கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கலைச் சுவடுகள்

Page 1
。
。
 


Page 2

கலைச் சுவடுகள்
திருமறைக் கலாமன்றம் (2) 238, பிரதான வீதி,
யாழ்ப்பாணம்

Page 3
முதல் பதிப்பு
அச்சுப் பதிப்பு
வெளியீடு
விலை
அட்டை அமைப்பு
பதிப்புரிமையுடயது.
First Edition
Printed by
Published by
Price
Cover Design
சித்திரை 1997
யுனி ஆர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் கொழும்பு - 13
திருமறைக் கலாமன்றம்
ரூபா 100
எஸ். டி. சாமி
April 1997
Unie Arts (Pvt) Ltd., Colombo - 13
Centre for Performing Arts.
RS. 100
: S. D. Samy

திருமறைக் கலாமன்றம் 238 பிரதான வீதி யாழ்ப்பாணம்
திரு. ஏ. வி. ஆனந்தன் திருமறைக் கலாமன்றத்தின் மூத்த உறுப்பினர்களுள் ஒருவர். அவர் ஒய்வுநேரச் சிற்பி மட்டும் அல்லர்; பல் கலை வல்லுனர். தாம் எடுக்கும் முயற்சிகளைத் திறம்பட நிறைவு செய்பவர். அவர் மரத்தில் உளி கொண்டெழுதிய சிற்பக் கவிதைகளுக்கு செந்தமிழ் மொழி கொண்டும் விளக்கங்களை வரைந்துள்ளார். இவற்றைக் “கலைச்சுவடுகள்’ என்னும் தலைப்பில் வெளியிடுவதில் திருமறைக் கலாமன்றம் பெருமையடைகிறது.
வெளியீட்டு பிரிவு திருமறைக் கலாமன்றம்
யாழ்ப்பாணம்

Page 4

Ꮷfl60ᎠᏛil செதுக்கிய Քյիլ Պ
"மண்ணினும், கல்வினும், மரத்தினும், சுவரினும் கண்ணிய தெய்வதம் காட்டுநர் வகுக்க”
என்ற மணிமேகலை வரிகள், மாண்ட வீரனின் உருவம் தாங்கிய வீரக்கல் நடும் பழக்கம் இருந்த சங்க காலம் தொட்டு, கருங்கற் சிலையிலும், கல்லிலும் இசை கண்ட மன்னர் ஆட்சியூடாக சமகால நிகழ்வுகளை, மெழுகிலும் மரத்திலும், அரக்கிலும், கல்லிலும் உருவ வடிவங்களில் சமைக்கும் இன்றுவரை, சிற்பக்கலை - மூவளவைக் கூறுகளால் உருவம் அமைக்கும் அழகுக்கலை - தமிழர் கலைகளில் நுண்மை மிக்க ஒன்றாக விளங்கி வருவதை உணர்த்துகின்றன.
திரு. ஏ. வி. ஆனந்தன் திருமறைக் கலாமன்றம் தொடங்கிய அறுபதுகளின் நடுப்பகுதியில் நடிகனாகவே அறிமுகமானவர். அன்று இறைமகன் இயேசுவின் பாத்திரத்தை நடிப்பதில் அவருக்கு இணை அவரேதான். இன்று அதே திருக்குமரனை மரத்துண்டுகளினூடாக அற்புதச் சிற்பமாகச் செதுக்கி, பார்ப்போர் வியக்கும் வண்ணம் தத்ரூபமாகப் படைக்கின்றர். அவரது கைபடும் மரத்துண்டுகள் பேசுகின்றன. அவரது உளி தொடும் மரக்கட்டைகள் இசை பாடுகின்றன. விஸ்வாமித்திரரின் தவம் குலைந்த நிலையும், அரிச்சந்திர மன்னனின் ஆண்டித்தோற்றமும், சகுந்தலாவின் சித்திர நடையும், சமகால நிகழ்வுகளின் அச்சமும், அவலமும், அழுகையும் நம் எல்லோரையும் ஈர்க்கும்; மணிக்கணக்கில் அவை பற்றிச் சிந்திக்கவும் வைக்கும்.
ஆனந்தன் அவர்கள் 1946 ன் இறுதிப் பகுதியில் இலங்கையின் வடபுலத்தில் மல்லாகம் என்னும் கிராமத்தில் ஒரு கலைக் குடும்பத்திற் பிறந்தார். ஆரம்பக் கல்வியைக் குளமங்கால் றோ.க. வித்தியாலயத்திலும், தொடர்ந்து திருமலை புனித சவேரியார் வித்தியாலயத்திலும் முடித்துக் கொண்ட இவர், வர்த்தகத்துறையில் ஈடுபடத் தொடங்கினார். தமது பாடசாலைப்

Page 5
பருவத்திலேயே மாவேலை, கட்டட வேலை, சிறு கைத் தொழில்கள் போன்றவற்றில் இவர் காட்டிய ஆர்வம் அவரது தொழில் முயற்சிகளுக்கு உதவியது. ஆனந்தன் ஒரு இறைபக்தி நிறைந்த தொண்டன், தொழில் முதல்வன், நடிகன், பாடகன், இசைக்கருவி மீட்போன், கவிதைகள் பாப்போன், வர்த்தகத்துறையில் வித்தகன், பல தொழில்களைத் துறை போகக் கற்றவன், நாடகத்துறையில் பிரமாண்டமான கண்கவர் நாடக மேடைகளை அழகுற நிர்மாணிப்பவன், காட்சியமைப்பாளன், படவரைஞன், இன்று மரத்தால் உருவங்களைச் சிற்பமாகச் சமைக்கும் அற்புதச் சிற்பி.
1995ல் திருத் தந்தை இரண்டாவது அருளப்ப சின்னப்பர் இலங்கைக்கு வருகை தந்த போது பனை மரத்தினாலான ஆனந்தனின் கைவண்ணத்தில் உருவான சிற்பம் ஒன்று மிகவும் தத்ரூபமாக செதுக்கப்பட்டு வடபுலத்து தமிழ் மக்கள் சார்பில் அவருக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டது. எமது மக்களின் துன்பச் சுமைகளையும் அதைக் காண வந்த திருத்தந்தையின் உருவமும் கொண்ட அந்தச் சிற்பம் இன்று உரோமாபுரியிலுள்ள வத்திக்கான் கலைக் கூடத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருப்பது நம்மவர்க்கெல்லாம் பெருமை தரும் செய்தி
உலகப்புகழ் பெற்ற மைக்கல் ஆஞ்சலோ போன்ற சிற்பிகளினால் செதுக்கப்பட்ட சிலைகள் உலகின் பல பகுதிகளில் கலைக் கூடங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. பார்ப்போரைச் சிந்திக்கவைத்தும். சுவைக்கவைத்தும் பாராட்டைப் பெறுகின்றன.
எமது மண்ணின் மைந்தன் சிற்பச் செல்வன் ஆனந்தனின் படைப்புக்களையும் உலகளாவிய முறையில் வெளிநாட்டவரும் பார்த்துப் பயன் பெற வேண்டும். அவரது படைப்பாற்றல் உலகெங்கும் அறியப்படவேண்டும். அதையிட்டு எமது மண்ணும், மக்களும், நாடும் பெருமைப் பட வேண்டும் என்பதே எமது அவா.
சிற்பக் கலைஞனும் கவிஞனுமாகிய திரு. ஏ.வி. ஆனந்தனது ஆக்கங்களை யாழ் திருமறைக் கலாமன்றம் சுலைச்சுவடுகள் என்ற பெயரில் நூலாக வெளியிடுவதில் பெருமையடைகிறது. ஈழத்தின் மரச்சிற்ப வரலாற்றின் முதலாவது சுவடாக வெளிவரும் இப்படைப்பு மேலும் பல கலைப் படைப்புகளுடன் பல சுவடுகள் பதிக்கும் என எண்ணுகிறோம்.
அருள் திரு நீ, மரியசேவியர் அடிகள்
இயக்குனர் திருமரைக்கWரன்றம்
 

மேதகு வண. தோமஸ் செளந்தரநாயகம் ஆயர், Wழ் மிறை WWட்டம்
சிற்பி ஏ.வி. ஆனந்தனின் சிற்பங்களைக் காணும் போது சொல்லில் விளக்க முடியாத ஒரு பரவசம் தோன்றுகிறது. மிக நுட்பமான, நுணுக்கமான படைப்புக்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதையையும், காவியத்தையும் கண் முன் கொணர்ந்து நிறுத்துகின்றன. இப்படியொரு அற்புதக் கலைஞன் எம்முடன் இருப்பது மகிழ்ச்சி பெருமை தரக்கூடியது. அவருடைய படைப்புகளினூடாக அவரது அடிமனதில் பதிந்துள்ள அறிவு, ஆற்றல், விவேகம், பொறுமை என்பன வெட்ட வெளிச்சமாகத் தென்படுகிறன.
விவிலியத்திலும் இலக்கியத்திலும், சமயங்களிலும் எம் கலை கலாசாரங்களிலும் அழிந்து, மறைந்து போகும் எம்மவரின் நினைவுகளையும் கண்ணால் காணாத பல 'மனித நேயங்களுக்கப்பாலும்' சென்று தன் கலைப்படைப்புகளைப் படைத்துள்ளார். சமகால நிகழ்வுகள் யாவும் அவரது படைப்புகள் மூலம் கண் முன்னே அப்பட்டமாக மிகத் தெளிவாகத் தென்படுகின்றன.
சிற்பி ஆனந்தனின் படைப்புக்கள் பல்லுலகுக்கும் கொண்டு செல்லப்பட்டுக் கலைக் கூடங்களிற் காட்சிக்கு வைக்கப்பட வேண்டியன. அவரது புகழ், எமது மண்ணின் புகழ், அது உலகம் பூராவும் பரவ வேண்டும். சிற்பச் செல்வன் ஆனந்தன் நீடுழி வாழ்க, அவரது கலைப்படைப்புக்கள் இன்னுமின்னும்
தொடர வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

Page 6
  

Page 7
பூவுலகிற் பலகோடி இன்பந் தேடிப்
புதையலினை அகழ்ந்தெடுத்தே பூரிப்பார் டோல் தா விமனம் அற்றவன் நீ வாழ்வுக்காகத்
தவந்கிடந்தே கரையேறத் தவிப்போர் தங்கள் ஆவியுடல் கண்டுருகிச் சிற்பஞ் செய்யும்
அரும்பனியே கரும்பேனவே சுவைத்ததாலோ நாவிழந்தார் பேசுமொழி மெய் வண்ணங்கள்
நானிலத்தோர் கண்டுணரப் படைத்தாய் நண்பா
வாய்மை வழி நன்றியொளி கற்பின் வாகை
வற்றாத கருணை விழிச் சால்பினோடே தாய்மையுளப் பாசமெலாம் தவழக் கண்டேன்
தமிழமுதக் கலைக் கோவிற் காவியங்கள் தூய்மையுடன் வடித்தவுயிர்க் காதை பாபுத்
துள்ளி வரும் கொள்ளையெழிற் செழிப்புக் கண்டேன் சேயினுளட் பாங்குமிழம் திருமுகங்கள்
சிந்தையுவந் திடச்சோரியும் சிரிப்புங் கண்டேன்
மங்கலப்பொன் மனைமாண்பின் மங்கை நல்லார்
மாமனிதர் குருமுனிவர் மனிதர் வீரர் பொங்கு புகழ்ட் புரவலர்கள் இன்பச் செந்தேன்
பொழிகின்ற மொழிநாத இசைவல் வார்கள் சுங்குலையே பகலாக்கும் சுவியின் வானர்
காவடியின் சேவடியோர் நடனமாதர் எங்கெங்கே பிறந்தாலும் செங்கைக் குள்ளே
எடுத்தழகு படைத்தகலை வளமுங்கண்டேன்
கண்ணெதிரே காலருகே கையின் பாங்கே
கானகத்தே வானகத்துக் காடசியாகும் வண்ணமுறும் புள்ளினங்கள் விலங்கினிடடம்
வரலாறு தனிலேறி வளர் செல்வங்கள் என்மனதில் முகிழ்த்தெழுந்தே இனிமை தேக்கும் எண்னற்ற கற்பனைகள் எல்லாம் தேடி விண்னகத்தோன் தந்த கொடை விற்பன்னத்தால்
விருந்திடடாய் நின்சீர்த்தி விசுடர்பிலோங்கும்.

உட்புகு முன்.
கலைஞன், கவிஞன் ஆனந்தன் அவர்களின் கலைச்சுவடுகள் என்னும் இவ்வாக்கத்தைப் பார்த்தேன், படித்தேன் ரசித்தேன், ருசித்தேன்.
கவிதை அது கருத்தின் வேகமான வாகனம். உயிரின் உள்ளோட்டம், உறைந்து உளுத்துப்போன உள்ளங்களையும் ஊடுருவிச் சென்று ஓர் இயக்கத்தை முடுக்கி விடும் ஜீவசக்தி விழிப்புள்ள விரத ள்ளத்தின் ஜோதிமிக்க மின்சார நிலை மின்னல் எனக் கவிதைக்கு வரைவிலக்கணம் தரப்படுகிறது.
என் அன்புக்கும் மதிப்புக்குமுரிய மாணவன் ஆனந்தனின் கவிதைகளிலும் மேலே தரப்பட்ட அழகு நடனம் பிரதிபலிக்கின்றது.
அவருக்கு இயல்பாகவே இறையருளாற் கைவந்த சிற்பக் கலையின் ஆத்மகிதமாய் இசைநாதம் எழும்புகிறது. பட்டை தீட்டிய வைரம் போலத் தொட்ட இடமெங்கும் பட்டொளிவிசிப் பரிமளிக்கிறது.
இரசம் ததும்பி நிற்கும் திராட்சைக்கனிபோல இனிய மதுவூறிப் பூரித்து நிற்கிறது. இவை உண்மை. வெறும் புகழ்ச்சியில்லை. கலையுள்ளம் காணும் கற்பனைக் கனவுகள் தலை நிமிர்ந்து கானம் பாடுவதைக் கவிதைகளின் ஊடாக அவரது சிந்தனைகள் சிறகடித்துப் பறப்பதைக் காய்தல் உவத்தலின்றி ஆய்தல் செய்வோர் அநுபவிக்கலாம்.
நாட்டின் பொற் சுரங்கமும் பூமியின் சாரமுமான ஆனந்தன் சிற்பக் கலையின் மன்னன். பொன்மலர் நறுமணம் பெற்றவாறாய் சிற்பஞானத்துடன் கவிதை
ஞானத்திலும் பெற்றிருக்கும் போாற்றலைப் பாராட்டுகிறேன். பனார வாழ்த்துகின்றேன்.
ஆயுளும் புகழுமி தீட ஆனந்தா வாழ்க வாழ்க !
ாழி ஜெயர்

Page 8
கலாநிதி க. குனராசா செங்கையாழியான் பதிவாணர் யாழ் பல்கலைக்கழகம்
ாழிப்பாசனம்
திரு. ஏ.வி. ஆனந்தன் அவர்களின் சிற்பங்களில் காணப்படுகின்ற உணர்வுபூர்வமான தனித்துவத்தை கண்டு மெய்மறந்தவன் நான். இந்த நாட்டில் ஏற்பட்ட அவலச் சூழ்நிலை காரணமாக நமது பாரம்பரிய கலை கலாசாரங்கள் படிப்படியாக அழிந்து மறைந்து போய்விடுமோ என்ற அச்சத்தைச் சிற்பக் கலைஞர் ஆனந்தனின் சிற்பங்கள் நீக்கிவிட்டன. அவருடைய சிற்பங்களை முழுமையாகப் பார்வையிடுகின்ற ஒரு அரிய பாக்கியம் எனக்கு கிட்டியதன் பேறாக அவரது ஆற்றலையும், அவர் உணர்ந்த சமூக வெளிப்பாடுகளை அரிய இந்தச் சிற்பங்களுக்கூடாக வெளிக்கொணர்கின்ற திறமையையும் உணர்ந்து கொண்டேன். அவரிடத்திலிருந்த கலைப் பொக்கிஷங்கள் பல அண்மைக்கால இடம்பெயர்வுகளின் போது மறைந்து அழிந்து விட்டன என்ற செய்தி துரதிர்ஷ்டவசமானது. அவரிடம் கைவசமுள்ள எஞ்சிய கலைப்படைப்புகளைப் புகைப்படமாக்கிப் புத்தகவடிவில் கொண்டு வந்தால் ஓரளவுக்காவது அதை ஓர் ஆவணமாகப் பாதுகாத்து, வருங்கால சந்ததியினருக்குக் கொடுக்க முடியுமெனக் கருதுகின்றேன்.
சிற்பங்களாக அவை விளங்கும் பொழுது அவற்றில் இருந்து புலப்படுகின்ற முப்பரிமாண அர்த்தங்கள் புகைப்பட வடிவத்தில் எவ்வளவுதூரம் சிறப்பாக அமையுமென்ற ஐயப்பாடு இருந்தாலும், அவரின் சிற்பங்களைப் பார்த்து இரசித்து, உணர்ந்து திருப்திப்படுகின்ற வாய்ப்பு கிட்டாதவர்களுக்கு இவ்வாறு புகைப்படங்களின் பதிப்பாக வெளிவரும் நூல் திருப்தியையும் வியப்பையும் தருமென நம்புகிறேன். எனவே "கலைச்சுவடுகள்” என்ற பெயரில் அவருடைய சிற்பப் புகைப்படங்களை சிறியதொரு ஆக்க நூலாக வெளியிட எடுத்த முடிவு
 

பாராட்டுதலுக்குரியது. கண்கவரும் வர்ணப்படங்கள் கலை ரசனை சிறிதும் குன்றாது தரமான பதிப்பாக வெளிவருகிறது. இச்சிற்பங்களுக்குரிய கவிதை வடிவிலான விளக்கங்கள் சிற்பக் கலைஞர் ஆனந்தன் அவர்களாலேயே எழுதப்பட்டுள்ளன. எனவே ஆக்கத் திறன் மிக்க இந்தச் சிற்பக் கலைஞரின் "கலைச்சுவடுகள்" என்ற நூல் காலத்தின் தேவையைப் பூர்த்தி செய்யுமென நம்புகிறேன். ஒவியர் மாற்கு, சிற்பிரமணி, கவிஞர் யாழ் ஜெயம் ஆகியோரது விமர்சனங்களுடன் கூடிய இந்த நூல் மேலும் பல சிற்ப - புகைப்படங்களுடன் தொடர்ந்து வெளிவர வேண்டுமென ஆசைப்படுகிறேன். இந்த நல்ல பணியைச் செய்த சிற்பக் கலைஞர் ஆனந்தன் அவர்களையும், இந்த நூலைச் சிறந்த நிலையில் மக்கள் முன் கொண்டுவரும் திருமறைக் கலாமன்றத்தினரையும் பாராட்டுகிறேன். சிற்பக்கலைஞர் ஆனந்தனின் கலைத்துவப் படைப்புக்கள் நமது கலாசாரப்பாரம்பரியத்திற்குப் பெருமை சேர்ப்பனவாகும்.
ரமணி கலைப் பகுதி அதிகாரி கல்வித்திணைக்களர்
ாழிப்பWrணம்
திரு. ஏ.வி. ஆனந்தன் அவர்களுடன் கலைத்துறையில் நீண்ட காலத் தொடர்பு எனக்குண்டு. ஒரு பெருந்தொழிலதிபராக இருந்த இவர் கலைத்துறையுடன் பொழுது போக்காக ஈடுபட்டுக் கொண்டிருந்தார். ஆனால் கடந்த பத்து வருடங்களாக தனது பொழுதை சிற்பத்துறையில் ஈடுபடுத்தினார். அதாவது நமது நாட்டில் ஏற்பட்ட யுத்த சூழ் நிலை காரணமாக பல நூற்றுக் கணக்கான தொழிலாளர்களைக் கொண்டியங்கிய அவரது தொழிற்சாலைகள் இழுத்து மூடப்பட்டன. இவர் பெரிதாக உழைத்துப் பெரிதாகப் பாதிக்கப்பட்டவர்.

Page 9
இதை நான் அவரது நண்பன் என்ற முறையில் நன்கறிவேன். இந்த வெறும் பொழுதை அவர் பயனுள்ள நல்ல வழியில் பயன்படுத்தி உள்ளார். அவர் ஒரு நல்ல உதாரணர். சுதந்திர சுயாதீன, உள்ளார்ந்தமான வெளிப்பாட்டுக்குச் சூழ் நிலை தடையல்ல என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளார். கடந்த பத்து வருடங்களில் எதிர்பாராத அளவில் அதிக சிற்பங்களைப் படைத்துள்ளார். இவருக்குக் குரு என்று சொல்லக் கூடியவராக யாரும் இருந்ததாக நான் அறியவில்லை. தொழில் ரீதியாக கதவுகள், தளபாடங்கள் போன்றவற்றில் கொத்து வேலைப்பாடுகள், செடி கொடிகள், அன்னப் பறவைகள் போன்ற புடைப்புச் சிற்பங்கள் (Relief) இவரால் வியாபார ரீதியாக முன்னர் செய்யப்பட்ட ஆதாரத்தை அடிப்படையாக வைத்துக் கொண்டு, பின்னர் முப்பரிமானத் தோற்றங்களைத் தானே தனக்குரிய பாணியில் அவைகளைப் படைக்கத் தொடங்கினார். இதற்கு உறுதுணையாக இவரது வெளிநாட்டுக் கலைப்பயணம் அமைந்திருந்தது என்பதை நானறிவேன். இந்தியாவின் கலைக் கோவில்கள், சிங்கப்பூர், பாங்கொக், ஹொங்காங், சீனா, தைவான் போன்ற கிழக்கு நாடுகளிலுள்ள கலைக் கூடங்கள் அவரைக் கவர்ந்து ஓர் உந்து சக்தியைக் கொடுத்துள்ளன. அவைகளின் தாக்கங்களைக் கூட இவரது சில படைப்புக்களில் நான் கண்டேன். இவர் கட்புலனால் கண்ட கலையுடன் மேலும் கலை சம்பந்தமான நூல்கள், கலைஞர்களுடன் அந்நியோன்னியமான, பரஸ்பரமான கருத்துப் பரிமாற்றங்களை மூலதனமாக்கி தன்னைத் தானே அபிவிருத்தி (Develop) செய்து கொண்டார்.
ஆரம்பக் காலங்களில்,மிகவும் அழுத்தத் தன்மையுடன் காணப்பட்ட இவரது படைப்புக்கள் போகப் ப்ோக் ஓர் உயிர்த்தன்மையடைவதை அவதானிக்க முடிகிறது. சிற்ப ஆக்கங்களில் வளைவு, நெளிவுகள், உளியின் வேகமான ஒட்டம், வரிகள் போன்றவை ஒரு விதமான உயிர்த்தன்மையை ஏற்படுத்துகின்றன. இவரது படைப்புக்களான மேளவாத்தியக்காரர், காவடி ஆட்டம், உரலிடிக்கும் பெண்கள் போன்றவற்றில் இவற்றைக் கூடுதலாக அவதானிக்க முடிகிறது. இவரது பாலன் குடில் சிற்பத்தில் இவர் எப்படிக் கஷ்டப்பட்டிருப்பார் என்பது எனக்குப் புரியும். பனைமரத்தில் செதுக்கப்பட்ட முகம் போன்ற மிகவும் கடினமான ஊடகங்கள் மரங்களின் அடர்த்தித் தன்மை போன்றவற்றுக்கேற்ப ஆயுதங்களைக் கூட அவரே செய்து வடிவமைத்துச் செதுக்குவதும் அவரது திறமை,
ஒரு கலைஞன் மக்களுக்கு எதைச் சொல்ல விரும்புகிறான் என்ன கருத்தை முன் வைக்க முயற்சிக்கிறான் என்பது முக்கியமான அம்சமாகும். கருத்துக்கள் பயனளிக்க வேண்டும். இந்த வகையில் ஆனந்தன் இதை நன்கு புரிந்து செயற் பட்டுள்ளார். சமய இலக்கிய, இதிகாசங்களையும் அழிந்து, மறைந்து கொண்டு போகும் எம் கலை, கலாசாரம், பாரம்பரியங்களையும் சமகால
O

நிகழ்வுகளையும், சில இடங்களில் மனித நேயங்களுக்கு அப்பாற் சென்று கூட, உதாரணத்துக்கு எலும்புக் கூட்டுடன் கூடிய ஓர் இளம் பெண்ணின் உருவம், இடம் மாறிய உறுப்புக்கள் போன்றவை. இவை நல்ல கருத்துக்களைக் கொண்ட சிற்பங்கள். இன்னும் இன்னும் இவர் அதிகமாகப் படைக்க வேண்டும் என நான் எதிர்பார்க்கிறேன்; அவர் படைப்பார் எனவும் நம்புகிறேன்.
கடந்த பத்துவருடங்களில் நம்ப முடியாத அளவுக்கு இவ்வளவு சிற்பங்களைச் செய்த ஆனந்தன் மேலும் பல புதுப் புதுப் படைப்புக்களைத் தருவார் என்பதில் சந்தேகமில்லை. இவரது படைப்பின் வேகம், இன்னும் பத்து வருடங்களில் இவர் ஒரு சர்வதேசப் புகழ் வாய்ந்த சிற்பியாகத் திகழ்வார் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை.
இவர் மேலும் மேலும் முன்னேற வேண்டும். இவரது படைப்புக்கள் ஈழத்தில் மட்டுமல்லாது சர்வதேசக் கலைக் கூடங்களையும் அலங்கரிக்க வேண்டுமென எதிர்பார்க்கிறேன். இவரது சிற்பக் கண்காட்சிகள் தலைநகர் கொழும்பிலும், கிழக்கு மாகாணத்திலும் நடைபெறுகின்றன. தொடர்ந்து பல வெளிநாடுகளிலும் நடை பெறப்போவதை அறிந்து மகிழ்வடைகிறேன். சிற்பி ஆனந்தனின் இக்கலைப்பணி தொடர என் மனமார வாழ்த்தி விடைபெறுகிறேன்
فایلنی
*ظاهوg
ஒவி
ப0ாற்கு அவர்கள்
சிற்பக் கலைஞர் ஆனந்தன் அவர்களைப் பலகாலமாக நான் நன்கறிவேன். அவரது சிற்பப் படைப்புக்களையும் செய்முறைகளையும் அவரது
11

Page 10
பட்டறையிலே நேரில் நின்று ரசித்துச் சுவைத்தவன் நான். தனது “கலை கலைக்காகவே அன்றிக் காசுக்காகவல்ல” என்று அடிக்கடி என்னிடம் கூறுவார். கலைக்காகத் தன்னை அர்ப்பணித்தவர் அவர். அவரது படைப்புக்கள் பற்றிய ஆய்வுரை ஒன்றை நான் வரைவதில் பெருமையடைகிறேன். அண்மையில் யாழ் நகரில் மிகப் பிரமாண்டமான முறையில் அவரது சிற்பக் கண்காட்சி திருமறைக் கலாமன்றத்தினரால் நடாத்தப்பட்டதையும் யாழ் ஆயர் தோமஸ் செளந்தரநாயகம் அவர்களால் பொன்னாடை போர்த்தி பொன்மாலையணிவித்து சிற்பச்செல்வன்' என்ற பட்டம் சூட்டிக் கெளரவிக்கப் பட்டதையும் அறிந்து அளவிலா உவகை கொண்டேன். ஆனந்தன் எமது மண்ணுக்குரியவர், எமக்குரியவர். அவரது படைப்புகளும் அதனால் அவரடைந்துள்ள பெயரும் புகழும் எமக்கும் எமது நாட்டிற்கும் பெருமைதருவனவாகவுள்ளன.
இவர் பாரம்பரியத்தினூடாகவோ, மரபு வழிகளிலோ, சிற்பக் கல்லூரிகளூடாகவோ வந்தவரல்ல. இவர் இக்கலையை முறையாக ஒரு குருவிடம் கற்று வரவில்லை. ஆனால் அதற்குரிய அடிப்படை ஆவணங்கள் மூலம் கற்றறிந்து கொண்டு சிற்பங்களைச் செதுக்கத் தொடங்கியவர். அதன் காரணத்தால் தான் அவரது படைப்புக்களில் நாம் இதுவரை காணாத ஒரு புதுவகையான கலைத்துவத்தைக் காண்கிறோம்; ரசிக்கிறோம்.
"நத்தார்க்குடில்” மாட்டுத் தொழுவத்திலே இயேசு பாலகனின் பிறப்பு - இது வாகை மரத்தினால் எதுவித இணைப்புகளுமின்றி இயேசு பாலன், அன்னை மேரி, தந்தை சூசை, மூன்று இராசாக்கள், இடையர்கள், அவர்களது மந்தைகள், தேவதூதர் இவர்களெல்லாம் அடங்கிய ஓர் சிறு குடில் எனப் பல உருவங்களாக மிகவும் நேர்த்தியாகச் செதுக்கப்பட்டுள்ளது. என்ன விதமான ஆயுதங்களைப் பாவித்து எப்படியாக இதைச் செய்யமுடிந்தது என்று வியக்கத் தோன்றுகிறது. கைகள் புகமுடியாத, ஆயுதங்கள் கூட மட்டு மட்டாக போகக் கூடிய இடமெல்லாம் இவரது உளியின் ஒட்டத்தைக் காண முடிகிறது. கைகளை வைத்தால் கண்ணால் பார்க்க முடியாத இடங்கள் கூட மிக நேர்த்தியாகச் செதுக்கப்பட்டுள்ளன. ஆனந்தனின் ஆற்றலை அளவிட இச்சிற்பம் ஒன்றே போதும். அடுத்ததாக மேளவாத்தியக்காரரின் ராக பாவங்கள், நடனமாதரின் தாளலயங்கள், கரகம், காவடியாட்டம் போன்ற சிற்பங்களின் சுழிவு, வளைவுகள், இலக்கிய இதிகாசங்களில் வரும் பெண் பாத்திரங்களின் நளினம், குறிப்பாகச் “சகுந்தலை", "ஆடை மாற்றும் அணங்கு” போன்ற சிற்பங்களின் சுழற்சித் தன்மை, (Twist) நமது பிள்ளையார் சிலைகூட அதே முறையில் அமைந்திருப்பதை அவதானிக்க
邯2

முடிகிறது. அதாவது இவர் தமக்கென ஒரு பாணியை அமைக்க முயல்வதைக் கவனிக்க முடிகிறது. சிற்பங்கள் பொதுவாக நேர்குத்தாக இல்லாமல் நெளிந்து வளைந்து, குனிந்து காணப்படும் முறைகள், உதாரணமாகப் பறைமேளம், காவடியாட்டம் போன்றவற்றில் காணப்படும் அமைப்பு முறை (Formation) ரசிக்கக் கூடியவிதமாகவுள்ளது. மேலும் இவரது மாற்றுலக்கை என்ற தலைப்பிலுள்ள சிற்பம் எமது பழைய நினைவுகளை மீட்டுவதாக உள்ளது. கட்டிளம் மாதர் இருவர் அந்த நாட்களில் “குறுக்குக் கட்டு’ எனப்படும் குறும் சேலையுடன் உரலிலுள்ள நெல்லை இரு பக்கமும் எதிரெதிரே நின்று இரு உலக்கைகளால் மாறி மாறி இடிக்கும் காட்சி, இப்போது அவைகளைக் காணமுடிவதில்லை. இதே போல கடகத்திலே மீனை வைத்துத் தலை மேல் சுமந்து வந்து தெருக்களிலும், வாசல்களிலும் கூவி விற்கும் காட்சிகளை இப்போது காணமுடியாது. முப்பது நாற்பது வருடங்களின் முன்னர் இவைகளை நாம் சாதாரணமாகக் காணக் கூடியதாக இருந்தது. இச்சிலையிலும் அவர் அந்த மீனவப் பெண்ணுக்குரிய அங்க அமைப்புக்களைத் தமக்குரிய பாணியில் காட்டும் விதம் ஒரு இயற்கையோடொத்த இணைப்பு (Rhythm) காணப்படுகிறது. நடை உடையில் கூட அது தெரிகிறது. தலைமுடி அந்நாட்களில் “தட்டுவக் கொண்டை” எனப்பட்டது, இயற்கையாக உள்ளது. அட்சரக் கூடு போன்ற அணிகலன், முகபாவம், ஒட்டமும் நடையுமான அமைப்பையும் ரசிக்க முடிகிறது.
அடுத்த படியாக "சுட்டபழம்” மிகவும் நேர்த்தியான படைப்பு. இது பள்ளிப்பிள்ளைகளைக் கூடக் கொள்ளை கொள்ளும் விதத்தில் அமைந்துள்ள இச்சிலை ஒளவைப்பாட்டியை அப்படியே கண்முன் கொண்டு வருகிறது. முருகனாக வந்த சிறுவனும், மயிலும் கூட அழகுறச் செதுக்கப்பட்டு பார்ப்போருக்கு அதன் கதையம்சம் புலப்படக்கூடிய விதத்தில் அமைந்துள்ளது. அதே போல விசுவாமித்திர முனிவன் தவநிலையிலிருந்து விடுபடும் காட்சி, மிகவும் தத்ரூபமாகவுள்ளது. ஆடி மயக்கிய மேனகை முனிவன் சபித்து விடுவானோ என்ற நிலையில் அழகு சேரக் கைகூப்பி வணங்குவது போலும் புலித்தோலின்மீது தவமிருந்த முனிவனின் விழிகள் திறந்து, வாய் பிளந்து, கைகள் தளர்ந்து, கமண்டலம் சரிந்து பத்மாசனம் கலைந்த நிலையும் தெளிவாகச் செதுக்கப்பட்டுள்ளது. விசுவாமித்திரனுக்கும் மேனகைக்கும் பிறந்தவள் தான் சகுந்தலை, கண்ணுவ முனிவனின் ஆச்சிரமத்தில் வளர்ந்த கட்டழகி. மானையும் மயிலையும் தோழிகளாகக் கொண்டு விளையாடி மகிழ்ந்திருந்த வேளை அவள் பாதத்திலே முள் ஒன்று தைத்து விட்டது. அந்த முள்ளை எடுப்பதற்கு அவள் ஒற்றைக் காலில் நின்று உடலைத் திருப்பி வேதனையுடன் தவிக்கின்றாள். அவள்
13

Page 11
தவிப்பைப் புரிந்து கொள்கிறது பெண்மான். அது கூடத்தன் காலைத் தூக்கி, தோழியைத் தாங்கித் துயரைப் பகிர்ந்து கொள்கிறது. ஆண்மான் சோகம் தவழும் அவள் முகத்தைக் கருணையுடன் நோக்குகிறது. Twist எனப்படும் சுழற்சித் தன்மையுடன் மிகவும் தத்ரூபமாக வடிக்கப்பட்டுள்ளது. இச்சிலை மாவிலங்கு மரத்தின் நிறம் தன்மை கூடச் சிலையின் அழகை ஒருபடி கூட்டி விடுகிறது.
இதே பாணியில் அமைந்துள்ள “தமயந்தி தூது’ அவள் அன்னப் பறவையைத் தழுவி மகிழும் நிலையும் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து பின்னிப் பிணைந்துள்ள முறையும் ஒர் அரச குமாரிக்குரிய அம்சமும், அழகு முகத்தில் காட்டும் உணர்வுகளும் சிலையை வடிப்பதற்கு அவர் எடுத்துக் கொண்ட ஊடகத்தைப் பயன்படுத்திய முறையும், எல்லாம் இயற்கையாக அமைந்துள்ளன.
சமகால நிகழ்வுகளைக் கூட மற்றவர் மனம் புண்படாதபடி இவர் எடுத்துக் காட்டிய விதம் கூட அலாதியானது. உதாரணமாக "சமாதானப் புறா". அதைக் கழுமரத்தில் கட்டி சித்திரவதை செய்தது போன்ற பாவனையிலுள்ளது. மேலே பொறிக்கப்பட்டுள்ள Peace என்ற வாசகம் மிகவும் பொருத்தம், முதிரை மரத்தில் செதுக்கப்பட்ட இந்த உருவம் சிலுவையில் தொங்கும் இயேசு மீட்பரை ஞாபகமூட்டி மக்களுக்காக அவர் செய்த தியாகத்தை நினைவுக்குக் கொண்டு வருகிறது.
அடுத்தபடியாக “ஆறுமுகம்” இது ஒரு புதுமையான படைப்பு. இதுவரை நாம் எங்கும் கண்டிராத, எமது சிந்தனைக்கும் அப்பாற்பட்ட கற்பனை வளமுடையது. கலைஞனின் ஆற்றலை அளந்து பார்க்க முயற்சிக்கிறேன்; ஒரு தலை - அதில் ஆறு முகங்களைக் காண்கிறோம். ஆறு விதமான பாவங்கள் தெரிகின்றன. ஆறு வாய்கள், ஆறு மூக்குகள், ஆறுகண்கள், ஒரு முகத்துக்கு உரிய கண் இன்னொரு முகத்துடன் சேருகிறது. ஆனால் அதன் பாவம் மாறாது சுவை கெடாது மற்ற முகத்துடன் ஒத்திசைவாக அமைவதும் புருவங்களின் அசைவுகள் ஒன்றையொன்று பாதிக்காத வகையில் அமைந்துள்ளன. இச்சிற்பத்திலும் உளியின் ஒட்டங்கள் சுருக்கங்கள் உயிர் ஊட்டுவதாக அமைகின்றன.
இதே போல எமது நாட்டு மூலவளமும் கற்பக தருவுமாகிய பனைமரத்தை ஊடகமாகக் கொண்டு செதுக்கியெடுக்கப்பட்ட “ஒரு முகம்” மிகவும் நேர்த்தியாக அமைந்துள்ளது. மிகவும் கடினமான சிராய்த் தன்மையுள்ள ஊடகமிது. இதில் கூடச் சிற்பி தனது ஆளுமையைக் காட்டியுள்ளார். ஒரு மரத்திலிருந்து,
14

உருவத்தை எப்படி அமைக்க முடியும், உயிரூட்ட முடியும் என்பதை பார்வையாளர் புரியும் படியாக வடித்துள்ளார். பாதி முகத்தையும், மீதி மரத்தையும் அப்படியே விடப்பட்டமை இயற்கையாகவுள்ளது. இதே மரத்தின் அடுத்த துண்டத்தில் உருவாக்கப்பட்ட சிற்பம் தற்போது “வத்திகான்’ மாளிகையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது படைப்புகளிலே தண்ணிர் குடம் சுமந்து வரும் பெண்களின் பலவிதமான நிலைகளை வடித்துள்ளார். முழுகிக் குளித்துக் குறும் சேலையை அள்ளி உடுத்து நனைந்த உடையோடும், கலைந்த முடியோடும் நடந்து வரும் நிலை கொள்ளை அழகு. இதே உருவங்களை நவீன பாணிகளிலும் (Abstract) அரூப பாணிகளிலும் மிக எளிமையாகப் படைக்கப்பட்டுள்ளமையும் அவதானிக்க முடிகிறது.
இவற்றுக்கு மேலாக, உண்மைக்காக வாழ்ந்த அரிச்சந்திர மன்னனின் சுடலை காக்கும் நிலை மிகவும் தெட்டத் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு உணர்வும் வெளிப்படுகிறது. உளிக் கோடுகளால் உணர்ச்சிகளை வெளிப்படுத்திய விதமும் திரட்சியான முறுக்கேறிய உடலமைப்பும், உடையமைப்பும் பாராட்டும் விதமாக அமைந்துள்ளன. சத்தியத்தைக் காத்த பாவி நான் என மயானத்தில் நின்று தன் நிலை மறந்து பாடும் நிலை, நாடக மேடைகளிலே நாம் கண்ட அரிச்சந்திர மன்னனை அப்படியே நினைவுக்குக் கொண்டு வருகிறது.
மேலும் இவரது அரிய கலைப் படைப்புக்கள் யாவும் எல்லோராலும்
அறியப்படவேண்டும், ஆய்வாளர்களால் ஆய்வு செய்யப்பட வேண்டும், புத்தக உருவில் வெளிவர வேண்டும்; அவை நாட்டுக்குப் பயன் படவேண்டும்.
15

Page 12

சமர்ப்பணம்
பஞ்சணையிற் பிறந்ததில்லை படடுடுத்தி வளர்ந்ததில்லை துஞ்சவொரு வசதியில்லை விடடகலா நினைவலைகள் தஞ்சமென உடனிருந்தாள் அஞ்சுகமாம் அன்னையவள் கஞ்சியுடன் கலையமுதையூடடியெனை வளர்த்தாள் எத்தனையோ துன்பங்கள் எப்படித்தான் வந்த போதும் அத்தனைக்கும் முகம் கொடுத்து இத்தரையில் தவழவிட்டடாள் பெயரோடும் புகழோடும் என் பணியைப் புரியவைத்த
அன்னையவள் பதமதிலே எனது கலை சமர்ப்பணமே.
ஏ. வி. ஆனந்தன்
17

Page 13
எனது நிலை பாரறிவார்
சிலையென்பார் சிற்பியென்பார் அழகென்பார் ஆக்கமென்பார் காலத்தால் அழியாத கலைப்படைப்புத் தானென்பார் புகழென்பார் பொருளென்பார் நிகரேது மிலையென்பார் இயல் என்பார் 'றியல்' என்பார்
கொடை உனக்குத் தானென்பார்
எடுத்த உளி தானே இனி என்ன வேண்டுமப்பா வடித்து விடு இன்னும் ஒன்று முடித்திடுவாய் நினைத்தவுடன் நீ தான் கடவுளப்பா நிகரிங்கே உனக்கேது நிலைத்து விடும் உனது புகழ் ஏதேதோ அளக்கின்றார்
மனக்கவலை தனை மறந்து மறுபடியும் துணிந்தெழுந்தேன் மகிழ்ச்சி தனைக்குழப்பிவிட வந்து நின்றான் ஒரு பாவி அடுத்த கிழமை வரை அவகாசம் தருகின்றேன் முடித்து விடு என்சிலையை முறைத்து விடடடுச் செல்கின்றான் விழித்திருந்த குறைச்சிலைகள் அடுத்த கணம் எனை விளித்துச் சிரிக்கிறது ஏளனமாய் எனது நிலை யாரறிவார்.
18

கலையதனைப் புரியாமல் துாற்றுகிறார் சில பேர்கள் விசரோ, பயித்தியமோ வேறு தொழில் தானிலையோ கடவுளையே படைக்கின்றான் கன்னியரைப் படைக்கின்றான் எதையெதையோ படைத்து விடடுக்
கலையென்று கூறுகின்றான்.
பித்துப் பிடித்ததடி பொல்லாத கள்ளனடி ஒருவரையும் விடமாடடான் கண்டபடி ஏசுகின்றார் துாற்றுவார் தூற்றLடடும் போற்றுவார் போற்றடடும் எனக்கதிலோர் கவலையில்லை
எடுத்த உளி விடமாபடடேன்.
புகழ்ச்சியிலே மதிமயங்கி அடுத்த கதை தொடர்வதற்கு மரத்தடியில் இருந்து கொண்டு இயற்கையதை ரசிக்கின்றேன் புதுப்பிறவி எடுப்பதற்குத் துடிக்கிறது மரக்கிளைகள் தனித்தனியே எனை விழித்துக் கண் சிமிடடி அழைக்கிறது வெறும் கிளைதா னென்றாலும் மனக்கண்ணால் பார்க்கின்றேன் ஒவ்வொன்றும் எனக்கதிலோர்
கலைப்படைப்பாய்த் தெரிகிறது.
19

Page 14
படுத்த படுக்கையிலே கண்ணுறக்கம் ஏதுமின்றிக் கருத்தரிக்க நானடைந்த சோதனைகள் வேதனைகள் கருவடைந்த சிசுவதனைக் கலையாமல் குலையாமல் மனதினிலே நான் சுமந்து மசக்கை தனிலே புரண்டு பசி தாகம் தனை மறந்து பத்தியமாய் நானிருந்து கலைந்து விடும் எனப் பயந்து கண்டதையும் கடியாமல் உண்ணாமல் உறங்காமல் எத்தனை நாள் எனை மறந்து கதறியழ முடியாமல் மனதுக்குள்ளே குமைந்து விழித்திருந்து நினைவிழந்து நித்திரையில் புலம்பியதை நெடுந்தூரம் தானலைந்து நடை மெலிந்து போனதனை யாரறிவார் உதவிடுவார் எனது கதை அறிவாரோ.
எந்த ஒரு ஆண்மகனும் அடையாத அனுபவத்தை நொந்து பெற அவளடைந்த துயரான துன்பமதை பெற்றவுடன் தானடைந்த இதமான இன்பமதை பிரசவத்தின் வேதனையை சோதனையை, சாதனையை நானும் அனுபவித்தேன் எனக்கதிலோர் மனத்திருப்தி
20

மரத்துள் மறைந்தது
மாமத யானை மரத்தை மறைத்தது
மாமத யானை

Page 15
깊
 

பாலகன் இயேசு பாரினில் பிறந்தார்
நிறை மாத பரிமாது முனி சூசை துணையோடு
மறை நூலின் வழி வந்த கதை காணப்புறப்படடாள் துறையேதுமறியாது பலகாத வழியேகி
இறை கூறுநகரான பெத்தலேம் தனை அடைந்தாள்
அவளும் மகள்தானே அவ்வேளை ஏற்பட்ட
அவலமதையுனர்ந்தாள்
உதரபது நோக உளமது வேகத்
தங்குமிடந்தனைத் தேடியலைந்தார்
இரவில் நடந்து பணியில் நனைந்து இடையது நொந்து இடருமடைந்து எதுவுமிலாது இடம் கிடையாது
மாடடை குடபுவினில் தஞ்சமடைந்தப்
துஞ்சி நடந்தவள் புல்லணை - தன்னைப்
பஞ்சனையாக்கி மெல்ல விழுந்தாள்
பாவியை மீடகப் பவவினை போக்க
பாரினில் இயேசுவும் வந்து பிறந்தார்
செய்தியறிந்தனர் விண்ணவர் மண்னவர்
பாலகன் பேசுவைப் பாடி மகிழ்ந்தனர்.
23

Page 16
三
|
| |-
三
24
 

ஆனந்த கணபதி
ஆனைமுகனென்பார் ஆதிமுதலென்பார்
பானை வயிறென்பார் பரம் பொருளே நீயென்பார்
u Taħħal 1 LITT இக்கோலம் 3) ற்க நினைத்தாயோ
நானுன்னைக் கேட்டபதற்குப் பலநாள் நினைத்ததுண்டு
பாலகனபதி, பக்திகனபதி, வீரகணபதி பிங்கல கணபதி அஷ்பரே கணபதி, ராபாஷகணபதி, லக+மிகணபதி, உச்சிடட கணபதி மகாகணபதி, புவனகணபதி, தனுர் கணபதி, நர்த்தனகனபதி
என்றெத்தனையோ பெயர் சூடடி உன்னை அழைக்கின்றார்
பாலைப் படைக்கின்றார் தேனைப்படைக்கின்றார்
ப்ே ஃ. T_; - தததககுடா பீ வைத்சர அமுதும படைகHiறTர பலகாரம் அத்தனையும் பழங்களும் செங்கரும்பும்
என்னென்ன வெல்லாமோ சேர்த்துப் படைக்கின்றார்
நான்கும் கலந்துனக்குக் கடனாய்ட் படைத்து விடடு எதையெதையோ கேட்டடுவைத்தான் அந்நாளில் ஒரு கவிஞன் உனக்கேதும் படைப்பதற்கு எனக்கு இங்கே இல்லையப்ப
உன்னையே படைத்து விடடேன் எனக்கும் அதைத்தந்து விடு
25

Page 17
25
 

தபசு கலைந்த தவமுனி
தவத்திலே தனக்கெனத் தனியிடம் அமைத்திட இயற்றினான் கடுந்தவம் விசுவாமித்திரன் இகத்திலே உதித்தவை அனைத்தையும் மறந்தனன்
துறந்தனன் துணிந்தனன் அவன் சுழல் அனைந்தனன்
பரத்திலே தரித்தவர் பொறுப்பினை மறந்தனர் பயத்திலே விழித்தனர் தவித்தனர் பதைத்தனர் தமக்கு மேல் தவத்திலே இருப்பரோ இவரெனப் பயத்திலே தவத்தினைக் குழப்பிட நினைத்தனர்
நினைத்தவர் கணத்திலே செயற்படத் தொடங்கினர் மனத்திலே உதித்தனள் சுடர்க்கொடி மேனகை அனுப்பினர் அவர்தவம் அழித்திட விதித்தனர் இதற்கு மேல் தொடர்வதைத் தடுத்திடப் பணித்தனர்
மலர்க்கணை தொடுத்தனர் உடற்களை கொடுத்தனர் மயக்கியே மனத்தினைக் கெடுத்திடத் துடித்தனர் மங்கையின் அணைப்பிலே பொறுப்பதைக் கொடுத்தனர்
புதுப்புதுக் கவிதைகள் மனத்திலே விதைத்தனர்
தேடினாள் ஓடினாள் மலர் க்கொடி மேனகா
ஆடினாள் பாடினாள் ஆவலைத் தூண்டினாள் ஊடினாள் ஊடலின் எல்லையைத் தேடிட
ஆடவன் தேடலின் கோடதை நாடினாள்
37

Page 18
தளராத் தவமுணி தன்னை மறந்தான்
புரளாமனத்தவன் தன் புண்ணியமிழந்தான் சிதறா மனத்தவன் சித்தம் குலைந்தான்
முற்றும் துறந்தவன் பித்தம் அடைந்தான்
தேடிய புண்ணியம் ஓடி மறைந்தது
மூடிய விழிகள் அகன்று திறந்தன
பத்மாசனமோ நெகிழ்ந்து கலைந்தது
கைகள் தளர்ந்தன, கமண்டலம் சரிந்தது.
பூட்டிய கதவுகள் உடைந்து திறந்தன.
குலைந்த தவமுனி தன்னிலை மறந்தான்,
தவத்தைத் துறந்தான் தன்னையிழந்தான்
B

|×
胰 *) 藏
s%

Page 19

சகுந்தலை
இடடடையிற் கடைந்தெடுத்து இடமறிந்து பதம் பிரித்துப் பக்குவமாய் ஒவ்வொன்றும் பாங்குடனே வகுத்துத் தேனமுதும் பால்நிலவும் சேர்த்துக் குழைத்தெடுத்துச் சந்தங்கள் மாறாத கவிதைச் சரம் போல அந்தந்த இடம் அறிந்து அத்தனையும் தொகுத்து எங்கெங்கோ சேர்த்தெடுத்த
முத்துக்கள் அத்தனையும் அங்கங்கே அழகாக உருவில் இழை பதித்துச் சிற்பியவன் சேதுக்கி வைத்த பொற்சிலையோ பேரெழிலோ பாவையவள் தான் நிலவோ தெள்ளமுதோ தெவிடடாத தித்திக்கும் செங்கரும்போ மரகதமோ மாணிக்க மனிவிளக்கோ கதிரவனின் ஒளிப்பிழம்போ கண்சிமிடடும் தாரகையோ காரிகையோ பேரெழிலோ நானறியேன் அள்ளி வைத்த கூந்தலிலே அஸ்லிமலர் சூடிக் கிள்ளி வைத்த மொட்டெடுத்து காலில் சரம் தொடுத்து அன்ன நடை பயில
அடியெடுத்து வைக்கையிலே முல்லை மரத்தடியில் முளைவிடட முள்ளொன்று தொல்லைதர நினைத்துத் தேத்ததுவோ பாதமதில்
3.

Page 20
2 I ‘7 9, (2
 

சுட்டபழம்
ஒளவைக்கிழவியவள் அமிழ்தான சொற்கிழவி கொவ்வைப்பழம் போலச் சுவையாகப் பாடடிசைப்பாள் கள்ளங்கபடமில்லா உள்ளமது கொள்ளை கொள்ளத்
தெள்ளு தமிழினிலே பிள்ளைக் கவியிசைப்பாள்
ஆத்திசூடி, கொன்றைவேந்தன் வாக்குண்டாம் நல்லவழி நலமாக நானிலத்தில் நாம் வாழ எழுதி வைத்தாள் இன்னும் இன்னும் எத்தனையோ எமக்களித்த பாடடியவள் அரசனையும் ஆண்டியையும் முருகனையும் பாடிவைத்தாள்
அன்றொருநாள் முருகனுக்கு ஒரு பொழுதும் போகவில்லை ஒளவையுடன் விளையாட அவதாரமெடுக்கின்றான் சிறுவன் வடிவினிலே மயிலேறி வலம் வந்து
நாவல் மரமதிலே நயமாக அமர்கின்றான்
தாகத்தால் நாவறண்டு சோகத்தால் மனந்துவண்டு முதுமையினால் உடல் தளர்ந்து பசியதனால் நடைதளர்ந்து வேகக் கொதிக்கின்ற வெயிலினிலே தான் நடந்து நாவல் மரநிழலில் வந்து நின்றாள் நம்கிழவி
ஆற அருகமர்ந்து அண்னார்ந்து பார்க்கின்றாள் நூறு பழமதிலே குலை குலையாய்த் தெரிகிறது பாலனவன் மேலிருந்து பழமதனைச் சுவைத்த விதம்
பாடடியவள் நாவினிலே நீரூறி நனைகிறது
யாரப்பா நியிங்கே ஏது புரிகின்றாய் ஏனிங்கே வந்தனையோ என்று வினவுகின்றாள்
33

Page 21
சிறுவன் சிரிக்கின்றான் பாடிடியும் சிரிக்கின்றாள் இருவரின் சிரிப்பொலியில் இன்னிசையே மலர்கிறது
பழுத்த பழமதனை ருசித்த சிறுவனிடம் போடப்பா எனக்குமொன்று என வேண்டி இரக்கின்றான் கபட மனத்துடனே கன்னடித்த சிறு முருகன் சுடட பழம் அதுவோ சுடாத பழம் தானோ
எப்படித்தான் வேண்டுமென்று ஏளனமாய்க் கேடகின்றான்.
சிறுவனது புதிரதனைப் புரியாத கிழவியவள் ரகசியமும் இதிலுளதோ சுடட பழம் போடு என்றாள் மறுபடியும் சிரித்த அவன் மரக்கிளையை உலுப்பி விட முதிர்ந்த பழங்களெல்லாம் பொலுபொலென உதிர்கிறது
உதிர்ந்த பழத்திலொன்றை வாஞ்சையுடன் குனிந்தெடுத்து ஒடடிய மணலகல ஊதுகிறாள் வாயதனால் இதைப் பார்த்த இளமுருகன் இன்னும் சிரித்து விடடு நன்றாகச் சுடுகிறதா இன்னும் இன்னும் ஊது என்றாள்
சிறுவனது விகடமதைப் புரிந்து கொண்ட பெண் கவி - தன் அறியாமை தனையுணர்ந்து அவமானம் அடைகின்றாள் இன்னும் படிப்பதற்கு உலகளவு இருக்கிறது சுற்றது கைம் மண்ணளவு என்பதனை உணர்ந்து கொண்டாள்
34

3.

Page 22

தமயந்தி தாது
காதலனைக்கானTது
கலங்கித்தவித்திருந்த காரிகையாள் தமயந்தி
ஏங்கித் துடிக்கின்றாள்
காதலனைத் தேடித் தூதனுப்ப விழைகின்றாள்
அன்னப் பறவையது
உதவிக்கு வருகிறது
வந்த பறவையிடம்
அழகாக மடல் வரைந்து
ஆருயிர் அன்பனிடம் தூதாக அனுப்புகின்றாள் குறிப்பறிந்த பறவையது குறியாக இடம் தேடிக்
காதலனிடம் சேர்த்து
அவன் தந்த சேதி தனைத்
தலைவியிடம் சேர்த்து விட
ஒலையுடன் வருகிறது
களிப்படைந்த கன்னியவள்
ஒலையுடன் பறந்து வந்த
அன்னப்பறவை தவின
அன்புடனே அரவனைத்து ஆரத்தழுவியங்கே
இன்புற்று மகிழ்கின்றாள்.
37

Page 23

மாற்றுலக்கை
முன்னொருநாள் ஒரு பொழுது என்விடடு முற்றமதில் குறுக்குக் கடடோடு கட்டான இரு மாதர் உரலிடட நெல்லதனை மாற்றுலக்கை போட்டிடித்த அழகான காடசியேந்தன் மனத்திரையில் நிற்குதடி
சுழகிவிடடுக்கொளித்தெடுத்த புழுங்கல்தவிடதனை எடுத்துண்ணுமாசையிலே இடித்து முடியும் வரை உரலடியில் காத்திருந்த என்சின்ன ஆசையெல்லாம் இப்போ நினைத்தாலும் கொடுப்புக்குள் இனிக்குதடி
நிண்ட நிலையினிலே நாலுகொத்துப் புழுங்கல் நலுங்காமல் இடித்திடுவாள் எமது மகள் என்று மாப்பிள்ளை வீட்டார்க்குப் பெருமையுடன் கூறி
இறுமாந்திருந்தது எம் முன்னோர்கள் காலமடி
இடிக்கும் ஒலியிடையே விண்ணாணக் கதைகளுடன் வக்கனையும் ஊர்வம்பும் ஆவலாதியும் விடுப்பும் பேசிவிடட சிரிப்பொலியில் இடித்த களை தெரியாமல் இடியிடியாய்ச் சிரித்த ஒலி இப்போதும் ஒலிக்குதடி
இடித்த உரலெங்கே மாற்றுலக்கை தானெங்கே குறுக்காகக் கட்டடிவிடட குறுஞ்சேலை அழகெங்கே கைக் குத்தரிசியிலே ஆக்கிவிடட சோறெங்கே வடித்த கஞ்சி தான் எங்கே எங்கே நான் காண்பனென
என் மனது துக்குதி.
39

Page 24
參|-No.
| || .
No.No. ()(
- ( )
|× 密|×
&
密No.
}
|× |×
密& · ,
[}
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சமாதானப் புறா
எங்கே சமாதானம் - எங்கே அமைதி எங்கு தான் நிம்மதியென்றேங்கித் தவிக்கின்றாய் தேடிய செல்வங்கள் மாடி மனைகளுடன் நாடதையுமிழந்து சொந்த பந்தங்கள் மறந்து அன்பர்கள் நண்பர்கள் காதலர் உடன் பிறந்தோர் கூடி மகிழ்ந்திருந்தோர் கூடடாகச் சேர்ந்திருந்தோர் அத்தனையுமிழந்து காடு மேடாய் நடந்து காற்று மழை வெயிலினிலே அலைந்து திரிகின்றாய் இத்தனைக்கும் காரணம் நீயன்றியாருமல்லர் என்னால் முடிந்தவரை உன் கவலைதனைப் போக்க சமாதானப் புறாவாக வானில் சிறகடித்து வடடமிடடுச் சுழன்று சுதந்திரமாய் சுற்றி வந்தேன் என் சேவை தவின் மறந்து ஏனோ சிறைபிடித்து வேண்டாத தீர்ப்பிட்டடு வெளியேற முடியாமல் இக்கதிக்குள்ளாக்கி விடடாய் சுழுத்திற் கயிறிடடுக் கால்களையும், கைகளையும் இறுகப் பினைத்திழுத்துக் Hi! Լեւո ரத்தில் டிரற்றியெந்தன் உயிரதனைக் குடித்துவிட ஏன் தான் நினைத்தாயோ துஞ்சித் துவண்டு நான் வேதனையில் துடிப்பதையும் துயரமது தாளாமல் புலம்பி வெடிப்பதையும் துரத்தே நீ நின்று வேடிக்கை பார்க்கின்றாய் தூயமனதோடு கிடட்ட நெருங்கி வந்து என்னைச் சிறை மீடசு உன்னால் முடியாதா சமாதானம் அமைதியென்று மேடைகளில் பேசியென்ன நார்வலங்கள் போயென்ன உளருராயலைந்தென் ፵ùl உண்னாமலுறங்காமல் உபவாசமிருந்தேன்ை கரைந்து வடிந்தென்ன கதறியழுதென்ன உண்மைச்சமாதானம் எப்படித்தான் வந்துவிடும் கள்ளமில்லா உள்ளமும் கபடமில்லா + சிந்தனையும் கருத்துக்கள் மாறாத கனிவான வாய் மொழியும்
நேர்மையும் உடனிருந்தால் உனக்கும் அது கிடைத்து விடும்
41

Page 25
|×
)
()
)
saesae
(參 密彩
o ,
42
 

பனை மரத்தில் பாதி முகம்
ஈழ வள நாடடின்
pagÚGAJGTITILDI TIGAT
H.GülUITGELF. HijLITLC || Lify
l, P. வேரோடி நெடிதுயர்ந்த பனைமரத்தில்
சோழ வளநாடடின் கலை வண்ணம் திகழ்வது போல்
யாழவரின் கலைச்சோலை
பொலிவாக மிளிர்வதற்கு
மேள வடிவாக
முழமாக அளவெடுத்துத்
தாள லயத்துடனே
மேள ஒலி சேர்ந்தது போல்
நான்தனனச் செலவு செய்து
பாதிமுகம் தனைச் செதுக்கி
மீளவுமோர் பொழுதினிலே
மீதிதனைச் செதுக்கிவிட
தோழருடன் சேர்ந்திங்கு
பாதிமுகம் தனை ரசித்தேன்

Page 26
3.
|- ¿
----
No| 參 } ------)----密密s. (~ 密
1
 

யார் கண்கள் பட்டனவோ
காதல் வயப்படட கன்னியவளொரு பொழுது காதலனைக் கனிவாகக்கானப் புறப்படடாள் சீவித்தலை முடித்துச் சிங்காரமாயுடுத்துப் பூவோடு பொடடு மிடடுப் புதுக்கோலமெடுக்கின்றாள்
மடிப்புக்கலையாத மகிழம்பூச் சேலை தனை எடுப்பாக உடுத்தி நின்று விடுப்போடு பார்க்கின்றாள் அப்படியும், இப்படியும் நெளிந்து வளைந்தெழுந்து இழுத்திழுத்துப் பார்க்கின்றாள். ம். ஹும் திருப்தியில்லை
உடுத்த உடையதனை உடனே கழற்றிவிடடு அடுத்ததனை எடுத்து வந்து உடுத்துகின்றாள் அழகாக கண்ணாடி முன்நின்று மறுபடியும் பார்க்கின்றாள்
ஏதோ குறையொன்று எப்படியோ தெரிகிறது
எத்தனையோ ஆடைகளும் எடுத்து வைத்த சேலைகளும் அத்தனையும் அவள்மனதில் அலை யலையாய்த் தெரிகிறது அதிலொன்றை உடுப்பமென உடுத்ததனைக் கழற்றுகிறாள் யாரோசிரித்த ஒளி அவள் மனதைக் கலக்கியது
துடித்துப்பதைத்த அவள் சுழன்று திரும்புகின்றாள் அடித்துவைத்த சிலைபோலக் காதலன்தான் சிரித்து நின்றான்
எப்படித்தான் வந்தானோ எங்கெங்கு பார்த்தானோ
அச்சம், மடம், நானம் அத்தனையும் அவளடைந்தாள்
45

Page 27

ஆறுமுகன்
ஒருமுகத்துஅண்ணனவன் வேழமுகத்தோனும் ஆறுமுகத்துத் தம்பி ஆறுமுகத்தோனும்
ஒருமுகமாய் நின்றிங்கு தமதருளைத் தந்து
ஒரு முகத்தில் ஆறுமுகன் காடசி தரக் கண்டேன்
ஆறுமுகங்களையும் ஒருமுகத்திற் கான ஆறுவித கோணமதில் கற்பனைகள் செய்தேன் ஆறுவித பாவங்கள் அவன் முகத்திற் கண்டேன் ஆறுதலாய் இருந்ததனை அர்த்தமுடன் செய்தேன்
ஆறுமுகங்களிலும் வேறுரசம் கண்டேன் ஆறுகண் மூக்காறு வாயாறு செய்தேன் ஆறுக்கும் ஒரு தலையாய் உருவமதைக் கொண்டு ஆறுமுகம் எனும் பெயரில் சிரமொன்று செய்தேன் -21, III முகந்தானோரு முகமாயானதுவோ அன்றேல்
ஒரு முகந்தானாறு முகமானதுவோ ஏது
ஒரு பொழுது என் நண்பன் யாழோனின் கேள்வி
ஆறொன்று -2, Cl அன்றி வேறொன்றுமில்லை.
구

Page 28
|×
念 密 No¿
sae
&
褒 參
參
§.
Ņ
B
 

தண்ணிர்க் குடத்துடனே
மெல்ல நடந்து வந்தாள்
நித்திரையும் வரவில்லை நிம்மதியும் கிடைக்கவில்லை விராய்க் கிடக்குதென்று வெளியே நடந்து வந்தேன் ஏதாலும் செய்வமென்று ஏதனங்கள் தேடுகிறேன் ஏதும் கிடைக்கவில்ல்ை உலக்கையொன்று கிடக்கிறது
சுருங்காலி உலக்கையது புரண்டு கிடந்த விதம் ஏதேதே சிந்தனைகள் என்மனதில் உதிக்கிறது அந்த நேரம் அவள் ஒருத்தி முழுகிக் குளித்து விடடுத் தண்ணீர்க் குடத்துடனே பெல்ல நடந்து வந்தாள்
அவள் நடந்த கலையழகும் நனைந்த உடையழகும் மெலிந்த இடையுடனே கலைந்த முடியபுதும் பொலிந்த முகத்தினிலே வடிந்த கலையழகும் - என் தெளிந்த மனத்தினிலே நிழல் போற் பதிகிறது
விரிந்த புருவம துள் விதம் விதமாய் அளவெடுத்துக் தெரிந்த விதம் போலச் சிலையொன்றைச் செதுக்கிவைத்தேன் வடிவமதைக் கொடுத்து விடடு வந்தவளும் சென்று விடடாள் செதுக்கி வைத்த உருவமிங்கே உங்கள் முன் இருக்கிறது.
19

Page 29
t
 

அரிச்சந்திரன்
"சத்தியத்தைக் காத்த பாவி நான் "
வாய்மையே சதமென்று
நாளெல்லாம் வாழ்ந்திருந்தேன் - என்
வாய்மைக்குக் கிடைத்த
பரிசு இது தானோ?
ஒரு பொய்யைக் கூறிவிடடால்
உலகமே உன் காவில் என்றார்
பொய் கூற முடியாமல்
உண்மைக்காய் வாழ்ந்திருந்தேன்
வெள்ளிக்காக கேடடவர்க்கு
அள்ளிக்கையால் நான் கொடுத்தேன்
கொள்ளிக்காக வாங்கலானேன் - பரா பரமே
கொள்ளிக்காக வாங்கலானேன்
சத்தியத்தைக் காப்பதற்காய்
நாடு நகரிழந்தேன்
மணிமுடியையும் துறந்தேன்
குடிமக்களை இழந்தேன்
மனைவியுடன் மகளின் விற்றேன்
தீராத பழியடைந்தேன்
காடு மேடாய் நடந்தேன்
LIGTINGILL 13 af Lř - || || G. TIL DILJI 1333 Tači
சுடலையும் காக்க நான் துணிவு கொண்டேன்
5

Page 30
「
No)XT어: 彩氦|-彩
& |-
密 sae -
密
No
No.海 ( 密
密
參
No
% 《
s. 習
}
} |-|- 多
 

அகதிக் குடும்பம்
ஆண்துணையே இல்லாத அபலைக்குடும்பமது ஒலைக் குடிலமைத்து எப்படியோ வாழ்கிறது போனவருடத்துப் புரடடாதி மாதத்திற்
புறப்படட கணவனவன் போனது போனதுதான்
பாதிவயிற்றுடனே படுத்துவிடட சிறிசுகளைச் சோகக் கதை கூறிச் சொகுசாகத் தூங்கவைத்தாள் விடிந்தும் விடியாத காலைப் பொழுதினிலே
எங்கேயோ கேட்ட ஒலி அவள் மனதைக் கலக்கியது
துடித்துப்பதைத்தெழுந்து தூங்கும் குழந்தைகளை அடித்துத்துயிலெழுப்பி அப்படியே ஓடுகிறாள் எங்கிருந்தோ ஏவிவிடட ஏவுகனையொன்று ஏவற்பசாசாகி இங்கே வெடிக்கிறது.
அள்ளிய குழந்தைகளைத் தள்ளி விழுத்தி விடடுத் தானும் நிலத்தினிலே விழுந்து படுக்கின்றாள் மறுபடியும் எழுந்த அவள் ஓடுகிறாள் ஓடுகிறாள் திக்குத் தெரியாமற் திசைமாறியோடுகிறாள்
சீறிப்பறந்து வந்த புக்காரா பொம்மரொன்று
காதைப்பிளந்து கொண்டு தாவிச் சுழல்கிறது சூரத்தாண்டவம் தான் ஆட நினைத்ததுவோ கோரப் பசியுடனே குத்திப் பதிகிறது.
ஆகாயம் தான் துணை அகதிக்கு என்றிருந்தும் அது கூடக்கடைசியிலே கையைவிரிக்கிறது அந்தரித்து வந்தவளும் அவள்தம் குழந்தைகளும் அந்த மரத்தடியைத் தஞ்சமடைந்தனரே.
53

Page 31
『W
 

நாதஸ்வர இசைக்குழு
நாதசுர மன்னரது
இசைவிருந்தின் போது
நானுமந்தச் சனத்திரளின்
நடுவினிலே ஒராள்
தேமழை மேள இடி
தாள ஒலி வகைகள் கேடபடிருந்த வேளையிலே கற்பனையின் தேரில்
பாதிவழி ஓடியங்கு பார்த்த கலைக் கடவிட்
பரிணாமம் இசைக்குழுவாய்
பார்ப்கின்றீரிங்கே
55

Page 32


Page 33


Page 34


Page 35


Page 36


Page 37


Page 38


Page 39


Page 40


Page 41
@
(Centre for Perfo Jaffna, Sri |
Printedat Unie Arts (Pvt) Ltd., 48 BB

)
rming Arts) Lanka
oemendhal Road, Colombo 13.