கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: விவசாய டிப்ளோமா

Page 1
$°
ち
காணி விவசாய அமைச்சு
வடக்கு - கிழ
 

விவசாயத் திணைக்களம்
மக்கு மாகாணம்
9 8 9

Page 2


Page 3

விவசாய டிப்ளோமா
பயிற் சி வி பரம்
விவசாயக் கல்லூரி வவுனியா
1989

Page 4

அறிமுகம்
விவசாயம் சமூகவாழ்க்கையின் முக்கிய அம்சமாக அமைந்துள்ளது. இலங்கையின் வடக்கு-கிழக்கு மாகாணத்தில் ஏறக்குறைய 60 % மக்கள் விவசாயப் பயிர்ச்செய்கையிலும், மற்றும் கால்நடை வளர்ப் பிலும் ஈடுபட்டுள்ளார்கள்.
இத்துறைகளின் உற்பத்தி இந்த மாகாணத்தின் தற்போதைய தேவைக்கு அதிகமான நிலையில் உள்ளது. விவசாயம் போன்ற உற்பத் தித் துறைகட்கு முக்கியத்துவத்தைக் கொடுப்பதால் இத்துறைகளில் வருமான அதிகரிப்புக்குரிய சாத்தியக்கூறுகள் எதிர்பார்க்கப்படுகின் றன. இத்தகைய வருமானம் எமது தேவைகளை அதிகரிக்கச் செய்வது தவிர்க்கமுடியாததாக அமைகிறது. இதஞலே உற்பத்தி அதிகரிப்பு சுலபமாக நுகரக்கூடியதாகிறது.
உலகின் பொருளாதார நிலைப்பாடுகளில் உணவு உற்பத்தியின் சாத்தியக்கூறுகள் சீர்தூக்கிப் பார்க்கப்படவேண்டியது.
விஞ்ஞான ரீதியிலான சீரான விவசாய உற்பத்தி அதிகரிப்பையே விவசாயிகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும். விவசாய உற் பத்தியினல் கிடைக்கும் அதிகரித்த வருமானம் எமது ஏற்றுமதி விவ சாய உற்பத்தியை ஊக்குவிக்கக்கூடியதாக அமையும். விவசாயத்தில் பயிற்சிபெற்றவர்களும், விவசாய அபிவிருத்தியில் தம்மை அர்ப்பணித் தோரும் தமது அறிவையும், அனுபவத்தையும் விவசாயிகளின் நல னுக்காக அர்ப்பணிக்கவேண்டியது அவசியம்.
இந்த நிலையில் வவுனியாவில் அமையும் விவசாயக் கல்லூரி விவ சாயத்தில் பயிற்சிபெற்று, விவசாயத்துறையில் தம்மை அர்ப்பணிக் கக்கூடிய இளைஞர்களை உருவாக்கவுள்ளது.
1977 டிசம்பர் மாதத்தில் USAID நிறுவனத்தின் ஆய்வின்படி 1978 தொடக்கம் 1982 ஆம் ஆண்டுக்கான காலப் பகுதியில் வருடம் தோறும் 315 விவசாய டிப்ளோமாப் பட்டதாரிகள் தேவையெனக் கணிக்கப்பட்டுள்ளது. 1982க்கு பின்னுள்ள காலப் பகுதியிலும் சில வருடங்களுக்கு இதேயளவான தேவை நீடிக்கலாம் எனக்கணிக்கப் பட்டுள்ளது. வடக்கு - கிழக்கு மாகாணத்திற்குத் தேவையான விவ சாய டிப்ளோமா பட்டதாரிகளின் அளவு பின்வரும் துறைகளில் அரசாங்க மற்றும் தனியார் நிறுவனங்களின் தேவையையும், விவ சாயத்தை தமது ஜீவனுேபாயமாகக் கைக்கொள்ள விரும்புவோரின் அளவிலும் தங்கியுள்ளது.
( 1)

Page 5
(அ) பயிர் உற்பத்தி
(ஆ) கால்நடை உற்பத்தி
(இ) காணி அபிவிருத்தியும், பாவனையும்
(ஈ) பெருந்தோட்டத்துறையான தென்னை, கரும்பு, மரமுந்திரிகை
உற்பத்தி
(உ) வனச் செய்கையும் மீன்வளர்ப்பும்
இதன்படி வருடம்தோறும் 75 தொடக்கம் 100 டிப்ளோமா பட்ட
தாரிகளை மேற்கூறிய துறைகளின் பற்ருக்குறையை நிவர்த்திசெய்யப்
பயிற்றுவிக்கவேண்டியுள்ளது.
விவசாயத்தில் சகலதுறைகளையும் உள்ளடக்கிய ஒரு விரிவான பயிற்சியை வழங்குவதே இக்கல்லூரியின் எதிர்பார்ப்பாக உள்ளது. விவசாயத்தைச் சார்ந்த ஏனைய துறைகளிலும் பயிற்சி வழங்கப்பட வுள்ளது.
மாணவர்களின் அறிவையும், திறமையையும் நல்ல முறையில் பயன்படுத்தி அவர்களுக்கு புதிய தொழில்நுட்பங்களில் விசேடமாக கம்பியூட்டர் போன்ற துறைகளில் சிறந்த பயிற்சி அளிப்பதும் இக்கல்லூரியின் எதிர்பார்ப்பாக உள்ளது.
மாணவர்கள் கல்வி சாரா பிற துறைகளான விளையாட்டு, இலக் கியம், சமூகசேவை போன்ற துறைகளிலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்படும்.
சுருங்கக்கூறின் இங்கு கல்வி பயில வரும் ஒவ்வொரு மாணவ ருக்கும் விவசாயத்துறையில் பயிற் சி வழங்குவதுமட்டுமல்லாமல், ஏனைய துறைகளிலும் சிறப் பா ன அறிவையும், அனுபவத்தையும் வழங்கி, தலைமைத்துவமேற்று நடாத்தக்கூடிய பொறுப்புணர்ச்சி யுடைய பிரசையாக மாற்றுவதே இக்கல்லூரியின் நோக்கமாக வுள்ளது.
இலங்கையின் மத்தியதர விவசாயக் கல்லூரியின் வரலாறு
முதன்முதலாக 1916 ஆம் ஆண்டில் பேராதனை அரசினர் பூங்கா வில் உள்ள அயனமண்டல விவசாயக் கல்லூரியில் மத்தியதர விவ சாய பயிலுனர்களை பயிற்றுவிப்பதற்கான விவசாயக் கல்வி நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. இப்பயிற்சி நெறியானது எதிர்கால விவசாய
(2)

போதனுசிரியர்களையும், விதானமார்களையும், ஆசிரியர் களையும் மற்றும் விவசாயத்தை ஜீவனுேபாயமாகக் கைக்கொள்ள விரும்பு வோரையும் பயிற்றுவிப்பதை நோக்கமாக கொண்டிருந்தது. இந் நிறுவனம் 1941 ஆம் ஆண்டில், தற்பொழுது கண்ணுெறுவையில் உள்ள சேவைக்காலப் பயிற்சி நிலையத்திற்கு மாற்றப்பட்டது. இதே வேளை யில் பெண்களுக்கான விவசாயப் பாடசாலை ஒன்று குண்டசாலையில் 1948 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டு பின் 1958 ஆம் ஆண்டில் இது ஆண், பெண் இருபாலருக்கான விவசாயக் கல்லூரியாக மாற்றப்பட்டு தமிழ், சிங்கள மொழிகளில் பயிற்சி அளிக்கப்பட்டது. 1966 ஆம் ஆண்டில் பேராதனையிலும், குண்டசாலையிலும் அமைந்த இரு விவ சாயக் கல்லூரிகளையும் ஒன்றிணைத்து பொதுவான பயிற்சி நெறி யானது பின்வரும் பிரிவுகளை உள்ளடக்கிய விசேட பயிற்சி நெறி
யாக மாற்றி அமைக்கப்பட்டது.
1. பயிர் உற்பத்தி 2. விலங்கு வேள 68%"חT60) LD
3. விவசாயப் பொறியியல்
4. பூங் கனியியல்
5. மனையியல்
1974 ஆம் ஆண்டில் பொதுசன அபிப்பிராயத்திற்கு இணங்க மேற் கூறப்பட்ட விசேட பயிற்சிநெறியானது மீண்டும் பொதுவான பயிற்சி
நெறியாக மாற்றப்பட்டது.
1981 ஆம் ஆண்டில் குண்டசாலை விவசாயக் கல்லூரியுடன், பெல்
விகாரையிலும், அங்குனகொலபலஸவிலும் சிங்கள மாணவர்கரைப் பயிற்றுவிப்பதற்காக மேலும் இரு விவசாயக் கல்லூரிகள் நிறுவப் பட்டன. இம் மூன்று பாடசாலைகளும் ஆண்/பெண் இருபாலருக்கும் இருவருட விவசாய டிப்ளோமாப் பயிற்சியை அளித்து வருகின்றன. விவசர்யத் திணைக்களத்தின் இப்பாடசாலைகளைத் தவிர அம்பாறையில் அமைந்துள்ள ஹா டி நிறுவனம், கொழும்பில் உள்ள அக்குவைனஸ் கல்லூரி மற்றும் கண்டியில் உள்ள திரித்துவக் கல்லூரியிலும் விவசாய டிப்ளோமா பயிற்சி வழங்கப்பட்டுவருகிறது.
( 3 )

Page 6
வடக்கு-கிழக்கு மாகாணத்தில் விவசாய டிப்ளோமா கல்லூரி அமையவேண்டியதன் அவசியம்
1958 ஆம் ஆண்டில் சிங்கள / தமிழ் மொழி மூலமான விவசாய டிப்ளோமா பயிற்சிக்காக குண்டசாலையில் விவசாயக் கல்லூரி அமைக் கப்பட்டது. இங்கு அண்ணளவாக வருடம்தோறும் 40 தமிழ் மாண வர்கள் டிப்ளோமாக் கல்வி பயின்றுவந்தார்கள். 1983 ஆம் ஆண்டின் பின் இக்கல்லூரியில் கல்வி பயிலும் தமிழ் மாணவர்களின் தொகை மிகக் குறைவாகவே இருந்தது. இதற்கான சில முக்கிய காரணங்கள் பின்வருமாறு:
மொழிப் பிரச்சனை காரணமாக தமிழ் மக்கள் தென் பகுதியில்
பாதிப்புக்குள்ளானதால் பெற்றேர் தமது பிள்ளைகளை இப்பாட
சாலைக்கு கல்வி பயில அனுப்பிவைக்கத் தயங்கினர்கள்.
* வடக்கு - கிழக்கு மாகாணத்தின் விவசாயிகள் நெடுந் தூரத்தில் உள்ள இப்பாடசாலைக்கு தமது பிள்ளைகளை அனுப்பிப் படிப்பிப் பதில் கூடிய செலவை எதிர்நோக்கி இருந்தனர்.
* மாணவர்கள் எந்தப் பகுதியில் விவசாயத்தில் த ங் களை ஈடு படுத்துகிருர்களோ அப்பகுதியிலேயே பயிற்சியும் வழங்கப்பட வேண்டும். பள்ள நாட்டின் வறண்டவலயத்தில் உள்ள வடக்கு - கிழக்கு மாகாணத்தின் காலநிலை, மண்வளம், மண்பாதுகாப்பு, பயிர்ச்செய்கை முறைகள் அவர்கட்குப் பயிற்சிவழங்கப்பட்டு வரும் குண்டசாலையின் நிலை மை க்கு ஒவ்வாததாகவுள்ளது. எனவே அங்கு வழங்கப்படும் இப்பயிற்சி எமது பகுதிக்கு ஒவ் வாததாகும்.
மேற்கூறிய பிரச்சினைகட்கு நிரந்தரமான ஒரு தீர்வுகாணவும் கூடிய தகைமையும் அனுபவமும் உள்ள மாணவர்களை இப் பயிற்சியில் ஈடுபடுத்தும் நோக்கத்துடனும் மற்றும் தற்போதைய டிப்ளோமா பயிற்சியில் உள்ள குறைபாடுகளை நீக்கி சிறப்பான ஒரு பயிற்சியை வழங்குவதற்கும் வடக்கு-கிழக்கு மாகாணத்தில் ஒரு டிப்ளோமா விவசாயக் கல்லூரி அமைவது இன்றியமையாததாகவுள்ளது.
(4)

இக்கல்லூரியை வவுனியாவில் அமைப்பதற்கான முக்கியநோக்கம் இக்கல்லூரி வடக்கு-கிழக்கு மாணவர்கட்கு மட்டும் அல்லாது ஏனைய மாகாணத்தில் உள்ள தமிழ் மாணவர்கட்கும் ஒரு மத்திய இடமாக அமைந்திருப்பதால் ஆகும். M.
பயிற்சி நெறிக்கான தவணை
இவ்விவசாயக் கல்லூரி ஆண்களுக்கும், பெண்களுக்கும் இருவருட விவசாய டிப்ளோமாப் பட்டத்தை வழங்கும்.
ஒவ்வொரு ஆண்டுக்குமான பயிற்சி நெறி செப்டெம்பர் மாதத் தில் தொடங்கி ஆகஸ்ட்டு மாதத்தில் முடிவடைகிறது. இக்காலத் தில் 10 மாதங்கள் பயிற்சிநெறிக்காக ஒதுக்கப்பட்டு 3 தவணைகளாக பிரிக்கப்படுகிறது.
1 ஆம் தவணை - செப்டெம்பர் - டிசம்பர்
பிற்பகுதி பிற்பகுதி 2 ஆம் தவணை - ஜனவரி - ஏப்ரல்
நடுப்பகுதி முற்பகுதி 3 ஆம் தவணை - மே - ஆகஸ்ட்டு முற்பகுதி முற்பகுதி
கட்டணங்கள்
பயிற்சி நெறிக்கான கட்டணம் இலங்கைப் பிரசைகட்கு பயிற்சி நெறி இலவசமாக வழங்கப்படுகிறது.
தங்கும் வசதியும் - விடுதிக் கட்டணமும்
மாணவர்களுக்கு சிறப்பான தங்குமிட வசதி வழங்கப்படும். உணவுக்கும், தங்குமிட வசதிக்குமாக ஒவ்வொரு தவணைக்கும் ரூபா 1500/- அறவிடப்படும். இப்பணத்தை தவணை தொடங்க முன்பு செலுத்தவேண்டும். மீளப்பெறக்கூடிய வைப்புப்பணம்
மாணவர்கள் ஆய்வு கூடங்களில் கையாளும் உபகரணங்களுக் காக மீளப் பெறக்கூடிய வைப்புப்பணமாக ரூபா 250/- (இருவருடத் திற்கு) கல்லூரியின் அனுமதியின்போது செலுத்தவேண்டும். மாணவர் மன்றக் கட்டணம்
மாணவர் மன்றக் கட்டணமாக ஆண்டு தோறும் பயிற்சிநெறி தொடங்கும்போது ரூபா 50/- செலுத்தப்படவேண்டும்.
(5)

Page 7
மீள் பயிற்சிக்கான கட்டணம்
மாணவர் ஒருவர் ஏதாவது காரணத்துக்காக தனது பயிற்சியை மீளத்தொடர வேண்டிய சந்தர்ப்பம் ஏற்படுமிடத்து அவர் அப்பயிற் சிக்காக வழங்கப்படும் சகல வசதிகளையும் இழந்தவராகக் கருதப்பட்டு விவசாயத் திணைக்களப் பணிப்பாளரால் தீர்மானிக்கப்படும் தொகையை பயிற்சி நெறிக்கான கட்டணமாகச் செலுத்திய பின்பே பயிற்சி நெறியைத் தொடர அனுமதிக்கப்படுவர்.
அனுமதி
இப் பயிற்சி நெறிக்கான விண்ணப்பம் வருடம்தோறும் யூலை மாதத்தில் புதினப் பத்திரிகைகள் மூலம் விளம்பரப்படுத்தப்படும் . விண்ணப்பதாரிகள் மாதிரி விண்ணப்பப் படிவங்களுக்கமையப் பூரணப் படுத்தப்பட்ட விண்ணப்பங்களை குறிப்பிட்ட திகதிக்கு முன்பாக கிடைக்கக்கூடியதாகப் பதிவுத் தடாலில் விவசாயப் பணிப்பாளர், வடக்கு கிழக்கு மாகாணம், திருகோணமலை என்ற முகவரிக்கு அனுப் பிவைக்க வேண்டும். தகுதியான விண்ணப்பதாரிகள் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டு இறுதியான தேர்வு முடிவடைந்ததும் தேர்வின் முடிவு அவர்கட்கு அறிவிக்கப்படும்.
அனுமதிக்கான தகைமைகள்
1. விண்ணப்பதாரி பயிற்சி ஆண்டின் அக்டோபர் மாதம் முத லாம் திகதியில் 18 வயதிற்கும் 22 வயதிற்கும் இடைப்பட்ட வராக இருத்தல் வேண்டும்.
2. க.பொ.த உயர்தரப் பரீட்சையில் ஒரே தடவையில் பின் வரும் பாட்ங்களுள் ஏதேனும் நான்கு பாடத்தில் சித்திய டைந்தவராக இருக்கவேண்டும்.
தாவரவியல், விலங்கியல், இரசாயனவியல், பெளதீகவியல்,
விவசாய விஞ்ஞானம், புவியியல்.
(6)

பயிற்சி நெறிக்கான பாடத்திட்டம்
முதலாம் ஆண்டு விவசாயத் தாவரவியல்
தாவர உருவவியல், தாவர உடற்கூற்றியல், இழையவியல், உடற்தொழிலியல், வளர்ச்சியும் விருத்தியும், இனப்பெருக்கம், பிறப்புரிமை யியல்பும் தாவரப் பிறப்பாக்கமும், விவசாய பயிர்களின் பிறப்பாக்கம், வனவியல், களைகளும் கட்டுப்பாடும்.
6în af PT u ) J F 1 u u 6JT un
பாறையும் கணிப்பொருட்களும், பாறைகளின் சிதைவும் மண் உற்பத்தியும், பெருமண் கூட்டப் பிரிவும், இலங்கையின் மண்வகை களும், மண்ணின் தன்மைகள் , தாவரப் போசனத் தேவைகள், மண்ணில் போசணை மாற்றங்கள்; சேதன, அசேதனப் பசளைகள் , நீர் தேங்கிய நெல்வயல் மண்ணின் தன்மை , பிரச்சனைக்குரிய மண் வகைகளும் அதன் தீர்வுகளும், உயிரியல் இரசாயனம்.
பயிர்ப் பரிபாலனம்
கால நிலையியல், மண்வளம் பேணல், சேதனப் பசளையும் மண் வளமும், பயிர்ச்செய்கை முறைகள், நெல், மற்றும் சிறுதானியப் பயிர்ச்செய்கை முறைகள்.
மிருக பரிபாலனம்
கால்நடை விருத்தியில் தற்போதைய நிலைமையும் காலநிலையின் தாக்கமும் (விசேடமாக வடக்கு - கிழக்கு மாகாண நிலமைப்பற்றியது.) மாடு, எருமை, கோழி, தாரா என்பவற்றின் இனங்களும், இயல்பு களும், போசணை, பராமரிப்பு முறைகளும் வதிவிடம் அமைத்தல், புல், வெட்டுப்புல் உற்பத்தி மற்றும் செறிவுத் தீனி வழங்கல்.
(7)

Page 8
பூங்கனியியல்
விதைகளும் அதன் இயல்புகளும், நாற்று மேடை பராமரிப்பு பதிய முறை இனப்பெருக்கம், பழத்தோட்டம் அமைத்தலும் பராம ரிப்பும், பழங்கள் அறுவடை, டாக்குவப்படுத்தல், சேமித்தல், பழ உடற்தொழிலியல், வளர்ச்சித் தூண்டுமுட்சுரப்புகள் விவசாயப் பொறியியல்
பொறியியல் பற்றிய அடிப்படை, நில அளவையும் மட்டம் பார்த்தலும், பண்ணைக் கட்டிட, அமைப்பு, இயந்திரம்பற்றிய அறிவு, இயந்திர வகைகள், வலுமாற்றம், எரிபொருள், குளிராக்கல், உராய்வு நீக்கல், மின் இணைப்புத் தொகுதி, இருசில்லு, நான்குசில்லு உழவு இயந்திரமும் இவற்றைத் தெரிவு செய்தலும், பொருத்த மான தொழில் நுட்பம். ر.* உணவு விஞ்ஞானம்
உயிர் இரசாயணம், போசனை, உணவுபதப்படுத்தலும் பாதுகாத் தலும், பால் இரசாயனம்.
வேலைத்தளப் பயிற்சி (ஆண்களுக்கு மட்டும்)
பொருட்களை வகைப்படுத்தல், உலோக வேலை, மரவேலை.
இரண்டாம் ஆண்டு பயிர்ப் பரிபாலனம்
பருப்புவகைப் பயிர்கள், எண்ணெய் வித்துப்பயிர்கள், வாசனைப் பயிர்கள், கிழங்குவகைப் பயிர்கள், நார்ப்பயிர்கள், கரும்பு மற்றும் புகையிலைப் பயிர்கள் போன்றவற்றின் உற்பத்தி, கோப்பி கொக்கோ, கறுவா, கராம்பு, சாதிக்காய், ஏலம், மிளகு போன்ற சிறு ஏற்றுமதி பயிர்களின் உற்பத்தி. பெருந்தோட்டப் பயிர்களான தேயிலை, தென்னை, இறப்பர் உற்பத்தி.
மிருக பரிபாலனம்
பன்றி வளர்ப்பு:- இனம் தெரிதல், பராமரித்தல், வதிவிடம், உன
வூட்டல், சந்தைப்படுத்தல்.
செம்மறி வளர்ப்பு: இனம் தெரிதல், பராமரித்தல், வதிவிட்ம், உண
வூட்டல், இனப்பெருக்கல், கம்பளி உற்பத்தி.
டல், பாலின் கூறுகள், பால் உற்பத்தியை நிர்ணயிக்கும் காரணிகள், பால் சுரத்தல், பால் கறத்தல், சுத்தமான பால் உற்பத்தி, பாலும் , நுண் அங்கிகளும்,
ஆடு வளர்ப்பு:- இனம் தெரிதல், பராமரிப்பு, வதிவிடம், உணவூட்
(8)

பால் பொருட்கள் - நெய் பிரித்தல், தயிர் உற்பத்தி, யோர்க்கட் உற் பத்தி, சீஸ் உற்பத்தி, வெண்ணெய் உற்பத்தி, ஒடுக்கியபால், பால்மா உற்பத்தி,
மிருக சுகாதாரம் - பக்டீரியா நோய்கள்
பங்கசு நோய்கள் வைரசு நோய்க்ள் ஒட்டுண்ணிகளின் நோய்கள் அனுசேப நோய்கள் போசணைக் குறைபாட்டு நோய்கள் செயற்கை முறைச் சினைப்படுத்தல்
பூங்கனியியல்
உள்நாட்டு, மேல்நாட்டு மரக்கறி வகைகளின் உற்பத்தி, பிரதா னமான பழமரங்களின் உற்பத்தி, பூந்தோட்டப் பயிர்கள், பழமர மானியத்திட்டம். வீட்டுத்தோட்ட அபிவிருத்தி (தேனி வளர்ப்பு உட்பட), பட்டுப்பூச்சி வளர்ப்பு.
விவசாயப் பொறியியல்
சக்தியின் மாற்றுவளங்கள். சாகுபடிக் கருவிகள், விதையிடும் கருவி, நாற்றுதடும் கருவி, தெளிகருவிகள், தூள் விசிறும் கருவிகள், களைகட்டுப்படுத்தும் கருவிகள், மற்றும் ஊடுசாகுபடிக் கருவிகள், நீர்நிலையியல், மண், நீர் பராமரிப்பு, நீர்ப்பாசனம், வடிகால் அமைத்தல், மண் பாதுகாப்பு, நீர் இறைக்கும் இயந்திரம், அறு வடைக் கருவிகள், அறுவடை, பதனிடும் கருவிகள், விவசாய இயந் திரங்களை பரிசோதித்தல்.
பயிர்ப் பாதுகாப்பு
பயிர்ப் பாதுகாப்புச் சட்டங்கள், பொதுவான பூச்சியியல், விவ சாயப் பூச்சியியல், முக்கிய பயிர்களைத் தாக்கும் பூச்சிகளும் கட்டுப் பாட்டு முறைகளும், −
(9)

Page 9
நோய்களும் நோய்க் காரணிகளும்.
முக்கிய பயிர்களைத் தாக்கும் நோய்களும் அதன் கட்டுப்பாட்டு முறைகளும், உடற்ருெழிலியல் நோய்கள் விலாங்குப் புழுக்கள், நாற்றுமேடை நோய்கள், களைகளும் அதன் பாகுபாடுகளும் - - களைகட்டுப்படுத்தல்.
விவசாயப் பொருளாதாரமும், பண்ணை முகாமைத்துவமும்
தரவுகள் ஒழுங்குபடுத்தல், பொருளாதார அறிமுகம், விலைக் கொள்கை உற்பத்திப் பொருளாதாரம், சமூக பொருளாதார ஆய்வு கள், இலங்கையின் பொருளாதார நிலைமையும், அதில் விவசாயத் தின் பங்கும், விவசாய சந்தைப்படுத்தல், கடன் வசதி, பயிர்க்கா ப் புறுதி, தளமட்ட விலேத்திட்டம்
பண்ணை முகாமைத்துவம்:- தத்துவங்கள், பண்ணை முகாமையா ளரின் பங்கு, பண்ணைத் திட்டமிடலும், நிர்வாகமும் - பண்ணை வரவு செலவு, பண்ணையின் உற்பத்தி மற்றும் சொத்துக்களின் பொறுப்பும், பாதுகாப்பும் .
விவசாய விரிவாக்கம்
விரிவாக்கத்தின் தத்துவங்கள், முதியோர் கல்வி, விவசாய அபி விருத்தி, விவசாய உற்பத்தியில் ஈடுபட்டிருக்கும் அரச நிறுவனங்க ளின் அமைப்பு முறையும், கடைமைகளும், செய்தித் தொடர்புகள் புதிய முறைகளின் கையாளல், பரம்பல் படிமுறைகள், கிராமிய சமுதாயம், தலைமைத்துவம், விரிவாக்கத் திட்டமிடல், பயிற்சி மூலம் தொடர்பு கொள்ளும் விரிவாக்க முறை, விரிவாக்க கற்பித்தல் முறையும், கற்பித்தற் பொருட்களும், பண்ணை மகளிர் விரிவாக்கத்திட்டம், இளம் விவசாயிகள் கழகமும், விவசாயத்தில் அதன் பங்கும்.
வேலைத்தளப் பயிற்சி
நாலு சில்லு, இரண்டு சில்லு உழவு இயந்திரங்களை பராமரித்த லும், பழுது பார்த்தலும்
தரை பண்படுத்தும் கருவிகள், விதையிடும் கருவிகள், தெளி வருவி கள், தூள் விசிறு கருவிகள், நீர் இறைக்கும் பம்பிகள், நீர்ப்பாசன உபகரணங்கள், அறுவடை, பதப்படுத்தல் இயந்திரங்கள்.
(10)

பரீட்சைகள்
வரவு
இறுதிப்பரீட்சை பகுதி I பகுதி II க்குத் தோற்றுவதற்கு ஒவ் வொரு பாடத்திலும் கொள்கைமுறை கற்பித்தலிலும், செயல்முறையி லும் தனித்தனியே வருடமொன்றுக்கு 80% க்கு குறையாத வரவு இருக்க வேண்டும்.
தொடர்மதிப்பீடு
சாதாரண பயிற்சிக் காலத்தில் ஒவ்வொரு பாடத்திலும் கொள் கைமுறை கற்பித்தலும், செயல்முறையிலும் தனித்தனியே தொடர் மதிப்பீடுகள் நடைபெறும். கொள்கை முறை கற்பித்தலில் தொடர் மதிப்பீடு சிறு பரீட்சைகள், தொடர்ச்சியான முறையில் வைப்பதன் மூலம் மதிப்பீடு செய்யப்படும். செயல் முறைகட்கான தொடர் மதிப்பீடுகள், வயல்களில் செய்யும் செயல்முறைகள், ஆய்வுகூடச் செயல் முறைகள், மற்றும் செயல் விளக்கம், ஒப்படைகள் மூலம் செய்யப் படும். ஒவ்வொரு பாடத்திற்கும் இறுதிப்பரீட்சை மதிப்பெண்ணின் 40% தொடர் மதிப்பீடு மூலம் வழங்கப்படும். . . . .' '
இறுதிப் பரீட்சை
முதலாம் வருட முடிவிலும் இரண்டாம் வருட முடிவிலும் முறையே பகுதி 1, பகுதி II க்கான இறுதிப்பரீட்சை நடாத்தப்படும். இப் பரீட்சைப் பெறுபேற்றில் இருந்து 60% மதிப்பெண் வழங்கப் Llu Goth.
கொள்கை முறைக் கற்பித்தலுக்கும், செயல் முறைகளுக்கு மான மதிப்பெண்கள் வழங்கல்.
பரீட்சையில் சித்தியடைவதற்கு கொள்கை முறைக் கற்பித்தலி லும், செயல் முறையிலும் தணித்தனியே 40 க்குக் குறையாத மதிப் பெண் பெறப்பட வேண்டும். இறுதி மதிப்பெண் பின்வரும் முறை யில் கணிக்கப்படும்.
கொள்கைமுறைக் கற்பித்தலின் 2/3 மதிப்பெண்கள் + செயல் முறையின் 1/3 மதிப்பெண்கள்.
(11)

Page 10
பின்வரும் மதிப்பெண் அடிப்படையில் ஒவ்வொரு ப்ோடத்திற்கும் தரங்கள் வழங்கப்படும்:
70% க்குக் கூடியது - A
60% - 69% - B 50% - 59 % - C 40% - 49 % - S
பரீட்சார்த்தி சகல பாடங்களிலும் சித்தியடைய வேண்டும். அத்தகைய பரீட்சார்த்திக்கான தரங்கள் பகுதி 1, பகுதி 11 ஆகிய பரீட்சைகளில் பெற்ற சராசரி மதிப்பெண்ணின் அடிப்படையில் பின் வரும் நியமங்களுக்கேற்ப வழங்கப்படும்.
70% க்குக் கூடியது 1ம் தரம் 2ம் தரம் 69% -نس %55 40% - 54% சாதாரண சித்தி
பகுதி 1 அல்லது பகுதி II இல் நடாத்தப்பட்ட பரீட் சையில் ஏதாவது ஒரு பாடத்திலாவது சித்தியடையாமல் மீள் பரீட்சைக்கு தோற்றிய பரீட்சாத்திகளுக்கு 1 ஆம், 2 ஆம் தரம் வழங்கப்பட மாட்டாது.
பரீட்சையில் சித்தியடைந்த பரீட்சார்த்திகளுக்கு விவசாய டிப் ளோமா தராதரப்பத்திரம் வழங்கப்படும்.
பரீட்சார்த்தி ஒருவர் ஒன்று அல்லது இரண்டு பாடங்களில் மட்டும் சித்தியெய்யத் தவறும் பட்சத்தில் அவர் அப்பாடங்களில் நூண சித்தி அடைவார். அவர் அப்பாடங்களில் மட்டும் மீள் பரீட் சைக்குத் தோற்ற அருகதையுடையவர்.
சித்தியின்மை
பரீட்சார்த்தி ஒருவர் இரண்டுக்கு மேற்பட்ட பாடங்களில் சித்தி படையத் தவறும் வேளையில் அவர் முழுப் பாடங்களிலும் சித்தி யடையாதவராகக் கருதப்படுவார்.
விடைத்தாள்கள் மீளத் திருத்தல்
பகுதி 1 அல்லது பகுதி II பரீட்சையில் நூனசித்தி பெற்றவரும் சித்தியடையாதோரும் தமது விடைத்தாள்களை மீனத் திருத்துவ
(12)

தற்கு தகுதியுடையவர்கள் இவர்கள் பரீட்சை முடிவு வெளிவந்து இரு கிழமைகட்குள் அதிபருக்கு இதுபற்றி அறிவித்து ஒவ்வொரு பாடத்திற்கும் மீளத் திருத்துவதற்கு ரூபா 100/- செலுத்த வேண்டும். பரீட்சார்த்தி மீளத் திருத்தும் பாடத்தில் சித்தியுறும் வேளையில் அவரது கட்டணம் ரூபா 100/- மீளளிக்கப்படும். சித்தியெய்யாத விடத்து அவரது பணம் மீள வழங்கப்படமாட்டாது. செய்முறையில் சித்திபெருத பாடத்திற்காக மீளத்திருத்துவதற்கு விண்ணப்பிக்க முடியாது நூ ைசித்தி அல்லது சித்தியின்மை காரணமாக மீளத் தோற்றும் பரீட்சாத்திகளின் விடைத்தாள் மீளத் திருத்தலுக்கு அருகதை அற்றதாகும்,
மீள் பரீட்சை
பகுதி 1 அல்லது பகுதி II இல் நூனசித்தி அல்லது சித்தியடை யாத பரீட்சார்த்திகள் மீள் பரீட்  ைச க்கு தோ ற் ற லா ம். இதற்கான விண்ணப்பங்கள் பரீட்சை முடிவு வெளியாகி இரு கிழமை கட்குள் அதிபருக்கு அனுப்பப்படல் வேண்டும்.
சித்தியடையாதோரும் பரீட்சையும்
சித்தியடையாத பரீட்சார்த்திகள் 3 தொடர்ச்சியான தட வைகட்கு மட்டும் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு அனுமதிக்கப்படுவர். ஏதாவது ஒரு தடவை பரீட்சைக்கு தோற்ற முடியாத பரீட் சார்த்திகள் வைத்திய சான்றிதழ் சமர்ப்பித்து பிறிதொரு தடவை பரீட்சைக்குத் தோற்றலாம். பரீட்சார்த்தி ஏதாவது ஒரு பாடத்திற் காவது தோற்றினலும் அது ஒரு தடவையாக கணிக்கப்படும்.
பரீட்சை ஒழுங்கீனம்
பரீட்சார்த்தி ஒருவர் பரீட்சை மண்டபத்தினுள் ஒழுங்கீனமாக நடப்பாராயின் அவரது நடவடிக்கை பற்றி அதிபர்/உதவி அதிபர், பிரதான பரீட்சை மேற்பார்வையாளா உள்ளடங்கிய குழு அவரது நடத்தை பற்றிய அறிக்கையை, பரீட்சார்த்தியின் வாக்குமூலம், மற்றும் சாட்சிகளின் வாக்குமூலத்துடன் விவசாயப் பணிப்பாளருக்கு அறுப்பிவைக்கவேண்டும்.
(13)

Page 11
பொது
மாணவர்கள் கல்லூரியின் சட்ட திட்டங்களை மதித்து நடக்க வேண்டும். அதிபரும், விரிவுரையாளர்களும் யாராவது ஒரு மாணவன் கல்லூரியில் ஒழுங்கீனமாக நடந்து அவரைத் தொடர்ந்து கல்லூரியில் வைத்திருப்பதால் கல்லூரிக்கு அபகீர்த்தி ஏற்படும் எனக் கருதுமி டத்து அம்மாணவன் எந்நேரத்திலும் கல்லூரியிலிருந்து இடை நிறுத்திவைக்கப்படலாம்.
மாணவர் மன்றம்
பாடவிதானத்திற்கு அப்பாற்பட்ட விடயங்களில் மா ன வ ர் மன்றம் ஈடுபாடு உடையதாக இருக்கும். விளையாட்டு, இலக்கியம், நாடகம், சமூகசேவை போன்ற துற்ைகளில் மாணவர்களின் ஈடு பாட்டுக்கு இம்மன்றம் பொறுப்பாக இருக்கும். சகல மாணவர்சளும் இம் மன்றத்தில் அங்கத்தவர்களாக இருக்கக் கடமைப்பட்டவர்கள். மாணவர் மன்றத்திற்குச் செலுத்திய பணம் மீள அளிக்கப்படமாட் டாது. விரிவுரையாளர்கள் இச் சங்கத்தின் கெளரவ அங்கத்தவர் களாக இருக்கலாம்.
ஆய்வுகூடங்கள், வேலைத்தளம், உணவு விஞ்ஞானப் பகுதி
இக் கல்லூ ரி க்கு சகல வசதிகளையும் உள்ளடக்கிய உயிரியல் மற்றும் இரசாயனவியல் ஆய்வுகூடமும், வேலைத்தளமும் மற்றும் உணவியல் பகுதியும் அமைத்துக்கொடுக்கப்படும்.
கல்லூரியின் பண்ணை
இக் கல்லூரியில் உள்ள பண்ணையில் மாணவர்கள் தங்களுக்குத் தேவையான செயல்முறை அனுபவங்களையும், அறிவையும் பெறும் பொருட்டு பயிர் உற்பத்தி, விலங்கு வேளாண்மை மற்றும் பூங்கனி யியல் பகுதிகள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. இப்பண்ணை யில் விரிவுரையாளர்கள் மாணவர்களின் உதவிகொண்டு விவசாய ஆராய்ச் சியிலும் ஈடுபடுவார்கள்.
( 14)

பகுதி நேர விரிவுரையாளர்கள்
பல்கலைக்கழகம், விவசாய ஆராய்ச்சி நிலையம் மற்றும் அரசாங்க நிறுவனங்களில் இருந்து பல்வேறு துறைகளில் நிபுணத்துவ சேவை யைப் பயன்படுத்துவதற்காகப் பகுதி நேர விரிவுரைகள் ஒழுங்கு செய்யப்படும். இவற்றின் மூ ல ம் மாணவர்கள் விவசாயத்துடன் இணைந்த பல துறைகளிலும் தமது அறிவைப்பெருக்கிக்கொள்ள ஏது வாக இருக்கும்.
கல்விச் சுற்றுலா
விவசாயத்துடன் தொடர்பான பல சுற்றுலாக்கள் சிறப்பான அனுபவங்களைப் பெற வசதியாக இருக்கும். இதனுல் தே யி லை, தென்னை, மற்றும் இறப்பர் ஆராய்ச்சி நிலையங்கள் மற்றும் கால் நடைப் பண்ணைகள், விவசாய ஆராய்ச்சி நிலையங்களுக்குக் கல்விச் சுற்றுலா ஒழுங்கு செய்து கொடுக்கப்படும் ,
பொழுதுபோக்கு வசதிகள்
மாணவர்களுக்கு உள்ளக விளையாட்டுகளில் ஈடுபட பட்மின்ரன், ரேபிள்டென்னிஸ், கரம், செஸ் போன்ற வசதிகள் செய்துகொடுக்கப் பட்டுள்ளது
பொதுவான ஒழுக்கம்
மாணவர்கள் கல்லூரியின் ஒழுங்கு விதிகளுக்கு உட்பட்டு நடத்
தல்வேண்டும். மாணவரின் லீவுகள், வெளிச்செல்லல், தொடர்பான
சகல விடயங்களையும் அதிபரிடமிருந்து அறிந்துகொள்ளலாம்.
(15)

Page 12
கல்விக் குழு அதிபர்
திரு. சு. இராசதுரை
2.
B.
Of.
O5.
Ան,
ዐ W .
OS.
()).
IO.
B.Sc (Agric.) Hons, M. Sc.
விரிவுரையாளர்கள்
திரு. ச. விக்னேஸ்வரன்
B. Sc., (Agric.); M.Sc.
திரு. க. செல்வநாதன்
B.Sc (Agric.)
செல்வி ஜெயகுமாரி சிவலிங்கம்
B.Sc. (Agric.); M. Sc
செவ்வி சசிபிரடா கந்தசாமி
B, Sc (Agric.)
செல்வி லலிதாகுமாரி நல்லதம்பி
事。通 B. Sc. (Agric.); Hons.
திரு. என். கேதாரநாதன்
B. Sc. (Agric.)
செல்வி ஆனந்தினி கணபதிப்பிள்ளே
B. Sc. (Agric.); Hons,
செல்வி கஃலயரசி சின்னேயா
B.Sc (Agric.); M.Sc.
திரு. பி. ஆழ்வாப்பிள்ளே
B.Sc (Agric.) Hons. ; M. Sc.
செல்வி அன்பழகி ஜெயபாலசிங்கம்
B.Sc (Agric.) ; Hons. M. Sc.
நிர்வாக உத்தியோகத்தர் - திரு. பி. ரி. சிறீதரன்
E. St. 27-09-1989
( 16)

SCHOOL OF AGRICULTURE V AV UNIYA
?oãክጽ* كلا الاقلة في
proSPECTUS DPLOMA IN AGRICULTURE
DEPARTMENT OF
AGRICULTURE
MINISTRY OF
LANDS & AGRICULTURE
No RT - - E A ST p R O V I N C E
989

Page 13


Page 14
-