கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மருத்துவமும் சோதிடமும்

Page 1
ogšap
குயிழர் வாழ்வில்
Dr. (BJT. SAGNARGO
 

சோதிடமும்
சித்த மருத்துவம்
JDSUTITIT M.D. (S)

Page 2


Page 3

மருத்துவமும் சோதிடமும்
(தமிழர் வாழ்வில் சித்த மருத்துவம்)
சித்த மருத்துவ கலாநிதி சே.சிவசண்முகராஜா B.S. M.S. (1"Class Hons) (Sri Lanka), M.D.(Siddha Pediatrics) (India)
சிரேஷ்ட விரிவுரையாளர், சித்த மருத்துவத்துறை யாழ்ப்பானப் பல்கலைக்கழகம்,
6616tful சித்தமருத்துவ வளர்ச்சிக் கழகம் 199// கின்னர்னேன்; யாழ்ப்பாணம்.

Page 4
Title of the book
Author
Publisher
CopyRight:
Printers
Edition
Pages
Price
Maruththuvamum Sothidamum.
(TamdarVaazhvi Siddha Maruththuvam)
Dr.S. Sivashanmugarajah B.S.M.S. (Hons), (S.L.), M.D. (S) (India)
Siddha Medical Development Society (S.M.D.S.) 1991 1. Kilner Lane, Jaffna.
Author
Bharathy Pathippakam, 430, K.K.S.Road, Jaffna. First, August 2006.
XM 40
Rs: 270

அகில இலங்கைச் சமாதான நீதிவானும், இளைப்பாறிய கோட்டக்கல்விப் பணிப்பாளரும், கந்தரோடை ஸ்கந்தவரோதயக் கல்லூரியின் முந்நாள் பிரதி அதிபரும், கந்தரோடை தமிழ்க் கந்தையா வித்தியாசாலை முந்நாள் அதிபரும், யாழ். சைவ வித்தியா விருத்திச் சங்கத் தலைவருமான ஆசிரியப்பெருந்தகை சித்தாந்த வித்தகர் அ. தற்பரானந்தன் அவர்கள் வழங்கிய
அணிந்துரை
தமிழர் வாழ்வில் சித்தமருத்துவமும் சோதிடமும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்துள்ளன. உதாரண மாகத் தமிழ்ப் புத்தாண்டை எடுத்துக் கொண்டால் பஞ்சாங்கம் (வாரம், நட்சத்திரம், யோகம், நிதி, கரணம் ஆகிய ஐந்தும்) பார்த்தே கொண்டாடுகின்றோம். விஷ9 புண்ணிய காலம் பார்த்து மருத்துநீர் தேய்த்து, அவ்வவ் வாண்டுக்குரியதெனக் கூறப்பட்ட மூலிகை இலையினைத் (உ-ம் ஆல் , கொன்றை, வேம்பு, புங்கு, கடம்பு) தலையிலும், காலிலும் வைத்து நீராடுகின்றோம். சுபநேரம் பார்த்துக் கருமங்களை ஆரம்பிக்கிறோம்.
திருமணத்திற்குப் பொருத்தம் பார்க்கிறோம். விவாகப் பொருத்தம் முக்கியமான பத்தினுள் நட்சத்திரம், கணம், யோனி, இராசி, இரச்சு ஆகிய ஐந்துக்கும்மேல் பொருந் தின் உத்தமம் என்று ஜோதிடம் கூறுகிறது. இன்று இவற்றைப் பாராது நாத்திகம் பேசி மணம்புரிந்தோர் அல்லல்படுவதைக் காண்கிறோம். ஆண், பெண் இரு வருக்கும் அல்லது இருவரில் ஒருவருக்குப் புத்திரதோஷம் இருப்பின் குழந்தைப் பாக்கியம் கிட்டாது. சித்த வைத்தியர் களுக்குச் சோதிடம் நன்கு தெரிந்திருப்பதால் மகப்பேறு சம்பந்தமான வைத்தியம் செய்யும்போது சரியான விளக் கமும் தகுந்த பரிகாரமுங் கூறுகின்றனர்.

Page 5
பரம்பரை வியாதிகள், மாறாது நீடித்து நிற்கும் வியாதிகள் (தீராத வியாதிகள்) என்பவற்றுக்குக் கன்ம வினையே காரணம் எனச் சித்தவைத்தியத்தில் கூறப்படு கின்றது. இது சம்பந்தமாக சித்தர் கன்மகாண்டத்தில் கூறப்பட்டிருக்கின்றது. கர்ம வினையின்படி ஒருவனுக்கு ஏற்படுபவைகளை அனுபவித்தே ஆகவேண்டும். அல்லது மறுபிறவியெடுத்து அனுபவிக்க வேண்டிவரும். பூர்விக கர்மத்தினால் ஏற்படும் நோய்களுக்கு தெய்வீக முறைப் படிதான் சிகிச்சையளிக்க முடியும் என்று சித்தமருத்து வத்தில் பரிகாரங்கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழ் மக்கள் மருந்து உண்ணத் தொடங்குவதற்கு நாள் நட்சத்திரம் பார்த்துத் தொடங்கும் வழக்கம் காணப் படுகிறது. உதாரணமாக, ஞாயிறு, செவ்வாய், வியாழன், ஆகிய நாட்கள் மருந்துண்ணத் தொடங்கச் சிறந்தன என்றும், ஜென்ம நட்சத்திரத்திலும் வேறுசில நட்சத்திரங் களிலும் மருந்துண்ணத் தொடங்கக் கூடாது என்றுங் கூறுவர்.
மேலும், பரணி, கார்த்திகை, திருவாதிரை, அவிட்டம், சதயம், பூரட்டாதி, கேட்டை, ஆயிலியம், சுவாதி போன்ற நட்சத்திரங்களில் நோய் உண்டானால் மரணம் ஏற்படக்கூடும். அத்துடன் சதுர்த்தி, சஷ்டி, நவமி, துவாதசி திதிகளில் நோய் ஏற்பட்டாலும் மரணபயம் உண்டு என்பர். மேலும் வருடம் பிறந்தபின் சுபநாள் பார்த்தே தலைக்கு எண்ணெய் வைப்பர். திங்கள், புதன், சனி ஆகிய கிழமைகள் இதற்குச் சிறந்தன. ஜென்ம நட்சத்திரம், மாதப்பிறப்பு, இரவுவேளை, அட்டமி, அமாவாசை, பூரணை, பிரதமை, சஷ்டி ஆகிய திகதிகளும் எண்ணெய் வைப்பதற்கு ஆகாத நாட்களாகும்.
iv

அறுவை வைத்தியத்திற்கும் (சத்திர சிகிச்சை)
நட்சத்திரம், திதி முதலியன பார்க்கப்படுகின்றன. மேல் நாட்டு முறை வைத்தியம் செய்யும் தமிழர்களில் பலர் இன்றும் நட்சத்திரம், திதி பார்த்தே செய்கின்றனர், செய்விக்கின்றனர்.
பண்டைய காலத்தில் மன்னர்களும் சித்த வைத் தியமும் சோதிடமும் நன்கு தெரிந்திருந்தனர். அவர்களின் அவையில் சோதிடர்களும், சித்தமருத்துவர்களும் தவறாது இடம் பெற்றிருந்தனர். இலங்கை கோட்டை, கண்டி, யாழ்ப்பாணம் என மூன்று தனியரசுகளாக விளங்கிய பிற்காலத்தில் கோட்டையைச் சிங்கள மன்னர்களும், கண்டியை இந்திய நாயக்க மன்னரும் யாழ்ப்பாணத்தை ஆரியச் சக்கரவர்த்திகளும் ஆண்டு வந்தனர். அக்காலத் தில் யாழ்ப்பாணத்தரசர் சித்த வைத்தியத்தையும், சோதிடத்தையும் இரு கண்ணெனப் போற்றி வளர்த்தனர். செகராசசேகரன் என்ற மன்னன் காலத்தில் செகராச சேகரம் என்ற சித்த வைத்திய நூலும், செகராச சேகரமாலை என்னும் சோதிட நூலும் ஆக்கப்பட்டமையும் பரராசசேகரன் காலத்தில் பரராசசேகர வைத்தியநூல் ஆக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
கந்தரோடை தலைநகராக விளங்கிய தொல்பதி யாகும். கந்தரோடையை ஊடறுத்துப் பாயும் வழுக்கை யாறு கடலுடன் கலப்பதால் துறைமுகமுலம் கடல், ஆற்று வழிகளால் வியாபார ஸ்தலமாக அக்காலத்தில் விளங்கி யிருக்க வேண்டும். இப்பகுதியில் கிடைத்துள்ள சீன, கிரேக்க, உரோம, ஒல்லாந்த நாணயங்கள் இதனை உறுதிப்படுத்துகின்றன. பராக்கிரமபாகு, சேதுமன்னர் களின் நாணயங்களும் இங்கு கிடைக்கப் பெற்றுள்ளன. இத்தகு சிறப்பு வாய்ந்த நகரில் அறிவு, ஒழுக்கங்களில்
V

Page 6
சிறந்த சைவச்சான்றோர் வாழ்ந்துள்ளனர். தமக்குரிய நெறி தவறாது சிவபூஜை செய்துவந்த சிவப்பிராமணர்களும் வாழ்ந்துள்ளனர். இந்நகரில் பல பிராமணக் குடியிருப்பு கள் இருந்தமைக்குச் சான்றுகள் உள. இன்றும் 'பிராமண வளவு' என்ற குறிச்சி உள்ளது. கந்தரோடைக்கும் உடுவில், காரைநகர், சுன்னாகம், மயிலனி, கோப்பாய் ஆகிய இடங்களில் வசிக்கும் பிராமணர்களுக்கும் நெருங் கிய தொடர்பு இருந்தது. இவ்வூரில் உள்ள அந்தணர்கள் கல்வி அறிவிலும், ஒழுக்கத்திலும், சமய அனுட்டானங் களிலும் மேம்பட்டவர்கள் என 'ஈழமண்டல சதகம்' கூறுகிறது. வைத்திய கலாநிதி சேதுமாதவர் சிவசண்முக ராஜா அவர்களின் பிறந்த ஊர் கந்தரோடையாகும். இவரின் தந்தை பிரம்மறி சேதுமாதவர் அவர்களின் தந்தை பிரம்மறி சுப்பிரமணியஐயர் (சாமிஜயர் 1878 - 1936) மாகியப்பிட்டி அங்கணம்மைக்கடவை மீனாட்சி அம்பாள் ஆலய ஆதீனகர்த்தாக்களில் ஒருவர். சித்த வைத்தியத்திலும் சோதிடத்திலும் வல்லுநராக விளங்கி யவர். அவ்விதமே தாய் வழிப்பேரனாகிய சிவபூரி சிவசுப்பிர மணியக் குருக்கள் தமிழிலும் சமஸ்கிருதத்திலும் பாண்டித்தியம் பெற்றிருந்ததுடன் கந்தரோடை தமிழ்க் கந்தையா வித்தியாசாலையில் தலைமை ஆசிரியராகப் பல்லாண்டு காலம் பணி புரிந்தவர். நியமம் தவறாமல் தினசரி சிவபூஜை செய்து வந்ததுடன் இலங்கையின் பல பாகங்களிலும் ஆலய மகோற்சவங்கள், கும்பாபிடே கங்கள் முதலியவற்றை முன்னின்று நடத்தியவர்.
எனவே, இவர்கள் வழிவந்த வைத்திய கலாநிதி சிவசண்முகராஜா அவர்கள் வைத்தியம், சமயம், தமிழ் என்பவற்றில் சிறந்த அறிவுபெற்றுள்ளது ஆச்சரியப்படத் தக்க ஒன்றல்ல. அத்துடன் ' விளையும் பயிரை முளையில் தெரியும்' என்ற முதுமொழிக்கிணங்க கந்தரோடை தமிழ்க் கந்தையா வித்தியாசாலையில் ஆரம்பக்கல்வியைக் கற்ற
vi

இவரது ஆற்றல், திறமைகள் மெச்சக்கூடியதாக இருந்ததைக் காணமுடிந்தது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பயின்று ஐந்து ஆண்டுகளும் முதல்வகுப்பில் தேறி (B.S.M.S பட்டப் படிப்பில் ஐந்து ஆண்டுகளும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்ற சிறப்பு இதுவரை இவருக்கு மட்டுமே உண்டு என்று அறிகின்றேன்.) வைத்திய கலாநிதியாக வெளியேறி சித்தமருத்துவ விரிவுரையாளராக, சித்தமருத்துவ அதிகாரி யாக பணிபுரிந்து 1997 இல் இந்தியா சென்று குழந்தை மருத்துவத்தில் பட்ட மேற்படிப்பைப் பூர்த்தி செய்து தற்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சித்தமருத்துவத் துறையில் சிரேஷ்ட விரிவுரையாளராக பணிபுரிந்து வருகிறார். பத்துக்கும் மேற்பட்ட சித்தமருத்துவ நூல்களை வெளியிட்டுள்ள இவரின் சித்தமருத்துவமும் சோதிடமும் (தமிழர் வாழ்வில் சித்தமருத்துவம்) என்ற இந்நூலுக்கு அணிந்துரை வழங்குவதில் மகிழ்ச்சியடைகின்றேன். மிகவும் எளிய தமிழ் நடையில் எழுதப்பட்டுள்ள இந்நூல் சித்த மருத்துவர்களுக்கு மட்டுமன்றி ஏனையோருக்கும் பயன்படக்கூடிய ஒன்றாகும்.
19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் கந்தரோடை யில் இவரின் பேரனார் சிறந்த சித்தமருத்துவராகவும், சோதிட விற்பன்னராகவும் விளங்கினார். அதே காலத்தில் முத்துக்குமாரு வைத்தியர் (முத்துப்பரியாரியார்) குழந்தை வைத்தியம், மகப்பேற்று வைத்தியத்தில் சிறந்து விளங்கினார். அவர்கள் வழியில் கந்தரோடையைச் சேர்ந்த வைத்தியகலாநிதி சேதுமாதவர் சிவசண்முகராஜா சித்த மருத்துவத்தில் சிறப்புற்று விளங்குவது எமது கந்தரோடை நகருக்குப் பெருமைதரும் ஒன்றாகும். அவரது பணிகள் தொடர வாழ்த்துகிறேன். "ஆனந்தகம்" கந்தரோடை, அ. தற்பரானந்தன் சுன்னாகம்.
27.08.2OO6
vii

Page 7
என்னுரை
முற்காலத்தில் ஒருவர் நோயுற்றுப் படுக்கையில் கிடக்கும் போது வைத்தியர் அவரின் கைநாடி பார்த்து இத்தனை நாளில் நோய்மாறும், அல்லது இத்தனை நாளில் மரணம் ஏற்படும் என்று துல்லியமாகக் கூறுவர் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். உண்மையில் கை நாடி மட்டுமன்றி நோயாளி நோயுற்ற நாள், நட்சத்திரம், திதி முதலிய பல விடயங்களை மனதில் ஒரு கணத்திலேயே அலசி ஆராய்ந்துதான் வைத்தியர்கள் அவ்விதம் கூறியிருக்க வேண்டும். நான் சிறுவனாக இருந்த காலத்தில் எமது உறவினர் யாரும் கடுமையாக நோயுற்று விட்டால் எனது தகப்பனார், நாள் நட்சத்திரம் பிரச்சினையாக இல்லை தப்பிவிடுவார், இன்று பரணி, அட்டமி ஒரு கிழமை போனால்தான் தெரியும் என்றெல்லாம் கூறக் கேட்டிருக்கிறேன். அப்போது எனக்கு இவை என்ன வென்றே விளங்கவில்லை.
எனக்கு முறைப்படி சோதிடம் கற்றுத்தந்தவர் எனது சிறிய தகப்பனார் சிவபூரீ ஷ, சோமாஸ்கந்தக் குருக்களாவார். நான் பல்கலைக் கழகத்தில் சித்த மருத்துவம் கற்றுக் கொண்டிருந்த வேளையில் மருத்து வத்தில் சோதிடம் ஓர் அவசியமானதுறை என்று கூறி ஊக்குவித்தவர் கல்வியங்காடு மருத்துவ அறிஞர் க. இராமசுவாமி ஆவார். பின்னர் இந்தியாவில் பட்ட மேற்படிப்பை மேற்கொண்டிருந்த வேளையில் மருத்து வத்துக்கும் சோதிடத்துக்கும் உள்ள தொடர்பின் முக்கியத்துவத்தை எனக்கு உணர வைத்தவர் பட்ட மேற்படிப்புத்துறை சிறப்பு மருத்துவத்துறைத் தலைவர் பேராசிரியர் ந. செல்லமுத்து அவர்களா
viii

வார். அவர் எனக்கு உபதேசித்த அடிப்படையிலேயே பகுதி II ஆக்கப்பட்டுள்ளது என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன்.
1993 இல் சுதேச வைத்திய சங்கத்தின் சார்பில் *சுதேசமருத்தும்" என்னும் காலாண்டுச் சஞ்சிகை வெளியிடப்பட்டது. அச்சஞ்சிகையின் ஆசிரியராக நான் கடமையாற்றினேன். அச்சஞ்சிகையில் “சோதிடமும் மருத்துவமும்” என்ற தலைப்பில் கட்டுரைத் தொடர் ஒன்றை எழுத ஆரம்பித்திருந்தேன். துரதிர்கூழ்டவசமாக அச்சஞ்சிகை தொடர்ந்து வெளிவரவில்லை. எனது முயற்சியும் அரைகுறையாக நின்று விட்டது. 2002 இல் சித்தமருத்துவ மூலதத்துவம் என்ற எனது நூலில் சோதிடமும் மருத்துவமும் பற்றி ஓர் அத்தியாயம் எழுதியிருந்தேன். அதைப்படித்த பலரும் அது பற்றி விரிவாக எழுதவேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அண்மையில் எனது புத்தக அலுமாரியை ஒழுங்கு படுத்திக் கொண்டிருந்த போது மருத்துவ சோதிடம் சம்பந்தமாக நான் 1993 இலிருந்து சேகரித்து வைத்திருத்த பல குறிப்புகள் கிடைத்தன. அவற்றைப் பார்த்ததும் அவற்றை ஒழுங்குபடுத்தி நூலுருவாக் கினால் பலருக்கும் பிரயோசனப்படும் என்று தோன்றியது. அதன் பயனாகவே இன்று இந்நூல் உங்கள் கைகளில் கிடைத்துள்ளது.
சித்த மருத்துவம் ஆன்மீக மேம்பாட்டிற்கும் ஆன்ம ஈடேற்றத்துக்கும் வழிகாட்டும் ஒரு மெய்ஞ் ஞான மருத்துவமுறையாகும். எனவேதான் சமய அடிப்படையை அது இன்றளவும் கொண்டு விளங்கு கிறது. சோதிடமும் சமய அடிப்படையில் எழுந்த ஒன்றாகவே உள்ளது. நட்சத்திரங்கள் - கிரகங்கள் - இராசிகள் அனைத்தும் தெய்வ சம்பந்தமுள்ளவை யாக அதிதேவதைகளைக் கொண்டிருக்கின்றன.
ix

Page 8
எனவே, சித்தமருத்துவத்தைக் கருதும் போது சமயம் - சோதிடம் என்பவற்றையும் இணைத்துப் பார்த்தல் வேண்டும். அப்போதுதான் சித்த மருத்துவ உண்மைகளை தெளிவாக விளங்கிக் கொள்ள (Մ?ւգեւյւն,
சித்த மருத்துவத்துக்கும் சோதிடத்துக்கும் நெருங்கிய தொடர்புகள் இருக்கின்ற போதிலும் சித்த மருத்துவ பாடத்திட்டத்தில் மருத்துவ சோதிடத்தைச் சேர்க்காது விட்டுள்ளமை வருந்தற்குரியது.
இந்நூல் மிகமிக இலகுவாக விளங்கிக் கொள்ளும் வகையில் ஆக்கப்பட்டுள்ளது. அதனால் இதைப் படித்ததும் எல்லாமே விளங்கி விட்டதாக நினைக்கக் கூடாது. சோதிடரீதியாக பலன் அறிதல் என்பது இலகுவான விடயமல்ல. கிரகபலம், கிரகச் சேர்க்கை, பார்வை போன்ற பல்வேறு விடயங்களை ஆராய்ச்சி செய்தே இறுதி முடிவுக்கு வரவேண்டும்.
இந்நூலாக்கத்துக்கு எனக்குச் சகல வழிகளிலும் உதவி புரிந்த எனது சகோதரன் பிரம்மபூர் சே. சிவசுப்பிரமணிய சர்மா அவர்கட்கும், சிறந்த தொரு அணிந்துரை வழங்கிச் சிறப்பித்துள்ள எனது ஆசிரியப் பெருந்தகை அ. தற்பரானந்தன் அவர்கட் கும், அட்டைப் படத்தை வரைந்துதவிய ஓவியர் ரமணி அவர்களுக்கும், இந்நூலைச் சிறந்தமுறையில் கணினிப்பதிவு செய்வதற்கு உதவிய பாரதி பதிப்பக அதிபர் திரு. இ. சங்கர் அவர்கட்கும் மற்றும் ஊழியர் களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவிக்கக் கடமைப் பட்டுள்ளேன்.
சே. சிவசண்முகராஜா
யாழ்ப்பாணம்.

பொருளடக்கம்
விடயம்
அறிமுகம் நட்சத்திரங்கள் இராசிகள் இராசிகளின் வடிவங்கள் இராசிகளின் தன்மை நட்சத்திரங்களும் இராசிகளும் ஜன்மத்திரயங்கள் இராசிகளின் அங்கங்கள் - 1 இராசிகளின் அங்கங்கள்-11 நவக்கிரகங்கள் நவக்கிரகங்களும் இராசிகளும் ஆட்சிவீடுகள்
நட்பு வீடுகள் உச்ச வீடுகள்
பகைவிடுகள்
நீச வீடுகள் கிரக சஞ்சாரம்
ajiLI - 9łajLIăsăsratsråIasosir கிரக சத்துரு மித்துருக்கள்
கிரக வலிமை கிரகங்களின் பார்வை கிரக காரகர்கள்
xi
SSD
O1
O9
O
12
13
5
18
8
19
20
2O
2.
23
25
28
27
28
29
29
32
33
33

Page 9
கிரக அங்கம் கிரக கேந்திர திரிகோண ஸ்தானங்கள் இலக்கினம், சந்திர லக்கினம் பன்னிரு பாவங்கள் - 1 பன்னிரு பாவங்கள் - II
திசாபுத்தி
கிரக தத்துவம், தன்மை கிரக அதிதேவதைகள்
கிரக குணம்
கிரகங்களின் திக்கு
கிரக நிறம் கிரகங்களும் பஞ்சபூதங்களும் கிரகங்களின் ஐம்பூதக் கூறுபாடுகள் கிரக வடிவம், அமைப்பு, உடலின் உறுப்புகள் கிரகங்களும் உடற்கட்டுகளும் கிரகங்களும் சுவையும் கிரகங்களும் ஐம்பொறி தன்மாத்திரை புலன்களும் கிரகங்களும் கன்மேந்திரியங்களும் கிரகங்களும் கோசங்களும் கிரகங்களும் ஆறாதாரங்களும் கிரக இரத்தினங்களும் உலோகங்களும் கிரக தானியம், நைவேத்தியம் கிரக சமித்து, துபதீபம், புஷ்யம் கிரக நாடிகள்
கோள்களும் மனிதனும்
xii
34
35
35
36
38
ftب!4
45
45
46
46
47
47
48
49
49
5O
5O
51
5.
52
53
53
54。
54。
54

உடல் ஆரோக்கியம் எப்பொழுதும் நோய்களால் பீடிக்கப்பட்டிருத்தல். நோய் உண்டாகும் அவயவம் நவக்கிரகங்களல் ஏற்படக்கூடிய நோய்கள் கிரகங்கள் உடலுறுப்புகளில் ஏற்படுத்தும் நோய்கள் நோய்களும் கிரக நிலைகளும் - 1 கிரக பார்வையும் நோய்களும் கிரகங்களால் பாதிக்கப்படும் தோஷங்கள் நோய்களும் கிரக நிலைகளும் - II குழந்தையின்மை - மலட்டுத்தன்மை நோயும் நட்சத்திரமும் நோய்க்கு ஆகாத நாளும் , நட்சத்திரமும் நோய் நட்சத்திரமும் தீரும் கால அளவும் - 1 நோய் நட்சத்திரமும் தீரும் கால அளவும் -II சுரநட்சத்திரம் (சுரக்கோள்) - 1 சுரநட்சத்திரம் - I அவமிருத்து நாளும் நட்சத்திரமும் நோய் மிருத்து நாட்கள் நோயுறினும், விஷந்தீண்டினும் ஆகாத நாட்கள் நோய் தீரும், தீராத நாட்கள் நோயுண்டாக்கும் கிரக அமைப்பு ஜாதகப்படி நோயை நிதானித்தல். வைத்தியம் செய்வதற்கு உகந்த நாட்கள் வைத்தியம் செய்ய உகந்த திதிகள்
xiii
8.
82
83
83
64
68
89
89
70
8O
87
93
93
95
96
98
99
OO
O1
O
103
105
109
O

Page 10
வைத்தியம் செய்ய உகந்த நட்சத்திரங்கள் வைத்தியம் செய்ய உகந்த இலக்கினங்கள் வைத்தியம் செய்ய உகந்த மாதங்கள் அறுவை வைத்தியத்துக்கு உகந்த நாட்கள் திதிகளும் அட்டை விடுதலும் அமாவாசை, பெளர்ணமி மருந்துண்ண உகந்த நாட்கள் - 1 மருந்துண்ண உகந்த நாட்கள் - II சுரம் சன்னிக்கு மருந்துண்ணல் வாத பித்த கபரோகங்களுக்கு மருந்துண்ணல் சகல வியாதிக்கும் மருந்துண்ணல் பிரமேகத்துக்கு சஞ்சீவினி மருந்துண்ணல் தைலாப்பியங்கத்துக்கு உகந்த நாட்கள் நோய் மாறிக் குளிப்பதற்கு உகந்த நாட்கள்
ஹோரை
சித்தரும் சோதிடமும் நட்சத்திரங்களும் அதிதேவதைகளும் கிரகங்களும் அதிதேவதைகளும் நவக்கிரக சாந்தி
நாக சாந்தி
പ്രgഖങ്ങ]
உதவிய நூல்கள்
xiv
110
11
12
13
114
15
11.8
117
118
119
2O
121
12
22
123
123
29
131
132
133
135
137
138

அறிமுகம்
சித்த மருத்துவத்தை மணி - மந்திர அவுடத வைத்தியமுறை என்றுங் கூறுவர். இதில் மணி என்பது சோதிடத்தைக் குறிக்கும் என்பர். எனவே, சித்த மருத்துவர்களுக்கு மருத்துவம் சார்ந்த சோதிட அறிவு (Medical Astrology) -96) isflu ILDITGilb. 5pb.5IT6556) சித்தமருத்துவம் சித்திக்காமல் இருப்பதற்கு சித்த மருத்துவர்களுக்குச் சோதிட அறிவின்மையும் ஒரு முக்கிய காரணமாகும். நவகோள்களும் மனித உடலில் ஆட்சி செலுத்திய வண்ணம் உள்ளன. அவற் றைச் சரிவர அறிந்து, குறைபாடுகளை நிவர்த்திப் பதன் மூலமே நோயை வேருடன் களைய முடியும். தற்காலத்தில் சித்தமருத்துவர்களிற் பலர் நோயாளி யின் நோய் நிலைகளை மேலைத்தேச மருத்துவ நூல்களில் கூறப்பட்டுள்ள நோய் நிலைகளுடன் ஒப் பிட்டு ஆராய்ந்து பரிகாரம் காண்பதிலேயே முக்கிய கவனம் செலுத்தி வருகின்றனர். இது குறுகிய கால நிவாரணத்துக்கே உதவும். ஆனால் சித்தர்களின் மணி - மந்திர - அவுடத முறையைப் பின்பற்றினால் நோயை அதன் மூலஸ்தானத்திலிருந்தே அகற்ற
O

Page 11
முடியும். சித்த மருத்துவர்களுக்குச் சோதிட அறிவு
மிகவும் அவசியம் என்று சித்தர்கள் வலியுறுத்திக்
கூறியுள்ளமையும் நோக்கற்குரியது.
*சோதிடம் பஞ்சபட்சி துலங்கிய சரநூல் மார்க்கம் கோதறு வகாரவித்தை குருமுனி - ஒதுபாடல் தீதிலாக் கக்கிசங்கள் செப்பிய கன்மகாண்டம்
ஈதெலாங் கற்றுணர்ந்தோர் இவர்ளே வைத்தியராவர்?
- பதினெண் சித்தர் நாடி நூல்
அதாவது சோதிட சாஸ்திரம், பஞ்சபட்சி சாஸ் திரம், மூச்சுப்பயிற்சி (சரநூல் மார்க்கம்), தத்துவங் கள் (கக்கிசங்கள்), சோதிட நாடி சாஸ்திரம் (கன்ம காண்டம்) வேதைநூல் (அகார வித்தை), அகத்தியர் முதலான சித்தர்களின் (குருமுனி) நூல்கள் என்பவற் றைக் கற்று உணர்ந்தவர்களே வைத்தியர்களாவார்.
சித்த மருத்துவத்தில் பரம்பரை வியாதிகள், திராத வியாதிகள் என்பவற்றுக்குக் காரணம் கர்ம வினை என்று கூறப்பட்டுள்ளது. அதுபற்றிய விபரங்கள் சித்தர்நாடி எனப்படும் கன்ம காண்டத்தில் (கர்மம் + காண்டம்) கூறப்பட்டுள்ளது. இது ஒவ்வொரு வரினதும் தனிப்பட்ட ஜாதக விடயமாகும். எத்த னையோ நூற்றாண்டுகளுக்கு முன்னர் சித்தர்கள் தமது தெய்வ சகாயத்தினால் எழுதி வைத்துள்ள நாடி சாஸ்திரம் தற்போதும் வழக்கிலுள்ளது. இதனையே காண்டம் என்று பொதுவில் கூறுவர். காண்டம் வாசிப் பவர்கள் தற்போதும் இலங்கையிலும் இந்தியாவிலும் இருக்கிறார்கள். காண்டத்திலிருந்து ஒருவரின் பூர்வீக
O2

வரலாறு, தற்போதைய பிறப்பு, நடந்தவை, நடப்பவை, நடக்கப்போகின்ற விடயங்கள், தற்போதைய வாழ்க் கையில் எழும் பிரச்சினைகளுக்கான பரிகாரங்கள் (சாந்தி காண்டம்) என்பவற்றை அறிந்து கொள்ளல் (լքւգեւյմ),
காண்டம் வாசிப்பவர் தனது கவனக்குறைவினா லும் அல்லது அர்த்தம் சொல்வதில் பிழைவிடு வதாலும் தவறுகள் ஏற்படலாமேயொழிய நூலில் (ஏட்டில்) பிழைகள் இல்லை. பூர்வ கர்மத்தினால் தெய்வ சங்கல்பமாக ஏற்படும் நோய்களுக்கு தெய்வீக முறைப்படிதான் பரிகாரம் காணமுடியும். சோதிட கன்ம காண்டத்தில் அவற்றுக்கான பரிகாரங்கள் கூறப்பட்டுள்ளன.
(குறிப்பு - சோதிடத்தில் வரும் சித்தர் நாடி நூல் என்பது காண்டத்தையே குறிக்கிறது. மருத்துவத்தில் வரும் சித்தர் நாடி நூல் என்பது கைநாடி பிடித்து நோயைக் கண்டறிந்து கொள்வதைக் குறிக்கிறது.)
மருத்துவன் அறிய வேண்டுபவை பற்றி “அகத்தியர் சில்லறைக் கோவை" குறிப்பிடுகையில்.
“பார்க்கின்ற சோதிடமே பிராயகாலம்
பகரும் விவகாரமொடு பிராயச்சித்தம் ஏர்க்கும் வயித்தியமிந்த நான்கும் வல்லோர்
இதன்வழியே சிகிச்சை ரட்சை செய்வாராகில் ஆர்க்குமே தோடமில்லை: இவைகள் யாவும்
அறியாதார் சாத்திரம் வல்லவர்கள் போலத் தீர்க்கமடி பிடியாகச் செய்வாராகில்
சீவபிர மத்தி வதை சேர்வாரன்றே"
O3

Page 12
அதாவது சோதிட சாத்திரம், நோயாளியின் வயது, தொழில் முறைகள், கிரகக் குற்றங்களுக்கு செய்யப் பட வேண்டிய பிராயச்சித்தங்கள் என்பவற்றைக் கருத் தில் கொண்டு சிகிச்சை செய்தல் வேண்டும். அதனால் யாருக்கும் குற்றமில்லை. நன்மையே ஏற்படும். அதை விடுத்து இவை ஒன்றையும் அறியாமல் அதேவேளை எல்லா நூல்களையும் கற்றவர் போல் நடித்து சிகிச்சை செய்வார்களேயானால் அவர்கள் சீவபிரம ஹத்தி செய்த குற்றத்துக்கு ஒப்பாவார்கள்.
மருந்துக்காக மூலிகை சேகரிப்பதாக இருந் தாலும் சரி, புதிதாக மருந்து தயாரிப்பதாக இருந் தாலும் சரி, நோய்க்கு வைத்தியம் பார்ப்பதாக இருந் தாலும் சரி, நோய்க்கு மருந்துண்ண ஆரம்பிப்பதாக இருந்தாலும் சரி நல்ல நாள், நட்சத்திரம், ஹோரை முதலிய பல விடயங்களைப் பார்த்தல் வேண்டும் என்று சித்த மருத்துவ நூல்களில் ஆங்காங்கே கூறப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சித்தமருத்துவர்கள் சோதிடக் கலையில் வல்ல வர்களாக ஆகாவிட்டாலும் ஓரளவிற்காவது அக் கலையை அறிந்து வைத்திருப்பது அவசியமாகும். அந்த வகையில் சில அடிப்படை மருத்துவ சோதிட விடயங்கள் பற்றி இந்நூலில் எடுத்துக் கூற முயற்சி எடுத்துள்ளேன்.
இந்நூல் ஆறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
பகுதி I இல் ஒருவரின் ஜாதகத்தை விளங்கிக் கொள்வதற்கு அவசியமான விடயங்கள் பற்றி எடுத்துக் கூறப்பட்டுள்ளது.
04

பகுதி I இல் நவக்கோள்களின் பல்வேறு தன்மைகள், உடலுக்கும் அவற்றுக்கும் இடையிலுள்ள தொடர்பு, மருத்துவத்தில் அவற்றின் முக்கியத்துவம் என்பன பற்றி எடுத்துக் கூறப்பட்டுள்ளது.
பகுதி II இல் உடல் ஆரோக்கியம், நோய்நிலை பற்றியும், அவற்றுக்குக் காரணமான கிரகநிலைகள் பற்றியும், மலட்டுத்தன்மை பற்றியும் எடுத்துக் கூறப் பட்டுள்ளது.
பகுதி IV இல் ஒருவர் நோய்ப்படும் நாள், நட்சத்திரங்கள் பற்றியும் நோய் திரும், தீராநிலைகள் பற்றியும் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.
பகுதி V இல் சிகிச்சை பெறுவதற்கும் மருந்துண் பதற்கும் உகந்த நாள், நட்சத்திரங்கள், திதிகள் பற்றியும் அவற்றுக்கு ஆகாத நாட்கள் பற்றியும் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.
பகுதி VI இல் சில பொதுப்பரிகார முறைகள் பற்றி எடுத்துக் கூறப்பட்டுள்ளது.
நோயாளிக்குச் சிகிச்சையளிக்கும் போது ரோகி பலம், ரோகபலம் என்பவற்றைக் கவனிப்பதுடன் கிரக பலத்தையும் கவனத்திற் கொள்ளுதல் வேண்டும்.
வைத்தியர்களும், வைத்திய மாணவர்களும் இந் நூலை பல தடவை வாசித்தும் தமது நோயாளிகளின் ஜாதக அமைப்புகளுடன் ஒப்பிட்டு ஆராய்ந்தும், பிற சோதிட நூல்களை வாசித்தும் பயன்பெறவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
05

Page 13

1.01
O2
1.O3
1.04
1.05
O6
O7
1. OS
O9
O
1.11
1.12
1.13
1.14
15
1.16
17 1.18
1.19
1。20
2
122
1.23
1.24
1.25
1。28
1。27
பகுதி - 1
நட்சத்திரங்கள்
இராசிகள் இராசிகளின் வடிவங்கள் இராசிகளின் தன்மை நட்சத்திரங்களும் இராசிகளும் ஜன்மத்திரயங்கள் இராசிகளின் அங்கங்கள் - 1 இராசிகளின் அங்கங்கள் - I நவக்கிரகங்கள் நவக்கிரகங்களும் இராசிகளும் ஆட்சி வீடுகள்
நட்பு வீடுகள்
உச்ச வீடுகள்
பகை வீடுகள்
நீச வீடுகள்
கிரக சஞ்சாரம் - சுப - அசுபக்கிரகங்கள் கிரக சத்துரு மித்துருக்கள் கிரக வலிமை கிரகங்களின் பார்வை கிரக காரகர்கள்
கிரக அங்கம் கிரக கேந்திர, திரிகோன ஸ்தானங்கள் இலக்கினம், சந்திர லக்கினம் பன்னிரு பாவங்கள் - 1 பன்னிரு பாவங்கள் - I திசாபுத்தி

Page 14

O
நட்சத்திரங்கள்
நட்சத்திரங்கள் இருபத்தேழாகும். அவையாவன.
ஒவ்வொரு நட்சத்திரமும் முதலாங்கால், இரண்
மூன்றாங்கால், நான்குகால்கள் அல்லது நான்கு பாதங்களைக்
டாங்கால்,
அசுவினி பரணி கார்த்திகை ரோகிணி மிருகசிரிடம் திருவாதிரை புனர்பூசம் ԱԺւb ஆயிலியம் மகம்
பூரம் உத்தரம்
. அத்தம்
சித்திரை
கொண்டுள்ளன.
எனவே, 27 நட்சத்திரங்களுக்குமாக மொத்தம்
15.
16.
17.
18.
19.
20.
21.
22.
23.
24.
25.
26.
27. .
நாலாங்கால்
சுவாதி விசாகம் அனுஷம் கேட்டை மூலம் பூராடம் உத்தராடம் திருவோணம் அவிட்டம் சதயம் பூரட்டாதி உத்தரட்டாதி ரேவதி
108 (27x4) கால்கள் (பாதங்கள்) உள.
09
எனறு

Page 15
1.O2 இராசிகள்
இராசிகள் பன்னிரண்டாகும். அவையாவன:
10.
11.
12.
GupLub
இடபம்
மிதுனம்
கடகம்
சிங்கம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
2560lծ:
шабли.
கும்பம்
மீனம்
(Aries) (Taurus)
(Gemini)
(Cancer)
(Leo)
(Virgo)
(Libra)
(Scorpio)
(Sagittarius)
(Capricorn)
(Aquarius)
(Pisces)
10

J09ņ99,qıııQ91@ - Zரகசிஓபியூரு "ஒ | ழாதே 6
quoisilgo ·quíoqi oop 1,99£)pılí Qū)Jooņ9rı
qigo-Top ·qırıqu@ : 1 !
quicos@gi ·qırı TỔ ogqITıgıç) * Iqıloogi o? 1
11

Page 16
1.03 இராசிகளின் வடிவங்கள்
10.
11.
12.
இராசி
மேடம்
இடபம்
மிதுனம்
கடகம் -
சிங்கம்
கன்னி
g516. It Lib
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
வடிவம்
ஆடு
67(1551
ஆணும் பெண்ணும்
நண்டு
சிங்கம்
பெண்
தராசு
தேள்
வில்
சுறாமீன்
குடம்
மீன்
12

1.04 இராசிகளின் தன்மை
இராசிகளிற் சில சரம் அல்லது அசையும் தன்மை வாய்ந்தனவாக உள்ளன. அவை ஜலராசி அல்லது சரராசிகள் எனப்படும். சில ராசிகள் ஸ்திரமானவை. அவை ஸ்திர ராசிகள் எனப்படும். சில ராசிகள் சரம், ஸ்திரம் என்பவற்றுக்கு இடைப்
பட்டவையாக உள்ளன. அவை உபயராசிகள் எனப்படும்.
இராசி தன்மை
1. மேடம் சராசி 2. இடபம் ஸ்திரராசி 3. மிதுனம் உபயராசி 4. கடகம் சராசி 5. சிங்கம் ஸ்திரராசி
6. கன்னி உபயராசி 7. துலாம் சரராசி 8. விருச்சிகம் ஸ்திரராசி 9. தனுசு உபயராசி 10. மகரம் சராசி 11. கும்பம் ஸ்திரராசி 12. மீனம் உபயராசி
13

Page 17
qiltilī,qI/1p- qļísgoasosiltilī, J09ņ99Ðquı1,91@quosogoșo),■IGĒĢ quisqoqỊsp quorsàlg?quíoqi dictoņ94Ế 199J199Đgousē) quí passisqo qigo-Topqırıqu@ qutIl-ĠqỊílýą9qỊ04?qutu Tā quicos@giqırı ıĠqITJug)qıloogi
14

1.05 நட்சத்திரங்களும் இராசிகளும்
இருபத்தேழு நட்சத்திரங்களும் பன்னிரு ராசி களுள் அடங்குகின்றன. நாம் ஏற்கெனவே குறிப் பிட்டுள்ளது போன்று 27 நட்சத்திரங்களுக்குமாக மொத்தம் 108 கால்கள் உள. இவற்றை 12 ராசி களுக்குள் அடக்கும் போது (108 + 12 = 9) ஒரு ராசி யில் ஒன்பது நட்சத்திர பாதங்கள் அடங்குகின்றன. (அதாவது இரண்டேகால் நட்சத்திரங்கள்) அதன்படி.
இராசி நட்சத்திரங்கள்
பரணி - 4 பாதங்கள்
1. GupLLb {န္တီး - 4 பாதங்கள்
கார்த்திகை - 1 ஆம் பாதம்
2. இடபம் கார்த்திகை - 2, 3, 4 ஆம் பாதங்கள்
ரோகிணி - 4 பாதங்கள்
மிருகசிரிடம் 1ஆம், 2ம் பாதங்கள்
மிருகசிரிடம் - 3, 4 ஆம் பாதங்கள்
திருவாதிரை - 4 பாதங்கள் புனர்பூசம் 1, 2, 3 ஆம் பாதங்கள்
பூசம் - 4 பாதங்கள் ஆயிலியம் - 4 பாதங்கள்
5. சிங்கம் மகம் - 4 பாதங்கள்
பூரம் - 4 பாதங்கள்
உத்தரம் - 1ஆம் பாதம்
15
4. கடகம் { புனர்பூசம் - 4 ஆம் பாதம்

Page 18
10.
11.
12.
{
{
ఆు
{
{ {
உத்தரம் - 2,3,4 ஆம் பாதங்கள் அத்தம் - 4 பாதங்கள் சித்திரை - 1, 2 ஆம் பாதங்கள்
சித்திரை - 3, 4 ஆம் பாதங்கள் சுவாதி - 4 பாதங்கள் விசாகம் - 1, 2, 3 ஆம் பாதங்கள்
விசாகம் - 4 ஆம் பாதம் அனுஷம் - 4 பாதங்கள் கேட்டை - 4 பாதங்கள்
பூராடம் - 4 பாதங்கள் உத்தராடம் - 1ஆம் பாதம்
உத்தராடம் 2, 3, 4 ஆம் பாதங்கள் திருவோணம் - 4 பாதங்கள் அவிட்டம் - 1, 2ஆம் பாதங்கள்
அவிட்டம் 3,4 ஆம் பாதங்கள் சதயம் - 4 பாதங்கள் பூரட்டாதி - 1, 2, 3 ஆம் பாதங்கள்
பூரட்டாதி - 4ஆம் பாதம் உத்தரட்டாதி - 4 பாதங்கள் ரேவதி - 4 பாதங்கள்.
16

மீனம் (3DLib இடபம் மிதுனம்
பூரட்டாதி அசுவினி கார்த்திகை மிருகசிரிடம் 4ஆம் பாதம் 4 பாதங்கள் ಹಿ 3. 4ஆம் பாதம் உத்தரட்டாதி பரணி னிே |திருவாதிரை 4 பாதங்கள் 4 பாதங்கள் 14 பாதங்கள் 4 பாதங்கள் ரேவதி கார்த்திகை மிருகசீரிடம் புனர்பூசம் 4 பாதங்கள் 1ஆம் பாதம்|1, 2ஆம் 1,2,3ஆம் பாதங்கள்
பாதங்கள
கும்பம் கடகம்
ś9łeft"Lub புனர்பூசம் 3, 4ஆம் பாதங்கள் 4ஆம் பாதம் சதயம் பூசம் 4 பாதங்கள் 4 பாதங்கள் பூரட்டாதி ஆயிலியம் 1.2.3ஆம் பாதங்கள் 4 பாதங்கள்
இராசிகளும் LD&sjib நட்சத்திரங்களும் சிங்கம் உத்தராடம் மகம் 2.3.4ஆம் பாதங்கள் 4 பாதங்கள் திருவோணம் Այն 4 பாதங்கள் 4 பாதங்கள் 9iesaħ Llib உத்தரம் 1, 2, பாதங்கள் 1 ஆம் பாதம்
5g)éir விருச்சிகம் துலாம் கன்னி
முலம் விசாகம் சித்திரை உத்தரம் 4 பாதங்கள் 4ஆம் பாதம் 3, 4 ஆம் 2,3,4ஆம் பாதம்கள் பூராடம் அனுஷம் பாதங்கள் அத்தம் 4 பாதங்கள் 4 பாதங்கள் சுவாதி 4 பாதங்கள் உத்தராடம் கேட்டை 4 பாதங்கள் சித்திரை 1 ஆம் பாதம் 4 பாதங்கள் விசாகம் 1, 2 ஆம் பாதங்கள்
1, 2, 3 ஆம் பாதங்கள்
1グ

Page 19
1.06ஜன்மத்திரயங்கள்
ஒருவரின் ஜன்ம நட்சத்திரத்துக்கு 10 ஆவது நட்சத்திரமும் அதற்கு 9 ஆவது நட்சத்திரமும் ஜன்மத்திரயங்கள் அல்லது கர்ப்பநாள், பகைநாள் எனப்படும். அதாவது
1. அசுவினி - மகம் - மூலம் 2. பரணி - பூரம் - பூராடம் 3. கார்த்திகை - உத்தரம் - உத்தராடம் 4. ரோகிணி - அத்தம் - திருவோணம் 5. மிருகசிரிடம் - சித்திரை - அவிட்டம் 6. திருவாதிரை - சுவாதி - சதயம் 7. புனர்பூசம் - விசாகம் - பூரட்டாதி 8. பூசம் - அனுஷம் - உத்தரட்டாதி 9. ஆயில்யம் - கேட்டை - ரேவதி
ஜன்மத்திரயங்களில் தைலாப்பியங்கம், எண் ணெய் முழுக்கு, நோய்க்கு புதிதாக மருந்துண்ணல் போன்றவை செய்யக் கூடாது.
1.07 இராசிகளின் அங்கங்கள் - I
1. GoldLib - தலை 2. இடபம் - முகம் 3. மிதுனம் - மார்பு 4. கடகம் - இருதயம் 5. சிங்கம் - வயிறு 6. கன்னி - கொப்பூள் 7. துலாம் - அடிவயிறு
18

8.
9.
10.
11.
12.
விருச்சிகம்
562)]ծ: மகரம கும்பம் மீனம்
- சிசுனம் (பிறப்புறுப்பு) - இருதொடை - இருமுழந்தாள் - கணுககால - இரு பாதங்கள்
1.08 இராசிகளின் அங்கங்கள்-I
இராசி
(BioLub
இடபம் மிதுனம்
கடகம்
சிங்கம்
கன்னி
துலாம் விருச்சிகம்
தனுசர் LDébJTub கும்பம்
மீனம்
அங்கம்
- தலை, முளை, கண், முகம் - கழுத்து, தொண்டை, உண்ணாக்கு - நுரையீரல், மார்பு, கைவிரல், மூக்கு - வயிறு, மார்பகம், வாய், நாக்கு - இதயம், முதுகு, முதுகுத்தண்டு,
567 - சிறுகுடல், பெருங்குடல், இடை - சிறுநீரகம், தோல் - பிறப்புறுப்புகள், காது - இடுப்பு, தொடை, கல்லீரல் - பல், எலும்பு, முழங்கால் - கணுக்கால், இரத்த ஒட்டம் - பாதம், மலக்குடல், மலவாசல்
19

Page 20
1.09 நவக்கிரகங்கள்
நவக்கிரகங்கள் என்றால் ஒன்பது கிரகங்கள் என்று பொருள். அவை வருமாறு:
கிரகம் வேறுபெயர் 1. சூரியன் - (Sun) - ரவி 2. FIBg5uédit - (Moon) - மதி, திங்கள் 3. செவ்வாய் - (Mars) - குஜன் 4. புதன் - (Mercury) - 5. 65ul IITyp67 - (Jupiter) - குரு 6. G616itofi - (Venus) - சுக்கிரன் 7. சனி - (Saturn) 8. ராகு - (Rahu) 9. கேது - (Kethu)
தற்காலத்தில் சிலர் இவற்றுடன் யூரேனஸ், நெப்டியூன், என்பவற்றையும் சேர்த்துக்கொள்வதுண்டு. 1.10 நவக்கிரகங்களும் இராசிகளும்
நட்சத்திரங்களுக்கும் இராசிகளுக்கும் தொடர் புள்ளது போலவே நவக்கிரகங்களுக்கும் இராசி களுக்கும் தொடர்புகளுள்ளது. இராசிகளிற் சில நவக் கோள்களுக்கு சொந்த வீடாக உள்ளன. அவற்றை அக்கிரகத்தின் ‘ஆட்சிவீடு” என்பர். சில இராசிகள் சில கிரகங்களுக்கு நட்பாக உள்ளன. அவற்றை, நட்பு வீடுகள்” என்பர். சில இராசிகளில் சில கிரகங்கள் உச்சப்பலனைக் கொடுக்க வல்லதாக உள்ளன. அதனை அக்கிரகங்களின், உச்சவீடுகள்” என்பர்.
20

அதேபோன்று சில இராசிகள் சில கிரகங் களுக்கு பகையாக உள்ளன. அவற்றை அக்கிரகங் களின், பகைவீடுகள்” என்பர். சில இராசிகளில் சில கிரகங்கள் மிகவும் கெடுதலான பலனை வழங்கு பவையாக உள்ளன. அவற்றை அக்கிரகங்களின், நீசவீடுகள்” என்பர்.
சில இராசிகளில் கிரகங்கள் பகையாகவோ, நட்பாகவோ அன்றி சமபலனுக்குரியனவாக உள்ளன. அவற்றை அக்கிரகங்களின், சமவீடுகள், என்பர்.
1. ஆட்சிவீடுகள்
கிரகம் - ஆட்சிவீடு (இராசி) 1. சூரியன் - சிங்கம் 2. சந்திரன் - கடகம் 3. செவ்வாய் - மேடம்
விருச்சிகம் 4. புதன் - மிதுனம்
கன்னி 5. வியாழன் - மீனம் தனுசு 6. வெள்ளி - இடபம் துலாம் 7. சனி ԼD5Մլb
கும்பம்
சில கிரகங்களுக்கு இரண்டு ஆட்சிவீடுகள் உள. ராகு, கேது என்பவற்றுக்கு ஆட்சிவீடுகள் இல்லை என்பர்.
21

Page 21
வியாழன் செவ்வாய் வெள்ளி | புதன்
சனி 8Fந்திரன்
ஆட்சிவீடு
சனி சூரியன்
வியாழன் செவ்வாய் வெள்ளி | புதன்
ஆட்சி வீட்டில் கிரக பலம் அதிகம்

1.2 நட்பு வீடுகள்
1.
கிரகம் சூரியன்
சந்திரன்
செவ்வாய்
புதன்
வியாழன்
வெள்ளி
சனி
இராகு
கேது
நட்புவீடு (இராசி)
கடகம் விருச்சிகம் தனுசு மீனம் மிதுனம் சிங்கம் கன்னி
சிங்கம்
560)|37 மீனம் இடபம் சிங்கம் துலாம் மேடம் சிங்கம் கன்னி விருச்சிகம் மிதுனம் மகரம் கும்பம் தனுசு இடபம் மிதுனம் மிதுனம் கன்னி துலாம் தனுசு מותDébjו மீனம்
23

Page 22
சூரியன் சந்திரன் செவ்வாய் வியாழன் புதன் &Fଇ୪f இராகு/கேது சனி வெள்ளி
இராகு/கேது
வெள்ளி ன் இராகு/கேது சூாய
நட்புவீடு
சந்திரன் வெள்ளி y56
செவ்வாய் வியாழன்
சூரியன் சூரியன் புதன் சந்திரன் செவ்வாய் வியாழன் இராகு/கேது வியாழன் வெள்ளி இராகு/கேது
24

1.13 உச்ச வீடுகள்
கிரகம் உச்சவீடு (இராசி)
1. சூரியன் மேடம் 2. சந்திரன் இடபம் 3. செவ்வாய் மகரம் 4. புதன் கன்னி 5. வியாழன் கடகம் 6. வெள்ளி மீனம் 7 சனி துலாம் 8. ராகு/கேது விருச்சிகம்
உச்ச வீட்டில் கிரகவலிமை மிக அதிகம்
வெள்ளி சூரியன் சந்திரன் w
- வியாழன்
உச்சவீடு
செவ்வாய்
4. ராகு/கேது சனி புதன்
25

Page 23
1.4 பகை வீடுகள்
கிரகம்
1. சூரியன்
2. சந்திரன் 3. செவ்வாய் -
4. புதன்
வியாழன் -
வெள்ளி s
7 சனி
8. ராகு/கேது
* குறிப்பு:
பகைவீடு (இராசி)
இடபம் ша»Jub கும்பம் * பகைவீடு இல்லை மிதுனம் கன்னி
கடகம்
இடபம் மிதுனம் துலாம் கடகம்
சிங்கம்
கடகம் சிங்கம் விருச்சிகம்
மேடம் கடகம் சிங்கம் கும்பம்
கிரகங்களின் நட்பு, பகை வீடுகள் பற்றி
மாறுபட்ட கருத்துகள் உண்டு.
பகை வீட்டில் கிரக வலிமை குறைவு
26

1.5 நீச வீடுகள்
கிரகம்
சூரியன் சந்திரன் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி ராகு / கேது
நீசவிரு (இராசி)
துலாம் விருச்சிகம் கடகம் மீனம் மகரம் கன்னி
மேடம்
இடபம்
உச்சவீட்டுக்கு 7ஆவது ஸ்தானம் நீசவிடாகும்.
நீச வீட்டில் கிரக வலிமை மிகமிகக்குறைவு
புதன்
சனி ராகு/கேது
வியாழன்
நீசவிடு
செவ்வாய்
சந்திரன்
சூரியன்
வெள்ளி
27

Page 24
1.6 கிரக சஞ்சாரம்
கிரகங்கள் எப்பொழுதும் வலஞ்சுழியாகவே சஞ்சரிக்கின்றன. அதாவது மேடம் -> இடபம் -> மிதுனம். என்ற ஒழுங்கில்.
ஆனால் ராகு, கேது ஆகிய இரண்டு கிரகங் களும் இடஞ்சுழியாக அதாவது மேடம் -> மீனம் -> கும்பம். என்ற ஒழுங்கில் சஞ்சரிக்கின்றன. இவற் றைச் சாயாக் கிரகங்கள் என்பர்.
கிரகங்கள் ஒவ்வொரு இராசியிலும் குறிப்பிட்ட கால அளவிற்குச் சஞ்சரிக்கின்றன. குறிப்பிட்ட கால
அளவு முடிந்ததும் அடுத்த இராசியில் சஞ்சாரம் செய்கின்றன.
கிரகம் ஓர் இராசியிற் சஞ்சரிக்கும் கால அளிவு
1. சூரியன் 1 மாதம் 2. சந்திரன் 2%நாள் 3. செவ்வாய் 1%மாதங்கள் 4. புதன் 1 மாதம் 5. வியாழன் 1 வருடம் 6. வெள்ளி 1 மாதம் 7 சனி 2% வருடங்கள் 8. ராகு 1% வருடங்கள் 9. கேது 1% வருடங்கள்
28

1.17 சுய-அசுபக்கிரகங்கள்
கிரகங்களிற் சில சுபக்கிரகங்கள் என்றும் சில அசுபக் கிரகங்கள் (பாபக்கிரகங்கள்) என்றும் கூறப் படுகின்றன.
சுபக்கிரகங்களாவன
1. சந்திரன் (வளர் பிறைச் சந்திரன்) 2. புதன் (பாபக்கிரகத்துடன் சேராத புதன்) 3. வியாழன்
4. வெள்ளி
அசுபக்கிரகங்களாவன:
சூரியன்
செவ்வாய்
சனி
ராகு
கேது
தேய்பிறைச் சந்திரன் பாபக் கிரகங்களுடன் சேர்ந்த புதன்
1.8 கிரக சத்துருமித்துருக்கள்
கிரகங்களுக்கிடையே நட்பு, பகை என்பன வுள்ளது. நட்புக் கிரகங்களை, “மித்துருக்கள்” என்றும் பகைக் கிரகங்களை, “சத்துருக்கிரகங்கள்” என்றும் அழைப்பர்.
= 29

Page 25
நட்புக்கிரகங்கள்
கிரகம்
சூரியன் - சந்திரன் - செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனி
இராகு/கேது -
பகைக் கிரகங்கள்
கிரகம்
சூரியன் சந்திரன் செவ்வாய் புதன் வியாழன் - வெள்ளி
சனி
இராகு/கேது -
நட்பு
செவ்வாய், சந்திரன், வியாழன் சூரியன், புதன் சூரியன், சந்திரன், வியாழன் சந்திரன், சூரியன் சூரியன், சந்திரன், செவ்வாய் புதன், இராகு, கேது, சனி வெள்ளி, புதன், இராகு, கேது சனி, வெள்ளி
6)
வெள்ளி, சனி, இராகு, கேது இராகு, கேது புதன், இராகு, கேது
சனி
வெள்ளி
புதன்
சூரியன், சந்திரன் சூரியன், சந்திரன், செவ்வாய்
30

Gogg
நட்புக் கிரகங்கங்களாவன:
6.
7.
கிரகம்
சூரியன்
சந்திரன் செவ்வாய் புதன்
வியாழன்
வெள்ளி
சனி
நட்பு
வியாழன்
புதன், வியாழன் புதன், வெள்ளி சந்திரன், வியாழன், செவ்வாய் வெள்ளி, சனி சூரியன், சந்திரன், புதன், வெள்ளி, சனி புதன், செவ்வாய், வியாழன், சனி
புதன், வியாழன், வெள்ளி
பகைக்கிரகங்களாவன:
3.
:
கிரகம்
சூரியன்
சந்திரன்
செவ்வாய்
புதன் வியாழன்
வெள்ளி சனி
e)
சந்திரன், செவ்வாய், புதன், வெள்ளி, சனி சூரியன், செவ்வாய், வெள்ளி, சனி சூரியன், சந்திரன், வியாழன், சனி
சூரியன்
செவ்வாய்
சூரியன், சந்திரன் சூரியன், சந்திரன், செவ்வாய்.
3.

Page 26
1.9 கிரக வலிமை
கிரகங்கள் ஒன்றிலும் மற்றது பலத்தில் வேறுபட்டுக் காணப்படும். எவ்விதமெனில்
புதனிலும் செவ்வாய் வலிமையானது. செவ்வாயிலும் சனி வலிமையானது. சனியிலும் வியாழன் வலிமையானது. வியாழனிலும் வெள்ளி வலிமையானது. வெள்ளியிலும் சந்திரன் வலிமையானது.
சந்திரனிலும் சூரியன் வலிமையானது.
மேலும் கிரகங்கள் குறிப்பிட்ட இடங்களில் அமையும் போது வலிமை மிக்கவையாக விளங்குகின்றன. உ+ம்
கிரகம் பலம்பெறும் இடம்
1. சூரியன் - 10 ஆம் இடத்தில் 2. சந்திரன் vp 4 ஆம் இடத்தில் 3. செவ்வாய் - 10 ஆம் இடத்தில் 4. புதன் - இலக்கினத்தில் 5. வியாழன் - இலக்கினத்தில் 6. வெள்ளி - நாலாம் இடத்தில் 7 சனி 7ஆம் இடத்தில்
32

1.20 கிரகங்களின் பார்வை
7.
கிரகங்கள் ஒவ்வொன்றிற்கும் பார்வை (திருஷ்டி) உள்ளது. பொதுவாக எல்லாக் கிரகங்களுமே தான் உள்ள இடத்திலிருந்து 7 ஆம் இடத்தை (வீட்டை)ப் பார்க்கும். சில கிரகங்களுக்குச் சிறப்பான பார்வை யும் உண்டு.
கிரகம்
சூரியன் சந்திரன் புதன் வெள்ளி செவ்வாய் சனி வியாழன்
பார்வை
7 ஆம் பார்வை. 7 ஆம் பார்வை. 7 ஆம் பார்வை. 7 ஆம் பார்வை. 4, 7, 8 ஆம் பார்வைகள். 3, 7, 10 ஆம் பார்வைகள். 5, 7,9 ஆம் பார்வைகள்.
செவ்வாய், சனி, வியாழன் ஆகிய மூன்றிற்கும் சிறப்புப் பார்வைகளுள.
1.2 கிரக காரகர்கள்
கிரகம் சூரியன் சந்திரன் செவ்வாய் புதன் வியாழன்
காரகதத்துவம்
தகப்பனார் (பிதுர்காரகர்)
தாயார் (மாதுருகாரகர்) சகோதரர் (சகோதரகாரகர்) மாமன், கல்வி (மாதுலகாரகர்) தனம், புத்தி, புத்திரர்
(புத்திரகாரகர்)
33

Page 27
6. வெள்ளி - மணவாழ்க்கை (களத்திரகாரகர்)
7 சனி - ஆயுள் (ஆயுள்காரகர்)
8. ராகு - வைராக்கியம், பிணி (வைராக் கியகாரகர்)
9. கேது - மோட்சம், ஞானம் (ஞானமோட்ச
காரகர்)
அதாவது ஜாதகனின் தந்தையைப் பற்றி சூரியனைக் கொண்டும், தாயைப்பற்றி சந்திரனைக் கொண்டும், சகோதரரைப் பற்றி செவ்வாயைக் கொண்டும், பிள்ளைகள், பணம், தொழில், இலாபம் இவற்றைப் பற்றி வியாழனைக் கொண்டும், ஆயுள், செலவு, சத்துருக்கள் பற்றி சனியைக் கொண்டும் அறியலாம் என்பதாம்.
1.22 கிரக அங்கம்
கிரகம் அங்கம்
1. செவ்வாய் தலை 2. சுக்கிரன் முகம் 3. புதன் - கழுத்து 4. சந்திரன் தோள் 5. சூரியன் ça மார்பு 6. வியாழன் - வயிறு 7 சனி தொடை 8. ராகு முழங்கால் 9. கேது உள்ளங்கால்
34

1.23 கேந்திரஸ்தானம் முதலியன
லக்கினத்துக்கு 1,4,7, 10 ஆம் இடங்கள் கேந்திர ஸ்தானங்கள் எனப்படும். திரிகோணஸ்தானம்
இலக்கினத்துக்கு 1,5,9 ஆம் வீடுகள் திரிகோண ஸ்தானங்கள் எனப்படும்.
பணபரஸ்தானங்கள்
2,5,8.11 ஆம் இடங்கள் பணபர ஸ்தானங்கள் எனப்படும்.
மறைவுஸ்தானம்:
இலக்கினத்துக்கு 3, 6, 8, 12 ஆம் இடங்கள் மறைவு ஸ்தானம் எனப்படும். சுக்கிரனுக்கு மட்டும் 12 ஆம் இடம் மறைவு ஸ்தானமல்ல.
1.24 இலக்கினம் (லக்கினம்)
ஒருவர் பிறந்த நேரத்தில் பன்னிரு இராசிகளில் எந்த இராசி உதயமாகி நின்றதோ அது அவரின் இலக்கினமாகும். இதனை உதய லக்கினம் அல்லது ஜன்ம லக்கினம் என்று கூறுவர். ஒருவருடைய ஜாதகத்தில் "ல" என்ற எழுத்தால் இது குறிக்கப் பட்டிருக்கும்.
இலக்கினம் என்பது ஒருவரின் ஜாதகம் அல்லது இராசிச் சக்கரத்தில் முதலாம் வீடு / முதலாம் பாவம் என்று குறிக்கப்படும். அதாவது இலக்கினமே முதலாம்
வீடாகும். அதற்கு அடுத்த இராசி (வீடு) இரண்டாம் 35

Page 28
வீடு / இரண்டாம் பாவம் என்றும் அதற்கு அடுத்த இராசி மூன்றாம் வீடு / மூன்றாம் பாவம் என்றும். இவ்வாறு 12ஆம் வீடு வரை குறிக்கப்படும். ஜாத கத்தில் இவை இலக்கங்களால் குறிக்கப்பட்டிருக்கும். சந்திர லக்கினம்
ஒருவரின் பிறந்த நட்சத்திரம் (ஜன்ம நட்சத்திரம்) எத்தனையாவது பாதத்திலுள்ளது என்பதைப் பொறுத்து அவரின் இராசி சந்திரனால் குறிப்பிடப் படும். அந்த இராசியே அவரின் பிறந்த இராசி / ஜன்மராசி எனப்படும். சந்திரன் நிற்கும் இராசியே சந்திர லக்கினம் எனவும் குறிப்பிடப்படும்.
1.25 பன்னிருபாவங்கள்(துவாதசபாவங்கள்) - 1
பாவம் - இடம் - ஸ்தானம் - வீடு என்பவை ஒரு பொருளைக் குறிப்பனவாகும்.
1. இலக்கினம் உள்ள இராசி முதலாம் வீடு எனப்படும். இந்த இராசியின் அதிபதி இலக்கி னாதிபதி என அழைக்கப்படுவர்.
2. இரண்டாம் வீடு வாக்குஸ்தானம், நேத்திர ஸ்தானம் எனப்படும். இவ்விராசியின் அதிபதி வாக்குஸ்தானாதிபதி, நேத்திரஸ்தானாதிபதி, குடும்பஸ்தானாதிபதி, தனாதிபதி என்று அழைக் கப்படுவர்.
3. மூன்றாம் வீடு இளைய சகோதரஸ்தானம், கர்னஸ்தானம் எனப்படும். இவ்விட்டதிபதி இளைய சகோதரஸ்தானாதிபதி, வீரியஸ்தானாதி பதி என அழைக்கப்படுவர்.
= 36

10.
நாலாம் வீடு வித்தியாஸ்தானம், மாதுரு ஸ்தானம் எனப்படும். இவ்வீட்டதிபதி மாதுருஸ்தானாதிபதி, சுகஸ்தானாதிபதி, பூமிஸ்தானாதிபதி, வாகனஸ் தானாதிபதி, மித்திரஸ்தானாதிபதி, வீட்டுஸ்தானா திபதி என்றெல்லாம் அழைக்கப்படுவர்.
ஐந்தாம் வீடு புத்திரஸ்தானம், இருதயஸ்தானம் எனப்படும். இவ் வீட்டதிபதி இருதயஸ்தானாதி பதி, புத்திரஸ்தானாதிபதி, புத்திஸ்தானாதிபதி என அழைக்கப்படுவர்.
ஆறாம் வீடு ரோகஸ்தானம், சத்துரு ஸ்தானம் எனப்படும். இவ்விட்டதிபதி சத்துருஸ்தானாதிபதி, ரோகஸ்தானாதிபதி, உதரஸ்தானாதிபதி எனப் படுவர்.
ஏழாம் வீடு களத்திர ஸ்தானம் எனப்படும். இவ்வீட்டதிபதி களத்திரஸ்தானாதிபதி, மர்ம ஸ்தானாதிபதி எனப்படுவர்.
எட்டாம் வீடு ஆயுள் ஸ்தானம் எனப்படும். ஆயுள் ஸ்தானாதிபதி, அட்டமஸ்தானாதிபதி, மரண ஸ்தானாதிபதி, நோய்ஸ்தானாதிபதி எனப் படுவர்.
ஒன்பதாம் வீடு பாக்கிய ஸ்தானம், தர்மஸ்தானம் எனப்படும். இவ்வீட்டதிபதி பாக்கியஸ்தானாதி பதி, தர்ம ஸ்தானாதிபதி, பிதுருஸ்தானாதிபதி எனப்படுவர்.
பத்தாம் வீடு தொழில் ஸ்தானம், கர்மஸ்தானம் எனப்படும். இவ்வீட்டதிபதி கர்மஸ்தானாதிபதி, தொழில் ஸ்தானாதிபதி எனப்படுவர்.
37

Page 29
11.
பதினொராம் வீடு இலாபஸ்தானம், மூத்த சகோதரஸ்தானம் எனப்படும். இவ்வீட்டதிபதி இலாபஸ்தானாதிபதி, மூத்த சகோதர ஸ்தானாதி பதி எனப்படுவர்.
12. பன்னிரண்டாம் வீடு விரயஸ்தானம் எனப்படும் இவ்விட்டதிபதி விரயஸ்தானாதிபதி, செலவு ஸ்தானாதிபதி, சயனஸ்தானதிபதி, கீர்த்தி ஸ்தானாதிபதி எனப்படுவர்.
விரயம் லக்கினம் குடும்பம் சகோதரம்
12 1. 2
லாபம் தாய் 11 4.
துவாதச பாவங்கள்
புத்திரர் தொழில் மாமன்
10
豪 - . , , , 1 சத்துரு தநதை ՓՖսկair களத்திரம் நோய் 9 8 7 6
1.26 பன்னிரு பாவங்கள் - II
பன்னிரு வீட்டிலிருந்தும் அறியக்கூடிய விடயங்
கள் வருமாறு:
1.
முதலாம் வீடு - ஜாதகரின் தேகம், தோற்றம், நடத்தை, வாழ்க்கைத்தரம், புகழ்
38

10.
11.
12.
இரண்டாம் வீடு - முகம், வலதுகண், வாக்கு, கல்வி, கழுத்து, பொருளாதாரம், குடும்பம்,
Զ-60076չյ மூன்றாம் வீடு - சகோதரம், தைரியம். வெற்றி, அன்பு, காது
நான்காம் வீடு - தாயின் நிலை, கல்வி, நண்பர்கள், பூமி, வீடு, வாகனம், மனம், புயம்.
ஐந்தாம் வீடு - பிள்ளைகளின் நிலை, இருதயம், புத்தி, பேரன், பூர்வபுண்ணியம்.
ஆறாம்விடு - நோய், வயிறு, பகைவர்கள், கடன், சிறை, தாயின் தாய், பயம்.
ஏழாம் வீடு - காதல், திருமணம், மனைவி, இல்லற இன்பம், நித்திரை, பங்காளி
எட்டாம் வீடு - ஆயுள், தீராத நோய்கள் மரணம், மாங்கல்யம், மானபங்கம்.
ஒன்பதாம் வீடு - தந்தையின் நிலை, பரம்பரை, வெளிநாட்டுப்பயணம், தர்மம், பேரப்பிள்னை, பாக்கியம், பத்தாம் வீடு - வேலை, செல்வநிலை, சுயமரியாதை, புகழ்
பதினொராம் வீடு - இலாபம், முத்தசகோதரர், துக்கத்திலிருந்து மீள்தல்.
பன்னிரண்டாம் வீடு - செலவு, இடதுகண்,
39

Page 30
12 ஆம் வீடு இலக்கினம் 2 ஆம் வீடு 3 ஆம் விரு * செலவு * தேகம் * முகம் * சகோதரம் * இடதுகண் * தோற்றம் * வலதுகண் * தைரியம் * மோட்சம் * நடத்தை * வாக்கு * வெற்றி
* வாழ்க்கைத் * கல்வி * 86
தரம் * கழுத்து * காது * վaնք * பொருளா
தாரம் * குடும்பம்
11 ஆம் விரு 4 ஆம் வீடு
* இலாபம் * தாய் * முத்த * கல்வி
சகோதரர் * நண்பர்கள் * துக்கமீட்சி * பூமி, வீடு * வாகனம் துவாதச பாவங்கள் - II | புயம் 10 ஆம் விடு 5 ஆம் விரு
* வேலை * பிள்ளைகள் * செல்வநிலை * இருதயம் * சுயமரியாதை * புத்தி * புகழ் * பேரன்
* பூர்வபுண்ணியம்
9 ஆம் வீடு
* தந்தையின்
நிலை பரம்பரை * வெளிநாட்டுப்
பயணம் * பேரப்பிள்ளை
தர்மம்
率
8 ஆம் வீடு
* ஆயுள் * தீராத
நோய்கள் * மரணம் * மாங்கல்யம் * மானபங்கம்
7 ஆம் விரு
* காதல் * திருமணம் * மனைவி * இல்லற இன்பம் * நித்திரை * பிறப்புறுப்புகள்
6 ஆம் வீடு
* நோய் * வயிறு * பகைவர்கள்
* சிறை * தாயின்தாய் * Lub
40

1.27 திசாபுத்தி
ஒருவர் பிறக்கும் போது எந்தத் திசா புத்தியில் பிறந்துள்ளார் என்பதை அவரது ஜாதகத்தில் கட்டாயம் குறித்திருப்பர். அதை அடிப்படையாகக் கொண்டு அவரின் தற்போதைய திசை, புத்தி என்ன என்பதை கணித்துக் கொண்டு பலன்களை ஆராயலாம். அதன் மூலம் அவருக்கு ஏற்பட்ட, ஏற்படக்கூடிய நோய்களைக் கண்டறிந்து ஏற்ற பரிகாரங்களைச் செய்து கொள்ள முடியும்.
ஒருவர் பிறக்கும் போது எந்தத் திசையில் பிறக்கிறார் என்பதை பின்வரும் அட்டவணை மூலம் அறிந்து கொள்ளலாம். இதற்கு அவரின் நட்சத்திரம் தெரிந்திருத்தல் வேண்டும்.
41

Page 31
மகாதசாபுக்தியும், அதன் சங்கியையும்
『』。B引引33BB0%%%00%B引0以及mnc区孙mePPPPPP ===娜娜翻腾 s*一3569mBBBB《拉)。而画) |- % B 입헌司이利이司히司이퍼州判中體*的神觀. 鱷口口珊珊娜因*川口*珊娜娜娜娜 唯书出上卡市长====节止出哪 *防姊仍 - -|-厅ケ・游动-历仍脚S. %仙剑卿分厂动到万加纳珊山物圈四一厂切朝.S |娜娜娜娜娜娜姆腳鶴珊娜娜娜娜鶴珊娜娜腦魏娜娜娜娜娜騰魏娜娜廳珊娜*娜娜 马一以原品惩罚西血洒一地盘舞西哥俩肠西厢奥丽娜雕像狮像翻继翻例翻圆筛像顾雏奥娜娜幽sS „ | 81 qızıore oktoosseLI TT1019 euroșițeoh || ... q-1@re pusgae@so | Oz q-isore ••ợışșø融舞蹈动咖。圆 Ģ%2「T49的「여Istwo sig)qiaodoqi-Tuffs如磐雅涵盛姆 so | quốtos@s@ - qi&fi7,97%) - qımsogno | quoan - ysgogoqứf - yaeyarı娜娜飓衡船动 qizual on o – s e o os e oss on – on se on e so <| + n + c n = • • • • – — c c c v^ —