கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சித்தராரூடம் (விஷக்கடி வைத்திய ஏட்டுச்சுவடி)

Page 1

Sf Sg S.
த்திய ஏட்டு

Page 2


Page 3

சித்தராருடம்
(ஏட்டுச் சுவடியின் அச்சுருவம்)
மன்று () வெளியீடு 를 மட்டக்களப்பு
1999

Page 4

பதிப்புரை
bம் கிராமப்புறங்களில் பழைய ஏட்டுச்சுவடிகள் பெட்டகங்களிலும், பழைய டிரங்குப் பெட்டிகளிலும் உறங்கிக்கிடக்கின்றன. அச்சுக்கலை பரவாத அந்நாட்களில் நம் மூதாதையர்கள் வைத்தியம், சோதிடம், மந்திரம் முதலான கலைகளை ஏடுகளில் எழுதிப் பாதுகாத்துப் பயன்படுத்தி வந்தனர். அந்நியர் ஆட்சிகளால் ஏற்பட்ட மேலைத்தேயக் கலாசாரம் நம்மவர் சொத்துகளான அக்கலை வடிவங்களை ஒரங்கட்டி விட்டது. இதனால் ஏட்டுச் சுவடிகள் கும்பகர்ணத் தூக்கம் கொள்ள நேரிட்டது.
இந்நிலவரத்தால் பழைய ஏட்டுச் சுவடிகளிற் பலவும் செல்லரித்து அழிந்து போய்விட்டன. எஞ்சிய ஏடுகளும் குல மரபு மனோபாவமுள்ள நம்மவர்கள் சிலரால் மறைக்கப்பட்டுக் கிடக்கின்றன.
இங்கு பிரசுரமாகும் இந்நூல் ‘சித்தராருடம் என்னும் பழைய ஏட்டுச்சுவடியின் இக்கால அச்சுவடிவம் அரவம் உட்பட மற்றும் விஷஜந்துகளின் விஷக்கடி வைத்தியம் பற்றிப் பேசுகிறது. இதனை ஏட்டுச் சுவடியிலிருந்து பிரதிபண்ணிப் பாதுகாத்து இப்போது அச்சுருவில் வெளிக்கொணர்வதற்கு எம்மிடம் மனமுவந்து ஒப்படைத்த மட்டக்களப்பு - மாவடிமுன்மாரி வட்ட விதானையார் திரு.செ.திருஞானச்செல்வம் அவர்களை வாழ்த்துவோம்.
பழைய ஏட்டுச் சுவடிகளின் பாடல் வடிவங்களின் எழுத்துநடை சந்திபிரிக்காமல் ஒருசேர எழுதும் மரபுகொண்டது. குருமரபில் பொருள்கொள்ளவேண்டியவை. ஆகவே, இந்நூலும் ஏட்டுப்பிரதியின் பிரகாரம் உள்ளது உள்ளவாறே பிரசுரமாகிறது.
இப்பாடல்களை வாசகர்கள் விளங்கிக்கொள்ள உதவும் வகையில் மட்டக்களப்பு . தாழங்குடா விஷவைத்தியர் திரு.கதிர்காமத்தம்பி பாலிப்போடி அவர்கள் சிரமம் பாராது பொருள் சொல்லியுள்ளார். அது நூலின் பிற்சேர்க்கையாக இங்கு பிரசுரமாகியுள்ளது. அன்னாரையும் நன்றி பாராட்டுவோம்.
பழம்பெரும் கலைப் பொக்கிசங்களை தங்களுக்குள் புதைத்து வைக்கும் மனோபாவம் நிலவும் நிலையில் மேற்சொன்ன இரு பெரியார்களும் இந்நூல் வெளிவர பங்களிப்புச் செய்துள்ளார்கள். அவர்களது பரந்தமனப்பான்மை நல்ல முன்மாதிரியாகும்.
மன்று நிறுவனம் மட்டக்களப்பின் பழைய பொக்கிசங்களில் ஒன்றை நவீன அச்சுருவில் கொண்டுவருவதில் ஒரு ஆத்மார்த்த திருப்தியடைகிறது.
இவ்வழியில் நம்மண்ணிலுள்ள ஏனைய ஏட்டுச் சுவடிகளையும் அச்சுருவில் வெளியிட்டுப்
பயனடைவதற்கு மற்றும் பொது நிறுவனங்களும் முன்வரவேண்டும் என்பது எமது பேரவா.
இல, 16, புனித மிக்கேல் வீதி, “மன்று நிர்வாகம் மட்டக்களப்பு

Page 5
பதிவுத்தரவுகள்
தலைப்பு
பொருள்
பிரதிபார்த்தல் உதவி
கணனி வடிவமைப்பு
உதவி
பதிப்பாசிரியர்
அச்சகம்
பிரதிகள்
பக்கம்
விலை
வெளியீடு
சித்தராருடம் (ஏட்டுச்சுவடி)
விஷவைத்தியம்
வீ. சு. கதிர்காமத்தம்பி
- திருமதி யோகா புவனேந்திரன்
திருமதி லீலா இரனேஸ்பரன்
பே. பிரான்சிஸ்
யோ.இ.கிறிஸ்ரோபர்
ஈஸ்ரன் கிராபிக்ஸ், மட்டக்களப்பு
1000
35 + X = 44
5. 50/-
மன்று, 1999

2கணபதி துணை
சித்தராளுடம்
காப்பு
ஒருபரன்றன்னை யெல்லா முருவுமாயுருவில்லானைக் கருவரம்பாகி நின்று கருத்திலே கருதினானைத் திருவரம்பாகி நின்று திரிபுர மன்றுளாடும் குருபரன்றன்னை நாளும் கூறுவார்க்கில்லைக் கூற்றே.
அன்னை வயிற்றிலவதரித்து அடியேன் பிறந்தேன் இறவாமல் என்னை வளர்த்துப்பால் புகட்டி ஏற்க மருந்து மந்திரமும் தன்னைச் சரியாமெனப்புகலத் தந்தோர் குருவிங்கிணையெனக்கு புன்னெச்சித்தர் திருநாமம் பொருந்தத் திருந்தப்புகலுகிறேன்.
அன்னையும் பிதாவும் சுற்றமனைவரும் குருவும் வாழி முன்னமேமுனிவர்வேழ்வி முகிழ்த்த வுழியனும்வாழி தன்னையேயறிந்த வேதத் தலைவரோடிறைவர் வாழி சென்னெல்சேர்கழனிர் கச்சிச் செகதலம் முழுதும் வாழி
அத்தனாரருளினாலே ஆயர்தம் குலத்திற்றோன்றிப் பத்னாமிறைஞ்சு மைந்தன் பாடினேனின்னூல்தன்னை அத்தனார் பாதத்தாணை மருந்து சொற்பிழைகளெல்லாம் சித்தனார் பொறுக்கவென்றே சிறியவனுரைக்கலுற்றேன்
அகவல்
திருவளர் தாமரைத்திசை முகன்படைத்த
விருநிலமடந்தையுமிப்படிப்பேர்நிலை
இயற்றி நாமமீய்பவர்க்கெல்லாம்
நயத்தினாலே நலம் பெறவுரைத்தேன்

Page 6
மன்னுயிர்க்கெல்லாம் வருத்தம் நீங்கத் துன்னிய செஞ்சடைத்தூயமதிவைத்தோன் பன்னியநூலின் பயன்களை நாட்டினான் ஆகமமியற்றி நாகமோரெட்டும் பாங்குள மண்டெலி பதினெட்டுள்பட ஓங்கிய வழலை ஒரு நான்குடனே நன்மையில்லா நாலிரண்டுடனே புன்மைவிரியன் புகன்றிருமூன்றுடன் கதிமுகப்பெருஞ் செயான்கறுக்காற்பூரமுஞ் சிலந்தியிருபதும் தீயபஞ் சோந்திலுஞ் சலந்தருதவளையும் சாற்றியஅட்டையும் மீறுமாப்புள்ளியும் சீறியநாயும் கூறியநரியுங் கூறாவினையும் நாடிச்சொன்ன நாளுமூண்கடிகையும் பேரும்விடமும் பெருகியவயதும் மெத்தமுன்னாளியல் புறுவயதும் நாற்றமுமாடலும் நன்மைப்படமும் கூற்றமும் பல்விடங்குறித்த வண்மையும் ஏற்றினோ மிக்கவிவவிறல் மாத்திரை வேகமோரெட்டும் மெய்ப்புறநாடிப் பாகியதுாதன் பரந்தெதிர் வரவும் மாற்றவர் சொல்ல வந்ததிசையும் ஆற்றவைதன்னை அறிந்துரை செய்தலும் ஆணோடு பெண்ணொடு சூல்குருடறிதலும் பேணிய கடிகை பின்னையுமறிதலும் இடம்வல மென்று இயற்கையறிதலும் படமுடைநாகம் பேர்பெற அறிதலும் தீரும் தீராதென்றுரைசெய்தலும் ஏர்பெற நாடியினிதாயுரைத்து மந்திரம் மருந்து வாய்த்த தியானம் அந்தமிவ்வடிவோடடங்கலுமுன்பட செந்தமிழ் முனிவன் தெரிந்துரை வகுத்த அந்தமில்காட்சி ஆகமம் பகர்ந்த
2

ஆதியாம் கடவுளடியினை வாழ்த்தி ஒதியவுள்ளத்தொழில் தனை நினைந்து வையகத்தோர்க்கு வருத்தம் நீங்க செய்த வின்னுாலின் திருப்பேரேதெனச் சித்தராரூடமென்றுரை செய்தனர் நெற்றியிற் காட்சி நெறியையுடையோர் நாகமோரெட்டும் பல்குறி நஞ்சும் தேரத்தேடினேன் புணர்ச்சிமுட்டை பிறந்த குருப்பேரரசனால் நாடினேன் இன்னுல் தன்னைச் சுருக்கமாய்ப் புகலலுற்றேன்
1.
எல்லாமருந்து மந்திரமும் ஏற்கும்துவாலையுறக்கோர்த்து சொல்லார் கலிங்கந் தயிலமுடன் தூதன் காலன் மரணமென்றே பொல்லாவிடங்களெல்லோர்கும் பொன்றாதுய்யப் புகழ்ந்துரைக்க நல்லோர் பெரியோர் தம்பாதம் நாவி லேற்றி நயந்தோமே
செடிகொன்செஞ்சடைச் சேடன் வந்துந்தினால் திங்கள் ஞாயிறு செய்தவம் கேளடா கடல் கிளர்ந்த திரையது போல்வே கடியனல் வீசும் காலன் விட்டோடுமே
காசிபர்க்குற்றதேவி கத்துருவினதையென்றும் பேசுகத்துருவின் மைந்தர்பேணில் நூற்றிருபதென்பர் வீசியபடங்கொள் பாம்புமிக்கதோர் தலைவனாகும் மாசிலாஅட்டநாக மென்றுதான் வகுக்கலாமே
வினதையின் புதல்வரான அருணனுங் கருடனும் முனியொரு யாகம் செய்து முற்றுத லதனாற்சார்தல் வினையிலே வினதைநோக மிக்கவர் புதல்வரெண்மர்
அனைவரும் பகைஞரானார் என்றுரை வகுக்கும்காலே
3

Page 7
10.
வேதியர் கடையாஞ்சாதி விடத்தினாற்றுஞ்சுவோரை ஒதிய மருந்து மந்திரத்தினாலுணர்த்துவோர்கள் சாதியில் பிறப்பில் வேதத்தலைவராய் பிறந்து பின்னும் ஆதியிற் பிரம்மாவாக அமர்ந்து வீற்றிருப்பராமே
தோற்றிடும் பாவமெண்ணித்துலங்கு வெண்பாதளத்தை ஏற்றிடுமென்றே சொல்லுமியல்பினால் வடநூல் தன்னைச் சாற்றினேன் தமிழினாலே தரணிமேல் வல்லோர் பாதம் போற்றினேன் தலைமேற்கொண்டேன் புகலுவேன் அரவின்நாமம்.
நாமங்கள்
அடல்மிகுவனந்தன் வாசுகிதக்கன் காற்கோடன்வெய்ய படமிகு பத்மனோடு மகாபத்மன் சங்குபாலன் விடமிகு குளிகனென்றே யெண்வகை அரவின் நாமம் உடன்மிகு வரவ முன்னோருறுதியாயுரைக்கலுற்றார்
அந்தநல்லணந்தனோடு அங்கடன் குளிகன் பார்ப்பான் வெந்திறவரசனாகில் வாசுகிசங்கு பாலன் அந்தனல்தக்கனோடு மகாபத்மன் வசியனாகும் புந்திசேர் கோடனோடு பத்மனுமுழவன் பொன்னே
நிறம்
வேதியணிரத்தமேனி வெந்திறலரன் பொன்னாம் நீதிசேர்வணிகனாகில் நிகரில்லாமதியின் வெள்ளை சோதிமென்னகையென்னுஞ் சூத்திரன் கரியதாகும் பூதலத்தோர்கள் நாளும் புகன்றிடப்புகலலுற்றேன்.
இருக்கும் இடம்
மறையவன் றெய்வஞ்சேரும் வாய்ப்புடையரசன்சென்றங் குறைவிலா விருட்சமாகுமூனமில்வசியனாகில்
4

11.
12.
13.
14.
தரையிலே நடந்து சென்று தான்மனையேறிவாழும் பொறையுடை சூத்திரன்றான் புத்தினிலடையுமென்னே
இரை எடுக்கும் நாள்
அனந்தனே யருக்கனாகும் ஆன வாசுகியே திங்கள் கனந்தரு தக்கன் செவ்வாய் கணிபுதன் கோடனாகும் மனந்தரு வியாழன் பத்மன் மகாபத்மன் வெள்ளியாகும் தனந்தரு சனியிற் சங்குபாலனும் குளிகனுண்ணும்
புசிக்கும் நாளிகை
அறுபது தொண்ணுறோடு வன்பது நாற்பதாகி நறுவிய வன்பதோடு எழுபது முப்பதாகி கருவுடையரவமாளுங் கடிகையு நாளுமாகும் முறைமையுமூன்றேமுக்காற் கடிகையிலுண்பதாமே
S-600T6
நலமலிவாசுகந்தம் நான்மறையாளனுண்ணும் அலர்மலியூவினல்லி யரசனே அமுது கொள்ளும் குலவிய எலியேயோந்தில் குலாவிய வசியனுண்ணும் தலமுடையுழவன்றானே தவளையும் மீனுமாமே
6TF606
வாய்ப்புடைமறையோனாகில் மருவிய நாவிநாளும் காப்புடையரசனாகில் கடிமலற்றாழை நாறும் சீப்புடைவசியனாகில் சிறந்த பாதிரியே நாறும் கோப்புடையுழவனாகில் குலவிய இலுப்பைப்பூவே

Page 8
15.
16.
17.
18.
19.
20.
ஆடுங்குறி
பூசுரன் வானைநோக்கும் போர்புனையரசன் செவ்வே ஆசிலா வணிகனாகிலறிந்திருபாலுநோக்கும் கூசிலாயுழவனாகிற் குவலயம் நோக்கியாடும் வீசியபடங்கொள் சங்கு சக்கரம் விளம்பக்கேளே
முத்திரை
வேதியர் படத்திற் சங்கு வெந்திறலரசனுக்கு மோது சக்கரமதாகு முயர்தரு வணிகனுக்கு மாதுகேள் வில்லதாகும் வலமிகு சூத்திரற்கு ஒது புள்ளடியதென்று உரைத்தனர் தவத்தின்மிக்கோர்
அடையாளக் குறி
பாம்பினார்விடம் மேலதோ கீழ்தோ தூம்புபற்துடி நாக்கதோமூக்கதோ வாம்புகண்டந்தலையதோ வாலதோ பாம்பினால்விடம் பார்த்துரை செய்யுமே
வாலில்லைத் தோலில்லை வஞ்சமற்ற வல்விடம் தோலில்லை சுளியில்லைக் கண்ணில்லைச் சொல்லிடில் நாலுபல்லினோடு வந்து நஞ்ச்மாக நண்ணினால் ஒலமோலமோல மென்றழைக்க ஓடிவந்துவுற்றதே
உண்ணப்பாசுறுந்தாலதூ போலவும் திண்ணத் தீமையிற் சுக்கிலம் போலவும் வண்ணப்பாம்பு கடிக்கும் கடித்தாக்கால் எண்ணத்தால் விடமிப்பரி சென்னவே
விடநிலை நிற்கும்போது விரிதலையடர்ந்து நிற்கும் படம் விரித்தாடும்போது கடைக்கண்ணே நோக்குமாலம்
6

21.
22.
23.
24.
25.
கடியுறத்தொண்ணுாற்றெட்டு மாத்திரை கடிவாய் நிற்கும் வடிவுறில் தந்தமாகு மகிழ்விலா வாரம் போலே
பல்லின் குறி
எரியுறுகாளி காணாஸ்திறி நமன் நமனார்தூதி தெரிதரு வெள்ளை செம்பொன்னிரத்தமாங் கறுத்தந்த புரிதருமுன்வலத்துப் புகன்றவிவ்விடத்திற் பின்னும் பரிதருபாம்பின் நாமம் பாடுசெய்தாரைத் தீண்டும்
பசியுற்றால் பயந்தால் நொந்தால் பல்விடம் மிகுந்தாற் கோபம் விசையினால் வினையால் முன்னைப் பகையினால் விண்ணோர் மற்றும் அசையுடன் முனிவர் காலனேவலா யிரஞ்சொன்ன
நசையுடனரவந்தீண்டும் நசிக்க நஞ்சென்று கொள்ளே
செய்நன்றிகுன்றினோரைச் சென்மமுற்பகையினோரை மெய்ப்பசி வேட்கையாலும் பல்விடம் மிகுத்தலாலும் செய்கையில் மிகுத்தல் சேரச் செல்லவே விடுத்தல் மற்றும் நையவேநமரேவக் கடித்திடுங் குணங்கள் தானே
பல்லின் குறி
காளியே காகபாதம் காளாஸ்த்திறியே முக்கோணம் நாளுடையியமன்றொட்டில் நல்கியதுதன் வில்லாம் வாளினை வென்ற கண்ணாய் வையகத்தோர்கள் மெய்யிற் கோளரவுற்றகாலை கொண்டவாய் வடிவின் கோலம்
தந்தமொன்றாகில் நஞ்சு சிறிதென்கயிரண்டாந்தந்த மந்திரமுரைக்கத்திருமருந்தினால் மூன்றாந்தந்த
7

Page 9
A6.
27.
28.
29.
30.
இந்திரர் முதலாந் தேவர் யாவரும் மூவர் தாமும் வந்தவப்போதுந்தீராவடிவுறுநாலம்பல்லே
ஆண், பெண்ணறிய
அட்டமானாகந்தன்னி லாண் பெண்ணை அறியவேண்டி இட்டமாயிட்த்தேவாழும் ஏந்திளையிருந்து கேட்க வட்டமாமரவந்தனில் வங்கிஷம் வகுக்க வென்றே நட்டமேபயிலுகின்ற நாதனுமருளிச் செய்தார்
முட்டையின் நிறம்
தேனமர் மொழியாய் கேளாய் திண்மையாய் மண்ணின்மீது ஊனமிலரவின் தோற்றமுண்மையாய் உரைப்பேன்மிக்க ஆனதோராடிதன்னிலடைவுடன் புணர்ந்து பின்னு மானதோர் திங்களஞ்சி லமர்ந்து வீற்றிருக்குந்தானே
ஆவணியாடி மாதமாடரவிருந்திளைத்து காவணி கார்த்திகைக்கே கருப்பமாய்க் கருவுமுற்றி மேவணியான பெண்ணே முருக்கமாங்கம்வெள்ளை ஈவனமுட்டையிட்டாலேழுநாளடை கிடக்கும்
ஈனுநன் முட்டை தானுமிருநூற்றுநாற்பத்தெட்டு ஆண்மலி சிவப்பு முட்ட்ை பெண்மலிவாகைப்பூவாம் மூனமில் முருக்கம்பூவின் நிறமுனதாகுமென்ன மான வையத்தின் போகமாருமேயறியச் சொன்னோம்
இருநூற்று நாற்பத்தெட்டிலேற்றமாயில்லைமுட்டை
இருநூற்றோடிருவத்தெட்டை ஏழுநாள் விழுங்குமென்க
பருமிக்க நான்கும் சாவாம் பதினாறு நல்ல முட்டை ஒருமிக்க இருபத்தேழ் நாளொப்புடன் பொரித்தேயூரும்

3.
32.
33.
34.
35.
நாலாறு காலுமுண்டாம் நவின்ற நன்மயிரேபோல நாலேழு நாளுஞ் சென்றால் ஞாயிறை நோக்கும் நஞ்சும் மேலேறு கொள்ளும் பாம்பு வெவ்வேறு தோற்றமாகில் சூலேறு விரியன் பாம்பில் தேள்முதற் பலவுந்தோன்றும்
சற்பவினை
இருதலை மணியன் சென்னாய் எரிமழைகாகம் கூகை எருதினிற் குழம்போடாந்தை யிடிமயில்பருந்து மின்ன லுருத்திபட் பன்றிகிரி செம்போத்துப்பின் மனிதர் தம்மால் வருத்த மொன்றில்லாவிட்டால் வயது நூற்றிருபதாமே
சற்ப வயது
இலகிய மறையவர்க்கீரைஞ் நூற்றெட்டு வேந்தற் குலவிய வெண்ணுாறாகும் கோதிலாச்செட்டிக் கைஞ்சா றுலகினிற் சூத்திரற்கு முரைக்குமுன்னூறதாகும் நலமுடைநாகபட்டபலன்களை நாட்டினாரே
மண்ணுறு பகையைத்தப்பில் வலியநாகங்கெளெட்டும் எண்ணுநூற்றிருபதாண்டு உலகினிலுார்ந்து வாழ்ந்து சென்று பின்னுடலந்தேய்ந்து படமதே சிறகதாகி நன்றது பறக்குமங்கே நன்மணிசிரசிற் தோன்றும்
தோன்றிய மணிகொள் நாகம் தொன்மையாய்ப்பறந்து மேய்ந்து வான்றகுமலையிற்றங்கும் வானவர் பொதும்புவைகும் கான்றெழு கண்ணில் நஞ்சு கனலெனக் கடுகிக்கொல்லும் சான்றவை கருடற்கல்லால் பின்னது சாகாதாமே

Page 10
36.
37.
38.
39.
41.
அறுபது நாளிற்றானே அடைவுடன் தோலுரிக்கும் மறுவறு திங்களாறில் வாலெயித்தாலுங்காலும் முறுவது செய்யுங்காணுமுள்ளதோ யுளதோ வென்னில் கறுவறு காலே காணுங் கண்களே செவியுந்தானே
தோன்றும் மீரேழே நாளில் தொக்க நஞ்சுண்டாய்வாளும் கான்றகு கீழ்வாய்ப்பல்லுங் காளி காளாஸ்த்திறியேயாகும் மேன்றமேலிரண்டாந்தந்த மியமனியம தூதியென்றே மான்றது விஷத்தின் பேர்கள் நான்கு மேயறிச்சொன்னோம்.
கடிவாய்க்குறி
கொண்டவாய் வெளுப்பாய் நீராய் குழுந்திடுங்குறுக்கிற்கீற்றாய் விண்டவாய் கடுக்குந் தோலுமிக்கவே வெழுக்கும் விம்மி கண்டிடிற்றசையிலூன்றுங் கனத்திடில் எலும்பில் நாடும் மென்றகுங் குருதிபாயும் இந்தனற் குணங்கள் தானே
கடித்திடு மீழுங்கொல்லும் காலனுமாகி நிற்கும் மடுத்தவாய் நஞ்சுமுண்டாம் மணாகமென்றும் பேராம் தொடுத்ததோர் தேறாவண்ணம் சூத்திரமறிந்து மீட்போர் நடிப்பது ஈசன் பாதம் நல்வழி சேர்வரன்றே
நன்னாகமெட்டும் நலமாய் நற்குலமாய் மண்ணில் மண்ணிடமுன்பு தெய்வமண்படவிடம் பல்வேறாய் இன்னதோர் விரியனாதி எறும்பினமிறுதியாக புன் மையில் விடந்தீர்ப்பார்க்கு மருந்தெனப்புகலலுற்றேன்
தெய்வத்தான மரசு புளி சீர்கொள்சந்திசுடுகாடு மெய்யிற்குளத்திற் கண்டடையில் வகுத்தகிணற்றில் புத்தடியில் மெய்யிலுறக்கந்துரந்தகடி விலங்குமிடத்திற்கடித்திடுமா லுய்யக்கடித்த கடியல்ல உலகோரறிய உரைத்தோமே
10

42.
43.
44.
45.
நந்தவனமால்மூங்கில் நாணற்கூட்டம் பாண்கோவில் பொந்துபுத்து பொதுச்சந்தி புன்னைக்கூட்டம் புனல்தண்ணிர் இந்தவானமிடப்புதல்வரெச்சிசாலை பாழ்மனைக ளந்திகாலையிவையிடத்திலரவுகடித்தாலாகாதே
தூதன் வந்த திக்கு அறிதல்
பெரிதாகிய நீழ்கொடியானையொடு பெலமாகிய சீயமோடேறுநிரைப் பரிவாலொரு தூதுவன் வந்திடு மேற் படர் நாகம தென்பதறிந்துரைநீ திரியார்புரமூன்றெரிசெய்தபிரான் திருநாமமு நெஞ்சில் வழுத்துவனா அறியாரவர் தங்கள் முன்னூலுரைசெய் யழகால் வருகின்ற தோரற்புதமே
எரியார் புகைமே லொருவன்வருமே லெழிலார் வழலைக்குலமென்றறிநீ குரையாகிய நாயது தன்றிசையிற் கொடிதாகிய மண்டெலி என்றறிநீ வரவாயுவில் வந்து விளம்பிடுமேல் வலிநன்றது வனமிருகம் பெரிதாகிய காகமதன் திசையில் பேரால் விரியனது பேரறியேன்
திருளாசனு செங்கதிர் சோமன் யமன் எழிலார் வருணன் இவர்தன்றிசை மேல் மருளாதொருதூதுவன் வந்திடுமேல் மடியாதவனாண் மகனென்றறிநீ அருளார்சிறுகாகமோடங்கிசென்னாய் அளியாமடமாதரை என்றறிநீ மருளாதொரு காற்றிசைமேல் வருமேலதுமாடெனவோதினராடவரே
11

Page 11
46.
47.
48.
49.
கதிர்தானினைதாகிய காலமன்னாள் கதநாகவிடங்கள் செறுக்குமிடம் பொதுவாகிய வாண்வலமாதிடமாம் புகழால் மலிகச்சி நகர்க்கிறைவன் மதுதானணிநின்று விளங்கிய தார்மலியும் புயசுந்தரவாசகனார் விதியாலுரை செய்தவின்நூலிதனை விரையாது விளம்புக மேன்மையிதே
இருளிலானே இடப்பக்கம் எழிலார் பெண்ணே வலப்பக்கம் மருளிற்பகலே யாண் வலமாம் வாய்த்த பெண்ணுக்கிடமாகும் அருள் முன்னிலவிலாண் வலமாம் அரிவைக்கிடமாம் பகல்தனக்கு சுருளுங்கூந்தல் மடமாதர் வலமாமானுக்கிடமாமே
காராமலியும் வல்லீறு பருந்தினோடு கரிக்குருவி சீரார்கோழி மயிலாந்தைதிக்கேள் காகந்திசையப்பு ஏரார்புகழ்சேரருக்கனியமனிலங்குஞ்சோமனிவர்களிலே சீரார்பிரமணிவர்தாமும் திக்கேழுந்திசையாலறியுகவே
ஆண்திசைமேலே வந்தங்கரிவையைக் கடித்ததென்னும் பூண்ட பெண்திசையிலாணைக்கடித்த தென்றவையும்பொய்யாம் மீண்டபெண்திசையிற் பெண்ணும் விளங்குமாண்திசையிலானும் தீண்டிடில் மெய்யதாகும் திக்குமாண்திக்கும் பெண்ணே
12 .

S().
5.
52.
53.
54.
தூதன் வந்த நாட்பக்கம்
தூதன் வந்த நாட்பக்கஞ் சொல்லுந்திக்கு திசையெட்டு மோதுமருந்து மந்திரமுமுற்ற பாகையறிந்தபடி நீதியுடனேதீராது தீரும் சீரும் நெறியறிய மாதவத்தோனடிவணங்கி வாழ்வெலாமறைகின்றோமே
ஆயிலியம் பரணி கார்த்திகை ஆதிரை ஒணமூலம் பாயும் புலியும் பகைநாளாம் பதினெட்டாநாள் வசியம் சீயம் ஏயுந்திதியுமட்டமியுமிருத்தை குளிகன்சட்டிவிட்ட மாயுமிடமாங் கடிகையிவை மாண்டாரிதனிற் கடியுண்டோர்
தானேயோடிக்கடித்தரவம் புரளுமாகிற்சாவென்ப தானேயோடிக்கடித்தரவம் கிடக்குமாகிற்சாவென்ப தானேயோடிக்கடித்துப்படம் விரித்துக்காட்டிற் சாவென்ப தானேயரவு செய்குறிகள் கண்டுகேட்டுந்தானறியேன்
செய்யாடன் கணவனைத்தன் தலைமேற்கொண்டு சிறகிரண்டும் பச்சையாய்ச் சிவந்த கண்ணாய் மெய்யாய்க் கந்தவளமாய் விண்ணோடு மண்ணதிர மேருவென்ன உய்யாதென்றிருந்தவிடமுய்யும் வகை யருளி ஓங்காரந்தனையுன்னி உலகனைத்தும் சிறகால் கையார வாரியமுதழிப்பான் கருடனைத்தியானிக்க விடங்களன்றுபோமே
தேவரும் முனிவர்தாமும் சிறந்தமாலடியிறைஞ்சி மேவியவிடங்களெல்லாம் விருப்புடனருள்புரிந்து மூவருங்கெருடனாக மூலமஞ்செழுத்தைநாவால் பாவினையோடுங் கொள்ளப்பறந்திடும் விடங்கள்தானே
13

Page 12
55.
56.
57.
58.
59.
தூதன் குறி
அருக்கனாகந் தேள்வளலையணி நீர்ப்பாம்புமானாக
மெருக்குமெலியுமண்டெலியுமெனில் கொள்சாரையாடரவம் புரிக்குமெறும்பு மயக்குமராப்புள்ளியரவம் பூராணிசன்போல் பெருத்தவிரியன் சிலந்தியிவை பேணியறியும் பெரியோரே
கைதனில் நாக்கில் மூக்கில் கழுத்தினில் நரம்பு நெற்றி மெய்தனிலுச்சி கண்கள் விளங்கிய குதியிற் தொப்பூழ் பையவே விலாவுதடு பைதரு நாக்கு மார்பு நையவேயரவுதீண்டில் நாசமாமுண்மைதானே
செய்யபூச் செய்யவாடை செப்பமில் வியாதியாளன் மெய்தலைமயிர்களைந்தோன் விரிதலையொற்றைக்கண்ணன் மையுலராடைசுற்றல் வார்த்தையாற்குளறிப்பேசல் கையிலேகயிறிருந்தால் காலனென்றறியலாமே
கண்ணில் நீர்ததும்பி நிற்றல் கைதனை நெரித்து நிற்றல் விண்ணினைப் பார்த்து நிற்றல் விறகினைச் சுமந்து நிற்றல் மண்ணினைக் காலால் கீறல் வன்கையாற்கோலொடித்தல் அண்ணலேயாதொன்றில்லை யாடரவணையிற்சாவே
படைவாளொடு தண்டுகையேந்திடினும் படர் நாகமதன் பெயர் முன்சொலினும் உடைபாதியொதுங்கினுமெய் யுணர்வாயினு நாவுபிறம்விடினும் விடமானது வென்றிடுமென்றறிகில் விதியார் வென்றது கண்டிடுநேர் படர்நாகவிடங்கொணந்தகனார் பதியாழ்பவர் மாழ்வதுநிட்சயமே
. முந்திவந்தவர் முந்தியதெவ்விடம்
கந்தமால்கடியுண்டது மவ்விடம்
14

6.
62.
63.
65.
முந்திவந்தவருந்தியதில்லையேல் கந்தமால் கடியுண்டதுமில்லையே
பாதந்தொட்டற்றேளாகும் பரிவுகணைக்கால் நீர்ப்பாம்பு சோதிவயிறு விரியனுமாந் தொடரும் கைகள் மயிர்க்கூரான் ஏதிடமார்பு கருவழலை எலியேயாகும் வலமார்பு காதும் கழுத்தும் மண்டெலியாம் கடிவாளரவு மூக்காமே
வந்தவன் வடக்குநோக்கி நிற்கினும் வளர்களுத்தை சந்தமார் கரத்தால் நீட்டிச்சார்வுறச்சார்வுறச் சொறிதலாலும் அந்தமாம் சென்னிமீதே அங்கையை வைப்பதாலும் மங்கைநல்மாதே சொன்னேன் வல்விடந்தீராதென்றார்
தலைதனி லெண்ணெய் தேய்த்தல் தற்கமே பேசி நிற்றல் புலவியாற் சென்னிமேற்கை வைத்திடலழுது வீழ்தல் நிலை பெறக்காலைநீட்டல் நீருறுடல் சோரநிற்றல் கொலைபட அரவந்தீண்டுங்குணங்களின் குறிகள்தானே
தலைவிரிதட்டை மொட்டை தவசி சன்னாசிபார்ப்பான் முலையிலாள் செம்புகும்ப மூக்கறைவிறகு கட்டு நலமலிமுது நோயாளன் நாவிதன்றிய நோயான் பலகுறி யெதிரேகண்டாற் பயன் படாக்கருமந்தானே
ஒகாரம் வந்துரைத்தானாகிலொருபல்லுமில்லை யென்க தகவுடன்றுாதறுாசு வெளுப்பெனவுடுத்துச்சூடி கதமுடன் தோன்றிநிற்கில் கறுவிடம் மெல்லிதாகும் பகர்தருதிசையை நாடிப்பார்த்து நீயறிந்து சொல்ல்ே
15

Page 13
66.
67.
68.
69.
எட்டுத்திக்கினிற் றுாதன் வந்தெய்திடிற் திட்டமோடு சிலந்தி மிதுனந்தேள் விட்டகோல் நண்டெறும்புடன் பூரமே தொட்டயீசனிற் சொல்லுக முள்ளென்றே
கொண்டு வந்தவனுரைத்த வாசகவெழுத் தினிற் சொலு குறிகளால் கோலமான சிறியோனோடாதி பெரியோனும் வந்துமுன்னிற்றலால் விண்டுவந்த சிறியோனில் நாகமிகு விரியன் வழலை யோடரவிடமதில்லை பெரியோனில் நாலுமெயிறாIரண்டிலறி பெண்ணோடாண் கண்டமானவரைக் கீழுமேலுமறி காதலாலிடம் வலமறி கற்றமந்திர மருந்து தீர்வதிலை யென்று காத்தல் செயுமைவரிற் பண்டு மூவரையும் விண்ணிலெண்ணி யறிபார்வை தீர்வையுடன் வேக நாடியறி பாலனாயுலகையுண்டோ ராலிலை பள்ளி கொண்டவர் பகர்ந்ததே
வந்தவனுரைத்து நின்ற வார்த்தையினெழுத்தை யெண்ணி ஐந்தினுக்கிந்தசேடமானதையறிந்து கொண்டு முந்த வொன்றாகில் நாகமிரண்டெனில்
புடையன் மூன்றினில் விரியன்
அந்தமில் வழலை நாலிலரவிடமில்லை ஐந்தே
தந்தமுமறியவேண்டிற்தக்கதோ ரெழுத்தை நான்காய்ப் பந்துசெய் சேடம்பல்லாம் பரவிய வெழுத்திரண்டாய் சந்துசெய்தனமே கீழாம் வலமிட முன்பின்னாகும் கந்தமிக்குழலினாளே தூதனிற்கண்டு கொள்ளே
16

7(),
71.
72.
73.
74.
75.
தூதன் மொழிந்த மொழியதனைத் துணிந்து மூன்று கூறாக்கி ஆயுமனவோர் பங்கொக்கி லங்கோர்விடமுமிலையென்க போயங்கிரண்டாமெழுத்தாகில் பொன்றுதலில்லை விடமுண்டு மாயுமோராமெழுத்தாகில் மாண்டாரென்ன மதித்திடுமே
கையிற் சக்கரமெழுதிப் பார்த்தல்
அரவுகடித்த தென மொழிந்தாலப்போதிடக்கை றீங்காரம் விரைய நிறுத்தி மோந்தாக்கால் வெண்தாழை நாறிலரவாகும் பரவு பாற்கிற் பாதிரியே வழலை புளியே பெருவிரியன் விரியு மல்லிகை மண்டெலியே மிளகுசுக்குச் சிறுபாம்பே
அரவின் பேர்தான் முன்பாகிலடவோன் பேர்தான் பின்பாகில் அரவின் விடத்துக்களவில்லை யென்று கொள்ளு உரகம் பேர்தான் பின்பாகிலுறவோன் பேர்தான் முன்பாகில் மருவும் விடமேசிறிதென்பர் மன்னும் பாகையறியுகவே
குணம்
கந்தவரிக் கருநாகம் கடித்ததெனிற் செவிகேளா மந்தனாற் கடியுண்ணில் மறித்துடலை நிலம் வீழ்த்தும் முந்தரவமலடாகில் வேர்வை வந்து மோகரிக்கும் இந்தவண்ணமாமரவக் கடியுண்டார் தன் குணமே
வழலைகடிவாயுதிரம் சொரிந்து நா வழுவழுக்கும் நிழல்விரியன் குருதிவரும் நிணம் சேரும் காத்தடியே அழலையிறுபடுங் கடிவாயழத்து மதுதான் பெருஞ்சேயான் சுழலுமாமஞ்சனிறமாம் நீர் சோரச் சொரிந்திடுமே
மண்டெலிமேலுடல் நொந்து மயிர்க்கால் வழியே குருதிவரும் விண்டழன்று பெருஞ்சேயான் விரிந்து சுடும் பெருஞ் சிலந்தி கண்டமதில் விருவிருத்தங் கெரித்தேறும் தேள் கடுக்கும் கண்டந்தெறுக்காற் பூரம் நின்றுார்ந்து கரகரக்கும்
17

Page 14
76.
77.
78.
79.
80.
81.
82.
கடிமுதுகுடம்பு நொந்து கழுத்தொடு வாயுங்கோணி வடுவறிந்தவறி நாவும் வருத்தங்கள் மிகவுமாகி கொடியதோர் மூரிவிக்கல் குணம் பிறயுனதேயாகில் முடிவிலா வாதரோக முடுகினுமூக்கனாமே
சீர்த்துளங் காலுங்கையும் சிவந்து வெப்புடலில் தோன்றி பார்த்துடல் கன்றி நொந்து பசிந்தாடி நிற்குமாகில் வாய்த்தவாய் நீரதெல்லாம் வழுவழுத்துப் புறைக்கில் கூற்றவாயரவமல்ல குணங்கருவழலையாமே
கடித்தவாயிறைச்சி துன்னிக் கண்களுமுறக்கந்தோன்றி அடுத்தவாய் மேலே வீங்கி அழலுடன் மெய் வெதும்பி வடுத்தவாய் எடுத்துச் செம்ம மஞ்சனிருதிரம் சோரிற் பொடித்தவாயரவமல்ல பொறியுறுவிரியனாமே
தலையுஞ்சுழன்று மெய்நடுங்கி தழன்றுமயிர்க்கால் குழுந்தேறி முலையுந்தோழு மிகநொந்து மூரியுளதோ முலர் வென்னக்
குலையுங் குடைதல் செவிகேளாகொள்ளலன்றி மூக்குளைதல அலையுங்குணங்களிவை கண்டாலையமில்லை மண்டெலியே
அந்தணன் தீண்டுமாகிலணைந்தவாய் வீங்கியேறும் வெந்திறலரசனாகில் சிக்கென வெருகிட்டேறும் மந்தமாய் வணிகனென்னும் வடிவுடைசூத்திரன்றான் முந்தவே குழுந்தங்கேறு முறைமையாலறிந்துகொள்ளே
அங்கை கால்கள் நரம்பெடுக்கும் கட்டுமேறுமாவீங்கும் பங்கமாக வீழ்விக்கும் கலகால் வாயை மிகப்பிதற்றும் துங்கயிரத்தந் தானெடுக்கும் துய்யகாலன்றனையழைக்கும் சங்குபாலன் கடியதனைத்தானேயறிந்து கொள்வீரே
குடையுங்காலி லெரிப்புண்டாம் குருகுருவென்றேயேறிவரும்
விடமாயெங்குமுடல் வீங்கும் வெங்கண்ணிரே மிகவுண்டாம்
தடையாம்புபோல் மயங்கித் தடித்தே நாக்குத்தானிருக்கும்
புடையன்பாம்பு கடித்தவரைப் போதவறிந்து கொள்வீரே 18

83.
84.
85.
86.
சோதனை
பங்கம்பாளை வேரதனைப் பாம்பு கடித்தோர் வாயிலிட அங்கு கைக்கில் விஷமில்லை அமிர்தமாகில் மூக்கனாம் பொங்கிப் புளிக்கில் வழலையதாம் புளித்துக் காறில்விரியனாம் செங்கண் சிவந்து துவர்க்கில் மட்டெலி காறிற்புடையனே
வேகலெட்சணம்
வேர்வாய் நிற்கும் முதல்வேகம் வேர்க்குமெய்க்கு மிருவேகம் சோர்வாய் நிற்கும் மூவேகம் சோற்றைக் கக்கும் நால்வேகம் மாராயஞ்சி நெஞ்சு கட்டும் ஆறாம் வேக மறிவழிக்கும் மேராயேழில் விறைவிறைக்கும் எட்டாம் வேகம் பட்டானே
வேகமொன்றிலுரோமம் நின்று திரங்களன்று யிரண்டடிவெம்பி வெந்துடல் ஏகரித்து மேவிவிந்துமுணந்திடும் சோகமூன்றிலுள்விளைந்து சொற்சீர்மை யானதுரை செய்வராம், சோரு நாலு தலம் விழுந்து சுழத்தி தன்னை யெழுப்பிடும் மாகவஞ்சினில் மூரிவெந்துடல் சேறிவற்றிடும் மாது கண்களிழைத்தடங்கியளன்று சுழல விளித்திடும் வேகமேழில் விளைந்தடங்கி விறைக்கும் புயமுள்ளரற்றி மிக்கயெட்டிலெழும்பவல்ல வர் மெத்தமாதவராவரே
தீராதென்றறிகுறி
கருங்கண்ணி மையுந்தான் சிவந்து காமக்கழுத்துந்தளர்ந்தாடி ஒருங்குஞ் சிறுநீர் சிவந்தழிந்து உரைக்கும் பல்லுங் கறுப்பாகி
19

Page 15
பொருந்து மரக்கன் புறங்கண்டு பொரு வேற்குருவை உயிர்மீட்ட மருங்கார் சிறுவன் கொண்டு வந்த மருந்தே வரினும் தீராதே
87. கடித்தபோதே கண்சிவந்து பல்லு
முகிருங் கறுக்குமேல் கடித்தபோதே வாய்கழுத்து வணங்கியே கலங்கினும் கடித்தபோதே மூத்திரம் மலம் சிவந்து கழியினும் கடித்தபோதேயவர் தனக்கு காலனென்றறிவீரே
* 岔 宏
நசியம் خه " பாகலிலை மென்தயிர்வேளை வேலிப்பருத்தி பகர்ந்தாபோல் மோகித்தெட்டும் சென்றடங்கில் மூன்று நாலு மணியுப்பு யாகப்பச்சை வெற்றிலையும் பிசைந்து மூக்கிலிடுவீரே
உற்றதோர் வசம்போடுள்ளி ஓங்கிய முசுமுசுக்கை முற்றுமே நறுக்கிக் கொண்டு சுவறினால் மூக்கில் பெய்ய வற்றுமே விடங்களெல்லாமரக்கர்கள் படையை வெல்லும் வெற்றிவேல் விழியினாளே மிகநன்று விரும்பிக் கொள்ளே
நொச்சிக் கொழுந்து சிறுதும்பை நுகருந் துளசி புனந்துளசி பச்சைக் கொழுந்து கிஞ்சுகமேற்படரும் நாறாகரந்தையுடன் நச்சமாயோரொன்றை நறுக்கிச் சிறுநீருடன் கூட்டி மெச்ச அஞ்சாறென வேகம் சென்றால் மூக்கில் விடுவீரே
பாகலிலையை உள்ளியுடன் பரணிக்கிடையேயடப்பிசைந்து நாகவிடம் போய்த்தலைக்கொண்டால் நாசினிடையேவிடுவீராய் ஆகமடையக்கலந்தாலு அனைத்தும்விடங்கள் நல்லமிர்தாம்
வேகமேறிச் சென்றாக்கால் மின்னே தெரியச் சொன்னோமே
20

மண்ணில் வேந்தன் மலையில் முனிவனும் உண்ணும் சோற்றுக்குரிசையுண்டானதும் கண்ணில் மூக்கிற் காதிற்பிழிந்திட விண்ணிற் போன விடங்குதித்தோடுமே
உள்மருந்து
அத்தைக்குரிய அடியாரை அனந்தன் கடித்து அயர்ந்ததென்றால் நத்தைப்பாலாவிப் பாலதனை நன்றாய்ச்சீலைதனிலுட்டி மத்கரிய வெந்நீரில் வருந்திப் பிசைந்து யிறையளவு பத்தக் கொடுக்கவல்லீராய் பாரிற்குதிக்கும் பல்விடமே
நீலஞ்சோதியிரண்டிடைகெந்தகம் ஏலங்காயுமிதரமுமல்விடை கோலநீலிச்சாற்றிற் குழைத்திடக் காலனோலை கனவிலுமில்லையே
வாய்த்தவானரவ நஞ்சு மன்னையைக்கட்டிச்சென்றால் ஆத்தியின் துளிரும் பச்சைப் பருத்தியின் பிஞ்சுங் கூட்டிச் சேர்த்த தண்ணிற் சேரவரைத்துடன் கரைத்துமீதே கரத்தவே மிளகின் தூளும் கலந்துள்ளேயருந்தத்திரும்
காலிவணங்கக் குழலூதும் காணமுகிலோன் தன்னாணை வேலிப்பருத்தி வேர்தன்னை விரையக்காடி தனிலரைத்து மாலியுளக்குக் காடிதனில் வருந்திக் கொடுக்க வல்லீராய் பாலித்துனக்கும் விடம்பறக்கும் பரமகுருவின் மருந்திதுவே
துவாலை, புடையன், மண்டெலி, வளலைக்கு
வல்லபுடையன் மண்டெலியும் வழலை கடித்துயுட்கொண்டால் நல்லதாளி வசம்புள்ளி நறுக்கியரைத்துச் சமன் கொண்டு மெள்ளயுடலிற்றுவாலையிட வீக்கம் விடங்கள் விலகிப்போம் கவலைப்படாமலிம் மருந்தைக் கருதிச்செய்வார் பெரியோரே
21

Page 16
புலிமுகச்சிலந்திக்கு
வெளவாலொட்டியிலையும், இலுப்பைப் புண்ணாக்குமிடித்துக்கட்டவும் பனைவேரும், வசம்பு, உள்ளியுமரைத்து இளவெந்நீரில் உள்ளே கொடுக்கவும்.
திருநீலகண்டனுக்கு
வெற்றிலை, வசம்பு, உள்ளி இவைகளை அரைத்து முலைப்பாலில் நையமிடவும் காண்டையிலையைத்தட்டி பாகம் மாறிக்கண்ணிற் பிளியவும்
சில விஷததுக்கு
மஞ்சள் மிளகு புண்ணாக்கு வருந்தி மூன்றும் பொடி செய்து நாசிதன்னிற் புகைபிடித்தால் நட்டுவக்காலி தேள்பூரம் மிஞ்சுஞ்சேயான் ஆறுபுள்ளி மெத்துஞ்சிலந்தி குளவியுடன் பஞ்சுவாயிற் பொறிபோலே பறந்துவிடுமே சிலவிஷங்கள்
நல்லபாம்புக்கு
வாகம்பூ, மிளகு, சுக்கு, இந்துப்பு, திப்பிலி இவைகளைப்
பாவையிலைச் சாற்றிலரைத்து உள்ளுக்குக் கொடுக்கவும்.
CSSR 灰の
- சித்தராருடம் முற்றும் - C4 SSD
22

4 LITL6) 66II3585Ihleb61
இந்நூலில் இடம்பெறும் மருத்துவப் பாடல்களுக்குரிய சில விளக்கங்களை மட்-தாழங்குடா விஷவைத்தியர் திரு.கதிர்காமத்தம்பி பாலிப்போடி அவர்கள் இங்கு குறிப்பிடுகிறார். பாடல்களின் இலக்கங்களின் பிரகாரம் பொருள் சொல்லப்பட்டுள்ளது.
UTL6) 07.
uTL6) 08.
IITL6) 10.
பாடல் 11.
நாமங்கள்
நாகபாம்பின் பெயர்கள் இவ்வளவுதான் உண்டு
நிறங்கள்
வேதியன் ரத்தமேனி வெந்திறலர்சன் - பொன்னிறம் வணிகின் வெள்ளை
வசிப்பிடங்கள்
பெரிய மரங்களிலும், பாழ் மனைகளிலும் ஏறிவாழும். சூத்திரன் a. புத்தினில் வாழும்.
இரை எடுக்கும் நாள்
அனந்தன் வாசுகி திங்கள் கனந்தரு தக்கன் செவ்வாய் கோடன் புதன் மனந்தரு வியாழன் மகாபத்மன் வெள்ளி சங்குபாலன், களிகன் சனி
பாடல் 12. இந்த நாளிகைக்குள்ளே இவை உண்ணாவிட்டால் இவை
இறந்துவிடும்.
23

Page 17
உணவு
பாடல் 13. வாசுகந்தம், நான் மறையாளன் பூக்களின் அல்லியை
பாடல்
ustL6)
பாடல்
UTL6)
14.
15.
16.
17.
உண்ணும்.
மற்றவைகளும், வசியறும்:- எலி, ஓணான் இவைகளை
உண்ணும்.
தலமுடையுழவன் - தவளையும் மீனும்
6TGF6)6
மறையோனாகில் - நாறும் (கொட்டாவி)
காப்புடையரசனாகில் - தாழை நாறும்
சீப்புடைவசியனாகில் - பாதிரிப்பூ நாற்றம்
கோப்புடையுழவனாகில் - இலுப்பைப்பூ மணம்
ஆடுங்குறி
பூசுரன் - வானை நோக்கி ஆடும்
* לל
வணிகன் கூசிலாயுழவனாகில் - எங்கிலும் வளைந்து ஆடும்.
முத்திரை
வேதியன் - சங்கு உண்டு வெந்திறலரசன் - சக்கரம் உண்டு வணிகன் - வில் உண்டு வலமிகு சூத்திரர் - புள்ளடிகள் உண்டு
அடையாளக் குறி
பாம்பு கடித்தவரின் காயங்கள் எப்படி இருக்கின்றது
என்பதை அவதானித்தல்.
24

LITL-6)
பாடல்
UTL6)
LTL6)
UTL6)
UTL6)
பாடல்
UTL6)
JTL6)
18.
20.
21.
22.
23.
24.
25.
26.
பாம்பு கடித்துவிட்டதென்று சொன்னவுடன் வைத்தியரின் கணிப்பின் பின் இது விசமில்லை என்று வைத்தியரால் கூறப்படல்.
பாம்பு வைத்தியரால் வைத்தியம் செய்ய முடியாதா? அல்லது முடியுமா? எனக் கூறுதல்.
விசம் எப்படி இருக்கும் என்பதைக் கணித்தல்.
பல்லின் குறி
பல்லின் குறியை - அதாவது எந்தப் பாம்பு கடித்துள் ளது என அறிதல்.
பாம்பு கடிக்கும் காரணங்கள்
பசி, பயம், நோதல், பல்லில் விசம், வினைப்பயன் இவற்றால் தீண்டும் என்று கூறுதல்
22ஆம் பாடலைப் போன்று
21ம் பாடலைப் போன்றது.
ஒரு பல்லாகில் - சிறிய விசம். மந்திரம் சொன்னால் மாறும். நான்கு பல்லுப் பட்டால் மருந்து செய்ய முடியாது!
ஆண்,பெண்ணறிய
ஆணா, பெண்ணா என அறிதல்
25.

Page 18
பாடல்
பாடல்
பாடல்
பாடல்
UTL6)
ustL6)
பாடல்
பாடல்
28.
29.
30.
3.
32.
33.
34.
35.
முட்டையின் நிறம்
முட்டையிட்டு 7 நாட்களுக்கு அடைபடுக்கும்.
248 முட்டைகள் இடும் - ஆண் குஞ்சுக்குரிய முட்டை சிவப்பாக மாறும். பெண் வாகைப் பூ நிறமாகும். மற்றவை அதாவது, அடைகாக்கும்போது முருங்கைப் பூப்போன்று இருப்பதை அது விழுங்கிவிடும்.
248ல், 228ஐ விழுங்கும் - மிகுதியில் 4 இறந்துவிடும். ஏனைய பதினாறும் நல்லமுட்டை. 27 நாட்களில்
குஞ்சாக வெளிவரும்.
28 நாட்களில் நஞ்சு சேரும். அதற்குப்பின் விரியன்பாம் பாகி தேள்முதல் பலவும் உருவாகும்.
சற்ப வினை
குஞ்சுக்குத் தோன்றும் வினைகள் தோன்றாவிட்டால் இவை 121 வயது வரை வாழும்.
சற்ப வயது
6)lug
அவற்றில் 120 வயதுக்குப்பின் உடல் தேய்ந்து படமது
சிறகாகிப் பறக்கும் - அதன் தலையில் மணி தோன்றும்.
இப்படியான நாகத்தின் ஒளிபட்டாலே மற்றவர் இறந்து விடுவர். கருடன் கண்டால் மட்டுமே இறக்கும். அல்லாது அதற்குச் சாவே இல்லை.
26

LITL6)
JTL6)
tist L6)
uTL6)
UTL6)
பாடல்
பாடல்
JITL6b
36.
37.
38.
39.
41.
42.
43.
60 நாட்களுக்கொரு தடவை தோலுரிக்கும். மீண்டும் 60 நாட்களில் மீண்டும் தோன்றும். அதன்பிறகு கண்தான் செவியாக மாறும்.
செவிகண்டபின் 14 நாட்களில் மறுபடி நஞ்சுண்டாகும். அதன்பிறகு கடும் விசம் தோன்றும்.
கடிவாய்க் குறி
கடித்த இடம் - வெளுப்பாய் இருக்கும், குளிர்ந்திடும் - வீக்கம் இருக்கும் - எலும்பினில் வருத்தமுண்டாகும் - விசமேறும்
பாம்பு கடித்தவரை விசத்தை இறக்கி மீட்டால் சொர்க்க லோகம் கிடைக்கும்.
இப்படியான மருந்து செய்வோரை "மருந்தென்றே அழைக்கப்படும்.
பாம்பு கடித்த இடங்களை அறிந்து இது காப்பாற்றக் கூடிய கடியல்ல எனக் கூறுதல்.
மூங்கில் வனம், நாணற்கூட்டம், பாழடைந்த கோயில், பொந்து, புத்து, பொதுச்சந்தி, புன்னை, குளத்துநீர் இவ்விடங்களில் வைத்து பாம்பு தீண்டக்கூடாது.
தூதன் வந்த திக்கறிதல்
தூதன் கொண்டுவந்த பொருளைக் கொண்டு எந்தப்
பாம்பென அறிதல் (தங்களை அறியாமல் கொண்டு வரல்)
27

Page 19
TL6)
பாடல்
பாடல்
UTL6)
UTL6)
பாடல்
LIFTL6)
UTL6)
44.
45.
47.
48.
49.
53.
54.
இரண்டிற்கு மேல் வந்தால் . வழலை தூதனும் வர நாயும் குரைத்து ஓடினால் - எலி காகம் கத்தினால் - விரியன் இல்லாவிட்டால் - வனமிருகமாகும்.
சூரியன் உதிக்கும் திசையில் வந்தால் அந்த நோயாளி இறக்கமாட்டார். அவர் ஓர் ஆண். இந்த செய்தி கொண்டு வரும்போது காகம் ஒரு திசையில் சென்றால் பெண் ஆவார்.
இருட்டில் கடித்தால் ஆணுக்கு இடப்பக்கம், பெண்ணுக்கு வலப்பக்கம்.
நோயாளர்களைக் கொண்டுவரும்போது - பருந்து, வல்லூறு, கருக்குருவி, கோழி, மயில், ஆந்தை கத்தக்
கூடாது.
ஆணா, பெண்ணா என அறிந்து மருந்து செய்தல்.
தூதன் வந்த நாட்பக்கம்
பாம்பு கடித்து பிரண்டு ஓடுமாயின் - சாவு பாம்பு கடித்து சும்மா படுத்தால் - சாவு பாம்பு கடித்து படம் விரித்தால் - சாவு இதைக் கேட்டறியவும்.
ஒன்றும் முடியாத கட்டத்தில் இந்தப்பாட்டை படித்து வணங்குதல்.
53ஆம் பாடலைப் போன்று
28

தூதன் குறி (செய்தி கொண்டு வருபவர்)
UTL6) 55. பாடலைப் படித்தல்
LITL6) 56. கை, நாக்கு, மூக்கு, கழுத்து, நரம்பு, நெற்றி, உச்சி,
கண்கள், குறி, தொப்புள், விலா, உதடு, நாக்கு, மார்பு இவற்றில் தீண்டியிருந்தால் மரணம்.
சகுனங்கள்
UsTL6) 57. நாசிவன், குருடன், சண்டைபிடித்தல், கையில் கயிறு
கண்டால் கூடாது.
தூதன் நிற்கும் நிலை
UTL6) 58. கண்ணில் நீர், கைதனை நெரித்தல், விறகினைச் சுமத் தல், மண்ணினை காலால் கீறுதல், கையால் உடம்பில்
கீறல் - இவை கண்டால் சாவு.
UsTL6) 61. தூதன் தன் காலினைத் தொட்டால்
- தேள் முழங்காலைத் தொட்டால் - நீர்ப்பாம்பு வயிற்றைச் சொறிந்தால் - விரியன் கை சொறிந்தால் - மயிர்க்கூறான் மார்பைச் சொறிந்தால் - கருவளலை வலமார்பைச் சொறிந்தால் - எலி காது, கழுத்து சொறிந்தால் . மண்டெலி இவ்வளவுமில்லாவிட்டால் - மூர்க்கன்
பாம்பு
பாடல் 64. மொட்டையன், சன்னியாசி, தலைவிரி ாேலத்துடன்
பெண் வரல், விறகுக் கட்டு, தீராத நோயாளன், அம்பட்டன் - இப்படியான குறிகள் கண்டால் தீர்க்க (UD19u Jfig5l.
29

Page 20
பாடல்
பாடல்
UITL6)
பாடல்
பாடல்
பாடல்
UsTL6)
67.
68.
69.
70.
72.
73.
74.
தூதன் கொண்டு வந்த செய்தியின் எழுத்துக்களை வைத்து அறிதல்.
பூச்சியின் பெயர்
கடிபட்டவனின் பெயர்
பூச்சி கடித்தல் என்ற சொற்களை வைத்துக்
கணிப்பிடல்.
மேற்கூறிய விடயங்களைக் கூட்டி நான்கால் பிரித்து அதன் மூலம் தூதன்தான் செய்தி கொண்டு வந்துள் ளான் என அறிதல்.
இவற்றைப் பிரிக்கும்போது மூன்று கூறாக்கினால் விசம் இல்லை. அவற்றில் இரண்டு எழுத்துக்கள் மிஞ்சினால் கொஞ்சம் விசமுண்டு. நான்கு எழுத்து மிஞ்சினால் மாண்டிடுவார்.
அரவத்தின் பெயர் முன்னும் கடித்தவன் பெயர் பின் னும் வந்தால் விசம் கூடியது. மாறிவந்தால் சொற்ப விசமாகும்.
குணம்
கருநாகம் கடித்தால் - செவி கேளாது, நடுங்கும்,
நிலத்தில் வீழ்த்தும்,
வியர்க்கும்.
வழலை கடித்தால் :ー நாவளுவளுக்கும் நிழல்விரியன்
கடித்தால் :- குருதிவெளிவரும், கிறுகி
றுத்து தூக்கி எறியும்,
மயக்கம் வரும், மஞ்சளாக
வாந்தி எடுத்தல், சிறுநீர் 30 கழித்தல் (இரத்தமாக)

ult L6) 75.
பாடல்
UITL6)
பாடல்
List L6)
பாடல்
UTL6)
76.
77.
78.
79.
80.
81.
எலி கடித்தால:- மயிர்க்கால் சிலிர்த்து விறு
விறுஎன்று ஏறும். பெருஞ்சேயான்
கடித்தால் :- நெருப்பால் சுடுவது போன்
றிருக்கும். பெருஞ்சிலந்தி
கடித்தால - விறுவிறுத்துக் கடுக்கும். பூரான் என்றால் - விட்டு விட்டுக் கடுக்கும்.
முதுகு நொந்து, கழுத்தும் வாயும் கோணி, வருத்தங் கள்கூடி, நிற்காத விக்கல் அதிகமாகினால் : மூர்க்கன் பாம்பு
காலும் கையும் சிவந்து வெளுத்த உடல் தோன்றி, உடல் கன்றி நொந்து - தளதளவென ஆடியும், வாய்நீர் வளுவளுத்து உப்புறைத்தால் :- கருவழலையாகும்
கடித்த இடம் விறைத்து, நித்திரை தோன்றி, வீங்கி, மயங்கி, மஞ்சள் நிறமான இரத்தம் தோன்றினால் விரியனாகும்
தலைசுற்றி, உடல் நடுங்கி, குளிர்ந்து, தலை, தோள் நோதல் :- மண்டெலி என்பர்
அந்தணன் தீண்டினால * வாய்வீங்கும் வெந்திறலரசனாகில் - உடனே விசமேறும் வணிகன் :- குறைவாக விசமேறும்
கால்கள் உழையும் , வீங்கும், வாய் பிதற்றுதல், கடு
மையாக இரத்தமடிக்கும், சாகப்போறேன் எனக் கத்துவான் :- சங்குபாலன் கடித்தால்
31

Page 21
UTL6) 82.
uTL6) 83.
uTL6) 84.
LuIIL6) 86.
LTL6) 87.
உள்ளங்காலில் எரிப்பு, குறுகுறுத்து இரத்தம் ஒடல். கண்ணெல்லாம் நீர் வடிதல், நாக்குத் தடித்தல் புடையன்பாம்பு தீனாடினால்
சோதனை
பங்கம்பாளை வேரை வாயிலிடும்போது அமிர்தமாக இருந்தால் மூர்க்கன்பாம்பு கடித்திருக்கும். புளித்தால் வழலை, புளித்துக்காறினால் விரியன், கண்கள் சிவந் தால் மண்டெலி, காறித்துப்பினால் புடையன்.
வேகலெட்சணம்
1ம் வேகம் வியர்வை 2b 9 வியர்த்துக் குளிர்ந்து போதல் 3 99 சோர்ந்து விழுதல் 4Lib 99 உண்டதைக் கக்குதல் 5D நெஞ்சடைக்கும் 6b 99 LDuff (göğ56ü 7D 99 விறைத்தல் 8ub ” இறத்தல்
தீராதென்ற குறி
கண்ணிமை சிவந்து, கழுத்து தளர்ந்து, சிறுநீர் சிவப் பாகி, பல் கறுப்பாகி, கண் பிரளுதல் - முனிவர் கொண்டுவந்த மருந்தாகிலும் இவருக்கு குணமாக்க (PI9u Islg5l.
86ஆம் பாடலைப் போன்று
32

நசியம்
பாகை இலை, வேலிப்பருத்தி சேர்த்து ‘மூன்று நான்கு உப்பு, வெற்றிலை இரண்டு மூன்று பிசைந்து சாற்றை மூக்கில் இடல்.
வசம்பு, உள்ளி, முசுமுசுக்கை வெட்டி எடுத்து மூக்கில் பிழியக் குணமாகும்.
நொச்சிக் கொழுந்து, சிறுதும்பை, மணமான துளசிக் கொழுந்து, நாறாகரந்தை நறுக்கி, சிறுநீருற்றி அரைத்து மூக்கிலிடுதல்.
பாகையிலையை உள்ளியுடன் பிசைந்து நாசியிலிட்டால் அமிர்த மென்றால் சரியாகும்.
மண்ணில் வேந்தன், மலையில் முனிவனும் உப்பும் காதிற் பிழிந்தால் குணமாகும்.
உள்மருந்து
நத்தைப் பாலாவிப் பாலை சீலையில் துவைத்து, அதை வெந்நீரில் துவைத்துப் பிழிந்து குடிக்கக் கொடுத்தல்.
கெந்தகம் - ஏலக்காய் - கோலநீலிச் சாற்றில் குழைத்து உள்ளுக்குக் கொடுத்தல்
ஆத்தித்துளிர், பச்சைப்பருத்திப் பிஞ்சு - தண்ணிரில் அரைத்துக் கரைத்து மிளகின் தூளுடன் கலந்து கொடுத்தல்.
வேலிப்பருத்தி வேரை அம்மியில் வைத்து அரைத்து, தேங்காய்ப் பாலில் கொடுத்தல் (தண்ணீர்விடாத பால்)
33

Page 22
துவாலை - புடையன் - மண்டெலி - வழலை
நாகதாளி - வசம்பு - உள்ளி சமளவு நறுக்கி அரைத்து வீக்கத்தில் பூசக் குணமாகும்.
புலிமுகச்சிலந்தி
வெளவால் ஒட்டிஇலையும் - இலுப்பைப் பிண்ணாக்கும் இடித்துக் கட்டி, பனைவேர், வசம்பு, உள்ளி அரைத்து இளவெந்நீரில் குடிக்கக் கொடுத்தல்.
திருநீலகண்டன்
வெற்றிலை, வசம்பு, உள்ளி அரைத்து முலைப்பாலில் மூக்கில் நசியமிடல். காண்டையிலையை இடித்து சீலையில் காயவைத்து அதை எரித்து அதன் புகையைக் கண்ணில் விடல்.
சில விசத்துக்கு
மஞ்சள், மிளகு, பிண்ணாக்கு மூன்றையும் பொடிசெய்து புகைபிடித்தால் நட்டுவக்காலி, தேள், பூரான், ஆறுபுள்ளி, மெந்துஞ்சிலந்தி, குளவி பறந்திடும்.
நல்லபாம்பு
வாகம்பூ, மிளகு, சுக்கு, இந்துப்பூ, திப்பிலி இவைகளை பாகையிலைச் சாற்றில் அரைத்து உள்ளுக்குக் கொடுத்தல்.
34

கடித்த இடத்தை இடக்கையினால் பிடித்தபடி விசமிறக்கும் மந்திரம்
ஓம் திருப்பரமேஸ்வரருடன் திருப்பரமேஸ்வரியும் திருவேட்டைக்கெழுந்தருளிப் போகிறபோது திருப்பரமேஸ்வரி கழுத்திற்கிடந்த திருமாங்கல்யம் அறுந்து தரையில் விழுந்து சிந்தினர் போலே என்சொல் மந்திரம் கண்டவுடனே இவர் சிரசில் இருக்கப்பட்ட விசங்களும் 4448 நரம்பில் எடுக்கப்பட்ட விசங்களும் என்னையும் உன்னையும் படைத்த ஆதிபரமேஸ்வரனில் ஆணை உருக வடிந்து உள்ளங்காலால் இறங்கி பூமி குதித்து போகப்போக பேசுவாரார்.
தவணை போடல்
ஓம் ஆலகால விசத்தை அரன் அள்ளி உண்டபோது ஏலவனும் கருங்குழலாள் ஈஸ்வரியினால் இடக்கையினால் பிடித்தபிடி இங்கே நிற்க நிற்க பேசுவாரார்.
35

Page 23
பாம்புக்குட்டிகள் தாயுடன் விளையாடும் காட்சி
 

thigп
冗 耻 = 齿 § 9
igo Snake
Ind
ருவனாலைப பாமபு

Page 24
TIL GIOL IIIIIII || $' "ঈশ্বপ্নে リエーリ SKKSzYSLAATAqASKSKSYS
 


Page 25


Page 26


Page 27

DI LI E il