கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சித்த மருத்துவம் அல்லது சித்தாயுள் வேதம்

Page 1
。 ஓம்
சித்த மரு
சித்தா புள்
O)
கொழும்பு ஆயுர்ே
மருத்துவவா
ఆలి கனகரத்தி
* 。
5
பதிவு
。、一
*୯ - இ
*?3លសំ
கொழு
24-7-4
 

N வதக் கல்லூரி
କ୍ରି, Fult :
вотно, A.M., A.C.
3、

Page 2

ge D :
மு னனுரை
இவ் யாட்டை யாடித் திங்கள் கூ-ம் வைகல் (247-49) ஞாயிற்றுக்கிழமையன்று யாழ்ப்பாண மூதூரகத்துக் குழு முஞ் சித்த மருத்துவப் பேரவையில் யானுற்ற வேண்டுஞ் சொற்பொழிவின் வெளியீடே யிச்சிறு சித்த மருத்துவக் கட்டுரை.
இஃதாயுள்வேதமென்ப தென்னவென்பதுஞ் சித்த மருத்துவத்தின் சிறப்பும் மருத்துவச் சித்தர் மாண்புஞ் சித்த மருத்துவச் சீர்திருத்தமும்பற்றி நான்கு கூறகிப் புதுமுறையில் ஆராய்ந்து சுருங்கச் சொல்லி விளக்கிச் செல்கின்றது.
இதன்கட் சித்த மருத்துவமென்பது ஆயுள்வேதத் தின் வழித்தோன்றியதென யான் முன்னர்க் கொண் டிருந்த கொள்கை பின்னர்ச் செய்துவந்த வாராய்ச்சி யாலே முரணுயதென்பது உஞ் சித்த மருத்துவமும் மற்றை மருத்துவங்களுந் தனித்தனிச் சிறப்புடையன வென்பதுTஉம் நன்கு வற்புறுத்தப்பட்டுள்ளன.
ஆயுள்வேதமென வொன்றில்லை ; சித்த மருத்து வமேயுள்ளதென வுண்மை துணிந்துணரத்தேற்றிய மரு த்துவச் சித்தர்களின் பெருமையையும் பேரருளையும் வியந்து வாழ்த்துகின்றேன்
இனிச் சித்த மருத்துவுத் யூாgாய்ச்சிமேன்மேற் பெருகியோங்கல் வேண் ನಿ:ಸ್ಡಿ வுஞ் சித்த மருத்துளி மாணவ ပြိုးနှီးစွဲ மிச்சிறு கட்டுரை பய8 படல்பேண்டுழென்ப்தென்து நாக்

Page 3
புதிய வாராய்ச்சி நுட்பங்களை வெளியிட் டிக்கட்டுரை வெளிவருவதற்கின்றியமையாத துணையாயிருந்தவர் நம் பியகவலாசிரியர் புலவர் பாண்டியனுர். இவர்க்குச் சித்த மருத்துவரெல்லாம் பெரிதுங் கடமைப்பட்டுள்ளார். புல வர்க்கெமது நன்றியறிவுரியதாகுக. மருத்துவரல்லரா யினுஞ் சித்த மருத்துவ மரபினராதலிற் புலவர் பாண்டி யணுர்க்குஞ் சித்த மருத்துவர்க்குதவுதல் கடமையாயிற்று.
எனது வேண்டுகோளை மறது விரைவிலே திருத்த முற இப்பதிப்பினை வெளியிட்டுதவிய சிலோன் பிரிண்டர் வலின் அன்பினையுந் திறமையையும் யான் பாராட்டாமலி ருக்க முடியவில்லை.
கொழும்பு, ஆ. கனகரத்தினம்"
20-7-49.

ஒம்:
சித்த மருத்துவம்
ஆயுர்வேதம்
ஆயுர் வேதமென்று வழங்குதல் வடநூல் வழக்கு. வட மொழியில் இப்பெயர் பெற்ற நூலொன்றுண்டென்று சிலர் பலர் நினைத்துக்கொண்டிருக்கலாம். அவ்வாருெரு நூல் இன்றுமில்லை. முன்னுமிருந்ததில்லை. அங்ங்னமே ஆயுர் வேதத்தோடு சேர்த்துக் கொள்ளப்பட்டுவருங் காந்தருவ வேதம், தனுர் வேதம், அருத்த வேதமென்பனவுமொவ்வொரு நூலல்ல. அவை யொவ்வொரு நூலென்பதற்குரிய யாதொரு சான்றுங் கிடையாது. எல்லா நூலாசி ரியரும் உரையாசிரியரும் அவை கூறுமென்னுமளவல்லது அவற்றி னின்று ஒரு செய்யுளையாதலெடுத்துக் காட்டி யிஃதின்ன வேதச் செய்யு ளென்று சொல்லிற்றிலர்.
இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலமென்னு முக்காலத்தி னும் மேல், கீழ், நடுவெனும் மூவுலகினுமுள்ள அறிஞர்களின் அறிவு வகைகளையெல்லாமொரு தொகையாகக் குறிப்பிடும் பெயர்ச் சொல்லே வேதமென்பது. இருக்கு வேத முதலியவற்றிற்கு உரையிட்ட சாயணு சாரியர் கருத்துமிதுவே.
மருத்துவம், இன்னிசை, பொருள் வருவாய் முதலிய ஒவ்வொரு துறையிலும் முக்காலத்தினு மூவுலகினு மவ்வத்துறைவல்லாருடைய ஆராய்ச்சித் திறங்களையெல்லாந் தனித்தனித் தொகையாகக் குறிப் பிடும்பொழுது அவ்வவ் வேதமென விதந்து குறிப்பிடுதலும் வட நூலார் வழக்கம்.
அம்முறை பற்றியே மருத்துவர்களின் அறிவு வகைகளெல்லா மடங்க ஆயுர்வேதமென்னுஞ் சொல்லால் வட நூலார் வழங்கிவந்தன ரென்பது துணியப்படுகின்றது. படவே ஆயுர் வேதமெனினும் மருத்துவ வுலகமெனினும் வைத்தியவுலகமெனினுமொன்றென்பதாயிற்று. அத ஞலே ஆரிய மருத்துவம், தமிழ மருத்துவம், ஐரோப்பிய மருத்துவ முதலான மருத்துவ வகையனைத்தும் ஆயுர் வேதத்தின் கிளைகளென வடநூலார் கூறுவதுமொக்கும். அங்ங்னங் கூறுமவர்க்கு ஆரியரல்லா தவ்ருடைய மருத்துவ நூலெல்லாம் வடநூன் மொழிபெயர்ப்பென்றே னும் அவற்றின் வழித் தோன்றியவென்றேனுங் கருதுங் கருத்தில்லை. இஃதுணரமாட்டாதார் தமிழ் மருத்துவ நூல்களிலே ஆங்காங்கு வட

Page 4
( 2 )
நூலார் கூறுவது போல ஆயுர் வேதங் கூறிற்றென்றற் ருெடக்கத்து மாற்றங்கொண்டு அப்பனுவல்களை வடநூன் மொழிபெயர்ப்பெனவும் வடநூல் வழித் தோன்றியனவெனவு மயங்கி யிடர்ப்படுவர். இது போலுமிடர்ப்பாடு மருத்துவ நூலார்க்குமட்டுமன்றி மற்றைத் தமிழ் நூல் பயில்வார் பலருக்குமிருந்துவருகின்றது.
மன்னுயிர்களின் வாழ்நாளைப்பற்றி யாராய்கின்ற நூலுலகமென் னும் பொருள்பற்றி மருத்துவ நூலுலகத்துக்கு ஆயுர் வேதமெனக் குறியீடு வழங்கினர் வடநூற் புலவர்.
வாழ்நாளென்பது உயிருடம்பொடு கூடியிருக்கின்ற நேரமெனப் படும். உயிருடம்பினின்றும் பிரிகின்ற நேரஞ் சாநாளெனப்படும்.
உயிருடலொடு கூடியிருத்தற்கு வழியாவ துடம்பு நோயில்லாம் லிருத்தலாம். ஆகவே யுடம்பு நோயுறுதலே யுயிருடலினின்றும் பிரிந்து போவதற்கு வழியென்பதாயிற்று. உடம்பை நோயில்லா தொரு தன்மையாகவே வைத்திருக்கக் கூடுமாயின் மன்னுயிர்கள் ஆயிரது பதினுயிரம் யாண்டுகட்கு மேலுஞ் சாவின்றி வாழ்தல் கூடு மென்ப்து மருத்துவ நூற்றுணிபு.
நோயென்பது உடம்பு தன்னியற்கை நிலையினின்று மாறுபடுத லாம். * பிணியெனப்படுவது, இயற்கையிற்றிரிந்துடம் பி டும் பை புரித ” லென்றர் மணிமேகலை நூலாசிரியரும். அம்மாறுபாடில்லா மையே நோயில்லா வாழ்வெனப்படும். நேர்யில்லாவுடம்பே யுயிர்க் குறுதியாகிய அறம், பொருள், இன்பம், வீடு பேறென்னும் நான்கு மெய்தற்குற்ற துணையாகும். அத்துணை யில்லையாயிற் பிறவியினுேக் கம் பாழ்பட்டுவிடும். இக்கருத்துப் பற்றியே " நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வ ’ மெனு முதுமொழியும்,
* உடம்பா ரழியினுயிரா ரழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவுமாட்டா ருடம்பை வளர்க்கு முபாயமறிந்தே யுடம்பை வளர்த்தே னுயிர் வளர்த்தேனே.” யென்னுந் திருமந்திரமு மெழுந்தன.
எண்ணரிய பிறவிகளில் நண்ணரிய மக்கட் பிறவியின் பெருமை யைப் பாதுகாத்துப் போற்றுந் திருவருட் செயலே மருத்துவத் துறை யென்பது.
ஆயுர் வேதம் மன்னுயிர்களின் வாழ்நாளைப்பற்றி யாராய்ச்சி செய்தலாவது, உயிர்களினுடம்பு நோயுறுமாறும் அது நோயுருவாறும் நோய் நோயின்மைகளின் வாயில்களும் அடையாளங்களும் நோய்க ளின் வகையும் இயல்பும் அளவுந் தொடர்பும் உற்ற நோயொழிக்குந் றனும், ஒழிந்த நோய் காக்குந் திறனும், நோயின் விளையுங் கேடும்

( 3 )
அஃதின்மையின் விளையும் நலனும், மருத்துவத்தின் சிறப்பும் வரலா றும் எடுத்துக்காட்டு மென்றிவற்ணிற யெடுத்துக்கொண்டு பலவாற்ற னுஞ் செவ்விதிற் றெரிதலாகும்.
வடநூலார் கூறுமாறே யெங்கணுமுள்ள மருத்துவ நூலெல்லா வற்றையு மொருங்கு தொகையாக ஆயுர் வேதமென வழங்குமிடத்து அவையெல்லாங் கடவுளொருவனுற் கூறப்பட்டனவெனக் கொள்ளலா மாயினும் ஆரிய மருத்துவம் தமிழ் மருத்துவமென்றற் போலத் தனித்தனியாகச் சுட்டுமிடத்து அவையெல்லாம் அவ்வந்நாட்டு மருத் துவம் வல்ல புலவர்களாற் கூறப்பட்டன வெனவே கொள்ளல் வேண் டும்.
இக்கடல் புடைசூழ் நிலம் வெளிப்பட்ட பின்பு ஓராண் மகனும் ஒரு பெண் மகளுமே யிருந்த முதலூழித் தொடக்கத்திலே உயிர் வாழ்க்கைக்கின்றியம்ையாத மருத்துவப் புலமையும் மருத்து வத் தொழிலுமே கல்வி யெல்லாவற்றுள்ளும் முதன் முறையிலுண்டான கல்வியாகல் வேண்டும். மற்றைக் கல்வி யெல்லாம் மருத்துவக் கல்வி தோன்றிய பின்னர் அதன் றுணையா லுண்டாகற் பாலனவேயாம். அன்றி அவற்றையெல்லாம் மருத்துவக் கிளைகளெனினு மிழுக்காகாது. எனவே தலைசிறந்த கல்வி மருத்துவ நூற் கல்வியென்பது பெறப்
பட்டது.
இப்பொழுது வாழும் இருநூறுகோடி மக்களு முதலூழித்தொடச் கத்திருந்த மருத்துவ மருத்துவிய ரிருவரின் வழி மரபினராவர்.
மருத்துவ வுணர்வு மாந்தர்கட்கு மட்டுமன்றி மரம் முதலிய ஒரறி வுயிர் முதல் ஆறறிவுயிரீருகிய உயிரெல்லாவற்றுக்கும் இயல்பாய் எழு கின்ற இயற்கையுணர்வு. இவ்வுணர்வில்லையாயின் அவையெல்லாந் தாம் உயிர் வாழ்வதற்கு வேண்டுவனவற்றையே கொண்டு வேண்டாத வற்றை விலக்கி நிற்கமாட்டாமையால் அழிந்துவிடுமியல்பின.
மக்கள் கண்ட மருத்துவம் எல்லா நாட்டுக்குமுரிய பொது மருத் துவமெனவும் அவ்வந்நாட்டுக்கேயுரிய தனிமருத்துவ மெனவுமிரு கூறுபடும். தனிமருத்துவம் அவ்வந்நாட்டுத் தட்ப வெப்பங்கட்கும் அவற்றுக் கேற்ப வமையக்கடவ கருப் பொருள்கட்கும் ஏற்றதாயிருக் கும். வெயில்காய்தல், வெளியிலுலாவல், உயிர்ப்புக்காற்றினை உட்கொ ளல், மடிந்திராது முயலல், புனலாடல் போல்வன பொது மருத்துவத் தின் பாற்படும்.
இயற்கைக் கலையாகிய மருத்துவம் ஒரு நாட்டிற்றேன்றி மற்றைய நாடுகளிற் பரவிற்றென்று கொள்ளல் கூடாதென்பது மேற் கூறியவாற் ருற் புலப்படுவது. ஒரு நாட்டு மருத்துவர் மற்றை நாட்டு மருத்துவப் புலமையும் பெற்றுக் கொள்ளலாம். சிற்சில மருத்துவ நுட்பங்கள் ஒரு நாட்டிற்றேன்றி யேனைய நாடுகளிற் பரவுவதுமுண்டு.

Page 5
( 4 )
இன்னுமிம்மருத்துவம் இயற்கை மருத்துவஞ் செயற்கை மருத்து வமென விருகூறு செய்யலாம். பால் பழம் முதலியனவுண்ணுதல் போல்வன இயற்கை மருத்துவம். சோறு கறி உண்ணுதல் போல்வன செயற்கை மருத்துவம். மக்கள் உண்ணுதல் உண்ணுமைகளேயன்றி. உடுத்தல் உடாமைகளும் புனைதல் புனையாமைகளும் பூசுதல் பூசாமை களும் சூடுதல் சூடாமைகளும் உரையாடல் உரையாடாமைகளும் செய் தல் செய்யாமைகளும் கழித்தல் கழியாமைகளும் நுகர்தல் நுகராமை களும உறங்கல் உறங்காமைகளும் இன்னுேரன்னவையும் மருத்துவத் தின்பாற்படுவனவேயாம்.
நேர் மருத்துவம், முரண் மருத்துவமென வேறிரு முறைகளும் மருத்துவ நூற்களிலுள்ளன. தலை நோய்க்குத் தலைக்கு மருந்திடுத லும், கால் நோய்க்குக் காலுக்கு மருந்திடுதலும், வெப்பு நோய்க்கு வெப்பு மருந்து செய்தலும், குளிர் நோய்க்குக் குளிர் மருந்து செய்த லும் போல்வன நேர் மருத்துவமாகும். தலை நோய்க்குக் காலுக்கு மருந்திடுதலும் கால் நோய்க்குத் தலைக்கு மருந்திடுதலும் வெப்பு நோய்க்குக் குளிர் மருந்து செய்தலும் குளிர் நோய்க்கு வெப்பு மருந்து செய்தலும் போல்வன முரண் மருத்துவமெனப்படும்.
இங்ங்னமன்றி அக மருத்துவம், புற மருத்துவம், அகப்புற மருத் துவமென மூன்று கூறுபடுத்தி ஆராய்தலும் பொருந்தும்.
அவற்றுள், அகமருத்துவமாவது இறைவனையும் இறைவனதாற் றலையும் ஆராய்தலும் வணங்கி வாழ்த்தலும் இடைவிடாது நினைத்த லும் பிறவுயிர்கள்மேல் அன்பு அருள் செய்தலும் காமம், வெகுளி, செருக்கு, அழுக்காறு முதலிய குற்றங் கடிதலு முதலாக அகத்து நிக ழுமாண்புகளினுலே உடம்பு நோய் காத்தலாம்.
புறமருத்துவமாவது உணவு, நுகர்வு, செயல்களானே உடம்பு நோய் காத்தலாம். f அகப்புறமருத்துவமாவது மேற்கூறிய அவ்விரு வகையுமொருங்கு செய்து போதலான் உடம்பு நோய் காத்தலாம். உடம்பு நோய் காத் தலாவது நோய் வராமற்றடுத்துக் காத்தலும் வந்த நோயைத் தீர்த்துக் காத்தலுமாம். சித்த மருத்துவமெனத் தமிழகத்து வழங்கப்படுவது இவ்வகப்புற மருத்துவத்தின்பாற்பட்டது. h

சித்த மருத்துவச் சிறப்பு
சித்தாயுள் வேதமெனினுஞ் சித்த மருத்துவ நூலுலகமெனினு ெேமான்று. இயற்கையுஞ் செயற்கையுமாய புறமருந்துகள் மேற்கூ றிய அக மருந்துகளோடு கூடிய வழியே நோய் மீண்டு வராதவாறு 'கெடுக்கத் தக்கனவாமென்பது சித்தர்களது கோட்பாடு. புறமருந்து நோய் நீக்க வல்லனவாயினும் நோயாளிக்கு அகத்துய்மை யில்வழி அம்மருந்துகளின் ஆற்றல் கெட்டுப் போமாதலின் அவை மருந்தா கின்ற தன்மையையிழந்து விடுகின்றன. அதனுலவற்றைச் சிறப்பு டைய மருந்தென்றல் சித்தர்க்கு நோக்கமன்று. இக்கொள்கை இன் றிங்குப் பயிலும் ஆரிய ஐரோப்பிய அராபிய மருத்துவ நூல்களிற் காண் பதரிதாகும். சித்தமருத்துவ நூல்களில் உடற்கூறுகளை அறுத்தல், சுடுதல், குருதி களைதல் முதலான படைக்கலத் தொழில்கள் கொள்ளப் படவில்லை. அதனுல் அக்கருவிகளின் வகைகளும் அமைப்புக்களும் அவற்றைக் கையாளும் முறைகளும் அந்நூல்களிற் கூறவேண்டியதில் லையாயிற்று. பற்கள் சொத்தை விழினும் அசைவுறினுமவற்றைப் பிடுங்கிவிடல் வேண்டுமென்னுது உள்மருந்து வெளிமருந்துகளாலே அவற்றைச் செம்மைப் படுத்தல் கூடுமென்பர் சித்தமருத்துவர். உடம் பினுள் எலும்பு முறிந்து விட்டாலும் முறிந்த இரு பகுதியையுமியைத் தொன்றக்கிவிடவல்ல மருந்துகளும் சித்தமருத்துவர்பாலிருந்தன. வயிற்றுளிருக்கும் ஐந்தாறு திங்கட் குழவியைத் தாய்க்கு நோவின் நியே வெளிவரச்செய்து சூல் கொண்ட பெண்களின் வயிற்றுக்கோளா றுகளையும் அக்குழந்தை சாவாது பிழைத்து வளர்ந்து முதிர்ச்சி யடை யவுஞ் சித்தர் மருந்து கண்டிருந்தனரென்பது தெரியவருகின்றது. திருதராட்டினன் மனைவி காந்தாரியின் சூல் வயிறு கலங்கியொழுகிய குருதியை முனிவன் வேதவியாதன் நூறு பானைகளில் நிரப்பி வைக்க நூறுபானக் குருதிகளும் நூறு குழந்தைகளாயின வென்பது பாரதச் செய்யுளிற் கேட்கப் படுகின்றது. அவ்வாறவன் அவற்றைக் குழந்தைக ளாக்கிய முறை சித்தமருத்துவ முறையாதல் வேண்டும். ஆணுற்குல் வயிற்றினின்றும் வெளிவரச் செய்த பச்சைக் குழந்தையாகிய இறைச் சிப் பிழம்பினை மீண்டுந் தாய் வயிற்றுள் வைத்து வளரச் செய்தல் சித்த மருத்துவ முறையில் முடியாத செயலாகும். அதனைக்காட்டி எனுஞ் சித்தமருத்துவ முறையே சிறந்ததாகும். இம்முறையாற் குழந் தைக்குங் குற்றங் குறைகளில்லாதொழிகின்றன. நொந்து வருந்திய தாயினுடம்பு மீண்டும் நொந்து வருந்தாதவாறு பாதுகாக்கவும்படுகின் றது. வாள் வெட்டு முதலிய வெட்டுப்புண்களைப் பட்டவுடனே தழும்பு மில்லாதவாறு மாற்றக்கூடிய மருந்துகளுஞ் சித்தர்களிடமிருந்தன" நஞ்சு தலைக்கேறி உணர்ச்சி முற்றுமிழந்த உயிர்களை மணம்பட்ட

Page 6
( 6 )
வுடனே உயிர்ப்பித்துணர்ச்சி யெழச் செய்யு மருந்துகளும் சித்தர்க. ளாற் காணப்பட்டன. இன்றைக்குப் பிறர் மருந்துகளாற் போக்குதற் கரியனவாயிருக்கின்ற தொழுநோய், தொய்வு, கணே,முளை, குன்மவலி, குருட்டுத்தன்மை, செவிட்டுத்தன்மை முதலாகப் பழவினைபற்றித் தொட ரும் பிணிகட்குச் சித்தருடையவை சிறந்தமருந்துகளாயிருந்தன. சித்த, மருந்தெல்லாம் மந்திரங்களோடு கையாள வேண்டியவை அம்மந்தி: ரங்களும் அவற்றை நவில வேண்டிய முறைகளுஞ் சித்த மருத்துவ நூல்களிற் கூறப்பட்டுள்ளன. மற்றை மருத்துவமெல்லாம் காற்று, மைப்புக், கோழையென்னு முப்பிணிகளையுந் தத்தமளவினேருமலிறங் காமலளவு படுத்தி வெண்சோரி ( விந்து) யைப்பாதுகாத்துக் கீழ்நோக் கச்செய்யும். அதனுல் வெண்சோரியிழிந்து மீண்டும் உடல்நலங்குன்றுத ல்கூடும். அவைபோலாது சித்தமருத்துவம் முப்பிணிகளையுமளவுபடுத்தி வெண்சோரியைப் பாதுகாத்து மேனுேக்கி நிற்கச்செய்யுமியல்புடையது. ஆதனுல் வெண்சோரி கட்டுப்பட்டு நிற்றலால் உடனலங்குன்றமை மட்டு மன்றிப் பிறவிப்பிணி தீர்க்கும் மெய்யுணர்வு நெஞ்சடக்கம் என்பன விளைதலும் வேறு செயற்கருஞ் செயல்கள் உண்டாதலுமுளவாகின் றன. இது மற்றை மருத்துவங்கட்கில்லாத சித்த மருத்துவத்தின் றணிச் சிறப்பாகும். இச்சித்த மருத்துவமேயன்றி வேறு மருத்துவங்க ளுந் தமிழ் மக்களிடைப் பண்டு தொட்டு நிகழ்ந்து வந்தன. எனவே சித்தமருத்துவ மென்பது தமிழ் மருத்துவத்துறையிற் சிறந்ததொரு வகையெனக் கொள்ளல்வேண்டும்.
முன்னைநாளையிலே பொதியின்மலைமேற் சித்தரெல்லாரும் வந்து கூடுவதொரு மன்று நிலவிற்றெனவும் அங்ங்ணமவர் மன்றுகூடித் தம்முண் மருத்துவ வாராய்ச்சி செய்து போந்தன ரெனவும் அந்த ஆராய்ச்சியின் விளைவாகப் பலப்பல சித்தமருத்துவ நூல்கள் வெளி வந்தன வெனவும் நினைத்தற்கிடனுண்டு. அதனுற் 'சித்தர் குழாம், சித்தர் கணம் என்னும் வழக்கா றுண்டாயிற்று. நல்லோருந் தீயோரும் நோயாளிகளாகக் கூடுமாயினுந் தீயோர்க்கு நோய் தீர்ப்ப தாயின் அவர்களால் உலகிற்குத் தீமைபெருகுமாகலின் அவர்கட் குச் செய்யாது நல்லோர்க்கே சித்தமருத்துவஞ் செய்யப்பட்டதாத லின் எல்லார்க்கும் பொதுவாகச் சித்தமருத்துவக் கோட்ட மென்பது சித்தர்களாலும் மன்னர்களாலும் நிறுவப்படவில்லை யென்பது தெரி: வருகின்றது.

மருத்துவச் சித்தர் மாண்பு
இங்ங்னம் மருத்துவங் கண்ட சித்தர்களைப்பற்றி வடநூன் முதலிய வற்றிற் கேள்விப்படாமையாலும் தமிழகத்துச் செய்யுட்களிலும் வழக் கிலும் பலமுறை கேள்விப் படுதலாலும் இவர் நந்தமிழகத்துத் தமிழர் மரபிற்றேன்றிய பெருமக்களேயாதல் வேண்டும், இவர்கள் அடர்ந்த காடுகளிலும் உயர்ந்த மலைகளிலுங் குன்றுகளிலும் வாழ்ந்துகொண்டு அவ்வப்போழ்து நாட்டுப்புறங்களிற் காணப்பட்டுத் தகுதியுடைய நல் லோர்க்கு அருள்செய்து மறைந்துபோகு மொருசார் முனிவர்கள். இன்றுந் தென்னிந்தியாவிலே மலைகளிற் சித்தர் பிறர் கண்ணுக்குப் புலப்படாவாறு வாழ்ந்து வருகின்றனரெனவும் அவர்களின் போக்கு வரவு வரலாறுகளையும், மலைச்சாரலில் வாழும் மக்கள் சொல்லிவ வது வழக்கமாயிருக்கின்றது. யானும் என் கண்ணுரக் கண்டும் பேசி யும் திருச்செந்தூரிலும் கதிர்காமத்திலும் சித்தரை ஐயுற்றிருந்து அவர் மறைந்த பின்னர் நினைவுவரப் பெற்றிருக்கின்றேன். தென் னிந்தியர்கட்குச் சித்தர்பாற் பேரன்பும் பேரச்சமுமுண்டென்பதனை அவர்களோடுரையாடுமிடத் தினிது காணலாம். அன்பும் பணிவும் ஒழுக்கமுமுடைய நல்லோர்க்கு வேண்டுமுதவி பலவற்றைச் செவ்விய றிந்து நல்குதலன்றிச் சித்தர் தமக்குப் பிறருதவியைச் சிறிதும் வேண் டாத தவவேந்தர்களாதலிற் புலவரும் புரவலருந் தம்மைப் பணிந்து குற்றேவல் செய்யத் தாம் வீற்றிருந்து கட்டளையிடுபவரேயாயிறைவனை வணங்குதலல்லது ஏனுேரொருவரையும் வணங்குதலிலராவர்.
இவர் பெறலரிய மந்திர மருந்துகளானே நோய்களைக் கெடுக்கும் வியப்பு மட்டுமன்றி இரும்பு முதலியவற்றைப் பொன் முதலியனவாக மாற்றுதல், கிழவர்களைக் காளையராக்குதல், விண்ணிற்பறத்தல், பலநூற் ருண்டுகட்கு நரைதிரையுஞ் சாவுமின்றி இளமை நீங்காதிருத்தல், மக் களினூடு வேருெருவர் காணுமலுலாவுதல், முக்கண் முதல்வன், முரு கன், மாலவன், மலரவன் விண்வேந்தன் முதலிய கடவுளர் கோல மெடுத்துக் காட்சியளித்தலென்றின்னுேரன்ன செயற்கருஞ் செயல்கள் பல கைவரப் பெற்றவர்.
இவர் தம் மாற்றல்களெல்லாம் இறைவியினுடையவை யென்று கொண்டு அவ்விறைவியைப் பலவாறு நினைந்து வழிபாடு செய்துவரும் வழக்கமுடையவர். முக்கண் முதல்வன் முதலிய கடவுளர் கோல மெல்லா மிறைவியின் பலப்பல தோற்றமென்பது சித்தர் துணிபு.
சித்தர்களை இடமாகப் பற்றி நின்றே யிறைவன் றன்னடியார்களை யாட்கொண்டருளுகின்ற னென்பது தோன்றுகின்றது.

Page 7
( 8 )
ஆளுடையவடிகள், ஆளுடைய பிள்ளையார். முதலிய நாயன்மார் கட்கும் பெரியாழ்வார், நம்மாழ்வார் முதலிய ஆழ்வார்கட்கும் மற் றையடியார்கட்கும் அவ்வப்போழ்து ஆங்காங்குத் தோன்றிய கடவுட் காட்சிகளெல்லாம் சித்தர்களை இடமாகக் கொண்டருளிய இறைவன் திருவிளையாட்டுக்களே யாமென்ப துய்த்துணரப்படுகின்றது.
சித்தர்களடங்கிய கல்லறைகளுள்ள இடங்களே இறைவன் தன்ன டியார்களையாட் கொள்ளும் திருவிளையாட்டுக்கள் பலநிகழ்த்திக் கோயில் கொள்வதற்குரியனவாயிருந்தன.
சித்தர்களின் யாக்கைகள் அருமருந்துகளின் றன்மையாலே கேடின்றி நெடுங்காலமாக நிலைபெறுந்தன்மையன. அதனுற் சித்தர் பலருந் தாஞ்சாவாமலே கல்லறைக்குட் புதைந்திருந்து கொண்டு மக் கட்கு நனவிலுங் கனவிலும் பற்பல கடவுட்டன்மைகளைக் காட்டித் தமி ழக மெங்கணும் இறைவனிறைவியர் குக் கோயில் பலவற்றையெழுப்பு வித்துத் தமிழ் மக்களை யுய்யக் கொண்ட பேரருளைத் தமிழ் மக்களெஞ் ஞான்றும் மறவாது போற்றுங் கடப்பாடுடையராவர்.
பண்டு தொட்டுத் தமிழர் சித்தர்களைக் கடவுளாகக்கொண்டு அவர் களின் கோலத்தைக் கல்லிற் செதுக்கி நட்டுக் கோயிலெடுத்து வழிபட்டுத் தங்குறை நிறைவேற்றப் பெற்றுத் தங்குழந்தைகட்குச் சித்தனென் னும் பெயருமிட்டுப் போற்றி வந்தனரென்பது தெரிய வருகின்றது, அந்நடுகல் பலவும் பிற்காலத்திலே முருகன் முதலான கடவுளாக வழி படப்பட்டு வருகின்றன. பழனிமலைமேற் பழனியாண்டவனென வழங்கப்படுகின்ற நடுகல்லை யின்று தமிழகம் முருகக் கடவுளின் பிழம் பாகக்கொண்டு வழிபாடுசெய்து வருதலைக் காண்கின்றேம், அது முரு கன் பிழம்பன்று. அப்பிழம்பு முருகனுக்கு வேறெங்குங் காணப் படாது. அதற்கு நூல்களினுஞ் சான்று காணமுடியாது. அஃதொரு சித்தனது பிழம்பெனவே கொள்ளல் வேண்டும். அம்பிழம்புக்குரிய புகழ் பெற்ற சித்தனுெருவன் வாழ்ந்து வந்ததனுலே பழனிமலையை யுடைய திருவாவினன்குடி * சித்தன் வாழ்வு’ எனப் பெயர்பெற் றிருந்தது. திருவாவினன்குடிக்குச் சித்தன்வாழ்வென வொரு பெய ருண்டென்பது திருமுருகாற்றுப்படைக்கு நச்சினுர்க்கினியரெழுதியவுரை யாற் புலப்படுகின்றது,
* நல்லம்பர் நல்ல குடியுடைத்துச் சித்தன்வாழ்
வில்லந் தொறுமூன் றெரியுடைத்து-நல்லரவப் பாட்டுடைத்துச் சோமன் வழிவந்த பாண்டியநின் ணுட்டுடைத்து நல்ல தமிழ்.” என்பது ஒளவையார் பாட்டென நச்சிஞர்க்கினியரெடுத்துக் காட்டிய மேற்கோள் வெண்பா. ஆண்டு நச்சிஞர்க்கினியர் சித்தனென்பது முருகக் கடவுளின் திருப்பெயர்களுளொன்றகக் கருதுகின்றர். அங்

( 9 )
ங்னமாயின் முருகாற்றுப்படையிலெடுத்துக்கொண்ட திருவாவினன்குடி யிற் கோயில்கொண்ட முருகன் சித்தணுகிய கோலத்தோடிருத்தல் வேண்டும். அங்ங்ணமிராமையாற் சித்தனென்பது .முருகன் பெயர்க ளுளொன்றகக் கொள்ளினுஞ் சித்தன்வாழ்வெனத் திருவாவினன் குடி பெயர் பெறுதற்கு வாயிலாகிய சித்தன் முருகக்கடவுளல்லனென் பதே தேற்றம். ஆகவே பழனியாண்டவன் சித்தருளொருவனே யாம். அதற்கேற்பப் போகனெனவொரு சித்தன் பழனிமலைமேல டங்கியிருக்கின்றனென வழங்குவதும் நினைக்கத்தக்கது. பழனியாண்ட சித்தன் போகனுக்கு ஆசிரியனே ? போகன்றனே தன்னைச் செய்து வைத்த பிழம்போ? போகனது தோற்றத்தை அவனடியார் செய்து வைத்த பிழம்போ ? சித்தரெல்லாருங் குழுமிச் சித்தர் முதல்வனே நாட்டி வழிபட்டதேயோ ? சித்தர் முதல்வணுகிய முக்கட் பெருமான் சித்தனுண்பொழுது அத்தோற்றமுடையவனுயிருந் திருக்க லா ம். குறிஞ்சி நிலத்து வாழுஞ் சித்தர்கட்குக் குறிஞ்சி நிலக் கடவுளாகிய முருகனே சித்தணுகி வந்து காட்சியளித்தருள்புரிந்ததுபற்றி அவனைச் சித்தர் குழாம் சித்தாரகிய கோலத்தில் வழிபட்ட பிழம்புதான் பழனி யாண்டவன் பிழம்பெனப்பட்டதெனக் கொள்ளினுங் கொள்ளலாம். எவ்வாற்றணும் பழனியாண்டவன் சித்தருளொருவனேயாம். திருப் புகழ் பாடியருளிய அருணகிரி நாதர் காலத்திற்கு முன்பே பழனி யாண்ட சித்தனை முருகக் கடவுளென்றல் பெருவழக்கானமையால் அவரும் முருகனெனவே பாடியுள்ளார். அன்றிப் பழனியாண்ட சித் தணுகி வந்து திருவிளையாட்டுச் செய்தருளி நடுகல்லானவன் முருகக் கடவுளென்னுங் கருத்துப் பற்றியும் அருணகிரி நாதர் அவ்வாறு பாடி யிருக்கலாம்.
பழனியாண்டவனைச் சித்தனென்னுது சித்தனல்லாத முருகனெ னவேகொண்ட பார்ப்பனர் கட்டிவைத்த பழங்கதைக்கு வேறு நூல் களிற் சான்று காணப்படாமையாலும் பழனியென்னுஞ் சொல்லுக்குத் தாங் கட்டிய கதையோடு பொருந்தச் சொல்லும் பொருள் தமிழ்ச் சொன்மரபுக்கு முரணுய் வழுவாதலாலும் அது பொய்க் கதையேயல் லாது மெய்வரலாறன்று. இதுபோலுங் கட்டுக்களை வரலாறென நம்புவ தால் யாமுண்மையை யிழக்குங் கொடுமையடைய நேர்ந்துவிடுகின்றது.
இவ்வாறு பழனிச் சித்தன் கோயில் போல மலைகளினும் பிறவி டங்களிலுஞ் சித்தர் கோயில்களும் சித்த வணக்கமும் மலிந்திருத்தல் வேண்டும். ஆருகத மதத்துள் அருகனையும் வீடுபேறெய்திய முனிவ ரையும் சித்தரென வழங்குவர். அங்கு அருக சரணஞ் சித்த சரணஞ், சாது சரணந், தன்ம சரணமெனவரு நால்வகை வணக்கங்களுட் சித்த வணக்கமென்பதொன்றுண்டு. அச்சித்தர்க்கு மிங்கெடுத்துக்கொண்ட தமிழ்ச் சித்தருக்குமுள்ள வேற்றுமை பெரிது.
பழனிக் கோயிற் சித்தனது தோற்ற மமைந்திருக்கு முறையாற் சித்தர் சிலர் மழித்த தலையருங் கோற் கையருங் கோவணவுடையருமா

Page 8
( 10 )
யிருந்தமை தோன்றுகின்றது. சித்தரெல்லாம் மருந்தினுற்றலால் முதிரா இளமை பெற்று வாழ்ந்துவந்தமை பழனிச் சித்தனிடம் பார்த் தின்புறலாம். அதனுற் சித்தரெல்லாரும் முருகக் கடவுளாகவே வணங்கத் தக்கவராயினர். இதனுலும் பழனிச் சித்தன் பழனி முருக னெனப்பட்டான் போலும். இன்னு மெத்தனை சித்தர் கோயில் முரு. கன் கோயிலாயினவோ? ஆங்காங்கு மறைந்திருக்குஞ் சித்தர் பிழம்பு களைத் தேடிக் கண்டெடுக்கக் கூடுமாயிற் சித்தர் தோற்ற முழுது மொரு வாறு தெரிந்துகொள்ளலாம்.
நச்சினர்க்கினிய ரெடுத்துக் காட்டியதாகக் காட்டப்பட்ட ஒளவையார் பாடலால் ஒளவையார் காலத்துக்கு முன்னரே சித்தன் வாழ்விற் சித் தன் வாழ்ந்தமை பெறப்படுதலாலே இற்றைக் கீராயிரம் யாண்டுகட்கு முற்றெட்டே சித்தர் வாழ்ந்துவருகின்றரென்பதுணரப்படும். ஒளவை யாருங் கருநெல்லிப் பழமுண்டமையாற் பல நூற்றண்டுகளாக வாழ்ந்துவந்தவொரு பெண்பாற் சித்தர். y கருவூர்ச் சித்தரென்பார் தஞ்சை யிராசராசேச்சுவர மென்னும் பெரிய கோயிலிலே சிவலிங்கம் ஆவுடையாரோடுமெழுகால் இணைக்க முடியாமற் சாய்ந்து சாய்ந்து விழ அதனைத் தம் வாய் வெற்றிலையை யுமிழ்ந்து பற்றவைத்து நிறுத்தினு ரெனக் கேள்விப்படுதலாற் கி. பி. பத்துப் பதினுென்று பன்னிரண்டாம் நூற்றண்டுகளிலுஞ் சித்தர் வாழ்ந்தனர்.
சித்தர் தமிழகத்துப் பல்லாயிரம் யாண்டுகளாக வாழ்ந்துவருகின் றனராயினும் இடையிலே சித்தரெனப் பெயர் வழங்கப் பெறுதற்கு முன்னர் வேறு பெயர்களால் வழங்கப்பட்டிருத்தல் வேண்டுமென்பது முனிவரகத்தியணுரையும் புலவர் திருவள்ளுவணுரையுஞ் சித் த ப் குழாத்துள்வைத்து வழங்கப்படுதலினின்றும் பெறப்படுகின்றது. முனி வரெல்லாரையுஞ் சித்தரெனக் கொள்ளுதல் கூடாது. மருத்துவ முறையாலே மூப்பிறப்புக்களின்றி நீடுவாழ்தன் முதலான பெறற்கரும் பேறுகள் பெற்று மன்னுயிர்களின் மேற் பேரருள் கனிந்த முனிவர்க ளையே சித்தர்களெனக் கொள்ளுதல் வேண்டும். அகத்தியுணுருந் திரு வள்ளுவணுருந் திருமூலஞரும் மருத்துவ முறையல்லாத முறைகளா லுஞ் செயற்கரிய செயல் வல்லுநராயினும் மருத்துவமுறையுந் தெரிந் துணர்ந்து துறைபோயது பற்றியே, முனிவர் குழாத்துள்ளும் புலவர் குழாத்துள்ளும் வைத்தெண்ணப்படுமவர்கள் சித்தர் குழாத்துள்ளும் வைத்தெண்ணப்படுபவராயினர். இதனுலே ஆளுடைய நம்பிகள் ஆளுடைய வாசுகள், ஆளுடைய பிள்ளையார், ஆளுடையடிகள், பட்டி னத்தடிகள், அருணகிரி நாதர், தாயுமானவர் முதலிய பெரியோர் களைச் சித்தர் குழாத்துள் வைத்தெண்ணுதல் பொருந்தாதென்பதா யிற்று. ஆரியருட் பதஞ்சலி முனிவனும் விசுவாமித்திர முனிவனு மிவர்போல்பவருஞ் சித்தர் குழாத்தினரல்லர். வேறு முனிவர் குழாத் தினராவர்.

( . . )
ஒரேட்டகத்துப் பதினெண் சித்தர் பெயரே காணப்பட்டமைகொண்டு பதினெண் சித்தரென்னும் வழக்குப் பயின்றதன்றிச் சித்தர் பதி னெண்மரேயல்லர். அக்கையேடு மிகப் பிற்காலத்திலே ஒருவர் தமக் குத் தோன்றியவாறெல்லா மெழுதி வைக்கப்பட்டதாகும். அது சித் தரல்லாத போலிகளையுஞ் சித்தராகக் கூறுகின்றது. முக்காலத்தினு முள்ளாராகிய சித்தருடைய தொகை வரையறைப்படாததாகும். சித் தர் குழாத்துள் இறைவனே முதல்வணுவன். ஏனைச் சித்தரெல்லாம் அம்முதல்வன் வழிமுறையே வருஞ் சித்தராவர். சித்தர் முதல் வற்கு எல்லாம் வல்ல சித்தனென்பது பெயர். எனவே மற்றைச் சித்தர் யாவரும் எல்லாம் வல்ல சித்தரல்லர் சிலபல செயற்கருஞ் செயல்வல்ல சித்தரென்பது பெறப்படும்.
இறைவன் எல்லாம் வல்ல சித்தணுகி விளையாடிய செய்தி மதுரை யறுபத்து நான்கு திருவிளையாடல்களுளொன்ருகவும் வழங்கப் படுகின் றது. எல்லாம் வல்ல சித்தன்முதற்சித்தரெல்லாம் வழிபட்டுவருவது இறைவியின் திருக்கோலமேயாம். படைப்புக்கடவுள், காப்புக்கடவுள், அழிப்புக் கடவுளென்றிவர் முதலான கடவுளரெல்லாம் இறைவியின் றேற்றமல்லதில்லை யாதலாற் சித்தரொரு கடவுளையும் இகழாது எல் லாக் கடவுளையுமொரு கடவுளாக வழிபாடு செய்து வந்தனர். முன் னர் கூறிய கருவூர்ச்சித்தர் திருவிசைப்பாப் பாடியுள்ளார். இதனுற்சித் தர் பலருஞ் செய்யுளியற்றவல்ல செந்தமிழ்ப் புலமையுஞ் சித்தர் பெரு மான் சேவடிப் பற்றுஞ் சிறந்து பொய்யடிமையில்லாத புலவராய்த்தி கழ்ந்திருந்தமையுங் கருதப்படுகின்றது. சித்தன் சிவன்பாற் பேரன்பு பூண்டு தோற்றம் முதலிய வற்றற் சிவனெனவே கருதி வணங்கத் தக்காணுயினமையிற் " சித்தன் போக்குச் சிவன் போக்கு ’ என்னும் பழமொழி யெழுந்தது. நந்துதல் நத்தமென வந்தாற்போலச்சிந்துதல் சித்தமென வரச் சித்தமுடையார் சித்தரெனப் பட்டார். இருவினைகளை யும் நோய்களையும் சிதறுதலுடையாரென்பது கருத்து. அன்றி இயற் சொல்லெனக் கொள்ளாது வடசொல்லெனக் கொண்டு சித்திகளை யுடையவர் சித்தரெனப் பட்டாரெனக் கொள்ளினுமமையும். சீத்தார் செற்ருர் என்னும் பெயர்கள் மருவிச் சித்தரெண வழங்கின வெனக் கொள்ளினுங் கொள்ளலாம். இவற்றுக்கும் வினைகளையும் நோய்களை யுங் கெடுத்தாரென்பது கருத்தாகக் கொள்ளலாம், விண்ணவர்வகை பதினெட்டனுட் சித்தரென வொரு வகையுண்டு. அவர்க்கு மருந்தோடு தொடர்பில்லாமை தெரிதலால் அவரின் வேறவர் தமிழ்ச் சித்தரென்பது பெறப்படும்.
சித்தருடைய மாண்புகள் சித்தெனவுஞ் சித்து விளையாட்டென வும் வழங்கப்படும். கலம்பகமெனத் தமிழின் வழங்குஞ்சிறுகோவைப் பாட்டுக்களினுறுப்புக்களுட் சித்தென்பது மொன்றகப் பாடப்பட்டு வரு கின்றது. அஃதாவது அப்பாட்டுடைத் தலைவனுசிய இறைவனுடைய சித்தர்தஞ் சித்து விளையாட்டுக்களினருமை பெருமைகளையெடுத்துப் பஈடு

Page 9
( 12 )
மாறு பாடுமுகத்தால் அவ்விறைவனைப் புலவர் புகழ்ந்து வாழ்த்துத லாம். இதனுலே பண்டைத் தமிழகத்திற் சித்தருடைய சித்து விளை யாட்டுக்கள்பல மலிந்திருந்தன வென்பதும் முழுமுதற் கடவுளைச்சித்தர் பெருமானுகக் கொண்டு அவன்பா லிடையருத பேரன்பு வைத்திருந்த னரென்பதும் அவர் சித்துக்களைப் புலப்படுத்திய கோயில் பலவுளவென் பதுந் தோன்றுகின்றன.
இத்துணைக் கடவுட்டன்மை வாய்ந்து திருவருள் பெருகுதற்கு வாயிலாய் வீற்றிருந்த சித்தர் குழாங்களை நினைந்து விளித்துத் தாயு மாணவடிகள் புகழ்ந்து பாடியவுருக்கமான பத்துப் பாட்டுக்களைப் பலருங் கற்றுப் பாடி வருகின்றனர். அப்பத்துப் பாட்டுக்களினிறுதி தோறும் ‘வேதாந்த சித்தாந்த சமரச நன்னிலை பெற்ற வித்தகச் சித் தர் கணமே ' யென வருகின்றது. இதனுற் சித்தருடைய கொள்கை முடிவு வேதாந்தத்துக்குஞ் சித்தாந்தத்துக்கும் பொதுவாகிய நன்னிலை யென வெளியாகின்றது. இம்முடிவு காழிக் கண்ணுடை வள்ளலா ரென்னு முனிவரியற்றிய ஒழிவிலொடுக்கக மென்னும் நூலிற் கூறப் பட்ட கொள்கையாகும். ஆகவே சித்தர் குழாம் வேதாந்தமுஞ் சித் தாந்தமு மொருங்கு கற்றுணர்ந்து அவற்றினுெருமைப்பாடு கண்டு தெளிந்து பொது நின்ற விழுமியோரென்பது புலப்படும்.
இந்துணைச் சிறந்த சித்தர் குழாமு மவர் கண்ட சித்தமருத்துவ நூல்களு மிப்பொழுது காணக் கிடையாது மறைந்துள்ளன.
மருத்துவச் சித்தர் பாடிய நூற்பாட்டுக்கள் சிலச்சில பழஞ்சித்த மருத்துவ மரபினர் சிலரிடஞ் சிதைந்துஞ் சிதையாதும் வழங்கிவருதல ல்லது சித்தமருத்துவ நூலொன்றுங் காணப்படாது கடல் கோட்பட்டும் பிறவிடை யூறுபட்டு மொழிந்து போயின வெணக் கண்ட பிற்காலச் சித் தமருத்துவர் சிலர் ஆங்காங்குத் தொன்று தொட்டுக் கைம்முறையாக வழங்கிவருஞ் சித்த மருத்துவ முறைகள் பல வற்றைத் தொகுத்துத் தத்தமக்குத் தெரிந்த வாறெல்லாந் தமிழ் மரபு கெடப் பாடித்தனித் தனியாகச் செய்யப் பட்டு அவ்வச் சித்தர் பாடியனவாகக் கட்டி வைத்த நூல்களே யின்று சித்தமருத்துவ நூல்களென வழங்கப் படுவன. அவற்றின் பாட்டு நடையைக் கண்டோர் அந்நூல்களெல்லாம் இற்றைக் கேறக் குறைய இரண்டு மூன்று நூற்றண்டுகட்கு முற்பட்டனவல்ல வென்பதனை யெளிதின் விரையக் கணடு கொள்வர். குன்றக்கூறன், மிகைப்படக்கூறல், கூறியது கூறன், மாறுகொளக்கூறல், வழுஉச்சொற் புணர்த்தன், மயங்கவைத்தல், வெற்றெனத் தொடுத்தன், மற்றென் றுவிரித்தல், சென்று தேய்ந்திறுதல், நின்று வற்றல்,என நன்னூலிற் கூறி விலக்கப் பட்டுள்ள குற்றங்கட்கெல்லாங் கொள்கலமாகிய இன் -றைய சித்தமருத்துவ நூல்களில் அவற்றுக்கு எடுத்துக் காட்டுக்கள் தேடி யெடுக்க வேண்டா. சித்தமருத்துவ நூலெல்லா மெடுத்துக் காட்டுக்களாமெனக் கூறிவிடலாம். தேரையர் கரிசல் போன்ற இரண்

( . 18
டொருநூல் ஒருவாறு திருந்திய நடைப் பாட்டுக்களாலாயின வெனக் கொள்ளலாமாயினும் அவையும் நன்காராய்ந்து பலவேடுகளை யொப்பு நோக்கிப் பிழையற வினப்புறப் பதிப்பித்துக் கீழ்க்குறிப்புக்களோடும் ஆராய்ச்சி முகவுரையோடும் வெளியிடப் படாமையால் அவற்றை விழை ந்து கற்றுப் பயன்படுத்த முடியாமலிருந்து வருகின்றனர் சித்தமருத் துவ மாணவ மாணவியர். இப்பொழுதைய சித்தமருத்துவ நூல்க ளெனப்படுவவற்றிற் பொறுக்கி யெடுத்துத் தொகுக்கப்பட்டுள்ள மருத் துவ முறைகளும் பண்டைச் சித்தர்களாற் கூறப்பட்டவாறே யுள்ள னவோ ? இடையே போலிச் சித்தர்களால் வேறுபடுத்தப் பட்டுள்ள னவோ ? ஆராய்தல் வேண்டும்.

Page 10
சித்தமருத்துவச் சீர்திருத்தம்
இப்பொழுது வழங்குஞ் சித்தமருத்துவப் பாடல்களிற் காணப் படுங் கருத்துக்களாகிய மருத்துவ முறைகளை மட்டுங் கண்டெடுத்து வழுவில்லாத வினிய தூய செந்தமிழ்ப் பாட்டு நடையிலாயினுங் கட் டுரை நடையிலாயினு மெழுதி வெளியீடு செய்தல் வேண்டும். பாடுவ தாயின் வெண்பா, அகவற் பாக்களாலன்றி நீண்ட வடிகளையுடைய விருத்தப் பாட்டு முதலிய பாவினங்களாற் பாடுதல் கூடாது. அவற் ருற் பாடப் புகின் மிகைப்படக் கூறன் முதலிய குற்றப்படாமற் பாடுத லியலாது. யாக்கோப்பு, சட்டமுனி முதலிய சித்தமருத்தவர்களை முதனூலாசிரியர்களாகிய சித்தமருத்துவர்களெனக் கொள்ளுந் தடு மாற்றந்தவிர்த்தல் வேண்டும். செந்தமிழ் வரம்புகண்ட முனிவரகத் தியணுரெங்கே அகத்தியர் பன்னிராயிரம் பாடிய அகத்தியரெங்கே. திருக்குறள் பாடிய் திருவள்ளுவணுரெங்கே ஞானவெட்டியான் பாடிய திருவள்ளுவரெங்கே. இங்ங்ணம் பொய் புனைந்துரைப்பதணுலே மருத் துவச் சித்திர் மாண்பு குன்றும்.
இனித் தென்னிந்தியாவிலும் வடவிலங்கை கீழையிலங்கையிலு முள்ள சித்தமருத்துவர்களை யெல்லா முறுப்பாளராகக் கொண்டி சித்த மருத்துவ மன்றமென வொரு பெரும் பண்ணை நிறுவுதல் வேண்டும். அம்மன்றத்துக் குறுப்பாவனவற்றுட் சித்தமருத்துவச் சுவடிநிலை யமு மொன்று. அதன்கட் பழைய புதிய ஒலச்சுவடிகளுங் கையெழுத் துச்சுவடிகளும் பதிப்பு வெளியீட்டுச் சுவடிகளும் வேற்றுமொழி மருத் துவச் சுவடிகளு மெல்லாங் கொணர்ந்து தொகுத்து வைத்தல் வேண் டும்.
பொதுக் கல்வியிலே பயிற்சிபெற்ற மாணவ மாணவியர் பலரைத் தேர்ந்தெடுத்துக் கொழும்பி ஞயுள்வேதக் க ல் லூ ரி யி லே னு ஞ் சென்னை யாயுள்வேதக் கல்லூரியிலேனுஞ் சேர்ந்து சித்த மருத்துவக் கல்வித் தேர்ச்சிபெற வுய்க்கும் பொருட்டு அவர்தம் பெற்றேரைத் தூண்டுமுகத்தால் ஆயுள்வேதக் கல்லூரியிற் சித்த மருத்துவக் கல்வி குன்றதவாறு பாதுகாக்க வேண்டும்.
மருத்துவத்துக்கு வேண்டப்படுங் காட்டு மருந்து கடைமருந்து களையெல்லாங் கொணர்ந்து தொகுத்து அவ்வவற்றின் பெயர்களை அவ்வப் பெட்டிகளில் எழுதி யொட்டிவைத்து விற்கும் ஒரு பெரிய விற் பனை நிலையமமைத்துச் சித்தமருத்துவ ரெல்லார்க்கும் மருந்துகளெல் லாம் முடையின்றி யினிது கிடைக்குமாறு செய்தல் வேண்டும்.
காட்டு மருந்துப் பயிர்களையும் விதைகளையு மெல்லாந் தேடிக் கொணர்ந்து நட்டும் விதைத்தும் ப்யிர்செய்யும் பெரும்பரப்புடைய

( 15 )
மருந்துத் தோட்டமொன்று சித்தமருத்துவ மன்றத்துக்குரியதாகல் வேண்டும்.
சித்தமருத்துவ நூலாராய்ச்சிக் கழகமென வொன்றை நிறுவி யங்கிருந்தாராயு மாராய்ச்சி வல்லுநரால் ஆண்டுதோறுஞ் சித்தமருத் துவச் சீர்திருத்தங்களையு மவற்றைப் பற்றிய அரிய பெரிய நுட்பங்களை யும் எழுத்து வாயிலாகவுஞ் சொற்பொழிவு வாயிலாகவும் பலரு முணரவெளியிட்டு வரல்வேண்டும். அவற்றை வெளியிடுதற் பொருட்டுச் சித்தமருத்துவமெனப் பெயரிய திங்களறிக்கை வெளியீடொன்றும் அதனைப் பதித்து வெளியிடும் பதிப்பகமொன்று மாராய்ச்சிக் கழகத் துக்குத் துணையாக வேண்டப்படுவனவாம். AV
ஆராய்ச்சியும் இக்காலை மேலே நாட்டாராய்ச்சி முறையைப் பின் பற்றி நிகழ்தலே போற்றத்தக்கதாகும். அம்முறையே யிப்பொழுதிரு நூற்றண்டாக வையகமெங்கணும் வளர்ந்து பரவிவருகின்றது. இன்று நாடெங்கணும் முன்னில்லாத மக்களினக்கலப்பு மலிகின்றன. அத ணுன் முன்னில்லாத புதுப் புது நோய்கள் உண்டாகின்றன. அந்நோய் கட்குப் புதுப்புது மருத்துவ முறைகளைக் காண்டல் வேண்டும். அந் நோய்களும் மருத்துவ முறைகளும் நம் பழைய நூல்களிற் காணப்பட மாட்டா. அவற்றை மேன்மேற்கொண்டு வெளியிட்டுவருகின்றனர் மேலைநாட்டாராய்ச்சி வல்லுநர். அவரதடிச்சுவட்டைப்பற்றிச் சென்று புதுப்புது நோய்கட்குரிய சித்த மருத்துவ முறைகளைச் சித்த மருத்து வம் வல்லார்கண்டு வெளியிடக் கடவர். . அந்நோய்களோ தனி நோய், கொள்ளை நோயென விருதிறத்துட்படும். அவரவர்கட் குண்டாகிப் பிறர்பாற் படராது அவரவரளவிலே நின்ருெழியும் நோய் தனி நோ யெனப்படும். அங்ங்னமன்றி யொருவர்பாலுண்டாகி அவரையொட்டி ஞர்பா லொட்டவல்ல நோய் கொள்ளை நோயெனப்படும். அவை பேரம்மை வார்த்தல், சிற்றம்மை வார்த்தல், கக்குவான், தொழு நோய், பறங்கி மேகம், வாய்கான்று வயிறு கழிதல், சொறி சிரங்கு, கரப்பான் முதலாகப் பலவாம். அவ்விருசார் நோய்க்குமாகின்ற மருந் துகள் காக்கு மருந்து, போக்கு மருந்தென விருகூறுபடுவனவாம். காக்கு மருந்தாவன நோய் வாராமுற் றடுப்பனவாம். போக்கு மருந் தாவன நோய் வந்தபிற் களைவனவாம். சித்த மருந்துகளுமிங்ங்ன மிருத்தல் வேண்டும். அன்றியுஞ் சித்த மருந்துகளொவ்வொன்றன் கூறுபாடுகளும் அக்கூறுபாடுகளினளவு மிவையிவையென வரையறுத் துணர்ந்து சொல்லத்தக்கவராயிருத்தல் இக்காலச் சித்த மருத்துவர்க் கின்றியமையாதது. அவற்றைக் காணுங் கருவிகளையும் அக்கருவிகளா லவற்றைக் காணுமுறையு மேலைநாட்டு மருத்துவர்பாற் தெரிந்துகொள் ளுதல் விரும்பத்தக்கதாகும். உடம்பினுள்ளுறுப்புக்களின் கேடுகளையு மவற்றின் செயல்களையுங் காட்டவல்ல நுண்ணிய வொளிக்கதிர்வழி யாக நிழலெடுத்துப் பார்க்குமுறையுஞ் சித்த மருத்துவர்க்கு வேண்டற் பாலதாகும். புற்று, மூச்சுத்தடை, நீரிழிவு, காக்கை வலி, உணர்ச்சி

Page 11
( 1Ꮾ )
மைப்பு, வலிநோய் முதலிய நரம்பு நோய்களையும் வயிற்று வலி முளை காண்டல், புழை விழுதல் போன்ற நோய்களையுங் கெடுத்தற்கு மேலே நாட்டாராராய்ச்சி செய்துவருகின்றனர். சித்த மருத்துவர்களும் அவற் றைப் போக்குவதற்குப் புதியனவாகத் தனி மருந்து கூட்டு மருந்து களைக் கண்டு கையாண்டு வருதல் சிறந்தது. கரி, புனற்காற்று, உயிர்ப்பு வளி, வெடி நாற்றம், சோரிமண், எரிப்பு, உப்பு, இனிப்பு, கொழுப்பு சுண்ணும்பு, இரும்பு முதலியவற்றி னுற்றல்களாகி யுடம்பினுறுப்புக்க ளொவ்வொன்றிற்கும் வேண்டுவனவற்றைச் சித்த மருத்துவர்கள் அளந்து பிரித்துப் பிரித்துக் கண்டுகொள்ளுந் திறமையுடையவர்களா யிற் புதுமுறைச் சித்த மருந்துகளைக் கண்டு செய்துகொள்ளலாம். அடிக்கடி நல்லவுடம்பினியல்புகளையுங் கெட்ட வுடம்பினியல்புகளையு மொப்புநோக்கிக் குருதி முதலியவற்றின் மிகை குறைகளையுந் தூய்மை யழுக்குக்களையு மாராய்ந்து துணிந்துவரும் பயிற்சியால் உடம்புகளினள வான வமைப்பு மவ்வமைப்புக்கு வேண்டுமுறைகளுஞ் சித்த மருத்து வர்கட்குப் புலணுகும். சித்த மருந்துகளில் ஊசிவழியால் எளிதின் விரைவாகக் குருதியிற் கலப்பிக்கக்கூடிய மருந்துகளுங் காண்டல் வேண்டும். இன்னுஞ் சித்த மருத்துவ முறைக்குத் துணையாவனவா கிய மேலைநாட்டு முறைகளையெல்லாந் தழுவிக்கொள்ளுதலாற் சித்த மருத்துவம் புது மறுமலர்ச்சியடைந்து பல நாடுகளினுள்ளங்களைக் கவர்வதாகும். தமிழகத்து வழங்கும் வேறு பல மருத்துவங்களையுஞ் சித்த மருத்துவத்தோடிணேத்தல் வேண்டும்.
ஆண்டு முடிவுதொறுஞ் சித்த மருத்துவ மன்றங் கூடிச் சித்த மருத்துவத் தேர்தலிலே நன்கு தேர்ச்சிதெற்ற மாணவ மாணவி யர்க்கும் ஆராய்ச்சிமுறை வல்ல சித்த மருத்துவப் புலவர்கட்கும் சித்த மருத்துவம் வளர்க்குஞ் செல்வர்கட்கும் பாராட்டுரை வாழ்த்துரைகளும் பரிசுகளும் சிறப்புப் பெயர்களும் வழங்கி யூக்கப்படுத்தல் வேண்டும்.
நன்கு கற்கும் வறிய சித்த மருத்துவ மாணவ மாணவியர் கல்வி கற்றற்கு வேண்டும் பொருளுதவியுஞ் சித்த மருத்துவ மன் றஞ் செய்தல் வேண்டும்.
பலவூர்களிற் சித்த மருத்துவக் கோட்டங்களை யேற்படுத்தல் வேண்டும்.
எல்லா வகையானுஞ் சித்த மருத்துவத்தின் பெருமையை மக்க ளுணர்ந்து வியந்து விருப்பங்கொள்ளுமாறு மெய்ப்படுத்துதல் மன் றத்தின் கடமை.
நாளடைவிலே ஒரு பெருஞ் சித்த மருத்துவக் கல்லூரி தமிழகத் துத் தோன்றுமென்பது எனது நம்பிக்கை.
இவ்வளவு மினிது நிறைவேற்றுதற்கும் பாதுகாத்துவருதற்குஞ் சித்த மருத்துவ மன்றம் ஒரு பெருந் தொகையை முதலீடு செய்து அதன் வருவாயைச் செலவு செய்தல் வேண்டும்.

( 17. )
அங்ங்ன முதலீடு வைத்தற்குப் பெருஞ் செல்வர்களும் வருவாய் மிகுதியுடைய தொழிலாளிகளும் அரசியலாளருந் தங்கடமையுணரச் செய்தலே சித்த மருத்துவ மன்றத்தின் முதற் பணி.
தங்கடமை யுணரு மேதக்க அரசியலாளரது துணையின்றி யென்ன மருத்துவமு மீடேற முடியாதென்பது தேற்றம். சித்த மருத்துவர்க ளைத் தன் மருத்துவக் கோட்டங்களிலமர்த்தி மக்கட்குச் சித்த மருத்து வஞ் செய்வித்து அதனலங்களை மன்றத்தின் முகமாகப் பொது மக்க ளினிது புலங்கொளச் செய்தல், அரசியல் செய்ய வேண்டு மரும்பணி யாகும். இதனைச் சித்த மருத்துவத்துறை. யார்வமுடைய நம் பாராண் மன்றினுறுப்பாளர்கள் பொதுமக்களொடு கலந்துசாவி யுணர்ந்து மருத்துவத்துறை மந்திரிக்கெடுத்துரைத்து நினைப்பூட்டிப் பொதுமக் களினலங்கருதிச் சித்த மருத்துவத்துறையாக்கத்துக் காவன செய்தல் வேண்டுமெனச் சித்த மருத்துவர் சார்பாக யான் அன்னுரைக் கேட் டுக்கொள்கின்றேன்.
சித்த மருத்துவர்களுக்குள் இந்துக்கள், பெளத்தர், கிறித்தவர், மகமதியர், உயர்ந்தவினத்தினர், தாழ்ந்தவினத்தினர், ஆண், பெண் என்றற்போலும் வேற்றுமைகளையறவே யொழித்துத் தாமொரு வயிற் றுடன் பிறப்புப்போலப் பழகி வாழ்ந்துவருமொற்றுமை நிலவுதல் சித்த மருத்துவத்துக்குப் பெரும் பாதுகாப்பான கோட்டையாகும். இந்துக்களல்லாதவருள்ளுஞ் சித்த மருத்துவர் பலருளரென்பதனை யிந்துக்கள் மறந்துவிடல் கூடாது. பல சித்த மருத்துவ நூலாசிரியர் யாக்கோபு வென்பவர் மகமதியச் சித்த மருத்துவராவர். அதனுல் மகமதியச் சித்த மருத்துவர் முதலியோருஞ் சித்த மருத்துவ மன் றத்திலும் சித்த மருத்துவக் கல்லூரிகளிலும் இடம் பெறுதற்குத் தக்க வுரிமையுடையவராவர். வேதாந்த சித்தாந்த சமரச நன்னி லையே சித்தர்களின் கொள்கை முடிபென்பது தாயுமானவடிகள் கூற் றற் பெறப்படுதல் மேற்கூறப்பட்டதாகலிற் சித்த மருத்துவர்கட்குஞ் சமரச நன்னிலையே முடிப்ாதல் வேண்டுமென்பதனை யான் வற் புறுத்தி நினைப்பூட்டுகின்றேன். அழுக்காறு, பொருமை, பொருள் வேட்கை முதலாய நோய்கள் சித்த மருத்துவர்களுக்குட் பற்றுதல் பிறராற் பழிக்கத்தக்கதாகும். சித்த மருத்துவர்கள் பெருந்தன்மை பூண்டிருப்பின் அவர்கள்பாற் சித்தர் முதல்வன்றிருவருள் குடிகொள் ளுதலால் அவர் செய்யு மருத்துவம் நோய்களைத் தீர்த்தலுறுதி யாகும்.
இத்தகைய சித்த மருத்துவ மன்றத்துக்கு நிலையாகிய தலைவன் பழனியங் குன்றின் பழஞ் சித்தனெனவும் நிலையாகிய வுறுப்பாளர் இடைக்காட்டுச் சித்தர், கொங்கணர் முதலிய சித்தர் குழாத்தினரெ னவும் வைத்துக்கொண்டு வழிபாடு செய்துவரல் வேண்டும். சித்தர் பெருமான் கோயிலொன்றெடுத்தல் வேண்டும்.

Page 12
( 18 )
சித்தர் பெருமான், சித்தர், சித்த மருத்துவர் என்றிவர்களின் வரலாறுகளை யெல்லாந் தொகுத்தெழுதப்பட்ட வொரு சிறந்த நூல் வெளியிடல் வேண்டும்.
இக்கூறியவெல்லாஞ் சித்தர் முதல்வன் றிருவருளாற் கைகூடப் பெற்றுச் சித்த மருத்துவஞ் செழித்தோங்குதலாற் செந்தமிழ் மக்க ளின் சீருஞ் சிறப்பும் முந்துபோன் ஞாலமுழுது முணர்ந்து பாராட்டு தலும் உலகமுறுபிணி நீங்கி யுறுதிபெற்றுய்ந்தின்புறுதலுமன்னுக. சித்தர் மீண்டும் நம்முள் வெளிப்படுக.
சித்தர் வாழ்க !
சித்த மருத்துவம் வாழ்க !


Page 13
密5ö厅ā
L麾子、
G@@厅、
 
 
 
 

ി:Li്ട് ബിg', ஸ் வீதி, கோட்டை,
கொழும்பு