கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் - பாகம் 1

Page 1
葛
WANNE
წ"|წ
W *
წ
 


Page 2


Page 3

சின்னத்தரை சோதிலிங்கம்
B.A.Dip.n.Ed
கணனி அச்சுப்பதிவு சண்சைன் கீரபிக்ஸ்
கே.கே.எஸ் வீதி, இணுைவில்,
2003

Page 4
இந்தநாகரீகத்தில் நுண்கலைகள்
ught - I
ஆசிரியர்: சி.சோதி B.A.Dip.ln.Ed
யா / இணுைவில் இந்துக் கல்லூரி
பதிப்பு முதற்பதிப்பு - 2003
பக்கங்கள்: i -- iv +- 250
பதிப்பு: யோகநாதன் கிரபிக்ஸ் அன் ஒவ்செற் பிறிண்ரேர்ஸ் கே.கே.எஸ் வீதி, இணுைவில்,
ചെ9: × தேன்மொழி சோதிலிங்கம் “செல்வகம்”
இணுைவில் கிழக்கு இணுவில்.
விலை: 250/=

66L650
வாழ்த்துரை
அணிந்துரை
என்னுரை
1s
4.
நுண்கலைகள் ஒர் அறிமுகம்
கலைபற்றிய அறிஞர் கண்ணோட்டம்
இந்தியக்கலை . மேனாட்டுக்கலைகளுக்கிடையிலான முரண்பாடுகள்
நுண்கலைகளின் வரலாறு கோயில்கள் வளர்த்த கலை இந்தியக் கலைக்கோட்பாடு
நுண்கலைகளில் கட்டடக்கலை
சிந்துவெளிகாலம்
வேதகாலம் சிவாகமம் காட்டும் ஆலய அமைப்பு மெளரியர் கால கட்டடக்கலை மெளரியரும் இந்து கட்டடக்கலையும் குப்தர்காலக் கட்டடக்கலை சங்க இலக்கியங்களில் கட்டடக்கலை காவிய நூல்களில் கட்டடக்கலை
பல்லவர் காலக் கட்டடக்கலை
சோழர் காலக் கட்டடக்கலை
விஜயநகர காலக் கட்டடக்கலை
நாயக்கர் காலக் கட்டடக்கலை
ii
iv
01
Ꭴ5
07
16
18
21
23
24
26
32
33
39
41
43
72
111
126

Page 5
7. சிற்பற்கலை 139
சிற்பக்கலை மூலங்கள்
ஒழுக்கக் கோட்பாடு 140 சிற்பக்கலை உறுப்புக்கள் 121 சமய வரலாற்றில் சிற்பக்கலை 142 மெளரியர்கால சிற்பக்கலை 145 குப்தர்கால சிற்பக்கலை 149 தமிழிலக்கியங்களில் சிற்பக்கலை 154 பல்லவர்கால சிற்பக்கலை 157 சோழர்கால சிற்பக்கலை 167 பல்லவ - சோழர்கால சிற்பக்கலை பொதுநோக்கு 180 பாண்டியர்கால சிற்பக்கலை 181 விஜயநகர காலத்துச் சிற்பக்கலை 184 நாயக்கள்காலச் சிற்பக்கலை 187
8. ஒவியக்கலை 191 வரலாற்றுப் போக்கில் ஒவியம் 196 ஓவியக்கலை மூலங்கள் 199 வட இந்தியக்கலை மூலங்கள்
யோகிமாரா ஒவியங்கள் 204 அஜந்தா ஒவியங்கள் 205 பாக் ஓவியங்கள் 212 வாதாபி ஒவியங்கள் 213 எல்லோரா ஒவியங்கள் 214 இராஜபுத்திர ஒவியங்ங்கள் 215 சேரர் ஓவியங்கள் 220 பிற்பட்ட காலம் 221 பாறை ஓவியங்கள் 222
9. தென்னாட்டு ஓவியங்கள்
பல்லவர் காலம் 223
பாண்டியன் காலம் 228 சோழர்கால ஓவியங்கள் 232 விஜயநகரகால ஓவியங்கள் 236 நாயக்கர்கால ஒவியங்கள் 239
உசாத்துணை நூல்கள். 245

வாழததரை
சமயம் என்பது அடிப்படையில் வழிபாட்டுடன் தொடர்புடையது. ஆனால் மனித நாகரிகம் வள வளர சமயமும் காலதேச வர்த்தமானங்களிற்கேற்ப வளர்ந்து வந்துள்ளது. அல்லது செப்பனிடப்பட்டு வளர்க்கப்பட்டது என்றுதான் கூறவேண்டும் சமயம் நிறுவனமயப் படுத்தப்படுகின்றபோது அதற்கே உரிய குணாம்சங்களும் அதனுள் அடங்கிவிடுகின்றன. வெறுமனே சடங்குடன் ஆரம்பித்த மதத்திற்கு சுண்ணமும் செங்கல்லும் கொண்ட தலங்கள் உருவாகின. காலவோட்டத்தில் அரசுகள் மாறிமாறி வந்தபோது அவை கற்றளிகளாக மாறின. கலைவண்ணம் சேர்ந்தது. கோயில் மீது இலக்கியங்கள் எழுந்தன. சமயத்தை நிலைப்படுத்த தத்துவங்கள் உருவாகின. இவ்வாறு சகல அம்சங்களும் சேர்ந்தபோது மதம் என்பது நாகரிகத்தின் நிலைக்களனாயிற்று. அங்கே பக்தி எனும் விடயத்திற்கு மேலாக பல்துறை அம்சங்களின் கூட்டு நிறுவனமாக அது விளங்கியது. ஆகவேதான் இந்துநாகரிகம் என்பதும் பல்துறை ஒழுங்குகளின் கூட்டு நிறுவனமாக விளங்குகிறது. வரலாறு, இலக்கியம், தத்துவம், நுண்கலைகள் முதலியவை என அவை விரிகின்றன.
இந்துநாகரிகம் எனும் பாடப்பரப்பில் மேற்குறித்த பல்துறை அம்சங்கள் அடக்கியுள்ளன எனினும், இந்நூல் நுண்கலைகள் பற்றிப் பேசுகின்றது. சிறப்பாக கட்டடம், சிற்பம், ஓவியம் என சகலதுறைகளையும் பற்றிய ஒரு பிராரம்ப உசாவலாக இது அமைகிறது. மாணவர்களாகிய நுகள்வோரின் கொள்ளளவை மனங்கொண்டு “க.பொ.த” உயர்தரம் மற்றும் வெளிவாரிய பட்டப்படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களுக்காகவே இந்நூல் எழுதப்பட்டுள்ளது.
இந்துநாகரிகம் எனும் துறையில் நிறைந்த புலமையும், அதனைக் கற்பித்தலில் உன்னதமும், பல நூல்களை எழுதி வெளியிட்ட ஆளுமையும் இணைந்த நண்பர் "சி.சோதிலிங்கம்” அவர்களது இந்த முயற்சி வரவேற்கத் தக்கது. மாணவர் உலகிற்கு இந்நூல் ஓர் வரப்பிரசாதமாகும். எழுத்துப்பணி மேன்மேலும் வளர எனது வாழ்த்துக்கள்.
12.08.2008 வல்லிபுரம் மகேஸ்வரன்
முதுநிலை விரிவுரையாளர் தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம்.

Page 6
அணிந்தரை
இந்து நாகரிகம் பன்முகப் பரிமாணங்களை உள்ளடக்கிய பெரும் ஆய்வுப்புலமாக விளங்குகின்றது. நுண்கலைகள் வாயிலாக எழும் புலக்காட்சி, அறிவாதாரங்கள், அறம், ஒழுக்கம், பிரபஞ்சம், உயிர்கள், பேருயிர் என்றவாறு பல தளங்களிலான தேடல்கள் இந்துநாகரிகத்தின் தனித்துவ நிலைகளைப் புலப்படுத்தும். மனித வாழ்வைத் தெய்வீகப்படுத்தி நிலைமாற்றம் செய்வதில் இந்து தர்ம நுண்கலைகள் சிறப்பார்ந்த செயற்பாடுகளைப் புரிகின்றன. நல்லவை நல்லவற்றைப் பிறப்பித்தலும், தீயவை தீயவற்றைப் பிறப்பித்தலுமாகிய விளைவுகளின் தொடர்ச்சியைப் புலப்படுத்தல் இந்துசமய நுண்கலைத் தனித்துவமாக அமைகின்றது. மெய்யறிவூட்டலும், மறை ஞானத்தின் சுவடுகளைக் காட்டுதலும், பரிபக் குவப் படிநிலைகளுக்கு ஏற்றவாறு கலைநுகர் பரிமாற்றங்களைத் தருதலும் இந்துமத நுண்கலை வடிவமைப்புக்களிலே பரக்கக் காணப்படுகின்றன.
இந்துநாகரிகத்தை ஒரு புலமை நெறியாகவும், சாதனை நெறியாகவும் பயின்ற ஆசிரியர் திரு.சின்னத்துரை சோதிலிங்கம் அவர்கள் இத்துறையினைப் பல்லாண்டு காலமாகக் கற்பித்த அனுபவம் நிரம்பியவர். பாட உள்ளடக்க ஆழத்துக்கு ஏற்றவாறு கற்பித்தல் நுட்பவியல்களையும் முறையியல்களையும் பயன்படுத்துவதில் தனித்துவமான ஆற்றல்களைக் கொண்டவர். மாணவர்களைத் தொடர்ந்து தேடுமாறும் துலங்குமாறும் தூண்டி வருபவர். மாணவரின் அறிகை ஆற்றல், எழுச்சி ஆற்றல், இயக்க ஆற்றல் முதலியவற்றை வரன்முறையாகக் கணிப்பீடு செய்வதில் தீவிர கவனம் செலுத்தி வருபவர். தமது நீண்டகாலகீ கல்வி அனுபவங்களை ஒன்று திரட்டி இந் நூலாக்கத்தை மேற்கொண்டுள்ளார். மாணவர்க்கும் இந்துநாகரிகத் துறையில் ஆய்வு செய்வோர்க்கும் இந்நூல் பயன்படத்தக்கவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
சத்தியத்தின் ஆழ்ந்த உள்ளடக்கங்களை அறிவதற்குத் துணைநிற்கும் இந்துக் கலைகள் மனித உணர்வுகளை விலங்கின நிலையிலிருந்து தெய்வீக நிலைக்கு பெயரச் செய்துவிடும் ஆற்றலை இந்நூல் தெளிவாகச் சுட்டிக்காட்டி

நிற்கின்றது. பல நூல்களிலிருந்தும் திரட்டிய தகவல்களை வரன்முறையாகத் தொகுத்துத் தந்துள்ளமை, மாணவர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் மிக்க பயனுடையதாக அமைந்துள்ளது.
இந்துக் கலைகளில் உள்ளடங்கியிருக்கும் மிகப்பெரிய இரகசியம் அதன் கலைவீச்சில் மறைந்து நிற்கும் அனுபூதி அனுபவங்கள் (MYSTIC EXPERIENCES) தான். அந்த அனுபவங்களுடன் சங்கமிக்கும் பொழுது நிகழும் பளிச்சீடுகளே கலை இன்பத்தை நிறையின்பமாக்கும்.
12.08.2003 பேராசிரியர், கலாநிதி சபா.ஜெயராசா
கல்வியியற் பேராசிரியர் யாழ். பல்கலைக்கழகம்.

Page 7
முனனுரை
இந்துக் கலைகள் இந்துப் பண்பாட்டின் உட்கூறான இறையியலுடன் இணைந்தே வளர்ந்து வந்துள்ளது. மக்கள் வாழ்வையும் மத அனுட்டானங்களையும் இணைத்த வகையில் இந்துக் கலைகள் சிறப்பிடம் பெறுகின்றன. இவை மனிதத்திறன் வழியாக பிறப்பது என்று கலையியலாளர்கள் கூறுகின்றனர். எனவே மனிதனின் அகவயப்பட்ட உணர்வுகளின் வெளிப்பாடே கலையாகும் நிலையில் நுண்கலை மரபில் கட்டடம், சிற்பம், ஓவியம், இசை, நாட்டியம் என்பன உள்ளடக்கப்பட்டுள்ளன. இவற்றை அழகியல் கலைகள் என்று அறிஞர்கள் கூறுவர். மக்களின் அறிவு முதிர்ச்சியே இக்கலைகளின் தோற்றத்திற்குக் காரணம் இயற்கையில் கண்ட இன்ப விருந்துகளை என்றும் அழியாமல் வைத்துச் சுவைத்து மகிழக் கண்ட முயற்சியின் பயன்களே இக் கலைகளாகக் கொள்ளலாம். இத்தகையதான நுண்கலை மரபிலே பெரும்பான்மையாக கட்டடக்கலையும் சிற்பக்கலையும் சிறுபான்மையாக வண்ண ஒவியமும் நிலைபெற்றுள்ளன. இன்று எஞ்சியுள்ள சிற்பவடிவங்களில் பெரும்பாலானவை கட்டடக்கலைக்குத் துணையாக அமைக்கப் பெற்றனவாதலின் அதனை எடுத்துக் காட்டுதலை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டதே இந்நூலாகும்.
கலைஞனின் தனித்துவமிக்க ஆற்றல்கள் திறன்கள் பல வகையில் வெளிப்படுத்தப்படும் நிலையில் கல்லிலோ மரத்திலோ செதுக்கி வடிவமாக்கிக் காட்டினால் அது சிற்பக்கலையாகின்றது. சிற்பக்கலையூடாக தெய்வீக உணர்வு வெளிப்படுத்தப்படுகின்றது. சிற்பிகள் சிற்பக்கலையின் உன்னத நிலையைப் பெற்றுள்ளனர். சிற்பிகள் வடித்த இறைவனது திருவுருவங்களை திருக்கோயில்களில் தெய்வீகப் பொலிவு பெற்று விளங்கச் செய்பவன் சிவாச்சாரியார். இவ்விருவரது கைவண்ணத்தில் சிற்பக்கலை இந்து மதத்தில் இரண்டறக் கலப்பது போல வேறு எம்மதத்திலும் நாம் காண்பது அரிது. வண்ணத்தைக் கருவியாகக் கொண்டு படமாக வரைவதையே ஓவியம் என்கிறோம். ஒவியம் என்பது செந்தமிழ் சொல். இதனை “சிறுமகாரும் பொருளுணர்ந்தோ உணராமலோ" அரிய செயலைக் குறிக்க வழங்குவதைப் பலர் கேட்டிருக்கலாம். இது சித்திரம் என்று இக்காலத்தில் வழங்குகின்றது. பலவகை வண்ணங்களாலும் வட்டம், கோணம் முதலிய வடிவங்களாலும் அழகுபெற அமைக்கும் செயலே ஒவியமாகும். இவை தற்காலப்போக்கில் தனித்துவமிக்கதாக வளர்க்கப்பட்டும் வருகின்ற நிலையில் இவற்றின் சிறப்பினை எடுத்துக் காட்டுதலே இந்நூலின் நோக்கமாகின்றது.

இந்நூலானது ஓர் ஆய்வு நூலன்று. இந்துநாகரிகத்தை க.பொ.த உயர்தர வகுப்பிற்கும் பட்டப்படிப்பு மேற்கொண்டோருக்கும் கற்பித்து அனுபவஞானம் அவர்களின் தேவைகளை நிறைவு செய்யவேண்டிய கடப்பாடு இருந்தமையின் பேறாக உயர்வாக நுண்கலை மரபு அவர்களுக்கு இன்றியமையாத் தன்மை கொண்டிருந்தமையினால் அதனால் அவர்கள் அனுபவித்த கஷ்டங்களைப் போக்கும் வகையில் உசாத்துணை நூல்கள் பலவற்றைத் தேடிப் படித்துத் தொகுத்தும் ஆங்காங்கு அத்தொகுப்புக்கு பொருத்தமான நோக்கில் எனது கருத்துக்களைத் தந்தும் இந்நூலினை உருவாக்கியுள்ளேன். இங்கு நுண்கலைகள் எனப்பட்ட போதும் முக்கலைகள் எனப்படும் “கட்டடம், சிற்பம், ஓவியம்” என்பவற்றுக்கு முன்னுரிமை கொடுத்து அதனை விரிவுபடுத்தி க.பொ.த உயர்தரத்துக்கு மட்டுமன்றி நுண்கலைத்துறையினருக்கும், வெளிவாரிப் பட்டப்படிப்பை மேற்கொள்வோருக்கும் ஏற்றவகையில் உருவாக்கிக்கொண்ட நிலையில் ஏனைய பகுதிகள் பாகம் 02 ஆக எதிர்காலத்தில் பரிணமிக்க அன்னை சிவகாமியின் இன்னருள் கிடைக்குமென எதிர்பார்க்கின்றேன்.
இவற்றுக்கும் மேலாக இந்நூலை எழுதவேண்டிய அவசியம் உணர்ந்து சந்தேகங்களைத் தெளிவுபடுத்தவும் எழுதிய பகுதியை செவ்வை பார்க்கவும் எமது மதிப்புக்குரிய யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இந்துநாகரிகத்துறை தலைவராகக் கடமையாற்றும் திருமதி கலைவாணி இராமநாதனை அணுகியபோது எதுவித தயக்கமும் இன்றி அதனை செவ்வை பார்த்தலுடன் விரிவுபடுத்தப்பட்ட விளக்கங்களையும் அளித்தமைக்கும், வாழ்த்துரை வழங்கிய பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்த்துறை முதுநிலை விரிவுரையாளர் வல்லிபுரம் மகேஸ்வரன் அவர்களுக்கும், அணிந்துரை வழங்கிய யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியற் பேராசிரியர் கலாநிதி சபா.ஜெயராசா அவர்களுக்கும், கணனியில் பக்கவடிவமைப்புச் செய்தும், அட்டையை அழகுற வடிவமைத்தும் தந்துதவிய சண்சைன் கிரபிக்ஸ் நிறுவனத்தினருக்கும், பதிப்பக வேலைகளை குறுகிய கால இடைவெளிக்குள் செய்து தந்துதவிய யோகநாதன் கிரபிக்ஸ் அன் ஒவ்செற் பிறிண்ரேர்ஸ் நிறுவனத்தினருக்கும் நன்றியறிதலைத் தெரிவித்துக்கொண்டு, அன்னை சிவகாமியின் பாதார விந்தங்களுக்கு இந்நூலை சமர்ப்பணம் ஆக்குவதில் பெருமை அடைகின்றேன்.
நன்றி
“செல்வகம்" சிசோதிலிங்கம் இணுவில் கிழக்கு,
இணுவில்.
07.09.2003

Page 8

C நுண்கலைகள் - ஓர் அறிமுகம் ) இந்துநாகரிக வரலாற்றில் பண்பாட்டின் நிலைக்களனாக விளங்குபவை
திருக்கோயில்கள். அவை பண்பாட்டின் உறைவிடம் ஆகவும், சமய வாழ்க்கையின் கேந்திரமாகவும் விளங்கி வந்துள்ளன. நாட்டின் முக்கிய
அம்சமாகக் கோயில்கள் விளங்குவதைக் கொண்டே “கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்ற மூதுரையை ஆன்றோர் வழங்கியுள்ளனர். இந்து சமய மரபிலே கோயில் வழிபாடு இன்றியமையாது தொன்மைக் காலத்தில் இருந்தே பேணப்பட்டு வருகின்றது. அவ்வாறு பேணப்பட்டு வரும் வழிபாட்டிடமான கோயில்களில் அழகியற் கலைகள் முக்கியம் பெற்று வளர்க்கப்பட்டு வருகின்றன.
கோயில்களில் அமைந்து காணப்படும் விமானங்கள், வானளாவிய கோபுரங்கள், தூண்கள் பலவகை மண்டபங்கள், மதில்கள் என்பனவற்றில் இக்கலைமரபு சித்தரிக்கப்பட்டமையின் பேறாக அது வளம்படுத்தப்பட்டு வந்துள்ளதெனலாம். ஒருவர் ஒரு காரியத்தை ஒழுங்குற நேர்த்தியாகச் செய்துவிட்டால் அவனுக்கு அந்தக்கலை தெரிகின்றது என்பர். இங்கு கலை என்ற சமஸ்கிருதச் சொல் Ar என்ற ஆங்கிலப்பதம் கொலே என்ற பிரான்சிய மொழிப்பதம். கல்வி என்ற தமிழ்ச்சொல் இவை யாவற்றுக்கும் மூலம் ஒன்றே என்பர். காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கராச்சாரிய சுவாமிகள் இங்கே கலா என்றால் சதா வளர்ந்து கொண்டிருப்பது என்பது பொருள் பிறையானது நாள்தோறும் வளர்ந்து கொண்டிருப்பது போலவே கலையும் மாந்தர்க்கு மனவளர்ச்சியைத் தந்து முடிவேயில்லாமல் என்றென்றும் வளர்ந்து வருவது. கலைச் சிறப்பின் பெறுபேறே கலாசாரம், பண்பாடு ஆகின்றது. மாந்தர் தம் மனதில் உதித்த உயரிய எண்ணங்கள், சீரிய சிந்தனைகள் பலவிதமான கலைகளாக உருவெடுத்து நிலையில்லாத உலகத்தில் நிலைபெற்று வாழ்வதுடன் காலத்தை வென்று அமரத்துவமாகியும் இருக்கின்றது. இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 01 Sசோதிலிங்கம்

Page 9
கலை கருத்தின் உறைவிடம், அழகின் பிறப்பிடம் இன்பம் அதன் பயன் கலையானது தன்னலமும், பழிவாங்கலும் நிறைந்த உலகை விட்டு நம்மை அப்பால் அழைத்துச் செல்லவல்லது இவ்வாறு கருத்துக் கூறுவர் ரவீந்திரநாத் தாகூர், வெளித்தோற்றத்தை மட்டும் காட்டுவது கலையின் நோக்கமன்று. அகத்தோற்றத்தையும் அது காட்டுதல் வேண்டும் அதுதான் உண்மையான கலை. ஒரு கலை உண்மையாக உயர்ந்ததாக இருந்தால் அது உணர்ச்சிகளுக்கும் புலன்களுக்கும் இன்பம் அளிப்பதோடு அறிவுக்கும் விருந்தாக இருக்கவேண்டும் என்பர் சிந்தனையாளர்
அரிப்ரோட்டில்,
ஒருவன் முன்பு அனுபவித்த ஓர் உணர்வை தன்னுள்ளத்தில் மீண்டும் எழுப்பி அசைவுகள், கோடுகள், வர்ணங்கள், ஒலிகள் அல்லது சொல்வடிவங்கள் மூலம் அந்த உணர்வைப் பிறரும் உணரும்படி செய்யவேண்டும். இதுவே கலையின் செயலாகும். இங்கு தான் கண்டு கேட்டு உய்த்து உணர்ந்த அனுபவங்களை மனத்திரையிற் பதித்து அதனூடாகப் பெற்ற அனுபவங்களை புறவடிவம் கொடுத்து அதன் மூலம் தான் அனுபவித்த உணர்ச்சிகளைப் பிறரும் அனுபவிக்க வைப்பவன் கலைஞன் ஆவன்.
கலைஞனுக்கு மனத்தூய்மை மிகவும் அவசியம் கலைப் படைப்பைத் தொடங்கமுன் சமயச் சடங்குகளைச் செய்யவேண்டும் எனப் பாஞ்சராத்திர ஆகமம் கூறும் கலைப்பொருளின் பல்வேறு பாகங்களும் முழுப்பொருளுக்கும் பொருந்தியவையாக இருக்கவேண்டும். அவை தக்க விகிதப்படியும் அமைதல் வேண்டும் என ஈஸ்வர சம்ஹிதை கூறுகிறது. விகிதப் பொருத்தத்தால் அழகு அமையப் பெறுகிறது. அளவுப் பொருத்தத்தால் கலைப்பொருளின் புறத்தோற்றத்தைக் காட்டவும் தன் கருத்தை கலையாகப் படைக்கவும் அறிபவன் கலைஞன் எனச் சாங்கியம் சொல்லுகிறது. உணர்ச்சிகள் சேர்ந்து சுவை தோன்றுகிறது. சுவையைத் தோற்றுவிப்பவனே கலைஞன் என நாட்டிய சாஸ்திரமும் அபிநயதப்பணமும் கூறுகின்றன.
இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 대) 8:சோதிவிங்கம்

கலைகள் இறைவனிடத்திலிருந்து பிறந்தன என்ற கருத்து உடையவர்கள் இந்தியர். உதாரணமாக கூத்துக்கலை பிரமதேவனால் உலகுக்கு வழங்கப்பட்டது என நாட்டிய சாஸ்திரம் கூறுகின்றது. சிவன் தாண்டவமூர்த்தி நடராஜன் கூத்தன் என அழைக்கப்படுகின்றான். ஏனெனில் இத் தெய்வத்தினூடாகவே ஆடற்கலை உலகுக்கு வழங்கப் பட்டது. விஷ்ணுவும் அரங்கநாதன் எனப் போற்றப்படுவது குறிப்பிடத் தக்கது. கலைகள் எல்லாம் இறைவன் பிரசாதமெனக் கொள்ளப்படுவது உலகத்து அனுபூதிமான்களின் கருத்தாகும். சிவானுபவம் எங்கே பிறக்கின்றதோ அங்கேதான் கலைகளும் முகிழ்க்கின்றன என்ற கொள்கைப்படி நம்மான்றேர் கலைகளுக்கும் புனிதமான தெய்வீகத் தோற்றம் கற்பித்துள்ளனர். இதனையே நாட்டிய சாளப்திரமும் வலியுறுத்திச் செல்கின்றது.
இங்கு கலை என்பது பலபொருள் குறிக்கும் சொல், கலை எனும் சொல் செயற்திறன் ஆண் மான், ஆண் குரங்கு, சுறாமீன், உடை, சாலறிவு முதலிய பல பொருள்களில் இலக்கிய ஆட்சி கொண்டது. உலக வழக்கில் இன்றும் பல பொருள்களை உணர்த்தி நிற்கின்றது. கலை என்பதற்கு சிறப்பாக அழகார்ந்த செயற்திறம் எனும் பொருள் அடிப்படையில் பலவாறாக விரிந்து நிற்குங் கூறுகளைக் காணலாம். கலை என்பதற்கு அவ்வக் காலங்களில் மக்களின் வாழ்வியல் பண்பாட்டிற்கு ஏற்பவும், நாகரிக வளர்ச்சிக்கு ஏற்பவும் ஒவ்வொருவரும் நோக்குங் கோணத்தைப் பொறுத்து என விளக்கம் தரப்படுகின்றது. எனவே கலையானது இன்னதுதான் என்று வரையறை கூறி விளக்க இயலாது. கலைபற்றி சிந்தித்துள்ள பல்வேறு அறிஞரும் பல்வேறு கோணங்களில் விளக்க முயன்றுள்ளனர். கல்லைக் கருவியாகக் கொண்டு சிற்பத்தையும் வண்ணத்தை கருவியாகக் கொண்டு ஓவியத்தையும், ஓசையைக் கருவியாகக் கொண்டு இசையையும் இவ்வாறு ஒவ்வொரு கலையையும் வினைப்பாங்குடன் உருவாக்கலாயினர்.
கலை - கலிப்பு என்ற சொல்லின் வழி பிறந்தது. கலித்தல், துள்ளல், எழுதல் என்பன தொடர்புடையவை. இயல் இசை வடிவம் பெற்று எழுந்து நாடகமாகத் துள்ளிநடக்கும் மனித உள்ளத்தில் எழும் இந்துநாகரிகத்தில் நுனர்கலைகள் 3. 3.சோதிவிங்கர்

Page 10
எண்ணில்லாத எழுச்சிகளைச் சீசெய்வது கலை எழுச்சிகளை தூண்டும் மூலம் எதுவென ஓர்ந்து அதனுடன் உயிரை ஒன்றுவிப்பதே கலைகளின் குறிக்கோள். இது உலகெங்கும் உயர்ந்தோரின் கலை பற்றிய சிந்தனையில் இடம்பெற்று இருப்பினும் இந்தியக் கலை மரபிலே அதன் பூரண விகசிப்பைக் காணலாம். கலைப்படைப்பு ஒன்றை கலையேதான் என்று கருதலாகாது. கலை என்பது ஒரு செயற்பாடு முதல்முதல் கலைஞனது உள்ளத்தே நிகழ்ந்தது அவனுள்ளேயே நிலைத்திருப்பது. அதே சமயம் பார்வையாளன் அதனை தன்னுள்ளே உணர்ந்து விமர்சிக்கும் செயற்பாட்டின்போது வெளிப்படும் இந்திய சிந்தனை மரபில் கலைகள் அனைத்தும் அறிவொடு பட்டவையாகவே மிளிர்கின்றன.
ஒருவன் முன்பு அனுபவித்த ஓர் உணர்வை தன்னுள்ளத்தில் மீண்டும் எழுப்பி அசைவுகள், கோடுகள், வர்ணங்கள், ஒலிகள் அல்லது சொல்வடிவங்கள் மூலம் அந்த உணர்வைப் பிறரும் உணரும்படி செய்யவேண்டும். இதுவே கலையின் செயலாகும். கலை அனுபவமானது தனியே ஒரு நாட்டுக்குரியதல்ல அனைத்துலகம் சார்ந்த பிரபஞ்ச ரீதியிலானது. உண்மையான ஆன்மாவைப் புரிந்தவன் எங்கிருந்தாலும் அவன் கலை அனுபவத்தைப் புரிந்தவனாகின்றான். இதனால் கலை அனுபவம் ஒரு சமய அனுபவமாக பிரபஞ்சம் சார்ந்ததாகக் கூறப்பட்டுள்ளது. அன்றியும் இவை ஆழ்ந்த சமயத்தெளிவின் வெளித்தோற்றங்களென்றும் எல்லாப் பொருள்களையும் உள்ளடக்கி ஒன்றாய் நிற்கும் பிரமத்தின் உண்மையை கற்கள் மூலம் மக்களுக்கும் கற்பிப்பவை என்றும் இவற்றுக்குப் பொருள் காண்கின்றனர். உலகக் கலைகளிலே அரிதான ஆழ்ந்த சமய உணர்ச்சி தோய்ந்திருக்கும் சில எச்சங்கள் உளவெனினும் பண்டைக்காலக் கலையில் முதன்மையாக வெளித்தோன்றுவது அவ்வக் காலத்துக்குரிய நிறைவான ஊக்கம் மிகுந்த வாழ்க்கையே ஆகும். முதலில் பாரூத்து, சாஞ்சி, அமராவதி ஆகியவிடங்களில் உள்ளவற்றைப்போல நேரடியாகவும் பின்னர் அஜந்தாவிலுள்ளனவற்றிற் போல மென்மையான இலட்சிய நோக்கோடும் ஈற்றில் இடையூழிக்குரிய பலகோயில்களிலே செதுக்கப்பட்டுள்ள மிகப்பல தெய்வ வடிவங்களிலும் மக்கள் வடிவங்களிலும் இவ்வியல்புகள் தோன்றுகின்றது. இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 04 Sசோதிலிங்கம்

1. கலைபற்றிய அறிஞர் கண்ணோட்டம்.
கலை என்பது யாது என்பதனை இராதாமல் முகர்ஜி என்பவர் கூறுமிடத்து 'மனித உறவுகளையும், வாழ்க்கைக் குறிக்கோள்களையும் வகுத்து ஒழுங்குபடுத்துவதற்காகச் சமுதாயத்திடம் காணப்படும் நுட்பமான கவர்ச்சியுள்ள ஆற்றலுடைய கருவியே கலை” என்றார் பாக்டர் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார். “கலைஞனது அனுபவத்தினை அவன் வெளியிடும் வெளிப்பாடு மட்டுமன்றி அதன் வெளிப்பாட்டினையே கலைஞர் உணர்வு நிலையில் துய்க்கின்ற அனுபவமுமாகும் என்றார் கலாயோகி ஆனந்தக்குமாரசுவாமி என்பவர். “இந்தியக் கலையானது இந்தியாவை மட்டும் உள்ளடக்காது மக்களது மனிதப் பிரபஞ்சத்தை உள்ளடக்குகின்றது” என்றார். எனவே கூடுதல், குறைதல் இல்லாமல் எந்தப் பொருளும் அளவுப் பொருத்தத்தோடு அமைகின்றபோது அது கலையின் பாற்பட்டதாகப் பூரணத்துவத்தைப் பெற்றுக்கொள்கிறது
666.
கலை என்பது மனிதத்திறன் வழியாகப் பிறப்பது என்று கலையியலாளர் கூறுகின்றனர். எனவே மனிதனின் அகவயப்பட்ட உணர்வுகளின் வெளிப்பாடே கலைகளாகும். இவ்வகையில் அகவயப்பட்ட பண்பாட்டுக் கோலங்களை எடுத்தியம்புவதில் கலைகள் பெரும்பங்கு வகிக்கின்றன எனக்கூறின் மிகையாகாது. இக்கலைகள் யாவும் தெய்வீகமானவை அம்பிகைக்குரிய ஆயிரம் திருநாமங்களில் ஒன்று கலாவதி என்றும் இன்னொன்று சதுஸ்ஷஷ்டி கலாமமீ என்று தொடரும் இதனையே குறிக்கின்றது. இத்துடன் சதுஸ்ஷஷ்டி கலாமt என்னும் சொற்தொடர் பற்றி லலிதா சகஸ்ரநாமம் கூறுவதிலிருந்து கலைகளின் தெய்வீகச் சார்பு துல்லியமாகத் தெரிகின்றது. இதேநேரம் இக்கலைகள் அறுபத்து நான்கு என்பதனை “ஆயகலைகள் அறுபத்து நான்கினையும் ஏய உணர்விக்கும் என்னம்மை’ என்ற குமரகுருபரரின் பாடல் அடிகளும் “எண்ணென் கலையும் இசைந்து போக” என்ற சிலப்பதிகார அடியினாலும் “எட்டெட்டிருங் கலையும் ஆனாய் கண்டாய்” என அப்பரின் பாடலடி மூலமும் கலைகள் அறுபத்து நான்கு என்பதும்
இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 05 S.G.3 Febsib

Page 11
இத்தகைய கலைகளினூடக வழிபாட்டுக்குரிய இறைவன் தலையாய கலை வடிவமாகவும் கலைப்பொருளாகவும் கலையின் தலைசிறந்த ஆசானாகவும் விளங்குகின்றான். இதனையே கலையாகிக் கலைஞானந் தானேயாகி என அப்பர் சுவாமிகளும், கலைக்கெல்லாம் பொருளாய் என சுந்தரமூர்த்தி சுவாமிகளும் சிவனைப் போற்றி பாடியுள்ளனவற்றிலே காணமுடிகின்றது. இங்கு இறைவனின் விசேடமான வெளிப்பாட்டை உணரத்தரும் திருக்கோவில்களில் வழிபடும் மக்களின் மனதில் இறை உணர்வைப் பதித்து பக்தி பெருக்கும் சூழ்நிலை அமைய வேண்டிய தேவையை நோக்கமாகக் கொண்டு திருக்கோயில்கள் இயங்க வேண்டிய விதிமுறைகளாக ஆகமங்கள் வகுத்து விதித்த வழிகளுக்கமையக் கிரிகை மரபு உருவாகி கலைகளை தோற்றுவித்தது. இக் கலைகள் கலையிற் கைதேர்ந்தவர்களின் ஆற்றல்களை பறை சாற்றுவதுடன் மேனாட்டவர்களின் பெருவியப்பிற்கும் பாத்திரமாய் நிற்கின்றன.
I. இந்தியக்கலை ~ மேனாட்டுக் கலைகளுக்கு
இடையிலான முரண்பாடுகள்.
இந்தியக் கலைகளுக்கும் மேனாட்டார் கலைகளுக்கும் இடையே பெரியதோர் வேற்றுமைகள் காணப்படுகின்றன. இந்தியக் - கலைப் பாரம்பரியமானது மக்கள் வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்திருப்பது போலவே சமயத்துடனும் மிக நெருக்கமான தொடர்புடையது என்பது வெள்ளிடை மலை சமயமே இந்தியக்கலையின் உட்பொருளும் தத்துவமுமாக அமைந்தது என்று சொன்னால் மிகையாகாது. இந்தியுக் கலைகள் தமது நோக்கிலும் முத்தி நெறிக்கு உகந்ததோர் சாதனமாகவே கையாளப்பட்டு வந்துள்ளன. ஆன்ம ஞானத்தையும் இறைபக்தியையும் வளர்ப்பதே இவற்றின் நோக்கம். மேலைத்தேச கலைகளோவெனின் உலகவாழ்க்கையில் உண்டாகக்கூடிய சிற்றின்ப அனுபவத்திற்குச் சர்பாகவே பெரும்பாலும் கையாளப்பட்டு வருவன. இயற்கைப் பொருட்கள் நம் கண்ணுக்கு எவ்வாறு தோற்றம் தருகின்றனவோ அவ்வாறே உள்ளத்துள்ளவாறு அவற்றைப் புனைந்தெழுதல்தான் மேலைத்தேசக் கலைகளின் நோக்கம். ஆக யதார்த்தமே அவற்றின் தலையாய பண்பு. இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 06 S.சோதிலிங்கம்

ஆனால் இந்தியக் கலைகளோ ஒரு பொருள் மாந்தர் தம் உள்ளத்தே இன்ப உணர்ச்சியைத் தோற்றுவிப்பதற்கு ஏற்றவாறு அமைந்திருத்தல் வேண்டுமோ அவ்வாறே அதை சாத்வீக உணர்ச்சியோடு பிணைத்து அமைத்தலையே தமது புனித நோக்கமாகக் கொண்டவை.
இந்தியக் கலைகள் குறித்து முல்க்ராஜ் ஆனந்த் என்பவர் கூறும் கருத்து மிகவும் முக்கியமானது. “இந்தியக் கலைகளின் கண்ணே மாறுதலடையாத ஒரு சமய நோக்கம் உண்டு. மனித வாழ்க்கையின் எல்லாத் தன்மைகளுக்கும் தெய்வீகக் கருத்தே கொள்ளப்படுகின்றது. கலைப் பொருட்களாகக் காட்டப்படும் உருவங்கள், மரங்கள், மலர்கள், பறவைகள் என்பன யாவும் இயற்கையிலிருந்தே எடுக்கப்படுவனவாயினும் அவை விண்ணுலக வாழ்வின் இயல்பினைக் காட்டும் தன்மையுள்ளனவாக அமைக்கப்படுகின்றன. ஒவியத்திலாயினும் சிலையுருவிலாயினும் மட்குடத்திலாயினும் பொறிக்கப்படும் சிறிய ஒரு சித்திரந்தானும் மனிதன் கடவுளை எப்பொருளினும் காண்கின்றான் என்னும் உண்மையை விளக்குவதுமன்றி கடவுள் எல்லாப் பொருட்களுக்கும் ஒரு தெய்வீக இயல்பினை அளித்திருக்கின்றார் என்னும் செய்தியையும் மனிதனுக்கு அறிவிப்பதாகின்றது. இந்தியக் கலையானது எல்லாப் பொருட்களையும் பேரின்ப உணர்ச்சியோடு நோக்குகின்றமையால் அதன் கண்ணே ஐரோப்பியராற் கொள்ளப்படும் பிரகிருதிவாதத்திற்கு இடமேயில்லை எனக்கொள்க’ எனக் கூறியமையும் இங்கு நோக்கத்தக்கது.
குப்தர் காலத்திற்கு முன் கலைமரபில் ஆன்மீக நோக்கம் அவ்வளவாகக் காணப்படவில்லை என சில ஆய்வாளர் கருதுவர். புராதன இந்தியக் கலைகளில் சமயம் சாராத தன்மையிருக்கிறது. அங்கே மக்களுடைய ஊக்கம் மிகுந்த வாழ்க்கை சித்தரிக்கப்பட்டது. பாரூக், சாஞ்சி, அமராவதி, சாரணாத் ஆகிய இடங்களில் உள்ள சிற்பங்கள் மக்களுடைய நேரடி வாழ்க்கையைக் காட்டுவனவாக உள்ளன எனக் கூறுவர். காலப்போக்கில் இம்மரபு சமயம் சார்ந்ததாக வளரத் தொடங்கி குப்தர் காலத்தில் முழு வளர்ச்சியடைவதைக் காணமுடிகின்றது. இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் O7 Sசோதிலிங்கம்

Page 12
  

Page 13
விளங்குகின்றன. நாகரிகம்பெற்ற எல்லா நாட்டிலும் அழகுக் கலைகள் வளர்ச்சியடைந்திருந்தாலும் இந்த நுண்கலைகள் எல்லாம் எங்கும் ஒரேவிதமாக வளரவில்லை. அழகுக் கலைகளின் அடிப்படையான தன்மை எல்லா நாட்டிலும் ஒரேவிதமாக இருந்தபோதிலும் அதாவது கற்பனையையும் அழகையும் இன்பத்தையும் தருவதே அழகுக் கலைகளின் நோக்கமாக இருந்தபோதிலும் அவை வெவ்வேறு நாட்டில் வெவ்வேறு விதமாக உருவடைந்து வளர்ந்து வந்திருப்பதனையும் நோக்க முடிகின்றது.
தென்னிந்திய வரலாற்றில் அழகுக் கலைகள் பற்றி நாம் நோக்கும் போது நம் முன்னோர் அக்கலைகளை எவ்வாறு போற்றி வளர்த்தார்கள் என்பதனைக் காணமுடியும் இதற்கு முன்னர் முத்தமிழ் பேராசிரியர் உயர்திரு விபுலானந்த அடிகளார் தமது யாழ் நூலிலே அழகுக் கலைகளின் பொதுவான சில இலக்கணங்களைக் கூறியுள்ளதை எடுத்துக் காட்டுவது சிறப்புடையதாக இருக்கும். அவை பின்வருமாறு.
இயற்றமிழ்
அகர முதல் னகர விறுவாகிய முப்பதும் சார்ந்து வான் மரபினவாகிய மூன்றும் என்னும் முப்பத்துமூன்று எழுத்துக்களைத் தொழிற்படுத்துதலினாலே இயற்றமிழானது பொருள் பொதிந்த சொற்களை ஆக்கி அவை கருவியலாகப் பார காவியங்களையும் நீதி நூல்களையும் வகுத்து இம்மை மறுமைப் பயனளிக்கின்றது.
இசைத்தமிழ்
ஸ், ரி, க, ம, ப, த, நி என்னும் ஏழு ஓசை கருவியாக இசைத் தமிழானது ஏழ்பெரும் பாலைகளை வகுத்து அவை நிலைக்களமாக நூற்றுமூன்று பண்களைப் பிறப்பித்து அவை தமது விரிவாகப் பதினோராயிரத்துத் தொண்ணுற்றொன்று என்னுந் தொகையினவாகிய ஆதியிசைகளை அமைத்து இம்மையின்பமும் தேவர்ப்பரவுதலானெய்தும் மறுமையின்பமும் பெறுமாறு செய்கின்றது.
இந்துநாகரிகத்தில்துர்ைகலைகள் 10 SசோதிLங்கம்

நாடகத் தமிழ்
நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என்னும் மெய்ப்பாடுகளை நிலைக்களமாகக் கொண்டு உள்ளத்துணர்வினாலும், உடலுறுப்பினாலும், மொழித்திறனாலும் நடையுடையினாலும் அவை தம்மைத் தொழிற்படுத்தி இருவகைக் கூத்து, பத்துவகை நாடகம் என்னுமிவற்றைத் தோற்றுவித்து நாடகத் தமிழ் உள்ளத்திற்கு உவகையளிக்கின்றது.
ஒவியம்
நேர்கோடு, வட்டம், முக்கோணம் ஆகிய மூலவடிவங்களினின்று தோன்றிய உருக்கள் எண்ணிறைந்தன. எல்லா வகையான வர்ணங்களும் அமைந்த அழகிய படங்களை அச்சியற்றுவோர் பயன்படுத்தும் நிறங்கள், மஞ்சள், சிவப்பு, நீலம் என்னும் மூன்றுமேயாம்.
இவ்வாறு ஆராயுமிடத்து கண்ணினாலும் செவியினாலும் உள்ளத்தினாலும் உணர்ந்து இன்புறற்பாலவாய அழகுக்கலை உருக்கள் எல்லாம் ஒரு சில மூலவுருக்கள் காரணமாகத் தோன்றி நின்றனவென்பது தெளிவாகின்றது. உருக்களை ஆக்கிக் கொள்ளும் முறையினைக் கூறும் நூல்கள் பொதுவியல்புகளை வகுத்துக் காட்டுவன. புலவன் இசையோன், கூத்தன், ஓவியன் என்று இன்னோர் தமது சொந்த ஆற்றலினாலே நுண்ணிய விகற்பங்களைத் தோற்றுவித்துச் செம்மை நலஞ்சான்ற உருக்களைப் பெருக்குதலினாலே அழகுக்கலைகள் விருத்தியடைகின்றன.
“இவ்வாறு நோக்குமிடத்துப் புத்தம் புதிய உருவங்களைப் படைத்துத் தருதலே கவிஞர் முதலிய அழகுக் கலையோர் இயற்றுதற்குரிய அருந்தொழில் என்பது புலனாகின்றது. மரபுபட்டு வந்த உருவங்களிற் பயின்றேர் நுண்ணுணர்வுடையராயின் புதிய உருவங்களை எளிதில் அமைப்பர். முன்னிருந்து இறந்துபட்ட உருவங்களை ஆராய்ந்து கண்டறிதற்கும் அத்தகைய பயிற்சியும் நுண்ணுணர்வும் வேண்டப் படுவதுவேயாம்.”
இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 11 Sசோதிலிங்கம்

Page 14
இவ்வாறு அடிகளர் அழகுக் கலைகளின் பொது இலக்கணத்தை விளக்கிக் கூறினார். இவற்றின் துணைகொண்டு நமது முன்னோரால் முற்பட்ட காலத்தில் இருந்து வளர்க்கப்பட்ட நுண்கலை வரலாற்றினை சமய வரலாற்றுக் காலப் பரப்பினை மையமாகக் கொண்டு நோக்குவோமானால் வரலாற்றுக்கு முற்பட்ட காலமான சிந்துவெளி காலத்தை நாம் நோக்கும்போது சிந்துவெளி கட்டடக் கலைஞர்கள் தனிச்சிறப்பு வாய்ந்த பொதுவான வரைபு ஒன்றைப் பின்பற்றி நகரங்களையும் கட்டடங்களையும் நிருமாணித்து கட்டடக் கலைமரபு திறன் காட்டினர். அழகுமிக்க விலங்கு சித்திரங்கள் அருமையானவை ஹரப்பாவில் கண்டெடுக்கப்பட்டுள்ள கற்சிலைகள் அழகில் சில கிரேக்கச் சிலைகளை ஒத்தவை. சிற்பக்கலையில் சிந்துவெளி மக்களுக்குள்ள திறமையை அங்கு கண்டெடுக்கப்பட்ட சிற்பங்கள் விளக்கி நின்றன. மட்பாண்டங்கள் உருவாக்குவதற்கென சக்கரங்கள், களிமண் செங்கற்களை சூளையிடுதல், உலோகவார்ப்பு மற்றும் கடினமாக பொருட்களைத் துளையிடுதல் போன்ற தொழில்நுணுக்கங்களில் மாந்தர் மேம்பட்டு விளங்கினர் என்பது தெரிகின்றது. சிற்பங்கள், சித்திரங்கள், இலட்சினைகள், அணிகள் ஆகியவற்றைப் பரிசீலனை செய்யும்போது இம்மக்களின் நுண்கலை வளர்ச்சிப் போக்கின் திறன் வெளிப்படுத்தப்படுகின்றது.
கண்டெடுக்கப்பட்ட மட்பாத்திரங்களில் ஓவியக் கலைமரபு அறிய முடிகின்றது. இங்கு வாழ்ந்த வேட்கோவர் மண்ணை நன்றாக அரைத்து உறுதியான மட்பாண்டங்களைச் செய்தனர். அவற்றை காள வாயிலிட்டு நன்றாகச் சுட்டு உறுதியாக்கினர். அவற்றை மெருகசெய்வதற்கு ஒருவித கருவியை உபயோகித்தனர் என அறியக்கிடக்கின்றது. பாண்டங்கள் பல நிறத்தனவாயிருப்பனவாகையால் வண்ணக்கலவை முறையையும் அவர்கள் நன்கறிந்திருந்தனர். பல பாண்டங்களில் அழகிய ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. சில ஒவியங்களில் மலர்கள், மாவிலை, அரசிலை முதலியன தீட்டப்பட்டுள்ளன. சிலவற்றில் மனிதவுருவங்களும் உள்ளன. இறந்தவரைப் புதைக்கும் பெரிய தாழிகளில் ஒவியங்கள் உள்ளன. பறவைகள், மிருகங்கள், மனித வடிவங்கள் ஆகிய பற்பல ஒவிய வடிவங்கள் தீட்டப்பட்டுள்ளன.
இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 12 Sசோதிலிங்கம்

இசைக்கலை, நடனக்கலையில் சிந்துவெளி மக்களுக்குப் பயிற்சி இருக்கின்றது. களிமண்ணாலான ஆண் உருவம் ஒன்றின் கழுத்தில் தவுள் போன்ற மேளம் காணப்படுகின்றது. மிருதங்கம் போன்ற தோற் கருவியின் முத்திரைகள் இரண்டும் வீணை வடிவில் அமைந்த ஓவியம் ஒன்றும், பாகவதர்கள் தாளமிடப் பயன்படும் சப்பளாக்கட்டை வடிவங்களும் இங்கு கிடைத்துள்ளன. இவை அவர்களுடைய இசைஞானத்தையும் வெண்கலத்தாலாகிய நடனமாதின் வடிவமும் நடனக்கோலத்தில் உள்ள கற்சிலைகளும் நடன அறிவையும் அறிய பெரிதும் உதவுகின்றன என டாக்டர் இராசமாணிக்கனார் கருத்துக் கூறுவர்.
வேதகாலத்தைப் பொறுத்தவரையில் ஆரம்பகாலமான இருக்குவேத காலத்தில் கட்டடக் கலையும் சிறிது வளர்ச்சி அடைந்திருந்தது. ஆயினும் தூண்களையும் கதவுகளையும் கொண்ட மாளிகைகளைப் பற்றிய குறிப்புக்கள் கிடைக்கின்றன. நூறு சுவர்களை உடைய கற் கோட்டைகளையும், மட்பாண்டங்களையும் குறித்த செய்திகளையும் கேள்வியுறுகின்றோம். இந்திரனைப் போன்ற உருவச்சிலை இருந்ததாகவும் குறிப்புக்கள் உண்டு. இதிலிருந்து சிற்பக்கலை ஓரளவு வளர்ந்திருந்தது எனக் கொள்ளவும் கூடும். இசைக்கலை வரலாற்றுக்கு சுவைமிக்க இசைக்காவியச் செய்யுள்கள் சில ரிக்வேதத்தில் காணப்படுகின்றன. இவைகளில் சில உஷாக்கால பெண் தெய்வத்தை இறைஞ்சுகின்ற வகையில் அமைந்து இருந்தன.
"வெண்மையான கடல் அலைகள் போன்ற ஒளிமிக்க புகழ் கதிர் பரப்பி எழுந்தனள் விடிவெள்ளிநாட்டின் இலக்கணமாம் அவள் இடர் சுற்றித் துலங்கச் செய்வாள். தூயவழிகள் பல ஒளிவீசிப் பளிச்சிடும் நின் கிரணங்கள் விண்முட்டும் நீயே அன்பின் உறைவிடம். கம்பீர ஒளி வீசித் திகழும் விடிவெள்ளியே நீ உன்னை அலங்கரித்துக் கொள்வதோடு எங்களுக்கும் உள்ளத்தில் இடமளிக்கின்றாய்.”
எனப் போற்றப்படுவது இசைமரபு சார்ந்த பாடல்களால் ஏற்றிப் போற்றி அருள் பெற்றதோடு கலைமரபின் தனித்துவத்தை வளம்படுத்த வேதம் வழிசமைத்தது என்பதனை அறிய ஆதாரமாகின்றது. இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 13 Sசோதிலிங்கம்

Page 15
ஆகமத்தை பொறுத்த வரையில் பலவிதமான கலைத்துறைகளின் விளக்கங்களும் கூறப்பட்டுள்ளன. கோயில் அமைந்தலில் நிலத்தினியல்பு, பல வடிவங்களுக்குரிய கற்களின் இயல்பு, அவற்றை திருவுருவங்கள் ஆக்கும் நுட்பம், அதில் கவனிக்க வேண்டிய மானாங்குலம் முதலிய பிரமாணங்கள் எல்லாம் கூறப்பட்டுள்ள நிலையில் ஆலயம் அமைத்தல், திருவுருவங்களைச் செய்தல், அவற்றைப் பிரதிஷ்டை செய்தல் அவற்றைப் பூசித்தல், அவற்றுக்குரிய விதிமுறைகள், காலம், நிமித்தம், பூமிவாஸ்து, விமானம், மண்டபம், பிரகாரம், பரிவார ஸ்தாபனம், ரிஷப ஸ்தாபனம், கோபுர ஸ்தாபனம் முதலானவை முறையாகக் கூறப்பெற்றுள்ளன.
இராமாயணத்தைப் பொறுத்தவரையில் தொழில்முறைமையுடன் கூடியதாக பல கலைநுட்ப முறைகளும் வளர்ச்சியடைந்திருந்தன. சமய வரலாறு சிறப்புப் பெற்று சைவம், வைணவம் தனித்துவம் பெற்ற மதமாகக் காணப்பட்ட நிலையில் அதனை மையமாகக் கொண்டு கோயில் கட்டடக்கலை முறைமை விரிவுபடுத்தப்பட்டிருந்தன. இதற்கேதுவாக கைவினைக் கம்மியர்களுள் சிற்பிகள் பலர் அன்று இருந்திருக்கின்றனர். இவர்கள் ஸ்தபதிகள் எனப்பட்டனர். மரங்கொல் தச்சர், கருங்கைக் கொல்லர், பொன்செய் கொல்லர், கன்னார் பித்தளை வேலை செய்வோர், வெள்ளையடிப்போர், மூங்கிலில் வேலை செய்வோர், உலோகங்களில் வேலை செய்யும் கம்மியர், கணிப்பொருள் தோண்டி எடுப்போரும் இருந்திருக்கின்றனர் எனத் தெரிகின்றது. இத்துடன் ஆனைத் தந்த வேலை செய்வோர், கண்ணாடி செய்வோர், பிரம்புவேலை செய்வோர், குடை செய்வேர், நெசவுத் தொழிலாளர், செருப்புத் தைப்பேர், தோல்வேல்ை செய்வோர், அம்பு வில்லுச் செய்வோர், மயிற் பீலியில் விசிறி செய்வோர் என்பவர்களும் இருந்திருக்கின்றனர்.
ஒவியமும் சிற்பமும் இராமாயண காலத்தில் வளமுற்றிருந்தன. பெண்கள் சாயம் தோய்த்தல், சித்திரவேலைகள் செய்தல் முதலிய கலைகளில் ஈடுபட்டிருந்தனர். இராவணன் மாளிகையில் ஓவியச்சாலை ஒன்று இருந்திருக்கின்றது. புஷ்பக விமானம், சிவிகை என்பவற்றில் இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 14 S.சோதிலிங்கம்

ஒவியங்கள் காணப்பட்டன. பைசாசங்கள் மயில், கின்னரப்புள் மகரம் என்பவற்றின் சிற்பங்கள் புஷ்பக விமானங்களில் செதுக்கப்பட்டிருந்தன. சேதவனராம விகாரை (அனுராதபுரம்) யில் காணப்படும் சிற்பங்களும் இத்தகையனவே. கல்லிலும் மரத்திலும் சிற்பிகள் வேலை செய்து இருக்கின்றனர். சிலைகள் வடிக்கும் கலையும் இராமாயண காலத்தில்
தெரிந்திருந்தது.
இசைக்கலையின் தனித்துவத்திற்கு பாணர் இசைப் பாடல்களையும் புகழ்மாலைகளையும் மக்கள் செவிமடுத்தனர். சூதர், மாகதர் அரசர்கள் மீது புகழ்மாலை பாடினர். காலையில் இசைபாடி அரசர்களை துயிலெழுப்பும் வழக்கம் இருந்து வந்தது. இசை பாடுவோரில் சூதர் தலைமை ஸ்தானம் பெற்றிருந்தனர். சங்கீதமும் நடனமும் பொழுது போக்குக்குக் காரணமாயிருந்தன. கீதம், வாத்தியம், நிருத்தம் என்பன ஒத்தியலும் மூவகை இன்னிசைகள் என இராமாயணம் குறிப்பிடுகின்றது. ஊர்வலங்களிலும் போர்க்களத்திலும் வாத்தியக் கருவிகள் ஒலிக்கப்பட்டன. சங்கு, பேரிகை, துந்துபி, மிருதங்கம், படகம், திந்திமி என்பன போரில் உபயோகிக்கப்பட்டன. அடிக்கும் கருவிகள், தொலைக் கருவிகள், நரம்புக் கருவிகள் என மூவகைப் பிரிவுகளுள் இராமயண கலை வாத்தியங்கள் அடங்கும், பேரிகை, மிருதங்கம், துந்துபி, பன்னவம், படகம், முரசம், திந்திமி, மட்டுகம் என்பன அடிக்குங் கருவிகள். இராவணன் மனைவியர் கும்பமுகம், கலாசி என்னும் இரு மண்ணாலான வாத்தியங்களை மீட்டினர். வீணை, தந்திரி, வல்லகி, விலஞ்சி என்பன நரம்புக் கருவிகளாகும். சங்கு, புல்லாங்குழல் என்பன துளைக் கருவிகளாம். கந்தருவர்கள் பாடினார்களெனவும், அப்சரசுகள் ஆடினார்க்ள் எனவும் இராமாயணத்தில் பலவிடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. தும்புரு, நாரதர், கோபர், பர்வதர் என்னும் கந்தருவரது கானங்கள் பற்றியும் இராமாயணம் கூறுகின்றது. இவை இந்திய சங்கீத பாரம்பரியத்தின் பழமையைக் காட்டி நிற்கின்றன. சங்கீதம் கந்தருவித்தை என்பனவும் அதில் திரிஸ்தானம், ஸ்வரம், தானம், ஸ்ருதி, தாளம், அட்சரம் என்பன பற்றிய குறிப்புக்கள் உண்டெனவும் இராமாயணம் கூறுகிறது. ஆடலும் இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 15 S.C. Asfiabib

Page 16
அந்நாளில் சிறந்த ஒரு பொழுதுபோக்காக இருந்து வந்திருக்கின்றது. இராவணனது மனைவியர் ஆடல் பாடலில் சிறந்து விளங்கினர். பரத்துவாசர் ஆசிரமத்தின் பரதனது சேனை ஆடல் பாடலால் மகிழ்விக்கப் பட்டது. ஆடல் பக்கவாத்திய சகிதமாகவே திகழ்ந்தது. ஊர்வசி, மேனகை, அரம்பை, பஞ்சசூடா, திலோத்தமை என்பவர்கள் இராமன், இராவணனை வென்றமை குறித்து ஆடினர்.
புராணங்களைப் பொறுத்த வரையில் மக்கள் போற்றும் கலைகளுக்கும் அவர்களது சமய வாழ்க்கைக்கும் நிறைவு பயப்பனவாக வாழ வழிகாட்டுவனவாய் வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்தனவாய் விளங்குகின்றன. அவை கட்டடக் கலைமரபில் திருக்கோயில்கள் அமைக்கப்பட வேண்டிய முறைமை, சிற்ப சாத்திர முறைமைகள், திருவுருவங்களை பிரதிஷ்டை செய்யும் வகைகள் அவற்றை நாளாந்த வாழ்வில் கையாளும் சிற்பக் கலைஞனது தனித்துவம் தெய்வீகத் தன்மையுடன் எடுத்துக்காட்டியதன் பேறாக தெய்வீகக் கதைகளுக்கேற்ற தலங்கள் சிறப்பாக தென்னாட்டில் எழுச்சிபெற்று அவற்றின் ஊடாக நுண்கலை மரபுகள் உயர்வாக வளர்க்கப்படுவதற்கு புராணங்கள் நிலைக் களனாக அமைந்தன எனலாம்.
IV. கோயில்கள் வளர்த்த கலை.
நுண்கலை மரபிலே முதல்நிலைப்பட்டதாக விளங்குவது கட்டடக் கலை. இறைவழிபாட்டிற்காக உருவங்கள் உருவாக்கப்படும்போது, வார்க்கப்படும் போது அவை விக்கிரகங்கள் எனப்படுகின்றன. அத்தகைய விக்கிரகங்களை நிறுவுவதற்கு ஆலயம் தேவைப்பட்டது. இதையொட்டி வளர்ந்தது கட்டடக்கலை. இக் கலைவல்லுனரான ஸ்தபதிகளால் நிர்மாணிக்கப்பட்ட பெருங்கோயில்களும் தூண்களும் விமானங்களும் வானளாவிய கோபுரங்களும் மதிற்கவர்களும் புராதன கோயில்களை அணிசெய்து இக்கலையிற் கை தேர்ந்தவர்களின் ஆற்றலை பறை சாற்றுவதுடன் மேனாட்டவர்களின் பெரு விருப்புக்கும் பாத்திரமாய் நிற்கின்றன. திருக்கோயில் விமானங்களிலும் கோபுரங்களிலும் தூண்களிலும்
இந்துதாகரிகத்தில் நுண்கலைகள் 16 Sசோதிலிங்கம்

தெய்வத் திருக்கோலங்கள் சிற்பநூல் கூறும் முறைமைக்கமைய பலவகைக் கோலங்களில் தோற்றம் பெற்றுள்ளன இறைவன் உவந்து பவனிவருவதற்காக வகைவகையாக வாகனங்கள் அமைக்கும் கலையும் வளர்ந்தது இவற்றையெல்லாம் வனப்புற அழகுறுத்த ஓவியக் கலையும் இதனையொட்டி வளரலாயிற்று. திருக்கோயிற் சுவர்களில் வீதியை வலம்வரும் அடியவர் மனதில் பதியக்கூடியவாறு இறைவன் பெருமையைச்சித்தரிக்கும் சித்திரங்களைத் தீட்டியும் ஆலயங்களில் ஓவியக் கலைஞர் தம் கலையை வளர்த்தனர் இந்துக்களின் இசைக்கலை வளர கோயில்களே நிலைக்களனாக விளங்கி வந்தன. இசைப் பாடல்கள் புகழ்பாடுதலையே பொருளாகக் கொண்டவை புகழ்ந்து பாடுவதற்கு தகுதிகொண்டவன் இறைவன் ஒருவனே. அத்தகைய தெய்வத்தைப்பற்றி எவ்வளவு அதிகமாக கூறியபின்பும் இன்னும் கூறினாலும் மிகையாகாது எனத் தோன்றுகின்றது ஏத்தில் புகழ்ந்து பாடுவதற்குரிய ஒருவனான இறைவன்மீது பாடும் மரபு கோயிலை அனுசரித்தே உருவாகி இசைக்கலையில் புதுப்புது வளர்ச்சி நிலைகளைத் தோற்றுவித்தது.
பண்ணிசை கோயில்களைக் காரணமாகக் கொண்டு வளர்ந்ததே தனிவரலாறு. இசைக் கருவிகளும் கோயிலின் இசைக் கலையை பெரிதும் வளர்த்தன. இசைக்கலையை கோயில் வளர்த்த முறையே தனி ஆய்வுக்குரிய விடயம்.
தெய்வங்களே இசைக் கருவிகளைக் கையிலேந்திய கோலத்தில் அமைவது இசைக்கலைக்கு அதியுன்னதமான தெய்வீகப் பின்னணியைத் தருகின்றது. கோயில்களில் வளர்த்த கலைகளுள் முன்னணியில் நின்றது நெடுங்காலம் பேணிக்காக்கப்பட்டு வந்ததுமான கலை நாட்டியக் கலையே. சூழ்நிலை காரணமாக இக்கலை கோயில்களினின்று இன்று மறைந்து விட்டது. இந்துப் பெரும் தெய்வங்களே ஆடற்கலையிலும் அமைப்பில் சித்திரிக்கப்பட்டிருக்கக் காண்கின்றோம். இறைவனுக்கு நித்திய நைமித்மிய வழிபாடுகளில் நிருத்திய உபசாரம் நிரந்தரமான இடம்பெற்றிருந்தது. பன்னெடுங்காலமாக கலைகள் சமயத்துடன் இணைந்து வளர்ந்து வந்துள்ளன. குறிப்பாக இந்துசமய நிழலிலே கலைகள் மிகநேர்த்தியாக இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 17 Sசோதிலிங்கம்

Page 17
வளர்ச்சியடைந்துள்ளன. இந்துப் பண்பாட்டு மரபிலே கட்டடக் கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை, நடனக்கலை, இசைக்கலை, கிராமியக் கலைகள், அலங்காரக் கலைகள் ஆகிய இன்னோரன்ன கலைகளுக்குத் திருக்கோயில்கள் நிலைக்களனாகத் திகழ்கின்றன. ஆகமங்கள் வகுத்த கிரிகை மரபு இத்தகைய கலைகளின் தோற்றத்திற்கு அடிப்படையாக அமைந்தது எனின் மிகையில்லை. திருக்கோயிலானது ஆண்டவனின் அருள் சுரக்கும் நிலையமாக மட்டுமல்லாது நுண்கலைகளின் உறைவிடமாகவும் கலை வளர்க்கும் அரங்கமாகவும் இருந்து வந்துள்ளது.
V இந்தியக் கலைக்கோட்பாடு.
நுண்கலைகள் உள்ளத்துணர்வை தூண்டவல்லன. கற்பனா சக்திக்கு இடமளிப்பன சிந்தனை செய்யவைப்பன தமது நோக்கிலும் முத்திநெறிக்கு உகந்ததோர் சாதனமாகவே கையாளப்பட்டு வந்துள்ளன. ஆன்ம ஞானத்தையும் இறைபக்தியையும் வளர்ப்பதே இவற்றின் நோக்கம் அதுமட்டுமன்றி ஒருவனுடைய ஆக்கத்திறனையும் காட்டவல்லன. தமக்கென உரிய காலதத்துவத்தைக் கொண்டு விளங்குவன. அந்த வகையில் ஒரு பொருள் மாந்தர்தம் உள்ளத்தே இன்ப உணர்ச்சியைத் தோற்றுவிப்பதற்கு எவ்வாறு அமைந்திருத்தல் வேண்டுமோ அவ்வாறே அதை சாத்வீக உணர்ச்சியோடு பிணைத்து அமைத்தலேயே தமது புனித நோக்கமாகக் கொண்டவை. அந்த வகையில் இந்திய நுண் கலைகள் தமக்கெனத் தனித்துவமான காலதத்துவத்தைக் கொண்டு
மிளிர்கின்றன.
இந்திய நுண்கலைகள் வீடுபேற்றுக்குரிய சாதனங்களாகத் தொன்று தொட்டுப் பயின்று வருகின்றன. ஆத்மஞானம், சிவானந்தம் என்பவற்றைத் தந்து முத்திக்கு வழிகாட்ட வல்லனவாகவுள்ளன. மன அமைதியை உண்டாக்கி இன்பநிலைக்கு இட்டுச்செல்லும் ஆற்றல் படைத்தனவாக உள்ளன. இசையும் தோத்திரமும் பக்தியை வளர்க்கும் சாதனங்களாகவும் உள்ளன. திருவுருவங்களின்றிக் கிரியா வழிபாடும் ஏனைய கிரிகைகளும் சாத்தியப்படாதென்பது மறுத்தற்கரிய உண்மையாகும் என்பர் ஆனந்தக் குமாரசுவாமி. இந்துதாகரிகத்தில்துணர்கலைகள் 18 Sசோதிலிங்கம்

இந்தியச் சிற்பம், ஓவியம் என்பவற்றை ஐரோப்பியக் கலைச் சின்னங்களுடன் ஒப்பு நோக்கி ஆராய்ந்த கலை விமர்சகராகிய ஹவெல் என்பவர் கூறும் கருத்தும் சிந்தனைக்குரியது. “இந்தியச் சிற்பி இயற்கை ஒழுங்கை அனுசரித்துக் கலைப் பொருட்களை ஆக்கும் திறமை படைத்தவன். இவன் உலகிற் காணப்படும் பொருட்கள் அனைத்தும் மாயை என்னும் தெய்வாம்சம் பொருந்திய ஆன்மா ஒன்றே உண்மையானதும் நிலையானதும் ஆகும் என்றும் வலியுறுத்துகின்றான். ஐரோப்பியக் கலைஞன் காணொணாத பரம்பொருளுடன் தன்னைத் தொடர்புபடுத்திக் கொள்ளாது இயற்கையுடன் கூடிய உலகுடன் மட்டும் நின்று விடுகின்றான். ஐரோப்பியக் கலை மறுமலர்ச்சிக் காலத்தின் பின்னர் சிறகுகள் துண்டிக்கப்பட்ட பறவைபோல் மேலெழாது உலக அழகை அறிவதுடன் மட்டும் நின்றுவிட்டது. ஆனால் இந்தியக் கலையோ அகன்ற பரிபூரண சச்சிதானந்த வடிவமாகிய பரம்பொருளை விளக்கி அதன் அழகை உலகுக்கு உணர்த்த முயல்கின்றது. மேலும் இந்தியச் சிற்பம் ஓவியம் என்பன செயற்கையானவை என்றும் உள்ளதை உள்ளவாறு காட்டும் ஆற்றலற்றவை என்றும் கூறுவாருமுள் இவர்கள் இந்தியக் கலையின் தத்துவத்தை உணராதோரேயாவர்” என எடுத்ரைத்துச் செல்கின்றார்.
மனித வாழ்விலே தெய்வம் என்பதோர் சித்தமுண்டாக கலைகள் இறைவனுக்கே அர்ப்பணிக்கப்பட்டன. குறிப்பாக இந்திய நுண்கலைகள் தெய்வீக நிழலிலேதான் நன்கு வளர்ந்து வந்துள்ளன. இறைவனே வெவ்வேறு வடிவங்களிலேகலைகளின் வடிவாகவும் முடிவாகவும் கருதப் பட்டான். இறைவனை அடைதற்கான சிறந்த வழிகளாக இசையும் நடனமும் கருதப்பட்டன. மலர், நைவேத்தியம் ஆகியனவற்றிலும் பார்க்க நிருத்த தானமே இறைவனுக்குச் சிறந்தது என நிருத்தரத்ணாவளி என்னும் நூல் கூறும். கோவில்களிலே நடைபெறும் நித்திய, நைமித்திய கிரிகைகளிலே நடனமும் முக்கியமான ஓரிடம் பெற்றது. கோவில் அமைப்பிலே நடனமிடுவதற்கான இடமும் வகுக்கப் பட்டது. நித்திய நைமித்திய கிரிகைகளின் போது நடனமாதர் கோயில்களிலே நிரந்தரமாக நியமிக்கப்பட்டுமிருந்தனர்.
இந்துதாகரிகத்தில் நுண்கலைகள் 19 SCd bath

Page 18
இந்நிலையில் இக்கலைகள் இயல்பாகவே மனித உள்ளங்களை கவர்வனவாதலின் அவற்றினை மேம்படுத்தி உயர்வான நிலைக்குக் கொண்டுவருவதற்கு போலும் அவை இறைவனுக்குரியனவாக விரும்புவனவாக, ஈடுபடுவனவாகக் கொள்ளப்பட்டன எனலாம். இந்திய இசை, நடனம் பற்றிய நூல்களில் இத்தகைய கருத்துக்களே வற்புறுத்தப் படுகின்றன. அதேவேளயில் இக்கலைகளில் உலகியல் சார்பான அழகியல், இன்பவியல் நோக்கும் பயன்பாடும் புறக்கணிக்கப்பட்டில. எடுத்துக்காட்டாக நாட்டிய சாஸ்திரத்திலே பரதர் நாட்டியத்தின் சமநோக்கினைக் கூறுவதுடன் நின்றுவிடாது பின்வருமாறும் குறிப்பிட்டுள்ளார். நாட்டியத்திலே காட்ட முடியாத ஞானமோ, சிற்பமோ, கல்வியோ, கலையோ, யோகமோ, செயலோ ஒன்றுமில்லை. சாஸ்திரங்கள், சிற்பங்கள் அனைத்தினையும் பல செயல் களையும் இதிலே காட்டலாம். நிருத்தம் ஒரு குறிப்பிட்ட தேவையின் நிமித்தம் தோன்றவில்லை. இது சோபையினை (அழகினை) ஏற்படுத்துகின்றது. நிருத்தத்தினை இயல்பாகவே மக்கள் அனைவரும் விரும்புகின்றனர். இது மங்களகரமானது எனப் போற்றப்படுகின்றது. மகிழ்ச்சியை உண்டாக்குகின்றது எனவரும் செய்யுட்கள் மனம் கொள்ளப்பாலன.
இந்தியக் கலை வரலாறு மறைபொருள் தன்மை கொண்டது என்பதற்கு ஏதுவானதாக அமைந்து காணப்படுவது இறைவனுடைய பஞ்சகிருத்தியங்களை விளக்குவதாக நடராஜ வடிவம் அமைந்துள்ளது. இந்தியக் கலாதத்துவத்தின் மகோன்னதமான நிலையை இது "சித்தரித்து நிற்கின்றது. இதேபோன்று இந்துமத விக்கிரகங்கள் ஒவ்வொன்றும் தத்தம் தத்துவப் பொருள்களை விளக்கி நிற்கக் காணலாம். அவ்வகையில் இந்துமதம் வற்புறுத்திச் செல்லும் இல்லற தர்மத்தை வலியுறுத்தும் வடிவங்களாக சிற்ப, ஒவிய, இசை, நடன, நாடக செல்வாக்குகளைப் பிரதிபலிப்பனவாக சிவலிங்க வடிவம், சோமாஸ்கந்த வடிவம், அர்த்தநாரீஸ்வர வடிவம், உமாமகேஸ்வர வடிவம், லக்சுமி - நாராயண வடிவம் என்பன இல்ல தர்மத்தை போதிப்பனவாக உள்ளன. நாயக - நாயகி பாவனையில் அமைந்த பக்திப் பாடல்களும் இதனை வலியுறுத்தக் காணலாம். இங்கு எளிமை, தூய்மை, சமயப்பற்று, பண்பாடு என்பவற்றை விளக்கும் வகையில் ஆன்மீகக் கருத்தை கலைப் பொருட்களுடாக இந்தியக் கலைஞன் காட்டும்போது நுண்கலைகள் தனித்த இடம்பெற்று வளர்ச்சியடைந்து வருகின்றது எனலாம். இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 20 S.C.) (1555th

(நுண்கலைகளில் கட்டடக்கலை)
நிலைபேறில்லாத உலகில் நிலைபெற்றிருக்கும் வகையில் உறுதியான பொருட்கள் பலவும் கொண்டு உருவாக்கப்பட்டது கட்டடம் பண்டைக்கால இந்தியாவிலும் இடைக்கால இந்தியாவிலும் நிலவிய கட்பொறி நுகர்வுக்குரிய கலைகளிலே பெரும்பான்மையானதாக கருதப்பட்டது. ஓர் நாமம், ஓர் உருவம் இல்லாத இறைவன் ஆன்ம ஈடேற்றம் கருதி கருணை மேலீட்டினால் திருவுருவங்களில் எழுந்தருளி இருக்கும் இடமே கோயில். விக்கிரக வழிபாடு முக்கிய பங்கு வகிக்கத் தொடங்கியபோது கோயில்கள் கட்டப்படலாயின. கோயில் அமைப்பு கட்டடக் கலையின் வளர்ச்சிக்குப் பெருவாய்ப்பளித்தது. இங்ங்ணமாக கட்டடக் கலையானது இந்துக் கோயிற் கலையுடன் பின்னிப் பிணைந்து வளர்ச்சி பெற்று வந்துள்ளது.
1. சிந்துவெளிக் காலம்.
இந்திய நுண்கலைகளின் ஊற்றுக்கால்களைச் சிந்துவெளியில்தான் காணமுடிகின்றது. இதுவரை காலமும் இந்திய நாகரிகத்தின் ரிஷி மூலத்தைத் தேட முயன்றவர்கள் பிரமிக்கும் வகையில் சிந்துவெளி அகழ்வாராய்ச்சி முடிவுகள் வெளியாகின. இந்திய நாகரிகம் பிற்பட்டது என்றும் அது இந்தோ ஆரியர்களால் வெளியிலும் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டதென்றும் பலர் கருதி வந்தனர். ஆனால், ஹரப்பா நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்டதுடன் இக்கருத்துப் பின்தள்ளப்பட்டுவிட்டது. இந்நிலையில் சிந்துவெளியில் மொஹெஞ்சதாரோ, ஹரப்பா ஆகிய இரு பெரு நகரங்களும் லோத்தால், மொஹஞ்சதாரோ, சான்ஹதரோ சிறிய நகரங்களும் வெளிக்கொணரப்பட்டன. இந்நகரங்கள் அனைத்தும் நன்கு திட்டமிடப்பட்டுக் கட்டப்பட்டன. சுட்ட செங்கற்களாலானவை நகர அமைப்பில் சிந்துவெளி மக்கள் மிகவும் சிறப்புற்று விளங்கியிருக்கின்றர்கள் எனக் கருத்துக்கூறுவார் பேர்ஸிபிறவுண் என்ற அறிஞர். இந்துநாகரிகத்தில்துணிகலைகள் 21 Sசோதிலிங்கம்

Page 19
சிறந்த வீதியமைப்பு, நுட்பமான வடிகாலமைப்பு, சுகாதார வசதிகளுடன் கூடிய மாடிவீடுகள் என்பன அக்கால மக்களுடைய கட்டடக்கலை பற்றியும் நகரநிர்மாண அறிவு பற்றியும் அறியப் பெருந்துணை புரிகின்றது. இவர்கள் கட்டிய வீடுகளின் அமைப்பு எகிப்தியரும் சுமேரியரும் இதே காலத்தில் அமைந்தனவற்றுடன் ஒத்துச் செல்கின்றன. இங்கு பெரிய அங்காடி மண்டபங்களும், களஞ்சிய அறைகளும் கண்டுபிடிக்கப்பட்டன. மாளிகைகளாக இருக்கலாமென சில கட்டடங்களையும் சமய வழிபாட்டிடங்களாக இருக்கலாமென சில கட்டடங்களையும் பேர்ஸிபிறவுண் கருதுகின்றார்.
ஹரப்பா பண்பாட்டுக்குரிய செங்கற் கட்டடங்கள் பயன்நோக்கி எழுந்தவை. உறுதியாயும் நிலைபெறும் தகுதியுடனும் அமைக்கப் பெற்றிருப்பினும் கலைச்சுவை பொருந்திய சிற்பவனப்பும் பெற்றில. இக் காலத்திற்கும் மெளரியர் காலத்திற்குமிடைப்பட்ட காலத்தில் கட்டடக் கலைக்குரிய குறிப்பிடத்தக்க எச்சங்கள் எவையேனும் கிடைக்கப் பெற்றில. காரணம் அஞ்ஞான்று கற்களால் கட்டடங்கள் அமைக்கப் பெற்றவை மிகச் சிலவேயாகும். மெகாத்தெனிசு என்பார் சந்திரகுப்த மெளரியன் என்பானின் மாளிகையானது மிகப் பெரிதாயும் இன்ப நுகர்ச்சிக்குரியதாயும் இருந்தபோதும் செதுக்கப்பட்டுப் பொன்முலாம் பூசப்பட்ட மரத்தினாலேயே கட்டப்பட்டிருந்ததெனக் கூறுகின்றார். இன்று நிலைத்திருக்கும் கட்டடங்கள் முன்னர் மரத்தினாற் கட்டப்பட்டவற்றையே எடுத்துக்காட்டாகக் கொண்டு அமைக்கப்பெற்றவை. பருப்பொருள் எச்சங்கள் எவையேனும் கிடைக்கப் பெறாமையால் மெளரியர் காலத்தும் அதற்கு முன்னரும் இந்த இந்தியக் கட்டடங்கள் இழிவானவை அல்லது நாகரிகங் குறைந்தவையெனக் கொள்ளல் சாலப்பொருத்தமானது. மெளியர்காலத்துக் கம்மியர் கற்பணியிலே நன்கு தேர்ச்சி பெற்றிருந்தனர் என்பதற்கு அக் காலத்திலே ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ள தூண்கள் சான்று பகரும். மெளரியர் காலத்துக் கட்டடங்கள் மரங்களால் அமைக்கப்பட்டிருப்பின் கங்கைச் சமவெளியில் கற்கள் குறைவாகக் காணப்பட்டமையும் இன்று மரங்கள் அருகியுள்ள இடங்களில் அவை ஏராளமாய் அக்காலத்தில் இருந்தமையுமே அதற்குக் காரணமாகும். இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 22 Sசோதிலிங்கம்

சிந்துவெளி நாகரிகத்திற்கும் மெளரியர் காலத்திற்கும் இடையில் கிட்டத்தட்ட 2700 வருட கால இடைவெளி உள்ளதென மஜும்தார் கூறுகிறார். இந்த இடைவெளி மிக நீண்டது. இக்காலப்பகுதிக்குரிய கட்டடங்களோ அல்லது கலைச் சின்னங்களே குறிப்பிடக் கூடியதாக எதுவும் கிடைக்கவில்லை. எனவே இக்காலப்பகுதியில் கலைகள் எதுவும் வளர்ச்சி பெறவில்லையா? என வினா எழுதல் இயல்பாகும். மெளரியர் காலச் சிற்பங்களிலும் கட்டடங்களிலும் காணப்படுகின்ற நிறைவையும் செம்மையையும் நோக்கும்போது அவை திடீரென்று மெளரியர் காலத்தில் தோன்றியதாகத் தெரியவில்லை. ஏற்கனவே அத்தகைய கலைப்பாங்குகள் நன்கு இந்தியாவில் வளர்ச்சியடைந்திருக்க வேண்டும் என்றே எண்ணத் தோன்றுகின்றது.
I. வேதகாலம்.
சிந்துவெளி காலத்தில் உருவ வழிபாடு நிலவியது என்பதனை அகழ்வாராய்ச்சிகள் புலப்படுத்தினும் அங்கே கோயில்கள் இருந்தமைக்கான சான்றுகள் காணப்படவில்லை. ஆயினும் பபிலோனியப் பகுதிகளில் இருந்தது போன்று சிந்துவெளியிலும் கோயில்கள் இருந்திருக்க வேண்டும் என்பது டாக்டர் மக்கேல் போன்ற ஆய்வாளர்கள் சிலரின் ஊகம். வேத காலத்தைப் பொறுத்தவரையில் தெய்வங்களின் உருவ வழிபாட்டுக்கான ஆதாரங்கள் கிடைத்தில. இக்காலப்பிரிவில் வேள்வியே சமயத்தில் உன்னதமான இடம்பெற்றது. பிரமாணங்களின் திருவுருவம் கோயில் பற்றிய குறிப்பெதுவும் இல்லையென்றாலும் யாகசாலை, யாககுண்டம் என்பவற்றை அமைக்கும் முறையைச் சிறப்பாக விதந்துரைக்கின்ற வகையில் அவை கோயிற் கட்டடக்கலை தோன்றி வளர வித்திட்டன என்பது பேராசிரியர் கைலாசநாதக்குருக்கள் போன்றோரின் கருத்து. பிரமாணத்துக்கமைய கணித நூலறிவைக் கொண்டு யாகசாலைகள் அமைக்கும் ஆற்றல் வளர்ந்து காலகதியில் பெருங்கோயில்கள் உருவாக்கும் கட்டடக்கலையை தோற்றுவித்தது என்று கூறுவதில் நியாயமிருக்கின்றது. இந்துதாகரிகத்தில் நுண்கலைகள் 23 Sசோதிலிங்கம்

Page 20
உபநிடதங்கள் தத்துவ விசாரணையிலே பெருமளவு ஈடுபட்டமையினால் அவற்றில் உருவ வழிபாட்டுக்கான ஆதாரம் எதுவும் இல்லையெனலாம். கிருஹய சூத்திரங்களில் வருகின்ற சில குறிப்புக்கள் தெளிவற்ற கோயில்களைக் குறிக்கின்றன. பிரமச்சரிய விரதத்தைப் பூர்த்தி செய்து கிருஹஸ்த ஆச்சிரமத்துள் நுழையும் மாணவர்கள் தெய்வங்கள் உறையும் இடம் வழியில் தென்பட்டால் அவற்றை வலம்வருதல் வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் தேவகிருதம், தேவாதயனம் என்ற பதப்பிரயோகத்திலிருந்து கோயில்கள் என்ற கருத்தில் வழிபாடு அக்காலத்தே இருந்தன என்பதனை ஊகிக்க முடிகின்றது. இவை படிமுறைத்திறனில் கட்டடக்கலை வளர்ச்சிபெற்று வருவதற்கு உந்து சக்தியாக அமைந்தன எனலாம்.
II. சிவாகமங்கள் கூறும் ஆலய அமைப்பு.
வழிபாட்டு மரபினை நிறைவேற்றுவதற்கென உருவாக்கப்பட்ட விக்கிரகங்களை நிறுவுவதற்கு ஆலயங்கள் தேவைப்பட்டது. இதனையொட்டி வளர்ந்த கட்டடக்கலை ஆகமங்களில் காமிகம் காரணம் சுப்ரபேதம்வாதுளம் முதலியனவற்றில் விபரங்கள் கூறப்பட்டுள்ளன. விஷ்ணுதர்மோத்த புராணம், அக்கினி புராணம், மத்ஸ்யபுராணம் முதலியவற்றிலும் இக்கலைகள் பற்றிய குறிப்புகள் பல காணப்படுகின்றன. எனினும் இவை பற்றிய விபரங்களை விரிவாகத் தருவதற்கு நூல்கள் பிற்காலத்தில் சாஸ்திர வடிவில் தோன்றலாயின. கட்டடக்கலை பற்றிக் கூறும் நூல்கள் வாஸ்து சாஸ்திரம் என்றும், சிற்பக்கலை தொடர்பான நூல்கள் சிற்பசாஸ்திரம் என்னும் பெயர்பெறும். ஆயினும் கட்டடம், சிற்பம் என்ற இரண்டும் வெவ்வேறு துறையாகப் பிரிந்தது அல்லாமல் ஒன்றில் மற்றது உள்ளடங்கி நிற்பது குறிப்பிடத் தக்கதோர் அம்சமாகும். சிற்பக்கலை அறிவும் செய்கைமுறையும் கட்டடக் கலைஞனுக்கு அத்தியாவசியம் எனக் கருதப்பட்டது. இவற்றின் பேறாக விதிக்கப்பட்ட ஆலய அமைப்பு இரண்டு வகைப்படும். ஒன்று நம் உடல் அமைப்பையொட்டியது. மற்றொன்று நம் இதய அமைப்பையொட்டியது. கோயில்கள் நம் உடம்புபோல் அமைக்கப்பட்டிருக்கின்றன என்பதை இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 24 SCs sigsfish

சேத்திரம், சரீரப் பிரஸ்தாரம் என்பர். இதனைத் திருமூலர் உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் என்றார். பிண்டமாகிய நம் உடலின் தலை, கழுத்து, மார்பு, நாடி, பாதம் என ஐந்து பிரிவுகள் உண்டு. புருஷ வடிவமாக விளங்கும் சிவாலயத்தை நம் உடலோடு ஒப்பிடும்போது கர்ப்பக்கிரகம் தலையாகவும், அர்த்தமண்டபம் கழுத்தாகவும், மகாமண்டபம் மார்பாகவும், யாகசாலை நாடியாகவும், கோபுரம் பாதமாகவும் விளக்கப்படுகின்றது. உடலில் வாய், நாக்கு, அணிணாக்கு, பஞ்சேந்திரியங்கள், இருதயம், உயிர் என்பன உள்ளன. அவற்றுடன் ஒப்பிடும்போது ஆலயம் உடலாகவும், கோபுரம் வாயாகவும், நந்தி நாக்காகவும், துவஜஸ் ரம்பம் அணிணாக்காகவும், தீபங்கள் பஞ்சேந்திரியங்களாகவும், கர்ப்பக்கிரகம் இதயமாகவும், சிவலிங்கம் உயிராகவும் விளங்குவதைக் காணமுடிகின்றது. உடலில் அன்னமய கோசம், பிராணமய கோசம், மனோமயகோசம் விஞ்ஞானமய கோசம், ஆனந்தமய கோசம் போலவும், தூல சாரீரம், சூக்கும சாரீரம், குண சரீரம், கஞ்சுக சரீரம், காரண சரீரங்கள் போல் உடலிலுள்ள ஆதாரங்கள் போல் ஐந்து பிரகாரங்களும் ஐந்து சபைகளும் உள்ளன. கர்ப்பக்கிரகம், அர்த்தமண்டபம் முதலானவை உள்ளன.
மேலும் இவ் ஆலயங்கள் பொதுவாகச் செங்கல், காரை, கம்பி போன்ற ஏழுவகைப் பொருள்களால் ஆனது. நம் உடலும் தோல், இரத்தம், நரம்பு போன்ற ஏழுவகைத் தாதுக்களால் ஆனது. இவ்வாறாக ஆகமங்களில் விதிக்கப்பட்ட ஆலய அமைப்பு நம் உடல் அமைப்புடனும் நம் இருதய அமைப்புடனும் ஒப்பிட்டு சாஸ்திர நூல்கள் குறிப்பிட்டுள்ளன.
கோயில்களில் சிறப்புப் பெறுவது ராஜகோபுரமாகும். இது ஸ்தூல லிங்கமாகும். வெகு தொலைவிலிருந்து கண்ணுக்குத் தென்படும் போது இதை தெய்வ சொரூபமாகவே எண்ணி வணங்குவார்கள். கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்ற பழமொழி இந்த வழக்கிலிருந்துதான் வந்தது. ராஜகோபுரத்தின் மேல் நிலை பொதுவாக ஒற்றைப்படை எண்ணில் அமைந்திருக்கும். மூன்று, ஐந்து, ஏழு ஒன்பது, பதினொன்று இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 25 Sசோதிலிங்கம்

Page 21
இவ்வாறு அதில் அமைந்துள்ள நிலைகள் அமையவேண்டும் என்பது விதியாக உள்ளது. மூன்று நிலைகள் முறையே ஜாக்கிரத், ஸ்வனப்பன, சுஷாப்தி என மூன்று அவஸ்தைகளைக் குறிக்கும். ஐந்து நிலைகள் ஐம்பொறிகளைக் குறிக்கும். ஏழு நிலைகள் ஐம்பொறிகளோடு மனம், புத்தி என இரண்டும் சேரும். ஒன்பது நிலைகள் அந்த ஏழினொடு சித்தம், அகங்காரம் என இரண்டும் சேர்ந்து ஒன்பதாகும். பஞ்சேந்திரியங் களைக் கொண்டும் மனம், புத்தி முதலியனவற்றைக் கொண்டும் புறவுலகை அறிகின்றோம். செயலை அப்படியே நிறுத்திவிட்டு மனதைத் துணையாகக் கொண்டு பரம்பொருளிடத்து பயணம் போக வேண்டும் என்னும் கோட்பாட்டை ராஜகோபுர வாயினுள் பண்ணும் பிரவேசம் நமக்கு விளக்கிக் காட்டுகின்றது. நாகரிகத்தின் கருப்பையாக விளங்குவது கட்டடக்கலை என்பது அறிஞர் பலரின் கருத்தாகும். கட்டடக்கலை வளர்ச்சி மக்களின் சமயவளர்ச்சி, அறிவியல் வளர்ச்சி, பொருளியல் வளர்ச்சி முதலியவற்றின் எதிரொலியாக விளங்குகின்றது. எடுத்துக்காட்டாக இந்தியரின் கட்டடங்கள் ஆன்மீகத்திற்கும், கிரேக்கர்களின் கட்டடங்கள் தூய்மைக்கும், உரோமானியரின் கட்டடங்கள் அறிவியல் வளர்ச்சிக்கும் சான்றுகளாக அமைகின்றன எனக் கூறப்படுகின்றது. நுண்கலைகளுட் தலைசிறந்த கட்டடக்கலையும், சிற்பக்கலையும், ஓவியக்கலையும் சிறந்தோங்கும் வண்ணம் கோயில்கள் நிலைக்களனாக - விளங்கும் தன்மையை ஒவ்வொரு தூணும், கோபுரமும், விமானமும், சுவரும் சுட்டிக்காட்டும். கோயில் அமைப்பு கட்டடக்கலை வளர்ச்சிக்குப் பெரிதும் துணைபுரிகின்றது என்பது சாலப்பொருத்தமுடையதாகின்றது.
IV. மெளரியர்காலக் கட்டடக்கலை.
மெளரியர் காலத்தைப் பொறுத்தவரையில் கலை வரலாறு புகழ்மிக்க காலமாக மிளிரும் நிலையில் இக்காலம் பெளத்த கட்டடக் கலை வரலாறாக அசோக மன்னனின் ஆட்சிக்காலம் முக்கிய இடம் பெறுதல் போல கலைவரலாற்றிலும் சிறப்பிடம் பெறுகின்றது. வரலாற்றுக் காலக் கலைவரலாறு இவனுடைய காலத்திலிருந்துதான் ஆரம்பிக்கின்றது என்பர். இவன் மாபெரும் கட்டட முதல்வன் எனவும் மரத்திற்குப் பதிலாக கல்லை முதன்முதல் கட்டடத்திற்குப் பயன்படுத்தியவன் எனவும் இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 26 Sசோதிலிங்கம்

கருதப்படுகின்றது. அசோகன் காலத்திலிருந்து 700 வருடங்களின் பின் இந்தியாவுக்கு வந்த சீன யாத்திரிகன் பாகியன் பாடலிபுர அரண்மனையைப் பார்த்து அவற்றை மானிடர்கள் செய்திருக்க முடியாதென வியந்துள்ளான். ஆனால் அவை எல்லாம் காலத்தின் கொடுமையால் அழிந்துவிட்டன. இன்று எஞ்சியிருப்பவை மிகச்சிலவே.
அசோகன் கலைக்கு ஆற்றிய பணிகள் பலவாகும். அவற்றை பேர்ஸிபிறவுண் பின்வருமாறு ஆறு பகுதிகளாகப் பிரிப்பர். பாறைக் கல் வெட்டுக்கள், தூபிகள், தனிக்கல் தூண்கள், தனிக்கல் உருவங்கள், பாடலிபுர அரண்மனைகள், குடைவரை மண்டபங்கள் என்பனவாகும். பண்டைக்காலத்தில் தூபி அல்லது தாகபா என்பது இறந்த ஒரு தலைவனின் சாம்பல் மேல் எழுப்பப்பட்ட நினைவுச் சின்னமாகும். புத்தர் பரிநிர்வாணமடைந்த பிறகு அவரின் நினைவுச் சின்னங்கள் மேல் தூபி என்பன கட்டப்பட்டன. கலிங்கப் பேரின் பின்னர் புத்தமதத்தைத் தழுவிய அசோகன் புத்தரைப் போற்றுமுகமாக நாடு முழுவதும் தூபிகளை எழுப்பினான். இவை பெளத்த கலையின் ஒப்பற்ற சின்னங்களாக மிளிர்ந்தன. இவற்றுள் பல இன்னும் அழியாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது. சாஞ்சியில் பல தூண்கள் கட்டப்பட்டதுடன் புத்தர் மாவீரர் போன்ற ஞானிகளும் அவர்களைப் பின்பற்றிய துறவிகளும் இறந்தபின் அவர்களின் சாம்பலை அடக்கம் செய்த இடங்களில் எழுப்பப்படும் அரைக்கோள வடிவ நினைவுச் சின்னங்கள் தூபிகள் ஆகும். இவன் கட்டிய தூபி ஒன்று நேபாளத்தில் உள்ளது. இது அரை வட்டக் குமிழ் வடிவிற் காணப்படுகின்றது. புத்தரின் நினைவுச் சின்னங்கள் பளிங்குப் பேழைகளில் வைக்கப்பட்டு சுடாத செங்கற்கள் உள்ளும் சுடாத செங்கற்கள் வெளியிலுமாக வைத்துச் சாந்தினால் பூசப்பட்டன. தூபியின் உச்சியில் கல்லால் அல்லது மரத்தாலாகிய குடையொன்று வைக்கப்படும். தூபி அண்டத்தின் சிறுபிழம்பாகக் கொள்ளப்படுகின்றது.
அசோகனால் நிறுவப்பட்ட தூபிகளில் சிறப்புடையது சாஞ்சியில் உள்ள பெரும் தூபியாகும். இது கலை வரலாற்றில் புகழ்மிக்க கிபி 1818 இல் கண்டுபிடிக்கப்பட்டது. அக்காலத்தில் இப் பெருந்துபியைச் இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 27 Sசோதிலிங்கம்

Page 22
சுற்றி அழகிய கல்வேலி அமைக்கப்பட்டது. இவ்வேலியில் தூண்கள் எண்பட்டையுடையன. தரை மட்டத்திலிருந்து மூன்று மீற்றர் உயரம் உடையன. இவை ஒன்றுக்கொன்று இரண்டு அடி தூரத்தில் நெருக்கமாக அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை மூன்று குறுக்குச் சட்டங்களும் உச்சியில் உட்டுனீசம் எனப்படும் நீண்ட விட்டமும் இணைக்கின்றன. சாதவாகன மன்னர்கள் இத்தூபியை புகழ்மிக்க கலைப் படைப்பாக உருவாக்கினர். ஒவ்வொரு தோரண வாயில்களும் இரு தூண்களும் தூண்களின் மீது குறுக்காக அமைக்கப்பட்ட மூன்று விட்டங்களும் உள்ளன. இவ் விட்டங்கள் ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கப்பட்ட மூன்று நீண்ட துணிச் சுருள்களைப் போன்று உருவாக்கப் பட்டுள்ளன. இது அக்கால கலைஞர்களின் கற்பனைத் திறனை வெளிப்படுத்துகின்றது. இவ்விட்டங்களைத் தாங்குவதற்குப் போதிகைகளை அமைப்பதற்குப் பதிலாக அழகிய பெண்ணுருவங்களைச் செதுக்கியுள்ளனர். இவை கலையம்சம் மிக்கன. இச்சுருள்களிலும் தூண்களிலும் புத்தரின் வாழ்க்கை வரலாறும் சாதகக்கதை நிகழ்ச்சிகளும் பெளத்தர்களின் புனித சின்னங்கள் பலவும் மிக நுணுக்கமாகவும் தந்த வேலைப்பாடுகளைப் போன்று செதுக்கப்பட்டுள்ளன. இவை யாவும் அக்கால சிற்பக்கலையின் உயர்ந்த நிலையைக் காட்டும். எனவே இவை உலக கலைவல்லுனர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
இப் பெருந்தூபியின் தெற்கு வாயில்களுக்கு எதிரே அசோகரின் சாசனத் தூணொன்று சிதைந்த நிலையில் காணப்படுகின்றது. இத் தூபியைச் சுற்றி அமைக்கப்பட்ட கல்வேலியில் குப்தப் பேரரசன், 2 ஆம் சந்திரகுப்தனின் கிபி 412 ஆம் ஆண்டுக் கல்வெட்டு ஒன்று காணப்படுகின்றது. பெருந்துபியைச் சுற்றிச் சில அழகிய கட்டடங்கள் உள்ளன. அவற்றுள் கீழ்க்கண்டவை குறிப்பிடத்தக்கன. (1) பெருந்துாபியின் தெற்கு தோரணவாயிலுக்கு நேரெதிரில் உள்ள
சைத்திரிய மண்டபம். (2) மேற்கூறிய சைத்திரிய மண்டபத்திற்கு கிழக்கே அமைந்த புகழ் மிக்க குப்தர்காலக் கோயில். இது கிபி 5 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது.
இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 28 S.சோதிலிங்கம்

(3) பெருந்தூபியின் மேற்கு தோரண வாயிலுக்கு முன்னே அமைந்த இரு மண்டபங்கள். இவற்றை பெளத்தப் பெண் துறவிகள் தங்குவதற்கென அசோக மன்னனின் மனைவியான தேவி என்பாள் கட்டினாள்.
தூபி எண் 02 சாஞ்சியில் காணத்தக்க தூபிகளுள் இதுவும் ஒன்று. இது இங்குள்ள குன்றின் மேற்கே அமைந்த பாறை மீது கட்டப்பட்டுள்ளது. இதன் விட்டம் 14 மீற்றர், உயரம் 8 மீற்றர் ஆகும். இதற்குத் தோரண வாயில்கள் இல்லை. இதனைச் சுற்றியுள்ள கல்வேலி இன்றும் சிதையா நிலையிலுள்ளது. இதிலுள்ள புடைப்புச் சிற்பங்கள் அழகுமிக்கன. அவற்றுள் பெண் தேவதைகள், சிங்கங்கள், யானைகள், பாம்புகள், இறைக்கையுள்ள சிங்கங்கள், முதலை அல்லது குதிரைத் தலையுடன் கூடிய மனிதர்கள், போதிமரம், தர்மச்சக்கரம் ஆகிய சிற்பங்கள் குறிப்பிடத்தக்கன.
மேற்கூறிய குன்றின் அடிவாரத்திலுள்ள சிறு தூபி கி.மு 3 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது. அக்காலத்துப் பெளத்த துறவிகளான கத்யன் மெளத்கல்ய புத்திரன் ஆகியோரின் சாம்பல் இதில் அடக்கம் செயயப்பட்டு உள்ளது. இதனைச் சுற்றி வேலைப்பாடுகள் மிக்க கல்வெளியும் தோரண வாயில்களும் உள்ளன.
பெளத்த துறவிகள் தங்கும் விகாரைகள் ஐந்து சாஞ்சியில் உள்ளன. இவை கிபி 4 தொடங்கி 12 ஆம் நூற்றாண்டுக்குள் கட்டப் பட்டவை. இவை தொடக்கத்தில் மரத்தால் கட்டப்பட்டுப் பின் அவை அழிந்தபின் கற்களால் கட்டப்பட்டன. இந்திய சிற்பக்கலை வரலாற்றில் சாஞ்சியின் சிற்பங்கள் தனித்ததொரு இடத்தைப் பெறுகின்றன. எனவே இக்கலை மரபு சாஞ்சிக் கலைமரபு என்று அறிஞர்களால் போற்றப் படுகின்றது.
இது அவனுக்குப் பின்னர் அடையாளம் தெரியாதவாறு இரு மடங்காகப் பெருப்பித்தமைக்கப்பட்டது. 121/, அடி விட்டம் உடையது. இதன் உயரம் எழுபத்தேழரை அடியாகும். முகப்பில் நல்ல கற்கட்டு வேலைப்பாடு காணப்படுகின்றது. நிலத்திலிருந்து 18 அடி உயரத்தில் இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 29 Sசோதிலிங்கம்

Page 23
நடந்து செல்லக்கூடிய படிக்கட்டு வழி உள்ளது. முன்னரிருந்த பாதை மரத்தாலன வேலி என்பன பின்னர் கல்லால் அமைக்கப்பட்டன. இதன் உயரம் 11 அடி. கி.முமுதலாம் நூற்றாண்டு அளவில் நான்கு புறமும் அழகுமிக்க தோரண வாயில்கள் அமைக்கப் பட்டுள்ளன. மெளரியர் கால கற்றுண்கள் கலைவளம் மிக்கவை. பெரும்பாலான தூண்களில் அசோகனுடைய ஆணைகள் பொறிக்கப் பட்டுள்ளன. சிலவற்றில் எழுத்துக்களே காணப்படவில்லை. அதனால் எல்லாத் தூண்களையும் அசோகன் நிறுவவில்லை என்பர் ஆர்கே முகர்ஜி என்பவர் இத்தூண்கள் இறுகிய மணற்கற்களால் ஆகியன 40 அடியில் இருந்து 50 அடி வரை உயரமுடைய இவை அடியிற் பெருத்தும் போகப்போகச் சிறுத்தும் நுனி கூம்பியதாக இருக்கும். இவற்றின் வெளிப்புறம் கண்ணாடி போல அழுத்தமாகவும் விளக்கமாகவும் உள்ளது.
மேற்படி தூண்களின் உச்சியே மிகவும் முக்கியமான உறுப்பாகும் இத்தூண்களின் மேல் மணிப் பொதிகையும் அதன் மீது ஒரு பீடமும் பீடத்தின் மீது ஒரு குறியுருவமும் காணப்படும். குறியுரு பொதுவாக ஒரு சிங்கமாகவேயிருக்கும். சாரணத்தில் காணப்படும் தூண் மிகவும் கவர்ச்சிகரமானது. இதில் நான்கு சிங்கங்கள் முதுகுகள் ஒன்றுடனொன்று பொருந்தும் வண்ணம் நாற்றிசையும் நோக்கியபடி கம்பீரமாக தர்மச் சக்கரத்தை ஏந்தியவாறு காணப்படுகின்றன. பிற்கால இந்தியத் தூபிகளில் மிகப் புகழ்வாய்ந்தவை சாரணாத்திலும் நாலந்தாவிலும் உள்ளவையே. புத்தர் முதற்கண் அறிவுரை நிகழ்த்திய இடமாகிய காசிக்கண்மையில் உள்ள சாரணாத்துத் தூபியானது அழகிய வார்ப்புள்ள செங்கல் வேலைப் பாடுடைய கண்கொள்ளாக் காட்சியாய் ஒரு காலத்திலிருந்தது. நீளுருளை வடிவுள்ள அதன் மேற்குமிழானது அரைவட்ட வடிவுள்ள ஒரு கீழ்க் குமிழின் மீது எழுப்பப்பட்டுள்ளது. அன்றியும் நாற்றிசையிலுமுள்ள முக்கோண முனைகளில் புத்தரின் பெரிய உருவச்சிலைகள் வைக்கப்பட்டு உள்ளன. அதன் இறுதித் தோற்றம் குப்தர் காலத்திலிருந்து தோன்றுகின்றது. நாலந்தாத்தூபி அடுத்தடுத்து ஏழுமுறை பெருப்பிக்கப் பட்டுள்ளது. அது இன்றுள்ள சிதைவு நிலையிலே மேல் முற்றம் இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 30 Sசோதிலிங்கம்

வரை படிவரிசைகளுள்ள ஒரு செங்கற் கூம்பகத்தை (பிரமிட்டை) ஒத்துள்ளது. முதலில் அது உயரமான மேடையில் அமைக்கப்பட்ட உயர்ந்த ஒரு தூபியாகவும் ஒவ்வொரு மூலையிலும் ஒவ்வொரு சிறு தூபிகளை உடையதாயிருந்தது. நாலந்தாவில் உள்ள கலைச் செல்வங்களுள் உன்னதமானவையாக விளங்குவது பாலர் காலத்திய கலைப்படைப்புக்களேயாகும் அவை பெரும்பாலும் குப்தரின் கட்டடங்களின் மீது கட்டப்பட்டுள்ளன.
நாலந்தாவில் அகழ்வாய்வின் ஊடாக அழிந்த கட்டடங்களின் பகுதிகள் மிக்களவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவை குப்தர் காலத்திற்கு பிற்பட்டவை. அவற்றில் ஏழு பண்பாட்டுக் காலங்களில் சிறந்து விளங்கிய தூபி குறிப்பிடத்தக்கது. அதன் நான்கு மூலைகளிலும் தோரண வாயில்கள் உள்ளன. அவ்வாயில்களில் உள்ள தேவகோட்டங்களில் அழகேயுருவான போதிசத்துவர் மற்றும் புத்தருடைய திருவுருவங்கள் இடம்பெற்றுள்ளன. இங்கே கண்டெடுக்கப் பட்டுள்ள செங்கற்களலான மேடையில் காணப்படும் கல்வெட்டு ஒன்றினைக் கொண்டு இக்கட்டடங்கள் கிபி 516 - 517 இல் கட்டப்பட்டன என்பதை அறியலாம். இது மட்டுமன்றி குப்தருடைய காசுகளும், இலட்சணை களும், குப்த வம்சத்தினரின் சமகாலத்தவரின் காசுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குப்தரது பிற்காலத்தைச் சார்ந்த புத்தரின் சிற்பங்களும், பெளத்தசமய தெய்வங்களின் சிற்பங்களும், உலோகப் படிமங்களும், சுடுமண் பொம்மைகளும், முத்திரைகளும்கூட இங்கு அகழ்ந்தெடுக்கப்பட்டன. இத்துடன் சைவசமயம் சார்ந்த கடவுளின் உருவங்களும் கண்டெடுக்கப்பட்டன. அவற்றுள் பலராமன், உமாமகேசுவரர், சரஸ்வதி, கங்கள திருமால் ஆகிய திருவுருவங்கள் அழகுமிக்கவை.
இக்காலத்தில் எழுந்த பெருந்துபிகளைச் சூழ்ந்து பக்திக்கும் புலமைக்குப் புகழ்போன துறவிகளின் சாம்பரைப் பெரும்பாலும் கொண்ட சிறுதூபிகளும் இன்றும் துறவியர் பள்ளிகளும், ஆலயங்களும், போதனை மண்டபங்களும், யாத்திரிகள்கள் தங்குவதற்கான மடங்களும் இன்னோரன்ன இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 31 SCd Ilgisůsh

Page 24
பலதிறக் கட்டடங்களும் இருந்தன. நாலாந்த போன்ற பெளத்த நிலையங் களிலே துறவியருக்குரிய கட்டடத் தொகுதிகள் பெரும்பாலும் சுற்று மதில்களால் சூழப்பட்டிருந்தன. இவை கட்டடக்கலை வரலாற்றுடன் சிற்பக்கலை வரலாறும் மிகவும் இணைக்கப்பட்டதொன்று என்பதனை எடுத்துக்காட்ட ஆதாரமாக இருக்கின்றன.
V மெளரியரும் இந்தக் கட்டடக்கலையும்.
மெளரியர் காலத்தில் இந்துக்கோயில் கட்டடக்கலை வரலாறும் வளர்ச்சி அடைந்திருக்கின்றது என்று ஊகிக்க முடிகின்றது. மலிந்த பண்கா எனும் கிரேக்க நூலிலிருந்து பெளத்தர்கள், இந்துக்கள் உருவ வழிபாடு செய்யும் கோயில்களுக்குச் செல்ல அனுமதிக்கப்படவில்லை எனத் தெரிகின்றது. அர்த்த சாஸ்திரத்திலிருந்து குமரித்தேவதை இலக்குமி, சிவன், குபேரன் ஆகியோருக்குக் கோயில்கள் இருந்ததாக அறியமுடிகின்றது. இக்கோயில்களில் விமானம் அமைக்கப்பட்டிருந்த நிலையில் விமானங்கள் அமைக்கும் மரபு இந்துக் கோயில்களுக்கேயுரியது என்பதும் இதுவரை ஆராய்ந்தனவற்றிலிருந்து நோக்கும் பொழுது மெளியர் காலத்திலும் இந்துநாகரிக வரலாறு கட்டடக்கலை வரலாற்றுடன் கூடியதாக பெளத்தமத வரலாற்றுடன் கட்டடக்கலை வரலாற்றின் மத்தியிலும் வளர்ச்சிபெற்றே வந்திருக்கின்றது என்பதனை அறியமுடிகின்றது.
மெளரியர் காலத்துக்கும் குப்தர் காலத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் பெளத்தக் கட்டடக்கலை வளர்ச்சிக்காக பெருந்தொகைப் பணமும் ஆற்றலும் செலவிடப்பட்டன. பழைய தூபிகள் பெருப்பித்து அழகுற அமைக்கப்பட்டன. இவற்றுள் மூன்று சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை. அவையாவன மத்திய பாரதத்தைச் சேர்ந்த பாரூத்திலும், பழைய போப்பால் அரசைச் சேர்ந்த சாஞ்சியும், கீழ்க்கிருட்டினைப் பள்ளத்தாக்கைச் சேர்ந்த அமராவதியிலுமுள்ள தூபிகளாம். கி.மு 2 ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதிக்குரிய பாரூத்துத் தூபியின் அமைப்பானது சிற்பத்திற்கே சிறப்பாகக் கொள்ளத்தக்கது. அத்தூபிதானும் இன்று மறைந்தொழிந்துவிட்டது. மற்றும் சாஞ்சியிலுள்ள இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 32 Sea Asiasub

தூபியே பண்டைய இந்தியாவின் ஒப்பற்ற கட்டடக்கலையை விளக்கும் எச்சங்களில் ஒன்றாகத் திகழ்கின்றது. சாஞ்சியில் உள்ள தோரண வாயில்கள் அவைதம் கட்டட வேலைப்பாட்டிலும் அவற்றிற் செதுக்கப்பட்டுள அலங்கார வேலைப்பாட்டுக்கே குறிப்பிடத்தக்கவை எனலாம். அவை ஒவ்வொன்றும் இரு சதுரத் தூண்களை உடையன. அத்தூண்களின் மேல் விலங்குகளினாலோ குறுந்தாட் பூதங்களாலோ தாங்கப்படும் மூன்று வளைந்த குறுக்கு விட்டங்கள் இருக்கின்றன. இவை யாவும் நிலமட்டத்திலிருந்து 34 அடி உயரமுள்ளன. இத்தோரண வாயில்களின் கட்டட அமைப்பைத் தொழில்நுட்பக் கண்கொண்டு நோக்கின் அவை பழமையானவை என்பது புலப்படும்.
பண்டைய மெளியர் காலக் கலைமரபின் தொடர்ச்சிகளின் கனிட்கன் காலத்தில் கட்டடக் கலை மிகவும் சிறப்புற்று விளங்கியது. இதற்கு வட மதுரா நல்லதோர் எடுத்துக்காட்டாகும். இதைவிடச் சிறப்பாக குசானர் காலத்தில் புதிய கலைமரபு ஒன்று காந்தாரத்தில் வளர்ச்சி பெற்றது. இது பைசா வரை மையமாகக் கொண்டு வடமேற்கு எல்லைப் புறத்தில் மிகவும் உயர்வாக வளர்ந்தது. இது ஏறத்தாழ 300 ஆண்டுகள் கிரேக்க, இந்திய கலைப்பண்புகளின் கலப்பினால் எழிலுடன் செழிப்புற்றோங்கியது. பாரசீக ஆட்சியில் தொடங்கப்பட்ட இக்காந்தாரக்கலை கிரேக்க, உரோமக் கலைஞர்களால் நன்கு வளர்க்கப்பட்டு இந்தியாவில் நுழைந்து குசானர் ஆட்சியில் பெரும் மெருகுடன் பூத்துக் குலுங்கியது.
VIL Gůrgabírø5 Goës 6LLäh65606No.
மெளரியர் காலத்தையடுத்துக் குப்தர் காலம் சிறப்பிடம் பெறுகின்றது. இதன் காலம் கிபி 320 முதல் 800 வரையிலான காலம். இக்காலத்தில் இந்துமதம் மறுமலர்ச்சி அடைந்தது. இதனால் இந்தியப் பண்பாடு மறுபிறவி எடுத்தது என்பர் தங்கவேல் என்ற அறிஞர். இக்காலத்தில் நுண்கலைகள் வளர்ச்சி பெற்றமையின் பேறாக இந்தியக் கலையின் பொற்காலம் எனக் கூறப்படுகின்றது. இக்காலத்தில் கட்டடக் கலை வரலாறு தனித்துவமான முறையில் வளர்ச்சியடைந்தமையின் இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 33 Sசோதிலிங்கம்

Page 25
பேறாக அவை முறையே உத்தரப்பிரதேசம், பீகார், மத்திய பிரதேசம் ஆகிய இடங்களில் காணலாம். பெரும்பாலான கட்டடங்கள் செங்கற்களால் ஆனவை. ஒரு சிலவே கற்களால் ஆனவை. அதனால் அவை இலகுவில் அழிந்துபடக் கூடியனவாகும். மத்திய காலத்திலே பிரமாண்டமான தோற்றமும் வரைவிலா வனப்பும் கொண்டு விளங்கிய கோயில்கள் குப்தர் காலம் முதலாகவுள்ள ஒரு நீண்ட கால வரலாற்றுப் பின்னணியைக் கொண்டுள்ளன. குப்தர் காலத்தில் வளர்ச்சிபெற்ற கோயிற் கட்டடக்கலையானது காலப்போக்கிலே பாரத கண்டம் முழுவதிலும் செல்வாக்குப் பெற்றது. நாகரம், வேசரம், திராவிடம் என்று சிற்ப நூல்கள் வகைப்படுத்தும் மூவகைக் கோயிலமைப்பு முறைகளுக்கும் குப்தர் காலப் பாணியே மூலமானது. நான்காம், ஐந்தாம் நூற்றாண்டுகளில் இக்கலைப்பாணியின் செல்வாக்கு சுவர்ண பூமியிலுள்ள நாடுகளுக்கும் பரவியது.
குப்தர் காலத்தில் எழுதப்பட்ட சாசனங்கள் விசாலமான அழகிய நெடுமாடங்கள், மாளிகைகள், கோயில்கள் என்பவை நிறைந்துள்ள பட்டிணங்களைப் பற்றியும் நகரங்களைப் பற்றியும் கவிநயத்துடன் வர்ணிக்கின்றன. ஆயினும் குப்தர் காலத்துக்குரிய கட்டடங்கள் பெரும்பாலும் அழிந்தொழிந்துவிட்டன. ஒருசில தலங்களில் மட்டுமே கட்டட அழிபாடுகள் அகழ்வாராய்ச்சியின் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றின் அடிப்படையில் குப்தர் கலைப் பாணியில் அமைந்த கோயில்களை மேல்வரும் வகைகளாகப் பிரிக்கலாம். (1) அகலத்தில் ஒடுக்கமான முகமண்டபத்துடன் கூடியதும் தட்டையான
கூரை கொண்டதுமான சதுர வடிவிலான கோயில்கள். (2) மூடப்பட்ட திருச்சுற்றாளவை பொருந்தியதும் சதுர வடிவங் கொண்டதும் தட்டையான கூரையுடையதுமான கோயில். (3) மேலே சிறிய சிகரத்துடன் அமைந்த சதுரமான கோயில் (4) நான்கு பக்கங்களிலும் நடுவிலே வெளிப்புறமாகச் சற்று நீண்டுள்ள அமைப்புக்களைக் கொண்ட வட்டமான தோற்றமுடைய கோயில்கள்.
இவற்றுள் முதலாவது வகையுள்ள கோயில்களின் அமைப்பு முறையே ஆதியானது. அதுவே இரண்டாம், மூன்றாம் வகையிலுள்ள இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 34 Sசோதிலிங்கம்

கட்டட அமைப்புக்கு அடிப்படையானது. சதுரமான வடிவமும், தட்டையான கூரையும் இந்த வகையிலுள்ள கோயில்களின் அடிப்படையான அம்சங்களாகும். சாஞ்சி, திகாவா, ஏறான், நாச்னா, குடாரா, சார்வா, வில்ஸ்ட்கோ என்னுமிடங்களில் இவ்விதமான கோயில்கள் அமைந்திருந்தன. இவற்றில் முதல் மூன்று தலங்களிலுமுள்ள கோயில் மட்டுமே ஓரளவு பேணிப் பாதுகாக்கப் பெற்றுள்ளன. ஏனையவற்றின் கட்டடங்கள் எல்லாம் அழிந்துவிட்டன.
சாஞ்சியிலுள்ள பதினேழாவது கோயில் முதலாவது வகைக்குரிய கட்டடங்களின் அம்சங்களைச் சிறப்பாகப் பிரதிபலிக்கின்றது. சாஞ்சிக் கோயில் சதுர வடிவிலமைந்த சிறிய அமைப்பாகும். அதன் பின்பு சற்று விசாலங் குறைந்த மண்டபமொன்று அமைந்துள்ளது. மண்டபத்திலே ஆறு தூண்கள் அமைந்துள்ளன. தட்டையான கூரையினை இவை தாங்கி நிற்கின்றன. தூண் ஒவ்வொன்றிலும் ஆறு அம்சங்கள் உள்ளன. அடிப்பகுதியானது சதுரமானது. அதற்கு மேலமைந்த பகுதி சடகோணமானது. அதன் மேலுள்ளது எண்கோண அமைப்பினைக் கொண்டது. அதற்கு மேல் குமிழ் வடிவில் அழகிய தோற்றமுடைய உருவம் காணப்படுகின்றது. அதன் மேலே சதுர வடிவமான பீடமும் பீடத்தின் மேலே கணதியான பருத்த பலகையும் அமைந்துள்ளன. பலகையின் மேல் சிற்ப வடிவங்கள் நுட்பமான முறையில் அமைக்கப்பட்டு உள்ளன. போதிகைகளில் சிங்கத்தின் மேல் ஆடவன் சவாரி செய்வது போல் புடைப்புச் சிற்பங்கள் உள்ளன. இத்தகைய கோயில்களுக்கு உதாரணமாக போபாசின் அருகிலிருக்கும் உதயகிரியில் மலையைக் குடைந்து அமைக்கப்பட்ட கர்ப்பக் கிரகங்களையும் முன் மண்டபங் களையுமுடைய கோயில்களைக் குறிப்பிடலாம்.
காஞ்சி திகாவா, ஏரான் என்னுமிடங்களிலுள்ள கோயில்களைப் பொறுத்தவரையில் அவற்றின் காலவரை குறித்து அறிஞர்கள் சில உறுதியான கருத்துக்களைக் கூறியுள்ளனர். கட்டட அமைப்பிலும் தூண்களின் அமைப்பிலும் காணப்படுகின்ற படிமுறையான வளர்ச்சியை இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 35 Sசோதிலிங்கம்

Page 26
ஆதாரமாகக்கொண்டு காலநிருணயம் செய்ய முயன்றுள்ளனர். சாஞ்சியிலுள்ள கோயில் ஏனையவற்றைக் காட்டிலும் ஆடம்பரமற்றதாகவும் அலங்கார வேலைப்பாடுகளற்றதாகவும் அமைந்திருப்பதால் காலத்தால் முந்திய குப்தர்காலக் கோயில்களுக்கு உதாரணமாகக் கொள்ளப்படுகின்றது. ஐரானிலுள்ள விஷ்ணு கோயிலானது இதனைக் காட்டிலும் சற்று வளர்ச்சி பொருந்திய அம்சங்களுடன் காணப்படுகின்றது. எனவே அதனை ஐந்தாம் நூற்றாண்டுக்குரிய கோயிலாகக் கொள்ளலாம்.
சிறு சிகரங்களைக் கொண்ட கோயில் எனும் நிலையில் நாச்னா குட்டார என்னும் ஊரிலுள்ள பார்வதி கோயில், பூமராவில் உள்ள சிவன் கோயில், பிஜாப்பூர் மாவட்டத்திலுள்ள ஜகோள் என்னுமிடத்தில் அமைந்துள்ள லத்கான் கோயில், துர்க்கா கோயில், கோன்ட்குடி, மேகுடி ஆகிய இடங்களிலுள்ள கோயில்கள் இத்தகைய அமைப்பு உடையனவாகும். லத்கான், துர்க்கா, உச்சிமல்லிக்குடி, மேகுடி ஆகிய கோயில்கள் குப்தர் காலத்துக்குரியனவாயினும் முற்காலச் சாளுக்கியர்களால் கட்டப்பட்டவை. பூமாராவில் உள்ள சிவன் கோயில் செங்கற்களாலானது. ஏனையவை கருங்கற்களால் கட்டப்பட்டவை. நாச்னா, குட்டார பார்வதி கோயில், லர்க்கான, மேகுடி கோயில் என்பவற்றில் கட்டடத்தின் மேல் கோஷ்டம் போன்ற ஓர் அமைப்புக் காணப்படுகின்றது. பூமார சிவன் கோயிலிலும் ஜகோள் துர்க்கா கோயிலிலும் உள்ள சிகரங்கள் போகப்போகக் குறுகிக் காணப்படுகின்றன. சிகரங்களின் நாலு மூலைகளிலும் ஆமலகம் (நெல்லிக்காய்) போன்ற வேலைப்பாடுகள் உள்ளன. இவை கலையழகுடனும் கூடிய பிரகாரத்தையும் படிகளையும் கொண்டு இருக்கின்றது. இக்கோயிலில்தான் கங்கை, யமுனை ஆகிய நதித் தெய்வங்கள் வாயிலில் அழகாகச் செதுக்கப்பட்டுள்ளன. இக்கோயில் அமைப்பு மிகவும் அற்புதமானது. பெளத்ததூபி ஒன்றை மாதிரியாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்துக்கோயில் இதுவாகும். இங்கே கட்டடத்தை இணைக்க இரும்புத் தீராந்திகள் பயன்படுத்தப்பட்டன. கட்டடத்தைச் சுற்றி வழி ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயில்கள் மூடப்பட்ட திருச்சுற்றாலையின் நடுவே அமைந்த சதுர வடிவான கோயில்களாகும். இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 36 Sசோதிலிங்கம்

ஆலயத்தினைச் சுற்றியுள்ள திருச்சுற்றாலை அடியார்கள் கோயிலை வலம்வந்து வழிபாடு செய்வதற்கென்று அமைக்கப்பட்டது. அது வேலைப்பாடமைந்த தூண்கள் பொருந்தியதாய் விளங்கியது. பிற்காலத்தில் இவ்வமைப்பு பரத கண்டத்திலும் பிற தேசங்களிலும் வெவ்வேறான கோலங்களில் விஸ்தாரமாகி பெருவளர்ச்சி அடைந்தது. பொதுவாக திருச்சுற்றாலையின் சுவர்கள் துவாரங்கள் பொருந்திய வேலைப்பாடு கூடிய கற்பலகைகளைக் கொண்டிருந்தன. வெளிச்சத்துக்காக இவ்வாறு அமைக்கப்பட்ட கற்கள் மூன்று பக்கங்களிலுமுள்ள சுவர்களின் நடுப்பகுதியிலே பொருத்தப்பட்டிருந்தன. நாச்னாகுட்டார கோயிலிலே கர்ப்பக்கிரகத்தின் நீளப்பாட்டுச் சுவர்களிரண்டிலும் சிறிய துவாரங்கள் அமைக்கப்பட்ட கற்பலகைகள் காணப்படுகின்றன. ஆலயங்களின் முன்புறத்தே பொதுவாக படிக்கட்டு அமைந்திருக்கும். அதற்கு நேரே திருச்சுற்றாலைக்கும் கர்ப்பக்கிரகத்துக்கும் போகும் வாயில்கள் நேராக அமைந்திருக்கும். இவ்வகைக்குரிய கோயில்கள் சிலவற்றிலே கர்ப்பக்கிரகத்திற்கு மேலாக சிகரம் போன்ற மாடம் அமைக்கப்பட்டிருந்தது.
பூமாராவிலுள்ள கோயிலிலே வேறொரு மாற்றம் ஏற்படுத்தப்பட்டது. முகப்பு வாயிலின் இருபக்கங்களிலும் ஒவ்வொரு தேவகோட்டம் அமைக்கப்பட்டது. இத்தகைய கோயிலமைப்பு நாலந்தாவிலே பெரு வளர்ச்சியடைந்தது. அங்குள்ள அழிபாடுகளை அகழ்ந்தெடுத்த பொழுது இவ்விதமான தேவகோட்டங்கள் பல ஆலயங்களிலே காணப்பட்டன. அதுமட்டுமன்றி நாலந்தாவிலே ஆலயத்தின் நான்கு மூலைகளிலும் தேவகோட்டங்கள் காணப்பட்டன. இத்தகைய கோயில்கள் சிற்ப சாஸ்திரங்களிலே பஞ்சாயதனக் கோயில் என்று குறிப்பிடப்படுகின்றன.
பஞ்சாயதனக் கோயிலமைப்பானது மத்திய காலத்தில் வளர்ச்சி பெற்ற இந்துக் கோயில்களின் பிரதான அம்சமாக விளங்கியது. நாச்னா குட்டாரவிலுள்ள பார்வதிகோயில் அலங்காரமற்ற தோற்றமும் எளிய வடிவமும் கொண்டது. எனவே அது குப்தர் காலத்து மிகப் பழங் கோயில்களுள் ஒன்றாகக் கொள்ளத்தக்கது. அதனுடைய முன் மண்டபத்தில் அமைந்துள்ள சிற்பங்கள் குடைவரைக் கோயில்களில் உள்ளவற்றைப் போன்றவை. சுவர்களின் புறத்தோற்றத்தில் குப்தர் காலத்தின் இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 37 Sசோதிலிங்கம்

Page 27
ஆரம்ப கட்டடத்துக்குரிய சிற்பவேலைப்பாடுகள் இடம்பெற்றுள்ளன. முற்றிலும் அழிந்த நிலையிலே காணப்படுகின்ற பூமாரா சிவாலயத்தின் சுவர்களின் கோட்டங்களிலே கணங்கள், கீர்த்தி முகங்கள், தேவபடிமங்கள் என்பன வனப்பு மிக்கனவாய் வடிக்கப்பெற்றன. சிற்ப வேலைப்பாடுகளும் தூண்கள் வாயிற் கட்டடங்களினது அமைப்புக்களும் ஆறாம் நூற்றாண்டுக்குரியனவாகக் காணப்படுகின்றன.
இதே காலத்தில் உருவாக்கப்பட்ட தியோகார் எனும் இடத்தில் உள்ள தசாவதாரக் கோயில் அளவிலே பெரியதாகவும், சதுர வடிவமான திருச்சுற்றலையின் நடுவிலமைந்ததாகவும் காணப்பட்டது. திருச் சுற்றலையின் நான்கு புறங்களிலும் வாயில்கள் அமைந்திருந்தன. ஆலயம் உயர்பீடத்தில் அமைந்திருந்தது. பீடத்தை அடைவதற்கு வாயில்களின் முன்பாக படிக்கட்டுக்கள் இருந்தன. இக்கோயிலின் இறையகத்தின் நான்கு பக்கங்களிலும் கட்டடங்கள் அமைந்திருந்தமை அதற்குரிய மற்றுமோர் சிறப்பம்சமாகும். நாச்னாகுட்டாரவிலுள்ள மகாதேவர் கோயில், படரியிலுள்ள சிவன் கோயில், பிதர்கோளிலுள்ள செங்கல்லினால் அமைந்த கோயில், புத்தகாயாவிலுள்ள மஹாபோதிக் கோயில், ஜகோவிலுள்ள உச்சிமல்லிக்குடி கோயில் என்பன மேற்படி சிகரங்கள் பொருந்திய அமைப்புடைய கட்டடங்களாக விளங்கின.
தசாவதாரக் கோயிலானது அழகிய 40 அடி உயரமுடைய சிகரத்தைக் கொண்ட பிரமாண்டமான விசாலமான பீடமொன்றிலே கட்டப் பட்டிருந்தது. அதனுடைய நான்குபுறங்களிலும் வாசல்கள் இருந்தன. படிக்கட்டுக்கள் மூலமாக நாற்புற வாயில்களையும் அடையக்கூடியதாக இருந்தது. மிகவுயரமாக அமைந்த தளத்திலே சிற்பங்கள் பொருந்திய கோட்டங்கள் அமைந்திருந்தன. இறையகத்தின் சுவர்களின் வெளியே அரைத் தூண்களின் நடுவில் கோட்டங்கள் சிற்பங்களோடு உருவாக்கப் பட்டிருந்தன. ஒரு பக்கத்தில் விசாலமான திருவாசல் அமைந்திருந்தது. இறையகத்தில் மேலே கல்லினால் அமைந்த சிகரம் காணப்படுகின்றது. சிகரம் பல்தள அமைப்பாகும். மேலுள்ள தளம் ஒவ்வொன்றும் அவற்றின் கீழுள்ளவற்றைக் காட்டிலும் அளவிற் சிறியனவாகும். அதனால் சிகரம் கூம்பிய கோலத்துடன் காட்சியளித்தது. சிகரத்தின் மேற்புறம் காலப் போக்கில் சிதைந்துவிட்டது. இந்துநாகரிகத்தில்துணர்கலைகள் 38 Sசோதிலிங்கம்

கான்பூர் மாவட்டத்திலுள்ள பித்தாக்கோன் கோயில் செங்கல்லால் ஆனது. இதன் கூரை பிரமிட் வடிவத்தையொத்தது. இது குப்தர் காலப் பொறியியல் நுட்பத்தை விளக்கி நிற்கின்றது. சுவர்கள் சுடுமட் சிலைகளைக் கொண்டுள்ளன. இக்கோயில் கர்ப்பக்கிரகம், அந்தராளம், அர்த்தமண்டபம் ஆகிய அமைப்புக்களை உடையது. செசார்லாவில் அமைக்கப்பட்ட கபோதீஸ்வரர் ஆலயம் மிகப் பழைமை வாய்ந்த இந்துக் கோயிலாகும். இதனுடைய அமைப்பும் அரைவட்ட வடிவமான பெளத்த சேத்தியத்தை ஒத்துள்ளது.
புத்தசமயக் கோயில்களுள் ராஜகிரியில் உள்ள தூபியும் சாரணாத்தில் உள்ள தூபியும் மிகவும் சிறந்தவை. இவற்றுள் சாரணாத்தில் உள்ள தூபி 121 அடி உயரத்தைக் கொண்டது. ஏழு மாடங்களையுடையது. இது காந்தாரத்தில் உள்ள தூபிகளிலிருந்தும் இந்துக் கோயில்களின் சிகரங்களிலிருந்தும் இந்த அமைப்பைப் பெற்றுக்கொண்டது. இத் தூபியின் நாற்புறமும் முக்கியமான இடங்களில் புத்தரின் வடிவங்களை வைக்கும் மாடக்குழிகள் காணப்படுகின்றன. இவை இக்கால கட்டடக் கலைத்திறனை எடுத்துக்காட்ட ஏற்புடை சாதனமாகின்றன.
குப்தர் காலத்தில் அமைந்த இந்துக் கோயில்களை முன்மாதிரியாகக் கொண்டு பெளத்த, சமணக் கோயில்களும் உருவாக்கப்பட்டன. எல்லாச் சமயத்தவரும் ஒரு பொதுவான ஒரு கட்டடக்கலை மரபைப் பின்பற்றினர். புத்தகாயாவிலுள்ள மகாபோதி ஆலயம் அதற்குச் சிறந்த எடுத்துக் காட்டாகும். இது காலாகாலம் புனரமைக்கப்பட்டதால் அதன் தோற்றத்தை அடிப்படையாகக் கொண்டு குப்தர் காலத்திலே அது எவ்வாறு காட்சியளித்தது என்று வர்ணிப்பது சிரமமாகும். ஆயினும் அது சிகர அமைப்பிலே உருவாக்கப்பட்டது. என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை.
VI. சங்க இலக்கியங்களில் கட்டடக்கலை.
தமிழ் இலக்கிய வரலாற்றுப் பரப்பைப் பொறுத்தவரை ஆரம்ப காலம் சங்ககாலமாக மிளிர்ந்த நிலையில் இக்காலத்தில் எழுந்த இலக்கியங்கள் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு போன்றவற்றிலே கட்டடக் இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 39 Sசோதிலிங்கம்

Page 28
கலையின் சாயல்கள் பலவாறாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. அவ் வகையில் கட்டடக்கலை மரபுகளின் தொடர்ச்சி புதிய பாணிகள் அறிமுகம் பரிணாம வளர்ச்சி என்பன தொடர்ச்சியாக அவதானிக்கக்கூடிய அம்சங்கள் கட்டடக்கலை தமிழ்நாட்டில் திடீரென ஏற்படுத்தப்பட்ட ஒன்று அன்று. கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்தில் அழியாப் பொருட்கள் கொண்டு நிரந்தரமான பெருங் கட்டடங்களை அமைக்கும் கலை தமிழ்நாட்டில் அதிகம் வளர்ச்சி பெற்றிருக்கவில்லை. இதுவரை தமிழகத்தில் கிடைத்த கிறிஸ்துவுக்கு முற்பட்ட கால கட்டடங்கள் பெளத்த சமண துறவிகளால் உறைவிடங்களாகப் பாவிக்கப்பட்ட குகைளாகும். இக்கட்டடங்களுக்கு செங்கல், மரம் முதலியவற்றால் சுவர்கள், தூண்கள் அமைக்கப்பட்டன. கியி 2 ஆம் நூற்றாண்டளவில் எழுதப்பட்ட பட்டினப்பாலை என்ற நூலில் காவிரிப்பூம்பட்டிணத்தின் சில கட்டட வர்ணனைகள் கூறப்பட்டுள்ளன. சங்ககால மக்கள் கோயில்களையும் அரச மாளிகைகளையும் மண்டபங் களையும் அமைத்தனர். சிற்பநூல் வல்லுனர்கள் நாழிகை பர்த்து நுண்ணிதிற் கயிறிட்டு அவ்வத் திசைக்குரிய
தெய்வங்களை வணங்கிக் கட்டடங்களை அமைத்தனர்.
அக்காலக் கட்டடங்கள் சுட்ட செங்கற்களால் கட்டப்பட்டன என்பதனை சுடுமணோங்கிய நெடுநகர் எனும் பெரும்பாணாற்றுப்படை வரி மூலம் அறியமுடிகின்றது. அடுக்குவீடுகளையும் நிலா முற்றங் களையும் கூட இவர்கள் அமைத்தனர். இவை உலோகத் தகட்டினாலும் சாந்தினாலும் வேயப்பட்டன. கோபுரங்களையுடைய வாயில்களையும் இரும்புக் கதவுகளையும் அக்காலச் சிற்பிகள் திறனாக அமைத்துக் கொண்டனர் என பேராசிரியர் வித்தியானந்தன் எடுத்தியம்பியுள்ளார். தொடக்க காலத்தில் சந்தடி நிறைந்த, அமைதி நிறைந்த இயற்கை நிலையங் களிலேதான் கடவுள் வழிபாடு நிகழ்ந்துள்ளது. “காடும் காவும் கவின்பெறு துருத்தியும் ஆறும் குளமும் வேறு பல வைப்பும் சதுக்கமும் சந்தியும் புதுப்பூங்கடம்பும் மன்றமும் பொதியிலும் கந்துடை நிலையிலும்’ என்ற திருமுருகாற்றுப்படை அடிகளும் “ஆலயமும் கடம்பும் நல்யாற்று நடுவும் கால் வழுக்கறு நிலைக்கன்றமும் பிறவும்” எனும் பரிபாடல் அடிகளும் இயற்கை வனப்புள்ள இடங்களே ஆரம்பத்தில் இறை இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 40 Sசோதிலிங்கம்

தலங்களாக இருந்தன என்பதனை உணர்த்துகின்றது. காலப்போக்கில் ஆலயங்கள் மக்கள் அதிகமாக வாழ்ந்த பிரதேசங்களில் அமைக்கப் படலாயின. இதன்பேறாக பூம்புகள், காஞ்சி, மதுரை போன்ற மாநகரங்களில் மாளிகையும் மாடமும் உயர்ந்தோங்கி காட்சியளித்தன. இத்தகைய மாடங்களை “விண்பொர நிலந்தவேயா மாடம்”, “மழைதோயுமுயர் மாடம்”, “முகில்தோய் மாடம்”, “மாடமோங்கிய மல்லல் முதுர்”, “மழையென மருளும் மகிழ்செய் மாடம்” என சங்க நூல்கள் வர்ணித்துச் செல்கின்றன.
VII, காவிய நால்களில் கட்டடக்கலை.
பிற்பட்டகாலத்து சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற இலக்கியங்களில் கட்டடக்கலை பற்றிய வர்ணனைகள் ஆங்காங்கே கூறப்பட்டுள்ளன. இக்கட்டடங்களின் அமைப்புப் பாணி பற்றியும் இந் நூல்களில் மூலம் தெளிவாகத் தெரிந்துகொள்ள முடியவில்லை. அவை பற்றிய புதைபொருட் சான்றுகளும் இதுவரை கிடைக்கவில்லை. இக் கட்டடங்கள் செங்கல், மரம் முதலியவற்றால் கட்டப்பட்டிருக்கலாம். இவையும் சிவனுக்கும், முருகனுக்கும், திருமாலுக்கும், பலராமனுக்கும், இன்னபிற கடவுளர்க்கும் ஆக எழுப்பப்பட்டவை என்பது எடுத்துக்
காட்டப்படுமிடத்து,
“பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும் அறுமுகச் செல்வேள் அணிதிகழ் கோயிலும் வால்வளை மேனி வாலியோன் கோயிலும் நீலமேனி நெடியோன் கோயிலும் மாலை வெண்குடை மன்னவன் கோயிலும்”
இருந்தன என்று சிலப்பதிகாரத்திலிருந்து அறிய முடிகின்றது. மேலும், “காடமர் செல்வி கழிபெருங் கோட்டமும் குறியவும் நெடியவும் குன்று கண்டன்ன சுடுமண் ணோங்கிய நெடுநிலைக் கோட்டமும்”
என்ற மணிமேகலை அடிகளும் இக்கருத்துத்தலுவூடுதி இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் లా Sசோதிலிங்கம்

Page 29
இக்கோயில்கள் செங்கல்லால் அமைந்தவை என்றும் தெரியவருகின்றது. ஆனால் துரதிஷ்டவசமாக இக்கட்டடங்களின் அழிபாடுகள் எதுவும் தமிழ்நாட்டிலே இதுவரை அகழ்ந்தெடுக்கப்படாததால் இவற்றின் கட்டடப் பணிபற்றி அதிகம் கூறமுடியாதுள்ளது.
இந்தியக் கட்டடக்கலை மரபை மூன்று பெரும் பிரிவுகளில் அடக்கலாம். ஒன்று வடஇந்தியக் கலைமரபாகிய நாகரம், இரண்டாவது பெளத்தக் கலைமரபாகிய வேசரம், மூன்றாவது தென்னிந்தியக் கலைமரபாகிய திராவிடம் என்பனவாகும். நாகர அமைப்பில் உள்ள கட்டடங்களை வட இந்தியாவில் நருமதை ஆற்றுக்கு வடக்கே காணலாம். அடி முதல் முடிவரையில் நான்கு பட்டையாக (சதுரம்) இது அமைக்கப்படும். வேசரக் கட்டடங்கள் தரையமைப்பிலும், உடலமைப்பிலும், கட்டட விமான அமைப்பிலும், வட்ட வடிவமாக அல்லது நீண்ட அரைவட்ட வடிவமாக இருக்கும். இந்தக் கட்டட அமைப்புமுறை தமிழ்நாட்டுக் கோயில்கள் சிலவற்றிலும் இடம்பெற்றுள்ளது. திராவிடக் கட்டடங்கள் தென்னிந்தியாவில் வடக்கே கிருஷ்ணாநதி முதல் தெற்கே கன்னியாகுமரி வரை காணப்படுகின்றன. திராவிட அமைப்பில் பல உட்பிரிவுகள் உண்டு. இலங்கையிலுள்ள இந்துக் கோயில்களும் திராவிட அமைப்பிலேயே கட்டப்பட்டுள்ளன.
திராவிடக் கட்டடக் கலைமரபை ஆராயும்பொழுது அவற்றை ஐம்பெரும் காலப் பிரிவுக்குள் அடக்கலாம். ஐந்து பிரிவுகளும் ஐந்து ஆட்சியாளர்களது பெயர்களினால் அழைக்கப்படுகின்றன. அவையாவ்ன, (அ) பல்லவர் காலம் (கிபி 600 - 900) (ஆ) சோழர் காலம் (கிபி 900 - 1150) (இ) பாண்டியர் காலம் (கிபி 1100 - 1300) (F) விஜயநகர காலம் (கிபி 1350 - 1565) (உ) நாயக்கர் காலம் (கிபி 1600 தொடக்கம்)
இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 42 Sசோதிலிங்கம்

C பல்லவர்காலக் கட்டடக்கலை
தென்னிந்திய வரலாற்றிலும் குறிப்பாக தமிழக வரலாற்றிலும் பல்லவ மன்னர்களின் எழுச்சியும் வீழ்ச்சியும் மேன்மை பொருந்திய செய்திகளாகும் வட இந்தியாவில் குப்த மன்னர்கள் தங்களுடைய பேரரசை அமைத்த காலத்தில் பல்லவப் பேரரசு தமிழகத்தில் அமைவுற்றது. ஆயினும் குப்தப் பேரரசை விட இது நீண்ட காலத்திற்கு நிலைபெற்றிருந்தது. தக்கணத்திலிருந்து சாளுக்கியருடைய எதிர்ப்பையும் தெற்கிலிருந்து பாண்டியர்களுடைய பகைமையையும் சமாளித்து நுண்கலை மரபுகளை ஆதரித்து வந்தனர். சங்ககாலத்தில் தமிழ் அரச மரபினைச் சேராத பல்லவர்கள் தங்களுடைய ஆட்சியின் பிற்பகுதியில் தமிழ் மொழியையும் சமய வரலாற்று நிகழ்வுகளையும் வளம்படுத்தியதுடன் அரசியல் சாணக்கியத் திறத்தினால் அவற்றைத் தென்னிந்தியாவுடன் மட்டுமன்றி தென்கிழக்காசிய நாடுகளுக்கும் பரவச் செய்தனர்.
இவர்களது ஆட்சிக்காலத்தில் வளர்ச்சியுற்ற சமயங்களாகிய சைவமும் வைணவமும் அச்சமயங்களின் இருப்பிடமாகக் கருதப்படும் திருக்கோயில்களும் இன்றும் நிலைபெற்றுள்ளன. தமிழகம் உள்ளவரை பல்லவர்களுடைய பெயர் மறைந்துவிடாது பேரரசுகளும் நாகரிகங்களும் உயர் சமயங்களின் அடிப்படையில் தோன்றுகின்றன என்ற ஆர்னால்டு டாயிபியின் கூற்று பல்லவர் வரலாற்றினால் தெளிவுறுகின்றது. கிபி 3 ஆம் நூற்றாண்டு தொடங்கித் தமிழகத்தின் வடபகுதியை ஆண்டவர்கள் பல்லவர்கள். இவர்கள் தமிழ்நாட்டைக் கலைச்செல்வங்களின் கருவூலமாய் மாற்றி கலையுலகில் புதுமை படைத்த காலம் கிபி 8 - 7 ஆம் நூற்றாண்டுகளில் தொடங்கிற்று எனலாம். இலக்கியச் சான்றுகள் மட்டுமல்லாது கட்டடக்கலை வரலாற்றிலும் புதுமை படைத்தவர்கள். மனித இனத்தின் உயர் நாகரிகத்தையும் பண்பாட்டு வளர்ச்சியையும்
இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 43 Sசோதிலிங்கம்

Page 30
அடையாளங் காண முதற் சான்றாய் விளங்குவது கட்டடக்கலை என உணர்ந்து அவை சமயச் சார்புடைய சமயச் சார்பற்ற கட்டடங்கள் என்று பிரிக்கப்பட்டு கோயில் அரண்மனை, வீடுகள் எனப் பல்வேறு வகையில் விரிவுகள் இருப்பினும் அவையனைத்தைப் பற்றியும் வாஸ்து நூல்களெனும் மனை நூல்களில் கூறப்பட்டிருப்பதைக் கட்டடக்கலையின் தோற்றம் வளர்ச்சி ஆகியவற்றை எடுத்தியம்பி நிற்பன கோயில்களே. இக்கோயில்கள் இறைவனை வணங்கும் இடமாக மட்டுமல்லாது மனித வாழ்வியலோடு இணைந்த சமுதாயக் கூடங்களாகவும் விளங்கின. இவையே நுண்கலைகளை வளர்த்தெடுத்த கலைக்கூடங்களாகவும்
விளங்கின.
மிகச் சிறந்த கலைமரபை சிறப்பாகக் கட்டடக்கலை மரபை தமிழகத்தே விட்டுச்சென்ற பல்லவர் மரபில் சிம்மவர்மன், சிம்ம விஷ்ணுவுக்கும் பிறகு அரசாட்சி செய்த மகேந்திரவர்ம பல்லவன் ஆரம்பமாயும் அடிவேராயும் இருந்து கலைப்பணிக்கு வித்திட்டவன் என்பது வரலாற்றுண்மை. அவனது வழிவந்த பல்லவ மன்னர்கள் ஒவ்வொருவரும் அரும்பெரும் கலைப்பணி ஆற்றியுள்ளனர். இவற்றின் பேறாக இக்காலம் கட்டடக்கலை வரலாற்றில் தென்னிந்தியாவைப் பொறுத்து புதியதோர் மாற்றத்தை ஏற்படுத்திய காலம் என்றே கூற முடிகின்றது. காரணம் செங்கல், சுண்ணாம்பு, மரம் முதலிய அழியக்கூடிய பொருட்களால் கோயில்கள் அமைக்கும் முறைமை கைவிடப்பட்டுக் கருங்கல்லினால் கட்டடங்கள் அமைக்கும் முறைமை ஆரம்பமாயிற்று. இதற்குப் பல்லவ மன்னர்கள் வித்திட்டுக்கொண்ட நிலையில் தமது வலிமையினால் ஆட்சி அதிகாரத்தைப் பெருக்கி தனியரசமைத்துக் கொண்டு காஞ்சிபுரத்தை தலைநகராகவும் ஆக்கி ஆட்சிசெய்த இவர்கள் காஞ்சிப்பல்லவர் என அழைக்கப்பட்டவர்கள் திராவிடக் கட்டடக்கலை வளர்ச்சியின் ஆரம்பத்தினை எடுத்துக்காட்டும் பல அழகிய கோயில்களை சிற்பவேலைப்பாடுகளுடன் அமைத்தனர். இதனால் கோயில் நகரம் என்று அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில் பல ஈஸ்வரங்களும் விண்ணகரங்களும் காமாட்சி அம்மன் கோயில்களும் இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 44 Sசோதிலிங்கம்

உள்ளன. சிவகாஞ்சி என்றும் விஷ்ணுகாஞ்சி என்றும் இந்நகரின் மேற்கு கிழக்குப் பகுதிகள் அழைக்கப்படுகின்றன. இவர்கள் சைவத்தையும் வைணவத்தையும் ஆதரித்ததோடு சைவ வைணவக் கடவுளர்க்கு கோயில்களையும் தொண்டை மண்டலங்கள் எங்கும் கட்டினர். இதன் பேறாக செங்கல், மணி, சுண்ணாம்பு, மரம் ஆகிய அழிவுப் பொருட்களைக் கொண்டு கட்டப்பட்ட கோயில்களுக்குப் பதிலாக அழியாத நிலையான கருங்கற் கோயில்கள் கட்டப்பட்டன. இத்தகைய நிலை பற்றி பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மன் தான் அமைத்துக் கொண்ட மண்டகப்பட்டு கல்வெட்டுச் சான்றிலே,
“செங்கல், சுண்ணாம்பு, மரம், உலோகம் இவை இல்லாமல்
மும்மூர்த்திகளுக்கு கட்டுவிசித்திர சித்தன் அமைத்த கோயில் இது”
என்று பெருமைப்படப் பிரகடனம் செய்யப்பட்டதிலிருந்து கற் கோயில்களை அமைக்கும் இப்புதிய மரபு முதலாம் மகேந்திரவர்மன் காலத்தில்தான் ஆரம்பமானது என்றே நம்பவேண்டும். இவர்கள் காலத்து கட்டட அமைப்பு இரண்டு வகைப்பட்டதாக அமைந்தன. ஒன்று புராதனகாலம் முதலாகச் செங்கல்லினால் அமைந்த கட்டடங்களை உள்ளடக்கியது. மற்றையது கற்றளிகளை உள்ளடக்கியது. கோயில்களைப் பொறுத்தவரையில் செங்கல்லினால் அமைந்தவையே பெரும்பாலானவை. அண்மைக்காலம் வரை கல்லினாலும் செங்கல்லினாலும் கோயில்களை அமைக்கும் முறை பின்பற்றப்பட்டு வந்தது. இந்நிலையில் கோயில்களை கற்றளிகளாக அமைக்கும் முறையினைப் பல்லவ மன்னர்களே தமிழகத்தில் முதன் முதலாகத் தொடங்கினார்கள். காஞ்சிப் பல்லவர்களின் ஆட்சிக் காலத்து முற்பகுதியில் ஆந்திர தேசத்து வேங்கி இராச்சியம் அவர்களின் வசமாயிருந்தது. வேங்கி மூலமாக வடக்கிலுள்ள பண்பாட்டு மரபுகள் தொண்டை நாட்டைச் சென்றடைந்தன. தக்கணத்தில் உள்ளவற்றைப் போன்ற குகைக் கோயில்களைப் பல்லவர்கள் தமிழகத்திலே ஏழாம் நூற்றாண்டின் முற்பகுதியில் அமைத்தனர். பின்பு மலைகளைக் குடைந்து மாமல்லபுரம், சாளுவன் குப்பம் என்னும் இடங்களில் குடவரைக்
இந்துநாகரிகத்தில்துண்கலைகள் 45 Sசோதிலிங்கம்

Page 31
கோயில்களை அமைத்தனர். அதன்பின் வேறு பல கற்றளிகள் பல்லவ மன்னர்களால் அமைக்கப்பட்டன. ஆயினும் மகேந்திரவர்மன் காலத்திலும் குறைந்தது ஒரு நூற்றாண்டுக்கு முன்பே பாண்டிநாட்டில் கல்லால் கோயில் அமைக்கும் முறைமையொன்று ஆரம்பித்துவிட்டது என்பதற்கு மிக அண்மையில் கிடைக்கப்பட்ட ஆதாரமும் சான்று பகர்கின்றது.
மேலும் கிபி 7 ஆம் நூற்றாண்டிலிருந்து இப்புதிய கலையின் வளர்ச்சியைப் படிப்படியாக அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. முதலாம் மகேந்திரவர்மன் காலம் கோயில் கட்டடக்கலை வரலாற்றில் முதற் கட்டமாகக் கொண்டு சமீபகாலம் வரை பல்வேறு காலப்பகுதிகளாக ஆய்வாளர் பிரித்துள்ளனர். இவற்றுள் முதலாவதை பல்லவர் காலம் என்றும் இதனையே நான்கு உபபிரிவுகளாகப் பிரித்த நிலையில், (1) மகேந்திரவர்மன் காலம் (600 - 630) (2) மாமல்லன் / நரசிம்மன் காலம் (630 - 674) (3) இராஜசிம்மன் காலம் (680 - 730) (4) நந்திவர்மன் காலம் (730 - 850)
என வரலாற்றாசிரியர்கள் வகுத்துள்ளனர். இவையும் கிபி 7 - கிபி 9 ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்திலே அடங்கும் என்பதும் இங்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதே நேரம் இக்காலத்தில் மண்ணாலும் சுட்ட செங்கல்லாலும் எடுக்கப்பட்ட கோயில்கள் மண்டளிகள் எனவும், மலையிற் குடையப்பட்ட கோயில்கள் குடபோகம் எனவும், தனிப்பாறையில் குடையப்பட்ட கோயில்கள் மலைத்தளிகள் எனவும் கருங்கற்களை அடுக்கிக் கட்டப்பட்ட கோயில்கள் கற்றளிகள் எனவும் வழங்கப்படலாயின என பாலசுப்பிரமணியம் என்பவர் தமது பல்லவர் கலைப்பாணி என்னும் நூலில் குறிப்பிட்டுச் சென்றுள்ளார்.
மேலும் தென்னாட்டிற் குடவரைக் கட்டடக்கலைக்கும் கற் கட்டடக் கலைக்கும் பல்லவர்கள் பாலமாக அமைகின்றனர். தென்னிந்தியக் கலை வரலாற்றில் பல்லவர்களின் கட்டடக்கலையும் சிற்பக்கலையும்
இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 46 Sசோதிலிங்கம்

ஒப்புயர்வு பெற்று விளங்குகின்றன. அம்மரபு இருபெரும் பிரிவுகளுள் அடங்கும் ஒன்று முழுக்க முழுக்க குடவரைக் கோயில்களை அமைத்த காலப்பகுதி. மற்றையது கற்பாறையில் இரதக் கோயில்களையும் தனிக் கற்கோயில்களையும் செதுக்கி அமைத்த காலப்பகுதி. மேலே குறிப்பிட்ட ஒவ்வொரு பகுதியையும் மேலும் இரண்டு காலப்பகுதிகளாகப் பிரித்து நோக்கலாம். (1) மகேந்திரவர்மன் பாணி - கிபி 610 - கிபி 640.
இக்காலம் தூண்களோடு கூடிய மண்டபங்கள் மட்டும் கட்டப்
பெற்றன.
(2) மாமல்லன் பாணி - கிபி 840 - கிபி 690
இக்காலப் பிரிவில் மண்டபங்கள், இரதங்கள் என்பன ஒற்றக்கல்லால் கட்டப்பட்டன.
(3) இராசசிம்மன் பாணி - கிபி 690 - கிபி 800
இக்காலப் பிரிவில் கற்றளிகள் அமைக்கப்பட்டன.
(4) நந்திவர்மன் பாணி - கிபி 800 - கிபி 900
கற்கோயில்கள் பல எழுப்பப்பட்டன.
(இவற்றிலே முதல் இரு பிரிவும் முழுவதும் கல்லிலே செதுக்கப் பட்டவை. ஏனைய இருபிவும் கற்களினால் முழுவதும் கட்டப்பட்டவை)
1. மகேந்திரவர்மன் பாணி 600 - 630.
பல்லவர் அமைத்த கோயில்களில் தொன்மையானவை மகேந்திர வர்மனால் கட்டப்பட்டனவாகும். இவன் நாட்டின் பல இடங்களிலும் மலைகளை குடைவித்து கோயில்களை உருவாக்கினான். காரணம் அப்பர் பெருமானால் சமண சமயத்தில் இருந்து சைவ சமயத்திற்கு மாற்றப்பட்ட அரசன் சைவத்தின் பெருமை உணர்ந்து அச்சமயவரலாறு என்றுமே நிலைத்து நிற்பதற்கேற்ற சாதனம் கோயிலென உணர்ந்து அவற்றை உருவாக்கிய நிலையில் அதுபற்றி மண்டகப்பட்டு என்னும் இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 47 Sசோதிலிங்கம்

Page 32
ஊரில் உள்ள கல்வெட்டு ஒன்று சான்று பகர்ந்த நிலையில் “இக் கோயில் சுதை, மண், உலோகம், மரம் என்பனவின்றி பிரம, ஈஸ்வர விஸ்ணுக்களுக்கு (மும்மூர்த்திகளுக்கு) விஷ்ணுசித்தன் என்னும் மன்னனால் நிறுவப்பட்டது” என்பதாகக் காணப்பட்ட தன்மையில் பல்லவர் காலத்துக்கு முன் கோயிலை அமைக்க மண் சுதை, மரம் என்பனவே பயன்படுத்தப்பட்டது எனத் தெரிகின்றது. மகேந்திரவர்மன் காலத்தில் பாறைகளைக் குடைந்து குகைக் கோயில் கட்டும் முறைமையை ஆரம்பித்து வைத்த பெருமை கொண்டவனாக இருக்க இவனது பரம்பரையினர் அதனை விரிவுபடுத்திச் சென்றனர். பாறைச் சரிவில் அமைக்கப்பட்ட கோயில்கள் எல்லாம் நடுவே கர்ப்பக்கிரகமும் அதன் முன் ஒரு மண்டபமும் இருக்கும். மண்டபத்தின் தூண்கள் நடுவில் எண்பட்டைகள் அமைக்கப்பட்ட சதுரவடிவினதாகவும் அலங்காரமற்ற தடித்த தூண்களாகவும் வெட்டப்பட்டுள்ளன. 7 அடி உயரமும் 2 அடி அகலமும் உடையன. இத்தகைய தன்மை கொண்டு மோகல் ராஜபுரத்தில் வெட்டப்பட்ட கோயிலில் தூணின் தலைப்பகுதியில் கூடு எனப்படும் சைத்திரிய மண்டபங்களின் நுழைவாயிலில் உள்ளன. இவை அரைவட்ட வடிவமான அலங்காரம் கொண்டு காணப்பட்ட நிலையில் இவன் காலத்தில் 14 கோயில்கள் அவ்வாறு இருந்தனவென பேர்ஸி பிறவுண் என்னும் அறிஞர் அடையாளம் கண்டுள்ளார். மேலும் மகேந்திரன் காலத்துத் தூண்கள் அலங்காரம் மிகக் குறைந்தவையாகக் காணப் பட்டாலும் தூண்களின் பகுதிகளை மூன்று பகுதியாக அவதானிக்க
முடிகின்றது. (i) தலைப்பாகம் (கபிடெல்) (i) நடுப்பாகம்
(i) அடிப்பாகம்
தலைப்பாகத்திலும் அடிப்பாகத்திலும் தடித்த கவர்ச்சி குறைந்த தாமரை இதழ்கள் வட்டவடிவில் காணப்படுகின்றது. நடுப்பாகம் எண்கோண அமைப்புடையதாகக் காணப்படுகின்றது. மகேந்திரன் காலத்தின் இறுதியில் தூண்களின் தலைப்பகுதியில் தடித்த அலை போன்ற அலங்காரமும் வெட்டப்பட்டது. இப்புதிய பாணியில் அறிமுகத்தை பல்லாவரம் என்ற இடத்துக் கோயிலில் காணமுடிகின்றது. இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 48 Sசோதிலிங்கம்

இக்காலத்துக் கோயில்கள் பாறைக்கோயிலின் அமைப்பிலே ஆரம்பித்து குகைக் கோயில் முறைமைகளாக்கப்பட்ட நிலையில் மகேந்திரவர்மன் குடைவித்த குகைக்கோயில்கள் மண்டகப்பட்டு, மாமண்டூர், பல்லாவரம், வல்லம், திருச்சி, சிங்கவரம், சீயமங்கலம், திருச்சிராப்பள்ளி, குடுமியாமலை, சித்தன்னவாசல் ஆகியனவாகக் காணப்பட்ட நிலையில் இவனால் கிபி 7 ஆம் நூற்றாண்டளவில் திருச்சிராப்பள்ளி மலையுச்சிப் பிள்ளையார் கோயிலுக்குச் செல்லும் வழியில் ஒரு குடைவரைக் கோயிலைக் கட்டினான். இது நான்கு தூண்கள் கொண்ட சிறிய ஆலயம். கருவறை வெறுமையாக உள்ளது. மலையடிவாரத்தின் தென்புறத்தே மற்றுமொரு குகைக்கோயிலுண்டு. மலையின் நடுவே நூற்றுக்கால் மண்டபம் ஒன்றும் அழகிய சிற்பங்களைக் கொண்ட மகேந்திரவர்மனால் நிர்மாணிக்கப்பட்ட ஒரு குடைவரைக் கோயிலும் இருக்கின்றன. மணிமண்டபம் ஒன்றும் உண்டு. அதன் மணியின் விட்டம் நான்கு அடி, எடை இரண்டரை தொன். இங்கு கோயில் கொண்டிருக்கும் முருகப்பெருமானை,
"திசைகள் போல் அலைமோதிய சிதள குடக காவிரி நீள் அலைசூடிய திருசிரா மலை மேலுறை வீர'
என அருணகிரிநாதர் புகழந்திருக்கின்றமை அதன் சிறப்பினை எடுத்துக்காட்ட ஆதாரமாகின்றன. அதேநேரம் ஆரம்ப காலத்தவை அவன் பரம்பரையினரால் சிறியரகக் கோயில்களாகவே கட்டப்பட்டன. காலப்போக்கில் அவை பெரிதாக்கப்பட்டன. இவன் அமைத்த கோயில்கள் நீண்ட சதுரமான மண்டபங்கள் போல் உள்ளன. இவற்றை மண்டபக் கோயில்கள் எனக் கூறலாம். இவற்றில் அதிகமான வேலைப்பாடுகள் இல்லை. மிகவும் எளிமையாகக் காணப்படுகின்றன. இவற்றின் பின்பக்கச் சுவரில் மூன்று அல்லது மூன்றுக்கு மேற்பட்ட கர்ப்பக்கிரகங்கள் உண்டு. கோயில் மண்டபத் தூண்களில் பொதிகை அமைப்பு, நாகபந்தம், பலகை அமைப்பு போன்ற பல படிமுறைகள் காணப்பட்டதுடன் மகரதோரணம் இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 49 Sசோதிலிங்கம்

Page 33
மீன்வடிவு என்பனவும் பொறிக்கப்பட்டன. கர்ப்பக்கிரக வாசலில் துவார பாலகர் அமைப்பு உருவாக்கப்பட்ட நிலையில் இத்தகைய தன்மை கொண்ட கோயில்கள் திருச்சி, பல்லவாரம், மாமண்டூர் மண்டகப்பட்டில் காணமுடிந்துற்ற அதேவேளை கோயில் சுவர்களில் புராணக்கதை மரபுகளைச் சித்தரிக்கும் சிற்ப முறைமைகளும் பொறிக்கப்பட்டிருந்தன.
மகேந்திரவர்மன் காலத்தில் அநேகமாக பாறைச் சரிவுகளில் கோயில்கள் உருவாக்கப்பட்ட நிலையில் தூண்கள், சுவர்கள், விக்கிரங்கள் அமைப்பதற்கென இடம் ஒதுக்கிப் பாறைகளை குடைந்து கட்டப்பட்டவை. தூண்கள் சதுரமானவை. அவற்றின் சராசரி உயரம் ஏழுமுழம். தூணில் பொதிகை சதுரக் கற்பலகையாலானது. அதன் கீழும் மேலுமுள்ள சதுரங்களிலே தாமரைமலர் செதுக்கப்பட்டிருக்கும் தூண் புறங்களிலே மகேந்திரவர்மனின் பட்டப்பெயர்கள் பொறிக்கப்பட்டு இருக்கும். சமணரின் முறைமையைப் பின்பற்றி ஒவ்வொரு குடைவரைக் கோயிலும் மூன்று அல்லது ஐந்து அறைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. நடு அறையிலும் பக்க அறையிலும் தெய்வ விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும். கருவறையின் இரு பக்கங்களிலும் துவரபாலகர் கையில் கோலேந்தி நிற்பர். கோயிற் சுவர்களில் புராணக் கதைகள் வனப்புடன் செதுக்கப்பட்டுக் காட்சிதரும். பெரும்பாலும் கோயில்களிலே வடமொழியிலும் தமிழ்மொழியிலும் கல்வெட்டுக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இவ்வறான பத்துக் குடைவரைக் கோயில்கள் மகேந்திரவர்மனின் பெயரால் நிலவுகின்றன. (1) பல்லாவரம் குகைக்கோயில். (2) தளவானூர் கோயில் (3) பல்லவபுரம் கோயில் (4) வல்லம் கோயில் (5) மாமண்டூர்க் கோயில் (6) மகேந்திரவாடிக் கோயில் (7) சீயமங்கலக் கோயில் (8) மண்டகப்பட்டுக் கோயில் (9) திருச்சிமலைக் கோயில் (10) நாமக்கல் மலைக் கோயில் இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 50 Sசோதிலிங்கம்

இவற்றைவிட மாமல்லபுரத்திலுள்ள தருமராசர் மண்டபமும் மகேந்திரவர்மன் கட்டியதே என்பர் இராசமாணிக்கனார். இவற்றிலே நல்ல வளர்ச்சியுற்ற கட்டட அமைதிகளை நாம் தளவானூர் சீயமங்களம் மற்றும் திருச்சிராப்பள்ளி குடைவரைகளில் காணலாம்.
தளவானுர்க் குடவரைவில் உள்ள தூண்களில் அழகிய தாமரைப் பதக்கங்கள் காட்டப்பட்டுள்ளதோடு தூண்களின் போதிகைகளிலே அழகிய மகரதோரண வேலைப்பாடுகளும் காணப்படுகின்றன. மேலும் தோள் பகுதி எனப்படும் பிரஸ்தாரத்தின் மூன்று உறுப்புக்களும் காட்டப்பட்டு உள்ளன. கபோதத்தில் அழகிய கீர்த்திமுகக் கூடுகளுக்கு நடுவே கந்தர்வர்களின் முகங்கள் காட்டப்பட்டுள்ளன. திருச்சிராப்பள்ளியிலுள்ள லலிதாங்குர பல்லவேசுவர கிருதம் எனும் குடவரையும், தளவானுர் குடவரைவும் சற்று மாறுபட்ட அமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளன. முகப்பு மண்டபம் உள்மண்டபம், கருவறை என நேர்நேராக அமையாது. முகப்பு மண்டபத்தையடுத்த நீண்ட உள்மண்டபத்தின் இடைப்புறம் சிறுமண்டபமும் அதன் பின் கருவறையும் அமையும் பாங்கினைத் தளவானுர்க் குடவரையில் காண்கின்றோம். சிற்பத்திற்கும் கட்டடக்கலைச் சிறப்பிற்கும் சான்றுகளாய்த் திகழ்கின்றன இக்குடவரைக் கோயில்கள்.
தொண்டை நாட்டிலுள்ள மற்ற அனைத்துக் குடைவரைகளினின்றும் வேறுபட்டுள்ளன. சோழநாட்டின் நடுநாயகமாக விளங்கும் திருச்சிராப்பள்ளிக் குடவரை மாறுபட்ட அலங்காரங்களுடன் காணப்படுகின்றது. அலங்கரிக்கப் பட்ட மகர தோரணங்கள், கீர்த்திமுகக் கூடுகள் கருவறையின் முன்புறம் உள்ள தூண்களுடன் கூடிய மண்டபம் இவையெல்லாம் மிகவும் வளர்ச்சியடைந்த நிலையில் காணப்படுவதால் இக்குடைவரை மகேந்திர வர்மனின் ஆட்சிக்காலத்தின் பிற்பகுதியில் குடைவிக்கப்பட்டிருக்கலாம் என்பர். சீயமங்கலம் அவனிபாகனன் குடைவரைக் கோயிலும் தனிச் சிறப்புடன் திகழ்கின்றது. இங்குள்ள தூண்களின் மேல் சதுரங்களில் சிற்பங்கள் காட்டப்பட்டும், அரைத்தூண்களில் கலசம், தாடி கும்பம், பத்மம், பலகை என்ற அனைத்து உறுப்புகளும் காட்டப்பட்டும் கட்டடக் கலையின் உயர்நிலையினை மகேந்திர வர்மனே காட்டிவிட்டான் என்பது போலவும் அமைந்துள்ளது. இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 51 S.C Irúath

Page 34
மேலும் உந்த வல்லியிலுள்ள அனந்தசயனன் கோயிலிலும், பைரவக் கொண்டாவெனும் இடத்திலுள்ள கோயிலும் மகேந்திரவர்மன் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டனவாகும். இவையும் மேலே குறிப்பிட்ட கோயில் அமைப்பையே கொண்டுள்ளன. எனினும் கலைப் பரிணாமத் தன்மை சிறிய வேறுபாடுகளையும் காட்டிநின்றன. அவ்வகையில் உந்தவல்லியிலுள்ள கோயில் பெளத்த விகாரையைப் போல கட்ட எடுத்த முயற்சியைக் காட்டுகின்றது. இது நான்கு அடுக்குகள் கொண்டது. ஒவ்வொரு அடுக்கிலும் தூண்கள் கொண்ட மண்டபங்கள் உள்ளன. முழுக் கட்டிடத்தின் உயரம் 50 அடியாகும். பைரவர்கொண்டா எனும் இடத்திலுள்ள தூண்களின் அமைப்பில்தான் தனிப்பல்லவ பாணியைக் காணமுடிகின்றது. தூணின் கீழ்ப்பகுதியில் ஒரு சிங்கமும் மேற்பகுதியில் ஒரு சிங்கமும் தூணுடன் சேர்த்து அமைக்கப்பட்டுள்ளன. இவை இக் காலத்தின் பின்னெழுந்த கட்டடங்களில் மேலும் சிறப்புடன் விளங்குகின்றது.
மேலும் இவன் கட்டிய கோயில்களில் மாமண்டுர், மகேந்திரவாடி, சிங்கவரம், நாமக்கல் என்னும் இடங்களில் குடையப்பட்டவை பெருமாள் கோயில்களாகும். சீயமங்கலம், பல்லவாரம், வல்லம், தளவானூர், திருக் கழுக்குன்றம், திருச்சிராப்பள்ளி என்னுமிடங்களில் குடையப்பட்டவை சிவன் கோயில்களாகும். இவற்றுடன் மண்டகப்பட்டில் மும்மூர்த்தி கோயிலும், சித்தண்ண வாசலில் சமணர் கோயிலும் குடைய்ப்பட்டன.
இக்கால கட்டடக்கலை பற்றிய வரலாற்றில் சுருக்கமாக அறியக் கூடியனவாக இருந்தமை, (1) உள்ளறையில் லிங்கம் வைத்த கோயில்கள் பல அந்த லிங்கங்கள்
உருண்டை வடிவின. பட்டை வடிவின அல்ல. (2) வாயிற் காவலர் நேர்ப்பார்வை உடையவர். அவர் கையையுயர்த்தி வணக்கம் தெரிவிப்பவராக அல்லது தடிமீது கைவைத்தவராக இருப்பர். (3) துண்கள் எல்லா இடங்களிலும் சதுரத் துண்களாகவே இருக்கின்றன. கீழும் மேலும் நான்கு முகங்களையும் இடையில் எட்டு முகங் களையும் உடையன. சதுரப் பகுதிகள் தாமரை மலர்களைக் கொண்டிருக்கும்.
இந்துநாகரிகத்தில் துண்கலைகள் 52 SC 1666th

(4) மாடங்களின் மேல் உள்ள தோரணங்கள் இரட்டைத் திருவாசி
அமைப்பினைக் கொண்டவை ஆகும்.
(5) பெரும்பாலும் தூண்களில் கல்வெட்டுக்கள் காணப்படும் அரசன்
பட்டப்பெயர்களும் பிற செய்திகளும் பொறிக்கப்பட்டிருந்தன.
II. நரசிம்மன் காலம் 630 - 674.
நரசிம்மன் பாணிக் கோயில்கள் மகேந்திரன் பாணியின் தொடர்ச்சியாக மண்டபங்கள், இரதங்கள் எனும் கோயில் வடிவங்கள் அறிமுகமாயின. தந்தையின் கோயிற் பணியைப் பின்பற்றியதோடு தனக்கென ஒரு பாணி வகுத்துத் தனிக்கற் கோயில்களைத் துறைமுகப்பட்டிணமாக மாமல்ல புரத்திலே சிறப்புற அமைத்தவன் நரசிம்மவர்மன் (மாமல்லபுரம், மகாவலி புரம் எனவும் அழைக்கப்படும் நரசிம்மவர்மனின் விருதுப்பெயர் மாமல்லன் அவன் பெயரால் அமைந்த பட்டிணமே மாமல்லபுரம்) இவன் ஒற்றைக் கல்லிலே இரத வடிவிலே செதுக்கிவித்து எழுப்பிய கோயில்கள் மாமல்ல புரத்திலே ஒரே வரிசையாய் அமைந்துள்ளன. இவை மண்டபங்களில் தர்மராஜ மண்டபம், கொடிக்கால் மண்டபம், மகிடாசுர மண்டபம், கிருஷ்ண மண்டபம், பஞ்சபாண்டவர் மண்டபம், வராக மண்டபம், ராமானுஜ மண்டபம், ஐந்து அறையுள்ள சிவன் மண்டபம் என்பவற்றுடன் இதுவரை முடிவுபெறாத இரண்டு மண்டபங்கள் அடங்கிய பத்து மண்டபங்கள் குறிப்பிடத்தக்கன. இவற்றுள் நான்கு முக்கியமானவை. ஆதிவராகக்குகை, மகிஷமர்த்தனி குகை, வராகக் குகை, மும்மூர்த்தி குகை என்பனவே அந்நான்குமாகும். அவற்றுள் வராகக் குகையும் ஆதிவராகக் குகையும் விஷ்ணுவுக்கும், மகிஷமர்த்தனி குகை சிவனுக்கும், மும்மூர்த்தி குகை முருகனுக்கும், திருமாலுக்கும், சிவனுக்குமுரியனவாக இருந்தது என நாகசாமி என்பவர் கருத்துக் கூறியுள்ளார்.
இவை பல வழிகளில் முற்பட்டகால பாணியின் தொடர்ச்சியாகக் காணப்பட்டாலும் கலையியல் ரீதியாக குறைந்த காலத்தில் நிறைந்த மாற்றங்களை அடைந்தவை எனலாம். ஆனால் பொதுப் பண்பிலும் இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 53 Sசோதிலிங்கம்

Page 35
கர்ப்பக்கிரகம், முன்மண்டபம் அமைந்துள்ள விகிதாசாரத்திலும் முற்காலப் பண்பின் தொடர்ச்சியாகவே காணப்படுகின்றது. இவற்றில் ஒன்றாவது பெரிய கட்டடமாக அமையவில்லை. ஆனால் முன் மண்டபத்தில் சில அலங்காரங்கள் கூடியளவு இடம்பெறுகின்றன. சையித்திய சாளரங்கள் மேலும் கவர்ச்சியாயிருக்கின்றன. தூண்கள் சிறிது மெல்லிய வடிவம் பெற்றுள்ளன. தலைப்பாகத்தில் அலை போன்ற அலங்காரம் மேலும் மெல்லியதாக வெட்டப்பட்டுள்ளன. நடுப்பகுதியில் பல்கோண அமைப்பும் துல்லியமாகத் தெரியும் வகையில் வெட்டப்பட்டுள்ளது. நரசிம்மன் பாணியில் புதிதாக அறிமுகப்படுத்தப்படும் கோயில் வடிவம் ரதங்களாகும். தனிப்பாறையில் குடைந்தெடுக்கப்பட்ட கோயில்களை ரதங்கள் அல்லது ஏழு பகோடாக்கள் என அழைப்பர். இத்தகைய ரதங்களில் முற்பட்ட மரத் தச்சுவேலைகளின் பிரதி செய்யப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. எந்த ஒரு இரதத்தின் உட்புற வேலையும் முழுமையாகப் பூர்த்திசெய்யப்படவில்லை. இங்கு எல்லாமாக எட்டு இரதங்கள் உள்ளன. தெற்குப் பகுதியிலுள்ளவை திரெளபதி, அர்ச்சுனன், வீமன், தருமராசன், சகாதேவன் பெயர்களாலும் வடக்கிலும், வடமேற்கிலும் உள்ளவை கணேசர், பிடரி, வளையான், குட்டை ஆகியோரின் பெயராலும் அழைக்கப் படுகின்றன. இங்கு முதலில் இருப்பது திரெளபதை இரதம் 14 அடி நீளம் கொண்டிருப்பதாக இரதத்தின் விமானம் சதுர வீட்டின் குடிசையின் வடிவத்திலே ஒரே பாறையில் செதுக்கி உருவாக்கப்பட்டிருக்கிறது. வாயிலின் மேற்புறம் எவ்வித வேலைப்பாடும் இல்லாத மகரதோரண அமைப்பும் வாயிற்காப்போராக பெண்கள் இருவர் இருக்க, கருவறையில் எருமைத் தலைமேல் நின்ற நிலையில் காணப்படும் துர்க்கை நான்கு கரங்களுடன் காட்சி தருகின்றாள். இதற்கு அடுத்தது அருச்சுனனின் இரதம் 16 அடி நீளத்தில் உருவாகி இருக்கிறது. சுவர்களில் சிவன், விஷ்ணு, இந்திரன் ஆகியோரின் உருவங்கள் காணப் படுகின்றன. இது ஒரு வீடு போன்று இருப்பதால் முன்னாட்களில் இவ்வழியே பயணம் சென்றவர்கள் தங்கி இளைப்பாறப் பயன்படுத்தியதினால் இக்கோயில் சேதமடைந்து இருக்கின்றது. பீடத்தின் அடியில் சிங்கம், யானை உருவங்கள் அடுத்தடுத்து அமைந்து காணப்படுகின்றன.
இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 54 SC 1666b

பீமனின் ரதம் எனப்படுகிறது அடுத்து இருப்பது. 48 அடி நீளம் கொண்ட மாபெரும் சிற்பம் வளைவான கூரைகொண்டு நிற்கிறது. மேற்புறம் செதுக்கப்பட்டும் கீழ்ப்புறம் செதுக்கட் ம் காணப்படுகின்றது. இந்தக் கோயிலைச் செதுக்கத் தொடங்கிய சிற்பி பாதியிலே வேலையை விட்டுவிட்டுச் சென்றுவிட்டர் போல் தோன்றுகின்றது. தர்மராசனின் ரதம் 29 அடி நீளம் 35 அடி உயரமும் கொண்ட கோயில் விமானத்தில் பல சிற்பங்கள் இருக்கின்றன.
இந்த நான்கு கோயில்களில் எதிரே இருப்பது சகாதேவன் இரதம் என்றழைக்கப்படும் 18 அடி நீளமுள்ள கற்கோயில். பெளத்த சைத்திரியத்தைப் போலக் காணப்படுகின்றது. கோயிலின் பின்புறம் அரைவட்ட வடிவிலிருக்கின்றது. இந்த ஐந்து கோயில்களுக்குமிடையே யானை, சிங்கம், எருது போன்ற மிருகங்களின் ஒரே கல்லாலான உருவங்கள் காணப்படுகின்றன.
இவற்றைக் கடந்து சற்றுத் தொலைவில் ஒரு குன்றும் அதன் சரிவில் இருக்கும் பாறைகளில் குகைக்கோயில்களும் நிறைந்திருக்கின்றன. மலைப்பாறைகளைக் குடைந்து உருவாக்கப்பட்ட கற்கோயில்களில் இருக்கும் கவர்ச்சிற்பங்கள் மிகவும் அழகானவை. எல்லோரா போன்ற குடைவரைக் கோயில்களில் காணப்படும் சிற்பங்களை விட இவை கலைநயம் மிக்கவை என்று கூறுவார்கள். இந்த குடைவரைக் கோயில்களில் குறிப்பிடத்தக்கவை சில
திரிமூர்த்தி கோயில் எனப்படும் குகைக் கோயில் 28 அடி அகலம் கொண்டது. இங்கு முருகன், விஷ்ணு, சிவன் ஆகிய மூவருக்கும் கருவறைகள் செதுக்கப்பட்டிருக்கின்றன. திருமாலின் காலடியில் அமர்ந்திருக்கும் இருவரின் தலைமயிர்கூட செதுக்கப்பட்டு இருக்கின்றது. இக்கோயில்கள் சிறிய சதுரமான மண்டபத்தையும் கீழே தூண்கள் கொண்ட விறாந்தையையும் மேலே கூர்நுதிக் கோபுரம் போன்ற சிகரத்தையும் உடையது. பீம, சகாதேவ, கணேச இரதங்களின் இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 55 Sசோதிலிங்கம்

Page 36
அமைப்பு சைத்திரிய பாணியில் உள்ளது. செவ்வக வடிவமுள்ள இவை இரண்டும் இரண்டிற்கு மேற்பட்ட அடுக்குகளையும் நுனியின் முக்கோண வடிவமுடைய பீப்பா போன்ற கூரைகளையுமுடையது. சகாதேவ இரதம் வில்வளைவு போன்றது. பிற்காலப் பல்லவர் கோயில்களிலும் இதனைக் கசப்பிரிட்டம் (யானையின் முதுகு) என அழைக்கலாயினர். இந்த இரதங்களின் செவ்வக அமைப்பில் மேலே போகப்போக அளவில் குறைந்து செல்லும் அடுக்குகள் கூம்பிய முடி (கவசங்கள்) முக்கோண வடிவிலமைந்த மேற்புறம் ஆகியவற்றைத் தாங்கிய பீப்பா போன்ற கூரைகள் தோற்றம்பெற்றுள்ளன. இத்தகைய கட்டடப் பாணிகள் தனிக் கற்களில் வெட்டப்பட்டதால் இவற்றை சிற்பமா அல்லது கட்டடமா எனக் கூறமுடியாத வகையில் காட்சியளிக்கின்றன. இரதங்களின் முக்கியத்துவம் யாதெனில் அமராவதியில் இருந்து பெற்ற கட்டடக்கலை மரபான விகாரை பெளத்த உருவங்கள், சைத்திய சாளரங்கள் என்பவை இந்துக் கோவில் கட்டட மரபின் அடித்தளத்தில் தொடர்ச்சியாக இடம்பெற இக்காலத்தில் அத்திவாரம் இடப்பட்டது. அத்துடன் பிற்காலத் திராவிட கோயிலில் வரும் விமானம் கோபுரம் என்பன மிகச்சிறிய அளவில் இந்த ரதங்களில் இடம்பெற ஆரம்பித்துள்ளன. எனவும் கூறமுடிகின்றது.
இவன் அமைத்த கோவில்களைக் கண்டறிதல் எங்ங்ணம் இவன் அமைத்த குகைக்கோவில்களில் இவனுடைய விருதுப்பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. கோவில்களில் ஓவிய வேலை மிகுதியாக இருக்கும். குகைக்கோயிலின் முன்மண்டபம் சுவர்களில் மிக்க அழகிய சிலைகளும் அணியணியாய் அன்னப் பறவைகளும் சிறுமணிக் கோவைகளும் வெட்டுவித்திருக்கும் மகேந்திரன் அமைந்த கோயில் தூண்கள் சதுரமாயும் கனமாயும் இருக்கும். ஆனால் நரசிம்மவர்மன் எடுத்த கோயில் தூண்களில் போதிகைகள் உருண்டு காடிகள் வெட்டி இருக்கும். போதிகைக்கு கீழ் தூணின் மேற்புறம் உருண்டும் பூச்செதுக்கப்பட்டும் இருக்கும். தூண்களின் அடியில் ஏறக்குறைய இரண்டு முழ அகலமும் இரண்டு முழ உயரமும் கொண்ட திறந்த வாயுடன் இருக்கும் சிங்கங்கள் தூண்களைத் தம் தலைமீது தாங்கியிருத்தல் போன்ற வேலைப்பாடு இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 56 Sசோதிலிங்கம்

காணப்படும். இவற்றை நோக்கும் போது இம்மன்னன் தன் பெயரை நிலைநாட்ட இச் சிங்கத்தூண்களை அமைத்தானோ என எண்ணத் தோன்றுவதுடன் இத்தகைய தன்மை கொண்ட கோயிலாக காஞ்சி வைகுந்தப் பெருமாள் கோயில் உள்ளதாக வரலாற்று ஆசிரியர்கள் எடுத்தியம்பியுள்ளனர்.
மேலும் திருக்கழுக்குன்றத்தில் உள்ள ஒரு குடைவரைக் கோயிலில் வாதாபி கொண்ட நரசிங்க போத்தரையனின் (மாமல்லனின்) கல்வெட்டு ஒன்று உள்ளது. அதனால் அக்குகைக் கோயில் மாமல்லன் காலத்தவையாக இருக்க வேண்டுமெனக் கருதப்படுகின்றது. இவனது காலத்தில் அமைந்த கோயில்கள் குகைக்கோயில்களாகவும் சிற்பத்திறன் மிகுதியாகவும் உள்ளவை என இராசமாணிக்கனார் கருத்துக் கூறுவர். இவை மட்டுமன்றி கோவர்த்தன மலையைக் கண்ணன் குடையாய்ப் பிடித்தல் கங்கைக்கரைக் காட்சி என்பன பாறைகளில் செதுக்கப்பட்டுள்ளன. இவற்றின் உருவாக்கத்திற்கும் நரசிம்மவர்ம பல்லவனே பொறுப்பு எனக் கூறப்படுவது இக்கால கட்டடக் கலைவரலாற்றின் சிறப்பினை அறிந்துகொள்ளக் காரணமாகும் அதேநேரம் இக்காலத்துடன் கற்கோவில் மரபு கைவிடப்பட்டு கோயில்களை சாந்துகொண்டு கட்டும் மரபு ஆரம்பிக்கப்பட்டமை அவற்றின் சிறப்புக்கு சிறந்த சான்றாகின்றது.
I. இராஜசிம்மன் காலம் 680 - 730.
பரமேஸ்வர மன்னனின் மகனும் சிறந்த சிவபக்தனும் சைவசித்தாந்த வித்தகனுமான இராசசிம்மன் தன் முந்தையோரின் பாணிகளிலிருந்து வேறுபட்டதொரு பாணியை வகுத்துக் கோயில் கட்டடக் கலையிலே புதுமை செய்தான். மாறுபட்ட கலைநிலைகளைக் கண்டவன். தன் முன்னோரின் கலையறிவு அனைத்தையும் ஒருவனே கொண்டானோ என்றெண்ணும் வகையில் தான் எடுத்த கோயில்கள் ஒவ்வொன்றையும் கலைப்பெட்டகமாக மாற்றினான். மலையிலும் கடற்கரையிலும் தரையிலும் என மூன்று வேறுபட்ட இடங்களில் கோயில்கள் அஜந்தர் சக்தி பெற்றவன். இவை கட்டடக்கலையில் ங்ஃத்துகின்றன
இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 57 Sசோதிலிதும்

Page 37
கட்டடக் கோயில் எடுப்பதில் மாபெரும் வெற்றிகண்டவன் குடைவரை கோயிலும் கண்டுள்ளான். நாடகசாலை போன்ற அமைப்பில் சாளுவன் குப்பத்தில் புலிக்குகை ஒன்றினையும் தோற்றுவித்துள்ளான். இன்னும் பல கட்டடக்கலை அம்சங்களை முதன் முதலில் புகுத்தியவன் எனப் பலவற்றை இவனது கட்டடக்கலைத் தன்மைகளாகக் கூறலாம். இவன் காலத்திலே கட்டப்பட்ட கோயில்களில் மாமல்லபுரத்துக் கடற்கரை ஆலயமும், ஈஸ்வர ஆலயம், முகுந்த ஆலயம் ஆகியவையும் பனைமலை (தென்னாற்காடு) என்ற இடத்தில் உள்ள கோயிலும் காஞ்சி கைலாசநாதர் கோயிலும், வைகுந்தப் பெருமாள் கோயிலும் அடங்கும். இரண்டு விமானங்கள் கொண்ட இந்தக் கோயில்கள் மூன்று பிரிவுகளைக் கொண்டது. கிழக்கு நோக்கிய கருவறை ஒரு பிரிவு. இதற்குள் பட்டை வடிவலிங்கம் இருக்கிறது. மேற்கு நோக்கியவாறு இருக்கும் கோயிலின் மூன்றாவது பிரிவில் சோமாஸ்கந்தரின் கருவறை உள்ளது. இந்த இரு பிரிவுகளுக்கும் இடையில் தனிக் கோயிலாக திருமாலின் சந்நிதி இருக்கின்றது. இதில் அவர் துயில் செய்யும் நிலையில் தரிசனம் தருகிறார். இக்கோயில் விமானத்தின் மேற்குப் பகுதிகள் விழுந்துவிட்டன என்கின்றார் டாக்டர் இராகலைக்கோவன் (இயக்குனர் டாக்டர் மாஇராச மாணிக்கனார் வரலாற்று ஆய்வுமையம், திருச்சிராப்பள்ளி).
காலத்தால் சிதறிக்கிடந்த பல நந்திச் சிற்பங்களை கோயிலின் மதில் சுவர் மீதும் இப்போது நிறுத்தி வைத்திருக்கின்றார்கள். காற்றிலும் மழையிலும் சேதமுற்றுத் தேய்ந்து போயிருந்தாலும் அவை உருவாக்கப்பட்ட காலத்தில் அச்சில் வளர்ந்தது போன்று அத்தனை உருவ ஒற்றுமையுடன் இருந்திருக்க வேண்டும். ஆயினும் இத்தனை சிறப்புப் பெற்ற இந்தச் சிவன் கோயில்கள் அடியர்களால் பாடப்பட்டதாகத் தெரியவில்லை. ஏனைய கோயில்களில் இருப்பது போன்று மூலவரைத்தவிர வேறு தெய்வங்களின் உருவங்கள் இங்கு காணப்படவில்லை. இவற்றில் காலத்தால் முந்தியது கடற்கரைக் கோயிலாகும். கடற்காற்று, கடல்நீர், கடற்கரை மணல் ஆகிய கட்டடங்களைச் சிதைக்கும் கருவிகளின் தாக்குதல்களுக்கு உட்படுத்தப்பட்டிருந்தும் இன்றுவரை பழுதுறாமல் இந்துநாகரிகத்தில் நுணர்கலைகள் 58 SG Isbistb

இருப்பது இதன் சிறப்பாகும்.இது கட்டடக்கலைக்கு இலக்கணமே இவைதானோ என்று எண்ணவைக்கும் விண்ணிழி விமானமும் திருச் சுற்றும் முழுமையான கோயில் இலக்கணத்தைக் காட்டுகின்றன. அடிமுதல் சிகரம் வரை மணற்கல்லால் ஆக்கப்பட்டது. சத்திரியசிம்ம பல்லவேசுவர கிருதம் என்றும், இராஜசிம்ம பல்லவேசுவர கிருகம் என்றும், நரபதிசிம்ம பல்லவிஷ்ணு கிருதம் என்றும் வழங்கப்படும் மூன்று கோயில்கள் உள்ளன. கிழக்குப் புறத்தில் உள்ள நுழைவாயில் கோபுர அமைப்பில் உள்ளது. பழமையான தமிழகக் கோயில் விமானமே உயர்ந்து காணப்படும் கோபுரம் என்ற அமைப்பு இராது. பின்னர் எழுந்த வானுயர் கோபுரங்கள் எல்லாம் முன்னுதாரணமாக முதன்முதலில் கோபுரம் அமைக்கப்பட்டது. இது இவனது காலத்தில் எழுந்த சிறப்புமிகு கட்டடக்கலை அமைப்பு எனக் கூறுவர்.
இக்கோயிலின் அமைப்பு முறை வழக்கத்துக்கு மாறாகவே உள்ளது. இதனுடைய மூலஸ்தானம் கடலைப் பார்த்தபடியே அமைந்துள்ளது. ஆகவே இதனுடன் சேர்ந்த பிற்பகுதிகள் இதற்குப் பின்னாலேயே அமைந்துள்ளன. பிரதான கட்டடத்தைச் சுற்றிப் பெரியதொரு சுற்றுமதில் காணப்படுகின்றது. இம்மதிலின் மேற்புறத்தில் கோயிலின் நுழைவாயில் உண்டு. மேற்புறத்தில் காணப்படும் இரு கோயில்களும் பிரதான கோயில் கட்டிமுடித்த பிறகே இணைக்கப்பட்டிருக்க வேண்டும். இக்கோயிலை முதன்முதலில் பார்ப்பவர்கள் மேற்குப் புறத்தையே பிரதான நுழைவாயிலாகக் கருதுவார்கள். கல்லில் செதுக்கும் குடைவரை முறையிலிருந்து சாந்து, கல் முதலியவை உபயோகித்து கோயில் கட்டும் முறைக்கு மாறியதைக் காட்டுவதுடன் தர்மராச இரதத்திலிருந்து பல அம்சங்கள் தர்க்கரீதியான வளர்ச்சியினையும் இக்கோயிலின் பல அம்சங்கள் நினைவூட்டுகின்றன. அத்துடன் விமானங்களைக் கட்டுவதற்கு நடைமுறையிலிருந்த விகாரையைப் போன்று கட்டும் முறை கைவிடப்பட்டு புதிய இலகுவான அதிக லயமுடைய கோபுரத்தைக் கட்டக்கூடிய முறை நடைமுறைக்கு வந்துள்ளது கவனத்திற்கொள்ள வேண்டியதாகின்றது. உயர்ந்து நிற்கும் இக்கோயில்கள் தவிர அண்மையில் இதனருகே இவன் காலத்ததாகக் கருதப்படும் மற்றொரு இந்துநாகரிகத்தில்துணர்கலைகள் 59 Sசோதிலிங்கம்

Page 38
கோயிலும் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இக்கோயிலின் கட்டட அமைதியும் கல்வெட்டுக்களும் இராஜசிம்மன் பாணியினை அடையாளம் காட்டுகின்றன. இக்கட்டடக் கோயில் தவிர வராக மண்டபம், சாளுவன் குப்பம், அதிரண சண்டேசுவர கிருகம், புலிக்குகை ஆகியவையும் இவன் எடுத்தவை எனலாம்.
மலைமேல் உயர்ந்து நின்று இராஜசிம்மன் புகழ்பாடும் கோயில் தாலகிரீசுவர் கோயில் இது காஞ்சி கைலாசநாதர் கோயிலையும் மாமல்லை கடற்கரைக் கோயிலையும் ஒத்தது. சாம்பல்நிறக் கருங்கல்லால் கட்டப் பட்டது. அதிட்டானம் முதல் சுவர்ப்பகுதி வரை கருங்கல்லாலும் மேலுள்ள விமானப் பகுதி சுதையாலும் அமைக்கப்பட்டுள்ளது. கோயிலின் பகுதிகளாக கருவறை, உள்மண்டபம், முகப்பு மண்டபம், திருச்சுற்று, சிற்றாலயங்கள் ஆகியன அமைந்துள்ளன. கருவறைச் புறச்சுவர்களில் பல்வேறு சிற்றாலயங்கள் அமைந்துள்ளன. தேவகோட்டம் அனைத்திலும் லிங்கங்கள் வைக்கப்பட்டுள்ளன. கூடுகளும் சாலைகளும் எழில்கோலம் கொண்டவை. காலத்தை அடையாளம் காட்டும் வகையில் சிம்மத்தூண்கள் அமைந்து காணப்படுகின்றன.
காஞ்சியில் இராசசிம்மனாற் கட்டப்பட்ட கைலாசநாதர் கோயில் மிகவும் அழகுவாய்ந்தது. பேரெழிலின் பிறப்பிடம், ஆயகலைகளின் இருப்பிடம், கலைக்கருவூலம், கட்டடப் பெட்டகம் என வருணிக்கும் வகையில் காண்பேர் கண்களைக் கவர்ந்திழுக்கும் கட்டடக் கோயில்கள் அதிட்டானம், சுவர், பிரஸ்தாரம், கீரிவம், சிகரம், தூபி என அனைத்து அங்கங்களையும் இக்கோயில் விமானம் கொண்டு விளங்குவதோடு அவற்றில் பல நுணுக்கமான வேலைப்பாடுகள் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. இவன் தன் எண்ணங்களுக்கெல்லாம் வடிவு கண்டவன். இக்கோயில் கட்டக்கலைத் தன்மையில் குறிப்பிடக்கூடியன. கருவறை அதிட்டானத்தில் ஜகதிப்படை முழுவதும் அழகிய சிவகணங்களை அமைத்துள்ளதும் வட்டக்கருக்குகள், கொடிக் கருக்குகள், மூலைக் கருக்குகள் கொண்டு குமுதப்படையை இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 60 Sசோதிலிங்கம்

அலங்கரித்திருப்பதும் குறிப்பிடத்தக்கவை. மேலும் கண்டப்படையின் மூலைகளில் அழகிய யானைத் தலைகள், மிக இயற்கையாக அமைக்கப் பட்டுள்ளன. பொதுவாகப் பிற்காலங்களில் இக்கண்டப் படையில் இராமாயணம் பெரியபுராணம் போன்ற கதைச் சிற்பங்களை அமைத்திருப்பர். கருவறைச் சுவர்ப்பகுதியும் மிக அதிகமான கட்டட வேலைப்பாடுகள் நிறைந்து மாறுபட்டு திகழக் காண்கின்றோம். இதன் தாய்ச்சுவர் கள்ணகூடு பத்தி, அகாரைப்பத்தி, முகபத்ர பத்தி எனும் பிரிவுகளுடன் காணப்படுகின்றது. இவற்றில் கள்ணகூடு பத்தி மட்டும் பிதுங்கிய நிலையில் காட்டப்பட்டுள்ளது. புறச்சுவரைக் கோட்டங்கள் போலுள்ள தனித்தனிச் சிற்றாலயங்கள் அலங்கரிக்கின்றன. சுவர்களிலுள்ள தூண்களில் பாயும் சிம்மங்கள் காட்டப்பட்டுள்ளன. சிம்மங்களின் மேற்பகுதி தூணின் அனைத்து உறுப்புக்களையும் பெற்றுத் திகழ்கின்றது. மேலும் உறுப்புக்கள் பலவும் நன்கு வளர்ச்சியுற்ற நிலையில் காட்டப்பட்டுள்ளன. இதனால் இராச சிம்மேச்சரம் என அழைக்கப்படும் இக்கோயில் பல்லவர் காலத்திற் கட்டப்பட்ட மிகவும் பெரிய திருக்கற்றளி என்று பெயர் பெற்றது. இங்கு பரிவார தெய்வங்களுக்கும் ஏனைய தெய்வங்களுக்கும் முழுமையாக அமைக்கப்பட்ட கோயில்களுண்டு. வரவரச் சிறுத்து உயரும் மாடங்கள் கொண்ட கோபுரம், முன்மண்டபம், பிரகாரச் சுற்றுச் சுவர், உள் மாடங்களிலே தெய்வப் படிமங்கள், தூண்களின் அடியிலே பொறிக்கப்பட்ட சிங்க உருவங்கள், கருவறையின் சிவலிங்கம் என்பவற்றோடு பிற்காலச் சோழருடைய கோயில் அமைப்புக்களுக்கு வழிகாட்டியாகவும் அமைந்தது இராசசிம்மனின் கைலாசநாதர் கோயில்
66.
கோயிலின் பிரதான விமானம் சதுரவடிவிலான சிகரத்தினைக் கொண்டு திராவிட பாணியில் அமைக்கப்பட்டுள்ளது. கோயிலின் வாயிலிற் சிறிய கோபுரமும் கோபுர வாசலுக்கு வெளியே 8 சிறிய சந்நிதிகளும் உள்ளன. கர்ப்பக்கிரகத்தில் 18 பட்டைகளைக் கொண்ட சிவலிங்கமும் கர்ப்பக்கிரக உட்புறச்சுவரில் சோமாஸ்கந்தர் சிற்பமும் காணப்படுகின்றன. கர்ப்பக்கிரக புறச்சுவரில் பல அழகிய சிற்பங்கள் கொண்ட சந்நிதிகள் உள்ளன. இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 61 Sசோதிலிங்கம்

Page 39
இப்பிரதான விமானத்திற்கும் கோபுர வாசலுக்கும் நடுவே இராஜசிம்மனின் மகன் 3 ஆம் மகேந்திர வர்மனால் அமைக்கப்பட்ட இரண்டு அடுக்குகளைக் கொண்ட விமானம் காணப்படுகின்றது. கோயிலின் திருச்சுற்றாலை மதிலின் நான்கு புறமும் கர்ப்பக்கிரகத்தினை நோக்கியவாறு 58 சிறிய சந்நிதிகள் தொடர்ச்சியாக அமைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் சைவ, வைணவ தெய்வங்களின் சிற்பங்களும் ஓவியங்களும் காணப்படுகின்றன. கட்டட சிற்பக்கலை வரலாற்றைப் பொறுத்தவரையில் இக்கோயில் தனி இடம்பெற்றுள்ளது. இத்துடன் நடராஜனின் பல நடனக் கோலங்கள் அக்கால அரசர்களின் கலை ஆர்வத்தை எடுத்துக் காட்டும் வகையில் அமைந்துள்ளன. இக் கோயிலின் நீளம் 150 அடி, அகலம் 80 அடி உள்ளே 41 அடி உயரமுள்ள லிங்கமொன்றும் காணப்படுகின்றது. இவற்றுக்கும் மேலாக இக்கோயிலில் காணப்படும் சிறப்பு. (1) கருவறையின் மேலுள்ள சதுரவடிவான விமானம் அடிப்பகுதியில் இருந்து மேலே செல்லச்செல்ல குறைந்துகொண்டே செல்லும். அது ஒரு தேரைப்போல காட்சியளிக்கும். (2) ஒவ்வொரு அடுக்கின் மூலையிலும் சிறு கலசமும் ஆன்மாவின்
உருவமும் காணப்படும். (3) கட்டடத்தின் மூன்று புறங்களிலும் காணப்படும் மாடக்குழிகள் கிழக்கு அல்லது மேற்கு நோக்கி இருக்கும். அம்மாடக் குழிகளில் கருவறையிலுள்ளது போன்ற சிங்கம் காணப்படும். (4) சுவரின் உட்புறங்களிலும் வெளிப்புறங்களிலும் அரிமாக்களின்
உருவம் காணப்படும். . (5) அவ்வரிமாக்கள் பின்னங் கால்களை ஊன்றி முன்னங்கால்களைத்
தூக்கி நிற்கும். (6) அவ்வரிமாக்கள் காரைகளால் ஆக்கப்பட்டுக் காணப்படுகின்றன. (7) கருவறையின் பின் உட்புறச்சுவரில் சோமாஸ்கந்தர் உருவமும்
மற்றும் பல சிற்ப பணிகளும் சோடணைகளும் காணப்படும்.
இவ்வாலயம் கிபி 8 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் 2 ஆம் நரசிங்கவர்மனாற் கட்டப்பெற்றது. அது தமிழகத்துக் கட்டடக்கலை
இந்துநாகரிகத்தில்துணர்கலைகள் 62 Sசோதிலிங்கம்

வளர்ச்சியின் பிரதான கட்டமொன்றைப் பிரதிபலிக்கின்றது. அதன் காரணத்தினாலும் கலைவனப்பினாலுங் கைலாசநாதர் கோயில் பெருஞ்
சிறப்பினைப் பெற்றுள்ளது. அதன் சுவர்களிலே பொறிக்கப்பட்டுள்ள சாசனங்கள்
வாயிலாகக் கோயிலைப் பற்றிய வரலாற்றம்சங்கள் பலவற்றை அறிய
முடிகின்றது.
நரசிங்கவர்மனால் (898 - 728) மாமல்லபுரத்தில் அமைக்கப்பெற்ற ஜலசயனத்தைக் காட்டிலும் கைலாசநாதர் கோயில் அளவிற் பெரியது. கலை வனப்பிலும் வேலைப்பாடுகளின் செம்மையிலும் அது முன்னேற்றமானது. கோயிலின் நிர்மாண காரணணான இராஜசிம்மனின் நாமம் என்றும் நிலைபெறும் வண்ணமாகக் கோயிலுக்கு இராஜசிங்க ஈஸ்வரம் என்று பெயர் சூட்டினார்கள். அதன் கோபுர வாசலோடு பொருந்தியதும் மூன்றாம் மகேந்திரவர்மனால் அமைக்கப் பெற்றதுமான கோயில் மகேந்திரவர்ம - ஈஸ்வரம் என்னும் பெயரைப் பெற்றது.
கைலாசநாதர் கோயிலைக் காஞ்சிபுரத்துப் பெரிய கற்றளி என்று பிற்காலத்துச் சாசனங்கள் வர்ணிக்கின்றன. அது காஞ்சிபுரத்தின் மிகப் பெரிய பழைய கற்றளியாகும். அதிலுஞ் சற்றுப் பெரியதான பரமேஸ்வர விண்ணகரம் காலத்தாற் சிறிது பிற்பட்டது. கைலாசநாதர் கோயிலின் அடித்தளம் கருங்கல்லினால் அமைந்தது. பாரம் மிகுந்த பெரிய அமைப்புக்களைத் தாங்கும் வண்ணம் அது உறுதியாக அமைக்கப்பட்டுள்ளது. பீடத்தின் மேலுள்ள பகுதிகள் மணற்கல்லால் உருவாக்கப்பட்டுள்ளன. காலாகாலம் பல திருத்த வேலைகள் நடைபெற்றுள்ளன. அவற்றின் காரணமாகக் கோயிலுக்கு இயல்பாக விருத்தவனப்பு மிகுந்த கோலம் சிறிது பாதிப்புக்குள்ளாகிவிட்டது.
தென்னிந்தியக் கோயிலமைப்பின் பிரதான அம்சங்களான விமானம், மண்டபம், பரிவார தேவர் கோட்டம், சுற்றலை, கோபுரம், பிரகாரம் ஆகிய யாவும் இக்கோயிலில் அமைந்துள்ளமை குறிப்பிடற்குரியது. கருவறையின் உள்ளே 18 பட்டை கொண்ட் இலிங்கம் உள்ளது. கர்ப்பக்கிரகத்தினைச் சுற்றி வலம் வருவதற்கு இரண்டடி அகலமான இந்துநாகரிகத்தில்துணிகலைகள் 63 Sசோதிலிங்கம்

Page 40
புழை அமைப்புடைய பாதை காணப்படுகின்றது. கர்ப்பக்கிரகமும் அதன் மேலமைந்த விமானமும் உருவ அமைப்பில் மாமல்லபுரத்துத் தர்மராஜரதத்தை முன்மாதிரியாகக் கொண்டவை. கர்ப்பக்கிரகத்தின் நான்கு மூலைகளிலும், கிழக்கிலுள்ளதைத் தவிர்ந்த ஏனைய மூன்று பக்கச் சுவர்களின் நடுவிலும் தேவகோட்டங்கள் இணைந்திருக்கின்றமை கைலாசநாதர் கோயிலின் சிறப்பம்சமாகும். இது கலிங்கத்திலுள்ள பிற்காலத்துக் கோயில்களின் அமைப்பினை ஒருவகையில் ஒத்துள்ளது. பல்தள அமைப்பான விமானம் உள்நோக்கிய சரிவுடன் ஓங்கியெழும் பாங்கில் வனப்புடன் அமைக்கப்பெற்றுள்ளது. நாற்சதுர வடிவிலான அதன் தளங்களில் மாடங்களும் புராணக்கதைகளை விளக்குஞ் சிற்பங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. சிகரத்தின் மேலே தூபி அமைந்துள்ளது.
இறையகத்தின் முன்னாலே தட்டையான கூரையுடன் அமைந்த மண்டபம் உண்டு. அகன்று பருத்த தூண்கள் அதனைத் தாங்கி நிற்கின்றன. ஆதியில் இறையகம், மண்டபம் ஆகியன தனித்தனியாகவே அமைக்கப்பட்டிருந்தன. ஆயினும் பிற்காலத்தில் அந்தராளம் ஒன்றை இடையிலே அமைத்து அவற்றைத் தொகுத்துவிட்டனர். அதனால் ஆலயத்தின் அற்புத கோலத்திற்கு இடையூறு செய்துவிட்டனர்.
திருச்சுற்றாலையைச் சுற்றி 58 சிறிய தேவகோட்டங்கள் உள்ளன. விமானத்துக்கும் கோபுரத்திற்கும் இடையிலுள்ள தளி மூன்றாம் மகேந்திர வர்மன் காலத்தில் அமைக்கப்பட்டது. இக்கோயிலின் பகுதிகள் யாவும் அகலமானதும் கபோதங்களைக் கொண்டதுமான சுற்றுமதிலினாற் சூழப்பட்டுள்ளன. கற்றாலையின் சுவர்களிலே சோமஸ்கந்ததர், கின்னரர், அரசகுலத்தினர் ஆகியேளின் ஓவியங்கள் வரையப்பெற்றிருந்தன. இதனோடு மாமல்லபுரத்துக் கடலோரத்தில் சத்திரிய சிகாமணிப் பல்லவேச்சரம், பள்ளிகொண்ட தேவர்கோயில், இராசசிம்ம பல்லவேச்சரம் என்ற மூன்றும் இவனாலேயே கட்டப்பட்டவை என்பதற்கு இராசராசசோழனின் கல்வெட்டு வாசகம் சான்றாகும். கடற்கரையில் முகுந்தநாயனார் கோயிலும் இராச சிம்மன் கட்டியதே. கைலாசநாதர் கோயில் திருக்கயிலையின் அளவு இந்துதாகரிகத்தில்துணர்கலைகள் 64 Sசோதிலிங்கம்

கொண்டே கட்டப்பட்டதாகும் என விபுலானந்த அடிகளார் கூறியுள்ளதாக எடுத்துக் காட்டும் இராசமாணிக்கனர் தமது பல்லவர் வரலாறு நூலிலே அக்கோயில் பற்றியதொரு கட்டுரையே எழுதியுள்ளதிலிருந்தும் அதன் இணையிலாப் பெருமையும் நன்கு புலனாகும்.
இக்கோயில் கூர்நுதிக்கோபுரம் போன்ற விமானத்தையுடைய மூலஸ்தானத்தையும் அதற்கு முன்னால் தூண்கள் நிரம்பிய ஒரு மண்டபத்தையும் கொண்டிருந்தன. மூலஸ்தானமும் மண்ட்பமும் தனித்தனியாக ஒரு நீள்சதுரமான வெளியில் இருந்தன. இந்த நீள்சதுர வெளியைச் சுற்றிக் கண்ணறையுள்ள உயரமான மதிற்கவர் இருந்தது. பல நூற்றாண்டுகளின் பின்பே மூலஸ்தானமும் முன் மண்டபமும் ஓர்
அழகைப் பறித்துவிட்டது. இங்கு மரபுகளின் தொடர்ச்சியை அவதானிக்க துணைக்கோயில்களை விட்டுப்பார்த்தால் மூலஸ்தானமும் விமானமும் தர்மராச இரதத்தை பெரிதுபடுத்திப் பார்ப்பதைப்போல் தோன்றும் மூலஸ்தானத்தின் ஒவ்வொரு மூலையிலும் ஒரு துணைக்கோயிலும் வாயிற்புறம் தவிர்ந்த ஏனைய மூன்று பக்கங்களிலும் மத்தியில் ஒவ்வொரு துணைக் கோயிலுமாக மொத்தம் ஏழு துணைக் கோயில்கள் இங்கு காணப்படுகின்றன. முழுக் கோயிலின் அழகையும் இவை மிகைப்படுத்து கின்றன. பல்லவ பாணியின் மிகச்சிறந்த அம்சங்களெல்லாம் இங்கு சிறப்பாகவும் கச்சிதமாகவும் இணைக்கப்பட்டுள்ளன. கடற்கரைக் கோயிலின் விமானத்தைவிட இங்குள்ள விமானம் அதிக முன்னேற்றத்தைக் காட்டுகின்றது. இது அளவில் பெரியதாகவும் சிறந்த விகிதாசாரம் உடையதாகவும் உள்ளது. இத்தகைய கோயில் கட்டிய கலைஞர்
நன்கு சிந்தித்துச் ெ ற்றியுள்ளனர் என்பதும் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.
மேலும் பல்லவர் கோயில்களிலே மிகச்சிறப்புப் பெற்ற கலைப்படைப்பு வைகுந்தப் பெருமாள் கோயில் எனலாம். இது இக்கால கட்டடக் கலைச் சிறப்புக்கும் முதிர்ச்சிக்கும் எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றது. கைலாசநாதர் கோயிலைவிடச் சற்றுப் பெரிதான இக்கோயிலின் வளைவுக் கூரை மண்டபங்கள், முகப்பு மண்டபம், கருவறை என்பன தனித் தனியாக நல்ல முறையில் இணைக்கப்பட்டுள்ளன. இங்கு சிங்கமுகத் இந்துதாகரிகத்தில் நுண்கலைகள் 65 Sசோதிலிங்கம்

Page 41
தூண் வரிசைகளும் காணப்படுகின்றன. நிலத்திலிருந்து 60 அடி உயரமான நான்கு மாடிகளைக் கொண்ட விமானம் இக்கோயிலை அழகு செய்கின்றது. கர்ப்பக்கிருகத்தில் ஒன்றன் மேல் ஒன்றாக விஷ்ணுவின் இருந்த, நின்ற, சயன நிலையிலான சிற்பங்கள் உள்ளன. ஒவ்வொன்றுக்கும் தனித்தனியான சுற்றுப்பிரகாரமும் காணப்படுகின்றது. கர்ப்பக்கிரகத்தினைச் சுற்றியுள்ள சுற்றுப்பிரகாரச் சுவர்களில் காணப்படும் சிற்பங்கள் பல்லவர்களது அரசியல் வர்லாற்றினை அறியப் பெரிதும் துணைபுரிகின்றன. இக்கோயிலின் விமானம், அர்த்த மண்டபம், சுவர்கள் மற்றுமிடங்களிலுள்ள சிற்பங்கள், விஷ்ணுவின் பல்வேறு தோற்றங்களைப் பற்றி அறிய உதவும் சிறந்த சான்றுகளாகவுள்ளன. இக்கோயில் மணற்கல்லினால் கட்டப்பட்டது.
இதன் மூலஸ்தானம் ஏறக்குறை 90 சதுரம் ஆகும். இதன் முற்பகுதி கிழக்கே 20 அடி வரை நீட்டப்பட்டு ஒரு முகப்பு மண்டபமாக விளங்குகின்றது. இக்கோயிலைச் சுற்றி ஒரு உயரமான மதில் உண்டு. இம்மதிலின் வெளிப்புறக் கரை முழுவதும் எளிமையான ஆனால் நன்கு கவர்ச்சியான வேலைப்பாடுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மதிலின் உள்ளேதான் பக்தர்கள் நடந்து செல்லக்கூடிய வெளியுண்டு. இவ்வெளியின் மேல் வளைவு கூரையுண்டு. சிங்கமுகத்தூண் வரிசையுமுண்டு. பல்லவ வரலாற்றின் முக்கிய நிகழ்ச்சிகளைக் குறிக்கும் சிற்பங்கள் இத்தூண்களில் உண்டு. கூரையின் உட்புறத்தை எட்டுத்தூண்கள் தாங்குகின்றன. முகப்பு மண்டபத்தையும் விமானம் மேலேயுள்ள நீள்சதுரமான அறையையும் முன்கூடம் ஒன்று இணைக்கின்றது. இத்துடன் திருச்சிக்கு அருகில் திருப்பத்தூர் என்னுமிடத்திலுள்ள கைலாசநாதர் கோவிலும் இவனாலேயே கட்டப்பட்டது. இதுவும் கைலாசநாதர் கோயிலைப் போன்ற அமைப்புடையது. இவை தவிர இறவாதேஸ்வர் கோயில், பிறவாதேஸ்வரர் கோயில், ஐராவதேஸ்வரர் கோயில் என்பனவும் இவன் காலத்தனவேயாகும்.
ராஜசிம்மன் பாணிக் கோவில்களிலேயே பல்லவர் காலத் தூண் மிகவும் கவர்ச்சியை அடைந்துள்ளது. புடைத்து நிற்கும் தூண்களின் கரையில் செய்யப்பட்டுள்ள சிங்க வேலைப்பாடுகளில் அதிக வளர்ச்சி
இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 66 Sசோதிலிங்கம்

ஏற்பட்டுள்ளது. கட்டியக்காரரைப் போல் நிமிர்ந்து நின்று திராவிட முறையிலமைந்த தூண்களின் மேற்பாகத்தைத் தாங்கும் சிங்கம் ஒவ்வொரு கோணத்திலிருந்தும் வெளியே தெரியும்படி நின்ற நிலையில் நிற்கின்றது. கட்டடத்தின் கீழ்ப்பகுதி முழுவதும் சமமான இடைவெளி களுடன் சிங்கத்தின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன என பேர்ஸிபிறவுண் கூறியுள்ளார். தூணின் தலைப்பகுதியின் உச்சியில் மரத்தூண்கள் தீராந்தியை முட்டும் பகுதியில் தோற்றமளிக்கும் வடிவில் வெட்டப்பட்டுள்ளன. பலகை என்ற பகுதியில் பல்வேறு விளிம்புகளையுடைய அலங்காரமும் கலசத்தின் நுனியில் காணப்படும் இதழ் வளைவு நெளிவுகளையுடைதாகவும் கலசம் மேலும் திரட்சி பெற்று அழகிய உருண்டை வடிவில் வெட்டப்பட்டு இருக்கிறது. இக்காலத்தில் வெட்டப்பட்ட தூணே பல்லவர் காலத் தூணில் அழகியல் ரீதியான உச்ச நிலையில் வைத்தெண்ணப்படுகிறது.
பொதுவாகவே இராஜசிம்மன் காலத்துக் கோயில்கள் தொலைவில் இருந்து நோக்கின் தருமராசர் தேரைப் போலவே தோன்றும் வரவர சிறுத்து உயரும் தட்டுக்களைக் கொண்டவை. உள்ளறை வேறு கோபுரம் வேறு என்றிராது நான்கு பக்கங்களிலும் உள்ள கூரைகளில் சிவலிங்கம் இருக்கும் கோயிலுக்குள் எழுந்தருளிவித்த லிங்கங்கள் எட்டு அல்லது பதினாறு பட்டைகள் தீர்ந்தவை. சில பக்கங்களில் காடி வெட்டியவை. சிவலிங்கத்துக்குப் பின் சுவர் மீது சோமாஸ்கந்தர் சிலை இருக்கும். திருவாசிகள் ஒற்றை வளைவு கொண்டவை. இவை அனைத்தையும் விடச் சிறந்த அடையாளம் ஒன்றுண்டு. மாமல்லபுரத்தில் இப்போதுள்ள கடலோரத்துக் கோயிலும், பனைமலையில் உள்ள தாலகிரீஸ்வரர் கோயிலும் அமைந்த கோயில்களில் தூண்களுக்கு அண்மையில் பின்னங் கால்களில் எழுந்து நிற்கும் சிங்கங்கள் வெட்டப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதோர் அம்சமாகும்.
IV. நந்திவர்மன் காலம் 730 - 850.
பல்லவர் காலத்தினி இறுதிக் காலமாகவும் எவ்வித முன்னேற்ற நிலமைகளின்றி பெரும்பாலும் சிறிய கோயில்களேயுள்ள காலமாகவும் விளங்குவது. இதற்கு முன் கட்டப்பட்ட கோயில்களிலும் பார்க்க இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 67 SEJIfkih

Page 42
வித்தியாசமான முறையில் காஞ்சிபுரத்திலுள்ள முத்தேசுவரர், மதங்கேசுவர் ஆலயங்களும் அங்கு காணப்படும் கோயில் தூண்களும் சான்று ஆகின்றன. 2 ஆம் நந்திவர்மனுடைய மனைவி தன் பெயரால் தர்ம மகாதேவீசுவரம் என்ற அழகிய சிறு கோயில் ஒன்றைக் கட்டியுள்ளாள் என்பதைக் கல்வெட்டு வழியறிகின்றோம். இன்று முத்தீஸ்வரர் என அழைக்கப்பட்டாலும் கல்வெட்டில் தருமமகா தேவீசுவரம் என்று வழங்கப்படுவதை உணர்கின்றோம். உயர்ந்த அதிட்டானத்தின் மேல் கட்டப்பட்ட இக்கோயில் சிறிய கருவறையும் முகப்பு மண்டபமும்
மண்டபத்தின் நடுவே அமர்ந்த சிங்கங்களும் கொண்ட தூண்கள் காணப்படுகின்றன. முன்னர் குறிப்பிட்டதுபோல் சிம்மத் தூண்களின் மேலுள்ள மத்மமும் பெரிய அளவில் கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இக்கோயிலின் கட்டட அமைப்பினை ஒத்து விளங்கும் மற்றொரு கோயிலான மதங்கேசுவரர் கோயிலும் இக்காலத்தை ஒட்டியதாகக் கருதலாம். அத்துடன் செங்கல்பட்டுக்கு அண்மையிலுள்ள உரகடம் என்னும் இடத்திலுள்ள வாடாமல்லீசுவரர் ஆலயம், குடிமல்வம் என்ற இடத்திலுள்ள பரசுராமேசுவரம் திருவதிகையில் அமைந்த வீரட்டானேசுவர் கோயில் இக்காலத்துக்குரியனவே. இவற்றில் திருவதிகை வீரட்டானேசுவர் கோயில் நந்திவர்மன் காலத்திலேயே இருந்ததை அங்குள்ள அவன் கல்வெட்டுக்கள் மூலம் அறிகின்றோம். இவ்வாலயம் அதிட்டானத்திற்கு மேலுள்ள பகுதி சுதையில் ஆனதால் சிற்பக்கலையமைதி மாறுபாடுகளுக்குட்பட்டிருப்பினும் பண்டைய அடிப்படை மாறிாமல் இன்றும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் நந்திவர்மனை அடுத்து நந்திவர்மபல்லவன் (கிபி 796 - 847) காலத்ததாகத் திருச்சி ஆலம்பாக்கத்திலுள்ள கோயிலைக் கூறலாம். சமயச் சார்பற்ற கட்டடங்கள் என்ற வகையில் பல்லவ மரபில் உள்ள இவ்வரசன் அமைத்த மாற்பிடுகு பெருங்கிணறு குறிப்பிடத்தக்கது. கட்டடக்கலையென்றால் கோயிலை மட்டும் சுட்டிக்காட்டிய நிலையில்
இந்துதாகரிகத்தில் நுண்கலைகள் 68 Sசோதிலிங்கம்

பொதுமக்கள் பயன்படுத்துவதற்கு எடுத்த கிணற்றை எழிற்கோலத்துடிஜ் அமைத்துள்ள மன்னன் காலக் கலைத்திறன் போற்றற்குரியது. ஸ்வூஷ்கிகழ்க என்றழைக்கப்படும் வடிவத்தில் இக் கிணற்றின் அஞைர்o காணப்படுகின்றது. இக்கிணற்றைத் நந்திவர்மனின் ஐந்தாலுதெ ஆட்சியாண்டில் கம்பன் அரையன் என்பான் எடுத்துள்ளான். இதன் வடிவம் புதுமையாக இருப்பது இதன் சிறப்புக்களில் ஒன்றாகும்ெ தமிழ்நாட்டில் பல்லவர் கல்வெட்டோடும் பழைமையான சிற்பங்களோடும் குன்றாத சிறப்போடும் இன்றும் உள்ள கிணறு இது ஒன்றேயாகும்.
பல்லவர் காலத்துக்கோர் இறுதிச் சான்றாக இன்றளவும் நிலைத்து இருப்பது திருத்தணிகை வீரட்டானேசுவரர் கோயில். அபராஜிதவர்மனின் (870 - 890) காலத்திற்கான கலைச்சான்று இதுவொன்றே கோயிலின் அமைப்பும் அழகும் கிபி 9 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியிலிருந்த பல்லவர்காலக் கட்டடக் கலைப்பாணியை அறிவதற்குச் சான்றாக விளங்குகின்றன. இங்குள்ள பாடற் கல்வெட்டொன்றால் இக்கோயில் அபராஜிதவர்மனின் 18 ஆம் ஆட்சியாண்டில் நம்பி அப்பி என்பவரால் கற்றளியாக அமைக்கப்பட்டது என்பதை அறிகின்றோம். இக்கோயில் அடிமுதல் முடிவரை கருங்கல்லால் அமைக்கப்பட்டுள்ளது. அதிட்டானம் முதலாக ஆறு அங்கங்களையும் முறையாகப் பெற்றுத் திகழ்கின்றது. அதிட்டானம் முதல் பிரஸ்தாரம் வரை சதுரமாகவும் அதன் மேலுள்ள கிரீடமும் சிகரமும் தூங்கானை வடிவிலும் எழுப்பப்பட்டுள்ளதை தனிச் சிறப்பாகக் கருதலாம். இக்கோயில் அதிட்டானம் எளிய உபானம், ஜகதி, முப்படைக் குமுதம், கம்பு, கண்டம், கம்பு மகாபட்டிகை, வேதிகை ஆகிய உறுப்புக்களைக் கொண்டு திகழ்கின்றது. சுவர்ப்பகுதி தெற்கு, மேற்கு, வடக்கு ஆகிய மூன்று திசைகளிலும் கோட்ட மாடங்களைப் பெற்றுத் திகழ்கின்றது. இம்மாடங்களில் முறையே ஆலமர்செல்வன், திருமால், நான்முகன் ஆகிய இறையுருவங்களைக் காண்கிறோம். கோட்டங்களின் மேல் முகப்பை மகரதோரணங்கள் அலங்கரிக்கின்றன. சுவரை ஒட்டியுள்ள அரைத் தூண்களின் கால், இடை, கலசம், தாடி, குடம், பத்மம், பலகை யாவும் சதுரமாகச் செதுக்கப்பட்டுள்ளன. பலகை இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 69 Sசோதிலிங்கம்

Page 43
மீது வீரகண்டம், போதிகை ஆகிய அமைப்புக்களைக் காணலாம். கூரைப்பகுதி பூதவி, கபோதவி, யாளிவி என்ற மூன்று அமைப்புக்களுடன் விளங்குகின்றது. கபோதங்களின் கொடுங்கைப் பகுதி மூலைக் கருக்கள் செதுக்கப்பட்டு எழிலுறக் காட்டப்பட்டுள்ளன். தூங்காணை வடிவச் சிகரம் மிக்க அலங்காரங்களுடன் தெளிவாகச் செதுக்கப்பட்டுள்ளது. பொதுவாக பிரதார, கிரிடப் பகுதிகளில் பூதவரி காட்டப்படுதல் மரபு. ஆனால் இங்கு கிரிடப்பகுதியில் அன்னவரி காட்டப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இக்கோயில் அபராஜிதன் கலைப்பாணிக்குச் சிறந்ததோர் எடுத்துக்காட்டாகின்றது.
இவற்றுடன் இவனால் கட்டப்பட்ட வைகுண்டநாதர் கோயில் எனப்படும் பரமேஸ்வர விண்ணகரம் சிறப்பு மிக்கது. ஒன்றின் மேல் ஒன்றாக அமைக்கப்பட்ட மூன்று கருவறைகளைக் கொண்ட இக் கோயிலின் விமானம் பெரியது. உத்தரமேரூரில் உள்ள சுந்தரவரதர் கோயிலும் இம்மன்னனாலேயே கட்டப்பட்டது. இவனது காலத்தில் மலையாடிப்படி என்ற இடத்திற் குடைவரைக் கோயில் ஒன்று குவாலன் சாத்தன் என்பவனாற் கட்டப்படுகின்றது. தந்திரவர்மன் ஆலம்பாக்கம் என்ற இடத்திற் கைலாசநாதர் கோயில் எடுத்தான். மதத்தால் வைணவனாயினும் சிவனுக்கு கோயில் எழுப்பியது இவனது பரந்த சமய நோக்கினைக் காட்டிநிற்கின்றது. இவனால் கட்டப்பட்ட பள்ளிகொண்டருளிய தேவர் ஆலயம் பின்புறமுள்ள கோயிலில் திருமால் ஆனந்த சயனம் செய்து கொண்டிருக்கின்றார். இதன் கருவறையின் மேற்புற விமானம் மூன்று அடுக்குகளைக் கொண்டு மேலே கலசத்தைப் பெற்றுள்ளது. முன்புறம் கோபுரம் இருந்திருக்க வேண்டும். அதனை உள்ளடக்கிய ஒரு சுற்றுப்புறச் சுவர் காணப்படுகின்றது. அதன் மேற் பகுதியில் எருதுகளின் படிமங்கள் காணப்படுகின்றன.
மேற்குறிப்பிட்ட கால வகையிலான கோயில்கள் தவிர தக்கோலம், திருவெற்றியூர், உத்தரமேரூர் ஆகிய இடங்களிலும் பல்லவர் கட்டடக் கலைப்பாணிகளைக் காணலாம். இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 70 Sசோதிலிங்கம்

இவ்வாறாகப் பல கோயில்கள் இக்காலத்தில் எழுப்பப்பட்டபோதும் இவற்றுள் காலத்தால் முந்தியவையாகவும் நந்திவர்மனால் கட்டப்பட்டனவாகவும் இருப்பது காஞ்சியில் உள்ள இரு கோயில்களுமேயாகும். நுழை வாயிலிலுள்ள இவற்றின் முகப்பு மண்டபத்தை இரு தூண்கள் தாங்குகின்றன. இப்பிரிவில் அடங்கும் ஏனைய நான்கு கோயில்களும் வில்வளைவு போன்ற தன்மையில் கட்டப்பட்டுள்ளன. இவையே இக்கால பரிணாம வளர்ச்சிப் போக்கைக் காட்டி நிற்கவும், பிற்பட்ட காலங்களில் அம்மரபு முறை பேணவும் வழிகாட்டிய நிலையில் இவை மகாபலிபுரத்தில் உள்ள சகாதேவ இரதத்தைப் பின்பற்றியே எழுந்திருக்கலாமென பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரி கருத்துக் கூறுவதும் ஈண்டு நோக்கத்தக்கது.
பொதுவாக நோக்குமிடத்து படிமுறை கால கட்டங்களில் பல வளர்ச்சிக் கட்டங்களைக் கடந்து மரபுகளின் தொடர்ச்சியாகவும் பல புதிய பாணிகளின் நுழைவுடன் சிறப்புப்பெற்ற பல்லவ கோயிற் கட்டடக் கலையின் அடிப்படையிலிருந்தே பிற்காலக் கட்டடக்கலை மரபு வளர்ச்சி அடையவும் ஆரம்பித்தது. இத்தகைய பல்லவ கலைமரபு தென்னிந்தியாவுக்கு மட்டுமன்றி ஒவ்வொரு கட்டத்திலும் கடல்கடந்த நாடுகளெனக் கருதப்படும் தென்கிழக்காசிய நாடுகளிலும் சிறப்பாக இலங்கையிலும் பரவிற்று என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
இந்துநாகரிகத்தில்துணர்கலைகள் 71 Sசோதிலிங்கம்

Page 44
( சோழர்காலக் கட்டடக்கலை )
நீண்டகால வரலாறு கொண்ட சோழர் காலமானது கிபி ஒன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலே சோழ மன்னன் விஜயாலயன் தலையெடுத்து சோழப் பேரரசுக்கு அடித்தளம் இட்டபின்பே மேலோங்கிய நிலையில் எழுச்சியடைந்தது. இக்காலம் இந்துப் பண்பாட்டு வரலாற்றிலே தமிழகமானது அதற்கு முன்னரோ பின்னரோ இல்லாத அளவுக்கு பெருவளர்ச்சி பெற்றது. கிபி 850 இல் விஜயாலய சோழன் தஞ்சாவூரை முத்தரையர்களிடமிருந்து கைப்பற்றி சோழப் பேரரசை நிறுவினான். இவனால் நிறுவப்பட்ட இப்பேரரசு 13 ஆம் நூற்றாண்டு வரை சுமார் 400 ஆண்டுகள் நிலைபெற்றது. வடக்கில் கங்கையையும் தெற்கில் இலங்கையையும் வென்ற சோழர்கள் தென்கிழக்காசியாவில் கடாரத்தையும் வென்று கடல்கடந்த நாடுகளிலெல்லாம் செல்வாக்குச் செலுத்தலாயினர். ஆட்சிச் சிறப்பாலும் கடல்கடந்த வாணிபத்தாலும் ஈட்டிய பெரும் பொருள் கொண்டு அவர்கள் செய்த திருப்பணிகள் அவர்களின் வரலாற்றை பெரும்புகழ்கொண்ட காலமாக்கிய நிலையில் இவர்களுடைய ஆட்சிக் காலமே அரசியல் வரலாற்றிலும், பொருளாதார வரலாற்றிலும், கலை வரலாற்றிலும் ஓர் பொற்காலமாக திகழச் செய்தது.
இத்தகைய நிலையிலேதான் சோழர் பரம்பரை ஆட்சி இருபது தலைமுறைகளைக் கண்ட நிலையில் அவற்றில் விஜயாலய சோழன் தொடக்கம் 3 ஆம் இராசசிங்கன் வரையுள்ள காலம் ஒரு தனித்துவ மிக்ககாலம். காரணம் அவர்கள் அண்டை நாடுகளின் மீது எடுத்த படையெடுப்புக்களில் எல்லாம் வெற்றிநடை போட்டு அந்நாடுகளையெல்லாம் அடிமைப்படுத்திக் கொண்டதுடன் அந்நாடுகளின் பொருள் வளத்தையும் சூறையாடி பெரும் தனவந்தராகினர். அதேநேரம் அத்தகைய செயல் முறைகளுக்கெல்லாம் ஆண்டவனின் இன்னருள் காரணம் என உணர்ந்த
இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 72 SC3 substb

நிலையில் அவற்றுடன் கூடிய தமது மேதகு நிலையையும் வரலாற்றில் பொறிக்க ஆசைகொண்டு வெற்றியின் உன்னத படைப்பாக ஒவ்வொரு புதுக்கோயில்களை உருவாக்கிக் கொண்டனர். அவை பல்லவர் காலத்தில் உருவாக்கப்பட்ட கோயில்களினின்றும் முற்றுமுழுதாக மாற்றியமைக்கப்பட்ட நிலையில் புதிய ரகமான சோழர் கலைப்பாணியானது முறமையாகப் பரிணமிக்கக் காரணமாயின. இத்தகைய நிலையில் இவர்கள் தென் இந்தியாவிலும் அயல் நாடுகளிலும் எண்ணிறைந்த கோயில்கள் எழுப்பப் பட்டன. அவை சோழர்கால கலைவரலாற்றைப் பொதுவாக முற்காலச் சோழர்கால கலை, இடைக்காலச் சோழர்கலை, பிற்காலச் சோழர்கலை என மூன்று பிரிவாகப் பிரித்து நோக்கக் காரணமாயின. அவையாவன, (1) விஜயாலயன் காலம் முதல் உத்தம சோழன் காலம் வரையுமுள்ள
பகுதி (கிபி 850 - கிபி 985). (2) முதலாம் இராஜஇராஜன் காலம் முதல் அதிஇராஜேந்திரன் காலம்
வரையுள்ள பகுதி (கிபி 985 - கிபி 1070 வரை). (3) முதற்குலோத்துங்கன் காலம் முதல் மூன்றாம் இராஜேந்திரன் காலம்
வரையுள்ள பகுதி (கிபி 1070 - கிபி 1270)
என வரையறுக்கக் காரணமாகிய அதேநேரம் கிபி 850 இல் அரசுகட்டிலேறிய விஜயாலயன் ஆட்சி கிபி 870 இல் முடிவுற அவன் மகனான முதலாம் ஆதித்தன் முடிசூடுகின்றான். இவனுடைய ஆட்சிக் காலத்திலிருந்து சோழ அரசு எழுச்சி பெற்றது. முதலாம் இராஜஇராஜன் கிபி 985 - 1014 காலத்தில் மேலும் வளர்ந்து அவன் மகனான இராசேந்திரன் காலத்தில் கிபி 1012 - 1044 இல் உச்சக் கட்டத்தினை அடைகின்றது. இராசேந்திரன் வடக்கே கங்கை வரையுள்ள பிரதேசம் இலங்கை ஆகியவற்றை வென்று அடிப்படுத்தியதோடு அந்நாடுகளில் எல்லாம் இந்துப் பண்பாட்டையும் அவற்றுடன் கூடிய முறைமையான கலை வரலாற்றையும் காலங்காலமாகப் பேணி வளர்ப்பதற்கு அடித்தளம் இட்டதுமான காலம் இச் சோழர் காலம் எனலாம். இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 73 Sசோதிலிங்கம்

Page 45
1. விஜயாலய சோழன் ~ உத்தமசோழன் வரையுள்ள
காலம். (கி.பி 850 - 985 வரை).
இந்தியப் பேரரசுகளில் ஒன்றாகக் கருதத்தக்க முதற்கால சோழப் பேரரசைத் தோற்றுவித்த முதல்வன். இவன் முத்தரையரை வென்று அதற்குப் பிரதியீடாக தஞ்சாவூரில் துர்க்கைக்கு கோயில் ஒன்று கட்டினான் என திருவாலங்காட்டுச் செப்பேடுகள் செப்புகின்றன. இதனைத் தொடர்ந்து இவன் மகன் ஆதித்தன் பல சிவன் கோயில்களைக் கட்டினான். அவன் மகன் பராந்தகன் முதலில் தந்தைக்கே கோயில் கட்டி பெருமை பெற்றவன். இவனைத் தொடர்ந்து அவனது மகன் உத்தம சோழனும் ஆட்சிப்பீடம் ஏறிய நிலையில் இவர்கள் காலத்தில் படிமுறைத்திறனில் கோயில்கள் பலவும் கட்டப்பட்டு காலத்தின் பெயர் பொறிக்கப்பட்டன.
ஆரம்ப காலத்தில் சோழ மன்னர்கள் பல்லவ மன்னர் கையாண்ட மரபைப் பின்பற்றிக் கோயிற் கட்டடங்களை அமைத்தனர். இக்காலகட்டத்தில் கட்டப்பட்ட கோயில்களின் சிறப்புக்கள். (1) கோயில்கள் கற்றளிகளால் ஆக்கப்பட்டன. (2) கருவறை வட்டமாகவும் சதுரமாகவும் இருந்தன. (3) கருவறையில் தேவகோட்டம் கிடையாது. (4) நான்கு தளங்கள் வரை விமானம் இருந்தது. (5) அம்பிகைக்குத் தனிக்கோயில்கள் இல்லை.
விஜயாலயன் காலத்தில் தஞ்சை (நிசும்பசூதனிக் கோயில்), திருவீழிமிழலை, நார்த்தாமலை (விஜயாலய சோழீச்சுவரம்) திருவரங்க்ம் ஆகிய இடங்களிலும், ஆதித்த சோழன் காலத்தில் சீனிவாச நல்லூர் (குரங்கநாதர் கோயில்), திருச்செந்துறை (சந்திரசேகரர்) கோயில், திருமழப்பாடி (வைத்தீஸ்வரர்) கோயில், திருத்தவத்துறை (சப்த ரிஷீஸ்வரர்) கீழையூர் கோயில், கீழைப்பழுவூர் செந்தலை, கும்பகோணம் (நாகேஸ்வரர்கோயில்), திருவெண்காடு, திருக்கட்டளை முதலிய ஊர்களிலும் முதலாம் பராந்தகன் காலத்தில் சித்தூர், திருப்புள்ளமங்கை, திருநாம நல்லூர், காட்டு மன்னார்குடி முதலிய ஊர்களிலும் மற்றும் இந்துநாகரிகத்தில்துணிகலைகள் 74 Sசோதிலிங்கம்

செம்பியன், மாதேவியர், உத்தமசோழன் காலத்தில் கரந்தை, ஆடுதுறை, குத்தாலம், திருநாரையூர், செம்பியன் மாதேவி ஆகிய இடங்களிலும் பல கோயில்களைக் கட்டியும் புதுப்பித்தும். இவர்கள் கோயில் கட்டடக் கலைக்கு ஊக்கம் கொடுத்தனர். இவற்றின் பெறுபேறாக 10 ஆம் நூற்றாண்டளவில் இவர்கள் அமைத்த கோயில்களில் ஏராளமானவை அளவிற் சிறியனவாக வட்டவடிவமான கட்டடங்களாக புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைக்கப்பட்ட நிலையில் இங்கு பல்லவர் பாணி படிப்படியாக மாறி சோழர்காலப் பாணியாக வடிவமெடுப்பதை இக் கோயில்களில் காணமுடிந்துற்ற அதேநேரம் அதற்கு ஆதாரமாக நார்த்தா மலையிலுள்ள விஜயாலய சோழீச்வரத்தைக் குறிப்பிடலாம். இக்கோயிலானது விஜயாலயன் சோழர் காலத்தில் (850 - 877) இளங்கோ அதி அரையர் என்ற முத்தரையக் குறுகிய மன்னனால் கட்டப்பட்டது. முழுவதும் கல்லாலான இக்கோயிலைச் சுற்றி ஆறு சந்நிதிகளும் ஏழாவது இருந்ததற்கான அடையாளமும் காணப்படுகின்றன. இவைகளும் கற்றளிகளே. இக்கோயில் வளாகம் முழுவதுமே ஒரு மாபெரும் பாறைக்குன்றின் மீது எழுப்பப்பட்டிருக்கின்றது.
விஜயாலய சோழீசுவரம் மேற்கு நோக்கி இருக்கும் சிவன் கோயில், இரு காவலர்கள் (விஜயாலயன் பாணி) வாவியின் வெளியே நிற்கிறார்கள். முழுவதும் மூடப்பட்ட முகமண்டபம், கருவறை, அதைச் சுற்றி ஒரு திருச்சுற்று ஆகியவை இருக்கின்றன. கோயிலின் வெளிப்புறம் சதுரமாக இருந்தாலும் கருவறை வட்டவடிவமானது. இது “ஓம்’ என்னும் பிரணவத்தைக் குறிக்கிறது என்கிறார்கள். உள்ளே சிவபெருமான் லிங்க வடிவில் காணப்படுகின்றார்.
இக்கோயிலின் வளாகத்தை ஒரு மதிற்கவர் சூழ்ந்திருக்கின்றது. வளாகத்தின் மேற்கில் மலையின் சரிவு செங்குத்தாக மாபெரும் பாறையாக நெடித்தோங்கி நிற்கிறது. அதன் அடிப்பகுதியில் இரு குடைவரைக் கோயில்கள் பழியிலீசுவரம், சமணர்குட்டு என்ற பெயர்களில் இருக்கின்றன. பழியிலீசுவரம் கற்பாறைக்குள் குடையப்பட்ட கருவறையைக் கொண்டது. இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 75 Sசோதிலிங்கம்

Page 46
உள்ளே பட்டை வடிவில் சிவலிங்கம் வைக்கப்பட்டிருக்கின்றது. கருவறையின் வாயிலில் இரு காவலர் சிற்பங்களும் வெளியே மேடை போன்ற பகுதியில் நந்தி உருவமும் காணப்படுகின்றன. நந்திமேடையின் அடிப்பகுதியைப் பூத கணங்கள் அலங்காரம் செய்கின்றன. இக்குடைவரையை பல்லவ மன்னன் திருப்பதுங்கனின் ஏழாவது ஆட்சி ஆண்டில் (882) விடேய்விடுகு முத்தரையன் மகன் சாந்தன் பழியிலி என்பவன் குடைவித்தான் என்று கூறுகின்றார்கள். இந்தக் குடைவரையின் அருகிலேயே சமணர்குட்டு இருக்கிறது. அது ஒரு விஷ்ணு குடைவரைக் கோயில். நீள்சதுரமான இக்கோயில் கல்லில் குடையப்பட்ட கருவறையும் முகமண்டபமும் கொண்டது. கோயிலின் மூர்த்தியின் பெயர் திருமேற்கோயில் மாணிக்க ஆழ்வார் என்கின்றார்கள். ஆயினும் கருவறையில் இப்போது எந்த உருவமும் இல்லை. முகமண்டபத்தில் விஷ்ணுபகவானின் பன்னிரண்டு சிற்பங்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன. எல்லாச் சிற்பங்களின் கைகளிலும் பிரயோக (எறியும்நிலை) சக்கரம் இருக்கின்றது.
இக்குடைவரையின் முன்னால் மகாமண்டபத்தின் அடியில் அடித் தளம் மாத்திரம் காணப்படுகின்றது. இதில் கும்மாளமிடும் யானைகள், யாளிகள் ஆகியவற்றின் உருவங்களைச் செதுக்கியிருக்கின்றார்கள். இந்த அழகிய சிற்பங்களிடையே பெண்ணின் முகமும் சிங்கத்தின் உடலும் கொண்டதோர் உருவம் காணப்படுகின்றது. இந்த அடித்தளத்தில் உள்ள கல்வெட்டு ஒன்று “ஆண்டாண்டு தோறும் எழுபத்தைந்து கலம் நெல் பதர், கல், செத்தை ஆகியவை நீக்கி” கோயிலுக்குக் கொடுக்கப்படல்
வேண்டும் என்ற ஓர் அறக்கட்டளையைப் பற்றிக் கூறுகின்றது.
இக்கோயில்கள் இருக்கும் குன்றின் நடுப்பகுதியில் உள்ள தலையாறு விசிங்கம் என்ற சுனையில் ஸ்வரஹரேசுவரர் என்ற சிவபெருமானின் லிங்கம் நீரில் மூழ்கி இருக்கின்றது. மலையின் அடிவாரத்தில் தளும்பு சுனை என்ற குளம் காணப்படுகின்றது. இதில் எப்போதும் நீர் நிறைந்திருக்கும் என்கின்றார்கள். கருப்பக்கிரகத்திற்கும் பிரகாரத்திற்கும் மேலேயுள்ள விமானம் போகப்போக அளவில் இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 76 S.C. Isbistb

குறைந்திருக்கும் நான்கு அடுக்குகளைக் கொண்டுள்ளது. முதல் மூன்று மாடிகளும் சதுரமாகவும் மேலேயுள்ள மாடி வட்டமாகவும் உள்ளன. இவை எல்லாவற்றுக்கும் மேலே குமிழ் போன்ற சிகரமும் அதற்கு மேலே வட்டமான கலசமும் அமைந்து காணப்படுகின்றன. கோயிலின் முன் மூடுமண்டபம் ஒன்றுண்டு. சோழர் காலத்திற்கே தனித்துவமான சுவர்களும் அவற்றின் அழகிய வேலைப்பாடுகளும் காணப்படுகின்றன. நுழைவாயிலில் ஒரு காலின் மேல் மறுகால் வைத்த தோற்றமுடைய இரு துவார பாலகர்கள் உள்ளனர். பிரதான கோயிலைச் சுற்றி ஏழு துணைக்கோயில்கள் உள்ளன. ஆரம்பகால சோழர் கலைப் பாணியில் இது முக்கிய அம்சமாகும். கண்ணனூரில் முதலாம் ஆதித்த சோழன் காலத்திற் கட்டப்பட்ட பாலசுப்பிரமணியர் கோயிலும் பெரிதும் இந்த அமைப்பையே கொண்டுள்ளது.
கட்டடக்கலை வளர்ச்சியின் அடுத்த வளர்ச்சியை பூீரீநிவாச நல்லூரில் உள்ள பூரீரங்கநாதர் கோயிலில் காணமுடிகின்றது. இது முதலாம் பராந்தகன் ஆட்சிக் காலத்தில் எழுந்தது. இக்கோயிலிலுள்ள கருவறை, அந்தராளம், அர்த்தமண்டபம் ஆகிய உறுப்புக்கள் ஒரே காலத்தில் கட்டப்பட்டு இன்றும் சிதைவுறாமல் உள்ளன. அளவுக்கு மீறிய அலங்கார வேலைப்பாடுகளின்றி மிகவும் எளிமையாக இக்கோயில் அமைக்கப்பட்டு உள்ளது. தூணின் மேலேயுள்ள அகன்ற பகுதியும் அதற்கு மேலேயுள்ள அகன்ற பகுதியும், அதற்கு மேலேயுள்ள பலகைப் பகுதியும் பல்லவர் பாணியிலிருந்து வேறுபட்டே காணப்படுகின்றன.
மேலும் பழுவூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிபுரிந்த பழுவேட்டரையர்கள் பல கோயில்களைக் கட்டினர். மேலைப்பழுவூர் சுந்தரேஸ்வரர் கோயில், கீழைப்பழுவூர் திருவாலத்துறை மகாதேவர் கோயில், இடைப்பழுவூர் அகத்தீஸ்வரர் கோயில் என்பன இவற்றுள் முக்கியமானவை. இம்மூன்றினுள் அகஸ்த்தீஸ்வரம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஒரே திருச்சுற்றில் இரண்டு விமானங்கள் அமைந்துள்ளன. ஒன்று வடவாயில் பூரீகோயில் என்றும் மற்றது தென்வாயில் பூரீகோயில் என்றும் பெயர்பெறுகின்றன. இரண்டு கோயில்களும் தனிக்கற்களாலான இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 77 SCFITsiủasub

Page 47
கற்றளிகளாகும். ஒன்று சதுரமான சிகரத்தையும் மற்றையது வட்டமான சிகரத்தையும் கொண்டுள்ளன. கோபுரத்தை நோக்கியுள்ள முகமண்டபம் மிகவும் எழிலாக அமைந்துள்ளது.
இக்காலக் கட்டடக்கலை அமைப்பில் கோபுரத்திலும் பார்க்க விமானம் உயர்ந்த தன்மையில் அமைக்கும் முறைமை அறிமுகமானது. அதற்கேதுவாக திருநாவலூர் இராஜாதித்தேஸ்வரம், திருப்புறம்பியம் ஆதீத்தேஸ்வரம் காணப்பட்ட நிலையில் இக்காலத்தில் எழுந்த விக்கிரமகேசிச்சரம் ஒரே திருச்சுற்றில் மூன்று விமானங்களை உடையன. இது விமானத்திரயம் என கல்வெட்டு சான்று பகர்கின்றது. இவை சதுரமான சிகரத்தையும் உடையன. இவற்றின் பேறாக மூவர் கோயில் எனவும் அழைக்கப்படுகின்றன. மேலும் பராந்தகசோழன் காலத்திலும் பல கற்கோயில்கள் கட்டப்பட்டன. இவை ஆதித்தசோழன் கலைமரபைப் பின்பற்றியே எழுந்தன. இக்காலக் கோயில்களில் புள்ளமங்கையில் அமைந்துள்ள பசுபதி கோயில் சிறப்புடையது.
இக் கோயிலானது பராந்தன்காலத்து (907 - 955) கலைக்கோயில்
கலை வளர்த்த திருக்கோயிலில் இங்குள்ள கலைச்செல்வங்கள் புகழ்படைத்தவை. ஆயினும் இற்றைநாள் தமிழ் மக்களின் கவனத்தை ஈர்க்க இக்கோயில் ஏனோ தவறிவிட்டது. புள்ளமங்கை என்ற கோயில் இப்போ மருவி பசுபதி கோயிலாகிவிட்டது. கல்வெட்டுக்களில் இக்கோயில் திருவாளந்துறை என்று குறிப்பிடப்படுகின்றது. இறைவன் திருவாளந்துறை மகாதேவர் என்று அழைக்கப்படுகின்றார்.
“நீதியறி யாதரமணன் கையரொடு மண்டைப்
போதியவ ரோதும் முரை கொள்ளார்
புளமங்கை ஆதியவர் கோயிறிரு
வாலந்துறை தொழுமின் சாதிம்மிகு வானோர் தொழு தன்மை பெறலாமே”
என்பது திருஞானசம்பந்தர் இக்கோயில் பற்றிப் பாடிய பாடல்களில் ஒன்று. இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 78 SC3 Assfadb

இக்காலத்தில் எழுப்பப்பட்ட ஓர் உயர்ந்த மதிற்கவரின் உள்ளே கோயில் வளாகம் அமைந்திருக்கின்றது. கருவறை, அம்மன் சந்நிதி, மூன்று பரிவார சந்நிதிகள், மண்டபங்கள் கொண்டிருக்கின்றன. வளாகம் கோயிலின் கருவறையும் அதன் முகமண்டபமுமே சோழர்காலத்தில் கட்டப்பட்டவை. எஞ்சியவை பிற்காலத்தில் தோன்றியவை. கிழக்கு நோக்கியிருக்கும் கோயிலின் வாயில்பீது ஒரு கோபுரம் எழும்பியிருக்கிறது. மூன்று நிலைகளைக் கொண்ட கோபுரத்தின் அடிப்பகுதி கல்லாலும் மேற்பகுதி செங்கல்லாலும் கட்டப்பட்டது. மூன்றாவது நிலையின் நான்கு திசைகளிலும் நந்திகள் வைக்கப்பட்டிருக்கின்றன. சாலை வடிவில் இருக்கும் சிகரம் 8 கலசங்கள் கொண்டது.
கோபுர வாயிலைக் கடந்ததும் மண்டலம் எதிர்ப்படுகின்றது. மண்டபத்தினூடு சென்றால் மகாமண்டபத்தையும் முக மண்டபத்தையும் அதையடுத்து கருவறைகளையும் அடையலாம். திருச்சுற்றில் மூன்று பரிவாரத் தெங்வங்களின் சந்நிதிகள் இருக்கின்றன. இவற்றில் தென்மேற்கு மூலையில் விநாயகரும் மேற்கில் முருகனும் வடக்கில் சண்டேசுவரரும் கோயில் கொண்டிருக்கின்றர்கள். சண்டேசுவரரே கோயில் கருவூலத்திற்கு பொறுப்பானவராகக் கருதப்படுவார். முன்மண்டபம், மகாமண்டபம், பிற்காலத்தில் செங்கல்லால் கட்டப்பட்டவை. இவற்றின் பின்னால் இருக்கும் முக மண்டபமும் உண்ணாழியும் காலத்தால் முற்பட்டவை. இவை ஓரளவு நல்ல நிலையிலேயே காணப்படுகின்றன.
கருவறை 12 அடி அளவு கொண்ட சதுர அமைப்பில் உருவாகி இருக்கிறது. உள்ளே திருவாளந்துறை மகாதேவர் இலிங்க வடிவில் எழுந்தருளி இருக்கின்றார். வெளிப்புறச் சுவரில் இருக்கும் மூன்று மாடங்களில் தட்சணாமூர்த்தி, லிங்கோற்பவர், பிரம்மா ஆகியேளின் சிற்பங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. கருவறை, முகமண்டபம் ஆகியவற்றின் அடித்தளம் பூமியின் மட்டத்திற்கு கீழே இருப்பதால் தரைக்கும் இந்தக் கட்டடங்களுக்கும் இடையே மூன்று புறமும் நான்கு அடி ஆழக் குழியாக இருக்கிறது. மழைக் காலங்களில் இக்குழியில் நீர் நிரம்பி இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 79 Sசோதிலிங்கம்

Page 48
கோவிலின் அழிவுக்கும் துணையாகவே காணப்படுகின்றது. இது பிரமபுரீஸ்வரர் கோயில் என்னும் திருவாளந்துறை மகாதேவர் கோயில் என்றும் அழைக்கப்படுகின்றன. இவை தவிர திருவாவடுதுறை, திருவாமாத்தூர், நங்கவரம், திருமால்புரம், எறும்பூர், காட்டு மன்னார்குடி முதலிய ஊர்களில் உள்ள கோயில்களும் பராந்தக சோழர் காலத்தன. பராந்தக சோழனுக்குப் பின்னர் கண்டராதித்தர், அரிஞ்சயன், சுந்தரசோழன், உத்தமசோழன் முதலியோரால் பல கோயில்கள் கட்டப்பட்டன. கண்டராதித்தரின் தேவியாரும் உத்தமசோழனின் தாயாருமான செம்பியன் மாதேவியர் பாடல்பெற்ற பல தலங்களைக் கற்றளிகளாக மாற்றியமைத்தார். வடக்கே காஞ்சிபுரத்திலிருந்து தெற்கே நாகபட்டிணம் வரை இவ்வம்மையார் கோயில்களை அமைத்தார். அவை செம்பியன் மாதேவி, கோனேரிராசபுரம், ஆடுதுறை, திருக்கோடிகாவில், குற்றாலம், திருநாரையூர், கண்டாதித்தம், விருத்தாசலம், திருவெண்ணை நல்லூர் ஆகிய இடங்களில் உள்ளன. செம்பியன் மாதேவியார் காலத்துக்கு முன்பு மூன்று அல்லது ஐந்தாக இருந்த தேவகோட்டங்கள் இக்காலத்தில் ஒன்பது முதல் பதினாறு வரை விவாக்கப்பட்டிருந்தன. இவை இக்கால கட்டடக்கலை வரலாற்றின் சிறப்புக்கேற்ற ஆதாரமாகின.
இக்கால கட்டடக்கலை வரலாறு மூன்று முறமைகளைக் கையாண்டு உயர்வாக அவற்றைப் பேணிய நிலையில் அவையாவன, (1) செங்கல், சுண்ணங் கொண்டு கட்டப்பட்டவற்றைக் கற்றளிகளாய்
மாற்றியமைத்தல். (2) புதியனவாய் கற்கோயில்கள் எழுப்புதல். (3) கோயில்களுக்கு நிலந்தங்கள் விடல், கோயில் நிலந்தங்களை இறை யிலிகள் ஆக்குதல், அணிகலன்கள், பாத்திரங்கள் வழங்கல், பால், நெய், தயிர் பெற ஆவினங்கள் அளித்தல்.
இத்தகைய நிலையில் சோழப் பேரரசின் முதல்வனான விஜயாலயன் புதுக்கோட்டை மாவட்டத்தில் நார்த்தாமலைக்கு தென்மேற்கில் விஜயாலய சோழேச்சரம் என்ற கோயிலைக் கட்ட அடுத்து வந்த முதலாம் ஆதித்தன் இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 80 SCs suggbastb .

காவிரிக் கரையிலிருந்த பல கோயில்களைக் கற்றளிகளாக்கினான். இவற்றுள்ளே திருப்புறம்பியக் கற்றளி சிறந்ததென்பர். இக்கோயிலின் சிற்பவனப்பு போற்றத்தக்கதாகும். இக்கற்றளி ஆதீத்தேச்சரம் என்று இவன் பெயராலேயே வழங்குகின்றது. இவன் மகனான முதலாம் பராந்தகன் காலத்தில் திருவிடை மருதூர், திருச்செந்துறை, உறுமூர்ச் சிவாலயங்கள் கற்றளிகளாக்கப்பட்டன. பராந்தகன் மகன் கண்டராதித்தன் சைவனாயினும் சமரசநோக்கு மிக்கவனாக இருந்து செயல்பட்டான் என்பதற்கு இவன் உருவாக்கிய கண்டராதித்திய சதுர்வேதி மங்கலத்திலே எழுப்பிய திருமால் கோயில் சான்றாகும். புறச்சமயமான சமணத்தையும் புறக்கணிக்காதவன் என்பதற்கு இவன் பெயராற் தென்னாற்காட்டில் அமைந்த கண்டராதித்தப் பெரும்பள்ளி தக்க சான்றாகின. இத்தகைய தன்மை கொண்டதான கட்டக்கலை வரலாற்றை அறிமுகம் செய்ததன் பிரகாரம் அடுத்த காலத்தில் மிகப் பிரமாண்டமான ஒரு கட்டடக்கலை வரலாற்றுக்கு அடித்தளம் இட்டகாலம் இக்காலம் என்றே கூறமுடிகின்றது.
II. முதலாம் இராஜஇராஜன் காலம் முதல் அதிராஜேந்திரன் வரையுள்ள காலம். (கி.பி 985 - 1070 வரை).
விஜயாலயனுக்குப் பின்வந்த சோழர்களில் சோழப்பேரரசை நன்கணம் அமைத்து நிலைபெறச் செய்த பேரரசன் இராஜராஜனே ஆவான். இவன் உண்டாக்கிய பேரரசு ஏறக்குறைய இரண்டு நூற்றாண்டுகள் நிலைபெற்று இருந்ததெனின் இவன் இட்ட அடிப்படை எவ்வளவு உறுதிவாய்ந்ததாக இருந்திருத்தல் வேண்டும் என்பது சொல்லாமலேயே புரியும். இவன் ஆண்டகாலம் சோழர் வரலாற்றிலே பொற்காலம் எனலாம்.
இவரது ஆட்சியின் போது பல கோயில்கள் கட்டப்பட்டது. சிவன், விஷ்ணு, புத்தர், சமணர் என்று வெவ்வேறு வழிபாடுகளுக்காக இவரும் இவரது குடும்பத்தாரும் ஒப்பில்லாத ராஜராஜீஸ்வரம் உட்பட 54 கோயில்களை எழுப்பினர். இது உலக வரலாற்றில் ஓர் சாதனை. இவரது தமக்கையார் குந்தவை நாச்சியார் ஒரே மாதிரியான மூன்று கோயில்களை (சிவன், விஷ்ணு, ஜெயின்) கட்டினார். இராஜராஜனின் மகன் இந்துதாகரிகத்தில்துணர்கலைகள் 81 Sசோதிலிங்கம்

Page 49
இராஜேந்திரன் இலங்கையில் கட்டிய கோயில்களோடு கங்கைகொண்ட சோழபுரத்தில் ஒரு சிவன் கோயிலை தஞ்சைப் பெருங்கோயிலின் மத்தியிலே ஆனால் சற்று சிறிய வடிவத்தில் எழுப்பியுள்ளார்.
இராஜஇராஜன் ஒரு சிறந்த மன்னர். அவரிடம் எல்லாக் குணநலன்களும் பக்தி, வீரம், தாராளகுணம், நன்றியுணர்வு, இனிமை, பிறரை மதித்தல், ஆழ்ந்த அறிவு, தூய்மை, சலனமடையாதிருத்தல், கண்ணியம், இரக்கம், கொள்கையில் உறுதி விடாமுயற்சி, குடிமக்கள் நலனில் அக்கறை இத்தனையும் நிறைந்திருந்தன. ஆயினும் கடல்கடந்த நாடுகளில் அவருடைய வெற்றியோ செங்கோல் வளையாத ஆட்சியோ போர்த்திறனோ அவருடைய நினைவுகளை நிரந்தரமாக்கிவிடவில்லை. மாறாக அவர் கட்டிய இந்த அற்புத சிவன் கோயில் அவருடைய ஆட்சியின் மேன்மைக்கோர் நினைவுச் சின்னமாக அமைந்தது. அவருடைய காலமே தமிழ்நாட்டு வரலாற்றின் ஒரு மகோன்னத காலமாக இருந்ததை இக்கோயில் காட்டுவதாகவும் அமைந்தது. இது தொடர்பாக உலக வரலாற்றில் அவருடைய பெயர் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவும் வைத்தது. இவனது ஆட்சியில் நுண்கலை நன்கு வளர்ச்சியடைந்த நிலையில் அதில் சிறப்புமிக்க கலையாக அமைந்து காணப்பட்டது கட்டடக்கலை வரலாறு ஆகும். அக்காலத்திலே சிற்பியரே கட்டடக்கலை நிபுணராகவும் வண்ணம் பூசுவோராகவும் பணிபுரிந்தனர். தஞ்சைக் கோயிலில் அதைக்கட்டிய இந்த விற்பன்னர்களின் இந்த மூன்று கலைகளும் மிக நேர்த்தியாக இணைந்திருப்பதைக் காணமுடியும். சோழர்களுக்கு கோவில் கட்டுவது என்பது தங்களது கலையுள்ளத்தின் ஒரு வெளிப்பாடு மட்டுமன்றி அது ஒரு வாழ்க்கை முறையாகவும் இருந்திருக்கின்றது. இதனால் அக்கால சமுதாய வாழ்க்கை கோயிலையே சார்ந்து சுழன்றிருக்கிறது. நாட்டியம், நாடகம், இசை ஆகியவையும் கோயிலில் அரங்கேறி கவின் கலைகள் வளர்க்கப்பட்ட ஒரு மையமாகவும் கோயில் செயல்பட்டிருக்கிறது. சோழரின் 450 ஆண்டுகால புகழ்பெற்ற வாழ்வு விஜயாலய சோழனின் காலத்திலே தொடங்கியது. ஆயினும் அவர்தம் மகோன்னத காலம் இராஜராஜன் எனும் அந்த பெரும் ஆற்றல் அரியணை ஏறியபோதுதான் தொடங்கியது. இந்துநாகரிகத்தில் நுணர்கலைகள் 82 Sசோதிலிங்கம்

இவனது ஆட்சிக்காலத்தில் பாடல்பெற்ற பல கோயில்கள் கற்றளிகளாக மாறின. புதிய பல சிவன் கோயில்கள் கட்டப்பட்டன. பல கோயில்கள் பலராலும் ஆதரிக்கப்பட்டன. கோயிற்பணிகள் வியத்தகு முறையில் பெருகின. இதனாற் கட்டடக்கலை வரலாறு ஒப்புயர்வு பெற்று பிரமிக்கத்தக்க வளர்ச்சியும் அதற்கு ஏதுவாக பெருநிதி கொண்டு பெருங்கோயில் அமைக்கப்பட்டன. முதலாம் இராஜஇராஜனும் அவனுடைய மகன் முதலாம் இராஜேந்திரனும் பற்பல நாடுகளைக் கைப்பற்றி சோழ இராச்சியத்துடன் இணைத்தனர். அதனாற் பெற்ற பொன்னையும் பொருளையும் கொண்டு ஈடிணையற்ற பெரும் கோயில்கள் கட்டினர். இவர்களின் கீழிருந்த சிற்றரசர்களும் குறுநில மன்னரும் கூடப் பற்பல கோயில்களை அமைக்கத் துணைநின்றனர்.
அதேநேரம் இராஜராஜன் காலம் வரை சிறிய கோயில்களே கட்டப் பட்டன. இவன் ஆட்சிப்பீடமேறிய பின்னரும் ஆரம்பத்தில் சிறிய கோயில்களே அமைக்கப்பட்டன. காலப்போக்கில் பிரமாண்டமான கோயில்கள் கட்டப்பட்டன. அதற்கு ஏதுவாக இராஜஇராஜன் கட்டிய தஞ்சைப் பெருங்கோயிலும் முதலாம் இராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட கங்கை கொண்ட சோழேஸ்வரமும் சான்று பகர்ந்த நிலையில் இவ்விரு கோயில்களும் பெரும்பாலும் ஒரே விதமான அமைப்புடையனவாகும்.
இராஜராஜன் காலம்:
இராஜராஜன் தமிழகத்தை ஆட்சிபுரிந்த ஈடிணையில்லா மன்னன் ஆவான். அவன் காலத்தில் ஆட்சிபுரிந்த எந்த இந்திய மன்னரும் அவனுக்கு இணையாகமாட்டர்கள். வீரமும் பக்திப்பெருக்கும் கலையார்வமும் கொண்ட இவன் எடுத்த தஞ்சைப் பிரகதீஸ்வரர் ஆலயம் தென்திசை மேரு என்றும் இராஜராஜேஸ்வரம் என்றும் அழைக்கப்படுகின்றது. இது சோழமன்னரது ஆட்சிக்குப் பெரிய அறிகுறியாகவும் சிறப்பாக தமிழகத்தின் கலையறிவை உணர்த்த வல்லதாகவும் இருப்பது தென்னிந்தியக் கட்டடக்கலையின் மிகவுயர்ந்த நிலையை இக்கோயில் சுட்டிநிற்கின்றது.
இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 83 Sசோதிலிங்கம்

Page 50
காலத்தை வென்ற இக்கோயில் முழுவதும் கல்லால் ஆனது. இது இராஜஇராஜனின் 19 வது ஆட்சி ஆண்டில் கட்டத் தொடங்கி அவரது 25 ஆவது ஆட்சி ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு அந்த ஆண்டின் 275 ஆவது நாள் குடமுழுக்கு செய்யப்பட்டது. கோயில் வளாகம் 320,000 சதுரஅடி பரப்பில் விரிந்திருக்கின்றது. 218 அடி உயரத்தில் இந்தியத் தீபகற்பத்திலேயே மிக உயரமான ஒரு விமானம், ஓர் அர்த்த மண்படம், ஒரு மகாமண்டபம், ஒரு முகமண்டபம் இவை அனைத்தும் ஒரே கட்டடமாக அமைக்கப்பட்டிருக்கின்றன. எதிரே ஒரு நந்திமண்டபமும் வளாகத்தில் அம்மன், சுப்பிரமணியர், சண்டேசுவர், பிள்ளையர் ஆகியோர் சந்நிதிகளும் இருக்கின்றன. சுற்றிலும் திருச்சுற்று மாளிகை காணப்படுகின்றது. கோயிலின் தரை மட்டத்திலிருந்து உயர்த்தப்பட்டு தூண்கள் தாங்கும் கூரை கொண்ட தாழ்வாரம் இத்திருச்சுற்று மாளிகை, இதனைத் தொடர்ந்து ஒரு உட்சுவரும் அரணாக புறச்சுவரும் அமைக்கப்பட்டிருக்கின்றன. கிழக்குப் பகுதியில் இரண்டு பெரிய கோபுரங்கள் இருக்கின்றன.
இவற்றில் ஒன்று கேரளாந்தகன் திருவாயில் என்றும் மற்றையது இராஜராஜன் திருவாயில் இதனைக் கடந்து கோயிலுக்குள் நுழைந்ததும் கருங்கல், செங்கற்களால் பரப்பப்பெற்ற சுமார் 500 அடி நீளமும், 250 அடி அகலமும் உள்ள ஒரு பரந்த பேரவை போன்ற வெளிமுண் மேடை இருக்கின்றது. அதன் மீது ஒரே கல்லால் ஆன நந்தியும் அதனைப் பாதுகாக்க நந்திமண்டபம் எதிர்ப்படும். மேற்கு நோக்கி இருக்கும் இந்த மாபெரும் நந்தி 11 அடி உயரத்தில் படுத்த நிலையில் இருக்கின்றது. நந்தி மண்டபத்தைக் கடந்ததும் கோயிலின் முன் மண்டபம் வரும். நடுவிலும் இருபுறமும் இருக்கும் படிகள் வழியே மேலே ஏறிச்சென்று மண்டபத்தை அடைய வேண்டும். சிற்பங்கள் செதுக்கப்பட்ட கல் தூண்களின் வரிசையைக் கடந்ததும் முன் மண்டபத்தை ஒட்டியபடி மகாமண்டபம் இருக்கின்றது. வாயிலின் இரு புறமும் இரு மாபெரும் காவலர்கள் (துவாரபாலகர்கள்) நிற்பதைக் காணலாம். இந்துநாகரிகத்தில்துண்கலைகள் 84 Sidligflådeb

உட்கோயில் இறையகம், அர்த்தமண்டபம், மகாமண்டபம், தியாகராசர் சந்நிதியுள்ள தாபன மண்டபம், நர்த்தன மண்டபம், வாத்திய மண்டபம் என்று ஆறு பகுதிகளையுடையது. கோயிலிலுள்ள ஏழு வாயில்களிலும் 18 அடி உயரமும் 8 அடி அகலமும் உள்ள 14 வாயிற் காவலர் சிலைகள் உள்ளன. உள்ளே நுழைந்ததும் பிரமாண்டமான தூண்களை வரிசை வரிசையாகக் காணலாம். அவற்றின் மீது மிகப் பெரிய குறுக்குக் கற்களை வைத்து கூரை அமைத்திருக்கின்றார்கள். வெளியில் எவ்வளவுதான் வெயில் கொடுமை இருந்தாலும் உள்ளே ஒரு குளிர்ச்சி நிலவுவதை உணரலாம். இக்கோயிலின் வாசல்கள் பற்றி பெரியபுராண இலக்கியம் விபரித்துச் சென்ற நிலையில் இதனை இராஜஇராஜன் மாற்றியமைத்தான் எனக் கூறப்படுகின்றது. இக்கோயில் நிலப்பரப்புக்கு மேல் உயர்ந்த மேடையில் நிறுவப்பெற்ற தன்மையினால் இது மாடக்கோவில் என்பதற்கேற்ற இலக்கணம் பெற்றதெனலாம். அத்துடன் நான்கு பக்கங்களிலும் முக்கியமான இடங்களில் துணைக் கோயில்கள் அமைக்கப் பெற்றுள்ளன.
கோயிலின் முக்கிய பகுதி முழுக்கோயிலுமே ஒரு தனித் தன்மையையும் ஒரு வடிவத்தையும் பெறும் பகுதி கோயிலின் விமானம்தான். இது தரைமட்டத்திலிருந்து 218 அடி உயரத்தில் நெடித்தோங்கி நிற்கின்றது. இரண்டு அடுக்குகளைக் கொண்ட கருவறை அடிப்பாகத்தில் 98 அடி அகலம் கொண்ட சதுர அமைப்பு அடுக்குகள் இடையே கொடுங்கைகள் துருத்திக் கொண்டிருக்கின்றன. முகல் நிலையில் தேவகோட்ட மாடங்களில் சிவபெருமானின் 28 முழு உருவச் சிலைகள் வைக்கப்பட்டிருக்கின்றன. இவை சிவனின் பலவித தோற்றங்கள், இரண்டாவது நிலையில் முதலாவது நிலையிலிருக்கும் சிலைகளுக்கு நேர்மேலே திரிபுராந்தகராகத் தோன்றும் சிவனின் சிலைகள் வெவ்வேறு பாவங்களில் நிற்கின்றன.
இந்த அடிப்பாகத்தின் மேல் 13 நிலைகளில் விமானம் இன்னும் மேலே எழுந்து கூராக நிற்கின்றது. தமிழரின் கட்டடக் கலையின் தன்மையின்படி ஒரு கோயில் சாதாரண மக்களின் குடியிருப்புக்களை இந்துநாகரிகத்தில் துணிகலைகள் 85 Sசோதிலிங்கம்

Page 51
விட வேறுபட்டதாக இருந்துவிட்டால் மாத்திரம் போதாது. அது அந்தச் சுற்றுச் சூழலை விட மிகவுயர்ந்து நிற்கவேண்டும் என்ற நியதிக்கோர் எடுத்துக்காட்டாக விமானம் கம்பீரமாக நிற்கின்றது. இது அற்புதமானதோர் கலைப்படைப்பாகும். உச்சியில் போடப்பட்ட தளம் 25 அடி சதுரமானது. ஒரே கருங்கல் ஆனது இதன் நிலை 80 டன். விமானத்தின் மேல் தூபித்தறியில் வைக்கப்பட்டுள்ள செப்புக்குடம் நிறை 3083 பலம் ஆகும். அதன் மேல் போர்த்துள்ள பொற்தகடு 2962/, கழஞ்சு நிறையுள்ளது.
ஆனால் இவை இப்போது இல்லை. இதன் பிரமரத்தினக்கல் ஒரே பாறையானது. என்றும் 80 டன் எடையுள்ளது என்றும் கூறியவற்றை திருச்சிராப்பள்ளி நகரிலிருக்கும் டாக்டர் மாஇராசமாணிக்கனார் வரலாற்று ஆய்வு மையத்தினர் சிறப்பாக வரலாற்று ஆய்வுமேதை இரா. கலைக்கோவன் அவர்கள் தமது சகபாடிகள் சகிதம் ஆய்வு மேற்கொண்டு அவை ஒரே பாறையால் ஆனது அல்ல பல கற்களை இணைத்து ஒரே பாறை போன்று தோன்றும் வண்ணம் மிக நேர்த்தியாக இணைக்கப் பட்டிருக்கின்றது எனக் கூறிய கருத்தும் கவனிக்கற்பாலது.
இந்தக் கல்லின் நான்கு மூலைகளிலும் நந்தியின் உருவங்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. ஆறரை அடி நீளமும் ஐந்தரை அடி அகலமும் கொண்டவையாகும். இத்தகைய தன்மைகள் இந்தியக் கட்டடக்கலையின் ஒப்புயர்வற்ற படைப்பாகும். இக்கோயிலென்பதும் இதன் விமானம் திராவிடக்கலையின் மகோன்னதத்தை விளக்கி நின்றதென்பதையும் யாவரும் மறுக்கமுடியாது என பேர்ஸி பிறவுண் என்னும் அறிஞர் கருத்துக் கூறுவர். மேலும் கட்டடக்கலை வரலாற்றுக்கு ஈடாக சிற்பக்கலை வரலாறும் வளம்படுத்தப்பட்டுள்ளன. என்பதற்கு ஏற்புடையதாக கருவறையில் 11 அடி உயரத்தில் அழகிய லிங்க வடிவில் சிவபெருமான் தரிசனம் தருகின்றார். இத்துடன் கோயிலில் காணப்படுகின்ற நந்தி வடிவம் இதன் உயரம் பன்னிரண்டு அடி நீளம் பத்தொன்பதரை அடி, அகலம் எட்டேகால் அடி கொண்டதாகக் காணப்படுகின்றது. இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 86 Sசோதிலிங்கம்

இவ்வாலய சிறப்புக்களை நோக்கும்போது இத்தலம் திட்டமிடப்பட்டு நேர்த்தியாகக் கட்டப்பட்டிருக்கின்றது. வெகு தூரத்திற்கு அப்பாலிருந்து மிகவும் தரமான கற்களை தேடிக்கொண்டு வந்து அவற்றைப் பெருக்கி அழகுறச் செதுக்கியிருக்கின்றார்கள். அதன் உறுதிவாய்ந்த கட்டட அமைப்பும் ஒரு நிரந்தரத் தன்மையைத் தோற்றுவிக்கின்றது.
இக்கோயிலின் சமகாலத்திலும் அதன் பிறகும் எத்தனையோ கோயில்கள் எழுந்தன. ஆயினும் எந்தக் கோயிலையும் தஞ்சை ராஜராஜீஸ்வரம் கோயிலோடு ஒப்பீடு செய்ய இயலாத அளவுக்கு இத் திருக்கோயில் எழுந்து நிற்கின்றது. இக்கோயில் போன்று உலகில் வேறு எந்தக் கோயிலுமோ வரலாற்றுச் சின்னமோ தன்னுடைய வரலாறு பற்றிய விளக்கமான சாதனங்களைத் தன்னகத்தே கொண்டிருக்கவில்லை. இந்தக் கோயிலின் தாங்குதளக் கற்களிலும் குமுதவரிகளிலும் வேறு பகுதிகளிலும் இருக்கும் கல்வெட்டுக்கள் இக்கோயில் நிர்மாணிக்கப்பட்ட கதையையும் அது நிறுவப்பட்டபோது இருந்த மகோன்னத நாட்களின் சமுதாய அமைப்புக்கள் பற்றிய விரிவான விளக்கங்களையும் சொல்லுகின்றன. மேலும் கோயிலுக்கு அளிக்கப்பட்ட அறக்கட்டளைகளின் பட்டியல்கள், வழிபாடு செவ்வனே நடைபெற செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகள், கோயிலுக்கு அளிக்கப்பட்ட உலோகத்தினாலான சிலைகள், சிலைகளுக்குரிய தங்கம், வெள்ளியினாலான அணிகலன்கள், கோயிலின் அதிகாரிகள், அலுவலர்கள், ஏனைய பணியில் இருப்போரின் பெயர்கள், முகவரிகள், சம்பளங்கள் முழுவதுமே சிறிய சிறிய விபரங்களைக்கூட விட்டுவிடாமல் துல்லியமாக எழுதப்பட்டுள்ளமை இக்கோயிலின் தனித்துவத்தன்மையை என்றும் எடுத்தியம்பத்தக்க ஆதாரமாகின்றன.
இராஜஇராஜ சோழனினால் தஞ்சைப் பெருங்கோயில் மட்டுமன்றி சித்துர் இருங்கோளீஸ்வரம், மேற்பாடி அருஞ்சிகைமீஸ்வரம், ஆற்றுர் இராஜஇராஜ விண்ணகரம், ஈழத்தில் பொலனறுவையை உள்ளிட்ட பல சிவன் கோயில்கள் கட்டப்பட்டன. இவற்றில் 10 சிவாலயங்கள், ஐந்து விஷ்ணு ஆலயங்கள், ஒரு காளி கோயில் என எடுத்துரைக்கப்பட்ட இந்துநாகரிகத்தில்துண்கலைகள் 87 Sசோதிலிங்கம்

Page 52
நிலையில் இவை நகரத்தின் பகுதிகள் பலவற்றிலும் சைவ, வைணவக் கோயில்களாக கலந்து அமைக்கப்பட்டன. அவற்றுட்சில கோயில்கள் தனித்தனியாக அமைந்திருந்தன. ஏனையவை பல தொகுதிகளாகக் காணப்பட்டன. அவற்றுள் ஐந்து கோயில்கள் அரண்களாற் சூழப்பட்ட நகரின் நடுப்பகுதியில் காணப்பட்டன. தூபாராமம், வட்டதாகே போன்ற பெளத்த கோயில்கள் அமைந்துள்ள நாற்சதுர மேடையின் தெற்குப் புறத்தில் முதலாம் சிவாலயம் அமைந்திருக்கின்றது. நகரத்தின் வடக்கு வாசலுக்குச் சமீபத்தில் மூன்று கோயில்களின் இடிபாடுகள் காணப்படுகின்றன. சிவாலயமொன்றும் பெருமாள் கோயிலொன்றும் பிள்ளையார் கோயிலொன்றும் அமைந்திருந்தன.
வட வாயிற்புறத்தின் வழியே நகருக்குப் போகும் வீதியின் வலது புறத்தில் மிகப்பெரிய சைவாலயமொன்றின் இடிபாடுகள் காணப்பட்டன. பிள்ளையாரின் உருவமொன்று அவற்றிற்கிடையே காணப்பெற்றதால் அங்குள்ள அழிபாடுகள் பிள்ளையார் கோயிலொன்றின் அழிபாடுகளாதல் வேண்டுமென்று தொல்பொருள் திணைக்களத்தவர்கள் கருதினார்கள். அதற்குத் தெற்கிலே 80 அடி தூரத்திலே சிவாலயமொன்று அமைந்து இருந்தது. அதனை ஏழாம் சிவாலயமென்று இலக்கமிட்டனர். அதில் அமைந்திருந்த இலிங்கத்தின் பீடத்திலே நிசங்கமல்லனது சாசனம் காணப்படுவதால் ஏழாம் சிவாலயம் 13 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அமைக்கப்பெற்றது என்று கருதலாம்.
இந்துக் கோயில்களில் பெரும்பாலானவை நகரின் வெளிப்புறப் பகுதியிலே அமைந்திருந்தன. மின்னேரியாவிலிருந்து தோப்பவாவிக்குப் போகும் வீதியின் இரு பக்கங்களிலும் மூன்று கோயில்கள் இருந்தன. அவற்றிலொன்று நான்காம் சிவாலயமாகும். இன்னொன்று மூன்றாம் விஷ்ணு கோயிலாகும். மூன்றாவது கோயில் அம்மன் கோயிலாக அமைக்கப்பட்டு இருந்தது. அவற்றிலிருந்து அரை மைல் தூரத்தில் வடக்கு நோக்கிப் போகும் பாதையிலே ஆறாவது சிவாலயத்தின் அழிபாடுகள் காணப்பெற்றன. அதற்குத் தெற்கில் ஐந்தாம் விஷ்ணு
இந்துநாகரிகத்தில் துணிகலைகள் 88 Sசோதிலிங்கம்

கோயில் அமைந்திருந்தது. பொலனறுவையில் அமைந்த இந்துக் கோயில்களிற் பெரும்பாலானவை நகரின் வெளிப்புறங்களைச் சேர்ந்தவை என்பது இதுவரை கவனித்தவற்றின் மூலம் தெளிவாகின்றது. அவை இரண்டு அல்லது மூன்று கோயில்கள் அடங்கிய தொகுதிகளாக அமைந்திருந்தன. ஒவ்வொரு தலத்திலும் விஷ்ணு கோயில் அமைந்து இருந்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். சிவாலயங்களுக்கு மிகச் சமீபத்திலே பெருமாள் கோயில்கள் அமைந்திருந்தமை மற்றுமொரு குறிப்பிடத்தக்க அம்சமாகும். சைவர்களும் வைணவர்களும் இவ்வாலயங்களின் சுற்றுப்புறங்களிலே கூடிவாழ்ந்தனரென்றும் அவர்களிடையே சமயவேற்றுமைகள் அதிகம் பாராட்டப்படவில்லை என்றும் கருதலாம்.
இக்காலத்தில் பல கோயில்கள் எழுந்தபோதும் அவற்றின் தனித்துவத்தில் முதலாம் சிவாலயம் சிறப்புப் பெறுகின்றது. அதன் வனப்புமிக்க கட்டட வேலைப்பாடுகள் காரணமாகவும் நகரின் மத்தியிலே பிரதான பெளத்த கோயில்களுக்குச் சமீபமாக அமைந்திருப்பதனாலும் பொலனறுவையிலுள்ள முதலாம் சிவாலயம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றது. அக்கோயிலின் அழிபாடுகள் சுமார் நூறு வருடங்களுக்கு முன் அகழ்வுகளின் மூலம் அடையாளம் காணப்பட்டபோது அவை கலாவிமர்சகர்களதும் பிறரதும் கவனத்தைப் பெற்றன. தொல்பொருள் திணைக்களத்து ஆணையாளரான எச்சீபிபெல் முதலாம் சிவாலயத்தை மேல் வருமாறு வர்ணிக்கின்றார்.
“கல் விகாரை நீங்கலாகவுள்ள கட்டடங்களிலே அதுவே பொலனறுவைமினை பார்க்கச் செல்வோரின் கூடுதலான கவனத்தைப் பெற்றது. அது முற்றிலும் கற்றளியாக அமைந்த கோயிலாகும். அது இதுவரை பல வருடங்களாகத் தலதா மாளிகை என்று பிழையாக வர்ணிக்கப்பட்டது. இன்றுவரையும் அதனைப் பற்றிப் பொது சனங்களிடையே நிலவிவரும் ஐதீகமும் அதுவேயாகும்.” இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 89 Sசோதிலிங்கம்

Page 53
அது நாற்கோண வடிவிலமைந்த உயரமான திடலின் தெற்கில் அதற்குச் சமீபமாக அமைந்துள்ளது. இலங்கை, தென்னிந்தியா, காம்போஜம் ஆகியவற்றின் கட்டடக்கலை அம்சங்களின் கலப்பினை நூதனமாகவும் பொருத்தமான முறையிலும் பிரதிபலிக்கும் வகையிலும் அமைந்துள்ளன. இரண்டாம் சிவாலயத்தைப் போல அதனிற் சற்றுச் சிறியதும் கூடிய அலங்காரத்தன்மை கொண்டதுமான இக்கோயில் வழமையான மூன்று தனித்தனியான பகுதிகளைக் கொண்டிருந்தது. அவை இணைக்கப்பட்டு ஒரே வரிசையில் அமைக்கப்பட்டுள்ளன. வெளிப்புறமாக அமைந்துள்ள மண்டபத்தின் சுவர்கள் உள்ளன. ஆனால் அதன் கூரை சிதைந்து அழிந்துவிட்டது. அதற்குப் பின்னுள்ள அந்தராளம், கர்ப்பக்கிரகம், ஆகியவற்றின் கூரைகள் கற்பாளங்களினால் அமைந்துள்ளன.
இரண்டாம் சிவாலயத்தைப் போல அதுவும் அடித்தளத்திலிருந்து சிகரம் வரை செம்மையாக வெட்டிச் செதுக்கப்பட்ட கற்பாளங்களால் அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு கோயில்களின் வெளிப்புறச் சுவர்களும் ஒரே விதமானவை. அவற்றின் அரைத்தூண்களும், காற்துண்களும் தேவகோட்டங்களின் பக்கங்களில் அமைந்துள்ளன. ஆனால் முதலாஞ் சிவாலயத்திலே தேவகோட்டங்களின் மேலே தோரணங்களும் வேறு முன்னேற்றமான அலங்கார வேலைப்பாடுகளும் இடம்பெற்றுள்ளன. இந்தப் பாழடைந்த கோயிலின் கட்டட அமைப்பு திராவிட கலைப்பாணியில் அமைந்த ஒன்றாகும். விமானத்தின் தளங்களும் கல்லினால் அமைந்திருக்கக் கூடியதான அதன் கபோதமும் முற்றாக மறைந்து விட்டன. அந்தராளத்தின் மேலமைந்த பகுதியும் முற்றாகச் சிதைந்து மறைந்துவிட்டது. அழிபாடுகளிடையே கற்பாளங்கள் குவிந்து காணப்படுகின்றன. எனினும் அவை அடையாளம் காணப்படவில்லை.
மண்டபத்தின் வாசற்படிகள் இப்போ காணப்படவில்லை. அதன் சுவர்களும் பெரும்பாலும் இடிந்து விழுந்துவிட்டன. ஆயினும் பல நூற்றாண்டுகளின் பின்பும் சேதமாக்கப்பட்ட இக்கோயிலின் குறிப்பிடத்தக்க இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 90 S.G.3 (T655th

பகுதிகள் உன்னதமான முறையிலே பாதுகாப்பாக இருந்துள்ளமை வியப்பிற்குரியதாகும் அந்தராளம் அர்த்தமண்டபம் ஆகியவற்றின் சுவர்களின் உட்புறங்களும் அந்தராளச் சுவர்களின் வெளிப்புறங்களும் ஒரு வெளிப்புற நோக்கிலான கற்படைக் குலைவினைத் தவிர இறையகத்தின் சுவர்களும் அவற்றுக்கு இயல்பாகவுள்ள செம்மையான தோற்றத்துடன் காணப்படுகின்றன.
இந்தக் கோயில் தென்னிந்திய சிற்ப சாஸ்திர முறைகளுக்கு ஏற்பவுஞ் சைவசமய வழிபாட்டுத் தேவைகளுக்கு வேண்டிய சில மாற்றங்களுடனும் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாலயம் 61 அடி 9 அங்குலம் நீளம் கொண்ட கட்டட அமைப்பாகும். அது 105 அடி நீளமும் 75 அடி அகலமும் கொண்ட பிரகாரத்தினுள் அமைக்கப்பட்டு இருந்தது. அதன் அதிஷ்டானம் ஏழு படைகளையும் உபானம் முதலான ஆறு பகுதிகளையும் கொண்டிருந்தது. கர்ப்பக்கிரகத்தின் வெளிப்புறச் சுவர்களில் தேவகோட்டங்களும் அரைத்தூண்களும் மிகவும் செம்மையாக அமைக்கப்பட்டுள்ளன. கற்கள் பளபளப்பான வெண்மையும் பச்சை நிறமும் இழையோடிய வண்ணமான நிறங்கொண்டவை. பத்மதளம், கால், வரி, கலசம், பத்ம இதழ் பலகை, பொதிகை என்னும் உறுப்புக்கள் கவர்ச்சியான கோலத்துடன் அமைக்கப்பட்டுள்ளன.
சிவாலயத்தைப் பொறுத்தவரையில் இறையகத்தின் விமானம் முற்றாக இடிந்து வீழ்ந்துவிட்டது. அதன் கீழே கொடுங்கையும் யாளி வரியும் அமைந்திருந்தமைக்கான அடையாளங்கள் தெரிகின்றன. மண்டபத்தின் அதிஸ்டானம் 4 அடி 5 அங்குலம் உயரம் கொண்டது. அதில் உபானம், பத்மதளம், குமுதம், கண்டம், வியானமாலம், கபோதகம் என்னும் பகுதிகளும் ஏழு படைகளும் உள்ளன. அது முற்றிலும் வானவன் மாதேவி ஈஸ்வரத்திலுள்ள விமானத்தின் அதிஷ்டானத்தை மாதிரியாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. கர்ப்பக்கிரகத்தின் வெளிப் புறத்தில் 18 அடிச் சதுரமாக அமைந்துள்ளது. மண்டபத்திலுள்ள தேவகோட்டங்கள் 3 அடி 8 அங்குலம் உயரமும் 1 அடி 4 அங்குலம் இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 91 Sசோதிலிங்கம்

Page 54
அகலமும் உடையவை. அவற்றின் மேலே கற்றகடுகளுந் தோரணங்களும் அமைந்து காணப்படுகின்றன. அரைத்தூண்களின் உயரம் முழுத் தூண்களின் உயரத்தைக் காட்டிலுங் காற்பங்கு குறைந்தது இரண்டாஞ் சிவாலயத்துத் தூண்களிலே அமைந்திருக்காத கலசம் இவற்றிலே தெரிகின்றது. அடியிலே குமுதம் குமிழ் வடிவம் பெறாது அவற்றிலே தட்டையான தோற்றத்தைக் கொண்டுள்ளது.
கர்ப்பக்கிரகத்திற்கும் மண்டபத்திற்கும் இடையில் அமைந்துள்ள அந்தராளம் உட்புறத்தில் 8 அடி நீளமும் 9 அடி 9 அங்குலம் உயரமும் கொண்ட அமைப்பாகும். இதன் இரு பக்கங்களிலுமுள்ள வழிகளிலே தோரணங்களைத் தாங்கும் அலங்காரத் தூண்கள் காணப்படுகின்றன. மகாமண்டபத்தின் அடித்தளம் மட்டும் எஞ்சியுள்ளது. அது 36 அடி 3 அங்குலம் நீளமும், 34 அடி 3 அங்குலம் அகலமும் கொண்டதாகும். சுவர்களின் உள்ளே நிலமட்டத்தில் அது 28 அடி 8 அங்குலம் அகலமும், 38 அடி 3 அங்குலம் நீளமும், 8 அடி அகலமுங் கொண்ட சாலை அமைக்கப்பட்டிருந்தது. தெற்கிலே அதே போன்றளவு நீளமுடைய மேடை உள்ளது.
மூன்று பரிவாரதேவர் கோயில்கள் இருந்தமைக்கான அடையாளங்கள் உள்ளன. கர்ப்பக்கிரகத்திற்கு தென்மேற்கில் விநாயகர்
Perti "I .
4ங்_Lய அமைந்திருந்தது. அதில் அடி 8 அங்குலம் அகலமும் 8 அடி 9 அங்குலம் நீளமும் கொண்ட கர்ப்பக்கிரகமும் அதற்கு ஒப்பான சுற்றளவினையுடைய அந்தராளமும் இருந்தன. வளாகத்தின் வடமேற்கு மூலையில் அதேயளவு கொண்ட தேவகோட்டமொன்று இருந்தது. அகழ்வுகளின் போது அதனிடத்திலே குமாரக்கடவுளின் சிலையொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தனவும் தரத்தில் முதன்மை வாய்ந்தனவுமாகிய வெண்கலப் படிமங்கள் பல இக்கோயில் வளாகத்திலே கிடைத்துள்ளன. இவை இலங்கை இந்துக்கோயில்களின் வரலாற்றிலும் பொலனறுவைக் கா லத்துக் கட்டடக் கலையைப் பொறுத்தவரையிலும் இரண்டாம் சிவாலயம் மிக இந்துநாகரிகத்தில் நுணிகலைகள் 9. sசோதிலிங்கம்

முக்கியத்துவம் பெறும் ஆலயமாகின்றது. இதன் பேறாகவே முதலாம் இரண்டாம் சிவாலயங்கள் உள்ளிட்ட மூன்று சிவாலயங்கள் ஐயத்துக்கிடமின்றி சோழர் காலத்தவை. அவையும் இராஜஇராஜன் காலத்திலேயே கட்டப்பட்டன என கலாநிதி பேராசிரியர் கா. இந்திரபாலா கருத்துக் கூறுவதும் நோக்கத்தக்கது.
இராஜேந்திரன் காலம்:
இராஜஇராஜ சோழன் மகன் இராசேந்திர சோழன் தந்தை வழி மைந்தனாக கட்டடக்கலை வரலாற்றில் ஈடுபாடு கொண்டமையின் பேறாக கங்கைகொண்ட சோழபுரத்தில் அளவில் பெரியதாகவும் கலைவனப்பு மிக்கதாகவும் தஞ்சைப் பெருங்கோமிலுக்கு ஈடாகவும் தமிழகக் கட்டடக் கலையின் மகோன்னத படைப்புக்களில் ஒன்றாக கங்கைப் படையெடுப்பின் நினைவாக (1012 - 1044) கங்கைகொண்ட சோழேஸ்வரம் என்னும் ஆலயத்தை அமைத்து அழியாப் புகழ் கொண்டான். இது தஞ்சைக் கோயிலுக்கு "அடுத்த நிலையிலே தலைசிறந்ததேயாம். இவை இரண்டிற்கும் கருவூர்த்தேவர் திருப்பதிகங்கள் பாடி அவையிரண்டும் திருவிசைப்பாவில் இடம்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
இராஜேந்திரன் எழுப்பிய கோயில்களுள் தலைசிறந்ததாக அவன்
புகழ்பரப்பிக் கொண்டிருப்பது கங்கைகொண்ட சோழபுரத்தில் தன்னுடைய பேரரசின் புதிய தலைநகரில் அவன் கட்டிய பெரிய நாயகரின் கோவில் ஆகும். இது தஞ்சாவூரின் ராஜராஜீஸ்வரம் போன்ற மாதிரி வடிவில் ஆனால் சற்றுச் சிறிய உருவில் கட்டப்பட்டிருக்கின்றது. தஞ்சைப் பெருங்கோயில் ஆண்மையின் ஆற்றலோடு வீறுகொண்டு எழுந்து விண்ணைக் கிழிப்பது போல் நிற்கும். ஆனால் கங்கைகொண்ட சோழபுரம் கோயில் அந்த அளவில் பெரிதாக இல்லாமல் ஒரு மென்மையான வடிவில் கட்டப்பட்டதாக தோற்றம் தரும். பேர்ஸி பிறவுண் என்ற மேலைநாட்டு அறிஞர் இந்தக் கோயில் தஞ்சைக் கோயிலின் பெண் வடிவம் என்று சொல்லுவார்.
இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 3.சோதிஜிங்கம்
.

Page 55
இராஜேந்திரனின் வடநாட்டுப் பேர் நடவடிக்கையின் பின்னர் அதன் வெற்றியின் சின்னமாக 1029 இல் நிர்மாணிக்கப்பட்டது. கங்கைகொண்ட சோழபுரம் ஆகும். பெரியகோட்டை திருமதில்களுடன் கட்டப்பட்டது. தலைநகர் மதில்கள் உட்படை விட்டு மதில் இராஜேந்திர சோழன் மதில், குலோத்துங்க சோழன் மதில் என்று பெயர்கள் கொண்டிருந்தன. நகருக்குள் சோழகேரளன் திருமாளிகை என்று வீரராஜேந்திரன் திருமாளிகை என்று முதலாம் குலோத்துங்கன் காலத்திலும் அரண்மனைகள் இருந்திருக்கின்றன. கோட்டைப் பேரரசின் பல முக்கிய நகரங்களோடு குலோத்துங்கசோழன் திருமதில் பெருவழி, இராஜேந்திரன் பெருவழி, கூழயானை போன பெருவழி, இராஜஇராஜன் பெருவழி ஆகிய பெரு வழிகளால் இணைக்கப்பட்டிருந்தது.
கோயில் வளாகம் 587 அடி நீளமும் 318 அடி அகலமும் கொண்ட சுற்றளவினை உடையதாகும். வளாகத்தினுள் ஆலயத்தைச் சுற்றி வடகைலாசம், தென்கைலாசம், சண்டேசுவரர் ஆலயம், மகிஷாசுர மர்த்தனி கோட்டம் என்னும் கோயில்களும் பலிபீடம், நந்தி அலங்கார மண்டபம் என்பனவும் அமைந்திருந்தன. கோயில் வளாகத்தின் கிழக்குப் புறத்திலே கோபுரவாசல் அமைந்திருந்தது. கர்ப்பக்கிரகம், அர்த்தமண்டபம் மகாமண்டபம் ஆகிய பிரதான பகுதிகள் ஒரு பொதுவான பிரமாண்டமான அதிஷ்டானத்தின் மேல் அமைந்துள்ளன. அதன் மகத்தான உபபீடத்தின் அடிப்பகுதி நிலத்தின் கீழே மறைந்துள்ளது. உபபீடம் அதிஷ்டானம் ஆகியவற்றுக்கிடையிலே ஓர் ஒடுக்கமான மேடை காணப்படுகின்றது. பத்மம், குமுதம், வரிமானம், வரி என்னும் வேலைப்பாடுகள் அதிஷ்டானத்தில் உள்ளன. உபபீடமானது 340 அடி நீளமும் 100 அடி அகலமும் கொண்டது. கர்ப்பக்கிரகம், மகாமண்டபம் ஆகியன முறையே 100 அடியும் 175 அடியும் நீளம் கொண்டவை. அர்த்த மண்டபம் இந்த இரு கட்டிடங்களுக்கிடையே குறுக்கப்பட்ட 8 சதுரஅடி சதுரமாக அமைந்திருக்கின்றது. கிழக்கே நோக்கியிருக்கும் கோயிலை அடையப் படிகளில் ஏறிச்செல்ல வேண்டும். முன்மண்டபம் போன்ற ஒரு திறந்த வெளி அமைப்பைக் கடந்தால் மகாமண்டபத்தை அடையலாம். வாயிலில் பெரிய காவலர் சிலைகள் அணிசெய்கின்றன. எட்டு வரிசைகளில் 144 தூண்கள் மகாமண்டபத்தினுள் நிறுத்தப்பட்டிருக்கின்றன. இந்துநாகரிகத்தில் நுனர்கலைகள் Sசோதிலிங்கமீ

அர்த்தமண்டபம் கருவறையும் மகாமண்டபத்தை இணைக்கின்றது. தெற்கிலும் வடக்கிலும் இருக்கும் படிகள் வழியாகவும் ஏறி அர்த்தமண்டபத்தை அடையலாம். தஞ்சைக் கோயிலைப் போன்றே இரு நிலைகளில் இருக்கும் இப்படிகளின் முடிவில் வாயிலை மாபெரும் காவலர்கள் (துவாரபாலகர்கள்) காக்கின்றனர். அர்த்த மண்டபத்தை சதுர வடிவிலான எட்டுப் பெரும் தூண்கள் தாங்கி இருக்கின்றன. இந்த மண்டபத்தின் கூரை மகாமண்டத்தின் கூரையை விட உயர்ந்தது. விமானத்திற்கும் மகா மண்டபத்திற்கும் இடையே ஒரு இரண்டடுக்கு கட்டடமாக உயருகின்றது. இவை கோயிலின் சிற்ப கட்டடக்கலை நுட்பங்களுக்கு ஒரு முன்னுரையாக அமைகின்றன.
அடுத்து இருப்பது கருவறையும் அதன் மீது இருக்கும் தள அடுக்குகளுமாகும். தஞ்சைக் கோயில் போன்று இக்கோயில் விமானமே கோயிலுக்கு தனித்தன்மையையும் முழு உருவத்தையும் தந்து கோயிலின் கட்டடத் தன்மையின் நேர்த்தியை வெளிக்கொணர்கின்றது. கருவறையின் சுவர் அடித்தளத்திலிருந்து 35 அடி உயரத்தில் இரு நிலைகளைக் கொண்டிருக்கின்றது. இந்த நிலைகளுக்கிடையே கொடுங்கைகள் சுற்றிவர துருத்திக்கொண்டிருக்கின்றன. சுவரின் மீது ஒன்பது தளங்கள் கொண்டு விமானம் 160 அடி உயரமும் எழுந்து நிற்கின்றது. உச்சியில் இருக்கும் சிகரம் ஒரே பாறையால் ஆனது அல்ல. தாமரை இதழ்களின் வடிவங்கள் செதுக்கப்பட்ட முடி தங்கத்தால் கவசமிடப்பட்டிருந்த கலசத்தைக் தாங்குகின்றது. கருவறையில் லிங்க வடிவில் கோயில் கொண்டிருக்கும் சிவபெருமானுக்கு பெரிய நாயகர் என்று பெயர். மிகவும் உயரமான லிங்க வடிவம். குறுக்களவு மூன்று அடி உயரம், பதின்மூன்று அடி சாரத்தின் மீது ஏறித்தான் திருமஞ்சனம் செய்வார்கள்.
கர்ப்பக்கிரகத்தினைச் சுற்றிவரும் உத்திரம் ஒன்றினாலே சுவர்கள் மேல் கீழாக இரு பகுதிகளாகப் பிக்கப்பட்டுள்ளன. அவை ஒவ்வொன்றிலும் அகலப்பாட்டில் ஐந்து பாகங்கள் காணப்படுகின்றன. அவற்றின் நடுவிலுள்ள பாகமே மிகப்பரந்தது. கரையோரமாக உள்ள இரண்டுஞ் சதுரமானவை. இந்துநாகரிகத்தில் நுணர்கலைகள் 95 Sசோதிவிங்கம்
ܐ ܢ

Page 56
இடையிலுள்ள இரண்டு பாகங்களும் நாற்சதுர வடிவிலுள்ளவை. சிவாகமங்களிலும் புராணங்களிலும் போற்றப்படும் தெய்வீகக் கோலங்கள் 50 இச் சுவர்களில் மிகச் சிறப்புடன் அமைந்து காணப்படுகின்றன. அவற்றோடு அலங்கார வேலைப்பாடுகளும் கூடு, கும்ப பஞ்சரம், சிங்க முகம் முதலானவையும் செம்மையாக உருவாக்கப்பெற்றுள்ளன. கர்ப்பக் கிரக சுவர்களில் அமைந்த சிற்பங்களில் நடராஜன், சண்டேசனுக்கிரக மூர்த்தி, சரஸ்வதி ஆகியோரின் படிமங்கள் மிகுந்த வனப்புடையவை.
கோயிலின் விமானம் ஒன்பது தளங்களால் அமைந்தது. தளங்களுட் கீழுள்ள ஒவ்வொன்றைக் காட்டிலும் அதன் மேலுள்ள ஒவ்வொன்றும் சுற்றளவிற் சிறியது. தஞ்சைப் பெருவுடையார் கோயில் விமானத்தின் தளங்களின் நாற்பக்கங்களும் நேராக அமைந்திருக்கையில் இங்குள்ள தளங்கள் நான்கு பக்கங்களிலும் வில் வளைவான கோலத்துடன் காணப்படுகின்றன. அவற்றின் சாரமாக விமானம் கல்யாணத் தோற்றத்துடன் காட்சியளிக்கின்றது. சதுரவடிவிலும் நாற்சதுர வடிவிலும் அமைந்த மாடங்கள் தளங்களை அலங்கரிக்கின்றன. ஒவ்வொரு புறத்திலும் நடுவிலும் அதன் அருகிலும் அமைந்த மாடங்கள் மூலைகளிலுள்ள கூடுகளைக் காட்டிலும் முன்னோக்கி நீண்ட வண்ணமாய் உள்ளன. இவை மட்டுமன்றி கிர்வத்தின் நான்கு பக்கங்களிலும் கூடுகள் உள்ளன. அதன் கீழமைந்த சதுரமான பீடத்தில் நான்கு நந்திகளின் உருவங்கள் அமைந்துள்ளன.
மகாமண்டபமும் அதன் முன்பாகவுள்ள மணிமண்டபமும் அவற்றோடு அதிஷ்டானம், இறையகம் ஆகிய அமைப்புக்களும் ஒரு பொதுவான பீடத்தில் அமைந்துள்ளன. மகாமண்டபத்தின் மேற்பாகமும் அதன் சுவர்களும் இடிந்து வீழ்ந்துவிட்டன. அது புனரமைக்கப்பெற்ற காலத்திலே அதன் சுவர்கள் குறைந்த உயரத்துடன் அமைக்கப்பெற்றன. அதன் மேற்குப்புறத்தில் மட்டுமே பழைய சுவரின் பகுதிகள் உள்ளன. அதிலுள்ள தூண்களும் பக்கச் சுவர்களும் கூரையும் பிற்காலத்திலே புதிதாக அமைக்கப்பட்டவை. மகாமண்டபம், மணிமண்டபம் ஆகிய இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் s Sசோதிலிங்கம்

இரண்டுக்கும் வளாகத்திலிருந்து செல்லுவதற்கான படிக்கட்டுக்களினால் அம்ைந்த வழி உணிடு. மக்ாமணி டபித்திலிருந்து அர்த்த மண்டபத்தினூடாக இறையகத்துக்குப் போகும் வழி இருந்தது.
மகாமண்டபத்தின் வடகிழக்கு மூலையிற் செளரயீடம் அமைந்து இருக்கின்றது. அது சதுரமான பீடத்திலமைந்த தாமரை மலரின் தோற்றம் கொண்டது. அமைப்பிலே கட்டடம் இரு தளங்களினாலானது. மேலுள் தளத்தில் எண் திசைகளையும் நோக்கி வண்ணமாக எட்டுக் கிரகங்களின் மூர்த்தங்கள் உள்ளன. அடித்தளமானது ஏழு குதிரைகள் இழுத்துச் செல்லும் இரதத்தின் கோலம் போல உருவாக்கப்பட்டுள்ளது. குதிரைகள் ஏழும் வாரத்திலுள்ள ஏழு நாட்களையும் அடையாளபூர்வமாக உணர்த்தும். சக்கரங்கள் ஒவ்வொன்றிலும் அமைந்த தாமரை இதழ் போன்ற 12 சட்டங்களும் பன்னிரண்டு மாதங்களையும் குறிக்கும். புவனம் சூரிய மண்டலமாய் இருப்பதனையும் காலசக்கரமானது சூரியனை அடிப்படையாகக் கொண்டு நாள், வாரம், மாதம் என்ற வகையில் வரிசைக் கிரமமாகச் சுழன்று செல்வதையும் அற்புதமான வகையிலே செளரயீடம் சித்தரிக்கின்றது. இத்தகைய தன்மை கொண்ட கங்கை கொண்ட சோழபுரம் மட்டுமன்றி தந்தை வழி மைந்தன் நிலையில் தென்னிந்தியாவின் பல பாகங்களிலும் பல கோயில்களை அமைத்துக் கொண்டான். அவ்வகையில் திருவெற்றியூரில் புற்றிடம் கொண்டாரின் திருக்கோயிலையும் இவனே அமைத்தான்.
இக்கோயிலானது (1012 - 1044) காலகட்டத்தில் அமைக்கப்பட்ட நிலையில் இக்கோயிலில் முதலாம் இராஜராஜனின் பாட்டனார் பராந்தக சோழனின் (907 - 955) கல்வெட்டு காணப்படுகின்றன. இதிலிருந்து மிகப் பழங்காலம் தொட்டே சோழர்கள் இக்கோயிலோடு ஈடுபாடு கொண்டிருந்தார் என்பது தெரிந்த நிலையில் இவனது காலத்தில் மீண்டும் புதிதாக முழுவதும் கல்லால் கட்டப்பட்டன. சதுரரான பண்டிதர் என்ற சைவ மத்த் தலைவர் ஒருவரின் வேண்டுகோளுக்கிணங்க வீரசோழ தக்ஷன் என்ற ஸ்தபதியால் முழுவதும் சிறிதுடே மாசில்லாத கருமை இந்துதாகரிகத்தில்துணிகலைகள் 97 Sசோதிலிங்கம்

Page 57
நிறக் கல்லால் மூன்று நிலைகளில் கட்டப்பட்டது என்று கூறும் சாசனம் கருவறையின் தெற்கில் காணப்படுகின்றது. நாட்கள் செல்லச் செல்ல கோயில் வளர்ந்து 14 ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஆதிபுரீசுவரர், நடராஜர், வட்டப்பிறை அம்மன், கெளடீஸ்வரர், சுப்பிரமணியர் ஆகிய தெய்வங்களுக்குரிய சந்நிதியும் மன்னர்களின் பெயரிலான மாடங்களும், இராஜராஜன், இராஜேந்திரசோழன், வியாகரணதானம், மண்ணைக் கொண்ட சோழன், வக்காணிக்கும் மண்டபம் என ஐந்து மண்டபங் is sinffs
வளாகம் கொண்டிருந்தது. இப்போது அவையெல்லாம் மாறிவிட்டன.
கோயிலின் இராஜகோபுரம் கிழக்கு நோக்கி இருக்கின்றது. இந்த வாயிலைக் கடந்ததும் கொடி மரமும் அதனையடுத்து நந்தி சிலையும் இருக்கின்றன. நேரே புற்றிடங்கொண்டார் (ஆதிபுரிசுவரர்) கோயில் அமைந்திருக்கின்றது. இக்கோயிலின் விமானம் மூன்று நிலைகளைக் கொண்டுள்ளது. இந்த விமானத்தின் சிறப்பு. இது அடித்தளம் (உபானம்) தொடக்கம் உச்சியின் குடம்வரை நீள் அரை வடிவத்தில் அமைந்திருப்பதுவே. கிழக்கு நோக்கி இருக்கும். இது ஒரு உண்ணாழியும் (கருவறை) ஒரு இடைவெளியையும் (அந்தராளம்) கொண்டது. முழுவதும் தூய்மையான கருங்கல்லால் கட்டப்பட்டு இருக்கின்றது. தேவகோட்ட மாடங்களில் கணேசர், தட்சணாமூர்த்தி, விஷ்ணு, பிரமன், துர்க்கை ஆகியேளின் சிலைகள் வைக்கப்பட்டிருக்கின்றன. கருவறையை அடுத்து பிரகாரம் முழுவதும் செதுக்கப்பட்ட கற்றுண்கள் நிற்கின்றன. சுற்றிலும் மேடை கொண்ட திருச்சுற்று மாளிகை இது.
திருச்சுற்று மாளிகையின் வடக்கில் தாளியின் சந்நிதி இருக்கின்றது. இவருக்கு வட்டப்பிறை அம்மன் என்று பெயர். புற்றிடம் கொண்டார் சந்நிதி எதிரே தெற்கு நோக்கியபடி நடராஜர் சந்நிதி இருக்கின்றது. இச்சந்நிதியின் தேவகோட்ட மாடத்தில் மிகவும் எழிலார்ந்த காண்பதற்கரிதான ஒரு சிலை இருக்கின்றது. இதற்கு ஏகபாதமூர்த்தி என்று பெயர். விஷ்ணு, பிரம்மா ஆகியோர் சிவனிடத்தே அடக்கம் என்பதனைக் குறிக்கும் வகையில் மூன்று உருவங்களும் ஒரே காலில் நிற்கும் வண்ணம் அம்ைக்கப்பட்டிருக்கின்றது இந்தச் சிலை. இந்துநாகரிகத்தில்துண்கலைகள் 98 Sசோதிலிங்கம்

கோவிலின் இரண்டாம் திருச்சுற்றின் தெற்குப்புறம் தியாகராஜரின் சந்நிதியின் பின்புறம் கெளடிஸ்வரரின் சிறிய ஆலயம் காணப்படுகின்றது. இது கிழக்கு நோக்கி இருக்கின்றது. ஓர் அந்தராளமும் (இடைவழி) கருவறையும் கொண்டது. மூலவர் நான்கு கரங்கள் கொண்டு யோக நிலையில் அமர்ந்திருக்கின்றார். விமானத்தின் தேவகோட்ட மாடங்களில் பிரம்மா, விஷ்ணு ஆகியோரின் உருவங்கள் காணப்படுகின்றன. கோயிலின் முகமண்டபத்தின் கிழக்கில் சுப்பிரமணியர் சந்நிதி இருக்கின்றது. கோயில் வளாகத்தின் வடகிழக்கில் வடிவுடையம்மன் சந்நிதியும் குளமும் இருக்கின்றன.
கோயில் முழுவதும் 149 கல்வெட்டுக்கள் இருக்கின்றன. இவனது ஆட்சிக்காலத்தில் கோயிலுக்குப் பலர் அளித்த நன்கொடைகள் குறிப்பிடும் சாதனங்கள் நிறையக் காணப்படுகின்றன. இவ்வளவு பழைமையும் சிறப்பும் வாய்ந்த இத்திருக்கோயில் தலைநகரில் இத்தனை அருகிலிருந்தும் போதுமான பராமரிப்பின்றி சேதமடைந்து வருகின்றது. மிகப் பழைமை வாய்ந்த நடராஜர் கோயிலின் விமானத்தில் செடிகள் முளைத்து சிதையும் தறுவாயில் இருக்கின்றது. இவை அக்கால வரலாற்றை மாற்றியமைக்கும் தன்மை கொண்டதாகவே கருதமுடிகின்றது.
இராஜேந்திர சோழன் தந்தை போன்ற வழிகளில் தென்னிந்தியாவின் பல பகுதிகளிலும் கோயில் அமைத்துக்கொண்ட நிலையில் கூழம்பந்தல் திருவெற்றியூர் ஆகிய இடங்களிலும் இலங்கையின் பொலனறுவையில் தன் தாயாகிய வானவன் மாதேவியின் பெயரால் ஒரு கோயிலைக் கட்டி வானவன் மாதேவீமீசுவரம் எனப் பெயர் சூட்டினான். இக் கோயில் கர்ப்பக்கிரகம், அந்தராளம், அர்த்தமண்டபம், மண்டபம், நந்தி பீடம், கோபுர வாசல் ஆகிய பகுதிகளுடன் அமைக்கப்பட்டிருந்தது. அதன் நீளம் 86 அடி 4 அங்குலம் கோயில் வளாகத்தைச் சூழ்ந்த சுவர் 96 அடி நீளமும் 84 அடி அகலமும் கொண்டதாகும். மதிற் சுவர்கள் செங்கட்டிகளால் அமைக்கப்பட்டிருந்தன. வடக்கிலும் கிழக்கிலும் மதிற் சுவர்கள் நகரின் அரண்களை ஒட்டியிருந்தன. கோயில் கற்றளியாக அமைந்த கட்டடமாகும். அது கருங்கல், சுண்ணக்கல் ஆகிய இரு வகையான கற்களையும் கலந்து கட்டப்பட்டுள்ளது. கர்ப்பக்கிரகமானது
இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் Sசோதிலிங்கம்

Page 58
அதன் புத்துங்களில் 20 அடி 8 அங்குலம் அளவு கொண்ட சதுரம் ஆகும். அதன் அதிஷ்டானம் 4 அடி 1 அங்குலம் உயரம் கொண்டுள்ளது. கர்ப்பக்கிரகத்தின் சுவர்கள் 12 அடி உயரமானவை. அவற்றிலே 5 அடி 8 அங்குலம் உயரமும் kஅடி 8 அங்குலம் அகலமும் 1 அடி ஆழமும் கொண்ட தேவகோஷ்டங்கள் உள்ளன. சுவர்களிலுள்ள அரைத் தூண்களில் தடி, குமுதம், கண்டம், பலகை, பத்மஇதழ், போதிகை என்னும் உறுப்புக்கள் உள்ளன.
கள்ப்பக்கிரகத்தின் மேலமைந்த திரிதளவிமானம் 31 அடி 9 அங்குலம் உயரம் கொண்டது. சமகாலத்திலேயே தென்னிந்தியாவில் அமைக்கப்பெற்ற கோயில்களின் விமானங்களோடு ஒப்பிடுமிடத்து இது சாதாரணமான அளவினைக் கொண்டதாகும். கர்ப்பக்கிரகத்தின் மேல் அகன்ற வளைவுகளை உடைய கொடுங்கையும் யாளி வரியும் அமைந்துள்ளன. முதலாவது தளத்தின் நான்கு மூலைகளிலும் கூடங்கள் உள்ளன. அவை அடியில் 3 அ" நீளமும் 2 அடி 8 அங்குலம் உய்ரமும் கொண்டவை. அவற்றிடையே சாலைகளும் நாசிகைகளும் அமைந்து உள்ளன. இரண்டாம் தளம் 13 அடி 8 அங்குலம் அளவுடைய பக்கங்களைக் கொண்ட சதுரமாகும். அதன் பீடம் குமுதம், கண்டம், பத்த பட்டிகை என்னும் படைகளைக் கொண்டுள்ளது. சுவர்களிலே அரைத்தூண்கள் அமைந்துள்ளன. மூன்றாந் தளம் பக்கங்களில் 4 அடி 8 அங்குல அளவு கொண்ட சதுரமான பிரஸ்தாரத்தில் அமைந்து உள்ளது. இத்தளமானது எண்கோண வடிவமானது. அதன் சுவர்களில் இரண்டாந் தளத்திலுற்gவற்றைழ் போன்ற அரைத்தூண்கள் உள்ளன. இரண்டு அடி ஒன்பதுඕl: ஐழ்,உயரமான இத்தளத்தின் மேலுள்ள பத்மபட்டிகையில் அமைந்திருக்கும் சிகரமும் எண்கோணமான அமைப்பாகும்.
அந்தராளத்தின் உள்ளே அதன் தளம் நிலழுத்திலிருந்து 3 அடி 1அங்குலம் உயரமானது. அது வெளியிலுள்ள அதிஷ்டானத்தின் உயரத்திலிருந்து ஒரு அடி உயரம் குறைந்ததாகும். அர்த்தமண்டபம், இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 100 SEsIIfigiúil,

மகாமண்டபம் ஆகியன முற்றாகவே மறைந்துவிட்டன. கிழக்கு நோக்கிய ஆலயத்தின் முன்புறத்தில் நந்திபீடம், பலிபீடம், கொடிமரம் ஆகியன அமைந்திருந்தன கோயில் வளாகத்தின் வடகிழக்கு மூலையில் பிள்ளையர் கோயில் செங்கல்லினால் அமைக்கப்பட்டிருந்தது கிழக்கு நோக்கிய வாசல்களையுடைய அக்கோயிலில் 8 அடி சதுரமான இறையகம் 8 அடி நீளமும் 5 அடி அகலமும் கொண்ட அந்தராளம் என்பவற்றைப் பகுதிகளாகக் கொண்டிருந்தது. அது ஒரு அதிஷ்டானத்தின் மேல் அமைக்கப்பட்டிருந்தது. வடமேற்கு மூலையில் இதனையொத்த தேவ கோட்டமொன்று அமைந்திருந்தது. குமாரக்கடவுளின் படிமமும் மயிலின் உருவமும் அதன் சுற்றாடலில் வேறு சிற்பங்களோடு காணப்பெற்றமையால் அது குமரகோட்டமாய் இருந்ததென்று உணர்ந்துகொள்ள முடிகின்றது.
இக்கோயிலானது இராசராசேச்சரம், கங்கைகொண்ட சோழேச்சரம் ஆகிய தமிழகத்துக் கோயில்கள் போன்று பிரமாண்டமானதன்றாயினும் சோழர் பாணிக்கேயுரிய கட்டட அமைப்பையும் கலையம்சத்தையும் கொண்டு விளங்குகின்றது. பொதுவில் பொலனறுவைச் சிவாலயங்கள் யாவும் சிறியளவில் அமைந்தனவே. ஐந்தாவது சிவாலயமும் சோழர் கட்டடக் கலைக்குச் சான்றாக உள்ளது. இக்கலைப்பாணி முறைமையில் மாதேவிமீச்சரம் கருங்கல்லால் கட்டப்பட்டமையால் இன்றுவரை அழிவுக்குத் தப்பி நிலைத்து நிற்பது இக்கால கட்டடக்கலை வரலாற்றின் சிறப்புக்கு சிறந்ததோர் சான்றாகின்றது. அதுமட்டுமன்றி கட்டடக்கலை என்பது தென்னிந்தியாவுக்குரியது மட்டுமன்றி அதனை தென்கிழக்காசிய நாடுகளுக்கும் மாற்றியமைத்து பெருமை பெற்றுக்கொண்ட காலமாக மிளிர்வது இக்காலமாகும்.
III. முதலாம் குலோத்துங்கன் - மூன்றாம் இராஜேந்திரன் வரையுள்ள காலம். (கி.பி 1070 - 1270 வரை).
விஜயாலயன் வழித்தோன்றிய சோழ அரசர்களுக்குப் பின்னர் கீழைச்சாளுக்கியர் சோழர் வழிவந்த முதலாம் குலோத்துங்க சோழன் கிபி 1070 இல் ஆட்சிப் பீடமேறினான். இவன் சிறந்த சித் இந்தநாகரிகத்தில் நுண்கலைகள் 101 Sர்திலிங்கம்

Page 59
இவன் சிதம்பரகூத்தப் பிரானிடம் பேரன்பு கொண்டமையின் காரணத்தால் அங்கு பல திருப்பணிகளைச் செய்தான். தில்லையம்பலத்துக்கு பொன் வேய்ந்தான். நூற்றுக்கால் மண்டபம், பெரிய திருச்சுற்று மாளிகை, தேவாரம் ஓதுவார்க்குரிய மண்டபம், சிவாகம கோட்டம் முதலியன கட்டுவித்தான். திருவதிகை கோயிலுக்கு காமகோட்டம் எடுப்பித்துப் பொன் வேய்ந்தான். ஆடரங்கு அமைத்தான். வேள்விச் சாலைகள் அமைத்தான். மன்னார்குடியிலுள்ள பெருமாள் கோயில் இவன் பெயரால் எடுப்பிக்கப்பட்டது. அதன் பழைய பெயர் குலோத்துங்க சோழ விண்ணகரம் என்பதாகும். அஃதன்றி இப்பெரியோன் காலத்தில் இருந்த சிற்றரசர்கள் பலர் பல வைணவக் கோயில் எடுத்து காலத்தின் பெருமைக்குச் சான்றுபகர்ந்தனர். இவனது காலத்தில் கட்டப்பட்ட கோயில்களுள் மேலைக்கடம்பூரில் உள்ள அமிர்தகடேஸ்வரர் கோயிலும், தஞ்சையிலுள்ள சூரியனார் கோயிலும், குமரிமாவட்டத்திலுள்ள சோழீச்சுவரர் கோயிலும், இராஜராஜபுரம் என்று அழைக்கப்படும் ராராபுரம் என்று மருவி தாராசுரம் என்று அழைக்கப்படும் கோயிலும் முக்கியமானவை ஆகும்.
இவற்றிலே இராஜராஜபுரம் என்று அழைக்கப்படும் தாராசுரக் கோயிலை எடுத்து நோக்கினால் இராஜராஜனால் கட்டப்பட்ட ஒப்பில்லாத தஞ்சைக் கோயிலின் மாதிரியிலே ஆனால் சற்றுச் சிறிய வடிவில் அமைக்கப் பட்டது. கிழக்கு நோக்கி இருக்கும் கோயில் 350 அடி நீளமும் 255 அடி அகலமும் கொண்ட வளாகத்தில் அமைந்திருக்கின்றது. ஒரு கருவறை, அர்த்தமண்டபம், முகமண்டபம், ராஜகம்பீரன் திருமண்டபம் ஆகியவை ஒரே கட்டடத்தில் 205 அடி நீளமும் 75 அடி அகல அளவுகளில் கட்டப்பட்டிருக்கின்றன. கொடிமரம், சிறிய நந்தி மண்டபம் ஆகியவை கோவிலுக்கு வெளியே தரைமட்டத்திற்குக் கீழே இருக்கின்றன. கோயிலின் அடித்தளம் கூட தரைமட்டத்திற்குக் கீழேதான் இருக்கின்றது.
நாற்பது அடி சதுரம் கொண்ட கருவறையின் உறுதியான சுவர்களின் மீது விமான மேற்பகுதி 83 அடி உயரத்தில் கவினுற எழும்பி நிற்கின்றது. கருவறை “நிர்அந்தார்” வகையைச் சேர்ந்தது இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 102 Sசோதிலிங்கம்

எனின் அதைச் சுற்றிலும் இடைவெளி இல்லை. உள்ளே லிங்க வடிவில் இறைவன் 2ஆம் இராஜராஜனின் இராஜராஜேஸ்வரம் உடையார் காட்சி தருகின்றார். ஐந்து நிலைகளில் இருக்கும் விமானத்தின் உச்சியில் கலசம் தாங்கும் சிகரம் வட்டவடிவமானது. ஏறத்தாழ தஞ்சை விமானம் போன்ற சிறிய அமைப்பாகத் தோன்றும் இந்த விமானத்தில் கலசம் காணப்படுகின்றது.
கருவறையின் மூன்று வெளிச்சுவர்களிலும் நாயன்மார்களின் வாழ்க்கையோடு தொடர்புடைய சில காட்சிகளைக் கல்லில் செதுக்கி வைத்திருக்கின்றார்கள். அந்தக் காட்சியைக் குறிக்கும் தலைப்பும் செதுக்கப்பட்டிருக்கின்றது. கருவறை ஓர் தாமரைக் குளத்தில் மிதக்கும் தெப்பம் போன்று காட்சியளிப்பதாகக் கூறுகின்றார்கள். கருவறையின் அடித்தளம் அருகே இருக்கும் சிறிய தடுப்புக்கள் குளத்தைக் குறிக்கின்றன என்றும் அவற்றுக்கு வெளியே காணப்படும் வட்ட வடிவ அமைப்புகள் விளக்குகள் என்றும் சொல்கிறார்கள். முக மண்டபத்தையும் அர்த்த மண்டபம் இணைக்கின்றது. இதன் வாயிலில் இரு காவலர்கள் நிற்கின்றார்கள். இந்த மண்டபத்திற்கு உள்ளிருந்து வெளியேற வடக்குப்புறம் படிகள் அமைத்திருக்கின்றார்கள்.
முகமண்டபம் 77 அடி நீளமும் 57 அடி அகலமும் கொண்டது. ஆறுவரிசைகளில் அழகிய சிற்பவேலைப்பாடுகள் உள்ள 48 தூண்கள் இந்த மண்டபத்தைத் தாங்குகின்றன. இதை அடுத்து ராஜகம்பீரன் திருமணபம் என்ற மண்டபம் இது கோயிலின் தெற்குப் புறம் கோயிலின் கட்டட அமைப்பை விட்டு வெளியே நீட்டிக் கொண்டிருக்கின்றது. 78 அடி நீள 89 அடி அகல அளவிலான இந்த மண்டபம் ஒரு மாபெரும் தேரின் வடிவில் கட்டப்பட்டிருக்கின்றது. தேரின் சக்கரங்களும் இழுக்கும் குதிரைகளும் திகவும் நுணுக்கமாகச் செதுக்கப்பட்டிருக்கின்றன. இதைப் போன்ற ஒரு மண்டபத்தைச் சிதம்பரம் கோயிலில் (நிருத்த மண்டபம்) காணலாம். ஒரிசாவின் கோனாரத்தில் காணப்படும் (சூரியன் கோயில்). இது போன்ற கோயிலமைப்பு தாராசுரம் கட்டப்பட்டு நூறு இந்துநாகரிகத்தில்துணர்கலைகள் 103 Sசோதிலிங்கம்

Page 60
ஆண்டுகளுக்குப் பின்னரே (1235 - 1255) கட்டப்பட்டிருக்கின்றது. கோனாராக் கோயிலின் அமைப்பு தாராசுரம் அமைப்பைத் தழுவியதே என்று கூறுகின்றார்கள்.
இராஜகம்பீரன் மண்டபத் தூண்கள் உட்கார்ந்திருக்கும் யாளிகளின் தலைகள் மீது எழும்பி இருப்பது போன்று செதுக்கப்பட்டிருக்கின்றன. தூண்களின் உச்சியில் பலகைக் கற்களை வித்து விதானம் அமைத்து இருக்கின்றார்கள். கூரைகளையும் சிற்பிகள் விட்டுவைக்கவில்லை. அங்கும் தங்கள் திறமையைக் காட்டியிருக்கின்றார்கள். இராஜகம்பீரன் மண்டபத்திற்குத் தெற்கில் தேவியின் சந்நிதி இருக்கிறது. இக்கோவிலில் அவரது பெயர் தேவநாயகி. இது பிற்காலத்தில் 3ஆம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டது. சோழர்களின் கோயில்களில் தனியே அம்மன் சந்நிதி அமைக்கும் வழக்கம் 1 ஆம் குலோத்துங்கன் காலத்திற்குப் பின்னரே வந்துள்ளது. 3 ஆம் குலோத்துங்கள் இந்தக் கோயிலின் கோபுர உச்சியைச் சீரமைக்க அளித்த கொடைகளைக் கோயிலின் தெற்குச் சுவரில் காணப்படும் கல்வெட்டுக் கூறுகின்றது.
இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில் தில்லைக் கோயில் சிறப்புற்றிருந்தது. இவன் செய்த கோயில் திருப்பணிகள் குலோத்துங்கன் உலாவிற் சிறப்புற விளக்கப்பட்டுள்ளன. தில்லைக்கோயிலுக்கு ஏழுநிலை கோபுரம் அமைத்தான். தான் பிறந்த கயிலையை அதனிலும் மேற்பட்ட முறையில் அம்மனுக்கு திருமாளிகை அமைத்தான். கோவிலின் பல பகுதிகளுக்கும் நகரத்தில் சில இடங்களுக்கும் பொன் வேய்ந்தான். இவனைத் தொடர்ந்து மூன்றாம் குலோத்துங்கன் செய்துள்ள திருப்பணிகளும் பல இவற்றில் குறிப்பிடத்தக்கனவாக மதுரை ஆலவாய்ப் பெருமானுக்கு தன்பெயரால் திருவீதியும், திருநாளும் அமைத்தான். திரிபுவனம் கம்பஹரேசுவர் கோயிலைக் கட்டிமுடித்தான்.
வரலாற்றின்படி சோழ அரசர்கள் கட்டிய கோயில்களில் இதுவும் ஒன்று. தஞ்சையில் 1 ஆம் இராஜராஜன் அமைத்த கோயிலின் மாதிரியிலே கங்கைகொண்ட சோழபுரத்தில் 1 ஆம் இராஜேந்திரனும் தாராசுரத்தில் 2 இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 104 Sசோதிலிங்கம்

ஆம் இராஜராஜனும் கோயில்களை எழுப்பினார்கள். அவர்கள் வழிவந்த 3 ஆம் குலோத்துங்க சோழதேவன் திரிபுவனவீரபுரத்தில் மற்றுமொரு கற்றளியைத் தஞ்சைக் கோயிலின் வடிவிலேயே கட்டி கலைத்தாய்க்கு அளித்து மகிழ்ந்தான். இவன் பாண்டியரை வென்று மதுரையில் வீராபிஷேகம் புனைந்து வெற்றிவிழாக் கொண்டாடிய சமயத்திலே திரிபுவனவீரதேவன் என்னும் சிறப்புப் பெயரைப் பெற்றான். இதன்பேறாக பழையாறை, கும்பகோணம் ஆகியவற்றுக்கிடையில் அவனால் அமைக்கப்பட்ட பெருஞ்சிவாலயம் திரிபுவனவீரஈஸ்வரம் என்னும் பெயரைப் பெற்றது. ஆனால் இப்பொழுது கோயில் கம்பஹாரேஸ்வரம் என்று சொல்லப்படுகின்றது. திரிபுவனவீரஈஸ்வரம் அமைந்துள்ள ஊர் திரிபுவனம் என இந்நாட்களிலும் வழங்கப்படுகின்றது.
திரிபுவனத்தில் பொறிக்கப்பட்டுள்ள அவனுடைய மெய்க்கீர்த்தியைப் பாடும் கல்வெட்டு அவனுக்கு “பாண்டியாரி” என்ற ஒரு பட்டத்தைக் குறிப்பிட்டு அவன் சிங்களத்து அரசனைக் கொன்று சேரன் ஒருவனை வென்று வீரபாண்டியன் என்ற பாண்டிய மன்னனை அழித்து மதுரையைக் கைப்பற்றினான் என்றும் அவனுடைய பேரரசு வடக்கே சக்கரக்கோட்டம் முதல் தெற்கே ஈழம் வரை பரந்திருந்தது என்றும் சொல்கிறது. மதுரையை வென்றபின் அவன் வீராபிஷேகம் செய்து கொண்டான் என்றும் அதே சாசனம் தெரிவிக்கின்றது. இந்த வீராபிஷேகம் செய்த நிகழ்ச்சியைப் பற்றி சக்தி முற்றம் என்ற கோயிலில் உள்ள கல்வெட்டும் குறிப்பிடுகின்றது. இக்கோயிலின் இறைவன் சிவக்கொழுந்தீஸ்வரரின் தேர்த்திருநாளுக்காக ஒன்றேகால் வேலிநிலம் சிவராயதேவமுடையான் என்ற ஒருவரால் 3 ஆம் குலோத்துங்க சோழன் ஆட்சியில் நடைபெற்ற அந்த வீராபிஷேகத்தின் போது கொடையாக அளிக்கப்பட்டதைக் குறிப்பிடுகின்றது.
திரிபுவனம் கோவிலின் வடமொழிக் கல்வெட்டு குலோத்துங்க சோழன் நிர்மாணித்து திருத்தியமைத்த கோயில்களைப் பட்டியலிடுகின்றது. “சிதம்பரத்திலே சபாபதியின் முன்னுள்ள மண்டபத்தையும், மலைமகள்
இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 105 Sசோதிலிங்கம்

Page 61
கோயிலின் கோபுரத்தையும் சுற்றியுள்ள பிரகார மாளிகைகளையும் நிர்மாணித்தான் காஞ்சிபுரத்திலே ஏகாம்பரேசுவருடைய அழகு பொருந்திய கோயிலையும், மதுரையில் ஆலவாயாருடைய கோயிலையும், திருவிடை மருதூர் கோயிலையும், தாராசுரத்தில் உள்ள பூரீராஜராஜேஸ்வரர் ஆலயத்தையும், திருவாரூர் வால்மீகேசுவரர் கோயிலையும் பொன்மயமாக விளங்கும்படி அமைத்தான். வால்மீகாதிபதியின் சபையையும் பெரிய கோபுரத்தையும் கட்டினான்’ என்று இந்தச் சாசனங்கள் கூறுகின்றன.
சோழர் அமைத்த கோயில்கள் எல்லாம் கருவறையின் மீதுள்ள விமானம் உருளை வடிவில் கோபுரங்களை விட உயரம் கொண்டு நெடித்தோங்கி நிற்கும் இந்தாப் பாணியிலேயே திரிபுவனம் கோயிலும் கட்டப்பட்டிருக்கின்றது. ஊரின் நடுவே கிழக்கு நோக்கி இருக்கின்றது. கோயில் இரண்டு கோபுரங்கள், இரண்டு திருச்சுற்றுக்களும், ஒரு விமானமும் திருச்சுற்று மாளிகையும் மண்டபங்களும் கொண்ட கோயில் வளாகத்தை உயரமான மதிற்கவர் வளைத்திருக்கிறது. வெளிக்கோபுரம் மிகவும் அகலமாக பிரமாண்டமான அளவில் நிற்கிறது. இரண்டு அடுக்குகளில் அடிப்பாகமும் அதன்மீது ஐந்து நிலைகளில் கோபுரமும் எழுப்பப்பட்டிருக்கின்றன. தேவகோட்ட மாடங்கள் வெறுமையாக இருக்கின்றன. முதல் தளத்தில் விநாயகர், முருகன் ஆகியோரின் உருவங்களும் ஏனைய நிலைகளில் காவலர் உருவங்களும் வைக்கப்பட்டிருக்கின்றன. உச்சியில் 11 கலசங்கள் காணப்படுகின்றன.
இதனையடுத்து இருக்கும் 2 ஆம் திருச்சுற்றில் நந்தி மண்டபம், கொடிமரம் ஆகியவை இருக்கின்றன. கொடிமரம் செப்புத் தகடுகளால் ஆனது. அதன் சதுரமான அடிப்பகுதியில் விநாயகள், முருகன், சரபமூர்த்தி ஆகியோரின் உருவங்கள் காணப்படுகின்றன. திருச்சுற்றின் வலது புறம் வசந்த மண்டபமும் யாகசாலையும் இருக்கின்றன.
திரிபுவனக் கோயில் கர்ப்பக்கிரகம், அர்த்தமண்டபம், அந்தராளம், மகாமண்டபம், முகமண்டபம் ஆகிய பிரதான அம்சங்களைக் கொண்டுள்ளது. சதுரவடிவான கர்ப்பக்கிரகம் உள்ளே 38 சதுரமீற்றர் இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 106 Sசோதிலிங்கம்

சுற்றளவினையும், வெளியே 1829 சதுரமீற்றர் சுற்றளவினையும் கொண்டுள்ளது. கர்ப்பக்கிரகத்துச் சுவர்கள் 35 அடி உயரமானவை. இறையகத்தின் மேலுள்ள ஆறுதள விமானம் 21 அடி (2770 மீற்றர்) உயரம் கொண்டது. நிலமட்டத்திலிருந்து தூபியின் நுனி வரை கோயிலின் உயரம் 128 அடி (3840 மீற்றர்) ஆகும்.
தஞ்சைப் பெருவுடையார் கோயிலைப் போன்று திரிபுவனத்துக் கோயிலும் மிகவுயரமான உபபீடத்தில் அமைந்துள்ளது. அதனாற் கட்டடம் மிகுந்த கவர்ச்சியான வடிவத்தையும் அலங்காரத் தோற்றத்தையும் பெற்றுள்ளது. உபானம், பத்மதளம், வியாளமாலம், கண்டம் முதலிய அம்சங்கள் உயர்பீடத்திலுள்ளன. அவற்றின் மேலுள்ள பாகத்திற் சுருள் வளைவான வடிவங்களும் நாட்டியக் கோலங்களும் அமைக்கப்பட்டுள்ளன. கிழக்கிலுள்ளதை தவிர்ந்த மூன்று பக்கங்களிலும் உபபீடத்தின் மேல் சுவர்கள் உண்டு. அவற்றின் மேலமைந்த அதிஷ்டானத்தில் மூன்று தள உபானம், பத்மதளம், குமுதம், கண்டம், கபோதம், வியாளமாலம், வேதிகை என்னும் அம்சங்கள் காணப்படுகின்றன. குமுதத்திலே தாமரைப் பூவின் இதழ்கள் போன்ற வடிவங்கள் நிமிர்ந்த வடிவிலுங் கவிழ்ந்த கோலத்திலும் கீழும் மேலுமாக அமைக்கப்பட்டுள்ளன.
கர்ப்பக்கிரகத்தின் சுவர்களில் முன்புறமாக நீட்டி அமைக்கப்பெற்ற கட்டடத் தொகுதிகளிலே தேவகோட்டங்கள் உள்ளன. அவற்றில் வடக்கிலே பிரமாவும், மேற்கிலே லிங்கோற்பவரும், தெற்கிலே தட்சிணாமூர்த்தியும் அமைந்துள்ளனர். சுவர்ப்பாகம் ஒவ்வொன்றிலும் சதுரமான பீடமும் எண்கோண வடிவமுள்ள தண்டும், கண்டம், கும்பம், குமுதம் முதலிய அம்சங்கள் கூடிய மேற்பாகமும் பொருந்திய தூண் வடிவங்கள் காணப்படும். தேவகோட்டங்களின் பக்கங்களிலுள்ள தூண் வடிவங்கள் அளவில் சிறியவை. அர்த்த மண்டபத்தின் தெற்குப் பக்கத்திலே கணேசரின் வடிவமும், வடக்குப் புறத்திலுள்ள - தேவகோட்டத்திலே ஷட்புய துர்க்கையின் உருவமும் உள்ளன.
இந்துதாகரிகத்தில்துணர்கலைகள் 107 Sசோதிலிங்கம்

Page 62
நந்தி மண்டபத்தின் எதிரே உட்கோபுரம் நிற்கிறது. இரண்டு வாயில் காவலர்கள் காக்கும் இந்தச் சிறிய கோபுரத்தின் குமுதமானது ரேகை வடிவிலான நிரைகளைக் கொண்டது. கோயிலின் உயர்ந்த மதிற்கவருக்கு வாயிலாக அமைந்துள்ளது. மூன்று நிலைகளும் ஏழு கலசங்களும் பெற்ற இக் கோபுரத்தின் முதல்நிலையில் அழகான சிலைகள் காணப்படுகின்றன. நடுவே இருக்கும் சிவபார்வதி சிலைகளை வணங்கியபடி இருபுறமும் ஓர் அரசனும் அரசியும் நிற்கிறார்கள். இவை குலோத்துங்கனும் அவனது அரசியாகவும் இருக்கலாம் என்கிறார்கள். இந்த வாயிலைக் கடந்ததும் கோயிலின் முதற்சுற்று வரும். அதை ஒரு திருச்சுற்று மாளிகை வலம்வருகிறது. திருச்சுற்றின் நடுவே கோயிலுக்கு தனித்தன்மையைத் தரும் முக்கிய பகுதியான விமானம் தஞ்சை விமானத்தை நினைவுபடுத்தியபடி கம்பீரமாக எழும்பி நிற்கிறது. உயரமான அடித்தளத்தின் மீது கருவறையின் சுவர் எழுப்பபட்டு இருக்கிறது. அதன் மீது கொடுக்கைகள் துருத்திக் கொண்டு இருக்கின்றன. மேலே ஏழு நிலைகளில் விமானம் விண்ணோக்கி எழுகிறது. ஒவ்வொரு நிலையிலும் ஏராளமான சிற்பங்கள் மிகவும் நெருக்கமாக விமானத்தின் நான்கு புறங்களிலும் செதுக்கப்பட்டு இருக்கின்றன.
திருக்காமக்கோட்டம் அலங்கார வேலைப்பாடுகள் மிகுந்த உபபீடம் ஒன்றில் அமைந்திருக்கின்றது. அதன் இறையகம் சதுரவடிவமானது. விமானத்தின் கிர்வமுஞ் சிகரம் வட்ட வடிவம் கொண்டவை. முன்புறமாக அர்த்த மண்டபம், மகாமண்டபம் என்னும் அமைப்புக்கள் உள்ளன. இவை யாவும் ஒரு பொதுவான அதிஷ்டானத்திலுள்ளன. உபானம், பத்மம், யகதி, திரிபட்ட குமுதம் ஆகிய அம்சங்கள் அதிலுண்டு. இறையகத்தில் அமைந்த மூன்று தேவகோட்டங்களிலும் இச்சா சக்தி, ஞானாசக்தி, கிரியாசக்தி ஆகியோரின் படிமங்கள் அமைந்திருக்கின்றன.
கருவறையையும் மகாமண்டபத்தையும் இணைக்கும் அர்த்த மண்டபத்தை தெற்கு வடக்குப் புறமாகவும் சென்றடையலாம். இரு நிலைகளில் கற்படிகள் இருக்கின்றன. அவற்றின் ஓரங்களில் கோரைப் பற்களோடு யாளியின் உருவங்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன. இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 108 Sசோதிலிங்கம்

அடிப்பகுதியில் போர்புரியும் வீரர்களின் உருவங்கள் நிறைந்திருக்கின்றன. மகாமண்டபத்தை நாயர் மண்டபம் என்றும் அழைக்கின்றார்கள். இதன் அடித்தளம் முழுவதும் அழகிய சிற்பங்கள், நடனமாடும் பெண்கள், போர்வீரர்கள், இராமாயணக் காட்சிகள் என ஒரு சிற்பக் களஞ்சியமே படைக்கப்பட்டிருக்கிறது. மண்டபத்தின் முகப்பிலுள்ள தூண்களை யாளிகள் தாங்கி நிற்கின்றன. கூரையில் தாமரை மொட்டுக்களை மிகவும் கவினுறப் பொறித்திருக்கிறார்கள்.
இவ்வாலயத்தில் சரபமூர்த்திக்கு தனிக்கோட்டம் அமைக்கப் பெற்றுள்ளமை கட்டடக்கலை வரலாற்றின் தனித்துவத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாகும். அத்துடன் சமஸ்கிருத சாசனம் பொறிக்கப் பெற்றுள்ளது. பிரகஸ்தி வடிவில் அமைந்த அதன் பாகம் திரிபுவன வீரதேவனின் சாதனைகளை நயம்பெற வர்ணிப்பதோடு ஆலயம் அமைந்த வரலாற்றினையும் விளக்குகின்றது. சிவன், பார்வதி ஆகியோர் பற்றிக் கொள்ளும் திரிபுவன ஈஸ்வரத்தை திரிபுவன வீரதேவனான குலோத்துங்கன் அமைப்பித்தான் என்றும் இது சோழப் பெருமன்னர்களால் அமைக்கப்பெற்ற நான்கு பெருங் கோயில்களுள் ஒன்றாக மிள்வது இக்காலக் கட்டடக்கலை வரலாற்றுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமைகின்றது. இத்துடன் கோயிலின் மதில்கள் முழுவதும் அழகிய சிற்பவேலைப்பாடுகளாலும் ஓவியங்களாலும் நிரம்பப்பெற்றன. தில்லை நடராசப் பெருமானது திருமுக மண்டபத்தையும் அம்மன் கோபுரத்தையும் கோயிலின் திருச்சுற்றையும் கட்டுவித்தான் முடித்தலைகொண்ட பெருமாள். திருவீதி என்று மேற்குத் தெரு ஒன்றை எடுப்பித்தான். திருவாரூரில் உள்ள சபாமண்டபமும் பெரிய கோபுரமும் இவன் முயற்சியால் இயன்றவை. அத்துடன் கச்சி ஏகம்பர் கோயிலையும் புதுப்பித்தான். இவனது இசைவு பெற்று திருக்கோவலூர் மலைமான்கள் செய்த பெருமாள் திருப்பணிகள் பலவும் செய்யப்பட்டன.
இத்தகைய நிலையில் இக்காலகட்டப் பரப்பில் அமைக்கப்பட்ட கோயில்கள் பெரியனவாக இல்லை. காலத்தின் தன்மை எடுத்தியம்பும் வகையில் முதிர்ச்சி காட்டி நின்றன. அந்த வகையில் முதலாம் குலோத்துங்கனால் அமைக்கப்பட்ட திரிபுவன வீரேசுவரம், திருவெண்காடு இந்துநாகரிகத்தில் துணிகலைகள் 109 SCFigůsub

Page 63
திருச்செக்கத்தான் அமைத்த நிலையில் இவற்றிலே திருவெண்காடு ஐந்து அடுக்கு கோபுரத்தைக் கொண்ட நிலையில் இங்கே கோயிலை அணிசெய்வன கோபுரங்களே. இவற்றினூடாக சோழர்காலத்துக்கென புதிய முறைமையில் அறிமுகம் செய்யப்பட்ட விமான முறைமைகள் மாற்றியமைக்கப்பட்டு மீண்டும் பழைய நிலையில் பல்லவர் காலத்தில் அறிமுகம் செய்யப்பட்ட கோபுரங்கள் மிகச் சிறப்பான முறையில் அமைக்கப்பட்ட நிலையில் அவை விமானங்களை விட உயரம் கூடியனவாக அமைந்திருந்தன.
பொதுவான முறைமையில் சோழர்காலக் கட்டடக்கலை வரலாற்றை நோக்கும்போது பல படிமுறைமைகள் கொண்ட ஒரு வளர்ச்சிக் கட்டமாக அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்ற தாரளமான சிந்தனைக்கேற்ப பொருளாதார வளர்ச்சி நிலைகளுக்கேற்ற வகையில் ஒவ்வொரு மன்னர்களும் தாம் விரும்பிய பிரதிபலிப்புக்களை உடனுக்குடன் இடம்பெறச் செய்யும் வகையில் பிரமாண்டமான முறையிலும் விமானம், விக்கிரகம், கோபுரம் என்பவற்றை உள்ளடக்கி அவற்றின் வளர்ச்சி ஏனைய குறைபாடுகளைப் போக்கும் வகையிலும் சிற்ப வேலைப்பாட்டுத் திறன்களுடன் கூடிய அபரிவிதமான வளர்ச்சிப் படிநிலைகளைக் கொண்டதான முறைமையில் அமைக்கப்பட்ட நிலையில் சோழர்கள் அமைத்த பெருங்கோயில்களில் ஒன்றாக இரண்டாம் இராஜஇராஜன் எடுத்த தாராசுரம் சுந்தரேசுவரர் ஆலயம் விளங்குகின்றது. ஓங்கிய விமானத்துடன் மண்டபம், திருச்சுற்று பலிபீடம் என்பனவும் அழகாக அமைந்துள்ளன. சோழர்காலக் கோயில்களுள் உயர்ந்ததாகவும் சிறந்ததாகவும் அமைக்கப்பட்ட கடைசிக் கோயில் திரிபுவனத்திலுள்ள கம்பஹரேஸ்வரர் கோயிலாகும். இதனை மூன்றாம் குலோத்துங்க்ன் கட்டினான். இது தஞ்சைக் கோயிலை ஒத்ததாக இருந்தபோதும் கங்கைகொண்ட சோழேச்சரத்தை விடச் சற்று உயரம் குறைந்ததாகவே அமைந்து காணப்படுகின்றது. இத்தகைய நிலையில் ஆரம்ப கால வளர்ச்சிகள் காலப்பரிணாமத் தன்மையில் முதிர்ச்சியிடைந்து பின் அவை குறைவுபட்டுச் செல்லும் தன்மையை ஒத்ததான முறைமையிலே சோழர்கால கட்டடக்கலை வரலாறு சித்தரிக்கப் பட்டபோதும் உண்மையில் கட்டடக்கலை வரலாற்றில் உச்சநிலைத் தன்மையை எடுத்துக்காட்டிய ஒரு பொற்கால வரலாறாகவே இக்காலத்தைக் காணமுடிகின்றது.
இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 110 Sசோதிலிங்கம்

(விஜயநகரகாலக் கட்டடக்கலை)
இந்திய வரலாறு கண்ட ஒரு பேரரசாக கிபி 1336 ஆம் ஆண்டிலிருந்து கிபி 1585 வரையுள்ள காலம் விஜயநகரப் பேரரசு காலமாகும். இக்காலமே திராவிடக் கட்டடக்கலை வரலாற்றில் நான்காவது பெருங்கட்டமாக அமைகின்றது. தக்கணத்தில் ஹோய்ஸலர்களும் காகதீய வம்சத்தினரும் தமிழ்நாட்டில் சோழர்களும் பாண்டியர்களும். வலுவிழந்து நலிவுற்றபோது விஜயநகரப் பேரரசு அமைந்தது. இப்பேரரசின் மன்னர்கள் தீவிர இந்துக்கள். சாத்தியமான எல்லா வழிகளிலும் இந்துமதத்தைப் பரப்ப அவர்கள் பெரிதும் பாடுபட்டனர். ஆலயங்களைக் கட்டுவதும் அவற்றுள் முக்கியமானதொன்றாக இருந்தது. அவர்கள் தக்கணத்திலும் தமிழ்நாட்டிலும் நிலவிய கட்டக்கலை மரபுகளைப் பின்பற்றியதுடன் தங்கள் பாணியில் வளர்ச்சிபெறவும் செய்தனர். அவர்களது ஆரம்ப தலைநகரான ஹம்பியில் சாளுக்கிய மரபிலும் தமிழக மரபிலும் கட்டப்பட்ட எண்ணற்ற கோயில்கள் உள்ளன. பின்னர் அவர்களுடைய தலைநகராக இருந்த இடங்களிலும் ஆனந்தப்பூர் மாவட்டபெனு கொண்டாவிலும் சித்தூர் மாவட்டம் சந்திரகிரியிலும் வடஆற்காடு வேலூரிலும் கோதாவாரியிலிருந்து கன்னியாகுமரி வரை வேறு பல இடங்களிலும் சிறியதும் பெரியதுமான ஏராளமான கோயில்கள் உள்ளன. இத்தகைய கோயில்களை விஜயநகரப் பேரரசின் சங்கமகுலத் தலை மன்னர்களான ஹரிஹரர், புக்கள் இவர்களது ஆட்சிக் காலத்தில் தமிழக ஆட்சியாளராக நியமிக்கப்பெற்றவரே புக்கரின் மகனான இரண்டாம் கம்பண்ணன் என்னும் குமாரகம்பண்ணர் ஆவார். இவரின் மனைவியான கங்கமாதேவி யாத்த 'மதுராவிஜயமும், இராகநாத திண்டிம கவியின் சாளுவாப்யுதயமும்” குமாரகம்பண்ணரின் தமிழகப் பணிகள் பற்றி விரிவாகக் கூறுகின்றன. ஏறத்தாழ கிபி 1350 ஆம் ஆண்டுக்குப் பிறகே குமாரகம்பண்ணரால் தமிழகக் கோயில்களின் முட்டுப்பாடு அகன்று மீண்டும் தழைக்கத் இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 111 Sசோதிலிங்கம்

Page 64
தொடங்கின. சோழர்காலத்தைக் காட்டிலும் இவர்களது காலத்தில் ஆலய நிர்மாணப்பணிகள் அதிகமாக இருந்தமை அக்கால கட்டடக்கலை வளர்ச்சிப் போக்கின் திறனை எடுத்துக்காட்ட ஆதாரமாக இருந்தன.
விஜயநகரர் காலத்தில் தென்னிந்தியக்கலை ஒரு பூரணத்துவம் பெற்றதுடன் கலப்பற்ற சுதந்திரமான முறையில் தன்னைச் செழிப்பாகவும் காட்டிக் கொண்டது. இஸ்லாத்தின் தாக்குதலுக்கும், ஆக்கிரமிக்கும் பின் என்னென்ன பண்புகளும் அம்சங்களும் பாழாகமல் எஞ்சி நின்றனவோ அவற்றைப் பாதுகாத்து வளர்க்க வேண்டுமென்ற பெரு நோக்கம் விஜயநகரப் பேரரசர்களுக்கிருந்தது. இந்த உணர்வுக்கீடான முறையில் ஒரு சுதந்திரக் கலையாகத் தென்னாட்டுக் கலை அதுவும் கட்டடக் கலையாக விளங்கியது.
1. பதங்கள்
விஜயநகரப் பேரரசர்கள் திருப்பணிபுரிந்த கோயில்களில் இரண்டுக்கு மேற்பட்ட பலதிருச்சுற்றுக்கள் (பிரகாரங்கள்) அமைப்பது அவற்றின் நான்கு திசைகளிலும் வாயில்களாம் கோபுரங்கள் எடுப்பது கோயிலுக்கு வெளியிலுள்ள திருவீதிகளையும் கோயிலின் அங்கமான புறத்திருச் சுற்றுக்களாகவே கொள்வது ஆகிய புதிய நெறிகளை வகுத்தனர். திருவரங்கம் திருக்கோயிலுக்கு ஏழு பிரகாரங்களும் மன்னார்குடிக் கோயிலுக்கு ஆறு பிரகாரங்களும் விரிவுபடுத்தியதைச் சிற்பபாகக் குறிப்பிடலாம். இது போன்று திருவண்ணாமலை, திருக்கழுக்குன்றம், திருமூட்டம், திருவானைக்கா, திருக்கோவிலூர் போன்று பல இடங்களிலும் பதங்கள் விரிவு பெற்றுள்ளன என்று குறிப்பிடலாம். திருக்கோபுர வாயில் புறமதில் இவைகளுக்கு வெளியிலுள்ள புறவீதிகளும் கோயில்களின் பிரகாரங்களாகவே மதிக்கப்பெற்றன என்பதை மன்னார்குடி, யூரீமுஷ்ணம் போன்ற ஊர்களில் ராஜவீதிகளில் பலிபீடமும் துவாஜஸ் தம்பமும் அமைந்துள்ளதை ஆதாரமாகக் கொண்டு அறியலாம். தில்லையில் அட்டதிக்கு தேவதைகளுக்குப் பலியிடல், பலிபீடங்கள் ராஜவீதியில் மிகப்பெரிய அளவில் வகுத்துள்ளமையும் இதற்குச் சான்றாகும். இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 112 SCFITsinasib

I. திருமதில்கள்.
விஜயநகர மன்னர்கள் எடுத்த மதில்கள் மிகப் பலவாயினும் குறிப்பிடத்தக்க சிறப்பு வாய்ந்தவை. தஞ்சாவூர் பெரியகோயில், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில், அருளாளப் பெருமாள் கோயில், திருக்கழுக்குன்றம் திருவண்ணாமலை, மதுரை, திருவரங்கம் போன்ற பெரிய திருக் கோயில்களின் திருமதில்களாகும்.
இவர்கள் செய்த திருமதில்களின் நிருமாணத்திற் மூன்று வகைப் பாடுகளைக் காணமுடிகின்றது. (1) முழுவதும் கருங்கற்களைக் கொண்டு எடுக்கப்பெற்றவை. (2) செம்புறம் பாறைக்கற்களைக் கொண்டும் செங்கற்களைக் கொண்டும்
எடுக்கப்பெற்றவை. (3) செங்கற்களை மட்டும் கொண்டு எடுக்கப்பெற்றவை.
என்பவை ஆகும்.
கருங்கற்களால் எடுக்கப்பெற்ற விஜயநகர மதில்களில் விஜயநகர அரசின் இலட்சினையான வராகம், குத்துவாள், சூரிய சந்திரர்கள் போன்ற உருவங்களையும் இராகு சந்திரனை விழுங்குதல், மகரங்கள் கண்ட பேரண்டப் பறவை, கயல்கள் உடும்பு போன்ற சிற்ப வடிவங்களையும் பொறிப்பது வழக்கமாகும். இஃது இவர்களது தனித்தன்மையாகவே காணப்பெறுகின்றது. -
கோயில்கள் சிறிய கோயில்களாக இருப்பினும் முழுச் செங்கற்கள் கொண்டும் பெரிய கோயில்களாயின் இருபுறமும் முழுச்செங்கற்கள் கொண்டும் உள்ளே உடைந்த துண்டுச் செங்கற்கள், மூண்டுக் கற்கள் கொண்டும் எடுக்கப் பெற்றுத் திகழ்கின்றன. இத்தகைய மதில்களில் வெளி அடுக்குக் கற்கள் சுண்ணாம்புச் சாந்து கொண்டு கட்டப்பெற்று உள்ளே மண் சாந்துக் கலவையோடு முண்டுக் கற்களைப் பயன்படுத்தி உள்ளனர். அடிப்பகுதி பருத்தும் மேலே செல்லச் செல்லக் குறுகியும் காணப்படுகின்றன. தலையீடு சுண்ணச்சாந்து கொண்டு பத்திருப்பு என்ற இந்துநாகரிகத்தில்துணிகலைகள் 113 Sesuchús

Page 65
வடிவமைப்போடு கட்டப் பெற்றிருக்கும் மதிலின் தலைப்பகுதியின் உச்சியில் மழைநீர் தேங்காவண்ணம் சரிவான ஏற்ற அமைப்பு உருவாக்கப் பெற்றுள்ளது. இச்சரிவுகளும் விந்த தலைப்பகுதியும் உள்ளே நிரம்பப் பெற்றுள்ள மண்சாந்து பாதிக்கப் பெறாவண்ணம் காப்பவையாகும். குறைந்த செலவீட்டில் அமைக்கப்பெறும் தனிச்சிறப்பு இதற்குண்டு.
விஜயநகர மன்னர் தங்கள் ஆட்சியை இங்கு நிலைநாட்டுவதற்கு முன்னர் இவ்விடங்களில் ஹொய்சளர், காகதீயர்கள் ஆகியோருடைய ஆட்சியிலும் கலைகள் இருந்தன. இவர்களைத் தொடர்ந்து விஜயநகர மன்னரும் ஹொய்சளர் கலைச்சாயலையும் காகதீயர் கலைப்பண்பையும் இணைத்து விஜயநகரப் பாணியை உருவாக்கினர். விஜயநகரருடைய தலைநகராகிய ஹம்பியில் பல கோயில்கள் கட்டப்பட்டன. ஆந்திரம், கர்நாடகம் ஆகிய இடங்களிலும் பல கோயில்களை அமைத்தனர். தமிழ்நாட்டிலும் சில கோயில்களும் கோபுரங்களும் கல்யாண மண்டபங்களும் அமைக்கப்பட்ட்டன.
I. கோபுரங்களின் எழுச்சி.
இக்காலப் பிரிவில் கோயில்கள் பல விமரிசையாகக் காணப்பட்டன. புதிய நிர்மாண முறைகள் கையாளப்பட்டன. கோயில்கள் அளவில் பெருமாளிகைகளை ஒத்திருக்க அழகிய மண்டபங்களும் கூடங்களும் கோயிலுக்குள்ளே ஆங்காங்கே அமைந்தன. மூலக்கோயிலோடு பிற தெய்வங்களும் சிறு கோயில்களும் கட்டப்பட்டன. திருக்கல்யாண விழா அக்காலத்தில் சிறப்பு பெற்றிருந்தமையால் கோயில்களில் கல்யாண மண்டபங்கள் எழுந்தன. கற்தூண்கள் வரிவளியாக கண்களைக் கவரும் முறையில் அமைந்து ஆயிரங்கால் மண்டபங்கள் பல கோயிலில் இருந்தன. தூணின் அமைப்பிலும் பெருங்கவனம் செலுத்தப்பட்டது. தூணின் நடுப்பகுதி நுட்பமான சிற்ப வேலைப்பாடுகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. பல்லவர் காலத்தில் வேலைப்பாடில்லாது சாதாரண முறையில் செய்யப்பட்டிருந்த தூணின் உயர்மட்டத்தில் உள்ள பொதிகைக்கட்டை காலவோட்டத்தில் முதிர்ச்சி பெற்று விஜயநகர காலப் இந்துநாகரிகத்தில் துணிகலைகள் 114 Sசோதிலிங்கம்

பகுதியில் தொங்கு தாமரை மொட்டுப் போன்று நேர்த்தியாக அமைவதாயிற்று. தூண்கள் பட்டமோணையிலும் வாசல்களிலும் நாகதந்தம் என்ற சிங்கார மெட்டு பன்னிரண்டாம் நூற்றாண்டில் தோன்றி விஜயநகர காலத்தில் முதிர்ச்சியடைந்தது. அவர்களது கோயில்கள் சில புகழுக்குரிய மண்டபங்களையும் கோபுரங்களையும் கொண்டவை. இவர்கள் காலத்தில் கோயில்களுக்கு வானளாவிய கோபுரங்கள் கட்டப்பட்டன. அக்கோபுரங்களில் கதையால் மிக அழகான உருவங்கள் அமைக்கப் பட்டன. எடுத்துக்காட்டாகக் கிருஷ்ண தேவராயர் சிதம்பரத்தில் கூத்தப் பெருமான் கோயிலில் கட்டிய வடக்குக் கோபுரத்தையும், காஞ்சிபுரத்தில் அமைந்த தெற்குக் கோபுரத்தையும், திருக்காளத்தியில் எழுப்பிய கோபுரங்களையும் கூறலாம். இந்தக் கோபுரங்களுக்கு இராயர் கோபுரங்கள் என்னும் மதிப்பு ஏற்பட்டது. காஞ்சிபுரத்து ஏகாம்பரநாதர் கோயிலில் தென்னிந்தியாவிலே மிகப்பெரிய கோபுரம் உள்ளது. இதன் உயரம் 188 அடியாகும். இதில் பத்து நிலைமாடங்கள் உண்டு. இப்பெருங் கோபுரத்தைக் கிருஷ்ண தேவராயர் கட்டினார். கிருஷ்ண தேவராயர் சிம்மாத்திரியிலிருந்து திரும்பியபோது சிதம்பரத்துக் கோயில் வடக்குக் கோபுரத்தைக் கட்டினார். இதன் உயரம் 140 அடியாகும். இதன் அடிப் பாகம் கற்களாலும் மேல் கூர்ப்பகுதி கல்லும் சுண்ணமும் கொண்டு கட்டப்பட்டன. வைணவ சிற்பங்களும் சைவ உருவங்களும் இதில் உள்ளனவாம். கிருஷ்ண தேவராயர் உருவமும் இக்கோபுரத்தில் இருப்பது குறிப்பிடத்தக்க சிறப்பு அம்சமாகும்.
இவர் தம் காலத்துக் கோயில்களில் விசேஷ அம்சங்களாக புஸ்ப பொதிகைகள் விரிவாகவும் நேர்த்தியாகவும் செதுக்கப்பட்ட தூண்கள் மீது கும்ப பஞ்சரங்கள், மண்டபங்கள் ஆகியவற்றை அமைத்ததுடன் நுட்பமான வேலைப்பாட்டையும் அறிமுகம் செய்தனர். அவ்வகையில் கல்யாண மண்டபம், உற்சவ மண்டபம், ராஜகோபுரம் எனப்படும் பெரிய கோபுரங்களைக் குறிக்கலாம். பெரிய ஆயிரம்கால் மண்டபங்கள் இக் காலத்தில் கட்டப்பட்ட நிலையில் வேலூர் கல்யாண மண்டபமும் விஜய நகர ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட திராவிட முறைக்கு எடுத்துக் இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 115 Sசோதிலிங்கம்

Page 66
காட்டாகும். காஞ்சிபுரத்திலிருக்கும் வரதராஜர் கோயிலின் சில பாகங்கள் விஜயநகர வேந்தர்களால் கட்டப்பட்டன. இதிலுள்ள கல்யாண மண்டபமும் வேலூர் மண்டபத்தை ஒத்துக் கட்டப்பட்டது. சிதம்பரம் நடராஜப் பெருமான் திருக்கோயிலுள்ள ஆயிரம்கால் மண்டபமும் விஜயநகர மன்னர்களால் கட்டப்பட்டதே. இம்மண்டபம் 197 அடி அகலமும் 337 அடி நீளமும் கொண்டது. ஒவ்வொரு தூணும் ஒவ்வொரு கல்லாலானது. ராஜகோபுரங்கள் சிலவேளைகளில் பதினொரு அடுக்கு வரை கொண்டதாக இருக்கும். தென்னிந்தியாவின் திராவிட பாணிக் கோயில் கலைக்கு விஜயநகரப் பேரரசின் காலம் வழங்கிய முக்கியமான அம்சங்கள் இவை எனலாம்.
கோபுர அமைப்பு முறமையிலே காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில் கோபுரமும் திருவண்ணாமலை கோயிற் கோபுரங்களிற் சிலவும் காளகஸ்தி கோயிற் கோபுரங்களும் அவர்கள் வகையிற் சிறந்தவை. திருவண்ணாமலைத் திருக்கோயிலின் ஆயிரங்கால் மண்டபத்திற்கு முன்பாகவுள்ள கற்பலகை ஒன்றில் கிபி 1517 இல் வெட்டப்பட்ட கிருஷ்ண தேவராயரின் சாசனமொன்று பின்வருமாறு குறிப்பிடுகின்றது.
“உடையர் திருவண்ணாமலை உடையநாயனார்க்கும் நாச்சியார் உண்ணாமுலை நாச்சியாருக்கும் இராயர் கிருஷ்ணராயர் மகாராயர் தன்மமாகப் பண்ணுவித்த திருப்பணி ஆயிரங்கால் மண்டபம். இதற்கு முன்பாக வசந்தன் தெப்பத் திருநாளுக்கு வெட்டின திருக்குளம் இதற்குத் தண்ணிர் வரத்து விழ வெட்டிய திருமலைதேவி அம்மன் சமுத்திரம் பதினொரு நிலைக் கோபுரம் ஏழாந்திருநாள் மண்டபம், விநாயகருக்குப் பண்ணுவித்த திருத்தேர் வானவதரையன் சோழன்வாசல் கதவு கதவுக்கால் மேற்படி உத்தமசோழன் திருவாசல்கதவு, பலகணிவாசல் பொன்பூசினதும் இந்த வாசல் முன்னதாகவும் பத்திரமத்திற் கெட்டிக் கொடுங்கைத் தகடு பொன் பூசினதும் உண்ணாமுலை நாச்சியார் கோயில் சடைப்பெருமாள் நாயனார் சன்னதிக்கு மேற்குவாசல் கதவு மேற்படி வெங்கலமும் வாசல் கால் கதவு மேற்படி பொன் பூசினதும் தூவிப் இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 116 Sசோதிலிங்கம்

பொன் பூசினதும் நாச்சியார் கோயில் மடப்பள்ளி முன் வெட்டின ஆராவமுகக் கிணறும்” என்று தொடர்கின்றது. இக்கல்வெட்டின் வழியாகப் பதினொரு நிலைக் கோபுரம் எடுக்கும் விஜயநகரப் பாணி பற்றி அறிவதோடு ஒரு திருக்கோயிலில் அப்பேரரசர் எந்தெந்த விதமான திருப்பணிகள் புரிந்தார்கள் என்பதையும் தெளிவாக அறிகின்றோம்.
கோயிலின் கிழக்கு கோபுர வாசலிலே முதல் வாயில். இது பதினொரு நிலைகளைக் கொண்ட 217 அடி உயரமும் 135 அடி அகலமும் உடைய மிகப்பெரிய கோபுரம். இதனை கிருஷ்ண தேவராஜன் என்ற அரசன் (1516) கட்டி இருக்கின்றார். அவருடைய தெலுங்குக் கல்வெட்டு இந்தக் கோபுரத்தின் சுவரில் வெட்டப்பட்டிருக்கின்றது. இந்தக் கோபுரத்தை ஒட்டியபடி திட்டிவாசல் என்ற ஒரு வாயிலும் உண்டு. மேற்கிலிருக்கும் கோபுரத்திற்கும் பேய்க்கோபுரம் என்றும் வடக்கிலிருப்பதற்கு அம்மணி அம்மன் கோபுரம் என்றும் பெயர்கள். தெற்கிலிருப்பது திருமஞ்சனக் கோபுரம். இவை எல்லாமே மிகப்பெரிய கோபுரங்கள் கட்டைக் கோபுரங்கள் என அழைக்கிறார்கள்.
கிழக்கு வாயிலின் வழியே நுழைந்ததும் முதல் திருச்சுற்றுத் தென்படுகின்றது. அதன் வலதுபுறம் ஆயிரங்கால் மண்டபம் இருக்கின்றது. கற்றுாண்கள் எல்லாம் சிற்பங்கள் கொண்டவை. மண்டபத்தின் தென்மேற்கு மூலையில் பூமிக்கு அடியிலுள்ள சந்நிதியில் பாதாளலிங்கம் இருக்கின்றது. இங்குதான் யூரீரமணமகரிஷி தன் பெரும்பாலான நேரத்தைத் தியானத்தில் செலவிட்டார் என்கிறார்கள்.
ஆயிரங்கால் மண்டபத்தை அடுத்து கோபுர சுப்பிரமணியத் சந்நிதியும் எதிரே முருகன் திருமுன்னும் இருக்கின்றன. இந்த முருகன் சந்நிதி கம்பத்து இளைஞனார் என்று பெயர். அருணகிரிநாதரின் வேண்டுதலுக்கு இணங்கி முருகப் பெருமான் இங்குள்ள ஒரு தூணில் இருந்து (கம்பம்) மயிலுடன் வெளிப்பட்டுக் காட்சி தந்ததால் இந்தப் பெயர் என்கிறார்கள். கருவறையில் திருமுருகன் எழுந்தருளி இருக்கின்றார். இந்துநாகரிகத்தில் துணிகலைகள் 117 Sசோதிலிங்கம்

Page 67
கம்பத்து இளைஞனார் சந்நிதிக்குப் பின்னால் விநாயகர் சந்நிதி இருக்கின்றது. இதனையடுத்து சிவகங்கைக் குளம் காணப்படுகின்றது. இதற்கு ஆதி நாட்களில் வசந்தகோலம் என்ற பெயர் இருக்கின்றது. எதிரே வல்லாளன் கோபுரம் ஐந்து நிலைகள் கொண்டு ஏராளமான சிற்பங்களுடன் எழும்பி நிற்கிறது. ஒருமுறை உடல் நோயினால் வருந்திய அருணகிரிநாதர் தம் உயிரை மாய்த்துக்கொள்ள இக்கோபுரத்தின் மீது ஏறிக் குதித்தார். அவரைக் கீழே விழுந்துவிடாமல் முருகப்பெருமான் கையில் தாங்கி கீழே விட்டாராம். அதுமுதல் எவ்வித துன்பமுமின்றி அருணகிரிநாதர் திருப்புகழ் பாடத் தொடங்கினார் என்பது தலவரலாறு. இந்தக் கோபுரவாயிலை அடையப் படிகள் வழியே ஏறிச்செல்ல வேண்டும். படிகளின் இருபுறமும் கோபுர சுப்பிரமணியர், சுந்தரேசுவரலிங்கம் ஆகிய இரு சந்நிதிகள் உள்ளன.
இரண்டாவது திருச்சுற்றின் இடதுபுறம் பிரம்மதீர்த்தம் என்ற குளமும் வைரவர் சந்நிதியும் இருக்கின்றன. மூன்றாவது திருச்சுற்றின் வாயிலில் கிளிக்கோபுரம் அழகிய கதை உருவங்களுடன் ஆறு நிலைகளில் அமைந்துள்ளது. இதனைக் கடந்ததும் மங்கையற்கரசி என்பவரால் எழுப்பப்பட்ட மண்டபம் எதிப்படுகின்றது. ஏற்கனவே இருந்த கோயில்களில் மேலும் புதிதாகப் பல கட்டடங்களை சேர்ப்பதுவே இக்காலத்தில் பிரதானமாக இருந்தபோதிலும் விஜயநகரத் தலைநகரமான ஹம்பியில் உள்ள பல கோயில்களிலும் மண்டபங்களிலும் கற்களில் தமிழ் எண்கள் இடம்பெற்றுக் காணப்படுகின்றன. தமிழகம் கடந்து பெல்லரிக்கு அருகில் உள்ள இத்தலைநகரில் தமிழ்ச் சிற்பிகளின் குறியீடுகளைக் காணும்போது அவர்களது கட்டடக்கலைத் திறன் எந்தளவு விஜயநகரப் பேரரசர்களால் போற்றப்பெற்றது என்பதனை அறியமுடிகின்றது. இத்துடன் இவர்களின் ஆக்கத்தாலும் ஊக்கத்தாலும் தஞ்சை செஞ்சி மதுரை நாயக்க மன்னர்கள் எண்ணற்ற கோபுரங்களை காஞ்சி, திருவண்ணாமலை, தில்லை, திருவரங்கம், ஆலவாய், திருவில்லிப்புத்தூர், வேலூர், திருக்கோவிலூர், ஹாஞ்சிபுரம், கும்பகோணம் போன்ற இடங்களில் பிற்காலத்தில் எடுப்பதற்கு இவர்கள் காரணமாகினர். இந்துநாகரிகத்தில் நுணர்கலைகள் 118 Sசோதிலிங்கம்

ஹம்பி போன்ற சில இடங்களில் ஒரு சில பெரிய கோயில்களும் புதிதாகக் கட்டப்பட்டன. ஹம்பியிலுள்ள கோயில்களில் பம்பாபதி, விருபாக்ஷர், ஹாகாரராமர், விட்டலர் கோயில்கள் குறிப்பிடத்தக்கவை. இவற்றுள்ளும் பாம்பாபதி விருபாக்ஷர் கோயில்களின் மூல அமைப்பு சாளுக்கியர் காலத்தைச் சேர்ந்தவை. மற்றைய இரண்டுமே முற்றுமுழுதாக விஜயநகர மன்னர் பாணியிலானவை. ஹாகாரராமர் கோயில் ஒருவேளை முன்பே தொடங்கப்பெற்று புகழ்பெற்ற கிருஷ்ண தேவராயர் காலத்திற் பூர்த்தி அடைந்திருக்கக்கூடும். இதற்குக் கோபுரம் கிடையாது. மண்டபம் நவரங்கவகை விமானத்தில் சுகநாசிகப் பகுதி உள்ளது. விமானத்தின் சுவர்களில் நிறையச் சிற்ப வேலைப்பாடுகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
IV. கருவறை விமானங்கள்.
கோபுரங்கள் போன்று கருவறைக் கட்டுமானங்களிலும் உபபீடம் அதிஷ்டானத்தில் துவங்கி, சிகரம் ஸ்தூபி வரை உள்ள எல்லா அங்கங்களிலும் மிக அதிகமான வேலைப்பாடுகளான அதிக மடிப்புக்கள் கொடிக்கருக்கள், இதழ்கள், மரச்சட்டவேலைப்பாடுகள் போன்ற பல அம்சங்களைக் காணமுடிகின்றது. கோஷ்டங்களுக்கு இடையே உள்ள
பகுதிகள் (கால்) புராணச் சிற்பங்களும் சில இடங்களில் காணப்படுகின்றன.
இவர்களின் காலக்கருவறைகள் அமைப்பிற்குச் சிறந்த எடுத்துக் காட்டுக்களாக மூன்று கோயில்களைக் கூறலாம். மதுரை ஆலவாய்ப் பெருமாள் உறையும் கருவறை, மதுரை நாயக்கர்களில் முதலாமவரான விசுவநாத நாயக்கரால் எடுக்கப்பெற்றது எனக் கலை வல்லுனர்கள் குறிப்பர். திருமாலிருஞ்சோலை மாபலி வானாதிராயனால் கிபி 1452 இல் எடுக்கப்பட்டதாக “திருப்பணி விபரம்” என்னும் நூல் குறிக்கும். எப்படியிருப்பினும் இது விஜயநகரப் பேரரசர்களின் ஆக்கத்தால் எழுந்ததே. கபோத பந்த அதிஷ்டானத்திற்கு மேலாகக் கால்களில் சிம்மங்கள் மிக எழிலோடு காணப்படுகின்றன. விமானத்தை எட்டுப் பெரிய யானைகள் தாங்கி நிற்பதாக படைக்கப்பெற்றுள்ளது. இது விஜயநகரபாணி கருவறை படைப்புகளுள் தனித்தன்மை வாய்ந்தது. இவர்கள் காலப் படைப்பான இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 119 Sca Noasisib

Page 68
மதுரை கடலழகர் கோயில் விமானம் தஞ்சைப் பெரிய கோயில் விமானத்தைப் போன்ற எடுப்போடு உயரம் குறைந்த மிக அழகிய படைப்பாகும். மூன்றாவதாகவும் ஈடிணையற்ற ஒருபடைப்பாகவும் கொள்ளத்தக்கது. தஞ்சை நாயக்கர்காலத்து விஜயநகரப் படைப்பான தஞ்சைப் பெரியகோயில் முருகப் பெருமானின் திருக்கோயிலாகும்.
அரிய கலைப்பெட்டகமாகத் திகழும் இக்கோயிலை எடுத்த சிற்பி தமிழகத்தைச் சேர்ந்த படைப்பாளன் என்பதனை இங்கு அணிசெய்யும் துவாரபாலகர் சிற்பத்திற்கு அருகே பொறிக்கப்பெற்ற கல்வெட்டால் அறியலாம். அதிஷ்டான வர்க்கத்தில் தொடங்கிய கோயில்கள் முழுவதும் மிக நுண்ணிய எழில்கொஞ்சும் வேலைப்பாடுகள் காணப்படுகின்றன. கோஷ்டங்களின் தனித்தன்மையுடைய கபோதங்கள் சுவர் முழுவதும் முருகப் பெருமானின் வள்ளி திருமணம், தேவியின் வீரக்காட்சிகள், மார்க்கண்டேயனின் சிவலிங்கத் தழுவல், காலணைக் காய்தல் போன்ற பல சிற்பத் தொகுப்புக்கள் களிறுகளும் சிம்மங்களும் சுமந்து கொண்டிருக்கும் படிகள், நடராசர் திருமேனி, சங்குசக்கரம் ஏந்திய திருமாலின் காளிங்க நர்த்தனம், அனுமனின் பணிவு போன்ற உள்ளம் மயக்கும் வடிவங்களையும் காணலாம்.
மதுரை தஞ்சையில் நாம் காணும் இப்படைப்புக்களில் முழுவதுமாகத் தமிழகத்தின் தனிக்கலைப் பாணியையே காணமுடிகிறது. பல்லவர், சோழர், பாண்டியர் கலைகளின் தாக்கம் புதிய பரிணாமத்தில் இங்கு மிளிர்கின்றன. விஜயநகர ஹம்பியில் உள்ள இராமசாமி கோயில் தஞ்சை முருகன் கோயிலையே முழுவதும் ஒத்துக் காணப்பெறுவதாலும் தமிழ்ச் சிற்பிகளின் குறியீடுகள் கல்வெட்டுக்களாக அங்கு திகழ்வதாலும் தமிழகச் சிற்பக் கலையின் புதிய கோணம் அங்கு பரிணமிப்பதை யாரும் மறுக்கவியலாது.
V கொடுங்கை,
திருக்கோயில் கருவறைகளின் கால்பகுதிக்கு மேலாக உச்சியில் நிகழும் பூதவரி விமானத்தினை அடுத்துத் திகழும் வளைந்த தளத்தின் விளிம்பிற்குக் கபோதகம் எனப்பெயர். இது கூடுகள் பல பெற்றுத் இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 120 Sசோதிவிங்கம்

திகழும். இதே பகுதி மண்டபங்களில் திகழும்போது கொடுங்கை என அழைக்கப்படும். கட்டக்கலை வளர்ச்சியில் விஜயநகரக் கலைப் படைப்புக்களுள் மிகச் சிறந்த இடத்தைப் பெறுவது கொடுங்கை அமைப்புக்களே ஆகும். t
VI. Ko60öir sifa66ir.
விஜயநகரக் கட்டடக்கலையினைச் சிறப்பித்துக் கூறும் பெரும் கலைக்கொடையாக தமிழகத்துக்குக் கிடைத்தவை கோபுரங்களும் திரு மண்டபங்களுமேயாகும். சோழ சாளுக்கிய பாணியான தாராசுரத்துத் தூண்களைத் தவிர மற்ற கலைப்பாணியாக அமைந்த தூண்களில் மிக அதிகப்படியான வேலைப்பாடுகளையோ, சிற்பங்களையோ காணமுடியாது. அவை எளிமையானவை, அழகுடையவை. கிருஷ்ண தேவராயர், அச்சுத தேவராயர் மற்றும் தமிழகத்து நாயக்க மன்னர்களின் கொடையாகக் கிடைத்த மண்டபங்களில் உள்ள தூண்கள் அந்தந்தப் பகுதிகளுக்குரிய கலைமரபுகளோடு இணைந்து புதிய பாணிகளை உருவாக்கியுள்ளன. பழைய மரபோடு போசள் கலைப்பாணிகளும், காகதீயர் கலைப்பாணிகளும் மற்றும் சேரநாட்டுக் கலைப்பாணிகளும் இங்கு சங்கமித்துள்ளன.
இவர்கள் நூற்றுக்கால், ஆயிரங்கால் மண்டபங்களை எடுத்தல், திருக்கோயில் பிரகாரங்கள் முழுவதையுமே மண்டபங்களாக மாற்றுதல் ஆகியவற்றில் அதிகநாட்டம் செலுத்தினர். காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில் மண்டபம், திருவண்ணாமலை ஆயிரங்கால் மண்டபம், திருக்கழுக் குன்றம், ஆமைமண்டபம், மதுரை கம்பத்தடி மண்டபம், நாயக்க மண்டபம், கிளிகட்டி மண்டபம், ஆயிரங்கால் மண்டபம், புதுமண்டபம், அஷ்டசித்தி மண்டபம், திருவரங்கம் சேஷராயர் மண்டபம், ஆயிரங்கால் மண்டபம், வசந்தமண்டபம், கருட மண்டபம், மன்னர்குடி ஆயிரங்கால் மண்டபம், கும்பகோணம் இராமசாமி கோயில் மண்டபம் ஆகியவை தனிச் சிறப்புக்கள் பல பெற்ற குறிப்பிடத்தக்க மண்டபங்களாகும் இவற்றுள்
இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 121 Sசோதிலிங்கம்

Page 69
சில மண்டபங்கள் அதிஷ்டான வர்க்கத்தோடு கூடிய மேடையாக அமைந்த உயர்ந்த மண்டபங்களாகும். இது தரை மட்டத்திலேயே குறைந்த உயரமுடைய தளங்களின் மேல் எழுப்பப்பெற்றுள்ளன.
எழில்கொஞ்சும் விஜயநகரகால மண்டபத் தூண்களில் பல்வேறு கலைப்பாணிகளைக் காண இயலுகிறது. காஞ்சி ஏகாம்பரநாதர் மண்டபம், திருவண்ணாமலை மண்டபம், திருவரங்கம் சேஷராயர் மண்டபம், மதுரை மண்டபங்கள் இவ்வகையில் முதலிடம் வகிக்கின்றன. பாயும் குதிரைகளின் மேல் வாளேந்திய வீரர்கள் பாயும் புலிகள், தெய்வத் திருவுருவங்கள், காமச் சிற்பங்கள், நடனமாதர்கள், கலைநயம் மிகுந்த போதிகைகள் எனப் பல்வேறு கூறுகளை இவற்றில் காணமுடிகிறது.
விஜயநகர பாணியிற் கட்டப்பட்ட கட்டடங்கள் துங்கபத்திரை ஆற்றுக்கு தெற்கேயுள்ள நாடு முழுவதிலும் காணப்படுகின்றன. இவற்றுள் விட்டலர் கோயிலும் ஹசார இராமர் கோயிலும் மிகவும் முக்கியமானது. விட்டலர் கோயில் இரண்டாம் கிருஷ்ண தேவராயர் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டு அச்சுதராயரின் ஆட்சிக்காலத்திலும் தொடர்ந்து கட்டப்பட்டது. எனினும் பூரணமாகக் கட்டி முடிக்கப்படவில்லை. இக்கோயிலானது முற்றிலும் தென் பாணியில் அமைந்தது. அக்ரமண்டபம் போன்ற எல்லா உபபகுதிகளையும் கொண்டது. சக்கரத்துடன் கூடிய தேர்போல் அமைக்கப்பட்டுள்ள ஒரு கருடமண்டபம் இருக்கின்றது. அத்துடன் கோயிலானது 500 அடி நீளமும் 310 அடி அகலமும் கொண்ட முற்றத்தையுடையது. கோபுரங்களுடன் கூடிய மூன்று வாயில்கள் உள்ளன. இவற்றுள் கிழக்கிலும் தெற்கிலும் உள்ள கோபுரங்கள் முக்கியமானவை. பிரதான கோயில் மத்தியிலுள்ளது. இதுவே விட்டலர் (விஷ்ணு) கோயில் எனப்படுகின்றது. 25 அடி உயரத்தையுடைய இக் கோயிற் கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம் ஆகிய மூன்று உறுப்புக்களைக் கொண்டுள்ளது. 135 அடி நீளமும் 87 அடி அகலமும் கொண்ட இக்கோயில் வெளிப்புறச் சுவர்கள் புடைப்புத் தூண்கள், மாடங்கள், மேற்கூரைச் சரிவுகள் என்பவற்றால் அழகுபடுத்தப்பட்டுள்ளன. இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 122 SCs subsib

கல்யாண மண்டபத்தருகே மகாமண்டப வாயிலை நோக்கியபடி இறைவனின் தேர் அமைக்கப்பட்டுள்ளது. இதன் அடித்தளமும் பிரதான அடுக்கும் கருங்கல்லாலானவை. சில்லுகள் சுற்றக்கூடியனவாகச் செதுக்கப் பட்டுள்ளன. மேற்பகுதி செங்கல்லாற் கட்டப்படடுள்ளது. இதே மாதிரியான கல்லாலான தேர்கள் இக்காலப் பகுதியிற் பல அமைக்கப்பட்டுள்ளன. அவற்றை தாத்பத்திரி, திருவாலூர் ஆகிய கோயில்களிற் காணலாம் எனக் கருத்துக் கூறுவார். பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரி இவை கவனத்திற் கொள்ளத்தக்கதாகும்.
விஜயநகர மன்னர் காலத்தில் எழுந்த தலைசிறந்த கோயில்களாக எடுத்துக் காட்டக்கூடியவை ஹஸாரா இராமசாமி கோயிலும், வித்தல் சுவாமி கோயிலும் ஆகும். இவற்றில் இராமசாமி கோயிலானது கலை நுணுக்கத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. பிரதான கோயிலுடன் அம்மன் கோயிலும் ஒரு கல்யாண மண்டபமும் பல துணைக் கோயில்களும் கருங்கற்களாலான அழகிய தூண்களும் அமைக்கப்பட்டுள்ளமை இதன் சிறப்பம்சங்களாகும். கீழ்மாடி கல்லாலும் மேற்பகுதி செங்கல்லாலுமான விமானம் இப்போது சிதைந்திருந்த போதிலும் பார்ப்போரைக் கவரும் வகையில் அமைந்திருக்கின்றது. இதன் சுவர்களில் இராமாயணக் காட்சிகள் புடைப்புச் சிற்பங்களாகத் தீட்டப்பட்டமை கட்டடக்கலை வளர்ச்சியை மேலும் காட்டுவதாகவே அமைந்து காணப்படுகிறது.
இக்காலப்பகுதியில் கட்டப்பட்ட புகழ்வாய்ந்த வேறு கட்டடக்கலை வரலாற்றுத் திறன்களை எடுத்துக் காட்டும் வகையில் கும்பகோணம், காஞ்சிபுரம், தாத்பத்திரி, யூரீரங்கம் ஆகிய இடங்களில் அமைந்து காணப்பட்ட கோயில்களைக் காணலாம். கோயில் திருப்பணிகள் இவ்வாறக வளர்ச்சியுற சாளுக்கியர் இராட்டிரகூடர், ஹொய்சள் ஆகியேளின் ஆட்சியிலே தக்கணத்திற் பிற பாணிகள் வளர்வுற்றன. மிக முக்கிய சாளுக்கிய கோயில்கள் குப்தர் கோயில்களை தனியொத்து அமைந்துள்ளன. இவ்வழி வெளிக்கவிந்த அகலமான தாழ்வாரம் அமைத்தல் மத்தியதக்கணத்து இடைக்காலக் கோயில்களின் சிறப்பியல்பாயது. பிற்கால சாளுக்கியரும் இந்துதாகரிகத்தில் நுண்கலைகள் 123 Sசோதிலிங்கம்

Page 70
ஹொய்சளரும் இன்னும் விரிவான பாணியை உருவாக்கி வளர்த்தனர். அவர் தம்கோயில்கள் செவ்வக ஒழுங்கில் கட்டப்படுவதொழிந்து பல்கோண வடிவிலும் விண்மீன் வடிவிலும் அமைத்து அதே வடிவத்தைக் கொண்ட உயர்ந்த திட்பமான மேடைமீது கட்டப்பட்டன. இம் மேடைகளிலும் சுவர்களிலும் யானைகள், குதிரைகள், வீரர், அன்னங்கள், யாளிகள், புராணக்கதைக் காட்சிகள் ஆகியவற்றைச் சித்தரிக்கும் கவர்ச்சிச் சிற்பங்கள் அடங்கலும் பொறிக்கப் பட்டுள்ளன. கொடுந்தோற்றம் உடைய கீர்த்தி முகமெனும் முகவலங்காரம் இக்காலத்தில் பரக்க வழங்கியது. அலங்காரச் சிற்பங்கள் செதுக்கப்பெற்ற தூண்களும் பெரிதும் பயன்படுத்தப்பட்டன. இக் கோயில்களிற் கோபுரம் இல்லை. அதனால் அவை கட்டமுடியாத நிலையில் உள்ளதெனக் கருதுவர். இக்காலத்துச் சிறுகோயில்கள் சிலவற்றில் கோபுரமுண்டு. சோமநாதபுரத்துக் கண்கவர் கோயில் இங்கு குறிப்பிடத்தக்கது. இதிற் பதிவான சிகரங்கள் மூன்று உள. அவற்றிற் சமாந்தரமான சித்திர வேலைப்பாடுகள் உள்ளமையால் அவை பொலிவு பெற்றுள்ளன. பளுவான கற்கட்டு வேலைகளும் அழகொளிருஞ் சிற்ப அலங்காரமும் இப்பாணியிலே இடம்பெறுகின்றபோதும் அதில் இடைவெளிகளில்லாது நிரை நிரையாய்த் தூண்களும் எங்கும் வளைவுகளும் பார்த்த இடமெல்லாஞ் செதுக்கற் சித்திரங்களும் வாய்த்தமையாலே அது திருமணக்கேக் ஒன்றின் நுட்பமான அமைப்பினையும் அழகினையும் நினைவூட்டுவதாக அமைந்துள்ளது.
விஜயநகரப் பேரரசிற் செழித்தோங்கி 18 ஆம் நூற்றாண்டில் உச்சநிலையடைந்த கட்டடக்கலை மரபிலே பாண்டியர் கொய்சளருடைய பாணியின் சிறப்பியல்புகளைக் காணலாம். ஹொய்சளின் பகட்டான சிறிய வேலைப்பாடுகள் இன்னும் பொலிவாக விருத்தி செய்யப்பட்டன. கோயிலமைப்பிலே புதுப்புது அம்சங்களும் புகுந்தன. தென்னாட்டுப் பெருங்கோயில்களிலே கோயில் கொண்டிருக்கும் இறைவனுக்கேயன்றி இறைவன் தேவியான அம்மனுக்கு கோயிலமைக்கும் வழக்கம் ஏற்பட்டது. அன்றியும் விழாக் காலங்களிலே இறைவனுக்கும் இறைவிக்கும் இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 124 Sசோதிலிங்கம்

திருமணவிழா கொண்டாடும் பொருட்டு ஒரு கல்யாண மண்டபமும் அமைக்கப்படுவதாயிற்று. கல்யாண மண்டபங்களிலே வேலூரில் உள்ள கல்யாண மண்டயமே மிகவும் அழகு வாய்ந்தது. இக்கோயிலின் கோபுரம் இந்நூற்றாண்டுக் கட்டடப் பாணியின் சிறப்புக்கு எடுத்துக் காட்டாகவுள்ளது. விஞ்சிபுரம் மார்க்ககேஸ்வரர் கோயிலின் கல்யாண மண்டபமும் அழகுமிக்கது. காஞ்சியிலுள்ள ஏகாம்பரநாதர் கோயிலும் வரதராஜ கோயிலும் பெரியளவிலான கூடார மண்டபங்கள் உள்ளன. இம்மண்டபத் தூண்களிலுள்ள விந்தையான கற்பனைச் சிற்பங்கள் இப்போதும் குறிப்பிடக்கூடியதாக இருக்கின்றன என்பதும் அவை கட்டடக் கலை வரலாற்றின் நிறைவுக்கு காரணமானவை என்பதும் குறிப்பிடத்தக்கது.
விஜயநகர பாணியின் வேறொரு சிறப்பியல்பு யாதெனில் ஊன்றுகால் மண்டபம் அணிசெய்கின்ற தெளிவும் நுட்பமும் வாய்ந்த செதுக் கோவியங்களாகும். அங்குள்ள நிலைக்கால்கள் அத்துனை கவினொழுக அணிசெய்யப்பட்டுள்ளவாதலின் அவையும் உயர்ந்த சிற்பப் படைப்புக்களாய் கொள்ளத் தக்கன. வலிமையும் வீறுமார்ந்த பாயும் குதிரைகளும், யாளிகளும் பிற விசித்திர விலங்குகளும் கற்றுண்களினின்றும் குதிப்பன போற் சித்தரிக்கப்பட்டுள்ளன. விஜயநகரச் சிற்பவலங்காரத்திற் காணப்படும் கற்பனை வளத்திற்கு இந்தியாவிலே ஒப்புயர்வு இல்லை. இத்தகைய தன்மைகளை எல்லாம் உள்ளடக்கி இக்கால பாணி முறைமையின் தனித்துவத்தை எடுத்துக்காட்டுவதற்கு பழைய விஜயநகரமான அம்பியிலுள்ள விட்டலர் கோயில் தக்க சான்றாக அமைந்து காணப்படுகிறது.
இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 125

Page 71
(நாயக்கர்காலக் கட்டடக்கலை
நாயக்கர் காலமானது கட்டடக்கலை வரலாற்றில் ஐந்தாவது காலமாகக் கருதப்படுவது விஜயநகர மன்னர் காலத்தைத் தொடர்ந்து 17 ஆம் நூற்றாண்டளவில் வளம்படுத்தப்பட்டு வந்த கலைமரபாக திராவிடக்கலை மரபாக வளர்ந்து வந்த நிலையில் இதனை நாயக்கர்பாணி அல்லது மதுரைப்பாணி எனவும் அழைப்பர். நாயக்க மன்னரின் பேராதரவுடன் திராவிடக் கட்டடக்கலை மரபு மேலும் ஒரு படி வளர்ந்தது என்றும் தனது வளர்ச்சியின் இறுதிக் கட்டத்தையும் எய்திய காலமாகக் கருதப்படும் காலம் நாயக்கள் காலமாகும். இக்காலக் கட்டடக்கலையானது இரண்டு பிரிவுகளைக் கொண்டு காணப்பட்டது. அவையாவன, (1) ஆலயம். (2) கோட்டை
என்பனவாகும்.
ஆலயங்களில் பழையன புதுப்பிக்கப்பட்டன. அத்துடன் பெருப்பிக்கப்பட்டன. புதுப்புது அம்சங்கள் சேர்க்கப்பட்டன. கோட்டைகள் மன்னர்கள் தமது ஆட்சிபீடத்தை அலங்கரிக்கவும் தமக்கு ஏற்புடை பாதுகாப்புக்குமென அமைக்கப்பட்டனவாகக் காணப்பட்ட நிலையில் சோழநாட்டில் கந்தர்வ கோட்டைப்பகுதியில் கிடைக்கும் செம்புறாங் கற்கலினால் எடுக்கப்பட்ட திருமதில்களில் சிற்பத்திறனைக் காண இயலாது. இவ்வகையில் எடுக்கப்பெற்ற மதில்கள் குறிப்பிடத்தக்கது தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு வெளியேயும் அகழிக்கு உட்புறமாகவும் அமைந்துள்ள மதிலாகும். தஞ்சை நாயக்க மன்னரான செல்வப்பர் அவரது மகன் அச்சுதப்ப நாயக்கள் ஆகியோரால் எடுக்கப்பட்ட இம்மதிலில் கொத்தளங்களும் சாளரங்களும் உண்டு. இது கோட்டை மதிலாகும். இதனையொத்த கோட்டை மதில் வேலூர் திருக்கோயிலுக்கும் உண்டு. இவற்றில் எல்லாம் இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 126 SCHIÖHћђ

புதிய அம்சங்கள் பல புகுத்தி தமது காலத்தின் தனித்துவத்தைப் பேணுவதற்கு காரணமாகக் கட்டடக்கலை வரலாறு அமைந்துள்ளதைக் காணலாம்.
17 ஆம் நூற்றாண்டின் மத்தியில் செஞ்சி, தஞ்சை, மதுரை ஆகிய மூன்று இடங்களிலும் நாயக்கர்கள் விஜயநகர அரசர்களின் பிரதிநிதிகளாக ஆட்சிபுரிந்தனர். அவ்வேளை விஜயநகரப் பேரரசின் மத்திய அதிகாரம் குன்றியதும் செஞ்சி, தஞ்சாவூர், மதுரைப் பிரதிநிதிகளாக இருந்து ஆண்டுவந்த நாயக்கர்கள் சுதந்திரம் அடைந்தனர். மதுரை நாயக்கள் விஜயநகரத்தில் இருந்து வந்து ஆட்சியை மேற்கொண்டவர்கள் ஆதலால் அவர்கள் அந்தப் பெருமுறையை ஏற்று மதுரை நாட்டில் கோயில்களுக்குக் கோபுரங்கள் கட்டினர்கள். மண்டபங்கள் அமைத்தார்கள். சிற்பங்கள் செய்தார்கள், ஓவியங்கள் தீட்டினார்கள். மதுரையில் உள்ள சிற்பக்கலைக்குக் காரணமாயிருந்தவர்கள் முக்கியமாக விசுவநாத நாயக்கரும் திருமலை நாயக்கருமே ஆவார்கள். திருமலை மன்னருக்கு கலையர்வம் பெரிதும் இருந்தது. அவர்களுக்குக் கலையர்வத்திலிருந்த ஈடுபாடுகள் செவிவழிக் கதை மரபாக சமூகத்தில் நிலவியும் வருகின்றது. இதன்பேறாக 17 ஆம் நூற்றாண்டில் தோன்றிய கட்டடக்கலை வரலாறும் ஏனைய கலைகளும் நாயக்கர்கால மரபு என்றே அழைக்கப்படுகின்றது. இவ்வாறு தோன்றிய கலைமரபுகளைத் தாங்கி நிற்குமிடங்களாக திருவண்ணாமலை, காஞ்சிபுரம், வேலூர், விஞ்சிபுரம், சிதம்பரம், பூரீரங்கம் மதுரை ஆகிய இடங்கள் விளங்குகின்றன.
1. திருச்சுற்றுப் பிரகாரம்.
நாயக்கர்காலப் பகுதியிலும் பழைய கோயில்கள் பெருப்பிக்கப்பட்டு புதுப்புது அம்சங்கள் சேர்க்கப்பட்டன. புதிய அம்சங்களில் கோயில்களைச் சுற்றிக் கட்டப்பட்ட பிரகாரம் முன்னணி வகிக்கின்றது. ஒன்றுக்கு மேற்பட்ட வீதிகளையும் மதில்களையும் கொண்ட பிரகாரங்கள் ஆலயத்தைச் சுற்றி அமைந்தன. பொதுவாக ஒவ்வொரு பிரகாரத்திற்குள்ளும் ஆயிரம்கால் மண்டபம், தெப்பக்குளம் போன்ற இந்துநாகரிகத்தில் துண்கலைகள் 127 Sசோதிலிங்கம்

Page 72
கோயிலின் பல்வேறு கட்டடங்கள் அமைந்தன. இவ்வகையில் திருமலை மன்னர் மதுரையிற் புதுமண்டபத்தைச் சிற்பவேலைப்பாட்டுடன் கட்டினர். மஹாலை அழகாகக் கட்டிமுடித்தார். இராசகோபுரத்தைக் கட்டி மீனாட்சியம்மன் கோயிலை செப்பமாகச் சிறந்த முறையில் அமைந்ததுடன் நான்கு தெருக்களையும் ஒன்றாகவும் இணைத்து வைத்தார். இதைத் தவிர அங்காடிகள், இல்லங்கள் ஆகியனவும் கட்டப்பட்டு முழுக் கோயிலுமே ஒரு தனிமரமாக விளங்கியது. பாண்டிநாட்டுச் சிகரமாக விளங்கும் மதுரை மாநகரமே இதற்குத் தலைசிறந்த எடுத்துக்காட்டாகும். மதுரைக் கோயில்கள் முழுக்க முழுக்க நாயக்கர் காலத்திலே கட்டப் பட்டது. 17 ஆம் நூற்றாண்டின் கட்டடக் கலையின் செழுமையை இக்கோயில்களில் காணலாம்.
II. மதரைநாயக்கம் மாணி.
ஆலய அமைப்பில் பிரகாரத்துக்கு அடுத்தபடியாக கோபுரம் நாயக்கள் கால கட்டடக்கலைப் பாணிக்கு தனிச் சிறப்புப் பெற்றது. திருவண்ணா மலையில் பதினொரு நிலைக் கோபுரத்தையும் ஆயிரங்கால் மண்டபத்தையும் எடுத்ததாகப் பேசும் இந்த கிருஸ்ண தேவராயரின் கல்வெட்டின் முற்பகுதி பூரீகாளத்தி கோயில் நூற்றுக்கால் மண்டபமும் பெரிய கோபுரத்தையும் இதே பேரரசர் எடுத்தார் எனக் குறிப்பிடுகின்றது. திருவண்ணாமாலை கிழக்குக் கோபுரத்திலுள்ள கல்வெட்டுப் பாடல்களில்,
“தானேற்றமாகச் சகாத்தங்களாயிரத்து, நானூற்றுத் தொண்ணுற்று நாலின்மேல் மானேற்ற தென்னருணை நாதருக்குச் செல்வ மகிபன் கயிலையன்ன தொரு கோபுரங் கொண்டாண்”
மருவு சிவனேசன் மகிழுலக நாதன் இருவரும் பேரன்பாலியற்ற அருணையிலே மானபரன் செல்வ மகிபால னப்பதினொன் றான நிலைக் கோபுரங்கொண்டான் எல்லப்ப நயினார் சொன்னது
இந்துதாகரிகத்தில்துணர்கலைகள் 128 Sசோதிலிங்கம்

என்ற கல்லெழுத்துக்களால் கிழக்குக் கோபுரம் தஞ்சை நாயக்க மன்னர் செல்லப்ப நாயக்கரால் எடுக்கப்பெற்றது என்பதை அறிகின்றோம். இதனை இங்குள்ள பல வடமொழிக் கவிதைக் கல்வெட்டுக்களும் உறுதி செய்கின்றன. 135 அடி நீளம் 98 அடி அகலம் 217 அடி உயரமுடைய இந்த பதினொரு நிலைக் கோபுரம் தஞ்சை நாயக்க மன்னனின் மகத்தான பணி என்பதில் ஐயமில்லை.
கிருஸ்ண தேவராயரின் கோபுரப் பணிகளுள் குறிப்பிடத்தக்கது. தில்லை வடக்குக் கோபுரப் பணியாகும். இக்கோபுர வாயிலிலேயே அவரது உருவச் சிலையோடு அத்திருப்பணியை மேற்கொண்ட சிற்பிகளின் உருவச்சிலைகளும் அவர்தம் பெயர்களும் கல்வெட்டுப் பொறிப்புகளோடு உள்ளன. அவை முறையே,
விருத்த கிரியில் சேவகப் பெருமாள் இந்த சேவகப் பெருமாள் மகள் விசுவமுத்து இவன் தம்பி காரணாகாரி திருப்பிறைக் கொடை ஆசாரி திருமங்கண்
என்பவையாகும்.
இவற்றை நோக்கும்போது தமிழகத்தில் உள்ள நெடிதுயர்ந்த கோபுரங்களை எடுக்கக் காரணமாய் இருந்தவர்கள் கிருஸ்ணதேவராயர், அச்சுத தேவராயர், சதாசிவராயர், போன்ற பேரரசர்களும் அவர்களது நாயக்கர்களுமே என்பதைத் தெளிவாக விளக்குவது இப்பெரும் பணிகளைப் புரிந்தவர்கள் விருத்தாசலம் சேவகப் பெருமாள் போன்ற தமிழகத்துச் சிற்பிகளே என்ற பெருமையும் புலப்படுகின்றது. இவர்களது முயற்சியால் இக்காலத்தில் வெளிமதிலில் நான்கு பெரிய கோபுரங்கள் எடுத்ததோடு உள் மதிலிலும் நான்கு கோபுரங்கள் எடுத்தனர். கற்சிற்பங்களுக்கு ஓரளவு முக்கியத்துவம் சுதைச் சிற்பங்களுக்கு மிகுந்த ஆக்கமும் அளித்தனர். திருவண்ணாமலை, திருக்கழுக்குன்றம், குடந்தை, சாரங்கபாணி, மன்னார்குடி, மதுரை மீனாட்சி ஆலயம், இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 129 Sசோதிலிங்கம்

Page 73
யூரீவில்லிபுத்துர், திருவரங்கம், தென்காசி, பட்டீச்சரம் போன்ற திருக்கோயில் கோபுரங்கள் இவர்கள் வளர்த்த கலையின் சிறந்த எடுத்துக்காட்டுக்கள். இவை இக்கால கட்டட நிர்மாணக்கலை மரபு விண்ணளவு உயர்ந்து வளர்ந்து இருந்தது என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகின.
இத்துடன் மெக்கன்சி சேகரிப்பு ஒலைச் சுவடிகளில் ஒன்றான “கர்நாடக ராஜாக்கள் சவிஸ்தார சரித்திரம்” எனும் நூலில் செஞ்சிக் கோட்டை கட்டுமானத்திற்காக வையப்பநாயக்கர் என்பவர் விஜயநகரம், கோல்கொண்ட நகரம் முதலான இடங்களிலிருந்து பல ஆயிரக்கணக்கான கல் தச்சர்களை அழைத்து வந்ததாகவும் கல்தச்சு போலாரி ஆசாரி, விருத்தகிரி ஆசாரி, ராளுசங்கமயன், சுன்னாரு, பாப்பய்யன் என்ற நாலு சர்தார்களுக்கும் பல்லக்கும் விருதுகளும் கொடுத்துச் சிறப்பித்தாகக் கூறுகின்றது. இங்கு குறிப்பிடப்பெறும் விருத்தகிரி ஆசாரி பற்றிய கல்வெட்டும் உருவச்சிலையும் தில்லைக் கோபுரத்தில் உள்ளதைக் கண்ட அதேநேரம் தமிழகச் சிற்பிகளின் கட்டுமானக் கலை ஆற்றல் நாயக்கர்கள் கோயிற் கலையைப் பரிணமிக்கச் செய்தது என்பது மகிழ்ச்சியளிக்கும் வரலாற்று உண்மையாகும்.
இச்சிற்பிகள் தமிழகத்திற்கே உரிய கலையாற்றலோடு காகதியர், போகள், மலையாளர் முதலிய பல கலைமரபுகளை எல்லாம் நுகர்ந்ததால் அவர்தம் படைப்புக்களில் பல்வேறு கலைப்பரிமாணங்களைக் காண முடிகின்றது.
தஞ்சை செல்லப்ப நாயக்கர்களின் திருக்கோயிற் பணிகளாக சங்கீத கதா எனும் நூலில் கோவிந்த தீட்சிதர் நீண்ட பட்டியல் ஒன்றைக் குறிப்பிடுகின்றார். காஞ்சிபுரம், திருநெடுங்குன்றம், விருத்தாசலம், பூரீசைலம் திருமலை, திருப்பதி போன்ற இடங்களில் கோபுரங்கள் எடுத்ததை விவரிக்கின்றார். இது போன்று விஜயநகரப் பேரரசர்களின் ஆக்கத்தாலும் ஊக்கத்தாலும் தஞ்சை செஞ்சி மதுரை நாயக்க மன்னர்கள் எண்ணற்ற கோபுரங்களை எடுத்தனர். காஞ்சி, திருவண்ணாமலை, தில்லை,
இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 130 Sசோதிலிங்கம்

திருவரங்கம், ஆலவாய், திருவில்லிப்புத்தூர், வேலூர், திருக்கோவிலூர், விஞ்சிபுரம், கும்பகோணம் போன்ற இடங்களில் எடுக்கப்பட்ட கோபுரங்கள் இக்காலக் கட்டக்கலை வளர்ச்சித் தன்மைக்குக் குறிப்பிடத்தக்க சிறப்பு வாய்ந்தவையாகும். இக்காலக் கோபுரங்கள் உபபீடம், அதிஷ்டானத்தில் இருந்து சிகரம், ஸ்தூபி வரை சோழர், பாண்டியர் எடுத்த கோபுரங்களுக்குரிய அனைத்து ஆக்கங்கள் இருப்பினும் ஒவ்வொரு ஆக்கத்திலும் சிற்பவேலைப்பாடுகள் மிக அதிகமாக இருப்பதே நாயக்கர்களுடைய கோபுரங்களின் கலைச் சிறப்பாகும் சோழர் கோபுரங்களின் அதிஸ்டானத்தில் காணப்படும் குமுதம் விருத்த அல்லது திரிபட்ட குமுதமாகவே வேலைப்பாடுகளின்றிக் காணப்படும். ஆனால் இவர்களுடைய படைப்புக்களில் குமுதம் பல மடிப்புக்களுடனும் அதனிடையே கொடிக் கருக்குகளும் பூ வேலைப்பாடுகளுடனும் காணப்பெறும் அதிஷ்டானங்கள் பெரும்பாலும் கபோத பந்த அதிஷ்டானங்களாகவே காணப்பெறும் கால்களும், பலகைகளும் பல மடிப்புக்களுடன் நுண்ணிய வேலைப்பாடுகள் மிகுந்து நிகழும் பஞ்சரங்களிலும் மிக அதிகமான மடிப்புக்களும் வளைவுகளும் இருக்கும் கோஷ்டங்களின் தலைப்பகுதி மகர தோரணமாக இருப்பின் மகர வாய்களிலும் மற்ற இடங்களிலும் கொடிக்கருக்கு வேலைப்பாடுகள் அதிகமாக இருக்கும் சில இடங்களில் கோஷ்டங்களில் கபோதக அமைப்பு நீங்க கொடுங்கை என்ற பெயரில் மர வேலைப்பாடுகள் போன்று குறுக்கு நெடுக்குச் சட்டங்கள் தாங்கி நிற்கும்.
முதல் தளம் முழுவதும் கருங்கற் பாணியாகவும் அதற்குமேல் ஒவ்வொரு தளமும் செங்கற்பாணியாகவும் திகழும் ஒவ்வொரு நிலையின் உட்புறம் திராவி என்ற மர உத்திரங்களாலும் மரப்பலகைகளாலும் மூடப்பெற்று அவற்றின் மேல் செங்கல் பரப்பப்பெற்றே தளங்கள் தொடரும் கோபுர வாயில்களைத் தாங்கி நிற்கும் நிலைக் கால்களில் மன்னர்களின் உருவச்சிலைகள், நாட்டிய அணங்குகள் புராணச் சிற்பங்கள், காமக்கணை
இவர்களது தனிப்பாணியாகும். வாயில்களில் உட்புற விதானங்களில் தாமரை மலர்கள், இராசிச் சக்கரங்கள், மலர் கொத்தும் கிளிகள், இந்துநாகரிகத்தில் துனர்கலைகள் 131 Sசோதிலிங்கம்

Page 74
பிஜங்களுடன் அமைந்த எந்திரங்கள் ஆகிய சிற்பங்களை வடிப்பதும் இவர்கள் பின்பற்றிய சிற்ப இலக்கணங்களாகும். இதன் அடிப்படையில் திருவில்லிப்புத்தூர், மன்னார்குடி இராஜ கோபாலசாமி கோயில் கிழக்குக் கோபுரம், மதுரை தெற்குக் கோபுரம் ஆகியவை அடிப்பீடம் நீளம் அதிகமாகவும், அகலம் குறைவாகவும் உடற்பகுதி நடுவில் வளைவு பெற்றுக் குறுகியும் சிகரம் நீள்வட்டப்பக்க அமைப்போடு சற்று மாறுபட்டுக் காணப்படும்.
மூன்றாவது வகையாகக் குறிப்பிடப்பெறும் கோபுரங்களாகத் திகழ்பவை திருவரங்கம் வெள்ளைக் கோபுரம், திருக்கழுக்குன்றம் பெரிய கோபுரம் ஆகியவையாகும். இவற்றில் சாலை மற்றும் ஒவ்வொரு தள துவாரங்கள் சிகரத்திலுள்ள மகாநாசிக்கூடு போன்றவை மிக அதிகளவான பிதுக்கம் பெற்று முன்னோக்கித் திகழும்.
கோயிலில் பிரகாரங்கள் அமைந்ததால் பல கோபுரங்களும் இடம்பெறலாயின. எடுத்துக்காட்டாக மதுரைக் கோயிலின் பதினொரு கோபுரங்கள் காணப்படுகின்றன. இவற்றுடன் தெற்கு வாயிலில் உள்ள கோபுரமே திராவிடக் கட்டடத்தின் சிறப்புக்குத் தக்க சான்றாகின்றது. அத்துடன் திராவிடக் கட்டடத்தின் கோபுரங்கள் அனைத்திலும் மிகப் பெரியதும் அதிகூடிய சிற்ப வேலைப்பாடும் கொண்டதாகும். கோபுரத்துக்கு அடுத்தபடியாகக் குறிப்பிடத்தக்க அம்சம் தூணாகும். கோயில்களில் ஆயிரங்கால் மண்டபங்களும் கட்டப்பட்டமையால் பெருந்தொகையான தூண்கள் அமைக்கப்படலாயின. அவற்றிலே அதிகப்படியான சுதை சிற்பங்களைக் கொண்ட பெரிய கோபுரங்களைக் கட்டியதும் இவர்களது முக்கிய பணிகளாகும். இருபுறமும் பெரிய தூண்களைக் கொண்ட மேடைகளுடன் கூடிய மூடப்பட்ட பிரகாரம் அமைப்பது இக்காலத்திய மிகப்பெரிய காணிக்கையாகும். இராமேஸ்வரத்திலுள்ள இராமநாதர் கோயில் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும். இது குறிப்பிடத்தக்க காணிக்கையாக இருப்பதுடன் இதுவரை தனித்தனியாகவே இருந்துவந்த விமானத்தையும் பிரகாரத்தையும் ஒருங்கிணைக்கவும் உதவியது. கோயிலின் அமைப்பில் சிறப்பிடம் பெறுவது தூண்கள். தூண்களின் தனித்துவத்தை மதுரைக் கோயிலில் காண முடிந்துற்ற
இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 132 Sசோதிலிங்கம்

நிலையில் இங்கு சுமார் ஈராயிரம் தூண்கள் காணப்படுகின்றது. இக்காலப் பிரிவில் அமைந்த தூண்கள் முன்னரைவிடச் சிக்கலான சிற்ப வேலைப்பாடுகள் கொண்டவை. அவற்றின் கபோதகம் முன்னரை விட மேலும் வளர்ச்சியடைந்துள்ளன. தூண்களின் கால்களில் அல்லது ஈடுபட்டைகளில் தெய்வங்கள் அல்லது கோயிலுக்கு உபயஞ்செய்தோரின் சிலைகள் செதுக்கப்பட்டிருந்தன.
நாயக்க மன்னருடைய ஆட்சியில் தமிழகத்தில் மிகப்பல கோயில்கள் கட்டப்பட்டன. இவையன்றி முன்னர் கட்டப்பட்ட கோயில்களில் மண்டபங்களும் திருச்சுற்றும் கோபுரங்களும் புதியனவாகக் கட்டிச் சேர்க்கப்பட்டன. தமிழ்நாட்டில் நாயக்காலச் சிற்பங்கள் பேரூர், தாரமங்கலம், மதுரை அழகர்கோயில், கிருஸ்ணாபுரம், தாடிக்கொம்பு, திருநெல்வேலி, திருவைகுண்டம், நாங்குனேரி, திருக்குறுங்குடி, தென்காசி, கும்பகோணம் ஆகிய இடங்களில் உள்ளன. மதுரை நாயக்கள் வழியில் வந்த விசுவநாத நாயக்கள் கிபி 1529 - 1564 இல் மதுரைச் சொக்கநாதருக்கு அழகிய கோயிலை அமைத்தார். இக்கோயிலை எட்டுத் திசை யானைகள் தாங்கி நிற்பது போலக் கட்டுவித்தார். இவரே மதுரை அங்கயற்கண்ணி ஆலயத்தையும் தோற்றுவித்தவர் என்பர் அறிஞர் பெருமக்கள்.
நாயக்க மன்னர்களில் ஒருவனான விசுவநாதனின் பேரன் கிருஸ்ணப்ப வீரப்ப நாயக்கன் அருமையான கட்டடங்கள் பலவற்றைக் கட்டினான். இவற்றுட் சிறந்ததாக மதுரை ஆயிரங்கால் மண்டபமும் சொக்கநாதர் கோயில் மண்டபமும் விளங்குகின்றது. இக்கால நடுநாயகக் கோயிலாக விளங்குவது மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில். இது 852 அடி நீளமும் 750 அடி அகலமும் கொண்ட சுற்றுமதிலால் சூழப்பட்ட உட்பகுதியுள் இரட்டைக் கோயில்களான சுந்தரேசுவரர் கோயிலும் மீனாட்சியம்மன் கோயிலும் உள்ளன. இவை இக்காலத்துக்குரியதாக புதுமையான கட்டடக்கலை முறையில் இரட்டைக் கோயில் அமைப்பு முறைக்கு வித்திட்டுச் சென்றுள்ளது. நாற்றிசையிலும் திருவாயில்களின் மீது உயர்ந்த கோபுரங்கள் உள்ளன. இவை ஒன்பது நிலைகளையும் அழகிய சிற்பங்களையுமுடையவை. இந்துநாகரிகத்தில் நுணர்கலைகள் 133 Sசோதிலிங்கம்

Page 75
திருவரங்கத் திருக்கோயிலை நோக்கின் விஷ்ணு ஆலயங்களில் மிகப் பெரிதாக கோயில் வளாகத்தில் 21 கோபுரங்களும் தங்கத்தாலான ஒரு விமானமும் கொண்டு பரந்திருக்கின்றது. கோயிலின் வெளிச்சுவர் அரண் போல் அமைக்கப்பட்டு 3072 அடி நீளமும் 252 அடி அகலமும் உடையதாக இருக்கின்றது. சுவரின் உயரம் 21 அடி பருமன் 6 அடி நான்கு திக்கிலும் நான்கு ராஜ கோபுரங்களும் ஒரு திருச்சுற்றுக்களும் உடைய கோயிலின் வளாகம் ஓர் ஊராகவே மாறிவிட்டது. மாடமாளிகைப் பிரகாரம் எனப்படும் ஏழாவது திருச்சுற்றும் திருவிக்ரம பிரகாரம் எனப்பெயர் கொண்ட ஆறாவது திருச்சுற்றும் அகளங்கன் எனப்படும் ஐந்தாவது திருச்சுற்றும் கடைகளும் வீடுகளும் நிறைந்து சந்தடிமிக்க பகுதிகளாகி விட்டன. எஞ்சிய நான்கு திருச் சுற்றுக்கள் கோயிலையும் அதைச் சார்ந்த கட்டடங்களையும் வலம் வருகின்றன.
கோயிலின் நான்கு ராஜ கோபுரங்களில் தெற்கில் இருக்கும் இராஜகோபுரம் மிகப்பெரியது. மொட்டைக் கோபுரமாக இருந்த இதை 236 அடி உயரத்திலும் 13 நிலைகளும் 13 கலசங்களும் கொண்டதாய்க் கட்டியெழுப்பி 1987 ஆம் ஆண்டு குடமுழுக்குச் செய்த பெருமை அக்கோயில் மடத்தின் பீடாதிபதியாக இருந்த ஜீயர் சுவாமிகளைச் சாரும். ஆலயத்திற்கும் ஊருக்குள்ளும் செல்ல இந்த கோபுர வாயிலைப் பயன்படுத்த வேண்டும். மிகப்பெரிய வாயில் இது. பக்கவாட்டில் 130 அடி நீளமும் 100 அடி அகலமும் 43 அடி உயரமும் கொண்டுள்ளது.
ஐந்தாம் திருச்சுற்றின் தென்புறக் கோபுர வாயில் நான்முகக் கோபுர வாயில் என்று அழைக்கப்படுகின்றது. கோபுரம் நான்கு திக்குகளையும் நோக்கும் நான்கு முகங்களைக் கொண்டுள்ளதால் இதற்கு இந்தப் பெயர் ஏற்பட்டது. அகளங்கன் பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் சக்கரத்தாழ்வாருக்கும் கோயிலின் இறைவியான ரங்கநாச்சியளின் திருமுன் இருக்கிறது. ஆயிரங்கால் மண்டபம் இந்தத் திருச்சுற்றின் கிழக்கே இருக்கின்றது. 500 அடி நீளமும் 160 அடி அகலமும் கொண்ட இந்த மண்டபத்தில் 951 தூண்கள் காணப்படுகின்றன. நடுவில் சதுர அமைப்பில் திருமாமணி மண்டபம் இருக்கின்றது. இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 134 Sசோதிலிங்கம்

III. மண்டபங்கள்.
நாயக்கர் காலத்தில் சிறப்பாக திருமலை நாயக்கர் காலத்தில் எழுப்பிய புதுமண்டபங்கள் இக்கால கட்டடக்கலை வரலாற்றுத் திறனை எடுத்துக்காட்டக் காரணமாக இருந்த அதே நேரம் திருக்கழுக்குன்றத்து ஆமை மண்டபம் செஞ்சி நாயக்கர்களின் உன்னத படைப்பாகும். ஓர் ஆமை மீது எழுப்பப்பெற்றது போன்று பல அழகிய சிற்பத் தொகுதிகளைச் சுமந்த வண்ணம் திகழ்வது இம்மண்டபமாகும். மதுரை நாயக்கர்களின் மண்டபங்களில் சிலவற்றில் பாயும் குதிரை, யாளிகள், சிம்மங்கள் இருப்பது போன்று சில மண்டபங்களில் மிகப்பெரிய அளவில் தெய்வத் திருவுருவங்கள் திகழ்கின்றன. கம்பத்தடி மண்டபத்தில் உள்ள காளி, வீரபத்திரர் போன்ற தூண் சிற்பங்கள் இவ்வகையைச் சார்ந்தவையே. விஸ்வநாத நாயக்கரிலிருந்து அனைத்து நாயக்க மன்னர்களின் உருவங்களையும் இங்கு தூண்களில் காணமுடிகின்றது. இது போன்றே திருவரங்கம் கருட மண்டபத்திலும் மதுரை நாயக்கர்கள் பலரது உருவங்கள் இடம்பெற்றுள்ளன. திருவரங்கத்து மண்டபத்து உருவச் சிலைகளில் போசளர்களின் கலைப்பங்கு காணப்பெறும் இதற்குக் காரணம் இங்குள்ள போசளர்களது வேணுகோபாலன் திருக்கோயிலாகும். மதுரையிலேயே பின்வந்த நாயக்கர்களின் படைப்புக்களாகத் திகழும் தூண்களின் கலைநயம் சற்றுக் குறைவு படத்துவங்கியதைத் திருப்பரங்குன்றம் போன்ற திருக்கோயில் மண்டபங்கள் வாயிலாக உணர முடிகின்றது. கும்பகோணம் இராமசாமி கோயில் மண்டபத் தூண்கள் தஞ்சை நாயக்கர்களின் தனித்திறனை வெளிப்படுத்துகின்றன. இங்கு சோழநாட்டு மரபுச் சிற்பக்கலை சற்று மாறுபாடுகளோடு பரிணமிக்கின்றது.
IV. புஷ்ய மண்டபங்கள்.
நீர்த்துறைகளில் திருக்கோயில்களோடு தொடர்புடையதாக எடுக்கப்பெறும் மண்டபங்களே புஷ்ய மண்டபங்களாகும். இவ்வகையில் அமைந்த மண்டபங்கள் தஞ்சை நாயக்கள்களால் எடுக்கப்பெற்றன. தஞ்சை அச்சுதப்ப நாயக்கர் திருவையாறு, கும்பகோணம், திருவிடைமருதூர், மயிலாடுதுறை ஆகிய இடங்களில் காவிக்கரையில் எடுத்த மண்டபங்கள்
இந்துநாகரிகத்தில் துணிகலைகள் 135 Sசோதிலிங்கம்

Page 76
பற்றிக் கல்வெட்டுக்களும் இலக்கியங்களும் பேசுகின்றன. நடுவே இ O திருமேனியை எழுந்தருளச் செய்த அழகிய மேடை நாற்புறத் தாழ்வாரங்கள் அழகிய கொடுங்கைகளோடு விதானம் நடுவே விமானம் ஆகியவற்றோடு சிற்பங்கள் எழில் செய்யத் திகழும் மண்டபங்கள் மேற்குறித்த ஊர்களில் காவிரிக்கரையில் உள்ளன. திருவிடை மருதூர் புஷ்ய மண்டபம் அனைத்தையும் விஞ்சும் வண்ணம் செறிவுடையதாகும்.
கும்பகோணம் மாகமகக் குளத்தைச் சுற்றிலும் சோடச மகாதான மண்டபங்கள் என்ற பெயரில் 16 மண்டபங்கள் உள்ளன. இங்கு பதினாறு வகையான மகாதானங்களைத் தஞ்சை இரகுநாத நாயக்கர் செய்ததாகக் கல்வெட்டுகளும் இலக்கியங்களும் குறிப்பிடுகின்றன. இம்மண்டபங்களுள் மிகவும் சிறப்பு வாய்ந்தது துலாபுருஷ மண்டபம் ஆகும். தூண்களிலும் விதானத்திலும் அழகுமிகுந்த சிற்பத் தொகுதிகள் அடுக்காய் உள்ளன. மன்னன் துலாபாரம் ஏறும் காட்சி தெய்வத் திருவுருவங்கள், அழகுப் பாவைகள் போன்றவை இம்மண்டபத்தில் காணப்பெறும் சிறப்பு மிகு சிற்பங்களாகும். இம்மண்டபம் போன்றே மற்ற 15 மண்டபங்களும் சிறிய கோயில்களுடன் இணைந்து காணப்பெறுகின்றன. தடாகங்களையும் கட்டடக் கலையின் திறத்தால் அழகுசெய்த நாயக்கர்களின் கலைப்பாணி போற்றுதற்குரியதாகும்.
கும்பகோணத்திலுள்ள வீரசைவ மடமான பெரியமடம், நாச்சியார் கோயில், பெருமாள் கோயில் முகமண்டபம் ஆகிய செங்கல் மண்டபங்கள் தஞ்சை நாயக்கர், இரகுநாத நாயக்கர்கள் எடுத்தார் என்பதை இங்குள்ள கல்வெட்டுக்கள் வாயிலாக அறியலாம். “வெளவால் நந்தி’ என்ற சிறப்புப் பெயருடன் அழைக்கப்படும் இவ்வகை மண்டபங்கள் சோழநாட்டில் பல உண்டு. நாகைமாவட்டம் திருவீழிமிழலையில் உள்ள வெளவால் நந்தி மண்டபம் தான் இவ்வகை மண்டபங்கள் தமிழகத்திலேயே மிகப் பெரியதாகும். மிகச் சிறந்த இந்த அரங்கம் நாயக்கள் கட்டக்கலையின் சிறப்பு முத்திரை ஆகும்.
இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 136 Sசோதிலிங்கம்

இவ்வகை மண்டபங்களுக்கெனத் தயாரிக்கப்பெற்ற செங்கற்கள் தனித்தன்மை வாய்ந்தவை. இவற்றின் தயாரிப்புப் பற்றிய குறிப்புக்கள் கிடைக்காதது பேரிழப்பேயாகும். நற்பயனாக இவ்வகைச் செங்கல் மண்டபங்கள் கட்டுவதற்கு உபயோகித்த சுண்ணாம்புச் சாந்துக் கலவை பற்றிய குறிப்புக்கள் மதுரை திருப்பணிமாலை மூலம் அறிய முடிகின்றது.
“அரைத்த சுண்ணாம்பை வெல்லச்சாறு விட்டு நன்றாய்க் குழைத்த செங்கல்லும் அடுக்காகப் பரப்பிக் கடுக்காயோடு ஆமலகம் அரியதான்றிக் காய், உழுந்து ஒருக்கால், இருக்கால் இடித்து நன்னில் ஊறிய கடுஞ்சாறும் விட்டு ஊழிக் காலங்களிலும் அசையாத வஞ்சிரக் காரையிட்டு” என்று இப்பழம் பாடல் மூலம் அறியமுடிகின்றது.
V திருக்கோயில் நெற்களஞ்சியங்கள்.
நாயக்கர்களின் திருக்கோயில் கட்டடக்கலையில் நெற் களஞ்சியங் களுக்குச் சிறப்பிடம் உண்டு. பெரும்பாலான திருக்கோயில்களில் களஞ்சியகங்களாகத் தனி அறைகள் உண்டு. திருவரங்கம் திருக்கோயிலில் மூன்றாம் திருச்சுற்றில் கொட்டாரம் என்ற சேமிப்புக் கிடங்கும் நான்கு மிகப்பெரிய களஞ்சியங்களும் உள்ளன. செங்கல்லால் மிகப்பெரிய வட்டமைப்பாக எடுக்கப்பெற்ற இக்களஞ்சியங்களில் சுண்ணாம்புப் பூச்சுப் பூசப்பெற்றுக் காணப்பெறுகின்றது. வெளிப்புறங்களில் மூன்று அடுக்காகக் “கொசிலி” என்றழைக்கப் பெறும் கபோத அமைப்பு வெவ்வேறு உயரங்களில் காணப்பெறுகின்றது. ஒவ்வொரு நிலையிலும் தானியங்கள் கொட்ட வாசல்கள் உள்ளன. மேலே கூரை அமைப்பின்றித் தற்போது காணப்பெறும் இக்களஞ்சியங்களில் தானியங்களால் நிரப்பிக் கூரை வேய்ந்து மழை நீர் இறங்காவண்ணம் காத்தனர். தமிழகத்துத் திருக்கோயில்களில் உள்ள களஞ்சியங்களிலேயே மிகப்பெரிய களங்சியங்கள் இவையே.
VI திருப்பாலைத்தறை களஞ்சியம்.
தஞ்சை நாயக்கர்களின் மிகச் சிறந்த கட்டடக் கலைத்திறனைக் காட்டும் ஓர் அமைப்பாகத் திகழ்வது தஞ்சைமாவட்டம் திருப்பாலத்துறை திருக்கோயில் திருச்சுற்றில் உள்ள நெற்களஞ்சியமே. அச்சுதப்ப நாயக்கள் இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 137 Sசோதிலிங்கம்

Page 77
இரகுநாத நாயக்கர் போன்ற தஞ்சை நாயக்க மன்னரின் ஆட்சியின்போது அமைச்சராகத் திகழ்ந்த கோவிந்த தீட்சிதரின் ஆக்கத்தால் எழுந்ததுவே இக்களஞ்சியம்.
வட்ட அமைப்பில் கற்கூரையோடு செங்கல்லால் உள் வெளிப் பூச்சின்றி எடுக்கப்பெற்றுள்ளதே இதன் தனிச்சிறப்பாகும் இரண்டு நிலைகளில் அமைக்கப்பெற்றுள்ள கொடுங்கை போன்ற கொசிலி மழை நீரால் வெளிப் புறச்சுவர் அதிகம் ஈரமாகாமல் தடுப்பதற்கேற்ற வண்ணம் உள்ளது. கூம்புவடிவில் காணப்பெறும் கூரை செங்கல் அடுக்கு முறையில் கட்டப் பெற்றுள்ளது. இவ்வமைப்பு முறையை கட்டடக்கலை 6.1659/60th 56f "Self Supporting Structure" 6T607 -960pur. 61/LL& சுவரில் வெளிப்புறம் "Brick Ribs” எனக் கூறப்பெறும் தூண் அமைப்புக்கள் காணப்படுகின்றன. இவை சுவருக்கு வலுவூட்டும் தன்மை உடையவை. முதல் அடுக்கிலும் இரண்டாம் அடுக்கிலும் பக்கவாட்டின் இரண்டு வாசல்களும் சரிந்த கூம்புக் கூரையில் சிறப்பு அமைப்புடன் ஒரு வாசகம் உள்ளன. இவை நெல் நிரப்பப் பெறுவதற்காக உள்ளவையாகும். நானூறு ஆண்டுகள் கடந்தும் நிமிர்ந்து நிற்கும் இக்களஞ்சியக் கட்டுமானத்திறன் எதிர்காலத்திலும் கட்டடக்கலை வல்லுனர்களுக்கு உதவிடும் என்பதில் ஐயமில்லை இவற்றின் பேறாக முழுமை உருப்பெற்று உருவான திராவிடக் கட்டடக்கலை மரபாகவும் இன்று வரை பின்பற்றப்பட்டு வரும் கலைமரபாகவும் மிளிர்வது நாயக்கர்கால கட்டடக்கலை வரலாறு ஆகும்.
இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 138 Sசோதிலிங்கம்

O சிற்பக்கலை
இந்துக்கள் காலம் காலமாக வளர்த்து வந்த கலைகளில் சிறப்பு மிக்கதோர் கலையாக விளங்குவது சிற்பக்கலை. இங்கு சிற்பம் என்பது கண்ணையும் கருத்தையும் கவருகின்ற கலைத்துவம் மிக்க சிறப்பு மிக்கவை. இவற்றை உள்ளதை உள்ளவாறே வடிக்காது உள்ளதை உணர்ந்தவாறு இராசானுபவம் தோன்றுமாறு கலைத்திறன் மிக்க கலைப் படைப்புக்களாகப் படைக்கப்படல் வேண்டும். அத்துடன் இறை பத்தியையும் இக, பர இன்பங்களையும் அருளையும் அளிக்கும் வகையில் படைத்தல் வேண்டும். இவை சிற்ப சாஸ்திர ஆகம விதிகளுக்கு அமைந்த வகையில் புராண அறிவு சிறந்த கைவண்ணம் தெய்வீக அம்சங்கள் பொருந்திய வடிவங்களை உருவாக்கும்போது அவை இந்து நாகரிக வளர்ச்சிக்கு சிறந்த வித்தாக அமைகின்றது.
மேலும் ஆகமம் கூறும் வழிபாட்டு மரபுக்கு அமைவாக இறைவன் புகழ், கலைச்சிறப்பு என்பவற்றை வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்படும் இச் சிற்பத்தை உருவாக்கும் திறன் படைத்தோர் நிச்சயம் நடனக்கலை மரபு தெரிந்தவராக இருக்க வேண்டும் என்பதும் அவர் உருவாக்கும் வடிவங்கள் சிற்ப பிரமாணங்களுக்கு ஏற்ப உருவாக்கப்பட வேண்டும். தவறின் பாதிப்புக்கள் ஏற்படுமென சிற்ப சாஸ்திரம் கூறுமிடத்து அது அவனையும் அதனை உருவாக்குவதற்கு காரணமான கர்த்தாவையும், கிராமம், நாடு, மக்கள், அரசன் என்ற எல்லோரையும் பாதிக்குமென ஆகமங்கள் எடுத்தியம்புகின்றன.
1. சிற்பக்கலை மூலங்கள்.
சிற்பக்கலை பற்றி எடுத்தியம்பும் நூல்களாக ஆகமம், புராணம்,
ஸ்மிருதி சிற்ப சாஸ்திர நூல்களெனக் கருதப்படும் விசுவகர்மீயம்,
இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 139 S.GJ FISIsSistb

Page 78
விஸ்வகாரம், காசியம், சகளாதிகாரம், சரஸ்வதீயம், மயமதம், மாநகாரம் முதலியனவும் குமாரதந்திரம், காரணம், காமிகம், சுப்பிரபோதம் முதலான ஆகமங்களும் சுக்கிரநீதி முதலான சாஸ்திர நூல்களும் அபிநயதர்ப்பணம், நாட்டிய சாஸ்திரம் போன்றனவும் இவைபற்றிச் சிறப்பித்துச் செல்கின்றன. இத்தகைய நூலாதாரங்கள் கொண்டு நோக்கும்போது தொழில்நுட்பத் திறனோடு கூடிய சிற்பக்கலையில் தேர்ச்சிபெற்ற கலைஞனே சிற்பி எனப்படுவான். இவனால் உருவாக்கப்படும் வடிவங்கள் சிற்பங்கள் எனப்படும். இச்சிற்பங்களை உருவாக்கும் சிற்பியானவன் தலைமுறை தலைமுறையாக தமது மரபினைப் பேணிவரும் நிலையில் அவனிடம் சில பண்பியல்புகள் அமைந்திருக்க வேண்டுமெனவும் அத்தகைய பண்பியல்புகளாகக் கருதப்படுபவை சாஸ்திரங்களையும் தோத்திரங்களையும் கற்றிருத்தல் வேண்டும். தனிமைவாய்ந்த புனிதமான இடத்தில் இருந்து நூல்கள் நுவலப்பட்டு தியான மந்திரங்களைத் தனது உள்ளத்திலே தியானித்தல் வேண்டுமென வலியுறுத்தப்படுகின்றன. அத்துடன் அவன் யூனூல், உருத்திராக்கம், விபூதி என்பன தரித்திருக்க வேண்டும். கடவுள் பக்தியுடையவனாகவும், ஏகபத்தினி விரதம் உடையவனாகவும் சிவபூஜை செய்பவனாகவும் பிரம்மா, விஷ்ணு, மகேசுவரரை இதயத்தில் தியானிப்பவனாகவும் இருத்தல் வேண்டுமெனவும் சிற்ப சாஸ்திரங்கள் வலியுறுத்திச் செல்கின்றன.
II. ஒழுக்கக் கட்டுப்பாடு
சிற்பக் கலைஞனைப் பொறுத்தவரை மந்திர உச்சாடங்களினூடாக தாம் செதுக்கப்போகும் தெய்வத்தைப் பாரம்பரியமாக அமைத்த அறிவு, உண்மையைத் தாமே உய்த்துணரும் ஆற்றல், தெய்வபக்தி என்ற மூன்றும் தலைசிறந்த சிற்பிக்கு இருக்கும் பண்புகள் ஆகும். இப்பண்பு நிலையினூடாக தாம் உருவாக்க விரும்பும் உருவத்தைத் தனது உள்ளக் காட்சியில் காணுதல் வேண்டும். தியானத்தின் பயனாய் உள்ளத்தில் தோன்றும் உருவத்தையே தனது கைவண்ணத்தின் மூலம் வெளிக் கொணர்ந்தான். இத்தெய்வ உருவங்களை ஆலயங்களில் பிரதிட்டித்து வழிபாடியற்றும் சிவாச்சாரியனும் அதே தியான மந்திரங்களைத் தியானித்து வழிபடுபவன். எனவே அந்நோக்கத்தை நிறைவுசெய்யத்தக்க
இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 140 Sசோதிலிங்கம்

உருவங்களையே சிற்பி அம்மந்திரங்கள் கூறும் முறைப்படி உருவாக்குவது அவசியமாகும். அக்காரணத்தால் சிற்பக் கலைஞன் தனது ஆன்மாவைத் தூய்மையாக வளர்த்துக்கொள்ள வேண்டியிருந்தது. ஆன்ம வளர்ச்சிக்கு ஒழுக்கமே உறுதுணை. எனவே சிற்பக்கலைஞனைப் பொறுத்தவரையில் ஒழுக்கமே அடிப்படைப் பண்புகளில் ஒன்றாக விளங்கியது. தெய்வச் சிற்பங்கள் வெறும் கலைப்படைப்போ, காட்சிப் பொருளோ அல்ல. உருவின்றிக் கண்ணால் காணமுடியாத ஒன்றை அறிவால் உணர்ந்து அவ்வுணர்வினை கலைவடிவாய் கண்முன் கொண்டு வந்து நிறுத்துவது இந்தியச் சிற்பக் கலைஞனது சிறப்பியல்பு ஆகும். அவ்வுருவங்கள் வழிபடுவோனது உள்ளுணர்வோடு தொடர்பு கொள்வன. எனவே ஒழுக்கசீலத்தினால் தூய்மையடைந்த சிற்பக் கலைஞனின் கைவண்ணத்தில் உருவாகிய கடவுட்படிமங்களில் இறைத்தன்மை மிளிர்ந்தது. சிற்பக்கலைஞனுக்கு இத்தகைய தகுதியை உறுதிசெய்வதற்கே பண்டைய பயிற்சிமுறையும் குருகுலவாச அடிப்படையில் அமைந்த கல்வி முறையும் ஒழுக்கக் கோட்பாடுகளும் உதவின எனலாம்.
III. சிற்பக்கலை உறுப்புக்கள்.
O e O ற்சிகள், போக்குகள் பாரம்பரிய சிறப்புக் எளிதில் விளங்க வைக்கக்கூடியதாக சிற்பங்களை உருவாக்க முடிந்துற்ற நிலையில் உள்ளத்தில் தோன்றும் உருவத்தை சிற்பி கல், மண், மரம், செம்பு, சுதை, கடுசர்க்கரை, தந்தம், வண்ணம், இரத்தினம் முதலான பொருட்களால் உருவங்களை உருவாக்கும் வல்லமை பெற்றிருந்தான் என்பர் நூலோர். தாமரை, வெள்ளி, தங்கம் முதலான உலோகங்கள் கொண்டு உருவாக்கப்பட்ட உருவங்கள் வழிபாடு செய்வதற்குச் சிறந்தவையாகவும் காணப்பட்டன. இத்தகைய நிலையிலேதான் சிற்பம் உருவாக்கும் திறன் பற்றி பின் கலந்தை எனும் நூலில் கூறப்பட்ட கருத்தினை அங்குள்ள பாடல்களுடாக காணுமிடத்து,
“கல்லும் உலோகமும் செங்கல்லும் மரமும் மண்ணும் சுதையும் தந்தமும் வண்ணமும் கண்ட சருக்கரையும் மெழுகும் என்றிவை பத்தே சிற்பத் தொழிலுக்கு உறுப்பாகும்” இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 141 Sசோதிலிங்கம்

Page 79
எனக் கூறப்பட்டவை அங்கு பத்து மூலப்பொருட்கள் பயன்படுத்தப் பட்டமை பற்றியும் அதிலே மண் - மிருண்மயி, மரம் - தாருகடிதம், கல் - சைலஜம், உலோக - லோகஜம் என்பன மிகச் சிறப்புடையன எனவும் இவற்றைக் கொண்டு உருவாக்கப்படும் தெய்வப் படிமங்கள் ஐந்து நிலைப்பட்டதாக இருந்தது என சிற்பசாஸ்திரம் கூறுமிடத்து,
ஸ்தானகம் - நின்று ஆஎUனம் - அமர்ந்து சயனம் - கிடந்து ஸ்தானாசனம் - நின்ற பிறசாயல் JLSTJGTIh - கிடந்த பிறசாயல்
கொண்ட அம்சங்களைப் பிரதிபலித்த நிலையில் இவை கலை, சமயம், தத்துவம் என்ற அம்சங்களை உணர்த்தி நின்ற தன்மையும் அக்கலைமரபின் தனித்துவதத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாகின.
1. சமய இலக்கிய வரலாற்றில் சிற்பக்கலை.
சமய வரலாறு என்று தோன்றியது எனத் திட்டவட்டமாகக் கூறமுடியாத நிலையிலும் அது வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இருந்தே பேணப்பட்டு வந்தது என்பதும் அதற்கேற்புடைய சான்று ஆதாரங்களாகச் சிந்துவெளி தொல்பொருட்கள் சான்றாகக் காணப்படும் நிலையில் இந்திய நுண்கலைகளின் ஊற்றுக்கால்களைச் சிந்துவெளி தொல்பொருள் சின்னங்களில்தான் காணமுடிகின்றது. இதுவரை காலமும் இந்திய நாகரிகத்தின் ரிஷிமூலத்தை வேற்று நாடுகளில் தேட முயன்றவர்களுக்குப் பிரமிக்கும் வகையில் சிந்துவெளி ஆராய்ச்சி முடிவுகள் வெளியாகின. அவ்வகையில் மொஹஞ்சதாரோவில் கிடைத்த தாடியுடைய மனிதனின் கண்ணாம்புக் கல்லாலாகிய சிலை ஹரப்பாவிற் கிடைத்த மணற் கல்லாலாகிய ஆணின் உடற்குறை என்பனவற்றைப் பார்த்த சேர் ஜோன் மார்சல் அது பற்றிப் புகழ்ந்தும் கூறியுள்ளார். இத்துடன் சிந்துவெளியில் புரோகிதனே அரசனாக இருந்திருத்தல் வேண்டும். இங்கே கண்டெடுக்கப்பட்ட தாடிக்கார மனிதன் புரோகித அரசனாக இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் Sசோதிவிங்கம்

இருத்தல் வேண்டும் என்பர் குறோவர். இத்துடன் இங்கு கிடைத்த வெண்கலத்தாற் செய்யப்பட்ட நடனமாதின் உருவம் சிந்துவெளி மக்களின் சிற்ப அறிவைப் புலப்படுத்துகிறது. இதன் இடது கை நிறைய வளையல்கள் காணப்படுகின்றன. இதனது கூந்தல் மிகவும் நுட்பமாகச் செய்யப்பட்டுள்ளது. இச்சிலை வழவழப்பாகவும் ஒழுங்காகவும் அமைந்துள்ளது. வேறு சில உருவச்சிலைகள் நடனஞ் செய்வதற்கு ஏற்றவாறு நிற்கும் கோலத்தில் அமைந்துள்ளன. இச்சிலைகள் சிவ பிரானது நடனக் கோலத்தின் முன்னோடியாக அமையலாம் என்பர் றோலன்ட் என்ற அறிஞர். இங்கு கிடைத்துள்ள திமிழ் பருத்த எருது, குட்டியுடன் இருக்கும் குரங்கு தனித்திருக்கும் குரங்கு, சிவயோகியின் வடிவம், தரைப்பெண் வடிவங்கள் என்பன இக்கால மக்களின் சிற்ப அறிவை அறிய உதவுகின்றன. இவை சிற்ப வளர்ச்சியின் ஆரம்ப நிலையைக் குறிக்கின்றனவேயன்றி கலைநுணுக்கம் உடையனவென்று கூறமுடியாதென்பர் பஷாம் என்ற அறிஞர்.
வரலாற்றின் ஆரம்பத்தில் சிற்பக்கலை பற்றியும் அதனை உருவாக்கும் சிற்பக்கலைஞனின் திறன் பற்றியும் இருக்கு வேதப் பாடல்கள் சான்றுபகர்ந்த நிலையில் விளம்வகர்மன் என்ற பெயர் சிற்பவியற்றுறையோடு தொடர்புடையது. இப்பெயர் இருக்கு வேதத்தில் உள்ளது. இவ்வேதத்தின் பத்தாம் மண்டலப் பாடல்களில் சில விஸ்வ கர்மன் என்ற தெய்வத்தின் மீது பாடப்பெற்றவை. இவற்றினூடாகப் பிரபஞ்சத்தைப் படைத்த சிற்பக்கலைஞனின் அம்சமாக பிரஜாபதி குறிப்பிடப்படுகின்றான். இவ்வுலக சிருஷ்டிக்குக் காரணமானவன் அவனே. இருக்கு வேதம் குறிப்பிடும் விஸ்வகர்மன் என்ற தெய்வத்தின் மீதும் இக்கருத்து பிரதிபலிப்பதுடன் சிற்பியின் தெய்வீக மரபு அவனால் உருவாக்கப்படும் சிற்பத்திறன் பற்றி அறிய முடிந்துற்ற நிலையில் நிறைவுபெற்ற கலையம்சத்தோடு சிற்பங்களை வடிப்பதே தெய்வீகக் கலைக்குரிய பண்பாக அமைகின்றது. தெய்வீகத் தூண்டுதலால் மனிதனது உள்ளத்தில் ஏற்பட்ட எண்ணங்களைக் கலையாக வடிப்பதே இந்தியக்கலையின் சிறப்பாக சிற்பக்கலையின் அடிப்படை அம்சமாகும் என எரிக்கிரில் என்பார் கூறும் கருத்தும் இங்கு பொருத்தமுடையதே.
இந்துநாகரிகத்தில் துணிகலைகள் 3. 3.சோதிஜிங்கம்

Page 80
i6oozů GTmkš பில் இ திருவுருவங் s உருவாக்கும் சிற்ப நுணுக்கங்களையும் எடுத்துரைக்கின்றன. காராணகாமம், காமிகாகமம் ஆகியவற்றில் இவை தொடர்பான விதி முறைகள் உண்டு. திருவுருவங்களின் தீர்மானங்களைப் பற்றி உத்தர காரணாகாமம் கூறுகின்றது. காமிகத்தில் அறுபத்தைந்தாம் படலத்தில் பிரதிமாலஷசணம் என்ற பிரிவில் திருவுருவங்கள் அவற்றுடன் கூடிய சிற்ப அமைப்பு முறைபற்றி விளக்கப்படுகின்றன.
இதிகாசங்களைப் பொறுத்தவரையில் தென்னிந்தியச் சிற்பக்கலை
மரபுடன் உன்னதமான தொடப்புகளை வைத்துக் கொண்டுள்ளது எனலாம். சிற்பக்கலைஞர்களாகச் சித்தரிக்கப்பட்ட பிருகு, அத்திரி, வசிட்டர், நாரதர், மனு, பராசர், காசியர், செளனகள், அநிருத்தர் ஆகியோர் வரலாறுகளையும் அவர்கள் உருவாக்கிய வடிவங்கள் குருகுல மரபினூடாக அக்கலை மரபைப் பேணுவதற்கு அவர்கள் முன்னோடியாக இருந்தமை பற்றியும் எடுத்து விளக்கிச் செல்லும் நிலையில் மகாபாரதத்தில் விஸ்வகர்மன் மயன் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. இவர்கள் முறையே தெய்வங்களினதும் தானவர்களினதும் வாஸ்து வித்தை வல்லுனர்களாக விளங்கியவர்கள் விஸ்வகர்மன் ஆயிரக்கணக்கான கலைகளில் வல்லன். தெய்வங்களுக்குத் தேவையான பொருட்களை உருவாக்கியவன் இவனே. மயன் என்பவன் தானவர்களின் விஸ்வகர்மனாகச் சுட்டப்படுகின்றான். தெய்வங்களின் சிற்பக்கலை வல்லுனனாக விளங்கிய விஸ்வகர்மனின் பெயர் பிற்காலத்தில் அத்துறை சார்ந்தோருக்குச் சூட்டப்படுவதற்கும் அவற்றின் பேறாக புனிதமான கலைமரபாக அதனைப் பேணி வருவதற்கும் காரணமாக அமைந்தவை இதிகாசங்களே எனலாம்.
புராணங்களைப் பொறுத்தவரையிலும் தென்னாட்டுத் திருக்கோயில் வழிபாட்டிற்கும் அங்கு வைத்துப் பேணப்படும் சிற்பங்கள் விக்கிரக வடிவங்களின் தனித்துவ இயல்பு முறைமைகள் பேணப்படுவதற்கும் பெரும் பங்களிப்பு நல்கியுள்ளன. என்றே கூறமுடிகின்றது. ஏனெனில் தென்னாட்டிலே எழுச்சிபெற்ற கோயில்களில் உள்ள கோபுரங்கள், விமானம் இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 144 Sசோதிலிங்கம்

முதலியவற்றில் மிளிரும் சிற்பங்கள், புராணங்கள் கூறும் தெய்வீகக் கதைகளைச் சித்தரிக்கின்றன. புராண நிகழ்ச்சிகள் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. மக்கள் மத்தியில் இறைவன் புகழையும் பக்தியையும் பரப்ப இம்முறை பெரிதும் உதவியது இலக்கியம், கலை ஆகிய இரு துறைகளினின்றும் புராணங்களின் தொடர்பை நீக்கிவிட்டால் அவற்றில் ஏற்படும் பள்ளங்களை நிறைவு செய்தல் மிகவும் கடினமாகும் எனக் கூறக்கூடிய முறைமை சிற்பக்கலை வரலாற்றில் அது பெற்றிருக்கும் முக்கிய இடத்தினை எடுத்தியம்பக் காரணமாகின்றது எனலாம்.
II. மெளரியர் காலச் சிற்பக்கலை.
இந்துநதி நகரங்களின் முடிவு தொடங்கி மெளரியர் எழுச்சி வரை ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலிடையிட்டுள்ளன. இவ் இடைக் காலத்தில் நிலைபெற்றுள்ள கலைப்பாணி யாதும் இல்லை. வட இந்தியாவில் எங்கோ ஓரிடத்தில் அழிவுறும் பொருள்களாலாய வேலைப் பாடுகள் மூலம் சிற்பக்கலை உயிர் தரித்திருந்தது என்பதில் ஐயமில்லை. மெளரிய மன்னர்களின் பேராதரவு மேலைநாட்டுச் செல்வாக்கின் நுழைவுபொருட் பெருக்கம் ஆகியன அதற்குப் புத்துயிர் அளித்தது. இன்று காறும் நிலைபெற்றுள்ள கல்லுருவங்கள், புடைப்புச் சிற்பங்கள் ஆகியவற்றைப் படைப்பதற்கு வழிகோலின. அசோகன் காலத்துச் துண்களிற் காணும் போதிகைகளே இந்துநதிப் பள்ளத்தாக்குச் சிற்பங்களை அடுத்துத் தோன்றிய மிகப் பழைய முதன்மை வாய்ந்த சிற்பங்களாம். அவன் ஆட்சிக்கு முன்னரே இவற்றுள் சில புனையப்பட்டிருக்கலாம். உண்ணாட்டமைதிகள் பலவற்றை அவை பெற்றிருப்பினும் இந்தியச் சிற்பிகளின் சிறப்பியல்புகள் அவற்றிற்கில்லை. காரணத்துத் தூணிலுள்ள புகழ்போன சிங்கப் பொதிகையும் எழில்மிக்க இராம்பூர்வா எடுத்துப் பொதிகையும் இரானிய, எலனிய மரபுகளின் சார்பினை ஒரளவு பெற்றனவாயினும் உள்ளதை உள்ளவாறு புனையும் சிற்பிகளின் படைப்புக்களாகும். மேலைநாட்டுச் செல்வாக்கு இருந்திருத்தல் இந்துநாகரிகத்தில்துணர்கலைகள் 145 Sசோதிலிங்கம்

Page 81
கூடுமென்பதை நாம் அறிந்திலோமாயின் அத்தூண்களிலுள்ள விலங்குச் சிற்பங்கள் இந்துநதி இலச்சினைகளைப் பொறித்தவர்களின் வழிவந்த மரபிற்குரிவை என நாம் கூறமுற்படுவோம்.
காலத்தால் முற்பட்ட பழைய ஓர் நாகரிகத்தில் இத்தகைய உயிர்ப்புடைய சிற்பங்கள் தோன்றியது பெருவியப்போ, போதிகை வரிச்சுக்கள் உச்சியிலுள்ள உருவங்களிலும் மிகத் தெளிவாய் இந்தியக் கலைப் பண்பினைக் காட்டுவன எனலாம். இயங்குவன போல் அமைந்துள்ள விலங்குருச் சிற்பங்கள் புத்த பகவானையும் மெளரியப் பேரரசன் அசோகனையும் குறிக்கும் ஆழிகள் பூக்களையும் இலைகளையும் கொண்ட சித்திர வேலைகள் மேனாட்டுச் செல்வாக்கை உணர்த்தும் காட்டுருக்களாக பொதிகை வரிச்சுக்களில் இடம்பெற்றுள்ளன. இத்தகைய தூண்கள் தவிர உயர்ந்த முறையில் ஒப்பஞ்செய்து நன்கு பூர்த்தி செய்யப்பட்ட மெளரியர் கலைத்திறனுக்குரிய பிற எச்சங்கள் ஆகும். “தீதார்கஞ்சு இயக்கி” என்னும் எழில்மிகு உருவம் இக்கலை மரபின் சிறப்பியல்பாயுள்ளன. துலக்கமான மெருகுவேலையை உடையது. ஆனால் இவ் உருவத்தின் அமைப்பு முறையை நோக்குமிடத்து அது மெளரியர்களுக்குப் பிற்பட்டதாகலாமெனவும் தோன்றுகின்றது.
மெளியர்களுக்குப் பிற்பட்ட காலத்துக்குரிய முதன்மை வாய்ந்த சிற்ப எச்சங்கள் பாரூத்து, கயிலாய காஞ்சி ஆகிய இடங்களில் காணப்பட்ட நிலையில் பாரூத்தை கிமு 150 ஆம் ஆண்டுக்குரியதென்றும் சாஞ்சியை கி.மு முதலாம் நூற்றாண்டின் இறுதிக்குரியதென்றும், சாயாவை இவ் இரண்டுக்குமிடைப்பட்டதென்றும் கொள்ளலாம். பாரூத் தூபியின் செங்குத்தான கம்பங்களில் இயக்கர், இயக்கியரின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. பிற இந்தியச் சிங்பங்கள் போன்று இவையும் நேர்த்தியாகப்பூர்த்திசெய்யப்பட்டு அலங்காரமாய் அமைந்துள்ளன. ஆயினும் அவற்றில் புதுமையையும் கலைத்தேர்ச்சியையும் காணல் முடியாது. சாயாவிலுள்ள அளி வரிசையானது தூபியொன்றைச் சுற்றியிராது புத்தர் மெய்யுணர்வு பெற்றபின் நீள்நினைவில் நடந்து சென்ற தூய வழியைச் இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 146 Sசோதிலிங்கம்

சுற்றியமைந்துள்ளது. அது பாரூத்திலும் முன்னேற்றமுடையதாய் காணப்படுகின்றது. அங்குள்ள உருவங்கள் ஆழப்பதிந்து கூடிய உயிர்ப்பும் உருட்சியுமுடையனவாய் உள்ளன. இத்தால் இக்காலமளவில் அச் சிற்பிகள் தங்கள் தொழில்முறையிலே தேர்ச்சிபெற்றுவிட்டனர் என்பது தேற்றம். உருவங்கள் கல்லிலே தட்டையாய்ப் பொழியப்படுவதொழிந்து முக்கால் அளவு நிலைகளிலே தோற்றமளிக்கத் தொடங்குகின்றன. காயாவிலுள்ள சிற்பங்களில் குறிப்பிடத்தக்கவை மக்கள் தலைகளைக் கொண்ட பதக்க அமைப்புக்களாகும். அவை அத்துணை இயற்கைத் தோற்றம் பெற்று இருப்பதால் அக்கால மக்கள் சிலரின் உருவச் சிற்பங்களே அவை எனக் கொள்ளினுங் கொள்ளலாம்.
மெளரியர்களுடைய மனிதச் சிற்ப வடிவங்களை மிருக வடிவங்களுடன் ஒப்பிடுகையில் கலை நுணுக்கம் குறைந்தனவேயாகும். பார்க்கம் என்னுமிடத்தில் கிடைத்த யட்சன் பெசுகரில் உள்ள யட்சினி, தீதார்க்கஞ்சில் உள்ள கவரிவீசும் பெண் வடிவம் என்பவற்றுள் தீதார்க்கஞ்சில் உள்ள வடிவம் செம்மையும் அழகும் உடையது. இவ் வடிவம் மெளியர் காலத்துச் உரியது. அல்லது முற்பட்டதாகலாம் என்பர் ஆனந்தக்குமாரசுவாமி. மெளரியர் காலத்துக்கு பிந்தியது என்பர் பசாம். பருமனான இயக்கள் வடிவங்கள், பருத்த வயிறு உடையவை இவை. ஹரப்பாவில் கிடைத்த உடற்குறையை நினைவுபடுத்துகின்றன
66.
வட இந்தியச் சிற்பக்கலை சாஞ்சியிலுள்ள உச்சநிலை எய்தியது என்பதில் ஐயமில்லை. இங்குள்ள சிறுதூபியொன்று பழையவோர் பாணியில் செதுக்கப்பட்ட சிற்பங்களைக் கொண்டுள்ளது. பாரூத் சிற்பங்களிலும் பழைமையானவை எனத் துறைபோன அறிஞர் சிலர் கூறுவர். பிரதான தூணின் அணிகள் சற்றும் அணிசெய்யப்படாதவை. ஆனால் இதற்கு மாறாக பெரிய முகப்பு வாயில்களிற் பெருந்திரளான உருவங்களும் புடைப்புச் சிற்பங்களும் செதுக்கப்பட்டுள்ளன. மிகப்பெரிய சதுரம் செங்குத்துக் கற்களில் மேலிருந்து கீழும் எல்லாப் புறங்களிலும் மூன்று இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 147 Sசோதிலிங்கம்

Page 82
குறுக்கு விட்டங்களிலும் அக்கால வாழ்க்கை உயிர்வெய்தித் தோன்றுகின்றது. ஒயிலான நிலைகளிற் சாய்ந்து நின்று இயக்கியர் புன்முறுவல் செய்கின்றனர். அல்லது திண்ணிய யானைகளாலும் உவகையோடு முதுகுவலிங்குங் குறுந்தாட்பூதங்களாலும் தாங்கப்பட்டுள்ள குறுக்கு விட்டங்களின் அணைக் கைகளாய் அமைகின்றனர்.
மௌரியர் காலத்தில் எழுந்த கற்றுண்கள் கலைவளம் மிக்கவை. பெரும்பாலான தூண்களில் அசோகனுடைய ஆணைகள் பொறிக்கப்பட்டு உள்ளன. சிலவற்றில் எழுத்துக்களே காணப்படவில்லை. அதனால் எல்லாத் தூண்களையும் அசோகன் நிறுவவில்லை என்பர் ஆர்.கேமுகர்ஜி. இத் தூண்கள் இறுகிய மணற்கற்களால் ஆகியன 40 அடியில் இருந்து 50 அடி வரை உயரமுடைய இவை அடியிற் பொருந்தும். போகப் போகச் சிறுத்தும் நுனி கூம்பியதாக இருக்கும். தூணின் உச்சியில் மணிப் பொதிகையையும் அதன் மீது ஒரு பீடமும் பீடத்தின் மீது ஒரு குறியுருவும் காணப்படும். குறியுரு பொதுவாக ஒரு சிங்கமாகவே இருக்கும் சாரணத்தில் காணப்படும் தூண்கள் மிகவும் கவர்ச்சிகரமானது. இதிலே நான்கு சிங்கங்கள் முதுகுகள் ஒன்றுடனொன்று பொருந்தும் வண்ணம் நாற்றிசையும் நோக்கியபடி கம்பீரமாக தர்மச்சக்கரத்தை ஏந்தியவாறு காணப்படுகின்றன. இச்சிற்பங்களைப் பர்த்து வியந்த வின்சன் ஏசிமித் பின்வருமாறு கூறுகின்றார். “இம்மிருகச் சிற்பங்களை விட மிக உயர்ந்த அல்லது சமமான கலைநுணுக்கத்துடன் கூடிய பழைய அழகிய சிற்பங்கள் எதனையும் உலகில் எந்த நாட்டிலும் காணமுடியாது”
சலம்பூர் எனும் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட தூணின் உச்சியில் நான்கு எருதுகள் ஒன்றுடனொன்று பொருந்தும் வண்ணம் நாற்றிசையையும் நோக்கியபடி அமைந்துள்ளன. ராம்பூர்வாவில் உள்ள ஒரு தூணின் உச்சியில் ஓர் எருதுச் சிற்பமும் பிறிதொரு தூணில் உச்சியில் சிங்கம் ஒன்றும் சாஞ்சியிலுள்ள பிறிதொரு தூணின் உச்சியில் யானையின் உருவமும் மெளரிய அரராஜில் உள்ள தூணின் உச்சியில் கம்பீரத்தோடு கர்ச்சித்து நிற்கும் சிங்க வடிவமொன்றும் உருமிண்டேயில் உள்ள தூணில் குதிரையின் சிற்பவடிவமும் உள்ளன. இந்துநாகரிகத்தில்துணர்கலைகள் 148 Sசோதிலிங்கம்

மேலே குறிப்பிட்ட மிருகங்கள் நிற்கும் பீடத்தில் வெளிப்புறச் சுவரில் தருமச் சக்கரங்களும் அவற்றிடையே குதிரை, எருது, யானை ஆகிய மிருகங்களின் புடைப்புச் சிற்பங்களும் காணப்படுகின்றன. இப் பீடங்கள் மணிப் பொதிகைகள் மீதுள்ளன. இவற்றைக் கவிழ்த்து வைக்கப்பட்ட தாமரை மலர்கள் என்பர். தூணின் உச்சியை அலங்களிக்கும் யானை, குதிரை, எருது, சிங்கம் ஆகிய மிருகங்கள் நான்கும் நான்கு திசைக்குரிய காவல் தெய்வங்களாகக் கொள்ளலாம் எனக் கருதுகின்றார் வின்சன் சிமித். இத்துடன் இவை இந்துமதத் தொடர்புடையவை. யானை மட்டுமே புத்தமதத்துடன் தொடர்புடையது.
அசோகனுடைய காலத்தில் அமைக்கப்பட்ட குடவரை மண்டபங்கள் காயாவுக்கு அருகில் உள்ள பராபரக் குன்றிலும், நாகர்ஜீனக் குன்றிலும் காணப்படுகின்றன. இக்குடவரை மண்டபங்களின் உட்புறம் கண்ணாடி போல மிக அழகாகத் துலக்கப்பட்டுள்ளது. இவற்றுள் பாராபர்க் குன்றிலே காணப்படும் உலோக மாசு இருடிக்குகை மிகவும் சிறப்பானது. மெளரியர் காலச் சிற்பங்களின் கைவண்ணத்தை இங்கே காணமுடிகின்றது. இதன் முகப்பு வாயிலில் மிகவும் அழகாக அலங்கார வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாயில் முகப்பு இலாடக்கவான்
பிணைப்போடு பொருந்திய தலைவாயில் ஆகியவற்றுடன் விளங்குகின்றது.
II. குப்தர்காலச் சிற்பக்கலை.
குப்தர்காலக் கலைமரபுகளில் தனித்துவமானது சிற்பக்கலை மரபாகும். இக்கால சுதை வேலைகளில் எஞ்சியுள்ளவை மிகச் சிலவேயெனினும் அக்காலச் சாதனைகளை அறிவதற்கு அவையே போதும். பாருத்து, சாஞ்சி, வடமதுரை என்னுமிவற்றின் கலை மரபுகள் இன்பச்சுவையும் உலகியற் போக்கும் வாய்ந்தனவாய் இருப்பன. அமராவதி மரபு உயிர்த்துடிப்பும் கிளர்ச்சியும் படைத்ததாய் இருக்க குப்தர் காலச் சிற்பங்கள் ஆன்ற அமைதியும் ஏமாப்பும் உறுதியும் ததும்புவனவாய் உள்ளன. இக்காலத்தில் எழுந்த புத்தர் தம் திருவுருவம் வேறெந்த சிற்பத்தினும் மேலாக புத்தமதத்தின் உண்மைப் பொருளை இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 149 Sசோதிலிங்கம்

Page 83
உணர்த்துவது போலுள்ளது. அழகான அணிசெய்யப்பட்ட பரிவட்டம் ஒன்று சுற்றியிருப்ப தேவ கணத்தவரிருவர் புடைசூழ புத்தபிரான் பெருமதித் தோற்றத்துடன் மெல்லிய உருட்சியான உடலுடையவராய் தசையமைப்பு விளக்கங்கள் எல்லாவற்றானும் வெளித்தோன்றா வகையில் ஒப்புரவாய் எளிமை தோன்ற அமைக்கப்பட்டுள்ளது. அவர்தம் மென் விரல்கள் அவர் தம் நெறியைப் போதிக்கின்றனர் என்பதைக் குறிக்கு முகமாகச் தர்மசக்கர முத்திரையைக் காட்டுவனவாய் அமைந்துள்ளன. வழக்கம்போல் அவர் முகம் மெத்தென வடிக்கப்பெற்றன. வாயில்களுடன் ஓர் இளைஞனின் முகம் போலுள்ளது. பாதி மூடிய கண்களும் அரும்பும் புன்னகையும் அவர் அடிப்படைப் போதனையை உணர்த்துகின்றன. இத்துடன் குவாலிருக்கண்மையில் பாவயாவிற் கண்டெடுக்கப்பட்ட வடிவம் நடனமாதும் இசைவல்லுனன் ஒருவனும் காணப்படுகின்றனர். இது ஓர் புடைப்புச் சிற்பம். இங்குள்ள சிற்பிகள் புராணக்கதை மரபுகளை எடுத்துக் காட்டும் அழகிய சிற்பங்களை வடித்துள்ளனர். அவற்றில் கதிரவன் சிற்பம் மிகவும் எழில்வாய்ந்த அருள் ததும்பும் தோற்றம் உடையது. அத்துடன் புகழ்பெற்ற பிறிதொரு குப்தர் சிற்பம் சாஞ்சி உடற்குறையாம் நுண்ணியதாயும் உறுதியாயும் வடிக்கப்பட்டு இச் சிற்பம் ஒரு போதிசத்துவரின் உடலைக் குறிப்பது. மனிதவுடலின் வளைவு நெளிவுகளையெல்லாம் மிக இயற்கையாக இச்சிற்பம் காட்டுகின்றது. இன்னும் நுண்ணியதாய் செதுக்கப்பட்டு மணிகுயிற்றிய அதன் கழுத்துப் பட்டிகையும் அரைக்கச்சமும் இடத்தோளின் மீதுள்ள பேர்த்த மான்தோலும் அதன் அங்க இலட்சணங்களை மேலும் எடுப்பாகக் காட்ட உதவுகின்றது.
இக்காலத்தில் செதுக்கப்பட்ட சிற்பங்கள் பலவும் ஆடை ஆபரணங் களுடன் காட்சி தருகின்றன. உடலழகைக் காட்டும் அம்மணச்சிலைகளை இவர்கள் படைக்கவில்லை. சாரணாத்தில் கிடைத்த அமர்ந்த வண்ணம் உள்ள புத்தர் வடிவமும் வடமதுரை அரும்பொருட் காட்சிச்சாலையில் காணப்படும் நின்ற வண்ணம் உள்ள புத்தர் வடிவமும் சுல்தான் கஞ்சில் உள்ள புத்தரின் செப்புச் சிலையும் இக்காலத்தில் எழுந்த இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 150 Sசோதிலிங்கம்

சிற்பக் கலைக்கு எடுத்துக்காட்டுக்களாகும். இத்துடன் கல்லில் செதுக்கப்பட்ட சிற்பங்களில் சிறப்புவாய்ந்தவை அஜந்தாவில் காணப்படு கின்றன. இங்கேயும் புத்தருடைய சிலைகள் மிக அழகாகச் செதுக்கப் பட்டுள்ளன. சிற்பங்களை அமைக்கும்போது அவர்கள் மனித உருவத்திற்குரிய தன்மைகளைக் கொடுக்காது தெய்வீகத்தன்மை அளித்துள்ளனர்.
இக்காலப்பிரிவின் தனித்துவம் யாதெனில் தெய்வப் படிமங்களில் இந்தியச் சிற்பி வெளிப்படுத்திய உன்னத கலைத்திறனாகும் பெளத்தம், இந்துமதம் இரண்டிற்குமான படிமங்கள் கல்லாலும் செம்பாலும் உருவாக்கப்பட்டன. சாரநாத்தில் கண்டெடுக்கப்பட்ட புத்தர் சிலைகள் மிகப் பலவாகும். இவற்றுள் ஒரு சில இந்தியாவிலே கிடைத்துள்ள புத்தர் சிலைகளிலும் மிகச் சிறந்தனவாய் கலைவல்லராற் கருதப்படுகின்றன. புத்தருடைய வடிவங்களுக்கு அடுத்தபடியாக சிறந்து நிற்கும் சிற்பங்கள் சிவனுடையவையாகும். குசானர் காலத்திற் சிவபெருமானை இலிங்க வடிவில் வழிபட்டனர். ஆனால் குப்தருடைய காலத்தில் சிவன் இலிங்க உருவில் ஒரு முகத்துடனும் மற்று நான்கு முகங்களுடன் படைக்கப்பட்டு வணங்கப்பட்டார். உமையொரு பாகனாகவும் இத்தெய்வம் வணங்கப் பட்டது. திருமாலுடைய அவதாரங்களும் சிற்பங்களாக முதன்முதலாக செதுக்கப்பட்ட காலமும் இக்காலமாகவே கருதப்படுகின்றது.
இத்தகைய நிலையிலேதான் குப்தர்காலச் சிற்பங்கள் யாவற்றிலும் கம்பீரமானது பீல்சாவுக்கண்மையில் உதயகிரிக் குகைகளின் வாயிலிற் புடைப்புச் சிற்பமாய் அமைந்துள்ள வராகம் எனலாம். பெரும் புரைக் கடலிலிருந்து புவியை மீட்கப் பன்றியுருவெடுத்த திருமாலின் தோற்றமானது குழப்பமே அழிவேயென்னுந் தீய சக்திகளுக்கு எதிராய் அறத்தைக் காக்க கனன்றெழுந்த ஒரு மாபெரும் சக்தியை எமக்கு உணர்த்துவதாய் அமைந்திருக்கின்றது. அவ்வாற்றால் அது எமக்கு நம்பிக்கையையும் ஏமாப்பும் உறுதியும் பயப்பதுபோல் காணப்படுகின்றது. அவ்வாரகத்தின் கொம்பிலே தொங்கிக் கொண்டிருக்கும் புவிமடந்தையின்
இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 151 SG Isbib

Page 84
சிற்றுருவை நோக்க இறைவன் பெருமையும் அவன் சிருஷ்டியின் சிறுமையும் புலனாகின்றது. உலகக் கலைப் படைப்புக்கள் யாவற்றுள்ளும் உண்மையான சமய தத்துவமொன்றைத் தற்கால மனிதனுக்குப் போதிக்கின்ற விலங்குருவில் அமைந்த தெய்வச் சிலை இதுவெனலாம்.
மேலும் பித்தரக்கோன் கோயில் காணப்படும் சுடுமட்சிலைகள் ஐதீகக் கலைகளையும் புராணக் கதைகளையும் சொல்கின்றன. தசாவதாரக் கோயிலின் நுழைவாயிலின் இருபுறத்தும் கங்கையும் ஜமுனையும் மிக அழகாகச் செதுக்கப்பட்டுள்ளன. ஆமை மீது கங்கையும் மகரத்தின் மீது யமுனையும் நிற்கின்றன. இவை பெரும்பாலான இந்துக் கோயில்களின் நுழையவாயில் அலங்காரங்களாக அமைந்துள்ளன. இங்கேயுள்ள படல் ஒன்றில் மகாயோகி வடிவில் சிவன் காணப்படுகின்றார். இவருக்கு நாலு கைகள் உள்ளன. யோகி ஒருவருடன் இவர் உரையாடுவது போலவுள்ளார். இவருடைய தலைக்கு மேலே விண்ணில் பறக்கும் உருவங்கள் காணப்படுகின்றன. பிறிதொரு படலில் திருமாலின் ஆனந்த சயனம் காணப்படுகின்றது. அதற்குமேல் தாமரை மீது இந்திரன், சிவன், பிரமன், பார்வதி ஆகியோர் இருக்கும் காட்சியுள்ளது. இவை அமைதியும் கனிவும் கொண்டனவாகக் காட்சியளிக்கின்றன. இங்கே இராமாயணச் சிற்பங்களும் கஜேந்திர மோட்சம், நரநாராயண வடிவம் என்பனவும் புடைப்புச் சிற்பங்களாக உள்ளன.
ஜபல்பூர் மாவட்டத்திலுள்ள திகாவா என்னும் ஊரில் திருமால் கோயில் ஒன்று உள்ளது. இங்கே கங்காதேவி வடிவம் பரிவார தெய்வங்களுடன் விரிவாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. இக்கோயில்களில் மணிப் போதிகைகளுக்குப் பதிலாக செப்புக்கொடி வேலைகள் உள்ளன. தேவகிரியில் உள்ள கோயிலில் செதுக்கப்பட்டுள்ள கோபாலனதும் கோபிகளும் கஜேந்திர மோட்சம் திருமாலின் அனந்த சயனம் நரநாராயணன் போன்ற சிற்பங்களும் சிறப்பானது. இதைப் போலவே சிவனாரின் திருவிளையாடல்களையும் சிற்பங்களாக வடித்துள்ளனர். இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 152 Sசோதிலிங்கம்

அலகபாத் மாவட்டத்தில் கோசம் என்னும் இடத்தில் கிடைத்த சிவ, பார்வதி வடிவங்கள் கல்கத்தா பொருட்காட்சிச் சாலையில் உள்ளன. ஜகோளில் உள்ள துர்க்கா கோயிலில் நடனமிடும் சிவவடிவம் காணப் படுகின்றது. பாதாமிக் குகையில் சிவ தாண்டவம் புடைப்புச் சிற்பமாக உள்ளது இரண்டாவது இலக்கக் குகையும் மூன்றாவது இலக்கக் குகையும் வைஷ்ணவ புடைப்புச் சிற்பங்களை உடையன. நாலாவது இலக்கக் குகையில் ஜைனசமயப் புடைப்புச் சிற்பங்கள் உள்ளன. இத்தகைய தன்மைப்பட்ட சிற்பக்கலை வளர்ச்சிப்போக்கு பெளத்த சமண மதங்களின் எழுச்சியால் இந்து மதத்தில் ஏற்பட்ட தளர்ச்சிப் போக்கை போக்குவதற்கும் உற்ற துணையாகின.
இக் கால சிற்பக்கலை வராலாற்றின் வளர்ச்சிப் போக்கு உலோகக் கலையையும் இக்காலத்தில் உன்னத நிலையை அடையச்செய்தது. எனலாம் நாலந்தாவில் 80 அடி உயரமான புத்தரின் செப்புப் படிமம் உள்ளது சுல்தான்கஞ்ச் என்னும் இடத்தில் 75 அடி உயரமான வெண்கலப் படிமம் ஒன்று காணப்படுகின்றது. குதுப்மினாருக்கு அண்மையில் தேன் இரும்பாலான ஸ்தம்பம் ஒன்று குப்தர் கால தொடக்கத்தில் அமைக்கப்பட்டது. நவீன காலத்து இரும்புத் தொழில் ஆலையில் கூட இத்தகைய செப்பமான இரும்புத்தூணை இயற்றுதல் அரிதினும் அரிதாகும் என்று கலைநுட்பம் உணர்ந்தோர் வியக்கின்றனர். இதன் உயரம் 24 அடி நிறை ஆறரை தொன். இது குப்தர் கால உலோக அறிவை வியக்க வைக்கும் அற்புதமான தூணாகவே கருதப் படுகின்றது.
மேலும் குப்தர் கால சிற்பக்கலைகளின் தனித்தன்மையை அக்காலத்தில் செய்யப்பட்ட தங்க நாணயங்களிலும் சிறப்பாகக் காணலாம். இவற்றில் வெளிநாட்டுச் செல்வாக்கு இருந்தபோதிலும் இந்திய உலோகக் கலைஞர்களின் தனித்த கைவண்ணமும் கலந்தே மிளிர்கின்றது. இவர்கள் தங்களின் கருத்துக்களையும் கலையுணர்வையும் சுதந்திரமாக வெளிப்படுத்தி அலங்கார அணிநலம் பொருந்திய நாணயங்கள் இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 153 SGJIsildbi

Page 85
உருவாக்கியுள்ளார்கள். இவையும் இக்காலத்தைய இந்துமத மறுமலர்ச்சிக் காலமாகவும் இந்தியக் கலையின் பொற்காலமாகவும் விளங்கச் செய்வதற்கு ஏற்புடையதாக அமைந்த கலைவரலாறாகக் காணப்படுவது சிற்பக்கலை வரலாறு ஆகும்.
IV. தமிழிலக்கியங்களில் சிற்பக்கலை.
தமிழ் இலக்கிய வரலாற்றைப் பொறுத்தவரை ஆரம்பகாலமாக சங்ககாலம் சித்தரிக்கப்பட்ட நிலையில் இது கிபி 1 - கிபி 3 வரையான காலமாகவும் வரையறுக்கப்பட்ட தன்மையும் இக்காலத்தில் தமிழும் சமயமும் ஒன்றிணைக்கப்பட்டு வளம்படுத்தப்பட்டது. இங்குள்ள சமய நிலைகள் பற்றி அறிவதற்கு இக்காலத்தில் தோன்றிய இலக்கியங்கள் சான்று பகரும் நிலையில் அக்கால வாழ்க்கை முறையில் போருக்குச் சென்று விழுப்புண் ஏற்பட்டு இறந்தோருக்கும் பொது நன்மை கருதித் தம்முயிரைத் தியாகம் செய்த தியாகிகளுக்கும் நினைவுச் சின்னங்களாக நடுகற்களை எழுப்புவது வழக்கம் சங்ககாலத்தில் இருந்தது. இந்நடுகல்லில் அவ்வீரனது உருவத்தைச் செதுக்கிப் பீடும் பெயரும் பொறித்து நாட்பலி செய்து, நெய்விளக்கேற்றி வழிபாடு செய்யும் மரபு அக்கால வழக்கமாகும். இத்தகைய மரபு நிலைகளே பிற்காலத்தில் சிற்பக்கலை வரலாற்றுத் தனித்துவத்தை உருவாக்க காரணமாகின என ஆய்வாளர் கருத்துக் கூறுவர்.
தமிழ் மக்கள் கல்லை இறப்புடன் தொடர்புபடுத்தியமையால் மங்களகரமான இறைத் திருவுருங்களுக்கு முற்காலத்தில் கல்லினைப் பயன்படுத்தியதில்லை. இறந்தவர்களின் நினைவாக எழுப்பப்படும் நடு கற்களுக்கும் கல்லறைகளுக்கும்தான் கற்கள் பயன்படுத்தப்பட்டன என்பர் கே.ஆர்யூரீனிவாசன். கந்திற்பாவை, கொல்லிப்பாவை என்பன பற்றிய குறிப்புக்கள் அக்காலத்தில் எழுந்த நூல்களில் காணப்படாதபோதும் அவை கற்களாலானவை என்பதற்குரிய ஆதாரங்களேதுமில்லை. அதே நேரம் சங்க இலக்கியங்கள் சுடுமட்பாவைகள் பற்றியும் கூறுகின்றனர். சிறுவர், சிறுமியர் விளையாடிய வண்டற்பாவைகள் பற்றிய குறிப்புக்கள்
இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 154 Sசோதிலிங்கம்

அகநானூறு, ஐங்குறுநூறு ஆகிய நூல்களில் காணப்படுகின்றன.
தமிழகத்தில் நடைபெற்ற பல்வேறு அகழ்வாய்வுகளின் போது சுடுமட்
பாவைகள் பல கிடைத்துள்ளன. இவற்றுக்கும் மேலாக இக்காலத்தில்
உலோகத் திருமேனிகளும் வழக்கிலிருந்தன. இவை பொன் புனைந்த பாவைகள் என மதுரைக்காஞ்சி குறிப்பிடுகின்றது. பொற்சிலை பற்றிய குறிப்பு ஒன்று குறுந்தொகையில் காணப்படுகின்றது. நெல்லை
மாவட்டத்தைச் சார்ந்த ஆதித்த நல்லூரில் நடைபெற்ற அகழ்வாய்வில் தாய்க்கடவுள், நாய், கோழி ஆகிய செப்புத் திருமேனிகள் கண்டெடுக்கப்
பட்டன. இவை வரலாற்றுக் காலத்திற்கு முன்பே தமிழகத்தில் உலோகத்
திருமேனிகள் இருந்தன என்பதை எடுத்துக் காட்டகின்றன.
கிபி 2 - 3 வரையான காலத்தில் பெளத்தமதச் சார்புடையதான வகையிலும் சிற்பக்கலை வரலாறு வளம்படுத்தப்பட்டிருந்து என்பதற் கேதுவாக அமராவதிப் பெருந்தூபியானது புத்தர் வாழ்க்கைக் காட்சிகளைச் சித்தரிக்கின்றன. சுண்ணக்கற் புடைப்புச் சிற்பங்களாலும் அயலிலே தனித்தனி நிற்கும் புத்த உருவங்களாலும் அணிசெய்யப் பட்டிருந்தது. இந்தியக் கலையின் மிகச் சிறந்த வேலைப்பாடுகளுள் இப் புடைப்புப் பதக்க அமைப்புக்களும் அடங்குமென்பதில் ஐயமில்லை. இப்புடைப்புச் சித்திரங்கள் வட்டவடிவான சட்டகத்துள் அழகுற நேர்பெற்றமைந்து மிக்க உயிர்ப்பையும் விரைந்தியங்குவன போன்ற உணர்ச்சியையும் தருகின்றன. ஆழ்ந்த அமைதி படைத்த பெளத்த மதத்தை விளக்க முற்படும் இச்சிற்பங்கள் அம்மதத்தில் இடம்பெற்றமை வியப்பே. நெடிய கால்களும் மெல்லிய தோற்றமும் படைத்த மனிதவுருவங்கள் தீவிரமாக இயங்கும் நிலையில் உள்ளன போன்றும் ஆவேச உணர்ச்சியுடையன போன்றும் சித்தரிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக புத்தபகவானின் பிட்சா பாத்திரத்தை உம்பருலகிற்கு இட்டுச் செல்லும் தேவகணங்களைக் காட்டுவதான பதக்கவுரு ஒன்று உள்ளது. அமராவதிக் கலைமரபு பெருஞ்செல்வாக்குப் பெற்றிருந்தமை இந்துக் கலைமரபு பிற்காலப் பகுதியில் தனித்துவம் மிக்கதான முறைமையில் வளம்படுத்தப் படுவதற்கு ஏற்ற சான்றாகின. இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 155 SPJIbibiћ

Page 86
சங்கமருவிய காலப் பகுதியிலும் பெளத்த சமண மதச் செல்வாக்குகள் செல்வாக்குற்றிருந்த நிலையிலும் அவற்றின் செல்வாக்குடன் சிற்பக்கலை வரலாறு ஓரளவு வளம்படுத்தப்பட்டிருந்தது என்றே கூற முடிகின்றது. தமிழகத்தின் பல்வேறுபட்ட இடங்களில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகளின் போதும் கற்சிற்பங்கள் எதுவும் கிடைக்கவில்லை. அதேநேரம் கல்லினாற் செய்யப்பட்டன மட்டும் சிற்பங்களல்ல அவை மண், சுதை, மரம், உலோகம் என்பவற்றினாலும் அமையும் என்பதனை
“வழுவறு மரனும் மண்ணும் கல்லும் எழுதிய பாவையும் .” என்னும் வரிகளும்
“மண்ணினுங் கல்லினும் மரத்தினுஞ் சுவரினும் கண்ணிய தெய்வதம் காட்டுநர்.”
எனப்படும் மணிமேகலை நூலில் காட்டப்பட்ட வரிகளும் உறுதிப் படுத்துகின்றன.
பிற்பட்ட காலத்தில் கற்களினால் தெய்வப் படிமங்கள் உருவாக்கப் பட்டமையின் தன்மை சேரன் செங்குட்டுவன் வடநாடு சென்று கனகவிசயரை வென்று இமயத்திலிருந்து கல்கொணர்ந்து கண்ணகிக்குச் சிலையெடுத்தான் என்பதனை
“கைவினை முற்றிய தெய்வப் படிமம்’
எனச் சிலப்பதிகார நூல் சான்று பகர்கின்றது. அதேநேரம் சுதை உருவங்கள் பலவும் செய்யப்பட்டன. இவ்வுருவங்களை அமைப்போரை மண்ணிட்டாளர் என சிலம்பு எடுத்துக்காட்டிய நிலையில் இவர்கள் கோயிற் சுவர்களையும் மாளிகைகளையும் பாவைகள் கொண்டு அலங்கரித்தனர். பூம்புகாரின் புறத்தேயுள்ள சுடுகாட்டுக் கோட்டத்தின் அகன்ற வாயிலில் மடித்த செவ்விதழ்களையும் கடுத்த நோக்கினையும் இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 156 S.G.) (1555th

கையிற் சூலத்தையும் பாசத்தையும் கொண்ட சுதையால் செய்யப்பட்ட இயமன் உருவம் காணப்பட்டதாக மணிமேகலை கூறுகின்றது. மாங்காட்டு மறையவன் திருவேங்கட மலையில் திருமாலின் கிடந்த வண்ணத்தையும், திருவரங்கத்தில் செங்கண் நெடியோன் நின்ற வண்ணத்தையும் கண்டதாகக் கூறும் திறனை சிலப்பதிகாரம் எடுத்து இயம்பிச் செல்கின்றது. இத்தகைய நூலாதாரச் செய்திகள் இக்காலக் கட்டப் பரப்புக்களில் சிற்பக்கலை வரலாறு பல படிமுறைகளின் தன்மையில் வளம்படுத்தப்பட்டது என்பதனை அறிய ஆதாரமாகின்றன.
V பல்லவர்காலச் சிற்பக்கலை.
சமய வரலாற்றைப் பொறுத்த வரையில் பல்லவர் ஆட்சிக்காலம் வைதீக கலாச்சார மரபு வளம்படுத்தப்பட்டமையின் பேறாக இக்காலத்தில் இதிகாச மரபுகளின் ஊடாக தென்னாட்டில் சமயத்தின் பெயரால் பக்தியியக்கத் திறன் உன்னதமாக வளம்படுத்தப்பட்டன. இத்தகைய பக்தியியக்கத் தொடர்புகள் சைவ, வைணவ சமய கலாச்சாரத்தைப் பெரிதும் பேணியமையின் பேறாக எண்ணிறைந்த கோயில்கள் உருவாக்கப்பட்டன. அவை சிற்பக்கலைக்கு அடிப்படையாக அமைந்தமையின் பேறாக வனப்பு மிகு சிற்பங்கள் தோன்றின. இதனை அக்கால மன்னர்கள் தாம் அமைத்த கோயில்களில் உயர்வாகப் பேணினர். இதன் பேறாக உருவாக்கப் பட்ட பல்லவர்காலச் சிற்பக்கலையானது நான்கு வகையாகப் பிரித்து நோக்கப்பட்டது. அவையாவன, (1) குடவரைக்கோயிற் சிற்பங்கள். (2) ஒற்றைக் கற்கோயிற் சிற்பங்கள். (3) கட்டடக் கோயிற் சிற்பங்கள். (4) திறந்தவெளிப் பாறைச் சிற்பங்கள். என்பனவாகும்.
முதலாவது மகேந்திரவர்மன் அமைத்த குடவரைக்கோயில்களுட் பெரும்பாலானவற்றில் துவாரபாலகள் சிற்பங்கள் உண்டு. தடித்த உடலுடன் இரண்டு கரங்களைக் கொண்ட சிற்பங்கள் சிலவற்றில் தலையிற் கொம்புகளும் கையில் கதாயுதமும் காணப்படுகின்றன. சீயமங்கலம்
இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 157 S.Gd suff

Page 87
குடைவரைக் கோயிற் தூணின் மேற்புறத்தின் நான்கு கைகளுடன் கூடிய நடராஜர் வடிவம் காணப்படுகின்றது. இச்சிற்பம் சிவபெருமான் ஆடல்வல்லானாகக் காட்சிதரும் சிற்பங்களில் பழமையானதாகும். சோழர்கள் இச்சிற்பத்தை மனதில்கொண்டுதான் நடராஜர் செப்புத் திருமேனிகளை உருவாக்கியிருக்கலாமென எண்ணத்தோன்றுகின்றது. இச்சிற்பத்தில் முயலகன் இல்லை. தூக்கிய இடது காலின் கீழ் பாம்பு காணப்படுகின்றது. கணம் ஒன்று இருகைகளால் மத்தளம் வாசிக்கின்றது. இச்சிற்பத்தின் வலது மேற்கையில் தீச்சுடரும், இடது மேற்கையில் மழுவும் உள்ளன. வலது கீழ்க்கை காக்கும் கையாகவும், இடதுகீழ்க்கை தொங்கும் கையாகவும் உள்ளன. அவரை வணங்கிய வண்ணம் அடியவர் இருவர் காணப்படுகின்றனர்.
இக்கோயிலில் காணப்படும் மற்றொரு சிற்பம் உமாசகித ரிஸபவாகன மூர்த்தி சிற்பமாகும் இச்சிற்பத்தில் சிவபெருமான் நந்தியின் மீது சாய்ந்து காணப்படுகின்றார். சிவபெருமான் அருகே பார்வதி நின்ற நிலையில் உள்ளார். இவ்விருவருக்கும் இடையில் நந்தியின் தலை காட்டப்பட்டு உள்ளது. சிவபெருமான் நான்கு கைகள் கொண்டு மேல் இரு கைகளிலும் மானும் அக்கமாலையும் கொண்டு வலதுகீழ்க் கை கடிகஸ்தத்துடனும் இடது கீழ்க்கை நந்தியின் தலை மீது வைத்த வண்ணம் உள்ளர். சிவபெருமானின் பின்புறம் திரிசூலம் காட்டப்பட்டுள்ளது. பார்வதி இரண்டு கைகளுடன் உள்ளாள். இடதுகை ஹஸ்தத்துடனும் வலதுகை தாமரை மலர் கொண்டும் விளங்குகின்றது. இக்கோயிலில் உள்ள நடராஜர் சிற்பத்தை எம்முறைப்படி செதுக்கினார்களோ அதே போன்று இச்சிற்பத்தையும் செதுக்கியுள்ளனர். பல்லவர்காலச் சிற்பங்களில் பார்வதி இடம்பெறும் முதல் சிற்பம் இதுதான். பார்வதியின் சிற்ப அமைதி மதுராவிலுள்ள யக்ஷியின் சிற்ப அமைதியை மனக்கண் முன் கொண்டு வருகின்றது.
மேற்கூறிய சிற்பத்திற்கு அடுத்தாற்போல் சிங்கவரம் குடவரைக் கோயிலிலுள்ள துர்க்கையின் சிற்பம் குறிப்பிடத்தக்கது. இக் குடவரைக் கோயிலின் துவாரபாலகர்களின் சிற்ப அமைதியைக் கொண்டு இக் இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 158 SC Assfaith

குடவரைக் கோயில் முதலாம் மகேந்திரவர்மன் காலத்தவையென ஜெஎன்துப்ரே குறிப்பிடுகின்றார். திருச்சினாப்பள்ளி குடவரைக் கோயிலில் சிறந்த வேலைப்பாடுகளுடன் கூடிய வகையில் மேற்சுவரில் ஏழு அடி சதுரமுள்ள இடத்தில் கண்கவர் பதுமைகள் செதுக்கப்பட்டுள்ளன. இதில் சிறப்பானது அழகிய கங்காதரர் சிற்பம். இது கங்கை அணிந்த நங்கைபாகனையே நம்முன் நிற்க வைக்கின்றது. இங்கு நான்கு கைகளுடன் இவ் இறைவன் மேற்புற வலக் கையிற் கங்கையைத் தாங்கியுள்ளார். முதலாம் மகேந்திரவர்மன் காலத்துச் சிற்பங்களுட் கலைச்சிறப்பு மிக்கதாகும். நாமக்கல் அரங்கநாதர் கோயிலில் பள்ளிகொண்ட பெருமான் சிலை தலைசிறந்த சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்தது. இவற்றின் சிறப்பினை உணர்ந்துகொண்ட பல்லவர் வரலாறு எழுதிய மா.இராசமாணிக்கனார் இது போன்ற சிற்பம் உலகில் வேறெங்கும் இல்லை எனக் கருத்துக் கூறுவர்.
இக்கால சிற்ப அமைவுகள் எல்லாம் குகைக் கோயில்களிலும் ரதங்கள், கற்றளிகள் இவற்றோடு பாறைத்தொடர்களிலும் சிறப்புமிகு தன்மையில் அமைக்கப்பட்டிருந்தன. அவ்வகையில் மாமல்லபுரத்திலுள்ள மும்மூர்த்தி குகைக் கோயிலின் மூன்று கர்ப்பக்கிரகங்களிலும் சிவன், விஷ்ணு, முருகன் ஆகியோருடைய வடிவங்கள் காணப்படுகின்றன. நான்முகனுக்குப் பதிலாக இங்கு முருகன் காணப்படுகின்றான். இக் கோயிலின் தென்புறத்தில் கொற்றவையின் சிற்பமும் உள்ளது. நரசிம்ம வர்மனால் உருவாக்கப்பட்ட மகிடாசுர மண்டபக் குகைக் கோயிலின் பாறைகள் மீது புராணக் கதைகள் படங்கள் வாயிலாக விளக்கப்பட்டுள்ளன. கொற்றவைக்காகக் கட்டப்பட்ட கொடிக்கால் மண்டபத்தில் காவற் பெண்டிர் சிற்பங்கள் உள்ளன. வராக மண்டபத்தில் நிலமகளைத் தாங்கி நிற்கும் பூவராகமூர்த்தியும் தாமரை மலர் மேல் வீற்றிருக்கும் இலக்குமியும் மூவடியால் உலகளந்த திரிவிக்கிரமரும் காட்டெருமை மீது நிற்கும் கொற்றவையும் காணப்படுகின்றனர். கொற்றவைக்கு தன் தலையினை வாளினால் அரிந்து பலிகொடுக்கும் ஆடவன் சிற்பமொன்றும் கொற்றவையின் அருகில் உள்ளது. ஆதிவராகக் குகைக் கோயிலில்
இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 1.59 Sசோதிலிங்கம்

Page 88
கங்காதரர், திருமால், ஹரிஹரன், பிரமன், கஜலட்சுமி, கொற்றவை ஆகியோருடைய சிற்பங்கள் உள. கஜலட்சுமியின் இருபுறத்தும் பொற் குடங்கள் ஏந்தி நீராட்டும் யானைச் சிற்பங்கள் அழகாக வடிக்கப்பட்டுள்ளன. இக்கோயிலின் வடபுறச் சுவரிலும் தெற்குப்புறச் சுவரிலும் பல்லவ அரசர் அரசியர் சிற்பங்கள் வைக்கப்பட்டுள்ளன. மகிஷமர்த்தனி குகைக் கோயிலில் உள்ள இரு சிற்பங்கள் பல்லவர்களது ஒப்புயர்வற்ற படைப்புக்களாகும். ஒரு பக்கத்தில் கணங்கள் புடைசூழ சீறிப்பாயும் சிங்கத்தின் மீதமர்ந்து அம்புகளைப் பொழிகின்றாள். அசுரனைச் சுற்றிலும் அவனுடைய படைகள் நிற்பதும் பிற்பகுதியில் ஆணவத்தின் வடிவமாகிய மகிஷாசுரனை வாளால் வெட்டி வீழ்த்தும் கொற்றவை காட்சி தருகின்றாள். மகிஷாசுரனின் படைகள் அஞ்சியோடும் காட்சியும் பல்லவர்காலச் சிற்பத்தின் தனிச் சிறப்புக்கு ஏதுவாகச் சித்தரிக்க்பபட்டுள்ளது. இதன் எதிரே சீற்றத்திற்கு எதிர்மாறாக அமைதியே வடிவமாக ஆழ்கடலில் அரவணை மேல் அறிதுயில் கொள்ளும் கடல் மலைக் கரும்பைக் காணமுடிகின்றது. இவ்விரு சிற்பங்களுக்குமிடையிற் கருவறையில் சிவனும் உமையும் இவர்களின் நடுவில் கந்தனுமாக சோமாஸ்கந்த மூர்த்தம் அழகாகக் காட்சிதருகின்றது. இவற்றுடன் வாமன அவதாரம், வராக அவதாரம் முதலிய வடிவங்களும் காணப்படுவது இக்கால சிற்பக்கலை வரலாற்றில் சமரச மனப்பாங்கு அதிகம் மிளிர்வதைக் காணமுடிகின்றது.
மேலும் ஒற்றைக் கற்கோயில்களில் தேவகோஸ்டம், விமானம், நாசிகை, மேல்தளம், சுவர் முதலியவற்றில் புராணக் கதை மரபுகள் அழகான சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளன. பஞ்சபாண்டவள் ரதங்களுள் திரெளபதி ரதம் கொற்றவைக்காக அமைக்கப்பட்ட கோயிலாகும். இங்கே கொற்றவையின் சிற்பம் கருவறையில் உள்ளது. அவளுக்கு இரு மருங்கிலும் அடியவர் இருவர் உள்ளன. இவ்விருவருள் ஒருவன் தனது தலையைத் தேவிக்கு அரிந்து பலியிடும் காட்சி காணப்படுகின்றது. கருவறையின் புறச்சுவரிலே கொற்றவையும் காவற் பெண்டிரும் காட்சி தருகின்றனர். இந்துநாகரிகத்தில் நுணர்கலைகள் 160 Sசோதிலிங்கம்

அருச்சுனன் தருமராச இரதம் ஆகிய கோயில்களிலே மிகவும் அழகான சிற்பங்கள் உண்டு. அருச்சுன இரதத்தின் கிழக்குச் சுவரிலும் தெற்குச் சுவரிலும் எழிலான பெண்ணின் வடிவங்கள் உள்ளன. மேலும் காவலர் சிற்பங்கள் இடபாந்திகள், முனிவர், அரசன், அரசி, யானை மீதமர்ந்திருக்கும் முருகன் அல்லது இந்திரன் ஆகியோருடைய சிற்பங்களும் உள்ளன. மூன்று தளங்களையுடைய தருமராசர் இரதத்தில் ஒவ்வொரு தளத்திலும் புராணக் கதைகளிற் சித்தரிக்கப்படும் இறைவனின் வடிவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. தட்சணாமூர்த்தியின் சிற்பம் முதன் முதலாகக் கோயிலின் தெற்குப் புறத்தில் இங்கேதான் அமைக்கப்பட்டுள்ளது என்பர். சகாதேவன் இரதத்தின் அருகில் பெரிய அளவிலிருக்கும் யானையும் தனிச்சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளன. திரெளபதி இரதத்தின் பின்புறம் நந்தியொன்று படுத்திருக்கும் கோலத்தில் காணப்படுகின்றது. இவை இக்காலத்தின் தனித்துவச் சிறப்புக்குப் பக்கபலமாகின்றன.
மேலும் இராஜசிம்ம பல்லவேஸ்வரம் எனப் பெயர்பெறும் “காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் பல்லவரது சிற்பக்கலையை உலகுக்கு அறிவிக்க எழுந்த சிற்பக்கலைக்கூடம் எனலாம்” எனக் கருத்துக் கூறுவர் பல்லவர் வரலாறு பற்றிக் கூறிய இராசமாணிக்கனார். இத்தகைய நிலைப்பட்ட சிற்பக்கலை வரலாற்றினை நாம் நோக்கும்போது கைலாசநாதர் கோயிலில் ஒருபுறம் சிவபெருமானின் திருநடனக் கோலமும், பிரமன், கலைமகள், திருமால், திருமகள் அவரை வணங்கும் கோலமும் வடித்த சிற்பங்கள் வனப்பு வாய்ந்தவை. இவற்றோடு ஆடலழகனின் உளர்த்துவ தாண்டவ வடிவங்களும் உள. இவற்றிலே சிவபெருமானின் பாண்டுரங்கம் கொடுகொட்டி நடனவடிவங்கள் அவையும் லடாலதிலகம், லதாவிருச்சிக வடிவங்களும் சேர்ந்து நந்தி, சிவகணங்கள், சிவனாருடன் தானும் ஆடுவனவாய் அமைந்தனவும் சிறப்பித்துக் கூறவேண்டுவனவே. முன்கோயிலில் நாலரை அடி உயரச் சிவலிங்கமும், சுவரில் சிவனும் உமாதேவியும் அமர்ந்துள்ள கோலமும் அழகாகப் பொறிக்கப்பட்டுள்ளன. சுற்றுச் சுவர்களில் பலவகை நடனக் கோலங்களும் சிற்பங்களாய் வடிக்கப்பட்டுச் சுவையுணர்விற்கு விருந்தாகின்றன. இராசசிம்மனின் இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 161 Sசோதிலிங்கம்

Page 89
கோயில்கள் பொதுவாக எட்டு அல்லது பதினாறு பட்டைகள் தீர்ந்த சிவலிங்கங்களும் அவற்றின் பின்னணியில் சோமஸ்கந்தர் படிமம் அமைக்கப்பட்டிருப்பது சிறப்பாகும். இவை யாவினும் குறிப்பிடத்தக்க சிற்ப அமைப்பு ஒவ்வொரு தூணின் அடியிலும் செதுக்கப்பட்டுள்ள சிங்க உருவங்கள் என்கிறார் இராசமாணிக்கனார்.
இராஜசிம்மன் காலத்துச் சிற்பங்கள் இரண்டு வகையாகச் செதுக்கப்பட்டன. முதல்வகையில் சிற்பங்கள் தனிக்கல்லில் செதுக்கிக் கோயிலின் சுவரிலே பதிக்கப்பட்டன. இரண்டாவது வகையில் கட்டடத்துக்குப் பயன்படுத்தும் கற்களிலேயே சிற்பத்தின் பாகங்களைச் செதுக்கி ஒவ்வொரு கல்லையும் இணைத்துச் சிற்பங்ககளின் உருவத்தை முழுமைசெய்து கோயில் கட்டப்பட்டது. இம்முறையினை மாமல்லபுரத்தில் இராஜசிம்மனால் எடுக்கப்பட்டு உழுக்கு எண்ணெய் ஈசுவரர் கோயிலில் காணலாம். இராஜசிம்மன் காலத்தின் சிற்பத்தின் கரடுமுரடான பகுதிகளைச் சுண்ணாம்புக் காறைகொண்டு சமமாகச் சரிசெய்து பின்னர் சிற்பங்களின் மேல் சுண்ணாம்புக் காறை பூசி அவைகளின் மேல் வண்ணம் பூசினர். சிற்பங்களின் மேல் சுண்ணாம்புக் காறை பூசியதால் அடிக்கடி புனரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. அப் புணர்மைப்பினால் சிற்பங்களின் உருவம் பருத்துக் காணப்பட்டது. இது போன்ற சிற்பங்களைக் காஞ்சி கைலாசநாதர் ஆலயத்தில் காணலாம். இராஜசிம்மன் காலத்திற்கு முன்னர் உள்ள சிற்பங்களின் மேல் காறை பூசியதால் சிற்பத்தின் மூலவடிவத்தை இராஜசிம்மன் காலச் சிற்பங்களில காண இயலாது என அறிஞர்ப் பெருமக்கள் கருத்துக் கூறுவர்.
கைலாசநாதர் கோயிலிலுள்ள லிங்கோற்பவ மூர்த்தியின் சிற்பம் குறிப்பிடத்தக்கதோர் அம்சமாகும். சோழர்காலத்தில் இச்சிற்பம் உருளை வடிவான லிங்கத்திலிருப்பதாகக் காணப்படும். இங்கு செவ்வக வடிவில் ஒரு அமைப்பை ஏற்படுத்தி அதில் சிவபெருமான் தோற்றமளிக்கின்றார். திருமால் நான்கு கைகள் கொண்டு நிலத்தை அகழ்வது போலவும் நான்முகன் பறப்பது போலவும் காண்பிக்கப்பட்டுள்ளனர். சிவபெருமான் இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 162 Sசோதிலிங்கம்

சந்திரசேகர் உருவத்தில் எட்டுக் கைகளுடனுள்ளார். லிங்கோற்பவ மூர்த்தி சிற்பத்தின் இருமருங்கிலுமுள்ள தேவகோட்டங்களிலுள்ள பெருமாளும் நான்முகனும் லிங்கோற்பவரை வணங்குவது போல காட்டப்பட்டுள்ளனர். சிவபெருமான் பெருமிதத் தோற்றத்துடன் காணப்படுகின்றார். இராஜ சிம்மன் காலத்தில் காக்கும் கை வலப்புறம் சாய்வாகக் காட்டப்படும். லிங்கோற்பவர் சிற்பத்தைச் சுற்றிச் சிற்பங்கள் அதிகளவில் செதுக்கப் பட்டிருப்பதால் லிங்கோற்பவரின் எடுப்பான தோற்றம் எடுபடவில்லை. ஆயினும் பல்லவர் காலத்து முதல் லிங்கோற்பவ வடிவமாக இது கருதப்படுகின்றது.
காஞ்சிபுர வைகுந்தப் பெருமாள் கோயிலில் மூன்று தளங்களிலுமுள்ள கருவறைகளிலும் விஷ்ணுவின் அவதார வடிவங்கள் நின்ற, இருந்த, கிடந்த கோலங்கள் சிற்பவடிவில் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் இத்தலம் பரமேஸ்வர விண்ணகரம் என அழைக்கப்படுகின்றன. இங்கே பல்லவ மன்னர்களது வரலாறு முழுவதும் சிற்பங்களாகக் காட்சிதருகின்றன.
திறந்தவெளிப் பாறைச் சிற்ப நிலைகளிலே மாமல்லபுர பாறைகளின் வெளிப்புறங்களைச் செதுக்கி புராண, இதிகாச வரலாறுகளை சிற்பங்களாய் வடித்துத் தமது கலைத்திறத்தினைப் பல்லவர் காலச் சிற்பிகள் சிறப்புற வெளிப்படுத்தியுள்ளனர். அவ்வகையில் வான கங்கை தரைக்கு வருகையில் அதைப் பெறுவதற்கு பகீரதன் தவம் செய்யும் காட்சி மிகவும் விரிவானது. கலையெழில், உருவ அமைதி, நகைச்சுவை என்ற யாவும் ஒருசேர அமைய இந்தச் சிற்ப வடிவங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலே விண்ணுலகு இடையே மண்ணுலகு, கீழே பாதாள உலகு எனப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு உலக நிகழ்வும் சித்தரிக்கப்பட்டுள்ளன. விண்ணுலகிலே தேவர், காந்தருவர் காட்சி தருகின்றனர். மண்ணுலகிற் பகீரதன் கால் ஒன்றை மேலே தூக்கிய வண்ணம் தவம் புரிகின்றனர். அவனைக் கேலி செய்வது போலப் பூனை ஒன்று கண்மூடிப் போலித் தவம் செய்கின்றது. பூனையின் காலடியில் அதன் கபடம் புரியாத அப்பாவிச் சுண்டெலிகள் காட்சி தருகின்றன. திருமால் கோயிலிலே இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 163 Sசோதிலிங்கம்

Page 90
தவம் இயற்றுபவராகவும் முனிவர் சிலர் கங்கையில் நீராடித் தமது துணிகளைப் பிழிவோராகவும் தோற்றுகின்றார்கள். குரங்கு ஒன்று தன் துணைவிக்குப் பேன் பார்க்கின்றது. துணைவியோ தன் மடியிலே குரங்குக் குழவிக்குப் பாலூட்டுகின்றது. கீழேயுள்ள பகுதியில் நாக லோகத்தில் உள்ள நாகர்கள், நாககன்னியர் ஆகியோர் மேல்நோக்கி வருவதாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.
அடுத்த நிலையில் பகீரதன் தவச் சிற்பங்களுக்குத் தென்புறத்தில் கண்ணபிரான் கோவர்த்தனகிரியைக் குடையாகத் தாங்கி ஆநிரைகளைக் காக்கும் காட்சிச் சிற்பமும் வனப்பானது. கன்றினை வாஞ்சையோடு நாவால் தடவிப் பாலூட்டும் தாய்ப்பசு, பாற்குடம் ஏந்திக் கறக்கும் ஆயன், துள்ளிவிளையாடும் கன்று, மதுபோதையில் குடிகாரர் இருவர் கைகோர்த்தாடும் நடனம், குழலின் இசையிலே தம்மை மறந்திருக்கும் ஆநிரைகள், கண்ணனின் சாதனைக்குப் பகைப்புலமாகக் கற்களிலே காவியச் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன.
மேலும் மாமல்லபுரத்திலிருந்து மூன்று மைல் தொலைவில் உள்ள புலிக்குகையின் முகப்பில் யாளிகளின் தலைகள் செதுக்குச் சிற்பங்களாகவுள்ளன. இதற்குத் தென்புறத்தில் யானை, குதிரை ஆகிய விலங்கின வடிவங்கள் உள்ளன. இங்குள்ள அதிரண மண்டபத்தின் கருவறையிலும் மண்டபச் சுவரிலும் சோமாஸ்க்கந்தர் சிற்பங்களும், தென்புறமுள்ள பாறையில் கொற்றவை மகிஷாசுரனுடன் பேரிடும் காட்சியும் காணப்படுகின்றன.
கட்டடக் கோயில் சிற்பவகைகளும் இக்காலத்தில் வளர்ச்சி பெற்றிருந்தன என்பதற்கேதுவாக மாமல்லபுரக் கடற்கரையில் உள்ள மூன்று கோயில்களுள் கிழக்கு நோக்கியுள்ள கோயிற் கருவறையில் இலிங்கமும் சோமஸ்கந்தர் வடிவமும் உள்ளன. உட்சுவரில் திருமால், இலக்குமி, நான்முகன், சரஸ்வதி ஆகிய வடிவங்கள் காணப்படுகின்றன. கருவறை வெளிச்சுவர்களில் திரிபுராந்தகள், நரசிம்மன் ஆகிய வடிவங்களும் இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 164 Sசோதிலிங்கம்

உள்ளன. மேற்குநோக்கியுள்ள கோயிற் கருவறையில் இலிங்கமும், சோமஸ்கந்த வடிவமும், வெளிச்சுவர்களில் ஒற்றைக்கால் மூர்த்தியும், நாகராசர் சிற்பமும் உள்ளன. நடுவிலுள்ள கோயிலில் பள்ளி கொண்ட பெருமாளின் சிற்பம் காணப்படுகின்றது. கருவறையின் வெளிச் சுவர்களில் கஜேந்திர மோட்சம், காளியநர்த்தனம், குதிரை, அரக்கனை வதைக்கும் கண்ணன் ஆகிய சிற்பங்கள் அமைந்துள்ளன. இவற்றிலும் மேலாக கைலாசநாதர் கோயிலின் சுற்றுப்புறத்திலே மதிலையொட்டிக் கட்டப்பட்ட ஐம்பத்தெட்டுச் சிறுகோயில் பலவற்றிலும் சிவனது அட்ட வீரச் செயல்களைக் குறிக்கும் திருவுருவங்கள் உள்ளன. இவை எல்லாம் பல்லவர் காலச் சிற்பக்கலை வரலாற்றின் சிறப்பினை அறிய ஆதாரமாக இருக்கும் அதேநேரம் கோயில்களை மையமாகக் கொண்டே உன்னதமான வளர்ச்சிப் போக்கினை இவை கண்டுகொண்டன என்பதும் நோக்கற்பாலதாகும்.
இராஜசிம்மன் தன் மனைவி ரங்கபதாகையின் அழகிற்காகவும், அவள் கற்பின் உயர்நிலையைச் சிறப்பிப்பதற்காகவும் இக்கோயிலில் சிற்பக்கலை வரலாற்றின் தனித்துவத்தை மெருகூட்டியதுடன் சிற்பிகளைக் கொண்டு சிவபுராணங்களை நுணுகி ஆராய்ந்து புராணங்களை அடிப்படையாகக்கொண்டு சிற்பங்களைத் தோற்றுவித்தான். கோயிலுள்ள சிற்பங்களின் மேல் வண்ணம் தீட்டினான். இவன் கையாண்ட சிற்பச் செதுக்கு முறையாலும் காறைப் பூச்சுக்களாலும் கோயிலின் பல பழுது பார்ப்புக்களாலும் பல்லவர்களுடைய கலை வரலாற்றிற்குச் சிறப்பாக சிற்பக்கலை வரலாற்றுக்கு கைலாசநாதர் கோயில் ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகின்றது.
இராஜசிம்மனுக்குப் பின்னர் ஆட்சிசெலுத்திய மன்னர்களில் குறிப்பிடத்தக்கவன் ஹிரண்யவர்மனின் வழித்தோன்றலாகிய இரண்டாம் நந்திவர்மன் (731 - 96) ஆவான். இவன் காஞ்சிபுரத்தில் திருமாலுக்கு வைகுந்தப் பெருமாள் என்ற கோயிலை எடுப்பித்தான். வைகுந்தப் பெருமாள் கோயிலின் வெளிப்பக்கச் சுவரில் திருமாலின் பல்வேறு உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இங்குள்ள சிற்பங்களின் மேல் இந்துநாகரிகத்தில்துண்கலைகள் 165 Sசோதிலிங்கம்

Page 91
சுண்ணாம்புக்காறை பூசப்பட்டு இருப்பதால் சிற்பங்கள் தெளிவாகத் தெரியவில்லை. திருப்பாற்கடலைக் கடைந்து திருமால் மோகினி வடிவில் தேவர்களுக்கும் தானவர்களுக்கும் அமுதம் அளிக்கும் காட்சி அழகுறத் தீட்டப்பட்ள்ளது. இச்சிற்பத் தொகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகள் ஒன்றன்பின் ஒன்றாக அழகாகச் செதுக்கப்பட்டுள்ளன.
இருந்தபோதும் இதன்பின் ஆட்சிசெலுத்திய பல்லவ மன்னன் அபராஜிதவர்மன் (895 - 913) பதினெட்டாம் ஆட்சியாண்டில் நம்பிஅப்பி என்பவரால் திருத்தணியில் வீரட்டானேஸ்வரர் என்ற கோயில் எடுப்பிக்கப் பட்டது. இக்கோயில் கருங்கல்லால் தூங்கணை வடிவில் எடுக்கப்பட்டது. சிற்பங்கள் தனியாக எடுக்கப்பட்டன. தாய்மார் எழுவர், நான்முகன் ஆகியேரின் சிற்பத் தொகுதிகளில் உள்ள சிற்பங்கள் உலோகத் திருமேனிகள் போல் செதுக்கப்பட்டுள்ளன. உலோகத் திருமேனிகளை வளர்க்கும் திறன் சிற்பிகளைக் கவர்ந்தது. இதனால் சிற்பக்கலை வரலாறு இடைமாறும் காலத்துக்கு ஆட்படுத்தப்பட்டு அவற்றின் பேறாக பல்லவர்கால கலைப்பாணி சோழர்காலத்துக்குரியதாக மாற்றப்பட்டன. இதன் பேறாக இக்காலம் சிற்பக்கலை வரலாற்றின் வனப்பை இழக்கத் தொடங்கிய காலம் எனவும் கூறப்படுகின்றது.
திருத்தணி வீரட்டானேஸ்வரர் கோயில் சிற்பங்கள் பருத்தும், உயிரோட்டம் உள்ளதாகவும் இராஷ்டிரகூடச் சிற்பங்கள் போலிருக்கும். இங்குள்ள தாய்மார் எழுவரின் சிற்பமும் தென்முகக் கடவுளின் சிற்பமும் பிரபல்யம் வாய்ந்தவை. சிற்பங்களில் புரிநூல் இடது தோளிலிருந்து தொடங்கி வலது கைமேல் செல்லும் உதரவந்த வேலைப்பாட்டால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் சிற்பங்களில் சங்குபோன்ற கழுத்தும், முழுத்தனங்களும், வட்டவடிவத் தோள்களும் கவர்ச்சிமிக்கதாக இருக்கும் வலிமையான கன்னமும், எள்ளுப்பூ போன்ற கூரிய நுனியுடைய மூக்கும் சோழர்காலச் சிற்பத்தில் காண்பது போல் செதுக்கப்பட்டிருக்கும் சிற்பங்களில் மலர்ந்த தாமரை மலர் போன்ற சிரசுச் சக்கரமும் காதில் மகர குண்டலங்களும் இடம்பெறும் கையின் உட்புறமும் காலின் பாதங்களும் தடிப்பாக இருக்கும். இக்கோயிலிலுள்ள துவாரபாலகள் சிற்பம் நான்கு கைகள் கொண்டு விளங்குகின்றது. வலது மேற்கை காக்கும் கை,
இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 166 Sசோதிலிங்கம்

வலது கீழ்க்கை சுட்டும் முத்திரை, இடது கீழ்க்கை சுதையின் மேல் வைக்கப்பட்டது. இக்கோயிலின் தட்சிணாமூர்த்தி சிற்பமும் இடதுகாலை இருக்கையில் குத்திட்டு வலது காலைக் கீழே தொங்கவிட்டு அமர்ந்த நிலையிலுள்ளது. சூரியசிற்பம் பெருமிதத் தோற்றத்துடன் சமமான நின்ற நிலையிலுள்ளது.
திருத்தணிச் சிற்பங்கள் போன்று காவேரிப்பாக்கம், சத்தியமங்கலம் என்ற இடங்களில் பிற்காலப் பல்லவர் சிற்பங்கள் உள்ளன. சத்தியமங்கலம் சிற்பங்களுடைய கழுத்து இடை மெல்லியதாகவும் நீண்டும் இருக்கும். கால்களும், கைகளும் மிகவும் மெலிந்து காணப்படும்.
ஏறக்குறைய நானூறு ஆண்டுகால ஆட்சியில் பல்லவர்கள் உன்னதமான மனம் கவரும் அழகான சிற்பங்களைத் தோற்றுவித்துள்ளனர். அவர்களுடைய சிற்பங்களில் இடம்பெறாத கருப்பொருளே இல்லை எனலாம். மதச்சார்புள்ள சிற்பங்களையும் மதச்சார்பற்ற சிற்பங்களையும் கோயில்களில் செதுக்கியுள்ளனர். பெரும்பாலும் புராணங்களை அடிப்படையாகக் கொண்டு சிற்பங்களை எடுத்துள்ளனர். இவை இந்து மதத்தின் பொருள் பொதிந்த கருத்தை வெளிப்படுத்துவதில் தெளிவாக இல்லாமல் இருந்தாலும் அவற்றை வளம்படுத்துவதனை நோக்கமாகக் கொண்டே சைவம், வைணவம், சாக்தம் ஆகிய சமயங்களுக்கு சமவாய்ப்பு அளிக்கப்பட்டு அவற்றின் சிறப்புக்களை எடுத்துக்காட்டுவதனை இலட்சிய நோக்கமாகக் கொண்டு வளர்க்கப்பட்ட கலையே பல்லவர்கால சிற்பக்கலை ஆகும்.
VI சோழர்காலச் சிற்பக்கலை.
சோழர்காலம் சிற்பக்கலை வரலாற்றைப் பொறுத்தவரையில் உச்சமான காலமாகவே காணப்படுகின்றது. இங்கு தெய்வப் படிமம் அழகற்ற குரூரமானதாயினும் மாந்தர்க்கு அதுவே நன்று. எத்துணை அழகுவாய்ந்தாயினும் மனிதப்படிமங்கள் அவர்களுக்கு நலம் பயக்காது” என்ற சுக்கிரநீதி என்ற நூலின் கோட்பாட்டையே சோழர் கடைப்பிடித்தனர் எனலாம். அவற்றின் பேறாகத் தெய்வப்படிமங்கள், நாயன்மர், ஆழ்வார்களின் இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 167 Sசோதிலிங்கம்

Page 92
படிமங்கள், அரசர் படிமங்கள் என்பவற்றைத் தனிக்கற்சிலைகளாக வடிப்பதிலேயே அதிக ஆர்வம் காட்டினர். காலப்போக்கில் அவற்றை உலோகப் படிமங்களாக்குவதிலும் அவற்றுக்கு மேலாக அலங்கார வேலைப்பாடுகள் கொண்ட மண்டபங்களை உருவாக்குவதிலேயும் ஆர்வம் காட்டினர். அரசர் படிமங்களில் தனிப்பட்ட மாந்தர் சிலரின் சிலைககளும் யதார்த்தமானவையாய் இராது ஒரோ வகைமையுடையனவாய் அமைக்கப் பட்டுள்ன. இக்கூற்றுக்கு எடுத்துக்காட்டுக்களை கோரங்கநாதர் கோயிலில் உள்ள ஆண் ஒருவனதும் பெண்கள் இருவரதும் உருவச் சிலைகளில்
காணலாம்.
சோழமன்னர்களில் ஆரம்ப காலத்தவனாகிய விஜயாலயன் அமைத்த நிசும்பசூதனி கோயிற் கருவறையில் இருந்ததாகக் கருதப்படும் இறைவியின் சிலை உக்கிரம காளியெனும் பெயரில் இப்பொழுது உள்ளது. இவ் இறைவி கையிற் படைக்கலங்களைத் தாங்கி காலடியிலிருக்கும் அரக்கனை வதைப்பவளாகக் காட்சிதருகின்றாள். காளியாபட்டி சிவன் கோயிலில் நந்தி, தட்சணாமூர்த்தி ஆகிய வடிவங்களும் அகத்தீஸ்வரர் கோயிலில் இந்திரன், தட்சணாமூர்த்தி, திருமால், நான்முகன் ஆகிய வடிவங்களும் யாளி வரிசையும், பூதகணங்களும் காணப்படுகின்றன. கண்ணனூர் பாலசுப்பிரமணியர் கோயிலில் முருகனின் வடிவமும் அவனுடைய ஊர்தியான யானை வடிவங்களும் உள்ளன. திருக்கட்டளை சுந்தரேசுவரர் ஆலயத்தில் சிவனாரின் பற்பல வடிவங்களும் திருமால், நான்முகன், யாளி வரிசைகள் ஆகிய சிற்பங்களும் காணப்படுகின்றன. பரிவார தெய்வங்களின் கோயில்களில் சூரியன், ஏழுகன்னியர், முருகன், சேட்டைச் சந்திரன், சண்டீசர், பைரவர் ஆகிய வடிவங்களும் உள்ளன.
ஆதித்தன் காலத்துக் கோயில்களில் சிற்பத்தால் சிறப்புடையது கும்பகோணத்து நாகேச்சுவரர் ஆலயம். இங்கு இராமாயணத்து நிகழ்வுகள் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. இதனால் பிற்காலத்தில் தோன்றிய தஞ்சைப் பெருங்கோயிலைப் போல் சிறப்புடையதாகக் காணப் படுகின்றது. இங்கேயுள்ள ஆறு ஆடவர் சிற்பங்களும் நான்கு பெண்களின் இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 168 Sசோதிலிங்கம்

சிற்பங்களும் உயிர்த்துடிப்புடன் அமைக்கப்பட்டுள்ளன. கோயிலின் அடித் தளத்தில் சோழப்பாணி முறைமையின் தனித்துவம் எடுத்துக்காட்டும் வகையில் இதிகாச, புராணக் கதைகள் எடுத்து விளக்கப்பட்டுள்ளன.
நாகேஸ்வரர் கோயிலைப் போலவே சிறப்புமிக்க மற்றொரு கோயில் பூரீநிவாச நல்லூரில் உள்ள கோரங்கநாதர் கோயிலாகும். இங்குள்ள இரு பெண்களின் சிற்பங்கள் மிகவும் அழகுவாய்ந்தவை. ஆலமரத்தின் கீழ் அமர்ந்து உயர் தத்துவத்தைப் போதிக்கும் நிலையிலுள்ள தட்சணா மூர்த்தியின் வடிவம் இன்னோர் அற்புதமான படைப்பாகும். கோரங்கநாதர் கோயில் கோட்டங்களில் மட்டுமன்றி சுவர்களிலும் அதிட்டானங் களிலும் அழகிய சிற்பங்கள் காணப்படுகின்றன. அதேநேரம் கொடும்பாரூர் மூவர் கோயிலில் உள்ள திரிபுராந்தகர் சிலையும் சிவனார் சதுர தாண்டவம் ஆடும் வடிவமும் மிகவும் அழகுடையவை. பழுவேட்டரையர்கள் அமைத்த மேலைப்பழுவூர் சுந்தரேஸ்வரர் கோயிலில் உள்ள நந்திக்கு ஈடாக எந்தவொரு வடிவமும் முன்னரும் செய்யப்படவில்லை. பின்னமும் செய்யப்படவில்லை. அதேவேளை தஞ்சையிலுள்ள நந்தி அளவில் பெரியதேயொழிய இதுபோல் அழகிற் பெரிதல்ல எனக் கருத்துக் கூறுவர்
அறிஞர் நாகசாமி என்பவர்.
சோழர்காலத்தின் ஆரம்பத்தில் கற்களினாலேயே அதிக சிற்பங்கள் செய்யப்பட்டன. அதற்கேதுவாக கொடும்பாளுர், திருக்கட்டளை ஆகிய ஊர்களிலே கவரிடையே மாடங்களிலே வீணாதர தட்சணாமூர்த்தியின் சிற்பங்கள் உள்ளன. கொடும்பாளுரிலே அர்த்தநாரீச்சுரர் ஒருகையை இடபத்தில் இட்டு மறுகையில் திரிசூலம் தரித்துக் காட்சி தருகின்றார். நின்ற கோலச் சிவனும் அமர்ந்த நிலையில் சீடர் கணம் சூழ்ந்திருக்க காட்சிதரும் தட்சணாமூர்த்தியும் முறையே திருவாடியிலும், கோரங்க நல்லூரிலும் சிற்பவடிவில் விளங்குகின்றனர். புள்ளமங்கை பசுபதிக் கோயிலின் விமானம் மூன்று நிலைகளைக் கொண்டது. ஒவ்வொரு நிலையிலும் ஏராளமான சிற்பங்கள் இருக்கின்றன. புறச் சுவர்களில் இருக்கும் சிற்பங்கள் மிகவும் அழகும் கலைநயமும் மிக்கவை. சற்றுநேரம் உற்றுநோக்கிக் இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 169 SGJПkih

Page 93
கொண்டிருந்தால் இவை சுவாசிப்பது போன்றும், நகருவது போன்றும் ஒரு மயக்கத்தைத் தரும். அத்தனை இயற்கையாக உருவாக்கி நமக்கு விட்டுவிட்டுச் சென்றுள்ளார்கள். சோழர் காலத்துச் சிற்பிகள் அவர்களுடைய ஆன்ம உந்துதலோடு இயற்கையிலே அவர்களிடம் மலிந்திருந்த கலையுணர்வும் சேர்ந்துகொண்டதால்தான் இதனைச் சிறப்பாகக் கலைப்படைப்புக்களாக அவர்களால் உருவாக்க முடிந்திருக்கின்றது என்று எண்ணத் தோன்றுகிறது. கலையுள்ளம் கொண்ட எவரையும் கவரும் தன்மை வாய்ந்தவை இக்கோயிலும் இங்கிருக்கும் சிற்பங்களுமாகும்.
கோயில் முகமண்டபத் தெற்குச் சுவரில் பிள்ளையார் சிற்பம் காணப்படுகின்றது. தாமரை மலரில் அமர்ந்திருக்கும் அவருடைய தலையின் மேலே ஒரு குடை விந்திருக்கிறது.இவரைச் சுற்றியிருக்கும் பணிபுரியும் கணங்களின் சிற்பங்கள் அழகுடையவை. குறிப்பாக வாழைப் பழமும் மோதகமும் வைத்திருக்கும் இரண்டு கணங்கள் சிறப்பானவை. அவர்கள் இருவர் முகத்திலும் புன்முறுவலைக் காட்டிய சிற்பி முன்னால் இருக்கும் உருவத்தின் முகத்தில் குறும்புத் தனத்தையும் பின்னால் இருக்கும் உருவத்தின் முகத்தில் சற்று நாணத்தையும் இழையோட விட்டிருப்பது ரசிக்கத்தக்கது.
தெற்குக்கரை கருவறை மாடத்தில் தட்சணாமூர்த்தியின் சிறிய உருவம் வைக்கப்பட்டிருக்கின்றது. இது பிற்காலச் சேர்க்கை என்றும் கோயிலை அமைத்தவர்கள் வைத்த பெரிய சிற்பம் அகற்றப்பட்டுவிட்டது என்றும் செல்வி.சுர.அகிலா (திருச்சிராப்பள்ளியின் டாக்டர் மாஇராசமாணிக்கனார் வரலாற்று ஆய்வுமையத்தின் மதிப்புறு ஆய்வர்) கூறுகிறார். முன் பிரிந்த பெரிய சிற்பத்தைச் சுற்றிச் சுவரிலிருந்த புடைப்புச் சிற்பங்கள் இன்றும் காணக்கூடியதாக இருக்கின்றன. இவற்றுள் வலதுபுறம் இருக்கும் சின்னரர்கள் கலையின் வடிவங்கள். வடக்குக் கருவறைச் சுவரில் லிங்கோற்பவரின் சிற்பம் நிற்கிறது. லிங்கத்தின் மேற்பகுதியில் பிரம்மாவும் கீழ்ப்பகுதியில் விஷ்ணுவும் இருக்கிறார்கள். இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 170 Sசோதிலிங்கம்

சிவபெருமானின் உருவத்தில் அவருடைய ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகக் காற்றையும் மழையையும் சந்தித்ததால் சிதைந்து போயுள்ளது. ஆயினும் அவருடைய தலையில் ஜடாமகுடமும், பிறைநிலவும் தெளிவாக உள்ளன. இதே மாடத்தின் இருபுறமும் பிரம்மாவும் விஷ்ணுவும் சற்றுச் சிறியளவு சிற்பங்களாக நிற்கின்றனர். இவர்கள் இருவரும் அணிகலன்கள் அணிந்து பட்டாடைகள் புனைந்திருக்கிறார்கள். இருவரும் அழகிய இளவரசர்களாகச் சித்தரிக்கப்பட்டு இருக்கின்றர்கள். அதுவும் பிரம்மாவின் முகத்தில் அந்த எடுப்பான நாசியும் வளைந்த புருவங்களும் நீண்ட நயனங்களும் அவருடைய மெல்லிய உருவமும் முகமும் எழிலார்ந்தவை. முகத்தில் சாந்தம் தவழ அவர் செய்யும் புன்னகை முகம் முழுவதும் வியாபித்திருக்கின்றது. இத்தகைய இளமை ததும்பும் அழகான பிரம்மாவின் சிலையை வேறெந்தக் கோயிலிலும் காணமுடியாது என்கிறார் டாக்டர் கலைக்கோவன்.
முகமண்டபத்தில் வடக்கு மாடத்தில் துர்க்கையின் சிற்பம் இருக்கின்றது. ஓர் குடையின் கீழ் ஒரு எருமையின் தலையின் மீது நிற்கும் இந்தத் தெய்வத்திற்கு எட்டுக்கைகள், மெல்லிய நீண்ட உருவம் இடையில் மேகலையின் தலையில் மகுடமும் பிற அணிகலன்களும் ஆண்டு இடையே ஒரு பக்கம் சாய்த்தவாறு நிற்கும் இந்தச் சிற்பத்தை மிகவும் எழிலுடன் உருவாக்கி இருக்கின்றான் சிற்பி. துர்க்கையின் காலடியில் இருக்கும் ஒரு மனிதன் தன் தலையைத் தானே அறுத்துப் பலியிட முனைகின்றான். வலதுகை கழுத்தை அறுக்க இடதுகை தலைமுைடியப் பற்றியவாறு உள்ளது. முற்காலச் சோழரின் காலத்திலும் இப்படித் தன்னையே கொற்றவைக்குப் பலியிட்டுக்கொள்ளும் பழங்கால வழக்கம் நீடித்து இருக்கின்றது என்பதை இந்தச் சிற்பம் காட்டுகின்றது. இடதுபுறம் இருக்கும் மனிதன் தன் தொடையிலிருந்து தசையை அறுத்துத் துர்க்கைக்கு அர்ப்பணிப்பதைக் காணமுடிகின்றது.
முகமண்டபத்தின் கூரையில் எட்டுப்பூத கணங்கள் உட்கார்ந்து இருக்கின்றர்கள். வடக்குப் புறமிருக்கும் கணங்களின் கைகளில் வாத்தியக் கருவிகள் இருக்கின்றன. இந்தப் பூதகணங்களின் முகத்தில் தவழும் இந்துநாகரிகத்தில்துணர்கலைகள் 171 Sசோதிலிங்கம்

Page 94
புன்சிரிப்பும் குறும்புத்தனமும் கவரும் தன்மை வாய்ந்தவை. கருவறையின் வடக்குமாடத்தில் பிரம்மா எழுந்தருளியிருக்கிறார். நான்கு கைகளுடன் காணப்படுகின்றர். தலைகளில் மூன்று தான் தென்படுகின்றன. ஜடா மகுடம் தரித்து அணிகலன்கள் பூண்டிருக்கும் இவரையும் ஓர் அழகிய இளைஞனாக மெல்லிய உயரமான உடற்கட்டோடு சித்தரித்திருக்கிறான் சிற்பி. இரு முனிவர்கள் அவருடைய காலடியில் அமர்ந்திருக்கின்றார்கள்.
விமானத்தில் ஆடற்பெண்டிர், இசைக்கலைஞர்கள் ஆகியோரின் 19 சிற்பங்கள் இடம்பெற்றிருக்கின்றன. எல்லா ஆடற்பெண்களும் “ஸ்வஸ்திக” கரணத்திலேயே காணப்படுகின்றார்கள். இசைக் கலைஞர்கள் இடக்கை என்ற தாளவாத்தியத்தைப் பயன்படுத்துகின்றார்கள். ஒரு பேரழகியின் உருவம் செதுக்கப்பட்டிருக்கின்றது. இடைக்குக் கீழே ஆடை அணிந்திருக்கும் இந்தப் பெண் நிற்பதிலசுட ஓர் நளினம் தோன்றுகிறது. இதே தளத்திலிருக்கும் ஓர் இளைஞனின் உருவமும்கூட மிகவும் அழகியது. இளமையின் குறும்புத்தனம் நிறைய முகத்தில் மகிழச்சியைத் தாண்டவமாட விட்டிருக்கிறான் அந்தச் சிற்பக் கலைஞன்.
கருவறையின் அடித்தளத்தில் ஏராளமான சிறிய அளவிலான சிற்பங்களைச் செதுக்கியிருக்கின்றார்கள். சில சிற்பங்கள் ஒரு பெண் மணியின் விரல்களை விடச் சிறியவையாயினும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதை சொல்லும் படங்கள் போன்று மிக இயற்கையாய் செதுக்கப்பட்டு இருக்கின்றன. இவற்றுள் மாதொருபாகன், நரசிம்மமூர்த்தி, சிவபெருமானின் தாண்டவம், பிச்சாடனர், கங்காதரர், மகிடாசுரமர்த்தனி, கயசங்காரமூர்த்தி, காமத்தகனமூர்த்தி, வராகர் ஆகிய சிற்பங்கள் குறிப்பிடத்தக்கவை. இராமாயணத்தில் இருந்தும் பல காட்சிகள் காணப்படுகின்றன. வாலியின் இறப்பைக் குறிக்கும் காட்சியில் வாலி இறந்து கிடப்பதும் அவனைச் சுற்றிக் குரங்குக் கூட்டம் அழுது அரற்றுவதும் தாரை சோகமாக அமர்ந்து இருப்பதும் படமாக்கப்பட்டிருக்கின்றது. ஒரு சிற்பத்தில் இராமனும் சீதையும் இலட்சுமணனும் ஆற்றைக் கடக்கும்போது மூங்கில் இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 172 Sசோதிலிங்கம்

தெப்பத்தில் சீதையை வைத்து இராமனும் இலட்சுமணனும் தள்ளுவதும் காட்டப்பட்டிருக்கின்றது. மற்றொன்றில் விராடன் என்ற அசுரன் இராமனை அச்சுறுத்த முனைவதையும் சீதை அதை ஆச்சரியத் தோடு நோக்குவதையும் காணலாம். சோழநாட்டு சிற்பக்கலைஞர்களால் கல்லில் கூட மனிதரின் மனவுணர்வுகளைக் காட்டமுடியம் என்பதற்கு இந்தச் சிற்பங்கள் ஓர் எடுத்துக்காட்டாகும்.
திருநெல்வேலி மாவட்டத்தின் திருவல்லீசுவரக் கோயிலின் பஞ்ச ரதங்களிலும் விமானங்களிலும் நடராசர், கங்காதரர், வீரபத்திரர், இலிங்கோற்பவர், விஷ்ணு, காலஹரமூர்த்தி, யோக தட்சணாமூர்த்தி, சண்டேசானுக்கிரகள் முதலிய சிற்பங்கள் வெளிவரியாகக் காணப்படுகின்றன. வீரட்டானேசுரத்தில் எட்டுத் திருக்கரங்களுடன் கூடிய துர்க்கை, அவள் முன் தலையையே பலியிடும் அடியவன் ஆகியோர் காணப்படுகின்றனர். உலகபுரத்தில் விஷ்ணு, பூதேவி, குரீதேவி சமேதரராகக் காட்சிதரும் சிற்பமும் குறிப்பிடத்தக்கதேயாகும். இத்தகைய நிலைப்பட்ட இன்னும் பல சிற்பங்கள் இக்காலத்தில் உருவாக்கப்பட்டு சோழர்காலத்தின் சிற்பக் கலைத்திறன் எத்தகைய தன்மையில் வளர்ந்துபட்டுக் காணப்பட்டன என்பதனை எடுத்துக்காட்ட ஆதாரமாக இருக்கின்றன.
மேலும் கற்சிற்ப முறைமைகளுக்கு மேலாகப் பொருளாதார வளம், தொழில்நுட்பத்திறன் விருத்தி என்பன இக்காலச் சிற்பக்கலை வளர்ச்சியினை உலோகத்தாலான செப்புப் படிமங்களையும் உருவாக்கும் கலைத்திறன் வளர்ச்சிக்கு வித்திட்டுச் சென்றன. இக்காலச் சிற்பிகளின் தன்னிகரற்ற திறன் முழுவதும் உலோகத்திலான திண்ணியனவும், உட்டுளை கொண்டனவும், பாதி துளையும், பாதி திண்மையும் பொருந்தியனவுமான படிமங்கள் பல ஆக்கப்பட்டன. இவை சோனாட்டு ஆலயங்கள் பலவற்றிலும் பிரதிஷ்டை செய்யப்பட்டு அக்கால உலோகக் கலைஞரின் பேராற்றலை மெளனகாவியங்களாக இசைத்த வண்ணமேயுள்ளன. கும்பகோண நாகேச்சுரர் கோயிலின் நடராசர் மிகப் பிரமாண்டமானதும் எழில் பொருந்தியதுமாகும். தஞ்சாவூரில் எட்டுத் திருக்கரங்களோடு இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 173 Sசோதிலிங்கம்

Page 95
காளிகாதாண்டவமாடும் ஆடலழகரும், கலைமேதாவிலாசத்துக்கு எடுத்துக்காட்டனாவரே. திருவரங்ககுளத்துச் சதுரதாண்டவர் படிமமும் குறிப்பிடத்தக்கனவே. இப்படிமங்களுக்குப் பின்னணி திருவாசிகள் எதுவும் இல்லை. மற்றும் திருவெண்காட்டிற் கண்டெடுக்கப்பட்ட உமாசகிதா சிவன், கங்கைகொண்ட சோழபுரத்து இடபாரூரர், புதுக்கோட்டை அரும்பொருட் காட்சியகத்திலுள்ள சுகாசனமூர்த்தி படிமங்கள் சோழர்காலத்து படிக்கலைச் சிறப்புக்குச் சான்றாக அமைந்துள்ளன.
மேலும் சோழர்காலத்து சிற்பக்கலை வரலாறு புராணக்கதை மரபுகளின் செல்வாக்குப் பெற்று அபிவிருத்தியடைந்த காலமாக இரண்டாம் காலமான இராஜ இராஜன் காலம் தொட்டு இராஜேந்திர சோழன் காலம் வரையுள்ள காலப்பகுதியில் அமைந்த ஆலயங்கள் அதிகம் காணமுடிந்துற்ற நிலையில் அதற்கேதுவாக இராஜஇராஜ சோழனால் அமைக்கப்பட்ட தஞ்சைப் பெருங்கோயிலை நோக்குமிடத்து அவனது சைவப்பற்றும் விந்த சமய நோக்கும் இப்பெரிய கோயில் விமானத்திலும் மற்றும் பல பகுதிகளிலும் மலிந்து கிடக்கும் சைவ, வைணவ புராண சம்பந்தமான சிலைகள், சிற்பங்கள் ஆகியவற்றால் அறிவுறுத்தப்படுகின்றன. திருக் கோயிலின் நாற்புறமும் உயர்ந்த மதில்களின் மேலிருந்தும் விழுந்தும் பிறர் எடுத்துப்போனவையும் போக எஞ்சிநிற்கும் 343 நந்தி உருவங்களும் இதனையே வலியுறுத்துகின்றன. அதுமட்டுமன்றி சிற்பக்கலையின் உன்னதமான அபிவிருத்திக்குச் சான்றாக இங்கே காணப்படும் ஒரே கல்லினாலான பெரிய நந்தி பன்னிரண்டு அடி உயரமும் பத்தொன்பதரை அடி நீளமும், எட்டேகால் அடி அகலமும் உடையதாகக் காணப் படுகின்றது. இதற்கு ஏற்புடையதாக அற்புதமான பெரிய லிங்கமும் பார்ப்போரை பரவசப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இத்துடன் கோயிலின் விமானத்தின் தென்புற மதிற்பக்கத்தில் சோழர் வீரர் தம் உருவங்களும் பிள்ளையர், திருமால், பிச்சாடனர், சூலதேவர், தென்முகக் கடவுள், மார்க்கண்டேயர், நடராசர் சிலைகளும், மேற்குப்பக்கத்தில் லிங்கோற்பவர், அர்த்தநாரீஸ்வரர் சிலைகளும் வடபாகத்தில் கங்காதரர், கலியாண சுந்தரர், மகிடாசுரமர்த்தனி படிமங்களும் வனப்புடன் உள்ளன. இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 174 Sசோதிலிங்கம்

மற்றும் திருச்சுற்று மாளிகையின் தென்பாகம் தவிர மற்றைய பாகங்களில் மகாலிங்கங்கள் நாதகன்னியர் சமயகுரவர் படிமங்கள் முதலியன நிலைபெறச் செய்துள்ளமை காணலாம். கோயிலின் கருவறை, மண்டபம் ஆகியவற்றின் நுழை வாயில்களில் 12 அடி உயரமுடைய எழில்மிகு துவாரபாலகள் வடிவங்களும் உள்ளன. சூலத்தையும், வாளினையும் தாங்கிய சிவவடிவம், பத்துக்கையுடைய நடராஜ வடிவம் என்பன அற்புதமான சிற்பங்களாகும். கோயிலின் சுற்றாலைகளில் பரதநாட்டியத்தின் 108 கரணங்களுள் 81 கரணங்கள் அழகாகச் செதுக்கப்பட்டதுடன் மிகுதி செதுக்குவதற்கு இடம் ஒதுக்கி விடப்பட்டமை நிறைவேறாத ஆசையின் ஏக்கத் தொனிப்பைச் சித்தரித்துக் காட்டுகின்றது. இத்துடன் சிவனாரின் திருக் கல்யாணக் காட்சி அருச்சுனனுக்கு பாசுபதம் வழங்கும் காட்சி என்பனவும் அழகான சிற்பங்களாகக் காணப்படுகின்றன.
முதலாம் இராஜேந்திர சோழனால் அமைக்கப்பட்ட கங்கைகொண்ட சோழபுரத்தில் அழகான சிற்பங்கள் பலவுமுண்டு. கோவில் முழுவதும் விமானத்திலும் கருவறைச் சுவர்களிலும் சிற்பங்களும் தூண்களும் மிகவும் அழகுறச் செதுக்கப்பட்டு நன்கு திட்டமிடப்பட்டு உரிய இடங்களில் நிறுவப்பட்டிருக்கின்றன. இவை கோயிலுக்கு அழகு சேர்ப்பதோடு முறையான வழிபாட்டுக்கும் வழிவகுக்கின்றன. கங்கைகொண்ட சோழபுரத்துச் சிற்பங்கள் தஞ்சைக் கோயில் சிற்பங்களை விடக் கலையழகு மிக்கவை. “சோழர்காலத்துச் சிற்பிகள் அசுரர்கள் போல் கற்பாறைகளை செதுக்கத் தொடங்கி பொற்கொல்லர்கள் போன்று மிகவும் நுணுக்கமாக சிற்பங்களை முடித்து வைப்பார்கள்” என்று சொல்லுவார்கள். தமிழ் நாட்டுக் கலைஞர்களின் கரங்களில் நெக்கு விடாப் பாறைகள்கூட களிமண் போன்று வளைந்து கொடுத்திருப்பதை கங்கைகொண்ட சோழபுரத்தில் காணலாம் இந்தக் கல்வடிவங்களில் சிற்பிகளின் உயிர்மூச்சே செலுத்தப் பட்டு அந்தச் சிற்பங்கள் சுவாசிப்பது போன்ற ஒரு தோற்றத்தைத் தருகின்றன. அத்தனை தத்ரூபமாய் அந்தச் சிற்பியர் செதுக்கியிருப்பதைக் காணும்போது அந்தக் கலைஞரிடம் மிக உயர்ந்த திறமை இருந்ததை அறிய முடிகின்றது. ஒரு வகையில் அந்தத் திறமையை விட இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 175 Sசோதிலிங்கம்

Page 96
அவர்களிடம் வேறு ஏதோவொன்று இருக்க வேண்டும். இல்லையெனில் அவர்கள் மனித ஆற்றல்களில் எல்லைகளைக் கடந்து தாங்கள் படைத்தவைகளுக்கு அமரத்துவத்தையும் அறிந்திருக்க முடியுமா? கருவறையின் சுவர் முழுவதும் இப்படி உயிரோவியங்களாக 42 அழகிய சிற்பங்கள் நிற்கின்றன. அவற்றுள் கருத்தைக் கொள்ளைகொள்பவை நடராசர், சண்டேசுவர அனுக்கிரக மூர்த்தி, சரஸ்வதி ஆகிய மூன்று சிலைகளுமே. இவை காலத்தை வென்று இன்றும் அழகோடு மிளிர்கின்றன. அர்த்த மண்டபத்திற்குச் செல்லும் படிமங்களின் வலப்பக்கம் உள்ளது சண்டேசுவர அனுக்கிரக மூர்த்தியின் உருவம். இறைவன் இறைவியுடன் வீற்றிருக்க அவருடைய திருவடியின் கீழ் சண்டேசுவரர் கூப்பிய கரங்களுடன் அமர்ந்திருக்கின்றார். அவரது முடியில் மிக அன்புடன் பூச்சரத்தைச் சூடுகின்றர் இறைவன். எதிர் சுவரில் சரஸ்வதியின் திருவுருவம் வடிக்கப்பட்டுள்ளது. பத்மாசனத்தில் அமர்ந்த ஆழ்ந்த அமைதியும் புன்னகையும் கொண்ட வடிவமாக அது காட்சியளிக்கின்றது. ஆடும் ஐங்கரன், உமையொருபாகன், ஹரிகரன் ஆகிய சிற்பங்கள் மிகவும் அழகானவை. இவ் ஆலயம் பழுதுபட்ட ஆலயங்களில் ஒன்றாகும். ஆனால் சிற்பங்கள் மட்டும் அன்று செதுக்கப்பட்டது போல் இன்றும் உள்ளன. இங்குள்ள சிற்பங்கள் ஆறு வகைப்பட்டனவாகக் காணப்படும் நிலையில் விசேடமானது, (1) விசாரமுனிவர் சண்டீசப்பதம் பெற்றமை. (2) சிவபிரான் உமாசகிதராக விசார முனிவின் முடியில் கொன்றைமாலை
அணிந்தமை. (3) சண்டீசப்பதம் அளித்தமை. (4) வலதுபுறம் கணநாதர் ஆடிப்பாடி மகிழ்தல். (5) இடதுபுறம் பசுக்கள் நிற்றல். (8) தெற்குப்புறம் கலைமகளின் கவிமிகு சிற்பம்.
வெண்டாமரை சாந்தமான வடிவத்துடன் அவள் வீற்றிருக்கும் திருக்கோலம் மனதைக் கொள்ளைகொள்வதாக உள்ளது. இவை அனைத்துக்கும் சிகரம் வைத்தாற்போல் காட்சிதரும் ஆடவல்லான் இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 176 Sசோதிலிங்கம்

வடிவமும் மகோன்னதமான கலைச் சின்னங்களாகும். இத்துடன் சிவனரின் பற்பல மூர்த்தி பேதங்களும் இராவணன் கைலையைத் தூக்குதல், அருச்சுனனுக்கு பாசுபதம் கொடுத்தல், நடனமாடும் விநாயகள் காட்சிகளும் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. புராணக் கதைகளை விளக்கும் சிற்பங்கள் அர்த்தமண்டபத்தின் கிழக்குச் சுவரிலே சித்தரிக்கப் பெற்றுள்ளன. அவற்றிலொன்று மகேஸ்வரன் இராவணனின் கர்வத்தினை அடக்கும். தன்மையைக் காட்சிப்படுத்தும் வகையில் உள்ளது. சிவனை அர்ச்சிப்பதற்கு வேண்டிய 1008 தாமரை மலர்களில் ஒன்று குறையாக இருப்பதைக் கண்டு திருமால் தன் கண்களில் ஒன்றைப் பறிப்பதனையும், அதனைப் பார்த்த சிவபெருமான் விஷ்ணுவுக்கு அனுக்கிரகம் பண்ணுவதையும் மற்றொன்று உணர்த்துகின்றது. வேறொன்று பார்வதி கல்யாணம் பற்றியதாக அமைந்திருக்கின்றது. சடங்கினை நடத்தும் புரோகிதராகப் பிரமாவும், கன்னியாதான்ஞ் செய்பவராகத் திருமாலும் காணப்படுகின்றனர். கிராதர்ஜனர், மார்க்கண்டேயர், சண்டேஸ்வரர் ஆகியோரின் கதைகளை விளக்கும் சிற்பங்களும் உள்ளன.
இத்துடன் மகாமண்டபத்திலே சம்பந்தரின் சிலை மிக்க அழகோடு காணப்படுகின்றது. துர்க்கையம்மன் சிலை அற்புதமான வேலைப்பாடு கொண்டது. நவக்கிரக அமைப்பு வேறெங்கும் காணப்படாத புதுமை வாய்ந்தவை. சூரியன் தேர், அட்டதிக்குப் பாலகர், அவர்க்குமேல் நவக்கிரக அமைப்பு, நடுவண் பதுமdடம் இவை அனைத்தும் ஒரே வட்டக் கல்லில் அமைந்துள்ள காட்சி கண்டுவியக்கத்தக்கது. மகாமண்டபத்தில் உள்ள இரு அறைகளில் விமானத்தின் கலசமும் பல சிவ விக்கிரகங்களும், திருமேனிகளும் இருக்கின்றன. ஏறத்தாழ 12 அடி உயரம் உடைய கம்பீரத் தோற்றமுள்ள வாயிற்காவலர் சிலைகள் 12 உள. அவற்றுள் முதல் இருவர் சிலைகள் கோபுரச் சிதைவில் உள்ளன. எஞ்சிய பத்தும் கோயில்வாயில், அர்த்தமண்டப வாயில், உள்ளுறை வாயில், வடக்கு தெற்கு வாயில் இவற்றை அண்டி இருக்கின்றன.
இந்துநாகரிகத்தில் நுணர்கலைகள் 177 Sசோதிலிங்கம்

Page 97
விமானத்தில் நிறைந்துள்ள சிற்பங்கள் கோயிலின் வெளிப்பாகத்தில் உள்ள சிற்பந்திகள் உருவங்களும் மிக்க வனப்புற்றவை. தென்னிந்தியாவில் உள்ள சிற்பங்களிலும் அவற்றைப் பின்பற்றிச் சாவகத்திலுள்ள உயர்ந்த சிற்பங்களிலும் இவை மேம்பட்டன என்று அறிஞர் கூறுகின்றனர். தென் மேற்கில் சபாபதியும், மேற்கே லிங்கோற்பவ அருணாச்சல ஈசுவரரும், தெற்கில் விநாயகரும், வடக்கில் திருவாயிலுக்கு அணித்தாய் சண்டேசுவரர்க்கு இறைவன் அருள்புரிகின்ற அருட்கோலமாய்ச் சண்டேசுவர அருள்புரியும் மூர்த்தியும் அருமையான வேலைப்பாடு உடையன. மற்றும் கண்களும் அப்சர மாதரும், இராக்கதக் கூட்டங்களும் அமைந்துள்ளன. மாமல்ல சிற்பமுறமை பின்பற்றி இங்கு அமைந்து கொண்ட நிலையில் அவற்றையும் விஞ்சி வளம்படுத்தப் பட்டவையாகவே காணப்படுகின்றன. இக்கோயில் சோழர் காலத்துக் கோயில்களில் அழகிலும் சிற்பத்திறனிலும் ஒரு தனிநிலை எய்தியுள்ளது என்பதனை எடுத்துக் காட்டுகின்றது.
மேலும் தாராபுரத்து ஐராவேதீஸ்வரம் கோயிலில் காணப்படும் சிற்பங்கள் பல தெய்வ வரலாற்றுக் கதைகளை எடுத்துக் காட்டுவதுடன் கோயிற் சுவர்களில் பெரியபுராணத்து நாயன்மார் வரலாறுகள் கண்கவர் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. இவை நாயன்மார் வரலாறுகளை பொதுமக்கள் அறியச் செய்வதற்குரிய வழிவகை எனலாம். இங்கு காணப்படும் மிகச்சிறிய வடிவங்களில் ஒன்று புனிதவதியார் தலைகீழாக நடந்து செல்லுதலைக் குறிக்கின்றது. இத்தகைய சிற்பத்திறன்களால் ஈர்க்கப்பட்ட அப்பர் பெருமான் இக்கோயிலைப் புகழ்ந்து கூறியதாக வரலாறு கூறுவதும் கவனிக்கத்தக்கது. இக்காலக் கோயில்களில் புராண இதிகாசக் கதைகளைச் சித்தரிக்கும் காட்சிகளும் வாத்தியம் இசைப்போர், சிலம்புப்போர் செய்வோர் ஆகியோருடைய காட்சிகளும் இக்காலத்தில் பெரிதும் அமைக்கப்பட்டவை. மன்னர்களும் மக்களும் இவற்றிலே கொண்டிருந்த ஈடுபாட்டினையும் அறிய டிகின்றது. கிழக்குக் கோபுரம் கட்டப்பட்டபோது அதன் நான்கு புறமும பொருத்தமான சிலைகளை வைத்திருக்கின்றார்கள். அந்தச் சிலைகள் இப்போது இல்லை. அந்தச் இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 178 Sசோதிலிங்கம்

சிலைகள் வைக்கப்பட்ட இடத்தில் அவற்றின் பெயர்கள் மட்டும் காணப்படுகின்றன. மொத்தமாக 36 சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. கோயிலின் ஏனைய பகுதிகளில் எஞ்சியிருக்கும் சிலைகள் சோழர்காலத்துச் சிற்பியரின் திறமைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றன. திருச்சுற்றின் வடக்குப் பகுதிகளில் ஒரே உடலில் ஒரு யாளியும் யானையும் ஒன்றை யொன்று கவ்வும் தோற்றத்தில் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அதே போன்று தென்மேற்கில் கலைக்கூத்தாடும் பெண்களின் வடிவங்களைக் காணலாம். ஒரே உருவத்தில் நான்கு பெண்களின் வடிவங்கள் மிகவும் நேர்த்தியாக இணைந்திருக்கின்றன. ஆடும் பெண்களின் சிற்பங்களும் இங்கு நிறைய இருக்கின்றன. அதே போன்று ஒரு கையில் ஒரு பாத்திரமும் மறுகையில் தாமரையும் ஏந்திப் புன்முறுவலுடன் நிற்கும் அன்னபூரணியின் சிலை எல்லோரையும் ஈர்க்கும் தன்மை வாய்ந்தது. இவளை விஷ்ணுமாய (வைஷ்ணவி) என்றும் தேவர்களுக்கு அமுதம் அளித்தவள் இவளே என்றும் கூறுகின்றார்கள். கோவிலின் மண்டபத்து முகப்பில் மூன்று தலைகள் எட்டுக் கைகளுடன் மாதொரு பாகனின் சிற்பம் நிற்கிறது. இதுபோன்ற சிலையை வேறெங்கும் காணமுடியாது என்கிறார்கள்.
மூன்றாம் காலகட்டமான குலோத்துங்க சோழனுக்குப் பிற்பட்ட கால வரலாற்றிலே கோயில்களில் கோபுரங்கள் சிறப்பிடம் பெற்றமையின் பேறாக கோபுரங்களின் கீழ்ப் பகுதியில் அழகிய சிற்பங்கள் வடிக்கப்பட்டன. இவ்வகையில் இரண்டாம் இராஜராஜன் அமைத்த இராஜ இராஜேஸ்வரம் கோயிலில் பெரியபுராணக் காட்சிகள் அற்புதமாக உள்ளன. திரிபுராந்தகள் கஜசம்கார மூர்த்தி, தாருகவனத்துப் பெண்களை மயக்கிச் செல்லும் கங்காளதேவன் என்பன அழகுமிக்கவை. பெண்ணொரு பாகர் சிற்பம் மூன்று தலைகளுடனும் எட்டுத் திருக்கைகளுடனும் விளங்குகின்றது. இது மகாமயாவாகிய பராசக்தியைக் குறிக்கும். 12 ஆம் நூற்றாண்டுப் பகுதியில் சக்தி வழிபாடு சிறப்புற்ற காரணத்தால் இத்தகைய சிற்பங்கள் தோன்றலாயின. இரணியனை வதைத்த நரசிம்மரை அடக்குவதற்காக சிவன் சரபமூர்த்தியாக வடிவமெடுத்த காட்சி முதன்முதலாக இங்கேதான் காணப்படுகின்றது. இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 179 Sசோதிலிங்கம்

Page 98
மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் திரிபுவனத்தில் கட்டப்பட்ட கம்பஹரேஸ்வரர் கோயிலில் அழகிய சிற்பங்கள் அமைக்கப் பட்டன. அவற்றிலே நாட்டியமாடும் நங்கையர், இசைக்கருவிகளை இசைப்பேர், யாளி வரிசைகள், இராமாயணக் காட்சிகள் என்பன அழகாகக் காணப்படுகின்றன. மகாமண்டபத்தை நாயர் மண்டபம் என்று அழைக்கிறார்கள். இதன் அடித்தளம் முழுவதும் அழகிய சிற்பங்கள், நடமாடும் பெண்கள், போர்வீரர்கள், இராமாயணக் காட்சிகள் என ஒரு சிற்பக் களஞ்சியமே படைக்கப்பட்டிருக்கின்றது. மண்டபத்தின் முகப்பில் உள்ள தூண்களை யாளிகள் தாங்கி நிற்கின்றன. கூரையில் தாமரை மொட்டுக்களை மிகவும் கவினுறப் பொறித்து இருக்கின்றார்கள். அலங்கார மண்டபம் சக்கரங்களுடன் கூடிய தேர்வடிவில் உள்ளது. அதனை இரு யானைகள் இழுத்துச் செல்வது போன்றும் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கும் மேலாக அலங்கார வேலைப்பாடுகள் கொண்ட தான அலங்கார மண்டபம், கல்யாண மண்டபம் என்பன கட்டப்பட்டதுடன் அவற்றிலே புராணக் கதைகளை விளக்கும் சிற்பங்களும் உருவாக்கப் பட்டன. இவை அக்காலத்தில் உருவாக்கப்பட்ட சிற்பக்கலை வகைத் தன்மையை நிறைவு செய்வதற்கேதுவாக அமைந்தன.
VI. பல்லவ சோழர்காலச் சிற்பக்கலையின் மொதவான
நோக்கு. பல்லவ சோழ மன்னர்களில் சமய வரலாற்று ஈடுபாட்டுக்கேற்ற முறையில் சிற்பக்கலை பரிணாம வளர்ச்சிப் போக்கில் காலத்தின் முதிர்வுக்கேற்ப அமைந்து காணப்பட்ட நிலையில் பல்லவர் காலக் கோயில்களின் கருவறையில் சோமஸ்கந்தர் சிலை நிறுவப்பட்டது. சோழர் காலத்தில் சோமஸ்கந்தர் உலோகத் திருமேனி உற்சவ மூர்த்தியால் பயன்படுத்தப்பட்டது. அரசர், அரசியர் சிலைகளைத் தேவகோட்டங்களில் அமைக்கும் வழக்கமும் இக்காலத்தெழுந்தது. பல்லவர் காலத் தேவ கோட்டங்களில் உள்ள சிற்பங்கள் பிரித்தெடுக்க முடியாதவாறு செதுக்கப் பட்டன. ஆனால் சோழர்காலச் சிற்பங்களோ தனியாகச் செய்யப்பட்டு பொருத்தப்பட்டுள்ளன. முற்காலச் சோழர் காலச் சிற்பங்களிலும் உலோகத் இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 18O Sசோதிலிங்கம்

திருமேனிகளிலும் கருணையையும் மென்மைத் தன்மையையும் காண முடிகின்றது. ஆனால் பிற்பட்ட காலத் தன்மையில் அத்தகைய தன்மை காணப்படவில்லை. அத்துடன் துவாரபாலகர் சிற்ப அமைப்பு முறை பல்லவர் காலத்தில் அறிமுகம் செய்யப்பட்டபோதும் அவற்றின் அபரிவிதமான வளர்ச்சிப் போக்கு அது அதிகமாக இடம்பெறும் தன்மைகள் எல்லாம் சோழர்காலத்தில் காணப்பட்டன. இது மட்டுமன்றி பல்லவர்கால சிற்பக்கலை கற்களினால் அமைந்து காணப்பட, சோழர்காலம் கற்களினாலும், பஞ்ச லோகத்தினாலும் அளவில் பெரியனவாக பிரமாண்டமான முறமையில் அமைந்து ஏனைய காலத்தன்மைகளுக்கு என்றுமே எடுத்துக் காட்டுக்களாக அமைந்த காலம் சோழர்காலச் சிற்பக்கலை வரலாற்றுக் காலமாகும்.
VI. பாண்டியர் காலச் சிற்பக்கலை.
பாண்டியர்கால வரலாறு பல்லவ மன்னர்களுடனான காலத்தில் வளம்படுத்தப்பட்ட நிலையில் சிறப்புக்குரிய காலமாக கிபி 10 - 14 வரை கொள்ளப்பட்ட நிலையில் இக்காலத்தில் சிற்பக்கலை வரலாறு பல்லவ மன்னர்களுக்கு ஈடான, இணையான முறைமையில் வளம்படுத்தப்பட்ட நிலையில் அவற்றுக்கும் மேலாக அதிக கோயில்கள் உருவாக்கி அவற்றில் எல்லாம் ஏராளமான சிற்பங்கள் செதுக்கியிருந்தனர். இதற்கேதுவாக பிள்ளையார்பட்டியிலே மூன்று சிற்பங்கள் உள்ளன. இதிலொன்று துதிக்கையை வலமாக மடித்து தொந்திக் கணபதியாக அமர்ந்துள்ள கணேசர் வடிவம் இன்னொன்று இடைவரையும் வெறும் தூணாகவும் மேற்பகுதி மட்டும் உடலாகக் காணப்படும் இலிங்கோற்பவர். மற்றொன்று ஹரிகரனுடைய வடிவம் என்பனாகும்.
திருமெய்யத்தில் இரண்டு குடவரைக் கோயில்கள் உண்டு. அதிலொன்று சிவனுக்கு நிலத்திலிருந்து முகட்டை முட்டும் வண்ணம் அமைக்கப்பட்ட இலிங்கோற்பவர் வடிவம் காணப்படுகின்றது. திருமால் கோயிலில் பரந்தாமன் பாம்பின் மீது பள்ளி கொள்ளும் தன்மை சந்திர சூரியர் வடிவங்கள், தும்புருநாதர், யாழ்வீணை என்பவற்றை இசைக்கும் இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 181 Sசோதிலிங்கம்

Page 99
காட்சியும் அற்புதமாகச் செதுக்கப்பட்டுள்ளன. திருமணபுரக் குடவரைக் கோயிலில் கருவறையின் நுழைவாயிலில் துவாரபாலகள் சிற்பங்கள் உள்ளன. இச்சிற்பங்களில் காணப்படும் கழுத்தணிகளும் மிகவும் அழகாகப் பல்லவர் காலச் சிற்பங்களில் உள்ளன போன்று காணப்படுகின்றன. கருவறைக்கு அடுத்துள்ள முகமண்டபத்தின் சுவர்களில் பிள்ளையர், திருமால், நடேசர், நான்முகன் ஆகியோருடைய வடிவங்கள் காணப்படுகின்றன.
திருப்பரங்குன்றத்திலும் ஆனைமலையிலும் முற்காலப் பாண்டியர் குடவரைக் கோயில்களை அமைத்தனர். திருப்பரங்குன்றத்து குடவரையின் பிற்பகுதியில் மூன்று கருவறைகளும் பக்கச் சுவர்களை அடுத்து இரு கருவறைகளும் உள. இவற்றில் இலிங்கம், திருமால், கொற்றவை, முருகன், விநாயகள் ஆகிய வடிவங்கள் காணப்படுகின்றன. இலிங்கமுள்ள கருவறையில் சோமஸ்கந்த வடிவமுள்ளது. இங்கே திருப்பணி என்னும் பெயரில் பழைய சிற்பங்கள் மீது கதை பூசிக் கெடுத்துவிட்டனர். எனினும் எஞ்சியுள்ள கருடனின் உருவமும் கங்காதரர் உருவமும் நன்றாகவே உள்ளன. பக்கச் சுவரிலே திருநடனம் புரியும் சிவனாரின் சிற்பமும் அதனை அன்னை சிவகாமியும் கணங்களும் பார்த்து மகிழும் காட்சியும் வாணன் குடமுழவு இசைக்க அப்ப்னுடன் சேர்ந்து ஆடும் அன்னையர் எழுவரின் காட்சியும் மிகவும் அழகாக உள்ளன என நாகசாமி எனும் அறிஞர் கருத்துக் கூறுவர்.
பாண்டியர்கள் அமைத்த ஒரேயொரு கற்கோயில் எனும் பெருமையிலே கழுகுமலையிலே உள்ள வெட்டுவான் கோயிலும் ஒன்று. இங்கு அற்புதமான சிற்பங்கள் உண்டு. பாம்பைப் பிடித்திருக்கும் பழமன் வடிவம் மிக அழகானது. இக்கோயிலில் இரண்டு தளங்கள் உள்ளன. முதலாவது தளத்திலுள்ள கோட்டங்களில் தட்சிணாமூர்த்தி, திருமால், வியாபரணசிவன், தட்சிணாமூர்த்தி, யோக நரசிம்மர், தாமரை மலர் மீது அமர்ந்துள்ள நான்முகன் ஆகிய சிற்பங்களும் உள்ளன. இவற்றினை விட நான்கு மூலைகளிலும் நான்கு நந்தி வடிவங்களும் செதுக்கப் பட்டுள்ளன. இவை அக்கால சிற்பக்கலை வளர்ச்சியின் திறனுக்கு எடுத்துக்காட்டாகவே அமைந்துள்ளன. இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 182 Sசோதிலிங்கம்

பாண்டியர்கள் திறந்தவெளியில் உள்ள பாறைகளிலும் முகப்புக்களைச் செதுக்கி அழகிய சிற்பங்கள் அமைத்திருந்தனர். அவற்றில் கழுகு மலையில் நின்ற கோலத்திலும், இருந்த கோலத்திலும் உள்ள தீர்த்தங்கரர்களுடைய இயக்கர், இயக்கியவர் வடிவங்களும் காணப்படுகின்றன. இவற்றுள் பர்சுவநாத தீர்த்தங்கர் வடிவமும் பத்மாவதி வடிவமும் குறிப்பிடத்தக்கன. மதுரைக்கு அண்மையிலுள்ள பேச்சிப் பள்ளம் என்னுமிடத்தில் பாகுபல், மகாவீரர் பார்சுவநாதர் முதலிய தீர்த்தங்கரருடைய சிற்பங்கள் உள்ளன. மேற்படி சிற்பங்களை நிறுவியவர் களின் பெயர்களும் இங்கே பொறிக்கப்பட்டுள்ளன. மேலும் மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் சுந்தரரேசப் பெருமான் சந்நிதியில் ஏழுமாதர் சிற்பங்கள் உள்ளன. கீழ்மத்துரில் உள்ள பூரீகண்டேஸ்வரர் கோயிலில் திருமால், கொற்றவை, வாயிற்காவலர், ஏழுமாதர், வீரபத்திரர், பிள்ளையர், தட்சிணாமூர்த்தி ஆகிய சிற்பங்கள் காணப்படுகின்றன. திருச்சுழியில் உள்ள சிவன் கோயிலில் அழகுமிக்க திருமகள், நிலமகள், திருமால் ஆகிய வடிவங்கள் உள்ளன. இங்குள்ள தேவியர் திருவுருவங்கள் ஆபரணங்களுடன் அழகாகத் தோற்றமளிக்கின்றன. திருப்புத்துர் திருத்தணி நாதர் கோயிலில் தட்சிணாமூர்த்தி, நந்தியோகநரசிம்மர், வைகுண்டநாதர், நான்முகன், கண்ணன், சிவபூஜை செய்யும் வாலி ஆகிய சிற்ப வடிவங்களும் காணப்படுகின்றன. இவையெல்லாம் பெரும்பாலும் பல்லவர், சோழர் காலத்திற்கீடான காலகட்டங்களில் உருவாக்கப்பட்டவை என்பதும் கவனிக்கத்தக்கது.
பாண்டிய மன்னர்கள் பெரும்பாலான கோயில்களைக் கட்டியதுடன் சுற்றுமதில்கள், கோபுரங்கள், மண்டபங்கள் என்பனவற்றை புனரமைப்புச் செய்த நிலையில் இவற்றிலெல்லாம் புதிய மாறுதல்களுடன் விரிவுகள் ஏற்படுத்தப்பட்டு அங்கெல்லாம் எண்ணிறைந்த சிற்பங்களை வடித்துப் பொருத்திக் கொண்டனர். அவ்வகையில் நாங்குநேரி சிவன் கோயிலில் ஏழுமாதர் தத்தம் ஊர்திகளில் அமர்ந்த கோலத்தில் உள்ளனர். இங்கேயுள்ள தட்சிணாமூர்த்தியின் சடாமண்டலம் அழகாகக் காட்சி த ன்றதுர் அப்பா சமுத்திரத்திலுள்ள திருவாலிஸ்வர் கேழலரும் நட் மிடும் இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 183 s Sysical ho

Page 100
நடராஜர் வடிவமும் கங்காதரர் சிற்பமும் சண்டேசுரருக்கு அருள்புரியும் மூர்த்தியின் சிற்பமும் மிக்க எழிலானவை. இம் மூன்று சிற்பங்களும் கங்கைகொண்ட சோழபுரக் கோயிலிலுள்ள சிற்பங்களை ஒத்தனவென அறிஞர்ப் பெருமக்கள் கருத்துக் கூறுவர். இங்குள்ள தட்சணாமூர்த்தி திருமால், நான்முகன், யோகநரசிம்மர், வீரபத்திரர், கங்காதரர், இலிங்கோற்பவர் ஆகிய சிற்பங்களும் இக்கால வளர்ச்சிப் படிமுறைத்திறனை எடுத்துக்காட்ட ஆதாரமாகின்றன.
மேலும் திருக்குறுங்குடித் திருமால் கோயிலின் இரண்டாவது கோபுரமானது கலைவனப்புடன் கட்டப்பட்டது. இதன் அடிப்பகுதியில் வைஷ்ணவ புராண இதிகாசக் கதைகளை விளக்கும் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. கோபியர் ஆடைகளை கண்ணன் கவர்தல், கோவர்த்தன கிரியைக் குடையாகப் பிடித்தல், இராமன் சீதையுடன் முடிசூடல், கோபியர் புடைசூழ கண்ணன் வேய்ங்குழல் ஊதுதல் ஆகிய காட்சிகள் அழகான சிற்பங்களாகக் காட்சிதருகின்றன. திருக்கோட்டியூரில் சிவனுக்கும், திருமாலுக்கும் ஒரே இடத்தில் கோயில்கள் காணப்படுகின்றன. சிவன் கோயில் மண்டபத்தில் அழகிய முருகன் வடிவம் நான்கு கைகளுடன் உள்ளது. சனகாதி முனிவர்கள் வடிவமும் பிள்ளையர் வடிவமும், வடக்கு வாயிலின் இருபுறமும் ஆறடி உயரமுள்ள நரசிம்மர் சிற்பங்களும் காணப்படுகின்றன. நரசிம்ம வடிவங்கள் இரணியனை வதை செய்யும் கோலத்தில் அமைக்கப்பட்டுள்ளன. குமரிமாவட்டத்திலுள்ள அகத்தியர் கோயிலில் தட்சணாமூர்த்தி, யோகநரசிம்மர், நான்முகன் ஆகிய வடிவங்கள் உள்ளன. இக்காலத்துச் சிற்பக்கலையின் உன்னத வெளிப்பாடு கோயில்களில் அமைக்கப்பட்ட இசைக்கற்றுண்கள் தட்டும் பொழுது ஸ்வர பேதங்களை ஒலித்துக் காட்டும் தன்மை சிற்பக்கலையின் வியத்தகு சாதனையாகவே அமைந்து காணப்படுகின்றன.
IX விஜயநகர் காலத்தச் சிற்பக்கலை.
விஜயநகரர் காலத்தில் தென்னிந்தியக்கலை ஒரு பூரணத்துவம் பெற்றதுடன் கலப்பற்ற சுதந்திரமான முறையில் தன்னைக் காட்டிக் கொள்வதற்கேதுவாக வளர்ந்த கலை சிற்பக்கலையாகும். இக்காலத்தில் இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 184 Sசோதிலிங்கம்

எழுந்த செறிந்த கற்றுாண்கள்களால் கூடிய மண்டபங்கள் அவற்றில் உருவாக்கப்பட்டிருந்த சிற்பங்கள் இக்காலத்தினைக் கலைக்களஞ்சியமாகப் போற்றுவதற்கு வழிகாட்டியதுடன் தன்னிகரற்ற முறையில் உருவாக்கப்பட்ட நிர்மாணச் சிற்ப முறைமைகள் இக்காலத்தைத் தனித்துவமிக்க காலமாக எடுத்துக் காட்டியது.
அவ்வகையில் காஞ்சி வரதராசப் பெருமாள் கோயிலில் உள்ள கல்யாண மண்டபத்தில் வரிசை வரிசையாக ஒற்றைக் கல்லாலான தூண்கள் காணப்படுகின்றன. முன்னங் கால்களைத் தூக்கிய வண்ணம் வீரர்களைத் தாங்கி நிற்கும் குதிரைகளும், யாளிகளும் அழகான சிற்பங்களாகும். குதிரை, யாளி என்பவற்றின் மீதுள்ள வீரர்கள் படைக் கலங்களைத் தாங்கிய வண்ணம் போர்புரியும் கோலத்தில் உள்ளனர். அவர்கள் அணிந்துள்ள ஆடைகள், அணிகலன்கள், கவசம் என்பனவும் அற்புதமாகச் செதுக்கப்பட்டுள்ளன. இம்மண்டபத்தின் தெற்குப்புறத்தில் கரும்புவில் மலர்க்கணை என்பவற்றுடன் காமனும், கிளியூர்தி மீது இரதியும் காணப்படுகின்றனர். ஏனைய இடங்களில் தூண்கள் தோறும் விஷ்ணுவின் தசாவதாரக் காட்சிகளும், கண்ணனது பல்வகை லீலைகளும், திருமாலின் நின்ற கோலமும், இராமாயணக் காட்சிகளும் அழகாகச் செதுக்கப்பட்டுள்ளன. சில தூண்களில் நரசிம்மர் இரணியினனுடன் போர் செய்து அவனுடைய குடரினைப் பிடுங்கும் காட்சியும், கண்ணன் கோபியரது துகில்களைக் கவரும் காட்சியும், காளிங்க நடனமும், கோவர்த்தன கிரியை குடையாகப் பிடிக்கும் காட்சியும், கஜேந்திர மோட்சமும் எழிலுறு வண்ணம் செதுக்கப்பட்டுள்ளன.
மண்டபத்தின் நடுவிலுள்ள தூண்களில் அழகிய நங்கையர் சிற்பங்களும் இம்மங்கையரில் மயங்கிய முனிவர் வடிவங்களும் காணப்படுகின்றன. இம்மங்கையர் ஒடுங்கிய இடையும் திரண்ட மார்பகங்களும் கொண்டு எழிலுடன் காட்சி தருகின்றனர். கல்யாண மண்டபத்தின் நடுமேடையை கூர்மம் ஒன்று தாங்கி நிற்கும் நிலையில் இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 185 Sசோதிலிங்கம்

Page 101
அமைக்கப்பட்டுள்ளது. இங்கே புராண, இதிகாசக் கதைகளை விளக்கும் சிற்பங்கள் உள்ளன. ஆண், பெண் உடலுறவு கொள்ளும் கோலத்தில் உள்ள சில சிற்பங்களும் செதுக்கப்பட்டுள்ளன.
வேலூர் ஜலகண்டேசுவரர் கோயில் கல்யாண மண்டபத்திலும் குதிரை வீரர்கள் படைக்கலங்களுடன் காணப்படுகின்றனர். யாளி மீது கண்ணன் அமர்ந்துள்ள காட்சிகளும் சைவபுராணக் கருத்துக்களை விளக்கும் சிற்பங்களும் உள்ளன. பூணூரீரங்கத்திலுள்ள குதிரை மண்டபத்தில் கோபத்துடன் முன்னங் கால்களைத் தூக்கிப் பாயும் குதிரைகளின் வரிசையிலுள்ளது. இக்குதிரைகளைக் காண்போர் கல்லாலானவை என எண்ணார் உருக்கிலானவை என்றே எண்ணுவர். அவ்வளவு நுட்பமாக இவை செதுக்கப்பட்டுள்ளன.
இக்காலச் சிற்பங்கள் பெருமளவு தெய்வ வடிவங்கள். கூர்மையான மூக்கையும், சிறிது பெருத்த விழிகளையும் விசாலமான புருவங்களையும் கொண்டிருக்கும் ஆடவர், பெண்டிர் வடிவங்கள் நீண்டு தடித்த உடலினைப் பெற்றிருக்கும் ஆடைகள், மடிப்புக்களைக் கொண்டனவாகவும் கோடுகள் பூவேலைப்பாடுகள் முதலியனவற்றை உடையனவாகவும் உள்ளன. சோழர்கால சிற்பங்களை விட இவை அழகிய வேலைப்பாடுகள் கொண்டனவே. இங்கு படைவீரர் வரிசைகளும் யாளி, யானை வரிசைகளும் தசாவதாரக் காட்சிகளும், இதிகாச, புராணக் காட்சிகளும் சிற்பங்களின் பொதுவான சிறப்பம்சங்களாகவே அமைந்து காணப்பட்டன.
அதுமட்டுமன்றி இக்காலத்தில்தான் முதன்முதலாக பன்னிரு ராசிகளும் சிற்பங்களில் எடுக்கப்பட்டன. இராமசாமி கோயில் புடைப்புச் சிற்பங்கள், உட் சுவர்களில் இராமாயணம், கிருஷ்ணன் லீலைகள் ஊடாக எடுத்துக் காட்டப்பட்டன. பொதுவாக இக்காலத்தில் அமைக்கப்பட்ட கல்யாண மண்டபங்களில் செதுக்கப்பட்ட சிற்பங்கள்
காண்போரை வியப்பிலாழ்த்தும் தன்மை கொண்டனவாகவே அமைந்து
இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 186 Sசோதிலிங்கம்

காணப்பட்டன என சிற்பக்கலைஞர் லோங்ஹேர்சத் கூறியுள்ளமையும் இக்காலச் சிற்பக்கலை வளர்ச்சிப் போக்கை முழுமையாக அறிந்து கொள்ளக் காரணமாகின்றது.
X நாயக்கர் காலச் சிற்பக்கலை.
நாயக்கர்கால வரலாற்றில் மன்னர்கள் ஆர்வத்துடன் கோயிலின் கோபுரங்கள், மண்டங்கள் அவற்றுக்குரிய தூண்கள் அமைப்பித்ததுடன் அவற்றிலே நூதனமான சிற்பவேலைப்பாட்டுத் திறன்களையும் எடுத்துக் காட்டத் தவறவில்லை. அவ்வகையில் கோயிற் சிற்பங்கள் பல திறத்தனவாகக் காணப்பட்டன. இந்நிலையில் கோவைப் பேரூர்ப்பட்டில் பெருமான் கோயிலில் அழகிய தூண்கள் அவற்றிலே செதுக்கப்பட்ட யானைகள், யாளிகள், போர்வீரர்கள், யானையை வதம் புரியும் சிவன், அவர் யானையின் பிடரியில் நடனமிடல், பத்துக் கைகளையுடைய அக்கினி, தக்கனைத் தண்டிக்கும் வீரபத்திரர், நடனமிடும் விநாயகர், அமர்ந்த கோலத்தில் ஆறுமுகன் முதலாகவுள்ள சிற்பங்கள் கலைத்திறன் பொருந்தியவை. தாரமங்கலம், கைலாசநாதர் கோயிலில் விநாயகர், பிச்சாடனர், மோகினி, பதினாறு திருக்கைகளுடன் ஊர்த்துவ தாண்டவமாடும் நடராஜ வடிவம் மிகவும் அற்புதமானது. இவற்றுடன் இராமன், வாலி, சுக்கிரீவன் வடிவங்களும் சிற்பத்திறனுக்கு எடுத்துக் காட்டானவையே. ஆயிரங்கால் மண்டபத்தில் திரிபுராந்தகள், குறவன், குறத்தி, காளத்திநாதர் ஆகியோரின் சிற்ப வடிவங்கள் இரசிக்கக்கூடியனவாக அமைந்துள்ளன.
மேலும் மதுரைச் சொக்கநாதர் கோயிலிலும், மீனாட்சியம்மன் கோயிலிலும் உள்ள மண்டபங்களில் ஏராளமான சிற்பங்கள் காணப்படுகின்றன. ஊர்த்துவதாண்டவர், உக்கிரத்துடன் ஆடும் காளி, அக்கினி வீரபத்திரர் ஆகிய சிற்பங்கள் மிக அழகானவை. ஆயிரங்கால் மண்டபத்தேயுள்ள யாழிசைக்கும் பாடினி அழகுமிக்கது. காமன்பேடு வடிவிலும், அருச்சுனன் பெண் வடிவிலும் காணப்படுகின்றனர். பிச்சாடனர் மோகினி வடிவங்கள் காம உணர்ச்சியைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளன. மண்டபத்தின்
இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 187 Sசோதிலிங்கம்

Page 102
புறத்தே காலாந்தகள், திரிபுரசங்காரமூர்த்தி, குறவன், குறத்தி, கண்ணப்பனுக்கு அருளிய மூர்த்தி ஆகிய வடிவங்கள் முகத்தின் அமைதியாலும் உடலின் வளைவுகளாலும் அணிகலன்களாலும் அனைவரையும் கவர்கின்றன.
சுந்தரேஸ்வரப் பெருமான் கோயிலுக்கு முன் நான்கு பெரிய சிற்பங்கள் உள்ளன. அவற்றுள் இரண்டு வீரபத்திரர் வடிவங்கள் மூன்றாவது ஊர்த்துவ தாண்டவர் வடிவம், நான்காவது காளியின் வடிவம். இவை பெரிய அளவில் செய்யப்பட்டவை. மிக அழகானவை ஆகும். அப்பனின் கீழ் நாரதர் தாளமிசைக்க திருமால் மத்தளம் வாசிக்க தும்புரு யாழ்மீட்க, காளி நடனமிடக் காணும் காட்சி கலைநுணுக்கம் மிக்கது. இக்காலத்தில் பெரிய கற்களைத் தேர்ந்தெடுத்து அழகிய தூண்களை அமைத்து அத்துடன் சிற்பங்களையும் செதுக்கிய சிற்பிகளின் திறமை வியக்காமல் இருக்க முடியாது. இதற்கேதுவாக திருவரங்கம் வேணுகோபாலன் கோயில் தெற்குப்புறச் சுவரிலே கற்பனைப் பெண்ணொருத்தி நிற்கும் நிலை கல்லிலே செதுக்கப்பட்டுள்ளது.
தாடிக்கொம்பு என்னுமிடத்திலுள்ள திருமால் கோயிலில் வனப்பு மிக்க திரிவிக்கிரமர், சக்கரத்தாழ்வார், நரசிம்மர், காமக்கடவுள், கருடவாகனர் ஆகிய வடிவங்கள் உண்டு. அழகர் கோயில் மண்டபத் தூண்களில் நிலமகளைத் தாங்கி நிற்கும் வராகமூர்த்தி, இரணியனை வதைக்கும் நரசிம்மர், ஓங்கி உலகளந்த உத்தமன், இளவரசன் ஒருவனை, துரத்திச் செல்லும் மலைநாட்டு மங்கை ஆகிய வடிவங்கள் மிகவும் அழகாக அமைக்கப்பட்டுள்ளன. திருநெல்வேலிக்கு அருகில் உள்ள கிருஷ்ணபுரக் கோயில் மண்டபத்தில் வேட்டுவவீரன் மங்கை ஒருத்தியை தோழில் தூக்கிச் செல்லும் காட்சியும் வீரர்களின் சிற்பங்களும் வீரபத்திரர் படைக்கலங்களுடன் நிற்கும் காட்சியும், அன்னப்பெடை மீது அமர்ந்துள்ள ரதிதேவியும், கர்ணன், அருச்சுனன் போர்க்காட்சியும் காணப்படுகின்றன. இச்சிற்பங்கள் நுண்ணிய வேலைப்பாடுடைய ஆடை அணிகலன்களுடன் அமைக்கப்பட்டுள்ளன எனக் கூறுவார் ஏகம்பரநாதன் என்பவர்.
இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 188 Sசோதிலிங்கம்

திருவைகுண்டத்தில் உள்ள திருமால் கோயிலில் இராமன், சீதை, அனுமான், வீரபத்திரர், விளக்கேந்திய அழகிய மங்கை ஆகிய சிற்பங்கள் உள்ளன. தென்காசிச் சிவன் கோயிலில் ஊர்த்துவ தாண்டவர், காளி, வீரபத்திரர், எழில்மிகு வேணுகோபாலர், அழகிய பெண்கள் ஆகிய எழில்மிகு சிற்பங்கள் காணப்படுகின்றன. காளியின் சிற்பம் அச்சம் தரும் வகையில் கோரப்பற்களுடன் அமைந்துள்ளமையும் காணமுடிகின்றது. நாங்குனேரி மண்டபத் தூண்களில் அருச்சுனன், வீமன், புருடா, மிருகம், இராமன், அனுமான், வீரபத்திரர் ஆகிய வடிவங்களும் களக்காடு சிவன்கோயிலில் அருச்சுனனும், கள்ணனும் போருக்குச் செல்லும் காட்சியும் காணப்படுகின்றது.
மேலும் திருவரங்கத்துக் கோயிலில் உள்ள கொக்குவாய் பிளந்த கண்ணனைக் குறிக்கும் தந்தச் சிற்பமும் அற்புதமானோர் கலைப் படைப்பெனலாம். அத்தோடு திருகுறுங்குடி திருமால் கோயிலில் திரெளபதி அருச்சுனன், கள்னன், மன்மதன், இரதி, தடாதகைப் பிராட்டியர் குழலூதும் பிள்ளையைக் குறிக்கும் சிற்பங்கள் உண்டு. ஆழ்வார் சன்னிதியில் கருடன், அனுமான், வீமன், இரணியனை வதைக்கும் நரசிம்மர், நாயக்க அரசர்கள் ஆகிய சிற்பங்கள் உள்ளன. இத்தகைய தன்மையில் அமைந்த ஆடவர் சிற்பங்கள் வலிமைபெற்ற உடலமைப்பு உடையனவாகத் தாடியுடனும் கீழ்நோக்கிய மீசையுடனும் காணப்படுகின்றன. பெண் சிற்பங்கள் தசை பெருத்த உடலமைப்பும் உருண்டு திரண்ட மார்பகங்களும், காதளவோடிய கணிகளும் அதிக ஆடை அணிகலன்களும் உடையனவாக அழகாக அமைக்கப்பட்டுள்ளன. இவை கவர்ச்சி மிக்கனவாகவும், காமச்சுவை பயப்பனவாகவும் உள்ளமை பார்ப்போரை பரவசப்படுத்தும் நோக்கிலே அமைக்கப்பட்டது என்பதனைப்
புலப்படுத்துகின்றது.
மேலும் இக்காலச் சிவன் கோயில்களில் சிவனுடன் தொடர்புடைய திருவிளையாடல் சிற்பங்களும் வைணவர் கோயில்கள், நரசிம்மர், கண்ணன் முதலாகத் திருமாலின் திருவுருவங்கள் மன்மதன், ரதி, அருச்சுனன், இந்துநாகரிகத்தில்துணர்கலைகள் 189 Sசோதிலிங்கம்

Page 103
கர்னன் சிற்பங்களும் பெரிதுமுள்ளன எனக் குறிப்பிடும் காரை. செ.சுந்தரம்பிள்ளை தெய்வச் சிற்பங்கள் மட்டுமன்றி சமயத்தொடர்பற்ற சிற்பங்களும் இக்காலப்பகுதியில் ஏராளமாக அமைக்கப்பட்டது என உரைப்பர்.
இத்தகைய திறனுடைய தன்மைகள் புறச்சமய பேரலைகளால் இந்து சமயம் மூழ்கடிக்க முற்பட்ட ஒரு காலகட்டத்தில் அத்தகைய பேரழிவினின்றும் அதனைக் காப்பாற்றுவதற்கு நாயக்க மன்னர் பயன் படுத்திய கலைகள் பலவற்றிலும் பெறுமதி மிக்க ஒரு கலை மரபாக அமைந்து காணப்பட்டது இச்சிற்பக்கலை வரலாறு எனலாம்.
இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 190 Sசோதிலிங்கம்

C ஓவியக்கலை
இந்துக்கள் போற்றி வளர்த்த நுண்கலைகளில் ஒன்று ஓவியம். இத்தகைய ஓவியக்கலை பற்றி முழுமையாக நாம் அறிந்து கொள்வதற்கு ஆதார நூலாக இருப்பது விஷ்ணு தர்மோத்திரம். இவற்றில் ஒவியம் வரையும் முறைமை வர்ணிக்கப்பட்டுள்ள நிலையில் இயற்கையில் கண்ட இன்ப விருந்துகளை என்றும் அறியாமல் வைத்து சுவைத்து மகிழக் கண்ட முயற்சியின் பயனே இதுவென்றும் இத்தகைய அழகுணர்ச்சியின் விருந்துகள் படமாக வரைந்து காட்டும்போது ஓவியம் எனப்படுகின்றது. இங்கு ஓவியம் என்பது செந்தமிழ்ச்சொல். இதனைச் சிறுமகாரும் பொருளுணர்ந்தோ உணராமலே அரிய செயலைக் குறிக்க வழங்குவதைப் பலர் கேட்டிருக்கலாம். இது சித்திரம் என்று இக்காலத்தில் வழங்குகிறது. அவ்வகையில் வர்ணங்களாலும் வரைகோடுகள் எனப்படும் வட்டம், கோணம், சதுரம் முதலிய வடிவங்களாலும் அழகு பெற அமைக்கும் செயலே ஓவியமாகும்.
இவ் ஓவியம் மன ஒருமைப்பாட்டை ஏற்படுத்தி இறைவனை அடைவதற்கு வழிவகுப்பது. இந்நிலையில் நாகரிகம் அடைந்த கன்னியர்களும் காளையர்களும் அறிந்திருக்க வேண்டிய கலைகளில் இதுவும் ஒன்று எனப் பேசப்படும் தன்மையில் “நிலைபேறில்லாத உலகிலே நிலைபெற்றிருப்பது காலம் அழியும் கலை அழியாது’ என்பதனை எடுத்துக் காட்டுவது ஆத்மீக வாழ்வில் இறையருள் பெற்றுப் புறத்தே கண்டதை அகத்தே நிறுத்திப் பின்னர் அதனை எடுத்துக் காட்டுவதற்கு ஆதாரமாவது இத்தகைய நிலையில் சிற்பம் அமைத்தோனே ஒவியம் தீட்டத் தகுதி படைத்தவனாகின்றான் எனும் நிலையில் "ஆயகலைகள் அறுபத்து நான்கிலும் தனித்துவம் ஆனது” அதே நேரம் புதுமை பழமையின் இருப்பிடமானது ஆய்வினூடாக தமிழ் மொழியும், ஓவியமும் ஒரு மனிதனின் இரண்டு கண்கள் போன்றன எனக் கூறப்படுகின்றன. இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 191 Sசோதிலிங்கம்

Page 104
கண்கள் காட்சிகளைக் காண உள்ளம் அவற்றுக்கு மெருகூட்டல் செய்யும் அதேவேளை அவற்றின் உணர்வு வெளிப்பாடுகள் ஒவியம் ஆகின்றன. இத்தகைய ஓவியக்கலை வரலாறுகளை தொல்பொருள் ஆய்வுகள், குகைகள், கோயில்கள், இலக்கியங்களை ஆதாரமாகக் கொண்டு அறியமுடிந்துற்ற நிலையில் ஒரு மொழி தெரிந்தவர் அம்மொழி தெரிந்த இன்னொருவருடன் மட்டும் தொடர்புகொள்ள முடியும். ஆனால் ஓவியம் மொழிதெரிந்தவரையும் தெரியாதவரையும் இணைக்கும் பாலமாகவே அமைந்து காணப்படுவதும் அதன் சிறப்பியல்பினை அறிந்து கொள்வதற்கு ஏற்புடைச் சான்றாகின்றது.
மேலும் கோடுகளின் அழகினாலும், ஏற்ற வர்ணங்களின் சேர்க்கையாலும் கண்ணுக்கும் கருத்துக்கும் இன்பம் அளிப்பது. காலத்தாலும் தேசத்தாலும் மறைந்துபோன பொருளை நமக்கு நினைவூட்டுவது ஒருவரது மனதில் தோன்றும் கருத்துக்களைப் பிறர் அறியும் வகையில் நிலையாக வரைந்து வைக்கப்படுவது ஓவியம் எனவும் கூறப்படுகின்றது. மனதின் ஆழத்திலே குமிழி இட்டு எழும் அழகுணர்ச்சி புறத்தே உருவம் தந்து பார்த்து மகிழவேண்டும் என்ற வெட்கம் அறியாத ஆசைதான் பழங்கால மனிதனைத் தூண்டியிருக்க வேண்டும் என்பது மற்றொரு சாராரின் கருத்து. இந்தப் பழங்கால ஒவியங்களையே மனித வாழ்க்கையின் குழந்தைப் பருவத்து முதற் புன்முறுவல் என்று மேலைநாட்டு பேராசிரியர் ஒருவர் கருத்துக் கூறியுள்ளமையும் நோக்கற்பாலது.
இந்துப் பண்பாட்டில் ஓவியக்கலை தனக்கென்ற காத்திரமான பண்புகளைத் தன்னகத்தே கொண்டு வளர்ந்துள்ளது. இங்கு ஓவியம் என்பது "நாம் கண்ணால் காணும் பொருட்களைச் சிந்தனைக்கு எடுத்து தூரிகை மூலம் அழகுற எழுதுதலே” ஆகும். இவ்வகையில் உள்ளத்தெழுகையாகவும் தூரிகைகள் மூலம் ஊற்றெடுத்து தங்கு தடையின்றிப் பாய்ந்து செல்வதே ஒவியம் என்பது சீனமக்களின் ஆய்ந்தறிந்த கருத்தாகும். இந்துநாகரிகத்தில் நுண்கல்ைகள் 192 Sசோதிலிங்கம்

ஓவியக் கலையானது கண்ணுக்கு விருந்தாகி மனதுக்கு இன்பம் பயப்பதாகும். ஓவியக்கலை கருத்தின் உறைவிடம், அழகின் பிறப்பிடம், கற்பனையின் சிகரம். இதன் பயன் இன்பம் அறிவின்மையும் துன்பத்தையும் அகற்றி இன்பத்தையும் மகிழ்ச்சியையும் தந்து இரசஞான உணர்ச்சியை ஊட்டி அமைதியை நிலவச் செய்து ஆத்மவளர்ச்சியை அடையச் செய்வது ஓவியக்கலை.
முற்கால மனிதன் தொடங்கிய கோட்டுருவக் குறியீடுகள், உருவ அடையாளங்களே பண்பட்ட மனித வாழ்வில் ஓவியமாக ஒழுங்குபெற்றது. ஒவியத்தின் தோற்ற காலமாக மனிதன் அநாகரிகனாய் குகைகளில் வாழ்ந்த காலம் எனலாம். காடுகளில் சென்று வேட்டையாடி இறைச்சி உண்டு குகைகளில் ஒதுங்கிய நேரத்தில் கைகளிற் கிடைத்த கரித்துண்டை வைத்துக்கொண்டு குகைளின் சுவர்களில் கிறுக்கிக் கொண்டிருந்தபோதுதான் மனிதன் ஓவியனானான். ஒவியத்தை வரைவதற்குத் தளம், வண்ணக்கலவை, தூரிகை என்பன தேவைப் படுகின்றன. கறுப்பு, சிவப்பு, மஞ்சள், நீலம், வெள்ளை என்பன ஒவியம் தீட்டுவதற்குரிய அடிப்டை வர்ணங்களாகும். கலைஞனுடைய அகக் காட்சியே புறத்தில் கவின்மிகு ஓவியமாக வெளிப்படுகின்றது.
பண்டைய இந்தியாவிலே ஒவியமானது மிக வளர்ச்சியுற்ற ஒரு கலையாக விளங்கிற்று என்பதை பனுவற் சான்றுகள் தெளிவாகக் காட்டுகின்றன. செல்வர் தம் மனைகளும் மாளிகைகளும் எழில்மிக்க சுவரோவியங்களால் அணிசெய்யப்பட்டன. அன்றியும் பக்குவப்படுத்திய பலகைகளிலே சிறுசிறு ஓவியங்கள் வரையப்பட்டன. ஒவியத்தையே வாழ்க்கைப் பணியாகக் கொண்ட ஓவியர் மட்டுமன்றி கல்வி கற்றவகுப்பாருட் பல ஆடவரும் பெண்டிரும் தூரிகையை இனிது கையாண்டனர்.
இவை யாவும் இப்பொழுது இழிநிலை அடைந்துள்ளனவெனினும் பண்டைய இந்திய ஓவியங்களுள் இன்று நிலைத்துள்ளவை ஒவியக்கலை எய்தியிருந்த உயர்நிலையைக் காட்டப் போதியவை அவை பெரும்பாலும் இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 193 SசோதிLங்கம்

Page 105
குகைக் கோயில்களில் சுவரோவியங்களாகவேயுள்ள பல கோயில்களில் எவ்வகையிலாவது ஓவியம் வரையப்பட்டது என்பதற்கு ஐயமில்லை. இந்துக் கோயில்களிலே இன்றுபோல அந் நாளிலும் சிற்பப்பொருள்கள் ஒள்ளிய நிறம் பூசப்பெற்றன. ஆங்காங்கு மிக விரிவான முறையிலே அலங்காரச் சுவரோவியங்கள் தீட்டப்பட்டன. வெளிப் புறங்களிலுள்ள சில குகைளில் அத்துணைச் சிறப்பில்லாத சில வரை படங்களுள. இவை மிகப் பழைய பாணியில் வரையப்பட்டுள்ளன. ஆராய்ச்சியாள் பலர் இவை வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தவையெனத் தேடுகின்றனர். எனினும் சமய நோக்கங்களுக்காக நல்கப்பெற்ற சில செய் குகைகளிலே நல்வளர்ச்சி பெற்ற ஓவியக்கலை மரபுகளை எடுத்துக் காட்டும் ஓவியங்கள் பல காணக்கிடக்கின்றன.
பழையகாலத்திலே மன்னர் அரண்மனைகளில் செல்வந்தர் வீடுகளில், கோயில்களில் சுதை வேலைப்பாடு நிரம்பிய பகுதிகளிலும் மரத்தால் அமைத்த வாகனங்களிலும் ஓவியக் கலைஞரின் கைவண்ணம் பொலிந்து விளங்கின. இவை தவிர திரைச்சீலைகள், தேர்ச்சீலைகள், மண்டப விரிப்புக்கள் என்பவற்றில் எல்லாம் ஓவியங்கள் வரையப்பட்டன. இங்கு ஒப்வு என்னும் வினையடியாகப் பிறந்த ஒவ்வு, ஓவியம், ஓவியர் என்னும் சொற்களும் சித்திரத்தையே குறிக்கின்றது. எது ஒன்றன் பிரதிரூபமாக இருக்கின்றதோ அதுவே சிற்பம் என்று கூறிய வடமொழியாளரைப் போன்றே தமிழரும் ஒரு பொருளை ஒத்திருக்கும் தன்மையால் சித்திரத்தை மேற்கூறிய மூன்று சொற்களாலும் விளக்கினர் போலும். ஒவியம் எழுதுபவர்கள் ஒவர், ஓவியர் எனப்பட்டனர். தமிழ்நாட்டில் சிறந்த நகரங்களிலெல்லாம் ஓவியர்களுக்கு எனத் தனி ஒரு வீதி இருத்ததை தமிழ் நூல்கள் தெரிவிக்கின்றன. புறக்கண்ணோடு அகக் கண்ணும் கூரிய அறிவோடு ஆழ்ந்து நோக்கும் அமையப்பெற்ற ஒவியர்களை
"நுண்ணிதி றுைணர்ந்த நுழைந்த நோக்கின்
கண்ணுன் வினைஞர்
இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 194 Sசோதிலிங்கம்

என மதுரைக் காஞ்சி பாராட்டுகின்றது. இந்த ஓவியர்கள் உலகில் காணப்படும் உயிர்கள் உள்ளன, இல்லாதன ஆகிய எல்லாப் பொருள் களையும் கற்பனையால் காணப்படுவனவற்றையும் அவ்வவற்றின் உருவங்களைப் போலத் தோன்றும்படி சித்திரங்களாகத் தீட்டினர். “எவ்வகைச் செய்தியு முவமங்காட்டி’ என மதுரைக் காஞ்சியும், “மையறு படிவத்து வானவர் முதலா எவ்வகையுயிர்களுமுவமங்காட்டி’ என மணிமேகலையும் கூறுகின்றது.
ஓவிய வல்லுனர்கள் தாம் எண்ணிய வடிவத்தைத் தீட்டுவதற்கு என்ன செய்கின்றார்கள் முதலில் பலகையிலோ, துணியிலோ, கல்லிலோ, பசையைப் பூசி அடிப்படை போடுகின்றவர்கள் பிறகு கரியினாலோ வேறு எதனாலோ தாம் எண்ணிய வடிவம் தோன்றும்படி வரிகளைப் போடுகின்றார்கள். பின்னர் வரிகளை அழகாக அமைத்து வண்ணங்களைத் தீட்டுகிறார்கள். இவர்கள் கண்ணுங்கருத்துமாய்த் தூரிகை கொண்டு தீட்டத் தீட்ட அழகிய வடிவம் காட்சியளிக்கின்றது. இவ்வாறு வண்ணங்கள் இன்றி ஒரே நிறத்தில் ஓவியம் வரைவதும் உண்டு. ஆயினும் இயற்கையில் உள்ளவாறு காட்டுவதற்கு வண்ணங்கள் இன்றியமையாதனவாகும். கடலைக் காட்டுவதற்கு நீல நிறமும் மரத்தின் இலைகளைக் காட்டுவதற்கு பசுமை நிறமும் மலர்களைக் காட்டுவதற்கு அவ்வவற்றின் நிறங்களும் இன்றியமையாதனவன்றோ.
சில கோடுகளால் ஒரு வடிவத்தை வரைந்து காட்டுவது எளிதான செயலென்று சிலர் எண்ணக்கூடும். ஒவியம் வரைவது அத்துணை எளியதன்று. இதற்கு உலக இயற்கையை உற்றுநோக்கி உணரும் நுண்ணறிவும் ஆர்வமும், மெய்வருத்தம் பாரா அரிய முயற்சியும், பலநாள் பழகிய பயிற்சியும், கலைப்பண்பும் வேண்டும். சில கோடுகளால் வடிவத்தைக் காட்டிவிடலாம். ஆனால் அது உண்மையாகவும் கண்டவர் மனதைக் கவர்ந்து வியப்பில் மெய்மறக்கச் செய்வதாகவும் இருந்தால்தான் உயிர் ஓவியமாகும். இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 195 Sசோதிலிங்கம்

Page 106
1. வரலாற்றுப் போக்கில் ஒவியம்.
வரலாற்றுக்கு முற்பட்ட காலத்து மனிதனின் ஓவியங்களில் அக்கால மனிதனின் வாழ்க்கைச் சூழல்களை அதாவது வேட்டைக் காட்சிகளையும் மந்திரம், சடங்குத் தொடர்புடைய ஒவியங்களையும் சித்தரித்துள்ளனர். அவை அக்கால மனித இனத்தின் வரலாற்றையும், பழக்க வழக்க நம்பிக்கைகளையும் எடுத்தியம்புகின்றன. இங்கு ஒவியங்கள் குகைகளை மையமாகக் கொண்டு வரையப்பட்ட நிலையில் அதன் சுற்றுப்புறச் சூழலில் உருவங்களைச் செதுக்கியும் மனித வடிவங்களை வரைந்தும் உள்ளமையைக் குறிக்கும். இந்தியக் குகை ஓவியங்கள் பற்றிய ஆய்வுகள் பல நிகழ்ந்தபோதும் ஒரு தெளிவான முடிவுகள், கருத்துக்களை கொடுக்கவியலாத நிலையில் அவை பற்றிய கருத்துக்கள் அமைகின்றன.
தென்னிந்தியாவிலும் பல்வேறு இடங்களிலும் பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டுகளில் தமிழகத்தின் பல இடங்களிலும் பாறை ஓவியங்கள் செதுக்கி அல்லது கல்வெட்டுக்களின் வரைவுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்திய ஓவியங்களின் மூலம் தமிழக கற்கால மனிதனுடைய பண்பாட்டினையும் பழக்கவழக்கங்களையும் நம்பிக்கைகளையும் அறியமுடிகின்றது. அண்மைக் காலமாக தமிழ் நாட்டில் பல்வேறு இடங்களில் தொன்மையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்துத் தொன்மையான வரலாற்றை அறிய இவை உதவக்கூடும். இவை குகை ஓவியங்களுக்குரிய ஓவிய வரைவமைதியும் வண்ணச் சிறப்புக்களையும் பெற்றுத் திகழ்கின்றன. அதேநேரம் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பிற ஓவியங்களுடன் ஒப்பிட்டுக் காணக்கூடிய சிறப்புத் தன்மைகளையும் பெற்றுத் திகழ்கின்றன. எனவே தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மல்லபாடி, கீழ்வாலை, செத்தவரை, சிறுமலை, ஆலம்பாடி போன்ற இடங்களில் காணப்படும் ஓவியங்களைக் குறித்து ஆய்வு மேற்கொண்டால் பல்வேறு சிறப்புக் கூறுகளை உலகிற்குத் தர இயலும். இந்துநாகரிகத்தில்துணர்கலைகள் 196 Sசோதிலிங்கம்

பொதுவாக வரலாற்றுக்கு முற்பட்ட காலத்து குகை ஓவியங்களில் விலங்கினங்கள் பொது இடம் பெறுகின்றன. இவ்வகை ஓவியங்கள் அடர்த்தியான சிவப்பு நிறத்தையும், வெள்ளை நிறத்தையும் கொண்டு இருப்பதனைக் காணமுடிகின்றது. வரலாற்றுக் காலத்தைப் பொறுத்தி வரையில் சிந்துநதி தீரத்தில் மொஹஞ்சதாரோ, ஹரப்பா முதலிய இடங்களில் அகழ்ந்து எடுக்கப்பட்ட பொருட்களில் நாடக கணிகையின் சிலையும் முத்திரைகளில் சித்திர எழுத்துக்களுடன் பொறிக்கப்பட்ட விலங்குகள், மனிதர்கள், தெய்வ உருவங்களும் வண்ணம் பூசி ஓவியம் தீட்டிய சட்டி பானைகளும் சிற்ப ஓவியக் கலைகள் இவர்களிடையே எவ்வாறு வளர்ந்தன என்பதனை ஒருவாறு எமக்கு எடுத்துக்காட்டுகின்றன.
சிந்துவெளி நாகரிகத்திலும் சுமேரிய நாகரிகத்திலுக்கிடைக்கப்பெற்ற விவடிவங்களில் வீடு போன்ற அமைப்பைக் காணமுடிகின்றது. இவ்வகை அமைப்புப் பற்றிய ஆய்வில் அதற்கு புள்ளி என்றும் வீடு என்னும் பொருள் கொடுக்கப்பட்டுள்ளதால் இவ்வடிவம் மிக்க தொன்மையானது. எனவே செத்தவரை ஓவியங்கள் தமிழ்நாட்டில் கிடைக்கப் பெற்ற தொன்மையான ஒவியங்கள் எனக் கருதலாம். இங்கு காணப்படும் மற்றுமொரு சிறப்பு எருமையின் உருவாகும். இவ் ஓவியத்தில் எருமையின் எலும்புகள் கோடுகளால் காட்டப்பட்டுள்ளன. இவ்வகை வடிவமைப்பானது எக்ஸ்ரே என்று குறிக்கப்படுகின்றது. ஐரோப்பாவில் வாழ்ந்த வேட்டைக்கால மனிதர்களால் இவ்வடிவமைப்பு முறை தோற்றுவிக்கப்ட்டது எனக் கருதுவர். வட இந்தியாவிலும் இவ்வகை ஒவியங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. எக்ஸ்ரே வடிவமைப்பு என்பது உடலின் உள்ளுறுப்புக்களைக் காட்ட முயற்சிக்கும் வரை படங்களே இவ்வகை ஓவியங்கள் ஒரு சில அண்மைக் காலத்தில் தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஓவியக்கலை வரலாறு தனித்துவம் மிக்க கலைவரலாறு ஆகியதற்கு அங்கு கிடைத்த முத்திரைகளும் பானைகளிலும் காணப்படும் உருவங்கள் சான்றாகின. இங்கு கலைஞர்கள் அவ்வப்போது உள்ளத்தில் இந்துநாகரிகத்தில்துணர்கலைகள் 197 Sசோதிலிங்கம்

Page 107
இருந்து வெளிவரும் ஆற்றல்களை தன்மயமாக்கி வளர்ந்த கலையாக ஓவியக்கலை பரிணமித்த நிலையில் இங்கு கிடைத்துள்ள திமில் பருத்த எருது, குட்டியுடன் இருக்கும் குரங்கு, தனித்திருக்கும் குரங்கு சிவயோகியின் வடிவம், தரைப்பெண் வடிவங்கள் என்பன அக்கால மக்களின் சிற்ப அறிவை அறிய உதவுகின்றன. அதேநேரம் ஓவியத்தின் தனித்துவத்திற்கு ஏற்ற கலைப்பொருளாகி வர்ணம் தீட்டும் கலையும் தனிக்கலையாகப் பரிணமிக்க வழிவகுத்தன. மேலும் சிந்துவெளியில் ஏராளமான மட்பாத்திரங்கள் கண்டெடுக்கப்பட்டன. இவை ஒருவகை திண்ணிய சிவப்புக்களியினால் ஆகியவை. இவற்றின் மீது தீட்டப்பட்ட ஓவியங்களிலிருந்து அவர்களுடைய ஓவியக்கலை பற்றி அறிய முடிகின்றது. பறவைகள், மிருகங்கள், மனித வடிவங்கள் ஆகிய பற்பல ஒவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. வெள்ளாடு தனது குட்டியை நக்கும் காட்சி, கோழி ஒன்று சுற்றித்திரியும் காட்சி, மீனவன் இடது தோளில் வலையைக் காவிச்செல்லும் காட்சி என்பன காணப்படுகின்றன. இன்னொரு ஓவியத்தில் ஒரு பறவை மீன் ஒன்றை வைத்திருக்கின்றது. கீழே நரி போன்ற மிருகம் மேலே பார்த்தபடி நிற்கின்றது. இது காகமும் வடையும் கதையை நினைவுபடுத்துகிறது என்பர் பீேலால் என்ற அறிஞர்.
ஓவியக்கலை ஒரு தனிக்கலையாக வளரவில்லை. எனினும் அது சிற்பத்தின் உறுப்பாகவே விளங்கிற்று. சிற்பியாக விளங்குபவன் ஓவியத்திலும் கைதேர்ந்தவனே. சிற்பநூல்களும் ஆகமங்களும் திருவுருவம் அமையும் முறையைக் கூறியதும் மூர்த்தியின் நிறத்தையும் அதே சந்தர்ப்பத்தில் குறிப்பிடுகின்றன. இவை இரண்டையும் ஒருங்கே கூறுவதிலிருந்து சிற்பத்தை அமைப்பவனே ஒவியத்தையும் கையாண்டான் என ஊகிக்க முடிகின்றது. உருவங்களைக் கல்லாலோ, மரத்தாலோ அமைத்த பிறகு அதற்குரிய வர்ணம் தீட்டி அழகுறுத்தினால் உருவம் நிறைவுபெறும். சாந்தினால் உருவாக்கும் உருவமும் அவ்வாறே.
இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 198 Sசோதிலிங்கம்

11. ஒவியக்கலை மூலங்கள்.
இந்திய சிற்ப நூல்களிலே உருவமைக்கும் கலையும், வர்ணம் தீட்டும் முறைமையும் தனித்தனியாகப் பித்து வெவ்வேறு விடயங்களாகக் கூறப்படவில்லை. சிற்பி இருவகைத் தொழிலையும் ஒன்றன் பின் ஒன்றாக நிகழ்த்துதலையே கூறுவன. இவ்வாறமைந்த உருவங்களுக்கு வர்ணம் பூசுவதிலிருந்து தேர்ச்சிமிக்க சிற்பி மட்டமான துணியிலோ, சுவரிலோ வர்ணம் தீட்டியே உருவத்தைத் தோற்றுவிக்கும் கலையை உண்டு பணிணியிருக்கலாம். நாளடைவில் இது தனிக்கலையாகச் செயற்படுவதைக் காண்கின்றோம். பிரகாரத்தை வலம்வரும் பொழுது சுவர்களிலும் கூரையின் கீழ்த்தளத்தில் அண்ணார்ந்து பார்க்கும் பொழுது புலனாகக் கூடியவாறும் இறைவன் புகழ்சுட்டும் நிகழ்ச்சிகளை ஓவியமாகத் தீட்டும் நிலையைத் தென்னிந்தியத் தேவாலயங்கள் எடுத்துக் காட்டின. திரைச் சீலைகள், தேரை அலங்கரிக்கும் தேர்ச்சீலைகள் மண்டபங்களை அலங்கரிக்கும் விரிப்புக்கள் மேற்காட்டிகள் முதலியவற்றிலும் இறைவன் புகழ்கூறும் இதிகாச புராண சம்பவங்களைச் சாயமேற்றியும் திறம்படத் சித்தரித்துள்ளார்கள். இவையெல்லாம் வரலாற்றுக் காலத்தில் ஓவியக்கலை எவ்வாறு வளம்படுத்தப்பட்டு வளர்ச்சி அடைந்து
வந்த கலை என்பதனை புலனாக்க ஏதுவாகின்றது.
இராமாயணத்தில் இராவணனது அரண்மனையைப் பார்த்த அனுமான் அங்கே தான் கண்டதை “மலைகள் நிறைந்த தேசங்களும் மரங்கள் நிறைந்த மலர்கள் நிறைந்த மரங்களும் சிறு இதழ்கள் நிறைந்த மலர்களும் அம்மாளிகைளில் எழுதப்பட்டிருந்தன. வெண்மையான வீடுகளும் அழகிய பூக்களால் விளங்கும் தடாகங்களும் மெல்லிய தாதுக்களை உடைய தாமரைகளும் சிறந்த பல்வகை வளங்களும் அங்கே எழுதப்பட்டிருந்தன” என்று கூறுகின்றான். இச்சித்திரங்களுக்கு உட்பொருளாக அமைந்தவை கவியின் கற்பனையாக இருக்கலாம். ஆனால் இராமாயணம் எழுதிய காலத்து மக்கள் தாங்கள் வசித்த வீடுகளிலே சித்திரங்களை வரைந்தும் வரைந்தவற்றைப் பார்த்து மகிழ்ந்தும் வந்தனர் என்னும் கருத்தையும் அறியமுடிகின்றது. இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 199 Sசோதிவிங்கம்

Page 108
மகாபாரதத்திலே சித்திரங்களைப் பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன. ஜரை என்னும் அரக்கி பிருகதீரன் என்னும் அரசனுக்குத் தன் வரலாற்றைக் கூறி அவனுக்குப் பிறந்த பிள்ளைக்குத் தன் பேரை இடுமாறு கூறுகின்றான். “அரசர்க்கரசே நான் ஜரை என்னும் அரக்கி. உன் அரண்மனையில் துதிக்கப்பெற்று சுகமாக வசித்தேன். இளமைப் பருவம் மக்கட்பேறும் கொண்டவளாக என்னை எவன் பக்தியுடன் எழுதிவைப்பானோ அவன் வீடு தளைத்து விளங்கும். பிரபுவே உன் வீட்டில் பல புத்திரர்களால் சூழப்பட்டவளாக சுவர்களிலே எழுதப்பட்டுக் கந்தங்கள், மலர்கள், தூபம் முதலியவற்றால் எப்போதும் நன்றாகத் துதிக்கப்படுகின்றேன்” என்றாள். இதனால் வீடுகளின் சுவர்களிலே சித்திரங்களை எழுதி அவற்றை வழிபட்டு வந்த வழக்கம் இந்தக் காலத்திலேயே இருந்தது என்பது தெரிகின்றது.
ஒவியத்தை வெறும் தொழிலாகக் கருதாது ஒரு யோக சாதனமாகவே கருதினர். தமிழர்கள் புறக்கண் பர்த்ததை அகக் கண்ணால் கண்டு இதய வெளியிலே எழுதி பிறகு சுவரிலோ துணியிலோ வரைந்தார்கள். பழங்கால ஓவியர்கள் இதயத்தில் எழுதிப் பார்க்கும் வழக்கத்துக்கும் சான்று. முதன்முதலில் மணிமேகலையில்த்தான் கிடக்கிறது. உவவனத்துப் பளிங்கறையில் நின்ற மணிமேகலையை அங்குள்ள ஓவியங்களுள் ஒன்றாகவே கருதி இத்தகைய ஓவியத்தை வரைய ஓவியன் எத்தகைய உருவத்தைத் தன் மனதில் எழுதிப் பார்த்திருக்க வேண்டும் எனக் கற்பனை செய்து உதயகுமாரன் வியக்கின்றான் என மணிமேகலை கூறுகின்றது.
“ஓவியனுள்ளத்துள்ளியது வியப்போன்” என்று மகேந்திர பல்லவன் காலத்தில் வாழ்ந்த நாவுக்கரர் திருவாரூர் கோயிலில் வீற்றிருக்கும் சிவபெருமானை,
“உயிரா வனமிருந்துந்றோக்கி யுள்ளக் கிழியுனுரு வெழுதி”
எனத் தொடங்கிப் பாடுகின்றார். இந்தப்பாடல் அந்தக்காலத்து ஒவியர்களின் பழக்கத்தை நன்கு தெரிவிக்கின்றது.
இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 200 Sசோதிலிங்கம்

சங்க காலத்திலும் அடுத்த காலப் பகுதியிலும் ஓவியக்கலை சிறந்திருந்ததென்பதை அக்காலத்தெழுந்த இலக்கியங்களில் இருந்து அறியமுடிகின்றது. ஒவிய வல்லுனர்கள் சுவர்களிலும் துணிகளிலும் ஒவியங்களை வரைந்தனர் என்பதும் அதற்கேதுவாக வெள்ளியையொத்த சாந்து பூசப்பெற்ற கரிய திரட்சிமிக்க வலிய தூண்களோடு கூடிய சுவர்களில் எழில்மிகு பல பூக்களையுடைய கொடிகள் வரையப் பெற்றன
எனபதை,
“வெள்ளியன்ன விளங்கும் சுதையுரீஇ மணிகண்டன்ன மாத்திரட்டின் காழ்ச் செம்பியன்றன்ன செய்வுறு நெடுஞ்சுவர் உருவப் பல்பூவொரு கொடி வளைஇக் கருவோடு பெயரிய காண்பினல்லில்’
என நெடுநல்வாடை கூறும்.
அழகிய இல்லங்களும் அரண்மனைகளும் ஒவியத்துடன் உவமிக்கப்பட்டன என்பதை “ஒவத்தன்ன இடனுடை வரைப்பின்’ “ஒவத்தன்ன வுருகெழு நெடுநகர் ஒவத்தன்ன வினைபுனை நல்லில்’ ஆகிய சங்க இலக்கியப் பாடலடிகள் விளக்கி நிற்கின்றன. இவற்றிலிருந்து அக்கால மக்கள் பெற்றிருந்த ஓவியப் புலமை குறித்து அறிய முடிகின்றது.
ஓவியம் வரையப்பெற்ற இடங்கள் சித்திரக்கூடம், சித்திரமாடம், எழுதுநிலை மண்டபம், அம்பலம் ஆகிய பெயர்பெற்றன. ஓவியக்கலை வல்லோர் ஓவியர், வித்தகர், ஒவமாக்கள், கண்ணுள்வினைஞர் என்று அழைக்கப்பெற்றனர். அக்காலத்தில் ஓவியம் பற்றிக் கூறும் நூல்கள் பல இருந்தன என்பதை “ஓவியச் செந்நூல் உரைநூற் கிடக்கையும்” எனும் மணிமேகலைப் பாடலடி மூலம் அறிய முடிகின்றது.
இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 201 Sசோதிலிங்கம்

Page 109
பரிபாடலிலே திருப்பரங்குன்றத்து முருகன் கோயிலின் அருகே இருந்த எழுத்துநிலை மண்டபத்தையும், அங்கே தீட்டப்பெற்ற ஒவியங்களையும் அவற்றின் கருத்துக் கேட்டு தெரிந்து கொள்பவர் களையும் பார்க்கின்றோம். ஒருபக்கம் சூரிய சந்திரர்கள் இன்னொரு பக்கம் மன்மதனும் ரதியும், வேறொருபக்கம் கௌதம முனிவர், அவருடைய மனைவி, அகலிகை, பூனை உருவில் இந்திரன் ஆகிய ஒவியங்கள் வரையப் பெற்று அவற்றினூடாக அகலிகையின் சோகக் கதையும் எடுத்துக்காட்டப் பட்டன. இவை எல்லாம் அழகாக எழுதப்பெற்று இருப்பதையும் இவற்றைக் கண்டுகளிக்கும் கலை விநோதங்களையும் காண்கின்றோம். வஞ்சிமாநகரத்தில் இருந்த பெளத்த பள்ளியில் பெளத்தமத நிதானங்கள் பன்னிரண்டும் உருவகப்படுத்தி ஒவியங்களாகத் தீட்டப்பெற்றுள்ளன என மணிமேகலை தெரிவிக்கின்றது. சமணப் பள்ளியின் சுவர்களிலும் ஓவியங்கள் வரையப்பெற்று இருந்தன என்பதை மதுரைக் காஞ்சியால் அறிகின்றோம்.
பண்டைய தமிழகக் கோயில்களிலும் அரண்மனைகளிலும் செல்வந்தர் மாளிகைகளிலும் சித்திர மண்டபங்கள் இருந்தது தவிர வீடுகளிலும் ஒவியங்கள் வரையப்பட்டிருந்தன. தலையானங்கானத்துச் செருவென்ற பாண்டிய மன்னனுடைய அரசியின் சித்திர மண்டப அந்தப்புரத்து மேல்விதானத்தில் அழகிய ஓவியங்கள் தீட்டப்பெற்றிருந்தன என சிலப்பதிகாரம் குறிப்பிடுகின்றது. வீட்டின் சுவர்களில் தெய்வங்களின் உருவங்களை வரைந்து அவற்றை வழிபடுவது அந்நாளைய வழக்கம். மகளைவிட்டுப் பிரிந்துவிட்டு வேலைகளில் மனம் செல்லாது தனியே இருக்கும் தாயின் நிலையை விளக்க வந்த நக்கீரர் சுவரில் முத்துவடம் முதலியன புனைந்து அழகும் ஒளியும் பொருந்த வரையப்பட்ட பாவைகள் பல என்பதனையும் கொள்ளாதிருக்கின்றன எனக்கூறுகின்றார். காவிரிப்யூம் பட்டினத்துக்குப் புதிதாக வந்த மக்கள் அங்குள்ள வீடுகளில் நீண்டுயர்ந்த வெளிச் சுவர்களிலே வரையப்பட்ட பல்வேறு ஒவியங்களைக் கண்டு வியந்தவை மணிமேகலை எடுத்துக் காட்டுகின்றது.
இந்துநாகரிகத்தில் துணிகலைகள் 202 Sசோதிலிங்கம்

பல உருவங்களான மலர்களை நிரம்பிய கொடிகளால் சித்தரிக்கப்பட்ட வீடுகளைப் பற்றிய குறிப்பு நெடுநல்வாடையில் கிடைக்கின்றது. சுவரில் எழுதப்பட்ட பாவை போன்று அழகொழுக விளக்குகின்றாள் தலைவி எனப் புவலர் ஒருவர் நற்றினையில் கூறுகின்றார். சுவரிலே ஒவியங்கள் வரைவதற்கு முன் நன்றாகக் குழைத்த வெண்சாந்தைச் சுவர் மீது தீற்றுவது வழக்கம். அச்சாந்து மென்மையும் உளியும் பெற்று விளங்கிற்று.
“வெள்ளியன்ன விளங்குஞ் சுதை” என்பது “நெடுநல்வாடை” “வெள்ளி வெண்சுதை” இழுகிய மாடத்து எனவும் “வெண்சுதை விளக்கத்து வித்தகரிய கண்சுவரோவியம்’ எனவும் மணிமேகலை கூறுகின்றது.
துணியில் ஓவியம் வரையும்போது அதன்மீது முதலில் மெழுகைத் தடவிக்கொண்டனர். பாண்டிய மன்னன் அரண்மனையில் படுக்கையறையில் கட்டிலின் மேலுள்ள விதானத்தில் மேடம் முதலிய பன்னிரண்டு ராசிகளையும் அவற்றில் சஞ்சரிக்கும் சூரியனையும் சூரியனுடன் மாறுபட்டுக்கொண்ட சந்திரனையும் சந்திரனைப் பிரியாத ரோகினியையும் எழுதி இருந்தனர் என்பது நெடுநல்வாடை சிலப்பதிகாரத்தில் மாதவி ஆடுவதற்காக அமைக்கப்பட்ட அரங்கில் நான்கு வருணத்துப் பூதரையும் எழுதி மேனிலையில் வைத்தனர் என்ற செய்தியையும் பார்க்கின்றோம் ஓர்
உவவனம் பலவகை மலர்களால் பரப்பப்பட்டிருந்தது.
“வித்தகரியற்றிய விளங்கிய கைவினைச் சித்திரைச் செய்கைப்படாம் போர்த்தது”
போலத் தோன்றிற்று என மணிமேகலை தெரிவிக்கின்றது.
வண்ணம் தீட்டிய சித்திரங்களைத் தவிர வண்ணம் தீட்டாத சித்திரங்களையும் எழுதிவைத்தனர். பூந்துலகில் உடுத்து வழங்கப்பட்ட மங்கை சாதாரண நூற் புடவையில் எப்படித் தோன்றுகின்றாள் எனக் இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 203 Sசோதிலிங்கம்

Page 110
கூறி வந்த நெடுநல்வாடை ஆசிரியர் அவளை புனையா ஒவியத்துக்கு ஒப்பிடுகின்றார். உரையாசிரியர் நச்சினார்க்கினியார் இத்தொடருக்கு “வண்ணங்களைக் கொண்டெழுதாத வடிவைக் கொட்டின சித்திரம்” எனவும் பொருள் கூறுகின்றார். இதே தொடர் மணிமேக்லையில் இரண்டு இடங்களில் வருகின்றது. இத்தகைய பல்வகைச் சித்திரங்களையும் கண்டு அனுபவிக்கும் அருங்கலை விநோதர்கள் அநேகள் இருந்தனர் என்பதனை நற்றினைச் செய்யுள் ஒன்று அழகிய முறையில் நமக்கு விளக்குகின்றது.
வண்ணத்திலே தோய்த்துச் சித்திரம் எழுத இரண்டுவகைத் தூரிகைகள் உபயோகிக்கப்பட்டன. ஒன்று துகிலிகை மற்றொன்று வட்டிகை. தம் தொழிலின் வல்ல ஒவியங்கள் ஒளிபொருந்திய அரக்கிலே தோய்த்த துகிலிகை போன்றிருந்தது. ஒரு மங்கையின் தலை எனக் கூறுகின்றது நற்றினை. “வட்டிகைப்பூங்கொடி’ எனச் சிலப்பதிகாரத்திலும் “வட்டிய செய்தியின் வரைந்த பாவை’ என மணிமேகலையிலும் கூறப்படுகின்றது. மேலும் ஓவியக்கலை நாடக மகளிக்கென வகுக்கப்பட்ட அறுபத்துநான்கு கலைகளில் ஒன்றாகவும் கருதப்பட்டு வந்தது. இதற்கெனத் தனியாக ஒருநூல் இருந்ததையும் அதில் மணிமேகலை தேர்ச்சி பெற்றிருந்ததையும்
"நாடக மகளிர்க்கு நன்கனம் வகுத்த ஓவியச் செந்நூல் உரைநூற் கிடக்கையும் சுற்றுத் துறைபோகிய பொற்றொடி நங்கை”
என்னும் மணிமேகலைப் பகுதியொன்று தெரிவிக்கின்றது.
1. வட இந்தியக்கலை வளர்ச்சியில் ஓவியக்கலை. 1. யோகிமாரா ஓவியங்கள்.
வரலாற்றுக் காலத்திற்குபட்ட ஓவியங்களில் பழமையானவை யோகிமாராக் குகையில் உள்ளவை. இந்தக் குகை மத்திய பிரதேசத்தில் ராம்கள் மலைச்சரிவில் இருக்கின்றது. இங்கு ஒவியங்களின் கீழே மாகத இந்ததாகரிகத்தில்துணிகலைகள் 204 Sசோதிலிங்கம்

மொழியில் பிராமி எழுத்துக்களால் கீழ்க்கண்டவாறு பொறிக்கப்பட்டு இருக்கின்றது. “சுதனுகா என்னும் தேவதாசி இளைஞர்களில் சிறந்தவனும் ரூபதஷ்சனுமான தேவதின்னனால் காதலிக்கப்பட்டாள்’ சீதாபெங்கா குகையில் ஆகும்வேளை தவிர மற்ற நேரத்தில் தனுகாவும் தேவதின்னனும் இங்கே தங்கள் காலத்தை இன்பமாகக் கழித்தார்கள். தேவதின்னன் இந்த ஒவியங்களை வரைந்து தன் ஒவியத் திறமையும் தங்கள் காதலின் மென்மையும் மாளாதிருக்குமாறு அவற்றின் கீழ் தன் காதலி பெயரையும் தன்பெயரையும் கல்லிலே பெருமையுடன் பொறித்தான் எனக் கூறப்படுகின்றது.
இங்கிருக்கும் ஓவியங்களிலே சிற்சில இன்னும் காணப்படுகின்றன. மரத்தின் அடியில் இருக்கும் ஒரு மனிதன் அவனுக்கு இடப்புறம் நடனமிடும் பெண்கள், வலப்புறம் யானை ஊர்வலம், பத்மாசனத்தில் இருக்கும் மனித உருவங்கள், மூன்று குதிரைகள் பூட்டிய தேர்கள், அதற்கு மேலே சந்திரவட்டக்குடை, மரங்கள், பறவைகள் இவையெல்லாம் பொதுவாக சிவப்பு வண்ணத்தாலும் சில இடங்களில் கறுப்பாலும் தீட்டப்பெற்று இருக்கின்றன.
11. அஜந்தா ஒவியங்கள்.
பல்வேறு கலைமரபை ஒன்றாய் இணைத்து வளர்த்த குப்த் பேரரசர் காலத்தில்தான் மிகச்சிறந்த ஓவியக்கலை தோன்றியது. குப்த மன்னர்களுடன் தொடப்புபொண்ட மன்னர்களின் வாகப் என்பவர் ஆட்சியிலே தான் அஜந்தாப்பகுதி இருந்தது. பம்பாயிலிருந்து 250 மைல் தொலைவில் உள்ள அஜந்தாவில் அம்மன்னர் காலத்திலேதான் உலகப்புகழ் பெற்ற ஓவியங்கள் தீட்டப்பட்டன. இதற்கேதுவாக கிமு மூன்றாம் நூற்றாண்டில் செங்கல்லாலும் மரத்தாலும் கட்டிய கட்டடங்களைப் போல மலைச் சரிவுகளிலே பெளத்த பிச்சுகள் கல்லைக் குடைந்து அழகிய தூண்களும் சிற்பங்களும் வண்ணமுறும் ஓவியங்களும் நிறைந்த புத்தரை வணங்குவதற்குரிய சேதியங்களும் தாங்கள் வசிப்பதற்குரிய விகாரைகளும் கட்டத் தொடங்கினர். இத்தகைய சேதியங்களும் விகாரைகளும் இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 205 Sசோதிலிங்கம்

Page 111
பெரும்பாலும் இந்தியாவின் மேற்குப் பாகத்தில் விந்திய மலைக்குத் தெற்கே உள்ள மலைச்சரிவுகளில் தான் காணப்படுகின்றன. பாஜா, கொண்டானே, பிடல்கோரா, அஜந்தா, பேட்சா, கார்லி, ஜன்னார், கனேரி, பாக் முதலிய இந்தக் குகைக் கோயில்கள் கி.மு 2 தொடக்கம் கிபி 8 ஆம் நூற்றாண்டு வரையில் கட்டப்பெற்றவை. இவற்றிலே எளிமையான கோடுகள் ஒன்றோடொன்று இயற்கையாய் இணையும் வண்ணங்கள் முதலியன சிறந்து விளங்கின. விலங்குகளும் பறவைகளும் உயிர் உள்ளனபோல் பல்வேறு நிலைகளில் சித்தரிக்கப்பட்டன. மனித உருவங்களுக்கு உள்ளுணர்ச்சியை வெளியே எடுத்துரைக்கும் வகையில் முகபாவங்களும் சூழ்நிலைகளும் வரையப்பட்டன. பொதுவாகக் கூறுமிடத்து அஜந்தா ஒவியங்கள் இயற்கையின் ஒவ்வொரு தோற்றத்தையும் கூர்ந்து நோக்கி அவற்றை நேரில் எடுத்துரைக்கும் வகையில் அமைத்துள்ளனர். இவை மனித குலத்தின் மனோபாவத்தைச் சிறக்க வெளிக்கொணரும் ஆற்றல் பெற்றிருந்தன.
அஜந்தாவில் உள்ள பழைய ஓவியங்கள் சாதவாகனர் காலத்துக்குரியவை. சாதாவாகனர்கள் கிமு 2 - கிபி 2 வரை தக்கணத்தில் மேம்பட்ட வல்லரசர்களாகத் திகழ்ந்தனர். இவர்கள் காலத்து ஓவியங்களை ஒன்பதாம் பத்தாம் இலக்கக் குகைகளிற் காணலாம். இவை பாஜா, சாஞ்சி, அமராவதி ஆகிய இடங்களில் உள்ள சாதவாகனர்களின் முற்காலச் சிற்பங்களை ஒத்திருந்தன என்பர் சிவராமமூர்த்தி. இங்குள்ள குகைக் கோயில்களின் உள்ளே சுவர்களிலும் தூண்களிலும் விதானங்களிலும் மனதைக் கொள்ளை கொள்ளும் காட்சிகள், புத்தபெருமான் உப்தேசத்துக்கு மாறாக ஒவியங்களாக வரையப்பெற்றிருக்கின்றன. எனினும் அஜந்தாவில் காணப்படும் ஒவியங்களே இந்திய ஓவியக் கலையின் பெருமையை உலகினருக்கு எடுத்துக் காட்டக்கூடியவை.
அஜந்தாக் குகைள் மகாராஷ்டிரத்தில் பிறைச் சந்திர வடிவாய் அமைந்திருக்கும் மலைச் சரிவில் இருக்கின்றன. செங்குத்தான பாறை மரங்களும் செடிகளும் நெருங்கி வளர்ந்த பள்ளத்தாக்கு வளைந்து இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 2O6 Sசோதிவிங்கம்

வளைந்து சலசலவென ஓடும் வாகோரா நதி, பாரிஜாத மலர்களின் நறுமணம் இவ்வியற்கை எழில் திகழும். இது போன்ற வேறோரிடத்தை தங்கள் சேதியங்களுக்கும் விகாரங்களுக்கும் பெளத்த பிச்சுக்கள் தேர்ந்து எடுத்திருக்க முடியாது. ஆவணி, புரட்டாதி மாதங்களில் அஜந்தாவைப் போய்ப் பார்ப்பது கண்கொள்ளாக் காட்சியாகும். இங்கே கௌதம புத்தரின் வாழ்க்கையிலிருந்தும், ஜாதகக் கதைகளிலிருந்தும் பெறப்பட்ட காட்சிகளும் மலர்கள், விலங்குகள், சம்பந்தப்பட்ட பண்புக் கூறுகளும் மிகவும் நுட்பமாகத் தீட்டப்டபட்டு உள்ளன. இந்தியாவெங்கும் காணப்படும் குப்த, வாகடக இடைக்கால ஓவியங்களுக்கு முன்னோடியாக இவை விளங்குகின்றன.
இங்கே அண்ணளவாக முப்பது குகைகள் காணப்பட்டன எனவும், அவற்றிலே ஒன்பது, பத்து, பத்தொன்பது, இருபத்தாறு, இருபத்தொன்பது என்ற எண்ணுள்ளவை சேதியங்கள். மற்றவை விகாரங்கள். இப்பொழுது ஓவியங்கள் காணப்படும் குகைகளில் புகழ் பெற்றவை ஒன்பது, பத்து, பதினாறு, பதினேழு ஒன்று இரண்டு என்பவையே. ஒருகாலத்தில் பார்த்த இடமெங்கும் சுவர்களிலும் தூண்களிலும் இங்கே ஒவியங்கள் நீக்கமற நிறைந்திருந்தன. இவற்றை முன்னைய ஹைதராபாத் சமஸ்தானத்தார் இந்த ஓவியங்களை புத்துயிர் பெறச் செய்வதிலும் இவற்றின் பெருமையை உலகின் நாலாபக்கமும் பரவச் செய்வதிலும் காண்பித்து வந்த அக்கறை போற்றத்தக்கது. அவையே இன்று அஜந்தா ஒவியங்களை நம்மால் பார்த்து மகிழ வைக்கின்றது.
வட இந்தியாவில் ஹர்சனும் தக்கிணத்தில் புலிகேசியும் தமிழ் நாட்டில் மகேந்திரவர்ம பல்லவனும் அரசு செலுத்திவந்த ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சீனாவிலிருந்து தென்னிந்தியாவுக்கு வந்து பெளத்தமத புண்ணிய இடங்களையெல்லாம் சென்று கண்ட யுவான்சுவாங் தான்பார்த்த மகாராஷ்டிர தேசத்தில் உள்ள அஜந்தாவைப் பற்றி கீழ்வருமாறு கூறுகின்றார். “இந்த தேசத்தின் அரசர் புலிகேசி என்னும் சத்திரியர் இதன் கீழ்ப்பாகத்தில் ஒரு மலைத்தொடர் வரிசை, வரிசையாக இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 207 Sசோதிலிங்கம்

Page 112
ஒன்றின் மேலொன்றாகச் சிகரங்கள் இங்கே ஒரு பெளத்த சங்காராமம் இதன் அடிப்பாகம் இருள்செறிந்த ஒரு பள்ளத்தாக்கிலே உள. இதன் கம்பீரமான சேதியங்களும் உயர்ந்த விகாரங்களும் மலையிலே குடைந்து எடுக்கப்பட்டு ஆற்றை நோக்கியவாறு இருக்கின்றன. இந்தக் குகைக் கோயிலின் சுவர்களிலே புத்தரது வாழ்க்கை வரலாற்றிலுள்ள பல நிகழ்ச்சிகள் அவர் ஞானம் அமைந்ததும் பரிநிர்வாணம் அடைந்ததும் உட்பட சிறிதும் பெரிதுமான ஒவியங்களாகத் தீட்டப்பெற்று இருக்கின்றன’ எனக் கூறியமை அவற்றின் சிறப்புக்களை உணர்ந்துகொள்ள ஏற்ற சான்றுகளாகின்றன.
அஜந்தாக் குகைகளில் பழமைவாய்ந்த பத்தாம்குகை கி.மு இரண்டாம் அல்லது முதலாம் நூற்றாண்டில் வெட்டப்பட்டது. அரசன் ஒருவன் தன் பரிவாரத்துடன் போதிமரத்துக்குச் சென்று வழிபடுவதைச் சித்தரிக்கின்றது. இங்கே தீட்டப்பட்ட உருவங்கள், ஆடையாபரணங்கள், தலையணி செய்யும் விதம் எல்லாம் உண்மைக்கு மாறுபடாத வகையில் வரையப்பட்டிருக்கின்றன. ஒவியனுடைய கோடுகள் சுவரிலே எவ்வளவு திறமையுடனும் உறுதியுடனும் அழகுடனும் வரையப்பெற்றிருக்கின்றன. இந்தத் திறமையும் உறுதியும் அழகும் ஒருங்கே ஏற்படவேண்டும் என்றால் இந்தக்கலை எத்தனை தலைமுறையாக விடாது பயிலப்பட்டு இருக்க வேண்டும். இதையெல்லாம் நாம் இப்பொழுது இந்தக் குகைச் சுவரில் தெளிவாகப் பார்க்கமுடியாது. இங்கே எஞ்சியிருப்பவை பெரும்பாலும் குகையைப் பார்க்க வந்தவர்களின் கையெழுத்துக்களே.
இங்கே கெளதம புத்தரின் வாழ்க்கையிலிருந்தும் ஜாதகக் கதைகளிலிருந்தும் பெறப்பட்ட காட்சிகளும், மலர்கள், விலங்குகள் சம்பந்தப்பட்ட கலைப்பண்புக் கூறுகளும் மிகவும் நுட்பமாகத் தீட்டப்பட்டு உள்ளன. புத்தர் முற்பிறவியிலே ஆறு தந்தங்களுடன் கூடிய யானையாகப் பிறந்து யானைகளின் தலைவனாக வாழ்ந்தார். இவரிடத்தில் பொறாமை கொண்ட மனைவி ஒருத்தி பின்னர் காசியரசன் மகளாகப் பிறந்து பழிவாங்குவதை “ஷட்டதந்த” ஜாதகக்கதை கூறுகின்றது. புத்தர் இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 208 Sசோதிலிங்கம்

கண்ணில்லாத பெற்றோருக்குப் பிள்ளையாகப் பிறந்து சாமன் என்ற பெயரில் அவர்களைப் பேணி வரும்போது அரசனொருவன் தவறுதலாக அம்பெய்து கொல்வதும் பின்னர் உண்மையறிந்து வருந்தி அப் பெற்றோரை ஆதரிக்க அரசன் முன்வருவதும், இவற்றை அறிந்த பெண் தெய்வமொன்று சாமனை உயிர்பெற வைப்பதும் சாம ஜாதகக் கதையிற் சித்தரிக்கப்படுகின்றன. இக்கதை தசரதன் முனிகுமாரனை அம்பெய்து கொன்ற வரலாற்றுடன் ஒத்துச் செல்கின்றது.
கிபி 4 ஆம், கிபி 5 ஆம் நூற்றாண்டுகளில் தீட்டப்பெற்ற ஒவியங்கள் மிகவும் சிறப்புடையவை. இரண்டாவது குகையிலும் பதினேழாவது குகையிலும் அழகிய ஓவியங்கள் காணப்படுகின்றன. இரண்டாவது குகையில் ஐந்து பெண்கள் ஆராதனைப் பொருட்களுடன் காணப்படுகின்றனர். இவர்களுடைய தலையலங்காரம் சிறப்புடையது. கையில் வாத்தியங்களுடன் தேவலோகப் பெண்களும் இதர இசை வல்லுனர்களும் வானத்தில் செல்வதாகக் காட்டும் காட்சி அஜந்தா ஒவியங்களுள் சிறந்தவை. சாமரைக்காரியும் கோலஞ்செய் தோழியும் அருகில் நிற்க அரசியொருத்தி கண்ணாடியைக் கையில் வைத்துக் கொண்டு கோலம் செய்யும் காட்சியும் அழகு வாய்ந்ததே.
பதினாறாவது குகை வாகட அரசர் ஹரிசேனர் மந்திரியான வராக தேவரால் ஐந்தாம் நூற்றாண்டின் கடைசியில் வெட்டப்பட்டது. இங்கே காணப்படும் கல்வெட்டு கூறுவதுபோல “சாளரங்கள், கதவுகள், எழில்மிகு ஒவியங்களள், அழகான தூண்கள், புத்தபெருமானின் தூபம் என்பன காணப்படுகின்றன. பதினேழாவது குகையில் சிம்மல அவதானம் எனும் ஜாதகக்கதை ஒவியமாகவுள்ளது. அக்காலப் போர்முறையை இதிலிருந்து அறிய முடிகிறது. ஞானம்பெற்ற புத்தர் பல இடங்களுக்கும் சென்று ஞானவொளியைப் பரப்பிய பின் சொந்த நகருக்குத் திரும்புவதும் கையில் பிச்சாபாத்திரம் தாங்கியவராய் வரும் இந்த ஞானமூர்த்தியைக் காண்பதற்கு யசோதையும் மகன் ராகுலனும் வருகின்றார்கள்.
இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 209 Sசோதிலிங்கம்

Page 113
“நெஞ்சிற் பெருகிடும் ஆசையினாள் - பண்டை நினைவு திறந்திடும் உள்ளத்தினான் பச்சை மனத்தினில் மிஞ்சியெழும் - பெரும்
பாசத்தினாலவள் விம்’
முவதையும் தன் உயிர் எதில் பற்றும் பசையும் கண்டதோ அதையே கொழுகொம்பாகப் பிடித்துக் கொள்ளுமாறு ராகுலனின் அரும்பவிழும் இதயத்தைத் தூண்டுவதையும் தாய், குழந்தை இவ் இருவருடைய கண்கள், புருவம், அதரம், தலை இவற்றை வைத்திருக்கும் வகையின் மூலம் தெளிவாகக் காட்டிவிடுகின்றான் ஓவியன். ஏதோ சொல்லத் துடித்துக் கொண்டிருப்பது போல் மலர்ச்சி பெற்று விளங்கும் யசோதரையின் வாய் அழகுதான் என்னே! பிள்ளையுள்ளத்தோடு தன் தந்தையைப் பார்க்கும் ராகுலனின் கண்களில் வீசும் அன்பும் பக்தியும்தான் என்னே! இவ்விருவரது உருவங்களுக்கும் மாறாக உருவ அமைப்பில் இருந்து ஆடை அணிவது வரை எல்லா விதத்திலும் புத்தரின் வடிவம் மரபுக்குட்பட்டதாய் வரையப்பட்டிருக்கின்றது. எனினும் இந்த வரையறைக்குள் இந்தப் பெரிய உருவத்திலே எத்தகைய புதுமையுடன் புத்தரின் கருணைபொழியும் முகத்தையும் அருள் கனியும் கண்களையும் ஒவியன் தீட்டியிருக்கின்றான். பெண் இதயத்தினின்றும் பெரும் மென்மை உணர்ச்சியையும் சொல்லுக்கடங்காத சமய தத்துவத்தின் உண்மையையும் ஒருங்கே இந்த ஒவியத்திலன்றி உலகில் வேறெங்கேனும் காணமுடியுமா? என அறிஞர் கேள்வி எழுப்புவதும் நோக்கத்தக்கது. இதே குகையில் இந்திரனும் காந்தர்வர்களும் பாடியவண்ணம் வானத்தில் பறக்கும் காட்சி அழகாகவுள்ளது.
முதற்குகையில் போதிசத்துவ பத்மபாணி அருளும் அன்பும் ததும்பும் நிலையில் ஆன்ம ஒளி வீசிய வண்ணம் காணப்படுகின்றார். இவர் கையில் தாமரை மலர் உள்ளது. இளமை கொழிக்கும் கோலத்தில் கம்பீரமாக நிற்கும் இவரருகில் தேவ மகளிரும் காந்தர்வர்களும் அழகொளிரக் காணப்படுகின்றனர். இவர்களுக்குப் பின்புறத்தில் காணப்படும் இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 210 Sசோதிலிங்கம்

பரிவாரங்களும், அழகிய மரங்களும், மிருகங்களும் ஒவியனின் கை வண்ணத்தை அழகுறக் காட்டுகின்றன. இரண்டாவது குகையின் சுவர்களின் பின்புறத்தில் கற்பனைப் பொழிவும் பாவப்பெருக்கும் நிரம்பிய சித்திரம் ஒன்று தீட்டப்பெற்றிருக்கின்றது.
அஜந்தா ஒவியன் தன்னைச் சுற்றியுள்ள வாழ்க்கையையும் இயற்கைக் காட்சிகளையும் மிகவும் அழகாகத் தீட்டியுள்ளான். தாவரங் களையும் விலங்குகளையும் கருணையுடன் நோக்கியுள்ளான். பத்தாம் குகையின் ஆலமரத்தடியில் இருக்கும் யானைகள் பதினேழாம் குகையில் ஹம்ச ஜாதகத்தில் உள்ள அன்னங்கள் அதே குகையில் உள்ள மான்கள், பறவைகள் என்பனவும் அழகாகச் சித்தரிக்கப்பட்டள்ளன. அரசவையின் பளபளக்கும் சிறப்பு எளிமையான நாட்டுப்புற வாழ்வு இளவரசனின் மகத்துவம், துறவியின் எளிமை, பார்ப்பனனின் வறுமை என்பனவும் எழிலுறு ஒவியப்படுத்தப்பட்டுள்ளன. இருபத்தியேழாம் குகைக் காட்சி பண்புடைய இந்தியாவின் வனவாழ்வைச் சித்தரிக்கின்றது.
கி.மு 2 ஆம் நூற்றாண்டிலிருந்து கிபி 8, 9 ஆம் நூற்றாண்டு வரை வளர்ந்து வந்த இவ் ஓவியங்கள் பொதுவாக புத்தர் வாழ்க்கை வரலாற்றையும், அவரது பழம்பிறப்புக் கதைகளையும் சித்தரிப்பதன் மூலம் எத்தகைய நாகரிகம் அடைந்திருந்தனர், அவர்களுடைய பழக்க வழக்கங்கள் என்ன, அவர்களுக்குக் கலைகளிலிருந்த ஈடுபாடும், விளையாட்டுக்களில் இருந்த ஊக்கமும் எவ்வளவு, மதத்திலே அவர்களுக்கிருந்த பற்றுதல் எத்தகையது என்பவற்றையெல்லாம் நமக்குத் தெரிவிக்கின்றன. முடிவுற்ற சித்திரங்களையும், ஓவியவல்லுனர்கள் தீட்டிய பகுதிகளையும், அனுபவம் இல்லாதவர்கள் தீட்டிய பகுதிகளையும் அஜந்தாவில் அருகருகே பார்க்கின்றோம். சித்திராச்சார்யர்களும் அவர்களுடைய சீடர்களும் தலைமுறை தலைமுறையாக இங்கே வாழ்ந்து இந்த ஓவியங்களைத் தீட்டினார்கள் எனக் கருதலாம். அதனாலேயே ஒரே குகையில் பல்வேறு காலத்து ஓவியங்களை ஒன்றின் மேல் ஒன்றாக அடுத்தடுத்துப் பார்க்கின்றோம். ஒவியர்களுக்கு வாழ்க்கையில் இந்துநாகரிகத்தில் துண்கலைகள் 211 S85 Náaîi6ub

Page 114
இருந்த இனிமையும் சமயத்திலே இருந்த பற்றுதல்களையும் இவற்றினூடே சுடர்விட்டு ஒளிரும் நகைச்சுவையையும் இங்கே நாம் காண்கின்றோம்.
III. பாக் ஓவியம் (கி.பி 5ம் நூற்றாண்டு).
அஜந்தாவுக்கு வடக்கே விந்திய மலையின் தென் சரிவில் பாக் எனும் சிற்றுரின் அருகே இருக்கும் குகைளில் கிபி 5ம் நூற்றாண்டில் எழுச்சிபெற்ற ஒவியங்கள் காணப்படுகின்றன. இங்கே உள்ள ஒன்பது குகைகளும் பெளத்த பிச்சுகள் வாழ்ந்து வந்த விகாரங்களாகவே தோன்றுகின்றன. ஒவியங்கள் எதை விளக்குகின்றன என்று உறுதியாகக் கூறமுடியாவிட்டாலும் சித்தரிக்கப்பட்டுள்ள பகலவன் புத்தருடைய திருவடிகளைக் கொண்டும், பெளத்த பிச்சுக்களின் உருவங்களைக் கொண்டும் பொதுவாக புத்தருடைய வாழ்க்கையையோ அது சம்பந்தமான வரலாற்றையோதான் குறிக்கின்றது எனலாம்.
இங்கேயுள்ள ஒவியங்களுள் சிறந்தவை நான்காவது குகையாகிய ரங்கமகாலிலும் அதற்கும் ஐந்தாவது குகைக்கும் இடையேயுள்ள வெளித் தாழ்வார உட்சுவரின் மேற்பாகத்திலும் காணப்படுபவையே. இங்கு காணப்படும் பாதுகாக்கப்பட்டுள்ள ஒவியங்களுள் துயரத்தில் உள்ள இளவரசியைத் தேற்றும் தோழியின் காட்சியை ஓவியன் அழகாகத் தீட்டியுள்ளான். இரு தேவர்கள் உரையாடுவதையும் மேலும் இரு அரசர்கள் உட்கார்ந்து இருப்பதையும் இன்னொரு ஓவியத்தொகுதி சித்தரிக்கின்றது. அந்தரத்திற் பறக்கும் முனிவர்களையும் இசைக் கருவிகளை மிழற்றும் இசையாளர்களையும் பிறிதொரு ஓவியத்தொகுதி காட்டுகின்றது.
இவை தவிர இன்னொரு அழகிய காட்சி கோலாட்டக் கம்புகளுடன் வட்டமிடும் பெண்கள் வளைக்கரங்கள் தாமொலிக்கக் கொட்டியிசைத்திடும் ஓர் கூட்டமுதப்பாட்டைச் சித்தரிக்கின்றது. இப்பெண்கள் இருபிரிவாகப் பிரிந்து கோலாட்டம் ஆடுகின்றார்கள். ஒரு பிரிவில் ஏழு பெண்களும்
இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 22 Sசோதிலிங்கம்

ஆண்கோலம் பூண்ட இன்னொருத்தியும் இதில் மூன்று பெண்கள் கையிலேயுள்ள தாளத்தால் தாளமிட மூன்று பெண்கள் கோலாட்டக் கம்புகளால் அடிக்க இன்னொருத்தி மத்தளம் கொட்ட ஆண் உடை தரித்த பெண் அபிநயம் பிடிக்கின்றாள். மலர்தாங்கிய கூந்தல் கையிலே கோலாட்டக்கம்போ, தாளமோ பிடிக்கும் வகை மத்தளம் வாசிக்கும் விரல்களின் பாவனை உடுத்தி இருக்கும் ஆடை அணிந்துள்ள கச்சு இவற்றிற்கெல்லாம் மேலாக முகத்தோற்றங்கள் அனைத்தும் காலத்தின் கொடுமையால் மிகவும் ஒளி இழந்திருந்தபோதும் அழகை எடுத்துக் காட்டுகின்றன. அத்துடன் மக்களுடைய வாழ்க்கையையும் பண்பாட்டையும் விளக்குகின்றன.
இங்கே அரசபவனி மூன்றும் அழகாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன. யானைகள் மீதும் குதிரைகள் மீதும் ஊர்வலமாக அணிவகுத்துச் செல்லும் காட்சியும், வீரர்கள் கம்பீரமாக ஆயுதங்கள் தங்கியபடி செல்லும் காட்சியும் அற்புதமானவை. இன்னொரு ஓவியத்தில் விதவிதமான குதிரைகள் என்ன சந்திரவட்டக்குடை பிடித்தும் அரசனைச் சுற்றியும் செல்லும் வீரர்களின் முகபாவங்கள் தாம் எத்தனை வகை. குதிரையைச் செலுத்தியவாறு பக்கத்தில் வருபவனோடு முகத்தைத் திருப்பிப் பேசும் வீரனும் வேறு பக்கத்தைப் பார்த்து இழுக்கும் குதிரையின் லாடனைப் பிடித்து அடக்கும் வீரனும் எவ்வளவு தூரம் இயற்கைக்கு மாறாத வகையில் உயிர்பெற்று விளங்குகின்றனர்.
IV. வாதாபி ஒவியங்கள் (கி.பி 600 - கி.பி 800).
அஜந்தா ஒவியத்தின் சாயல்கள் இந்தியா முழுவதிலும் பரந்திருந்து மிளிர்ந்ததன் பேறாக கி.பி 8 - 7 ஆம் நூற்றாண்டுகளில் வாதாபியை தலைநகராகக் கொண்டு ஆண்ட சாளுக்கியர்களின் கோயில்களிலும் குகைகளிலும் இம்மரபு பிரதிபலித்தது. பின்னர் வந்த இராஷ்டிர கூடர்களின் அவையிலும் இம்மரபு தொடர்ந்து நிலவியது. இங்கு பெளத்த சமணர்களைப் போல இந்துக்களும் குன்றுகளைக் குடைந்து இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 213 Sசோதிலிங்கம்

Page 115
கோயில்களை அமைத்து அழகிய ஓவியங்களைத் தீட்டினர். அவற்றுள் ஒன்று சாளுக்கிய அரசன் மங்களேசனால் கிபி 578 இல் வெட்டப்பட்ட மூன்றாவது குகையாகும்.
இங்கே ஒருவன் குழலூத இருபெண்கள் நடனமிடும் காட்சியும் தோழியர் புடைசூழக் கம்பீரமாகக் காட்சிதரும் பெண்ணொருத்தியின் ஓவியமும் முக்கியமானவை. பறக்கும் வித்யாதர சோடிகளின் ஓவியம் சிதைந்த நிலையில் உள்ளது. அரசனாகிய மங்களநேசனின் ஓவியமும் இங்கேயுள்ளது.
V எல்லோரா ஒவியங்கள்.
இராஷ்டிரகூட மன்னர் கால ஓவியங்களை எல்லோராக் குகைகளிலும் காணமுடிகின்றது. இங்குள்ள பெளத்தமத சார்பான ஒவியங்கள் பெரும்பாலும் சிதைந்துவிட்டன. இந்துமதக் கோயில்களான கைலாசநாதர் கோயில், தசாவதாரக்குகை, கணேசர்குகை, துமார்லேனா முதலியவற்றில் காணப்பெறும் ஓவியங்களே எட்டு முதல் பன்னிரண்டாம் நூற்றாண்டு வரை தமிழ்நாட்டு ஓவியம் வளர்ந்த வகையை அறிய உதவுகின்றன.
இவை மண்டபங்களின் விதானங்களிலும் சுவர்களிலும் காணப்படுகின்றன. கைலாசநாதர் கோயிலில் ரங்கமகாலில் சில ஓவியங்கள் உள்ளன. தாமரைத் தடாகமொன்றில் இரண்டு யானைகள் குளிக்கும் காட்சி, யானைகளுடன் காணப்படும் குள்ளர்கள், யாளியின் மீது செல்லும் தேவன் காந்தர்வர்களும் வித்தியாதாரர்களும் ஆடிப்பாடித் தழுவிச் செல்லுதல் ஆகிய காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளன. இதே பக்கத்தில் பூமகளும், திருமகளும் அவரவர் வாகனங்களில் அமர்ந்திருக்க திருமால் கருடன் மீது காட்சி தருகிறார். இந்த ஓவியங்களுக்கு மேலே விநாயகர், சிவன், பார்வதி, சுப்பிரமணியர் ஆகியோருடைய ஓவியங்கள் உள்ளன.
சிவனுடைய ஓவியம் தமிழ்நாட்டு விக்கிரகத்தை நினைவு படுத்துகிறது என்பர் இராமசுவாமி. சிவபிரானது தாண்டவ வடிவம் இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 214 Sசோதிலிங்கம்

ஒன்றும் இங்கே காணப்படுகிறது. இது சதுர நடன அமைப்பில் உள்ளது. கைலாசநாதர் கோயிலின் மேற்கு வாயிலருகில் போர்க்காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளன. யானைப்படை, குதிரைப்படை என்பவற்றுடன் வீரர்களது கம்பீரமான தோற்றமும் நன்றாக ஓவியப்படுத்தப்பட்டுள்ளன. சமணர்களுடைய துமரலேனர் கோயிலில் சமண நூல்களை விளக்கும் காட்சிகளும், மிகுதியான மலர்கள், விலங்குகள், பறவைகள் என்பவற்றைச் சித்தரிக்கும் காட்சிகளும் உள்ளன. இத்தகைய புதிய இயல்புகளை நான்கு நூற்றாண்டுகளாக எல்லோரா ஒவியங்களில் மாத்திரமல்ல சிறிது சிறிதாக மக்கள் உறவால் நாட்டின் பல பாகங்களிலும் இவை பரவி வளர்ச்சியடைந்தன என்றே கூறலாம்.
VI. இராஜபுத்திர ஓவியங்கள். (18 ஆம் நூற்றாண்டு) 18ஆம் நூற்றாண்டிலும் அதற்குப் பின்னும் வர்ச்சித்திரங்கள் இராஜஸ்தானத்தில் வரையப்பட்டு வந்ததை பிக்கானிர், உதயப்பூர் அரண்மனைகளிலும், ரோடாவில் உள்ள தாம்பேகள்வாடா, விட்டல், மந்திரம் முதலிய இடங்களிலும் தால்பெகட் நரசிம்மதேவர் ஆலயத்திலும், ஆர்ச்சா லக்சுமி ஆலயத்திலும் இந்துர் மாதியாக்கிலும் காணலாம் இதே நூற்றாண்டில் இராஜஸ்தானத்தில் வளர்ந்த ஓவியக் கலையின் எடுத்துக் காட்டாக ஜெய்ப்பூரில் பிரதாப்சிம்மரது காலத்தில் (கிபி 1778 - 1803) வரையப்பட்ட ராசமண்டலம் எனும் சித்திரத்தைக் கொள்ளலாம். சித்திரத்தின் நடுவே கருங்கண் தோகை மயிற்பீலி அணிந்து கட்டி, நன்கு உடுத்த பீதக ஆடை அருங்கல உருவில் ஆயர்பெருமான் ராதையுடன் ஆடுகிறான். இவர்களைச் சுற்றி மூன்று வட்டமாக நின்று மட மயில்களோடு மாண்பினை போல மங்கைமார்கள் “லயம் கொண்டு சிலம்பு புலம்பிடவேஅங்கை வயல்கள் கிலுங்கிடவே” கண்ணன் புகழ்பாடி ஆடுகிறார்கள். இந்த மோகன ஆட்டத்தை பதினாறாமாயிரவர், தேவிமர் பார்த்திருப்பதோடு அல்லாது தங்கள் தங்கள் வாகனங்களில் வந்து நின்று விண்ணின் மீதமரர்கள் விரும்பித் தொழுவதாகவும் சித்திரம் தீட்டப்பெற்றிருக்கின்றது. முகலாய உறவு அதிகரிக்க அதிகரிக்க உருவப் படங்கள் தீட்டும் வழக்கமும் பெருகிற்று. ஜெய்ப்பூரிலும், பிக்கானிலும் இத்தகைய சித்திரங்கள் காணக்கிடக்கின்றன. இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 215 Sசோதிலிங்கம்

Page 116
திருவனந்தபுரம் பூீரீபத்மநாப சுவாமி கோயில் கருவறையைச் சுற்றி ஒவியங்கள் வரையப்பட்டன. இவை இராமாயணம், மகாபாரதம், பாகவதம் ஆகியவற்றிலிருந்து எடுத்தகாட்சிகளைக் கொண்டு விளங்குகின்றன. ஏற்றுமானூரில் முயலகன் மீது நிற்கும் நடராஜ வடிவம் பட்டக்கல் நடராஜ வடிவத்தையும், நல்லூர் நடேச படிமத்தையும் ஒத்துள்ளது. இவை எல்லோராவில் உள்ள கைலாசநாதர் கோயில் ஓவியங்களை ஒத்துள்ளன. தஞ்சாவூர் திருபுராந்தகள் ஒவியத்துடனும் விஜயநகரப் லேபாசியில் உள்ள வீரபத்திரர் ஓவியத்துடனும் இந்த நடராஜரை ஒப்பு நோக்கலாம். திருவஞ்சைக்களம், பள்ளிமனை, திருப்பரயாறு, திருக்குர், வடக்குநாதர் கோயில், பத்மநாபபுரம், கிருஷ்ணாபுரம் ஆகிய இடங்களிலுள்ள ஓவியங்கள் சேர்கால ஒவியங்களின்
சிறப்புக்கு எடுத்துக்காட்டுக்களாக உள்ளன.
திருமூலக்குளம் இலட்சுமணன் கோயில், அரண்முளை விஷ்ணு கோயில், பனையன்னார்காவு சிவன், பகவதி கோயில்கள், திருச்சக்கரபுரம், திருக்கடித்தானம் கோயில்கள் இவற்றின் சுவர்களில் காணும் ஒவியங்கள் எல்லாம் இந்த நூற்றாண்டைச் சேர்ந்தவை. கிருஷ்ணபுர அரண்மனைச் சுவரில் காணும் கஜேந்திரமோட்சம் என்ற ஓவியமும், திருவனந்தபுரம் கோட்டைக்குள் இருக்கும் கறிவேலைப்புற மாளிகையில் காணும் ஓவியமும் இதேகாலத்தில் தீட்டப்பட்டவை. இதே காலத்தில் திருவஞ்சைக் களம், திருச்சூர், செம்மந்தட்டை, பெருவனம் கோயில்களில் காணும் ஒவியங்களும் மட்டாஞ்சேரி அரண்மனையில் கீழேயுள்ள அறையில் காணும் பார்வதி பரமேசுவரர் திருக்கல்யாணத்தையும் குமரப் பெருமானின் திருவவதாரத்தையும் சித்தரிக்கும் ஓவியங்களும் பார்வதியின் கோலத்திரு மேனியை மங்கலக் கோலஞ்செய்யும் காட்சியும், அவனை மணவறைக்கு இட்டுச்செல்லும் காட்சியும் மிக அற்புதமாகக் காணப்படுகின்றது.
மொகலாய மன்னர் காலத்திலும் அதற்குப் பின்னும் பண்டைய ஓவியக்கலைமுறை கலைகளைப் பிற்பற்றி வரையப்பெற்ற ஓவியங்களை இராஜபுத்திர ஓவியங்கள் என்பர் ஆனந்தக்குமாரசுவாமி. பதினாறாம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பப்
இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 216 Sசோதிலிங்கம்

பகுதிவரை வரையப்பட்பட்ட ஓவியங்களே இவையாகும். ஆனந்தக் குமாரசுவாமியால் இராஜபுத்திர ஓவியங்கள் என உலகுக்கு அறிவிக்கப்பட்டு புகழடைந்தவற்றுள் பெரும்பாலான காங்டா ஒவியங்களே பதினேழாம் நூற்றாண்டிலிருந்தே இங்குள்ள ஒவியங்கள் காணப்படுகின்றன. சைவ, வைணவ புராணக் கதைகளும் நாயகி, நாயக சித்திரங்களும் கேசவதாசர் முதலிய கவிஞர்களின் கவிதைகளை விளக்கும் சித்திரங்களும் காங்டாவில் தீட்டப்பெற்றன. கிருஷ்ண லீலைக் கதைகளும், காதற் கவிதைகளும் மக்களின் தினசரி வாழ்க்கையைச் சித்தரிக்க உதவுகின்றன.
மேலும் இங்கு வரையப்பட்ட ஓவியங்கள் இந்துசமய, இதிகாச புராணக் கதைகளையே பொருளாகக் கொண்டுள்ளன. அதனால் இவ் ஒவியங்களை இந்து ஓவியங்கள் என்பர். அஜந்தா, சித்தன்னவாசல், சிகிரியா ஆகிய இடங்களில் தோன்றிய ஓவியங்களின் பின்னர் எழுந்த எழுச்சிமிக்க படைப்புக்கள் இராஜபுத்திர ஓவியங்களாகும். இவ் ஓவியங்கள் பண்டைய ஓவியங்களைப் போலச் சிறப்புடையன என்று கூறமுடியாது. ஆயினும் இந்தியக் கலையம்சம் பொருந்திய நல்ல ஒவியங்கள் என்பதையும் மறுக்க முடியாது.இவ் ஓவிய மரபு தஞ்சாவூர் மகாராசா காலத்தில் தென்னிந்தியாவில் பரவத்தொடங்கி தஞ்சையை ஆண்ட சிவாஜி அரசன் (1835 - 1855) காலத்தின் பின்னர் அருகிவிட்டது என்றே கொள்ளமுடிகின்றது.
காங்டாவில் கமந்த்சந்த் (கிபி 1751 - 74), சம்சார்சந்த் (கிபி 1775 - 1823) காலத்தில் ஓவியக்கலை புகழடைந்தது. “ஓவியக்கலையில் விருப்பம் கொண்ட சம்சர்சந்தின் அரசவையில் பல ஒவியர்கள் இருந்தனர். இவர் ஒரு பெரிய ஓவியத்தொகுதி சேகரித்து வைத்திருக்கின்றார். இவற்றுள் பெரும்பான்மை கிருஷ்ண பலராமர் கதைகள் அருச்சுனனது வீரச்செயல்கள், மகாபாரதக் கதைகள் என்பவற்றைச் சித்தரிப்பனவாக இருக்கின்றன. அருகிலுள்ள அநேக அரசர்கள், அவர்களின் முன்னோர், இவர்களுடைய உருவ ஒவியங்களும் இங்கே காணப்படுகின்றன. சம்சார்சந்தின் அரசவைக்குச் சென்ற (கிபி 1821) கிராப்ட் என்னும் ஆங்கிலேயர் கூறுகிறார் பொதுவாக புராணக்கதைகள் அனைத்துமே இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 217 Sசோதிலிங்கம்

Page 117
இங்கு நன்கு சித்தரிக்கப்பட்டாலும் கோகுலபாலனாகவும், கோபாலனாகவும் கோபியர் தோழனாகவும் தோற்றமளிக்கும் சிறந்த கோலங்களில் கிருஷ்ண லீலைகளைச் சித்தரிக்கும் காட்சிகளே ஒப்புயர்வற்று விளங்குகின்றன.
காங்டாவையொட்டியது கட்வால் எனும் மலைநாடு இங்கே காளியமார்த்தனம் அழகிய ஓவியமாகவுள்ளது.
66 娥
தடம்படு தாமரைப் பொய்கை கலக்கி விடம்படு நாகத்தை வால்பற்றியிர்த்து படம்படு பைந்தலை மேலெழப் பாய்ந்திட்டு”
கண்ணன் காளிங்கனின் உச்சியில் நடனமிடும் காட்சி அற்புதமாக உள்ளது. காளிங்கனின் மனைவியர் கண்ணனின் இருபுறமும் நின்று அருள்புரிய வேண்டுகின்றனர், பொய்கைக் கரையில் யசோதையும், நந்தகோபாலனும், கோகுலவாசிகளும், அவர்களின் பசுக்களும், பயமும், ஆச்சரியமும் துயரமும் தோன்ற நின்று கவனிக்கும் காட்சி என்பன ஒவியத்தில் அழகுணர்ச்சியுடன் தீட்டப்பட்டுள்ளன. பிறிதொரு சிறந்த ஒவியம் சிவ - பார்வதி ஒவியமாகும். நிலவொளி வீசும் இரவில் புலித்தோலை விரித்து உருத்திராக்க மாலையணிந்து சிவபெருமான் அமர்ந்திருக்கின்றார். அவர் மடியிலே தலைவைத்துப் பார்வதி தூங்குகின்றாள். பின்னால் பனிமூடிய மலையும் தாமரைத் தடாகமும் தமரு, கமண்டலம் இவற்றைத் தாங்கிக் கம்பீரமாக வலப்பக்கம் நிற்கின்றது. சிவபெருமானது திரிசூலம், நந்தி இடப்புறம் தலைகுனிந்து காவல் புரிகின்றது.
இராஜபுத்திர ஓவியங்கள் பெரிதும் வைஷ்ணவ சமயம் சார்ந்த கதைகளையே விளக்குகின்றன. குறிப்பாக இராதாகிருஷ்ண பிருந்தாவன லீலைகளைச் சித்தரிக்கின்றன. வைஷ்ணவ பத்திநெறி இவ் ஓவியங்கள் ஊடாகப் பரவியதென்பர். இவை தவிர நளன் - தமயந்தி மார்க்கண்டேய புராணம் கூறும் தேவி மகாத்மியம் ஆகிய கதைகளையும் இவ் இந்துநாகரிகத்தில் துண்கலைகள் 218 Sசோதிலிங்கம்

ஒவியங்கள் விளக்குகின்றன. இக்கால ஓவியங்களுள் சிறந்த பகுதிகள் எனப்படுபவன இராகஇராகினி ஒவியங்களும், நாயக - நாயகி பாவனையில் அமைந்த ஓவியங்களுமாகும் இராகங்களைக் காதினாற் கேட்டு இன்புறுதல் போல இவற்றின் இயல்புகளைக் கண்களினாற் பார்த்தும் இன்புற இவ் ஒவியங்கள் கருவிகளாக அமைகின்றன. இராகங்களின் இயல்புகளை உருவகப்படுத்தி ஒவியங்களாக வரைந்து கண்ணுக்கு விடயமாகக் காட்டுவதில் இராக - இராகினி ஒவியங்கள் தலைசிறந்து விளங்குகின்றன.
காதல்துறையில் காணப்படும் பலவகையான மனவுணர்வுகளைச் சித்தரிக்கும் ஓவியங்களாக நாயக - நாயகி பாவனையிலமைந்த ஓவியங்கள் உள்ளன. காம சாஸ்திர நூலார் நாயக, நாயகியரை எட்டு வகையாகப் பீப்பர். அவ் எட்டு வகையினரையும் இவ்வோவியங்கள் விளக்கி நிற்கின்றன. “ஊர் சென்ற கணவனைப் பிரிந்து உருகும் மனைவியின் தாபம், வேறொருத்தியோடு கூடிக் காலையில் வந்த கணவனைக் கண்டு வெகுளும் மனைவியின் கள்வம், படுக்கையிலிருந்து கொண்டு கணவன் வரவை எதிர்பார்க்கும் மனைவி, குறித்த இடத்திற்கு விரைந்து செல்லும் மங்கை, வெட்கமும் நாணமுங் கொண்ட மணமகள் முதலியவர்களை விளக்கும் இராஜஸ்தானி, பஹாரி சிற்றோவியங்களில் இந்து சமயப் பக்திப்பெருக்கையும் தன்னலமற்ற தியாகத்தையும் நன்கு காணமுடிகின்றது.
இராஜஸ்தான் ஓவியங்கள் அக்கால மக்களுடைய சமயப் பண்பாட்டையும் நாகரிகத்தையும் வாழ்க்கை முறைகளையும் அறியப் பெரிதும் உதவுகின்றன. இவை இந்திய ஓவியங்களின் கலை வனப்புக்கும், ஆன்ம இயல்புக்கும், கண்கவர் தன்மைக்கும் சான்றாக உள்ளன என்பர் இராஜஸ்தான் ஒவியங்களை ஆராய்ந்த அறிஞர் கங்கூலி என்பவர். இத்தகைய நிலையில் 18ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து ஏறக்குறைய எழுபத்தைந்து ஆண்டுகளாக லாகூரிலும் அமிர்தசரசிலும் சீக்கியர்களின் ஆட்சியில் ஓவியக்கலை வளர்க்கப்பட்டது. லாகூர் கோட்டையில் ரஞ்சித சிம்மன் கட்டிய மாளிகையொன்றின் தாழ்வாரத்தில் கிருஷ்ண லீலை, இராமாயணக் கதைகள், சீக்கிய குருக்களின் இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 219 Sசோதிலிங்கம்

Page 118
உருவங்கள் போன்றவை சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. மழைக்காலத்தில் மரத்திலே ஊஞ்சல் கட்டி பெண்ணொருத்தி விளையாடும் காட்சி அருமையாக அமைந்துள்ளது. கையை நீட்டி ஊஞ்சலைத் தள்ளப் போகும் நிலையில் நிற்கும் உருவங்களும், மழையின் ஆரவாரத்தைக் கேட்டுத் தோகை வித்தாடும் மயில்களும் அழகுறத் தீட்டப்பட்டுள்ளன. ரஞ்சிதசிம்மன் சமாதி, பாய்வஸ்திரம், தர்மசாலை முதலிய கட்டடங்களின் சுவர்களிலும் ஒவியங்கள் காணப்படுகின்றன. மேனாட்டு உறவால் உருவ ஒவியங்கள் இங்கு அதிகமாக வரையப்பட்டன. அரசர்களும் பெருமக்களும் தங்கள் உருவங்களோடு தங்கள் குடும்பத்தினரின் உருவங்களையும் வரையச் செய்தார்கள். உருவ ஒவியங்களின் சிறந்த சான்றாக பிரிட்டிஷ் பொருட்காட்சிச் சாலையிலுள்ள குலாப்சிம்மனும் அவர் குமாரர்களாலும் தீட்டப்பட்டுள்ள சித்திரத்தைக் கொள்ளலாம்.
VI. சேரர் ஓவியங்கள்.
தமிழ்நாட்டுக் கலைமரபில் நின்றும் வேறுபட்ட ஒரு கலைமரபாகத் தோன்றியது சேரர்பாணி. அக்காலச் சிற்பம், மரச்செதுக்குவேலை என்பனவற்றைப் பெரிதும் ஒத்துள்ளது. கதகளியை நினைவுகூரும் வகையில் ஆடை அணிகள், அணிகலன்கள், கிரீடம் என்பன காணப்படுகின்றன.
சேரர் ஓவியங்கள் வாய்பெரிதும் அகன்றும், கண்ணோரமாகச் சாய்ந்தும், உடல் கனமாக அமைந்தும், இதழ்களில் புன்னகை பூத்தும் காணப்படுகின்றன. நம்பூதிரிகளின் உச்சிக் குடுமியும் அழகாகச் சித்தரிக்ககப் பட்டுள்ளது. மேலும் தெய்வ உருவங்களும் இராமாயண, மகாபாராத புராணக் காட்சிகளும் எழிலாகத் தீட்டப்பட்டுள்ளன.
தக்கிண ஓவியங்கள்.
பதினைந்தாம் நூற்றாண்டின் இறுதியில் உருவாக்கப்பட்ட ஓவியக் கலைமரபாகக் காணப்படுகிறது. இக்கால ஓவியச் சிறப்புக்கு புல்லும் செடியும் வளர்ந்த தரையில் இடது கையில் வீணையும், வலது கையில் சங்கும் ஏந்தி லலிதாசனத்தில் அமர்ந்துள்ள ஒரு பெண்னின் சித்திரம் இதற்குச் சான்று. சுருங்கிய நெற்றி, நீண்ட எடுப்பான மூக்கு, இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 220 Sசோதிலிங்கம்

நன்கு விரிந்து காதளவு நீண்டு கூர்மையாகச் செல்லும் கண்கள் இவை. இவ்வோவியங்களின் தனி இயல்புகள்.
பதினேழாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் தக்கிணத்தில் கோல் கொண்டாவை சிறந்த நகரமாய்த் திகழ்ந்தது. கிபி 1581 - 1612 வரை கோல்கொண்டாவை ஆண்டுவந்த முகம்மது குலிகுதுப்ஷாவின் காலத்திலே வரையப்பட்டதாகவே கருதப்படுகின்றது. மங்கையும் மைனாவும் என்னும் ஓவியம், அப்துல்லா பவனி செல்லும் வேறிரண்டு ஒவியங்கள் வியன்னாவிலும், லெனின் கிராடிலும் இருக்கின்றன. இவற்றுள் லெனின் கிராட் ஓவியமே சிறப்புற்றுத் திகழ்கின்றது.
பதினெட்டாம் நூற்றாண்டில் ஹைதராபாத்தில் வளர்ந்த ஓவியக் கலையின் சான்றுகளை அங்குள்ள பொருட்காட்சிச் சாலையிலும் ஸாலர் ஜங்பொருட் காட்சிச் சாலையிலும் லண்டனில் பிரிட்டிஷ் பொருட்காட்சிச் சாலையிலும், இந்திய காரியாலயத்திலும் காணலாம். தக்கிண ஒவிய மரபோடு இராஜபுத்திர ஓவிய மரபும் இங்கு கையாளப்பட்டது.
VII, பிற்பட்ட காலம்.
தமிழ்நாட்டிலே தென்கோடிக்கு அருகில் சிற்புரல் மலைக் கோயிலில் காணும் ஒவியங்களை 18 ஆம் நூற்றாண்டு ஓவியங்களெனக் கொள்ளலாம். தஞ்சாவூர் கோயிலில் காணப்படும் ஒவியம் பற்றி வரகூர் கோபால பாகவதர் ஓவியத்தினின்றும் தெரியவருகின்றது. தூய்மையும் பக்தியையும் உருவெடுத்த பாகவதரை கிபி 1869 இல் தாம் கண்டபொழுது தமக்கு ஏற்பட்ட உணர்ச்சியைக் கீழ் வருமாறு மகாமகோபாத்தியாய சாதிநாத ஐயர் வெளியிடுகின்றார். பளபளவென்ற அவர் மேனியும் விபூதி தாரணமும், துளசி மணிமாலையும் தூய உடையையும் என் கண்களைக் குளிர்வித்தன எனக் கூறல் அதன் சிறப்பை உணரக் காரணமாகின்றது. இவற்றுக்கும்
பிற்பட்ட காலத்திலே தோன்றியவையாகக் காணப்படுபவை.
இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 221 Sசோதிலிங்கம்

Page 119
  

Page 120
விண்டு உதிர்ந்துபோய் அதன் அடியில் பாறையோடு சேர்ந்து வரையப்பட்டுள்ளன. சில ஓவியச் சின்னங்களாக காணப்படுகின்றது. இவை மகேந்திரவர்ம பல்லவன் காலத்தில் வரையப்பட்டவையாக இருக்கலாம் என்பது அறிஞர்களது கருத்து.
பல்லவாரத்திலும் காஞ்சிபுர ஏகாம்பர நாதர் கோயில் மண்டபத் தூண் ஒன்றிலும் காணப்படும் கல் வெட்டுக்களில் மகேந்திரவர்ம பல்லவனுக்கு அணி செய்யும் அநேக விருதுகளில் “சித்திரகாரப்புலி’ என்பதும் ஒன்று. விருதுக்கேற்ப ஓவியக்கலையை மிகுந்த ஈடுபாட்டுடன் அவன் வளர்த்தான் என்பதனை நாம் அறியலாம். இவனது காலத்து ஓவியங்கள் எதுவும் இப்பொழுது கிடைக்கவில்லை. ஆனால் இவனுக்குப் பின் ஆட்சிபுரிந்த இராஜசிம்மனாற் கட்டப்பட்ட காஞ்சி கைலாசநாதர் கோயிலும், பனைமலை தாலகிரீசுவரர் கோயிலும் அழகிய ஓவியங்கள் காணப்படுகின்றன. இவை தவிர மாமல்லபுர குகைக் கோயில்கள் சிலவற்றிலும் முன்பு ஓவியங்கள் இடம்பெற்றிருந்ததற்குரிய ஆதாரங்களாக அழிந்த நிலையிலுள்ள வர்ணப் பூச்சுக்கள் காணப்படுகின்றன. கழுத்தில் மணியும் காதுகளிற் குண்டலங்களும் காணப்படுகின்றன. தலைக்கு மேல் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய வெண்கொற்றக் குடையொன்று உள்ளது. ஊழிக்காலத்து சிவபிரான் ஆடும். ஊழிக்கூத்தே இதுவாகும். இதனையே சம்ஹாரத் தாண்டவம் என்பர். கைலாசநாதர் ஆலயத்தின் சிற்றாலயங்கள் சிலவற்றிற் காணப்படும் சம்ஹாரத் தாண்டவத்தினை இது ஒத்திருக்கின்றது எனக் கூறுவார் நாகசாமி.
இவ்வாலயத்தைச் சுற்றியுள்ள சிறுமண்டபங்கள் சிலவற்றுள் காணப்படும் ஓவியச் சின்னங்களும் சோமாஸ்கந்தரது உருவமும் ஒரு முகத்தின் இடப்பகுதியும் சிறப்பானவை. இதன் அடிப்படையில் கோயிலின் உண்ணாழிப் பகுதியில் சோமஸ்கந்தரை எடுப்பித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சோமஸ்கந்தர் ஓவியங்களைத் தீட்டியுள்ளனர். குறிப்பாகச் சிற்றாலயம் எண் 3, 23, 41, 43 ஆகியவற்றில் தீட்டப்பெற்றுள்ள சோமாஸ்கந்தர் ஓவியங்கள் சிறப்பானவை. இந்துதாகரிகத்தில் துணிகலைகள் 224 Sசோதிலிங்கம்

நீண்ட சதுரபீடத்தின் மீது சிவன், பார்வதி, குழந்தை, முருகன் ஆகியோர் அமர்ந்த நிலையில் தீட்டப்பெற்றுள்ளனர். பீடத்தின் மீது மலர் வடிவில் வண்ணம் தீட்டப்பெற்றுள்ளது. ஆடையின் மீது விவரியாகவும் வட்டமாகவும் வண்ணம் தீட்டப்பெற்றுள்ளது. வெண்மை, மஞ்சள், நீலம், பச்சை, காவிச் சிவப்பு ஆகிய வண்ணங்கள் தீட்டப்பெற்றுள்ளன. சோமஸ்கந்தர் உருவத்தின் பின்பக்கம் நான்முகனும் திருமால் உருவங்களும் தீட்டப்பட்டுள்ளன.
சிவாலயம் எண் 41 இன் மேற்குப் பக்கம் சோமஸ்கந்தர் உருவம் முழுவதும் கோட்டுருவமாகத் தீட்டப் பெற்றுள்ளது. வண்ணம் தீட்டப் பெறவில்லை. இவ்வோவியம் பெரிய அளவில் காட்சி தருகின்றது. இராஜசிம்மன் மகனான இரண்டாம் பரமேஸ்வரன் கிபி 725 - 732 காஞ்சியில் கட்டிய வைகுந்தப் பெருமாள் கோயில் விமானத்திலும் ஓவியச் சின்னங்கள் தெரிகின்றன. பல்லவ காலத்து ஓவியங்களுள் வண்ணம் அழிந்துவிட்டபோதும் வரியின் உயர்வு நம்மைக் கவர்கின்றது. சான்றாக மாமண்டூர் கோயிலில் காணப்படும் தாமரை மலரையும் பனைமலைப் பார்வையும் காஞ்சிக் கைலாசநாதர் கோயிலில் காணும் ஒரு முகத்தின் இடப்புறத்தையும் கூறலாம். நீரில் நிற்கும் தாமரைத் தண்டின் நிமிர்ந்த நிலையும் விரிந்த மலரின் வனப்பும் நீண்ட கண்களின் கருணை நிரம்பிய பார்வையும் நன்கு வரையப்பெற்றிருக்கின்றன.
பனைமலைச் சிவன் கோவிலின் உட்புறச்சுவிலே பல கரங்களுடன் ஊர்த்துவ தாண்டவமாடும் சிவனும் அவரது நாட்டியத்தை கண்டு களிக்கும் உமையும் காணப்படுகின்றனர். இவற்றுள் பார்வதியின் ஓவியம் பவனியாக வடக்குப் பக்கம் சிற்றாலயத்தின் உட்சுவரில் தீட்டப்பட்டுக் காணப்படுவது இக்கோயிலுக்குச் சிறப்பளிப்பதாக உள்ளது. தேவி வலது காலை ஊன்றி இடதுகாலை எழிலாக வளைத்து வைத்திருப்பதாக தீட்டப்பெற்றுள்ளது. இடையில் அணிந்துள்ள ஆடைப்பகுதியில் கொடிகளும் பூக்களும் காணப்படுகின்றன. பல்லவர் காலத்தில் பெண்கள்
இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 225 S.C. Isbist)

Page 121
மென்மையான அழகுவாய்ந்த ஆடைகளை உடுத்தியிருந்தனர் என்பது தெரிகின்றது. முகபாவத்தை வெளிப்படுத்தும் வகையில் மென்மையான கோடுகள் வரையப்பட்டு வண்ணம் தீட்டப்பட்டுள்ளது. கண் இமையும் கருவிழியும் பல்லவர்கால ஓவியக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். இதில் தேவியின் மகுடத்துடன் கூடிய சிரசிற்கு மேலாகத் தொங்கலுடன் கூடிய மயில்தோகை விரித்தாற் போன்று நீல வண்ணத்தில் குடை ஒன்று வண்ண ஒவியமாகத் தீட்டப்பட்டுள்ளது. அழகு தேவதை போன்று தீட்டப்பட்ட தேவியின் கழுத்தில் மணிமாலை அசையக் காதில் குழையுடன் காட்சியளிக்கின்றாள். திரிபங்க நிலையில் கல்பலதா பாணியில் பட்டுப் பாவாடையுடன் அஜந்தாக்குகை எண் 1 இல் தீட்டப்பெற்றுள்ளன. அவலோகீஸ்வரர் பத்மபாணியை ஒத்துக் காணப்படுகின்றது. மகுடத்துடன் லகுவாக தலை சாய்த்துக் காணப்படுகின்றது. இக்காட்சி காண்பவர் கண்களுக்கு அரிய விருந்தாக அமைந்துள்ளது. இந்த ஓவியம் அஜந்தா, சிகிரியா ஆகிய இடங்களில் தீட்டப்பெற்றுள்ள பெண் ஒவியங்களை ஒத்துக் காணப்படுகின்றன. மென்மையான கோடுகளால் மகுடமும், முகம் இளம் மஞ்சள் நிறத்திலும், உடல் இளஞ்சிவப்பு நிறத்திலும், மேல் ஆடை சிவப்பும் மஞ்சளும் கலந்த வண்ணத்தில் தீட்டப்பட்டுள்ளன.
வடதிசையில் உள்ள சிற்றாலயத்தில் இலிங்கத்தின் பின்புறம் ஊழிக் காலத்தின் இறுதியில் அனைத்து உலகத்தையும் அழித்துச் சிவபிரான் ஆடுகின்ற ஊழிக்கூத்து சம்ஹாரத் தாண்டவம் தீட்டப்பட்டுள்ளது. இந்தவகை நடனத்தைக் காஞ்சி கயிலாசநாதர் கோயிலிலும் மாமல்ல கடற்கரைக் கோயிலிலும் காணமுடிகின்றது. வலது காலை மடக்கித் தரையில் பதியவைத்து இடது கால் முட்டிய பகுதியினைத் தரையில் தொடும்படி செய்து கால் பாதத்தினைப் பின்புறமாக மடக்கி வைத்து முன் வலதுகை கஜகஸ்தத்தில் காட்டப்பட்டுள்ளது. இடது முன் கையினை மேலே உயர்த்தி மகுடத்துடன் கூடிய சிரசினை நோக்கி விஸ்மயம் காட்டித் தாளசம் போதிதம் பாணியில் இவ்வோவியம் தீட்டப்பட்டுள்ளது. மற்றக் கைகளில் தீ, உடுக்கை, பரசு, பாசம் ஆகியவை காட்டப்பட்டுள்ளன. சிவபெருமான் ஒவியத்தின் பெரும்பகுதி சிதைந்து இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 226 Sசோதிலிங்கம்

விட்டது, உமையின் ஓவியம் பாதுகாக்கப்பட்டுள்ளது. இறைவியின் தலையில் உள்ள மகுடமும் ஆடை அலங்காரங்களும் பல்லவர் காலத்துக்குரியனவென்று தெளிவாகத் தெரிகின்றன.
பல்லவர்கால ஓவியக்கலை மாட்சியைத் திருச்சிராப்பள்ளி 25 கல் தொலைவிலுள்ள சித்தன்ன வாசலின் சிறியதொரு மலையின் குகைக் கோயிலிலே உள்ள சுவர்களிலும் தூண்களிலும் தீட்டியுள்ள அழகிய ஒவியங்களில் காணலாம். தொடக்கத்தில் இந்த ஓவியக்கலை முதலாவது மகேந்திரவர்மன் காலத்தவையென அறிஞர்கள் கருதினர். இப்பொழுது இவை பாண்டியர் காலத்துக்குரியவை எனத் தெரியவந்துள்ளது.
இராசசிம்மனுக்குப் பின்னர் பல்லவர்கள் விட்டுச்சென்ற ஒவியங்கள் என்று கூற அதிகமாக ஒன்றுமில்லை. எனினும் கிபி 8 ஆம் நூற்றாண்டின் இறுதி அல்லது 9 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தைச் சார்ந்த ஒவியங்கள் ஆர்மாமலை என்னுமிடத்தில் உள்ளன. இவை வட ஆற்காடு மாவட்டத்தில் மலையாம்பட்டி என்னுமிடத்தில் உள்ளன. இங்கே சமணத் துறவியர் வாழ்ந்த குகையொன்று காணப்படுகிறது. இக்குகையின் சுவர்களிலும் விதானங்களிலும் ஒவியங்கள் தீட்டப்பட்டன. விதானங்களில் உள்ள ஒவியங்களே இன்று அழியாது எஞ்சியுள்ளன. மண்சுவரின் மீது ஒவியங்கள் ஆங்காங்கே தென்படுகின்றன. ஒரு இடத்தில் மட்டும் ஒரு மனித முகத்தின் பகுதி தெரிகின்றது குகைத் தளத்தின் மேல் விதானத்தின் சுதை பூசி அதன் மீது ஒவியங்கள் தீட்டப்பட்டுளன. ஒரு பகுதியில் வளைந்து செல்லும் கொடிகளும் இலைத் தவிர்களும் தீட்டப்பட்டுள்ளன. மற்றொரு பகுதியிற் இறக்கையை விரித்துத் தலைவைத் திருப்பி நிற்கும் நிலையில் அழகிய உயிர்த்துடிப்புள்ள அன்னங்களை வரைந்துள்ளனர். இங்குள்ள ஓவியங்கள் சதுரமான கட்டடங்களை அமைத்து அவற்றின் உள்ளே வரையப்பட்டுள்ளமை சிறப்புடையதாகும். சுற்றிலும் எட்டுச் சதுரமாகவும் நடுவில் ஒரு சதுரமாகவும் கட்டடம் அமைந்துள்ளது. இவற்றில் தற்பொழுது இரண்டு கட்டங்களில் மட்டும் ஓவியங்கள் காணப்படுகின்றன. இவ் ஓவியங்கள் திசைக்காவலர் எண்மரின் இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 227 Sசோதிலிங்கம்

Page 122
ஒவியங்கள் ஆகும். நீள் தாடியும், தீப்பிழம்பு போன்ற சடைமுடியும் மார்பில் புரிநூலும் அலங்கரிக்க அக்னிதேவன் தன் தேவியுடன் ஆட்டின் மீது அமர்ந்து விரைந்து வரும் காட்சி இடம்பெற்றுள்ளது. அக்கினி தேவனின் இடக்கரம் விஸ்மயத்திலும் வலக்கரம் மரத்தினை ஏந்தியும் உள்ளன. அடுத்த கட்டத்தில் முட்டப் பாய்வது போன்ற எருமைக் கடாவின் தலைப்பகுதி அழிந்து காணப்படுகின்றது.
மற்றொரு பகுதியில் தடாகம் ஒன்று தீட்டப்பட்டுள்ளது. இத் தடாகத்தில் தாமரை மொட்டுக்களும் மலர்ந்த தாமரைப் பூக்களும் காவி நிறத்தில் காட்டப்பட்டுள்ளன. வித்த தாமரை இலைகள் கிளிப்பச்சை வண்ணத்தில் தீட்டப்பட்டுள்ளன. ஒரு யானையின் உருவமும் மீன் உருவமும் காணப்படுகின்றன. மற்ற உருவங்கள் காவி வண்ணத்தில் வரையப்பட்டுள்ளன. எல்லோரா கமிலாசநாதர் குடவரைக் கோயிலில் இந்திர சபா திசைக்காவலர்கள் உருவங்கள் தீட்டப்பட்டுள்ளன. ஒரு தாமரைத் தடாகம் தீட்டப்பட்டுள்ளது. இதில் காணப்படும் தாமரைப் பூக்கள் விரிந்த இலைகள், யானை, மீன், அன்னங்கள் ஆகியவை ஆர்மாமலை தாமரைத் தடாகத்தை ஒத்துக் காணப்படுகின்றன. ஆர்மாமலைத் தடாகம் எல்லோரா, சித்தன்னவாசல், சமண சமய ஓவியங்களை ஒத்துக் காணப்படுவதிலிருந்து தென்னகப் பண்பாட்டு ஒற்றுமை பளிச்சிடுகிறது.
ப. பாண்டிய கால் ஒவியங்கள்.
பாண்டியர் கால ஓவியங்கள் திருமலைபுரம் குடவரைக் கோயிலிலும் திருநந்திக்கரை குடவரைக் கோயிலிலும் சித்தன்ன வாசல் குடவரைக் கோயிலும் காணப்படுகின்றன. திருமலைபுரம் கோயிலில் நாட்டியமாடும் மானிடரும், மத்தளம் கொட்டுவோரும், ஆடவர் பெண்டிர் ஆகிய வடிவங்களும், தாமரை மலர்கள், அன்னம் சிங்கத்தின் மீது வீற்றிருக்கும் தெய்வம் ஆகிய ஓவியங்களும் காணப்படுகின்றன. திருநந்திக்கரை ஒவியங்கள் பெரிதும் சிதைந்துவிட்டன. இவற்றுடன் கிரீடத்துடன் காணப்படும் மகாபுருடனுடைய ஓவியம் முக்கியமானது. இங்கே இந்துநாகரிகத்தில் துணிகலைகள் 228 SGJ. Abgöliáb

சிங்கத்தின் ஓவியம் ஒன்றும் காணப்படுகின்றது. சித்தன்னவாசல் ஓவியக்கலை பற்றி அறியுமிடத்து கோயிலின் அர்த்தமண்டபத்தின் தெற்கோரத்தில் உள்ள கல்வெட்டு ஒன்று அவனிசேகரன் என்ற பூரீவல்லபன் காலத்தில் 830 - 882 மதுரை ஆசிரியரான இளங்கெளதமன் அண்ணல் வாயில் அறிவர் கோயிலின் அர்த்த மண்டபத்தைப் புதுப்பித்து முக மண்டபத்தைக் கட்டினான் எனக் கூறுகின்றது. இவற்றோடு குகை முழுவதும் ஓவியத்தைத் தீட்டினான் என நாம் கருதலாம்.
ம்ணிடபத்தின் விதானத்தில் தாமரைத் தடாகம் ஒன்று காணப் படுகின்றது. இத்தடாகத்தில் தாமரை, அல்லி முதலிய கொடிகளும் அவற்றின் மலர்களும், இலைகளும், நீந்தும் அன்னங்களும், மீனினமும் காணப்படுகின்றன. தாமரை மலர்களைத் தாங்கிய காந்தர்வர்கள் நீராடும் யானைகள், எருமைகள் ஆகிய ஓவியங்களும் தாமரை மலர்களைக் கொய்து வைத்திருக்கும் கோவண ஆடை தரித்த சமண முனிவர்கள் மலர்களைக்கொய்து கூடையிலிடும் ஆடவர் ஆகிய ஓவியங்களும்
6660.
கோயிலில் நுழையும் போதே இரண்டு பக்கங்களிலும் நிற்கும் தூண்களில் நடனமாதர்களின் உருவங்கள் வியப்படையும் முறையில் வரையப்பட்டுள்ளன. இப்பொழுது இவையும் மங்கலாகவே தெரிகின்றன. தமிழ்நாட்டு ஓவியக்கலையும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அடைந்திருந்த சிறப்பை எடுத்துக்காட்ட இவ்விரு ஓவியங்களும் போதும் தென்புறத் தூணில் தீட்டப்பெற்றிருக்கும் பெண்ணின் இடதுகை அவள் உடலின் குறுக்கே வலப்புறம் நீட்டப்பட்டுத் தொங்குகின்றது. வலது கை மடக்கி அபய முத்திரை காட்டுகின்றது. இந்த நடன நிலைதான் நாம் நடராஜ சிற்பங்களில் காண்பது. நடராஜ ஆனந்த தாண்டவத்தில் காணும் சிறப்பையும் அழகையும் இந்த ஒவியத்துள் நாம் காணுகின்றோம். வடபுறத் தூணில் நிற்பவள் வலது கரத்தை மடக்கி அபயமுத்திரை காட்டி இடது கரத்தை நேசிதமாக நீட்டியிருக்கின்றாள். நாட்டிய உடை
இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 229 Sசோதிலிங்கம்

Page 123
அணிந்து கைகளில் வளையல்கள் முழங்கையில் கடகம், கழுத்தில் முத்துமாலைகள், காதில் ஒலைகள், கூந்தலுக்கு அழகுசெய்ய மலர்களும் ஆபரணங்களும் இவை விளங்க இவ்விருவரும் காட்சி தருகின்றனர். கரங்கள் நெளியும் வனப்பும், கண்களில் ஒளிரும் பார்வையும் ஆட்டத்தின் வேகத்தில் ஆடையும், ஆபரணமும், பறக்கும் அழகும் இயற்கையாக சித்தரிக்கப்பட்டுள்ளன. இந்த நடன மாதர்களை பார்க்கும் பொழுது நாவுக்கரசரின் “கைஞ்நின்ற ஆடல் கண்டால் பின் கண் கொண்டு காண்பதென்னே’ என்ற வாக்கு நினைவுக்கு வருகின்றது.
அர்த்தமண்டபத்தின் விதானத்தில் தாமரைக்குளக் காட்சி ஒன்று தீட்டப்பெற்றுள்ளது. அரும்பு முதல் மலர் வரை பல்வேறு நிலையிலுள்ள அல்லியும் தாமரையும் நீரிலே பரந்து கிடக்கும். இவற்றின் இலைகள் “ஓடுமீன் ஒட உறுமீன் வரும்வரை” மலரின் மீதும் இலையின் மேலும் வாடிக் களைத்திருக்கும் சில பறவைகள், தாமரை மலர்களைக் கண்டு வெள்ளந்தீட்டப்பட்டதோ எனப் பறந்தோட முயலும் வேறு சில பறவைகள், நீரினுள்ளே துள்ளியோடும் பலவகை மீனினங்கள், நீரைக் கலக்கும் எருமைகள், துதிக்ைகையில் தாமரைத்தண்டைப் பிடித்து பிய்த்தெறிந்து விளையாடும் யானைகள், இவற்றோடு தொள்ளைக் காதுகளுடனும், கோவணத்துடனும் சாந்தி நிலவும் முகத்துடனும் கையில் மலர்களைத் தாங்கிய இருமனித உருவங்களும், இடது கையில் பூக்கூடை கொண்டு வலது கையால் மலர் பறிக்கும் ஒரு மனித உருவமும் வரையப்பட்டு இருக்கின்றன. அர்த்த மண்டபத்தில் தெற்குப் புறத் தூணின் மேற்குப் புறத் தூணின் மேற்குப் புறத்தில் மணிமுடி தரித்து காதுகளில் குண்டலங்களோடும் கழுத்தில் அணிகலன்களோடும் கம்பீரமாக தோற்றமளிக்கும். அரசனும் அவன் மனைவியும் பின்னால் பணியாள் ஒருவன் தொடர்ந்து வரக் கோவிலை நோக்கிச் செல்வது போல வரையப்பட்டிருக்கின்றன. இவை தவிர, கருவறை, அர்த்தமண்டபம் இவற்றின் விதானங்களிலும் வேறுபல இடங்களிலும் வட்டம், சதுரம், சூலம், ஸ்வஸ்திகம், பறவை, சிங்கம், மனித உருவம், தாமரை மலர் இவற்றோடு வரையப்பட்ட கோலங்கள் காணப்படுகின்றன. இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 230 Sசோதிலிங்கம்

இங்குள்ள ஓவியங்கள் உடலசைவு, முகக்குறிப்பு, உணர்ச்சி வெளிப்பாடு என்பன புலப்படுமாறு ஓவியன் அழகாகச் சித்தரித்துள்ளான். நன்றாக மலர்ந்த தாமரை, சிறிய விரிந்த தாமரை மலர்கள், அரும்புகள் என்பனவும் தத்ரூபமாகச் சித்தரிக்கப்பட்டு உள்ளன. இவ் ஓவியம் பற்றி நாகசாமி என்பவர் கருத்துக் கூறும்பொழுது இது அஜந்தா ஓவியங்களை விட எவ்வகையிலும் அழகிற் குறைந்ததல்ல. அவற்றைவிடச் சிறந்ததென்றே கூறலாம் என்பர்.
நாற்பத்து நான்காவது கருவறையில் கின்னரர், கின்னரி முதலியோருடைய வடிவங்கள் முழுமையாக உள்ளன. இவற்றிலிருந்து பல்லவ ஒவியனது கைவண்ணத்தை அறியமுடிகின்றது. இவைதவிர விஞ்ஞான முறைப்படி தூய்மை செய்து சில ஓவியங்கள் வெளிப்படுத்தப் பட்டுள்ளன. அவற்றுள் கொற்றவை, திருமகள் ஆகிய உருவங்கள் முக்கியமானவை.
பாண்டியன் காலத்து ஓவியங்கள் சில அண்மையிற் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. அவை அண்ணா மாவட்டத்தில் சித்தையன் கோட்டை எனும் ஊரிலே உள்ள சிவன்கோயிலில் உள்ளன. இக்கோயிலின் தெற்குப் பக்க வெளிச்சுவரில் தென்திசைக் கடவுளான தட்சிணாமூர்த்தியின் உருவம் உள்ளது. அர்த்த மண்டபத்திலுள்ள தேவகோட்டத்தில் ஆடவல்லானின் வடிவமும் அதனைக் கண்டுகளிக்கும் உமையம்மையின் வடிவமும் உள்ளன. தட்சிணாமூர்த்தியின் அருகில் இரண்டு முனிவர்கள் தாடியுடன் காணப்படுகின்றனர். இவர்களுக்கருகில் மான் முதலிய மிருகங்களும் காணப்படுகின்றன.
இக்காலத்தில் உருவாக்கப்பட்ட ஓவியங்களில் ஒன்றுதான் கீழ் வளவில் காணப்படும் ஓவியமும் ஆகும். இங்கு இருந்த ஓவியங்கள் பெருமளவு அழிந்துவிட்டாலும் ஓர் அழகான தாமரை மலர் ஓவியம் மட்டும் எஞ்சியுள்ளது. இத்தாமரை மலர் சித்தன்னவாசல் ஓவியப் பொய்கையில் தீட்டப்பட்டுள்ள தாமரை அப்படியே கொணர்ந்து இங்கு இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 231 Sசோதிலிங்கம்

Page 124
வைத்தது போல உள்ளது. இரண்டு ஒவியங்களும் ஒரே காலத்தில் ஒரே கலைமரபைச் சேர்ந்த கலைவல்லுனர்களால் தீட்டப்பட்டிருக்கக் கூடும்.
பெருங்கற்காலத்தில் எளிமையாகப் பாறையில் தொடங்கப்பட்ட ஓவியக்கலை சங்ககாலத்தில் வண்ணச் சுதைகளில் சுவரோவியங்களாக மிளிர்ந்தது. முற்காலப் பாண்டியர் காலத்தில் குடவரைக் கோயில்களிலும் புடைப்புச் சிற்பங்களிலும் வெண்சுதைப் பூச்சுக்கு மேலாக வண்ணங்கள் தீட்டப்பட்டன. பல்லவர் கலை வெளிப்பாடுகளில் எத்தகைய வளர்ச்சிகள் நிகழ்ந்தனவோ அவை அதே காலத்தில் பாண்டியர் பகுதிகளிலும் கையாளப்பட்டுள்ளன. எளிமையான தொடக்ககால முயற்சிகள் வளர்ந்து மிகப்பெரிய கலைக்கூடங்களையே கண்முன் நிறுத்தும் உன்னத நிலையை அடைந்ததைச் சித்தன்னவாசலில் காணலாம்.
II. சோழர் கால ஓவியங்கள்.
சோழப் பெருமன்னர் காலத்தில்தான் பிரமாண்டமான கோயில்கள் கற்களாற் கட்டப்பட்டன. இக்கோயில்களிலெல்லாம் அழகிய ஓவியங்கள் தீட்டப்பட்டன. இவ் ஓவியங்கள் கூரை, தட்டைப்பகுதி, விமானத்தின் கீழ்ப்புறம், பிரகார, வெளிப்புறச் சுவர்கள், கர்ப்பக்கிரகத்தின் வெளிச் சுவர்கள் ஆகியவற்றில் வரையப்பட்டன. நிகழ்வொழுங்கைப் பேணுமுகமாக
கோயிலின் பிரதட்சண ஒழுங்கில் ஒவியங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இவை பல்லவர் காலத்தில் இருந்து படிப்படியாய் வளர்ந்துவந்த தமிழ்நாட்டு ஓவியக்கலையின் சிறந்த பகுதியை சோழர்களின் காலத்தில் காணமுடிகின்றது. முதலாம் ஆதித்தசோழன் காலத்தில் கிபி 871 - 907 கட்டப்பெற்ற கண்ணனுர் பாலசுப்பிரமணியர் கோயிலின் கருவறையைச் சுற்றியுள்ள பிரகாரத்தில் ஒரு கபோதத்தில் ஓவியச் சின்னங்கள் தென்படுகின்றன. இராஜராஜசோழன் கிபி 985 - 1014 கல்வெட்டு ஒன்று “பூgராஜராஜதேவன் தஞ்சாவூர்ப் பெரிய செண்டுவாயில் சித்திரகூடத்து தெற்கில் கல்லூரியில் எழுந்தருளியிருந்து உத்தரவளித்தார்’ என்று இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 232 Sசோதிலிங்கம்

கூறுகிறது. இதிலிருந்து தஞ்சைப் பெருங்கோயிலின் வெளிக் கோபுரத்தருகே ஒரு சித்திரக்கூடம் இருந்தது என்பது தெரியவருகிறது. பெரிய கோயிலின் கருவறையைச் சுற்றியுள்ள பிரகாரத்தில் சுவர்களில் காணப்பட்ட பிற்கால ஓவியங்கள் சிற்சில இடங்களில் பெயர்ந்துவிழ அவற்றின் அடியிலுள்ள ஓவியங்கள் சோழ ஒவியங்களின் கைத்திறனை நமக்கு உணர்த்துபவை. இவற்றை முதன் முதலில் வெளியுலகுக்கு விளக்கிக் கூறியவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஆசிரியராக இருந்த கோவிந்தசாமியே. “சோழர்களின் மாட்சிபெற்ற காலத்தின் இச் சீரிய செல்வத்தை மாசகற்றி பெயர்ந்துவிழாது கட்டுப்படுத்திப் பாதுகாக்க காலந்தாழ்த்தாமல் திறமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதே இந்தியத்தொல்பொருள் இயல் துறையினருக்கு என்முறையீடு” எனக்கேட்டுக் கொண்டார். அவர் ஓவியங்கள் கெடாமல் காப்பதிலும் அவற்றின் மீது படர்ந்திருந்த அழுக்கையகற்றித் துப்புரவு செய்வதிலும் தொல்பொருளியல் துறையினர் எவ்வளவு கவனம் செலுத்தியுள்ளனர். ஆசிரியர் கோவிந்தசாமியின் வேண்டுகோள் எத்தகைய பலனை அளித்துள்ளது என்பதை தஞ்சைப் பெரிய கோயிலில் உள்ள ஒவியங்களைப்
பார்க்கும் அனைவரும் நன்கு உணரலாம்.
தஞ்சைப் பெரிய கோயிற் திருச்சுற்றின் உட்சுவர்ப் பகுதியில் இரண்டடுக்கில் ஒவியங்கள் காணப்படுகின்றன. இவற்றின் கீழுள்ள அடுக்கில் முதலாம் இராஜராஜன் காலத்து ஓவியங்களும் மேலுள்ள அடுக்கில் நாயக்கர்கால ஓவியங்களும் உள்ளன. இராஜராஜன் கால ஓவியங்கள் விஞ்ஞான முறையில் தூய்மை செய்யப்பட்டு இப்பொழுது வெளிக்கொணரப்
பட்டுள்ளன.
இவற்றுள் திரிபுரதகனமும் சுந்தரமூர்த்தி நாயனார் வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்களைக் குறிக்கும் ஓவியங்களும் முக்கியமானவை. வடக்குச் சுவர் முழுவதும் திரிபுரதகனம் சித்தரிக்கப்பட்டுள்ளது. திருபுரானந்தகள் எட்டுத் தோள்களுடன் தேரில் நின்று கைகளிலே ஆயுதங்கள் பல இருக்கவும் வில்லை வளைத்து அம்பை எய்யாமலே இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 233 Sசோதிலிங்கம்

Page 125
தன் புன்முறுவலால் முப்புரத்தை எரிக்கும் காட்சி வெற்றிகண்ட
பெருமிதமும் வீரமும் ததும்ப அழகாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. அசுர கணங்களின் முகங்கள் எத்தனை வகையில் ஆச்சரியமுறும்படி
வரையப்பட்டிருக்கின்றன. மரத்தையும் மலையையும் பிடுங்கி எதிர்த்துத்
தாக்கவரும் அசுரர்கள் ஒருபுறம், தலையைப் பிய்த்துக்கொண்டு
அழுதரற்றிய வண்ணம் பயந்தோடும் அசுரர்கள் ஒருபுறம் இவர்களையும்
துர்க்கை, முருகன், விநாயகர் முதலியவர்களையும் எவ்வளவு அழகாக
இவ் ஓவியத்தில் தீட்டியிருக்கின்றனர்.
மேற்குச் சுவரில் சுந்தரமூர்த்தி நாயனாரின் வாழ்க்கையில் இருந்து சில நிகழ்ச்சிகள் ஓவியப்படுத்தப்பட்டிருக்கின்றன. மணப்பந்தரில் வீற்றிருந்த சுந்தரரை பெருமான் தடுத்தாண்கொண்ட காட்சி இவற்றுள் ஒன்று. திருவெண்ணெய் நல்லூர்ச் சபையிலே இளையோரும் முதியோரும் கூடியிருக்கின்றனர். நடுவில் கிழவேதியர் மணப்பிள்ளையும் எதிரெதிரே நிற்கினறனர். வேதியரின் ஒருகையில் தாழங்குடை, மற்றொரு கையில் ஓர் ஒலை. மணப்பிள்ளை கைகளைக் கட்டி அடக்க ஒடுக்கத்துடன் நிற்கிறார். கூட்டத்தினரின் முகங்களிலெல்லாம் வியப்பு, ஐயம், சினம் முதலிய மாறுபட்ட உணர்ச்சிகள் பெருக்கெடுத்து ஓடுகின்றன. கூட்டத்தின் வலதுபுறம் திருவருள் துலங்கும் ஆலயம். அதனுள் விரைந்து செல்கின்றனர். சில கதையிலுள்ள நாடகப் பண்பு சிறிதும் சுவைகுன்றாது இந்த ஒவியத்தில் தீட்டப்பெற்றிருக்கின்றது. இந்த ஒவியத்தைப் பார்த்துத்தானோ என்னவோ தாராசுர ஐராவதேஸ்வரர் கோயிலின் கல்லிலே இந்தக்கதை செதுக்கப்பட்டிருக்கின்றது.
சுந்தர் வாழ்க்கையில் இன்னொரு காட்சி கைலைக்குச் செல்லுதல் முன்னால் நன்றாக அலங்கரிக்கப்பட்ட குதிரையின் மீது செல்லும் சேரமான் பெருமாள் பின்னால் வெள்ளை யானையின் மீது கரங்களில் தாளம் தாங்கி வரும் சுந்தரரைத் திரும்பிப் பார்க்கிறார். மேலே வானவீதியில் “அரவொளி ஆகமங்கள் அறிவாரறி தோத்திரங்கள் விரவிய சேவாலி விண்ணெலாம் வந்தெதிர்ந்திசைப்பத் தேவர்கள் ஆடியும் பாடியும் இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 234 S.சோதிலிங்கம்

இவர்களை வரவேற்கின்றனர். கீழே மீன்கள் நிரம்பிய அலையெறியும் கடல் நிலைகெட விண்ணதிர நிலமெங்கும் அதிர்ந்தசைய மலையிடைச் செல்லும் அக்கோடு நான்குடைக் குஞ்சரத்தின் வேகமும் கம்பீர நடையும் நன்கு தீட்டப்பெற்றிருக்கின்றன.
இவற்றைத் தவிர பக்த கணங்கள் சூழ அருகிலே நந்தி படுத்துக் கிடக்க தேவமாதர் இருவர் நடனமிட மான்தோல் மீது யோகநிலையில் வீற்றிருக்கும் தட்சிணாமூர்த்தியின் ஓவியம், ஒரு கோயிலும் அதனுள் நடராஜரின் திருவுருவம், அதை வழிபடும் பெருமகளும், சில மங்கையர் களுமாக ஓர் ஓவியம், இன்னும் எத்தனையோ ஓவியக் காட்சிகள்.
மேலும் கைலாயத்தில் சிவன் யோகாசனத்தில் அமர்ந்துள்ளார். அவர் புலித்தோலைத் தரித்திருக்கின்றார். அவரின் முன்னிலையில் நந்திதேவர் நிற்கிறார். இருடிகள் சூழ்ந்திருக்க அப்சரசுகள் நடனமாடுகின்றனர். இது மேற்குச் சுவரின் உச்சியில் காணும் காட்சி. சிவனுக்குச் சிவப்பு நிறமும், இருடிகளுக்கு நீலநிறம் ஊட்டப்பட்டுள்ளன. தாருகாவனக் காட்சியும் இங்கே அழகாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. பூதகணங்களுடன் இவ்வனத்துக்குச் செல்லும் எட்டுக் கைகளுடன் கூடிய வைரவர் அவருடைய வாகனமாகிய அழகிய ஞமலி. இவரைக் கண்டெழுந்து வணங்கும் முனிவர்களுடன் சிங்கம் புலி, மான், பன்றி ஆகிய மிருகங்களும் எழில்மிகும் ஒவியங்களாகவுள்ளன. இவை போலவே வடபுறச் சுவரிலே திரிபுரம் எரிக்கும் விரிசடைக் கடவுளின் திருவிளையாடல் காட்சி தருகின்றது. சிவனுக்கு எதிரே அஞ்சியோடும் அசுரர்களும், கதறியழும் அசுரப் பெண்களும் சுவைபடச் சித்தரிக்கப்பட்டுள்ளனர். சிவனாருடன் மயில்மீது முருகனும், பெருச்சாளிமீது கணேசரும், சிங்கத்தின் மீது காளியும், இவர்களுக்குப் பின்னால் தேவகணங்களும் காணப்படுகின்றனர். மற்றொரு சுவரிலே கனகசபையிலே நடனமாடும் ஆடழலழகரைத் தரிசித்த வண்ணம் அரசனொருவனும் அவனுடைய பட்டத்தரசியும் பரிவாரங்களும் காட்சி தரும் ஓவியம் ஒன்றினை அண்மையிலே கண்டுபிடித்துள்ளனர். இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 235 Sசோதிலிங்கம்

Page 126
பிறிதொரு தொகுதியில் நடராஜப் பெருமானை வணங்கும் அரசர், அரசியர் ஒவியங்கள் உள்ளன. இன்னொரு தொகுதியில் இராஜராஜனும் கருவூர்த் தேவரும் காணப்படுகின்றனர். இக்கால ஓவியங்களில் பெண்களின் பெருத்த வட்டக் கொண்டையும், நெற்றியிலே சுருள் சுருளாகத் தொங்கும் மயிர்த்திரளையும் ஆண்களின் முகத்தில் தாடியையும் காணமுடிகின்றது. பொதுவாக ஒவியங்கள் அக்காலத்தில் வாழ்ந்த மக்களின் ஆடை வகைகளையும் ஆபரணச் செழிப்பையும் காட்டுகின்றன.
தொகுத்துக் கூறுவதாயின் சோழப்பெருமன்னர் தமது காலத்திலே அனைத்துக் கலைகளையும் சமயநோக்கிற் கண்டு அவற்றிற்குப் புத்துயிரும் புதுவாழ்வும் அளித்தனர் என்று கொள்ளலாம்.
IV. விஜயநகர கால ஓவியங்கள்.
விஜயநகர அரசர்களுட் பெயர்பெற்றவர் கிருஷ்ண தேவராயர். இவர் கிபி 1509 - 1529 வரை ஆட்சிபுரிந்தார். தமிழகத்தில் மிகச் சிறந்த கோபுரங்களை அமைத்த பெருமை இவருக்குண்டு. இவர் காலத்தில் வரையப்பெற்ற ஒவியங்கள் திருவண்ணாமலைக் கோயில் யானை கட்டும் மண்டபத்தில் உள்ளன. பாற்கடலைக் கடையும் காட்சியும் சிவன், உமை திருமணக்காட்சியும் இங்கே எழிலுடன் காணப்படுகின்றன. மேலும் காஞ்சிபுரம் வரதராஜசுவாமி கோயிலில் காணும் ஓவியங்களும், உருத்திரமேரூர் சுந்தரவரதப் பெருமாள் கோயில் கல்கி அவதார ஓவியமும் கொண்ட வீடு, இராகவேஸ்வரர் கோயிலில் உள்ள ஓவியச் சின்னங்களும் இக்காலத்து அரண்மனையில் பலபாகங்களில் ஒவியங்கள் தீட்டப்பெற்று இருந்ததையும் ஒருபுறத்தில் பிறநாடுகளிலிருந்து போர்த்துக்கீசர் வரை இங்குவந்த மக்களின் நடை, உடை, பாவனைகளை விளக்கும் சித்திரங்கள் அந்தப்புரத்தினர் கண்டறிய எழுதப்பட்டிருந்ததையும் மேனபட்டு பேய்ஸ் கூறுகின்றார்.
இக்காலத்து ஓவியங்கள் கர்நாடக மாநிலத்தில் ஹம்பி, லேபாசி, சோமபாளையம், ஆனகொந்தி, தாட்பத்திரி முதலிய இடங்களிலுள்ள இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 236 Sசோதிலிங்கம்

கோயில்களில் உள்ளன. தமிழகத்தில் காஞ்சிபுரம், திருவரங்கம், திருவீழிமிழலை, கும்பகோணம், யூரீரங்கம் ஆகிய இடங்களில் உள்ள கோயில்களிற் காணப்படுகின்றன. லேபாஷியில் மூன்று சந்நிதிகளுக்குப் பொதுவான ஒரு மண்டபத்தின் கூரையின் உட்புறம் வீரபத்திரரின் மாபெரும் ஓவியம் உள்ளது. இது விஜயநகரர் காலத்து முக்கியமான ஓவியமாகும். இங்கு மகாபாரதம், இராமாயணம் புராணங்கள் என்பவற்றில் இருந்து எடுத்த சம்பவங்களை விளக்கும் காட்சிகளும் உள்ளன. இவற்றுள் அருச்சுணனும், கிராதனும் சண்டையிடுதல், ஆலிலையில் துயிலும் கிருஸ்ணன், பிச்சாடனர், காலரிஹரமூர்த்தி, கங்காதரதர், திரிபுராந்தர் ஆகிய காட்சிகள் முக்கியமானவை.
சோமபாளையம் விஷ்ணு கோயிலில் புராணக்கதைகளை விபரிக்கும் ஒவியங்கள் பல உள்ளன. இவை லேபாஷி கோயிலில் உள்ள ஓவிங்களை ஒத்திருக்கின்றன. ஹம்பியில் உள்ள விருபாட்சகர் கோயிலின் முன் மண்டபக் கூரையில் வித்தியாரணியர் ஊர்வலம் காணப்படுகின்றது. பெரியதொரு பரிவாரம் தொடர வித்தியாரணியர் ஊர்வலமாகச் செல்லும் காட்சி விஜயநகர ஓவியங்களுட் சிறப்புடையதாகும்
திருப்பரங்குன்றம் வர்த்தமானர் கோவிலின் சங்கீத மண்டப விதானத்தில் காணும் ஓவியங்கள் 16ஆம் நூற்றாண்டை ஒட்டியவை. சமண தீர்த்தங்கரர்களான ரிஷபதேவர், நேமிநாதர், கிருஷ்ணர், வர்த்தமானர் இவர்களுடைய கதைகளை விளக்கும் சித்திரங்களே இங்கே காணப் படுபவை. வர்த்தமானரைப் பற்றிய சித்திரங்களைத் தவிர மற்றவற்றின் கீழே சித்திரம் எதைக் குறிக்கின்றது என்று தமிழ் எழுத்துக்களில் எழுதப்பட்டிருக்கின்றது. நீண்ட மூக்குடன், காதளவோடும் கண்களுடனும் பக்கவாட்டிலே வரையப்பட்ட இந்த உருவங்கள் கூர்ஜர ஏட்டுச் சித்திரங்களை நமக்கு நினைவூட்டுகின்றன. இங்கே காணும் மரங்கள் கூட கூர்ஜர மரபைப் பின்பற்றியே வரையப்பட்டுள்ளன. தேவமாதர் நடனமிடும் காட்சியொன்றில் பெண்களின் பல்வகை ஆடை நிற்கும் நிலையிலே காணும் வேறுபாடு நெற்றியிலும், தலையிலும், சடையிலும் இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 237 Sசோதிலிங்கம்

Page 127
அணிந்துள்ள அணிகள், சடை பின்னியிருக்கும் முறை இவை அழகாகத் தீட்டப்பட்டுள்ளன. இதே காலத்தவையாக வடஆற்காடு மாவட்ட போளுரை அடுத்த திருமலையில் உள்ள திகம்பர சமண மடத்து ஓவியங்களையும், புதுக்கோட்டைக்கு அருகில் உள்ள நார்த்தாமலை விஜயாலய சோழீச்சரம் என்னும் கோயிலின் அர்த்த மண்டப வடக்குச் சுவரிலும் விதானங்களிலும் காணும் ஓவியங்களையும் கூறலாம்.
திருவண்ணாமலையின் அடிவாரத்தில் ஒரு மண்டபம் உள்ளது. இங்கே முக்கியமான மூன்று ஓவியங்கள் உள்ளன. அவையாவன, (1) சிவன் உமை திருக்கல்யாணக் காட்சி. (2) இராமாயணக் கதையிலிருந்து ஒரு காட்சி. (3) வள்ளிக்கொடியின் அடியிற் குழந்தையாகப் பிறந்து வளர்ந்து தினைப் புனங்காத்து இறுதியில் முருகனை மணம்புரியும் வள்ளியின் - வள்ளி திருமணக் காட்சி.
இவையெல்லாம் அமைப்பிலும் அழகிலும் ஹம்பி விருபாட்சகள் கோயில் ஒவியங்களைப் பெரிதும் ஒத்துள்ளன.
திருவெள்ளறையில் புண்டரீகாஷர் கோயிற் சித்திர மண்டபத்தில் அழகிய ஓவியங்கள் உண்டு. இவற்றுள் ஒருபகுதி இராமாயணக் காட்சிகளைச் சித்தரிக்கின்றது. இன்னொரு பகுதியில் அழகிய சித்திர வேலைப்பாடுகளுடன் கூடிய ஓவியங்கள் காணப்படுகின்றன. காஞ்சி வரதராசப் பெருமாள் கோயிலிலும் கிருஷ்ணதேவராயர் காலத்து ஒவியங்கள் உள்ளன. கோயில் ஊஞ்சல் மண்டபத்தின் விதானத்தில் கோபியரது ஆடைகளைக் கவரும் கண்ணன் காளிங்க நடனம் புரியும் காளியநர்த்தனர் அமர்ந்த கோலத்தில் உள்ள திருமால், அவருடைய தேவியர் பல்லக்கிற் பவனிவரும் வித்தியாதரர்கள், காமன், இரதி ஆகியோரது ஓவியங்கள் உள்ளன. நரசிம்மர் கருவறையின் முன்மண்டபத்தில் கருடாரூடர் இவரை வணங்கும் அடியவர் யானை மீதமர்ந்து தாளமிசைக்கும் ஒருவர், நீலமேனி நெடுமால், அவருடைய தேவியர் ஆகிய வடிவங்கள் காணப்படுகின்றன. இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 238 Sசோதிலிங்கம்

VI. நாயக்கர் கால ஓவியங்கள்.
நாயக்க மன்னர் காலத்து ஓவியங்களை திருப்பருத்திக் குன்றம்,
திருவாரூர், தஞ்சை, திருவலஞ்சுழி, மதுரை, சித்ம்பரம், குற்றாலம்,
கும்பகோணம் முதலிய இடங்களிலுள்ள கோயிற்களில் காணலாம்.
ஜைனகாஞ்சி என்றழைக்கப்படும் திருப்பருத்திக் குன்றத்தில் வர்த்மானர் கோயிலின் முகமண்டபத்திலும் சங்கீத மண்டபத்திலும் அழகிய ஓவியங்கள் உண்டு. முற்பகுதி ஒவியங்கள் இடபதேவர், நேமிநாதர் ஆகிய தீர்த்தங்கர்களது வாழ்க்கை வரலாற்றைக் குறிக்கின்றன. கண்ணன் சகடத்தைக் காலால் உதைத்தல், இடுப்பினில் கட்டிய உரலை இழுத்துச் செல்லல் என்பனவும் ஓவியமாக உள்ளன. இவற்றையடுத்து இருபத்து நான்காவது தீர்த்தங்கரராகிய மகாவீரரது வாழ்க்கை வரலாறு சித்தரிக்கப் பட்டுள்ளது.
தஞ்சைப் பெருங்கோயிலில் இருபட்டனத் தன்மையில் மேலுள்ளவையாகக் காட்டப்பட்ட நிலையில் இங்கு இந்திரன், அக்கினி, யமன், வருணன் ஆகிய தேவர்கள் முறையே வெள்ளை யானை, ஆடு, எருமை, மகரம் ஆகிய ஊர்திகளில் வலம் வரும் காட்சிகளாகும். மேலும் தேவர்களும் அசுரர்களும் அமுதம் கடைதல், துர்வாச முனிவர் தவமியற்றுதல், கொற்றவை, நிசும்பன், சும்பன் ஆகியோருடன் போரிடல், திருமால் சிவனை வழிபடத் தாமரை மலர்கொய்தல் என்பனவும் காணப்படுகின்றன.
தென்காசியை அடுத்த திருக்குற்றாலத்துச் சித்திரசபையில் பத்து ஆண்டுகளுக்கு முன் காணப்பட் டஒவியங்கள் மதுரையை ஆண்ட திருமலை நாயக்கர் காலத்தில் கிபி 1623 - 1659 இல் வரையப்பெற்றன. இப்பொழுது ஒவியங்கள் புதுப்பிக்கப்பட்டுவிட்டன. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பொற்றாமரைக் குளத்துக்கு அருகிலுள்ள ஊஞ்சல் மண்டப விதானத்தில் மீனாட்சியின் திருக்கல்யாணமும், அட்டதிக்கு விஜயமும் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. திருக்கல்யாணக் காட்சியை இராணி மங்கம்மாளும், தளவாய் நரசப்பையரும் தரிசிக்கின்றார்கள். புவனங்கடந்து இந்துநாகரிகத்தில் நுணர்கலைகள் 239 Sசோதிலிங்கம்

Page 128
நின்ற ஒருவன் திருஅன்னத்தில் அழகொழுக எழுதிப் பார்த்திருக்கும் உயிரோவியமாகிய மதுரை மரகதவல்லியின் திருக்கல்யாணக் காட்சியை இந்தக் கோயிலில் சிற்பி ஒருவன் கல்லிலே கவினுற வடித்துவிட்டான். ஆனால் நம் ஓவியனுக்கு அது தீட்டமுடியாத செவ்வியாகவே அமைந்துவிட்டது. பொற்றாமரைக் குளத்தைச் சுற்றியுள்ள மண்பத்தின் சுவரிலே சிவபெருமானது அறுபத்துநான்கு திருவிளையாடல்களைப் பல வண்ணங்களில் சித்தரிக்கின்றனர். இந்த ஓவியங்கள் இன்று சிறிது சிறிதாக மங்கிவருகின்றன.
திருவாரூர் தியாகேசர் கோயிலில் உள்ள முகுந்தச் சக்கரவர்த்தியின் கதையை விளக்கும் ஒவியங்களும் சிதம்பரத்தில் அம்மன் கோயிலின் முன் உள்ள மண்டப விதானத்தில் காணும் பிச்சாடனர், மோகினி, நடராசர் ஓவியங்களும், திருவலஞ்சுழிக் கோயில் சிவநடனம் முதலிய ஒவியங்களும் பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.
பதினேழாம் நூற்றாண்டுச் சித்திரங்களிலே மிகப்புகழ்பெற்றவை இராகமலைச் சித்திரங்கள். இராகங்களை உருவகப்படுத்தும் வழக்கம் நம்மிடையே தொன்றுதொட்டு இருந்து வருகிறது. இராஜஸ்தானத்தில் 17ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வரையப்பட்ட சித்திரங்கள் பாஸ்டன் பொருட்காட்சிச் சாலையிலும் மாதவதாசரால் எழுதப்பட்ட ஓவியங்கள் டில்லி இந்திய தேசிய பொருட்காட்சிச்சாலையிலும் இருக்கின்றன. இராகமாலைச் சித்திரங்களுக்குச் சிறந்த சான்றாக பாஸ்டன் பொருட்காட்சிச் சாலையில் உள்ள மதுமாதவி இராக சித்திரத்தைக் கூறலாம். பதினேழாம் நூற்றாண்டின் இறுதியின் முன்னும் பின்னும் இராஜஸ்தானத்துக்குத் தெற்கேயும் வடக்கேயும் இராகமாலைச் சித்திரங்கள் வரையப்பட்டாலும் இப்பொழுது இராஜஸ்தானத்தில் வரையப்பட்ட ஓவியங்களில் உள்ள வண்ணப் பொலிவும் வரியின் அழகும் மற்றவற்றில் காண்பதரிது. கவிதையும் இசையும் ஒவியமும் திரிகோண சங்கமம் போல இந்தச் சித்திரங்களிலே ஒருசேரக் காட்சி அளிக்கின்றன. இன்னிசையின் அற்புதமான இயல்புகளையும் கவிதையின் சிறப்பான கருத்துக்களையும் தங்கள் கற்பனையால் இராஜஸ்தான் ஓவியர்கள் இராகமாலைச் சித்திரங்களில் விளக்கியிருக்கின்றனர். இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 240 Sசோதிலிங்கம்

மேற்கூறிய சித்திரங்களைத் தவிர பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாக ஆர்ச்சா அரண்மனை ஸ்தானத்தில் காணும் கிருஸ்ண கோபியர் சித்திரங்கள், வேறொருபுறம் எழுதப்பட்ட நடன மங்கையர், குதிரை, யானை மீது செல்லும் வீரர்கள், நாட்டிய அரண்மனையில் காணும் ராசலீலைக் காட்சிகள், உதயப்பூர், பிக்கானிர், ஆம்பர் முதலிய நகரங்களிலுள்ள அரண்மனைச் சுவர்களில் காணும் ஓவியங்கள் இவற்றைக் கூறலாம்.
சிதம்பரம் கோயிலில் சிவகாமசுந்தரி கருவறையின் முகமண்டபத்தில் அழகிய ஓவியங்கள் காணப்படுகின்றன. சிவன் தாருகாவனத்து முனிவர்களது செருக்கை அடக்கப் பிச்சாடனர் வேடமிட்டுச் செல்வது, ஆடையின்றிச் சென்ற இவரது அழகில் முனிபத்தினிமார் மயங்கிப் பிச்சையிடுவது, திருமால் மோகினி வடிவில் செல்ல முனிவர்கள் மயங்குவது, பின்னர் சிவனை அழிக்க நெருப்பு, முயலகன், பாம்பு, மான், புலி என்பவற்றை ஏவிவிடுவது ஆகியன அழகாகச் சித்தரிக்கப் பட்டுள்ளன. இவை தவிர நடராஜர், சிவகாமவல்லி ஆகியோர் ஓவியங்கள் ஒருபுறமும், சிவன், விநாயகர், முருகன் அவர்தம் தேவியர், நந்தி ஆகிய ஓவியங்கள் மறுபுறமும் காணப்படுகின்றன.
திருவாரூர் சிவன் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் நாயக்கர் கால ஓவியங்கள் பல உண்டு. சிவனாரின் திருவிளையாடல்களையும், முகுந்தச் சக்கரவர்த்தி பட்டத்து யானையில் வலம்வருதலையும், இந்திரன் நாட்டிய மகளிர் ஆகியேர் அவரை வரவேற்றலையும் காணமுடிகின்றது. அடுத்து முகுந்தன் இந்திரனிடம் தியாகராசரின் திருவுருவத்தைக் கேட்டுப் பெறுதலையும், பின்னர் இலக்குமி நாராயணனை வணங்குதலையும் காணமுடிகின்றது.
திருவலஞ்சுழியில் உள்ள சிவன் கோயிலில் பதினாறு கைகளுடன் கூடிய நடராஜ வடிவம் உள்ளது. நடராஜரது இடப்புறம் உமையும், நான்முகனும் காணப்படுகின்றனர். இறைவனது ஆடலுக்கேற்ப திருமால் இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 241 Sசோதிலிங்கம்

Page 129
மத்தளம் கொட்டுகின்றார். தேவனொருவன் ஐந்து முகங்களையுடைய தோற்கருவியை வாசிக்கின்றான். இவ் ஓவியத்தின் மேற்பகுதியில் தேவர்களும் காந்தர்வர்களும் வியப்புடன் இந்த ஆடலை நோக்குகின்றனர். அடுத்துள்ள பகுதியில் பிச்சாடனருக்கு முனிபத்தினிமார் உணவு அளிப்பதுவும், காமன் கரும்புவில்லேந்தி மலர்க்கணை தொடுப்பதும், இரதி அன்னப்பெடை மீது காட்சி தருவதும் காணப்படுகின்றன. இவ் ஒவியங்களையடுத்து சிவனும் உமையும் வெள்ளேறின் மீது காட்சிதருதல், திருமால் சிவனை வணங்கிச் சக்கரம் பெறுதல், பிரணவப் பொருளை உணர்த்திய முருகனுக்குச் சிவன் ஆசி நல்குதல் ஆகிய ஓவியங்களும் உள்ளன.
திருவலஞ்சுழி, திருவண்ணாமலை, திருவெற்றியூர் முதலிய இடங்களில் இராமயண, மகாபாரதக் காட்சிகள் அழகிய ஓவியங்களாக வடிக்கப்பட்டுள்ளன. கும்பகோணம் இராமசுவாமி கோயிலில் இராமயணக் காட்சிகள் பல உண்டு. இவை இரகுநாதநாயக்கள் காலத்தில் எழுந்தனவாகும்.
இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 242 SGJ Hökölüölb

நிறைவாக கலை என்பது ஒரு செயற்பாடு முதன் முதலில் கலைஞனது உள்ளத்தே நிகழ்ந்தது அவன் உள்ளேயே நிலைத்திருப்பது. அதேசமயம் பர்வையாளன் அதனை தன்னுள்ளே உணர்ந்து விமர்சிக்கும் செயற்பாட்டின் போது அது வெளிப்படும், இந்திய சிந்தனை மரபில் கலைகள் அனைத்தும் அறிவோடுபட்டவவையாக வளர்க்கப்பட்டு வருகின்றன.
இக்கலைகள் கட்டடமாகவும் சிற்பமாகவும் ஓவியமாகவும் இங்கு வெளிப்படுத்தப்படுகின்றன. இந்துக்கலைகள் இந்துப்பண்பாட்டின் உட்கூறான இறையியலுடன் இணைந்து வளர்ந்து வந்துள்ளது. மக்கள் வாழ்வையும் மத அனுட்டானங்களையும் இணைத்த வகையில் இவை சிறப்பிடம் பெறுகின்றன. ஆரம்ப காலத்திலிருந்து பரிமணமித்து படிமுறை வளர்ச்சிகண்ட நிலையில் காலத்தின் ஆட்சியியல் அரசரின் ஆர்வமுடமை பல வழிமுறைகளிலும் இலக்கியங்கள் ஊடாக வெளிப்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில் காலங்கள் மாறி கோலங்களை விரிவுபடுத்தி வந்தபோதும் மன்னர்களின் தனித்துவம் அரசியல் பொருளாதார வளர்ச்சிநிலை கலாச்சாரங்களை மாற்றியமைத்து சிறந்த முத்திரை ஒன்றை பதித்துள்ளன. அதேநேரம் இன்றைய போக்குடன் ஒப்பிடக்கூடிய அளவுக்கு பேணப்பட்டும் வந்திருக்கின்றன.
உலகம் போற்றும் உன்னத பண்பாடுகளைத் தன்னகத்தே கொண்டு இந்துமதம் தொன்றுதொட்டு மங்காப்புகழொலியுடன் வளர்ந்து வந்துள்ளது. அவ்வேளையில் எல்லாம் உலகுக்கே இந்துப் பண்பாட்டை எடுத்தியம்பும் தனித்துவமான தன்மை கொண்டும் இக்கலை மரபுகள் காணப்படுகின்றன. இவற்றை வளம்படுத்துபவை கோயில்கள். இவை பண்பாட்டின் நிலைக்களனாக விளங்குவன மட்டுமன்றி பண்பாட்டின் உறைவிடமாகவும் விளங்கி வந்துள்ளன. நாட்டின் முக்கிய அம்சமாக கோயில்கள் விளங்குவதைக் கொண்டே “கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்ற மூதுரையை ஆன்றேர் வழங்கியூஸ்ஜர் இந்துசமய மரபில் திருக்கோயில் வழிபாட்டு மரபு மிகவும் தெஜினே
A z
இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 243 TSசோதிலிங்கம்

Page 130
தொன்றாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாகவும் பண்டைக்காலம் தொட்டு இன்றுவரை நிலவி வந்துள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
இவ்வாலயங்களை மையமாகக்கொண்டே இக்கலை மரபுகளும் சிறப்பாக கட்டட, சிற்ப, ஒவியமாக மனித வாழ்வுடன் இணைக்கப் பட்டதாகவும் வளம்படுத்தப்பட்டு வருகின்றன. காலப்பரிணாமத் தன்மை மன்னர்களின் மனப்போக்கு பிரமாண்டமான முறையில் அவற்றை வெளிப்படுத்த காரணமாகிய நிலையில் இன்று அவற்றின் அழிபாடுகள் எச்சசொச்சங்கள் அவற்றின் புராதன மகிமைகளை அக்கால சமய சமூக கலைமரபுகளின் தனித்துவத் திறன்களைப் பறைசாற்றி நிற்கின்றன. இவை மனித மேம்பாட்டிற்கும் சமூக நலனுக்கும் கலைமரபின் தனித்துவத்திற்கும் அச்சாணியாகவும் நிலைக்களனாகவும் விளங்கும் என்பதில் ஐயம் எதுவுமே இல்லை எனலாம்.
முற்றும்
இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 244 Sசோதிலிங்கம்

(O1)
(02)
(03)
O4)
(O5)
Ꮻ6)
(07)
(08)
(0.9)
உசாத்துணை நூல்கள்
AVL UT5FTLD
வியத்தகு இந்தியா அரசகரும மொழித்திணைக்கள வெளியீடு - 1963.
சோ.நடராசா
வடமொழி இலக்கிய வரலாறு கொழும்பு - 1967
பேராசிரியர் கைலாசநாதக் குருக்கள் M.APh.D
வடமொழி இலக்கிய வரலாறு கலாநிலையம், 175 செட்டியார்தெரு, கொழும்பு, 1962
பேராசிரியன் கைலாசநாதக் குருக்கள் MAPh.D
சைவத் திருக்கோயிற் கிரிகை நெறி இந்து கலாபிவிருத்திச் சங்கம், கொழும்பு - 1963.
கலாநிதி காரை கந்தரம்பிள்ளை
இந்து நாகரித்தில் கலை பாரதி பதிப்பகம், யாழ்ப்பானம் - 1994.
வித்துவான் கசொக்கலிங்கம் MA
இந்துநாகரிகம் பாகம் - 3 ஆரீ கப்பிரமணிய புத்தகசாலை - 1997.
கலைக்களஞ்சியம் II
தமிழ் வளர்ச்சிக் களஞச்சியம் சென்னை - 1956.
பேராசிரியர் நீலகண்டசாஸ்திரி
தென்னிந்திய வரலாறு அரசாங்க கல்வி வெளியீட்டுத் திணைக்களம்.
டாக்டர் A.சுவாமிநாதன்
தென்னிந்திய வரலாறு கி.பி 1336 வரை தீபா பதிப்பகம் சென்னை - 1994 மே.
இந்துநாகரிகத்தில்நுண்கலைகள் 5 Sசோதிலிங்கம்

Page 131
(10)
(11)
(12)
(13)
(14)
(15)
(16)
(17)
(18)
Percy Brown
Indian Architeture Buddhist And Hindu Priod Bombay - 1942.
வாழ்வியற் களஞ்சியம்
தொகுதி - 06 தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
நடன காசிநாதன்
தொல்லியல் நோக்கில் அன்றில் பதிப்பகம், சென்னை - 1993,
வித்துவான் இராசாமாணிக்கம்பிள்ளை MO.L.B.T
பல்லவர் வரலாறு திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற் பதிப்புக் கழகம், 1964.
பேராசிரியர் ப.கோபாலகிருஸ்ணஐயர்
இந்துப்பண்பாட்டு மரபுகள் வித்யா வெளியீடு யாழ்ப்பாணம் - 1992.
வித்துவான் இராசாமாணிக்கம்பிள்ளை MOLBT
சோழர் வரலாறு திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த றுந் பதிப்புக்கழகம் - 1964.
எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம்
சோழர் கலைப்பாணி பாரி நிலையம், சென்னை - 1966.
அ.கி.பரந்தாமனார் எம்.ஏ
மதுரை நாயக்கர் வரலாறு பாரிநிலையம் சென்னை - 1966.
பி.ஆர்.ரீனிவாசன்
கோயிற் கலையும் சிற்பங்களும் கலைஞன் பதிப்பகம் - 1965.
இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 246 S.G.3 Figgisb

(19)
(20)
(21),
(22)
(23)
(24)
(25)
பேராசிரியர் கா.இந்திரபாலா
இலங்கையில் திராவிடக் கட்டடக்கலை ஓர் வர6 சிற்று அறிமுகம் கொழும்பு - 1970
Ananda Kumaraswamy
Introduction to Indian Art Den 1 - 1969
மே.க.இராமசுவாமி
இந்திய ஓவியம் நேஷனல் புக் டிரஸ்ட் வாசகன் வட்டம் சென்னை - 1972
கே.சிவராமமூர்த்தி
இந்திய ஓவியம் நேஷனல் புக் டிரஸ்ட் 6JT3F856, 6 Lib சென்னை - 1972
இரா.பவுண்துறை எம்.ஏ. பி.ஜி.டி.டி
தமிழக பாறை ஓவியங்கள் சேகள் பதிப்பகம் சென்னை - 1986
கலைப்புலவர் நவரத்திரனம்
தென்னிந்திய சிற்பவடிவங்கள் யாழ்ப்பாணம் - 1941
தமிழ் மொழியும் இலக்கியமும்
கல்விவெளியீட்டுத் திணைக்களம் தேசிய கல்வி நிறுவகம் இலங்கை - 1998
குடவாயில் பாலசுப்பிரமணியன் M.A
தமிழகக் கோயில் கலைமரபு சரஸ்வதி மகால் நூலகம் தஞ்சாவூர் : 1993
இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 247 Sசோதிலிங்கம்

Page 132
(27)
(28)
'(29)
:(30)
{(3:1)
(33)
(34)
தேவமணி ர.பேல்
தமிழ்நாட்டுக் கலைக் கோயில்கள் 57/2 ஆறாவது நிழல்சாலை அண்ணாநகள் மேற்கு சென்னை.
(Guy Tiffair af.Lig, DBITg56ór B.A., Ph.d
இலங்கையில் இந்து கலாச்சாரம் இந்துசமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் கொழும்பு 07 - 2000
வாழ்வியற் களஞ்சியம்
தொகுதி எட்டு தமிழ் பல்கலைக்கழகம் - தஞ்சாவூர் திருவள்ளுவர் ஆண்டு 2022 - 1991
வாழ்வியற் களஞ்சியம்
தொகுதி எட்டு தமிழ் பல்கலைக்கழகம் - தஞ்சாவூர்
தமிழ்நாட்டு வரலாற்றுக் குழுவில் திரு.ஆர்.கோபாலன்
தமிழ்நாட்டு வரலாறு (பல்லவர், பாண்டியர் காலம்) முதற்பகுதி தமிழ் வளர்ச்சி இயக்கம் குறளகம் - சென்னை - 1990
தமிழ்நாட்டு வரலாற்றுக் குழுவில் திருமதி ஆர்.வசந்தகல்யாணி
தமிழ்நாட்டு வரலாறு (பல்லவர், யாண்டியர் காலம்) முதற்பகுதி தமிழ் வளர்ச்சி இயக்கம் மூன்றாம் தொகுதி - இரண்டாம் யாகம் குறளகம் - சென்னை - 1997
;LDTD660)
தமிழக அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை - 1968
இரா.நாகசாமி
ஓவியப்பாவை தொல்பொருள் ஆய்வுத்துறை வெளியீடு, சென்னை,
1979
இந்துதாகரிகத்தில் நுண்கலைகள் 248 Sசோதிலிங்கம்

(35)
(36)
(37)
(38)
(O1)
(02)
(03)
(04)
மயிலை சீனி வேங்கடசாமி
தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் பாரி நிலையம்
3i.psu.pubgb|Th M.A Ph.D -
இந்தியாவின் சிறப்பு வரலாறு தமிழ் வெளியீட்டுக் கழகம் தமிழ்நாடு அரசாங்கம் - 1965
கலாநிதி ஆனந்தகுருகே
இராமாயண சமூகம் கலைவாணி புத்தக நிலையம் uJTipÚLT60öLb - 1966
க.சி.குலரத்தினம்
இந்து நாகரிகம் பாகம் ஒன்று பூரீசுப்பிரமணிய புத்தகசாலை uJITUT600TD.
சஞ்சிகைகள் இந்துநெறி - இந்து மன்றம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வெள்ளிவிழா சிறப்பு மலர் யாழ்ப்பாணம் - 1999
பேராசிரியர் கா.கைலாசநாதக்குருக்கள்
இந்துப்பண்பாடு சில சிந்தனைகள் லீலாவதி இராமநாதன் பெருமாட்டி நினைவுப் பேருரை 1985
கலைப்புவலர் நவரத்தினம்
ஈழகேசரி வெள்ளிவிழா மலர்
சுன்னாகம் - 1956
ஆத்மஜோதி முத்தையா ஞாபகார்த்த கட்டுரை மலர்
இந்துசமயப் பேரவை யாழ்ப்பாணம் - 1997
இந்துதாகரிகத்தில் நுணர்கலைகள் 249 Sசோதிலிங்கம்

Page 133
(05) மங்கை - ஆலய மலர்
சிவாலய அமைப்பும் வழிபாட்டு முறைகளும் தமிழ் புத்தாண்டு சிறப்பிதழ், மே. 1995
(06) இந்துநெறி - இந்து மன்றம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாணம் - 1978
இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் 250 Sசோதிலிங்கம்


Page 134


Page 135