கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சித்தமருத்துவ வாகடம்

Page 1
S \,\Pe. Dr. சே.சிவச
 
 

agates at M.D. (S)
ண்மு

Page 2

6
சித்தமருத்துவ வாகடம்
(கந்தரோடை க. கா. சுப்பிரமணிய ஐயர் வைத்திய முறைகள்)
சித்த மருத்துவ கலாநிதி சே.சிவசண்முகராஜா
st B.S. M.S. 1 Class (Hons) (Sri Lanka), M.D.(Siddha Pediatrics) - (India)
சிரேஷ்ட விரிவுரையாளர், சித்த மருத்துவத்துறை, யாழ்ப்பானப் பல்கலைக்கழகம்
6l6ᎣI6ifiuiᎶ சித்தமருத்துவ வளர்ச்சிக் கழகம் 199/1, zýkžzvířGovář, vzýůvravů.

Page 3
Title of the book
Author
Publisher
CopyRight
Printers Edition Pages
Price
Siddha Maruthuva Vaakadam
Dr.S. Sivashanmugarajah B.S.M.S. (Hons), (S.L.), M.D. (S) (India) Siddha Medical Development Society (S.M.D.S.) 199/ , Kilner Lane, Jafna.
.P - O2 222832O
Author
Bharathy Pathippakam, 430, K.K.S.Road, Jaffna. First, September 2007
O2+XIV
Rs... 2OOOO

பதிப்புறை
வரலாற்றுச் சிறப்பு மிக்க கந்தரோடையின் புராதன பிராமணகுடியில் மணி - மந்திர - வைத்திய பரம்பரை யில் வந்தவர் இவ்வாகட ஆசிரியரான பிரம்மபூரீ கார்த்திகேசஐயர் சுப்பிரமணியஐயர் ஆவார். இவர் களின் குலதெய்வம் மாகியப்பிட்டி அங்கணம்மைக் கடவை முறி மீனாட்சி அம்பாள் ஆலயமாகும்.
வைத்தியப் பெருந்தகை கா. சுப்பிரமணியஐயர் அவர்களின் காலம் 1880 - 1935 ஆகும். அவர் தம் மருத்துவ, சோதிட சமயக் கல்விகளை முதலில் தமது தந்தையாரிடமும், பின்னர் தென்னிந்தியாவிலும், வங்கா ளத்திலும் கற்றுத் தேர்ந்தாகக் கூறுவர். ஐயரவர்கள் தமது 55 ஆவது வயதில் (1936 இல்) காலமாகும் வரை கந்தரோடையில் வைத்திய சேவையில் சிறந்து விளங்கினார். நோயாளிகளைப் பார்த்த உடனேயே அவருக்கு ஏற்பட்டுள்ள நோய் இன்னது என்று கூறும் ஆற்றல் அவருக்கு இருந்தாக அவர்காலத்தில் சிறுவர் களாக இருந்து தற்போது 90 வயது தாண்டிய சில முதியவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன். சிங்கப்பூர், மலாயா போன்ற நாடுகளிலிருந்தும் பலர் அவரிடம் வைத்திய ஆலோசனையும், மருந்தும் பெற்றதை அவரின் மருத்துவ நூலொன்றினுள் காணப்பட்ட சில கடிதங்கள் மூலம் அறிந்து கொள்ள முடிந்தது.
ஐயரவர்கள் எதிர்பாராதவிதமாக மரணமடைய நேர்ந்தபோது அவரின் மூன்று ஆண் குழந்தைகளும் சிறுவர்களாக இருந்த காரணத்தால் அவரின் வைத்திய முறைகள் தொடர வழியேற்படாமல் தடையேற்பட்டது.
iii

Page 4
ஆயினும், அவர் பயன்படுத்திய மருந்துசெய் வாகடச் சுவடியை அவரின் மூத்த புதல்வரும் எனது தந்தை யாருமான பிரம்மபூரீ சு. சேதுமாதவஐயர் அவர்கள் பொன்போலப் பாதுகாத்து வந்தார். நான் இத்துறையில் கல்விபயில ஆரம்பித்ததும் அவற்றை என்னிடம் 1986 இல் கையளித்தார். சரியாக எனது பேரனார் காலமாகி 50 ஆண்டுகள் கழிந்த நிலையில் அவரின் வைத்திய வாகடமுறைகள் எனது கரங்களுக்கு வந்து சேர்ந்தன.
கடந்த இருபது ஆண்டுகளாக அவற்றை ஆராய்ந்து பார்த்தபோது அவை பெரும் புதையலாகவே எனக்குத் தோன்றின. யாழ்ப்பாணச் சித்தமருத்துவமுறைகள் பல இதில் அடங்கியிருப்பதைக் காணலாம். இந்நூலுக்கு “சித்த மருத்துவ வாகடம்" என்று பெயரிட்டு வெளியிட முன்வந்துள்ளளேன். சித்த மருத்துவம் ஓர் அற்புதமான மருத்துவமாகும். விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானமும் கலந்த இம்மருத்துவமுறையின் மேன்மையை அதில் அர்ப் பணிப்புடன் ஈடுபட்டவர்களால் மட்டுமே உணர்ந்து அனுபவிக்கமுடியும். நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகமும் - என்ற நல்நோக்கத்துடன் இந்நூலை வெளியிட்டுள்ளேன்.
இது போன்ற சிறந்த மருத்துவ முறைகள் வைத்திய பரம்பரையில் வந்த பலரிடம் இன்னமும் பாதுகாப்பாக உள்ளன. அவர்கள் அவற்றை அழிந்து போகமுன்னர் வெளியிட முன்வரவேண்டும் அல்லது எம்மிடம் கொடுத்தால் அவற்றை வெளியிட ஆவன செய்வோம் என்று இச்சந்தர்ப்பத்தில் கூறிவைக்க விரும்புகிறோம்.
Taipinu Tawid. சே. சிவசண்முகராஜா 23.09. 2007
iv

பொருளடக்கம்
கோரோசனை மாத்திரை கிரந்திக்கோரோசனைக் குளிகை கிரந்திவாய்வுக்கோரோசனைக்குளிகை சிறுவர் கோரோசனைக்குளிகை கோரோசனைப் பற்பம் கோரோசனை மிறுத்தியாதி சந்தனாதிக் குளிகை சிறுபிள்ளைமாந்தத்துக்கு பூரணசந்திராதிக்குளம்பு சுத்தபுன்னைவேர்க்குளிகை
புன்னைவேர்க்குளிகை -1
. புன்னைவேர்க்குளிகை -11
கறுத்தைத் துள்
. அஸ்வலிகந்திச் சூறணம்
விக்கல் ஓங்காளத்துக்குக்குடிநீர் விக்கலுக்குத் தூள் வயிற்றுக்கழிச்சனுக்குக் குடிநீர் சத்திக்கு மருந்து இருமலுக்குமருந்து
. சிறுபிள்ளைஅக்கரக்குளம்பு
சேர்வை
. கட்டு அமர
கட்டுக்குப்பூச்சு வீக்கம் வற்ற
O
O1
O2
O2
O2
Ο3
O4
O4.
O4.
O7
O8
O8
O8
O9
O9
10
1O
O
O
11
11
1.
11

Page 5
25。
28.
27.
28.
29.
30.
3.
32.
33.
34.
35。
38.
37.
38.
39.
40.
41.
42.
43。
4连。
45。
46.
47.
48.
49.
SO.
ാ6ിr ബിg
வீக்கம் கட்டிகளுக்கு சிறுவர் விடாச்சுரம், முறைச்சுரம் என்பவற்றுக்குக் குடிநீர் சிறுவர் விடாச்சுரம்முறைச்சுரம் சுரக்குளிகை
பெரும்பாட்டுக்கு சிறுபிள்ளைசகலதுக்கும் குடிநீர் குலைப்பன் காய்ச்சலுக்குமருந்து வலிகளுக்கு நசியம் வபரியவைத்திய சிந்தாமணி வெட்டுமாறன்
வபரும்பாட்டுக்கு சூலைவாய்வுக் குளிகை ஏலாதிச் சூறணம் சிவநாயகன் குளிகை குருக்கள் குளிகை கஸ்துரிக்குளிகை ஆனந்தபைரவிக்குளிகை குன்மத்துக்குச்சூறணம் மூச்சானந்தவைரவன் குளிகை கிருமிக்குமருந்து வாய்வுக் குளிகை வைத்தியருக்குற்பனம் வலஞ்சலமடைத்தால் கிரந்திக்கு இலைப்பற்பம் கிரந்திக்கு முருக்கிலைப்பற்பம்
vi
12
12
12
13
13
13
14
14
14
14
15
15
16
17
18
18
19
20
20
2.
22
23
23
28

51。
52。
53
54。
55。
56.
57.
58。
59.
60.
81.
82.
63.
64。
65.
88.
67.
88.
69.
7O.
71.
72.
73.
74.
75.
76.
77.
கீரைப்பாம்புக்கு குடிநீர் வாதம் நோவுக்கு ஒத்தடம் கறுப்புத்துள் வசங்கமாரிச் சூறணம்
லிங்கக் கட்டு லிங்கக் கட்டு
லிங்கக் கட்டு தசமூலச் சூறணம் வேர்க்கொம்புச் சூறணம் வேர்க்கொம்புச் சூறணம் இருமலுக்குச் சூறணம்
Fp6f 66 mL நந்தி சிந்தாமணி பற்பம் வைத்திய சிந்தாமணி பற்பம் வசுவாசிச் சூறணம் வெள்ளறுகுப் பற்பம் சீவறட்டினாதி வபண்கள் வவள்ளைக்கு தீராத வவள்ளைக்கு சிவகரந்தைக் ஆறணம் மிறுத்தியுண்டை சிவப்புக் குளிகை சந்நிக்குச் காயம் மூக்கு நசியம் வயிற்று வலிக்குப் பற்பம் வயிற்றுக்கடுப்புக்கு வநய் அதிமதுரச்சூரணம்
vii
23
24
24
24
25
25
26
28
28
28
29
29
3O
3O
3.
32
32
33
33
34
34
35
35
35
36
36
33

Page 6
78.
79.
80.
81.
82.
83.
84。
85。
86.
87.
88.
89.
90.
91.
92.
93.
94。
95。
98.
97.
98.
99.
100.
0.
102.
103.
04.
குக்கலுக்குக் குளிகை குக்கலுக்குக் குளிகை மூச்சு சந்நி. குளிகை விசவ்வாப்புக்கட்டிக்கு கோழை குத்து இருமலுக்குச் சூறணம் மூச்சுக்குளிகை அறுபத்தினான்கு சுரத்துக்குக் குளிகை சுரத்துக்கு ஆனந்த பைரவி கூஷ்மாண்ட லேகியம் வாயுவுக்குப் பூச்சு வலிகளுக்கு நசியம் பிரமேகப்பாகு பிரமேககலைக்குப் பற்பம் ஆடாதோடை மிறுத்தியாதி சறுவடநாதிக் குளிகை வெப்புப் பார்வைக்கு Lipňlá8ů LGor6o60or 9gĎlu இளைப்புத்தீர மருந்து கண்வியாதிக்குப் புறவளையம் கண்ணில் பழுமாற அக்கரம் சகலதுக்கும் குடிநீர் உரேமம் முளைக்க நல்லபாம்பு விஷத்துக்கு சகல விஷத்துக்கும் புண் அழுக்ககற்ற பவுந்திரக் கட்டுக்கு பிதற்றலுக்குக் குடிநீள்
viii
37
37
37
38
38
38
39
39
40
40
40
40
40
4i
41
42
42
43
43
43
43
43
44
44
44
44

105.
O3.
O7.
108.
109.
10.
111.
112.
113.
14.
115.
116.
117.
118.
119.
120
12.
122。
123.
124.
125.
128.
127.
128.
129.
BO.
13.
பாண்டு சோபை காமாலைக்கு சுகபேதிக்கு சூறணம் மருத்தீடு விழ
பிறவீச்சுக்கு
நாய்க்கடிக்கு
கரப்பனுக்கு
கட்டிக்கு வாதவாய்வு வீக்கத்துக்கு ஒத்து வசுவாசிச் சூறணம் வவாசிச்சூறணம் (பெரிய சூறணம்) சுவாதம் சந்திக்கு குளிகை வயிற்றில் புண்ணுக்கு தாகத்துக்கு திருக்கைமுள் தைத்தால் வாதஉளைவுக்கு குடிநீர் கோழை சங்கரன் வயிற்றால் மறிப்புக்கு
வேறு
கல்வி சித்திக்கு கோளை குத்திருமலுக்குச் சூறணம் சிறுபிள்ளை பறங்கிக்கு வில்வபத்திரிச் சூறணம் சிறுவர் தோஷ சந்தி மூச்சுக்குக் குடிநீர் நீர்ப்பிடிப்புக்குப் பதங்கம் நாக்குத்திமிர் விறைப்புக்கு சிவப்புக் குளிகை சிவப்புக் குளிகை
ix
44
今k5
45
45
45
45
46
46
46
46
47
47
47
48
48
48
5O
5O
5O
50
51
51
51
52
52
53
53

Page 7
132. சிவப்புத்துள் 133. வெல்ல உண்டை
134.பூசணிக்காய்ச் சூறணம் 135. குத்துக் குளிகை 136. இராமபாணக் குளிகை 137. மஞ்சல் பற்பம் 138. உடற்புண்ணுக் உறட்டி 139. நம்பன் குளிகை 140. லேபனக்குளிகை 141. கர்ப்பிணி வயிற்றில் வாதவீக்கம்
சகலதுக்கும் சூறணம் 142. தீமுறுகல் 143. சீவறட்டினாதி. 144. இராச பேதி 145. நவசுரக்குளிகை 146. சிவகரந்தைப்பற்பம் 147. மேக காந்திச் சூறணம் 148. பிரமேககலைக்குப் பற்பம் 149. பிரமேகப்பாகு 150. வெண்காயக்குளிகை
I
151. விவண்காயக்குளிகை - I
III
IV
152. வெண்காயக்குளிகை
153. வெண்காயக்குளிகை
154. இஞ்சிப்பாகு 155. தேன்பாகு 156. வெண்சூலைக் குடிநீர் 157. விரேசனம்
55
55
56
58
56
57
57
57
58
59
BO
B.
63
83
63
65
68
87
87
87
68
88
68
69
89
39

158。
159.
16O.
161.
162.
163.
164。
165。
166.
167.
168.
189.
17Ο.
171.
72.
173.
174.
175.
178.
177.
178.
179.
18O.
18.
182.
183.
184。
அமுக்கிராச் சூறணம் இரவு விரேசனமுறை இருமலீளைக்கு சந்திரகாந்தச் சூறணம் ஆலாத்திப் பூரனம் வெந்தயச் சூறணம் நாகவல்லிக் குளிகை செங்கிரந்தி கருங்கிரந்தி வபரிய முலைப்பால்க் குளிகை காயாசுவாத மிறுத்தியாதி மாந்த சந்நிக்குளிகை தண்டு வயலனுக்குப் பூச்சு சாராயக் குளிகை உட்குத்து புறவீச்சுக்குளிகை மாற்று வெற்றிலைக் குடிநீர் மஞ்சட் பற்பம் கெற்பவாயுவுக்கு மருந்து வாதத்துக்துப் பூச்சு
மறுபூசசு மறுபூச்சு உஷ்ணவாயுவுக்கு உள்மருந்து பற்கொதி மருந்து புண்ணுக்கு உறட்டி
அக்கரத்துக்கு அரைமருந்து பணிச்சம்பழநெய் சீரகவுநய் சகல நோவுக்கும் கோழிக்குஞ்சுக் காயம்
xi
69
7Ο
7Ο
7Ο
71
71.
72
72
73
74
75
75
75
78
76
76
77
77
77
77
77
78
78
78
79
79
79

Page 8
185。
186.
187.
188.
189.
190.
191.
192.
193.
94.
195.
198.
197.
198.
99.
2OO.
2O1.
202.
2O3.
204.
205。
208.
207.
208.
209.
210.
211.
armYTruskE56mhl கர்ப்பிணிகளுக்கு 21 சரக்குகள் வல்லாரல் நெய் சின்னமுலைப்பாற் குளம்பு உஷ்ணத்துக்கு லேகியம் மதன காமிய லேகியம் மேகவாத லேகியம் கிரந்தி எண்ணெய் கரப்பனுக்கு எண்ணெய் ஆறாத புண்ணுக்கு எண்ணெய் ஒடுவுக்கு எண்ணெய்
്BITവൈങ്ങrഞ്ഞi வாதத்துக்குப் பூச்சு சிறுவர் சுரத்துக்கு எண்ணெய் தொய்வுக்கு எண்ணெய் அந்தரத்தாமரை எண்ணெய் கருவநாச்சி எண்ணெய் பழுதாபுளி எண்ணெய் வெப்பாத்துப்புளி எண்ணெய் வபரியபுளி எண்ணெய் முலைப்பாலெண்ணெய் வாதக்குத்து சூலைக்கு எண்ணெய் முக்கூட்டிலெண்ணெய் காணாக்கடி எண்ணெய் குதிரைவலி எண்ணெய் - 1 குதிரைவலி எண்ணெய் - II கரப்பனுக்கு எண்ணெய்
xii
8O
8O
8O
8.
81
82
82
84
84
85
85
85
83
86
86
87
87
88
88
89
89
89
90
90
9.
9.
9.

2瑾2。
2鱼3。
2堡4。
2鱼5。
2鱼6。
27.
2重8。
29.
22O。
22.
222
223.
வனவாகக்கக்க எண்
பறங்கி வியாதிக்கு எண்ணெய்
ன்வந்திரியார் சண் ருத செர் A. சண்டமாருத செந்தூரம் வேறு) அக்கினி குமாரன் பஞ்சலோக வசந்தூரம்
xiii
9.
92
92.
93
94
94.
95
96
97
99.
1OO

Page 9

1. கோரோசனை மாத்திரை
பாலருக்குக் கோரோசனை மாத்திரையைக் கேளு பாங்கான கோரோசனை குங்குமப்பூ சீலமுறு வெண்காரம் கெந்தி சூதம் சிறப்பான கருஞ்சீரகம் கடுகுரோகிணி தாலமுறு நன்னாரி லாமிச்சோடு சந்தனமும் வகை களஞ்சு வாளமிரண்டு சீலமுறு செவ்விளநீர் விட்டரைத்து சிறுபயறுப் பிரமாணம் உண்டை செய்த குளிகையை முலைப்பாலிலிட்ட போது செவ்வாப்புக் கருவாப்பு சன்னிதோஷம் ஐயமுறுந்த வலி தொய்வு சேடமருவருப்புச் சறளியொடு கிரந்திவாய்வு நைய்யல் செய்யும் காய்ச்சலொடு பழஞ்சுரங்கள் நாடாது நாடாது நமனுமஞ்சும் பையவே யுலகோர்க்கிரங்கிச் சொன்னேன் பண்பான குளிகையிது பரிவாகச் செய்
2. கிரந்திக் கோரோசனைக் குளிகை
இரசம், கெந்தி, கடுகுரோகணி, வெண்காரம், இலாமிச்சம்வேர், கோரோசனை, குங்குமப்பூ வகை களஞ்சு-2 வாளம் களஞ்சு-4 முலைப்பால் விட்டரைத்துப் பயறளவுறுட்டி முலைப் பாலிலிடவும். திரும் ரோகங்கள்-கிரந்தி வாய்வு, இருமல்
O

Page 10
3. கிரந்தி வாய்வுக் கோரோசனைக் குளிகை
கோரோசனை, இருசிரகம், திரிகடுகு, சாதிக்காய், உள்ளி, மஞ்சல், கிருமிசத்துரு, மதுரம், சித்தரத்தை, கோட்டம், செவ்வள்ளி, வாளம் வகை-1களஞ்சு. மொசு மொசுக்கைச்சாறு, கறுத்தப்பூச்சாறு வகைக்கு இரண்டு சாமம் அரைத்து. மிளகு அளவு உருட்டி சுக்கு நீரிலிடவும். திரும் ரோகங்கள்-காய்ச்சல், சறளி, கிரந்தி, வாய்வு, முட்டு, வீக்கம்.
4. சிறுவர் கோரோசனைக் குளிகை
கொச்சிஏலம், இலவங்கம், கோட்டம், சுக்கு, இருசீரகம், கராம்பு, வசுவாசி, ஓமம், லிங்கம், சாதிக்காய், கோரோசனை வகை - 1களஞ்சு அரைப்பு - முலைப்பால் அனுபானம் - முலைப்பால், இஞ்சிச்சாறு திரும் ரோகங்கள் - செரியாமை, மாந்த தோஷம், காய்ச்சல், வெப்பு, அவியல்.
5. கோரோசனைப் பற்பம் கை கண்டது)
சிறுதேக்கு, திரிகடுகு, வாய்விடங்கம், ஓமம், இரு சீரகம், சித்தரத்தை, கடுகுரோகிணி, சிறுமுலம், கடுகு, வசுவாசி, இரசகர்ப்பூரம், கண்டில்வெண்ணெய், கல்நார், திரிபலை, காந்தம், கோரோசனை, வெட்டி வேர், பேய்ப்புடோல், கோட்டம், செண்பகப்பூ, சிற்றேலம், இலாமிச்சு, சிறுநாகம்பூ, அதிமதுரம், தேவதாரு, கறுவா, உருளரிசி, கராம்பு, சாதிக்காய்,
02

சாத்திரபேதி, அரிசிவகை-6, அதிவிடயம், சிவதைவேர் வகை-1களஞ்சு
பிரமாணம் - விரிகடி (3விரல்) அனுபானம் - இஞ்சிச்சாறு, தேன் திரும் ரோகங்கள்-பித்த சுரம், பாண்டு, காமாலை, மஞ்சட்சுரம், பித்தப்பைக்கல்.
6. கோரோசனை மிறுத்தியாதி
கோட்டம் சாதிக்காய் கோரோசனை பூரமும் கூட்டுமேலமும் குங்குமப்பூவுமாம் காட்டிலக் கருகாந்தி முறுகலும் நாட்டுமோரொன்று நயந்து களஞ்செடென லிங்கம் நாலு யிதமாகச் சுத்தித்து நலிந்த சந்தனம் நாறுகராம்புடன் உயர்ந்த செண்பகப்பூவுமொருசரிபலமதானதாலதாய் பறபமாய் தூள் செய்து நீரை விட்டு நெருப்பினிலாறவிட்டு அரைத்து அளவுகேள் பாரில் குன்றிப்பருப்பளவுருட்டிப்பின் சேரும் வெந்தயம் சேர்த்தவித்த நீரிலிட அந்தி சந்தியனுபானத்தாலே வந்த பித்தம் வருத்துமிருமலும் மாந்ததோடமரு வாதசன்னிகள் தொந்தக்காய்ச்சல் தொடாது சூயே அழல்வாதம் அடருமதிசாரம் தொண்டைச்சேடம் தொலைக்கும் சிவாதத்தை குண்டமாகுளைந்த வியாதிபோம் நின்ற காசம் நீங்கும் நீரிழிவு குன்மம் படர்தாமரை நீர்ப்பிடிப்பு கழிச்சல் விடம் வலிகள் நீங்கும்
03

Page 11
7. சந்தனாதிக்குளிகை
சந்தனம், கோட்டம், அதிமதுரம், சாத்திரபேதி, தக் கோலம், கோரோசனை, முத்தற்காசு, முல்லை, இரு வேலி, இலாமிச்சு, அரைத்து இலந்தைக் கொட்டைப் பிரமாணம் உண்டை செய்யவும்.
8. சிறுபிள்ளை மாந்தத்துக்கு
வேப்பிலையைத் துவைத்துச் சாறெடுத்து புதுச் சட்டியில் விட்டு மிளகும் புழுங்கலரிசியும் வேர்க் கொம்பும் போட்டு அவித்து வற்றினபின் வறுத்துப் பொன்னிறமாக வருகின்றவேளை % கொத்து தண்ணிர் விட்டு ஆவிபோகாமல் முடி இறக்கி இறுத்தெடுத்து உள்ளே கொடுக்கவும். திரும்ரோகங்கள்-மாந்தம், பொருமல், தாகம்.
9. பூரண சந்திராதிக் குளம்பு (பாலசஞ்சீவிச் சந்திராதிக் குளம்பு)
சீரப்பா சிவன் உமைக்குச் சொன்ன வாக்குச் சிறப்பான நந்திக்கு உமையாள் அளித்த வாக்கு ஏரப்பா நந்தியுமோ எனக்கு உபதேசித்த வாக்கு நந்தியுமே எனக்குபதேசித்த பாலசஞ்சீவியெனும் பாலகெருடப்பச்சைக் குளம்பு தன்னைப் பாடுகிறேன் பண்பாய்க் கேளுபாரப்பா பாலகெருடப்பச்சை பலம் ஒன்று
O4

அப்பா பாங்கான காண்டாமிருகக்கொம்பு பலம் ஒன்று அப்பா பாங்கான சூரிவித்து ஆளாக்கு அப்பா பாங்கான முள்ளிவித்துப் பலமோ கால்
தானப்பா பகருகின்றேன் முள்ளிலகம் பிசின் பலமரைதானப்பா தாங்கிவளர் அமுதுசற்கரைதான் பலமே முக்கால்
போடு பாங்கான பூமிசற்கரைதானும் பண்பாகக் கால்பலம் போடு பகருகின்றேன் என்மக்காள் பணிந்து கேளு நீரப்பா சொல்லுகின்றேன் நண்பான சிந்திலுடசாறு
நாழி பரிவான ஓரிதழின் சாறு நாழி வாங்கான சீதேவிச்சாறு நாழி பகருகின்றேன் வல்லாரைச்சாறு நாழி தையலை நீ மனதில் எண்ணிப் பகருவாய்
கற்கவகைதானப்பா இருசந்தனம் மாயாக்காய் ஏலம்
வால்மிளகு இருசிரகம் அப்பா குங்குமப்பூ நாகம்பூ கோரோசனை புனுகுச்சட்டம் கஸ்தூரி பச்சைப்பூரம் அப்பனே வகை வகைக்கு களஞ்சு ஒன்றுதான் ஒன்றாகச் சரக்கு அத்தனையும் சேர்த்திடித்து
шотбытий என் மகனே கணேசனையும் தியானம் மனதிலே
செய்து எடுத்து நீர்ச்சாற்றாலாட்டிச் சாற்றில்க் கரைத்து தாளிக்குள் ஊற்றி அடுப்பேற்றி.
05

Page 12
சங்கரனார் உமைதனையே மனதிலெண்ணித் தப்பாமலத்தியெரித்து குளம்பதாகும் பதங்கண்டு
இறக்கிடாயே. இறக்கியே நீ சட்டி தயவாய்க் கிண்டியே மெல்லிய சூட்டுடன் குளம்பில் கோரோசனை கஸ்தூரி புனுகுச்சட்டம் பூரமிவைகளை முன் நீர்ச்சாற்றாலரைத்துப் போட்டுக் கிண்டி அப்பனே பண்பான வெள்ளியுட சிமிழில்
வைத்துமே தானியப் புடத்தில் வைத்து எடுத்துத் தயவாகப் பாலருக்குத்தான் பிரமாணம் துாதுளை விருத்தருக்கு இலந்தைப்பழப்பிரமாணம்
கொடுத்திடாயே. கொடுக்கவே திருகின்ற வியாதி கேளு கொடுமையென்ற இராக்காய்ச்சல் கணையுந்தீரும் கொற்றவனே கசம் ஈளை கறகறப்பு கண்ணிர்
பாய்தல் கற்றான மாலைக்கண் புகைச்சல் திரும் தாங்கான முலச்சூடு மூலவெக்கை போகும் கிரந்தி குட்டம் சாந்தமாகும் சாந்தம்
சந்தேகமில்லை இரத்தம் சடுதியிலுாறும் சங்கரனார் வாக்குத்
தப்பாதப்பா சார்ந்து நீ மருந்து தயவாய்ச் செய்யெனச்செய மருந்துடைய வலிமை மெத்தவே சொல்லுகிறேன் இன்னங்கேள் சாரப்பருப்பு சாலாமிசிறிப் பருப்பு தயவாகத் தேனுமோ கால்ப்படி வாரேன்
06

பாலருக்கு அருந்துவாயானல் இறக்குமெடா
நாலாயிரத்து நாற்பத்தெட்டு வியாதியுமே கதிரவன் முன் பனியே
போல காதம் விட்டோடும் கண்டு பாரே. இன்னும் அனேக வியாதி திரும்
10. சுத்த புன்னைவேர்க் குளிகை
சுக்கு, சாதிலிங்கம், துாதுவளைவேர், சந்தனம், முத்தற்காசு, கண்டங்கத்தரிவேர், கோட்டம், திற்பலி, காண்டைவேர், உள்ளி, பெருங்காயம், திற்பலிமுலம், காந்தம், மிளகு, இந்துப்பு, சிறுதேக்கு, கலைக்கொம்பு, வசுவாசி, நிலவேர், ஓமம், சாத்திரபேதி, முசுற்று முட்டை, மரமஞ்சல், உருத்திராட்சம் வகை-1களஞ்சு அரைப்பு - புன்னைவேர்க் கயாளத்தால் அரைக்கவும். குளிகையின் வீரியத்தைக் கூட்ட விரும்பின் சுத்தி செய்த அரிதாரம், மனோசிலை வகைக்கு 2களஞ்சு கூட்டி - இயங்கம்வேர், புன்னைவேர், கான்றைவேர் தனித்தனி அவித்து ஒவ்வொரு சாமம் அரைத்து அவ்விதம் ஐந்து சாமம் அரைக்கவும். பிரமாணம்-மிளகு,
நிழலுலர்த்தி சிமிளில் வைக்கவும். அனுபானம்-இஞ்சி தேனில் இட குத்து மாறும். அரிதாரம் மனோசிலை கூட்டி அரைக்கில் அனுபானம்கையாந்தகரைச்சாறு, பாவட்டை, இயங்கு, புன்னை, கான்றை நாலும் வேர்க்கவுாயமாக்கி இடவும். சுவாத மும் மாறும்.
07

Page 13
1. புன்னை வேர்க்குளிகை - 1
சாதிலிங்கம், சாத்திரபேதி, உள்ளி, இந்துப்பு, காந்தம், பெருங்காயம், வசுவாசி, சாதிக்காய், கல்நார், இலுப் பைப்பூ, திற்பSமூலம், சன்னிகளநாயகன், நிலவேர், முசுற்றுமுட்டை, இருசிரகம், திற்பலி, சந்தனம், முத்தற்காசு, மரமஞ்சல், சுக்கு, கராம்பு, உன்தகப்பன் தங்கைவிந்து(சித்தரத்தை), மதுரம், அரிதாரம், மிளகு, சிறுதேக்கு, தேவதாரம், மல்லி, ஓமம், அத்விடயம் வகை-1களஞ்சு அரைப்பு-புன்னைவேர்ச்சாறு அல்லது கஷாயம்.மூன்று
FITLDuib.
பிரமாணம்-மிளகு. அனுபானம்-இஞ்சி, தேன், முலைப்பால் திரும் ரோகங்கள்-கோளை, குத்து, சன்னி, வரட்சி, காய்ச்சல், சுவாதம்,
12. புன்னைவேர்க்குளிகை - II
காந்தம், கோட்டம், உள்ளி, சந்தனம், இந்துப்பு, சுக்கு, திற்பலி, முத்தற்காசு வகை-1களஞ்சு அரைப்பு:நாகவேர்க்கவுாயம்.(நாகம்-புன்னை)
13. சகல வியாதிக்கும் கறுத்தைத்தூள் கைகண்டது)
அரிதாரம், இரசம், கருஞ்சீரகம், பொரிகாரம், மிளகு, ஊசிக்காந்தம், சாதிலிங்கம், வேர்க்கொம்பு, கெந்தகம், பொரிகாரம் வகை-1களஞ்சு
08

பொரிகாரமும் மிளகும் சேர்த்து வறுத்துக் கொள்ள வும். மைநீறாக வருமளவும் அரைத்துக் கொள்ளவும். அனுபானம்1. சத்தி, கழிச்சல், வயிற்றுவலி, சமியாமைக்கு
இஞ்சிச்சாறு 2. சமியாக்குணம், வாய்வுக்குத்துக்கு-வென்னிர் 3. பளுவறையன், நெஞ்சுக்குத்துக்கு-வெற்றிலைச்
சாறு உட்குத்து, பிறவீச்சுக்கு-தேன் 5. சன்னிதோஷங்களுக்கு - இஞ்சிச்சாறு, இன்னும்
அறிந்து கொடுக்கவும்
4.
14. அஸ்வலிகந்திச் சூறணம்
இலவங்கம் - 1களஞ்சு. நாகம்பூ-4 களஞ்சு. ஏலம்-4 களஞ்சு. மிளகு-8 களஞ்சு. திற்பலி-16 களஞ்சு. சுக்கு32களஞ்சு. அமுக்கிராய்-64களஞ்சு. இவைகளை நிறுத்து எடுத்து, இடித்து, எள்ளுப்புடமிட்டு இடித்து அரித்துக் கொள்ளவும். அனுபானம் -பசுப்பால், பசுநெய், சர்க்கரை திரும் வியாதிகள் - மேகம்-20, வெட்டை-8, சுரம். ஈளை இளைப்பு, பாண்டு இன்னும் அனேக வியாதிகள்
15. விக்கல் ஓங்காளத்துக்குக் குடிநீர்
நெற்பொரி, புடோல், கூவிளைவேர், பயறு, வேர்க் கொம்பு - இவை சமன் கூட்டி குடிநீரிடவும்.
09

Page 14
16. விக்கலுக்குத்தூள்
திற்பலி விளாம்புளிசேர் மனோசிலை நெற்பொரித்துாள் நெய் தேனில் கொண்டிடிற் பற்றிய விக்கல் போய் விடுமே
17. வயிற்றுக் கழிச்சலுக்குக் குடிநீர்
வேப்பங்கூர், மாங்கூர், மஞ்சவண்ணாக்கூர், திற்பலி, வேர்க்கொம்பு, சதகுப்பை, பனங்குருத்து இவை சரி கூட்டி அவித்து இறக்கி முடி தண்ணிரை இறுத்துக் கொடுத்துவர வயிற்றுப் பொருமல், கழிச்சல், மாந்தம் திரும்.
18. சத்திக்கு மருந்து
நீடுமாதுளை நெற்பொரி சர்க்கரை தேடுதிற்பலி தேனிற் குழைத்திட பீடை செய்சது பெருத்திடு சத்தியும் ஒடவென்று உறுட்டிக் கலைக்குமே
19. இருமலுக்கு மருந்து
நெல்லி திற்பலி சர்க்கரை நல்ல தேனில் நறு நெய்யில் நக்கிட இல்லையில்லை இருமல் இளைப்பு தில்லையம்பலத்தினானை தேசிகனாணை
O

2O, சிறுபிள்ளை அக்கரக்குளம்பு
கையான்தகரை, பசுப்பால், நெல்லிக்காய் வகை-நாழி எண்ணெய்-2நாழி
அதிமதுரம்-10களஞ்சு அரைத்து குளப்பி மெழுகுபதம் வடித்து சிரசில் வைத்து மூன்று நாள் சென்ற பின் கழற்றவும். திரும் ரோகங்கள்-கண்ணெரிவு, தலையெரிவு பித்தக்கிறுதி, சூடு, வெக்கை, பித்தசுரம், சிலேற்பன சுரம். அக்கரம்
21. சேர்வை
சாதிலிங்கம், வீரம், இரசம் - எருக்கலம்பால் விட்ட ரைத்து அதன்பின், பசுப்பால் விட்டரைத்து துணியில் பூசி புண்ணில் போடவும்.
22. கட்டு அமர
ஆவாமல்லி, ஆமணக்கம்முத்து, எள்ளுப்பருப்பு, மஞ்சல், சிரட்டைசுட்டகரி பச்சைவெண்ணெயில் அரைத்துப் பூச அமரும்.
23. கட்டுக்குப்பூச்சு
வேப்பிலை, குப்பிளாயிலை, குன்றியிலை, முக்கி ளுவை இலை பூனைக்களற்சியிலை - இவை அரைத் துப் பூசவும்.அமரும் அல்லது உடைக்கும்

Page 15
24. வீக்கம் வற்ற
பூமத்தம் இலையும் வெள்ளைப் பாஷாணமும் அரைத்து கட்டவும்.
25. முள் விழ
பிரண்டையிலையும் பூமத்தம்இலையும் துவைத்துக் கட்டவும்.
26. வீக்கம் கட்டிகளுக்கு
பாவட்டை, நொச்சி, வேம்பு, ஆமணக்கு, வட்டத் துத்தி, சீதேவி, மாதுளந்துளிர் இவை இலைவகை வறுத்து அல்லது அரைத்துக் கட்டவும். வீக்கம் வற்றும்.நீரையும் இழுக்கும்.
27. சிறுவர் விடாச்சுரம், முறைச்சுரம் இவைக்குக்
குடிநீர்
பேராமட்டிவேர், திருக்கொன்றைவேர், சிறுகாஞ் சோன்றி வேர், ஆடாதோடைவேர், பேய்ப்புடோல்வேர் சிந்தில்வேர், நாய்வேளை இவை வகை-1பிடி மல்லி, உள்ளி, சுக்கு வகை-1களஞ்சு இருநாழி நீர் விட்டு ஒரு நாழியாய்க் குறுக்கிக் கொடுக்கவும்.
2

28.சிறுவர் காய்ச்சல், அவியல், அக்கரம், விதாய்வு
கனைக்குக் குடிநீர்
தூதுவளை, நன்னாரி, வட்டுக்கத்தரி, கண்டங்கத்தரி, நாயுருவி, இலாமிச்சு, இருவேலி, கோரைக்கிழங்கு இவை வேர்-1பிடி பற்படாகம், பிரமி, விஷ்ணுகிராந்தி வகை-1பிடி மாயாக்காய், திற்பலி, அக்கரா, நற்சிரகம், ஈரவெங் காயம், கடுகுரோகிணி, மதுரம் வகை-2களஞ்சு. நாலொன்றாக்கிக் கொடுக்கவும்
29. சுரக்குளிகை கைகண்டது)
காந்தம், அரிதாரம், கெந்தகம், மனோசிலை, பொரி
காரம், கடுகுரோகிணி, சுக்கு, சிவதைவேர், நற்சிரகம்,
வாளம் வகை-1களஞ்சு
அரைப்பு-எலுமிச்சம்புளி
பிரமாணம்-பயறு
அனுபானம்-வாதசுரத்துக்கு-சுக்கு நீர்
பித்தசுரத்துக்கு-முலைப்பால் கபசுரத்துக்கு-இஞ்சிச்சாறு
30. லயரும்பாட்டுக்கு கைகண்டது)
குங்கிலியம், சந்தனம், இரண்டும் சமன் எடுத்து சுடுதணிணிர் விட்டரைத்து சுடுதணிணிரில் கொடுக்கத்திரும்.

Page 16
3. சிறுபிள்ளைகள் சகலதுக்கும் குடிநீர் கைகண்டது)
தக்காளி, சிறுகாஞ்சோன்றி, பேராமட்டி, இவை வேர்வகை. வெள்வேலம்பட்டை, பருத்திப்பிஞ்சு, தென்னங் குரும்பை, வில்வம்பிஞ்சு, இதரைவாழைப்பூ, வல் லாரை இவை வகை-1களஞ்சு குடிநீராக்கவும்.
32. குலைப்பன் காய்ச்சலுக்கு மருந்து கைகண்டது)
11மிளகும், வசம்பும், வேர்க்கொம்பும், நொச்சித் துளிரும் வென்னிர் விட்டரைத்து விழுங்கி வென்னிர்
குடிக்கவும்.3, 4முறை குடிக்க உடன் குலைப்பன் விடும். ܚ
33. வலிகளுக்கு நசியம் (கைகண்டது)
உள்ளி, வேர்க்கொம்பு, அவுரி பொடி செய்து நாசியில் ஊதவும்.
34. லயரிய வைத்திய சிந்தாமணி
அரிதாரம், மனோசிலை, கெந்தகம், காந்தம், இரசம் வகை-1களஞ்சு இருசீரகம், சிறுநாகம்பூ, அதிவிடயம், திரிகடுகு,
14

திரிபலை, உலுவா, மாயாக்காய், உள்ளி, சடைக் கஞ்சா (பெண்கஞ்சாவின் பூந்துனர்)வகை-2களஞ்சு. பெருமருந்து, சாயவேர், கோரைக்கிழங்கு, அவுரி, சாறணை வகை-1பிடி. இவைகளைக் காயவைத்து, சட்டி காயவைத்து ஒன்பது புடம் செய்து கருகாமல் பதமறிந்து எடுத்துக் கொள்ளவும். அனுபானம்-காய்ச்சலுக்கு-வென்னில்
கழிச்சல், சத்தி, சமியாக்குணத்திற்கு-தேனில்.
35. வட்டுமாறன்/ சின்னச்சிவப்பு கைகண்டது)
இனிதான பொரிகாரம் நாவிலிங்கம் மிளகு கோட்டம் திற்பலி இவை சமன் கொண்டு இஞ்சி நீரில் அரைத்து உளுந்து பிரமாணம் உருட்டி நிழலுலர்த்தவும். அனுபானம்-நெஞ்சடைப்பு புளிப்பு, சத்தி, ஓங்காளம் இவைகளுக்கு-வெற்றிலைச்சாறு முலைப்பால். மற்றவைக்கு-இஞ்சி தேன் முலைப்பால்.
36. வியரும்பட்டுக்கு
அவுரியிலை பிடுங்கி அரைத்து ஒரு கொட்டைப்
பாக்களவு மருந்து பசுவெண்ணெய் சமன் சேர்த்து முன்று வேளை தின்னவும்.
5 mu

Page 17
37. சூலைவாய்வுக் குளிகை
சாதிலிங்கம் வெண்காரம் உலுவாதாரம் சாற்றியதோர் திரிகடுகு மதுரம் கைப்பு கோரைவேர் சிவதைவேர் கழற்சிக்கொட்டை கொத்தமல்லி இந்துப்பு சீனக்காரம் காதலுறு சாதிக்காய் நெல்லிக்கெந்தம் கடுகுரோசனை ஊசிக்காந்தம் மாஞ்சில் கராம்பு திற்பலியின்மூலம் பெருஞ்சீரகத்தினோடு ஓமம் கூட்டே.
கூட்டெடா உள்ளி வெட்பாலரிசி வசுவாசி
குணமுடைய கல்நார் கல்மதத்தினோடு நாட்டெடா மனோசிலை சீரகங்களிரண்டும்
நலமுடனே ஒரொன்று களஞ்சு தூக்கி வாட்டடா உலர்ந்த இஞ்சி ஒரு பலமதனில் வாகாய்க் கசாளமிட்டுச் சாற்றில் ஆட்டெடா குளிகை துவரை போலுருட்டி
அடைவுடனே கெற்பிணிக்குக் கொடுக்கக் கேளே
2.
கேளெடா வயுறு நொந்து வருத்தமானால்
கெறுவான காக்கனவேர் உள்ளி சுக்கு
தாளுமெடா மிளகு உலுவா கஷாயமாக்கிய
சாறுதனில் மூன்று குளிகை கொள்ள
மீளுமெடா திங்கள் பத்தும் குறையில்லாட்டால்
மிடுக்கான நோவுண்டாகி பிறவினோக்கும்
வாழுமெடா குறைமாதமானாலிந்த வருத்தமெல்லாம் மாறும் கொடுத்துப்பாரே 3.
16

பாரும் பெண்களுக்கு மிருத்து வாத சன்னிக்கு
வேப்பிலையும் தோலும் உள்ளி மிளகு சுக்கு வண்டிலவித்த சாற்றிலிடு பச்சை இஞ்சிச்
சாற்றிதனில் நன்று கூறுலவு சன்னிக்கு வேம்பினெண்ணெய் குத்தொடு கொளுவலுக்கு
உள்ளி சுக்கு உலுவா ஊரிலுள்ள முதலித்தோல் கஷாயமாக்கி உள் மூன்று
குளிகையிட ஒடிப்போமே 4.
வண்டிலவித்த-வேடுகட்டி அவித்த ஊரின் முதலி-முருங்கை
வயிற்று நோவுக்கு-உலுவா, உள்ளி, சுக்கு, வெள்ளைக்காக்கணம் வேர்க்கவுாயத்தில் 3குளிகை. காய்ச்சலுக்கு-உள்ளி, சுக்கு, மிளகு. குத்து, கொளுவலுக்கு-உள்ளி, சுக்கு, முதலித்தோல். கழிச்சல், சலக்கழிச்சலுக்கு-உள்ளி, சுக்கு, ஓமம், சீரகம் கருக்கி கஷாயமிட்டுக் கொடுக்கவும். மிருத்துவாதசன்னிக்கு-நிம்ப எண்ணெய்.
38. ஏலாதிச் சூறணம் (லபரியவுடமை)
ஏலம், இலவங்கம், சாதிக்காய், வசுவாசி, அக்கரா, அசமதாகம், நற்சிரகம், கருஞ்சீரகம், வேர்க்கொம்பு, மிளகு, வசம்பு, சிற்றரத்தை, திற்பலி, வெண்காரம், பொரிகாரம், சீனக்காரம், சவுக்காரம், சாதிலிங்கம், தக்கோலம், செண்பகப்பூ, அதிமதுரம், கடுக்காய், தான்றி நெல்லிக்காய் பெருங்காயம் இந்துப்பு வகை
‹ዎ ዘበD6ዕክሆ
17

Page 18
வசம்பு மட்டும் சுட்டுச் சாம்பல் எடுக்கவும். சரக் கெல்லாம் வறுத்துப் பொடி செய்து கொள்ளவும். அனுபானம்-இஞ்சி, தேன்
திரும் ரோகங்கள்-சன்னி-18.
பத்தியம் பிடிக்கவும்.
39. சிவநாயகன் குளிகை
இந்துப்பு, வெண்காரம், சாதிலிங்கம், மனோசிலை, திற்பலி, சாதிக்காய், கராம்பு, வசுவாசி, பொரிகாரம், இருசந்தனம், பச்சிலை, நாவி, இரசம், இருசிரகம், நேர்வாளம், சீனக்காரம் வகை-1களஞ்சு. அரைப்பு-முதல் நாள்-கஞ்சாவிலைச்சாறு
மறுநாள்-எலுமிச்சம்புளி பிரமாணம்-பயறு அனுபானம்-இருவேலி, ஆடாதோடை, எலுமிச்சம் வேர், பற்படாகம், திரிபலை, முத்தற்காசு,சந்தனம் குடிநீரிட்டு சீனி சேர்த்து மூன்று குளிகை கொடுக்கவும். திரும் ரோகங்கள்-தண்ணிர்த்தாகம், நாவரட்சி, கூதல்,
dijЈио.
40. குருக்கள் குளிகை
மாயாக்காய், சீனக்காரம், இருசிரகம், திற்பலி, சுக்கு, அக்கரா, உள்ளி, மதுரம், பொரிகாரம், கராம்பு, இந்துப்பு, காவிமண், சிறுதேக்கு, வசுவாசி, சாதிக் காய், பொன்னரிதாரம், மடலரிதாரம், கோட்டம், பெருங்காயம், துத்தம், துருசு, கடுகுரோகிணி, வெண்காரம் வகை-1களஞ்சு
18

வெள்ளைப்பாஷாணம்-1களஞ்சு இலிங்கம், செஞ்சந்தனம், முள்முருக்கம் கொட்டை வகை-3களஞ்சு அரைப்பு-முலைப்பால், தோடம்பழச்சாறு பிரமாணம்-பயறு அனுபானம்-சுரத்துக்கு-சுக்கு நீர்
சுவாதத்துக்கு-முருங்கைப்பட்டைச்சாறு மேல்மூச்சு கழிச்சலுக்கு-தோடம்புளி, முலைப்பால், தேன், நெய்.
தாகத்துக்கு-தேசிப்புளி வயிற்றுவலிக்கு-வசம்பு அவித்தநீர் இருமலுக்கு-குன்றியிலைச்சாறு, தேன் நெஞ்சடைப்புக்கு-வெற்றிலைச்சாறு பக்கவாயுவுக்கு-பெருங்காய நீர் அண்டவாயுவுக்கு-முடிதும்பைஇலைச்சாறு வலிக்கு - வசம்பு அவித்த நீரில் கொடுக்க
6ւյԼ0.
4. கஸ்தூரிக் குளிகை
கஸ்துாரி-1களஞ்சு. கோரோசனை-3களஞ்சு. குங்குமப் பூ-2 களஞ்சு.
அரைப்பு-முலைப்பால்
பிரமாணம்-பயறு
அனுபானம்-முலைப்பால் திரும் ரோகங்கள்-விஷசன்னி, தாகம், வரட்சி, படர்தாமரை, செங்கரப்பன், செங்கிரந்தி, செவ்வாப்பு, கருவாப்பு.
19

Page 19
42. சுரத்துக்கு ஆனந்தபைரவக்குளிகை
சாதிலிங்கம், வற்சநாவி, மிளகு, வெண்காரம், திற்பலி வகை-சமன் அரைப்பு-தேசிப்புளி பிரமாணம்-குன்றி அனுபானம்-சுக்கு, கொத்தமல்லி, காய்ச்சியிடவாதசுரம் திரும்.
ஆடாதோடை, சுக்கு அவித்த நீர்-சேடகரம் முலைப்பாலில்-சன்னி மிளகுப்பொடி, சர்க்கரையில்-கழிச்சல் திரும்.
43. குன்மத்துக்குச் சூறணம்
இந்துப்பு, வெண்காரம், கெந்தகம், மனோசிலை, இவைக்குச்சமன் மிளகு சேர்த்து நன்கு அரைக்கவும். வெற்றிலையில் வெருகடி வைத்துச் சப்பி வென்னிர் கொள்ளவும். திரும்ரோகங்கள்-குன்மம், வாய்வு, மகோதரம், பசா சுக் குறை, பித்தம் இன்னும் அனேகவியாதிகள்.
44. மூச்சானந்த வைரவன் குளிகை
மாயாக்காய், சுக்கு, அரிதாரம், உள்ளி, சாதிக்காய், அதிமதுரம், காந்தம், கோட்டம், சீனக்காரம், பொரி காரம், பெருங்காயம், இருசிரகம், சிறுதேக்கு, துத்தம், திற்பலி, கராம்பு, துரிசு, அக்கரா, வசுவாசி, லிங்கம், முருக்கங்கொட்டை, வெண்காரம், கடுகுரோகிணி, காவாஅரிசி, வெள்ளைப்பாஷாணம், செஞ்சந்தனம், பச்சிலை, நாவி வகை-1களஞ்சு.
20

சந்தனம்-பாக்களவு அரைப்பு-தேன்தோடம்புளி-1சாமம்
முலைப்பால்-1சாமம் அனுபானம்-காய்ச்சலுக்கு-சுக்கு நீர்
குத்து சுவாதத்துக்கு-முருங்கைப்பட்டைச்சாறு, தேன்தோடம்புளி, கருப்பஞ்சாறு, முலைப்பால், பசு நெய்,
தண்ணிர்விடாய்க்கு-தேசிப்புளி, நல்லெண்ணெய் இருமலுக்கு-குன்றியிலைச்சாறு பக்கவாயுவுக்கு-பெருங்காயம் அண்டவாயுவுக்கு-முடிதும்பையிலைச்சாறு வலிக்கு-வசம்பு நெஞ்சடைப்புக்கு-வெற்றிலைச்சாறு.
45. கிருமிக்கு மருந்து
சாறனை வேர் துாள் பண்ணி-1கொத்து பசுக்கோசலம்-2கொத்து இலைக்கள்ளிச்சாகம்-2கொத்து இலைக்கள்ளிப்பால் -% கொத்து
நெய்-1ஆளாக்கு இவையெல்லாம் கூட்டி பாகு செய்து குளம்பாக்கி வெருகடிப் பிரமாணம் கொடுக்கவும். அதிகமாக வயிறு கழிந்தால் தயிரும் சோறும் கொடுக்கவும். திரும் ரோகங்கள்-வெப்புப்பார்வை, பெருவயிறு, பீலிகை, அட்டபிலிகை, நீராமை, பேராமை, கீரைப் பாம்பு, கிருமி.
2

Page 20
46. வாய்வுக்குளிகை
கறுத்தப்பூவிலை, மொசுமொசுக்கையிலை, குப்பை மேனியிலை, பருத்தியிலை, கையாந்தகரையிலை, கள்ளியிலை, குப்பிளாயிலை, சமன் காயப்போட்டு தூள் பண்ணவும். துத்தம், துருசு, இரசம், மனோ சிலை, 100 குளிகைக்கு 50 நேர்வாளக்கொட்டைகள் சேர்த்து சதுரக்கள்ளிச்சாற்றில் அரைத்து மிளகு பிரமாணம் குளிகை செய்யவும். தீரும் ரோகங்கள்-சகலவாய்வு, விக்கல், சத்தி, சல மறிப்பு, வலமறிப்பு, அடைகதல், குத்துதல், சுவாதம்.
47. வைத்தியருக் குற்பணம்
மிளகு பலம்-1, தாளிசபத்திரி பலம்-1, கொடிவேலி பலம் - % சித்தரத்தை பலம்-1, திற்பலி மூலம் பலம்-2, வேர்க்கொம்பு பலம்-1, இலாமிச்சு வேர் பலம்-% இலவங்கம் பலம்-% இலவங்க பத்திரி பலம்/4 பெருநாகம்பூ பலம்-% கடுக்காய்த்தோல் பலம்-1 இவையெல்லாம் சேர்த்து ஒடுகாயவைத்து வறுத்து இடிக்கவும். சர்க்கரை மூன்று பங்கு சேர்த்து வைத்துக் கொண்டு அந்தி சந்தி சாப்பிட்டு வரவும். திரும் ரோகங்கள்-தீன்கூடாதவர்களுக்கும் வாயூறல், அருவருப்பு, செரியாமை, சுவாசகாசம், பழங் காய்ச்சல், மார்பில் வியாதி, கிராணி, பாண்டு, வாதரோகம், கழுத்துக்குள் உண்டான நோய், சத்தி, வயிற்றுக் கழிச்சல், குன்மம், பீலிகை, மூலவியாதி திரும்.
29

48. வலஞ்சலமடைத்தால்
பொரிகாரத்தைப் பொரித்து முலைப்பால், ஆமணக் கெண்ணெயுஞ் சேர்த்து கலக்கிக் கொடுக்க இரு நீரும் உடைக்கும்.
49. கிரந்திக்கு முருக்கிலைப் பற்பம்
முருக்கிலை, குப்பிளாயிலை, குப்பைமேனியிலை, பூனைக்கழற்சியிலை, பருத்தியிலை இவை வகை1பிடி. கீச்சுக்கிட்டம்-2களஞ்சு ஊசிக்காந்தம்-1களஞ்சு கிருமிசத்துரு-1களஞ்சு பழப்புளி-உரிக்காத பாக் களவு நன்கு இடித்து துாள்பண்ணி ஏழு நாள் பதி னாலு நேரம் சாப்பிடவும். பத்தியம் பிடிக்கவும். கிரந்தி பறங்கி சகலதும் திரும்.
50. கிரந்திக்கு இலைப்பற்பம்
செருப்படி களற்சி மேனி சிவவேம்பு முருக்குத்தும்பை கருக்குவாய் நொச்சி எட்டும் குலந்ததோரளவாய்க் கொண்டு விரித்த
நெல்லரிசிமாவும் மேவியோர் சிறங்கை கொண்டிடித்து மூன்று காசிடை காணுங் கொள்ளே.
5. கீரைப்பாம்புக்குக் கைகண்ட குடிநீர்
பழஅறச்சனம்கிழங்கு - 3களஞ்சு, கிருமிசத்துரு1களஞ்சு. செப்புநெருஞ்சிச்சாறு-1சிறங்கை. அரைப்படி தண்ணிர் காற்படியாக வற்றக் காய்ச்சி மூன்று நேரம் கொடுக்க கூட்டோடு விழும்.
23

Page 21
52. வாதம், நோ இவைக்கு ஒத்துப்பொட்டணம் கைகண்டது)
பெருமருந்து, நொச்சி, கான்றை, இயங்கு, மாவி லங்கம்பட்டை, உத்தமாகாணி, எருக்கு, வாத மடக்கி, வெள்ளறுகு இவை வேர்வகை. அமுக்கிரா, பறங்கிக்கிழங்கு, நிலப்பனை, பிரப்பங் கிழங்கு, சிவனார் வேம்பு, கான்றை, நொச்சி, வாத மடக்கி - கற்க வகை திரிகடுகு, கடுகு, உள்ளி, காயம், கரியபவளம், சாளியா, கற்பூரம், சாம்பிராணி, வெளுத்தல்பிசின் இவை சரக்கு வகை-1களஞ்சு வேர், இலை ஒவ்வொரு பிடி. சாராயம் விட்டு இடித்து பொட்டளி கட்டி அவித்து வேப்பெண்ணெய் தோய்த்து பிடிக்கவும்.மறுபடி கழுதை விட்டையும் வெள்ளாட்டுப் புழுக்கையும் அவித்துக் கழுவவும்.
53. கறுப்புத்தூள் பொன்னரிதாரம், பொரிகாரம், பெருங்காயம், வெண்காரம், லிங்கம், கருஞ்சீரகம், இரசம், கெந்தகம்சமஅளவு.
54. விசங்கமாரிச்சூறணம்
திரிகடுகு, கராம்பு, பெருங்காயம், சாதிக்காய், வெட் பாலரிசி, ஓமம், சாதிபத்திரி, வாலுளுவை, இருசீரகம், குங்குமப்பூ, அதாவரிசி, கோட்டம், கோரோசனை, வெளுத்தல்பிசின், இலவங்கம், நெரியரிசிப்பால், கடுகு, அதிமதுரம், கண்டில்வெண்ணெய், பற்படாகம்,
24

கடுக்காய், கார்புகாவரிசி, கற்கடகசிங்கி, மாய 3காய், உலுவா, சிறுநாகம்பூ, அதிவிடயம், விளாலரிசி, செண்பகப்பூ, கறுவா, உள்ளி, சிறுகுரும்பை, இந்துப்பு, கல்நார், சதகுப்பை, அக்கரா, கல்மதம், கடுகுரோசனை, பீநாறி, செஞ்சந்தனம், பச்சைக் கர்ப்பூரம், தேவதாரம், சிற்றரத்தை, பேய்ப்புடோல் சமுலம் இவை வகை-1களஞ்சு. நன்கு சூறணிக்கவும். அனுபானம் - காலை - பசுநெய்
மாலை - இஞ்சிச்சாறு 7 நாள் சாப்பிடவும். சலம் சுத்தமாய் வரும் வரையில் கொள்ளவும். அதற்கு மேல் முழுகவும். பத்தியம்-பாலும் சோறும். நெய், பாசிப்பயறு, பொன்னாங்காணி, அரைக்கீரை, தூதுவளங்காய் இவை பிரதானமாய் முறிந்த நோய்க்கு ஆகும்.
55. லிங்கக்கட்டு
லிங்கத்தை மூன்று நாள் மங்கையர் பாலில் ஊறப் போட்டு எடுத்துக்கொள்ளவும். திரும்பிடச் சுருக்குக் கொடுக்கவும். இயங்கம்பழச்சாறு, குப்பை மேனிச் சாறு, ஐவிரலிச்சாறு, தேசிப்புளி, கொப்பாந்தேன், முலைப்பால் - சுருக்கம் கொடுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
56. லிங்கக்கட்டு வேறு
லிங்கத்தை 3நாள் மங்கையர் பாலில் ஊறவைத்து உலர்த்தி முன் சொன்ன முறையாய்ச் சுருக்கம்
25

Page 22
கொடுத்து எடுத்து வைத்துக்கொண்டு சுருள்தங்கம்10களஞ்சு லிங்கத்துக்கு-1களஞ்சு தங்கம் வாங்கி நறுக்கி குன்றிமணிப்பருப்பெடுத்து அரைத்து தங்கத்துண்டில் பூசிக்கவசம் செய்து மறுபடி சீலைமண் கவசம் செய்து புடம் போடவும். லிங்கம் கட்டாகும். அதை எடுத்துச் சகல நோய்க்கும் தகுந்த அனுபானத்திலிடவும்.
57. லிங்கக்கட்டு வேறும்
லிங்கம் ஒரு பலம் வாங்கி முலைப்பாலில் சுருக்கிட்டு வெய்யிலில் காயவைத்து எடுத்து, ஐவிரலிச் சாற்றில் சுருக்கிட்டு, மறுபடி இயங்கிலைச்சாற்றில் சுருக்குக் கொடுத்து மறுபடி மேனிச்சாறு, மறுபடி தேசிப்புளி, மறுபடி கொப்பாந்தேன், இப்படிச் சுருக்கங் கொடுத்து லிங்கத்தை எடுத்து, லிங்கத்தை முடிச் சீலை நன்கு சுற்றி மறுபடி கவசம் கறியுப்பினால் நல்லாகக் கவசம் கட்டி மறுபடி மண்சீலை வலுவாகச் செய்து கணக் காகப் புடம் போடவும்.
58. தசமூலச்சூறணம்
தானென்ற தெசமுலச் சூறணத்தைச் சாற்றுகிறேன்
இந்நிலத்தில் சார்பாய்க்கேளு வானென்ற சிவனுடைய வேம்பு சிந்தில் மண்ணில்
வளர் தாழங்கிழங்கு பூவரசு இயங்கு நன்னாரி சிறுகுறிஞ்சி அமுக்கிரா வெள்ளறுகு
வானென்ற பறங்கியொடு பத்துங்கூட்டி இவை வகை தானிரண்டு கூட்டிக் கொள்ளே.
26

பலமான சரக்குவகை சொல்லக் கேளு
திரிகடுகு வெளுத்தல் ஏலம்
குணமான சந்தனம் கற்பூரத்தோடு
கோதிலாத் தக்கோலம் சிறுநாகம்பூ
வலிநாகம்பூ அதிமதுரம் மரமஞ்சல்
மஞ்சிட்டி மாஞ்சில் இலவங்கப்பத்திரி அபினி
இவைதான் களஞ்சிரண்டு இளவறுப்பாய்
வறுத்திடுவாயே.
வறுத்திடுவாய் கருவேம்பு பலந்தானிரண்டு
வாகான கோரக்கர் பலமே நாலு சிறந்திடவே சுத்தி செய்து சிறந்த துTள்
அதனோடு ஒக்கக் கறுத்திடவே பனைவெல்லம் பலந்தானெட்டை
கலந்திடிக்கச் சூறணமாம் சாமம் மூன்றில் பொறுத்திடித்துத் தூளதனை
சகல நோயும் போக்கவே மகிழ்ந்து வெருகடிதான்
கொள்ளே,
கொள்ளடா அந்தி சந்தி குறிப்பாக வென்னிர் கொண்ட பின்பு விள்ளெடா தேகமெல்லாமிறுகிப்போம்
மகத்தான சூறணத்தின் வலிமை மெத்த தெள்ளடா தெசவாய்வுப் பிடிப்புத்திரும்
தேய்ந்திடுமே பறங்கியொடு குட்டம் திரும் வெல்லடா தேகத்தில் உட்டணந்திரும்
மிகுந்த குடகிரி வாய்ப்புற்றுப் பறக்கும் பாரில்.
27

Page 23
பாரெடா பல்வலிதான் முகவாதங்கள்
பருவத்திலுள்ளதொரு பாண்டுரோகம் நீரெடா நேத்திரத்தின் கோசம் காசம் நீரழிவு பொல்லாத ரோகம் வேரோடே பிடுங்கிவிடும் விமலன் வாக்கால்
விளம்பியதோர் மெய்யென்று நம்பு திண்ணம் சேரெடா அரிவையரை மதனபாணம்
சென்றதுபோற் செய்யுமெடா நம்பிச் செய்யே.
59. வேர்க்லிகாம்புச்சூறணம்
வேர்க்கொம்பு-1பலம், இருசிரகம், மல்லி, மதுரம், ஓமம், அக்கரா, அதிவிடயம், கறுவா, ஏலம், கராம்பு, உலுவா, அரத்தை, சாதிக்காய், சாத்திரபேதி, மிளகு, திற்பலி, திற்பலிமுலம், இந்துப்பு வகை-1களஞ்சு. காயம்-2களஞ்சு. குங்குமப்பூ -%களஞ்சு
60. வேர்க்லிகாம்புச்சூறணம் வேறு
கோட்டம், மதுரம், திற்பலி, அரத்தை, சீரகம், சாத்திர பேதி, பெருங்காயம், இந்துப்பு, சாதிக்காய், ஏலம், கடுகுரோகிணி, உலுவா, உள்ளி, வெளுத்தல்பிசின், அசமதாகம், அதிவிடயம், மல்லி, கடுகு இவை வகை1களஞ்சு. வேர்க்கொம்பு - 20களஞ்சு. சூறணிக்கவும். அனுபானம் - இஞ்சி, உள்ளி, சாறனை அவித்த நீரும் தேனும்.
28

துவாலை கண்டால் ஆவாரை அல்லி, வேர், பூவும் அரைத்து தூளுடன கொடுக்கவும். ஆக அதிக மானால் சர்க்கரை கலந்து கொடுக்கவும். இருவேளை சாப்பிடவும்.
61. இருமலுக்குச்சூறணம்
நற்சிரகம், திற்பலி, மதுரம் வகை-3களஞ்சு. ஏலம், இலவங்கம், கராம்பு, வசுவாசி, சாதிக்காய், மாயாக்காய், திரிபலை, இந்துப்பு, கோட்டம், மிளகு, உலுவா வகை-1களஞ்சு.
கண்டங்கத்தரித்துாள்-1பலம். கண்டங்கத்தரி விரை-1பலம். துாதுவளை வேர், அமுக்கிரா வேர்-1பலம். இவைகளை இடித்து துாள்பண்ணி சீனி பனங் கல்கண்டு -1பலம் பசுநெய்-%படி. விட்டு அடுப்பேற்றி கொதிப்பித்து கீழே இறக்கி வைத்துக் கொள்க.
பிரமாணம்-வெருகடி
அனுபானம்-தேன் திரும் ரோகம்-மூலகாந்தி, வரட்சி, இருமல், ஈளை, முட்டு, சிலேட்டுமச்சறளி மாறும்.
62. சறளிலவட்ட மருந்து
பெருமருந்துவேர், மல்லி, கராம்பு, உலுவா வகை சமன் எடுத்து புழுங்கல் அரிசியில் போட்டவித்த கஞ்சியில் கொடுக்க சறளி வெட்டும்.
29

Page 24
63. நந்தி சிந்தாமணிபற்பம்
வசுவாசி, வெண்காரம், குரோசாணி வகை-2களஞ்சு வேம்பாடல், நாகம்பூ, சிறுதேக்கு, ஏலம், உள்ளி, அதிவிடயம் வகை-2களஞ்சு இருசீரகம், வால்மிளகு, கஞ்சா, அபின் வகை-1களஞ்சு அக்கரா, ஓமம், மதுமத்தம்வித்து, கராம்பு, பிள்ளை திற்பலி, அரிதாரம், மதுரம், சாதிக்காய், குங்குமப்பூ லிங்கம், கோரோசனை வகை-1களஞ்சு. % காந்தம், கடுகுரோசனை, கோட்டம், இந்துப்பு, பெருங்காயம், வெட்பாலை, வாலுளுவை, கற்கடக சிங்கி, இலுப்பைப்பூ, இஞ்சி, தாமரைப்பூ, சதகுப்பை, கிருமிசத்துரு வகை-2களஞ்சு. அளவாக எடுத்து உலர்த்தி இடித்து 7 புடமிட்டு வைத்துக்கொள்க.
பிரமாணம்-வெருகடி அனுபானம்-சீனி, தேன், பனங்கட்டி இருவேளை தின்னவும். தீரும் ரோகங்கள். குன்மம்-18, வாதம்-80, பித்தம்-40, கோளை, ஈளை, இளைப்பு, விக்கல், முட்டு, தொய்வு, பழங்காய்ச்சல் (நாட்பட்ட காய்ச்சல்), கனல், குரு வீக்கம், சன்னி-13, கழிச்சல், சத்தி, வயிற்றுநோ, பொருமல்.
64. வைத்திய சிந்தாமணி
கோட்டம், பேரரத்தை, வெண்காரம், சித்தரத்தை, அமுக்கிராய், சிறுநாகம்பூ, மதுரம், வாய்விடங்கம்,
குங்குமப்பூ, கராம்பு, வாலுளுவை, மரமஞ்சல்,
30

வசுவாசி, வால்மிளகு, மாஞ்சில், சாதிக்காய், விழால்அரிசி, அதிவிடயம், சதகுப்பை, செண்பகப்பூ, செவ்வியம், கல்நார், பூதவிருக்கம், செஞ்சந்தனம், குக்கில், கல்மதம், சிறுதேக்கு, சிற்றேலம், தேவதாரு, திற்பலிமுலம், ஏலம், கிருமிசத்துரு, பெருங்குரும்பை, இலவங்கம் செவ்வள்ளி, கடுகுரோகிணி, திற்பலி, மாம்பிசின், குரோசானி, மிளகு, மாயாக்காய், இந்துப்பு, வேர்க்கொம்பு, மரமஞ்சல், பெருங்காயம், ஓமம், உள்ளி, மதுமத்தம்விரை, மாஞ்சில், சாத்திர பேதி, அபின், இஞ்சி, சாதிலிங்கம், மல்லி, கெந்தகம், மனோசிலை இவை வகை-1களஞ்சு.
கஞ்சா-4பலம் வேர்வகை - சாரணை கொடிவேலி, காண்டை, அவுரி, புங்கு, பெருமருந்து, சாயவேர், காற்றோட்டி, வெள்ள றுகு, சிவனார்வேம்பு, ஆடாதோடை வகை-3களஞ்சு. எடுத்து இடித்து அரித்து மூன்று புடமிட்டு வைத்துக் கொள்ளவும்.
பிரமாணம்-வெருகடி அனுபானம்-சீனி, பனங்கட்டி, தேன், இஞ்சி, வென்னிர் திரும்ரோகங்கள் - குன்மம்-18, வாதம்-80, ஈளை,
கோளை, படுவன், கழிச்சல், சன்னி-13, கசம்-64, சத்தி, விக்கல், பிளவை, கட்டுவியாதி, நீரழிவு, மூலம் - 6 செவ்வாப்பு, வாய்வுப்பொருமல், குத்து மற்றும் பல வியாதிகள்.
65. வசுவாசிக்கறணம்
ஏலம், கோட்டம், குங்குமப்பூ, இருசிரகம், இந்துப்பு,
திற்பலிமுலம், இலவங்கம், கிளியூறல், மதுரம், செஞ்
3.

Page 25
சந்தனம், மிளகு, நாகம்பூ, பொரிகாரம், வகை1களஞ்சு.
வசுவாசி-9களஞ்சு
திற்பலி-4களஞ்சு சித்தரத்தை சாதிக்காய் வேர்க்கொம்பு கராம்பு வகை3களஞ்சு
இடித்து 9 புடம் செய்து கொள்க. அனுபானம்-இஞ்சி, தேன், கற்கண்டுப்பொடி, உள்ளி, திரும் ரோகங்கள்-குத்து, கொழுவல், கழிச்சல், சத்தி
66. வெள்ளறுகுப் பற்பம்
நெல்லி, மிளகு, மஞ்சல், கடுகு, கராம்பு, வசம்பு, வேர்க்கொம்பு, திற்பலி, இந்துப்பு, இரசம் வகை1களஞ்சு சிவனார்வேம்பு, வெள்ளறுகு, கொடிவேலி, நன்னாரி, இயங்கு, சீந்தில் வகை-1பிடி.
இடித்துத் துரள் செய்க.
பிரமாணம்-வெருகடி
அனுபானம்-தேன் திரும் ரோகங்கள்-முட்டு தொய்வு, சிற்றிளைப்பு, கை கால் ஓய்தல், பிடிப்பு, உட்டணம், வெள்ளை மற்றும் பல வியாதிகள்.
பத்தியம்-உப்பு, புளிதள்ளவும்.
67. சீவறட்டினாதி
சாதிலிங்கம், சாதிக்காய், களற்சிப்பருப்பு, இந்துப்பு, மனோசிலை, வசுவாசி, வெள்ளைப்பாஷாணம்,
32

கராம்பு, பெருங்காயம், வகை-1களஞ்சு. சுக்கு, பூமத்தம்வித்து, சாதிலிங்கம்-5களஞ்சு தகரைப்பருப்பு, கஞ்சாவிரை-1/2களஞ்சு. ஞாயிற்றுக்கிழமை காலை வடக்கு முகமாக இருந்து முலைப்பால் விட்டு அரைத்து, பின்பு இஞ்சிச்சாறு விட்டரைக்க. பிரமாணம்-குன்றிமணி நிழலுலர்த்திக் கொள்க. அனுபானம்-சுரத்துக்கு-நாரத்தையிலைச்சாறு. கட்டுக்கு-சீனி சந்தனம், இளநீர், முலைப்பால். வயிற்றுளைவு, காய்ச்சலுக்கு-தேங்காய்ப்பால் குத்துக்கு-சுக்குநீர் தேன் சத்திக்கு-நெற்பொரி, கருப்பஞ்சாறு வயிற்றுவலிக்கு-வெற்றிலைச்சாறு, தேசிப்புளி
68. லபண்கள் வெள்ளைக்கு தக்காளி, மணித்தக்காளி, இரண்டும் சமனாய் இலையும் காயும் ஆய்ந்து கயாளமிட்டு உள்ளுக்குச் சாப்பிடவும்.ஒன்றுக்குப் போகும் போதெல்லாம் யோனியில் படும்படி கழுவவும்.
69. தீராத வெள்ளைக்கு
படிகாரத்தைப் பொடித்து அதுக்குச் சமன் கற்கண்டு நெல்லிவற்றல் தோலும் இரண்டுமொன்றாய் கலந்து இடித்து வஸ்திரகாயம் செய்து வைத்துக்கொண்டு வேளைக்கு இரண்டு வராகனிடை அளவாக தினம் 3 வேளை பசுவின் மோரில் போட்டுச் சாப்பிடவும். 7 நாட்சாப்பிட தீராத வெள்ளை, நீர்க்கடுப்பு திரும். இச்சாபத்தியம்.
33

Page 26
ஒருசமயம் இருமல் காணுமாயின் பசுப்பால் கறந்த உடனே சாப்பிடவும்.
70. சிவகரந்தைச் சூறணம்
சீனப்பாகு-3பலம், கடுக்காய்-2பலம், கருஞ்சீரகம்2பலம், கார்புகாவரிசி-3பலம், கூகைநிறு-5விராகன், சிவகரந்தை, முடக்கொத்தான், குப்பைமேனி, நில பாவல், அவுரி, துளசி, முருக்கு, இயங்கு, நொச்சி, களற்சி, வேம்பு, கண்டங்கத்தரி, பொன்னாவாரை, புளியமிலை, கோழியாவாரை இவை வகை-1பிடி. சூரியபுடமிட்டு சரக்கையும் இலையையும் உரலில் இட்டு இடித்து பொடியாக்கி மோர், சீனியில் தின்று வர மேகவியாதி யெல்லாம் பறக்கும்.
71. மிறுத்தியுண்டை
அதிமதுரம், ஏலம், இலவங்கம், கல்நார், சாத்திர பேதி, சாதிக்காய், செண்பகப்பூ, செங்கழுநீர், கோட் டம், கலையின் கொம்பு, உருத்திராக்கம், கோரோ சனை, முசுற்றுமுட்டை, நிலவேர், கமலவளையம், கற்கம் எல்லாம் எடுத்து முலைப்பாலில் அரைத்து பிரண்டைக் காயளவு உருட்டிக் கொள்ளவும். தீரும் ரோகங்கள்-சந்நிவாதசுரமானால், தாபகர மானால் - சிரட்டையில் முலைப்பால் கறந்து அதில் 1 உருண்டை கொள்ள சுரமனைத்தும் திரும்.
: 34

72. சுரத்துக்குச் சிவப்புக்குளிகை
சாதிக்காய், கராம்பு, வசுவாசி, பொன்னரிதாரம், சாதிலிங்கம், வெட்பாலையரிசி, கோட்டம், கெந்தகம் வகை-1களஞ்சு. அரைப்பு:இஞ்சிச்சாறும், முலைப்பாலும் கூட்டி அரைக்கவும்.
பிரமாணம்-சுண்டங்காய் அனுபானம்-இஞ்சி, முலைப்பால் திரும் ரேர்கங்கள்-சுரம் முறைச்சுரம்.
73. சந்நிக்குக் காயம்
கடுகு, மிளகு, வசம்பு, உள்ளி, வெண்காயம், பெருங் காயம், சதகுப்பை, வேர்க்கொம்பு, சந்நிகளநாயகன், வெளுத்தல்பிசின், இருசிரகம் வகை-சமன். எடுத்து வேலிப்பருத்திச்சாறும் சமனாக விட்டு அரைத்துக் குளம்பாகக் காய்ச்சி உள்ளுக்குக் கொடுத்து மேலும் பூச 18 சந்நியும் திரும்.
74. மூக்கு நசியம் (சந்நீக்கு)
எருக்கம்பால் புதுச்சட்டியில் விட்டு திருநீறு போட்டுக்குளப்பி ஒருசாமமளவும் நீறான பின் அந்த நீறுடன் மிளகு, வேர்க்கொம்பு, மஞ்சல் சரிசமன் துாள்செய்து நாசியில் ஊத சகல சந்நியும் மாறும்.
35

Page 27
75. வயிற்றுவலிக்குப்பற்பம்
கராம்பு, வசுவாசி, சாதிக்காய், வேர்க்கொம்பு, மிளகு, ஏலம், இலவங்கம், ஓமம், வேம்பாடல், வெண்குந்தி ருக்கம், விளாம்பிசின், இலவம்பிசின், புளியங் கொட்டைத்தோல், மரமஞ்சல்பட்டை, நீர்ப்புல்லாந் திப்பட்டை, கைப்பு, களிப்பாக்கு வகை சமன் எடுத்து உலர்த்திச்சூறணிக்கவும். அனுபானம்-தேன், எருமைமேர் தீரும் ரோகங்கள்-உளைவு, கடுப்பு, கிராணி
76. வயிற்றுக்கடுப்புக்கு வநய்கை கண்டது)
நெய்-1நாழி, சதகுப்பை, கொத்தமல்லி, அதிமதுரம், செண்பகப்பூ, ஏலம், நற்சிரகம், கற்கண்டு வகை சமன் எடுத்து அரைத்து நெய்யில் கரைத்து மெழுகுபதம் வடித்து ஒரு கரண்டி வீதம் சாப்பிடவும்.தலைக்கும் வைக்கவும். திரும் ரோகங்கள்-வயிற்றுவலி, மூலவாய்வு, குடல் வாதம், சத்தி, குன்மம், இரத்தக்கழிச்சல், வெப்பு, கண்ணெரிவு .
77. பித்தம் நாற்பதுக்கும் அதிமதுரச் சூறணம்
அதிமதுரம், கோட்டம், தாளிசபத்திரி, திரிகடுகு, ஏலம், நெல்லிப்பருப்பு, மாஞ்சில், சந்தனத்தூள், கராம்பு, சீரகம், நன்னாரி, மஞ்சிட்டிவேர் சிறுநாகம்பூ வகை1பலம்.
= 36

பச்சைக்கற்பூரம்-2களஞ்சு. சேர்த்து இடித்துச் சூறணிக்கவும். பிரமாணம்-வெருகடி அனுபானம்-சர்க்கரை, 10 நாள் சாப்பிடவும்.
78. குக்கலுக்குக் குளிகை
திரிகடுகு, திற்பலி, ஏலம், மிளகு, வகை-சமன். இளநீர் மட்டை சுட்டு பிழிந்து கோரோசனையுங் கூட்டி அரைத்துக் குளிகை பண்ணி வென்னில் கொடுக்க வும். குக்கல், இளைப்பு, இருமல் மாறும்.
79. குக்கலுக்குக் குளிகை
சிறுதிற்பலி, கொச்சிஏலம் வகை-2களஞ்சு. பொட்டளி கட்டி இளநீர் விட்டவித்து மட்டைச்சாறு விட்டரைத்து சில்லாகப் பிடித்து நிழலுலர்த்திக் கொள்க. அனுபானம்-வென்னிர். திரும் ரோகங்கள்-நெஞ்சுக்கட்டு, இளைப்பு.
80. மூச்சு, சந்தி, குத்து கொளுவல், சுவாதத்துக் குக் குளிகை (கை கண்டது)
கல்நார், கல்மதம், சாத்திரபேதி, கோட்டம், செண்ப கப்பூ, மதுரம், திற்பலி, ஏலம், இலவங்கம், கோரோ சனை, சாதிக்காய், உருத்திராட்சம், மான்கொம்பு தாமரை, வளையம், முத்தற்காசு, முசுற்றுமுட்டை, பூநாகம் வகை-1களஞ்சு.
அரைப்பு-முலைப்பால்
37

Page 28
அனுபானம்-முலைப்பால் திரும் வியாதிகள்-முச்சு, சறளிக்கட்டு, காய்ச்சல், இருமல், சுவாசத்தெண்டல், குத்து, கொளுவல், நாவ றட்சி, சுவாதம், வேர்வை.
8. சிறுபிள்ளை செவ்வாப்புக் கபிடிக்கு
முசுற்றுமுட்டை, முத்தற்காசு, சிறுபுள்ளடி, நாயுருவி, உள்ளி, வசம்பு கூட்டி அரைத்து நல்லெண்ணெயில் பிசைந்து பூசி வாழையிலையில் கிடத்தவும். பிறகு வாழையிலையை வழித்துத் தண்ணில் போட இரத்தம் குதிக்கும்.
82. கோளை, குத்து இருமலுக்குச் சூறணம்
கைகண்டது)
இருசீரகம், அசமதாகம், திற்பலி, கராம்பு, வசம்பு, கடுக்காய், நெல்லிக்காய், களற்சிப்பருப்பு, வேப்பம் நெட்டு நொச்சியிலை சமன் கூட்டி இடித்து வடிகட்டி எடுக்கவும். பிரமாணம்-வெருகடி அனுபானம்-நல்லெண்ணெய் திரும் வியாதிகள்-சிலேட்டுமம் மேல்மூச்சு கோளை இருமல்,
83. மூச்சுக் குளிகை
பொரிகாரம், முக்கடுகு, லிங்கம், நாகம் அரைப்பு:இஞ்சிச்சாறு, தேசிப்புளி, தோடம்பழச்சாறு. பிரமாணம்-பயறு. அனுபானம் - சுரத்துக்கு-முருக்கம்பட்டை
பித்தத்துக்கு-சீனி சேடகரத்துக்கு-கழுநீர்.
38

84. அறுபத்தினான்கு சுரத்துக்குக் குளிகை
வெள்ளைப்பாஷாணம், லிங்கம், கோட்டம் வகை1களஞ்சு, பாஷாணத்தைப் பசுப்பாலில் கொஞ்சம் அவித்து பின்பு எலுமிச்சம்புளி விட்டரைக்கவும். (4.5FITLDub)
பிரமாணம்-பயறு. அனுபானம்-இஞ்சி தேன் முலைப்பால் திரும் ரோகங்கள்-வாத பித்த சிலேத்துமம் பத்தியம்-கஞ்சி.
85. சுரத்துக்கு ஆனந்த பைரவி
சாதிலிங்கம், வற்சநாவி, மிளகு, வெண்காரம், திற்பலி
வகை-சமன்.
அரைப்பு-எலுமிச்சம்புளி
பிரமாணம்-குன்றி.
அனுபானம்-சுக்கவித்த நீர், கொத்தமல்லிநீரிலிட:
வாதசுரம்
ஆடாதோடை, சுக்குக் காய்ச்சிய நீரிலிட-சேடகரம் முலைப்பாலிலிட - சந்நிவாதசுரம் மிளகுப்பொடியும் சர்க்கரையும் காய்ச்சியிட-சுரம்,
கழிச்சல் என்பன மாறும்.
86. இருமலுக்குக் கூஷ்மாண்ட லேகியம்
நீற்றுப்பூசணிக்காய், பால், நெய், தேன் சமன்.
சரக்கு திரிகடுகு, நற்சிரகம், கூகைநீறு, இலவங்கம், ஏலம், கோட்டம், கராம்பு, வசுவாசி, செண்பகம்,
நாகம்பூ
39

Page 29
87. வாயுவுக்குப்பூச்சு வாதப்பூச்சு) இருசீரகம், சதகுப்பை, திரிகடுகம், வசம்பு, உள்ளி, இயங்கு, கடுகு, மஞ்சல், உலுவா, சாளியா, வெழுத் தல், அதிமதுரம், இளங்கலையன்(அரிசி), அரிசி, அவித்த நீரில் அரைத்துப்பூசவும்.
88. வலிகளுக்கு நசியம் கை கண்டது) உள்ளி, வேர்க்கொம்பு, அவுரி பொடி செய்து நாசியில் ஊதவும்.
89. பிரமேகப்பாகு உள்ளி, எலுமிச்சம்புளி, தேங்காய்ப்பால், நல்லெண் ணெய், கொடிவேலிவேர். நற்சிரகம், திற்பலி ஓமம்,
90. பிரமேகசூலைக்குப் பற்பம் வேர்வகை-கண்டங்கத்தரி, மணித்தக்காளி, தூது வளை, வட்டுக்கத்தரி, சரக்கு-ஏலம், இலவங்கம், வாலுளுவை, இலவம், வெட்பாலரிசி, விழாலரிசி, மாஞ்சில், மஞ்சிட்டி, கோட்டம், கடுகுரோகிணி, திரிபலை, கொத்தமல்லி, முச்சீரகம், திரிகடுகு, வால்மிளகுவகை-சமன் அனுபானம்- காலை-சீனி
அந்தி-தேன்
9. ஆடாதோடை மிறுத்தியாதி திரிகடுகு, வெண்காரம், வசம்பு, வெளுத்தல், கடுகு, உள்ளி, காந்தம், லிங்கம், அரத்தை, கோட்டம், கராம்பு, ஓமம், வாளம், மதுரம் வகை-1களஞ்சு.
40

இரசம்-2களஞ்சு வாளம், இரசம் சுத்தி செய்யவும். இவைகளைப் பொடி செய்து கல்வத்திலிட்டு ஆடா தோடையிலைச்சாறு விட்டு இருசாமம் அரைக்கவும். பிரமாணம்-மிளகு அனுபானம்-நோய் கண்டு கொடுக்கவும்.
மூச்சுக்குநிலவேர், முசுற்றுமுட்டை, தோடை இலை, அரத்தை, இஞ்சி சமன் எடுத்து வறுத்து அவித்து பிழிந்த நீரிலிடவும்.
92. சறுவாடநாதிக் குளிகை
கடுகுரோகிணி, கெளரிபாஷாணம், வெள்ளைப்பாஷா ணம், வாய்விடங்கம், சாதிக்காய், கராம்பு, வசுவாசி, வேர்க்கொம்பு, களற்சிவிரை, கஞ்சாவிரை, பூமத்தை விரை மனேசிலை வகை-1களஞ்சு. லிங்கம்-களஞ்சு சரிக்குச்சரி அரைப்பு:இஞ்சிச்சாறு. நாள் ஒன்று. பிரமாணம்-சாமிப்பிரமாணம், அனுபானம்-கழிச்சலுக்கு-தேன்
காய்ச்சலுக்கு-முலைப்பால்
காந்தலுக்கு-சந்தனம்
கிராணிக்கு-விளாங்காய்
93. வெப்புப் பார்வைக்கு
சுக்கு பத்துப் பலங்கொள்ளு
துய்ய மிளகு பலம் மூன்று கருஞ்சீரகம் கோட்டமுடன் ஓமந்தானும்
பலம் மூன்று மிக்கவுள்ளி பலம்
41

Page 30
இருபது மேவுங்காயம் பலமொன்று
தக்க கருஞ்சீரகம் பலமரைக்கால் சரியாய் வோட்டில் வறுத்து எடே.
வறுக்கும் சரக்கதெல்லாம் தோதாகப் பொடிபண்ணி
துய்ய பனையின் கட்டியதுடன் போட்டு பெருங்காயம் உருக்கியிட்டுப்
பிறகுள்ளி நறுக்கியிட்டு உள்ளி நறுக்கியிட்டவுடனே எள்ளிலெண்ணெய்
விட்டு மெள்ளச் சட்டிதனில் போட்டு விரும்பிப் பிசறிக்காயமாக்கித் துள்ளும்
நெருப்பில் வைத்துச் சுறுக்காய் கலயந்தன்னில்? புகட்டிக் கொள்ளும்
வெருகடிப் பிரமாணம் கூட்டிக் கொள்ளும்,
தீரும் நோய்கள்-10நாளைக்குச் சாப்பிட பெரு வயிறு கரையும். குடற்பிணி பலதும் மாறும். வென்னிர் தான் குடிக்க வேண்டும்.
94. பறங்கிப்புண்ணை அறிய
கையாந்தகரையிலைச்சாறு புண்ணில் பூசி வைத்தால் சொறிவு தோன்றினால் பறங்கிப்புண்ணல்ல என்றறியவும்.
95, இளைப்புத் தீர மருந்து
கத்தரிப்பழச்சாறு, மிளகு, பால் சேர்த்துக் குடிக்கத் திரும்.
42

96. கண் வியாதிக்குப் புறவளையம்
சீனக்காரம், மஞ்சல், கடுக்காய், அபின் கடுக்காயைச் சுட்டுச்சாம்பல், மாதாளம்பிஞ்சு கட்டசாம்பல், ஆவா மல்லி, எலுமிச்சம்புளி விட்டு இரும்பினாலரைத்து புறவளையம் போடவும். கருவேலந்துளிரும், துத்தமும் கூட்டினால் மெத்த நல்லது.
97. கண்ணில் பழுமாற
பொன்னாம்பலகாணிவேர் நொச்சிச்சாற்றிலரைத்து புறவளையம் போடவும்.
98. அக்கரம் சகலதுக்கும் குடிநீர்
கருஞ்சீரகம், மிளகு, நாகைஉள்ளி, பிரமி, கற்பூர வள்ளி, காஞ்சோன்றி, வல்லாரல், உரிய திற்பலி ஓர் நிறையாய் நாலிலொன்றாய் அவித்து பருகிவரவும். தீரும் ரோகங்கள் - அக்கரம், சுரம், கறுத்தைஅக்கரம், கிரந்தி
99. உரோமம் முளைக்க
மயிரோசனையும் சூடன் கற்பூரமும் எலுமிச்சம் புளியில் அரைத்து குளப்பிப் பொருத்தவும். முளைக்கும்.
100. நல்ல பாம்பு விஷத்துக்கு
காட்டுக்கரடியாற்றின் பிசவற்றலை சாயத்தில் ஊறவைத்துக் குடிக்க நல்ல பாம்பு விஷம் இறங்கும்.
43

Page 31
10. சகல விஷத்துக்கும்
புளிப்பு நாரத்தையின் பருப்பு இரண்டு வராகனெடை தின்ன சகல விஷமும் திரும்.
02. புண் அழுக்ககற்ற
வட்டத்துத்தி இலையும் அரிசிமாவும் சேர்த்தரைத்து கள்ளுவிட்டுக் களிகிண்டிக் கட்டவும்.
103. பவுந்திரக்கட்டுக்கு
நத்தைச்சூரிவேர் பிடுங்கி பசுப்பாலில் அவித்துக் கட்டவும். ஒதியமிலை அவித்துக் கட்டவும். ஆணிச்சிதலும் எடுபடும்.புண்ணும் மாறும்.
104. பிதற்றலுக்குக் குடிநீர்
மிளகு, வேர்க்கொம்பு, திற்பலி, துாதுவளை வேர், சீந்தில்கிழங்கு, வட்டுவேர் சமன் எடுத்து நாலொன் றாய்க் காய்ச்சி தேன்விட்டுக் கொடுக்கவும். நெய்யும் கூட்டவும்.
105. பாண்டு, சோபை, காமாளை, மூலச்சூட்டுக்கு
திரிகடுகு, கெந்தகம், சிறுநாகம்பூ, விழாலரிசி, முத்தற்காசு வகை-1களஞ்சு.சிவதைவேர்-12களஞ்சு சீனி-18களஞ்சு.சூறணம் பண்ணவும். சுகபேதியாகும்.
44

106. சுகபேதிக்கு ஆறணம்
நற்சிரகம்-4களஞ்சு. சீனி-4களஞ்சு. சிவதைவேர்8களஞ்சு. சூறணமாக்கி வெருகடிப்பிரமாணம் தின்னவும். வென்னிர் அருந்தவும்.
107. மருத்தீடு விழவும் பேய்பிசாசுக்கும் கைகண்டது)
திருக்கொன்றையிலைச்சாறும் சோமனாதிப் பெருங் காயமும் உரைத்துக் கொடுக்க எலிக்குஞ்சு போல் விழும்.குருவே துணை.
108. பிறவீச்சுக்கு
கான்றைவேர், இயங்கு, நத்தைச்சூரிவேர், கருஞ் சீரகம், உள்ளி, மிளகு கடுகு பெருங்காயம் இவை சமன். பூசவும். சதுரக்கள்ளி, தேங்காய்ப்பூ ஒரு சிறங்கை வறுத்து பொட்டணி கட்டிப் பிடிக்க பிறவீச்சு சன்னி ஏர்ப்புச்சன்னி மாறும்.
109. நாய்க்கடிக்கு
சாறணை, கடுகு, தேங்காய்ப்பாலில் குடிக்கவும.
10. கரப்பனுக்கு
தேங்காய்ப்பால், துளசி, முருங்கைப்பட்டை, தெளி வெண்ணெய்.
45

Page 32
11. கபிடிக்கு
கரியபவளம், அன்னபேதி, கறுவா மூன்றும் சமன் கொண்டு தேனில் அரைத்து சர்க்கரையில் கொடுக்க வும். கட்டி கரையும்.
12. வாதவாய்வு, வீக்கம் இவைக்கு ஒத்து
நொச்சி, எருக்கு, வாதமடக்கி, அணிஞ்சில்பட்டை
சமன் எடுத்து இடித்து வோட்டில் அவித்து வக்கம்
பிடிக்கவும். 3நாள் - 6நேரத்துக்கு.
13. வசுவாசிச்சூறணம்
ஏலம், இலவங்கம், மரமஞ்சல், அதிமதுரம், நற்சிரகம், திற்பலி, சிறுநாகம்பூ, வேர்க்கொம்பு, மிளகு வகை1களஞ்சு. வசுவாசி-2களஞ்சு. சேர்த்திடித்துச் சூறணமாக்கவும்.
பிரமாணம்-வெருகடி
அனுபானம்-சர்க்கரை.
14. வசுவாசிச்சூறணம் (லபரிய சூறணம்
சாதிக்காய், கராம்பு, ஏலம், திற்பலி, திற்பலிமுலம், வசம்பு, கோட்டம், ஓமம், சுக்கு, அரத்தை, மதுரம், இலவங்கம், வெந்தயம், வாலுளுவை, அதிவிடயம், பீநாறி, சிறுநாகம்பூ, கடுகு, மல்லி, உள்ளி, மிளகு, மரமஞ்சல் தேவதாரம் சதகுப்பை வகை-1களஞ்சு. வசுவாசி-6 களஞ்சு.சேர்த்திடித்துச் சூறணமாக்கி வஸ்திரகாயம் செய்யவும்.
பிரமாணம்-வெருகடி
அனுபானம்-தேன்.
46

15. சுவாதம், சந்நீக்கு தலைக்கு வைக்கிற குளிகை
நாவி, நிறுவிஷம், காந்தம், லிங்கம், உள்ளி, சுக்கு, காயம் வகை-1களஞ்சு. அரைப்பு-உத்தமாகாணிச்சாறு, உருண்டை செய்க. அனுபானம்-கொளுவல் குத்தல் நின்றவிடத்து எருக்கலம் பாலில் உரைத்துப் பூசவும்.தலைக்கும் வைக்கவும்.
ப6. வயிற்றில் புண்ணுக்கு
இயங்கந்தோல், அத்திப்பட்டை, கள்ளிப்பட்டை, ஆலம் பட்டை, அரசம்பட்டை சமன் எடுத்து இடித்து 11நாழி தண்ணிர் விட்டு காய்ச்சி 4நாழியான பின் சரக்குகள்மதுரம், கோட்டம், இலாமிச்சு, கொட்டிக்கிழங்கு, முத் தற்காசு, தக்கோலம், நன்னாரி, இயங்கு, பச்சிலை, முந்திரிகைப்பழம், புனுகுச்சட்டம், மாட்டில்வெண் ணெய் வகை-சமன் எடுத்து கயாளமாக்கி காய்ச்சிக் கொடுக்கவும், திரும் ரோகங்கள்-வயிற்றில்புண், நெஞ்சில்புண்.
17. தாகத்துக்கு
கராம்பு-1பிடி. மாம்பூ-1பிடி நாவலடிமண்-1பிடி. எடுத்து ஓடு காயவைத்து பொன்னிறமாக வறுத்து % கொத்து நீர்விட்டு மூடி இறக்கி ஒரு சிறங்கை தண்ணிர் குடிக்க நிற்கும்.
47

Page 33
18. திருக்கை முள்தைத்தால்,
வெள்ளைப்பாஷாணமும் வேலிப்பருத்தியும் அரைத் துக் கட்டவும். புங்கம்வேர் துருவிக்கட்டவும்.
119. வாத உளைவு முதலியவற்றிற்குக் குடிநீர் சீனப்பாகு, சாதிக்காய், வசுவாசி, கராம்பு, சுக்கு, சித்தரத்தை, வெங்காயம், மிளகு வகை-1%களஞ்சு. துாவளைவேர், இயங்கம்வேர், வட்டுவேர், வெள்ள றுகுச் சமுலம், செங்கத்தாரிவேர், கொடியாள்கூந்தல் சமூலம் வகை-சமன்.4படி தண்ணிர் விட்டு 1பங்காக வற்றக் காய்ச்சிக் குடிக்கவும். திரும் வியாதிகள்-வாதஉளைவு வாதப்பிடிப்பு வாத சூலை, மூலக்கரப்பன். பத்தியம்-உப்பு புளி தவிர்க்கவும்.
120. கோழை சங்கரன்
இருசீரகம், அசமதாகம், வெண்காரம், துரிசு, கெந்தகம், பொரிகாரம், சீனக்காரம், அரிதாரம், கோட்டம், சிவதை, இந்துப்பு, காவிமணி, மனோசிலை, ஊசிக் காந்தம், துத்தம், அக்கரா, மாயாக்காய், திரிபலை, ஏலம், வற்சநாபி, சிறுதேக்கு, கராம்பு, வசுவாசி, சாதிக்காய், திரிகடுகு, முருங்கைக்கொட்டை வன்கை1களஞ்சு. சாதிலிங்கம், செஞ்சந்தனம் வகை-5களஞ்சு. இவற்றை இரண்டாகப் பிரித்து ஒரு பங்கை எடுத்து 10பங்கு வாளம் சேர்த்து விரேசனத்துக்கும் மறு பங்கை பத்தியத்துக்கும் அரைத்துக் கொள்ளவும்.
48

அரைப்பு-தோடம்புளி-1சாமம்.
தோடையிலைச்சாறு-1சாமம். தோடங்காய் தட்டிப்பிழிந்து-1சாமம்.
பிரமாணம்-ஒலுக்கொட்டை அனுபானம்
1.
10.
அக்கினிக்கோழை, ஈளை, இளைப்பு, தண்ணிர்த் தாகத்துக்கு-சந்தனம் இலாமிச்சுவேர் முலைப் பால் கூட்டி கொடுக்கவும். விடாக்காய்ச்சல், இளைப்பு, கொளுவலுக்குவேர்க்கொம்பு, உள்ளி, ஈருள்ளி, முலைப்பால், வேப்பெண்ணெய் கூட்டிக்கொடுக்கவும். சகல சந்நிக்கும்-சிந்தில், சுக்கு பொடி செய்து தேன், வேப்பெண்ணெயில் கொடுக்கவும். சந்நி, சீதளம், கோளை, இளைப்புக்கு-முசுற்று முட்டை, பெருங்காயம் உள்ளி தட்டி அவித்த நீரிலிடவும். சகல விஷம், உளைவு, மாறாட்டம் -வேப்பம் பட்டைச்சாறு, வேப்பெண்ணெயில் கொடுக்கவும். சந்நி, கோழைக்கு-தோடம் புளி, வட்டுவேர், குப்பை மேனிவேர், எலுமிச்சைப்பட்டைக் கஷா யத்திலிடவும். வயிற்றுப்பிரட்டுக்கு-மிளகு, உள்ளி, அவித்த நீரில் கொடுக்கவும். பிதற்றுசந்நிக்கு-வேப்பம்பட்டை, பேய்மருட்டி யிலைச் சாற்றிலிடவும். சந்நிக்கு-சுக்கு, இருசிரகம், சிந்தில், முருங்கை வேர் கஷாயத்திலிடவும். எல்லாவற்றிற்கும்-ஆடாதோடை, குப்பைமேனி வேடுகட்டி அவித்துப் பிழிந்து கொடுக்கவும்.
49

Page 34
121. வயிற்றால்மறிப்புக்கு மிஞ்சினால் பூச மருந்து
ஆவாரந்துளிரை முலைப்பால் விட்டரைத்து தொப்பூளில் பூசவும்.
22. வேறு
தும்பையிலைச் சாற்றில் அபின் சேர்த்து அரைத்துப் ԱԺ6ւյլb.
23. கல்விசித்திக்கு கை கண்டது)
மதுரம், அமுக்கிராய், செப்புநெருஞ்சில்வேர், நிலப் பனை, சாத்தாவாரி, இலவம்பிசின் வகை சமன் எடுத்து தூள் செய்து சீனி கலந்து தேனில் அல்லது பசுப்பாலில் அந்தி சந்தி 7நாள் 14நேரம் தின்னவும். 7ஆம் நாள் தலைமுழுகவும். திரும் ரோகங்கள்-தலைக்கரப்பன் கபாலக்குத்து கண்குத்து, பித்தரோகம், பித்தபாண்டு, கல்விசித்தி, குரல்தேறும், கீதம்பாடும். கவுசிகமுண்டாகும்.
24. கோளை குத்திருமலுக்குச் சூறணம்
கை கண்டது)
இருசீரகம், அசமதாகம், கராம்பு, கடுக்காய், நெல்லிக் காய், களற்சிப்பருப்பு, வேப்பம்நெட்டு, நொச்சியிலை, சமன் எடுத்து சூறணம் செய்து கொள்ளவும். பிரமாணம்- வெருகடி
அனுபானம்- நல்லெண்ணெய் திரும் ரோகங்கள். மேல்மூச்சு, கோளை, இருமல், குத்து கொழுவல்.
50

125. சிறுபிள்ளை பறங்கிக்கு கை கண்டதும்
வேப்பங்கொட்டை, பூவரசம்பட்டை, இயங்கம்வேர், வகை சமன் கூட்டி இடித்து வஸ்திரகாயம் செய்து அதே நிறை கொட்டைத்தேங்காயும் பனங்கட்டியும் சேர்த்து உரலிலிட்டு இடித்து இரசம்-2மஞ்சாடியும் கையாந்தகரைச் சாற்றில் கொடுத்து ஒன்றாய் இடிக்கவும்.
அனுபானம்- நெய். திரும் ரோகங்கள்- பறங்கிக் கிரந்தி, பிடிப்பு, கடுப்பு. பத்தியம்- கிரந்திப் பாண்டம் தவிர்க்கவும்.
26. வயிற்றுக் கடுப்புக்கு வில்வபத்தரிச் சூறணம்
வில்வபத்திரி, பிஞ்சு, அத்திப்பிஞ்சு, தென்னங்குரும் பைப்பிஞ்சு, முத்தற்காசு, இலந்தைப்பிஞ்சு, பருத்திப் பிஞ்சு, எள்ளுப்பிஞ்சு வகை-1களஞ்சு. இலவங்கம், கோரோசனை, கராம்பு, வசுவாசி, அரிதாரம், சாதிக்காய், அதிவிடயம், கல்நார், கச் சோலம், செண்பகப்பூ, சிறுநாகம்பூ, ஏலம், மாஞ்சில், கற்பூரம், அபின், கஞ்சா வகை-2களஞ்சு. இடித்துப் பொடி செய்க.
பிரமாணம்- வெருகடி
அனுபானம்- தேன்.
27. சிறுவர் தோஷசந்நி சுரம், மூச்சுக்குக் குடிநீர்
குப்பைமேனி, முடிதும்பை, தயிர்வளை, வெந்தயம், ஓமம், துாதுவளை, வட்டுவேர், சிறுகாஞ்சோன்றி,
51

Page 35
ஆடாதோடை, நொச்சி, சிந்தில்தண்டு, கண்டங் கத்தரி, சிற்றாமட்டி, பேராமட்டி, கோரைக்கிழங்கு வகை-2களஞ்சு. பற்படாகம், கடுக்காய், திற்பலி. 1களஞ்சு. மேல்பொடி. கற்கண்டு.
28. நீர்ப்பிடிப்புக்குப் பதங்கம் கை கண்டது) சீனக்கிழங்கு 2பலம், திரிகடுகு, கருஞ்சீரகம், ஓமம், குரோசாணி, திரிபலை, ஈரரத்தை, செவ்வியம், வால்மிளகு, கோட்டம், மல்லி வகை-2களஞ்சு. கசகசா-1களஞ்சு மாஞ்சில், கராம்பு, சாதிக்காய், இலவங்கப்பட்டை பத்திரி, திற்பலிமுலம்-1களஞ்சு. சீரகம்-2விராகன். ஏலம்-2விராகன் மூலவகை-கொடிவேலி, நன்னாரி, இயங்கு, நிலப் பனை, அமுக்கிரா. 1களஞ்சு. இடித்து பிட்டவித்து அரைக்கால்படி-நெய், சீனி-2பலம் தேன்-%படி. பிரமாணம்- பாக்களவு. வேளை-அந்தி சந்தி பத்தியம் பிடிக்கவும்.
29. நாக்குத்திமிர், விறைப்புக்குக்லிகாப்புளிக்க,
அரைத்துப்பூசகை கண்டது)
சுக்கு, திற்பலி, மிளகு, தூளாக இடித்து அரைத்து வென்னில் போட்டுக் கொப்பளிக்கவும்.
52

மஞ்சலும் பத்தரை மாற்று உருத்தராக்ஷமும் தண்ணிர் விட்டரைத்துப் பூசி தேய்க்கலாம். பாரிசவாத நோயாளிகளில் நாக்கு இழுத்தால் பூசலாம்.
30. சிவப்புக் குளிகை
பொன்பொலி கோட்டம் நாவி பொருந்துமிலிங்கம் சுக்கு இனிய பொலியு மரத்தை திற்பலி கராம்புஞ்சேர்த்தே திற்பலி ஓமம் நல்ல சீரகம் வசம்பினொடு நற்பொரிகாரம் தானும் நயந்தரு நிறையிற் கூட்டே. கூட்டியே ஏற்ற இஞ்சிச் சாற்றிலக் குணமாய் ஆட்டியே குன்றியின் அளவாயுருட்டி நிழலுலர்த்தி வைத்திட்டே முலைப்பால் இஞ்சி தேன் உரைத் திட்டியே வருகில் வரட்டிருமல் குத்து சுவாதமுச்சு மேலிளைப்புப் போமே. மேலும் சுரங்கள் சந்நி சுவாதகழிச்சல் முதலியனவும் uDITgDJLô.
13. சிவப்புக் குளிகை
மாயாக்காய், அரிதாரம், மதுரம், சீனக்காரம், இரு சீரகம், திற்பலி, அக்கரா, சுக்கு, உள்ளி, காந்தம், பொரிகாரம், வெண்காரம், இந்துப்பு, கராம்பு, வசு வாசி, சாதிக்காய், துரிசு, சிறுதேக்கு, துத்தம், கோட் டம், பெருங்காயம், கடுகுரோகிணி, கார்புகாவரிசி, நாவி, வெண்பாஷாணம், முருக்கங்கொட்டை, சாதிலிங்கம், செஞ்சந்தனம்.
53

Page 36
வகை- 6களஞ்சு, சந்தனம்-பாக்களவு. அரைப்பு- தோடம்பழச்சாறு. முலைப்பால் ஒவ்வொரு சாமம் பிரமாணம்-உளுந்து
அனுபானம்
1.
2.
10.
11.
12.
13.
14.
சுரத்துக்கு-சுக்குநீர் சுவாதமுச்சுக்கு - முருங்கைப்பட்டைச்சாறு, தோடம்பழச்சாறு, கருப்பஞ்சாறு, முலைப்பால், தேன், நெய் கூட்டி 2குளிகை இடவும். தாகத்துக்கு-குன்றிச்சாறு, எலுமிச்சம்புளி நல் லெண்ணெய்த்துளி விட்டுக்கொடுக்கவும். இருமலுக்கு-குன்றிமணியும் தேனும். வயிற்றுவலிக்கு-வசம்புத்தண்ணிர். நெஞ்சடைப்புக்கு-மாற்றுவெற்றிலைச்சாறு. பக்க வாயுவுக்கு-பெருங்காயம். அண்டவாயுவுக்கு - முடிதும்பை, நொச்சி, வசம்பு, உள்ளி, சுக்கு ஒன்றாயரைத்து தேன் சேர்த்துக் கொடுக்கவும்.
மேல்மூச்சுக்கு-முலைப்பால். வயிற்றுப் பொருமலுக்கு-மிளகு நீர். கெற்பவாயுவுக்கு-உள்ளி. சந்நிக்கு-வேப்பம் பட்டைச்சாறு அல்லது வெள்ளையுள்ளி முறைக்காய்ச்சலுக்கு-உள்ளி அல்லது வேப் பெண்ணெய். காதுக்குத்துக்கு-எருக்கலம் சாற்றில் கொதிப் பித்து விடவும்.
z-r-r“ 54

32. சிவப்புத் தூள்
குதம் காந்தம் வெண்காரம் சொன்னோ மிலிங்கம்
அதிவிடயம் மாதே கேளுமரிதாரம் வற்சநாபி மிளகு மஞ்சல் கோதே நெல்லிக் கெந்தகமும் கொடியவாளம் சிலை
கொம்பு காதே கடுக்காய் நெல்லிக்காய் கடிய கெளரி இந்துப்புடனே இருவி தொட்டி
எல்லாம் வகை களஞ்சதாகவே வெந்த வோட்டில்
வறுத்திடித்து விரவிக் குன்றியெடை கொடுக்க
தந்து செய்யும் சனிவாதம் சந்நி பிளவை
பவுந்திரமும் வெகுண்டேயோடும்
வேறு இன்னங்கேள் பெண்ணே வலிகளெல்லாம்
பிரசவம் வேரோடேபோம் பழஞ்சுரங்கள்
அத்திசுரம் அத்திவெட்டை வீறான வலிகளெல்லாம்
வேரோடே போம்
33. வெல்ல உண்டை
சாதிக்காய், கராம்பு, வசுவாசி, திற்பலி, கெந்தகம், அபின், இந்துப்பு, கைப்பு, ஓமம், சூடன்கற்பூரம், வாலுளுவை, துத்தம், இருசிரகம், கோட்டம், அக்கரா, கடுக்காய் வகை-1களஞ்சு.
இரசம்-2களஞ்சு. அரைப்பு-துளசிச்சாறு பின் வெல்லமும் கொள்ளும். அனுபானம்-இதரைவாழைப்பழம். பத்தியம் இருக்கவும்.
55

Page 37
34. பூசணிக்காய்ச்சூறணம் கை கண்டது)
பூசணிக்காய் துருவி, நெய் சட்டி காயவைத்து துளியாக விட்டுக்கிண்டி உலர்த்தி வறுத்து திரிகடுகு, நற்சிரகம், ஓமம், ஏலம், இலவங்கம், மதுரம் வகை3களஞ்சு. இடித்து வஸ்திரகாயம் செய்து அனுபானத்தில் கொள்ளவும். திரும் ரோகங்கள்-எலும்புருக்கி, சூடு, அழல்வாயு, அழல்வாதம், தேககாந்தி, உஷ்ணம் இன்னும் பல வியாதிகள்.
பத்தியம் பிடிக்கவும்.
135. குத்துக் குளிகை
கருநாவி, லிங்கம், அதிவிடயம், வாய்விளங்கம், பொரி காரம், கராம்பு, வசுவாசி, சாதிக்காய், வசம்பு, சுக்கு, கடுகுரோகிணி, குறோசாணி, மத்தம்விரை, கஞ்சா, அரைப்பொடி இடித்து காயவைத்து பூமத்தம்சாறு விட்டரைத்து மிளகளவுருட்டி நிழலுலர்த்துக.
36. இராமபாணக் குளிகை
பெருங்குரும்பை வசம்பு இதரம் வற்சநாபி பேசுபுகழ்
கோட்டம் இந்துப்பு அணிஞ்சில் பெருங்கு பெருங்காயம் எருக்கமுக்கிராய்வேர் வாளம்
சிவந்த கொடிவேலி நீலி அருங்கரந்தை சிவந்த பாஷாணம் உத்தமாகாணிக் கொழுந்து தாழங்காய் நன்னாரி
56

மருங்குலவு திற்பலி வேர்க்கொம்பு எலுமிச்சம்புளி எருக்கம் பால் விட்டரைத்து குன்றிபோலுருட்டி நிழலுலர்த்தே.
37. மஞ்சல் பற்பம்
சிவதைவேர்-1பலம். கடுக்காய், காந்தம், அரைப் பொடி -3களஞ்சு. சூதம், மதுரம், சாதிலிங்கம், காயம், கோட்டம், கராம்பு, நெல்லி, முக்கடுகு, விழால், நிலவினுப்பு, தான்றி கந்தகம் ஈருள்ளி ஏலம் இருசீரகம் கடுகுரோகிணி வகை-1களஞ்சு. பிரமி, பொடுதலைச்சாறு விட்டரைத்து காய்ந்தபின் உள்ளி. 1பங்கு சுத்தி செய்த வாளம்-1களஞ்சு. அனுபானம்-பனங்கட்டி.
38. உடற்புண்ணுக்கு உறட்டி
உலுவா-4 கோட்டம்-1 ஏலம்-1 கறுவா-1 சாதிக்காய்-1 நல்லெண்ணெய்-% படி பதத்தில் சுட்டெடுத்து 12நாள் தின்னவும். அதன்பின் அந்த எண்ணெயைச் சாதத்தில் விட்டுத்தின்னவும். - 39. நம்பன் குளிகை
நற்சிரகம், மஞ்சல்-3 சாதிக்காய்-2 கராம்பு-3 கஞ்சாவிரை-7 களற்சிப்பருப்பு-2 ஊமத்தங்கொட்டை-8 வெள்ளைப்பாஷாணம்-1 இலுப்பை அரப்பு-3 லிங்கம்மேற்சொல்லியதில் % வாசி. அரைப்பு:இஞ்சிச்சாறு. 2சாமம்.
57

Page 38
அனுபானம்
சுரத்துக்கு-இஞ்சிச்சாறு குத்து, வாய்வுக்கு-சுக்குத்தண்ணிர் சேடகரத்துக்கு-சுக்கு, தோடம்புளி வலிக்கு-வசம்பு, எலுமிச்சம்புளி, சந்தனம், தேற்றான்கொட்டை, முலைப்பால், இளநீர் 5. பிள்ளைபெறாமல் வருத்தங்கண்டால் - நாறு கரந்தைச் சாற்றில் கொடுக்கவும்.அல்லது சிறு குறிஞ்சியிலைச்சாற்றில் கொடுக்கவும். மருக் காரைச்சாற்றிலும் கொடுக்கலாம். பிள்ளை அலறிப்பிறக்கும்.
40. லேபனக் குளிகை
வெள்ளைப்பாஷாணம், குதிரைப்பாஷாணம், சிவந்த பாஷாணம், சடாமாஞ்சில், இருசிரகம், வெள்ளை வெண்காயம், திற்பலி, திரிபலை, அரைப்பொடி, பெருங் காயம், அதிமதுரம், வசம்பு, காந்தம், கராம்பு, வசுவாசி, பல்மாணிக்கம், இரசம், மனோசிலை, பொரிகாரம், அரிதாரம், சாதிலிங்கம், நவாச்சாரம், துத்தம், மாங்கிஷ பேதி, கடுகு, மிளகு, வேர்க்கொம்பு வகை-1களஞ்சு. இந்தச் சரக்கினெடை வாளம் கூட்டவும். அரைப்பு- தோடம்புளி
பிரமாணம்-துாதுவளங்காய்
அனுபானம்1. தோடம்பங்கிரியில் வைத்துத் தின்னவும்-வயிறு கழியும்.குளிர்ந்த தண்ணிரும் வெந்நீரும் மாற்று.
58

5.
பிரமிய வாதத்தில் வந்த கட்டிக்கு இளநீர், வயிற் றில் வந்த 448 வியாதிகள், இரத்தக்கட்டி, மாங் கிஷக்கட்டி, காய்ச்சல்க்கட்டி, கெற்பக்கட்டி, குன் மக் கட்டி, எலும்புருக்கிக்கட்டி, சதைக்கட்டி, எலும்பைப் பிழந்துவரும்கட்டி. பேய்க்கட்டி சந்நிக் கட்டி வெப்புப்பார்வை எல்லாம் திரும். இரத்தம் இரத்தமாய்க் கழியும். பயப்பட வேண்டாம். இரணசுக்கிரனுக்கு-சீரகப்பொடியில் 2 உண்டை யாக 3நாள் தின்ன சுகம்வரும். ஆட்டுபால் அல்லது பசுப்பாலுடன் குளிகை வீதம் தின்ன நரை திரை மாறும். உடம்பழகுண்டாகும். கழுதை முத்திரத்தில் நையம் பண்ண பேய்திரும். கோட்டம் பெருங்காயம் பொடி செய்து 7 நாளைக் குப் பின்னர் பிரித்து 2 உருண்டை வீதம் தின்ன எப்படிப்பட்ட வாய்வும் திரும். முந்திரிகைப்பூவும் 2 உண்டை தின்ன வாயாலே வந்த முடக்கம் திரும். பாக்கு இரவில் ஊறப்போட்டு அந்தச்சாற்றில் கொடுக்கலாம். கடுவளைச்சாற்றிலும் கொடுக்கலாம்.
141. கர்ப்பிணி வயிற்றில் வாதவீக்கம் சகலதுக்கும் சூறணம்
இருசீரகம், குரோசாணி, அதிமதுரம், ஓமம், ஏலம், இலவங்கம், உலுவா, திற்பலி, திற்பலிமுலம்,
59

Page 39
பெருங்காயம், சித்தரத்தை, கோட்டம், கராம்பு, வசுவாசி, சாதிக்காய், உள்ளி, கொத்தமல்லி வகை-1களஞ்சு. வேர்க்கொம்பு (தோல் சீவி)-12களஞ்சு. இவையெல்லாம் பாகுபதமாயிடித்து அரித்து இஞ்சி தேனில் கொடுக்கவும். திரும் ரோகங்கள்-சந்நி மாந்தம், பெரும்பாடு, சுரம், கழிச்சல், திமிர், விறைப்பு, வாய்வு, வாதம்.
142. தீமுறுகல்
திமுறுகல், சூதம், நாவி, வெள்ளைப்பாஷாணம், லிங்கம், அரபொடி. அரைப்பு:இஞ்சிச்சாறு உள்ளிச்சாறு இருசாமம் பிரமாணம்-உளுந்து. திரும் ரோகங்கள்-வலி-18, வாதம்-80, சந்நி13, சுரம்-64, இன்னும் அனேக வியாதிகள். அனுபானம்-வலிகளுக்கு-கொடிக்கள்ளி வாட்டிப் பிழிந்து 7 மிளகும் பொடி செய்து வேர்க்கொம்புத் துாளும் போட்டு 2 குளிகை கொடுக்கவும்.கொடுத்து ஒரு மணித்தியாலத்தின் பின் வயிறு ஊதி வாயாலாவி புறப்படும். மற்ற நோய்களுக்கு இஞ்சி தேன் முலைப்பால் சாறணை இவைகளில் கொடுக்கவும்.
60

43. சீவறட்டினாதி
திருவளரும் மாசருடை பாதம் போற்றி
ஜெகத்தோர்க்கு வரும்பினியகல வேண்டில் மருமலரும் சீவறட்டினாதி மகத்துவமாம் குளிகைதனை வழுத்துவோமே அருவளரும் எட்டிவிரை மத்தின்கொட்டை
பறுபண்டித்தகரைவிரை சேர்த்துப் பருவமுறுங் கஞ்சாவின்விரையும் கூட்டிப்
பக்குவமாய் முருங்கையுடைவிரை தேடே
தேடுவாய் கஞ்சாங்கோரைவிரை நிம்பவிரை
தயிர்வளை விரை தேருறு சிங்கிப்பட்டை களற்சிக்கொட்டை அதிகள இலுப்பையரப்பு மிளகு நாருறு செஞ்சந்தனம் கராம்பு வசுவாசி
நலமாக ஒர்களஞ்சு கூட்டின அதிவிடயம் லிங்கம் சேர்த்தெல்லாம் அம்மியிலிட்டுக் கொண்டு தெளிவாக இஞ்சிச்சாறு சாமம் ஒன்று மாற்றமில்லாக் காரவல்லிச்சாறு சாமம் ஒன்று
மகத்துவமாம் நாகவல்லி சாமம் ஒன்று முருங்கை சாமம் ஒன்று எலுமிச்சம்புளி சாமம் ஒன்று வார்த்தரைத்து ஒலுகொட்டைப்பிரமாணம் உருட்டி நிழலுலர்த்தி வைத்துக்கொள்ளே
(ஒலுகொட்டை-மஞ்சாடிபிரமாணம்) உற்றதோர் பிணிகள்தன் குணத்தையுங்கேள்
அதமுறுசந்நிதனக்கு வேப்பெண்ணெயிற் கொடு மீறினால் முருங்கைப்பட்டைச் சாற்றில் ஒரு குளிகை
மீறினால் கனத்த இஞ்சிச்சாற்றிலிடு அகன்றுபோமே
6.

Page 40
வலுத்துவரும் பொருமல் முட்டுத் தொய்வு கண்டால்
வளர் எருக்கலையிலை வாட்டிப் பிழிந்த சாற்றில் ஒரு குளிகை கொடுக்கத் திரும்.
பொல்லா மந்தமது மீறினால் தெளிந்த முலைப்
பாலிற் கொடுக்கச் சிதறிப்போம்.
தேற்றாவிரையும் சந்தனமும் தேன்தோடம்புளியும்
சேர்த்து ஒரு குளிகை கொடுப்பீராகில் ஒழிந்துவிடும் சுரமெல்லாம் தெளிந்து போகும்
கழிச்சலுக்கு ஒரு குளிகை இஞ்சிச்சாற்றில் கொடு கூடியதோர் குளிகைக்கு மீறினால் ஒரு குளிகை
எடுத்து கருப்பஞ்சாற்றில் நாட்டமுள்ள
நெற்பொரித்துாளும் கூட்டி நலமாகக் கொடுத்து விடத் திரும்
நாடா தோடிவிடும் நாட்டமுள்ள வலிகளுக்கு எலுமிச்சம்புளி
மாறாவிடில் நொச்சியிலைச் சாற்றில் மீழும் இஞ்சிச்சாற்றிலிடத் திரும் செங்கண்மாரி
தெளியாதானே தானே நெஞ்சில்சளி அடைப்புக்கெல்லாம் தயங்காதே சிங்கிலிப்பட்டைச்சாறு மானாரும் குழலாளே மீறினால் வடிவான
நல்லெண்ணெய் கூட்டிக்குடி அதில் விட்டாயானால் பறக்குமெடா
பெரும்பாடு மிஞ்சினால் தென்னம்பூச்சாற்றிலிடு.
இன்னும் நோய் கண்டு அனுபானம் சொல்லவும்.
62

144. இராச பேதி
சூதம், கெந்தி, வாளம், காக்கணம், கொவ்வைவிரை, கொன்றைவிரை, வெங்காயம், பூவரசம்விரை வகைசமன் எடுத்து கள்ளிப்பால் விட்டு 3நாள் அரைக்கவும். பிரமாணம்-குன்றி.
1குளிகை தொப்பூளில் பூசுக. 10முறை விரேசனமாகும். உள்ளங்காலில் தடவ- 10முறை விரேசனமாகும். அண்டத்தில் தடவ- 7முறை கழியும். உள்ளுக்கு குளிகை இட கணக்கில்லாமல் கழியும்.
145, நவசுரக்குளிகை
துரிசு அரிதாரம், கெந்தகம், சாதிலிங்கம், தொட்டிப் பாஷாணம், வெள்ளைப் பாஷாணம், கெளரி பாஷாணம், செம்பு, வங்கபற்பம் வகை-சமன். அரைப்பு-பூமத்தையிலைச்சாறு
பிரமாணம்-மிளகு
அனுபானம்-இஞ்சிச்சாறு.
நவசுரம் மாறும்.
46. சிவகரந்தைப் பற்பம்
சீனக்கிழங்கு பலம் மூன்று சீரார்கடுக்காய்
பலமிரண்டு கானக்கருஞ்சீரகம் பலம் ஒன்று கார்கோலரிசி
பலமொன்று மானக்கறுவா சீயாக்காய் வகை வராகனொரு முன்று கூனற்பிறைநுதலாளே கூகைநீறு வராகன் அஞ்சே
63

Page 41
அஞ்சே கேளு மதிமதுரம் ஓமம் வால்மிளகு மின்சேருமிந்துப்பு மிகுந்த கிருமி சத்துருவும் அஞ்சார் கோரோசனை குங்குமமிரண்டு களஞ்சு
புவிதனிலே புவிதனிற் செய் பாவமகற்றும் நொச்சி புளி பொன்னா வாரை கண்டங்காலி கழற்சி அவுரி சங்கு துளசி முருக்கிலை சேர் கோழியாவாரை குப்பைமேனி நில மடவாய் கொண்டே நவமதுடனால் சேர்ந்த இலைகளெல்லாம் நன்றாக நிழலுலர்த்தித் துாளாய் உவமையதா முன் சரக்குஞ் சமனாய்ச் சேர்த்துண்டு வர வெருகடி துாள் மோரிற்கொள்ளே.
உண்டுவர "இருநேரம் திரும் நோய் கேளு உதரநோய்கள் கண்டங் கண்டமாலை மினண்டுதமுளை ஈளை மேகவுறல் மிகுந்த சொறி வெட்டையினால் வருங்கிரந்தி விண்டு பவுந்திரமரையினாப்பு வீக்கம் விற்புருதி கால்கையிற் கறுப்புத்தானும் கொண்ட முறிகிரந்தியெட்டும் பித்தவெடியோடு கூடுபடர் தாமரை வாய்க்கிரந்தி வாதை
வாதை செய்யும் பாதசக்கரத்தினோடே வாளா
தலையிற் சொறிவும் மலச்சிக்குத்தானும் ஊதைமுன்னே பஞ்சதெனப் பறந்து போகும்
உரைத்த மருந்துக்குப் பத்தியமில்லை மாதினுடன் புணர்தல் பகற்றுயில் நீக்கி மருந்திது
நாற்பதுநாள் கொள் மங்கைபாகச் சதாசிவன் பாதம் போற்றி மலையில் வாழும் அகத்தியமாமுனியுரைத்தாரறிந்து கொள்ளே
64

செய்முறை-சரக்குத்துாளும் இலைத்தூளும் ரிசரி எடுத்து கோரோசனை குங்குமப்பூ கலந்து ஒட்டில் வெக்கை காட்டி, வறுக்காமலரைத்து சாப்பிடுவது.
47. மேக காந்திச் சூறணம்
பத்தி செறி மேகமதிற் சூறணந்தான் பார் மீதில் இருவழிகளுமறிய மாட்டார் சத்தியமாம் இம் மருந்து வியாதிக்கெல்லாம் ஆகுமெடா அரைநொடியில் பறக்குந்தானே
பறக்குமெடா மேகவெட்டை பன்னிரண்டும்
பொல்லாத சீவிழுதல் இரத்தம்விழுதல் தாக்கு பிரமியங்கள் அழல்வாதங்கள்
தளமிதில்ப் பிடிப்புடனே கட்டு வெட்டை நீக்குமெடா அண்டமதில் வாய்வுதானும்
நில்லாது பிரமியங்கள் நீர்கடுத்து விழுதல் வாக்குடைய இம்மருந்து ஏற்குமாற்றும்
மாறாத குன்மமெல்லாம் மாறுந்தானே
தானப்பா இருசிரகம் மிளகு உள்ளி ஓமம்
கதித்த திரிமஞ்சல் இருகாயம் உண்ணப்பா இருவகையாக கொத்தமல்லி
உற்பனமாம் தட்டிலுடன் கோட்டம்தானே சேரப்பா தற்கோலம் மாயாக்காய் சிறந்தேலம்
மதுரமுடன் சிறுநாகம்பூ வீனப்பா என்று நீபயப்படாதே செம்மையாய்
வசுவாசி நான்கே நாற்களஞ்சு
65

Page 42
அதிவிடயம் செவ்வள்ளி கணப்புடைய அக்கரா
கறுவாப்பட்டை கோலமெனுங் கற்பூரம் இலவங்கந்தான்
கூட்டுவாய் கராம்பு மதிமுகனும் தேடு
சாலமுறு சித்தரத்தை உலுவா திற்பலி
தயவான குங்குமப்பூ சந்தந்தானே
மூலமெனும் திற்பலி கோரோசனை சாத்திரபேதி முறையான கடுகுரோகிணியும் கூட்டே
கூட்டுவாய் திரிபலையும் சீனப்பாகு முறையாய்ப் பலமிரண்டு அமுக்கிராய் பலம் மூன்று நாட்டுவாய் நற்சிரகம் பலம் ஒன்று
நல்எள்ளு உளுந்துமா கொத்து ஒன்று இத்துடனே சரக்குத்துள் எல்லாம் போட்டிடித்துப் புடமே செய்து சீனி தேன் சர்க்கரையிற் திடமாய் நாற்பது நாட்கொள் அந்தி சந்தி
மண்டலந்தான் கொள்ளே.
பத்தியம்- புளி, புகையிலை விடவும்.
48. பிரமேகச்சூலைக்குப் பற்பம்
வேர். கண்டங்கத்தரி, மணித்தக்காளி, தூதுவளை, வட்டக்கத்தரி சரக்கு- ஏலம், இலவங்கம், வாலுளுவை, இலவம் பட்டை, வெட்பாலரிசி, விழாலரிசி, மாஞ்சில், மஞ்சிட்டி, கோட்டம், கடுகுரோகிணி, திரிபலை, கொத்தமல்லி, முச்சீரகம், திரிகடுகு, வால்மிளகு கடுக்காய் வகை3களஞ்சு. அனுபானம்- காலை-சீனி
அந்தி-தேன்
66

149. பிரமேகப்பாகு
உள்ளி, எலுமிச்சம்புளி, தேங்காய்ப்பால், நல்லெண் ணெய், கொடிவேலிவேர், நற்சிரகம், திற்பலி, ஓமம்.
50. விவண்காயக் குளிகை -
சித்தரத்தை, மிளகு, திற்பலி, வேர்க்கொம்பு, காந்தம், அக்கரா, வசுவாசி, கராம்பு, சாதிக்காய், ஏலம், கடுகு ரோகிணி, பெருங்காயம், ஓமம், வசம்பு, உலுவா, சதகுப்பை, கடுகு, பொரிகாரம், நற்சிரகம், கறுவா, கொத்தமல்லி, வெண்காரம், கோட்டம், மதுரம், வெள்ளிலோத்திரம், கருஞ்சீரகம் வகை-1களஞ்சு. உள்ளி-1பலம். உத்தமாகாணிச்சாற்றில் அரைக்கவும். கர்ப்பிணிகளுக்கு உகந்தது.
15. விவண்காயக் குளிகை - 2
அக்கரா, ஏலம், திரிகடுகு, சதகுப்பை, நற்சிரகம், கருஞ்சீரகம், கோட்டம், கடுகு, காயம், வசம்பு, மதுரம், கடுகுரோகிணி, கராம்பு, வசுவாசி, சாதிக்காய், வெண்காரம், பொரிகாரம், காந்தம், கறுவா, உலுவா, கித்தரத்தை இந்துப்பு வகை-1களஞ்சு. உள்ளி. 1பலம். உத்தமாகாணிச்சாறு விட்டரைக்கவும். கர்ப்பிணிகளுக்கு உகந்தது.
67

Page 43
152. வண்காயக் குளிகை - 3
உள்ளி- 2 பலம். அக்கரா, ஏலம், உலுவா, திரிகடுகு, இருசீரகம், குலக்காய், ஓமம், அரிதாரம், இயங்கு, கோட்டம், மதுரம், சசியினுப்பு, ரோகிணி, அரத்தை, கராம்பு, வசுவாசி, உருளரிசி வகை-1களஞ்சு. அரைப்பு- உத்தமாகாணிச்சாறு. பிரமாணம்-தூதுவளங்காய்.
53. வெண்காயக் குளிகை - 4
உள்ளி, அக்கரா, ஏலம், இருசிரகம், உலுவா, சாதிக்காய், கடுக்காய், ஓமம், கோட்டம், காயம், இந்துப்பு, மதுரம், அரத்தை, கராம்பு, கடுகுரோகிணி, வசுவாசி, மாயாக்காய், மல்லி, இஞ்சி, சாறணை வேர் வகை-1களஞ்சு.
அரைப்பு-உத்தமாகாணிச்சாறு பிரமாணம்-இலந்தைக்கொட்டை. அனுபானம்-இஞ்சி தேன் முலைப்பால் உள்ளிச்சாறு.
154. இஞ்சிப்பாகு
வேர்க்கொம்பு, கொத்தமல்லி, வசம்பு, மஞ்சல், உள்ளி, மிளகு, காந்தம், சாதிக்காய், அரிதாரம், சீரகம், உலுவா, சதகுப்பை, திற்பலி வகை-1களஞ்சு. அரப்பொடி-% களஞ்சு.கருப்பஞ்சாறு, பால், தேன், இஞ்சிச்சாறு, மாதாளம்பழச்சாறு, நெய், இளநீர் வகை-% கொத்து.
68

55. தேன்பாகு
இலவங்கம், மதுரம், கராம்பு, வசுவாசி, மாயாக்காய், விழாலரிசி, மிளகு, திற்பலி, வேர்க்கொம்பு, நற்சிரகம், கருஞ்சீரகம், ஏலம் வகை-1களஞ்சு.
தேன்-நாழி பழையசுரம், இருமல், சூடு, தொய்வு, வரட்சி, ஓங்காளம் இவை திரும்.
156. வெண்கலைக் குடிநீர்
வேர்க்கொம்பு, புல்லாந்திவேர்ப்பட்டை, நாவற்பட்டை, துளிர், மாந்துளிர், ஆலமுகை குடிநீரிட்டு தேன் விட்டுக் கொடுக்கவும்.
57. விரேசனம்
இலுப்பைப்பூ, கடுகுரோகணி, வாளம் சமனிடை கூட்டுக.
158 அமுக்கிராச் சூறணம்
கராம்பு-1 பங்கு, சிறுநாகம்பூ-2 பங்கு, ஏலம்-4 பங்கு, திற்பலி - 8பங்கு, மிளகு - 16பங்கு, சுக்கு - 32பங்கு, அமுக்கிரா-64பங்கு .
திரும் ரோகம்-வாதம், சூடு
69

Page 44
59. இரவு விரேசனமுறை
நீரடிமுத்து, செங்கொட்டை, கழற்சிப்பருப்பு, சுக்கு, திற்பலி, மிளகு, சோகி, திருக்கை முள்ளு (திருக்கை வால்), பிரப்பங்கிழங்கு, பற்படாகம், கல்லுப்பு, கறுப்புப்பு இவை- அரை ரூபா நிறை. சூரைத்தாமரை-சமன்.
அனுபானம்-எலுமிச்சம்புளி,
60. இருமலீளைக்கு
செப்பினதோர் கடுகதுதான் ஒரு சேர் வாங்கி
திரண்டிருக்கும் கற்கண்டு சேரிரண்டு அப்பதனிற் பாகாக்கியருள் முன்னாக அரைத்து
நன்றாய்க் கிண்டியரைத் தேன்விட்டு துப்புரவாய்க் கிண்டியுண்ன மந்தாரகாசம் சுவாசமொடு காசம் இருமலிளை துப்பரவாய்த் திருமுண்மை யாகச்சொன்னேன்
சொல்ல வொண்ணாக் கைகனட சூட்சந்தானே
16. சந்திரகாந்தச் சூறணம்
கெற்பவியாதி சூட்டுக்குப் பண்ணார் மருந்துதனைப் LITLds(856it
விண்ணோர்கள் தேடுஞ் சிவவிந்து தேவியுட
விந்துடனே நாடரிய காந்தம் நல்லயப்பொடியுங்
கேடில்லாப் பெருங்காயம் மிளகு சுக்கு
பேதமில்லா விருசீர் நருங்கு திற்பலி இந்து வாசி
70

கூட்டியே காலமதில் உள்ளி கடுக்காய்
ஒரொன்று களஞ்சாய் வள்ளலே நீயெடுத்து வைத்து பின் இஞ்சி கரிசான் குமரியில்
ஒரொன்று ஒருநாட் தஞ்சமுடனே யரைத்து சாந்தமாய் நிழலுலர்த்தி யாரமதி நள்ளளவு சேர்த்து அரிவையர்க்குப் பாலிலே தேனில் பரிவாக வெரிட்டித்தான் கொண்டால் வியாதி
முன்சொன்னதெல்லாம் மதியைக்கண்ட கருவரி போலாகுமே தான்
62. ஆலாத்திப்பூரணம்
காரமெனற் கடுங்காரஞ் சூடனைத்தான் சொல்வேன் தனிவாழைக் கிழங்கோடு கறுவாப்பட்டை காரமெனச் சீனமொடு வெடியுங்கூட்டி
கைமுறையாய் எரித்துவிட்டான் பறங்கியப்பா வாரமெண்னதிக்கொழுத்தநீர்மலமாய்ப் போகுமப்பனே
வா சீனத்தான் கறுவாப்பட்டை பூரமென்றிதைச் சொல்வர் சூடனென்பார் புகழானக்
கடுங்காரப் போக்கைக் கேளே
63. விவந்தயச் சூறணம்
உள்ளி, சுக்கு, வசம்பு, கடுகுரோகிணி வகை-2களஞ்சு. கராம்பு-3களஞ்சு. திற்பலி-4களஞ்சு. சாறணைவேர். 4களஞ்சு. மல்லி மிளகு உலுவா-வகை-1பிடி. இவைகளை இடித்து பசுப்பாலில் அரைத்துக் காயவைத்து அரைக்கவும்.
7

Page 45
பிரமாணம்-வெருகடி. அனுபானம்-தேன். இருவேளை. திரும் ரோகம்-கர்ப்பிணிகளில் காணும் கழிச்சல்.
164. சந்திக்கு இராசபூபதி/இராசபாண்டி/ நாகவல்லிக்குளிகை
கெளரி (சுத்தி செய்த) -5 களஞ்சு. பெருங்காயம்1களஞ்சு. வாளம் (சுத்தி செய்த) -2 களஞ்சு. சூதம் (சுத்தி செய்த)-2களஞ்சு. இவைகளைக் கையாந் தகரைச்சாறு நாவிச்சாற்றில் 4 சாமம் அரைத்து பயறளவுருட்டி சுக்குநீர் முலைப்பால் தேனில் இடவும்.சந்நி மாறும்.
165, செங்கிரந்தி, கருங்கிரந்தி, கர்ப்பமழிக்கும்புழு,
கெற்பச்சூட்டுக்கு மருந்து
கொள்ளவே விரிகரப்பன் கூட்டினாற் பலதுமுண்டு உள்ளி தூதுளை நாரத்தை முந்திரிகை கோட்டம் நொச்சி கள்ளவிழ் பிரமி முள்ளி களற்சி மாவிலங்கை நன்னாரி தெள்ளிய இளநீர் சுக்குச் செய்திடு குடிநீர் தானே
காயம், சாதிக்காய், கராம்பு, அதிவிடயம், அரத்தை, வெட்பாலையரிசி, திற்பலி, கோட்டம், ஊசிக்காந்தம், கடுகுரோகிணி, நற்சிரகம், கருஞ்சீரகம், ஓமம், கடுகு, மிளகு, வேர்க்கொம்பு, வசம்பு, வெள்ளுள்ளி, இந்துப்பு, வகை-சமன். கொடிக்களற்சி வெள்ளறுகு வேப்பிலை மூன்றுசாறும் ஒவ்வொருபடி எடுத்து
72

அரைத்துக் காயமாகக் காய்ச்சி உள்ளுக்குத் தின்னவும். பெருங்காயம் கூட்டினாலும் நல்லது. மேற்சொன்ன வியாதிகள் யாவும் திரும்.
66. லிபரிய முலைப்பால்க் குளிகை
சூதம், கெந்தி, வற்சநாபி, வெண்காரம், மிளகு, திரிபலை, சாதிலிங்கம், நேர்வாளம் வகை-1களஞ்சு. கல்வத்திலிட்டு முருக்கிலைச் சாற்றாலாட்டி குன்றிப்பிரமாணம் உருட்டவும்.
அனுபானம்
1. சந்நி, நீரடைப்புக்கு- முலைப்பால். 2. சுரத்துக்கு-சுக்கு, மல்லி, அவித்தநீர். 3. நாலாமுறைச்சுரத்துக்கு-நொச்சிச்சாறு. 4. சிறுபிள்ளைக்கு-ஏலக் காயப்-களஞ்சு சேர்த்
தரைத்து ஒரு உருண்டை முலைப்பாலில் கொடுக்கவும்.எந்த வியாதியும் திரும். கர்ப்பிணிக்கு-வேர்க்கொம்பு அவித்த நீரில் கொடுக்கவும்.எந்த வியாதியும் மாறும். மாறா விட்டால் சுக்கு திற்பலி கடுக்காய் அவித்துக் கொடுக்கவும். நஞ்சுக் கொடி விழ-பூசணிக் கொழுந்து, வெற் றிலைக் கொழுந்து அவித்து வேப்பெண்ணெய் விட்டுக் கொடுக்கவும். பிள்ளைபிறக்க கஷ்டப்பட்டால் - கொடிக்கள்ளி வாட்டிப்பிளிந்து அந்தச்சாறும் வெடியுப்பும் நிம்ப எண்ணெயும் சேர்த்துக் கொடுக்கவும். பிள்ளை பிறக்கும்.
73

Page 46
167. காயாசுவாத மிறுத்தியாதி
அதிமதுரம் ஏலம் இலவங்கமுயர் திற்பலியோடு
அதிவிடயம் வசுவாசி அகில் மாஞ்சில் கோரோசனை தேவதாரமுடன்
அரவிந்த மலர் இலுப்பைமலர் கதிதருமுருத்திராக்ஷம் சாதிக்காய் கராம்பு
வேர்க்கொம்பு கோட்டம் கருதிடு சாத்திரபேதி குங்குமப்பூ முத்தற்காசு பச்சைக்கற்பூரமுடனே முதிதான கடுகுரோகிணி பொற்சீந்தில் செண்பகப்பூ நன்னாரி இருவேலிவேர் புகர்கின்ற முந்திரிகை பேரிந்துவின்கனி
இலாமிச்சை கலங்கொம்பு களஞ்சொன் றதாய் முறைப்படி எடுத்துக் கொண்டு முலைப்பால்
இஞ்சி கரும்புடனே மேவுசாறு ஓரளவெடுத்து இதமாயரைத்து மிளகளவு குளிகையுருட்டி நிழலுலர்த்திமேவுமுன்னதனில் செப்பில் வையே
மேவுசிலேற்பனம் சிலேற்பனசுரம் சீர்முலைப்பால் கரும்பினுடன் இருகுளிகையிடு இளைப்பு இருமல் பித்தசுரம் மாற்றுமுயர்
செவ்விளநீர் தன்னிலிடு கழிச்சல் சுவாதம் போக இஞ்சிச்சாற்றிலிடு. எச்சுரமும் எவ்விளைப்பு முட்டு மூச்சுக்கு இஞ்சி தேன் முலைப்பால் தேறுமிது காயாசுவாத மிறுத்தியாதி என்பனைய செந்தமிழ் பொதிகைமுனிவர் செப்பினார்.
74

68. மாந்த சந்நீக்குளிகை (கறுப்பன் குளிகை)
நாவி இருவி இரசம் அரிதாரம் அப்புருவம் சாதி லிங்கம் காவில் மிளகு திற்பலி மனோசிலை கடிய கெந்தகம் வெண்காரம் பாவித்தனையுமோர் நிறை யாய் பதமாம் இஞ்சிச்சாறு விட்டரைத்துக் கூவிக் குன்றிபோலுருட்டிக் கொடுக்க கொடுக்கு மனுபானங் கேள்
மந்தம் வலி கண்டால் விரைவாய்ச்சந்நி கண்டால் இஞ்சிதன்னில் கொடுக்க வீழும் கழிச்சல் வலி கண்டால் விரைவாய் வசம்புத்தண்ணிர். நாளும் கதித்த மந்தம் நின்றால் நாட்டில் முருங்கை வேர்ச்சாறாம் தாளும் தலைமயக்கிடில் தானே தேசிப்புளியிலிடு. இடுமே குளிர்ந்த சந்நி முற்றாய் விடுமே பண்டிதன் குளிகையிதுவே கையாட்சியான கறுப்பன் குளிகையிதே
169. தண்டுபெலனுக்குப் பூச்சு
உப்பு, இஞ்சி, அரத்தை வகை-1காசெடை. தேன் விட்டரைத்து தண்டில்பூசி உலரவிட்டு பின் சேரவும். வீரியவிருத்தியும் 96 தத்துவமும் பெலக்கும். ஏழு பெண்ணுடனும் சேரலாம்.
70. சாராயக்குளிகை (கை கண்டது)
வற்சநாவி, கெளரி, சாதிலிங்கம், திற்பலி, மிளகு, ஓமம் வகை-1களஞ்சு. இஞ்சி-2களஞ்சு. தலைவடிசாராயம் விட்டரைத்து பயறளவுண்டை செய்க. அனுபானம்-ஓமம் மிளகு திற்பலி அவித்தநீர். திரும் ரோகம்-கெற்பவாயு, குத்து, கொளுவல்.
75

Page 47
71. உட்குத்து புறவீச்சுக் குளிகை (கை கண்டது)
மகிழம்பருப்பு, களற்சிப்பருப்பு, அணிஞ்சில்பருப்பு, முருங்கைப்பருப்பு, முருக்கம்பருப்பு, புங்கம்பருப்பு, கடற்சில்லு வகை-2களஞ்சு. மாவிலங்கை, உவாய், காண்டை, நொச்சி, பெரு மருந்து, அவுரி, அரமுறி, உத்தமாகாணி இவை-வேர் சுக்கு, மிளகு, திற்பலி, கடுக்காய், இருசிரகம், இந்துப்பு, பேரரத்தை இவை-கற்கம் காரரிசி, வாலுளுவை, அக்கரா, சூடன், துரிசு, உள்ளி, விழாலரிசி, வெட்பாலரிசி வகை-1களஞ்சு. அரைப்பு-உத்தமாகாணிச்சாறு பிரமாணம்-இலந்தைக்கொட்டை அனுபானம்-வெந்நீரில் ஒரு குளிகை. மீறினால் ஐங்கோலத்தைலத்திலிடவும். திரும் ரோகம்-உட்குத்து புறவீச்சு.
72. மாற்று விவற்றிலைக் குடிநீர் கை கண்டது)
மாற்றுவெற்றிலை-12 பாக்களவு சுண்ணாம்பு. வெற்றிலையில்பூசி குறுணியாய் அரிந்து பாக்கு-2 கராம்பு பெருங்காயம் -1பங்கு. தண்ணிர்-1படி. காற்படியாக்கிக் கொடுக்கவும். வாந்தி இருந்தால் அரைக்களஞ்சு காய் சேர்க்கவும்.
73. மஞ்சட்பற்பம்
வேர்க்கொம்பு, மிளகு, திற்பலி, உள்ளி, கடுக்காய், பெருங்காயம், இந்துப்பு, சவுக்காரம், பொரிகாரம், வெண்காரம் சீனக்காரம் நேர்வாளம் வகை-1களஞ்சு. மஞ்சள்-2களஞ்சு. சூறணிக்க. பிரமாணம்-வெருகடி. தீரும் நோய்கள்-வீக்கம், காமாளை.
76

174, கெற்பவாயுவுக்கு மருந்து
மிளகு, பூடு, மஞ்சள், வசம்பு, வேப்பங்கொளுந்து, மிருதாரசிங்கி
175. வாதத்துக்குப்பூச்சு
கருஞ்சீரகம், சாம்பிராணி, வெந்தயம், வெண்குங் கிலியம், கரியபவளம் வகை-1களஞ்சு. நொச்சிச்சாறு விட்டரைக்கவும். அந்தச்சாற்றில் கொதிப்பித்து 7நாள் 14நேரம் பூசவும்.
76. மறுபூச்சு
புத்துமண், சவுத்துமண், வளையலுப்பு, கஸ்தூரி மஞ்சள், கருஞ்சீரகம், உள்ளி, வசம்பு, வகை2களஞ்சு. வாதமடக்கிச்சாறு விட்டரைத்து அந்தச் சாற்றில் கொதிப்பித்துப் பூசவும்.
177. மறுபூச்சு
இரசம், வாளம், கெந்தகம், அரிதாரம், லிங்கம், கருஞ்சீரகம், ஏலம் வகை-2களஞ்சு. வெற்றிலைச்சாறு விட்டரைத்து அந்தச்சாற்றில் கொதிப்பித்துப்பூசவும். வாதமடக்கி, கஞ்சாங்கோரை அவித்துக் கழுவவும்.
178, உஷ்ணவாயுவுக்கு உள்மருந்து
இயங்கங்கிழங்கு எடுத்து வெள்ளாட்டுப்பாலில் அரைத்துக் கலக்கிக் கொடுக்கவும்.
77

Page 48
179. பற்கொதி மருந்து
அரக்கு, சீனக்காரம், துரிசு, கடுக்காய், மாயாக்காய் வகை-1களஞ்சு.
தான்றி அரப்பொடி வகை-3களஞ்சு. அரப்பொடியை எலுமிச்சம்புளியில் சுத்தி செய்யவும். ஒட்டில் போட்டு தைலம் விட்டு வறுக்கவும். பிறகு புளி விட்டரைக்கவும்.
அரைப்பு-2சாமம்.
வஸ்திரகாயம் செய்து எடுக்கவும்.
180. புண்ணுக்கு உறட்டி
மெழுகு-முக்காற் பலம், துத்தம்-காற்பலம், துரிசு, அன்னபேதி, கற்பூரம், சீனக்காரம், வெண்குந்துருக்கம் வகை-காற்பலம்.
எலுமிச்சம்புளிகாற்படி. சிறுகுறிஞ்சாய்ச்சாறு-காற்படி. கஞ்சாங்கோரைச்சாறு-காற்படி. மெழுகும் சாறுகளும் கலந்து உருக்கி கொதித்து வரும் நேரம் சரக்குத்துாள் போட்டு கிண்டி உறட்டியாக்கி புண்ணில் வைத்துக் கட்டவும்.மாறும்.
181. அக்கரத்துக்கு அரைமருந்து
திற்பலிசீர் ஓமமதிமதுரம் ஏலம் பொற்புறு நாகையுள்ளி புகழில் வகைமாயாக்காய் சேர் படுகராம்பு வசுவாசி
துய்ய சாதிக்காய் கோட்டம் சீருறு அரத்தை சுக்கு
திகளுள்ளி கடுக்காயிந்து செவ்வள்ளி பூதவிருக்கம்
78

மோடிபல செஞ்சந்தனம் முந்த வோரொன்று களஞ்சொன்று
முதிய வள்ளிச்சாற்றில் அரைத்து கந்தமான பனையின் வெல்லத்தில் அருந்துவீரே அக்கரசுர மானதுவும் சகல அக்கரசந்நிகளும் பறந்து பேமே
182. பனிச்சம்பழ வநய்
பனிச்சங்காய் அரிந்து-1சிறங்கை. துத்திவேர், கோரைக்கிழங்கு, மலைதாங்கிவேர் வகை1பிடி. நற்சிரகம், ஓமம், சுக்கு, அதிவிடயம், கைப்பு வகை-1களஞ்சு.
பசுநெய்-நாழி, சரக்கெல்லாம் அரைத்து நெய்யும் விட்டுக் கலக்கி காய்ச்சி மெழுகுபதம் இறக்கி அந்தி சந்தி தின்று வரவும். வெந்நீர் பருகவும். அவியல், தீராதகழிச்சல் என்பன திரும்.
183, வயிற்றுளைக்குச் சீரகவுநய் சீரகம் -1களஞ்சு. அசமதாகம்-2களஞ்சு. சாதிக்காய் அதிவிடயம் காசுக்கட்டி சுக்கு வசுவாசி கராம்பு வகை% களஞ்சு,நெய். பதத்தில் காய்ச்சியெடுக்கவும்.
184, சகல நோவுக்கும் கோழிக்குஞ்சுக்காயம்
அசமதாகம், மதுரம், செவ்வள்ளி, வெங்காயம், கிருமிசத்துரு, சதகுப்பை, மாஞ்சில், சீனக்காரம், மனோசிலை, சுக்கு, வெளுத்தல், மாயாக்காய், கடுக்காய், கடுகுரோகிணி, உள்ளி, செண்பகப்பூ, சாராயம் கோழிக்குஞ்சையும் அரிந்து அரைத்துக் காய்ச்சி இறக்கி உடனே சாராயத்தை வார்த்து முடிவைத்து அந்தி சந்தி குடிக்கவும்.
79

Page 49
185. வயிற்றுப்புண்ணுக்குச் சாராயக்குளம்பு கைகண்டது)
முந்திரிகைப்பழச்சாறு, வெள்ளுள்ளிச்சாறு, இஞ்சிச் சாறு, சாராயம் வகை-1படி. சாதிக்காய்- % பலம். இவையெல்லாம் கூட்டி குளம்பாக்கவும். மெல்லிய எரிப்பு. உப்பு புளிதள்ளவும்.
86. கர்ப்பிணிகளுக்கு 2 சரக்குகள்
சாதிக்காய், கராம்பு, ஏலம், வசுவாசி, கறுவா, திற்பலி, உலுவா, சீரகம், இலவங்கம், உள்ளி, சுக்கு, கோட்டம், மதுரம், மல்லி, நாகம்பூ, குங்குமப்பூ, வால்மிளகு, கற்கடகம், சிறுதேக்கு, ஓமம், மிளகு வகை-1களஞ்சு. இடித்துச் சாராயத்தில் போடவும்.
187. வல்லாரல் வநய்
வல்லாரைச்சாறு-1நாழி, கற்பூரவள்ளிச்சாறு-நாழி. சாத்தாவாரிச்சாறு-உரி கொடியாலைச்சாறு-உரி கருங்காக்கணச்சாறு-உரி குன்றுமணிச்சாறுகால் நாழி, தூதுவளங்காய்ச்சாறு-1படி, நெய்-1படி. வேர்வகை - பொன்னாங்காணி, நாயுருவி, கல்முரிசு, களப்பன்னை, செங்கத்தாரி, நீர்ப்பூலா, துாதுவளை வகை-1களஞ்சு. சரக்குகள்- இருசீரகம், ஓமம், செஞ்சந்தனம், செவ்வள்ளி, கடுக்காய், நெல்லிக்காய், திரிகடுகு, மல்லி, ஏலம், கராம்பு, அக்கரா, இலவங்கம்,
80

பச்சிலை, கோட்டம், மாயாக்காய், இம !ப்பு. கடுகுரோகிணி, மதுரம், சாத்திரபேதி, கோரோசனை, கஸ்துாரி புனுகு வகை-1களஞ்சு. கல்லாக்காரம் கற்கண்டு, சீனி, தேன். பிரமாணம்-இலந்தைப்பழம். தீரும் ரோகங்கள்-சிலேற்பனம், சுவாதம், கழிச்சல்.
188. சின்னமுலைப்பாற் குளம்பு
இருசிரகம், கற்கடகசிங்கி, கராம்பு, சாதிக்காய், கோட்டம், இலவங்கம், மதுரம், இந்துப்பு, கடுக்காய், திற்பலி, மிளகு, ஏலம், ஓமம், நெல்லி வகை-1களஞ்சு. பூநாகம், முசுற்றண்டம், நன்னாரி, தூதுவளை முத்தற் காசு வகை-2களஞ்சு. முலைப்பால் விட்டரைத்து முலைப்பாலில் கொதிப் பித்து துாதுவளங்காய்ப் பிரமாணம் கொடுக்கவும். அனுபானம்-முலைப்பால். தீரும் ரோகங்கள் இருமல், தொய்வு, சறளி, மலக்கட்டு சுவாதமுச்சு மற்றும் பல வியாதிகள்.
89. உஷ்ணத்துக்கு லேகியம்
சுக்கு-காற்பலம். அரிசித்திற்பலி-1பலம்.
திற்பலியை ஒரு பாத்திரத்திலிட்டு அடுப்பில் வைத்து அது புழுங்கும்படி நீர் விட்டு இறக்கி கல்வத்திலிட்டு இடித்து அரைத்து வில்லை தட்டி எண்ணெயூறிய சட்டியை அடுப்பில் வைத்து 2பலம் நெய் விட்டு அதில் வில்லையை வைத்து எரிக்கவும். பின்னெடுத்து
8.

Page 50
கல்வத்திலிட்டு அரைத்து வில்லை தட்டி மறுபடியும் நெய்யில் வேக வைக்கவும். இவ்விதம் 5 முறை வேகவைக்கவும். அரைக்கவும். லேகியமாக்கி வைத்துக்கொண்டு சுண்டங்காயளவு அந்தி சந்தி கொள்ளவும். இச்சாபத்தியம். கடுகு, நல்லெண்ணெய் கூடாது.
190. மதன காமிய லேகியம்
திரிகடுகு, திரிபலை, சமுத்திரப்பச்சை, கடுகு, ஓமம், நாகம்பூ, கஞ்சா வகை-2 களஞ்சு. சூரியகாந்தி, குரோசாணி, இருகற்பூரம், அக்கரா, வசுவாசி வகை-1 களஞ்சு. சீனி, தேன், நெய், சரி சரி சேர்த்து துவைக்கவும்.
19. மேகவாத லேகியம்
நீர்வள்ளிக்கிழங்கு, கற்பூரவள்ளி, பீச்சுவிளாத்தி, இயங்கு இவை இலைச்சாறு- நாழி, பசுப்பால்- 3 நாழி. சீனி. 15 பலம். சேர்த்து பாலும் சீனியும் சாறும் காயவைத்து காய்ந்து வருகின்ற நேரம் சீனப்பாகு- 20 பலம். இரசம்- 1பலம், நெல்லிக் கெந்தகம்-1/2 பலம். சாதிலிங்கம்- 1 பலம். சுக்கு5பலம். ஊசிக்காந்தம்- 1 பலம். மிளகு- 5 பலம். திற்பலி. 1 பலம் கொத்தமல்லி. 5 பலம். சாதிக்காய்- 3 பலம், சாதிபத்திரி 3 பலம். கருஞ்சீரகம். 5 பலம். குரோசாணி- 1 பலம். அசமதாகம்- 1 பலம், காட்டசமதாகம்- 1 பலம், வாய்விளங்கம்- 1 பலம். நற்சிரகம்-10 பலம். கராம்பு- 1 பலம். ஏலம்- 1 பலம்.
89.

மதுரம்- 1 பலம். கஸ்துாரிமஞ்சள்-1 பலம். திற்பலி மூலம்- 1 பலம். கோதுமை மா- பலம். கூகைநிறு- 1 பலம். பேரீச்சம்பழம்-1பலம். கொடிமுந்திரிப்பழம்- 1 பலம். இரசம், கெந்தகம், ஊசிக்காந்தம் என்ப வற்றைச் சுத்தி பண்ணிக் கொள்ளவும்: சுத்திபண்ணிய மருந்தையும் மற்றமருந்தையும் இளநீர் விட்டரைத்து மருந்துகளைக் கயாளத்தில் கரைத்து 2 நாழி பசுநெய்யும் நாழி தேனும் விட்டுக் காய்ச்சி குளம்பாக வருகின்ற நேரம் இறக்கி புதுக்கலசத்தில் வைக்கவும். பிரமாணம்- நெல்லிக்காய். இரண்டு நேரம் - ஒரு மண்டலம் உண்க. திரும் வியாதிகள்- பிரமேகம்-24. மண்டைசூலை - 18 பினிசம், நாசிகாபீடம், சூலை, வாதகுலை, ஈளை, கிரந்தி, பறங்கி, அழுகியபுண், அரையாப்பு, நாப்புற்று. கன்னப்புற்று, கொடுப்புப்பீறி, காச்சற்கட்டி, நீர்க் கடுப்பு, ஒடுசலம், ஒழுகுசலம், திமிர்வாதம். கெண்டை வாதம், கிருச்சுவாதம், மண்டைவாதம், மரணவாதம், பறணர் டைவாதம் , பாணி டு, சூலை, சோபை, அழல்வாதம், எரிவாதம், கரப்பன்வகை, தொய்வு, முட்டு, விக்கல், சத்தி, பெரும்பாடு, கைகால்எரிவு, நீரெரிவு, நீரரிப்பு, நீர்க்கடுப்பு, யோனிதோஷம், மூலவாய்வு, மூலக்கடுப்பு, இரத்தக்கடுப்பு நிதம் பகுல்ை, பொத்திக்கரப்பன், தாதுநட்டம், சலக் கழிச்சல், கெற்பவாயு, கெற்பக்கட்டி, இரத்தக்கட்டி, மூலக்கரந்தி, இலிங்கப்புண், பிளவை மற்றும் பல வியாதிகள்.
83

Page 51
192 கிரந்தி எண்ணெய்
நல்லெண்ணெய்- 1 போத்தல். ஆமணக்கெண்ணெய்-1 போத்தல். சாறுவகை- காக்கணமிலை-1பிடி கறிவேப்பிலை-1 பிடி விஷ்ணுகிராந்தியிலை-1 பிடி இவற்றை அரைத்துக் கரைத்து எண்ணெயும் விட்டு மூன்றுநாள் வெய்யிலில் காய வைத்து அதன் பின் - இருசீரகம், திற்பலி, மதுரம், கடுக்காய், மாயாக்காய், வேம்பாடல், வலம்புரி, கைப்பு, களிப்பாக்கு, ஈரவெங் காயம், வெளுத்தல்பிசின் வகை- % களஞ்சு. அரைத்துக் கரைத்து எண்ணெயில் கரைத்து அடுப் பேற்றி எரித்து இளம்பதம் வடித்து பொன்னிறமாக வரும் நேரம் இறக்கி வைத்துக் கொண்டு பிள்ளை பிறந்து 7 ஆம் நாள் 3 துளி எண்ணெயும் காக்கணஞ் சாறு உள்ளிச்சாறு-3 துளியும் விட்டுக்கொடுக்க வயிறு கழியும். ஒரு மாசமானால் சாறு கூட்டிக்கொடுக்கவும். மாசம் அதிகமாக அதிகமாக கூட்டிக்கொடுக்கவும். தாய் பத்தியமாக நடக்க வேண்டும்.
193. கரப்பனுக்கு எண்ணெய்
வசம்பு, உள்ளி, வெளுத்தற்பிசின், கருஞ்சீரகம், திற்பலி, அவுரிவேர், சித்திரப்பாலாவிச்சமூலம், சாத்தா வரி, சிறுகுறிஞ்சாவேர் இவற்றைத் துாள் பண்ணி நல்லெண்ணெயில் கொதிப்பித்து உள்ளுக்கும் கொடுத்து தலைக்கும் வைத்து மேலுக்கும் பூசி வரவும். கரப்பன் மாறும்.
84

194. ஆறாத புண்ணுக்கு எண்ணெய்
வேம்பாடல், அதிமதுரம், கருஞ்சீரகம், துத்தம், துரிசு, கைப்பு, களிப்பாக்கு, குளவிந்தம், வெண்குந்திருக்கம், புங்கம்வேர், ஒடுவடக்கிவேர், பருத்தியிலை துாள் பண்ணி எண்ணெயிலிட்டுக் கொதிப்பித்துப் புண்ணி லிட ஆறாத பறங்கிப்புண்ணும் ஆறும்.
195. ஒடுவுக்லகன்ணெய்
துத்தம், துரிசு, கிருமிசத்துரு, மரமஞ்சல், வெளுத்தற் பிசின், வெண்காரம், கெந்தகம், நெல்லிக்காய், கற்பூரம், முருக்கஞ்சாறு, சாத்தாவாரிக்கிழங்குச்சாறு, புளியிலைச்சாறு, குறிஞ்சாயிலைச்சாறு, புங்கம் வேர்ச்சாறு, தேங்காயெண்ணெய் விட்டுக் காய்ச்சி வெற்றிலை வெடி பதமிறக்கவும்.
196. நோவிலிலண்ணெய். நோவவண்ணெய்
வில்வம்பட்டை, பஞ்சபாண்டவர்முல்லை, காவிளாய், நல்லெண்ணெய்- % படி. வேப்பெண்ணெய். % படி. இலுப்பெண்ணெய் -% படி. பூமத்தமிலைச்சாறு, துாத்துமக்கொத்தான்சாறு மஞ்சல்ச்சாறு வகை-% படி. கற்கடகசிங்கி, சமுத்திரப்பச்சை, இந்துப்பு, கடுகு, வேம்பாடல், இலவங்கம், சாளியா, கற்பூரம், பெருங்காயம் வகை- 1 களஞ்சு. மெழுகுபதம் வடித்துப்பூசவும்.
85

Page 52
197, வாதத்துக்குப் பூச்சு எண்ணெய்- ஐந்தினம். தில்லம்பால், வேலிப்பருத்தி, எருக்கு, முருங்கைவேர், மாவிலங்கை, வாகை வகை % படி, வெள்ளுள்ளி, பெருங்காயம், இந்துப்பு, வசம்பு 1 பலம். கற்கமாகக் கூட்டி தைலமாக்கி வளையமிடவும்.
198. சிறுவர் சுரத்துக்கு எண்ணெய்
தாழைவிழுதுச்சாறு, கையாந்தகரைச்சாறு, சாத்தா வாரிச்சாறு, குப்பைமேனிச்சாறு, கற்றாழைச்சாறு, பழச்சாறு, பொன்னாங்காணிச்சாறு வகை- % படி சிற்றா மட்டி, மதுரம், சந்தனம், உள்ளி, மிளகு அக்கரா, வசம்பு
வகை- 1 களஞ்சு. பசுப்பால் -% படி நல்லெண்ணெய் -% படி சரக்கை யெல்லாம் அரைத்துக் கரைத்து மெழுகுபதம் வடித்து தலைக்கும் வைத்து உள்ளுக்கும் மூன்று வேளை கொடுத்து வெந்நீரில் முழுகவும். முறைச்சுரம் மாறும்.
199. வதாய்வுக்கு எண்ணெய்
திரிபலை, திரிகடுகு, கராம்பு, கோட்டம், மதுரம், சித்தரத்தை, கார்புகாவரிசி, விழாலரிசி, நாகம்பூ, உலாந்தாக்காவி வகை- 1 களஞ்சு. சாறுகரும்பு குங்குமுலி?
எண்ணெய்-1 படி
தேசிப்புளி % கொத்து. வெள்ளறுகுச்சமூலம்- 16 களஞ்சு, இதற்குப்புகை-கருஊமத்தம் தோல் சீவி சுங்கானில் வைத்துக் குடிக்கவும்.
86

200. அந்தரத்தாமரை எண்ணெய் குளிர்ச்சி என்வணய்)
தானான எண்ணெய் படிதான் ஒன்று
தகுமை குளிர்தாமரைச்சாறு படிதானொன்று தானென்ற பதந்தனிலே காய்ச்சிப் பக்குவமாய்த்
தானிறக்கிக் கீழே வைத்து மானான பூலாங்கிழங்கு சமுத்திரப்பச்சை
வகைவகைக்கு விராகனிடை ஐந்து
சேர்த்துக்கொண்டு தேனாகப் பொடிபண்ணித் தூவிப்போடு
தெளிவாக வடித்திறுத்து முழுகுவாயே
முழுகையிலே சூடெல்லாந் தணிந்துபோகும்
உண்மையாகக் கண்ணொளி குளிர்ச்சிசூடு
பழுத்து தேகமது பொன்போலாகும்
பண்பான நீர்க்கடுப்பு வெள்ளை திரும்
அணுகாது சூலையொடு சறனை திரும்
நலமான கடாக்ஷமதாதே.
20. கருவுநாச்சி எண்ணெய்
திற்பலி, கருநொச்சிச்சமூலம், வெள்ளுள்ளி, கையாந் தகரை, பழப்பாக்கு, பூமத்தை, நத்தைச்சூரிசமூலம், நாய்க்கடுகு % களஞ்சு. தெளிவெண்ணெய்- 1 படி. திரும் ரோகம்- வாத உளைவு.
87

Page 53
2O2. பழுதாபுளிஎண்ணெய்
ஏலம், இலவங்கம், நற்சிரகம், ஓமம், சுக்கு, மிளகு, சித்தரத்தை, சதகுப்பை, அதிமதுரம், கோட்டம், சந்தனம், செண்பகப்பூ, இருவேலி வகை- 1 களஞ்சு. வேர்வகை- எலுமிச்சை, தோடை, நன்னாரி, கோரைக் கிழங்கு, இலாமிச்சை வகை- சமன். சாறு - மொசு மொசுக்கை, நொச்சி பொன்னாங்காணி வகை- 1 படி. எலுமிச்சம்புளி பால் செவ்விளநீர் நல்லெண்ணெய்1படி. மெழுகுபதம் வடித்து தலையில் பொருத்தவும். வென்னில் முழுகவும். தீரும் ரோகங்கள்- மஞ்சட்காமாளை, செங்கமாரி, பித்தபாண்டு, பித்தவரட்சி, பித்தசிலேத்துமம்.
203. வெப்பாத்துப்புளிஎண்ணெய்
வேர்வகை- சிற்றாமட்டி, பேராமட்டி, நன்னாரி, அமுக் கிரா, நிலக்குமிழ், பொன்னாங்காணி, இருவேலி, இலாமிச்சு, கோரைக்கிழங்கு, களப்பன்னை, சீதேவி, ஓரிதழ்தாமரை, வட்டுக்கத்தரி, துாதுவளை, சிறுகீரை, சிந்தில், மலைதாங்கி சாறுவகை-சாத்தாவாரி, எலுமிச்சம்பழம், பால், இளநீர், பொன்னாங்காணி, நல்லெண்ணெய் வகை- நாழி, சரக்கு- வாலுளுவை, அதிமதுரம், வசுவாசி, மாஞ்சில், இலவங்கம், திரிகடுகு, ஏலம், உலுவா, உள்ளி, செவ்வள்ளி, பற்படாகம், அசமதாகம், கடுகுரோகணி, நற்கீரகம், கருஞ்சீரகம், கொத்தமல்லி, கராம்பு, சாதிக்காய் வகை- 1களஞ்சு.
தீரும் ரோகங்கள்- சந்நி, நடுக்கம், கொதி.
88

204, ஸபரியபுளிஎண்ணெய்
பருத்தியிலைச்சாறு புளி வகை- 4 படி, எண்ணெய்1 Ilg. சரக்கு-தேவதாரம், பெருங்குரும்பை, வலம்புரி, குந்தி ருக்கம், கடகசிங்கி, ரோகணி, வாளம், மாயாக்கங் சன்னசாலை, விழாலரிசி, சிறுதேக்கு, சிறுமூலம், ஓமம் கடுகு, வசுவாசி, சாதிக்காய், கராம்பு, ஏலம், உலுவா, சிறுநாகம்பூ, இந்துப்பு, செவ்வியம், செவ்வள்ளி, கோட்டம் வாலுளுவை மல்லி மாஞ்சில் சீரகம் மரமஞ்சல், செண்பகப்பூ, வசம்பு, அரத்தை, கடுக்காய் தான்றி, வெளுத்தல், வெட்பாலை, திரிபலை, இலவங்கம், கச்சோலம், சுக்கு, பெருங்காயம் மெழுகுபதம் வடிக்கவும். சந்நி, சுவாதம், மூச்சுக்கோளை திரும்.
205. முலைப்பாலலண்ணெய்
சிற்றாமட்டி, சீதேவி, நன்னாரி, அமுக்காரா, கோரை இருவேலி, இலாமிச்சு வகை-சமன். முலைப்பால், பசுப்பால், இளநீர், நல்லெண்ணெய் -1
Ilg. - சரக்கு- சித்தரத்தை, தேவதாரம், அகில், கசகசா, செவ்வள்ளி, மாஞ்சில், கடுகுரோகிணி, சந்தனம், நாகம், கோட்டம் வகை-% களஞ்சு
206. வாதத்குத்து, சூலைக்கு எண்ணெய்
நொச்சிச்சாறு, நல்லெண்ணெய் வகை- % கொத்து.
எருக்கலம்வேர். 2பிடி. இரசம், கோட்டம், சதகுப்பை1 களஞ்சு,
89

Page 54
207. முக்கூட்டிவலண்ணெய்
நல்லெண்ணெய், வேப்பெண்ணெய், ஆமணக்கெண் ணெய் வகை- 1கொத்து. சாறு. காக்கணம், உத்தமாகாணி, நொச்சி, வாத மடக்கி வேர்வகை- சிவனார்வேம்பு, நிலவேம்பு, வில்வம், சீதேவி, காக்கணம், பெருமருந்து, சித்தரத்தை, கல்முரிசு, நிலவாகை, நொச்சி, பருத்தி வேர் சுரக்கு- சித்தரத்தை, சதகுப்பை, தேவதாரம், செவ்வியம், திரிகடுகு, இலவங்கம், வெட்பாலரிசி, வசம்பு, வெளுத்தல், விழால், வாதுமை, மரமஞ்சல், கருஞ்சீரகம், இந்துப்பு வகை- 1 % களஞ்சு.
208. காணாக்கடி எண்ணெய்
நல்லெண்ணெய் -1 படி. கோழியாவாரை, இயங்கு, துாதுவளை, குப்பைமேனி, கொடிக்கள்ளி, மொசுமொசுக்கை, மணத்தக்காளி, வல்லாரை, சிங்கிலி, பொடுதலை, கையாந்தகரை, கிரந்திநாயகம், அவுரி, கருநொச்சி, கற்றாளை, ஈருள்ளி இவை சாறு சரக்கு உள்ளி, மிளகு, வசம்பு, இருசிரகம், வெளுத்தல், பூதவிருக்கம், வேம்பாடல், சதகுப்பை, திற்பலிமுலம், மஞ்சல், சித்தரத்தை வகை. சமன். மெழுகுபதம் வடிக்கவும். உயிலம்பட்டை மேற்பொடி, தீரும் ரோகங்கள். காணாக்கடி, கரப்பன்.
90

209. குதிரைவலி எண்ணெய்
கொடிவேலி, பிரண்டை, குதிரைவாலி, கொன்றை, கள்ளி, மதுரம், நிலவேர், நல்லெண்ணெய், வேப் பெண்ணெய், தேங்காயெண்ணெய். சுரக்கு உள்ளி, வசம்பு, பெருங்காயம், வேர்க் கொம்பு, நற்சிரகம், கருஞ்சீரகம், கஸ்துாரி வகை- 1 களஞ்சு.
20. குதிரைவலி எண்ணெய் - 11 சரக்கு- கடுகு, கெந்தகம், துரிசு, வசம்பு, மிளகு, திற்பலி, வேர்க்கொம்பு, இந்துப்பு, கடுக்காய், வெளுத்தல், கற்கடகசிங்கி வேப்பெண்ணெய், ஆமணக்கெண்ணெய். முருங்கைவேர், துத்திவேர்.
21. கரப்பனுக்கு எண்ணெய் தேங்காய்ப்பால், துளசி, முருங்கைப்பட்டை தெளிவெண்ணெய் (ஆமணக்கெண்ணெய்)
22. பிறவீச்சிலெண்ணெய்
தெளிவெண்ணெய் வேர். கான்றை, சாறணை, உவா, மாவிலங்கு, பெரு மருந்து, குந்திருக்கை, காற்றோட்டி, நன்னாரி, குதிரை வாலி, அவுரி, நொச்சி, கோடகசாலை சரக்கு- சுக்கு, வசம்பு, மிளகு, உலுவா, கொத்த மல்லி, ஓமம், திற்பலி, கடுகு, மஞ்சல், வெளுத்தல், பெருங்காயம், வாளம், துரிசு, கடுகுரோசனை, இரசம், சுரச்சை (உருத்திராக்கம்?)
9.

Page 55
23. உஷ்ணவாதத்துக்கு எண்ணெய்
செருப்படை, குன்றிமணி, குப்பிளாய், வெள்ளறுகு, எலுமிச்சம்புளி, கோழியாவாரை, இவை சாறு- 1 கொத்து. சாதிக்காய், கராம்பு, வசுவாசி 2 களஞ்சு. திற்பலி. 5 களஞ்சு. நேர்வாளம்- 20 கொட்டை. அதி மதுரம், கெந்தகம்- 4 களஞ்சு. கோட்டம், துத்தம், துரிசு - 3 களஞ்சு. ஊசிக்காந்தம், இரசம், இலவங்கம், ஏலம் சாதிக்காய்- 2 களஞ்சு. பொரிகாரம். 3 களஞ்சு. சீனக் காரம்- 4 களஞ்சு. வெள்ளைக்குந்திருக்கம்- 3களஞ்சு. கருஞ்சீரகம்- 10 களஞ்சு. பறங்கிக்கழங்கு- 5 களஞ்சு. மெழுகுபதம் வடித்து மேலும்பூசி உள்ளுக்கும் கொடுக்கவும். திரும் ரோகங்கள்-உஷ்ணவாதப்பிடிப்பு, உளைவு
24. பறங்கி வியாதிக்கு எண்ணெய்
பருத்தியிலை, தயிர்வளையிலை வகை- 1 பிடி. இடித்துப் பிளிந்து நல்லெண்ணெய் விட்டு கராம்பு, வசுவாசி, சாதிக்காய், வெடிகெந்தம் இவை அரைத்து கரைத்து இரசம் (பருத்தியிலையில் சுத்தி செய்தது) சேர்த்துக் காய்ச்சி பதத்தில் வடித்து உள்ளுங் கொடுத்து மேலும் பூசவும். பத்தியம்- மோர் கூட்டவும். உப்பு வறுத்துக் கூட்டவும். குளிர்ந்த தண்ணிர் வார்த்து முழுகவும்.
92

25. தன்வந்திரியார் சண்டமாருத வசந்தூரம்
இரசகற்பூரம் (சுத்தி) - 4 வராகன் லிங்கம் (சுத்தி) - 8 வராகன்
வீரம் (சுத்தி) - 2 வராகன் நெல்லிக்கெந்தகம்(சுத்தி)-2 வராகன் இரசசெந்துாரம் (சுத்தி). 1 வராகன் இவைகளைக் கல்வத்திலிட்டு இரண்டு சாமம் அரைத்து எடுத்துக் கொள்ளவும். பிரமாணம்-பணவெடை, 6 வேளை தின்னவும். (3 நாட்கள்)
அனுபானம்- பனை வெல்லம். திரும் ரோகங்கள்- சந்நி-13, குஷ்டம், மகோதரம், பீலிகை, குன்மம், வாதம், கிரந்தி, கொருக்கு, காமாலை, பிளவை, சுரம்-64, விரைவாதம், தனுவாதம், சூலை, பவுந்திரம், கண்டமாலை, மேகம், வண்டுக்கடி, யோனிப்புற்று.
26. சண்டமாருத வசந்தூரம் வேறு
பூரம் (சுத்தி) - 10 வராகன் லிங்கம் (சுத்தி) - 8 வராகன் வீரம் (சுத்தி) - 2 வராகன் கெந்தி (சுத்தி) - 1 வராகன் இரசசெந்துாரம் (சுத்தி) -2 வராகன் இவைகளைக் கல்வத்திலிட்டு 6 சாமம் அரைத்து எடுக்கவும். பிரமாணம்- அனுபானம்திரும் ரோகங்கள் - முன்போலவே,
93

Page 56
27. அக்கினிகுமாரன் பஞ்சலோக வசந்தூரம்
இரும்பரப்பொடி - 1 பலம். உருக்கரப்பொடி - 1பலம் வெங்கல அரப்பொடி - 1பலம். பித்தளைப்பொடி - 1 பலம்.
செம்புப்பொடி - 1 பலம்.
ஊசிக்காந்தம் - 1 பலம்
இரசம் - 1 பலம்.
கெந்தகம் - 1 பலம்
வெண்காரம் - 1 பலம்
மனோசிலை - 1 பலம்
அரிதாரம் - 1 பலம்
திற்பலி - 1 பலம் கற்றாழைச்சாறு விட்டு 3 நாள் ஊறவிட்டு அரைத்து ஒரு வில்லை தட்டி உலர்த்திச் சட்டிக்குள் வைத்து சட்டி மூடி சீலைமண் செய்து இன்னொரு சட்டிக்குள் வைத்துச் சட்டிமுடிச் சீலைமண் செய்து அடுப்பில் வைத்து மூன்றுநாள் எரிக்கச் செந்தூரமாகும்.அதை எடுத்துவற்சநாவி1 பலம் திற்பலிபலம் திற்பலிமுலம்- 1 பலம் வெள்ளுள்ளிச்சாறு விட்டரைத்து பணஎடை வீதம் குளிகையுருட்டி உள்ளித்தைலத்தில் 1 நேரம் குளிகையிட சந்நி, வலி, வாதம் என்பன திரும்.
28. வாதநாராயண வசந்தூரம் அரப்பொடி - 10 பலம் வீரம், பூரம், இரசம், கெந்தி, லிங்கம், தாளகம், பூநிறு, வெள்ளைப்பாஷாணம், சீனம், வெடியுப்பு, சாரம் வகை 1 களஞ்சு.
94

அரைப்பு - தேசிப்புளிச்சாறு வில்லை செய்துலர்த்தி சட்டியில் வைத்து சட்டிமுடி சீலைமண் செய்து புடம்போடவும். பிரமாணம் - பேன்பிடி. அனுபானம் - தேன் பனைவெல்லம் தீரும் வியாதிகள் - வாதம், வலி, நரம்புப்பலவீனம் இன்னும் அனேக வியாதிகள்.
29. இரசவசந்தூரம்
இரச செந்துாரம் பாரப்பா
இன்னமொரு செந்தூரந்தான்
பரிவாகச் சூதமடா பலந்தான் வாங்கிச்
சேரப்பா இருப்பை நெய்யில் சுத்திபண்ணி
சீராகத்தானெடுத்து வைத்துக் கொண்டாரப்பா
வெண்ணெய்போல் சொல்வாரப்பா
அப்பனே நானுனக்குச் சொன்னேன்பாரு
சேரப்பா சொல்லுகிறேன் கராம்பு திறமாகத்
தானிரண்டு வாங்கிக் கொள்ளே
கூட்டியே கஸ்தூரி மஞ்சளப்பா
குமிவே மரமஞ்சள் வராகனொன்று கூட்டிக் கொள்ளாட்டு வெற்றிலையின் சாற்றால்
குறித்துவர அரைத்து விட்டு முன்றுசாமம் அதிட்டியே பரிவாகப்பூசை செய்து
வில்லை செய்து ரவியில் வைத்து ஒட்டில் வைத்து சீலைமண் செய்து
மைந்தனே மயிற்புடத்திற் போடே
95

Page 57
போடச் செந்துாரமாமே செந்துாரந்தானெடுத்து
வைத்துக்கொண்டு வெண்ணெயிற்கொடுக்கும்போதுமந்தார காசமுடன் மயக்கமுடன் பித்தத்தால் வந்த மேகந் தொந்தரைகள்
செய்கின்ற காசரோகம் துடியான வாதமுடன் முடக்கு சூலை தானும்
மிஞ்சொல்லுமே
சொன்னேனப்பா சர்க்கரையிற் கொள்ளும்போது
துடியான சூலையெல்லாம் போகும் சொன்னேன்யான் வெல்லத்திற் கொள்ளும் போது
சுகசந்நி மாறுமடா சூடுந்திரும் சொன்னேன் நான் திரிகடுகுடன் கொள்ளும்போது
சூலை அரையாப்பு போமே இன்னுஞ் சொன்னேன் நான் நிறுபோலச் செந்துாரஞ்
சொல்லவில்லை மெய்ஞ்ஞான சூக்ஷமிதே
220. முட்டடைப்பன், கண்டமாலைக்கு எண்ணெய்
குன்றிமணிவேரும் இலையும், குப்பைமேனிச்சமூலம், வட்டுவேர், துாதுவளைவேர், வெள்ளைக்காற்றோட்டி வேர், மாவிலங்கம்வேர், நாயுருவிச்சமூலம், முருங்கை வேர், துடைவாழைக்கிழங்கு, காக்கணம் கொவ்வைக் கிழங்கு, அவுரி, காவிளாய், பெருமருந்து இவற்றின் சாகமெடுத்து வட்டுக்காய், மருக்காரைக் காய் பன ரைக்காய், இங்கிறுக்கொடிச் சாகமும், அரப்பவித்த நீரும் ஒவ்வொரு சிறங்கை கூட்டிக் காய்ச்சி இது யொக்க கொத்து நல்லெண்ணெய் தேங்காயெண்
96

ணெய் சேர்த்துக்காய்ச்சி பதத்தில் இருசீரகம், உள்ளி, ஓமம், திற்பலி, கராம்பு, வசுவாசி, சீனக்காரம், இந்துப்பு, துரிசு, மிளகு, சுக்கு, திரிபலை அடப்பங் கொட்டை, புங்கங்கொட்டை - இவையெல்லாம் சேர்த் தரைத்து கரைத்து மெழுகு பதத்தில் இறக்கவும். முட்டடைப்பன் கண்டமாலைக்கு உள்ளும் பருக்கி சீலையிலுரட்டி கொடுப்பிலடக்க காதில் விட கழுத் துக் கட்டி வீக்கங்களில் பூச நாக்கு வீங்கினால் பேச்சுக்குழறினால் - புகையிருமலுக்கு பூச மாறும்.
22. சித்தாதி எண்ணெய்
சீர்சிறந்த உடல்தனிலே கவுசைரோகம்
சிரசுதனில் குடியிருந்த மற்றரோகம் பாரதனில் விழுந்தெழுந்த சூலைரோகம்
பம்பரம் போலாடுகின்ற நீராம்பல்க்கட்டி நீரழிந்த கற்கூடு நீர்மலத்தின் கட்டு
நீரான சொறியோடு இரணங்கள்தானும் பேர் பெரிய பெரும்பாடு நாவடைப்பு
பின்னும் கிரந்தியொடு மேகந்தானே
தானென்ற தலையிடித்தல் வாயிற்புண்ணும்
தளம்புகின்ற கண்ணெரிவும் ஊதுவாய்வும் ஊனென்று உயிர்த்தெழுந்து குடிபோந்தான்
உத்தமனே எண்ணெயொன்று உரைக்கக்கேளு வேனென்ற காயமொடு உள்ளி வாளம்
விரும்பியே வெண்காரம் காட்டெருமைப்பாலும் கானென்ற கடுக்காய் இந்துப்புவாகும்
கருத்தொரு சீரகமொடு திற்பலியும் சேரேன்
97

Page 58
சேரேன் நீசுக்கு ஓர் களஞ்சு சோராமல்
வாளமதுவோ ஒரு பலம் வாங்கு பாரே நீ உள்ளி சேர் கணக்காய் வாங்கி
கடுக்காயுமப்படியே வாங்கி சேரினி சிற்றண்டத்தெண்ணெய் சேராகும்
சிறப்பாகத் தேங்காய்ப்பால் சேர் எட்டு வாங்கு உத்தமாகாணிச்சாறு சேர் எட்டு வாங்கு
வாங்குவாய் சரக்கதெல்லாம் வகைக்கு ஒரு
களஞ்சு மைந்தாகேளு பாங்குடனே கலத்திலிட்டு
மைபோலாட்டி பாலகனே பால் சாறெண்ணெய் தெங்கியே சரக்கதெல்லாம் குளப்பிக்கொள்ளு
தியங்கியங்காமல் வேகமுள்ள விறகால் மூட்டி நீயும் சாங்கமாய்த் தீமூட்டி சட்டமதாக
சம்பிரமுடன் வெந்திறக்கிச் சரி சொல்வேன் சொல்வேனெண்ணெய்தனைத் தொட்டுப்பார்த்தால்
சுந்தரனே சுத்த சலம் போலிருக்கும்
மல்லுவேன் மறுபாண்ட மிறுத்துக் கொள்ளேன்
மைந்தனே உண்பதற்கு ஒரு களஞ்சு எண்ணெய்
வெல்லுமே ரோகமெல்லாம் வேகமென்ற
சிரங்குமுதல் வெருண்டேயோடும்
அல்லவே கொட்டிவிட்டால் பிசாசுபோகும்
அப்பனே அழலையென்ற தாகம் போகும்
போமேதான் விக்கல் சத்தி குன்மம் போகும்
புத்தியுள்ள புலத்தியனே கவுசிகை போகும் போமேதான் கிரந்தியரையாப்புப் போகும்
பொல்லாத பெரும்பாடு பொருமல் பைத்தியம்
போகும்
98

போமேதான் சூலையொடு பறங்கிப்புண்ணும் பொல்லாத உள்கவிகை விக்கல்தானும்
போமே நாவடைப்பு கெற்பசூலை தானும்
போமெடா வலியுந்தான் பறந்துபோகும்
தாழுமே காதடைப்பு வயிற்றில்ரோகம்
தாங்காது கண்ணெரிவு பூச்சிவெட்டு வானுமே மயங்குமெடா குன்மமெட்டும்
வகைகெட்ட சூதகத்தின்வெட்டை போகும் நானுமே கிரந்தி மாமிசங்களெட்டும்
நசித்திடவே கலங்குமெடா பவுந்திரரோகம் பாடுயின்னுலைச் சித்தர் கூடிப் பட்சமுடன்
மகிழவே பேரிட்டாரே
222. மிளகெண்ணெய் கைகண்டது)
மிளகு 1 கொத்து. எடுத்து தோல்போக்கி மொசு மொசுக்கைச்சாறு விட்டவித்து வற்றியபின் வெய்யி லில் ஒரு நாள் காயவைத்து அதேபோல் மறுநாள் கையாந்தகரைச்சாறு அதற்கு மறுநாள் பொன்னாங் காணிச்சாறு அதற்கு மறுநாள் செவ்விளநீர் மறுநாள் பசுப்பால் கடைசியாக ஆட்டுப்பால் 3 நாளுலர்த்தி அந்த மிளகை எடுத்து அரைத்து நல்லெண்ணெயில் கரைத்து அடுப்பில் வைத்து ஜங்கறனை மண்டாடம் செய்து மெழுகுபதம் தண்ணில் வைத்து வடித்து ஆறினபின் தலையில் வைக்கவும். திரும் வியாதி-பீனிசம், தலைநோ, மண்டைவியாதி20, உப்புப்புளி தவிர்க்கவும். உப்பை வறுத்துக் கூட்டவும்.
99

Page 59
பொன்னாங்காணி, ஆவின்பால், ஆரல், சிறுகீரை, கூட்டிக்கொள்ளவும்.நெல்லிக்காய் மொசுமொசுக்கை மிளகு அரைத்து அரப்புப் புண்ணாக்கு போட்டுக் &ւՔՈ)յ06ւրճ,
223. சர்வ சங்காரக் கொதிலயன்ஸினய்
சீர்பெருகு சன்னிவிரை இரசங் கெந்தம்
திரிபலையோடசமதாகம் பச்சைநாவி கார்செறியும் மிளகுடனே வெள்வெங்காயம்
கறியுலுவா மரமஞ்சல் வசம்பு கொள்வாய் பேர்செறியும் மனோசிலை வாலுளுவை பேர்பெரிய நற்கராம்பு தானும் நேர்செறியும் கைப்புடனே நிறுவிஷநிகர் நாகம் நிசமாக வோரொன்று களஞ்சு கூட்டே நிதிபயில் சாறணையின் கிழங்குதானும்
நிகருமுவாய் வெள்ளுடல் வேலவேர்
பிடியொவ்வொன்று ஆதியியங்கம்சாறு மாவிலங்கைச்சாறு
வரிதான தயிர்வளையின்சாறு வேலிப்பருத்தி ஒதியதாம்பூலவல்லி முருங்கைவேரும்
ஒருசரியாய் படியதொன்று நிம்பவெண்ணெய்
காதியதோர் கொத்தொன்று கூட்டிக்காய்ச்சி
கடுகுமிதந்திட்ட பதம் கடைச்சரக்கே
கடைச்சரக்கு வேர் தூளாய் இடித்து வைத்து
கடியதோர் கொதியெண்ணெய் கொதியை மாற்றி
100

துடித்திடவே தூள்தூவியிறக்கி உள்ளும்
சுகமாக உச்சியினும் மேலும்பூச
நடித்துவரும் உட்குத்து பிறவீச்சு
தானுளைவு திமிர் விறைப்பு கபாலசந்நி
பிடித்த நச்சுவலி மரணவலி பேர்பெரிய
குதிரைவலி சந்நியென்றதெல்லாம் போமே
போமேதான் முயலகனன்டன் குமரகண்டன்
பிள்ளைப்பெற்றோர் பொருந்து பயங்கரம் சிரித்தல் வாங்கல்தானும் தாமேதான் பிடிப்புடனே கடுப்பெரிவு பிதற்றலொடு சந்நிவாதம் ஆமே பொறிகெட்டு வந்த வந்த கண்ணுக்கு
அருமையாய்ச் செவியூடு அடைத்துவைத்து நாமேவும் பெருங்காயம் வசம்பு திற்பலி
நயமாக வேர்க்கொம்பு சமனாய்க் கொள்ளே
கொண்டதொரு சரக்கெல்லாம் பொடியாய் செய்து கூசாமல் எண்ணெயிட்டுத் துவாலைபோட கண்டபடி சொன்னதோர்முறை செய்வீரேல்
கதிரவன் முன்பனிப்போலக் காய்ந்தேயோடும் துண்டமதிசூடு சிவன் சங்கரரர்ச்
சொல்லரிய கொதியெண்ணெய் செய்வீராகில் மண்டலத்தில் செய்து கை கண்டதென்று
மறையோது முனிவன் உரைத்ததாமே
O

Page 60
பீனிசம் நாசிகாபீடம் சூலை வாதகுலை
ஈளை கோளை பழுவறையன் பவுந்திரம் கிரந்தி பறங்கி அழுகியபுண் அரையாப்பு நாப்புற்று
கன்னப்புற்று கொடுப்புப்பீறி காச்சற்கட்டி நீர்க்கடுப்பு ஒடுசலம் ஒழுகுசலம் திமிர்வாதம்
கெண்டைவாதம் கிருச்சுவாதம் மண்டைவாதம் மரணவாதம் பறண்டைவாதம் பாண்டு சூலை
சோபை அழல்வாதம் எரிவாதம் கரப்பன்வகை தொய்வு முட்டு விக்கல் சத்தி பெரும்பாடு
கை கால்எரிவு நீரெரிவுநீரரிப்பு நீர்க்கடுப்பு
தோஷம் மூலவாய்வு மூலக்கடுப்பு இரத்தக்கடுப்பு
நிதம்பசூலை பொத்திக்கரப்பன் தாதுநட்டம் சலக்கழிச்சல் கெற்பவாயு கெற்பக்கட்டி
இரத்தக்கட்டி மூலக்கரந்திஇலிங்கப்புண் பிளவை மற்றும் பல வியாதிகள் மாறும்.
102
 

2.
4.
S.
9.
10.
11.
12.
13.
14.
S.
16.
17.
18.
ஆசிரியரின் நூல்கள்
ஈழத்துச் சித்தமருத்துவ நூல்களி ஓர் அறிமுகம் (அரச சாகித்திய மண்டலப்பரிசு, கொழும்பு தமிழ்ச் சங்கப் பரிசு பெற்ற நூல்)
கதேச மருத்துவ மூலிகைக் கையகராதி (அரச கரும மொழித்திணைக்களப் பரிசு பெற்ற நூல்)
உளநெருக்கீடுகளும் மனநலனும்
கட்டு வைத்தியம் இருபதாம் நூற்றாண்டில் ஈழத்துச் சித்தமருத்துவம்
. பிள்ளைய் பிணிமருத்துவம் - கைநூல் . சித்த மருந்தியலும் மருந்தாக்கவியலும்
சித்த மருத்துவ மூலதத்துவம் (வட கிழக்கு மாகாணசபையின் உயர்கல்விக்கான விருது பெற்ற நூல்) யாழ்ப்பாணமக்களின் சைவ உணவுப்பழக்கவழக்கங்கள்
மூலிகைகள் ஓர் அறிமுகம்
மூலிகை உணவு மருத்துவம்
யோகாசனமும் உடல்நலமும்
Common Drugs in Siddha Pediatrics
இந்து ஆலயங்களில் மருத்துவ சுகாதாரம்
மருத்துவமும் சோதிடமும்
இந்துவிரதங்களும் உடல்நலமும் சித்தமருத்துவ வாகடம் சித்தமருத்துவமகய்பேற்றியலும் மகளிர் மருத்துவமும்

Page 61


Page 62


Page 63
96ögí6ása, Dr. 36
உங்கள் படைப்பு
அவற்றுள் மிக மிக முக்கியமான இலகுவான காரியமல்ல.
உங்கள் நூலில் ஒவ்வோர் பக்க முக்கியமானது தேவையானது, அவசி கூறலாம்.
தெளிவான அச்சில் முறையான தக்கது.
Dr. சிவசண்முகராஜா,
பல்வேறுபட்ட வாசகர்களின் ந ர், பருத்தி ஒன்றில் "ரெடிமேட் ே உங்கள் அணுைகுமுறை.
பிரம்ம சூத்திரத்திலும் பார்க்க ! அது போலிருக்கிறது உங்கள் "உளெ மாற்றமுடியாத நெருக்கீடு உள்ள மந்திரம் போலிருக்கிறது - தந்திரமாக
நூல் என்னும் சொல்லுக்கு வரை இவ்வளவு ஆளுமையுள்ள படை அந்த இடத்துக்கு வந்தாலே சிறப்புடை உங்களுக்கு எமது வாழ்த்துக்க யாழ். இந்துக் கல்லூரி, யாழ்ப்பாணம்.
பாரதி பதிப்பகம், 430
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன் நூல்கள் பற்றி.
வசண்முகராஜா,
"சித்தமருந்தியலும் மருந்தாக்கவியலும் து மிகையாகாது. யவாறு எழுதுவது குறைவு.
தோன்றலாம்.
ாவை எவையெனக் குறித்துக் காட்டுவது
த்திலும், ஒவ்வோர் குறிப்பும் பொருந்தியது, பம் அறிந்து கொள்ள வேண்டியது என்றே
வகையில் ஆக்கப்பட்டிருப்பது போற்றத்
அன்புடன் Dr. நீகாந்தா அருணாசலம் முன்னாள் விரிவுரையாளர், கொழும்பு.
ாடியைப் பிடித்துக் கதை சொல்லவல்லவர் சேட்" காய்த்துத் தொங்குவது போலுள்ளது
அத்வைதநெறி எப்படி மேம்பட்டிருக்கிறதோ நருக்கிடும் மனநலனும்” நூல். ாவர்களுக்கு இது மருந்துபோலிருக்கிறது - இருக்கின்றது - தேன் போலிருக்கிறது. விலக்கணமாக உள்ளது. -ப்பாளி எந்த இடத்துக்கு வரவேண்டுமோ த்து.
5GT.
ஐ. கமலநாதன் ஆசிரியர்,
காங்கேசந்துறை வீதி, யாழ்ப்பாணம்