கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கட்டு வைத்தியம்

Page 1


Page 2


Page 3

6. சிவமயம்
கட்டு வைத்தியம்
Lju af fif:
சித்த மருத்துவ கலாநிதி சே. சிவசண்முகராஜா
பி. எஸ். எம். எஸ். (இலங்கை)
சித்தமருத்துவ வளர்ச்சிக் கழகம்
55.56 TDL, 366), T35).

Page 4
நூற்பெயர்: védureofoi:
66 fou SPG36 au 67 di :
அச்சிடுவோர்:
usty faco: முதற்பதிப்பு:
விலை
பதிவுத் தரவுகள்
கட்டு வைத்தியம் Dr. Ggf. சிவசண்முகராஜா
.. (B.S. M.S (eey) கந்தரோடை, கன்னாகம். சித்த மருத்துவ வளர்ச்சிக் கழகம் கந்தரோடை, சுன்னாகம் பாரதி பதிப்பகம் 430, காங்கேசன்துறை வீதி, யாழ்ப்பாணம். பதிப்பாசிரியருக்கு 2000 , *9. חזחמL
MUn 50,00

முன்னுரை
கட்டு வைத்தியம் என்னும் சிகிச்சைப் பிரிவானது ஈழத்துச் சிறப்புச் சித்த மருத்துவத் துறைகளில் இரண சிகிச்சைப்பிரிவில் அடங்குகிறது. அந்நியர் ஆட்சியில் எமது அறுவை மருத்துவச் சிகிச்சை முறைகள் கவனிப்பாரற்றுக் கைவிடப்பட்ட போதிலும், விரணங்களுக்குச் சிகிச்சை யளிக்கும் பிரிவானது கட்டுவைத்தியம் என்ற பெயருடன் சில வைத்தியர்களால் சிறப்பாகக் கையாளப்பட்டு வந்தது. இத்துறையில் தேர்ச்சி பெற்ற வைத்தியர்கள் இணுவில், பருத்திக்கலட்டி, நல்லூர், வடலியடைப்பு போன்ற இடங்களில் வாழ்ந்து மக்களுக்குப் பெருஞ்சேவையாற்றி யுள்ளனர்.
நான் ஈழத்துச் சித் த ம ரு த் துவ நூல்கள் பற்றிய நூலாய்வை மேற்கொண்டிருந்த வே  ைள யில் எனது மாணவ நண்பன் டாக்டர் க. ரீதரன் ஓர் ஒலைச் சுவடி யைக் கொண்டு வந்து காண் பித் தார். அது கட்டு வைத்தியம் சம்பந்தமான பல அபூர்வ சிகிச்சை முறைகளைக் கொண்டிருந்தது. அதனை அச்சில் வெளியிட்டு அதிலுள்ள விடயங்களைப் பாதுகாப்பதுடன் அதனால் சித்தமருத்து வர்களும் பயன்பெற வேண்டும் என்று கருதினேன். அவ் வெண்ணம் தற்போதுதான் நிறைவேறியுள்ளது. ஒரே யொரு கவலை என்னவெனில், ஏட்டுப்பிரதியில் நூலாசிரி யரின் பெயரோ அல்லது ஏட்டை எழுதிய வைத்தியரின் பெயரோ குறிப்பிடப்பட்டில்லை.

Page 5
இவ்வேட்டுப்பிரதி யாழ்ப்பாணத் தமிழரின் வசன நடையில் அமைந்துள்ளது. ஏட்டிலுள்ள அளவைகளைத் தற்கால அளவைக்கு மாற்றிக் கொடுத்துள்ளதும், முன், பின்னாக ஒழுங்கற்று இருந்த சிகிச்சை மு  ைற க  ைள இயன்றளவில் ஒழுங்குபடுத்தித் தந்திருப்பதும் தான். பதிப்பாசிரியர் செய்த மாற்றங்களாகும். நூலின் இறுதியில் முக்கியமான கலைச் சொற் களு க் கா ன விளக்கம் பதிப்பாசிரியரால் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நூல் வெளிவருவதற்கு உறுதுணையாக இருந்த டாக்டர் க. பூரீதரன், டாக்டர் திருமதி பிரேமா சிவசண்முகராஜா ஆகியோருக்கும், இந்நூலின் அட்டைக் கான ஒவியத்தை வரைந்துதவிய யாழ். இந்துக்கல்லூரி சித்திர ஆசிரியர் திரு. துரை. துஷ்யந்தன் அவர்களுக்கும், எனது சகோதரர் யாழ். இந்துக் கல்லூரி உப அதிபர் திரு. சே. சிவசுப்பிரமணியசர்மா, பாரதி பதிப்பக உரிமை யாளர் திரு. இ. சங்கர், மற்றும் பாரதி பதிப்பக ஊழியர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
கவனிப்பாரற்றுக் கிடக்கும் ஏட்டுச் சுவடிகளை அச்சில் கொண்டுவரும் எமது முயற்சிக்குத் தமிழ் மக்களும் சித்தமருத்துவர்களும் தொடர்ந்தும் தமது ஆதரவை வழங்குவதுடன், இந்நூலைப் பெற்றுப் பயன்பெறுமாறு வாழ்த்தி விடை பெறுகிறேன்.
கந்தரோடை, சே. சிவசண்முகராஜா
சுன்னாகம்.
13-03-2000

1.
2.
கட்டு வைத்தியம்
கட்டு பழுக்க மருந்து
1. நீர்ப்பூலா இலையை கோழி முட்டை வெண்கரு
விட்டரைத்துக் கட்டவும் - கட்டு பழுக்கும்.
2. குருவீச்சம்பூவை மண்டிக்கள்ளில் அவித்துக்
கட்ட பழுக்கும்.
3. வேப்பிலையை இடித்துக் கட்டவும்.
பிறகு வேப்பிலையை வறுத்துக் கட்டவும் , பிறகு சிறுநீர்விட்டு வறுத்துக் கட்டவும் கட்டு பழுக்கும். எல்லாவித புண்ணும் மாறும்.
5G, 665, 355 fi56I 355 6 di5 fò என்பவற்றுக்கு மருந்து
1. மாவிலங்கம் பட்டையை இடித்துக்கட்டவும். 2. திருக்கொண்டல் இலையை இடித்து வைத்துக்
கட்டவும். 3. கொடிக் கள்ளியைப் புழுங்க வைத்து (அனலில்
வாட்டி) வைத்துக் கட்டவும்.
35 06Î 35 12 56)Ju LD5535
கொவ்வைத்தண்டுத்தும்பு, குறி ஞ் சா இ  ைல, தேங்காய்ப்பூ, மஞ்சள் என்பவற்றை இடித்து பொட் டணி கட்டி வேட்டில் அவித்து கறள் கட்டியில் ஒத் திட்டு, அம்மருந்தை (பொட்டணியை) அவிழ்த்து கறள் நோவில் பரவிக்கட்டவும். இவ்விதம் மூன்று நாட்கட்டவும்.

Page 6
4.
35.GË Lucipi 5 D5j5
அரிசிமாக்குருணனும் வட்டத்துத்தி இலையும் எடுத்து மண்டிக்கள்ளில் அவித்துப் போடவும்.
காதுக்குள்ளே கட்டி வெடித்தால் எண்ணெய்
காத்தோட்டி வேர், குருந்தம் வேர், காண்டை வேர், நெல்லிவேர், வட்டுவேர், மஞ்சள், வெள் ளுள்ளி, வெளுத்தற்பிசின், வசம்பு, முருங்கைவேர் இவை வகைக்கு 5 கிராம் வீதம் எடுத்து தூள் பண்ணி வேப்பெண்ணெயிற் கொதிக்க வைத்து, வெற்றிலை வெடிபதத்தில் இறக்கவும். இரண்டொரு துளிவீதம் காதில் விட்டுவர மாறும்.
நகக் காளான் குளிகை
கர்ப்பூரம், பச்சைக் கர்ப்பூரம், அக்கரா, சித்த ரத்தை, நகக்காளான், முசிற்றுமுட்டை, நல்வேளை சம அளவில் எடுத்து கரிப்பான் சாறுவிட்டரைத்து குன்றிமணிப் பிரமாணம் குளிகை செய்து நிழலுலர்த் திக் கொள்ளவும்.
புண்ணைத் தொடவாங்கல், வலிப்பு முதலிய வற்றுக்கு வேப்பெண்ணெயைக் கொதிக்க வைத்து, இறக்கி, ஆறவைத்து அதில் ஒரு கு விரி  ைக  ைய உரைத்துக் கொடுக்கவும்.
அறணித்த கட்டைக் கரைக்கவும், விரைவில் உடைக் கவும் மருந்து i
காண்டைவேர், சீவி எடுத்து மஞ்சள் சேர்த்
திடித்துச் சிறுக வறுத்துக் கட்டவும். வீக்கம் மெல்ல மெல்ல வற்றும்.

10
.
கட்டு வற்றப் பகு
சுக்கு = 120 கிராம் எடுத்துத் தூள் செய்து கொள்ளவும். மருதோன்றி இலையும், பட்டையும் எடுத்து துவைத்து, அவித்து, பிழிந்து, சாறெடுத்துக் காய்ச்சி பதமாய் வரும்போது சுக்குத்தூளும் போட்டுக் கிண்டி இறக்கிக் கட்டிற் போடவும்.
56 Qiu Sufi 35 tij Fat), 5 f, i QJ I bib, 5 (pj5, தலை விறைப்பு ஏற்பட்டால் மருந்து
திப்பலி, சுக்கு, கந்தகம், துத்தம், எருசுட்ட சாம்பல் வகைக்கு 5 கிராம் எடுத்து எருக்கம்பால் விட்ட ரைத்து தூளாக உலர்த்தி வைத்துக் கொண்டு, நாசியில் ஊதவும்.
கட்டு வியாதி விரைவில் உடைக்க மருந்து
உலுவா, வெள்ளுள்ளி, பெருங்காயம், மூன்றும் சமன் எடுத்து கோழி முட்டை வெண்கரு விட்டரைத்து துணி யிற் பூசி கட்டின் முகம் விட்டுப் போட வீக்கம், விரணம், குத் து  ைள வு, கணப்பு நீங்கி, கட்டும் சிறுக உடைக்கும்.
சகல கட்டு, பிளவை, சிலந்தி, கரப்பன், திரட்சிப்புண் 6656) ) pööÜ 3 665 000 i
வசம்பு, ஒர் உள்ளிப்பூடு, பெருங்காயம், மதுரம், காண்டைவேர், களற்சி, கொடிவேலி, சிறுகுறிஞ்சாய், தயிர்வேளை வகைக்கு சமன் எடுத்து, அரைத்து, நல் லெ ண் ணெ யி ற் சேர்த்துக் காய்ச்சி, பதத்தில் வடித்து, உள்ளுக்கும் கொடுத்து, கட்டு, வீக்கத்திலும்
of LDfTgOjtih.
3

Page 7
12. கட்டுவியாதிக்குத் துவர் எண்ணெய்
இரசம்=5 கிராம், மஞ்சள், கடுகு, இயங்கம் வேர் சம அளவு எடுத்து, நாலையும் அரைத்து, ஒடுவடக்கிச் சாறு, பருத்தியிலைச் சாறு, ஒதியம்பட்டைச்சாறு, சித்திரப்பாலாவிச்சாறு, என்பன விட்டரைத்து, தேங் காய் எண்ணெயிற் கலந்து, காய்ச்சி, மெழுகுபதம் வடித்து துணியிற்றோய்த்துப் போடவும். எந்தவித மான கட்டு, புண்ணும் மாறும்.
13. வேறு
புங்கம்பாலும், மஞ்சளும், தேங்காய் எண்ணெயும் கலந்து சூரியபுடம் வைத்து புண்ணிற் போ ட வும்
LDTgib.
14. எந்தவித கட்டு, கரப்பன், பிளவைக்கும் மருந்து
வெள்ளைப் பாஷாணமும், கோதுமை அரிசியும்
சரி கூட்டிக் கோழிமுட்டை வெண்கரு கூட்டி அரைத் துப் போடவும்.
15
மாறாத கட்டு, பிளவை, சிலந்திப்புண்கள் சகலதுக்கும் கைகண்ட எண்ணெய்
இரசம், துத்தம், துருசு வகைக்கு - 5 கிராம், முருக்கிலைச் சாறு, முருங்கைப்பட்டைச் சாறு, வெற் றிலைச் சாறு, குப்பைமேனிச்சாறு, வகை சமன் விட்டு அரைத்து தேங்காய் எண்ணெய் சேர்த்துக் காய்ச்சி, மெழுகுபதத்தில் கடுகுடன் வைத்துக் கொண்டு, தொட் டுப்பூச பிளவை, கட்டு, சிலந்தி, பவுந்திரம், தொடை வாழை, பரு எல்லாம் தீரும்.
4.

16. கட்டு, பிளவைக்குக் காரம்
ஊமத்தங்காய் கருகச் சுட்டு, சுண்ணாம்பு கூட்டி
அரைத்து திரியில் தோய்த்து புண்ணில் வைக்கவும்.
கட்டு உடைக்கும்.
17. கட்டு வற்ற மருந்து
வாழைக்காம்பு சுட்டுக் கரியாக்கி அதனுடன் சுண் ணாம்பு கூட்டி தழும்பில் வைக்கவும்.
நெற்பொரி, ஆமணக்கம் விதை, எள்ளுப்பொரி சேர்த்தகூரத்து நெய்யிற் கலந்து பூச வற்றும் அல்லது உடைக்கும்.
18. தத்தம், கன்னத்தில் திரண்ட கட்டு, சன்னிவலி, முறிந்து இரு புறத்தில் தந்தத்திற் கட்டு வியாதிகளுக்கு மருந்து
முடக்கொத்தான் இலை, கீழ்க்காய் நெல்லி இலை
சமன் எடுத்து பெருங்காயம், மிளகு, வெள்ளுள்ளி
இவையும் சமன் எடுத்து தட்டி முலைப்பால் விட்ட
ரைத்துப் பூச வீக்கம், விதனம், கடுப்பு, திரட்சி எல்லாம் மாறும்.
19. சகல கட்டுக்கும் மருந்து
1. வெந்தோண்டிக் கிழங்கு, தொடைவாழைவேரும்
கிழங்கும் , ஒலுக்கிழங்கு, கற்றாளங்கிழங்கு, கோடகசாலைக் கிழங்கு, களற்சித் துளிர், கோரைத்துளிர், கொவ்வைக் கிழங்கு இவை சமன் எடுத்து, உப்பும் சின்னட்டி அரிசிமாவும் சேர்த்து அரைத்துப்பூச மாறும்.
5

Page 8
20.
2.
22.
இலுப்பை இலை, நொச்சியிலை, குறிஞ்சாயிலை, அமுக்கிராக்கிழங்கு அரைத்துப் பூசமாறும். வெள்ளைப் பாஷாணம், குதிரைப் பாஷாணம், கெளரி பாஷாணம், சிவந்த பாஷாணம், வச்சநாபி, பெருங் குரும்பை, தேவதாரு, அதிவிடயம், வெந்தோண்டிக் கிழங்கு என்பவற்றைச் சமன் எடுத்து தேங்காய்ப் பாலில் அரைத்துக் காய்ச்சி, மெழுகுபதம் வடித்து கடுகைப் புண்ணுக்குப் போடவும். எண்ணெயை மாறாத புண்ணுக்குப் போட மாறும்.
நீர்ப்பூலா இலையும், கோழிமுட்டையும், தேங்காய்ப்
பூவும் கோடைக்கிழங்கும், பச்சைமஞ்சளும் அரைத்
துப் பூச மாறும்.
உடைத்த கட்டில் சலம் வற்ற மருந்து
வேப்பம்பட்டையும், தேங்காய்ப்பூவும் பொன்னிற மாக வறுத்துக் கட்டவும்.
கட்டுக்கு உள் மருந்து
மிளகு, சாரணைக்கிழங்கு, நல்லதண்ணிக்கிழங்கு முருங்கைக் கொழுந்து, என்பவற்றைத் தேங்காய்ப் பாலில் அரைத்து உள்ளுக்குக் கொடுக்கவும் வற்றும் . (நல்ல தண்ணிக் கிழங்கு - ஒரு மூலிகை வேர்)
கட்டுக்குப் பூச மருந்து
1. இலுப்பை வேர்ப்பட்டை, குன்றிமணி வே ர், எருக்கம் வேர், மாவிலங்கம் வேர்ப்பட்டை, சமன் எடுத்து துவைத்து சாறு எடுத்து எலுமிச்சம் புளி யிலும், தோடம்புளியிலும், சின்னட்டி அரிசிமாவும் போட்டுக் கொதிக்க வைத்துப் பூசவும். வீக்கம் வற்றும்.

2. முள்முருக்கம் பட்டை, முருங்கைப்பட்டை, பச்சைமஞ்சள் இடித்து வறுத்துக் கட்டவும்.
3. மா விலங்கம் வேர், ஒதியம் வேர் எடுத்து சீவித் தூளாக்கி, நல்லெண்ணெயிற் கொதிப்பித்து பொன்னிறமாக இறக்கி, கட்டில்  ைவத்து க் கட்டவும்.
4. வாய் பேசாமல் தயிர்வளை இலையைப் பிடுங்கி,
கசக்கிக் கட்டவும்.
23. கட்டு வற்ற மருந்து
1. எருக்கம்பாலில் குன்றிமணிப் பருப்பை அரைத்துப்
பூசக் கட்டு வற்றும். நோவும் மாறும்.
2. எருக்கம் பாலில் வெள்ளைப் பாஷாணம், குன்றி மணிப்பருப்பு என்பவற்றைச் சேர்த்தரைத்து முகம்விட்டுப்பூச சகல கட்டு, பிளவை, வீக்கம், நோவு என்பன மாறும்.
24. கட்டு வியாதிக்குச் சந்தப்பாணம்
ஓடுநீக்கிய ஆமணக்கம்விதை, புங்கங்கொட்டை, முருக்கங் கொட்டை, வேப்பங்கொட்டை, பழந் தேங் காய்ப்பூ, நெற்பொரி, மஞ்சள் இவற்றையெல்லாம் சேர்த்து, ஒட்டிலிட்டு, இளவறுப்பாய் வறுத்து. தேங் காய்ப்பூவைக் கருகவறுத்து, அம்மியிலிட்டு, தண்ணிர் விடாமல் அரைத்து, இளகி எண்ணெய் கசியுமட்டும் அ ைபத்து, கட்டுமேலே போடவும்.
25. 359$g5 Lf3 Dbb
1. சுண்ணாம்பு, எருமை வெண்ணெய், வெள்ளை பூடு மூன்றும் அரைத்துப் பூசவும். வற்றும் .
2. வெள்ளைக் கல்லைத்தட்டி பொடிபண்ணி 7
மிளகும் வைத்து ஊமத்தங்காய்ச் சாறுவிட்டு அரைத்துப் பூசக் கட்டு வற்றும்.
7

Page 9
26. āL0 6ÎIIII$ẳ9ỗ (56ff605 - 66IộifIIIÎ18HITöff
(கை கண்டது)
சேங்கொட்டை = 4, வெள்ளைப்பாஷாணம், கெளரிபாஷாணம், நாவி, அரிதாரம், இரசம், நிர்விஷம், துருசு இவை வகைக்கு 5 கிராம் அளவில் எடுத்து, களற்சிச் சாறு விட்டரைத்து, மிளகுப் பிரமாணம் குளிகை செய்து, எருக்கிலைச் சாற்றில் உரைத்துப் போடவும். ஊமத்தை இலையை வாட்டி மேலே போடவும். எந்தக் கட்டுவியாதியும் மாறும்.
27. கட்டிக்குப் பூச்சுமருந்து
வேப்பெண்ணெய், ஆமணக்கெண்ணெய், எள்ளு, தேன், சுண்ணாம்பு என்பவற்றை அரைத்து, நெட்டி முறிகின்ற பதத்தில் வழித்து கட்டியிற்பூச வற்றும்.
28. புண்ணுக்குத் துவர் எண்ணெய்
துத்தம், துருசு, கைப்பு, கடுக்காய் வகைக்கு - 5 கிராம், அத்திவேர், ஆவாரைவேர், நீர்ப்பூலாவேர், துடரிவேர், நாகலவிட்டாடியம்வேர்(?), காஞ்சுரை வேர், புங்கம்வேர், ஒதியம்பட்டை சமன் எடுத்து, துவைத்து, அவித்துப் பிழிந்து சாறு எடுத்து அந்தச் சாறுவிட்டு மே ற் சொ ன் ன சரக்கை அரைத்து, வேப்பெண்ணெய், தேங்காய் எண்ணெய் சமவளவாய் எடுத்து அதிற் சேர்த்துக் கரைத்து மூன்றுநாள் ஊறக் காய் ச் சி, மெ ழு கு ப த ம் வடித்து, ப ஞ் சி ல் தோய்த்து புண்ணில் போட்டுவரவும். எப்படிப்பட்ட புண்ணும் மாறும்.
குறிப்பு:- துடரிவேரினை வெ ய் யி லி ல் காய
வைத்து, தூள் பண்ணி எண்ணெய்க்கு
மேல் புண்ணில் தூவி விடவும்.
8

29.
30.
3.
32.
பத்தியம்:- முருங்கைப் பிஞ்சு, கோழிமுட்டை வெள்ளைக்கரு, தூதுவளை இலை சேர்க்கவும்.
புண்ணுக்கு மருந்து
1. பேய்நொச்சியிலையை அரைத்துப்பூச மாறும்.
2. பேய்க் கொம்மட்டி இலைக்கு சு ன் ண |ா ம் பு கொஞ்சம் சேர்த்து அரைத்து அல்லது காய்ச்சி வைத்து, பாவட்டம் இ  ைல வாட்டி வைத்துக் கட்டவும். எந்தப்புண்ணும் மாறும் ,
புண்ணுக்கு எண்ணெய் (கையாட்சி)
கைப்பு, களிப்பாக்கு, கடுக்காய், ஒதியம்பட்டை, ஆவாரை, அல்லி, வகை சமன் எடுத்து, ஒடுவடக்கிச் சாறு விட்டரைத்து, வேப்பெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் பதமாகக் காய்ச்சிக் கடுகுடன் சேர்த்து வைத்து எந்தப் புண்ணுக்கும், ஒடுவுக்கும் போட்டு ஊதிவிடவும்.
பதினெட்டுப் புண்ணுக்கும் எண்ணெய்
சித்திரப்பாலாவி இலை, ஈரவெங்காயம், சமன் எடுத்து, அரிந்து, ந ல்  ெல ண் ணெ யி ற் போட்டுக்
காய்ச்சி, மெழுகுபதம் வடித்துப் புண்ணிற் போடவும். ஆறாத புண்ணும் மாறும்.
புண்ணுக்குப் பூச்சு
1. மூக்கரட்டை, சாரணை இலை, கோட்டம் சமன் அரைத்து புண்ணின் முகம் விட்டுப் பூசவும்.
9

Page 10
33.
2. வசம்பு, வெள்ளு ஸ் ஸ்ரீ, கராம்பு, இயங்கம் கொழுந்து என்பவற்றை கருக வறுத்து ஆமணக் கெண்ணெயிற் கொதிப்பித்துப் பூசவும்.
3. குன்றிப்பருப்பு, எருக்கிலையைப் பாலில் அரைத் துப் பூசவும். சகல கட்டு, பிளவையும் மாறும்,
4. குன்றிப்பருப்பு, வெள்ளைப்பாஷாணம், சமன் எடுத்து எருக்கம்பால் விட்டரைத்துப் பூசவும், சகல கட்டு, பிளவை, தொடைவாழை, பவுந்திரம் என்பன மாறும்.
புண், பெலத்த புண்கள் மீறிய வியாதியானால் உடனே புகைக்கு மருந்து
சாதிலிங்கம், இரசகர்ப்பூரம், இரசம், வெள்ளைப் பாஷாணம், வகைக்கு ஊ 5 கிராம், கருஞ்சீரகம் - 15 கிராம் (பெலத்த புண், குட்டமான வியாதி என்றால் மட்டும் பாஷாணம் கூட்டவும்) மற்ற மருந்துகளை ஒன்றாக அரைத்து, நன்றாய்த் தூள் செய்து வைத் துக் கொண்டு பாயாலே கட்டு செய்து, ஒருவர் கூட நின்று, கழுத்துவரை புகை புறப்படாமல் கம்பளி அல்லது புடைவையாலே சுற்றிப் பின் சிறு சட்டியில் புளியந்தணல் போட்டு, அதில் தூள் மருந்து வெரு கடிப்பிரமாணம் போட்டு, பாய்க்குள்ளே வைத்து, புகை ஓய்ந்ததும் நோயாளியை வெளியே எடுக்கவும். இவ்விதம் அந்தி, சந்தி வெருகடிப்பிரமாணம் எடுத்து ஏழுநாள் செய்யவும்.
பத்தியம் - பொடிக்கருவாடு, உப்பு வறுத்து க் கூட்டி, முருங்கைப் பிஞ்சு, மிளகு நீர், கூட்டித் தின்னவும்.
O

34.
35.
வாய்க்குள்ளும், கண்டத்திலும் வரும் விரணம், விக்கம் சகலதுக்கும் ஒத்தடமும் பூச்சு மருந்தும்
1. வெருகங்கிழங்கும், காஞ்சுரம் பட்டையும், இலை யும், எலுமிச்சம் பட்டையும், இலையும், வசம்பும் இடித்து பொட்டணி கட்டி அவித்து ஒத்தடம் கொடுக்கவும். எப்படிப்பட்ட வீக்கம், விதனமும் மாறும்.
2. காஞ்சுரந்துளிர், முதிரந்துளிர், முருங்கைத்துளிர் என்பவற்றைச் சிறுநீர்விட்டரைத்து, பசுவின் நெய்விட்டுக் குழைத்துப் பூச வீக்கம் மாறும்.
3. அமுக்கிராய்க் கிழங்கு, ஆனைப்பல்லு , வசம்பு, வெள்ளுள்ளி, கருங்கறையான் மண், குரக்கன் பொரி, தோடம்புளி விட்டரைத்து பூச கன்ன வீக்கம், விதனம், உளைவு, கடுப்பு மாறும்.
கன்னம், கொடுப்பு, அண்ணாக்கு, முரசு, நாக்கு, உதடு, பல், தொண்டை, விதனம், புண்ணுக்கும்
6)5
பொரிகாரம், அக்கரா , சாதிக்காய், சாதிலிங்கம் வகைக்கு 2.5 கிராம் எடுத்து அம்மியில் வைத்து மாவாக அரைத்து மறுபடி கொஞ்சம் தண்ணிர்விட்டு அரைத்து, திரட்டி அவ்வளவு மருந்தையும் பொடி பண்ணி, புதுச் சுங்கானிலிட்டு அந்தி, சந்தி புகைக்க கவும். விழுங்கக் கூடாது. முழுக்கப் புகைத்து முடிந் ததும் வெள்ள்ாட்டுப் பால் அல்லது பசுப்பால் வாயில் நன்றாக அடக்கிக் கொப்பளிக்கவும். அல்லாவிடில் மிடறு நோகும். பல் விரணம், முரசு விதனம் மாறும். மருந்து புகைக்கும் போது உட்பாகங்கள் வெண்ணிற மாகலாம். வேறு ஒன்றும் ஆகாது. மருந்து 3 நேரம் பத்தியத்துடன் சொன்னபடி குடித்துப் போட்டு

Page 11
மறுபடி 3 நேரம் பத்தியத்துடனிருந்து தண்ணீரில் ஒன்று விட்டொருநாள் முழுகவும். இப்படி 7 முழுக்கு முழுக வும். முழுகின சமயம் மட்டும் பூச்சிக்காற் கருவாடு வறுத்துக் கட்டவும். மேற்சொன்ன வியாதி எல்லாம் தீரும்.
36. புண்ணுக்குத் துவாலை
1. வவ்விலொட்டித்துளிர், முருங்கைத்துளிர், கொவ் வைத்துளிர் இம்மூன்றும் வகைக்கு ஒரு பிடி வீதம் எடுத்து புண்ணில் பிளந்து வைத்துக் கட்டவும்.
2. மயிலடிக்குருந்தம் பட்டையும், இலையும் சிறுநீரில்
வறுத்துக் கட்டவும்.
37. புண் அரிக்க மருந்து
1. தென்னங்குருத்தும், மஞ்சள் களற்சி இலையும், உப்பும் இடித்துக் கட்ட புண் அரித்துவிடும். 2. தென்னம் ஈர்க்குப் பொடியாக இடித்து தேங் காய்ப்பூவும் மஞ்சளும் சேர்த்தரைத்து நல்லெண் ணெயிற் குழைத்துப்பூசவும்
38. எரிவு காந்தல் கொண்ட புண்ணுக்கு
திராய் வேரைப் பிடுங்கி, பொடியாகச் சீவி வைத்துக்கட்டவும்.
39. புரைவிழுந்த புண்ணுக்கு எண்ணெய்
1. நல்லெண்ணெய் அரக்கு, தேசிப்புளி, ஊமத்தஞ் சாறு சமன் எடுத்து மெழுகுபதம் காய்ச்சிப் புரையில் இடவும்.
2

40.
41.
42.
43.
al
இரசம் 5 கிராம், கடுகு, மஞ்சள், இயங்கம்வேர், சித்திரப்பாலாவி வேர், தில்லம்பட்டை, பருத்தி யிலை, ஒடுவடக்கியிலை இவை சமன் எடுத்து இரசம் சேர்த்து அரைத்து தேங்காய் எண்ணெயில் சேர்த்துக் காய்ச்சி மெழுகுபதத்தில் வடித்துக் கொள் ளவும். துணியில் தோய்த்துப் புரையில் போடவும்.
615.5f g6ïorg)DIfb LD I DD (1555
1. இரசம், பருத்தியிலை, களற்சியிலை, ஒடுவடக் கியிலை சமன் எடுத்து இடித்துப் பொன்னிற மாக வறுத்துப் பூசவும்.
2. கடுக்காய், குமிழ், விட்டாடியிலை, ச ம ன்
எடுத்து இடித்து வைத்துக் கட்டவும்.
l6st Apå GFssNM
கைப்பு, களிப்பாக்கு, துத்தம், துருசு, நல்லெண் ணெய் விட்டரைத்து வெந்நீர்விட்டுக் கழுவி, துணியில் கோய்த்துப் புண்ணில் போடவும்.
சகல புண்ணுக்கும் எண்ணெய் (கையாட்சி)
துத்தம், துருசு. கைப்பு, களிப்பாக்கு, வேம்பாடல், அத்திவேர், ஆவாரைவேர், கடுக்காய்வேர், நீர்ப்பூலா வேர், செங்கத்தாரிவேர், காஞ்சுரைவேர் ᎧlᎶᏈᎧᏧᎦ5 60 கிராம் எடுத்து, இடித்து, அவித்து குடினிரிட்டு தேங்காய் எண்ணெயிற் சேர்த்துக் காய்ச்சி புண்ணிற் போடவும் . எல்லாப்புண்ணும் மாறும்.
3

Page 12
44 புண்ணுக்கு உறட்டி
45
46
மஞ்சள் இலை, பூலா இலை, மாவிலங்கம் பட்டை, துவைத்துச் சாறு எடுத்து, சின்னட்டி அரிசி எடுத்து ந  ைன ய ப் போட்டு மா இடித்து மேற்படி சாறுவிட்டுக் குழைத்து, உறட்டி சுட்டு புண்ணில் அணைக்கவும். 7 நாள் அந்தியில் இவ்விதம் செய்து விடியலில் வெந்நீராற் கழுவி, பிறகு புளியிலை இடித்து இலுப்பெண்ணெயிற் சுண்டிக் கட்டவும்.
நரம்பு வந்த புண்ணுக்கு மருந்து
கருங்கொள்ளுமா பொடிசெய்து நரம்பு மேலே போட்டு, மூவரட்டை, பருத்திச் சாகத்தை நரம்பு மேல் தாரையில் விடவும்.
புண்ணுக்குக் காரமும் ஓடு எண்ணெயும்
(560 Gy 556), gp56. It ID 56fi (p6)))
அரிதாரம், பொரிகாரம், மனோசிலை, தாரம், கடுக்காய், உள்ளி, திப்பலி, மஞ்சள், கொடிவேலி வேர், சமன் எடுத்து தூள் செய்து பசுவின் நெய்யில் குழைத்துப் போடவும். துணியில் தோய்த்துப் போட வும். தயிரும் சோறும் வைத்துக் கட்டவும். பிறகு
எண்ணெய்;. நீர்ப்பூலா, முட்காண்டை, புங்கு, நீர்ச்சாயம், கடலடக்கி, துடரி இவை வேர் சரிநிறை, பொன் ஒதி, சிற்றகத்தி, வேர்விலா (?) சுக்கு, கடுக் காய், திப்பலி, அசமோதகம், செவ்வள்ளி, செஞ் சத்தனம், துத்தம், துருசு, வேம்பாடல், கொத்த மல்லி, இலவங்கம் இவற்றை எண்ணெயுடன் சேர்த் துக் காய்ச்சி ஒடுவுக்குப் போட மாறும்.
14

47.
48.
49.
50.
புண்ணுக்கு
தேங்காய் துருவி, புளியங்கொட்டை த் தோ ல்
பொடியாக்கி, ஒக்க விரவி வெய்யிலில் வைத்து, பிழிந்த எண்ணெய் பூச புண் மாறும்
திராத புண்ணுக்கு
பூவரசம் சருகு சுட்டு தேனும் நல்லெண்ணையும்
விட்டு, கல்வத்திலிட்டரைத்து குளம்பாக்கிப் புண் ணிற் போடவும்.
புண்ணுக்குச் சேவை
1.
துத்தம், துருசு, கிருமி சத்துரு, கோழிமுட்டை வெண்கரு எடுத்து செளிம்புச் சட்டியில் (களிம்பு) அரைத்து சீலையிற்பூசி புண்ணில் போடவும். தீராத புண்ணும் மாறும். துத்தம், துருசு, குந்திருக்கம், சுண்ணாம்பு சமன் எடுத்து பொடி செய்து கறள் பிடித்த வட்டிலிற் போட்டு, நல்லெண்ணெய் வார்த்து, செம்பாலே அரைத்து, கோழி இறகாலே பூசிவர பூச்சி செத்து, புண்ணும் ஆறும். (கைகண்டது) பருத்தியிலைச் சாறு, முரு க் கி  ைல ச் சாறு, வார்த்து மெழுகு உருக்கி, அரைத்து புண்ணிற் கட்டவும். அந்தி, சந்தி புண்ணைக் கழுவி சேர்வை மாற்றவும்.
ஆறாத புண்ணுக்கு மருந்து
எள்ளு மஞ்சலிஞ்சி வேப்பிலை தெள்ளிதாகவே தேனிற் குத்திட உள்ளசிழும் ஒழுகிய புண்களும் கள்ளமின்றி எந்த மலைகளும் வற்றுமே.
15

Page 13
51.
52
53.
புண்ணுக்கு இராச சேர்வை
துருசு, சீனக்காரம், வெண்குந்திருக்கம், இளம் பாக்குச்சுட்டகரி, மெழுகு வகைக்கு 5 கிராம் எடுத்து எலுமிச்சங்காயளவு வெண்ணெய் கூட்டி மெழுகு போல் அரைத்து துணியில் தடவிப் போடவும் மாறும்.
புண்வியாதி சகலதுக்கும் பற்பம் (தவசிப்பிள்ளை கையாட்சி)
சீனப்பாகு - 120 கிராம், இரசம், லிங்கம், குரோ சாணி, நெல்லிக்காய்க் கெந்தகம், பொன்னிமிளை, மாயாக்காய், அக்கரா , வெட்பாலரிசி, சாதிக்காய், நிர்விஷம் வகைக்கு - 10 கிராம், இயங்க ம் வேர், காண்டை வேர், நொச்சிவேர், குப்பை மேனி வேர் சமன் கூட்டி இடித்து சீலையில் அரித்து வெருகடிப் பிரமாணம் 7 நாள் அந்தி, சந்தி வெந்நீரினில் கொள் ளவும். பின் குளிர்ந்த தண்ணிரில் முழுகவும்.
தீரும் வியாதிகள் - சகல கரப்பன், பறங்கி வியாதி, முறிகிரந்தி, வாத கரப்பன், புடைகரப்பன், ஊது கரப்பன், தடி கரப்பன், சொறி கரப்பன், வீங்கு கரப் பன், விஷ கரப்பன், பெரும் புண், குட்டம், மற்றும் புண்வியாதிகள்.
பத்தியம் - முருங்கையிலை, காரையிலை, சிறுமீன், கோழிக்குஞ்சு, வெள்ளாட்டுப்பால், முருங்கைக்காய் ஆகும், உப்பை வறுத்துக் கூட்டவும்.
பறங்கிப் புண்ணுக்கும் மாறாத புண்ணுக்கும் மருந்து.
திரிகடுகு, திரிபலை, கெந்தகம், இரசம், சாதிக் காய், வெள்ளைப் பாஷாணம், கர்ப்பூரம், துத்தம், துருசு, மனோசிலை, பொன்னரிதாரம், வெண்காரம்,
6

54.
வெள்ளுள்ளி, வசம்பு, வெட்பாலரிசி, கார்போகரிசி, அணிஞ்சில்வேர், களற்சிவேர், வே ப்ப ம் விதை, காஞ்சுரம் விதை, வகை சமன் எடுத்து இடித்து, தூளாக்கி, 1 கொத்து தேசிப்புளி விட்டு இரண்டு நாள் ஊறப்போட்டு இடித்து, பற்பமாக்கி எடுத்து. வெருகடிப்பிரமாணம் வெந்நீரிலாதல், குறுணல்புற்கை யிலாதல் குழைத்து உண்ணாக்கிற்படாமல் விழுங்க வும். 7 நாள் 14 நேரம் தின்னவும். 7 நாட்களின் பின் குளிர்ந்த தண்ணிரில் குளிக்கவும். தலையிலும் வார்க்கவும்.
தீரும் வியாதி - பறங்கிப்புண், மாறாத புண்கள் மாறும்.
பத்தியம் - உப்பு, வறுத்துக் கூட்டவும். 40 நாட்களின் பின்னர் வறுக்காத உப்புச் சேர்க்கவும்.
மோகப்புண், கரப்பன், விதனம், எரிவு, சிதல், இரத்தம் பாய்தல் முதலியவற்றிற்குப் பற்பம்.
சீனப்பாகு - 5 கிராம், கெந்தகம், சாதிக்காய், சாதிபத்திரி, முருங்கைப்பூ, கொ டி வே லி வே ர், வகைக்கு 5 கிராம் இடித்து, அரித்து வெரு கடிப் பிரமாணம் அந்தி, சந்தி பசு நெய்யும், சர்க்கரையும் கூட்டிக் குழைத்துத் தின்னவும். 7 நாட்களுக்குத் இன்னவும். V−
தீரும் வியாதிகள் - முகசிங்கிப்புண், வீக்கம்,
விதனம், இரத்தம் விழுந்த விரணம், புண்காந்தல், எரிவு, பிரமிய வெட்டை
பத்தியம் - உப்பு, புளி நீக்கவும். பசுப்பால், வெந்நீர் கூட்டவும்.
17

Page 14
55.
56.
57.
பறங்கிப் புண்ணுக்கு குடிமருந்து
தேன்பாணி - 1 போத்தல், நல்லெண்ணெய் - 1 போத்தல், கோழி அவித்த தண்ணிர் - 1 போத்தல் இறைச்சி, வேப்பந்தோல் ஊறவைத்து ஊறின தண்ணீர்- 1 போத்தல் இவற்றை ஒன்றாக்கி அளவின் படி குடிக்கக் கொடுக்கவும்.
பறங்கிப் புண்ணுக்குப் புகை
ஈயம், இரசம், நவாச்சாரம், வெண்காரம், பொன்னரிதாரம், சீனி, சூடம், துத் தம், துருசு, வெள்ளைப்பாஷாணம், கஞ்சா இலை, மருதோன்றி இலை, பருத்தியிலை, ஊமத்தை இலை, எருக்கிலை, கள்ளிப்பால், கையாந்தகரை, எருக்கம்பால், சீதுளாய், குப்பைமேனி, முருங்கைத்தோல், எருக்கந்தோல், குங்கிலியம் இவைகளைப் பொடித்து புகைக்கவும்.
திருவடிப் புண்ணுக்கு
1. இரசம் - 5 கிராம், துத்தம் 2, 5 கிராம், துருசு 2. 5 கிராம், குந்திருக்கம் - 10 கிராம், பழம் பனாட்டில் அரைத்துப்போட தி ரு வ டி ப் புண் மாறும் .
2. வெள்ளைக்குந்திருக்கம் பொடி செய்து நல்லெண் ணெயிற் சேர்த்தரைத்து, துணியிற்பூசி புண்ணில்
போடவும்.
3. துருக , வேம்பாடல், சமன் எடுத்து, களிப்பாக்கு எடுத்து நன்கு சீவி நல்ல தண்ணீரில் நணையப் போட்டு அந்தத் தண்ணீரில் அதை, அரைத்து பின் ஏனையவற்றையும் சேர்த்து எலுமிச்சம்புளி விட் டரைத்துக் கொள்ளவும். புண்ணை நன்கு கழுவிய பின் வெற்றிலைச் சாற்றில் ஒரு உருண்டையை உரைத்துச் சீலையில் தடவிப் போடவும். எப்படிப் பட்ட புண்ணும் மாறும்.
8

58.
59.
60.
6.
4. ஒடுவடக்கி இலை, மஞ்சவண்ணா இலை, சமன் எடுத்து இடித்து டொன்னிறமாக வறுத்துக் கட் டவும்.
திருவடிப்புண், பறங்கிப்புண், வேறும புண்கள் IDI på GF&DA
இரசம், மஞ்சாடி, குந்திருக்கம் வகை 5 கிராம் ஊமத்தஞ்சாறு விட்டரைத்து து னி யி ற் ற ட வி புண்ணில் போடவும்.
பத்தியம் - உப்பு, புளி தவிர்க்கவும். முருங்கைப் பிஞ்சு, இலை கூட்டவும்.
சிரங்குக்கு எண்ணெய்
லிங்கம், நெல்லிக்காய்க் கெந்தகம், துருசு, நேர்வாளம் வகைக்கு 10 கிராம், சாதிக்காய், குங்கிலியம், களிப்பாக்கு, கராம்பு, மதுரம், கைப்பு, நற்சீரகம், கருஞ் சீரகம், பொரிகாரம், சீனக்காரம், வகைக்கு 5 கிராம், கடுக்காய் - 20, கோழியவரைச் சாறு, தேசிப்புளி, நல்லெண்ணெய், மூன்றும் சமன் எடுத்து, காய்ச்சி வடித்து பதத்தில் இறக்கவும்.
சிரங்குக்கு சூரியபுட ன்ெணெய்
தேங்காய் எண்ணெய், வெற்றிலைச்சாறு, முருக் கிலைச் சாறு, பாகலிலைச்சாறு, இயங்ச மிலைச்சாறு, தேசிப்புளி, எண்ணெய்க்குச் சமன் சாறு விட்டு, மிளகு பொடித்திட்டு சூரியபுடம் வைத்து மேலுக்குப் பூசவும். மாலையில் வெந்நீர் வார்க்கவும்.
fJiI856)I(6).JII
துத்தம், துருசு கெந்தகம், இரசம், கிருமிசத்துரு, பாகல் இலைச் சாறு, தேங்காய் இரண்டு பிழிந்து
பால் எடுத்துக் காய்ச்சி, எண்ணெய் மிதந்து வரும்
19

Page 15
62.
63.
64.
வேளையில் ஆவாரை இலையும், ஆவாரை வேர்ப் பட்டையும் காயவைத்து இடித்து, து ளாக்கிப்போட்டு, காய்ச்சி 7 நாள் புண்ணிற் போட மாறும் ,
பத்தியம் - உப்பு, புளி தவிர்க்கவும்.
தண்டுப் புண்ணுக்கு மருந்து
கன்னிக் கோழிமுட்டையும், காசுக்கட்டியும் பொடி செய்து புண்ணிற் போடவும் மாறும்,
தண்டு விக்கம், விதனம், குட்டரோகத்துக்கு இடி மருந்து
தென்னம்பூ, விராலி இலை, துவைத்துச் சாறு எடுத்து, கற்றாளஞ் சோற்றில் அரைத்து, கரைத்து உள்ளே கொடுத்து, மேலுக்கும் அந்த வி ரா லி இலையை அவித்து, அந்த இலையை வீக்கத்தின் மேலே அணைத்துக் கட்டவும். தண்டு வீக்கம், விதனம் சகலதும் மாறும்.
தண்டுக்கு மேலே கட்டும் மருந்து
புளியம் இலை உருவி அவித்து அந்த நீரினா லேயே தண்டைக் கழுவி, பின் அந்த இலையை வீக்கம், விதானத்தின் மேலே மூடிக்கட்டவும்.
65. ஆணுடம்பில் வரும் புண்ணுக்குச் சேர்வை
(6)5 u Tif)
குந்திருக்கம் - 5 கிராம், இரசம் - 2.5 கிராம், பருத்தியிலைச் சாற்றில் சுத்தி பண்ணிக் கொண்டு, இத்துடன் துருசு, தேன்மெழுகு கொஞ்சம் கூட்டிக் கல்வத்திலிட்டு பருத்தியிலைச்சாறு விட்டரைத்து,
2O

பின் பசுவெண்ணெய் விட்டரைத்து, பின் தண்ணிரி விட்டரைத்து, குப்பியில் சேகரித்து வைத்துக்கொண்டு துணியிற் பூசிப் புண்ணிற் போட ஆணுடம்பில் வருகிற சகல புண்களும் களங்கமற மாறும்.
66. தண்டால் இரத்தம் விழுவதற்கு
செவ்வரத்தம் பூவைப் பசுப்பாலில் அரைத்துக்
குடிக்கவும்.
67. இரத்த சலத்துக்கு
கவிழ்தும்பை வேர்பிடுங்கி, ஒருபாக்களவு அரைத்துப்பச்சை வெண்ணெயிற் குழைத்துக் கொடுக்கவும் ,
நறுந்தாழி இலை எலுமிச்சங்காயளவு அரைத்துப்
பசு வெண்ணெயிற் கொடுக்கவும்.
வடக்கே போகும் இயங்கம்வேரை தண்ணிர் விடாமல் அரைத்துப் பாலிற் கொடுக்கவும்.
பசுப்பாலிற் கொவ்வை இலையைப் பிழிந்து கொடுக்கத் தீரும்.
68. வெந்த புண்ணுக்கு எண்ணெய்
பெருநாவல் தோல் சீவிப்போட்டு, இரண்டு
தேங்காய் துருவி, இரண்டையும் சேர்த்திடித்து, அவித்து தண்ணீர்விட்டுப் பிழிந்து, எண்ணெய் எடுத்
துக்
கொண்டு, அந்த எண்ணெயில் சிறுபுள்ளடி
அரைத்து, எலுமிச்சங்காயளவு அரைத்து, கைப்பு, பெருந்தேன்மெழுகு சமன் போட்டு, எண்ணெய் காய்ச்சி பதத்தில் இறக்கிக் கொண்டு பூசமாறும்.
2

Page 16
69. SIL 67 g)li (5
1.
2.
நீற்றுப் பூசணிக்காய்ச் சாகமும், நல்லெண் ணெயும் சாதித்துப் பூசவும். கருப்பட்டிக் குட்டான் ஒலை சுட்ட சாம்பலும் நல்லெண்ணெயும் குழைத்துப் பூசவும்.
70. விக்கம் வற்ற மருந்து (கையாட்சி)
1.
2.
3.
4 •
5.
துருசை எலுமிச்சம்பழச் சாறு விட்டரைத்து, நோவு, வீக்கம் உள்ள இடத்திற்பூச வற்றும். இவ் GAJ FT gol seg, Ol தரம் பூசவும்.
ஆவாரை அருகியைப் பசுப்பாலில் அரைத்துப் பூசவும்.
விளக்கெண்ணெயில் பசுப்பால் மத்தித்துப் பூசவும்.
மாவிலங்கம் பட்டையை நன்றாக இடித்து, கொஞ்சம் தண்ணிர் விட்டுப் பிசைந்து, வடிகட்டி அந்தநீரைக் காய்ச்சி, பாகுபதத்தில் இறக்கிப் பூச சகல வீக்கமும் வற்றும்.
ஒட்டறையும், நெல்வேரும், சுக்கும், கஞ்சா இலையும், இலுப்பைப் பூவும், சமன் எடுத்து அரைத்து, பாகாகக் காய்ச்சிப் பூசவும் நோ விதனம், வீக்கம் மாறும்.
71. விக்கத்துக்குப் பத்து
l.
வேப்பம் பிசின், கருஞ்சீரகம், ஈசுரமூலிவேர், குன்றி மணி இலை, கோழிமுட்டை வெண் கருவால் அரைத்துப் போட வீக்கம், வற்றும்.
வெள்ளைப் பாஷாணம், பெருங்காயம், குன்றி மணி எருக்கம் பாலில் உரைத்துப் போடவும்
22

12. ஒடு, புரைக்குத் திரி
73.
74
5.
76.
1. துத்தம், துருசு, இந்துப்பு எலுமிச்சம்புளி விட்டரைத்து திரியில் திரித்து புரையில் வைக்க கனன்று அறுந்து விழும்.
ஒடு, புரைக்கு எண்ணெய்
வெள்ளுள்ளி, மிளகு, சுக்கு, வசம்பு, சதகுப்பை, ஓமம், கருஞ்சீரகம் வகைக்கு 5கிராம் அரைத்து எருக்கம்பூச்சாறும், தேங்காயெண்ணெயும் சமன் கலந்து கரைத்துக் காய்ச்சி மெழுகுபதம் வடித்து உள்ளும் கொடுத்து, மேலும் பூசவும்.
60JCIIIII 618)ћg
புங்கம் வேர்ப்பாலும், தேனும் சமன் கூட்டி ஒட்டிலிட்டுக் காய்ச்சி பதத்தில் சீலையில் தோய்த்து புரையோடிய புண்ணில் போட ஆறும்.
96 GT660), (6).3556 L)
புங்கம்பால், தேங்காய்ப்பால், சமன் கலந்து காய்ச்சி எண்ணெய் பிறந்துவரும் வேளை இருசீரகம், ஒமம், துருசு, வெண்குந்திருக்கம், பொடிசெய்து போட்டு மெழுகுபதம் வடித்து கடுகை 3 நாள் கட்டவும். 3 ஆம் நாள் எண்ணெயை பஞ்சில் தோய்த்து புண்ணிற் போடவும். சகலபுண்ணும்
மாறும்.
68 6666NII I66 JIJ
இரசம், கெந்தகம், துத்தம், துருசு உள்ளி, வசம்பு, குந்திருக்கம், கைப்பு, களிப்பாக்கு, அரிதாரம், சாதி
லிங்கம், செஞ்சந்தணம், சாதிக்காய் வகைக்கு
23

Page 17
77.
78.
79.
5 கிராம் வெட்பாலரிசி, 10 கிராம், புங்கம்,-பால் விட்ட ரைத்து, தேங்காய் எண்ணெய் விட்டுக் காய்ச்சி" மெழுகு பதத்தில் வடித்துப் போட மாறும்.
படுவன் நெய்
கடுக்காய், மதுரம், மிளகு, திப்பலி, கடுகு, கராம்பு, நற்கீரகம், வகை, 5 கிராம் - சீதேவியார், படு வ ன், கோழியவரை, பொன்னாங்காணி, நன்னாரி, நாயுருவி, கீழ்க்காய் நெல்லி, ஒடுவடக்கி, கஞ்சாங்கோரை, முத்தற்காசு வகை சமன் எடுத்து உலர்த்தி இடித்துத் தூளாக்கி பசு நெய் கொதிக்கவைத்து அதில் மேற்படி தூளைப்போட்டுக் காய்ச்சி இறக்கி உள்ளுங்கொடுத்து கட்டியிலும் போடவும் மாறும்.
பத்தியம் - பசுப்பால், பசுநெய், பாவிக்கலாம். கோழி முட்டை தவிர்க்கவும்.
படுவன், கட்டுக்கு நெய்
நன்னாரிவேர், நாயுருவிவேர், முத்தற்காசு, சிறகு, அவரை, சீதுளாய், மிளகு, சீதேவியார் செங்கழுநீர், படுவனிலை, இவை வேரும், இலையும், சீரகம், கருஞ்சீரகம், திப்பிலி, சுக்கு, மதுரம், கடுக்காய் சமன் எடுத்து, தூள் செய்து சரக்குத்தூளும், வேர்த் தூளும் கூட்டி பசுநெய்யில் வெற்றிலை வெடிபதத்தில் கொதிப்பித்து உள்ளுக்கும் கொடுத்து, கட்டியிலும் பூசவும்.
56ÕTLUD M606), 66 T6T6ID) LED 1606), 65 T6T SOL
கரப்பன், கழுத்தைச் சுற்றிய கண்டமாலைக்கு ଗରif ଗର୩till
சுக்கு, மிளகு, வெள்ளுள்ளி, வசம்பு, நற்சீரகம்,
கருஞ்சீரகம், கடுக்காய், ஓமம், திப்பிலி, வெண்காரம் வகைக்கு 5 கிராம், முடக்கொத்தான், எருக்கம்பூ,
24

8.
82,
ஊமத்தையிலை, குப்பைமேனி, மாவிலங்கை இலை, பிரண்டைத்தண்டு, கையாந்தகரை, இயங்கம் வேர், பூலான் கிழங்கு, இவற்றின் சாறு 1 கொத்து எடுத்து நல்லெண்ணெயிற் காய்ச்சிக் கொள்ளவும். தீரும் வியாதிகள் - கண்டமாலை மற்றும் மேற் சொன்ன வியாதிகள் அனைத்தும் தீரும். எண்ணெயை உள்ளுக்குங் கொடுத்து தலையிலும் வைத்து, கட்டி யிலும் பூசவும்.
பத்தியம் - உப்பு, புளி ஆகாது.
66) p.
கோழிமுட்டை வெள்ளைக்கருவை எடுத்து சீனக் காரம், ஆமணக்கெண்ணெய் எ ன் ப வ ற் று ட ன் சேர்த்துக் கல்வத்திலிட்டு அரைத்து, சீலையில் தோய்த்துப் போடவும். கசடு (அழுக்கு) அறுக்கும்.
கழுத்தைச் சுற்றிய கண்டமா லைக்கு பூச்சு மருந்து
மிளகுபழம் , நாய்க்குடம், பருத்தியிலை, பசுப் பால் விட்டரைத்து ஒரு தேசிக்காயளவு எடுத்து, அரைவாசி கழுத்திற்கும் பூசவும். அரைவாசி உள் ளுக்குக் கொடுக்கவும். தீரும்.
фIL616), QFICI805, ЂJILI6T QI) 5, Jћf வகை, தண்டுப்புண், சலப்புண், கட்டு, பிளவை, சகலதுக்கும் எண்ணெய்
குக்கில், மிளகு, திப்பலி, ஏலம், கராம்பு மதுரம், கடுகுரோகணி, நேர்வாளம், வகை 5 கிராம் இரசகர்ப்பூரம் - 10 கிராம், நேர்வாளத்தைச் சுத்திபண்ணிக் கொள்ளவும். மருந்தெல்லாம் ஒன்றாக வைத்தரைத்து ஆமணக்கெண்ணெய் ஓர் ஆழாக்கிற்
25

Page 18
83.
84
85.
86.
கரைத்து சூரியபுடத்தில் 3 நாள் வைத்து, காலையிற் குடிக்கவும். கடுகும் எண்ணெயும் கலக்கி ஒரு சிறு கரண்டியளவில் உள்ளே கொடுக்க 4,5 முறை பேதிக் கும். இவ்விதம் 3 நாள் அருந்தி ஓமம் தலையில் வைத்து வெந்நீரில் முழுக மாறும்.
பத்தியம்- உப்பு தவிர்க்கவும். காடை, கவுதாரி ஆகும்.
பொத்திக் கரப்பனுக்கு மருந்து.
சிற்றாமணக்கம் பூவும், சூடம் கர்ப்பூரமும் சமன் எலுமிச்சம் புளி விட்டரைத்துப் பூசவும். கரப்பன் LDT gDjib.
கரப்பன் கட்டுக்குப் பூச்சு மருந்து.
பெருமருந்துவேர், கோழிமுட்ட்ை வெண்கரு விட்டரைத்துப் பூச வற்றும் .
35 yÜL) i 6T6T 663OTs
தேங்காய் எண்ணெய், களிப்பாக்கு, வேம்பாடல் செங்கத்தாரிவேர், அத்திவேர், புங்கம்வேர், ஆவாரை வேர்,நீர்ப்பூலாவேர், துடரிவேர், இவை சமன் எடுத்து தூள் பண்ணி எண்ணெய் காய்ச்சி வெற்றிலை வெடிபதத்தில் தூள் போடவும். பொன்னிறமாக இறக்கி பஞ்சில் தோய்த்துப் போடவும்.
வேறு
இசங்கம் கொழுந்து, காஞ்சோன்றிக் கொழுந்து, களற்சிக் கொழுந்து, வசம்பு, பீநாறிச்சிராய், செஞ்சந் தணம், வெளுத்தற் பிசின், கடற்சில்லுப்பருப்பு (கடற் களற்சி) இவை சமன் எடுத்து மூன்று சாறும் விட்ட ரைத்து எண்ணெயிற் கொதிக்க வைத்துப் பூசவும்.
26

87. Q]TÎ&đ7)oổõ I005jöI
நாயுருவிக் கொழுந்தும், சீரகமும் இளவெந்நீரில் அரைத்து நாவில் தேய்க்கவும். அதன் பிறகு தண்ணீராலே வாய் கொப்பளிக்கவும்.
88. கிரந்திப் புண்ணுக்கு மருந்து
துத்தம், துருசு, கைப்பு, சுண்ணாம்பு, பசுவெண் ணெயில் அரைத்து துணியில் தோய்த்துப் போடவும்.
89 அரையாப்புக்குக் கசக்கிக் கட்ட மருந்து
1. உப்புக் கொஞ்சம் கையில் எடுத்துக் கொண்டு போய், வாய் பேசாது மாவிலங்கை மரத்தடியிற் போய் அதன் வடக்கே போகும் கொப்பின் துளி ரைப் பிடுங்கிக் கொண்டு வந்து உப்பும், கொழுந்து மாகக் கசக்கி, உடனே கட்டியில் வைத்துக் கசக்கி விட வேண்டும். மிகவும் காந்துவதாக நோயாளி சொன்னால் அக்காலைப் பற்றி மெல்ல உருவி விடவும். இவ்வாறு மூன்று தினம் செய்யவும் .
2. எந்தக் கட்டுக்கும் குழித்தாமரை இலையைக்
கசக்கி வைத்துக் கட்ட மாறும்.
90. 96) TLIITÜ, Llais jy b, 65 6DL-6T 60y, 56ÍTL LD T60)6), í6IT6))6QI D jb pI üib Ji5(6 af356)ğ5öi5ğ5fb GT60600 if
உடைந்த வேப்பெண்ணெய் உள்ளி
ஓங்கிய வேம்பாடல் துத்தம் கடைந்த கெந்தகம் சூதம்
காசு நான் கருளினாரே
27

Page 19
9.
92.
93.
விடைந்த குங்கிலியம் குக்கில்
முரிதாரம் சிங்கிதாரம்
இடைந்தில்லாத் தைலம் வாங்கே
எந்த மாரோகம் போமே.
கயாளம் போட்டு, நாளுறி மெழுகுபதம் வடித்து உள்ளும் கொடுத்து வீக்கத்திலும் போட எந்தக் கட்டும் வற்றும். பத்தியம் - உப்பு, புளி ஆகாது. கரப்பன் பண்டம் தவிர்க்கவும்.
96.JI TIJöë 66ë 660 If
நல்லெண்ணெய், கொடிவேலிவேர், பனங்கட்டி, பெருங்காயம் இவற்றை அரைத்து எண்ணெயிற்கலக்கி 3 நாள் சூரியபுடம் வைத்து கட்டியிற் போடவும்.
அரையாப்புக் கட்டுக்கு மருந்து
1. வெளுத்தற்பிசின், அபின், சுக்கு, பச்சையரிசி கு ர க் க ன் பொரி, கோழிமுட்டைவெண்கரு, விட்டரைத்துக் கட்டுக்குப் பூசவும்.
2. அபின், பெருங்காயம், சு க் கு, குரக்கன்பொரி, பச்சையரிசி சமன் எடுத்து முலைப்பாலில் அரைத்துப் பூசவும்.
அரையாப்புக்குச் சேர்வை
குந்திருக்கம், வெங்காயம் வகைக்கு 5 கிராம், துத்தம், துருசு வகைக்கு 2 கிராம், காந்தம், மஞ்சா டி கடுக்காய், கைப்பு, வேப்பம்பட்டை, இவை யாவற் றையும் நல்லெண்ணெய் விட்டரைத்து சேர்வையாக வைத்துக்கொண்டு போடவும். எ ந் த ப் புண் ணு ம் மாறும்.
28

0.
95.
96.
5160JETILjš5 616106rti
சுக்கு, வெள்ளுள்ளி, கருஞ்சீரகம், பெருங்காயம் வகைக்கு 5 கிராம், கிளாவேர், முல்லைவேர், கொடி வேலிவேர், எருக்கம்வேர், நத்தைச்சூரிவேர், தயிர் வேளைவேர் வகைக்கு 5 கிராம், சரக்குகள், வேர்வகை என்பவற்றை எலுமிச்சம்புளி விட்டரைத்து நல்லெண் ணெயுடன் சேர்த்துக் காய்ச்சி மெழுகுபதம் வடித்து உள்ளுக்குக் கொடுக்கவும். பத்தியம் உப்பு, புளி, ஆகாது. கோழிமுட்டை வெண் கரு, வெள்ளாட்டுப்பால் ஆகும். 3 ஆம் நாள் வெந்நீரில் குளிக்கவும்.
9600g III TIq jiġi 3 Ji D 05535
1. வெள்ளுள்ளி, பொடுதலை அரைத்து காலையில் மூன்று நாள் நல்லெண்ணெயிற் குழைத்துப் பூசவும். வெந்நீர் குடிக்கவும்.
2. சுண்ணாம்பும் தயிரும் குழைத்துப் பூசவும்.
வேலிப் பருத்தியிலையைக் கருக வறுத்து வேப்பெண்ணெயில் அரைத்துப் பூசவும்.
4. நெல்லும் மஞ்சளும் வறுத்தரைத்து ஆமணக்கெண் ணெய் விட்டரைத்துப் பூசி, முகத்திலே வழுதலை இலை வாட்டிப் போட வெடிக்கும்.
பவுந்திரத்திற்கு சுடர்த்தைலம்
வெள்ளைப் பாஷாணம், துத்தம்,துருசு, கெந்தகம் வகை - 5 கிராம், பெருமருந்து - 10 கிராம், எல்லாம் அரைத்து, சீலையில் தடவி பசுநெய்யில் தோய்த்து எரித்து, வடித்து, சீலையில் தடவி புண்ணில் போட மாறும்.
29

Page 20
97,
98.
99.
100.
பவுந்திரத்துக்குக் குடிமருந்து
நாக இலை, இலுப்பை இலை, விட்டுணு கிராந்தி இலை மூன்றும் சமன் எடுத்து, துவைத்துச் சாறெடுத்து நல்லெண்ணெயும் சமன் கலந்து 7 நாள் அல்லது 9 நாள் குடிக்கவும். பத்தியம்: உப்பு, புளி நீக்கவும்.
பவுந்திரத்துக்குப் பற்பம்
இரசம், லிங்கம், பொன்னரிதாரம், காந்தம், அப்பிரகம், நெல்லிக்காய்க் கெந்தகம், கடுகு சரிநிறை கொண்டு இடித்து தேனில் தின்னத் தீரும்வியாதிகள் பிரமேகம், பவுந்திரம், கோளை, உள்மூலம், கிரகணி,
செங்கமாரி. பத்தியம்: உப்பு, புளி தவிர்கவும்
பவுந்திரத்துக்கு மருந்து (கையாட்சி)
ஒரு சிறங்கை கொடிவேலிவேரும், ஒரு சிறங்கை காக்கணம் வேரும் ஒரு சிறங்கை உள்ளியும் எடுத்து நீர்விட்டு உள்ளி நசியக் காய்ச்சி ஒரு சிறங்கை வீதம் குடிக்கவும்.
பிளவைக்கு மருந்து
1. பூவரசம் கொழுந்து புண்ணில் வைத்து அதன்மேல்
ஆமணக்கெண்ணெய் வைத்துக் கட்டவும்" 2. சுரையிலையில் ஆமணக்கெண்ணெய் தடவி புண் மேலே போட்டு, அதன்மேலே ஊமத்தை இலையை வாட்டிக் கட்டவும். 3. புளியமடல் பிளந்து வாட்டிக் கட்டவும். சிறு குறிஞ்சா இலை அரைத்துப் புறத்திக்குப் பூசவும். கறிக் குறிஞ்சா இலை அரைத்தும் பூசலாம்.
30

101.
2.
பிளவையும் அதன் குணமும் மருந்தும்
பாற்பிளவையின் கணம் - பால் போற் பொங்கும்
எரிபிளவை - எரியும், காந்தல் செய்யும். சொறிபிளவை - சொறியும், வீங்கும். உச்சிப் பிளவை
பக்கப் பிளவை இவை செய்யும் குணம் - பவுந்திரப் பிளை எறும்புக்கண் போலும், ஒடுப்பிளவை தினையரிசி போலும் உறுப்பரவு பிளவை கட்டுக் கிளம்பும். அக்கினிப் பிளவை சவம் போலேயிருக்கும்.
ண்டப் பிளவை XV அ do CJ இவை செய்யும் குணம்
முதுகுப் பிளவை - அடைக்க வீங்கும். முதுகெலும்புப் பிளவை எரிவு, காந்தும்
1. பிளவையை அறுத்தால் உப்பு அரைத்துக்
கட்டவும்.
2. பச்சை நாவி, நிர்விஷம், பாஷாணம் அரைத்துக்
கட்டவும்.
3. வயிறு காந்தல் கொள்ளும். அப்போது தயிரும்
சோறு கொடுக்கவும்.
4. நகக் காளான் குளி  ைக வேப்பெண்ணெயிற்
O2.
கொடுக்கவும்.
சகல பிளவை, கட்டுவகை, சிலந்திவகை, படுவன் வகை, பவுந்திரவகை, அரையாப்புவகை, தொடை வாழை, விற்புருதி, சகல வியாதிக்கும் பயமறச் செய்யக் கூடிய கைகண்ட எண்ணெய்
செங்கத்தாரி வேர், சா ற  ைண வேர், வகைக்கு 10 கிராம், பச்சையாகச் சீவி, இளக்கிக் கொண்டு, அக்கரா, வெளுத்தற் பிசின், கோட்டம், மிளகு, கருஞ்சீரகம், கடுகு - வகைக்கு 5 கிராம்
3.

Page 21
O3.
04.
இவையெல்லாம் இடித்துக் கொண்டு ஆமணக் கெண்ணெய் அரை ஆழாக்கு எடுத்து அடுப்பேற்றி கொதிபதத்தில் மருந்துத் தூள் வாய்பேசாமல் போட்டுக் கிண்டி, நீர்ப்பூலாக் கிழங்கு ஒர் எலுமிச்சங்காயளவு நன்கு தட்டிப் போட்டு, இறக்கி உள்ளுக்குங் கொடுத்து பஞ்சில் தோய்த்து மேலுக் கும் போடவும்.
நாக்குப் பிளவைக் குணமும் மருந்தும்
நாக்கு வாயெங்கும் கீறு கீறாகப் பிளந்து, நீலம் பாரித்து அழலையும் இரத்தமுமாய்ச் சொரியும்.
இதற்கு மருந்து:
முத்தற் காசு, நன்னாரி வேர், சந்தணம், ஆவாரைவேர், சிறுகுறிஞ்சா வேர், பூலாவேர் கர்ப்பூரவள்ளி, சாரணைவேர், மதுரம், சிறுதேக்கு, சித்தரத்தை, பெருங்குரும்பை, கைப்பு, நெல்லி, திப்பலி, கடுகு, சவ்வியம், இவை வகை 5 கிராம் நீர்விட்டரைத்து நல்லெண்ணெயி ற் க  ைரத் து, காய்ச்சி பதத்தில் வடித்து, உள்ளுக்குக் கொடுத்து. நாக்கிலும் பூசவும் மாறும் .
நாக்குப் பிளவைக்குச் சூடும் மருந்தும்
எருக்கம் பூவும், நெல்லிக்காய்க் கெந்தகமும் (சுத்தி செய்தது) 7.5 கிராம் வீதம் எடுத் து அரைத்து வேப்பெண்ணையிற் கொதிப்பித்து, துணியிற் பூசி நாக்கில் அடக்கியிருக்க, நாக்குப் பிளவை வற்றிப்போம். உமிஞ்சு துப்பவும். இந்த மருந்து செய்யுமுன் செம்பூசியாற் சுட்டு, பிறகு இந்த எண்ணெய் போடவும்.
32

105.
106.
107.
108.
நாக்குப் பிளவைக்கு
1. விட்டுணுகிராந்திச் சமூலம் பசு ப் பா லில்
கொடுக்கவும்.
2. தேற்றான் வேரும், கருப்பட்டியும் அரைத்து நல்லெண்ணெய் தேன் சேர்த்துக் கொடுக்கவும்.
3. ஆலம் கொழுந்து, கடுக்காய், நெல்லிக்காய்
சர்க்கரை வகைக்கு 10 கிராம் எடுத்தரைத்து, முதற்கமுநீர் தள்ளி, மற்றக் கழுநீரில் கொடுக்
d, GLD.
வாய்ப் புண்ணுக்கு மருந்து
சுக்கு, மிளகு, திப்பலி, மஞ்சள், வெளுத்தற்
பிசின், பெருங்காயம், குதிரைவாலி, வேலிப்
பருத்திவேர் சமன்எ டுத்து தேன் விட்டரைத்து
வாயில் அடக்கிவர வாய்ப்புண் மாறும் ,
பத்தியம்: உப்பு, புளி நீக்கவும்.
பல்வலி, பல்லரணை குத்துக்கு மருந்து
கடுகுரோசனை, வசம்பு, சவர்க்காரம், களற்சிப் பருப்பு, மூக்கரட்டை, சாரணைவேர், கண்டங் கத்தரி, ஆவாரை வேர், ஆவாரம் பருப்பு சமன் எடுத்து தேன் விட்டரைத்து உண்டை பண்ணி பல்லடியில் தேய்த்துவிட்டு, கரைந்த பின் வெந் நீரால் வாய் கொப்பளிக்கவும். மாறும்.
pi 6sfid56OIT6ò LD (556
பச்சைக் கழுதை லத்தியும், களற்சி இலை
யும், செந்தவிடும் (சிவப்புத் தவிடும்) இடித்து, சிறு நீரில் வறுத்து, வீக்கத்தில் ஒத்திப் போடவும். பின் அதையே வீக்கத்தில் வைத்துக் கட்டவும்.
33

Page 22
O9.
10.
11,
2.
பற்புழுவுக்கு மருந்து
வட்டுப் பழத்தை அவித்து தும்பைச் சாற்றில் பிசறி,பல்லடியில் அடக்கவும். புறத்திலும் நல் லெண்ணெயிற் குழைத்துப் பூசவும், பூச்சி விழும்.
6666 (5 6,660)
மஞ்சள், சுக்கு, வசம்பு, வெள்ளுள்ளி, கஸ்தூரி மஞ்சள், வெளுத்தற்பிசின் வகைக்கு 2. 5 கிராம், இலைக்கள்ளி, எருக்கிலை, வாழைப்பூச்சாறு, தேசிப்புளி, நல்லெண்ணெயிற் காய்ச்சி வாயிலிடத் தீரும்.
பற்பூச்சிக்கு மருந்து
1. ஊமத்தங்காயை இரண்டாகப் பிளந்து விதை யும் கு ட லு ம் தள்ளி, ஆமணக்கெண் ணெயும் நல்லெண்ணெயும் சரிசரி விட்டு துத்தம் பொடி செய்து போட்டு மூடியாலே மூடிக் காயை நெருப்புத் தணலிலே கொதிக்க வைத்து கருகாமல் இறக்கி, வாயிலடக்கி, விழுங்காமல் வைத்திருந்து, கொப்பளிக்கவும்.
2) சித்தரத்தை, கர்ப்பூரம், மிளகு, பொரிகாரம், வெற்றிலைச்சாறு, விட்டரைத்து குளிகை செய்து கொடுப்பில் அடக்கவும்.
தந்த ரோகத்துக்கு எண்ணெய்
செங்கொட்டை 180 கிராம், வெள்ளுள்ளி 180 கிராம், கருஞ்சீரகம், ஓமம், மிளகு, வசம்பு, சுக்கு, திப்பலி, கோட்டம், வெளுத்தற்பிசின், துத்தம், துருசு , கோழிமுட்டைவெண்கரு, அக்கரா , வேப்பம் பருப்பு, ஆமணக்கம் பருப்பு, கடற்சில்லுப்
34

13.
114.
115.
பருப்பு, நிலக்குமிழ் வேர், சிவனார் வேம்பு, நொச்சிவேர், பல்மாணிக்கம் கிழங்கு, கச்சந்திரிச் சாறு, வேப்பிலைச்சாறு, ஆலம்பால், எருக்கம் பால் வகை ஒவ்வொரு சிறங்கை, கள்ளிச்சாறு, கற்றாளஞ்சோறு சமன், சரக்குகளை கியாளம் போட்டு 3 ஆழாக்கு நல்லெண்ணெயிற் சேர்த்துக் காய்ச்சி, மெழுகுபதம் வடித்து, வாயில் அடக்கப்
பின்வரும் வியாதிகள் தீரும்.
தந்தரோகம், த ந் த வா த ம், பற்புற்று, பல்லரணை, பற்கொதியுடன் வாயுள் வந்த கொப்புளம், வாய்க்கிரந்தி, முரசு, பற்கரைதல் முதலியன. மேலும் பல் பெலக்கும். பத்தியம் - முருங்கைக்காய், சுறாகண்டம், பசுப்பால், உப்புவறுத்துக் கூட்டவும், வெந்நீர் பருகவும்.
பல்லரணை, பல்வலிக்கு மருந்து
குளத்திலே கிடக்கிற பாசியை எடுத்து எருக் கலம் இலையில் பொதிந்து, புழுங்க வைத்து எடுத்து பல்லடியில் ஒதுக்க மாறும்,
பற்பூச்சி விழ மருந்து
சித்தரத்தை , சூடம், மிளகு, பொரிகாரம், வெற்றிலைச் கொடிச்சாகம் விட்டரைத்து குளிகை செய்து, கொடுப்பில் அடக்க விழும். *
பல் வலிக்கு
சீனக்காரம், கொறுக்காய்ப்புளியும் சுட்டு
கரியாக்கி, சாந்துபோல் அ  ைர த் து வைத்துக்
கொண்டு காலையில் 8 நாள் பல்லில் அடசிவர
மாறும்.
35

Page 23
116.
117.
118.
9.
கன்னர் புற்று, பல்புற்று, நாக்குக் கிரந்தி இவற்றுக்கு மருந்து
1. செப்புத் தகடு காய்ச்சி பொறுக்கும் சூட்டில்
எடுத்து புற்றில் சுடவும் மாறும்.
2. எருக்கலம்பூ, நெல்லிக்கெந்தகம், இரசம் வகை 5 கிராம் இரசத்தைச் சுத்தி பண் 6ணி சேர்த் தரைத்து வேப்பெண்ணையிற் கொதிப்பித்து துணியிற் தோய்த்துப் புண்ணிற்போடமாறும்.
நாப்புற்றின் குணமும் மருந்தும்
நாக்கு ஒரு புறம் விரிந்து அல்லது இழுபட்டு கண், கண்ணாய் இருக்கும்.
இதற்கு மருந்து தேங்காய் எண்ணெய், வெள்ளாட்டுப்பால், பிராய்வேர், வட்டுவேர், துத்திவேர், நீர்ப்பூலாவேர், வாலுளுவை, கராம்பு, கார்போகரிசி, கோரோசனை, சித்தரத்தை, சிறுதேக்கு, மஞ்சள், மிளகு, சந்தணம், வகைக்கு 5 கிராம், அரைத்து, கரைத்து பதத்தில் வடித்து உள்ளும் கொடுத்து நாக்கிலும் பூசவும்.
லுெம்பு முறிவு, பிசகுதலுக்கு மருந்து
நாவற்பட்டை, ஒதியம்பட்டை, உருக்கு மருந்து கொடியும் பட்டையும், எருக்கம் பூ, சிரட்டைக்கரி, புழுங்கல் அரிசிச்சோறு என்பன வற்றைச் சமன். எடுத்து இடித்துக் கட்டவும்.
முறிவு நெரிவுக்கு மருந்து
ஓமம், பச்சை மூங்கில் தண்டு, சீனக்காரம், உள்ளி, திப்பலி, கருஞ்சீரகம், மிளகு, முருங்கை யிலை, எலுமிச்சங்காய், இவையெல்லாம் ஒரள வாய்க் கூட்டி, எலுமிச்சங்காயைப் பொடியாக வறுத்துப் போட்டு, பொட்டணி கட்டி வைத்துக் கொண்டு, தேவையான போது நல்லெண்ணெய்
36

20.
21.
22.
23.
சட்டியிலுாற்றி, சுடவைத்து பொ ட் ட னி  ைய எடுத்து ஒற்றடம் கொடுக்கவும். தாலுநேரம் செய்ய வேண்டும்.
முறிவு நெளிவுக்கு பத்து
குக்கில், சாளியா, குந்திருக்கம், காசுக்கட்டி, களிப் பாக்கு, கடுக்காய், உள்ளி இவை சமன் எடுத்து முதலிற் கூறப்பட்ட நாலு சரக்கையும் வறுக்காமல் ஏனையவற்றைக் கருக்காமல் வறுத்து, எல்லாவற்றையும் ஒன்றாக்கி அம்மியில் இட்டு அரைத்து, பிறகு கோழிமுட்டை வெண்கருவிட்டு அரைத்து மெல்லிய சீலையில் தடவி நோவிற் போடவும். எலும்பு முறிவு, தெரிவு பொருந்தும்.
எலும்பு முறிவுக்கு மருந்து
1. மாவிலங்கம் பட்டையைத் தூளாக்கி வைத்துக்
கட்ட முறிவு, நெரிவு மாறும்.
2. அத்திவேரை அரைத்து நல்லெண்ணெயில் அரைத்துப் போட எலும்பு முறிவு மாறும்.
மரத்தால் விழுந்த நோவுக்கு ஒத்தடம்
சுக்கும், குறிஞ்சா இலையும் இடித்து, வெதுப்பி ஒத்தடம் கொடுக்கவும்.
முறிவு நெரிவுக்கும், மரத்தாலே விழுந்தவர்களுக் Öll C{hb hl
வேப்பங்கொழுந்து, நொச்சிக் கொழுந்து, சாரணைவேர், சுக்கு, வெள்ளைப்பூடு, வசம்பு, இவை சமன் எடுத்து அரைத்துக் கொண்டு, கத்தரிப் பிஞ்சு துவைத்த சாறும், கோழிக்குஞ்சு
37

Page 24
124.
25.
துவைத்த சாறும், எலுமிச்சம்புளி, சாராயம், நல்லெண்ணெய், வே ப் பெண் ணெ ய், கோழி முட்டை வெண்கரு சமன் எடுத்து அரைத்துக் காயமாக்கிக் கொடுக்க எலும்புமுறிவு நெரிவு, நோவு, இரத்தச் சுரப்பு, நஞ்சுக்கறள், வீக்கம், உளைவு, கடுப்பு, காய்ச்சல், உளத்தி, மயக்கம், பதறுதல் இவையெல்லாம் மாறும். மரத்தாலே விழுந்தவர்களுக்குக் கொ டு க் க நல்லது. குளிர், கூதல், மாறாட்டம், வாதம், சரீர முழுவதும் பரந்த விதனமும் மாறும் .
மரத்தால் விழுந்த நோவுக்கு மருந்து
கோழிக்குஞ்சுச் சாறு, கத்தரிப்பிஞ்சுச்சாறு, சாராயம், கோழிமுட்டை வெண்கரு, வேப்பெண் ணெய் சமன் எடுத்து சதகுப்பை, குக்கில், கரிய பவளம் இவை சமன் எடுத்து இடித்து தூள் போட்டுக் கொடுக்க நோவு, விரணம், வீக்கம், இரத்தம் கண்டல் மாறும். இது நெஞ்சு நோவுக் கும் நன்று.
மரத்தாலே விழுந்த நோவுக்கு மருந்து
1. தென்னங்குருத்தும், ம ஞ் ச ஞ ம் சேர்த்து இடித்து பொட்டணி செய்து நல்லெண்ணெ யிற் கொதிப்பித்து ஒத்தடம் கொடுக்கமாறும்.
2. சுக்கு, மிளகு, வசம்பு குறி ஞ் சா யி  ைல ச் சாற்றில் அரைத்து கொதிக்க வைத்துப் பூசமாறும் .
3. தும்பை இலையும், எருக்கிலையும் சமன்
எடுத்து அரிந்து வேடுகட்டி ஒத்துப்போடவும். பின் நோவில் வைத்துக் கட்டவும்.
38

126.
27.
28.
29.
திருக்கை முள் தைத்தால் இருந்து
நரி ப் ப ய று வேர், சாயவேர், கறியுப்பு, மிளகாய், மஞ்சள், சுக்கு, வெங்காயம், தட்டி கடிவாயில் வைத்துக் கட்டி, பச்சைத் தண்ணீர் ஊற்றவும். புண் இருந்தால் இயங்கம்வேர் துருவி பால் பிழிந்து சக்கையும் சேர்த்துக் கட்டவும்.
திருக்கை முள் தைத்தால் மருந்து
1. கொ வ்  ைவ ச் சாறும், வேப்பெண்ணெயும்
சேர்த்து விடவும்.
2. கொவ்வையிலையும், வெங்காயமும் கசக்கி
வைத்துக் கட்டவும்.
3. பிறகு சுக்கு இடித்து புண்வாயில் வைத்துக்
கட்டவும்.
4. பின் கொவ்வைத் தண்டு இடித்து வைத்துக்
கட்டவும்.
5. வல்லாரை, குதிரைவாலி துவைத்து வைத்துக்
கட்டவும்,
கண்ணில் முள்ளுத் தைத்தால் மருந்து (கையாட்சி)
செந்நாயுருவியிலை, கீழ்க்காய் நெல்லி இலை,
சிறுநீர் விட்டுப் பிசைந்து 3 நாள் கண்ணில் விட LDITgytb.
முள்ளு வீழ
பழப்புளியும், சுண்ணாம்பும் நல்லெணெண் யிற் குழைத்து முட்தைத்த வாயிற்பூச விழும்.
39

Page 25
30.
13.
132.
133,
கடிவிஷத்துக்கும் சிலந்திக்கும் பூச்சு
கோழிமுட்டை, பெருங்காயம், சுண்ணாம்பு, வெல்லம் நன்றாய் அரைத்துப் பூசவும்.
கொடுக்கன் குத்தினால் மருந்து
காஞ்சுரம் பட்டை, வசம்பு, மிளகு, சமன் கூட்டி அரைத்துக் கடிவாயிற் பூச மாறும்.
நாய் கடித்தால் மருந்து
வாய் பேசா து ஊ மத் தம் இலையும், சுண்ணாம்பும் சேர்த்தரைத்து தழும்பிற் பூசவும். வீ ங் கி னா ல் ஊமத்தஞ்சாறும், ஒட்டறையும் சுண்ணாம்புத் தண்ணிரும் கொதிக்க வைத்துப் பூசவும். மிக வருந்தினால் குதிரைவாலி எண்ணெய் தலைக்கு வைக்கவும் அல்லது சின்ன மாவிலங்க மெண்ணெய் தலைக்கும் வைத்து சர்வாங்கமும் பூசவும்.
நகக் காளான் குளிகையை வேப்பெண்ணெ யிற் கொடுக்கவும், குளிர் கண்டால் வாதமடக்கி, நொச்சி, ஊ ம த் தை, களற்சி, மாவிலங்கை, இவற்றின் இலைகளை அரிந்து வே டு கட்டி, அவித்துச் சர்வாங்கமும் ஒத்தடம் கொடுக்கவும். இத்துடன் வேப்பம் விதை கூட்டி ஒத் த ட ம் பிடிப்பது நன்று
பேய்நாய் கடித்தால் மகுந்து
களற்சிப் பருப்பு, பேய்ப் பீர்க்கங்கொட்டை, ஊமத்தங்கொட்டை, சிற்றகத்திக் கொ ட்  ைட பேய்மருட்டி, பேய்க் கரும்பு, கெளரிபாஷாணம், அபின், அவுரிச்சாறு விட்டரைத்து வெற்றிலையில் கொடுக்கவும்.
40

134.
35.
136.
137.
138.
139.
நாய்கடிக்கு மருந்து
பருத்தி இலை, உத்த மா காணி இ ைல வகைக்கு 1 பிடி, மிளகு . 6 இச்சாற்றில் அரைத்துக் கொடுக்கவும்.
விஷக்கடிகளுக்குத் தூதுவளைப்பற்பம் (கையாட்சி)
தூதுவளைச் சமூலம் உலர்த்திப் பொடிசெய்து சீலையில் அரித்து எருமை மோரில் கொடுக்க பாண்டுரோகம் தீரும். நெய்யில் தின்ன உடல் பெருக்கும். தேனில் தின்ன உடல் மெலியும். எருமைத்தயிரில் தின்ன எலிக்கடி தீரும். பசு வெண்ணெயிற் தின்ன விஷக்கடி தீரும் விளக்கெண்ணெயிற் கொள் முதலைக் கடிதீரும். காடியிற் கொள்ள "உடம்பெரிவு தீரும் ,
எலிக்கடிக்கு மருந்து பிரண்டையும் உப்பும் இடித்து 3 நாள் கட்டவும்.
கரடிக் கடிக்கு மருந்து
காட்டுக் குருத்து இலையும், உப்பும் இடித்து
3 நாள் கட்டவும்.
முதலைக் கடிக்கு மருந்து புளியமிலையும், உப்பும் இடித்து 3 நாள் கட்டவும்.
புழு வெட்டுக்கு மருந்து
இலைக்கள்ளிச் சாறும், வெள்ளாட்டுப் புழுக்கிை
பும கூடடி அரைத்துப போடவும்.

Page 26
இந்நூலிற் கூறப்பட்டுள்ள விரணம்
முதலியவனவற்றின் விபரம்
அரையாப்பு இரத்த வீக்கம் எலிக்கடி எலும்பு பிசகல் (முறிவு நெரிவு) ஒடு கட்டு கண்டமாலை களகண்டம் கரடிக்கடி கரப்பன் கிரந்தி குட்டம் கொடுக்கன் குத்தினால் சிரங்கு சிலந்தி தண்டுப்புண் திருக்கைமுள் தைத்தால் திரட்சிப் புண் திருவடிப் புண் தீப்புண் தொடை வாழை தொண்டை மாலை நாய்க்கடி படுவன் பல்வலி பவுந்திரம் பறங்கிப் புண் பிளவை புண் புழுவெட்டு புரை முதலைக்கடி மோகப்புண் வாய்ப்புண் விதனம் விற்புருதி
42

ll. 12.
13.
I 5。 6. 7.
18. 2ο
21. 22。
சில கலைச் சொற்களுககான விளக்கம்
அரையாப்பு
ஒடு
ஒடு விரணம்
கசடு கடுகு
கண்டமாலை
கரப்பன்
களகண்டம்
கிரந்தி சிலந்தி
தண்டுப் புண் திருவடிப் புண்
தொடைவாழை தொண்டைமாலை
படுவன் பறங்கிப் புண் பிளவை
புரை |ւIf0Ա) : மோகப்புண்
விதனம் விற்புருதி
Bubo -அரையிடுக்கில் நிண
நீர்க்கணுக்களில் ஏற்படும்
வீக்கம். Fistula - பகந்தரம், பவுந் திரம்
பகந்தர விரணம்
- அழுக்கு. தழும்பு, அயர்
எண்ணெய் கா ய் ச் சு ம் போது அடியில் அடைவது கழுத்தில் ஏற்படும் ஒரு வகை வீக்கம் Eczema - GF(g5 6du6o 35ë தோல் வியாதி கழுத்தில் ஏற்படும் ஒரு வகைத் திரட்சி வீக்கம் Ganglion - GTL 6 67éend Boil - கட்டு - இதனை சிறு பிளவை என்றும் கூறுவர். ஆண்குறியில் ஏற்படும்புண் ஆறாப் புண், நோவில்லாப் புண்
ஒரு வகைத் தோல் நோய் கழுத்தைச் சுற்றி ஏற்படும் ஒருவிதகழலை ஒரு வகைப் புண் கட்டி Syphilitic ulcer Carbuncle இராஜகட்டி, வெடிபுண் Sinus - (5:Attilyair Cancer - LI fig Gibst it பாலியல் தொடர் பால் ஏற்படும் புண் வேதனையுடன் கூடிய புண் Abscess - Spódi Lig.
43

Page 27
ஆசிரியரின் பிறநூல்கள்
* ஈழத்துச் சித்த மருத்துவ நூல்கள் ஒர்
அறிமுகம் (சாகித்திய மண்டலப் பரிசு, கொழும்புத் தமிழ்ச் சங்கப் பரிசு பெற்ற நூல்)
* சுதேச மருத்துவ மூலிகைக் கையகராதி (இலங்கை அரச கரும மொழித்திணைக்களப் பரிசு பெற்ற நூல்)
崇 உளநெருக்கீடுகளும் மனநலனும்
* கட்டு வைத்தியம்
* இருபதாம் நூற்றாண்டில் ஈழத்துச்
சித்தமருத்துவம்
வெளிவரவுள்ள நூல்கள்
举 யாழ்ப்பாண மக்களின் சைவ உணவுப் பழக்க வழக்கங்களும் சித்த மருத்துவமும்
* சித்த மருந்தியல்
3 Siddha System of Medicine in Sri Lanka
 


Page 28


Page 29