கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஈழத்துச் சித்த மருத்துவ நூல்கள் - ஓர் அறிமுகம்

Page 1
se சித்த மருத் ߆. faléřIsh JIPT
சித்தமருத்துவ வளர்ச்
 

723
ருத்துவ நரல்கள்
ஏறிமுகம்
துவ கலாநிதி
வி. எஸ். எம். எஸ். (இலங்கை)
*சிக் கழகம், இலங்கை.
-ఆఫ్రో
*ৎ -

Page 2

ஈழத்துச் சித்த மருத்துவ நூல்கள்
ஓர் அறிமுகம்
சித்த மருத்துவ கலாநிதி சே. சிவசண்முகராஜா பி. எஸ். எம். எஸ். (இலங்கை)
சித்தமருத்துவ வளர்ச்சிக் கழகம், இலங்கை,

Page 3
Title of the book Ealaththu Siddha Maruttuva Nooikal 'Or Arimukam
Author : Dr. S. Sivashannagarajah, B. S. M. S. (Cey.)
Medical officer, Siddha Teaching Hospital Kaithady
Publisher : Siddha Medical Development Society (SMDs)
Jafna Sri Lanka
Printers : St. Joseph's Catholic Press
360, Main Street, Jaffna
Copyright : Author
Edition : First, October, 1993

6.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்
பேராசிரியர் அ. துரைராசா அவர்களின் ஆசிச் செய்தி
வைத்திய கலர்நிதி சே. சிவசண்முகராசா அவர்களினால் ஆக்கப் பட்டிருக்கும் ' ஈழத்துச் சித்த மருத்துவ நூல்கள் " என்னும் இந் நூல் வெளிவருவதையிட்டு நான் மிக மகிழ்ச்சியடைகிறேன்.
சித்தமருத்துவம் தமிழ்மக்களின் பாரம்பரிய மருத்துவம். இம் மருத்துவ முறைகள் தமிழ்மொழியில் நூல்வடிவத்திலும், ஏட்டுச்சுவடி களிலும் காணப்படுகின்றன. ஈழத்திலும் சித்த மருத்துவமுறைகள் பற்றிப் பல நூல்களும், ஏடுகளும் எழுதப்பட்டுள்ளன. தமிழ்ப் பிர தேசம் மேல்நாட்டு அந்நியர் ஆட்சியின்கீழ் வந்தபின், சித்தமருத்துவம் பின்னடைவு அடைந்து மேல்நாட்டு வைத்தியம் இங்கு பரவியது. ஈழத்தமிழ் இனத்தின் தனித்துவம் பேணிக் காப்பாற்றப்பட வேண்டு மாயின் தமிழ்மொழி, கலை, பண்பாடு, வரலாறு போல் சித்தமருத்து வமும் பேணிவளர்க்கப்படல் வேண்டும்.
இங்கு வழக்கிலிருந்த சித்த மருத்துவ ஏடுகள் பல அழிந்துவிட் டன. சித்த வைத்தியர் பலர் தங்களுக்குத் தெரிந்த வைத்திய நிபுணத் துவத்தை மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுக்காத நிலையிலும், நூல்வடி வில் வெளியிடாத நிலையிலும் அந்த நிபுணத்துவமும் அவர்கள் இறப் புடன் அழிந்துவிட்டது. இந்த நிலைமாறிச் சித்தமருத்துவம் வளர்ச்சி யடைய வேண்டுமாயின் தற்போதுள்ள சித்த வைத்திய நிபுணர்கள் தாங்கள் அறிந்த நிபுணத்துவத்தை நூல்வடிவில் வெளியிடவேண்டி யது அவசியமாகும்.
வைத்திய கலாநிதி சே. சிவசண்முகராசாவின் இந்நூல் ஈழத்தில் வெளிவந்த சில சித்தமருத்துவ நூல்களைப்பற்றிய விளக்கங்களைத்

Page 4
*参见
தருகின்றது. இந்நூல் சித்தமருத்துவ மாணவர்கள், வைத்தியர்கள், ஆய்வாளர்கள் போன்றோருக்கு மிக உதவியாக இருக்குமென்று நான் நம்புகிறேன். நூலாசிரியரை அவரின் முயற்சிக்காகப் பாராட்டும் அதே வேளையில், பல நூல்களை இத்துறையில் அவர் வெளியிட இறைவன் அருள்புரியவேண்டும் எனப் பிரார்த்திக்கின்றேன்.
94·函G町阿ng町 துணைவேந்தர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
இலங்கை

ii
யாழ்மாவட்டி அரச அதிபரும், மாவட்டி ஆணையாளருமாகிய திரு. கா. மாணிக்கவாசகர் அவர்களின்
ஆசிச் செய்தி
'ஈழத்துச் சித்தமருத்துவ நூல்கள்" என்ற இவ்வரிய அறி முக நூல் அமைதியான ஒரு காலப்பகுதியில் வெளியிடப்பட்டிருந் தாலே பெரிய வரவேற்பையும் பாராட்டையும் பெற்றிருக்கும். அப் படியிருக்கையில் மருத்துவ வசதிகள் பெரிதும் குறைந்துள்ள இன்றைய நிலையில் இந்நூல் வெளியிடப்படுவது சித்தமருத்துவ நூல்களை அழி யாது காக்கும் ஒரு முயற்சியாக மட்டும் கருதப்படாது மக்களுக்குச் செய்யும் ஒரு மாபெரும் சேவையாக எல்லோராலும் பெரிதும் வர வேற்கப்படும், பாராட்டப்படும் என்பது எனது அசையாத நம்பிக்கை.
இப்படியான முயற்சிகள் மேன்மேலும் பெருகவேண்டுமென்ப தோடு இந்நூலாசிரியரின் அளப்பரிய இம்முயற்சிக்கு எனது மன முவந்த ஆசிகளைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.
கா. மாணிக்கவாசகர் யாழ்மாவட்ட அரச அதிபரும், மாவட்ட ஆணையாளரும்.

Page 5
iv
கைதடி, சித்த போதனா வைத்தியசாலைப் பொறுப்பதிகா
மருத்துவ கலாநிதி (திருமதி) வி. கைலாசபதி வழங்கிய வாழ்த்துச் செய்தி
** ஈழத்துச் சித்த மருத்துவ நூல்கள் " என்னும் இந்நூல் வெளி வருவதையிட்டு மிக்க மகிழ்ச்சியடைகின்றேன். யாழ்ப்பாணத்தில் பாரம்பரியமாக வளர்ந்துவரும் சித்த மருத்துவத்திற்கு ஆதாரமான மருத்துவ நூல்களைத் தொகுத்து, அவை எழுந்த காலங்கள், எழுதிய பெரியார்கள், அவற்றிற் கூறப்பட்ட மருந்துகள் போன்றவற்றை எடுத் துக் கூறும் அதேவேளையில் ஒவ்வொரு நூல்களின் உள்ளடக்கங்களையும் ஒப்புநோக்கியும், ஆராய்ந்தும், தொகுத்தும் கூறியுள்ளமை குறிப்பிடத் தக்கது இந்நூலானது சித்த மருத்துவத்தைக் கற்பவர்களுக்கும், ஆராய்பவர்களுக்கும், மருத்துவர்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமையு மென நம்புகின்றேன். இந்நூலை எழுதிய வைத்திய கலாநிதி சேது மாதவர் சிவசண்முகராசா, இத் துறை யில் தொடர்ந்தும் தமது ஆராய்ச்சியினை மேற்கொண்டு, மேலும் பல நூல்களை வெளியிட வேண்டுமென வேண்டிக்கொண்டு, இவரின் இக் கன்னிமுயற்சி வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
வைத்திய கலாநிதி (திருமதி) விக்னேஸ்வரி கைலாசபதி
வைத்தியப் பொறுப்பதிகாரி சித்த போதனாவைத்தியசாலை கைதடி, யாழ்ப்பாணம்

W
6யாழ். பல்கலைக்கழகச் சித்த மருத்துவத்துறைத் தலைவர், சித்த மருத்துவ கலாநிதி சு. பவானி D.I.M.S. (Cey), H.P.A. (Cey). Onfrassir aptisu
முகவுரை
சுதேச மருத்துவம் இயற்கையுடனும் மருத்துவம் வளர்ந்த இடத்து மக்களின் கலாச்சாரம் சமயம் ஆகியவற்றுடனும், பின்னிப் பிணைந்து காணப்படுகின்றது. சித்த மருத்துவம் "தமிழ் மருத்துவம்" எனவும் அழைக்கப்படுகின்றது, தமிழர்களுடைய தாயகத்தில் அங் குள்ள இயற்கையின் செல்வத்தை பெரிதளவு மூலதனமாகக் கொண்டு பண்டைய வைத்தியர்களால் இந்த சிகிச்சைமுறை பேணப்பட்டு வத் தது. அன்றைய அரசர்களும் தமிழ் மருத்துவத்தைப் பெரிதும் பேணி யுள்ளார்கள் என்பது வரலாறு எமக்கு அறிவுறுத்தும் பாடமாகும்.
ஒரு இனத்தின் அரசியல், பொருளாதார, சமூக, கலாச்சார மேம்பாட்டிற்கு அவர்களின் தாய்மொழி பிரதானமாக கொள்ளப்பட் டுள்ளது. சுதேச மருத்துவ முறையை நாம் கவனிக்குமிடத்து இந்தி யாவில் இரு மொழிகள் மூலம் இரு வேறு வ்ைத்திய சிகிச்சை முறை கள் வளர்ந்துள்ளன. இந்து மதத்தின் அடிப்படைத் தத்துவங்களை மூலமாகக் கொண்டு வடமொழியில் ஆயுள்வேத நூல்கள் எழுந்துள் ளன. அதேபோல் தமிழ் மொழியில் சித்த மருத்துவ நூல்கள் எழுந் துள்ளன. இருவைத்திய முறைகளிலும் சில ஒற்றுமைகள் காணப்பட்ட போதும் இரண்டும் ஒன்று என்று கூறுமளவிற்கு பல விடயங்கள் எதி ராக அமைந்துள்ளன.
ஈழத்தில் தமிழ் மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்த இடத்தில் தமிழ் வைத்திய முறை பேணப்பட்டுள்ளது. தென் இந்தியாவில் தமிழில் பல மருத்துவ நூல்கள் எழுந்துள்ளன. ஆயினும் விசேடமாக ஈழவள நாட் டில் எழுந்த தமிழ் மருத்துவ நூல்களில் இந்தியாவில் பேணப்பட்டு வந்த சித்த மருந்துகள் குறிப்பிடப்படவில்லை. எங்கள் நாட் டிற்கே உரித்தான தமிழ் மருத்துவம் அல்லது சித்த மருத்துவம் பண் டைய வைத்தியர்களால் பேணப்பட்டுவந்தமையும் அதை அன்றைய அரசர்கள் ஊக்குவித்தனர் என்பதும் சரித்திரம் கூறும் ஆதாரங்களா கும். பரரசசேகரன், செகராசசேகரன் போன்ற அரசர்கள் வாழ்ந்த காலத்தில் சித்த மருத்துவத்திற்கு ஆதரவு வழங்கப்பட்டபோதும் பல அரிய நூல்கள் ஏட்டு வடிவத்திலேயே காணப்பட்டன. ஐ, பொன் னையா என்னும் பெருந்தகை. இவற்றில் பெரும்பாலான ஏடுகளை சேகரித்து அச்சுவாகன மேற்றியுள்ளமை சித்த வைத்தியர்களால் நன்றி புடன் நோக்கற்பாலதாகும்.

Page 6
vi
ஈழத்தில் எழுந்த சித்த மருத்துவ நூல்கள் பற்றி தொகுத்துத் தருவதுடன் தனது சில கருத்துக்களையும் இந்த நூலாசிரியர் வலி யுறுத்தியுள்ளார். ஒவ்வொரு வைத்தியர்களிடையேயும் தனித்தனியே உள்ள நூல்களை ஒன்றுசேர்த்து ஒரே பார்வையில் பார்ப்பதற்கு ஆசிரி யரின் முயற்சி துணைநிற்கின்றது, பரராஜசேகரம், செகராஜசேகர வைத்திய மாலை போன்ற நூல்களில் காணப்படும் ஒத்த பாடல்கள் சிலவற்றை குறிப்பிட்டுக் காட்டியுள்ளமை அந்தக் காலத்தில் இந்த நூல்களை தொகுத்தவர்களால் அல்லது அச்சிட்டவர்களால் ஏற்படுத் தப்பட்ட தவறு எனக் கருத இடம் உண்டு. அக்காலத்தில் தோன்றிய ஏட்டுப் பிரதிகள் ஈழத்துச் சித்த மருத்துவ நூல்களுக்கு ஆதாரமாக அமைந்துள்ளன. இந்த நூலாசிரியர் அப்படியான் மூல ஏட்டுப் பிரதிகளை முற்றாகப் பெற்று அவற்றை அடிப்படையாகக் கொண்டு நூல்களில் குறிப்பிடப்பட்டவற்றை ஆராய்ந்திருந்தால் உண்மை நிலையை மருத்துவர்களும் மக்களும் பெறக்கூடியதாக இருந்திருக்கும். இந்நூல்கள் எழுந்த காலப்பகுதிகளும் ஆராயப்பட்டுள்ளமை வரலாற்று ரீதியான ஒரு பரிமாணத்தை தருவதுடன் தமிழ் மருத்துவத்தின் ஆரம்பம் ஈழவளநாட்டிலேயே தொன்மையானது என்பதனை உறுதி படுத்துகின்றது.
நூலாசிரியர் ஈழத்தில் எழுந்த சித்த மருத்துவ நூல்களைக் குறிப்பிட்டுள்ளதுபோல் இதுவரை அச்சுவாகனமேறாத சில ஏட்டுப் பிரதிகளையும் ஆராய்ந்து குறிப்பிட்டிருப்பின் இன்னும் வெளிக் கொண்டுவரப்படாத விடயங்களை வைத்தியப் பெருமக்கள் அறியக் கூடியதாக இருந்திருக்கும். ஈழத்து மருத்துவ நூல்களில் சித்த மருத் துவத்திற்கு அடிப்படையாக அல்லது மூலதத்துவங்களாக விளங்கும் விடயங்கள் குறிப்பிடப்பட வில்லை. சித்த மருத்துவத்தின் மூலத் தத்துவங்கள் மருத்துவ நூல்களில் மட்டுமல்லாது சமய நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளன. மற்றும் ஆரோக்கியத்தைப் பேணுதல் ஒரு நோய்த் தடுப்பு முறையாகும். இவற்றின் முக்கியத்துவம் ஆறுமுக நாவலர் போன்றோரின் சமய நூல்களில் காணப்படுகின்றன.
இந்நூலில் விஷேடமாக ஆறு நூல்கள் ஆராயப்பட்டுள்ளன. அத்துடன் பிறநூல்கள் என்ற தலைப்பில் சிலவும் குறிப்பிடப்பட்டுள் ளன. ஆசிரியர் மருத்துவர்களுக்கு ஏடுகளையும் நூல்களையும் தமது சொத்தாக வைத்திராமல், சித்த மருத்துவர்களிற்கும் அதில் ஆராய்ச்சி செய்பவர்களுக்கும் பயன்படக்கூடிய முறையில் அவற்றை கொடுத் துதவுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த வேண்டுகோள் சித்த மருத்துவத்தின் சில அரிய ஏடுகள் காலத்தால் அழிவதனைத் தடுக்கும் ஒரு சிறந்த முயற்சியாகும்.

vi
இந்நூலாசிரியர் வைத்திய கலாநிதி சே.சிவசண்முகராஜாவின் முயற்சி முன்மாதிரியானதொன்றும் பாராட்டப்பட வேண்டியதொன் றுமாகும். வரலாறுகளைப் பகுத்து ஆராய்வதும் தொகுப்பதும் சரித் திர ஆசிரியரின் கடமையாவதுபோல் மருந்துகளின் செய்முறைகளில் ஆய்வுகள் மேற்கொள்வதும், நோயாளர்களில் அதனைப் பிரயோகித்து அதன் சிறப்புக்களை வெளிக் கொணர்வதும் இன்று எமது மக்கள் சித்த மருத்துவர்களிடமிருந்து எதிர்பார்க்கும் பணி என்பதை ஒவ் வொரு சித்த மருத்துவரும் உணர்ந்து செயற்படுவது காலத்தின் முக் கிய தேவையாகின்றது. இதன்மூலம்தான் சித்த மருத்துவத்தில் பொதிந் துள்ள சிறப்புக்களை நாம் மக்களுக்கு வழங்கி ஆரோக்கியத்தைப் பேணு வதுடன் அத்த வைத்திய முறையில் மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை யையும் வலுவடையச் செய்யலாம். இந்தவகையில் நூல்கள் ஆக்கம் பெறுவது மிகவும் அவசியமானதும் வரவேற்கத் தக்கதுமான பெரும் பணியாகும்.
சு. பவானி 36066th
சித்த மருத்துவத்துறை யாழ் பல்கலைக் கழகம்

Page 7
yiti
முன்னாள் சித்தமருத்துவத் துறைத் தலைவரும், இளைப்பாறிய மூத்த விரிவுரையாளருமான மருத்துவ கலாநிதி yjssijsgr o(56vTTssib D.I.M.S. (Ceylon).M.S.A.M. (India) அவர்கள் வழங்கிய
மதிப்புரை
ஒரு நூலினை எழுதும்பொழுதோ அல்லது ஒர் சொற்பொழிவை ஆற்றும்போதோ கருத்திற்கொள்ள வேண்டிய நான்கு பிரதான காரணிகள் உள. அவையாவன: 1. நூலினது அல்லது சொற்பொழி வினது தலைப்பு (Title). தலைப்பு, பயன்படக்கூடியூ கருத்துள்ளதாக அமைதலவசியம். 2. தலைப்பிற்குப் பொருந்தியவகையில், நூலிலோ அல்லது சொற்பொழிவிலோ பொதிந்துள்ள கருத்துக்கள் குறிப்பிட்ட நோக்கினை அல்லது குறிக்கோளினைத் (Objective) தெளிவு படுத்தக் கூடியதாயிருத்தல் வேண்டும். 3. நூலினை அல்லது சொற்பொழிவை வாசிப்பதற்கோ அல்லது கேட்பதற்கோ அதிகாரம் அல்லது உரிமை யுடையவர்களின் அறிவுத் தரத்தையும் (Standard of recipient) is சயித்துக் கொள்ள வேண்டும். 4. மேற்கூறப்பட்ட காரணிகளின் சம்பந்தம் (Interrelation) வழுவாத வகையிற் கருத்துக்களைச் சீராக வழங்குந் தகுதியும் (Competent) ஆற்றலும் இருத்தல் அவசியம்,
வைத்திய கலாநிதி சே. சிவசண்முகராஜா எழுதிய இந் நூலைப் பற்றி மதிப்புரை வழங்குவதில் மகிழ்ச்சியடைகின்றேன். மேலே சுறப் பட்டுள்ள நான்கு காரணிகளைக் கருத்திற் கொள்கையில் முதலாவது காரணியாகிய நூலினது தலைப்பு கருத்துடையதாகவும் பயன்படக் கூடிய விடயங்களை உள்ளடக்கிய ஓர் நூலாக இருக்கலாமெனவும் அனுமானிக்கக் கூடியதாக அமைந்துள்ளது. இரண்டாவது காரணி யைப்பற்றி ஆராயுமிடத்து, தலைப்பிற்கேற்ப இந்நூலினூடாக எதிர் பார்க்கும் குறிக்கோள் அல்லது நோக்கம் யாதென்பதையும் ஆசிரியர் முகவுரையில் விபரித்துள்ளார். ஆசிரியர் சித்தமருத்துவத்திற் தேர்ச்சி பெற்றவராதலால் ஈழத்துச் சித்தமருத்துவ நூல்கள்’ என்ற தலைப் பினைத் தழுவி, மருத்துவர்தியிலே கண்ணுற்று விமர்சிக்கும் தகுதி யுடையவர் என்பதை அவர் எடுத்துள்ள முயற்சி நன்கு எடுத்துக்காட்டு

斑
கின்றது. நூலின் பொருளடக்கம் விடயத்தைப்பற்றி (ஈழத்துச் சித்த
eருத்துவ நூல்களைப்பற்றி) அறியவிரும்புவோர் எவருக்குமே பயன்
படக்கூடியதாயிருக்குமென நூலாசிரியர் கூறினும் விசேடமாகக் குறிப் பிடுவதாயின் சித்தமருத்துவ மாணவர்கட்கும் சித்தமருத்துவர்களுக்
கும் ப்ெரிதும் பயன்படும் வகையில் தொகுக்கப்பட்டுள்ளது எனக்
கூறலாம்,
நூலாசிரியர் ஈழத்தில் வெளிவந்துள்ள பல தமிழ் மருத்துவநூல் களைப்பற்றி ஆராய்ந்துள்ள போதிலும் பரராசசேகரம், GosFastTrarse சேகரம் ஆகிய இரு நூல்களைப்பற்றியே கூடுதலாக ஆராய்ந்துள்ளார். இதற்குக் காரணம் இவ்விரு நூல்களும் ஈழத்தில் பெரிதும் பயன்படுத் தப்படுவதாலாகலாம்.
நூல்களைப்பற்றி விமர்சனம் செய்கையில் ஆசிரியர் மிகவும் சிர மப்பட்டுள்ளார் என்பது புலனாகின்றது. பற்பல சந்தேகங்களையும் குறைகளையும் நுட்பமாக ஆராய்ந்து வெளிப்படுத்தியுள்ளதோடு, தொடர்ந்தும் இவ்விடயத்தைப் பற்றிய ஆய்வு நடைபெற இடமுண்டு என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
பரராசசேகரம், செகராசசேகரம் ஆகிய இருநூல்களினது தோற் றம் எக்காலத்தில் ஏற்பட்டிருக்கக் கூடும் என்றவோர் சந்தேகத்தைக் குறித்துள்ளார். மேலும், அவ்விரு நூல்களிலும் சில பாடல்கள் ஓரிரு சொற்களால் மட்டுமே வேறுபட்டு நிற்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.
பரராசசேகரம் ஓர் பூரணமான மருத்துவ நூலாகுமா என்ற கேள்வி எழுவதற்கு இடமுண்டு. நோய்நாடல், நோய் முதல் நாடல் என்பன வற்றைத் தெளிவாக விளக்கும் வகையிலோ, நோய்கள் சரீரத்தினுள் எவ்வாறு உருவாகின்றதென்பதை விளக்கும் சம்பிராப்தியோ நூலிலே இடம் பெறாதமை ஒரு குறையாகவே அமைந்துள்ளது என இயம்ப லாம். எனவே, அனுபவம் பெற்ற வைத்தியர்கட்குப் பெரிதும் உத வக் கூடியதாயிருப்பினும் நூலாசிரியர் எடுத்துக்காட்டியிருப்பது போலவே பயிலும் சித்த மருத்துவ மாணவர்களுக்கு ஓர் பூரணமான மருத்துவ நூலாகுமெனக் கூறமுடியாதென்பதே எனது அபிப்பிராய மும் ஆகும். நோய் நாடல் பற்றிய விளக்கம் பிறிதோர் நூலாகப் (பிரி வாக) பரராசசேகரத்தில் எழுதப்பட்டிருக்கலாம் என்றும் அந்நூல் அச்சிடப்படாமல் மறைந்து போயிருக்கலாம் என எண்ணவும் கூடும்.
ஆயுள்வேதத்தில் அகஸ்திய, தன்வந்திரி என்ற நாமங்களுடன் பிரசித்தி பெற்ற முனிவர்களும், சித்த நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள அகத்தியர், தன்வந்திரி முதலிய சித்தர்களும் ஒன்றா வேறா என்ப

Page 8
裳
தைப் பற்றி ஆராய்வதும் வேண்டற்பாலது. மேலும் பரராசசேக ரத்தில் கூறப்பட்டுள்ள "தன்வந்திரி", "தன்மந்திரர்’ என்ற இரு நாமங்களைப்பற்றி ஆராய்வதும் உசிதமாகும்.
மருத்துவ ஆராய்ச்சி (Medical research) யினை மூன்று முக்கிய பிரிவுகளாகப் பேதப்படுத்தலாம். அவை 1. மருத்துவ இலக்கிய ஆராய்ச்சி (Literary researeh) 2. நோய்கள் (மருத்துவம்) பற்றி ஆராய் 56áb (Clinical research) i 3. Sy anys surmruijs* (Drug research) * வைத்திய கலாநிதி சே. சிவசண்முகராஜா எடுத்துள்ள இப்பிரயத் தனம் சித்தமருத்துவ இலக்கிய ஆராய்ச்சியைத் தழுவியதாகும். எந்த வோர் ஆராய்ச்சியாளரின் மிகப் பிரதான இலட்சணங்களாக அமைய வேண்டியது பட்சபாதமற்ற நோக்கமும் தளராத விடாமுயற்சியுமா கும் எனக் கூறுவது மிகையாகாது.
இப்படைப்பின்மூலம் ஓர் ஆராய்ச்சியாளருக்குரிய பண்புகளும் ஆற்றலும் நூலாசிரியரில் அரும்புவதைக் காணக்கூடியதாயுள்ளது. நூலாசிரியருக்கு அறிவும் ஆற்றலும் மேலும் பெருக இறைவனை
வேண்டி வாழ்த்துகிறேன். r
பூனிகாந்தா அருணாசலம்

xt
வேண்டத் தக்கது அறிவோய் f6
9. 8. 1989 அன்று மரணவேதனை, வேதனை. அன்று தான் இந்நூலாசிரியர் டாக்டர் சே. சிவசண்முகராசாவின் சக மாணவி டாக்டர் கலாநாயகி சிங்கநாயகத்தைக் காலன் கவர்ந்தது. ஆனால் syair Quurité sag Guaraib (No pleasure without pain) gigs தான் "மூலதத்துவம்" என்னும் சித்த மருத்துவ அடிப்படைக் கைநூல் குழந்தையாகப் பிறந்தது. மூலத்துவ வெளியீட்டுக் குழுவில் இந் நூலாசிரியரின் பங்கு அளப்பரியது. அந்நூல் வெளியீட்டு விழாவின் போது நூலிற்கான விமர்சன உரை நிகழ்ந்த பின்பு, நூலாசிரியரின் பதிலுரையில் இருந்து, அவரது கரம் சித்த மருத்துவ கருப்பையாக மாறும் என்ற எண்ணத்தை அன்று அங்குள்ளோர் மனதில் தோற்று வித்தது. அந்தக் கருப்பையில் இருந்து பிரசவித்த நூல்தான் இன்று உங்கள் கரங்களில் தவழ்கின்ற ஈழத்துச் சித்த மருத்துவ நூல்கள் என்றால் மிகையாகாது.
பரம்பரைக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சித்த வைத்தியம் பல்கலைக்கழக மட்டத்திற்கு உயர்ந்த பின்பும் மாணவர்களின் தரத் தினாலும், வைத்தியர்களின் திறமைகளினாலுமே சித்த மருத்துவத் திற்கு பெருமை சேருகிறதே தவிர ஆக்கங்களையோ அ ல் ல து ஆய்வுகளை இதுவரை வெளிப்படுத்தாதமை மிகவும் வேதனை தரும் விடயமாகும். ஆனால் எங்கள் வேதனையை "ஈழத்துச் சித்த மருத் துவ நூல்கள்" எனும் வரலாற்று ஆய்வுநூல் ஓரளவு சாந்தப்படுத் தும் என்பதில் ஐயமில்லை.
ஈழத்து சித்த மருத்துவ நூல்களின் வரலாற்று ஆய்வுகளை ஆராயும் ஆசிரியரிடத்து, ஆங்கிலேயரின் ஆதிக்கத்தால் சித்தமருத் தின் தனித்துவம் சிதைக்கப்படப் போகிறது என்ற மனக்கொதிப்பு ஆங்காங்கே எழுவதையும், ஈழத்துச் சித்த வைத்தியர்களிடத்து பிர பல்யம் வாய்ந்த மருந்துகளை ஆய்வுகளுடன் வெளிக்கொணர்ந்து சித்த மருத்துவத்தின் தனித்துவத்தை நிலைநாட்டவேண்டும் என்ற தன் கற்கை நெறிக் கல்விக்கு உரம் தேடுகின்ற உளப்பாங்கினையும் அறியக் கிடக்கிறது.
வரலாற்று ரீதியான ஆய்வுகளுடன் சித்த மருத்துவம் தனித்துவ மானது என்று நிறுவமுற்படும் ஆசிரியர் இந்து மதத்திலிருந்து சித்த

Page 9
xi
ஆயுர்வேத மருத்துவத்தின் தோற்றுவாயையும், சித்தர்களால், அரசர் களால் ஆயுர்வேதம் பேசப்படுவது பத்தியும் எடுத்துக் காட்டி சித்த வைத்தியம், ஆயுர்வேத வைத்தியம் இரண்டிற்கிடையிலான ஒற்றுமை யையே விஞ்சவைக்கிறார். அரும்பாடுபட்டு ஈழத்து சித்த மருத்துவ நூல்களின் ஒரு பகுதியை அச்சேற்றிய அமரர் ஐ. பொன்னையா அவர்களைக் குறை காணுவது ஆசிரியரின் இலக்கல்ல. அவருக்குச் சிரம் தாழ்த்துவதையும், நன்றி செலுத்தவேண்டிய கடப்பாட்டினையும் தனக்கு மட்டுமன்றி, சித்த வைத்தியர்களுக்கும் எடுத்துக் காட்டுகி றார் அ வ ர து பதிப்பின் மீது தற்கால எதிர்காலங்கட்கு ஏற்ப திருத்தங்கள் இருந்தால் நன்றாக இருக்கும் என்பதே ஆசிரியரின் அவா போலும்,
அன்பு, அறிவு, அமைதி ஒருங்கே அமையப்பெற்ற இந் நூலா சிரியர் டாக்டர் சே. சிவசண்முகராசாவிடம் ஆளுமையும் விசேட மாகப் காணப்படுகின்றது என்பதற்கு இவர் சித்த வைத்திய பரம் பரையிலே பிறவாத போதிலும் இந்நூலிற்கான, உசாவு துணை நூல்கள், அறிவுரைகள் பெறுவதற்கு எடுத்த முயற்சிகளும் சென்ற பாதைகளும் இடர் மிகுந்தனவாகவே இருந்திருக்கும். அந்த இடர்ப் பாதையில் துணிந்து சென்று ஈழத்து சித்த மருத்துவ நூல்கள் என்ற நூலை இன்று தருகின்ற படியால் ஆளுமை உடையவர் என்ற கூற்று யதார்த்த நிரூபணமாகிறது.
இன்று ஈழத்தில் ஒவ்வொரு அறிவியல் சார் அலகுகளும் தன் னிறைவு அடைவதில் போட்டாபோட்டி போடுகையில் கவனிப்பாரற்று கிடக்கின்ற சித்த மருத்துவ உலகிற்கு வேண்டியதை வேண்டியாங்கு வேண்டிய நேரத்தில் வெளிவிட்டதனால் 'ஈழத்து சித்த மருத்துவ நூல்கள் மூலம் 'வேண்டத்தக்கது அறிவோய் நீ' ஆகிறாய்.
வளர்க நின் ஆற்றல்
வைத்தியகலாநிதி சோ. சபாநாதன் தலைவர் சுதேச வைத்திய அபிவிருத்திச்சங்கம்

என்னுரை
'ஈழத்துச் சித்த மருத்துவ நூல்கள் ஓர் அறிமுகம்’ என்ற இச் சிறு நூல் காலத்தின் தேவை கருதி எழுந்த ஒன்றாகவே நான் கரு துகிறேன். தமிழ் நாட்டைப் போலவே இங்கும் தமிழ் மருத்துவமாம் சித்த மருத்துவ பாரம்பரியம் உண்டு. சிறந்த பல சித்த மருத்துவ நூல்கள் எமது மண்ணில் தோன்றியுள்ளன. ஆனால் அவற்றின் அருமை பெருமைகளை அறிந்தவர்கள் மிகக் குறைவு.
நான் சிறிது காலம் சித்த மருத்துவ மாணவர்களுக்கு இவற் றைக் கற்பித்த வேளையிலும், சித்த மருத்துவம் சம்பந்தமான பல் வேறு கருத்தரங்குகளில் பங்கு பற்றிய வேளைகளிலும் எமது சித்த மருத்துவ நூல்களின் தேவையையும் முக்கியத்துவத்தையும் நன்கு உணர்ந்தேன். இது சம்பந்தமான ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும் என்ற அவாவுடன் எனது தேடுதலை ஆரம்பித்தேன். அதற்காக இங்கு வெளியான சித்த மருத்துவ நூல்களையும், ஏட்டுச் சுவடிகளையும் பற் றிய விபரங்களைச் சேகரிக்க முற்பட்டேன்.
ஆனால், ஏட்டுச் சுவடிகளில் இருந்து அச்சுவாகனம் ஏறிய ஒரு சில மருத்துவ நூல்களைக் கூடக் கண்ணால் கண்பதே அரிதாக இருந் தது. இந்நிலையில் ஏட்டுச் சுவடிகளை ஆராய முன்னர் அச்சில் வெளி வந்த நூல்களைப் பாதுகாத்தல் அவசியம் எனத் தோன்றியது. சிங்க ளத்தில் ஆயுள்வேத நூல்களைப் பிரசுரம் செய்வதில் * அரசாங்கம் காட்டும் அக்கறையை இந்நூல்களை மறுபிரசுரம் செய்வதிலும் காட்ட வேண்டும். அது நடக்குமா என்பது தான் கேள்விக்குறி! எனவே, அச் சில் வெளி வந்து, கிடைப்பதற்கரிதாகிப் போய் விட்ட மருத்துவ நூல் களைப் பற்றி எழுத வேண்டிய தேவை எனக்கு ஏற்பட்டது. அதன் விளைவே இந் நூலாகும்.
இக் கட்டுரைத் தொகுப்பில் இட்ம் பெற்றுள்ள நூல்களில் பெரும் பாலானவை முதற் பதிப்புடனேயே நின்று போய் விட்டன. அதுவும் சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முற்பட்டவையாகவே இருக்கின்றன. அவை பற்றிய விபரங்களைத் தானும் சரி வரப் பெறுதல் அரிதாகவிருக் கிறது. எனவே, அந் நூல்களைப் பற்றி, அவற்றின் நூலாசிரியர், நூல் தோன்றிய காலம் நூலில் காணப்படும் விடயங்கள், குறை

Page 10
giv
பாடுகள் என்பன பற்றி இங்கு ஓரளவு ஆராயப்பட்டுள்ளன. இத் தொகுப்பில் இடம் பெறாத வேறு பல மருத்துவ நூல்களும் இருக்கின் றன என்பதையும் மறந்து விடக் கூடாது.
இச் சிறு நூலை எழுதுவதற்கு முற்பட்ட போது நான் அனுப வித்த கஷ்டங்கள் பல. எமது சித்த மருத்துவர்களிற்பலர் தமக்குத் தாமே வைத்துக் கொண்டிருக்கும் கர்ண பரம்பரைக் கதைகளையும், வரலாறுகளையும் கேட்ட போது எது நிஜம், எது கற்பனை என்று. பகுத்தறிவது எளிதானதாக இருக்கவில்லை. எனவே பலருடன் கதைத்து, அறிவு பூர்வமாக ஏற்றுக் கொள்ளக் கடியவை என்று கரு தியவையே ஆங்காங்கு சேர்க்கப்பட்டுள்ளன. 'என்னிடம் பரராச சேகரம் புத்தகம் முழுவதும் உண்டு", "செகராசசேகரம் என்னிடம் தான் ஒழுங்காக இருக்கிறது" என்றெல்லாம் முதலிற் சொன்ன சில ரிடம் 'உங்கள் முன்பாகவே பார்த்து விட்டுத் தருகிறேன், எடுத்து வாருங்கள்" என்ற போது, ‘நேற்றுத்தான் ஒருவர் வந்து இரவல் வாங் இச் சென்றார். நாளை வாருங்கள் கட்டாயம் வாங்கி வைக்கிறேன்" என்றனர் சிலர். ஆனால் அந்த "நாளை" அவர்களுக்கு இன்று வரை வரவேயில்லை.
வேறு சிலர், "சித்த மருத்துவ நூல்களை ஆராய்ச்சி செய்வதா? கடவுளுக்கு ஒப்பான பெரியோர்கள் மெய்ஞ்ஞான நிலையில் நின்று சொன்ன மருத்துவ உண்மைகளை, மருந்து முறைகளை ஆராயலாமா? கூடவே கூடாது" என்று கூறினார்கள். "சித்தர்கள் மெய்ஞ்ஞானத் தில் திளைத்தெழுந்து இவ் வைத்தியத்தை எமக்கு வழங்கியிருக்கலாம். ஆனால் அந்த மகான்கள் கூறியபடியே இன்று அம் மருத்துவ முறை கள் வழக்கிலில்லை. காலத்துக்குக் காலம் ஏடுகளைப் பிரதிபண்ணிய வர்களும் அச்சிட்டவர்களும் அவற்றைக் கூட்டியும், குறைத்தும், மாற்றி யும் வழுக்களுள்ளதாகவும் செய்துள்ளார்கள். எனவே, அத்தவறுகளைத் திருத்தினால் தான் உண்மையான சித்த மருத்துவத்தை நாம் காண முடியும்" என்று அவர்களுக்கு எடுத்துக் கூறியும் பிரயோசனம் இருக்கவில்லை. காலஞ்சென்ற பழம்பெரும் வைத்தியர் ஒருவரின் துணைவியார் (அக்குடும்பத்தில் தற்சமயம் யாருமே வைத்தியத் தொழி லில் இல்லை) "அவரின் (கணவரின்) ஏடுகள், புத்தகங்கள் எல்லா வற்றையும் பூஜை அறையில் வைத்து விளக்கு வைத்துக் கும்பிட்டு வருகிறோம். பார்ப்பதற்குக் கூட வெளியே எடுக்கமுடியாது’ என்று கூறினார். அதேவேளை யாழ்ப்பாணத்திலுள்ள பழைய புத்தகக் கடையொன்றில் இன்னொரு பழம்பெருமை வாய்ந்த வைத் தியர்

XV
ஒருவர் பாவித்த பரராசசேகரம் பிரதிகள், சொக்கநாதர் தன்வந்திரி வம், வைத்திய சிந்தாமணி ஆகிய நூல்கள் ஒரளவு நல்ல நிலையில் எனக்குக் கிடைத்தன.
சில நல்ல மனங் கொண்ட வைத்தியர்களும், நண்பர்களும் இத் தொகுப்பில் ஆராயப்பட்டுள்ள பல நூல்களையும், கையெழுத்துப் பிரதிகள் சிலவற்றையும், முக்கியமான சில தகவல்களையும் தந்து உதவினார்கள். அவர்களின் பெயர்களும், முகவரிகளும் உரிய இடங் களில் மிகுந்த நன்றியுடன் குறிப்பிடப்பட்டுள்ளன.
ஈழத்துச் சித்த மருத்துவ நூல்களைப் பற்றிய ஆய்வில் ஈடுபடுபவர் கள் அதற்கான ஆதாரங்களைப் பெறுவதில் பெருங் கஷ்டங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது. அவர்களுக்கு ஓரளவுக்காவது உதவ வேண்டும் என்ற நோக்குடன் 'ஆதாரக் குறிப்புகள்' ஒவ்வொரு கட் டுரையின் இறுதியிலும் சேர்க்கப்பட்டுள்ளன.
ஈழத்துச் சித்த மருத்துவ நூல்களைப் பற்றி ஒரளவிற்காவது தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்கும், சித்த மருத்துவம் கற்கும் மாணவர்களுக்கும், ஈழத்துச் சித்த மருத்துவ நூல்களை ஆராய விரும் புபவர்களுக்கும் இந் நூல் ஒரு வழிகாட்டியாக உதவ வேண்டும் என் பதே எனது விருப்பம்.
என்னுடைய இச் சிறு ஆராய்ச்சிக்கு உதவியவர்கள் பலர். பெயர் குறிப்பிட்டு நன்றி சொல்ல முற்படின் யாருடைய .ெயரையாவது தவற விட்டு விடுவேனோ என்ற அச்சம் ஏற்படுகிறது. எனினும் சில ரின் பெயரைக் குறிப்பிடுவதும் அவசியமாகின்றது.
தமது பல்வேறு கடமைகளுக்கு மத்தியில் இந் நூலை வாசித்து, ஆசியுரை வழங்கி, இந் நூலைச் சிறப்பித்துள்ள யாழ்ப்பாணப் பல்க லைக்கழகத் துணைவேந்தர், பேராசிரியர் அ. துரைராசா அவர்களுக் கும், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும், மாவட்ட ஆணை யாளருமான திரு. கா. மாணிக்கவாசகர் அவர்களுக்கும் முதற்கண் எனது இதயபூர்வமான நன்றியைத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன்.
அடுத்து, யாழ். பல்கலைக்கழகச் சித்த மருத்துவத்துறையில் நான் மாணவனாக இருந்த போதும், விரிவுரையாளனாகக் கடமையாற்றிய போதும் இத் துறையில் எனது ஆர்வத்தைத் தூண்டியதுடன் சித்த மருத்துவ மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியுடன் உயர் தமிழையும் C

Page 11
XV
குறிப்பாகச் சித்தரிலக்கியம், யாழ்ப்பாணச் சித்த மருத்துவ நூல்கள் என்பவற்றை ஒரு பாடமாகக் கற்பிக்க வாய்ப்பளித்ததுடன், இந்நூல் சிற்ப்புற அமைவதற்கு வேண்டிய திருத்தங்களையும் ஆலோசனைகளை யும் எடுத்துக்கூறியதுடன் சிறந்ததொரு முகவுரையும் வழங்கிச் சிறப் பித்துள்ள எனது மதிப்பிற்குரிய சித்த மருத்துவத்துறைத் தலைவர் மருத்துவ கலாநிதி சு. பவானி உவர்களுக்கும்,
வாழ்த்துச்செய்தி வழங்கிய கைதடி, சித்த போதனா வைத்திய சாலைப் பொறுப்பதிகாரி மருத்துவ கலாநிதி (திருமதி) வி. கைலாசபதி அவர்களுக்கும்,
நான் சித்த மருத்துவ மாணவனாகக் கல்வி பயின்று கொண்டி ருந்த வேளையிலேயே என்னை ஆராய்ச்சித்துறையிலும் ஈடுபடவேண் டும் என்று வாழ்த்தி வழிகாட்டியதுடன், இந்நூலை . நான் எழுதி முடித்த போது, அதில் வேண்டிய திருத்தங்களைச் செய்ய ஆலோசனை கள் வழங்கி என்னை ஊக்க வித்ததுடன், இந்நூல் விரைவில் வெளி வந்து பலருக்கும் பயன்பட வேண்டும் என்று வாழ்த்தி, இந்நூல் பற் றிய மதிப்புரையும் வழங்கி எனது முயற்சியைப் பெருமைப்படுத்திய எனது மதிப்புக்குரிய விரிவுரையாளர் மருத்துவ கலாநிதி பூஜீகாந்தா அருணாசலம் அவர்களுக்கும்,
இந் நூல் பர்றிய தனது நல்ல கருத்துக்களை எடுத்துரைத் துள்ள எனது விரிவுரையாளரும், சுதேச வைத்திய அபிவிருத்திச் சங் கத் தலைவரும், மூத்த சகோதரனுக்கு ஒப்ப என்னுடன் பழகுபவரு மான அன்புக்குரிய மருத்துவ கலாநிதி சோ. சபாநாதன் அவர்களுக் கும், சுதேச வைத்திய அபிவிருத்திச் சங்கச் செயலாளர் மருத்துவ கலாநிதி ஐ. ஜெபநாம கணேசன் அவர்களுக்கும்,
எனக்குத் தமிழ் கற்பித்த வேளையிலேயே ஈழத்து சித்த மருத்துவ நூல்கள் பற்றி ஆராய வேண்டும் என்ற ஆர்வத்தையும் ஏற்படுத்திய யாழ். பல்கலைக்கழகத் தமிழ்த்துறைப் பேராசிரியர் கலாநிதி இ. பால சுந்தரம் அவர்களுக்கும், தமிழ் விரிவுரையாளரான கனகசபாபதி நாகேஸ் வரன் அவர்களுக்கும்.
எனக்குக் கல்வி கற்பித்த, என்னுடன் கல்வி கற்பித்த சித்த மருத்து வத்துறை விரிவுரையாளர்களுக்கும், சித்த மருத்துவ போதனா வைத் தியசாலை மருத்துவ உத்தியோகத்தர்களுக்கும், கொழும்பு மத்திய அரசினர் ஆயுள்வேத வைத்தியசாலையில் பணிபுரியும் மருத்துவ கலா நிதி செல்வி, விக்னவேணி பாலசிங்கத்துக்கும்,

xvii
என்னிடம் கல்வி பயின்ற எனது அன்புக்குரிய சித்த மருத்துவ மாணவ, மாணவிகளுக்கும்,
பழைய நூல்களையும், ஏட்டுச் சுவடிகளையும், அரிய தகவல் களையும் தந்துதவிய பெரியோர்கள், நண்பர்களுக்கும்,
நான் எழுதிய கட்டுரைகளைத் தட்ட்ச்சில் அழகுறப் பொறித் துதவிய செல்வி துரைராஜா சாந்தகுமாரி அவர்களுக்கும்,
அச்சுப் பிரதிகளைச் சரிபார்ப்பதில் உதவிய உள்ளகப் பயிற்சி மருத்துவ உத்தியோகத்தர்களான ந. பூரீசுப்பிரமணியம், ப. சுரேசன் ஆகியோருக்கும்,
இந்நூல் உருவாவதில் சகல வழிகளிலும் ஒத்துழைப்பு நல்கி, உடனிருந்து பணிபுரிந்த எனது துணைவியார் மருத்துவ கலந்நிதி பிரேமா சிவசண்முகராஜாவிற்கும்,
இந் நூலைச் சிறப்புற அச்சிட்டு வழங்கும். புனித வளன் கத் தோலிக்க அச்சகத்தினருக்கும்,
எனது மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதுடன்,
தமிழ் மக்களின் கரங்களில் இந்நூலைச் சமர்ப்பிக்கத் திருவருள் பாலித்த உமைபாலகனான முருகப்பெருமான் திருவடிகளை வணங்கி விடை பெறுகிறேன்.
வணக்கம், கந்தரோடை, சித்த மருத்துவ கலாநிதி சுன்னாகம், சே. சிவசண்முகராஜா

Page 12
சமர்ப்பணம்
எனது இன்றைய நன்னிலைக்குக் காரணமான எனதருமைப் பெற்றோருக்கும், கந்தரோடை தமிழ்க் கந்தையா வித்தியாசாலை, ஸ்கந்தவரோதயாக் கல்லூரி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஆகிய கல்வி நிலையங்களில் எனக்கு ஆசிரியர்களாக விளங்கி அறிவினையூட்டிய எனது மதிப்புக்குரிய ஆசிரியப் பெருந்தகைகளுக்கும் இச்சிறு நூலைக் காணிக்கையாக்குவதில் பெருமகிழ்ச்சி அடை கிறேன்.
சே. சிவசண்முகராஜா

7.
8,
9. 10. 11.
★
பொருளடிக்கம்
ஆசிச் செய்திகள்
முகவுரை
மதிப்புரை
வாழ்த்துரை
என்னுரை
அறிமுகம் 8 y 9
பரராசசேகரம் 8 sis பரராசசேகரம் சத்திரவிதி, சிரைவிதி பரராசசேகரம் பதிப்பிலுள்ள குறைபாடுகள்
அங்காதிபாதம் 媳象激 is
செகராசசேகரம் .
அமுதாகரம் 8 . A se e இருபாலைச் செட்டியார் வைத்திய விளக்கம் சொக்கநாதர் தன்வந்திரியம் a கிறிஸ்தவ பண்டிதர் வைத்திய நூற்றிரட் பிறநூல்கள்
முடிவுரை so
பக்கம்
24
28
38
42
48
52
56
62
67
71

Page 13
விரைவில் வெளிவரவிருக்ரும் ஆசிரியரின் பிறநூல்கள்.
ஆ& யாழ்ப்பாண மக்களின் உணவுப்
பழக்கவழக்கங்களும், மருத்துவப் பயன்பாடும்.
* சித்தர்கள் கூறிய உள மருத்துவம்.

1. அறிமுகழ்.
இந்தியாவில் தமிழ்நாட்டைப் ஃல்ே*ழத்திலும் மிகவும் ஆதிகாலந்தொட்டு சித்தவைத்தியம்சமிக்க்ள்துபிணி நிர்ப்பதில் சிறிப் புற்று விளங்கிவந்துள்ளதை அறியக்கூடியதாக விள்ளது. இலங்கேஸ் வரனான இராவணன் காலத்துக்கு மூன்யும்.பின்பும் இங்கு மருத் துவம் சிறப்பிடம் பெற்று வந்துள்ளது. இராவணன்கூட ஒரு சிறந்த மருத்துவனாகக் கருதப்படுகிறான். அதுமட்டுமன்றி சஞ்சீவி பர்வ தத்தை இலங்கைக்கு எடுத்துவந்த அனுமன் அட்டமா சித்திகள் கைவரப்பெற்ற ஒரு சித்தனாகச் சித்தரிக்கப்பட்டுள்ளான். எனவேதான் அவனால் கடலைத் தாண்டப் பேருருவமும் மகிமா to be immensely large) அவ்விதம் பேருருவமெடுத்து ஆகாயத்தில் பறக்கும் போது உடலை இலேசாக, பாரமற்றதாகவும் (இலகிமா to have no weight) கடல் மார்க்கமாக வருகையில் சுரசை, சிம்ஹிகை முதலியவர்களை வெற்றி கொள்ளவும், இலங்கையில் சீதையைத் தேடுகையிலும் மிக I th Sibgcoalgpub (syahuont to become small as an atom) syGrints வனத்தில் சீதையுடன் கதைப்பதற்காக காவல் அரக்கியரை வசியத் snai (a Saigailh to control all creatures and elements) aprivasa செய்யவும் முடிந்தது என்பர்.
பல்லவ, சோழ, பாண்டியர்களின் நட்புறவும் மேலாதிக்கமும் இலங்கையில் ஏற்பட்டிருந்த காலங்களில் தமிழகத்தில் கையாளப்பட்டு வந்த மருத்துவம் (சித்தமருத்துவம்) இங்கும் கையாளப்பட்டு வந்தி ருக்க வேண்டும். பொலநறுவை பொற்கல் விஹாரையில் (potgul Weh era) அமைந்துள்ள ஒரு சிலை சித்த மருத்துவத்தின் தந்தை என்று கருதப்படும் அகத்திய முனிவருடையது என்ற கருத்து இன்த வலுப்ப டுத்துவதாக அமைகிறது. 15 ஆம் நூற்றாண்டளவில் சிங்களத்தில் ஆக்கப்பட்ட வைத்திய சிந்தாமணி பைசாஜ்ஜ சங்கிரகம் (vaidya cin tamani bhaisadya sangrahava) 66irgb T6 paši šis ir Aba என்னும் தமிழ் மருத்துவ நூலைத்தழுவி எழுதப்பட்ட ஒன்றாகும் என்ற கருத்தும் ஈண்டு நோக்கத்தக்கது.2
பிற்காலத்தில் தமிழ் மருத்துவமானதுஇலங்கையின் வடக்குள் கிழக்குப் பகுதிகளிலேயே பெருமளவில் கையாளப்பட்டு வந்துள்ளது, இலங்கையில் சித்த மருத்வத்தின் தாயகமாக யாழ்ப்பர்ணம் விளங்கு கிறது" என்று கலைப்புலவர் நவரத்தினம் அவர்கள் தமது இந்துசமயம் என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார். "சித்தமருத்துவமானது அதன் தூய்மையுடனும், தனித்துவத்துடனும் யாழ்ப்பாணத்தில் இன்று வரை கையாளப்பட்டு வருகிறது” என்ற பேராசிரியர் உரகொட அவர்களின் கருத்தும் இங்கு கவனத்திற் கொள்ளத்தக்கது.*

Page 14
யாழ்ப்பாண வைத்தியர்களால் பல சிறந்த சித்த மருத்துவ நூல்கள் ஆக்கப்பட்டுள்ளன. சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த பெரியார் பூரீலழரீ ஆறுமுகநாவலர் அவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்த நரசிங்கபுரவீர்ா சாமி முதலியாருக்கு எதிராக எழுதிய கண்டனக் கட்டுரை ஒன்றி ல் , யாழ்ப்பாணத்தில் எழுந்த சிறந்த நூல்களில் செகராச சேகரம், பரராச சேகரம், அமுதாகரம் என்பவற்றையும் குறிப்பிட்டுள்ளார். ஆறுமுகதா வலரின் இக்கட்டுரை நல்லறிவுச் சுடர் கொளுத்தல் என்ற தலைப்பின் கீழ் 9ம் வகுப்பு தமிழ் பாட் நூலிலும் இடம்பெற்றுள்ளது.
நாவலர் குறிப்பிட்டுள்ள மேற்படி சித்த மருத்துவ நூல்கள் மட்டு மன்றி சொக்கநாதர் தன்வந்திரியம், இருபாலைச் செட்டியார் வைத்திய விளக்கம், அங்காதிபாதம், வைத்திய சிந்தாமணி என்பனவும் சிறந்த மருத்துவ நூல்களாகும். இவற்றுள் பெரும்பாலானவை ஏழாலையைச் சேர்ந்த ஐயம்பிள்ளை - பொன்னையா (அருளானந்தசிவம்) என்பவரால் ஏட்டுச்சுவடிகளில் இருந்து அச்சேற்றப்பட்டவையாகும். ஆயினும் ஏட் டுச் சுவடிகள் முழுமையாகக் கிடைக்காத நிலை, இடைச் செருகல்சள், சிதைவடைந்த சுவடிகள் போன்ற பல்வேறு காரணங்களால் இந்நூல் களில் பெரும்பாலானவை பூரணத்துவமுடையனவாக அமையாதிருக் கின்றன. எனினும் ஐ. பொன்னையா போன்றவர்களின் சேவையால் தான் இன்றைக்கும் இந்நூல்கள் எமக்குக் காணக்கிடைப்பதற்கு ஏது வாக உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை,
மேற்குறிபிட்ட நூல்கள் தவிர வேறும் பல மருத்துவ நூ ல் க ள் ஈழத்தவராற் செய்யப்பட்டுள்ளன என்று அறியக்கூடியதாக இருத்தா லும் அவை தனிப்பட்ட சிலரிடம் சிக்கிக் காலப்போக்கில் அழிந்துபோ யிருக்க வேண்டும். அவ்விதம் அழியாமல் உள்ள சுவடிகள் சிலரால் பரம் பரைப் பொக்கிஷமாகப் பேணப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. அவ்விதம் வைத்திருப்பவர்கள் அவற்றை மண்ணுடன் மண்ணாக மறைந்து ழோகவிடாமல் மக்களுக்குப் பயன்படும் வகையில் வெளியிட வேண்டும் அல் லது வெளியிடுபவர்களுக்குக் கொடுத்துதவ வேண்டும்.
தற்போது காணக்கிடைத்துள்ள நூல்களை அடிப் படை யாகக் கொண்டு ஈழத்தில் சித்த மருத்துவம் செழிப்புற்று வளர்ந்து வந்ததை எடுத்துக் காட்டுவதும், மக்கள் மத்தியில் அதன் முக்கியத்துவத்தை உண ரச் செய்வதுமே இக் கட்டுரைகளின் நோக்கமாகும். காலக் கணிப்புக்கள், நூல் திருத்தங்கள் என்பன வருங்காலத்தில் ஆய்வுகள் மூலம் தெளிவு படுத்தப்படும் போது இக் கட்டுரைகளின் முக்கியத்துவம் குறைந்து யோக லாம். ஆனால் இன்றைய நிலையில் ஈழத்து வைத்திய நூல்கள் பற்றி பொதுவான விளக்கமும் தெளிவும் ஏற்பட இந்நூல் உதவுமானால் இக் கட்டுரைகளை எழுதியதன் பயனைப் பெற்றவனாவேன்.

ஈழத்துத் தமிழ் வைத்திய நூல்கள் உண்மையில் சித்த வைத்திய நூல்களா அல்லது ஆயுள்வேத வைத்திய நூல்களா என்ற கே ள் வி இந்நூல்களைப் படிக்க முற்படும் ஒவ்வொருவருக்கும் எழுவது இயற்கை. இக் கேள்விக்கு விடை கூறுவது இலகுவான செயலன்று. ஏ னெ E ல் இந்நூல்கள் ஒவ்வொன்றிலும் பல இடங்களில் 'ஆயுள் வேதம்" என்ற சொல் கையாளப்பட்டுள்ளதைக் காணக்கூடியதாக உள்ளது. r
எனவே இவ் வினாவிற்கு விடை காண்பதற்கு முதலில் சித்த வைத் தியம் என்றால் என்ன? ஆயுள் வேதம் என்றால் என்ன? என்பது பற்றிச் சிறிது கவனித்தல் அவசியமாகின்றது. புராணக் கதைகளின்படி சிவ பெருமான் உமைக்குச் சொன்ன மருத்துவத்தை நந்தி தேவர் கேட்டு திருமூலருக்குச் சொன்னதாகவும் அவரிடமிருந்து சித்தர்கள் பல ர் இதைக் கற்றறிந்து நாடெங்கும் பரப்பியதாகவும் கூறப்படுகிறது. இதில் முக்கியமான சித்தர்கள் 18 பேரை ஒன்றாகப் பதினெண் சித்தர்கள் எனச் சிறப்பித்துக் கூறப்படுகின்றனர்.
இங்கு நந்திதேவரிடம் இருந்து திருமூலர் மருத்துவத்தைக் கற் றறிந்து கொண்டதாகக் கூறப்பட்டுள்ள போதிலும் தமிழ் மருத்துவத் தினதும் பதினெண் சித்தர் சணத்தினதும் தலைவராக அகத்தியரைக் கொள்வதே மரபாகியுள்ளது. அதேவேளை இந்த மருத்துவம் ஆயுள் வேதம் என்ற பெயராலேயே இவர்களால் வழங்கப்பட்டு வந்துள்ளது.
ஆயுள்வேதம் பற்றிய வரலாற்றில் பிரம்மாவிடமிருந்து அஸ்வினி தேவர்களும், அவர்களிடமிருந்து இந்திரனும் இந்திரனிடமிருத்து பரத்துவாச முனிவரும் மருத்துவத்தை அறிந்து உலகில் பரப்பிய தாகக் கூறப்படுகிறது. (இதுபற்றிய விபரங்களை அக்கினிவேச முனி வர் எழுதிய சரகசம்ஹிதை சூத்திரஸ்தானம் 1 சுலோகம் 8 முதல் - 14 சூஸ் 30, சுலோகம் 21, 23, 27 மூலம் அறிந்து கொள்ளலாம்.) மேலும் முதலிற்கூடிய சம்மேளனத்தில் (சரக சூத். 1:8 முதல் 14 புலஸ்தியர், அகஸ்தியர், வாமதேவர் ஆகிய பெயர்களும் கூறப்பட்டுள் ளன.) அதாவது சித்த வைத்தியமானது (தமிழ் வைத்தியம்) சிவசம் பிரதாயமுடையது என்றும், ஆயுள்வேத வைத்தியமானது பிரம்ம சம்பிரதாயம் உடையது என்றும் கூறப்படுகிறது.
சிவசம்பிரதாய சித்த மருத்துவமும் பிரம சம்பிரதாய ஆயுள் வேதமும் ஆயுளைப்பற்றி விளக்கும் வைத்தியமுறைகளேயாகும். எனவே, பொதுப்பெயராக ஆயுள்வேதம் என்று இரண்டையும் குறிப் பிடினும்,சிறப்புப்பெயராக பிரமசம்பிரதாய வைத்திய முறைக்கு ஆயுள் வேதம் என்ற பெயர் ஏற்பட்டது. ஆயுள்வேதம் அதர்வ வேதத்தின் உபவேதமாகவும் கருதப்படும். சிவசம்பிரதாய வைத்திய முறைக்கு சித்தவைத்தியம் என்ற பெயர் பின்னாளில் ஏற்பட்டிருக்கவேண்டும்.

Page 15
தமிழில் பல மருத்துவ நூல்கள் ஆதிமுதல் இருந்து வந்தபோதி லும் சித்தர் காலம் என்பது முக்கியமாக 13, 14ஆம் நூற்றாண்டு காலப் பகுதியாக இருக்கலாம் என்பர். இதை நாம் முடிந்த முடிபா கக் கொள்ள முடியாது. எனினும் தமிழில் இருந்த மருத்துவத்தைமருத்துவ நூல்களைச் சித்தர்கள் பெருமளவில் சீர்படுத்திய காலமாக இதைக் கருத முடியும். இவ்விதம் அவர்களால் சிரிபடுத்தப்பட்ட பின் னரே தமிழ் மருத்துவம் "சித்தமருத்துவம்' என்ற சிறப்புப் பெயரைப் பெறும் நிலையை எய்தியது என்று கருதத் தோன்றுகிறது.
சித்த வைத்தியம் தமிழிலும் ஆயுள்வேத வைத்தியம் சமஸ்கிரு தத்திலும் எழுதப்பட்டிருந்த போதிலும் அவற்றின் அடிப்படைத் தத் துவங்கள் பெருமளவில் ஒத்திருப்பதை இவ்விரு மருத்துவ நூல்களை பும் ஆராய்ந்த பலரும் கூறியிருக்கிறார்கள். 8 இதற்குக் காரணம் இவ் விரு மருத்துவங்களும் இந்துமத தத்துவங்களின் அடிப்படையில் எழுந் தமையினால் ஆகும். முக்கியமான வேறுபாடுகளை நோக்குமிடத்து நாடிப்பரீட்சை மூலம் தோய்களைக் கண்டறிதல், உலோக, தாதுவர்க் கங்களைக் கொண்டு செய்யப்படும் பற்ப செந்தூரங்களைப் பெருமள வில் பயன்படுத்துதல் என்பன சித்த மருத்துவத்திற்கேயுரிய தனிச் சிறப்பம்சங்களாகக் கருதப்படுகின்றன.
இவ்வகையில் நோக்குமிடத்து ஈழத்துத் தமிழ் மருத்துவ நூல் களில் பின்வரும் அம்சங்கள் சிறப்பாக நோக்கத்தக்கன:-
1. பரராசசேகரம், செகராசசேகரம், சொக்கநாதர் தன்வந்திரியம் முதலிய நூல்களில் சிவன் உமைக்குச் சொன்ன வைத்தியம், அகத் தியமுனி சொன்ன ஆயுள்வேதம் போன்ற குறிப்புகள் சித்த மருத் துவ புராண வரலாற்று மரபைச் சுட்டி நிற்கின்றன
2. தமிழர் வைத்தியத்தில் நாடிப்பரீட்சை முக்கியமான ஒன்றாகும். எண்வகைப் பரீட்சை முறைகளில் ஒன்றான நாடிப்பரீட்சைக்கு இந்நூல்கள் முக்கியத்துவம் கொடுத்துள்ளன. முக்கியமாக வைத் திய சிந்தாமணி, பரராசசேகரம், அங்காதிபாதம் என்பள நாடிப் பரீட்சை பற்றித் தெளிவுறக் கூறியுள்ளன.
3. உலோக உபரச தாதுவர்க்கங்களைக் கொண்டு தயார்செய்யப்
படும் மருந்துகள் பெருமளவில் கூறப்பட்டுள்ளன.
4. இந் நூல்களில் சில இடங்களில் 'வடமொழி ஆயுள்வேதந்தை செந்தமிழாற் செய்தேன்' போன்ற கூற்றுக்கள் அக்காலத்தில் வடமொழியின் செல்வாக்கு மிகுந்திருந்த நிலையையும், அதன் மீது மக்களுக்கிருந்த கவர்ச்சியையும் நூலாசிரியர்கள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்த முற்பட்டுள்ளனர் என்பதை எடுத்துக்

காட்டுவதாகக் கொள்ளலாம், மேலும் தமிழ்நாட்டைப் போலவே இங்கும் வைத்தியத் துறையில் வடமொழி, தென்மொழியிற் புலமை பெற்ற பிராமணர்கள் ஆதிக்கம் பெற்றிருந்தமையும் மறுப்பதற்கில்லை. பிராயண நூலாசிரியர்களில் அமுதாகரம் எழு திய வரத பண்டிதர், சொக்கநாதர் தன்வந்திரியம் எழுதிய சொக்கநாதக் குருக்கள் என்போர் குறிப்பிடத்தக்கவர்கள். வட மொழியில் இருந்ததை தமிழிற் சொன்னோம் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ள போதிலும் வடமொழிமூல நூல்கள் எவை என தெளிவுபடுத்தவில்லை. பரராசசேகரம், சொக்கநாதர் தன்வந்திரி யம் என்பவற்றில் தன்வந்திரி சொன்னதைத் தமிழிற் சொன் னோம் என்று மட்டும் குறிப்புகள் காணப்படுகின்றன. ஆனால் தன்வந்திரி என்பவர் இரு மொழியிலும் புலமை பெற்றவர் என் பதும் வடமொழியில் மட்டுமன்றித் தமிழ்மொழியிலும் நூல்கள் பல செய்துள்ளார் என்றும் அறியப்பட்டுள்ளது.7 அதுமட்டு மன்றி இந்நூல்களிற் கூறப்பட்டுள்ள மருந்துகளிற் பல வடமொழி ஆயுள்வேத நூல்களிற் காணமுடியாதுள்ளன. எனினும் இந் நூலாசிரியர்களுக்கு ஆயுள்வேத மருத்துவத்திலும் இருந்த ஆழ்ந்த அறிவு காரணமாக அதன் நிழல் அவ்ர்களின் நூல்களில் படிதல் தவிர்க்கமுடியாது போய்விட்டது போலும். சுருங்கக் கூறின் சித்தர்களால் செய்யப்பட்ட தமிழ் மருத்துவ நூல்களுக்கும் மருத் துவ முறைகளுக்கும் பிற்காலத்தில்தான் சித்த மருத்துவம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது போல் தெரிகிறது. உயிரைப்பற்றி அறிய உதவும் நூல் - உயிர்காக்கும் நூல் என்னும் கருத்தில் அக் காலத்தில் தமிழ் வைத்திய நூல்களுக்கு ஆயுள்வேதம் என்றே பல ரும் பெயரிட்டுள்ளனர். அகத்தியர் தேரையர் போன்ற சித்தர் கள் கூட தமது நூல்களில் ஆயுண்மறை, ஆயிருவேதம் என்றே கூறியுள்ளனர், அது போலவே பரராச சேகரம், செகராச சேகரம் போன்ற ஈழத்து மருத்துவ நூல்களிலும் ஆயுள்வேதம் என்று அக் கால நிலைக்கேற்ப குறிப்பிடப்பட்டிருப்பினும் அவை சித்த மருத் துவ நூல்களேயாகும். (உண்மையில் அக்கால இந்திய அல்லது இந்து மருத்துவ முறைகள் யாவும் ஆயுள்வேதம் என்றே அழைக் கப்பட்டன.)
தற்போதுகூட இலங்கையில் 1961 ஆம் ஆண்டு ஆயுள் வேத Act No. 31 இன்படி ஆயுள்வேத என்பது ஆயுள்வேத வைத்தியம், சித்தவைத்தியம், யுனானி வைத்தியம் என்பவற்றைக் குறிப்பதாகஅமை யும் என்று தெளிவுபடுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
According to Section 89 of Ayurveda Act No. 31 of 1961 Ayarveda includes the Siddha and Unani and Desiya Chikitsa systems of Medicine and Surgery and any other system of Medicine indigenous to Asian countries and recognised as such by their respective governments '

Page 16
பக்க சார்பற்று ஆராய்வோமேயானால் ஈழத்துத் தமிழ் மருத்
துவ நூல்கள் பெருமளவில் சித்தர் மருத்துவ மரபைத் தழுவியவை யாகவும், அத்துடன் வடமொழி ஆயுள்வேதக் கலப்புடையவையாக வும் விளங்குகின்றன என்பது புலப்படும். ஏற்கனவே குறிப்பிட்டது போல நூலாசிரியர்களுக்கு இருந்த ஆயுள்வேத மருத்துவ அறிவே இதற்கு முக்கிய காரணம் எனலாம்
ஆதாரக் குறிப்புகள்
Uragoda C. G - A History of Medicine in Sri Lank
from earliest times to 1948, A Centenay
Publication, Sri Lanka Medical Association, Colombo - 1987 pg 14
மேற்படிநூல் பக் 107
Navaratnam K. - Studies in Hinduism, 1963 p 165
Uragoda C. G - A History of Medicine in Sri Lanka
p - 14
தமிழ்மலர் 9 - கல்வி வெளியீட்டுத் திணைக்களம், கொழும்பு-1971
பக் - 67
Uragoda C. G - A History of Medicine In Sri Lanka
p - 14
உத்தமராயன் க சு - தோற்றக்கிரம ஆராய்ச்சியும் சித்தமருத்துவ வரலாறும் தமிழ்நாடு அரசு வெளியீடு, 1978 us 382 - 333
۷۰- - Wanninayaka-P.B - Ayurveda in Sri Lanka
Ministry of Health, Sri Lanka - June 1982 p 1

2. பரராசசேகரம்
ஈழத்துச் சித்த மருத்துவ நூல்களிலே முதன்மையாக வைத்து எண் ணப்படுவது இந்நூலேயாகும். மூல நூலானது பல பிரிவுகளைக் கொண்டதாகவும், பன்னிராயிரம் (12,000) பாடல்களை அடக்கிய தாகவும் ஆக்கப்பட்ட போதிலும், தற்சமயம் எமக்கு சில ஆயிரம் பாடல்களே கிடைத்துள்ளன. அவற்றை ஏழாலையைச் சேர்ந்த சுதேச வைத்தியர் ஐ. பொன்னையா என்பவர் ஏழு பாகங்களாகப் பிரித்து வெளியிட்டுள்ளார். அச்சுவேலியைச் சேர்ந்த ச. தம்பிமுத்துப்பிள்ளை என்பவரும் பரராசசேகரததை பதிப்பித்துள்ளதாக கூறப்படுகின்ற போதிலும் அவரின் பதிப்பு நூல் காணக்கிடைத்திலது.
இத் நூலானது பரராசசேகர வைத்தியம், பரராசசேகர மாலை, பரராசசேகரம் பன்னிராயிரம் என்னும் பெயர்களில் வழங்கப்பட்டு வந்ததாகவும் கூறுவர். பரராசசேகரம் நூலைப்பற்றிப் பல்வேறு சர்ச்சைகள் காலத்துக்குக் காலம் எழுந்தவண்ணம் உள்ளன. முக்கிய மாக இது ஒரு தனி நூலா அல்லது தொகுப்பு நூலா? நூலாசிரியர் பார்? நூல் ஆக்கப்பட்ட காலம் எது? இது சித்த வைத்திய நூலா அல்லது ஆயுள்வேத வைத்திய நூலா? என்று கேள்விகள் பலரிடையே வாதப்பிரதிவாதங்களைத் தோற்றுவித்துள்ளன.
இந்நூலானது வேறும் பல மருத்துவ நூல்களில் இருந்தும் தொகுக் கப்பட்டதென்று பல செய்யுட்கள் மூலம் அறியக் கிடக்கிறது. ஆயி னும் அம் மூல நூல்களின் பெயர்கள் தெளிவாகக் குறிப்பிடப்பட் டில்லை. ஏட்டுப் பிரதிகளில் இருந்த வேறுபாடு காரணமாக இந்து லைப் பதிப்பித்த பொன்னையாபிள்ளை அவர்களும் முதற்ப்ாகமான சிரரோகத்திற்கு இரண்டுபாயிரம் வெளியிட்டதன் மூலம் மூலநூல் பற்றிய ஒரு மயக்கத்தை ஏற்படுத்திவிட்டார் போல் தோன்றுகிறது. **இந் நூல் அச்சிடத் தொடங்கிய பின் கிடைத்த ஏட்டுப்பிரதி ஒன்றிற் கண்ட பாயிரச் செய்யுட்களில் இன்றியமையாததாயுள்ள சிலவற்றை அச்சிட்டு முதலில் சேர்த்துள்ளோம்.?"1 என்று அவரே குறிப்பிட் еттri.
மேற்படி முதற்பாயிர விநாயகர் வணக்கத்தில் சாதரணியோர் மிகப்புகழுந் தன்வந்திரி செய்
தகவுடைய சீர்த்திபெறு மாயுள்வேதப் பேரணியும் வாகடத்தைப் பெரிது பேணிப்
பெட்புடைய தமிழ்ப்பாவாற் பேசும்வண்ணம்"2 என்று கூறப்பட்டுள்ளது. இதனைக் கருத்திற் கொண்டே பலரும் பரராசசேகரமானது தன்வந்
திரி பகவானின் வடமொழி ஆயுள்வேத வாகடத்தைத் தழுவி உரு வான நூல் எனக் கூறுவர்.

Page 17
8
-gsörfró) இதேபாயிரத்தில் நூல் வரலாறு பற்றிக் கூறுமிடத்தில்
(பக். 2,3) சிவசம்பிரதாயம் கூறப்பட்டுள்ளதுடன் அகத்திய முனிவர் முன்னர் சொன்ன வைத்தியத்தைப் பின்பற்றியே இந்நூல் இயற்றப் பட்டுள்ளதென்ற கூற்றும் இடம் பெறுவது கவனத்திற்கொள்ளத்தக் கது. மேலும்,
அந்தமிலருள் பெறு மகத்தியன்முனே
சுந்தர வைத்தியஞ்சொல்லச் சேகரன்
கந்தமில சாத்தியங் கால சாத்தியம்
சந்தமில் கட்- சாத்தியமுஞ் சாற்றினான்.9
என்ற செய்யுள் நோக்கற்குரியது.
அகத்தியர் முதலானோரின் நூல்களைப் பின்பற்றி பரராசசேகர மன்னன் இந்நூலை இயற்றினான் என்பதற்கு ஆதாரமாகவும் இச் செய்யுளைப் பலரும் எடுத்துக்காட்டுவர்.
இவ்விதம்ே பாயிரம் 2 ல் கடவுள் வணக்கச் செய்யுளில்:- "அமிழ்துறள் தமிழ்மொழி யகத்தியற் குணர்த்திய
கவுதரின் புதல்வன் கார்த்திகேயன் கதிரை நன்நகர் முதற்பதிபல மேவி அடியவர் வேண்டியாங் கருள்புரி வள்ளல்" என்று தமிழ்முனி அகத்தியர் முன்வைக்கப்படுவதுடன் அவருக்குத் தமிழ் உணர்த்தியவரும் சித்தர் வணங்கும் தலைவருமான இறைவன் முருகப் பெருமானும் போற்றப்படுகிறார். மேலும் பாயிரம் ே ஈற் றுச் செய்யுளில்:-
"வேதன் முன் வகுத்த வாயுள் வேதத்தில் விரித்துச் சொன்ன
கோதிலா வியல்பினாலே குறுமுனி அருளிச் செய்தார்
ஆதலாற் றமிழினாலே யாய்ந்தவ ரறிந்துரைத்த
மூதுரை வாகடத்தின் முறைமையை மொழியுமாறே"? என்று கூறப்பட்டுள்ளது.
இதன்படி பிரம்மா (வேதன்) சொன்ன ஆயுள்வேதத்தை அகத்திய
முனிவர் ஆராய்ந்து தமிழில் வெளியிட்டதாகவும், அங்ங்ணம் தமிழில் (அகத்திய முனிவரால்) கூறப்பட்ட வாகடங்களை அடிப்படையாக வைத்தே இந்நூலை ஆக்கியதாகவும் இச் செய்யுளை யாத்தவர் குறிப் பிட்டுள்ளார்.
மேலும் உதரரோக நிதானம் பதிப்பில் சோகை காமாலைகசூ மண்டூர குறணம் பற்றிக் கூறுகையில்

என்று பொதியத்திருந்து தமிழுரைத்த நன்றியுறு நாயகனார் - அன்றருளிச் செய்தபடி யாலுரைத்தேன். . ."6 என்று அகத்தியர் சொன்னதையே மீண்டும் சொல்வதாகக் குறிப்பிடப் பட்டுள்ளது. அத்துடன் "வாகடநூல் சொன்னது", "வாகடர் சொல் லியது", "வாகடநூல் விதித்ததன்றே", "சாற்றினார் வாகடநூல் தன்னையாய்ந்தே ”7 என்ற வரிகளும்,
"பாயிரும் புவனத்துள்ளே பரந்த முன்னுரல்கள் பேணி
ஆய நோய்க்குணஞ் சிகிச்சை யறிந்தவா புகலலூற்றாம்."8 என்ற செய்யுள் வரிகளும் இந்நூல் பலநூல்களின் தொகுப்பு என் பதை சந்தேகமற எடுத்துக் காட்டுகின்றன. کی۔
மேலும், வடமொழியிற் சொன்னதைத் தமிழிற் சொன்னோம் என்று சில இடங்களிலும், உதாரணமாக,
'அந்தமிலாயுரு வேத மாயுயர்
சுந்தர மந்திரி சொல் சிந்தாமரிைச் சந்தநல் வடமொழி தமிழ் வளம்பெற எந்தை தனகுளி னாலியம்பு வாமரோ'9 "தன்வந்திரியுரைத்த சாத்திரத்தைத் தென்றமிழால்
தன்மந்திர ருரைத்த தாம்."10
என்று கூறப்பட்டுள்ளதை நோக்குமிடத்தும் இந்நூலை யாத்த பண்டிதர்களில் (பண்டிதர் - வைத்தியர்) சிலர் வடமொழி ஆயுள் வேதத்திலும் சிறந்த பாண்டித்தியம் பெற்றவர்களாக இருந்திருக்க வேண்டும் என்று எண்ணத் தோன்றுகிறது. அத்துடன் அக்காலத்தில் அரசசபையில் வடமொழி ஆதிக்கமும் ஓரளவு இருந்திருக்கிறது. அரச வம்சத்தில் வந்தவரான அரசகேசரிப் புலவர், காளிதாசப்புலவர் வட மொழியிற் செய்திருந்த இரகுவமிசம் என்னும் மகாகாவியத்தை தமி ழில் இயற்றியிருக்கிறார் என்ற கூற்று இதனை வலுப்படுத்துவதாக அமைகிறது.11 எனவே, மருத்துவப் புலவர்களிற் சிலரும் அவ்விதமே வடமொழி ஆயுள்வேத முறைகளைத் தமிழிற் பாடி பரராச சேகரத் தொகுப்பில் இடம்பெறச் செய்திருக்கக்கூடும்.
அதேநேரத்தில் பரராசசேகரத்தில் பல இடங்களிலும் சித்தவைத் திய சிவசம்பிரதாயம் கூறப்பட்டுள்ளது, 'தமிழ் முனிவனுரை செய் தானே", "அகத்தியமுனிவனருளின் வகுத்துரை செய்த வாகடம் கூறுமே” * யுயர்ந்தமுனிவன் மொழிந்த தமிழ் கண்டீர் முதல்"? என்றும், மற்றும் பல இடங்களிலும் அகத்தியர் கூறிய மருத்துவம் என்று கூறப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. (வாதரோக நிதானம் 19

Page 18
O
பித்தரோகநிதானம் 1* ஒலேற்பனரோக நிதானம் 15 என்பவற்றி லும் பார்க்க) மேலும் முன்னோர் கூறியது 16 வாகடக் கருத்து ' என்று வெவ்வேறு இடங்களில் கூறப்பட்டுள்ளதும் நோக்கற்பாலது. அதுமட்டுமன்றிச் சித்தவைத்தியத்தில் தேர்ந்தவரான தேரையரின் மருத்துவ சிகிச்சை முறைகளும் ப்ரராசசேகரத்தில் எடுத்தாளப்பட் டுள்ளன. உதாரணமாக அதிசாரரோக நிதானத்தில் ஆ  ை நெய்பற்றிக் கூறுகையில் அது தேரையரின் முறை என்று எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.
"தேரையணன்று சொனன அதன் மொழியாரை நெய்யை
வாருறுகுழலாய் செய்யும் வகையினையுரைப்பக் Gsteinri'' எனவே பரராசசேகரத்துக்கு மூலநூல்களாகத் தமிழ் (வித்த) வைத்திய நூல்களும் இருந்திருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை.
அக்காலத்தில் தமிழ்மொழி, வடமொழி கலந்த மணிப்பிர வாள நடை எவ்விதம் தமிழரிடையே கையாளப்பட்டு வந்ததோ அதே போல வடமொழி, தமிழ்மொழி வைத்தியங்கள் இரண்டும் கலந்து பண்டிதர்களால் பின்பற்றப்பட்டு வந்திருக்க வேண்டும் போல் தோன்றுகிறது. அரச ஆதரவும் அடிகைாரமும் இவ ற் றுக்கு இருந்த காரணத்தாலும் இவ்விரு வைத்திய முறைகளும் இந்து தத்துவ அடிப்படையில் எழுந்தமையாலும் எவருமே அக்காலத்தில் இவற் ைற வேற்றுமைப்படுத்தி நோக்கவில்லைப் (3 u v gyn ŭb o அதுமட்டுமன்றி பிரம்மா, விட்டுணு, சிவன் ஆகியோை மும்மூர்த்தி களாக இந்துமத தத்துவங்கள் கூறுகின்றன. மும்மூத்ர்திகளை இந்துக் கள் பேதப்படுத்தி வணங்குவதில்லை, எனவே அவர்கள் வழிவந்த பிரம்ம சம்பிரதாய ஆயுள் வேத வைத்தியமும், சிவ சம்பிரதாய சித்த வைத்தியமும் இந்துமத அடிபடைத் தத்துவத்திற்கமைய நிறுவப்பட் டன. எனவே, மக்களும் மருத்துவர்களும் இவற்றை வேறு 9 if is gil நோக்காததில் வியப்பேதும் இல்லை
மேலும் பழந்தமிழ் நூல்களில் மிக்க பரிச்சயம் உள்ளவரும் வமொழி விற்பனரும் இரகுவமிச உரை, மகாபாரதம் சூதுபோர்ச் சருக்க உரை, ஒருதுறைக் கோவை உரை அகநானூறு முதல் நூறு செய்யுள் களுக்கான உரை.'** என்று பல்வேறு நூல்களுக்கு உரை செய்த வருமான வித்துவசிரோன்மணி கணேசையர் அவர்கள் பொன்னையா அவர்களின் பதிப்புகள் பலவற்றிற்கு உறுதுணையா நின்று திருத்தங் கள் செய்ததுடன் பரராசசேகரம் சொக்கநாதர் தன்வந்திரியம் போன்ற நூல்களுக்குச் சிறப்புப்பாயிரங்களும் வழங்கியுள்ளார். ஐயர் அவர்கள் அச்சிறப்புப்பாயிரங்களில் அகத்தியர் மரபுச் சித்தமருத்துவ நெறியினையே பெரிதும் வாழ்த்தி அவற்றைத் sqpoiGu இந்நூல்கள்

ஆக்கப்பட்டுள்ளதாக எடுத்துக்காட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது" இவ்விதம் ஐயர் அவர்கள் ஒரு வைத்தியராக இல்லாதிருந்தும் போற்றி யிருப்பது இங்குள்ள வைத்தியம் (ஆயுள்வேதம் என்று பொதுவில் சொல்லப்பட்டாலும்) அகத்தியர் முதலான தமிழ்ச் சித்தர்களின் வழி யைப் பின்பற்றி வந்ததாக வைத்தியரல்லாதாரும் அறிந்து வைத்திருந் தமைக்கும் சான்றாக அமைகிறது.
**யாழ்ப்பாணத்து நல்லூர் நகரா
அரசிருத் தாண்டு பல்லுயிர் புரத்தலோ டமையா துளமா ரருளது துரப்ப நல்லுயிர்க்கினிது நாடியோர் சங்கத் நிறீ இப் பன்னு னிடு நுண்மதியின்
ஆய்தல் செய்தும் அவைபல வியற்றியும் அருந்தமிழ் புரந்த திருந்து நல்லறிஞன் பரராச சேகரப் பார்த்திபன் பெயரொடு கிழமை கொண்டிலகிய கெழுமிய தென்றிசை பொருப்பன் முதலோர் புகன்ற முன் வைத்திய நூல்கள் பலவுந் நுண்ணிதின் நோக்குபு
a * b M ab o d 2C
இவ்விதமே சொக்கநாதர் தன்வந்திரியத்திற்கு அவர் எழுதிய சிறப்புப்பாயிரத்தில்
': ............ . . . . . . . . . . . . மாவையம்பதியில்
மேவியிருந்த தேவியற் குருவாம் சொக்க நாதத் தொல்பெரும் புலவன் பொதியத்தருந்தவன் நிதியெனத் தந்த வைத்திய நூலெலா மரபினினாடி ..."21
என்று அகத்தியர் மரபுவழியைப் போற்றியுள்ளார்.
எனவே இந்த அடிப்படையில் இன்றைய நிலையில் பரராசசேக ரத்தை தமிழ்ச் சித்த வைத்திய நூல்வரிசையில் வைத்து எண்ணுவது பொருத்தமுடையதே. இங்கு மட்டுமல்ல தமிழ்நாட்டுச் சித்தர்களின் மருத்துவ நூல்கள் பலவற்றில் கூட வடமொழி ஆயுள்வேதத்தின் கலப்பு இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
அடுத்து பரராசசேகரம் நூலாசிரியர் பற்றிய விடயத்துக்கு வரு வோம். இந்நூலாசிரியர் பற்றி மூன்றுவிதமான கருத்துக்கள் கொன் ளத்தக்கன;

Page 19
1. பரராசசேகர மன்னனால் இந்நூல் இயற்றப்பட்டிருத்தல் வேண்டும்.
2. மன்னன் வேண்டுகோட்படி மருத்துவப் புலவர் ஒருவரால் இயற்
றப்பட்டிருக்க வேண்டும்.
3. மன்னன் வேண்டுகோட்படி பலர்சேர்ந்து தொகுத்திருக்க வேண்டும்.
கர்ண பரம்பரைக் கதைகள் பரராசசேகரனே இந்நூலை ஆக்கிய தாகக் கூறுகின்றன. யாழ்ப்பாண வைத்தியர்களிடையே பரராசசேக ரம் நூலாசிரியர் பரராசசேகர மன்னனே என்ற கருத்து பெருமளவில் நிலவிவருவதைக் காணக்கூடியதாக உள்ளது. அழவைநகர் ஆயுள் வேத வைத்தியர் க. வே. கந்தையாபிள்ளை என்பவர் தொகுத்து வெளியிட்ட பாலவைத்தியத் திரட்டு என்னும் நூலின் முகவுரையில், அதற்கு ஆதாரமாக யாழ்ப்பாணத்தை அரசாண்ட செகராசசேகர மகாராசாவின் சகோதரரும் இலங்கையரசனாலும் ஏனைய அரசர் களாலும் நன்கு மதிக்கப்பெற்றவருமாகிய வைத்தியராசேந்திர பர ராச மகாராசா எழுதிவைத்துள்ள வாகட முறையையும்” பின்பற்றியதா கக்22 கூறியுள்ளது அதனாற்றான் போலும். அதுமட்டுமன்றி, சிர\ரோக நிதானப்பதிப்பு நயனரோகத்தில்
**சீர்மேவு நதிமதியும் பொதியுந்தூய
செஞ்சடை நஞ்சுடைக் கண்டன்றிருப்பாகஞ்சேர் வார்மேவுகளபமுலை மலைமான் கேட்ப
வண்மைபெற வுரைத்த மணிவாகடத்தைப் பார்மேவு மரசர்குல திலகமான
பரராசசேகரன் மால் பருதியேந்தி ஏர்மேவுமுலகு புரந்தருளுநாளி
லிசைத்தனனைங் கரக் கரியையிறைஞ்சலுற்றே"23 என்ற செய்யுளும் பரராசசேகர மன்னனை நூலாசிரியனாகக் கருத வைக்கின்றன. ஏற்கெனவே எடுத்துக்காட்டிய சிரரோக நிதானம் செய் 19 இதற்கு ஆதாரமாவுள்ளது.
தமிழ்ப்புலமையும் மருத்துவ அறிவும் மிக்க மன்னன் இந்நூலை இயற்றியிருத்தல் பொருந்தக்கூடியதே. திருவாரூருலா முதலிய நூல் களை இயற்றிய அந்தகக் கவிவீரராகவ முதலியார் என்னும் புலவர் பெருமான் பரராசசேகர மன்னனிடம் வந்து பாடிப் பரிசில் பெற்ற போது அம்மன்னன் புலவரின் கவிப்புலமையை மெச்சித் தானே சில, கவிதைகள் செய்தான் என்பர்.24 ஆனால் இங்கு குறிப்பிடும் இரு வரும் 15ஆம் நூற்றாண்டுக்குரியவராக தமிழ்ப்புலவர் சரித்திரம் கூறு கிறது. ஆனால், திருவாரூருலா இயற்றிய அத்தகக் கவிவீரராகவ முதலி யார் என்னும் பெயருடைய சிறந்த புலவர் ஒருவர் வாழ்ந்த காலம் 17ஆம் நூற்றாண்டு எனத் தமிழ் இலக்கிய வரலாறு - 14ஆம் நூற் றாண்டு நூலாசிரியர் மு. அருணாசலம் தெளிவுபடுத்தியிருப்பது குறிப்

13
பிடத்தக்கது.25 மன்னனே நூலாசிரியரானமையினால்தான் மன்னனை வாழ்த்திப் புகழும் செய்யுட்கள் அதிகம் இந்நூலில் இடம்பெறவில்லை என்றும் கூறுவர்.
இரண்டாவதாக பரராசசேகர மன்னன் இந்நூலை இயற்றவில்லை எனின் மன்னனின் ஆணைக்கிசைந்து மருத்துவப் புலவர் ஒருவர் இதனை ஆக்கியிருக்கலாம் எனவும் கருதமுடியும். தன்வந்திரியின் வட மொழி நூல்களைப் பின்பற்றி "தன்மந்திரர்” என்பவர் இதனை ஆக் கியிருக்கல்ாம் என்றும் சிலர் கூறுவர்.28
பரராசசேகரம் நூலைப் பதிப்பித்த ஐ. பொன்னையூா அவர்கள் 'பரராசசேகரன் சபையில் இருந்த பண்டிதர்கள் (பண்டிதர். வைத்தியர்) பலர் இதை இயற்றித் தொகுத்தார்கள் எனக் கூறுவாருமுளர்; வேறுங் கூறுவர்" என்று தனது சிரரோக நிதானப் பதிப்பு நூன் முகத்தில் குறிப்பிட்டுள்ளார்.27
எனவே, பரராசசேகரம் நூலாசிரியர் யார் என்பது பற்றிப் பின்வருமாறு முடிவுக்கு வரலாம்.
மக்கள் நலனிலும் மருத்துவத் துறையிலும் ஈடுபாடு கொண்டு மன்னன் சிதறிக்கிடந்த மருத்துவ முறைகளை (வடமொழி. தமிழ்) ஒன்று சேர்த்துப் பேணும் நோக்குடன் மருத்துவ அறிஞர் குழு ஒன்றை நியமித்திருக்க வேண்டும் (கி.பி 14 - 17 ஆம் நூற்றாண்டு காலப்பகுதி தமிழிலக்கிய வரலாற்றில் பழந்தமிழ் நூல்களைத் தேடித் தொகுத்தல், உரை எழுதல் என்பன முக்கியமாக நடைபெற்றிருக் கின்றன. அதே வழியைப் பின்பற்றித் தமிழ் மருத்துவ நூல்களைத் தேடித் தொகுத்தலும் இடம் பெற்றிருக்க வேண்டும். இதில் பரராச சேகரன், செகராசசேகரன் என்ற பெயர்களையுடைய மன்னர்கள் ஈழத்தில் முன்னணியில் நின்று செயற்பட்டிருக்கிறார்கள்.) தன்மந்திரர் என்பவர் இக்குழுவின் தலைவராகவோ அல்லது ஒரு உறுப்பினரா கவோ இருந்திருக்கலாம். மன்னனும் தனக்கு இத்துறையில் இருந்த அறிவும் ஆர்வமும் காரணமாகச் சில பல செய்யுட்களைச் செய் திருக்கக்கூடும். மருத்துவக் குழுவிற்குத் தலைமை வகித்தவர், பலரும் சேர்ந்து சேகரித்த விடயங்களை மன்னனின் அனுசரணையுடன் நெறிப்படுத்தித் தொகுத்திருக்க வேண்டும்.
எனவே, பரராசசேகரமானது பரராசசேகர மன்னனாலும் அவன் ஆதரவுபெற்ற மருத்துவப் புலவர்கள1 லும் (மன்னன் புகழ்பாடும் சில செய்யுள்கள் இவர்களாலேயே இயற்றப்பட்டிருக்க வேண்டும்) சேர்ந்து

Page 20
14
உருவாக்கப்பட்ட ஒரு தொகுப்பு நூலாகக் கருதுவதே பொருத்த முடையது. (பரராசசேகரம் நூலாசிரியர் பற்றிய சர்ச்சைகள் "வைத்தியன்' மாத இதழில் புரட்டாதி, ஐப்பசி - 1950 வெளி வந்துள்ளது. ஆர்வமுடையோர் அவ்விதழ்களைப் பார்வையிடலாம்.)29 அடுத்து இந்நூலில் பல இடங்களில் "கதிரைமலைக் கந்தன்” பற்றி சிறப்பித்துக் கூறப்படுகிறது. (உ + ம்) சிரரோகநிதானம்29 வாதரோகநிதானம் 30 கெர்ப்பரோகநிதானம் 31 பாலரோகநிதானம்? உதரரோகநிதானம்33 மூலரோக நிதானம்34, இங்கு கதிரைமலை என்றும் கதிரைந3ர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது கதிர்காமத்தையே என்று பலரும் கூறுவர். “பாய்ந்திடுங் கங்கை சூழ் தென்கதிரை நகரிலுறை பரமனறுமுகவன்'35 'மணிகங்கை சூழ் கதிரையெந்தை முருகேசனருள்"36 என்பன மூலம் இது மேலும் தெளிவுபடுகிறது. எனவே, மன்னன் தனது குலதெய்வமாகக் கதிரமலைக் கந்தனைக் கொண்டிருக்கலாம் என்றும் ஊகிக்க முடிகிறது.
(யாழ்ப்பாண மன்னர்கள் பெரிதும் போற்றி வணங்கிய நல்லைக் கந்தன் பற்றி இந்நூலில் ஏதும் குறிப்பிடப்படவில்லை அதற்கான காரணமும் தெரியுமாறில்லை.)
சித்தர்களுக்கும் கதிர்காமத்துக்கும் நெருங்கிய தொடர்புகளுண்டு பதினெண் சித்தர்களில் ஒருவரான போகநரதர் என்பவரே முருக னருளால் கதிர்கர்மயந்திரத்தை ஸ்தாபித்தவர் என்றும் இவரே பழனியில் நவபாஷாணத்தைக் கட்டி முருகன் சிலையை ஸ்தாபித்தார் என்றும் கூறுவர். தமிழ்நாட்டில் பொதிகைமலையைப் போன்று ஈழத்திலும் கதிரைமலை சித்தர்களின் புண்ணிய வாசஸ்தலமாக விளங்கியுள்ளது. மூலிகை வளம்மிக்க இப்புண்ணிய பூமியில் தமது தலைவரான முருகப்பெருமானின் யந்திரத்தை ஸ்தாபித்து சித்தர்கள் வழிபட்டு வந்திருக்கிறார்கள். தமது சீடர்களுக்கு இங்கு தீட்சை யளித்துமுள்ளார்கள். (இதுபற்றிய விபரங்களை 'பாபாசி, போகா கண்ட யோகம்” (கிரியா) (1982) (பதிப்பாசிரியர் யோ கி சா. அ. அ. ராமப்யா) என்ற நூலில் காணலாம்.)
எனவே, கதிரைமலை முருகன்பற்றி பரராசசேகரத்தில் கூறப் பட்டுள்ளமை நன்கு ஆராயத்தக்கது. கதிர்காமத்தை மையமாக விைத்தே ஈழத்தில் சித்தமருத்துவம், பரவியிருக்கவேண்டும். "கதிரை மலை முருகனருள் பெற்ற அகத்தியர் கூறியது,' "கதிரைமலை மேவு முனி சொன்னது" என்று பரராசசேகத்தில் பலவிடங்களிலும் கூறப்பட்டுள்ளதும் நோக்கற்குரியது. இந்த அடிப்படையில் கதுரை

5
மலை என்ற தமிழரின் புரதான இராசதானிபற்றியும் கந்தமாதனம் என்னும் பெயருடைய இராமேசுவரம் பற்றியும் பெயர்த் தொடர்பு ஆராய்வு செய்வதும் வரவேற்கத் தக்கது.
அடுத்து நூல் எழுந்த காலம் பற்றிச் சிறிது நோக்குவோம்.
பரராசசேகரன் என்ற பெயரில் பல மன்னர்கள் யாழ்ப் பாணத்தை ஆட்சி புரிந்திருக்கின்றார்கள். ஆனால் வரலாற்று ரீதியில் ஒவ்வொரு பரராசசேகர மன்னன் பற்றியும் தெளிவான விபரங்களைப் பெறமுடியாதிருக்கின்றது. ஈழநாட்டுத் தமிழ்ப்புலவர் சரிதத்தில் அண்ணன் தம்பிகளாக ஒரு பரராசசேகரனும், செகராசசேகரனும் சிறப்பித்துக் காட்டப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் 15 ஆம் நூற்றாண்டுக்குரியவர்கள். ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளது போல் அந்தகக் கவிவீரராகவர் மேற்படி பரராசசேகரனிடம் வந்து பாடிப் பரிசில் பெற்றுச் சென்றுள்ளார். இப்புலவர் மன்னனின் தயாளகுணத் தைப் பின்வருமாறு வியந்து போற்றியுள்ளார்.
**டொங்குமிடியின் பந்தம் போனதே யென்கவிதைக் கெங்கும் விருது பந்த மேற்றதே - குங்குமந்தோய் வெற்பந்தமான புயவீர பரராச சிங்கம் பொற்பந்த மின்றளித்த போது’*37
பரராசசேகரம் வைத்திய நூலிலும் அந்நூலுடன் சம்பந்தப்பட்ட பரராச சேகர மன்னன் ஒரு சிறந்த காடையாளியாகவே சிறப்பிக்கப் பட்டிருக்கிறான்,
''. . . . . . . . .. . . . . . . . . . . . . . . . . வீசுபுகழ் பரராச சேகரன்முன் மிடியெனவே யகலுமிது மெய்மையாமே ""38
இதுபோலவே, செவிரோக நிதானத்தில் உசீர் சந்தனாதித் தைலம் பற்றிக் கூறுகையிலும் மன்னனின் கொடைத்திறன் புகழ்ந்து ரைக்கப்பட்டுள்ளது. "பாரின்மேவு திறலரசனான பரராச சேகரனை யண்டினோர்
சீரின்மேவிவளர் செல்வமல்க வவரின்மை தீருமது செய்கைபோல்"*9
எனவே பரராச சேகரத்துடன் சம்பந்தப்பட்ட பரராசசேகரனும் அந்தகக் கவிவீரராகவ முதலியாரால் புகழப்பட்ட பரராச சேகரனும் ஒருவனாகவே இருத்தல் வேண்டும். அந்தகக் கவிவீரராகவ முதலியா ரது காலம் 17ஆம் நூற்றாண்டு என்ப்து மு. அருணாசலம் அவர் கவின் தமிழிலக்கிய வரலாறு 14ஆம் நூற்றாண்டு நூல் மூலம் அறி யக்கூடியதாக உள்ளது. பாவலர் சரித்திர தீபகம் நூலிலும் திரு

Page 21
。酸6
வாரூருலா முதலிய நூல்களியற்றிய அந்தகக் கவிவீரராகவ முதலி யார் காலம் 17ஆம் நூற்றாண்டு என்றே கூறப்பட்டுள்ளது. பொன்னையாபிள்ளை அவர்களும் தமது பரராசசேகரம் சிரரோக நிதானம் நூன்முகத்தில் அது சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னர் உரு வானதாகக் கூறியுள்ளார்.40 எனவே, பரராச சேகரம் உருவான காலம் 17ஆம் நூற்றாண்டாக இருக்கவேண்டும். என்னும் இதில் சம் பந்தப்பட்ட பரராசசேகர மன்னன் பற்றிய விபரங்கள் இனிமேல்தான் தெளிவுபடுத்தப்பட வேண்டியுள்ளது.
ஆனாலும், வைத்தியன் சஞ்சிகையில் பரராசசேகரம் 600ஆண்டு களுக்கு முன்னர் தொகுக்கப்பட்டிருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.41 ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம் ஆசிரியரின் கூற்றுப்படி நோக்கி னும் பரராசசேகரம் 15ஆம் நூற்றாண்டுக்குரியதாகவே கொள்ள வேண்டியுள்ளது.
இன்னொரு விதமாகப் பார்த்தால் தமிழ் இலக்கிய வரலாற்றின் படி தமிழில் மருத்துவ (சித்தர்) பாடல்கள் அதிகளவில் எழுந்தகாலம் கி. பி. 14, 15ஆம் நூற்றாண்டு காலப்பகுதியாகக் கூறப்படுகிறது. அக்காலத்தில்தான் சித்தர் எனப்பட்டோர் பலவித மருத்துவ நூல் களைச் செய்ததாகக் கூறுவர். அவ்விதம் நோக்குமிடத்து (தமிழகத் துக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையில் இருந்த நெருங்கிய தொடர் புகள் காரணமாக) சமகாலத்தில் தமிழகத்தில் ஏற்பட்ட இந்நிகழ்வு கள் யாழ்ப்பாணத்திலும் பிரதிபலித்திருக்க முடியும், மருத்துவம் வல்ல சித்தர்களையும் முனிவர்களையும் யாழ்ப்பாண மன்னன் தரி சித்துப் பயன்பெற்றிருப்பான். அறிவும் ஆற்றலும் வாய்ந்த, மன்னன் அவர்கள் வாயிலாகக் கேட்டவற்றையும், தான் அனுபவபூர்வமாக அறிந்துணர்ந்தவற்றையும் நூலாகச் செய்திருக்க முடியும். சித்தர் களால் கூறப்பட்ட மருத்துவ முறைகள் முக்கியமாக மருந்துகள் இங்கு மீண்டும் பரீட்சித்துப் பார்க்கப்பட்டு, அப்பரிசோதனை முடிவுகளே நூலுருவில் வந்திருக்க வேண்டும். ஏனெனில் சித்தர்கள் பலர் சிறப் பாகக் கூறிய பற்பங்கள், செந்தூரங்கள், காயகற்பம் முதலியன பற் றிய விபரங்கள் பரராச சேகரத்தில் அதிகம் இடம்பெறவில்லை. தமிழ் வைத்தியத்தில் வாதரோக சிகிச்சையில் பற்பங்கள், செந்தூரங் களுக்கு முக்கிய இடம் கொடுக்கப்பட்டுள்ள போதிலும் பரராச சேக ரம் வாதரோக நிதானத்தில் இவை இடம்பெறவில்லை, மாறாக யாழ்ப்பாண மண்வளத்துக்கமைய எளிய முறையில் தயாரிக்கப்படும் வெள்ளறுகுச் சூறணம்தான் பற்பம் என்ற பெயரைப்பெற்று வெள் ளறுகுப் பற்பம்? என்ற முறையில் இடம்பெற்றுள்ளது. இது எதைக் காட்டு5 றது என்றால் நூலை ஆக்கியவர்கள் தாம் கேள்விப்பட்ட அல் லது தென்னிந்தியாவிலிருந்து கற்றுணர்ந்த மருத்துவத்தை இங்கு

夏亨
பரீட்சித்து அதில் சிறந்தவற்றையே வெளிப்படுத்தியுள்ளனர் போலும், பஸ்ப செந்தூரங்களைத் தயாரிப்பதற்கும் பரீட்சிப்பதற்கும் நாளாகு மாகையால் அவை நூலில் இடம்பெறவில்லைப் போலும், மேலும் கல்வியங்காடு என்னும் இடத்தில் மூலிகைத் தோட்டமொன்று பரராச சேகர மன்னன் காலத்தில் அமைக்கப்பட்டிருந்ததாகவும் வரலாற்றுச் செய்திகள் கூறுகின்றன. இது மன்னனுக்கு மூலிகை மருத்துவத்தில் இருந்த ஆர்வத்தை எடுத்துக் காட்டுவதாக அமைகிறது. எவ்விதம் நோக்கினும் பரராசசேகரம் 14 - 17ஆம் நூற்றாண்டுக்காலப் பகுதி யில் வெளிவந்திருக்க வேண்டும் என்பதில் சந்தேகமில்லை.
நூலமைப்பை எடுப்போமானால் இதில் செய்யுள் வடிவில் மட மன்றி உரைநடையிலும் மருந்துகள் பற்றிக் கூறப்பட்டுள்ளன. உரை நடையிலுள்ளவை பிற்காலத்தவராற் சேர்க்கப்பட்டிருத்தல் வேண் டும். சிரரோக நிதானம் பதிப்பில் நாக்குரோகம் பற்றிப் பதிப்பா சிரியர் கூறுகையில் "சிரரோக நிதானத்தைச் சார்ந்த நாக்கு ரோகம் முதலிய சில பகுதிகள் பிரதிகளில் வசன நடையிலேயே எழு தப்பட்டிருக்கின்றன. வசனங்கள் பிரதிகள் தோறும் வேறுபட்டிருப்பி னும் குணங்கள், இரட்சை முதலியன பெரும்பாலும் ஒற்றுமையுடை யனவாகவே இருக்கின்றன. ஆயின் மருந்துகள் மட்டும் சில தவிர ஒவ்வொரு பிரதியிலும் வெவ்வேறாகவே காணப்படுகின்றன. இவ் வேறுபாடுகளை நோக்க, மூலப்பிரதியிலிருந்து அவற்றைப் பெயர்த் தெழுதியோர் தாம் தாம் விரும்பியபடி செய்யுட்களை வசனமாகத் திரித்தும் தமக்கு வேண்டியதென்று காணும் மருந்துகளை மட்டும் தெரிந்தும் எழுதிக்கொண்டனர் என்று எண்ண இடந்தருகிறது. வச னங்களை பொருள் மாறுபடத் தகுந்த எவ்வித மாற்றமுஞ் செய்யாது பிரதிகளிற் கண்டவாறே பதிப்பித்திருக்கிறோம்"43 என்று குறிப்பிட் டுள்ளார்.
ஐ. பொன்னையா அவர்கள் பரராச சேகரத்தை ஏழு பாகங்களா கப் பிரித்து வெளியிட்டுள்ளார். அவற்றின் விபரம் வருமாறு . முதலாம் பாகம் இதில் சிரரோக நிதானம் என்ற தலைப்பின் கீழ் கழுத்துக்கு மேற்பட்ட உடலுறுப்புக்களில் ஏற்படும் நோய்கள் உதா ரணமாக உச்சிரோகம், (கபாலரோகம்), அமுதரோகம் (மூளையுடன் சம்பந்தப்பட்ட நோய்கள்) செவிரோகம், (காதுசம்பந்தப்பட்ட நோய் கள்), நாசிரோகம் (மூக்கு சம்பந்தப்பட்ட நோய்கள்) நயனரோகம் (கண் சம்பந்தமான நோய்கள்), வாய் ரோகங்கள் (இதில் உதடு, பல், நாக்கு சம்பந்தமான நோய்கள் அடங்கும்) கழுத்து சம்பந்தமான நோய்கள் என்பன பற்றிக் கூறப்பட்டுள்ளது. இரண்டாம் பாகத்தில் கெர்ப்ப ரோக (இதில் கர்ப்பிணிகளுக்கும், சாதாரண பெண்களுக் கும் ஏற்படும் நோய்கள் அடங்கும்) பாலரோக (குழந்தைகளுக்கு

Page 22
翼芭
ஏற்படும் பல்வேறு நோய்கள் அடங்கும்) நிதானங்களும், மூன்றாம் பாகத்தில் சுரம், சன்னி, வலி, விக்கல், சத்திரோக நிதானங்களும், நான்காம் பாகத்தில் வாத, பித்த, சிலோற்பன ரோக நிதானங்களும், ஐந்தாம் பாகத்தில் மேகரோகம், பிளவைரோகம், பவுந்திர ரோக நிதானங்களும், வன்மவிதி, சத்திரவிதி, இரட்சைவிதி என்பனவும் ஆறாம் பாகத்தில் உதரரோக நிதானம் என்ற தலைப்பின் கீழ் உதர ரோகங்கள் (வயிறும் அத்துடன் சம்பந்தப்பட்ட உறுப்புக்களிலும் ஏற் படும் நோய்கள்), குன்மம், பாண்டு, காமாலை, சோகை, வாய்வு, சூலை ரோகங்களும், ஏழ்ாம் பாகத்தில் மூலம் அதிசாரம், கிரகணி, கரப்பன், கிரந்தி, குட்டரோக நிதானங்களும் அவற்றுக்கான சிகிச்சை முறைகளும் கூறப்பட்டுள்ளன. இவ்வேழு பாகங்களும் 1928 - 36 காலப்பகுதியில் வெளிவந்துள்ளன,
இந்நூலின் ஒவ்வொரு பிரிவும் நிதானம் என்ற பெயரைக் கொண் டுள்ளது. உதாரணமாக சிரரோக நிதானம், வாதரோக நிதானம். நிதானம் என்றால் நோயை நிர்ணயித்தல் அல்லது கண்டறிதல் என்று பொருள்படும். ஒரு நோயை இன்னது தான் என்று நிச்சயிப்பதற்கு ஐந்து முக்கிய விடயங்களைப் பற்றிய அறிவு ஒரு வைத்தியனுக்கு இருத்தல் அவசியம்,
அவையாவன:
1. நோய்க்கான காரணம். 2. அதன் முற்குறிகள். 3. குறிகுணங்கள். 4. சில மருந்துகளைக் கொடுத்துப் பார்க்கும் போது அந்நோய்
த ரிவடையும் அல்லது தணிவடையாத நிலை. 5. நோய்க்கான காரணி/காரணம் உடலில் ஏற்பட்டதிலிருந்து அதனால் உடலின் சில அல்லது பல பாகங்கள் பாதிக்கப்படு வது சம்பந்தமான விபரமான அறிவு. அதாவது உடலமைப்பு ரீதியாகவும் உடற்றொழிலியல் ரீதியாகவும் மானசீகச் செயற் பாடுகள் ரீதியாகவும் (உளவியல் ரீதியாகவும்) ஏற்படுகின்ற LDniprisair (Pathological and Psycholgical changes)
இந்த ஐந்து விடயங்களையும் ஒருங்கு சேர்த்து பஞ்ச இலக்கண (இலட்சண) நிதானம் என்பர். இவ்வடிப்படையில் பரராச சேகரத்தை எடுத்து ஆராய்வோமானால் அதில் பல குறைபாடுகளிருப்பதை அவ தானிக்கலாம். ஒவ்வொரு பிரிவும் நிதானம் என்று குறிப்பிடப்பட் டுள்ள போதிலும் அதனுள் ரோகங்களின் மொத்த எண்ணிக்கை, அந்த ரோகம் உண்டாவதற்கான பொதுக்காரணங்கள் சாத்திய

9
(மாறக்கூடியது). அசாத்திய (மாறமாட்டாதது) நிலைகள் என்பன கூறப்பட்டுள்ளதுடன் நோய்களைத் தனித்தனி பிரித்துக் கூறும்போது முக்கியமான சில குறிகுணங்களை மட்டும் கூறி சிகிச்சையும் கூறப் பட்டுள்ளது. இதை நோக்கும்போது நோயைச் சரிவர நிச்சயித்தறிதல் குருவிடமிருந்து முறையாகக் கற்றுத் தேர்வதனாலும் அனுபவத்தினா லும்தான் ஆகும். அது எல்லோருக்கும் பொதுவானதல்ல. கற்றறிந்த மருத்துவனுக்கு மட்டுமே உரியவிடயம் என்று நூலில் கூறாது விடப்பட் டுள்ளதுபோல் தோன்றுகிறது.
மேலும் ஐ. பொன்னையா அவர்கள் தாம் பதிப்பித்த வாதரோக நிதானத்தில், 'இந் நிதானத்தில் முதலில் எண்பது வாதங்களையும், அரைக்குமேல் நாற்பதும் அரைக்குக் கீழ் நாற்பதும் என இரண்டாக வகுத்து அரைக்கு மேல் நாற்பதில் சாத்தியம் - 10, அசாத்தியம் - 30 எனவும், அரைக்குக் கீழ் 40இல் சாத்தியம் - 20, அசாத்தியம் . 20 என்றும் கூறப்பட்டுள்ள போதிலும் அவ்வொழுங்கின்படி முழுவதும் குணம், சிகிச்சை முதலியன முறைப்பட எழுதியுள்ள பிரதிகள் ஒன்றே னும் கிடைக்கவில்லை. அரைக்கு மேல் நாற்பதில் சாத்தியம் - 10 உம் அசாத்தியம் - 30இல் சிலவுமே அம்முறையில் அமைந்துள்ளன. ஒழுங் கற்ற முறையில் குணங்கள் ஒருபுறமாகவும் முடிவில் ஒருசிலவற்றிற் குத் தனிப்படச் சிகிச்சைகளும் பொதுச் சிகிச்சைகளுமாக எழுதப்பட் டிருக்கிறது. இதை அடுத்துள்ள பித்தரோக, சிலேற்பனரோக நிதா னங்களும் குறைபாடுடைய ைவே"44 என்று குறிப்பிட்டுள்ளார். அது மட்டுமன்றி சிரரோக நிதானத்தைச் சார்ந்த செவிரோகங்கள்.45 நாசிரோகங்கள்46 என்பனவும் கிரந்திரோக நிதானம்47. குட்ட ரோக நிதானம்48, உதர ரோக நிதானம்49 என்பனவும் குறைபாடு டையன எனப் பதிப்பாசிரியர் எடுத்துக் கூறியிருப்பதும் நோக்கற் குரியது.
இந்நூலிற் கூறப்பட்டுள்ள மருந்து வகைகளைக் கவனிக்குமிடத்து அவை பல ரோகங்சளுக்கும் பாவிக்கக்கூடிய தன்மையில் அமைந் திருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது. உதாரணமாக மேகவுாதத் தின் கீழ் கூறப்பட்டுள்ள வெள்ளறுதப் பற்பம் (வாதரோக நிதானம்) மேக வாதத்துக்க மட்டுமன்றி வேறும் பல வா த ரே (ா கங் களைப் போக்க வல்லதாக அமைகிறது. அவ்விதமே வாதரோக நிதானத்தில், குறிப்பிட்ட ஒரு வாதநோய்க்குச் சிகிச்சையில் கூறப் பட்டுள்ள எண்ணெய் முதலியனவும் வேறும் பல நோய்களுக்கு மருந்தாகவும் அமைகின்றன. இங்ங்ணம் பொதுச் சிகிச்சையில் (பல்வேறு நோய்களுக்கு ஒரே மருந்து) பயன்படும் வகையிலும் மருந்துகள் கூறப்பட்டுள்ளதால் மருத்துவர்களால் இம்மருந்துகள் பெரிதும் பயன்

Page 23
0
படுத்தக்கூடிய நிலையில் உள்ளன. மேலும் இந்நூலில் கூறப்பட்டுள்ள கொதி எண்ணெய், கிரந்தி எண்ணெய், வெள்ளநுகுப் பற்பம், வீகாரிச் சூறணம், கருங்கோழி பற்பம், வீரமாணிக்கன் எண்ணெய், முதியார் கூத்தலெண்ணெய், மாவிலங்கம் எண்ணெய். . முதலியன இன்றும் யாழ்ப்பாண மருத்துவர்களால் சிறப்பாகக் கையாழப்பட்டு வருகின்றன.
சிகிச்சை முறையில் தேவையான இடங்களில் பத்தியங்கள் கூறப்பட்டுள்ளன.50 சிகிச்சை பிழைக்கும் இடங்களில் இரட்சை (சுட்டிகை) என்னும் கருவிகளால் சுடும் முறை பற்றிக் கூறப்பட் டுள்ளது. (உ + ம் வாதரோக நிதானம்61 சிரரோக நிதானம் 52) இரட்சைவிதி சத்திரவிதி பற்றிச் :ேகரோக நிதானத்தில்83 கூறப்பட் டுள்ளது. மேலும் சிரை (Weins) என்னும் இரத்த நாளங்களைக் குத்தி (Venesection) இரத்தம் வாங்கல் பற்றியும் கூறப்பட்டுள்ளது.54 மேலும், மாற்றமுடியாத கடும் நோய்கள் மாறுவதற்குக் கடவுள் மீது நம்பிக்கை வைக்கும்படி கூறப்பட்டுள்ளது. முக்கியமாக சிவன், கதிரை மலைக்கந்தன் மீது நம்பிக்கை வைத்தால் நோய் மாறும் என்று கூறப்பட்டுள்ளது.55
இந்நூலிற் கூறப்பட்டுள்ள பெரும்பாலான மூலிகைகள் யாழ்ப்பாண மண்ணிற் பெறக்கூடியனவாக இருப்பது குறிப்பிடத் தக்கது. எனினும் தெளிவாக இனங்கண்டு விளங்கிக் கொள்ள முடியாத மூலிகைகளும் சில இடங்களில் கூறப்பட்டுள்ளன. அவை பற்றி அறிந்து கொள்வதும் அவசியமாகின்றது.
பரராசசேகரம் நூலமைப்பைச் சற்று நுணுக்கமாக நோக்கினால் அது மருத்துவர்களுக்கு பயன்படும் வகையில் பல ரோகங்களைப் பற்றியும் அவற்றின் சிகிச்சை முறைகளையும் அடக்கிய ஒரு மருத்துவ நூலாக ஆரம்பத்தில் ஆக்கப்பட்டிருக்க வேண்டும் போல் தோன்று கிறது. சிரரோக நிதானப்பதிப்பில் பதிப்பாசிரியர் பின்வரும் கலிவெண்பா மூலம் அதை எடுத்துக்காட்டியுள்ளார் -
*பேரும் குறிகுணமும் பேணுமவுடதமும் தீரும் தீராததுவுஞ் செய்கைகளும் . பாரிலுள்ளோர் எல்லார்க்குஞ் சொன்னானிமய மயிலுக்கிறைவன் பொல்லாங்கு தீரும் பொருட்டு’56

客及
இப்பாடல் மூலம் நோய்களின் பெயர், குறிகுணம், அவுடதம்,
தீரும் தீராதவகை என்பவற்றை எல்லா நோய்களிலுமே நூலாசிரியர் எடுத்துக் கூறியிருக்க வேண்டும் என்று ஊகித்தறிய முடிகிறது.
யாழ்ப்பாண மருத்துவர்களுக்கு மட்டுமன்றி சித்த வைத்திய உலகிற்கே அரிய பொக்கிஷமாக விளங்கியிருக்கக்கூடிய இந்நூல் சுய நலம் மிக்க சிலர் ஏட்டுப்பிரதிகளை மறைத்ததாலும், காலக்கோளாறு களாலும் பூரணத்துவத்தை இழந்து நிற்கின்றது. சிதறிக் கிடக்கும் ஏட்டுச் சுவடிகளைச் சேகரித்தும், எமது கைவசம் கிடைத்துள்ள நூலைச் செப்பனிடுவதாலும் இந்நூலை எமது மருத்துவ உலகம் நன்கு பயன்படுத்த வழிசெய்ய முடியும்.
ஆதாரக் குறிப்புகள் 1. பொன்னையாபிள்ளை, ஐ. (பதிப்பாசிரியர்) prgrmésG37 zprb முதற்பாகம், யாழ்ப்பாணம் சைவப்பிரகாசயந்திரசாலை, 1928 நூன்முகம் மேற்படி நூல், பக் 1 செய்1
மேற்படி நூல், பக் 3 - 4 செய் 19 மேற்படி நூல், பாயிரம் i, பக் 1 செய் 2 , மேற்படி நூல், பாயிரம் i, பக் 2 செய் 12
:
பொன்னையாபிள்ளை, ஐ, (பதிப்பாசிரியர்), பரராசசேகரம் ஆறாம் பாகம், மல்லாகம் திருஞானசம்பந்தர் அச்சியந்திர சாலை, 1935 பக் 76 செய் 80 7. மேற்படி நூல் பக் 50 செய் 247, 248, பக் 53 செய் 259, Lići 69 Glarui 387 8. பரராசசேகரம் முதற்பாகம் பாயிரம் i, பக் 2 செய் 11 9. மேற்படி நூல். பாயிரம் i, பக் 2 செய் 5 10 மேற்படி நூல், சிரரோகம் பக் 3 செய் 11. பூலோகசிங்கம், பொ. (பதிப்பாசிரியர்) பாவலர் சரித்திர தீபகம்,
பகுதி 1 கொழும்பு தமிழ்ச்சங்க வெளியீடு, 1975. பக் 88 - 89 12. பொன்னையா, ஐ. (பதிப்பாசிரியர்) பரராசசேகரம் இரண்டாம் பாகம், ஏழலை திருஞானசம்பந்தர் அச்சியந்திரசாலை, 1932 பக் 20 செய் 83, பக் 28 பக் 75 செய் 220 13. பொன்னையா, ஐ. (பதிப்பாசிரியர்) பரராசசேகரம் நான்காம் பாகம், மல்லாகம் திருஞானசம்பந்தர் அச்சியந்திரசாலை, 1934
já - 34

Page 24
.
5.
6.
7.
8,
9.
20,
2.
22。
2. 24.
25
26.
27.
28.
29.
30.
吕卫,
33.
34.
35.
36.
7.
38。
39.
மேற்படி நூல், பக் 131, 136, 140, 148 மேற்படி நூல், பக் 162 ற்ேபடி நூல், பக் 174, 194, 195, 198 மேற்படி நூல், பக் 181, 183, 192, 193, 97 பொன்னையா, ஐ. (பதிப்பாசிரியர்) பரராசசேகரம் ஏழாம் பாகம், மல்லாகம் திருஞானசம்பந்தர் அச்சுயந்திரசாலை, 1936 பக் 42 செய் 29
சிவலிங்கராஜா, எஸ். வித்துவசிரோமணி கணேசையரின் வாழ்க் கையும் பணியும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், இலங்கை 1989 பக் 18 பரராசசேகரம் முதற்பாகம் - சிறப்புப்பாயிரம் பொன்னையா, ஐ (பதிப்பாசிரியர்) சொ க்கநாதர் தன்வந்திரியம், ஏழாலை, திருஞானசம்பந்தர் அச்சியந்திரசாலை, 1933 சாற்றுகவி உபக் 3
கந்தையாபிள்ளை, க. வே. (தொகுப்பு), பாலவைத்தியத்திரட்டு அக்ஷயவருஷம் = முக,ெரை பரராசசேகரம் முதற்பாகம், பக் 143 செய் 585 கணேசையர், சி. ஈழநாட்டுத் தமிழ்ப்புலவர் சரிதம், ஈழகேசரி பொன்னையா வெளியீடு, குரும்பசிட்டி 1939. பக் ?" 9 அருணாசலம், மு தமிழ்இலக்கிய வரலாறு தமிழ்ப்புலவர் வர லாறு, பதினான்காம் நூற்றாண்டு 969 பக் 7 பரராசசேகரம் முதற்பாகம், பக் 3
மேற்படி நூல், நூன்முகம் வைத்தியன், அகில இலங்கைச் சித்த ஆயு ள்வேதச் சங்க வெளியீடு, புரட்டாதி ஐப்பசி இதழ் 1990 பரராசசேகரம் முதற்பாகம், பாயிரம் i, செய் 2
p. நான்காம் பாகம், பக் 86, 99 104, 107 இரண்டாம் பாகம், பக் 40, 80
இரண்டாம் பாகம் பக் 166
s ஆறாம் பாகம், பக் 87, 88, 89 98, 101, 14 s ஏழாம் பாகம், பக் 94
s ஆறாம் பாகம், பக் 114, செய் 62
ஆறாம் பாகம், பக் 115 செய் 64 கணேசையர், சி. ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம், பச் 8 பரராசசேகரம் இரண்டாம் பாகம், பக் 129, செய் 329
முதற்பாகம், பக் 109 செய் 469

á0.
4,
12.
43
44,
45,
46 ،
47.
48,
49。
51.
52.
·莎3。
54.
5う。
56.
盛岛
முதற்பாகம், நூன்முகம் வைத்தியன் மாதசஞ்சிகை, - பரராசசேகரமாலை . சுரரோக நிதானம் கட்டுரை - அகில இலங்கை சித்த ஆயு ள் வேதச்சங்க வெளியீடு விரோதி ஆண்டு (1949) கார்த்திகை பக் 24
பரராசசேகரம் நான்காம் பாகம், பக் 94-95 செய் 868, 369, 370
முதற்பாகம், பக் 226
நான்காம் பாகம், பக் 59
முதற்பாகம், பக் 137
鼻烈 முதற்பாகம், பக் 138
is ஏழாம் பாகம், பக் 99
s ஏழாம் பாகம் பக் 99
ஆறாம் பாகம், பக் 4
s ஏழாம் பாகம், பக் 31, செய் 117, 118, 119, 120
? நான்காம் பாகம், பக் 8 செய் 38, பக். 19 செய் 68, 70, பக் 20 செய் 14 - 15, பக் 23 செய் 85, செய் 88.89, பக் 26 செய் 95, பக் 27 செய் 98-99,பக் 29 செய்109
பக் 30 செய் 113, பக் 45 செய் 161, பக் 77 செய் 318
பரராசசேகரம் முதலாம் பாகம், பக் - 202, 204, 205, 209 213, 248, 255 S. பொன்னையா, ஐ. (பதிப்பாசிரியர்) பரராசசேகரம் ஐந்தாம் பாகம், மல்லாகம் திருஞானசம்பந்தர் அச்சியந்திரசாலை 1935 பரராசசேகரம் ஆறாம்ப்ாகம், பக் 13 செய் 64, 65. பக் 25 செய் 131 . பரராசசேகரம் நான்காம் பாகம் - 337 பக் 97 செய் 379, பக் 99 செய் 394 பக் 104 பக் 107 செய் 475 பரராசசேகரம் முதலாம் பாகம் பக் 137
குறிப்பு : சில உதாரணங்களுக்காகவே இங்கு பரராசசேகரம் நூற்
பாகமும் பக்கங்களும் செய்யுட்களும் எடுத்துக்காட்டப் பட்டுள்ளன. ஆனால் இங்கு எடுத்துக் காட்டப்பட்ட உதாரணங்கள் வேறும் பல இடங்களில் கூறப்பட்டுள்ளன. உதாரணமாக இரட்சை பற்றி முதலாம் நான்காம் பாகங் களிலிருந்து சில உதாரணங்கள் எடுத்துக் காட்டப்பட்டுள்ள போதிலும் பிறபாகங்களிலும் அவை பற்றிக் குறிப்பிடப் பட்டுள்ளது. அவ்விதமே பிறவும்

Page 25
24
3. பரராச சேகரம் - வன்மவிதி, சத்திரவிதி, சிரைவிதி, இரட்சைவிதி.
பரராச சேகரம் என்ற பெயரில் வெளிவந்துள்ள ஒவ்வொரு நூற்பாகமும் தனித்தனி ஆய்வு செய்யப்பட வேண்டியவை. ஆனால் நூலறிமுகத்தையே முக்கிய நோக்கமாகக் கொண்ட இக்கட்டுரைத் தொடரில் அவற்றை விரிவாக ஆராய முற்பட்டால் இந்நூல் தனித்துப் பரராசசேகரம் நூலாராய்ச்சியாக அமைந்து விடுமோ என்று அஞ்ச வேண்டியுள்ளது. எனவே, முக்கியமான நிறை, குறைகளை மட்டுமே இங்கு எடுத்துக்காட்டுவதற்கு இயலும். அந்தவகையிலேயே இதற்கு முந்தைய கட்டுரையும், அடுத்துவரும் பரராசசேகரம் பதிப்பிலுள்ள குறைபாடுகள் என்ற கட்டுரையும் எழுதப்பட்டுள்ளன,
ஆனாலும், ஐ. பொன்னையா அவர்களால் வெளியிடப்பட்ட பரராசசேகரம் ஐந்தாம் பாகம் பற்றி பல்வேறு காரணங்களுக்காக இங்கு ஆராயப்படவேண்டியுள்ளது. இதில் மேகரோகம், பிளவை, பவுத்திரம், கைக்குழித்தாமரை, மூத்திரகிரிச்சிரம், கல்லடைப்பு போன்ற ரோக நிதானங்களும் சிகிச்சை முறைகளும் கூறப்பட்டுள்ள துடன் வன்மவிதி, சத்திரவிதி, சிரைவிதி, இரட்சைவிதி போன்ற விதிமுறைகள் பற்றியும் கூறப்பட்டுள்ளது. இரணவைத்திய (அறுவைச் சிகிச்சை) சிகிச்சையில் இடம் பெறும் இவ்விதிமுறைகள் இங்கு கூறப்பட்டுள்ளமை கவனத்திற் கொள்ளத்தக்கது. இப்பாகத்தில் இடம் பெற்றுள்ள பிளவை, பவுந்திரம், மூத்திரகிரிச்சிரம் போன்ற ரோகங் கள் கூட எளிதில் மருந்துகளுக்குக் வசப்படாதவையாகவும், தேவைப் படின் சத்திர சிகிச்சைக்குட்படுத்த வேண்டியவையாகவும் அமைந் &ର୍ଦr୩ ଭାr.
பதிப்பாசிரியர் இவ்விதிகளின் முக்கியத்துவம் கருதித் தமது முன்னுரையில் அவைபற்றிச் சிறு விளக்கமும் கொடுத்துள்ளார். இவ் விதிகள் அடங்கிய கையெழுத்துப்பிரதி (ஏட்டுப்பிரதி?) ஒன்று மட் டுமே தம்மிடம் இருந்ததாகவும் சத்திரகர்மவிதி, நயனசத்திரவிதி, சல் லியவிதி என்பன இன்னொருவரிடம் கொடுத்தவிடத்து, அ  ைவ தொலைந்து போய் விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.1
- வர்மமுறைகள் (வன்மமுறைகள்) தமிழர் வைத்தியத்தில் நீண்ட காலமாகக் கையாளப்பட்டு வந்துள்ளன. ஆயுள்வேத மருத்துவ

5
நூல்கள் இவற்றையே மர்மங்கள் என்று குறிப்பிடுகின்றன. எமது உடலிலுள்ள சில ஸ்தானங்களில் அடி, தாக்கம் முதலியன ஏற்பட்டால் அதனால் உயிராபத்து ஏற்பட வாய்ப்புண்டு. அத்தகைய ஸ்தானங் களையே வன்மஸ்தானம் அல்லது மர்மஸ்தானம் (Vital Points) என்பர். இவை மொத்தம் 107 ஆகும். இங்கு வன்மவிதியின் கீழ் கூறப்பட்டுள்ள சிப்ரம், கூர்ச்சம், சாநு. போன்ற வன்மங்களின் பெயர், விபரம் முதலியவற்றைப் பார்க்கையில்2 அவை அசுருத சம்ஹிதை, அஷ்டாங்கஹரிருதயம் போன்ற ஆயுள்வேத நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள அதே பெயர் விபரங்களைத் தழுவியவையாக அமைந்துள்ளதைக் காணக்கூடியதாக உள்ளன.3
அவ்விதமே, சத்திர விதியில் புண்கள், கட்டிகள் முதலியவற்றைக் இறுதல் போன்ற செய்கைகளுக்குப் பயன்படுத்தும் கருவிகள் 26 என்றும் அவற்றுட் சிலவற்றின் விபரமும் கூறப்பட்டுள்ளது.4 இங்கு கூறப்பட்டுள்ள மண்டலாக்கிரம், விருத்தி, உற்பலம். முதலிய பல் வேறு கருவிகள் பற்றியும் மேற்படி ஆயுள்வேத நூல்களில் தெளி வாகக் காணக்கூடியதாகவுள்ளது.5
இரத்தமோக்ஷனம் என்பது சரீரத்தில் சிலபாகங்களில் உள்ள இரத்த நாளங்களிலிருந்து கேடுற்ற இரத்தத்தை வெளியேற்றும் செயல்முறையைக் குறிக்கும். இது இரண்டுவிதமாக செய்யப்படும். (1) y'all cosdi (Application of Leeches) (2) psitoriosi கீறி இரத்தத்தை வெளியேற்றல் (Venesection) இங்கு சிராவிதி என்னும் பகுதியில் முக்கியமாக நாளங்களைக்கீறி கேடுற்ற இரத் தத்தை வெளியேற்றும் முறைபற்றிக் கூறப்பட்டுள்ளது. இதில் சிரா விதி யார்யாருக்குச் செய்யலாம், யார்யாருக்குச் செய்யக் கூடாது, செய்யும் முறை, பராமரிப்பு போன்ற விபரங்கள் கூறப்பட்டுள்ளன.8 இதுபற்றிய விபரங்களையும் நாம் ஆயுன்வேத நூல்களில் காணக் கூடியதாக உள்ளது.7
சத்திர சிகிச்சை முறைகளில், சில நோய்களின் தீவிரத்தன்மை யைக் குறைக்க அல்லது மாற்றுவதற்கு உடலின் குறிப்பிட்ட ஸ்தானங் களில் சுட வேண்டும் (Cautarization) என்று கூறப்பட்டுள்ளது. இரட்சை விதி என்றும் பகுதியில் சுடுதற்குரிய கருவிகளின் இலட்ச ணங்கள், பயன்படுத்தும் முறைபற்றியும், காரத்தையும் (கூடிாரம்) -(அதாவது அழற்சியைத் தரும் ஒருவித வஸ்து காரம் எனப்படும்)
•àêauqರು பிரயோகித்து சுடுதல் பற்றியும் கூ றப்பட்டுள்ளது.8

Page 26
ஆயுள்வேத நூல்களிலே இது 'க்ஷாராக்கினி கர்மம்' என்னும் பகுதியில் காணப்படுகிறது 9 இங்கு குறிப்பிட்டுள்ள நூல்களை ஒருவர் எடுத்து ஒப்பிட்டு நோக்கினால் இந்த உண்மைகள் நன்கு புலப் படும்.
எனவே, நடுநிலையில் நின்று நாம் ஆராய்வோமேயானால் இங்கு கூறப்பட்டுள்ள விதிமுறைகள் யாவும் ஆயுள்வேத மருத்துவ நூல் களைத் தழுவியவையாக அமைந்துள்ளதை ஒப்புக்கொண்டுதானாக வேண்டும். தமிழர்களிடையே இரணவைத்திய சிகிச்சை முறைகள் இருந்து வந்துள்ள போதிலும் அவற்றை விடுத்து இங்கு ஆயுள் வேத நூல்களைத் தழுவியதாக எடுத்துக் கூறப்பட்டுள்ளமைக்கு காரணம் தெரியாதுள்ளது. ஏற்கனவே, கூறியுள்ளதுபோல ஆயுள் வேதத்தில் பரிச்சயம் மிக்க பண்டிதர் ஒருவர் பரராசசேகரத் தொகுப் பில் இவற்றை இயற்றிச் சேர்த்திருக்க வேண்டும். அல்லது, வேறு ஏதாவது ஒரு வாகடத் தொகுப்பை (பரராசசேகரத்துக் குரியதாக இல்லாதிருந்தும்) பதிப்பாசிரியர் பரராசசேகரத்துக்குரியதாக நினைத்து வெளியிட்டிருக்க வேண்டும், பதிப்பாசிரியர் தனிய ஒரு பிரதிமட்டுமே க அதுவும் சிதிலமான நிலையிலுள்ள பிரதிமட்டுமே இதில் இருந்த தாகக் கூறியுள்ளமையும் கவனத்திற் கொள்ளத்தக்க்து. எனவே, இவ் விதிகள் பரராசசேகரத் தொகுப்பைச் சார்ந்தவையா, இல்லையா ? என்பதை முடிவு செய்வதும் அவசியமாகிறது.
பரராசசேகரத்தின் ஏனைய பாகங்களில் கூறப்பட்டுள்ள பெரும் பாலான நோய்கள், சிகிச்சை முறைகள் என்பன பெருமளவில் சித்த மரபுகளுக்கு அமையக் காணப்படுகின்ற போதிலும் இங்கு ஆயுள்வேதப் பின்னணியில் விதிமுறைகள் காணப்படுவது நன்கு ஆராயப்பட வேண்டிய ஒரு விடயமாகும். இத்துடன் தொலைந்து போனதும், சிதைவடைந்து போனதும் போக எஞ்சியவற்றிலிருந்து பதிப்பாசிரியர் அனுபந்தம் என்ற பெயரில் எலும்பு முறிவுக்குரிய சில சிகிச்சை முறைகளை வெளியிட்டுள்ளார் போலும். அதுவும் பூரணமற்றதாகவே அமைந்துள்ளது.19
பதிப்பாசிரியர் பல்வேறு பிரதிகளை ஒப்புநோக்கி (விதிவிலக்கு - ஐந்தாம் பாகம்) பரராசசேகரத்தை வெளியிட்டதாக நூலின் பல இடங்களிலும் கூறியுள்ளார். அதே நேரம் விரிவஞ்சி பல சிகிச்சை மருந்துகளைப் பதிப்பிக்காது தவிர்த்ததாகவும் கூறியுள்ளார். சிதறிக் கிடந்த ஏடுகளைச் சேகரிப்பதும், அவற்றை முறைப்படி தொகுத்து

7.
வெளியிடுவதும் மிகவும் கடினமான செயல் என்பதை அத்துறையில் ஈடுபட்ட பலரும் நன்கு அறிவர். சில பதிப்பாசிரியர்கள் தமக்குக் கிடைக்கும் ஏடுகளை முறைப்படி தொகுக்காமல் அப்படி அப்படியே வெளியிட்டு விடுவதும் உண்டு. ஐ. பொன்னையா அவர்களின் பெரு முயற்சியால் எம்மால் இன்றைக்கு பரராசசேகரம் என்ற நூலைப் பார்க்க முடிகின்றது என்பது உண்மையே. எனினும் அதில் காணப்படும் பல்வேறு குறைபாடுகளில் சிலவற்றையாவது அடுத்து வரும் அத்தி யாயத்தில் பார்ப்போம்.
ஆதாரக் குறிப்புகள்
l. . பொன்னையா. ஐ (பதிப்பாசிரியர்) பரராசசேகரம் ஐந்தாம்பாகம் மல்லாகம், திருஞானசம்மத்தர் அச்சுயந்திர சாலை 1935. முகவுரை
2. மேற்படிநூல் - பக் 105 - 19 3. துரைஸ்வாமி ஐயங்கார். மே. (மொழிபெயர்ப்பாசிரியர்) அஷ்
டாங்கஹருதயம், வைத்திய கலாநிதி ஆபீஸ் சென்னை - 1920 (?) சாரீரஸ்தானம்- பக். - 283 - 290
பரராசசேகரம் ஐந்தாம்பாகம் பக். - 120 - 123 மேற்படி அஷ்டாங்கஹிருதயம் - சூத்திரஸ்தானம்- பக். 187-191 பரராசசேகரம் ஐந்தாம்பாகம் பக். 24 - 146
பரராசசேகரம் ஐந்தாம்பாகம் பக். 147 - 189 மேற்படி அஷ்டாங்க ஹிருதயம் - சூத்திரஸ்தானம் 224 - 230
4.
5
6 7 மேற்படி அஷ்டாங்க ஹிருதயம் - சூத்திரஸ்தானம் பக். 198 - 204 8. s
9 10. பரராசசேகரம் ஐந்தாம்பாகம் பக். 159 - 173

Page 27
4. பரராசசேகரம் பதிப்பிலுள்ள குறைபாடுகள்.
பரராசசேகரம் பதிப்பில் பல குறைபாடுகள் உள்ளன என்பது மறுக்கமுடியாத உண்மை. அதற்கான காரணங்களைச் சிறிது ஆராய்வது இங்கு பொருத்தமுடையது.
யாழ்ப்பாணத்தை ஆண்ட கடைசித் தமிழ் மன்னனான சங்கி லியன் அந்நியரால் (போர்த்துக்கேயர்) பி டி க் கப்பட்டு தூக்கிலிடப்பட்ட சம்பவங்களினை அடுத்து அதுகாறும் அரண்மனை யில் பாதுகாக்கப்பட்டு வந்த பழம்பெரும் ஏட்டுச்சுவடிகள் பல (மருத்துவ ஏடுகள் உட்பட) சிதறிப் போப் பலரின் கைகளிலும் சிக்கின. அவற்றைப் பத்திரப்படுத்தி வெளியிட்டவர்களும் உண்டு. தமது பரம்பரைப் பொக்கிஷமாக மறைத்து வைத்து அழியவிட்ட வர்களும் உண்டு. பரராசசேகரம், செகராசசேகரம் என்பவற்றினது மூலப் பிரதிகளும் இவ்விதமே சிதறித் தம் முழு உருவை இழந்திருக்க வேண்டும். குருசீடபரம்பரையில் வந்தவர்களும், தல்ல மனம் கொண்ட சில் வைத்தியர்களுமே இந்நூல்கள் முற்றும் அழிந்து போய் விடாமல் காப்பாற்றியிருக்கிறார்கள். (இவ்விடயத்தை வயோதிபர் ஒருவர் தன்னிடம் கூறியதாக எனது மாணவ நண்பன் புங்குடுதீவைச் சேர்ந்த செல்வன். க. பூஜீதரன் என்னிடம் கூறினார். இது யாதார்த்த ரீதியாக இருப்பதால் இங்கு குறிப்பிட்டுள்ளேன்) இவர்கள் யாவருக் கும் தமிழ் வைத்திய உலகம் நன்றி கூறக்கடமைப்பட்டுள்ளது.
மேலும், சென்ற நூற்றாண்டில் தமிழ், சமய நூல்களை அச் சேற்றும் முயற்சியில் யாழ்ப்பாணத்தில் முன்னோடியாக விளங்கிய பூரீலயூரீ ஆறுமுக நாவலர் அவர்கள் அதற்காக ஏட்டுச்சுவடிகளைச் சேகரித்த போது அவர்வசம் பரராசசேகரம், செகராசசேகரம் சம்பந்தப்பட்ட சில ஏட்டுச்சுவடிகள் கிடைத்தன என்றும் ஆனால், அவர் அவற்றை உரிய மருத்துவர்களிடம் சமர்ப்பித்து விட்டதாகவும் கூறுவாருமுளர். எனினும் ஆறுமுகநாவலர் அவர்கள் இம் மருத்துவ நூல்களின் பெருமையினை நன்குணர்ந்திருத்தல் வேண்டும். அதனால் தான் இவை அச்சுவாகனம் ஏறுவதற்குச் சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்னரே, இவற்றை யாழ்ப்பாணத்தவரின் சிறந்த தமிழ் நூல்கள் என்ற வரிசையில் அவர் எடுத்துக்காட்டியிருக்கிறார்.
எவ்விதமிருப்பினும் பரராசசேகர வைத்தியநூலை முழுமையாகப் பெறுதல் என்பது இயலாத காரியமாகவே தோன்றுகின்றது. ஐ. பொன்னையாபிள்ளை அவர்கள்கூடத் தமது பரராசசேகரம்

盛愈
முழுமைபெற்ற பதிப்பல்ல என்று அதன் முன்னுரையிலும்? வேறு இடங்சளிலும் (உ + ம்) வாதரோகநிதானம்3 ஒத்துக்கொண்டிருக் கிறார். மேலும் சில, ஏட்டுப் பிரதிகளில் பரராசசேகரத்துக்குப் பதில் தன்வந்திரி வைத்திய சிந்தாமணி என்று பெயர் எழுதப்பட்டிருந்ததாக வும் குறிப்பிட்டுள்ளார்.4 அவ்விதமே தாம் பதிப்பித்த பரராச ச்ேகரம் பித்த ரோகத்தில் பல செய்யுட்கள் செகராசசேகரத்துக் குரியன என்று கருதப்படுவதாக ஐ பொன்னையா கூறியுள்ளார்.5 இவ்விதம் பொன்னையாபிள்ளை தமது பதிப்பில் உள்ள குறை பாடுகளை ஒப்புக்கொண்டுள்ளமை போற்றத்தக்கதே. மேலும் பரராசச்ேகரம் 12,000 பாடல்களைக் கொண்டிருந்த போதிலும் பொன்னையாபிள்ளை அவர்கள் சுமார் 7,000 பாடல்களையே பதிப் பித்ததாகக் கூறுவர்.
எனினும் ஐ, பொன்னையா அவர்களின் பதிப்பில் சில பாடல் கள் வெவ்வேறிடங்களில் அப்படியேயும் சிறுமாறுதல்களுடனும் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதற்கான காரணங்கள் சரிவரத் தெரியவில்லை. எனினும் பின்வரும் காரணங்களில் ஏதும் ஒன்றாக இருக்கக்கூடும் :
1. ஏடுகளில் அவ்விதம் ஒழுங்கின்றி இடம்பெற்றிருத்தல் கண்டு,
பதிப்பாசிரியர் அவற்றை அப்படியே பதிப்பித்திருக்கலாம்.
2. வெவ்வேறு இடங்களுக்குப் பொருத்தமாகச் சில செய்யுட்கள் - அமைந்திருத்தல் கண்டு பதிப்பாசிரியர் அவற்றை இரு இடங் களிலும் சிறிது மாற்றத்துடன் இட்டு நிரப்பியிருக்கலாம். 3. பதிப்பாசிரியர் கவனக் குறைவாக இருந்திருக்கலாம் (இது அவ்
வளவு பொருத்தமாகப்படவில்லை)
சில உதாரணங்களை எடுத்துக் காட்டுவதன் மூலமே இக்குறை பாடுகளை விளங்கிக் கொள்ள முடியும்.
பரராசசேகரம் சன்னிரோக நிதானத்தில் பிடரிவலி பிறவீச்சின் குணம் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது. "பிடரிவலித்து நோமிகுந்து பேரப்பிரிய வொண் ணாமல் உடனே மயக்கித் தலை கணக்கு முடனே நடுக்குந்திமிருண்டாம் விடமே மிகுந்த வதுபோல மேனி வரஞ நாடோறும் இடரே பண்ணும் பிடரிவலி யிதுவும் பிறவீச்செனலாமே"
இதே செய்யுள் பரராச சேகரம் வாதரோக நிதானத்தில், பிற வீச்சு வாதம் என்ற தலைப்பின் கீழ் பின்வருமாறு இடம் பெற்
றுள்ளது

Page 28
90
"பிட்ரிவலித்து நொந்துளைந்து பேரப்பிரிய வொட்டாமை
உடனே மயக்கி யலசுடித்தே யோடியடங்கும் பெருநரம்பில் விடமே காந்து மதுபோல மிகுமே புளியிலுவாதி மிகும்
இடரே பண்ணும் பிடரிவலி யிதுவும் பிறவீச்செனல்ாமே?
. இவ்விதமே சன்னிரோக நிதானத்தில் பிறவீச்சின் குணம் பின்
வருமாறு கூறப்பட்டுள்ளது.
"அடுத்தடுத் தெதிர்த்துக் குத்தியதிகமாய் விறைத்து வேர்த்துப்
படுத்த நாத் தடக்கிக் பேசும் பல்லதுகிட்டு நெஞ்சும் அடுக்கவே கட்டிச் சீறி யங்கமும் பிறகே விழில் திடுக்கெனப் பிறவீச்சென்று தெளிந்தவர் செப்பினாரே."8
இதே செய்யுள் வாதரோக நிதானத்தில் பிறவீச்சு வாதம்
என்றதன் கீழ் பின்வருமாறு இடம் பெற்றுள்ளது.
"அடுத்தடுத் தெதிர்த்துக் குத்தி யதிகமாய் விறைத்து வேர்த்துப்
படுத்து நாத் தடக்கிப் பேசிப் பல்லது கிட்டி நெஞ்சம் அடுக்கவே சிறிக்கட்டி யங்கமும் பிறகே வீழ்ந்து திடுக்கிடிற் பிறவீச்சென்று செப்பினார் தெளிந்தோர்தாமே"s
சன்னிரோக நிதானத்கில் பக்கவாத சன்னியின் குணம் பின்வரு
மாறு இடம்பெற்றுள்ளது :-
"கையுங்காலுமொரு பக்கங் கனத்துத் திமிர்த்துச் சோர்வாகி
மெய்யுமறவே நொந்துவரும் வெதும்புந் நாவு தடுமாறும்
செய்யுங் குணத்தை நாடியறிவு செப்பும் பக்கவாதசன்னி உய்யும் படிக்கு வழிகாணா துலகோர் அறிய வுரைத்தோமே"19 இதோ செய்யுள் வாதரோக நிதானத்தில் பக்க சன்னிவாதம்
என்றதன் கீழ் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது :-
"கையுங்காலு மொருபக்கங் கனத்துத் திமிர்த்துச் சோர்வாகி மெய்யுமறவே விழுந்துவரும் விளம்பு நாவுத் தடுமாறும் செய்யுங் குணத்தை நாடியறி செப்பும் பக்கசன்னிவாதம் உய்யும் படிக்கு வழிகாணாதுலகோர் அறிய வுரைத்தோமே"11
சன்னிரோக நிதானத்தில் முகவாத சன்னியின் குணம் பின்வரு மாறு கூறப்பட்டுள்ளது. "கண்ணிற் றலையிற் புருவத்திற் காதிற் கன்னமதிற் குத்திப் பண்ணில் பதைக்க முகமதனைப் பக்கம் பற்றித் திருப்பிவிடும் நண்ணிப் பகர நாத் தடக்கு நாடுங் குணங்கள் இவை கண்டால் எண்ணிச் சொன்னார் முகவாத சன்னியாகு மிதுவெனவே”*12,
இதே செய்யுள் வாதரோக நிதானத்தில் முகவாதத்தின் கீழ்
பின்வருமாறு இடம்பெறுகிறது:

31 'கண்ணிற் றலையிற் புருவத்திற் காதிற் செவிட்டிற் குத்துண்டாய் பண்ணிப் பதிக்கு முகந்தன்னைப் பக்கம் பற்றித் திருகிவிடும் எண்ணிச் சொல்லு முகவாத மிதுவுஞ் சாத்தியமாமென்று நண்ணிச் சொன்னோ மொரு பாலினாடு முகத்தில் வாதமிதே"13
5. இவ்விதமே திமிர்வாத கரப்பன் பற்றி வாதரோகநிதானம்14 295 வது செய்யுள் சில மாறுதல்களுடன் கரப்பன்ரோகநிதானம்" செய் 53 இலும் கரப்பன்ரோகநிதானம் இல் வாதகரப்பனின் குணம்பற்றிய8 செய் 4 உம் செய் 3 உம் வா த ரோக நிதானம் இல் திமிர்வாதகரப்பன் 17 என்றதின்கீழ் 297, 298 வது செய்யுட்களாக இடம் பெற்றுள்ளன.
இவ்விதம் ஐ. பொன்னையாபிள்ளையின் பரராசசேகரப் பதிப் பில் பல குறைபாடுகளைக் காணக்கூடியதாய் உள்ளது. இது மட்டு மன்றிச் செகராசசேகரம் நூலில் காணப்படும் சில பாடல்கள் பரராச சேகரம் ஐ. பொன்னையா பதிப்பிலும் இடம் பெற்றுள்ளனபோல் தெரிகின்றது. உதாரணங்கள் சில வருமாறு
1. செகராசசேகரம் வாதரோகத்தில் உளைவாதத்தின் குணம் பின்
வருமாறு கூறப்பட்டுள்ளது. 'ஒடி யுளைந்து திமிருண்டாயொருக்கால் மிகக் குத்தும் வாடிக் காயம் வரண்டு வரும் வலுவாய்க்கடுத்து உளைந்தேறும் தேடிப்புணர்ச்சிதனைச் செலுத்தா சிறுநீர் கருகித்தெளிந்துவரும் நாடிக்கபால வலிகனப்பு நண்ணுமுளைவாதம் தானே'18
பரராசசேகரம் வாதரோகநிதானத்தில் உளைவாதத்தின் குணம் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.
"ஓடி உளைந்து சந்துதொறு மொருக்கால் விடமன்மிகக்குத்தும் வாடிக் காயம் வரண்டுவரும் வலுவாய்ப்பற்று முளைவாதம் தேடிப்புணர்ச்சிதனைச் செய்தாற் சிறுநீர்கருகித் தெளிந்துவிழும் நாடிக் கபாலங் கணப்புவலி வந்தே நாளில் நல்குமதே"19
அதேநேரம் இக்கட்டுரையாசிரியருக்குக் கிடைத்த பரராச சேகரம் ஏட்டுப் பிரதியொன்றில் இச்செய்யுள் பின்வருமாறு அமைந்துள்ளது: “ஓடிபுளைந்து சந்து நொந்து ஒருக்கால் விடாமல் மிகக்குத்தும் 'வாடிக்காயம் வரண்டு வரும் வலுவாய்ப் பதறு முளைவாதம் தேடியுணர்ச்சிதனைச் செய்யாச் சிறுநீர் தெளிந்து வருமென்னில் நாடிக்கபாலங் கணப்புறுகில் நலிந்த நாளில் மறுகுவதே"29
2. செகராச சேகரத்தில் நடுக்குவாதத்தின் குணம் பின்வருமாறு
இடம்பெற்றுள்ளது;- V−

Page 29
"நடுக்கஞ் சுழற்சி திமிர் நாவாட்சி வெப்பு
யடுக்க நடுக்கி வசைய - முடுக்கிக் கிடுகிடெனக் கொண்டு கெடியில் விழத்தாட்டும் நடையிடரrம் பார் நடுக்கு வாதம், "21
பரராச சேரகத்தில் நடுக்குவாதத்தின் குணம் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.
'நடுக்குஞ் சுழற்சி செப்பு தாத்திடக்கிப் பேகம்
படுத்து முழுதங்கம் பரக்கும் - முடுக்கிக் கிடுகிடெனக் கொண்டே கெடியில் விழத்தள்ளும் நடையிடறு மென்றே நவில் "??
3. செகராச சேகரத்தில் பெருவாதத்தின் குணம் பின்வருமாது
கூறப்பட்டுள்ளது.
"வருத்திட முடக்குங் காயும் வசமற வீங்குங்கால்கை
யுருத்திட லுழைந்து குத்தி யுவாகியும் பயமுமுண்டாம் கருத்துடனசனஞ் செல்லா கடுத்திடு முறக்சும் வாரா பெருத்திடும் பெரியவாதஞ் செய்குனம் பேசுங்காலே."23
இது பரராசசேகரத்தில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது:-
"வருத்திடு முடக்குங் காயும் வசமற வீங்குங் கால்கை
உருத்திட னுiைந்து குத்தி புவாதியும் பயமுமுண்டாம் கருத்துடனசனஞ் செல்லா கடுத்திடு முறக்கம் வாரா பெருத்திடும் பெரியவாதஞ் செய்குணம் பேசுங்காலே 24
4. செகராச சேகரத்தில் சன்னிவாதக் குணம் பின்வருமாறு கூறப்பட்
டுள்ளது.
கையுங்காலுமொருபக்கங் கனத்துத் திமிர்த்துச் சாவாகி மெய்யுமறவே மெலிந்து வரும் வெதும்பு நாவுத் தடுமாறும் செய்யுங்குணத்தை நாடியறி செப்புஞ் சன்னி போதமென உய்யும்படிக்கு வகை கானோ முணர்ந்தோருரைத்து மொழி
பrமே.2 இது பரராச சேகரத்தில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது. 11கையுங்காலு பொருபக்கங் கனத்துத் திமிர்த்துச் சாவாக்கும்
ஒமய்யுமறவே மிகமெலிந்து வெதும்பு நாவுக் கடுமாறும் செய்யுங் குணத்தை நாடியறி செப்புஞ்சன்னி வாதமென உய்யும் படிக்கு வழிகானா துலகோரறிய வுரைத்தோடிே, "25

萱
சேகராச சேகரத்தில் சரியாங்சு வாதம் பின்வருமாறு கூறப்பட்
டுள்ளது.
"குத்திடுங் கடுக்கும் வீங்கும் குமிறிடும் பரத்து நோயாய்
ஒத்திடுங் காக்கு மெங் த முளைத்திடும் விறைத்து வாங்கும் பித்திடு மயக்குஞ் சொகும் பிடித்திடு மெழும் பொனாது கத்திடுங் களையுண்டாகுங் கடுஞ்சறுவாங்க வாதம்."2"
இது பாசாச சேகரத்தில் இடம்பெற்றுள்ள முனற பின்வருமாறு:
"குத்திடுங் கடுத்து வீங்குங் குமிறிடும் பரந்து நோகும்
ஒத்திடக் கணக்கு மேனி யுளைந்திடும் விறைத்து கிபTங்கும் பித்திடு மயக்குஞ் சோரும் பிடித்திடுமெழும் பொனாது இத்திடுங் களையுண்டாதுங் கடுஞ் சருவாங்க வாதம், 29
செகராச சேகரத்தில் நெஞ்சடை சித குணம் வருங்ாறு:
" நெஞ்சிகளிலடைத்து நொந்து நின்றதிற் சேடமுண்டாய்க் கஞ்சி சோறகுந்தில் விக்கிக் கடினமாய் வண்சிற்றள்வி மிஞ்சிட வெடுத்து முட்டாய் மிகுதியுங் களையுண்டாகும் வஞ்ச நெஞ்சீடை வாதஞ்செய்குணமென வகுத்தாரன்துே."29
இது பரராச சேகரத்தில் பின்வருமrது ஆடம்பெற்றுள்ளது.
'நெஞ்சினிலடைத்து நின்று நின்றதிற் சேடமுண்டாய்க் கஞ்சி சோமருந்தில் விக்கிக் கடினமாய் வணகிற்றுள்ளி மிஞ்சவே படைத்து முட்டாய் மிகுதியுங்களையுண்டாகும் வஞ்சி நெஞ்சடைக்கும் வாதகுணமென வகுக்கலாமே 30
இதுவுபது -
'அன்றியுஞ்சரீர நொந்து அன்னமு மறந்தாள் வற்றி
யொன்றிய சளி கேடுண்டாயுதரமு மெரிந்துரண் செல்லா நன்றிச்சராறாந் திங்கள் தங்கிய வெட்டாந்திங்கள் வென்றிசேர் பன்னிரண்டில் விதிவழிக் காலனென்ளே.31
இது பரராச சேகரத்தில்
'அன்றியுஞ் சரீர நோவா யன்னமு மறந்தாள் வற்றி ஒன்றிய சீவி சுடுண்டா முதை விம்மிடுமே வாயு நன்றி சேராயா மாத நல்கிய வெட்டா மாதம் வென்றிசேர் பன்னிரண்டில் விதிவழிக் காலமாமே."32
இவ்விதமே, செகராச சேகரத்தில் விக்கலும் குணமும் மருத்தும் பற்றிக் கூறுகையில்,

Page 30
94
"நீடு கூவிளை நெற்பொரி சர்க்கரை
தேடு திற்பலி தேனிற் குளைத்துண்ணப் பீடு செய்யும் பெருவிக்கல் சத்தியை ஓடவோடத் துரத்து மிதுண்மையே."33
இது பரராச சேகரம் விக்கல் ரோக நிதானத்தில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது.
"நீடு மாதளை நெற்பொரி சர்க்கரை
தேடு திப்பலி தேனிற் குளைத்துண்ணப் பீடை செய்யும் பெருஞ்சத்தி விக்கலும் ஓடவோடத் துரத்து மிதுண்மையே."94
மேலும் பரராச சேகரம் மேகரோக நிதான்ம் சலக்கழிச்சல் என் னும் பகுதியில் இடம்பெற்றுள்ள பல பாடல்கள் செகராச சேகரத்தி லும் அதேபிரிவில் காணப்படுகின்றன, இவ்விதம் வேறும் சில இடங் களில் செகராச சேகர பதிப்பில் இடம்பெற்றுள்ள பாடல்கள் பரராச சேகரப் பதிப்பிலும் சிறு வேறுபாடுகளுடன் இடம்பெற்றுள்ளதைக் காணக்கூடியதாக உள்ளது, இதற்குக் காரணம் பதிப்பாசிரியர் ஏடு களில் இருந்தவாறு பதிப்பித்திருக்கக்கூடும் அல்லது பரராச சேகரத் தில் இல்லாத செய்யுட்களை செகராச சேகரத்தில் இருந்த செய்யுட் களைக் கொண்டு ஏடு எழுதியவர்களோ அல்லது பதிப்பாசிரியரோ இட்டு நிரப்பியிருக்கக்கூடும். அன்றியும் செகராச சேகரம் பதிப்பா சிரியர் பரராசசேகரச் செய்யுட்களை ஏற்கெனவே கையாண்டிருக்க வும் கூடும். ஆனால் எதற்கும் ஆதாரமில்லை.
பரராசசேகரம் பதிப்பாசிரியரான ஐ. பொன்னையா அவர்கள் தமக்குக்கிடைத்த பரராசசேகரம் செய்யுட்களை முழுமையாக வெளி யிடவில்லை என்பதும் அவரது குறிப்புகள் மூலம் அறியக்கூடியதாக வுள்ளது. உதாரணமாக உதரரோக நிதானத்தில் மகோதரத்துக்கான சிகிச்சை முறையில், 'மருந்துகள் பிரதிகள் தோறும் வெவ்வேறாய் நூற் றுக் கணக்காகக் காணப்படுகின்றன. விரிவஞ்சி ஒரு சிலவே இங்கு எழு தப்படுகின்றன"35 என்றும், கிரகணி ரோக நிதானத்தில் 'இந்நிதா னத்திலும் மற்றைய ரோக நிதானங்களிலும் விரிவஞ்சி நீக்கிய மருந்து கள் இனி வெளியிட இருக்கும் அவிழ்தத்திரட்டு என்னும் நூலிற் சேர்க்கப்படும்"36 என்றும் பதிப்பாசிரியர் கூறியுள்ளார்.
அதுபோலவே நயனரோகத்தில் 'இலங்கைச் சிங்கை மன்னன் நயனவிதி" என அறியப்படும் மற்றொன்று 200 செய்யுட்களுக்கு மேலுள்ளதாகலின் விரிவஞ்சி இதிற் சேராது விடுத்தோம். தனிப் புத்தகமாக அச்சிட்டுப் பின்னர் வெளியிடப்படும்"97 என்றும் பதிப் பாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

35
ஆனால் அவர் அவற்றை வெளியிட்டாரா? என்று அறியமுடியா துள்ளது. அதுமட்டுமன்றி "இலங்கைச் சிங்கைமன்னன் நயனவிதி" என்று அவர் குறிப்பிட்டுள்ள நூல் பரராசசேகரத்தைச் சார்ந்ததா? அல்லது சிங்கை நகரையாண்ட வேறு தமிழ்மன்னர் காலத்துக்குரியதா என்பதும் தெளிவாகவில்லை.
岛· பொன்னையா அவர்களின் பரராசசேகரம் பதிப்பிலுள்ள பல குறைபாடுகளை பேராசிரியர் கலாநிதி பொ. பூலோகசிங்கம் அவர் களும் தனது பரராசசேகரம் கட்டுரையில்38 எடுத்துக்காட்டியுள்ளார். அவற்றுட் 9 லவற்றை இங்கு பார்ப்பது பொருத்தமுடையது போல் தோன்றுகிறது.
''. . . . . . . . . அவர் (பொன்னையா) பதிப்பித்த ஏழு பாகங்களையும் நோக்கும்போது அவற்றிலே 5800 பாடல்வரைதான் காணப்படுகின் றன என்பது கவனிக்கத்தக்கது இத்தொகையிலே செகராசசேகரம் முதலாம் பிரதிகளிலிருந்து பதிப்பாசிரியராற் சேர்க்கப்பட்டவையும் உள்ளடங்குவன என்பது மறக்கொணாதது."
ஏழாலை பெ7 ன்னையாவின் பரராசசேகரப் பதிப்பு சில முக்கிய மான தவறுகளையுடையது. வைத்தியர் என்ற முறையிலே பரராச சேகரத்தில் இடம்பெறாத ரோகங்கள் குணங்கள் சிகிச்சைமுறைகள் ஆகியவற்றை வைத்தியரின் தேவை நோக்கிப் பதிப்பாசிரியர் நூலிலே சேர்க்கத் தயங்கியதாகத் தெரியவில்லை.”*
". எனவே, பொன்னையா பதிப்பில் இடம்பெறும் செய்யுள் களிற் சில பரராசசேகரத்திற் குரியவையல்ல என்பது மறக்கவொண்ணா உண்tையாகும். இதனை மறந்து சிலர் அவருடைய பதிப்பில் இடம் பெறும் செய்யுள்கள் யாவற்றையும் பரராசசேகரத்திற்குரியனவாகக் கணக்கிட்டுள்ளனர்."
இவற்றைவிட பேராசிரியர் பொ. பூலோகசிங்கம் அவர்கள் வேறொரு முக்கிய குறைபாட்டையும் எடுத்துக் காட்டியுள்ளார்.
"பொன்னையா பதிப்பிற் பாடலெண் துணிதல் அரிதாயிருத்தல் வருந்தத்தக்கது. பாடபேதச் செய்யுளுக்கு எண்ணிட்டும் எண்ணிடா தும் மயக்கம் தருவதோடு வசனப் பகுதிகளுக்கு எண்ணிட்டுத் திகைப் பினை ஏற்படுத்தியுள்ளனர். இவை போதாவென்பதுபோல, அச்சுப் பிழையாகச் சில பாடல் எண் பெறாமலும் சிலபாடல் தவறான எண் பெற்றும் அமைந்திருத்தல் முழுப்பதிப்பிலும் காணக்கூடியதாயிருக் கின்றது"39
வைத்தியன் மாத இதழ்கள் சிலவற்றில் பொன்னையாபிள்ளை பதிப் பில் இடம்பெறாதனவும் சேர்க்கப்பட்டுள்ளன என்று கூறிச் சுரரோக

Page 31
30
நிதானம், சன்னிரோக நிதானம் குஷ்டரோக நிதானம் பற்றிய குறிப் புகள் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன.49 இந்நூலாசிரியருக்குக் கிடைத்த ஏட்டுப் பிரதி ஒன்றில் பரராசசேகரம் வாதரோகநிதானம் ஒரளவு திருத் தமாகக் காணப்படுகிறது. பொன்னையா பதிப்பில் இடம்பெறாத பல செய்யுட்கள் இதில் காணப்படுகின்றன. உதாரணமாக கெற்ப சூலைவாதம், மகாவாதம், வாதகண்டம், குடல்வாதம், மூடுவாதம் என்பவற்றைக் குறிப்பிடலாம். மேலும் தலைநோக்காட்டில் வாதத் தலை நோக்காடு, பித்தத்தலை நோக்காடு இரண்டும் ஐ. பொன் னையாவின் பதிப்பில் காணப்படுகின்றன. ஆனால் ஏட்டில் இவற்று டன் சேர்த்து சிலேற்பணத் தலை நோக்காடு, கிருமித் தலை நோக் காடு, சன்னிவாத தலை நோக்காடு இரத்த பித்தத்தலை தோக்காடு என்பனவும் காணப்படுகின்றன. அதுபோலவே வாதகன்ன சூலை பற்றி மட்டும் பொன்னையா பதிப்பில் காணப்படுகிறது. ஏட் டுப் பிரதியில் அத்துடன் பித்த, சிலேற்றும, கிருமி, தொந்தவாத கன்ன குலைகளும் காணப்படுகின்றன. இது போலவே அண்டவா தத்தை ஏறுவாதம், இறங்குவாதம், வீங்குவாதம், வலிவாதம், அந் தரவிட்டி வாதம், மெத்திய வாதம் என 8 வகையாகப் பிரித்து அவற் றின் குறிகுணங்களும் சிகிச்சை முறைகளும் ஏட்டில் மட்டும் காணப் படுகின்றன.
எனவே வருங்காலத்தில் இந்நூல்களை ஆராய முற்ப வோர் இக்
குறைபாடுகளையும் கருத்தில் கொண்டு தமது ஆராய்ச்சியை நடாத்த முன்வரவேண்டும்
ஆதாரக் குறிப்புகள் 1. தமிழ்மலர் - 9 அரசாங்க வெளியீடு, கொழும்பு பக் 67 2. பரரரசசேகரம் . முதலாம் பாகம்
3. - நாலாம் பாகம் பக். 59 4. - முதலாம் பாகம் நூன்முகம்
, - p5nresantuh untasub Lués, l 19
6. பொன்னையா. ஐ. (பதிப்பாசிரியர்) பரராசசேகரம் மூன்றாம் பாகம், ஏழாலை திருஞானசம்பந்தர் அச்சுயந்திரசாலை 1932 பக். 121 செய். 265
7. பரராசசேகரம் - தாலாம் பாகம் பக். 21 செய். 78
8. *影 மூன்றாம் பாகம் பக். 113 செய். 236 9. is p நான்காம் பாகம் பக். 21 செய். 77 0. yo மூன்றாம் பாகம் பக், 83 செய். 130 1. நான்காம் பாகம் பக். 26 செய். 98 3. மூன்றாம் பாகம் பக். 80 செய். 215 3. நான்காம் பாகம் பக். 23 செய். 87
நான்காம் பாகம் பக். 71 செய், 295 翼5。 多患 ஏழாம் பாகம் பக். 78 செய், 53

37
16. பரராசசேகரம் - ஏழாம் பாகம் பக். 63 செய். 4 17. p , நான்காம் பாகம் பக். 71 செய். 297, 298 18. தம்பிமுத்துப்பிள்ளை. ச (பதிப்பாசிரியர்) செகராசசேகர வைத்தியம், அச்சுவேலி ஞானப்பிரகாச யத்திரசாலை, 1932 பக், 145 செய், ! 19. பரராசசேகரம் நான்காம் பாகம் பக். 39 செய். 151 20. பரராசசேகரம் வாகடத் தொகுப்பு - நூலாசிரியரிடம் உள்ளது 21. செகராசசேகரம் பக். 149 செய். 1 22. பரராசசேகரம் நான்காம் பாகம் பக். 20 செய். 73 23. செகராசசேகரம் பக். 33 24. பரராசசேகரம் நான்காம் பாகம் பக். 51 செய். 193 25. Gssgrmy Gersprth uš. 1 36 Go)sů. 1 26. பரராசசேகரம் நான்காம் பாகம் பக். 39 செய். 153 27. G)s 5 print sy CBF sprub Luaš. 1 328 GFů. Il 28. பராாசசேகரம் நான்காம் பாகம் பக். 51 செய். 192 29. செகராசசேகரம் பக். 117 செய். 1 30, urrrry Grasprub strairsrri umas tb udi. 16 Grin. 56 31. செகராசசேகரம் பக். 117 செய். 2 32. பரராசசேகரம் நான்காம் பாகம் பக். 16 செய். 57 33. செகராசசேகரம் பக். 92 செப். 89 34. பரராசசேகரம் மூன்றாம் பாகம் பக், 132 செய். 18 35. பரராசசேகரம் ஆறாம் பாகம் பக். 33 38. பரராசசேகரம் ஏழாம் பாகம் பக். 82 37. பரராசசேகரம் முதலாம் பாகம் பக். 215 38. பூலோகசிங்கம் பொ. பரராசசேகரம் கட்டுரை, சித்தமருத்துவம் 1988 - 89, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சித்தமருத்துவ மாணவர் மன்ற வெளியீடு, பக். 55 - 56 39; மேற்படி கட்டுரை பக். 56 40. வைத்தியன் - அகில இலங்கைச் சித்த ஆயுள் வேதச் சங்க
வெளியீடு 1951 - 53
பரராசசேகரம் சம்பந்தமாகக் கட்டுரை எழுதுவதற்கு மேற் கொண்ட முயற்சிகளின் போது அதில் இடம் பெற்றுள்ள பல மூலி கைகளின் சரியான பெயர்களையும் அறிய முடிந்தது. காலமும் நேரமும் கைகூடினால் பரராசசேகரம் மூலிகைக் கலைச் சொற்றொகுதி ஒன்றை வருங்காலத்தில் வெளியிட முடியும். இவ் விடயத்தில் எனக்குப் பெரிதும் உதவிகள் புரிந்ததுடன் பரராசசேகரம் பொன்னையா பதிப்புகள் பலவற்றையும் பார்வையிடத்தந்துதவிய எனது மாவை நண்பன் தும்பளைபைச் சேர்ந்த ந. பூரீசுப்பிரமணி யத்துக்கு நன்றிகள்.

Page 32
38
5. அங்காதி பாதம் இந் நூலானது பரராசசேகரத்தை சார்ந்தது என்று இதனைப் பதிப்பித்த ஏழாலை ஐ பொன்னையா அவர்கள் குறிப்பிட்டுள்ளார். சிலர் இதனைப் பரராசசேகரத்தின் ஒரு பிரிவாகவும் கொள்வார். நூலாசிரியர் பெயரோ, காலமோ அறியமுடியாதுள்ள போதிலும் பரராசசேகரத்தைப் போலவே இதுவும் ஒரு தொகுப்பு நூல் என அறியக்கூடியதாக உள்ளது.1
இந் நூல் 400 பாடல்களைக் கொண்டதாக உருவாக்கப்பட்ட தாகக் கூறப்பட்ட போதிலும்? சுமார் 175 பாடல்கள் வரையிலேயே அச்சில் வெளிவந்துள்ளன. பாடல்கள் யாவும் அந்தாதி முறையில் அமைந்துள்ளன. சித்த மருத்துவத்திலுள்ள பல அடிப்படை விஷ யங்களுக்கு (Fundamentals) இந்நூல் விளக்கம் தருவதாக அமைந் துள்ளது.
அங்காதி பாதம் என்றால் மனித உடலமைப்பைப் பற்றி விளக் கிக் கூறும் நூல் (Anatomy) என்று பொருள் படும். மனித உடல மைப்பைப் பற்றிய இன்றைய விஞ்ஞான விளக்கத்துக்கும் சித்தர்களின் மெய்ஞ்ஞான விளக்கத்துக்கும் (மெய்ஞ்ஞானம் - மெய் + ஞானம் உண் மையான அறிவு, மெய்-உடல் அதாவது உடலைப்பற்றிய உண்மை யான அறிவு என்றும் கொள்ளலாம்) இடையில் முரண்பாடுகள் உண்டு சித்தர்கள் மனித உடல் மண், நீர், தீ, காற்று ஆகாயம் என்னும் பஞ்சபூதங்களின் சூட்சும அம்சங்களால் ஆக்கப்பட்டது என்பர். அதாவது அண்டத்தில் (பிரபஞ்சம் - Universe) உள்ளது, பிண்டத்திலும் (மனித உடலிலும்) உள்ளது என்பது அவர்கள் கருத்து. மேலும் அவர்கள் அதைச் சிருஷ்டி தத்துவத்துடன் தொடர்பு படுத்தி 96 தத்துவங்களால் ஆனது மனித உடல் என்றும் கூறுவர். இவ்வுண்மைகள் இந்நூலிலும் இடம்பெற்றுள்ளன.? அத்துடன் இன்றைய விஞ்ஞானம் முக்கியத்துவம் கொடுக்கும் மூளை, கல்லீரல், மண்ணீரல், எலும்புகள், தசைகள், நாடி, நரம்புகள் பற்றியும் அவற் றின் நிறை முதலியனவும் கூறப்பட்டுள்ளன.*
இந்நூலில் கூறப்பட்டுள்ள நிறைகளுக்கும் தற்கால விஞ்ஞான நூல்களில் கூறப்படும் நிறைகளுக்குமிடையில் வேறுபாடுகள் மிக உண்டு. அதற்குக் காரணம் அக்காலத்தில் யுத்தகளத்தில் இறந்த வீரர்களின் உடல்களையே முக்கியமாக வெட்டிப் பரிசோதித்திருக் கிறார்கள். யுத்தகளத்தில் மாண்ட வீரர்களின் உடல்களை எவ்வளவு நாட்கள் வைத்திருந்து வெட்டிப் பரிசோதித்தார்கள் என்ற விபரமோ, அதுவரையில் எவ்விதம் அவ்வுடல்களைப் பாதுகாத்தார்கள் என்ற விபரமோ தெரியுமாறில்லை. அத்துடன் அவர்களின் (இறந்த

89
உடல்களின்) வயது போன்ற பல்வேறு விபரங்கள் குறிப்பிடப் பட்டில்லை. எனவே இவை தற்கால விஞ்ஞான நூல்கள் கூறும் அளவுகளில் இருந்து மாறுபடுவதில் வியப்பேதும் இல்லை.
'இயம்பிய குடலு மூணு மென்பு நாடிகளுமற்றுஞ் செயம்பெறு சிங்கைநாடன் செகராசசேகரன்றா
ணுயர்ந்தவாள் வடக்கராக முருட்டிய களத்தின் மீதே
அபஞ்சிறி துளது தீர அளந்து கண்டறிந்ததா\மே"9
செகராசசேகரத்தில் இடம்பெற்றுள்ள இப் பாடல் யுத்தகளத்தில் எதிரிகளின் உடல்களைப் பிளந்து குடல், தசை, எலும்பு, [5rrւգ முதலியன பற்றி சிங்கை நகராண்ட செகராசசேகர மன்னன் ஐயம் சிறிதுமில்லாது நீங்குதற் பொருட்டு அளந்தறித்து கொண்டான் என்று கூறுகின்றது இப் பாடலை. இவ்விடத்தில் தோக்குவது அக் காலத்து மன்னரும் வைத்தியர்களும் உடற்கூறு பற்றி அறிவதில் கொண்டிருந்த ஆர்வத்தை எடுத்துக் காட்டுதற் பொருட்டேயாம். அங்காதிபாதம் பற்றிய அறிவு ஒரு வைத்தியனுக்கு அவசியம் என் பதால் செகராசசேகரத்திலும் அது பற்றி விரிவாகக் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.8
பரராசசேகரம் அங்காதி பாதத்தில் உடலமைப்பு மட்டுமன்றி உடலியக்கம் (Physiology) அதில் வாதம், பித்தம், கபம் என்று சொல்லப்படுகின்ற முத்தாதுக்களுக்குள்ள தொடர்பு, நோய்களின் எண்ணிக்கை, நோய் வரும் வழி, நடக்கைப் பி  ைழ யா ல் வரும் நோய்கள் போன்ற பல்வேறு விடயங்கள் எடுத்துக் கூறப் பட்டுள்ளன. கோபம், உண்ட உணவு சமிக்க முன்னர் மீண்டும் உணவருந்தல், வெயில், மழை, பனியில் திரிதல், மலசலமடக்கல், கூடாமகளிரைக் கூடல், மருத்தீடு, உண்ணத்தகாத ஆகாரங்களைப் புசித்தல், ஒழுங்காகக் குளித்து முழுகாமை, அழுக்கு நீரருந்தல், மது பானம், அதிக பாரம் சுமத்தல், அசுத்தக் காற்றை சுவாசித்தல் போன்ற நடக்கைப் பிழைகள் நோயுண்டாவதற்கான காரணங்கள் என்று கூறியிருப்பது, மக்கள் இவற்றை விடுத்து ஆரோக்கிய வாழ்வு வாழ வேண்டும் என்பதற்காகவே.
"வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும்" என்று வள்ளுவர் கூறியுள்ளதும் இங்கு நோக்கத்தக்கது.
இலகுவில் நிதானித்து (Diagnosis) நிச்சயிக்க முடியாத சில நோய்கள் மக்களுக்கு ஏற்படும் போது அதனைப் பேய் பிசாசுகள், கெட்ட ஆவிகளின் தொடர்பால் வந்ததென்றும், கிரகக் கோளாறு களால் வந்ததென்றும் கூறும் மக்கள் எம்மிடையே இன்றும் இருக்கின்

Page 33
40
றார்கள், ஆனாலும் இவ்விதம் பேய், பிசாசு பற்றி சித்த வைத்தியர் கள்தான் மக்கள் மத்தியில் மூட நம்பிக்கையை ஏற்படுத்தி வருவதாகச் சிலர் குற்றஞ்சாட்டுவதுண்டு. ஆனால் சித்தவைத்தியத்துக்கும் இதற் கும் எவ்வித சம்பந்தமுமில்லை. அது ஒரு தூய பிணியகற்றும் வைத் தியமே என்றும் பேய், பிசாசு கிரகக் கோளாறு முதலியன மந்திர வாதிகளினதும், சோதிடர்களினதும் கூற்றேயாகும் என்றும் இந்நூல் எடுத்துக்கூறுகின்றது.
'மரபிற் பண்டிதர் வன்பிணி யென்குவர் பெரிய மந்திரர் பேயெனப் பேசுவர் அரிய சோதிடர் கோளென்றறைகுவர் உரிய ஞானியர் ஊட்பயனென்பரே'8
* பண்டிதர் - வைத்தியர்
ஒரு நோயாளியின் நோயைக் கண்டறிவதற்கு ஒரு வைத்தியன் அந்த நோயாளியின் எட்டு ஸ்தானங்களை அல்லது எட்டு அம்சங்க ளைப் பரீட்சித்து அறியவேண்டும் என்று மருத்துவம் வல்ல சான் றோர் கூறுவர். அந்த எட்டு ஸ்தானங்களைப் பரீட்சித்தறிவது பற்றியும் இந்நூலில் விளக்கிக் கூறப்பட்டுள்ளது. அவையாவன :
GBT urtGafflussär førtáš (Tongue), si Gior (Eye), Fguoub (Skin) Gssplsplb (Colour of the Skin), salti Guslb GSnsafl (Speech), சிறுநீர் (Unine), மலம் (Stool) நாடிநடை (Pulse) ஆகிய எட்டு விடையங்களைப் பற்றியும் அவற்றில் ஏற்படும் மாறுபாடுகள் பற்றியும் தெளிவாக அறிந்து கொள்வதன் மூலமே ஒரு நோயை இன்னதென்று நிச்சயிக்க முடியும். இவ்வெட்டுவித பரிசோதனை முறைகளையும் "அட்டஸ்தான பரீட்சை' என்பர்
அட்டஸ்தான பரீட்சையில் ஒன்றான நாடிப் பரீட்சை பற்றி மிகத் தெளிவாக இங்கு கூறப்பட்டுள்ளது கவனத்திற்குரியது. தமிழ் வைத்தியர்களுக்கே சிறப்பாக உரிய நாடிப் பரீட்சை இந்நூலிலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
குறிப்பு :- அங்காதி பாதம் (வாகட தத்துவத்துடன்) பரரசசேகரத் தைச் சார்ந்தது என்ற குறிப்புடன் ஐ. பொன்னையா அவர்களால் 1936 ஆம் ஆண்டு அங்காதிபாதம் நூலானது மீண்டும் பதிப்பிக்கப்பட்டுள்ளது. அதில் 405 செய்யுட்கள் வரை காணப்படுகின்றன. மூன்று பிரதிகளை ஒப்புநோக்கி வெளியிட்டதாக பதிப்பாசிரியர் கூறியுள்ளார். அத்துடன் இரண்டாம் பிரிவான வாகடதத்துவத்தில் சுகவாழ்வுக்கு இன்றியமையாத வாந்தி, பேதி, நசியம், அஞ்சனம் என்ப வற்றின் செய்முறையும் அவற்றிற்குரிய காலம், வாதாதி தேகிகளுக்குரிய உணவு வகைகள், பிரகிருதிபேதங்கள்.

8.
女
át
மருந்துகளின் செய்முறை, கருவிகளின் விபரம், மருந்துகளின் பாவனைக்காலம் போன்ற அம்சங்கள் இடம் பெற்றுள் ளன. மேலும், பதிப்பாசிரியர் சேர்க்கப்பட்டவை என்று கூறி வெளியிட்ட செய்யுட்கள் ஒரு ஏட்டுப்பிரதியி னிற்றில் இருந்ததைத் தான் அப்படியே வெளியிட்டதா கவும் தன்னால் சேர்க்கப்படவில்லை என்றும் குறிப்பிட் டுள்ளார். பதிப்பாசிரியர் தன்னிஷ்டப்படி சில இடங்க ளில் செய்யுட்களைச் சேர்த்திருக்கிறார் என்ற கருத்து அக் காலத்தில் சிலரிடையே இருந்தமை யாற்றான் அவர் இவ் விதம் கூறியுள்ளார் போலும்,
ஆதாரக் குறிப்புக்கள்
பொன்னையா - ஐ (பதிப்பாசிரியர்) அங்காதிபாதம் (uportTar சேகர வைத்தியம்) பக். 1 செய். 3, 4, மேற்படி நூல் பக். 1 செய், 7 மேற்படி நூல் பக் 2-3 செய். 15,16,17 மேற்படி நூல் பக, 5 செய். 32-38தம்பிமுத்துப்பிள்ளை. ச. (பதிப்பாசிரியர்) GoesFes pT r F Ger 5 gr வைத்தியம் அச்சுவேலி ஞானப்பிரகாச யந்திரசாலை 1932 பக், 3 செய், 22
மேற்படி நூல் பக். 3-12
திருக்குறள் பொருட்பால் 435 பரரசசேகரம் அங்காதிபாதம் பக். 11 செய். 80
இந்நூற் பிரதியை எனக்குப் பார்வையிடத் தந்துதவியவர் 1992 இல் சித்தமருத்துவத்துறை இரண்டாம் வருட மாணவியாக இருந்த மாதகல் மேற்கு மாதகலைச் சேர்ந்த செல்வி கந்தையா
சத்தியவதி ஆவார். அவருக்கு நன்றிகள்.
பராசசேகரம், செகராசசேகரம் என்பவற்றில் அங்காதிபாதம் பற்றிக் கூறப்பட்டுள்ளது. இதைத்தவிர திருகோணமலைச் சேர்ந்த ப. சின்னத்தம்பி என்பவரும் அங்காதிபாதம்" என்ற பெயரில் 1906 இல் ஒரு நூல் எழுதியுள்ளதாகவும் அது இற்றவரை கையெ ழுத்துப் பிரதியாகவே இருப்பதாகவும் பா. சிவகடாட்சம் அவர் கள் தமது பண்டைய மருத்துவமும் பயன்தரு மூலிகைகளும் என்ற நூலில் (பக். 60) கூறியுள்ளார்.
அங்காதிபாதம் (வாகடதத்துவத்துடன்) 1936 நூலை எனக்குப் பார்வையிடத் தந்துதவியவர் வைத்திய கலாநிதி எம். எஸ். சுந்தரம் அவர்கள் அவருக்கும் எனது நன்றிகள்,

Page 34
6. செகராச சேகரம்
யாழ்ப்பாணத்து மன்னர்களின் பெயரைத் தாங்கி வெளிவந்த மருத் துவ நூல்கள் இரண்டில் இதுவும் ஒன்றாகும். நோய்கள் பற்றியும், அதற்கான சிகிச்சை பற்றியும் இந்நூலில் சுருக்கமாகக் கூறப்பட்டுள்
fff
செகராசசேகரம் வைத்திய நூலானது கனகசூரிய சிங்கையாரிய்ன் ஆறாம் செகராச சேகரன் காலத்தில் தோன்றியது என்று சுவாமி ஞானப்பிரகாசர் யாழ்ப்பாண வைபவ விமர்சனத்தில் குறிப்பிட்டுள் ளார். எனினும், வரோதய சிங்கயாரியன் காலத்திலேயே (கி.பி. பதி னான்காம் நூற்றாண்டின் நடுப்பகுதியில்) செகராச சேகரமாலை என் னும் சோதிட நூலும், செகராசசேகரம் வைத்திய நூலும் தோன்றி யிருக்கவேண்டும் என்று பேராசிரியர் கலாநிதி பொ. பூலோகசிங்கம் தமது பரராசசேகரம் என்ற கட்டுரையில் கருத்துத் தெரிவித்துள்ளார்.2 முதலியார் குல. சபாநாதன் அவர்களும் 1880ஆம் ஆண்டளவில் ஆட்சிக்குவந்த ஐந்தாம் செகராசசேகர மன்னன் காலத்திலேயே இந் நூல்கள் உருவானதாகக் கூறியுள்ளார்.3
அதுமட்டுமன்றி, கர்ணபரம்பரைக் கதைகள் பரராசசேகரத்தையே காலத்தால் முற்பட்டதாகவும், சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்னர் அது உருவானதாகவும் கூறுகின்றபோதிலும் செகராசசேகரமே காலத் தால் முற்பட்டது என்று அறிஞர் பலரும் கருதுகின்றனர். அவ்வித மாயின், தற்போது எமக்குக் கிடைத்துள்ள ஈழத்துச் சித்தமருத்துவ நூல்களிலேயே செகராசசேகரம்தான் பழைமைவாய்ந்த நூலாகும்.
பரராசசேகரத்தில் செகராசசேகரம் பற்றியோ அல்லது செகராச சேகரத்தில் பரராசசேகரம் பற்றியோ எதுவும் கூறப்பட்டில்லை. இது இவ்விரு நூல்களில் எது முதலில் தோன்றியது என்பதை அறிவதில் பெரிதும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. ஏனெனில் இவ்விரு நூல்களும் அடுத்தடுத்து ஒன்றைத்தழுவி மற்றது உருவானது என்று பலரும் கூறு கின்றபோதிலும் எதைப் பின்பற்றி மற்றது எழுந்தது என்று அறிய வழியில்லாதிருக்கிறது. செகராசசேகரத்தில் சுருக்கமாகச் சொல்லப் பட்ட விடயங்களை விரிவாகப் பரராசசேகரத்தில் சொல்லப்பட்டுள் ளன என்றும் அத்துடன் புதிய விடயங்சளும் சேர்க்கப்பட்டுள்ளன என்றும் அறிஞர்கள் சிலர் கூறுகின்றபோதிலும் செகராசசேகரத்தின் விரிவுதான் பரராசசேகரம் என்பதற்கான ஆதாரங்களைப் பெறுதல் இயலாதிருக்கிறது.

每ö
பரராசசேகரம் வைத்தியநூலிலே பல இடங்களிலும் கதிரைமலை பற்றியும் அங்கு எழுந்தருளியிருக்கும் முருகப்பெருமான் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. (ஏற்கனவே குறிப்பிட்டதுபோல் யாழ்ப்பாண மன்னர்கள் பெரிதும் போற்றி வணங்கிய நல்லூர்க் கந்தன் பற்றிய குறிப்புகள் எதுவும் இவ்விரு நூல்களிலும் இடம்பெற்றில்லை. அதற் கான காரணங்களும் தெரியுமாறில்லை.) செகராச சேகரத்தில் கதிரை மலைபற்றிய குறிப்புகள் இடம்பெற்றில்லை. ஆனால் அதேகாலப் பகுதியில் எழுந்ததாகக் கருதப்படும் செகராச சேகரமாலை என்னும் சோதிட நூற்பாயிரத்தில் -
"கந்தமலை யாரியர்கோன் செகராச சேகரமன்
கங்கைநாடன்”
என்று குறிப்பிடப் பட்டுள்ளது?
கதிரைமலை என்பது யாழ்ப்பாண மன்னர்கனின் புராதன இராச தானியைக் குறிப்பதாகவும் அமையும். அதேவேளை கதிர்காமத்தை யும் குறித்து நிற்கிறது. மேலும் கந்தமாதனம் என்னும் பெயருக் குரிய இராமேசுவரத்தையும் குறிப்பதாக அமையும். (யாழ்ப்பாண மன்னர்கள் இராமேசுவரத்தை ஆண்ட மன்னர்களுடன் திருமணத் தொடர்புகொண்டு பூணூல் அணிந்து ஆரியர் என்னும் பெயரையும் பெற்றிருந்தனர் என்பதும் வரலாற்றுச் செய்திe) பரராசசேகரத்தில் இராமேசுவரம் பற்றி பின்வரும் பாடல் மறைமுகமாகக் கூறுகிறது.
** நிகழதி கோபங்கண்ணினெரிவு சந்திரகாசங்கள்
இகல் செயு மாங்கிஷத் தோடெழுச்சி யென்றிவைகளெல்லாம் புகழ்பெறு சேதுமன்னன் பொருவில் செங்கோவின் முன்னால்
பகையென வொழியுமென்று பகர்ந்தனர் முனிவரன்றே”7
ஏறத்தாள 15ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த அருண கிரிநாதர் கதிர்காமத்தைப் பலவிடங்களிலும் கதிர்காமம்' என்றே பாடியுள்ளார். ஆனால் பரராசசேகரத்தில் கதிர்காமம் என்று கூறா மல் கதிரமலை, கதிரைநகர் என்ற சொற்கள் இடம் பெற்றிருத்த லைக் காணும்போது, அவற்றை இயற்றியவர் யாழ்ப்பாணச் சரித் திரத்திலும் ஈடுபாடு கொண்டிருந்தார் போல் தோன்றுகிறது. திருக் கதிர்காமம் பதினொராம் நூற்றாண்டு முதலாகவே தமிழ் இலக்கியத் தில் போற்றப்பட்டு வந்துள்ளது என்று பேராசிரியர் கலாநிதி பொ. பூலோகசிங்கம் கூறியுள்ளார்.8
கலாநிதி uח . சிவகடாட்சம் அவர்கள் தமது நூலில் செகராச சேகரத்துக்குப் பிறகே பரராசசேகரம் உருவாகியது என்பதற்குச் சில காரணங்களை எடுத்துக் காட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.9

Page 35
44
யாழ்ப்பாண மன்னர்களின் ஆட்சிபற்றிய காலக்கணிப்புகளில் யாழ்ப்பாண வரலாற்று ஆய்வாளர்களிடையே முரண்பாடுகள் காணப் படுகின்றன. எனவே, சித்தமருத்துவர்களும் யாழ்ப்பாண வரலாற்று, இலக்கிய ஆய்வாளர்களும் இணைந்து செயற்பட்டால்தான் இந்நூல் களின் காலக்கணிப்புகளைச் சரிவர நிர்ணயம் செய்ய முடியும். ஆனால் சித்தமருத்துவர்களைப் பொறுத்தவரையில் இந்நூல்களில் அடங்கியுள்ள விடயங்களின் பயன்பாடுபற்றி ஆராய்ந்தறிதலே இன்றைய நிலையில் பிரயோசனமுள்ளது என்பது எனது தாழ்மையான அபிப் பிராயமாகும்.
இனி, செகராச சேகர வைத்திய நூல்பற்றிச் சிறிது கவனிப்போம் செகராசசேகர வைத்தியமானது அச்சுவேலி ச. தம்பிமுத்துப் பிள்ளை என்பவரால் 1932ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டுள்ளது அப் பதிப்பே தற்போதும் ஒரு சிலரிடம் காணக்கிடைக்கிறது. ஆனால் இது ஒரு முழுமையான பதிப்பு என்று கூறிவிட முடியாது. மூலநூலா னது சுமார் 4000 பாடல்களைக் கொண்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ள போதிலும் சில நூறு பாடல்களே அச்சில் வெளிவந்துள்ளன. பா. சிவ கடாட்சம் அவர்கள் செகராசசேகரம் அச்சுப் பிரதியில் காணப்படாத தும் ஏட்டுப் பிரதியில் காணப்படுவனவுமாகிய சில பாடல்களைப் பற் 'ஹித் தமது நூலில் எடுத்துக் காட்டியுள்ளார்.10 அதில் ஒரு பாடல் செகராச சேகரனின் மருத்துவ அறிவைப் புலப்படுத்துவதாக அமைத் துள்ளது. அப்பாடல் பின்வருமாறு:
"ஆக்கியே திற்பலியுடனருந்தப் போகு மாம்சுரம் நோக்கிய வாகடம் பயின்று நோயதுயிருண் காலனையுத் நீக்கியே யாருயிரை நிலையாக்குந் நரபாலன் சேக்கொடி யோன் செகராச சேகரனை வணங்கிடுமே”
பரராச சேகரத்தைப் போலவே இந்நூலை ஆக்கியவர் யார் என்று திட்டவட்டமாக அறிந்துகொள்ள முடியாதுள்ள போதிலும் நூலின் பல விடயங்களிலும் செகராசசேகர மன்னன் புகழ் பாடப் பட்டுள்ளதைக் காணுமிடத்து இந்நூல் மன்னன் வேண்டுகோட் படி மருத்துவப் புலவரொருவரால் இயற்றப்பட்டிருக்கக் கூடும் என்று கருதலாம்:
இது ஈழத்தீவில் உருவான நூல் என்பதும், இங்கு அறிவிற் சிறந்த மருத்துவ அறிஞர்கள் பலர் இருந்திருக்கின்றார்கள் என்பதும் அவர்கள் சொன்னவற்றையே நூலாசிரியரும் பின்பற்றியிருக்கிறார் என்பதும் பின்வரும் செய்யுள்வரிகள் மூலம் ஊகித்தறியக் கூடிய தாகவுள்ளது.

45
விரவுகை முடக்குவாத குணமென விளம்பிவைத்தார் திரைமலி கடல்சூழ் பூவிற் றிருந்திய வறிவின் மிக்கோர்"11
மேலும் இங்கு செகராசசேகரன் பெருவீரனாகவும், வைத்திய அறிஞனாகவும் கூறப்பட்டுள்ளதை நோக்குமிடத்து மன்னனும் நூலாக்கத்தில் பங்களிப்புச் செய்திருக்க வேண்டும் என்று ஊகிக்க முடிகின்றது.
இந்நூலில் ஆயுள் வேதம் என்ற சொல் பலவிடயங்களிலும் கையாளப்பட்டுள்ள போதிலும் சித்தமருத்துவ நெறி கூறும் சிவசம் பிரதாயமே பெரிதும் எடுத்துக் கூறப்பட்டுள்ளது. உதாரணமாக 'ஆலமுண்டருள் கண்டனாருரை செய்தவாயுள் மாமறையில்"12 என்றும், 'ஆரணமறைக்குமெட்டா அருளொளியான மூர்த்தி, பூரண மறையாயந்நாட் புகன்ற வாயுறு வேதத்தின்'13 என்றும், பட ரொளிக் கயிலைமீதிற் பரம்பொருள் ஆதிகால இடரொளி நந்திக் கந்நாளியம்பிய வாயுள் வேதம்’14 என்றும் கூறப்பட்டுள்ளமை நோக்கத்தக்கவை.
* மேலும் செகராசசேகரம் வாகடத் தொகுப்பில் வாத, பித்த கப தாடிகள் பற்றி தெளிவாக கூறப்பட்டுள்ளதை பா. சிவகடாட்சம் அவர்கள் எடுத்துக் கூறியுள்ளார்.18 செகராசசேகர வைத்தியத்திலும் நாடிவிதிபற்றித் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. மேலும் உதரரோகப் பரீட்சையில் "வரண்டு கண் சிவந்து வீங்கில் நாடியும் வகை யிலோடா”16 என்றும் வேறுபல இடங்களிலும் நாடிப் பரீட்சையின் முக்கியத்துவம் புலப்படுத்தப்படுகிறது.
நூலமைப்பை எடுத்து நோக்கினால் பாடல்கள் பெரும்பாலும் அந்தாதி முறையில் அமைந்துள்ளன. பரராசசேகரத்தைப் போன்றே இங்கும் நோய் பற்றித் தெளிவா ரீ விபரங்களைக் காணமுடியாதுள் ளது. எனினும் நோய்களின் பெயரும் முக்கியமான குறிகுணங்களும் அவற்றுக்கான சிகிச்சை முறைகளும் கூறப்பட்டுள்ளன. சுரரோகம் பற்றிக் கூறுகையில் சுரவிதி என்னும் தலைப்பின் கீழ் இன்ன இன்ன நாள் நட்சத்திரங்களில் வரும் சுரம் இத்தனை நாளில் மாறும், அல்லது மாறாது மரணம் ஏற்படும் என்ற விபரங்கள் கூறப்பட்டுள் ளன.17 இஃது அக்காலத்தில் மருத்துவத்தில் தகுந்த முறையில் சோதிடமும் பயன்படுத்தப்பட்டிருப்பதை எடுத்துக் காட்டுவதாக உள்ளது. சித்தர்கள் கூறிய மணி மந்திர அவுடதத்தில் மணி என்பது சோதிடத்தைக் குறிப்பதாக அமையும் என்ற ஒரு சாராரின் கருத்து ஈண்டு நோக்கற்பாலது. W

Page 36
இந்நூலில் வியாதி வரும் வகை, அங்காதிபாதம், சலமலப்பகுப்பு, உணவுவகை, நாடிவிதி, சுரவிதி குணமும் மருந்தும் சன்னிகளின் வகையும் மருந்தும், மூல வியாதியின் குணமும் மருந்தும், விக்கலின் குணமும் மருந்தும், சுவாதம் 10 ன் குணமும் மருந்தும், வாதத்தின் குணமும் மருந்தும், கசரோக குணமும் மருந்தும், காசம், குட்ட ரோகம், கரப்பன் வகை, வலியின் குணமும் மருந்தும், உதரரோகங் கள், உட்குத்துப் பிறவீச்சுக் குணமும் மருத்தும், நீரிழிவின் குணமும் மருந்தும் (இதில் சலச் சோதனை கூறப்பட்டுள்ளது.) முதுகுப்பிளவை யின் குணமும் மருந்தும் பித்தம் 42 இன் குணமும் மருந்தும் பற்றிக் கூறப்பட்டுள்ளது. மேலும் இத்துடன் சர்ப்ப சாஸ்திரமும் இருந் திருக்க வேண்டும் என்று பா. சிவகடாட்சம் எடுத்துக் காட்டி யுள்ளார்.18 யாழ் பல்கலைக்கழக நூலக சுவடிப் பிரிவில் சர்ப்பசாஸ் திரம் - செகராசசேகரம் என்ற பெயரில் ஏட்டுச்சுவடி ஒன்றிருப்பதாக திரு சி. முருகவேள் அவர்களும் தெரிவித்துள்ளார்.19
பரராசசேகரத்துடன் ஒப்பிட்டு நோக்கும் போது அங்கு ஒவ்வொரு முக்கிய நோய்ப்பிரிவும் வாதரோக நிதானம், பித்தர்ோக நிதானம், மூலரோக நிதானம். என்ற வகையில் காணப்படுகின்றது. இங்கு சுருக்கமாக வாதத்தின் குணமும் மருந்தும், மூலவியாதியின் குணமும் மருந்தும் என்ற வகையில் காணப்படுகின்றது. இந்நூலிலும் நோய் வருங் காரணங்கள், குறிகுணங்கள், ரோகியைப் பரீட்சிக்கும் முறைகள் என்பன மாணாக்கன் முறைப்படி குருவிடம் கற்றுத்தேற வேண்டு மென்பதால் தவிர்க்கப்பட்டுள்ளன போல் தெரிகிறது. மேலும் மருந்து பிழைத்தால் அவ்விடத்தைச் சுடுதல் பற்றிக் கூறப்பட்டுள்ளது. தேவையான இடங்களில் பத்தியாயத்தியங்கள் பற்றியும் கூறப்பட்டுள் ளது. வாயால் மருந்து கொடுக்க இயலாத சந்தர்ப்பங்களில் உச்சியில் கீறி இரத்தத்துடன் மருந்தைக் கலக்கச் செய்யும் "குடோரி” மருந் துகளும் கூறப்பட்டுள்ளன. இந்நூலும் பஸ்ப, செந்தூரங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டில்லை. பரராச சேகரத்தைப் போலவே இந்நூலூம் பூரணப்டுத்தப்பட வேண்டிய நிலையில் உள்ளது.
ஆதாரக் குறிப்புகள்
1. யாழ்ப்பாண வைபவ விமர்சனம், 1928 பக். 90, 97 2* பூலோகசிங்கம். பொ, பரராசசேகரம் கட்டுரை, சித்தமருத்துவம்
1988 - 89, பக், 53. 3. சபாநாதன். குல, முதலியார், இலங்கையின் புராதன சைவால யங்கள் - நல்லூர்க் கந்தசுவாமி, நல்லூர் தேவஸ்தான வெளி யீடு, 1971, பக். 4

0.
Il .
12,
3.
14,
bò
16.
7,
8.
19.
கணேசையர். சி. ஈழநாடடுத் தமிழ்ப்புலவர் சரிதம், பக். 10.
அறிவொளி. அ. இராமேஸ்வரம், மணிவாசகர் பதிப்பகம்,
சிதம்பரம் 1984 பக். 49.
குணராசா, க, நல்லைநகர் நூல், பூபாலசிங்கம் புத்தகசாலை,
யாழ்ப்பாணம் 1987, பக். 18.
. பரராசசேகரம், முதலாம் பாகம், பக். 158. செய், 616. பூலோகசிங்கம். பொ, பரராசசேகரம் கட்டுரை, பக் 54. சிவகடாட்சம், பா, பண்டையமருத்துவமும் பயன்தரு மூலிகை
க ஒரும், பேராதனை, 1979, பக், 59, மேற்படி நூல், பக். 57. தம்பிமுத்துப்பிள்ளை. ச, (பதிப்பாசிரியர்) செகராசசேகரம் அச்சுவேலி ஞானப்பிரகாச யந்திரசாலை, 1932 பக்.116 செய் 2. மேற்படி நூல், பக். 77 செய். 1 மேற்படி நூல், பக் 102 செய்" 1 மேற்படி நூல், பக், 94 செய். 1 சிவகடாட்சம். பா, பண்டையமருத்துவமும் பயன்தரு மூலிகை களும், பக். 43. செகராசசேகரம், பக். 235 செய், 3. மேற்படி நூல் பக். 31 சிவகடாட்சம். பா, பண்டைய மருத்துவமும பயனதரு மூலகை களும், பக். 38. s முருகவேள். சி, (பரிசோதித்துத் தொகுத்தவர்), யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலக ஏட்டுச்சுவடிகள் பட்டியல், யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலக வெளியீடு, 1992 பக். 8

Page 37
7. அமுதாகரம்
ஈழத்துச் சித்த மருத்துவ நூல்களிலே நஞ்சியல் (Toxicology) பற்றி வெளிவந்த முதலாவது நூலாக அமுதாகரம் கருதப்படுகிறது. இந்நூலை இயற்றியவர் சுன்னாகத்தைச் சேர்ந்த அ. வரதபண்டிதர் என்பவராவர். இவர் இற்றைக்குச் சுமார் 250 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர். இவர் பற்றிய செய்திகளை இந்நூலின்கண் உள்ள சிறப் புப்பாயிரச் செய்யுளாலறிந்து கொள்ளலாம்.
'ஐயமின்முன்னுாற்றை யிருவிருத்தம் செய்ய செந்தமிழாற் றெரிந்துரை செய்தனன் கங்கை மா நதிசூழ் காசி மா நகரும் பங்கமில் பங்கயப் பைத்துணர் மாலையும் ஆதி நான்மறை சேரந்தணராணையும் கோதக லோதிமக் கொடியுமிங் குடையோன் கன்னியங் கமுகிற் கயலினங் குதிக்கும் துன்னிய வளவயற் சுன்னைனாடன்'
அந்தணர் மரபில் தோன்றிய இவர் வடமொழி, தமிழ்மொழி இரண்டிலும் புலமைபெற்று விளங்கியவர். தமிழ் இலக்கிய இலக்கணங் களும், சோதிடம், வேதாந்த சித்தாந்த நூல்களும் நன்கு கற்றவர். மருத்துவ நூல்கள் மட்டுமன்றி சிவராத்திரி புராணம், ஏகாதசி புரா ணம், கிள்ளைவிடுதூது, பிள்ளையார் கதை போன்ற வேறு நூல்க ளும் இவரால் இயற்றப்பட்டுள்ளன. இவரின் த கப்பனார் பெயர் அரங்கநாதையர். இவர் தமது நூலில் பாம்பு கடி க்கு கொவ்வைக் குளிகை பற்றிக் கூறிய இடத்திலும் மருந்தின் பெருமையுடன் தன் னைப் பற்றியும் கூறியுள்ளார்.
"இந்த மருந்தின் பெருமை யிருபிறப்பு மொருபிறப்பிலெய்தாநின்ற வந்தணர் தங்குலத்துதித்த ஜெகநாதன் அருளரங்கநாதன்பால் வந்த மருந்திரு நாலு மாநாகங்கடித்திடினும் மாறு மன்றே"
இவரின் பெயர், தந்தையார் பெயர் முதலியவற்றைப் பார்க்கு மிடத்து வைணவ சமய வழிவந்தவர்களாகக் கருத இட முண்டு, ஆனால் சிவராத்திரி புராணம், ஏகாதசிப் புராணம், பிள்ளையார் கதை என்பனவும் இவரால் இயற்றப்பட்டிருத்தலை நோக்குமிடத்து யாழ்ப்பாணத்து அந்தணர்களுக்கேயுரிய சைவ வைணவ சமநோக்கு இவருக்கும் இருந்திருப்பது நன்கு புலப்படுகிறது.

49
சித்தராருடத்தைத் தழுவி எழுதப்பட்டதாகக் கூறப்படும் இந் நூலில் முக்கியமாக விஷக்கடிக்குரிய சிகிச்சை முறைகள் கூறப்பட்டுள் ளன. சிறப்பாக பாம்புக்கடி, தேள்கடி, புலிமுகச்சிலந்திக்கடி, நட்டு வாக்காலி, திருநீலகண்டன், செம்பூரான், நச்சுப்பல்லி, அ ற  ைண, செவ்வட்டை, மூஞ்சூறு, முதலைக்கடி, புவிக்கடி, பூனைக்கடி, நாய் கடி, கருங்குளவி, திருக்கை முள் தைத்தல், குரங்குக்கடி, கெளிற்று முள், கிழாத்திமுள் விஷங்கள் இன்னும் நாட்பட்ட பல்வேறு விடங் களுக்குரிய சிகிச்சை முறைகள் கூறப்பட்டுள்ளன.
எனினும் மேற்படி விஷ ஜந்துக்களின் அங்க அடையாளங்கள் அவற்றை அடையாளங்காண உதவும் பிரத்தியேக குறிகள், அவை கடித்தால் ஏற்படும் சிறப்புக்குறி குணங்கள் (Cardinal Signs) பற்றி இந்நூலில் கூறப்படாதிருப்பது துரதிஷ்டவசமானது. அக்கால மரபுப் படி அனுபவமுள்ள ஆசான் வாயிலாகவே மாணவர்கள் அவற்றை அறியவேண்டும் என்று கருதியே ஆசிரியர் அவற்றைக் கூறாது விட்டார் போலும்,
செய்யுள் நடையைக் கவனிக்குமிடத்து இவரது மருத்துவப் புல மையுடன் தமிழ்ப்புலமையும் வெளிப்பட்டு நிற்கிறது. வட மொ ழி தமிழ் மொழி கலந்த மணிப் பிர வா ள நடையைச் சரளமாகக் கையாண்டுள்ளதுடன் சித்தமருத்துவ முன்னோடிகளான சித்தர்களைப் போலவே 'குழுஉ? குறிகளையும் மறை பொருள்களையும் நன்கு பயன்படுத்தியுள்ளார்.
உதாரணமாக :
ஈசுரமுலி கருடக் கொவ்வை யிறையவனிம்பமுடன் எட்டியாடை குலைத்தானொச்சியடம் பெழினிர் நொச்சி யாசறு காண்டை கொடிக் கழலகுப் பழையரமுறி
தொட்டவிரலன்று தறித்தான்
குந்த மயிற் குந்தத் தொடுவாய் முதிரை தேசுற நாறுகரந்தை புறங்கை திருந்தவே நாறியுடன் செப்பிய வங்கோலங் காத்தோட்டி சிறந்திடு வேரிவைகள் பேசிய வேrரளவாகத் தூள் பொடி செய்து களஞ்சிரதம் பிரிய முறித்துச் செறிவு மீதொக்கப் பேணிக் கொண்டருளே’
女 ஈசுரமூலி பெருமருந்து இறையவனிம்பம் - சிவனார்வேம்பு
ஆடைகுலைத்தான்.குறிஞ்சா தொட்டவிரலன்றுதறித்தான்.பாகல் குந்தம் - குருந்தம்.

Page 38
so
இவ்விதமே இந்நூலாசிரியரின் செய்யுள் நடை அமைகிறது.
வாழையை - தாயைக் கொன்றான் என்றும், கருடன்
முட்டையை - காளவண்ணனூர் தியண்டம் என்றும் மயிலை - சூர்ப்
பகை வானூர்பரி என்றும் குறிப்பிடுகிறார். நசியவகை பற்றிக் கூறுகையில்
**மண்ணின் வேந்தும் மலையின் முனிவனு
முண்ணுஞ் சோற்றுக் குரிசையுண்டானுமாய்க் கண்ணின் மூக்கிற் கசக்கிப் பிழிந்திடில் விண்ணிற்போன விடங்களும் தீருமே" என்கிறார்
大 மண்ணின் வேந்து  ைமுடிதும்பை மலையின்முனி - மிள்கு
சோற்றுக்குரிசையுண்டான் - உப்பு V
அதாவது முடிதும்பை இலை, மிளகு, உப்பு இம்மூன்றையும் துவைத்து கண், மூக்கில் விட எந்தவித விட மும் மாறுமாம்.
பொதுவாக விஷக் கடியினால் விஷம் உடலில் பரவும் வேளை யில் ஒருவர் உணர்ச்சியிழந்து நினைவற்றுப் போவது (Coma) இயல்பு. அங்கனம் மூர்ச்சையடையும் வேளைகளில் வாயினால் மருந்துகளைக் கொடுத்தல் இயலாத காரியம் என்பதுடன் அப்படிக் கொடுத்தால் அது கவாசாசயத்தை அடைந்து கேடு விளை விக் கும் என்பது உண்மை, எனவேதான் இந்நூலாசிரியர் வாய்வழியாகக் கொடுக்கும் மருந்துகளி லும் பார்க்க உச்சியைக் கீறி இரத்தத்துடன் மருந்தைக் கலக்க வைக் கும் (குடோரி) முறை, நாசி வழியாகத் துளித்துளிவாக மருந்தை உட் செலுத்தும் முறை, (நசியம், புகை) கண்ணிற்கு இடும் மருந்து (கலிக் கம்) கடிவாய்க்கு இடும் மருந்து (துவாலை) என்பவற்றை முக்கியமாகக் கூறியுள்ளார். மந்திர உச்சாடனம், பார்வை பார்த்தல் போன்ற விட யங்களில் நூலாசிரியர் அதிக அக்கறை காட்டியதாகக் தெரிய வில்லை. பெரும்பாலும் மருந்துகளுடன் பத்தியங்கள் பற்றியும் கூறி uyararmrnt.
astrreovuors =
"தொலையும் பத்தியஞ் சொல்வேன் முருங்கையி னிலையும் பிஞ்சு மினிதென்றியம்புவர் " என
எலிக்கடிக்கு பத்தியம் கூறியுள்ளார்.

9.
சித்தர்களின் விஷவைத்திய நூல்களில் பாம்புக் கடிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். இவரும் தமது நூலில் நாகம், புடையன், அழுகு சர்ப்பம், விரியன், இரத்தப்புடையன், இரத்த மண்டலி, சுருட்டை, கருவிலி நாகம், வாளை போன்ற சர்ப்ப வகை கவின் கடிக்கு சிகிச்சை முறைகள் கூறியுள்ளார்.
மேறும் விஷக்கடிகளுக்குரிய பொது வைத்திய முறைகள், கைவைத் திய முறைகளும் இந் நூலில் கூறப்பட்டுள்ளன. கைவைத்தியம் என்று கூறும் போது தற்காலத்தவரால் தவறாக விளக்கம் கொடுக் கப்படுகிறது. உண்மையில் சித்தமருத்துவ நூல்களில் கூறப்படும் கைவைத்தியங்கள் தற் காலத்தில் கையாளப்படும் முதலுதவிச் சிகிச்சை முறைகளை ஒத்தனவா கும் வைத்தியரில்லாதவிடத்து நோயைத் தணிக்கவும் அல்லது மாற்றவும், வைத்தியர் வரும் வரை அல்லது வைத்தியரிடம் கொண்டு செல்லும் வரை நோயாளியை நோயின் தீவிரத் தன்மையிலிருந்து பாதுகாக்கவும் அக்கால த்தில் கைவைத்திய முறைகள் பெரிதும் உதவியுள்ளன. பாம்புக் கடிக்கு வாழைத்தண்டுச் சாறு பருக்குதல்,கடிவாயைக் கீறி இரத்தத்தை வெளிப் படுத்தல், கடிவாயில் சுடுதல் போன்றன அத்தகைய முறைகளேயாகும். ஆனால் பிற்காலத்தில் சித்த ஆயுர்வேத மருத்துவத்தின் முக்கியத்துவம் புறக்கணிக்கப்பட்ட போது கைவைத்திய முறைகளே முக்கிய சிகிச்சை முறைகளாக அனுபவமில்லாதோரால் கையாளப்பட்டு அசல் எது, போலி எது என்று விளங்கிக் கொள்ள் முடியாத மயக்க நிலையை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.
சுருங்கக் கூறின் விஷக்கடிகளுக்குரிய சிகிச்சைகளைக் கூறும் ஒரு சிறந்த நூலாக இதைக் கருதலாம்.
ஆதாரக் குப்புறிகள் * செய்யுள் இலக்கங்கள் கையெழுத்துப் பிரதியில் ஒழுங்கின்மை
யால் குறிப்பிடமுடியவில்லை. ★ இந்நூலின் கையெழுத்துப் பிரதியை எனக்குத் தந்துதவிய வர் சுன்னாகத்தைச் சேர்ந்த Dr. P. அருளப்பன் ஆவார். ★ திருகோணமலையைச் சேர்ந்த சு. தம்பையா என்பவர் 1852 ஆம் ஆண்டு இந்நூலைப் பதிப் பித்து ள் ளார் என்று பா. சிவகடாட்சம் அவர்கள் தமது நூலில் குறிப்பிட்டுள்ள போதிலும் (பக். 60) அந்நூல் பிரதி இக்கட்டுரையாசிரியருக்குப் பார்வை யிடக் கிடைக்கவில்லை.

Page 39
8. இருபாலைச் செட்டியார்
வைத்திய விளக்கம்
யதார்த்த சூடாமணி
யாழ்ப்பாணத்து வைத்திய நூற்பிரசுரம் என்ற வரிசையில் ஏழாலை ஐ. பொன்னையா அவர்கள் முதலாவதாக வெளியிட்ட நூல் இதுவாகும். இருபாலைச் செட்டியாரால் இயற்றப்பட்ட வைத்திய விளக்கம் என்னும் அமிர்த சாகரம், பதார்த்த சூடாமணி என்னும் இருநூல்கள் இதில் அடங்கியுள்ளன. சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் (1927) பதிப்பிக்கப்பெற்ற இந்நூலின் முகவுரையில் ஐ. பொன்னையா அவர்கள் வெளியிட்ட கருத்துக்கள் இன்றைக்கும் பொருத்தமாயுள்ளதால் அவற்றை இங்கு நோக்குவது பொருத்த Gp600. Ugl.
"பண்டைக்காலத்திலே யாழ்ப்பாணத்திலிருந்த பண்டிதர்கள் பலர் அரிய பெரிய வைத்திய நூல்கள் பலவற்றை D.GaoGassnt Luasnt Ur Lorras இயற்றி வைத்துள்ளார்கள். அவற்றுள் பிறர்க்குப் பயன்படுதல் கூடாது என்று எண்ணும் சுயநலக் கருத்துடைய நல்லறிவில்லா மாக்களிடம் அகப்பட்டுச் செல்லுக்கிரையாய் மாண்டொழிந்தன பல. இன்னும் ஒழிய இருப்பன பல. அரிய முறைகளில் முக்கியமான பாகங்களை மாறுபடுத்திக் கூட்டியும் குறைத்தும் ஏட்டில் எழுதி வைத்துப் பிறரை வஞ்சிக்கும் இயல்புடையோரும் நம்மூரில் காணப் படுவர். இத்தகையோரது வஞ்சகச் செயல்களினால் எத்தனையோ சிறந்த அவுடத பாகங்கள், எத்தனையோ சிறந்த நூல்கள் தம் உண்மையுருவமிழத்து அறிதற்கரியனவாய்ச் சிதைந்து கிடக்கின்றன. ஒரு நூலில் எத்தனை பிரதிகளைத் தேடி ஒப்பு நோக்கினாலும் எல்லாம் ஒன்றுக்கொன்று பெரிதும் முரண்பாடுடையனவாகவே காணப் படுகின்றன. தாமறிந்ததைப் பிறர் அறிதல் கூடாது என்னும் அறக் கொடிய எண்ணத்தினால் வைத்தியம் கற்கும் மாணவர்கள் தாமும் பெரும்பாலும் தப்பு வழியே காட்டப்படுகின்றனர்."
**இவை போன்ற குறைபாடுகள் பல நம்மிடம் நிரம்பிக் கிடக் கும் போது, தமிழ் வைத்தியம் பிறரால் அலட்சியம் பண்ணப் படுகிறது என்று கூக்குரல் போடுவதினாலும், கூட்டங்கள் பல வைப் பதினாலும் விளையும் பயன் யாதுமில்லையாம். நடு நின்று நோக் குவார் தமிழ் வைத்தியமானது ஆங்கிலம் முதலிய பிற வைத்தியங்கள் எவற்றினும் பார்க்க எத்தனையோ மடங்கு உயர்ந்தது என்னும் உண்மையை மறுக்க மாட்டார்கள். ஆயினும் நம்மவர்களிடத்தி

53
லுள்ள பொறாமையினாலும் சுயநலக் கருத்தினாலும் அதிற் பயில் வோர் பெரும்பாலும் கல்வியறிவில்லாதவர்களாயிருந்ததாலும் பிற குறைகளாலும் தன் மேன்மையிழந்து கீழ் நிலையடைந்து விட்டது. தமிழ்ச் சித்த வைத்தியம் உயர்நிலையடைந்து பிறராலும் பாராட்டப் படுதல் வேண்டுமாயின் இக்குறைபாடுகளெல்லாம் ஒழிந்து பழையன வும் புதியனவுமாகப் பல நூல்கள் வெளிவருதல் வேண்டும்."
மிகவும் தீர்க்கதரிசனமுள்ளதாக இம் முகவுரை அமைந்துள்ளது. கூட்டங்கள் கூடிப் பேசுவதும் தீர்மானங்களை நிறைவேற்றுவதும் தவிர சித்த மருத்துவ வளர்ச்சிக்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படுவது இற்றைவரை சொற்பமாகவேயுள்ளது. இந்த முக வுரையில் தமிழ் வைத்தியம், தமிழ்ச் சித்த வைத்தியம் என்ற சொற்களை (1927ல்) ஐ. பொன்னையா அவர்கள் பிரயோகித் திருப்பது கவனிக்கத் தக்கது. யாழ்ப்பாண மருத்துவ நூல்கள் மருத் துவ முறைகளுடன் மிகவும் ஆழமான தொடர்பும், அறிவும் கொண்டிருந்த ஐ. பொன்னையா அவர்கள் மேலோட்டமாக 'தமிழ் சித்த வைத்தியம்' என்ற சொல்லைக் கையாண்டிருக்கமாட்டார். இங்கு மரபு வழியாக இம்மருத்துவம் கையாளப்பட்டு வருதல் கருதியே அவர் இவ்விதம் கூறியிருக்கக்கூடும்.
இந்நூலாசிரியர் பற்றியும் தனது முகவுரையில் ஐ. பொன்னையா குறிப்பிட்டுள்ளார். அதன்படி பார்க்கையில் இவர் இருபாலை என் னும் இடத்தில் இற்றைக்குச் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னர் வசித்தவராக இருக்க வேண்டும். அவரது இயற்பெயர் தெரிந்திலது. மீசாலையில் வேளாண்செட்டி மரபில் பிறந்த இவர் நீண்ட காலம் இருபாலையில் வசித்து வந்தமையால் இருபாலைச் செட்டியார் என அழைக்கப்பட்டனர் போலும். இவர் துறவு வாழ்க்கை வாழ்ந்த Qufluurrif. -
இவர் பற்றிப் பல்வேறு கர்ணபரம்பரைக் கதைகள் கூறுவர். அதில் ஒன்று வருமாறு 'இச் செட்டியாரிடம் வைத்தியம் செய்யச் செல்லும் நோயாளிகளை இவர் வீட்டுத் திண்ணையில் வைத்து கைநாடி பிடித்துப் பார்த்துச் சோதிப்பாராம், பின்னர் தனது வீட்டுக் காணியைச் சுற்றி வருவாராம். அவ்விதம் வரும் போது தகுந்த மூலிகைகளைப் பிடுங்கி சேர்த்து வந்து நோயாளிக்கு கஷாயம் முத லியன செய்து குடிக்கும்படி கூறுவாராம்'. இக் கதை செட்டியாரின் மருத்துவ அறிவுக்கும் காலதேச நிலைகளை அனுசரித்து அவர் கையாளும் சிகிச்சை முறைகளுக்கும் சான்றாக அமைகிறது
மேலும் இருபாலைச் செட்டியாரின் வைத்திய முறைகள் அக்காலத்தில் வாழ்ந்த ஆங்கில வைத்தியர்களாலும் வியந்து பாராட் டப்பட்டுள்ளது. பாலவைத்தியத்திரட்டு நூலாசிரியர் தனது முகவுரை

Page 40
5á
யில் அந்நூலுக்கு ஆதாரமாகப் பரராசசேகரம் ஏடுகளை மட்டுமன்றி "ஆங்கில வைத்தியராலும் ஆயுள்வேத வைத்தியராலும் வியந்து புகழப் பெற்ற இருபாலைச் செட்டியார் அவர்களாலும் எழுதி வைத்துள்ள ஏட்டுப்பிரதிகளைக் கொண்டும் எழுதப்பெற்றது" என்று குறிப்பிட்டுள்ளமை நோக்கற்குரியது.2
நூன்முகத்தில் தெல்லிப்பழை க, தம்பையாபிள்ளை என்பவர் இந்நூல்களில் கூறப்பட்டுள்ள விடயங்களைப் பின்வருமாறு தொகுத் துக் கூறியுள்ளார்.
"அமிர்த சாகரமானது நாடிகளின் தோற்றம், தொழில் ஆகிய வற்றையும் சுரவகை, அவற்றின் குணம், சிகிச்சை முதலியவற்றையும் சூரணம், மாத்திரை வகைகளையும், மூலப்பவுந்திரம், கட்டு, புண், பற்பேத்தை, செங்கரப்பன், கபாலம், கயரோகம், நீரிழிவு, சன்னி, வெட்டை, சூலை முதலாம் பல கொடு நோய்களின் தன்மைகளை யும் அவற்றுக்குரிய மருந்து, நெய், எண்ணெய், தைலவகைகளை யும் சிறப்பாகக் கூறி உடம்பு நலத்திற்கு இன்றியமையாத பச்சடிகள், இரசங்கள். நீராகாரங்கள் ஆகியவற்றைப் பொது வகையாலுரைத்து உயிர்கட்கு உறுதி பயப்பது. இன்னும் இந்நூலானது பிள்ளை பெற்ற பெண்கள், சிறு பிள்ளைகள், உன்மத்தர் முதலாயினோர்க்கு வேண்டும் முறைகளையும் சரக்குச் சுத்தியையும் தெளிவாகக் கூறும்."3
பதஈர்த்த சூடாமணியானது உடம்போடு இயைந்து பயன் தரும் பொருள்களின் குணங்களை நன்கு விளக்குவது, இன்னும் இது நல்லன தீயன என்பவற்றைப் பகுத்துக் காட்டுவது. நிலம், நீர், தீ, வளி, வான் இவற்றின் குணமும் உணவுக்குரிய சோற்றுவகை, சிற்றுண்டி வகை, புன்செய்தானிய வகை, கீரை வகை, வேர், பூ, காய், இலை வகைகளும், பால், தயிர், நெய், மோர், இறைச்சி, மீன், கடைச் சரக்கு இவைகளின் குணங்களும் இந்நூலின் கண் தெளிவாகக் கூறப் படுகின்றன.4
சுருங்கக் கூறுவதாயின் வைத்தியர்களுக்குப் பயன்படும் வகை யில் அரிய மருந்துகளைப் பற்றிக் கூறியுள்ளதுடன், மக்கள் யாவ ரும் இயற்கையில் கிடைக்கும் உணவுகளை, அவற்றின் மருத்துவக் குணங்களை நன்கு தெரிந்து அன்றாடம் தகுந்த முறையில் பக்குவம் செய்து உட்கொண்டு வருவார்களேயானால் நோயின்றி வாழலாம் என்பதையும் நன்கு எடுத்துக் காட்டியுள்ளார்.
கொடுநோய்கள் பலவற்றைக் குணப்படுத்தி அக்கால ஆங்கில வைத்தியர்களையே வியப்பிலாழ்த்திய சித்தமருத்துவ வல்லுனரான

55
இருபாலைச் செட்டியாரின் நூல்களை இன்றும் யாழ்ப்பாணத்திலுள்ள 8த்தவைத்தியர்கள் அரியபொக்கிஷமாகப் பேணிப் பாதுகாத்துப் பயன்படுத்தி வருவதில் வியப்பேதும் இல்லை.
ஆதாரக் குறிப்புகள்
பொன்னையாபிள்ளை, அ. (அருளானந்தசிவம்) யாழ்ப்பாணம்
இருபாலைச் செட்டியார் இயற்றிய வைத்திய விளக்கம் என்னும் அமிர்தசாகரம், பதார்த்த சூடாமணி, யாழ்ப்பாணம் சைவப் பிரகாச யந்திரசாலை 1927 பக். 1 (குறிப்பு : நூலில் அ. பொன்னையாபிள்ளை என்றே காணப்படு கிறது. ஆனால் சிறப்புப்பாயிரத்தில் வித் துவ சிரோ மணி சி. கணேசையர் ஐயம்பிள்ளை பொன்னையா என்றே குறிப் பிட்டுள்ளார்) sy கந்தையாபிள்ளை. க. வே. (தொகுப்பு) பாலவைத்தியத்திரட்டு அகழ்யவருஷம். முகவுரை
மேற்படி இருபாலைச் செட்டியார் வைத்திய விளக்கம் பக். 4
மேற்படி நூல் பக். 4
இந்நூற்பிரதியை எனக்குப் பார்வையிடத் தந்துதவியவர் ன் க த டி ஆயுள்வேத வைத்தியசாலையிற் கடமையாற்றும் Dr. S. பரமசிவம்பிள்ளை. அவருக்கு நன்றிகள்.

Page 41
9. சொக்கநாதர் தன்வந்திரியம்
யாழ்ப்பாணத்து வைத்திய ஆசிரியர்களால் இயற்றப்பட்ட சிறந்த வைத்திய நூல்களில் இதுவும் ஒன்று. இந்நூலை இயற்றியவர் சொக்க நாதக் குருக்கள் என்பவராவர். இவர் மாவிட்டபுரத்தில் ஏறக்குறைய 150 ஆண்டுகளுக்கு முன்னர் வசித்தவர். М
இந்நூலைப் பதிப்பித்த ஐ. பொன்னையா அவர்கள் மேற்படி சொக்கநாதக் குருக்களால் இயற்றப்பட்ட வேறும் சில நூல்கள் இருந் ததாகவும் அவை கிடைத்தால் தாம் அவற்றை வெளியிட முடியும் என்றும் கூறியிரு ந் தார். (ஆனால் அத்தகைய நூல்கள் ஐ. பொன்னையா காலத்திலோ அல்லது அதற்குப் பின்னரோ வெளிவந்த தாகத் தெரியவில்லை) ஐ. பொன்னையா அவர்கள் தமது வைத்திப் நூலாராய்ச்சியின் பயனாக இருபாலைச் செட்டியார் வைத்திய விளக் கத்திற்கும் சொக்கநாதர் தன்வந்திரியத்துக்கும் இடையில் சிற்சில இடங்களிற் பெரிதும் ஒற்றுமை காணப்படுவதாகவும் எனவே, இவ்விரு நூலாசிரியர்களும் ஒரே வடமொழி வைத்திய நூலை ஆதாரமாகக் கொண்டு தத்தம் நூல்களை ஆக்கியிருக்கலாம் என்றும் கருத் து வெளியிட்டுள்ளார்.1
ஆனாலும் இதை நாம் ஏற்பதற்கில்லை. ஏனெனில் சொக்கநாதர் தன்வந்திரியத்தில் நூலாசிரியர் அதற்கு மூலநூலாக "தன்வந்திரி வடமொழியிற் சொன்னதைத் தமிழாற் சொன்னோம்" (செய். 212) என்று குறிப்பிட்டுள்ளார். இருந்தும் தன்வந்திரி செய்ததாகப் பல நூல்கள் தமிழிலும் வடமொழியிலும் வழங்கிவருகின்றன.2 அதில் இவர் தமக்கு மூலநூலாக எவற்றைப் பயன்படுத்தினார் என்பது தெளிவாகக் கூறப்படவில்லை, அதேநேரம் இருபாலைச் செட்டியார் தனது நூல்களில் தன்வந்திரி பற்றிக் குறிப்பிடவில்லை மாறாக சித்தர் சொன்ன ஆயுள்வேதம்3 (கண்டில் வெண்ணையின் குணங்கள்) சித்தர் கூறுவர்4 (கையாந்தகரையின் குணம்) வாதமெல்லாம் தீர்க்கும் என்பர் சித்தர்5 (மாவிலங்கையின் குணம்) என்று சித்தர் கூறிய வைத்தியத்தையே தானும் கூறியுள்ளதாகக் கூறியுள்ளார். சொக்க நாதக் குருக்களும் தனது நூலுக்கு வடமொழி நூலை மூலநூலாகக் கூறின் சிறப்பானது என்ற கருத்தினாலும் தமக்கு ஆயுர்வேதமருத்து வத்திலிருந்த அறிவு காரணமாகவும் வடமொழியில் இரு ந் த தை த் தமிழிற் சொன்னேன் என்று பாடியுள்ளார் போல் தெரிகிறது. (இவ் விதமே பரராச சேகரம் போன்ற நூல்களிலும் இடைஇடையே வட மொழியிற் சொன்னதைத் தமிழிற் சொன்னோம் என்ற குறிப்புக்கள்

57
காணப்படுகின்றன.) வடமொழி ஆயுள் வேதத்தின் கலப்பு இந்நூல் களில் இடம்பெற்றுள்ளன என்பதை மறுக்க முடியாது. எனினும், தமிழ் ஆயுள்வேதம் என்று சொல்லப்படுகின்ற சித்தர்களின் மருத்துவ முறைகளையே இவர்கள் பெருமளவில் பின்பற்றி தமது நூல் களை ஆக்கியுள்ளனர் என்பது வெளிப்படை,
இந்நூலின் திருத்தமான ஏட்டுப்பிரதியொன்று இணுவில் Dr. க. பாலசுப்பிரமணியம் அவர்களிடமிருந்து பார்வையிடக் கிடைத்தது. அதில் பொன்னையா பதிப்பில் இடம் பெற்றிராத சில செய்யுட்களும் காணப்படுகின்றன. முக்கியமாக நூல்வழி என்ற தலைப்பின் கீழ் பொன்னையா அவர்கள் வெளியிட்டுள்ள இரு செய்யுட்கள் தவிர மேலும் இரு செய்யுட்கள் காணப்படுகின்றன. அதில் ஒன்று வரு LonTay.
"தன்வந்திரிக்குந் தமிழ்முனிக்குஞ் சித்தருக்குங் கன்மந்தி பகவான் கட்டுரைத்த வாகடமாம் பாற்கடற்கண் வந்த மருந் தொக்குமே கூறிடமரர் மூலிகுணம்’6
சொக்கநாதர் தன்வந்திரியத்திலும் சித்தர் மருத்துவ மரபு முறை களே பெரிதும் கூறப்பட்டுள்ளன என்பது கவனிக்கத்தக்கது. செளமிய காண்டத்தில் சிவசம்பிரதாயம் பின்வருமாறு கூறப்படுகிறது.
"இப்படி நோயொன்றுக்கா
வெண்ணிலா மருந்து சொன்னார் தப்பற வீசனென்றுத் தயவுளனாதலாலே கைப்பட வரிதாய்க் காட்டின்
மலைகளிற் காணாதெல்லாம் செப்பினன் குணமுஞ் செய்யுங்
கிரியையுஞ் சிவனே கண்டாய்"7
நூல் வரலாற்றில் மணிமந்திர அவுடதம் பற்றி வலியுறுத்திக் கூறியுள்ளார். மணி, மந்திர, அவிழ்தம் என்பது சித்தர்கள் கையாண்ட மருத்துவம் என்று யாவருக்கும் தெரிந்ததே.
*மந்திரம் மருந்தோடு மணிபல
தந்திரஞ்செயுஞ் சம்பிரதாயமும் நிந்தியாமற் குருமொழி நேசித்துச் சிந்தைநம்பிடச் சித்திக்குமீதெலாம்,8

Page 42
8.
மேலும் தேவ வைத்தியம் பற்றிக் கூறுகையில் (தேவவைத்தியம்= இரசம் முதலியன கொண்டு செயப்படும் வைத்தியம் சிக்கர் பற்றி யும் குறிப்பிட்டுள்ளார்.
தேவர் சொன்ன வைத்தியஞ் செய்முறை மூவரிந்திர ராதியர் முக்குணம் தாவருஞ் சித்தர் தானவராதியோர் ஏவருக்கு மிது பெறுமேற்றமே'9
சொக்கநாதர் தன்வந்திரியமானது உக்கிர காண்டம், செளமிய காண்டம் எனும் இருபிரிவுகளைக் கொண்டுள்ளது. உக்கிர காண்டLorra.org குரூரகாண்டம் எனவும் வழங்கப்படும் என்பர். இவ்விரு பிரிவு களுக்கும் முன்பாக வைத்தியனிலக்கணமும் (அதாவது வைத்தியன் எனப்படுபவன் பார்: அவன் கற்க வேண்டியவை கடைப்பிடித்து ஒழுக வேண்டியவை போன்ற விபரங்கள்) பதார்த்த குண விளக்க மும் இடம் பெற்றுள்ளன.
வைத்தியனிலக்கணத்தில், வைத்தியன் பற்றிக் கூறுகையில், வாகடங்களிற் சொல்லப்பட்டுள்ளவற்றைத் தெளிவாக கற்றுத் தேர்வ துடன் தேச கால அடிப்படையாகக் கொண்டு தோன்றும் நோய்கள் கர்ம நோய்கள், பஞ்ச இலக்கண நிதானம், அனுபவ, கையாட்சி முறைகள் என்பவற்றை விருப்புடன் கற்றுணர்வோனே உயர் வைத் இயன் என்கிறார். -
மேலும் மருத்துவன் நோயாளியால் இரக்கமுடையவனாக இருக்க வேண்டும் என்கிறார். இரக்கம் இரண்டு விதமாக ஏற்படலாம். நோயாளியின் துன்பத்தைக் கண்டு இரக்கப்படுவது (Sympathy) என்பது ஒன்று நோயாளியின் துன்பத்தைத் தன் துன்பமாகக் கரு es (Empathy) uobos Io கருணையின் உயர்நிலை. இத னையே மருத்துவனின் சிறப்பாகக் கூறுகிறார்.
ஆயுள் வேதியர் தங்கட்கருங்குறி
தாயினு முயிர்கட்குத் தயவுளான் நோய் பிறர்க் கெனிற் றன்னுடனோயென ஆய்வனேலவனே யருளாளனே'19
திருவள்ளுவர் கூட இதே கருத்தைப் பின்வருமாறு வலியுறுத்தி உள்ளது நோக்கற்குரியது

s
*அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின்நோய்
தன்நோய் போல் போற்றாக் கடை"11
மேலும் வைத்தியன் பொறாமை, பிறர் பொருள் மேல் இச்சை, மயக்கம், சோம்பல் முதலிய குணங்கள் இல்லாதவனாகவும் திடமான நெஞ்சமுடையவனாகவும் இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
பதார்த்தங்களின் குணங்களைப் பற்றிக் கூறுகையில் இருபாலைச் செட்டியாரின் பதார்த்த குண குடாமணியைப் போலவே மூலிகை களின் செய்கைகளை விளக்கிக் கூறியுள்ளார். எனினும் பதார்த்த குண சூடாமணியில் கூறப்பட்டுள்ளது போல் சோற்று வகை, உலோக வகை, மீன் வகை, பறவை வகை, கடைச்சரக்கு வகை போன்றன அதிகம் இடம்பெறவில்லை.
உக்கிர காண்டத்தில் மானிட சிகிச்சை, தேவ வைத்தியம், அரக் கர் வைத்தியம் என்னும் மூன்று வகை சிகிச்சை முறைகளையும் கூறியுள்ளார். மானிட சிகிச்சை என்னும் போது சாதாரண குடினிர், சூரணம், மாத்திரைகள், எண்ணெய்கள் என்பவற்றைக் கொண்டு செய்யப்படும் சிகிச்சை முறைய்ாகும். தேவ வைத்தியம் என்பது பஸ்பம், செந்தூரம் முதலிய உயர் மருந்துகளைக் கொண்டு செய் யப்படும் சிகிச்சையாகும். இதில் சித்தர்கள் பற்றியும் காயசித்தி பற்றியும் நூலாசிரிபர் கூறியிருப்பதானது சித்த மருத்துவ மரபை அவர் பின்பற்றிள்ளதை தெளிவாக எடுத்துக் காட்டுவதாக உள் ளது. 12
அரக்கர் வைத்தியம் என்பது கட்டி, கட்டு, கழல்ை, விரணம் முதலியவற்றை வெட்டுதல், சுடுதல், கீறுதல், பிடித்தல் போன்ற அறுவைச் சிகிச்சை முறைகளை குறிப்பதாக அமையும்.19
உக்கிர காண்டத்தில் முக்கியமாக தலைமுதல் பல்வேறு அங்கங் களில் ஏற்படும் வியாதிகளுக்குரிய சிகிச்சை முறைகள் முக்கியமாக காதடைப்பு, கரப்பன், உதட்டு ரோகம், நாசிகாபீடம், பீனிசம், தும்மல், நாசியரிப்பு, பற்புழு, நாப்புற்று, அரோசகம், விக்கல் கொட்டாவி, விற்புருதி, இருமல், கண்டக்கரப்பன், சயரோகம், காதுக்கட்டு, கூவைக்கட்டு, மாந்தை, கண்டவாயு, மார்புவலி, நாவ ரட்சி, முலைக்கட்டு, இதயசல்லியம், உட்குத்து, வர ஸ்வாயு, காசம் விஷ அசீரணம், அட்டகுன்மம், உதரவாயு, மேகரோகம், வண்டு கடி, நிதம்பசூலை, மலட்டு ரோகங்கள், பெரும்பாடு மூல1ோகக் கிரகணி, பெருவியாதி, நகச்சுற்று, சிலந்தி, சன்னி 13, வெட்டுக்காயம் போன்ற பல்வேறு வியாதிகளுக்குரிய சிகிச்சை முறைகள் கூறப்பட்டுள்ளன.

Page 43
60
மேலும் இரசம் முதலிய பாஷாண மருந்துகளின் பிரயோகம், கத்தி முறைகள் (Purifications), நாகபாம்பு முதலிய பிராணிகளின் பித்தத்தைச் சேர்த்துச் செய்யப்படும் பைரவ மருந்துகள் என்பனவும் பத்திய முறைகளும் கூறப்பட்டுள்ளன.
செளமியம் என்றால் சாந்தம் என்று பொருள். எனவே சௌமிய காண்டத்தில் கடும் மருந்துகளோ, கடுமையான பத்திய முறைகளோ வலியுறுத்தப்படவில்லை. இதில் முக்கியமாக பலவீனம் ஆனவர்களுக்கு உதாரணமாக குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர், உடல் இளைத்தவர்கள் போன்றவர்களுக்கான எளிய சிகிச்சை முறை கள் கூறப்பட்டுள்ளன. கடும் பத்தியங்களும் இங்கு வலியுறுத்தப்பட வில்லை.
"சிசுக்கள் நோயுறினுங் கெர்ப்பத்
தெரிவை நோயுறினும் புல்லார்
பசுக்கள் நோயுறினும் காளைப்
பருவம் போய்க் காலைக்கையை
அசைக்கவும் வலிமையில்லா
வறமுதிர் விருத்தருக்கும்
பொசிப்பிலா தொடுங்கினோர்க்கும்
புரிவது செளமியந்தான்"14
அரிய பல விடயங்களைக் கொண்டுள்ள இந்நூல் யாழ்ப்பாண வைத்தியர்களிடையே 'பெயரளவில்" மட்டும் பிரபல்யமாக இருப்பது வியத்தற்குரியது. இதன் பாவனையை வெகுசிலரிடையேதான் காணக் கூடியதாக உள்ளது.
ஆதாரக் குறிப்புகள்
1. பொன்னையா. ஐ. (பதிப்பாசிரியர்) சொக்கநாதர் தன்வந்திரியம், ஏழாலை திருஞானசம்பந்தர் அச்சுயந்திரசாலை 1933 முகவுரை 2 உத்தமராயன் க. சு. தோற்றக்கிரம ஆராய்ச்சியும் சித்தமருத் துவ வரலாறும், தமிழ்நாடு அரசு வெளியீடு 1978 பக். 332 - 333
3 பொன்னையாபிள்ளை ஐ. இருபாலைச் செட்டியார் வைத்திய
விளக்கம், 1927 பக். 21
4. மேற்படிநூல் பக். 18

0.
l,
12,
1Ꮽ .
4.
6
மேற்படிநூல் பக். 20
சொக்கநாதர் தன்வந்திரியம் வாகடத்தொகுப்பு, நூலாசிரி பரிடம் உள்ளது சொக்கநாதர் தன்வந்திரியம் நூல், செளமியகாண்டம், பகி, 211 =
Il Gruiu. 210 மேற்படிநூல் பாயிரம் பக். 8 செய், 35 மேற்படிநூல் உக்கிரகாண்டம் பக். 132 செய், 717 மேற்படிநூல் பக், 6 செய். 19 திருக்குறள் - காமத்துப் பால் 315 சொக்கநாதர் தன்வந்திரியம் பக். 108-109 மேற்படிநூல் பக் 98, 99 மேற்படிநூல் செளமியகாண்டம் பக் 147 செய் 4
இந்நூலின் பூரணமான ஏட்டுப் பிரதி ஒன்று Dr. K. பால சுப்பிரமணியம், இணுவில், அவர்கள் தந்துதவினார். அவருக்கு நன்றிகள்,

Page 44
10. கிறிஸ்தவ பண்டிதர் வைத்திய நூற்றிரட்டு
ஈழத்துச் சித்தமருத்துவ வளர்ச்சியில் கிறிஸ்தவ பண்டிதர்களின் பங்களிப்பும் கணிசமாக இடம் பெற்றுள்ளது. பிற்காலத் தமிழிலக் கியத்தில் கிறிஸ்தவ பெரியார்கள் பலர் எவ்விதம் அரும்பணியாற்றி னார்களோ அவ்விதமே தமிழர் மருத்துவ வளர்ச்சிக்கும் அருந்தொண் டாற்றியுள்ளார்கள். சென்ற நூற்றாண்டில் இங்கு ஆங்கில மருத்து வத்தைப் பரப்புவதில் முக்கிய இடம் வகித்த சாமுவேல் F. கிறீன் அவர்கள்கூட இங்குள்ள பல தமிழ் வைத்திய நூற் சுவடி களை ஆராய்ந்து, அவற்றின் உண்மைகளைத் தமது தாயகத்திற்கு அனுப்பி வைத்தார் என்று கூறுபவர்களிற் பலர் இன்றும் எமது மத்தியில் இருக் கிறார்கள். அது எவ்வளவு தூரம் உண்மையானது என்று தெரிய வில்லை.
ஆனால், கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றிய பல பண்டிதர்கள் யாழ்ப்பாணத்தின் பல பாகங்களிலும் தமிழ்ச் சித்த மருத்துவத்தில் தேர்ச்சிபெற்று மக்கள் பிணி தீர்த்து வந்துள்ளார்கள். அவர்களிற் சிலர் அபூர்வமான வைத்திய நூல்களை எழுதியுமுள்ளார்கள். அவற்றுட் சிலவற்றையே "கிறிஸ்தவ பண்டிதரின் பாவனையிலிருந்த வைத்தியநூற்றிரட்டு' என்ற பெயரில் பதிப்பிக்கப்பெற்ற நூலில் காணக்கூடியதாகவுள்ளது. இந்நூலின் பதிப்பாசிரியர் யார் என்பது தெரியவில்லை. இந்நூல் அச்சுவேலி ஞானப்பிரகாச யந்திரசாலையிற் பதிப்பிக்கப்பெற்றுள்ளது. (இதுபோலவே, "சுதேச வைத்திய அவு டதத் திரட்டு' என்னும் நூலும் மேற்படி அச்சகத்தால் வெளியிடப் பட்டுள்ளது. அதன் பதிப்பாசிரியரும் யார் என்று அறியமுடியாதுள் ளது.) இவ்விரு நூல்களினதும் பதிப்பாசிரியர் ஒருவரேயென்றும் அவர் அச்சுவேலியைச் சேர்ந்த கிறிஸ்தவர் என்றும் ஆனால் அவர் ஒரு வைத்தியரல்லர் என்றும் கூறுவர்.1 பதிப்பாசிரியர் யாராக இருப்பி னும் அவரின் சேவையால் இச் சிறந்த சித்த மருத்துவ நூல்கள் எமக் குக் கிடைத்துள்ளன.
மேற்படி வைத்திய நூற்றிரட்டில் 1. வயவை பூரீபிரான்சீஸ் பண்டிதர் இயற்றியதும் திருத்தியது மானநூல். 2. பண்டத்தரிப்பில் வசித்த டிரீ பெரிய சமரக்கோன் முதலியாரியற்றிய நூல். 3. இராச ரிஷி வீரமாமுனிவர் இயற்றிய 'நசகாண்ட வெண்பா' ஆகிய மூன்று நூல்கள் இடம்பெற்றுள்ளன. இதில் மூன்றாவதாகக் கூறப்பட்டுள்ள நூல் ஈழத்து நூலா என்பது தெளிவாகவில்லை. சித்தமருத்துவ மர

63
பைப்பேணி இவர்கள் நூலியற்றியிருப்பது ஒரு சிறப்பு அம்சமாகும். இந்நூல்களில் முக்கியமாக நாடிவிதி, பண்டிதரிலக்கணம், மருந்து பலியாதோர். சகுனசாஸ்திரம், பேய், பில்லி, சூனியம் ஆகியவற்றில் நம்பிக்கை வைக்கக்கூடாது, சென்மக்குறி (தேகதத்துவம்) முத்தோ ஷக்குறி, மரணக்குறி போன்ற அடிப்படைத் தத்துவங்களும், பல் வேறு நோய்களுக்குரிய மருந்துகளும் கூறப்பட்டுள்ளன.
தமிழகச் சித்தமருத்துவ நூல்களிலும்சரி ஒருவர் வைத்தியத் தொழிலில் ஈடுபட வேண்டுமானால் அதற்கு அவர் கொண்டிருக்க வேண்டிய அடிப்படைத் தகைமைகள், கற்றுத்தேற வேண்டிய நூல் கள், வைத்தியம் செய்யும்போது கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறை கள் (Medical Ethics) வைத்தியன் தனது கடமையிலிருந்து தவறும் போது அவனுக்குரிய தண்டனைகள் என்பனபற்றி வலியுறுத்திக் கூறப்பட்டுள்ளது. அக்கால வைத்தியர்கள் தமது மனச்சாட்சிக்குப் பயந்து கடமை புரிந்து வந்தமையால் இவ்விதிமுறைகளுக்கு அவசியம் அதிகம் இருந்திருக்காது. ஆனாலும் வருங்காலத்தில் தகுதியற்றவர் களின் கைகளில் மருத்துவம் சிக்கிச்சீரழிந்து விடாமல் இருக்க வேண் டும் என்ற தீர்க்கதரிசனத்துடன் அவர்கள் ஒவ்வொருவருமே தமது நூலில் இவற்றைக் குறிப்பிட்டுள்ளனர் போலும், கிறிஸ்தவ பண்டிதர் களும் சித்தர் வழியில் அவற்றை வலியுறுத்தியுள்ளனர். எடுத்துக் காட்டாகப் பின்வரும் பாடலைப் பார்க்கலாம்.
கருவழித்திட மருந்து கொடுக்கலாகா
சனமயக்குஞ் செய்மருந்து காட்டலாகா வரு பெல்லி சூனியத்தை நம்பலாகா
மாற்றுவோமதை யென்று வழுத்தலாகா பெருமுழக்கிட்டஞ்ஞானக் கிரியை செய்வார்
பேதமைக்கனுசரணை செய்யலாகா குருபரணை யெந்நாளும் வணங்கிப் போற்று குற்றமறு மோட்சமதிற் குலவுவாரே'2
மேலும் சுமார் பத்து செய்யுட்களில் மருத்துவனிலக்கணம், கடமைகள் பற்றிக் கூறப்பட்டுள்ளது.8
அடுத்து, சித்தமருத்துவ நூல்களில் கடவுள் நம்பிக்கை வலி யுறுத்தப்பட்டுள்ளதுடன் மூடநம்பிக்கைகள் கண்டிக்கப்பட்டுள்ளதையும் காணக்கூடியதாக உள்ளது. சித்தர்கள் சமய சமரச நெறிநின்று இறை வனையடைய வழிகாட்டிய மதவாதிகளாகக் கருதப்படுகின்றனர். அவர்கள் மதநம்பிக்கையுடையவர்களாக இருந்த காரணத்தாலேயே சித்தமருத்துவத்திலும், "பிரார்த்தனை சிகிச்சை" அதாவது மருத்து

Page 45
64
வன் கைவிட்ட நிலையிலும் ஆண்டவன் கைவிடமாட்டான் என்ற உயரிய நிலை பேணப்படுகிறது. வைத்தியனியல்பு பற்றிக் கூறும் போதுகூட, கடவுள் நம்பிக்கை வலியுறுத்தப்படுகிறது. ஏனெனில் வைத்தியனாயினுஞ்சரி, நோயாளியாயினுஞ்சரி கடவுளிடத்தில் நம் பிக்கை வைக்கவேண்டும். கடவுள் நம்பிக்கையற்ற நிலையில் வைத்தி யம் பயனளிக்காது.
* கற்ற குருவாக்குங் காதலித்த வாகடமும் பற்றுக்கோலொன்றே பரிகாரம் - முற்ற அவன் பொறுப்பல்லா லொன்று மாவதில்லையென்றே இவனுணரக் கீர்த்தி இங்கு"4
அதேநேரத்தில் மக்களின் மூடநம்பிக்கைகளைக் கேலிசெய்து கண் டிக்கவும் சித்தர்கள் தயங்கவில்லை.
"தங்கள் தேக நோய்பெறில் தனைப் பிடாரிகோயிலில் பொங்கல் வைத்து ஆடுகோழி பூசை பலியிட்டிட நங்கச் சொல் நலிமிகுத்து நாளுந்தேஞ்சி மூஞ்சூறாய் உங்கள் குலதெய்வமுங்களுருக் குலைப்பதுண்மையே" என்ற சித்தரின் பாடல் கோயிலிற் பலியிடுவதைக் கண்டிக்கிறது, எனவே, பேய் பிசாசு, மருத்தீடு, பில்லி, சூனியம் போன்ற மூட நம் பிக்கைகள் எல்லாம் சில போலி மதவாதிகளின் சுயநலத்துக்கான கற் பனைகளேயன்றி, உண்மையான மதவாதிகளுடனோ, அல்லது சித்த மருத்துவத்துடனோ எவ்விதத்திலும் சம்பந்தப்பட்டதல்ல என்பதை உணர்ந்து கொள்ளல் வேண்டும்,
ஆயினும் மக்கள் மத்தியில் வேரூன்றிவிட்ட இத்தகைய மூட நம். பிக்கைகளை அவர்களின் அறியாமை என்று கருதியதுடன், அத்தகைய சந்தர்ப்பங்களில் "மனம்" பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதற்குரிய மருத் துவ முறைகளையும் சித்தர்கள் கூறிவைத்துள்ளனர் என்பது குறிப் பிடத்தக்கது.
சித்தர்வழி வைத்தியத்தைப் பின்பற்றிய கிறிஸ்தவ பண்டிதர் களும் அன்னை மரியாள், அந்தோனியாரைத் துதித்து வணங்கித் தமதுநூலை ஆரம்பித்து, சமய சமரச நிலையில் நின்று மருத்துவம் போதித்துள்ளதைக் காணக்கூடியதாகவுள்ளது. மேலும் மக்கள் மத்தி யில் நிலவிய மூடநம்பிக்கைகளை அகற்றுவதிலும் இவர்கள் பெரு முயற்சி எடுத்துள்ளார்கள் போல் தோன்றுகின்றது. பி ன் வரும் பாடல்களில் சிறிது நகைச்சுவையுடன் பேய், பில்லி, சூனியம் போன்ற மூடநம்பிக்கைகளைக் கண்டிப்பதைக் காணக்கூடியதாகவுள்ளது.

65
பேயென்று சொல்லுவார் பேயைக் காணார்
பெருகுமுளப் பேதமையே பேயாய்நிற்கும்
நீயொன்றுமிதை நம்பியிருக்க வேண்டாம்
நிறை மனதைத் திருத்திபண்ணு நின்றுபோகும்
வாயொன்றைப் பேசுவதால் வண்மையில்லை மனதாலேயதை யகற்றும் வழியைத்தேடு
போயிற்றென்றெண்ணுதற்கே மயிரைச் சேர்த்துப் பொருந்தாணியடித்ததனைப் போக்குவாரே"
"கழிப்பதனைச் செய்வதாய்ச் சாலஞ் செய்வார்
காரியத்திலதுவு மனுகூலமாகும் m ஒளித்த சூனியமதனை யெடுப்போமென்பார்
உற்ற விந்தச் சாலமும் பலித்துப்போகும் விழித்திருந்து பார்த்திட்டா லொன்றுமில்லை விகடமதினாலுள்ளம் மயங்க வேண்டாம் துளிர்த்த பித்தவீறுமதிமயங்குஞ் சேர்ந்தாற்
தொடர் பேயாஞ் சூனியமும் வட்டந்தானே”
"அங்கிங்குமோடியே தேடிப்பார்ப்பார் ܗܝ
அதைவெட்டு மிதை வெட்டு மென்றுசொல்வார்
செங்கையாற் பழையதாய் மயிர்கள் சுற்றித் தேடி வைத்திடும் சுத்த சூனியத்தை
மங்கியதோர் பழையதென்று காட்டுதற்கு
மண்ணுள்ளே புதைத்தெடுத்த பொருளைப் போட்டுத்
தொங்கியே மிதித்ததனை மறைத்துவிட்டுத் துரிதமாய் மறுபடியுங் கிளறென்பாரே'
"ஆராய்ச்சி செய்பவர்களாரும் வந்தா
லன்று சூனிய மெடுக்க வாயாதென்று
சாராயந்தனைப் படைத்துச் சத்திபூசை
தான் செய்வோமென்று நிருவாணமாகப்
பூராயமாயறையிற் புகுந்து கொள்வார்
புத்தியில்லார் சமுகத்திற் சித்திரமாகப்
பார்பாரென்றே பலவிடத்தில் வெட்டிப்
பாசாங்காய்ச் சூனியங் கைப்பற்றுவாரே'
மேற்படி பாடல்களின் கருத்துகள் வெளிப்படையாகவுள்ளதால் அவை இங்கு கூறப்படவில்லை. மக்கள் மத்தியிலுள்ள் இத்தகைய மூடநம்பிக்கைகள் அவர்களின் மனத்தை எவ்விதம் பாதிக்கின்றன என்
9

Page 46
பதை நன்குணர்ந்ததால் மனத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்கள். உளவியல் ரீதியிலான விழிப்புணர்ச்சிக்கு சித் தர்களைப் பின்பற்றி இவர்களும் முக்கியத்துவம் கொடுத்துள்ளதைக் காணக்கூடியதாகவுள்ளது.
அடுத்து, இவ் வைத்தியநூற்றிரட்டிற் காணப்படும் மருந்துகளின் எண் ணிக்கை சொற்பமாக இருக்கின்ற போதிலும், அவற்றினால் தீரும் ரோகங்கள், பத்தியாபத்தியங்கள் என்பனபற்றி தெளிவாகக் கூறியுள் ளமையும் கவனிக்கத் தக்கது. சிறுவர் கோரோசனை மிருத்தியாதி, சந்தனாதித்தைலம், தாழங்காய் எண்ணெய், சாராய ஊறற் சூறணம், வேர்க்கொம்புச் சூறணம் போன்ற சிறந்த மருந்துகளை இந்நூலின் கண் காணக்கூடியதாகவுள்ளது.
ஆதாரக் குறிப்புகள்
1. நடராஜா ஆ. (தகவல்) வைத்திய கலாநிதி, கந்தரோடை,
சுன்னாகம், ܫ
2. கிறிஸ்தவ பண்டிதர் வைத்திய நூற்றிரட்டு பக் 10. செய் 7.
மேற்படி நூல் பக் 7-8
4. சண்முகவடிவேல் M. - சித்தமருத்துவ நோய்நாடல் நோய் முதல்
நாடல் திரட்டு, தமிழ்நாடு அரசுக்காக, தமிழ் நா டு எழுது
பொருள் அச்சுத்தொழில் நெறியாளரால் பதிப்பிக்கப்பெற்றது, 1967, š. 86.
5. கிறிஸ்தவ பண்டிதர் வைத்தியநூற்றிரட்டு, பக் 10. செய்3-6.
* இந்நூலை எனக்குப் பார்வையிடத் தந்தவர் Dr. சோ. சபாநாதன் சுதேச வைத்திய அபிவிருத்திச் சங்கத் தலைவர் ஆவார். அவருக்கு எனது நன்றிகள்,

11. பிறநூல்கள்
1. வைத்திய சிந்தாமணி
ஏழாலை ஐ. பொன்னையா அவர்களால் 1932 இல் ஏழாலை திருஞானசம்பந்தர் அச்சியந்திரசாலையில் பதிப்பிக்கப்பெற்ற இந் நூலின் ஆசிரியர் யார் என்பது தெரியவில்லை. ' அரியதொரு வசன நூல், ஏட்டுப்பிரதியில் உள்ளது" என்று பதிப்பாசிரியர் இந்நூலை விளம்பரப்படுத்தியுள்ளார்.
இந்நூலில் அட்டவிதப்பரீட்சை என்ற தலைப்பின்கீழ் ஒரு நோயா ளியைப் பரீட்சிக்க வேண்டிய எட்டு விடயங்களான நாடி, பேச்சு, நாக்கு, கண், சருமம், மலம், சலம், நிறம் என்பனபற்றியும் (அட்ட ஸ்தான பரீட்சை என்றழைப்பதுதான் பொருத்தமுடையது போல் தோன்றுகிறது) ரோகங்களில் அசீரணம், சுரம், சன்னி, வாத, பித்த, கபதோஷங்கள், அதிசாரம், உவாந்தி, விக்கல் என்பன பற்றியும், அறி வுடையோர்க்கடாதன, வைத்தியம் செய்யத்தகுந்தவன் பற்றிய விப ரங்களும், இலங்கண விதியின் கீழ் பட்டினி இருக்க வேண்டிய நிலை மைகள், முறைகள் பற்றியும் கூறியுள்ளதுடன் கஷாய விதியின்கீழ் பல் வேறு நோய்களுக்கான கஷாயங்களையும், சரக்குச் சுத்தியின்கீழ் (Purification) மருந்துச் சரக்குகளைச் சுத்தி செய்வது பற்றியும், பற்ப சிந்துார விதியின்கீழ் பல்வேறு பற்ப செந்தூரங்களையும், மாத்திரை விதியின்கீழ் மாத்திரைகள் பலவற்றையும் குறணவிதின்கீழ் குறணங் கள் பலவும், கிருதவிதியின் கீழ் பல்வேறு நெய்களையும் (Medicated ghee) இரசாயன விதியின்கீழ் பல்வேறு இரசாயனங்கள் பற்றியும் கற்ப விதியின்கீழ் கற்ப மருந்துகள் பற்றியும் கூறப்பட்டுள்ளது. மேலும் கண் மருந்துகள், தைலங்கள் (Medicated oil) பற்றியும் கூறப்பட்டுள்ளது.
2. வைத்தியத் தெளிவு
வைத்தியத் தெளிவு" (அனுபந்தத்துடன்) - செட்டியார் இயற் றியது என்ற குறிப்புடன் ஐ. பொன்னையா இந்நூலைப் பதிப்பித் துள்ளார் 1 எனினும் செட்டியார் என்று இங்கு குறிப்பிடப்பட்டவர் வைத்திய விளக்கம் எழுதிய இருபாலைச் செட்டியாரா? அல்லது தீவுப் பகுதியில் வசித்த முத்துச் செட்டியாரா? என்ற சந்தேகத்தையும் பதிப் பாசிரியர் கிளப்பி அதைத் தீர்க்க முடியாதநிலையில் சீசெட்டியார்" என்று பொதுவில் குறிப்பிட்டுள்ளார்.2

Page 47
68
எனினும், அரசாங்க வெளியீடான ஆயுள்வேத (சித்த?) அவுடத சங்கிரகம் 3 என்னும் நூலில், இதிலிருந்து எடுத்துத் தொகுக்கப்பட்ட பறங்கிக்கிழங்குச் சூறணம், வெள்ளைவெங்காய லேகியம் என்பனவற் றிற்கான மூலநூலாக "இருபாலைச் செட்டியார் வைத்தியத் தெளிவு" என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது கவனத்திற்குரியது.
வைத்தியத் தெளிவானது 500 செய்யுட்களையுடையது என்று கூறப்படுகிறபோதிலும் சுமார் 200 செய்யுட்கள் வரையிலேயே வெளி யிடப்பட்டுள்ளன.
இந்நூலிலும் நாடிபற்றியும், முத்தோஷங்கள், சில பொதுவான நோய்கள் பற்றியும் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளதுடன் அவற்றுக்கான மருந்துகள் பத்தியத்திற்கு ஆவன, ஆகாதன பற்றியும் கூறப்பட்டுள்ளது.
3. வைத்திய பூரணம் 205 சூத்திரம் 25
இது ஒரு ஈழத்துச் சித்தமருத்துவ நூலல்ல. ஆயினும் யாழ்ப் பாணத்தவரால் பெரிதும் கையாளப்பட்டு வந்தகாரணத்தால் இதைத் தாம் பதிப்பித்துள்ளதாக ஐ. பொன்னையா அவர்கள் அதன் முக வுரையில் குறிப்பிட்டுள்ளார். அகத்திய முனிவர் அருளிச்செய்த வைத் திய பூரணம் - 205 என்று நூலுக்குப் பெயரிட்டுள்ளபோதிலும், சில கையெழுத்துப் பிரதிகளில் தகதிணாமூர்த்தி சுவாமிகள் அருளிய வட கோவை 205 என்றும் வடகோவை 295 ற் குத்திரம் 25 என்றும் குறிப் பிடப்பட்டுள்ளதாகவும் பதிப்பாசிரியர் சுட்டிக் காட்டியுள்ளார். இந் நூலானது யாழ்ப்பாண மருத்துவர்களாற் கையாளப்பட்டுவந்த பல பற்ப செந்தூரங்கள், நீறுகள், தைலங்க்ள் என்பனவற்றை அடக்கி யுள்ளது.
தமிழகச் சித்தமருத்துவ முறைகள் இங்கு பரவியிருந்தன என்ப தற்கு இந்நூல் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். மேலும் தகதிணா மூர்த்தி சுவாமிகள் குருநாடி 250, தக்ஷஷிணாமூர்த்தி சுவாமிகள் வைத் தியம் 500, தக்ஷஷிணாமூர்த்தி சுவாமிகள் வைத்தியம் 200, அகத்தியர் சாரப்போக்கு போன்ற நூல்களும் இங்கு வழக்கிலிருந்ததாக ஐ. பொன் னையா அவர்களின் முகவுரையிலிருந்து அறியக்கூடிவதாக உள்ளது.4
4. சுதேச வைத்திய அவுடதத்திரட்டு
யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு வைத்தியர்களால்
மரபுவழியாகக் கையாளப்பட்டுவந்த பல மருத்துகளை அடக்கிய தொகுப்பாக இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. ஆயினும் இதில் தொ

குத்துக் கூறப்பட்ட மருந்துகளின் மூல நூல்பற்றிய விபரம் எதுவும் குறிப்பிடப்பட்டில்லை. இதிற் கூறப்பட்டுள்ள சிவகரந்தைச் சூறணம், கொத்தமல்லிச் சூறணம், பஞ்சதீபாக்கினிச் சூறணம், தசமூலச் குறணம், பெரியபற்பம் (பெரிய வேர்க்கொம்புச் சூறணம்) நந்தீகரசித்தாமணி சின்னச் சிவப்புக்குளிகை, சின்னப் புன்னை வேர்க்குளிகை, சிவன்குவிகை (ஈசுரகுளிகை), பெரிய சிவப்புக்குளிகை, நயனவிதிஎண்ணெய் போன்ற மருந்துகள் இன்றும் யாழ்ப்பாண மருத்துவர்களிடையே கைகண்ட மருந்துகளாக விளங்குகின்றன. *
5. ஆயுள்வேத (சித்த ?) அவுடத சங்கிரகம்
ஆயுள்வேத அவுடத சங்கிரகம் என்ற பெயரில் சித்த அவுடத செய் முறைகள் பற்றிய நூலொன்று அரசாங்க வெளியீடாக ஆயுள்வேத சங்கிரக சபையின் அனுசரணையுடன் வெளிவந்துள்ளது. எனினும் இந்நூலானது பரராசசேகரம், இருபாலைச் செட்டியார் வைத்திய விளக்கம், வைத்தியத் தெளிவு, சுதேச வைத்திய அவுடதத்திரட்டு, சில ஏட்டுப்பிரதிகள் என்பவற்றையும் தென்னிந்திய சித்தமருத்துவ நூல் களான சித்த வைத்தியத்திரட்டு, தேரையர் தைலவர்க்கச் சுருக்கம் போன்றவற்றிலிருந்தும் தெரிந்தெடுக்கப்பட்ட மருந்துகளின் தொகுப் பாகவே அமைந்துள்ளது. • ,
மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் பழைய தமிழ் மருத்துவ நூல்களில் கூறப்பட்டுள்ள அளவைகள்ைத் தற்காலத்துக்குரிய முறை யில் மாற்றியமைக்க வழிகாட்டியிருப்பதும் மருந்துகளின் செய்முறை விதிகளைத் தெளிவுபடக் கூறியிருப்பதும் இந்நூலிற் காணப்படும் சிறப்பு அம்சங்களாகக் கொள்ளலாம்.
குறிப்பு:
யாழ்ப்பாணத்தவராற் செய்யப்பட்ட அல்லது வெளியிடப்பட்ட வேறும் பல மருத்துவ நூல்களிருக்கின்றன. அவற்றுட் பெரும்பா லானவை பரராசசேகரம், செகராசசேகரம், இருபாலைச் செட்டியார் வைத்திய விளக்கம் போன்ற நூல்களைத் தழுவி எழுந்தனவாக (தொகுக்கப்பட்டனவாக) இருப்பதால் அவற்றைத் தனிநூலாய்வு செய் வது இங்கு அவசியமற்றது. பாலவைத்தியத்திரட்டு, சித்தவைத்திய சிகிச்சைக்கிரமம்7, அனுபவமுள்ள குடிநீர் வகைகள் 8 போன்ற நூல் களையும், மறைந்த வைத்தியர்களின் நினைவுகளைப் போற்றுமுகமாக எழுந்த பல சிறுநூல்களையும் இதில் அடக்கலாம்.
0

Page 48
7ο
ஆதாரக் குறிப்புகள்
பொன்னையா ஐ (பதிப்பாசிரியர்) " வைத்தியத்தெளிவு, அனு
பந்தத்துடன் " செட்டியாரியற்றியது - திருமகள் அச்சுயந் திரசாலை, சுன்னாகம் 1930,
மேற்படிநூல் - நூன்முகம்
பொன்னையா எஸ். எம். சபாபதிப்பிள்ளை .ஐ, ஆயுள்வேத அவு டத சங்கிரகம், ஆயுள்வேத திணைக்கள வெளியீடு. பக் 21, 59
பொன்னையா .ஐ (பதிப்பாசிரியர்). அகத்தியமுனிவர் அருளிச் செய்த வைத்திய பூரணம் 205, திருஞானசம்பந்தர் அச்சுக் கூடம் மல்லாகம். வெகுதானிய வருடம் கார்த்திகை மாதம்.
சுதேச வைத்திய அவுடதத்திரட்டு, அச்சுவேலி ஞானப்பிரகாச
யந்திரசாலை,
கந்தையாபிள்ளை க. வே. - பாலவைத்தியத் திரட்டு, அக்ஷய
வருடம் வெளியிட்டது.
முத்தையா ஜோன் W. சித்தவைத்திய சிகிச்சைக்கிரமம் (ஒா
குறிப்பு வழிகாட்டி), 1972,
இராசையா ஏ. சி. அனுபவமுள்ள குடிநீர் வகைகள், (அனுபவத் தொகுப்பு), வெளியீடு, வைத்திய கலாநிதி வேலாயுதம்பிள்ளை குகளுமுர்த்தி, கந்தர்மடம், யாழ்ப்பாணம் 1985.
வைத்தியத்தெளிவு. அகத்தியமுனிவர் வைத்திய பூரணம் 205 ஆகிய நூல்களைப் பார்வையிடத் தந்துதவியவர் சித்தமருத்து வத்துறைத் தலைவர் Dr. சு. பவானி அவர்களாவர். அவருக்கு எனது நன்றிகள்,

முடிவுரை
ஈழத்துச் சித்தமருத்துவ நூல்கள் பற்றிய இச் சிறு ஆய்விலிருந்து நாம் பின்வரும் முடிவுகளுக்கு வரக் கூடியதாக இருக்கிறது.
பதினேழாம் நூற்றாண்டு வரை யாழ்ப்பாண அரசரின் ஆதர வுடன் சித்தமருத்துவம் இங்கு சிறப்புற்று விளங்கியது. அக்காலத்தில் வடமொழி, தமிழ்மொழியிற் புலமைமிக்க சிறந்த மருத்துவர்கள் பலர் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களின் உதவியுடனும் அரச அங்கீகாரத் துடனும் தொகுக்கப்பட்ட நூல்களே யாழ்ப்பாணத்தவரால் இன்றைக் கும் பெரும் பொக்கிஷமாகப் பேணிப் பாதுகாக்கப்பட்டு வரும் பரராசசேகரம், செகராசசேகரம் ஆகிய தமிழ் மருத்துவ நூல்களாகும்.
யாழ்ப்பாண அரசின் வீழ்ச்சியுடன் தமிழர் மருத்துவம் அரச ஆதரவை இழந்து, தனிப்பட்ட மருத்துவர்களின் கைகளில் தங்கி வளரவேண்டிய நிலைக்கு உள்ளானது. அந்நியர் நாட்டைக் கைப் பற்றியதால் நிலவிய யுத்தச் சூழல், அவர்களின் மேலாதிக்கம், மக்கள் இடம் விட்டு இடம் பெயர்ந்து வாழவேண்டி ஏற்பட்ட சம்பவங்களில் மருத்துவத்தினதும் மருத்துவர்களினதும் தேவை மிகுதியாவது இயல்பு. எனவே, இக்காலத்திலும் மருத்துவத்திற் சிறந்த பல பண்டிதர்கள் மக்களுக்குச் சேவையாற்றியுள்ளார்கள், பல தமிழ் வைத்திய நூல் கள் இக்காலத்தில் தோன்றியுள்ளன.
அமுதாகரம், சொக்கநாதர் தன்வந்திரியம், இருபாலைச் செட்டி யார் வைத்திய விளக்கம், பதார்த்த சூடாமணி முதலிய நூல்கள் இக் காலத்திலேயே தோன்றின. சொக்கநாதர் தன்வந்திரியம் நூலாசிரிய ரின் வேறும் பலநூல்கள் வழக்கிலிருந்ததாக அதன் பதிப்பாசிரியர் ஐ. பொன்னையா தமது முன்னுரையில் குறிப்பிட்டுள்ள போதிலும் அவை எதுவும் இதுவரை கிடைத்திலது.
இங்ங்ணம் யாழ்ப்பாண மன்னர்களாலும், தனிப்பட்ட மருத்துவப் பெருந்தகைகளாலும் பாதுகாக்கப்பட்டு வளர்க்கப்பட்ட சித்தமருத்துவ மானது ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தில் ஆங்கில வைத்தியம் இங்கு புகுத்தப்பட்டதுடன் தனது முக்கியத்துவத்தை இழக்கவாரம்பித்தது எனலாம். முக்கியமாக அமெரிக்காவைச் சேர்ந்த சாமுவேல் F. கிறீன்

Page 49
(Samuel F. Green M. D) Syayi ssir gav råvarası(GaoGau ypassiv முதலில் யாழ்ப்பாணம் மானிப்பாயில் (1848 இல்) ஒரு ஆங்கில வைத்தியக் கல்லூரியை நிறுவியதுடன், தமிழ் மொழியில் தமது மருத்துவ நூல்களைப் பிரசுரிக்க நடவடிக்கை எடுத்தார். இச்செய லானது ஒருவகையில் சித்தமருத்துவத்தின் வளர்ச்சியைக் கட்டுப் படுத்தியதுடன் புதிய சித்தமருத்துவ நூல்கள் உருவாவதையும் பாதித்தது எனலாம்.
றிென் அவர்கள் தமது மருத்துவ நூல்களின் தமிழாக்கம் இங் குள்ள மக்கள் மத்தியிலும் மருத்துவர்கள் மத்தியிலும் பழக்கத்தி லிருந்த கலைச் சொற்களைக் கொண்டதாக அமைய வேண்டும் என்று விரும்பினார். அவரின் முயற்சியால் அங்காதி பாதம், இந்துபதார்த்த சாரம், இரணவைத்தியம் என்னும் நூல்கள் தமிழாக்கம் செய்யப் பட்டு வெளியிடப்பட்டன. அவற்றை வாசிப்போர் கிறீனின் நோக் கத்தை நன்கு உணர்ந்து கொள்ளலாம். இரண வைத்தியம் என்னும் மொழி பெயர்ப்பு நூலில் அதன் நூன்முகத்தில், "இப்புத்தகம் தமிழ்ப்பாஷையில் இருக்கிறது. எவ்வளவு தேவையோ அவ்வளவாய்த் தமிழ்த் தேச வழக்கங்களுக்கும் ஏற்றதாக இருப்பது அவசியம்' என்று விளக்கியுள்ளார்.2
ஆங்கில அரசாங்கத்தின் அனுசரணையுடன் அரச வைத்தியம் என்ற அங்கீகாரமும் பெற்றிருந்த ஆங்கில வைத்தியமானது கிறீன் போன்றவர்களின் முயற்சியால் இவ்விதம் கற்பிக்கப்பட்டதால் சித்த வைத்தியம் எவ்வளவு தூரம் பாதிக்கப்பட்டிருக்கும் என்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம். அதுமட்டுமன்றி, ஆங்கில வைத்தியத்தை எமது மரபுகளுக்கமைய தமிழில் கற்பிக்க கிறீன் அவர்கள் மேற் கொண்ட முயற்சி காலப்போக்கில் தமிழ் வைத்திய சிகிச்சை முறை களில் ஆங்கில வைத்திய முறைகள் கலப்பதற்கு வாய் ப் பாக அ  ைமந்து விட்டது போல் தோன்றுகின்றது. ஏனெனில்அரச ஆதரவை இழந்து சோர்ந்திருந்த சித்த வைத்தியர்கள், படிப் படியாக ஆங்கிலேய கலாச்சாரத்துக்கு மாறிக்கொண்டிருந்த தமிழ் சமுதாயத்துக்குச் சிகிச்சையளிக்க வேண்டிய நிலையில் இருந்தார்கள். நோயாளிகளால் சித்த வைத்தியத்தின் கடுமையான பந்தியங்கள், நடைமுறைகள் என்பவற்றைக் கடைப்பிடித்தல் இயலாதிருந்ததும் இதற்கு ஒரு காரணம் எனலாம்.

73
மானிப்பாயைச் சேர்ந்த C. W. சுப்பிரமணியபிள்ளை என்பவர் 1889 இல் வெளியிட்ட பாலவைத்தியம்3 என்ற நூலில் குழந்தை நோய்களுக்குப் பாவிக்கும் சித்தமருந்துகளான கோரோசனை மாத் திரை, கிர்ந்தி எண்ணெய் முதலியன கூறப்பட்டுள்ளதுடன் அக்காலத் தில் ஆங்கில மருத்துவர்கள் பாவித்த Carminative mixture, Cough mixture, Stimulant mixture G Tsirp grijaео иолigatoir i Joey iћ கூறப்பட்டிருப்பதை இதற்கு நல்லதொரு உதாரணமாகக் கொள்ள லாம். இந்நூல் அச்சுவேலி ஞானப்பிரகாச யந்திரசாலை ஆதினரால் 1931 இல் 3ஆம் முறையாகப் பதிப்பிக்கப் பெற்றதிலிருந்து இதன் பாவனையை உணர்ந்து கொள்ளலாம். அதுமட்டுமன்றி இந்நூலாசிரியர் கிேறீன்" அவர்களின் மாணவர்களில் ஒருவர் என்பதும் குறிப்பிடத் தக்கது?,
இவ்விதம் மேலைத்தேச மருத்துவத்தால் இங்கு சித்த மருத்துவம் செயலிழந்து வந்ததைச் சில பெரியார்கள் உணர்ந்தார்கள். சித்த வைத்தியத்தை அழிந்து போகாமல் காப்பாற்ற வேண்டுமாயின், அதன் அரிய பொக்கிஷங்களான ஏட்டுச் சுவடிகளில் உள்ள விடயங் கள் அச்சில் வெளிவந்து பலபேரையும் சென்றடைய வேண்டும் என்று அவர்களிற் சிலர் கருதினார்கள். அவ்விதம் எண்ணி ஆக்க பூர்வமான நடவடிக்கை எடுத்தவர்களில் ஏழாலை ஐ. பொன்னையா அவர்களின் பங்கு மகத்தானது. அவர் தனது உள்னக் கிடக்கையை இருபாலைச் செட்டியார் வைத்திய விளக்கம் என்ற தமது முதலாவது பதிப்பு நூலில் தெளிவுபடக் கூறியுள்ளார். தீர்க்கதரிசனம் மிக்க அந்த முன்னுரையின் பகுதிகள் ஏற்கனவே எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.
அடுத்து, யாழ்ப்பாணத்தவரால் செய்யப்பட்ட வேறும் பல தமிழ் மருத்துவ நூல்கள் உள்ளதாக ஐ. பொன்னையா போன்றவர்கள் குறிப்பிட்டுள்ள போதிலும் அவற்றின் பெயர்களைத் தன்னும் அறிய முடியாத நிலையில் நாம் இருப்பது வேதனைக்குரிய விடயமாகும்.
வட்டுக்கோட்டையைச் சேர்ந்த இராமசாமி ஐயர் நாகேச ஐயர் என்னும் அந்தணர் இற்றைக்கு 130 வருடங்களுக்கு முன்னர் “ae (ypg நுணுக்கம் என்னும் விஷ வைத்திய நூல் இயற்றியுள்ளார் என்று கூறப்பட்டுள்ள போதிலும் அது பற்றிய விபரங்கள் எதையும் பெற முடியாதுள்ளது.9

Page 50
74
யாழ்ப்பாணத்தில் முறிவு நெளிவு வைத்தியம், நயன ரோக வைத்தியம் (கண் வைத்தியம்), மன நோய்களுக்கான வைத்தியம், கட்டு வைத்தியம் (தோல் வியாதிகள் சம்பந்தமான வைத்தியம்) என்று தனிப்பட்ட துறையில் தேர்ச்சி பெற்று வைத்தியம் செய்த பல வைத்தியர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்களின் பரம்பரையினர் சில ர் அங்குமிங்குமாக அவ் வைத்திய முறைகளைத் தற்போதும் செய்து வருகின்றனர். எனினும் இத் துறை சார்ந்த யாழ்ப்பாணத் துத் தமிழ் மருத்துவ நூல்கள் வெளி வந்ததாகத் தெரியவில்லை. &9· பொன்னையா அவர்கள் பரராசசேகரம் சிாரோக நிதானப் பிரிவில் இலங்கை சிங்கைமன்னன் நயனவிதி என்று குறிப்பிட்டுள்ளபோதும் அது பற்றி மேலும் விபரங்கள் பெற இயலவில்லை. இந்நூலாசிரிய ரிடம் கிடைத்துள்ள ஏட்டுச் சுவடி ஒன்று 'கட்டுவைத்தியம்' சம்பந் தமானதாக உள்ளது. வசன நடையிலுள்ள அவ்வேட்டுச் சுவடியில் சிகிச்சை முறைகளே பெருமளவில் கூற்ப்பட்டுள்ளன. அதிலுள்ள
விடயங்கள் இனிமேல் தான் ஆராயப்பட வேண்டியுள்ளன.
இன்னமும் ஏட்டுருவில் உறங்கிக் கொண்டிருக்கும் யாழ்ப்பாணத் துச் சித்த மருத்துவ நூல்களிற் பல அச்சில் வெளிவர வேண்டிய நிலையிலுள்ளன 'மருத்துவ ஏடுகள் வைத்திருக்கிறோம்" என்று பெருமைக்குக் கூறும் சில மருத்துவர்களும், வைத்திய பரம்பரையின ரும் இன்றும் நம்மிடையே இருக்கத் தான் செய்கிறார்கள். தம்மிடம் உள்ள ஏடு எது? (அதன் பெயர் என்ன?) அதில் என்ன அடங்கி இருக்கிறது? என்றே தெரியாமல் வைத்திருப்போரும் எம்மிடையே உள்ளனர். இந் நூலாசிரியர்பால் நம்பிக்கை கொண்டு சிலர் தம் வசம் வைத்திருந்த ஏட்டுச் சுவடிகளைப் பார்வையிடக் கொடுத்துதவினர் (அதற்காக அவர்களுக்கு நன்றி) வைத்திய ஏடுகள் என்று அவர்கள் கொடுத்தவற்றில் பல வைத்தியத்துடன் தொடர்பற்றன என்பதைக் காணக் கவலையாக இருந்தது. அரிச்சந்திரபுராணம், சிவஞான சித்தி யார், சோதிடம், மாந்திரீகம் சம்பந்தமான ஏடுகளும் மாட்டுவாகடம் ஒன்றும் அவற்றுள் காணப்பட்டன. மேலும் தமிழ் நாட்டுச் சித்தர் களின் வாகடங்களான அகஸ்தியர் 2000, ஆத்மரட்சாமிர்தம், தேரை யர் சி தர் வெண்பா போன்ற சில ஏடுகளும் பரராச சேகரம் சம் பந்தமான பூரணமற்ற ஏட்டுச் சுவடி ஒன்றும் சொக்கநாதர் தன் வந்திரியம் பூரணமான ஏட்டுச் சுவடி ஒன்றும் இந்நூலாசிரியருக்குப் பார்வையிடக் கிடைத்தன.

75
எனவே, ஏட்டுச் சுவடிகளை வைத்திருப்பவர்கள் அதில் என்ன அடங்கியிருக்கிறது என்று கூடத் தெரியாமல் வைத்திருந்து, பெருமை பேசுவதை விடுத்து தகுந்தவர்கள் யாரிடமாவது கொடுப்பதன் மூலம் அவற்றிலுள்ள உண்மைகள் அழிந்து போய் விடாமல் காப்பதற்கு உதவியவர்களாகலாம்.
ஐ. பொன்னையா, ச. தம்பிமுத்துப்பிள்ளை போன்ற பதிப்பாசிரி யர்களின் சேவையை ஈழத்துச் சித்த மருத்துவ உலகம் என்றைக்கும் நன்றியுணர்வுடன் நினைவு கூரக் கடமைப்பட்டுள்ளது. ஆயினும் இப் பதிப்பு நூல்கள் யாவும் பூரணமற்றனவாகவும், பல செய்யுட்கள் இடம் பெறாமலும் செய்யுட்கள் மாறுபட்டும் வெளியிடப்பட்டுள்ளதாகப் பதிப்பாசிரியர்களே தெரிவித்துள்ளார்கள். பல இடங்களில் பக்க எண், செய்யுள் எண் என்பன மாறுபட்டும் காணப்படுகின்றன. எல்லாவற் றுக்கும் மேலாக இவற்றுட் பல ஒரேயொரு பதிப்புடன் நின்று போய் விட்டன. எனவே இக்குறைபாடுகளைச் சீர்திருத்தி வருங்காலத்தில் மேலும் சிறந்த முறையில் இந் நூல்களை வெளியிடுவதே இப் பதிப் பாசிரியர்களுக்கு நாம் செய்யும் நன்றிக் கடனாக அமையும்.
இறுதியாக, ஈழத்துச் சித்த மருத்துவ நூல்களை, அவை பற்றி அறிய விரும்புபவர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கும் நோக்குடன் இந்நூல் எழுதப்பட்டாலும் அவற்றிலுள்ள சிறப்பு அம்சங்கள், குறை பாடுகள் என்பனவும் ஓரளவு சுட்டிக்காட்ட முயன்றுள்ளதுடன் அவை பற்றிய விரிவான ஆராய்ச்சியின் அவசியமும் உணர்த்தப்பட்டுள்ளது. மேலும் ஈழத்தில் (குறிப்பாக யாழ்ப்பாணத்தில்) சித்த மருத்துவ வளர்ச்சி பற்றியும் இந்நூல்களின் துணை கொண்டு ஒரளவு எடுத் துக் காட்டப்பட்டுள்ளது.
பழமை வாய்ந்த இந் நூல்களைப் பற்றி அறிதல் அவசியமா? அதனால் ஏதும் பிரயோசனம் உண்டா? என்ற கேள்வி சிலருக்கு எழலாம். சித்த மருத்துவ இலக்கிய ஆராய்ச்சி (Literary research) இல்லாமல், மருத்துவ ஆராய்ச்சியோ (Clinical research) அல்லது மருந்துகள் பற்றிய ஆராய்ச்சியோ (Drug research) நடாத்த முடி யாது என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ளுதல் வேண்டும். சித்த மருத்துவத்தில் விஞ்ஞான ரீதியிலான ஆய்வுகளை மேற்கொள்வதாயி னும் அதற்கு ஆதாரமான மூல நூல்களாக இவையே அமையும். அத்துடன் வேறு துறைகளில் உள்ளவர்கள் (மருத்துவம் சார்ந்த அல்

Page 51
76
லது மருத்துவம் சாராத) எமது மருத்துவம் சம்பந்தமாக அறியவோ அல்லது ஆராயவோ முயலும் போது எமது மருத் துவ உண்மை சளுக்கு ஆதாரமாக (Text books) நாம் எடுத்துக் காட்டக் கூடி யவை இந் நூல்களேயாகும். எனவே, ஈழத்துச் சித்த மருத்துவ நூல்களைப் பேணிப்பாதுகாப்பதுடன், ஆராய்ச்சிகள் மூலம் அவற்றில் உள்ள நல்லனவற்றைப் பயன்படுத்த நடவடிக்கை எடுப்பதும் சித்த மருத்துவர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது.
ஆதாரக் குறிப்புகள்
1. Uragoda C. G. A History of Medicine in Sri Lanka,
from earliest times to 1948, 1987. P, 114
2. டன்வதர், ய. (மொழி பெயர்ப்பு) இரண வைததியம், யாழ்ப் பாணம் அமெரிக்கன் இலங்கை மிஷன் வெளியீடு, 1867 நூன் முகம்
3. சுப்பிரமணியபிள்ளை C. W. பால வைத்தியம், அச்சுவேலி
ஞானப்பிரகாசயந்திரசாலை 1931
4. நடராஜா ஆ. (தகவல் தந்தவர்) வைத்திய கலாநிதி, கந்த
ரோடை சுன்னாகம்
ச. கணேசையர், சி. ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம், பக். 220
பதிப்பகம்: புனித வளன் ésśGaraớPéšas ayé Fasó, udvarghuju arawó I 1993


Page 52
இந்நூலாசிரியரைப் பு
ஈழத்தில் சித்த மருத்துவ நூல்கள் வாக எல்லோராலும் குறிப்பிடப்பட் ஆய்வினை மேற்கொண்டு, இவைத கள் என்று எடுத்துக் காட்டி, அt பில் நின்று விமர்சிக்கும் அளவுக் கொண்ட முதல் ஆய்வாளர் டா: கரிே ரீபர்
சித்த திருத்துவ துறையின் மூத்த சுன்னாகம், கந்தரோடையைப் பிற ரோடை ஸ்கந்தவரோ தயாக் கல்ஜ் ஆர்சி வாழ்க்கையிலேயே எழுத்துத் கட்டுரைப் போட்டிகள் பலவற்றி பாராட்டுதல்களும் பெற்றவர். கல்லு "ஸ்கந்த" விலும் இவரது கட்டுை கல்லூரி வாழ்விலேயே சிறந்த எ பெற்ரார். இவர் ஒரு சிறுகை யதார்த்தப் படைப்பான 'பைத்திய தெழில்' மாத சஞ்சிகையில் வெளி பெற்றது)
யாழ். பல்கலைக்கழக சித்த முதல் தொகுதிப் "பட்டமாணி" களில் ஒருவர். சித்த மருத்துவ மாணவனா இணைந்து "சித்த மருத்துவ மான பங்கு வகித்ததுடன், மன்றத்தின் ே சஞ்சிகையின் முதல் மலராசிரியரா பணியாற்றியவர். சித்த மருத்துவம் நாடு, சுதேசியன் பத்திரிகைகளிலும் பந்தமான படைப்புகள் வெளியாகி சித்தங்கேணியைச் சேர்ந்த கா யுதபிள்ளை அவர்களின் நினைவு வளர்ப்பில் பெற்றோர் எதிர்தோ அ தீர்வுகளும்" என்ற கட்டுரை இடம் டாக்டர் (செல்வி), கீலா நாயகி சிங் வெளியான "மூலதத்துவம்" (சித்த கள் அடங்கியது) என்னும் நூல் பரே மூலகர்த்தாவாக விள்ங்கினார்
இந்த வசீசையில் 'ஈழத்துச் இந் நுர்ல் இவ்ாது எழுத்தாற்றலுக் கொண்டுள்ள அதீத ஈடுபாட்டுக்கு
டாக்டர்
சுதேச ை

löö •••
ர் பல இருக்கின்றன என்று பொது தி வந்த போதிலும், அவை பற்றிய ான் ஈழத்துச் சித்த மருத்துவ நூல் பற்றின் உள்ளடக்கத்தை நீதிலை கு சமகாலத்தில் ஆய்வினை மேற் சுடர் சே, சிவசண்முகராஜா அவர்
மாணவர்களில் ஒருவரான இஆர் ப்பிடமாகக் கொண்டவர். கந்த 7ரிசின் ப ைபு: மாThர் இல் துரையில் ஈடுபாடு கொண்டு, ஸ் பங்கு பற்றிப் பரிசில்களும் ரீயின் வருடாந்த சஞ்சிகையான ர வெளி வந்துள்ளது. இவர்தால் மூத்தாளருக்குரிய பண்புகாைபும் தி எழுத்தாளரும் கூட. இவரின் ீங்கள் வாழட்டூர்” சிறுகதை ‘புத் "பாதிப் பவரின் பாராட்டுதுவை:
மருத்துவத்துரை வெளியேற்றிய முதல் தர பட்டதாரிகளில் இவரும் கப் பயின்ர வேளை சில் எம்முடன் வர் மன்றம்" அமைப்பதில் முக்கிய வெளியீடான "சித்த மருத்துவம்" "கீப் பொறுப்பேற்று, சிறப்புடன் சஞ்சிகைகளில் மட்டுமன்றி சுழ * இவரது சித்த மருத்துவம் சம் புள்ளன . Rஞ் சென் த வைத்திட்டர் க. வேலு மலரில் இவர் எழுதிய "குழந்தை கும் பிரச்சினைகளும் அதற்கான பெற்றுள்ளது. அமரத்துவமெய்திய
கதாபகம் அவர்களின் நினைவாக
* மருத்துவ அடிப்படைத் தத்துவங் வெளியாவதிலும் இந் நூலாசிரி F
சான்று பகர்வதாக அமைகிறது,
ஐ. ஜெபநாம கணேசன்,
செயலாளர், வத்திய அபிவிருத்திச் சங்கம்.
༈
சித்த மருத்துவ துரல்கள்" என்ற