கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: உயிர்நிழல் 2007.10-12

Page 1
WOL. V. N4 - SSUE 27
 

October - December 2007

Page 2
■ 』 W
LGUIg|TUELU
o'r "
"ப்பிடிப்போனால் சரிவராது நாங்கள் நீண்ட நாங்கள் இப்புகதைக்காட்டிப் பிறகு எப்பவு வருடங்களுக்குமுன் இப்படித்தான் இந்தக் கிழவி என்ன்சொல்லுறியள் இப்ப நாங்கள் இப்பிடிக் இருங்கோளங்கLைIகடமையை நாங்கள் மற்றவர்கள் சொன்னார்கள்
இல்லை. எங்கLைஅமைப்புக்குள் ஜனநாயக பயப்படாதீர்கள். நாங்கள் எல்லோரும் ஒன்றுசிே ஏற்படுத்தலாம் நம்பிக்கையுடன் பேசினார்.இப் கொண்டுவரக்கிழவர் அன்று விரும்பினார்:l
in LIBILI:
"""
Iஅது என்னழம் எண்டு எழுதிய கதாசின்
விEIEஇருபு
தம்பிஈழம்செத்துவிட்டது என்பதுபொருளல்ல, ஒன்றுதான்.இதைவிடப்பாதுகாப்பான்இLEஎன் அதைச் சவப்பெட்டியுடன் புதைத்திருப்பேன்ஈ ஈழத்விதத்தந்து சவப்பெட்டியுடன் எர்வின்போ
Iசவப்பெட்டி'சிறுகதையிலிருந்து
 
 
 

Iதொடர்புகளிற்கு
Meera Pushparajah
BİRLEMİSEST) 956). Goussianwhile
Face ITETI: 0.033 39853.3
e-Taillcupidon frohotmail.com
வெளியீடு
|||||||||||||||||||||||||| NEGESELLIITTGITTLE
|205:கருப்பூர்சாலை |山巽屿萤ü621310, ||||||||||||||| BELSBERG
இந்தியா
MTesloog A332273444
||||||||||||||||||||||||| e-mail: admin@adaiyalam.com
L60LLIL56T.
தொகுப்பு: மீரா புஸ்பராஜா
நாட்களுக்கு ஓம் போட்டுக் கொண்டிருக்க முடியாது. b கதைக்க முடியாமல் போய்விடும். இருபது ர்பேச்சை எடுத்தார்.
கதைப்பது தெரிந்தாலே உயிருக்கு ஆபத்து சும்மா செய்வம் நடக்கிறது நடக்கட்டும்" ஒரே குரலில்
ம் வேண்டும் அதிகாரப் பரவலாக்கல் வேண்டும். ந்துகேட்டால் பலமாகவிருக்கும். ஒரு மாற்றத்தை டித்தான் இயக்கத்துக்குள் புரட்சிகர மாற்றத்தைக்
பசவப்பெட்டிக்குள்ளிவத்துக்கொண்டு திரியிறியள்
ஈழத்விதவைத்துப்பாதுகாக்கக்கூடிய இடம் அது க்குத் தெரியவில்லை.ஈழம்செத்துவிட்டது என்றால் நத்தைப் பாதுகாக்கவேண்டியது எனது கடமை. கவிடுங்கள்."

Page 3
இரத்துரந்-திர்க்கத்ாச்சாரம்=உலகமயமாதல்
யாழ்ப்பாணத்து இரவுகள்
--
எழுத்தாளர் செ. யோகநாதன் அந்சலி
அநாதை தேசங்கள்
மரங்களைத் தேதி.
மலேசியத்தமிழரும் இனத்துவ முரண்பாடுகளும்
= சமகாஸ் சமூகப் பார்வைகள்
ஆராஜ் கவிதைகள்
இர்ரெப் சிந்திய இரத்தம்
சிர்ேனர் திட்போவுவா பரிசு பெற்ற இரு படைப்
ஜோர்ஜ் ஹபாஸ் அந்சவி
அரிது அரிது
மணி திரைப்பட இயக்குநர் புதியவனுடன் ஓர் உ
தலைமுறை இடைவெளிகளைத் தகர்த்து வாழ்ந்த தோழர் பரா இன்று எம்முடன் இல்ை
மூச்சுக் காற்றால் நிறையும் வெளிகள்
வெற்றிடம்
எீர் தடத்தில்.
ஈரானிய பெண்கள் சினிமாவின் பயணம் -சிஸ் குறிப்புகள்
இநகலாசபதினிெறு இரக கோர்த்து நிற்போம்
பிரத்தியேக நாட்குறிப்பில் இருந்து.
புதவி நிகழ்வுகள்
 
 
 

பாளிகள்
உரையாடல்
இராகவன் இன்ங்கை
霹
கலையரசன் 19
புதியமாதவி மும்பை
லெனின் மதிiானம்
5.TELEFFğü | 43 }
ரதன்
மான்சி
பிச்சிவிக்காடு இளங்கோ சிங்கப்பூர் 4ே
ஸ்சுமி
துவாரகன்
பதழி
பிச்சிதித்தாடு இளங்கோ:சிங்கப்பூர் ே
ரதன்
இதுபராசன்
தெருக்கத்தின்
... is

Page 4
நேசமுகம்
சுதந்திரமான உருவாகிறது
16-03-2008, நேரம் காலை 11.00 மணி
தோழமையுடன் அனைவருக்கும்! பராவின் நினைவாக நடைபெறும் மதிய டே நினைவு ஒன்று கூடலிலும் கலந்து கொள்க
குடும்பத்தினரும் நண்பர்களும்,
DL-Lib: Werkstatt der Kulturen, W.
12049 Berlin, Germany தொடர்புகளுக்கு: 004930 61627808, 0
I WOL- VIII N°4.
நிறுவனர்: கலைச்செல்வன்
தொகுப்பாசிரியர்கள் லசந்தி ந.சுசீந்திரனர்
வடிவமைப்பு
பிரதினர்
தயாரிப்பில் உதவி பிரியதர்வினி தயாநிதி
 
 
 
 
 

நெஞ்சிருத்தி
கருத்துப் பரிமாறல்கள் மூலமே சிந்தனை
-தோழர் பரா
பாசன உபசாரத்திலும் தொடர்ந்து நடைபெறும் ா அன்புடன் அழைக்கிறோம்.
issmann Str. 32
04420851 82 086
தகவல்: சந்துளப்
தொடர்புகளுக்கு:
Ei 27, Rue Jean Moulin 92400 Courbevoie FranGe
e-mail: exilpub(0gmail.com
இணையத்தில் உயிர்நிழல் www.uyirrhizhal.com
அன்பளிப்பு: வருட சந்தார். 15 euros (4பிரதிகள்: தபாற் செலவு உட்பட)
No d'enregistrement de l'association: 13023204

Page 5
d5Tலையில் கேலொக்கின் சான்ட்விச், மதியம் மக்டொனால்ட் பேர்கள், இரவு வீட்டிற்குக் கொண்டு வந்து விநியோகிக்கப்படும் பீசா. இது இன்றைய இந்தியாவில் மத்திய மேல் தட்டு வர்க்க மக்களின் உணவுவகைகள்.
இலங்கையில் சற்று மாறுதலாக, அங்கு இரவு, மதிய உணவுடன் கென்டக்கி சிக்கன் சேர்க்கப்படும்.
சுமார் 20 வருடங்களுக்கு முன்னர் இந்த உணவுவகை இட்லி, சோறு-கறி, தோசை என்று இந்தியாவில் இருக்க, இலங்கையில் பாண், பிட்டு, சோறு-கறி, இடியப்பம் மற்றும் பின்னேரங் களில் வடை-தேநீர் என இருந்தது. சுதந்திரத் துக்கு முற்பட்ட காலங்களில் தேநீர் இருக்க வில்லை. தேநீர் இலவச பானமாக மக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு, பின்னாளில் இலங்கை யின் உற்பத்தியில் அதிக அளவையும், ஏற்று மதியில் முதலிடத்தையும் இந்தத் தேயிலை பிடித்துக் கொண்டது. 'சிலோன்' என்ற நாட்டை உலக வரைபடத்தில் காட்ட முடியாத மேற்கத் திய மக்கள்கூட, சிலோன் ரீ எனக் கேட்டு வாங்குவார்கள். எமது பண்டைய பானங்களான கேள்வரகு மற்றும் அரிசிக் கஞ்சி போன்றன வற்றை சுவைப்பவர்கள் அருகிவிட்டனர்.
இன்று இந்தியாவில் மிகப் பிரபலமான ஐந்து அமெரிக்கப் பொருட்கள் : கோக்கோ கோலா, லெவிஸ் ஜீன்ஸ், கூகிள், வயக்ரா, கோல்கேட் ஆகியன. (வயக்ரா-கோக்கின் எதிர்வினைக் கான நன்வினை, கோல்கேட் - மத்தியதர மக்க ளின் வாய் மணம் போக்கும் போர் வாள். இதிலில் லாத வீடில்லை. பெட்டிக்கடையிலேயே பெற்றுக் கொள்ளலாம்). இந்தியாவில் அதிகம் வாசிக்கப் LJL || 5 sơ)(C)upflöớ15 TBIT6ü356i GOne With the Wind (Margaret Mitchell), Old Man and the Sea (Ernest Hemingway), The Godfather
இதழ் 27
வாத்
· 6ILDg
மோ
தே
LDIII)
 

Xஅரசியல்
ராதா கிருஷ்ணன்
“io Puzo), Love Story (Erich Segal), Da Vinci Code(Dan wn). இந்த மாற்றங்கள்எதனால்? கல்வி, கட்டிடக் கலை, விளையாட்டு, சட்ட முறைகள், சியல் யாப்புக்கள், அபிவிருத்தித் திட்டங்கள், பாடசா கள், களியாட்டங்கள், தொழில்முறைகள், வீதிகள், ணவு,உடை,உறையுள், வியாபாரங்கள் போன்ற அனைத் மேல் நாட்டு முறைகளே. லொஸ் ஏஞ்ஜெல்ஸ், பாரிஸ் ன்ற நகரங்களைப்போல் எமது நகரங்களும் வளர ண்டும் என்றுதான் நினைக்கின்றோம். நாம் எமது பராம் பக் கல்வி முறைகள், அறிவுச் சொத்துக்கள், நம்பிக் கள் போன்ற அனைத்தையும் இழந்துவிட்டோம். இந்தியா, ங்கை, சீனா, யப்பான் போன்ற கீழைத்தேய நாடுகளின் வுச் சொத்துக்களும், வளங்களும், விஞ்ஞான முறை ம், மருத்துவமுறைகளும் அழிக்கப்பட்டுவிட்டன. இவற் அறிவை மேற்கத்தியநாடுகள் எங்களுடைய மரபு அறிவு நிகளிடமிருந்து பெற்றுத்தம் சொத்தாக்கிவிட்டன. நாம் து கண் முன்னால், எமது சொத்துக்களை அவர்களும், ர்களின் முகவர்களாக செயற்படும் மரபு அறிவுஜீவிகளும் ப்பதை அனுமதிக்கின்றோம். எமது அடையாளத்தை பர்கள் கூறித் தெரிந்து கொள்ளும் அளவிற்கு மிக சமானநிலையில் உள்ளோம். ۔ இன்றைய நுகர்வுமுறையானது தேவைக்கு அப்பாற்பட்டு, வைகளைத் துாண்டும், கவர்ச்சிகரமான ஒரு பொருளாக விட்டது. நுகர்வு முறைகள் பல படிமங்களில் ஊட்டப் நின்றன. கல்வி, ஊடகங்கள் போன்ற அனைத்தும் இந்த ர்வுமுறையை மாற்றியமைத்துவிட்டன.
ாச்சாரம்
கலாச்சாரம் என்ற பதத்திற்கான விளக்கம் பல படிநிலை லேயே கூறப்படலாம். இது கொண்டுள்ள கூறுகளே இதன் ாழிற்பாட்டினைத் தீர்மானிக்கின்றன. சமூகவியலாளர் ம், மானுடவியலாளர்களும் இதற்கான வரைபில்வேறுபடு றனர். எட்வேட் பேர்னெற் ரைலர் என்ற இங்கிலாந்தைச் ந்த ஆய்வாளர்"மனிதநாகரீக வளர்ச்சிக்கோட்பாட்டின் பும், இனப்பரப்பு பற்றிய விஞ்ஞான ஆய்வுகளின் பிரகா
5 உயிர்நிழல் 0 ஒக்டோபர் - டிசம்பர் 2007

Page 6
அரசியல் >
ரமும், ஒரு மனித குழுமத்தினால் உள்வாங்கப்பட்ட நம்பிக்கைகள், சடங்குகள், சட்டம், நீதியுணர்வு, ஒழுக்கமுறைகள், பழக்க வழக்கங்கள் போன்றன வற்றின் ஒட்டு மொத்த வடிவம்" என்கின்றார். இவற் றுடன் மதம்,ஆன்மீகநம்பிக்கைகள், கொள்கைகளும் உள்ளடங்கும் என்கின்றது யுனெஸ்கோ. காலம் காலமாக பல்வேறு ஆய்வாளர்கள் பல்வேறு கருத்துக் களை தெரிவிக்கின்றனர். உளவியலாளர்கள் கலாச் சாரத்தின் பிரதான கூறுகளாக மொழி வடிவங்கள், உடலியல், உறவியல், எதிரிகள் பற்றிய கருத்தியல், திருமணமுறைகள் இருத்தலுக்கான மனப்பயம்என்பன உள்ளன என்கின்றனர்.
இன்று பல விதமான கலாச்சார வடிவங்கள் உள்ளன. ஒற்றைக் கலாச்சாரம் : ஐரோப்பாவில் பெரும்பாலும் ஒத்த கருத்துள்ள சமூகக் குழுமங்களிடேயே நிலவும் கலாச்சாரம். இது 19ம்நுாற்றாண்டின் ஆரம்பத்தில் காணப்பட்டது. புரட்சிகரமான மாறுபாடு: பல்வேறுபட்ட இனக்குழு மங்கள், அரசின் தலையீடின்றி தோற்றுவித்துள்ள கலாச்சாரம். இதன் கூறுகளை அமெரிக்காவில் காண லாம் என அமெரிக்க ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பல்கலாச்சாரம்: அந்தச் சூழலில்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள்.
கலாச்சாரத்தின் ஆரம்பம் பின்வரும் படி நிலைக ளில் வளர்ந்துள்ளது. * மனிதனின் தோற்றம். இயற்கையுடனான உறவு * மனிதனுக்கும், அவனது குடும்பத்திற்கும் சக மனித குடும்பங்களுக்குமான உறவு. * தனக்குத் தேவையான உணவுக்கான போராட்டம்இங்கு உற்பத்திமுறைகள் தோன்றுகின்றன. * உணவை விநியோகித்தல்,பண்டமாற்றுமுறைகள் * இயற்கை அறிவுடன் புதிய பொருட்களைக் கண்டு பிடிப்பதற்கான அறிவை வளர்த்தல் * தத்துவங்கள், கோட்பாடுகளின் தோற்றம் * மதத்தின் வளர்ச்சி,மந்திரங்களின் வளர்ச்சி * குழுத்தலைவர்களின் தோற்றம் * இவர்கள் அரசர்களாக மாற்றம் * மனித வாழ்வியலை தீர்மானிக்கும் கடவுளராக அரசர்கள் உள்ளனர். * இவர்கள் புகழ் பாடும் புலவர்கள். * வர்த்தக முறைகளின் தோற்றம். மறுபுறம் நவீன அறிவியலின் தோற்றம். * பிரதேசங்களை ஆக்கிரமிப்பதற்கான அரசர்களின் படையெடுப்பு * பொருள் தேடுவதற்கான போட்டிப்படலம்
* கப்பல் ஒட்டிய தமிழர்களும், கொலம்பசும் தோற்றம். * ஐரோப்பியர்களின் ஆக்கிரமிப்பு * கைப்பற்றப்பட்ட நாடுகளில் இவர்களதுமதம், கலாச் சாரம் ஆகியவற்றின் பரம்பல் * அடிமைகளாக, குடிமைகளை நாடு கடத்தல் (இந்தியர்கள்-மேற்கிந்திய தீவுகளுக்கும், இலங் கைக்கும், ஆபிரிக்கர்கள்-அமெரிக்காவுக்கும், ஐரோப் LIT6dbgbub)
உயிர்நிழல் 0 ஒக்டோபர் - டிசம்பர் 2007

* வளங்கள் சுரண்டப்படுதல், இயற்கை வளங்கள்
அழிக்கப்பட்டு, வர்த்தக நலன் வளங்கள் மாற்றிடப் படுதல் (தேயிலை, இறப்பர்) * இவர்களுக்கு எதிரான போராட்டங்கள் * சுதந்திரம் வழங்கப்படல் * பொருளாதார ரீதியாக தொடர்ந்தும் மேற்குலகநாடு களில் தங்கியிருத்தல் * இனப்பிரச்சினையை தோற்றுவித்து ஆயுதக் கலாச் சாரத்தை தோற்றுவிக்கின்ற மேற்குலக நாடுகள் * சமாதானம் என்ற பெயரில் மீண்டும் காலடித்தடங்கள் * அகதிகளாக மேற்குலகநாடுகளை நோக்கிமக்கள் * குறைந்த சம்பளத்தில் தொழிலாளர்களாக இதே அகதிகள் * உலக வங்கி மூலம், கட்டாய பொருளாதார மாற்றங் களை தோற்றுவித்து, திறந்த சந்தைப் பொருளாதா ரத்தைத் தோற்றுவித்தல் * மேற்குலகநிறுவனங்கள், மூன்றாம் உலகநாடுகளை நோக்கிப்படையெடுப்பு * குறைந்த ஊதியத் தொழிலாளர்கள் மூலம், உலக சந்தையில் பொருட்களைப் பெரும் லாபத்திற்கு விற்றல் மேற்கூறிய ஒவ்வொரு படிநிலையிலும் கலாச்சா ரத்தின் கூறுகள் மாறியுள்ளன.
கலாச்சார நண்பர்கள்-உறவினர்கள்
இந்தியாவும் இலங்கையும் ஒத்த கருத்துக்கள் அடங்கிய கலாச்சாரத்தைக் கொண்டுள்ளன. அதே போல் சீனர் - வியட்நாமியர், ஆமேனியர் - துருக்கியர், ஈராக்கியர் - மற்றும் சுற்றியுள்ள முஸ்லீம்நாடுகள் சில உதாரணங்கள். ஆனால் இந்த இனக் குழுமங்களின் ஒத்த கலாச்சாரம் தோன்றக் காரணம், ஒன்றின் மீதான மற்றொன்றின் ஆதிக்கமே. உ+ம்: இலங்கையில் புத்த மதத்தின் தோற்றம், ஆரியரின் படையெடுப்பு, பிராம ணர்களின் ஆதிக்கம். இவை ஆதிநாகரிக தோற்றத் தைக் கொண்டிருந்த குழுமங்களின் கலாச்சாரத்தை, மதத்தை, மொழி வடிவங்களை மாற்றி ஒத்த கருத்துக் கொண்ட கலாச்சாரநண்பர்களாக உருமாற்றிவிட்டன.
எதிர்க் கலாச்சாரம்
பெரியாரும் எதிர்க்கலாச்சாரத்துக்குத்தான் போராடினார். அவர் பெண்கள் மீதான ஒடுக்குமுறை, பிராமணிய ஆதிக்கம், சாதிக் கொடுமைகளுக்கு எதிராக போராடினார். இதனை மரபு அறிவுஜீவிகள் எதிர்த்தனர். இன்றைய மேற்குலகினால் ஏற்படுத்தப் படும் எதிர்க்கலாச்சாரத்தை இதே மரபு அறிவுஜீவிகள் ஏற்றுக்கொள்வதன் மூலம், எதிர்க்கலாச்சார காவி களாகவும் செயற்படுகின்றனர். கலாச்சார செயற் பாடுகளில் அறிவுஜீவிகள் மதம், தொடர்புசாதனங்கள், கல்விநிறுவனங்கள் போன்றனவற்றினுடாக செயற்படு கின்றனர். மரபு அறிவுஜீவிகள் கலாச்சாரக் கட்டமைப்புபணிமனைகள், அரசு அமைப்புக்கள் போன்றனவற்றில் அமர்ந்து எதிர்க் கலாச்சார காவிகளுக்கூடாக செயற் படுத்துகின்றனர். ஆதிக்க வர்க்கத்தின் உலகப் பார் வையை, கருத்தியலைபரப்புகின்றனர்.
மற்றொரு பக்கத்தில் புதிய கருத்துக்களை கொண்ட கலாச்சாரக் குழுமங்களை, இடதுசாரிகளின்
இதழ் 27

Page 7
தோற்றமும், மார்க்சியத்தின் வளர்ச்சியும் ஆதிக்கம் கொண்ட நாடுகளில் தோற்றுவித்தன. அதேபோல் உலகின் பல நாடுகளில் பல இனக்குழுக்களிடையே இதன் பாதிப்பைக் காணலாம். இவை வர்க்க ரீதியாக கலாச்சார குழுமங்களை தோற்றுவிக்க முனைந்தன. இதற்கான போராட்டத்தை ஆய்வாளர் டேவிட் ரொத் கொப் "கடவுளற்ற கம்யூனிஸவாதிகளுக்கு எதிராக நேர்மையற்றமுதலாளித்துவவாதிகள்" எனக்கூறினார். தமிழ்நாட்டில் பெரியாரின் போராட்டத்தையும், திரா விடர் கழங்களின் எழுச்சியையும் இதன் வழிவந்த கூறாகக் காணலாம்.
இதன் தொடர்ச்சியாக, சோவியத் யூனியனின் உடைவுக்குப்பின்னர், அமெரிக்கமயமாதல் இலகுவாக நடைபெற்றுவருகின்றது.இதற்கு உதவியாக சர்வதேச நாணயநிதியம், உலக வங்கி, உலக வர்த்தக அமைப்பு போன்ற நிறுவனங்கள் உதவி புரிகின்றன. இவை மூன்றாம் உலக நாடுகளுக்கு வழங்கும் கடன்கள், இதன் மீதான வட்டிகள் போன்றவை அவற்றின் பொரு ளாதார சந்தையை தீர்மானிக்கின்றன. தனியார் மயமாக்கலை துரிதப்படுத்துகின்றன. உ+ம் : ஜமேக்கா, அமெரிக்க மாநிலமான புளோரிடாவுக்கு அருகில் உள்ள ஓர் தீவு. இங்கு அமெரிக்க நிறுவ னங்கள் உல்லாச விடுதிகளை நடாத்துகின்றன. சுற்றுலாத்துறையை நம்பியே இத்தீவு மக்கள் வாழ்கின்றனர். இவர்களது கலாச்சாரம், மொழி போன்ற வளங்கள் என்பன அழிக்கப்பட்டுவிட்டன. அமெரிக்க உணவு விடுதிகளே அங்கு ஆட்சி புரிகின்றன. இதே தீவுக்கருகில் உள்ள மற்றொரு தீவு கியூபா. இங்கும் உல்லாசத்துறை உண்டு. ஆனால் இன்றும் உலக சந்தையில் பல எதிர்ப்புக்களின் மத்தியிலும் தன்னி றைவுடன் கம்பீரமாக வாழ்கின்றது. இங்கு அமெரிக்க மயமாதல் இன்னும் இல்லை.
புலப் பெயர்வு
எழுபதுகளில் மிக அதிகளவில் தோன்றிய புலம் பெயர்வு, எதிர்க் கலாச்சாரத்தை இலகுவில் காவக் காரணமாகின்றது. புகுந்த நாட்டில் இவர்களுக்கு ஏற்படும் கலாச்சார அதிர்வுகள், இவர்களது மரபு நாடுகளையும் சென்றடைகின்றது. மூன்றாம் உலக நாடுகளில் இருந்து புலம் பெயரும் மரபு அறிவுஜீவிகள், கல்விமான்கள், முனைவர்கள் தமது நாடு பற்றிய பன்முகத்தன்மைகளை (கலாச்சாரம், உளவியல், மொழியியல், மதம், நம்பிக்கைகள், விஞ்ஞானம்) ஆய்வுகளாக வெளியீடுகின்றனர். இது மேற்கத்திய வர்த்தகர்களுக்கு, கீழைத்தேய நாடுகளில் வியாபா ரங்களைத் தொடங்க உதவுகின்றது. அத்துடன் இவ்வாறு புலம் பெயர்ந்த பின்னர், மரபு நாடுகளுக்கு செல்லும் அவர்கள் மேலைத்தேய முகாமைத்துவ முறைகளை மேற்கொள்கின்றனர். இப்படித்தான்பசுமதி அரிசியின் மூலத்தை அமெரிக்கா தனதாக்கிக் கொண்டது.
புலம் பெயர்வு அடையாளங்களையும் மாற்றி விடுகின்றது. உ+ம்: அட்றியன் டிமித்ரி மஸ்க ரெனாஸ்என்ற இங்கிலாந்து கிரிக்கெட் விளையாட்டு வீரரது மூலம் தமிழ். இவர்களது மூதாதையர் துாத்துக்
இதழ் 27

g sugdui
குடியிலிருந்து, இலங்கைநீர்கொழும்பைச் சென்றடைந் தார்கள். றோமன் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்த வர்கள். இவரது பெற்றோர் நன்கு தமிழ் பேசக் கூடிய வர்கள். இவர் இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்தமையால், இவரது அடையாளம் அருகிவிட்டது.
யோகா போன்ற கீழைத்தேய முறைகளை மேற்கு லக நாடுகள் தமக்குரியதாகிக் கொண்டன. ரைம் சஞ்சிகையின் யோகா பற்றிய சிறப்பு வெளியீடு ஒன்று 23.04.2001இல் வெளிவந்தது. இதில் யோகாவிற்குரிய கீழைத்தேய வடிவங்களுக்கான, விஞ்ஞானரீதியான மேற்கத்திய கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
உலக அழகிப்போட்டிகள்
மூன்றாம் உலக நாடுகளில் இப்போட்டிகளை நடாத்துவதன் மூலம் ‘ஓர் கவர்ச்சி வியாபாரத்தை' இந்த நாடுகளில் உருவாக்கலாம். 1996இல் இந்தியா விலும், 2004, 2005இல் சீனாவிலும் நடாத்தப்பட்டது. இப் போட்டிகள் மூலம் பல கோடிக்கணக்கான அழகு சாதனப் பொருட்களை மூன்றாம் உலக நாடுகளில் விற்கலாம்.
திரைப்படங்கள்
இன்று ஹொலிவூட் படங்கள் உலக அரங்கை கொள்ளையடிக்கின்றன. சில உதாரணங்கள் சீனாவில் ரைட்டானிக் 39 மில்லியன் டொலர்களை சம்பாதித்தது. இன்று சுமார் 1.5 பில்லியன் டொலர் வருமானத்தை அமெரிக்க படங்கள் பெறுகின்றன. இன்னமும் இரு வருடங்களில் ஏனைய மேற்கத்தியநாடுகளின் மொத்த வருமானத்தை விட சீனாவில் இருந்து பெறும் வரு மானம் அதிகமாக இருக்கும் என எதிர்வு கூறப் பட்டுள்ளது.
விளையாட்டு
கலாச்சாரத்தின் கூறுகளில் முக்கியமானது விளை யாட்டு. ஒரு கலாச்சார வளர்ச்சியில் இதன் பங்கும் முக்கியம். ஆங்கிலேயர், தாம் ஆட்சிபுரிந்தநாடுகளில் தமது விளையாட்டுக்களை அறிமுகப்படுத்தினர். இவற் றுள் ஒன்று, பேர்னாட் ஷா "பதினொரு முட்டாள்கள் விளையாட, பதினோராயிரம் முட்டாள்கள் பார்க்கின் றாார்கள்" எனக் கூறிய கிரிக்கெட். இன்று இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஸ், மேற்கிந்திய தீவுகள் போன்றநாடுகளின் பிரதான விளையாட்டாக மாறிவிட்டது. இந்த நாடுகள் இதில் அதிக கவனத் தையும், பணத்தையும் செலவழிப்பதனால் தமது பராம்பரிய விளையாட்டுகளில் கவனம் செலுத்தத் தவறிவிட்டன. ஒலிம்பிக் போட்டிகளில் இவை பெறும் பதக்கங்களினுாடக இதன்விளைவுகளைக்காணலாம். ஒலிம்பிக்கில் இதுவரை இந்தியா பெற்ற பதக் கங்கள் மொத்தம் 17. இவற்றுள் 10 பதக்கங்கள் ஹொக்கிவிளையாட்டுக்குரியது. 1900ம் ஆண்டு ஒலிம் பிக்கில் 200மீ ஓட்டம், 200மீ தடைஓட்டம் ஆகியவற் றிற்கு மட்டுமே இரு வெள்ளிப்பதக்கங்களை இவர்கள் மைதான நிகழ்ச்சிகளில் பெற்றார்கள். இலங்கை இதுவரை 1948இலும், 2000இலும் இருபதக்கங்களையே பெற்றுள்ளது. பாகிஸ்தான் பெற்ற பத்தில் எட்டு
உயிர்நிழல் 0 ஒக்டோபர் - டிசம்பர் 2007

Page 8
அரசியல் >
ஹொக்கிபதக்கங்கள். அமெரிக்கமயமாதல் பல புதிய அமெரிக்க விளையாட்டுக்களை அறிமுகப்படுத்தி யுள்ளது. இவை மேலும் பாரம்பரியங்களை அழிக் கின்றன.
தொழில்நுட்பமும் வெகுசன ஊடகங்களும்
உலகமயமாதலின்காவிகளாக தொழில்நுட்பமும், வெகுசன ஊடகங்களும் இயங்குகின்றன. இன்று எங்கு பார்த்தாலும் சி. என்.என். உம், அவற்றின் தொலைக் காட்சித் தொடர்களும், இவர்களது சஞ்சிகைகளும், புத்தகங்களும் காணப்படுகின்றன. காலையில் எழுந்ததும் சி.என்.என். செய்திகள். அமெரிக்கப் பொருட்கள், அமெரிக்க உணவு, அமெரிக்க நிறுவ னத்தில் வேலை, அமெரிக்க மக்களுக்கு அவர்களது பெயரில் அறிமுகப்படுத்தி பதில் கூறல் என அமெரிக்க வாழ்க்கையாக மாறிவிட்டது ஹொலிவூட் படங்கள் இன்று சர்வதேச சந்தையில் (சீனா, யப்பான் உட்பட) வெற்றி நடை போடுகின்றன. பல நாடுகளில் உள் நாட்டுத் திரைப்படங்களின் எண்ணிக்கை பூச்சிய மாகிவிட்டது. பெரும்பாலும் ஹொலிவூட் தயாரிக்கும் அனைத்துப் படங்களும் இங்கு இறக்குமதியாகின்றன. மத்திய மேல்தட்டு மக்களை கவர்ந்துள்ள சற்றலைட், மற்றும் அமெரிக்க சஞ்சிகைகள் புதிய கலாச்சார வடிவங்களை உருவாக்கியுள்ளன. மிகவும் கட்டுப் பாட்டுடன் உருவாக்கப்பட்ட முஸ்லிம் நாடுகளில் கருப்புச் சந்தை சற்றலைட்கள் கலாச்சார மாற்றத்தை
D-6)8 கலாச்சா
சற்றலைட்
உயிர்நிழல் 0 ஒக்டோபர் - டிசம்பர் 2007
 
 

ஏற்படுத்தியுள்ளன. ஈரானிய படங்கள் உலகின் தலை சிறந்த படங்கள் வரிசையில் இடம் பெறலாம். ஆனால் இவைகள் கருப்புச் சந்தையினுாடகக்கூட அந்த மக்களைச் சென்றடையவில்லை. மாற்றத்தை ஏற்ப டுத்தவில்லை. ஆனால் கருப்புச் சந்தை சற்றலைட்கள் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. வெகுசனத்தொடர்புச் சாதனங்கள் இங்கு 'அடையாள மூலதனம்'ஆக செயல்படுகின்றன.
வட அமெரிக்க சுதந்திர வலயம் உருவாக்கப்பட்ட பொழுது ஓர் அமெரிக்கப் பத்திரிகை 'அமெரிக்கப் பொருட்களுக்கான வேட்கை என மெக்ஸிக்கோ மக் களைப் பார்த்துக் கூறியது. இந்த அமெரிக்க மயமா தலை மெக்ஸிக்கோவின் வெகுசன தொடர்புசாதனங் களும் வளர்த்தன. வடஅமெரிக்க சுதந்திர வர்த்தக உடன்படிக்கை (NAFTA) இதனை அமுல்படுத்த வேண்டும் என மெக்ஸிக்கோவைச் சேர்ந்த நிதி முகவர்கள் சுமார் 40 மில்லியன் டொலர்களை செலவ ழித்துள்ளனர். இந்தியாவிலும் இதே நிலை காணப் பட்டது.
சர்வதேச அரசு சாரா நிறுவனங்களும் 'உதவி புரிதல்' என்ற பதாகையுடன் புதிய அடையாளங்களை மூன்றாம் உலகநாடுகளில் புகுத்துகின்றன. சுகாதாரம், கல்வி, சுற்றுச்சூழல், போன்றவை சர்வதேச விவகா ரங்களாக மாற்றப்பட்டு, சர்வதேச சந்தையை வளர்க் கின்றன. மூன்றாமுலகநாடுகளில் புதிய தொழிலாளர் சமூகத்தை உருவாக்கலில் இவர்களின் பங்கு முக்கிய
உள்நாட்டு &eps கலாச்சாரம்
இதழ் 27

Page 9
மானது. மூன்றாம் உலகத் தொழிலாளர்கள் மேற்கு லகத் தொழிலாளர்களைவிட ஒன்பது மடங்கு அதிகம் உழைக்கக்கூடியவர்கள் என்பது ஆய்வுகள் கண்ட றிந்த உண்மை. இந்தத் தொழிலாளர் சமூகம் சர்வதேச அடையாளங்களைக் கொண்டதாகவும், அதன் மொழியை உணர்ந்ததாகவும் காணப்படும். இவர்கள் மூன்றாமுலகநாடுகளில் வாழும் அமெரிக்க அடையா ளங்களை, கருத்தியலைக் கொண்ட பிரஜைகளாகக் காணப்படுவார்கள்.
பெரும் வணிக நிறுவனங்கள்
பிரான்ஸில் CAFE என அழைக்கப்படும் டோனட் கடைகள் காணப்பட்டன. அங்கு தேநீருடன்கோப்பியுடன் ஆறுதலாக அமர்ந்து பத்திரிகையும் வாசிக்கலாம். ஆனால் மக்டொனால்ட் போன்ற அதி வேக சுவையகங்கள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் இந்த நிலை மாறிவிட்டது. இவை தொழில் நகரங்களில் தொழிலாளிகள் மதிய இடைவேளையை வேகமாக முடிக்கவும் உதவுகின்றன.
2005ம் ஆண்டில் மக்டொனால்டின் வருமானம் (பில்லியன் டொலர்களில்):ஐரோப்பா(7072 பில்லியன் -ஒட்டுமொத்த வருமானத்தின் 35 வீதம்), அமெரிக்கா (6.955 பில்லியன் -34 வீதம்), அவுஸ்திரேலியா/பசுபிக் ஆசியா (2.815 பில்லியன் - 14 வீதம்), லத்தின் அமெ ரிக்கா (1.327 பில்லியன் - 6வீதம்), கனடா (0.948 பில்லி யன் - 5வீதம்), ஏனைய நாடுகள் (1.343 பில்லியன் - 6வீதம்)
மக்டொனால்ட்டின் &l, Lovin it) என்ற வாசகத் துடன் (மூளைச்சலவைவாசகங்கள்) கூடியவிளம்பரம், பல இளம் தலைமுறையினரிடம் இந்த உணவு வகை களை வாங்கத் துாண்டுகின்றன. சீனா, இந்தியா போன்ற சனத்தொகை அதிகமான நாடுகள் தேசிய எழுச்சியையும் கொண்டுள்ளன. இங்கு "நான் விரும்பு கின்றேன்" இது எனது உணவு என்ற மயக்கத்தை தோற்றுவிக்கின்றன.
கொக்காகோலா: உலகம் முழுவதும் குளிர்பானம் வழங்கும் இந்த நிறுவனம் ஏற்படுத்தும் தண்ணீர் பிரச்சி
முன்னிலையில் உள்ள ம
நிலை நிறுவனம் மூலநாடு நிகர
(மில்ல
1. வால்மார்ட் அமெரிக்கா 19 2 கார்ட்பூர் பிரான்ஸ் 62 3 அஹோல்ட் நெதர்லாந்து 5C 4. குரொகர் அமெரிக்கா 49 5 மெத்ரோ ஜேர்மனி 46 6 அல்பேட்டன்ஸ் அமெரிக்கா 3. 7 கேமார்ட் அமெரிக்கா 3. 8 ரெஸ்கோ இங்கிலாந்து 33 9 சே'.வ்வே அமெரிக்கா 31 10 றெவி ஜேர்மனி 31
இதழ் 27

K sagdflugih
னைகள் அதிகம். தாமிரபரணி இன்று கோக்கின் உற்பத்தி மையமாகிவிட்டது. இந்நிலை கேரளாவிலும் தொடர்கின்றது. இதுவரை இதற்கெதிராக மாநில, மத்திய அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.மாறாக, இதற்காகப் போராடியவர்களுக்கு எதிராக வன்முறையை மேற்கொண்டது.
பெப்சி: பெப்சியின் தண்ணீர் போத்தல்களான அக்குவா..பினாவில் குழாய்த் தண்ணிரை நிரப்பு கின்றார்கள் என்பதனை பெப்சி ஒத்துக் கொண் டுள்ளது. இந்த நிறுவனங்கள்தான் மூன்றாம் உலக நாடுகளை நோக்கிநகர்கின்றன.
வோல்மாட்: உலகநாடுகள் அனைத்திலும் தனது கால்களைப் பதித்துள்ள இந்நிறுவனம் விற்கும் பொருட்களில் 80 வீதமானவை சீனாவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. அமெரிக்கநிறுவனங்களின் சீனத் தயாரிப்பு பொருட்களை உலகெங்கும் விநியோகிக் கின்றன. பாரிய நுகர்வோர் உற்பத்திக் கம்பெனிகள் டயல்ஸ் 28.3%(சோப் வகைகள்), டெல் மொன்ட் 24% (உணவு வகைகள்), கொலொரொக்ஸ் 23% (சலவை, சுத்திகரிப்பு பொருட்கள்), ரெவ்லொன் 23% (அழகு சாதனப் பொருட்கள்). அமெரிக்காவில் இந்த நிறுவ னத்தின் தொழிலாளியின் சராசரிச் சம்பளம், ஏனைய நிறுவனங்களைவிட ஒரு மணித்தியாலத்துக்கு மூன்று டொலர்களினால் குறைவானது. மூன்றாம் உலக நாடுகள் இவர்களுக்குச் சொர்க்கம்.
இவை உள்நாட்டு உற்பத்தியைக் குறைக்கும். உள் நாட்டுத்தொடர்புச் சாதன சமூகத்தையும், இந்த பெரும் முதலாளிகள் கைப்பற்றுவார்கள்.வோல் மார்ட் சிறு நகர முதலாளித்துவம்' என்பதை தங்கள் பதாகை யாகக் கொண்டுள்ளதாக மேற்குலக விமர்சகர்கள் குறிப்பிடுகின்றார்கள். இந்தப் பெரும் வியாபார ஸ்தலம் அமைந்துள்ள சிறு நகரத்தின் மக்கள் உலகம் இக் கடையைச் சுற்றியே அமையும். அங்கு சகல பொருட் களும் கிடைப்பதனால் அந்த நகரத்தில் உள்ள சிறு வணிகர்கள் பாதிக்கப்படுகின்றார்கள். பஞ்சாப் மாநிலத்தில் வோல்மார்ட் 50000 ஏக்கர் பரப்பளவில் ஒப்பந்த விவசாயத்திலும் ஈடுபடவுள்ளது. இவைகொள் முதலிலும், விநியோகத்திலும் ஆதிக்கம் செலுத்த
ளிகை விநியோகிஸ்தர்கள்
விற்பனை உள்நாட்டு வெளிநாட்டு பியன் டாலர்) விற்பனை (%) விற்பனை (%)
1329 83 17
2263 52 48
) 424 18 82
OOO 100 O
5353 56 44
7.478 100 O
7 O28 100 O
3 058 90 10
L977 89 11
L. 898 80 20
9
உயிர்நிழல் 0 ஒக்டோபர் - டிசம்பர் 2007

Page 10
அரசியல் )
எதிர்க்
கலாச்சாரம்
வணிக
நிறுவனங்கள் usumu
வுள்ளன. பயிரிடும் பயிர்களையும் இவையே தீர்மானிக் கின்றன.'விதை, உரம் ஆகியவை இலவசம். அத்துடன் காய்கறிகளை பயிர் செய்து கொடுத்தால் விலையும் கிடைக்கும் போன்ற விளம்பரங்கள் மூலம் உள்ளூர் விவசாயிகளைக் குத்தகை விவசாயிகளாக மாற்றி விடுகின்றார்கள். இவ்வாறு பயிரிடப்படும் நிலங்களில் வேறுபயிர்கள் வளராது. காரணம் பாவிக்கப்படும் உரம் ஒரு குறிக்கப்பட்ட பயிருக்கே உரியது. இதனால் விவசாயிகள் ஒன்றுமே செய்ய முடியாத நிலையில் உள்ளனர். அரசு எப்பொழுதும் போல் விவசாயிகளுக்கு எதிராகவே செயற்படும்."பஞ்சாய்ப்பறந்திடும் பஞ்சாப் மூலதனம்"
மேற்கத்தியநாடுகளில் தேசிய இறைமை குறைந்து செயல்படுவதனையும், அதனிடத்தில் சர்வதேச மூல தனம் அமைக்கக்கூடிய ஒருவாய்ப்பினையும், பரவலாக ஏற்றுக் கொள்ளப்படும் ஒரு கோட்பாடு ஏற்படுகின்றது. முதலாளித்துவத்தின் வளர்ச்சிப்படிகளின் உச்சக் கட்டங்களில் ஒன்று உலக சந்தையை உருவாக் குவது. இதற்கு பொருளாதார ஊடுருவல்கள் அவசிய மாகின்றது. மூலதனத்தைத் தொடர்ச்சியாக திரட்டு வது அவசியம். மூலப் பொருட்களை கட்டுப்பாட் டுக்குள் வைத்திருப்பதும் அவசியமாகின்றது. நிதி மூலதனம் சர்வதேசமயமாதல், உலகமயமாதலின் முக்கிய அம்சமாகும். வங்கிகள் சர்வதேச எல்லை களைக் கடந்து உலகநாடுகளில் செயற்படுகின்றன. (சிற்றி பாங்க் - 46 நாடுகள், 1400 கிளைகள், 3800 தானியங்கிவங்கி இயந்திரங்கள், நொவா சொக்ரியா வங்கி - 40 நாடுகள், 720 கிளைகள், 1500 தானியங்கி வங்கி யந்திரங்கள்) 1960களில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் ஒரு சதவீதமாக இருந்தது. 1980களில் இது 20 சதவீதமாக அதிகரித்துள்ளது. சர்வதேச வங்கிகளின் குறிப்பிட்ட செயற்பாடுகளில் ஒன்று உலக வர்த்தகத்துக்கு நிதியளிப்பது. மூன்றாம் உலக நாடு களின் அதிகரித்த கடன் தேவைக்கு ஏற்ற வகையில்
உயிர்நிழல் 0 ஒக்டோபர் - டிசம்பர் 2007
 
 
 
 
 

புதிய பணச் சந்தைகள் உருவாகின. இவை பன்முகத் தன்மை கொண்ட பல புதிய நிதிசார் பொருட்களை உருவாக்கின.இவைகடன்முறையின் அடித்தளத்தை விரிவுபடுத்தின. இது வங்கிகளின் வருமானத்தை அதிகரித்தது. உலகளாவிய ரீதியில் அமெரிக்க டொலர்கள் விநியோகிக்கப்பட்டன. 1971இல் நிக்ஸ னால் ஏற்படுத்தப்பட்ட டொலர், தங்கம் மாற்றத்துக்குப் பின்னர் வளர்ச்சியடைந்த நாடுகள் அந்நியச் செலா வணிவிகிதங்களை உறுதியாக வைத்திருப்பதற்கான புதிய வழிமுறைகளை கையாண்டன. 1970களில் நிர்ணயிக்கப்பட்ட பரிவர்த்தனை முறைக்குப்பதிலாக மிதக்கும் பரிவர்த்தனை முறை அமுல்படுத்தப்பட்டது. இது மேலும் மூன்றாம் உலக நாடுகளை பாதித்தது. 1971இல் டொலருடனான, தங்கத்துக்கான இணைப்பு துண்டிக்கப்பட்டது. ஆனால் இந்நிலை சர்வதேச சந்தைவியாபாரத்துக்கும், பணப்புழக்கத்துக்குமான விகிதத்தை குறைத்தது. 1986ம் ஆண்டு 18800 கோடியாக இருந்த பணப் புழக்கம், 2001ம் ஆண்டில் 2 த்ரில்லியன் டொலர்களானது. 1974இல் ஏற்ப்ட்ட எண்ணெய் விலை அதிகரிப்பும், 1980களில் ஏற்பட்ட பணவீக்கமும்,நிதி மூலதன வளர்ச்சிக்குதவிபுரிந்தன. இதன்பின்னர் உலக வங்கி, சர்வதேசநாணயநிதியம் ஏற்படுத்திய கட்டுப்பாடுகள், மூன்றாம் உலக நாடுகள் உலக சந்தைக்குத் திறந்து விடப்பட்டன. உலக மயமாக்கலின் வர்த்தகமும், உற்பத்தியும் முக்கிய அம்சங்கள். அவற்றைவிட முக்கியமானது மூலத னத்தின் வீச்சு.நாடுகளின் பொருளாதார நடவடிக்கை களில் தனியார் மூலதனத்தின் வீச்சு முக்கிய இடம் பெறுகின்றது. இந்த நிதி மூலதனம், நவீன தொழில் நுட்ப வசதிகள் மூலம் ஒரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு மிக விரைவில் செல்லக்கூடியது. எங்கு லாபம் கிடைக்குமோ அந்த இடத்தை நோக்கிநிமிடங் களுக்குள்நகர்த்தலாம். உலகமயமாதலின் இன்றைய வளர்ச்சிக்கு மூலதன வீச்சும் காரணம். உலக வர்த்
இதழ் 27

Page 11
தகம் சில குறிப்பிட்ட நாடுகளிலேயே குவிந்துள்ளது (ஜி7 நாடுகள்) உற்பத்தி, வர்த்தகம், முதலீடு என்ப வற்றை இந்த நாடுகள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளன.
உலகம் எங்கே செல்கின்றது? பலம் வாய்ந்த, பணம் நிறைந்த நிறுவனங்கள் மேற்குலக அரசுகளை நிர்ணயிக்கின்றன. இவைதான் உலக எல்லைக் கோட்டையும் இந்த அரசுகள் மூலம் தீர்மானிக்கின்றன.
1945இல் ரூஸ்வெல்ட்டும் சர்ச்சிலும் ல்டாலினுக்குக் கூறியது:
"போலந்து, ஹங்கேரி, செக்கோசிலோ வாக்கியா உனக்குரியது, யுகோஸிலாவியா 50 க்கு 50. கிறீஸ் எங்களது. அதில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டால், புரட்சி நடைபெற்றால் உன்னை சும்மாவிடமாட்டோம்"
அமெரிக்கர்கள் லத்தீன் அமெரிக்காவைப்பற்றி கூறியவை:
"இந்த நாடுகள் எங்களுக்குரியவை. இவை எங்களது பின் முற்றங்கள்."
உலக நாடுகளை இவ்வாறு கொண்டு வருவதே இந்த பலம் வாய்ந்த நிறுவனங்களது திட்டம். அரசு,
உயிர்நிழல் ஜூலை - செப்ரெம்பர் 2007 இதழ் வாசிக்கக் கிடைத்தது. 'தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டம் எதை நோக்கி? எனும் வி. சிவலிங்கத்தின் கட்டுரை ஒர் ஆழ்ந்த விவாதத்திற்குரியதும், பரவலாக் கப்படவேண்டியதுமாகும். இலக்கியச் சந்திப்புப் பகுதி யில் வரும் 'அக்டோபர் புரட்சி-எழுச்சியும் வீழ்ச்சியும் எனும் தலைப்பிலான யோகரட்ணம் (பிரான்ஸ்) அவர் களது உரையின் பதிவில் "1967. 1982 காலப்பகுதி போராட்டத்தில் மட்டும் பதினைந்துக்கும் மேற்பட்ட தலித்துகள் 'உயர்சாதியினரால் கொலை செய்யப் பட்டனர்" என்றவாறாக அவர் குறிப்பிட்டுள்ள பெயர் களில் மா. சீவரட்ணம் (கன்பொல்லை), க. செல்வராசா (கன்பொல்லை), மு. கந்தையா (கரவெட்டி) ஆகிய மூவரும் வெடிகுண்டு தயாரித்துக் கொண்டிருக்கும் போது ஏற்பட்ட விபத்தில் மரணமடைந்தவர்கள். இவர்கள் கொலை செய்யப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
‘முஸ்ஸிம் மக்கள் தமிழுக்குச் செய்த பங்களிப்பு எனும் றவூப் காஸிமின் கட்டுரை வரவேற்கத்தக்க முயற்சி. இதில் விடுபட்டுப்போயுள்ள சில பெயர்களைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். அப்துல் மஜீத் புலவர் (ஆசாரக்கோவை), மருதுர்க் கொத்தன்,'இளம்பிறை ஆசிரியர் எம். ஏ. ரஹ்மான், ஏ. எம். ஐ. எம். றவூப் (மரு துர்க்கொத்தனின் மகன்), ஒட்டமாவடி அறபாத் மற்றும் அண்மைக்காலமாக ஓர் மாற்று இலக்கியச் சஞ்சி கையாக "பெருவெளியை வெளியிட்டுவரும் மஜீத்,
இதழ் 27
 

X அரசியல்
வெகுசன தொடர்புச் சாதனம் -நிறுவனங்கள், வங்கி கள் எல்லாம் இவர்கள் கைவசம் உள்ளன. இத்துடன் உள்நாட்டு முதலாளிகளும் இவர்களுக்கு உதவி புரிகின்றனர். (உ+ம்:தமிழ்த் தொலைக்காட்சிகள், சஞ்சிகைகள் போன்றவைபன்னாட்டுநிறுவனங்களின் விளம்பரங்களைக் கொண்டுள்ளன.) இதே பன்னாட்டு நிறுவனங்கள் மூன்றாம் உலக அரசுகளையும் தீர்மா னிக்கின்றன.கொக்காகோலா மயமாக்கல், மக்டொ னால்ட் மயமாக்கல், வோல்மார்ட் மயமாக்கல் போன்ற வற்றைநிறுத்துவது கடினம்.
பெண்ணடிமைத்தனம், மற்றும் சாதி, மத, மொழி வேறுபாடுகளைத் தொடர்ச்சியாகப் பேணுவதன்மூலம் எதிர்க்கலாச்சாரத்தை இந்த அரசு, மற்றும் வெகுசன சமூகம் மூலம் இவர்கள் நிறுவுகின்றனர். எதிர்க் கலாச் சாரம் பன்னாட்டுநிறுவனங்களை வாழவைக்கின்றது. நவீனத்துவத்தையும், சீரிய அரசுகளையும் ஒவ்வொரு சுய இனக்குழுமங்களும் அமைக்கும் வரை இது தொடரத்தான் செய்யும். இப்பொழுது மேற்குலநாடுகள் மூன்றாம் உலக நாட்டு மக்கள் மீது 'அடையாளமற்ற அடையாளத்தை ஏற்படுத்துகின்றார்கள்.
றியாஸ் குரானா, மிஹாத், றசாக் இவர்களுடன் பரிசோதனை ரீதியான சிறுகதைகளை எழுதி வரும் அம்ரிதா ஏயெம், ஹசீன் மற்றும் கவிதையில் நளிம், பெண்ணியா, பஹிமா ஜஹான், மருதுரர் அனார், எச்.எம். பாறுக் என முக்கியமான சிலரைக் குறிப்பிடலாம்.
பா. அ. ஜயகரனின் சிறுகதையான'லாகாசா குறிப் பிட்டுச் சொல்லக்கூடியது. வாழ்புலத்தில் மனிதருக் குள்ள அகமுரண்பாடுகளை நேர்த்தியாக வெளிப் படுத்துவதில் "லா காசா வெற்றி பெற்றுள்ளது. இந்த வகைக்கதைகள்'உயிர்நிழல்' போன்ற ஒரு சில இதழ் களில்தான் வெளிவரமுடியும். ஈழத்துச் சஞ்சிகைகளில் நினைத்துப் பார்க்க முடியாது. கொஞ்சம் நெகிழ்ந் தாலும் தங்களது ‘கற்பு பறிபோய்விட்டதெனப் புலம்புவார்கள்.
ரட்ணஜிவன் ஹPலின் நேர்முகம் அநேக விடயங் களைத் தெளிவுபடுத்தியது. இப்போது என். சண்முக லிங்கன் பல்கலைக்கழகத் துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியா கின்றன. உயர்கல்வியின் எதிர்காலம் யாழ்ப்பாணத் தைப் பொறுத்து எவ்வாறமையப்போகிறது? என்பது தான் இன்றுள்ள பிரதான கேள்வி.
இராகவன் - கரவெட்டி இலங்கை
1. உயிர்நிழல் 0 ஒக்டோபர் - டிசம்பர் 2007

Page 12
ஊரடங்குச்சட்டத்துடன் தொடங்குகின்ற யாழ்ப்பாணத்து இரவுகள் படைக்கலங்களுடன் நகர்ந்து செல்கின்றன. கருணையற்ற விதத்தில்
நத்தின் அழுகையை வண்டின் ரீங்களிப்பை வெட்டுக்கிளியின் கிறிச்சிடலை சாமக்கோழியின் கடவுதல்ை நாயிடும் ஊளையை அனுமதிக்காமல் வேட்டொலிகளால் முழுமையாகத் தம்மை நிரப்பிக் கடந்தேகுகின்றன. சவ இரர்வலத்தைப்போல,
தமக்குவித்தான எந்த ஒலிப்பிலும் பீதியைக் கிளப்பி மரண ஒத்திகை நிகழ்த்துவதைத் தவிர யாழ்ப்பாணத்து இரவுகளிடத்தில் எதிர்பார்க்க பாதுமில்லை!
புதுமுறையிலான கொள்ளையிடலையோ அல்லது
கொலைப்பாதகம் மற்றும் கூட்டான வன்புணர்வையோ ஊரடங்கின் வழியே அனுமதிக்கின்ற யாழ்ப்பாணத்து இரவுகள் சதிகாரர்களைப்போல் பல்லிளித்துக் குதிக்கின்றன. இந்தப் பல்லிளிப்பை மின்வெட்டு நிழற்படமாக்கி ஆாடகங்களில் விதந்துரைக்க இன்னும் நிமிர்ந்து செல்கின்றன யாழ்ப்பாணத்து இரவுகள்
ー
உயிர்நிழல் ஒெக்டோபர்- இந்பர் 2007
 


Page 13
அது ஒரு காலம்!
இலங்கையில் சினிமா இறக்குமதியை மட்டுப் படுத்திய பூரீமாவோவின் ஆட்சிக் காலம். பழைய தமிழ்நாட்டுத்திரைப்படங்களே துரசு தட்டப்பட்டு யாழ்ப் பாணத்திரையரங்குகள்- பொதுவாக இரண்டாம் தரத் திரையரங்குகள் எங்கும் காட்சிக்கு விடப்பட்டிருக்கும். தூசுதட்டுபவர்கள் வெகு விரைவாகத் தட்டியதாலோ என்னவோ ஒரு படமாளிகைக்கு வரிசையாக பல படங்கள் துரிதமாய் வந்து கொண்டிருக்கும். எதை வெண்திரையில் காட்டுவது என முதலாளிகள் திணறி, முடிவெடுக்கும் முன்பே வேறு படப்பெட்டிகள் அங்கு இறக்கப்பட்டிருக்கும். இதனால் ஒரு திரைப்படம் பல நாட்கள்'நின்று ஒடுவதில்லை. படமாளிகையைவிட்டு விரைவாய் ஓடிவிடும். பத்திரிகையில் அறிவிக்கும் அவ
இதழ் 27
 
 

Kசினிமா
NXY
அருண்
காசத்தின் முன்பே அவசரமாய் இது நடந்துவிடும். (5 படத்துக்கென்று போனால் அந்தறிலை எடுத்துவிட்டு இன்னொன்றை மாட்டிவிட்டிருப்பார்கள். யாழ்ப்பாணத் துக்கு அப்பால் பிற ஊர்களில் இது கொஞ்சம் மந்த கதியில்தான் நடக்கும்.
சிவாஜி கணேசனின் 'மகாகவி காளிதாஸ் சுவரொட்டியைக் கண்டதும் பார்க்கவேண்டுமென்று போக, யாழ்படமாளிகையின் அவசரத்தால் சந்தர்ப்பம் நழுவ, அதுகோண்டாவிலுக்குச் சென்றதறிந்துதுவிசக்கரவண்டி உழக்கிச் சென்று படம் பார்க்க நேர்ந்தது. அங்கு தினசரி 4 காட்சிகள் என்பதில்லை. கமக் காரர்கள் தோட்டத்தில் இருந்து திரும்பி கால்-முகம்மேல் கழுவி உண்ட பின் வருவதற்கு வசதியாக இரவுக்காட்சி மட்டும் போட்டார்கள். என்ன செய்யிறது,
உயிர்நிழல் 0 ஒக்டோபர் - டிசம்பர் 2007

Page 14
ਗD X
வழி வேறில்லையே என்று போய்ப் பார்த்தால் சிவாஜி மட்டுமல்ல எல்லோருமே மங்கியிருந்தார்கள். இடைக்கிடை என்றில்லாமல் அடிக்கடி குழந்தைகள் புத்த கத்தில் கிறிவைப்பதுபோல் கீறல் விழுந்திருந்தது. அதுமட்டுமல்ல மகாகவியின் பாடல்களை, காட்சி களை எல்லாம் நறுக்கி 'எடிட்' பண்ணி ஒன்றரை மணித்தியா லத்தில் எம்மை வீட்டுக்கு அனுப்பி வைத்திருந்தார்கள். அப்போது இதற்கெல்லாம் காரணம் அந்த 'ஒப்பரேற்றர்'தான் என்று நினைத் துக் கொண்டிருந்தேன். அவர் தான் போய் வேளைக்குப்படுக்கி றதுக்காக ‘எங்களை ஏமாத்திப் போட்டான்' எனத் திட்டிக் கொண் டேன். பின்புதான் என் தவறு புரிந்தது. ஏனென்றால், திரைப் படச் சுருள் என்பது மெல்லிய 'செலுலோயிட்'சுருள். எப்போதும் அது மிகப்பிரகாசமான ஒளி யையும், கடும் வெப்பத்தையும் தாங்கிக்கொண்டு இயந்திரத்தில் ஒடுகிறது. இது எப்பவும் அறலாம்; கீறுப்படலாம்; கட்டாயம் மங்கும். பாவம் அந்த ஒப்பரேற்றர்;அவர் என்னதான் செய்வார். ‘ஒப்ப றேற்ரரே என்னை மன்னியும்' என மீண்டும் இப்போது கேட்டுக்கொள் கிறேன்.
இந்தச் சிக்கல் புரிந்தபோது அறாத, கீறுப்படாத, மங்காத படச்சுருளை நான் கண்டுபிடித்தாலென்ன என்று, ஒரு விஞ்ஞானியாகும் முனைப்புடன் யோசித்தேன். பிறகு படத்தை புத்தம் புதிதாய் பார்த்தால் இதெல்லாம் எதற்கு என்ற யோசனையுடன் விட்டுவிட்டேன். எனது வகுப்பில் படித்தரூபன், சிவாஜியின் படம் வெளியானதும் பள்ளிக் கூடத்திற்கு மட்டம் போட்டுவிட்டு முதல்நாள் முதற் காட்சிபார்ப்பவன் என்பது தெரியவந்ததும், இப்படி நான் மட்டுமல்ல பலரும் விஞ்ஞானி ஆகும் சந்தர்ப்பத்தை கோட்டை விட்டிருப்பார்கள் என்பதும் பின்பு புரிய வந்தது. ஆனால் முதல் காட்சியில் இருக்கும் துல்லியம் அடுத்தடுத்தடுத்த காட்சிகளில் படிப்படியாகக் குறைகின்றது என்பது இன்றுவரை ரூபனுக்குத் தெரிந்திருக்கநியாயமில்லை. ஏனென்றால் அவன்தான் எப்போதுமே முதலில் முதல் காட்சிபார்ப்பவனாயிற்றே. அப்படி முதல் காட்சி பார்க்கச் சென்று ராஜா தியேட்டரில் சிலர் கொட்டன்களால் அடி வாங்கி னார்கள் என்றும்;வின்ஸர் தியேட்டரின் இரும்பு வேலி யின் வேலில் குத்துப்பட்டு செத்தார்கள் என்றும் கேள் விப்பட, முதற் காட்சி ஆசையிலிருந்து நான் பின் வாங்கினேன். பின்பு காதல் கத்தரிக்காய் என்று வர, முன்புகைவிட்டிருந்த விஞ்ஞானியாகும் பழைய யோச
உயிர்நிழல் 0 ஒக்டோபர் - டிசம்பர் 2007 1.
 

னையை மீளப் பரிசீலிக்க நேரம் கிடைக்கவில்லை. ஆனால் நேரம் கிடைத்த எவரோ சிலர் முயன்று இவை எல்லாவற்றுக்கும் வழிவகைசெய்யும் டி-சினிமா (d- cinema) என்கின்ற டிஜிற்றல் சினிமாவைக் கொண்டு வந்திருக்கிறார்கள். இதை ‘e-சினிமா (e-cinema) என்றும் இலத்திரனியல் சினிமா என்றும் கூறுகிறார்கள். அது என்ன டிஜிற்றல் சினிமா?
அண்மையில் வெளிவந்த 'மும்பாய் எக்ஸ்பிரஸ்' படம் டிஜிற்றல் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டது எனப் பிரஸ்தாபிக்கப்பட்டபோது, டிஜிற்றல் தொழில் நுட்பத்துக்குத் தரமுயர்த்தப்பட்ட திரையரங்கு களிலேயே அது காண்பிக்கப்படவும் முடியுமெனக் கூறப்பட்டது. அப்போதும் 'அதென்ன டிஜிற்றல் திரைப்படம்?’ எனத் தமிழ் சினிமா ரசிகர்களிடையே கேள்வியும் எழுந்தது.
டிஜிற்றல் தொழில்நுட்பம் தமிழ் சினிமாவில் முன்பே பி.சி.ரீராமின் "வானம் வசப்படும்' படத்தில் அறிமுகப் படுத்தப்பட்டிருக்கிறது. எஸ். ஏ. சந்திரசேகரின் முத்தம்' படமும் ஏ.ஜே. முருகனின்'மன்மதன் படமும் டிஜிற்றல் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டவையே. இருந்தும் இவை எல்லாம் வழமையான படச்சுருளி லேயே வெளிவந்தன. ஏனெனில் திரையரங்குகள்டிஜிற்
இதழ் 27

Page 15
றலில் படம் காட்டும் வகைக்கு தரம் உயர்த்தப்பட்டி ருக்கவில்லை. ஆனால் படமானது டிஜிற்றலாய் காட்டவும் பட்டாலே அது பூரணமான டிஜிற்றல் திரைப்படம்.
அது சரி! அது என்ன டிஜிற்றல் சினிமா? பதுங்கிய கோழியைப் புகுந்து பிடிக்காமல் பற்றையைச் சுற்றி அடிக்கிறீர் என நீங்கள் கேட்பது விளங்குகிறது. பொத்தம்பொதுவாக ஒருசொல்லில் சொல்லப்போனால் இது "கொம்பியூட்டர்-நுட்பவியல் சினிமா. விலா வாரியாக தொழில்நுட்பத்தைச் சொல்லப்போனால் நீண்டுவிடும். அதனால் செயற்பாட்டைக் கூறி விளங்கப் படுத்தினால் போதும் என நினைக்கிறேன்.
காலாகாலமாக திரைப்படத்துறை பல மாற்றங் களைக் கைக்கொண்டு வளர்ந்திருக்கிறது. ஆரம் பத்தில் ஓரிரு நிமிடத் துண்டுக் காட்சிகளாக, 35 மிமீ ஊமைப்படங்களாக, கறுப்பு-வெள்ளையாக ஆரம் பித்து, மெளனமான கதைப்படங்களாகி, பின்னர் பேசும் படமாகி, அதுவே வர்ணப்படமாகி 70 மிமீ படமாக, "சினிமா ஸ்கோப் படமாகி அது ஸ்ரீரியோவில், பின் டொல்'யி, டீ.ரி.எஸ்.ஐ-மக்ஸ் எனவாகி சினிமா வளர்ந் திருக்கிறது. தோமஸ் அல்வா எடிசனின் முயற்சியி லிருந்து இன்றுவரை நாங்கள் பார்க்கும் திரைப் படங்கள் வரை செலுலோய்ட் பிளாஸ்ரிக் படச்சுருள் களிலேயே வெளிவந்திருக்கின்றன. அது மாறவில்லை. அதேபோல்படங்காட்டும் கருவியான'புரொஜெக்டரும் படமாய்விம்பம்தாங்கும் வெள்ளைத்திரையும் லுமியர் சகோதரர்கள் ஆரம்பித்து வைத்ததிலிருந்து இன்று வரை மாறாது இருக்கின்றது.
"மகாகவி காளிதாஸ்' படத்தில் விழுந்த கீறல் களும், அறுந்துபோய் ஒட்டியதும், மங்கியதும் அந்தத் திரையாலோ புரொஜெக்டராலோ வந்ததல்ல, எல்லாம் அந்த செலுலோயிட் படச்சுருளால்தான். DVD தொழில் நுட்பத்திற்கு மாற்றினால் என்ன? - மாற்றினார்கள். அதுவே e-சினிமாவின் பிள்ளையார்சுழி. அதாவது eசினிமாவில். படச்சுருள் தேவையில்லாது போகிறது. கீறல்கள், அறுதல், மங்கல், ஏன் ஒப்பரேற்றரின் எடிட்டிங்கூட இல்லாமல் போகிறது. அப்பாடா! அதுதான் டிஜிற்றல் திரைப்படம்.
டிஜிற்றல் திரைப்படமானது வழமையான செலுலோயிட்-படச்சுருளில் படமாக்கப்படுவது மில்லை. படச்சுருளில் தொகுத்து அதில் பேச்சு, பின்னணி ஒலி, பின்னணி இசை சேர்க்கப் படுவதுமில்லை. "பிலிம்'எனும் படச்சுருளில் வெளிவருவதுமில்லை என இலகுவாகச் சொல்லிவிடலாம். படச்சுருள் இல்லாவிடில், எதில் படம் பிடிப்பார்கள்? எதை வைத்து படம் காட்டுவார்கள்? எனக் கேள்விகள் எழும். அதற்கு டிஜிற்றல்-ரேப் (digital tape) அல்லது டிவிடி-றொம் (DVDROM) எனப்பதில் கூறமுடியும். அடுத்து வழமையான திரைப்படம்போல இது அகன்ற திரையில் விழுமா எனக் கேள்வி எழும். ஓம், சரியான புரொஜெக்டர் இருந்தால் அகன்ற திரையில் துல்லிய ஒளி, ஒலியுடன் திரைப்படம் காட்ட முடியும். இதற்குத் தேவை ஒரு டிஜிற்றல் திரையரங்கு. இது கனடாவில்கூட மிக அரிது.
இதழ் 27
 

KefaufLDIT
ரொறொன்ரோ படமாளிகையில் 'மெதுவாக உன்னைத் தொட்டு' திரைப்படம் காட்டப்பட்டபோது, வழமைபோல் திரையரங்கின் பின்புறம் இருக்கும் புரொஜெக்டரில் இருந்து படம் காட்டாமல் நடுவில் ஒரு உயர்ந்த குத்தி வைத்து அதன்மேல் புரொஜெக்டரை வைத்துப் படம் காட்டினார்கள். இதனைப் பார்த்ததும் முன்னொரு காலத்தில் ஊரூராய் இலங்கை அரச படக் கூட்டுத்தாபனம் காட்டிய விவரணப்படக் காட்சியும் 'சன்லைற் விளம்பரப் படக்காட்சியும் ஞாபகத்தில் வந்ததுதவிர்க்க முடியாததுதான். இதனை ஊகித்தோ என்னவோ, இதை மறைப்பதற்காக ஆட்கள் வந்தமரும் முன்பே படமாளிகையை இருட்டாக்கி விட்டிருந்தனர். உள்ளே சென்றவர்கள் இருட்டில் தட்டுத் தடுமாறியே இருக்கைகளைத் தேடிப்பிடிக்க வேண்டியிருந்தது.
பிலிம்'இல் படம் காட்டாமல் இதென்ன வீடியோ விலா காட்டுகிறார்கள் எனப் பலரும் ஏளனமாகப் பார்த்திருப்பார்கள். சிலர் இது பற்றிக் கேட்டதற்கு, அமைப்பாளரில் ஒருவர் இத்திரையரங்கில் டிஜிற்றல் தொழில்நுட்ப வசதியில்லை எனக்கூறவும் 'இவர் சுத்துகிறார்’ என நமட்டுச்சிரிப்புடன் அவர்கள் சென்றதைக் காணமுடிந்தது. உண்மையில் ஏளன மாகவும் நமட்டுச் சிரிப்புடனும் பார்த்தவர்கள்தான் பரிதாபத்துக்குரியவர்கள். புதிய தொழில்நுட்பத் தைப்பற்றி செவி வழியேனும் அறிந்திராதவர்கள் அவர்கள்தான். உண்மையில் இத்திரைப்படம் டிஜிற்றலில் படமாக்கப்பட்டு, டிஜிற்றலில் தொகுத்து டிஜிற்றலில் இசை சேர்க்கப்பட்டு, டிஜிற்றலில் அகலத் திரையில் படங்காட்டப்பட்டு-முழு டிஜிற்றலில் வெளி வந்த கனேடித் தமிழ்த் திரைப்படம் இதுவாகும். உண்மையில் அந்தத் திரையரங்கு மட்டுமல்ல, இங்கு டிஜிற்றல் படக்காட்சிக்கு தயார்ப்படுத்தப்பட்ட திரையரங்குகள் மிகமிகக் குறைவே. இதன்பின் ஒன்ராறியோ விஞ்ஞான மையத்தில் முருகனின் 'சுகம் சுகமே திரைப்படம் காட்டப்பட்டபோது அதனைப் புரிந்து கொண்டிருப்பார்கள் என நம்புகிறேன்.
L5 உயிர்நிழல் 0 ஒக்டோபர் - டிசம்பர் 2007

Page 16
சினிமா )
உலகளவிலேயே இப்போதைக்கு 650 திரையரங் குகளே தயார் நிலையிலுள்ளன. பல நாடுகளிலும் இப்புதிய தொழில்நுட்பப் படங்களான டிஜிற்றல் படங்களைக் காட்டுவதற்காகத் திரையரங்குகளைத் தரமுயர்த்த முயற்சிகள் நடைபெறுகின்றன. இந்தியாவில் 'சத்தியம் திரையரங்குதான் முதல் டிஜிற்றல் திரையரங்கு. மும்பை எக்ஸ்பிரஸ் அங்கு மட்டுமே டிஜிற்றலில் காண்பிக்கப்படும் எனக் கூறியபோது, அதென்ன டிஜிற்றல் படம்? என பாமரர்களிடையேயும் கேள்வி எழுந்தது. ஆனால் இந்நிலைமை படிப்படியாக மாறிவருகின்றதைக் காண முடிகிறது.
ஜோர்ஜ் லூக்காசின் 'ஸ்ரார் வோர்ஸ் () முதன் முதலில் டிஜிற்றலில் படமாக்கப்பட்டது. சிறப்புக் காட்சி வெளிப்பாட்டு (special effect) உத்திக்காக லூக்காஸ் டிஜிற்றலைநாடினார். ஆனால் செலுலோய்ட் படமாகவே 1997இல் இது வெளிவந்தது. ஆனால் 2002இல் வெளியான இவரது'ஸ்ரார்வோர்ஸ் (I) முழுநீள முழுடிஜிற்றல் படமாகும். 1997இல் மதிவாசன் ‘எங்கோ தொலைவில் திரைப்படத்தை முதன்முதலில் டிஜிற்றலில் தயாரித்திருந்தார். அதைத் தொடர்ந்து இங்கு தயாரிக்கப்படும் எல்லாமே டி-படங்களே.
e-சினிமாவில் படங்கள் படச்சுருளில் காட்டப் படுவதற்கு நிகரான துல்லியத்துடன் இருக்கின்றதா எனக் கேட்கையில் சற்று நிதானமாகத்தான் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. குறிப்பாக, இரண்டு விடயங்கள் நோக்கப்படவேண்டும். ஒன்று படமாக்கப்
உயிர்நிழல் 0 ஒக்டோபர் - டிசம்பர் 2007
 

படுவதன் துல்லியம், மற்றையது படங்காட்டப்படும் g5/6)65ulb. ILLDITáisabill (66)g HD (High Definition) வரை வளர்ந்திருக்கிறது. 'பிலிம்'இல் பதியப்படும் நிறத்தைவிட 3 மடங்கு அதிகமான செறிவில் படமாக் கலாம். இருட்டையும் படம் பிடிக்கும் துல்லியம் பிலிமை விட உயர்ந்திருக்கிறது. படம் காட்டப்படும்போது படச்சுருளில் முதலாவது காட்சியில் காணும் துல்லி யத்துக்கு இன்னும் டிஜிற்றல் படத்தின் துல்லியம் வரவில்லை. வரும் என்பதுதான் நம்பிக்கை. இப்போ துள்ள DLPதொழில்நுட்ப புரொஜெக்டர் ஐந்தாம்நாள் காட்சியில் பிலிம் வெளிப்படுத்தும் துல்லியத்திற்கு இணையாக இருக்கிறது. இதனை இன்னும் முன்னேற் றுவதற்குப் பல நிறுவனங்கள் முயன்றுகொண்டி ருக்கின்றன. அப்படியிருந்தும் இத் தொழில்நுட்பம் உலகளவில் அங்கீகரிக்கப்படுவதற்குக் காரணங்கள் இல்லாமலில்லை.
e-சினிமா படச்சுருளை விடச் செலவு குறைந்தது. படமெடுத்துக் கழுவ அனுப்பி எடுக்கும் நேர விரயம் தவிர்க்கப்பட்டு, படம் எடுக்கும்போதே சரி-பிழைகளை உடனுக்குடன் கண்டுகொள்ளும் வசதியும், நிறத் துக்கு இரசாயனத்தை நம்பியிராத தன்மையும், எந்த விதமான தந்திரக்காட்சியையும் உருவாக்கலாம் என்ற நம்பிக்கையும் e-சினிமாவில் உண்டு. பிறநாடுகளுக்கு, பல்வேறு திரையரங்குகளுக்கு அனுப்பப்படவெனப்பல பிரதிகள் எடுக்கவேண்டியதேவையும், விமானத்திலும் கப்பலிலும் பாரவண்டிகளிலும் அனுப்பவேண்டிய தேவையும் செலவும் பாரம்பரியபிலிம் முறைக்கு அவசி யமாகிறது. ஆனால் e-சினிமா இன்ர நெற்றில் கூட அனுப்பி வைக்கக்கூடிய அளவில் செலவிலும் துரிதத்திலும் சிக்க னமானதாக இருக்கின்றது. ஒரு பிரதியி லிருந்து ஒரேநேரத்தில் பல படமாளிகை களில் படம் காட்டப்படக்கூடிய வகையில் வசதியானதாக இருக்கின்றது. இடையில் காட்டப்படவேண்டிய விளம்பரப் படங் களைக்கூட எந்த நேரத்திலும் நீக்கவோ செருகவோ கூடியதாகவும் e-சினிமாவில் வசதி இருக்கின்றது. உலகக்கோப்பைப் போட்டிகளின் நேரடிக் காட்சிகளைக்கூட e-சினிமாவில் பார்க்க முடியும். கனடாவில் இருந்துகொண்டே இலங்கையில் படம் காட்ட முடியும். அதனால்தான் இன்று உலகம் முழுவதும் படிப்படியாக eசினிமாவுக்கான ஆயத்தங்கள் சிறுகச் சிறுக நடந்து வருகின்றன. செலுலொய்ட் படங்கள் இல்லாது போய் 'டிஜிற்றல் தொழில்நுட்பப் படமாக வரத் தொடங்கி யுள்ளன. சொல்லப் போனால் சிறுகச்சிறுக படச்சுருளின் சகாப்தம் முடிவுக்கு வர உள்ளது எனலாம்.
தென்னிந்தியப் படங்களும் இப்பாதை யில் இறங்குகின்றன. இதன் முன்னோடியாக சேரனின் 'தவமாய் தவமிருந்து காலடி எடுத்து வைத்துள்ளது. கனேடியத் தமிழ்ப் படங்களும் இதே வழியிலேயே செல்ல
இதழ் 27

Page 17
முனைப்புடனுள்ளன. சர்வதேசரீதியில் முதன்முதலாக வெளியிடப்பட்ட இந்தியப் படமான 'குரு' படத்தின் வெளியீடு அண்மையில் ரொறன்ரோவில் ஆரம்பித்து வைக்கப்பட்டபோது e-சினிமாவாகவே வெளியிடப் பட்டிருந்தது.
e-சினிமாவில் படம் எடுக்கும்செலவு குறைவு. ஆனால் படம் காட்டியின் (projector) செலவுதற்போது அதிகமாக இருப்பதால் திரையரங்குகளைத் தரமுயர்த்துவதற்கான செலவு அதிகமாக இருக் கின்றது. எனினும் டோக்கியோவில் 2000ம் ஆண்டில் முழு டிஜிற்றல் திரையரங்குநிர்மாணிக்கப்பட்ட பின்னர் உலகம் முழுவதும் பாரம்பரியத் திரையரங்குகள் படிப்படியாக டிஜிற்றல் திரையரங்குகளாக மாறி வருகின்றதென்பதை டிஜிற்றல் திரைப்படம் மீதான நம்பிக்கை வலுக்கிறாக ஏற்கலாம். -
e-சினிமாவின் பலமாக இருப்பது ஒலியமைப்பு. ஏனெனில் டிஜிற்றல் ஒலிகளை இதில் மிக இலகுவில் இணைத்திடும் வசதியாகும். இதனால் DTS சூழ்ஒலியமைப்பை வெகு இலகுவாகப் பொருத்தமுடியும். ஜோர்ஜ் லூக்காஸின் THX சூழ்- ஒலியமைப்பையும் சேர்த்திடலாம். அதுமட்டுமல்லாது இலகுவாக மொழிமாற்றமும் செய்திட முடியும். தமிழ்ப்படங்களை வேற்று மொழி பேசும் படங்களாக இலகுவாக மாற்றிடலாம். பின்னணி இசை, பின்னணிக்குரல் சேர்ப்பதும் கூட இலகுவானதே. அது போன்றே காட்சிகளைச் செருகுதலும் இலகுவாகவே முடியும். மேலும் சில காட்சிகளில் நடிகர்களின் நிறங்களைக் கூட மாற்றிடமுடியும். இதனால்தான்'சிவாஜி படத்தில் வெள்ளைநிற ரஜனியைப் பார்க்க முடிந்தது. பழைய
இதழ் 27
 

17
(K Parfurt
கறுப்பு-வெள்ளை ஹிந்தி ‘தேவதாஸ் படத்தையும்நிறம் தீட்டி வர்ணப்படமாக மாற்றும் வேலையையும் e-சினிமா தொழில்நுட்ப வசதி மூலந்தான் செய்து கொண்டிருக்கிறார்கள்.
e-சினிமாவின் இன்னொரு வசதி என்னவென்றால், SFX எனும் சிறப்புக் காட்சி வெளிப்பாட்டு (special effect) உத்திகளை சேர்க்க முடிவது. விரும்பும் தந்திரக் காட்சிகளை உருவாக்கும் வகையில் பல மென்பொருள்கள் இருக் கின்றன. தேவையேற்படின் மென் பொருள்களை எழுதவும் முடியும். இப்போது வெளியாகும் பாரம்பரிய படச் சுருள் படங்களுக்கான SFX e-சினிமா வில் செய்தே மீளவும் படச்சுருளில் மாற்றியிருக்கிறார்கள். 'ஜீன்ஸ்' படத்தில் ஷங்கர் செய்ததும் அதுவே. இதேவழியில் இன்னும் மேலே போய் முப்பரிமாணப் படங்களும் தயாரிக்க முனைகிறார்கள். இதன்முன்னோடியாக நோர்வேயில் முப்பரிமாண விளம்பரப் படமும் எடுத்துள்ளார்கள். இதனால் காலப்போக்கில் முழுநீள முப்பரிமாணப் படங்களும் வர வாய்ப்பிருக்கிறது. இதற்காகத் திரைகூட மாற்றப்பட வேண்டியிருக்கும்.
படச்சுருளின் தேவை இல்லாது போய் விட்டது. வெள்ளைத் திரையின் தேவையும் இல்லாது போய் கண்ணாடித் திரை வரலாம். படம் காட்டியின் தேவை கூட இல்லாது போகலாம். e-சினிமாவின் வளர்ச்சியில் எதுவும் இல்லாது போகலாம். ஆனால் சினிமா மட்டும் என்றென்றும் இருக்கும்.
இது எப்போதோ வந்திருந்தால் 'மகாகவி காளிதாஸ்' படத்தை அரைகுறையாகப் பார்த்த துர்ப் பாக்கியம் எனக்கு நேர்ந்திருக்காது.நான் இதை எழுத நேர்ந்துமிருக்காது. ஆனாலும் என்ன இப்போதாவது வந்துவிட்டதே. பென்சில், பேனா போன்று எவருக்கும் இலகுவில் கிடைப்பதுபோல் சினிமா இருந்தால் அது தன் உச்சக்கட்டத்தை அடைந்துவிட்டது என்று கருதிக்கொள்ளலாம். அப்போதுதான் சாதாரண மனித னின் கருத்துக்கூட சினிமா ஏறமுடியும்.
அந்த வகையில் e-சினிமா ஈழத்துத் தமிழர் களுக்கு, குறிப்பாக புலம்பெயர் தமிழர்களுக்கு, வரப் பிரசாதமாக அமைகிறது. எமக்கென்றோர் சினிமாவை உருவாக்கும் கனவுகளோடிருந்த எமக்கு ஆதரவு, பொருளாதாரம், அரசியல், கிணற்றுத்தவளைத்தனம், சினிமாத் தீண்டாமை எனப் பல முட்டுக்கட்டைகள் இருந்திருக்கின்றன. ஆனால் புலம்பெயர்ந்தபோது பலதும் எம்மைவிட்டுப் பெயர்ந்து விட்டதுடன் புதிய தொழில்நுட்பம் எமக்குக் கைகொடுக்கத் தயாராக இருக்கின்றது. இந்தத் தொழில்நுட்பங்களைத் தெரிந்துகொண்டால் எமது கனவுகளும் ஒருநாள் மெய்ப்படும். எமக்கான சினிமாவை நாங்கள் உரு வாக்குவோம் என நம்பலாம்.
உயிர்நிழல் 0 ஒக்டோபர் - டிசம்பர் 2007

Page 18
அத்சவி >
எழுத்தாளர் செ. யோகநா
(1942-2008) அஞ்சலி
6ழுத்தாளர் செ.யோகநாதன் இலங்கையிலும், தமிழகத்திலும் நன்கு அறியப்பட்டவர். யாழ்ப்பாணம், கொழும்புத்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் பேராதனைப் பல்கலைக்கழகப் பட்டதாரியுமாவார். மேலும் மட்டக்களப்பு, பூநகரி ஆகிய இடங்களில் உதவி அரசாங்க அதிபராக கடமையாற்றியவர். இரு தடவைகள் சாகித்திய மண்டலப் பரிசைப் பெற்றி ருக்கிறார்.
நாவல்.சிறுகதை, குறுநாவல், சிறுவர் இலக்கியம், சினிமா, சின்னத்திரையென இவரது தமிழ்க் கலை இலக்கியத்துக்கான பங்களிப்பு பன்முகப்பட்டது. இலங்கைத் தமிழ் இலக்கியச் சூழலில் முற்போக்கு எழுத்தாளராக இனங்காணப்பட்டவர்.
யோகநாதன் ஆரம்பத்திலே இன, மொழி உணர்வு மிக்கவராக தமிழரசுக் கட்சியால் கவரப்பட்டவர். பின்னர் தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தில் ஈடுபடத் தொடங்கியதும் ஒரு மார்க்சியமுற்போக்குவாதியாகி கடைசிவரை அப்படியே வாழ்ந்திருக்கின்றார். இவரின் பிற்காலத்திய எழுத்துக்களில் தமிழ்த் தேசியவாதம் ஆழவே வேரூன்றி உள்ளதைக் காணலாம். எவ்வா றாயினும் யோகநாதனின் கதைகள் சமூக வாழ்க்கை விமர்சனங்களாக விளங்குகின்றன. தமிழ்த் தேசிய உணர்வுக் காலகட்டத்தில் ஈழத்துச் சிறுகதை உல கிற்குக் காத்திரமான பங்களிப்பாக அமைவன யோக நாதனின் கதைகளாகும். ஈழத்து வாழ்க்கைப் பிரச்சி னைகளின் மையங்களை இனங்கண்டு உணர்வோடு பதிய வைத்திருக்கின்றார்.
1962இல் அவரது முதலாவது சிறுகதையான 'மனக்கோலம் வெளிவந்தது. அவருடைய சமகாலத் தவர்களாக செங்கை ஆழியான், செம்பியன் செல்வன், கதிர்காமநாதன், குந்தவை, பரராஜசிங்கம், அங்கை யன், கைலாசநாதன், சிதம்பரவர்த்தினி போன்ற சிறுகதைப் படைப்பாளிகள் அந்தக் காலத்திலே பேராதனைப் பல்கலைக்கழகத்திலே இருந்தார்கள். அவர்களோடு மெளனகுரு, சண்முகதாஸ், தளைய சிங்கம் போன்றோர்களும் அங்கு இருந்தார்கள். அங்கு பேராசிரியர்கள் கைலாசபதி, வித்தியானந்தன் ஆகி யோர் இலக்கியத்தினுடைய செல்நெறிகளை நன்கு அறிந்தவர்களாக இருந்தார்கள். அவர் கைலாச பதியோடுமிகுந்த ஈடுபாடுகொண்டவராக இருந்தார்.
உயிர்நிழல் 0 ஒக்டோபர் - டிசம்பர் 2007

தன்
8
பல்கலைக்கழகத்துக்கு வெளியே தெணியான், தெளிவத்தை யோசப், பெனடிக்ட் பாலன் போன்ற எழுத்தாளர்களும் ஈழத்துச் சிறுகதை இலக்கியத்தை அடுத்த கட்டத்திற்கு முன்னெடுத்துச் சென்றனர் என்பது முக்கியமானதாகும். மேலும் கேடானியல், டொமினிக்ஜிவா, என்.கே.ரகுநாதன், அகஸ்தியர், அ.ந.கந்தசாமி எனப் பலருடன் தன் நட்பைப் பேணி வந்தவர். .
இவர் பற்றி கைலாசபதி இப்படிக் கூறுகிறார். "யோகநாதனின் கதைகள் வாழ்வில் யதார்த்தத்தை சித்தரிக்கிற வேளையிலேயே அதன் உள்ளடக்க வலுவினையும் பெற்றிருக்கின்றன. கதைகளின் கலை யழகு வெகுஇயல்பாகவே உள்ளடக்கத்தோடு ஒட்டி நிற்பதற்கு, எழுத்தாளனின் சிந்தனைத்தெளிவு, பார்வை என்பனவே காரணம் என்பர் மேனாட்டு விமர்சகர். யோகநாதனின் கதைகள் இத்தகைய அம்சங்களைப் பூரணமாகப் பெற்றிருக்கின்றன என்று துணிந்து கூறலாம்.
நாட்டு நிலைமை காரணமாக 1983இல் இவர் இந்தியாவிற்குச் செல்ல நேரிட்டது.
ஈழத்தில் இருந்த காலத்தில் எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகத்தின் மூலம் 1976ல் ‘காவியத்தின் மறுபக்கம் எனும் நூலை வெளியிட்டும் இருந்தார். அப்போது 'வசந்தம்' எனும் சிறுசஞ்சிகையையும் நடத்தி இருக்கி றார்.
அரசியல், வாழ்வியல் தனக்கு சாதகமான ஒரு சூழலில் மீண்டும் இலங்கை திரும்பி எம் டி குணசேனா நிறுவனத்தின் வெளியீட்டுப் பிரிவில் கடமையாற் றினார். அவர்களால் வெளியிடப்பட்ட ஆதவன் பத்திரி கையின் ஆசிரியர் குழுவிலும் இயங்கினார். முன்னர் சாதியவர்க்க எதிர்ப்புப் போராட்டங்களில் பங்குபற்றிய அனுபவம் கொண்ட இவர் பளிச்சென விமர்சனங்களை முன்வைப்பவர்.
இவர் 13 நாவல்களும், 15 குறுநாவல்களும், 17 சிறுகதைத்தொகுதிகளும், 11 சிறுவர்நூல்களும், சினிமா, வாழ்க்கைவரலாறு என இரு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவர் சஞ்சயன் எனும் புனைபெய ரிலும் எழுதிவந்துள்ளார்.
இதழ் 27

Page 19
"தமிழீழத்தைவிட பரப்பளவில் சிறிய ஐ.நா. சபை அங்கத்த
"அரபுமொழிபேசும் மக்களு
"உலகில் பல்வேறு ெ தமக்கெனத் தேசங்கை
“பல்வேறு நாடுகளில் வாழும் தமிழ
பலருக்கும்பரிச்சயமான மேற்குறிப்பிட்ட வாசகங்கள் தமிழர் விடுதலைக்கூட்டணியின் கோட்பாட்டுவிளக்கா பிற தேசிய இனங்களின்பால் தமிழர் பலரின் கவனம் கூட்டணி சட்டத்தரணிகள் வகுத்துக் கொடுத்த சித்தார் கூற்றுகள் யாவும் உண்மையா என்பதை ஆராயவேண்டி
முதலில் தமிழீழத்தை விடச் சிறியநாடுகளின் சுதந்தி அவற்றின் வரலாற்றைப்படிப்பது அவசியம். உலகிலேே ஐ.நா.சபையில் பார்வையாளர் அந்தஸ்துமட்டுமே வழ ஒருநாடாக அங்கீகரிக்க மாட்டார்கள். போப் (அரசர்), க (பாராளுமன்றத்தில்) இருந்துகொண்டு கத்தோலிக்க வத்திக்கான் நகரத்தின் சுயநிர்ணய அந்தஸ்து ஒரு பெரும்பகுதிபோப்பரசரால் ஆளப்பட்ட கத்தோலிக்க ம நீடித்த மதத்தின் ஆட்சி 19ம் நூற்றாண்டில் முடிவுக்கு வ செய்துகொண்ட ஒப்பந்தத்தின்பிரகாரம் தற்போதுநாம்க
இதழ் 27
 

Xஅரசியல்
I
நாடுகள்கூட சுதந்திரதேசங்களாக, தவர்களாக உள்ளன'
க்கு 18 தேசங்கள் உள்ளன"
மாழிபேசும் மக்களும் ளக் கொண்டுள்ளனர்"
ருக்கு மட்டும் ஒரு நாடு இல்லை!"
ர் இலங்கையில் தமிழ்த் தேசிய அரசியலை உருவாக்கிய கள். இந்த விளக்கங்களைக் கேட்ட பின்புதான் உலகில் திரும்புகிறது. இருப்பினும் அவர்களின் பார்வையானது த அடிப்படையைக் கொண்டது. ஆகவே மேற்குறிப்பிட்ட யதேவையும் எழுகின்றது.
ரம் எப்படிச்சாத்தியமாகியது என்பதை அறிந்து கொள்ள பமிகச் சிறிய சுதந்திரநாடு வத்திக்கான்நகரம். அதற்கு ங்கப்பட்டுள்ளது. ஏனெனில் விபரம் அறிந்த யாரும் அதை ார்டினல்(மந்திரி)களுடன் சென்ற்பீட்டர்ஸ் தேவாலயத்தில் மதத்தை (அரசியல்) நிர்வகிப்பதை தேசம் என்பதா? வரலாற்றுத் தொடர்ச்சி. ஒரு காலத்தில் இத்தாலியின் நவாத தேசமாக இருந்தது. சுமார் ஆயிரம் ஆண்டுகாலம் ந்தது. 1921இல் அன்றைய சர்வாதிகாரி முசோலினியுடன் ாணும் வத்திக்கான் என்ற தன்னாட்சி அதிகாரம் கொண்ட
9 உயிர்நிழல் 0 ஒக்டோபர் - டிசம்பர் 2007

Page 20
அரசியல்)
பகுதி உருவானது.
19ம் நூற்றாண்டு கால ஐரோப்பா பல மாற்றங்களை பல்வேறு ஐரோப்பிய மன்னர்களைப் போரில் தே நெப்போலியன் புதிய பாணி (பாசிசம்?) சாம்ராஜ்யத் பித்தான். நெப்போலியன் வெறும் அதிகார ஆசையில்ந வில்லை. பிரெஞ்சுப் புரட்சி முன்மொழிந்த லிபரல் சி நெப்போலியன் கைப்பற்றிய நாடுகளில் பரப்பப்பட்ட புரட்சியின் விளைவுகள் இன்றுவரை நிலைத்து நி வாட்டர்லூ போரில் நெப்போலியன் தோற்றாலும், அதன் சாம்ராஜ்யம் சிறு துண்டுகளாக உடைந்தபோதும், ஆ தோன்றிய புதிய ஆளும் வர்க்கம் (மத்தியதர வர்க்க மன்னர்களை சிம்மாசனத்தில் அமர்த்தச் சம்மதிக் வியன்னாவில் ஒன்றுகூடி ஐரோப்பிய கண்டத்தின் எ குறித்து ஆராய்ந்தார்கள். வியன்னா மகாநாட்டில் ே
ஒப்பந்தத்தின் பிரகாரம் புதிய எல்லைகள் வரைய அப்படித்தோன்றியவைதான் இன்றுநாம் காணும் தேசங் தேசங்களின் ஆட்சிப் பொறுப்பேற்றவர்கள், மன்னருக் சமுள்ள முடியாட்சியையோ அல்லது கடவுளுக்கு அ மதவாட்சியையோ பின்பற்ற விரும்பவில்லை. அதற் சிந்தனையான பகுத்தறிவுஇடம் கொடுக்கவில்லை. அப்ே ‘தேசியம்'என்ற புதிய சொல் அகராதியில் இடம்பிடித்த
ஒருநாட்டின் தலைவராக மன்னர் இல்லாவிட்டால் ஆ சாகிவிடும். அந்தக்குடியரசு'தேசிய அரசு என அழைக் முடி தரித்த தனிமனிதனுக்கு குடிமை வேலை செய் ‘தேசம்' என்ற (பிறந்த) மண்ணிற்கு கடமைப்பட்ட பி னார்கள். அவர்களை ஒன்றிணைக்க ஒரு பொது மொழ சியம் உணரப்பட்டது. இவ்வாறு தோன்றியவைதான்." மொழிபேசும் மக்களுக்கான தனித்தனி தேசிய ஆ ஐரோப்பாவில் ஒரு காலத்தில் (கத்தோலிக்க) கிறிஸ்
உயிர்நிழல் 0 ஒக்டோபர் - டிசம்பர் 2007
 

க் கண்டது. ாற்கடித்து தை ஸ்தா ாடுபிடிக்க த்தாந்தம் து. அந்தப் ற்கின்றன. நிமித்தம் ாங்காங்கே ம்) மீண்டும் கவில்லை. திர்காலம் பாடப்பட்ட
பப்பட்டன. கள். புதிய குவிசுவா டி பணியும் குப் புதிய போதுதான்
.
İlgibi (ölç2UT 55 MILLI l-ġb. த மக்கள்
"ஜைகளா யிென் அவ ஒவ்வொரு அரசுகள்". தவ மதம்
திணிக்கப்பட்டதுபோல பெரும்பான்மை இனத்தின் மொழி சிறுபான்மை இனங்களின் மீது திணிக்கப்பட்டது.
ஐரோப்பாவின் புதிய தேசிய அரசுகள் எல்லாமே மொழி வேறுபாட்டினால் பிரிய வில்லை. வியன்னா ஒப்பந்தத்தின்படி நெதர்லாந்துடன் சேர்ந்திருந்த பெல்ஜி யத்திற்கு கத்தோலிக்க மதம் பெரிதா கப்பட்டது. புரட்டஸ்தாந்துக்காரருடன் சேர்ந்திருக்க விரும்பாமல் தனிநாடாக சண்டையிட்டுப் பிரிந்தது. இதற்கிடையே லக்ஸம்பேர்க்கை ஆண்ட குறுநில மன்ன னுக்கு மக்களின் ஒத்துழைப்புடன், ஆனால் காலத்திற்கேற்ற மாறுதல்களுடன் முடியாட்சியை நீடிக்கும் எண்ணம் ஏற் பட்டது.தற்போது உலகளாவிய அதிகாரம் பெற்றுவிட்ட தேசிய அரசுகளுக்கு எங்கோ ஒரு மூலையில் குறுநில மன்னர்களின் ஆட்சி தொடர்வது கவலைப்படவேண்டிய விடயமாக இருக்கவில்லை. இவ்வாறே, வேறு சில குறுநிலமன்னர்களும் தனிக் காட்டு ராஜாக்களாக அதிகாரம் செலுத்த அனுமதி வழங்கப்பட்டது. சுவிட்சர் லாந்துக்கும் ஒஸ்திரியாவுக்கும் இடையில் உள்ள லீக்டன்ஸ்ரைன், தெற்கு பிரான்சில் உள்ள மொனோக்கோ, ஸ்பெயினுக்கும் பிரான்சிற்கும் இடையில் இருக்கும் அண் டோரா என்பவை இவ்வாறுதான் தனிநாடு களாயின. இத்தாலியில் இருக்கும் சென் மரினோ ஏற்கனவே குடியரசாக இருந்த தைக் கண்டு மெச்சிய நெப்போலியன் கொடுத்த உறுதிமொழியினால் அது இன்னமும் தனது சுதந்திரத்தைப் பேணி வருகின்றது.
ஐம்பது சதுரகிலோமீற்றர் பரப்பள வைக்கூட கொண்டிராத இந்தக் குட்டி நாடுகள் யாவும் தமது பொருளாதார, பாதுகாப்பு தேவைகளுக்காக அயல் நாடுகளில் தங்கியுள்ளன. இன்றைய நவீன உலகில் அயல்நாடுகளின் உதவியும் ஒத்து ழைப்பும் கிடைக்காவிட்டால் ஒரு சில நாட்கள்கூட நிலைத்து நிற்க முடியாது என்பதே யதார்த்தம். இதனால் பாதுகாப்பு, வெளிவிவகாரம் போன்றவற்றை அயலி லுள்ள பெரிய நாடுகளே கவனித்து வரு கின்றன. ஒப்பீட்டளவில் அதிக பரப்பள வையும் மக்களையும் கொண்ட லக்ஸம் பேர்க் மட்டும் இதில் விதிவிலக்காக பூரண சுதந்திரத்தைக் கொண்டுள்ளது. இருப் பினும் பெரும்பாலான நுகர்வுப்பொருட்கள் அயல்நாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்படுவதால், வர்த்தக ஒப்பந் தங்களில் தங்கியிருக்க வேண்டியுள்ளது. உலகின்அனைத்துக்குட்டிநாடுகளினதும் நிலைமை இதுதான். பசுபிக் சமுத்திரத்
இதழ் 27

Page 21
திலும் கரீபியன் கடலிலும் உள்ள சிறுதீவுகள் பல சுதந்திர நாடுகளின் பட்டியலில் இணைகின்றன. முன்பு ஒரு காலத்தில் ஐரோப்பிய காலனி களாக அல்லது ஆக்கிரமிக்கப்பட்ட இந்தத் தீவுகள் சுதந்திரம் வழங் கப்பட்டாலும் முன்னாள் காலனிய எஜமானர்களுக்குப்பணிந்து நடக்க வேண்டிய நிலையில் உள்ளன. உதாரணமாக பசுபிக்சமுத்திரத்தீவு நாடுகளான மைக்ரோனேசியா, மார்ஷல் தீவுகள், பலவு போன்றன இரண்டாம் உலகயுத்த காலத்தில், யப்பானாலும் அமெரிக்காவாலும் கைப்பற்றப்பட்டன. யுத்தம் முடிந்த பிறகு அமெரிக்காவுடன் பாதுகாப்பு, பொருளாதார ஒப்பந்தங்களைச் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற் பட்டது. முற்றுமுழுதாக அமெரிக்க நிதியுதவியில் தங்கியிருக்கும் இந்த நாடுகள் சில நேரம் கொடுக்கும் விலை பெரியது. குறைந்தது 50 அணுவாயுத பரிசோதனைகளை அமெரிக்கா மார்ஷல் தீவுகளில் நிகழ்த்தியுள்ளது. அதேபோல் பிரான்சின் கடல்கடந்த பிரதேச மாகக் கருதப்படும் பொலினேசிய தீவில்தான் பிரான்ஸ் தனது அணு வாயுதப் பரிசோதனை நடத்தியது. நவ்று தீவு அவுஸ்திரேலிய நிதியுதவியுடன் ஆட்சி நடத்தும் இன்னொரு குட்டி தேசம். தற்போது அந்த நன்றிக் கடனாக அவுஸ்திரேலியா நோக்கி வரும் அகதி களுக்கான சிறைச்சாலையைப் பராமரிக்கும் புதிய வேலை கிடைத்துள்ளது. சில நேரங்களில் குட்டித் தீவுகளின் ‘சுதந்திரம் அந்நிய தலையீட்டினால் 'காப் பாற்றப்படுகின்றது. பிஜி தீவில் சுதேசி இன இராணுவ வீரர்கள் ஆட்சியைக் கைப்பற்றியபோது அவுஸ்தி ரேலியா படைகளை அனுப்பி"ஜனநாயகத்தை மீட்டது பலருக்கு ஞாபகமிருக்கலாம்.
கரீபியன்தீவுநாடுகளும், தமது காலனியத் தொடர் புகளை முற்றுமுழுதாகத் துண்டிக்க முடியாத நிலை யிலுள்ளனர். கிரிக்கட் பிரியர்களுக்குப் பரிச்சயமான மேற்கிந்திய தீவுகள் - இந்த சுதந்திர நாடுகளுக்கு வழங்கப்பட்ட பொதுப் பெயர். டொமினிக்கா, சென் கிட்ஸ்-நெவிஸ், சென் லூசியா, அன்டிகுவா-பார்புடா, கிரெனாடா போன்ற தீவு நாடுகள் தமக்குள் கரிபியன் பொருளாதாரக் கூட்டமைப்பை உருவாக்கி, கரிபியன் டொலர் என்ற பொது நாணயத்தைப் பயன்படுத்து கின்றன. முன்னாள் பிரிட்டிஷ் காலனிகளான இவை எலிசபெத் மகாராணியை தமது தலைவியாக ஏற்றுக்கொண்டே சுதந்திரம் பெற்றன. இவையும் தமது பொருளாதார, பாதுகாப்புத் தேவைகளுக்காக முன்னாள் காலனியவாதிகளில் தங்கியிருக்க வேண்டியநிர்ப்பந்தத்தில் உள்ளன. இதுகாலவரையில் கிரெனாடா மட்டுமே சுயாதீனமான அரசியல் செய்யத்
இதழ் 27
 

துணிந்த நாடு இறுதியில் அதற்குக் கொடுத்த விலை, அமெரிக்க படைகளின் ஆக்கிரமிப்பு. 1974இல் நவகாலனிய பொம்மை அரசுக்கு எதிராக, மொரிஸ் பிஷப் தலைமையில் ஆயுதமேந்திய புரட்சி வெற்றி பெற்றது. ஒரு மார்க்ஸிஸ்டான மொரிஸ் பிஷப்நாட்டை சோசலிசப் பாதையில் கொண்டு செல்வதற்காக கியூபாவின் உதவியை நாடினார். கியூபாவும் தனது ஆசிரியர்கள், வைத்தியர்கள், தொழில்நுட்பவியலா ளர்கள் போன்றவர்களை அனுப்பி அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டு வந்தது. அதில் குறிப்பிடத் தக்கதாக புதிய விமான நிலையக் கட்டுமானப் பணி அமைந்திருந்தது. அந்த விமானநிலையத்தில் சோவி யத் போர் விமானங்கள் வந்திறங்கவிருப்பதாக சி.ஐ. ஏ. கொடுத்த தவறான தகவலைநம்பி அன்றைய ஜனா திபதி ரீகன் அமெரிக்கப் படைகளை அனுப்பினார். பிறகென்ன கிரெனாடா தீவை அமெரிக்கப்படைகள் ஆக்கிரமிக்க கொம்யூனிசம் முடிவுற்றது, சுபம்.
முன்னாள் காலனிய எஜமானர்கள், தாம் சுதந்திரம் கொடுத்த நாடுகள், 'பொதுநலவாய அமைப்பு என்ற பெயரிலாவது தம்முடன் நல்லுறவு பேணவேண்டும் என்று விரும்புகின்றன. அதற்காகப் பல சலுகைகள் வழங்கப்படுகின்றன. பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா போன்ற 19ம் நூற்றாண்டு காலனிய சக்திகளே இன்று வரை தமது பிடியை விடாமல் வைத்திருக்கின்றன. இதற்கு மாறாக முன்னாள் போர்த்துக்கீசிய, ஸ்பானிய காலனிகள் நவீன உலகின் ஆதிக்க சக்திகளுக்குப் பணிந்துபோக வேண்டியநிலையில் உள்ளன. இதற்கு
உயிர்நிழல் 0 ஒக்டோபர் - டிசம்பர் 2007

Page 22
அரசியல்)
கிழக்குத் திமோர் ஒரு சிறந்த உதாரணம். இந்தோனே சியாவின் அருகில் இருக்கும் முன்னாள் போர்த்துக் கீசிய காலனியான கிழக்குத் திமோர் தனது சுதந்தி ரத்தை ஒரு வருடம்கூடக் காப்பாற்றமுடியாமல் இந்தோ னேசியாவிடம் தன்னை இழந்தது. பல தசாப்தங் களிற்குப் பின்னர், அங்கேயுள்ள எண்ணை வளங் களைக் குறி வைத்து அவுஸ்திரேலியா தலைமை யிலான பன்னாட்டுப் படைகள் விடுதலை பெற்றுக் கொடுத்தன. புதிய சுதந்திரநாடாக ஐ. நா. சபை அங்கத்துவம்பெற்ற கிழக்குத் திமோர் அதனது காலனிய வரலாற்றுத் தொடர்ச்சியாகவே சர்வதேச
அங்கீகாரம் பெற்றது. ஏனெனில் கிழக்குத் திமோரில் வாழும் பல்வேறு மொழிபேசும் அதே இனங்கள் மேற்குத் திமோரிலும் இருக்கின்றன. இந்தோனேசியாவின் ஒரு பகுதியான மேற்குத் திமோர் குறித்து யாரும் இதுவரை கவலைப்படவில்லை.
இதுபோன்றே காலனிய வரலாற்றுத் தொடர்ச் சியாகக் கருதப்படும் இன்னொரு நாடு ஏற்கனவே பல நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டபோதும் நீண்ட ஆயுதமேந்திய விடுதலைப்போராட்டத்தின் பின்னும் ஐ. நா. சபை சுதந்திரம் பெற்றுத் தருவதாக வாக்களித்த போதும். இன்ன பிறவெல்லாம் இருந்தும் இன்றுவரை மொரோக்காவால் ஆளப்படும் மேற்கு சஹாரா மாநிலம் யாருடைய கவனத்தையும் பெறவில்லை. மொரோக்கோ பிரெஞ்சுக் காலனியாக இருந்தபோதிலும் அதன் தென் பகுதி மாநிலமான மேற்கு சஹாராஸ்பானியக் காலணி
உயிர்நிழல் ஒெக்டோபர் - டிசம்பர் 2007
 

யாக இருந்தது. சுதந்திரமடைந்த மொரோக்கோ, மேற்கு சஹாரா காலனிய காலத்திற்கு முன்னர் தனது ராச்சியத்தின் ஒரு பகுதியாக இருந்த வரலாற்றைக் காரணம் காட்டிச் சொந்தம் கொண்டாடியது. அது போன்றே மொரிட்டானியாவும் தன் பங்கைக் கோரியது. 1975ம் ஆண்டு ஒரு ரகசிய ஒப்பந்தத்தின் பின்னர் ஸ்பெ யின்மேற்கு சஹாராவைவிட்டு வெளியேறிய கையோடு, மூன்றில் இரண்டு பங்கு பகுதியை மொரோக்கோ ஆக்கிரமித்து அதனைத் தனது மாகாணமாக்கியது. மிகுதிப் பகுதி மொரிட்டானியாவால் ஆக்கிரமிக்கப் பட்டது. இது ஒரு சர்வதேசப் பிரச்சினையாகி
விட்டதால் தீர்த்து வைப்பதற்காக ஐ.நா. சபை தலை யிட்டபோதிலும் இதுவரை எந்த முடிவும் எட்டப் படவில்லை. இதற்கிடையே “பொலிசாரியோ’ என்ற இயக்கம் மேற்குசஹாராவின்விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்தது. அல்ஜீரியா தனது நாட்டில் முகாம்களை அமைத்துக் கொள்ள இடம் கொடுத்தது. மொரோக்கோ பதிலடியாக இராணுவ காட்டாட்சியை ஏவிவிட்டது. மேற்கு சஹாரா மக்கள் இராணுவகாவலரண்களைக் கொண்ட வேலியிடப்பட்ட தடுப்பு முகாம்களுக்குள் வாழும்படி நிர்ப்பந்திக் கப்பட்டனர். இதன்மூலம் அல்ஜீரிய எல்லையில் இருந்து ஊடுருவித் தாக்கும் "பொலிசாரியோ' கெரில்லாக் களின் இராணுவ நடவடிக்கைகள் கணிசமானளவு குறைக்கப்பட்டன. இன, மொழி, கலாச்சார ரீதியாக மேற்கு சஹாரா மக்களுக்கும் அயலவரான மொரோக்
இதழ் 27

Page 23
கோ, மொரிட்டானிய மக்களுக்கும் இடையில் அதிக வேறுபாடு கிடையாது. ஒரேயொரு முக்கிய வேறுபாடு 'காலனிய மனோபாவம்'. ஸ்பானிய காலனிய கலாச்சா ரத்தைப்பின்பற்றும் மேற்குசஹாராமக்கள் அதன்மூலம் தம்மை அயலவரிடம் இருந்து வேறுபடுத்திப் பார்க் கின்றனர்.
எரித்திரியர்களும் அதுபோன்று காலனியத் தொடர்ச்சியாக தனிநாடு கோரியவர்கள்தான். ஆபி ரிக்கக் கண்டத்தில் ஐரோப்பியரால் காலனியாதிக் கத்திற்கு உட்படுத்தப்படாத ஒரேயொரு நாடு எத்தி யோப்பியா. ஆனால் அதன் கடற்கரையோரப் பகுதி யான எரித்திரியா நீண்டகாலம் இத்தாலியின் கால னியாக இருந்தது. இத்தாலி விட்டுச் சென்ற பின்னர் எத்தியோப்பியாவினால் இணைக்கப்பட்டது. அங்கு வாழும் திக்ரிஞா, திக்ரே, அட்பார் மொழிகள் பேசும் மக்கள் எத்தியோப்பாவிலும் வாழ்கின்றனர். எத்தி யோப்பிய சக்கரவர்த்தி ஹைலே செலாசிக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட விடுதலைப் போராட்டம் 30 ஆண்டு கள் நீடித்தது. பிற்காலத்தில் மெங்கிஸ்டு தலை மையில் ஏற்பட்ட கம்யூனிச அரசாங்கம், பிரிவினை வாதிகளுக்கு எதிராக சோவியத் யூனியனுடன் போரிட் டும் வெல்லமுடியவில்லை. எரித்திரிய விடுதலை இயக் கமான ஈ.பி.எல். எவ், எண்பதுகளின் இறுதிப்பகுதியில் எதிரிப்படைகளை அழித்து எரித்திரியாவைவிடுதலை செய்தது. அஸ்மாரா விமானப்படைத் தளத்தின்மீது தாக்குதல்நடத்தி அங்குநிறுத்திவைக்கப்பட்டிருந்த 30 போர் விமானங்களை அழித்தமை ஒரு திருப்பு முனையாக அமைந்தது. எத்தியோப்பியாவில் இருந்த பிற விடுதலை இயக்கங்களுடன் சேர்ந்து போரா டியமை, மற்றும் சோவியத் யூனியனின் வீழ்ச்சி ஏற்படுத் தியதாக்கம் என்பன கைகூடிவரப்பெற்றதால் 1991இல் எரித்திரியாவின் பூரண விடுதலை சாத்தியமாகியது. புதிய எத்தியோப்பிய அரசாங்கம் ஐ. நா. தலைமை யிலான வாக்கெடுப்புக்குச் சம்மதிக்க எரித்திரிய சுதந்திரத்திற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்தது.
ஒரு தேசத்தில் பல்வேறு சக்திகள் போராடிக் கொண்டிருக்கும் குழப்பகரமான சூழலைப் பயன் படுத்தி, தனது பிரதேசத்தை மட்டும் பிரித்துசுதந்திர தேசமாக அறிவித்துக் கொண்ட உதாரணங்கள் வரலாற்றில் பலவுண்டு. நீண்ட காலம் அரசாங்கம் அமைக்க முடியாமல் அராஜகம் கோலோச்சிய சோமா லியாவில் இருந்து உதயமாகியது 'சோமாலிலாண்ட் என்கிறபதிய நாடு. அதுகூட பழையகாலனிய எல்லை களைக் கொண்டு அமைக்கப்பட்டமை தற்செயலா னதாக இருக்கலாம். முன்பு சோமாலியா மூன்று ஐரோப் பியகாலனியவாதிகளால்பங்கிடப்பட்டிருந்தது. இன்று சுதந்திர தனித்தேசமான ஜிபூத்தி பிரான்சினாலும், இந்துசமுத்திரப் பிரதேசமான சோமாலியா இத்தாலி யினாலும், செங்கடல்பகுதி சோமாலிலாண்ட் பிரித்தா னியாவினாலும் ஆளப்பட்டன.
1991இல் சோமாலிய சர்வாதிகாரி சியாட் பரேயின் வீழ்ச்சிக் காலகட்டத்தில் சுதந்திரப்பிரகடனம் செய்த சோமாலிலாண்ட், பிரிவினைக்கான போரில்பத்தாயிரம் மக்களையாவது பலிகொடுத்தது. இன்றுவரை சோமா லிலாண்டில்நிலையான ஆட்சி அமைந்ததற்கு அப்பிர
இதழ் 27

23
Kஅரசியல்
தேச மக்களதுஒற்றுமை முக்கிய காரணம், சோமாலி யாவின் பிறகுதிகளில் பல்வேறு சாதீய இயக்கங் களின் ஆயுதபாணிகள் அதிகாரப்போட்டியில் சண்டை யிட்டதுபோல சோமாலிலாண்டில் நடக்கவில்லை. 16 வருடங்களைக் கடந்தபோதும் சோமாலிலாண்டை உலகில் எந்தநாடும் அங்கீகரிக்கவில்லை. சர்வதேச நாடுகளின் அங்கீகாரம் பிற பிரிவுவாத அமைப்புக் களை ஊக்கப்படுத்தலாம் என ஆபிரிக்க ஒன்றியம் கருதுவதால் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் பின் நிற்கின்றன. அண்மையில் புஷ் நிர்வாகம் குறைந்தளவு தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளதுடன், சோமாலி லாண்டை அங்கீகரிக்கும் சாத்தியக் கூறுகள் நிலவு கின்றன. அதற்குக் காரணம் வேறு. அல்கைதா சோமா லிலாண்டைத் தனது புகலிடமாக மாற்றிவிடலாம் என்ற அச்சமும் அதனை முன்கூட்டியே தடுக்க நினைக்கும் சமயோசிதமும்தான் முக்கிய காரணம்.
சர்வதேசநாடுகளின்,நிறுவனங்களின் அங்கீகாரம் இருந்தாலும் தமக்கென ஒரு தேசத்தை அமைத்துக் கொள்வது 50 வருடங்களுக்கு மேலாகியும் பாலஸ் தீனர்களால் முடியாத காரியமாக உள்ளது. பாலஸ்தீ னம் என்ற தேசத்தை இதுவரை 108 நாடுகள் அங்கீக ரித்துள்ளன. அதேநேரம் இஸ்ரேலை34நாடுகள் அங்கீ கரிக்கவில்லை. 1948இலேயே அந்தப் பிரதேசத்தில் இஸ்ரேல், பாலஸ்தீனம் என்ற இரு தேசங்களை முன் மொழிந்ததன்மூலம் ஐ.நா. சபைகூட பாலஸ்தீனியர் களுக்கு உதவக் கடமைப்பட்டுள்ளது. இருப்பினும் யதார்த்த நிலைமை எப்படி இருக்கின்றது என்பதை இங்கே கூறத்தேவையில்லை.
மத்திய கிழக்கில் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை ஆட்சி செய்த ஒட்டோமான் துருக்கியர்கள் பலவீனப் பட்ட காலத்தில் பிரித்தானியாவும் பிரான்சும் தங்க ளுக்குள் பங்குபோட்டுக் கொண்டன. இந்த ஐரோப்பிய பரோபகாரிகள் முதலில் அரேபியருக்கு உதவி செய்ய வந்ததாகக் கூறினர். துருக்கியருக்கெதிராகப் போராட ஆயுதங்கள் வழங்கினர்.போரில் துருக்கி தோற்கடிக் கப்பட்ட பின்னர் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்ற நினைத்த அரேபியரை ஒரம் கட்டிவிட்டு பிரித்தானி யாவும் பிரான்சும் மத்தியகிழக்கு முழுவதையும் தமது காலனியாக்கிக் கொண்டன. தாம் விரும்பியபடி தனித் தனி நிர்வாக அலகுகளாகப் பிரித்துக் கொண்டன. காலனியாதிக்கம் முடிந்த காலத்தில் இந்த அலகுகள் தனித்தனி நாடுகளாக சுதந்திரம் பெற்றன. இவ்வாறு தான் அரபுமொழி பேசும் மக்களுக்கு 18 நாடுகள் கிடைத்தன. இவை அந்த மக்கள் விரும்பிக் கேட்ட தல்ல. காலனிய எஜமானர்கள் அந்நாடுகளைத் தமது சொந்தக் காணிநிலம் போன்று நடத்தினர். அல்ஜீரி யாவைத் தனது மாகாணம் என்று உரிமை கோரிய பிரான்ஸ், சிரியாவில் இருந்து லெபனானைப்பிரித்தது. தன்னுடன் ஒத்துழைத்த அரபுத் தலைவர்களை மன்னர்களாக்குவதற்காக ஜோர்தான், ஈராக் என்ற புதிய தேசங்களை உருவாக்கியது பிரித்தானியா. அதிலும் எண்ணை வளம் மிக்க குவைத் ஈராக்கில் இருந்து தனியாக பிரிக்கப்பட்டது. அதேபோன்றே வளைகுடா எண்ணையை மட்டும் கருத்தில் கொண்டு பாஹற்ரைன், கட்டார், எமிரேட்கள் போன்ற அளவிற்
உயிர்நிழல் 0 ஒக்டோபர் - டிசம்பர் 2007

Page 24
அரசியல்)
சிறிய நாடுகள் உருவாக்கப்பட்டன.
பிரித்தானியாவின் ஐரோப்பிய காலனி என்று அழைக்கப்படும் சைப்பிரஸ் இன்று இனப்பிரச்சினை யால் இரண்டு துண்டுகளாகியுள்ளது. 1983இல் தன்னிச்சையாக சுதந்திரப்பிரகடனம் செய்த வடக்கு சைப்பிரஸ் துருக்கியக் குடியரசு, துருக்கியைத் தவிர வேறெந்த நாட்டாலும் அங்கீகரிக்கப்படவில்லை. மத்திய தரைக் கடலில் இருக்கும் சைப்பிரஸ் தீவில் 78வீதம் கிரேக்கர்களும் 18வீதம் துருக்கியரும் வாழ்ந்து
வந்தனர். ஒட்டோமான் ஆட்சியில் இருந்து விடுதலை பெற்ற கிறீசுடன் சைப்பிரஸ் கிரேக்கர்கள் இணைய விரும்பினர். அதற்கு ஆங்கிலேயர்கள் சம்மதிக்க வில்லை. இதனால்கிரேக்கத்தேசியவாதிகள்பிரிட்டிஷ் காலனியாட்சிக்கெதிராக ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தனர். பிரித்தாளும் சூட்சியில் வல்லவர் களான ஆங்கிலேயர்கள் துருக்கியரை பொலிஸ் படையில் சேர்த்தனர். இதனால் கிரேக்க கிளர்ச்சி யாளர்களால் துருக்கிய பொலிஸார் கொல்லப்படும் போதெல்லாம் இனக்கலவரம் மூண்டது. சைப்பிரஸ் சுதந்திரம் பெற்ற பின்பும் ஏதோ ஒரு காரணத்தைச் சாக்காக வைத்து கலவரம் வெடிப்பது. அடிக்கடி நடந்தது. சுதந்திரத்திற்குப் பின்னரான கிரேக்கப் பெரும்பான்மை அரசாங்கம் துருக்கிய சிறுபான்மைக்கு வாக்களித்தபடி அதிகாரப் பரவலாக்கல் செய்யாத தைக் காரணம் காட்டி மிதவாதத்தலைவர்கள் பதவி
உயிர்நிழல் 0 ஒக்டோபர் - டிசம்பர் 2007
 

விலக, ஆயுதபாணி தீவிரவாதிகள் துருக்கியிடம் போர்ப் பயிற்சியையும் ஆயுதங்களையும் பெற்றுக் கொண்டதானது நிலைமை மோசமடைவதைக் காட்டியது. இராணுவ மோதல்கள் தீவிரமடையவும் புதிதாகப் பொறுப்பேற்ற அரசாங்கம் கிறிசுடன் சேரும் நோக்கத்தை மீண்டும் பகிரங்கப்படுத்தவும் நிலை மையைச்சாதகமாக்கிக்கொண்டு துருக்கி இராணுவம் படையெடுத்தது. இன்றுவரை வடக்கு சைப்பிரஸில் துருக்கி இராணுவம் நிலைகொண்டுள்ளது. தற்போது
சைப்பிரஸ் ஐரோப்பிய யூனியனில் இணைந்து கொண்டதால் இரு இனங்களும் ஒன்றுபடுவதற்கான சாத்தியக்கூறு உள்ளது.
பகுதி 11
ஐரோப்பிய கண்டத்தைத் தலைகீழாக மாற்றிய லிபரல் புரட்சி தேசியவாத அரசியலின் உருவாக் கத்திற்குக் காரணமாக அமைந்தபோது அதுமுதலா ளித்துவப் பொருளாதாரத்தை தழுவிக் கொண்டது இயல்பானதே. ஒரு நாட்டில் மன்னன் இட்டதே சட்டம் என்ற நிலை மாறி அரசு என்ற நிலையான ஸ்தாப னத்தை உருவாக்குவதேபூர்சுவாக்களின் (மத்தியதர வர்க்கத்தின்) நோக்கமாக இருந்தது. எல்லோருக்கும் பொதுவான சட்டம், அரசமைப்பதற்கான யாப்பு போன்ற வற்றின் அவசியம் அப்போது உணரப்பட்டது. மேற்கு
இதழ் 27

Page 25
ஐரோப்பாவில் நெப்போலியன் சட்டம் (Code Napolean) பிற்காலத்தில் பரந்த அரசியலமைப்புச் சட்ட மாகியது. (இதைத்தான் ஒல்லாந்தர் இலங்கையில் அறிமுகப்படுத்த அது அங்கே டச்சுச் சட்டம் என்றழைக் கப்படுகின்றது) இங்கிலாந்தில் உரிமைகள் சாசனம் (Bill of Rights) மத்தியதர வர்க்கத்தால் பொதுச் சட்டமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. தொழிற் புரட்சியின் விளைவாக ஏற்பட்ட தொழிற்சாலைகள் விநியோகத்திற்காக ரயில் பாதைகள், நெடுஞ் சாலைகள் மற்றும் நிலையான நுகர்வோர் வட்டம் போன்றவற்றை வேண்டி நின்றன. ஒரு தேசிய அரசு மட்டுமே இத்தேவைகளைச் சாத்தியமாக்க முடியும்.
தேசியவாதம் குறித்த பிரச்சினை மார்க்சிய வாதிகளையும் விட்டுவைக்கவில்லை. "பாட்டாளி களுக்குத் தேசம் கிடையாது" என்று கூறிய கார்ல் மார்க்ஸ் கூட இங்கிலாந்தின் முதலாவது காலனியான அயர்லாந்து பிரிந்ததை வரவேற்றார். "ஒடுக்கப்படும் தேசமொன்றின்பிரிந்துபோகும் உரிமைக்கான போராட் டத்தை ஒடுக்குகின்ற தேசத்தைச் சேர்ந்த சோஷ லிஸ்ட் புறக்கணித்தால் அவன் சோஷலிஸ்ட் அல்ல" என்றார் லெனின். 1917இல் போல்ஷ்விக் புரட்சி வெற்றி பெற்றதும் பின்லாந்துக்கு ரஷ்யாவிடம் இருந்து விடுதலை கிடைத்தது. இருப்பினும் கத்தோலிக்க தேசியவாத போலந்தை விட்டுவிடும்படி ஸ்டாலின் கூறியதை லெனின் ஏற்கவில்லை. போலந்துமக்களின் ஆதரவு கிடைக்காத செம்படை அவமானத்துடன் திரும்பியது. பால்டிக் கடலோரக் குடியரசுகள் மற்றும் ஆர்மேனியா ஆகியநாடுகளில் ஏற்கனவே தேசியவாத சக்திகள் பலமாக இருந்தன. இந்தப் பாரம்பரியம் 70 ஆண்டுகளுக்குப்பிறகும் சோவியத் யூனியனின் உடை விற்குக் காரணமாக இருந்தது.
ஜார் காலத்து ரஷ்யாவில் துருக்கி இனமக்கள் வாழ்ந்த பிரதேசங்கள் மதத் தலைவர்களின் பிடியில் இருந்ததால் அங்கே தேசியவாதக் கருத்துகள் எட்டியும் பார்க்கவில்லை. அஸர்பைஜானில் போல்ஷ் விக்குகள் வர்க்கப் புரட்சிக்கு அறைகூவல் விடுத்த போது அதனை அம்மக்கள் 'ஜிகாத்' என்று புரிந்து கொண்டார்கள். இன்று ஆப்கானிஸ்தான் இருக்கும் நிலையில் அன்றிருந்த மத்திய ஆசியா, மதவாதிகளை 'கொள்ளைக்காரர்கள்' எனப் பட்டம் சூட்டி விரட்டி யடித்த பின்புதான் அபிவிருத்தியடைந்தது. சோவியத் யூனியனில் பல்வேறு தேசிய அரசுகளாகப் பிரிக்கும் கடமையை ஏற்றிருந்த ஸ்டாலின் வரைந்த எல்லை களின்படிதான்'ஸ்தான் என்றுமுடியும் மத்திய ஆசியக் குடியரசுகள் உருவாகின. அந்தப் புதிய தேசங்கள் அங்கே வாழ்ந்த மக்கள் பேசிய மொழியின் பெயரில் உருவானபோதும், குறிப்பிட்ட நாட்டினுள் பிறமொழி பேசும் அயலவரும் அடங்கினர். இது வேண்டுமென்றே முன்யோசனையுடன் எடுக்கப்பட்ட நடவடிக்கை. ஒரு குறிப்பிட்ட இனம் பெரும்பான்மையாக ஆதிக்கம் செலுத்துவதை தடுக்கும் நோக்கில்நிறைவேற்றப்பட்ட திட்டம், இன்றைய இனப் பிரச்சினைகளுக்குக் காரண மாகவுள்ளது. இருப்பினும் விரும்பியோ விரும்பாமலோ பிற இனங்களுடன் நட்புறவை பேணும் நிர்ப்பந்தம் அங்கே காணப்படுகின்றது.
இதழ் 27
2

Xஅரசியல் مح۔
சோவியத் யூனியனின் 15 குடியரசுகளும் வரலாற்று தொடர்ச்சியாகவோ அல்லது குறிப்பிட்ட பிரதேசத்தில் பெரும்பான்மையாக உள்ள இனத்தின் பெயரிலோ அமைக்கப்பட்டிருந்தாலும், அந்தக் குடியரசுக் குள்ளேயே பல சிறுபான்மை இனங்கள் வாழ்ந்து வந்தனர். ரஷ்ய சோசலிசக் குடியரசில் மட்டும் நூற் றுக்குக் குறையாத மொழிகள் பேசும் மக்கள் வாழ் கின்றனர். கணிசமானளவு தொகையுள்ள வளர்ச்சி யடைந்த மொழிச் சிறுபான்மையினருக்கென தன் னாட்சிப் பிரதேசங்கள் அமைக்கப்பட்டன. சோவியத் அரசமைப்புச் சட்டத்தின்படி 15 குடியரசுகளுக்கும் பிரிந்து போகும் உரிமை இருந்ததைப் பயன்படுத்தி, 1991இல் சோவியத் யூனியன் 15 துண்டுகளாக உடைந்தது. ஆனால் தன்னாட்சிப் பிரதேசங்களால் அவ்வாறு செய்யமுடியவில்லை. விளைவு பேரழிவைத் தந்த முடிவுறாத யுத்தங்கள். இவற்றில் குறிப்பிடத் தக்கது, ரஷ்யாவிலிருந்து பிரிய விரும்பிய செச்னி யாவின் யுத்தம். இரண்டுசெச்னிய போர்களுக்குப்பின், சில முன்னாள் கிளர்ச்சித் தலைவர்கள், ரஷ்ய அரசுடன் சமரசம் செய்துகொண்டு சில கூடுதல் சலுகைகளுடன் மாநில ஆட்சியைப் பொறுப்பேற்றனர். மொஸ்கோவிற்கு அடிபணிய மறுத்த ஆயுதபாணிகள் தொடர்ந்து வேட்டையாடப்பட்டனர்.
புதிதாகச் சுதந்திரம்பெற்ற முன்னாள் சோவியத் குடியரசுகளான ஜோர்ஜியாவிலும் மோல்டோ வியாவிலும் கதை வேறுவிதமாக இருந்தது. ஜோர்ஜி யாவின் ரஷ்ய எல்லைப்புறமாக அப்காஸியர், ஒசாத்தியர் என்ற இருவேற்றுமொழிபேசும் இனமக்கள் வாழ்கின்றனர். சோவியத் காலத்தில் இவர்களுக்கு வழங்கப்பட்ட தன்னாட்சிப் பிரதேச அலகு புதிய ஜோர்ஜிய அரசாங்கத்தால் ரத்துச் செய்யப்பட்டது. மேலும் ஆட்சியில் இருந்த ஜோர்ஜிய பேரினவாதிகள் தமது குடியரசில் இருக்கும் மொழிச் சிறுபான்மையினர் ஜோர்ஜிய மொழியை உத்தியோகபூர்வமான மொழி யாக ஏற்கவேண்டுமெனக் கட்டாயப்படுத்தினர். இதன் எதிரொலியாக அப்காஸியர், ஒசேத்தியர் மத்தியிலும் தேசியவாத அமைப்புகள் தோன்றின. 1992இல் இனப் பிரச்சினை ஆயுதப் போராட்டமாகியது. கடுந்தாக் குதல்களைச் சமாளிக்க முடியாத ஜோர்ஜியப் படை கள் தோற்றுப் பின்வாங்கி ஒட, அப்காஸியா, தெற்கு ஒசேத்தியா ஆகிய இரு சுதந்திரதேசங்கள்பிரகடனப் படுத்தப்பட்டன. தொடர்ந்து அங்கே காலம்காலமாக வாழ்ந்துவந்த ஜோர்ஜிய இனமக்கள் இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையாக விரட்டியடிக்கப்பட்டார்கள். அப்காஸியா, தெற்கு ஒசேத்தியாநாடுகளின் சுதந்திரப் பிரகடனத்தை இதுவரையாரும் அங்கீகரிக்கவில்லை. பின்புலத்தில் இருந்து கொண்டு இவைகளை ஆதரிக்கும் ரஷ்யாகூட அங்கீகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சந்தேகத்திற்கிடமில்லாமல் இவ்விரு குட்டிநாடுகளும் பொருளாதாரரீதியாக ரஷ்யாவில் தங்கியுள்ளன.
ரொமானியாவிற்கும் உக்ரேனுக்கும் நடுவில் அமைந்துள்ளது. முன்னாள் குடியரசுகளில் ஒன்றான மோல்டோவியா, 1991இல் சோவியத் உடைவின் பின் சுதந்திரம் பெற்ற மோல்டோவியாவில் பெரும்பான்மை
உயிர்நிழல் 0 ஒக்டோபர் - டிசம்பர் 2007

Page 26
அரசியல்)
யினமாக ரொமேனிய மொழிபேசுவோரும், உக்ரெயின் எல்லையோரம் ரஷ்ய மொழி பேசும் சிறுபான்மையின ரும் வாழ்ந்துவருகின்றனர். ரஷ்ய மொழிச் சிறுபான்மை யினர் வாழும் பகுதியை டினியேஸ்டர் நதி நெடுக்கு வெட்டுமுகமாக பிரிப்பதால், அந்தப்பிரதேசம் திரான்ஸ் டினியேஸ்டர் அல்லது திரான்ஸ்திஸ்திரியா என அழைக்கப்படுகின்றது. சோவியத் காலத்தில் பெரும் பாலான தொழிற்சாலைகள் அந்தப்பிரதேசத்தில்தான் அமைக்கப்பட்டன. மோல்டோவியாவின் சுதந்திரப் பிரகடனத்திற்குப் பிறகு ரொமேனிய பெரும்பான்மை அரசுக்கெதிராக ரஷ்ய சிறுபான்மை ஆயுதப் போராட் டத்தில் இறங்கியது. அவர்களுக்குரஷ்யராணுவத்தின் உதவி கிடைத்தது. மிக விரைவிலேயே மோல்டோ வியப்படைகளை தோற்கடித்து, ரஷ்ய ஆயுதக் குழுக் கள் திரான்ஸ்திரியா பகுதி முழுவதையும் விடுவித்து சுதந்திரப்பிரகடனம் செய்தனர். தற்போது தமக்கெனப் பாராளுமன்றம், பொலிஸ், இராணுவம், வங்கி,நாணயம் என்று ஒரு தேசத்திற்குத் தேவையான எல்லா அம்சங்க ளுடன்கடந்த 15 வருடங்களாக சுதந்திரநாடாக இருக் கும் திரான்ஸ்திரியாவை இது வரை உலகில் எந்த நாடும் அங்கீகரிக்கவில்லை. முன்னாள் சோவியத் யூனியனின் சின்னங்கள், கொடிகள் மற்றும் லெனின் சிலைகள் என்பனவற்றை இப்போதும் அங்கே பார்க் கலாம். இருப்பினும் அந்த நாட்டை ஆள்வது கம்யூ னிஸ்ட்டுகள் அல்ல. தேசிய முதலாளித்துவ பொருளா தாரத்தைக் கொண்ட ஒரு கட்சி (அல்லது தனிநபர்) சர்வாதிகாரமே அங்கே நிலவுகிறது.
சர்வதேச நாடுகளோ அல்லது நிறுவனங்களோ இத்தகைய புதிய சுதந்திரதேசங்களை அங்கீகரிக்க மறந்து அநாதைகளாக விட்டுவிடும் வேளையில், மறு பக்கத்தில் வேறு சில தேசங்களை அங்கீகரிப்பதில் பின் நிற்கவில்லை. பல தடவைகளில் இந்த இரட்டை வேடம் அம்பலப்படும்போது எழும் சர்ச்சைகளால் இவர்களது நம்பகத்தன்மை, நேர்மை, நன்னடத்தை என்பன கேள்விக்குள்ளாக்கப்படுகின்றன. பல தசாப்தங்களாக சுதந்திரம் கோரிப் போராடும் பாஸ்க் (ஸ்பெயின்), கோர்சிகா (பிரான்ஸ்) மக்களின் பிரச்சி னைகளைக் கவனத்தில் எடுக்காத ஐரோப்பிய ஒன்றியம் யூகோஸ்லாவியாவில் இருந்து பிரிந்த நாடு களை ஒவ்வொன்றாக அங்கீகரித்தது. 20ம் நூற்றா ண்டின் தொடக்கத்தில் யூகோஸ்லாவியா என்ற நாட்டை உருவாக்கிய மேற்கைரோப்பிய நாடுகள், பின்னர் அதைத் துண்டு துண்டாக உடைத்ததற்கு அவர்களது தன்னலம் மட்டுமே காரணம். கம்யூனிச அரசாங்கங்களின் வீழ்ச்சியைத் தொடர்ந்து கிழக்கை ரோப்பிய நாடுகள் துரித வேகத்தில் மேற்கைரோப் பாவினால் காலனித்துவப்படுத்தப்பட்டது. பெரிய வர்த்தகக் கழகங்கள் புதிய சந்தைகளையும் செலவு குறைந்த மனித வளத்தையும் கண்டுபிடித்தன. முன்பு ஹிட்லர் ஆயுதபலம் கொண்டு அடையவிரும்பியதைத் தற்போது ஐரோப்பிய யூனியன் சமாதான வழியிலேயே பெற்றுக் கொண்டது.
இதன் பின்னணியிலேயே எதிர்பார்க்கப்படும் கொசோவாவின் சுதந்திரத்தையும் நோக்க வேண்டும். விமானக் குண்டு வீச்சுகளின் உதவியுடன் சேர்பியா
உயிர்நிழல் 0 ஒக்டோபர் - டிசம்பர் 2007

வின் கொசொவோ மாகாணத்தைக் கைப்பற்றிய நேட் டோபடையணிகள் அதனைப்பூரண ஐரோப்பிய காலனி யாக மாற்றிக் காட்டின. அதேநேரம் அல்பேனிய தேசிய வாதிகள் பிற இனங்களை அடித்து விரட்டி இனச்சுத் திகரிப்பு செய்ததை கண்டும் காணா ததுபோல் இருந்தன. இதனால் கொசோவோவிற்குப் பூரண சுதந்திரம் வழங்கப்பட்டால் அதன் ஆட்சியாளர்கள் எல்லா வற்றிற்கும் மேற்கைரோப்பிய காலனியவாதிகளில் தங்கியிருக்க வேண்டி இருக்கும். இது எதிர்காலத்தில் இஸ்ரேல் போன்று ஒரு பிராந்திய ரவுடியை உருவாக்க வழி சமைக்கலாம். இது ஒரு புறமிருக்க கொசோவோ விற்குச் சுதந்திரம் வழங்கப்பட்டால் அப்காஸியா, தெற்கு ஒசேத்தியா, திரான்ஸ்திரியா போன்றவற்றின் சுதந்திரத்தைத்தான் அங்கீகரிக்க வேண்டி இருக் கும் என்று ரஷ்யா பயமுறுத்தி வருகின்றது. வரலாறு நெடுகிலும் தம்மீது ஆதிக்கம் செலுத்தும் வல்லரசு பலவீனப்படும் வேளையிலேயேகுட்டித்தேசங்கள்விடுதலையடைந்து வந்தன அல்லது இன்னொரு வல்லரசின் பக்கபலத்துடன் தமது சுதந்திரத்தை காப் பாற்றி வந்துள்ளன. இருப்பினும் 20ம் நூற்றாண்டு பல்வேறு தேசிய இனங்களின் எழுச்சியைக் கண்டது. இதற்குக் காரணம் உலகெங்கும் பரவிய சித்தாந்தப் புரட்சி.
ஐரோப்பாவில் தோன்றிய புரட்சித் தீகண்டங்கள் கடந்து பரவியது. முரண்நகையாக ஐரோப்பியக் கால னியவாதிகளும் அதற்கு உதவியுள்ளனர். அவர்கள் காலனித்துவப்படுத்திய நாடுகளில் ஒரு மத்தியதர வர்க்கத்தை உருவாக்கி அவர்களுக்கு ஐரோப்பியக் கல்வியைப் புகட்டப்போக, அந்தக் கல்வியினுாடாக தேசியவாதத்தை அறிந்துகொண்ட உள்ளுர்த்தலை வர்கள் அதைக் கொண்டே காலனியவாதிகளை விரட் டியடித்தமை வரலாறு. தற்போது அப்படி விடுதலைய டைந்த தேசங்களில் வாழும் பிற சிறுபான்மையி னங்கள் அதே தேசியவாத சித்தாந்தத்தை அடிப்படை யாக வைத்துத்தமது உரிமைகளைக் கோருகின்றனர். சக மனிதர்கள் சம உரிமை கோருவது போல இனங் களும் சம அந்தஸ்து கோருவது வியப்பில்லை.
அதே நேரம்"ஒன்றுபட்டால் நன்மை எமக்கு, பிரிந் தால் இலாபம் எதிரிக்கு" என்ற பொன்மொழியை மறுப்ப தற்கில்லை. இதயசுத்தியுடன் தேசிய இனப் பிரச்சி னைகளைத் தீர்த்து வைப்பதுதான் அப்பிரச்சினை எழுவதைத் தடுக்கும் ஒரே வழி.
சமாதானத்தை பிறருக்கும் வழங்குவதன்மூலம் தான்தானும் சமாதானமாக வாழ முடியும்.
* * 安 壳
.02.2008 அன்று கொசோவா சுதந்திரமடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்
சேர்பியாவில் பெரும் ஆர்ப்பாட்
w
நடைபெற்று வருகி இச் சுதந்திரப் பிரகடனத்தை ரஷ்யா
இதழ் 27

Page 27
கண்ணாடிகளில் தன்னை அலங்கரித்துக் கொண்டு பிரகாசமாகிறது
மழைக்கால சூரிய
மழைத்துளிகளை இலைகளில் உருட்டி விளையாடிய நினைவுகளின் எச்சமாய் சன்னல் கம்பிகளில் பட்டுத் தெறிக்கும்
சின்னத்துளிகளை எட்டிப்பார்க்க சிறகுகள் விரிக்கும் சிட்டுக்குருவிகள்.
புது:
காங்கீரிட் காடுகளின் மின்சார கம்பிகளில் இப் 3. அகதிகளாய் கூ
காத்திருக்கின்றன் எப்போதாவது il fo இந்த மண்ணிலும் 2து மரம் நடப்படலாம் என்ற நப்பாசையுடன் o: File:Hi!
}}|]] மறர் |
அச்
அப் உத் ஒ 齿圆 f
 
 

புதியமாதவி மும்பை)
கு குழியிலிருந்து
போதெல்லாம் களே இல்லாத வாழ்க்கை களுக்குப் பழகிப்போனது எத்தில் மிதந்து கொண்டே
டு உறங்கி வித்து ங்கிக்கொண்டிருக்கும் கள் தொட்டில்கள்
து போகுமொ கிளையில் கட்டுகட்ட
சமாக இருக்கிறது கள் ஆதித்தாயே போதாவது ர்ந்த இலைகளையும் ந்த குச்சிகளையும்
நத்ரீ விந்தி
ஸ்லிக்கொடுப்பாயா கள் சிட்டுக்குருவிகளுக்கு
உயிர்நிழல் ஒக்டோபர் டிசம்பர் 2007

Page 28
உயிர்நிழல் 0 ஒக்டோபர்-டிசம்பர் 2007
 
 


Page 29
Dலேசியாவில் இன்று தமிழர்கள் பல்வேறு விதமான சுரண்டல்களுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் உட்பட்டுவருவதனை ஆட்சேபித்து ஆர்ப்பாட்டங் களில் ஈடுபட்டுள்ளதை அண்மைக்கால செய்திகள் மூலமாக அறியக் கூடியதாக உள்ளது. இந்து உரிமை கள் செயற்பாட்டுக்குழு (Hindraf) தலைமையின் கீழ் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து, ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட பொதுமக்கள்மீது பொலிஸார் தடியடிகளை நடாத்தியதுடன் கண்ணிர்ப் புகையையும் பிரயோகித்துள்ளனர். சிலர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவர்களுக்கு எதிரான கொலை முயற்சி வழக்கு தொடரப்பட்டு வருகின்றது.
இந்த ஆர்ப்பாட்டங்களையொட்டி எழுந்த தாக்குதல்கள் குறித்து மலேசியத் தமிழர்களை பிரதி நிதித்துவப்படுத்துவதாகக் கூறும் மலேசிய இந்தியன் காங்கிரஸின் தலைவர் டத்தோசாமிவேலு அவர்களின் பார்வை இவ்வாறு அமைந்திருக்கின்றது.
"மலேசியாவின் இந்திய வம்சாவளியினர் (மலே சியத்தமிழர் என்ற பதத்தினையே பிரயோகிக்க விரும்பு கின்றேன்-கட்டுரை ஆர்) புறக்கணிக்கப்படுவதில்லை. இந்தியாவில் செயற்பட்டு வரும் அமைப்பும் மலேசிய எதிர்க்கட்சிகளும்தான் இந்துக்கள் போராட்டம் நடத்துவதற்கு பின்னணியில் உள்ளனர்.
இந்துக்களாக போராட்டம் நடாத்திவரும் ஹிண்ட்ராஃப் அமைப்பு மலேசியாவில் உள்ள இந்துக் களுக்குக் கெட்ட பெயரைத்தான் சம்பாதித்துக் கொடுத்துள்ளது. நவம்பர் 25ம் திகதி நடந்த ஆர்ப் பாட்டத்தில் பல்லாயிரம் பேர் கலந்து இருக்கலாம். ஒவ்வொருவருக்கும்பத்து இலட்சம் அமெரிக்க டொலர் கள் தருவதாகக் கூறினால், கூட்டத்தைக் கூட்டுவது மிகவும் எளிது. அன்றும் அதுதான் நடந்தது. ஒட்டு மொத்த இந்துக்களும் கொந்தளிப்பில் உள்ளனர் என்று கூறிவிட முடியாது. ஒரு சிறிய கூட்டம்தான் போராட் டத்தில் குதித்துள்ளது. ஹிண்ட்ரா.ப் அமைப்பை நடத்துவது சட்டத்தரணிகள். அவர்கள் தங்களை ஒரு அரசாகநினைத்துக்கொண்டுவிட்டனர். மலேசியாவில் விரைவில்நடக்க உள்ள தேர்தலில் இந்தப்போராட்டம் பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தி விடாது. உண் மையைநாங்கள் எடுத்துக் கூறுவோம். மலேசியாவில் பல இன மக்கள் வசித்து வந்தாலும் அவர்களிடம் கருத்து வேறுபாடு கிடையாது. ஒற்றுமையே எங்கள் வலிமை"
இவ்வாறானதோர் சூழலில் தேசிய நலன்களுக்கு அச்சுறுத்தலாக மலேசியத் தமிழர்கள் செயற்பட்டால் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படுமென மலேசியப் பிரதமர் அப்துல்லா அஹற்முத் பதாவி எச்சரிக்கை செய்துள் ளதுடன் மலேசியத் தமிழர்களின் நடமாட்டத்தை கண்காணிக்குமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தி யுமுள்ளார்.
அவ்வகையில் இவ்வார்ப்பாட்டமானது சர்வதேச கணிப்பைப் பெற்றுள்ள இன்றைய நாளில், அதனைப் பல தீவிரவாத இயக்கங்களுடன் இணைத்து, போராட்டங்களைசிதைக்கின்றமுயற்சியிலும் அதனை கொச்சைப்படுத்த முனையும் முயற்சிகளிலும் பலர்
இதழ் 27

ggsagdui
ஈடுபட்டு வருவதை அவதானிக்கலாம். இப்பின்புலத்தில் இவ்வார்ப்பாட்டங்கள் தற்செயலாக இடம்பெற்ற ஒன்றா, அந்த ஆர்ப்பாட்டத்தின் பின்னணி என்ன என்பன குறித்து நோக்கவேண்டியது காலத்தின் தேவையாகவுள்ளது. இவ்விடயம் குறித்து சிந்திக் கின்றபோது மலேசியத்தமிழரின் சமூக, பொருளாதார, பண்பாடு குறித்த தெளிவுணர்வு அவசியமாகின்றது.
மலேசியாவில் இந்தியர்களின் வருகையானது கிறிஸ்துவிற்கு முன்னரே இடம்பெற்று வந்திருப்பினும் அவை ஒரு சமூக குழுமத் தன்மையை ஏற்படுத்தாது இருப்பதை அவதானிக்கலாம்.
இவ்வகையில் நோக்குகின்றபோது பிரித்தானிய காலனித்துவ ஆட்சிக்காலப்பகுதியில்தான் இம் மக்கள் பெருந்தொகையினராக மலேசியநாட்டிற்குள் கொண்டுவரப்பட்டனர்.
19ம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் தொழில் புரட்சியுடன் உருவாகிய பிரித்தானிய காலனித்துவம் தமது முதலாளித்துவ வயிற்றுப் பசிக்கு உகந்த வகையில் பொருளாதார அரசியல் கொள்கைகளை உருவாக்கிக் கொண்டது.
எந்த பழைய உலகத்திலிருந்து அது தன்னை படைத்துக் கொண்டதோ, அந்த பழைய உலகத்தை, தனதுதேச எல்லைகளுக்கு அப்பால்கூட வைத்திருக்க அது விரும்பவில்லை. எல்லாத்தேசங்களையும் தனது காலனிய, அரசியல் ஆதிக்க முறைக்கு கொண்டு வர ஆக்கிரமிப்புயுத்தத்தில் இறங்கியது.நவீன துப்பாக்கி களையும், பீரங்கிகளையும் பயன்படுத்தியது. 18ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தனது அரசியல் இராணுவ கட்டுப்பாட்டுக்குள் இந்தியாவைக் கொண்டு வந்து சேர்த்தது. "இந்திய மக்கள் தமது பழைய உலகத்தை இழந்தனர். சுயதேவைபொருளாதாரத்தை மிக எளிமையான கருவிகளைக் கொண்டே உற்பத்திச் செயலில் ஈடுபட்டிருந்த இந்தியக் கிராமங்கள், சுயேச் சையாக இயங்கிக் கொண்டிருந்தன. நீர்ப்பாசனம் அரசின் நடவடிக்கையாக இருந்ததனால் ஒவ்வொரு கிராமங்களும் தமது பொருளுற்பத்திக்கு அரசை சார்ந்தே இருக்க வேண்டி இருந்தது. இவ்விதத்தில் அரசு சமூக வாழ்க்கையில் முக்கியத்துவம் பெற்றதாக இருந்தது. இதனை காலனித்துவ அரசின் வருகை உடைத்தெறிந்தது. விவசாயம் சீர்குலைக்கப்பட்டு விவசாயிகள் நடுத்தெருவிற்கு வர, பிரிட்டன் காரண மாய் இருந்தது?
இவ்வாறாக தென்னிந்தியத் தமிழ்க் கிராம மக்கள் வறுமைக்கும் சாதிய அடக்குமுறைக்கும் உட்பட்டு மிகக் கொடூரமான வாழ்க்கையை அனுபவித்தனர். ஒரு புறம்நிலப்பிரபுத்துவபொருளாதார சுரண்டலும் மறுபுறம் சாதிய அடக்குமுறைகளும் இம்மக்களின் வாழ்க் கையை வேதனைக்குள்ளாக்கியது. இச்சூழலில்தான் தொழில் புரட்சியும் பிரித்தானிய காலனித்துவ ஆதிக்கமும் இம்மக்களின் வாழ்க்கையில் இன்னொரு அத்தியாயத்தை உருவாக்கியது.
வறுமை, பஞ்சம், பசி இம்மக்களைப் பெரிதும் வாட்டியது. அவர்களை ரொட்டித்துண்டுகளுக்கு முன் மண்டியிட வைத்தது. அவர்கள் பிறந்த மண்ணைத் துறந்து புது வாழ்வு தேடி வேறுநாடுகளுக்குச் செல்ல
உயிர்நிழல் 0 ஒக்டோபர் - டிசம்பர் 2007

Page 30
அரசியல்)
வேண்டிய நிர்ப்பந்தத்தை உருவாக்கியது. தமது உழைப்புச் சக்தியைகுறைந்த விலையில் விற்பதற்குத் தயாரானார்கள்.
பிரித்தானியர்கள் தமது காலனித்துவ ஆதிக்கத் திற்கு உட்பட்ட நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்ட பெருந்தோட்டப் பயிர்ச் செய்கையை மேற்கொள் வதற்கு தேவையான ஒப்பந்தக் கூலிகளை அழைத்துச் செல்வதற்குப் பல்வேறு போலி விளம்பரங்களைப் பிரச்சாரப்படுத்தினர். தென்னிந்தியாவில் இருந்து இலங்கையின் மலையகத்திற்கு அழைத்துவருகின்ற போது "தேங்காயும் மாசியும் தேயிலைக்கடியில் இருக்கின்றது' எனப் பிரச்சாரம் செய்யப்பட்டது போன்று, அவர்களை மலேசியாவிற்கு அழைத்துச் சென்றபோது "காகத்திற்கு சீனி ஊட்டுவதற்காகவே அழைத்துச்செல்வதாக பிரச்சாரங்கள் செய்யப்பட்டன. இவ்வாறு ஒப்பந்தப் பிணைப்பு செய்து கொண்டு தென்னிந்தியாவிலிருந்து மலேசியாவிற்குக் கொண்டு வரப்பட்ட தொழிலாளர்களும் அவர்களோடு இணைந்து வந்த ஏனைய வர்க்கத்தினரும் 'மலேசியத் தமிழர் என்று அழைக்கப்படுகின்றனர்.
இது இவ்வாறிருக்க ஆரம்ப காலம் தொடக்கம் இறப்பர்த்தோட்டங்களிலும் ரயில் பாதைகள் அமைக் கும் தொழில்களிலும் துரைமார்களாக (Superindents) இலங்கையின் யாழ்ப்பாணத் தமிழர்கள் கடமையாற்றி வந்துள்ளனர். யாழ்ப்பாணத் தமிழர்களில் சிலர் காலத்திற்குக் காலம் மலேசியாவிற்குப்புலம்பெயர்ந்து சென்றுள்ளனர். கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கையில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழலும் இப் புலப்பெயர்வை அதிகரித்துள்ளது. அவர்களில் பலர் மலேசிய பிரஜாவுரிமையும் பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கதொன்றாகும். யாழ்ப்பாணகூட்டுறவுச் சங்கம்' என்ற ஒரு அமைப்பும் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வமைப்பானது மலேசியாவில் வாழ்ந்து வருகின்ற யாழ்ப்பாணத்தமிழரைப்பிரதிநிதித்துவபடுத்துகின்றது என்பதை விட அங்கு வாழ்கின்ற யாழ்ப்பாண சமூக அமைப்பின் மேட்டுக்குடியினரையே பிரதிநிதித்துவப் படுத்துகின்றதுஎன்பதே பொருத்தமுடைய கூற்றாகும். மிக அண்மைக் காலங்களில் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மூன்று, ஐந்து ஆண்டுகளுக்கென ஒப்பந்தப்பிணைப்பு செய்துகொண்டு மலேசியாவிற்கு வருகின்றனர். அவர்களில் இலங்கை, இந்திய தமிழ்த் தொழிலாளர்களும் அடங்குவர்.
மலேசியத் தமிழரும் மேற்குறிப்பிட்ட மேட்டுக்குடித் தமிழரும்தமிழர் என்ற அடிப்படையில்ஒற்றுமை கொண் டிருப்பினும் இவர்களிடையே சமூக, பொருளாதார, அரசியல்ரீதியாகப் பாரிய வேறுபாடுகள் காணப்படு வதை அவதானிக்கலாம்.
மூன்றாவது தேசிய இனம்
மலேசிய நாட்டின் சமூக பொருளாதாரத்தை வளப்படுத்துவதில்'மலேசியத் தமிழர் எனும் உழைக் கும் மக்கள் குழுமத்தினருக்கு முக்கிய பங்குண்டு. இவர்கள் ரயில் பாதை மற்றும் வீதிகள் அமைக்கும் பணிகளிலும் மற்றும் ஈயம் தோண்டும் பணிகளிலும், இரப்பர், செம்பனைத் தோட்டத் தொழில்களிலும்
உயிர்நிழல் 0 ஒக்டோபர் - டிசம்பர் 2007

ஈடுபட்டனர்.
அவ்வகையில், ஒரு காலகட்ட சூழலில் மலேசிய நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு பலமான அடித்தளத்தை இட்டதில் மலேசியத் தமிழர் முக்கிய பங்களிப்பு நல்கியுள்ளனர், இன்றும் நல்கி வரு கின்றனர்.
மலேசியத் தமிழர் பொதுவாகத் தென்னிந்தியாவி லிருந்து கொண்டு வரப்பட்டவர்கள். அவர்களின் கலாச்சார பண்பாட்டுப் பாரம்பரியமானது தென்னிந் தியத் தமிழர்களின் கலாச்சார பண்பாட்டுப் பாரம் பரியங்களைக் கொண்டிருப்பினும் அவை மலேசியச் சூழலுக்கு ஏற்ற வகையில் புதிய பரிணாமம் அடைந்து விளங்குவண்தக் காணலாம். மலேசியப் பிரதேச உற்பத்தி அமைப்பும், உற்பத்தியைத் தளமாகக் கொண்டு எழுப்பப்பட்ட சமூகக் கட்டமைப்பும் அவற் றைத்தீர்மானம் செய்கின்ற உற்பத்திமுறை, உற்பத்தி உறவுகளும் சார்ந்தது யதார்த்தமாகியுள்ள வர்க்க முரண்பாடுகளே இப்பண்பாட்டைத் தோற்று விக்கின்றன.
மலேசியாவில் அரசியல், பொருளாதார, சமூக வாழ்வில் மலேசியத் தமிழர் ஒரு தனித்துவமான பண்பாட்டைக் கொண்டவர்களாகக் காணப் படுகின்றனர். மலேசியாவில் வாழ்கின்ற பிற மக்கள் தொகுதியினரான சீனர்கள், மலாயர்கள்மற்றும்ஏனைய இனத்தவரிலிருந்து பிரித்தறியக்கூடிய உடலமைப்பு, குணநெறிகளைக் கொண்டதோர் சமூகமாக விளங்குகின்றனர். இப்பின்னணியில் அம்மக்களின் அரசியல், சமூக பொருளாதார, பண்பாட்டு அம்சங்கள் குறித்து நோக்குகின்றபோது இம்மக்கள் மலேசிய நாட்டின்மூன்றாவது தேசிய இனமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற குரல்நியாயமானதே.
மலேசியத்தமிழர்கள் குறிப்பாக, அடிநிலைமக்கள் எங்கிருந்தோ வந்து தயாராக இருந்த பொருளாதார வாய்ப்புகளை அபகரித்துக்கொண்ட மக்கள் அல்லர். எந்தவொருநாகரிக சமூகத்தின்மூலத்தைப்போலவே காடுகளை அழித்து வளமாக்கி புதியதோர் பொருளா தாரத் துறையை ஏற்படுத்திக் கொண்டவர்கள். இவர்கள் அமைத்த இந்தப் பொருளாதாரத் துறையும் அவைசார்ந்த அமைப்புகளும் இன்றுமலேசியநாட்டின் ஆதாரமாக விளங்குகின்றன. இந்த மக்களின் வரலாறும் உருவாக்கமும், யாரையும் போலவே இவர் களும் இம்மண்ணின் மக்களே என்பதை ஆதாரப் படுத்துகின்றன. ஒருபுறமான காலனித்துவஆதிக்கமும் மறுபுறமான சமூகவுருவாக்கமும் இணைந்து, தாம் தனித்துவமான தேசிய இனம் என்ற உணர்வை உருவாக்கியுள்ளது எனலாம். இன்றுவரை இவர்கள் பல்வேறுவிதமான சுரண்டல்களுக்கும் ஒடுக்குமுறை களுக்கும் உட்பட்டு வருகின்றனர். ஒரு தேசிய இனத்தின் எழுச்சி பற்றிய கருத்தினை முன்வைக்கும் ஒரு பிற்போக்குவாதியின் பார்வையும் ஒரு மார்க்சிய வாதியின் பார்வையும் அடிப்படையில் முரண்பட்ட சிந்தாந்தங்க்ளைக் கொண்டவையாகும். மலேசியத் தேசிய இனத்தின் வளர்ச்சியை உழைக்கும் மக்கள் நலன்சார்பான கண்ணோட்டத்தில் நோக்குவது அதன் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு வலிகோலும்.
இதழ் 27

Page 31
ஆனால் இன்றுவரை மலேசிய அரசாங்கமும் ஏனைய ஏகபோக சக்திகளும் இம்மக்களை குறிப்பதற் காக "இந்தியத் தமிழர் என்ற அடையாளத்தையே உபயோகித்துவருகின்றனர். இப்பதமானது மலேசியத் பெருந்தேசியவாதிகளும் ஏகபோக வர்க்கத்தினரும் இம்மக்களை எவ்வாறு நோக்குகின்றார்கள் என்ப தனை எடுத்துக் காட்டுகின்றன. ஓர் உறுதியான இன, மத, மொழி, அரசியல், பொருளாதார, பிரதேச வேறு
பாடுகளை கொண்டிருக்கின்ற இம்மக்கள் மலேசியத் தமிழர் என்ற உணர்வையே கொண்டு காணப் படுகின்றனர்.
மலேசியாவில்'இந்தியத்தமிழர்கள் என்று அழைக் கக்கூடிய, அதே சமயம் மலேசியத் தமிழருடன் எவ்விதத் தொடர்பும் இல்லாத ஒரு வர்க்கப் பிரிவினர் மலேசியாவில் வாழ்ந்து வருகின்றனர். பொதுவாக, இவர்கள் மலேசியத் தரகு முதலாளிகளுடன் ஏகபோக வர்த்தக உறவுகளை ஏற்படுத்திக் கொள்கின்றவர் களாவர். இந்திய - மலேசிய நட்புறவின் மூலம் கிடைக்கின்ற சகலவிதமான சலுகைகளையும் இவ்வர்க்கத்தினரே அனுபவித்து வருகின்றனர். இத்தகைய நலனின் பின்னணியில்தான் மலேசியத் தமிழர் சமுதாயத்தில் தோன்றியதரகு முதலாளித்துவ வர்க்கம் அவ்வப்போது வந்து குடியேறும் இந்தியத் தமிழர்களுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு உழைக்கும் வர்க்கத்தினரைத் தமக்கு சாதகமாக காட்டி அதனு டாக தமது நலன்களை பாதுகாத்துக் கொள்வ
இதழ் 27
31
 

Xஅரசியல்
தற்காகவே இந்தியத் தமிழர்' என்ற பதத்தைப் பிரயோகிக்கின்றனர்.
தேசிய சிறுபான்மை இனத் தரகு முதலாளித்துவ வர்க்கம் பொருளாதாரத்துறையில் ஆதிக்கம் செலுத் தும் போக்கு மலேசியாவிற்கு மட்டும் உரித்தான தொன்றல்ல.
பர்மாவிலே இந்திய நிலவுடைமையாளர்களும் பூர்ஷ்வாக்களும்; தாய்லாந்து, இந்தோனேசியா,
பிலிப்பைன்ஸ் போன்றநாடுகளில் சீனபூர்ஷ்வாக்களும்; மலேசியாவில் சீன, இந்தியபூர்ஷ்வாக்களும் இவ்வாறே ஆதிக்கம் செலுத்தினர். இதற்கான காரணம் யாதெ னில், தென்கிழக்காசிய நாடுகளில் மூலதனத் திரட்சி மிகவும் மந்தமாக இருந்தபடியால் ஓரளவு வர்த்தக மூலதனத்துவ வளர்ச்சி பெற்ற அண்டைய ஆசிய நாடுகளைச் சேர்ந்த பூர்ஷ்வாக்கள் வர்த்தகத் துறையை கைப்பற்றிக்கொண்டனர் என்பதேயாகும்.
இவ்விடத்தில் மலேசியாவின் சூழலை இலங்கை யுடன் ஒப்பிட்டு நோக்குவது பொருத்தமானதாக அமையும். இங்கு நகரத்தை மையமாகக் கொண்ட பெரும் வர்த்தக பூர்ஷ்வாக்கள் தேசிய சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள். அதே சமயம் அவர்களோடு எவ்விதத் தொடர்பும் இல்லாத அதே சமூகத்தைச் சார்ந்த பெருமளவு மக்கள் பெருந்தோட்டங்களில் வாழ்ந்துகொண்டு தனியான மக்கள் குழுவாக உருவாகிக் கொண்டிருந்தார்கள்.
உயிர்நிழல் 0 ஒக்டோபர் - டிசம்பர் 2007

Page 32
அரசியல்)
போது இந்த 'அந்நிய பூர்ஷ்வாக்களுக்கு எதிராக தேசியவாதம் கிளப்பப்பட்டது. அத்தேசியவாதம் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிராகவும் திசை திரும்பியது. அதைவிட முக்கியமான விடயம் யாதெனில், அதுவரை தம் சமூகத்தைப் பற்றிக் கவலைப்படாத தேசியச் சிறுபான்மை பூர்ஷ்வாக்கள் தமக்குப் பிரச்சினை வந்தபோது, தமக்கு எதிராக தேசியவாதம் எழுப்பப்பட்டபோது, தம்மைப் பாது காத்துக் கொள்வதற்காக தொழிலாளரிடம் ஓடினர். அவர்கள் மத்தியில் தேசியவாதத்தைத் தட்டி எழுப்பி அவர்களை ஸ்தாபனப்படுத்தினர். ஒடுக்குமுறைக்கு எதிராகக் குரல்கொடுத்தனர். தேசிய இயக்கங்களைத் தொடக்கி வைத்துதலைமை தாங்கினர்."
மறுபுறமாக, மலேசியத் தமிழர் என்ற உணர்வும் அதன் வெளிப்பாடான தேசியமும் மலேசியத்தோட்டத் தொழிலாளர்களை அடிப்படையாகக் கொண்டு எழுந்ததாகும்.
இன ஒடுக்கு முறைகள்
இலங்கை மலையகத்தைப் போன்று ஒரு தொழி லாளி ஒய்வு பெற்றபின் தொடர்ச்சியாக அக்குடியி ருப்பில் வாழக்கூடிய உரிமை மலேசியத் தோட்டத் தொழிலாளிக்கு இல்லை. இதன் காரணமாக ஓய்வு பெறுகின்ற தொழிலாளர்களும் அவர் சார்ந்த குடும்பமும் (குடும்பத்தில் எவரேனும் வேலையற்று இருப்பின்) வேறு இடங்களுக்குப் புலம் பெயர்ந்து செல்லவேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
மலேசியாவில் பெருந்தோட்டங்களைப் பொறுத்த மட்டில் இன்று தொழிலாளர்கள் பெரும்பாலும் தோட்டங்களிலிருந்து விலகிச் செல்கின்றனர். இன்று ஒவ்வொரு தோட்டங்களிலும் பத்து அல்லது பதினைந்து தமிழ்க் குடும்பங்களையே காணக் கூடியதாக உள்ளது. தொழிலாளி ஒருவர் ஐம்பத் தைந்து வயதை அடைந்தவுடன் அவரது சந்ததியினர் எவரும் அத்தோட்டத்தில் வேலை செய்யாதிருப்பின் தோட்ட முதலாளிக்குச் சொந்தமான வீட்டை ஒப்ப டைக்க வேண்டும் அப்படி ஒப்படைக்கத் தவறுமிடத்து அவரது ஓய்வூதியப்பணம்பறிமுதல் செய்யப்படுவதுடன் குறித்த அந்நபருக்கெதிரான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந் நிலையில் தமது ஓய்வு காலத்தின் பின்னர் தமக்கென ஒரு குடிசைகூட இல்லாதநிலையில் அல்லலுறுவதுடன் அத்தோட்டங்களிலிருந்தும் வெளியேறுகின்றனர். அவர்கள் பல்வேறு மாநிலங் களுக்குப் புலம்பெயர்ந்து செல்கின்றமையினால் ஓர் இனமாகக் கூடி வாழுகின்ற தன்மை சிதைக்கப் படுகின்றது. மறுபுறமாக, அம்மண்ணிற்கும் அம்மக் களுக்கும் இடையிலான உறவுசிதைக்கப்படுகின்றது. இன்றுவரை பல்வேறு விதமான பிரச்சினைகளை தொழிலாளர்கள் குடியிருப்புத் தொடர்பில் அனுப வித்து வருகின்றனர். இச் சதித் திட்டங்களுக்கு எதிராகத் தொழிலாளர்கள் ஆங்காங்கே சில போராட்டங்களை நடத்தி வந்திருப்பினும் அவை ஒரு இயக்கம் சார்ந்த போராட்டமாக வளர்த்தெடுக்கப் படவில்லை என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். மறுபுறமாக, இந்நிகழ்ச்சித் திட்டங்கள் யாவும்
உயிர்நிழல் 0 ஒக்டோபர் - டிசம்பர் 2007

மலேசியத் தமிழர் பரந்துபட்ட பிரதேசத்தில் ஓர் இனமாகக் கூடி வாழ்வதை சிதைக்கின்றன. அவர் களுக்கான இனத்துவ அடையாளங்களைச்சிதைத்து, சுயநிர்ணய உரிமைக்கான போராட்டங்களை முன்னெ டுக்க முடியாத வகையில் இக்குடியேற்றத் திட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
இவ்வாறான சூழலில் தமிழர்கள் பெரும்பாலும் பிற இடங்களுக்குச் சென்று தமது கலாச்சார பண்பாட்டு பாரம்பரியங்களை நிறுவமுனைகின்றபோது பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர். ஏற்கனவே அவர்கள் வாழ்ந்த பிரதேசங்களில் உள்ள இவர்களது கலாச்சார வழிபாட்டு எச்சங்கள் அழிக்கப்படுவதுடன் புதிய சூழலிலும் அவர்களது கலாச்சார பண்பாட்டு வழிபாட்டு முறைகளை பேண முடியாத நிலையில் உள்ளனர். f
மலேசியாவை காலத்திற்குக் காலம் ஆட்சி செய்தவர்கள் மலாயர்களின் இன, மத, மொழி தூய்மையை வலியுறுத்தியதுடன் அவர்களை பூமி புத்திரர்களாகக் கருதி சிறப்புச் சலுகை வழங்கி வந்துள்ளார்கள். இதன் காரணமாக, மலாயர்கள் தங்களை இந் நாட்டின் உயர் வர்க்கமாகக் கருதி யதுடன் ஏனைய மக்களின் கலாச்சார, பண்பாட்டு பாரம்பரியங்களை அழிக்கவும் தலைப்பட்டனர். எடுத்துக் காட்டாக பின்வரும் சம்பவங்களை கூறலாம். "பதிவுசெய்யப்பட்ட முதலாவது தமிழர் - மலாயாக் காரர்கள் மோதல் கெர்லிங்கில் நிகழ்ந்தது. இதற்கு முன்னதாக முஸ்லிம் மதவெறியர்கள் மலாக்கா, சிலாங்கூர் மற்றும் பேராக்கில் டிசம்பர் 1977முதல் ஆகஸ்டு 1978வரை மொத்தம் 28 இந்துக் கோவில் களை உடைத்துத் தகர்த்தனர். இவ்வாறான கோவில் உடைப்புசம்பவங்கள் 9 மாதங்கள்வரை தொடர்ந்தன. ஆனால் அரசாங்கமும் காவல்துறையினரும் இந்துமத வெறியர்கள்மீது எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை. ஆகவே இந்துக்கள் தங்கள் ஆலயங் களைத் தற்காத்துக் கொள்ள கட்டாயமான சூழலில் வன்முறையில் இறங்கினர். ஆயுதங்களை கையில் ஏந்தினர். 19 ஆகஸ்டு 1978இல் கெர்லிங் பூரீ சுப்பிர மணியர் ஆலயத்தை தற்காத்துக் கொள்வதற்காக அக்கோவிலை உடைக்க வந்த 4 முஸ்லிம்களை வெட்டிக் கொன்றனர். மேலும் ஒருவரைக் கடுமையான காயங்களுக்கு ஆளாக்கிவிட்டனர். ஆலயம் உடைப் பதைத் தற்காக்க போராடியவர்களை காவல் துறை யினர் இரண்டு தொடக்கம் நான்கு ஆண்டுகள் வரை சிறையிலிட்டனர். எனினும் இந்துக்கள் மத்தியில் இவர்கள் நாயகராகத் திகழ்கின்றனர் காரணம் அதற்குப் பிறகு ஆலய உடைப்பு சம்பவங்கள் நடைபெறவில்லை."
தவிரவும் காலத்திற்குக் காலம் மலேசிய அரசாங் கத்தினால் பல இந்துக் கோயில்கள் உடைக்கப்பட்டு வந்துள்ளன. இதற்கு மாறாக, இஸ்லாமியப் பள்ளி வாசல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையும் மலேசியநாட்டை இஸ்லாமியநாடாக காட்டுவதற்கான முயற்சிகள் தொடர்ச்சியாக முன்னெடுத்து வரப் படுவதும் இடம்பெற்றுவருகின்றன. இன்னொருபுறமாக, மலேசியத் தமிழர்களுக்கு எதிரான இன வன்முறை
இதழ் 27

Page 33
களும் காலத்திற்கு காலம் கட்டவிழ்த்துவிடப்பட்டுள் ளதனையும் அறிய முடிகின்றது. 1969ம் ஆண்டு கோலாளங்பூரில்நடந்த இனங்கலவரம் இன்றுவரை பலருக்கு அந்நாட்டின்மீது அச்சத்தை ஏற்படுத்துவ தாகவே உள்ளது. இக்கலவரம் “மே 13 கலவரம்' என அழைக்கப்படுகின்றது.இவ்வாறே மார்ச் மாதம் 2001இல் நிகழ்ந்த கம்போங் மேடான் வன்முறை தமிழர்களை அதிகமாக பாதித்த ஓர் நிகழ்வாகும். இச்சம்பவத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டது குறித்து மலாயப் பல் கலைக்கழக அவசர சிகிச்சை மையத்தின் தலைவர் டாக்டர் அப்துல் அலிராஜா முகமட் அவர்களின் கூற்று பின்வருமாறு:
"எனது வாழ்வில் மிகவும் துன்பகரமான அனுபவம், கம்போங் மேடான் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர் களுக்கு சிகிச்சை அளித்ததுதான். அவர்கள் உடம்பு முழுவதும் வெட்டுக் காயங்கள். அந்த மூன்று நாட்க ளில்நாங்கள் (உயிருக்குப் போராடிய) 90க்கும் அதிக மானோரைக் காப்பாற்றியிருக்கிறோம். மனிதன் இவ்வளவு கொடூரமாகவும் இருக்க முடியும் என்பதை அப்போதுதான் உணர்ந்தேன். இயற்கைப் பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களைப்பார்த்துள்ளோம். அவை விதி என்று ஆறுதல் அடையலாம். ஆனால் ஒரு மனிதன் இன்னொருவனை வேண்டுமென்றே வெட்டுவதுமனதை நடுங்க வைக்கும் அனுபவமாகும்."
இச்சம்பவம் குறித்து வெளிவந்த 'மார்ச் 8 என்ற நூல் இன்று மலேசியா அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்டுள்ளது. அதன்பின்தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பிறிதொரு நடவடிக்கையே அன் மையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டமும் அது குறித்து ஆளும் வர்க்கம் மேற்கொண்ட நடவடிக்கையுமாகும்.
மலேசியத் தமிழர்களின் கலாச்சாரப் பண்பாட்டு பாரம்பரியங்கள் நாளுக்கு நாள் சிதைக்கப்பட்டு வருகின்றன. மலேசிய அரசாங்கமானது இஸ்லாமிய அடிப்படைவாதத்தை முனைப்புப்படுத்தியுள்ளதுடன் ஏனைய மக்கள் குழுமத்தினரின் பண்பாட்டு பாரம்பரிய அடையாளங்களை நாளுக்கு நாள் அழித்து வரு கின்றது. மலேசியாவில் பல பிரதேசங்களில் உள்ள இந்துக் கோயில்கள் இடித்து உடைக்கப்பட்டுள்ளன. கோயில்களுக்கு சொந்தமான பலநிலங்கள் அரசால் அபகரிக்கப்பட்டுள்ளன.
இவ்வகையில் நோக்குகின்றபோது மலேசியத் தமிழர்களின் கலாச்சாரப் பண்பாட்டுக் கூறுகள் திட்டமிடப்பட்ட வகையில் மலேசியப் பெருந்தேசிய வாதிகளால் சிதைக்கப்பட்டு வருகின்றது. இலங்கை போன்ற நாடுகளில் சிங்களப் பெருந்தேசியவாதிகள் சிறுபான்மையினருக்கு எதிராக எத்தகைய கலாச்சார பண்பாட்டு ஒடுக்குமுறைகளை மேற்கொண்டு வருகின்றார்களோ அவ்வாறே மலேசியாவில் மலாயப் பெருந்தேசியவாதிகள் தமிழர்களுக்கு எதிரான கலாச்சார பண்பாட்டு ஒடுக்குமுறைகளை நடாத்தி வருகின்றனர்.
உலகமயம் என்பது ஒரு பன்முக நிகழ்ச்சிப் போக்கு. இது பொருளாதார, சமூக, அரசியல், பண்பாட்டுத் தளங்களில் முக்கிய தாக்கம் செலுத்தி வருகின்றது. இன்று உலகமயமாதல் என்கின்ற
இதழ் 27
33

Cஅரசியல்
சிந்தனைப் போக்கானது ஏகாதிபத்திய சிந்தனைப் போக்காகவே வெளிப்பட்டு நிற்கின்றது. இதனை முதலாளித்துவ வளர்ச்சியின் புதிய கட்டம் என்பர்.
ஏகாதிபத்திய நாடுகள் தமது தேச எல்லையைக் கடந்து ஏனைய நாடுகளில் தமது மூலதனத்தை முதலீடு செய்து அந்நாடுகளின் வளங்களை ஈவு இரக்கமற்ற முறையில் சுரண்டுகின்றனர். தமது ஏகபோக நலன்களுக்கு சாதகமாக பண்பாட்டு கூறுகளையும் அந்நாடுகளில் உருவாக்க முனை கின்றனர். இப்போக்கை நாம் மலேசியாவில் இடம் பெற்றுவருகின்றதொழிற்துறை வளர்ச்சியிலும் காணக் கூடியதாக உள்ளது.இன்றுமலேசியாவில் அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளில் தனியார் கம்பனிகள் அதிகரித்துவருகின்றன. வெளிநாட்டுநிதி முதலீட்டின் மூலமாக நாட்டை அபிவிருத்தி செய்தல் என்ற திட்டங்களின் மூலம் இந்நாடு கொள்ளையடிக்கப் படுகின்றது. குறிப்பாக, இவ் அபிவிருத்தித் திட்டங் களும் தமிழரைப் பெரிதும் பாதித்துவருகின்றன.நகர அபிவிருத்தித் திட்டங்களினூடாக தமிழர் ஓர் இன மாகக் கூடி வாழ்ந்த பிரதேசங்கள் சுவீகரிக்கப்பட்டு அவர்கள் வேறு இடங்களுக்கு பலவந்தமாக வெளி யேற்றப்படுகின்றனர். எடுத்துக்காட்டாக, கோலாலம்பூர், சாலாம் முதலிய பிரதேசங்கள் தமிழர் ஓர் இனமாக செறிவாக வாழ்ந்த பிரதேசமாக காணப்பட்டன.
தொழில்கள்
மலேசியத் தமிழர்களில் மிகக் குறைந்த தொகை யினர் தனியார் கம்பெனிகளிலும், விரல்விட்டு எண்ணக்கூடியவர்கள் ஏனைய அரச தொழில்களிலும் ஈடுபடக்கூடியவர்களாகக் காணப்படுகின்றனர். பெரும் பாலானோர் அடிநிலை உழைப்பாளிகளாகவே காணப் படுகின்றனர். ஆரம்ப காலங்களில் மலேசியத் தமிழர்களில் பெரும்பாலானோர் இரப்பர் தோட்டங் களிலும் ரயில் பாதை அமைத்தல், ஈயம் தோண்டுதல் ஆகிய தொழில்களிலும் ஈடுபட்டு வந்தனர்.
ஆரம்ப காலங்களில் சிறு அளவிலாக பயிர் செய்யப்பட்ட செம்பனை பயிர்ச்செய்கையானது காலப் போக்கில் அதன் அருமை அதிகரிக்க முக்கிய பெருந் தோட்டப் பயிர்ச் செய்கை முறையாக வளர்ந்து வந்துள்ளது. செம்பனைத் தோட்டங்களில் வேலை செய்கின்ற தொழிலாளியொருவர் ஒரு நாளைக்கு குறைந்தது ஒருசொட்டு இரத்தத்தையாவது சிந்தியே உழைக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது. அத்துடன் இத்தோட்டங்கள் யாவும் தனியாருக்கு விற்கப்பட்டதன் விளைவாக மக்களின் கூலி குறைக்கப் பட்டுள்ளதுடன் வேலைச் சுமையும் அதிகரிக்கப்பட் டுள்ளது. இத்தோட்டங்களைப் பெருமளவிற்கு வாங்கியவர்கள் சீன முதலாளிகள். சீனர்கள் பொதுவா கவே கடின உழைப்பில் ஈடுபடுகின்றவர்கள் என்ற வகையிலும் இன்று அவர்கள் பணம் சம்பாதிப்பதையே முக்கிய இலக்காக கொண்டிருக்கின்றமையினாலும் மலேசியத் தோட்டத் தொழிலாளர்களின் ஆன்மா நசுக்கப்பட்டு அவர்களின் உடலுழைப்பு பிழிந்து எடுக்கப்படுகின்றது. ஏற்கனவே தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட அடிப்படையான வசதிகள் கூட இன்று
உயிர்நிழல் 0 ஒக்டோபர் - டிசம்பர் 2007

Page 34
அரசியல்)
மறுக்கப்பட்டுவருகின்றன.
மறுபுறமாக, இந்நாட்டுத் தொழிலாளர்களுக்குப் பதிலாக பிறநாட்டுத்தொழிலாளர்களை தற்காலிகத் தொழிலாளர்கள்) பயன்படுத்துகின்ற சூழல் இன்று மலேசியாவில் உருவாகி வருகின்றது. குறுகிய கால ஒப்பந்தத்தின் அடிப்படையில் சட்டரீதியாகவும் சட்ட முரணாகவும் வேலைதேடி மலேசியாவிற்கு வருகின்ற வெளிநாட்டுத் தொழிலாளர்கள் (குறிப்பாக இந்தோ னேசியா, மியன்மார், லாவோஸ், இலங்கை, இந்தியா முதலிய நாடுகளிலிருந்து) குறைந்த கூலிக்கு தமது உழைப்பை விற்பவர்களாக காணப்படுகின்றனர். எடுத்துக் காட்டாக, மலேசியத் தொழிலாளர்கள் 25 வெள்ளிகளுக்கு (Rm) வேலை செய்பவர்களாக காணப்பட்டால், வெளிநாட்டுத் தொழிலாளர்கள் 15
வெள்ளிக்கு (Rm) வேலை செய்யத் தயாரானவர் களாகக் காணப்படுகின்றனர். எனவே தனியார் கம்பெனிகளில் வெளிநாட்டுத் தொழிலாளர்களை வேலைக்கமர்த்தவே விரும்புகின்றனர். இவ்வாறு மலேசியத் தொழிலாளர்களுக்கு எதிராக, பிறநாட்டுத் தொழிலாளர்களைபபயன்படுத்துகின்றநிறுவனங்கள் அத் தொழிலாளர்களின் உழைப்பையும் உதிரத் தையும் கசக்கிப்பிழியவும் தயங்குவதில்லை.
இந்த நிலைமைகள் காரணமாகத் தோட்டங் களிலிருந்து தொழிலாளர்கள் வெளியேறிச் செல் கின்ற நிலைமை உருவாகியுள்ளது. இவர்களில் பெரும்பாலானோர்நகரை ஒட்டிக் கீழ்நிலைத்தொழில் களில் ஈடுபட்டு வருகின்றனர். விரல்விட்டு எண்ணக் சுடியவர்களே சாரதிகளாகவும் மற்றும் தற்கா விகமாகத் தனியார் கம்பனிகளில் கிடைக்கக்கூடிய மத்தியதரத் தொழில்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
உயிர்நிழல் L ஒக்டோபர் - டிசம்பர் 2007
 

சிலர் அத்தோட்டங்களிலே கங்காணிகளாகவும், அலுவலகப் பணிகளிலும் மற்றும் செம்பனைப் பயிர் களுக்கு இடையில் வளர்கின்ற களையெடுக்கின்ற தொழில்களிலும் ஈடுபட்டுவருகின்றனர்.
இவ்வாறிருக்க, ஒப்பந்தக்காரர்களின் கீழ் கொத் தடிமைமுறையில் வாழ்ந்து வருகின்றதமிழ் தொழிலா எார்களும் மலேசியாவில் காணப்படுகின்றனர். ஒப்பந்தக் காரர்கள் தம்மிடம் பெற்ற கடன்களுக்காக இவர் களைத்தமது சொந்த அடிமை போல்நடத்துகின்றனர். இவர்களின் அனுமதியின்றி அவர்கள் வெளியில் செல்லுகின்ற உரிமையோ அல்லது வேறு எவருடனும் தொடர்பு கொள்கின்ற உரிமையோ அவர்களுக்குக் கிடையாது. இவர்கள் உழைப்பில் ஈடுபடாதபோதோ அல்லது தமக்கு வெறுப்பு வருகின்றபோதோ அவர்
களைத் தடி கொண்டு அடிக்கின்ற உரிமையையும் இவர்கள் பெற்றிருந்தார்கள். தமக்கு அடிமைகளாக இருக்கின்ற பெண்களைப் போகப் பொருளாகவும் பாவித்துவருகின்றனர். பருவம் அடையாத சில பெண் களை இந்த ஒப்பந்தக்காரர்கள் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவங்கள் ஏராளம். இவர்கள் அரசு துறை சார்ந்தவர்களையும் பொலிசாரையும் தமக்குச் சாதக மானவகையில் திசைதிருப்பிக் கொள்கின்றார்கள்.
இரப்பர், செம்பனைத்தோட்டங்களில் தொழிலாளர் களை வழங்குவதற்கான ஒப்பந்தங்கள் செய்து தமக்கு அடிமையாக கொண்டு வரப்பட்ட தொழிலா னர்களை அத்தொழில்களில் ஈடுபடுத்திக் கொள்ளை லாபம்சம்பாதிக்கின்றார்கள். மிகச் சொற்பசுவியையே அத்தொழிலாளர்களுக்கு வழங்கிவருகின்றனர். அக் கூலியானது அவர்களின் வயிற்றைநிரப்பிக் கொள்ளக் கூடப்போதாது. அத்துடன் தேவையேற்படின் தமக்குக்
இதழ் 27

Page 35
கீழ் இருக்கின்ற தொழிலாளர்களை வேறொரு முதலாளிக்கு விற்பனை செய்யக் கூடியவர்களாகவும் காணப்படுகின்றனர். இவ்வடிமை முறையானது இந்தியாவிலிருந்த பண்ணை அடிமை முறையை விட கொடுரமானது.
கல்வி உரிமைகள்
மலேசியத் தமிழர்கள் கூட்டரசு அரசமைப்புச் சட்டத்தின்படி மலேசிய நாட்டின் அனைத்து உரி மைகளையும் கொண்ட குடிமக்களாவர். அந்த உரிமைகளில் ஒரு தனிமனிதன் என்பவன் ஒரு சமூகம் விரும்பும் இலக்குகளை அடைவதற்கு, சுதந்திரமாக வாழ்வதற்கு, முன்னேறுவதற்கு, மேம்பாடு அடை வதற்கு, பாதுகாப்புப்பெறுவதற்கு உரிய உரிமைகளும் அடங்கும். அமைதியாகவும் சுபீட்சமாகவும் வாழ்வ தற்கு இவ்வுரிமைகள்குடிமக்களுக்கு உரித்தாகும் என அந்நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தில் பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது.
மலேசியத் தமிழர்கள் ஒப்பந்தப் பிணைப்பின் அடிப்படையில் கூலிகளாகக் கொண்டு வருவதற்கு முன்னரே வணிகர்கள், ஆட்சியாளர்கள் மற்றும் அவர்களைத் தொடர்ந்து வந்த படையினர் மூலமாக தமிழ்மொழி அந்நாட்டை வந்தடைந்தது.
முன்சி அப்துல்லா (1796-1854) தான் தமிழ்க்கல்வி கற்க அனுப்பப்பட்டது பற்றிக் கூறியிருக்கிறார். தமிழ்மொழி எல்லோராலும் பயன்படுத்தப்பட்ட ஒரு பொதுவனிக மொழியாக இருந்ததால் அவரின்தந்தை அவரைத் தமிழ் கற்கச் செய்தார். மலாக்காவில் உயர் நிலையில் இருந்த அனைவரும், வர்த்தகத்தில் ஈடுபட்டி ருந்த அனைவரும் தமிழ் கற்றிருந்தனர். ஆனால், தாய்மொழியை (மலாய்) கற்க வேண்டிய தேவை யில்லாமல் போய்விட்டது என்றார். (Munshi Abdullah himself is said to have referred to Tami as a universal language and that there was no necessity for studying the "mother tongue' meaning Malay)
மலாக்காவில் மட்டுமன்று ஏனைய கெடா, பேராக், பகாங் முதலிய மாநிலங்களிலும் தமிழ்மொழி சிறப்புப் பெற்று விளங்கியதை அறியக் கூடியதாக உள்ளது. அத்துடன் ஆங்கிலேயர்ஆட்சிக்காலத்தில் பலநிலப் பத்திரங்கள் தமிழில் எழுதப்பட்டிருந்தன.
இத்தகைய தேவையின் பின்னணியில் தமிழ்மொழி மூலமான பாடசாலைகள் பல தோற்றம் பெற்றன. அவ்வகையில் மலேசியாவில் தோன்றிய முதல் தமிழ்ப் பள்ளி 1816ம் ஆண்டில் பினாங்கில் கிறித்துவர்களால் துவக்கப்பட்டது. இன்னும் 10 ஆண்டுகளில் தமிழ்ப் பள்ளிகளின் வரலாறு இருநூறாண்டுகளை அடையும். முதல் சீனப் பள்ளி 1815ம் ஆண்டில் துவங்கியது. பிரிட்டிஷார் காலத்தில் தோட்டங்களிலும் நகர்ப் புறங்களிலும் தமிழ்ப் பள்ளிகள் தோன்றின. பொருளா தார வளமற்ற தமிழ்ப் பள்ளிகள் தோட்ட உரிமை யாளர்களின் தயவிலும் அரசாங்க உதவியோடும் இன்னும் சில தனியாரின் ஆதரவோடும் வளர்ந்த தமிழ்ப் பள்ளிகள் நாடு சுதந்திரமடைந்த காலகட்டத்தில் எண்ணிக்கையில் 888 ஆக இருந்தன. சீனப் பள்ளி களின் எண்ணிக்கை 1343 ஆகும். காலனித்துவ
இதழ் 27

Xஅரசியல்
ஆட்சிக் காலப்பகுதியில் தான் மலேசிய நாட்டில் தமிழ்ப் பள்ளிகள் தோன்றின. 1900களில் அந்நாட் டிற்கு அதிகமாக வந்திறங்கியதோட்டத்தொழிலாளர் களுக்காக பிரித்தானிய அரசு 1912இல் தொழிலாளர் சட்டத்தை இயற்றியது. இச்சட்டத்தின் மூலமாக தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்காக தோட்ட நிர்வாகம் தமிழ்ப் பள்ளிகளை உரு வாக்கியது.
1930இல் 333 ஆக இருந்த தமிழ்ப் பள்ளிகள் 1938 இல் 547 ஆக அதிகரித்தது. 1947இல் 741 ஆகவும் 1957இல் 888 ஆகவும் தமிழ்ப் பள்ளிகளின் எண் ணிக்கை அதிகரித்தது. மலேசியத் தமிழர்களிடையே கல்விக்கான தேவை உணரப்பட்டுவருகின்றது. எனவே கல்வி ஆற்றலில் பங்குபற்றுகின்ற மலேசியத் தமிழர் களின் அளவும் அதிகரித்து வருகின்றது. இவ்வாறான தோர் சூழலில் தமிழருக்கு எதிராகக் கொண்டு வரப்பட்டு சமூக பொருளாதார அரசியல் மாற்றங்கள் தமிழர்களின் கல்வித்துறையையும் பாதிப்பதாக அமைந்தது. இதன் காரணமாக, தமிழ்ப் பள்ளிகளின் எண்ணிக்கை 1963ம் ஆண்டு 720 ஆக குறைந்தது. தொடர்ந்து 1969ம் ஆண்டு662 ஆகவும் 1973ம் ஆண்டு 631ஆகவும், 1998ம் ஆண்டு530 ஆகவும், 2000இல் 526 ஆகவும் 2006ம் ஆண்டு523 ஆகவும் குறைந்துவிட்டன. இவ்வாறு காலத்திற்குக் காலம் தமிழ்ப் பள்ளி களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு வந்துள்ளன. அத்துடன் மலேசியாவில் அமுலுக்குக் கொண்டு வரப் பட்டுள்ள எட்டாவது ஒன்பதாவது மலேசியத் திட்டங் களில் தமிழ்ப்பள்ளி கட்டுவதற்கான எவ்வித ஏற்பாடு களும் இல்லை. இதுபோக, தமிழ்ப்பள்ளிகளை இல்லா தொழிக்கின்ற செயற்பாடுகள் மட்டும் தொடர்ந் துள்ளன.
மேலும் தமிழ்ப் பாடசாலைகளுக்கு ஒதுக்கப் படுகின்ற நிதியின் அளவும் மிகவும் குறைவாகவே உள்ளன. பல பாடசாலைகளின் கட்டிடங்கள் கறை யான் அரித்தநிலையில்இடித்துவிழுகின்றவையாகவே காணப்படுகின்றன. பெரும்பாலான தமிழ் மாணவர்கள் அடிப்படை வசதிகள்கூட இல்லாத மிக பின் தங்கிய பாடசாலையிலேயே கல்வி கற்று வருகின்றனர். எடுத்துக் காட்டாக சிரம்பான் மாநிலத்தில் அமைந் துள்ள ரீஜண்ட் தோட்டத் தமிழ்ப்பாடசாலை, லங்காவி, சுங்கை ராயா தோட்டத் தமிழ்ப் பாடசாலை முதலிய வற்றினைக் குறிப்பிடலாம்.
"சீன தொடக்கப்பள்ளிகளின் எண்ணிக்கைகளும் கடந்த ஐம்பது ஆண்டு காலத்தில் குறைவு கண் டுள்ளன. சீன மக்களின் எண்ணிக்கை உயர்ந்து, சீன மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்த நிலையிலும் புதிய சீனப்பள்ளிக்கூடங்கள் தேவைக்கேற்றஅளவில் கட்டப்படவில்லை. சீனர்களின் இடைநிலைப் பள்ளி களுக்கு, அதாவது, மெண்டரினை போதனை மொழி யாகக் கொண்டுள்ள பள்ளிகளுக்கு, அரசாங்க நிதி ஒதுக்கீடு கிடையாது. அப்பள்ளிகள் independent Secondary Schools' 676ip. 960dpdisabi UGB356ip607. தமிழர்களுக்கு தமிழ் இடைநிலைப் பள்ளிகள் கிடையாது. மேற்குறிப்பிட்ட சீன இடைநிலைப் பள்ளிகள் அனைத்தும் சீன சமூகம் அளிக்கும் நன்
உயிர்நிழல் 0 ஒக்டோபர் - டிசம்பர் 2007

Page 36
அரசியல்)
கொடைகளைக் கொண்டே இயங்குகின்றன. சீன அமைப்புகளின் வலுவான ஆதரவுஅவற்றிற்கு உண்டு ஆனால் தமிழ்ப் பள்ளிகளை சீன பள்ளியின் வளர்ச்சி யுடன் ஒப்பிடுகின்றபோதும் தமிழ்ப்பள்ளிகளின்நிலை மிகவும்பின்தங்கியதாகவே காணப்படுகின்றன. தமிழ்ப் பள்ளிகள் வளர்ச்சியின் நன்கொடைகள் மிகக் குறை வாகவே காணப்படுகின்றன."
மலேசியத் தேசிய கல்விக் கொள்கையில் காணப் படுகின்ற பிறிதொரு பாரபட்சம் சிறுபான்மையினத் தினருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட மொழிக் கொள்கையாகும். 1957ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட கல்விச்சட்டமானது (விதி 3இல்) எல்லா இனங் களையும் இணைத்து அவர்களின் மொழி மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றிற்கு பாதுகாப்பு மற்றும் ஆதரவு கொடுக்க வகை செய்யும் வாசகங்கள் ஆங்காங்கே குறிப்பிட்டிருப்பினும் நடைமுறையில் அவை ஏட்டுச் சுரைக்காயாகவே அமைந்து காணப் பட்டன. அத்தகைய குறைந்த பட்ச வாசகங்கள்கூட 1961ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட கல்விச் சட்டத்தில் (விதி 3இல்) நீக்கப்பட்டுள்ளன. இவ் அம்சம் எதனை உணர்த்துகின்றது? மலாயர்கள் அல்லாதோரின் மொழி,கலாச்சாரம்,கல்வி உரிமைகளுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட சதித் திட்டமாகவே மேற்குறித்த கல்வித்திட்டம் அமைந்துள்ளது எனலாம்.
இச்சட்டத்தில் முக்கியமாகக் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயம் யாதெனில்"விதி21(2) ஆகும்.இந்த விதி கல்வி அமைச்சர் விரும்பிய நேரத்தில் தாய் மொழியை போதனை மொழியாகக் கொண்ட தமிழ் அல்லது சீனத் தொடக்கப் பள்ளியை அரசாங்க மலாய்த் தொடக்கப் பள்ளியாக மாற்றுவதற்கான அதிகாரத்தை அமைச்சருக்கு வழங்கியிருக்கிறது. தமிழ்த் தொடக்கப் பள்ளியை மலாய்த் தொடக்கப் பள்ளியாக மாற்றும் முழு அதிகாரத்தை இச்சட்டத்தின் மூலம் கல்விஅமைச்சர் பெறுகிறார்."
மேலும் பல்லின கலாசாரத்தைக் கொண்ட மலேசிய நாட்டில் சகல தேசிய சிறுபான்மையினரதும் மொழி, கலாச்சார, பண்பாட்டுப் பாரம்பரியங்களை தகர்த்து விட்டு ஓரின கலாச்சார கல்விக் கொள்கையை உரு வாக்குவதற்கு மேலும் வகை செய்யப்பட்ட புதிய கல்விச் சட்டம் 1996இல் இயற்றப்பட்டு ஜுலை மாதம் 1997இல் அமுல்படுத்தப்பட்டது.
இக்கல்விச் சட்டத்தின்படி தேசிய மாதிரிதொடக் கப் பள்ளி மாணவர்கள் இடைநிலைப் பள்ளிகளில் தங்களின் படிப்பை தொடர்வதற்காக மலாய் மற்றும் ஆங்கில மொழிகள் தமிழ்ப்பள்ளிகளிலேயே போதிக் கப்படுகின்றன. தமிழ் தொடக்கப்பள்ளிகளின் வளர்ச் சிகள், தமிழ்மொழி கற்பித்தல் செயற்பாடுகளுக்கும் அரசாங்கத்தின்நிதி ஒதுக்கீடுமிக குறைவானதாகவே காணப்படுகின்றன. தமிழ் மற்றும் சீன தொடக்கப் பள்ளிகள் ஆறாம் வகுப்புடன் முடிவடைந்து விடு கின்றன. மலாய் தொடக்கப் பள்ளிகள் மாத்திரம் தொடர்ந்து அரசாங்க நிதியில் இயங்கிவருகின்றன.
சில தேசியப் பள்ளிகளில் தமிழ் ஒரு பாடமாக கற்பிக்கப்படினும் அதனால் எவ்விதமான பலன் களையும் எதிர்பார்க்க முடியாது. தமிழ்மொழிபாடமா
உயிர்நிழல் 0 ஒக்டோபர் - டிசம்பர் 2007

36
னது கட்டாயமான பாடமாக இல்லாமையினாலும் மற்றும் தொழில் வாய்ப்பினை பெறுதற்கு குறித்த மாணவரொருவர் மலாய், ஆங்கிலம் முதலிய மொழி களிலே தேர்ச்சி பெற வேண்டிய நிலை காணப்படு கின்றமையினாலும் தமிழ் மாணவர்கள் தமிழ்மொழி கற்றலிலானது ஆர்வம் நாளுக்கு நாள் குறைந்து வருகின்றது.
தாய்மொழியே சிந்தனைக்கான கருவி. அதன் காரணமாக, அது சிறந்த பயிற்று ஊடகமாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. மொழியே சிந்தனைக்கான அடிப்படை எனவும் வெவ்வேறுமொழிகள் பேசும்மக்கள் அவற்றின் வேறுபட்ட இயல்புகள் காரணமாக தம்மளவில் வெவ்வேறுஉலகில்வாழ்கின்றனர் எனவும் மொழியியலாளர்கள் கூறுகின்றார்கள். எனவே ஒருவர் தனது உள்ளார்ந்த உணர்வுகளை தனது சொந்த மொழியில் மட்டுமே சிறப்பாக வெளிப்படுத்த முடியும்? அந்தவகையில் மலேசியத் தமிழ் மாணவர்களின் சுதந்திரமான சிந்தனை வளர்ச்சியும் ஆக்கத்திறன் வளர்ச்சியும் கட்டுப்படுத்தப்படுவதுடன் சமுதாய உணர்விலிருந்து அந்நியப்படுத்தப்படுகின்றனர்.
அத்துடன் மலேசிய தமிழர்களின் கல்வியுரிமை யானது மிகவும் மோசமான நிலையில் பாதிக்கப்பட்டு வருகின்றது. கல்வித்துறையில் வழங்கப்படுகின்ற பூமி புத்திரர்களுக்கான சலுகை பூமிபுத்திரர்கள் அல்லாத ஏனையசிறுபான்மை இனத்தவரை அதிகமாக பாதித்து வருகின்றது. பாடசாலை முதல் பல்கலைக்கழகம் வரையிலான நுழைவில் காட்டப்படுகின்ற பாரபட்சம் விளைவாக சிறுபான்மையினர் தமது கல்வி கற்கும் வாய்ப்பை இழக்கின்றனர். அத்துடன் தமிழ்ப் பாடசாலைகளிலான ஆசிரியர் பற்றாக்குறை, பரீட்சை மதிப்பீடுகளில் காணப்படுகின்ற பாரபட்சம், மற்றும் கற்றுபட்டங்கள் பெற்றபின்னரும் அரச தொழில்களை பெறுவதில் உள்ள பாரபட்சங்கள் மலேசிய தமிழ் மாணவர்களை வெகுவாக பாதித்ததுடன் அவர்கள் கல்வியில் விரக்தி கொண்டு, அதிலிருந்து விலகி செல் கின்ற நிலைமையும் இன்று உருவாகி வந்துள்ளது. தமிழர் ஒருவர்தாம் கல்வித்துறையில்எத்தகைய சிறப்பு தேர்ச்சிகளையும் பட்டங்களையும் பெற்றிருப்பினும் கூட அவர் ஒரு மாவட்ட அதிகாரியாகக் கூட வர முடியாத சூழல் இன்று மலேசியாவில் காணப்படுகின்றது.
இவ்வாறிருக்க, மலேசியத் தமிழர்களில் சிலர் பேராசிரியர்களாக, சட்டத்தரணிகளாக, அதிகாரி களாக மற்றும் இராஜதந்திரிகளாகவும் சமூக பெயர்ச்சியை அடைந்துள்ளனர் என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது. குறித்த இச்சிறுகுழுவினரின் வளர்ச்சியை மையமாகக் கொண்டு ஒட்டுமொத்தமான சமூகத்தின் வளர்ச்சியையும் மதிப்பிட முடியுமா?
ஒருநாட்டில் விவசாயி அல்லது தொழிலாளி ஒருவர் பிரதம மந்திரியாகிவிட்டார் என்பதற்காக அச்சமூகத் தினர் அனைவரும் முன்னேறிவிட்டார்கள் எனக் கருத முடியாது. அவ்வாறே பெண் ஒருவர் பிரதம மந்திரி யாகிவிட்டார் என்பதற்காக அந்நாட்டின் முழுப் பெண்களும் விடுதலை அடைந்து விட்டார்கள் எனக் கூற முடியாது. ஒரு சமூகத்திலான சிறு குழுவினரின் வளர்ச்சி ஒட்டுமொத்தமான சமூக வளர்ச்சிக்கான
இதழ் 27

Page 37
குறிகாட்டிகளாக அமையாது. இருப்பினும் இச்சிறு தொகையினரின் வளர்ச்சியையும் கவனத்திலெடுத்தல் முக்கியமானதொன்றாகும். ஆனால் அதுவே முழு வளர்ச்சியாகிவிடாது.
அந்த வகையில், மலேசியத் தமிழர்களின் கல்வி உரிமையானது பல வழிகளில் மலேசிய அரசாங்கத் தாலும், ஏகபோக சக்திகளாலும், மற்றும் தேசிய பெருந்தேசியவாதிகளாலும் பாதிக்கப்பட்டு வந்துள் ளன; வருகின்றன. எனவே மலேசியத் தமிழர்களின் சமூக மாற்றப் போராட்டத்தின் அங்கமாக கல்வி யுரிமையும் விளங்குகின்றது.
அரசியல் தொழிற்சங்க அமைப்புகள்
எங்கெல்லாம் ஒடுக்குமுறைகளும் அடக்கு முறைகளும் காணப்படுகின்றதோ, அங்கெல்லாம் போராட்டங்களும் போராட்ட இயக்கங்களும் அவை சார்ந்த வீரர்களும் தோன்றுவது இயற்கையின் நியதி. அவ்வகையில் ஆரம்ப காலங்களில் (1910 -1920) மலேசியத் தமிழர்களின் குறிப்பாக, தோட்டத் தொழிலாளர்களின் போராட்டங்கள் ஆங்காங்கே தன்னெழுச்சியான போராட்டங்களாக முகிழ்ந்த போதிலும் அவை ஒரு இயக்கமாக ஸ்தாபன மயமாக் கப்படவில்லை. ஆரம்பகாலப் போராட்டங்கள் பொது வாக கங்காணித்துவமற்றும் நிர்வாக அடக்கு முறை களை எதிர்த்து எழுந்தவையாகும். ஒரு தொழிலா ளிக்கு இழைக்கும் அநீதிக்கு எதிராக ஏனைய சக தொழிலாளர்கள் ஒன்றிணைந்து போராடினார்கள்.
ஒரு வகையில் தொழிலாளர்களின் ஆரம்ப காலப் போராட்டங்களை ஒடுக்குவதிலும் அவற்றினைச் சிதைப்பதிலும் காலனித்துவவாதிகள் ஓரளவு வெற்றியும் கண்டனர் எனலாம். அத்துடன் இப் போராட்டங்களுக்குத் தலைமை தாங்கியவர்களும் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டனர். இக்காலச் சூழலில் 'இந்தியத் தொழிலாளர்கள் தொழிற்சங்கம் அமைக்கும் முயற்சி ஏதும் தொடங்கவில்லை. இதற்குச் சில காரணங்கள் கூறலாம். ஒன்று இந்தியத் தொழிலா ளர்கள் ரப்பர்த் தோட்டங்கள் போன்ற துண்டித்துத் தனிமையாக்கப்பட்ட குறுகிய சமூக, பொருளாதார உலகத்தில் முடக்கி வைக்கப்பட்டிருந்தனர். மேலும், இந்தியத் தொழிலாளர்கள் ஒருபோதும் அரசியல்சார்பு கொண்டிருக்கவில்லை.
1930இன் பிற்பகுதியில் தோன்றிய தீவிரமான இந்தியத் தேசியம், தோட்டத் தொழிலாளர்களின் விழிப்புணர்ச்சிக்கும் போராட்ட உணர்விற்கும் வித்து களை விதைத்தது. தோட்டத் தொழிலாளிகளின் மத்தியில் 1936இல் அமைக்கப்பட்ட மலாயா மத்திய இந்தியர் சங்கம்' (CIAM) பிரிட்டிஷ் எதிர்ப்பு உணர்வு களைப் பரப்பியது. இந்திய அமைப்பு 1938இல் தனது விடாப்பிடியான போராட்டங்களின் மூலம் தொழிலா ளர்கள் இந்தியாவிலிருந்து பிறர் உதவியுடன் குடியேறு வதற்கு முற்றுப்புள்ளி வைக்க உதவியது"
1940களில் இவ்வியக்கமானது புதியதோர் பரிணாமத்தை எட்டியது. விலைவாசியின் ஏற்றத்தைக் கருத்திற் கொண்டு சீன மற்றும் மலாயத் தொழிலாளர் களின் சம்பளம் எவ்வாறு உயர்த்தப்பட்டதோ அவ்
இதழ் 27

Xஅரசியல்
வாறே மலேசிய தோட்டத் தமிழ்த் தொழிலாளர் களினதும் சம்பளம் உயர வேண்டும் என்ற கோரிக் கையை முன்வைத்துப் போராடியது. வெறும் சம்பள உயர்வுக்கான போராட்டமாக மட்டுமன்று, அதிகா ரத்துக்கு எதிரான போராட்டமாகவும் அதுதிகழ்ந்தமை குறிப்பிடத்தக்கதொன்றாகும். அவ்வகையில் கிள்ளான் மாவட்டத்தில் இடம்பெற்ற போராட்டங்கள் முக்கியமானவையாகும்.
இதன் இன்னொரு வளர்ச்சிக் கட்டமாகவே மலேய தொழிற் சங்கங்களின் சம்மேளனத்தை (Panmalayan Federative of Trade Unions- PMFTN) (g5sóius டலாம். 1945க்கும் 1947க்கும் இடையிலான காலப் பகுதியில் மலேசியாவில் உருவான பல தொழிற்சங்க அமைப்புகள் இணைந்து தொழிலாளர்கள் சார்பான உறுதிமிக்க போராட்டங்களை நடாத்தியது. குறிப்பாக இவ்வமைப்பானது தொழிற்சங்கம் எனும் விடயத்தைக் கடந்து பரந்துபட்ட உழைக்கும் மக்கள் நலன் சார்ந்த அரசியல் சித்தாந்த கோட்பாட்டினைக் கொண்டிருந்தமை இதன் பலமான அம்சமாக காணப் பட்டது. சகல நேச சக்திகளும் ஒன்றிணைத்திருந்தனர். நண்பன் யார், எதிரி யார் என்பதில் மிகத் தெளிவான பார்வையையே கொண்டிருந்தனர்.
1940களின் பிற்பகுதியில் மலேசியாவில் கம்யூ னிஸ்ட் கட்சி வளர்ந்து ஒரு மாபெரும் சக்தியாக விளங்கியது. அவ்வமைப்பானது முதலாளித்துவ முறைமைகளையும் அடக்குமுறைகளையும் மாற்றி அமைப்பதற்காக கடுமையாகப்போராடியது. குறிப்பாக, இறப்பர்த் தோட்டங்களிலும் நிலக்கரி, ஈய சுரங் கங்களிலும் கடுமையாக சுரண்டப்பட்ட தொழிலா ளர்கள் சார்பாக, எட்டு மணி நேர வேலைக்கான கோரிக்கையை முன்வைத்து அப்போராட்டங்கள் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தன.
அவை வெறுமனே தொழில் பிரச்சனைகளுக்கான
போராட்டங்களாக மட்டுமன்றி, அரசியல், பொரு
37
ளாதார, சமூக பண்பாட்டு விடுதலையையும் வேண்டி நின்றமை அதன் பலமான அம்சமாகும்.
இச்சூழலானது அ. ம.தொ.ச அமைப்பைப் பலப் படுத்தியது. இதன் வெளிப்பாடாக, தொழிலாளர்கள் தமது கூலி, உரிமைகள் குறித்த போராட்டங்களை முன்னெடுத்தனர். சீனா, இந்தியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் நடந்தேறிய போராட்டங்களும் மலேசியாவில்தாக்கம் செலுத்தத்தொடங்கியிருந்தது. மலேசியாவில் இவ்வெழுச்சியானது ஆளும் வர்க்கத்தினரையும் ஏனைய இதர வர்க்கத்தினரையும் அதிர்ச்சிகொள்ளச் செய்திருந்தது. எனவே இரண்டாம் உலகப்போரின்போது மலேசியாவின் கம்யூனிஸ்ட் கட்சியும் அ.ம. தொ. க. ஆகிய இயக்கங்களும் சட்ட பூர்வமான இயக்கங்கள் அல்ல என்று பிரகடனப் படுத்தப்பட்டது.
இந்தச் சட்டத் திருத்தங்கள் அனைத்தும் அகில மலாயா தொழிற்சங்கங்கள் சம்மேளனத்தை (PMFTU) அழிப்பதற்காக கொண்டுவரப்பட்டவையாகும்.
புதிதாகத் திருத்தப்பட்ட சட்டத்தின் கீழ் அகில மலாயா தொழிற்சங்க சம்மேளனம் 1946ம் ஆண்டு அமுலிலிருந்த சட்டத்தின் கீழ் 03, 11, 1946 அன்று
உயிர்நிழல் 0 ஒக்டோபர் - டிசம்பர் 2007

Page 38
அரசியல்)
தன்னை ஒரு சம்மேளனமாக (as federation) பதிவு செய்து கொள்வதற்காக வழங்கப்பட்ட மனு 12.06.1948 இல் நிராகரிக்கப்பட்டதாகக் காலனித்துவ அரசு பி.எம்.எப்.டி.யு. (PMFTU) விடம் தெரிவித்தது. அதாவது இருபதுக்கும் மேற்பட்ட மாதங்களுக்கு முன்பு அமுலில் இருந்த சட்டத்தின் கீழ் செய்யப்பட்ட மனு, அந்த மனுவை நிராகரிப்பதற்காகவே நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் கீழ் இருபதுக்கும் மேற்பட்ட மாதங் களுக்குப் பிறகு நிராகரிக்கப்பட்டது. 1948ம் ஆண்டு ஜூன் மாதம் 13ம் தேதியில் "பெரிய மற்றும் சக்தி வாய்ந்த தொழிலாளர் அமைப்பு' என்று கவர்னர் எட்வர்ட் ஜென்ட்டால் வர்ணிக்கப்பட்ட அகில மலாயா தொழிற்சங்கங்களின் சம்மேளனம் தடை செய்யப்பட்டது
இக்காலப் பின்னணியில் கம்யூனிஸ்ட் இயக்கத் தைச் சார்ந்த பலர் கொன்று குவிக்கப்பட்டனர். சிலர்
காடுகளில் தலைமறைவுவாழ்க்கையை வாழ்ந்தனர். தமிழர்களிடையே பொதுவுடைமை சித்தாந்தத்தை கட்டி வளர்த்த S.A.கணபதி தூக்கிலிடப்பட்டார். வீரசேனன் பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இரையானார். இது இவ்வாறிருக்க, மக்களிடையே கட்டி வளர்க்கப்பட்ட போராட்ட உணர்வுகளும் குணாதி சயங்களும் ஆதிக்க சக்திகளை நிலை தடுமாற வைத்ததுடன் அவர்களைச் சிந்திக்கவும் வைத்தது. இவ்வாறானதோர் சூழலில் தமிழ் மக்களிடையே ஏற்பட்டிருந்த வர்க்க உணர்வை மழுங்கச் செய்வ தற்காக பிரித்தானிய காலனித்துவ அரசாங்கம் மிக முக்கியமானதோர் சூழ்ச்சியைச் செய்தது.
அதன் முதற் கட்ட அம்சமாக, போர்க்குணம் மிக்க தொழிற்சங்கத்திற்கும் அதன் அரசியல் உணர்விற்கும் பதிலாக அடிமையுணர்வை வளர்க்கக்கூடிய தொழிற் சங்கத்தை உருவாக்கியது. 1946இல்'தேசியதோட்டத் தொழிலாளர்கள் என்ற ஓர் அமைப்பை உருவாக்கி அவ்வமைப்பை முன்னெடுத்துச் செல்வதற்கும் கால னித்துவ வாதிகளின் அற்ப சலுகைகளுக்கும் அடி
உயிர்நிழல் 0 ஒக்டோபர் - டிசம்பர் 2007 3:
 

வருடியாக இருக்கக் கூடிய P. P. நாராயணன் என்ற இடைத் தரகரை காலனித்துவ அரசாங்கம் பயன் படுத்திக் கொண்டது. இவ்விடைத் தரகரே இவ்வ மைப்பின் ஏகபோக செயலாளராக தெரிவு செய்யப் பட்டார். ஒரு தொழிற்துறைக்கு ஒர் தொழிற்சங்கமே அமைக்க முடியும் என்ற மலேசிய தொழிற்சங்க சட்டத்தை சாதகமாகப் பயன்படுத்தி, தொழிலாளர் களின் போராட்டங்களையும் உரிமைகளையும் மழுங்கடிப்பதில் ஆதிக்க வர்க்கமும் இடைத் தரகர் களும் ஒரளவு வெற்றியும் கண்டனர்.
"நாராயணன் போன்றோரின் முயற்சியால்நாட்டின் அரசியலில் அக்கறை ஏதும் கொள்ளாததும், போராட்ட குணம் இல்லாததுமான தொழிற்சங்கத் தலைமை யொன்று தோன்றியது. வெறும் பொருளாதாரக் கோரிக்கைகளை மட்டுமே முன்வைத்த தொழிற்சங்க இயக்கம் 1948-50 இல் வளர்ச்சி பெற்றது. அதன் முக்கிய செயற்பாடு ஓரளவு ஊதிய உயர்வைப் பெறுவதும் வேலை நிலைமைகளை ஒர ளவு மேம்படுத்துவதும் தான். 1950இல் மலாயா தொழிற் சங்க கவுன்சில் (இது பின்னர் மலேசியா தொழிற்சங்க காங் கிரஸ் எனப்பெயர் மாற்றப் பட்டது) உருவாக்கப்பட்டது. ஒரு தேசிய தொழிற்சங்க 60DDu yLDITō5 Goldfu J6ùl JCB6)glölž5/T6öy இதன் குறிக்கோள். அன்று முதல், தொழிற்சங்க நடவடிக் கைகள் முற்றிலும் மாறி விட் டன. சோறும் கறியும் பற்றிய பிரச்சினைகளோடு மட்டும் நிறுத்திக் கொள்கின்ற வெறும் பொருளாதாரக் கோரிக்கைகளை மட்டுமே முன்வைக்கின்ற தொழிற்சங்க நடவடிக்கைகளாகிவிட்டன. தொழிற்சங்கங்களின் அரசியல், சமூகப் பாத்திரங்கள் அரசாங்கத்தால் அன்று முதல் மாற்றியமைக்கப்பட்டுவிட்டன."
இவ்வியக்கமானது ஏகாதிபத்திய நலன்களுக்கு தொழிலாளர்களை தாரை வார்ப்பு செய்கின்ற பணி யினையும் மறுபுறமாக அவர்களின் குறைந்தபட்ச உரிமை போராட்டங்களைக்கூட சமரசம் செய்து விடுகின்ற பணியினையும் சிறப்பாகவே செய்து வருகின்றது.இதன் காரணமாக தொழிலாளர்கள்தமது அடையாளங்களை அரசியல், சமூக பொருளாதார பண்பாட்டுத் துறையில் இழந்து நிற்பது தற்செயல் நிகழ்ச்சி அல்ல.
மறுபுறமாக, இம்மக்களிடையே எழுந்த மலேசியன் இந்தியன் காங்கிரஸானது மலேசியத் தமிழரில் தொகையில் கூடிய தொழிலாள வர்க்கமான பெருந் தோட்டத் தொழிலாளர்களின் இனத்தனித்துவத்தை சிதைப்பதில் ஆளும் வர்க்கத்தினருடன் இணைந்து தீவிரமாக செயற்பட்டுவருகின்றது. அவர்களின் வர்க்க, இன தனித்துவத்திற்கு அடிப்படையாக இருக்கின்ற
இதழ் 27

Page 39
பெருந்தோட்டத் தொழிற்துறையை இல்லாமலாக்கும் நடவடிக்கைகளை மலேசிய அரசாங்கம் மிக வேகமா கவே செயற்படுத்தி வருகின்றது. இதற்கு எதிராக மக்களிடையே எழுகின்ற போர்க்குணங்களைத்திசை திருப்பிஅதனை சமரசம் செய்துகொள்வதன்மூலமாக முழு மந்திரி, அரை மந்திரி பதவிகளையும் பெற்றுக் கொள்கின்ற பணியினை ம. இ. க. வும் இது போன்ற அமைப்புகளும் சிறப்பாகவே செய்துவருகின்றன.
சமகால வாழ்க்கை பிரச்சினைகள்
ஆறாவது மலேசியத்திட்டத்தை (1990-1995) தவிர ஏனைய மலேசியத் திட்டங்கள் யாவும் தோட்டத் தொழிலாளர்களை வறுமையாளர்கள்என இனம்கண்ட போதினும் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை சீர் செய்வதற்கான எந்தவிதமான முயற்சிகளும் மேற் கொள்ளப்படவில்லை. குறிப்பாக, மலேசிய அபிவிருத் தித் திட்டங்களில் மலேசியத் தமிழர்கள் புறக்கணிக் கப்பட்டுவந்துள்ளனர்/வருகின்றனர்.
சமுதாயம் மற்றும் பொருளாதார புறக்கணிப்பின் அடிப்படையில் கடந்த இருபது ஆண்டுகளாக தோட்டங்களில் வாழ்ந்த மலேசியத்தமிழர்கள் வேலை யில்லாப் பிரச்சினைக்கு ஆளாகி வருகின்றனர்.பல காரணங்களுக்காகத் தோட்டங்களின் அளவு குறைந்ததால் தோட்டங்களில் வேலைசெய்து அங்கேயே வாழ்ந்து வந்த 300,000 இந்தியத் தொழி லாளர்கள் 1980ம் ஆண்டிலிருந்து 2000ம் ஆண்டு வரையில் வேலை இழந்துள்ளனர். இருந்த எல்லா வற்றையும் இழந்து தோட்டப்புறத்திலிருந்து நகர்ப் புறத்திற்கு வலுக்கட்டாயமாக இவ்வளவு பேர் இடம் பெயர்ந்துவந்தது தெரிந்திருந்தும் அதிகாரத்திலுள்ள வர்கள் எதுவுமே செய்யவில்லை."
நகர்ப்புறங்களை நோக்கி இடம்பெயர்ந்தவர்களில் பெரும்பாலானோர் கீழ்மட்ட வேலைகளிலேயே ஈடுபடுகின்றனர். பல தமிழ் இளைஞர்கள் சட்டவிரோத செயற்பாடுகளிலும் குண்டர் படை செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வரலாயினர்.
மலேசியாவின் மொத்த மக்கள் தொகையில் 75% வீதத்தினரே மலேசியத் தமிழர்கள். ஆனால் கடுமை யான குற்றச் செயல்கள் மற்றும் குண்டர் படைநடவடிக் கைகளில் ஈடுபட்டதற்காகக் கைது செய்யப்பட்டவர் களில் இந்தியர்களே அதிகமான தொகையினராக காணப்படுகின்றனர். தடுப்புக் காவல்சட்டத்தின்கீழ் 2005ம் ஆண்டில் (மார்ச் வரை) கைது செய்யப்பட்டு சிம்பாங்ரெங்கம் மறுவாழ்வு மையத்தில் அடைக்கப் பட்டுள்ளவர்களில் 377 பேர் அல்லது 54 விழுக்காடு இந்தியர்கள்.
மலேசிய அரசாங்கமானது இந்தப் புள்ளி விபரங் களை தமக்குச்சாதகமான வகையில்துக்கிப்பிடித்து
மலேசியத் தமிழர்களைக் குற்றவாளிகளாகக் காட்ட
முனைவது அபத்தமானது. எங்கெல்லாம் சமுதாய உரிமைகளும்நீதியும்மறுக்கப்படுகின்றதோ அங்கெல் லாம் இவ்வாறான குற்றச் செயல்கள் தோன்றுவது இயற்கையின் நியதி. குற்றங்களுக்காகத் தனிமனி தனைத் தண்டிப்பதை விட குற்றங்களின் பிறப் பிடங்களை அழித்துவிட வேண்டும் என்ற குறைந்த
இதழ் 27
3.

Xஅரசியல்
பட்ச நாகரிகம் கூட இங்கு குழி தோண்டிப் புதைக்கப்பட்டுள்ளது.
கல்வித்துறையினைப் பொறுத்த மட்டில் கல்வியி லிருந்து இடை விலகிச் செல்கின்ற மாணவர்களில் அநேகர் மலேசியத் தமிழர்களாவர். சிறுபான்மை யினருக்கு எதிரான கல்வித்துறையிலும் தொழில் துறையிலும் காணப்படுகின்ற பாரபட்சம் இதற்கு அடிப்படைக் காரணமாகும். பூமிபுத்திரர்களுக்கான சலுகை' என்பதன் மறுபுறமாக பூமிபுத்திரர் வகைப் பாட்டிற்குள் வராத தமிழரும் சீனரும் அதிகமான பாதிப்புக்குட்பட்டு வருகின்றனர். கல்வி கற்பதற்கான வாய்ப்புகளை மலாயர்களே பெற்றுள்ளதுடன் 99% வீதத்தினர் அரச தொழில்களையும் ஆக்கிரமிப்புச் செய்துள்ளனர். சில உயர் பதவிகள் மலாயாக் காரருக்கு உரியதாகவே இருந்துவருகின்றது.
மலேசியாவில் காலத்திற்கு காலம் பூமிபுத்திரர் களுக்காகக் கொண்டு வரப்படுகின்ற சட்டங்கள் பூமிபுத்திரர்கள் அல்லாத ஏனைய சிறுபான்மை யினரைப் பெருமளவு பாதித்துள்ளது. ஒன்பதாவது மலேசியத் திட்டம் இதனை மேலும் உறுதிப்படுத்து வதாக அமைந்துள்ளது. காணிகளைக் கொள்வனவு செய்தல், மற்றும் வங்கியில் கடன் பெறுதல், அதற்கான வட்டி முதலிய துறைகளில் பூமிபுத்திரர்களான மலாயர்களே அதிகமான லாபத்தைப் பெற்று வருகின் றனர். இந்த நிலை மலேசியத் தமிழர்களை வறுமைக் கோட்டிற்குக் கீழ் இட்டுச் சென்றுள்ளது.
மலேசியாவில் வாழ்ந்து வருகின்ற மக்களின் தமிழர்களே அதிகமான உளவியல்பாதிப்பிற்குட்பட்ட வர்களாகவும் தற்கொலை புரிந்து கொள்கின்ற வர்களாகவும் காணப்படுகின்றனர். அண்மைக்காலப் புள்ளி விபரங்களின்படி 100,000 தமிழர்களில் 21.1வீதமும் 100,000 சீனர்களில் 8.6வீதமும் 100,000 மலாயர்களில் 2.6விதமும் தற்கொலைகள் செய்துக் கொண்டதாக அறியப்பட்டுள்ளன.?
இவ்வகையில் மலேசியத் தமிழர்கள் பல்வேறு விதமான சுரண்டல்களுக்கும் அடக்குமுறைகளுக்கும் உட்பட்டுவருகின்றனர் என்பது யதார்த்தமாகும்.
நாம் செய்ய வேண்டியவை
ஒடுக்குதலுக்கு உட்படும் எந்த மக்கள் பிரிவினரும் அந்த ஒடுக்குமுறைஎந்த வடிவில்இடம்பெறுகின்றதோ அந்த வடிவத்திற்கு எதிராகப் போராட வேண்டியது நியாயமானது என்ற வகையில் மலேசியத் தமிழர்கள் தமது கலாச்சார ஒடுக்குமுறைக்கு எதிராக ஆர்ப்பாட் டங்களை நடாத்தியது முற்போக்கானது. அதே சமயம் அவ்வார்ப்பாட்டங்கள் இந்துத்துவ அடிப்படை வாதத்திற்குள் மூழ்கி விடாமல் இருக்க வேண்டியது முக்கியமானதொன்றாகும் மலேசியாவில் இடம்பெற்ற கலாச்சார ஒடுக்குமுறைக்கெதிரான இந்துமக்களின் போராட்டங்களை இந்தியாவில் இடம்பெற்றுவருகின்ற இந்துத்தீவிரவாத இயக்கங்களின் செயற்பாடுகளுடன் ஒப்பிட்டு நோக்குகின்றபோது அது பல்வேறு அம்சங் களில் குணாம்ச ரீதியான வேறுபாடுகளையும் வர்க்க நலன்களையும் கொண்டிருப்பதனை அவதானிக்கலாம். இந்தியாவில் இடம்பெற்று வருகின்ற இந்துத்துவ
உயிர்நிழல் 0 ஒக்டோபர் - டிசம்பர் 2007

Page 40
வாதிகளின்போராட்டமானது இந்து மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதற்கான முயற்சியாகவே அமைந்து காணப்படுகின்றது.ஆனால் மலேசியாவைப்பொறுத்த மட்டில் தமது உரிமை மீறல்களுக்கெதிராக தமிழர்கள் மேற்கொண்டுள்ள போராட்டம் மலாயர்களுக்கு எதிரா னது அல்ல என்பதையும் வலியுறுத்த வேண்டும். ஒடுக்கும் இனத்திலுள்ள அனைவரும் இன ஒடுக்கலின் மூலமாக நன்மை பெறுவோரல்ல. பெரும்பாலானோர் பொருளாதார சுரண்டல்களுக்கும் ஒடுக்குமுறைக்கும் உட்பட்டுவருகின்றவர்கள்
"அமெரிக்க நீக்ரோ இன விடுதலைப் போராட்டம், அடிமை முறையிலிருந்து விடுபடும் போராட்டங்களிற் தொடங்கி பல்வேறு உரிமைப் போராட்டங்களுடாக வளர்ந்து இன்னும் அமெரிக்க சமுதாயத்தில் நிற வேறுபாடின்றி சமத்துவம் வேண்டி நிற்கும் போராட்ட மாகத் தொடர்கிறது. அமெரிக்காவில் வெள்ளைநிற வெறியும் இன ஒடுக்கலும், அமெரிக்கா ஒரு ஏகாதி பத்திய வல்லரசாகத் தொடரும்வரை ஒழியப் போவதில்லை.நிக்ரோ மக்களதும் அவர்கள் போன்று ஒடுக்கப்பட்ட ஹிஸ்பானிக் (ஸ்பானிய மொழி பேசும் லத்தின் அமெரிக்க) சிறுபான்மையினரும் தொடர்ந்தும் ஒடுக்கப்பட்டனர். இதுவரை மேற்கொள்ளப்பட்ட சில்லறைத் சீர்திருத்தங்கள் பிரச்சினையின் ஆண் வேரைத் தொடத் தவறிவிட்டன. எனவே, அவர்களது இன விடுதலைப்போராட்டம் தொடர்கிறது. அவர்களது நீண்ட கால கலாச்சார வரலாற்று வேறுபாடுகள் அவர்களைத்தனித்தேசிய இனங்களாக அடையாளங் காட்டினாலும் அவர்களது போராட்டம் பிரிவினைப் போராட்டமாக வடிவம் பெற இயலாது. அமெரிக்க நீக்ரோக்களை ஒரு சுதந்திரத்தனிநாடாக்கும் கருத்து சில இயக்கங்களால் 60களில் முன்வைக்கப்பட்டு பெருவாரியான நீக்ரோ இனத்தவர்களால் நிராகரிக் கப்பட்டது. இன்று தென் ஆபிரிக்கா (அசானியா) வில் நடக்கும் விடுதலைப் போராட்டமும் முன்பு எபிம்பாப் வேயில் நடந்ததும் உள்நாட்டில் இருந்த வெள்ளை இன வெறி அதிகாரத்திற்கு எதிரானவை. வெள்ளை இன மக்களும் ஒடுக்கப்பட்ட ஆபிரிக்க மக்களும் பெரும எாவிற்கு ஒரேதேசத்திற்குரிய இயல்புகளை உடையவர்
உயிர்நிழல் 0 ஒக்டோபர் - டிசம்பர் 2007
 

களல்ல. ஆயினும் அந்த நாடுகளின் விடுதலைப் போராட்டங்கள் அங்கு வெவ்வேறு சுதந்திரநாடுகளை உருவாக்குவது தொடர்பானவையல்ல. அங்கே விடுதலைப் போராட்டத்தின் மூல நோக்கம் நிறம், இனம், மொழி, மதம் என்ற வேறுபாடுகளின் அடிப் படையில் ஒருவரை ஒருவர் ஒடுக்க அனுமதியாத ஐக்கியமான சுதந்திர தேசத்தை உருவாக்கு வதாகும்"
அந்த வகையில் மலேசியாவில் இடம்பெற்று வருகின்ற தமிழர்களின் கலாச்சார ஒடுக்குமுறைக் கெதிரான போராட்டமானது ஜனநாயகப்போராட்டமாக முன்னெடுக்கப்படுவதுடன் பின்வரும் அம்சங்களும் இணைக்கப்பட வேண்டுமென்பது காலத்தின் தேவையானது.
மலேசியத்தமிழரின் பாரம்பரியமான பிரதேசங்கள் ஒன்றிணைக்கப்பட்டு சுய நிர்ணய உரிமை அடிப் படையில் முழு அதிகாரங்களும் கொண்ட பூரணமான சுயாட்சி முறை ஒன்று உருவாக்கப்படல் வேண்டும். இப்பிரதேச சுயஆட்சியின் கீழ் அவர்களின் பொருளா தாரம், நிதி நிர்வாகம், மொழி கல்வி போன்ற விடபங்கள் நிர்வகிக்கப்படல் வேண்டும். இனம், தேசியம், மதம் அல்லது மொழி என்பவற்றினால் ஒரே மக்கள் கூட்டத்தில் ஏனையவர்களிடமிருந்து வேறு பட்ட மக்கள் சட்டம் என அவர்கள் கொள்வார் களாயின் அந்த இனம் ஒரு தேசிய இனம் என்று அழைக்கப்படலாம் என அண்மைக்கால சமூகவியல் அறிஞர்கள் எடுத்துக் கூறியுள்ளனர். அந்த வகையில் மலேசியத்தமிழர்கள்தொடர்ச்சியான பிரதேசத்தைக் கொண்டிராமையின்காரணமாகவும் பெரும்பான்மையின மக்களிடையே பேரினவாத கருத்துக்கள் செல்வாக்கு பெற்றுள்ள மக்களிடையே வாழ்ந்துவருகின்றவர்கள் என்ற வகையிலும் மலேசியத் தமிழர்கள் தொடர்பான அரசியல் போராட்டங்களை முன்னெடுப்பதில் நிதானம் தேவை
மலேசியத் தமிழர்களின் இன ஒடுக்குமுறை களுக்கு எதிரான சுயநிர்ணய உரிமைக்கான மக்கள் போராட்டமானது குறுகிய இனவாதமாகவோ ஏனைய இனங்களுக்கு எதிரானதாகவோ அல்லது தனிநபர்
@gig, 27

Page 41
குழு போராட்டங்களாகவோ முன்னெடுக்கப்படாமல் பரந்துபட்ட மக்கள் போராட்டமாக அது அமைய வேண்டும். யாவற்றிற்கும் மேலாக, மலேசியத் தமிழர் களின் சுபீட்சத்திற்கான மக்கள் போராட்டமானது மலேசியாவில் வாழ்ந்து வருகின்ற ஏனைய அடக்கப் பட்ட மக்களின் போராட்டங்களுடனும் முழுத் தேசிய விடுதலைப் போராட்டங்களுடனும் இணைக்கப்படல் காலத்தின் தேவையாக உள்ளது.
இவர்களின் மானுட விடுதலைக்கான பயணத்தில் பல்வேறுபட்ட அடக்கு முறைகளும் தடைகளும் எதிர் பார்க்கப்படுகின்றன. அதேவேளை அவற்றினை மீறி முன்னேறுவதற்கான சாத்தியக் கூறுகளும் காணப் படுகின்றன என்பதும் கவனத்தில் கொள்ளப்படல் வேண்டும். இவற்றினை வீரியத்துடனும் நேர்மையுடனும் முன்னெடுக்கக் கூடிய மக்கள் இயக்கமொன்றினை கட்டியெழுப்புதல் அவசியமானதொன்றாகும்.
இவ்விடத்தில் பிறிதொரு விடயம் குறித்து நோக்கு தல் அவசியமானதாகும். அதாவது கடந்த காலங் களில் மலேசியத் தமிழர்களிடையே எழுந்த மக்கள் இயக்கங்கள் குறித்த பார்வையும் விமர்சனங்களும் முக்கியமாக கவனத்திலெடுக்கப்பட வேண்டும். அவ்வி யக்கங்களின் வெற்றிகள் மட்டுமல்ல தோல்விகள் கூட புதியதோர் மக்கள் இயக்கத்தை கட்டியெழுப்புவதில் ஆதர்சனமாக அமைகின்றன.
மலேசியத்தமிழர் தமது தன்னடையாளங்களையும் கலாச்சார பண்பாட்டு பாரம்பரிய கூறுகளையும் பாது காப்பதற்கான செயற்பாடுகள் அவசியம். இவற்றைப் பாதுகாத்தல் என்பதன் மறுபுறமாக, தமிழர் சமுதாய அமைப்பில் புரையோடிப் போயிருக்கின்ற பிற்போக்குக் கலாச்சாரத்தை முற்றாக மாற்றியமைக்க வேண்டிய சந்தர்ப்பங்களை கவனங் கொள்ளாதுவிடவேண்டிய அவசியமில்லை. தமிழர் தமது பண்பாட்டை முன்னோக் கித் தள்ளக்கூடியநாகரிகமான கலாச்சாரதன்னடை யாளங்களை வளர்ப்பதற்கான போராட்டங்களை முன்னெடுத்தல் வேண்டும்.
மலேசிய அரசாங்கத்தினால் காலத்திற்குக் காலம் கொண்டு வரப்படுகின்ற அபிவிருத்தித் திட்டங்களில் தமிழரின் நலன்களும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கான போராட்டங்களை முன்னெடுத்தல் அவசியமானதாகும். தோட்டங்களி லிருந்து வேலை நீக்கம் செய்யப்பட்டு வெளியேற்றப் பட்ட தொழிலாளர்களுக்கு அவர்களின் தோட்டங் களுக்கு அருகாமையிலே குடியிருப்புத் திட்டங்களை உருவாக்கித் தருவதற்கான முயற்சிகள் மேற்கொள் ளப்பட வேண்டும். குறிப்பாக மலேசியத் தமிழர்கள் அந்நாட்டின் மூன்றாவது தேசிய இனம் என்ற வகையில் அவர்களின் இனத்துவ அடையாளங்களைச் சிதைக்காத வகையில் அத்திட்டங்கள் ஆக்கப்படல் வேண்டும்.
குறைந்தவருமானத்தைப்பெறுகின்றதொழிலாளர் களுக்கான சுகாதார வசதி, வீட்டு வசதி, குழந்தை பராமரிப்பு வசதி என்பன வழங்குவதற்கு அரசை நிர்ப்பந்தித்தல் வேண்டும்.
மலேசியத்தமிழரின்கல்வி உரிமைக்கான போராட் டங்களை முன்னெடுத்தல் அவசியமானதாகும்.
இதழ் 27

Xஅரசியல்
சகலருக்கும் சமத்துவமான கல்வி என்ற அடிப்படைக் கோரிக்கையானது கல்விக்கான உரிமையைப் பெற்றுக்கொடுப்பதாக மட்டுமன்று கல்வியில் தமது மொழியுரிமையையும் வென்றெடுப்பதாக அமைய வேண்டும். அத்துடன் கல்வியின் பெறுபேறு என்பது இன்றைய ஏகாதிபத்திய செயற்பாடுகளுக்கான கூலிப் பட்டாளத்தை உருவாக்குகின்ற நோக்கிலிருந்து விடுபட்டு மானுட மேன்மையை ஏற்படுத்துவதாக அமைதல் வேண்டும்.
மலேசியத் தமிழருக்கும், சீனருக்கும் - மலாயர் களைப் போல அரச தொழில்களில் பங்குபற்று வதற்கான வாய்ப்பை வழங்குவதற்கான கோரிக்கை களை முன்வைத்தல் வேண்டும். சில உயர் பதவிகள் மலாயர்களுக்கு மட்டுமே என்றநிலைமாறிதிறமையின் அடிப்படையில் இப்பதவிகளுக்கு நியமனம் செய்யப் Lu.6üb (36)J60ör(Bub.
மலேசியத் தமிழ்ப் பெண்கள் குறித்து விசேட கவனம் செலுத்தல் வேண்டும். உழைப்புச் சுரண்டல், போசாக்கின்மை முதலியவற்றில் பெண்களின் நிலை மிகவும் பரிதாபகரமாக உள்ளது. மற்றும் இன்று மலேசியாவில் புதியதொரு சந்தையாக வளர்ந்து வருகின்ற பாலியல் தொழிலாளர்களின் உடல் விற்பனை மிகுந்த வேதனைக்குரியதொரு விடயமாக காணப்படுகின்றது. இந்நிலையை மாற்றுவதற்கான செயற்திட்டங்கள் உருவாக்கப்படல் வேண்டும்.
ԱքլԶ6ւյ6ԾՄ
மலேசியாவில் நீதிக்கும் சமத்துவத்துக்குமான போராட்டத்தில் மலேசியத் தோட்டத் தொழிலாளர் களை இனரீதியாகத் தனிமைப்படுத்தி அவர்களின் சமுதாய உணர்வைச் சிதைக்கின்ற முயற்சியில் மலேசிய அரசாங்கமும் ஏகபோக வர்க்கமும் ஓரளவு வெற்றி கண்டுள்ளது எனக் கூறின் தவறாகாது. இந்நிலையில் மலேசியத் தமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்கக் கூடியதோர் மக்கள் இயக்கத்தைக் கட்டியெழுப்புவது தொடர்பாகச் சிந்தித்தல் அவசிய மாகும். இவ்வமைப்பானது தமிழர்களைப் பிரதிநிதித் துவப்படுத்துகின்ற அதே சமயம் அதன் ஜனநாயக சக்திகளைத்தன்னுள் உள்ளடக்கிய அமைப்பாக வளர வேண்டும். அத்துடன் அவ்வமைப்பானது நீண்ட கால தொழிலாள வர்க்க அரசியலைக் கொண்டு முழு மக்களையும் அணிதிரட்டும் நடவடிக்கைகளில் ஈடுபடு வதுடன் அது முழு மக்களின் நலனிலும் அக்கறை கொண்டு செயற்படுதல் முக்கியமானதொரு விடயமாகும்.
மலேசியத் தமிழரின் அபிலாஷைகளப் பூர்த்தி செய்யமுடியாது அரசாங்கத்திற்கு முட்டுக் கொடுத்து பேரம் பேசுகின்ற அரசியல் நடவடிக்கைகளால் எதனையும் (தலைவரையும் அவரை சார்ந்தோரின் குடும்ப நலன்கனையும் தவிர) சாதிக்க முடியாது என் பதை ம. இ. க. வினதும் அதன் தலைவர் டத்தோ சாமிவேலுவினதும் அரசியல் செயற்பாடுகள் எமக்கு எடுத்துக்காட்டுகின்றன.
இது பேரம் பேசும் அரசியலுக்கும் அதன் தலை வருக்கும் கிடைத்த தோல்வியாகும்.
உயிர்நிழல் 0 ஒக்டோபர்-டிசம்பர் 2007

Page 42
அரசியல்)
இவ்வாறானதோர் சூழல் புதியதலைமைத்துவத்திற் இப்பின்னணியில் உருவாகின்ற ஸ்தாபனம் ஒன்றின் மூ போராட்டத்தை சரியான திசையில் கொண்டுசெல்ல மு
அடிக்குறிப்புகள்:
1. மலேசியாவில் இந்துக்கள் புறக்கணிக்கப்படவில்லை. பொ தினக்குரல் 09.12.2007 2. மார்க்ஸ் கார்ல், ஏங்கல்ஸ் பிரெடரிக் - இந்தியாவைப் பற்றி 3. மோகன்ராஜ் (1984) - இருபதாம் நூற்றாண்டின் நவீன அடிை சென்னை, பக். 70-71.
4. ஆறுமுகம்.கா (2006) - மார்ச் 08 - செம்பருத்தி பதிப்பகம், ( 5. காத்தையா ஜிவி (2007 பெப்ரவரி) - 'தமிழ்ப்பள்ளி மெல்ல இருப்பவர்களால்' - செம்பருத்தி இதழ் (கோலாம்பூர்) பக்.08.
6. அதே கட்டுரை பக்.08 7. அதே கட்டுரை பக். 7b Disanayake J.B. (2002) “A Language at the Cross Roads: The case in Sinh 8. வரதராசு, மு. - எங்கே என் பங்கு - தோட்டத் தொழிலாளர்களி 9. கந்தையா ஜீவி (2006) - மலேசிய தொழிற்சங்க போராட் செம்பருத்தி இதழ் (பெப்ரவரி) பக். 36.
10. வரதராசு. மு. மேற்படி நூல் பக்.35 11. கந்தையா ஜீவி (2006) - பூமிபுத்திராக்களின் நிறுவன பங் விழுக்காடா அல்லது 36.64 விழுக்காடா? எது சரி- செம்பருத்தி இ
12. அதே கட்டுரை பக். 20. 13. இமயவரம்பன் (1988) - இன ஒடுக்கலும் விடுதலைப் போராட் பக். 22, 23.
உயிர்நிழல் 0 ஒக்டோபர் - டிசம்பர் 2007 4.
 

கான தேவையை தமிழர் மத்தியில் உருவாக்கியுள்ளது. லம் மலேசிய தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான Ձեւյլb.
துப்பணித்துறை அமைச்சர் சாமிவேலு கூறுகிறார்.
- நியூசெஞ்சரி புக் ஹவுஸ் சென்னை. மத்தனம் (மலையக மக்களின் வரலாறு) - ஈழம் ஆய்வு நிறுவனம்,
காலாம்பூர், பக். 85. மடியவில்லை, திட்டமிட்டுக் கொல்லப்படுகின்றது. ஆட்சியில்
ala - C.W.W. Kanangara memoriallecture, N.I.E. Maharagama p.11. ன் தொடரும் பிரச்சனைகள் - மீடியா பிரிண்டர்ஸ். சென்னை, பக். 32 டத்தின் வரலாறு, அரசியல், சமூகவியல் ஒரு கண்ணோட்டம் -
குடமை 18.9 விழுக்காடா? அல்லது 45 விழுக்காடா? அல்லது 50 தழ் (டிசம்பர்), கோலாலம்பூர். பக்.14.
டமும், புதிய பூமி வெளியீட்டகம், சவுத் ஏசியன் புக்ஸ், சென்னை.
இதழ் 27

Page 43
மழைநீர் வியாபாரி வானத்தைச் சுற்றியமர்ந்திருக்கிறான்
கடல் பரப்பில் ஹூர்வீன்கள் வேதமோதி நடக்கவும் நீர் ஆவியாகின்
பிறகு மாவாகின பிறகு கண்களாகியும்
அந்த ஈரநீர்
இறகு வளர்த்து அறைகள் சுற்றிலும் குழுமை பூசி ஹர்ேலீன்களோடு வரும்
வெப்பத்தைத் தழுவியவர்கள் பனிக்காயங்களோடு படுத்திருக்க உடல் சுற்றிலும் குழுமை பூசி ஹர்வீன்களோடு வரும்
மயங்கி கண்களாகியும் நடுங்கி கைகளிலும் கரைந்து தாவரங்களை எழு
முன்னர் வளராமலும், பழுக்காமலுமிருந்த தாவர அருந்தின பால் நீரின் முலையில்
பதுங்கிப் பார்ப்பதற்கும் நீரின் முலையில் பால் அருந்துவதற்கும் காத்திருந்தன வீட்டுக்குள்ளிருக்கும் மரங்கள்
தலைமுடி அலங்கரித்து
வெளியே வருவதற்குள் வானம் காய்ந்துவிடும் முலையும் வறண்டுவிடும்
 

ஒப்பும்
|ங்கள்
(கவிதை
- சைால்
நீ இறங்கினால் ஆத்துக்குள் நீர் அதிக முலைகளைக் காட்டுகிறது நான் இறங்கினால் ஆத்துக்குள் மீன் மூலைகளைக் கடித்து விளையாடுகிறது
மீனவனுக்கு விலையில் கறியில்லை மழை விடட்டுமென்று காத்திருக்கிறான்
அதனூடாக அதனூடாக வாழ்வின் கிழிந்த வலையினைக் கட்டி
உயிர்நிழல் 9 ஒக்டோபர் டிசம்பர் 2007

Page 44
: ... .
பாம்புகள் வாழும் ஒரு புளியமரத்தில் உயிரற்று நீளும் பழங்கள்
புளியமரத்தின் கீழ் நிற்பதற்குப் HIJF
எத்தனை விரல்கள் கிளைகளில் பிடித்துவைத்திருக்கும் பொல்லு
என்னையும் தாக்கி கிளையிலே வைத்துவிடும்
தோல்வேறு சுதைவேறாகும் வித்தையாடும் பறவையும் அதில் சுட்டிநின்று புதினம் பார்ப்போர் அதிகம்
அந்த புளியமரத்தடியில் சுடப்பட்டு அவன் இறந்து கிடக்கிறான்
கண்களால் முறண்டுபிடித்துப் பார்க்கும் கிளைகளால் இறங்கிவரும் பாம்பு அல்லது புளிய
திருடனைப்போல், திருடுவதுபோல் கண்ணாடிப் பாத்திரங்கள் கீழே விழுந்து வீட்டுக்காரன் கண் விழிக்காமல் திருடவேண்டும் சதையை இரத்தத்தை என்று:கற்றத்தரும் பறவையது
தோலொருக்குகை பயணிகளில்லாத ரெயில்ப் பெட்டி
சிறு பூச்சிகளோடு பிச்சைக்காரனும் பாதுகாப்பிற்கா
வாழுமிடம்
ஏர் கர்ப்பிஜி னைவி மடிநிறைய பாம்புகளை வைத்திருக்கிறாள் கொஞ்சமும் பயமில்லாமல் கொஞ்சமும் நினைத்தால் வாளிபோட்டு அள்ளலாம் வாய்க்குள் உமிழ்நீர்
உயிர்நிழல்) ஒக்டோபர் டிசம்பர் 2007
 


Page 45
ബ്സ്കിuff
வெண்கட்டியைக் கையிலெடுத்தேன் சுவரில் ஒட்டியிருந்த கரும்பலகை விழுந்தது துண்டு துண்டாக பிரிந்தது
உண்பபும்போது தமிழ் எழுத்துக்களும், கணித எழுத்துக்களும் சிந்தின நிலமெங்கும்
அத்தனையெழுத்துக்களையும் எடுத்து வாக்கியங்களும், கனக்கும்
= அமைத்துக் காட்டச் சொன்னாள் வாத்தியர்
விடிந்தாலும் நான் பாடசாலையில் வெண்கட்டியைக் கையிலெடுப்பேன்
- அவருக்கு பலகையுடைந்தது பற்றி
பரவாயில்லை சட்டைப் பைக்குள்ளொருதுண்டு அது வடைவாங்கிய மீதிக் காசு சிகரெட்டு வாங்குவேன் என்பார்
என் பாடசாலைக்கு வாத்தியார் வரும் வாகனத்தை அந்த மர நிழலில் வைப்பர் இலை விழுந்தாலும் கண்ணாடியுடையும் காற்றடித்தால் இருக்கை கிளம்பும்
யாரோ முதல் சம்பளத்தில் வாங்கியதை இவர் முதல் சம்பளத்தில் வாங்கியிருக்கிறாள் வீட்டுச் சமையல் வேலைக்கு தண்ணிக்குடம் அவருக்கு அது பரவாயில்லை
 
 

(கவிதை
ബ്ബീർീ
- staff.
串5 உயிர்நிழல் L ஒக்டோபர் - டிசம்பர் 2:

Page 46
அதிகமான் நாட்கள் நாங்கள் பேசியிருக்கமாட்டோம்
வீட்டில்
தொலைபேசிக்கட்டணம் அதிகம் தொடர்ந்த துண்டிக்கப்பட்ட தொலைபேசியை தாக்கி
அத அடைத்துவந்த அறைக்குள் வைத்துவிட்ே
இேடைவெளி நிரப்புக? என்ற சொல்லை என்னாலும் மறக்க முடியாதுஇதைத்தான் நீ கடைசியாகப் பேசிவிட்டுப்போனா
பஸ்ஸில் போகும்போது: அடையாள அட்டை தவறியதாகச் சொன்னாய் நான் நினைக்கிறேன் இலேசில் நீ வீடுபோய் சேர்ந்திருக்க முடியாது
என் வீட்டு தென்னை மரத்திற்குக் கீழ் இப்போது யாருடனும் நான் அமர்ந்திருப்பதில்லை என்பதையும் உனக்கு அறிவிக்க எண்ணியிருந்தேன்
ETE g
அருந்துவதற்காக வந்த தேநீர்
சுடுகிறதென்று:சொல்லி
கதிரையில் இருந்தவாறு கீழே வைத்தோம் ; கோப்பையில் தேங்காய் விழுந்து
தேநீரைக்குடிகுடியென குடித்துவிட்டு تی
எழுந்த நடந்து சென்றது
ஒரு மனிதன்போல் 是
பத்தில் ஒக்டேர் டிசம்பர் 20 4
 

ன் வீட்டு தன்னை மரத்திற்குக் கீழ் இப்போது யாருடனும்= ான்அமர்ந்திருப்பதில்லை ன்பதையும்
:னக்கு அறிவிக்க எண்ணியிருந்தேன்
அவன்தான் தேங்காய் மனிதன் என்றாய் நான் அவன்தான் தேங்காய் மடையன் என்றேன் சித்துக் காண்டு அதன் பிறகு பேசமுடியாமல் போனது அதனால் நாணின்னும்
இந்:

Page 47
அலன் கிறீன்ஸ்பான் 11.08. 1987 - 31. 01. 2006 வரை அமெரிக்க மத்திய பெடரல் சேமிப்பின் தலைவராக கடமையாற்றியவர். "எண்ணெய் சிந்திய இரத்தம்' என்பது இவர் வெளியிட்ட கருத்தே. ஈராக் போர் எண்ணெய்க்காகத்தான் என்பதை இவர் மிகத் தெளிவாக உறுதிப்படுத்தியுள்ளார். புஷ் நிர்வாகம் 2003இல் மிகத் துரிதமாக செயல்படத் தொடங்கியது. ஐ.நா.சபையைநிர்ப்பந்தித்துஉலக வங்கி-சர்வதேச நாணய நிதியங்களின் அனுசரணையுடன் ஐ. நா. சபையின் பாதுகாப்பு கவுன்சிலின் 1483ம் சரத்தை அமுல்படுத்தியது. இதன்பிரகாரம் சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஈராக் எண்ணெய்க்கான பணம் ஈராக்கின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு மாற்றப் பட்டது. இந்த நிதியை மேற்பார்வை செய்தவர்கள் போல் பிறீமர் மற்றும் சர்வதேச நாணய நிதிய கணக் காளர்கள். அமெரிக்கா செய்யும் ஒவ்வொரு துளி அபி விருத்திக்கும், அமெரிக்கா அளிக்கும் உணவுக்கும், கேளிக்கைகளுக்கும், இந்த எண்ணெய் விற்ற பணம் மேற்கூறிய கணக்காளர்களால் வாரி வழங்கப்பட்டன. இவற்றுடன் அமெரிக்க ஏற்றுமதி - இறக்குமதி வங்கி (Exim) வழங்கிய கடன்களுக்கும், வட்டிகளாக இந்த பணம் மீளக் கட்டப்பட்டது. தனியார் வங்கிகள் இதர நாட்டு வங்கிகள் என்பன ஈராக்கின் நிலைமை காரணமாக கொடுக்கப் பயந்த கடன்களை, Extm ஈராக்கில் தனது உப முகவர்கள் மூலமாக வழங்கி வருகின்றது. இந்த உப முகவர்களைத் தேர்வு செய்தவர்கள் எண்ணெய் விற்பனை முதலைகளான பெக்டெல், ஹலிபேட்டன் ஆகியோர். மற்றொரு உய சரத்தின் பிரகாரம் எண்ணெய் மூலம் ஈராக் பெறும் வருமானம், தனியார்நிறுவனங்கள் கொடுக்கும் கடன்களுக்காகவும், சேவைகளுக்காகவும் இந்த நிறுவனங்களுக்கு கொடுக்கப்படும் என்று அமெரிக்க அரசினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் ஈராக்கில் உள்ள அமெரிக்கநிறுவனங்களது நிதிகளும், முதலீடுகளும் பாதுகாக்கப்படுகின்றன.
இதழ் 27
 

47
ஈராக் எண்ணெய்க் கிடங்குகள் அமெரிக்கநிறுவனங் களின் கைகளில் உள்ளன. இந்த எண்ணெய் உற்பத் தியில் ஈராக்கியர் சிந்திய இரத்தங்கள் அமெரிக்க பணக்களஞ்சியத்தை நிரப்புகின்றன.
அலன் தனது பொருளாதாரக் கொள்கையில் தொடர்ச்சியாக, இடைவிடாத பொருளாதார வளர்ச்சி அமெரிக்காவுக்கு அவசியம் எனத் தெரிவித்தார்.அதன் வெளிப்பாடே ஈராக் போர். ஜேர்மனி இரண்டாகப் பிரிந்தி ருந்தபொழுது கிழக்கு ஜேர்மனி பொருளாதாரத்தில் மிகவும் முன்னேறியிருந்தது. கிழக்கு 75 சதவீத பொருளாதாரத்தையும், மேற்கு 25 சதவீத பொருளா தாரத்தையும் கொண்டிருந்தன. கிழக்கின் வளத்தை சோவியத் யூனியன் அனுபவித்தது. உடைவின் பின்னர் அது அமெரிக்காவுக்குச் சாதகமாகியது. இதுபோன்ற நிலை சீனாவிலும் ஏற்படலாம். அங்கும் கம்யூனிசம்
வெகுவிரைவில் முற்றாக உடைக்கப்படும்.
1985 செப்டம்பர் மாதத்திலிருந்து சவூதி அரேபியா, இங்கிலாந்திற்கு ஆறு இலட்சம் பீப்பாக்கள் சுத்தி கரிக்கப்டாத எண்ணெயை ஒவ்வொரு நாளும் வழங்குகின்றது. இங்கிலாந்து போர் விமானங்கள், இராணுவ தளபாடங்கள் மற்றும் பொருட்களையும் வழங்கும் என்றும் அதற்குப் பிரதியீடாக சவூதி எண் ணெயை வழங்கும் என்று 1985இல்தட்சர் அம்மையாரின் ஆட்சியின் போது, சவூதி அரச குடும்பத்தினருக்கும், இங்கிலாந்துக்கும் நீண்ட கால ஒப்பந்தம் கைச்சாத் திடப்பட்டது. இந்த ஒப்பந்தத்திற்கு மிகவும் ஆச்சரியப் படக்கூடிய விசித்திரமான பெயர் சூட்டப்பட்டுள்ளது. &Al-Yamamah) (இது புறாவிற்கான அரபுச் சொல்.நற் செய்தி கொண்டு வருபவர் அல்லது அமைதித் துாதர் எனப் பொருள்படும்) புறா என்பதும் சரியான பதமே. புறா அமைதியின் சின்னம். பிஏஈ, பிபீ. றோயல் டச் ஷெல், லஸாட் வங்கி, ஹொங்கொங் ஷங்காய் கூட்டுறவு வங்கி (முன்னைய பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பெனி), கார்லில் க்றுாப் போன்ற நிறுவனங்களுக்கு சுமார் 80-160 பில்லியன் டாலர்கள்வரை வருமானம்
உயிர்நிழல் 0 ஒக்டோபர் - டிசம்பர் 2007

Page 48
அரசியல் >
கிடைக்கும். இது உலகமயமாதலில் எண்ணெய் - துப்பாக்கிவியாபாரத்துக்கு சிறந்த உதாரணம் எனக் கூறலாம். சுவூதி இளவரசர் மாண்பிமிகு பண்டார் பின் சுல்தான் இந்த ஒப்பந்தத்தின் சூத்திரதாரி. சுமார் 160 பில்லியன் டாலர்கள் எண்ணெய் சர்வதேச சந்தையில் மேற் கூறிய நிறுவனங்ககளால் 2006ம் ஆண்டுவரை விற்கப்பட்டுள்ளன. இதன் 40 சதவீத லாபத்தில், சவூதி க்கு கிடைத்த இராணுவ உதவி 40 பில்லியன் டாலர் கள். இளவரசர் பெற்ற தரகுப்பணம் சுமார் 2பில்லியன் டாலர்கள். மிகுதிப் பணத்தில் அமெரிக்க கறுப்புச் சந்தையில் பெறப்பட்ட ஆயுதங்கள் ஆபிரிக்க, ஆசிய
நாட்டு போராளிகளுக்கும் (அமெரிக்க ஆங்கில இலக்கணத்தில் இதன் பொருள் பயங்கரவாதிகள்) அரசுகளுக்கும் விற்கப்பட்டன.
2000 ம் ஆண்டில் & அமெரிக்க பிரித்தானிய படைகளை தனியார் மயப்படுத்தல்) மகாநாடு டிக் செனியால் கூட்டப்பட்டது. அச் சமயம் செனி பிரபல ஹலிபேட்டன் எண்ணெய் நிறுவனத் தலைவராகவும், நிறைவேற்று அதிபராகவும் கடமையாற்றினார். இந்த மகாநாட்டை நடத்த உதவி புரிந்தவர்கள் ரான்ட் கூட்டுத்தாபனம். ஜோர்ஜ் டபிள்யு புஷ் (தந்தை) சி. ஐ. ஏ.யின் தலைவராக வரக் காரணமாக இருந்தவர் டிக்
உயிர்நிழல் 0 ஒக்டோபர் - டிசம்பர் 2007 4
 

செனி. பின்னாளில் (1989-1993) அமெரிக்க பாதுகாப்பு அமைச்சராகவும் கடமையாற்றினார். 2000ம் ஆண்டிலிருந்து அமெரிக்க உதவி அதிபராக கடமை யாற்றுகின்ற்ார்.
சித்திரை 2000இல் பிரித்தானியாவின் பாதுகாப்பு மதிப்பீட்டு ஆராய்ச்சி நிறுவனம் தனியார் மயப்படுத் தப்பட்டது. 24.01.2001இல் ஹலிபேட்டன் நிறுவனத் துக்கு சுமார் 600 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள பாரிய இராணுவ வாகனங்களுக்கான உடன்படிக்கை வழங்கப்பட்டது. குவினெட்டிக் (QuinetiQ) என்னும் பிரித்தானியபாதுகாப்பு தொழில்நுட்பக் கம்பெனிக்கு
யூலை 2001இல் மற்றொரு இராணுவத் தளபாட ஒப்பந்தம் வழங்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் 34 விகித பங்குகளை புஷ் குடும்பத்தின் மற்றொரு நிறுவனமான கார்லில் க்றுாப் வைத்திருந்தது. இதன் அதிபராக முன்னாள்பிரித்தானியபிரதமர் ஜோன் மேஜர் 2002இல் இருந்து 2005 வரை கடமையாற்றினார்.
ஈராக் போரின் சூத்திரதாரிகள் டிக் செனி, அலன் கீறீன்ஸ்பான் ஆகியோர். மற்றும் ஹலிபேட்டன்கார்லில் க்றுாப் என்பவற்றின் ஆலோசகர்களாகவும், அதிகாரிகளாகவும் பின்வரும் அரசியல் அதிகாரிகள் கடமையாற்றியுள்ளனர்.
இதழ் 27

Page 49
ஜேம்ஸ் பேக்கர், ஜோர்ஜ். எச்.டபிள்யூ.புஷ், ஜோர்ஜ். டபிள்யூ. புஷ், ஃபிராங்க் சி. கார்லுச்சி (முன்னாள் ஐ. நா. பாதுகாப்புச் செயலர் (19871991), லியூ ஹொங் ரூ (சீன பாதுகாவல்கள் சீர்படுத்தும் சபையின் தலைவர்), ஜோன் மேஜர் (முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர், காரலில்ஐரோப்பாவின் தலைவர் (2002-2005), ஃபிராங்க் மக்கென்னா (ஐக்கிய நாடுகளின் கனேடியத் துாதுவர், கார்லிலின் கனேடியப் பரிவு ஆலோசனைச் சபையின் முன்னாள் அங்கத்தவர்), அாக் மக்லாஹ்ட்டி (பில் கிளின்ரன் ஜனாதிபதிக் காலத்தில் வெள்ளை மாளிகையின் உத்தியோகத்தர்களின் தலைவர்), ஃபிடெல் வி. ராமோஸ் (பிலிப்பைனின் முன்னாள் ஜனாதிபதி, கார்லிலின் ஆசிய ஆலோசனைச் சபையின் அங்கத்தவர், 2004இல் d60) g560). செய்யப்படும்வரை), அனந்த பண்யரஷன் (முன் னாள் தாய்லாந்து பிரதமர், கார்லிலின் ஆசிய ஆலோசனைச் சபையின் அங்கத்தவர், 2004இல் சபை தடைசெய்யப்படும்வரை), தக்சின் வழினா வத்ரா (தாய்லாந்தின் பழைய பிரதமர்), லூயிஸ் ரெலே குவென்ஸ்லர் (மெக்சிக்கன் பொருளாதார வியல்நிபுணர்)
ஈராக் குவைத்தைப் பிடித்தபொழுது குவைத்தை நாசப்படுத்தியதற்காக சுமார் 27 பில் லியன் டாலர்கள் நட்ட ஈடாக குவைத்துக்கு கொடுக்க வேண்டும் என அமெரிக்காவின் புஷ் அரசு அறிவித்தது. இதனைச் சேகரிக்க அமெ ரிக்காகார்லில் க்றுாப்பையேநியமித்தது.9/11க்குப் பின்னால் இந்த நிறுவனம் பல அரச ஒப்பந்தங் களைப் பெற்றுக் கொண்டது. ஐக்கிய அமெரிக்க புலனாய்வுச் சேவைகள் USS என்ற நிறுவனம் அமெரிக்க அரச தொழிலாளர்களின் பின்புலம், அடையாளம் போன்ற பாதுகாப்பு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிறுவனத்தின் முழுப் பங்குதாரர் கார்லில் ஆகும். அந்திராக்ஸ் மருந்தால் பாதிக்கப்பட்ட வாஷிங்டனில் உள்ள ஹாட் செனட் கட்டிடத்தை துப்பரவு செய்யும் பணி இந்த நிறுவ னத்துக்கே வழங்கப்பட்டது. இவற்றுடன் பாதுகாப்பை பலப்படுத்தும் பல ஒப்பந்தங்களை இந்த நிறுவனம் பெற்றுக் கொண்டது.
இந்தநிறுவனம் சவூதி அரசகுடும்பத்தின்பணத்தை அமெரிக்காவில் முதலீடு செய்தது. அதுமாத்திரமல்ல, சவூதியின் பிரபல பின்லாடன் க்றுாப் 5 பில்லியன் முத லீடு கொண்ட பிரமாண்டமான கட்டிட நிர்மாணக்கம்பனி அமெரிக்காவில் முதலீடு செய்தது.
ஹலிபேட்டன் பல தவறுகளை இழைத்துள்ளது. உதாரணமாக,
1. ஈராக்கில் உள்ள அமெரிக்கப் படைகளுக்கு உணவு, எண்ணெய், வீடு, போக்குவரத்து போன்றன வற்றை ஏற்பாடு செய்வதற்காக சுமார் 8 பில்லியன் டாலர்கள் ஒப்பந்தம் வழங்கப்பட்டது. இதனைச் சரியாகச் செய்யாததுடன், சுமார் 40 வீதம் அதிக மாகவும் பெற்றுள்ளது. 42,000 உணவுப் பொதிகள்
இதழ் 27
49
 

g sigdui
வழங்கியதாக அரசிடம் பணம் பெற்ற நிறுவனம், வெறும் 14,000 பொதிகளையே வழங்கியுள்ளது.
2. ஈராக்கில் உற்பத்தியாகும் சோடா (24 போத் தல்கள்) 45 டாலர்கள் ஒரு பெட்டிக்கு அறவிட்டுள்ளது. ஒரு சலவைப் பை கழுவுவதற்கு 100 டாலர்கள் அறவிட்டுள்ளது. ஆனால் அங்கு வேலை செய்யும் தொழிலாளிகளுக்கு வெறும் 50 சதங்களையே ஒரு மணித்தியாலத்திற்கு வழங்கியுள்ளது.
3. சுமார் 85,000 ட்ரக்குகள் செயலிலந்துள்ளன. 4. துருக்கி, பிலிப்பைன் தொழிலாளர்களுக்கு எச்சில் பண்டங்களை உணவாக வழங்கியுள்ளது.
5. ஈராக்கின் வடபகுதியில் இருந்து ஏற்றுமதி யாகும் எண்ணெயின் அளவு பெருமளவு குறைந் துள்ளது. எண்ணெய்க் கிடங்குகள் அனுமதியற்ற இடங்களில் பிழையான முறையில் தோண்டி யுள்ளார்கள். ஒரு நாளைக்கு எண்ணெய் ஏற்றுமதி 5 மில்லியன் டாலர்கள் இதனால் ஈராக்குக்கு நட்டம். அப்படியிருந்தும் அமெரிக்கா தொடர்ச்சியாக இவர்களுக்குப்பணத்தை வழங்கியுள்ளது.
6. ஹலிபேட்டன் 1998இல் 302 மில்லியன் டாலர் களை கம்பனி வரியாகச் செலுத்தி பின் 1999இல் 8.5 மில்லியன் டாலர்களை மீளப்பெற்றுள்ளது.
அங்கோலா பெற்றோலியமும், வைரங்களும் நிறைந்த ஆபிரிக்க நாடு. நீண்ட கால உள் நாட்டு யுத்தத்தால்நாடுவறுமையில் வாடுகின்றது. இங்கு கூட
உயிர்நிழல் 0 ஒக்டோபர் - டிசம்பர் 2007

Page 50
அரசியல் >
புஸ் விட்டு வைக்கவில்லை. இங்கும் இரத்த ஆறை ஒட வைக்கும் அங்கோலா அரசுக்கு சுமார் 750 மில்லியன் டொலர்கள் எண்ணெய் பணத்திற்கு, ஆயுதங்களை வழங்கியுள்ளது. அங்கோலா அதிபரின் மனைவி சோனியா (முன்னால் பொலிவியா அழகி), புஸ்ஸின் தேர்தலுக்கு பணம் வழங்கியுள்ளார். அங்கோலா அரசுக்கும் செனியின் ஹலிபேட்டன் மற்றும் அதன் உப கம்பனி பிரவுண்-ரூட்க்கும் தொடர்புகள் உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதே அங்கோலா ஆயுதங்களைப் பெறுவதற்காக சீனாவிற்கு எண்ணெய் ஏற்றுமதி செய்கின்றது இதே போல்தான் இந்தோனேசியாவும் எண்ணெயைக் கொடுத்து ஆயுதங்களைப் பெறுகின்றது.
மத்திய ஆபிரிக்க நாடான சாட்டில் எண்ணெய்க் கிணறுகள் தோண்டுவதற்காக உலகவங்கி 3.7 மில்லியன் டாலர்களை வழங்கியது. அமெரிக்க நிறுவனங்களான எக்ஸொன் மொபைல், ஷெவ்ரொன் ஆகியவை எண்ணெயை கமரூன் ஊடாக மற்றைய நாடுகளுக்குக் கொண்டு செல்கின்றன. எண்ணெய் வருமானத்தை சாட் அதிபர் இட்ரிஸ் டெபி ஆயுதங்கள் வாங்குவதற்காகவே செலவிடுகின்றார்.
சூடானின் வருமானத்தில் 40 வீதம் எண்ணெய் வியாபாரத்தினால் பெறப்படு கின்றது. இதில் சுமார் 60 வீதத்தை ஆயுதங்கள் வாங்க செலவிடுகின்றனர். சூடான்,கொங்கோ, எகிப்து போன்ற நாடுகள் எண்ணெயை கொடுத்து சீன ஆயுதங்களைப் பெறுகின்றனர். மொரித்
உயிர்நிழல் 0 ஒக்டோபர் - டிசம்பர் 2007 t
 
 

தானியா, அல்ஜீரியா, சிம்பாப்வே போன்ற நாடுகளிலும் சீன ஆயுதங்களைக் காணலாம்.
வெனிசுலாவின் புகழ் பெற்ற ஜனாதி பதி ஹியூகோ ஷவேஸ் உடன் சீனாவும், வடகொரியாவும் எண்ணெய்-ஆயுத பேரம் பேசுகின்றன. இது சீனா, வட கொரியா, வெனிசுலா, கியூபா போன்ற நாடுகள் ஐக்கியமாகி மீண்டுமொரு இடது - வலது போரை வெளிப்படுத்தலாம் என ஐயப் படுகின்றனர் மேற்கத்தைய இராஜ தந்திரிகள்.
2006சித்திரையில்ரஷ்யாவும், பர்மாவும் எண்ணெய் - ஆயுத ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.
பிரான்ஸ் நாடானது சவூதி குவைத், சிரியா போன்றநாடுகளில் இருந்து இறக்கு மதியாகும் எண்ணெய்க்கு மாற்றீடாக ஆயுதங்களை வழங்குகின்றது. பிரான்ஸ் ஆயுத ஏற்றுமதியில் மூன்றாம் இடத்தில் உள்ளது. முதலாவது இடம் அமெரிக்கா வுக் கே. சுமார் 50க்கு மேற்பட்ட நாடு களுக்கு பிரான்ஸ் ஆயுத ஏற்றுமதி செய்கின்றது. இந்தியா, பாகிஸ்தான், அங்கோலா போன்ற நாடுகள் போட்டி போட்டுக் கொண்டு ஆயதங்கள் வாங்குகின்றன. சீனா ஆயுத உற்பத்தியில் முன் நிற்கின்றது. மிகக் குறைந்த விலையில் நல்ல ஆயுதங்களை வாங்கலாம் என்ற பெயரும் சீனாவிற்குண்டு.
இன்று அபிவிருத்தியடைந்தநாடுகள் அனைத்தும், மூன்றாம் உலக நாட்டு மக்களின் சதைக்கும், இரத்தத்துக்குமாக அலைகின்றார்கள். புஷ், பிளேயர் எனத் தொடரும் பட்டியல் வாசிகள் துப்பாக்கியை கொடுத்து பணம் சம்பாதிக்கின்றார்கள். எண்ணெய்ப் பணத்துக்காக பல்வேறு தில்லு முல்லுகளைச் செய்கின்றார்கள். இவர்களைத் தான் உலக மக்கள் தெய்வமாக பூசிக்கின்றார்கள்.
O இதழ் 27

Page 51
Guati GGEDGJádána fELOTei BLITGus Slug Guio
ஹிர்ஸி அலி:
இவர் 1969ம் ஆண்டு நவம்பர் 13ம் திகதி சோமாலியாவில் பிறந்து பின்னர் சிறு வயதிலேயே சவுதி அரேபியா, கென்யா போன்றநாடுகளில் வாழ்ந்து பின்னர் 1992ம் ஆண்டில் நெதர்லாந்தில் தஞ்சம் கோரி இருந்தார். இவர் ஒரு சர்ச்சைக்குரிய எழுத்தாளர், அரசியல்வாதி, பெண்ணியவாதி. இவர் பின்னர் ஜனநாயகத்துக்கும் சுதந்திரத் துக்குமான மக்கள் கட்சியில் அங்கத் தவராக இருந்தார். இவர் 2003-2006வரை பாராளுமன்ற அங்கத்தவராக இருந்து பினனர் இவரது டச்சுப்பிரஜா உரிமைமீது கேள்வி எழுப்பப்பட்டதால் எழுந்த சர்ச்சையால் இவர் பாராளுமன்ற பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். திரைப்பட இயக்குனர் தேயோவான்கோ 2004இல் கொல்லப்பட்போது அவருடன் இணைந்து திரைப்படத்தில் பணி புரிந்தமைக்காக இவருக்கும் கொலை :
இதழ் 27 5.
 
 
 
 
 
 
 
 
 

Q Efshgi
l, LIGOLLITGdassif
8ז60חפו
அச்சுறுத்தல் விடப்பட்டது. அதைத் தொடர்ந்து டச்சு அரசாங்கம் பாதுகாப்பு வழங்கியது.
பின்னர் இவர் சிறிது காலம் அமெரிக்காவில் தங்கியிருந்தார். ஆனால் அங்கு தங்கியிருக்கும் அவருக்குப் பாதுகாப்பு வழங்குவதில் சிக்கல்கள் இருப்பதாக டச்சு அரசாங்கம் அறிவித்ததைத் தொடர்ந்து அவர் கடந்த ஒக்ரோபர் மாதம் மீண்டும் நெதர்லாந்தில்வந்து இருக்கின்றார். தற்போது சிமோன் திபோவுவா விருது பெறுவதற்காக ஜனவரி மாதம் பிரான்சிற்கு வந்திருந்த வேளையில் ஐரோப்பிய ஒன்றியத்திடம் இவரது பாதுகாப்புக்கான செலவுகளைக் கோரி பிரான்சில் உள்ள அமைச்சர்களிடம் உயர்மட்ட அதிகாரி களிடமும் கோரியுள்ளார். இடதுசாரிக் கருத்தியல்களுக்கு ஆதரவான படைப் பாளிகள் இவரது கோரிக்கையை தீவிரமான கவனத்திற்கெடுக்க வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.
உயிர்நிழல் 0 ஒக்டோபர் - டிசம்பர் 2007

Page 52
விருது X)
தஸ்லிமா நஸ்ரி 1962ம் ஆண் பெண்ணியவாதி
256Ꮘ)6u ᎥᏝ600ᏁᎠ6Ꭰ! வெளியேறியதி வெளியிட்ட 'லஜ் செய்யப்பட்ட 1 மேற்கொள்ள தலைமறைவு வ கல்கத்தாவில் கலவரங்களினா இவர் புதுடில்லியி தகவல்கள் தெ மோசமானதும் சயசரிதையின் நூலை வெளியி அதேசமயம் விருது பற்றிக் கு செல்வதற்கான என்றும் தன்னு குறிப்பிட்டார்.
ஜனவரி 9ம்த நஸ்ரினின் வெ சான்றிதழை அ அந்த விழாவுக்க உரை மிகுந்த வ
உயிர்நிழல் 0 ஒக்டோபர் - டிசம்பர் 2007
 
 
 

6OT: ாடு ஒகஸ்ட் 25ம் திகதி பிறந்த தஸ்லிமா நஸ்ரின் ஒரு , எழுத்தாளர், கவிஞர், பத்திரிகையாளர். இவர் தனது வாழ்க்கையை 1994இல் பங்களாதேவுை விட்டு ல் இருந்து ஆரம்பித்ததார். இவர் 1993இல் எழுதி ஜ்ஜா நாவலானது மிகுந்த சர்ச்சைக்குள்ளாகி தடை பிற்பாடு அவர் தனது தலைமறைவு வாழ்க்கையை வேண்டியாயிற்று. கிட்டத்தட்ட 13 வருடங்களாக பாழ்க்கையை மேற்கொண்டிருக்கும் இவர், தற்போது இருந்து இவரை வெளியேற்றும்படி ஏற்படுத்தப்பட்ட ால் மீண்டும் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றார். இப்போது பில் இரகசிய இருப்பிடம் ஒன்றில் வைக்கப்பட்டிருப்பதாகத் தரிவிக்கின்றன. தஸ்லிமாவுக்கு ஏற்பட்டிருக்கும் மிக பாரதுாரமானதுமான அழுத்தங்களால் அவர் தனது ஆறாவது பாகமான "அங்கு எதுவும் இல்லை" என்னும் டுவதைக் கைவிட்டுவிட்டார்.
இவ்வருடத்திற்கான சிமோன் திபோவுவா பெண்ணிய குறிப்பிட்டபோது, அவர் தான் இந்தச் சமயத்தில் பாரிஸ் எந்தத் தேவையும் தனக்கு இருப்பதாகத் தெரியவில்லை புடைய செயற்பாடுகள் இந்தியாவில்தான் என்றும்
திகதிநடைபெற்ற இந்த விருதுபெறும் விழாவில்தஸ்லிமா ளியீட்டாளர் கிறிஸ்ரியன் பெஸ் இந்த விருதுக்கான வர் சார்பாக பெற்றுக் கொண்டு, தஸ்லிமா நஸ்ரினால் 5ாக அனுப்பிவைக்கப்பட்ட உரையையும் படித்தார். அந்த பரவேற்பைப் பெற்றது.
பிரெஞ்சு அரசாங்கமானதுதஸ்லிமா நஸ்ரீன் எந்த நேரமும் பிரான்ஸ் நாட்டிற்கு வரலாம் எனவும் அங்கு வந்து அவருடைய விருதைப் பெறலாம் எனவும் கருத்துச் சுதந்திரத்திற்காக உயிர் அபாயங்களை எதிர் கொள்ள நேரும் எவருக்கும் புகலிடம் அளிப்பது பிரான்ஸ்நாட்டின் பாரம்பரியம் என்பதற்கிணங்க, அவர் அங்கு வந்து பாதுகாப்புடன் இருப்பதை தாங்கள் வரவேற்பதாகவும் தெரிவித்திருக்கின்றது.
தஸ்லிமா நஸ்ரின் ஏற்கனவே இருபதுக்கும் மேற் பட்ட விருதுகள் பெற்றவர். இப்போது கடைசியாக அவருக்குக் கிடைத்திருப்பதுதான் சிமோன் தி போவுவா பெண்ணிய விருது.

Page 53
ஜோர்ஜ் ஹபாஸ் (02.08.1926 - 26.01.2008) அஞ்சலி
ஜோர்ஜ் ஹபாஸ் ஒரு கிறீஸ்தவ பாலஸ்தீனர். அவருடைய முக்கியமான ஈடுபாடு அரசியலாக இருந்த போதிலும் அவர் மருத்துவக் கல்லுாரியில் பட்டப் படிப்பை முடித்தவர். பாலஸ்தீனம் விடுதலையின் மீது உறுதியான நம்பிக்கை வைத்துச் செயற்பட்டார். அதற்காக எந்த வழிகளையும் கடைப்பிடிக்க வேண்டும் என்பதிலும் உறுதியாக இருந்தார். இக் காரணத்திற் காக முழு அர்பு உலகையும் சேர்த்துக்கொள்ள வேண்டிய முயற்சியில், அரபுத் தேசிய இயக்கத்தை 1951இல் நிறுவினார். இவ்வமைப்பை கமெல் அப்டெல் நாஸரின் அரபுத் தேசிய கோட்பாட்டுடன் வழி நடத் தினார். 1967ம் ஆண்டு வரையும் பாலஸ்தீன விடுதலை அமைப்பின் முன்னணி அங்கத்தவர்களில் ஒருவராக இருந்தார். அரபு நாடுகளின் கூட்டு இஸ்ரேலினால் முறியடிக்கப்பட்டபோது FATAH தலைவர் யாசீர் அரபாத்துடன் பாலஸ்தீன விடுதலைக்கான பிரபல முன்னணியைநிறுவினார். 1970இல் கறுப்பு செப்டெம்பர் கலவரங்களில் முன்னணிப் பாத்திரத்தை வகித்த தனால், ஜோர்டானில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
1974இல் இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்சினைக்கான தீர்வாக இரு அரசுகள் கொண்ட ஒரு தீர்மானத்தை ஏற்றுக் கொண்டது. ஜோர்ஜ் ஹபாஸ் இதனை எதிர்த்தார். தொடர்ந்து எதிர்ப்பு முன்னணியை உருவாக்கினார். ஹபாஸ் PFLPயை பாலஸ்தீன விடுதலை அமைப்பு மற்றும் லெபனிய தேசிய இயக்கம் போன்றவற்றுடன் இணைத்தார். ஆனால் லெபனான் யுத்தத்தின்போது பக்க சார்பு எடுக்காது இருந்தார். இவர் டமாஸ்கஸில் வசித்தபோது, 1980இல் இவர் சுகயினமுற்றதைத் தொடர்ந்து PFLPயின் ஏனைய அங்கத்தவர்கள் முன்னணிக்கு வந்தார்கள். ܚ
இதழ் 27 5
 

K susif
ஒஸ்லோ உடன்படிக்கையின் பின்னர் ஹபாஸ் இன்னொரு கூட்டொன்றைக் கட்டினார். இதில் எதிர்ப்பு முன்னணி அங்கத்தவர்களும் ஹமாஸ் போன்ற இஸ்லாமிய அமைப்புகளும் கொண்ட கூட்டாக இது அமைந்தது. முதலாவது இன்ரி"பதாவின்போது ஹமாஸ்மிகுந்த பிரபல்யத்தைப் பெற்றது. உடல்நிலை சீரின்மை காரணமாக 2000ம் ஆண்டில் PFLP தலை மையில் இருந்து விலகிய போதிலும் அம்மானில் மாரடைப்பினால் காலமாகும்வரை (82 வயதுவரை) அவர் PFLPயின் செயற்பாட்டாளராகத் தொடர்ந்து இருந்தார்.
ஈழவிடுதலைப் போராட்ட அமைப்புகள் சில பாலஸ்தீன இயக்கத்தின் பாசறையில் பயிற்சிபெற்றன என்பதும் குறிப்பிடப்பட வேண்டியதே.
உயிர்நிழல் 0 ஒக்டோபர் - டிசம்பர் 2007

Page 54
பிரநிழல்) ஒக்டோர். டிசம்பர் 2007
ஓட்டைகள் எல்லாவற்றிலும் ஓட்டைகள்
ஓட்டை என்றால்
ஒழுகும்
ஒழுகும் ஓட்டைகள் அண்ட்க்கப்படும்
அன்பாய் ஓர் அழைப்பு
ஒழுகலும் ஒட்டையும்
ஒருபோதம் வெளியே
தெரியவே கூடாது
கரிசனமாய் ஒரு கண்டிப்பு
அதனதன் வழியில்
அதன்தண் பயணம்
இப்படியும் ஒரு வழிகாட்டல்
எப் டியோ எல்லா ஓட்டைகளும் ஏதோவொரு வலையில்
வலைக்குள் விழுந்த ஒட்டைகளால் மட்டும் ஆங்காங்கே உறுத்தல்கள்
வலையில் விழாத ஒட்டைகளும் வலைக்குள் வாழாத ஒட்டைகளும் அரிது அரிது
அi அளவில்
சிறிது சிறிது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பிச்சினிக்காடு இளங்கோ சிங்கப்பூர்

Page 55
உயிர்நிழல் 'மண் படத்தைப் பற்றி ஏற்கனவே உயிர்நிழலில் வெளிவந்திருந்த விமர்சனங்களில் இருந்து உங்களை ஒரு திரைப்பட இயக்குநராக உயிர்நிழல் வாசகர்கள் ஏற்கனவே அறிந்திருப்பார்கள். எனினும் உங்களைப்பற்றிய ஒரு அறிமுகத்தை நீங்கள் தெரிவிப்பது நல்லது. சினிமா பற்றிய உங்கள் தேடல் குறித்து. இதை உங்கள் பாடசாலை நாட்களில் இருந்தே நீங்கள் தொடங்கலாம்? உங்கள் இளமைக் காலத்தில் இருந்து எவ்வாறு சினிமாவைப் பார்க்க வெளிக்கிட்டீர்கள்?
புதியவன் இளமைக் காலத்தில் எனக்கு சினிமாவில் பெரிதாக ஒரு ஆர்வமும் இருக்கவில்லை. பாடசாலை நாட்களில் நாடகங்களில் நடித்திருக்கிறேன். அதையும் ஒரு விருப்பத்துடன் செய்திருக்கவில்லை. நிர்ப்பந்தத்தினால் என்று சொல்லலாம். வன்னியைப் பொறுத்தவரையில் கிராமங்களில் படம் பார்ப்பதற்கான சந்தர்ப்பங்கள் இல்லைத்தானே. வவுனியா, முல்லைத் தீவு இரண்டு மாவட்டங்களையும் சேர்த்து 4 சினிமா தியேட்டர்கள்தான் அப்போதுவவுனியாவில் இருந்தன. அவ்வளவுதுாரத்திற்கு - கிட்டத்தட்ட 23மைல் துாரத் திற்கு - சென்று படம் பார்க்க வீட்டில் விடமாட்டார்கள். தனியாகச் சென்று படம் பார்க்க வெளிக்கிட்டபோதே கிட்டத்தட்ட 16 வயதாகத்தான் இருக்கும். இளம் வய தில் படங்களைப் பார்த்து அதில் ஒரு ஈடுபாடு வந்தி ருக்கும் என்ற காரணியும் இங்கு கிடையாது. சினி மாவை நான் ஒரு தவிர்க்க முடியாத தெரிவாகத்தான் எடுத்தேன். பிற்பட்ட காலங்களில் அது சம்பந்தமான ஆர்வம் இருந்தது. பிற்பட்ட காலங்கள் என்று சொல் வது, புலம் பெயர்ந்ததில் இருந்து ஆரம்பிக்கிறது. அப் போது வேற்றுமொழிப் படங்களைப் பார்க்கும் சந்தர்ப் பங்கள் என்று வந்த பிறகு, இந்தத் துறையில் ஈடுபட்டு ஏதாவது செய்யலாம் என்ற ஆர்வம் ஏற்பட்டது. ஆனால் படம் எடுக்க வேண்டும் என்று ஏற்பட்ட முடிவு, சிறுபத் திரிகைகள் புலம்பெயர் சூழலில் இல்லாமற் போனதன் பின்னர்தான். ஏற்கனவே பத்திரிகைகளில் ஒரு ஈடுபாடு இருந்ததுதானே. உதாரணத்திற்கு, நாங்கள் இலண் டனில் இருந்து 'ஈழபூமி என்றொரு பத்திரிகையை வெளியிட்டோம். 'உயிர்நிழல்'க்கு முதல் 'எக்ஸில்' என்றொரு சஞ்சிகை வந்தது. அதற்கும் முதலில் நிறையச் சிறுபத்திரிகைகள் வந்து நின்று போயி
இதழ் 27
 

g durinT
26our-e
ருந்தன. அவற்றிற்கான எங்களுடைய பங்களிப்புகள் இருந்தபோது எங்களுடைய ஈடுபாட்டை வெளிப்படுத்து வதற்கான வேறு ஊடகங்களை நாங்கள் தேடவில்லை. அவைகள் நின்று போனபின்பு எங்களுக்கு ஒரு பத்திரிகையை நடத்தும் திராணியும் இருக்கவில்லை. அப்படிப் பத்திரிகை ஒன்றைத் தொடர்ச்சியாகக் கொண்டுவருவதென்றால் அதற்கு (மாதாந்தமாகவோ அல்லது காலாண்டாகவோ) தொடர்ச்சியாக ஒரு விசயத்தைச் சொல்ல வேண்டிய தேவையும், வாசகர்
களுக்கு அதன் தொடர்ச்சியைப் பேணவேண்டிய
5
கடமைப்பாடும் எங்களிடம் இருக்கவேண்டும்தானே. அந்தச் சிக்கலுக்குள் திருப்பிப் போய் மாட்டுப்பட்டு, அதைத்தொடர்ந்துகொண்டு வரமுடியாமல் அதற்காக மன்னிப்பெல்லாம் கேட்டுக் கொண்டிராமல், எங்களுக்கு இயைபான கருத்துக்களோடு ஒரு கலை வடிவத்தைக் கொண்டு வருதல் வேண்டும் என்று நானும் சிலர்நண்பர் களுமாகச் சேர்ந்தெடுத்த முடிவுதான் படத்தைக் கொண்டு வருதல் என்பது. ஏனென்றால், கட்டாயம் வருடத்திற்கொரு படம் கொடுக்க வேண்டும் எனும் தேவை இருக்கவில்லை. எங்களுக்கு வசதி இருக்கிற நேரமும் எங்களுக்கு லிவு கிடைக்கும்போதும் வருடத் திற்கொரு தட வையோ அல்லது இரண்டு வருடத் திற்கொரு தட வையோ ஒரு படத் தைக் கொண்டு வரமுடியும்தானே. அதனால தான எங் களுடைய வெளிப் பாட்டு g)67I L. dB5 D T dSB5 சினிமா வைத் தெரிவு செய் தோம்.
உநி. அதாவது அரசியல்ரீதியாக இதை அணுக வேண்டும் என்பது
உயிர்நிழல் 0 ஒக்டோபர் - டிசம்பர் 2007

Page 56
| X
தான் உங்கள் நோக்கமாக இருந்தது? புதியவன் பிரதான காரணம் அதுதான்.
உ.நி. சரி, அப்படி ஒரு இடத்தில் ஆரம்பிக்கிறீர்கள்? ஆனால், அதற்குப்பிறகு மூன்று படங்கள். இந்த மூன்று படங்களையும் அடுத்தடுத்துப் பார்த்தால் ஒரு வளர்ச்சிப் போக்குத் தெரியும். ஆரம்பத்தில் மாற்றாக ஒன்றைச் செய்வோம் என்று ‘மாற்று' படத்துடன் ஆரம்பிக்கிறீர்கள். ஆனால் இந்த மூன்று படங்களும் ஒரு வளர்ச்சிப்படியில் நகரும்போது நீங்கள் அதை எப்படி உணர்ந்தீர்கள்? இப்போது இந்த மூன்றாவது படத்தை முடித்து நிற்கும்போது நீங்கள் எப்படி உணர்கின்றீர்கள்? புதியவன் உண்மையில்'மாற்று எடுக்கும்போது ஒரு முற்போக்கு சினிமா என்ற உணர்வு இருந்ததே தவிர, (வார்த்தை சரியோ தெரியவில்லை) முற்போக்கு சினிமா பற்றிய வரைவிலக்கணங்கள் எதுவும் தெரிந் திருக்கவில்லை. சினிமாவை எப்படி உருவாக்குவது என்று தெரியாமல் ஒரு சினிமாவை உருவாக்க வெளிக்கிட்டோம். சாதாரணமாகச் சொல்வார்கள், எடிட்டிங் சரியாக வருவதற்கு 1:3 என்ற விகிதத்தில் தான் எடிட்டிங்கிற்கு முன்பான படம் பிடிக்கப்பட்ட காட்சி இருக்க வேண்டும் என்று. ஆனால் 'மாற்று வில் ஒன்றே முக்கால் மணித்தியாலப்படத்துக்குநாங்கள் 45-46 மணித்தியாலங்கள் படப்பிடிப்பைச் செய்தி ருக்கிறோம். தொழில்நுட்பப் பக்கங்கள் பற்றிய விளக்கங்கள் எங்களிடமிருந்திருக்கவில்லை. அதனால், கமரா,நடிகர்கள், மேக்கிங் என்று எல்லாமே முதல் தடவையாக ஏதோ செய்கிறோம் என்று செய்தோம்.
Screen play என்று நாலைந்து வெள்ளைத் தாள்களை எடுத்து நம்பர் பண்ணி இந்தக் கட்டத் துக்குப் பிறகு இந்தக் காட்சி என்று ஒரு ஒழுங்கைத் தெரிவு செய்தோம். இதுநாங்கள் பார்த்த படங்களில் இருந்த ஒழுங்குகளை அவதானித்து, படப்பிடிப்பு ஒழுங்குகள் இப்படித்தான் அமையுமாயிருக்கும் என்று எங்களுக்கு ஒரு லொஜிக்கை உருவாக்கிகாட்சிகளை ஒழுங்காக்கினோம். 'மாற்று படத்தை வெளியிடும் பொழுது அதற்குக் கிடைத்த விமர்சனங்கள் மூலம் நாங்கள் எங்கெங்கு எங்களை வளர்த்துக் கொள்ள வேண்டிய தேவை இருக் கின்றதென்பதைப் புரிந்து கொண்டோம். உண்மையி லேயே'மாற்று படத்துக்குக் கிடைத்த காத்திரமான விமர் சனங் களர் தானி எங்களை அடுத்த கட்டத் துக்கு நகர்த்திச் செல்லக் கூடிய ஒரு உந்துதலைத் தந்தவை. சினிமாட்டோ கிராபி, எடிட்டிங், டைரக் ஷன். இப்படி எல்லாவற் றிலும். இவைகளைக் கருத் தில் எடுத்துக்கொண்டு நாங்கள் இரண்டாம் கட்டத
உயிர்நிழல் 0 ஒக்டோபர் - டிசம்பர் 2007
 

துக்குப் போகிறோம். அப்போது எங்களுக்குச் சில பயிற்சிகள் தேவைப்படுகின்றது என்பதை உணர்ந் தோம். Channel4 இனால்நடத்தப்பட்ட பயிற்சி வகுப்பு ஒன்றுக்குப்போனோம். எடிட்டிங், கமராக் கோணங்கள், காட்சிகளை எப்படி வெளிப்படுத்துதல் போன்றவை தொடர்பான புரிதலுக்கு இது உதவியாக இருந்தது. பிறகு ஒரு மூன்று மாதம் 16மிமீபிலிம் மேக்கிங் எப்படிச் செய்வது, டிஜிற்றல் பிலிம் மேக்கிங்கில் இருந்து எப்படி பெரிய பிலிம் மேக்கிங் மாறுபடுகின்றது என்று கற்றுக்
கொள்வதற்காகச் சென்றேன். அதற்குப் பிறகு
கெரில்லா பிலிம் மேக்கிங் குறித்து அத்துறை வல்லு நர்கள் எழுதிய புத்தகங்களை வாசித்தேன். இந்திய மரபுச்சினிமாவின் சிந்தனையில் இருந்து மாறுபட்டு - ஈரானிய, ஆபிரிக்க, வேற்றுமொழிப் படங்களின் உருவாக்கம் பற்றிய தேடலில் நுழைந்தேன். இந்த விஷயங்களை வைத்துக்கொண்டு 'கனவுகள் நிஜ மானால்' படத்தை செய்யத் தொடங்கினோம். 'கனவுகள் நிஜமானால் படத்தில் இந்த மாற்றங்கள் நிறையவே சிலாகிக்கப்பட்டது. ஏற்கனவே'மாற்றுக்கு விமர்சனம் செய்தவர்கள் இதைப் பார்த்து வெளிப் படுத்திய விமர்சனங்களினுாடாக எங்களுடைய வளர்ச்சியைப் புரிந்துகொள்ள முடிந்தது. அப்படி யிருந்தும் 'கனவுகள் நிஜமானால் இல் சில குறைகள் இருந்தன. ஒலியின் தெளிவின்மை, தொலைக்காட்சித் தொடர்களிற்கு வருவதுபோன்று இசை தொடர்ந்து படம் முழுவதிலும் விரவியிருப்பது என்பது குறித்த விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அப்போதுதான் இவற்றை நிவர்த்தி செய்வதற்கு ஒரே வழி. தொழில் முறை வளர்ச்சியடைந்த தொழில்நுட்பவியலாளர் களுடன் நாங்கள் இணைந்து வேலை செய்வது ஒன்று தான் இதற்கான தீர்வைத் தரமுடியும் என்று நாங்கள் யோசித்தோம். ஏனென்றால் 'மாற்று', 'கனவுகள் நிஜமானால் இரண்டிலுமே ஒரே தொழில்நுட்பக் காரர்கள்தான் செயற்பட்டோம். உதாரணத்திற்கு, கமராமேனை எடுத்தால், அவர் சாதாரணமாக் கொண் டாட்டங்களிற்கு வீடியோ செய்யும் ஒருவர்தான். அதற்கு மேலாக சினிமா தொடர்பாக பயிற்சிஅவருக்கு இருக்க வில்லை. இவைகள் பற்றிய தெளிவு குறித்த மாற்றம் என்மட்டத்தில் மட்டும் ஏற்பட்டதே ஒழிய, அங்கு கமரா, எடிட்டிங், சவுண்ட் செய்தவர்களிடம் அதேயளவு தெளிவு இருக்கவில்லை. நான் இதை முன்னோக்கி நகர்த்த வேண்டும் என்றால் தொழில்நுட்பத்தில் அனுப வமுள்ளவர்களுடன் இணைந்து வேலை செய்ய வேண்டும் என்று தெரிவுசெய்தேன்.இதனால்தான்மண்' முழுநீளப் படமாகச் செய்யும் லெவலுக்குப் போனது. ‘மண் செய்யும்போது அதில் வேலை செய்தவர்கள் எல்லோருமே சினிமா இன்டஸ்ட்ரியில் வலும் அனுபவ மான ஆட்கள். ஒரு இயக்குநரின் தேவைகள் என்ன வென்பதைத் தெரிந்துகொண்டு அதற்காக வேலை செய்யக்கூடிய - அதற்கான தெரிவுகளைத் தந்து தவக்கூடிய தொழில்நுட்பவியலாளர்கள் இருந்தார்கள். இப்படியான ஒரு தெரிவுத் தேர்வு மாற்று அல்லது 'கனவுகள் நிஜமானால் இல் இருக்கவில்லை. ஒரு கமராமேன் தன்னுடைய கமரா பேசவேண்டும் என்று நினைப்பதை 'மண் செய்யும்போதுதான்நான் அறிந்து
இதழ் 27

Page 57
x
கொண்டேன். முதலில் மற்றப்படங்கள் செய்யும்போது கமராமேனுக்காகவும் நான் வேலைசெய்யவேண்டி இருந்தது. அதேமாதிரி எடிட்டிங் மூலம் சில விஷயங் களைச் சொல்ல முடியும். உதாரணத்திற்கு இரண்டு காட்சிகளை பிரித்துக் காட்டுவதற்கு black frame பாவிப்பது. மற்றது ஒரு frameஇல் இருந்து இன்னொரு frame dissolve usoiroft (3LIT g5lbGLITQpg5 time lack எப்படிக் காட்டலாம் இப்படியான விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். ஒலியை எடுத்தால், அதற்கு வேலை செய்தவர் ஏற்கனவே நிறைய அனுபவ முள்ளவர். எத்தனையோ விருதுளைப் பெற்றவர். அவருடன் இருந்து வேலைசெய்யும்போதுதான் அவர் சொன்னார். இந்த இந்த இடங்களில் மியூசிக் போட்டால் அது சரியாக வராது. அங்கு காற்றுச்சத்தத்தை மட்டும் போட்டாலே அது நன்றாக இருக்கும் என்று - இப்படி யான விடயங்களைக் கற்றுக் கொண்டேன். மற்றது இயக்குநர் என்பவர் எல்லாத்துறைகளிலும் தேர்ந்த வராக இருக்கமுடியாதுதானே.'கனவுகள்ந்ஜமானால், ‘மண்' இரண்டிற்குமிடையில் தொழில்நுட்பங்கள் பாவித்திருப்பதற்கிடையிலான அபாரமான பாய்ச்சல் எப்படி நிகழ்ந்ததென்றால் நாங்கள் அதற்குரிய அனுபவம் வாய்ந்த தொழில்நுட்பக் கலைஞர்களுடன் சேர்ந்துநின்று பணியாற்றியதுதான். இன்றைக்கு நான் இன்னுமொரு படத்தைச் செய்யப்போவதாக இருந்தால் அது எப்படித் தயார்படுத்தப்படவேணும் அது எப்படி நகர்த்தப்பட வேணும் என்பதை இப்போது நான் துணிவாகச் சொல்வேன்.இதனை'மண் படத்தயாரிப்பு அனுபவம் எனக்குத் தந்திருக்கின்றது. 'மண் படம் செய்யத் தொடங்கும்பொழுது அவ்வளவு தன்னம்
இதழ் 27
 

பிக்கை எனக்கு இருக்கவில்லை. இப்போது தென் னிந்திய சினிமா இண்டஸ்ட்ரிக்குள் போய் நின்று ஒரு படத்தை இயக்குவதற்கான துணிவையும் தைரியத் தையும் எனக்கு இந்த அனுபவம் வழங்கி இருக்கின்றது.
உ.நி. சினிமா என்பது ஒரு கூட்டு முயற்சி. உங்களு டைய முதல் இரண்டு படத்தையும் பார்த்தால் உங்க ளுடன் யூனிட்டில் இருந்த ஆட்களெல்லாம் பெரும் பாலும் புகலிடத் தமிழ் தொழில்நுட்பக் கலைஞர்கள்,
புதியவன்: ஒம். இலங்கையைப் பின்னணியாகக் கொண்ட புகலிடத் தமிழர்கள்.
உ.நி. உங்களுடைய படங்களை வகைப்படுத்துவ தென்றால் 'இலங்கைப் புகலிடத் தமிழ் சினிமா என்ற வரிசைக்குள்தானே ‘மண் வரும்?
புதியவன் : ஒம்.
உநி, ! அப்ப இந்த 25 வருடத்துக்குப் பிறகு வருகிற ஒரு முழுநீளத்திரைப்படத்தில் உங்களுக்கு ஒரு யூனிட் சரியாக அமையாமற் போயிருக்கிறது. அதாவது புகலிடத் தமிழ் சூழலுக்குள் உங்களுக்கு தொழில் நுடபக் கலைஞர்கள் அமையாமற் போயிருக்கிறார்கள். புதியவன் : ஒம் அப்பிடித்தான்.
உ.நி. அதற்கான சாத்தியப்பாடுகள் இல்லை என்று நீங்கள் கருதுகிறீர்களா?
புதியவன்! இதற்கு வேறு காரணங்களைச் சொல்லலாம். ஒன்று, சினிமாவுக்கான ஒரு துறை
உயிர்நிழல் 0 ஒக்டோபர் - டிசம்பர் 2007

Page 58
്താr x
இருக்கவில்லை. அரசியல்ரீதியாக செயற்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்னும் காரணத்தினால், அல்லது நாங்கள் செயற்படுகிறோமோ இல்லையோ எங்களுக்கான அரசியல் கருத்தொன்று இருக்கின்றது என்னும் காரணத்தினால், அதாவது எங்களுடைய கருத்துக்களை வெளிக்கொண்டு வருவதற்கு ஒரு சமூக அக்கறையின் பாற்பட்டு இப்படி ஒரு விடயத் திற்குச் செல்கிறோம். உதாரணமாக 'மாற்று'வில் வேலை செய்த கமராமேன் பொபியை எடுத்தால் அவர் கொணடாட்டங்களுக்கு வீடியோப் படம் எடுக்கும் ஒருவர். அது அவரது வருமானத்திற்கான தொழில். அவர் அதைவிட்டுவிட்டு தொழில்சார் கமரா படிப்பைப் படித்து வந்து கமரா செய்வதென்பது நடக்க முடியாத காரியம். இது ஒரு துறையாக இல்லாமல் இருப்பது அவர்களுக்கு சினிமாமீது ஒரு ஈடுபாட்டைக் கொடுப் பதில்லை. இங்கு இருக்கும் இளம்தலைமுறையினர் சிலர் அதைச் செய்கிறார்கள். ஆனால் அவர்கள் எங்க ளுடன் வந்து நின்று வேலை செய்யத் தயாரில்லை. அவர்கள் பி. பி. சி. போன்ற பெரிய நிறுவனங்களை நோக்கிய பயணத்தில்தான் தங்கள் செயற்பாட்டைத் தொடர்கிறார்கள். அவர்களெல்லாம் இங்கு வந்து நின்று எங்களுடன் மினைக்கெட மாட்டார்கள். 50000 (ஐம்பதினாயிரம்) பவுண்ஸ்க்கு மீடியாவில் வேலை கிடைக்கும் ஒருவர், பிரயாணச் செலவும் சாப்பாடும் தருகிறோம் எங்களுடன் வந்து நின்று வேலை செய் யுங்கள் என்று நாங்கள் கேட்டால் வரமாட்டார் கள்தானே. அவர்களுக்கு சமூக அக்கறை கிடையாது. இந்த இரண்டு விஷயத்தையும் நீங்கள் பார்த்தீர்கள் என்றால், அதாவது ஒரு துறையாக இல்லாததும் - அந்தத் துறையில் ஒரு வேலைவாய்ப்பும் வருமானமும் இருக்கும் என்றநிலை இருந்தால் இதை ஒரு துறைசார் கல்வியாகக் கொள்ள முயற்சிகள் நடக்கக்கூடும். அது இல்லை. இலங்கையிலும் இல்லை. புலம்பெயர் சூழலி லும் அது இல்லை. இது பிரத்தியேகமான ஈடுபாடாக இப்படி என்னைப் போன்ற சிலருக்கு வர வேண்டும். சமூகத்திற்காக ஏதாவது நல்ல விஷயம் செய்ய வேண்டும் என்று எண்ணும் விரல் விட்டு எண்ணக்கூடிய சிலருக்கே இது சாத்தியம். இதுதான் தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றாக்குறைக்குரிய காரணமாக இருந்திருக்கின்றது.
உ.நி. சரி. உங்களுடைய மண் திரைப்படம் ஒரு இலங்கைத் தமிழ் சினிமா. அப்படிப்பார்த்தாலும் அதில் கட்டாயம் இலங்கைத் தமிழ்க் கலைஞர்கள்தான் வேலை செய்திருக்க வேண் டும் என்றில்லை. அப்படி எந்த ஒரு வரையறைக் குள்ளும் போகவேண்டிய தேவை இல்லை என்று நினைக்கிறேன். இந்த 25 வருடம் மட்டுமல்ல ஒரு 50 வருடங்களுக்கு மேலேயே 鑫 : இலங்கைத் தமிழ் மக்கள்,
உயிர்நிழல் 0 ஒக்டோபர் - டிசம்பர் 2007
 

புகலிடம் உள்ளடங்கலாக, இந்திய சினிமாவைத்தான் சினிமாவாகப் பார்த்துப் பழக்கப்பட்டவர்கள். அவ்வப்போது வெளிவந்த ஒன்றிரண்டு படங்களைத் தவிர. அந்த வகையில் 25 வருடங்களிற்குப் பிறகு ‘மண்ணுக்கு, என்ன மாதிரியான வரவேற்பு இலங்கைத் தமிழ் மக்களிடம் இருந்ததென்று நீங்கள் நினைக் கின்றீர்கள்.
புதியவன்! படம் நெகடிவ் ஆக ரிசீவ் பண்ணப்பட்டு விட்டது என்று நான்நினைக்கிறேன். அதற்கு மலையக மக்களுடைய பின்னணி என்பது ஒரு காரணம். உதார ணத்திற்கு, குறிப்பிட்ட ஒரு சமூகத்தை பின்னணியாகக் கொள்ளாமல், ஒரு பொதுவான பிரச்சினையை மைய மாகக் கொண்ட ஒரு கதையை வைத்து இந்தப் படத்தை எடுத்திருந்தால் அதற்கான வரவேற்பு வேறுவிதமாக இருந்திருக்கும் என்றுதான் நான் நினைக்கிறேன். ஏன் இதைச் சொல்கிறேன் என்றால், ரூபவாஹினியில் கிட்டத்தட்ட இரண்டு கிழமைகளாக, இது 25 வருடங்களிற்குப் பிறகு வந்திருக்கின்ற இலங் கைத் தமிழ்த் திரைப்படம் என்று விளம்பரம் செய்தது. ஆனால் சக்தி எப். எம். இல் இருந்த சிறீரங்கன் என்று ஒருவர் இந்த திரைக்கதையைப் பார்த்துவிட்டே ஒத்துழைப்புத் தரமுடியாதென்று சொல்லிவிட்டார். பத்திரிகைகள் "தோட்டக்காட்டான்' என்று பாவித் திருக்கின்றது போன்ற எதிர்க்கருத்துகளை முன் வைத்தன. இது மலையகத்தமிழருக்கு எதிரான விடயம் என்ற விமர்சனத்தை முன்கூட்டியே கொடுத்து விட்டார்கள். படத்தை ரிலீஸ் பண்ணிய இடங்கள் வவுனியா, மட்டக்களப்பு, கொழும்பு. படவிநியோ கஸ்தர் இது மலையக மக்களுக்கு எதிரான படம் என்றும் மலையகத்தில் திரையிட்டால் தனக்கு அடி தான் விழும் என்றும் தன்னால் அதை அங்கு திரையிட முடியாதென்றும் மறுத்துவிட்டார். இன்று வரைக்கும் அது மலையகத்தில் திரையிடப்படவில்லை. இத்த
னைக்கும் அவரிடம் 2 பிரின்ற்கள் இருக்கின்றன.
ஆனால் மட்டக்களப்பில் 52நாட்கள் ஓடியது. அந்த நேரத்தில் அவர் ஒப்பிட்டுச் சொன்னது எப்படி என்றால், அதேகாலப்பகுதியில் வெளிவந்த அஜித்தின் படம் 18 நாட்களே ஓடியதாகவும், இது 52 நாட்கள் ஓடிய தென்றும். சில பகுதிகளில் மிக நல்ல வரவேற்பி ருந்தாலும் ஒட்டுமொத்தமாக எதிரான பிரச்சாரமே நடைபெற்றதனால் அது இலங்கையில் நன்றாக வரவேற்பைப் பெறவில்லை என்றுதான் சொல்ல வேண்டும் - அதாவது படம் நிற்பாட்டப்படவேண்டும் என்றுகூட.
உநி. படம் உண்மையில் மலையக மக்கள் சார்ந்த ஒரு அக்கறையுடன்தானே இருந்தது.?
புதியவன்! அதுதான் எனக்கும் விளங்கவில்லை. ஒரே போமுலாவுக்குப் பழக்கப்பட்டுப் போனவர்களால் இதைப் புரிந்துகொள்ள முடியாமற் போயிற்றா அல்லது நான் அதைத் தெளிவாகச் சொல்லவில்லையா என்ன என்பது எனக்கு விளங்கவில்லை. ஆனால் தமிழ் நாட்டில் அ. மார்க்ஸ்க்கு இலங்கை மக்கள் சம்பந்தப் பட்டுத் தெரிந்த விஷயத்தை இலங்கையில் இருக்கிற ஒரு தமிழரால்புரிந்துகொள்ளமுடியவில்லை என்பதும்
இதழ் 27

Page 59
எப்படியென்று எனக்கு விளங்கவில்லை. இந்தியாவில் இது ரிசீவ் பண்ணப்பட்ட விதத்தை எடுத்துக் கொண் டால், அதாவது கிட்டத்தட்ட 40 - 50 சஞ்சிகைகள், பத்திரிகைகள், இணையத்தளங்கள் என்று விமர் சனங்களை முன்வைத்தன. சில விமர்சனங்கள் அதைப் பண்ணையாருக்கும் பண்ணையாரிடம் வேலை செய்யும் ஒருவருக்கும் இடையிலான பிரச்சினையாகப் பார்த்து விமர்சித்திருக்கிறார்கள். 80வீதமான விமர்ச னங்கள் படத்தில் சொல்லப்பட்ட விடயத்தைப் புரிந்து கொண்டு செய்திருக்கின்றன. இலங்கைப் பேச்சுத்தமிழ் தங்களுக்குப் புரியவில்லை என்ற விமர்சனம் எங்கும் வரவில்லை. அந்தளவு வரவேற்பு இலங்கையில் இருக்கவில்லை. இதற்கான காரணம் இன்றைக்கு வரைக்கும் எனக்குத் தெரியாது.
உ.நி. ஊடகங்களின் பிரச்சாரம், வெளிப்பாடு என்பவை ஒரு புறம் இருக்க, வவுனியாவும் மட்டக் களப்பும் நீங்கலாக, கொழும்பில் 50வீதமானவர்கள் மலையக மக்கள்தானே. அதைப் பார்த்தவர்கள் எப்படி உணர்ந்தார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். புதியவன் கொழும்பில் சினி சிற்றியிலும் கொட்டாஞ் சேனையில் உள்ள இன்னொரு தியேட்டரிலும்தான் ஒடியது. அங்கிருந்து வந்த விமர்சனங்களைப் பார்த்தால், வீரகேசரியில் சினிமாப்பகுதியில் இது மலை யக மக்களுக்கு எதிரான ஒரு கதை. இது இலங்கைப் படம் என்றுநாங்கள் ஏற்றுக்கொள்ளவே கூடாது என்று எழுதியிருந்தது. அதற்கு மலையகத்தைச் சேர்ந்த கொழும்பில் இருந்த ஒருவர் அதற்கு மறுப்புத் தெரி வித்து எழுதியிருந்தார். "தோட்டக்காட்டான்' என்று மலையக மக்களை இழிவுபடுத்துவது இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது என்றும் அதைப் படத்தில் தெளிவாகச் சொல்லி இருக்கி றார்கள் என்றும் எழுதி இருந்தார். நாட்டின் நிலைமை கருதியும் பொருளாதாரச் சிக்கல்களாலும் நான் படம் திரையிடப்பட்டபோது அங்கு நிற்க முடியவில்லை. அதனால் நேரடி அனுபவம் கிடைக்கவில்லை. முதல் காட்சிக்கு 500 பேர் வரை வந்திருந்தார்கள். அந்தக் காட்சி முடிந்த பின்பு கருத்துக் கணிப்பு ஒன்றை எடுத்தது. அதில் 60வீதமானவர்கள் அதை பொசிற்றிவ் வாகத்தான் பார்த்திருக்கிறார்கள். சாதிபட பேரையும் மலையகத்தமிழரை இழிவாக நடத்துவிதையும் பச்சை மிளகாய்ப் பயத்தில் ஒத்தி வைத்திருக்கிறார்களே தவிர மாற்றிக் கொள்ளவில்லை. மாற்றம் நடக்க வில்லை என்பதை இவர்களால் ஏற்றுக்கொள்ள ஏன் தயக்கம் என்பது நான் சொல்லித் தெரியவேண்டிய தில்லைத்தானே.
உ.நி. இவ்வளவு காலத்திற்குப் பிறகு இண்டஸ்ட்றி இல்லாமல் ஒரு படத்தை எடுத்திருக்கிறீர்கள். அது எவ்வளவு கஷ்டமான விஷயம். அப்பிடிக் கஷ்டப்பட்டு எல்லாம் எடுத்து முடிய ஊடகங்கள் சரியான ஒத்து ழைப்புத்தரவில்லை என்றுநீங்கள் கருதுகின்றீர்களா? புதியவன்! நான் ஒரு பத்திரிகை மாநாடு ஒன்றைக் கொழும்பில் நடத்தினேன். அநேகமாக எல்லாப் பத்திரிகைகளிலும் இருந்து வந்திருந்தார்கள். அதில்
இதழ் 27

X சினிமா
நான் ஒரு விஷயத்தை அவர்களுக்குச் சொன்னேன். விமர்சனம் என்பது எனக்கொரு பிரச்சினையே கிடையாது, அதை நான் பொசிற்றிவ் ஆகப்பார்ப்பவன் என்ற வகையில், ஆனால் இந்தியாவில் விமர்சனங்கள் இப்படித்தான் இருக்கின்றன. அதாவது படங்கள் எவ்வளவு குப்பையான படமாக இருந்தாலும்கூட, ஒரு படம் வந்து 3 அல்லது 4 கிழமைகளுக்கு எந்த வெகு ஜனப் பத்திரிகையிலும் அது தொடர்பான ஒரு நெகடிவ்வான விமர்சனத்தைப்பார்க்க முடியாது. இதை ஒரு எழுதப்படாத விதியாகவே அங்கு கொண்டிருக்கி றார்கள். ஆனால் நெகடிவ்வாக இல்லை என்பதற்காக, அதை ஒகோ என்ற ஒரு படம் என்றும் சொல்ல மாட்டார்கள். அதாவது நீங்கள் படத்தை போய்ப் பார்க்கத் துாண்டுவதுமாதிரி எழுதிவிடுவார்கள். ஆனந்தவிகடனைப் பார்த்தீர்கள் என்றால் அதில் எப்போதும் படம் வெளியாகி 3 கிழமைகளுக்குப் பின்னர்தான் மார்க்ஸ் போட்டு வரும். அது ஏன் என்று சொல்கிறார்கள் என்றால், இந்த இண்டஸ்ட்ரியை உயிர்வாழ வைக்கும் கடமையும் ஊடகங்களிற்கு இருக்கின்றதென்று. அது தொழிற்துறையாக வளர்ச்சி யடைவதற்கு ஊடகங்களின் பங்கு அவசியம் என்று கூறுகிறார்கள். எனவே இந்த விடயத்தை அந்தப் பத்திரிகையாளர் மாநாட்டில் விளங்கப்படுத்தினேன். எங்களுக்கு தொழிற்துறை இல்லை. காசு பெறுவது மட்டும் எனது நோக்கமாக இருந்திருந்தால், இந்தி யாவில் போய்த்ரிஷாவையும் போட்டு தொடையையும் காட்டி இவ்வளவுகாசையும் செலவழித்து ஒரு படத்தை என்னால் எடுத்திருக்க முடியும். நான் அவ்வளவு பணத்தையும் கொண்டுவந்து உயிராபத்துக்கிடையில் ஒரு படத்தை எடுத்திருக்கத் தேவையில்லை என்று அவர்களிடம் சொன்னேன். இலங்கையிலும் ஒரு தமிழ்ப் படத்தை எடுக்கலாம் என்று சிந்தித்துக் கொண்டி ருக்கும் கலைஞர்களுக்கு ஒரு உந்துசக்தியைக் கொடுப்பதற்கு,தயாரிப்பாளர்களுக்கு ஊக்குவிப்பைக் கொடுப்பதற்கு இதைச் செய்து காட்டவேண்டும் என்ற நோக்கம் இருந்தது. இனிமேல்படம் எடுக்க வேண்டாம் என்று எழுதுவதுகூடப்பிரச்சினை இல்லை. ஆனால் ஒரு இரண்டு கிழமைகளுக்கு இந்தப்படத்தைப் பார்க்கக் கூடியதாகச் செய்யுங்கள் என்றும் இதை ஒரு தொழிற்துறையாக வளர்ச்சி பெறக்கூடிய ஒரு உதவியாக அதைச் செய்யுங்கள் என்றும் அவர்களிடம் கேட்டிருந்தேன். ஆனால் 3 நாட்களிலேயே வீரகே சரியில் விமர்சனம் வந்துவிட்டது. தினகரன் பிறகு அதற்கு ஒரு எதிர்விமர்சனத்தை எழுதி இருந்தது. ஆனால் ஊடகங்கள் எல்லாம் சேர்ந்து எதிரான கருத்தைப் பரப்பின. சக்தி எப். எம். காரன் படத்தைப் பார்க்காமலே எதிர்விமர்சனம் செய்யத் தொடங்கி விட்டான். சக்தி ரிவியில் விளம்பரமே போடமுடியா தென்று சொல்லிவிட்டான். சக்தி எப்.எம். என்னிடம் பேட்டி எடுத்தது. படம் ரிலீஸ் பண்ணும் வரையும் அதைப் போடவிடவில்லை.
உ.நி. இலங்கையில் ஊடகங்கள் ‘மண்ணைப்
புறக்கணித்ததாக ஒரு முடிவுக்கு வரலாம், அப்படித் தானே.
உயிர்நிழல் 0 ஒக்டோபர் - டிசம்பர் 2007

Page 60
புதியவன்; நிச்சயமாக, அப்படித்தான்.
உநி. சரி. இலங்கைச் சூழல் இப்படி இருக்க, இந்தியச் சூழல் சாதகமாக இருந்ததாக நினைக்கிறீர்களா?
புதியவன்! என்னுடைய அறிவுக்கெட்டியவரையில், இதுதான் முதல் தடவை இலங்கையில் தயாரித்த திரைப்படமொன்று அங்கு mass levelஇல் ரிலீஸ் பண்ணப்பட்டிருக்கிறதென்று நான் நினைக்கிறேன். பிரத்தியேக காட்சிகளுக்கு வேறு இலங்கைப்படம் போனதோ தெரியவில்லை. 'மண்ணுக்கு இந்திய ஊடகங்கள் கொடுத்தளவு வரவேற்பை இலங்கை ஊடகங்கள் கொடுத்திருக்க வேணடும். எதிரான விமர்சனங்கள் என்று அவர்கள் எதையும் வைக்க வில்லை. சாதாரணமாக பத்திரிகையாளருக்குரிய காட்சி முடிய, எல்லாருடைய கையிலும் என்வலப் வைக்க வேண்டும். கவர் குடுக்காவிட்டால் சார்பாகவோ எதிராகவோ எழுதவே மாட்டார்கள். 'மண்ணுக்கு முதல் 'நெஞ்சில்' என்றொரு படம் போனது. Preview show ஒரு தியேட்டரில் நடந்தது. அங்கு வந்திருந்த நிருபர்கள் 'நெஞ்சில் படம் பிடிக்காமற் போனதால் திரும்பிச் சென்று விட முடிவுசெய்திருந்த வேளை கவர் இருப்பதான தகவல் தெரிய கவரை வேண்டிச் செல்லலாம் என்று சிலர் பேர் தங்கினார்கள். பிறகு படம் முடிந்து வெளியில் போகும்போது சொல்லிவிட்டுப் போனார்கள் "நெஞ்சிலை மண்ணும் மண்ணிலை நெஞ்சும் இருந்துவிட்டது" என்று வந்த விமர்சனங்கள் எல்லாம் உற்சாகத்தைத் தரக் கூடியதாக இருந்தன. ஏதோ ஒரு பத்திரிகையில், விஜய், அஜித் எல்லாரும்
உயிர்நிழல் 0 ஒக்டோபர் - டிசம்பர் 2007
 

நடிப்பது எப்படி என்று இந்தப் பையன்களைப் போய்ப் பாருங்கள்' என்று எழுதியிருந்தது. இதில் ஒரு 10வீதம் இலங்கையில் நடந்திருந்தால் அது எதிர்பார்க்காத அளவு சென்றடைந்திருக்கும். ஒரு தாற்பரியத்தை ஏற்படுத்தி இருக்கும். இது பரவலாகப் போகவேண்டிய கதைதானே, வெற்றி தோல்விக்கு அப்பால். அதையும் தடுத்துவிட்டார்கள். VM
இது இரண்டையும் விட்டுவிட்டு புகலிடத்தை எடுத்தால், இங்கு ஊடகங்களின்பங்கு எப்படி இருந்தது என்று பார்த்தால், இணையத்தளங்கள் என்று எதுவும் இது பற்றி எழுதவில்லை. 'தேசம்' சஞ்சிகை ஜெய பாலன்,நண்பன்என்ற முறையிலும்'இலண்டன் உதயன்' பத்திரிகையூடாக நன்றாக விளம்பரம் செய்திருந்தார். தீபம் ரிவிஎங்களுக்கு ஓரளவுவிளம்பரம் செய்தார்கள். இந்த நேரத்தில் இந்திய மக்களைக் (சார்பாகவோ எதிராகவோ) கிண்டி விடுகின்ற படம் என்று ஐ.பி. சி. வானொலி எல்லாம் பாட்டையே இடையில் நிற்பாட்டி விட்டார்கள். அதாவது, இந்திய மக்களின் உணர்வு போராட்டத்திற்கு சாதகமாக நகர்ந்து கொண்டு வரும்பொழுது நாங்கள் மலையக மக்களைக் கொடுமைப்படுத்துகிறோம் என்று பேசுவது சரியான தல்ல என்றார்கள். ராஜீவ் காந்தியின் கொலைக்குப் பிறகு, இது மீண்டும் இந்திய மக்களைத் திசை திருப்புவதற்கான ஒரு வேலையைச் செய்யும் முயற்சி என்றார்கள். இது யாரென்றே தெரியாது - இது டக்ளஸிடம் - அதாவது இலங்கை அரசிடம் - பெட்டி வாங்கிச் செய்த படமாகத்தான் இருக்கும் என்று யாழ் இணையக்கில் காரசாரமாகக் கிழித்திருந்தார்கள்.
இதழ் 27

Page 61
புலம்பெயர்சூழலில் இது சரியான வீழ்ச்சி. பிரான்ஸில் எத்தனையோ படங்களை எல்லாம் எடுத்துப் போட்டு ஒரு சதமும் இல்லாமல் போயிருக்கிறாங்கள். அங்கு படம் போடுவதற்குத் தியேட்டர் எடுப்பதற்கு 5 கிழமை களுக்குமேல் அலைய வேண்டியதாயிற்று. தியேட்டரை ஒழுங்குபடுத்துபவருக்கு 500 தடவைகளிற்கு மேல் போன் பண்ணி இருப்பேன். கனடாவில் எல்லாம் படம் போடப்படவில்லை. கனடாவில் அதை ஒரு விஷய மாகவே நினைக்கவில்லை. (ரதனைத் தவிர) முற் போக்குச் சக்திகள் என்று சொல்லப்படுபவர்கள்கூட, குறைந்த பட்சமாக, ஒரு குறிப்பிட்ட சிலருக்காவது இதைப்போட்டு ஒரு விமர்சனக் கூட்டத்தை வைப்போம் என்றளவிற்குக்கூட ஒருவரும் முன்வரவில்லை. ரதன் கொஞ்சம் இது தொடர்பாக உதவி செய்ய முன்வந்த வர். ஆனால் ஒருவேளை அவருக்கு இதை ஒழுங்கு செய்வதற்கு நிதிரீதியான கஷ்டங்கள் இருந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். பிறகு கடைசியாக, கனடாவில் போடுவதற்கு ஒழுங்கு செய்யப்பட்ட சமயம் இங்கு எனது தம்பியின் வீடெரிந்து தம்பியின் மகளும் மாமன் மாமியும் இறந்துபோன துயரச் சம்பவம் நடந்த தனால் அது ரத்துச் செய்யப்பட்டது. அதற்குப் பிறகு டிவிடி வந்ததும் கனடாவில் அந்த முயற்சிகள் நிறை வேறாமலே போயிற்று. இலண்டனை எடுத்தால், நான் இங்கு இருக்கிறேன் என்ற வகையில் தனிப்பட்ட முறை யில் எனக்கு ஆட்களைத் தெரியும் என்ற முறையிலும், நடித்தவர்களில் இருவர் இலண்டனைச் சேர்ந்தவர்கள் என்பதாலும் 5 காட்சிகள் நன்றாகப் போயிற்று. இங்கு ஒரு விமர்சனக் கூட்டமும் வைத்திருந்தோம். 100-150 பேர் வரையில் விமர்சனத்தில் பங்களித்தார்கள். காத்திரமான விமர்சனங்கள் என்று இல்லாவிடினும் அவர்கள் அதை எப்படி உணர்ந்து கொண்டார்கள் என்பதை அறியக்கூடியதாக இருந்தது.
உ.நி. நிதிரீதியாக எப்படி? போட்டகாசு உங்க ளுக்குத்திரும்பிவந்ததா? புதியவன்! அதை எப்படிச் சொல்ல முடியும் என்றால், நிதிரீதியாக அரைவாசி திரும்பி வந்தது என்று சொல்லலாம்.
உ.நி. இண்டஸ்ட்ரி இல்லாத சூழலில், தனிப்பட்ட ரீதியில் பணத்தைப் போட்டு அரைவாசிதான் திருப்பி எடுக்கமுடியும் என்பது ஒரு ஆரோக்கிமான சூழல் இல்லையே! புதியவன்! இல்லைத்தான்.
அப்பிடிச் செய்திருக்க வேண்டிய தேவை இல்லை. கனடா, ஜேர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, சுவிஸ் போன்ற நாடுகளில் இருந்து ஒரு நியாயமான அளவு ஆக்கள் வந்து பார்த்திருந்தாலே போட்ட காசைத் திருப்பி எடுத்திருக்கலாம்.
ஆனால் அதற்குரிய வரவேற்பு இருக்கேல்லை. இது சரியா பிழையா என்றதும் எனக்குத் தெரியாது. சனம் 'பில்லா' படத்தைத்தான் பார்க்கப் போகுது. 'பில்லா படம் இப்போது மூன்றாவது கிழமையாகவும் இலண் டனில் ஒடிக்கொண்டுதான் இருக்குது. எங்கடை சனம் வந்து'பில்லா மட்டத்திலைதான் இருக்குதா இல்லாட்டி
இதழ் 27

K faufuDIT
இந்த வியாபாரப் பொறிமுறை சரியில்லையா என்று எனக்கு விளங்கவில்லை.
ஆனால் என்னுடைய பழைய இயக்கப் பின்னணி, எங்களுடைய இன்றைய அரசியல் கருத்துநிலைப்பாடு என்பன ஒரு காரணமாக இருந்திருக்கின்றதென்பது எனக்குத் தெரியும். ஐ.பி.சி.பின்வாங்கியதற்குப்பிறகு பிரான்சிற்கு படத்தைக் கொண்டு வரும்போது அது புலிக்கெதிரான படம் என்றுகதை பரவிவிட்டது. அதுக் குப்பிறகு வரமாட்டாங்கள்தானே. இதை நிராகரிக்கச் சொல்லி இணையத்தளங்களில் செய்தி வெளிவந்த பிறகு நான் கூட்டத்தை எதிர்பார்த்திருக்க முடியாது. ஆனால் இவைகள் எல்லாவற்றுக்கும் எதிரான ஒரு கூட்டமும் அங்கே இருக்குதுதானே. அந்தக் கூட்டம் இதை ஒரு வேறு தளத்துக்குக் கொண்டு சென்றி ருக்கலாம். அவர்களும் அதற்குத் தயாராக இருக்க வில்லை.
உ.நி. மாற்றுக் கருத்தாளர்கள், உங்களுடன் இயங்கிய தோழர்கள், நண்பர்கள் கூட்டம் என்று ஒன்றிருக்கிறதுதானே. ஒட்டுமொத்தமாக எல்லாரும் இந்தப் பொறுப்பைத் தங்களுடைய கையில் எடுக் காமல் விட்டுவிட்டார்கள் என்று நினைக்கிறீர்களா? புதியவன்! அப்படித்தான் நான் நினைக்கிறேன். ஒரு குறிப்பிட்ட அளவுக்கு நான் அவர்களைத் தொடர்பு கொண்டும் இருக்கிறேன். கட்டாயம் அவர்கள் செய்ய வேண்டுமா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் இலக்கியச் சந்திப்பு ஒன்று செய்வதாக இருந்தால் அல்லது வேறொரு கூட்டம் நடந்தால் அதற்குப் போய் ஆதரவளிக்க வேண்டும் என்பது போன்ற ஒரு கடப் பாட்டுஉணர்வுஇதற்கும் இருந்திருக்க வேண்டும் என்று தான் நான் நினைக்கிறேன். அது இருக்கவில் லைத்தான்.
உ.நி. இலங்கைத் தமிழ் சினிமா என்ற வகையில் நீங்கள் முன்னோக்கி நகர்ந்திருக்கிறீர்கள், இந்த 25 வருடங்களுக்குப் பிறகு. ஆனால் உங்களைப்போல் வர, வளர ஆசைப்படுபவர்கள் இருக்கலாம். அவர் களிற்கெல்லாம் அல்லது உங்களுக்கு எவ்வளவு துாரம் ஒரு சினிமாவைத் தயாரிப்பதற்கான சந்தர்ப்பங்கள் இருக்கின்றன?
புதியவன்: இரண்டே இரண்டு விஷயங்களைத்தான் நான் பார்க்கிறேன். Main stream சினிமாவுக்குள் போனால் ஒன்று கமர்சி யலாக எடுக்க வேண்டும். அல்லது திரைப்பட விழாக் களை நோக்கி போயிருக்க வேண்டும். 'மண் எடுத்த பிறகும் ஒருதரம் யோசித் தேன் பாட்டுகள் என்ப வற்றை எடுத்துவிட்டு திரைப்பட விழாக்களை நோக்கியே போயிருக் கலாமோ என்று. உண்மை யாக புலம்பெயர் சூழலில் இவ்வளவிற்கு ஒத்துழைப்பு
உயிர்நிழல் 0 ஒக்டோபர் - டிசம்பர் 2007

Page 62
്ത0 x
இல்லாமல் போகும் என்பதை நான் எதிர்பார்க்க வில்லை.பாட்டுகளைக் கொண்டுவந்ததன் நோக்கமே சாதாரண பார்வையாளர்களின் எதிர்பார்ப்பையும் நிவர்த்தி செய்யவேண்டும் என்றுதான். புலம்பெயர் சூழலில் அதற்கான ஆதரவுகிடைக்காது-குறிப்பாக இந்த முற்போக்கு சக்திகள் என்று சொல்லப்படுகிற வர்களின் ஆதரவு - என்று முதலிலேயே தெரிந்தி ருந்தால், பாடல்களுக்கான செலவைக் குறைத்து மலையகப்பகுதிகளின் பின்னணியைக் காட்டக்கூடிய சில காட்சிகளையும் இணைத்துவிழாக்களை நோக்கி நகர்ந்திருப்பேன்.
உநி: அதாவதுமுற்றுமுழுதாக ஒருசமரசம் இல்லாத சினிமாகவே கொண்டுபோய் இருக்கலாம். அப்படியா? புதியவன்! அப்படிச் செய்திருக்கலாம். அப்படி ஒரு விழாவில் போட்டு ஒரு பரிசு கிடைத்திருந்தால்கூட போட்ட காசை எடுத்திருக்கலாம். ஆனால் என்னுடைய நோக்கம் அதுவாகவே இருக்கவில்லை. அதாவது இதுபற்றி எதுவும் தெரியாத ஒரு பார்வையாளர் கூட்டத்தின்முன்கொண்டுபோய்ய்போட்டு இதுபற்றி ஒரு பத்திரிகையில் எழுதுவது என்பது ஒரு சிறிய விடயம். இதை ஒரு மாற்று ஊடகமாக நாங்கள் நினைக்கிறோம் என்று சொன்னால், யாருக்கு இது மாற்று ஊடகம் என்று நினைக்கிறோமோ அவர்களிடம் அது போய்ச் சேரத்தானே வேண்டும். அந்த நோக் கத்தில் செய்ததால்தான் அது இப்படிப் போச்சு.
புதிதாக வருகிறவர்கள் என்ன செய்யவேண்டும் என்று கேட்டீர்கள் என்றால், அவர்களில் இரண்டு விதமான ஆட்கள் இருக்கக்கூடும். ஒரு வகை, இலங்கை பற்றிய விடயங்களைப் பதிவு செய்ய வேண்டும் என்பதே ஒரே நோக்கம். அதில் இருந்து பணம் சேகரிக்கலாம் என்ற எண்ணமில்லாதவர்கள். உதாரணத்திற்கு, புகலிடத்திற்கு வருவதற்கு எடுத்துக் கொண்ட சிரமமான பயணப் பாதைகள் பற்றிய விவரணம் ஒன்று படமாக எடுக்கப்படலாம்தானே. இப்படியானவற்றிற்கு ஆதரவாக இருப்பவர்கள் ஒரு வகையினர்.
மற்றது எந்தப் படைப்பாளி என்றாலும் அது இந்தியாவில் இருந்துதான் வரவேண்டும். என்னுடைய அடுத்த படத்தைப்பற்றி அப்படித்தான் யோசித்துக் கொண்டிருக்கிறேன். உங்களுக்கான அடையா ளத்தைத் தக்கவைக்கக்கூடியதான ஒரு படத்தை முதலில் தென்னிந்தியச் சூழலில் இருந்து அதனுா டாகக் கொண்டு வந்து விட்டு, அதற்குப் பிறகு வருங்காலத்தில் ஒரு படத் தைக் கொண்டுவரும்போது அதற்கான அங்கீகாரத் துடன் ஏற்றுக்கொள்ளப் படுவீர்கள். அல்லது மாற் றுக்கான ஒரு இயக்கமாக அது உருவெடுத்து, இந்தச் சினிமாவை 500 அல்லது 1000 பேர் பார்ப்பதற்கான
உயிர்நிழல் 0 ஒக்டோபர் - டிசம்பர் 2007
 

52
ஒரு கட்டமைப்பை எல்லா நாடுகளிலும் உருவாக்கி அதற்கான செயற்பாட்டின்மூலம் இதைக் கொண்டு செல்லமுடியும். அப்படி இல்லாமல் இலங்கை அடையா ளத்துடன் வரும் எவரும் கமர்சியலாக வெல்ல முடி யாது. வெல்வதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை.
உ.நி. புகலிட நாடுகளில் வந்த விமர்சனங்களில் குறிப்பாக,மாற்றுக் கருத்தாளர்களின் ஊடகங்களில் வந்த விமர்சனங்கள் என்று பார்க்கலாம் இதை. அவர் கள் குறிப்பாகச் சொன்னது. இது தென்னிந்திய சினிமா மொழி. இந்தியத் தமிழ் சினிமா என்று இவர்கள் சொல் வதற்கு பாட்டு ஒரு காரணமாக இருக்கலாம். இலங் கைத் தமிழ்ச் சூழலுக்கு இது தேவையில்லை என்பது அவர்களது கருத்து. இந்த விமர்சனங்கள் தொடர்பாக நீங்கள் என்ன சொல்லப் போகிறீர்கள்?
புதியவன்! நான் இதை முதலே உங்களுக்குச்சொல்லி விட்டேன். இரண்டு விஷயங்கள்தான். புலம்பெயர் சூழலில் உள்ள 4 அல்லது 5 வீதமான முற்போக்கு சக்திகளுக்கும் சர்வதேச திரைப்பட விழாக்களுக் குமாக எனக்கு இந்தத்திரைப்படத்தைச் செய்திருக்க முடியும். ஆரம்பத்தில் திரைக்கதையை எழுதும்போதே நான் அப்படித்தான் செய்தேன். ஆனால் என்னுடைய பதினைந்து இருபது நண்பர்கள் காசு பங்களித்திருக் கிறார்கள். இவர்கள் யாருமே (நண்பர் ஜூட்டைத்தவிர) முற்போக்கு சக்திகள் கிடையாது இவர்கள் யாருக் குமே மலையக மக்களின் பிரச்சினையை உலகத் தளத்திற்கு கொண்டு போகவேண்டும் என்ற சிந்தனை கிடையாது. அவர்களிற்கு அந்தக் காசு தங்களுக்குத் திரும்பிவரவேணும் என்ற நோக்கம்மட்டும்தான். அந்த வகையில் இதை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும் என்ற ஒரு பொறுப்பும் எனக்கிருக்கிறது. எங்களில் எத்தனை பேர் மாற்றுச் சினிமா பார்த்தி ருக்கிறோம். சாதாரண ஆங்கிலப் படங்களைப் பார்த்திருக்கிறோம். சாதாரணமாய் லாச்சப்பலிலை உள்ள 100 பேரிட்டை நீங்கள் கடைசியாகப் பார்த்த 10 படங்களைச் சொல்லுங்கள் என்று கேட்டால் அது நிச்சயம் தென்னிந்தியப்படங்களாகத்தான் இருக்கும். அவனுக்கு படம் என்றால் ஒரு போர்முலா வைத்தி ருப்பான். பாட்டு, சண்டை இப்பிடி, நாங்கள் எடுத்ததும் படம்தான் என்று முதலில் நம்ப வைப்பதற்கு சில விடயங்கள் தேவைப்பட்டது. அதில் ஒன்று பாட்டு. குறைந்த பட்சம் நான் அந்தப்பாட்டுகளை படத்தோடு ஒட்டியதாகவே வைத்திருக்கிறேன். குறிப்பாக மலை யக மக்களின் பின்னணி பற்றிச் சொல்லுகின்ற ஒரு பாட்டு.புலம்பெயர் தமிழர்களைப்பற்றி அவர்கள் அங்கு என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றிய இன்னொரு பாட்டு. மிச்ச இரண்டு பாட்டும்தான் வெறுமனே பாட்டு என்பதற்காக அங்கு சேர்க்கப்பட்டவை. வேறு எங்குமே யதார்த்தத்தை மீறியதாக நான் நினைக்கவில்லை. உரையாடல்களோ, காட்சிகளோ, ஏன் நகைச்சுவை கூட எங்கும் மிகைப்படுத்தப்பட்டதாக இல்லை. தென்னிந்திய நடிகர்கள்கூட ஆரம்பத்தில் மிகை நடிப்புக்குத்தான் வந்தார்கள். ஆனால் பிறகு அவர்களை ஒரளவு யதார்த்த நடிப்புக்கு கொண்டு வந்தேன். எங்களுடைய முற்போக்கான விமர்சகர்
இதழ் 27

Page 63
களிடம் ஒரு பிரச்சினையும் இருக்குத்தானே. தாங்கள் முற்போக்காக ஒரு விஷயத்தைப் பார்க்கிறோம் அல்லது சினிமாவை மாற்று சினிமாவாகத்தான் பார்க்கிறோம் என்பதைச் சொல்வதற்காக, சில விஷயங்களைச் சொல்லியே தீரவேண்டும் என்று நினைக்கிறார்கள்.
உ.நி. யதார்த்தமாக இருப்பவைகளை முற்றாகவே புறக்கணித்துவிட்டு ஒரு இண்டஸ்ட்ரி இல்லாத இடத்தில் இருந்து ஒரு சினிமா வருகின்றது என்பதை கணக்கில் எடுக்காதுதான் இந்த விமர்சனங்களைச் சொல்கிறார்கள். அப்படியா! புதியவன்: அ.மார்க்ஸ், வெளிரங்கராஜன் இவர்களின் விமர்சனத்தை - இவர்கள் எல்லாம் தெரிந்தவர்கள் என்னும் அர்த்தத்தில் சொல்லவரவில்லை.அ.மார்க்ஸ் சொல்கிறார், வியாபாரத்துக்காகச் சில விடயங்களை வைத்திருக்கு, அவற்றை நாங்கள் விட்டுவிடுவோம் என்று. அவர் இந்தியாவில் இருக்கிறார் என்ற முறையில் அவருக்குத் தெரிகிறது, இந்த சினிமா துணிந்து கதைக்க வந்திருக்கிறது. சுற்றிவளைக்காமற் பேசியி ருக்கின்றது. சொல்ல வந்த விடயத்தைத் தெளிவாகச் சொல்லி இருக்கின்றது. பாட்டுகள் என்ன நோக்கத் திற்காக வைக்கப்பட்டிருக்கிறது என்பதையும் தெளி வாகச் சுட்டுகிறார். இந்தத் தெளிவுபுலம்பெயர்சூழலில் இருப்பவர்களுக்கு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
உ.நி. பாடல்கள், படத்தின் மொழி எல்லாவற்றையும் ஒருபக்கம் வைத்துவிட்டு'மண் படத்தின் அரசியலைப் பார்த்தால், இந்த மாற்றுக் கருத்தாளர்களால் நிராகரிக்கப்படும் அல்லது ஏற்றுக்கொள்ள முடியாத கருத்தியல் என்றில்லை. அது ஒரு மாற்றுக் கருத்துத் தான். படத்தின் உள்ளிட்டைப் பார்க்காமல் கோதை மட்டும் வைத்து தென்னிந்திய சினிமாப் பாணி என்று சொல்வதென்பதை இந்த மாற்றுக் கருத்தாளர்களும் விமர்சகர்களும் உள்ளீட்டைப் பார்க்கத் தவறியிருக் கிறார்கள் எனலாமா?
புதியவன்; தவறியதாகத்தான்நான் நினைக்கிறேன். சில விமர்சகர்களுக்கு, நான் இந்தக் கதையின் பின்னணியை வன்னியாக வைத்திருக்கிறன். வன்னி யில்நாங்கள்பார்த்த சில சம்பவங்களின் தொகுப்பாகத் தான் அந்தப் படத்தை செய்திருக்கிறேன். மலையக மக்கள் அங்கு எப்படித்துன்புறுத்தப்பட்டிருக்கிறார்கள் என்பதைச் சொல்லி இருக்கிறேன். இதுதான் கொழும் பில் நடந்தது. யாழ்ப்பாணத்தில் நடந்தது. மட்டக் களப்பில் நடந்தது. மலையகத்தில் கூட யாழ்ப் பாணத்துத் தமிழர் செய்தது இதைத்தான். கொடூரம் வெவ்வேறு வடிவத்தில் இருந்தாலும் ஒடுக்குமுறை ஒரேமாதிரியானதுதான். எனக்குத் தெரிந்த தளம் என்ற படியால் நான் கதையை வன்னிக்குக் கொண்டு வந்தி ருக்கிறேன். மலையக மக்களுக்கு ஏற்படுத்தப்பட்ட கொடுமை, மலையக மக்களை இவர்கள் நடத்திய விதங்கள் எல்லாமே ஒளிவுமறைவில்லாமல் சொல்லப் பட்டிருக்கிறது.நான் ஒரு பூர்வீகத் தமிழனாக இருந்து
இதழ் 27

3
K Parry yw
கொண்டு எங்களைக் காப்பாற்றும் முயற்சியை நான் ஒரு இடத்திலும் எடுக்கவில்லை. அது எந்த விமர்சகர் களாலும் தெளிவாக முன்வைக்கப்படவில்லை. ரதனின் விமர்சனம் 'உயிர்நிழல்'இல் வந்தபோது, அவர் தீர்வு சொல்லக்கூடாது என்றுதான் எழுதுகிறார். தீர்வுநான் சொல்லவில்லைத்தானே. அதை நான் திறந்துதான் விட்டிருக்கிறேன். அவன் துப்பாக்கியை எடுக்கிறான். சுடுகிறான். மலையகத்துமகன் என்ற வகையில் அவன் அதைச் செய்தது சரியா என்பது விமர்சனத்துக் குரியதாக இருக்கலாம். இன்றைக்குநாங்கள் இருந்து துரையப்பாவைச் சுட்டது சரியா பிழையா என்று யோசித்துக்கொண்டிருக்கிறோம். அடிப்படையில் தமிழ் மக்களின் பிரச்சினை சரியா பிழையா என்பதை விவாதிப்பதற்கு நாங்கள் தயாரில்லை. அதேபோலத் தான் இது மலையக மக்களுடைய பிரச்சினை, பாதிக்கப்பட்டது மலையக மக்கள். மலையக மக்கள் என்ன முடிவு எடுக்கிறார்கள் என்பதுபற்றியும் அவனு டைய அந்தப் பிரச்சினைக்கு என்ன முடிவெடுக்க வேண்டும் என்பதுபற்றியும் அவன்தான்முடிவுசெய்வான். அதில் சுட வெளிக்கிட்டது பிழை என்று எப்படிச் சொல்லலாம் என்பது எனக்குத் தெரியவில்லை. வன் முறையை நான் ஆதரிக்கவில்லை. வன்முறைகளுக் குள்ளால் தீர்வுகளைக் கொண்டு வந்துவிடலாம் என்பதில்லை எனது கருத்து. அதே நேரத்தில் அவன் கையைக் கட்டிக் கொண்டு ஆர்ப்பாட்டம் செய்வதாலும் அதுதான் தீர்வாகுமா என்பதும் எனக்குத் தெரியாது. அதனால்தான் அதை முடிவு சொல்லாது விட்டிருக் கிறேன். சுட்டபடியால்தான் அது இவ்வளவு எதிர் விவாதங்களையும் கொண்டு வந்தது. படைப்பினுடைய நோக்கமும் அதுவாகத்தானே இருக்கவேணும். உதாரணத்துக்கு, "உயிர்நிழல்'இல் ஒரு கட்டுரை வருகிறதென்றால் கட்டுரையை அப்படியே ஏற்றுக் கொள்வதுமட்டும்தான்என்றால் கட்டுரைக்கு நோக்கம் இல்லாமல் போய்விடும்தானே. அந்தக் கட்டுரை ஒரு விவாதத்தையும் கிளப்பத்தானே வேணும். இன்னொரு தளத்திற்கு கொண்டு செல்லுதல் என்பதுதானே ஒரு படைப்பினது நோக்கமாக இருக்கவேண்டும். அந்த வகையில்'மண் நிறைய விவாதங்களை உருவாக்கித் தான் இருக்கின்றது. அந்த வகையில் நான் அதை ஒரு வெற்றியாகத்தான் பார்க்கிறேன்.
உநி: யாழ் மையவாதம் என்பதுமலையக மக்களை எப்போதும் ‘தீண்டத்தகாத மக்களாகத்தான் பார்த்திருக்கிறது. இது மலையக மக்களுக்கு எதிரான படம் என்று ஒரு சாரார் சொன்னாலும் இந்த யாழ் மையவாதக் கருத்துட்ையவர்களை இந்தப் படம் ஆத்திரப்படுத்தியிருக்கும் என்று நீங்கள் நம்பு கிறீர்களா?
புதியவன்! நிச்சயமாக ஆத்திரப்படுத்தி இருக்கும். மலையக மக்கள் தீண்டத்தகாதவர்களாக (அவர் களுக்குள் இருக்கும் சாதிப் படிமங்களை ஒதுக்கி)
ஒட்டுமொத்தமாக ஒரு சாதிப் பிரிவை உருவாக்கி
யிருக்கும் இந்த யாழ் மையவாதம் இந்தப் படத்தை கைதட்டி வரவேற்கும் என்பது சிரிப்புக்குரிய விடயம் தான்.
உயிர்நிழல் 0 ஒக்டோபர் - டிசம்பர் 2007

Page 64
சினிமா )
உநி. அதனுடைய வெளிப்பாடுகள்தான் இது என்று நீங்கள் நம்புகிறீர்களா?
புதியவன் இவங்கள் தேவையில்லாமல் பிரச்சினை யைக் கிளறிப் போட்டாங்கள் என்று சொன்னதை ஆழமாகப் பார்த்தால், எதைக் கிளறினது? அப்பமூடி மறைக்கப்பட்ட உண்மை ஒன்று இருக்கிறது. இதைக் கிளறுவதால் அவர்கள் வெளிச்சத்துக்கு வரப்போகி றார்கள். இது தங்களுக்கு ஒரு பாதிப்பைக் கொண்டு வரப்போகுது. அந்தப் பாதிப்பு வந்தால் ஒட்டுமொத்த மாகப் போராட்டம் என்று பார்க்கும்போது அது பாதிப்புத் தான்.
அத்துடன் யாழ்மையவாதத்தைப்பிடித்துவைத்தி ருப்பவர்களுக்கும் இது ஒரு சவாலாக வரப்போகின்றது தானே. இதற்குப் பதிலளிக்கவேண்டி வரும் என்பதும் இதை இல்லாமலாக்குவதற்கு ஒரு காரணம்.
மாற்றுக் கருத்தாளர்களென்று எடுத்தால், என்னி டம் ஒரு நண்பன் சொன்னான் "நீ எப்பவும் யாழ்ப்பா ணத்திலை குறை சொல்றத்திலை இருக்காமல் மிச்சத் தையும் பார்” என்று. அப்போது நான் சொன்னேன், மாற்றுவில் அது வருகிறது. 'கனவுகள் நிஜமானால் அதைப்பற்றிக் கதைக்கவில்லை. 'மண்'இல் நான் யாழ்ப்பாணத்தைப் பற்றியே கதைக்கேல்லை. அது யாழ் மக்களுக்கும் பொருத்தமாக இருந்திருக்கிறதே தவிர. படத்தின் களம் வன்னி. அங்குள்ள பூர்வீகத் தமிழர் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதுதான்
Ltb.
அப்போதுதான் அவர் சொன்னார்: "இந்தக் கொடுமையின் உச்சம் யாழ்ப்பாணத்துத் தமிழர்களால்தான் நடத்தப்பட்டிருக்கின்றது" என்று. அப்போது நான் சொன்னேன் உங்கள் பக்கத்துத் தவறுகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளத்தானே வேணும்
бT60їДІј.
பிர்நிழல் 0 ஒக்டோபர் - டிசம்பர் 2007
 

உ.நி. இந்தப் படத்தை இலங்கைக்குப் போய் எடுக்கும்பொழுது அங்குநிறையச் சிக்கல்களை எதிர் நோக்கவேண்டி இருந்திருக்கும்.
நீங்கள் ஐரோப்பாவில் இருந்து போகிறீர்கள். உங்களிடம் ஒரு யூனிட் இல்லை. இந்நிலைமையை நீங்கள் எவ்வாறு எதிர்கொண்டீர்கள்? புதியவன் தயாரிப்புப் பொறுப்பாளர் என்று ஒருவர் இருப்பார்தானே. உதவி டைரக்டர், தயாரிப்புமுகாமை யாளர். ஒப்பனைக் கலைஞர் - இவர்களை நாங்கள் சிங்களக் கலைஞர்களிடம் இருந்து பெற்றுக் கொண் டோம். படத்தைப் பதிவு செய்வதற்கு, அதில் இருந்த முக்கிய பகுதிகளை நீக்கிவிட்டுத்தான் திரைப்பட நிறுவனத்திற்குக் கொடுத்தோம். துவக்குடன் வருகின்ற காட்சிகள் போன்றவற்றைக் கொடுத்தி ருந்தால் நாங்கள் இலங்கைக்குள்ளேயே போயிருக்க முடியாது. கிட்டத்தட்ட ஆறேழு காட்சிகள் வெளியில் எடுத்துவிட்டோம். கொடுக்கும்போது இது ஒரு காதல் கதை என்றுதான் சொன்னோம். படப் பெட்டிகளை நாங்கள் முதலிலேயே தனித்தனியாக இந்தியாவுக்கு அனுப்பி விட்டோம். Process பண்ணாத பிலிம்களை இந்தியாவில் உள்ள ஒரு கம்பெனிக்கு அனுப்புவது போல் அனுப்பிவிட்டோம். ஒரேயடியாக அனுப்பிப் பிடிபட்டால் முழுவதும் process பண்ணிப் பார்க்காமல் வெளியே விட்மாட்டார்கள் என்பதனால் படம் எடுத்துக் கொண்டிருக்கும்போதே படப்பெட்டிகளை நாங்கள் இந்தியாவுக்கு அனுப்பிவிட்டோம்.
மற்றது படம் எடுத்த இடங்கள் எல்லாம் கொஞ்சம் ரென்சனான பகுதிகள். எல்லைக் கிராமங்கள் முழு வதும் சிங்களக் கிராமங்கள். அங்கு தமிழர்கள் நிறையப் பேர் போய் நிற்கும்போது பிரச்சினையாக இருக்கும்தானே. ஆமி வரும்போது, இரண்டு தரம் பொலிஸ் ரெயிட் நடக்கும் போது, அந்த நேரம் பார்த்து
இதழ் 27

Page 65
கதிர்காமரைச் சுட்டு விட்டார்கள். இந்தச் சந்தர்ப் பங்களில் எல்லாம் சிங்கள ஆட்கள் தான் முன்னுக்கு நின்று கவனித்துக் கொண்டார்கள். அதனால்தான் நாங்கள் ஒரளவுதப்பிக்க முடிந்தது. ---
33 நாட்கள் தொடர்ச்சியாகப்படம் எடுத்ததினால் நேர இழப்பைத் தவிர்த்தோம். சாதாரணமாக அப்படிச் செய்வதில்லை.
உ.நி. இலங்கைச் சூழலில் கொஞ்சம் மாற்றுக் கருத்துக்களைக் கொண்ட சிங்கள சினிமாக்களே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் ஒரு தமிழ் சினிமா, அதுவும் எல்லைப் புறக் கிராமங்களில் படம் எடுப்பதற்குப்போகும்பொழுது இலங்கைத்திரைப் படக்கூட்டுத்தாபனம், இலங்கை அரசசினிமா அமைப்பு கள் எல்லாம் படத்திற்கு எவ்வளவு துாரம் ஒத்து ழைப்புக் கொடுத்தது? புதியவன்! இலங்கைத் திரைப்படக் கூட்டுத்தாபனம் ஒரு பேச்சுக்குத்தான் தமிழ்ப் பிரிவு என்ற ஒன்றை வைத்துள்ளது. அவர்களிடம் எந்த அதிகாரமுமில்லை. அவர்களுக்கு எந்த வருமானமும் இல்லை.
தேவதாசன் அதனுடைய தலைவராக இருந்தவர். இப்போது ராஜினாமா செய்து விட்டார் என்று நினைக் கிறேன். அவர்கள் எங்களுக்கு கொஞ்சம் உதவியாக இருந்தார்கள். உதவியாளர்களை எடுத்துத் தருவதில் கொஞ்சம் ஒத்தாசையாக இருந்தார்கள். சினிமாத் துறையில் அவர்களுக்கிருந்த தொடர்புகளால் அவர்கள் எங்களுக்கு இந்த உதவிகளைச் செய்தார் கள். மற்றும்படி கூட்டுத்தாபனம் எதிராக இருந்தது என்றுதான் சொல்லவேண்டும். ஆதரவாக இருக்க வில்லை.
உநி. எந்த வகையில்? புதியவன்! உண்மையில் அந்தத் திரைக்கதை தெரிந்திருந்தால் எங்களைபடம் எடுக்கவேவிட்டிருக்க மாட்டார்கள். மற்றும்படி எந்த ஆதரவும் கிடைக்கவும் இல்லை. நாங்கள் அதை எதிர்பார்க்கவும் இல்லை.
பிரதானமாக நான்கைந்து பேரைத் தவிர படம் எடுக்கும் இடங்களைப் பற்றி யாருக்குமே சொல்ல வில்லை. கலைஞர்கள் எல்லாருக்கும் எங்கு போகி றோம் என்பதையேநாங்கள் சொல்லவில்லை.நாங்கள் அவர்களை வாகனத்தில் ஏற்றி, புத்தளத்தில் கொண்டு போய் இறக்கும் வரையும் ஒருவருக்கும் தெரியாது. கொண்டு போனவர்கள் எல்லாரையும் வீட்டுக் காவலில் வைத்திருந்தமாதிரி 33 நாட்களும் அங்கேயே வைத்திருந்தோம். ஒரிரு காட்சிகளில் வந்தவர்களைக் கூட நாங்கள் வெளியில் விடவில்லை.
ஏனென்றால் அவர் கொழும்புக்குத்திரும்பிப்போய்ப் படம் எங்கு எடுத்தோம் என்று சொன்னாரென்றால்பிறகு திரைப்படக் கூட்டுத்தாபனத்துக்குத் தெரிந்து எல்லா வற்றையும் சோதிக்க வெளிக்கிட்டால் பிரச்சினை யாகிப் போய்விடும்.
அதனால் கிட்டத்தட்ட 80 கலைஞர்களை 33 நாட்கள் வைத்திருந்து சாப்பாடும் இருப்பிடமும் கொடுத்தோம். பிறகு படப்பெட்டிகள் எல்லாம் வெளியில் போன பிறகுதான் ஆட்களை வெளியில் விட்டோம்.
இதழ் 27

K för DIY
உ.நி. நீங்கள் படத்தை இலங்கையில் எடுத்து இந்தியாவில் எடிட் செய்து திருப்பி இலங்கையில் கொண்டுபோய்த் திரையிடுகிறீர்கள்.
அப்போது திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் எதிர்வினை எப்படி இருந்நது?
சென்சார் போன்ற ஏதாவது பிரச்சினைகள் இருந்ததா? புதியவன்: தணிக்கைக் குழுவின் பிரச்சினை என்ன வென்றால், அவர்கள் முழுப் படத்தையும் பார்ப்ப தில்லை. ஒரு படத்தை 10-15 நிமிடங்கள்தான் பார்ப் பார்கள். முதல் 15 நிமிடங்கள் பள்ளிக்கூடக் காட்சி கள்தானே. அந்த முசுப்பாத்திகளைப் பார்த்துவிட்டு அவர்கள் ஒன்றுமே சொல்லவில்லை. ஆனால் தொடர்ந்து பார்த்து துவக்குக் காட்சிகளை எல்லாம் பார்த்திருந்தால் பிரச்சினையாக இருந்திருக்கும். பட விநியோகஸ்தருக்கு திரைப்படக் கூட்டுத்தானத் திற்குள் கொஞ்சம் செல்வாக்கு இருக்கின்றது. ஐங்கரன் விநியோகஸ்தர்தான் உதவியாக இருந்தார். அவர் இந்தப் படத்தை இலங்கைப் படம் என்று சொல் லாமல் இந்தியப்படம் என்று சொல்லித்தான் சமர்ப் பித்தார். இந்தியப் படங்களை அவர்கள் பெரிதாகப் பார்ப்பதே இல்லை. இந்தியா என்ன மாதிரியான அத்தாட்சிப்பத்திரம் கொடுத்திருக்கின்றது என்பதைப் பார்த்து அதேமாதிரி ஒரு அத்தாட்சிப்பத்திரத்தைக் கொடுத்துவிடுவார்கள். 'மண்ணுக்கும் அதேமாதிரித் தான் நடந்தது.
உ.நி. புகலிட நாடுகளில் ஏற்கனவே சினிமா சார்ந்து இயங்குகின்ற பலர் இருக்கிறார்கள். சிலர் குறும்படம் எடுக்கிறார்கள். சிலர் வீடியோப் படங்களாக எடுத்த வர்கள் இருக்கிறார்கள். அவர்களினுடைய செயற் பாடுகள், படங்கள் சார்ந்து நீங்கள் என்ன நினைக் கிறீங்கள்?
புதியவன் துறை சார்ந்து பார்ப்பதாக இருந்தால் விரும்பியோ விரும்பாமலோ அவற்றை இலங்கை சினிமாவுக்கான அடையாளமாகத்தான் நாங்கள் பார்க்கலாம். நாங்கள் நாளைக்குத் திரும்பிப் போகி றோமோ இல்லையோ, இன்றைக்கு வரைக்கும்நாங்கள் எங்களை இலங்கைத் தமிழர்களாகத்தானே அடையாளப்படுத்திக் கொள்கிறோம். 99வீதமான முயற்சிகள் புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்க்ளால் தான்மேற்கொள்ளப்படுகிறதால் அதை ஒரு இலங்கைத் தமிழ் சினிமாவாகத்தான் பார்க்கலாம் என்று பார்த் தால், தரத்துக்கு அப்பால், அதாவது மாற்று சினிமா வாக மட்டும் பார்க்காமல், ஒரு முற்போக்கு சினிமா வாகப் பார்க்காமல், ஒரு பொழுதுபோக்கு ஊடகமாக மட்டும் பார்த்தால், நிறையப் படங்கள் பொழுதுபோக் குக்கான அம்சங்களைக் கொணி டிருக் கரின்றன. 'முகம்' படம் தவிர்த்து,
ܬܐ .
உயிர்நிழல் 0 ஒக்டோபர் - டிசம்பர் 2007

Page 66
சினிமா >
குறும்படங்கள்தான் முற்போக்கான விடயங்களைப் பேசி இருக்கிறது. முழுநீளத் திரைப்படம் என்று பார்த் தால் பூக்கள் அல்லது கனடாவில் இருந்து வந்த சில படங்கள் பொழுதுபோக்கு அம்சத்தை மட்டுமே கொண் டுள்ளன. ஒன்றிரண்டு படைப்புகளைத் தவிர. என்னைப் பொறுத்தளவில் நான் என்ன நினைக்கிறேன் என்றால், இவைகள்எல்லாவற்றையும் ஆதரிக்கத்தான் வேணும். குறைந்தபட்சம்கூட ஏற்றுக்கொள்ள முடியாத படமாக இருந்தாலும் கூட. இதை நிராகரிப்பதால் என்ன நடக் கின்றதென்றால் அந்த இயக்குநரின் பார்வையை மட்டும் நிராகரிக்காமல் ஒட்டுமொத்தமாக அதில் ஈடுபட்ட கலைஞர்கள் எல்லோரையும் நிராகரித்து விடுகின்றோம். இயக்குநர் வளருவதற்கான சந்தர்ப்பம் இல்லை. ஆனால் புலம்பெயர் சூழலில் ஒரு நடிகனோ நடிகையோ வெளியில் வருவதென்பது மிகவும் கடின மான விடயம். அவர் எந்த ஒரு படத்திற்குள்ளால் வந்தா லும் நடிகர்தான். இந்த ஒட்டுமொத்தமான நிராகரிப்பு அனைவரையும் இன்னொருமுயற்சிக்குப்போகாதவாறு தடுத்துவிடுகின்றது.
இங்குள்ள சூழலை எடுத்தால் பிரான்ஸில் அருந் ததி ‘முகம்' படத்திற்குப் பிறகு எந்த முயற்சியும் இல்லை. சுவிஸில் அஜீவனைப் போல் ஒன்றிரண்டு பேர் நல்ல குறும்படங்களைத் தந்திருக்கிறார்கள். தென் னிந்திய சினிமாவின் மொழியைத்தான் சினிமா மொழி என்று நினைக்கின்ற நிறையப் பேர்தான் இங்கு இருக்கிறார்கள்.
ஆகவே வரப் போகிற படங்கள் எல்லாம் அதை யொட்டிய படங்களாகத்தான் வரும். இதை முற்று முழுதாகநிராகரிக்கிறதா அல்லது இதில் உள்ளநல்ல அம்சங்களை ஊக்குவித்துநல்ல படங்களை எடுக்கக் கூடிய சூழலை நோக்கி நகர்த்துவதா என்ற இக்கட் டான சூழல்தான் இருக்கின்றது. எனவே நிராகரிப்ப தென்பது ஒரு துறை உருவாக்கத்தையே நிராகரிப் பதாகப் போய்விடும் அபாயம்தான் இருக்கின்றது
உ.நி. அதாவது ஆரம்பத்திலேயே நிராகரிக்கப் படுவதைச் சொல்கிறீர்களா?
புதியவன்: ஓம். ஆரம்பத்திலேயே மிகமோசமான விமர்சனங்களை வைத்து, இது சாதியத்தை ஆதரிக் கிறது, இது பெண் விடுதலைக்கு எதிரானது என்று எல்லாம் போட்டு அடித்துவிட்டால் அந்தப்படைப்பாளி திரும்ப நிமிரவே மாட்டான். அதற்காக நாங்கள் விமர்சனத்தை ஒதுக்க வேண்டும் என்பதில்லை. ஒரு படம் வந்தால் அதில் ஏற்றுக் கொள்ளக்கூடிய அம்சங் களும் இருக்கும்போது அவற்றை ஊக்கப்படுத் தியும் ஏற்றுக்கொள்ள முடியாவற்றை விமர்சித்தும் ஒருகாத்திரமான விமர்சனச் சூழலுக்கூடாக ஒரு துறை நோக்கிய நகர்வை ஏற்ப டுத்த வேண்டும். அதாவது ஒருவருடைய நடிப்பு, படத்
உயிர்நிழல் 0 ஒக்டோபர் - டிசம்பர் 2007
 

தின் இசை, ஒளியமைப்பு, இயக்கம் என்பன பற்றித் தனித்தனிக் கூறுகளாக விமர்சிப்பதுதான் காத்திர மானது. ஆனால் வந்த விமர்சனங்களைப் பார்த்தால் புதியவன் என்ற இயக்குநரை நிராகரிக்க வெளிக்கிட்ட முற்போக்குச் சக்திகள் வெறும் புதியவனை மட்டும் நிராகரிக்கவில்லைத்தானே! அதில் எத்தனை கலை ஞர்கள் இருக்கிறார்கள் - அவர்கள் தங்களுடைய திறமைகளை வெளிக் கொணர்ந்திருக்கிறார் கள்தானே. புதியவனை நிராகரிப்பது பற்றி எனக் கொன்றும் பிரச்சினையில்லை. ஆனால் ஒட்டு மொத்தமான துறை வளர்ச்சிக்கான பின்னடைவைத் தான் இந்த விமர்சகர்கள் செய்கின்றார்கள்.
உ.நி. இதையும் தென்னிந்திய சினிமாவின் பாதிப் பாகக் கருதலாமா?அதாவது அங்கு ஒரு படம் வெற்றி பெற்றாலோ தோற்றாலோ விஜய்யின் அல்லது அஜித்தின் படம் வெற்றி பெற்றது அல்லது தோற்றது என்று சொல்வதற்கு ஒப்பிடலாமா? அதில் உள்ள தொழில்நுட்பக் கலைஞர்களைக் கருத்தில் எடுத்தி ருக்க மாட்டார்கள். அதே மனோநிலைதான் இதுவும் என்று கொள்ளலாமா? புதியவன்! ஆனால் அங்கு அது ஒரு பாதிப்பாக இருக்காது. ஏனென்றால் அங்கு துறை உருவாக்கம் ஏற்கனவே நடந்துவிட்டது. எங்களுக்கு இன்னும் ஒரு துறையே இல்லை. அப்படி ஒன்று உருவாகவேண்டும் என்று சொன்னால் தொடர்ச்சியாகப் படைப்புகள் வந்துகொண்டிருக்க வேண்டும். w
உதாரணத்துக்குப்பார்த்தீர்கள் என்றால்'மாற்று செய்யும் பொழுது நாங்கள் வீட்டிலேயே சமைத்துச் சாப்பிட்டு படத்தைச் செய்தோம். ஆனால் 'கனவுகள் நிஜமானால் செய்யும்போது ஒரு இடத்தில் சாப்பாட் டுக்கு ஒழுங்கு செய்தோம். இதையேன் சொல்கிறேன் என்றால், நாங்கள் எங்களை ஒழுங்கமைக்க வெளிக் கிடுகிறோம். இதுவே 10 படமாக வரும்போது 5 பேருக் குத் தொடர்ச்சியாக சாப்பாட்டுக்கு ஒடர் கொடுக்க வேண்டி வரும். -
படங்கள் தொடர்பாக வந்த விமர்சனங்களை நீங்கள் ஓரளவுபார்த்தீர்கள் என்றால், வேற்றுமொழிப் படங்கள் போல் கதை ஒருவர், திரைக்கதை இன்னொருவர், இப்படி. இல்லாமல் எல்லாவற்றையும் ஒருவரே செய்வதால் இந்த விமர்சனங்கள் யாவும் குறிப்பிட்ட ஒருவரை நோக்கியே முன்வைக்கப் படுகின்றது. புலம்பெயர்சூழலில் பார்த்தால் இந்த விமர்சனம் இயக்குநர்மீது வைக்கப்படுகின்றது. தென்னிந்தியச் சூழலை எடுத்தால் அது dominate பண்ணும் நடிகர் மேல்தான் வைக்கப்படுகின்றது. சில படங்களுக்குத்தான் இயக்குநர்மீது விமர்சனம் வைக்கப்படுகின்றது. உதாரணத்திற்கு, மணிரத்தினம் அல்லது பாலுமகேந்திரா போன்ற இயக்குநர்களுக்கு. புலம்பெயர் சூழலில் இயக்குநர் சம்பந்தமாக வைக்கப்படும் விமர்சனங்கள் படத்தையே நிராகரிப் பதாகத்தான் இருக்கின்றது. தனிப்பட்டமுறையில் நடிகருக்கு, தொழில்நுட்பக் கலைஞருக்கு வைக்கப் படும் சாதகமான விமர்சனங்கள் ஒரு நிராகரிக்கப் படவேண்டிய இயக்குநரினது படமாக இருந்தாலும்
இதழ் 27

Page 67
அவர்களை அடுத்த கட்டத்துக்கு செல்வதற்கான உந்துதலைக் கொடுப்பதாக இருக்கும்.
நீங்கள் பார்த்தீர்கள் என்றால் கனடா, டென்மார்க், பிரான்ஸ், இங்கிலாந்து என்று படங்கள் உருவாகிக் கொண்டேதான் இருக்கின்றது. இது ஒரு தொடர்ச்சி யான உருவாக்கத்திற்கு வரும் என்பது என்னுடைய நம்பிக்கை. ஒரு கட்டத்திற்குப்பிறகு இந்தச் சக்திகள் எல்லாம் தங்களுக்குள் ஒரு ஒருங்கிணைப்புக்கு வந்து சர்வதேச ரீதியான பரிமாற்றங்களைச் செய்து கொள்ளக்கூடும். வியாபாரரீதியிலான கட்டமைப் பொன்று உருவாகக்கூடும். அதற்கான அவசியம் ஒன்று ஏற்படும் என்று நான் கருதுகிறேன். அல்லது அடுத்த டுத்துப் படங்கள் வந்து திடீரென்று எல்லாமே நின்றுவிடவும் கூடும்.
எனக்குத் தெரிந்தவரையில் கனடாவில் திரைப் படச் சங்கம் போல் ஒன்று உருவாக்கி, யாருடைய படம் வந்தாலும் அதை ஊக்குவிப்பதற்காக உதவுகிறார்கள். அதற்கான முனைப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. அந்தவகையில் எங்களுடைய முற்போக்குச் சக்திகள் மிகவும் பொறுப்புடன் விமர்சனங்கள் வைக்க வேண்டியது அவசியம் என்று நான் நினைக்கிறேன்.
உநி: இதில் முற்போக்கு சக்திகள், மாற்றுக் கருத்தா ளர்கள், வரிசையில் வரும் இந்த விமர்சகர்கள் இவர்கள் சினிமாவை ஒரு கலை ஊடகமாக எடுத்துக் கொள்கி றார்களா? இது குறித்து அவர்கள் எவ்வளவு புரிந்து ணர்வுடன் இருக்கிறார்கள் என்று நீங்கள் நினைக் கிறீர்கள்? இந்த விமர்சனங்களுக்கும் அதற்கும் ஒரு தொடர்பு இருக்க வேண்டும். புதியவன் உண்மையில்நிங்கள்பார்த்தீர்கள்என்றால், ‘மண் தொடர்பாக வந்த விமர்சனங்களை எடுத்துக் கொள்ளுவோமே, உண்மையில் படத்தின் தொழில் நுட்பம் சார்ந்து குறைந்த பட்ச அறிவுகூட இல்லாத வர்கள்தான் விமர்சித்திருக்கிறார்கள், ஒரிருவரைத் தவிர. S.
இதுபற்றி ஒரு பொதுமேடையில் நான்பகிரங்கமாக சவால் விடவும் தயார். இவர்கள் தங்களுடைய பின்னணி அரசியலுக்குள்ளால் மட்டுமேதான் இந்தப் படத்தைப் பார்க்கிறார்கள். படத்தின் மொழியை அல்லது படம் என்ன சொல்ல முற்படுகின்றது என்ற விஷயம் எல்லாவற்றையும் இவர்கள் கோட்டை விட்டு விடுகிறார்கள்.
உதாரணத்திற்கு, படத்தில் என்ன கலர் ரோனைக் கொடுக்கிறோம் என்பது மிகவும் முக்கியமான விடயம். மண்ணில் வழமையான வடிவத்தில் இருந்து reverse பண்ணிப்பார்த்திருக்கிறேன். Fashback போகும்போது மஞ்சள் ரோனுக்கும் யதார்த்தம் வரும்பொழுது சாதாரண ரோனுக்கும் போகிறது. பசுமையான நினை வுகள் கடந்த காலம்தான். நிகழ்காலம் கிடையாது. பசுமையான நினைவுகளுக்கு பச்சை ரோனையும் இப்போதைய நிகழ்வுகளுக்கு மஞ்சள் ரோனையும் கொடுப்போம் என்று மாற்றிச் செய்திருக்கிறேன். இந்தியாவில் இருந்து வந்த ஒன்றிரண்டு விமர்சனங் களைத் தவிர, இந்தியன் எக்ஸ்பிரஸ், The Hindu, தீராநதி போன்றவற்றைத் தவிர, புலம்பெயர் சூழலில்
இதழ் 27

7
K சினிமா
யாராவது இந்தரோனைப்பற்றிப்பேசி இருக்கிறார்களா என்று பாருங்கள்.
யமுனா ராஜேந்திரன் உட்பட எவருமே இதைப் பற்றிக் கதைக்கவேயில்லை. இதுரோனைத் தெரியா மல் இல்லை. இது ஒரு மிக முக்கியமான விஷயம். ஏனென்றால் வழமையாக இந்த மஞ்சள் ரோனை கடந்த காலத்தைச் சொல்லத்தான் பாவிக்கிறார்கள். படத் தைப்பற்றி விமர்சிக்கும்போது இதைப்பற்றிச் சொல்லி இருக்கத்தானே வேணும். நான் ஏன் இதைச் சொல்ல வருகிறேன் என்றால், கனபேருக்கு சினிமா பற்றிய அறிவுமட்டமாகத்தான் இருக்கிறது.
இப்ப என்னிடம் வந்து சுந்தரராமசாமியின் கதை களை விமர்சியுங்கோ என்றால் என்னால் அவற்றை விமர்சிக்க முடியாது. ஏனென்றால், நான் இலக்கியம் தொடர்பாக ஒரு விமர்சனம் வைக்கப் போகிறேன் என்றால், அது குறித்த குறைந்த பட்ச அறிவோ ஆய்வோ தேடலோ இருக்க வேணும். எனக்கொரு அரசியல் பின்னணி இருக்குது. Political correctness என்பதை வைத்துக்கொண்டு, இடதுசாரி ஈடுபாடு என்பதை மட்டும் வைத்துக்கொண்டு விமர்சனம் செய்ய முடியாது. வந்த விமர்சனங்களில் அரைவாசிக்கு மேல் அது சம்பந்தப்பட்டதுதான்.
அதாவது இவர்கள் எல்லாரும் சினிமா எனும் ஊடகம் பற்றிய முழுமையான புரிதல் இல்லாமல் வைத் தவைதான். ஒருநாளும் படமே பார்க்காது ‘மண்'ஐ மட்டும் பார்த்த ஒருவர். சில விடயம் தெளிவாகச் சொல்லப்படவில்லை என்று சொல்லிவிட்டுப் போக லாம். ஆனால் படம் பற்றிய விமர்சனத்திற்குப் போகும் போது அது குறித்த குறைந்தபட்ச தெளிவாவது இருக்கத்தானே வேணும். அப்போதுதான் அதனுடைய முழுமையைப் புரிந்துகொள்ளலாம். ஜெயபாலனின் விமர்சனத்தைப் பார்த்தீர்கள் என்றால் எடிட்டிங் இன்னும்improve பண்ணி இருக்கலாம் என்று சொல்லி இருக்கிறார்.
நான் எடிட்டிங்கில் வேலை செய்யும்போது அவர் எனக்கு அதற்கான காரணத்தைப்புரியவைத்தார். அது படத்தின் வேகத்துடன் சம்பந்தப்பட்ட விடயம். உதார ணத்திற்கு, "Speed' படத்தை எடுத்தால் அதன் வேகத்தை எந்த இடத்திலும் குறைத்திருக்க முடியாது. படம் தேவையற்ற இடத்தில் பொருத்தமற்ற வேகத்தில் செல்வது தவிர்க்கப்படும்போதுதான்பார்வையாளனை சோராமல் இருக்க வைக்கமுடியும். இது எடிட்டிங்கில் முக்கியம். அவர் சொன்னார், 'மண்இல் முதல்பாதியில் வேகத்தைக் கூட்டமுடியாது. அதேபோல் பிற்பாதியில் குறைக்கவும் முடியாது. இந்த வித்தியாசத்தைக் காட்டு வதென்றால் அதை cuttingஇல்தான் காட்டவேணும். எனவே சில விமர்சனங்களைப் பார்த்துவிட்டு பேசாமல் இருக்க வேண்டியதுதான்.
யமுனா ராஜேந்திரனிடம் முதலில் கதைத்தபோது, படத்தில் ஏதோ பிரச்சினை இருக்கிறது என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டே வந்தார். பின்பு வெளி ரங்கராஜன், புதிய பார்வை, அ. மார்க்ஸ் ஆகியவர் களின் விமர்சனங்களைப் பார்த்துவிட்டு "அடடே இவங்களெல்லாம் இப்பிடி எழுதியிருக்கிறாங்க" என்று அவர் ஆச்சரியப்பட்டார். அதைத் தொடர்ந்து அவரு
உயிர்நிழல் 0 ஒக்டோபர் - டிசம்பர் 2007

Page 68
சினிமா )
டைய அப்பிராயங்கள் மாறிக் கொண்டே இருந்தது. ஒரு சினிமா விமர்சகனாக நீங்கள் இருக்கும்போது, முதல் தடவை பார்த்துவிட்டு வரும்போது உங்களுக்கு இருக்கின்ற அந்த விமர்சனம் மாறமுடியாதுதானே. படத்தைப்பார்த்தவுடன் இருந்த உங்கள் விமர்சனமும் ஒரு 10 நாட்களிற்கும் பிறகான உங்கள் விமர்சனமும் ஒன்றாக இல்லாதவிடத்து, அதன் அர்த்தம் படம் சம்பந்தமான உங்கள் புரிதல் போதாது என்பதே. இன்னொருவரின் அபிப்பிராயத்தை ஒட்டி உங்களு டைய அபிப்பிராயம் மாற முடியாதுதானே.
உ.நி. அவசரமாக அல்லது தளும்பல் நிலையில் வைக்கப்படும் விமர்சனங்கள் துறை வளர்ச்சியைப் பாதிக்கின்றது. அப்படித்தானே?
ஆரம்பத்தில்வைத்த விமர்சனங்கள்தானே'மண்ஐ சிக்கலுக்குள் கொண்டு போனது. புதியவன்: ஓமோம். ரதனின் விமர்சனத்தைப் பார்த் தீர்கள் என்றால், அதுவும் மாலதி The Hinduவில் எழுதிய விமர்சனமும் ஒன்று. நான் எல்லா விமர்சனமும் பார்த்ததால் எனக்குத் தெரியும்.
ஒருவருடைய கருத்து இன்னொருவருடைய கருத்தால்influence பண்ணப்படுகிறது. விமர்சனத்தை அப்படிப் பார்க்க முடியாது என்றுதான் நான் பார்க்கி றேன். ரதன், ஜெயபாலன் போன்றவர்களுடைய விமர்சனம் என்னில் மாற்றத்தைக் கொண்டுவந்திருக்க வேண்டும். r
உதாரணத்துக்கு, கடைசியில் துவக்கை எடுத்துச் சுடும் காட்சி வந்ததை, புதியவனின் படத்தில் எப்போ தும் இப்படித்தான் முடிவு என்னும் விமர்சனம் என்னை ஒரு கணம் சிந்திக்க வைத்தது.நான்அதை ஒருபோதும் அப்படி நினைத்துப் பார்த்திருக்கவில்லை. இந்த விமர்சனங்கள் என்னில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வரலாம். ஆனால் ஒரு விமர்சகனின் கருத்து நேரத் திற்கு நேரம் மாறுபட முடியாது. அப்படியாயின் அவர் எப்போது உண்மையாக விமர்சித்தார் என்ற கேள்வி எழுகின்றது. அப்படியும் நடந்திருக்கின்றது. ஏனென் றால் தனிப்பட்ட முறையில் அவர்களுடன் கதைக்கும் போதுஅந்த மாற்றம் தெரிந்தது. அவர்கள்படம்பார்த்த வுடனே ஒரு கருத்தும் பின்பு தனிப்பட்டமுறையில் கதைக்கும்போது வேறு கருத்தும் கொண்டிருந்தார்கள். இது எனக்கு அவர்களின் விமர்சனம் மீதான சந்தே கத்தை ஏற்படுத்துகின்றது. ஒரு படைப்பாளி என்ற வகையில் பலரின் விமர்ச னங்களின் பின் என்னுடைய படைப்பை நான் கேள்விக் குள்ளாக்க (լքlջԱյլb. ஆனால் விமர்சகர்கள் அப்படியல்ல.
உ.நி. தென்னிந்தியத் தமிழ் சினிமாவானது இலங் கைத் தமிழ் சினிமாவை ஆக்கிரமித்திருக்கிறது என்று பார்க்கும்பொழுது அதனுடைய மொழியோ
உயிர்நிழல் 0 ஒக்டோபர் - டிசம்பர் 2007
 

அல்லது அது பேசும் அரசியலோ எப்போதுமே ஒரு பொதுநலன் சார்ந்ததாக இருந்ததில்லை.
தென்னிந்தியத் திரைப்படத்துறை என்பது பொது நலன் சார்ந்து சிந்திக்க முடியாத தடைக் கற்களால் நிரம்பிய ஒன்று. இப்படியான ஒரு விடயம் இருக்கும் போது ஒரு இலங்கைத் தமிழ் சினிமாத்துறை ஒன்றை உருவாக்க, அதாவது எங்கள் பிரச்சினைகளைப் பேசும்படியான ஒரு திரைப்படத்துறையை உருவாக்கு வதற்கு, நாங்கள் யோசிக்கிறோம். இப்படியான நேரத் தில் எங்களுக்கும் தென்னிந்திய தமிழ் சினிமாவுக்கும் இடையிலான ஒரு உறவு தேவையா? புதியவன்: இதில் இரண்டு விஷயங்களைக் கருத்தில் எடுக்கவேண்டும்.
ஒன்று, தென்னிந்தியச் சினிமாவில் இருந்து விலகி ஒரு சினிமாவை உருவாக்குவதற்கான முயற்சி இருந்தால்மட்டும்தான் இலங்கைத் தமிழ் சினிமா மாறுபட்டு வரும். அதாவது சர்வதேச அந்தஸ்தில் சிங்களப்படங்களுக்கு இருக்கின்ற வரவேற்புதமிழ்ப் படங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்றால், அது தென்னிந்தியாவில் இருந்து வருகின்ற தமிழ்த் திரைப்படங்களுக்குக் கிடைப்பதற்குச் சந்தர்ப்பங்கள் இல்லை. ஏனென்று சொன்னால், அங்கு ஏற்கனவே உருவாக்கப்பட்டிருக்கும் அத்திரைப்படத்துறையில் இருந்து விலகி, அடிக்கட்டுமான மக்களின் பிரச்சினை களைத் தீவிரமாக அலசும் திரைப்படங்களை உருவாக்க வேண்டும். அதற்கு அங்கு யாருமே தயாராக இல்லை.
ஆனால் எங்களுக்கு பொருளாதார வெற்றி முக்கியமாக இல்லாமல் இருக்கும்பொழுது, பொருளா தார வெற்றியை அடையமுடியாமல் இருக்கும்பொழுது நாங்கள் சாகசமான சினிமாவை உருவாக்கவேண்டிய தேவையும் இல்லை. பறந்து பறந்து அடிப்பதையோ, பெண்களை அரை நிர்வாணமாகக் காட்டுவதையோ, வக்கிரமான காட்சிகளையோ படத்திற்குள் அவர்கள் புகுத்துவது ஏனென்றால் பொருளாதாரரீதியில் அதிகூடிய இலாபத்தை அடைவதற்கு.
புகலிடத்தில் இருந்தோ அல்லது இலங்கையி லிருந்தோவரப்போகும் இலங்கைத் தமிழ்ப்படங்களில் இப்படியான காட்சிகளைப் புகுத்துவதன்மூலம் மட்டும் அவை எங்களுடைய மக்களிடம் சென்றடையப்போவ தில்லை. இப்படியான படங்களும் இலங்கைத் தமிழ் சினிமாவில் இருந்து வந்துள்ளன. ஆனால் அவையும் மக்களிடம் சென்றடையவில்லை. கனடாவில் இருந்து சில படங்கள் வந்திருக்கின்றன. டென்மார்க்கில் இருந்து பூக்கள் வந்திருக்கின்றது. அவை எங்கள் மக்களை ஈர்த்திருந்தால் நாங்கள் எங்களுக்கும் தென்னிந்திய தமிழ் சினிமாவுக்குமான ஒரு உறவைப் பற்றிப் பேசலாம். எந்த ஒரு இலங்கைத் தமிழ்ப்படமும் 4000 பார்வையாளர்களைத் தாண்டிப் போகவில்லை. அத்துடன் தென்னிந்தியத் தமிழ்த் திரைப்படத்துறை வளர்ச்சியுடன் போட்டி போட்டுநாங்கள் அப்படியான மூன்றாந்தர சினிமாக்களைப்பார்வையாளர்களுக்குக் கொடுக்க முடியாது. எனவே இலங்கைத் தமிழ் சினிமா வைப் பொறுத்தமட்டில் அது தனித்து நின்று வந்த தென்றால், அதற்கான ஒரு தனி அடையாளத்தை
இதழ் 27

Page 69
எடுக்கின்ற சாத்தியக் கூறுகள் இருக்கின்றன. அதற் குரிய முனைப்பும் இருக்கின்றது. அதேபோன்று திறமைசாலிகளான படைப்பாளிகளும் எங்கள் மத்தியில் இருக்கின்றார்கள். அவர்கள் தனிப்பட்ட முறையில் ஊக்குவிக்கப்பட வேண்டும்.
இரண்டாவது, தொடர்பு என்கின்ற முறையில், எங்களுக்கு சினிமா தொடங்கி என்னதான் 50 வருட சரித்திரம் இருந்தாலும் இன்னும் நாங்கள் சினிமா தொடர்பாகத் தனித்து நின்று ஒரு சினிமாவை எடுக்குமளவு பயிற்சியோ, தொழில்நுட்பமோ அறிவோ எங்களுக்குக் கிடையாது. இவற்றைநாங்கள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றால், தென்னிந்திய தமிழ் சினிமாத்துறைக்கும் எங்களுக்குமான சிறிய தொடர் பொன்று ஏற்படவேண்டும். இந்தக் கலைஞர்களுடன் அல்லது தொழில் நுட்பவியலாளர்களுடன் சேர்ந்து வேலைசெய்ய வேண்டிய தேவை ஒன்று இருக்கிறது. ஆனால் இந்தத் தேவை என்பது எங்களை எங்கே கொண்டு போய் விடப் போகின்றது என்ற ஆபத்தும் இருக்கின்றது. அந்தச் சகதிக்குள் விழாமல் துணிந்து நின்று செய்தால் எதிர்காலத்தில் சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்குபெறக்கூடிய தமிழ்ப் படங்கள்
இதழ் 27
 

எங்களிடம் இருந்துதான் வரமுடியும் என்று நான் நினைக்கிறேன்.
உ. நி. சர்வதேசரீதியில் பார்த்தால் சினிமா என்பதும் அதன் மொழி என்பதும் ஒரு கட்டுக்குள் சுருங்கியது போல் எனக்கொரு அபிப்பிராயம் தென்படும். எப்படி என்றால், உதாரணத்திற்கு சீனாவில் தயாரிக்கப்படும் ஒரு திரைப்படம் பிரான்சிலும் திரையிடப்படும். அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் திரையிடப்படும். அதனுடைய 'சினிமா மொழி என்பது பிரெஞ்சு மக்க ளாலும் புரிந்து கொள்ள முடியும். அதேபோல்தான் பிரெஞ்சுப் படம் ஒன்று சீனாவிலும் திரையிடப்பட முடியும்.
ஆனால் இந்தத் தென்னியத்தமிழ் சினிமா அல்லது இந்திய சினிமா என்பது இதில் இருந்து மாறுபட்ட அம்சமாகவே இருந்திருக்கின்றது. எனக்கு இங்கி லாந்தின் நிலைமை தெரியாது. இங்கு பிரான்சில் ஒரு இந்தியப்படத்தைக் கொண்டுவந்துதிரையிட்டால்கூட அதுதிரைப்படமாகப்பார்க்கப்படுவதைவிட அதை ஒரு musical show மாதிரித்தான் பார்க்கிற நிலைமை இருக்கின்றது. இந்த நிலைமை இருக்கும்பொழுது
உயிர்நிழல் 0 ஒக்டோபர் - டிசம்பர் 2007

Page 70
afD X
நாங்கள் எங்களுடைய ஆரம்பத்தை மீண்டும் வைக்கி றோம் பாடல்களுடன். இப்படிநிலைமை இருக்க. புதியவன்! நீங்கள் சொல்ல வந்த விடயத்தில், இரண்டு மூன்று விடயங்கள் உள்ளடங்குகிறது.
சினிமா என்று சொல்லும்போது அதற்கு மொழி என்ற ஒரு வரையறையைப் போடுவது தேவைதானா என்று யோசித்துப் பார்க்க வேண்டும்.
உதாரணத்துக்கு கனடியத் திரைப்படவிழாவில், இந்தியத் திரைப்படம் என்றால் பாட்டும் அதனுடைய ஒரு அம்சம் என்று புரிந்து கொண்டுதான் அதை வகைப்படுத்துகிறார்கள். அதை ஏற்றுக்கொள்ளும் மட்டத்துக்கும் வந்திருக்கிறது. பாடல்கள் ஏன் வேறு இடத்தில் ஏற்றுக்கொள்ளப்படமுடியாமல் இருக்கிற தென்றால், படங்கள் வந்து படமாக இல்லையே! மிகை நடிப்புள்ள நாடகமாகத்தானே படங்கள் வருகின்றது. உதாரணத்துக்கு வடிவேலுவை எடுத்தால் வடிவேலு வுடன்நீங்கள் போய்இருந்துகதைத்தால்இப்படிக்கத்த மாட்டாரே. ஆனால் எந்தப் படத்தை எடுத்தீர்கள் என்றாலும் வடிவேலு கத்திக் கொண்டுதான் வருவார். உரையாடல்கள்கூட யதார்த்தமான மொழிநடையாக இருப்பதில்லை.
இந்த யதார்த்தமின்மைதான் இப்படங்களை சர்வ தேச சூழலின் கவனத்தை ஈர்க்காமல் போனதன் காரணம் என்று நான் நினைக்கிறேன். இதே போமு லாவில்தான் நாங்களும் போகவேண்டுமா என்று கேட்டீர்கள் என்றால், உண்மையான பதில் இல்லை என்பதுதான்.
ஆனால் நான்மண் என்ற படத்தை எடுக்கிறேன் என்று சொன்னால், இடதுசாரிக் கருத்துக்கொண்ட ஒரு சிலருக்கு அல்லது இந்த இலக்கியச்சந்திப்பில் கலந்து கொள்பவர்களுக்கு-அதாவதுமுற்போக்குச்சிந்தனை கொண்ட ஒரு 400 பேருக்கும் இந்த மலையக மக்கள் கொடுமைப்படுத்தப்பட்டது பற்றியும் அவர்கள் இலங்கையின் பூர்வீகத் தமிழர்களால் கொடுமைப் படுத்தப்பட்டார்கள் என்பதையும்'மண் சொல்லித்தான் தெரியவேண்டியதில்லை.
அவர்களிடம் அது குறித்த விமர்சனங்கள் காத்திரமாகத்தான் இருக்கின்றன. இந்தச் சூழலில் நான் சிந்திக்க வேண்டியதுயாரைப்பற்றி என்றால் இந்த முற்போக்கு என்று சொல்கிறவர்களை விட்டு அடுத்த படியில் இருப்பவர்களைப்பற்றியல்லவா?
நான் அவனிடம் போய் அவனுக்கு விளங்குகிற மொழியில் பேசாமல், நான் வேறு மொழியில் பேசுவதால் என்ன நடக்கப் போகின்றது. ஆகவே நான் என்ன நினைக்கிறேன் என்றால் இந்த இரண்டுவிதமான பொறுப்புகளும் புலம்பெயர் சூழலில் இயங்கும் படைப்பாளிகளுக்கு இருக்க வேண்டும்.
ஒன்று, படம் முழுக்க முழுக்க யதார்த்தத்தைப் பேசுவதாக இருக்க வேண்டும். அப்போதுதான்நீங்கள் சொல்கிற அந்த சர்வதேச சூழல் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு புலத்தைக் கொண்டதாக இருக்கும்.
பிரான்சில் சாதாரணமாக ஒரு கபே பாரில் இருந்து கபே குடிப்பதற்கும் அதை சினிமாவில் பார்ப்பதற்கும் பாரிய வேறுபாட்டைநாங்கள் காணமுடியாது அழகிய
உயிர்நிழல் 0 ஒக்டோபர் - டிசம்பர் 2007

70
லைத் தவிர்த்து. அதனால்தான் யதார்த்தத்துடன் ஒன்றிப்பார்க்கக் கூடியதாக இருக்கின்றது.
இந்தியசினிமாவைப்பார்க்கும்போது எங்களுக்குத் தெரியும் எல்லாமே மிகைப்படுத்தல்கள்தான் என்று. கமராவைப் பார்க்காமல்நின்று வசனம் பேசமாட்டான், இவைகளால் நாங்கள் படத்தில் நின்று அந்நியப் படுகிறோம்.
ஆனால் புலம்பெயர் தமிழ்ச் சூழலில் இருக்கின்ற எங்களுக்கு என்ன நோக்கம் என்று சொன்னால் - ‘மண்'இல் பாட்டுக்களை நீக்கிவிட்டு நீங்கள் பார்த்தீர்கள் என்றால், அது யதார்த்தத்தில் இருந்து பெரிதாகப் பிசகாத படம். ஒரு கதாபாத்திரமுமே எக்சென்ட்ரிக் ஆகக் கதைக்கவில்லை. ஒருவருமே அழுது புரண்டு சிவாஜிகணேசன் மாதிரி நடிக்க வில்லை. அது கிராமச்சூழலில் ஒரு பாத்திரம் எப்படி இருந்திருக்குமோ அப்படித்தான் இருக்கிறது. பாட்டைப் புகுத்தியவுடன் அது வேறு பரிமாணத்திற்குப் போய்விடுகிறது.
நான் எப்படிப் பார்க்கிறேன் என்று சொன்னால், யாருக்கு நாங்கள் படத்தைக் கொண்டு செல்லப் போகிறோம் என்பது எங்களுடைய நோக்கமாக இருக்கின்றதோ, அவர்கள்எதைப்படமாகநினைத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதன் ஊடாகச் சென்று அவர்களிடம் விஷயத்தைக் கொண்டு செல்லுதல் என்பதுதான். அப்படி இல்லாவிட்டால் நாங்கள் ஒரு இயக்கமாகி வகுப்புகள் எடுத்து அவர்களுக்கு படம் பற்றிய புரிதலை உருவாக்க வேண்டும். வேற்றுநாட்டுப் படங்களைப் போட்டுக் காட்ட வேண்டும். இது ஒரு இயக்கமாகவே மாறி, ஹொலிவூட் படங்களுக்கு எதிராக, பிரான்சில் ஆர்ட் பிலிம் சொசைற்றிதொடங்கி, அதற்கு ஒரு மாற்றைக் கொண்டு வந்தது போல் நாங்களும் செயற்படத் தொடங்க வேண்டும். அப்படிச் செய்தால், ஒருவேளை ஒரு மாற்றத்தைக் கொண்டு வரலாமோ தெரியவில்லை.
ஆனால், தொடர்ச்சியாக தமிழ்ப் படங்களையே பார்த்துப்பழக்கப்பட்ட ஒருவனிடம்நாம் ஒரு படத்தைக் கொண்டு போகவேண்டுமென்றால், வேறுவிதமாகச் சென்றால் அவர்கள் அதைப் படம் இல்லையென்றே நிராகரித்துவிடுவார்கள். இதற்கு ஒரு உதாரணத்தைச் சொல்லலாம்,'கனவுகள்ந்ஜமானால் படம் வந்தபோது என்னுடைய மனைவி தன் நண்பி ஒருத்தியிடம் "என்னுடைய கணவன் எடுத்த படம் இன்றைக்கு ரிவியில் போகின்றது. பாருங்கோ" என்று சொல்லி யிருக்கிறா. அடுத்தநாள் அதைப் பார்த்துவிட்டுவந்த நண்பி சொல்லி இருக்கிறா, "நீங்கள் படம் என்று சொன்னீங்கள் அதுநாடகமெல்லோ போனது" என்று.
இது எனக்கு ஒரு நல்ல விசயமாகப் பட்டது. ஏன் அவ அதைப் படம் என்று சொல்லேல்லை என்று. ஏனென்றால், பாட்டு வரேல்லை. டான்ஸ் இல்லை. சண்டை இருக்கேல்லை. தொடக்கத்தில் இருந்து முடியும் வரையும் எங்களுடைய மொழியில் கதைக் கிறோம். தென்னிந்தியத் திரைப்படத் தமிழ் அங்கு இருக்கவில்லை. அப்படி வராதவை எல்லாம்நாடகமா கத்தானே இருந்தது. இலங்கை வானொலியில் அது நாடகமாகத்தானே இருந்தது. ஒன்றில்நாடகத்தைக்
இதழ் 27

Page 71
கொண்டுபோகவேண்டும். அல்லது முன்பு குறிப்பிட்டது போல் ஒரு இயக்கமாக மாற்றி ஒரு மாற்றைக் கொண்டு வரும் முயற்சியில் இறங்க வேண்டும். இதொன்றுக்கும் எங்களுக்கு நேரம் இல்லையென்றால், இப்பிடித்தான் இருக்கும்,
ஆனால்'மண்ஐசனங்கள்படம் என்று சொல்லிச்சு. அதை நாடகம் என்று சொல்லேல்லை. இதைப் படம் என்று சொன்னதற்கு முக்கிய காரணம், பாட்டும் ஒரிரு தென்னிந்திய நடிகர்களின் தோற்றமும்தான். இது இரண்டும் இல்லையென்றால் அவர்களுக்கு 'மண்'உம் நாடகம்தான்.
அதனால்தான்நான் என்ன சொல்கிறேன் என்றால் சர்வதேசத் தரத்துக்கு எங்களுடைய படங்களைக் கொண்டுசெல்லவேண்டும் என்றால், பாட்டை வெளியில் எடுத்துவிடலாம். ஆனால் சாதாரண தமிழ் திரைப்படப் பார்வையாளனிடம் அதை அப்படியே கொண்டு (3 it (36 Tib.
அப்பிடிப் பார்த்தால் சில விடயங்கள் இப்போ தைக்கு தவிர்க்க முடியாதவைதான். அது வேதனை யான விடயம் என்றாலும் எதிர்காலத்திலும் அப்படித் தான் நான் செய்வேன். சர்வதேச சினிமா விழாக் களுக்கு படத்தைக் கொண்டு செல்வதென்றால் பாட்டுகளை எடுத்துவிட்டு அதற்காக வேறு ஒரு கொப்பி தயாரிக்க வேண்டும். அதாவது பாட்டுகள், சாகசங்கள், சண்டைகள் இவற்றை எடுத்துவிட்டு யதார்த்தம் மட்டும் இருக்கவேண்டும். அப்படிப் போனால்தான் படங்கள் வரலாம். மற்றமாதிரி படம் எடுத்தால் ஒரு படத்தை எடுத்து4 பேருக்கு காட்டிவிட்டு பிறகு ஒரு 10 வருஷத்துக்கு ஆளையே பிடிக்க (piņTgb.
உ.நி.நீங்கள் சொல்கின்ற பொதுப்புத்திமட்டத்தில் உள்ளவர்கள், அதாவது மாற்றுக் கருத்தாளர்களைத் தவிர ஏனையவர்கள், இலங்கைத் தமிழ் சினிமாவுக்கு தியாகராஜ பாகவதர் காலத்தில் இருந்து விஜய் வரையும்தான் தெரியும்.
இதில் மாற்றுக் கருத்தாளர்களும் உட்படத்தான்
சினிமா என்றால் தென்னிந்திய திரைப்படத்தைத் தான் சினிமா என்று நினைத்து வைத்திருக்கிறார்கள். அதோடு நீங்கள் ஒன்றை ஒப்புக் கொள்கிறீர்கள் ஆரோக்கியமான சினிமாவை இந்தப் பொதுப்புத்தி மட்டத்திற்குக் கொண்டு போக முடியாது என்பதை. ஆனால் நான் நினைக்கிறேன் ஒரு பலவீனமாக இருக் கின்ற ஒரு பொதுப்புத்தித் தளத்தை ஓரிரண்டு படங் களினால் உடனடியாக நல்ல சினிமா பார்வை யாளர்களாக மாற்றுவது சாத்தியமில்லை. ஆனால் ஒரு நீண்ட கால வேலைத்திட்டத்தின் மூலம் அந்த இலக்கை அடையமுடியும் என்று.
ஒரு சர்வதேச சினிமா மொழி என்பதெல்லாவற் றையும் விட்டுவிட்டு ஒரு ஆரோக்கியமான சினிமா மொழியைப் பார்க்கக்கூடிய பொதுப்புத்தித் தளத்தை உருவாக்குவது சாத்தியமானதுதான். ஆனால் அந்த சாத்தியமாகப் போகும் என்ற இடத்தை அடைவதற்கு ஏதோ ஒரு புள்ளியில் யாரோ ஒருவர் ஆரம்பிக்க வேண்டும்.
இதழ் 27

1.
g durinT
அந்த ஆரம்பப் புள்ளி எப்படி இருக்கலாம்? அதற் கான சாத்தியப்பாடுகள் இருக்கின்றதா? புதியவன்; நான் சொன்னதுபோல்'மாற்று'கனவுகள் நிஜமானால் போன்ற படங்களில் ரைற்றிலில் வரும்பாட்டைத் தவிர வேறு பாட்டுகளே இல்லை. "மண்'ஐ விட 4000 பேருக்கு மேல் 'கனவுகள் நிஜமா னால் பார்த்தார்கள். பார்த்தவர்கள் எல்லோரும் பாராட்டியும் இருந்தார்கள். அதை நான் இல்லையென்று சொல்லவில்லை.
ஆனால் என்ன பிரச்சினை என்றால், 'கனவுகள் நிஜமானால் பிரான்ஸையும் இங்கிலாந்தையும் தவிர வேறு ஒரு இடத்திலும் திரையிடப்படவும் இல்லை. பிரான்சில் இரண்டு காட்சிகளும், இங்கிலாந்தில் 10 காட்சிகளும் போட்டோம். பரவலாகக் கொண்டு போகாமல் மற்றவர்களைக் குற்றம் சொல்வது பிழை. ஆனால் இது தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்க வேணும். அதாவது படங்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்க வேணும்.
அதுதான் பிரான்சில் மாயாஜால ஹொலிவூட் படங்களுக்கு எதிராக யதார்த்தமான சினிமாவைக் கொண்டு வரவேண்டும். அது கலாச்சாரத்தை நடைமுறைகளைச் சுரண்டுகிறது என்பதற்கு எதிராகத் தொடங்கியதுதான்மாற்றுச் சினிமாவுக்கான அமைப்பு. அது வெற்றியடைவதற்குக் காரணமாக இருந்தது என்னவென்றால் அதுதான்நீங்கள் சொல்வதுபோன்று தொடர்ச்சியான திரையிடல்கள். தீவிர சினிமாப் பார்வையாளர்களை உருவாக்கும் செயற்பாடு.
ஆனால் நாங்கள் இன்று வாழும் சூழலில் எங்க ளுடைய குடும்பச் சுமைகள் என்பவற்றுடன் பார்க்கும் போது அது சாத்தியமில்லைத்தானே. ஆனால் அதற் கான ஒரு தளம் போடப்படுமாய் இருந்தால் புலம்பெயர் சூழலில் உள்ளவர்களிடம் கொண்டு செல்வது மிகவும் சுலபம். ஏனென்றால் 'மாற்று', 'கனவுகள் நிஜமானால் போன்றவை அவர்களுடைய பிரச்சினைகளைப் பேசிய தால் அது அவர்களை இலகுவில் சென்றடைந்தது. அது ஒரு தாக்கத்தையும் உருவாக்கியது.இன்றைக்கு அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் சூழலில் உள்ள விடயம் கருவாகத் தெரிவுசெய்யப்பட்டால் தீவிரமான ஒரு சினிமாவைக் கொண்டு செல்லலாம். ஆனால் அதற்கு அளவிடமுடியாத உழைப்புத் தேவை. அந்த உழைப்புத்தான் இல்லை என்று சொல்கிறேன். அது எங்களால் முடியாது.
உ.நி. மண்ணில் 50வீத மான காசு மட்டும் திரும்ப வந்ததற்கு. புகலிட நாடு களில் ஏற்பட்ட மார்க் கெற்றிங் சிக்கல்கள்தான் ஒரு காரணமாக இருக்க லாமா, குறிப்பாக கனடா வில் இன்னும் படம் போட வில்லை.
இன்று குறிப்பிட்டளவு சினிமா பார்க்கும் ஒரு கூட் டத்தை உருவாக்கிவைத்தி
உயிர்நிழல் 0 ஒக்டோபர் - டிசம்பர் 2007

Page 72
്തിയ x
ருப்பதில் கனடாவை முதன்மையாகக் கொள்ளலாம். அப்படியான ஒரு இடத்தில்'மண்ணைப் போடவில்லை என்பது 'மண் ணுக்குப் பெரிய பாதிப்பு என்று எண்ணு கிறேன். புதியவன்! நிச்சயமாக,
இதில் நடந்த சிக்கலாக நான் பார்க்கலாம் எப்படி யென்றால், எங்களுக்குமார்க்கெற்றிங்க்கு இன்டஸ்றி இல்லாததுதான். மார்க்கெற்றிங் என்று வரும்போது பார்த்தால் ஒன்று ஊடகங்கள்.
ஆணிவேர்'ஐப் பார்த்தீர்கள் என்றால், ஆணிவே ருக்கு ஊடகங்கள் கொடுத்தளவுவிளம்பரத்தை'மண்' ணுக்கு எடுக்க முடியாமற் போயிருக்கிறது. இந்த ஊட கங்களை அணுகுவதற்கும் எல்லா இடங்களிலும் ஒரு coordination தேவை. ஒரு அமைப்பு சகல இடங்க ளிலும் கிளைகள் வைத்திருப்பதுபோல், சினிமாவைப் பரவலாகக் கொண்டு செல்வதற்கும் சகல இடங் களிலும் அதற்கான ஒரு அமைப்பின் கிளைகள் உரு வாக்கப்பட வேண்டும்.
உதாரணத்திற்கு'மண் படத்தை இரு வார விளம்ப ரத்துக்குப் பிறகு முதல் தடவை இலண்டனில் திரை யிட்டுபிறகு பிரான்சிற்குக் கொண்டு போய்திரும்பவந்து இரு வாரம் விளம்பரம் செய்து இப்படிப் போடவே காசு முழுவதும் விளம்பரத்திலேயே போய்விடும். இதை ஒரே நேரத்தில் சகல இடங்களிலும் போடக்கூடிய ஒரு கட்டமைப்பு இருக்கும் என்றால் ஒரேநேரத்தில் செய்யும் விளம்பரத்துடன் எல்லா இடங்களிலும் திரையிடக் கூடியதாக இருக்கும்.
உதாரணத்துக்கு,'முகத்தை எடுத்துப்பாருங்கள். அதே நிறைய இடங்களில் போடப்படவில்லை. இங்கி லாந்தில்'முகம்' படத்தை கிட்டத்தட்ட ஒரு நுாறு பேர் தான் பார்த்திருப்பார்கள். ஆனால் இங்கிருக்கும் ஆட்கள் நினைத்திருந்தால் குறைந்தது ஆயிரம் பேராவது பார்க்க வேண்டிய படம், 10 பவுண்கள் கொடுத்துஆயிரம்பேர்பார்த்திருந்தால் செலவுமுழுவ தையுமே கவர் பண்ணி இருக்கும். 1000பேர் என்பது பெரிய கூட்டம் என்றில்லை. ஆனால் அதைக்கூடச் சேர்ப்பதற்கான எத்தனிப்பு இங்கில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
உ.நி. அதை உருவாக்குவதற்கு நீங்கள் சொல்லு கின்ற ஒரு வழி எல்லா இடங்களிலும் கிளைகள் கொண்ட ஒரு அமைப்பை உருவாக்கி செயற்படல்.
இன்னும் ஆரோக்கிய மாக்குவதற்கு இதைவிட வேறு ஏதாவது செய்யலாம் என்று நீங்கள் யோசிக்கி ரீங்களா? புதியவன்! நான் என்ன பார்க்கிறேன் என்றால், ஏப்ரல் அல்லது யூன் வரை யில் புலம்பெயர் சூழலில் இருக்கும் படைப்பாளி களிடம் இருந்து சில கட்டு ர்ைகளைச் சமர்ப்பித்து M அவற்றின்மீதான விவாதங்
உயிர்நிழல் 0 ஒக்டோபர் - டிசம்பர் 2007
 

களை எழுப்புவதன்மூலம் தென்னிந்திய சினிமாவில் இருந்துவிடுபட்டு எங்களுக்கான புலம்பெயர் சினிமாத் தளம் ஒன்றை உருவாக்க ஏதுவான ஒன்றை உருவாக்கி எப்படி புலம்பெயர் நாடுகள் எல்லாவற்றிலும் இதனை திரையிட வைக்க முடியும் என்று.
அத்துடன் ஆரம்பத்திலேயே அவர்களுக்கு நம் பிக்கை தரக்கூடியதுபோன்ற படங்கள் போடப்பட வேண்டும். இதில் படங்களை எந்த அடிப்படையில் தெரிவுசெய்வது என்ற சிக்கல் வரும். சர்வதேசரீதியில் ஒரு 10 பேர் கொண்ட குழு ஒன்று இருந்தால் அவர்கள் அந்தப்படத்தைப் பார்த்துவிட்டு தெரிவுசெய்வார்கள் திரையிடுவதுபற்றி இந்தக் குழுவில் இருக்கும் 50வீதமா னவர்களுக்கு மேல் இதை ஒகே என்று சொன்னால் அப்போது இதை மக்களிடம் கொண்டு செல்லலாம். அதற்குக் குறைந்தவர்கள் அதை ஏற்றுக் கொண்டால் அந்த இடத்தில் படைப்பாளியும் அந்தப் படத்தை வெளியே கொண்டு செல்ல முடியாதென்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
அதற்கான ஒரு கூட்டத்தை ஒழுங்கு செய்து இவற்றை முன்னெடுக்க வேண்டும் என்று நினைக் கிறேன். இப்படியான முன்னெடுப்புகள் அவசியம் என்றும் கருதுகிறேன். படைப்பாளிகள் என்ற வகை யிலேயோ அல்லது சமூக அக்கறை கொண்டவர்கள் என்ற முறையிலேயோ இதைச் செய்தால்தான் அடுத்த கட்டத்தை நோக்கிக் கொண்டுசெல்ல முடியும்.
உ.நி. கடைசியாக ஒரே ஒரு கேள்வி. எங்களுக் கிருக்கும் இந்தச் சிக்கல்கள் சிங்களச் சினிமாவுக்கு இல்லைப்போல் தெரிகிறது. அவர்கள் ஒரு முன்நோக் கிய பார்வையில்நகர்ந்து சென்றிருக்கிறார்கள்.
உதாரணமாக, கடைசியில் வந்த பிரசன்ன தொடக்கம் விமுக்திவரையும் சொல்லலாம். அவர்களு டைய திடீர்ப்பாய்ச்சல், சினிமா மொழி எல்லாம் ஒரு குறிப்பிட்ட இடத்தை நோக்கி நகர்ந்திருக்கின்றது. இந்த வளர்ச்சி, அல்லது அண்மைய கால சிங்களத் திரைப்படங்கள் பற்றி நீங்கள் என்ன நினைக் கின்றீர்கள். புதியவன் அண்மையில் வந்த படங்கள் என்பதைவிட, நீங்கள் சிங்களப் படங்களை எடுத்தால், அவற்றில் பாட்டுகள் என்று வந்திருந்தாலும் அவர்கள் பேசும் மொழி யதார்த்தமானது. அதுவும் ஒரு காரணம் அவர்களுடைய படங்கள் வெளியில் எடுபடுவதற்கு.
மற்றது தொடர்ச்சியாக அரசாங்கத்தின் ஆதரவு இருந்தது. ஜனாதிபதிப் பரிசு வேறும் பரிசுகள் இப்படி அவர்களுக்குக் கொடுக்கப்பட்டு ஊக்குவிக்கப்பட்டு வந்தார்கள். மேலும் சிங்கள மக்களுக்குள்ளேயே ஒரு ஆரோக்கியமான பெரிய பார்வையாளர் கூட்டம் ஒன்று இருக்கிறது. அவர்கள் 50 இலட்சம் ரூபாவைப் போட்டு ஒரு படத்தை எடுத்தால் 75 லட்சம் திரும்பி வரக்கூடி யளவு ஒரு வியாபாரச் சூழலும் அங்கிருக்கின்றது. அந்தச் சூழலைப் பாதிக்கின்றதற்கென்று வேறு இடங்களில் இருந்து சிங்களப்படங்கள் வரவில்லை.
அதாவது தன்னுடைய மொழியில் ஒரு படத்தை முழுதாகப் புரிந்துகொள்ளும்படி ஒரு படத்தை ஒரு சிங்களவன்பார்க்கவேண்டும் என்றால் அவன்சிங்களப்
இதழ் 27

Page 73
படத்தைத்தானே பார்க்க முடியும் ஹிந்திப்படம் தமிழ்ப் படங்கள் இருந்தாலும் அவைடப்பிங் ஆக அல்லது சப் டைட்டிலுடன்தான் வருகின்றது. அவற்றில் உணர்வு ரீதியான புரிதல் இருக்காதுதானே.
கலாச்சாரம், வாழ்க்கை நடைமுறை, பேச்சு மொழி எல்லாம் ஒன்றிப்போய் பார்வையாளன் கதாபாத்தி ரத்துடன் ஒன்றிப்பார்ப்பதற்கான சாத்தியம் அவனுக்கு சிங்களப்படத்தில் மட்டும்தான் வரும். சிங்களப்படங் களுக்கு போட்டி இல்லை. ஆனால் தமிழ்ப்படத்தை எடுத்தால் அது தென்னிந்தியப் படம் மாதிரி இல்லை என்றுதான் முதலில் சனங்கள் சொல்கிறார்கள். அல்லது பாட்டொன்றைப் போட்டால் சொல்கிறார்கள் இது இந்தியாப்பாட்டு மாதிரி இருக்கிறதென்று. இல் லாட்டி இதென்ன இது ஈழத்துப்பாட்டு மாதிரிக் கிடக்கு என்று அதை ஒரு மலினமான அர்த்தத்தில். இந்த ஒப்பீட்டுத்தன்மை சிங்களப்படங்களுக்கு இருக்க வில்லை. மற்றது இலங்கையில் தமிழ்ப்படத்துடன் பார்க்கும்போது அவர்களுக்கு ஒரு மார்க்கெட் இருக்கின்றது.
உதாரணத்துக்கு பிரசன்ன விதானகேயின் படங்களை எடுத்துப் பார்த்தால் என்னதான் Contraversialஆக இருந்தாலும், அவருடன்நான்'மண்' திரையிடலின்போது சந்தித்துப் பேசிக் கொண்டி ருக்கும்போது சொல்கிறார், தன்னுடைய படங்க ளுக்குத்தனக்கு retum இருக்கின்றதென்று. திரைப்பட விழாக்களில் இருந்து கிடைப்பது அதைவிட மேலதிகமானது என்றுதான்.
ஆனால் நான் இன்னொரு முழு நீளப்படத்தை இப்போதைக்குச் செய்ய முடியாது. முதலாவது படத் துக்கான return இல்லையென்றால் பிறகு எப்படி
அன்புடையீர்,
வணக்கம். எனது வேண்டுகோளை ஏற்று உயிர்நி கிடைத்தன.
வெளி உலகைத் தரிசிக்க'உயிர்நிழல் வாய்ப்புநல் விடயங்களை அறிந்துகொள்ள உதவியது. வெவ்வேறு வெளிவரும் சஞ்சிகைகள், நம்மவர் சந்திக்கும் பல்வே இரண்டாம் தலைமுறையினரின் அடையாளத்தேடலும் த சிந்திக்க வைத்தது. மற்றும் இரா.றஜின்குமாரின்
"புலம்பெயர் தமிழர் யாம்
குழந்தைகள் பெறுவது
யுத்தத்தால் அழிந்த
தமிழ்ச் சந்ததியின்
அழிவைச் சமன் செய்யவென"
வரிகள் பற்றியும் சேர்த்துச் சிந்தித்தேன்.
உயிர்நிழலைத் தொடர்ந்து அனுப்புமாறு கேட்டுக் ெ
இதழ் 27
 

g durinT
இரண்டாவது படத்தைப் பற்றி யோசிப்பது. சிங்களப் படைப்பாளிகளுக்கு உள்நாட்டிலேயே அதற்குரிய returnஐ எடுக்கக்கூடியதாக இருக்கும் பொழுது அவர்கள் தொடர்ந்து படங்களை எடுக்கக்கூடியதாக இருக்கும். - ஆனால் எங்களுக்கு ஒப்பிட்டுப் பார்ப்பதற் தென்னிந்தியத் தமிழ்த் திரைப்படங்கள் இருப்பதால் நாங்கள் சில முன்னனுமானங்களுடன் படம் எடுக்க வேண்டியசூழலில் இருக்கின்றோம். ஆனால் சிங்களத் திரைப்படப்படைப்பாளிகளுக்கு அப்படி இல்லை. இப்படி இருக்கும்பொழுது நாங்கள் யதார்த்த சினிமா என்று ஒரு படத்தை எடுத்து கான் திரைப்படவிழாவில் போட்டுவிட்டு, அடுத்தது என்ன?
பிரதீபன் அல்லது ரதன் ‘உயிர்நிழல்'இல் எழுத லாம், இப்படி ஒரு தமிழ்த் திரைப்படம் கான் திரைப் படவிழாவில் திரையிடப் பட்டது என்று. ஒரு சிலரின் பாராட்டைத் தவிர எஞ்சுவது வேறொன்றும் இல்லை.
மற்றது சிங்களப்படத்தை எடுத்தால் ஒரு 50வீதமா வது யதார்த்தம் இருக்கும். ஒருநேரத்தில் தமிழீழப் போராட்டம் வெற்றியடைந்து அப்போது தென்னிந்தியத் திரைப்படங்களுக்கு அங்கு தடை விதித்தால் அங்கு உருவாகும் திரைப்படங்களை பாட்டில்லை அல்லது யதார்த்தமாக எடுக்கப்பட்டுள்ளது என்பதற்காக பார்க்காமல் விடமாட்டார்கள்.
ஆனால் இன்றிருக்கும் நிலை எங்களுடைய இலங்கைத் தமிழ் சினிமாவுக்கு ஏற்பட்ட சாபக்கேடு தான்.
ஆனால் இந்தப் போராட்ட சூழல் மாறுவதற்கு இன்னும் ஒரு 30 வருடங்களாவது செல்லும்,
ழலை அனுப்பி வருவதற்கு நன்றி. 25ம், 26ம் இதழ்கள்
குகிறது. 34வது இலக்கியச் சந்திப்பு அறிக்கை பல்வேறு தேசங்களில் நம்மவர் நடத்தியநிகழ்வுகள், வெளிவந்த று பிரச்சினைகள் என நன்றாக இருந்தது. "புகலிடத்தில் மிழ்ச்சமூகமும் என்ற கலந்துரையாடல் என்னை அதிகம்
கொள்கிறேன்.
யோகேஸ்வரி சிவப்பிரகாசம் கோப்பாய், இலங்கை.
3 உயிர்நிழல் 0 ஒக்டோபர் - டிசம்பர் 2007

Page 74
சுயாதீன கலைத் திரைப்பட மையம் சர்வதேசநாடு குமான திரைக்கதைப் போட்டியைநடாத்துகின்றது.
1வது பரிசு: 250 ! 2வது பரிசு 150 க் 3வது பரிசு 100 க்
போட்டி விதிகள்: 1. திரைக்கதைகள் தமிழ் மொழியில் இருத்தல் :ே 2. திரைக்கதை5நிமிடங்களுக்கு மேற்பட்டதாகவ குரியதாக இருத்தல் வேண்டும். 3. 12 புள்ளிகள் எழுத்துருவில் ஒளி அச்சில் அல்ல வேண்டும். 4. 8x11 தாளில், தாளின் ஒரு பக்கத்தில் மட்டும் த 5. போட்டிக்கு அனுப்பப்படும் திரைக்கதை, திரை ருக்கக்கூடாது. 6. இந்தத்திரைக்கதை உரிமையாளராக, திரைக் 7. வேறு ஒருவரின் திரைக்கதையோ, இல்லையே தாளரின் கையொப்பமிட்ட கடிதம் இணைக்கப்பட ே 8. திரைக்கதைக்குரிய வடிவில் முழுமையாக இரு 9. ஒருவர் எத்தனை பிரதிகளும் சமர்ப்பிக்கலாம். 10. தனித்தோ அல்லது கூட்டாகவோ திரைக்கதை 11. படைப்பாளியி(களி)ன் பெயர், வதிவிட விபரம் இ 12. பிரதிகளின் முகப்புப் பக்கத்தில் மட்டுமே பிரதி இருத்தல் கூடாது. 13. பிரதிகள் திருப்பி அனுப்பப்படமாட்டா. 14. தேர்வாகும் ஐந்து பிரதிகள் நுால் வடிவில் வெ6 15. பிரதிகள் இ-மெயிலில் அனுப்பப்படின் PDF வடிவ 16. முடிவு திகதியின் பின்னர் கிடைக்கும் பிரதிகள் 17. நடுவர்களின் முடிவே இறுதியானதும், தீர்மானது
போட்டி முடிவுத் திகதி:
DITdf 15, 2008 (Februray 15,2008)
பிரதிகள் அனுப்ப வேண்டிய முகவரி:
M. Raguanthan Program Director Independent Art Film Society 4. Castlemore Avenue Markham, ON L6C 2B3 Canada.
உயிர்நிழல் 0 ஒக்டோபர் - டிசம்பர் 2007
 

þခံa.ဇာၾပံ (éပ္n(ဗ.မှ
களில் உள்ள தமிழ் பேசும் படைப்பாளிகள் அனைவருக்
கனடிய டொலர்கள் கனடிய டொலர்கள் கனடிய டொலர்கள்
வண்டும். பும் 15நிமிடங்களுக்குட்பட்டதானதுமான திரைப்படத்துக்
Uது தட்டச்சில் 30 பக்கங்களுக்குட்பட்டதாக இருத்தல்
ட்டச்சில் பிரதியாக்கப்பட்டிருக்க வேண்டும். ரப்படமாகவோ, நூல் வடிவிலோ ஏற்கனவே வெளிவந்தி
கதையாசிரியர் இருத்தல் வேண்டும். ல் நூலோ திரைக்கதையாக்கப்பட்டிருப்பின் மூல எழுத் வேண்டும்.
த்தல் வேண்டும்.
சமர்ப்பிக்கலாம் இணைக்கப்படல் வேண்டும். பாசிரியரது பெயர் இருத்தல் வேண்டும். பிரதிகளினுள்ளே
ரிவரும். பத்தில் இருத்தல் வேண்டும்.
ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. துமாகும்.
E-mail entries:
iafs () rOgerS.COm
CC: rathan OrogerS.COm WWW.iafstamil.Com
74 இதழ் 27

Page 75
குமாரசாமி 16.12.1935
புகலிட இலக்கியச் சந்திப்பின்நிறுவன கர்த்தாக் களின் பரப்பில்'சிந்தனையின் ஆசிரியரும்,புகலிட அரசு தன் பங்கை இறுதிவரை ஆற்றிக் கொண்டிருந்த எங்க ஆண்டு டிசம்பர் மாதம் 16ம் திகதி பின்னிரவில் இவர் எ 73 வயதாகிய தோழர்பரா எவ்வயதினருடனும் தோ சந்திப்புகளிலும் உற்சாகத்துடனும் சோர்வற்றும் கலந் ஈடுசெய்யப்பட முடியாத இழப்புகளின் தொடர்ச்சியில் இ தோழர்பரா பற்றிய அவசரமான குறிப்பொன்றுடன் உ கொள்கிறது.
இந்த வெறுமையான கணமொன்றில் மல்லிகா, ! உயிர்நிழல் பங்கு கொள்கின்றது.
இதழ் 27
 
 

(K in Tingi infil
935 - 2007.
பரராஜசிங்கம் 6)6blf
- 16.12.2007
களில் முக்கியமானவரும், எண்பதுகளின் சிறுசஞ்சிகை சியல் களத்தில் மிகவும் உற்சாகமாகவும் சுறுசுறுப்பாகவும் ள் தோழர் பரா அவர்கள் இன்று எம்முடன் இல்லை. 2007ம் ங்களை விட்டுப்பிரிந்து சென்றுவிட்டார். ழமையுடன் உறவாடும் பண்புள்ளவராக இருந்தார். எந்தச் து கொண்டிருந்தார். புகலிட அரசியல் இலக்கியப்பரப்பில் இப்போது தோழர் பராவும் அடக்கம். உயிர்நிழல் தனது தோழமையான அஞ்சலியைச் செலுத்திக்
உமா, முரளி, சந்துாஷ் ஆகியோரின் மனச்சுமையிலும்
உயிர்நிழல் அஞ்சலி 17.12.2007
நிப்பின் தந்தை bகை எய்துதல் pவின் முடிவு pவின் அடுத்த பரிமாணம் த வார்த்தைகளிடையே சிக்காத ாலும் விரும்பப்படாத புதிராக னம் வளைய வருகின்றது.
களோடு பேச முடியாெ ஸ்வதமாய் ஓங்கி அறை ாழுதே பொய்த்து கணம் வரையிலும்
75 உயிர்நிழல் 0 ஒக்டோபர் - டிசம்பர் 2007

Page 76
நினைவுக் குறிப்புX)
புகலிட அரசியல்கலை இலக்கியப்பரப்பில்'தோழர் பரா என்றும் 'பரா மாஸ்டர்' என்றும் நேசத்துடன் அழைக்கப்பட்ட குமாரசாமி பரராஜசிங்கம் அவர்கள் தனது 72வது பிறந்த தினத்தன்று மாரடைப்பினால் ஜேர்மனி பெர்லினில் காலமாகினார்.
தோழர் பராவினது இறுதி அஞ்சலி நிகழ்வு பேர்லினில் 27. 12, 2007 வியாழக்கிழமை அன்று நடை பெற்றது. ஐரோப்பாவின் பல பாகங்களிலும் இருந்து வந்த நண்பர்கள் கலந்து கொண்டு தங்கள் இறுதி மரியாதையைபரா அவர்களுக்குச் செலுத்தினார்கள். இந்நிகழ்வில் பல நூற்றுக்கணக்கான நண்பர்களும் தோழர்களும் மற்றும் உறவினர்களும் கலந்துகொண்டு தங்கள் இறுதி அஞ்சலிகளைத் தெரிவித்தனர்.
丧女★
தோழர் பரா அவர்களை நினைவு கூர்ந்து கனடா வில் ஒரு அஞ்சலிக் கூட்டம்'ஸ்காபரோ சிவிக்சென்ரர் இல் 19.01.2008 சனிக்கிழமையன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தை கனடாவில் இருக்கும் தமிழர் சிந்தனை செயற்பாட்டு மையம், தமிழர் வகைதுறை வளநிலையம், மனவெளி கலையாற்றுக்குழு, கரு மையம், 'உயிர்ப்பு அமைப்பு, SLDF, சமாதானத்திற்கான கனேடியர்கள், 'வைகறை பத்திரிகை, "நம்மொழி சஞ்சிகை, மற்றது சஞ்சிகை, காலம்' சஞ்சிகை, ‘கரித்துண்டு இணையத்தளம் என்பன இணைந்து நடாத்தின. இந்நிகழ்வை தோழர் பராவின் நண்பரும் தோழருமான ரட்ணம் கணேஸ் அவர்கள் ஒருங் கிணைத்து செயற்பட்டார்.
கூட்டத்தில்ரட்ணம் கணேஸ் உட்பட ரதன், கவிஞர் சேரன், தவபாலன், மார்க் ஆகியோர் உரையாற்றி னார்கள். கனடாவில் வசிக்கும் தோழர் பராவின்
உயிர்நிழல் 0 ஒக்டோபர் - டிசம்பர் 2007
 

சகோதரிகளும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். இறுதியாக நடந்த கலந்துரையாடலில் பலரும் கலந்து கொண்டு தங்கள் பார்வையில் பராவின் அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பான கருத்துக்களைத் தெரிவித்தனர்.
தோழர்பராவின் பழைய அனுபவங்கள் தொடர்பான ஒரு செய்திப்படமும் அங்கு காண்பிக்கப்பட்டது.
寮素安 தோழர் பரா அவர்கள் இலங்கையில் சமசமாஜக் கட்சி, இலங்கை வர்த்தக ஊழியர் சங்கம், புரட்சிகர மார்க்சியக் கட்சி, நீதிக்கும் சமத்துவத்துக்குமான இயக்கம் ஆகியவற்றின் தீவிர பங்காளராய் இருந்து 1983இல் ஜேர்மனிக்குப் புலம்பெயர்ந்தார். 1985 தொடக்கம் 1995வரை 'சிந்தனை' என்னும் சிறுசஞ்சி கையின் ஆசிரியராக இருந்தவர். ‘சிந்தனையை இணைய சஞ்சிகையாக்கும் முனைப்பில் அண்மைக் காலத்தில் ஈடுபட்டிருந்தார். முற்போக்காளர், இடது சாரி, மறுத்தோடி, இலக்கியவாதி, புகைப்படக் கலைஞர், அரசியல் கலை இலக்கியப் பரப்பில் எழுத் தாளர் இப்படி என்று அவரை ஒருவரைபுக்குள் அடக்கிப் பார்க்க முடியாதவராக, எதிலும் துடிப்புடன் செயற்படும் இளமை குன்றாதவராக இறுதிவரையிலும் செயற்பட்ட ஒருவராகவும் இருந்தார்.
1988இல் ஆரம்பிக்கப்பட்ட புகலிட இலக்கியச் சந்திப்பின் தொடர் இருப்புக்கு மிகவும் முக்கியமாகப் பரா உழைத்தார் என்று சொல்வது மிகையாகாது. சுதந்திரமான கருத்துப் பரிமாற்றத்திற்கான விரிவான தளங்களை உருவாக்கவேண்டும் என்பதில் மிகத் தீவிரமான செயற்பாட்டளாராக இருந்திருக்கின்றார்.
வர்க்க, சமூக ஒடுக்கு முறைகளினால் பாதிக்கப்
இதழ் 27

Page 77
கனடா அஞ்சலி நிகழ்வு
பட்டவர்களின் அருகிருந்து அவர்களின் விடுதலைக் காக தனது இறுதிக் கணம் வரையிலும் குரல் கொடுத் தவர் தோழர்பரா.மனிதர்களைப்பாகுபடுத்திவைத்துக் கொண்டிருக்கும் எல்லைகளைத் தகர்த்தபடி வாழ்ந்து காட்டியவர் தோழர் பரா.
கடந்தநவம்பர் மாதத்தில் கனடாவில்நடைபெற்ற ‘சமாதானத்திற்கான கனேடியர்கள் அமைப்பினரின் அழைப்புக்கிணங்கி முக்கிய பேச்சாளராக் கலந்து கொள்வதற்கு இருந்தபோதிலும், இறுதியில் அவரு டைய உடல்நிலை விமானப் பயணத்துக்கு இடம் கொடுக்கவில்லை. இதுகுறித்து அவர் மிகவும் கவலை கொண்டிருந்தார். அந்தநிலையிலும் தனது உரையை அங்கு படிக்கப்படுவதற்காகத் தயார் செய்து அனுப்பி இருந்தார். ஆங்கிலத்தில் அம்மாநாட்டில் சமர்ப்பிக் கப்பட்ட அவ்வுரையை இங்கு பதிவு செய்கிறோம். இன்றைய போராட்ட சூழலில் எப்படியான ஒரு தீர்வை நோக்கிநாங்கள் நகர முடியும் என்பது பற்றிய தனது நிலைப்பாட்டை தோழர் பரா அவர்கள் இக் கட்டுரை யில் முன்வைத்தள்ளார்.
烹安赏
‘சமாதானத்திற்கான கனேடியர்கள் அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்டு 2007ம் ஆண்டு நவம்பர் மாதம் 10ம் திகதி, ரொறன்ரோ, கனடாவில் அமைந்த ஸ்காபரோ சிவிக் சென்றரில்,நடந்த மாநாட்டில்ரட்ணம் கணேஸ் அவர்களினால் வாசிக்கப்பட்ட தோழர் பரா குமாரசாமி அவர்களின் கட்டுரை:
தலைவர், கனம் தங்கியபேச்சாளர்கள்,நண்பர்கள் அனைவருக்கும்,
‘சமாதானத்திற்கான கனேடியர்கள்' என்ற அமைப்பினால் இன்று இந்தக் கூட்டத்தில் பேச்சாள ராகக் கலந்து கொள்ள அழைக்கப்பட்டமைக்காக நான் பெருமையடைகின்றேன். எதிர்பாராத விதமாக ஏற்பட்ட சுகயினம் என்னை இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதைத் தடுத்ததுதுரதிர்ஷ்டவசமானது.நான்
இதழ் 27
 

K நினைவுக் குறிப்பு
உங்களுடன் நேரில் பேசுவதற்கான சந்தர்ப்பத்தை தவற விட்டதற்காக மிகவும் வருந்துகின்றேன். ஏற்பாட்டாளர் களுக்கு ஏற்பட்ட இடைஞ்சல்களிற்காக நான் மன்னிப்புக் கோருகிறேன். நீங்கள், அதாவது கனடாவில் வசிக்கும் புலம் பெயர் இலங்கையர்கள், தங்களுடைய சொந்த நாட்டில் சமாதானத்தையும் ஜனநாயகத்தையும் வேண்டி‘சமாதானத் திற்கான கனேடியர்கள் என்ற அமைப்பை உருவாக்கியதையிட்டு மகிழ்ச்சியடை கிறேன். இலங்கையில் சமாதானம், ஜன நாயகம், மனித உரிமைகள் என்பன வற்றிற்காகக் குரல் கொடுப்பதற்கான நேரம் வந்துவிட்டது. சமாதானத்தை விரும்பும் சகல இலங்கையர்களும், இலங் கையர்களில் பெரும்பான்மையினரும், புலம்பெயர் வாழ் இலங்கையர் உட்பட, நாட்டில் போரை விரும்பவில்லை என்பதில் நாங்கள் தெளிவாக இருக்க வேண்டும். 20 வருட காலப்போராட்டம் எழுபதாயிரத்துக்கும் மேலான உயிர்களைக் காவுகொண்டிருக்கின்றது. பல நூற்றா யிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்திருக்கிறார்கள். ஆயிரக் கணக்கானவர்கள் விதவைகளாகவும் அநாதைகளாகவும் ஆகிவிட்டனர். இந்தநீண்ட யுத்தம் இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு இராணுவரீதியிலானதல்ல என்பதை எங்களுக்குக் காட்டி இருக்கின்றது. யாரும் இந்த யுத்தத்தை வெல்லப் போவதில்லை. இது மிகவும் நியாயமற்றது. மேற்கத் தையலிபரல் ஜனநாயகத்தின் செளகரியங்களுடன், தங்கள் பிள்ளைகளுடனும் குடும்பத்துடனும் வாழும் ஒருவருக்கு அதாவது யுத்த அரங்கில் இருந்து வெகு தொலைவில் இருக்கும் ஒருவர் இந்த யுத்தத்தை ஆதரிப்பதென்பது- தமிழ்ஈழப்போராட்டத்தை ஆதரிப் பதாகவோ அல்லது யூரீலங்கா அரசின் இராணுவ நடவடிக்கைகளை ஆதரிப்பதாகவோ இருக்கும்.இந்த போரில் இருந்து வெளிவருவதற்கான ஒரே வழி அரசியல் சட்டநடவடிக்கைதான். ஒரு நீடிக்கக்கூடிய அரசியல் தீர்வைக் கொண்டு வர முடிந்த ஒரு சட்ட நடவடிக்கை ஆகும்.
அண்மைய கடந்த காலத்தில் போரின் இருண்ட முகில்களுக்குள் இரண்டு வெள்ளிக் கீற்றுகளைக் கண்டோம்.
ஒன்று 2002இல் கைச்சாத்திடப்பட்ட போர்நிறுத்த உடன்படிக்கை. அதுதமிழீழ வடுதலைப்புலிகளுக்கும் அரசபடைகளுக்கும் இடையிலான யுத்தநடவடிக்கை களைநிற்பாட்டியது.நாட்டில் ஒரு நிரந்தர சமாதானம் வரப்போகின்றதென்று அனைவரும் எண்ணினார்கள்.
சமாதானம் என்பது நாட்டில் இருக்கும் வெவ்வேறு பட்டவர்களுக்கு வெவ்வேறு அர்த்தங்களைக் கொண்டது. தெற்கில் இருக்கும் சிங்கள மக்களுக்கு சமாதானம் என்பது பூரீலங்கா இராணுவத்திற்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையில் யுத்தமில் லாதிருத்தல், கொழும்பில் குண்டுவெடிப்புகள், போக்கு வரத்துத் தடைகள் இல்லாதிருத்தல். தமிழர்களுக்கும்
7 உயிர்நிழல் 0 ஒக்டோபர் - டிசம்பர் 2007

Page 78
நினைவுக் குறிப்பு)
முஸ்லிம்களுக்கும் அது இதைவிட அதிகமானது. அது யுத்தத்தை நிறுத்துவது மட்டுமல்ல, ஆனால் அது அவர்களுடைய அடிப்படை உரிமைகளுடன் தொடர்பு டையது.தங்களுடைய ஜனநாயக உரிமைகளை மீளப் பெறுதல், சட்டமும் ஒழுங்கும் நிலைநாட்டப் படுதல், அரசியல் கொலைகளை நிறுத்துதல், தங்களுடைய குழந்தைகளைக் கடத்தலில் இருந்துகாப்பாற்றுதல், அகதி முகாம்களில் இருந்து தங்கள் சொந்த இடங் களிற்கு மீளுதல், யுத்தத்தினால் விதவைகளானவர் களுக்கும் சிறார்களுக்குமான புனர்வாழ்வு, போரினால் சின்னாபின்னமான வடக்கினதும் கிழக்கினதும் அபிவி ருத்தி என்று இப்படித் தொடரும்.
2002ம் ஆண்டின் போர் நிறுத்த உடன்படிக்கை வடக்கு கிழக்கில் இருக்கும் தமிழ் முஸ்லிம் மக்க ளுக்கு இவற்றைக் கொண்டு வந்ததா?இல்லை என்பது தான் துயர் தோய்ந்த விடை. இந்தப் போர் நிறுத்த உடன்படிக்கை தன்னுடைய சொந்த வீழ்ச்சியினால் அதற்கான விளைவுகளை எதிர்கொண்டது. பேச்சு வார்த்தைக்கான பங்காளிகளாக பூரீலங்கா அரசாங் கமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் மட்டுமே என்று மட்டுப்படுத்தியதானது, தமிழீழ விடுதலைப்புலிகள் அனைத்துத் தமிழ் பேசும் மக்களின் ஏகப் பிரதிநிதி என்று தம்பட்டமடிக்க உதவியது. இது ஏனைய தமிழர்கள், முஸ்லிம்கள், மலையக மக்கள் போன் றோரின் அபிப்பிராயங்களைப் புறந்தள்ளியது. போர்நிறுத்த உடன்படிக்கையானது ஏனைய தமிழ் தரப்புஆயுதக்குழுக்களின் ஆயுதங்களைக் களையக் கோரியது. இது அரசியல் கொலைகளுக்கும் ஆயுத மற்ற தனிநபர்களின் கொலைகளுக்கும் பாதை வகுத்தது. மனித உரிமை மீறல்களைக் கண்காணிப் பதற்கென்று அமைக்கப்பட்டபூரீலங்கா கண்காணிப்புக் குழுவானது அதிகரித்துச் சென்ற மனித உரிமை மீறல்களை நிறுத்துவதற்கான அதிகாரமற்றுப் போனது. இன்று போர்நிறுத்த உடன்படிக்கை ஒரு மரணித்த நகலாகப் போயிற்று.
புலப்பட்ட மற்ற வெள்ளிக்கிற்று என்னவென்றால், பூரீலங்காவில் உள்ள இந்தப் பிளவுக்கு ஒரு நிரந்தரத் தீர்வைக் கொண்டு வருவதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு. சர்வ கட்சிப் பிரதிநிதிகள் குழுவில் இருந்த வேறுபாடு என்னவென்றால், நோர்வேஜிய சமாதான உடன் படிக்கை, போர்நிறுத்த ஒப்பந்தம் போன்றவற்றில் மறுதலிக்கப்பட்டவர்களின் அரசியல் தீர்வுக்கான பார்வைகளும் அனுமதிக்கப்பட்டன. முஸ்லிம்கள், மலையக மக்கள் மற்றும் ஏனைய பல்வேறு குழுக்களும் தங்கள் பார்வைகளை சர்வ கட்சிப்பிரதிநிதிகள் குழு வுக்கு அனுப்பி வைக்க முடிந்தது. இந்த செயன் முறையில் ஒரு பொது விவாதம் வெளிப்படையாக இருந்தது. இதன் விளைவாக, சர்வ கட்சிப் பிரதிநிதி கள் குழுவின் தலைவர் பேராசியர் திஸ்ஸ விதாரண அவர்களினால் ஒரு பிரேரணை முன்வைக்கப்பட்டது. அது ஒரு தீர்வுக்கான பொருத்தமான பிரேரணையாக மிதவாத எண்ணம் கொண்ட இலங்கையர் பலரினால் மிகவதிகமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதுறுலங்கா அரசை ஒற்றையாட்சி அல்லது கூட்டாட்சி என்று
உயிர்நிழல் 0 ஒக்டோபர் - டிசம்பர் 2007

அழைப்பதைத் தவிர்த்தது. அது மாகாணங்களை அதிகாரப் பரவலாக்கல் அலகுகளாக பிரேரித்தது. அத்துடன் இரண்டு நாடாளுமன்றங்களையும், அதில் இரண்டாவது நாடாளுமன்றமானது மாகாணங்களை (சிறுபான்மையினரை) பிரதிநிதித்துவப்படுத்துவதாக இருக்கும் என்றும் பிரேரித்தது. -
இதில் கூட, நாட்டின் பிரதான கட்சிகளான பூரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் இந்த செயன்முறைக்கு எதிராக சதி செய்ய விரும்பின. பூரீலங்கா சுதந்திரக் கட்சி மாவட்டங்களாக அதிகாரப் பரவலாக்கலை முன்மொழிந்து, ஒற்றை யாட்சியைப் பிரேரித்தது. ஐக்கிய தேசியக் கட்சி வழமைபோல் கூட்டாட்சி என்பதில் இருந்து மாறி ஒற்றையாட்சி என்று குட்டிக்கரணம் போட்டது.
இந்த அடிப்படையில், பொது அபிப்பிராயக்கருத்தெ டுப்பொன்று கொழும்பில் உள்ள மார்கா நிறுவனத் தினால் நடத்தப்பட்டது. இதற்காக ஒரு தேசிய மாதி ரியை, நாட்டின் 18 மாவட்டங்களில் இருந்து 1800 பேரை எழுந்தமானமாக, தெரிவுசெய்தது. இங்கு அதனைச் சமர்ப்பிக்க விரும்புகிறேன். இவ்வாண்டுமே-யூன் மாதங் களில்நடத்தப்பட்ட இந்தக் கருத்தெடுப்புக்கு தேசிய சமாதான பேரவை ஆதரவளித்தது.
கருத்துக்கணிப்பிற்கு இவர்களின் முன்வைக்கப் பட்ட விடயங்களாவன:
1. ஒருநிரந்தரசமாதானத்தை அடைவதைத்தேடும் ஒரு செயன்முறைக்கு எவைஎவை அடிப்படை நியமங் களாக இருக்கவேண்டும்?
2. தமிழீழ விடுதலைப்புலிகளைப் பலவீனமாக்கும் இன்றைய இராணுவ யுத்த தந்திரத்தை பொதுமக்கள் எப்படிப் பார்க்கிறார்கள்? தமிழீழ விடுதலைப் புலி களிடம் இருந்து அவர்கள் எதை எதிர்பார்க்கிறார்கள்? 3. சிங்களப் பெரும்பான்மையும் முஸ்லிம் சிறுபான் மையும் பெருமளவில் ஏற்றுக் கொள்ளக்கூடிய எவ்வித மான அரசியலமைப்புச் சீர்திருத்தங்களைக் கொண்டு வர முடியும்?
4. எவ்வாறு வடக்கிலும் கிழக்கிலும் சமாதானமும் சகஜநிலையும் மீளக் கொண்டுவரப்பட முடியும்?
இந்தக் கருத்துக் கணக்கெடுப்பின் முடிவுகள், இந்தப் போராட்டத்தின் கடும் யதார்த்தங்களாக மக்கள் உணர்வதற்கும் அவர்கள் சீரிய விளைவாக எதை விரும்புகிறார்கள் என்பதற்கும் இடையில் ஒரு இடைவெளியைச் சுட்டுகிறது. ஆனால் முடிவுகள் சமாதானத்திற்கான அடிப்படைநியமங்களிற்கான ஒரு அர்ப்பணிப்பைக் காட்டிநிற்கின்றன.
அ. 99வீதமானவர்கள் யுத்தம் வெகுவிரைவில் முடிவுக்கு வரவேண்டும் என்றும் நாட்டின் சகல பகுதி களிலும் சமாதானமும் பாதுகாப்பும் மீளமைக்கப்பட வேண்டும் என்று விரும்புகின்றனர்.
ஆ. 72 வீதமானவர்கள் இராணுவ நடவடிக்கை களுடன் சம்பந்தமற்ற ஒரு அரசியல் தீர்வு இருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.
இ. 95 வீதமானவர்கள், சகல சமூகங்களுக்கும் பாரபட்சமற்ற ஒரு தீர்வுஇருக்க வேண்டும் என்பதையும், நாட்டின் சகல பகுதிகளிலும் சம உரிமைகளையும் சம நல்வாய்ப்புகளையும் அனுபவிக்கவேண்டும் என்பதை
இதழ் 27

Page 79
யும் ஒத்துக் கொள்கிறார்கள்.
ஈ. 86 வீதமானவர்கள் தேசிய மட்டத்திற்குக் கீழ் இருக்கும் மக்களுக்கு அதிகாரமளிப்பதாகவும் அது உள்ளுர் மட்டத்தை அடையுமாறான அதிகாரப் பரவ லாக்கம் நிச்சயம் இருக்க வேண்டும் என்று தெரிவிக் கின்றார்கள்.
இங்கு இதனுடைய முழு அறிக்கையையும் உங்க ளுக்குத் தரமுடியவில்லை. ஆனால் இன்னும் சுவாரசி யமான இரண்டு முடிவுகளைத் தருகிறேன்.
87 வீதமானவர்கள் மாகாண ஆலோசனைச் சபை அமைப்புக்கு ஆதரவாக உள்ளனர்.
72.4 வீதமானவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஈழப்பிரகடனத்தைக்கைவிடச்செய்து அவர்களை ஒரு ஜனநாயக வழிமுறைக்குக் கொண்டுவந்துஅவர்களை உள்ளடக்கிய ஒரு தீர்வைக் கொண்டு வருவது மிகச் சிறந்த தீர்வாக இருக்க முடியும் என்று கருதுகின்றனர். இது தொடர்ந்த யுத்தத்தினிடையே வாழ்ந்து கொண்டி ருந்தவர்களின் அபிப்பிராயமாகும்.
இன்று பூரிலங்கா அரசாங்கத்தின் மைதானத்தில் பந்து உள்ளது. நாட்டில் உள்ள சகல சமூகங்களும்
உயிர்நிழல் சஞ்சிகையை தொடர்ந்து எனக்கிருந்தன. இருந்த போதிலும் அதற்காக
உயிர்நிழல் இதழை எனக்கு வாசிக்கத் இதழாசிரியர் எம். பெளசர் அவர்கள்தான். இப்ே தளம் மூலமாக வாசிக்கும் வாய்ப்பு பாராட்டத்த இதழ்களின் அமைப்பு மிகவும் விரும்பத்தக்க அப்படியேதான். இன்னும் போர் என்பதும் அதனு மனதில் பதிந்துவிட்ட விடயமாகிப் போய்விட்ட "லா காசா சிறுகதையும் மற்றைய அரசியல் ச சந்திப்பும், புகலிட நிகழ்வுகள் போன்றவைக வாசித்தபின் எழுதுகிறேன்.
by 27
 
 

K நினைவுக் குறிப்பு
ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு அரசியல் தீர்வை முன் வைப்பது அரசாங்கத்தின் கடமையாகும். நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிர்வகிப்பதும் நாட்டில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதும் அரசாங்கத்தின் கடமையாகும்.
உடனடியாகப் போரை நிறுத்துவதற்கான பிரச்சாரத்தை ஒழுங்கமைப்பதற்கும் போராட்டத்தை ஒரு முடிவிற்குக் கொண்டு வருவதற்குமான ஒரு அரசியல் தீர்விற்காகவும் பூரிலங்காவில் உள்ள சகல ஆயுதக் குழுக்களின் மனித உரிமை மீறல்களுக்கும் எதிராகவும் புலம்பெயர் சமூகம் உள்ளடங்களான மக்க ளின் குரல் ஓங்கி ஒலிக்கவேண்டும்.
‘சமாதானத்திற்கான கனேடியர்கள் அமைப்புக்கு இந்தப் பிரச்சாரத்தில் ஒரு பாத்திரம் இருக்கின்றது. எதிர்காலத்தில் உங்களின் செயற்பாடுகளுக்காக உங்களை வாழ்த்துகிறேன்.நன்றி
பராகுமாரசாமி பேர்லின், ஜேர்மனி 09.11.2007
வாசிக்கக் கிடைக்காத பல சந்தர்ப்பங்கள் அரிய முயற்சிகள் செய்த காலமும் எனக்குண்டு
தந்துதவியவர் நண்பர் மூன்றாவது மனிதன்' பாது முடிந்தளவு வாசித்து வருகிறேன். இணையத் க்கது. யூலை-செப்டம்பர் 2007 இதழ் வாசித்தேன். ததாகவிருக்கின்றது. அரசியல் கட்டுரைகளும், லூடாகப் போராடுவதென்பதும் மக்கள் மத்தியில் து. இதை அழியாப் பதிவென்றும் சொல்லலாம். 5ட்டுரையும், திரைவிமர்சனம், 34வது இலக்கியச் ள் அருமையாக வந்துள்ளன. மேலும் ஆழமாக
என்றும் அன்புடன் பைசால் 02. 02. 2008.
79 உயிர்நிழல் 0 ஒக்டோபர் - டிசம்பர் 2007

Page 80
மூச்சுக் காற்றால்
I. மூச்சுக்காற்றால் நிறைகின்றன் வெளிகள். எல்லைகள் தாண்டிச் சென்று இடைவெளிகளை நிரப்பிடாதபடி கூட்டுக்குள்ளேயே நிரம்பித் திமீறுகின்றன. கண்ணாடி மீன் தொட்டிகளில்
முட்டிமோதும்
மீன்குஞ்சுகளைப்போலவே,
புதிய மூச்சு
இளைய மூச்சு
முதிய மூச்சு
எல்லாம் நெருக்கியடித்தபடி
ஒன்றையொன்று முட்டிமோதியபடி
அலைகின்றன.
சுவரில் மோதித் திரும்பும்
Liaircuingo. filЛШ
2 மூச்சுக்காற்றால் இரண் மீண்டும் மீண்டும் கட்கு
ாகிர்ருன் வெளிகள்.
நிறைகின்றன் குருதி
இற்றப்போன
ஒரு இலைச்சருகின் இடைவெளியை நரம்
நிரப்பிக் கொள்கிறது முன்
ā. ே
கட்கு
மூச்சி தன்
萤、
 
 
 

< கவிதை
நிறையும் வெளிகள்
துவாரகன்
சத்தின் துவார்வெளிகள் அடைபட்டு களிலிருந்து வெளியேறுகின்றது மூச்சுக்காற்று.
ம் காதும் பிருஷ்டமும் என லத்தின் ஒட்டைகளை அடைத்துவிட்டு
டு கண்களையும் தள்ளிக்கொண்டு ழிகளிலிருந்து யுடன் வெளிக் கிளம்புகின்றது மூச்சுக்காற்று.
கள் மட்டும் இரு பெரும் முட்டைகள்போல் புகளுடன் TITTE
ரத்தில் தொங்கிக் கொண்டிருக்கின்றன.
ழிகளும் இமைகளும் களைத் தேடிக்கொண்டிருக்கின்றன.
க் காற்ற மட்டும் இஷ்டம்போல் கால் வெளியேறிக்கொண்டிருக்கிறது.

Page 81
இதழ் 27 E1
 

raph by Horst Faas in Vietnam
உயிர்நிழல் L ஒக்டோபர் - டிசம்பர் 2007

Page 82
அறிமுகம் >
U5
முஸ்லிம்களின் கடவுள் நம்பிக்கையின் துாண் களாக கருதப்படுபவை ஒரு கடவுள், நோன்பிருத்தல், பிரார்த்தனை, மற்றவர்க்கு உதவுதல், கடவுளை நோக்கிய யாத்திரை செல்லல் என்பன. சில மத அதிகாரிகள் ஜிகாத்தை ஆறாவது துாணாக கருது கின்றனர். ஜிகாத்தின் கருத்தாக'புனிதப் போர் என்ற பதத்தை இந்த மதவாதிகள் முன்வைக்கின்றனர். உண்மையில் குர்ஆன் முன்வைக்கும் கருத்து போராட்டம். போராட்டம் என்பது ஆயுதப் போராட்ட மல்ல. அது உணவுக்கான, உண்மைக்கான, மனிதத் துக்கான போராட்டம் என்பதே உண்மையானது.
'இஸ்லாம்' என்பதன் பொருள் சமர்ப்பித்தல். சமர்ப்பித்தலுக்கு போராட்டம் அவசியம். இவை ஒன்றுக்கொன்று தொடர்பானவை. புதிய மதத்தைத் தோற்றுவித்த போராட்டத்தின் பின்னர் மதீனாவிற்குத் திரும்பிய மொஹமட் பின்வருமாறு கூறுகின்றார். "நாங்கள் குறைந்தளவு ஜிகாத்தில் இருந்து அதிக ளவான ஜிகாத்திற்கு திரும்பியுள்ளோம்" மக்கள் அவரிடம் கேட்கின்றனர் "ஓ! ஆண்டவனின் துாதரே! நம்பிக்கையற்றவர்களிற்கு எதிராகப் போராடுவதைத் தவிர எந்த ஜிகாத் மேலானதாக இருக்க முடியும்?"
உயிர்நிழல் 0 ஒக்டோபர் - டிசம்பர் 2007
 
 

Lól
அதற்கு மொஹமட் எதிரிக்கு எதராக நீங்கள் சொந்த மாகப் போராடுவது" என்கிறார். குர்ஆனின் இரண்டா வது அத்தியாயத்தில், தற்பாதுகாப்பை மேற்கொள்ளும் பொழுது, சில சமயங்களில் போர் தவிர்க்க முடியா துள்ளதுஎனக் கூறப்பட்டுள்ளது. மதவாதிகள்'ஜிகாத் என்ற பதத்தை தமக்கு சார்பாக மாற்றி வன்முறைகளை வளர்க்கின்றனர்.
9/11க்குப் பின்னர் முஸ்லிம் மக்களுக்கு எதிரான இனவாதம் வட அமெரிக்காவில் கட்டவிழ்க்கப்பட் டுள்ளது. 06, 10, 2002இல் CBSஇன் 60 நிமிட நிகழ்வில் அமெரிக்கப்பாதிரியார் ஜெரி'யல்வெல்மொஹமட்டை பயங்கரவாதி எனக் குறிப்பிட்டார். முஸ்லிம்களாலும் முஸ்லிம் அல்லாதாராலும் எழுதப்பட்ட வரலாற்றுக் குறிப்புகள் மொஹமட்டை வன்முறையாளராகவே கருதுகின்றன. ஆப்கானிஸ்தானில் சோவியத் யூனியன் நிலை கொண்டிருந்தபொழுது ஆப்கானிஸ்தியர்கள் போராளிகளாக மேற்கத்தைய ஊடகங்களால் வர்ணிக்கப்பட்டன. இன்று அதேமக்கள் பயங்கரவாதி களாக திரிபுபட்டுள்ளனர், வர்ணிக்கப்படுகின்றனர். 'ரொறன்ரோஸ்ரார்ல் இல் வந்த செய்திக்குறிப்புஒன்று மிக முக்கியமானது.
இந்தியாவில் உள்ள இந்து ஒருவர் மசூதி ஒன்றை நடத்தி வருகின்றார். இதில் பிரார்த்த னைகள் நடத்துவதற்கு முஸ்லிம் மதகுருவையும் நியமித்துள்ளனர். இச்செய்தி பரவலாக்கப்பட வேண்டும்.
9/11இன் பின்னர் முஸ்லிம்கள் இஸ்லாமியரா கவும் மொஹமதியராகவும் கருதப்படுகின்றனர். பெண்கள்'ஜிகாத் அணிவதாக எழுதப்படுகின்றன. உண்மையில் பெண்கள் அணிவது'ஹிஜாப். இந்தச் சாதாரண உண்மை கூடத் தெரியாமல் எழுதத் தொடங்கிவிடுகின்றனர்.
நியூயோர்க் மத்திய பூங்காவில் ஒரு சிறு பையனை நாயிடம் இருந்து காப்பாற்றுகிறார் ஒரு மனிதன். நியூயோர்க் ரைம்ஸ்'இல் தலையங்கம்
82 இதழ் 27

Page 83
முதலில்"துணிச்சலானநியூயோர்க் நகரவாசிபிள்ளையைக் காப்பாற்று வதற்காக தனதுயிரைப் பணயம் வைத்தார்" என்று அமைந்திருந்தது. பின்னர் ஆராய்ந்ததில் அந்த மனிதன் நியூயோர்க் நகரவாசியல்ல என்பதனைக் கண்டறிகிறார் அந்த நிருபர். காப்பாற்றியவர் பாகிஸ் தானைச் சேர்ந்தவர் என உறுதிப் படுத்திவிடுகின்றார். மறுநாள் பத்தி ரிகையில் இவர் எழுதிய தலை யங்கம் "பாகிஸ்தான் தீவிரவாதி நாயைத் தாக்கினார்-அல்கைதா தொடர்புகள் கண்டுபிடிக்கப்பட்டன" என வெளிவந்தது.
முஸ்லிம்களும் பெண்களும்
பாலஸ்தீன கிறிஸ்தவப் பெண்கள் தலையை மூடிக் கட்டுகின்றனர். இதனை அவர்கள் ஒரு கலாச்சாரக் கூறாகவே கருதுகின்றனர். இந்நிலை பெரும்பாலான முஸ்லிம்நாடுகளில் வாழும் கிறிஸ்தவர்கள் மத்தியில் காணப்படுகின்றது. பிரித்தானிய எழுத்தாளர் வேர்ஜி னியா வூல்ஃப் "பெண்ணாக எனக்கு ஒரு நாடில்லை. பெண்ணாக சர்வதேசமும் எனது நாடு” எனக் குறிப் பிட்டிருந்தது எத்தனை உண்மை.
1938இல் கனடாவில் எட்மன்ரனில் முதலாவது மசூதி பெண்களின் முயற்சியினாலேய கட்டப்பட்டது.
கி.பி. 700ம் ஆண்டு நடைமுறைக்கு வந்த ஷரியா சட்டத்தின் பிரகாரம் பின்வரும் உரிமைகள் பெண் களுக்கு வழங்கப்பட்டுள்ளன: வாக்களிக்கும் உரிமை, கருக்கலைக்கும் உரிமை (நான்கு மாதங்களுக்கு மேற்படாத), போரில் பங்கு பற்றும் உரிமை, தமது பெற்றோரின் பெயரைத் தங்கள் பெயருக்குப்பின்னால் வைத்திருக்கும் உரிமை, தங்களது வேதனங்களைத் தாங்களே வைத்திருக்கும் உரிமை.
இவ்வுரிமைகளை 1938இல்தான் மேற்கத்தைய நாடுகள் பெண்களுக்கு வழங்கின. ஜூடித் ரக்கர் என்ற மேற்கத்தைய ஆய்வாளர் இதனைத் தனது ஆய்வில் உறுதிப்படுத்தி உள்ளார்.
மொஹமட்டின்முதலாவது மனைவி கதிஜா அவரை விட 22 வயது அதிகமானவர். இரண்டாவது மனைவி ஆயிஷா ஒரு சட்டத்தரணி. இவரது மகள் பாத்திமா அவருடைய அறைக்கு வரும்போதுமொஹமட் எழுந்து நின்று வரவேற்பார்.
இந்த நிலையானது இன்று முற்றாக மாற்றப் பட்டுவிட்டது. முஸ்லிம் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மதவாதிகளால் கட்டவிழ்த்து விடப் பட்டுள்ளது. முஸ்லிம் பெண்கள் தங்களது சுதந்தி ரத்துக்காக குரல் கொடுக்க வேண்டும். இன்றும் குர்ஆனில் கூறப்பட்டதற்கும் மாறாக முஸ்லிம் மதவாதிகளும் ஆணாதிக்கவாதிகளும் முஸ்லிம் பெண்களைத் தங்களது கைப்பாவைகளாக தங்களுக்கேற்றவாறு சட்டங்களையும் மாற்றி, கலாச்சாரங்களையும் மாற்றி கொடூரமாகச் சித்திரவதை செய்கிறார்கள். இதற்கெதிராக முஸ்லிம்
இதழ் 27
 

(K. SBarfupasib
பெண்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும். மேற்கத் தையப் பெண்களுக்கும் இது ஒரு படிப்பினையாக இருக்கவேண்டும். ஆனால் மேற்கத்தைய ஊடகங்கள் இதனைக் கேலிக்குரியதாகப் பார்ப் பதை நிறுத்தவேண்டும். இவர்கள் இந்த நுாற்றாண்டின் முற்பகுதி யிலேயே மேற்கிலுள்ள பெண்க ளுக்கு ஓரளவுசுதந்திரத்தை வழங் கினார்கள்.
Their Jihad not my Jihad - (Raheel Reza) 676öp 51T6ú66ö (bibjö சில பகுதிகள்
ரஹீல் ரேஸா பாகிஸ்தானைப் பிறப்பிடமாகக் கொண்டு கனடாவில் வாழும் ஒரு பெண்நிலைவாதி.
**责演女
மீண்டும் ஒர் தடவை
ரஹீல் ரேஸா தமிழில்: பதமி
மீண்டும் ஓர் தடவைநான் பந்தாடப்பட்டேன் உதைக்கப்பட்டேன்
சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டேன் மீண்டும் ஓர் தடவை நான் பெண் என்பதனால் எனது கருவறைக்குள் நான் கட்டிய சுவருக்குள்
அடக்கப்பட்டேன்
சிறைப்படுத்தப்பட்டேன் மீண்டும் ஓர் தடவை'மன்னிக்கவும்' என்ற குரலைக் கேட்கின்றேன் ஆனால் அவை வெறுமையானவை உணர்விழந்தவை மீண்டும் ஓர் தடவை செங்குத்துப்பாறை விளிம்பின் நுனியில் விடப்பட்டேன்
குளிர்
ஆத்திரம்
வெறுமை
மெளனம் மீண்டும் ஒர் தடவை வலுவிழக்கப்பட்டேன் எனக்குத் தெரிந்த ஏனைய பெண்களைப்போல் கறுப்பு
வெள்ளை
ይbööቧ
கிராம மீண்டும் ஓர் தடவைநான் ஓவென்றழுவதற்கு, தொலைவிற்கு ஓடிவிட
விரும்புகின்றேன் மீண்டும் ஓர் தடவைமுடியாதுள்ளது ஏனெனில் குழந்தைகள் என்னுடையவை
3 உயிர்நிழல் 0 ஒக்டோபர் - டிசம்பர் 2007

Page 84
கவிதை )
ര് െ
என் வீடு என் வீட்டறைகள் எனக்கே உரித்தான அறைகளெல்லாம் எனக்கான சுதந்திரத்துடன் இல்லை.
ஜண்னல்களை விருப்பம்போல் திறந்துவைக்க முடியவில்லை
காற்று விழுந்தென்னைப்புணர்வது தடுக்கப்பட்டுவிட்டது
ஆகாயவைரங்களைக் காணாமல்
கரையும்பொழுதுகளால் கனக்கிறது மனம்
என் சுதந்திரவெளி யாருடைய எல்லைக்குள்ளோ இருப்பது அறிந்து அமைதியிழக்கிறது அந்தரங்கம்
நான்குபுறமும் முளைத்துக்கொண்டே உயரும் கழுகுகள்
என் சூரியனையும் சந்திரனையும் பறித்துக்கொண்டன்
நான்
என் சுதந்திரம் எப்படி சுதந்திரமாக
 
 
 
 

பிச்சினிக்காடு இளங்கோ சிங்கப்பூர்) =

Page 85
ஈரானிய பெண்கள் சி
ஈரானிய சினிமா வரலாற்றுச் சுருக்கம்
1905 - முதல் சினிமா அரங்கம் திறக்கப்பட்டது. 1925 - ஒவனெஸ் ஒன்றணியன் ஒரு ஆமேனிய ஈரானியர். ரஷ்யாவில் திரைப்படக் கல்வி கற்று விட்டு வந்து திரைப்படக் கல்லூரியை ஆரம்பித்தார். 1930 - முதலாவது மௌனப் படம் தயாரிக்கப் பட்டது.
1934 - The Lor Girl முதலாவது ஈரானியத் திரைப்படம். இது இந்தியாவில் தயாரிக்கப்பட்டது. 1965 - Gane-e-aோபn என்ற படம் எபியாமக் பளuாமியால் தயாரிக்கப்பட்டது. சுமார் ஒரு மில்லி பயன் டொலர் வருமானத்தைக் கொடுத்த LILLË.
1989 -1979 - ஈரானிய இஸ்லாமியப் புரட்சிக்கு முன்னர் - ஈரானிய நியூ வேவ் படங்கள் ஆரம் பித்தன.
 

« മിഥ്
'afiðI6ldi LIIIáMb
சில குறிப்புகள்
80 - இனப்லாமியப் புரட்சிக்குப் பின்னர் ஏகாதிபத்தி க்கெதிரான இஸ்லாமிய கட்டமைப்புடன் அமைந்த $ள் மட்டுமே வெளியிட அனுமதிக்கப்பட்டன. feqh யின் கட்டுப்பாடுகள் அதிகமாக இருந்த காலம், 90 - மீண்டும் உலக அரங்கில் சிறந்த படங்களை யிடத் தொடங்கின. 97 - கட்டாமியின் ஆட்சி தொடங்கிய பின்னர் பெனன் பிரச்சினைகள் பற்றிய படங்கள் கூடுதலாக வெளி தொடங்கின. ன்று இரு வகையான திரைப்படங்கள் வெளிவருகின்றன. ஜனரஞ்சக சினிமா - இது இஸ்லாமியக் கோட்பாடு காவியாக செயல்பட்டு வந்தது. ஆனால் இன்று இது த்திய கலாச்சாரக் காவியாகவும் செயற்படுகின்றது. சீரிய சினிமா - இது பற்றி அப்பாஸ் கியாறோஸ்ரமி
கருத்து மிகமுக்கியமானது. ராணின் பிரதான ஏற்றுமதிப் பொருட்களான பிளப்தா நகள், கம்பளங்கள், எண்னெய் ஆகியவற்றுடன் ாது சினிமாவும் சேர்ந்துள்ளது". ப சினிமா என்பது இஸ்லாமிய சினிமாவல்ல, இது f சினிமாவாக இருக்கின்றது.
உயிர்நிழல் ப ஒத்டோபர் - டிசம்பர் 2007

Page 86
சினிமா >
1979இன் இஸ்லாமியப் புரட்சியின் பின்னரோ முன்னரோ, ஈரானில் பெண்கள் சினிமாவில்நடிப்பதற்குப் பல தடைகள் இருந்தன. ஒரு நடிகனோ நடிகையோ ஒருவரையொருவர் தொட்டு நடிக்க முடியாது. பெண்கள்முக்காட்டுடன் கண்கள் மட்டுமே தெரியுமாறு உடைகள் அணிய வேண்டும் போன்ற கட்டுப்பாடுகள் இருந்தன. இதனால் பெண்கள் நடிப்பதற்கு முன் வரவில்லை. Sheida என்ற படத்தில் ஒரு பெண் தாதி காயம்பட்ட ஆண் நோயாளியை தொட்டுத் துாக்கிய காட்சிக்கு எதிராகக் குரலெழுப்பினர். இவ்வாறான காட்சிகள் தடை செய்யப்பட வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டது. 1930இல் தயாரிக்கப்பட்ட முதலாவது மெளனப் படத்தில் நடிக்க பெண்கள் 6T6 (bib (p6i 61J 6,6606). Sedighe Saminejad Mehranghtz தான் முதலாவது நடிகை. இவர் வீதியில் சென்ற பொழுது, மக்கள் கற்களால் எறிந்துதாக்கினர். இஸ்லாமிய, மதவாத தலிபான் சட்டங்கள் பெண்கள்மீது அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்ட நிலையிலும்இன்று 62 பெண் இயக்குனர்கள் உள்ளனர். இஸ்லாமிய புரட்சியின்போது ஒரேயொரு பெண் இயக்குனரே இருந்தார். இன்று 24% அரங்க நிர்மா ணிப்பாளர்களும், 10% திரைக்கதையாசிரியர்களும், 5% தயாரிப்பாளர்களும் பெண்கள். இவற்றை விட பல்கலைக்கழகங்களில் 60%மான மாணவர்கள் பெண்கள். பெண்களின் அரசசார்பற்றநிறுவனங்களின் எண்ணிக்கை 400 வீதத்தால் உயர்ந்துள்ளது. ஜனாதிபதித் தேர்தல் காலகட்டங்களில் பெண்களின் நிலை பற்றிய கருத்துக்கள் கூறப்படுகின்றன. இந்த மாற்றத்துக்குக் காரணம் பெண்கள் தாங்களே போராடியமையேயாகும். இதற்கு கலை மற்றும் மாற்று ஊடகங்களும் ஒத்துழைப்பு நல்கியுள்ளன. இதில் திரைப்படங்களும் முக்கியபங்கு வகிக்கின்றன.
Tahereh Qorat-al-Eyn (36 6 Julgö) 6T6öymo b6f6ODG ஆண்களுக்குச் சமமாகப் பெண்களும் நடாத்தப்பட வேண்டும் என்று 1850இல் வாதிட்டுத் தனது முக்காட்டை மக்கள் மத்தியில் துாக்கி எறிந்தார். இதற்காக இவர் துாக்கிலிடப்பட்டார்.
தவற்பமினேமிலானியின் படங்கள்
ரெஹற்ரான் பல்கலைக்கழகத்தில் கட்டிடக் கலைஞர் பட்டப்படிப்பை 1986இல் முடித்துவிட்டு சிறிது காலம் கட்டிடக்கலைஞராக வேலைபார்த்தார். பின்னர் சில காலம் உதவி இயக்குநராக பணியாற்றி, 1989இல் தனது முதலாவது படத்தை இயக்கினார். 1960இல் பிறந்த இவர், 1979இல் திரைக்கதைப் பயிற்சியினை முடித்தார். இவர் பல படங்களுக்கு திரைக்கதை யாசிரியராகவும் பணிபுரிந்துள்ளார்.
இவரதுTWOWomen படத்தயாரிப்புக்கான அனும திக்கு எட்டுவருடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது The Fifth Reaction 616ip g6 Jgby LIL-gigég, HyT60ful இஸ்லாமியக் கலாசார வழிகாட்டி அமைச்சு அனுமதி கொடுத்த பின்னரே படம் தயாரிக்கப்பட்டது. படம்
உயிர்நிழல் 0 ஒக்டோபர் - டிசம்பர் 2007

வெளியான பின்னர் எழுந்த எதிர்ப்பால் இவர் 2001ம் ஆண்டு ஓகஸ்ட் 26ம் திகதியில் சிறையிலடைக்கப் பட்டார். 2005இல் வெளியான இவரது Unwanted Women என்ற படம் இவரை மீண்டும் சர்ச்சைக் குள்ளாக்கியது.
1996இல் வெளியான இவரது Kakadoவில் எட்டு வயதுச் சிறுமி முக்காடு போடாமல் படத்தில் தோன்றியதால் பெரும் எதிர்ப்புக் கிளம்பியது. ஈரானிய தேசியத் தொலைக்காட்சி நிறுவனம் இப்படத்திற்கு விளம்பரங்கள் அளிக்க மறுத்து விட்டது. மதத் தலைவர்களும் தங்களது எதிர்ப்பை வெளிப்படை யாகவே தெரிவித்தனர்.
ஈரானில் பெண்கள் ஹிஜாப் (முக்காடு) இல்லாமல் திரையில் தோன்ற முடியாது. ஆண்களும் பெண்களும் தொட்டு நடிக்க முடியாது. வீட்டிற்குள் நடக்கும் அந்தரங்கங்களை திரையில் காண்பிக்க முடியாது. பெண்கள் இருவிதமான சட்டங்களை சந்திக்கின் றார்கள். வெளியில் (ஆண்களின்) அரசினாலும் வீட்டினுள் ஆண்களாலும் ஏற்படுத்தப்பட்டது.
Two Women (1999)
ஒரு தலையாக காதலித்தவனதும், கணவனதும் பார்வையில் பெண் என்பவள் அடிமை என்பதுதான். ஒன்றாக படித்த இரு பெண்கள் வெவ்வேறு துருவங் களில் தமது வாழ்வைத் தொடங்குகின்றனர். ஒருவர் கட்டிடக் கலைஞராக வேலை பார்க்கின்றார். மற்றப் பெண் தனது பெற்றோரின் வற்புறுத்தலுக்கு ஏற்ப திருமணம் செய்து கணவனுக்கு தொண்டாற்று கின்றாள். காலப் போக்கில் கணவனுக்கும், நிக்கி கரீமிக்கும் இடையே பிளவுகள் ஏற்படுகின்றன. மனைவி தனது சொல்லுக்கும், செயலுக்கும் அடிமைப்பட்டவள் என்பது கணவனின் கருத்து. அவள் விவாகரத்துக்கு விண்ணப்பிக்கின்றாள். வழக்காடு மன்றத்துக்குச் செல்லும் பெண்ணிடம்நீதிபதி கேட்கும் கேள்விகள்மிக முக்கியமானவை. "உனது கணவன் உன்னை அடிப்பதில்லை, உன்னை சரியாக கவனிக்கின்றார் எனவேரீஅவரைமதித்து வாழ்வதே முக்கியம். உனது கருத்துக்கு ஏற்ப நீவாழமுடியாது."-இது நீதிபதியின் தீர்ப்பு. ஈரானில் புற வன்முறைகளையே சட்டங்கள் ஏற்றுக் கொள்கின்றன. அக வன்முறைகளை அவர் களது சட்டங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. தனது வீட்டுக்கு வரும் நிக்கியை பெற்றோர் ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர். அவள் மீண்டும் கணவனிடம் வரு கின்றாள். இவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்த நிலை யில் ஜெயிலில் இருந்துதிரும்பும் காதலன்கணவனைக் கத்தியால் குத்தியதில் அவன் இறந்துவிடுகின்றான். தனது பள்ளித் தோழியிடம் நிக்கி கூறுகின்றாள்:
"இப்பொழுது சுதந்திரம் கிடைத்துள்ளது. ஆனால் பறக்க முடியாத ஒரு விமானம் போல் எனது வாழ்வு ஆகியுள்ளது".
பெண்களின் சுயம் என்பது கணவனின் அல்லது ஆண்களின் கீழ்தான் என்பதனைச் சட்டங்களும், தீர்ப்புக்களும் தொடர்ந்து வெளிப்படுத்திவருகின்றன. இப் பெண்ணுக்கு அவளது கணவன்மீது ஏற்பட்டது காதலல்ல. நிர்ப்பந்தத்தில்ஏற்படும் உறவு இந்தநிலை
இதழ் 27

Page 87
இன்று அநேகமாக எல்லாப் பெண்களுக்கும் பொது வானது.
The Fifth Reaction
நிக்கி கரிமி காதலித்துத் திருமணம் செய்த பணக் காரக் கணவன் இறந்து விடுகின்றான். கணவனின் தந்தை ஒரு ட்ரக் முதலாளி. நிக்கியின் இரு பிள்ளை களையும் பராமரிக்கும் உரிமை கணவனின்தந்தைக்கு வழங்கப்பட்டுள்ளது. தனது பிள்ளைகளையே வாரம் இருதடவைதான் சந்திக்கலாம் என்றநிலைநிக்கிக்கு. கணவனின்தம்பியைநிக்கி திருமணம் செய்யவேண்டும் என மாமனார் நிப்பந்திக்கின்றார். அதற்கு நிக்கியின் கணவனின் பெயரில் உள்ள சொத்துக்களும் ஒரு காரணம்.மாமனாரின் தொல்லைகள் அதிகரிக்கநிக்கி தனது இரு பிள்ளைகளுடனும் ஈரானின் மறு எல்லை நோக்கிப் பயணமாகின்றாள். மாமனார் தனது லொறி ஒட்டிகள் மூலம் நிக்கியைத் தேட, இறுதியில் நிக்கி தனது இரு பிள்ளைகளையும் மாமனாரிடம் இழந்து விடுகின்றாள்.
ஆணாதிக்க சமூகம் இயற்றியுள்ள சட்டங் களினால் ஒரு பெண் தனது பிள்ளைகளைக்கூட இழக்கும் நிலை ஏற்படுகின்றது என்பதனை துல்லிய மாகக் காட்டி உள்ளார்.
The Hidden Half
துாக்குக் கயிற்றை சிலநாட்களில் சந்திக்கவுள்ள பெண் கைதியை இறுதியாக விசாரிக்க நீதிபதி
இதழ் 27
 

7
வருகின்றார். விசாரணைக்கு முன்னர், தனது மனைவியிடமிருந்து வந்த நீண்ட கடிதத்தை ligábál6ögDTit. É35ug5lu96ör D60)6076íl Fereshteh - Nikki Karimi 1979இல் நடந்த இஸ்லாமிய புரட்சியில் ஈடுபட்டுள்ளார். அப்பொழுதுஅவர் புரட்சியில் ஈடுபட்ட மற்றொரு போராளியான ஒரு கவிஞரை விரும்பி யுள்ளார். அவர் ஏற்கனவே திருமணமானவர். கவிஞர் புரட்சியின் பின்னர் தன்னை மறந்து விடுமாறு கூறியுள்ளார். இருவரும் பிரிந்துவிடுகின்றனர். இதுவே கடிதத்தில் உள்ளவை. Fereshteh நீதிபதியை மணமுடித்து இப்பொழுது 20 வருடங்களாகிவிட்டன. முதலில் துாக்குத் தண்டனைக் கைதியின் பக்க நியாயங்களை மேலோட்டமாக கேட்ட நீதிபதி இப்பொழுது கடிதத்தை வாசித்த பின்னர் பொறுமை யுடன் கேட்கின்றார்.
இந்தப் படத்திற்காக இயக்குநர் சிறையில் அடைக்கப்பட்டார்.
Unwanted Woman
சிமா தனது கணவனுடமும், சிபா என்ற கணவனை இழந்த ஒரு பெண்ணுடனும் கிராமத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார். பயணத்தின்போது தனது கணவனுக்கும் சிபாவுக்கும் உள்ள உறவை சிமா தெரிந்து கொள்கின்றாள். சிபாவின் மீது அவளிற்கு இரக்கம் ஏற்படுகின்றது. சிமா ஒர் ஆசிரியை. இவர்கள் விடுதியில் தங்கியிருந்தபொழுது புது மனைவியைக் கொன்ற கணவனை பாதுகாப்பு அதிகாரிகள்
உயிர்நிழல் 0 ஒக்டோபர் - டிசம்பர் 2007

Page 88
சினிமா >
தேடுகின்றனர். விடுதியில் ஒளிந்து கொள்ளும் கொலைகாரன்தப்பிக்கொள்ள சிமா உதவுகின்றாள்.
Cease Fire
படித்த இரு காதலர்கள் திருமணம் செய்து கொள்கின்றனர். மனைவி-கட்டிடக் கலைஞர், கணவன் - பொறியலாளர். இவர்கள் இருவரிடமும் நான்' என்ற அகங்காரம் குறுக்கிடுகின்றது. மனைவி விவாகரத் துக்காக ஒரு வழக்கறிஞரிடம் செல்கின்றாள். அங்கு தற்செயலாக ஒரு கவுன்சிலர். வைத்தியரை சந்திக் கின்றாள். மனைவியைத் தேடி வரும் கணவனும் அதே வைத்தியரை சந்திக்கின்றான். கவுன்சிலரின் ஆலோசனைப்படி இருவரும் பத்து நாட்கள் பிரிந்து வாழ்கின்றனர். பின்னர் இருவரும் இணைகின்றனர். ஆனாலும் இருவரிடமும் உள்ள அகங்காரம் தீர வில்லை. வைத்தியர் ஒரிடத்தில் கூறுகின்றார்:
உங்களது வீட்டில் நான்கு பேர் உள்ளனர்.
ஒருவர் 35 வயது கணவன், மற்றவர் 6 வயது கணவன், மூன்றாவது நபர் 32 வயது மனைவி, நான்காவது 5 வயது மனைவி. பல சமயங்களில் உங்களது நடவடிக்கைகள் சிறு பிள்ளைத் தனத்தையே காட்டிநிற்கின்றன. அதுதான் உங்களது முக்கியபிரச்சினை.
சமீரா மக்மால் பவ்வின் படங்கள்
1960இல் பிறந்த இவர் தனது 17 வயதில் ‘அப்பிள்' என்ற விவரணத்திரைப்படத்தை இயக்கினார். இவரது தாயும், தந்தையும் திரைப்பட இயக்குநர்களே. அப்பிள்
ஒரு தந்தை தனதுஇருபெண்குழந்தைகளை சுமார் 11 வருடங்கள்(2வயதில் இருந்து 13 வது வயதுவரை)
உயிர்நிழல் 0 ஒக்டோபர் - டிசம்பர் 2007
 

வீட்டில் அடைக்கின்றார். சுற்றத்தினர் இது பற்றி அரசாங்கத்துக்கு அறிவிக்கின்றனர். அரசு பிள்ளைகளுக்கு அடைக்கலம் கொடுக்கும்பொழுது, பிள்ளைகளால் பேசவோ நடக்கவோ முடியாது. ஆனால் சில காலங்களின் பின்னர் அரசாங்கம் மீண்டும் பிள்ளைகளை தந்தையிடம் அனுப்பிவிடுகின்றது. பிள்ளைகளைப்பராமரிக்க வரும் தாதி, பிள்ளைகளை வீதியில் விளையாட விடுவதற்காக, தந்தையை வீட்டினுள் அடைத்து விடுகின்றாள். குழந்தைகள் தங்களது வாழ்வில் முதல்முதலாக வெளியுலகத்தை தரிசிக்கின்றார்கள். பிள்ளைகள் இப்பொழுது சுதந்தி ரமாக வீதியில், ஆனால் தந்தையை விடுவிக்க முடி யாமல் உள்ளார்கள். அவர்களுக்கு கதைக்கத் தெரியாது. தங்களது எண்ணத்தை வெளிப்படுத்த (plgu Igbl.
இப் படம் பெண் குழந்தைகளுக்கு எதிரான சமூகத்தின் அடக்குமுறையை வெளிப்படுத்தியுள்ளது. ஆண் குழந்தைகள் வெளியே சென்று சமூகத்தை புரிந்து கொள்கின்றார்கள். ஆனால் பெண்கள் மிகச் சிறு வயதிலேயே அடக்கு முறையை அனுபவிக் கின்றார்கள். பொதுவாக குழந்தைகளை பெற்றோர் நடாத்தும் முறைக்கும் எதிர்ப்பைக் காட்டியுள்ளது. அரசாங்கம், குறிப்பாக, பெண் குழந்தைகள்மீது காட்டும் பாரபட்சத்தை கடுமையாக சாடியுள்ளது.
கரும்பலகை
இதுகுர்திஸ்தானின் ஹலப்ஷேஹற் என்ற எல்லைப் பகுதியில் படமாக்கப்பட்டது. கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டுள்ள இப்பகுதியில் இது படமாக்கப் பட்டுள்ளது. எல்லைப் பகுதியில் ஈராக்கில் இருந்து பொருட்களையும், மனிதர்களையும் ஈரானுக்கு கடத்து

Page 89
வதை தொழிலாகக் கொண்டிருந்தோர், எல்லையோரங்களில் இரு நாடுகளுக் கிடையில் புலம் பெயர்ந்து கொண்டி ருந்தனர். இரு வாலிபர்கள் தமது முதலா வது சந்ததியினருக்கும், மூன்றாவது சந்ததியினருக்கும் கல்வியறிவூட்ட கரும்பலகை காவித்திரிந்து முயற்சிப்பதே இப்படம். முதலாமவன் அக்கும்பலில் உள்ள ஒரேயொரு பெண்ணின்மீது காதல் கொள் கின்றான். எல்லையோரத்தை அடையும் பொழுது காதலும் முறிந்து விடுகின்றது. மற்ற இளைஞனிடம் கல்வி கற்க ஓர் சிறுவன் முயற்சிக்கின்றான். ஒவ்வொரு தடவையும் குண்டுச் சத்தம் அவர்களது முயற்சியைதடுத்துவிடுகின்றது. போரினால் ஏற்படும் ஓர் சந்ததியினரின் இழப்புக்கள் முக்கியமானவை. அத்துடன் அகதிக ளாகக் குடி பெயர்வோரின் வாழ்க்கை அவலங்கள் சிறப்பாக சித்தரிக்கப்பட்டுள்ளன.
At Five in the Afternoon
ஆப்கானிஸ்தானில், தலிபான் ஆட்சியின் வீழ்ச்சி யின் பின்னர் ஒரு சிறுமி பள்ளிக்குச் செல்ல விரும்பு கின்றாள். சரியான உடைகளின்றி பள்ளிக்குச் செல் கின்றாள். பள்ளிக்குச் செல்லும் உடை அணிந்தால் தந்தையார் விடமாட்டார். பள்ளியில் மாணவிகளிடம் நீங்கள் எதிர்காலத்தில் என்னவாக வர விரும்பு கின்றீர்கள் என ஆசிரியை கேட்கின்றாள். சிலர் வைத்தியராக, பொறியிலாளர்களாக, வக்கீல்களாக என்று பதிலளிக்கிறார்கள். நோக்றீஜனாதிபதியாக வர விருப்பம் தெரிவிக்கின்றாள். பெனாசீர் பூட்டோ இவள் விரும்பும் தலைவர். அவள் ஜனாதிபதியாவது எப்படி எனப் பலரிடமும் கேட்கின்றாள். பாகிஸ்தானில் அகதியாக இருந்து விட்டு திரும்பும் கவிஞரிடமும் தனது தேடலை தொடர்கின்றாள். இவளது தந்தை மிகவும் கட்டுப்பாட்டுடன் கூடிய டாக்ஸி சாரதி. இவர்களது குடும்பம் இறுதியில் குண்டு வெடிப்பில் உடைந்த பாராளுமன்ற கட்டிடத்திற்கு குடிபெயரு கின்றது. வறுமையிலும், நோயிலும் அவளது தேடல் தொடருகின்றது.
இவற்றைத் தவிர, 'செப்ரம்பர் 2001’ என்ற குறும் படமும் இயக்கியுள்ளார். இப்படத்தில் அமெரிக்கா பற்றியதனது கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார். உலகமயமாதலின் வெளிப்பாடு தான் 9-11 தாக்குதல் என்றும், தொடர்ந்தும் பல நாடுகளின் குரல் அமெரிக் காவால் அடக்கப்பட்டுள்ளது என்றும் சித்தரிக் கின்றார்.
இவர் தனது படங்களில் பெண்கள் தமது ஒடுக்கப் பட்ட கலாச்சார வடிவங்களுக்கூடாக தமதுவிடுதலை யைத் தேட வேண்டும், பெண்களுக்கான கல்வியறிவு முக்கியம், பெண்கள் அரசியலில் ஈடுபடவேண்டும் என்பது போன்ற கருத்துக்களை முன்வைத்துள்ளார். இவரது படங்களில் வரும் பாத்திரங்களுடாக இக்கருத்துக்களை வெளிப்படையாகவும் துணிச்ச லாகவும் வெளிப்படுத்தியுள்ளனர்.
இதழ் 27
 

g difiDIT
ஹனா மக்மல்பல்
g6) vir &FußJAT 66ör FG8a5 Tg75f. Buddha Collapsed Out of Shame. இது ஹனாவின் முதலாவது படம். ஏற்க னவே பல குறும்படங்களையும் இவர் இயக்கியுள்ளார். ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள், தலிபானால் அழிக்கப்பட்ட புத்தர் சிலையின் கீழ் ஆப்கான் மலை யின் குகைகளில், வறுமைக் கோட்டின் கீழ் மிகவும் பின்தங்கிய நிலையில் வாழ்கின்றனர். ஆறு வயது பாக்ரே என்ற சிறுமிக்கு, அவளது தங்கையான கைக் குழந்தையைப் பார்க்க வேண்டியது முக்கிய வேலை. அவளது கவனத்தை திருப்பும் குரல் முன்னால் குகையில் வசிக்கும் சிறுவனுடையது. இவன் பாடப் புத்தகம் படிக்கின்றான். சிறுமிக்கும் படிக்க ஆசை. அவள்படிப்பதற்கு கொப்பிவாங்குவதற்கு காசு தேவை. வீட்டில் உள்ள முட்டைகளை விற்றால் கொப்பி வாங்கலாம். அந்த சிறுமி பண்டமாற்றுவியாபாரியாக மாறிவிடுகின்றாள். இறுதியாக கொப்பி வாங்கி சிறுவ னுடன் பள்ளிக்குச் செல்கின்றாள். அது ஆண்கள் பாடசாலை, அங்கே அவளை அனுமதிக்க மறுக்கின் றார்கள். பெண்கள் பாடசாலைக்கு மறு கரைக்குச் செல்ல வேண்டும். இறுதியாக அங்கே சென்று ஒருவாறு ஒர் வகுப்பறையில் அமர்ந்து கொள்கின்றாள். எழுதுவதற்கு அவளிடம் பென்சில் இல்லை. ஆனால் தாயின் லிப்ஸ்ரிக் உண்டு. அவள் அதனால் எழுதத் தொடங்குகிறாள்.
இறுதியில் பல சிறுமிகளின் முகத்தை இந்த லிப்ஸ்ரிக் அலங்கரிக்கின்றது. கரும்பலகையில் தீவிரமாக எழுதிக் கொண்டிருக்கும் ஆசிரியை. சடுதியாக திரும்பிப் பார்க்கின்றாள். சிறுமி வகுப் பறையை விட்டு வெளியேற்றப்படுகின்றாள்.
சிறுமி விடு திரும்பும் வழியில் ஒரு சிறுவர் கூட்டம் வழிமறிக்கின்றது. இச் சிறுவர்கள் தங்களை தலிபான் களைப்போல் கற்பனை செய்து கொள்கின்றார்கள். இப்பொழுது இந்த சிறுமியை கற்களால் எறிந்து கொல்ல வேண்டும், இல்லையேல் அமெரிக்கர்கள் போல் சுட்டுக் கொல்ல வேண்டும் என தீர்மானிக்கின்
9. உயிர்நிழல் 0 ஒக்டோபர் - டிசம்பர் 2007

Page 90
சினிமா )
றார்கள். ஒரு கிடங்கினுள் சிறுமியை நெஞ்சளவிற்கு புதைக்கின்றார்கள். பின்புசிறுமி ஒருவாறு அங்கிருந்து தப்பி வீடு செல்கின்றாள்.
வறுமைக்கோட்டின்கீழ் வாழும் குடும்பங்களில் கூட இந்த லிப்ஸ்ரிக் காணப்படுகின்றது. தலிபானால் இது தடை செய்யப்பட்டுள்ள போதிலும் அதையும் மீறி இவை ஊடுருவுகின்றன. வன்முறைகள் எவ்வாறு ஒரு சமுதா யத்தை அழிக்க முடியும் என்பதற்கு இப்படம் ஓர் எடுத்துக் காட்டு. பாடசாலையில் கற்பதுடன், சமூக நடைமுறைகளையும் அவர்கள் அதிகூடுதலாக கற்கின்றனர். இதுவே இச் சிறுவர்களது வாழ்வாக மாறிவிடுகின்றது.
ஆப்கானிஸ்தானின் பாமியன் கிராமத்தில் சில வருடங்களுக்கு முன்னர் பல நுாறு ஆண்களும், சிறுவர்களும் இவர்களது தாய்மார், மனைவிமார் முன்னிலையில் சுட்டுக் கொல்லப்பட்டனர். ரஷ்யப் படைகளின் பின்னர், தலிபான், அதன் பின்னரான அமெரிக்கப் படைகள் என இவர்களது வாழ்வு வன்முறை சமுதாயத்தின் தொடர்ச்சியாகவுள்ளது. "அமெரிக்கப்பிள்ளைகள் போல் இவர்கள் ஹொலிவூட் படங்கள் மூலம் வன்முறைகளைக் கற்கவில்லை. இவர்கள் தங்களது கண்முன்நிகழ்ந்த அனர்த்தங்கள் மூலமே கற்றுள்ளனர்" என்று இயக்குனர் கூறுகின்றார். படத்தில் வரும் சிறுவன் பாத்திரம் நேரத்துக்கு நேரம் தன்னை மாற்றிக் கொள்ளும். இவர்கள் மாறிக் கொண் டிருக்கும் அதிகாரத்துடன் ஒவ்வொரு தடவையும் நெருங்கிய உறவுகொள்வார்கள். இவர்கள் வன்முறை களை நேசிப்பவர்களாக மாறிவிடுவார்கள். வன்முறைச் சமூகத்தின் அழிவுகளை ஓர் சிறுமியின் பாடசாலைப் பயணம் மூலம் இயக்குநர் பதிவாக்கி யுள்ளார்.
மர்ஸியேஹற் மெஷ்கினி
இவர் சமீரா, ஹனா ஆகியோரின் தாயார்.
The day I became a woman
இது மூன்றுகதைகளைக் கொண்டது. முதலாவது, ஒன்பது வயது ஹவா வீதியில் விளையாடிக் கொண்டிருக்கின்றாள். திடீரென இவள் வயதுக்கு வந்து விட்டாள். பெற்றோர் அவளை வீதிக்குச் செல்லக் கூடாதுஎனக் கூறுகின்றனர். அவள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றாள்.
இரண்டாவது, ஒரு இளம் பெண் தனது முக்காட் டுடன் சைக்கிள் ஒட்டப்போட்டி ஒன்றில் கலந்து கொள்கின்றாள். குதிரையில் துரத்திச் செல்லும் இவளது கணவன் இவளைச் சைக்கிளில் இருந்து இறங்கும்படி வற்புறுத்துகிறான். இல்லாவிட்டால் அவளை விவாக ரத்து செய்துவிடப் போவதாக மிரட்டுகின்றான்.
மூன்றாவது, ஒரு வயது முதிர்ந்த பெண் இறுதிக் காலத்தில் தனக்குக் கிடைத்த பணத்தில் தான் வாழ்ந்த காலங்களில் தான் விரும்பியபடி வாங்க முடியாமற் போன பொருட்களை வாங்க விரும்பு கின்றாள். அப்பொழுதுகளில் அவள் சந்திக்கும் எதிர்ப்புக்களே இப்பதிவு
உயிர்நிழல் 0 ஒக்டோபர் - டிசம்பர் 2007

Stray Dogs
காணமல் போன கணவனை விலக்கிவிட்டு மறுமணம் முடிக்க முயலும் மனைவி கைது செய்யப் படுகின்றாள். இவளது குழந்தைகள்இவளுடன் இரவில் சிறையில் வாழ அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் பகலில் அவளுடன் வாழ்வதற்கு குழந்தைகளிற்கு அனுமதி இல்லை. அவர்கள் காபூல் வீதியில் குற்றச் செயல்களில் ஈடுபட விழைகின்றனர்.
ரக்ஷான் பனி-எற்மட்
ஈரானின் குறிப்பிடத்தக்க பெண் இயக்குநர்களில் இவரும் ஒருவர். இவர் பல விருதுகளையும் பெற்றுள்ளார்.
Nargess
ஒரு வயதான கொள்ளைக்காரப் பெண்ணின் முன்னாள் இளம் காதலன், நேர்மையான, எளிமையான நர்கீஸை விரும்புகின்றான். அவர்கள் திருமணம் செய்து வாழ்வைத் தொடர வேண்டுமாயின் இவளது கொள்ளை களுக்கு உதவ வேண்டும் என முன்னாள் காதலனை மிரட்டுகின்றாள்.
The May Lady
ஒரு நடுத்தர வயது திரைப்பட இயக்குநர். கணவனை இழந்த ஓர் இளம் தாய். இவரது இளம் வாலிப மகன் தாயின் புதிய உறவை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றான். தாயின் அன்பை இழந்துவிடுவோமோ என அச்சமடைகிறான். இந்த உறவுச் சிக்கல்களுக் கிடையில் உள்ள போராட்டத்தைக் காட்டுகின்றது. தாய்மைக்கும், காதலுக்குமிடையில் திண்டாடுகின்றார் இந்தத்திரைப்படப்படைப்பாளி.
The Blue-veiled
இவரது முன்னைய படத்துக்கு நேரெதிரானது. மனைவியை இழந்த ஒருவருக்கும் அவரது தோட்
இதழ் 27

Page 91
டத்தில் வேலை பார்க்கும் இளம் பெண்ணுக்கு மிடையிலான காதலினால் அவருடைய மகள்களும் மருமக்களும் மானபங்கமாக உணர்வதையும் அவர்களை அவர் அனுசரித்துப்போவதா அல்லது தனது சந்தோஷத்த்ை தெரிவுசெய்வதா என்னும் மனப் போராட்டத்தையும் பதிவாக்கியுள்ளது.
Under the Skin of the City
ரியூபா என்ற பெண் தனது குடும்பத்தை சுமக்கும் தொழிலாளியாக, தாயாக, தந்தையாக வாழ்ந்து காட்டும் வீரத்தை பதிவாக்கியுள்ளார். சமூக மதிப் பீடுகள் காலத்துக்கும், தேவைக்கும் ஏற்ப ஆண்களால் மாற்றப்படுகின்றன. பெண்ணிற்கு தாய்மைக்கும், பெண்ணின் சாதாரண உடல், உள உணர்வுகளுக்கும் இடையில் அகத்திலும், புறத்திலும் போராட்டம் ஏற்படுகின்றது. ஆனால் முடிவை ஆண் சார்ந்த சமூகமே தீர்மானிக்கின்றது.
ஜட்பார்பனாஹறி
இவர் நியூயோர்க் ஜே.எப்.கே.விமானநிலையத்தில் வைத்து 15. 04, 2001 அன்று கைகளில் விலங்கு மாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். அதற்கான காரணங்கள்:
1. இவருக்கு ட்ரான்சிட் விசா இல்லாதிருந்தது.
2. இவர் கைரேகை அடையாளம் அளிக்க மறுத்தமை. பின்னர் இவர் ஹொங்ஹொங்கிற்குத் திருப்பி அனுப்பப்பட்டார். இவர் கைது செய்யப்பட்ட போது இவரது படம் அமெரிக்க திரைப்பட விழாவில் காண்பிக்கப்பட்டது. அத்துடன் இவருக்குFreedom of Expression Award விருதும் வழங்கப்பட்டது. இந்த கைதுபற்றி அமெரிக்கப் பத்திரிகைகள் மெளனம் காத்தன.
The Circle
இப்படம் ஈரானில் தடை செய்யப்பட்டது. இவரது படங்கள் யதார்த்தத்தைச் சித்தரிக்கின்றன. ஒவ்வொரு சமூக நம்பிக்கைகளையும், ஒழுக்காறு களையும் விமர்சிக்கின்றன. பெண்கள் பிறந்த கணத்தில் எழுப்பும் குரலில் இருந்து இறக்கும் வரையில் அவர்கள் சந்திக்கும் சமூக ஒடுக்குமுறைகளை விமர்சிக்கின்றன.
g6)J5660)6ou Lilã6i Café Transit, The Mirror. The White Baloon, Off Side.
Sentenced to Marriage
இதுஓர் இஸ்ரேலிய திரைப்படம். ஆனாலும் பெண்கள் ஒடுக்குமுறைபற்றிய ஓர் குறிப்பிடத்தக்க Lil-lb.
மூன்று பெண்கள் விவாகரத்துக்காகப் போரா டுவதை பதிவாக்கியுள்ள விவரணப்படம். ஆண்களின் அனுமதி இருக்கும்போது மட்டுமே விவாகரத்து வழங்கப்படுகின்றது.
இயக்குநரின் ஓர் முக்கிய குறிப்பு: பெண்கள் மூன்று 660) d5 6. வாங்கப்படுகின்றார்கள்.
இதழ் 27

1.
(g farfurt
1. பணம்
2. புலன்
3. உடலுறவு. இரு வழிகளில் தன்னைத்தான் கண்டடைகிறாள் 1. விவாகரத்து
2.கணவனின் இறப்பு.
The Ladies Room
இது பெண்களின் கழிவறையைப் பற்றிய பதிவை முன் வைத்துள்ளது. இங்கு வந்து போகும் பாத்திரங் களின் வாழ்வியல் போன்றனவற்றை அக, புற சமூக கண்ணோட்டத்தில் முன்வைத்துள்ளது. இந்த கழிவறையிலேயே வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள கழிவறை மேற்பார்வையாளர். கொமெய்னியை ஆதரிக்கும் கிறிஸ்தவ கைச்சாத்திர நிபுணி தனது முஸ்லிம் மருமகளை வெறுக்கிறாள். காரணம் அவள் முஸ்லீம் மதத்தைப் பின்பற்றவில்லை என்பதே. முன்னாள் கணவனின் குழந்தையுடனும், மற்றொரு கைக்குழந்தையுடனும், புதிய கணவருடனும் தனது குடும்பம், கணவன் என அருகில் உள்ள பூங்காவில் வாழ்ந்து வருகின்றாள். இவர்கள் அனைவரும் சந்திக்கும் இடம் இந்தக் கழிவறை.
The Iranian Journey
கிழக்கில் இருந்து மேற்கு நோக்கிச் செல்லும் பேரூந்துதில் ஒட்டியாக வேலை பார்க்கும் பெண் சந்திக்கும், வேலை ரீதியான பிரச்சினைகள், பயணிகள் அவரைப்பார்க்கும் பழகும் விதம், அவரது குடும்பமும், சமூகமும் அவரை நோக்கி எழுப்பும் எதிர்ப்புக்கள் என்பவற்றை இப்படம் பதிவாக்கியுள்ளது. இவரது கணவரும் ஓர் பேரூந்து ஒட்டியே. இவரது பெண்கள் இவரது சாதனையை பார்த்து பிரமித்தபொழுதும், சமூகமும், குடும்பமும் இவருக்கு எதிராக உள்ளது. இவரது பணத்தை இக் குடும்பம் எதிர்பார்க்கின்றது. ஆனால் ஆண்கள் எழுதிய சட்டங்களை பெண்கள் பின்பற்ற வேண்டும் என்பதுநியதி.
டாரியுஷ் மெஹற்ருஜியின் படங்கள்
Leila s - லைலா என்ற பெண், கருத்தரிக்கவில்லை என் காரணத்தினால் மாமியாரினால் நிராகரிக்கப் படுகின்றாள். கணவனும், மனைவியும் பல்கலைக் கழகத்தில் படித்தவர்கள். சகல வசதிகளுடனும் வாழ்கின்றனர். கணவனுக்கு குழந்தை வேண்டும் என்ற கட்டாயம் எதுவுமில்லை. அவன் மனைவியை மிகவும் நேசிக்கின்றான். மாமியாரும்,நண்பர்களும் வற்புறுத்தி கணவனுக்கு இரண்டாவது திருமணம் செய்து கொடுக் கின்றனர். இப் படம் நவீன யுகத்தில் பெண்களுக்கு ஏற்படும் கொடுமைகளை பிரதிபலிக்கின்றது. இக் கருத்தை மையமாகக் கொண்டு சில தமிழ்ப்படங்களும் வெளிவந்துள்ளன. ஆனால் இப் படம் சமூகம் மீதான விமர்சனத்தை சிறப்பாக வெளிப்படுத்துகின்றது. பெண்களுக்கு எதிரான செயற்பாடுகளுக்கு பல சமயங்களில் பெண்களே காவிகளாக உள்ளனர்.
உயிர்நிழல் 0 ஒக்டோபர் - டிசம்பர் 2007

Page 92
சினிமா )
Divorce Iranian Style
இது ஈரானில் பெண்கள் அதிகமாக விவாகரத்து கேட்பதையும், அதற்கான காரணங்களையும் அலசு கின்றது. 16 வயது பெண், 38 வயது கணவன்தன்னைக் கொடுமைப்படுத்தினார் எனக் கூறி விவாகரத்துக் கேட்கின்றார். மற்றொரு தாய் தனது குழந்தைகளை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கோரி நிற்கின்றாள்.
The Bride
இதில் மணமகன் ஓர் கிராமவாசியை காரினால் அடித்துக் கொன்றுவிட்டுத்தப்பிவிடுகின்றான். இதை அறிந்த மணமகள் திருமணத்தை ரத்துச் செய்து விடுகின்றாள். இது போன்ற ஆண்களது அரக்கத் தனங்களுக்கு எதிரான படங்கள் பெண் படைப்பாளி களால் பதிவாக்கப்படுகின்றன.
Cafe Setareh
இதில் மூன்று பெண்களது வாழ்வு பதியப் பட்டுள்ளது. ஒரு உணவகத்தை நடத்தும் பெண்ணின் கணவன் வேலையற்றவன். இவனை அவள் தனக்கு உதவி செய்ய வற்புறுத்துவதுடன், கால்,கைகளை பிடித்து விடுமாறும் நிர்ப்பந்திக்கின்றாள். மற்றொரு இளம் பெண் துபாயில் தனது காதலனுடன் மத்தியதர வர்க்க வாழ்க்கை வாழ விரும்புகின்றாள். ஆனால் காதலன் ஓர் கார்மெக்கானிக் அவன்திருமணத்திற்கே பணமற்றுள்ளான். மற்றுமொரு நடுத்தர வயதுப் பெண், இளம் வாலிபனை விரும்புகின்றாள்.
இவர்களது வாழ்வை கவித்துவமாக படைத் துள்ளார். இப்படத்திலும் முஸ்லிம் கலாச்சாரக் கூறுகள் விமர்சிக்கப்படுகின்றன. குடும்பம் என்பதன் பிரதான கூறு தாயும் பிள்ளையுமே. இதன்நிர்வாகக் கூறே ஆண் என்பன போன்ற கருத்துக்கள் நேரடியாகவே கூறப் படுகின்றன.
窦责褒素
ஈரானிய நியூவேவ் பெண்ணிய திரைப்படங்கள் விவாகரத்துமறுக்கப்படுவதற்கு எதிராகவும், பெண்கள் மீதான வன்முறைகளுக்கு எதிராகவும் தொடர்ச்சி யாகக் குரல் கொடுக்கின்றன. உதாரணங்களாக Red (Fereydoun Jeyrani, 2000), Tootia (2000, Iraj Ghaderi). In Deep Breath 6igib Lig56b 6i'60L விட்டு வெளியேறும் இளம் பெண் இரு இளைஞர்களுடன் 6)Typ65sTaf5 #51TL" 'Lu'(B6it6.Tg5. I’m Taraneh, 15 and Khakestari என்ற படத்தில் இளம் பெண்கள் காதலற்ற திருமணத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றார்கள்.
மரியாம் கெஷவார்ஸின் படங்கள்
இவர் அமெரிக்க வாழ் ஈரானிய பெண் இயக்குனர்.
The Colour of Love
இவ்விவரணத்திரைப்படத்தில், இன்றைய ஈரானில் பெண்கள் பாலியல் சுதந்திரத்தை வரவேற்கின்றார்கள். கள்ளச் சந்தையூடாக வரும் அமெரிக்க சற்றலைட் தொலைக்காட்சிநிகழ்ச்சிகள் இவர்களது கருத்தியல் தளத்தில் மாற்றங்களைக் கொண்டுவருகின்றன. பெண்
உயிர்நிழல் 0 ஒக்டோபர் - டிசம்பர் 2007

92
களில் பலர் விவாகரத்தை விரும்புகின்றார்கள். இஸ்லா மிய சட்டங்களையும் மீறி பல பெண்கள் செயற்படு கின்றார்கள். இன்றைய பெண்களின் சிந்தனை மாற் றங்கள் அமெரிக்கமயமாதலினால்தான் நிகழ்ந் துள்ளது. இது செக்ஸ் சுதந்திரத்தை மட்டும்தான் வளர்க்கின்றது. மாறாக உண்மையான பெண்ணிய சுதந்திரத்துக்கு எதிராகச் செயற்படுகின்றது என்பதை இயக்குநர் வெளிப்படுத்தியுள்ளார்.
I இப்படைப்புக்களின் பொதுத் தன்மைகள்
1. பெண்மைக்கும் தாய்மைக்கும் இடையிலான வேறுபாடுகளை, பாதிப்புக்களை வெளிப்படுத்தி யுள்ளன.
2. சொத்து ஆண்களுக்கே (பிள்ளைகள் உட்பட) உரியது.
3. சமூகம், சட்டம், குடும்பம் இவையனைத்தும் ஆண்களின் தலைமையின் கீழ் தான் செயற்படு கின்றன. இங்கு பெண்கள் அடிமைகளே.
4. சமூக ஒழுக்கங்கள் பெண்களுக்கு மாத்திரமே யுரியவை.
5. விவாகரத்தின்போதுகூட ஆண்களுக்கு சாதகமான தீர்ப்புகளையே வழங்குகின்றன.
6. பெண்கள் தங்களது சமூக வாழ்வியலிலும், தொழில்சார் வேலைத்தளங்களிலும் செயற்படும் பொழுது, அவர்களது செயற்பாடுகளையும், சிந்தனை களையும் தீர்மானிப்பவர்களாக ஆண்களே உள்ளனர். ஈரானில் நடைபெற்ற சமூக மாற்றம் என்பது பெண்க ளுக்கு எதிரானதே. இஸ்லாமிய சட்டம் கி. பி. 700ம் ஆண்டிலேயே பெண்களுக்கு வாக்குரிமை, கருவைக் கலைக்கும் (4 மாதங்களுக்குட்பட்ட) உரிமை போன்றனவற்றை வழங்கியிருந்தது. தலிபானும், முஸ்லிம் மதவாதிகளும் பெண்கள் பாடசாலைக்குச் செல்வதைக்கூட தடை செய்துள்ளார்கள்.
இதழ் 27

Page 93
7. பாத்திரங்களுக்கிடையிலான அசமத்துவத் தினுாடாக பெண்கள் மீதான அடக்குமுறையை வெளிப்படுத்துகின்றனர்.
8. பெண்கள் புத்திஜீவிகளாகவும், படித்தவர் களாகவும், செயற்திறன் மிக்கவர்களாகவும் காட்டப்படுகின்றனர்.
9. இப்படைப்பாளிகள் சமூகப் போராளியாகவும் செயற்படுகின்றனர். இவர்களது படங்களில் வரும் பெண் பாத்திரங்கள் ஆண்களுக்கு எதிரான அடக்கு முறைக்கு தம்மாலான எதிர்ப்பை வெளிப்படுத்தி யுள்ளன.
10. ஆண் பாத்திரங்களில் குற்ற உணர்வற்ற, ஒருவித பெருமிதம் கொண்ட தன்மை காணப்படு கின்றது. இது ஒரு மனநோய் என்பது இவர்களது வாதம். 11. பெண்களுக்கு கல்வி, பொருளாதார மேம்பாடு என்பன அவசியம் என்பதனை வலியுறுத்துகின்றனர்.
12. குழந்தைகள், குறிப்பாக பெண்குழந்தைகளின் கல்வியில் பெரிதும் அக்கறை காட்டுகின்றனர்.
V
அண்மைக் காலங்களில் ஹொலிவூட் படங்களின் தாக்கத்தாலும், கறுப்புச் சந்தை சற்றலைட் தொலைக் காட்சியாலும் சில புதியபடங்கள் ஹொலிவூட் படங்கள் பெண்களை சித்தரிக்கும் பாணியில் வெளிவருகின்றன. Lófab g960ör 6ØDuDuĵ6ù (0966f6fög5 Behrouz Afkhami’s Shokaran (Hemlock) 616örf) LI_ö 1980æ6lfsó வெளிவந்த ஹொலிவூட் படமான FatalAttraction என்ற படத்தைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது. இப் படத்தில் சிமா என்ற பெண் பாத்திரம், ஓர் தொடர் சிகரட் புகைப்பாளராகவும், போதை மருந்து உட்கொள்பவ ராகவும், ஆண்களை மயக்குபவராகவும் காட்டப் பட்டுள்ளது. இப்படத்திற்கு எதிராக அரசாங்கம் எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை. மாறாக இப்பாத்திரம் ஓர் தாதி என்பதனால்தாதிகள் சங்கம்மாத்திரம்தங்களது தொழில் தார்மீகத்துக்கு எதிரானது என எதிர்ப்புத் தெரிவித்தார்கள்.
V ஈரானிய பெண் இயக்குநர்கள் உலகின் மற்றைய பெண் இயக்குநர்களை விட வித்தியாசமானவர்கள். ஈரானிய படங்களில் காதல், அன்பு போன்ற உணர்ச்சி களை வெளிப்படையாக காட்டமுடியாது. இஸ்லாமிய
இதழ் 27
 

(K Parfinst
கோட்பாட்டைப் பின்பற்றும் இந்த படைப்பாளிகள், மதத்தின் பெயரால் கட்டப்பட்ட கலாச்சாரத்தின்மீதான விமர்சனத்தையே முன்வைக்கின்றார்கள். யதார்த்தக் காட்சிகள் மூலம், சட்டத்தையும், சமூகத்தையும் விமர்சிக்கின்றார்கள். இந்த யதார்த்தக் காட்சிகள் பெண்கள் மத்தியில் சுதந்திர உணர்வைத் துாண்டும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த உணர்வானது ஓர் குற்ற உணர்வற்று அமையவேண்டும் என்பதில் கவனங்கொண்டவர்களாகவும் காணப்படுகின்றார்கள். மரபுசினிமா முறைகளை உடைத்தெறிந்துவிட்டு, புதிய வடிவமொன்றுக்குள் செல்லும் இவர்கள், மரபு அறிவுஜீவிகள், மரபு அரசியல்-மதவாதிகள் மீது குற்ற உணர்வைசுமக்கவைக்கின்றார்கள். மனித, கலாச்சார உறவுகளுக்கான சமூக நிர்ணய காரணங்களை விசாரணைக்குட்படுத்துகின்றனர். இதுவே இவர்களது மிகச்சிறந்ததன்மையாகவும் காணப்படுகின்றது. ஆண் -பெண் எதிர்முரண்நிலைகளின்தன்மைகளை ஆய்வு செய்வதுடன், ஆண்களின் அசைக்க முடியாத நம்பிக் கைகளையும் உடைத்தெறிகின்றார்கள். பெண்கள்மீது திணிக்கப்பட்டுள்ள கலாச்சார குற்றஉணர்வு, சிதைக் கப்பட்டுள்ளதைரியம் என்பவற்றின் காரணகர்த்தாவான ஆண்மீதான விமர்சனங்களை வெளிப்படுத்துகின்றனர். பெண் பாத்திரங்களை அனுதாப நோக்குடன் படைக் காமல், அதிகாரப் பகிர்வுக்கு கோரிக்கை விடுக்கின் றார்கள். ஆண்களின் அதிகார மையத்தை தகர்ப் பதற்கும் சமூக நிறுவனங்களின், அரசின் பிற்போக்குத் தன்மையை உடைப்பதற்கும் பெண்களை தயார்ப் படுத்துகின்றார்கள். தங்களது எல்லைக்குள் நின்று தங்களது எதிர்ப்புக்களை காட்டுகின்றார்கள். இவர்களது படங்கள் எவையும் பெண்களை மோசமாக சித்தரிக்கவில்லை மாறாக அவர்களது துணிச்சல் களையும், இயங்கு திறனையும், எதிர்ப்புக்களையும் பதிவு செய்துள்ளன. இவர்கள் தங்களை பெண்ணிய வாதி இயக்குநர்களாக பிரகடனப்படுத்தவில்லை. மாறாக சமூக அக்கறை கொண்ட இயக்குநர்கள், ஆனால் பாலால் பெண், என்கிறார்கள். இவர்கள் அளவிற்கு வேறு எந்த இயக்குநர்களும் செல்ல வில்லை. இவ்வகையில் இந்திய வம்சாவளி பெண் இயக்குநர்களில் அபர்ணா சென் ஓரளவிற்குக் குறிப்பிடத்தக்கவர். இவர்கள் இயங்கும் தளம் ஓர் சீரிய பெண்விடுதலை குறித்த அக்கறையுடன் இயங்குவதை இவர்களது படைப்புக்கள் வெளிப்படுத்துகின்றன.
93 உயிர்நிழல் 0 ஒக்டோபர் - டிசம்பர் 2007

Page 94
உயர் குடிப் பிறந்தோர் வாழ்வில் உதிர்த்திடும் மொழியெல்லாம் உலகியல் வழக்காய் உலவிடக் கண்டு உவகைபற்ற தமிழ் இலக்கியத் தளத்தின்ை, இடம்மாற்றி இடர்ப்படும் மக்களின் தடயங்களையும் தணிக்கையின்றி வெளிக்கொ: களம்திருந்து கச்சிதமாய் வடிவமைத்த மக்கள் இலக்கியத்தின் மகத்தான விமர்சகன் கைலாசபதியென்று கைகோர்த்த நிற்போம்.
யெளவனக் காரிகை கடைவிழி வீச்சும் இடை தொடை வனப்பும் மங்கிய ஒளியில் மறுகிடும் முயக்கும் காவிய நயப்பாய்க் கடைவாய் ஒழுகிட சுந்தன் புராணத்திலும் கம்பன் ரசத்திலும் மாந்தி மாந்தி மயக்குறும் மாயம் களைந்து, பண்ணை மக்களை நேசிக்கும் பாரதி போன்றோர் பாவின் பவித்தரமும் சங்கச் செய்யுளின் சங்கதியும் இளங்கோவும் வள்ளுவனும் இன்னும் மேலைத் தேயத்து மேன்றையுறு இலக்கியமும் கீழைக் காற்றிலும் தவழ்ந்திட வகைசெய்த மக்கள் கவிஞர் முனைப்புற = திண்ணிய விமர்சன வீச்சினை விதைத்தோன்
கைலாசபதியன்ற கைகோர்த்து நிற்போம்.
இயங்கியல் பொருள் முதற் பார்வையில் சமூக மாற்ற நெறிமுறையினை உலக வரலாற்றின் உன்னத கட்டங்களை கடந்த கால நகர்வுகளின் போக்கறிந்து தொடரும் வரலாற்று அசைவினில் நின்ற தனிமனித சரிதைப் புனைவுகள் வரலாறல்ல, சமூக உற்பத்தியின் நகர்வுதான் சரித்திரமாய் விரிகிறதென்ற விளப்பமுடன் தமிழ் இலக்கியமும் உலக இலக்கியமும் வெளிக் கொணரும் வெளிச்சங்களைத் தேடி ஆய்வுக் கட்டுரைகளும் அறிவார்ந்த உரைய மூச்சிருக்கும் வரை முழுநாளும் செய்தோன் - கைலாசபதியென்று கைகோர்த்து நிற்போம்.
உயிர்நிழல்) ஒக்டோபர் டிசம்பர் 2007
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ககோர்த்து நிற்போம்
- இதயராசன் :
['୩']
ாடல்களும்
gi

Page 95
கைலாசபதியென்று ை
பாமரர் பாட்டினைப் பதிவுசெய்திட ஈழத்து-இலக்கியப் புலத்தினில் அது இழிசனர் இலக்கியமென முத்திரை குத்தினர் பழும்பண்டிதர் குழாமொன்ற இகழ்ச்சியுடன், முனைப்புற்ற பஞ்சப் பராரிகள் போராட்டம் நெஞ்சை உலுக்கிடும் நெடுஞ்சாவிலும் தொடர்ந்த தஞ்சிபாமக்கள் இலக்கியத்தைத் துணிவுடன் ே தினகரனாய் நின்றார் திசையழிந்தது திருக்கட்ட் விசைபெற்ற பெருங்கட்ட்டம் விழிப்புடன் துளிர்த் உடமையும் உரிமையும் இழந்த உழைக்கும் மக்களிடம் உண்மையைக் கண்டார் மடமையினைக் கொழுத்தி மதியினை உயர்த்தி மகிழ்வுடன் வாழ்ந்து மானுடம் துளிர்த்திட சீருடன் உழைத்த சிந்தனையாளன் -எங்கள் கைலாசபதியென்ற கைகோர்த்து நிற்போம்.
(பேராசிரியர் கைலாசபதியின் 25 ஆவது நிை
 
 
 

(கவிதை
கோர்த்து நிற்போம்
- இதயராசன்
னவு தினத்தை முன்னிட்டு 2007.12.06) :
உயிர்நிழல் ஒக்டோபர்-டிசம்பர் 2007

Page 96
பத்தி>
னெக்குத் தெரிஞ்சு எங்கடை அப்பம்மா வீட்டு வேலை, வளவு வேலை எல்லாத்தையும் முடிச்சுப் போட்டு வாசற்படியிலை காலை நீட்டிக் கொண்டிருந்து ஆசுவாசமாகச் சுருட்டைப் பத்த வைச்சுப் புகையை விட்டபடி முற்றத்திலை துப்புவா. இடைக் கிடை வெத்திலையும் போடுவா. இப்ப எனக்கு ஏன் இருந்தாப்போலை அப்பம்மாவின் ரை நினைப்பு. கிட்டத்தட்ட 40 வருசங்களுக்கு முந்தினநினைவுகள். அதுக்கும் ஒரு காரணம் இருக்கு. எனக்கு என்ரை அப்பம்மா சுருட்டுப் பத்தேக்கை ‘இதென்ன ஒரு பொம்பிளை சுருட்டுப் பத்திறா' என்று நினைக்கத் தோணேல்லை. வீட்டில் இருந்த மற்றவர்கள் யாரும் இதை பொருட்படுத்திக் கொண்டதாகவும் ஞாபகங்கள் இல்லை. ஆனால் அப்பம்மா இந்தக் கலாச்சாரக் கட்டுமானங்களின் முழு விம்பமாகத்தான் இருந்தா. ஆனால் அவ என்ன வீட்டை விட்டு வெளியிலை வேலைக்குப் போகேல்லை. அவவின்ரை உலகமே தன்ரை பிள்ளைகள், பேரப் பிள்ளையளின் ரை வீடுகள்தான். ஆனால் சுருட்டுப்பிடித்தா. இடைக்கிடை உடம்பு நோவென்று சாராயம், பின்னாளிலை பிரண்டி என்று இடைக்கிடை பாவிப்பா. ஆனால் இதே தொழிலாக இருப்பதில்லை.
இப்ப என்னென்றால் சிகரட் குடிப்பதும் வைன் குடிப்பதும் மேற்கத்தைய பெண்விடுதலைக் கோட் பாடுகளுக்கு எடுபட்டுப் போனவர்களின் வெளிப்பாடு என்னும் கோட்பாட்டு உருவாக்கத்தை முன்வைக் கிறார்கள். இது எங்கள் கலாச்சார விழுமியங்களுக்கு ஒத்திசைவானதல்ல என்று தைரியமாகச் சொல்ல முடியாது மென்று விழுங்குகிறார்கள். (ஏனென்றால் அப்படிச் சொல்வதென்பது 'தமிழ்க் கலாச்சாரம் எனப்படும் வேறு விடயங்களில் அவர்களின் எதிர்ப்பை மலினப்படுத்துவதாக அமைந்து விடும்) நீலப்படங் களைத் தேடிப் பார்ப்பவர்கள் பாலியல் பெண் தொழி லாளர்களின் அவலத்தைக் காட்டுவதற்கான நிர்வாணங்களைக் காட்டும்போது "ஐயோ இதென்ன! இப்ப எங்களுக்கிருக்கிற பிரச்சினைக்குள்ளை இதையேன் இப்ப பறைவான்?’ என்கிறார்கள். பாலியல் தொழிலாளர்கள் பற்றிய அவலங்களையும், அவர்கள் எப்படி இந்த ஆணாதிக்க சமூகத்தின் வக்கிர
உயிர்நிழல் 0 ஒக்டோபர் - டிசம்பர் 2007
 

66.5
உணர்வுகளிற்குப் பலியாகிப் போகிறார்கள் என்பதையும் பேச முற்படும்போது இவர்களிற் கென்னவோ கொஞ்சம் அருவருப்பாக இருக்கின்றது. நிர்வாணங்களை இருட்டோடிருட்டாகத் தடவிவிட்டு வெளிச்சத்தைப் போடும்போது ஆடைகளுடன் இருப்பவர்களின் மனோநிலை இப்படித்தான் இருக்க முடியும்.இந்த மனோநிலைகள் ஒன்றும் அதிர்ச்சியைத் தரவில்லையாயினும் எரிச்சலைத் தருகின்றன. இவை இப்படியேதான் இருக்கும் இவர்கள் திருந்தப் போவதில்லை என்றுவிட்டு மற்றவர்கள் பேசாதிருக்க முடியாது. 'மற்றது பற்றியும் 'மற்றவை பற்றியும் அதாவது பெரும்பான்மை தவிர்த்தும் பேசியே ஆகவேண்டி சூழல்நிர்ப்பந்திக்கின்றது.
திரும்பியும் என்ரை அப்பம்மாவிடம் வருகிறேன். சில காலங்களிற்கு முன்பு எடுத்த ஒரு கருத்துக் கணிப்பும் ஞாபகம் வருகின்றது. 'தமிழ்க் கலாச்சாரச் சூழலில் பெண்கள் சிகரட் புகைப்பதும் வைன் அருந்துவதும் உடலாரோக்கியத்துக்குக் கெடுதியா னதா? அல்லது கலாச்சாரத்துக்கான சிதைவா? என்னும் வினாக்களுக்கு விடை பகிர்ந்தபோது, 90 வீதமானவர்கள் கலாச்சாரத்துக்குக் கெடுதியானது என்றும் 8வீதமானவர்கள் உடல்நலத்திற்குக் கெடுதல் என்றும் 1.8வீதமானவர்கள் பொதுஇடத்தில் இவற்றைச் செய்தல் சரியானதல்ல என்றும் 0.2வீதமானவர்கள் ஆம்பிளையளைப்போலை பொம்பிளையஸ் இருக்க வேணும் எண்று நினைப்பது சரியானதல்ல என்றும் கருத்துத் தெரிவித்தனர்.
சிகரட் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும். வைன் குடிப்பது உடலாரோக்கியத்திற்கு உகந்ததல்ல என்பதைக் கூட ஒருபுறம் தள்ளி வைத்துவிட்டு, ஒரு பெண் கருத்துச்சொல்லமுடியாதென்கிறார்கள். ஒருவர் தனது உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும்போது அவருடைய கருத்துகள் எப்படி இருக்கின்றன என்பதை விடுத்து நீங்கள் எப்படியான நடை உடை பாவனை களைக் (அவர்கள் மொழியில் எப்படியான நடத்தை) கொண்டிருக்கிறீர்கள் என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள். இப்படியானவர்கள் சமூகத்தில் நிலவும் ஆணாதிக்கத்திற்கு அடிவருடிகளாக இருக்கிறார்கள் என்பதைத்தான் காட்டுகின்றது.
இதழ் 27

Page 97
இவர்களுடன் விதண்டாவாதம்தான் செய்ய முடியுமே தவிர பெண் விடுதலை பற்றிப் பேசமுடியாது. என்ன சமாச்சாரம் என்றால் சிகரட்டும் வைனும் பெண்ணியம் சார்ந்த விடயம் என்று இவர்கள் வரைவிலக் கணங்களை உருவாக்க முயற்சிக்கிறார்கள். இவர்களது கோட்பாட்டுக்கு ஒரு சிரிப்பு மட்டுமே பதிலாகத் தரமுடியும். அதுகூட மெத்தல். ஆனால் ஒன்றைக் கவனிக்க வேண்டும். இவர்கள் இவைகள் எதையும் அப்பாவித்தனமாகச் செய்யவில்லை என்பதை,
இதெல்லாம் ஒரு விஷயம் என்று போய் ட்யறிக் குறிப்பிலை எழுதி வைத்திருக்கிறாவோ என்றும் கேட்கத் தோன்றும். இவைகளெல்லாம் சில்லறை விடயங்கள் போலத் தோன்றினாலும் 'கலாச்சாரம்' என்ற போர்வையில் 'பெண்' என்பதற்காக மட்டுமே திணிக்கப்பட்டுள்ள ஒழுங்குமுறைகளை உதறித் தள்ளுபவர்களை கால் தடம் போட்டு விழுத்த நினைக்கும் ஆபத்தான பேர் வழிகள். சமூகத்திற்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்றும் இவர்கள் அடிக்கடி வலியுறுத்துவார்கள். முன்மாதிரி என்றால், ஆணாதிக்கக் கலாச்சாரக் கட்டுமானத்திற்குள் இருக்கும் பெரும்பான்மையினரின் எதிர்ச்சொல்லுக்கு ஆளாகாமல் அதற்குட்பட்டு நடக்கவேண்டும். இது எவ்வளவுமுரண்நகை,
'உயிர்நிழல்' ஒக்டோபர் - டிசம்பர் 2006. மீண்டும் காலம் தாழ்த்தி வெளியாகியுள்ளது பிரான்ஸிலிருந்து வரும் ‘உயிர்நிழல்' சஞ்சிகை.
அம்பையின் 'கைலாசம்' என்ற சிறுகதை மிகவும் வித்தியாசமான படைப்பு. தமிழ் நாட் டிலோ இலங்கையிலோ ஏன் அவுஸ்திரேலியா வில் வெளியாகும் 'உதயம்' பத்திரிகையிலோ பிரசுரமாகக் கூடிய சிறுகதையல்ல 'கைலாசம்'. இதுதான் பின்நவீனத்துவம் என்றோ இலக்கிய இஸங்களுக்குள் சிறைப்படுத்தக்கூடிய கதை யென்றோ அம்பையின் 'கைலாசத்தை விமர் சிக்காமல் பாலியல் சம்பந்தமான கதையை இப்படியும் எழுதலாம் என்ற துணிவை படைப் பாளிகள் பெற்றுக்கொள்ளலாம்.
'அரேபியர்கள் இரண்டுபட்டால் அமெரிக்கா வுக்கு கொண்டாட்டம்' என்ற கலையரசனின் கட்டுரை ஈராக், பாலஸ்தீனம், லெபனான் முத
9
இதழ் 27
 
 

K Luif
மேலும், "பெண் உடல்மொழி பற்றிப் பேசுகின் றளவுக்கு எங்கள் பெண்கள் இன்று முன்னேற்றம் கண்டுள்ளார்கள் என்று வெளிப்படையாகப் பேசும் ஆண்களும்கூட இந்தப் பெரும்பான்மைக் கலாச்சாரம் 'பெண்மைக்கு வகுத்துள்ள எல்லைக்குள் நின்றுதான் இந்தப் பெண்கள் பேசுகிறார்களா என்பதனைக் கண்காணித்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.
எதை எப்படிப் பார்த்தாலும் ஒரு சமூகத்தின் கலாச்சாரம் என்பது யாரால் உருவாக்கப்பட்டது? ஏன் உருவாக்கப்பட்டது! என்னும் கேள்விகளைக் கேட்டுப் பார்த்தால் இலகுவாகத் தெரிந்து போகின்ற விடயம். எங்களுடைய கலாச்சாரத்திற்கு என்ன விடயங்கள் வலுச் சேர்க்கின்றன, என்ன விடயங்கள் சீர்கேடாக இருக்கின்றன என்று கருதுகின்றோம் என்று விலா வாரியாகப் பார்த்திர்கள் என்றால், 'பெண்ணுக்கான (மன்னிக்கவேணும், எது"பெண்மை' என்று ஆண்மையக் கலாச்சாரம் வடிவமைத்துள்ள “பெண்மைக்கான) பாதுகாவலர்கள் ஏதோ ஒரு வடிவத்தில் ஆண்கள் - தந்தை, தனயன், அண்ணன், தம்பி, மைத்துனன், கணவன், தோழன், நண்பன் - மற்றும் ஆண்மையக் கருத்தாக்கக் காவிகள் என்பதைக் காணலாம்.
இது ‘கலாச்சாரப் பாதுகாப்பு என்னும் பெயரில் பெண்ணை அடிமை செய்தல் அல்லது பெண்மீதான கண்காணிப்பைக் கொண்டிருத்தல் என்பதாகும்.
லான நாடுகளுக்குள் நீடிக்கும் அரசியல் நெருக் கடிகளை விவரிக்கின்றது. லெனின் மதிவானம் எழுதியுள்ள "மலையகத் தமிழ் இலக்கியமும் அதன் சித்தாந்த நிலைப்பாடுகளும்' என்ற கட்டுரை ஈழத் தமிழ் இலக்கியத்தில் மலையக இலக்கியத்தின் பங்களிப்பைச் சொல்கிறது.
மறைந்த படைப்பாளிகள், அரசியல் இயக்கத் தலைவர்கள் சிலரைப் பற்றிய குறிப்பு களும் 'உயிர்நிழலை கவனிப்புக்குள்ளாக்கு கின்றது. தேர்ந்த ரஸனை மிக்க வாசகர் களுக்கு உயிர்நிழலின் வருகை பயன்மிக்கது.
"உதயம்' பத்திரிகை -அவுஸ்திரேலியா ஜரலை 2007
உயிர்நிழல் 0 ஒக்டோபர் - டிசம்பர் 2007

Page 98
புகலிட நிகழ்வுகள் >
இடம்பெயர்ந்த இலங்கையர்க்க அமைப்பின் வருடாந்த ம
05. 10, 2007 - 07 10. 2007 வரை மூன்று நாட்கள் பேட்பொல் என்ற ஜேர்மனியின் சிறு கிராமமொன்றில் அமைந்த புரட்டஸ்தாந்து அகாடமியில்'இடம்பெயர்ந்த இலங்கையர்க்கான சர்வதேச வலைப்பின்னல் (NSD)அமைப்பின் வருடாந்த மகாநாடு நடை பெற்றது. ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி, டென்மார்க், சுவிற்சர்லாந்து, ஒல்லாந்து மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் இருந்து பேராளர்களும் பங்காளர்களும் கலந்து கொண்டனர். இலங் கையில் இருந்து மட்டும் 4 பேச்சாளர்களும் மற்றும் இங்கிலாந்து, ஜேர்மனி போன்ற இடங்களில் இருந்தும் விசேட பேச்சாளர்கள் கலந்து கொண் டனர். இந்த மாநாட்டில் பங்கு கொண்டவர்களில் அநேகமானோர் இலங்கையர்களாயினும் கணிச மான அளவு ஜேர்மனியர்களும், இலங்கையின் விடயங்களில் அக்கறை கொண்ட அல்லது நீண்ட காலமாக இலங்கை விடயத்தில் உழைத்து வருகின்ற செயற்பாட்டாளர்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டதைக் காண முடிந்தது. மாநாடு மூன்று நாட்கள் நடைபெற்றபோதும் சனிக் கிழமையே அதிகம்பேர் கலந்து கொண்டனர். கேட்போரின் வசதி கருதி ஆங்கில, சிங்கள மற்றும் தமிழ் மொழிகளில் உடனுக்குடனான மொழி பெயர்ப்பு வசதிகள் எற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இலங்கையில் இருந்து தெரு நாடகக் கலைஞர் பராக்கிரம திரியெல்ல எதிர் பார்க்கப்பட்டிருந்த போதிலும் அவரின் பிரதியீடாக திரைப்பட இயக்குநர் தர்மசிறீ பண்டாரநாயக்க அவர்கள் வந்திருந்தார்கள். அவ்வாறே மனித உரிமை மீறல்களைத் துணிச்சலுடன்முன்வைக்கும் சுனிலா அபயசேகரவிற்குப் பதிலாக சாந்தி சச்சிதானந்தன் அவர்களும் பேராசிரியர் சண்முக ரட்ணம் அவர்களிற்குப் பதிலாக யுவி தங்கராஜா அவர்களும் கலந்து கொண்டார்கள். இலண்டனில் இருந்து 'பிரெட் போர் த வேர்ல்ட்' அமைப்பைச் சேர்ந்த இங்கிறிட் ஒஸ்ரமான் அவர்கள் கலந்து கொண்டார்கள். புரட்டஸ்தாந்து அகாடமியைச் சேர்ந்த டாக்டர் புடின்ஸ்கி, திருமதி ஹெட்விக் ஹெல்ட், லெயோனி ரெட்மான், ரஞ்சித் ஆகியோர் இம்மாநாட்டின் உரைகளை வழிநடத்தினர்.
இம்மாநாட்டை ஆரம்பித்து வைத்த புடின்ஸ்கி அவர்களும், இம்மாநாட்டின் ஏற்பாட்டு அமைப்பா ளரானறுவழிகா களுபோவில அவர்களும், NSD பற்றி சிவராஜன் சிவசாமி அவர்களும் தொடக்கவுரை நிகழ்த்தினர்.
அதன் பின்னர் தர்மசிறி பண்டாரநாயக்கவின் 'துார்த்திகாவோ நாடக விவரணப் படம் திரை யிடப்பட்டது. இத் திரைப்படம் இலங்கையின் தென் பகுதியிலமைந்த கல்லுாரியொன்றின் மாணவர்களால் நடாத்தப்பட்ட ச்ெச்செனியப் போரட்டம் பற்றிய ஒரு
உயிர்நிழல் 0 ஒக்டோபர் - டிசம்பர் 2007
 

ான சர்வதேச வலைப்பின்னல்
காநாடு - ஒக்டோபர் 2007
ஹெட்விக் ஹெல்ட் - இங்கிறிட் ஒஸ்ரமான் - தோமஸ் சீபேற்
98 இதழ் 27

Page 99
சாந்தி சச்சிதானந்தன்
வண. நந்தன மணதுங்க
சுனந்த தேசப்பிரிய
சிவராஜன் சிவசாமி
இதழ் 27
நாடகப் பயிற்சிப் பட்டை போக்குக்கும் உண்மை நாடகமாக மட்டுமன்றி உள்ளெழுந்து உணர்த்து அதன் பின்னர் இடம்ெ கருத்துகள் பரிமாறப்பட் இலங்கையில் செயற்படும் வெளிச்சத்திற்கு வந்தன. சுதந்திர ஊடக அயை அரசியலில் கடந்த இ கொல்லப்பட்டதை எடுத் அச்சுறுத்தல்கள் பற்றித் நிலையத்தின் தலைவர் 6 குலைவுகளினால் எவ் ருக்கின்றதென்பதை பல் பயங்கரவாத ஒழிப்பு என் எவ்வாறு சர்வாதிகாரப்பே சான்று பகன்றது. 2006ம் என்றும் அதில் பெருமள சமர்ப்பித்தார்.
போர்க் காலப் பொரு மினிஸ்டர் கல்லுாரியைச் இன்றைய மனித உ முன்னெடுப்புகளும் அ சச்சிதானந்தன் அவர் இலங்கையில் இருந்து இட தளமாகக் கொண்டு செய இனப் பிரச்சினைக்குத் குறித்து ஆராய்ந்தனர்.
பீற்றர் ரொட்டாஹ் அ6 பகுதியின் இணைப்பாள ஒழிப்பும்' என்னும் தலைை
இறுதி நாள் நான்கு பங்காளர்கள் தங்கள் ஒருங்கிணைத்தனர். இடப் தொடர்புகளைப் பேணிக் சிவில் சமூக ஸ்தாபனங்க எப்படி இருக்க வேண்டும் எ
 
 
 
 
 

Kபுகவிட நிகழ்வுகள்
ற போன்றதில் ஆரம்பித்து ஒரு வகை மிகையதார்த்தப் க்கும் இடையில் களம் அமைத்த ஒரு உருக்கமான இலங்கையில் நிலவும் அரசியல் யதார்த்தத்தை ம் தன்மையதாகவும் காணப்பட்டது.
பெற்ற கலந்துரையாடலின்போது மிக ஆரோக்கியமான டன. கலைஞர்கள் மீதான அச்சுறுத்தல்கள், அவர்கள் வதற்கு முடியாதிருக்கின்ற பிரதான காரணிகள் என்பன
Dப்பைச் சேர்ந்த சுனந்த தேசப்பிரிய அவர்கள் இலங்கை ரு வருடங்களில் பதினொரு பத்திரிகையாளர்கள் துக் காட்டி ஊடகவியலாளர்கள் மீது தொடுக்கப்படும் தெளிவுபடுத்தினார். கண்டியில் இருக்கும் மனித உரிமை வண. நந்தன மணதுங்க அவர்கள் சட்டவொழுங்குச் சீர் வாறு இலங்கையில் சட்டம் செயற்பட முடியாதி )வேறு உதாரணங்களினுாடாக எடுத்துக் காட்டினார். ற போர்வையில் இலங்கை அரசும் அதன் ராஜாங்கமும் பாக்குடையதாக இருக்கின்றன என்பதற்கு அவரது உரை ஆண்டு சுமார் 4500 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள் ாவு தமிழர்கள் என்பதனையும் புள்ளி விபரங்களுடன்
நளாதாரத்தின் தன்மைகள் பற்றி இலண்டன் வெஸ்ட் சேர்ந்த யுவிதங்கராஜா அவர்கள் பேசினார்.
உரிமை மீறல்களுக்கு எதிரான சிவில் சமூகத்தின் வற்றின் தாக்கங்களும் எனும் தலைப்பில் சாந்தி களும், தோமஸ் சீபேற்றும் இங்கிறிட் ஒஸ்ரமானும் டம் பெயர்ந்தோரின் சமூக அமைப்புகளும் இலங்கையைத் பற்படும் அரசு சாரா நிறுவனங்களும் எவ்வாறு இலங்கை தீர்வு காண்பதற்கான பங்களிப்பை நல்கலாம் என்பது
வர்கள் ‘டியாக்கொனி அமைப்பின் பேரழிவு உதவி எனும் ர். அவர் 'இலங்கையின் புவியியல் மாற்றமும் வறுமை மையில் நீண்ட உரையொன்றை ஆற்றினார். செயற்பாட்டுக் குழுக்கள் அமைக்கப்பட்டு மாநாட்டின் அபிப்பிராயங்களையும் கருத்துக்களையும் இங்கு bபெயர் சமூக அமைப்புகளும் அரசு சாரா நிறுவனங்களும் கொள்ள வேண்டும் என்பதையும் இலங்கையில் இருக்கும் ளுக்கும் இடம்பெயர் சமூகத்திற்குமான தொடர்பாடல்கள் ன்பதுபற்றியுமான கருத்துகளைத் தொகுத்து வழங்கினர்.
சிவலோகநாதன் - பாஷண
99 உயிர்நிழல் 0 ஒக்டோபர் - டிசம்பர் 2007

Page 100
புகலிட நிகழ்வுகள் >
26வது பெண் பிரான்ஸ் - ஒ
26வது புகலிடப் பெண்கள் சந்திப்பு இம்முறை பிரான்சில் ஒக்டோபர் 13ம், 14ம் திகதிகளில் நடைபெற்றது. பல்வேறு நாடுகளிலும் இருந்து வந்த பெண்கள் கலந்து கொண்டனர்.
சுய அறிமுகத்துடன் முதல் நாள் நிகழ்வுகள் ஆரம்பமாகியது. பெண்கள் சந்திப்புத் தொடர்பற்றிய ஒரு மீளாய்வு ரஞ்சி(சுவிஸ்)யினால் செய்யப்பட்டது. பெண்கள் சந்திப்பு இப்போது 17 வருடங்களாக தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. 'பெண்கள் சந்திப்பு மலர்' எனும் தொகுப்பு இச் சந்திப்பின் மூலம் வெளியிடப்பட்டு வருகின்றது.
தேவா (ஜேர்மனி) 'குடும்ப வன்முறை பற்றிப் பேசினார். குடும்ப வன்முறையானது தாயகம், புலம் பெயர்சூழல், வேறு இனங்கள் என்று எந்த இடத்திலும் எந்த விதமான வேறுபாடும் இன்றி அவற்றிற்கேற்ற பரிமாணங்களில் எங்கும் விரவிக்கிடக்கின்றதென்றும் பல தகவல்களைக் கூறினார்.
'இசை பிழியப்பட்ட வீணை" (மலையகப் பெண்கள் கவிதைத் தொகுப்பு - ஊடறு வெளியீடு) நூலை ஆழி யாள் (அவுஸ்திரேலியா) அறிமுகம் செய்து வைத்தார். அதனைத் தொடர்ந்து அதன் தலைப்புபற்றிய விவாதம் நிகழ்ந்தது. இந்நூலை ஆழியாள் வெளியிட புதிய மாதவி(மும்பை) பெற்றுக் கொண்டார்.
‘உறவுச் சிக்கல்கள் என்ற தலைப்பின் கீழ் புதிய மாதவி உரை நிகழ்த்தினார். எத்தனையோ போராட் டங்களின் பின்பும் பெண்களின் மீதான வன்முறைகள் தொடந்து சகல தளங்களிலும் அதிகரித்துவரும் கால கட்டத்தில்தான் நாங்கள் இருக்கின்றோம். சீனாவில் திருமணத்தையும்பாலுறவையும் குழப்பிக் கொள்ளும் தன்மை அரிதாகிக் கொண்டு வருகின்றது என்றும் இம் மாதிரியான மனநிலைகள் ஆணாதிக்க சமூக மதிப்பீடு களைத் தகர்த்து வருகின்றது என்றும் பல விடயங் களை ஆய்வுபூர்வமாக எடுத்துச் சொன்னார்.
தொடர்ந்து ராஜேஸ் பாலா (இலண்டன்) 'புனிதம் எனும் போர்வையில் தற்கொலைதாரிகள் என்ற சிறு குறிப்பை வாசித்தார். தற்கொலைதாரிகளாக ஏழைப் பெண்கள் புலிகளால் பலியிடப்படுகிறார்கள் என்ற கருத்தை முன் வைத்தார். இதனைத் தொடர்ந்து பலமான விவாதம் நடைபெற்றது.
அடுத்து ஜெயா பத்மநாதன்(பிரான்ஸ்)'பெண்ணின் உடல் ரீதியான மாற்றம் ஏற்படுத்தும் விளைவுகள் பற்றிப் பேசும்போது, தமிழ்ப் பெண்களுக்கு உடல் ரீதியான மாற்றங்கள் பற்றிய அறிவையும் விழிப்பு ணர்ச்சியையும் ஏற்படுத்த வேண்டும் எனத் தனது கருத்துக்களைத் தெரிவித்தார்.
இரண்டாவது நாள் ஆரம்பமாகும் பொழுதில் 'சிவப்புக் கட்டு மரங்களும் வெள்ளைச் சிலந்திகளும் என்ற தலைப்பில் ஆழியாள் பேசினார். அவுஸ்திரேலி யக் கவிஞைகள் மூவர் பற்றியும் அவர்களின் பெண்
உயிர்நிழல் 0 ஒக்டோபர் - டிசம்பர் 2007

ர்கள் சந்திப்பு க்டோபர் 2007
OO
நிலைவாதம் படைப்புலகம், கவிதை போன்ற தளங் களில் எவ்வாறு பன்முகப்பட்ட தன்மைகளைக் கொண் டுள்ளது என்பது பற்றியும் குறிப்பிட்டு, குறித்த தலைப்புகளுக்குள் எம்மை அடக்கிக் கொள்ளாது வேறு தளங்களில் நாங்கள் வியாபித்தல் வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
தொடர்ந்து சாந்தி சச்சிதானந்தம் (இலங்கை) இலங்கையின் போர்ச்சூழலில் பெண்களுக்கான வேலைத்திட்டங்கள் என்னும் தலைப்பில் பேசினார். அங்கு களவேலையில் தாங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் அரசுசாரா நிறுவனங்கள் பெறும் நிதியை சில நிறுவனங்கள் முறையற்ற வழிகளில் பாவிப்பதையும் குறிப்பிட்டுக் காட்டிப்பேசினார்.
பின்னர் புதிய மாதவியின் படைப்புகளான நிழல் களைத் தேடி', 'ஹே. ராம் கவிதைத் தொகுப்புகள், மற்றும் 'சிறகசைக்கும் கிளிக் கூண்டுகள் கட்டுரைத் தொகுப்பு என்பனவற்றை விஜி (பிரான்ஸ்), ஷரீலா (பிரான்ஸ்) ஆகியோர் அறிமுகமும் விமர்சனமும் செய்தார்கள்.
ஊடறு வெளியீடாக வந்த 'மை' கவிதைத் தொகுப்பை தர்மினி (பிரான்ஸ்) அறிமுகம் செய்து வைத்தார்.
“பெண்ணியச் சிந்தனைகளும் தமிழ்ப் பெண்களின் விடுதலையும்' என்னும் தலைப்பில் பேசிய நிர்மலா (இலண்டன்) கலாச்சாரக் கட்டுமானங்கள் பெண்ணைப் பெண்ணாக உணர்தலை எவ்வளவு துாரம் தள்ளிப் போடுகின்றன என்றும் பெண்ணின் செயற்பாடுகளைத் தீர்மானிக்கும் சக்திகள் எவ்வாறான கருத்தாடல் களைக் கையாள்கின்றன என்பது பற்றிய விசாலமான நோக்கு தேவை என்றும் பல்வேறு நிலைப்பட்ட பாலநிலை கொண்டவர்கள் இன்று சமூகத்தில் அடையாளப்படுத்தப்பட்டு வருகின்ற காலகட்டத்தில் எங்களுடைய சிந்தனை முறைகளும் பல்வேறு தளங் களுக்கு வியாபிக்க வேண்டிய அவசியம் உள்ளது என்றும் குறிப்பிட்டுப்பேசினார்.
இறுதியாக "பெண்களும் சமாதானத் தீர்வுகளும் என்ற தலைப்பில் விஜி (பிரான்ஸ்) கட்டுரை வாசித்தார்.
அடுத்த பெண்கள் சந்திப்பு கனடாவில் 2008 ஜூலை மாத இறுதியில் நடைபெற உள்ளது. கனடாவில் சுமதி ரூபனால் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.
இதழ் 27

Page 101
முதலாவது பிரான்ஸ் - ஒ
பிரான்ஸ்-இலங்கைத் தலித் மேம்பாட்டு முன்னணி யினரின் முதலாவதுதலித் மாநாடு பாரிஸின் புறநகர்ப் பகுதியான சார்சலில் ஒக்டோபர் 20ம் 21ம் திகதிகளில் நடைபெற்றது.
பெரியார், அம்பேத்கார், கே. டானியல், எம்.சி.சுப்பிர மணியம்,என்.ரி.என்.நாகரட்ணம் ஆகியோரின் ஓவியங் கள், மற்றும் சாதியக் கறைகளைச் சுட்டும் வாசகங் களும் சுவர்களை வரைந்திருந்தன.
தலித் மேம்பாட்டு முன்னணியின் தலைவர் தேவதாசன் தலைமையில் சாதியப் போராட்டத் துக்காக மரணித்தவர்களிற்கான அஞ்சலியுடன் முதல் நாள் நிகழ்வுகள் ஆரம்பமாகியது. சாதிய ஒடுக்கு முறை வரலாற்றின் தொடர்ச்சி, அதன் பேணல் மற்றும் இதற்கெதிரான சிறுபான்மைத் தமிழர் மகாசபை, இடதுசாரிகளின் போராட்டம், பின்னர் தேசிய விடுத லைக்கான போராட்டத்துடன் எவ்வாறு அவை மழுங்க டிக்கப்பட்டன என்பன பற்றிய குறிப்புகளுடன், தொடர்ந்து போராட்ட சூழல் ஒயும்போது எப்படி சாதித் துவம் வெளியே வந்து தனது குரூரத்தைக் காட்டும் அதனாலேயே இதுபற்றிய விழிப்புணர்வு இப்போ திருந்தே தொடங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
இதைத் தொடர்ந்து'தீண்டாமை ஒடுக்குமுறையும் எதிர்ப்புப் போராட்டங்களும்' என்ற தலைப்பில் பரா, யோகரட்ணம் ஆகியோர் உரையாற்றினர். சாதியத்தின் தோற்றம் 2500 வருடங்களிற்கு முற்பட்டதாக இருக்க வேண்டும் என்றும் நிலப்பிரபுத்துவ அமைப்பு முறை யைக் காப்பாற்றுவதற்கு இது தேவையாக இருந்த தென்றும் குறிப்பிட்டார். யாழ் மையவாதம் என்பது சாதிய ஒடுக்குமுறையைக் கட்டிக்காக்கின்றதென்றும் இலங்கை முழுவதும் இது வியாபித்திருக்கின்ற தென்றும் கூறினார். ஐரோப்பியரின் வரவினால் மேட்டுக்குடியினர் கல்வித் தகைமைகள் பெறுவதில் ஏனைய சமூகத்தினரை அப்புறப்படுத்துவதில் அவதானமாக இருந்தனர். ஆறுமுகநாவலரின் பைபிள் மொழிபெயர்ப்பு, சைவமறுமலர்ச்சி போன்றவை சாதிப்
இதழ் 27
 

K Lichß
தலித் மாநாடு க்டோபர் 2007
பாகுபாட்டில் வகித்த பங்குகள் பற்றியும் குறிப்பிட்டார். இலங்கையில் வாலிய காங்கிரஸின் தோற்றம், யோவே போலின் போராட்ட முனைப்புகள், இதற்கான சேர் பொன் ராமநாதன் போன்றவர்களின் எதிர்ப்பு பற்றி எடுத்துரைத்தார். மேலும் பாடசாலைகளில் எவ்வாறு சாதி ஒடுக்குமுறை விரவியிருந்தது என்பதையும் இதற்காக எவ்வாறான போராட்ட முன்னெடுப்புகளை அமைந்திருந்தன என்பது பற்றியும் விரிவாக பேசினார். பின்னர் யோகரட்ணம் அவர்கள் பேசும்பொழுது, 1950களில் இருந்து இன்றுவரையான ஒடுக்குமுறை எப்படி இருக்கின்றதென்பதையும் அந்தந்தக் கால கட்டங்களில் எவ்வகையான முறையில் இவை நடை முறைப்படுத்தப்பட்டன என்றும் அவற்றை எதிர்த்த போராட்டங்கள் எவ்வாறு ஏற்படுத்தப்பட்டன, அவற் றின் விளைவுகள் எப்படி இருந்தன இன்றும் இது எவ்வகையில் தொடர்கின்றது என்பதுபற்றியும் மிகவும் விரிவாக எடுத்துக் காட்டுகளுடன் கூறினார். ஒக்ரோபர் 21, 1961 தலித்துகளின் போராட்டத்தில் மிகவும் முக்கி யமானநாளான சங்கானைப் போராட்டத்தைப் பற்றிக் கூறினார். ஆதிக்க சாதிகளில் இருந்தவர்களிலும் தீண் டாமை ஒடுக்குமுறைக்கு எதிராக குரல் கொடுத்தவர் களையும் ஒருதடவைநீனைவுபடுத்திக் கொண்டார்.
'தமிழ்த் தேசியமும் தலித்தியமும்' என்ற தலைப் பில் அருந்ததி பேச்சை ஆரம்பித்தபோது, தான் ஒரு தமிழனாக இருப்பதற்கு வெட்கப்படுவதாகக் கூறி, சாதி ஒழிந்துவிட்ட்து என்னும் அபாண்டமான பொய்யைக் கூறும் தமிழ்த் தேசியம் என்றார். புகலிடத்தில் பிள்ளை கள் திருமண வயதுக்கு வரும்போது சாதி மேல் எழுகின்றதென்றும் ஆதிக்க சக்தியானது ஒடுக்கு முறைக்குள்ளானவர்களின் கலாச்சார அடையா ளங்களை இழிவாக்குகிறது அல்லது அவற்றை அழிப்பதற்கு முனைகிறது என்றும் குறிப்பிட்டார். இதற்கு உதாரணமாக யாழ் நூல்நிலையம் செல்லன் கந்தையாவினால் திறக்கப்படுவதைத் தடுத்ததை சுட்டிக் காட்டினார். மேலும் தலித் மக்களின் கொலை,
01. உயிர்நிழல் 0 ஒக்டோபர் - டிசம்பர் 2007

Page 102
μήή Σ
முஸ்லிம் மக்களின் வெளியேற்றம் என்பன கறைகள் என்றும் இவற்றைக் களைவதற்கு போராட்ட எழுச்சி அவசியம் என்றும் குறிப்பிட்டார். இன்னும் தமிழ்க் கலாச்சாரம் இந்துக் கலாச்சாரம் என்று மட்டுப்படுத்தப் பட்டுள்ளதா? தலித்துகளின் பாரம்பரியக் கலைகள் எல்லாம் அழிக்கப்பட்டு ஆதிக்க சாதிகளின் கலைகள் தான் இன்று முன்னுக்கு வருகின்றன. தேசியக் கலைஞர்கள் என்ற வரிசைக்குள் இன்று யார் யாரோ வருகிறார்கள். எம்மைப் பொறுத்தவரையில் எமது தேசியக் கலைஞன் வி. வைரமுத்துதான் என்றார்.
அடுத்து அதே தலைப்பில் ராகவன் தனது உரை யைச் சமர்ப்பித்தார். இவரது உரையின் தொகுப்பாக அவர் பின்வரும் விடயங்களைக் குறிப்பிடுகின்றார்.
தமிழ்த் தேசியவாதம் ஆதிக்க சாதிகளின் அரசியல் கருத்தியலின் வெளிப்பாடு. அது சாதிய சிந்தனை முறையில் ஊறிப்போய்க் கிடக்கிறது.
அகிம்சை போராட்டத்திலிருந்து ஆயுதப் போராட்டம் வரை சாதியக் கூறுகளின் அடித்தளத் திலேயே தமிழ்த் தேசியவாதம் கட்டப்பட்டிருக்கின்றது. யாழ்ப்பாணத்திலிருந்து ஐரோப்பா, அமெரிக்கா வரை சாதியமைப்பின் கரங்கள் நீண்டுகொண்டே போகின்றன. வெளிநாடுகளிலும் தனது சாதிய இருப்பை யாழ்ப்பாணத்துஆதிக்க சாதிசமய-கலாச்சார - கல்வி அமைப்புகளை நிறுவித் தொடர்ந்தும் பாதுகாத்து வருகிறது. அதுவே தமிழ்த் தேசியவாதத்தின் கருத் தியல் வெளிப்பாடாக அலையாய்ப்பரவுகிறது.
தமிழ்த் தேசியவாதக் கருத்தியல் தலித் தியக் கருத்தியலுடன் அடிப்படையில் முரண் படுகிறது. தமிழ்த் தேசியவாதக் கருத்தியல் சாதியத்தை தனது கருத்தியல் அமைப்பியல் பரிமாணங்களாகக் கொண்டிருக்கிறது.தலித் தியம் சாதியகட்டுமானத்தையும் அதன் கருத் தியல் தளத்தையும் அம்பலப்படுத்தும் போது தேசியவாதம் ஈடாடிப்போகிறது. சாதி இல்லை என்று மறுக்கிறது.
இதன் பின்னணியில் பல்வேறு வரலா றுகள் போராட்டங்கள் மறைக்கப்படுகின்றன அல்லது திரிக்கப்படுகின்றன. தலித்திய சிந்தனை, அதன் வரலாறு, போராட்டங்கள் அனைத்தும் ஒற்றைப் பரிமாண வரலாற்றி யலால் மறைக்கப்படுகின்றது.
தலித்தியம் ஒருபுறம் தேசியவாதக் கருத்தியலுக்கெதிராகப் போராட வேண்டி யிருக்கிறது. மறு புறம் 'உயர் சாதி ஆதிக்
உயிர்நிழல் 0 ஒக்டோபர் - டிசம்பர் 2007
 
 

شهبنة
கத்திற்கும் சைவசித்தாந்த கருத்தியலுக்கும் எதிராகப் போராட வேண்டியிருக்கிறது. தமிழ்த் தேசியவாதம், "உயர் சாதி ஆதிக்கம், சைவசித்தாந்தம் அனைத்தும் பின்னிப் பிணைந்திருப்பினும் இவற்றை வெவ்வேறு தளங்களில் தலித்தியம் சந்திக்க வேண்டியிருப்பதே கள யதார்த்தம்.
தமிழ்த் தேசியவாதக் கருத்தியலின் வீச்சு இன்று தலித் இருப்புக்கான அற்ப சொற்பஜனநாயகத்தையும் மறுத்துத் தலித்தியப் போராட்டங்களை வடக்கில் அடக்கி ஒடுக்கி முடிவுக்குகொண்டுவந்த இச்சூழலில் புலம்பெயர்ந்தநாடுகளில்தலித்தியம் தனதுதடத்தைப் பதித்திருக்கிறது.தலித்தியமானது தன்னை ஒடுக்கப் பட்ட சாதி, வர்க்கம், பால்நிலை ஆகியவற்றுடன் அடை யாளம் காண்பதால் குறுந் தமிழ்த் தேசியப்பார்வையை நிராகரிக்கிறது. தலித்தியத்திற்கு ஒரு விசாலமான பார்வை இருக்கிறது. Dait panthers அமெரிக்காவில் கருப்பின மக்களின் சமூக விடுதலைப் போராட் டத்துடன் தங்களை அடையாளப்படுத்திய பாரம்ப ரியத்தைக் கொண்டவர்கள். இலங்கையிலும் புலம் பெயர்ந்த தேசங்களிலும் சாதியால், நிறத்தால், பால்நிலையால், அரசியல் பொருளாதார அமைப்பால் ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை மாந்தர்களை ஒன்றி ணைக்கும் விடியலிற்கான விடுதலைக் கோட்பாடு தலித்தியம்.
இதனைத் தொடர்ந்து ‘சர்வதேசியப் பார்வையில் தலித்தியம் என்னும்தலைப்பில்புதியமாதவிபேசினார்.
இதழ் 27

Page 103
யாராலோ மாற்றப்பட்டிருக்கும் எங்கள் வரலாற்றை நாங்கள் மீட்டெடுக்க வேண்டிய தேவை எங்கள் முன் உள்ளது என்றும் இலங்கையில் சாதி அமைப்பு இல்லை என்பது போன்ற தகவல்கள்தான் தங்களுக்கு இந்தி யாவில் ஊடகங்கள்மூலம் கிடைத்து வருகின்றன என்றும் மேலும் எந்த மதமும் விதிவிலக்கில்லாமல் சாதி யைப் பேணிக் கொண்டிருக்கின்றது என்றும் சாதியின் கரம் ஒவ்வொரு துறைகளுக்குள்ளும் தன் கரங்களை எவ்வாறு ஆழப் பதித்துள்ளது என்பதற்கான உதார ணங்களையும் சுட்டிக் காட்டிப் பேசினார். மேலும் தலித் துகளுக்கிடையிலும் பல்வேறு சாதிப் பிரிவுகள் இருக்கும்வரை தலித் விடுதலைக்கு முழுமையான சாத்தியம் இல்லை எனத் தெரிவித்தார்.
மேற்கண்ட தலைப்பிலேயே அசுராவும் பேசினார். இந்தியா தான் சாதியின் வேர்கள் ஆரம்பித்த இடம் என்றும் 3000 ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக சாதிய மைப்பு முறையைக் கடைப்பிடிக்கின்ற சமூகம் ஒரு மனநோய் பிடித்த சமூகம் என்றார். ஒருநாடு பொருளா தாரத்திலும் விஞ்ஞானத்திலும் வளர்ச்சியடைந்த நாடாக இருந்தாலும் சமூக வளர்ச்சி அங்கு இல்லாத வரை அதனை ஒரு வளர்ச்சி பெற்ற நாடாகக் கருத முடியாதென்றார். சாதியம் பற்றிய ஆய்வுகள் ஒரு திறனாய்வாக எம்மிடம் இல்லை என்பது ஒரு பாரிய வெற்றிடம் என்றும் சிந்துவெளி நாகரிகம் பற்றியும் கி.மு. 1000இல்தான் சாதியத்திற்கான அடித்தளம் வருணாச்சிரம தர்மத்தின் மூலமாக இடப்பட்டதென்றும், மேலும் சாதியம் என்பது இயற்கையானதல்ல என்பதைத் தலித்துகள் அறிந்து கொண்டு அதிலிருந்து விடுபட வேண்டியது முக்கியமானதென்றும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து 'இலங்கைத் தலித் இலக்கியத்தில் பெண்ணியம்' என்ற தலைப்பில்பேசியராஜேஸ்வரிபாலசுப் பிரமணியம் இலங்கையின் அறுபது களின் எழுத்தாளர்கள் சிலரின் பெயர்களைப் பட்டியலிட்டுக் குறிப் பிட்டுப் பேசினார். இதே தலைப்பின் கீழ் பேசிய தேவா, டானியலின் எழுத்துகள்
இதழ் 27
 
 

K Uji
இந்தியாவில் தலித்திலக்கியம் வருவதற்கு முன்பே வந்தவை என்றும் தமிழ்நாட்டில் இருந்து வெளி வந்திருக்கும் தலித் படைப்புகளின் வரிசைகளைக் குறிப்பிட்டார்.
இரண்டாம்நாள்நிகழ்வுகள் கலந்துரையாடலுடன் ஆரம்பமாகியது. இதனை விஜி நெறிப்படுத்தினார். இக் கலந்துரையாடலில் றயாகரன், ரவி, பால கிருஷ்ணன், பூபால் சோமசுந்தரம், புதிய மாதவி, ஷோபாசக்தி, விஜிதா, ஜெயபாலன், ஸ்ராலின், ஜெகநாதன், அலெக்ஸ், ஜெயா பத்மநாதன், கோவை நந்தன், ராகவன். லோகநாதன். பஷீர். ரகு, மனோ, தமிழச்சி, இசிதோர் பெர்னாண்டோ, அசோக், கீரன், ஜெயந்தி, சிவகுருநாதன், லக்ஷமி, சேனன், சிவகுமார், பரா. புஸ்பராணி. பாலா ஆகியோர் தங்கள் கருத்து களைத் தெரிவித்தனர்.
கலந்துரையாடலைத் தொடர்ந்து‘தலித்துகளின் பொருளாதார மேம்பாடு' பற்றி பகவத்சிங், பூபால் சோமசுந்தரம் ஆகியோர் பேசினார்கள். பகவத் சிங் தனது உரையில் தொழில் மதிப்பின் அவசியத்தை வலியுறுத்தினார். தமது உழைப்பின் உறுதியில் நின்ற வர்களை அடக்கி ஒடுக்கியது தமிழர் தம்மினத்திற்குச் செய்த மிகப்பெரிய துரோகம் என்றார். தாயகத்தில் இழிவானதாகக் கருதப்படும் சாதிரீதியாக வகுத்த தொழில்களை அங்கு செய்யாதவர்கள் புலம்பெயர்ந்த
உயிர்நிழல் 0 ஒக்டோபர் - டிசம்பர் 2007

Page 104
μΦή Σ»
தேசத்தில் அதையே பணத்திற்காக செய்கி றார்கள் என்பதையும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பூபால் சோமசுந்தரம் ஒதுக்கப்பட்டதென்று கருதப்படும் தொழில் களுக்கான அங்கீகாரமும் அதிக கூலியும் வழங்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுப் பேசி ஒரு கலந்துரையாடலுக்கூடாக விடயதானத்தை விவாதிக்கலாம் என்ற குறிப்புடன் முடிவுற்றது.
தொடர்ந்து 'இலங்கைத் தீர்வுத்திட் டங்களும் தலித்துக்களும்' என்ற தலைப்பில் எம்.ஆர்.ஸ்ராலின் பேசினார். தமிழர்கள் என்ற ஒரு பதாகைக்குள் வழங்கப்படும் தீர்வுத் திட்டமானது ஒரு குறிப்பிட்ட சாராரிடமே அதிகாரங்களைக் குவிக்கும் என்றும் இது அனைத்துத் தமிழர்களுக்குமான தீர்வாக இருக்க மாட்டாது என்றும் குறிப்பிட்டார்.
தலித்துகளுக்கான பிரதிநிதித்துவம் எல்லா மட்டங்களிலும் வலியுறுத்தப்பட வேண்டும் என்று சில ஆலொசனைகளை முன்வைத்தார்.
அடுத்து சிவகுருநாதன் பேசும்பொழுது கனடா அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள என்ன விதமான சட்டங்களை இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தில் கொண்டு வர முடியும் என்றும், கனடாவில் இருக்கும் நிறப் பாகுபாட்டுக்கு எதிரான சட்டங்களை, இலங் கையில் சாதிப்பாகுபாட்டுக்கு எதிரான சட்டங்களாக அமுல்படுத்த வெண்டும் என்றும் கருத்துத் தெரிவித்தார்.
தொடர்ந்து எம்.எம். பஷீர் பேசும்பொழுது இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தில் இனம், மொழி, மத, சாதி, பால் அடிப்படையில் வேற் றுமை பாராட்டக்கூடாது என்றும் எவருடைய அரசியல் அபிப்பிராயங்களும் மதிக்கப்பட வேண்டும் என்றும் எழுதி வைக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார். இலங்கை அரசியல மைப்புச் சட்டத்தில் சேர்க்கப்பட்டு நடை முறைப்படுத்தப்படவேண்டிய விடயங்கள் குறித்த குறிப்புகளைச் சொன்னார். முஸ்லிம் மதத்தில் சாதிய அமைப்புநிலவுவதென்பதை கடுமையாக மறுத்தார்.
இரண்டுநாள் தலித் மாநாட்டுநிகழ்வுகள் இத்துடன்நிறைவுபெற்றன.
"நீங்கள் உங்களை ஒரு தேசம் எனக் கருது வது வெறும் பிரமை. பல்வேறு சாதிப் பிரி வினைகள் கொண்டவர்கள் தங்களை ஒரு தேசம் என்று அழைக்க என்ன அருகதை இருக்கிறது? நிலவி வரும் சமூக ஒழுங்கை மாற்றாத வரை நீங்கள் எவ்வித முன்னேற்றமும் அடையப் போவதில்லை. சாதியக் கட்டமைப்பிலிருந்து நீங்கள் எதனை உருவாக்கினாலும் அது இறுதியில் உடைந்துதான் போகும்”
-அம்பேத்கர்
உயிர்நிழல் 0 ஒக்டோபர் - டிசம்பர் 2007
 

04 - இதழ் 27

Page 105
சர்வதேச தமிழ்
56L -
ரொறன்ரோவில் வருடா வருடம் 85 திரைப்பட விழாக்கள் நடைபெறுகின்றன. அவற்றுள் ஒன்று எமது சர்வதேச தமிழ்த்திரைப்பட விழா. இரு வாரங்களுக்கு முன்னர் சிவிக் சென்ரரில் இவ் வருடக் குறும்பட விழா நடைபெற்றது. வழமைக்கு மாறாக குறித்த நேரத்துக்கு ஆரம்பமாகியது. சுமார் 400க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். திட்டமிட்டபடிநிகழ்ச்சி அட்டவணைக்கு ஏற்ப நிகழ்ச்சி நடைபெற்றது. ஒரு சில படங்களின் பிரதிகள் ஆட்டம் கண்டன. சென்ற முறையைவிட இம் முறை தொழில்நுட்பக் குறைபாடுகள் இல்லை.
இம்முறை இந்த விழா சம பால் உறவுமுறைகள் பற்றிய சில சிறப்புப் பதிவுகளைத் திரையிட்டது. இம்முறை அவர்களது கருவாகக் கூட இதனைக் (55titil 6Tib. gift IITaib, The Oriental Boy Friend என்ற படம். ஓர் வெள்ளை இனத்தவர், தனக்கு ஓர் சீன நண்பன் தேவைஎன விளம்பரப்படுத்துவதை கருவாகக் கொண்ட ஒருநிமிட படம். இப்படம் நிற பேதத்தையும் சம பால் உறவையும் பதிவு செய்துள்ளது. மற்றொரு படமான The Day I Died என்ற ஈரானிய இயக்குநரின் 12 நிமிடப் படம். இது ஆர்ஜன்ரீனாவில் படமாக்கப் பட்டுள்ளது. சகோதரன், சகோதரியும், நண்பியும் ஓர் பூங்காவில் விளையாடுகின்றனர். சகோதரனுக்கு, நண்பியின் மேல் காதல். அதேபோல் சகோதரிக்கும் நண்பியின் மேல் காதல். இவர்கள் அனைவரும் 12-15 வயதுடையவர்கள். இப் படம் பெரும் அதிர்வை ஏற்படுத்தவில்லை. எமது கல்லூரிகளில், விடுதிகளில் இந் நிகழ்வுகள் சகஜம். கடந்த வாரம் ரொறன்ரோ பாடசாலை விடுதியில் சம பால் உறவு வன்முறையில் ஈடுபட்டதற்காக 13வயது சிறுவன் கைது செய்யப் பட்டான். இவ்வாறான கைதுகள் இலங்கையில் நடை பெறின் பல ஆசிரியர்கள், அதிபர்கள் கைது செய்யப் பட்டிருப்பார்கள்.
நிகழ்ச்சியை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம். முதலாவது கனடியப்படங்கள்.
உணர்வு ததும்ப ஆரம்பமாகிய நிகழ்வு, எமது அடையாளத்தைக் கேள்வி கேட்பதுடன் சூடுபிடிக்க ஆரம்பமாகியது. இவ்விரண்டு படங்களும் உணர்வு களுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை, கதையதார்த் தத்துக்கும், திரைக்கதை ஒழுங்கமைப்புக்கும் கொடுக் கவில்லை. தொடர்ந்த படமான 'கண்ணால் காண்ப தெல்லாம் சிறப்பான நடிப்பால் அரங்கை அதிர வைத்தது. கணவன், மனைவி இருவரும் சிறப்பாக நடித்திருந்தனர். தொடர்ந்து 'வினை 'என்னும் படம். கடந்த வருடம் பார்வையாளர்களாக கலந்துகொண்ட தாக இவர்களுடன் கதைத்தபொழுது தெரிவித்தனர். இளைஞர்களான இவர்களது இந்த முயற்சி, ஓர் சிறப்பான அரங்கேற்றம். <தன் வினை தன்னைச் சுடும். இல்லையேல் சார்ந்திருப்போரை சுடும்) என்ற கருத்துப்பட வன்முறைக் கலாச்சாரத்தை விமர்சித்
இதழ் 27 1.

5
K Luis
திரைப்படவிழா
20.10.2007
05
துள்ளார்கள். ஒலி தெளிவாக பிரதி செய்யப்பட வில்லை. சில காட்சிகளில் கதைப்பது கேட்கவில்லை. மிகத் தெளிவான கனவுக்காட்சி ஒன்று படத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. சின்னச் சின்ன குறைபாடுகளை தவிர்த்திருந்தால் இப்படம் மேலும் ஓர் சிறப்பான பதிவா கியிருக்கும்.நீரோஜனுக்கு மேலும் நல்ல எதிர் காலம் உண்டு. சுதாகரனின் கதவுகள் தட்டப்படும் சத்தம் கேட்டுநிமிர்ந்து இருந்த பொழுதுஅவர்தற்கொலைக்கு சென்றுவிட்டார். அவ்வளவு சிறிய படம். சுதாகரனுக்கு ஏன் பெண்கள் மீது கொள்ளைப் பிரியம்?ஆண்டாண்டு காலமாக நூலும் சேலையும் போல் தாயும் பிள்ளையும் பிணைப்பால் இறுக்குண்டவர்கள். தற்கொலையின் போதும்பிள்ளையுடன்தான் தற்கொலை செய்வார்கள். இங்கு பிள்ள்ையை விட்டுவிட்டுத் தாய் சென்று விடு கின்றாள். பாவம் சுதாகரன் தற்கொலை செய்யமுடிய வில்லை. படத்தின் கலர் கறுப்பு வெள்ளை. மாற்று முகாமுக்கான பிரதியீடா?கருத்துரீதியான குறைபாடு களை தவிர்த்துப் பார்த்தால், இவ் விழாவில் காட்டப் பட்ட ஓர் நல்ல குறும் படம்.
மூடிய கதவிடுக்கினுள்பார்த்த பொழுது தெரிந்தது 'அ'கம்'. சினிமா விமர்சகர், திரைக்கதையாசிரியர், எழுத்தாளர் எனப் பல்வேறு தளங்களில் செயற்படும் எழுத்தாளர் அருணின் முதல் படம் இது. வெறுமையை பிரதிபலிக்கும் இப்படத்தை கரண் ஒளிப்பதிவு செய்துள்ளார். மிகத் தெளிவான ஒளிப்பதிவு கரண் நீங்கள் காட்டிய வீதி ரொறன்ரோவில் எங்குள்ளது? அழகான, அமைதியான வீதி. படத்தின் பின்பகுதியை இழுத்திருக்கத் தேவையில்லை. மரத்தைப் பார்ப் பதுடன் முடித்திருக்கலாம். குறும்படத்துக்குரியவீச்சம் அதிகரித்திருக்கும். சற்றேனும் எதிர்பார்த்திருக்காத கதை. இவ்வருட விழா தந்திருக்கும் மற்றொரு நல்ல இயக்குனர் அருண்.
இரண்டாவது இடைவேளைக்குப் பின்னர் காட்டப் பட்ட கனடிய படம் 'மெளனச் சுமைகள் வயது வந்த பெற்றோரை பிள்ளைகள் ஒருவருக்கு ஒருவராக பிரிப் பதே இப் படத்தின் கதை. வழமையான விடயமே. பணத்துக்காகநாங்கள் எதையும் செய்வோம். அடுத்த வருடம் தனபாலனிடமிருந்து மற்றொரு நல்ல படத்தை எதிர்பார்க்கலாம்.
பொதுவாக இவ்வருடக் கனடியப்படங்களின் குறை பாடு திரைக்கதை அமைப்பும், எடிட்டிங்கும். (இவ்வரு டம் எடிட்டிங் விருது எவருக்கும் கொடுக்கப்பட வில்லை).நல்ல கருவைசிறப்பாக வெளிப்படுத்த மிகச் சிறந்த திரைக்கதை அமைப்புத் தேவை, திரைப்படம் பற்றிய அறிவைமேலும் அதிகரிக்கும்பொழுதுபடங்கள் சிறப்பாகப்படைக்கப்படும். படைப்பாளிகள் தங்களது தேடலை அதிகரிக்க வேண்டும்.
ஐரோப்பிய, இந்திய, இலங்கைப் படங்கள் தொடரும் தொலைக்காட்சி தொடர்களும் பெண்களும்
உயிர்நிழல் 0 ஒக்டோபர் - டிசம்பர் 2007

Page 106
Liή Σ»
என்ற தலைப்பில் கட்டுரையாக வரைந்திருக்கலாம். ஆண்கள் எவரும் தொலைக்காட்சித் தொடர்கள் பார்ப்பதில்லை என்பது டென்மார்க் சண்ணின் முடிவு மீண்டும் தாயை இழிவுபடுத்தும் முயற்சி. பிள்ளைக்குச் செய்யவேண்டிய கடமைகளைச் செய்யாது, தொலைக் காட்சியே தஞ்சம் எனத் தாய் உள்ளாள் என்பது சண் ணின் கூற்று.
ரமேசின் அஸ்தமனம் பிள்ளைகள் மீதான வன் முறையை சுட்டிக்காட்டியுள்ளது. இறுதிவரிகள் மூலம் இப்படம் செய்தித் துண்டாக மாறிவிட்டது. அப்புவின் சினிமா சாதி மத வேறுபாடுகளை படமாக்கியுள்ளது. முழு நீளத்திரைப்படக்தையை சுருக்கியுள்ளார்கள். அப்புவாக நடித்த கெளசிக் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்ததார். இலங்கைப்படமான 'விழி
தொகுப்பு  ெ
'ஈராக்கின் ஒலங்கள் - { பிரான்ஸ் - ஒ
2007ம் ஆண்டு ஒக்டோபர் 14ம் திகதி அன்று பாரிஸின் புறநகர்ப் ご பகுதியான கார்ஜ் சார்செலில் 'ஈராக் pici கின் ஒலங்கள் இசைத் தொகுப்பு : ஈராக் வெளியீட்டுநிகழ்வுநடைபெற்றது. 3: ... *::::
மாலை 6.00 மணிக்கு சமாதானப் பிரார்த்தனையுடன் நிகழ்வு ஆரம்ப மாகியது. அதனைத் தொடர்ந்து 'ஈராக்கின் ஒலங்கள் இசைத் தொகுப்பு அகன்ற வெண்திரையில் காட்சிப்படுத்தப்பட்டது. ஈராக்கில் அமெரிக்க, பிரித்தானிய ஏகாதிபத் தியங்களால் மேற்கொள்ளப்படும்
ஆக்கிரமிப்பு அட்டூழியங்களையும் 4182ುಳ್ಯ அந்த மக்கள் படும் அவலக் காட்சி (...is களையும் காட்சிப்படுத்தியது. ೫¬
அதனைத் தொடர்ந்து கவிஞர் .. ဈ၅:#င်္ဂီ
வி.ரி.இளங்கோவன் தலைமையில் இடம்பெற்ற விமர்சன அரங்கில் கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் (நோர்வே), தோழர் அழகிரி,'ஒசை மனோ,இராஜேஸ்வரிபாலசுப்ரமணியம் (இலண்டன்), அ.தேவதாசன் ஆகியோர் விமர்சன உரையாற்றினார்கள்.
மனோ மட்டுமே வெளியிடப்பட்ட இசைத்தொகுப்பு
உயிர்நிழல் 0 ஒக்டோபர் - டிசம்பர் 2007
 
 
 
 
 
 
 
 

போரின் அவலங்களைப் படமாக்கியிருந்தது. ஒளிப் பதிவு மிகவும் நன்றாகவிருந்தது. 'மெளனச் சுமைகள் பெண்கள் திருமணத்தின் பின் தங்களது ஒவ்வொரு கனவுகளையும், விருப்புக்களையும் புதைத்துக் கொள் கின்றார்கள் என்பதை சுட்டிக் காட்டியிருந்தது. கவித் துமான முயற்சி. இவ்விழாவில் பெண்களால் படைக்கப் பட்ட ஒரேயொரு படமிது. பிரான்ஸில் இருந்து வந்திறங்கிய நதி அகதி வாழ்வின் அவலங்களை பதிவாக்கியிருந்தது. சிறந்தநடிப்பு. கதை, இயக்கம் என மிகச் சிறந்த படமாக வெளிப்பட்டது இப்படம்.
ஒரு வித்தியாசமான உலகத்தை தரிசித்த அனுபவத்துடன் வெளியே வந்தபொழுது, பூமிக்கு அருகில் சந்திரன் வந்திருந்தது.
இசைத்தொகுப்பு வெளியீடு க்டோபர் 2007
ST0SS00SDS D00 TD0TTGeeS SeMtSStkLS0SDeAS
ಜಿಜ್ಙಘ್ರ& * శుభ#భ?:?,భః
ఛజKళ*.* $8ళఖ్యakశీఖ్య
:***४४१४°{ eta 3 98 i P E acɛ sa Ros é ぎ & 32対*容ぎ効さ;&33巻姿 {{{ಟ#{{{ಟಿ
பற்றியதான விமர்சனத்தை வைத்தார்.
ஏனையோர் ஈராக்கின் வரலாற்றுபின்னணியையும், அமெரிக்காவின் வியட்நாம்-ஆப்கானிஸ்தான் ஆக்கிர மிப்புகளின் போது இடம் பெற்ற கொடுமைகளையும் பற்றித்தொட்டுப் பேசினார்கள்.
06 இதழ் 27

Page 107
முதற்பதி வெளியீடு का| Elterület 7©ul; LüLL、 இலங்ை
கல்ாநிதி செ யோகராசாவின் முன்னுரையில் இருந்
இத்தொகுப்பில் உள்ள கவிதைகளின் சுவை புதி என்றாகிய பிறந்த மன் மற்றும் வாசகரனைவருக்கு இக்கவிஞர் மண்டு கவிஞர் குழாத்தினரிடம் இரு இருந்தும் வேறுபட்டு நிற்கின்றார் என்பதும் ஈழத்து முற்படுகின்றார் என்பது வெளிப்படை
முதற்பதி வெளியீடு
L| ESTE
|L LDLLEEEEE| GAGAJIEGITE Te:009
E=ITTEE|ETH;
கலாநிதிசெயோகராசா எழுதிய முன்னுரையில் இ
வாழ்க்கைபற்றிய நவீன ஞான சித்தர்கள் போன்றத இத்தொகுப்பில் இல்லை. பதிவாக ஏனைய தொகுப் சார்ந்த பல கவிதைகள் இத்தொகுப்பில் காணப்படு: கையும் மாறிமாறி வருவதும் தனிமனித அனுபவமு பிற கவிதைத் தொகுப்புக்கள் தராத புதிய அனுபவ
 
 

கார்த்திகைப்பறவைகள்
|imi Eggerä2007 III |
LITT GÖTEB W
குறுக்கு விதிI ||||
R
து ஆன பண்பும், கவிஞரின் தொப்புள்கொடி புலப்படும் என்றே கருதுகின்றேன்.இவ்விதத்தில் து மட்டுமன்றி ஈழத்தின் ஏனைய கவிஞர்களிடம் நவீன கவிதை வளர்ச்சியில் புதியதLங்கள்பதிக்க
W
TT|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
M
SS S S S S S S S S S S SS
கவிதைகளின் தொகுப்பு
EILLETou^2007 W W
கல்முன்ைவீதிநொச்சிமுவின் TitiLINMIMMIMIMMIN
Tavamahadyahgatiom"
ருந்து
த்துவார்த்தப்போதனைகள் கொண்புகவிதகள் புகளில் இல்லாத வாழ்க்கை பற்றியதன்ன்னுபவம் கின்றனவாழ்க்கைமீது நம்பிக்கையும் அவநம்பிக் ம் பொதுமனித அனுபவமாகிவாசகரைஈர்ப்பதும் கிளர்ச்சியெனின் அது மிகையன்று
M
W W
M
W

Page 108
魔
ஒழுங்கமைப்பதற்கும்
இராப்பத்தை ஒரு தீர்விற்காகவும் Šჭუჭ58 წ58
மீறல்களுக்குஎதிராகவும்
 

தற்கான பிரச்சாரத்தை
பூர் கிருஷ்ணமூர்த்தி
), மேற்கு ஊரப்பாக்கம், பின்கோடு: 6032O2