கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மருத்துவத் தமிழ் முன்னோடி டாக்டர் கிறீன்

Page 1


Page 2

மருத்துவத் தமிழ் முன்னோடி
டாக்டர். கிறீன்
திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிட் சென்னை -18.

Page 3
டு அம்பிகை பாகன்
THE SOUTH INDIA SA IVA SI DOHANTA WORKS PUBLISHING SOCIETY, TIN NEVELLY, LIMITED
கிளைகள் 79. பிரகாசம் சாலை (பிராடுவே). சென்னை-108. திருநெல்வேலி-6. மதுரை- கோயமுத்தூர்
கும்பகோணம்-1. திருச்சிராப்பள்ளி* சேலம்-1
േ, ബൈബിധ@് : 1945
பதிப்பு 1 நவம்பர் 1995
Lу7 M
N95
MARUTHUVA THAMIZH MUNNOD! DR. GREEN
ஈஸ்வர் லேசர், சென்னை -18.
அப்பர் அச்சகம், சென்னை -108.

பதிப்புரை
தமிழ் மொழி வளர்ச்சிக்குத் தமிழ் வழிக் கல்வி இன்றியமையாதது. சிறுவர் வகுப்பிலிருந்து பல்கலைக்கழகப் Լյւգ ւսւ! வரை தாய்மொழி வழியாகவே இருக்க வேண்டுமென்று இன்று தொழில் துறையில் மிகவும் முன்னேறியுள்ள ஜப்பான் நாடு எல்லாக் கல்வியையும் தாய்மொழி வழியாகவே கற்பித்து வருகிறது. தமிழகத்தில் தமிழில் முடியுமா? என்று அரை நூற்றாண்டுக் காலமாகக் கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கிறோம்.
'முடியும்' என்று இற்றைக்கு ஒன்றரை நூற்றாண்டுகட்கு முன்பு இலங்கையில் மருத்துவக் கல்வியை மாணவர்களுக்குத் தமிழ் வழியாகக் கற்பித்தவர் அமெரிக்கப் பாதிரியாரான டாக்டர். சாமுவெல் எஃப். கிறீன் ஆவர். கற்பித்ததுடன் இரணவைத்தியம் (Surgery) மனுஷவங்காதிபாதம் (Human Anatomy) கெமிஸ்தம் (Chemistry)போன்ற பல அரிய பெரிய நூல்களையும் படைத்தார். இவைஅன்ைத்தும் இலங்கையிலும் தமிழகத்திலும் அச் சேறின.
இத்தகைய மருத்துவத் தமிழ் முன்னோடியின் வரலாற்றைச் சுவையாகப் படைத்துத் தந்துள்ளவர் ஒய்வு பெற்ற இலங்கை அறிஞர் தமிழ் மணி, கவிஞர் அம்பிகைபாகன். தற்போது பாப்பாநியுகினித் தீவில் தொடர் கல்வித்துறையில் பணியாற்றி வருபவர். இந்த அரிய நூலைத் தமிழ் மக்கள் படித்துப் பயன் பெறுவார்களாக,
- சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்

Page 4
உள்ளுறை
பக்கம் 1. ஏன் எழுதுகிறேன் 1 2. இளமையுங் கல்வியும் 14 3. இலங்கைக்கு வருகை 2 4. வைத்திய சேவையும் வைத்தியக் கல்வியும் 30 5. தமிழில் விஞ்ஞானம் 38 6. கிறீனின் சான்றாண்மை 55 7. எல்லாந் தமிழ் 68 8. தமிழில் அறிவியல் நூல்கள் 75 9. கலைச் சொல்லாக்கம் 98 10. கலைச் சொல் ஒருமைப்பாடு 114 11. மொழி பெயர்ப்பு 122 12. விஞ்ஞானத் தமிழ் 133 13. கிறீனின் நூல்களில் தமிழ் 138 14. சமயமும் விஞ்ஞானமும் 155 15. கிறீனின் அடிச்சுவடு 160
பின்னிணைப்பு:
1. கிறீனின் சமகால மிஷன் ஊழியர்கள் 2. மேனாட்டு வைத்தியம் கற்ற கிறீன் மாணவர் 3. ஆதார நூல்கள்

1.ஏன் எழுதுகிறேன்
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு என்னாற்றுங் கொல்லோ உலகு.
- பொதுமறை
凸 மிழ் மாணவர்கள் தமிழ்மொழி மூலம் கல்வி பயிலத் தொடங்கிப் பல தசாப்தங்கள் ஆகிவிட்டன. உயர்வகுப்புக் களிலும் பல்கலைக் கழகங்களிலும் தமிழ் மொழியே தமிழ் மாணவரின் போதனா மொழி என்று இலங்கையிலும், தமிழ்நாட்டிலும் பொதுவாகக் கருதப்படுகிறது. ஆனால், அறிவியல், வைத்தியம், தொழில்நுட்பம் போன்ற துறை களைப் பொறுத்தவரை, தாய்மொழி மூலங் கல்வி பயிற்றும் கொள்கை முழுமையாக நடைமுறையில் உள்ளதா? வெற்றிகரமாக நிகழ்கின்றதா?
இத்தகைய வினாக்களை எழுப்பவோ, ஆராயவோ இங்கு நான் முயற்சிக்கவில்லை. அது எமது நோக்கமுமல்ல. எனினும், சில ஆண்டுகளுக்குமுன் தமிழ்நாட்டிலிருந்து வெளிவந்த ஆராய்ச்சி நூலொன்றுக்கு ஆசியுரை வழங்கிய பேராசிரியர் (டாக்டர்) தா. ஏ. ஞானமூர்த்தி அவர்களின் கருத்தை ஈண்டு குறிப்பிடுதல் பொருத்தமானக் கருதுகிறேன்.
"அறிவியலும் தொழில்நுட்பவியலும் நாளுக்கு நாள் மிக விரைந்து வளர்ச்சியடைந்து வருவது

Page 5
2 ( ) மருத்துவத் தமிழ் முன்னோடி
1985
கண்கூடு. இத் துறைகளில் உலகிலுள்ள பல நாடுகள் முன்னேற்றம் அடைந்துள்ளன. இத் துறைகளை அந்நாடுகள் தத்தம் தாய்மொழி யிலேயே பயில்கின்றன. அவர்கள் முன்னேற்றத் திற்கு இஃது அடிப்படையான காரணம் எனலாம். இவ்வுண்மையை உணர்ந்து கடந்த பல ஆண்டுகளாக நம் அறிஞர் பலர் அறிவியல் தமிழாக்கத்திற்குத் தொடர்ந்து முயற்சி செய்து வந்துள்ளனர். எனினும், தமிழ்நாட்டுக் கல்லூரி களும் பல்கலைக்கழகங்களும் தமிழைப் பயிற்று மொழியாக்கும் நிலையை எய்தவில்லை. இது வருந்தற்குரியது. நமது நாட்டில் மிகப்பல அறிவியல் பேரறிஞர்கள் தோன்றுதற்குரிய ஒரே வழி கல்லூரிப் பாடங்கள் அனைத்தும் தாய் மொழியில் கற்பிப்பதேயாகும். இதற்குரிய ஆக்க வழிகளை நம் அரசும் பல்கலைக் கழகங்களும் விரைந்து மேற்கொள்ளுதல் வேண்டும்"
ஆம் ஆண்டின் இறுதியிலே இவ்வாறு
கருத்துத்தெரிவித்தவர் தமிழ்நாட்டுப் பல்கலைக் கழகம் ஒன்றிலே தமிழாராய்ச்சித் துறைப் பேராசிரியர்; தமிழ் நாடறிந்த பேரறிஞர். இக்கருத்தையும் மனத்துடிப்பையும் வெளியிட்டு இப்பொழுது ஏழு ஆண்டுகள் கடந்துவிட்டன. அக்கால எல்லையுள் நிலைமை எத்துணை மாறியுள்ளது?
இது நம்மை நாமே கேட்டு விடைகாண வேண்டிய கேள்வி.
யப்பான், ரஷ்யா, ஜெர்மனி போன்ற ஆங்கிலமொழி
ஆதிக்கஞ்
செலுத்தாத நாடுகளுக்கு நமது மாணவர்

ஏன் எழுதுகிறேன் 3
மேற்படிப்புக்காகச் செல்வதுண்டு. அங்கு செல்பவர்கள் அந்தந்த நாட்டு மொழியை முதலிலே கற்றுப் பின்புதான் அறிவியலையோ தொழில்நுட்பத்தையோ பயிலுகின்றனர். இது நாம் அறிந்த உண்மை. அந்தந்த நாடுகள், தமது மொழிகளை எத்துணை உணர்ச்சியுடன் வளர்த்து வெற்றி கண்டுள்ளனர் என்பதற்கு வேறு சாட்சியம் தேவையில்லை.
தமிழ்மொழியைப் பொறுத்தவரை, தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் ஆக்கபூர்வமான முயற்சிகள் மேற்கொள்ளப் படுவது உண்மை. பல்கலைக்கழகங்களும் அறிஞர்களும் பலபட முயற்சி எடுத்து வருகின்றனர். மூலநூல்களும் மொழிபெயர்ப்பு நூல்களும் வெளியிடப்படுகின்றன.
அரசுகளின் ஆதரவுடனேயே இவை எல்லாம் மேற்கொள்ளப்படுகின்றன. சுதந்திரம் பெற்ற பின்பு, அரச கொள்கைகளும் செயல் திட்டங்களும் இத்தகைய முயற்சி களுக்கு வழிகோலின. ஆயினும் நமதுமொழி வளம்பெறல் வேண்டும்; நமது பிள்ளைகள் நமது மொழி மூலம் கற்று மேனிலை எய்துதல் வேண்டும்; பஞ்சபூதச் செயல்களின் நுட்பங்கள் கூறுந் திறமையை நமது மொழி முழுமையாகப் பெற்று, நவீன உலகில் வாழும் மொழியாக நிலைத்தல் வேண்டும் என்ற ஆர்வமுந்துடிப்பும் நம்மவருட் பலருக்கு இன்றுமே இருப்பதாகத் தெரியவில்லை. அரச பாடசாலை களில் பயிலும்போது தமிழிலே பிள்ளைகள் பாடங்களைப் பயில்கிறார்கள்; எனவே, சர்வதேச (International) பாடசாலை களிலே (ஆங்கிலத்தில்) பயில்தல் நன்றென இன்றும் எண்ணுபவர்கள் பலர்.

Page 6
4 ( ) மருத்துவத் தமிழ் முன்னோடி
"எமது பிள்ளைகள் அறிவியலைத் தமிழில் படித்துவிட்டு எதிர்காலத்தில் என்ன செய்யப்போகிறார்கள்? வெளிநாடு சென்று தொழில் பார்க்கும் வாய்ப்பு இதனால் அற்றுப்போய் விடுகிறதல்லவா?" இவ்வாறு அங்கலாய்க்கும் மனப்பாங்கு நம்மவர் பலருக்கு இன்றுமே உண்டு.
சமூக, அரசியல் காரணங்களால் இந்த மனப்பாங்கு இன்றும் மேலோங்குகிறது.ஆனால் ஒன்றுமட்டும் உண்மை. புலம்பெயர்ந்து செல்பவர் போக, தமிழரின் பாரம்பரிய பிரதேசத்தில் வாழ்பவர்கள் தான் எதிர்காலத்தில் தமிழர் களாக வாழ்வார்கள். அவர்கள்தான் தமிழ்மொழியை வளர்ப்பார்கள். அவர்களாற்றான் தமிழ்மொழியும் வளரும். தமிழ்மொழி காலத்தால் வாழ்வதற்கு, அறிவியற் கலைகள் தமிழில் வளரவேண்டும். ஆக, பாரம்பரிய தமிழ்ப் பிரதேசங்களில் வாழும் தமிழர்கள் தேசாபிமானமும் மொழியபிமானமுங் கொண்டவர்களாக வாழ்தல் அவசியம்.
சுதந்திர உணர்வு அற்றவர்களாகவும், தேசாபிமானமும் மொழியபிமானமுங் குன்றியவர்களாகவும் இன்றைய சமுதாயத்திலேயே ஒரு பகுதியினரை நாம் காண்கின்றோமே! தமிழின் வளர்ச்சியில் இவ்வாறு பற்றற்ற மனப்பான்மை இன்றுள்ளதாயின், இற்றைக்கு 150 ஆண்டுகளுக்கு முன்பு நிலைமை எப்படி இருந்திருக்கும் என்பதைக் கூறத் தேவையில்லை. படித்துப் பணமுழைத்துச் சுகவாழ்வு பெற்றவர்களெல்லாம் அன்று ஆங்கில நிழலிலே நிம்மதியாக உறங்கியவர்கள்; ஆங்கிலத்திற் சிந்தித்து, ஆங்கிலத்திற் பேசி, அதுவே அறிவுக்கு அறிகுறியெனவும் அளவுகோல் வகுத்தவர்கள்.

ஏன் எழுதுகிறேன் 5
இற்றைக்கு ஏறக்குறைய ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு முன்பு யாழ்ப்பாணத்தில் அத்தகையதோர் சமுதாயத்திலே தாய் மொழி மூலங் கல்வியூட்டுவதே சிறந்தது என்று துணிந்து செயலாற்றினார், அமரிக்க மிசன் வைத்திய ஊழியரான சமுல் பி. கிறீன் வைத்தியர். ஆரம்பக் கல்வியை அல்ல மேனாட்டு வைத்தியக் கல்வியையே தமிழ்மூலம் புகட்டித் தகுதிவாய்ந்த வைத்தியர்களை உருவாக்குவதில் அன்று வெற்றியுங் கண்டார். சிறந்த வைத்திய, விஞ்ஞான நூல்களையெல்லாந் தமிழில் மொழிபெயர்த்து வெளி யிட்டார். கலைச்சொற்களைத் தொகுத்தும் அமைத்தும் தேவையை நிறைவேற்றினார். தமிழ்க் கலைச்சொற்கள், தமிழ்பேசும் மக்கள் அனைவருக்கும் பொதுவானவையாக அமைதல் வேண்டு மென்று, இந்திய நாட்டு மிஷன் ஊழியருடனுந் தொடர்புகொண்டார்.
இவ்வண்ணந் தீர்க்கதரிசனத்துடன் சிந்தித்துச் செயலாற்றிய அறிஞரின் சேவை, பிற்காலத்திற் பரவவில்லை. அதுமாத்திரமல்ல, அன்னாரின் அருமை பெருமைகளையே நம்மவர் அறிய வாய்ப்பில்லை. தமிழில் விஞ்ஞானங் கற்பிக்க ஆரம்பித்த காலத்திலே, தமிழில் இது முடியுமா? என்று பலர் மனந் தளர்ந்தனர். அந்நாட்களிலேதான் 150 ஆண்டுகளுக்கு முன்பே, இதைச் சாதித்துக் காட்டி விட்டார் கிறீன் வைத்தியர் என்று அறிய முடிந்தது. கிறின் வைத்தியரின் முழு முயற்சியையும் அறிய ஆவல்கொண்டதால், கலைக் களஞ்சியத்தில் ஏதாவது குறிப்பு இருக்குமா எனப் புரட்டிப் பார்த்து, ஏமாற்றமே அடைந்தேன். அறிவியலைத் தமிழில் வளர்ப்பதற்கு முதன்முதலில் எடுத்த முயற்சி உரிய அளவு

Page 7
6 ( ) மருத்துவத் தமிழ் முன்னோடி
பரவியிருந்தால் கிறீன் வைத்தியரின் சேவைபற்றிய குறிப்பு, கலைக்களஞ்சியத்திற் சேர்க்கப்பட்டிருக்கும் என்பதிற் சிறிதுஞ் சந்தேகமில்லை. உண்மை என்னவெனில், அன்னாரின் சேவையை இன்றைய சமுதாயமே நன்கறிய வில்லை, அறியும் வாய்ப்புமில்லை.
கிறித்துவரால் தமிழ்மொழிக்கு உண்டான நன்மைகளைக் கூறும் f'கிறித்துவமும் தமிழும்' என்னும் நூலிலே பின்வரும் குறிப்புண்டு.
"gynistgung B (Human Anatomy) dirfoir 6tair airi எழுதியது. 1872-ல் யாழ்ப்பாணத்தில் அச்சிடப்பட்டது. அருமையான சிறந்த நூல். மருந்துச் சரக்குகளின் பெயர் (Vocabularies of Meteria Medica and Pharmacy)ggjay is drfair என்பவர் எழுதியது. 1875-ல் நாகர்கோயில் அச்சுக்கூடத்தில் அச்சிடப்பட்டது. கெமிஸ்தம் (Chemistry) கிரீன் வைத்தியர் இயற்றியது-தமிழில் எழுதப்பட்ட விஞ்ஞான நூல்களின் முழு விவரமும் எமக்குக் கிடைக்காதபடியால், எமக்குத் தெரிந்த வரையில் சுருக்கமாக எழுதப்பட்டது."
இந்த நூற்றாண்டின் முற்பகுதியில் இத்துறையில் எழுத முயன்றவர்களுக்கே கிறீன் வைத்தியரின் முயற்சிகள் முற்றாக இன்றும் கிடைக்கவில்லை என்பது இதனால் விளங்குகின்றது.
f கிறித்துவமும் தமிழும் மயிலை, சீனி, வேங்கடசாமி அவர்கள் இயற்றியது. மூன்றாம் பதிப்பு (கழக வெளியீடு) 1948. பக்கம் 55 (முதற் பதிப்பு 1936)

ஏன் எழுதுகிறேன் ( ) 7
மேலும், கிறீன் வைத்தியர் யாழ்ப்பாணத்தை விட்டு* சென்று இருபத்தைந்து ஆண்டுகளுள்,
புத்தம் புதிய கலைகள் - பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்
மெத்த வளருது மேற்கே - அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை " என்று மனந் துடித்தநிலை ஏற்பட்டது. ஆமாம், அமரகவி பாரதியின் காலத்தில் இக் கருத்து நிலவியது. மேலைநாட்டிலே வளர்ந்த அறிவியற் கலையானது நமது தமிழ்மொழியில் இல்லையே என்று பலரும் வேதனைப்பட்ட காலம், பாரதியாரின் காலம். அது மட்டுமா? அறிவியற் கலைகளை யெல்லாம்,
சொல்லவுங் கூடுவதில்லை - அதைச்
சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை
மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த
மேற்கு மொழிகள் புவிழிசை ஓங்கும் என்றுகூட வசைகூறப் பேதைகள்' எண்ணிய காலம், அக்காலம்.
எனவே, பாரதியார் காலத்திலேயே சமுல் பி. கிறின் வைத்தியரின் முயற்சி மறைந்துவிட்டது என்பது தெளிவா கின்றது. கிறீன் வைத்தியரின் அடிச்சுவட்டிலே செல்லும் ஆர்வம் அன்று நம்மவர்க்கிருக்கவில்லை.
நெடுங்காலமாக அடிமைவாழ்வு வாழ்ந்த மக்கள், இரவோடிரவாக மனவொளி பெற்று விட முடியுமா?

Page 8
8 ( ) மருத்துவத் தமிழ் முன்னோடி
தமிழபிமானமுந் தன்னலமற்ற பொதுநோக்குமிணைந்து செயற்பட்டாற்றானே முன்னேற்றங் காணல்கூடும் ! அன்றைய சூழலில், ஆங்கிலம் அரியணையில் வீற்றிருந்தது மாத்திரமல்ல, வீட்டு மொழியாகவுங்கூடப் புகுந்திருந்தது! அந்நிலையில், நமது தாய்மொழியாந் தமிழை வளர்த்து, அறிவியற் கலைகள் தமிழில் வளர வழி வகுத்துப் பஞ்சபூதச் செயல் நுட்பமெல்லாந் தமிழிலும் பரவவேண்டுமென்ற உணர்ச்சி ஊற்றெடுத் திருந்தாற்றானே, கிறீன் வைத்தியரைத் தொடர்ந்து நம்மவர் பணியாற்ற உள்ளங் கொண்டிருப்பர். அவ்வண்ணம் உள்ளங் கொண்டிருந்தாலல்லவா கிறீன் வைத்தியரின் முயற்சி பயனளித்துப் பரவியிருக்கும்!
அன்று இலங்கை சுதந்திர நாடாக இருக்கவில்லை. அன்னிய ஆட்சியில், அடிமை நாடாக, ஆங்கிலேயரின் குடியேற்ற நாடாக இருந்தது. எனவே, கிறீன் வைத்தியரின் தீர்க்கதரிசனம் சமுதாயத்திற்குப் புலனாகவில்லை.
சுதந்திர நாடொன்றிலே, அந்நாட்டு மக்களின் மொழி, கலை, கலாசாரம், இயற்கை வளம் எல்லாம் பேணிக் காப்பாற்றப்படுவதும் அபிவிருத்தி செய்யப்படுவதும் இயல்பு. அரசியலாரின் ஆதரவுங் கிட்டுமாயின், பணி மேலும் இலகுவாகும். தேசிய உணர்வுடன், ஓர் இனந் தன் பாரம் பரியத்தைப் பாதுகாத்துப் பக்குவப்படுத்தி வாழ்வதற்குத் தியாக சிந்தையுந் திடமனமுந் தேவை. பெரும்பான்மையான குடிமக்கள் விழிப்புணர்ச்சியின்றி அடிமைகளாக வாழ்வரேல், அடிமை வாழ்விலும் பிறமொழி மோகத்திலும் பெருமை கொள்வரேல், தேசாபிமானமும் மொழியபிமானமுந் தலை தூக்கியெழ முடியாது.

ஏன் எழுதுகிறேன் 9
சமுல் பி. கிறீன் வைத்தியர் தமிழில் அறிவியற்கலை வளர்த்த காலமும், அன்றைய சமுதாயமும், அரசியற் குழலும், எத்தகையன என்பதை ஆராய்ந்து அதன் மத்தியிலே கிறீன் வைத்தியர் பரப்பிய கருத்துகளும் எடுத்த, முயற்சிகளும் எத்தகையன என்பதை அறியும் போதுதான் அன்னாரின் பெருமை, தியாக சிந்தை, அந்தரங்கத் தூய்மை எல்லாம் பொங்கிப் பொலிகின்றன; பெருகி இரட்டிக்கின்றன.
கிறீன் வைத்தியர் அமரிக்க நாட்டவர். ஆனால், வைத்தியர் பட்டம் பெற்ற பின்பு, இற்றைக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்பே இந் நாட்டிற் பணிபுரிய மனமுவந்து வந்தார்.
அவர் தமிழரல்லர்.
ஆயின், தமிழைப் படித்து, அறிவியற் கலைகளையுந் தமிழிற் பரப்ப வேண்டுமெனப் பேரார்வங் கொண்டுழைத்தவர்.
புத்தம்புதிய கலைகளும், பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்களும் ஆங்கில மொழியறிவுடையோர்க்குமே அன்று எளிதிற் கிட்டவில்லை.
அந்தச் சமுதாயத்திற்றான், மேல்நாட்டு வைத்தியக் கலையைத் தமிழ்மூலம் போதித்து நல்லறிஞர்களை இந் நாட்டிலும் உருவாக்குவதற்கு உளங்கொண்டுழைத்தார்.
அறிவியற் கலைகளையெல்லாந் தமிழிற் சொல்லவுங் கூடுவதில்லை' என்று எண்ணிய காலத்துக்கும் அரை நூற்றாண்டு முந்திய காலம், கிறீன் வைத்தியர் இத் துறையில் ஆரம்ப முயற்சி எடுத்து அடிவைத்த காலம். அன்று,

Page 9
10 ( ) மருத்துவத் தமிழ் முன்னோடி
விஞ்ஞான நூல்கள் தமிழிலே இல்லை; கலைச் சொற்றொகுதி இல்லை; பணங் கொடுத்து மொழிபெயர்ப்பித்து அச்சுவாகன மேற்றும் அரசு இல்லை. எனினுங் கலைச் சொற்களை அமைத்தார். உறுதியான விதிகளை அமைத்துப் புதிய பதங்களை உற்பத்தி செய்தார். தாமே நூல்களை மொழி பெயர்த்தும், மற்றோர் மொழிபெயர்ப்புகளைப் பார்வை யிட்டுத் திருத்தியும் பதிப்பித்தார் என்றால் அன்னாரின் சிந்தை எத்துணை நிறைவுபெற்றது என்பது தெளிவன்றோ!
அன்றைய குடியேற்ற நாட்டரசு, அன்னாரின் ஆக்க வேலைகளுக்கும், அருமையான சேவைக்கும், நிதானமான கொள்கைக்கும் ஆதரவு சிறிதும் அளிக்கவில்லை. மாறாக, அறிவியற் கலைகளைத் தமிழிற் பரப்புதலும், கற்பித்தலும் 'ஆபத்தானது, தற்கொலைக்கு ஒப்பானது' என்றுகூடக் கூறி உதவிசெய்ய மறுத்தது.
அதுமட்டுமல்ல: கிறீனின் மாணவர்களே தமிழில் மேனாட்டு வைத்தியக் கல்வியால் பயனுண்டா எனவுஞ் சற்றுச் சலனமடைந்தனர்." எனது மாணவர்கள் ஆங்கிலத்தி லிருந்து மாறி தமிழில் கற்பது பற்றிச் சலனமடைந்துள்ளனர். அரச சேவையில் ஈடுபட்டுச் சம்பளம் பெறும் வாய்ப்புக் குன்றுமென அவர்கள் எண்ணுகிறார்கள். அது உண்மை. ஆனால், வைத்தியர்களை அவரவர் கிராமத்தில் நிலைபெறச் செய்தலே எதிர்கால நோக்கமாகும். எனவே, பத்துநாட்கள் ஓய்வு கொடுத்து, வைத்தியக் கல்வியைத் தொடர்வார்களா அன்றேல் வேறு தொழிலை நாடுவார்களா எனத் தீர்மானிக்க அவர்களுக்கு அவகாசம் கொடுத்துள்ளேன்"t
f : Life and Letters: Page 111 of Dr. Green.

ஏன் எழுதுகிறேன் O 11
இத்தகைய சூழலிலேதான், கிறீன் வைத்தியர் தமதுள்ளத்திற் கொண்ட உயர்ந்த கருத்தை நிலைநாட்ட உறுதிபூண்டுழைத்தார். போலிப் பெயரும் புகழுந் தேடவோ, பணமும் பதவியுங் கருதியோ வாழ்வை வீணாக்காத படியாற்றான் அன்னாரை ஒரு பெரு மகானாக நாம் போற்றக் கடமைப்பட்டுள்ளோம்.
கிறீன் வைத்தியர் நமது நாட்டிற் சேவை செய்த காலத்திற் பிரயாண வசதிகள், மக்களிடையே தொடர்பு கொள்ளும் வாய்ப்புகள் எல்லாம் எப்படி இருந்திருக்கலாம் என்பதை நாம் கற்பனை செய்வது கடினமாகாது. இருந்துங் கூட, கடலும் அலையும், காலமுந் தூரமும் அன்னாரின் அறிவுச்சுடரை மறைக்கவில்லை. தமிழ் நாட்டிலும் அன்னாரின் சேவை மதிக்கப்பட்டது. தமிழில் விஞ்ஞானம்' பற்றிய விடயங்களிலே இறுதி முடிவு கூறுந் தகுதிவாய்ந்த அதிகாரியாகவும், வல்லுநராகவும் கிறின் வைத்தியர் மதிக்கப்பட்டார்.
தமிழில் விஞ்ஞானந் தந்த பிதாவென அவர் பாராட்டப்பட்டார்.
அவசியந் தேவையான ஒரு துறையிலே காலெடுத்து வைத்துத் துணிந்து பணியாற்றிப் புதுப்பாதை வகுத்த முன்னோடியெனக் கெளரவிக்கப்பட்டார்.
அன்னாரின் கைபட்டு மலர்ந்த நூல்களே, அருஞ்சேவையின் நினைவுச் சின்னங்களாக வாழுமென்று அறிஞர் வாழ்த்தினர்.
இவையெல்லாம் முற்றும் உண்மை; வெறும் புகழ்ச்சியில்லை. போதிய ஆதாரங்கள் அடுத்துவரும்

Page 10
12 ( ) மருத்துவத் தமிழ் முன்னோடி
அத்தியாயங்களிற் காட்டப்பட்டுள்ளன என்பதை இவ்விடத்திற் குறிப்பிடல் பொருத்தமாகும்.
இத்தகைய பெரியாரின் சாதனை - புத்தம் புதிய கலைகள் எல்லாம் மெத்த நம் மொழியில் வளரல் வேண்டும் என்ற முயற்சி ஏன் மங்கி மறைந்தது என்பதும் எளிதிற் புலனாகும்.
அடிமனதிலே மொழிப்பற்றுான்றி வளராமல், உள்ளத்தில் உண்மையொளி இல்லாமல், தனக்கு முன்பாகச் சமுதாயத்தைக் கருதாமல் வாழும் மக்களை இந்தச் சுதந்திர நாட்டிலே காண்கிறோமே! அப்படியாயின், அன்று நிலைமை எப்படி இருந்திருக்கும் என்பது வெள்ளிடைமலை.
தமிழின் வளர்ச்சியில் ஈடுபாடின்றியும், அலட்சியமான கருத்துடனும் மக்கள் பலர் இன்றும் வாழ்கிறார்களெனின், இற்றைக்கு நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலைமையைக் குறை கூறுதற்கு நாம் உரிமையற்றவர்கள்.
ஆக, கிறீன் வைத்தியரின் சேவையும் அது ஏன் மங்கி மறைந்ததென்பதுந் தெளிவு. ஆயின், ஒன்றரை நூற்றாண்டு களுக்கு முன்பாக நமது நாட்டிற்கு வந்த அமரிக்க மிசன் ஊழியரான கிறீன் வைத்தியரின் வண்டமிழ்ச் சேவையை, இன்றைய சமுதாயம் நினைவிற் கொண்டு போற்றல் வேண்டும். அன்னாரின் கைம்மாறு வேண்டாச் சேவையை, ஆக்க பூர்வமான அருந்தமிழ்ப் பணியைக் காலத்தினாற் செய்த நன்றியென நாம் மதித்தல் வேண்டும். கிறித்துவமத ஊழியராக அடியெடுத்து வைத்தபோதிலும், தமிழ்த் தொண்டராக வாழ்ந்து, தமிழில் விஞ்ஞானந் தந்த

ஏன் எழுதுகிறேன் 13
முன்னோடியாகத் திகழ்கின்ற வைத்தியர், அன்றைய சமுதாயத்தின் உண்மை நோயை அறிந்து, உரிய மருந்தையுங் கொடுத்தாரே! அவ்வருமருந்தின் குணமறிந்த நாம் அந் நன்றியை மறத்தல் தகாது.
மாநிலம் வாழ்கவென மழை பொழிகிறது. இருந்தும், உலக மக்களிடமிருந்து அது எந்தவித பிரதியுபகாரத்தையும் எதிர்பார்ப்பதில்லை.
பிறர்க்கென வாழாமல் முற்றுந் தனக்கென வாழ்பவர்கள், உண்மையிலே உயிர் வாழ்பவர்களல்லர். கைம்மாறு வேண்டாமல் மனித சமுதாயம் பயன்பெறத் தம் வாழ்வை அர்ப்பணிப்போரே உண்மையில் உயிர் வாழ்பவர்களாவர்.
இது சான்றோர் வாக்கு: தமிழ் மறை.
மனித சமுதாயத்துக்குத் தொண்டு செய்யுங் குண சிலர்கள், ஓர் இலட்சியத்துக்காக வாழ்கிறார்கள். அதனால், அவர்கள் காலத்தாற் சாவதில்லை; காலத்தின் கோரத்தால் ஏலத்திற் போவதில்லை. எனவே என்றென்றும் வாழுஞ் சாகாவரம் பெறுகிறார்கள்.
இச் சான்றோர் வரிசையில் இடம் பெற்றுத் தமிழ்கூறும் நல்லுலகின் உள்ளத்தில் அணையா ஒளியாக வாழவேண்டிய தன்மைகள் பெரிதுங் கொண்டவர் சமுல் பி. கிறீன் வைத்தியர் என்பதிற் சந்தேகமில்லை.

Page 11
2. இளமையுங் கல்வியும்
ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா ஊக்கம் உடையான் உழை
- பொய்யாமொழி
"ରJ ளரும் பயிரை முளையிலே தெரியும்" என்பதற் கிணங்க, களத்திலே விதைத்த விதைகள் முளைத்து வரும் போது அவை பற்றிய மதிப்பை ஓரளவு கூறிவிடலாம். அவை வளரும் பயிரா, வளர்ந்து விளைந்து பயன் தருமா என்று முளையிலேயே மதிப்பிடலாம். அதே போன்று பிள்ளைகளின் இளமைப் பருவத்தைக் கவனித்து, அவர்களது இயல்பாற்றல் களையும் ஊக்கத்தையும் மதிப்பிட்டு, அப் பிள்ளைகளின் எதிர்காலம் எப்படி அமையுமெனக் கூறுதல் கூடும்.
செலவு தந்தைக்கோ ராயிரஞ் சென்றது தீதெனக்குப்பல் லாயிரஞ் சேர்ந்தன நலமொ ரெட்டுணையுங்கண்டி லேனிதை
நாற்ப தாயிரங் கோயிலிற் சொல்லுவேன்" என்ற அமரகவி வாக்கு, இன்றைய இளைஞருக்கு எத்துணை பொருந்தும் என ஆராய்தல் தேவையில்லையாயினும், பொது வாக இன்றைய இளைஞர் மனப்பாங்கு சிந்திக்கற்பாலது. தமது எதிர்காலம்பற்றிச் சற்று நிதானமாகச் சிந்திக்கும் மனப்பான்மை குன்றி, மதிப்புணர்வுகளும் விழுமியங்களும்

இளமையுங் கல்வியும் ) 15
தவறாகி, இளைஞர்களின் விருத்தியும் நாட்டின் தேவைகளும் பாதிக்கப்படுவதை நாம் பரக்கக் காணமுடிகிறது. சுய ஆற்றலும் விவேகமும் வீணாகும் அதே வேளையிலே, சுய தேவைகள் பூர்த்திசெய்யப்படாமல் நாடே இன்னலுறுவதுங் கண்கூடு. பலவிதமான மனச் சிக்கல்களால் மாணவரூடே கல்வி பயிலும் ஆர்வங் குன்றுநிலை தோன்றுகிறது. மிக அவசியமான தொழிற்றுறைகளில் ஈடுபட மனமொன்றாமல் வேலையில்லை’ என்ற மனச் சோர்வுடன் மாணவர் ஊக்கங் குன்றி நிற்றலைக் காண்கிறோம். இந்நிலையில், வளரும் பருவத்திலே கிறீன் எத்தகைய சூழலில், எத்தன்மையான இயல்புகளுடன் வாழ்ந்து வளர்ந்தார் என அறிதல் சுவையான செய்தியாயும் வழிகாட்டியாயும் அமைகிறது.
அமரிக்காவில், மசச்கு சற்ஸ் மாநிலத்தில் வூஸ்டரிலுள்ள "கிறீன் ஹில்" என்னுமிடத்தில் உவில்லியம் ஈ கிறீன் தம்பதிகளுக்குப் புத்திரனாக 1822 ஆம் ஆண்டு ஒற்றோபர் மாதம் பத்தாந் திகதி சமுல் பிறந்தார். இவருக்குப் பத்துச் சகோதரர் இருந்தனர். தமது பதினோராவது வயதிலேயே, தாயை இழந்தார். அதனால் ஏற்பட்ட பலவித இன்னல்களைச் சமாளித்து, உடலுழைப்பாற் சம்பாதிக்கவும் பழகிக் கொண்டார். விடாமுயற்சியுஞ் சிக்கன முறைகளும் அவரது அன்றாட வாழ்வில் அருமையான அனுபவங் களாயின. இச் சிறப்பியல்புகள் அவரது பிற்கால வாழ்வுக்கு அத்திவாரமிட்டு, எடுத்த கருமத்தைத் திறம்படச் செய்து முடிக்கப் பக்கபலமாகவும் நின்றன.
'சிற்றின மஞ்சும் பெருமை' என்பது வள்ளுவன் வாய்மொழி. இளம் பருவத்திலேயே சமுல் கிறீன், கீழ்மக்களை

Page 12
16 மருத்துவத் தமிழ் முன்னோடி
விட்டு விலகி நடந்தார். நல்லவர்களை நாடி உயரிய சிந்தனை உடையவராகித் தமது பதினேழாவது வயதிலேயே சமயாசார முள்ளவராக வாழத் தொடங்கினார். அறவழி நின்று அருட் செல்வமுடையராகத் திகழ்ந்த அவர், ஆத்மீகத் துறையில் அக்கறையுஞ் சன்மார்க்க வழிகளில் ஈடுபாடுங் கொண்டார். அவரது இதயத்திற் சுரந்த ஆத்மீக உணர்வு, அன்னாரின் வாழ்நாள் முழுவதும் பெருகி நின்றது.
இயற்கையிலே, உணர்ச்சிவசப்படுந் தன்மையும் எடுத்த கருமத்திற்காகத் தீவிரமாக வாதாடுமியல்பும் அவரில் அமைந்திருந்தன. ஆனால், அடக்கமும் சுய கட்டுப்பாடும் உள்ளவராகையால், இந்த இயல்புகளை எல்லாம் நல்ல வழியிலே திருப்பி ஆக்கபூர்வமான சாதனைகளை நிறுவப் பயன்படுத்தினார்.
தீபரந்து எரியும்போது, நெருப்பாகப் படர்ந்து எரிந்து அழிப்பதுபோல உள்ளத்து உணச்சிகளும் கட்டுமீறிப் பரவினால், அழிவுக்கு வழி கோலுமென்பது யாவருமறிந்த உண்மை. கட்டுப்படுத்தப்பட்டிருக்கும்போது இருளகற்றும் ஒளி தருகின்ற மத்திய தீபமாக அமைவதும் தியேதான். அதேபோல, குமுறி வரும் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி, அழிவுப் பாதையை அணுக விடாது அணைபோட்டு, சுய கட்டுப்பாட்டின் மூலம் அந்த உணர்ச்சிகளையெல்லாம் ஆக்க வேலைகளுக்கு இயக்குஞ் சத்திபெறவும் நற்சிந்தனைகளைச் செயலுருவாக்கவும் பயன்படுத்தினார், கிறீன். இன்றைய சமுதாயத்திற்கு, விசேடமாக இளைஞர்களுக்கு, இது நல்லதொரு முன்மாதிரியாக அமையும்.
வளமான ஓர் எதிர்காலத்தையும் பண்புமிக்க தியாக வாழ்வையும் அவரது இளமைப் பருவம் பிரதிபலித்ததென்று

இளமையுங் கல்வியும் ( ) 17
கூறும்போது, சற்று மிகைப்படுத்திக் கூறுவதாகச் சிலருக்குத் தோன்றலாம். ஆனால், அவரது வாழ்க்கை எங்கே எப்படி ஆரம்பமாகிப் பின்பு இங்கே ஈழத்தில் எவ்வண்ணம் மலர்ந்து நறுமணம் வீசியது என்பதை அறியும்போது, அன்னாரது இலட்சிய வாழ்வின் இலட்சணம் தெளிவாகின்றது.
தமது பத்தொன்பதாவது வயதிலே நியூயோர்க் கிலிருந்த வண. டாக்டர் வேர்கன் அவர்களிடம் கடமை யாற்ற ஆரம்பித்தார், கிறீன். சாதாரண எழுதுவினைஞ ராகவே வாழ்க்கை ஆரம்பித்தது. சீர்திருத்திய சபையின் அத்தியட்சர்கள் சபையின் செயலாளராக அன்று வண. டாக்டர் வேர்கன் பதவி வகித்தார். அவரின் கீழ் வேலை பார்க்கும்போது, ஓய்வுநேரத் தாராளமாக இருந்தது. எனவே, படிப்பதும் வாசிப்பதுமே ஒய்வு நேர வேலைகளாக அமைத்துக்கொண்டார். வைத்தியத்துறையில் ஆர்வம் அதிகம் இருந்தபுடியால், பல் வைத்தியம் பற்றிய பாடங்களைப் படிக்கவும் ஆரம்பித்தார்.
தேவைக்கமைய, இளமையிலேயே தொழில் பார்க்க வேண்டி ஏற்பட்டும், தமக்கிருந்த இயல்பாற்றலை விட்டுவிடாது, ஓய்வு நேரத்தை வைத்தியத் துறையிலே செலவிட்டு ஆக்கத்துறையில் அடி எடுத்து வைத்ததால், காலப் போக்கிலே தமது பாதையில் அவர் வேகமாக முன்னேறினார். அந்த நாள்களிற் சமுலின் சகோதரர் ஒருவர் வைத்தியக் கல்வியை முடித்துக்கொண்டு, தொழிலை ஆரம்பித்தார். அதனாலே தூண்டப்பட்ட சமுலின் மனதில், ஓர் அமைதியான சிந்தனை ஓட்டம் தொடர்ந்து

Page 13
18 ( ) மருத்துவத் தமிழ் முன்னோடி
பாய்ந்துகொண்டிருந்தது. தாமும் வைத்தியங் கற்கவேண்டு மென்று முடிவு செய்துகொண்டு எழுதுவினைஞர் தொழிலைக் கைவிட்டு, யோன். ஏ. மாக்விக்கர் என்னும் வைத்தியரிடம் வைத்தியங் கற்கத் தீர்மானித்தார்.
1841 ஆம் ஆண்டின் ஆரம்பத்திலே மேற்கொண்ட எழுதுவினைஞர் தொழிலைச் சில மாதங்களிலே விட்டுவிட்டு முழுநேர வைத்தியக் கல்வியை மேற்கொண்ட சமுல், விரிவுரை களைக் கேட்டும், சத்திரசிகிச்சைகளைப் பார்வையிட்டும், நல்ல வைத்திய அறிவு சேகரித்துக் கொண்டார். பின், அதே ஆண்டில் ஒற்றோபர் மாதத்தில் நியூயோர்க்கிலிருந்த ஒரு வைத்தியக் கல்லூரியிற் சேர்ந்து வைத்தியங் கற்கத் தொடங்கினார். கல்லூரியிற் பிரவேசித்துப் படிப்பை ஆரம்பித்த அவர், விரைவில் ஒரு நல்ல வைத்தியராகத் தேர்ச்சிபெற்று விளங்கினார்.
சாதாரண எழுதுவினைஞராகத் தமது வாழ்வை ஆரம்பித்த சமுல், சுயமுயற்சியாலுந் தணியாப் பேரார் வத்தாலும் ஊக்கங் குன்றா உழைப்பாலுந் தமது ஆற்றலுக் கேற்றவாறு முன்னேறினார். சந்தர்ப்பமுஞ் சூழ்நிலையும் வசதியளிக்காதபோதும், முடிவிற்றாமே சந்தர்ப்பத்தை ஆக்கித் தமதாசையை நிறைவேற்றியமை நமதிளைஞர் சமுதாயத்துக்கு மன விழிப்பூட்டுஞ்செய்தியன்றோ!
திறமை எங்கிருக்கிறதோ, ஊக்கம் எங்கிருக்கிறதோ
ங்கு வெற்றியும் இலட்சிய நிறைவுமுண்டு என்பதற்கு, றினின் இளமையுங் கல்வியும் நல்லதோர் உதாரணமாகும்.

இளமையுங் கல்வியும் 19
சான்றோர் களாக உலகில் வாழ்ந்து, தமது புகழுடம்பை விட்டுச்சென்ற பலரின் சரிதங்களுடன் கிறீனின் சரிதமுஞ் சான்றாக அமைந்து, முயற்சியுடையோர் இகழ்ச்சி அடையா ரென்னுங் கருத்துக்கு வலுவூட்டுகின்றது. மாணவராக இருந்த கால சாதனைகள் பல, கிறீனின் விடாமுயற்சிக்கும்
ஊக்கத்திற்கும் சான்று பகர்கின்றன.
வைத்தியத்துறையிலே பிரவேசிக்க எண்ணிக் கல்வி பயின்ற வேளையிலும் தமது பொதுத் தேர்ச்சியிலும் அக்கறை காட்டினார் கிறீன். ஜெர்மன், லத்தின் பாஷைகளை அவர் கற்றார். கவிதை, சரித்திரம், கணிதம், தத்துவம் போன்ற பலதுறைக் கல்வியில் கவனஞ் செலுத்தினார். தன்னைக் கட்டுப்படுத்தக்கூடிய மனப்பக்குவத்தையும் வளர்க்க விரும்பினார்.
வைத்திய மாணவனாக ஆரம்பித்த காலத்தில், அறுவைக் கல்விக் கூடமும் சகமாணவர் நடத்தையும் சற்று வெறுப்புணர்ச்சியை ஊட்டின. ஆயினும், மனதை அடக்கிக் கடமை உணர்வுடன் முயற்சி செய்து கல்வியில் ஆர்வத்தை நிலைநிறுத்தினார்.
உடலைக் குறைவால் இடையிடையே அவர் கல்வியை நிறுத்தி ஓய்வு பெற நேரிட்டது. ஆனால், அவர்தம் ஆர்வம் கல்வியை இடையில் நிறுத்தாது தொடர வழிவகுத்தது. நோயாளர்களை இரக்கத்துடன் நோக்கவும் அவர்தம் வேதனைகளை உணரவும் அவரது உள்ளம் பக்குவம் பெற்றிருந்தது. "வைத்தியரும் நோயாளியும் - இருவருமே சுகவாழ்வு, ஆயுள் என்ற பரிசுத்த மூலத்தில் தங்கியுள்ளனர் என்பதை அவர் மறந்திலர்.

Page 14
20 மருத்துவத் தமிழ் முன்னோடி
1844 ஆம் ஆண்டிலேயே மிஷனரிப் பணி செய்யும் எண்ணமும் அவருக்கு ஏற்பட்டது. 'எனது உடனலம் குறைவு தான்; ஆனால் சுவாத்திய மாற்றம், பழக்க வழக்க மாற்றம் போன்றவை உடனலனைச் சீராக்கக்கூடும்’ என்று தமது சகோதரிக்கு அவர் எழுதித் தன் மனதை வெளியிட்டார்.
இவையெல்லாம் இளமையிலேயே அவரது மனப்பக்குவத்தைப் பிரதிபலிக்கின்றன. இத்தகைய மனப்பாங்குடன் வைத்தியங் கற்ற கிறீன் 1845 ஆண்டு மே மாதம் 13 ஆம் திகதி வைத்திய கலாநிதிப் பட்டம் பெற்றார். சில நாட்களுள்ளேயே நியூயோர்க்கிலிருந்த ஒரு சிகிச்ச சாலையில் நியமனமுங் கிடைத்த்து. ஆனால், சொந்த ஊரிலே சென்று வாழ விரும்பிய அவர், அதை ஏற்கவில்லை" தமது ஊராகிய வூஸ்டருக்குச் சென்று தொழிலை ஆரம்பித்தார். ஆயினும் - மிஷன் சேவை செய்யும் எண்ணம் மாறவில்லை. "நான் பயன்படக் கூடிய ஓர் இடத்திற்குச் செல்லுதல் நன்றல்லவா?" இந்த எண்ணமே மேலோங்கி, அவரை
வழிப்படுத்தியது.
"புத்திசாதுரியமாகத் தெரிவு செய்யப்பட்ட ஒரு கருமத்தை இலட்சியமாகக் கொண்டு, முழுமனதுடன் அதைச் செய்ய முயல்தல் அவசியம்" என்று கிறீன் வைத்தியர் அடிக்கடி கூறுவதுண்டென்பதை இவ்விடத்தில் நினைவு படுத்துவது மிகப் பொருத்தமாகும்.
தளராத ஊக்கமுடையானிடம், பொருள் தானே வழி வினவிக்கொண்டு செல்லும் என்பது பொய்யாமொழி.

@s7Genuougù கல்வியும் ( ) 21
எத்தகைய இன்னல் இடைமறிப்பினும், இடுக்கண் எதிர்ப்பினும் மனந்தளராது நமது இலட்சியப் பாதையிலே தொடர்ந்து சென்றால், வெற்றி தானாகவே வந்தடையும். முயன்றால் வாராத தொன்றில்லை' என்பது ஆன்றோர் பொன்மொழி. நாம் எடுத்துக்கொள்ளுந் தொழில் எதுவாயினும், அதில் வெற்றிகாண ஊக்கம் எத்துணை அவசியமென்பதை இவை வலியுறுத்துகின்றன.
இவ்விலக்கணத்துக்கு அமைய வாழ்ந்து, வெற்றிகண்டு, இலக்கணத்தை உண்மைப்படுத்தி இறவாப் புகழெய்திய ( பார்களுள் சமுல் பி. கிறின் அவர்களும் இடம் பெறுதற்கு உரிமையுடையர். அன்னாரின் இளமையுங் கல்வியும், முயற்சியும் முன்னேற்றமும் இன்றைய சமுதாயத்தினருக்கு நல்லதொரு பாடமுமாகுமெனக் கருதின், அது தவறாகாது.

Page 15
3. இலங்கைக்கு வருகை
ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறிவாளன் திரு.
- தமிழ்மறை
நிமது நாட்டிலே அடியெடுத்து வைத்துச் சமயத் துறையிலுங் கல்வித் துறையிலும் ஈடுபட்டு, ஆலயங்களும் பாடசாலைகளும் நிறுவிய அமெரிக்க மிசன் ஊழியர்கள், வைத்தியத்துறையிலும் சேவை செய்ய ஆரம்பித்தமை சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியாகும். 1819 ஆம் ஆண்டிலே வைத்திய சேவையையும் ஆரம்பிப்பதெனத் தீர்மானித்து, யாழ்ப்பாணத்துக்கு ஊழியரை அனுப்பிய துடன், வைத்திய மிசனரிச் சேவை அங்குரார்ப்பணமுஞ் செய்யப்பட்டது. அமரிக்கமிசனின் வைத்திய சேவையை ஆரம்பித்து நடாத்தவென L_T革L_rf Guurrair sioエーr行 தம்பதிகள் அமரிக்காவிலிருந்து யாழ்ப்பாணம் வந்தனர். அவர்களின் முதலாவது வைத்திய நிலையம், 1820ஆம் ஆண்டு பண்டத்தரிப்பிலே நிறுவப்பட்டது.
வைத்திய சேவையை ஆரம்பித்த டாக்டர் ஸ்கடர் அவர்கள், நோயாளருக்கு அன்பும் ஆதரவுங் காட்டி நடாத்தியதால், எல்லோரும் ஏகோபித்துப் பாராட்டினர். அதனால் அவர்களின் சேவை மக்களைக் கவர்ந்தது;


Page 16
24 ) மருத்துவத் தமிழ் முன்னோடி
மக்களாற் போற்றப்பட்டது. யாழ்ப்பாணம் வந்து ஒன்றரை ஆண்டுக்குள் ஸ்கடர் தம்பதிகள் மூன்று குழந்தைகளை இழந்துங்கூட, மனந் தளராது சேவையைத் தொடர்ந்து நடாத்தினர். நாளடைவில், வைத்திய சேவை செய்வதோ டமையாது, சுதேசிகள் சிலருக்கு வைத்தியங் கற்பிக்கும் முயற்சியிலும் டாக்டர் ஸ்கடர் ஈடுபட்டார்.
1836 ஆம் ஆண்டிலே, ஸ்கடர் தம்பதிகள் தாயகந் திரும்பினார்கள். வைத்திய சேவையைத் தொடர்ந்து நடாத்த டாக்டர் நேதன் உவாட் யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தார். பத்து ஆண்டுகளின் பின், அன்னாரின் சேவைக்காலம் முடிவடைந்ததும் அவ்விடத்திற்கு வந்து சேர்ந்தவர்தான் சமுல்பி.கிறீன் வைத்தியர் ஆவர்.
1846 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பல அமரிக்க மிஷன் ஊழியர்கள் அங்கிருந்து இந்தியாவிற்குக் கப்பலிற் பயணஞ் செய்தற்குத் தயாராகிக் கொண்டிருந்தனர். இலங்கை யில் பணியாற்றியவர்களான வண. லீவை ஸ்போல்டிங், டாக்டர் ஜோன் ஸ்கடர் ஆகியோரும் அவர்களுள் இருவர். அவர்கள் புறப்படுமுன் டாக்டர் கிறின் அவர்களைச் சந்தித்துப்பேசி அமரிக்கமிஷன் ஊழியராகப் பணியாற்றத் தமக்குள்ள ஆர்வத்தையும் டாக்டர் ஜோன் ஸ்கடருக்குத் தெரிவித்தார். அதன் பலனாக, இலங்கையில் அமரிக்க மிஷன் வைத்தியராகப் பணியாற்றுதற்கு நியமனம் கிடைத்தது.
விரைவிலே தமது நண்பர்களையும் ஊரையும் விட்டுத் தூர தேசத்திற்குச் செல்ல வேண்டுமென்பது அவர் மனதிலே ஓர் உணர்ச்சி ஓட்டத்தை ஏற்படுத்தியது. அந்த மன உணர்வை அவர் இவ்வண்ணம் குறித்து வைத்தார்:

இலங்கைக்கு வருகை 25
"அன்று நள்ளிரவிலே துயிலின்றி என் அந்தரங்க ஆத்மாவின் உணர்வோடு இயைவு பூண்டதெனத் தோன்றிய அம் மங்கிய நிலவொளியில் வியாகுலத்துடன் உலாவிக் கொண்டிருந்தேன். சந்திரன் கீழ்த்திசையில் உதயமாகிக் கொண்டிருந்தான். அத் திசையை நோக்கி என் எதிர்காலம் என்னை அழைத்தது. என் விதி எவ்வித தடுமாற்றமோ சந்தேகமோ இன்றித் தங்கக் கரங்கள் சுட்டி அறிவுறுத்திக் கொண்டிருந்தது. கேள்வி வழியில் மட்டும் அறிந்திருந்த கீழைத்தேசக் காட்சிகளை விழிப்பு நிலையிற் கற்பனை செய்துகொண்டிருந்தேன். இரவின் அழகில் ஒளிபட்டதைக் காணுந்தோறும் ஏதோ ஒரு அறிவுறுத்த முடியாத மன நெகிழ்ச்சி ஏற்பட்டது. யான் தன்னந் தனியாகி என் சுற்றம், எனக்கு இனியவர்களை ஒருமுறை எண்ணுங்கால் இப் பேரிளம் மதியன்றோ என் ஆத்மாவுக்குத் தண்ணொளி தந்து சாந்தப்படுத்தும் ஆ இலட்சம் பேர்களின் குரல் என்னை அழைக்கிறது! நான் நிற்கவொண்ணாது"
இந்த மனவுணர்வுடன், வூஸ்டரில் இருந்து புறப்பட்டு நியூயோர்க்கிற்குச் சென்று பிரயாணத்திற்கான ஆயத்தங் களைச் செய்தார். கப்பல் எப்போது புறப்படுமென்பதை அறியாத படியால், இலங்கையில் இருந்து திரும்பிய மிஷன் ஊழியர் ஒருவரிடம் தமிழ் கற்க ஆரம்பித்தார். ஏலவே லத்தீன், கிரேக்கம், பிரஞ்சு, ஜெர்மன் ஆகிய மொழிகளையும் கற்றுத் தேர்ந்தவராகையால், தமிழ் மொழி கற்பதில் சிரமம் இருக்காது என்பது அவர் எண்ணம். அங்கு மூன்று மாதம் வரை தமிழ் கற்பதற்கு அவகாசம் கிடைத்தது.
நான் தனியாகச் சென்று இந்துப் பிரதேசத்தை அறியும் வரை மணஞ் செய்ய மாட்டேன்" என்று தமது சகோதரி

Page 17
26 மருத்துவத் தமிழ் முன்னோடி
ஒருவருக்குக் கூறிய டாக்டர் கிறீன், 1847ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 20 ஆம் தேதி ஜேக்கப் பேர்க்கின்ஸ்" என்ற கப்பலில் அமரிக்கத் துறைமுகமொன்றான பொஸ்ரனில் இருந்த புறப்பட்டார்.
அந்தக் கப்பலில் கிறீனுடன் இன்னுமொரு பிரயாணி மட்டுமே இருந்தார். அவருக்குச் சமயத்தில் எதுவித அக்கறை யும் இருக்கவில்லை. எனினும், கப்பலில் யாவருடனுமே கிறீன் அனுதாபத்துடன் ப்ழகினார். தமிழ்மொழி படித்தார். விஞ்ஞான, இலக்கிய நூல்களை வாசித்தார்.
1847 ஆம் ஆண்டு செத்தெம்பர் மாதம் நான்காம் திகதி சென்னையை அடைந்த டாக்டர் கிறீன், இன்னொரு மிஷன் ஊழியரான திரு. ஹன்றி என்பவருடன் 20 ஆம் திகதி குதிரையிலே பயணத்தைத் தொடர்ந்தார். சென்னை யிலிருந்து 205 மைல் தூரம் சென்ற அப்பயணம் ஒற்றோபர் 2 ஆம் திகதி நிறைவுற்றது. பின்பு, ஆறாம் திகதி கடலைக் கடந்து யாழ்ப்பாணத்தின் வடபால் உள்ள பருத்தித் துறையை அடைந்தார். அங்கிருந்து, ஐந்து மைல் தூரத்தில் வல்வெட்டியிலே அன்றிருந்த அமரிக்கமிஷன் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
வல்வெட்டிக் கிராம மிஷன் நிலையத்தில் அன்று பணியாற்றியவர் மிஷன் ஊழியர் திரு கோப்ஸ் என்பவர். அவருடன் தங்கியிருந்த கிறீன், பின்பு தெல்லிப்பழை, பண்டத் தரிப்பு, உடுவில், வட்டுக்கோட்டை, மானிப்பாய் ஆகிய ஊர்களில் இருந்த மிஷன் நிலையங்களுக்கும் அழைத்துச் செல்லப்பட்டு அறிமுகஞ் செய்யப்பட்டார்.

PORTRAT’ OF DR. SA M UT FEL FISK (FREEN,
T`ለ}X£ኮ! Å ['Q፪ሆÉ " ደ.1 /

Page 18
28 ( ) மருத்துவத் தமிழ் முன்னோடி
யாழ்ப்பாணத்தில் டாக்டர் கிறீனின் வைத்தியப் பணி வட்டுக்கோட்டையில் ஆரம்பமாகியது. அங்கு மிஷன் வைத்தியராகப் பணியேற்றபோது, அவருக்கு வயது 25. மறுநாள் அவரது பிறந்ததினம். அதுபற்றித் தன் குடும்பத்தினருக்கு எழுதுகையில்
"எனது அடுத்த கால்நூற்றாண்டை இங்கு ஆரம்பிக்கிறேன்.நாளை என் வயது 25ட"
என்று உணர்ச்சி ததும்ப எழுதினார். அங்கிருந்து அடுத்த கால்நூற்றாண்டு காலத்திற்கு தமிழில் மேனாட்டு வைத்திய அறிவை வளர்க்கப் போகிறேன் என்று மானசியமாக உணர்ந்தாரோ, என்னவோ.
உலகம் வாழுமாறு சேவை செய்யும் பேரறிஞனின் செல்வம், ஊரார் நீருண்ணுங் குளம் நிறைந்தாற் போன்றது. யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகமே என்ற மனதோடு செய்யுஞ் சேவை, நிலையான பலனைக் கொடுக்கும். தமிழ்மொழிமூலம் விஞ்ஞான அறிவைப் பரப்புதற்குத் தாம் முயற்சி எடுத்த போது கிறீன் வைத்தியர் கூறிய உண்மைகள் 16), இன்று வழிகாட்டும் ஒளிவிளக்குகளாகவும் பிரகாசிக்கின்றன.

4.வைத்திய சேவையும் வைத்தியக் கல்வியும்
"கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக"
திருக்குறள்
ட்ெடுக்கோட்டையில் கிறீன் வைத்திய சேவையை ஆரம்பித்த முதற் சில நாட்கள் அவரது சேவையை நாடியவர்கள் மிகச் சிலரே. பொதுவாக, அன்றைய சமூகத் தினர் சுதேச வைத்தியர்களிடம் மிக நம்பிக்கை கொண்டிருந் தனர். தமது வைத்தியர்களிடம் நம்பிக்கை வைத்தவர்கள் அவர்களை விட்டுப் பிறரிடம் செல்லத் தயங்கினார்கள். மேலும், கிறித்தவமதத் தொடர்பில்லாதவர்கள் மிஷன் வைத்தியர்களை நாடுவதுங் குறைவாகவே இருந்த காலம் அது. எனவே, புதிய மேனாட்டு வைத்தியரான கிறீனிடம்
சென்று சிகிச்சைபெற நோயாளிகள் ஆர்வங் காட்டவில்லை.
இரண்டு வாரங்களுள் நிலைமை மாறும் சம்பவம் ஒன்று நடந்தது.
மூத்த தம்பி என்ற பெயருடைய தமிழ் அறிஞர் ஒருவர் கடுஞ் சுகயினமுற்றிருந்தார். தமது வயிற்றுள் ஏற்பட்ட

Page 19
30 மருத்துவத் தமிழ் முன்னோடி
வலியினால் வேதனைப்பட்ட அவர் மரணத்துடன் போராடி னார். அவருக்கு வைத்தியஞ் செய்த சுதேச வைத்தியர்கள் நம்பிக்கை இழந்துவிடவே, கிறீன் வைத்தியரிடஞ் செல்வதா இல்லையாவென உறவினர் ஆலோசித்தனர். இறுதியில், கிறீன் வைத்தியரிடஞ் சிகிச்சைக்குச் செல்வதென முடிவு செய்தனர்.
கிறின் வைத்தியர் நோயாளியைப் பார்வையிட்டார். அறுவைச் சிகிச்சை செய்தல் அவசியமெனக் கூறினார். உறவினரும் நோயாளியுஞ் சற்றுச் சிந்தித்தபின் அதற்கு உடன்பட்டனர்.
அறுவைச் சிகிச்சை நடைபெற்றது. நோயாளி குணமடைந்தார்.கிறீன் வைத்தியரின் புகழ் பரவியது.
டாக்டர் இ. வைத்திலிங்கம் என்னும் 'பழைய மாணவன்" கிறின் காலமான பின்பு, பழைய நினைவுகளைக் குறிப்பிட்டு கிறிணின் குடும்பத்தினருக்கு எழுதிய கடிதத்தில் இந்த அறுவைச் சிகிச்சையின் பின்னணி பின் வருமாறு விவரிக்கப்பட்டுள்ளது.
"1847ஆம் ஆண்டிலே மிகச்சில ஆங்கில வைத்தியர்களே இருந்தனர். யாழ்ப்பாணத் தமிழர்களும் மேனாட்டு வைத்திய முறைபற்றி அறிந்திருக்கவில்லை. தமது சுதேச வைத்தியர் களை எதிர்த்து யாழ்ப்பாணத்தவர் எதுவும் பேசத் துணிய மாட்டார்கள். எனவே, இந்தப் புதிய வைத்தியர் (கிறீன்) மக்கள் அறியாமையை போக்கி மனப்பாங்கைச் சாதகமாக்க
வேண்டிய தேவை இருந்தது.

క్ష్

Page 20
32 ( ) மருத்துவத் தமிழ் முன்னோடி
"தமிழ், சமஸ்கிருத அறிஞரும் மிஷன் ஊழியருக்குத் தமிழ் கற்பிக்கும் ஆசிரியருமாகிய திரு. மூத்ததம்பி (எனது மாமனார்) பல நாட்களாகச் சுரங்கண்டு வேதனையுற்றார். என து தகப்பனாரே வைத்தியஞ் செய்தார். அவர் நோயினின்றுத்தப்புவார் என்ற நம்பிக்கை அற்ற நிலை.
"மற்றைய சுதேச வைத்தியர்களும் கைவிட்ட நிலையில், டாக்டர் கிறீனை அழைத்து ஆலோசனை கேட்போமென எனது தந்தையாருக்குக் கூறினேன். பலத்த ஆலோசனையின் பின் டாக்டர் கிறீனை அழைக்கச் சம்மதித்தனர். அறுவைச் சிகிச்சை அவசியமென அவர் கூறினார். அறுவைச் சிகிச்சை நடைபெற்றது. புகழ் பரவியது! அன்று முதல், டாக்டர் கிறீன் 'கடவுள் அவதாரமென எண்ணி யாழ்ப்பாணத்தின் பல பாகங்களிலிருந்தும் பெருந்தொகையான மக்கள் அன்னாரை
நாடினர்"
கிறீனிடம் வைத்தியங்கற்று, பின்பு குடியேற்ற நாட்டு அறுவை வைத்தியராகப் பணியாற்றிய டாக்டரின் புகழுரை
இது!
முதன் முதலாகச் செய்த அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நிறைவெய்தியதுடன் கிறீன் வைத்தியரின் பெயரும் புகழும் யாழ்ப்பாணக் குடாநாடு முற்றும் பரவியது. அவரை நாடி வந்த நோயாளர் தொகையும் நாளுக்கு நாள் அதிகரித்தது. அதனால் அவரது அன்றாட வேலைப் பளுவும் தொடர்ந்து அதிகரித்தது.

வைத்திய சேவையும் வைத்தியக் கல்வியும் 33
கிறீன் வைத்தியருக்கு அன்றிருந்த பொறுப்புக்கள் மூன்று வகையானவை.
1.
நாளும் அதிகரித்த நோயாளர்களுக்கு சிகிச்சை அளித்தல்.
முன்பு டாக்டர் ஸ்கடர் பயிற்றி பல்வேறு அமரிக்க மிஷன் வைத்திய நிலையங்களிலும் கடமையாற்றிய வைத்திய உதவியாளரை மேற்பார்வை செய்து வழிப்படுத்துதல்.
மேனாட்டு வைத்தியக் கல்வியைச் சுதேசிகளுக்கு பயிற்றுதல் வேண்டுமென்ற மிஷன் கொள்கையை நடைமுறைப்படுத்துதல்.
ம்மூன்று பொறுப்புக்களையும் அவர் மனப்பூர்வமாக
ep60Ti, D UL- t 专当
ஏற்று, மற்றையோர் வியப்புறும் வகையில் நிறைவேற்றினார்.
சுதேசிகளுக்கு வைத்தியங் கற்பிக்கத் தொடங்கிய
போது, முதலில் இரு மாணவர்கள் சில மாதங்களுள்
ன்னுமொரு மாணவன். எனவே 1848 முதல் 1850 வரை
SEl Cl (Մ)
வைத்தியங்கற்று கிறீன் வைத்தியரின் ஆரம்ப வகுப்பில்
பயின்ற வைத்தியர்கள்'மூவர்.
1.
2.
3.
Gosh na Danforth
J. Dennison
J. Waittilingam

Page 21
34 ( ) மருத்துவத் தமிழ் முன்னோடி
=-- 露露匾 二 H
ܕ ܡ .
-
. 11 - -
 
 
 

வைத்திய சேவையும் வைத்தியக் கல்வியும் 35
(இவர்களுள், G, Damforth, பின்பு கிறீன் வைத்தியர் தமிழில் வைத்திய நூல்களை மொழிபெயர்த்து வெளியிட உதவியவர்: G, Danforth என்ற ஆங்கிலப் பெயர் ய. டன்வதர் என அக்காலத்தில் தமிழாக்கப்பட்டதை அவர் மொழி பெயர்த்து அச்சிட்ட இரண வைத்தியம்" என்ற நூல் மூலம் அறியமுடிகிறது)
இந்த ஆரம்ப வகுப்புக்குக் கற்பிப்பதன் மூலம் கிறின் வைத்தியர் வைத்தியக் கல்விக்கான பாடத் திட்டமொன்றை யும் வகுத்தார். எனவே, முறையான பாடத் திட்டத்துடன் ஆரம்பித்து நடாத்திய வகுப்பு 1851 - 1853 ஆம் ஆண்டுகளில் நடைபெற்றதெனக் கூறலாம். அந்த வகுப்பில் கற்ற ஐந்து மாணவருடன் ய, டன்வதரையும் சேர்த்து எடுத்த புகைப் படம் பல செய்திகளை நமக்குத் தருகின்றது. அவற்றை எல்லாம் படத்தைப் பார்த்தே கிரகித்துக் கொள்ளலாம்.
எத்தனை பொறுப்புக்கள் இருந்தும் கிறின் வைத்தியர் தமது இலக்குத் தவறவில்லை. அதாவது, தமிழ் கற்றுப் பாண்டித்தியம் பெறும் நோக்கத்தைக் கைவிடவில்லை. அதற்கும் இருவழிகளைக் கையாண்டார்.
1 தம்மிடம் வந்த நோயாளிகளுடன் தமிழில் பேசியதன் மூலம், வழக்குச் சொற்களையும் தமிழ் உச்சரிப்பையும் பயின்றார்.
2. ஆசிரியர் ஒருவரிடம் முறைப்படி கிரமமாகத்
தமிழ் கற்றுத் தேர்ச்சி பெற்றார்.
இத்தகைய விடாமுயற்சியால், இலங்கைக்கு வந்து எட்டு மாதங்களுள் தமிழை இலகுவாகப் பேசுந்திறமை
எய்தினர்.

Page 22
36 ) மருத்துவத் தமிழ் முன்னோடி
தமிழ்மொழியில் தேர்ச்சி பெறுவதில் முன்னேற்றங் கண்ட கிறீனின் மனதில் இன்னோர் ஆசை. தமிழர்களுக்கு மேனாட்டு வைத்தியத்தை தமிழ்மொழி மூலம் கற்பித்தால். ஆம்; அன்றைய சமுதாயத்துக்குத் தேவையானது அதுவே என்று நம்பினார்: ஆர்வத்துடன் செயற்படவும் எண்ணி னார். ஆயினும், அதற்குத் தேவையான ஆயத்தங்கள் செய்ய வேண்டுமே!
அக்காலத்தில் விவிலிய நூல் தமிழாக்கப்பட்டுவிட்டது. அத் தமிழாக்கத்துக்கு என்ன பிரச்சினை இருந்ததோ, அதே பிரச்சினை தான் தம்மை எதிர்நோக்குமென எண்ணினார். புதிய கருத்துக்களை எடுத்துக்கூறக் கூடிய செர்ற்கள் - இதுவே பிரச்சினை. அதைச் சிறிது சிறிதாக முயன்று வெற்றி காணலாம் என்ற நம்பிக்கை அவருக்கிருந்தது. (அம் முயற்சி பற்றிய விவரம் தமிழில் விஞ்ஞானம்' என்ற அத்தியாயத்தில் உள்ளது) ஆயினும் மேனாட்டு வைத்தியத்தை முதலிலே ஆங்கிலத்தில் கற்பித்து வெற்றிகாண எண்ணினார்.
1850 ஆம் ஆண்டிலே கிறீனுக்கு உற்சாகமூட்டும் சம்பவம் ஒன்று நடந்தது. குடியேற்ற நாட்டரசின் வடமாநில அதிகாரி மேனாட்டு வைத்தியக் கல்விக்குத் தமது ஆதரவை வழங்கியதே அந்தச் சம்பவம். இந்த உற்சாகம், ஓர் எதிர்காலத்
திட்டமாக மனக் கண்ணிற்பட்டது.
"ஒவ்வொரு மூன்று ஆண்டுகளும், ஆறு மாணவர்களை பயிற்றினால்? ஆம். கடவுள்

வைத்திய சேவையும் வைத்தியக் கல்வியும் 37
எனக்கு ஆயுட்பலந்தரின், காலப் போக்கில் இம்மாகாணத்தை மேனாட்டு வைத்தியங் கற்ற சுதேசிகளால் நிரப்பிவிடுவேன்."
இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த அவர் முற்பட்டார். 1851 ஆம் ஆண்டிலேயே தமது பணியை முறைப்படி ஆரம்பித்தார். என முன்பே கூறப்பட்டது. கிறித்தவ சமயத்தளத்தில் நின்று வைத்திய சேவை செய்த கிறீன், கசடறக் கற்று அதன்பின் கற்றதற்கு முரணில்லா வகையில் ஒழுகிய பெருமகன் அன்றோ.

Page 23
5. தமிழில் விஞ்ஞானம்
"காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மானப் பெரிது
- குறள்
மேனாட்டு வைத்தியங் கற்றவர்களுக்கு நமது சமுதாயத்தில் இன்றுள்ள மதிப்புந் தேவையும் யாவரு மறிந்ததேயாம். எனவே, கிறீன் வைத்தியர் நமது நாட்டுக்கு வந்த காலத்திலே, நிலைமை எப்படி இருந்திருக்குமென்பதைக் கற்பனை செய்தல் இலகுவாகும். சுயநல வேட்கையும் பண ஆசையுமின்றிச் சேவையுள்ளங் கொண்டவராகையாற்றான், அன்று நமது நாட்டுக்கு வந்து பணி புரிந்தார். இலங்கையிற் சேவை செய்வதற்கு வரத் தீர்மானித்தவுடனேயே, தமிழ் மொழியைக் கற்கவும் ஆரம்பித்துவிட்டார். தாம் எந்த மக்களுடன் கூடி வாழ்ந்து சேவை செய்ய எண்ணினாரோ, அந்த மக்களின் மொழியை ஏலவே அறிந்துகொள்ளல்
வேண்டும் என்பது அவர் கொள்கை.
அக்காலத்திலே, இலங்கைக்கு வந்து சமயசேவை செய்து தாயகந் திரும்பிய பலர், தமிழ்ச் செல்வத்தையுந் தம்முடன் கொண்டு சென்றனர். அதனால், அமரிக்காவி லிருந்த காலத்திலேயே கிறீன் வைத்தியர் தமிழ் மொழியை

தமிழில் விஞ்ஞானம் 39
ஓரளவு கற்க முடிந்தது. ஆங்கிலம், இலத்தீன், ஜெர்மன், பிரெஞ்சு, கிரேக்கம் ஆகிய மொழிகளை நன்கு கற்றவர், கிறீன் வைத்தியர். அதனால், தமிழ் மொழியையுங் கற்றுத் தேர்ச்சி பெற்றதிற் புதுமையில்லை.ஆனால் -
தமிழில் நல்ல திறமை பெற்ற பின் அவர் மனதிலே ஒர் ஆசை எழுந்தது என முன்பு குறிப்பிட்டேன். மேனாட்டு வைத்தியத்தைத் தமிழில் வழங்கினால் அது நன்மை பயக்கும் அல்லவா? அம்முயற்சியை மேற்கொண்டால் ..!
தமிழ் மக்களுடன் கூடி வாழ்ந்து சேவை செய்த கிறீன் வைத்தியர், தமிழ் மொழியையும் அறிந்திருந்தபடியால், மக்களின் வாழ்க்கை முறைகளையும் இன்ப துன்பங்களையும் விளங்கிக்கொள்ள முடிந்தது; மக்களின் உள்ளத்தையும், அவர்தங் கருத்துக்களையும் அறிந்துகொள்ள வாய்ப்பு ஏற்பட்டது. பரம்பரை பரம்பரையாகக் கையளிக்கப்பட்டு வந்த சுதேச வைத்திய முறையைக் கைவிடத் தயங்கிய மக்களையே அன்னார் ஈழத்திற் கண்டார். மேனாட்டு வைத்தியத்துடன் ஒப்பிடும்போது, அநாகரிகமாகவும் நோயாளரை வேதனைப்படுத்துவதாகவும் அமைந்த சில முறைகளை நீக்கிவிடுதல் அவசியமெனக் கிறீன் வைத்தியர் கருதினார். சுதேச வைத்தியம்ொன்றே பரவியிருந்த சமுதாயத்தில், உண்மையறிவை வளர்ப்பதற்கு மேனாட்டில் வளர்ந்த விஞ்ஞானமும் வைத்தியமுந் தமிழிற் பரவ வேண்டுமென்று நம்பினார். இந்த எண்ணத்துடன், தமிழில் வைத்திய விஞ்ஞானங் கற்பிக்கும் முயற்சி ஆரம்பமாகியது.
அப்படியாயின், அதற்கு முன்பு தமிழில் விஞ்ஞானம் இருக்கவில்லையா என்று கேட்கத் தோன்றலாம். இன்றைய

Page 24
40 ( ) மருத்துவத் தமிழ் முன்னோடி
பொருளில், விஞ்ஞானம் அல்லது அறிவியல் என்ற சொற்கள் மேனாட்டில் வளர்ந்த 'புத்தம் புதிய கலைகளைக் குறிக்கின்றன. ஆயினும் யாழ்ப்பாணத்தில் தமிழ் மன்னர் காலத்திலேயே, சில விஞ்ஞான நூல்கள் ஈழத் தமிழகத்தில் வெளியிடப்பட்டன. "விஞ்ஞான நூல்கள்' என்று கூறும் போது, அச் சொற்றொடர் பலருக்கும் பலவிதமான பொருளை இன்று தருமென்பதே எனது எண்ணமாகும். நவீன உலகின் ஆராய்ச்சி வேலைகளும், அவற்றின் பெறு பேறுகளும், செயற்கைப் பொருள்களும், செய்மதியும், அணுக் குண்டுகளும் இன்னும் எத்தனையோவெல்லாம் மனதிலே தெறிக்கும் என்பதை நான் உணருகிறேன். ஆனால், தமிழ் மன்னர் காலத்திலேயுந் தமிழில் விஞ்ஞானம் இருந்ததெனக் கூறும்போது, ‘விஞ்ஞான நூல்கள் என்று எவற்றைக் கூறுகிறேன் என்றுங் குறிப்பிடல் வேண்டும்.
‘விஞ்ஞானம்' என்பது அறிவுகொண்டு அமைக்கப்பட்ட ஒரு கட்டுக்கோப்பு என நாம் கருதுவோமானால், நான் கூறும் "சங்க காலத்து விஞ்ஞானம்" இங்கு குறிப்பிடற்குரியது என்பது எனது கருத்தாகும். சுதேச வைத்திய, சோதிட நூல்களையே நான் இங்கு விஞ்ஞான நூல்களெனக் குறிப்பிட விரும்பினேன். சுதேச வைத்தியமாக இருந்தாலும், அதுவும் அறிவின் கட்டுக்கோப்பு என்பதை நாம் நினைவிலிருத்தல் வேண்டும். அவற்றிலும், விஞ்ஞான முறைகள் பல கையாளப் படுகின்றன. சோதிட நூல்களை விஞ்ஞான நூல்களெனக் கூறும்போது, கருத்து வேறுபாடு ஏற்படுமென்பதையும் எதிர்பார்க்கிறேன். நாள்களையுங் கோள்களையுங் கொண்டு
உயர்ந்த கணித நுட்பத்துடன் கணக்கிடப்பட்டுச் சொல்லுங்

தமிழில் விஞ்ஞானம் 41
கலை என்ற வகையில் அதையும் மேன்மைக் கலைகளுள்ளே ஒரு ஞானமென்ற பொருள்பட ஈண்டு குறிப்பிடலாமன்றோ?
யாழ்ப்பாணத்தில், அரசகேசரி மன்னரது காலத்திலே தமிழ்ச்சங்கம் ஒன்று நிறுவப்பட்டுத் தமிழ்ச்சேவை மேற் கொள்ளப்பட்டிருந்தது. ஈழத் தமிழர் பெருமைப்படத்தக்க அந்தச் சங்கம், நாம் இப்போது கவனஞ் செலுத்துந் துறையில் ஏதாவது பணி மேற்கொண்டதா என்பதை உறுதியாகக் கூற முடியவில்லை. எனினும், தொடர்ந்து செகராசசேகரன், பரராசசேகரன் ஆகிய மன்னர்களின் காலங்களில் வைத்திய, சோதிட நூல்களிற் கவனஞ் செலுத்தப்பட்டதை நாமறிவோம். செகராசசேகர மன்னன் தனது பெயரிலே செகராசசேகர மாலை என்னும் பெயர்கொண்ட சோதிடநூல் ஒன்றை எழுதுவித்தான். அச்சுவாகனம் ஏறாவிடினும் முறைப்படி எழுதப்பட்ட இந் நூல், குறிப்பிடத்தகுந்த நூலாக அமைந்தது. அண்மைக் காலத்தில், விசுவாவசு வருடம் ஆவணி மாதத்தில் இந்நூலைப் பரிசோதித்து அச்சிடு வித்தார், யாழ்ப்பாணத்தின் பிரபல சோதிட அறிஞர் பிரமயூரீ இரகுநாதையர் அவர்கள்.
பரராசசேகர மன்னன் தனது காலத்திற் பரராசசேகர மாலை என்று தனது பெயர் கொண்ட ஒரு வைத்திய நூலை எழுதுவித்தான். இதன் பிரதிகள் கிடைப்பது அரிதாயினுங் குறிப்பிடவேண்டிய முயற்சியெனக் கருதிக் குறிப்பிட்டேன். பரராசசேகர மாலை, செகராசசேகர மாலை ஆகிய இரு நூல் களுஞ் செய்யுளிலேயே அமைந்தவை. செய்யுளில் அமைந்து, ஏட்டுச் சுவடிகளாகவிருந்த நூல்கள், மேனாட்டவரின் வருகையாலேதான் புதுக்கோலம் பெற்றன. வசன நடையிலே

Page 25
42 மருத்துவத் தமிழ் முன்னோடி
நூல்களை எழுதி அவற்றை அச்சுவாகன மேற்றும் வழக்கம், அவர்களின் வருகையால் ஏற்பட்டதாகும். நூலிலே சொல்லு வதைச் சுருங்கக் கூறி விளங்கவைத்துத் தேவையேற்படின் வல்லார்வாய்க் கேட்டுணரவிட்டது, பழைய தமிழகம். நிகண்டு, இலக்கியம், இலக்கணம் ஆகிய நூல்களே செய்யுளில் எழுதப்பட்டுவந்த தமிழகத்தில், வைத்திய, சோதிட நூல்கள் செய்யுளில் அமைந்தமை இயல்பன்றோ.
மேற்கூறிய இரு நூல்களுஞ் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். இன்னும் இவைபோன்ற பல இருத்தல் கூடும். அது ஆராய்ந்தறியவேண்டியதாம். ஆயினும், கிறீன் வைத்தியர், விஞ்ஞானமும் மேலைத்தேச வைத்தியமுந் தமிழில் வேண்டுமெனக் கருதி, முயற்சியெடுப்பதற்குமுன், எத்தகைய நிலை இருந்ததென்பதைக் காட்டவே மேற்கூறிய நூல்களைக் குறிப்பிட்டேன். இந்தப் பின்னணியுடன் பார்த்தால், கிறின் வைத்தியரின் வருகையால் நந்தமிழ் பெற்ற செல்வம், காலத்தினாற் செய்த நன்றி என்பது புலனாகும்.
டாக்டர் கிறீன் தமிழில் மேனாட்டு வைத்தியம் கற்பிக்க விரும்பிய அதே காலத்தில், அமரிக்க மிஷனரித் தொடர்பால் வேறு சில அறிவியல் நூல்களும் வெளிவந்தன. ஆனால் அவை டாக்டர் கிறீனின் முயற்சி போன்று தாக்கம் ஏற்படுத்தியவை அல்ல. அவற்றுள் மூன்று முக்கியமானவை.
டாக்டர் கிறீன் மானிப்பாயில் பணியாற்றிய காலத்தில் வட்டுக்கோட்டைச் செமினரியில் பணியாற்றியவர் வண. எச். ஆர். ஹோஷங்டன் என்ற அமரிக்க மிஷன் ஊழியர். அவர் Hindu Astronomy என்னும் நூலொன்றை செமினரி மாணவர்க்கென ஆங்கிலத்திலே எழுதினார். பின்பு, அதன்

தமிழில் விஞ்ஞானம் 43
மொழிபெயர்ப்பையும் தாமே செய்து, 1848 ஆம் ஆண்டிலே வெளியிட்டார். "நம்மிடத்திற் படித்து நமக்குத் துணைத் தொழில் செய்கிறவர்கள் தமது சனபாசையிலேயே பெரும்பாலும் காரியம் பார்க்கவேண்டியவர்களாகையால் அவர்கள் இந்து சோதி சாத்திரத்தை அதன் சுய அணி ரூபங்களிற்றானே பயின்றிருக்க வேண்டும்" என்பது அவர் கருத்து.
நியாய இலக்கணம் (Elements of Logic) என்னும் தர்க்க சாத்திர நூல் ஒன்றை மு. (நெவின்ஸ்) சிதம்பரப்பிள்ளை என்ற அறிஞர் 1850 ஆம் ஆண்டிலே வெளியிட்டார். இந்நூலாசிரியரும் அமரிக்க மிஷன் தொடர்புடைய யாழ்ப்பாணத் தமிழர்.
வீச கணிதம் என்ற அட்சரகணித (Algebra) நூல் ஒன்றை கறோல் விஸ்வநாதபிள்ளை 1855 ஆம் ஆண்டிலே வெளியிட்டார். நவீன கணிதத்தின் ஒரு பகுதியைத் தமிழில் தர எடுக்கப்பட்ட முயற்சி இது.
டாக்டர் கிறீன் காலத்திலேதான் இம்மூன்று நூல்களும் வெளியிடப்பட்டன. யாழ்ப்பாணத்தில் விஞ்ஞான நூல் வெளியிட எடுக்கப்பட்ட முயற்சிகளென இவற்றைக் குறிப்பிடல் வேண்டும். எனினும், அறிவியல் வளர்ச்சிக்குத் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் என்று கூற (plurgil.
தமிழில் மேனாட்டு வைத்திய அறிவைப் பரப்பும் முயற்சியில், 1850 ஆம் ஆண்டிலேயே கிறீன் வைத்தியர் திட்டமிட்டு அடியெடுத்து வைத்தாரெனக் கூறுகையிற்

Page 26
44 ( ) மருத்துவத் தமிழ் முன்னோடி
சிலருக்குச் சந்தேகமும் ஆச்சரியமும் ஏற்படல்கூடும். இந்த இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தமிழில் விஞ்ஞானம் பரப்புங் கொள்கைகுறித்து நம்மவர் சிலர் என்ன நினைத்தார்கள்? இதோ ஒரு உதாரணம்.
இற்றைக்கு முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, தமிழில் முடியுமா என்ற நூல் ஒன்றை, அறிஞர் இராஜாஜி அவர்கள் எழுதி வெளியிட்டார்கள். மேனாட்டில் வளர்ந்த மேன்மைக் கலைகளை எல்லாந்தமிழில் எழுத முடியும்; சொல்ல முடியும்; சொல்லுந் திறமை தமிழ் மொழிக்குண்டு என நிறுவும் நோக்கத்துடன் அந்நூல் எழுதப்பட்டது. அந்நூல், 'தமிழில் அது முடியாது' என்று கருதிய மக்களுக்கு விழிப்பூட்டி அறிவியலைத் தமிழிற் பரப்பும் ஆர்வமுந் துணிவுந்தருமெனக் கருதினார், இராஜாஜி அவர்கள். எமது இளஞ் சந்ததியினர் படித்துப் பயனடைந்து அப்பாதையிலே முன்னேறல் வேண்டு மெனவும் பைந்தமிழ் வளமுறல் வேண்டுமெனவுங் கருதி எடுத்த அம் முயற்சி குறித்துத் தெரிவிக்கப்பட்ட ஒரு கருத்து ஈண்டு குறிப்பிடத்தக்கது.
f சொல்லாக்கல் மகாநாடொன்று சில வருஷங்களுக்கு முன் கூடி, ஸயின்ஸ், கலைகளையெல்லாம் தமிழிலேயே விளக்கச் சாதனமாகப் பல அருமை யான சொற்களைச் சிருஷ்டித்து, தமிழன்னையின் பாதபிடங்களில் சமர்ப்பித்தது ஞாபகமிருக்கும். அந்தச் சொற்களை எந்தப் பத்திரிகைகளாவது, ஆசிரியர்களாவது, உபயோகப்படுத்தினால் தானே. பேசாமலிருந்துவிட்டார்கள். நாட்டிலே ஞானம் பெருகு
f எப்படி எழுதினேன்: தி. ஜ. ரசக்திகாரியாலயம், மதுரை. 1943, பக்கம் 13 .

தமிழில் விஞ்ஞானம் 45
வதற்காகத் தங்கள் சந்தாதாரர்களையும் வாசகர்களையும் இழக்க எந்தப் பத்திரிகைகளுக்கும் ஆசிரியர்களுக்கும் சம்மத மில்லை. பார்த்தார் ராஜாஜி, எழுதிவிட்டார் இப் புத்தகத்தை, ராஜாஜியின் புத்தகத்தின்மூலம், ஸயின்ஸைத் தமிழில் எழுத முடியும் என்பது நிச்சயமாய் நிரூபணமாகிவிட்டது. ஆனால், ஸயின்ஸைத் தமிழில் படித்துப் புரிந்துகொள்ள முடியும் என்பது மாத்திரம்தான் அந்தப் புத்தகத்தால் நிச்சயப்பட வில்லை."
தமிழில் விஞ்ஞானங் கற்பித்தலும் எழுதுதலும்) முடியுமெனக் காட்டுதற்கு எடுத்து வைத்த ஓர் 'அடி' குறித்து இவ்வண்ணம் எமது தமிழர் கருதியது நியாயமாகுமா என்பது இன்றைய பிரச்சனையல்ல. அறிவியற் கலையைத் தமிழில் எழுதலாம், படிக்கலாம், படிப்பித்தலும் முடியும் என்பது முடிந்த முடிபு. ஆனால், மேற்கூறிய கருத்துடன் 150 ஆண்டுகளுக்குமுன் அமரிக்க நாட்டவரான கிறீன் வைத்தியர், தமிழில் விஞ்ஞானம் பரப்புதல்பற்றிக் கொண்டிருந்த கருத்தை ஒப்பிடலே எமது ஒரே நோக்கமாகும். நம் மக்களுக்குத் தமிழ்மொழிமீதுள்ள நம்பிக்கையிலும் பார்க்க அமரிக்க நாட்டவரான கிறீன் வைத்தியருக்கு அந்தக் காலத்திலேயே கூடிய நம்பிக்கை இருந்ததைக் கண்டு எமது சமுதாயமே வெட்கப்படல் வேண்டும்.
அந்நியர் ஆட்சியிலே, ஆங்கில மொழியறிவு பெற்று, பதவிகளும் பட்டங்களுந் தேடுவதில் நம்மவர் மயங்கிநிற்க, பிறநாட்டவர் தமிழ்ப்பற்றுடன் செயல் புரிந்தமை உண்மை யிலேயே அசாதாரண செயலாகும். தேசியப் பற்றுக் குன்றி அந்நியரின் நடையுடைபாவனைகளை நம்மவர் நாகரிகமென

Page 27
46 மருத்துவத் தமிழ் முன்னோடி
ஏற்ற காலை, தேசியப் பற்றையுமே அவ்வமரிக்கர் தூண்ட முயன்றார். அன்று ஆங்கில அறிவு பெற்றுப் பணமும் பதவியும் வகித்துச் சுகவாழ்வு அநுபவித்தவர்களின் வழிவழி வந்தவர்கள் இன்றும் ஆங்கிலமொன்றே அறிவுப் பரிவர்த் தனை சாதனமாக அமைதல் வேண்டுமென எண்ணுகிறார் கள். இவர்கள், தமிழ் மொழிமீதோ ஆங்கில மொழிமீதோ அன்றேல் அறிவியற்கலை வளர்ச்சியின்மீதுசுட அக்கறை புடையவர்களல்லர் சுயநலன் விம்பிகளாவர். இம் மனப் பான்மை கொண்டவர்களால் நாடு முன்னேறமாட்டாது. நாட்டின் முன்னேற்றங் கருதும் உள்ளமும் இவர்க்கில்லை. இந்நாடு இன்றேல் பிறநாடு சென்றேனுஞ் சுகவாழ்வு காணத் துடிக்கும் உள்ளமே, இவர்களுக்குண்டு திரைகடல் ஒடியுந் திரவியந்தேடல்'இவர்களின் தாரகமந்திரமாகும்.
எனவேதான். தமிழில் இது முடியுமா? என்று சந்தேகமின்றித் துணிந்து அடி எடுத்துவைத்த கிறின் வைத்தியர், தமிழில் விஞ்ஞானந் தந்த முன்னோடியாக விளங்குகிறார். அன்னாரின் அடிச்சுவட்டைப் பின்பற்றி நம்மவர் வீறுநடை போட்டிருந்தால், இன்று நமது நிலையே முற்றாக வேறானதாக இருக்குமென்பதுறுதி குடியேற்ற நாட்டரசு நம் நாட்டவரின் முன்னேற்றத்திலோ நாட்டின் அபிவிருத்தியிலோ கொண்டிருந்த அக்கறை மிகக் குறைவு தம் ஆதிக்கமும் வருமானமும் மட்டுமே அவர்கள் இலட்சிய மாக இருந்தன. அதனால், கிறீன் வைத்தியரின் முயற்சி உரிய பலன் அளிக்கவில்லை, மக்களைக் கவர வில்லை; அன்னாரின் உயரிய சேவையை நம்மவர் போதிய அளவு உணரவு
Lsjúgsjál).

தமிழில் விஞ்ஞானம் 47
அறிவியற் கலைகளையெல்லாந் தமது சொந்த மொழியில் ஏலவே வளர்த்த நாட்டவர்கள், வேகமாக முன்னேறியிருப்பதை நாம் இன்று காண்கிறோம். யப்பான், சீனா, சோவியற்று நாடுகள் சிறந்த உதாரணங்களாக விளங்கு கின்றன. அண்மைக் காலத்தில் இந்நாடுகள் அடைந்துள்ள முன்னேற்றமும் அறிவியற்றுறை ஆராய்ச்சியில் இவை முன்னணியில் விளங்குவதும் உலகறிந்த உண்மைகளாகும். சுதேச உணர்வுடன் அந்நாட்டவர்கள் அரைநூற்றாண்டுக்கு முன்னரே அறிவியலையெல்லாந் தமது மொழிகளிற் புகுத்தி விட்டனர். அதனால், நாட்டில் வாழ்ந்த எல்லோருக்கும் அறிவியற்கலை கற்கும் வாய்ப்பு ஏற்பட்டது. ஏழை, பணக்காரன், முன்னேற்றமடைந்த பட்டினத்தில் வாழ்பவன், பின்தங்கிய கிராமத்தில் வாழ்பவன் என்ற வேறுபாடின்றி அறிவியற்கலை கற்கும் வாய்ப்பு யாவருக்குங் கிட்டியது. அதனால் விவேகமும் ஆற்றலுமுடையவர்கள் எங்கிருந் தாலும், அவர்களுக்கு அறிவியற்கலை கற்று முன்னேறும் வசதி கிடைத்தது. ஆக, நாடு முன்னேறியதுடன், மொழியும் வளமடைந்து அறிவியலை எடுத்துக்கூறும் ஆற்றல் பெற்று வளர்ச்சியடைந்தது. மொழித்தடையோ விளக்கக் குறைவோ இன்றி அறிவு விருத்தியடைய வாய்ப்புண்டாகியதுடன் கைத்தொழில், கமத்தொழில், பொறியியல், வைத்தியம் ஆகிய சகல துறைகளுந்துரிதமாக முன்னேறி நன்மை விளைந்தது.
கிறீன் வைத்தியர் வகுத்த வழியைத் தொடரும் மன விழிப்பு அன்று நம்மவர்க்கிருந்து, அரசியற் சூழலும் அதரவு நல்கியிருந்தால், இன்று நமது நாட்டின் பொருளாதார நிலையும் அறிவியல் மேன்மையும், மொழி வளமும் முற்றாய் வேறாக இருந்திருக்கும் என்பது மிகத் தெளிவாகின்றது.

Page 28
48 ( ) மருத்துவத் தமிழ் முன்னோடி
வைத்திய சேவையை ஆரம்பித்த காலத்திலேயே டாக்டர் ஸ்கடர், சுதேசிகள் சிலருக்கு வைத்தியங் கற்பித்தாரென முன்பே குறிப்பிட்டேன். அப்பொழுதுமுதல், சுதேசிகள் மேனாட்டு வைத்தியமுங் கற்கும் வாய்ப்பு ஏற்பட்டதாயினுங் கற்கும் மொழி ஆங்கிலமாகவேயிருந்தது. யாழ்ப்பாண மக்களுடன் கூடி வாழ்ந்த கிறீன் வைத்தியரே, சமுதாயத்தில் மேனாட்டு வைத்தியமும் விஞ்ஞானமுந் தமிழிற் பரவினாற்றான், மக்கள் உண்மைப் பயனடைவர் என நம்பினார். இந்த எண்ணங் கொண்டபின் தாம் எண்ணித் துணிந்த கருமத்தை நிறைவேற்றத் தமது ஆற்றலை முற்றாகப் பயன்படுத்தினார்.
விரைவிலே, தமிழில் விஞ்ஞானந் தரும் முயற்சியில் கிறீன் வைத்தியர் ஈடுபட்டார். 1850 ஆம் ஆண்டு, தமிழில் விஞ்ஞானந் தரும் ஆரம்ப முயற்சியில் அடியெடுத்து வைத்தபோது, கிறீன் வைத்தியர் தமது மனதைத் திறந்து கூறியதை ஈண்டு நினைவூட்டல் பொருத்தமானதாகும்.
f "நான் மேற்கொண்டுள்ள இம் முயற்சியானது, தமிழில் மேனாட்டு வைத்தியம் பரவ ஓர் அத்திவாரமாகவும் ஆரம்பமாகவும் அமைதல் வேண்டுமென விரும்புகின்றேன்."
இவ்வண்ணம் ஆசைகொண்ட வைத்தியர், தம்மிடம் வைத்தியங் கற்றவர்களுள் திறமைமிக்கவர்களையெல்லாம் விசேட பணிக்கமர்த்திச் செயலில் ஈடுபடச் செய்தார். ஆங்கிலத்தில் அவர்கள் கற்ற விடயங்களைத் தமிழில் எழுதுமாறு பணித்துத் தாமுந் தமது தமிழறிவுக்கெட்டிய
f Life and Letters of Samuel Fisk Green, M.D., 1891. Compiled by Ebenezar Cutler p. 75.

தமிழில் விஞ்ஞானம் ( ) 49
அளவிலே தமிழில் விடயங்களை எழுதினார். பின், அவர் களின் மொழிபெயர்ப்புப் பிரதிகளுடன் தமது தமிழ்ப் பிரதி களை ஒப்பிட்டுச் சரிபார்த்தார். இத்தகைய பரிசோதனைகள் மூலம், பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்களைத் தமிழிற் பிழையின்றித் தர அத்திவாரமிட்டார்.
முதன்முதலில் மொழிபெயர்ப்புக்கென எடுத்த நூல், டாக்டர் கல்வின் கற்றர் இயற்றிய அங்காதிபாதம் ஆகும். இம் முயற்சி 1851 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. மொழி பெயர்ப்பதற்கு ஆரம்பித்தகாலை, அமரிக்காவிலிருந்த தமது சகோதரிக்குக் கிறீன் வைத்தியர் மேல்வருமாறு கடிதம் எழுதினர். 'இவ் வேலை மிகவுங் கடினமானதும் நாட்படக் கூடியதுமாகுமாயினும் மிக்க கவர்ச்சியுமுடையதுமாகும். இதனாற் பெறும் பலாபலனிலே, இப்போது செலவிடுஞ் சத்திக்கு ஏற்ற பிரதியுபகாரத்தையும் நாம் அனுபவித்தல் கூடும்."
இந்த நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்ட மொழி பெயர்ப்பை ஆறுமாத காலத்திலே நிறைவேற்றினார், கிறீன் வைத்தியர். மொழிபெயர்ப்பு முடிந்ததும், வைத்தியர் அவர்கள் கொண்ட மகிழ்ச்சிக்கு ஈடேயில்லை. 1852 ஆம் அண்டு அந்நூல் அச்சுக்குத் தயாராகவிருந்த போது, தமது சகோதரிக்குப் பின்வருமாறு எழுதினார் :
f 'எனது ஆறுமாத கால முயற்சியில் நான் இரு பலன்களைப் பெற்றுவிட்டேன். நல்லதோர் விடயத்தைத்
i Anatomy, Physiology and Hygiene by Dr. Calvin Cutler
f Life and Letters of Samuel Fisk Green, M.D., page 86.

Page 29
50 ( ) மருத்துவத் தமிழ் முன்னோடி
தமிழிற் சேர்த்ததொரு பலன். தமிழில் எழுதும் அநுபவம் பெற்றது இரண்டாவது பலன். இவ் விடயத்திற் குறிப்பாக எமக்கிருந்த ஆர்வத்தாலே, மிகவும் அக்கறையுடன் எனது பணியைக் கவனித்தேன். குறிக்கோளின்றித் தமிழைக்கற்பதிலும் பார்க்க ஒரு நோக்கத்துடனே கவனமாகத் தமிழை அணுகி நல்ல அநுபவம் பெற்றுள்ளேன்."
இக் குறிப்பும் எமக்கு நல்லதோர் பாடமாக அமைகிறது. புதிய துறையொன்றிலே பூரணத்துவம் பெறல் வேண்டு மாயின், முயன்று ஓர் சாதனையை நிலைநாட்டி அநுபவம் பெறல் அவசியமாகும். நீரின் வெளியே நின்று நீந்தக் கற்ற லென்பது முயற்கொம்பாகும். பஞ்சணையிலிருந்தவாறு ஆக்க முயற்சிகளுக்குப் பாதகமான கருத்துக்களைக் கூறுவது தர்மமாகாது; பயன்தரு செயலுமாகாது. தமிழில் விஞ்ஞானங் கற்பிப்பதற்கு வல்லுநர் எங்கே? புத்தகம் எங்கே? இது முடியுமா? என்றெல்லாம் ஐயப்பாடுகளை எழுப்புதல், ஆக்க வேலைக்கு ஆதரவு தரும் பணியன்று. எண்ணித் துணிந்து திடசித்தத் துடன் முன்னேற்றப் பாதையிலே அடியெடுத்து வைத்தால் ஆற்றலும் வெற்றியுந் தாமாகவே வந்து சேரும்.
எந்த ஒரு இலட்சியத்தை எய்துவதற்கும் முதலிலே திட்டமும் முயற்சியும் வேண்டும். திட்டம் அமைத்துத் திடமனதுடன் அதற்கமையப் பணிபுரிதல் வேண்டும். அவ் வண்ணம் பணிபுரியும் வேளை, நமது முன்னேற்றத்தையும் விருத்தியையும் நாமே காலத்துக்குக் காலம் மட்டிடல் இயலும். எந்தச் சந்தர்ப்பத்தில் எத்தகைய இடையூறுகள், தவைகள் குறுக்கிடுமென அநுபவத்தால் உணர்ந்து தீர்க்க தரிசனத்துடன் செயலாற்றல் கூடும். முதன் முயற்சியும்

தமிழில் விஞ்ஞானம் ( ) 51
அதனாற் பெறும் அநுபவமும் அடுத்தடுத்த முயற்சிகளுக்கு வித்திட்டு முன்னேற்றத்துக்குப்பாதை வகுக்கும்.
1852 ஆம் ஆண்டிலே அச்சுக்குத் தயாராகவிருந்த கிறீன் வைத்தியரின் அங்காதிபாதம், விரைவில் அச்சுவாகனம் ஏற்றப்பட்டது. அந்நூலிற் பல பிரதிகள் அனுப்புமாறு தென்னிந்தியாவிலுள்ள திருநெல்வேலியிலிருந்து வேண்டு கோளொன்று வந்தது. இதனால், கிறீன் வைத்தியர் பெருமகிழ்ச்சி அடைந்தார். தமது சேவை அயல்நாட்டுத் தமிழரிடையேயும் பரவுதலைக் கண்டு பெருமிதமடைந்தார். தக்க சமயத்திலேயே தாம் தமிழில் விஞ்ஞானம் பரப்ப முயலுவதாகவும், தாம் வாழ்ந்த சமுதாயத்துக்கு அத்தகைய சேவை தேவையென்பதும் உறுதி செய்யப்பட்டதாகக் கிறீன் வைத்தியர் கருதினார். எனவே, காலத்தினாற் செய்த சேவை யென்றே தமது சேவையைக் கருதி முழு நேரத்தையுங் கவனத்தையும் இத் துறையிற் செலுத்தினார். அதனால், f 1855 ஆம் ஆண்டிலேயே தம் மாணவருக்குத் தமிழ் மொழிமூலம் மேனாட்டு வைத்தியங் கற்பிக்க ஆரம்பித்தார். பரீட்சார்த்த முயற்சி என்பதை பரீட்சார்த்தமாக வலியுறுத்துதல் வேண்டும்.
இத் துணிகரமான முயற்சி இன்றைய சமுதாயத் தினருக்கு நல்லதோர் எடுத்துக்காட்டாகும். உயர் வகுப்பு களிலே தமிழைப் போதனா மொழியாகக் கொண்டாற் கல்வியின் தரங் குறைந்துவிடும் என்றதோர் காரணத்தைக் காட்டி, ஆங்கிலத்தையே போதனா மொழியாக நிலைநிறுத்த முயலும் பலரும், அமரிக்க நாட்டவரான கிறீன் வைத்தியர்,
... t Life and Letters.......... Page 114.

Page 30
52 மருத்துவத் தமிழ் முன்னோடி
தமிழ் மொழிமீது கொண்ட நம்பிக்கையை அறிதல் வேண்டும். இன்றைய நவீன விஞ்ஞானக் கருத்துக்களைத் தெளிவாகக் கூறுந் திறமை தமிழ் மொழிக்கில்லை எனக் கூறி, எமது தமிழ் மொழியின் ஆற்றலைக் குறைத்து மதிப்பிடுவதை நிறுத்துதல் வேண்டும்.
அப்படியாயின், மேற்கு நாடுகளிலே வளர்ந்துள்ள மேன்மைக் கலைகளையெல்லாஞ் சொல்லுந் திறமை தமிழுக்கு இன்றுண்டா? என்ற கேள்வி இயல்பாகவே எழுகின் D.g.
மொழி என்பது கருத்துப் பரிமாறுஞ் சாதனமாகும். எக் கலையையுங் கருத்தையும் எடுத்துக் கூறுந் திறமை எந்த மொழிக்குமுண்டு. ஆனால், அத் திறமை காலத்துடன் விருத்தி செய்யப்படவேண்டியதென்பதையும் மனதில் நிறுத்துதல் வேண்டும். இன்றுள்ள நிலையில், நவீன விஞ்ஞானத்தை யெல்லாந் தெளிவாகக் கூறும் விருத்தியடையாத மொழி யாகவே தமிழ்மொழி விளங்குகிறது. பல நூற்றாண்டுகளாகத் தூங்கியிருந்த துறையொன்றிலே இரவோடிரவாகத் திறமை பெறல் கூடுமோ? தமிழ் மொழிமூலங் கருத்துக்களைப் பரிமாற நம்மவர் ஆரம்பித்தாற்றானே நமது மொழியும், நடைபோடும் உலகோடு நடைபோட்டு முன்னேறிச் செல்லல் கூடும்! ஆங்கிலேயரின் ஆட்சி தொடங்கிய நாள்முதல் ஆங்கில மொழியை வீட்டு மொழியாகவுங் கொள்வதிற் பெருமை கண்ட சமுதாயம், தமிழ் மொழியின் வளர்ச்சியிலே கருத்துச் செலுத்தவில்லை. இன்றுள்ள நாம், தமிழிலே விஞ்ஞான அறிவை வளர்ப்பதற்கு ஆரம்பித்தால், விஞ்ஞானக் கருத்துக் களை எடுத்துக் கூறுந் தேவை நம் மொழிக்கும் ஏற்படும். இத்

தமிழில் விஞ்ஞானம் 53
தேவையைத் தீர்ப்பதற்கு முயற்சி எடுக்கப்பட்டால், அநுபவத் தின் மூலம் அத் தேவை தீர்க்கப்படும். அதனால் மொழி வளம்பெற்று விருத்தியடையும். இவ் விருத்தி மேலும் மொழி விருத்தியடைவதற்கு அத்திவாரமாகவும் ஆரம்பமாகவும் அமையும். இடைக் காலத்திலே, மொழிவளம் போதாதெனக் கருதினும், பண்டைப் பெருமையும் வளமும் நிறைந்த தமிழ் மொழி விரைவில் விருத்தியடைந்து தேவையை நிறைவேற்றும் என்பதிற் சந்தேகமில்லை.
இன்று ஆங்கில மொழி சிறந்த வளமுடைய மொழியாக விளங்கக் காரணம் என்ன? விஞ்ஞான விருத்தி முற்றாக ஆங்கிலேயரின் முயற்சியாற்றான் ஏற்பட்டதா? அவர்களது நாட்டிலேதான் விஞ்ஞான அறிவு முற்றும் வளர்ந்ததா? இல்லை மேற்கு நாடுகளிற் பரவலாக வளர்ந்த விஞ்ஞான அறிவை, ஆங்கிலேயர் விரைந்து தமது நாட்டிற்குக் கொண்டுசென்று தமது மொழியிலே பரிமாறத் தொடங்கிய பதினாறாந் நூற்றாண்டு முதலே, மேற்கு நாடுகளில் வளர்ந்த விஞ்ஞானம் ஆங்கில மொழியிற் பேசப்பட்டது; எழுதப் பட்டது; மக்களுக்கும் வழங்கப்பட்டது. நாளடைவில், ஆங்கில மொழி அறிவியற் கலைகளை எடுத்துக் கூறுஞ் சிறந்த மொழியாக விளங்கிற்று. விஞ்ஞான அறிவும், பொதுமக்களின் சொத்தாகியது. ஆயின், இன்றும் ஆங்கில மொழியிற் கல்வி பயின்று விஞ்ஞானப் பட்டம் பெறுவதற்கு ஜெர்மன், பிரஞ்சு ஆகிய மொழிகளைக் கற்கவேண்டியதையும் நாம் மறந்து விடல் கூடாது! ஏன், இற்றைநாளில், சோவியற்று நாட்டவரின் மொழியையும் சீன தேசத்தவரின் மொழியையுங் கூடக் கற்றாலல்லவா நவீன விஞ்ஞானத்தை முற்றாக அறிதல் கூடும்! M

Page 31
54 ( ) மருத்துவத் தமிழ் முன்னோடி
ஆக, தரங்குன்றாக் கல்வி பெறுதற்கு உயர் வகுப்புகளிலே ஆங்கிலத்தைத் துணை மொழியாகக் கற்றல் நியாயமானது மிக அவசியமானதுங் கூட ஏன், விஞ்ஞானந் துரிதமாக வளரும் பிறநாட்டு மொழிகளைப் பயில்வதும் நன்மையே தருமன்றோ! ஆனால், ஆங்கிலமே தொடர்ந்து போதனா மொழியாக இருத்தல் வேண்டுமெனக் கருதுதல் பொருத்தமற்றது. இன்று நாம் தமிழைப் போதனா மொழியாக்கிவிட்டாற் காலப் போக்கிலே - நூறு ஆண்டு களின் பின்பாயினும் - தமிழ் மொழியும் விஞ்ஞான அறிவைத் தரங்குறையாமற் கூறுந் திறமை பெறுமென்பது உறுதி பிற மொழிகளுக்குத்தான் இறைவன் வரமளித்துள்ளான் என மனவிருளில் உலைவது விவேகமாகாது.
விஞ்ஞானக் கல்வியைத் தமிழ்மொழியிற் கற்பித்து, தமிழில் விஞ்ஞானம் வளர்வதற்கு அத்திவாரமிட்டுப் பொது மக்களிடையேயும் அவ்வறிவைப் பரவலாகப் பரப்பும் அதே தருணத்தில், முன்னேறிச் செல்லும் உலகோடு கூடிச் செல்வ தற்கும், தரங் குன்றாததும் பின் தங்காததுமான அறிவைப் பெறுவதற்கும், துணை மொழியாக ஆங்கிலத்தை நாடலாம். அதுவே இன்றைய தமிழ்ச் சமுதாயத்தின் தலையாய கடனாகும். மனவொளியுடன் அணுகினால், கிறீன் வைத்தியர் வகுத்ததும் இதே பாதையென்பதைத்தான் காணலாம்.

6. கிறீனின் சான்றாண்மை
"கடன் என்ப நல்லவை எல்லாம் கடன் அறிந்து சான்றான்மை மேற்கொள் பவர்க்கு
முப்பால்
பணிசெய்தல் என் கடமை என்ற உணர்வுடன் செயலாற்றிய கிறீன் வைத்தியர், பல குணங்களாலும் நிறைந்து விளங்கினார் என்பதற்கு அன்னாரின் வாழ்க்கை யிலே நிகழ்ந்த சம்பவங்கள் சான்று பகர்கின்றன. எடுத்த கருமத்தைச் செவ்வனே நிறைவேற்றுவதற்காக எத்துணை மனத் துணிவுடனும் ஆர்வத்துடனுஞ் செயலாற்றினார் என்பதை ஈண்டு ஆராய்வோம்.
வைத்தியக் கல்வியைத் தமிழ்மொழிமூலங் கற்பிக்க ஆரம்பித்தவுடன், தமிழிலே பல நூல்கள் வெளியிடவேண்டிய அவசியமும் ஏற்பட்டது. இடைக்காலத் தேவையை நிறைவேற் றுவதற்கு, ஆங்கில நூல்களிற் படித்த விடயங்களைத் தமிழிற் குறிப்பெழுதி, ஓர் அடி முன்னேறினார். வைத்தியக் கல்விக்குத் தேவையான கலைச்சொல் அகராதி ஒன்றும், ஆங்கில - தமிழ் அகராதி ஒன்றுந் தயாரித்தார். தொடர்ந்து, வைத்தியக் கல்விக்கு வேண்டிய நூற்றொகுதிகள் முழுவதையுந் தமிழில் மொழிபெயர்ப்பதற்குத் திட்டந் தயாரித்தார்.

Page 32
56 ( ) மருத்துவத் தமிழ் முன்னோடி
இத்துணை ஆர்வத்துடனும் முன்யோசனையுடனும் படிப்படியாக முன்னேறத் திட்டமிட்ட வைத்தியர், அங்காதிபாத நூலின் திருந்திய பதிப்பொன்றை, 1856 ஆம் ஆண்டிலே வெளியிட எண்ணினார்.
அதிக பக்கங்களும் பல படங்களுங்கொண்ட இந்நூலை அரசாங்கச் செலவில் அச்சிடுவதற்கு நிதியுதவி கோரி இலங்கைத் தேசாதிபதிக்கும் ஒரு கடிதம் எழுதினார்.
மாதங்கள் பல சென்றும் பதில் கிடைக்கவில்லை. பதில் வரத் தாமதமேற்பட்டதால், எத்தகைய பதில் வருமெனவுங் கிறீன் வைத்தியர் எதிர்பார்த்தார். எனவே, அன்று சென்னையில் நற்பதவியிலிருந்த திரு. ஹன்ற் என்பவர் வாயிலாக அந் நூலைச் சென்னையிலேயே அச்சிடுவித்தார். சென்னையிலிருந்த தென்னிந்தியக் கிறித்துவப் பாடசாலைப் புத்தகச் சங்கம், மூவாயிரம் பிரதிகளைப் பணங் கொடுத்து வாங்கி உதவியது. அமரிக்க - இலங்கை மிசன், ஆயிரம் பிரதிகளை வாங்கியது. அதனாற் கைம்மாறற்ற சேவைக்குத் தேவையான பண உதவிகிட்டியது.
இதற்கிடையில், தேசாதிபதியின் பதிலும் வந்தது. f அமரிக்க மிசன் நடைமுறையிற் கொண்டிருக்கும் ஆங்கிலந் தவிர்க்குங் கொள்கை, பேராபத்தானதுந் தற்கொலைக்கு ஒப்பானதுமாகும்" என்று தேசாதிபதி கருதி, தமிழில் நூல் வெளியிடுவதற்கு எவ்வித உதவியும் அளிப்பதற்கு மறுத்துவிட்டார்.
+ Life and Letters....... P.126.

கிறீனின் சான்றாண்மை 57
குடியேற்ற நாட்டரசினர், இத்தகைய கருத்துக் கொண்டிருந்தமை அவர்களைப் பொறுத்தளவில் முற்றும் நியாயமானதென்றே கூறல் வேண்டும். மக்கள் கல்வியறிவு பெற்று அறிவுடையோராகி விட்டால், அடிமைகளாக வாழ்வதற்கு இணங்க மாட்டார்கள்; அடிமைத் தளையை அறுத்தெறியவே முயல்வர். ஆதலால், மக்களுக்கு அறிவொளி யேற்றும் பணி, அவ்வரசின் தற்கொலையாக முடியும் என்ப துண்மையே. மக்களை அடிமைகளாக வைத்து, குடியேற்ற நாட்டிலிருந்து தமது ஆதிக்கஞ் செலுத்துவதற்கு எண்ணிய அன்றைய அரசு, பிறிதொரு கருத்தைக் கொள்ளுமென நாம் எதிர்பார்த்திருக்க முடியாது. மக்கள் சுதந்திரமாகவும் சுபீட்ச மாகவும் வாழ்ந்து பிறவிப் பயனைப் பெறல் வேண்டுமென்ற பொதுநலன் விரும்பிகளன்றோ மக்களுக்காகப் பணியாற்ற விழைவர்!
நமது நாட்டிலே கிறித்துவ சமயத்தைப் பரப்புதற்கு வந்த மிசன் ஊழியரான கிறீன் வைத்தியர், அரசாங்க உதவியோ நல்லாசியோ கிட்டாதபோதிலுந் தமது தமிழ்த் தொண்டை விட்டுவிடவில்லை. 1856ஆம் ஆண்டிலே,*பிரசவ வைத்திய நூலொன்றை எழுதி முடித்து, மானிப்பாயில் இருந்த மிசன் அச்சகத்தில் அச்சிடக் கொடுத்தார். இந்நூல், 1857 ஆம் ஆண்டிலே தயாராகியது. அந் நாட்களில் தமிழில் வெளியிடப் பட்ட மேனாட்டு வைத்திய நூல்களைச் சுதேச வைத்தியருட் சிலர் ஆவலுடன் படித்ததை அறிந்து, கிறீன் வைத்தியர் மேலும் உற்சாகம் அடைந்தார்.
* Obstetrics

Page 33
58 ( ) மருத்துவத் தமிழ் முன்னோடி
இந்நிலையில், யாழ்ப்பாணத்திலே பத்தாண்டு சேவை முடிவுற்றதால், கிறீன் வைத்தியர் தாயகந் திரும்புங் காலம் வந்தது. மேல் நாட்டிலே வளர்ந்த வைத்திய முறையைத் தமிழிலே வேரூன்ற வைப்பதற்கு நல்லதோர் அத்திவாரமிட விரும்பிய கிறீன் வைத்தியர், இவ் வைத்திய முறையை நன்கு பயின்று பயிற்சி பெற்ற தமிழ் வைத்தியர்களை உருவாக்கு வதற்கு ஆசைப்பட்டாராயினும், இந்த இலட்சியத்தை நிறைவேற்றுமுன், 1857 ஆம் ஆண்டு ஒற்றோபர் மாதந் தாயகந்திரும்பினார்.
தமிழ் மக்களையும், தமிழ் நாட்டையும் விட்டுச் சென்றபோதிலும், கிறின் வைத்தியரின் இலட்சியம் மாற்ற மடையவில்லை; தமிழார்வங் குன்றவில்லை. மேனாட்டிலே விருத்தியடைந்தது போன்று, தமிழ் மொழியிலும் விஞ்ஞானம் விருத்தியடைதல் வேண்டுமெனத் தொடர்ந்தும் உழைத்தார். விடுமுறைக்காக அமரிக்க சென்ற வைத்தியர், தமது நாட்டிலிருந்துந் தமிழ்த் தொண்டாற்றும் பணியைக் கைவிடவில்லை.
தாயகத்தில் இருந்தபோது, சிறந்த வைத்திய விஞ்ஞான நூல்களைத் தெரிவுசெய்து, தமிழில் மொழிபெயர்க்கும் ஒழுங்குகளை மேற்கொண்டார். புதிய நூல்களையெல்லாம் படித்துத் தமிழில் எழுதி வெளியிட முயன்றார். தமிழில் நூல்களை வெளியிடத் தேவையான் நிதியையும் அந் நாட்டிலேயே சேர்ப்பதற்கு முற்பட்டார். அதற்காகப் பல சுற்றுநிருபங்களைத் தயாரித்துப் பொது நிறுவனங்களுக்குந் தனிப் பிரமுகர்களுக்கும் அனுப்பி, நிதியுதவி கோரினார். "தவறான வைத்திய முறையை நீக்கி நல்லதோர் உறுதியான

கிறீனின் சான்றாண்மை 59
வைத்திய முறையை நிலைநாட்டுவதும், இலட்சாதிலட்சம் தமிழ் மக்களுள்ளே நல்ல வைத்திய அறிவைப் பரப்புவதுமே” தமது நிதானமான நோக்கமெனத் தம் அமரிக்க மக்களுக்கு அறிவித்து, அவர்தம் ஆதரவை வேண்டி நின்றார். தாம் தமிழ்மொழியில் வெளியிடக் கருதிய நூல்கள் தரங் குன்றாத நவீன அறிவைப் பரப்புதல் வேண்டுமென விரும்பி, 1858 ஆம் 1859 ஆம் ஆண்டுகளிலே புதிய வைத்திய நூல்களைத் தமிழில் மொழிபெயர்ப்பதற்கெனத் தெரிவுசெய்து, நியூயோர்க்கில் இருக்கும்பொழுதே அந்நூல் உரிமையாளரின் உத்தரவையும் பெற்றுக்கொண்டார். மேலும் அந் நூல்களுக்குத் தேவை யான படங்கள், பட அச்சுகள் ஆகியனவற்றையும் அவர்க ளிடம் பெற்றுக்கொண்டார்.
இவ்விடத்தில் இன்னொரு விடயத்தைக் குறிப்பிடல் பொருத்தமானதாகும். இன்று தமிழில் வெளியிடப்படும் விஞ்ஞான நூல்கள் பற்றிய விடயமே அது. தரங் குன்றாத அறிவைப் பெறுவதற்கும் நவீன முறைகளைப் பரப்புவதற்கும் பழைய நூல்களை மொழிபெயர்ப்பதுந் தழுவி எழுதுவதும் உடனடியாகப் பயன்படமாட்டா. நமது நாட்டில் மொழி பெயர்க்கப்பட்டு உலாவும் பல நூல்கள் மிகப் பழையன. பல்கலைக்கழகப் பட்டதாரி மாணவரின் தேவைக்காக மொழிபெயர்க்கப்படும் நூல்களுட் சிலவும் மிகப் பழைய காலத்து நூல்களாகவே காணப்படுகின்றன. தரங் குன்றாத கல்வியை நிலைநாட்டுவதற்கு, முதலிலே நவீன நூல்களைத் தேடி மொழிபெயர்ப்பதே விரும்பத்தக்கதாகும். எந்நூலை மொழிபெயர்த்தாலும், அது தமிழில் விஞ்ஞான இலக்கியம் பரவுவதற்கு உதவுமெனினும், நவீன நூல்களே முதலிடம் பெறுதல் வேண்டும் என்பதையும் மறந்துவிடல் கூடாது.

Page 34
60 ( ) மருத்துவத் தமிழ் முன்னோடி
நெஞ்சில் நிறைந்த இலட்சியத்துடன் ஐந்து ஆண்டு காலம் விடுமுறையைக் கழித்த கிறீன் வைத்தியர், 1862 ஆம் ஆண்டு ஒற்றோபர் மாதம் மீண்டும் தம் பாரியாருடன் யாழ்ப்பாணம் வந்து சேர்ந்ததும் தமிழில் விஞ்ஞானந் தரும் முயற்சி மேலும் வலுவடைந்தது. அவ் வேளையிலே தென் னிந்தியாவில், மலையாள மொழியில் அங்காதிபாத நூல் ஒன்றை வெளியிடுவதற்குக் கிறீன் வைத்தியரின் தமிழ் மொழி பெயர்ப்பை அடிப்படையாகக் கொள்ள அனுமதி வேண்டிக் கடிதம் ஒன்று வந்தது. இவ் வேண்டுகோள் வந்ததும், தமது முயற்சி அயல் நாட்டு அறிஞரின் அங்கீகாரத்தைப் பெறுகிற தென மன நிறைவு அடைந்தார்.
இவ்வண்ணம் பெயரும் புகழும் பரவத் தொண்டுசெய்த கிறீன் வைத்தியருக்கு, 1863 ஆம் ஆண்டிலே பொறுப்பு அதிகரித்தது. இராணுவ வைத்தியரிடமிருந்து யாழ்ப்பாண வைத்தியசாலைப் பொறுப்பை ஏற்குமாறு அரசினர் அழைப்பு அனுப்பினர். அதை ஏற்பதா மறுப்பதா என முதலிலே சற்றுத் தயங்கினார், கிறீன் வைத்தியர், மூன்றுமாத காலம் பரீட்சித்துப் பார்ப்பதற்கு உடன்பட்டு, பின் தொடர்ந்து அச் சேவையையும் மேற்கொண்டார்.
அரசாங்க வைத்தியசாலைப் பொறுப்பு, தமது புத்தகத் தயாரிப்பு வேலையைப் பாதிப்பதை விரைவிலே கிறீன் வைத்தியர் உணர்ந்தார். வேலை அதிகமாக இருந்தபடியால், ஒய்வுநேரமே கிடைப்பது அரிதாகவிருந்தது. பலதரப்பட்ட வேலைகளையும் வைத்தியசாலையிற் கவனிக்கும் அதே வேளையில், வைத்தியங் கற்பிப்பதும் தமிழில் நூல்கள் வெளியிடுவதுந் தடையின்றிச் செவ்வனே நடைபெறல்

கிறீனின் சான்றாண்மை 61
வேண்டுமெனவும் மனப்பூர்வமாக விரும்பினார். எனவே, தம்மிடம் வைத்தியங்கற்றுச் சிறந்த பயிற்சியும் பெற்ற சிலரின் உதவியுடன், நூல் வெளியிடும் பணியை நிறைவேற்றுவதற்குத் திட்டமிட்டார்.
இந்த நோக்கத்துடன், தம்மிடம் படித்தவர்களை அழைத்து, "வைத்தியங் கற்றுப் பட்டம் பெற்றுள்ள சிலர் பொதுநலன் கருதிச் சிறந்த வைத்திய நூல்களைத் தமிழில் எழுதித் தயாரித்து வெளியிடுவதற்கு முன் வந்து உழைப்ப ரென நான் எதிர்பார்க்கிறேன்" என்று தமது ஆசையை வெளியிட்டார்.
கிறீன் வைத்தியரின் இந்த ஆசையை நிறைவேற்றச் சிலர் முன்வந்தனர்.ஜே. ஏ.எவட்ஸ் என்பவர்,* வைத்திய கைவாகடம் என்னும் நூலையும், ய.டன்வதர் என்பவர், t இரண வைத்தியம் என்னும் நூலையும் எழுத ஒப்புக் கொண்டதால், கிறீன் வைத்தியர் ஒரளவு ஆறுதல் பெற்றார்.
கிறீன் வைத்தியரின் சான்றாண்மையைத் தெளிவாக்கு வதற்கு இன்னும் இரண்டொரு உதாரணங்களை எடுத்துக் காட்டுவது நலமென எண்ணுகிறேன். மக்கள் நல்லறிவு பெற்று விருத்தியடைந்து நாகரிகமுற வேண்டுமெனப் பாடுபட் டுழைத்த வைத்தியர், கருத்து முன்னேற்றத்தையே தமது இலட்சியமாகக் கொண்டிருந்தார். கருவிகளின் முன்னேற் றத்தால் உண்மை வளர்ச்சி பெறல் இயலாது, அது வளர்ச்சியு மல்ல என்பதை அன்னார் தெளிவாக எடுத்துக் கூறிய சந்தர்ப்பங்களும் உள.
* Physician's Vade Mecum t The Science and Art of Surgery

Page 35
62 ( ) மருத்துவத் தமிழ் முன்னோடி
மேனாட்டவரின் வருகையின்பின், நமது நாட்டவரின் நடையுடை பாவனைகளில் ஏற்பட்ட மாற்றத்தை ஈண்டு விபரித்தல் தேவையில்லை. தேசிய உணர்வு அற்றவர் களாக்வும் நடையுடை பாவனைகளில் மேனாட்டவரைப் பின்பற்றுபவர்களாகவும் நின்ற தமிழரைக் கண்டு, 1864 ஆம் ஆண்டிலே, கிறீன் வைத்தியர் யாது கருதினார் என்பதை இன்றைய சமுதாயமும் அறிதல் நன்று!
f வேட்டி காற்சட்டையாஃபும், சால்வை மேற்சட்டை யாகவும், தலைப்பாகை தொப்பியாகவும், தாவர போசனம் மாமிச போசனமாகவும், குடிசை வீடாகவும் மாற்றமடைகின்றன எனவே நான் எண்ணுகிறேன். கிறித்துவர் களாகாமல் தேசியத்தை இழப்பவர்களையே நான் காண்கின்றேன். ஐரோப்பியரின் நடையுடை பாவனைகளைப் பின்பற்றும் இந்துக்களைவிடக் கிறித்துவ இந்துக்களையே நான் காண ஆசைப்படுகிறேன்."
ஆம் கிறித்துவராதல் என்பது தேசியத்தை இழத்தல் அல்ல என்பதைத் தெளிவாகக் கூறிய கிறீன் வைத்தியர், கருவிகளின் முன்னேற்றம் அல்லது மாற்றம், வெறும் போலி என்பதையுந் தேவையற்றது என்பதையும் உணர்த்தினார். தேசியத்தை இழக்காமலே உள்ளத்தாற் கிறித்துவராதல் வேண்டும் என்பதையே அவர் வற்புறுத்தினார்.
அது மாத்திரமல்ல; தமிழில் மேனாட்டு வைத்தியங் கற்பிப்பதன் மூலம் விஞ்ஞானந் தரும் நன்மையை ©೧uT மக்களும் அனுபவிக்கக் கூடிய நிலையை உருவாக்குவதற்கும்
f Life and Letters......Page 216.

கிரீனின் சான்றாண்மை 63
வைத்தியர் விரும்பினார். நோயாளியைப் பார்ப்பதற்கு அழைப்பு வரும்பொழுது, குதிரயுைம் வண்டியும் எதிர்பாராமல், அதிகம் பணத்தை நினையாமல், தேசிய உடையுடனே கால்நடையாகச் சென்று சேவை செய்வதற்கு உடன்படும் வைத்தியர்களை உருவாக்கலாமென நான் எதிர்பார்க்கிறேன்." எனவே, மக்களின் நல் வாழ்விலும் ஓவாப்பிணியை ஒட்டுவதிலுமே கிறீன் வைத்தியர் கண்ணுங் கருத்துமாக இருந்தார்! சமயத் துறையிலே ஈடுபட்டு உழைத்த இப் பெரியார், "உன்னைப்போல உன் அயலானையும் நேசிப் பாயாக’ என்ற கிறித்துவ இலக்கணத்துக்கு இலக்கியமாக வாழ்ந்து, கிறித்துவைப் பின்பற்றுதலே உண்மைக் கிறித்துவம் , என்பதை உணர்த்தினார்.
அமரிக்காவிலே பிறந்து வைத்தியக் கல்வியை முடித்த சமுல். பி. கிறீன் வைத்தியர் தமது வாழ்நாள் முழுவதையுமே தமிழ் மக்களுக்காக அர்ப்பணித்தார் என்றால் மிகையாகாது. 1847 ஆம் ஆண்டு தமது 25 ஆவது வயதாரம்பத்தில் யாழ்பாணத்திற் சேவையை ஆரம்பித்தார். அவரது பிறப்பு முதல் இறப்பு வரை, காலக் குறிப்பு:
1822 ஒற்றோபர் மாதம் 10ஆம் திகதி: பிறப்பு
1847-1857 : யாழ்ப்பாணத்தில் வைத்தியம், வைத்தியக்
கல்வி, தமிழில் விஞ்ஞானம் தரும் முயற்சிகள்.
1858-1862 : ஐந்தாண்டு காலம் அமரிக்காவில். உடனலக் குறைவால் சற்றுச் சலனமுற்றும் தமிழில்

Page 36
64 ( ) மருத்துவத் தமிழ் முன்னோடி
மேனாட்டு வைத்தியம் பரப்புதற்கு வேண்டிய முயற்சிகளில் ஈடுபடவும் தவறவில்லை.
1863-1872 : இரண்டாவது முறையாக யாழ்ப்பாணம் வந்து தாம் முன்பு ஆரம்பித்த தமிழில் விஞ் ஞானம் தரும் முயற்சியைத் தொடர்ந்தார்.
1873-1883 அமரிக்கா திரும்பியும், அங்கும் தமிழ் நூல்களைத் திருத்தியும் பார்வையிட்டும் அச்சுவாகன மேற்ற வழிப்படுத்தினார்.
1884 மே மாதம் 28ஆம் திகதி இறையடி எய்தினர்.
யாழ்ப்பாணத்திற்கு இரண்டாவது முறையாக 1862இல் வரும்போது தான் திருணமாகி வந்த அவர்க்கு நான்கு பிள்ளைகள் யாழ்ப்பாணத்திலேயே பிறந்து வளர்ந்தனர். யாழ்ப்பாணத்தை விட்டுக் கப்பலில் செல்லும் போது "நாம் எல்லோரும் இப் பயணத்தின் போது உலகைவிட்டுச் செல்ல நேர்ந்தால், எமது சொத்தெல்லாம் யாழ்ப்பாணக் கல்லூரி யில் மருத்துவ பீடம் ஒன்றமைக்க வழங்கப்படுவதாக" என்று பெருமனத்துடன் உணர்ச்சி ததும்ப எழுதினார். அன்னாரின் சான்றாண்மை காலத்தால் அழியும் சால்புடைத்தன்று! அது மட்டுமா? நாடு திரும்பி நோய்வாய்ப்பட்டிருந்த கடைசிக் காலத்தில், தமது நினைவுக்கல் எப்படி அமைதல் வேண்டு மெனவும் எழுதிவைத்தார்.
"எனக்கு ஒர்நினைவுக்கல் நாட்டப்படின் அது எளியதாக அமையட்டும். அதிலே பின் வரும் விபரம் பொறிக்கப்படட்டும்.

கிறீனின் சான்றாண்மை 65
SAMUEL FISK GREEN
1822 - 188.... MEDICAL EVANGALIST TO THE TANs
Jesus my All
ஆம். நினைவுக்கல்லிலும், தாம் தமிழர்க்காகவும் தமிழில் மேனாட்டு வைத்தியத்தை எழுதிச் சேவை செய்தும் வாழ்ந்த இலட்சிய வாழ்வு பிரதிபலித்தல் வேண்டும் என்ற அவரது பெருமனம், நமது மனதைத் தொடுகின்றதல்லவா?
1974 ஆம் ஆண்டு, அமரிக்க சென்ற பொழுது, கிறீனின் பரம்பரையினர், எவரையாவது சந்திக்கவேண்டும். அன்னார் நினைவுக் கல்லுக்குச் சென்று மரியாதை செலுத்துதல் வேண்டுமென ஆசைப்பட்டேன். என் ஆசையை எமது விரிவுரையாளருள் ஒருவரும் அமரிக்க வாசருமான டாக்டர் மக் ஏடெல் என்பவரிடம் கூறினேன்.
அதன் பலனாக என் ஆசை நிறைவேறியது. கெனக்ரிக் கட்டில் மேற்கு ஹாட்பட்டில் வாழ்ந்த கிறீனின் பேரர் தொமஸ் டி கிறீன் குடும்பத்தினரைச் சந்தித்தேன்.
அத்துடன், கிறீன் குடும்பத்தினரின் பாரம்பரிய மாநிலமான மசச்சூட்டில் கிறீனின் கல்லுறைத் இந்இசிக்
i 1. ) マ *- - அஞ்சலி செய்தேன். கிறீனின் ரூஃ: கல் பொறிக்கப்பட்டிருப்பதை அங்கு ச்ெல்பவர் காணலாம்.

Page 37
66 மருத்துவத் தமிழ் முன்னோடி
தமது சான்றாண்மையால், கிறீன் வைத்தியர் தமது
உதவியாளருடன் எழுதி மொழிபெயர்த்து அச்சிட்ட நூல்கள்தான் எத்தனை!
1.
10.
11.
கல்வின் கற்றரின் அங்காதிபாதம், சுகரணவாதம்
உற்பாலனம் பக் 204 1852, 1857
யோன்சயின் பிரசவ வைத்தியம் பக் 258 1857
துருவிதரின் இரண வைத்தியம் பக் 504 1867
கிரேயின் அங்காதிபாதம் பக் 338 1872
கூப்பரின் வைத்தியாகரம்’ шф 917 1872
வெல்சின் 'செமிஸ்தம்" பக் 516 1875
டால்தனின் மனுஷ சுகரணம்' பக் 590 1883
வாநிங்கின் சிகிச்சா வாகடம்" பக் 574 1884
Pharmacopoeiaofindia பக் 574 1888
மனுஷ சுகரண கலைச்சொற்கள் பக் 134 1872
அருஞ்சொல்லகராதி பக் 161 1875
இவற்றை விட, கண், காது, கை, கால், தோல், வாய்,
உடல் சுத்தமாய் இரு, வாந்தி பேதிகால உதவிக் குறிப்புக்கள் முதலிய சிறு கை நூல்களும் சிறு வெளியீடுகளும். 110 பக்கங்கள்.

கிறீனின் சான்றாண்மை 67
(இந்நூல்களில் பார்வையிடக் கூடியதாக இருந்தவை பற்றிய விபரங்கள் பிறிது அத்தியாயங்களில் உள்ளன) அன்னார் தம் வாழ்க்கையை எமது சமுதாயத்துக்கே முழுமனதாக அர்ப்பணித்தார் அன்றோ!
இத்தகையோர் தூய்மையான வாழ்க்கை வாழ்ந்தபடி யாற்றான், அன்னார் சான்றாண்மை மிக்கவராய்க் காலத்தாற் சாகாமல் ஞாலத்திற் சுடர்விடுந் தன்மையைப் பெறுகின்றார். சான்றாண்மை மேற்கொண்டு ஒழுகுபவர்களுக்கு நற் குணங்கள் யாவும் இயல்பாகவே அமைந்திருக்கும் என்ற வள்ளுவன் வாக்கு, கிறீன் வைத்தியரின் வாழ்விற் பிரதிபலிக்கின்றது.

Page 38
7. எல்லாந்தமிழ்
"எண்ணிய எண்ணியாங்கெய்துப எண்ணியார் திண்ணியராகப் பெறின்
- வாயுறை வாழ்த்து
gif இலட்சியத்தைக் கருத்திற் கொண்டவர் அதை அடைவதற்கு வாயிலாகிய வினைக்கண் gairaold உடையராயின், தாம் எண்ணியதை எண்ணியவாறே எய்துவரென்பது வாயுறை வாழ்த்து. கருத்திற் கொண்ட இலட்சியத்தை நிறைவேற்றுவதற்கு வினைக்கண் திண்மை வேண்டுமெனின், கல்வியாற் பெற்ற அறிவுடன் பெறற் கரியதாகிய உணர்வுந் தேவையாகும். அறிவொளி பெற்ற உள்ளத்திலே உணர்வும் உயிர்த்தாற்றான், உண்மைஒளி உண்டாகும். அப்பொழுதுதான், மேற்கொள்ளும் முயற்சியில் உறுதியான நம்பிக்கை ஏற்படும். இத்தகையதோர் நம்பிக்கையே தமது வெற்றிக்குக் காலாக அமைந்தது என்பது, கிறீன் வைத்தியரின் கருத்து.
கிறீன் வைத்தியர் கண்ட வெற்றிதான் என்ன? இந்த வினாவுக்கு இவ்விடத்தில் விடைகாணல் நன்று.
1866 ஆம் ஆண்டு ஒற்றோபர் மாதத்தில் கிறீன்
வைத்தியர் ஒரு செய்தியைப் பெருமையுடன் கூற முடிந்தது! தமிழிலே மேனாட்டு வைத்தியக் கல்வியைக் கற்பித்தல்

எல்லாந் தமிழ் ( ) 69
மாத்திரமல்ல, எல்லாந் தமிழ் மயமா நடத்துதலுஞ் சாலும் என்று தமிழின் திறமையை எடுத்துக்காட்டிய மாபெரும் வெற்றிச் செய்தி, அது. t இப்பொழுது எல்லா விடயங்களுந் தமிழிலே நடைபெறுகின்றன. மருந்துகளின் பெயர், நோய்களின் பெயர், இடாப்புகள், கணக்கு விபரங்கள், மருந்துக் குறிப்புகள் எல்லாந்தமிழிலே எழுதப்படுகின்றன."
மறைவாக நமக்குள்ளே பழம்பெருமை பேசுவதிற் பயன் எதுவுமே இல்லை. திறமான புலமையெனில் வெளிநாட்டார் அதை வணக்கஞ் செய்தல் வேண்டும் என்பது பெரியதோர் உண்மை. கிறீன் வைத்தியரின் புலமையை நாம் வணக்கஞ் செய்யவேண்டியவர்களாகவே இன்றும் இருக்கின்றோம். தமிழின் பெருமை குறித்துந் தொன்மை குறித்தும் பெருமிதம் அடையும் நாம், இன்றைய தேவையை உணர்ந்து, தேவைக் கேற்ப மொழி வளம் பெற வழி காண மனங்கொண்டு செயலாற்றுகின்றோமோ என்பது நம்மை நாமே கேட்டு விடை அறியவேண்டிய கேள்வி.
எல்லா வகுப்புகளிலும், பல்கலைக் கழகங்களிலுந் தாய்மொழியே போதனா மொழியாகப் படிப்படியாக அமைதல் வேண்டுமென அரசாங்கந் தீர்மானித்தபின்பும், இது முடியுமா? இது முடியாது' என்று முனகலிடையேதான் தயக்கத்துடன் நாம் அடியெடுத்து வைத்தோம். தேவையை நிறைவேற்றுந் திறமை தமிழ்மொழிக்கு உண்டு என்ற மனத்
it Life and Letters........ p. 249.
"The business is now wholly in the Tamil Language. The
Names of medicines and diseasas, the registers and books of accounts, the prescription and labels all in the vernacular."

Page 39
70 ( ) மருத்துவத் தமிழ் முன்னோடி
திண்மையுடன் செயலாற்ற முயன்றவர் சிலரே. தமிழ் மொழியில் வைத்தியம், பொறியியல், இன்னும் இவைபோன்ற மற்றும் உயர்தர அறிவியற் கலைகளைத் தெளிவாக எடுத்துக் கூறிப் பூரணத்துவம் பெறல் முடியாதென்ற மயக்க நிலையி லேயே நமது சமுதாயத்தின் பெரும்பகுதியினர் இன்றுந் துயில்கின்றனர். இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம், அறிவுடையவர்கள் எல்லோரும் உணர்வுடன் செயலாற்றும் மனத்திண்மை பெறாத குறைபாடேயாம்.
இன்றைய சமுதாயத்திலே அறிவியற் கலைத் துறைகள் பலவற்றிலும் புலமை பெற்றுள்ளவர்கள் இதுவரை காலமும் முயற்சியின்மையால் ஏற்படுத்தப்பட்ட வெற்றிடத்தைக் கண்டு மலைத்து நிற்றல் அறிவுடைமையாகாது. அவர்கள் அறிவும் அபிமான உணர்வும் இணைந்து செயற்படாததால் ஏற்பட்ட மந்த நிலையை விரைவில் மாற்றியமைக்கும் மன உணர்வு - உயிர்ப்பு. பெறல் வேண்டும். அறிவின் வாயிலாகப் பெற்ற அருஞ் செல்வம், சிந்தையில் ஒன்றிச் செறிந்து, சுயநலமற்ற பொதுநலச் செயலுக்குக் கருவாகி மன உந்தல் பெறுதல் வேண்டும்.
சமுதாயத்தில் உணர்வின்றி வாழும் அறிவுடை யோராலே தேவையான பொதுநல சேவை நடைபெற மாட்டாது. மறுதலையாக, அறிவு இல்லாதவர்கள் உணர்ச்சி பெற்றாலுந் தேவை தீர்க்கப்பட முடியாது. உணர்வு இருந்தால், உயிருடையோராகிறோம். அறிவு இருந்தால் வளமும் வளர்ச்சியும் பெறுகிறோம். அறிவின்பாற்பட்ட உணர்வுடன் செயலாற்றினால், நாம் சமுதாயமாக உயர்வடை
கிறோம். கற்றறிந்த எல்லோர்க்கும், விசேடமாக ஆசிரியர்,

எல்லாத் தமிழ் 71
விரிவுரையாளர், பேராசிரியருக்கும் இந்த அறிவின்பாற்பட்ட உணர்வு இன்றைய காலகட்டத்தில் மிக அவசியமாகும்.
இன்று பணியாற்றும் ஆசிரியரும், விரிவுரையாளரும், பேராசிரியரும் அறிவியற் கலைகளைத் தமிழில் எடுத்துக் கூறும் பயிற்சியும் அநுபவமும் பெறும் வாய்ப்புப் பெறா தவர்கள். ஆயினும், பொதுநல நோக்குடனும் தமிழபிமானத் துடனும் செயலாற்றித் தாமாகவே ஆற்றலும் அனுபவமும் பெற வேண்டிய கடப்பாடுடையவர்கள். தமிழின் வளர்ச்சியிற் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த இடைக்காலத்திலே தமது பணி மகத்தானது என்ற கடமை உணர்வுடன் மெய்வருந்தி உழைப்பதற்கு முன்வரவேண்டியவர்கள். இப் பொறுப்பை ஏற்கவேண்டிய பலர், முன்பெலாஞ் சற்றே தயங்கி நின்றபோதும், இன்று திடமனதுடன் முயற்சி எடுப்பது ஒளி மயமான எதிர்காலத்தைக் காட்டுகிறது. அவர்களுக்கெல்லாம், கிறீன் வைத்தியரின் அடிச்சுவடு கலங்கரை விளக்காக நின்று நம்பிக்கை ஊட்டுகிறது.
1864 ஆம் ஆண்டிலே தமிழ் மூலம் மேனாட்டு வைத்தியங் கற்பித்தார். கிறீன் வைத்தியர் என முன்பே குறிப்பிட்டேன். சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த முதலாவது தமிழ் வகுப்பிற் படித்துத் தேர்ச்சி அடைந்த வைத்தியர்கள் பதின்மர். கே. இளையபிள்ளை, எஸ். சிற்றம்பலம், வி. சிற்றம்பலம், எஸ்.டேவிட், டானியல் வெற்றிவேலு, கந்தப்பர், ஏ. சிவ சிதம்பரம், எஸ். சின்னப்பு, எஸ். முருகேசு, ஆர். எஸ். வேலுப் பிள்ளை ஆகியோரே அவர்கள். கிறீன் வைத்தியர், யாழ்ப்பாணத்திலே மேனாட்டு வைத்தியங் கற்பித்த அறுபத் திரண்டு பேர்களுள் முப்பத்துமூன்று பேருக்குத் தமிழ்மொழி மூலங்கற்பித்தாரென்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும்.

Page 40
72 ( ) மருத்துவத் தமிழ் முன்னோடி
ஒருவன் தெரிந்து எடுத்துக்கொண்ட உதவியாள ருடனே செய்யத் தகுந்த வினையை ஆராய்ந்து, பின்னர் தானும் எண்ணிச் செய்துமுடிக்கும் வல்லமையிருந்தால், எய்துதற்கரிய எதுவுமிலது. கிறீன் வைத்தியர் தமது உதவியா ளருடன் கூடித் தமிழில் வெளியிட எண்ணிய நூல்கள் யாவை என 1864 ஆம் ஆண்டிலேயே தீர்மானித்தார். அங்காதிபாதம், கெமிஸ்தம், மனுஷ சுகரணம், இரண வைத்தியம், வைத்தியம், வைத்திய கைவாகடம், வைத்தியாகரம், குழந்தைகள், பெண்கள் ஆகியோரின் நோய்கள், கலைச் சொற்கள் ஆகிய நூல்களே அவை. வைத்திய வகுப்புகள் நடாத்துவதோடு இந் நூல் களையும் அச்சிட முன்கூட்டியே திட்டமிட்ட அன்னார், எண்ணியபடியே அவற்றை அச்சிட்டு முடித்தார்.
நான் எங்கே தொண்டுசெய்தல் வேண்டுமென ஆண்டவன் எண்ணுகிறானோ, அங்கேயே நான் உள்ளேன் என்பதைக் கண்டு சாந்தியடைகிறேன்' என்ற ஆத்மீக உணர்வுடன் செயல் புரிந்தவர், கிறீன் வைத்தியர். இந்த இலட்சியவாதியின் பண்புகளைக் கண்டு, அவற்றாற் கவரப் பட்டதால், தமிழில் அறிவியல் வளர்க்குங் கொள்கையை எதிர்த்த குடியேற்ற நாட்டரசுகூடப் பிற்காலத்திலே அன்னாரின் உதவியை நாடியது!
கிறீன் வைத்தியர் இந்நாட்டிற் சேவை ஆற்றிய காலத் திலேதான், வாந்தி பேதிநோய் பெரும்பலி எடுத்தது. அதைத் தடுக்கும் பொருட்டு, பல துண்டுப் பிரசுரங்களை அவர் வெளியிட்டு, மக்கள் சுகாதார அறிவு பெற்று நல்வாழ்வு வாழ வழிவகுத்தார். இக் கொடிய நோயைத் தடுப்பதற்குக் கிறீன் வைத்தியர் ஆற்றிய பணியைப் புகழ்ந்து இலங்கை ஒப்சேவர்'

எல்லாந் தமிழ் 73
பத்திரிகை அன்னாரை வாழ்த்தியது. தமிழில் வைத்தியநூல் வெளியிடுவதற்குப் பண உதவி அளித்தல் தற்கொலையாகும் என முன்பு கூறிய அரசாங்கங்கூட, கிறீன் வைத்தியரை நாடியது! அரசாங்கம் வெளியிடுவதற்கு எண்ணிய பிரசுரங் களைத் தமிழிலே எழுதுவதற்கும் பிரசுரஞ் செய்வதற்கும் கிறீன் வைத்தியரின் உதவியை நாடினார் தேசாதிபதி 1870 ஆம் ஆண்டிலே, கிழக்கு மாகாண அரசாங்க அதிபராக விருந்த , திரு. மொறிஸ் என்பவர், கிறீன் வைத்தியரின் நூல்களை அரசாங்கம் வாங்கி மக்களுக்கு வழங்குவதற்கு ஏற்பாடு செய்ய முன்வந்தார்.
மேலும், 1873 ஆம் ஆண்டிலே குடியேற்ற நாட்டரசின் வைத்தியரான டாக்டர் லூஸ் என்பவர், கிறீன் வைத்தியரின் சேவையைப் பாராட்டி எழுதுகையில், நீங்கள் இந் நாட்டை விட்டுச் சென்றபின்பும், "வைத்தியஞ் சம்பந்தமாகத் தமிழில் நீங்கள் வெளியிட்டுள்ள நூல்கள் உங்கள் நினைவுச் சின்னங்களாக விளங்கும். இந் நாட்டவர் உங்களை விரைவில் மறந்துவிட முடியாது"என்று குறிப்பிட்டார்!
கிறீன் வைத்தியரின் மகத்தான சேவையை அரசினர் உண்மையிலே உணர்ந்துகொண்டனர் என்பதை இது
உறுதிப்படுத்துகின்றதல்லவா?
எனவே, வினைக்கண் திண்மை உடையவரான கிறீன் வைத்தியர், தாம் எண்ணியதை எண்ணியவாறே முடித்தார். அது மாத்திரமல்ல, குடியேற்ற நாட்டரசினரின் மனக் கண்ணையுந் திறந்து, உண்மையொளியை ஏற்றிய பெருந்தகையும் ஆகினார்!

Page 41
74 ( ) மருத்துவத் தமிழ் முன்னோடி
இந் நாட்டிலிருந்து கிறீன் வைத்தியர், தமிழில் மேனாட்டு வைத்தியம் வளர்த்த காலத்திலே சென்னையில் இருந்து பெரும் உதவி செய்தவர் முன் குறிப்பிட்ட திரு. மெர்டொக் என்பவர். 1868ஆம் ஆண்டு, கிறீன் வைத்தியருக்கு அவ்வறிஞர் எழுதிய கடிதமொன்றில் கீழ்வருமாறு குறிப்பிட்டிருந்தார்.
"தமிழ் மொழியிற் பயிற்சி பெறாதிருக்குஞ் சிலர் எதைத்தான் கருதியபோதும், நீங்கள் சரியான பாதையிலே செல்கிறீர்கள் என்பதில் எதுவித சந்தேகமும் இல்லை. நீங்கள் ஒரு மகத்தான பணியை நிறைவேற்றுகிறீர்கள். நல்ல ஆங்கில அறிவுபெற்ற சுதேச வைத்தியர்கள் இந் நாட்டுக்குத் தேவை என்பது முற்றும் உண்மை. ஆயின், பணிவான வைத்தியர்கள் அதிலுங் கூடுதலாகத் தேவை. இன்று உங்கள் சேவை உரிய அளவில் மதிப்புப் பெறத் தவறினாலும் வருங்கால சந்ததியினர் இதன் பலனை அனுபவிப்பார்கள்."
ஆம்! இன்றைய சமுதாயம் அப் பலனை அனுபவிக்கும் என்பதிற் சந்தேகமில்லை.

8. தமிழில் அறிவியல் நூல்கள்
"எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவ மென்பது இழுக்கு
- வள்ளுவம்
g ருவன் செய்யத்தகுந்த கருமத்தைச் செய்வதற்கு ஆரம்பித்தாலும், அதைச் செய்து முடிக்கும் வழிவகைகளை யும் ஆராய்ந்து தொடங்குதல் வேண்டும். இன்றேல், எதிர் பாராத் தடைகளைக் கடந்து செல்லுதற்கு ஆற்றாமல், எடுத்த கருமத்தை இடையில் நிறுத்தி அவமானம் அடைதல் கூடும்.
மேனாட்டு வைத்திய நூல்களைத் தமிழில் எழுதி வெளியிடுவதற்கு எண்ணிய கிறீன் வைத்தியர், திட்டமிட்ட படி எல்லா நூல்களையும் வெளியிட்டார். தாம் மொழி பெயர்த்தும், தம் மாணவரை அமர்த்தி மொழிபெயர்ப் பித்தும் அக்காலத்தில் அன்னார் வெளியிட்ட நூல்களை அறிமுகஞ் செய்தல் சாலவும் பொருத்தமென எண்ணுகிறேன். இந் நூல்கள் எல்லாம் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி நூல் நிலையத்திலே இன்றும் விசேட பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. நூல்களை நேரிற் பார்வையிடும் போதும் படித்துப் பார்க்கும்போதும், வைத்தியரின் திறனையுந் தீர்க்கதரிசனத்தையுந் தெளிவாக உணரக் கூடியதாகவிருந்தது.

Page 42
76 ( ) மருத்துவத் தமிழ் முன்னோடி
அன்று அறிவியல் நூல்களே தமிழில் இல்லை. மேனாட்டு வைத்திய விஞ்ஞானம் தமிழுக்குப் புதிய துறை. எந்த நூல்களை மொழி பெயர்ப்பது? கலைச் சொற்களை எப்படி ஆக்குவது? யாருடைய உதவிபெறுவது?
இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் வழிவகை களை அவர் முன் கூட்டியே நிச்சயித்தார். நூல்களைத் தெரிவு செய்தார். கலைச் சொல்லாக்க முறைகளைத் திட்டமிட்டார். உதவியாளர்களை நியமித்தார். அந்த உதவியாளருக்கு வழிகாட்டியாகச் செயற்பட்டு, தமிழில் நூல்களை எழுதவும் எழுதுவித்துத் திருத்தவும் தொடங்கினார்.
கிறீன் வைத்தியருக்குத் துணையாகச் செயற்பட்ட உதவியாளரும் தமிழில் அறிவியல் வளர உழைத்த பெருந் தகைகளே. தனெல் வி சப்மன், ய. டன்வதர், வில்லியம் பவுல் ஆகிய வைத்தியர்கள் அந்தப் பெருந்தகைகளாவர். இவர்கள் அமரிக்க மிஷனிற் சேர்ந்து தமது பெயர்களை மாற்றிய யாழ்ப்பாணத் தமிழர்கள் என்பதையும் இங்கு குறிப்பிடுதல் பொருத்தமானது.
இனி, தமிழில் கிறீன் வைத்தியரும் அவரது உதவியாளரும் எழுதியும் மொழிபெயர்த்தும் வெளிவந்த வைத்திய விஞ்ஞான நூல்களின் விபரங்களைப் பார்ப்போம். பார்வைக்குக் கிடைத்த நூல்களின் விபரங்களே ஈண்டு தரப்படுகின்றன.
அங்காதிபாதம்,சுகரணவாதம்,உற்பாலனம் பிரசுரம் : 1852 (முதற் பதிப்பு) பக்கங்கள்:204
அச்சு:அமரிக்க மிஷன் அச்சகம், சென்னை.

தமிழில் அறிவியல் நூல்கள் L 77
கிறீன் வைத்தியர் முதன் முதலில் மொழிபெயர்க்கத் தொடங்கிய நூல் கல்வின் கற்றர் வைத்தியன் எழுதிய Anatomy Physiology and Hygiene என்ற ஆங்கில நூலின் தமிழாக்கமே இந்நூல். கிறின் வைத்தியனால் ஆராய்ந்து திருத்தி தமிழ் நாட்டாசாரங்களுக்கிசைவித்து சில ஆசிரியருடைய உதவியைக் கொண்டு இங்கிலிசிலிருந்து மொழி பெயர்க்கப் பட்டது'என்ற குறிப்பு நூலில் உள்ளது.
இதன் முதற் பதிப்பு 1852 ஆம் ஆண்டிலேயே தயாராகியது என்பதுவும் இலங்கையிலும் இந்திய்ாவிலு மிருந்த அமரிக்க மிஷன்களுக்காக இது 1857 இல் இரண்டாவது முறை பதிப்பிக்கப்பட்டது என்பதுவும் குறிப்பிடத்தக்கனவாகும்.
பல தெளிவான படங்களுடன் வெளியிடப்பட்ட இந்நூல் ‘தமிழில் அறிவியல் நூல்கள் வரிசையில் முதலாவது என்ற காரணத்தால், நூலின் 'பாயிரம் முழுமைய்ாக இங்கே தரப்படுகிறது. பல சுவையான செய்திகளை வதர் தத்தம் விருப்பத்திற்கேற்ப இப்பாயிரத்திற் கண்டு கொள்ள முடியும் என்பது என் நம்பிக்கை.
urtulutub
இப்புத்தகத்திலே கண்ணினாலே கண்ட அல்லது பழக்கத்தினாலே அறிந்த காரியங்கள் மாத்திரம் எழுதப் பட்டிருக்கின்றன. இதிலே மனிததேகத்தைக்குறித்தும், அதின் பல உறுப்புகளின் தொழில்களைப் பற்றியும், அதின்

Page 43
78 மருத்துவத் தமிழ் முன்னோடி
சுகத்தைக்காக்கும் விதத்தைக் குறித்தும் சுருக்கமாகக் காட்டி இருக்கின்றது. சந்தேகமில்லாமல் மனமே மனிதனில் விசேஷமானது. ஆனாலும் அது தேகம் என்னுங் கூட்டிலே அடைபட்டிருக்கிறபடியினாலே, அக்கூடு வேளைக்குவேளை மாறும் பல நிலைகளுக்குத்தக்கதாக மனதின் செயல்களும் விகற்பமாகும். ஆதலால் நமது சரீர அனுபவங்களைப்பற்றி மாத்திரமல்ல, நமது மனோவிருத்திகாகவும், நமது சரீரத்தை உண்டாக்கினர் இன்ன பிரமாணங்களுக்கு அதை அமைத்திருக்கிறாரென்று அறிந்து, அவைகளின்படி நடப்பது மிகவும் அவசியம்.
வைத்தியனாகிய கல்வின்கற்றர் இளைஞர்கள் கற்றுக் கொள்ளும்படி எழுதின ஓர் புத்தகத்திலிருந்து இப் புத்தகம் மொழிபெயர்க்கப்பட்டது. அவருடைய தயாளத்தினால் இப்பதிப்பில் பல படங்கள் சேர்த்துக் கொள்ளும்படி கிடைத்தன. அப்புத்தகத்திலே தமிழ்நாட்டாருக்கு ஒவ்வா தெனக்கண்ட சில அற்ப காரியங்களை மாத்திரம் அதினின்று சொற்ப விகற்பமாக்கி, இதிலே அவர்களுக்கு இணங்க எழுதினதுமல்லாமல், இத்தேசத்தவர்கள் அறியவேண்டிய வேறு சில காரியங்களும் கூட்டி எழுதப்பட்டிருக்கின்றன. இப் புத்தகத்திலே புதுச்சொற்கள் கூடியளவு கொஞ்சமாய்க் காணப்படும் அவைகளும், அச்சொற்கள் வழங்கப்பட்ட பொருள்களின் சில குறிகளைப்பற்றிச் சமஸ்கிருதபாஷையி லிருந்து தெரிந்து கொள்ளப்பட்டன.
இப்புத்தகத்தில் அணைந்த அருஞ்சொல் அகராதி சுருக்கமாயும், அதிலுள்ள சொற்கள் கூடியளவு தெளிவாயும்

தமிழில் அறிவியல் நூல்கள் ( ) 79
அருத்தப்படுத்தியிருக்கிறதினாலே, யாவரும் இந்நூலை இலேசாய் விளங்கிக்கொள்ளக் கூடும்.
இப்புத்தகம் அநேகருக்குச் சந்தோஷமும் இலாபமுமாய் முடியும் படிக்கும், விசேஷமாக இந்தச் சரீரம் என்னுங் கூட்டை ஆச்சரியவிதமாய்ப் படைத்துச் சற்றும் இளைப் பின்றி அதை விழிப்பாய்ப் பார்த்து அதின் சுகத்தைக் காத்து வருகிற கடவுளுக்கு நாம் வணக்கமும் நன்றியறிதலுமுள்ள வர்களாய் வரும்படிக்கும் அவர் தயை செய்வாராக.
1853-வருடம்
ச.வி.கி.
அன்று தமிழ் பேசும் மக்கள் வழக்கில் இருந்த பாயிரம், சுகத்தைக் காக்கும் விதம், பிரமாணங்கள், வைத்தியன், தயாளம், சொற்பவிகற்பம், காரியங்களுங்கூட்டி போன்ற சொற்களும் சொற்றொடர்களும் எத்துணை இலகுவாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதை இப் பாயிரத்திலே காண்கிறோம்.
இந்நூலின் மொழிபெயர்க்கும் போது தமிழ் நாட்டாருக்கு ஒவ்வாதெனக் கண்ட சிலவற்றை நீக்கியும் அறிய வேண்டிய வேறு சில காரியங்களும் கூட்டியும் எழுதிய யுத்தி ஆகிய இன்றைய சமுதாயத்தில் மொழிபெயர்ப்பா தழுவலா பொருத்தமானது என்போர்க்கும் ஓர் சிறப்புச் செய்தியைக் கூறுகிறது.
அறிவியல் துறையில் உழைத்த வைத்தியன் இறை
பக்தியுடன் பாயிரத்தை முடித்தலும், தமிழ் இலக்கங்கள் - 1853 - வருடம் ஆகியனவும் கவனத்திற் கொள்ளத்தக்கன.

Page 44
80 ( ) மருத்துவத் தமிழ் முன்னோடி
எலும்புகள், பேசிகள், சீரண உறுப்புகள், இரத்த உறுப்புகள், சுவாசம், தோல், நரம்பு மண்டலம் போன்ற வற்றிலே மூன்று பகுதிகள் - விவரம், தொழில், பேணும் முறை ஆகியவை தனித்தனியாக உள்ளன. இது மாணவர் தெளிவு பெற மிக உதவும் முறையாகும். தெளிவான படங்களுடன் தரப்பட்டுள்ளன. (மனித எலும்புகள் படமும் அத்தியாயம் 1 இன் முதற்பக்கமும் தரப்பட்டுள்ளன) ஒவ்வொரு அதிகாரத் திலும், முதற்பக்கத்திலே அவ்வதிகாரத்திலுள்ள அருஞ் சொற்கள் (கலைச்சொற்கள்) வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. நூலில் உள்ள அருஞ்சொற்கள் நூலின் இறுதியில், தமிழ் விளக்கத்துடனும் ஆங்கிலக் கலைச் சொல்லுடனும் தரப்பட்டுள்ளன.
உதாரணம் : பேசி Muscle. உடம்பிலுள்ள அசைவுகளுக்குக்
காரணமான கருவி.
"உவில்சன் என்பவர் செய்து இரண்டாந்தரம் அச்சிற் பதிப்பித்த சமஸ்கிருத இங்கிலிஷ் அகராதி" யில் இருந்து சில கலைச்சொற்கள் பெறப்பட்டன என்ற குறிப்பும் அகராதிப்
பகுதியில் உள்ளது.
பக்கம் 81 இல் உள்ள மனித எலும்புகள் படம். படத்தில் பாகங்கள் இலக்கமிடப்பட்டு பெயர்கள் தரப்பட்டுள்ளன.
இதுபோல பல படங்கள். இவை எல்லாம் கல்வின் கற்றர் வைத்தியன் (Dr.CalvinCutter)வழங்கியவை.

தமிழில் அறிவியல் நூல்கள் ( ) 81
க-ம் படம். சங்காளத்தின் முன்பக்கம். 1, 1. முள்ளந்தண்.ெ 2, தலையே.ே 3. கீழ்ச் கணுவென்பு, 4, கெஞ்சென்பு. 5, பமு. 6, 6, அவையின் முருக்தப்பகுதி. 7, சாறை யென்பு 8, புயவெண்பு. 9, தோள்ப்பொருத்து. 10, ஆரைபென்பு. 11, இரத்தினி Quarily. 12, opypéadar. 18, sida:4gcrer. 14, eadar. 15, சர்தென்பு. 16, பீடிகை யென். 17, தொடைச்சத்துப் பொருத்து, 18, தொடையென்பு, 19, முழத்தாட்சில். 20, முழங்கரல்பொருத்து. 21, சரவென்பு. 22, சளகவென்பு. 23, கற்குளச. 24, பாதம். 25, 26, வறையென்பையும் பழுக்களையும் செஞ்சென்போடே தொடுக்கும் விசிகள். 27, 28,29, தோன், முழங்கை, கைக்குளசு என்னும் பொருத்துகளின் விசிகள். 30, a-Ab4sr பத்தின் பெருராடி. 32, தெrடையின் பெருநாடி. 33, காலின் பெருராடி 34,35, 36, சர்துப்பொருத்து, முழர்தான், காற்குளசகளின் விசிகன்.

Page 45
82 ( ) மருத்துவத் தமிழ் முன்னோடி
பக்கம் 11இல் அத்தியாயம் 1 ஆரம்பமாகிறது. அப் பக்கம் இதோ:
முதலாம்பகுதி
1.அதிகாரம் எலும்புகளின் விவரம்
1. எலும்புகள் பெலனும், வைரமும், மங்கலான வெண்ணிறமுள்ளவைகள். மனிதருக்கும், குதிரை, ஆடு, மாடு முதலிய சில பிராணிகளுக்கும், எலும்புகள் சதைக்குள்ளே இருக்கின்றன. நண்டு, இறால் முதலியவைகளிலே, அவைகளின் உறுப்புகளுக்கு இடையூறுவராமல் காத்துக் கொள்ளும் படிக்கு, அவைகளுடைய எலும்புகள் ஓடாகச் சதைக்கு வெளியே இருக்கின்றன. ஆமை முதலியவைகளின் எலும்புகள் உள்ளுக்கும் வெளிக்கும் இருக்கும்.
2. மனித தேகத்திலுள்ள தசையை நீங்கிய எலும்புக்கோவையாகிய முழுவெலும்புக்குக் கங்காளம் என்று பெயர்.
3. எலும்புகளிலே அவைகளுக்கு வைரமும் பெலனுங் கொடுக்கிற சுண்ணாம்பும், அத்தோடேகூட உடம்புக்குரிய செலதிம் என்னும் ஒரு பசையும் இருக்கின்றன.
4. எலும்புகளிலுள்ள சுண்ணாம்பை நீக்கி அவைகளி
புள்ள செலதிமைக் காட்டுகில், ஒரு சிற்றெலும்பைச் சில
காலத்துக்கு ஒரு மெல்லிய அமிலத்தில் புதைத்துவைத்தால், அது எப்பக்கத்துக்கும் வளைக்கப்படக் கூடியதாய் வரும்.

தமிழில் அறிவியல் நூல்கள் ( ) 83
5. செலதிமை ஒழித்து எலும்பிலுள்ள சுண்ணாம் பைக் காட்டுகில், ஒரு எலும்பை ஒரு நாழிகை அளவுக்கு அக்கினியில் இட அது வெண்மையாகவும், பாரங் குறைந்த தாகவும், இலேசிலே நொறுங்கத்தக்கதாகவும் வரும்.
இப்பகுதியிலுள்ள அருஞ்சொற்கள்;- அதக்காயம், அமிலம், உற்காயம், கசேருவதை, சுரேகை, கூபகம், சில்லி செலதிம், நாடி, நரளம், நித்தாசில்லி, நித்தை, பந்தனம், பரிபத்தியம், பொகுட்டு, முண்டம், முருந்து.
பக்க இறுதியிலே இப்பகுதியிலுள்ள அருஞ்சொற்கள்'
என்ற பட்டியலைக் காண்க.
g[Tବd ତ୍ରିறுதியில் உள்ள அகராதியில் இச் சொற்களின் பொருளை "பார்த்துப் பாடம் பண்ணியபின்பே அந்தந்தப் பகுதியை வாசிக்கத் தொடங்கவும் என்ற குறிப்பும் நூல் ஆரம்பத்திலே உள்ளது.
அக்காலத்திலேயே, தெளிவாக எழுதப் பயன்படுத்திய யுத்திபலவும் இந்நூலில் காணப்படுகின்றன.
கிறீன் வைத்தியரின் முதலாவது அறிவியல் நூலாகையால் பல விபரங்கள் தரப்பட்டன. ஏனைய J5/Tgü5656ir "G)5Lélsivőli Pharmacopoeia of India 67 6öt gól இருநூல்கள் பற்றியும் சில மேலதிக குறிப்புகள் உள்ளன. மற்றையவை பற்றிய அறிமுக விபரங்கள் தான் தரப்பட்டுள்ளன.

Page 46
84 மருத்துவத் தமிழ் முன்னோடி
இரண வைத்தியம்
பிரசுரம் 1867 பக்கங்கள் : 504 'எறிக்சர், துருவிதர் என்ற பண்டிதருடைய நூலைத் தமிழில் மொழிபெயர்த்தவர் ய. டன்வதர்; பார்வையிட்டுத் திருத்தி வெளியிட்டவர், ச. பி. கிறீன் வைத்தியர்.
இந்நூல் இரண வைத்திய முறைகள் பற்றி விளக்கமாகக் கூறுகிறது. முற்றும் வைத்திய விடயமாகையால், அது குறித்து எதையும் நான் குறிப்பிடவில்லை. ஆயினும், கிறீன் வைத்தியரின் இலட்சியத்தையும் மனத்தூய்மையையும் விளக்குவதற்கு இன்னொரு குறிப்பை மாத்திரம் எடுத்துக் காட்டுகிறேன்.
துருவிதர் எறிக்சரின் இரண வைத்தியம் தமிழ்ப் பாஷையில் இருக்கிறது எவ்வளவு தேவையோ, அவ்வண்ணம் தமிழ்த்தேச வழக்கங்களுக்கும் ஏற்றதாக இருப்பது அவசியம்’ என்றெண்ணித் தமது சொந்த அபிப்பிராயத்தில் நல்ல தென்று கண்ட சிலவற்றையும் இடைக்கிடை சேர்த்து' நூலைத் தொகுத்துள்ளார், கிறீன் வைத்தியர்.
மேலும், திருவாளங்கோட்டில் இருக்கும் கனம் பொருந்திய லோ வைத்தியரும் மற்றவர்களும் செய்த அரிய உதவிக்கு நன்றி கூறுகிறார்.
The Science and Art of Surgery by Erichsen and Druitt. Translated by Danforth. Supervised by Dr. S. F. Green.

தமிழில் அறிவியல் நூல்கள் 85
கெமிஸ்தம்
பிரசுரம் : 1875.பக்கங்கள் 520
அச்சு : நாகர்கோயில் லண்டன் மிஷன் பிரஸ்.
இந்நூல், கிறீன் வைத்தியரால் மொழி பெயர்க்கப் பட்டது. அன்னாருக்கு உதவி செய்தவர்கள் தனெல் வி சப்மன், ச. சுவாமி நாதன் ஆகியோர். இரசாயனவியல் வைத்தியத்துறைக்கு மிகவும் அவசியமானதொன்று. எனவே, இந்நூல் வைத்திய நூல்களுடன் சேர்க்கப்பட்டமை மிகவும் பொருத்தமானதே.
அன்றைய சமுதாயத்திலே மெய்யறிவுத் தீபமேற்றி மக்களை நல்வழிப்படுத்தல் வேண்டும் என்ற துடிப்பைக் கொண்டிருந்தவர், கிறீன் வைத்தியர். அன்னாரின் துடிப்பை அவர்களின் மொழியிற் றருவதே நலமென எண்ணுகிறேன்.
"இல்லாத சாத்திரமென்ற மப்பில் பதுங்கி தமிழருக்கு நாசமோசத்தை வருவிக்கும் சகுனம், சூனியம் முதலிய பொய்கள் நித்தமும் தடையின்றி உலாவுகின்றன. ரஸவாதத்துக்குப் பதிலாக பொருள்களின் கூறுகளைக் குறிக்கும் கெமிஸ்த வித்தையும், சோதிட சாஸ்திரத்துக்குப் பதிலாக வான சாஸ்திரமும், பொய்யான கல்விக்குப் பதிலாக மெய்யான அறிவை தேசத்தில் நிறுத்துவது, ஊரிலும் ஆளிலும் உள்ள துரெண்ணம் பழக்கங்களை அகற்று மென்று நம்பி விரும்புகிறபடியால் இப் புஸ்தகம் வெளியாகிறது."
Chemistry : by David A. Wells. Translated by
Dr. S. F. Green.

Page 47
86 ( ) மருத்துவத் தமிழ் முன்னோடி
கெமிஸ்த' நூலைப் படித்துப் பார்த்த பொழுது, கிறீன் வைத்தியரின் தீர்க்கதரிசனத்தை அறியும் வாய்ப்பு மேலும் ஏற்பட்டது. தமிழில் விஞ்ஞானம்' தரும் முயற்சியில் மாத்திரம் அல்ல; விஞ்ஞானக் கல்வி முறையிலும் அன்னார் முன்னோடியாகவே திகழ்கின்றார் என எண்ணத் தோன்றுகிறது.
இன்றெல்லாம் விஞ்ஞானக் கல்வி முறையில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது அல்லவா? நிலையியல் விஞ்ஞானக் கல்வி முறை மாறி இயக்கவியல் விஞ்ஞானக் கல்வி முறை தோன்றியுள்ளதையே, "புதிய திருப்பம்’ எனக் கூறுகிறேன். நூலைப் படித்துப் பரீட்சைகளில் ஒப்படைக்குங் கல்விமுறை மாறி படித்த அறிவைப் புதிய சந்தர்ப்பங்களுக்கு ஏற்ற வண்ணம் பிரயோகித்து விடை எழுதப் பயிற்றுங் கல்விமுறை இன்றுள்ளது. இதே முறை, கெமிஸ்த’ நூலிலே காணப் படுவது, ஒரு சிறப்பாகும்.
நீரின் வன்மை" குறித்துப் பாடம் எழுதுகையில், கிறீன் வைத்தியர் மேல்வருமாறு கூறுகிறார்: "மென்தண்ணிரில் அவிந்த காய் கிழங்குகள் மறுபடி உப்புப் போடுவதால் சுவை கொள்ளாதிருப்பதற்கு நியாயம் இதுவே. பயறு, கொள்ளு கொட்டைகளிலிருக்கும் கசியின் என்னும் பதார்த்தத்தைச் சுண்ணாம்பு வைரமாக்குவதால் இவைகள் வன் தண்ணீரில் மெதுவாக அவியாது. தண்ணிர் பொருளின் தன்மையை மாற்றுவதற்கு வெங்காயம் நல்ல உதாரணம். வெங்காயத்தை சுத்தமான மென்தண்ணீரில் அவித்தால் சுவை கெடும். உப்புத் தண்ணிரில் அவித்தாலோ உப்பு ருசிக்குமல்லாமல், வெங்காயத்தின் இனிமையும் வாசனையும் குறையாமல்

தமிழில் அறிவியல் நூல்கள் 87
இருக்கும். பொருளின் சாரம் வாங்காமல் சமைக்க வேண்டின் வன்தண்ணீர் நல்லது. மென் தண்ணீர் பொருளை அதிகமாய் கரையாதபடி உப்புப் போடுவது வழக்கம்."
வாழ்க்கையுடன் தொடர்புபடுத்தி நீரின் வன்மை பற்றிய இப் பாடம் எழுதப்பட்டமை, கிறீன் வைத்தியரின் நூலுக்குரிய தனிச் சிறப்பாகும். இத்தகைய கல்விமுறை இன்றுதான் நமது சமுதாயத்திற் பரவுகிறது. நாட்டுக்கும் மக்களுக்கும் விஞ்ஞான அறிவு உண்மையிலே பயன்தர வேண்டுமானால், விஞ்ஞானக் கல்வி எப்படி அமைதல் வேண்டுமென, கிறீன் வைத்தியர் நூறு ஆண்டுகளின் முன்பே எடுத்துக் காட்டினார் என்று கூறுதல் முற்றும் நியாயமானதேயாம்.
f வைத்தியம்
பிரசுரம் :1875. பக்கங்கள்:920 அச்சு : மானிப்பாய் அச்சுக்கூடம்
இந்நூல் கிறீன் வைத்தியரால் எழுதப்பட்டது. மேனாட்டு வைத்திய முறைகளைத் தெளிவாகவும் விரிவாக வும் எடுத்துக் கூறுகிறது. தமிழில் வைத்தியங் கற்றவர்களுக்குக் கைநூலாக இது வெளியிடப்பட்டது.
மனுஷ் அங்காதிபாதம் :
பிரசுரம் : 1872 பக்கங்கள்: 900
அச்சு : மானிப்பாய் அச்சுக்கூடம்.
Practice of Medicine.

Page 48
88 மருத்துவத் தமிழ் முன்னோடி
"கிறே, ஓர்னர், ஸ்மிது, வில்சன் என்ற பண்டிதருடைய நூல்களிலிருந்து தனெல் வி. சப்மன் வைத்தியனால் மொழிபெயர்க்கப்பட்டு, சமுல் பி. கிறீன் வைத்தியனால் நடத்தித் திருத்தப்பட்டது" என அந் நூலிலே குறிப்பிடப் பட்டுள்ளது.
இந்நூலை எழுதி முடிப்பதற்கு மூன்று ஆண்டுகளும் திருத்துவதற்கு ஓர் ஆண்டுஞ் செலவாயின. தனெல் வி. சப்மன் என்பவர், கிறீன் வைத்தியரின் மாணவராவர்.
இந்நூல் வெளிவரச் சில ஆண்டுகளுக்கு முன்பே, பள்ளிக்கூடப் பாவனைக்கென அங்காதிபாதம் பற்றிய சிறிய நூலொன்று வெளியிடப்பட்டது. ஆயின், வைத்திய போதனைக்கு அது போதாதென்று கண்டபடியால்'திருந்திய பதிப்பு வெளியிடப்பட்டது.
அங்காதிபாதம் 'உடலின் உறுப்பு நெசவுகளின் வடிவம் கட்டுப்பாடு சேர்மானங்களைக் குறிப்பது' என்பது அதிலுள்ள வரையறை. பல நூல்களிலிருந்து விடயங்களைத் தெரிந் தெடுத்து இந்நூல் தொகுக்கப்பட்டது.
மனுஷ சுகரணம்
பிரசுரம் 1872 பக்கங்கள் 134
அச்சு : மானிப்பாய் அச்சுக்கூடம்
'டால்தன் பண்டிதரால் எழுதப்பட்ட ஆங்கில நூலைத் தழுவி மனுஷ சுகரண நூல் ஒன்றை, தனெல் வி. சப்மன்
Human Anatomy: Compiled from Gray, Horner, Smith and Wilson by Daniel W. Chapman, Surpervised by Dr. S.F. Green.

தமிழில் அறிவியல் நூல்கள் 89
தயாரித்தார். அதுவும், கிறீன் வைத்தியரின் மேற்பார்வையில் நடைபெற்றது. உரிய காலத்தில் அது வெளிவரவில்லை யாகையால், சிறிய பதிப்பாக இந்நூல் முதலில் வெளியிடப்பட்டது.
"சுகரண நூல் முழுவதுந் தமிழில் தோன்றுவது தடைப்பட்டு நின்றதால், அதன் முகவுரையையும் படங்களையும் அவைகளின் விளக்கத்தையும் சுகரணத்துக் குரிய அகராதியையும் அடக்கி உவாத்திமாருக்கும் மாணாக்கருக்கும் உபயோகமாகக்கூடுமென்று பிரசுரஞ் செய்யப்படுகிறது" என நூற் பாயிரத்தில், கிறீன் வைத்தியர் விளக்கங் கொடுத்துள்ளார்.
"பிராணி, தாவரம் என்னும் இந்திர வஸ்துக்களின் செயல், இலட்சணங்களைப் பற்றிக் கூறும் நூலே சுகரணம்" என்பது வைத்தியரின் வரையறை. முதலில் இச் சிறுநூல் வெளியிடப்பட்டபோதும், பின்பு அதிக பக்கங்களுடன் முழுநூல் வெளியிடப்பட்டது.
மனுஷ சுகரணம்
பிரசுரம் 1883. பக்கங்கள் :590 அச்சு : மானிப்பாய் அச்சுக்கூடம்
கிறீன் வைத்தியர் திட்டமிட்ட மனுஷ சுகரணத்தின் முழுப் பதிப்பு இதுவாகும். தனெல் வி. சப்மன் வைத்தியரால் மொழிபெயர்க்கப்பட்ட இந் நூல், சமுல் பி. கிறீன் வைத்தியராற் பார்வையிடப்பட்டுத் திருத்தப்பட்டது.
Human Physiology: by Prof. John C. Dalton. Translated by Daniel W.Chapman. RevisedandEdited byDr.S.F. Green.

Page 49
90 ( ) மருத்துவத் தமிழ் முன்னோடி
"சுகரணம் என்பது அங்காதிபாதத்துக்குத் தோழமையான கல்வி அங்காதிபாதம் உடலின் உறுப்பு நெசவுகளின் வடிவம் கட்டுப்பாடு சேர்மானங்களைக் குறிப் பிடுவதுபோல, சுகரணம் அவற்றின் விருத்தி தொழில், மாறுதல் ஆகியவற்றைக் குறிக்கும். சுகரணக் கல்வி தீவிர வளர்ச்சியடைய வேண்டும். அதை ஏற்ற விதமாய் விளக்கப் புத்தகத்திலும் பத்திரிகையில் பதித்தும் பரவுவது தகும்" என்பது அந்நூலில் உள்ள குறிப்பு.
"இப் புத்தகம் வருங்காலத்துத் தமிழருள் இக் கல்வியின் ஓட்டத்துக்குத் தொடக்கமான நிலையமாய் இருக்கட்டும். இவ்வோட்டம் மேற்குத் தேசத்தாருள் முன் கண்ட ஓட்டத்துக்கு நிகராகக்கடவது"
கிறீன் வைத்தியரின் இந்த ஆசை, இந் நூலின் முன்னுரையிற் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேனாட்டில் மெத்த வளர்ந்துள்ள விஞ்ஞானம், தமிழரிடையேயுஞ் சரிநிகர் சமானமாகப் பரவுதல் வேண்டும்; அதற்குத் தமது முயற்சி தொடக்கமாக அமைதல் வேண்டும் என்று நூறு ஆண்டுகளுக்கு முன் விரும்பிய கிறீன் வைத்தியருக்கு நாம் எத்துணை கடப்பாடுடையோம்!
வைத்தியாகரம்
பிரசுரம் : 1872 பக்கங்கள் 1918 அச்சு : நாகர்கோயில் லண்டன் மிஷன் பிரஸ் 'ஊபரின் வைத்திய கைவாகடம் தமிழில் வில்லியம் பவுலால் மொழிபெயர்க்கப்பட்டு, ச. பி. கிறீன் வைத்தியரால் நடத்தித் திருத்தப்பட்டது' என்று நூலிலே குறிப்பு இருக்கின்றது.

தமிழில் அறிவியல் நூல்கள் ( 91
வைத்தியன் வியாதியைப் பரிகரிப்பதற்கு அறிய வேண்டிய சகல விஷயங்களையும் சுருக்கமாகவும் விளக்க மாகவும் காட்டுவதே இந் நூலின் நோக்கம்' என முன்னுரையிற் கூறப்பட்டுள்ளது. நோய், குணம், சோதனை, கருவி போன்ற பல வைத்திய விடயங்கள் இதில் இரண்டு பாகங்களாக விளக்கப்பட்டுள்ளன. அன்றைய மேனாட்டு வைத்தியர்கள் அன்றாட வாழ்க்கையிற் பயன்படுத்தக்கூடிய சிறந்த கைநூலாக இது தயாரிக்கப்பட்டுள்ளது.
நூலிலே உள்ள கலைச்சொற்கள் எவ் வண்ணம் அமைக்கப்பட்டன் என்ற விளக்கம் இந் நூலிற் சேர்க்கப் பட்டுள்ளது. கலைச் சொல்லாக்கம் பற்றிய விடயம் பின்னர் ஆராயப்படுகிறது. ஆகையால், அவ் விளக்கத்தை ஈண்டு குறிப்பிடவில்லை.
Pharmacopoeiaofindia:(மொழிபெயர்ப்பு)
பிரசுரம் : 1888 பக்கங்கள் :574 Jey&& !StrongandAsburyPrinters, Jaffna இந்நூல் தனெல் வி சப்மன் மொழி பெயர்த்து, கிறீன் வைத்தியர் திருத்தி வெளியிட்ட நூல். கிறீன் வைத்தியர் அமரிக்கா திரும்பிய பின்பும், தமிழில் விஞ்ஞானமும் வைத்திய மும் வளரவேண்டுமென்ற ஆசை மனதைவிட்டு அகலவில்லை என்பதை உறுதிப்படுத்தும் வகையில் இது அமைகிறது.
தனெல் வி. சப்மன் மொழிபெயர்த்து அனுப்ப, அங்கிருந்து திருத்தி திருத்தங்களை சப்மனுக்கு அனுப்பினார் என்ற குறிப்பு நூலிலே உள்ளது.
Hooper's Physician's Vade Mecum - Translated by William Pauli.

Page 50
92 மருத்துவத் தமிழ் முன்னோடி
இந்நூலில் இரண்டு பகுதிகள் உள்ளன.
1 g5rap. 15Tri55 FTTub (Vegetable Materia Medica)
(299பக்கங்கள்)
2.955gu Lgsstrig5g5 Frrprb (n - organic Materia Medica)
(105பக்கங்கள்)
அனுபந்தம், அருஞ்சொல் அகராதி ஆகியன ஏனைய பக்கங்களில் பின்னிணைப்பாக உள்ளன.
"கிறீன் வைத்தியராற் பிரசுரஞ் செய்யப்பட்ட நூல்களுக்கு இது "ஈருந்தமாய்த் தோற்றுகிறது என்றும், முக்கியமான வாகடம் என்றும் கிறீனிடம் வைத்தியம் கற்ற வைத்தியர்களும் நாட்டு வைத்தியர் பலரும் இதை ஆவலோடு எதிர்பார்த்திருந்தனர்' எனவும் த. வி. சப்மன் முகவுரையில் கூறியுள்ளார்.
* அருஞ்சொற்களை அடக்கிய அகராதி
பிரசுரம் : 1875 பக்கங்கள் 161 அச்சு : நாகர்கோயில் லண்டன் மிஷன் பிரஸ். இந்த அருஞ்சொல் அகராதியைத் தயாரித்தவர், கிறீன் வைத்தியர். உதவி செய்தவர்கள் ச. வை. நதானியல், தனெல் வி. சப்மன் ஆகியோர்.
பதார்த்தசாரம், சிகிச்சம், மருத்துவம் ஸ்திரி வைத்தியம், பாலர் வைத்தியம் ஆகிய துறைகளிற் பிரயோகிக்கப்படும் அருஞ்சொற்கள், அமைக்கப்பட்ட முறை, சொல்லாக்க விதிகள் எல்லாம் இதிலே தரப்பட்டுள்ளன.
இந்த அருஞ்சொல்லகராதியிலே ஆங்கிலம்- தமிழ், தமிழ்-ஆங்கிலமாக இரு தொகுதிகள் உள்ளன.

தமிழில் அறிவியல் நூல்கள் ( ) 93
உதாரணங்கள்
MIDWIFERY AND DISEASES OF WOMEN AND CHILDREN.
This is compiled from the works of Caseaux, Thomas,
in many instances,
Tanner and othere,
terms are furnished, from both the Sanscrit and the English.
"Mr-ram-ran
ABD
Abdominal est.
Apoplexy உதரவிகிர்தி. Cavity வயிற்றறை, உதர
வறை. Supporter உதாந்தாங்கி, உத
ாககவணம. Abnormal sycoe gas, கிக்கிரம,
இயல்பற்ற, Abortion கருவழிதல், அபார்சன்,
அசனுகம Abrasion arcp isé5. Absque marito gwast'ul-ui auth. Accoucher மருத்துவன், பிரசவீகன். Accouchnent SD 5Faith. Acephalia அசீடம், அகெவலம், ACephaluey86 அகெவலுசிஸ்து, அசி
டவத்தி. Acephalus y 9fug-, gyQa5669. Acme உச்சம், அக்மி, Acne yes, soil.
, TOSacea ரோசகுனி. Acrania gyfurt6vb. Action செயல், சேட்டணம். Active FLJa). Acute gasp. Adventitious gaol-us L. Adynamic „9ygFéög7ianv. Aeration காற்றுப்படல், பரமாணு
சுவறல.
Affective Farlty sosulfoapill,
9ʻy
9.
99
குணகரணகம்,
ANA
Afflux of Blood id-69 irts TA ' l-ażi.
After-birth, Secondines sarutor திகள், செக்கந்தின், சராயுகம், பிற்பிறவி,
After-pains SerGeodis rr09.
Agalactia LurssSearcoub, sy6o prestis.
Ague குலைப்பன், விகம்பம், எகு.
Air Bath a ruśGórub, SuśGFśr
Ամlbo
Albinismus yai Sath. Albuminuria -ZyểòHư98)ro, oajerir
முரிகம். Alimentary Canal granorutaea. Alimentation (ou Tou'il. Alkalino Injection sydiaeoGavaf
மம், சருச்சியுள்ள பாயுரியம். Allantoid, Allantois g6vtšatö. Alvine Discharge Loadéaysay. Amaurosis அமருேசி, திமிரம், தரிச
Astads Amenorrhoea அமெனுறியம், அருது
85 Amnion அம்னியன், உட்பரிப்பீள். Amputation தறித்தல்,வெட்டல்,
6MTaorup, அமடதாசம. Amyelia அகசேருகம், முள்ளந்தண் டின்மை, அமையெல்யம். Anemia அனிமி, குரத்தம்,கிருதிரம்
Analysis அனலிசு, விபேதனம். Anasarea அனசார்கம், நீர்க்கோவை.

Page 51
94 ( ) மருத்துவத் தமிழ் முன்னோடி
கருத்துவம், ஸ்திரி பாலர் வைத்தியம்
என்பவைகளின்
y&L f
fir ir
layof F
survis Aoraniaஅகுனி ACne; A Rosace& ரோசகுனி
yQasaw6vb Acephalia gol-tih. JeyQaseva Acephalus pygop. அகெவலுசிஸ்தி Acephalocyst அசீட
அக்கிrேசி Anghylosis கனதை, ஆர்ங்கூசம் Croteheக்
years. Abortion
அபார்கன். 8 - Anefacephalous yearai Qas
aya), k . . You -6.J. Anencephaloid Garcăr@Æ
வலடு. அசீரகம் Agalacti% பாலின்மை, அஸ்திேசு AScite8 மக்ோதரம், உ
தோதரம், அஸ்தியுசாகோமம்
அஸ்தியாமிசம். அஸ்கினிய Asthenie அசத்துவ.
sy6iuldth Asthma rar. அஸ்விக்சி Asphyxia அகம்பனம், அட்டுவி Atrophy அபோஷம், வற்
ይD@p. அன்னயம் Placenta பிளசெந்தம்.
960evägiro Atelektasis 65äsib,
குறைவிரி. அதிருேமம் Atheroma களிகிறைந்த
பைக்கழலை. அதீபனம் Anorexia அனுர்ெக்சி, லிகு
கருவழிதல்,
Osteo-sarcoma
6ಳ್ಳ#
wa
அத்திரீசியம் Atesia அடைப்பு, பீறு
S0) lO அந்தகை Cul-de-sa0 பொக்கணம்,
LScopu60l. அந்தர்சீவி nேtozoda என்றுசோன், ayigua, Irth Intestinal Fever Fair
ணிவசாம், தைவடு. -3u6Nb Impotence LoGo@. -ylum eius? Exostosis , 5TdF6ivGas ngt6.. sylurieair Abortion, Miscarriage கருவழிதல், அசனுகம், மிஸ் காறிச்சு, அபனியம் Apnce& அசுவாசம் அமருேசி Amaurosis திமிரம், தரிச
f5fter அமெறீையம் Amenorrhoea அருதி
also அமையெல்யம் Amyelia அகசேரு கம், முள்ளந்தண்டின்மை, ayib SøSasQ6JG5ểo Umbilical Wesi
cle நாபிவத்திகம். sythaofusif Liquor Amnii lucrafi. அம்னியன் Amnion உட்பரிப்பீள்.
yuudi, Incontinence sylián 60 D,
மறிபடாமை, sy6orisch Allantoid, Allantois. gay 66)-F is Hallucination aldsg3ker. зубо 860 ti, Albinismus. gyếdluÁ962/Taff? Albuminuria sev6ITAT
முரிகம். a 6 ridista Excretion syssal.

தமிழில் அறிவியல் நூல்கள் ( ) 95
"அங்காதிபாதம், கெமிஸ்தம் முதலியவற்றுக்குரிய சொற்கள் பல இந்த அகராதிகள் சேர்ந்த நூல்களில் வருமானாலும் அவை இங்கே போடப்படவில்லை. அவைகளை பிரசித்தம் பண்ணப்பட்டிருக்கிற அந்தந்த நூல்களின் அகராதிகளில் பார்க்க வேண்டியது என்ற குறிப்பு முகவுரையில் உள்ளது. தனி நூல் சிலவற்றில் அகராதி இணைத்துள்ளமை பற்றி முன்பே கூறியது நினைவிருக்கலாம்.
நூல்கள் எழுதவும் மொழிபெயர்க்கவும் தம் மாணவரைத் தூண்டிய கிறீன் வைத்தியர். தகுந்த இடத்திற் போற்றினார்; தவறான இடத்திற் கண்டித்தார். அதனால், நற்பணியையே அவர் விரும்பினார் என்பதும் புலனாகிறது. நற்பணி ஆற்றியவர்களுக்கு உற்சாகம் அளிக்கும் பொருட்டு அவர்களைக் கெளரவிக்கவும் விரும்பினார்.
உதாரணமாக, * 1866 ஆம் ஆண்டிலே ய. டன்வதர் என்பவர் இரண வைத்தியம் என்ற நூலை மொழிபெயர்த் முடித்ததும், அந் நூலைத் திறம்படத் தமிழில் எழுதியதற்ஒர்க அன்னாருக்கு 'ன்வத்திய கலாநிதிப் பட்டம் அளித்தல் வேண்டுமெனத் தமது நாட்டிலிருந்த வைத்தியக் கல்லூரிக்கு விண்ணப்பஞ் செய்தார். தகைமை அற்றவர்களுக்கு இப், பட்டம் அளிக்கும் வண்ணம் நான் விண்ணப்பஞ் செய் வில்லை. தமிழில் வைத்திய இலக்கியம் 'படைப்பதற்கு மற்றவர்களைத் தூண்டுவதற்காகவே உரிய .4 t அளிக்குமாறு வேண்டுகிறேன்" எனத் தடித் விண்ணப்பு த்திற் குறிப்பிட்டார்.
* Life and Letters P. 243

Page 52
96 மருத்துவத் தமிழ் முன்னோடி
நூலாசிரியர் எல்லோரையும் பண்டிதர்" எனக் கிறீன் வைத்தியர் குறிப்பிடுவதையும் நூல்களிற் காணலாம். வரையறை சிலவற்றை வைத்தியரின் மொழியிலேயே தந்திருப்பதால் அன்னாரின் மொழிநடையையும் அவதானிக்கலாம். மேனாட்டவரின் பெயர்களுக்குக் கிறீன் வைத்தியர் கொடுத்த தமிழ் உருவம் கவனிக்கற்பாலது. நூல்களிலே தமது பெயரைக் கிறீன் வைத்தியன் என்றே எப்பொழுதுங் குறிப்பிட்டிருக்கின்றார்.
இந் நூல்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கக்கூடிய f சென்னை நூதனசாலை, வைத்தியக் கல்லூரி நூல் நிலையங்கள், அமரிக்கன் ஒறியன்ரல் சபை, பிரித்தானிய நூதனசாலை நூல்நிலையம், றோயல் ஆசியச் சங்க நூல்நிலையம் ஆகிய நிறுவனங்களுக்கு நூற் பிரதிகளை அனுப்பிவைக்குமாறு 1869 ஆம் ஆண்டு சென்னையிலிருந்து திரு. மேர்டொக் என்னும் அறிஞர், வைத்தியருக்கு எழுதினார். அவ்வண்ணம் அனுப்பி இருந்தால் அவை அங்கே இன்றும் பார்வைக்கிருத்தல் கூடும். குறிப்பு
இந் நூலிலே குறிப்பிட்ட நூல்களுட் பல பார்வையிட மட்டும் யாழ்ப்பாணம் "யாழ்ப்பாணக் கல்லூரியிலே’ 1960-65இல் கிடைத்தன. இன்று அவை எப்படியுள்ளன வென
அறிதல் சிரமமாதலால் இப்பொழுது இந்நூல் எழுது முன் பார்வையிட முடியவில்லை.
f The Museum, Medical College Libraries in Madras American Oriental Society, British Museum Library, Royal Asiatic Society's Library.

தமிழில் அறிவியல் நூல்கள் 97
1974இல், யான் கெனக்ரிக்கட் மாநிலத்திலுள்ள ஹாற்பட் நகரில் கிறீன் வைத்தியரின் பேரரான தொமஸ் டி. கிறீன் (அன்று வயசு 72) என்னும் ஒய்வு பெற்ற பொறியியலாளரைச் சந்தித்தேன். அவர் கிறீன் வைத்தியரின் மகன் டாக்டர் நேதன் கிறீனின் மகன். அப்பொழுது, தன் வீட்டில் ஓர் அறைக்குள் கிறீன் வைத்தியரின் நூல்கள், புறுாவ் பிரதிகள், கையெழுத்துப் பிரதிகள் போன்ற பலவற்றைக் காண்பித்து என்னை ஆச்சரியத்துள் ஆழ்த்தினார்.
"என் தந்தை தமது தந்தையாரின் சாதனையை, நினைவுக்கு வைத்திருந்தார். நானும் தொடர்கிறேன்"
என்று பெருமிதம் அடைந்தனர்.
அன்று அவர்கள் தந்த சில நூல்கள் என்னிடம் இன்றும் ad-airóT607.

Page 53
9. கலைச்சொல்லாக்கம்
"குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்
- திருக்குறள்
அறிவியற்கலை வளர்ச்சியுடன் இன்றைய உலகு அடர்ந்து படர்ந்து பின்னிப் பிணைந்து ஒன்றிக் கிடக்கின்றது. அறிவியலைத் தெளிவாக எடுத்துக் கூறவுங் கற்பிக்கவும் ஏற்ற மொழியே, இன்றைய சமுதாயத்துக்கு வேண்டற்பாலது. அண்மைக் காலம்வரை, தமிழ் மொழி இவ்வியல்பைப் பெறும் வாய்ப்புக் குன்றி வளர்ச்சியின்றி நின்றது. மேனாட்டிலே யாதொரு தடங்கலுமின்றி வேகமாக வளரும் அறிவியற் கலையைச் செவ்வனே எடுத்துக்கூறும் வளம்பெற்றுத் தமிழ்மொழி வளர்ச்சியுறல் வேண்டுமாயின், மூன்று பிரதான துறைகளில் நமது கவனஞ் செலுத்தப்படல் வேண்டும்.
அவையாவன,
கலைச்சொல்லாக்கம் மொழிபெயர்ப்பு விஞ்ஞானத் தமிழ்
இவற்றுள், கலைச்சொல்லாக்கம், மொழிபெயர்ப்பு கிய இரண்டு துறைகளிலுங் கிறீன் வைத்தியர் கண்ட னுபவங்களும், கூறிய கருத்துகளும் இன்றைய சமுதாயம்

கலைச்சொல்லாக்கம் 99
ஊன்றிக் கவனித்து உள்ளத்திற் கொள்ள வேண்டியன என்று உறுதியாகக் கூறலாம். முதற்கண், கலைச்சொல்லாக்கம் பற்றிய கருத்துகளைக் கவனிப்போம்.
கலைச்சொல்லாக்கமும் அதற்கென ஒரு மகாநாடுந் தேவையா, இல்லையா என்பது பழைய பிரச்சனை. வேற்றுமொழிச் சொற்கள் வந்து சேரும்போது அவற்றைச் சீரணித்துக் கொள்ளல் வேண்டுமென்பது சிலர் கருத்தாகும். திட்டவட்டமான விதிகளுக்கு அமையவே சொற்களை அமைத்தல் வேண்டுமென்பது மற்றொரு கருத்தாகும். சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கத்தின் முயற்சியால் f அறுபதுக்கு மேலான அறிஞர்கள் நான்கு ஆண்டுகளாக முயற்சியெடுத்து ஒன்பது கலைத்துறைகளைச் சேர்ந்த பதினாயிரஞ்சொற்களைத் தமிழிற் சேர்த்தபொழுது, சிலர் அம் முயற்சியைப் பரிகாசஞ் செய்தனர் பாஷை உடல்; விஷயம் உயிர்' என்று கூறிய இராஜாஜியும் இம் முயற்சியில் ஈடுபட்டாரேயெனச் சிலர் ஆச்சரியப்பட்டனர்!
பொருளே உயிர் என்பது உண்மை. மொழி, உடல் என்பதும் உண்மை. பொருளைத் தான் மொழியின்மூலம் எடுத்துக் கூறுகிறோம். வளர்ச்சிக்கும் நல்வாழ்வுக்கும் உயிர் எத்துணை அவசியமோ, உடலும் அத்துணை அவசியந்தான். ஊனமில்லாத உடல் நமக்கு அவசியமில்லை என்று எவருங் கூறத் துணியமாட்டார்கள். உடம்பார் அழியின் உயிரார் அழிவார் என்பது திருமந்திரம். இம் மந்திரத்தை வெல்லுந் தந்திரம் எதுவுந் தமிழ் வளர்ச்சிக்கு உயிர் அளிக்கமாட்டாது.
f கலைச்சொற்கள் : சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கம்,
திருநெல்வேலி 1938 பக்கம்.5.

Page 54
100 ) மருத்துவத் தமிழ் முன்னோடி
இன்று நமது நாட்டிலே கலைச்சொற்களின் நிலை எப்படி இருக்கிறது? * ஒட்சிசன் என்று ஒரு கலைச்சொல் வழங்கப்படுகிறதே, முன்பெல்லாம் பிராணவாயு என்று கூறிய வாயுவின் இன்றைய தமிழ்ப் பெயர், ஒட்சிசன் ஆகும். தன்மொழி அலுவலகத்தினரால் வெளியிடப்பட்டு ஈழத்துத் தமிழ் மாணவராலும் ஆசிரியராலும் பிரயோகிக்கப்படுகிறது, இக் கலைச்சொல். இதே அலுவலகத்தினர், பட்டதாரி வகுப்பு களுக்குத் தேவையான கலைச்சொற்களையும் ஆக்கிப் பிரசுரஞ் செய்துள்ளார்கள். கடந்த பன்னிரண்டு ஆண்டு களாக நமது நாட்டிலே இத் துறையில் முயற்சி நடை பெறுகிறது.
தமிழ், சிங்களம் ஆகிய மொழிகளில் விஞ்ஞானங் கற்பித்தல் வேண்டுமென 1955 ஆம் ஆண்டிலே இலங்கை அரசினர் தீர்மானித்ததைத் தொடர்ந்து, தன்மொழி அலுவலகந் தமிழ்க் கலைச்சொற் றொகுதிகளைத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டது. கலைச் சொற்களை அமைக்குங்கால், தன்மொழி அலுவலகத்தினர் திட்டமான விதிமுறைகள் சிலவற்றைக் கையாளுகின்றனர்.
f ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன் ஆகிய மொழி களிலிருந்து பெயர்ச்சொற்களானவை தமிழோசை சிதையாமல் எடுக்கப்பட்டன. புதிய சொற்களும் இலக்கண விதிகளைத் தழுவியே ஆக்கப்பட்டன. ஒன்றுக்கு மேற்பட்ட சொற்களைச் சேர்த்து ஒரு சொல்லாக்கும்போது முதற்
* Oxyen
† Glossaries of Technical Terms, Department of Swabasha
Ceylon.

கலைச்சொல்லாக்கம் 101
பொருள் பிறழா வண்ணஞ் சொற்கள் சுருக்கப்பட்டன. புதிய சொற்களை ஆக்கும்போது பிற மொழிகளிலிருந்து முதற் கருத்தே மூலமாகக் கொள்ளப்பட்டது. சென்னை அரசினர் வெளியிட்ட சொற்றொகுதியும் வேண்டிய இடத்துப் பயன் படுத்தப்பட்டன. ஆனால், கிரந்த எழுத்துகள் தவிர்க்கப்பட்டன.
தென்னிந்தியத் தமிழர் மத்தியிலே ஒட்சிசன் வாயுவைக் குறிக்குங் கலைச்சொல், ஆக்ஸிஜன் ஆகும். சென்னை அரசினர் வெளியிட்டுள்ள கலைச்சொற்றொகுதியில் இச் சொல் தரப்பட்டுள்ளது. சென்னை அரசினர் வெளியிட்ட கலைச் சொற்றொகுதியோ, எமது நாட்டு முயற்சிக்குப் பதினைந்து ஆண்டுகள் முந்திய தீர்மானத்தைத் தொடர்ந்து ஆக்கப்பட்டதாகும்.
இந்திய நாட்டின் பல்வேறு மொழிகளிலும் விஞ்ஞானத்தை அறிமுகப்படுத்தும் நோக்கத்துடன் கலைச் சொற்களை அமைப்பதற்கு ஒரு பொதுக் கொள்கையை வகுக்கவென, 1940 ஆம் ஆண்டிலே இந்திய அரசினரால் ஒரு பொதுக்குழு நிறுவப்பட்டது. சீரான முறையில் விஞ்ஞானதொழில் நுட்பக் கலைச்சொற்களை அமைப்பதற்குத் தென்னிந்திய மொழிகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வோர் உப குழு நியமிக்கும்படி இப் பொதுக்குழு ஆலோசனை கூறியது. இவ்வுபகுழுக்களின் தீர்மானப்படி, 1947ஆம் ஆண்டிலே சில கட்டுப்பாடுகளுக்கும் விதிகளுக்கும் அமையத் தமிழ்க் கலைச்சொற்கள் ஆக்கப்பட்டன. ஆங்கிலச் சொல்லின் ஒசை கெடாமற் றமிழ்ப்படுத்துவதோடு வேண்டிய இடத்திற் கிரந்த எழுத்துகளும் பிரயோகிக்கப்பட்டுள்ளன.

Page 55
102 மருத்துவத் தமிழ் முன்னோடி
சொற்களைத் தேவைக்கு ஏற்றவண்ணஞ் சீரணித்துக் கொள்ளல் கூடும் என்று விட்டு விடாது, திட்டமான விதிகளை வகுத்து, அவற்றுக்கமையச் சொற்களை அமைத்துக் கோடல் மிக நல்ல முயற்சியேயாம். ஆனால், ஈழத்துக் கலைச்சொற்கள் ஈழ நாட்டிலே மட்டும் பிரயோகிக்கப்படுகின்றன. சென்னை அரசினரின் கலைச் சொற்கள் தமிழகத்திலே மட்டும் பிரயோகிக்கப்படுகின்றன. இரு நாட்டுத் தமிழ் அறிஞர்களும் இணைந்து செயலாற்றும் வாய்ப்பு ஏற்படாத காரணத்தால், கலைச்சொற்களில் ஒருமைப்பாடில்லை. ஆங்கிலப் பதத்தை ஓசை கெடாமற் றமிழுருவங் கொடுப்பதிற்கூட ஒருமைப்பாடில்லை. அரசாங்க ஊழியர்கள் அலுவலகங்களில் இருந்து இந்த ஒருமைப் பாட்டைக் காணுதல் நடைமுறையில் ஏற்படக்கூடியதுமல்ல!
கடலையுங் காலத்தையுங் கடந்து தமிழ் பேசும் மக்களை இணைத்து நிற்பது தமிழ் மொழி பரந்த உலகைச் சுருக்கி மனித சமுதாயத்தை ஒன்றாக்கி வைத்துள்ளது அறிவியற் கலை. ஆயின், அதே தமிழின் பெயராலும் அறிவியற்கலையின் பெயராலும் ஒன்றுபட்டிருந்த தமிழினமே இன்று பிளவுபட்டு நிற்பது விரும்பத்தக்கதல்ல.
கலைக்களஞ்சியத்தை அமைப்பதில் இந்தியா, பர்மா, மலாயா, இலங்கை ஆகிய நாட்டுத் தமிழர் ஒன்றுபட்டுச் செயலாற்றல் கூடுமெனின், கலைச்சொல்லாக்கத்தில் மட்டும் ஏன் இந்தப் பிளவு? இப் பிளவு தமிழருக்கும் தமிழ் மொழிக்கும் ஓர் இழுக்கல்லவா?

கலைச்சொல்லாக்கம் 103
அறிவியற்கலைகள் தமிழிற் பரவித் தமிழ் மொழி வாழ்வும் வளமும் பெறல்வேண்டுமாயின், பல்கலைக் கழகங்களிலும் தமிழே போதனா மொழியாகித் திறமையைக் காட்ட வேண்டுமாயின், மேலுந் தாமதமின்றி ஒருமைப் பாடான கலைச்சொற்கள் பிரயோகத்துக்கு வருதல் அவசியம். தகுதி வாய்ந்த அறிஞர்கள், இத்துறையில் ஈடுபட்டுத் தமிழ் பேசும் மக்கள் எல்லோருக்கும் பொதுவான கலைச்சொற் றொகுதியைத் தயாரித்தளித்தல் வேண்டும். அதற்கென, இலங்கை, இந்தியா, மலேசியா ஆகிய நாடுகளின் பல்கலைக் கழகங்களும் மற்றும் உயர் கல்வி நிலையங்களும் உழைத்தல் வேண்டும். கலைச்சொற்களைக் கட்டுப்படுத்தவும் ஆக்கவும் அனைத்துலகத் தமிழறிஞர் நிறுவனம் ஒன்று நிறுவுவதே முதற்கண் வேண்டற்பாலது.
ஆங்கில மொழி படிப்படியாகத் துணை மொழியாக மட்டும் இடம்பெறுங் காலத்தை அணுகிக்கொண்டிருக்கும் இந்நாளில், எல்லை காணாது விஞ்ஞானம் எங்கும் வியாபித்து வாழ்வுடன் ஒன்றிவளரும் இவ்வேளையில், ஈழத் தமிழருக்கு ஒரு கலைச்சொற்றொகுதியும் இந்தியத் தமிழருக்குப் பிறிதொரு கலைச்சொற்றொகுதியுமாகித் தமிழ் மொழிக்கு இழுக்குண்டாக்குவது விரும்பத்தக்கதல்ல; விவேக மான செயலுமல்ல. அடிப்படையான விஞ்ஞானக் கல்வி ஆங்கில மொழிமூலங் கற்ற நாளில் அமைந்ததுபோன்று தரங் குன்றாது தமிழிலுஞ் சிறந்த முறையில் அமைதல் வேண்டு மாயின், ஒருநாட்டறிஞரின் முயற்சியும் ஆராய்ச்சியுந் தமிழ் பயிலும் அனைவர்க்கும் விளங்குதல் வேண்டும். தமிழ்பேசும் மக்கள் எங்கு வாழினும், விஞ்ஞான அறிவு எதுவிதத்தடைகளு

Page 56
104 ( ) மருத்துவத் தமிழ் முன்னோடி
மின்றித் தெளிவாகவும் ஐயந்திரிபறவு மிருத்தல் வேண்டும். சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிடுந் தமிழ்நூல் இலங்கைத் தமிழ் மாணவனுக்குப் பயன்படாது போகு மானால், தமிழில் விஞ்ஞானத்தைப் பரப்பும் அடிப்படை நோக்கமே தோல்வி யுற்றுவிடுமல்லவா? ஒரு நாட்டில் வெளிவருந் தமிழ்நூல்களுஞ் சஞ்சிகைகளுஞ் சகல நாட்டினருக்கும் பயனளித்தல் வேண்டுமல்லவா? இதற் கெல்லாம், ஒருமைப்பாடான கலைச் சொற்கள், தவிர்க்க முடியாத ஓர் அம்சமாகும்.
எழுதும் எழுத்தே கருத்துப் பரிமாறலின் அடிப்படை முறையாக விளங்குகிறது. இதற்கு மாற்றுமுறை காணல் முடியாது. எனவே, தமிழ்மொழி ஒரே மொழியாக வளர்ந்து வாழவேண்டுமாயின், இந்தக் கலைச்சொல் ஒருமைப்பாடு மிக அவசியம்.
இன்று, பிரயோகத்தில் உள்ள ஆங்கிலப் பதங்களை உச்சரிப்புக் கெடாமற் றமிழுருவங் கொடுத்தே இரு நாட்டினருஞ் சொற்களை ஆக்குகிறார்கள். கிரந்த எழுத்துக் களைப் பிரயோகஞ் செய்வதில் இவ்விரு நாட்டினருக்கு மிடையே கருத்து வேறுபாடுண்டு. உச்சரிப்புக் கெடாமற் சொல்லுக்குத் தமிழுருவங் கொடுப்பதிலுஞ் சிறிது வேறுபாட்டைக் காண்கிறோம்.
பொதுவாகப் பார்க்குமிடத்து, எந்த ஒரு விடயத்திலும் எப்பொழுதுமே கருத்தொற்றுமை நிலவுவதில்லை. கலைச் சொல்லாக்கத்தில் மட்டும், கருத்தொற்றுமை நிலவும் என நாம் எதிர்பார்ப்பதுந் தவறாகும். கருத்து வேறுபாடு என்றுமே நிலவும் என்பதற்காக ஒருமைப்பாடான கலைச் சொற்களின் அவசியம் புறக்கணிக்கப்படலுமாகாது.

கலைச்சொல்லாக்கம் 1 05
புதிய கலைச்சொற்களை அமைக்கும் பொறுப்பு மிகவும் மகத்தான பொறுப்பாகும். கருத்து வேறுபாடுகளை யெல்லாம் அலசி ஆராய்ந்து தீர்ப்புக் கூறுவதும் திட்டவட்ட மான முடிவு எடுப்பதுஞ் சுலபமான பொறுப்பல்ல. ஆனால், தகுதிவாய்ந்த அறிஞர்குழுவொன்று ஆராய்ந்தளிக்கும் முடிவை, மொழி வளமும் வளர்ச்சியுங் கருதி ஏகமனதாக ஏற்றுக்கொள்ள வேண்டியது தமிழ்மக்கள் கடமை. அது தமிழ்த் தொண்டுமாகும். எனவே, வேற்றுமையில் ஒற்றுமை கண்டு, கருத்து வேறுபாட்டை அலசி முடிவுசெய்தல் தவிர்க்க முடியாத நிலைமையாகிறது.
நாளிதுவரை, வேற்று மொழிமூலம் ஒருமைப்பாடான சொற்களைப் பிரயோகித்த நாம், இன்று தமிழிற் கலைச் சொற்களை ஆக்கும் போது வேற்றுமைப்பட்டு நிற்றல் பெரும் இழுக்காகும். எனவே, யாது செய்யலாம் என மனந்தளர்ந்து ஒவ்வொரு நாட்டினருந் தத்தம் மனவிருப்பத்திற்கேற்பச் சொற்களை ஆக்கி ஒருமைப்பாடற்ற கலைச்சொற்களைப் பிரயோகிக்க அனுமதித்தல் தகாது என்பதையே ஈண்டு மீண்டும் வற்புறுத்துகின்றேன். சுதந்திர நாட்டிலே, விஞ்ஞானக் கல்வியுந் தமிழ்மூலமே கற்பிக்கப்படல் வேண்டு மென எண்ணி அடியெடுத்து வைத்தபோது, கலைச்சொற்கள் தேவைப்பட்டன. அதனால், இந்த இடைக்கால முயற்சியில் அனைத்துலக ஒருமைப்பாட்டை எண்ணிச் செயலாற்றும் வாய்ப்பு ஏற்படாமை குறித்துக் குறைகூறுவதற்கில்லை. ஆயின், இத்தனை ஆண்டு காலமும் பெற்ற அனுபவங்களைக் கொண்டு, இனிமேலாவது தகுந்த வழியிற் செல்லக் கடமைப் பட்டுள்ளோம். மேலும், நமக்கு முன்னோடிகளாகப் பணி

Page 57
106 ( ) மருத்துவத் தமிழ் முன்னோடி
யாற்றியவர்களின் கருத்துகளையும் அனுபவங்களையும் அவதானித்துச் செயலாற்ற வேண்டியவர்களாகவும் இருக்கின்றோம். t இரசாயனக் கலைச்சொற்கள், உயிரியற் கலைச்சொற்கள் போன்றவற்றில் அனைத்துலக ஒருமைப் பாட்டைக் காண்பதற்காக நடைபெற்ற மாநாடுகள் நமக்கு வழிகாட்டுகின்றன. மொழியால் வேறுபட்டவர்களிடையே யுங் கலைச்சொற்களின் அமைப்பில் அனைத்துலக ஒருமைப் பாடு காண இம் மாநாடுகள் சட்டம் அமைத்துள்ளன!
கலைச்சொல்லாக்கத்திலும், கிறீன் வைத்தியர் முன்னோடியாகத் திகழ்கின்றார் என்பதை இவ்விடத்தில் எடுத்துக்காட்டுவது பொருத்தமாகும். தமிழில் மேனாட்டு வைத்தியங் கற்பிக்கும் முயற்சியில் ஈடுபட்ட காலத்தில், கிறீன் வைத்தியர் கலைச்சொல்லாக்கத்துக்கு முதலிடங் கொடுத்தார். திட்டவட்டமான விதிகளை அமைத்து, அவற்றுக்கமையவே புதிய சொற்களை ஆக்கிய கிறின் வைத்தியர், கலைச்சொற் பிரயோகத்தில் அனைத்துலக ஒருமைப்பாடு காணவும் முயற்சிஎடுத்தார்.
தமிழில் வைத்தியங் கற்பித்தல் வேண்டுமென் எண்ணங் கொண்டவுடன், 1850 ஆம் ஆண்டிலேயே கலைச்சொற் றொகுதியை அமைப்பதற்கு ஆரம்பித்தார் கிறீன் வைத்தியர். அவ் வேளையிலே, * அநேகஞ் சொற்கள் இப்பொழுதே தமிழில் உள்ளன. அவை அருமையான வைத்தியச் சொற் களாகும்' என வைத்தியர் குறிப்பிட்டுள்ளார். ஆயினும், தேவையைப் பூர்த்தி செய்வதற்குப் புதிய சொற்களை ஆக்கும் பணியிலும் ஈடுபடல் அவசியமாகிறது. எனவே, கலைச்
* Van Nostrand's Scientific Encyclopedia pp. 229,997 * Life and Letters.......P. 74.

கலைச்சொல்லாக்கம் 107
சொல்லாக்க விதிகளை அமிைத்துப் புதிய சொற்களை ஆக்கினார். fஅன்றாடப் பிரயோகத்தில் இருந்த தமிழ்ச் சொற்களுள் மிகவும் பொருத்தமாகவுஞ் சுருக்கமாகவுங் காணப்பட்டனவற்றுக்கு முதலிடங் கொடுக்கப்பட்டது. பின், தமிழ்ச் சொற்களிலிருந்து பொருத்தமான சொற்கள் சிறு மாற்றங்களுடன் அமைக்கப்பட்டன. ஒரே பொருளைக் குறிக்கும் பல சொற்கள் இருப்பின், அவற்றுள் ஒன்று தெரிவு செய்யப்பட்டது.
தமிழில் இருந்து தேவையான சொல்லைப் பெற முடியாதாயின், உச்சரிப்பையும் ஒலியையும் பேணி ஆங்கிலச் சொல்லிலிருந்து முதனிலையைத் தெரிவுசெய்து தமிழ் மரபுக்கு ஏற்றதாக விகுதி அமைக்கப்பட்டது. அஃதும் இயையாவிடத்து சமஸ்கிருதத்திலிருந்து தேவையான சொல் அமைக்கப்பட்டது.
t Aiming to have each term brief, euphonious and apposite in derivation and accounting as practically Tamil any word in good general use, Seek for the term first in the Tamil thus:-
1. Prefer a simple or compound Word in common use or.
2. lf more appropriate some apt though abstruse wobr.
3. Compound the word by uniting roots or a roéand al
particle.
4. Rarely some apt radical word may be modifiężby givin,
it an ordinary termination or.
5. Where there are several words wider th9gh similaryn
meaning, restrict one to specify the objeqSör.
6. Translate and join the several membes of the Esgrish
compound word.

Page 58
108 மருத்துவத் தமிழ் முன்னோடி
f "அரும் பதங்களுள் சில செந்தமிழ்ச் சொற்கள், சில சமஸ்கிருதச் சொற்கள் . அநேகம் தமிழ் எழுத்தில் சமைத்த இங்கிலிஷ சொற்களாயிருக்கும். பதம் ஒவ்வொன்றும் தனித்தனி ஆராய்ந்து சேர்க்கப்பட்டது. ஆயினும், தாய்நூலிலே உள்ள இங்கிலிஷ சொல்லை தமிழில் எழுதும்போதெல்லாம் அது
Finding no term in Timal transfer the English thus:
1. Write the word as a noun, tersely and smoothly, preserve its accent and the sounds of its radical portion and terminate in ordinary Tamil form.
2. Modify it when requisite by the addition of an abpropriate
particle.
3. In compounds if there be for any member a good Tamil
word combine it with the English word. If the word cannot be satisfactorily Tamilised seek a term in the Sanskrit thus:
1. Prefer a term sanctioned by both an English and
Sanskrit and a Sanskrit and English dictionary.
2. Should no appropriate term be found, adopt some word expressive of one or more characteristics of the object to be named Or.
3. Compound the word by unting roots or a root and a
particle
4. Adopt a Word having the same meaning as the original of
the English derivative
5. Where there are several words of wider though similar
meaning, restrict one to specify the object.
6. If there be for any member of the English compound a
good Tamil word combine it with the Sanskrit.

கலைச்சொல்லாக்கம் 109
குறளவும் அதற்குரிய ஓசை கெடாமல் ஏற்ற கோலங்கொள்ளவும் தக்கதாய் இயற்றி இருக்கும்"என்பது வைத்தியரின் விளக்கம்.
இப்படியாக, திட்டமான விதிகளை அமைத்ததோடு நிற்கவில்லை; இந்தியநாட்டுத் தமிழரின் கருத்தை அறியவும் அவர்களது ஒத்துழைப்புடன் ஒருமைப்பாடான கலைச் சொற்களைத் தமிழ்பேசும் மக்களிடையே பரப்பவும் ஆவல் கொண்டார் வைத்தியர். "ஒரே கலைச்சொற்களைப் பிரயோகிப்பதற்கு எல்லோருஞ் சம்மதிக்க முடியுமானால், அதுகுறித்துத் தாம் மகிழ்ச்சியும் ஊக்கமும் பெறக் காரணமுண்டு" எனத் திருவாங்கூரில் அன்றிருந்த டாக்டர் லோ என்னும் அறிஞருக்கு 1865 ஆம் ஆண்டிலேயே எழுதினார்/ இற்றைக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னர், தமிழரல்லாத கிறீன் வைத்தியர் இத்துணை தீர்க்க தரிசனத்துடன் பணியாற்றியுள்ளாரே, அவரின் அடிச் சுவட்டை யாம் ஏன் தொடரவில்லை?
இந்த நூற்றாண்டிலே கலைச்சொல்லாக்கத்தில் ஈடுபட் டவர்கள் எவராவது ஒருமைப்பாட்டைக் காண முயற்சி எடுக்கவில்லை என்று கூறுதல் தவறு. சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கம் 1934 ஆம் ஆண்டில் எடுத்த முயற்சியில், ஒருமைப்பாடான கலைச்சொற் பிரயோகத்துக்கு வழிகாண முயன்றது என்பதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.
கலைச்சொற்களை ஆக்கவேண்டும் என்ற தீர்மானம், 1934 ஆம் ஆண்டிலே சென்னை மாகாணத் தமிழர் மகா நாட்டில் நிறைவேறியது. அதன் பயனாகச் சொல்லாக்கக் கழகம் ஒன்று நிறுவப்பட்டது. கணிதம், பூதநூல், வேதி நூல், பயிர்நூல், விலங்குநூல், உடலியலும் நலவழியும், பூகோளம்,

Page 59
110 மருத்துவத் தமிழ் முன்னோடி
வரலாறு ஆகிய கலைகளுக்கான கலைச்சொற்களைப் பல அறிஞர்கள் பொறுப்பேற்று ஆக்கினர். இச் சொற்கள், 1935 ஆம் ஆண்டிலே ஆராயப்பட்டுப் பின்னர் புலமைமிக்க பலருக்கு அனுப்பப்பட்டன. இச் சொற்களை உறுதிப் படுத்தவென 1936 ஆம் ஆண்டிலே கலைச்சொல்லாக்க மாநாடு சென்னையிற் கூடிய போது, சென்னைப் பல்கலைக்கழகம், இலங்கைக்கல்விப் பகுதியினர், தென்னிந்திய ஆசிரியர் சங்கம், சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகளும் பங்குபற்றினர். ஈழத்துச் சுவாமி விபுலானந்தர் அவர்கள் மாநாட்டுத் தலைவராகப் பணிபுரிந்தமை குறிப்பிடத்தக்கதாகும். இதில், இலங்கைப் பிரதிநிதிகளும் கலந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டதால், கலைச்சொற் பிரயோகத்தில் ஒருமைப்பாடு ஏற்படவும் வழி அமைக்கப்பட்டது.
இக் கலைச்சொற்களை ஆக்குங்கால் இரண்டு
அடிப்படைக் கொள்கைகள் அனுசரிக்கப்பட்டன.
1. சொற்கள் சுருக்கமாகவுந் தெளிவாகவும் பொருள்
பொதிந்தனவாகவும் இருத்தல் வேண்டும்.
2. சொற்கள் தமிழோடு தமிழாய்க் கலக்கும்
இயல்பினவாக இருத்தல் வேண்டும்.
இவ்விரு அடிப்படைக் கொள்கைகளுக்கும் முரணில்லாத வகையில் வேற்று மொழிகளிலிருந்து கட்ன் வாங்கவும், தமிழிற் சேர்ந்து விட்ட பிறமொழிச் சொற்களைச் சேர்த்துக் கொள்ளவும் அனுமதி இருந்தது.

கலைச்சொல்லாக்கம் 111
இச் சொற்கள் இன்று வழக்கில் இல்லாதிருப்பினும், இன்றைய கலைச்சொல்லமைப்பிற் பிரதான வழிகாட்டி களாக அமைகின்றன.
இதுவரை நான்கு வெவ்வேறு கலைச்சொல் லாக்க முயற்சிகள் குறிப்பிடப்பட்டன. கிறீன் வைத்தியரின் சொற்கள், சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கத்தினரின் சொற்கள், சென்னை அரசாங்கத்தின் சொற்கள், இலங்கை அரசாங்கத்தின் சொற்கள் ஆகிய இந் நான்கிலிருந்துஞ் சில சொற்களைத் தெரிந்து ஒப்பிட்டுப் பார்த்தல் நன்று.
ஆங்கிலம் கிறீன் தமிழ்ச் சென்னை இலங்கை வைத்தியர் சங்கம் அரசாங்கம் அரசாங்கம்
Oxgen அக்சிதம் தியகம் ஆக்ஸிஜன் ஒட்சிசன்
Hydrogen gCD.5Li நீரகம் ஹைடிரஜன் ஐதரசன் Sulphate E636) is கந்தகை ஸல்பேட்டு சல்பேற்று Sulphite || &Faüaîls; கந்தசை ஸல்பைட்டு சல்பைற்று Sulphide arabaibutuh sisang 67ua)60LG) சல்பைட்டு
ஆங்கிலச் சொல்லுக்குத் தமிழுருவங் கொடுத்தே
தமிழகத்திலும் ஈழத்திலுங் கலைச்சொற்கள் ஆக்கப்படு கின்றன என்பது இதனாற் புலனாகிறது. இதே கொள்கை யைத்தான் நூறு ஆண்டுகளுக்குமுன் கிறீன் வைத்தியருங்
(66) 6Lİff681öTl-İTİT.
கலைச்சொற்கள் ஒவ்வொன்றும் உயிராகக் கொண் டிருக்கும் பொருளைத் தெளிவாகப் பரிமாறுவதற்கு, ஆங்கிலச் சொல்லை நேரடியாக எடுத்தாளுவதே சிறந்த வழியென, கிறீன் வைத்தியர் கருதினார். மேனாட்டுக் கலைச்சொற்

Page 60
112 ( ) மருத்துவத் தமிழ் முன்னோடி
களைத் தமிழிற் சேர்க்கும் முறையிற் சில இடர்கள் இருப்பினும், ஆங்கிலச் சொற்களைத் தமிழ்ப்படுத்துவதில் உள்ள இடர்களைச் சமாளித்துக்கொள்ளல் கூடுமெனவும் வைத்தியர் துணிந்தார். தமிழிலுஞ் சமஸ்கிருதத்திலும் இல்லாத ஆங்கில ஒலிகளும் அமைப்புகளும் எவையெனக் கண்டு, ர் அவற்றுக்குத் தமிழுருவங் கொடுப்பதில் ஒரு சீரான முறையைத் தீர்மானித்துக் கொள்ளுவதே, தம்மை எதிர் நோக்கியிருந்த ஒரே பொறுப் பெனவும் எண்ணினார்.
உலகத்தின் பல்வேறு மொழிகளிலுங் கலைச் சொல்லாக்கத்தில் ஒருமைப்பாடு காண்பதற்கு, இம் முறையே இன்று கையாளப்படுகிறது. ஒவ்வொரு மொழியும் அதன் தனித் தன்மைகளுக்கு ஏற்ப அமைப்பையும் விகுதியையும் வகுத்துக் கொள்ளல் கூடும்.
ஆயின், தமிழுருவங் கொடுப்பதற்குச் சீரான முறையை வகுத்துக்கொள்வதிற்றான் கருத்து வேறுபாடு தோன்றி யுள்ளது. மொழி வளர்ச்சியும் மறுமலர்ச்சியும் பற்றிய கருத்து வேறுபாட்டால் ஏற்பட்ட பிளவே இது. கிரந்த எழுத்துக் களைப் பிரயோகித்தல் வேண்டுமா? என்பது முக்கியமான வினாவாக அமைகிறது. தமிழ் மொழியின் தன்மைக்கும்
it "The direct introduction of Western terms into the Tamil is desirable as affording the readiest communication of the knowledge they embody.... Though there are some difficulties in the process these can be met in the case of the English terms. It needs but to determine what sounds and forms exist in the English unlike those in the Tamil and Sanskrit and to agree upon a uniform manner of rendering them into Tamil"
- Vocabularies of Meteria Medica & Pharmacy

கலைச்சொல்லாக்கம் 113
மரபுக்கும் ஏற்பச் சொற்களின் அமைப்பையும் விகுதியையும் வகுத்துக்கொள்வதிலும் ஒற்றுமையில்லை.
இன்று, தமிழ்மொழி வளர்ச்சிக்காக உழைக்கும் பல்கலைக்கழகங்களின் கூட்டுச் சபை அல்லது அனைத் துலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழகம் இப் பொறுப்பை ஏற்றுத் தகுதி வாய்ந்த குழுவொன்றை நியமித்தல் வேண்டும். மிகவும் இடர்ப்பாடான நிலைமையிலும் அன்று கிறீன் வைத்தியர் ஒருமைப்பாடான கலைச்சொற் பிரயோகத்துக்கு வழிவகுக்க ஆசைப்பட்டாரெனின், இன்று நாம் முயற்சி மேற்கொள்ளல் எளிதன்றோ! இன்றுள்ள சொற்களின் குணம் நாடி அவற்றின் குற்றமும் நாடினால், அவற்றுட் சிறந்தது எது என்பதைத் தீர்த்துவைப்பதிற் கற்றோர் உடன்பாடு காணுவது இலகுவாகும். அறிஞர்கள் இதற்கு வழிவகுப்பரென
எதிர்பார்ப்போமாக!

Page 61
10. கலைச்சொல் ஒருமைப்பாடு
"எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு
- திருக்குறள்
f'பொதுவாக, தமிழகத்திலும் இலங்கையிலும் கையாளப்படும் கலைச் சொற்களில் ஒருமைப்பாடு இல்லை என்பது வெளிப்படை - தமிழக இலங்கையினரின் கூட்டு முயற்சி இந்நிலையைச் சீராக்கும். அறிவியலும் தொழிலிய லும் மிகவேகமாக முன்னேறி வரும் இந் நாளில் கலைச்சொல் ஒருமைப்பாடு இன்றியமையாததாகும்"
'கலைச் சொல்லாக்கம்' என்ற தமது ஆராய்ச்சி நூலிலே, கொடைக்கானல், அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக இணைப்பேராசிரியர் டாக்டர் இராதா செல்லப்பன் மேற்கண்டவாறு கூறுகின்றார். தமிழகப் பேராசிரியர் ஒருவர் இப்படி இருநாட்டு கூட்டு முயற்சி பற்றிக் கூறியிருப்பது உண்மையில் மகிழ்ச்சிக்குரியது.
இதே பேராசிரியர், 1987 ஆம் ஆண்டு கோலாலம்பூரிலே நடைபெற்ற ஆறாவது தமிழாராய்ச்சி மாநாட்டில் கூறிய கருத்துக்களைத் தொடர்ந்து நடைபெற்ற விவாத அரங்கில் பங்கு பற்றிய அறிஞர்கள் தினமணி
f கலைச்சொல்லாக்கம்: டாக்டர் திருமதி இராதா செல்லப்பன் அச்சிட்டோர். நாவல் ஆர்ட் பிரிண்டர்ஸ், சென்னை 14 (1985) பக்.72

கலைச்சொல் ஒருமைப்பாடு ( ) 115
ஐராவதம், கவிஞர் ரங்கசாமி, மனவை முஸ்தாபா, பேராசிரியர் சுப்பிரமணியம் முதலிய பலரும் கலைச்சொல் ஒருமைப்பாட்டின் அவசியத்தை வலியுறுத்தினர். தமிழகத்தில், ஒரே பல்கலைக் கழகத்தின் வெவ்வேறு துறைப் பேராசிரியர்களிடையே கூட ஒருமைப்பாடான கலைச்சொற் பிரயோகம் இல்லையே' என்று கூடச் சில அறிஞர்கள் சுட்டிக்காட்டியதையும் ஈண்டு குறிப்பிடுதல் பொருத்தமான தென எண்ணுகிறேன். விவாத அரங்கு முடிவில், கலைச் சொற்கள் உருவாக்குவதற்குப் பல்கலைக்கழகம் மற்றும் வெளி அறிஞர்கள் கொண்ட நிலையமொன்றை அமைத்தல் வேண்டு மென ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டது. இச் செய்தியைத் தொகுத்தளித்த மலேசியப் பத்திரிகையான தமிழ் நேசன்" * பூனைக்கு மணிகட்டுவது யார்? என்று தலைப்புக் கொடுத்து வெளியிட்டது.
கலைச்சொல்லாக்கம் பற்றிய # கருத்தரங்கு ஒன்றிலே இலங்கை அறிஞர் இ. முருகையன் கலைச்சொல் ஒருமைப் பாடு பற்றி வலியுறுத்தியபின், பூனைக்கு யார் மணிகட்டு வார்களோ தெரியாது' என்று குறிப்பிட்டார். 1989 ஆம் ஆண்டு மொரிசியஸில் நடைபெற்ற ஏழாவது அனைத்துலக தமிழாராய்ச்சி மாநாட்டிலேயும் பல பேராசிரியர்கள் கலைச் சொல் ஒருமைப்பாடு பற்றி வலியுறுத்தினர். ஆனால் இற்றை வரை இலங்கைத் தமிழகம் இரண்டும் (ஏன்? பிறநாடுகளும்) ஒருங்கிணைந்து உழைத்துக் கலைச்சொல் ஒருமைப்பாடு காணும் முயற்சிபூச்சியமாகவே உள்ளது.
* தமிழ் நேசன்: நவம்பர் 18, 1987 பக்கம் 6
# இ. முருகையன்: தமிழில் விஞ்ஞானம் பற்றிய கருத்தரங்கு 17-18 ஜனவரி 1967

Page 62
118 ( ) மருத்துவத் தமிழ் முன்னோடி
வெவ்வேறான கலைச்சொற்களை ஒரே மொழியான தமிழில் பிரயோகித்தல் விரும்பத்தக்கதல்ல என்பதைப் பலரும் ஏற்றுக் கொள்வர். தமிழ் பேசும் மக்களை எல்லாம் காலம். இடம் - தூரத்தை வென்று ஒன்றிணைப்பது தமிழ்மொழி. மக்கள் இனத்தையே காலம் இடம் தூரத்தை வென்று ஒன்றிணைப்பது அறிவியல். இந்நிலையில், அதே தமிழின் பெயராலும் அதே அறிவியலின் பெயராலும் தமிழ் மக்கள் கூறுபட்டு நிற்பதும் இருவேறு தமிழை வளர்ப்பதும் நிச்சயமாக நாம் விரும்பத்தக்கதல்ல; விவேகமான செயலுமல்ல.
கலைச்சொல் ஒருமைப்பாடின்றி அறிவியல் நூல்கள் வெளியிடப்படும்போது ஆசிரிய மாணவர் பல நடைமுறை பிரச்சினைகளை எதிர் நோக்குவர். ஆரம்ப காலத்தில், இந்த வகையான நடைமுறைப் பிரச்சினையை நான் அனுபவத்தில் உணர்ந்தேன். 1950 ஆம் ஆண்டுகளில், இலங்கைத் தன்மொழி அலுவலகம் வெளியிட்ட கலைச்சொற்கள் தமிழ்நாட்டுச் சொற்களினின்றும் வேறுபட்டிருந்தன. அவ்வேளை, தமிழில் கலைச்சொல் ஒருமைப்பாட்டின் அவசியம் பற்றியும் இலங்கை - தமிழ்நாட்டுக் கூட்டு முயற்சியின் அவசியம் பற்றியும் சில கூட்டங்களில் பேசினேன். அதை ஆதரித்து 'வீரகேசரிப் பத்திரிகை ஒர் ஆசிரியத் தலையங்கமே எழுதியிருந்தது.
# "...நாம் தேடி அலைய வேண்டியிருக்கும் பல்லாயிரக்கணக்கான கலைச்சொற்களுக்கு ஏற்கனவே உயிரும் உருவமும் கொடுக்கப்பட்டு அவை வழக்கிலும் வந்திருக்கின்றன. அந்த
* வீரகேசரி 14.3.1959.

கலைச்சொல் ஒருமைப்பாடு 117
நிலைமையில் இந்தியத் தமிழ்ப் பேரறிஞர்களின் ஆராய்ச்சிகளும் அவற்றில் கண்ட முடிவுகளும் நமக்கும் பயன்படுவதாயிருக்க வேண்டும். அதே போல, நாம் இயற்றும் நூல்கள் உலகத் தமிழ் மக்களுக்குப் பயன்படுவதாகவுமிருக்க வேண்டும். இதற்குச் சரியான வழி திரு. அம்பிகைபாதன் அறிவுறுத்தியிருப்பதைப் போல, இலங்கையிலும், இந்தியாவிலுமுள்ள தமிழ்ப் பேரறிஞர்கள் ஒத்துழைப்பதுதான்." இந்த ஒத்துழைப்பு அன்றை குழல் சாத்தியமில்லை என்பதை நாம் அறிவோம். இருவேறு அரசுகளின் பணியில் ஈடுபட்டுத் தொழில் புரிந்தவர்களே அன்று இலங்கையிலும் தமிழகத்திலும் தனித்தனியாகச் செயற்பட்டனர். ஆரம்ப காலத்தில், இது அரசபணியாக இருந்தமையால், தனித்தனி முயற்சிகளும் தவிர்க்கப்பட வாய்ப்பில்லை. எனவே அவை இடைக்கால முயற்சிகள் எனச் சமாதானம் சொல்லி ஏற்க வேண்டிய ஒரு நிலை.
ஆனால் இந்த நிலை தொடரலாமா? இந்த எண்ணத்தில், 1966 ஆம் ஆண்டில் கோலாலம்பூரில் நடை பெற்ற முதலாவது அனைத்துலக தமிழாராய்ச்சி மாநாடு, 1968ஆம் ஆண்டில் சென்னையில் நடைபெற்ற இரண்டாவது மாநாடு ஆகிய இரண்டிற்கும் கட்டுரைகள் சமர்ப்பித்தேன். "கலைச்சொல்லாக்க ஒருமைப்பாடு காண்பதற்கு வழிவகுக்கும் பொறுப்பு அந்த அனைத்துலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழகத்தின் பொறுப்பாகும்"என்பதை வலியுறுத்தினேன்.

Page 63
118 ( ) மருத்துவத் தமிழ் முன்னோடி
அக்காலங்களில் ஆதரவு அதிகம் இருக்கவில்லை. தனி வழியில் சென்று ஒரு தசாப்தமாகி விட்டதால், மீள்பார்வை செலுத்திப் பிரச்சினையைத் தீர்க்க எவரும் உற்சாகங் காட்டவில்லை. தமிழகத்திலே முன்பு செயற்பட்ட பலர் கூடத் தனிக்குழு முயற்சிகளை மேற்கொண்டவர்கள் சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கம், தமிழக அரசு, இலங்கை அரசு தவிர வேறு நிறுவனங்களும் காலத்துக்குக் காலம் செயற்பட்டுக் கலைச் சொல்லாக்கிய வரலாறு டாக்டர் இராதா செல்லப்பனின்* நூலிலே ஓரளவு விரிவாக உள்ளது. ஆயினும் கலைச்சொல் ஒருமைப்பாடுகாணும் முயற்சி அனைத்துலக நிறுவனம் ஒன்றாலேதான் மேற்கொள்ளப்படல் வேண்டும்: அந்நிறுவனத்தின் முடிவை தமிழ் பேசும் மக்கள் எல்லோரும் ஏற்று வழக்கில் நிறுத்த வேண்டும். இடைக்கால முயற்சி எல்லாம் 'பிரசவ வேதனையின் பிரதிபலிப்புக்கள் என்பதை நாம் மனதார ஏற்க வேண்டும்.
இலங்கை, தமிழக அரச முயற்சிகளாக மேற்கொள்ளப் பட்டவையே கடந்த நான்கு தசாப்தங்களாக “உத்தியோக பூர்வ முயற்சிகள். இலங்கை அரச அங்கீகாரம் பெற்ற சொற் களை இலங்கைத் தமிழர் பயன்படுத்தக் கடப்பாடுடையர். அதே போல, தமிழக அரச அங்கீகாரம் பெற்ற சொற்களை இந்தியத் தமிழர் நடைமுறைப்படுத்தும் கடப்பாடுடையர். இதுவே இன்றைய நிலை. ஆனால் 2000 ஆம் ஆண்டிலும் இதே நிலை தொடரல் விரும்பத்தக்கதா? 'பிரசவ வேதனை தீர்ந்து ஒருமைப்பாடான கலைச்சொற் பிரயோகம் பிறப்பதற்கு அரை நூற்றாண்டு இடைக்காலம் போதியதாகும் என்பதில் நம்பிக்கை எனக்குண்டு.
* கலைச்சொல்லாக்கம்: பக் 105-120

கலைச்சொல் ஒருமைப்பாடு ( ) 119
1989 ஆம் ஆண்டு மொரிசியசில் நடைபெற்ற ஏழாவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி நாள், இந்த ஒருமைப்பாடு காண வேண்டிய தேவை பற்றி தமிழகப் பேராசிரியர்கள் குறிப்பிடத் தவறவில்லை. அப்படியானால் நாம் இதுவரை நடைமுறையில் எதைக் கண்டோம்? எழுத்துச் சீர்திருத்தம் தேவை என்று (தேவையில்லை என்பார் இன்றுமுளர்) ஃன என்ற எழுத்துணை ஆனதும் னே ,னோ ஆனதும் இவை போல் மற்றும் பல உருமாறியதும் யாமறிவோம். தமிழக, இலங்கை அரசுகள் இம்மாற்றத்தைத் துரிதமாக நடைமுறைப்படுத்தின. வளர்ந்தவர்கள் இன்றும் கையெழுத்துப் படிவங்களில் பழைய முறையிலேயே எழுதுகின்றார்கள். ஆனால் அச்சுவாகன மேறும் நூல்கள் பத்திரிகைகள் மாற்றத்தை நடைமுறைப்படுத்துகின்றன.
இத்தகைய முடிவு கலைச்சொல் ஒருமைப்பாடு காண்பதற்கு ஏன் எடுக்கப்படவில்லை? யார் இதைச் செய்வார்கள்? எப்போது? யார், எப்போது பூனைக்கு மணி கட்டினாலும் நாம் ஏற்கக்கூடும் என்றிருந்த காலம் கடந்து விட்டது என்பதை இன்று பலரும் உணர்வர். அறிவியலும், கணனிப் பிரயோகமும் விரைவாக வளரும் இக்கால்த்திலே, தமிழால் ஒன்றுபட்ட தமிழினம் அறிவியல் தமிழால் பிளவுபடக் கூடாது. வெவ்வேறு அறிவியல் தமிழ் வளர்வது விரும்பத்தக்கதல்ல.
டாக்டர் திருமதி - இராதா செல்லப்பன் வலியுறுத்தியிருப்பது போல, கலைச்சொல் ஒருமைப்பாடு இன்றியமையாதது. அதேவேளை, யார் அந்த முயற்சியை மேற்கொண்டாலும், இன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக

Page 64
120 ( ) மருத்துவத் தமிழ் முன்னோடி
சிரேஷ்ட பதிவாளராகவுள்ள இ. முருகையன் அன்று கூறியதையும் மறந்து விடலாகாது.
கலைச் சொல் பற்றிய கருத்தரங்கு ஒன்றிலே அவர் தெளிவாக ஒரு கருத்தை வலியுறுத்தினார்.
அவர் கூறியது இதுதான்:
"இறுதியாக ஒன்று. தமிழ்ச் சொற்களின் ஒருமைப் பாட்டைப் பற்றியது. தமிழகம் முழுமைக்கும் ஒரே கலைச்சொற்றொகுதி வேண்டும் என்ற கோரிக்கையே அது. இயலுமானால் உடனே நிறைவேற்றப்படவேண்டிய காரியம் இது. ஏற்கனவே நமக்கும் தென்னகத்துக்கும் பொதுவான கலைச்சொற்கள் ஏராளமாக உண்டென்பதும் மனங் கொள்ளத்தக்கது.
"பூனைக்கு யார் மணி கட்டுவார்களோ தெரியாது. ஆனால் இதில் ஓர் அபாயம் உண்டு. புத்திசாலித்தனமான ஆலோசனைகள் கூறும் சிறு பிள்ளையை நயக்கத் தெரியாத தந்தை ஒருவன், "நீ சிறுபிள்ளை, அனுபவம் இல்லாதவன். உனக்கென்ன தெரியும்?" என்று அடித்துப் பேசி அடக்கி விடுவதுபோல, "நாம் எண்ணிக்கையாற் கூடியவர்கள், பரந்து பட்ட பெரும்பான்மையோர்" என்ற மனப்பான்மையுடன் தென்னகத்தோர் நம் குரலை அமுக்கிவிடாது பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் கலைச்சொற்களைப் பொறுத்தவரையில் அவற்றின் பொருத்தமும், திருத்தமும் மிகவும் முக்கியம். இந்நாட்டிலே பல்லாயிரக்கணக்கான சொற்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. சில பாடங்களைப்
பொறுத்தமட்டில்,பட்டப்படிப்பின் ஆராய்ச்சிக்கு வேண்டிய

கலைச்சொல் ஒருமைப்பாடு 121
அளவு சொற்கள் அமைக்கப்பட்டுள்ளன. இத்தனை தேட்ட மும் வீணடிக்கப்படக் கூடாது. "சர்வதேசத் தமிழ்க் கலைச் சொல் நியம நிறுவகம்"ஒன்று ஏற்படுமானால், இங்கு செய்யப் பட்ட வேலையின் தாரதம்மியமும் உரியவாறு கவனிக்கப்பட வேண்டும். ஏற்ற வகையிலே நமது பிரதிநிதிகளும் அங்கு இடம்பெற வேண்டும். இது மிகவும் முக்கியமாகும்.
"இதுகாறும் கூறியவற்றிலிருந்து பார்க்கும்போது தமிழ்க் கலைச்சொல்லாக்கம் பொருத்தமும் திருத்தமும் நோக்கிச் சீரடைந்து வருகிறதென்பது விளங்கும். முன்னர் விட்ட பிழைகள் பல திருத்தப்படுகின்றன. ஆனால் இத்தகைய திருத்தங்களை நாம் அடிக்கடி செய்யக் கூடாது. அவ்வாறு செய்தால் ஆயிரக்கணக்கான ஆசிரியர்களும் மாணவர்களும் அதனாற் பாதிக்கப்படுவர். இது ஒரு நடைமுறைப் பிரச்சினை ஆகும். பொருத்தமும் திருத்தமும் நோக்கிச் செப்பம் செய்வதற்கும் ஓர் எல்லைப்பாடு உண்டு. அது எது என்பதையும் உரியவர்கள் நன்கு விளங்கிக் கொள்ளல் வேண்டும். 100% திருப்பித் தராதச் சொற்கள் கூட, வழக்கத்துக்கு வந்துவிட்டால், அவை ஏற்கத்தக்கவை ஆகி விடக் கூடும். ஒருமைப்பாட்டு வேலை நடைபெறுமானால், அப்போது இந்த உண்மையையும் மனங்கொண்டு செயலாற்றுதல் வேண்டும். அவ்வாறு செய்யின் இணக்கமும் உடன்பாடும் ஏற்பட வழியுண்டாகும். உண்டாகவே கலைச்சொல் பற்றிய பிரச்சினைகள் திருப்திகரமாகத் தீர்க்கப்படும்."
திருப்திகரமான தீர்வு விரைவிலே ஏற்புடுமென்த்தேழி கூறும் நல்லுலகம் எதிர்பார்க்கிறது?

Page 65
11.மொழிபெயர்ப்பு
ஆக்கங் கருதி முதல்இழக்குஞ் செய்வினை ஊக்கார் அறிவுடையார்
- குறள்
՛լ ի றநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும்; இறவாத புகழுடைய புது நூல்கள் தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும்’ என்பது அமரகவியின் அறைகூவல். விஞ்ஞானம் வீறு நடை பயிலும் விந்தையுலகிலே, பிறநாட்டு மொழியறிவு பெறாத தமிழ்மக்களின் மனக்கதவைத் திறந்து விஞ்ஞான அறிவுத் தீபவொளி ஏற்றி வைப்பதற்கு, மொழிபெயர்ப்பு மிக அவசியமேயாகும். தமிழில், விஞ்ஞானம் வளர்வதற்கும் மக்கள் நல்லறிவு பெறுவதற்கும் விஞ்ஞான இலக்கியங்கள் ஏராளமாகத் தமிழில் வந்துசேரல் வேண்டும். இன்றைய காலகட்டத்தில், விஞ்ஞானப் பாடநூல்களுந் துணை இலக்கியங்களுந் தேவைக்கேற்பத் தவிர்க்கமுடியாத ஒன்றாகும்.
இந்த மொழிபெயர்ப்பு இருக்கின்றதே, அது ஒரு மிக இலகுவான தொழிலாகப் பலருக்குத் தோன்றுகிறது. இன்று நமது நாட்டிலே முழி பெயர்க்கப்பட்டு உலாவுகின்ற நூல்களே இக் கருத்துக்குச் சான்று பகரும். தமிழில் விஞ்ஞானம் வளர்க்கும் பணியாம் ஆக்கங் கருதி

மொழிபெயர்ப்பு ( ) 123
உழைக்கும்போது, விஞ்ஞான அறிவாம் முதல்' பாதுகாப்பாக இருத்தல் வேண்டும். தமிழில் விஞ்ஞான நூல்கள் வேண்டுமென்பதற்காக விஞ்ஞான அறிவையே மட்டமாக்கி, மழுங்கலாக்கி விடக்கூடிய வகையில் நூல்களைத் தமிழாக்குதல் தகாது.
இப்படிக் கூறும்பொழுது, செந்தமிழ் மரபைச் செவ்வனே அறியாதவர்கள் விஞ்ஞான நூல்களைத் தமிழில் எழுதுதல் தகாது என்பது என் கருத்தல்ல. இன்று, தமிழை மரபு வழுவாது படித்தவர்கள், விஞ்ஞானமும் படித்திருப் பார்கள் என்று எதிர்பார்த்தல் முடியாது. இவ்விடைக் காலத்திலே தமிழில் விஞ்ஞானம் எழுதும்போது, மொழி நடை, வசன அமைப்பு, சொற்பிரயோகம் ஆகியவற்றிற் பல பிழைகள் ஏற்படல் கூடும். அவற்றை மிகைப்படுத்துதல் நியாய மல்ல. இன்று தேவையை நிறைவேற்றுதற்கு விஞ்ஞானப் பொருளைத் தமிழில் எழுத முற்பட்டால், சிறிது காலத்தில் அநுபவசாலிகள் தோன்றி மரபுபேணி எழுதுவார்கள் என்பது திண்ணம். ஆயின், பொருள் சிதையாமலுஞ் சீரழியாமலுந் தமிழில் எழுதப்படல் வேண்டும் என்பதை வற்புறுத்தியே ஆக வேண்டும். அதாவது, பொருள் தெளிவாக வும் செம்மையாகவும் எழுதப்படல் வேண்டும்.
பின்வரும் வாக்கியங்களைப் பாருங்கள்: "பெளதிகவியல் என்றழைக்கப்படும் விஞ்ஞானத்தின் ஒரு பகுதியை, பொறியியல், வெப்பவியல், ஒலியியல், ஒளியியல், மின்சாரவியல், காந்தவியல் ஆகிய சிறு பகுதிகளாக மேலும் பிரித்து, அவைகளைப்பற்றி அறிந்து கொள்வது வழக்கம்" இவ் வசனத்தில், பொருள் மயக்கமாகவே இருக்கின்றது. அதே

Page 66
124 ( ) மருத்துவத் தமிழ் முன்னோடி
போல, "ஓரலகு திணிவுடைய ஒரு பதார்த்தம், அதன் கொதி நிலையில், திரவ நிலையிலிருந்து வாயுநிலைக்கு மாற்றப் படுவதற்கு வேண்டிய வெப்பக் கணியம் அப் பதார்த்தத்தின் ஆவியாதலின் மறைவெப்பம் எனப்படும்" என்ற வரையறை யுந் தெளிவில்லாதிருக்கின்றது. காரணம், ஆங்கில வசனத்தை அமைப்புக் குலையாமல் மொழிபெயர்க்க முயலுவதாகும்.
இற்றைக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்பே தமிழில் விஞ்ஞானந்தரும் பணியில் ஈடுபட்ட எமது கிறீன் வைத்தியர், மொழிபெயர்ப்புப் பற்றிக் கூறிய கருத்துகள் இங்கு நினை வூட்டற்குரியவை. இன்று, மொழிபெயர்ப்பிற் காணப்படும் பல வழுக்களை நீக்கவும் அன்னாரின் கருத்துகள் பாதை வகுக்கின்றன.
வயலொன்றின் ஊடாக நாம் செல்லும் வேளையிலே, மேற்பார்வை செய்து நடந்து செல்லல்கூடும்; உழுது செல்லு தலுங் கூடுமல்லவா? மொழிபெயர்ப்பின்போது தேவைப் படும் மாற்றங்களைக் கவனித்தால், மொழிபெயர்ப்பானது வயலினூடாகர் நடந்து செல்வதல்ல; உழுது செல்லல் ஆகும் என்பது கிறீன் வைத்தியரின் கருத்து
ஆம். எழுத்துக்கு எழுத்தும், சொல்லுக்குச் சொல்லு மாக வாக்கியங்களை மொழிபெயர்த்தல் உண்மையிலே சித்திரவதையாகும்; உயிரை எடுத்து, ஊன உடலை நடமாட
+ "The translation requires so much alteration that it amounts to ploughing one's way rather than a walk of survey over the field"
Life and Letters.......

மொழிபெயர்ப்பு 125
விடுவதாகும் மொழிபெயர்ப்பிலே, கருத்துத்தான் முக்கியம். மூல நூலாசிரியன் கூறும் பொருளை, உள்ளது உள்ளவாறு உயிருடன் தருவதே உண்மை மொழிபெயர்ப்பாம். மூலநூலை மேலெழுந்தவாரியாகப் பார்த்து உயிர்ப்பொருளைக் காணல் முடியாது. துருவி ஆராய்ந்து, உண்மையை உணரல் வேண்டும். பின், அவ்வுண்மையைத் தமிழில் எழுதுதல் வேண்டும். மொழிபெயர்ப்பு என்றால் என்னவென்பதைத் தெளிவுபடுத்தும் நோக்கத்துடன் வயலை உழுது செல்வதை உவமை கூறுதல், எத்துணை அழகாகவும் ஆழமாகவும் அமைகிறதெனக் காணலாம்.
கிறித்துவ வேதாகமத்தைத் தமிழில் மொழிபெயர்க்கும் முயற்சியில், யாழ்ப்பாணத்திலிருந்த வேதாகம சங்கம் 1840 ஆம் ஆண்டில் ஈடுபட்டிருந்தபோது, சென்னை வேதாகம சங்கத்தினர் விதித்த பிரமாணங்கள் பல. அவற்றுள் ஒன்று, f "ஆங்கில மொழிபெயர்ப்பின் கருத்து மாத்திரமின்றி, வசன அமைப்பு, சொல்லடுக்கு குறியீடுகள் எல்லாம் முற்று முழுதாகப் பாதுகாக்கப்படல் வேண்டும்" என்பதாகும். உண்மையில், இத்தகையதோர் மொழிபெயர்ப்பு எத்துணை அலங்கோல மாகவும் அபத்தமாகவும் அமையும் என்பது வெளிப்படை முதனூலைக் கருத்துப் பிறழாமல், யதார்த்தமாக மொழி பெயர்த்தல் வேண்டுமெனினும், குறியீடுகளும் வசன அமைப்பும் பிறவும் அப்படியே அமைதல் வேண்டும் என்பது மொழிபெயர்ப்புக்குப் பொருந்தாது. அத்தகைய மொழிபெயர்ப்புக் கருத்துப் பரிமாறும் பணியுமாகாது. ஆயின், இக் காலத்திலும் மொழிபெயர்ப்புப்பற்றி அத் தகையதோர் மனப்பான்மை இருக்கிறதா எனச் சந்தேகிக்க
if A Brief Narratine of Jaffna Auxiliary, p. 16.

Page 67
126 ( ) மருத்துவத் தமிழ் முன்னோடி
வேண்டி யுள்ளது. முன்பு கூறிய உதாரணங்கள் அவ்வாறு சிந்திக்கத் தூண்டுகின்றன.
தமிழில் வைத்திய நூல்களை மொழிபெயர்க்கும் பணியில் கிறீன் வைத்தியர் ஈடுபட்டிருந்த காலத்திலே, 'வைத்திய கைவாகடம்" என்னும் நூலை, ஜே. ஏ. எவட்ஸ் என்பவர் மொழிபெயர்ப்பதற்கு முன்வந்தார் என முன்பு குறிப்பிடப்பட்டதல்லவா? 1870 ஆம் ஆண்டிலே மொழிபெயர்ப்பு முடிவுற்றதும், கிறீன் வைத்தியர் அதைப் பார்வையிட்டார். அம் மொழிபெயர்ப்பை ஏற்க விரும்பாமல், அதற்குரிய காரணத்தையுங் கூறினார்.
f "டாக்டர் எவட்சின் மொழிபெயர்ப்பு, ஆங்கிலச் சொற்களை இலக்கணத் தமிழிலே எடுத்துக் கூறுகிறது. ஆனால், ஆங்குள்ள பொருளே நமக்குத் தேவையாகும். அவரின் மொழிபெயர்ப்பின் மூலம் நாம் ஆங்கிலேயனைக் காணமுடிகிறது. உண்மையில், மொழிபெயர்ப்பின் மூலம் நாம் தமிழனைய்ே காணல் வேண்டும்."
ஆமாம். விஞ்ஞான நூல்களை மொழிபெயர்க்கும் நோக்கமே, விஞ்ஞான அறிவைப் பரப்புதல் ஆகும். மேனாட்டு நூலொன்றை மொழிபெயர்க்கும்போது, அதிற் கூறப்படும் பொருள் நமது நாட்டினருக்கு விளங்கக் கூடியதாகவும், நமது சூழலுக்கு ஏற்றதாகவும் எழுதுதல் வேண்டும். உவமைகளும் எடுத்துக்காட்டுகளும் நமது நாட்டுக்கும் மக்களுக்கும் பரிச்சயமானவையாக அமைதல் வேண்டும். அதுவே
பயன்தரு மொழிபெயர்ப்பாம்.
Lifeand Letters..... p.295.

மொழிபெயர்ப்பு ( ) 127
இன்று, விஞ்ஞானப் பாடநூல்கள் பல மொழி பெயர்க்கப்படுகின்றன. அந்த நூல்களைச் சிறிதும் மாற்றாது, உள்ளதை உள்ளபடியே மொழிபெயர்த்து எந்த அளவுக்குப் பயன்பெறலாம் என்பதைச் சற்று நிதானமாகச் சிந்தித்தல் நன்று. ஆங்கில நூலாசிரியன் கூறும் பொருளைமட்டும் எடுத்துக்கொண்டு மற்றும் உதாரணங்கள் உவமைகள் ஆகியவற்றை நமது நாட்டுக்குஞ் சூழலுக்கும் ஏற்றவண்ணம் மாற்றியமைத்தல் கூடிய பயன் அளிக்குமா இல்லையா என்பதைச் சிந்தித்தல் வேண்டும். அதாவது, மூலநூலை அப்படியே மொழி பெயர்ப்பதைவிடத் தழுவி எழுதுதலே நமது நாட்டு மாணவருக்குக் கூடிய விளக்கங் கொடுக்கு மென்பதை ஈண்டு வற்புறுத்த விழைகின்றேன். பல ஆங்கில நூல்களைத் துணையாகக்கொண்டு ஒரு புதிய நூலைத் தமிழில் எழுதுதலே இதனிலுஞ் சிறப்புடைய பணியாகும். அவ்வண்ணம் எழுதும் போதெல்லாம் உதாரணங்களும் உவமைகளும் நமது சூழலில் உள்ளனவாகவும் நமது நாட்டு மாணவர் அநுபவிப்பனவாகவும் அமைதல் வேண்டும். விஞ்ஞான பாடத்தைப் 'புத்தகப் படிப்பு நிலையில் இருந்து மாற்றி வாழ்க்கை அநுபவப் படிப்பு' முறையிற் கற்பிப்ப தெனில், இத்தகையதோர் மாற்றந் தவிர்க்கமுடியாததாகும்.
இவ்வுண்மையை நாம் இன்று அநுபவ வாயிலாகவுங் காண்கிறோம். இன்றைய விஞ்ஞானபாடத் திட்டங்களுக் கமையக் கல்வி பயிற்றல் வேண்டுமெனின், பழைய நூல் களைப் பற்றி நிற்றல் எத்துணை பயனற்றது என்பதையுங் காண்கிறோம். பரிசோதனை முறைகளும் ஆய்கருவிகளுங்கூட நமது நாட்டுக்கு ஏற்ற வண்ணம் திருத்தியமைக்கப்படல் வேண்டும். மாணவன் சாதாரணமாகப் பெற்றுக்கொள்ளக்

Page 68
128 ( ) மருத்துவத் தமிழ் முன்னோடி
கூடிய பாத்திரங்களையும் பொருள்களையும் ஆய் கருவிகளாக மாற்றியமைத்துப் பரிசோதனை செய்யப் பயிலல் வேண்டும். எனவே, மேனாட்டு மாணவருக்கென எழுதப்பட்ட நூல் அப்படியே மொழிபெயர்க்கப்படுமாயின், அது நமதுநாட்டு மாணவருக்கு இன்று பொருந்தாது என்பது தெளிவு.
ஐ. நா. கல்வி விஞ்ஞான கலாச்சார நிறுவனம், விஞ்ஞானங் கற்பிப்பதற்கு உதவியாக வெளியிட்டுள்ள மூலநூலிலே இத்தகைய மாற்றத்தை அறிவுறுத்தி வழி காட்டியுள்ளது. அந்நூலை அடிப்படையாகவும் வழி காட்டியாகவுங் கொண்டு ஆசிரியர்களும் மாணவர்களும் தத்தம் நாட்டுக்கும் வசதிக்குஞ் சூழலுக்கும் ஏற்ப ஆய்கருவி களை அமைத்தல் வேண்டும் என்பது அந் நிறுவனத்தின் கருத்தாகும். விஞ்ஞான அறிவைப் பெறவும் விஞ்ஞானமுறை யைக் கற்றுக் கொள்ளவும் இம் முறையைப் பின்பற்றல் வேண்டுமென அந்நூல் வலியுறுத்துகிறது. தற்காலக் கல்வித் திட்டத்துக் கமைய நூல்கள் அமைதல் வேண்டுமெனின், மொழிபெயர்ப்பிலும் பார்க்கத் தழுவி எழுதும் நூல்களே பய னளிக்குமென்பதை மேலும் விளக்குதல் தேவையற்றதாகும்.
இந்தக் கருத்து நமது நாட்டுக் கல்வித் திட்டத்தில் மிக அண்மைக் காலத்திலேதான் மாற்றத்தை ஏற்படுத்தி யிருக்கிறது. ஆயின், கிறீன் வைத்தியர் தமது காலத்திலேயே இக் கருத்தை வலியுறுத்தியிருக்கின்றார். நேர் மொழி பெயர்ப்புகள் பயனற்றவை என்பதைத் தெளிவாகக் கூறினார். நூலாசிரியர் தாமாகவே ஒரு திட்டம் அமைத்து அதற்கமைய நூல் எழுதுதல் வேண்டுமென்பதும், அதற்குப் பல நூல்களில் இருந்தும் ஆதாரம் பெறலாம் எனவும் அவர் தமது உதவியாளருக்கு அறிவுறுத்தினார்.

மொழிபெயர்ப்பு ( ) 129
இரண வைத்தியம் என்ற நூலின் நூன் முகத்திலே கிறின் வைத்தியர் கூறியிருப்பதை ஈண்டு குறிப்பிடல் பொருத்த முடைத்து. "துருவிதர், எறிக்சரின் இரண வைத்தியம் தமிழ்ப் பாஷையில் இருக்கிறது எவ்வளவு தேவையோ அவ்வண்ணம் தமிழ்த்தேச வழக்கங்களுக்கும் ஏற்றதாக இருப்பது அவசியம் என்று எண்ணி என் சொந்த அபிப்பிராயத்தில் நல்லதென்று கண்ட சிலவற்றையும் இடைக்கிடை சேர்த்துட" என்று கூறும்போது, மொழி பெயர்ப்பு எப்படி அமைதல் வேண்டுமென, கிறீன் வைத்தியர் செயலாற்றினார் என்பது தெளிவாகவுள்ளது.
மேனாட்டு நூல்களை மொழிபெயர்க்கும் போதுந் தழுவி எழுதும்போதும் மேனாட்டுப் பெயர்களையும் எழுதவேண்டிய தேவை ஏற்படுகிறது. உலகமே ஒரு சமுதாய மாகிவிட்ட இற்றைநாளிலே, பிறநாட்டுப் பெயர்களைத் தமிழில் எழுதுதல் அவசியமாகிறது. ஆயின், மேனாட்டுப் பெயர்களைத் தமிழில் எழுதும் முறையில் ஒருமைப்பாடு இருப்பதில்லை. Isaac என்ற பெயரைத் தமிழில் எழுதும் போது ஓசை கெடாமல் ஐஸாக் என எழுதுகிறார்கள்.Sதிரந்த எழுத்தைத் தவிர்ப்பதற்காக ஐசாக் என எழுது ர்கள். ஐசாக்கு எனத் தமிழ் மரபுபேணி எழுதுகிறார்ஜசி. இதே போல, Joule என்னும் பெயர் ஜூல், சூல், யூல் எழுவும், DA என்னும் பெயர் டேவி, தேவி எனவும், Volta எலிலும் புெ வோல்ற்றா, வோல்டா, உவோற்றா எனவும் பஞ்பட எ 盛 ப் படுவதுண்டு. *** ARAN
வடநாட்டுப் பெயர்கள் தமிழில் வந்துSசேர்ந்த (ԼՔgii ராமன் இராமன் ஆனதும், லீலா லீ ாகவேீபதும், ராஜ" இராசு ஆனதும் நாமறிந்ததே கிறீன் கிைத்தியர், Danforth என்ற பெயரை டன்வதர் ஆகவும், Druit என்ற

Page 69
130 ( ) மருத்துவத் தமிழ் முன்னோடி
பெயரை துருவிதர் எனவும், Samuel என்ற பெயரைச் சமுல் எனவும் எழுதியதையுங் கண்டுள்ளோம். ஆங்கிலச் சொல்லைத் தமிழ் மரபுக்கு ஏற்றதாக எழுதுவதே அவரின் கொள்கையெனவும் அதற்கமையவே அன்னார் செயலாற் றினார் எனவும் இத் தருணத்தில் நினைவூட்டல் நன்று.
ஆயினும், விஞ்ஞானிகளின் பெயர்களையும் அவற்றை அடிப்படையாகக் கொண்ட கலைச்சொற்களையுந் தமிழில் வெவ்வேறு வகையாக எழுதிவைத்தல் விஞ்ஞான முறையல்ல; விரும்பத்தக்கதல்ல.
வடமொழியின் தாக்கத்தாலும் பிற்காலத்திலே ஆங்கில மொழியின் தாக்கத்தாலுந் தமிழில் இல்லாத ஒலிகளுக்கு எழுத்துருவங் கொடுப்பதற்காகக் கிரந்த எழுத்துக்கள் சில தமிழில் வந்து புகுந்துகொண்டன. அத்தியாவசிய தேவைக்காகச் சிலர் கிரந்த எழுத்துகளைச் சேர்த்தார்கள். தேவையற்ற அளவுக்குப் பலர் அவற்றைச் சேர்த்தணைத்துக் கொண்டார்கள். இலக்கண நூலாசிரியரும் இவற்றின் பிரயோகத்துக்கு ஓரளவு இடங்கொடுத்தார்கள்.
ஆயின், கிரந்த எழுத்துகளைப் பிரயோகஞ் செய்வது தகுமா என்றதோர் வினா, தமிழ் மறுமலர்ச்சியாளரையும் முற்போக்காளரையும் பிளவுபடுத்துகிறது.
கிரந்த எழுத்துகளைப் பிரயோகித்தல் வேண்டா மென்பதில் நியாயம் உண்டு என்பதை நாம் ஒப்புக்கொண் டாக வேண்டும். எமது தமிழில் இல்லாத சில ஒலிகள் பிற மொழிப் பரிச்சயத்தால் ஏற்பட்டிருப்பது உண்மை ஆயினும், தமிழ் நெடுங்கணக்குடன் கிரந்த எழுத்துக்களையுஞ் சேர்த்துக் கொள்ளல் நியாயமாகாது. f ஆங்கிலத்திற் சில
t GypsT - Vizha:SrTari - Gnanam

மொழிபெயர்ப்பு ( ) 131
ஒலிகளைப் பெறுவதற்கு எழுத்துகளின் இணைப்புப் பயன்படுத்தப்படுவதை நாம் அறிவோம். எழுத்துகளை இரவல்' வாங்கத் தொடங்குதல் நிச்சயமாகத் தமிழ் வளர்ச்சியல்ல எனக் கூறுவதில் நியாயம் உண்டு. புதிய தேவைகளைத் தீர்த்து வைக்கும் முயற்சியிற் சொந்த அடியில் நின்று வளர்ச்சிகாண்பதே நியாயமானது.
மேலும், பிறநாட்டு நல்லறிஞரின் பெயர்களைத் தமிழாக்கும் முயற்சியில் ஈடுபட்டுப் புறவெட்டுச் செய்தல் நியாயமாகுமா என்பது அடுத்த கேள்வி. இன்றைய உலகுக்கு இது பொருந்தாது என்று நாம் ஒப்புக்கொண்டாக வேண் டும். அற்றைநாளிலே இந் நாட்டுக்கு வந்த பிறநாட்டவர் f யாழ்ப்பாணத்தையும் மட்டக்களப்பையும் திருகோண மலையையுந் திரித்தனர் என்றபடியால், பிறநாட்டவர் பெயர்களை இன்று நாம் திரித்தல் நியாயமெனக் கூறல் இன்றைய சமுதாயத்துக்குப் பொருந்தாது.+ பசிக்கால், தேவி, மாட்சு என்பனபோன்ற திரிப்புகள் தமிழில் விஞ்ஞான வளர்ச்சிக்கு நிச்சயம் பொருந்தா. அந்நிய ஆட்சியையும் ஆங்கிலமொழியையுங் குடியேற்ற நாட்டிலே நிலைநிறுத்த முயன்றவர்களைப்போல, நாமுஞ் செயலாற்றுதல் தமிழ்த் தொண்டேயல்ல.
இந்நிலையில், * சிறப்புப் பெயர்களுக்கு மயக்க விதிகளும் முதல், கடைஎழுத்து விதிகளும் வேண்டாமென விட்டுவிடுதலே ஏற்றதென்ற யோசனை மிகவும் வரவேற்கத்தக்கதாகும்.
t Jaffna, Batticaloa, Trincomallee. t Lufåstså - Pascal.GssN- DeVyldte 's-Marx
* இ. முருகையன் அறிவொளி வைகாசி 1964 பக்கம் 2.

Page 70
132 மருத்துவத் தமிழ் முன்னோடி
பழையன கழிதலும் புதியன புகுதலுங் காலத்தின் கோலத்தின் பாற்பட்டனவாகையால், இத்தகையதோர் மாற்றம் வழுவாகாது. தமிழ் எழுத்துகளின் ஒலிக்குள் அமையாத பிற ஒலிகளுக்கு எழுத்துருவங் கொடுக்கவேண்டின், எமது ஆய்தவெழுத்தைத் திட்டமிட்டுப் பிரயோகஞ் செய்ய முயற்சி எடுத்தல் வேண்டும். இவ்வண்ணம், முன்னோர் காட்டிய முறையை வளர்த்துப் பேணல் மிகவும் விரும்பத்தக்கதாகும்.
தொன்று தோன்றிய எவையும் நன்றாகா இன்று தோன்றிய எவையும் தீதாகா. ஆக, புதிய தேவைகள் ஏற்படும்போது அவற்றை ஒருமைப்பாட்டுடன் தீர்த்துவைப்பதிலேதான் எமது திறமை யைக் காட்டல் வேண்டும். கலைச்சொல்லாக்கம், மொழி பெயர்ப்பு, சிறப்புப் பெயர்களின் தமிழாக்கம் ஆகிய பணி களை எல்லாந் தமிழ்பேசும் மக்கள் அனைத்துலக ஒற்றுமை யுடன் செய்தல் வேண்டும். அப்பொழுதுதான் தமிழ்மொழி யானது காலத்துக்கேற்ற வளம்பெற்று வளர்ச்சியடையும்.

12.விஞ்ஞானத் தமிழ்
"வாளிபெருக்கி வளம்படுத்து உற்றவை
ஆராய்வான் செய்க வினை
- திருக்குறள்
திமிழில் விஞ்ஞானம் வளர்க்கும் பணியில் ஈடுபடும் பொழுது, ‘விஞ்ஞானத் தமிழ்’ என்ற புதியதோர் துறையிலே நாம் காலெடுத்து வைக்கின்றோம். விஞ்ஞானக் கல்வியிலே ஆங்கிலமொழி இதுவரை வகித்த இடத்தைத் தமிழுக்கு அளிக்கின்றோம். அதே வேளையில், உடனடியாக இது நடைபெறக்கூடியதல்ல என்பதையும் உணருகிறோம்.
தந்தை அருள் வலியாலும் - இன்று
சார்ந்த புலவர் தவவலியாலும் இந்தப் பெரும் பழிதீரும் - புகழ்
ஏறிப்புவிமீசை என்றும் இருப்பேன். என்று தமிழாள் நம்புகின்றாள். இந் நம்பிக்கை ஏமாற்றத்தை அளிக்காமற் றவிர்த்துக் கொள்வதற்கு விஞ்ஞானத் தமிழ் வளர்ச்சியில் இன்றைய அறிஞர்கள் கவனஞ் செலுத்துதல் இன்றியமையாத பணியாகும்.
இந்நிலையில், விஞ்ஞானத் தமிழ் என்று தனித்ததோர் துறை உண்டா என்ற வினா எழுகிறது. அத்தகையதோர் தனித்துறை இல்லையாயின், இன்று எல்லா வகுப்புகளிலுந்

Page 71
134 மருத்துவத் தமிழ் முன்னோடி
தமிழில் விஞ்ஞானங் கற்பித்தல் தடையின்றி நடைபெறல் ஏன் சாத்தியமில்லை? கலைச் சொற்கள் மாத்திரந்தான் புதிய தேவை எனின், வைத்தியம், பொறியியல் போன்ற உயர்தர விஞ்ஞானக் கல்வியையும் இன்று தமிழிற் போதித்தல் சிரமமாக இருப்பதேன்?
ஆதிசிவன் பெற்று, அகத்திய மாமுனி வளர்த்து, இலக்கிய இலக்கணங்களிலே செழித்துள்ளது, தமிழ்மொழி. பண்டைப் பெருமையும் பல்சுவை இலக்கியங்களும் நிறைந்தது நந் தமிழ்மொழி. ஆயின், விஞ்ஞானக் கல்வியிலே ஆங்கிலம் எத்தகைய முக்கிய இடத்தை வகிக்கின்றதோ, அதே இடத்தைத் தமிழ் மொழிக்கு முற்றாக அளிக்கமுடியாது அவதியுறுகிறோம். விஞ்ஞானக் கருத்துக்களைப் பரிமாறு வதற்கு ஆங்கிலம் ஒன்றே வரம்பெற்று வந்த மொழிபோல எண்ணிக் கொள்கிறோம். இதற்குக் காரணம், விஞ்ஞானச் சொற்றொடர்களும் விஞ்ஞான மொழியின் தனித்தன்மையும் தமிழில் வளர்ச்சியுறாதிருப்பதேயாம்.
விஞ்ஞான மொழி சில கருத்துகளையும் எண்ணங்களை யும் பிழையின்றி எடுத்துக்கூறல் வேண்டும். கருத்துக் குழப்ப மின்றித் தெளிவாகவுஞ் சுருக்கமாகவும் அமைதல் வேண்டும். இலக்கியத்தில் இடம்பெற்றுச் சுவை நல்கும் அணிகளும் சிலேடைகளும் விஞ்ஞானத் தமிழில் இடம்பெற மாட்டா. சொல்ல எடுத்ததை அப்படியே கூட்டிக் குறைக்காமல் எடுத்து விளக்குதல் விஞ்ஞானத் தமிழின் தேவை. எனவே, விஞ்ஞானத் தமிழ் இலக்கியத் தமிழிலிருந்து வேறுபட்டது.

விஞ்ஞானத் தமிழ் ( ) 135
விஞ்ஞானத்துறையிலே சிறப்பான பல சொற்களுஞ் சொற்றொடர்களும் உள. இவை ஒவ்வொன்றும் நிலையான ஒரு பொருளைக் குறித்தல் அவசியமாகும். ஊருக்கூர், பிராந்தியத்துக்குப் பிராந்தியம் பொருள் திரிதல் தகாது. "மண்வாசனை'யால் வேறுபட முடியாது. தேவையற்ற சொற் பெருக்கு விஞ்ஞானத் தமிழுக்கு முரணானது. ஆயின், இன்றெல்லாம் சில விஞ்ஞானச் சொற்றொடர்களைத் தமிழாக்குவதில் நம்மவர் பெரும் இடர்ப்பாட்டுக்கு ஆளாகு கிறார்கள். ‘விஞ்ஞானத் தமிழ் என்ற தனியான துறைக்கென மொழிமரபு ஒன்று வகுத்து நிலைபெறச் செய்யாதவரை இந்தப் பிரச்சனை திரக்கூடியதல்ல.
இலக்கியத்துறையில் வளர்ந்துள்ள தமிழ், விஞ்ஞான உலகின் தேவையை முற்றாகப் பூர்த்திசெய்ய முடியவில்லை. கருத்துகள் வரும் வாயில் விரிவடைய விஞ்ஞானத்துறை தமிழிற் புகுந்து கொள்கிறது. பல சொற்றொடர்கள் வழக்கில் வரும்போது, தமிழில் விஞ்ஞானந் தரும் முயற்சியில் உற்ற இடையூறுகள் நாள்தோறுந் தீர்க்கப்படும். புதிய மரபு நிலை நிறுத்தப்பட்டதும், கருத்தை எடுத்துக் கூறுவதில் ஒருமைப் பாடு தோன்றும். ஆக, காலப்போக்கிலே விஞ்ஞானத் தமிழ் உறுதியாக நிலைநிறுத்தப்பட்டு, விஞ்ஞானக் கருத்துகளை எடுத்துச் சொல்லுஞ் சிறந்த சாதனமாகத் தமிழ்மொழி மலர்ந்து கமழும்.
பழந்தமிழ் மரபில் ஒன்றிநின்று, புதிய தேவையை நிறைவேற்றல் முடியுமா என்பது சந்தேகம்:t 10 கற்றிணிவுள்ள ஒரு திண்மம்' என்று கூறும்போது, இன்றைய விஞ்ஞான மாணவருக்கு முதலிற் பொருள் மயக்கமாகும். ஆனால்,
if A Solid of mass 10 Stone.

Page 72
136 மருத்துவத் தமிழ் முன்னோடி
10 கல் திணிவுள்ள' எனப் பிரித்து எழுதினால், பொருள் தெற்றெனப் புலனாகும். ஆயின், மரபுபேணி இலக்கண வழுவின்றி எழுதின் 'கல் திணிவு' என அமையாது. இவ் வண்ணமே, பல சந்தர்ப்பங்களிற் புணர்ச்சியின்றி எழுதினால், தெளிவான விளக்கம் பெற உதவும். சிறப்புப் பெயர்கள் பற்றி மொழிபெயர்ப்பிற் கூறியவையும் இச் சந்தர்ப்பத்திலே புதிய மரபாக அமையலாம்.
விஞ்ஞானத் துறைக்குரிய சொற்றொடர்களும் இலக்கியத்தில் இன்றுள்ள மரபுச் சொற்றொடர்கள் போன்று நிலைபெறல் வேண்டும். இவை உறுதியான எல்லையுந் தெளிவான பொருளுங் கொண்டிருத்தல் வேண்டும். இவ் வண்ணம், புதிய மரபொன்று நிலைநிறுத்தப்பட்டுவிட்டால், விஞ்ஞானத்தைத் தெளிவாகவும் இடரின்றியுந் தமிழிற் கற்பிக்கவும் எழுதவும் முடியும்.
இவற்றையெல்லாம் வல்லவர்கள் ஆராய்ந்து, விஞ்ஞானத் துறைக்கு ஏற்ற முறையில் தனித்ததோர் விஞ்ஞானத் தமிழ் மரபை வகுத்து, நிலைநிறுத்தும் பணியில் ஈடுபடல் அவசியம். ஏனென்றால் - எந்த ஒரு மொழியும் வாழ்வதற்கு அது வளர்ச்சி அடைதல் அவசியம். வளர்ச்சி என்பது காலத்தின் தேவைக்கு ஏற்ப மாற்றம் அடைதல் ஆகும் . அந்த மாற்றம் தற்செயலாக நிகழ்வதல்ல. அதாவது சாதாரண பேச்சு மொழியிலோ அன்றேல் இலக்கிய தமிழிலோ ஏற்படுவதுபோல, விஞ்ஞான மொழியிலும் ஏற்படுவதல்ல. விஞ்ஞானத் தமிழ் என்றால் அதன் சிறப்பியல்புகளுக்கு ஏற்ப, திட்டமிட்டு, விஞ்ஞான தொழில் நுட்ப சாதனங்களின் தேவைகளை நிறைவேற்றுதற்காக நாம் ஏற்படுத்தும் மாற்றங்களாகும். w

விஞ்ஞானத் தமிழ் 137
அப்படியான தேவையாதென நோக்கின், மாறும் உலகின் பல நவீன எண்ணக்கருக்கள், கருத்துக்கள் ஆகியன ஒரு பால். நவீன உலகில் கணனியைப் பயன்படுத்தி மொழி பெயர்ப்பு போன்றவற்றை இலகுவாக்கும் நுட்பம் ஒரு பால். காலத்தையும் நேரத்தையும் நமக்குச் சேமித்துத் தரும் செயல் நுட்பங்கள் அவை.
இந்நிலையில், விஞ்ஞானத் தமிழ் வளர்ச்சியில் கலைச் சொற்களைப் போல அனைத்துலக ஒருமைப்பாடு அவசியம். இன்றுள்ள விஞ்ஞானப் பாட நூல்கள், பரீட்சை வினாத் தாள்கள் மாணவருக்கு எத்துணை மயக்கத்தை ஏற்படுத்து கின்றன என்பதை ஒரு நாட்டில் உள்ள மாணவர்களே உணர்ந்துள்ள காலமிது; சில பரீட்சைகளில், மாணவர் வினாவுக்கு விடை தெரியாமல் அல்ல. வினாவே விளங்காது மலைப்பதால் விடை எழுதாது விடுவதை நாமறிவோம்.
ஆம். தமிழ்மொழி எதிர்காலத்திலும் நிலை நின்று நவீன மொழியாக வளர்வதற்கு இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத் தமிழ் என்பனவற்றுடன் விஞ்ஞானத் தமிழ் அல்லது அறிவியற்றமிழும் வளர வேண்டிய காலம் இது.
விஞ்ஞானத் தமிழ் இலகுதமிழர்கவும் அமைதற்குச் சில இலக்கண விதிகளை தளர்த்தலும் அவசியமாகலாம். பிறமொழிச் சொற்களை ஏற்கவும் நேரிடும். அஃதெலாம் காலத்தியல்பென ஏற்று விஞ்ஞானத் தமிழ் வளர வழி வகுத்தல் இன்றைய சமுதாயத்தின் கடமை.

Page 73
13. கிறீனின் நூல்களில் தமிழ்
கிறீன் வைத்தியர் தமிழில் விஞ்ஞானம் வளர உழைத்த முன்னோடி என்ற பெருமைக்குரியவர். வைத்திய விஞ்ஞான நூல்களை அவர் மொழிபெயர்த்தும், மொழி பெயர்ப்பித்துத் திருத்தியும், கலைச்சொற்களை திட்டமான விதிகளுக்கு அமைய ஆக்கிப் பயன்படுத்தியும் மேனாட்டு வைத்தியக் கல்வியைப் பயிற்றி அரிய சாதனையை நிலை
நாட்டியவர்.
அவரது பணிக்கு உறுதுணையாக நின்றவர்கள், அவரிடம் மேனாட்டு வைத்தியங் கற்றுத் தேர்ந்த யாழ்ப்பாணத் தமிழர் ய. டன்வதர் தனெல். வி. சப்மன், வில்லியம் பவுல், ச. வை. நதானியல், ச. சுவாமிநாதன் ஆகியவர்களின் பெயர்களை மொழிபெயர்ப்பாளரென நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளதல்லவா? அவர்கள் யாவரும் யாழ்ப்பாணத் தமிழர்கள். அமரிக்க மிஷனில் சேர்ந்து பெயர் மாற்றம் பெற்றவர்கள்.
uu. L6ðraugsri (Goshna Danforth) épífarfaðir (pg5Guvriranug மாணவராக 1848 - 50 ஆம் ஆண்டுகளில் பயின்று வைத்தியரானவர். தமிழ்ப் பெயர் தெரியவில்லை. தனெல். வி. சப்மன் (தமிழ்ப்பெயர் வைத்திலிங்கம்), வில்லியம் பவுல்

கிறீனின் நூல்களில் தமிழ் 139
(William Pau) (தமிழ்ப் பெயர் ஏ. அப்பாப்பிள்ளை) ச. வை. நதானியல் (தமிழ்ப் பெயர் சுவாமிநாதன்) ஆகியோர் 1861 - 64 ஆம் ஆண்டிலே கிறீனிடம் வைத்தியங் கற்றுத் தேர்ந்தவர்கள். வைத்திய நூல்களை மொழிபெயர்ப்பதிலும் கலைச் சொல்லாக்கத்திலும் கிறீன் வைத்தியருக்கு உறுதுணை செய்தவர்கள் தமிழில் விஞ்ஞானம் வளர உழைத்த முன்னோடிகள் வரிசையில் கிறீனுடன் இணைந்து நிற்பவர்கள்.
கிறீனின் முயற்சியால் வெளிவந்த நூல்களின் தமிழ் நடைக்கு இவர்களும் கணிசமான பங்களிப்புச் செய்தவர்கள். அந்தத் தமிழ் நடையை ஓரளவு மதிப்பிடவும் எமது சிந்தனையைத் தூண்டவும், அக்காலத்தின் வழக்கை அறியவும் அந்நூல்களின் சில பகுதிகளை இங்கு தரப்படுகின்றன.
1. அங்காதிபாத சுகரணவாத உற்பாலன நூல் (1852)
1852இல் வெளிவந்து பின்பு 1857 இல் இரண்டாவது முறையாக பதிப்பிக்கப்பட்ட இந்நூலின் பல பகுதிகள் அத்தியாயம் எட்டில் விரிவாகத் தரப்பட்டுள்ளன. எனினும், முதலாவது நூலின் மொழி நடையின் தெளிவையும் சொற்பிரயோகத்தையும் காட்டுதற்கு இந்தப் பகுதி தரப்படுகிறது.

Page 74
140 மருத்துவத் தமிழ் முன்னோடி
店_晶五_晶 அதிகாரம்: து னே யா னி சுட  ைம.
க. அதுணேயாளியாவது வைத்தியனுடைய ஏவலின்படி நோயாளிக்கு உதவிசெய்யும் ஆளாம். வைத்தியனுஞ் சத்தி ரவைத்தியனும் வியாதிகளைச் சொஸ்தப்படுத்தும்படி அவர் வர்க்குரிய சாத்திரங்களேப் படித்துப் பயில்வதுபோலத்துனே யாளியுங் தன் கடமைகளேச் சரியாய்ச் செய்யும்பொருட்டு .3} + கடமைகளே நன்ருய்ப் படித்துப் பயின்றிருக்கவேண்டும்.
2. கிழவரும், பலவீனரும் வியாதிப்படுவதுபோலவே எா விபரும் பவமுள்ளவர்களும் கொள்ளநோயினுலும், காந்து, மவிழ, பனிமுதலியவைகளில் புத்தியீனமாய் துேரிப்பட்டுச் திரிவதிஞலும், வேறு சடுதியான் மோசங்களினுலும் வியா திப்படத்தக்கவர்களாயிருக்கிருர்கள் ஆதலால் வயது னிட்ட அம்மைகளேப்போலவே சிறுபெண்களும் இப்படிக் கொத்த தருணங்களிலே சரியாயும் நவமாயும் உதவிசெய்யப் பயின்திருக்கவேண்டும். ஒவ்வொரு பெண்பிள்ளேயும் சுகத் தைப்பேனும் பக்குவங்கள் இன்னவென்று படித்து அறிய வேண்டும். அவ்வறிவு பிரயோசனமாய் முடியும்பொருட் ப்ெ பின்னுகச் சொல்லப்படுகிற துணையாளி கடமைகளேயுங் சுற்றுணர்ந்துகொள்ளவேண்டும்.
ஈ. ஸ்தான்ம் இல்லையென்றுபோனுலும் நோயாளி ஒவ் வொருகாளுக்கொருமுறை ஆகுதல் ஃாானம்பண்ணவேண் டும். விரல் இட்ைகளும்,பொருத்துகளின் மடிப்புகளும் அ முக்கு மிகுதியாய் பிடிக்கும் இட்ங்களானதினுல் அப்பகுதிக
இப்பகுதியிலுள்ள அருஞ்சொத்ாங்-இங்கினம், காங்சே அபஞ்ச, தண்பர்.
துணையாளி யார்? துணையாளி கடமை யாது? கருத்துத் தெளிவாகவும் இலகு தமிழிலும் கருத்துப்பரிவர்த் தனை உள்ளதா? அக்காலப் பேச்சுத்தமிழும் தமிழிலக்கங் களும் பயன்படுத்தப்பட்டுள்ளனவா? இவ்வினாக்களுக்கு விடை தருகிறது மேலே தந்துள்ள பகுதி

கிறீனின் நூல்களில் தமிழ் 141
2. கெமிஸ்தம்
1852 இல் முதலாவது நூல் வெளிவந்த போது,
அன்றைய வழக்குக்கேற்ப இலக்கங்களையே தமிழ் மரபுக்
கமைய எழுதிய கிறீன் வைத்தியர் பின்பு அதைக் கைவிட்டார்.
கெ மி ஸ் த ம் .
வே ல் க ப க்ர பு தர்
இங்கிலிஷில் இயற்றிய தாலிலிருந்து
பாடி க்த ர | க்க 3 ல்,
த. வி. சப்மன் வைத்தியனுடைய உதவியையும்
| L
ச. சுவாமினுதன் வைத்தியதுண்டய உதவியையும்
Сілі ===
Us. Lਹੰ॥
மொழிபெயர்ச்சப்பட்ட
H- E -e-, - F -
யாழ்ப்பார்ம் : பரம சிக சிங் டி = பிட்டது : காகர்கோவில் ஸ்ண்டன் மிடின் அச்சியந்திரசாலேயில் பதிப்பிக்கப்பட்டது. E5.

Page 75
142 மருத்துவத் தமிழ் முன்னோடி
மூலநூல் ஆசிரியரின் பெயரை வெல்சு பண்டிதர்' எனத் தமிழாக்கிய கிறீன் Chemistryஎன்பதைக் கெமிஸ்தம் என எழுதினார். ஆங்கிலச் சொல்லின் உச்சரிப்பைப் பேணி விகுதியை தமிழ் மொழிக்கமைய எழுதும் அவரது கலைச் சொல்லாக்க வழிக்கு இது ஒர் உதாரணமாகும்.
ஒலியமைதிக்காகத் தேவையானவிடத்து வட எழுத்துக் களும் உள. Samuelஎன்ற பெயரை "சமுல்" எனவும் Danielஎன்ற பெயரை தனெல்" எனவும் ஒலிபெயர்த்தமையும் ஈண்டு அவதானத்திற் கொள்ளத்தக்கன.
தமிழிற் சில எழுத்துக்கள் சொல் முதலில் வருதல் தமிழ் வழக்கல்ல. உதாரணமாக, ட, ல: Daniel என்ற பெயர்ச் சொல்லை இக்காலத்தில் நாம் "டானியல்' என எழுதத் தொடங்கிவிட்டோம் ஆனால் அன்று, கிறின் அதை தனெல் எனத் தமிழாக்கினார். "லங்கை, லண்டன்' என்பனவற்றிலே இ புகுத்தப்படவில்லை. எனவே தமிழாக்கும் போது ஒலியமைதி பெறுவதை கிறீன் குறிக்கோளாகக் கொண்டா ரன்றி இலக்கண மரபை அல்ல என்பது தெளிவு. அதே காலத்தில் அகராதி முயற்சியில் ஈடுபட்ட பீற்றர் பேர்சிவல் பாதிரியார் ர ல எழுத்துக்களின் முன் இ, உ என்னும் எழுத்துக்களை இட்டதும் முக்யம்', 'சக்தி என்ற சொற்களை முக்கியம், சத்தி என மாற்றியதும் இங்கு குறிப்பிடல் பொருத்தமாகும்.
இனி நூலின் உள்ளே நுழைவோம். காபன் பற்றிய அறிமுகத்தின் ஆரம்பம் இவ்வாறு உள்ளது:
 

கிறீனின் நூல்களில் தமிழ் 143
காபன்.
CARBON.
416. History. பூதியங்களுக்குள்ளே காபன் அகெம்
+
ஏராளமும் அதிகம் முககமுமானது. இது சுரங்கங்களில் *ங்கரியாகவும், காபனிக்கமிலவாயுவ பாமாலுவில் செறிந்து
*ாகவும், பெரிய மலேப்பார்களிே சுரோனீTபவர் மக்னிசி
- -, ... - எனற கூறுகளாகவும், பிராணி காபரங்களிலிருந்து "LI ITT, ir- at . آیت
'வாசலபும் முக்கியமான கூஒவுேம் 翌g"のリ இதறகு செபஸ் சாபியம், 3. பி சாப், ாே. அசேஷ கிறுவிதம் வைார்பில்லுக்கப்போல் ே s =
t سره =ھا ԱՄ - -
பிாகும் இருக்கும்.
آئی۔
கற்கரி (Coal); காபனக என்பது Carbonale என்பதற்குக் கலைச்சொல். கெமிஸ்த சாமியம் (Chemical equivalon) சின்னம் (Symbal) கிறாவிதம் என்ற கலைச்சொற் பிரயோகங்களும் Chemical Symbol தமிழில் கா எனப் பிரயோகிக்கப்பட்டுள்
ளமையும் காண்க.
தமிழ்மொழி நடை சொற்பிரயோகம் ஆகியவற்றை மேலும் தெளிவாக்கப் பின் வரும் பகுதி உதவுகிறது. தண்ணிர் வாடிக்கை, வைரப்பொருள் என்ற சொற் பிரயோகங்களும் தேவையென எண்ணுமிடத்து, ஆங்கிலச் சொற்கள் அடிக்குறிப்பாகத் தரப்பட்டுள்ளன என்பதும்
அவதானிக்கத்தக்கவை.
* கெமிஸ்தம் பக்கம் 257

Page 76
144 மருத்துவத் தமிழ் முன்னோடி
go. For MATION OF RேSTAIS மிகுதியான பதார்த்தங் . குளிர்க்க தண்ணிலும் வெந்நீரில் அதிகமாய்க் கரையுமா தாாள் கிரிஸ்கலுண்டாக்கக் தெரிந்துகொண்ட பொருளே வெக் Eல் தரைப்பதே வாடிக்கை நீர் ஆறும்போது கொவிசம்
ჟუწ* ரி G ܡ ܢ ஒா. தண்ணீருக்குள் சிகரியிருகே அட பாருளின் அணுக் :ள். அதற்குரிய கிரிஸ்தலின் வடிவமுள்ள கட்டியாகச் சேரும். வைரப்பொருளே மெல்லமெல்ல ஆறவிட்டால்
அணுக்கள் விரிங்தாக உறையும். தத்தம், அந்தமனி என்பவைகளின் சுட்டிகளே உ "'+(ظالمی تجاIT =قالینے ہتھیلیے #ہے۔
ரிேல் شعة السالته طبقة
டைத்திப் பார்த் உருக்கினயின் ஆதி உறையும்போதி a F-F-F-F-T.
தண்ணீர் ஒசாய் உறையும்போது நப்பான ரிெஸ்தல்: வந்த மழைப்ாகிய ஸ்அேதில் இ iurEiזו ●リ لاتقه تلك الكويت பார்த்தால் இக்கிரிஸ்தல் மிகச் ஒப்பாய்த் தோன்ம்' பாகைககுதி கு:ே ந்ேதையுள்ள கறுத்தப்பெரு) : 臀 : இந்திரில்தல்கள் காணப்பம்ே. :ளுவிலுண்டாகும் " கள் சிலவதின் மாதிரியை 16- انتقال = "TAA" بالا آلات آن *
ஸ்னேவில் தோன்றும் இரின்கலகள் கண்ணுக்குட்டியாகிய ஐழ் ஆசிரம் இதில் ஒன்றித்திருப்பதால் அன்றுகளின் பூங்கேம்ே.
- ܡܢ தட்சசீர் உறையத் துவங்கும்போது F மேற்பாவை' ஒரிஸ்தல்கள் - Timru. 1፵f} LITEELLIGE Ffl- L-EFF-xaTrieri EIT 『주 ŞÉı” அதேபோன்று குறுக்கிட்டு Ështësi 9-i. I fër Tij gj italia. Firstare. TLD.
輩
கெமிஸ்தம் பக்கீம்சி
 
 
 
 
 
 
 
 

கிறீனின் நூல்களில் தமிழ் 15
கிரிஸ்தல்' என்பது Crystal எனும் ஆங்கிலக் கலைச்சொல்லின் ஒலிபெயர்ப்பு கிறீன் தமது அகராதியிலும் நூலிலும் கிரிஸ்தல் அல்லது படிகம் என்றும் வழக்கில் உள்ள தமிழ்ச்சொல்லையும் குறிப்பிட்டுள்ளார். ஆங்கிலப்பதத்தின் பகுதியை ஒலி சிதையாமற் பேணி தேவைக்கேற்ப வட எழுத்தையும் பயன்படுத்தித் தமிழ் முறையில் விகுதியை அமைக்கும் கலைச்சொல்லாக்க முறைக்கு கிரிஸ்தல் என்ற சொல்லும் ஒர் உதாரணமாகும்.
இனி இரசாயனப் பரிசோதனை ஒன்றை எவ்வண்ணம் விவரித்து, சமன்பாட்டையும் எழுதியுள்ளார் கிறீன் என்பதற்கு ஒர் உதாரணம் இது
0000S LLLLLLLHHLHHH LLLL H LLLLLCLLLHLSYTTT TTTT S TSSS uOSuu அன்ஆடிக் டோங்க்ள்ள்ே செப்புத்துண்டுகள் போட்டு கொஞ்சிக் தர் சிரும் ர் ரிச்சுரிமம் விட, இவ்வாயு பிறக்கும். இதற்கு குதி
தவையில்லேயாதலால் 11-ம் படத்தில் காட்டி பிருக்கிறபடி இ இதுக்கியிருச்சித | 1만- படம். ஒடிச்சோ டே தம். செயன் தொடங்கும்போதி சேர்வை சிங்க பு: Flan. ஆகிலும் வாயுவே T TTue uTS T LTLSAS A AAA KSYS SS uu u uu uu HHH S AAA A A A STTTT SS தாப் வரும.
நீதிருசதவிபக்சிாம் உண்டாவதற்கு ஈட்ச்கும் சுெ நிஸ்த மாறுதலாவது, செம்பு Fஓரிம்சமிலத்தில் பங்கிலிருச் ஆக்சித் த்தே GJIT TE GESET மாக, அது இன ஞெரு பங்கு சீரிச்சமித்தோரி கலகது செம்பு ர் 5 சாம். இது சன் $சிருக்கும் 芷品 நீலகி.முள் - இப்படி 4.நரசினராக பிரித்த தேரிக்க மிஸ்ப்டன்கு கச்சிதத்தில் గ్రిన్హో சாமியச்ஈத இழரசு, நக்தி மூன்று பக்கும் செம் போடு சேரும். தக்சிகத்தின் மிச்சமான இரண்டு சாமியங்கள் துே ருத்தோடு சேர்வதால் திேருசதுவியச்சி வாயு :ள் டாகும்.
செம்பு. கிரிக்கமிலம், செம்புரேரா, நீ எருச சுவியச்சிாம். ~~ー、エー 。一ー -一。一。
3 கூ + 4(நீஅ5 ) = 3: கூஅ, நீஅ5) + .
* கெமிஸ்தம் பக்கம் 23
10.

Page 77
148 ( மருத்துவத் தமிழ் முன்னோடி
இதிலே சீசா, கொஞ்சம் தண்ணீர், பிறக்கும், குழல், போதும், மிச்சமான என்ற சொற் பிரயோகங்கள், பேச்சுத் தமிழ்ச் சொற்கள். பிரயோகிக்கப்பட்டிருப்பதைக் காட்டு கின்றன. இன்று சமன்பாடு' என்னும் சமீகரணம் எழுதும் போது Cப விற்கு கூ எனத் தமிழில் எழுதி இருப்பதுவும் அவதானத்திற்கொள்ளத்தக்கதாகும்.
3. வைத்தியாகரம்
இந்நூல் பற்றி முன்பே குறிப்பிடப்பட்டது.
வைத்தியகரத்தின் முகவுரை இதோ:
மு கவு  ை .
ம்"ஊபர் வைத்தியர் கைவாகடம் என்ற இங்கிலிஷ் திாலினிஜ மொழிபெயர்க்கபபட்டது. அதிலுள்ள சில பகுதிகள் நிப்பதி இல்லாத சில பகுதிகள் கூட்டப்பட்டும் இருக்கும் இந்ததின் முதற்பக்கு வைத்தியத்திக்கு அஸ்திபாரமான கோட்பா துே ஆந்தலால் அதில் பரிபாஷை சற்றதிகமாய் வரும். ஆயி இசிஜமின்தி ஒருபோகிம் வழங்கப்படவில்லை.
அருந்தியதற்கஞ்ன் சில செந்தமிழ்ச் சொற்கள்; சில சமஸ்கிரு இச்ஆெங்கிக் அகேசும் தமிழ் எழுத்தில் சமைத்த இங்கிலிஷ் சொற் ஈனாயிருக்கும. பதம் ஒவ்வொன்றும் தனித்தனி ஆராய்ந்த சேர்க்கப் ஆயினும் தாய்நூலிலே உள்ள இங்கிலிஷ் பதங்களே அதிக معينة عسك :சேர்ந்திருக்கும். இங்கிலிஷ் சொல்லே தமிழில் எழுதும்போதெல் கிரீம் தி குறளவும் அதற்குரிய ஓசை கெடாமல் ஏற்ற கோலங் கொள்வர்கம் தக்கதாய் இயற்றியிருக்கும்.
 
 
 
 
 
 
 

கிறீனின் நூல்களில் தமிழ் 147
திேமட்டாய் அறிந்த எவர்க்கும் இப்புஸ்தகம் தெளிவாய் விளம் கும்படி அகராதி உரை முதலியவைகள் இதில் அடங்கியிருக்கும்.
ஸ்காட்டினை தேசத்திலேயுள்ள் லோ பண்டிதர் முதலான சிசே சிT இதிலேயுள்ள படங்களைத் தேடிக்கொடுத்த தயவையும் பிழை -ாமல் இசை அச்சடித்தல் கவனத்தோடு பிரசுரஞ்செய்த கனம் பெருந்திய பேலிசு, நூபோட், ஜோன்சு முதலிய தபாளரின் பிரயா #ஆமதிகக் மொழிபெயர்த்தோர் வானிபோர் எல்லாரும் அரு ஈசிசிப் கிரேக்கக்கடவர்.
இதற் சிபாதி வராமல் நீப்ேபதற்கும் வருதகம் வேதன் தனிப் பதற்கும் வெகுவமாக உதவவேணுமென்று அபேட்சித்தும் தமிழ மு: அசேகர் உணராமலிருந்தும் அவர்களுக்கு உத்தமமான சிநேகித r இருக்கிற யேசுாேதரின் ஆசீர்வர்தம் இத்திடன் செல்லவேண்டு LETE விரும்பியும் இது அவர்களுக்கு நண்புடன் கொமிக்கப்படுகிறது
மொழிபெயர்க்கும் போது கையாண்ட யுத்தி LTது எனவும் நூலின் தெளிவு பற்றியும் கலைச்சொற் பிரயோகம் பற்றியும் தமது தமிழிலே கூறியுள்ளார். கிறின் வைத்தியரும் மொழிபெயர்ப்பாளர் வில்லியம் பவுலும் இனி நூலில் இருந்து ஒரு சிறிது பரிசோதனையை விளக்கும் பகுதியைப் பார்ப்போம்.
அமுரிச் சோகன். Examination of the Urine.
581 பவுதிக சோதனேகளிகுலும், அனுசரிசனியிஞலுமே வைத்தி யர் ஆமுர்ரியைச் சோனே பண்ணுகிறர்கள் அமுரிக்கு ஒன்றில் டேப் தீவுடன் அல்லது பெய்து கொஞ்சநேரம் ஆறிகின்றபின்பே சோதar கள் இடவேண்டும், தெளிந்த நீரையும் அட்ைப&யம் சிலவேளே வெவ் வேருய் சோதிக்கவேண்டிவரும், விேயங்ாவது சோதனேயிஞலாவது
உண்டான அடையவே இன்னது என்று அறியும்பொருட்டு குக்கு மாட்சியை வழங்குவார்கள்.

Page 78
148 ( மருத்துவத் தமிழ் முன்னோடி
585. சோதனைகள், Testa, கீதரிக்கமிலம், மஞ்சட்கடுதாசி, லித்மஸ்ககோசி, குடு என்பவைகளே வழமையான சோதனேகள், ஐருகுலோபிக்கமிலம், அசிதிக்கமிலம், அமோனகிர், பதாசிகீர் இவைக ஆம் பல சகுனங்களில் வழங்கப்படுகின்றன. சில கோக்கங்களுக்கு அலக்காக்யும், அமோனஅச்சஸ், நீரிசு, ஆக்சலிக்கமிலம் என்பவை களே தண்ணீரில் கலந்தும் இடுவார்கள். சுவிைளக்கும், சிறு பிலா டினத்தகம், அமுரிமானி அல்லது 1000 கிறேன் குப்பியும் வாடிக் கையான முரிச்சோதனேக்குப் போதும்,
586. குக்குமாட்சிச்சோதரேக்கு குக்குமாட்சியைத்தவிர சண் ஆடிப்பாத்திரங்கள் சிகப்பும், ஒரு சிறு கண்ணுடிக்குழலும் தேவை. முரிபை &laն நாழிகைகளாக பாத்திரத்தில் கீற்கவிட்டு அடையவில் கொஞ்சத்தை சிறு குழவிால் உறிஞ்சி எடுத்து கண்ணுடிச்சுட்டில்
இட்டுச் ரோதிக்கலாம். அல்லது ஒரு தினி அமுரியை Aািrশল্পী டிக் கட்டில் இட்டு அதை வேறொரு மெல்லிய கண் குடித்த கட்டால் முடிச் சோதித்தலாம், ܗ
87. சேர்களேக்கு, ஒன்றில் ாாள்முழுதும் பெய்த முரிபை அலலது காலமே எழுந்தவுடன் பெய்தபின் D "L'y of TL9Lorrêt பெய்ததை எடுக்கவேணும். । ਘ பாார்ந்த ਸ਼e ஒன்றும் அதில் விழாதபடி அதை முடிவைத்துக்கொள்ளவேனும், 588, அழுரிச்சோதனேயூைப் Territo-tiil, ಕ್ರೌ।।೭।। சோன்ேகளால் விளங்கும் ਨਾ । ਜੇ அம, பிற்று அமுரியின் பற்பல கூறுகளின் பெளதிக ஸ்ட்சனங்கள் குக்குமாட்சிக்கோலங்கள் என்னவென்றும் சொல்லப்படும்.
இரசாயனப் பரிசோதனை அன்றைய தமிழ்ச் சமுதாயத்துக்குப் புதியதோர் துறை. அன்றை வைத்தியர் களுக்கும் உதவியாளருக்கும் தெளிவாகக் கூறவேண்டிய இரசாயன ஆய்வு பற்றிய விளக்கம் தரும் பகுதியிது.
கருத்துத் தெளிவும் செய்முறைப் படிமுறைகளும் தெளிவாக உள்ளன அல்லவா? இப்பகுதியைத் தொடர்ந் தரப்பட்டுள்ளது, சோதனை மூலம் நாம் பெறும் முடிபுகள் பற்றிய விளக்கம்.
வைத்தியாகரம் பக் 158, 159
 

அதனின் நூல்களில் தமிழ் 19
ー
மனித சல" (wine) பரிசோதனை இன்று மிகச் சாதாரண
நசிமூலம் அத்துறையை மானதொன்று. ஆனால் ஆரம்ப முயறசமூ
நம்மவர்க்கு நமது மொழியில் தெளிவுபடுத்துதல் எத்துணை
சிரமமாக இருந்திருக்கும் என்பதை விவரிக்க தேவையில்லை.
அந்தச் சிக்கலான இரசாயன விளக்கத்தை ஈண்டு பார்ப்போம்.
Inications of Test3 மந்சட்கடுதாசி சகுச்சி அமுரி பட கபில நிறமாகும். நீல விற்மஸ் கடுதாசி அமில அமுரி பட, சிவப்பா கும். காய்ச்ச, அல்புமின் அடையும். பாஸ்வசுக்கள் அதிகமாயிரு. கால் ரவைகளும் அடையும், சோடாதேசும் அமோனலிதசம் நிக்குக் கரைந்தபோம். நீ துரிக்கமிலம் அல்புமினே வெள்னைத்திரளே களாக அடையச்செய்யும். இது இட்டுச் சில நாழிகைக்குப்பின் விதிக் கமிலத்தை அடையச்செய்து, பின் அதை நூர்ைத்துக் காையச்செய் பும், இது சுண்ண அச்சரசையும் சருச்சிப்பாஸ்வ்சுக்களிாயும் கரைக்கும். பித்தரிேன் சிறப்பதார்த்தத்தை பச்சைநிறமாக அடையச்செய்யும். தமி லத்தைச் சற்றதிகமாகச் சேர்த்தால் அதை சுறுக்கில் மங்கச்சிவப் பாக்கி பின்பு கபிலரிதமாக்கும், பூறி அதிகமாயிருந்தால், அமுரி புடன் சரிபங்கு தேரிக்கமிலம் சேர்க்க, யூறிதோசப் படிகங்கள் உண்டாவதினுல் ரீதரிக்கமிலம் ஆறியையும் காட்டித்தரும். மேலும் சில் அத்திரதேசங்கள் சேர்ந்த அமுரியில் தேரிச்சமிலம் கலங்கலான புகார் தோன்றச்செய்யும், ஐருதலோநிக்கமிலம் எவ்வளவு சேர்ந்தா லும், விதிக்கமிலத்தையும், இப்பூரிக்கமிலத்தையும் அடையலாகும்படி செய்யும். இவ்வமிலம் பித்த கீரின் சிறப்பதார்த்தத்தை பச்சைநிறமான அடையல் ஆக்கும். இது சுண்ணவக்சலனசயும், சிஸ்தினேயும், பாஸ்வச களேயும் சுரைக்கும். அசிதிக்கமிலம் சளியுள்ள அமுரியில் புசார் உண்டார்ச்செய்யும். சருச்சிபாஸ்டி சுக்களேயும், சொற்பமாய் சுனன பங்வசையும் கனாக்கும். சல்வுரிக்சமிலத்தை சீனியாவது அல்புமி குவதி உள்ள சூடான அமுரியுடன் சேர்த்தால் காபன் அடையும், அமோன நீர் சருச்சிப்பால்வசுகளே வெண்மையான அடையல் ஆக்கும், சிஸ்தின் கரைக்கும். அமோனதாயு விதிக்கமில படிகங்களே கருஞ் சிவப்பாக்கும். அக்சலிக்கமிலநீர் பூறிஅக்சவிசை அடையப்பண்ணும். அமோனவக் சலசு சண்ணபான்வசை கண்டுபிடிப்பதற்காக வழங்கப் படும், காப்பதசி3 விதிக்கமிலத்திையும், சோட விசளிசயும், அமோன திதசையும் கண்ாக்கும். அமுரியுடன் காாப்பதாசி சேர்த்தச் சூடாக் இளூல் அமோனவிதசிலிருந்து அமோனவாயு பறியும், சற்கரையுள்ள ம்முரியில் காாப்பதாசி சேர்த்தால் அது கருங்கபிலகிதமாகும். அதில் சீழ் சேர்ந்திருந்தால் அச்சீழ் தடிப்பாகும். துரிசுநீருடன் காரப்பதாசி சர்த்து, சத்ததிகமாய்ச் சீனி சேர்ந்த அமுரியுடன் கலந்து ரூடேற் திகுல், செம்புசெவ்வக்சிரம் அடையலாசிரதிஞல் சீனி காணப்படும்.
LLLHHL SS SS 0 LMLLLLLL LS S S LLTLLLLLLL S S LLLSS LLtt LLLLLtS

Page 79
150 ( ) மருத்துவத் தமிழ் முன்னோடி
அமிலங்கள் பெயர், நிறங்கள் பெயர், செய்முறை பற்றிய விளக்கம் அவதானிப்புக்கள் பற்றிய விபரம் ஆகியன வற்றுடன் மொழி நடையும் தெளிவும் சிந்தனைக்கு விருந்தாகும்.
4. Pһагппасорoeіa of India
இந்நூல் தனெல் வி. சப்மன் மொழிபெயர்த்து இறுதியாக 1888இல் வெளியிட்ட காரணத்தாலும், கிறின் வைத்தியர் அமரிக்க திரும்பிய பின் வெளிவந்தது என்பதாலும் 'சப்மனின் மொழி நடை எனவே கருதுதல் வேண்டும். ஆயினும், கிறீனின் கைப்பட்டதென்பதாலும் அன்னார் வளர்த்த சப்மன் வைத்தியரும் ஆரம்ப முயற்சிகளில் ஈடுபட்டவர் என்பதாலும், சில பகுதிகளைப் பார்த்தல் தகும்.
செல்வலரி, SWBescented 0leander, பூசைகளுக்காக இந்தச்செடி இந்துதேசத்தில் அதிகமாய் உண்டாக்கப்படும். வேர் முதலாய் இநின் எல் வாப்பகுதிகளும் கஞ்சு, ஆதலாற் சொலே தற்கொலேசுக்ளச் செய்வதற்கு இதைச் சுதேசிகன் பிரயோகிப்பார்கள். ஆயினும் இந்திய வாகடங்கன் கி வன்ற்றில் இது குஷ்டத்துக்கும் வேறு நோய்களுக்கும் மருந்தாகக் குறிக்க ப்பட்டிருச்சின்றது. அதிகமாய்க் கொடுத்தாத் வேமோசந்தாலும் நேரிடு மாகையால் இதை மெத்தக் கவனமாய்ச் சோதித்துப் பார்ச்சுவேதும். இ சாவ் இருவர் கஞ்சூட்டப்பட்டார்களென்று பிறவதனர் ஒராளேயும் கிரீகர் பண்டிதர் பின்னுெசாளேயும் பற்றியெழுதியிருக்கிருர்கள். நிறீதர் சொன்ன ஆளில், அந்த கஞ்சு நரம்புமண்டலத்திற் தாக்கினதால் மரணம் நேரிட்ட தென்கிருர், இதின் வேர்ப்பட்டையைத் நின்றநிஞல் எர்ப்பின் குணங் கன் உண்டான ஒரு ஆளேப்பற்றிக் காமிகாயாத ஆசிர்சர் எழுதியிருக்கிருர், Itaar. Cerbera, Odolla mor C. Manghas. goržga? ன் கடற்கரைகளில் நொதியான இடங்களில் உண்டாகும். இதின் பாலு ம் இலச்சாறும் பேதிக்கும், வாந்தியுஞ் செய்யும் இச்சமரம் நச்சுத்தன்மை யுள்ளதாகையாலும்,விக்கினமில்லாமற் பேதி சத்தி செய்யும்மருத்துசன் வே நனேகமிருப்பதாலும், இவைகளைச் சொடுக்கப்படாது.

கிறீனின் நூல்களில் தமிழ் 15
பாம்புச்சைலம், 0phioxylon Serpentinum. இது இந்தி அடங்ாறு முள்ள படர்செடி. இதைப் பாம்புகடிக்கு நல்ல மருந்தென்று சுதேசிகள் மெத்த வழங்குவார்கள். ஆயினும் இதைப்பற்றி நம்பிக்கையான அத்தாட் சிகேண்டும். மேலும் தொணிகமாகவும் சாக்கினியாகவும் இது மதிக்கப்ப ம்ெ இதின் வேரில் வீரன கசப்புக்கஷாயம் எடுக்கலாமென்தும் இது மெத்திச் சத்துள்னதென்தும், அஷ்வீல்டர் சொல்லுகிருர் மேலும் யாவகச் இதை அக்தெல்மிச்நியோக வழங்குருெர்களென்றும் இவரே சொல்லுகிருர், பிரசவ நோக்காட்டை அதிகப்படுத்துவதற்கு இகின் வேர்ச்சஷாயன் சொ ச்ெசப்படுகிறதென்று பழனியாண்டி வைத்தியர் சொல்லுகிருர்,
ாசையம், Rhazya Strict, இது சிந்தி, பஞ்சாப்பு ஆபுகானிஸ்த ன் என்ற இடங்களிலுள்ள பூமி, இதின் காய்ர்த இலேகளும் தண்டுகளும்
LLLLt CTLSS K LSLMCLLLS S CMHLLLLLLLS 0 LLLLLLLllll LLTLLLLLLL חוןist5 יוחנ Fiהשם דח ש
ygium. 6 Tunic. 7 Febrijuge. S AnthicimIII Luc, 9 Wumb.
செவ்வலரி காட்டலரி என்ற செடிகள் நாம் அறிந்தவை. அவற்றையும் அவற்றின் இயல்பையும் கூறுந்தமிழ் இலகுவான தமிழ் அல்லவா?
நாம் நன்கறிந்து பயன்படுத்தும் நன்னாரி பற்றி எழுதியுள்ள பகுதியும் எடுத்துக்காட்டாக நோக்கத்தக்கது.
அஸ்கிவிபிரியங்கள்.
ASCIL FIADE AE.
156är62f. INDIAN SASS: PARILL.A. EEMIDESMUS.
வாசம். இது --극 추 உண்டு.
வாகடபகுதி. கேர் : - 5ளமான மஞ்சட் கபிலநிறமுள்ள Fர adeirg - நிருசல்சன pagear FF அரும் நெடும்பாட் ச்ேகு of Fair P-675வாயம்ான வெடிப்பாள் பட்டை உயப் பிரிக்கும், InFE #Assurirt &T, AF KAJ Liro aRRrr
Pharmacopoeia Ofilindia:jakan Li, 75)

Page 80
152 மருத்துவத் தமிழ் முன்னோடி
மும் சொற்பமான =a === =வை யமுடையது. இதின் சத்து ஒர் அத்திரஎேண்ணெய்யிதும் ச்ெசிெகள் என்ற கிரினதற்பதாாத்சத்திலு மிரு க்கும்.(47)
தன்மை. இது சிரத்த அங்கீதா சொணிகம், சுதேனி, அமுரிதி. உபயோகம் டெவ3: :ளின் காமாஜ்வ. உடம்பிற் செறிந்த சிவ்விசு"சாலிசவாதம், அருகேட்கள் இவற்றுக்கு இது கொடுத்து அதிகய ங்கண்டிருக்கின்றது.
fissil fit. "stir-fairsgill infusion of Hernidesmus. Qatar. *ன்னுரிவேர், இடித்தி ஒரு =ள்= கோதிநீர் பத்து அன்சு மூடிய பாத்திர ச்சில் ஒருமணிநேரமூரவிட்டுச் Fலவில் வடிக் அம்.
தேயம், இதில் இரண்டு அன்= முதல் மூன்று அன்னசி நாள் மூன்று முறை கொடுக்கலாம்.
(குடிச்சு இதுவே உத்தமான அறை. கதைாயஞ் சூடாயிருக்கையித் கு டிச்சால் அதிக சித்தியாகும். இதற்குப் பாலுஞ் சர்ச்சரையுஞ் சேர்த்தால் பிள்ளைகள் பிரியம்ாங்க் குப்பார்கள் பதசியவியோதிரித்துக்கும் மற்று ம்மருந்துகளுக்கும் இது கங்வ அனுபானம், வேர் புதிதாவில் சத்து அதிகம்) "FigJfäägrLIL- Sy:1p i Hermidesmus. Gatsh. Fa ஞரி வேர் நாலு அன்சா சுத்த சர்க்கனா இருபத்தெட்டு ஆன்சு; கொதிநீர் அதைாழி. மூடிய பாத்திசத்தில் என்ஒர்டிேனாக் கொதிநீரில் மாலுமணிநேர மூறவிட் ச்ே சீலயில் வடிக்கவும். இந்த சீமா மண்டியடையுந்தனேயும் வைத்து, தெளித்தரீசை இரத்தெடுத்து சர்க்கரையைக் கூட்டி மென்சூட்டிற் கரை த்திக்கொள்ளவும். வரும்பான இரண்டு இருத்தல் பத்து துன்சு, நிறுத்து, 1335 என்ற விசேஷகிருவிதம் உடையதாயிருக்கவேண்டும்.
தேயம். ஒருதிருமுங் உடன் கொடுக்கலாம். இது சுரக்கு பொதிச் குமாகையால் உஷ்டனகாங்விடங்களில் வழங்த்தசசதல்ல
CTLLTLTTS SK CCLL AS 0 TLLLLLLLLS LLLLLLLLS SaaTS 0 LLLLTLLLLLLLLS
GS lHLaLMLSS 0 TTTT LLTLLTYS S CLL uuu uu LLaS
(47) (48) ஒபக்தர்பார்.
அறிவியல் தமிழ் அக்காலத்திலேயே எத்துணை கவனத்துடன் வளர்க்க முயற்சி எடுத்தனர் கிறீன், சப்மன், பவுல், டன்வதர் ஆகியோர் என்பதை இன்று நாம் நினைத்துப் பாராட்டுதல் தவறாமோ?
Pharmacopeia of India:Luis E151.

கிறீனின் நூல்களில் தமிழ் 153
:} | ** Fల్లో 'FA4:4ஆ*ன: ??'i't, i'khayya, as a . o Cztga
في العثمانيه Վ . To æ:AA f3". Wrafi fra ஐசர்கள் ို႔ &#နှီလှီ من 1 ب "إتش تيم , وجnج - 73 - خواب۔. 浣接
ix. A r, trip 'Fr. | Fr gr. , Frro. =چې ميشته لاړي آ * rive...'. F ar gf பு: 零 it "ళ్ * tየ'ዏ ኣoc : :Fسولې; i rتگ ل }'#if:بل يې \ | '' or
* t وقت W་པའི་྾་་་་ 구 rri , 'Fr -- f" {\* . چشته ཤ་ཚ་བའི་ཟིན་ 沁4 24 L. All
է: --զ: , ॥ 晶、frqr、 )سافر من - - لم يعينوه ، في 3 مات لومړنيله : - . . - உ = = = = = = س + س = درجة - مكة
------"r r m-" *下。Jリーリッ zrf.“
E &#Bيج; fi rLLSSSK SSS SSASA S S YS S S SS S SS t SS a S S K SLA திேரிக்கி:
ہنچ وفاته في جميع حتيiف I Ifہل& u ،تھتھا "jr ፶፮ Lt Ali'' ཚar ༣༽ ༧ ལྷ་ エ 4ேட்ட-N: שם ח | இல் FFFF"
ܕܬ স্ট্র المخدم كثيم . يستقيم عربية تنموية. المخيمس "هيس *-* بهم. ཧ་ ༢༧ ཚ༧༡༨་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་을 \" " "
r
. ." f 1 - mJomy£፡°*; GS SeAS Y rGMu S T SA ATSYS e SSAS rr riyqeS
. . . . و ام ، وعلم يتم عم ميمونيكر. يعية. س Pic"; s) prišla, žr. ab Areizi za ஆா : ፰ “o (ጄo.. ")" Erik J. L.
తాజాy Ai "aill, Yrdir i'r
5, AG ■ 1 1 リ』_ョ。ー =\flà r, Éሇሦሶች= 烹 f' TPIT . Eft" | 计 ** *、平 الأفواج في يوم بهجت التفجيري میل" چھپیپسی
고...'. 그후 "", , , ." Er به . تم 43 في بدم *、 r-ra \r T- . . . ஒ ايتم" + ཆ་གངT ༈ ཟླ་ arti irkir, הלידהf-LF-די "בה"א ו יך ה', 3+. יואן / לא+-isor :התי #
寓 பட்சத்தி التي هير
r r ; ****** IGE, nya? 3"***** *چ1. م" i. $ዱዓፓ“? "4" ". - ' +hyltiFilH=="#"; ዲ'vኛ + 0 የጎ'ና፡ 、。。、パリ י cmー エす、 *m N * ---------- .باندې بيلابېلټي
. ... =Lئی = | الگی نام میلام ملی این - الفحم -
A -, - - ------ : 告、一)下
SLKSL S SSYSSS SS SS Kaa K LLS YK S S S LLLaHBYSLLKKSS SLLLL S S S S S L SS K KL K CLL ÅF111 H-III
Lu SSS S LSLKYSKKKJS T LKJJSKKS LSJKiS KLL KK S KLLSLKS LCLaaL S SSSLLL S KK
Eatractforsingeand Letters of Dr. Green.

Page 81
154 ( ) மருத்துவத் தமிழ் முன்னோடி
தமது அன்றைய தமிழாக்க முயற்சியில் எத்துணை சிரமப்பட்டனர் கிறீனும் உதவியாளரும்?
அவர்கள் கையெழுத்து எப்படி இருந்தது? இவற்றை அறிய இதோ ஒரு சான்று!
மீளாய்வு செய்தும் திருத்தியும் எழுதிய இப் பக்கம் எமது முன்னோடிகள் அன்று பட்ட சிரமங்களைக் கூறுகின்றது.
இதுவரை பார்வையிட்டுப் படித்தறிந்த எடுத்துக் காட்டுகளில், கிறின் காலத்து மொழிநடை, சொற்பிரயோகம், வசன அமைப்பு, பிறமொழிகள் தமிழில் ஏற்படுத்திய தாக்கம் ஆகியன பற்றி ஓரளவு தெளிவாகி இருக்கும்.
எந்த மொழியும் காலத்தால் மாறும் இயல்புடையது. தேவைக்கேற்ப மாறும் சால்புடையது. சொற்பொருள் மாற்றம், வாக்கிய அமைப்பு முறை ஆகியன சமகாலத்திலேயே ஊருக்கூர், நாட்டுக்கு நாடு வேறுபடுவதை நாம் அறிவோம்.
இதையெல்லாம் தொகுத்தாயும் ஆர்வம் பலருக்குண்டு. ஆனால் கிறீனின் ஆரம்பகால நூல்களோ தேடற்கரியவை. சாதாரணமாக நூல் நிலையங்களிலே பார்வையிடக் கிடைக்காதவை. விலைக்குப் பெற முடியாதவை.
இதை உணர்ந்துதான் சில நூல்களின் சில பகுதிகள் எடுத்துக்காட்டாகவும் சிந்தனையைத் தூண்டுதற்காகவும் மேலே தரப்பட்டன. ஆராய்வார்வம் உடையவர்களுக்கு இது சிறிதெனினும் உதவுமென்பதில் மன நிறைவு ஏற்படுகிறது.

14. சமயமும் விஞ்ஞானமும்
"கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள்-தொழாஅர் எனின்
- தமிழ் வேதம்
t"கிறித்துவமதம் இந்திய நாட்டுடன் ஒன்றி அந் நாட்டின் விருத்திக்கு வலுவளிக்கும் இயற்கை மதமாகுவதற்கு யாது செய்தல் வேண்டும்? ஸ்ரான்லி யோன்ஸ் என்ற பிரபல கிறித்துவ அறிஞர், மகாத்மா காந்தியைப் பார்த்து இவ் வண்ணங் கேட்டார். "கிறித்தவர்கள் கிறித்துவைப்போல வாழத் தொடங்குங்கள்" என்று ஆரம்பித்து, "பிற மதங்களைக் கூடிய கரிசனையுடனுங் காருணிய சிந்தையுடனுங் கற்றறிந்து, ஆங்குள்ள நல்லியல்புகளை அறியுங்கள்" என முடிந்தது விடை.
'எனக்குப் பணிசெய்பவன், என்னைப் பின்பற்றுக’ என்ற கிறித்துவ வேத வாக்கியத்துடன், காந்திஜியின் விடை ஒத்திருக்கின்றது. கிறித்துவைப் பின்பற்றாமலே, அவருக்குச் சேவை செய்யலாம். அதேபோல, பிற சமயத்தவருந்தத்தமது
A.
சமயத்தைப் பின்பற்றி வாழ்வில் அநுசரிக்காமல், 'சமய
f Mahatma Gandhi an Interpretation by Stanley Jones Hodder and Stoughton, St. Paul's House, London, E.C.4 pp. 69,70.

Page 82
156 மருத்துவத் தமிழ் முன்னோடி
சேவை செய்தல் கூடும் போதனையுஞ் செய்தல் கூடும்.இதை மகாத்மா சுட்டிக் காட்டியபோது அப் பெரியார் அப்படியே ஏற்றுக்கொண்டார்.
எச் சமயமும் மனித வாழ்வைப் புனிதப்படுத்தி மக்கட் பண்பை வளர்க்கும் நோக்கமுடையது; அன்பின் அடிப் படையிலே அறவாழ்வை நிலைநிறுத்த முயல்வது. 'யான் பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகமே என்ற பரந்த மனமும், 'உன்னைப்போல உன் அயலானையும் நேசிப்பாயாக' என்ற கிறித்துவ வேதவாக்கியமும் ஒரே பொருளைத்தான் கூறு கின்றன. ஆக, எச் சமயத்தவனும் எல்லாம்வல்ல ஒருவனை மையமாகக் கொண்டுள்ளான். எனவே, எச் சமயத்தவரும் பிற சமயங்களையும் மதித்து, காருணிய சிந்தையுடன் அணுகி அவற்றை அறிதல் வேண்டும். சமய சேவைக்குஞ் சமுதாய வாழ்க்கைக்கும் இவ்வியல்புகள் மிக அவசியமானவை.
கிறீன் வைத்தியர் அவர்கள், காந்தி மகான் சுட்டிக் காட்டிய அந்த நல்வழியிலே நாளும் ஒழுகினார். மெய்யுணர் வுடையானின் நற்பாத கமலங்களைத் தொழாராயின், கல்வி அறிவாற் பயன்பெறல் முடியாது என்பது தமிழ் வேத மல்லவா? வைத்திய விஞ்ஞான வல்லுநரான கிறீன் வைத்தியர், சமயப்பற்றும் பண்பும் மிக்கவராக வாழ்ந்தமை, சுற்றதனால் நற்பயனை அன்னார் பெற்று வாழ்ந்தார் என்பதை உறுதிசெய்கிறது. அதுமாத்திரமல்ல - இந்து சமயத்தையும் அன்னார் அலட்சியமாகக் கருதவில்லை. தேசியம் இழந்த இந்துக்களைக் காண்பதிலும் பார்க்கக் கிறித்துவ இந்துக்களைக் காணவே நான் விரும்புகிறேன்" என்று கூறிய பொழுது அன்னாரின் உள்ளம் புலனாகிறது.

சமயமும் விஞ்ஞானமும் 157
சமயமும் விஞ்ஞானமும் இரு வேறு தளங்களில் நின்று உலகை நோக்குபவையாகும். சமயத் தளத்தில் நிற்பவன் உலகைக் காணுங் கோணம் ஒன்று; விஞ்ஞானத் தளத்தில் நிற்பவன் உலகைக் காணுங் கோணம் பிறிதொன்று. எனவே, படைப்புக் கொள்கையும் பரிணாமக் கொள்கையும் இரு வேறு விளக்கங்களைக் கொடுக்கின்றன. ஆயின் இவற்றுள் ஒன்று மற்றையதைவிட உயர்ந்தது அல்லது தாழ்ந்தது என மதிப்பிடல் பொருந்தாது. ஒன்றுக்கொன்று முரணானது எனக் கருதுதலும் அறிவுடைமையாகாது.
கிறீன் வைத்தியர், இவ்விரு தளங்களிலும் ஏக காலத்தில் நின்று உலகை உள்ளவாறு கண்ட உத்தமராவார். T அணுக்களையும் உலகங்களையும் ஒரேசரியாய் ஆண்டு, நமது உடலில் நட்ட சீவசத்தினால் மரண பரியந்தம் அதிலுள்ள அணுக்களை ஏற்றி மாற்றி மரித்தவுடன் தடையின்றி செயல்கொள்ளும் கெமிஸ்த சக்தியினால் அவைகளைக் குலைத்துச் சிதைக்கின்ற இயேசுநாதரே!" என்று விழிக்கும் போது, கிறீன் வைத்தியர், இரு தளங்களிலும் ஏககாலத்தில் நின்று உலகைப் பார்ப்பது தெளிவாகிறது.அதுமாத்திரமல்ல; விஞ்ஞானமும் வைத்தியமுங் கற்றபோதும், சமயத்தின் மகத்துவத்தை அன்னார் உரிய அளவு பேணிநின்றார். விஞ்ஞான முறை சமயத்துறையில் ஊடுருவ இடமளிக்க வில்லை. சமயக் கொள்கை விஞ்ஞான விருத்திக்கு முட்டுக்கட்டையிடவும் இடமளிக்கவில்லை.
T கெமிஸ்தம் சபி சிறின் வைத்தியர் 1875

Page 83
158 மருத்துவத் தமிழ் முன்னோடி
f விஞ்ஞானத்துக்கும் சமயத்துக்கும் இடையிலான முரணின் சரிதம்' என்ற நூல் ஒன்று குறித்து 1875ஆம்அண்டு தமது சகோதரருக்கு எழுதும்போது, "டவிஞ்ஞானம் தனது சூழ்விளக்கால் எம்மைத் தூய்மையான பாதைக்குக் கொண்டு செல்லுமா? அல்லது, நாம் அதனிலும் பெரிய ஒளியைப் பின்பற்றுவதா?" என்று கேட்டார். விஞ்ஞான அறிவுமிக்க கிறீன் வைத்தியரின் உள்ளத்திற் சமயப்பற்று எத் துணை ஊன்றி நின்றது என்பது இதனாலே தெளிவாகிறது. விஞ்ஞான அறிவின் வாயிலாகப் பெற்ற செல்வத்தைச் சமய ஒளியில் நின்று அநுபவித்தார், கிறீன் வைத்தியர். 1869 ஆம் ஆண்டு, தமது இளைய சகோதரி அமரிக்காவிற் காலமானார் என அறிந்த பொழுது, "டகடவுளின் இராச்சியத்திலே நாம் நம்பிக்கையின் மூலம் ஒருவரையொருவர் சந்தித்தல் முடியும். செபத்தின்மூலம் நாம் ஒருவர்க்கொருவர் உதவிசெய்தல் முடியும். இங்குள்ள வேலைகளை நிறுத்திவிட்டு உவ்விடம் வர நான் விரும்புவேன். ஆயின், நீ உவ்விடமே நில்’ என்று நீவிர் கூறுவீரென்பதையும் நான் அறிவேன்." என்று தன் குடும்பத்தினருக்குக் கடிதம் எழுதினார். வாழ்க்கையுஞ் சமயமும் எத்துணை ஒன்றி நிற்றல் வேண்டும் என்பதை எமக்கெல்லாங்காட்டும் ஒளிவிளக்காக மிளிர்கின்றார், கிறீன் வைத்தியர் என்பது இதனாற் புலனாகிறது.
வைத்தியங் கற்றபின், எங்கே யான் தொண்டுசெய்தல் வேண்டுமென ஆண்டவன் எண்ணுகிறானோ, அங்கேயே யான் உள்ளேன் என்பதைக் கண்டு சாந்தியடைகிறேன்'
t History of the Conflict between Religion & Science by John William Draper.

சமயமும் விஞ்ஞானமும் ( ) 159
என்று பணிசெய்வதிற் சாந்திபெற்றவர், சமய சன்மார்க்க சீலரான கிறீன் வைத்தியர். 'என் கடன் பணி செய்து கிடத்தலே' என்ற உணர்வு, வாழ்வின் உயிர்நாடியாக நிற்றலைக் காணமுடிகிறது. சமயத் துறையில் ஊழியஞ்செய்ய அன்று வந்த மிசனிமார் அனைவரும் அந்த மனஉணர்வு உடைய உண்மைத் தொண்டரே! எனினும், வைத்தியமும் விஞ்ஞானமுங் கற்ற கிறீன் வைத்தியர், சமயப்பண்புடனும் உணர்வுடனும் செயலாற்றித் தனிச்சிறப்பெய்தினார். வையத் துள் வாழ்வாங்கு வாழ்ந்து பெருமகனாக விளங்குகின்றார்.

Page 84
15.கிறீனின் அடிச்சுவடு
தெரிந்த இனத்தோடு தேர்ந்துஎண்ணிச் செய்வார்க்கு அரும்பொருள் யாதொன்றும் இல்
- பொய்யாமொழி
'....... LTன் தன்னந்தனியாகி என் சுற்றம் எனக்கு
இனியவர்களை ஒருமுறை எண்ணுங்கால் இப்பேரிளம் மதியன்றோ என் ஆத்மாவுக்குத் தண்ணொளி தந்து சாந்தப்படுத்தும் ஆ இலட்சம் பேர்களின் குரல் என்னை அழைக்கிறது! நான் நிற்கவொண்ணாது"
இந்த மனத்துடிப்புடன் தன்சொந்தச் சுற்றம், சூழல், நாடு ஆகியவற்றை விட்டுப் பிரிந்து யாழ்ப்பாணத்திலே 1847 ஆம் ஆண்டிலேயே சேவை செய்யத் தொடங்கியவர் கிறின் வைத்தியர். கிறித்தவ மத ஊழியஞ் செய்தற்குத் தன்னை அர்ப்பணித்தாரெனினும் அவ்வூழியம் அன்றைய தமிழர் சமுதாயத்திலே மேனாட்டு வைத்தியத்தை- அம் மக்களின் மொழி மூலம் - பரப்புதற்கு வழி வகுத்தது. 'மக்கள் பணியே மகேஸ்வரன் பணி என்று கொள்ளும் பரந்த மனவுணர்வுடன் அன்னார் பணியாற்றி கால மணற் பாதையிலே காலடிச் சுவடு பல இன்றைய சமுதாயத்திற்கு வழிகாட்டுதற்கு விட்டுச் சென்றுள்ளார்.
அப்படியானால், கிறீன் விட்டுச் சென்றுள்ள அடிச்சுவடுதான் யாது?

கிறீனின் அடிச்சுவடு ( ) 161
முதலில் நாம் காண்பது, மக்கள் மொழியிலே மேனாட்டு வைத்திய விஞ்ஞானம் பரவுதல் அவசியமென்ற கொள்கை. தமிழ் மக்களிடையே விஞ்ஞான அறிவு தமிழில் வளரல் வேண்டுமென்ற அடிப்படை இலட்சியம். இந்த இலட்சியத்தை வகுத்த அவர் ஓர் அமரிக்கர். இந்த இலட்சியத்தை எய்த முயற்சி எடுத்த காலம், அன்னியர் ஆட்சியில் தமிழர்கள் அடிமைகளாக இருந்த காலம். ஆயினும், காலமும் சூழலும் தாமொரு பிற நாட்டவர் என்ற எண்ணமும் அவரது கொள்கையை நிர்ணயிக்கவில்லை. மக்கள் அபிவிருத்திக்குத் தேவை என்ன என்ற அவர் உணர்வொன்றே அவரது கொள்கையை நிர்ணயித்தது.
இரண்டாவதாக, தமது இலட்சியத்தை எய்துதற்குத் தாமே முன்னோடியாகி உழைத்தல் வேண்டும் என்பதை அவர் உணர்ந்தார். அதற்குத் தாமே தமிழில் பாண்டித்தியம் பெறல் அவசியம் எனவும் உணர்ந்தார். எனவே, சிரமத்தையும் தமது சொந்த வேலைப் பழுவையும் பாராது, தமிழைக்கற்றுக் கொண்டார். கருமமே கண்ணாயினோர் மெய்வருத்தம்
பாரார் பசிநோக்கார்- என்றெல்லாம் இலக்கணம் வகுத்த
எமது இலக்கியமாக அன்னார் வாழ்ந்து காட்டினார்.
அடுத்து, தமிழிலே விஞ்ஞானம் வளர வேண்டின், கலைச் சொற்கள் அவசியம்; அவை தமிழ் நூலும் நல்லுல கெங்கும் ஒருமைப்பாடான வையாக அமைதல் வேண்டு மெனக் கருதினார். இது இரவோடிரவாக நடைபெறக் கூடியதல்ல என்பதையும் அவர் மறந்து விடவில்லை. தாமாகச் சில உறுதியான விதிகள் அழைத்து, அவற்றின் அடிப்படை யில் கலைச்சொல்லாக்க முயன்றார். தென்னிந்தியாவிலும்

Page 85
162 ) மருத்துவத் தமிழ் முன்னோடி
சிலர் தமிழில் விஞ்ஞானம் தரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என அறிந்ததும், தமது சொற்றொகுதியையும் விழிகளையும் அவர்களுக்கு அனுப்பி, அவர்தம் கருத்தையும் வேண்டி நின்றார். தமிழில் ஒருமைப்பாடான கலைச்சொற் பிரயோகத்தை ஏற்படுத்த வேண்டுமென எண்ணியவர், திருவாங்கூர், சென்னை, மதுரை போன்ற இடங்களில் பணியாற்றியவர்களுடன் மிக நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார்.
தமிழில் கலைச்சொற்கள் மட்டுமா? தமிழ் நூல்களும் அல்லவா வெளிவரல்வேண்டும். இத்தேவையை நிறைவேற்று தற்காக ஆங்கில நூல்களைத் துணையாகக்கொண்டு மொழி பெயர்ப்பு மட்டுமல்ல; தருவல் நூல்களும் அவசியமெனக் கருதினார். தமிழர்களான தமது மாணவர் ஆங்கிலத்திற் கற்றவற்றை தமிழாக்கப் பணித்து, தாமும் தமிழாக்கி, இரண்டையும் ஒப்பு நோக்கிக் கலந்துரையாடுவதன் மூலம் தெளிவான நூல்களைப் பிரசுரஞ் செய்ய முயற்சி எடுத்தார். மொழிபெயர்ப்புக்கு இலக்கணமும் வகுத்து வழிகாட்டினார்.
மொழிபெயர்ப்பு நூல்களையும் தென்னகத்தில் பணியாற்றிய மத ஊழியருக்கு அனுப்பிக் கருத்தறிய அவர் தவறவில்லை. பல நூறு பக்கங்கள் கொண்ட நூல்களைப் பிரதி செய்தல்; தென்னிந்தியாவுக்கு அனுப்புதல் போன்றவை அக்காலத்தில் எத்துணை சிரமம் என்பதை இன்று நாம் மனக்கண்ணால்தான் பார்க்கமுடியும். விமானத்தால் மட்டு மல்ல; கூரியர் சேவை, ஃபாக்ஸ் போன்ற தொடர்பு முறைகள் இருந்தும், இன்று நிலைமை என்ன என்பதைக் கூறத்தேவை யில்லை. ஆக, கலந்துரையாடலும் கருத்துப் பரிமாறலும்

கிறீனின் அடிச்சுவடு ( ) 163
எத்துணை அவசியம் என்பதையும் கிறீனின் அடிச்சுவடு காட்டி நிற்கிறது. ത
இனி கிறீன் வைத்தியரின் மாணவர்கள் தமது ஆசிரியரைப் பற்றி கூறியது யாது? 1884 ஆம் ஆண்டிலே, தமது குரு காலமானதை அறிந்து இரு 'பழைய மாணவர் எழுதிய குறிப்புக்கள் இங்கு குறிப்பிடத்தக்கவை.
1862 ஆம் ஆண்டிலிருந்து நான்கு ஆண்டு காலம் மாணவராகவிருந்த டாக்டர் வில்லியம் பவுல் (தமிழர்) எழுதிய குறிப்பில் ஒரு பகுதி:
".. நாம் மிகக் கடுமையான பழக்க முறை களுக்கும் சிரமமான ஒழுங்குமுறைக்கும் உள்ளா கினோம். ஆயினும், தனி விருப்பு வெறுப்பின்றி எல்லோரையும் சமமாக நடாத்தியதால் அவரது திறமையை நாம் மெச்சினோம்."
நேரத்துக்கு வகுப்புகளுக்குச் செல்லவேண்டும்; மணவிழிப்பாக இருத்தல் வேண்டுமென அவர் எதிர்பார்த்தார். சரியாக 9 மணிக்கு வரவுப் பதிவு செய்வார். கிறிஸ்தவரல்லாதோர் அதை ஏற்க வேண்டுமென அவர் வற்புறுத்தவில்லை."
நல்லாசிரியனின் பண்பும் மத சுயாதீனத்துக்கு மரியாதை செலுத்திய நாகரிகமும் இங்கு பிரதிபலிக்கின்றன.
கிறீன் வைத்தியருக்குத் துணையாகப் பல ஆண்டுகள் பணியாற்றிய டாக்டர் வைத்திலிங்கம் (Dr. W. சப்மன்) இவ்வாறு கூறுகிறார்:

Page 86
164 ( ) மருத்துவத் தமிழ் முன்னோடி
"எனது பேரன்புக்குரிய ஆசிரியரும் ஆன்மீகத் தந்தையும் ஆகிய டாக்டர் கிறீன் அவர்களை 1862 ஆம் ஆண்டு முதல் அறிந்தேன். ஏறக்குறைய பத்து ஆண்டுகள் நான் தினமும் (சனி, ஞாயிறு தவிர) அவருடன் இருந்தேன். யாழ்ப்பாணத்தை விட்டுச் சென்ற போது, தமது இடத்தில் என்னைக் கடமையாற்றப் பணித்துச் சென்றார். பத்து மில்லியன் தமிழ் மக்களுள் ஒவ்வொரு பத்தாயிரம் பேருக்கும் ஒரு வைத்தியர் விகிதம் வழங்க அவர் எண்ணினார்."
கிறீன் வைத்தியரின் இலட்சியத்தை அவருடன் தமிழில் விஞ்ஞானம் தந்தவரான இவ் வைத்தியர் கூற்று தெளிவுபடுத்துகிறது.
கிறித்துவமத ஊழியராகத் தமிழ் மக்களிடையே வாழ்ந்து, தமிழ்த் தொண்டராக விளங்கிய பலரை நாம் அறிவோம். அவர்களது பெயர்கள் இன்றுந் தமிழ்மொழி வளர்ச்சியுடன் தொடர்புபட்டு வாழ்கின்றன.
குற்றை அகற்றியதிற்
கொம்பைச் சுழித்துக் குறைதீர்த்தோன் அற்றம் அறுந்த செயலை
இன்றுந் தமிழுலகம் போற்றுகிறது. ஆம். வீரமா முனிவருக்குத் தமிழுலகில் அழியாப் புகழ் என்றுமே உண்டு. மற்றும் மத குருமாரான போப், சீகன்பால்கு, கால்ட்வெல், இரேனியுஸ், பார்சிவல், வின்ஸ்லோ போன்றோரின் தமிழ்ப் புலமையுந் தொண்டுஞ்சாகாவரம் பெற்றவை.
இப் பெருமக்களின் தமிழ்த் தொண்டுக்கும் கிறீன் வைத்தியரின் தமிழ்த் தொண்டுக்கும் ஒரு பெரும் வித்தியாசம் உண்டு. இப் பெருமக்கள் எல்லாந் தமிழ் இலக்கிய

கிறீனின் அடிச்சுவடு ( ) 165
இலக்கணத் துறைகளிலே நின்று பணியாற்றினர்; இலக்கிய - இலக்கண வளர்ச்சிக்கு உழைத்தனர். அகராதிகளை எழுதி அகராதி முறையைத் தமிழில் அறிமுகப்படுத்தினர். அன்றைய சமுதாயம் அதை உணர்ந்து, அவர்களுக்குரிய இடத்தைச் கொடுத்துக் கெளரவித்தது.
கிறீன் வைத்தியரோ, தமிழுக்குப் புதிதான விஞ்ஞானத் துறையிலே நின்று பணி புரிந்தார். தமிழில் விஞ்ஞானத்தை அறிமுகப்படுத்தி, அத் துறையை வளர்க்கும் பணியில் ஈடுபட்டார். அதுவோ தமிழுக்குப் புதியதோர் துறை. அன்று, தமிழ் கற்றவர்களுக்கு விஞ்ஞானத்தில் ஆர்வம் இருக்கவில்லை. விஞ்ஞானம் ஆங்கில மொழியிலேனும் மக்களிடையே பரவியிருக்கவில்லை. எனவே, ஒன்றரை நூற்றாண்டு முன்னதாகவே கிறீன் வைத்தியர் இங்கு வந்து தமிழ்த் தொண்டாற்றினார் என்று கூறுதல் பொருந்தும். ஆக, அன்னாரின் அருமை பெருமைகளை நமது சமுதாயம் அன்று முற்றாக உணரவில்லை.
இன்று காலம் மாறிவிட்டது. இன்றைய சமுதாயம் கிறீன் வைத்தியரின் தீர்க்கதரிசனத்தையுந் திறமான புலமை யையும் உரிய அளவு உணரும் வாய்ப்புண்டு. தெரிந்து எடுத்த இனத்துடனே செய்யத்தகும் வினையை ஆராய்ந்து, பின் தாமும் எண்ணிச் செய்து முடிப்பவர்கள் எதையும் எய்துதல் சாலும் என்பது பொய்யாமொழி. எனவே, தமிழ் கூறும் நல் லுலகம் கிறீன் வைத்தியருக்கு உரிய கெளரவம் அளிக்கும் என எதிர்பார்ப்போமாக! அன்னாரின் அடிச்சுவடு இன்றைய சமுதாயத் தினருக்கு வழிகாட்டித் தமிழில் விஞ்ஞான வளர்ச் சிக்கு மேன்மேலும் உதவுமென நம்பிக்கை கொள்வோமாக.

Page 87
பின்னிணைப்பு 1
MISSIONARIES IN CEYLON
CONTEMPORANEOUS FOR SOME PERIOD WITH DR. GREEN.
REV.ANDMRS.BENJAMINC.MEIGS,
DANIELPOOR,
MIRONWINSLOW, LEVISPAULDING,
GEO.H.APTHORPE,
HENRYR.HOISING TON, SAMUEL G.WHITTELSEY, EDWARD COPE,
JOHNC, SMITH,
ADINH.FLETCHER, WILLIAM W. HOWLAND, WILLIAM W.SCUDDER, EUROTUSPHASTINGS, JOSEPHT.NOYES,
CYRUST, MILLS,

பின்னிணைப்பு 1 ( ) 167
" " " THOMASS. BURNELL, " " " MARSHALLD. SANDERS, " " " NATHANL. LORD, M.D., " " " MILAN H.HITCHCOCK, " " " JAMESOUICK, " " " JAMESA.BATES, " " " WILLIAMIE. DERIEMER, " " " THOMASS. SMITH, MR. " " EASTMANS. MINOR,
MISS ELIZAAGNEW
MISS HARRIET. E.TOWNSEND
MISS HESTER A.HILLIS

Page 88
பின்னிணைப்பு2
TAMLS EDUCATED IN MEDCINE
BY OR SAMUEL F. GREEN.
CLASS OF 1848 - 50 Joshua Danforth, J. Dennison,
J. Waittilingam.
CLASS OF 1851-53
J. Town N. Parker
C. Mead A. C. Hall
S. Miller
CLASS OF 1853 - S6
T. Hopkins, G.M. Reid,
C.McItyre, A. McFarland.
CLASS OF 1856-59
J. H. Bailey, A. Blanchard.
J.P. Harward F. Latimer.
J. Wilson, J. Ropes,
J. Flud, D.P. Mann.

பின்னிணைப்பு 2 169
Kartthekaser,
Ethernayakam, Swaminather, Kanakadattinam,
Vaittilingam,
S. Navaratnam
A. Appapilly, J.B.Shaw,
CLASS OF 1861 - 64
alias
M. Hitchcock,
C.T.Mills,
S.W. Nathaniel,
L.S.Strong, D.W.Chapman Sivappiraksam, William Paul,
L. Spaulding.
CLASS OF 1864 - 67 THE FIRST IN THE
K. Elyapillay,
S. Sittambalam,
V.Sittambalam,
Samuel David,
Daniel Vettivalo,
A. Appapillay,
Arumugam,
V. Senivasagam,
VERNACULAR
S. Mandalam
CLASS OF 1867-70
Kandapper,
A. Sivasidambaram
S.Sinnappu,
Samuel H. Murugasu,
R.S. Welopilly,
A. Appuckutty,
S. Sarawanamuttu,
S.Saminather,

Page 89
170 ( ) மருத்துவத் தமிழ் முன்னோடி
S. Kandavanam, Edward Lovell, V. Vannitumby, Visuvanathan,
S. Vinasitamby.
CLASSOF 1871-73 J. Amerasinger, S. Arunasalem M. Ramalingam, V. Catheravaloo, V. Sadasivam Bates, S.Sarawanamuttu, S. Sinnatamby, S. Sinniah, K.Tilliampalam, K. Vaittilingam,
K. Wellopilly.
CLASSOF 1872-75 A. Amerasingam, R. Ambalam T. Kanagasaphy, C. Kumaravaloo, Richard S. Adams, Benjamin Lawrence, V.Sellappah, N.L.Joshua N.Tambimuttu, M. Nannitamby, AbrabamV.Nitsinger, Joshua
K. Pereatamby V.Ponnambalam, K. Ponnambalam, S. Ponnambalam, Mutiyah S. Ropes, N. Mutatamby V. Vetteawanam
The class of 1875 had not completed their course when Dr. Green left Ceylon.

பின்னிணைப்பு 2 ( 171
Subject: GreenFamily Reunion
Heldon the 15th and 16th September, 1861, at the oldancestral manor of Green Hill. William E. Green (Samuel Green's father) was 85 on this day; he had 10 children, all of whom gathered for the reunion, Mr. Green was living with his fourth wife.
Those at the reunion were; (see photo) LydiaPlimpton Green John Plimpton Green Lucy Merrian Green
Samuel Fisk Green
William Elijah Green
Martin Green
Julia Elizabeth Green
William Nelson Green
Mary Ruggles Green
Andrew Haswell Green
Oliver Bourne Green
his last years were spent in completing his publications, his life's work, and in visiting, comforting and aiding those about him, not merely by expenditures from his scanty means, but from the treasures of kindness and benevolence in the far highter fields of pains - taking personal exertion at the cost of repose and comfort. The memory he left behind is his monument, but is an eminent here at home as it is among his numerous friends on a remote continent.
This information was located at the American Antiquarian Society in Worcester, Massachusetts. USA.

Page 90
ஆதார நூல்கள்
Cutler, Ebenezer
கிறீன், ச. பி.
சப்மன், தனெல் வி.
sårengsrif, u.
பவுல், வில்லியம்
Jones, Shanley E
வேங்கடசாமி, மயிலை சீனி
தி. ஜ. ர.
: Life and Letters of Samuel Fisk Green
(1891)
! அங்காதி பாதம், சுகரணம்
உற்பாலனம் (1852)
மனுஷ சுகரணம் (1872)
கெமிஸ்தம் (1875)
: வைத்தியம் (1875)
அருஞ்சொற்கள் (1875) மனுஷ அங்காதிபாதம் (1872) மனுஷ சுகரணம் a872)
: Pharmacopoeia of India (1888)
இரண வைத்தியம் (1867)
வைத்தியாகரம் (1872)
: Mahatma Gandhi a Interpretation
(1950)
கிறித்துவமும் தமிழும் (1943)
: எப்படி எழுதினேன் (1943)

ஆதார நூல்கள் ( ) 173
செல்லப்பன், டாக்டர் இராதா கலைச் சொல்லாக்கம் (1985)
கலைச் சொற்கள் சென்னை மாகாணத் தமிழ்ச்
சங்கம் (1938)
Technia and Scientific Terms : Governmentofindia (1947)
Glossaries of Technical Terms : Dept. of Swabasha Ceylon (1955)
Scientifically speaking : Collecting of BBC Scripts (1978)
அறிவொளி விஞ்ஞான சஞ்சிகை, இலங்கை (1964)
Van Nostrand's Scientific Encyclopedia

Page 91


Page 92


Page 93
தலைமை நீ
ஆள்வார்பேட்டை
கிளை நிலை 79, பிரகாசம் சான
சென்6ை
திருநெல்வேலி-6.
கோயமுத்தூர்-1.
திருச்சிராப்பள்ளி.
விலை ரு,
அப்பர் அச்சகம், செ
 
 
 

லையம் : கே. சாலை, , சென்னை-18,
லயங்கள் :
) இ) (பிராட்வே), ன= 108,
மதுரை-1. கும்பகோணம்-1. 2。 சேலம்-1.
35-OO
:ன்னை-600 108,