கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுருக்கெழுத்து தட்டச்சுத் தொழில்நுட்பக்கலை வரலாறு

Page 1
- 수 ܠܸܟܬ �ܲ ܬ ܡ را می کرد. در اساس سرش کسریس-سسال.
க.வ.சிவச்சந்திரே
ܚ
* km^
...-----.............
ܠ ܛܠܢܵܐܬܼ ܠ¬2 ܚ ܇ܝ | 1... ܥܵ- ܐܽ ܬ ܩܝ |
YA : * 1. S. A. SAN IKI
 
 
 
 
 
 
 
 
 
 

து தட்டச்சுத் கலை வரலாறு
7.s.-
-- ~~
る 、

Page 2

சுருக்கெழுத்து தட்டச்சு தொழில்நுட்பக்கலை வரலாறு
தொகுப்பாசிரியர்: க.வ.சிவச்சந்திரதேவன்
வெளியீடு: வடமராட்சி சுருக்கெழுத்துக்கழகம், வதிரி, கரவெட்டி.

Page 3
நூற்பெயர்:
தொகுப்பாசிரியர்:
முதற்பதிப்பு:
s foodLD:
வெளியீடு:
அட்டை வடிவமைப்பு:
விலை:
அட்டை அச்சுப்பதிவு:
நூல் அச்சுப்பதிவு:
Name of book:
Compiler
Frist Edition
CopyRight
Publisher
Cover Design :
Price
Cover Printers:
Book Printers:
சுருக்கெழுத்து தட்டச்சு தொழில்நுட்பக்கலை வரலாறு
க.வ.சிவச்சந்திரதேவன்
2001 நவம்பர்
தொகுப்பாசிரியருக்கு.
வடமராட்சி சுருக்கெழுத்துக்கழகம்
ரமணி
குருஅச்சகம், திருநெல்வேலி. பிள்ளையார் அச்சகம், நல்லூர்.
SURUKKELUTHTHU THADATCHU THOLILNUDPAKALAIVARALARU
K.V.SHIVASHANTHRATHEVAN
2001 July
November
Vadamaradchy Steno Club
Ramany
RS 70/-
Guru Printers, Thirunelvely.
Pillayar Printers, Nallur.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவர் கலாநிதி எஸ்.சிவலிங்கராசா அவர்கள் வழங்கிய
அணிந்துரை
அன்பர் சிவச்சந்திரதேவன் அவர்கள் எழுதிய சுருக்கெழத்து, தட்டச்சு தொழில் நுட்பக்கலை வரலாறு என்னும் நூலைக் கண்ணுற்றேன். விஞ்ஞானம் வளர்ந்து, கணினியுகத்திலே இன்று சாதனைகள் படைத்துக் கொண்டிருக்கின்றமையை அனைவரும் அறிவர்.
குரல் ஒலிக்குறியீடாக அமைந்த எழுத்துக்கலை காலத்திற்குக் காலம் பல்வேறு மாற்றங்களைக் கண்டு வந்துள்ளமையை ஆய்வாளர்கள் நன்கு அறிவர். கருத்துத் தொடர்புச்சாதனங்களிலே வலுவானதாக அமைந்த மொழி நவீன மாற்றங்களுக்கு உட்பட்டுப் பல்பரிமாண வியாபகத்தை இன்று பெற்றுள்ளது.
வேகமும் பரபரப்பும் நிறைந்த வாழ்விலே அதன் தேவையைப் பூர்த்தி செய்ய உருவான சுருக்கெழுத்தின் வரலாற்றை ஆசிரியர் வரலாற்று அடிப்படையிலே விளக்க முற்பட்டிருக்கின்றார். சுருக்கெழுத்துக்கும் தட்டச்சுக்கும் உள்ள அத்தியந்த உறவின்ைச் சுட்டிக்காட்டும் ஆசிரியர் அதன் பயன்பாட்டையும் சொல்லத் தவறவில்லை.
எழுத்தின் வரலாறு, எழுத்துக்கலை, அச்செழுத்தின் வரலாறு, அச்சுக்கலை முதலான பல நூல்கள் தமிழிலே தோன்றியுள்ளன. எனினும் சுருக்கெழுத்து தட்டச்சு தொழில்நுட்பக்கலைவரலாறு பற்றிய நூல்கள் மிக அருந்தலாகவே தமிழில் வெளிவந்துள்ளன. இந்த அருந்தலைத் தீர்க்கும் வகையிலே சிவச்சந்திரதேவனின் நூல் அமைகின்றது எனலாம்.
நவீன தொழில்நுட்பத்திற்கு ஈடுகொடுக்கும் வகையிலே இன்னும் பல நூல்களை இவர் எழுதித் தரவேண்டும் என அறிவுலகம் எதிர்பார்க்கின்றது.
கலாநிதி எல்.சிவலிங்கராசா.

Page 4
வடக்குகிழக்கு மாகாண முகாமைத்துவ அபிவிருத்தி மற்றும் பயிற்சித் திணைக்கள பிரதிச் செயலாளர்;
திரு. வி. செ. சுவாமிநாதன் அவர்களின்
are 4a வாழததுரை
மக்கள் வங்கியில் அந்தரங்கச் செயலாளராகப் பணியாற்றுபவரும் வடமராட்சி சுருக்கெழுத்துக்கழகத்தின் தாபகரும், சுருக்கெழுத்துக் கலையைப் பரப்புவதில் இடைவிடாது கற்பித்தல் ஆர்வம் நிறைந்தவருமாகிய திரு. க. வ. சிவச்சந்திரதேவன் தான் நேசிக்கின்ற ஒருதுறையில் நூலொன்றினை வெளியிடுவதனை அறிந்து மட்டற்ற
மகிழ்ச்சியடைகின்றேன். அவரது எழுத்துக்கள் பிரமாவின் எழுத்துக்களைப் போல உறுதியானவை.
சேவைக்காக உடல், பொருள், ஆவி அனைத்தையும் ஒருங்கு சேர்த்துள்ள திரு.சிவச்சந்திரதேவனை அர்ப்பண ஆசிரியராகக் கொண்டது வடமராட்சி சுருக்கெழுத்துக்கழகம், ه
தனது சேவை பொதிந்த அரும் பெரும் முயற்சியினால் திரு.சிவச்சந்திரதேவன், அம்பாறை மாவட்டத்தில் கல்முனை, சம்மாந்துறை ஆகிய இடங்களிலும், மட்டக்களப்பு மாவட்டத்தில்: பெரிய கல்லாற்றிலும், முல்லைதீவு மாவட்டத்தில் மாங்குளத்திலும், கிளிநொச்சி மாவட்டத்தில் கிளிநொச்சியிலும், யாழ்ப்பாண மாவட்டத்தில்: புலோலி, பருத்தித்துறை, அல்வாய், உடுப்பிட்டி, வல்வெட்டித்துறை, மல்லாகம், யாழ்ப்பாணம், இருபாலை, அச்சுவேலி, வதிரி ஆகிய இடங்களிலும் சுருக்கெழுத்துக் கல்வியைப் போதத்து பல பணி பும் திறனும் மிகுந்த சுருக்கெழுத்தாளர்களையும் தட்டெழுத்தாளர்களையும் உருவாக்கி அரச, தனியார், வங்கி, தொண்டர் நிறுவனங்களின் சேவைக்கு வலுவூட்டியுள்ளமை நிர்வாக வட்டாரங்களில் நன்கு அறியப்பட்ட வரலாறாகும்.
திரு. சிவச்சந்திரதேவனின் அயரா முயற்சிக்கு என்றும் துணையாகவுள்ள அவரது குடும்பத்தினருக்கும், வடமராட்சி சுருக்கெழுத்துக்கழகத்திற்கும் அவர்களது சேவையால் பயன் பலபெறும் மாணவர்களுக்கும் இத்தருணத்தில் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்.
நல்வாழ்த்துக்களுடன், வி. செ. சுவாமிநாதன், பிரதிச் செயலாளர், மு.அ.ப.தி.

ge 144YaY ook vlivkygg www.y
யாழ்ப்பாணம் தொழில்நுட்பக்கல்லூரியில் 1972ல் நான் ஆங்கில சுருக்கெழுத்தாளர் பயிற்சியைப் பெற்றேன். அப்போது எனக்கு போதனாசிரியராக இருந்தவர் செல்வி மனோ விஸ்வலிங்கம் (தற்போது அவுஸ்திரேலியாவில் வசிக்கிறார்). இவரின் சிறந்த கற்பித் தலி முறையாலி சுருக் கெழுத்து தட்டச் சுத் தொழில்நுட்பக்கலையில் எனக்கு அதிக ஆர்வம் ஏற்பட்டது. இதன் காரணமாக 1974ல் நான் பருத்தித்துறை வர்த்தகக் கல்லூரியில் தமிழ் சுருக்கெழுத்தாளர் பயிற்சியையும் பெற்றேன். எனக்குக் கிடைக்கும் ஓய்வு நேரங்களில் பல்வேறு தமிழ், ஆங்கில சஞ்சிகைகளையும் செய்தித்தாள்களையும், புத்தகங்களையும் (நாவல் உட்பட) வாசிப்பேன். அவ்வேளையில் சுருக்கெழுத்து தட்டச்சு தொழில்நுட்பக்கலை தொடர்பான தகவல்கள் ஏதும் கண்ணிற்பட்டால் அவற்றைக் குறிப்பெடுத்துக் கொள்வேன் அல்லது கத்தரித்து வைத்துக்கொள்வேன்.அத்துடன் இத்துறையில் ஆர்வமுடையவர்களையும் சந்தித்துத் தகவல்களைச் சேகரிப்பேன்.
இதன் காரணமாக ஈழத்து தமிழ் சுருக்கெழுத்துத் தந்தை அமரர் சி.இராமலிங்கம், யாழ்ப்பாணம் மத்தியகல்லூரி முன்னாள் நூலகர் திரு.கா.மாணிக்கவாசகர் (தமிழ் தட்டச்சுத்தந்தை அமரர் இ.முத்தையா அவர்களின் மருமகன்), திரு.கோவிந்தபிள்ளை (முன்னாள் எழுதுவினைஞர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் பல்வேறு தமிழ் தட்டச்சு விசைப்பலகைகளை ஆராய்ந்து தமிழாராய்ச்சி மாநாட்டில் கட்டுரை சமர்ப்பித்தவர்) மற்றும் துறைசார்ந்த போதனாசிரியர்கள், சுருக்கெழுத்தாளர்கள், தட்டெழுத்தாளர்களின் தொடர்பும் எமக்குக் கிடைத்தன. அவர்களிடம் இருந்து பல பயனுள்ள தகவல்களைப் பெறக்கூடியதாக இருந்தன.
மேற்படி தகவல்களைக் கொண்டு 1982ம் ஆண்டில் முதன் முதலாக ‘ஈழநாடு’ பத்திரிகையில் கட்டுரை ஒன்று எழுதக்கூடியதாக இருந்தது. அதனைத் தொடர்ந்து 'ஈழமுரசு', 'முரசொலி" பத்திரிகைகளிலும் தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் உதயன்,
V

Page 5
“வலம்புரி’ பத்திரகைகளிலும் மற்றும் சில சஞ்சிகைகளிலும் சுருக்கெழுத்து தட்டச்சுத் தொழில்நுட்பக்கலை தொடர்பான கட்டுரைகள் எழுதக் கூடிய வாய்ப்புகளும் எமக்கு கிடைத்தன.
இவ்வாறு பிரசுரமான கட்டுரைகளில் சில மாற்றங்களைச் செய்தும் பிரசுரமாகாத சிலவற்றைச் சேர்த்தும் இந்தநூலைத் தொகுத்துள்ளேன். இதனை வடமராட்சி சுருக்கெழுத்துக்கழக வெளியீடாக வெளியிடத் தமது பூரண சம்மதத்தைத் தந்ததுடன் பல ஆலோசனைகளையும் வழங்கிய அதன் தலைவரும் பருத்தித்துறை காணிப்பதிவு அலுவலக மேலதிக காணிப் பதிவாளருமான திரு.சி.குலசிங்கம் (முன்னாள் ஆங்கில சுருக்கெழுத்து பகுதிநேரப் போதனாசிரியர் சம்மாந்துறை, யாழ்ப்பாண தொழிநுட்பக்கல்லூரிகள்) அவர்களுக்கும் இந்நூலை ஒழுங்குபடுத்தி அமைப்பதற்கு உதவிய திரு.க.அருளானந்தன் (முன்னாள் பத்திரிகையாளர் ‘ஈழநாடு', 'வீரகேசரி) அவர்களுக்கும் தட்டச்சுப் பிரதிகளைத் தயாரித்துத் தந்த திருமதி.ஜெ.சத்தியா (சுருக்கெழுத்தாளர் - மீன்பிடி நீரியல் வள அமைச்சு, கொழும்பு), திரு.புரமேஸ்வரன் (பொருளாளர் - வடமராட்சி சுருக்கெழுத்துக்கழகம்) ஆகியோருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் உரித்தாகுக.
இந்நூலிற்கு வாழ்த்துரை வழங்கிய எமது கழக வளர்ச்சியில் ஆரம்பகாலம் தொடக்கம் தீவிர அக்கறையுடையவராயிருந்துவரும் திரு.வி.செ.சுவாமிநாதன் (பிரதிச் செயலாளர், முகாமைத்துவ அபிவிருத்தி மற்றும் பயிற்சித் திணைக்கள பிரதிச்செயலாளர் வடக்கு, கிழக்கு மாகாணம், திருகோணமலை) அவர்களுக்கும் அணிந்துரை வழங்கிய யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவர் கலாநிதி.எஸ்.சிவலிங்கராசா அவர்களுக்கும் எனது மனழர்ந்த நன்றிகள் உரித்தாகுக.
எனக்கு எழுத்துத்துறையில் ஆர்வமூட்டிய - நெல்லியடி 'மத்திய மகள்வித்தியாலயத்தில் நான் க.பொ.த.(சாத) வகுப்பில் ப்டிக்கும்போது தமிழ் ஆசிரியராக விளங்கிய அல்வையூர் திரு.சு.கீணபதிப்பிள்ள்ை (சுகணா) அவர்களையும் இவ்வேளையில் எனது நேஞ்சில் நன்றியுடன் நிறுத்துகிறேன்.
VI

இந்நூலை சிறந்த முறையில் அச்சிட்டு உதவிய பிள்ளையார் அச்சகத்தினருக்கும், அட்டைப்படத்தை சிறந்தமுறையில் வரைந்து உதவிய ஒவியர் 'ரமணி, (திரு.வை.சிவசுப்பிரமணியம்) அவர்களுக்கும், அட்டைப்படத்தை சிறந்த முறையில் அச்சிட்டு உதவிய குரு அச்சகத்தினருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் உரித்தாகுக.
சுருக்கெழுத்து தட்டச்சு தொழில்நுட்பக்கலை தொடர்பான வரலாற்று ஆவணங்கள் ஏதும் இதுவரை தொகுப்பாக வெளிவந்ததாகத் தெரியவில்லை. இந்நூல் ஒரு பூரணமான தொகுப் பாக இல் லா விட்டாலும் , இத் துறையில் ஈடுபாடுடையவர்களுக்கு ஒரு முன்னோடிப் பொக்கிஷமாக விளங்கும் என நம்புகிறேன்.
இந்நூலில் உள்ள தகவல்கள் தொடர்பாக மேலதிக தகவல்களையும் இதில் உள்ள குறைபாடுகளையும் எனக்குத் தெரிவித்து உதவினால் அவற்றை மறுபதிப்பில் சேர்க்க முடியும் என நான் எண்ணுகிறேன்.
இந்நூலிற்கு அனைவரதும் ஆதரவு கிடைக்கும் என நம்புகிறேன்.
நன்றி,
“இலகூழ்மி பவனம்”, க.வ.சிவச்சந்திரதேவன்.
உடுப்பிட்டி,

Page 6
01.
02.
03.
04.
05.
06.
07.
08.
09.
10.
11.
12.
13.
14.
15.
16.
17.
18.
19.
20.
சங்ககாலச் சுருக்கெழுத்து.
நவீன சுருக்கெழுத்து
பிற்மன்
கிரெக் சுருக்கெழுத்து சுலோன் டூப்ளோயன் சுருக்கெழுத்துமுறை தமிழ் சுருக்கெழுத்து இலங்கையில் தமிழ் சுருக்கெழுத்து சிங்களச் சுருக்கெழுத்தும், பிறமொழிச் சுருக்கெழுத்தும்
தட்டச்சு
கிறிஸ்தோபர் லதாம் சோல்ஸ் ஆங்கில தட்டச்சு விசைப்பலகை தமிழ் தட்டச்சும் அமரர் இ.முத்தையாவும் சிங்கள் தட்டச்சு, பல மொழித் தட்டச்சுப் பொறிகள்
ஆறு வயது தட்டச்சாளர் அல்கா
தட்டச்சு சாதனைகள்
தட்டச்சு தொடர்பான பல்வேறு தகவல்கள்
விரக்தி
அனுபவம்
சிறு தவறு பெரும்பாதிப்பு
சுருக்கெழுத்து - தட்டச்சு நகைச்சுவை.
VIII

A merrM mrer
yen. A முேயலழுேதலு
தமிழ் இலக்கிய வரலாற்றின் தொன்மைக் காலமான சங்க காலத்தில் சுருக்கெழுத்து முறைகள் இருந்ததற்குச் சான்றுகள் உள்ளன. முதலாவது, சங்கப் புலவர்கள் பற்றிய கர்ணபரம்பரைக் கதையில் வெளியூர்ப் புலவர்கள் வந்து தங்கள் கவிதைகளை அரங்கேற்றும்போது மறைவிடத்தில் இருந்து ஒரு புலவர் விரைவாக அப்பாடலைப் பனை ஏட்டிலே எழுதுவாராம். பின்னர் வந்த புலவரை மடக்கி இது பழைய பாடல் இதோ! ஏடு என்று அதனைக் காட்டுவார் களாம். இதனை அறிந்த இடைக்காடர் எனும் புலவர் மிருக, பறவை இனங்களின் ஒலிகளைக் கலந்து செய்யுள் ஒன்றினைப் பாடினார். மறைந்திருந்து ஏடு எழுதும் புலவர் இப்பாடலை எழுத முடியாது திணறி விட்டாராம்.
இரண்டாவது, பிரபல தமிழ் நாவலாசிரியர் சோமு எழுதிய “வெண்ணிலவுப் பெண்ணரசி” என்ற நாவலின் இரண்டாம் அத்தியாயத்தில், "எழுதியிருந்த எழுத்து சாதாரண தமிழ் எழுத்தாக இல்லாது ஊசிமூரி என்று அழைக்கப்படும் தமிழ் கூட்டெழுத்தாகவே இருந்தது. பலபக்கங்களில் எழுத வேண்டியிருந்தவற்றை எல்லாம் சில வரிசையில் அடக்கிவிடக் கூடிய இந்தச் சுருக்கெழுத்தாகிய “ஊசிமூரி'யை இளமையில் மங்களக்கிழாரிடம் கற்றிருந்தாரென அறியக் கூடியதாக உள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.
நாம் பேசும் பொழுது வேகமாகப் பேசுகின்றோம். அந்த வேகத்தோடு அதனை எழுதுவதென்பது முடியாத காரியம். பேசும் வார்த்தைகளை உருப்படியாக வைத்துப் பயன்படுத்தும்படி செய்ய வேண்டுமானால் எழுதினால் தான் முடியும். ஆகையால் பேச்சை அப்படியே எழுதுவதற்குச் சுருக்கமாக எழுதும் முறை ஒன்று அவசியம் என்பதை அந்தக்
காலத்திலேயே அறிந்து கொண்டிருக்க வேண்டும். لم - ܢܠ
-1-
ཡོད།

Page 7
I H கக்கெமக்க
நவீன சுருக்கெழுத்து
அதிவேக ரோமானியப் பேச்சாளர் சிசரோ என்பவரின் செயலாளர் மார்க்கஸ் டல்லியல் டைரோ கி.மு.100 இல் சுருக்கெழுத்து முறையொன்றைக் கண்டுபிடித்தார். இம்முறை சொற்களின் பகுதியின் முதல் எழுத்துக்களைக் கொண்டதாகும். கி.பி.460ல் இம்முறையின்கீழ் சுமார் 13,000 குறியீடுகள் இருந்ததாயும் ரோமானியரின் வீழ்ச்சியின் பின் இம்முறை அழிந்துவிட்டது என்றும் கூறப்படுகின்றது.
டிமத்தி பிரைட் என்ற ஆங்கிலேயர் சொற்களைக் குறியீடு கொண்டு எழுதும் புதிய முறையை 1588ல் கண்டுபிடித்தார். ஆனால் இம்முறை நடைமுறையில் அதிக பயன் தரவில்லை ஆயினும் மற்றவர்களை இத்துறையில் ஈடுபட ஊக்குவித்தது.
பிற்மன் என்பவர் 1837ல் முதன்முதலாக சுருக்கெழுத்து நூல் ஒன்றை வெளியிட்டார். இதன் பின்னரே சுருக்கெழுத்து முறை உலகெங்கும் பரவத் தொடங்கியது.
காபல்ஸ் பேர்கர் என்ற ஜேர்மனியரும் எமில் டியூப்ளவாயே என்ற பிரெஞ்சுக்காரரும் இத்துறையில் பாடுபட்டவர்கள். ஜோன் ரொபேட் கிரெக் என்பவர் 1888ல் வகுத்த கிரெக் சுருக்கெழுத்து முறை இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டு ஐக்கிய அமெரிக்காவில் பரப்பப்பட்டது.
கலைகள் வளர்ப்பதில் போட்டி, பூசல்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாதநிலை. ஒன்றுக்கு மேற்பட்ட சுருக்கெழுத்து முறைகள் நடைமுறைக்கு வரும்போது சிறப்புரிமை பாராட்டும் பண்பும் யாவருக்கும் இயல்பானதே. அதனால் ஒருவர் மற்றவரைத் தூற்றமுயலாமல் தம் கண்டுபிடிப்பின் மகிமையை பயிற்சியாளரின் மூலம் பிரதிபலிக்கச் செய்து கலைத்தொண்டில் நாட்டம் செலுத்துவது வேண்டற்பாலது.
-
고

பிற்மன்
| || பிற் மண் சுருக்கெழுத்து முறை ஒலியை
அடிப்படையாகவும் கேத்திர கணித அடிப்படைத் தரவுகளை ஆதாரமாகவும் கொண்டு ஆங்கிலத்தில் உருவாக்கப்பட்டதாகும்.
பிற்மன் காலத்திற்குக் காலம் தமது சுருக்கெழுத்து முறையில் ஈடுபட்டுள்ளவர்களைச் சந்தித்து, அவர்களது கருத்துக் களைக் கேட்டு, தமது சுருக்கெழுத்து முறையினை விருத்தி செய்து வந்தார்.
பிற்மன் தமது சுருக்கெழுத்து முறையைக் கண்டு பிடித்ததோடு மட்டுமல்லாமல் அதைச் சரியாகப் பயன்படுத்துவதிலும் ஒரு நிபுணத்துவம் வாய்ந்தவராக இருந்தார்.
ஒருவர் பேசும்போது எழும் ஒலி அசைவுகளையே அடிப்படை யாகக் கொண்டு இருப்பதால் உலகில் இன்று அனைத்து மொழியினராலும் பிற்மன் சுருக்கெழுத்து முறை பாவிக்கப்படுகின்றது.
உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர்களான "பேர்னாட்ஷா" "சார்ள்ஸ் டிக்கின்ஸ்' ஆகியோரும் இந்தியா சுதந்திரம் பெறுமுன் வங்காளத்தில் மகாதேசாதிபதியாக இருந்த லார்ட் கார் மிக்கில் (Lord CarMichel) என்பவரும் மிகவும் திறமை மிக்க பிற்மன்முறைச் சுருக்கெழுத்தாளர்களாக விளங்கியுள்ளனர்.
சாமுவேல் பெப்பீஸ் என்ற அறிஞர் தமது நாட்குறிப்பை பிற்மன் முறைச் சுருக்கெழுத்திலேயே எழுதுவாராம்.
உலகப் பிரசித்தி பெற்ற பைபிள் நூலும் டேவிட் கொப்பர்பில்ட் என்ற அறிஞரின் நூல் ஒன்றும் கூட சுருக்கெழுத்துப் பிரதிகளாக உள்ளனவாம்.

Page 8
சுவாமி விவேகானந்தர் தமது சுற்றுப் பயணங்களின்போது நிகழ்த்தியஉரைகளை ஜே.ஜே.குட்வின் என்ற ஆங்கிலேய இளைஞர் சுருக்கெழுத்தில் எழுதி, நூலாக்கி வெளியிட்டு உள்ளார். மிகவும் இளவயதில் காலமான குட்வினுக்கு தமிழ்நாட்டின் ஊட்டியில் ஒரு நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டிருப்பது அவரது அளப்பரிய சேவைக்கு ஓர் எடுத்துக்காட்டு. பிற்மன் மறைந்து பல ஆண்டுகள் சென்றாலும் இன்றும் அவரது சேவைகளை லண்டன் மாநகரில் உள்ள "சேர் ஐசாக் பிற்மன் அன் சன்ஸ்' என்ற நிறுவனம் செய்து ” வருகின்றது. இந்நிறுவனம் இதுவரை நூற்றுக்கு மேற்பட்ட சுருக்கெழுத்து நூல்களை வெளியிட்டுள்ளது. அத்துடன் சில சுருக்கெழுத்து அகராதிகளையும் வெளியிட்டுள்ளது. வாராந்தம் சுருக்கெழுத்துச் சஞ்சிகைகளையும் வெளியிட்டு வந்திருக்கின்றது. இந்நூல்கள் பிற்மன் சுருக்கெழுத்து முறையைக் கற்பிக்கும் போதனாசிரியர்களுக்கும் பயிலும் மாணவர்களுக்கும் ஒரு வரப்பிரசாதம்.
மேற்குறிப்பிட்ட நிறுவனம் தம்மால் வெளியிடப்பட்ட நூல்களை மீள அச்சிட்டு விநியோகிக்கும் பொறுப்பை இந்தியாவின் அலகபாத்தில் உள்ள ஏ.எச்.வீலர் அன் கொம்பனி (பி) லிமிட்டட் என்ற நிறுவனத்திற்கு வழங்கியிருந்தமை சுருக்கெழுத்து நூல்களுக்கு ஏற்பட்டிருக்கும் மதிப்பைக் காட்டுகின்றது.
பிற்மன் நிறுவனத்தினர் ஆண்டுதோறும் உலகம் பூராவும் உள்ள தமது முகவர்கள் ஊடாகச் சுருக்கெழுத்துப் பயிற்சி பெற்றவர்களுக்குப் பரீட்சைகளை நடாத்திப் பெறுமதி மிக்க சான்றிதழ்களை வழங்கி வருகின்றனர்.
சேர்ஐசாக்பிற்மன் 04-01-1818ல் லண்டனில் உள்ள வில்ற்ஷையர் மாநிலத்தில் துரெபிறிஜ் (Trobridge) என்ற இடத்தில் பிறந்தவர். தனது பெயரைக் கொண்ட சுருக்கெழுத்து முறையொன்றை உருவாக்கியமையால் அவர் ஒரு சிறந்த கல்விமானாகப் பலராலும் கணிக்கப்பட்டு வருகின்றார்.

சேர் ஐசாக் பிற்மன் முதன் முதலில் சாமுவேல் ரெய்லர் என்பவரின் சுருக்கெழுத்து முறையைப் பயின்றவர். பின்னர் சுருக்கெழுத்துக் கலையை அபிவிருத்தி செய்யும் விருப்புடன் தமது ஒலிமுறையிலான சுருக்கெழுத்தைக் கண்டுபிடித்தார்.
1837 ல் நூல் வெளியிட்டாளர் சாமுவேல் பக்ஸ்ரர் என்பவரின் ஆலோசனைப்படி அவரின் உதவியுடன் தமது சுருக்கெழுத்து நூலை குறைந்த விலையில் கூடுதலானவர்களுக்கு விநியோகம் செய்தார். இதனால் உலகளாவிய ரீதியில் இவரது சுருக்கெழுத்து முறை பிரபல்யம் அடைந்தது.
சேர் ஐசாக் பிற்மன் போலியோ வியாதியால் பாதிக்கப்பட்டு உடல் ஊனமுற்ற ஒருவர். புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்ற தீயபழக்கங்களும் இல்லாதவர். அத்துடன் மாமிசம் உண்ணாத ஓர் ஆங்கிலேயரும் ஆவார். இவர் 12-01-1897ல் சோமசெற் மாநிலத்தில் தமது 79ம் வயதில் காலமானார்.
பிற்மன் முறையிலான சுருக்கெழுத்தை நிமிடத்திற்கு 250 சொற்கள் என்ற வேகத்தில் எழுதி, சான்றிதழ் பெற்றவர்கள் பலர். அவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள் இருவர்;
1) Qsf6d6 6Tb6ó ç, afluógö (Miss Emile De Smith) 6
இங்கரிலாந்தரிலி சுருக் கெழுத்து ஆசிரியையாக கடமையாற்றியதோடு சில சுருக்கெழுத்து நூல்களையும் ஆக்கியுள்ளார்.
2) திரு.ஜியோ பிரவுண் ( Geo Brown) இவர் அவுஸ்திரேலிய அரசாங்கச் சுருக்கெழுத்தாளர் அலுவலகத்தில் கடமை யாற்றியதோடு பல புதிய சுருக்கெழுத்துக் குறியீடுகளையும் அறிமுகப்படுத்தியுள்ளார்.
-N-

Page 9
an ars es FChmrns nemers (Chres Trans mer чо-олUJU UAQJUхоАЧ»Osgus
rr (Nr në aratr . I ai rr mraS S S SLuJSAeAeLeq 0TT AASS AAS S SSLL SSSLL LLLSS S SS ATL GS SSS Uu i VIVI · qau t) VVa A. Vul WW- kV (XV) با -به فها لاهه فنه» بوده با الا را با- LAU I vav) y uU
சுருக்கெழுத்துமுறை லிவப்பூல் எனும் இடத்தில் 1888ல் இரு ஒற்றைகளைக் கொண்ட தாளில் Light Line Phonography என்னும் தலைப்பில் வெளியிடப்பட்டது. இதை அறிமுகப்படுத்திய காலத்தில் சட்டத்தரணிகளே இம்முறையைக் கூடுதலாகப் பயின்றனர். கிரெக் அவர்கள் இதை 5 வருட காலம் லிவப்பூலிலும் மன்செஸ்ரரிலும் போதித்த பின் அமெரிக்கா சென்று குடியேறினார். அங்கு அவர் நூல் வெளியிட்டுப் பதிப்புரிமைச் சட்டத்தின் கீழ் தமது சுருக்கெழுத்து முறையினைப் பல அபிவிருத்திகளுடன் 'கிரெக் சுருக்கெழுத்து என்னும் தலைப்பில் வெளியிட்டார். இந்த நூலிற்கு அமெரிக்காவில் அதிக வரவேற்புக்கிடைத்தது என்று சொல்லப்படுகின்றது. அக்காலத்தில் அமெரிக்காவில் சுருக்கெழுத்துப் பாடசாலைகளில் 90 வீதமானவற்றில் இம் முறை போதிக் கப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது.
கிரெக் முறையிலான சுருக்கெழுத்து ஐரிஸ், பிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலியன், போத்துக்கீஸ், ஜப்பானிஸ் போன்ற பலமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 6mbur6fluj GLDTélul6ó El Taquigrafe gregg 66ó Quió oc5 சுருக்கெழுத்துச் சஞ்சிகையும் முன்னர் வெளிவந்ததாகக் கூறுகின்றனர்.
அல்பேர்ட் ஷினிடர் (Albert Schineider) என்னும் கிரெக் சுருக்கெழுத்தாளர் 1921ல் நிமிடத்திற்கு 200 சொற்கள் வீதம் பிழையில்லாமல் எழுதி உலக சாதனை ஒன்றை ஏற்படுத்தினார். இவர் ஐக்கிய அமெரிக்க காங்கிரஸ் (பாராளுமன்றம்) இல் அறிக்கையாளராகக் கடமையாற்றினார்.
19236ò a#T66ù 6T6öd af GQ6)lb (Charles L. Swem) 6T6öggolub கிரெக்ழுறை சுருக்கெழுத்தாளர், சுருக்கெழுத்து எழுதுவதில் உலக சாதனை ஏற்படுத்தினார். 1925ற்கும் 1927ற்கும் இடையில் திரு. மாட்டின் ஜே டூப்புரோ (Martin J Dupraw) என்னும் 21 வயது சட்டக்கல்லூரி மாணவன் 3 முறை தொடர்ச்சியாக சுருக்கெழுத்து எழுதுவதில் உலக சாதனை ஏற்படுத்தினார். இந்த சாதனைக்கான வேகம்; நிமிடத்திற்கு 200ற்கும் 280 ற்கும் இடைப்பட்ட சொற்களாகும்.
-6-

பிரித்தானிய தீவுகளில் விருது
19286) National Union of Teachers BLITg55u 6(3sFL பரீட்சையில் 19 வயதுடைய செல்வி பெகி கிப்சன் (Miss Peggie Gibson) என்பவர் நிமிடத்திற்கு 200 சொற்கள் வீதம் எழுதிச் சான்றிதழ் பெற்றார். இதே ஆண்டில் நடாத்தப்பட்ட வேறோர் பரீட்சையில் லெஸ்லி பியர் (Leslie Bear) என்ற 16 வயது மாணவன் நிமிடத்திற்கு 200 சொற்கள் வீதம் எழுதிச் சான்றிதழ் பெற்றுள்ளார். லெஸ்லிபியர் பின்னர் ஆங்கிலநாட்டின் மக்கள் பிரதிநிதிகள்சபையில் (House of Commons) அறிக்கையாளராகப் பதவி வகித்தார்.
fig5T66suu S6566, Royal Society of Arts 6T6óris நிறுவனம் நடாத்திய கிரெக் சுருக்கெழுத்து முறைப் பரீட்சையில் குறிப்பிடத்தக்க சாதனை படைத்தோர் விபரம்
எப்ரல் 1935 - Miss I.J. Vallins (18 வயது) மே, யூலை 1935 - Miss M. Timons (14 1/2 வயது) LDITjJèf 1936 - Miss C. Thorby (17 வயது) மே 1936 - Miss L. Wilfred (15 வயது)
1915ல் சுருக்கெழுத்துமுறையில் சிறந்தமுறையாக கிரெக் (p60Big5 Panama Pacific International Exposition 6T66p si6OLD L பதக்கம் வழங்கிக் கெளரவித்தது.
1926லும் சுருக்கெழுத்து முறையில் சிறந்த முறையாக &Gyds (p60psisg, Sesqui Centinial International Exposition என்ற அமைப்பு Philadelphiaவில் பதக்கம் வழங்கி கெளரவித்தது.
1927 ல் Brussels ல் நடைபெற்ற சர்வதேச சுருக்கெழுந் மாநாட்டில் கிரெக் சுருக்கெழுத்து முறைக்கு Grand Prixன்ற் விருது வழங்கப்பட்டு திரு. கிரெக் அதன் உபதலைஐநர்கீத் தெரிவு செய்யப்பட்டார். -
-7-

Page 10
கிரெக் சுருக்கெழுத்து முறை பற்றிய சில தகவல்கள்; 1. குறியீடுகளை; தடிப்பாக அல்லது மெல்லியதாக எழுதவேண்டிய
அவசியமில்லை 2. ஆங்கில எழுத்துக்கள் போலவே தொடர்ச்சியாக எழுதலாம். 3. எந்த நிலையிலும் எழுதலாம் கோடு தேவையில்லை. 4. உயிர் எழுத்தையும் மெய் எழுத்தையும் சேர்த்தெழுதலாம் 5. குறியீடுகளில் கோணங்கள் அரிது.
திரு. சுவெம்
வூட்றோ வில்சன் மாநில ஆளுனராக இருந்தபோது அவரது உத்தியோகபூர்வ தகவல் அதிகாரியாகவும் ஜனாதிபதிப் பதவியை வகித்தபோது அவரது அந்தரங்கச் செயலாளராகவும் சுவெம் எட்டு வருடம் கடமையாற்றினார். இவர் 1908ல் இரவுப்பாடசாலை ஒன்றில் கிரெக் சுருக்கெழுத்தைக் கற்கத் தொடங்கினார். அப்போது இவர் ஒரு அலுவலகத்தில் எடுபிடிப் பையனாக வேலைசெய்தார். 1924ல் நியுயோர்க் சுப்ரீம் நீதிமன்றில் சுருக்கெழுத்தாளர் பதவிக்குத் தேர்வு நடைபெற்றபோது 150 பேர் தோற்றினர். அவர்களில் சுவெம் முதலிடம் பெற்றார். ஆனால் இவர் தமது பதவியை ஏற்கவில்லை. எனினும் 1928ல் மீண்டும் அப்பரீட்சைக்குத் தோற்றி முதலிடம் பெற்றபின்னர் அந்தப் பதவியை ஏற்றுக் கொண்டார்.
கற்றோர் மத்தியில் மதிப்பைத் தரும் கலை
சுருக்கெழுத்துக் கலை

கலோன் டூப்ளேயன் சுருக்கெழுத்து முறை Sloan Duployan Shorthand System
சுலோன் டூப்ளேயன் (Sloan Duployan) , சுருக்கெழுத்து முறை கேத்திரகணிதத் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு, உயிர் எழுத்துக்களைச் சேர்ந்து எழுதக்கூடிய ஒரு முறையாகும். ஜே.எம். சுலோன் என்பவரால் அபிவிருத்தி செய்யப்பட்ட இம்முறை அபி டூப்ளோயி (AbbeDuployee) என்பவராலேயே அத்திவராமிடப்பட்டது. வெவ்வேறு சுருக்கெழுத்து முறையினைக் கண்டுபிடிப்பவர் அல்லது அபிவிருத்தி செய்பவர் தமது முறையினையே சிறந்தது அல்லது இலகுவானது எனச் சொல்வது இயற்கை.
ஏழு வெவ்வேறு சுருக்கெழுத்து முறைகளைக் கற்று, அவற்றில் பாண்டித்தியம் பெற்றவர் லண்டனில் உள்ள றோயல் நோர்மல் கல்லூரியில் கடடையாற்றிய டபிள்யூ.ஜே. மெரிடன் (WJMeridan) என்பவர். இவர் தமது சுருக்கெழுத்துத் தொடர்பான ஆய்வறிக்கையில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்; “எனது 15 வருட ஆய்வின் பின்னர் சுலோன் டூப்ளோயன் முறை ஒன்றே சுருக்கெழுத்து முறைக்குரிய குணாதிசயங்களை உள்ளடக்கியுள்ளது என்ற முடிவிற்கு வந்துள்ளேன்."
செயல் முறையில் இம்முறை கூடுதலான சாதனைகளைப் புரிந்துள்ளது. 15,16 வயதுடையவர்கள் பலர் இம்முறையினைப் பயரின் று நீதமன்றங்களிலும், பாராளுமன்றங்களிலும் சுருக்கெழுத்தாளர்களாகக் கடமையாற்றியுள்ளனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் ஜேம்ஸ்டன்கன் என்பவராவர்.
இம்முறையினைப் பயின்றவர்களில் பலர் நிமிடத்திற்கு 230 முதல் 309 சொற்கள் வரையிலான வேகத்தில் எழுதிச் சான்றிதழ் பெற்றுள்ளனர். பாடசாலை மாணவர்கள் பலர் நிமிடத்திற்கு 100 சொற்கள் வேகத்திலும், மாலைநேர வகுப்பு மாணவர்கள் பலர் நிமிடத்திற்கு 200 சொற்கள் என்ற வேகத்திலும் சான்றிதழ் பெற்றுள்ளனர். 1913ல் சர்வதேசரீதியில் நடைபெற்ற சுருக்கெழுத்துப் போட்டியில் முதலிடம் பெற்றுச் சாதனை படைத்த பெருமை சுண்டுக்குளியைப் பிறப்பிடமாகக் கொண்ட இராமலிங்கம் முத்தையா (தமிழ் தட்டச்சின் தந்தை) என்பவரையே சாரும்.
-9-

Page 11
இராவ் சாகிப் ம. சீனிவாசராவ்
பிற்மன் முறையிலான சுருக்கெழுத்தை தமிழில் உண்டாக்கி அதனைப் பிரபல்யப் படுத்திய பெருமை ம. சீனிவாசராவ் என்பவரைச் சாரும். இவரது தாய்மொழி மராத்தி. 1864ம் ஆண்டு இந்தியாவிலுள்ள வடார்க்காடு மாவட்டத்தைச் சார்ந்த "இரகுநாதபுரம் என்ற ஊரில் பிறந்தவர். பாடசாலைப் படிப்பை முடித்த பின் ஆங்கிலத்தில் பிற்மன் சுருக்கெழுத்தைக் கற்றுத் தேர்ந்தார். அக்கலையைப் பிறருக்கு, சொல்லிக் கொடுப்பதில் இவர் காட்டிய syj61560);55 BirL Pitman Phonography Society foils). TEFUIT606i, தமது உறுப்பினர் ஆக்கிக்கொண்டது. பின் சுருக்கெழுத்துக் கலையை மற்றவர்களுக்கு எவ்வாறு கற்பிப்பது என்னும் பயிற்சியை இவருக்கு அளித்து Society's Teachers Diploma GT65 glib Bg556)u வழங்கினார்கள்.
சுருக்கெழுத்துக் கலையுடன் தொடர்புடைய பல அமைப்புக்களுடன் தம்மை இணைத்துக் கொண்டு இதனை மற்றவர்களுக்குக் கற்பிக்கும் பணியையே தமது வாழ்வின் சீரிய குறிக்கோளாகக் கொண்டிருந்தார் திரு.சீனிவாசகராவ். இவர வேலூரில் வசித்தபோது Rotler's தமிழ் அகராதியில் உள்ள சொற்களை ஆராய்ந்து, தெரிவு செய்து, பிற்மன் ஆங்கில சுருக்கெழுத்து முறையை ஒட்டி தமிழில் சுருக்ழுெத்து முறையைக் கண்டுபிடித்தார். தமது சொந்தச் செலவிலேயே தமது சுருக்கெழுத்து நூலினை 1909ம் ஆண்டு வெளியிட்டார். தமது முறையினைப் பரீட்சாத்தமாக 1910ல் ஐவருக்கு கற்பித்து. அனைவரும் நிமிடத்திற்கு 90 சொற்கள் எழுதும் தேர்வில் தேர்ச்சி பெறவைத்தார். முதன் முதலாகத் தமிழில் பிறந்த சுருக்கெழுத்து முறையின் தோற்றம் அனைவருக்கும் மகிழ்ச்சியை ஊட்டியது. பல பத்திரிகைகள் இதனைப் பாராட்டின. சென்னை அரசாங்கமும் இச்சுருக்கெழுத்து முறைக்கு அங்கீகாரம் அளித்தது. இதனை அடுத்து தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் 1925ன் பின் இலங்கையில் பருத்தித்துறையிலும் இந்த முறை பரவத்தொடங்கியது.
--
 

சீனிவாசராவ் அவர்கள் தெலுங்கு, கன்னடம், மராத்தி, உருது ஆகிய மொழிகளிலும் பரிச்சயம் உடையவர் என்பதால் அவர் பிற்மன் முறையையொட்டி தெலுங்குச் சுருங்கெழுத்து நூலினையும், கன்னடச் சுருக்கெழுத்து நூலினையும் வெளியிட்டார்.
திரு.சீனிவாசராவ் சுருக்கெழுத்துத்துறை தொடர்பாக ஆற்றிய அரும்பணிகளைப் பாராட்டும் வகையில் இந்தியஅரசு "இராவ் சாகிப் பட்டத்தை அவருக்கு வழங்கிச் சிறப்பித்து. இவர் 27-12-1924ல் மாரடைப்பால் காலமானார்.
இராவ் சாகிப் ம.சீனிவாசராவ் தமிழ்ச் சுருக்கெழுத்தினை, நமக்குத் தந்தமை குறித்து பிரபல எழுத்தாளரும் புலவரும் பேச்சாளருமான கி.வா.ஜகநாதன் அவர்கள் பாடிய பாடல்:
"ஆங்கில மொழியில் பிற்மனார் அமைத்த
அருஞ் சுருக்கெழுத் தினைத் தழுவிப் பாங்குறத் தமிழ்ல் ஒருமுறை தெரிந்த
பல பலகுறியீடு களை வளைத்தே ஓங்குறு தமிழிற் சுருக்கெழுத் ததனை
ஊக்கங் கொண்டே பயில வென்றே ஏங்குறா தவித்த உயர் சீனிவாச
ராவ் எனும் உத்தமன் இவனே.”
என். சுப்பிரமணியம்
இவர் ஆங்கிலமொழியில் 1882ல் உண்டாக்கப்பட்ட திரு.ஜே.எம்.சுலொன் டூப்ளோயன் முறையிலான சுருக்கெழுத்தைக் கற்ற அதிஉயர் சுருக்கெழுத்தாளராக விளங்கினார். இவர் கும்பகோணத்தில் "இந்து பத்திரகையின் நிருபராகக் கடமையாற்றி யதுடன் அன்னி பெசன்ட் அம்மையார் நடாத்திய நியூ இந்தியா பத்திரிகையின் நிரந்தர நிருபராகவும் பணியாற்றியுள்ளார். சென்னை நகராண்மைக் கழகத்திலும் அறிக்கையாளராக இருந்துள்ளார். 1958ம் ஆண்டு தனது பதவியிலிருந்து ஓய்வு பெற்றபின் "இந்தியன் எக்ஸ்பிரஸ்' "ஆந்திரப் பிரபா', 'தினமணி' ஆகியனவற்றின் நிருபராகப் பணிபுரிந்துள்ளார்.

Page 12
இக்காலப் பகுதியில் தமிழில் சிறந்த சுருக்கெழுத்து முறை ஒன்றைக் கண்டுபிடிக்கும் அவாவில் பல ஆய்வுகள் நடாத்தி ‘டூப்ளோயன் முறையையொட்டி, தனித்துவம் பொருந்திய தமிழ் சுருக்கெழுத்து நூல் ஒன்றினை 1935ல் வெளியிட்டார். இந்தச் சுருக்கெழுத்து முறை தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் பரவத் தொடங்கியது. இவரது முறை 1959ம் ஆண்டு தி லிட்டில் பிளவர் கொம்பனி "லிப்கோ தமிழ் சுருக்கெழுத்து” என்ற பெயரில் நூல் ஒன்றினை வெளியிட்டனர்.
பிஜிசுப்பிரமணிய ஜயர்
தஞ்சாவூரில் பிறந்த இவர், சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் படித்து பட்டம் பெற்றபின் சுருக்கெழுத்துத்துறையில் ஆர்வம் ஏற்பட்டதன் காரணமாக பிற்மன்முறையைப் பயின்று நீதிமன்றத்தில் ஆங்கிலச் சுருக்கெழுத்தாளராகப் பல காலம் பணியாற்றினார். தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம், உருது ஆகிய மொழிகளிற் பாண்டித்தியம் பெற்ற இவர், ஒரு "தமிழ் சுருக்கெழுத்து’ முறையினை வகுத்துள்ளார். இவரது நூல் 1939ல் “தமிழ் சுருக்கெழுத்து தற்போதினி” என்ற பெயரில் தருமபுரம் ஆதீனத்தாரால் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. இது பிற்மன் முறையையொட்டி எழுதப்பட்டாலும் சீனிவாசராவ் முறையினின்றும் வேறுபட்டது.
தட்டச்சுக் கலையைப் பயின்றவர்கள் கணினியை இயக்குவது சுலபம்
-12

இலங்கையில் தமிழ் சுருக்கெழுத்து
இலங்கையில் முதன்முதலாக 1900 ஆண்டளவில் யாழ்ப் பாணம் சென்.பற்றிக்ஸ் கல்லூரியின் தலைவராகக் கடமையாற்றிய வண. பற்றிக்அடிகள், அக்கல்லூரியின் தமிழ் பண்டிதர் சுபவாக்கியம் பிள்ளையுடன் இணைந்து தமிழ்மொழிக்கான சுருக்கெழுத்து முறை யொன்றை வகுத்தமைத்து “தமிழ் தீவிரலிகிதம்” என்னும் பெயரில் நூல் வெளியிட்டதாக அறியக்கூடியதாக உள்ளது.
அத்துடன் யாழ்ப்பாணம் நாவாந்துறை கிறிஸ்தவ கோவிற் போதகராகவிருந்த வண.சாள்ஸ் ஷோவான் அவர்களும் 1946இல் தமிழில் சுருக்கெழுத்து நூல் ஒன்றை வெளியிட்டுள்ளதாகவும் அறியக்கூடியதாக உள்ளது. ஆனால் இவ்விரு முறைச் சுருக்கெ ழுத்தைப் பயின்றவர்கள், பயன்படுத்துபவர்கள் பற்றிய தகவல்கள் எதுவும் தெரியவில்லை.
தமிழ் சுருக்கெழுத்து முறையை இலங்கையில் பிரபல்ய
'படுத்தியவர்கள் பலர் இருப்பினும் அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள்
இருவர். ஒருவர் அமரர் வே.வா.வேலுப்பிள்ளை, மற்றவர், அமரர் சி.இராமலிங்கம்.
அமரர்.வே.வா.வேலுப்பிள்ளை
இவர் வடமராட்சி அல்வாய்ப் பகுதியைச் சேர்ந்தவர். 1920 தொடக்கம் 1923 காலப்பகுதியில் சுருக்கெழுத்து தட்டச்சு (தமிழ்,ஆங்கிலம்) மற்றும் வர்த்தகப் பாடங்களைப் பயின்று 1924இல் பருத்தித்துறையில் வர்த்தகக் கல்லூரி' என்னும் பெயரில் தனியார் கல்லூரி ஒன்றைத் தொடக்கி, தாம் படித்த பாடங்களைப் போதித்து வந்தார். அந்தக் காலகட்டத்தில் வட-கிழக்குப் பிரதேசத்தில் இக் கல்வியைப் போதிக்கும் வேறு நிறுவனங்கள் இருந்ததாகத் தெரியவில்லை. இதன் காரணமாகத் தொழில் வாய்ப்புக்களைப் பெறும் நோக்குடன் இத்துறையில் பயில மன்னார், வவனியா,
-13

Page 13
முல்லைத்தீவு, மட்டக்களப்பு, கல்முனை, திருகோணமலை போன்ற தூர இடங்களிலிருந்தும் மாணவர்கள் வந்து விடுதியிலும் தனியார் வீடுகளிலும் தங்கிப் படித்தனர். இவரிடம் ஆங்கிலச் சுருக்கெழுத்து, தட்டச்சுப் பயிற்சி பெற்றவர்களான திரு.சி.குலசிங்கம், திரு.சி.அழகேசன் ஆகியோர் பின்னர் கொக்குவில் அரச தொழில்நுட்பக் கல்லூரியில் போதனாசிரியர்களாகக் கடமையாற்றியதும் தமிழ் சுருக்கெழுத்து, தட்டச்சுப் பயிற்சி பெற்ற பலர் தாம் பயின்றமுறையை ஏனையோருக்கும் போதித்து வருவதும் ஆசிரியர் வே.வா.வேலுப் பிள்ளையின் திறமையையே பிரதிபலிக்கின்றது.
அமரர் வேலுப்பிள்ளை அவர்கள் சுமார் 50 வருடங்களுக்கு மேலாக இத்தனியார் கல்லூரியைத் திறம்பட நடாத்திப் பல சுருக் கெழுத்தாளர் களையும் பல தட்டெழுத்தாளர்களையும் உருவாக்கிய மையும் அவரது சிறந்த ஆற்றலையே எடுத்துக்காட்டுகின்றது. இவர் ஆங்கிலத்தில் பிற்மன் முறைச் சுருக்கெழுத்தையும் தமிழில் பிற்மன் முறைத் தழுவிய சீனிவாசராவ் முறைச் சுருக்கெழுத்தையுமே போதித்து வந்தார்.
லண்டன் பிற்மன் நிறுவனத்தினர் நடாத்தும் சுருக்கெழுத்து, தட்டச்சுப் பரீட்சைகளை நடாத்தும் நிறுவனமாக வேலுப்பிள்ளை அவர்களின் வர்த்தகக் கல்லூரி விளங்கியது குறிப்பிடத்தக்கதாகும்.
அமரர் வேலுப்பிள்ளை அவர்களால் போதிக்கப்பட்ட சீனிவாசராவ் முறையிலான தமிழ்ச் சுருக்கெழுத்தை "வடமராட்சிச் சுருக்கெழுத்துக்கழகம் மிகச் சிறந்த முறையில் போதித்து வருகின்றது.
மேலும் யாழ்ப்பாணம் வை.எம்.சி.ஏ இலங்கைச் செஞ்சிலுவைச் சங்க யாழ்ப்பாணக்கிளை, இலங்கைச் செஞ்சிலுவைச் சங்க கிளிநொச்சிக்கிளை, கோப்பாய் மக்கள் நலன் காக்கும் பிரிவு, தேசிய இளைஞர் சேவை மன்றம் (கரவெட்டி), புலோலி கிழக்கு ஞானசம்பந்தர் கலைமன்றம் ஆகிய நிறுவனங்களிலும் இம்முறை போதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
--

eIDji f6JTID65tasi
தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகக் கொண்ட இ) சி.இராமலிங்கம் அவர்கள் தமிழகம் சென்று தஞ்சாவூரில்
* சுப்பிரமணியம் முறையிலான சுருக்கெழுத்தையும் மற்றும் தமிழ்,ஆங்கிலத் தட்டச்சையும் பயின்று இலங்கை திரும்பி 1951முதல் கொழும்பில் இயங்கிய அரச கரும மொழித் திணைக்களத்திலும் பின்னர் யாழ்ப்பாணம், சம்மாந்துறைத் தொழில்நுட்பக் கல்லூரிகளிலும் தமிழ் சுருக்கெழுத்து, தட்டச்சுக் கலைகளைப் போதித்தார். இவர் தம் சேவைக்காலத்தில் "தமிழ் ஒலி" என்னும் தமிழ்ச் சுருக்கெழுத்து நூலினை அரச அங்கீகாரத்துடன் வெளியிட்டார். இவர் அரச நிறுவனங்களிலேயே கடமையாற்றியதால் இவரது சேவைக்குப் பெருமதிப்புக் கிடைத்தது. இவர் சுமார் 35 வருடங்கள் ஏனையோருக்கு இத்துறைகளைப் போதித்தார்.
இவரது அரும்பணியைக் கெளரவிக்கும் முகமாக இவரது பழைய மாணவர்களும் நலன்விரும்பிகளும் ஒன்று சேர்ந்து 1976.03.29 இல் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் வெள்ளிவிழா ஒன்றைக் கொண்டாடியமை குறிப்பிடத்தக்கது. 26.11.1928இல் பிறந்த இராமலிங்கம் அவர்கள் சுகவீனம் காரணமாக 13.05.1989இல்
ET6)LDITGOTIT.
இலங்கையின் தொழில்நுட்பக் கல்லூரிகளில் தமிழ்ச் சுருக்கெழுத்து, தட்டச்சுப் போதனாசிரியர்களாகக் கடமையாற்றிய திருமதி செல்வராணி சந்திரசேகரம், திரு.ஐ.சண்முகம், திருமதி கமலாபாலசுப்பிரமணியம், செல்வி மு.விஜயமணி, செல்வி மலர்ராஜினி மற்றும் தற்போது போதிக்கும் திருமதி ஜெபராசக்தி ஆகியோரும் முன்னர் தொழில்நுட்பக் கல்லூரிகளில் பகுதிநேர தமிழச் சுருக்கெழுத்தப் போதனாசிரியர்களாகக் கடமையாற்றிய செல்வி நாகரத்தினம் வேலுப்பிள்ளை, திரு.வி.கா.ஏரம்பமூர்த்தி ஆகியோரும் அமரர் இராமலிங்கத்தின் மாணவர்களே.
--

Page 14
சிங்களச் சுருக்கெழுத்தும் பிறமொழிச் சுருக்கெழுத்தும்
சிங்களச் சுருக்கெழுத்துமுறை; இலங்கையில் மட்டுமே பாவனையில் உண்டு. இம்முறை 1940 ஆம் ஆண்டிலிருந்து வளரத் தொடங்கியது. சிங்களச் சுருக்கெழுத்துமுறை வரலாற்றில் லோறன்ஸ் பெரேரா, சிறீவர்த்துனா, ஹன்டர் ஆகிய மூவருக்கும் அழியாத இடமுண்டு. a r
லோறன்ஸ் பெரேரா
இவர் அரசாங்க மொழி அலுவலகத்தினரால் 1952இல் ஆரம்பிக்கப்பட்ட சிங்களமொழிச் சுருக்கெழுத்தாளர் பயிற்சி வகுப்புக களை நடாத்தி, பல்லாயிரக் கணக்கான சிங்களச் சுருக்கெழுத்தாளர் களை உருவாக்கியவர். இவரது சேவையை இலங்கை அரசு கெளரவிக்கும் பொருட்டு 12.02.1976ல் கலாசார அமைச்சால் விழா ஒன்றை நடாத்தியது.
சிறிவர்த்தனா
இவர் 1951இல் இலங்கைப் பாராளுமன்றக் கட்டடத்தில் சபாநாயகள் மொலமுரே அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட சிங்களமொழி சுருக்கெழுத்துப் பயிற்சி வகுப்புக்களுக்குப் பொறுப்பாக இருந்தும் பின் பாரளுமன்ற சிங்கள அறிக்கையாளராகப் பதவியேற்றும்பின் அதிகார பூர்வாமான அறிக்கை ஆசிரியராக பதவி, உயர்வு பெற்று சேவையாற்றியுள்ளார்.
ஹண்டர்
இவர் இலங்கைத் தொழில்நுட்பக் கல்லூரி (மருதானை)யில்
வணிகவியல் சிங் களமொழிச் சுருக்கெழுத்துத் துறைப் போதனாசிரியராகக் கடமையாற்றியவர்.
-16

மேற்குறிப்பிட்ட மூவரையும் தவிர கல்வித் திணைக்கள வணிகபாடப் பரிசோதகராக இருந்த களுவாராய்ச்சி அவரகள் பிற்மன் முறையைத் தழுவி சிங்கள மொழியில் சுருக்கெழுத்து நூல் ஒன்றை எழுதியுள்ளார்.
ஹிந்தி மொழிச் சுருக்கெழுத்து, தட்டச்சு
ஹிந்தி மொழிச் சுருக்கெழுத்து, தட்டச்சு முறைகள் இந்தியா, டெல்லியில் பிரபல்யமானவை. தற்போது இவைகளை வளர்த்து வருபவர்களில் குறிப்பிடத்தக்க பெருமை சென்னையைச் சேர்ந்த தமிழ்த் தம்பதியினரான திரு.நரசிம்மனும், திருமதி ஜெயா நரசிம்மனும் ஆவர். இவர்கள் டெல்லியில் ஹரோல்பாக் என்ற Ugg5ulsi) BLITg55 6(5tb Madres Shorthand Type Writing College g6t) ஆண்டு தோறும் 500க்கும் மேற்பட்ட்வர்கள் பயிற்சி பெற்றுப் பலனடைகிறார்களாம்.
༽༄ هـ ك/
எந்தவொரு சுருக்கெழுத்து முறையும்:-
1). சிரமமில்லாமல் எழுதக்கூடிய தன்மையதாய் 2). படிக்கும்போது மொழி நடைக்கேற்றவாறு எளிதில்
புரிந்து கொள்ளக் கூடியதாய். 3). குறியீடுகள் சரியாகவும், கச்சிதமாகவும்
அமைவதோடுறன்றி சுருக்கமாகவும் இருக்கக் கூடியதாய், 4). காலத்திற்கேற்ற புதுப்புதுத்தேவைகளையும் அவசியத்தையும் பூர்த்தி செய்யும் வகையில் வளர்ச்சியும் முன்னேற்றமும் அடைவதற்கு இடம் கொடுக்கும் தன்மை உள்ளடங்கியதாய், 5). பகுத்தறிவுக்கு ஏற்றதான குறியீடுகள் கொண்டதாய், அமைந்திருக்கிறிதோ அதுவே உயர்ந்தது. அதுவே. சிறப்பானது.
الري ܢܠ
- 17

Page 15
தட்டச்சு
1808 ஆம் ஆண்டு இத்தாலியைச் சேர்ந்த பெல்லிகிறீன் டாரி என்பவர் தட்டச்சைக் கண்டுபிடித்ததாகக் கண்டுபிடிப்பாளர்கள் பட்டியலில் பெயர் இருந்தாலும் உண்மையில் இவருக்கு முன்னரே பலரால் கண்டுபிடிக்கப்பட்டதே தட்டச்சு இயந்திரம்.
அச்சிட்டதைப் போலவே, தனியார் எழுதும் வியாபாரக் கடிதங்கள் இருக்க வேண்டும் என்ற ஆவலே தட்டச்சு உருவாகக் காரணமாகியது. கையால் எழுதுவதை இயந்திரம் செய்தால் எவ்வளவு அழகாக இருக்கும் என்னும் ஆவலில் முதல் முதலாக இங்கிலாந்தைச் சேர்ந்த ஹென்றி மில் என்பவர், 1714இல் ஒரு தட்டச்சு அமைப்பினை அமைத்தார். இது அச்சுக் கோர்ப்பதைப்போல் எழுத்துகளைக் குச்சிகளினால் கோர்த்து கையால் சுற்றினால் எழுத்துக் கீழே உள்ள காகிதத்தில் படிந்தது. இதில் நடைமுறைச் சிரமம் இருந்தாலும் தட்டச்சு இதன் அடிப்படையிற்தான் உருவாக் கப்பட்டது.
இதற்குப் பின் 1829ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த வில்லியம்பாட் என்பவர் இரண்டாவது நிலைத் தட்டச்சைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கினார். இவர், தான் கண்டுபிடித்த இயந்திரத்துக்கு “டைபோகிராபர்” என்று பெயர் கொடுத்தார். தற்போது A என்ற எழுத்தை தட்டச்சு இயந்திரத்தில் இடது கைச் சுட்டுவிரலால் ஒரு முறை தட்டுகிறோம். இவரது தட்டச்சு முறையில் A யைப் பொறிக்கவேண்டுமானால் இரண்டுமுறை தட்ட வேண்டும். தேவையான எழுத்துக்கு ஒரு பொத்தான் தட்டிய பிறகு அது காகிதத்தில் பதிய மறுபடியும் ஒரு தடவை தட்டவேண்டும். இவ்வாறு ஒரு கடிதத்தைத் தட்டச்சில் பொறிக்கும் நேரத்தில் கையினால் பல கடிதங்கள் எழுதிவிட முடிந்தது.
அடுத்து 1833இல் செவியல் புரொகின் என்ற பிரெஞ்சுக்காரரும் 1843இல் சால்ஸ்ஸ் தள்பர் என்ற அமெரிக்கரும் இதில் முயற்சி
- 18

செய்தார்கள். சில முன்னேற்றங்கள் உண்டாயினவே தவிர முழுமையான தட்டச்சு இயந்திரம் உருவாகவில்லை.
இறுதியில் பத்திரிகையாளராக இருந்து பின் சுங்க அதிகாரியாகக் கடமையாற்றிய ஒருவரது பொழுதுபோக்கு முயற்சியால் தட்டச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டது. இவரே 1867இல் நாம் இன்று பயன்படுத்தும் தட்டச்சு இயந்திரத்தை வடிவமைத்தவர் தட்டச்சு' என்ற பெயரைக் கொடுத்தவரும் இவரே.
இவருடைய முதல் தட்டச்சுப் ? என்ற எழுத்தை மட்டும்தான் அடித்தது. ஆறு ஆண்டுகள் கஷ்டப்பட்ட பின்பே 26 எழுத்துக்களையும் Capital, Smal எழுத்துக்களில் பொறிக்கும் முறையை அதுவும் ஒரே இடத்தில் வந்து அடிக்குமாறும் இவரால் கண்டுபிடிக்க முடிந்தது. இவர்தான்; நாடா, “காகித உருளை, எண்கள், குறியீடுகள், இடைவெளி இடும்முறை முதலியவற்றையும் கண்டுபிடித்து அமைத்தவர் ஆவார்.
1873இல் உலகின் முதல் தட்டச்சு “ரெமிங்டன் நிறுவனம்” மூலம் விற்பனைக்கு வந்தது. மின்சாரத் தட்டச்சு இயந்திரம் 1925இல் தாயாரிக்கப்பட்டது. கணினியில் இயங்கும் தட்டச்சு இயந்திரங்கள் அடுத்த சில ஆண்டுகளில் வெளிவந்தன.
கணினி இணைக்கப்பட்டு வந்துள்ள ஒலிம்பியா நிறுவனத்தின் தட்டச்சில் குறியீடுகளை, தட்டச்சு செய்ததை குறிப்பிட்ட இடத்துக்கு, தொலைபேசி மூலம் சொல்லும் வசதியும் இதில் உள்ளது. இது 1986இல் வெளிவந்தது.
சுருக்கெழுத்தில் சிறப்பாக தேர்ச்சிபெறுவதற்கு ஊக்கம், பொறுமை, விடாமுயற்சி என்பன அவசியம்.
- 19.

Page 16
கிறிஸ்தோபர் லதாம் சோல்ஸ்
தட்டச்சைக் கண்டுபிடித்த கிறிஸ்தோபர் லதாம் சோல்ஸ் 14.02.1819இல் மூர்ஸ்பர்க் என்ற இடத்தில் பிறந்தவர். பாடசாலைப் படிப்பின் பின்னர் அச்சுக்கூட உரிமையாளர் ஒருவரிடம் தொழில் பயின்றார். நான்கு வருடங்களின் பின்னர் மடிசன் என்ற இடத்தில் தமது பெற்றோருடன் சென்று குடியேறினார். ஒரு வருடத்தின் பின் கெனோவழி (Kenoshe) என்ற இடத்துக்குச் சென்று பத்திரிகை ஒன்றின் ஆசிரியராகக் கடமையாற்றினார். அதன்பின் அரசியலிலும் ஈடுபட்டார். 1860இல் “மில் வோக்கி நியூஸ்" (Milwauke News) என்ற பத்திரிகையிலும் கடமையாற்றி ஆபிரகாம் லிங்கனால் கொடுக்கப்பட்ட சுங்க அதிகாரிப் பதவியை ஏற்பதற்காகப் பத்திரிகைத் துறையைக் கைவிட்டார்.
1864இல் சோல்ஸ"ம் அவரது நண்பர் சாமுவேல் சோல்ஸ் என்பவரும் சேர்ந்து புத்தகங்களுக்கு இலக்கமிடும் பொறியை (Numbering machine) கண்டுபிடித்து அதற்கு அரச அங்கீகாரத் தையும் பெற்றனர். இவர்களது நண்பர் கார்லஸ் கிலிடன் (Garless Giden) இலக்கம் இடும் பொறியை எழுத்துப் பொறிக்கும் கருவியாக மாற்றும்படி ஆலோசனை கூறினார். அந்த ஆலோசனைப்படி சோல்ஸ் தனது வாழ்நாளின் மிகுதிப் பகுதியை சோல்ஸ் கிலீடன் ஆகியோருடன் இணைந்து தட்டச்சுக் கருவியைக் கண்டுபிடிக்கச் செலவிட்டார். 23-06-1868ல் தட்டச்சுப் பொறிக்கான அரச அங்கீகாரத்தையும் பெற்றதோடு தட்டச்சுப்பொறியை நவீனமாக்கி அதற்கு அரச பதிவு பெற்றார். இதில் மேலும் அபிவிருத்திகளை மேற்கொள்ள அவருக்கு நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டது. 1873ல் தாம் கண்டுபிடித்த தட்டச்சுப் பொறியின் உரிமை முழுவதையும் ஆயுதம் தயாரிப்பதில் பிரசித்தி பெற்ற நிறுவனமான ரெமிங்டன் கம்பனிக்கு 12000 டொலர்களுக்கு விற்றார். இக்கம்பனியிடம் கூடுதலான தட்டச்சுப் பொறிகளை உற்பத்தி செய்யக்கூடிய சகல வசதிகளும் இருந்ததன் காரணமாக அக்கம்பனி தட்டச்சுப் பொறிகளைப் பல்லாயிரக்கணக்கில் உற்பத்தி செய்து 'ரெமிங்டன்’ என்ற பெயரில் சந்தைப்படுத்தியது.
சோல்ஸ் தொடர்ந்தும் தட்டச்சுப் பொறியில் அபிவிருத்தி செய்யும் முயற்சியில் ஈடுபட்டு 17-02-1890ல் காலமானார்.
-20

ஆங்கில தட்டச்சு விசைப்பலகை
“சுமார் 60 வருடங்களுக்கு முன்பாக கண்டுபிடிக்கப்பட்ட ஆங்கிலத் தட்டச்சு விசைப்பலகை முறை விரைவில் கூடுதலான தட்டெழுத்தாளர்களுக்கும் கணினி இயக்குநர்களுக்கும் உதவக் கூடிய வகையில் உருவாக்கப்பெறவுள்ளது.” இது அலுவலகத் திறனாய்வு வல்லுனர்களின் கருத்தாகும்.
தற்போது நடைமுறையில் உள்ளதும் நம்பகரமானதும் என நாம் எண்ணிக் கொள்ளும் QWERT முறை ஒரு நூற்றாண்டுக்குமுன் கண்டுபிடிக்கப்பட்ட முறையாகும். ஆனால் இம்முறை தற்போது அபிவிருத்தி அடைந்த விஞ்ஞான தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு அமையக் கணினி வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கக்கூடிய முறையில் அமையவில்லை என்பது கணினித்துறை விற்பன்னர்களது கருத் தாகும். அவர்கள் மிகவும் விரைவானதும் திறமையானதுமான ஒரு முறையைத் தேடுகிறார்கள்.
“இன்றைய காலத்திற்கு ஒவ்வாத விசைப்பலகை முறையினால் கணினி அபிவிருத்தி தடைப்படுகின்றது என்றே சொல்ல வேண்டும். அடுத்த பரம்பரை இயக்குநர்கள் கட்டாயமாகப் புதியதோர் முறையைப் பயிலவேண்டும்.” என்பது கணினித்துறை விற்பன்னர் ஒருவரின் கருத்தாகும்.
சாதாரண தட்டெழுத்தாளர் ஒருவரின் விரல்கள் ஒரு நாளில் 16 மைல்கள் செல்கின்றன என்று கருத்துத் தெரிவிக்கும் அமெரிக்கத் தொடர்புடைய டிவோரக், "சர்வதேச சம்மேளனத்தைச் சேர்ந்த வேர்ஜி னியா ரசல்.” தங்களது முறையில் கிட்டத்தட்ட ஒரு மைல் மட்டுமே விரல்கள் அசைந்து அதேஅளவு வேலைகளைச் செய்கின்றன என்றும் கூறுகின்றார்.
வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் கல்வியியல் பேராசிரியரான ஆகஸ்ட் டிவோரக் என்பவர் ஆங்கில எழுத்தக்களில் ஆராய்ச்சி
-21

Page 17
செய்து அதன் விளைவுகளைக் கொண்டு தட்டச்சு விசைப்பலகையொன்றை அமைத்தார். இந்த விசைப்பலகை 1937ம் ஆண்டு நவம்பர் மாதம் உருவாக்கப்பட்டது. இவ்விசைப் பலகையின் பிரதான விசையின் இடது பக்கத்தில் A,E,I,O,U என்ற ஐந்து எழுத்தக்களும் வலது பக்கத்தில் நாளாந்தப் பாவிப்பில் அநேகமாகப் பயன்படுத்தும் ஐந்து ஏனைய எழுத்துக்களும் உண்டு. இப்பத்து எழுத்துக்களைக் கொண்ட விசைகள் மூலம் ஆங்கிலமொழியில் உள்ள 70 வீதமான சொற்களைத் தட்டச்சில் பொறிக்கலாம் எனத் தெரிவிக்கின்றார். வேர்ஜீனியாரசல் அத்துடன் இந்த விசைப்பலகை மூலம் வழமையைவிட 35 வீதம் விரைவாகப் பொறிக்கலாம் என்றும் அவர் கூறுகின்றார்.
டிவோர்க் தனது முறையை பிரபல்யமாக்க தட்டச்சுப் பொறித் தயாரிப்பாளரின் உதவியை நாடினார். ஆனால் அது உடனடியாகச் சாத்தியமாகவில்லை. அவர் 1971ம் ஆண்டு இறந்தபோது ஒருசிலரே அவரது விசைப்பலகைமுறையைப் பின்பற்றினார்கள். குறைந்தளவு எண்ணிக்கையில் இவ்விசைப்பலகையைக் கொண்ட தட்டச்சுப் பொறிகள் தயாரிக்கப்பட்டன.
தற்போது கணினித்துறை அபிவிருத்தியை முன்னிட்டு ‘டிவோரக் சர்வதேச சம்மேளனம்" அமெரிக்க கணினி தயாரிப்பாளர்களை, அவர்களது உற்பத்தி சாதனங்களில் டிவோரக்' விசைப்பலகையினைப் பொருத்தும்படி வேண்டுகோள் விடுத்துள்ளது.
டிவோர்க் முறைப் பாவிப்பாளர்கள் 1980ನು 5, 000 பேராகவும் 1985ல் ஒரு லட்சம் பேராகவும் இருந்தனர். இன்று இம்முறையைப் பயன்படுத்துவோர் தொகை அதிகமாக இருக்கலாம்.
QWERT முறை ஒரு காலத்தில் அழிந்துபோகும். அதற்குப் பதிலாக டிவோர்க் முறை பாவிக்கப்படும். அமெரிக்காவின் மிகச் ‘சிறந்த நிறுவனங்களில் இம்முறையே பின்பற்றப்படுகின்றது. எனக் கூறுகிறார் வேர்ஜ"னியா ரசல். QWERT முறைக்கு மாற்றீடாக பாவிப்பில் உள்ள Maltran Moulden முறை விசைப்பலகைத் தயாரிப்பு நிறுவனத் தலைவர் ஸ்ரீபன் ஹொப்டே பின்வருமாறு கூறுகின்றார்;

“வாடிக்கையாளர்கள் QWERT விசைப்பலகை முறையை மாற்றும்படி வேண்டுகோள் விடுக்காததால் பல நிறுவனங்கள் தொடர்ந்தும் QWERT விசைப்பலகையைக் கொண்ட தட்டச்சுப் பொறிகளைத் தயாரிக்கின்றன.”
QWERT முறையைப் பாவிக்கும் அலுவலங்களில் வேலை செய்வதற்காக நாம் புதிய தட்டெழுத்தாளர்களைப் புதிய விசைப்பலகையில் பயிற்றுவிக்கலாம் எனக் கருத்துக் தெரிவிக்கிறார். பிரெயன் பியர்ஸ்' என்பவர். இவர் லெளபரோ பல்கலைக்கழகத்தில் புதிய தட்டச்சு விசைப்பலகையை ஆராய்ச்சி செய்பவர்.
டிவோர்க் முறையிலான தட்டச்சு பொறிகளை அமெரிக்காவில் பாவிக்கும் நிறுவனங்கள் அதிகளவு வேலையைக் குறைந்தளவு தட்டெழுத்தாளர்களின் எண்ணிக்கையுடன் பெற்றுள்ளன என்றும் கருத்துக் தெரிவிக்கப்படுகிறது.
ஒரு தட்டெழுத்தாளரை புதிய விசைப்பலகையில் (டிவோர்க்) இருவார காலத்தில் மீளப்பயிற்றுவிக்கலாம். "அநேக நிறுவனங்கள் ஏற்கனவே எழுதுவினைஞர்களுக்குக் கூடுதல் வேலைகளைக் கொடுத்திருப்பதால் மீளப் பயிற்சியளிப்பது என்பது சாத்தியமாகாது” எனக் கருத்து தெரிவிக்கிறார். அமெரிக்க பனொசனிக் நிறுவனத்தைச் சேர்ந்த பிராங் மாசி என்பவர்.
"QWERI" முறை 1873ல் பிரபல தட்டச்சு இயந்திர உற்பத் தியாளரான ரெமரிங் டன் கம் பணியினராலி அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு முன்னர் எழுத்து விசைகள் A,B,C,D,E, என்ற வரிசைப்படி ஒழுங்குபடுத்தி இருந்ததாகத் தெரிகிறது.

Page 18
தமிழ் தட்டச்சும் அமரர்.இ.முத்தையாவும்
தமிழ்மொழியில் தட்டச்சுப்பொறியை முதன்முதலில் அமைத்தவர் அமரர் இ. முத்தையாவே. இவர் யாழ்ப்பாணம் சுண்டுக்குளியில் 24.02.1880ல் பிறந்தவர். இவரது தந்தை அமரர் இராமலிங்கம் ஓர் கல்விமான், " பத்திமான், அத்துடன் ஆறுமுகநாவலரின் சீடர்களில் ஒருவராகவும் இருந்தார். முத்தையாவுக்கு ஏழு வயதாக இருக்கும்போதே தந்தையார் இறந்துவிட்டார். தாயாரின் பராமரிப்பில் தனது கல்வியைக் கற்ற முத்தையா 1907ல் மலாயா சென்றார். அங்கு டானியல் போதகர் என்பவரின் தொடர்பு முத்தையாவுக்குக் கிடைத்தது. அவரின் உதவியுடன் புகையிரத இலாகாவில் வேலைக்குச் சேர்ந்தார். சில நாட்களில் அச்சேவையை விட்டு விலகி, பிரபல வணிகநிறுவனமான "ஐல்ஸ்பரி அன்ட் கார்லண்ட்ல் வேலைக்குச் சேர்ந்து அங்கு 1930வரை பிரதம எழுதுவினைஞராகப் பணிபுரிந்தார். இக்காலப் பகுதியில் கணக்குப்பதிவு, பொருளாதாரம், சுருக்கெழுத்து பயின்றார். 1913ல் சர்வதேசரீதியில் நடைபெற்ற சுருக்கெழுத்துப் போட்டியில் வெற்றிபெற்று வெள்ளிப்பதக்கம் பெற்றார். М
அலுவலங்களில் ஆங்கிலத்தட்டச்சு இயந்திரம் இருப்பது போல் தமிழ் தட்டச்சு இயந்திரம் ஏன் இருக்கக்கூடாது என்று சிந்தித்தார். அன்றுமுதல் தமிழ் தட்டச்சு விசைப்பலகையை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். தனிமையாக அறையிலிருந்து 247 எழுத்தின் வடிவத்தை ஒரு புறமும் தட்டச்சின் 46விசைகளை மறுபுறமும் வைத்து எழுத்துக்களை எப்படி விசைகளில் அமைப்பது என்பது பற்றிச் சிந்தித்தார். எனினும் எழுத்துக்கள் 72ற்கு மேல் குறைக்க முடியவில்லை. ஆங்கிலத் தட்டச்சில் இல்லாத நகராவிசையையும் இவரே கண்டுபிடித்தார். இவ்விசைகளை ஜேர்மனியில் உள்ள "சைடல் அன் நெளமான்” என்ற வியாபார
-24
 

நிறுவனத்தினிடம் ஒப்புவித்துத் தமிழ் தட்டச்சு பொறிகளை உருவாக்கி பெரும் எண்ணிக்கையில் இறக்குமதி செய்து விற்றார். தாம் அமைத்த விசைப்பலகையில் சிலகுறைகள் இருப்பதையும் கண்டார். அவற்றை நீக்கி பிஜோ' 'ஐடியல்' ஆகிய Portable தட்டச்சுக்களை உருவாக்கினார். இவைகளைப் பின்பற்றியே 'ஆர் சி’, ‘ஏரிக்கா , யுரேனியா’, ‘ஹல்டா’ போன்ற தட்டச்சுக்கள் வெளியாகின.
தமிழ் தட்டச்சை உருவாக்கிய திரு. முத்தையா தமது 79 ஆவது வயதில் அதாவது 11.02.1959ல் காலமானார்.
மேல்நாட்டு நாகரிகத்தைப் பற்றிய எந்தெ புத்தகத்தைப் படித்தாலும் அவர்களுடைய நாகரிகம் கிறிஸ் தேசத்தில் ஆரம்பிமாயிற்று என்றும், ரோமில் உண்டாயிற்று என்றும் சொல்வார்கள். சுருக்கெழுத்துக் கலையிலும் கூட ரோமானியரே சிறந்தவர்களாக இருந்திருக்கிறார்கள். அங்கே நகரசபைகளும் ஆட்சிச் சபைகளும் 2000 ஆண்டுகளுக்கு முன்னாகவே இருந்தன. அங்கே வல்வாயர்கள் நிறையப் பேசினார்கள். அந்தப் பேச்சுக்களை யெல்லாம் எழுத்துவடிவத்தில் கொண்டு வருவதற்கு சில புதியளழுத்து வடிவத்தில் கொண்டு வருவதற்கு சில புதிய முறைகளைக் கண்டுபிடித்து எழுதிவந்திருக் கிறார்கள் . அந்த முறையையே கரிரேக் கர் களும் அனுசரித்திருகிறார்கள். அப்படியே கிறிஸ்தவப் பாதிரியார்கள். தங்கள் மதம் சம்பந்தமான பிரச்சாரங்களுக்கும் சுருக்கெழுத்துமுறையைப் பயன்படுத்துகிறார்கள்.
-சி.இராமலிங்கம்
ノ - ܢܠ
-25

Page 19
சிங்கள தட்டச்சு
சிங்கள தட்டச்சு விசைப்பலகையை அமைத்தவர்களில் குறிப்பிடத் தக்கவர் திரு. விஜயசேகார ஆவர்.
இவரால் கண்டுபிடிக்கப்பட்ட முறை, இன்று இலங்கையில் தமிழ் பிரதேசங்கள் தவிர்ந்த எனைய பிரதேசங்களில் உள்ள அரசாங்க தொழில்நுட்ப கல்லூரிகளிலும் மாகாணங்களின் தலைநகரங்களிலும் உள்ள சில தனியார் தட்டச்சுப் பயிற்சி நிலையங்களிலும் போதிக்கப்படுகின்றது. இதன் காரணமாக இச் சிங்களத் தட்டச்சுமுறையினைப் பயின்ற ஆயிரக்கணக்கானோர் இலங்கையில் உள்ள பல அரசாங்க அலுவலகங்கள், கூட்டுத்தாபனங்கள், நீதிமன்றங்கள், வங்கிகள் மற்றும் பல தனியார் நிறுவனங்களில் சிங்களச் சுருக்கெழுத்தாளர்களாகவும் தட்டெழுத்தாளர்களாகவும் பணியாற்றுவது. குறிப்பிடத்தக்கது.
பல மொழித்தட்டச்சுப் பொறிகள்
1. முன்னர் மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானபீடத் தலைவராகக் கடமையாற்றி, பின்னர் " | இங்கிலாந்து சசக்ஸ் பல்கலைக்கழகத்தில் கடமையாற்றிய டாக்டர் டி.ஆர்.எம். வோல்ற்ரன் என்பவர் தமிழ், ஆங்கிலம், சிங்களம், ஆகியமொழிகளை ஒரே தட்டச் சிலி பொறிக்கத் தக்க முறையில் அறிமுகப்படுத்தியுள்ளார். இத்தட்டச்சுப் பொறி 1988ம் ஆண்டு கொழும் யில் British Council லில் பொதுமக்களுக்கும் பாராளுமன்றத்தில் அப்போதைய ஐனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தனா விற்கும் அமைச்சரவையினருக்கும் பார்வைக்கு வைக்கப்பட்டது.
2. கொடுமுடி சண்முகம் என்ற தமிழ் நாட்டு அறிஞர் இரு மொழித்தட்டச்சு (தமிழ்/ஆங்கிலம்) அதிக பயன்தரும் எனவும் அதனை அமைக்க சில ஆலோசனைகளையும் 1974ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் கட்டுரையாகச் சமர்ப்பித்தார்.
3. ஒரே தட்டச்சில் 87 மொழிகளில் தட்டச்சுப் பொறிக்கும் வசதிகள் உள்ள இயந்திரத்தை ஓர் அமெரிக்கள் கண்டுபிடித்துள்ளார். இத்தட்டச்சும் அமெரிக்காவில் விற்பனை செய்யப்பட்டதாம்.
-26

ar H. H TYS L CHLCHG GGGL KLL TLLS SLLLeTTLSYTTLL TTeuHez
S2) OJ JJ Y)-vu-(29y1 va JJ USTVA VIVULUI.
அல்கா, வாணி யவத்மால் ஜில்லாவில் வசிக்கிறாள். இது மகாராஷ்டிரா மாநிலத்தில் இருக்கிறது. இவர் தனது ஆறாவது வயதில் ஆங்கில தட்டச்சில் நிமிடத்திற்கு 70 வார்த்தைகள் தட்டச்சு செய்து சாதனை புரிந்திருக்கிறார். இது ஒர் உலக சாதனை என்று ஒப்புக்கொண்டுள்ள கின்னஸ் சாதனையாளர் புத்தகத்தின் துணை ஆசிரியர் நிக்கோலஸ் ஹித் ப்ரெளன் (NICHOLOS HEATH BROWN) இவருக்குப் பாராட்டுக் கடிதம் எழுதியிருப்பதுடன் இவளது இந்தச் சாதனை வெளிவர இருக்கும் 1989 ஆம் வருடத்து கின்னல் சாதனைகள் புத்தகத்தில் இடம்பெறும் என்று தெரிவித்திருக்கிறார். ஆக, உலகச் சாதனையாளர் பட்டியலில் இடம்பெற இருக்கும் இன்னோர் இந்தியப் பெண் இந்த அல்கா. இவள் நாக்பூரில் உள்ள பிரபல பத்திரிகை அலுவலகம் ஒன்றில் மகாராஷ்டிரா முதல்வர் முன்பு இந்தச் சாதனையை நிகழ்த்தி அவரையும் மற்றவர்களையும் அசரச் செய்தாள். உடனே அல்காவிற்குக் கல்வி இலாகா மூலம் எல்லா உதவிகளைச் செய்வதாகவும், புலமைப்பரிசில் வழங்குவதாகவும் முதல்வர் அறிவித்தார்.
வாணி என்ற சிற்றுரில் அல்காவின் தந்தையான மதுகருக்கு ஒரு தட்டச்சுப் பயிற்சி நிலையம் இருக்கிறது. தந்தையின் மடியில் உட்கார்ந்தபடி விளையாட்டுத் தனமாக சிறுமி அல்கா தட்டச்சுச் செய்வது பழக்கம். இதைப் பார்த்த மதுகர் இவளுக்கு இதில் நன்கு முறைப்படியான பயிற்சியை அளித்தால் என்ன என்று எண்ணினார். வேறு யாரேனும் என்றால் என்ன செய்வார்கள்? “கையையும் காலையும் வச்சுக்கிட்டுச் சும்மா இருக்கப் போறியா இல்லையா சனியனே!, தட்டச்சை தொட்டே கையை ஒடிச்சு அடுப்புல வச்சுடுவேன்!" என்பார்கள். இல்லையா? மதுகர் வித்தியாசமானவர்.
இரண்டாம் வகுப்பு மட்டுமே படித்து முடித்திருந்த சிறுமியான
அலகாவிற்கு அப்போது ஆங்கிலமே தெரியாது. இருர் 鹦姆部町
சொல்படி கற்றுக் கொண்டே ಅಣ್ಣ: ஆங்திற4 க்களைத்
--

Page 20
தினசரிப் பத்திரிகைகள தந்தைக்கு வந்த கடிதங்கள் ஆகியவற்றில் இருந்து மளமளவென்று தட்டச்சு செய்யத் தொடங்கினாள். சில மாதங்களில் நிமிடத்திற்கு 70 வார்த்தைகள் என்ற வேகத்தை எட்டிப்பிடிக்க ஆரம்பித்து விட்டாள் அல்கா. ஆனால் திறமை இருந்தும் வயதும் படிப்பும் இல்லாத காரணத்தால் தட்டச்சில் கீழ்நிலை. மேல்நிலை என்று பரீட்சை எழுத முடியவில்லை. நிபந்தனைகளுக்கு மாற்றுச் செய்து பரீட்சை எழுத இவளை அனுமதிக்கவேண்டும் என்று விரும்பிய மதுகர். அல்காவைப் பற்றி நாக்பூரில் பிரபல பத்திரிகையிடம் எடுத்துச் சொல்ல, அது ஆறுவயது அல்கா தட்டச்சு அடிப்பதை ஒரு கண்காட்சி போல நடத்தி, அமைச்சர் உட்பட பல பிரமுகர்களை வரவழைத்துவிட்டது. இதற்காகவெல்லாம் அரசு விதிகள் தளமுகா என்ன? ஆனால் இந்த நிகழ்ச்சி அல்கா
உலகறியச் செய்தது. உண்மை.
“வித்தைப் பெண்” என்று வடநாட்டுப் பத்திரிகைகள் இவள் சிறு வயதிலேயே இப்படி தட்டச்சில் விரல் நடனம் புரிவதை விளம்பரப்படுத்தின. பல விழாக்கள், கண்காட்சிகள் என்று அல்கா தன் தட்டச்சுத் திறமையை வெளிப்படுத்தியபடி இருந்தாள்.
அல்காவின் ஆசை, தான் ஒரு சிறந்த சுருக்கெழுத்தாளராக வரவேண்டும் என்பதும், மின்விசை தட்டச்சில் உலக சாதனையான நிமிடத்திற்கு 176 வார்த்தைகள் என்பததை முறியடிக்க வேண்டும் என்பது மட்டும் தான். மிக வேகமான குழந்தை தட்டச்சாளர் (Fastest Child Typist) 6T6ip Quuj 6Trias.usfront esos.T, U6) குறைந்த வயதுக்காரர்களை இந்தத் துறையில் ஈடுபட மறைமுகமாகத் தூண்டிவருகிறாள் என்பது மட்டும் நிச்சயம்.
(1996ல் வெளிவந்த சஞ்சிகை ஒன்றில் இருந்து பெறப்பட்டது)
-28

தட்டச்சு சாதனைகள்
தட்டச்சுப் பொறிப்பதல பல சாதனைகள் நிகழ்ந்தப்பட்டுள்ளன. அவற்றில் சில:-
1. ஜப்பானியப் பெண் ஒருவர் இடத்தைவிட்டு ஏழாமல் தொடர்ச்சியாக 62 மணி 31 நிமிடங்கள் தட்டச்சுப் பொறித்துக் காட்டியுள்ளார். இது நடந்தது; 1968ல்.
2 1969ல் இங்கிலாந்தில் மன்செஸ்ரர் என்னும் இடத்தில் மைக் ஷேல்ஸ் என்னும் கண்பார்வை இல்லாதவர் 120 மணி 15 நிமிடங்கள் தொடர்ந்து தட்டச்சுப் பொறித்துக் காட்டியுள்ளார்.
3. 1968ல் ஷம்பூ அம்பேவேன் என்னும் 44வயது இந்தியர் 123 மணி நேரம் தொடர்ந்து தட்டச்சுப் பொறித்துக் காட்டியுள்ளார். இவர் ஆரம்பத்தில் நிமிடத்திற்கு 60 சொற்கள் வீதமும் இறுதியில் நிமிடத்திற்கு 15 சொற்கள் வீதமும் பொறித்தாராம். இவரது சராசரி வேகம் நிமிடத்திற்கு 24 சொற்களாக இருந்ததாம். இவர் இச்சாதனையை நிகழ்த்த 806,000 முறை விசையைத் தட்டியுள்ளாராம்.
4. திறமைவாய்ந்த தட்டெழுத்தாளர்; மணிக்கு 2,400 சொற்கள் முதல் 3,600 சொற்கள் வரைதான் பொறிக்கின்றனர். ஆனால் அமெரிக்காவைச் சேர்ந்த ஜார்ஜ் போல்பீல்ட் என்பவர்; ஒரு மணித்தியாலத்தில் 8656 சொற்கள் (அதாவது நிமிடத்திற்கு 140 சொற்கள்) பொறித்துச் சாதனை புரிந்துள்ளார். அவர் தவறாக 31 சொற்கள் மட்டும்தான் பொறித்துள்ளாராம்.
5. மேற்கு வங்காளத்தில் 'மெளசுமி' என்ற ஏழு வயதுச் சிறுமி
நிமிடத்திற:கு 47 சொற்கள் வேகத்தில் பொறித்துச் சாதனை புரிந்துள்ளார்.
-29

Page 21
6. பெங்களுரில் வேணுகோபால் குப்தா என்ற வலதுகை இல்லாத இளைஞன் இடதுகையை மட்டும் பாவித்து தட்டச்சுப் பொதுப் பரீட்சை ஒன்றில் தேறிச் சாதனை புரிந்துள்ளார்.
7. மின் தட்டச்சில் நிமிடத்திற்கு 176 சொற்கள் வேகத்தில்
பொறித்து ஒருவர் சாதனை புரிந்துள்ளார்.
8. வாய்ப்பாட்டு, வீணை, பிடில் டியூசன் போலவே தட்டச்சுக் கல்வியையும் அவரவர் வீட்டிற்கே ஆசிரியரை வரைவழைத்துக் கற்றுக் கொள்பவர் உண்டா? உண்டு என்கிறார் சென்னையிலுள்ள "கெல்லிஸ் இன்ஸ்ரி ரியறிட் ஒவ் கொமர்ஸ் உரிமையாளர். பெரிய நிர்வாகப் பதவிகளை வகிக்கும் கணவன்மார்களுக்கு தட்டச்சு கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டுகிறார்கள். எங்கள் இன்ஸ்ரிரியூட்டில் ஒரு பெண்மணி மிகவும் ஆர்வத்தோடு பயிலவந்தார். பரீட்சைக்குப் பணம் கட்டும் சமயத்தில் அவரது படிப்புச் சான்றிதழ்களை பார்த்தபோது அவரோர் ஐ.ஏ.எஸ் அதிகாரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கின்றார். எனத் தெரிய வந்தது.
அவர் ஏன் இந்த தட்டச்சுக்கல்வியைப் பயில வேண்டும்? ‘என்னை இன்னும் சில மாதங்களில் ஒரதிகாரியாக நியமித்து விடுவார்கள். தட்டச்சு தெரிந்திருந்தால் சில சமயங்களில் நானும் பிறர் கையை எதிர்பார்க்காமல் சில முக்கிய அலுவல்களைத் தாமதமின்றிக் கவனத்தில் கொள்வேன். அல்லவா? என்றாராம் பெருமையோடு.
-30

1. தட்டச்சுப் பொறிக்கும்போது அலுவலங்களில் அதிக சத்தம் உண்டாகின்றது. இதனால் மற்றவர்களின் வேலை கெடுகிறது. ஆகையால் ஓசையை எழும்பாத தட்டச்சுப் பொறிகளை தற்போது அமெரிக்காவில் கண்டுபிடித்துள்ளார்கள்.
2. முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வேல்ட் தம்மிடம் கையெழுத்துக்காகவரும் கடிதங்களில் ஏதாவது ஒரு திருத் தத்தைக் கட்டாயமாகச் செய்வாராம். இதனால் கடிதத்தைப் பொறிப்பவர் தினமும் கவலைப்படுவாராம். வழமைபோல் ரூஸ்வேல்ட் திருத்தம் செய்து கையெழுத்துப் போட்ட ஒரு கடிதத்தை மறுபடியும் நன்றாகப் பொறித்து அவரிடம் கையெழுத்திற்காகக் கொண்டு வந்தார், காரியதரசி. அப்போது ரூஸ்வேல்ட் காரிய தரிசியிடம் “இனிமேல் இப்படிச் செய்யாதீர். என் கைப்பட ஏதும் திருத்தம் இருந்தால்தானே நான் அவற்றை ரொம்பவும் கவனித்திருப்பதாக ஜனங்கள் எண்ணுகிறார்கள்” என்றாராம்.
3. லூயி பிஷர் என்ற இங்கிலாந்தைச் சேர்ந்த பத்திரிகை நிருபர், நல்ல கோடைகாலத்தில் இந்தியாவில் காந்திஜியின் சேவாச் சிரமத்தில் தங்கியிருந்தபோது வெயிலின் கொடுமையிலிருந்து தன்னை ஓரளவு பாதுகாத்துக்கொள்ள காந்திஜியின் ஆலோசனைப்படி தினமும் நடுப்பகலில் குளிர்நீர் தொட்டியில் ஸ்நானம் எடுத்துக்கொள்வார். இதனால் அவரது நேரம் வீணாவதால் நீர்த்தொட்டியின் விளிம்பின் மேல் ஒரு பலகையை வைத்து அதன் மீது தட்டச்சை வைத்து நீரில் இருக்கும்போதும் தொடர்ந்து தமது தட்டச்சு வேலையைச் செய்து வந்தாராம்.
జ31 -

Page 22
4. மேல் நாடுகளில் உள்ள எழுத்தாளர்கள் தமது கையால் பேனா பிடித்து கதை, கட்டுரைகள் எழுதுவது குறைவு. அனே கமாக எல்லோரிடமும் தட்டச்சுப் பொறிகள் உள்ளன. அவர்களும் தட்டச்சுப் பொறிக்கப் பழகியுள்ளனர். இதனால் அவர்கள் தமது கதை, கட்டுரைகளைத் தாமே தட்டச்சில் பொறித்து விடுகிறார்கள்.
5. சில அலுவலங்களில் உள்ள உயர்அதிகாரிகள் தட்டச்சுப் பொறிக்கத் தெரிந்தவர்களாக உள்ளார்கள். பருத்தித்துறை முன்னாள் உதவி அரசாங்க அதிபர் திரு. வி. வேலும்மயிலும் இதற்கு ஓர் உதாரணம். அவர் தாம் கையொப்பமிடும் தமது அலுவலகக் கடிதங்களைத் தாமே பொறித்துக் கையொப்பமிடுவதைப் பலர் அறிவார்கள்.
1965ம் ஆண்டு தமிழ் படங்களில் நடித்த ஜீவனாம்சம் லட்சுமி, தேவிகா ஆகியோர் தட்டச்சுக்கலையில் தேர்ச்சி பெற்றவர்கள். இவர்கள் நிமிடத்திற்கு 40 சொற்கள் பொறித்திருக்கிறார்களாம்.
7. எட்கார் வலஸ் என்பவர் புகழ்பெற்ற மர்மக்கதை ஆசிரியர்.சுமார் 58 ஆண்டுகளுக்கு முன் இறந்தவர். இறக்கும்போது 13/4 லட்சம் பவுண் கடன். ஆனால் அவர் இறந்த பின் அவரது புத்தக விற்பனைமுலம் கடன் அடைக்கப்பட்டு விட்டதாம். இவர் ஒருசமயம் ஒரே மூச்சில் "பேயினுடைய ஆள் (Devil's Man) என்ற நாவலை எழுதிமுடித்தார். இடைவிடாமல் 60 மணி நேரம் அவர் தனது கதையை கருத்துமாறாமல் சுவைபட உணர்ச்சி வேகத்தில் சொல்லிக்கொண்டேவர பல சுருக்கெழுத்தாளர்கள் அவர் சொல்வதை வார்த்தை பிறழாமல் இருமணிநேரத்திற்கு ஒருவராகச் சுருக்கெழுத்தில் எழுதி பின்பு தட்டச்சில் பொறித்து பிரதிகள் தயாரித்து அவர் பார்வைக்கு அனுப்பி வந்தனர். கதை முடிந்ததும் மிகவும் சோர்வடைந்தவராய் அலுத்துப்போய்ப் படுத்த படுக்கையாகக் கிடந்தார். கதை வெளியானதும் அவரது கடனை அடைக்கத்தக்க வகையில் வருமானம் கிடைத்தாம். இதற்குச் சுருக்கெழுத்தாளிரின் சிறந்த பணியே முக்கிய காரணம் எனச் சொல்லப்படுகிறது.
-32
 

O.
தட்டெழுத்தாளர் வேலை பார்க்கும் பெண்களின் நகங்கள் சீராக இல்லாது வளைந்தும் பிளவுபட்டும் இருப்பதற்குக் காரணம் இரத்த ஓட்டம் தடைப்படுவதே. விற்றமின் - "ஏ" சத்துள்ள உணவு வகையைச் சாப்பிட்டால் நகங்கள் சீராக
வளரும் என வைத்தியர்கள் தெரிவிக்கிறார்கள்.
தட்டச்சுப் பொறியைப் பாதுகாப்பதும் ஒருகலை, "மூடாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்" என்பது தட்டச்சுப் புதுமொழி. வாரம் ஒருமுறையேனும் முக்கிய பாகங்களுக்கு Non Viscon 0i போடவேண்டுமாம். பிரஷினால் எழுத்துக்களைத் துடைப்பது நல்லது.
தட்டச்சுப் பொறிகள் பழுதுபட்டால் அதைத் திருத்துவதற்கு மெக்காணிக்கைத் தேடிப்பிடிப்பது கஷ்டம். தட்டச்சு திருத்துவதில் திறமையுடையவர்கள்கூட அக்கலையை ஏனையோருக்குக் சொல்லிக்கொடுப்பது அருமை. ஆனால், இந்தியாவில் கேரளாவில் பிறந்த டி.பி.கே.இராமன் என்பவர் சிறுவயது முதலே தட்டச்சுப்பொறிகளில் உள்ள நாட்டம் காரணமாக பி.ஆர்.அன் சன்ஸ் என்ற நிறுவனத்தில் 1937ல் தட்டச்சுப் பொறிகளைத் திருத்துவதற்குப் பழகினார். இரு ஆண்டுகளில் அதாவது தமது 17வது வயதில் திறமைமிக்க மெக்கானிக்காகச் சான்றிதழ் பெற்றார். இவர் சென்னையில் 15ருபா வாடகையில் அறையொன்றை எடுத்து International Type Writer Emporium என்ற தட்டச்சுப்பொறி திருத்தும் நிறுவனத்தை ஆரம்பித்தார். முதன்முதலாக சென்னையில் உள்ள உயர்நிலைப் பள்ளி ஒன்றில் உள்ள தட்டச்சுப் பொறியைப் பழுதுபார்த்து, அதற்குக் கூலியாக அரைருபா அறவிட்டாராம். சென்னையிலும் காஷ்மீரிலும் இவரது தொழில் விஸ்தரிக்கப்பட்டது. எனினும் அந்த உயர்நிலைப்பள்ளியில் தொடர்ந்து 20 வருடமாக வேலைகளைச் செய்துவந்தபோதிலும் அங்கு முதலில் வசூல்செய்த அரைளுபாவையே கூலியாகப் பெற்று வந்தராம். 1967ல் இவரிடம் 16 பேர் வேலை
-33

Page 23
11.
12.
செய்தார்களாம். மேலும் பலர் இவரிடம் தொழில் பழகிச் சுய தொழிலி மூலம் பெருந் தொகைப் பணம் சம்பாதிக்கிறார்களாம்.
கண்பார்வை இல்லாதவர்களுக்கென்று ஒல்லாந்து நாட்டில் ஒரு தட்டச்சுப் பொறியை உருவாக்கி இருந்தார்கள். கண்பார்வை இல்லாதவர்களுக்கான பிரெய்லி எழுத்துக்களே இத்தட்டச்சுப் பொறியில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. இதில் தட்டச்சு செய்யப்பட்ட எழுத்துக்களைத் தொட்டுப்பார்த்து, கண்பார்வை இல்லாதவர்கள் படிக்கலாம்.
முப்பத்துநான்கு வருடங்களுக்கு முன்னர் அமெரிக்க வர்த்தக. ஒலிபரப்பொன்றில் ஓர் அருமையான சொற்பொழிவிற்குப் பிறகு இரு நிமிட மெளனம். அதைத்தொடர்ந்து பேசிய அறிவிப்பாளர் சொன்னார் “இயந்திரக்கோளாறு காரணமாக இருநிமிடங்கள் ஒலிபரபபில் தடையேற்றபட்டு விட்டதென்று நீங்கள் கருதுகிறீர்களா? மன்னிக்கவேணி டும் . தவறு உங்களுடையதுதான். அந்த இரு நிமிடங்களிலும் ஒரு விளம்பரம் தரப்பட்டது. என்னவென்று சொல்லத் தெரியுமா? தலைவலியை உண்டாகம், “டொக் டொக்” சத்தமே
எழுப்பாமல், அமைதியாக இயங்கக்கூடிய தட்டச்சு இயந்திரம்
தயாரிக்கும் நிறுவனம் ஒன்று அப்போது அந்த இரு நிமிடங்களில் உங்களுக்கு தங்கள் இயந்திரங்களை இயக்கி காண்பித்தது.
சுருக்கெழுத்துச் தட்டச்சுக் கலைகளில் ஆர்வம் உடையவர்கள் தமது வட்டிலி ஒரு சிறு சுருக்கெழுத்துத் தட்டச்சு நூலகம் ஒன்றை உருவாக்கினால் அது பலருக்குப் பிரயோசனமானதாக இருக்கும்
" س34

roxo
ரைபேது சில சமயங்களில் சுருக்கெழுத்து - தட்டச்சுப் பயிற்சி பெற்றவர்கள் வேலை கிடைக்காமல் விரக்தி அடைவதும் உண்டு.
இதற்கு உதாரணமாக இந்தியப்பெண் ஒருவர் பேட்டி ஒன்றில் கூறியதை அவர் சொன்னமாதிரியே கீழேதரப்படுகின்றது:-
நான் எஸ்.எஸ்.எல்.சி.படித்து 2வருடமாகியும் எம்பிளோய்மன்ட் எக்ஸ்சேஞ்சிலிருந்து இன்டர்வியூ ஏதும் வரவில்லை. இதனால் எம்பிளெய்மன்ட் ஆபிசரை ஒரு முறை நேரில் சந்தித்து “எனக்கு இன்டர்வியூ ஏதாவது போடக்கூடாதா?’ எனக் கேட்டேன். அதற்கு அவர் "அட போம்மா அவங்கவங்க டிகிரி முடிச்சிட்டு கிடக்கிறாங்க அவங்களுக்கே எங்களால் இன்னும் இன்டர்வியூ போட முடிய வில்லை. அதனால நீயும் ஒரு டிகிரி முடிச்சிட்டு வா உனக்கு ஒரு இன்டர்வியூ காட் போடறேன்" என்று சொன்னார். நானும் கஷ்டப்பட்டுப் படிச்சு ஒருவழியாக டிகிரியை வாங்கிட்டு எம்பிளாய்மென்ட் ஆபிசரை போய்ப் பார்த்தேன். அப்போது அவர் “என்னம்மா இது வெறும் டிகிரியோட இருந்தா இந்தக் காலத்தில எப்படி இன்டர்வியூ போடமுடியும்? அதனாலை ரைப்பிரைட்டிங் ஏதாவது பாஸ் பண்ணிவிட்டு வா” என்னு சொல்லி அனுப்பிச்சிட்டாரு. தினம் தினம் இன்ஸ்ரியூட்டில் இரண்டு மணி நேரத்திற்கு மேல் கஷ்டப்பட்டு நானும் ஒருவழியா தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் ரைப்பிரைட்டிங் பாஸ்பண்ணிவிட்டு திரும்பவும் எம்பிளாய்மென்ட் ஆபிசரிடம் போனேன். அப்போது அவர் "எல்லாம் சரிதானம்மா .ஆனா நீ ஷட்ஹண்டும் பாஸ் செய்திட்டா உனக்கு சுலபமா இன்டர்வியூ போட்டு வேலை வாங்கிக் கொடுத்து விடுவேன்" என்று சொன்னதால் இன்னும் ஒரு வருஷம் கஷ்டப்பட்டு கடைசியாக ஷட்ஹண்டும் பாஸ் செய்து திரும்பவும் எம்பிளாய்மென்ட் ஆபிசரைப் பார்த்தேன். அவர் எல்லாம் சரிதானம்மா என்று மீண்டும் இழுக்கத் தொடங்கினார் அதனால் வேலை தேடுவதில் இனிப் பலன் இல்லை என்று முடிவு செய்து நானே ஒரு ரைப்ரைட்டிங் இன்ஸ்ரிரியூட் ஆரம்பித்துவிட்டேன், மாவட்டத் தொழில் மையத்தின் உதவியுடன் என்று கூறியிருந்தார்.
--

Page 24
as A AYT T ay TTN. C7yjuurJJ-u
பொதுவாகச் சுருக்கெழுத்து - தட்டச்சுப்பயிற்சி பெறுபவர்கள் இளம்பெண்கள். பயிற்சியின் பின்னர் தொழில் வாய்ப்புப் பெற நேர்முகப்பரீட்சைக்குச் செல்லவேண்டும். அத்தகைய ક6o சந்தர்ப்பங்களில் புதிய அனுபவங்களைப் பெறவும் சங்கடங்களைச் சமாளிக்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்படும். அதற்கொரு உதாரணம் கீழே தரப்படுகிறது.
மனேஜரின் அறைக்கு வெளியே இரண்டு பெண்கள் உட்கார்ந் திருந்தார்கள். மூன்றாவதாகப் போய் அமர்ந்து கொண்டாள். ஷோபா, அன்று அங்கு ஸ்டெனோ வேலைக்கு நேர்முகத்தேர்வு.
பெண்கள்மட்டும் விண்ணப்பிக்கவும் என்று விளம்பரத்திலேயே குறிப்பிடப்பட்டிருந்ததால் ஆண்கள் யாரும் வரவில்லை. மற்ற இரு பெண்களும் தன் அளவுக்கு அழகில்லை என்று கணித்துக் கொண்ட ஷோபா உள்ளுக்குள் மகிழ்ச்சி அடைந்தாள். ஸ்டெனோ வேலைக்கு அழகும் ஒரு ப்ளஸ் பாயின்ட் என்று சொல்வார்கள்.
பேட்டி ஆரம்பமானது. ஒவ்வொரு பெண்ணாக உள்ளே
போய் வந்து விட்டார்கள். கடைசியில் ஷோபா அழைக்கப்பட்டாள். மனேஜரின் அறைக்குள் நுழைந்தாள் ஷோபா.
“டேக் யுவர் சீற்”
உட்கார்ந்தாள்.
“உன் பெயர்?"
ஷோபா
“எதுவரை படித்திருக்கிறாய?”
பி.காம்
“ரைப்பிரைட்டிங் ஷாட்ஷாண்ட்?"
ரைப்பிரைட்டிங்கில் ஹையர் பாஸ் பண்ணியிருக்கேன். சுருக்கெழுத்து லோயர் பாஸ் பண்ணிவிட்டு ஹையருக்கு தயார் பண்ணிக்கொண்டிருக்கின்றேன்.
-36

“சரி இப்போ நான் ஒரு லெட்டர் டிக்டேட் பண்றேன். அதைச் சுருக்கெழுத்தில் எழுதிக்கொண்டு அதோ மூலையில் இருக்கிற ரைப்ரைட்டரில் அடித்துக் கொண்டுவா பார்க்கலாம்.
கடிதத்தை எழுதி டைப் அடித்து எடுத்துவந்து நீட்டினாள் ஷோபா. அதை வாங்கிப் பார்த்த மனேஜரின் முகம் மலர்ந்தது.
“வெரி குட் ” “வயது இருபத்தைந்தைத் தாண்டி விட்டதே. வீட்டில் கல்யாணப் பேச்சு எடுத்திருப்பார்களே? “
இதென்ன கேள்வி என்பது போல் எரிச்சலடைந்தாள் ஷோபா. "திருமணமானாலும் தொடர்ந்து வேலையில் நீடிப்பாயா என்பதைத் தெரிந்து கொள்ளவே இதைக் கேட்கிறேன். 'நீடிக்கத்தான் அபிப்பிராயம் இருக்கிறது. “அவசரமாக வேலை இருக்கும் நாட்களில் தாமதமானாலும் அதைச் செய்து முடித்து விட்டுத்தான் நான் வீட்டுக்குக் கிளம்புவேன். அப்போது நீயும் என்கூட இருக்க வேண்டிவரும்.” ஷோபா தயங்கினாள்.
"கவலைப்படாதே «* an o e o «o o as e ao o a o a அது மாதிரி சந்தர்ப்பங்களில் நானே உன்னை என் காரில் கொண்டுபோய் வீட்டில் drop பண்ணி விடுகிறேன்.சரிதானே? ”
அதைத் தொடர்ந்து தன்மீது தீர்க்கமாக விழுந்த பார்வையைச் சந்திக்க முடியாமல் நெளிந்தாள் ஷோபா.
"நீ ரொம்ப அழகாக இருக்கே . உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு."
ஷோபாவின் விண்ணப்பத்தில் Appointed என்று எழுதி பியூன் மூலம் கொடுத்தனுப்பிவிட்டு " நாளையிலிருந்து நீ வேலைக்கு வந்து விடு” என்று மனேஜர் சொன்னதும் ஷோபாவிற்கு மகிழ்ச்சி தாளவில்லை. “தாங்கியூ மெடம்” எனச் சொல்லிவிட்டு எழுந்தாள்.
-37

Page 25
சிறு தவறு பெரும்பாதிப்பு
தட்டச்சுப் பொறிக்கும்போது ஏற்படும் சிறு தவறு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இதற்கு உதாரணமாக நிகழ்வு ஒன்று கீழே தரப்படுகின்றது.
-பம்பாயில் ஓர் அலுவலகத்தின் மேலதிகாரி தனக்குக் கார் வாங்கப் பணம் கடன் கொடுக்கும்படி தனது தலைமை அலுவலகத்திற்கு விண்ணப்பித்தார். மிகவும் நம்பிக்கை வாய்ந்த தன் ஸ்டெனோ -ரைப்பிஸ்டைக் கூப்பிட்டு விண்ணப்பத்தைச் சொன்னார். அவளும் அதை எழுதிக்கொண்டு ரைப் செய்து கொடுத்தாள். அவள் மீதிருந்த நம்பிக்கையால் அதைப் பாராமலேயே கையெழுத்திட்டு அனுப்பி வைத்தார். இரண்டு நாட்களில் தலைமை அலுவலகத்தில் இருந்து தந்தி வந்தது.
“பூனை வாங்கப் பணம் கடன் வேண்டுமா?’ இது என்ன கேள்வி?
ரைப்பிஸ்ட் தன் தவறைப் புரிந்து கொண்டாள். Car என்பதற்குப் பதிலாக Cat எனப் பொறித்து விட்டாள். தட்டச்சுப் பொறியில் r ம் tயும் அடுத்தடுத்து இருப்பவைதானே.
யாழ்ப்பாண மாவட்டத்தில் எந்தவொரு நிறுவனத்திலும் (சுருக்கெழுத்துச் தட்டச்சு போதிக்கும் நிறுவனம்) ஆங்கிலச் சுருக் கெழுத்துச் தட்டச்சு போதிக்க ஒரு நிரந்த ஆசிரியர் கூட இல்லாதது. ஒரு குறைபாடு
-38

சுருக்கெழுத்து ~ தட்டச்சு நகைச்சுவை
சுருக்கெழுத்து.தட்டச்சு தொடர்பான பல நகைச்சுவைச் சம்பவங்கள் நடந்துள்ளன. அவற்றில் சில கீழே தரப்பட்டுள்ளன;
1. பிரபல நகைச்சுவை எழுத்தாளரான 'பேனாட்ஷா பல அண்டுகளுக்கு முன் தமது அலுவலகத்தில் சக ஊழியர் ஒருவருக்குப் போட்டுக் காண்பித்த கணக்கு :
அமெரிக்காவின் ஜனத்தொகை 17 50 00 000 65 வயதிற்கு மேற்பட்டோர் 6 00 00 000 மீதி 11 50 00 000 21 வயதிற்கு மேற்பட்டோர் 5 70 00 000 மீதி 5 80 00 000 அரசாங்க ஊழியர்கள் 2 60 00 000 மீதி 3 20 00 000 போர்ப்படை வீரர்கள் 40 0 000 மீதி 2 80 00 000 வேறு வேலைகளில் இருப்பவர்கள் 2 40 00 000 மீதி 40 00 000 நோயாளிகள் 37 00 000 மீதி 3 00 000 வேலை செய்ய விரும்பாதோர்கள் 2 99 998 மீதி -
மிஞ்சியிருப்போர் நாம் இரண்டே பேர்தான். எனக்கோ உடம்பெல்லாம் வலியாக இருக்கிறது. இந்த 350 பக்கங்களையும் நீயே ரைப் பண்ணிவிடேன்.

Page 26
2. ஒரு நாடக ஒத்திகையின் போது நடிகர் ஒருவர் பேசிய வசனம் “உறல்லோ உறல்லோ உறம்ஸா ஸ்பீக்கிங் உறியர்” நாடகத் தயாரிப்பாளர்களுக்கும் ஏனையோருக்கும் இது விளங்க வில்லை, திகைத்தனர். நடிகர் தட்டச்சில் பொறிக்கப்பட்ட பிரதியை வைத்தே வாசித்தார்.
தமிழில் 'ஹ' வினைத் தட்டச்சிற் பொறிக்கும்போது 'உ' 'ற'வும் சேர்த்தே பொறிக்கவேண்டும். இது அவருக்கு தெரியாததால் வாசிக்கும்போது பிழை ஏற்பட்டது. சரியான வசனம் “ஹல்லோ ஹல்லோ ஹம்சா ஸ்பீக்கிங் ஹியர்.”
米米米
3. ஓர் அலுவலகத்தில் வேலை செய்பவர்களின் மேசையில் அவர் களது பதவியைக் குறிக் கும் பலகைகள் வைக்கப்பட்டிருந்தன. அதாவது மனேஜர், கணக்காளர், லிகிதர் போன்று டைப்பிஸ்ட் என்ற பெயர்ப் பலகையும் வித்தியாசமான முறையில் இருந்தது. அதாவது டைப்பிஸ்ட் என்பதில் ‘ட’ வைச் சுற்றி பெட்டி போட்டிருந்தது. விசாரித்தால் அவர் தற்போது வேலை பழகுவதால் (அனுபவம் போதாது) பெட்டியில் இருக்கும் எழுத்தை L ஆகக் கருத வேண்டும் என்றார்களாம்.
லேடி ஸ்டெனோ என்ற பெயர் எப்படி வந்தது?
வீட்டில் பெண்களே இடைவிடாமல் பேசிக்கொண்டிருக்க அதைக் கேட்டுக் கொண்டே இருக்கவேண்டும் என்ற நிலைக்கு ஆளான அப்பாவி மனிதர் ஒருவர் இட்ட சாபம்தான் அலுவலகங்களில் ஆண்கள் சொல்லிக் கொண்டிருக்க, அதைப் பெண்கள் வாய்மூடிக் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும் அன்றி சுருக்கெழுத்திலும் அதைக் குறித்துக்கொள்ள வேண்டும் என்ற லேடி ஸ்டெனோ ’ பதவி உண்டாயிற்று என்று கூறுகிறார்கள். இதில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்பது தெரியாது.
-40

4. தகப்பன் ; ரைப்பிஸ்ட் தேவையென்று பேப்பரிலே விளம்பரம்
கொடுத்து நம்ம வீட்டு முகவரி கொடுத்திருக்கியேடா! என்ன வேலை அது
LD56 : தினம் பத்துக் கம்பனிகளுக்கு நான் வேலை கேட்டுக் விண்ணப்பம் ரைப்பண்ண வேண்டியிருக்கே, அதற்கு ஆள் போட்டால் தான் சரியாக இருக்கும்.
தகப்பன் : ???
5. மனேச்சர் : அட தப்பே இல்லாமல் டைப்
பண்ணியிருக்கிறியே!
ரைப்பிஸ்ட்: ஒரு மாதம் லீவிலை இருந்ததாலேயோ
என்னவோ . டச்’ விட்டுப்போச்சுச் சேர்.
6. தப்பும் தவறுமாக ரைப் செய்யும் ரைப்பிஸ்ட் தப்பிஸ்ட்”
என்று சொல்லாமா?
-41

Page 27
உசாத்துணை நூல்கள் / சஞ்சிகைகள் .
1.
ஈழத்துத் தமிழ் சுருக்கெழுத்துத் தந்தை சி.இராமலிங்கம் வெள்ளிவிழாமலர் - 1976 தமிழ் சுருக்கெழுத்து நூல் ம.அனந்தநாராயணன்
Pitman Shorthand Instructor & Key
Gregg Shorthand
கலைக்களஞ்சியம்
புதிய உலகம் அறிவுக் களஞ்சியம் 1,7,8,12 சஞ்சீவி - 10.09.88, 12.11.88, 22.189 ஈழநாடு 13.05.90, 19.12.90 அறவழி ஆடி 89 வாரமுரசொலி 25.10.88
ராணி 208.67 தினமணிக்கதிர் 29.66, 14.10.66, 20.8.71 கல்கண்டு 22.7.66, 30.3.67, 254.68, 5.6.69, 19.6.69 குமுதம் 28.3.68, 19.6.69, 26.6.69 கல்கி 28.7.68, 1968, 20.10.68 ஆனந்தவிகடன் 11.8.68, 15.12.68 Daily News 25.9.1986


Page 28
COV er Printed

by CTRU Peinters, Thirunelvely.