கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கல்வி முகாமைத்துவ விடய ஆய்வுகள்

Page 1

வ விடய ஆய்வுகள்
Rநவீன அணுகு முறைகள்
Syagains ag a *N

Page 2
Fducation Managemt Case Studies New Approaches
Author: M. Selvarajah
Printer: Rajeswary Press 18, Prince Street, Colombo .
Publisher: Gowry Publishing House Maharagama
(C) Author
Front Cover Design: Chirndu varma
SBN 955-95598-1-6

உள்ளடக்கம்
1க்கம்
Foreword
அணிந்துரை முன்னுரை VIII
4. அறிமுகம் 2. விடைய ஆய்வுக்கு விடையளிப்பதற்கான அனுகு
முறைகள் 3. மாதிரி விடய ஆய்வுகள் விடய ஆய்வு ஒன்று 4. 4. விடய ஆய்வு இரண்டு 2 *. விடய ஆய்வு மூன்று 9 " விடய ஆய்வு நான்கு 25 赫 விடய ஆய்வு ஐந்து 35 விடய ஆய்வு ஆறு 45 * விடய ஆய்வு ஏழு 57 10 விடய ஆய்வு எட்டு 60
கலைச்சொற்கள்
துணை நூல்கள்

Page 3
FOREWOR)
Dr. (Mrs) T. KARIYAWASAM, B. A. (Hons) Dip. in. Ed. M. A. (Sri Lanka) Ph. D (London, Director General, National Institute Of Education, Maharagama
I have great pleasure in giving this brief Foreword to the book on Education Management Case Studies - New Approaches, written by Mr. M. Selvarajah in Tamil. Case Study Method is used in taining Programmes popularly all over the world. It brings the teal situation to the classrooms.
There is a death of literatures in education management in Tamil. Mr. Selvarajah's effort in this regard is quite useful to our teachers, principals and education officers to develop their professional skills.
While congratualating his effort, I wish , . Mr. Selvarajah will continue to publish books in education management in the future too.

அணிந்துரை
கு. சோமசுந்தரம் B.A. (Lond) M. A. Dip. N. Ed. (Cey)
உதவிக்கல்விப் பணிப்பாளர் நாயகம், மொழி இணைப்புப் பிரிவு தேசியகல்வி நிறுவகம், மஹரகம.
திரு. மா. செல்வராஜா அவர்களால் வெளியிடப்படும் கல் வி முகாமைத்துவ விடய ஆய்வுகள், நவீன அணுகுமுறைகள் எனும் நூலுக்கு அணிந்துரை ஒன்றை வழங்குவதில் நான் மிகவும் மகிழ்ச்சி யடைகின்றேன்.
விடய ஆய்வு அணுகுமுறை இன்று பல்வகையான பயிற்சி நெறி களில் கையாளப்படுகின்றது. குறிப்பாக வளர்ந்தோர்களது கல்வி -
பயிற்சி நெறிகளுக்கு இது ஓர் ஏற்ற முறையெனலாம்.
பாடசாலைகள், திணைக்களங்கள் போன்றவற்றின் யதார்த்த நிலைகளையும், பிரச்சினைகளையும் நன்கு விளங்கி ஆலோசனை வழங்கக் கூடியவர்களாலேயே விடய ஆய்வுகளைப் பயன் தரத்தக்க வகையில் எழுத முடியும். திரு. செல்வராஜா இலங்கையின் சகல மாவட்டங்களிலுமுள்ள பாடசாலைகள் பற்றி அறிந்தவர். தேசிய ரீதியில் நடாத்தப்படும் கல்வி முகாமைத்துவப் பயிற்சி நெறிகள் மூலம் அதிபர்கள், கல்விநிருவாகிகளுடன் பிரச்சனைகளைக் கலந்து ரையாடியவர். இத்தகைய அனுபவ அறிவுடைய இவர் விடய ஆய் வுகள் பற்றிய நூலை வெளியிடுவதற்குப் பொருத்தமானவர்.
இந்நூலில் பாடசாலைகள் எதிர் நோக்கும் பல்வேறு பிரச்சினை களை அவர். உள்ளடக்கி வெளியிட்டுள்ளமை கல்வித்துறையில் முகா மைத்துவத் திறன்களை வளர்க்க விரும்பும் சகலருக்கும் பயன்படுவ தாகும்.
திரு. செல்வராஜா அவர்களது முயற்சியைப் பாராட்டுவதுடன் இத்துறையில் மேலும் பல வெளியீடுகளை அவர் செய்ய வாழ்த்து கின்றேன்.

Page 4
அணிந்துரை
5c5. Così. FLIT 5Tu5D, B. A. Dip in Ed
பிரதிக் கல்விப் பணிப்பாளர் நாயகம் (தமிழ்) கல்வி, உயர்கல்வி அமைச்சு
'gasojuru” பத்திரமுல்லை
திரு. மா. செல்வராஜா அவர்களால் வெளியிடப்படும் கல்வி முகாமைத்துவ விடய ஆய்வுகள் நவீன அணுகுமுறைகள்" எனும் நூ லு க் கு இவ்வணிந்துரையை வழங்குவதிற் பேருவகையடைகின் றேன்.
விடய ஆய்வு இன்று பயிற்சி நெறிகளிலும், அரசாங்க சேவைக்கு ஆளணியினரைத் தெரிவு செய்வதிலும் பயன்படுத்தப்படும் ஒரு பயன்தரு முறையாகக் கொள்ளப்படுகின்றது. விடய ஆய்வினைக் கற்பதன் மூலம், பரீட்சைகளில் வெற்றி பெறுவது மட்டுமன்றி, ஆசிரி யர்கள், அதிபர்கள், கல்வி நிருவாகிகள் ஆகியோர் தமது தொழில் திறன்களை வளர்த்துக் கொள்ளவும் முடிகின்றது. கல்விமுகாமைத் துவ இலக்கியம் தமிழ் மொழியில் இல்லாதிருப்பது பெருங்குறை பாடாகவுள்ளது. இக் குறைபாட்டை நீக்குவதற்கு திரு. செல்வராஜா அவர்களால் ஏற்கனவே செய்யப்பட்ட வெளியீடுகளும் இதுவும் இலங் கையில் தமிழ் மொழி மூலம் வெளிவரும் முதல் முகாமைத்துவ இலக்கி யங்கள் என்றால் மிகையாகாது. இவரது வெளியீடுகள் கல்விமுகாமைத் துவத்தில் முன்னோடி வெளியீடுகளாகக் கருதப்படத்தக்கவை.
ஆசிரியராக, விரிவுரையாளராக, அதி பரா க, முகாமைத்துவ ஆலோசகராக நீண்ட கால அனு பவம் வாய்க்கப் பெற்ற திரு, செல்வராஜா இத்தகைய பணியைச் செய்வதற்கு மிகவும் பொருத்தமானவராவர். இவர் இது போன்ற இன்னும் பல வெளி யீடுகளை எதிர்காலத்திலும் செய்ய வேண்டும் என்பது எனது விருப்
Lu LDT (5 b.
கல்வித்துறையில் பணியாற்றுவோர் இதனைக் கற்றுத் தம் தொழில் திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். கல்வி முகா மைத்துவத்தின் பல்வேறு அம்சங்கள் தொடர்பாகவும் இன்னும் நூல்கள் பலவற்றை வெளியிட இறைவன் அவருக்கு ஆற்றலை அளிக்க வேண்டும் எனப் பிரார்த்தித்து அமைகின்றேன்.

முன்னுரை
முகாமைத்துவ விடய ஆய்வு தொடர்பாக 1991 ஆம் ஆண்டு வெளியான எனது வெளியீடுகள் பற்றி ஆசிரியர்கள், அதிபர்கள் கல்வி நிருவாகிகள் ஆகியோர் நன்கறிவர், அதனைத் தொடர்ந்து நாட்டின் பல மாவட்டங்களிலுமிருந்து ஆசிரியர்கள், அதிபர்கள், கல்விநிருவாகிகள் மட்டுமன்றிமுகாமைத்துவத்தில் நாட்டமுள்ள அனை வரும் தமது தொழில் திறன்களை வளர்க்கும் பொருட்டுச் சுயமான கற்றலை மேற் கொள்ளவும், கல்வி தொடர்பான பரீட்சைகளுக்குத் தம்மை ஆயத்தம் செய்யவும் இன்னும் கூடிய விளக்கங்களுடனும், வழி காட்டல்களுடனும் இதனை மீண்டும் வெளியிடுமாறு கேட்டுக் கொண்டனர். அவர்களது வேண்டுகோளை நிறைவேற்று முகமாக இந்நூல் வெளிவருகின்றது.
பாடசாலை முகாமைத்துவம் தொடர்பான பல்வேறு பிரச்சினை கள் இதில் உள்ளடக்கப்படுகின்றன. விடய ஆய்வுக்கு விடையளிக் கும் பல்வேறு அணுகு முறைகள், விடய ஆய்வுகள், அவைகள் மீதான வினாக்கள், வினாக்களுக்குவிடையளிப்பதற்கு உதவியான மாதிரி விடைகள், குறிப்புக்கள் என்பனவற்றை உள்ளடக்கி வெளிவரும் இந் நூல் அதிபர்கள் சேவைப் பரீட்சை (SLPS) கல்வி நிரு வா க் சேவைப் பரீட்சை (S L E AS) தடைதாண்டுப் பரீட்சைகள் (E 8) பட்டப்பின் கல்வி முகாமைத்துவ டிப்ளோமா, பாடசாலை முகா மைத்துவ டிப்ளோமா புகுமுகத்தேர்வுகள் போன்றவற்றுக்கும் பயன் படுவதுடன் கல்வித்துறையில் பணிபுரிவோர் தம் முகாமைத்துவத்
திறன்களை வளர்ப்பதற்கும் பயன் படும்.
தமிழில் கல்வி முகாமைத்துவ இலக்கியங்கள் மிக அரிதாகவே உள்ளன. தமிழ் மொழி மூலம் கல்விப் போதனை இடம் பெறும் இக்காலத்தில் முகாமைத்துவ இலக்கியங்களுக்குத் தேவை அதிகமாக உள்ளது. இதனை உளத்திற் கொண்டே பல்வேறு செயற்பாடுக ளின் மத்தியிலும் இந்த வெளியீட்டு முயற்சியில் பணியாற்ற வேண் டியதாயிற்று.
ஆசிரியர்கள் அதிபர்கள், கல்வி நிருவாகிகள் உட்பட்க் கல்வித் துறையில் பணியாற்றும் பணியாளியினர் இத்தகைய ஆக்களுக்கு
உழங்கி வரும் ஊக்குவிப்புக்கு எனது நன்றிகள் உரியன.
இந்நூலுக்கு முன்னுரை ஒன்றை (ஆங்கிலத்தில்) வழங்கிய எக் கிள் கல்விப் பணிப்பாளர் நாயகம் கலாநிதி (திருமதி) தி. கார்டிவச்ம் பூவர்களுக்கு எனது நன்றிகள் என்றும் உரியன.

Page 5
அணிந்துரைகளை உவந்தளித்த எமது உதவிக்கல்விப் பளிப்பா ளர் நாயகம் திரு. கு. சோமசுந்தரம் அவர்களுக்கும், கல்வி, டயர் கல்வி அமைச்சின் பிரதிக் கல்விப் பனிப்பாளர் நாயகம் (தமிழ்) திரு வே. சபாநா சகம் அவர்களுக்கும் எனது மனமுவந்த நன்றிகள் உரியன.
எனது ஆக்கங்களுக்கு என்றும் ஆலோசனைகளும், ஊக்கமும் அளித்துவரும் எனது நண்பர்களான திரு. சபரகிங் சகுனர் சேரர திரு. ஜயசேன புத்பிட்டிய ஆகியோருக்கும் எனது நன்றிகள் என் றும் உரியன.
எங்கள் முகாமைத்துவ அபிவிருத்தித்துறைப் பணிப்பாளர் திரு. ஈ. எஸ். வியனகே அவர்களும், பரிைப்பாளர், கல்வி வல்கள் துறை திரு. கே. ஜி. குலசேன அவர்களும் எனக்கு எப் பொழுதும் வழிகாட்டி வருடவர்களாவர் இம்முயற்சி தொடர்பாக அவர்களுக்கு எவ்வகையில் நன்றி கூறினும் போதா.
அட்டைப் படத்தை வரைந்து உதவிய திரு. எஸ். கோபாலன் (சின்டு மாமா) அவர்களுக்கும் இராஜேஸ்வரி அச்சகத்தாருக்கும் எனது
நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
மா. செல்வராஜா
- -
ཟ ཟ་ཆ་ཡོ"
-Hilal
臧
 

கல்வி முகாமைத்துவ விடய ஆய்வுகள்
1.
நவீன அணுகு முறைகள்
அறிமுகம்!
விடய ஆய்வானது சட்டத்தரணிகள், வர்த்தகர்கள், வைத்தி யர்கள் ஆகியோருடன் தொடர்புபடுத்திக் கூறப்படுவது வழக்கம். இதன் முன்னோடியாகக் ஹார்வார்ட் பல்கலைக் கழகம் கருதப்படுகின்றது. பயிற்சி நெறிகளில் விடய ஆய்வு ஒரு சிறந்த முறையாக அண்மைக் காலங்களில் பிரபலியம் பெற்றுள்ளதாயினும், இம்முறை பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்ததெனலாம், சமய போதகர்களும், சமயத்தலைவர் களும் தம்மைப் பின்பற்றுபவர்களுக்கும், வளர்ந்தோருக்கும். பிள்ளைகளுக்கும் தலைமுறை தலைமுறையாகக் கதைகளைக் கூறிவந்தனர். இக்கதைகள் நாடகமாகவும் நடிக்கப்பட்டன பஞ்சதந்திரக் கதைகள், பெளத்த ஜாதகக் கவிதைகள், ஹோமரின் கதைகள், யேசுநாதரின் கதைகள் என்பன வாய் மொழி மூலமான பரம்பரைக் கதைகளாக உள்ளன. இக் கதைகள் பல்வேறு திறன்களை வளர்ப்பனவாயும் கானப்படு கின்றன. இக்கதைகள் விடய ஆய்வின் தன்மைகள் பலவற் றைக் கொண்டு விளங்குகின்றன. இன்று பலதுறைகளில் பயிற்சிநெறிகளின் போது விடய ஆய்வு ஒரு கற்பித்தல் முறை யாகக் கையாளப்படுகின்றது. சிறந்த விடய ஆய்வுகள் உண்மையான சூழ்நிலையினைக் கற்றல் இடம்பெறும் வகுப்ப றைகளுக்குக் கொண்டு வருகின்றன: முகாமைத்துவத்தைக் கற்கும் மாணவர் நல்ல நீர்மானம் செய்யும் திறனைப் பெற ஒரு சந்தர்ப்பத்தை அளிக்கின்றன. அத்துடன் அவர்கள் குறிப்பிட்ட சூழ்நிலையில் அனுபவம் பெறவும் வாய்ப்பளிக் கின்றன:
விடய ஆய்வுக்கு விடையளிப்பதற்கான அணுகு
முறைகள் :
2. கல்வி நிருவாக சேவைப் பரீட்சைகளில் வரும் கல்வி முகாமைத்துவ விடய ஆய்வில் பரீட்சார்த்திகள் பெறும் வெற்றியானது அவர்கள் எவ்வாறு விடய ஆய்வை அணுகுகின்றார்கள் என்பதிலேயே தங்கியுள்ளது. முதலில் பரீட்சார்த்திகள் தமது அறிவு. அனுபவம்

Page 6
24
2.5
2.6
- 2 -
ஆராயும் திறன் என்பனவற்றை அடிப்படையாகக் கொண்டு விடய ஆய்வினை ஒருமுறை வாசித்து விளங்க வேண்டும்.
அடுத்தபடியாகக் கவனிக்கவேண்டியது அதில் உள்ளடக்
கப்பட்ட முகாமைத்துவ எண்ணக் கருக்களை விளங்கு தலாகும். திட்டமிடல் என்றால் என்ன? தொடர்பா டல் என்பதன் பொருள் யாது? வேலைப் பகிர்வு என்பது எதைக் குறிக்கும் என்பன போன்ற முகாமைத் துவ எண்ணக் கருக்கள் பற்றிய சுருக்கமான அறிவும், விளக்கமும் அவசியம்
அடுத்ததாக விடய ஆய்வினை மீண்டும் மிகுந்த அவதா னத்துடன் வாசித்துத் தெளிவாக விளங்குவதுடன் வினாக்களையும் வாசித்து விளங்குதல் வேண்டும். இவ் வாசிப்பின்போது அவசியமான குறிப்புக்களைக் குறித் துக் கொள்ள வேண்டும்.
விடய ஆய்வில் வரும் பிரச்சினைகள் (Problems) (pur GăøT Lunt Gé956řT (Conflicts) Fib uanu på 55 Gir (Events) என்பவற்றைத் தெளிவாக விளங்கிக் கொள்வது விடை யளிப்பதற்கு உதவியாக அமையும்.
விடய ஆய்வில் தரப்படும் வினாக்களுக்குக் குறிப்பிட்ட நேரத்தில் விடையளிக்கவேண்டுமாகையால் நேர அள வில் போதிய கவனம் செலுத்தவேண்டும். உதாரணமாக ஒரு விடய ஆய்வுக்கு விடையளிக்க ஒரு மணித்தியாலம் தரப்பட்டால் அதனை வாசிக்க 30 நிமிடங்களும் விடையளிக்க 30 நிமிடங்களும் செலவிடலாம். இரண் டாம் முறை வாசிக்கும் போது எழுதப்படும் குறிப்புக் கள் விடையளிப்பதற்கான திட்டமாக அமையுமாறு கவனித்துக் கொள்ளல் வேண்டும். இவ்வாறான விடைத் திட்டமிடல் ஆளுக்கு ஆள் வேறு படலாம். ஒவ்வொரு வினாவுக்குமுரிய விடைகள் சிறப்பாகத் திட்டமிடப் படுதல் வேண்டும்.
பரீட்சார்த்திகள் விடய ஆய்வில் இடம்பெறும் பிரச்சி
னைகள், முரண்பாடுகள் என்பனவற்றின் வேறுபாடு களை விளங்கவும். முரண்பாடுகள் பொதுவாக இரு பகுதிகளைக் கொண்டிருக்கலாம். உதாரணமாக இரு தனியாட்களுக்கிடையே முரண்பாடுகள் தோன்றலாம். அல்லது ஒரு தனியாளுக்கும் இன்னொரு குழுவுக்கு மிடையே முரண்பாடுகள் தோன்றலாம். இரு குழுக்க

2
7
8
2.9
2.. O
2
---- 3 -س-
ளிடையேயும் முரண்பாடுகள் தோன்றலாம். பிரச்சினை கள் பல முகங்களைக் கொண்டிருக்கக்கூடும். ஒரு பிரச்சினையில் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், கல்வித்திணைக்களம், உத்தியோகத்தர்கள் அரசியல் வாதிகள் ஆகியோர் சம்பந்தப்பட்டிருக்கலாம். ஆகை யால் விடய ஆய்வினை வாசிக்கும்போது இவற்றைத் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.
விடய ஆய்வில் முகாமைத்துவ எண்ணக்கருக்கள் தொடர்புறுகின்றன. திட்டமிடல், ஒழுங்குப்படுத்தல் நெறிப்படுத்தல், இயைபுபடுத்தல், மேற்பார்வை, மதிப் பீடு, பின்னூட்டல், தொடர் செயற்பாடு, கட்டுப்பாடு என்பன முகாமைத்துவ விடய ஆய்வில் சம்பந்தப்படு வது தவிர்க்க முடியாதது. பரீட்சார்த்திகள் இவ்வகை யான எண்ணக்கருக்கள் எவ்வகையில் சம்பந்தப்படு கின்றன என்பதைக் கவனத்திற் கொள்ளல் வேண்டும்
விடையளிக்கும் போது அவசியமேற்படின் குறிப்பிட்ட சம்பவம் நடைபெறாது தவிர்த்திருப்பதற்கு என்ன நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கலாம் என்பதை யும் குறிப்பிடலாம். இது பரீட்சார்த்தியின் சிந்தனைத் திறனைப் பரீட்சகருக்கு எடுத்துக்காட்டுவதாக அமை to T.
விடைகளில் தெளிவு, இலகுவாக விளங்கக்கூடிய தர்க்கரீதியான ஒழுங்கமைப்பு, மொழித் தவறுகள் இன்மை என்பன பரீட்சார்த்தியின் வெற்றிக்கு உதவி யாக அமையும்.
விடையில், பாடசாலை, கல்வித்திணைக்களம், கல்வி யமைச்சு என்பவற்றின் ஒழுங்கமைப்பு, அட்டவணை கள், சுற்று நிருபங்கள் என்பனவும், எடுத்துக் காட்டப்படலாம். மேலும் தாபனக் கோவை, நிதிப் பிரமாணங்கள் என்பனவும் ஆதாரங்களாக எடுத்தா ளப்படலாம். விடைகள் பொதுவானதாயிராது, குறிப் பான தன்மைகளைக் கொண்டிருக்க இவை உதவியாக அமையும்.
விடையளிப்பவர், தக்கநிகழ்ச்சிகள், உதாரணங்கள் என்பனவற்றை எடுத்துக்காட்டித் தமது விடையை நியாயப்படுத்த வேண்டும். விடையினைப் பொதுவான தன்மையினதாக எழுதுவதைப் பரீட்சார்த்திகள் கண் டிப்பாகத் தவிர்க்கவேண்டும். உதாரணமாகத் திட்ட மிடல் ஒழுங்காக இருக்கவில்லை, தொடர்பாடல் சிறப்பாக இருக்கவில்லை என்பன போன்ற சொற் பிர யோகங்கள் போதிய விளக்கங்களைத் தராது இருப்ப துடன் விடையின் தரத்தையும் குறைக்கும்.

Page 7
O3.
3.
மாதிரி விடய ஆய்வுகள் :
விடய ஆய்வு ஒன்று
பெரிய மாவை சிதம்பரா வித்தியாலயம் நிர்மானிக்கப் பட்டுவரும் ஆலய மண்டபத்தில் நடாத்தப்படுகின்றது இப்புதிய ஆலய மண்டபத்தின் செவ்வக வடிவமான ஒரு பகுதியில் ஆண்டு ஒன்று தொடக்கம் ஆண்டு ஐந்து வரை யிலான வகுப்புக்கள் நடாத்தப்படுகின்றன. பாடசாலை யின் மொத்த மாணவர் தொகை 24 ஆகும். தரைக்குச் சீமெந்து இடப்பட்டுள்ளது. வாங்குகள் கதிரைகள் என்பன போதியளவுக்கு இருந்தபோதிலும், கட்டடம் இல்லாமையால் ஆலய தங்கு மண்டபத்தில் வகுப்புக்களை நடாத்துவதற்குக் கோயில் ஐயர் அனுமதி வழங்கியுள்ளார். பாடசாலைக்குச் சொந்தமான சில அலுமாரிகள் ஆலயத்தின் வேறோர் இடத்தில் வைக்கப்பட்டுள்ளன. அப்பொருள்கள் தேவைப்படும்போது இரண்டு ஆசிரியர்களால் தூக்கிவரப் படும். பாடசாலைக்கு வரும் மாணவர்கள் வறிய குடும் பங்களைச் சேர்ந்தவர்கள் என்பது தெளிவு.
இப்பாடசாலைக்கென இரண்டு ஏக்கர் விஸ்தீரணமுள்ள காணி சுவீகரிக்கப்பட்டு ஆறு வருடங்கள் கழிந்து விட்ட போதிலும் கட்டடம் அமைக்கும் வேலைகளை ஆரம்பிப்ப தற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டமைக்கான அறி குறிகள் ஏதும் தென்படவில்லை. கட்டட நிதியைச் சேகரிப்பதற்கான சகல முயற்சிகளையும் ஆலயத்தின் ஐயரே தலைமைதாங்கி மேற் கொள்கின்றார். அவரின் தலையீடு இன்றேல் இப்பாடசாலை பல மாதங்களுக்கு முன்னரே மூடப்பட்டிருக்கும். வருடந்தோறும் ஆனி மாதத்தில் கட்டடத்திற்கான நிதி சேகரிப்புத்திட்டங்கள் அமுற் படுத்தப்பட்டபோதிலும், கட்டடம் நிர்மாணிக்கப்படும் வேலைகள் இதுவரையில் ஆரம்பிக்கப்படவில்லை.
இப்பாடசாலையில் கற்கும் 24 மாணவர்களையும் ஏறத் தாழ 2 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள மத்திய மகாவித் யாலயத்திற்கு மாற்றும்படி உதவிக் கல்விப் பணிப்பாளர் அவர்கள் செய்த சிபாரிசை கோயில் ஐயரும், தலைமை ஆசிரியையும் கடுமையாக எதிர்த்து நின்றனர். பெற்றோ ரும், பிரதேச பாராளுமன்ற உறுப்பினரும் இது தொடர்பான விடயங்களை விளக்கிக் கூறியபின்னர் அம்முயற்சி கை விடப்பட்டது. எனினும் இப்பாடசாலை ஆங்கில ஆசிரியை

- 5 -
உதவிக் கல்விப் பணிப்பாளரின் கருத்துக்கு இணக்கம் தெரிவித்தார். அவரது வீடு மேற்குறிப்பிட்ட மத்திய மகா வித்தியாலயத்திற்கு அருகே அமைந்துள்ளது. எனவே அது அவருக்கு செளகரியமானதாக அமையும் என்பதில் gu மில்லை. புதிதாக நியமனம் பெற்றுவந்த உதவிக் கல்விப் பணிப்பாளர் அவர்கள் பாடசாலை வருடாந்த அறிக்கை யைப் பெறுவதற்காகப் பாடசாலைக்கு வந்தார். பல வரு டங்களாக வருடாந்த அறிக்கை எழுதப்படாமையால் அவற் றைப் பெறுவது மிக முக்கியமானது என அவர் கருதினார், உதவிக் கல்விப் பணிப்பாளர் அவர்கள் பாடசாலைக்கு வந்தபோது 14 மாணவர்கள் கோயில் மண்டபத்தின் திண் ணையில் விளையாடிக் கொண்டிருந்தனர். தலைமை ஆசி ரியை பாடசாலைக்குச் சமூகமளிக்கவில்லை. அவர் சுகவீனம் காரணமாகப் பாடசாலைக்குச் சமூகமளிக்கமுடியாமையை அறிவித்துக் கடிதம் அனுப்பியிருந்தார். அதனைப் பதிற் கட மையாற்றுகின்ற பதில் அதிபராகிய ஆங்கில ஆசிரியை ஏற்க னவே 'லொக்' பதிவேட்டில் குறிப்பிட்டிருந்தார். அக்குறிப்பு இரண்டு பக்கங்கள்வரை நீண்டிருந்தது. முதல்நாள் தலைமை ஆசிரியை அவரைக் கண்டித்துப் பேசியவிதமும் பயன்படுத்திய கடின வார்த்தைகளும் லொக் பதிவில் அடங்கியிருந்தன. தத்தமக்கு வாய்ப்புக் கிடைக்கும்போது ஒருவருக்கு எதிராக மற்றொருவர் எழுதிய குறிப்புக்களே “லொக் பதிவேட்டில் காணப்படுகின்றமையை அதனைப் புரட்டி வாசித்த உதவிக்கல்விப் பணிப்பாளர் அவர்கள் புரிந்து கொண்டார். தலைமை ஆசிரியை ஆங்கில ஆசிரி யையை நோக்கும் விதமும், ஆங்கில ஆசிரியை தலைமை ஆசிரியையை நோக்கும் விதமும் அக்குறிப்புக்களின் மூலம் தெளிவாகத் தெரிந்தன. பாடசாலையினுள் நிலவும் ஊழல் கள், பிரச்சினைகள் போன்றனவும் அதன்மூலம் தெளிவா கத் தெரியவந்தன.
ஆண்டறிக்கைகள் எதுவும் தயாரிக்கப்பட்டிருக்கவில்லை. வகுப்புப்பதிவேடுகள், தினவரவுப் பதிவேடு போன்றவை பேணப்படவில்லை. மாணவர் வரவுப் பதிவேடு ஆச்சரி யத்தை விளைவிப்பதாகக் காணப்பட்டது. அதிபர் பாட சாலைக்கு வருகைதந்த நாட்களில் மாத்திரம் மாணவர் வரவு 30 பேர்வரை அடையாளமிடப்பட்டிருந்தது. உதவி ஆசிரியை மாத்திரம் கடமையாற்றிய நாட்களில் வரவு 10-14 மாணவர் வரையிலேயே பதிவாகியிருந்தது.
உதவிக் கல்விப் பணிப்பாளர் அவர்கள் கோயில் ஐயரை அணுகிப் பாடசாலையைப் பற்றி விசாரித்தபோது அப்பாட

Page 8
(1)
(2)
(3)
གང་མ-6 -----
சாலை ஒரு குறித்த குலத்திற்குரியது எனவும், அயற் பாடசாலைக்கு அவர்களை அனுப்புவது நியாயமற்றது எனவும், அவர்களுக்காகப் புதியதொரு பாடசாலையை ஒதுக்குவது அரசின் பொறுப்பாகும் எனவும் ஐயர் எடுத் துக் கூறினார். இப்பாடசாலையை மூடிவிடுவதற்குத் தான் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை எனவும் உறுதியா கத் தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலின் பின்னர் உதவிக்கல்விப் பணிப்பா ளர் அவர்கள், கடந்த வருட அறிக்கைகளை 10 நாட்க ளுள் தயார்ப்படுத்த வேண்டுமெனவும் அதன் பின்னர் தனக்கு அறிவிக்கவேண்டுமெனவும் குறிப்பிட்டுப் பாட சாலை முகாமைத்துவம் தொடர்பான சில கருத்துக்களை யும் எழுதிவிட்டுச் சென்றார். இவ்வாறாக மூன்று தடவை கள் எச்சரிக்கை செய்தபோதும் வருடாந்த அறிக்கை தயார்ப்படுத்தப்படவில்லை. அதிபரது விடுதலைக்கான காரணங்கள் வினவப்பட்டபோது அதிபர் (தலைமை ஆசிரியை) பல காரணங்களைச் சமர்ப்பித்தார். அவை பெரும்பாலும் சுகாதாரக் காரணங்களாகும். ஏனையவை சொந்தக் கடமைப் பளுக்கள் ஆகும்.
இப்பாடசாலையை இவ்வாறாக 14 மாணவர்களுக்காக நடாத்துதல் பாரிய வீண்விரயமாகும் எனவும், குல பேதங் களை வளர்ப்பதற்கான ஒரு வழிவகை எனவும் இப்பாட சாலையை மூடிவிட்டு மாணவர்கள் அனைவரையும் அயலில் உள்ள விக்னேஸ்வர வித்தியாலயத்திற்கு அனுப்புதல் உத்தமம் எனவும் சிபார்சு செய்த அறிக்கையொன்றினை கோட்டக்கல்வி அதிகாரிக்கு அவர் அனுப்பிவைத்தார். இப்பாடசாலையை உடனடியாக மூடிவிடும்படி கோட்டக் கல்விப் பணிப்பாளர் உத்தரவிட்டார். எனினும் பாட சாலை தொடர்ந்தும் அவ்வாறே நடைபெறுகின்றது:
பின்வரும் வினாக்களுக்கு விடை தருக :
இப்பாடசாலையில் நிலவும் பிரச்சினைகளைத் தனித்தனியே ஆராய்க.
அப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நீர் கூறும் வழிவகை களை விளக்குக.
உதவிக்கல்விப் பணிப்பாளரின் நடவடிக்கைகள் பற்றிய உமது கருத்துக்களைத் தருக

حس۔ 7 مسس۔
(4) நீர் இவ்வுதவிக்கல்விப் பணிப்பாளராக இருப்பின் மேற்
கொள்ளும் நடவடிக்கைகள் யாவை?
(5) இப்பாடசாலையின் அதிபர் பதவி உமக்கு வழங்கப்பட்டால்
நீர் எத்தகைய செயற்பாடுகளை மேற்கொள்வீர்.
(6) பாடசாலையை உடனடியாக மூடிவிடும்படி கோட்டக்கல்விப்
பணிப்பாளர் உத்தரவிட்டது நியாயமானதா?
(7) மாணவரின் கல்வி முன்னேற்றத்திற்குக் கோயில் ஐயரும்
தலைமை ஆசிரியையும் தடையாக உள்ளார்கள் ஆராய்க.
விடை எழுதுவதற்கான குறிப்புகள்
விடய ஆய்வு ஒன்று
வினா 1.
இப்பாடசாலையில் நிலவும் பிரச்சினைகளைப் பின்வருமாறு வகைபடுத்தலாம்.
1. வளப்பற்றாக் குறையும், இருக்கும் வளங்கள் நன்கு பயன்படுத்
தப் படாத நிலையும்.
அதிபரின் முகாமைத்தவத்தின் குறைபாடு. 3 சுமுகமற்ற அதிபர்-ஆசிரியர் உறவு.
4. சீரற்ற அதிபர் திணைக்களத் தொடர்பு.
5. குறைபாடுள்ள நிதிமுகாமை.
உதாரணங்கள் காட்டி ஒவ்வொரு வகையான பிரச்சினையையும் விளக்குக.
உ+ம் பாடசாலைக்கான கட்டிடம் இன்மை.
பிள்ளைகளின் வளர்ச்சிக்கு ஆசிரியர் வளம் முறையாகப் பயன் படுத்தப்படவில்லை. அதிபரிடம் பாடசாலை முகாமைத்துவக் குறைபாடுகள் உள. பிழையான பதிவுகளுக்கு இடமளித்தமை. பாடசாலையில் உள்ள ஒரே ஒரு ஆசிரியராலும் கூட ஏற்கப்படாத தலைமைத்துவம். பிரதான இலக்காகிய மாணவர் கல்வியில் அக்கறை காட்டாத நிலை. உதவிக்கல்விப் பணிப்பாளரது சிபார்சுகளைப் புறக்கணித்தமை. குறிப்பான உதாரங்கள் காட்டி விளக்கவும். விடையினைத் தர்க்க ரீதியாக எழுதவும்.

Page 9
வினா 2.
1.
பெற்றோர், பழைய மாணவர் ஆகியோரின் உதவியுடன் சேக ரித்த பணத்தைக் கொண்டு தற்காலிக வகுப்பறை ஒன்றைச் சிரமதான அடிப்படையில் கட்டிக் கோயிலிலிருந்து பாடசா லையை மாற்றலாம்.
ஆசிரியரது ஒத்துழைப்பைப் பெறுவதுடன் கற்றல் கற்பித்தல், வள அபிவிருத்தி தொடர்பான செயற்திட்டங்களைத் திட்ட மிட்டு அமுற்படுத்தலாம்.
பாராளுமன்ற உறுப்பினரது உதவியுடன் நிரந்தர கட்டடம் ஒன்றை அமைக்க வழிவகைகளை மேற்கொள்ளலாம்.
கலைத்திட்ட முகாமை, பாடசாலை - சமூகத் தொடர்பு, மேற் பார்வை, நிதிமுகாமை போன்ற அம்சங்களில் அதிபரது முகா மைத்துவத் திறனை விருத்தி செய்ய முகாமைத்துவப் பயிற்சி நெறிகளில் பங்கு கொள்ள வழிவகைகளை மேற்கொள்ளலாம்.
sh бірт 3.
1.
பாடசாலையை மூடுவதற்குக் கோட்டக் கல்விப் பணிப்பாளருக் குச் சிபார்சு செய்தமை பொருத்தமானதல்ல. கல்வியளித்தல் மனித உரிமை. அதிலும் ஆரம்பக் கல்வியளித்தல் மிகவும். அத்தியாவசியமான பணி.
பாடசாலையின் பின்னணியை உதவிக் கல்விப் பணிப்பாளர் மிக முக்கியமான தீர்மானம் எடுக்கும் முன்பு தெளிவாக அறிந் திருக்க வேண்டும். தனது சிபார்சு ஒன்று எந்தளவுக்கு நடை முறைச் சாத்தியமானது என்பதில் அவர் போதிய கவனம் செலுத்தித் தீர்மானம் எடுக்கவில்லை. பாராளுமன்ற உறுப்பி னர், கோயில் ஐயர், பெற்றோர் ஆகியோரின் பக்கபலம் அதிப ருக்குண்டு என்பதையும் கருத்திற் கொண்டிருக்கவேண்டும். தீர்மானம் செய்யும் முன்பு போதிய தகவல்கள் திரட்டப்படுவது அவசியமாகும். அத்துடன் பல்வேறு அம்சங்களும் சீர்தூக்சி ஆராயப்படவும் வேண்டும்.
இவ்வாறான பிரச்சினையுள்ள பாடசாலையில் உதவிக்கல்விப் பணிப்பாளரது அதிபருடனான தொடர்பு நேரடியானதாக இருந்தால் பிரச்சினைகளையும் பாடசாலையில் செய்து முடிக்க வேண்டிய வேலைகளையும் கலந்துரையாடலாம். வருடாந்த அறிக்கை கோரும் விடயத்திலும் பாடசாலையின் ஏனைய முகாமைத்துவப் பிரச்சினையின் விடயத்திலும் அதிபருடனான நேரடித் தொடர்பாடல் பயனளிப்பதாக அமையும். இவ்வாறான

-- 9 --س-
நேரடித் தொடர்பாடல் அதிபர்-கல்விப் பணிப்பாளர் உறவைச் சுமூகமாக்கி செயற்பாடுகளை இலகுவில் மேற்கொள்ளக்கூடிய சூழலை ஏற்படுத்தியிருக்கும்.
1.
I
2
அதிபரை நேரடியாகச் சந்திக்க முயற்சி எடுத்திருக்கலாம். தொடர்பும், தொடர்பாடலும் நிலைமையைச் சுமூகமாக்கி யிருக்கும்.
கல்வித் திணைக்களத்தின் மூலம் தற்காலிகக் கட்டடம் ஒன்றை அமைக்கச் சிபார்சு செய்திருக்கலாம். இது பாடசாலை முகா மைத்துவத்தில் அனாவசியமான தலையீடுகளைத் தவிர்க்க, வழியேற்படுத்தியிருக்கும்.
பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின்/சபையின் விஷேட கூட்ட மொன்றை அதிபரைக் கொண்டு கூட்டுவித்து சேகரித்த நிதியு டன் பாடசாலை அபிவிருத்தி வேலைகளைச் செய்ய ஊக்கு வித்திருக்கலாம்.
அதிபருக்கும் ஆசிரியைக்குமிடையேயுள்ள முரண்பாட்டினை நட்பு முறையில் கலந்துரையாடித் தீர்த்திருக்கலாம். முரண் பாடுகள் நீக்கப்படுவதால் சகோதரத்தன்மை வாய்ந்த சூழல் ஏற்படும். இது வினைத்திறன் மிக்க பாடசாலைச் செயற் பாட்டிற்கு வழிவகுக்கும்.
பிரதேசமட்டத்தில் நடாத்தப்படும் அதிபர்கள் பயிற்சிநெறியில் பங்குபற்ற இப்பாடசாலை அதிபருக்குச் சிபார்சு செய்திருக்க லாம். அன்றியும் நிறுவனவிருத்தி எனும் புதிய முகாமைத்துவத் திட்டத்தின் கீழ் இப்பாடசாலையையும் உள்ளடக்கி அதனை விருத்தியாக்க முயற்சி எடுத்திருக்கலாம். இதனால் இது ஒரு பயன்தரும் பாடசாலையாக (Effective School) உருவாக வழியேற்படும்.
வினா 5.
பாடசாலையின் பிரச்சினைகளை இனங்காண வேண்டும்.
பிரச்சினையைத் தீர்ப்பதற்கும் பாடசாலையின் உயர்வுக்கும் பயன்படக்கூடிய செயற்திட்டங்களைத் திட்டமிட்டு அமுல் படுத்தலாம்.
செயற்திட்டம், உதவி ஆசிரியர் உதவியுடன் நடைமுறைப்படுத் தப்படலாம். இதற்கு ஆசிரிய உறவை வலுப்படுத்த வேண்டும். முன்னுரிமை அடிப்படையில் செயற்திட்டங்களை அமுல் படுத் தலாம்.

Page 10
4.
10 -
பாடசாலை அபிவிருத்திச் சபை பழைய மாணவர் சங்கம், சமய ஸ்தாபனங்கள் என்பவற்றின் உதவியுடன் சேகரித்த உதவியைக் கொண்டு தற்காலிக வகுப்பறையைக் கட்டலாம். உதவிப்பணிப்பாளருடன் நல்ல உறவினை ஏற்படுத்துவதன் மூலம் அவரது ஒத்துழைப்பைப் பெறலாம்.
5. பாராளுமன்ற உறுப்பினரைச் சந்தித்து நிரந்தரக் கட்டடம்
6.
ny f
8.
அமைக்க நிதி ஒதுக்கீடு பெற முயற்சி செய்யலாம்.
ஆசிரியருடன் நட்புறவோடு கலந்துரையாடி அவரது போக்கு வரத்து, உணவு, தங்குமிடவசதிகள் போன்ற பிரச்சினைகளுக்கு சமூக உதவியைப் பெற்றுக் கொடுக்கலாம். இது ஆசிரியர்அதிபர் உறவினை வளர்க்கும்; பிழையான விளக்கங்கள் ஏற்படுவதை இதன்மூலம் தவிர்க்கமுடியும்.
*ற்றல் கற்பித்தல் அபிவிருத்தி இப்பாடசாலையைப் பொறுத்து மிகவும் அவசியமானது. ஆகையால் ஆசிரியரது உதவியுடன் மாணவர்களது கற்றல் மேலோங்கத்தக்க கலைத்திட்டச் செயற் பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம்.
சிறந்த பாடசாலை ஒன்றை உருவாக்குவதை இலக்காகக் கொண்டு ஊக்குவித்தல் உத்திகளைக் கையாண்டு ஆசிரிய, மாணவர் அடைவுகளை அதிகரிக்கலாம்.
சிேசாமைத்துவத்தின் நவீன கருத்துக்களைப் பிறபாடசாலை அதிபர்களிடமிருந்தும், முகாமைத்துவப் பயிற்சிகளிலிருந்தும் பெற்று ஒரு பயன்தரும் பாடசாலை அதிபராக வர முயற்சி செய்யலாம். w
வினா 6
1.
2.
உதவிக்கல்விப் பணிப்பாளரின் சிபார்சின் படியே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் கோட்டக்கல்விப் பணிப்பரி ளர், உதவிக்கல்விப் பணிப்பாளருடன் உரையாடி உண்மையான குழ்நிலையை அறிவதுடன் அது தொடர்பான விசாரணை ஒன்றையும் மேற்கொண்டிருந்தால் இவ்வுத் தரவை அவர் பிறப் பிக்காமல் விட்டிருக்கலாம்.
பாடசாலையை மூடிவிடுவதற்கான நிருவாக அடிப்படையிலான காரணங்கள் இருக்குமாயினும் பாராளுமன்ற உறுப்பினருடனோ அன்றி மாகாண அல்லது மத்திய கல்வியமைச்சுடனோ தொடர்புகொண்டு தீர்மானத்தை எடுத்திருக்கலாம்.

3,
1 ...
கல்வி ஒரு மனித அடிப்படை உரிமை என்பது கோட்டக்கல்விப் பணிப்பாளரது கவனத்திலிருக்க வேண்டியதாகும்.
1. கட்டடம் கட்டுவதற்கான நிதி ஆறு வருடங்களாக அறவிடப்
பட்டும் கட்டடம் அமைக்கப்படவில்லை. இதற்கு ஐயரும் அதிபரும் பொறுப்பாவர்.
அதிபரது பங்கினையும் ஐயரே வகிக்கக்கூடியளவு அவரது தலையீடு அதிகமாகக் காணப்படுகின்றது. அதிபர் சுயசிந்தனை யுடன் செயற்படும் நிலை காணப்படவில்லை.
பாடசாலை முகாமைத்துவக் கடமைகளிலும், மாணவர்களத் கல்வி வளர்ச்சியிலும் அதிபர் காட்டிய அக்கறை மிகவும் குறை வாக இருப்பதற்கு உதாரணங்கள் உள.
பாடசாலையின் குறைபாடுகளை நீக்கவும், அதன் வளத்தினைப்
பெருக்கவும் பக்க உதவிகள் இருந்தும் அவை பயன்படுத்தப் படவில்லை; இந்நிலைக்கு அதிபரும், ஐயரும் பொறுப்பாக இருந்துள்ளனர். அதாவது பாடசாலைக்கு இருந்த சமூக உதவி பயன்படுத்தப்படவில்லை.
ஆசிரியர் அதிபர் உறவு செம்மையாக இராமையால் கற்கும் சூழல் ஊக்கமளிப்பதாக இல்லை. இவ்வுறவு சீராக இருப்பது பாடசாலையின் பொதுவான முன்னேற்றத்திற்கும் மாணவர்க ளது கற்றல் முன்னேற்றத்திற்கும் அவசியம். இத்தகைய சூழலை அதிபர் பாடசாலையில் ஏற்படுத்தத் தவறிவிட்டார்.

Page 11
- 12 -
விடய ஆய்வு இரண்டு
3 2
அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் ஒன்றான பொட்ஸ்வா னாவில் நவீன முறைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கல்வித் திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டம் பாடசாலை களில் ஆரம்பக் கல்விப் பிரிவில் புதிய விஞ்ஞானப் பாடவிதா னத்தை (கலைத்திட்டத்தை) அபிவிருத்தி செய்வதை இலக்காகக் கொண்டது. 1972ல் ஆரம்பித்து வைக்கப்பட்ட இத்திட்டத்தின் முதலாவது கட்டச் செயற் திட்டங்கள் 1980 அளவில் முடிவுறும் நிலையில் இருந்தன.
1970ம் ஆண்டளவில் எல்லாப் பாடப் பரப்புக்களையும் உள்ள டக்கிய முழு அளவிலான பாட விதான விருத்தித் திட்டம் பொட்ஸ்வானாவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாடவிதான அபிவிருத்தி ஆலோசனைக் குழுவின் தலைமையில் முன்னைய கலைத் திட்டங்களையும் கற்பித்தல் நூல்களையும் மாற்றியமைப்பதற் காகப் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டன. பொட்ஸ்வானாவின் கல்வியமைச்சு விஞ்ஞான ஆசிரியர் சங்கத்திற்கு விஞ்ஞானக் கலைத் திட்டத்தைப் புதுப்பித்தலுக்கான பொறுப்பை வழங்கியது.
ஆரம்ப விஞ்ஞானக் குழுவொன்று புதிய விஞ்ஞான பாட விதானங்களையும், ஆசிரியர் வழிகாட்டிகளையும், உபகரணங்களை யும் ஆண்டு ஒன்று முதல் ஐந்துவரையான எல்லா ஆரம்ப வகுப்பு களுக்கும் தயாரித்தது. விஞ்ஞானத்தைக் கற்பிப்பதற்கான அலகு கள் பரந்த கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டிருந்தன. இத்திட்டமானது அடிப்படை அலகுகளான விஞ்ஞான வளர்ச்சி, மனிதவாழ்க்கை, சூழல் முதலியவற்றில் ஒவ்வொரு பாடசாலையும் தங்கள் தேவைகளுக்கேற்றவாறு தெரிவு செய்யக்கூடிய தலைப்புக்க ளையும் கொண்டதாயிருந்தது.
அடுத்து, விஞ்ஞானக் குழு பாடசாலையின் இரண்டாம் நிலைக்கு முக்கியத்துவமளிக்கத் தீர்மானித்தது. எனவே இத்திட் டம் கனிஷ்ட இடைநிலை விஞ்ஞானத்திட்டம் என வழங்கப்பட்டது. இதற்கான கலைத்திட்ட அபிவிருத்திக் குழு அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களும், ஆசிரிய பயிற்சியாளர்களுமாக இருபதுபேரை உள் ளடக்கியிருந்தது. இக்குழு பாடப் பரப்பின் உள்ளடக்கத்தையும் எழக்கூடிய கற்பித்தல் பிரச்சினைகளையும் தீர்மானித்தது. உள்ள டக்கம் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு குழுவின் ஒவ்வொரு உறுப்பின ருக்கும் எழுத்து மூல ஒப்படை வழங்கப்பட்டது. இவ்வொப்படை யைப் பூரணப்படுத்தும் தலைவர் அதைப் பதிப்பித்து மேலதிக

- 13 -
ஆலோசனைக்காக அக்குழுவிற்குத் திருப்பி அனுப்புவதாக ஒழுங்கு மேற்கொள்ளப்பட்டிருந்தது. விஞ்ஞானக் குழுவிலிருந்து பெறப்படும் விதப்புரைகளின் அடிப்படையில் தயாரிக்கப்படும் இரண்டாம் ஆய்வு முதலாவது வரைவாக (First Draft) உருப்பெறும். ஒவ்வொரு அல கின் தொடக்கத்திலும் கொடுக்கப்படும் முன்னுரையானது ஆசிரி யர்க்கு வழிகாட்டியாகவும், மாணவர்க்கு வினாத்தாள் ஒப்படையா கவும் அமையும்
கற்பித்தல் நூல்கள், உபகரணங்கள் என்பவற்றினூடாக விஞ் ஞானத்தின் உள்ளடக்கத்தையும், கற்பித்தல் முறைகளையும் நவீனப் படுத்தல் மட்டுமன்றி, ஆசிரியர் பயிற்சித் திட்டத்தின் மூலமும் இதனை ஏற்படுத்தலே இத்திட்டத்தின் நோக்கமாகும். தற்பொழுது இரண்டாம் நிலைக்கல்வியின் கட்டாய பாடமாகவுள்ள பொது விஞ்ஞானத்தின் காலத்திற்கொவ்வாத நூல்கள், உபகரணங்கள் என்பனவற்றை நீக்கி, மாணவனின் சுற்றாடலுக்கும், அனுபவத்திற் கும் தொடர்புறுமாறு புதிய உள்ளடக்கத்தை அறிமுகப்படுத்தி இயற்கையான ஆர்வத்தையும், விஞ்ஞான வளர்ச்சியையும் ஏற்படுத் துவது இதன் ஒரு விசேட அம்சமாகும்.
பெளதீகம், இரசாயனம் எனத்தனித்தனியாக ஒன்பதாம், பத் தாம் ஆண்டுகளிலிருந்த பாடங்கள் நீக்கப்பட்டு பொது விஞ்ஞானம் அதற்குப் பிரதியீடாகச் சேர்க்கப்பட்டது. இதில் பெளதீகம், இரா சாயனம் இரண்டும் ஒன்றிணைந்த பாடமாக அமைந்தன. இம்மாற் றம் மாணவர்க்குப் பரந்த அடிப்படையிலான கல்வியை வழங்குகின் றமை இன்னொரு சிறப்பம்சமாகும்.
இத்திட்டத்தின் சீரான நடைமுறைப்படுத்தலை உறுதிப்படுத்த விஞ்ஞானக்குழு உபகரணங்களையும், கற்பித்தல் முறைகளையும் விளக்குவதற்காக ஆசிரியர்களை மீளப் பயிற்சியளிக்கும் ஒரு தொடர் திட்டம் ஏற்படுத்தப்பட்டது. பொட்ஸ்வானாவின் விஞ்ஞான ஆசிரி யர் சங்கம் கல்வியமைச்சுடன் சேர்ந்து நடைமுறைப்படுத்துவதற் காக வேலைத்திட்டங்களை நடாத்தி ஆசிரிர்களின் அனுபவங்களை யும், கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளும் திட்டம் ஒன்றைக் கொண்டிருந்தது. புதிய திட்டத்தை எல்லா விஞ்ஞான ஆசிரியர் கட்கும் அறிமுகப்படுத்தும் வரையில் ஆசிரியர்களை மீளப் பயிற்று விக்கும் தொடரும் விஷேடதலைப்புக்கள் சிலவற்றிலான படச்சுருள் கள் முன்னரே தயாரிக்கப்பட்டுக் கறபித்தலுக்கு உதவியாக விஞ்ஞா னக் கல்வி ஆசிரியர்களால் உபயோகிக்கப்பட்டு வருகின்றது
பின்வரும் வினாக்களுக்கு விடை தருக.
LUK'. 1 பொட்ஸ்வானாவின் விஞ்ஞானகெழுத்தி2தில் நவீன முறைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க முற்பட்டதற்கான காரணங்களைச் சுருக்கமாக ஆராய்க.

Page 12
- 4 -
2. விஞ்ஞானக் கலைத்திட்டவிருத்திக்கு அனுபவம் வாய்ந்த ஆசி ரியர்களது பங்களிப்பை அந்நாட்டுக் கல்வியமைச்சு நாடியதற் கான காரணங்கள் எவை எனக் கருதுகின்றீர்?
3 அடிப்படை அலகுகளைத் தெரிவு செய்வதில் பாடசாலை களுக்கு இடமளிக்கப்பட்டிருந்தமை பற்றி உமது கருத்து யாது? இலங்கையிலிருந்து உதாரணங்காட்டி விளக்குக.
4. கலைத்திட்டத்தில் புதுமைகள் அறிமுகப்படுத்தப்படும் போது பாடசாலை அதிபர் எத்தகைய யுத்திகளைக் கலைத்திட்ட அமுலாக்கத்தைப் பொறுத்துக் கையாளலாம்.
5. பொட்ஸ்வானாவின் கனிஷ்ட இடைநிலைக் கலைத்திட்டத்
தின் சிறப்பம்சங்கள் யாவை?
6. பொட்ஸ்வானாவின் விஞ்ஞானக் கலைத்திட்டத்திற்கும் இலங்கையின் விஞ்ஞானக் கலைத்திட்ட விருத்திக்குமிடையே நீர் காணும் ஒற்றுமைப்பாடுகள் யாவை?
விடை எழுதுவதற்கான குறிப்புகள்
விடய ஆய்வு இரண்டு
குறிப்பு - விடய ஆய்வை வாசித்து கலைத்திட்டவிருத்தி தொடர் பாக இலங்கையில் உள்ள உமது அனுபவங்கள் அறிவு என்பன வற்றைப் பயன்படுத்தி விடையளிக்கவும். அவசியமாயின் கற்பனை, ஊகம் என்பனவற்றையும் பயன்படுத்தலாம்.
வினா 1,
(1) கலைத்திட்டத்தை மாற்றியமைப்பதற்கு பல காரணங்கள்
உள. பின்வருவன அவற்றுட் சில:
- அரசியற் சித்தாந்தம் - கல்விக் கொள்கை - சமூக மாற்றமும், தேவைகளும் - நாட்டின் பெர்ருளாதார அபிவிருத்தி - விஞ்ஞான தொழில் நுட்பவிருத்தி - கலாசார விருத்தி
இக்காரணிகள் கல்வி இலக்குகளை நிர்ணயிக்கவும் அதன் மூலம் கலைத்திட்ட மாற்றம் ஏற்படவும் பங்களிக்கும். ஒவ்வொன் றையும்பற்றிச் சுருக்கமாக விளக்கவும்.

(2)
(3)
(4)
(5)
3
ளுக்கே நன்கு விளங்கும். எழக்கூடிய பிரச்சினைகளை உள்
ཨ་མ་ 15 ཡས་མས་
அரசு நாட்டின் அபிவிருத்திக்கு விஞ்ஞானக் கல்வியின் அவசி யத்தை வலியுறுத்தியிருக்கலாம் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இவ்வம்சங்கள் இடம்பெற்றிருக்கலாம்.
சமூகம் மாற்றமடைவது. அவ்வாறு மாற்றமடையும்போது பல்வேறு தேவைகள் உருவாகின்றன. மாறும் உலகிற்கு இயைபு கொள்ளவேண்டியது அவசியம். விஞ்ஞான தொழில் நுட்ப மாற்றங்களுக்கு எதிர்காலத் தலைமுறையினர் தகுதி பெறுதல் அவசியம்.
பாடவிதான மாற்றம் (கலைத்திட்ட மாற்றம்) பொருளா தார வளர்ச்சிக்கும், விஞ்ஞான தொல்ழி நுட்ப வளர்ச்சிக்கும் ஒரு கருவியாக அமைகின்றது.
நவீன முறைகளுக்கு ஒரு நாடு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியம். அறிவுப் பெருக்கம் பழைய முறைகள் காலங்கடந்ததாகி விடுதல். இந்நிலையில் புதியவற்றுக்கு இட மளித்தல் தவிர்க்க முடியாதது
2
ஒரு நாட்டின் கல்வி வளர்ச்சி ஆசிரியர்களது கையில் உள்ளது ஆசிரியர்களது உதவியின்றி அது தன் கல்வி நோக்கை அடைய முடியாது.
கல்வியின் இலக்கு அதை அடைவதற்கான வழிமுறைகள் என் பனவற்றைப் பற்றிய தெளிவான அறிவை அனுபவம்மிக்க ஆசிரியர்களே கொண்டிருப்பர். எனவே கலைத்திட்ட மாற் றத்திற்கும், கற்பித்தல் முறைகளில் மாற்றம் ஏற்படுத்துவதற் கும் அனுபவம்மிக்க ஆசிரியர்கள் தேவை
கலைத்திட்ட மாற்றம் (பாடவிதான மாற்றம்) நாட்டின் குழல் அதன் தேவைகள் என்பனவற்றுக்குப் பொருத்தமான தாக இருக்க வேண்டும். அனுபவமற்றோர் பொருத்தமான கலைத்திட்டத்தைச் செய்யார்
கலைத் திட்டத்தை (பாடவிதானத்தை) உருவாக்கி நடை முறைப்படுத்தும்போது பிரச்சினைகள் எழுவது வழக்கம். இத் தகைய பிரச்சினைகள் பற்றி அனுபவம் உள்ள ஆசிரியர்க
ளத்திற் கொண்டு கலைத்திட்டத்தை நெகிழ்ச்சியுடையதாக அமைக்க அனுபவம் வாய்ந்தோரே தேவை

Page 13
வினா
2
۔۔۔ 16 ہے۔
மாணவருக்கு விஞ்ஞான எண்ணக் கருக்களைக் கற்பிக்கையில் அவர்களது உளவயது, விளங்கும் ஆற்றல் என்பன கருத்திற் கொள்ளப்படல் வேண்டும். உளவளர்ச்சிக்கு ஏற்பவே எண்ணக் கருக்கள் படிப்படியாக வளர்க்கப்படலாம். பியாஜேயின் எண் ணக்கருக்கள் இதையே வலியுறுத்துகின்றன. இதற்கு ஆசிரியர் அனுபவம் உள்ளவராக இருத்தல் அவசியம்
இன்று கலைத்திட்டத்தில் அறிவு வளர்ச்சிக்கே கூடிய முக்கி யத்துவம் அளிக்கப்படுகின்றது. ஒரு கலைத்திட்டம் அறிவு திறன், மனப்பாங்கு, விழுமியம் என்பனவற்றுக்கு முக்கியத்து வம் கொடுக்கவேண்டும் ஒரு சம நிலையான கலைத்திட்டத் தின் மூலமே சமநிலையான ஆளுமை கொண்ட சமுதாயத்தை உருவாக்கலாம். பொட்ஸ்வானாவின் கல்வியமைச்சு இத்தகைய அம்சங்களைச் சீர்தூக்கிப்பார்த்து அனுபவம் உள்ள ஆசிரியர் களது சேவையைப் பெறத் தீர்மானித்திருக்கலாம்,
3
ஒரு நாட்டின் எல்லைக்குள் பிரதேச வேறுபாடுகள் உண்டு. தாழ்நிலம், கடற்கரையோரப் பிரதேசங்கள், மலைப் பிரதே சங்கள் போன்று இயற்கை அமைப்பில் வேறுபாடுகளிருக்க லாம். மூலவளங்கள் கிடைப்பதில் பிரதேசத்திற்குப் பிரதேசம் வேறுபாடு இருக்கலாம். கலாசாரம், சமூகம் எனும் அம்சங்க ளில் வேறுபாடிருக்கலாம். ஆகையால் பொதுவாக நாடு முழு வதற்கும் அமைக்கப்படும் கலைத்திட்டம் பல்வேறு பிரதேசங் களிலிருக்கும் பாடசாலைகள் பின்பற்றுவதற்கு நெகிழ்ச்சித் தன்மையுடையதாக இருக்க வேண்டும். இலங்கையில் அரசியல் யாப்பின் 13வது திருத்தத்திலும் இவ்வம்சம் குறிப்பிடப்பட் டுள்ளது. இந்நிலையில் பாடசாலைகளுக்குப் பாட அலகுக ளைத் தெரிவு செய்ய இடமளிக்கப்படுதல் பயன் தரும் ஒழுங் காக இருக்கும்.
மேலும் பாடசாலைகள் நகர, கிராமியச் சூழல்களிலிருக்கும் போது பாடவிதானத்தில் சில பாடங்களுக்குரிய அலகுகளைத் தெரிவு செய்கையில் இத்தகைய வேறுபாடுகளைக் கருத்திற் கொள்வதும் பாடசாலைகளுக்கு இத்தகைய தெரிவைச் செய்வ தில் இடமளிக்கப்பட்டிருத்தலும் பொட்ஸ்வானாவின் பாட விதான அமுலாக்கலில் ஒர் அம்சமெனலாம்.
இலங்கையில் 1984 ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட வாழ்க்கைத் திறன் பாடத்தில் பாடசாலைகளுக்கு இத்தகைய தெரிவு செய்யும் சுதந்திரம் இருந்தமையையும் சுட்டிக் காட் டலாம்.

வினா
வினா
- 17 -
பல வளர்ச்சியடைந்துவரும் நாடுகளுக்கு இத்தகைய கலைத் திட்ட அமுலாக்கல் ஒழுங்கு சிறத்தது. மனிதனைச் சூழலு டன் இயைபாக்கம் செய்யச் செய்வதே கல்வி. ஆகையால் பாடசாலைகள் பிள்ளைகளது சூழலுக்குப் பொருத்தமான வகையில் பாட அலகுகளைத் தெரிவு செய்ய உத்தோசிக்கப் பட்ட பொட்ஸ்வானாவின் ஒழுங்கு பாராட்டற்குரியது.
4
கலைத்திட்ட மாற்றத்தின் நோக்கங்களையும், இலக்குகளையும் தான் சரியாக விளங்குவதுடன் தனது ஆசிரியர், பெற்றோர் போன்றவர்களுக்கும் அவற்றை விளக்க வல்லவராக இருத்தல் வேண்டும்.
கல்வியமைச்சினால் நடாத்தப்படும் கலைத்திட்ட மாற்றம் தொடர்பான கருத்தரங்குகள், வேலையமர்வுகள் என்பவற். றில் தானும் பங்குகொண்டு, தனது ஆசிரியர்களையும் பங்கு கொள்ள ஊக்குவிக்க வேண்டும்.
மாணவர், பெற்றோர் ஆகியோருக்கு அதன் நன்மைகளை விளக்க வேண்டும். அத்துடன் அவர்களது ஒத்துழைப்பையும் கலைத்திட்ட அமுலாக்கத்திற்குப் பெறலாம்.
கலைத்திட்டத்தை அமுல்படுத்துவதற்கான நேர சூசி மாற் றம், மேற்பார்வைத் திட்டம், கலைத்திட்ட அமுலாக்கல் ஒழுங்கமைப்பு என்பனவற்றை ஏற்படுத்த வேண்டும்.
கலைத்திட்ட அமுலாக்கத்திற்கான வகுப்பறை வசதிகள், உப கரண வசதி, களவேலை போன்ற ஒழுங்குகளைச் கலைத்திட்ட அமுலாக்கத்திற்கான அறிவுறுத்தல்களுக்கு இசைய மேற் கொள்ள வேண்டும்.
மாணவர்களை மேற்பார்வை செய்தல், மதிப்பீடு செய்தல், பின்னூட்டல்களைப் பெறல் என்பன கிரமமான முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும்.
கலைத்திட்ட மாற்றம் தொடர்பான எதிர்மறையான கருத் துக்களை எந்த மட்டத்திலாயினும் (மாணவர், ஆசிரியர்) நீக்குதல் அவசியம்,
5
கலைத்திட்ட உருவாக்கத்தில் அனுபவம் வாய்ந்த ஆசிரியர் குழுவொன்று சம்பந்தப்படுத்தப்பட்டமை அது சிறப்பாக உருவாக்கப்பட உதவியது. இவ்வம்சம் கலைத்திட்டத்தின்

Page 14
سے 18 ـــــــــسے
பொருத்தப்பாடு, தரம் என்பவற்றுக்கு ஆதாரமாக அமைந்தது.
2. கலைத்திட்டம் உருவாக்கப்படுதல் மட்டும் போதாது ஆசிரி யர்கள் கருத்திற் கொள்ளப்படவேண்டும். மாணவர்களது செயற்பாடு கருத்திற் எடுக்கப்பட வேண்டும். பொட்ஸ்வா னாவின் கனிஷ்ட இடைநிலை விஞ்ஞானக் கலைத்திட்டத் தால் ஆசிரியர்களுக்கு வழிகாட்டிகளும், மாணவர்களுக்கு ஒப் படைகளும் இடம்பெறுவது சிறப்பான அம்சங்களாகும்.
3. கற்பித்தல் முறைகளை நவீனப்படுத்தல் இன்னொரு சிறப்பம்
சமாகும்.
4. தொடர்ந்த ஆசிரியர் பயிற்சி பிரிதொரு சிறப்பம்சமாகும்.
5. மாணவரின் சூழல் அனுபவத்திற்குப் பொருத்தமான உள்ள டக்கம் கலைத்திட்டத்தில் இடம் பெற்றமையும் இன்னொரு சிறப்பம்சமாகும்.
6. ஒருங்கிணைக்கப்பட்ட தன்மை இன்னொரு சிறப்பம்சமாகும்.
வினா 6.
- நோக்கம் (இலக்கு)
- உள்ளடக்கம்
- ஒருங்கிணைப்பு
- கலைத்திட்டவிருத்தி உத்திகள்
- கலைத்திட்ட அமுலாக்கம்
- ஆசிரியர் பயிற்சி
- மதிப்பீடு என்பனவற்றை உள்ளடக்கி இலங்கை அனுபவங்களைச் சேர்த்து ஒப்பீட்டு ரீதியில் விடை அமைக்க.

مسس۔ نہ - مـــــــ
விடய ஆய்வு மூன்று 3.3
இலங்கயிைன் வடமேற்குக் கரையோரமாகவுள்ள கருவூர் என் னும் கிராமத்தில் அமைந்துள்ள பாரதி வித்தியாலயம் ஒர் ஆரம்பப் பாடசாலையாகும். இதன் அதிபரான வீரபத்திரன் ஐம்பத்தெட்டு வயதுள்ளவரும் பொதுவாக எதிர்மறையான மனப்பாங்கும் (Negative Attitude) கொண்டவராவர். நூற்று அறுபது மாணவர்களைக் கொண்ட இப்பாடசாலையில் அதிபரைத்தவிர வேறு ஐந்து பெண் ஆசிரியைகள் உள்ளனர். இவர்கள் ஆசிரியப்பயிற்சி பெற்றவர்கள். கொத்தணி நடைமுறைப்படுத்தப்படும் காலகட்டத்தில் கொத்தணி அதிபரது பல்வேறு செயற்பாடுகளின்போது அதிபர் வீரபத்திரன் ஆசிரியர்களிடம் நம்பிக்கையற்ற பேர்வழி என்பது தெளிவாக இனங் காணப்பட்டது. இதன் காரணமாக அதிபர், ஆசிரியர் தொடர்பு கள் சிறந்ததாக இருக்கவில்லை. இதனால் பாடசாலையின் ஆசிரிய வளம் மாணவர்களது கல்வி முன்னேற்றத்திற்கு முழுமையாகப் பயன் படுத்தப்படவில்லை என்பதற்கான ஆதாரங்களை வகுப்பறை மேற் பார்வை, பரீட்சைப் பெறுபேறுகள் என்பனவற்றின் ஆய்வுகளின் போது கண்டறியப்பட்டன.
தற்போதைய மதிய உணவுத்திட்டம் அமுல்படுத்தப்படுவதற்கு முன்னர் உள்ள காலம். மாணவர்களது மதிய உணவுவேளை "பிஸ்கட்" பகிர்ந்து கொடுக்கப்படும். பாரதி வித்தியாலயத்திலும் அதிபர் பிஸ்கட் பங்கீட்டையே செய்து கொண்டு வந்தார். பிஸ்கட் பங்கீடு தொடர்பான பதிவேடுகள் பார்வையிடப்பட்டபோது மூன்றாண்டு களுக்கு மேலாக எதுவித பதிவேடுகளும் பேணப்படவில்லை என்பது தெரிய வந்தது.
வசதிகள் சேவைகள் கட்டணப்பதிவுகள் ஒழுங்கீனமாகக் காணப் பட்டன. பெற்றுக்கொண்ட பணத்திற்குப் பற்றுச்சீட்டுக்கள் வழங் பப்பட்டிருக்கவில்லை. வசதிகள் சேவைகள் கட்டணங்கள் தொடர் பாகப் பேணவேண்டிய பதிவேடுகள் வரவுசெலவுத் திட்டம் தயா ரித்தல், காலாண்டு அறிக்கைகள் தயாரித்தல் போன்றவற்றில் கொத்தணி மட்டத்தில் போதிய விளக்கங்களும், பயிற்சிகளும் கொடுக்கப்பட்டபோதும் அவை எந்தவிதமான மாற்றத்தையும் குறிப்பிட்ட அதிபர் மீது ஏற்படுத்தவில்லை. இதற்குக் காரணம் அவரிடமிருந்த எதிர்மறையான மனப்பங்கே எனலாம்.
இது ஒருபுறமிருக்க அதிபர் பாடசாலுைத்துக் துறுத் தாமதித்தேயாகும். காலை 7.30 蠶蟾 கும் பாட சாலைக்கு அதிபர் வீரபத்திரன் சமூகமளிக்கும் நேரம் பொதுவாக 8.00 மணிக்கும் பிந்தியேய்ாகும். இது கோட்டத்இன்.பிரதிக் கி.

Page 15
سمت 20 -سست
விப் பணிப்பாளர், கொத்தணி அதிபர் ஆகியோரின் மேற்பார்வை யின்போது உறுதியாகியது. இவ்வாறு அதிபர் பாடசாலைக்குத் தாமதித்து வருவதற்குக் காரணம் அவர் தனது கிராமத்திலிருந்து ஏறக்குறைய மூன்று மைல்களுக்கப்பால் உள்ள ஒரு கிராமத்திற்குச் சென்று மீன், மரக்கறி, அரிசி என்பனவற்றை வாங்கிவந்து வீட்டில் கொடுத்த பின்பே பாடசாலைக்கு வருவதாகும். பாடசாலையின் ஏனைய ஆசிரியர்களது பணி ஒழுக்கத்திற்கும் இது பாதகமானதாக அமைந்தது.
கொத்தணி அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில் இப்பாடசாலை ஒரு முன்னோடிக் கொத்தணியில் இடம் பெற்றிருந்தமையால் அது அண்மிய மேற்பார்வைக்கு உட்படுத்தப்பட்டது. இதனால் அப் பாடசாலையின் முகாமைத்துவக் குறைபாடுகளை நீக்கக் கொத்தணி அதிபர் முயற்சிகளை மேற்கொண்டார். கொத்தணியில் உள்ள ஏனைய அதிபர்களது உதவியையும் பெற இவ்வதிப்ருக்குக் கொத் தணி அதிபர் ஏற்பாடு செய்திருந்தார். நிதிமுகாமை தொடர்பாக உள்ள குறைபாடுகளை நீக்கும்படியும், காலாண்டு அறிக்கையைத் தயாரித்துக் கொத்தணி அதிபருக்கு அனுப்பும்படியும் கூறியபோது வீரபத்திரன் தான் சேவையிலிருந்து ஓய்வு பெறப்போவதாகக் கூறி
Irf T fir.
பாடசாலையின் வருடாந்த அமுலாக்கல் திட்டத்தின் முதற் பகுதி வழமைபோல் பிரதி செய்யப்பட்டுக் கோவையிலிடப்பட்டிருந் தது. செயற்திட்டத்தை உள்ளடக்கிய பாடசாலை வருடாந்த அமு லாக்கல் திட்டத்தின் இரண்டாம் பகுதிக்கு ஒருவித முக்கியத்துவமும் கொடுக்கப்பட்டிருக்கவில்லை.
கொத்தணி அதிபர் வீரபத்திரனுக்கு எவ்வளவோ ஆலோசனை களும், வழிகாட்டலும் வழங்கியும் அவரது பாடசாலைச் செயற் பாடுகளில் முன்னேற்றம் எதுவும் காணப்படவில்லை தனது மேற் பார்வையின்போது கொத்தணி அதிபர் கண்டறிந்த குறைபாடுகளை நிவிர்த்தி செய்யும்படி கூறும்போது ‘நான் அடுத்த மாதத்திலிருந்து ஓய்வு பெறப் போகிறேன்’ எனக் கூறித் தனது கடமையிலிருந்து தப்பிக்கொள்ள முயல்வது அதிபருக்கு வழமையாகிவிட்டது. இதன் மூலம் அதிபர் ஒருவர் பாரதி வித்தியாலயத்திற்கு இல்லாதுபோகும் நிலையைக் கொத்தணி அதிபருக்கு உணர்த்தலாம் என்பது வீரபத் திரனின் உபாயமாகவிருந்தது.
வசதிகள் சேவைகள் கட்டணம், பிஸ்கட் பங்கீடு என்பனவற்றை பற்றிய அறிக்கை ஒன்றைக் கோட்டக்கல்வி அலுவலகத்திற்கு உடன டியாக அனுப்பவேண்டியேற்பட்டதால் கொத்தணி அதிபர் வீரபத் இரனுக்கு அவற்றை உரிய முறையில் அறிக்கை தயாரித்து அனுப்பும்

- 21 -
படி கூறியபோது தனது வழமையான ஒய்வு பெறப் போகும் கதையை வீரபத்திரன் வெளியிட்டார். பாரதி வித்தியாலயத்திற் கற்கும் 160 ஏழைப்பிள்ளைகளின் கல்வியானது தொடர்ந்தும் பாதிக்கப்படுவதை விரும்பாத கொத்தணி அதிபர் ஒய்வு பெறக் கோரும் கடிதத்தை வீரபத்திரனிடமிருந்து பெற்று உரிய படிவங் களை உடனடியாக நிரப்பித் தனது சிபார்சையும் செய்து கோட்டத் தின் பிரதிக் கல்விப் பணிப்பாளருக்கு (DEO)த் தாமதமின்றி அனுப்பி வைத்தார். அதிபர் வீரபத்திரனின் முகாமைத்துவப் பெல வீனங்கள் மாவட்டக் கல்விப் பணிப்பாளர், கோட்டத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஆகியோருக்கும் ஏற்கனவே தெரியவந்திருந்தன ஆகையால் வீரபத்திரனின் ஒய்வு பெறக் கோரும் வேண்டுகோளை ஏற்பதிலும் பாரதி வித்தியாலயத்திற்கு ஒரு நல்ல அதிபரை நிய, மிக்க முயற்சி எடுப்பதிலும் அவர்கள் சிரத்தை காட்டினர். வீரபத் திரனின் ஒய்வு பெறும் வேண்டுகோளும் அவர்களால் நடவடிக்கைக் காகத் தீர்மானிக்கப்பட்டாயிற்று.
இதனிடையில் அதிபர் வீரபத்திரன் தான் விருப்பமின்றிக் கொடுத்த ஓய்வு பெறவிரும்பும் கடிதத்தைக் கொத்தணி அதிபரிடமிரு ந்து மீண்டும் பெற்றுச் சேவையில் தொடர்ந்திருக்க முயற்சி செய்த போதும் பயனில்லாது போயிற்று. கோட்டக் கல்வி அலுவலகத்திற் குச் சென்று அதனை மீளப் பெற முயற்சி செய்ததும் பயனளிக்க வில்லை. ஆகையால் திரு. வீரபத்திரன் தனது ஓய்வூதியத்தைப் பெறும் முயற்சியைத் தீவிரமாக மேற்கொள்ள வேண்டியதாயிற்று.
பின்வரும் வினாக்களுக்கு விடை தருக.
1. பாரதி வித்தியாலய அதிபர் வீரபத்திரனின் தலைமைத்துவப்
பண்புகளில் உள்ள குறைபாடுகளை ஆராய்க.
2. வீரபத்திரனின் நிதிமுகாமை தொடர்பான குறைபாடுகளை விளக்கி அவற்றை நீக்க நீர் கூறும் ஆலோசனைகளைத் தருக. 3. இவ்வித்தியாலயத்தின் பாடசாலை வருடாந்த அமுலாக்கல்
திட்டம்பற்றி உமது கருத்து யாது? 4. பாரதி வித்தியாலயத்தினை ஒரு பயன்தரும் பாடசாஒலயாக
ஆக்குவதற்கு நீர் கூறும் ஆலோசனைகள் யாவை?
வினா 1.
1. ஒரு தலைவரைப் பொறுத்தமட்டில் அவர் கொண்டிருக்கவேண்
டிய மனப்பாங்கு மிகவும் பிரதான அம்சமாகும். அதிபர் வீர பத்திரன் உடன்பாடான மனப்பாங்கின்றி எதிர்மறையான

Page 16
வி:ை
1.
- 22 -
மனப்பாங்கும் சந்தேகமான முறையில் தனது ஆசிரியர் களை நோக்குவதும் அவரது தலைமைத்துவப் பண்புகளில் உள்ள குறைபாடாகும்.
பாடசாலைத் தலைமைத்துவம் சமூகத்தின் ஒத்துழைப்பைப் பெறக்கூடியதாயிருத்தல் வேண்டும். பெற்றோர், Listopu. Lorrar வர்கள், கல்வித் திணைக்களம், கொத்தணி என்பன இதிலடங் கும் அதிபர் வீரபத்திரனின் தலைமைத்துவம் சமூகத்தின் ஒத்துழைப்பையும் ஆலோசனைகளையும் பெற்றுப் பாடசா லையை விருத்தி செய்வதாயிராது அதனையும் புறக்கணிப்ப தாயுள்ளது. கொத்தணி அதிபரின் ஆலோசனைகளையும், அதிபர் பல தடவைகளில் புறக்கணித்திருக்கின்றார். திணைக் களத்தினுடனான இவரது உறவும் திருப்தியாக இல்லை. கல்வி அதிகாரிகள் வீரபத்திரன் மீது வைத்திருக்கும் அபிப்பிராயங் களும் சாதகமாயில்லை.
தலைமைத்துவம் பிறர்க்கு முன்மாதிரியாக இருந்து பிறர் பின் பற்றுமாறு அமைதல் வேண்டும். அதிபர் வீரபத்திரனைப் பொறுத்தமட்டில் பாடசாலைச் செயற்பாடுகளில் எதிலும் தனது ஆசிரியர்களுக்கு ஒரு முன்மாதிரியாக நடந்து காட்டிய தாக இல்லை. அவரது செயற்பாடுகள் ஆசிரியர்க்கு எதிர் மறையான அம்சங்களை அறிவுறுத்துவதாகவே அமைந்திருந் தன.
மாணவர்களது திறன்களும் எதிர்பார்ப்புக்களும் உயர் மட்டத் தில் இருக்கக்கூடியவாறு செய்து மாணவர்களது செயற்பாடு களை நெறிப்படுத்துவது அதிபரது கல்வித் தலைமைத்துவத் தின் பொறுப்பாகும். மாணவர்களது கற்கைச் செயற்பாடு களை மேம்படுத்த ஆசிரியர்களது ஆற்றலை முழுமையாகப் பயன்படுத்த முடியாதநிலை பாரதி வித்தியாலயத்தின் வித் தலைமைத்துவத்தின் பெருங் குறைபாடாகும். இது அறி வுறுத்தல் தலைமைத்துவத்தின் பல குறைபாடுகை புலப் படுத்தும் ஒன்றாக உள்ளது.
う
«A
நிதி முகாமை தொடர்பாக அதிபர் வீரபத்திரன் பாரிய தவறுகளை இழைத்திருப்பதை அவதானிக்கலாம். மூன்றாண்டு களுக்கு மேலாக பிஸ்கட் கணக்குகள் பதியப்படாதிருந்தமை நிதிதொடர்பான பாரிய குற்றமாகும். பிஸ்கட் பங்கீடு தொடர்பாக மாணவர் வரவு விநியோகிக்கப்பட வேண்டிய அளவு, மீதி என்பன தினந்தோறும் பதிவேட்டில் பதியப்பட வேண்டும். இது தொடர்பாக அமைச்சினால் வழங்கப்பட்ட

- 23 -
படிவம், அறிவுறுத்தல்கள் கிரமமாகப் பின்பற்றப்பட்டால் தவறுகள் ஏற்படுவதைத் தவிர்க்கலாம். இது தொடர்பாகத் திறமையுள்ள ஆசிரியர்களுக்குக் கடமைகளைப் பங்கிட்டுப் பணியைத் திறமையாக நிறைவேற்ற அதிபர் வழிகாட்டலாம்.
வசதிகள் சேவைகள் கட்டணம் தொடர்பாக நோக்கும்போது திரு. வீரபத்திரனின் நிதிமுகாமை தொடர்பான குறைபாடு களுக்கு மேலும் ஆதாரங்கள் கிடைக்கின்றன. பெற்றுக்கொள் ளப்பட்ட பணத்திற்குப் பற்றுச்சீட்டு வழங்கப்படாமை நிதிப் பிரமாணங்களுக்கு மாறானது அதிபர் ஓர் ஊழல் பேர்வழி என்பதை நிரூபிக்க இது போதிய சான்றாகும்.
1969-06-21ஆந் திகதிய 123ஆம் இலக்க சுற்று நிருபம் 1975ல் திருத்தப்பட்டு 1975 நவம்பர் 05ம் நிகதி வெளியி " டப்பட்ட 57/75ஆம் இலக்கச் சுற்று நிருபத்தின் வழிகாட்டற் படி பதிவுகள் செய்யப்படல் வேண்டும் பற்றுச் சீட்டு வழங் குவதற்குக் கல்வியமைச்சினால் சிபார்சு செய்யப்பட்ட “சி 100” படிவத்தை உபயோகித்தல் வேண்டும். பற்றுச் சீட்டுப் புத்த கங்களைத் (சி100) தொடர் ஒழுங்குப்படி பதிவொன்றில் பதிவு செய்து வைத்திருத்தல் வேண்டும். அதற்கு வசதிகள் சேவை கள் கட்டண உப பதிவேடு எனப் பெயரிடலாம்,
செலவுகள் தொடர்பாகக் காசேடு ஒன்றைப் பேணல் வேண்டும். செலவினங்களுக்காகக் கொடுப்பனவு வவுச்சர் பயன் படுத்தப்படல் வேண்டும். வசதிகள் சேவைகள் கட்டணம் எந்த எந்தச் செலவுகளுக்காகப் பயன்படுத்தப்படல் வேண்டும் என்பதனைச் சுற்று நிருப அறிவுறுத்தல்களுக்கிணங்க மேற் கொள்ள வேண்டும். பாடசாலை அபிவிருத்திச் சபை/சங்கம் என்பனவற்றின் பணங்களும் அதற்குரிய சுற்று நிருப அறிவுறுத் தல்களுக்கமையக் கையாளப்படல் வேண்டும்.
அதிபர் வீரபத்திரனின் பிறிதொரு குறைபாடு நிதிமுகாமை தொடர்பான வழிகாட்டல்களைப் புறக்கணித்தமையாகும் பாடசாலை நிதிமுகாமை தொடர்பாகப் போதிய ஆலோச னைகள் வழிகாட்டல்கள் என்பன கொத்தணி அதிபரால் கொடுக்கப்பட்டிருந்தும் அதிபர் அலட்சியமாக இருந்து வந் துள்ளதை அவதானிக்கலாம். நிதிப்பிரமாணங்கள், அது தொடர்பான செயற்பாடுகள் மாற்றமடையக் கூடியவை. ஆகையால் சகல அதிபர்களுக்கும் அது தொடர்பாக ஆலோ சனைகள் வழிகாட்டல்கள் தேவைப்படுவதுண்டு அவ்வாறான நிலையில் வழிகாட்டல்கள் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ள வாய்ப்புக்களிருக்கும்போது அவற்றைப் பயன்படுத்

Page 17
- 24 -
துவது ஒரு நல்ல அதிபரின் கடமை. அதிபர் எப்பொழுதும் தனது செயற்பாடுகளை மேம்படுத்த முயற்சி செய்தல் அவ சியம் நிதிமுகாமையைப் பொறுத்தமட்டில் அதிபர் வீரபத்தி ரன் கண்டிப்பாக அறிவுறுத்தல்கள், ஆலோசனைகள் என்பன வற்றைப் பின்பற்ற வேண்டியவராவார்.
பாடசாலையில் இடம் பெறும் செலவீனங்கள் தொடர்பாகக் காலத்திற்குக் காலம் நிதி அறிக்கைகள் அனுப்பப்படுவதன் மூலமே அதிபர் தனது நிதி நிருவாகம் தொடர்பாக நற் பெயரை ஏற்படுத்த முடியும். இந்தவகையில் அதிபர் வீரபத் திரன் வசதிகள், சேவைகள் கட்டணம் தொடர்பாகக் காலாண்டு அறிக்கைகளைக் கிரமமாக அனுப்பத் தவறிவிட் டார். இது அவரது நிதி தொடர்பான பிழையான செயற் பாடுகளை திணைக்களத்தினரும் விளங்க வாய்ப்பை ஏற்படுத்தி விட்டதெனலாம். வசதிகள், சேவைகள் கட்டணம் தொடர் பான காலாண்டு அறிக்கை தயாரித்தல், கோவைப்படுத்தல் திணைக்களம், கொத்தணிக் காரியாலயம் என்பனவற்றுக்கு அனுப்புதல் என்பனவற்றில் அதிபர் வீரபத்திரன் நிதி விதி முறைகளைப் பின்பற்ற வேண்டியது அவசியம்.
3.
அண்மைக்காலத்தில் பாடசாலை முகாமைத்துவத்தில் ஒரு பிரதான அம்சமாகக் கல்வியமைச்சினால் புகுத்தப்பட்டது பாடசாலை வருடாந்த அமுலாக்கல், திட்டமாகும். பாட சாலையின் வழமையான கடமைகள், விஷேட செயற் திட்டங் கள் எனும் இருபகுதிகள் இதில் உள்ளன. பாடசாலை ஒன்று பயன் தரும் பாடசாலையாக உருவாக இதன் ஒழுங்கான திட்டமிடலும், அமுல்படுத்தலும் அவசியமாகும். பாரதி வித்தி யாலயத்தில் இந்த வருடாந்த அமுலாக்கல் திட்டத்திற்கு எவ்வித முக்கியத்துவமும் கொடுக்கப்படவில்லை. அதுமட்டு மன்றி இது தொடர்பான தெளிவான அறிவோ, விளக்கமோ அதிபருக்கு இருக்கவில்லை. பாரதி வித்தியாலயத்தின் வரு டாந்த அமுலாக்கல் திட்டம் ஆண்டுத் தொடக்கத்தில் ஏற் கனவே உள்ள ஒரு திட்டத்தினைப் பிரதி செய்து வைக்கும் ஒரு செயற்பாடாக இருந்து வருகின்றது ஆக்கப்பாடு, புதி யன புனைதல், உயிர்த்தன்மை என்பனவற்றைப் பாரதி வித் தியாலயத்தில் எதிர்பார்க்க முடியாததை அதன் வருடாந்த அமுலாக்கல் திட்டம் காட்டுகின்றது. இது ஓர் அடிப்படை முகாமைத்துவக் குறைபாடாகும்.

வி ை
பொதுவாகக் கூறுவதாயின் அதிபரது தலைமைத்துவக் குறை பாடும், பாடசாலை அபிவிருத்தியில் அவருக்குள்ள அசிரத்தை யும் பாரதி வித்தியாலயத்தைத் திட்டம், இலக்குகள் என்பன அற்ற ஒரு பாடசாலையாக ஆக்கிவிட்டதெனலாம்.
4.
பாரதி வித்தியாலயத்தை ஒரு பயன் தரும் பாடசாலையாக ஆக்குவற்குப் பின்வரும் ஆலோசனைகள் முன் வைக்கப்பட லாம்.
அதிபர் இயக்கப்பாடானதும், தொழில் சார்ந்ததுமான ஓர் அறிவுறுத்தல் தலைவராகக் கடமையாற்றுதல் வேண்டும்.
பாரதி வித்தியாலயத்தில் உயர்ந்த இலக்குகளை அடிப்படை யாகக்கொண்ட ஒரு கற்றற் கலாசாரம் கட்டியெழுப்பப்படல் வேண்டும்
அதிபர் தனது பாடசாலைக்குப் பொருத்தமான இலக்குகளை ஆசிரியர்களுடன் இணைந்து தீர்மானித்து அதனை அடையப் பொருத்தமான செயற் திட்டங்களை உருவாக்கிச் செயற் படுத்தல் வேண்டும்.
பாடசாலையின் சகல செயற்பாடுகளும் அதிபரால் மேற் பார்வை செய்து நெறிப்படுத்தல் வேண்டும்
ஒவ்வொரு மாணவனதும் கல்வி விருத்திக்கு வழிவகுக்கக்கூடிய கல்விச் சூழலைப் பாடசாலையுள் ஏற்படுத்த வேண்டும்.
ஆசிரியர்களுக்கு ஊக்குவிப்பு வழங்கக்கூடிய நுட்ப முறைகளை
அதிபர் கைக்கொள்வதுடன் அவர்களது தொழிற்துறை அபி விருத்திக்கும் வழிவகை மேற்கொள்ளல் வேண்டும்.

Page 18
-- 26 م -س--
விடய ஆய்வு நான்கு 3 .. 4
இலங்கையின் மத்திய பிரதேசத்தில் அமைந்துள்ள கலைமகள் மகா வித்தியாலயம் தரம் 1"சி" பாடசாலையாகும். 900 மாணவ மாண விகளையும் 34 ஆசிரிய ஆசிரியைகளையும் கொண்ட இப்பாடசாலை யின் ஆரம்பப் பிரிவில் 399 மாணவர்களும் 09 ஆசிரியர்களும் உள்ள னர். 6 - 11 வரையிலான வகுப்புக்களின் மாணவர் தொகை 510 ஆகும். ஆசிரியர் குழுவில் ஆங்கில ஆசிரியர்கள் 2, அழகியற் கல்வி ஆசிரியர் 1, கலைப் பட்டதாரி ஆசிரியர்கள் 8, விஞ்ஞானப் பட்ட தாரி ஆசிரியர் 1, கணிதப் பயிற்சி ஆசிரியர் 1, வர்த்தகவியல் ஆசி ரியர் 1, சாதாரண பயிற்சி ஆசிரியர்கள் 20 ஆகியோர் காணப்படு கின்றனர். பாடசாலை நடவடிக்கைகளை நெறிப்படுத்துவதற்காக அதிபர், உப அதிபர், ஆரம்பப்பிரிவுத் தலைவர், வகுப்பாசிரியர்கள் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு ஆசிரியருக்கும் நேர அட்டவணை வழங்கப்பட்டுள்ளது.
பாடசாலையில் கல்விப் பொருட் காட்சியொன்றினை நடாத்து துெ பற்றிக் கலந்துரையாடும் கூட்டமொன்று நடைபெற உள்ளது என்பதை அதிபர் ரங்கசாமி உரிய தினத்திற்கு ஒருவார காலத்திற்கு முன்னரே ஆசிரியர் குழுவினருக்கு அறிவித்திருந்தார். இதற்கான அறிவித்தல் மாணவன் ஒருவன் மூலம் எழுத்தில் அனுப்பப்பட்டது. குறித்த தினத்தன்று பிற்பகல் 1.30 மணியளவில் 20 ஆசிரியர்கள் மாத்திரமே கூட்ட மண்டபத்திற்கு வந்து சேர்ந்தனர். குறித்த நேரத் திலிருந்து 15 நிமிடம் தாமதித்து ஆரம்பித்த அதிபர் ஆசிரியர்க ளின் எண்ணிக்கை குறைவாகக் காணப்படுகின்றமை குறித்துக் கவலை தெரிவித்தபடி உரையாற்றினார். பாடசாலையில் பொருட் காட்சியொன்றினை நடாத்த வேண்டுமெனத் தீர்மானிக்கப்பட்டுள் எதையும், இப்பொருட் காட்சி காரணமாகப் பாடசாலை பிரபலிய மடையக் கூடிய வாய்ப்புக் கிடைக்கும் என்பதையும் பிரதேச பொது மக்களின் பிரதிநிதிக்கு மக்கள் அனைவர் முன்னிலையிலும் உரை யாற்றுவதற்கான வாய்ப்புக் கிடைக்கப்பெறும் என்பதையும் அவ ரைப் பாடசாலைக்கு வரவழைப்பதற்கு இது ஒரு நல்ல சந்தர்ப்ப மாகும் என்பதையும் அவர் எடுத்து விளக்கினார்.
பொருட்காட்சியை நடாத்துவதற்குத் தேவையான நடவடிக்கை களை ஒழுங்கமைக்கும் செயற்பாடு அடுத்து இடம்பெற்றது. ஒவ் வொரு பிரிவினருக்கும் ஒப்படைக்கப்படும் கருமங்கள் பற்றிக் கலந் துரையாடப்பட்ட போதிலும், கூட்டத்தில் கலந்துகொள்வதற்காசி ஆரம்பப்பிரிவுத் தலைவர் வருகை தராமையினால் அவ்விடயம் தொடர்பாக ஏனைய பிரிவுகளைச் சேர்ந்த ஆசிரியர்களுக்குக் கூட் டாகக் கருத்து வெளியிட வாய்ப்புக் கிடைக்கவில்லை. பல்வேறு

- 27 -
பாடப் பொறுப்பாசிரியர்கள் பாடப்பிரிவுகளுக்கு அமைய அக்கரு மங்களை ஒழுங்கமைத்தல் வேண்டும் எனக் கருதப்பட்டது. தற் போது பொருட்காட்சியை நடாத்துவதனால் மாணவரின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்படக்கூடும் எனவும், வருடத்தின் இறுதிப் பகுதியில் பரீட்சைகளுக்குத் தயாராகும் மாணவர்களின் கல்வி அத னால் பாதிக்கக்கூடும் எனவும் சில வகுப்பாசிரியர்கள் எடுத்துக்கூறி னர். 12ம். 13ம் ஆண்டுகளிற் கற்பிக்கும் ஆசிரியர்கள் பொருட்காட் சிக்காக ஒரு மாதகாலம் வரையில் ஒதுக்குவது தொடர்பாக எதிர்ப்புத் தெரிவித்தனர். இவ்வாறாகக் காலத்தை விரயஞ் செய்வ தால் மாணவரின் கல்வி பாதிக்கப்படும் என்பதை அவர்கள் எடுத் துக் காட்டினர். விளையாட்டுப் போட்டியொன்றினையும், கலை விழாவொன்றினையும் நடத்த வேண்டும் என்ற கருத்துக்களை வெளி யிட்டவாறு விளையாட்டுப் பொறுப்பாசிரியரும், அழகியற் கல்வி ஆசிரியரும் காரசாரமான விமர்சனங்களைப் பரிமாறிக் கொண்டவேளை கூட்ட நிகழ்ச்சிகள் உச்சக்கட்டததை அடைந்தன. விளையாட்டுப் போட்டியையும், கலை விழாவையும் நடத்தா விடின் பொருட்காட்சியை நடாத்துவதற்கேற்ற பணத்தைப் பெற முடியாது என அதிபர் ரங்கசாமி குறிப்பிட்டார். இதன் காரணமா கப் பாடசாலையின் நிதி நடவடிக்கைகள் தொடர்பான பல விமர் சனங்களும் தலைதூக்கின. எவ்விதமான தீர்மானங்களோ முடிவோ இன்றியே கூட்டம் முடிவடைந்தது. அதுமட்டுமன்றிக் கூட்டத்தில் கலந்துகொண்டோர் ஒவ்வொருவரும் மனக்கசப்புடனேயே கலைந்து சென்றனர்.
இப்பாடசாலை தொடர்பாக மாவட்டக் கல்வித் திணைக்கள ஆய்வுக் குழுவினர் நடாத்திய ஆய்வுகள் தொடர்பான அறிக்கையி லிருந்து பெற்ற சில அவதானிப்புக்கள கீழே தரப்பட்டுள்ளன. பாடசாலையின் ஒழுங்கமைப்பை இனங் காண்பதற்கு இவ்வவதா னிப்புக்கள் துணையாக அமையும்.
* இப்பாடசாலையில் வருடாந்த வேலைத் திட்டங்கள் எதுவும்"
தயாரிக்கப்பட்டதாக தெரியவில்லை. இதற்கான ஆதாரங்கள் எதையும் அவதானிக்க முடியவில்லை.
* ஒவ்வொரு ஆசிரியருக்கும் நேர அட்டவணைக்குப் புறம்பான வகையில் ஒதுக்கப்பட்ட பொறுப்புக்கள் தொடர்பான எழுத்து மூலப் பதிவுகள் எதுவும் காணப்படவில்லை. சில பொறுப்புக்கள் சிலரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்ட ப்ோதி லும் அவ்வாசிரியர்களுக்கு அவ்விடயங்கள் பற்றிய போதிய விளக்கம் இருந்ததாகத் தெரியவில்லை. இவற்றின் காரணமாக முகாமைத்துவக் கருமங்கள் பிரச்சினையான நிலையை அடைந் துள்ளதைக் காண முடிகின்றது.

Page 19
- 28 -
காசேடு பொருட் பதிவேடு ஆகியன தொடர்பாகக் கணக்காளர் மேற்கொண்ட ஆய்வுகளின்போது நிதி நடவடிக்கைகள் ஒழுங்கு முறையாக மேறகொள்ளப்படுவதில்லை என இனங்காணப்பட் டது. விஷேடமாக, அன்றாடம் சேகரிக்கப்படும் வசதிகள் சேவை கள் கட்டணத்தை உரிய விதத்தில் காசேட்டில் பதிவு செய் யும் தொடர்ச்சியான வேலைத்திட்டம் காணப்படவில்லை. என்பது தெளிவாகியது. சேகரிக்கப்படும் பணம் வகுப்பாசிரியர் களது கையில் நீண்ட காலம் இருப்பதையும் அறிய முடிந்தது.
பெற்றோரின் ஒத்துழைப்புப் பாடசாலைக்குக் கிடைக்கப் பெறுவ தில்லை என்பது ஆசிரியர்களில் பெரும்பாலானோரின் கருத்தா கக் காணப்பட்டது. இவ்வாண்டு ஒரு தடவையேனும் பாட சாலை அபிவிருத்திச் சங்கம் கூட்டப்படவில்லை.
பாடசாலை மாணவர்க்கும் போதியளவு பாடப்புற வேலைகள் ஒழுங்கமைத்துக் கொடுக்கப்படவில்லை என்பதும் தெரிய வந்தது.
பாடசாலை அறிக்கைகள் எதுவும் உரிய முறையில் பேணப்பட வில்லை. ஒவ்வொரு விடயம் தொடர்பாகவும், மாணவர்களது அடைவு தொடர்பாகவும் அறிக்கைகள் பேணப்படவில்லை. ஒப்படைக்கப்படும் கருமங்கள் தொடர்பான எழுத்து மூல அறிக்கைகள் பேணப்பட வேண்டியது அவசியமானதாக இருப்பி னும் பாடத்தலைவர்களோ, பிரிவுத்தலைவர்களோ இவ்வாறான அறிக்கைகளைத் தயாரிக்கவில்லை. வருடாந்த அறிக்கைகள் போதுமானவையாகக் காணப்படவில்லை. ஆரம்பப் பிரிவின் செயற்பாடுகள் தொடர்பான அறிக்கைகள் பாடசாலை அலு வலகத்திற்குக் கிடைக்கவில்லை.
ஆசிரியர்கள் அதிக விடுமுறை எடுப்பதால் கற்பித்தற் செயற் பாடுகள் சீர்குலைந்துள்ளன. குறித்த காலப்பகுதியுள் கற்பித்து முடிக்க வேண்டிய பாட அலகுகள் தொடர்பான திட்டங்களோ அவற்றை நடைமுறைப் படுத்துவது தொடர்பான மதிப்பீட்டு அறிக்கைகளோ பேணப்படவில்லை. இவை உடனடியாகப் பேணப்பட வேண்டும்.
பாடத்திட்டம் உரிய விதத்தில் அமுற்படுத்தப்படாமையே பாட சாலையில் பரீட்சைப் பெறுபேறுகள் திருப்திகரமானவையாகக் காணப்படாமைக்கான காரணமாகும். அலகுகள் கற்பித்து முடிக்கப்படவில்லை. மாணவர்களது பயிற்சிப் புத்தகங்கள் முறை யாகப் பார்வையிட்டுத் திருத்தப்படவில்லை. இவ்விடயங்கள் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

- 28 -
* விளையாட்டுத்துறை, அழகியற் பிரிவு ஆகியவற்றுக்குரிய பொருட்கள் உரிய விதத்தில் பயன்படுத்தப்படவில்லை. இது தொடர்பாகக் கூடிய கவனஞ் செலுத்துவது அவசியம்.
பின்வரும் வினாக்களுக்கு விடை தருக.
1.
ଖୁଁ ଖୁଁt it!
இச்சம்பவத்தினை அடிப்படையாகக் கொண்டு பாடசாலை ஒழுங்கமைப்பு தொடர்பான எவ்வெப் பிரதான அம்சங்களை வெளிக் கொணரலாம்?
பாடசாலை அதிபர் என்ற வகையில் அதிபர் ரங்கசாமியிடம் காணப்படும் குறைபாடுகளைச் சுருக்கமாகக் கூறுக.
பாடசாலையின் வேலை ஒழுங்கமைப்பு பயனுள்ள முறையில் திட்டமிடப்பட்டுள்ளதா? விளக்குக.
ஒழுங்கு முறையான பயன் தரும் வேலை ஒழுங்கமைப்பொன் றில் காணப்படவேண்டிய பண்புகள் யாவை?
பாடசாலையின் எந்தச் செயற்பாட்டினதும் நோக்கம் கல்வி அபிவிருத்தியும், மாணவர்களது முன்னேற்றமுமே. பொருட் காட்சியொன்றைப் பாடசாலையில் நடாத்த முற்படும் அதி பர், பொது மக்களின் முன்னிலையில் உரையாற்றப் பாராளு
மன்ற உறுப்பினருக்கு ஒரு சந்தர்ப்பத்தை அளித்தலாகும்
2
என்பதைத் தனது உரை மூலம் வெளிப்படுத்துகின்றார். நோக்கங்கள், குறிக்கோள்கள் என்பன சரியாக விளங்கிக் கொள்ளப்படாதிருப்பது பாடசாலை ஒழுங்கமைப்பின் அடிப் படைக் குறைபாடாகும்.
நடைபெறவிருக்கும் ஆசிரியர் கூட்டம் பற்றிய அறிவித்தல் ஒரு வாரகாலத்திற்கு முன்னமேயே எழுத்து மூலம் கொடுக் கப்பட்டிருந்தும் மொத்தம் 34 ஆசிரியர்களில் 14 பேர் சமூக மளிக்காமை அதிபரது தலைமைத்துவம், மனிதவள முகாமிை மற்றும் தொடர்பாடற் குறைபாடுகள் போன்ற அம்சங்களை ஒழுங்கமைப்பு தொடர்பாக வெளிக்கொணரக் கூடியதாக வுள்ளது.
கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது பல்வேறு விமர் சனங்கள் தலைதூக்கியதும் அதைக் கட்டுப்படுத்திக் கூட்டத் தின் இலக்கை எய்தக் கூடியளவு நடத்திச் செல்லாமை அதி பரது முகாமைத்துவக் குறைப்பாட்டைப் பொதுவாக வெளிக் காட்டுவதுடன் கூட்டம் நடத்துவதில் அவரிடம் க்ாணப்படும் கட்டுப்பாடு இன்மையையும் வெளிப்படுத்துகின்றது. கூட்டம்

Page 20
ཡས་མས་ 30 གསས་ཁང་ཁག་
குறிக்கோளை அடையுமுன்னர் கலைவதை அதிபர் உணர்ந்து கட்டுப்படுத்தியிருக்க வேண்டும். மேலும், இது கூட்டத்தின் இலக்கு ஆசிரியர்களால் ஏற்றுக்கொள்ளப்படாமையையும் காட்டுகின்றது.
எந்தவோர் ஒழுங்கமைப்பிலும் நிதியின் உபயோகமும் அதை
முகாமையும் பிரதான அம்சமாக இடம்பெற வேண்டும்.
வினா
பாடசாலை ஒழுங்கமைப்பில் நிதி தொடர்பான அம்சம் ஒழுங்கீனங்களும், ஊழலும் நிறைந்ததாகக் காணப்படுகின்றது என்பதனைக் காட்டுவதாக உள்ளது. இதனைக் கல்வித் திணைக்கள ஆய்வும் உறுதி செய்கின்றது.
பாடசாலையில் ஒரு பொருட்காட்சியை நடாத்த வேண்டும் என்ற தீர்மானம் அதிபரால் ஏற்கனவே தன்னிச்சையாக எடுக்கப்பட்ட தீர்மானம் என்பது அவர் கூட்டத்தில் உரை யாற்றும்போது தெரியவருகின்றது. ஓர் ஒழுங்கமைப்பில் தீர் மானம் எடுத்தல் கூட்டான செயல் முறையாக இருத்தல் வேண்டும். அப்போது தான் அது வெற்றிகரமாக அமுல்படுத் தப்பட்டு நிறைவேறும். எனவே ஒழுங்கமைப்பின் பல்வேறு குறைபாடுகளுக்கு இது காரணமாக அமையலாம்.
பொறுப்பு வாய்ந்த ஆசிரியர்கள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ளாமை ஒழுங்கமைப்பில் ஆசிரியர் விருத்தியின் குறை பாட்டைக் காட்டுகின்றது. (உ-ம்) ஆரம்பப்பிரிவின் பொறுப் பாசிரியை கூட்டத்திற்குச் சமூகமளிக்காமை பொறுப்பற்ற தன்மைக்கு எடுத்துக்காட்டாகும்.
2
அதிபர் ரங்கசாமி தன்னிச்சையாக எடுத்த தீர்மானம் ஒன்றை ஆசிரியர் கூட்டத்தில் கூறி நடைமுறைப்படுத்த முயல்வதாகத் தெரிகின்றது. பாடசாலையில் செயற்படுத்தப்படும் எந்த நட வடிக்கையாயினும் முகாமைத்துவக்குழு, ஆசிரியர்குழு என்பவற் றில் ஆராயப்பட்டுத் தீர்மானம் எடுக்கப்பட்டவையாக இருக்க வேண்டும். அதிபர் தான் ஏற்கனவே எடுத்த தீர்மானம் ஒன்றை ஆசிரியர்களிடம் கூறித் திணிக்கமுயல்வதாகக் காணப் படுகின்றது. இது அடிப்படை முகாமைத்துவத் தத்துவத்திற்கு முரணானதாகும்.
பாடசாலையில் கூட்டம் ஒன்று நடாத்தப்படும்போது அது நன்கு திட்டமிடப்பட்டதாகவும், அதன் நோக்கத்தை இறுதி யில் நிறைவேற்றுவதாகவுமிருத்தல் வேண்டும். இது அவரது தலைமைத்துவப் பண்பிலும், முகாமைத்துவத்திலும் காணப்

வினா
سست 31 --سمبے
படும் குறைபாடாகக் காணப்படுகின்றது.
பாடசாலையின் பிரதான நோக்கம் அதன் பாடவிதானத்திற் சிறந்த முன்னேற்றத்தை ஏற்படுத்துவதாகும். பாடவிதானத் தின் (கலைத்திட்டத்தின்) பிரதான பகுதிக்கு அதாவது கல்வி முன்னேற்றத்திற்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் போதிய தாகக் காணப்படவில்லை. பொருட்காட்சியும் அதன்மூலம் பிரதேசப் பாராளுமன்ற உறுப்பினருக்குப் பொது மக்கள் மத்தியில் உரையாற்றுவதற்கு ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்து வதும் போன்ற அம்சங்கள் அதிபரது நோக்கில் பிரதான இடத்தை வகிப்பதை அவதானிக்க முடிகின்றது.
பாடசாலையின் ஒழுங்கமைப்புத் தொடர்பான கல்வித் திணைக்களத்தின் ஆய்வுகளிலிருந்து இப்பாடசாலையின் வரு டாந்த வேலைத்திட்டங்கள் தயாரிக்கப்படவில்லை என்பதும் அதன்மூலம் முகாமைத்துவத்தின் பிரதான அம்சங்களுள் ஒன்றான திட்டமிடல் போதிய கவனத்தைப் பெறவில்லை என்பதும் தெரியவருகின்றது.
வேலை ஒப்படைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பினும் அது தொடர்பாக ஆசிரியர்கள் போதிய விளக்கமற்றவர்களாகக் காணப்பட்டதனையும் அவ்வாய்வு வெளிப்படுத்தியிருப்பது குறைபாடாகக் காணப்படுகின்றது. இது பல்வேறு முகாமைத் துவப் பிரச்சினைகளுக்குக் காலாக இருப்பது சுட்டிக்காட்டப் பட்டுள்ளது.
சேகரிக்கப்படும் பணம் நீண்ட காலம் ஆசிரியர் கையில் இருப் பது நிதிதொடர்பான பதிவேடுகள் முறையாகப் பேணப் படாமை போன்ற குறைபாடுகளும் திணைக்கள ஆய்வுகள் வெளிப்படுத்தியிருக்கும் ஒழுங்கமைப்புக் குறைபாடாகும்.
பெற்றோர் ஒத்துழைப்பு இன்மை, ஆசிரியர்கள் அதிக லீவு பெறுதல் பாட அலகுகள் பூர்த்தி செய்யப்படாமை வளங் களின் உச்சப் பயன்பாடின்மை திருப்தியற்ற பரீட்சைப் பெறு பேறுகள் போன்ற குறைபாடுகள் பாடசாலை அதிபரது தலை மைத்துவத்திலிருந்து தோன்றியவையாகக் கொள்ளலாம்.
3.
பாடசாலையின் குறிக்கோள்களை அடைவதற்காக அதன் ஆளணியினருக்கு வேலைகள் பகிரப்பட்டு ஏற்படுத்தப்படும் அமைப்பு முறையினை வேலை ஒழுங்கமைப்பு எனலாம். இப் பாடசாலையில் வேலை ஒழுங்கமைப்பு திருப்திகரமாகத் திட் டமிடப்படவில்லை என்பதற்குப் பல காரணங்கள் உள்ளன.

Page 21
r
ജ് 3
வகுப்பறையில் கற்றல் - கற்பித்தல் செயற்பாடுகளுக்கு உதவக் கூடிய வகையில் கல்வி அபிவிருத்தியை அடிப்படையாகக் கொண்ட பகுதியொன்று தெளிவாக ஒழுங்கமைக்கப்பட்ட தற்குச் சான்றுகள் குறைவாக உள்ளன.
பாடவிதான முகாமைத்துவத்திற்காக ஆசிரியர் குழு ஒழுங்க மைக்கப்பட்டு அவர்களிடையே தொடர்பு, தொடர்பாடல், குழுப்பண்பு என்பன ஏற்படக்கூடிய வகையில் வேலை ஒழுங் கமைப்பு இருந்தமைக்கு ஆதாரங்கள் இல்லை.
பாடசாலையில் உள்ள வேலை ஒழுங்கமைப்பு ஒன்றை யொன்று வளமூட்டுவதாக இருக்க வேண்டும். ஆனால் கலை மகள் வித்தியாலயத்திலுள்ள அத்தகைய ஒழுங்கமைப்புக்கள் ஒன்றுடன் ஒன்று முரண்படுகின்ற நிலையைக் காட்டுவதுடன் வளமூட்டக்கூடிய வகையில் விருத்தியடைந்ததாகவுமில்லை.
சிறப்பான வேலை ஒழுங்கமைப்பின் தன்மைகளில் ஒன்று தீர் மானங்கள் கூட்டாக மேற்கொள்ளப்படலும், பொருத்தமான குறிக்கோள்களைக் கொண்டிருத்தலுமாகும். கலைமகள் வித் தியாலயத்தில் தீர்மானம் தனியாக எடுக்கப்பட்டு ஆசிரியர் கள் மீது சுமத்தப்படும் நிலை காணப்படுகின்றது.
அதிபர் நடத்தை, ஆசிரியர் குழாத்தின் நடத்தை, திணைக் களத்தின் ஆய்வுகள் என்பனவற்றை மொத்தமாக நோக்கும் போது பாடசாலையின் ஒழுங்கமைப்பு பயன் உள்ள வகை யில் திட்டமிடப்படவில்லை என்பது தெளிவாகின்றது.
i
பாடசாலை ஒன்றில் பல்வேறு பணிகள் ஆற்றப்படல் வேண் டும். அவற்றை நிறைவேற்றுவதற்குப் பல்வகை ஒழுங்கமைப் புக்கள் அவசியம். ஒவ்வொருவகையான பணிக்கும் ஆளணி யினர் இனங்காணப்படல் வேண்டும். ஒழுங்கு முறையான பயன்தரும் வேலை ஒழுங்கமைப்பொன்றில் இருக்கவேண்டிய பிரதான அம்சம் என்னவெனில் உறுதியான தலைமைத்துவ மாகும். ஒரு வேலை ஒழுங்கமைப்பு வெற்றிதர வேண்டும்" யின் அதன் தலைவர் சிறந்த தலைமைத்துவப் பண்புகளைக் கொண்டு இயங்க வேண்டும். அவர் வேலை ஒழுங்கமைப்பின் சகல பிரிவுகளையும் அவற்றின் குறிக்கோள்களை அடைய நெறிப்படுத்துபவராக இருத்தல் வேண்டும். அதிபர் சிறந்த நோக்கங்களையும் குறிக்கோள்களையும் கொண்டிப்பதோடு ஒழுங்கமைப்பில் உள்ள பணியணியினர் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டவராகவுமிருத்தல் வேண்டும்.

2
7
- 33 -
அடுத்த அம்சம் நோக்கங்கள் குறிக்கோள்கள் என்பனவற் றைக் கொண்டிருத்தலாகும். பாடசாலை ஒன்றிற்கு நோக் கங்கள், குறிக்கோள்கள் என்பன இருப்பது போன்று வேலை ஒழுங்கமைப்பின் பல்வேறு பிரிவுகளும் அவற்றுக்கான குறிப் பான நோக்கங்கள் குறிக்கோள்களைக் கொண்டிருத்தல் அவசி யம். குறிக்கோள் இல்லாத ஒழுங்கமைப்பு இலக்கு அற்ற கப்ப லைப் போன்றது. எனவே ஒழுங்கமைப்பின் வெற்றிக்கு இவை அவசியமாகும்.
பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றைத் தீர்ப்பதற்கு முறை யான திட்டங்கள் அமைக்கப்படுவது சிறந்த ஒழுங்கமைப்பின் பண்பாகும். பாடசாலையில் அமைக்கப்படும் வருடாந்த அமு
லாக்கல் திட்டங்கள் ஒழுங்கமைப்புக்களின் செயற்பாடு
களைப் பிரதிபலிப்பனவாக அமையலாம். திட்டங்கள் அமைப் பது ஒழுங்கப்பின் வெற்றிக்கு அத்திவாரமாக அமையும்.
தீர்மானங்கள் குழு அடிப்படையில் எடுக்கப்படுவது பயன் தரும் வேலை ஒழுங்கமைப்பின் பண்பாகும். அவை தலைவ ரால் அல்லது அதிபரால் மட்டும் எடுக்கப்பட்டு பணியணி யினரிடையே சுமத்தப்படுமாயின் அதனைச் செயற்படுத்துவ தில் சிரமங்கள் ஏற்படலாம். எனவே கூட்டாகச் சேர்ந்து தீர்மானம் எடுக்கும் பண்பு சிறந்த வேலை ஒழுங்கமைப்புக்கு உதவுவதாகும்.
பணியாற்றுவோரிடையே நிறுவனப்பற்று அல்லது பாட சாலைப்பற்று இருத்தல் வேண்டும். இதனைப் பாடசாலை மீதான மதிப்பு அல்லது பத்தி எனவும் அழைக்கலாம். வேலை ஒழுங்கமைப்பில் சுறுசுறுப்பான செயற்பாட்டிற்கு இத்தகைய பற்று அவசியம். இது உளவியல் காரணியாக அமைந்து பணி யணியினரை ஊக்குவிக்கும்.
வேலை ஒழுங்கமைப்பின் சகல பிரிவுகளும் குறிக்கோளை நோக்கிச் செயற்படுகின்றதா என்பதை உறுதிப்படுத்தச் சிறந்த மேற்பார்வை அமைப்பு அவசியம். மேற்பார்வைக்கான குழு வில் இடம் பெறுவோர் பணியணியினருக்கு உதவுகின்ற மனப் பாங்கு கொண்டவர்களாக இருக்க வேண்டும். அன்றியும் பணியணியினரிடையே இத்தகைய உதவும் மனப்பாங்கு ஓர் ஒழுங்கமைப்புக் கலாச்சாரமாக வளர்க்கப்படவும் வேண்டும்.
பணியை நிறைவேற்றி உயரிய அடைவைப் பெறவேண்டும் என்ற உயரிய நோக்கமும் பணியணியினரிடையே இருத்தல்

Page 22
--سے 34 سی
வேண்டும். வேலை ஒழுங்கமைப்பு பணியை உயர்தரத்தில் ஆற்றக்கூடிய ஊக்குவிப்பை வழங்க வேண்டும்.
வேலை ஒழுங்கமைப்பு ஆரோக்கியமான ஆள் இடைத் தொடர்புகளைக் கொண்டிலங்க வேண்டும். ஒருவருடன் ஒரு வர் தொடர்புறுதல் மூலமும், ஒருவர் மீது ஒருவர் தம் செல் வாக்கினை ஏற்படுத்துவதன் மூலமும் ஏற்படக்கூடிய வளர்ச்சி வேலை ஒழுங்கமைப்புக்கு உயிர்ப்பூட்டும் ஒன்றாகும். குழு வுணர்வு, பாராட்டு, வெகுமதி என்பனவற்றையும் ஒழுங்க மைப்புக் கொண்டிருக்க வேண்டும்.

3 - 5 விடய ஆய்வு ஐந்து
இலங்கையின் வடமேற்குப் பிரதேசத்தில் கடற்கரையிலிருந்து நான்கு மைல்கள் மேற்கே ஒரு விவசாயக் கிராமத்தில் அமைந்துள்ள இந்து மகாவித்தியாலயம் நீண்ட காலமாக ஓர் ஆரம்பப் பாட சாலையாகவிருந்து கடந்த ஏழு ஆண்டுகளுள் துரித வளர்ச்சி கண்ட ஒரு பாடசாலையாகும். இதில் 850 மாணவர்கள் கற்கின்றனர் ஆசிரியர்கள் தொகை 31 ஆகும். வகுப்புக்கள் ஆண்டு ஒன்றிலிருந்து பதின்மூன்று வரை உள்ளதுடன், கல்விப் பொதுத் தராதர உயர் வகுப்பில் வர்த்தக, கலைப் பிரிவுகள் இரண்டும் உள்ளன.
இவ்வித்தியாலய அதிபர் திரு. சிவநேசன் ஒரு பயிற்றப்பட்ட கலைப்பட்டதாரியாவார். அவர் கடந்த ஐந்தாண்டு காலமாக இவ் வித்தியாலயத்தில் கடமையாற்றுகின்றார். முதலிரண்டு ஆண்டுகள் பட்டதாரி உதவியாசிரியராகவும், பின்னர் உதவி அதிபராகவும் பணி யாற்றிய சிவநேசன் அப்பாடசாலை அதிபர் ஓய்வு பெற்றுச் சென்ற வுடன் அதன் நிறைவேற்று அதிபராக நியமனம் பெற்றார்.
ஒரு சிறந்த ஆசிரியராக மாணவர் மத்தியில் நன்மதிப்புப் பெற்ற இவர், நிறைவேற்று அதிபராக நியமனம் பெற்றதும் இந்து மகா வித்தியாலயத்தில் சில குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை ஏற்படுத்தினார். இந்து மகா வித்தியாலய மாணவர் தொகையில் அதிகமானோர் வறியவர்களாவர். அரசின் புதிய மதிய உணவுத் திட்டம் அமுல்படுத்தப்படத் தொடங்கியதும் மாணவர் தொகை கூடியது. மேலும் சுற்று வட்டாரத்திலுள்ள ஏனைய பாடசாலை களில் நடைமுறைப்படுத்தப்பட்ட மதிய உணவுத் திட்டத்தினை விட இப்பாடசாலையில் சிறப்பான முறையில், அமைச்சின் சுற்று நிருப அறிவுறுத்தல்களுக்கிணங்க நடைமுறைப்படுத்தப்பட்டது. அப் பாடசாலையில் பெற்றோர் மதிய உணவினைச் சமைப்பது போன்ற செயற்பாடுகளுக்குப் பூரண சரீர உழைப்பினை வழங்கினர்.
நிறைவேற்று அதிபரான சிவநேசன் பாடசாலையின்
கட்டடங்கள் இன்மை, தளபாடமின்மை, ஆசிரியர் பற்றாக் குறை என்பனவற்றைத் தீர்ப்பதில், மாவட்டக் கல்வித் திணைக்களம், கோட்டக் கல்வி அலுவலகம், மாகாணக் கல்வித் திணைக்களம் என் பனவற்றுடன் தொடர்புகளை ஏற்படுத்தியதன் மூலம் பெற்றுக் கொண்டார். விளையாட்டு மைதானம் இல்லாத இப்பாடசாலைக்கு அதற்கான ஒரு நிலமும் இவர் முயற்சியால் பெற்றுக் கொள்ளப் பட்டது.
பெளதிகத் தேவைகள் :* 為蠍 t
விதான முன்னேற்றத்திலும் அதிபர் ன் கூடிய அக்கறை

Page 23
-- 36 -۔
செலுத்தியமையால் ஐந்தாம் ஆண்டுப் புலமைப் பரிசில் பரீட்சை, கல்விப் பொதுத் தராதர சாதாரண, உயர்தரப் பரீட்சைகளில் குறிப்பிடத்தக்க அளவு பெறுபேறுகளை இந்து மகாவித்தியாலயம் பெற்றுக் கொண்டது. இதனால் இப்பாடசாலையின் வரலாற்றில் இக்காலகட்டம் மிகவும் சிறப்பான முன்னேற்றம் கண்டகாலப் பகுதியா கப் பெற்றோர், பாடசாலை அபிவிருத்திச் சபையினர் ஆகியோரால் பாராட்டப்பட்டது. எனவே அதிபர் அப்பாடசாலையில் தொடர்ந் தும் பணியாற்ற வேண்டும் என்றும் விரும்பினர். அதிபர் தரம் இல்லாதிருந்தும்கூட ஒரு சிறந்த அதிபராகத் திரு. சிவநேசன் பணி யாற்றிவருகையில் அதிபர் தரம் இரண்டைப் பெற்ற திரு. கனக ரட்ணம் என்பவர் இந்து மகாவித்தியாலயத்திற்கு அதிபராக நியம னம் செய்யப்பட்டார். கோட்டக் கல்விப் பணிப்பாளர், மாவட்டக் கல்விப் பணிப்பாளர் இருவரும் செய்த ஆலோசனையின் பின்பே இந்த நியமனம் செய்யப்பட்டது. இது தொடர்பாகக் கனகரட்ணம் பின்னர் குறிப்பிடுகையில் தன்னிடமுள்ள தனிப்பட்ட கோபம் கார ணமாகவே மாவட்டப் பணிப்பாளர் தன்னை இந்து மகாவித்தியால யத்திற்கு நியமனம் செய்ததாகக் குறிப்பிட்டார். கனகரட்ணத்தின் சொந்த ஊருக்கும் இந்து மகா வித்தியாலயத்திற்கும் இடைத்தூரம் ஏறக்குறைய பதின்மூன்று மைல்கள் மட்டுமன்றிப் பிரயாணக் கஷ்ட மும் கொண்டதாகும். ஆகையால் கனகரட்ணம் இம்மாற்றத்தை விரும்பாமலேயே அப்பாடசாலைக்குச் சென்று சில தினங்களில் தனது இயலாமையை வெளியிட்டுப் பணிப்பாளரிடம் கூறி மீண்டும் தனது பழைய பாடசாலைக்குச் சென்று விட்டார். இந்து மகாவித்தியாலய பாடசாலை அபிவிருத்திச் சங்கம் கனகரட்ணத்தின் நியமனத்தை அறவே விரும்பவில்லை. பணிப்பாளரின் இச்செயல் நியாயமற்றது என விமர்சிக்கப்பட்டது. அதே மாவட்டத்தில் வேறு சிலர் அதிபர் தரம் இல்லாமலேயே நிறைவேற்று அதிபராகக் கடமையாற்றினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவையெல்லாம் அப்பிரதேச பாராளு மன்ற உறுப்பினராலும் சுட்டிக்காட்டப்பட்டமையால் பணிப்பாளரது முடிவு தோல்வி கண்டது.
அதிபர் சிவநேசனும் பாடசாலையில் முழு ஊக்கத்துடனும் செயற்பட்டு வந்தார். ஏற்கனவே குறிப்பிட்டது போன்று பாட விதான அபிவிருத்தி, கட்டட வசதிகள், தளபாடம், விளையாட்டு மைதானம் அமைத்தல், மாணவர் ஒழுக்கம், புறப்பாடச் செயற்றிட் டம் என்பனவற்றில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காட்டிய சிவநேசன் அவ்வூரிலுள்ள ஆலய வளர்ச்சியிலும் போதிய அக்கறை காட்டிக் கோயில் - பாடசாலைத் தொடர்பு மூலம் சமய, கலாசார வளர்ச்சிக்கும் வழிவகுத்தார். இதனால் அவ்வாலய பரிபாலன சபை யினரது ஒத்துழைப்பையும் பாடசாலைக்காகப் பெற்றுக் கொண்டார்.
மேலும் தொண்டர் தாபனமொன்றின் உதவியுடன் இலவச பிற் பகல் வகுப்புக்களை க. பொ. த. சா. த.) வகுப்பில் சித்தியடை

- 37 -
யாத மாணவர்களதும், பாடசாலையை விட்ட மாணவர்களதும் நன்மையினை முன்னிட்டு நடாத்தினார். இதற்கு அக்கிராமத்திலும், வேறு கிராமங்களிலுமுள்ள படித்த இளைஞர்கள் உதவியாகவிருத்த னர். இதனால் பல மாணவர்கள் பரீட்சையில் வெற்றிபெற்று உயர் தர வகுப்பைக் கற்கத் தராதரமும் பெற்றனர். பாடசாலைக் கடமை களுக்குப் புறம்பான வகையில் அமைந்த இச்சேவையால் பல கிரா மங்களைச் சேர்ந்த மாணவர்கள் பயன்பெற வழி வகுத்தமையால் சிவநேசனது சேவை அவருக்குச் சமூக ஒத்துழைப்பை மேலும் அதி கரித்தது.
இந்நிலையில் புதிதாக நியமனம் பெற்று வந்த மாவட்டக் கல்விப் பணிப்பாளர், அதிபர் தரம் இல்லாத நிறைவேற்று அதிபர் உள்ள பாடசாலைகளுக்கு அதிபர் தரங்களைப் பெற்றவர்களை நிய மனம் செய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டார். இது இப்பணிப் பாளருக்குப் பலத்த எதிர்ப்பை ஏற்படுத்தியது. இதுவரை காலமும் நிறைவேற்று அதிபராகச் செயற்பட்டுவந்த அதிபர்கள் அனைவரும் சேர்ந்து பணிப்பாளருக்கு அவ்வாறு செய்ய வேண்டாம் என்றும், தமது முன்னேற்றத்தை அது பாதிக்குமென்றும் ஓர் எழுத்துமூல மகஜரைக் கொடுத்தனர். இதனை முன்யோசனையில்லாமல் பணிப் பாளர் புறக்கணிந்ததுடன், தனது தீர்மானத்தை நடைமுறைப்படுத் தவும் முற்பட்டார் திரு. ஆறுமுகம் எனும் அதிபர் தரம் இரண்டைப் பெற்ற ஒருவர் இந்து மகாவித்தியாலயத்திற்கும் நியமனம் செய்யப் பட்டார். இச்செய்கையை இந்து மகாவித்தியாலயப் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் வெகுவாக மீண்டும் எதிர்த்தது. புதிதாக நிய மனம் செய்யப்படும் அதிபர் தமக்குத் தேவையில்லை என்றும், தற் போதைய அதிபரான திரு சிவநேசனின் சேவையில் தாம் மிகவும் திருப்தியடைவதாகவும், பணிப்பாளரது இச்செயல் கல்வி விருத்தியை ஏற்படுத்துவதல்ல, மாறாகக் கல்வி வளர்ச்சியை நாசமாக்கும் செய் கையே என்றும் காரசாரமாக விமர்சித்து மத்திய கல்வியமைச்சு, மாகாண கல்வியமைச்சு என்பவற்றுக்கும் பாராளுமன்ற உறுப்பின ருக்கும் புகார் செய்தனர். இச்செயல் தொடர்பாகப் பணிப்பாள ருக்கு எதிராகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கள் பல
* முன்னர் கனகரட்ணம் என்பவரையே நியமித்து முன்னைய பணிப்பாளர் வெற்றியடையவில்லை அப்படியிருக்க இப்புதிய கல்விப் பணிப்பாளர் ஏன் என்னை மீண்டும் இந்து மகாவித்தியாலயத்திற்கு நியமனம் செய்கின்றார் " என ஆறுமுகம் குறிப்பிட்டார். அத்துடன் அவர் அங்கு செல்ல முற்றாக மறுத்தும் விட்டார்.
* பணிப்பாளரது போக்குத் தன்னிச்சையானது; பிழை யானது ஓர் அதிபரின் சேவையை மதியாது; அவரது தொழில் உயர்ச்சியைக் கருத்திற் கொள்ளாது மேற்கொண்ட இச் செயல் கண்டிக்கப்பட வேண்டியதே " என்பது கந்தையா எனும் கோட்டக் கல்விப் பணிப்பாளரது கருத்தாகும்.

Page 24
- 38 -
* இந்து மகாவித்தியாலயத்தை விட்டுச் செல்ல வேண்டாம் புதிய அதிபர் நியமிப்பதை நானும் வெறுக்கிறேன் " என கோட் டத்திற்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர் திரு. பெர் ணாண்டோ திரு சிவநேசனிடம் கூறினார்
இந்நிலையில் மாவட்டக் கல்விப்பணிப்பாளரைக் கண்டு கதைத்த திரு. சிவநேசன் புதிய அதிபரை இந்து மகாவித்தியாலயத்திற்கு நிய மிப்பதாயின் தன்னை நான்கு மைல்களுக்கு அப்பால் உள்ள வித்தி யாலங்கார மகாவித்தியாலயத்திற்கு உதவி அதிபராக நியமிக்குமாறு கேட்டுக்கொண்டார் இதையும் பணிப்பாளர் சிறிதும் கருத்துக்கு எடுக்கவில்லை
பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினரின் கடும் எதிர்ப்பு, திரு. ஆறுமுகத்தின் மறுப்பு, பாராளுமன்ற உறுப்பினரது தலையீடு இவற் றின் மத்தியில் பணிப்பாளரது தீர்மானம் செயல் இழந்ததாயிற்று. திரு. சிவநேசன் தொடர்ந்தும் நிறைவேற்று அதிபராகவே இந்து மகாவித்தியாலயத்தில் பணியாற்றி வருகின்றார்
பின்வரும் வினாக்களுக்கு விடை தருக.
1. இந்து மகாவித்தியாலயப் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் பற்றி
உமது கருத்து யாது?
2. இத்து மகாவித்தியாலய அதிபர் தொடர்பாக மாவட்டக் கல்விப் பணிப்பாளர்களது மனப்பாங்கையும், செயற்பாடுகளையும் விமர் சனம் செய்க
3. இந்து மகாவித்தியாலய அதிபர் திரு. சிவநேசன் சமூக ஒத்து
ழைப்பை நன்கு பெற்றிருந்தமைக்குக் காரணங்கள் யாவை?
4. ஒரு சிறந்த கல்விப் பணிப்பாளரது பண்புகள் எவையாக இருத்
தல் வேண்டும் என்பதை இந்து மகாவித்தியாலய நிகழ்ச்சிகளை உளத்திற்கொண்டு ஆராய்க.
விடை எழுதுவதற்கான குறிப்புகள்
விடய ஆய்வு ஐந்து
வினா 1.
1. பாடசாலை அபிவிருத்திச் சங்கம்/சபை அதன் அதிப்ருக்குப் பல வகையிலும் ஒத்துழைப்பு வழங்குவதுடன் பாடசாலையின் அபி விருத்தியிலும் எப்பொழுதும் அக்கறையாக இருத்தலும் அவசி யம். பல பாடசாலைகளில் அதிபருக்கும் பா. அ. சங்கத்திற்கு மிடையேயுள்ள முரண்பாடுகள் பாடசாலையைச் சீர்குலைத்து விடுவதும் உண்டு. அத்துடன் இருசாராருக்குமிடையேயுள்ள

- 39 -
தொடர்பு ஆரோக்கியமானதாக இருப்பதுமில்லை. இந்து மகா வித்தியாலயப் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்திற்கும் அதிப ருக்கும் இடையேயுள்ள தொடர்பு சிறப்பாகவும் ஏனைய பாட சாலை அபிவிருத்திச் சங்கங்களுக்கு ஒர் உதாரணமாகவும் இருக் கின்றது. அது அதிபர் சிவநேசன் ஆற்றிய சேவையை நன்கு இனங்கண்டு கணிப்புக் கொடுத்திருத்தலையும் காணலாம்.
அதிபர் சிவநேசன் பாடசாலையின் உயர்வுடன் அமையாது கிரா மத்தின் கோயில், மற்றும் பாடசாலையைவிட்ட மாணவர்களது உயர்வு என்பனவற்றிலும் காட்டும் அக்கறையும் செய்யும் பணி யும் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தால் கருத்திற் கொள்ளப் படுவதையும் அவதானிக்கலாம் ஒரு பாடசாலையின் அபிவிருத்தி தனியே பாடசாலையுள் மட்டும் அமைந்து விடுவதன்று. அது ஒரு சமூகத்தாபனமாகையால் சமூகத்திலுள்ள ஏனைய தாபனங் களின் தொடர்பும் அதனுாடாக ஒன்றினை ஒன்று வளர்த்தலும் தவிர்க்கமுடியாததாகின்றது. இந்த அம்சங்களையெல்லாம் சீர் தூக்கிப் பார்த்து ஒருவரது சேவையை மதிப்பிடும் ஆற்றல் கொண்டதாக இந்து மகாவித்தியாலயப் பாடசாலை அபிவி ருத்திச் சங்கம் காணப்படுகின்றது
அதிபர் சிவநேசன் தனது கல்வித்தகைம்ை, தொழிற்தகைமை என்பனவற்றைத் தவிரத் தனக்கென அதிபர் சேவைத்தரம் அல் லது கல்வி நிர்வாக சேவைத்தரங்கள் ஏதும் இல்லாதவர். அப் படியிருந்தும் அவர் ஆற்றும் சேவையையே பிரதான அம்சமாகக் கருதிச் செயற்படுவ ~த அவதானிக்கலாம். இது பாடசாலை அபிவிருத்திச் சங்கம் கல்விபற்றிய தெளிவும், சிந்தனையும் கொண்டது என்பதைக் காட்டுகின்றது
இந்து மகாவித்தியாலயப் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் ஒரு விழிப்புள்ள அமைப்பென்பதை அதன் செயற்பாடுகளிலிருந்து அறியலாம். அதிபர் தரத்தைப் பெற்ற வேறு இரு அதிபர்கள் இரண்டு பணிப்பாளர்களால், வெவ்வேறு தடவைகளில் இந்து மகாவித்தியாலயத்திற்கு நியமனம் செய்யப்பட்டபோதும் சிவ நேசன் அதே பாடசாயிைலிருந்து பணியாற்ற வேண்டும் என்ப தற்காகச் செயற்பட்டதைக் காணமுடிகின்றது. சிவநேசன் பாட சாலையிலிருந்து கடமையைத் தொடர அது பல அணுகுமுறை களைக் கையாண்டு புதிய அதிபர் வருவதைத் தடைசெய்திருப் பது அதன் உயிர்ப்பும், விழிப்புணர்வும்கொண்ட செயற்பாட்டிற்கு உதாரணமாகும். -
கடமைகளில் ஈடுபட்டிருக்கும் ஆளணியினருக்கு ஊக்குவிப்பு அவ சியம், பலவகையான ஊக்குவிப்பு நுட்பங்கள் முகாமைத்துவத்

Page 25
l.
- 40 -
தில் உபயோகிக்கப்படுகின்றன. ஒவ்வொருவரின் தேவை, இயல்பு என்பனவற்றுக்கேற்ப அவை வேறுபடலாம். இந்து மகாவித்தியா லயப் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் அதிபரின் சேவையைப் பாராட்டுவதையும் அவரே அப்பாடசாலையில் தொடர்ந்தும் பணியாற்ற வேண்டும் என்று விரும்புவதையும் காணலாம். இத னால் அதிபர் சிவநேசன் மேலும் தாது கடமைகளைச் செய்ய ஊக்குவிக்கப்படும் நிலையை அவதானிக்கலாம்.
இவ்வாறான பல அம்சங்களை அவதானிக்கும் போது இப் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் பயன்தரும் தன்மையும் வினைத் திறனும், உயிர்த்துடிப்பும் கொண்ட ஒரு முன் மாதிரிப் பாட சாலை அபிவிருத்திச் சங்கமாக இருக்கிறதெனலாம்.
ר
கல்வி நிருவாக நிலையிலுள்ளோர் கல்வி வளர்ச்சியில் அக்கறை கொண்டவர்களாக விளங்குவது அவசியம். பாடசாலைகள் eup alth ஏற்படுத்தப்படும் வளர்ச்சி, சமூகம் நாடு என்ற வகையில் பரந்து செல்லும். இவ்வாறு கல்வி விருத்தியை ஏற்படுத்துவதன் மூலம் நாட்டின் கல்விக் கொள்கையில் குறிப்பிடப்படும் இலக்குகளை அடைவதற்கு அவர்கள் செயற்பட வேண்டும் என்பது கல்வி அமைச்சின் எதிர்பார்ப்பாக அமைகின்றது. இந்து மகாவித்தியா லய அதிபர் சிவநேசன் பாடசாலையின் குறிக்கோள்களை அடை வதற்காகச் செயற்பட்டுவரும் ஓர் அதிபர். பாடசாலையுடன் ஏனைய சமூக நிறுவனங்களையும் இணைத்துச் செயற்படும் ஒரு பயன் தரும் தன்மைகொண்ட அதிபராக விளங்குகின்றார். அவரை பாடசாலைச் சமூகம், ஆலயம் மற்றும் தொண்டர் தாபனங்கள் என்பனவும் பெரிதும் விரும்புகின்றன. இந்நிலையில் அதிபருக்குச் சமூகத்தில் ஒரு பலமான ஆதரவும் இருக்கின்றது. இவ்வாறான நிலையிலுள்ள ஓர் அதிபரை அப்பாடசாயிலிந்து மாற்ற முயல்வது கல்வி வளர்ச்சியில் அக்கறைகொண்ட ஒரு கல்விப் பணிப்பாளரால் செய்யப்பட முடியாதது. பாடசாலை யாலும், பொதுவாகச் சமூகத்தினாலும் விரும்பப்படும் ஓர் அதி பரை மாற்ற முயல்வது பணிப்பாளரது ஆழமற்ற கல்வி வளர்ச்சி தொடர்பான சிந்தனையைக் காட்டுகின்றது.
அதிபர் தரம் இல்லாதவர்கள் அந்த மாவட்டத்தின் ஏனைய பாடசாலைகளிலும் இருக்கின்றார்கள். அப்படியிருக்கக் குறிப் பிட்ட சில பாடசாலைகளிலுள்ள சில அதிபர்களை மாற்ற முயல் வது பணிப்பாளரது பாரபட்சமான முறையில் எடுத்த தீர்மா னத்திற்கும் சான்றாகின்றது, தீர்மானங்கள் எல்லோருக்கும் சம மாகவும். ஏற்கப்படக் கூடியதாகவுமிருக்க வேண்டும். ஒரு நிரு

5.
- 4 , -
வாகி தீர்மானம் எடுக்கும்போது நியாயப்படுத்தப்படக் கூடிய தாக இருக்க வேண்டும். அவ்வாறில்லாவிடின் பலவித விமர் சனங்களுக்கும் உள்ளாக வேண்டிவரும்.
பணிப்பாளரது செயலை அவருக்குக் கீழ்ப்பணியாற்றும் நிருவா கிகளும் வெறுப்பதை அவதானிக்கலாம். ‘பணிப்பாளரது போக் குத் தன்னிச்சையானது; ஒர் அதிபரின் சேவையை மதியாது அவரது தொழில் உயர்வைக் கருத்திற் கொள்ளாது மேற்
கொண்ட இச்செயல் கண்டிக்கப்படவேண்டியதே' எனும் சே71
டக்கல்விப் பணிப்பாளரது கருத்து உற்று நோக்கற்பாலது இதிலிருந்து பணிப்பாளர் கூட்டான தீர்மானமின்றித் தன்னிச் சையான தீர்மானம் மேற்கொள்பவராக இருப்பதை நோக்கலாம்.
அதிபர்கள் கல்வியமைச்சின் முதல் நிரை முகாமையாளர்களாவர். ஒரு நாட்டின் பொதுக் கல்வித் திட்டத்தின் வெற்றி அவர்களது கையிலேயே தங்கியுள்ளது. பாடவிதானத்தைப் பயன்தரும் வகையில் செயற்படுத்துபவர்களும், குறிக்கோளை நோக்கிப் பாட சாலையை நெறிப்படுத்துபவர்களும் அவர்களே. கடந்த பத் தாண்டுகளாக அவர்களுக்குக் கூடிய அதிகாரங்களை வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்திருப்பதைப் பல அறிக்கை கள் காட்டுகின்றன. இவைகளை அறிந்தவராகவும், அவர்களது சேவையைக் கணிப்பவராகவும், அவர்களை ஊக்குவிப்பவராகவும் பணிப்பாளர்கள் விளங்க வேண்டும். ஆய்வில் குறிப்பி-'"ே பணிப்பாளர்களது செயல் அதிபர்களுக்கு ஊக்கத்தைக் குறைக் கும் செயலாக உள்ளது. அதிபர் பணிப்பாளர் உறவு பலமாவட் டங்களில் விருத்தியடையுமாயின் அது கல்வி விருத்திக்கு வித் தாக அமையும்.
கல்வி நிருவாக முறை பன்முகப்படுத்தப்பட்டிருக்கும் இன்றைய நிலையில், கல்வி முறைமையில் பணியாற்றும் ஆளணியினரது. குறிப்பாக ஆசிரியர்கள், அதிபர்களது பிரச்சினைகள், இடமாற் றம், அவர்களது தொழில் உயர்வு போன்ற விடயங்களை நிரு வாக ஏணியின் உயர்மட்ட அதிகாரிகளுக்குதி தெளிவுபடுத்தும் ஆற்றலும் தகுதியும் பணிப்பாளர்களுக்கு இருத்தல் வேண்டும். கல்வியமைச்சு காலத்திற்கு காலம் விடுக்கும் சுற்று நிருபங்களுக கேற்பச் செயற்பாடுகளை மேற்கொள்ளும்போதும் அவற்றுக்குப புறநடையான நிலை, சமூகத்தேவை, வேண்டுகோள்கள் என்பன வும் கருத்திற் கொள்ளப்படவேண்டியதாகும். கல்வி நிருவாகம் கச்சேரி மற்றும் பொது நிருவாகம் போன்றவற்றினின்றும் வேறு பட்டது என்பதையும், ஆளணியினர் இயந்திரங்கள் அல்ல, சி" கள் பிரச்சினையுடன் தொடர்பானவர்கள் என்பதையும் நிரு
விாகம் கருத்திற் கொள்ளவேண்டியதொன்றாகும். இன்று நிரு

Page 26
سے 42 سی۔
வாகத்தில் மனிதத் தொடர்பு அணுகுமுறை தவிர்க்க முடியாத
தொன்று என்பதையும் இப்பணிப்பாளர் கருத்திற்கொள்வதுடன் சூழ்நிலை அணுகுமுறை தனது நிருவாகத்தில் தவிர்க்க முடியாது பின்பற்றப்பட வேண்டியது என்பதையும் கருத்திற் கொள் பவராயின் ஆசிரியர்கள், அதிபர்கள் தொடர்பான பிரச் சினைகளை வெற்றிகரமாகச் சமாளிக்க முடியும்
வினா 3
அதிபர்கள் சமூகத் தலைவர்களாவர். பாடசாலை மூலமாகச் சமூக உயர்வுக்குச் செயற்படுவதால் அவர்கள் சமூகத்தால் ஏற் கப்படுவதுடன் தலைவர்களாக, வழிகாட்டிகளாக விளங்கி உயர்வு பெற்றவர்களை நம் நாட்டின் கல்வி வரலாற்றில் நிறையைக் காணலாம் திரு சிவநேசன பாடசாலையின் அபிவிருத்தி மூலம் சமூக உயர்வுக்கு வழிவகுத்தமையால் பாடசாலைச் சமூகம் அவரை முழுமையாக ஏற்று அவரது சேவையைக் கணிக்கத் தொடங்கியது.
இந்து மகாவித்தியாலயம் நீண்டகாலமாக ஆரம்பப் பாடசாலை யாகவிருந்து அண்மைக்காலமாகத் துரித வளர்ச்சி கண்டதும், தரம் ஒன்றுக்கு உயர்ந்தப்பட்டதுமாகும். கட்டட வசதிகளும். கல்வி முன்னேற்றங்களும் குறிப்பிடத்தக்க அளவில் அடையப் பட்டுள்ளன. இச் சாதனை சிவநேசனுக்குப் பெற்றோரின் நல் லெண்ணத்தைப் பெற்றுக் கொடுத்தது.
அதிபர்கள் பல நிறுவனங்களை இணைக்கும் செயற்பாட்டை மேற்கொள்கின்றனர். பாடசாலை சமூகத்தில் உள்ள ஏனைய நிறுவனங்களுடன் பின்னிப்பிணைந்த ஒன்று. அதன் முன்னேற்றத் திற்கு அவற்றின் தொடர்பு அவசியம். அதுமட்டுமன்றி பாட சாலையின் செல்வாக்கு அவற்றின் வளர்ச்சிக்கும் உதவியாக அமைய இடமுண்டு. இங்கு அதிபர் சிவநேசன் தனது பிரதேசத் தில் இயங்கிவரும் தொண்டர் தாபனங்களைப் பாடசாலைக்கு மட்டுமல்ல பொதுவாக பாடசாலையைச் சூழவுள்ள சமூகத்துக்கே பயன்படுத்த முயல்வதைக் காணலாம். இது அவருக்கு ஒரு பலத்தைக் கொடுத்திருக்கின்றது
சமயம் எமது கலாசாரத்தின் ஆணிவேரெனலாம். ஒவ்வொரு கிராமத்திலும் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட ஆலயங்க ளைக் காணலாம். இவற்றின் தொடர்பு பாடசாலையை வளர்க்க ஒரு உந்து சக்தியாக அமையலாம். மாறாகப் பாடசாலையின் தொடர்பு அதன் வளர்ச்சிக்கும் உதவியாக அமையலாம் இந்த அம்சத்தைத் திரு. சிவநேசன் சிறப்பாக விளங்கிக் கொண்டதைக்

سس. 43 سسيه
காண முடிகின்றது. அவர் ஏற்படுத்திய ஆலய பாடசாலை தொடர்பு ஆலய நிருவாகத்தின் உதவியை அதிபருக்கு வழங்கி யது. அதுமட்டுமன்றிக் கலாசார வளர்ச்சிக்கும் காலாக அமைந் தது. இது அதிபருக்கு சமூக ஒத்துழைப்பை வழங்கிய பிறிதொரு அமசமாகும.
பொதுவாக நோக்குகையில், அதிபர் சிவநேசன் பெற்றார், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், சமய நிறுவனம், தொண்டர் தாபனம் போன்றவற்றின் நல்லெண்ணத்தைப் பெற்றதன் மூலம் ஒரு பலமான சமூக ஒத்துழைப்பைப் பெற்றிருந்தார் எனலாம். பாடசாலையின் வெற்றிக்கு இது அவசியமானதொன்று, பல அதிபர்கள் சிவநேசனின் முன்மாதிரியைப் பின் பற்றுதல் பயன் ქმნდ)tD.
வினா 4
.
ஒரு சிறந்த கல்விப் பணிப்பாளர் பல்வேறு பண்புகளைக் கொண்டு விளங்குதல் வேண்டும் தனது எல்லைக்குட்பட்ட பாட சாலைகள், அங்கு பணியாற்றும் அதிபர்கள், ஆசிரியர்கள் ஆகி யோர் பற்றித் தெளிவான விளக்கம் ஒன்றைப் பெற்றிருத்தல் அவரது நிருவாகத்திற்கு உதவியாக அமையும். இந்து மகாவித்தி யாலயத்தைப் பொறுத்தமட்டில் பணிப்பாளர்கள் அதிபரின் சேவை, அவரது தொழில்துறை உயர்வு அவருக்குப் பாடசாலை யிலும் சமூகத்திலுமிருந்த ஆதரவு போன்றவற்றை விளங்காத
வர்களாகக் காணப்பட்டனர்.
கல்விப் பணிப்பாளர் மாவட்டத்தின் கல்வி வளர்ச்சிக்குத் தலைமை தாங்குபவர். ஆகையால் ஆசிரியர்களையும், அதிபர் களையும் ஊக்குவித்தலும், அவர்களது உயர்வுக்கு வழிச7-ே தலும் அவசியம். இந்து மகாவித்தியாலயத்தையிட்டு நோக்கும் போது பணிப்பாளர்களது நடவடிக்கை அதிபரையும், பாடசாலை அபிவிருத்திச் சங்கம் மற்றும் சமூகம் என்பனவற்றை ஊக்கமி ழக்கச் செய்யும் ஒன்றாக அமைந்துள்ளது எனினும் அறிவும், கடமையில் ஆர்வமும் கொண்ட சிவ்நேசன் இத்தகைய ஊக்க மிழக்கச் செய்யும் செயற்பாடுகளுக்கிடையிலும் கடமையை நன்கு செய்து வந்தார். இதே நிலையை எல்லா அதிபர்களிடமும் எதிர் பார்க்க முடியாது.
அதிபர் தரத்தைப் பெறாத ஆனால் கல்வித்தகைமையும், சிறந்த கடமையுணர்வும் உள்ள பலர் எமது கல்வியமைப்பில் அதிபர் களாக உள்ளனர் கல்வி வளர்ச்சி, மாணவர் முன்னேற்றம் என்பன பிரதானமாகையால் அத்தகைய அதிபர்களுக்கு ஊக்கு

Page 27
--سمہ 44 م۔
விப்பும், தொழில் உயர்வுக்கு வழியேற்படுத்தவும் பணிப்பாளர் கள் முயல வேண்டும் பணிப்பாளர் தமக்கொன உயரிய கல்வித் தத்துவம் ஒன்றைக் கொண்டவர்களாக விளங்க வேண்டும்
காலத்திற்குக் காலம் வெளிவரும் கல்வி ஆராய்ச்சி முடிவுகளை அறிந்து தமது மாவட்டத்தின் கல்வி நிலை என்ன? ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடும்போது இதன் கல்வித்தரம் எவ்வாறு உள்ளது, எங்கெங்கு கல்வி வளர்ச்சியடையாது உள்ளது. அதற் காக என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பன பற்றிய ஓர் ஆய்வுக் கண்ணோட்டம் உள்ளவராகவும், பாரபட் சமான முறையில் அதிபர்களையோ, ஆசிரியர்களையோ நடத் திாதவர்களாகவுமிருத்தல் வேண்டும். தீர்மானங்கள் எடுக்கும் போது எல்லோருக்கும் பொதுவானதாக இருத்தல் விரும்பத் தககது.
பாடசாலை அபிவிருத்திச் சங்கங்கள் சபைகள் போதிய பலமும் செல்வாக்குமுள்ளவையாக இருக்கலாம். இவ்வாறான அமைப்புக் களுடன் முரண்படுவதைத் தவிர்த்து அவற்றின் அனுசரணையு டன் தமது மாவட்டத்திலுள்ள பாடசாலைகளை நிருவகிப்பார் ளாயின் நல்ல கல்வி முன்னேற்றங்களை ஏற்படுத்த முடியும்.
பாடசாலைகள் மாணவர்களது கல்வி முன்னேற்றத்திற்கும், சமூ கத்தின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்வதற்கும் உள்ளனவே யன்றி அதிபர் தரத்தினைப் பெற்றவர்களுக்கு இடத்தைக் கொடுப் பதற்காக அவை இருக்கவில்லை என்பதைப் பணிப்பாளர்கள் தெளிவுபடுத்திக் கொள்ளுதல் வேண்டும்.
பணிப்பாளர்கள் தமது நிருவாக அனுபவங்களைப் புதுப்பிப்வர்களாகவும், பிரதேச மட்டங்களில் ஓர் அறிவுறுத்தல் தலைவர்களாகவும், தம்முடன் பணியாற்றும் கல்வியதிகாரிகள் அதிபர்களது ஆலோசனைகளையும் கருத்திற்கொண்டு கல்வி முன்னேற்றத்திற்குப் பாடசாலைகளை இட்டுச் செல்பவர்களா கவும் முரண்பாடுகளையும், பாரபட்சங்களையும் களைபவர்க ளாகவும், ஆசிரியர், அதிபர்கள் ஆகியோருக்கு ஊக்கமும், உற் சாகமும் அளித்து அவர்களது கல்வி, தொழில் உயர்வுகளுக்கு வழிகாட்டுபவர்களாகவும், தாம் பணியாற்றும் பிரதேசத்தின் கல்வி நிலையை உயர்த்துவதற்காகக் கல்வி தொடர்பான தொழிற்பாட்டு ஆய்வாளர்களாகவும் விளங்குதல் பயன் தரும்.

سی۔ 45 سس۔
விடய ஆய்வு ஆறு 3 .. 6
இது கொத்தணியமைப்பு நடைமுறைப்படுத்தப்படாத ஒரு பிர தேசத்திலுள்ள வித்தியாதான வித்தியாலயத்தைப் பற்றியதாகும். தளர்விலாத அபிவிருத்தி கண்ட ஒரு கனிஷ்ட பாடசாலையாகத் திகழ்ந்த இப்பாடசாலை அண்மையில் சேர்க்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கையிலான மிகப் பெரிய, துரிதமான அதிகரிப்புடன் பாரிய மாற்றமொன்றைக் கண்டது. வட்டாரத்தில் கிராமக் குடியிருப்புக் கள் சில தாபிக்கப்பட்டதன் விளைவாகவே அதிகரித்த அளவில் மாணவர் இங்கு அனுமதிக்கப்பட்டனர். இதற்கு இன்னுமொரு கார ணம், இப்பிரதேசத்தில் இப்பாடசாலைக்கு இருந்த பெருமதிப்பாகும். பெண் பிள்ளைகளுக்கும், ஆண் பிள்ளைகளுக்கும் சிறந்த அடிப்படை கல்வியை வழங்கி வரும் ஒர் இடமாக இப்பாடசாலை குறிப்பிடப் பட்டு வந்தது.
தற்பொழுது பாடசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணவர் எண்ணிக்கை 950 ஆகும் அங்கிருந்த அதியுயர்ந்த வகுப்பு கல்விப் பொதுத் தராதர்ப்பத்திர சாதாரணமாகும். இப்பாடசாலையின் ஆசிரியர் குழுவில் பயிற்சி பெற்ற ஒரு தொகையான பட்டதாரிகள், தனித்துறை ஆசிரியர்கள் உட்பட 35 பேர் இருந்தனர்.
பாடசாலையின் அதிபர் திரு. வித்திசேகர குணதாச இப்பாட சாலையின் அதிபராகப் பத்தாண்டு காலம் சேவையாற்றியவராவர். எட்டு ஆண்டுகளாகப் பயிற்சி பெற்ற ஆசிரியராக இருந்த அவர் சுயமாகக் கற்று வெளிவாரிப் பட்டதாரியானார். திறந்த பல்கலைக் கழகத்திலிருந்து அவர் டிப்ளோமாப் பட்டத்தையும் பெற்றுள்ளார். சென்ற ஆண்டு அதிபர்கள் சேவையின் முதலாம் தரத்திற்குப் பதவி யுயர்த்தப்பட்டார்.
கடந்த ஆண்டு எட்டு வகுப்பறைகளைக் கொண்ட ஒரு புதிய இரு மாடிக் கட்டடமொன்று கட்டப்பட்டது. இடநெருக்கடியைக் குறைப்பதற்கு எழுந்த பல்வேறு வேண்டுகோள்களுக்குப் பதில் நட வடிக்கையாகத் திணைக்களத்தினால் நிர்மாணிக்கப்பட்ட இப்புதிய கட்டடம் பொதுவாக முற்போக்கு வாய்ந்த ஒரு பெரிய நடவடிக்கை யாகக் கருதப்பட்டது. இப்புதிய கட்டடம் வழங்கப்பட்டதுடன் தோற்றமெய்திய அபிலாசைகள் பலவாகும் இவ்வபிலாசைகளுக்கு மெய்வடிவம் கொடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. இதுதொடர்பில் அதிபரின் கடமைக்கூறு உண்மையில் முக்கியத்துவம் வாய்ந்ததாயிற்று வெளி நிறுவனங்களினதும் நிர்வாக கட்டமைப்பின் சில பகுதிகளின் தும் முயற்சிகளை இயைபுபடுத்துவதற்கு நிறைவேற்றப்பட வேண்டிய வேலைகள் பல இருந்தன. இப்பணியில் உள்ளூர்க் கல்வி அலுவல

Page 28
جیسے 46 حس۔
கத்திற்கு முக்கிய பங்கொன்று உண்டு என அதிபர் நம்பினார். எனி னும் புதிய வகுப்பறைத் தொகுதிக்குத் தளபாடம் வழங்குவதிற் தாமதமேற்பட்டமை அவதானிக்கப்பட்டது. அவற்றுக்காகக் காத்தி ருந்த காலம் ஆறு மாதங்களுக்கு மேலாக நீடித்தது. கடிதத் தொடர்புகளின் பிரதிகள் பாடசாலைக் கோப்புக்களைத் தடிப்பெய் தச் செய்தன. "நிலைமை மோசமாகி விட்டது. உண்மையில் என் னால் இதை நிருவகிக்க முடியாது. சிறிய பாடசாலையொன்றிற்கு நான் இடமாற்றம் பெறுதல் வேண்டும் ' என்று உள்ளாரக்கிடந்த தனது அதிருப்தியை அவர் உதவி ஆசிரியர் சுமித்திரசேனவிற்கு வெளியிட்டார். சுமித்திரசேன ஓர் இளம் பட்டதாரியாசிரியராவார். அவர் மிகச் சமீப காலத்திலேயே கல்வி டிப்ளோமாப் பட்டத்தைப் பெற்றிருந்தார். பாடசாலை விவகாரங்கள் பலவற்றில் அவர் விரும் பத்தகுமளவில் கடுமையாக உழைப்டார். 'பாடசாலையைக் கட்டி யெழுப்பியவர் நீர், தற்பொழுது பாடசாலையை விட்டு விலக எண் ணுகிறீர். மக்கள் இச்செய்தியச்ை கேட்டு அதிர்ச்சியடைவர். உண்மை யில் உம்மை எவரும் வெறுக்கவில்லை என எண்ணுகிறேன்." என்று சுமித்திரசேன கூறினார். ‘என்னை எவரும் வெறுக்கவில்லையென்பது உண்மைதான். ஆனால் தளபாடங்கள், நூலக ஒழுங்கமைப்பு, பழைய மாணவர்களிடமிருந்து பெற்றுக்கொள்வதற்குரிய நன்கொடைகள், சமாந்தர வகுப்புக்களின் முகாமை, ஒழுங்கமைக்கப்பட்ட சில விளை யாட்டு முயற்சிகள் என்பவை பற்றி எழுகின்ற எண்ணற்ற முறைப் பாடுகள், ஆசிரியர்களது வேண்டுகோள்கள் ஆகியவற்றை சமாளித் துக் கொள்ளுதல் எனக்குச் சிரமமாகவுள்ளது. இவ்விடயங்கள் யாவும் ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கிக் கொணரப்படும் பொழுது யாவற்றை யும் ஒரே குழப்பமயமானவையாகக் காண்கின்றேன்" என்று குண தாச விளக்கினார்.
இவ்வுரையாடல் அவர்களிருவரும் கல்வி அலுவலகத்துக்குச் சென்று கொண்டிருந்த வழியில் நிகழ்ந்தது. குணதாச கல்வி அலு வலகத்துடனான தனது தொடர்புகளில் பெரிதும் தயக்கம் காட்டி வந்தார். கல்வி அதிகாரி தனக்கு குறைந்த கணிப்பையே நல்குவ தாக அவர் எண்ணினார். பாடசாலை நாட்களிலிருந்து அவருடன் தான் கொண்டிருந்த நெடுங்காலப் பரிச்சயமும் கூட தனக்குப் பிரதி கூலமாகவே உள்ளதாக அவர் கருதினார். அவர் காட்ட எத்தனித்த நட்பும் அவ்வளவு விசுவாசம் மிக்கதாக அவருக்குத் தோன்றவில்லை. அவர்கள் கல்வி அலுவலகத்திற்குச் சென்ற வழியில் சுமித்திரசேன பேசிக் கொண்டது உற்சாகமளிப்பதாக இல்லாவிடினும் தான் பெற் றிருந்த வெறுப்புணர்விலிருந்து விடுபடக் குணதாசவிற்கு உதவியது. ஏனைய விடயங்களுள் சுமித்திரசேன பின் வருவனவற்றையும் குறிப் பிட்டார்.

- 47 -
*தனியொரு பாடசாலைக்கு அனைத்ததையும் கொடுக்க முடி யாது எனும் கருத்தில் அலுவலகம் நிலைகொண்டால் நாம் எமது கருத்துக்களைப் பலமாக முன்விைத்தல் வேண்டும்.'
**புதிய கட்டடம் காரணமாகவே தளபாடம் வழங்கலில் தீவிர மான கவனக்குவிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது ’’
'தளபாடமற்ற புதிய பாடசாலைக் கட்டடத்தைப் பயனற்ற ஓர் அன்பளிப்பாக மக்கள் கருதத் தலைப்பட்டுள்ளனர்.'
அவர்கள் இருவரும் அன்று தமது பாடசாலைக்கான தளபாடம் வழங்குதலுக்கு முன்னுரிமையளிக்கப்படச் செய்தனர். அவசரக் கட் டளையொன்றின் பேரில் கிடைக்கக்கூடும் எனக் கருதப்பட்ட சில தளபாடங்களைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் அவர்கள் நம் பிக்கை கொண்டனர். தளபாடம் வழங்கற் பிரிவின் மூலம் இவ்விட யங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கு, குணதாசாவுக்கு, சுமித்திர சேனவின் வாதங்கள் எவற்றையேனும் பயன்படுத்த வேண்டிய தேவை ஏற்படவில்லை. உறுதியாக நிகழக்கூடிய விடயங்களையிட்டு ஓரளவு திருப்தி கொண்ட உணர்வுடன் அவர்கள் கல்வி அலுவலகத்தை விட்டு நீங்கினர். பாடசாலைக்குத் திரும்பும் வழியில் பாடசாலை தொடர்பான பல விடயங்களையிட்டும் அவர்கள் கலந்துரையாடினர்.
**ஆசிரியர் பாடநூல்களையும் பாடநெறி வழிகாட்டிகளையும் பகுத்து ஆராய்தல் வேண்டும்; இவை குறித்து நெடிது கலந்துரை யாடுவதன் மூலம் கற்பித்தலுக்குதவும் பொருட்களையும் விருத்தி செய்து வரவேண்டும்; தரம் ஒவ்வொன்றுக்கும் ஏதேனும் கற்பித்தல் ஒழுங்கமைப்பு இருத்தல் வேண்டும் என்றெல்லாம் அவர்கள் கூறுகி றார்கள் போற் தெரிகிறது; இவை எவையுமின்றியே சிறந்த கற்பித்தல் நிகழலாம் என்று உறுதியாக நான் நம்புகிறேன்' என்று கூறினார் குணதாச.
"நீர் குறிப்பிட்ட யாவற்றையும் முற்று முழுதாகப் புதியவை யென்றோ அன்றேல் சிரமமானவை என்றோ கருதுகிறீரா?' என்று வினவினார் சுமித்திரசேன. அவர்கள் கலந்துரையாடிய ஏனைய விடயங்களிட் சில கீழே தரப்பட்டுள்ளன.
* பாலிதா எனும் பழைய மாணவர் ஒருவர் பாடசாலைக்குப் பெட்டிகைப் பதியி (Cassette Recorder) ஒன்றையும் வெறுமையான சில பெட்டிகளையும் வழங்க முன்வந்துள்ளார். அதை ஏற்று அந்த அன்பளிப்பினால் யாம் பயனடைதல் வேண்டும். புதிய தொழில் நுட்பச் சாதனங்களில் நீர் பரிச்சயமுடையவர் என்று நான் நம்பு

Page 29
ܚ- 48 ܚܚܘ
கிறேன். எமது பாடசாலையில் தொழில் நுட்பவியலைப் பயன்படுத் தலின் தொடக்கம் இதுவே போலும்.'
"உதவி ஆசிரியர் ஜெயமான நூலக வசதிகளை ஒழுங்கு படுத் துவதற்குப் பயனுள்ள முன்மொழிவுகள் சிலவற்றை வழங்குகிறார். நூலக அட்டைகளும், வேறு ஆவணங்கள் சிலவும் இலவசமாகப் பெற்றுக்கொள்ளப்படலாம். புத்தக நன்கொடைகள் சிலவற்றிற்கும் ஒழுங்கு செய்யப்படலாம். குறிப்பாக புதிய கட்டிடமொன்று எமக் குத் கிடைத்துள்ள காரணத்தால் நூலகத்திற்கான கட்டிடமொன் றைப் பெற்றுக்கொள்ளவும் வசதியுண்டு.
"ஆசிரியர்கள் பலர் விளையாட்டு முயற்சிகளிலும் பயிற்சி வசதி களிலும் தீவிரமான நாட்டத்தைக் காண்பிக்கின்றனர். பயனுள்ள முன்மொழிவுகள் சிலவற்றை அவர்கள் வழங்கியுள்ளனர். சமாந்தர வகுப்புக்கள், கூடிய ஒழுங்கமைப்பு வாய்ந்த வேலைக்கு வாய்ப்புக் களை வழங்கும் என்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த உண்மை பல தடவைகள் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.”*
'ஒரே பொழுதில் விடயங்கள் அனைத்தையும் என்னால் நிறை வேற்றிக் கொள்ளமுடியாது. தளபாடப் பிரச்சினையை முதலில் தீர்ப்பேன். ஏனைய விடயங்களை அதன் பின்னர் கவனிக்க எண்ணு கிறேன்.""
சுமித்திரசேனவும் குணதாசவுடன் தனிப்பட்ட முறையில் கூடிய தொடர்பு கொண்ட விடயங்கள் சிலவற்றைக் குறிப்பிட்டார்.
'திணைக்களம் உம்மில் ஒரளவு திருப்தி கண்டுள்ளது. கடந்த பத்து ஆண்டுகளாக உமக்கு எதிராக முறைப்பாடு எதுவேனும் எழுந்த தில்லை. பாடசாலை குறித்த ஒவ்வொர் அம்சமும் ஏதோ ஒரு வகையில் ஓரளவு முன்னேற்றம் கண்டுள்ளது.' இவை பற்றி குண தாச தனது கருத்துக்களை அதிகம் வெளியிடவில்லை. விடயங்கள் பலவற்றையும் பற்றித் தீவிரமாகச் சிந்தித்தவராகிச் சுருக்கமான கருத்துரைகள் சிலவற்றைத் தந்தார். அவை பின்வருமாறு;
‘வெகு விரைவில் - சில நாட்களுக்குள் ஆசிரியர் கூட்டமொன் றைக் கூட்ட வேண்டும். ஏறக்குறைய மூன்று மாதங்களாக ஒரு கூட்டமேனும் நடத்தப்படவில்லை. எந்த நடவடிக்கையும் நான் எடுத்துக் கொள்ளாது, முன்மொழிவுகளை ஒன்றன்பின் ஒன்றாக எடுத்தாராய்தல் பயனற்றதென எண்ணியிருந்தேன்.’’ சுமித்திரசேன ஆலோசனைகள் சிலவற்றை வழங்கினார்.
புதிய முன்மொழிவு எதுவும் சமர்ப்பிக்கப்படும் ஒவ்வொரு வேளையிலும் அதை அற்புதமான ஒரு முன்மொழிவாக நீர் ஏற்றுக்

سس. {49 سسسسس
கொள்ளுதல் வேண்டும். அதை நீர் மிகவும் விரும்புவதாகக் கூறுவ தோடு முன்மொழியும் தரப்பினரை அம்முன்மொழிவைச் செயற்படுத் தும்படி கேட்டு அதற்கான பொழிப்பையும் அவருக்கு வழங்குதல் வேண்டும். இயல்பாகவே அம்முன்மொழிவுகள் நசுங்கிவிடும் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன்.'
குணதாச அக்கருத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. 'தெரிவிக்கப் படும் கருத்து ஒவ்வொன்று தொடர்பாகவும் எவ்வாறு நான் அப்ட டிக் கூற முடியும்? எழும் புதிய கருத்துக்களை நான் நிறுத்தத் திட் டமிட வேண்டுமா?’ அவர் மீண்டும் ஆசிரியர் கூட்டம் பற்றிய விடயத்துக்குத் திரும்புகிறார்.
"எமது மக்களிற் பலர் இப்பாடசாலையின் வரலாறு பற்றி மிகச் சொற்ப அளவிலேயே அறிந்துள்ளனர். இப்பாடசாலையை அபிவிருத்தி செய்வதற்குக் குறித்த சில காலம் எம்மிற் சிலர் எங்ங் னம் அயராது உழைத்தோம் என்பதை நான் அவர்களுக்குக் கூற வேண்டும்.”*
அம்மக்களின் மீது வெளிப்படையான தாக்கத்தை உண்டு பண் ணும் வகையில் இது நிகழ்த்தப்பட வேண்டுமென சுமித்திரசேன ஆலோசனை பகர்ந்தார். ஆனால் குணதாச அதற்கு இணங்கவில்லை. "இவ்விடயங்களைச் சினேக பூர்வமான தொனியில் என்னாற் கூற முடிபும். முன்னைய நாட்களில் எமது மாணவர் எழுதிவந்த முத்தை நிகர்த்த எழுத்துக்களாலான ஆக்கங்களின் பொருட்காட்சி போன்று குறிப்பிடப்படுதற்குரிய விடயங்கள் பல உள்ளன. "சிகிரியாவின் நிழல் கள்’ எனும் தலைப்பிலான சித்திரப் பொருட்காட்சி, ' "தொழிற்படும் கரங்கள்’’ எனும் தலைப்பிலான கைப்பணிப்பொருட்காட்சி எமது பாடசாலைத் தோட்டத்தில், அவற்றுக்குரிய புதிய பெயர்களு-* கவனத்தை ஈர்க்கும் தானங்களான மலர் வேலி, வட்ட"°? பாறைக் கூனல், பானிறக்குன்று, மல்லிகைச் சோலை போன்றவை யும் அவை இனங்காணப்பட்டுப்பயன்கொள்ளப்பட்ட விதமும் " இவை யாவும் பற்றிக் குறிப்பிடுதல் வேண்டும். இவ்வரலாறு வளம்மிக்க ஒன்றாக விளங்கவில்லையா? அது பெறுமானம் மிக்கதாகத் தோன்ற வில்லைய?ா’’ -
‘இச் சாடைகள் பற்றி நீர் பெருமைப்படுதல் வேண்டும். அவற் றைக் குறிப்பிட்டுப் பாராட்டையும் பெற்றுக் கொள்ளுதல வேண் டும்' என்று சுமித்திரசேன கருத்துத் தெரிவித்தார்.
'இச் சாதனைகளுக்கான பாராட்டை நான் பெற்றுக்கொள்ள வேண்டுமா? அவை பற்றி நான் வீம்பு பேசவேண்டுமா? அவ்வாறு செய்வதற்குத் தனக்கு உரிமையுண்டா? என்று அவர் வினவினார்.

Page 30
-س= 50 س--
ஆயினும் பயன்மிக்க ஆசிரியர் கூட்டமொன்றை நடத்துவதற்கான திட்டங்களில் அவர் முனைப்புடையவராக இருந்தார். தற்காலத்து டன், கடந்த காலம் இணைக்கப்படுதல் வேண்டும். கடத்த காலச் சாதனைங்களிலிருந்து அகக் காட்சியொன்றைச் செயன்முறைப்படுத்த முடியுமா?
( கடந்த கால வினாத்தாளிலிருந்து
பின்வரும் வினாக்களுக்கு விடை தருக.
1. நிருவாகக் கட்டமைப்பு, நிருவாகச் செயன்முறை, நிருவாகச் செயல் நிறைவேற்றம் என்பன பற்றிய கோட்பாடு எங்ங் னம் பொருத்தமான வகையில் வித்யாதான வித்தியாலயத்துக் குப் பிரயோகிக்கப்படலாமென விளக்குக. உமது விடையைத் தெளிவுபடுத்துவதற்கு நூலகத்திற்கான முன்மொழிவுகள் பயன் படுத்தப்படலாம். ,
2. 2கமித்திரசேன பொழுதுபோக்கும் ஓர் ஆலோசகராக விளங்கு கிறார். ' சுமித்திரசேன வழங்கிய ஆலோசனைகளை மதிப்பிடுக.
3. வித்யாதான வித்தியாலயத்தின் பிரச்சினை யாது? இங்கே தரப்
பட்ட விடயங்களின் அடிப்படையில் பகுத்தாராய்க.
4. வெற்றிகாணும் ஓர் அதிபருக்குரிய சிறப்பியல்புகள் சிலவற்றை குணதாச பெற்றிருப்பதை ஒருவர் அவதானிக்க முடியும். இது பற்றிக் கருத்துரை தருக.
விடையளிப்பதற்கான குறிப்புக்கள்
விடைய ஆய்வு ஆறு
நிரு வாக க் க ட் ட மை ப் பு
1. வித்தியாதான வித்தியாலயத்தில் நிருவாகக் கட்டமைப்பு சிறப் பாகப் பேணப்படவில்லை என்பதற்கு ஆதாரங்கள் உள. உதார ணமாகப் பாடசாலையில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள நூலக அபிவிருத்தி, தளபாடம் பொறுதல், பழைய மாணவர்களிடமி ருந்துநன்கொடை பெறுதல், சமாந்தர வகுப்புக்களின் முகாமை, விளையாட்டு முயற்சிகளின் ஒழுங்கமைப்பு போன்றவற்றைத் தான் செய்து முடிக்க முடியாது என அதிபர் கூறிக் கொள்வ திலிருந்து இதனை அறியலாம். நிருவாகக் கட்டமைப்பில் இத் தகைய பணிகளுக்கு ஒழுங்குகளை மேற்கொள்வது அவசியம்.

གསང་བ་མ་ ༣ 1 གང་ལགས་
அதிபர் பாடசாலைக் கடமைக் கூறுகளை நிருவாகக் கட்ட மைப்பின் கீழ் ஆசிரிய அணியினருக்குத் திறமை இனங்கானல்’ அடிப்படையில் ஒப்படைத்திருத்தல் வேண்டும். வேலை ஒப் படைப்பு (Delegation) வெற்றியளிப்பதற்கும் நிருவாகக் கட் டமைப்பு சிறப்புற அமைவதற்கும் இது அவசியம். வித்தியா தான வித்திதாலயத்தில் இந்த முகாமைத்துவ அடிப்படைக்
கருமம் ஒழுங்காக மேற் கொள்ளப்படலாம்.
வித்தியாதான வித்தியாலயத்தின் நூலக அபிவிருத்திக்குச் சிறப் பான பல முன்மொழிவுகளை முன்வைத்து அதில் ஆர்வம் காட் டிய உதவி ஆசிரியர் திரு. ஜெயமான அவர்களிடம் நூலக அபி விருத்தி தொடர்பான செயற்திட்டத்தினை ஒப்படை-த்தல் வெற்றியளிக்கக்கூடும். அவ்வாசிரியரையுள்ளடக்கிய ஒரு குழு நிருவாகக் கட்டமைப்பில் உள்ளடக்கப்படலாம்
பாடசாலை நிருவாகக் கட்டமைப்பில் பழைய மாணவர் சங்க மும் ஒன்றாக இருத்தல் வேண்டும். அதற்கான செயற்பாட்டு வரையறைகள் பொறுப்புக்கள் என்பனவும் தெளிவாக ஒப்ப டைக்கப்படல் பாடசாலை அபிவிருத்திக்கு உதவியா? * யும்,
ள் இப்பாடசாலையில்
ஒன்றுக்கு மேற்பட்ட சமாந்தர வகுப்புக்க
ள் தெரிவு செய்யப்
காணப்படுவதால் வகுப்பு இணைப்பாளர்க ப்ட்டுக் கடமைகள் வரையறுக்கப்படல் நிருவாகக் dy,L,L-66 lb பில் இடம்பெற வேண்டியதாகும். சமாந்தர வகுப்புக்களின்
பயன்தரும் முகாமைதுவத்திற்கு இத்தகைய ஒழுங்கு பயன்தரும்.
இப்பாடசாலையின் விளையாட்டு முயற்சிகளில் ஆசிரியர்கள் நல்ல ஆர்வம் காட்டுவதை அவதானிக்க முடிவதால், HTH சாலையின் கனிஷ்ட பிரிவு, சிரேஷ்ட பிரிவு ஆகிய இரண்டிற் கும் தனித்தனியாக ஆர்வமுள்ள விளையாட்டுப் பொறுப்பாசி ரியர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களிடம் விளையாட்டு முயற்சிகள் ஒப்படைக்கப்பட்டிருக்கலாம்.
ஆலோசனைகள் ଗାଁt g_L口一H டுதாண்டஉதவியா நிருத்த
GG)
மைப்
அதிபருக்கு உதவி ஆசிரியரான சுமித்திரசேன வழங்குவதைக் காணலாம். இத்தகைய ஆசிரியர்க பிரதி அதிபர், பகுதித் தலைவர்கள் ஆகியோரைக் ஒரு முகாமைத்துவக் குழு நிருவாக கட்டமைப்பிற்கு கவும் அதிபருக்கு ஆலோசனை வழங்கும் ஒன்ற7° வேண்டும். மாணவர் தலைவர்களும் நிருவாகக் கட்ஓர் அங்கமாக இடம்பெறுவது பயன்தரும்.

Page 31
س- 25 --س-
நிரு வாக ச் செ ய ல் முறை
.
வித்தியாதான வித்தியாலய அதிபர், பிரதி அதிபர், உதவி அதிபர், பகுதித் தலைவர்கள், ஆசிரியர் ஆகியோரைக் கொண்ட ஒரு கூட்டத்தை அவசியத்தினடிப்படையில் ஓர் ஒழுங்கான கால இடைவெளியில் கூட்டி ஆலோசனைகள் செய்தல், கலந்துரை யாடல்களை ஏற்படுத்தல் பயன் தரும். இத்தகைய கூட்டங்க களில் அதிபர் நல்ல ஆலோசனைகளைப் பெறல் அவசியம். இப் பாடசாலையைப் பொறுத்தமட்டில் இவ்வம்சம் பூரணமாக விருத் தியாக்கப்பட வேண்டியதொன்று. தொடர்பாடல் (CommuniCation) நிருவாகச் செயல்முறையில் ஒரு பிரதான அம்சம். இதனை நிருவாகச் செயல்முறையின் உயிர்நாடி என்பது பொருந்தும். மூன்று மாதங்களுக்கு ஆசிரியர் கூட்டம் இல்லாதிருப் Lது பாடசாலை நிருவாகச் செயல்முறையில் பெருங் குறைபாடா கும். வித்தியாதான வித்தியாலய அதிபர் இதனைத் தனது கவ னத்திற்கு எடுத்துச் செயற்படுத்தல் வேண்டும்.
குழுக்களுக்கு வேலை ஒப்படைப்பு செய்தான பிறகு, அவை கூடிக் கலந்துரையாடல், பணிகளின் முன்னேற்றம் தொடர் பாக மீளாய்வு செய்தல் என்பன நிருவாக செயல்முறைகளில் இடம் பெறுதல் நலம்.
நூல் நிலையத்திற்கான குழுவின் செயற்பாடுகளாகப் பின்வரு
வன அமையலாம்.
நூலகத்திற்கான கட்டட ஒழுங்குகளைச் செய்தல். தளபாட வசதிகளைப் பெறுதல்.
நூல்களைச் சேகரித்தல்.
:
நூலகத்திற்குத் தேவையான நன்கொடைகளைப் பெறல்
இச்செயற்பாட்டிற்குப் பாடசாலை அபிவிருத்திச் சங்
கம், பழைய மாணவர் சங்கம், நலன் விரும்பிகளின்
உதவிகளைப் பெறலாம்.
* நூலகத் திறப்பு விழாவிற்கான ஆயத்தங்களைச் செய்
தல்,
* கால எல்லையை நிர்ணயித்தல்.
நி ரு வா க ச் செ ய ல் நிறை வே ற் ற ம்
.
பாடசாலை நிருவாகச் செயல் நிறைவேற்றம் எனும் விடயத் தில் முகாமைத்துவத்தின் அடிப்படைத் தத்துவங்கள் பிரயோ கிக்கப்பட வேண்டியனவாகும். பாடசாலையில் வழமையான

2
سی۔ 53 سیسہ
கடமைகள், விசேடமான செயற்திட்டங்களின் அமுலாக்கங்கள் என்பனவற்றின்போது மேற்பார்வை செய்தல் பிரதான அம்ச மாகும். பொதுவாக ஆளணியினரில் 90%த்திற்கும் மேற்பட் டோர் மேற்பார்வையின்றேல் செயற்பட மாட்டார்கள் என்பது ஆய்வு முடிவாகையால், மேற்பார்வையின் தற்காலப் பண்புக ளுடன் அது மேற்கொள்ளப்படும்போது பாடசாலையின் செயற் திட்டங்கள் நன்றாக அமுலாக வழியேற்படும்.
மேற்பார்வையுடன் தொடர்புபட்டதாக உதவுதல், ஆலோசனை வழங்குதல் என்பனவும் அவசியம். நல்ல ஆலோசனைகள் நிரு வாகச் செயல் நிறைவேற்றத்தில் பணியாற்றும் ஆசிரியர்களுக் குப் பேருதவியாக அமையும்.
பணிகளில் ஈடுபட்டிருக்கும் ஆசிரியர்களை ஊக்குவிக்கவும் அதி பர் நுட்பங்களைக் கையாளலாம். நிருவாகச் செயல் நிறைவேற் றம் வெற்றிபெற உளவியல் ரீதியானதும், பாடசாலையின் வளத்தைப் பொறுத்துப் பொருளாதார அடிப்படையிலானதுமான் ஊக்குவிப்புக்களும் கையாளப்படலாம்.
நிருவாகச் செயல் நிறைவேற்றத்தில் இருக்கவேண்டிய பிரதான அம்சமாக மதிப்பீட்டையும் குறிப்பிட வேண்டும். மதிப்பீடு தொடர்ந் தேர்ச்சியானதாகவும், குறிப்பிட்ட கால எல்லை முடி வில் மேற்கொள்ளப்படுவதாகவும் அமைந்து பாடசாலையின் 'ள் திட்டங்களை அமைக்க உதவியாக அமைதல் வேண்டும்.
வினா 2.
உதவி ஆசிரியர் சுமித்திரசேன பாடசாலை அதிபருக்கு வழங்கிய ஆலோசனைகளை முற்று முழுதாகப் பொழுது போக்கும் தன்மை கொண்டதாகக் கொண்டுவிட முடியாது. அவரது ஆலோசனைகளில் பயனுள்ள கருத்துக்களிடம் பெற்றிருந்ததைக் காணமுடியும். அதே வேளை சில பயனற்றனவாகவும் காணப்படுகின்றன.
l.
'தனியொரு பாடசாலைக்கு அனைத்தையும் கொடுக்கமுடி யாது எனும் கருத்தில் அலுவலகம் நிலைகொண்டால், நாம் எமது கருத்துக்களைப் பலமாக முன்வைத்தல் வேண்டும்’ எனும் கருத்து அலுவலகத்துடன் அதிபரை மோத விடுவதற்கு இட்டுச் விசல்லக் கூடியது. இதை ஒரு நல்ல ஆலோசனையாக் கொள்ள முடியாது. காலத்தை வீணாக்கும் தன்மையானதெனவே கொள் GT6)fTb.
அதிபருடன் உரையாடும்போது சுமித்திரசேன கூறும் பின்வரும் கூற்று நோக்கற்பாலது. ‘தளபாடமற்ற புதிய பாடசாலைக்

Page 32
سسس--- . 4 8 ----
கட்டடத்தைப் பயனற்ற ஓர் அன்பளிப்பாக மக்கள் கருதத் தலைப்பட்டனர்' எனும் அவரது கூற்று அதிபருக்குக் கூறும் நல்ல ஆலோசனையன்று. பொதுவாக ஒரு கட்டடத்தைப் பெறுவது பெரியதொரு சாதனை. அதற்குத் தளபாடங்களைப் பெறுவது அடுத்த பணி. தளபாடங்களைத் திணைக்களம் கொடுக்கலாம். அல்லது சமூகத்திடமிருந்தும் பெறலாம். இந்நிலை யில் கட்டடத்தைப் பயனற்ற அன்பளிப்பு என மக்கள் கருது வதாக அவர் குறிப்பிடுவது ஒரு நல்ல ஆலோசகர் கூறக் கூடிய தொன்றல்ல. இது அதிபர், பெற்றோரைப் பற்றித் தவறான கருத்துக் கொள்ளவும் இடமளிக்கும். அதுமட்டுமன்றிப் பெற் றோர் அவ்வாறு உண்மையில் கருதுவார்களா என்பதும் சந் தேகமானதே.
அதிபரே எல்லா முன்மொழிவுகளையும் செய்ய வேண்டும் எனக் கூறுவதும் சுமித்திரசேனவின் ஆலோசனை பயனற்றது என்ப தற்குச் சான்றாகின்றது.
அதிபருக்கு உற்சாகமும், தைரியமும் ஊட்டும் சில கருத்துக் களையும் சுமித்திரசேன வெளியிடுவதைக் காணலாம். அதிபர் பாடசாலையை விட்டுச் செல்ல வேண்டும் எனக் கூறியபோது சுமித்திரசேன 'மக்கள் இச் செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடை வர்' என்று கூறுவது அதிபருக்கு ஒரு திருப்தியையும், மக்கள் தம்மிடம் வைத்திருக்கும் நம்பிக்கையையும் வெளிப்படுத்துவதா கக் கொள்ளலாம். மேலும் 'திணைக்களம் உம்மில் ஒரளவு திருப்தி கொண்டுள்ளது' என்று சுமித்திரசேன கூறுவதும் அதி பருக்கும் திணைக்களத்திற்குமிடையே ஒரு நல்ல உறவைப் புதுப்பிப்பதற்கு உதவியாக அமையும் கருத்தாகக் கொள்ளலாம்
பொதுவாக நோக்கும்போது சுமித்திரசேன கூறிய ஆலோ சனைகளும், கருத்துக்களும் முற்றாகப் பொழுது போக்குத் தன்மை கொண்டதாகவோ , முற்றாக நல்ல கருத்துக்களையும் ஆலோசனைகளையும் கொண்டதாகவோ கொள்ள முடியாது. பயனற்ற கருத்துக்கள் சிலவற்றைப் பொறுத்தமட்டில் அவை ஒரு பொழுது போக்கு ஆலோசகருக்குரிய தன்மைகளைக் கொண்டி ருந்தன என்பது உண்மையே. அதேவேளை அவரது ஆலோச னைகள் அதிபருக்கும் பாடசாலை முகாமைத்துவத்திற்கும் பய னளிப்பவையாகக் காணப்படுவதையும் காணலாம்.
வினn 3
வித்தியாதான வித்தியாலயத்தின் பிரச்சினைகளைப் பின்வருமாறு சுருக்கமாகக் குறிப்பிடலாம்.

2
- 55 -
புதிதாக அமைக்கப்பட்ட கட்டடத்திற்குத் தளபாடங்கள் இல் லாதது ஒரு பிரச்சினையாகக் காணப்படுகின்றது. இதனைப் பாடசாலை முகாமைத்துவத்தின் திட்டமிடற் பிரச்சினையாகக் கொள்ளலாம்.
நூலகம் ஒன்று தேவையாக இருப்பதும் வளத்துடன் தொடர் பான பிரச்சினையாகக் கொள்ளலாம். திட்டமிடல், ஒழுங்க மைத்தல், அமுல்படுத்தல் போன்ற திறன்களை வேண்டி நிற் கும் பிரச்சினையாக இது உள்ளது.
வகுப்பறை முகாமைத்துவம் தொடர்பாக நோக்கும்போது சமாந்தர வகுப்புக்களைச் செவ்வனே நிருவகிக்கத் தர இணைப் பாளர்கள் நியமிக்கப்படலும் அவர்கள் வகுப்புக்களின் செயற் பாடுகளை இணைப்பாக்கம் செய்வதுமான கட்டமைப்பு, ஒருங் கிணைப்புப் பிர்ச்சினைகளையும் இனங்காணலாம்.
பாடசாலை விளையாட்டுக்கள் தொடர்பாக நோக்கும்போது ஒழுங்கமைப்புப் பிரச்சினைகளைக் கொண்டிருப்பதைக் காண முடிகின்றது.
பாடசாலையின் பிரதான செயற்பாடு கலைத்திட்ட அமுலாக்க மாகும். கலைத்திட்ட அமுலாக்கம் வெற்றிபெற நல்ல கற்பித் தல் இடம்பெற வேண்டும். கற்பித்தல் தொடர்பாக அதிபர் கொண்டிருக்கும் கருத்தொன்றை இங்கு அவதானிக்கலாம். ‘' .இவை எவையுமின்றியே சிறந்த கற்பித்தல் நிகழலாம் என்று உறுதியாக நான் நம்புகிறேன்" உன்று அதிபர் குணதாச
குறிப்பிடுவது அவரது கற்பித்தல் தொடர்பாகக் கொண்டிருக்
கும் பொருத்தமற்ற கருத்துக்கு உதாரணமாகும். அதிபர் ஓர் அறிவுறுத்தல் தலைவராவர். அவர் கற்பித்தல் நிகழ்ச்சிகளில் போதிய அனுபவம், அறிவு, வழிகாட்டும் பண்புகள் என்பன வற்றைக் கொண்டிருக்கவேண்டும். மேற் கூறப்பட்ட அவரது கூற்று கற்பித்தல் தலைமைத்துவத்தின் பொருத்தமற்ற அம்ச மொன்றை வெளிப்படுத்துகின்றது. இதைத் தலைமைத்துவம் தொடர்பான ஒரு பிரச்சினையாக இனங்காணலாம்.
அதிபருக்குத் தெளிவும், உறுதியும் இருப்பது அவசியம். திரு. குணதாசவின் கூற்று ஒன்றை இங்கு குறிப்பிடுவது பொருத்த மானது, ' யாவற்றையும் ஒரே குழப்பமானவையாக நான் காணுகின்றேன்' என்று அதிபர் குறிப்பிடுவது அவரது உறுதி யின்மை, மனச்சோர்வு, தெளிவின்மை என்பவற்றுக்கு எடுத் துக் காட்டாகும்.

Page 33
- 56 -
7. அதிபரது திணைக்களத் தொடர்பும் ஒருவித தயக்கம் கொண்ட தொன்றாகக் காணப்படுகின்றது. அதிபர் பலபக்கத் தொடர் களைப் பேணவேண்டியவர். இவற்றுள் திணைக்களத்துடனான இவரது தொடர்பு ஆரோக்கியமானதாக இருக்கவேண்டியது அவசியம்.
விtை 4
1. குறைபாடுகள் சில இருந்தாலும்கூட குணதாசவிடம் வெற்றி காணும் ஓர் அதிபருக்குரிய பல பண்புகள் இருப்பதைக் காண லாம். இணைப்பாடவிதான செயற்பாடுகளில் இப்பாடசாலை குறிப்பிடக்கூடிய சாதனைகளை ஏற்படுத்தியுள்ளது.
2
அதிபர் சமூகத்துடனான நல்ல தொடர்பைப் பேணிவந்ததா லேயே சமூகத்திலிருந்து பல்வேறு உதவிகளைப் பாடசாலைக்குப் பெறக்கூடியதாக இருந்தது.
3. வளங்களைப் பாடசாலைக்குப் பெறுவதற்குரிய ஆற்றல் உள்ள
வராக அதிபர் காணப்படுவதை அவதானிக்கலாம்.
4. பாடசாலையில் ஏற்படுத்தப்படும் முன்னேற்றங்கள் ஆசிரியர்க ளது உழைப்பினால் ஏற்படுபவை என்ற கருத்திலும் அதிபர் நிலைகொண்டவராக இருத்தலை ‘இச் சாதனைகளுக்கான பாராட்டை நான் பெற்றுக் கொள்ள வேண்டுமா?’ எனக் குணதாச கேட்பதிலிருந்து விளங்கிக் கொள்ளலாம். இது உண்மையான ஒரு தலைவருக்குரிய பண்பெனலாம். R
5. அதிபர் அயரா உழைப்புடைவர் என்பதையும் இங்கு குறிப்பிட லாம். உதாரணமாக குணதாச சுமித்திரசேனவுடன் உரையா டும்போது "இப்பாடசாலையை அபிவிருத்தி செய்வதற்குக் குறித்த சிலகள் லம் எம்மிற் சிலர் எங்ங்ணம் அயராது உழைத் தோம் என்பதை நான் அவர்களுக்குக் கூறவேண்டும்.' எனக் குறிப்பிடுவதை நோக்கும்போது அவரும் தனது ஆசிரியர்களுடன் பாடசாலை உயர்வுக்கு அயராது உழைத்த உண்மையை அறி யக் கூடியதாக இருக்கின்றது.
6. வெற்றி காணும் ஒரு தலைவர் தனது ஆசிரியர்களது கருத்துக் களைச் செவிமடுப்பவராக இருப்பதுமன்றித் தீர்மானம் எடுக் கும்போது நிதானமாகவும் எடுத்தல் வேண்டும். உதாரணமா கச் சுமித்திரசேன ‘முன்மொழியும் தரப்பினரை அம்முன் மொழிவைசெயற்படுத்தும்படி கேட்டு, அதற்கான பொறுப்பை யும் அவர்களுக்கு வழங்குதல் வ்ேண்டும். இயல்பாகவே அம்முன் மொழிவுகள் நசுங்கி விடும் என நான் உறுதியாக நம்புகிறேன்"

எனக் குறிப்பிடுகின்றார். இது ஒரு நல்ல ஆலோசனையாகச் சொல்வதற்கில்லை. அதிபர் குணதாசாவும் இதற்குப் பதிலாக 'தெரி விக்கப்படும் கருத்து ஒவ்வொன்று தொடர்பாகவும் எவ்வாறு நான் அப்படிக் கூறமுடியும். எழும் புதிய கருத்துக்களை நான் நிறுத்தத் திட்டமிடவேண்டுமா?" என்று கூறுவது அவரது தர்க்கிக்கும் ஆற் றலையும் பிறரது நியாயமான கருத்துக்களுக்கு மதிப்புக் கொடுக் கும் பண்பையும் காட்டுகின்றது.
இவ்வாறு பல தலைமைத்துவப் பண்புகளைக் கொண்டு வெற்றி காணும் ஓர் அதிபராகத் திரு குணதாச விளங்குகிறார் எனலாம்.
விடய ஆய்வு ஏழு
இது இலங்கையின் வடமேற்குக் கரையோரப் பிரதேசத்தில் உள்ள சாந்த அந்தோனியார் பாடசாலையில் ஆறாம் வகுப்பில் கற்றுக் கொண்டிருந்த கோபாலன் எனும் மாணவனைப் பற்றிய தாகும்.
கோபாலன் தனது சிறுவயதிலேயே தனது தந்தையை இழந்த வன். அவனுக்கு ஒரு பெண்சகோதரியும், மூன்று ஆண் சகோதரர்க ளும் உள்ளனர். இவன் கற்கும் பாடசாலை ஒரு கத்தோலிக்க சமயப் பாடசாலையாயினும் இவன் ஓர் இந்து ஆவான்.
அண்மைக் கிராமத்திலுள்ள ஒரு பாடசாலையில் ஏற்பட்ட பிரச் சினையால் பாடசாலை சில மாதங்களுக்கு நடைபெறாமல் போகவே அப்பாடசாலையிலுள்ள பல மாணவர்கள் சாந்த அந்தோனியார் பாடசாலையில் சேர்க்கப்பட்டனர். இப்பாடசாலையின் அதிபர் திரு. யேசுதாசன் ஒரு கத்தோலிக்கர் எனினும் இந்துப் பிள்ளைக ளும் தமது சமயானுட்டானங்களை மேற் கொள்ள வழிவகைகளை மேற்கொண்டிருந்தார். அவற்றில் ஒன்று வெள்ளிக்கிழமை தோறும் அப்பாடசாலை அமைந்திருந்த கிராமத்திலுள்ள இந்துக் கோயிலுக்கு மாணவர்கள் சென்று வழிபாடு செய்துவருவதாகும். இதில் கோபால னும் கிரமமாகப் பங்கு கொண்டு வந்தான்,
அதிபர் யேசுதாசன் இப்பாடசாலையில் பல முன்னேற்றங்களை ஏற்படுத்தினார் பாடசாலைக்குப் புதிய கட்டிடங்கள் போடப்பட் Lன. அதிபர் தங்குவதற்கு விடுதியமைக்கப்பட்டது. ஆரம்பப் பாட சாலையாகவிருந்த அந்தோனியார் வித் தியா லயம் படிப்படியாக வகுப்புக்கள் அதிகரிக்கப்பட்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண வகுப்பு வரையும் கொண்ட பாடசாலையாக உயர்த்தப்பட்டதுடன் விளையாட்டுத்துறையிலும் அவ்வட்டாரத்திலேயே ஏனைய பாடசா லைகளை விட சாதனைகளைச் சாதித்த நிலைக்கு உயர்ந்தது. ஆசி ரிய தொகை மாணவர் தொகை க்குப் போதியதாக விருந்தாலும்

Page 34
-- 8 س--
சில பாடங்களுக்குப் பொருத்தமான ஆசிரியர்கள் இருக்கவில்லை. இருப்பினும் முன்னைய காலங்களை விடக் கல்வி வளர்ச்சியில் குறிப் பிடக் கூடிய ஏற்றம் கண்ட தென்பதில் ஐயமில்லை.
விவசாயப்பாடத்தின் செயல் முறைகளுக்கர்கப் பூந்தோட்டம், காய்கறித்தோட்டம் என்பவையும் செவ்வையாக அமைக்கப்பட்டிருந் தன, இப்பாடசாலைக்குச் சுற்று மதில்கள் இல்லாவிட்டாலும் முட் கம்பி வேலி நன்கு அமைக்கப்பட்டிருந்தது.
தந்தையில்லாத கோபாலன் தாயின் வழிகாட்டலில் வளர்ந்து வந்தான். எனினும் எப்படியோ களவுப் பழக்கம் ஒன்று கோபால னிடம் வளர்ந்துவிட்டதற்குச் சான்றுகள் உள்ளன. பாடசாலை தோட் டத்துக் காய்கறிகளைச் சிறிது கிறிதாககத் திருடிச்செல்லும் வழக் கம் கோபாலனிடம் காணப்பட்டது. கோபாலனின் இச் செயல் தொடர்பாக மாணவர்கள், பெற்றோர் ஆகியோர் மூலம் பாடசா லக்ைகு ஒரளவு தகவல்கள் கிடைத்தன வெனலாம்.
ஒரு தினம் கோபாலன் பாடசாலைத் தோட்டத்திலுள்ள பெரிய தொரு பூசணிக்காயை ஒரு புதன்கிழமை மாலை திருடிச்சென்று தனது வீட்டில் வைத்துவிட்டான். அடுத்த நாட்காலை பாடசாலைக்கு வந்து தோட்ட வேலைகளைக் கவனித்த மாணவர்கள் பூசணிக்காய் களவு போய் விட்டதை அறிந்து கொண்டனர். ஏற்கனவே உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு பூசணிக்காயைத் திருடிச் சென்றது யார் என்பதைத் தீர்மாணித்த மாணவாகள் கோபாலனது வீட்டிற்குச் சென்று அவனது தாயிடம் விசாரித்த போது உண்மை வெளி வந்தது. கோபாலனது தாயிடமிருந்து மாணவர்கள் பூசணிக் காயைப் பெற்றதுடன் அவனையும் அழைத்துக்கொண்டு அதிபரிடம் விட்டனர். அதிபரது அறிவுறுத்தல்களுக்கு இணங்கக் கோபாலன் ஆசிரியர் குழத்தினால் விசாரிக்கப்பட்ட போது அவன் உண்மையை ஒப்புக் கொள்ள மறுத்துவிட்டான். உண்மையை அவனிடமிருந்து அறிவதற்கு அவன் பாடசாலை மனையியல் அறையினுள் சில நேரம் பூட்டி வைக்கப்பட்டான். மனையியல் அறையு ள் ஆசிரியர்களது உபயோகத்திற்காகச் சீனி, பால் மா, தேயிலைத்தூள் என்பனவயும் பிஸ்கட்வகைகளும் வைக்கப்பட்டிருந்தன. ஏறக் குறைய ஒரு மணித்தி யாலத்தின் பின்னர் திறந்து பார்த்த பெர்முது கோபலன் அவை யெல்லவற்றையும் உண்டு முடித்திருந்ததுடன், அவன் உண்மையை ஒப்புக்கொள்ள இன்னும் தயாராயிருக்கவில்லை. பிற்பகல் ஒன்றரை மணிக்குப் பாடசாலை கலையும் போது கோபாலனும் வீடு செல்ல அனுமதிக்கப்பட்டான். பொதுவாகப் பாடசாலைக்கு ஒழுங்காக வருகை தராத கோபாலனின் வருகை இன்னும் குறைந்து விட்டதெனலாம்,
கோபாலன் தனது பாடசாலையில் கற்கும் தன்னிலும் மூத்த மாணவர்களையும் 'தம்பி" என்றே அழைப்பது வழக்கம், அதுமட்டு

- 59 -
மல்ல அக்கிராமத்திலுள்ள மற்றைய வளர்ந்த பிள்ளைகளையும் அவ்வாறே அழைப்பான் கோபாலன் மாணவர்களுக்குப் பட்டப் பெயர் இட்டு அழைப்பதிலும் வல்லவனாகவிருந்தான். எப்படி யிருந்த போதிலும் கோபாலனிடம் அபாரமான ஞாபக சக்தியும், மனனம் செய்யும் ஆற்றலும் போதியளவு காணப்பட்டன. வெள்ளிக் கிழமைகளில் மாணவர்களுடன் கோயிலுக்குச் செல்லும் போது கோயில் ஐயர் ஒதும் வடமொழியிலான சுலோகங்கள் அனைத்தையும் மனப்பாடம் பண்ணியிருந்தான். கோபா லன். இச்சுலோகங்களை அவன் கூறக்கேட்டு வியப்ப்டைந்த சகமாணவர்கள், சிரேஷ்டமான வர்கள் ஆகியோர் வியப்படைந்திருந்த சந்தர்ப்பங்கள் பலவிருந்தன. மேலும் வெள்ளிக்கிழமை தவிர்ந்த ஏனைய நாட்களிலும் அவன் கோயிலுக்குச் சென்று வருவதும் உண்டு. இவன் கோயிலுக்குச் செல் வது வழிபாட்டுக்கன்றிக் கோயில் பிரசாதம் பெற்றுண்ணும் பொருட் டெனலாம்.
இப்பொழுது அவன் பாடசாலைக்கு வருவது முற்றாக நின்று விட்டதெனலாம். அவனுடன் கற்ற மாணவர்கள் பலர் கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையில் சித்தியடைந்து உயர்தரவகுப்பில் கற் பதற்காக வேறு பாடசாலைகளுக்குச் சென்று விட்டனர் உயர் வகுப்பில் கற்கத் தகுதி பெறாதோர் கிராமத்திலேயே தங்கிவிட்ட னர் கோபாலனும் இப்பொழுது வளர்ந்து குமரப் பருவத்தினனா னான். கோபால னது பிற்காலச் செயல்கள் பற்றி அவனது சக மாணவர்களும் ஆசிரியர்களும் பின் வரும் செய்திகளை அறியமுடிந்
占芷f· V−
* கோபாலன் அவன் வாழும் பிரதேசத்திலுள்ள ஒா ஆலயத்தில் வருடாந்த உற்சவம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் ஆல யத்தில் நிதி சேகரிக்க வைக்கப்பட்டிருந்த உண்டியல்களுள் ஒன்றைத் திருடி விட்டான்.
* தான் மனனம் செய்திருந்த கோயில் ஐயரின் சுலோகங்களைக் கொண்டு ஒர் ஐயராக வேடம் போடத் தொடங்கினான். அவனது கிராமத்திலிருந்து பல மைல்கள் தொலைவிலுள்ள ஒரு சிறிய கிரா மத்தில் உள்ள கோயிலுக்கு ஐயர் தேவைப்படுவதை அறிந்து அங்கு சென்று தான் ஐயர் என்பதைக் காட்டிக் கிராம மக்களை நம்பச் செய்து அப்பதவியைப் பெற்றுக்கொண்டான் உண்மை வெளி வந்து கோயில் நிருவாகத்தினரால் வெளியேற்றப்படும்வரை அவன் அங்கேயே ஐயருக்குரிய கடமைகளைச் செய்துவந்தான்
* கோயிலிலிருந்து துரத்தப்பட்டுத் தனது கிராமத்தில் தங்கியி ருந்த காலத்தில் தனது கிராமத்திலுள்ள ஒருவியாபாரியின் வீட்டில் பணம், தங்க நகைகள் என்பனவற்ற்ைத் திருடிக் கொண்டு தலை மறைவாகிவிட்டான். வியாபாரியின் பலத் த தேடுதலின் பின்னர்

Page 35
- 60 -
பொவிசாரின் உதவியுடன் கோபாலன் கைப்பற்றப்பட்டு விளக்க மறி பனில் இடப்பட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டான். நீதிமன்றத்தில் கோபாலனது செயல் விசாரிக்கபபட்டதுடன் அவன் ஏற்கனவே செய்த சில குற்றச் செயல்களும் தெரியவந்தன, கோபாலன் செய்த குற்றங்களுக்காக அவனுக்கு ஐந்து வருடக் கடூழியச் கிறைத் தண்டனை விதிக்கப்பட்டுக் கொழும்பிலுள்ள சிறைச்சாலையொன் றிற்கு அனுப்பப் பட்டான்.
பப்பட்ட கோபாலன் தனது ஊருக்கு வருவதற்காகக் கோட்டை புகையிரத நிலையத்தில் நின்று கொண்டிருந்த வேளை தனது பன் ளிக் கூடக்காலத்தில் அங்கு படித்தவர்களில் ஒரு வரை ச் சந்திக்க நேர்ந்தது. அவரிடம் தான் சிறைவாச காலத்தில் சொல்லெரை சுஷ்டங்களை அனுபவித்ததாகக் கூறினான். அவனது கூற்று அவ ணுக்குரிய பரணியில் வெளிவந்தது.
"தம்பி அந்த வியாபாரி தம்பிமுத்துவின் வஞ்சனையால் நான் பட்ட கஷ்டங்களுக்குக் கணக்கில்லை. இதற்குக் கீரன் மாகவிருந்த அவனைப் பழிவாங்காமல் நான் விடப்போவதில் இப்பொழுது ஊருக்குச் சென்று செய்யப்போகும் முதல்வே அதுதான்." ܐ
பின்வரும் வினாக்களுக்கு விடைதஞக.
1. கோபாலன் ஒரு விவேகமுள்ள மானவனாகவிருந்தும் அவன் நெறிப்பிறழ்வுற்றதற்கான காரணங்கள் அவனது குடும்பத்தைச் சாந்ததே ஆராப்பீ.
"பாடசாலை அவனுக்கு வழிகாட்டத் தவறி விட்டது." இக் கூற்றினை விமாசனம் செய்க.
3. பாடசாலையில் மாணவர்களுக்கு வழிகாட்டுத்திட்ட மொன்றை அமைக்க என்ன என்ன வழிமுறைகளைக் கையாள வேண்டும்?
4. "இன்று இலங்கையிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு வாழ்க்கை வழிகாட்டல் திட்டங்கள் அவசியம்" இதனை நீர் ஏற்றுக் கொள்வீரா? கோபாலனது வாழ்க்கையை அடிப்ப டையாக வைத்து ஆராப்சு?
விடய ஆய்வு எட்டு
பல்கலைக் கழகத் திருத்தச் சட்டமூலம் தொடர்பாக மாணவர்
களின் ஆர்ப்பாட்டங்கள் தலை தூக்கத் தொடங்கின. சட்டமூலம் அறிமுகப் படுத்தப்படும் நாளில் ஒவ்வொரு பாடசாலையிலும் உயர்

- 61
வகுப்பு மாணவர்கள் வகுப்புப் பகிஷ்கரிப்பில் ஈடுபடச்சேய்வதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளமை தொடர்பான வதந்திகள் பரவத் தொடங்கின. இச் செய்தியை அதிபர்கள், கல்விப்பணிப்பாளர்கள், பொலிசார் உட்பட அனைத்துப் பிரிவினரும் நன்கு அறிந்து வைத் திருந்தனர்.
எந்தப் பாடசாலையிலும் வகுப்பு பகிஷ்கரிப்பு இடம் பெறக் கூடாது எனும் பணிப்புரைகள் கோட்டக்கல்விப் பணிப்பாளரால் முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது அவ்வாறே வகுப்புப் பகிஷ்கரிப்பைத் தடுப்பது தொடர்பான முன்னாயத்தங்கள் மேற்கொள்வது பற்றி பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது என்பதை அவர்களின் நடத் தைக் கோலங்களின் மூலம் அறியக்கூடியதாக இருந்தது.
குறித்த தினத்தில் தருமரட்ணம் மகாவித்தியாலைய மாணவர் கள் காலை உடற்பயிற்சிக்காக பாடசாலை சதுக்கத்துக்குள் வரும்படி அழைக்கப்பட்டபோது, மேல்வகுப்பு மாணவர்கள் உடனடியாகச் செயற்பட்டு, வகுப்பு பகிஷ்கரிப்பதை திட்டமிட்டு ஏறத்தாழ 350 மேல்வகுப்பு மானவர்கள் வரையில் அதனை ஆரம்பித்தனர். அவர் களை வகுப்புக்குச் செல்லுமாறு அதிபர் அவர்கள், பல்வேறு விதமான வேண்டுகோளை விடுத்தபோதிலும் அவர்கள் அவை எதனையும் செவிமடுக்கவில்லை வகுப்பு பகிர்கரிப்பு ஏறத்தாள ஒரு மணி நேரம் இடம் பெற்ற பின்னர், மாணவர்கள் படிப்படியாக அமைதியடையத் தொடங்கினர், சிலர் சுலோகங்களைக் கூறியவாறு கூச்சலிடத் தொடங் தினர். அதிபரும், ஆசிரியர்களும் பல்வேறு முயற்சிகளை மேற் கொண்ட போதிலும் மாணவர்கள் கேட்கவில்லை. எனினும் பாட சாலையின் மற்றைய ஏறத்தாழ 3,500 மாணவர்கள் வகுப்பறைக எளில் வைத்திருக்கவும், அவர்களை வகுப்புப் பகிஷ்கரிப்போருடன் சேர இடமளிக்கா திருக்கவும், ஆசிரியர்கள் வகை செய்தனர்.
இந்த நில  ைம பற்றி கோட்டக்கல்விப் பணிப்பாளர் அவர்க ளூக்கு யாரோ ஒருவர் அறிவித்திருந்தார். கோட்டக்கல்விப் பணிப் பாளர் இது குறித்து அதிபரிடம் வினவி, தேவைப்படின் பொலிசா ருக்கு அறிவிக்கும்படியும் பணிப்புணர வழங்கியிருந்தார். பொலிசார் பாடசாலை நுழை வாயிலுக்கு அருகில் கூடியிருந்த போதிலும், அவர் களை பாடசாலை வளவினுள் நுழைய அதிபர் இடமளிக்கவில்லை. எனினும் வெளியே நிறுத்தப்பட்டிருந்த ஜீப் வண்டிகள் மீதும் லொறி கள் மீதும் ஏறிநின்றபடி, மானவர்களின் சுலோக, வாTத்த்ன்விங்கம் கூச்சல்களையும் பதிவு நாடாக்களில் பதிலுடுசய்ததோடு: காட்சிகளை ஒளிப்படமும் பிடித்துக் கொண்டனர். இச் சந்தர்ப்பத்தில் மாணவூர் கள் பொவிசாருக்கு எதிராகவும் சுலோசு வாசகங்களைக் கூறியது கூச்சலிட்டமையால் பொலிசார் வெகுண்டு காஐட்ன்:
الطا

Page 36
- 62 -
இந்நிலமை யாரோ ஒருவரினால் மாகாணக்கல்வி அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. வகுப்பு பகிஷ்கரிப்பில் பங்கு கொண்ட் மான வர்கள் அனைவரையும் வீடு செல்லும் படியும் மறு அறிவித்தல் வரை பாடசாலைக்கு வரக்கூடாது எனவும் அறிவிக்கப்பட்டது.
இக்கட்டளைக்கு அமைய பாடசாலை வளவுக்குள் நுழைவதற்கு அனுமதி கிடைக்கப் பெறாத மாணவர்கள் வீதி வழியே குழுக்களா கச் சேர்ந்து, அடுத்ததாக மேற் கொள்ள வேண்டிய நடவடிக்கை கள் பற்றிக் கவனஞ் செலுத்திக் கொண்டிருந்தனர். இதற் கிடையில் பாதையில் சென்ற ஒரு பொலிஸ் ஜிப்பை நோக்கி மாணவர்கள் கூச்சலிட்டனர். கோபமுற்ற பொலிஸ் அதிகாரிகள், வீதியில் நின்ற மாணவர்கள் மீது தயவு தாட்சண்யமின்றிக் குண்டாந் தடிப் பிர யோகம் மேற் கொண்டனர். அதனால் காயமுற்ற பல மாணவர் கள் சிகிச் சைக் கா க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். பொலிசாரின் இந்தக் கடுமையான நடவடிக்கை காரணமாக வெகுண் டெழுந்த பெற்றோர் அதிபரைப் பல்வேறு விதமாகச் சாடிக் குறை
கூறி
சகல பிரிவுகளிலிருந்தும் அதிபர் மீது கடும்பழிச் சொற்கள் தொடுக்கப்பட்டன. நிலைமை முற்றி உச்சக் கட்டத்தை அடைந்த வேளையில் அதிபர் குறித்த பெற்றோர்களின் கூட்டமொன்றினை உட னடியாகவே கூட்டினார். நிலைமை முற்றி உச்சக் கட்டத்தை அடைந்த வேளையில் பெற்றோரின் கூட்டம் கூட்டப்படுவது குறித்து சில ஆசிரி யர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். எனினும் கூட்டம் கூட்டப்பட்டது. இக் கூட்டததிற்கு பெற்றோர் மாத்திர மன்றி, பாதுகாவலர் என்று கூறிக் கொண்டு வெவ்வேறுபட்ட ஆரசியற்கருத்துக்களைக் கொண் டோரும் வந்திருந்தனர். இவர்கள் அதிபரிடம் பல்வேறு குறுக்கு வினாக்களை வினாவியதோடு, பொலிசாரைக் கொண்டு வீணாகத் தமது பிள்ளைகளுக்குத் குண்டாந்தடி பெற்றுக் கொடுத்ததும் அதிபரே எனவும், அவர் ஒரு கோழை எனவும் விமர்சித்துச் சாடி னர். மாணவர்கள் பாடசாலை வர அனுமதிக்க வேண்டும் என பெற்றோர்கள் அனைவரும் ஏகோபித்துக் குரல் எழுப்பினர். அதிபர் உடனடியாக மாகாணக்கல்வி அமைச்சுடன் மீண்டும் தொடர்பு கொண்டு விடயங்களை விளக்கியதன் பின்னர், மாணவர்கள் Lfrசாலையுள் அனுமதிப்பதற்கான அனுமதி கிடைத்தது. அம்முடிவு உடனடியாகக் கூடியிருந்தோருக்கு அறிவிக்கப் பட்டது. * - シ
நிலைமை சுமுக நிலையை அடைந்தது எனினும் பெற்றோர் பின் வரும் குற்றச்சாட்டுக்களை அதிபர் மீது சுமத்தினர்.
1 அதிபர் ஒரு கோழை . கையாலாகாதவர். 2. “சிறு சிறு விடயங்கள் உட்பட அனைத்து விடயங்களையும் பணிப் பாளரிடம் வினவிய பின்னரே செய்ய வேண்டுமென்றால் அதிபர்

5
f
63 ۔۔۔۔
ஒருவர் தேவை இல்லையே அப்படியாயின் அந்த தேவையைச் சுப்பனுக்கும் செய்ய முடியுமே" (சுப்பன் அப்பாடசாலையின் ஒரு சிற்றுாழியர்.) அதிப. அன்று காலைக் கூட்டத்தைக் கூட்டாதிருந் திருந்தால் இந் நிலைமை ஏற்பட்டிருக்காது. அதிபர் முடிவெடுக்கையில் தளம்பக் கூடியவர், சேற்றில் நட்ட தடி போன்றவர், அவர் தருணத்துக்குப் பொருத்தமானவாறு கரும மாற்றுபவரல்லவர், தமது மதிப்பை மட்டும் பெற்றுக் கொள்ள முயற்சிப்பவர். மாணவர்கள் மறு நாட் காலையில் பாடசாலைக்கு வருவதைத் தடை செய்தமை அவர் செய்த பெருந்தவறான ஒரு கா ரிய மாகும். தனது பாடசாலை நிர்வாகத்தை அமைச்சு அதிகாரிகளிடம் ஒப் படைத்தல் எவ்வகையிலும் பொருத்தமானதொரு நடவடிக்கை அல்ல.
பின்வரும் வினாக்களுக்கு விடைதஞக
இப் பாடசாலையின் பிரச்சனை யாது? இப் பாடசாலை அதிபர் மீது பெற்றோர் சுமத்திய குற்றச்சாட் டுக்கள் நியாயமானவையா? காரணங்கள் காட்டி ஆராய்க? இந்த அதிபரின் குறைநிறைகளை ஆராய்க? நீர் இப்பாடசாலையின் ஆசிரியர் குழாத்தின் ஓர் அங்கத்தவர் எனக் கொண்டு, இப்பிரச்சினையை அணுகும் விதத்தைத் தருக? நீர் அதிபராக இருப்பின் இப்பிரச்சனையை அணுகும் விதத்தைத் தருக?
இப் பிரச்சினைக்கான தீர்வுகள் எவை?
தருமரட்ணம் வித்தியாலயம் அப்பிரதேசத்தில் முன்னணி வகிக் கும் ஒரு பாடசாலை யாகுமா? ஆராய்க?

Page 37
கலைச் சொற்கள்
Administration நிருவாகம்
Attitude war மனப்பாங்கு
Accountability - பொறுப்புக்கூறல்/வகைசொல்லல் Bureaucracy - பணிக்குழுஆட்சி Communication - தொடர்பாடல்
Conflict முரண்பாடு
Concept ۔۔۔۔ج எண்ணக்கரு
Centralization - ஒருமுகப்படுத்தல்
Change "-" மாற்றம்
Change Agent MWWWWW மாற்றமுகவர்
Counselling ra ஆலோசனை
Delegation ۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔ வேலைப் பகிர்வு Decentralisation - பன்முகப்படுத்தல்
Decision ۔۔۔۔۔۔۔۔۔ தீர்மானம் Efficiency - வினைத்திறன்
Effcetiveness 'ww. பயன்தருதன்மை Organizational Structure - filoyagarj; 5'L60LDÜL Organizational Process - நிறுவனச் செயற்பாடு
Organizational Development - நிறுவன அபிவிருத்தி Progress Control - முன்னேற்றக்கட்டுப்பாடு
Problem Solving பிரச்சனைதீர்த்தல் Power - அதிகாரம் Ouality Contro - தரக்கட்டுப்பாடு Ouantity mma-- அளவு
Role ~~~~~ கடமைக்கூறு Resource V. M வளம்
Responsibility - - - பொறுப்பு Team Building --Mrs- குழுஅமைத்தல் Technology --- தொழில்நுட்பம் Values --- விழுமியங்கள்
Wastage in Education - saicusai aggrub

Feedback •rw~~~~ பின்னூட்டல்
Follow Up Work - தொடர்செயல் Goals இலக்குகள்
Job Evaluation ar வேலைமதிப்பீடு Job Satisfaction - வேலைத்திருப்தி
leadership . ~~ தலைமைத்துவம்
Management - முகாமைத்துவம் Management By objectives - இலக்கடிப்படை முகாமைத்துவம் Management Development - gpasit6)upassa syu9a?objöS Motivation - ஊக்கம்
innovation MM புத்தாக்கம்
information www. தகவல்
input W உள்ளிடு
Organization - ஒழுங்கமைப்பு
Organiza Tional Structure - figy 616trial loudlity

Page 38
துணை நூல்கள்
'Jon Wiles And Joseph Bondi (1986)
Making The Middle School Work Ased, Aleyandriya
Janetw Wohlberg 8 Thomas C. Head (1989)
Organi Zational Behaviour Houghton Mifflin Company, Boston.
Rensis Likert (1967)
The Human Organization, Mcgrow - Hill Book Company, New York
Roditert Mecaig (1 98b)
The Common Wealth Case Book
For
Administrators in Post - Secondary Schools Malborou House, London.

பிழை திருத்தம்
பக்கம் பந்தி வரி பிழை திருத்தம்
முன்னுரை 4 2 பணியாளியினர் பணியணியினர்
40 3 15 பாடசாலையிலிந்து பாடசாலையிலிருந்து 46 15 இசசெயதியைக் இச்செய்தியைக் 49 4 15 தோனறவில்லையா? தோன்றவில்லையா? 49 1 சாடைகள் சாதனைகள் 5. 2 இனங்கானல் இனங்காணல் 5. 6 வித்திதாலயத்தில் வித்தியாலயத்தில் 52 1 1 உதவி உதவி 55 5 6 உன்று என்று 58 3 4 கிறிதாகத் சிறிதாகத் 58 3 7 பாடசாலக்ைகு பாடசாலைக்கு 58 4 12 குழத்தினால் குழாத்தினால் 58 4. 18 கோபலன் கோபாலன் 60 5 கிறைத்தண்டனை சிறைத்தண்டனை 60 2 5 சொல்லெனாக் சொல்லொனாக்
60 2 7 பரணியில் பாணியில் 60 agorr 1 மானவனாகவிருந்தும் மாணவனாகவிருந்தும் 60 வினா 4 4 ஆராப்க? ஆராய்க? 62 3 8 ஆரசியற்கருத்துக்களைக் அரசியற்கருத்துக்
63 4 3 மாற்றுபவரல்லவர் மாற்றுபவரல்லர்
பின்பக்க அட்டை
2 முறைச்சாரக்கல்வி முறைசாராக்கல்வி 3 4 தே. க. நிசவகத்தின் நிறுவகத்தின்

Page 39


Page 40
நூலாசிரிய
LD L 1. கொண்ட தனைப் பட்டத்ை கத்தில் முது மான நிறுவகத் மைத்துவ இங்கிலா, கல்வி மு: என்பவற் தையும் ே
1974 ம் ஆண்டு தொடக்கம், ! கம்பஹா, கொழும்பு, மட்டக்களட் யராகவும், மட்/ஆசிரிய கலாசாலை கவும் பணியாற்றினார். 1982 யூன் யில் (SLEAS) நியமனம் பெற்று கெ னந்த வித்தியாலயம் என்பவற்றில் பராகவும், கல்வியமைச்சின் தொை றிக்குக் கற்பித்தல் மேற்பார்வைய பல்கலைக்கழக டிப்புளோமாப் பா மையாற்றினார்.
கிராமியத்துறையின் கல்வி வள 9p6if7,#; 3956ñ) 63)ITif? (The Collge Of Lig கலாசார நிறுவனத்தை 1978ம் ஆன தே, க, நிசவகத்தின் கல்விமுகாபை சிரேஷ்ட செயல் திட்டஅலுவலராக 4. ITT 36| LOT 3) u 1 (Management Cons நிருவாகிகள் ஆகியோருக்கு கல்வி மு நெறிகளை நடத்தி வருகின்றார்.
s
\
SBN 955 - 95598 - 1 - 6
 

ர் பற்றி
-க்களப்பைப் பிற ப் பிடமாகக் திரு. மா. செல்வராஜா பேரா பல்கலைக்கழகத்தில் கல்வி மாணிப் தயும், கொழும்புப் பல்கலைக்கழ கல்வி முது மாணிகல்வித்தத்துவ னிப்பட்டங்களையும், தேசிய கல்வி தில் பட்டப்பின் கல்வி முகா டிப்புளோமாப் பட்டத்தையும், ந்து லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் காமைத்துவம், கல்வி நிருவாகம்
றில் கல்வி முதுமாணிப்பட்டத்
பெற்றார்.
982ம் ம் ஆண்டு வரை குருநாகல் பு ஆகிய மாவட்டங்களில் ஆசிரி யில் உளவியல் விரிவுரையாளரா ன்மாதம் கல்வி நிருவாக சேவை ாழும்பு இந்துக்கல்லூரி, டிட்/சிவா அதிபராகவும், கொத்தணி அதி லக்கல்வி டிப்புளோமா பாடநெ ாளராகவும், சிலகாலம் திறந்த டநெறிக்குப் பரீட்சராகவும் கட
ர்ச்சிக்கு ஊக்குவிப்பு வ ழ ங் க ht) எனும் முறைச்சாரக் கல்வி ண்டு ஆரம்பித்தார். தற்பொழுது 2த்துவ அபிவிருத்தித் துறையில் வும், கல்வி முகாமைத்துவ ஆலோ ultant) இவர், அதிபர்கள், கல்வி முகாமைத்துவ நிருவாகப் பயிற்சி
க. ஜெயரஜா முகாமையாளர் இராஜேஸ்வரி அச்சகம், கொழும்பு,
: