கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கதாநாயகன் பெஞ்சமின் இமானுவல்

Page 1


Page 2


Page 3

கதாநாயகன்
கதாநாயகன்
பெஞ்சமின் இமானுவேல்
திரு பெஞ்சமின் இமானுவேல் அவர்களின் கலைத்துறை நினைவுகளின் தொகுப்பு
OKF6 Guettene UrblijuiūGuib fèXO
நந்தினி கலைத்தென்று; NANTHNIKALA 浣

Page 4
கதாநாயகன் பெஞ்மின் இமானுவேல் Kathanayakan Benchamin Imamuvel
வண்ணைதெய்வம் Wanna Theiwan
முதற் பதிப்பு. 24.09.1994
First Edition: 24th Sep.1994 அட்டை வடிவமைப்பு
நந்தினி அட்டைப்பதிப்பு ஆர்ப் கொப்பிசேவிஸ்
Cover Printing R.P. Copy Service கணணிப் பதிப்பு நியூ மெய்கண்டான் அச்சகம் பாரிஸ். வி4.2 0928 82 Computer Service New Meigandhaan ஒப்பு நோக்கல் அ.இராகுலன் Proof Reading A. Ragula T1
வெளியீடு நந்தினி கலைத்தென்றல் Published by (nauttiini Kalaitsentral 212, Av. du 8 May 1945
93150 - BlancInnesnill France. Tel: 48670 25
별
வண்ணைத்தெய்வம்

கதாநாயகன்
எங்கள்
நெஞ்சங்களில்
குடியிருக்கும்
குஞ்சம்மாவிற்கு
........
மறைந்தது மண்ணைவிட்டுத்தான் எங்கள் மனங்களை விட்டல்ல

Page 5
வண்ணைத்தெய்வம்
ஆசிரியரின் ஏனைய நால்கள்
விடிவை நோக்கி
(ரஜனி பதிப்பகம்) கலைப்பாதையில் இவர் (ரஜனி பதிப்பகம்)
கலைத்துறையில் இருமலர்கள்
(நந்தினி கலைத்தென்றல்)
ஆசிரியரின் அடுத்து வெளிவரவுள்ள நூல்
எனத காதலர்கள் (கவிதைத்தொகுதி)
 

கதாநாயகன்
நினைக்கின்றேன்
காலத்தின் சுழற்சியினால் எனது தாய், சகோதரர்கள், மனைவி, மக்கள், யாவரும் புலம் பெயர்ந்து பல திசைகளில் சிதறுண்டு வாழ்கின்ற போதும் தான் பிறந்த மண்ணை விட்டு புறப்பட மறுத்து அம்மண்ணில் இன்றும் கலைப்பணி ஆற்றி வரும் என் அன்புத் தந்தை சாமுவேல் பெஞ்சமின் அவர்களை பாசமுடன் நினைக்கின்றேன்.
பெஞ்சமின் இமானுவல்
S

Page 6
வண்ணைத்தெய்வம்
ReV. Fr. /W/M. SAVER/
B.Th., L. h. (Roma) Puia var Madurai} M.A., Ph.D. (London), D.Th. i Passau, W. Germanv]) Director, C.P.A.
பேராசிரியர் நீ. மரியசேவியர்
திரு பெஞ்சமின் இமானுவேல் அவர்கள் திருமறைக் கலாமன்றத் தின் அடித்துரண்களாய் உள்ளவர்களில் ஒருவர். அவர் ஈழத்தில் எப்படிக் கலைக்காக உழைத்தாரோ, அதே விதம் பிரான்ஸ் நாட்டிலும் கலையை வளர்க்க அரும்பாடுபடுகிறார். குறிப்பாக அங்குள்ள திருமறைக்ககலாமன்றத்தின் தலைவர் அவர் என்ற தில் பெருமிதம் அடைகின்றோம். அவர் ஒரு நடிகர், ஒப்ப னைக் கலைஞர், ஆடை அலங்கார நிபுணர், எல்லாவற்றிற்கும் மேலாக அவரது கள்ளம் கபடமற்ற ஒழுக்கம் யாவரையும் கவர்ந்திழுக்கும். கலைஞர்களிடத்தில் காணப்படவேண்டிய குழந்தை உள்ளத்திற்கு உதாரணமாக வாழும் இமானுவேல் அவர்கள் ஐரோப்பாவில் கலைமாமணிப்பட்டம்பெறும் வேளை அவரை வாழ்த்தி இறை ஆசீரை வேண்டுகின்றோம்.
திரு பெஞ்சமின் இமானுவேல் அவர்கள் திருமறைக்கலாமன்றத் தின் வரலாறுபடைத்வர். குன்றனைய பண்பினர். குழந்தை ஒத்த தன்மையினர். குருபக்தி நிறை நீர்மையினர். கலை நெஞ்சமும் கட்டுப்பாடுடன் கலந்த ஒழுக்கமும் உடைய உயர்ந்த இவரை வாழ்த்தி இறை ஆசீர் இவரது வாழ்வில் என்றும்பொலிய வேண்டி இவரது மகிழ்வில் நானும் கலந்து கொள்கின்றேன்.
കേഴു سلاطيخ
—9t V— c-e2>ô5n .

கதாநாயகன்
R.C. Bishop's House Jaffna Sri Lanka
தோமஸ் சவுந்தரநாயகம் யாழ். ஆயர்
திரு பெஞ்சமின் இமானுவல் கலைக்கும், திருச்சபைக்கும், யாழ். திருமறைக்கலாமன்றத்தின் தொண்டனாக இருந்து பணிபுரிந்து இன்று பிரான்ஸ் தேசத்தில் திருமறைக்கலாமன்றத்தின் தலைவராகப் பணியாற்றிவரும் திரு பெஞ்சமின் இம்மனுவல் அவர்களுக்கு ஜேர்மனியில் உள்ள இரங்கும் இல்லம் என்ற அமைப்பினால் கலைமமாணி என்ற பட்டம் வழங்கப்பட்டு கெளரவிக்கப்படுவதை பாராட்டி வாழ்த்து கிறேன். இறைபக்தி நிறைந்த அவருக்கு இறைஆசீர் என்றும் கிடைக்கவேண்டும் என்று வேண்டுகிறேன்.

Page 7
வண்ணைத்தெய்வம்
யாழ்.பேராலயம் கண்ட பெருங்கலைஞன்
யாழ். பேராலயம் கண்ட பெருங்கலைஞன் யாழ். புனித மரியன்னை பேராலயப் பங்கின் செயலாளர் என்ற வகையில், கலைமாமணிப் பட்டம் பெறும் திரு. பெஞ்சமின் இமானுவல் ஆனந்தராஜா அவர்களையிட்டு, அவரது கலைவாழ்வையொட்டி வாழ்த்துச்செய்தி அனுப்புவதில் நான் பெருமகிழ்ச்சியும், பெருமையும் அடைகின்றேன்.
திரு. இமானுவல் யாழ். புனித மரியன்னை பேராலயத்திற்கே தனிப்பெரும் மதிப்பும், கெளரவமும் தேடித்தந்த பெருமைமிக்க கைலஞன் என்று கூறுவதில் தவறு ஏதேனும் இல்லை. கார ணம் இவர் மிக நீண்ட காலமாகப் பேராலயத்துடன் பல வழிகளிலும் இரண்டறக்கலந்துள்ளார். இவர் பள்ளிப்பராயத்தில் புனித ஞானப்பிரகாசிரியப் பீடப்பணியாளர்சபையில் அங்கத்தவ ராகச் சேர்ந்த காலத்திலிருந்தே இவரது பணிவாழ்வு ஆரம்ப மாகியது. இறைபணியோடு கலைப் பணியும் புரிய ஆரம்பித்து விட்டார். "வளரும் பயிரை முளையிலே தெரியும்" என்பதற் கொப்ப கலை வாழ்வு முளைகட்டியது. அன்று தொடங்கிய கலை வாழ்வு, துளிர்த்து, தளிர்த்து, கிளைத்து எழுபதுகளில்
8

கதாநாயகன்
ஆரம்பத்திலே பூத்துக் குலுங்கியது. எழுபது ஆரம்பத்தில் அப்போதைய பங்குத் தந்தையாக இருந்த அருட்திரு. எக்ஸ். கிறீஸ்தோத்திரம் முதன் முதலாக யாழ். பேராலயத்தில் "இ ளைஞர் மன்றம்" ஒன்றை உருவாக்கினார். இதன் பணி "கலை மூலம் நற்செய்தி பரப்பல்" ஆக அமைந்திருந்தது. இதற்கொப்ப பல நாடகங்கள் மூலம் பல புனிதர்களின் வாழ்வு நடித்துக்காட் டப்பட்டது. இவ்வேளையில் 1972ம், 1974ம் ஆண்டுகளில் எனது நெறியாழ்கையில் "திருப்பாடுகளின் காட்சி" மேடையேற் றப்பட்டது. இவ்விரண்டு மேடையேற்றங்களும் என்றும் நினை விலிருக்கக் கூடியதாகும். இதில் 1974ம் ஆண்டு மேடையேற் றப்பட்ட "திருப்பாடுகளின் காட்சி" என்றுமே நினைத்திருக்கக் கூடியது. காரணம் இதில் யேசுவாக நடித்தவர் வேறுயாருமல் லர், திரு. இம்மானுவல் ஆகும். இவர் யேசுவாக நடித்தார் என்று கூறுவதை விடுத்து, யேசுவாகவே மாறினார் என்று கூறுவது மிகப் பொருத்தமாகும். இவரது தோற்றம், நடிப்பு, அங்க அசைவாட்டம், பாத்திரத்தை உணர்ந்து நடித்த தன்மை இன்னும் மேலாக இதனை ஒரு வெறும் நடிப்பாகக் கொள் ளாது, ஒறுத்தல் முயற்சிகளை செபத்தியானங்களை மேற் கொண்டு நடித்த தன்மை குறிப்பிடக் கூடியது. இன்னும் மேலாக கற்றுணிலே கட்டி அடித்த போது, அக்காட்சியிலே தத்துருபமாக அடிக்கச் செய்தும், சிலுவை சுமக்கும் போது வீழ்ந்த காட்சிகளில் தமது உண்மையான நடிப்பாற்றலை வெளிப்படுத்தி மக்களின் புகழையும் ஆதரவையும் பெற்றார். இத்துடன் இவரது கலைப் பணி நிறைவு பெறவில்லை. இத னைத் தொடர்ந்து இங்கு மேடையேற்றப்பட்ட, வெற்றி வாகை துடிய, "ஆண்டவன் கட்டளை", "சங்கிலியன்", "மூன்று இராசாக்கள்", "கிறீஸ்து பிறந்தார்" போன்ற நாடங்களும் குறிப்பிடத்தக்கன. இன்னும் இலங்கை வானொலியில் பேரால யப் பங்கால் மேடையேற்றப்பட்ட நாடகத்திலும், அழகுறும் மலை நாட்டில், கலிகத்தனை என்னும் இடத்தில் மேடையேற் றப்பட்ட "மனமாற்றம்" என்னும் நாடகங்களும் இவரது சிறப்புக் கும் நடிப்புக்கும் சிகரமாகும்.
இப்பொழுது இங்கு நடைபெறும் தெருக் கூத்துக்கள் போன்று அன்று எழுபதுகளில் நடத்திய "கிறீஸ்து பிறந்தார்" என்ற நிகழ்வுகள் பங்கு மக்களால் மாத்திரமன்று அனைவராலும்

Page 8
வண்ணைத்தெய்வம்
பாராட்டப்பட்டது. இங்கும் இவரது பாத்திர வெளிப்பாடு சுடர்
விட்டது. இன்னும், "உத்தான விழா", மேடையேற்றப்பட்ட
போது பண்பாட்டோடு கூடிய நடிப்பாற்றலைக் காணக் கூடிய தாக இருந்தது. "உரைச் சித்திரம்", வில்லுப்பாட்டு" போன்ற நிகழ்ச்சிகள் இவருக்குக் கைகண்ட கலையாக இருந்தது.
இவை தவிர, பேராலயப் பங்கிலே தனித்தனியாக நடாத்தப்பட் டமன்றங்கள் மூலமாகவும் மேடையேற்றப்பட்ட அரிய பல நாடகங்களிலே மற்றும் ஓர் பேராலய நாடகக் கலைஞனான திரு. கறிகறி தங்கராஜாவுடன் இணைந்து நடித்துப் புகழ் பெற்ற பல நாடகங்கள் என் நினைவில் மீள வருகின்றன. இதில் சிகரமாக விளங்குவது "மயான காண்டம்". அந்த நாடகத்தில் சத்திய கீர்த்தியாக வந்து சபையோரின் பாராட்டைப் பெற்றதை ‘நான் மறக்க முடியாது. இன்னும் "மயான காண்டம்" மேடை யேற்றப்படும் போது இவரது நடிப்பு மீண்டும் நினைவு கூரப்ப டுகின்றது.
இத்தகைய புகழ் மணக்கும் கலைஞனின் கலை வாழ்வு,
மேலைத் தேச கலைப் புகழ் கூறும் பிரான்ஸ் நாட்டிலும் தாய்த் தமிழின் இனிமையிலும், இன்னிசையிலும் முழங்குவது வரவேற்கக் கூடியதும், பாரட்டக் கூடியதும், போற்றப்படக் கூடியதும். எங்கும், தொண்டாற்றும் இக் கலைஞன் போற்றப் படக் கூடியவரே. இவரது கலை வாழ்வுக்கு விழா எடுத்து,
பட்டமளித்துக் கெளரவப்படுத்துவதும் புகழ்படக் கூடியதே.
கலை என்றும் வாழும், கலைஞனும் என்றும் வாழ்வான்.
கலை வாழ்வு தொடர்க ! காலமெல்லாம் மலர்க ! " பணி வாழ்வு நிலைக்க ! நலமுடன் வாழ்க ! என்று வாழ்த்துகின்றேன் வாழ்க !
39, மத்தியூஸ் வீதி, மோ. தார்சீசியஸ் யாழ்ப்பாணம், 27 04. 94 இலங்கை.
10

கதாநாயகன்
நீடுழி வாழ்க
யாழ்பாடி வளர்த்தகலை கலைந்திடுமோ, மீள் கொண்டு, மேன்மை துலங்க வித்தகன் தாள் பணிந்து, ஆய கலைகளை அறிந்து, ஏழ் கடலைத் தாண்டிய "ஆண்டவர்" ஏற்றம் பெறவே.
கால வெள்ளம் பிந்திய வேளையிலும், "கலைமாமணி" தகுதியைப் பெற்றது சாலம் பொருத்தமே கலைஞன் புகழை ஞாலம் போற்ற வாழ்த்துதல் தகுமே.
வாழையடி வாழையாய் வளர்ந்த வல்லன் தாளை வணங்கிடும், தனிப் பெரும் தருவே ஏழைக் கலைஞனின் எழுசுடர் வழியே வேளையும் வந்தது, வெற்றியும் குவிந்தது.
சந்திர முகத்தோன், சதிராடும் மேனியன், இந்திரலோகத்திலும் இணையிலா நடிகன், முந்தைய சரிதம் கண்முன் காட்டிலே சிந்தையில் நிறுத்தி சிந்திக்க வைப்பவன்.
அருகிரு மந்திரியாய் அரசனாய் ஆண்டியாய் திருவுருவ மன்மகளும், மாதொரு பாகனாய் மெருகேற்ற மேன்மை தரு பாத்திரங்கள் புருவமுயரப் படைத்தலே உன் திறமைகாண்.
தாயீன்ற தமிழ் தரணியெங்கும் பரவ சேயீன்ற சேவை சிறப்புற்று வளர ஐயம் திரிபுற்ற அறுபத்துநான்கு கலைகளுடன் ஆயிரம் பிறைகண்டு நீ வாழவேண்டும்.
வணக்கத்துடன் சிவலிங்கம் சிவபாலன்

Page 9
வண்ணைத்தெய்வம்
ஒப்பற்ற நடிப்பிற்கும் ஒப்பனைசெய்வதற்கும்
ஒப்பற்ற நடிப்புக்கும் ஒப்பனை செய்வதற்கும் விற்பகனாம் எம் அண்ணன் இமானு வேல்புகழ் வாழ்க கற்பகவல்லியின் கடை கண்பார்வை பெற்ற அற்புதக் கலைஞன் இமானு வேல்புகழ் வாழ்க
ஆண்டவர் - கலையை ஆண்டவர் அரசு ஆண்டமன்னர்களாய் மாறி மேடையை ஆண்டவர் எங்கள் இமானுவேல் மீண்டுமொரு ஆண்டவர் பிறந்தாரோ எனநாம் வியக்க ஆண்டவராய் தோன்றி ஆண்டவராய் ஆனவர் - இவர் நீண்ட காலம் வாழ ஆண்டவனை வேண்டிடுவோம்.
- பிரியாலயம் துரைஸ்

கதாநாயகன்
என்னுரை
அறிஞர்களே, பெரியோர்களே, எனது அன்புக்குரிய கலைத் துறை நண்பர்களே, மதிப்பிற்குரிய ரசிகப்பெருமக்களே!
மானிடப்பிறவியிலே நானும் சகமனிதர்களைப்போல் சாதாரண மனிதன் தான். இரங்கும் இல்லம் என்ற இந்த அமைப்பு கலைத்துறையிலும்சரி, சமூகப் பணிகளிலும்சரி, தமிழ்ஈழத்தில், அழிவுகள், துன்பங்கள், கண்ணிர்கள், கவலைகள் மத்தியில் வாழ்ந்துகொண்டிருக்கும் எமது மக்களுக்கு உதவிபுரியும் பணி யிலும்சரி, நாம் அனைவரும் பெருமைப்படக்கூடிய வகையில் அளப்பரிய சேவையைச் செய்துகொண்டு வருவதை நாம் அனைவரும் அறிவோம். ஐரோப்பியநாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழ்க் கலைஞர்களுள் சிறந்த கலைஞரைத் தேர்ந்தெடுத்து வருடாவருடம் கலைமாமணி என்ற விருதுடன்பணமுடிப்பையும் வழங்கத் தீர்மானித்து, அவர்களின் முதல் தேர்வுக்குரியவனாக என்னைத் தேர்ந்தெடுத் திருக்கிறார்கள். நான் தமிழகத்தில் இருந்தபொழுது எனது நண்பனும், இந்த மலரின் ஆசிரியருமாகிய திரு வண்ணைத் தெய்வம் மூலம் இச்செய்தியை தொலைபேசிமூலம் அறிந்தேன். இந்த மகிழ்ச்சியான செய்தியைக் கேட்டவுடன் என்முகத்தில் ஏற்பட்ட மகிழ்ச்சிக்கோடுகளை திரு வண்ணைத்தெய்வம் பார்க்காதுவிட்டாலும் எனது குரலின் தடுமாற்றத்திலிருந்து எனது உள்ளத்தின் பூரிப்பை அவர் உணர்ந்திருப்பார் என்று எண்ணுகின்றேன்.
43

Page 10
வண்ணைத்தெய்வம்
கலைமாமணி என்ற இந்த விலைமதிக்க முடியாத கெளரவம் எனக்குக் கிடைத்திருக்கிறது என்றால் அது முற்றுமுழுதாக எனக்குச் சொந்தமான கெளரவம் என்று நான் கூறுவதற் கில்லை. இதற்கு முழுமையாக உரித்தானவர் எனது தந் தையே. எனது தந்தை திருவாளர் சாமுவேல் பெஞ்சமின் அவர்களைத் தெரியாத கலைஞர்கள் இலங்கையில் இல்லை யென்றே சொல்வேன். அப்பேற்பட்ட மாபெரும் கலைஞனக்கு மகனாகப் பிறந்தது நான் பெற்ற பாக்கியம் என்றே கருதுகின் றேன்.
இமானுவேல் என்ற இந்தச் சிறியோனைக் கலைவாழ்வில் வளர்த்துவிட்டதில் என் தந்தையுடன் எத்தனை பெரிய கலை ஞர்களுக்கெல்லாம் பங்கு உண்டு என்பதை இம்மலரில் திரு வண்ணை தெய்வம் மிக அழகாக விபரித்துள்ளார் என்பதை மலரைப் புரட்டிப் படிக்கும் நீங்களே புரிந்துகொள்வீர்கள். இந்த கலைமாமணி விருதில் அவர்களுக்கெல்லாம் பங்குண்டு உரி மையுண்டு என நான் கருதுகிறேன். கலைஞர்களாக இல்லாது விட்டாலும்கூட, எனது வெற்றிக்காக கரகோசம் செய்து ஊக் கம் தந்த ரசிகப்பெருமக்கள் எல்லோருக்கும் இந்த விருதில் பங்கு உண்டு என நான் எண்ணுகிறேன். வெற்றியின் பரிசு என் கைகளில் இருந்தாலும், இவ்வெற்றியில் உங்கள் எல்லோருக் கும் பங்கு உண்டு.
இந்த நூலை உருவாக்கிய எனது மதிப்பிற்குரிய நண்பன் திரு. வண்ணை தெய்வம் அவர்கட்கும், நந்தினி கலைத்தென் றலுக்கும், எனக்கு ஆசிச்செய்திகள் அனுப்பியிருந்த மேன்மை தங்கிய யாழ். ஆயர் தோமஸ் செளந்தரநாயகம் ஆண்டகை அவர்கட்கும், என் கலைக்குரு அருட்தந்தை சவிரிமுத்து அடிகளார் அவர்கட்கும், ஆசிரியர் மோ. தாசீசியஸ் அவர்கட் கும், கவிஞர் சிவலிங்கம் சிவபாலன் அவர்கட்கும், பிரியாலயம் துரைஸ் அவர்களுக்கும், நான் என்னென்றும் நன்றியும் கட மையுள்ளவனாகவும் இருக்கிறேன். என் நெஞ்சில் நீங்காத புள்ளி திரு வண்ணை தெய்வம்.
நான் கலைத்துறையில் காலடி எடுத்து வைத்து ஏறக்குறைய நாற்பது வருடங்களாகிவிட்டது. நாற்பது வருடகால
4

கதாநாயகன்
நினைவுகளை மீட்பது என்பது சுலபமான விடயமல்ல. என்னால் முடிந்தவரை, என் நினை வில் நின்ற குறிப்புகளை நண்பன் வண்ணைத் தெய்வத்திற்கு கொடுக்க அவர் தனக்கே உரித்தான அழகு தமிழ் வார்த்தைகளில் வடிவமைத் இந்த மலரை உருவாக்கியிருக்கிறார்.
அவருக்கும் இந்த மலரை உருவாக்குவதற்கு உதவிய நண்பர் நியூ மெய்கண்டான் அரியம் அவர்கட்கும், இந்த கலைமாமணி விருதை வழங்கிய இரங்கும் இல்லத்திற்கும் எனது மனமார்ந்த நன்றியைக் கூறுவதோடு, புலம் பெயர்ந்து வாழும் எம்
கலைஞர்களின் திறமைகளைப் பாராட்டி வருடந்தோறும் தொடர்ந்து சிறந்த கலைஞர்களுக்கு இந்தப் பட்டத்தை வழங்க முடிவுசெய்திருக்கும் இரங்கும் இல்லத்தை வாழ்த்தி விடைபெறு கின்றேன்.
நன்றியுணர்வுடன்
அன்பன்
பெஞ்சமின் இமானுவேல்

Page 11
வணிணைத்தெய்வம்
வண்ணவரிகள்
என் அன்புக்குரிய வாசகர்களே! அன்பான தமிழ்நல் உள்ளங் களே! வணக்கம். அழகுமிகு யாழ்நகரின் ஒரு பகுதியாக விளங்கிய வண்ணார்பண் ணையில் பிறந்த இந்த நாகேந்திரம் தெய்வேந்திரம், நான் பிறந்த மண்ணின் பெயரை என்னோடு இணைத்து வண்ணைத் தெய்வேந்திரம் என்று பெயர் கொண்டு எழுத ஆரம்பித்தேன். கால ஓட்டத்தில் பெயர் சுருங்கி வண்ணைத் தெய்வமாகி இன்று வண்ணை என்று நான் பிறந்த மண்ணின் பெயரைச் சொன் னாலே என்னை மற்றவர்கள் தெரிந்து கொள்ளும்படி வளர்ந்து கூடிட்டேன்.
எனது நீண்டநாள் கனவு எனது எழுத்துக்களை அச்சில் பதித்து புத்தகமாகப் பார்க்க வேண்டுமென்று. அந்தக் கனவைச் செயலாக்கி வைத்தவர் எனது மதிப்புக்குரிய நண்பரும் ஈழநாடு ஆசிரியருமான திரு S. S. குகநாதன் அவர்கள்.
"விடிவை நோக்கி" என்ற எனது அந்தக் கவிதைத் தொகுதி எனது எழுத்துக்களுக்கும் ஒரு விடிவைக் கொடுத்தது.
எனது இரண்டாவது நூலும் ரஜனிபதிப்பகத்தாலேயே வெளியி டப்பட்டது. இது பொன்விழாக்கண்ட கலைஞனும் எனது நண்பனுமான கிறெகரி தங்கராஜா அவர்களின் கலைவாழ்வு பற்றியது.
A tó

கதாநாயகன்
அதன்பின் "கலைத்துறையில் இருமலர்கள்" என்ற பெயரில் திருமதி நீலதயாட்சியக்கா, திருமதி வளர்மதி துரைஸ் ஆகிய இரு பெண்கலைஞர்களையும் பாராட்டி நந்தினி கலைத்தென்றல் வெளியிட்ட ஒரு சிறு மலர் அது.
நந்தினி கலைத்தென்றல் அதை வெளியிட்டாலும் அதற்குப் பின்னால் ரஜனி பதிப்பகத்தின் கரங்கள் ஒழிந்து கொண்டிருந் தது/பலருக்குத் தெரியாது.
இதுமட்டுமல்ல ஈழநாடு பத்திரிகை மூலமும் பல கலைஞர்க ளின் சிறப்புக்களை வெளிப்படுத்தியிருக்கின்றேன்.
"கதாநாயகன்" என்ற இந்த நூலும் ஒரு கலைஞனின் கதை தான். இப்பொழுது நான் எழுதிக் கொண்டிருக்கும் "எனது காதலர்கள்" என்ற கவிதைத் தொகுதியும் கலைஞர்களைப் பற்றியது தான்.
நான் ஏன் கலைஞர்களைப் பற்றியே அதிகம் எழுதுகின்றேன் என்று கேட்கின்றீர்களா?
எனக்குக் கலைஞர்களைப் பிடிக்கும். அவர்கள் மற்றவர்கள் மணந்து கொள்ளும் மலர்களைப் போன்றவர்கள். வானத்தில் மின்னும் நட்சத்திரங்களைப் போன்றவர்கள். கலைமான்கள்,
கலைக்கதிர்கள். மற்றவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்த வானத் தில் இருந்து பூமிக்கு வந்த தேவதை போன்றவர்கள். விலை யில்லாப் பொக்கிசங்கள். முயற்சியின் முளைகள். உழைப்பின் சின்னங்கள். அடுத்தவர்களின் மகிழ்ச்சிக்காக தங்களின் சுகங் களை மறந்தவர்கள். தங்களின் தூக்கங்களைத் துறந்தவர்கள்.
ஏன் சில சமையங்களில் தங்களில் குடும்பங்களையே மறந்தவர் கள் இந்த மாணிக்கங்கள். அதனாற்றான் இந்தக் கலைஞர்க ளைப் பற்றி அதிகம் எழுதுகின்றேன். -
என் எழுத்துக்களை வளர்ப்பதற்கும், ரசிப்பதற்கும், விமர்சிப்ப தற்கும் கலாரசனையுள்ள ஆயிரக்கணக்கான நல் உள்ளங்கள் இருக்கின்ற வரையில் எனது பேனாவின் மை வற்றப்போவ தில்லை.
7

Page 12
வண்ணைத்தெய்வம்
இருந்த போதும் எழுவதில் நான் புதியவனே?
புதியவர்கள் என்றாலே சில பழையவர்களுக்கு வேப்பங்காய்
புளியங்காய் போல. . .
ஏன் இந்தக் கசப்பு? ஏன் இந்தப் புளிப்பு? இன்றைய குழந்தைதானே நாளைய மனிதன்! இன்றைய பிறை நிலா நாளைய முழுநிலா அல்லவா? இன்றைய புதியவர்கள் நாளைய பழையவர்கள் தானே?
நாளை என்று ஒன்று வராமலா நின்றுவிடப் போகின்றது!
வான், நிலம், கடல் இவைகள் அனைத்தும் பழையவைகள் தான். ஆனால் என்றும் புதியவைகளாகவே மக்களால் மதிக்கப் படுகின்றது, ரசிக்கப்படுகின்றது.
நான் எழுதுவதற்கு என்றும் புதியவன்தான். அந்த அடக்கத்து டனேயே இந்த நூலை எழுதியிருக்கின்றேன்.
இந்த நூலின் கதாநாயகன் சாதாரண கலைஞன் அல்ல? ஒரு கலை மேதையின் வாரிசு. ஒரு கலைக்குடும்பத்தின் தலைப் பிள்ளை. கலைஞர்கள் மத்தியில் ஒரு விலையில்லா முத்து.
எண்ணற்ற மேடைகளிலும், மேடைக்குப் பின்பும், ஏன்? மேடையாகவும் நின்று இந்தக் கலைஞன் ஆற்றிய பணி கடல் போன்றது. இந்த நூல் ஒரு துளி போன்றது.
இமானுவேல் எத்தனை வேடங்களை ஏற்று நடித்திருந்தாலும் ஆண்டவர் வேடம் மட்டும் இவரோடு ஒட்டிக்கொண்ட விந் தைதான் என்ன?
இவர் ஆண்டவரா? ஆண்டவரே இவர்தானா? என்று பல ஆயிரக்கணக்கான ரசிக உள்ளங்கள் வியந்ததுண்டு ஆனால் ஒன்றுமட்டும் நிதர்சனமான உண்மை, கலைத்துறையையே பெஞ்சமின் குடும்பமே ஆண்டவர்கள்.
8

கதாநாயகன்
அதனாற்றாலன் ஆண்டவர் என்ற பெயர் இவரோடு ஒட்டிக்கொ ண்டதோ! இப்படி எல்லோருக்கும் அமைவதில்லை. இது ஒரு சாதனை.
சாதனை என்பது இவருக்குச் சாதாரணமாக இருக்கலாம்.
ஆனால் அந்தச் S =ாதனையாளருக்கு மிக உயர்ந்த விருது
கிடைத்திருக்கின்றதே! இது சாதாரணமானதா?
"கலைமாமணி" என்ற பட்டம் எல்லோருக்கும் கிடைத்துவிடக் கூடிய சாதாரணமான விருது அல்ல. இந்த விருது இவரது திறமைக்கும் இவரின் கலைச்சேவைக்கும் கிடைத்த பரிசு.
ஐம்பது வயதைத் தாண்டிய பின்பும் ஐந்து வயதுச் சிறுவனைப் போல் துள்ளிக் குதிக்கும் இந்தக் கலைஞனுக்கு இரங்கும் இல்லம் பெருவிழா எடுக்கும் இந்த வேளையிலும் நந்தினி கலைத்தென்றலும் தன் பங்கிற்கு இந்த நூலைப் படைக்கின் 2D35.
இந்த நூல் இமானுவேலைப் பற்றிய சுயசரிதையோ அல்லது அவரது வாழ்க்கைச் சரிதையோ அல்ல?
சுயசரிதை என்பது பெரும்பாலும் சுயதம்பட்டமாகவே இருக் கும். வாழ்க்கைச் சரிதை என்பது அவரின் நிறை, குறைகள் அனைத்தையும் விமர்சிக்கப் பட்டிருக்கும். ஆனால் இந்த நூல் இமானுவேலின் வாழ்க்கையின் ஒரு பக்கம் தான். அவரே இந்த நூலை எழுதாததால் இது சுயசரிதையுமல்ல, வாழ்க் கைச் சரிதையுமல்ல.
இது திரு இமானுவேலின் கலைச்சரிதை. இந்தக் கலைஞனின் கலைச் சரிதையை எழுதியதில் எனக்குள்ளேயே எனக்கு ஒரு பெருமை.
ஒரு பெரும் கலைஞனின் கதையை நான் எழுதிதால் என் பெயரும் சிலர் வாயில் நுழையவேண்டுமென்ற நப்பாசைதான். வரும் காலத்தில் இந்த வண்ணை இல்லாத போது இந்தக் கலைஞர்களின் உள்ளங்களில் எல்லாம் வாழவேண்டுமென்று ஒரு பேராசைதான்.
9

Page 13
வண்ணைத்தெய்வம்
கலைஞர்களை வாழ்த்துவதற்கும், பாராட்டுவதற்கும் ஒரு மனப் பக்குவம் வேண்டும். இரங்கும் இல்லத்தின் தலைவர் திரு சிவனடியான் பூரீபதி இதில் உயர்ந்தே நிற்கின்றார். ஆனாலும் அந்த மரத்துக்கும் சில கல்லெறிகள் விழத்தானே செய்கின்றது! அதனால் என்ன நடந்து விடும்? இந்தக் கல்லெ றியால் அந்த மரத்துக்கு என்ன நடந்து விடும்? அது மரம் பரந்து, விரிந்து, விழுதுகளை ஊன்றி விருட்சமாக நிற்கும் ஒரு ஆலமரம். அந்த மரம் இந்த கல்லெறிகளுக்கா விழுந்து விடும்? இன்னும் பல கலைமாமணிகளை வழங்கவிருக்கும் இந்த இரங்கும் இல்லம் இந்தக் கல்லெறிக்கா விழுந்து விடும்! இமானுவேல் கலைமாமணி விருதுக்கு ஆரம்பம்தான். முடிவு?. . . அது இல்லாமல் இருக்க வேண்டும்.
கலைஞர்களைக் கெளரவிக்கப் புறப்பட்ட இரங்கும் இல்லத் திற்கு வாழ்த்துக்களைக் கூறுவதோடு இந்த நூல் உருவாகுவ தற்குக் காரணமாக இருந்தவர்களுக்கு நன்றி சொல்வதும் என் கடமையாகும்.
நூல் ஒன்று வெளியிட வேண்டுமென்று சொன்னதும் வா என்று பெருமனதோடு அழைத்து கணனியில் பதிப்பித்துத் தந்த மெய்க ண்டான் அரியம் மாஸ்டரின் பணி நன்றி என்ற ஒரு வார்த் தையோடு முடிந்துவிடக்கூடிய ஒரு விடமல்ல! அவருக்கும் அவருடன் இனைந்து பணியாற்றிய நண்பன் பூரீ அவர்களுக்கும் என்னோடு இரவு பகலாகக் கண்விழித்து இந்த நூலை உரு வாக்குவதற்கும் எழுத்துக்களைப் பிழை திருத்திச் சரிபார்த்தவ ருமான என் நண்பன் திரு ராகுலன் அவர்கட்கும், அழகான அட்டையைப் பதிப்பித்துத் தந்த R. P. கொப்பி சேவிஸ் ஸ்தா பனத்தாருக்கும் இந்த நூலை வெளியிடுவதற்கு பெருமனதோடு
முன்வந்து முழு உதவிகளையும் புரிந்த தமிழாலயம் புத்தக நிலைய உரிமையாளர் திரு நடேசன் அவர்கட்கும் இந்த நூலை வாங்கிப் படிக்கும் உங்களுக்கும் நந்தினி கலைத்தென்ற லின் இதய பூர்வமான நன்றிகள் என்றென்றும்.
நூறு மலர்கள் மலரட்டும் நாளைய உலகம் சிறக்கட்டும்.

கதாநாயகன்
ஐம்பதிலும் ஞானம் வரும ஆயிரம் கரங்கள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை ஆணைகளிட்டே யார் தடுத்தாலும் அலைகடல் ஓய்வதில்லை
ஒரு கலைஞன் வயதால் முதிர்ச்சியடையும் போது அவன் அனுபவத்தால் இளமை அடைகின்றான் என்பதுதான் உண்மை. அவனுடைய வயதிற்கேற்ற அனுபவத்தின் வெறிப்பாடுகள் புதிய கருத்துக்களை புதிய யுத்திகளை, புதிய பாவங்களை, கொண்டு வருவதற்கு காரணமாகின்றது. நடிப்பில் பரிணாமம் வளர்ச்சியை காணமுடிகின்றது. அந்த கலைஞனுக்கு வயதுதான் அதிகரித்துள்ளதே தவிர் அவனுடைய அனுபவங்கள் இளமை பெற்றுள்ளது என்ற உண் மையையே இது எமக்கு உணர்த்துகின்றது. இந்த உண்மைக்கு சாட்சியாக எம்மிடத்தில் வாழும் ஒரு கலைஞர் இருக்கின்றார். அவர்தான் சாமுவேல், பெஞ்சமின், இம்மானுவல் அவர்கள். பாரிஸ் மாநகரில் மிகப் பெரிய அரங்கம், அந்த அரங்கம் நிறைந்த மக்கள் வெள்ளம், எல்லோருடைய பார்வையும் அரங்கின் ஒரே இடத்தை நோக்கியே செல்கின்றது. ரசிகர்கள் மூச்சு விடும் சத்தம் கூட அங்கு கேட்கவில்லை. ஒரு குண் டூசி விழுந்தால் கூட அந்த சத்தம் எல்லோருக்கும் கேட்டுவி

Page 14
வண்ணைத்தெய்வம்
டக்கூடிய நிர்மலமான அமைதி, மேடைக்கு பின்புறம் இருந்து முகாரி ராகத்தை சுமந்து வரும் மெல்லிய இசை. . . . . . இடையிடையே சிறு முனகல் சத்தம். "பிதாவே... என் பிதாவே. . .
இவர்கள் அறியாமல் தவறு செய்கின்றார்கள் இவர்களை மன்னித்து விடும். . . " அரங்கத்தில் அமர்ந்திருக்கும் பார்வையாளர்களின் முகங்களில் சோகம்.
"நான் தாகமாக இருக்கின்றேன். நான் தாகமாக இருக்கின்றேன். . .
தண்ணிர். . . தண்ணிர். . . "
பார்வையாளர்கள் மனதில் ஒருவித ஏக்கம் ஆண்டவருக்கு யாரும் தண்ணிர் கொடுக்க மாட்டார்களா? என்ற ஏக்கம். "தண்ணிர். . . தண்ணிர். . . பிதாவே இவர்களை மன்னித்து விடும். . .
ஆ. . . 1 ஆஆ. . . " முடிந்து விட்டது எல்லாம் முடிந்து விட்டது. கல்வாரி மலை யிலே கயவர்களால் சிலுவையில் அறையப்பட்டிருந்த ஆண்ட வர் மரணித்து விட்டார். முகாரி ராகம் மேடையிலே. . . 'முனுகல் சத்தங்கள் அரங்கி னிலே. . . அந்த அரங்கினிலே இருந்த மக்கள் தாங்கள் ஒரு நாடகத்தை பார்த்துக் கொண்டிருப்பதாக உணரவில்லை. தங்கள் கண்ணெதிரே ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை சிலு வையில் அறைந்து கொல்கின்றார்கள் என்ற உணர்வுதான். "ஆண்டவரே. . . ஆண்டவரே. . . " என் ஆவியை உம் திருக்க ரங்களில் ஒப்படைக்கின்றேன். " இரக்கமுள்ள இதயங்கள் எல்லாம் வாய்க்குள் முணு முணுக்கின் றது. இதயம் நெகிழ்ந்தவர்களின் கண்களில் கண்ணிர் வடிகின் றது. தொங்கிய தலை! தொங்கி வளையாத உடம்பு சிலுவை யில் தொங்கிக் கொண்டிருக்கின்றார் பெஞ்சமின் இமானுவல் அவர்கள். ஆம், அன்று அங்கு ஆண்டவராக நடித்துக் கொண்டிருந்தவர் பல நாடகங்களில் இயேசுநாதராக நடித்து மக்களால் ஆண்ட வர் என்று அன்பாக அழைக்கப்படும் பெஞ்சமின் இமானுவல் அவர்கள்தான்.

கதாநாயகன்
இருபத்தி ஐந்து வருடங்களுக்கு முன். . . 1969ம் ஆண்டு யாழ்ப்பாணம் பெரிய கோவிலில் வணக்கத்திற் குரிய தந்தை ஜோய் கிறிஸ்த்தோத்திரம் அவர்களின் தயாரிப்பில் (தற்சமயம் இவர் அமெரிக்காவில் வசிக்கின்றார். ) முதன் முதலாக ஆண்டவர் வேடமிட்டு நடித்த அதே இம்மானுவல் தான். இருபத்தியைந்து வருடங்கள் கழித்து இன்று தனது ஐம்பதாவது வயதில் பாரிசில் ஆண்டவராக நடிக்கின்றார். வயது தான் ஐம்பது. . . அவருடைய இருபத்தி ஐந்து வருட அனுபவத்தின் முதிர்ச்சி அந்த பாத்திரத்தை முன்னைய விட இன்னும் சிறப்பாக நடிக்கின்றார். கலைக்கு முதிர்ச்சி இல்லை என்பதை தனது நடிப்பால் ர்ேல் லோருக்கும் தெரிவிக்கின்றார் இம்மானுவல் அவர்கள். ஐம்பதிலும் (கலை) ஞானம் வரும் என்பதற்கு இம்மானுவல் ஒரு சாட்சியாக நிற்கின்றார். இருபத்தி ஐந்து வருடங்களுக்கு முன் யாழ்ப்பாணத்தில் இமா னுவலை ஆண்டவராகப் பார்த்த மக்கள் எல்லாம் இன்று பாரிசில் தனது ஐம்பது வயதில் இம்மானுவல் அவர்கள் ஆண் டவராக தோன்றிய போது மத வேறுபாடுகளை மறந்து தூய மணதோடு பக்தி உணர்வோடு பார்க்கின்றார்கள். . . வியந்து பார்க்கின்றார்கள்! எம் தேசத்து மக்கள் மட்டுமல்ல வெள்ளையர்கள் கூட. . .
பலர் ஓடிவந்து ஆசீர்வாதம் பெறுகின்றார்கள். ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த திருமதி: சிறிபதி அவர்கள் கூறுகின்றார்கள் "ஜேர்மனிக்கு பக்கத்து நாடுதான் பிரான்ஸ் எனக்கு . . . வயதா கின்றது, இதுவரை காலமும் நான் பிரான்ஸ் வரவேண்டும் என்று முயற்சிக்கவில்லை, ஏன் விரும்பியது கூட இல்லை. இன்று தான் முதற்தடவையாக பிரான்ஸ் நாட்டிற்கு வந்திருக் கின்றேன். அதன் காரணம்: இந்த இயேசுநாதரை தரிசிப்பதற் காக எனக்கு ஆண்டவரால் விடுக்கப்பட்ட அழைப்போ என்று கூட நான் எண்ணுகின்றேன்." என்று உணர்ச்சி தலும்பக் கூறுகின்றார். இப்படி பலருடைய பாராட்டுக்களுக்கும் உரியவரான இமானு வல் அவர்கள் சிறிது சலனமும் இல்லாது அமைதியே உருவாக அமர்ந்திருக்கின்றார். அவருடைய எண்ணங்கள் சிந்தனைகள் எல்லாம் எங்கோ சிறகடித்து நிற்கின்றது.

Page 15
வண்ணைத்தெய்வம்
ஆம், தன்னுடைய இந்தக் கலைப் பணிக்கு சிறுவயதிலிருந்து ஆக்கமும் ஊக்கமும் கொடுத்து மேடையிலும் மேடைக்குப் பின்னும் தன்னை பெயர் சொல்லக் கூடிய கலைஞனாக வளர்த்து விட்ட தனது தந்தை சாமுவேல் பெஞ்சமின் அவர் களை நோக்கி இமானுவலின் நினைவுகள் செல்கின்றது. இலங்கையின் பல பாகங்களில் நடைபெற்ற பலிக்களம் நாடகத் திற்கு ஒப்பனையாளராக திரு. பெஞ்சமின் அவர்கள் தான் கடமையாற்றியிருக்கின்றார். இமானுவலுக்கு ஒப்பனை செய்வதும் அவர்தான். ஒப்பனைக்காக இமானுவல் அவர் முன் அமர்ந்து விட்டால் அவர் இமானுவலைத் தன் மகனாகப் பார்க்க மாட்டார், 606 لوگہT டவராகத் தான் பார்ப்பார். தான் இந்த அளவிற்கு உயர்வதற்கு அவர் கூறிய ஆலோசனைகள் அவர் கற்றுக் கொடுத்த தொழில் நுணுக்கங்கள். . . இம்மானுவலின் இந்த வெற்றிக்குப் பின்னால் இருக்கும் ரகசியங்கள் ஏராளம், ஏராளம். அவற்றில் முதல் மனிதர் இந்த ஆண்டவரின் தந்தை சாமுவேல் பெஞ்சமின் அவர்கள் தான். , அவர் ஒரு கலை களஞ்சியம் அவர் மட்டுமா? அந்த குடும்பமே அப்படித்தான் அவர்களைப் பற்றி எழுத இந்த புத்தகத்தின் பக்கங்கள் போதுமா? V
 

கதாநாயகன்
திரைக்குப் பின்னால் ஒருபெருங்கலைஞன் தாயிற் சிறந்தொரு கோயிலும் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரமில்லை
கூத்தாடுவதும் குண்டி நெளிப்பதும். ஆத்தா. . . அது அவன் செயல், என்று எமது முன்னோர்கள் சொல்லிவைத்தார்கள்.
கூத்துக்கும் அரிய கலைகளுக்கும் சொந்தக்காரன் ஈசன்தான், என்பதே அவர்களின் வாக்கு, அப்படியான அரும் பெரும் கலைகளை எம் முன்னோர்கள் தெருக்கூத்து, நாட்டுக்கூத்து, காத்தான் கூத்து, தென்மோடி, வடமோடி, வாசாப்பு இப்படிப் பல பெயர்களில் படைத்து வந்தார்கள், பின்பு காலத்தின் வளர்ச்சி வசனங்களுடன் கூடிய நாடகமாக வடிவமைக்கப்

Page 16
வண்ணைத்தெய்வம்
பட்டு பின் நவீனமுறை நாடகங்களும் திரைப்படங்களும் கூட வந்துவிட்டன.
இவைகளில் நடிக்கும் நடிகர்களின் நடிப்பையும், அவர்களின் ஆடை அலங்காரங்களையும், காட்சி அமைப்புகளையும் பார்த்து ரசிப்பதோடு மட்டும் நாங்கள் நின்று விடுகின்றோம். அந்த நடிகர்களையும், அரங்கங்களையும் இவ்வளவு அழகாக அமைத் தவர்களின் பெயர்கள் அனேகமானவர்களுக்கு தெரிவதே இல்லை.
அப்படிப் பெயர் தெரியாமல் திரைக்குப் பின்னாலேயே இருந்து கொண்டு கலைப்பணியாற்றியவர்களில் சாமுவேல் பெஞ்சமின் அவர்களும் அடங்குவார். 5ம் வகுப்பு வரைதான் பெஞ்சமின் அவர்கள் படித்திருக்கின்றார், ஆனால் சிறுவயதிலேயே சித்திரம் வரைவதில் கெட்டிக்காரராக இருந்தார்.
பெஞ்சமின் அவர்களின் தந்தை சாமுவேல் அவர்கள் கூட சிறந்த வர்ண வேலைக் கலைஞர்.
பனை ஓலைக்கு வர்ணங்கள் பூசி அழகிய வர்ண வேலைப்
பாட்டுடன் சிறிய பெட்டிகள், அடுக்கு குட்டான்கள் இப்படிப் பலவிதமானவற்றைச் செய்து பார்ப்பவர்களை வியக்கும் வண்
ணம் செய்யக்கூடிய சிறந்த கலைஞர்.
பெஞ்சமின் அவர்களுக்குக் கலைத்துறையிலேயே நாட்டம் அதிகமாக இருந்ததால் ஐந்தாம் வகுப்புடன் படிப்பை நிறுத்திக் கொண்டு அன்று ஒப்பனைக் கலைஞராக இருந்த இவரின் மாமனார் திரு. பிலிப் அவர்களிடம் தொழில் பழகச் சென்றுவிட் டார். சீன்ஸ் கட்டுவது, ஒப்பனை செய்வது காட்சியமைப்பது எல்லாம் தொழில் முறையில் செய்தாலும் அந்தக் காலத்தில் இவருக்குப் பெரிய வருமானம் கிடைப்பதில்லை. இதனால் சாமுவேல் அவர்களுக்கு மகன் பெஞ்சமினை ஒப்பனைக்கலை பழகவிட விருப்பமில்லை ஆனாலும் பெஞ்சமின் அவர்களுக்கு அந்தத் துறையிலேயே நாட்டம் அதிகமாக இருந்ததால் அவர் திரு. பிலிப் அவர்களுடன் சேர்ந்து அந்தத் தொழிலின் நுட்பங் களை எல்லாம் பழகினார். 1939ம் ஆண்டு தானே தனியாக தொழில் பெரிய வருமானம் கிடைக்காவிட்டாலும் அந்த
26

(5:5fps/Tusai
தொழில் அவருக்கு ஆத்ம திருப்தியைக் கொடுக்கின்றது. கலைஞர்கள் மத்தியில் சீன்ஸ்கார பெஞ்சமின் என்ற பெயர் நிலைத்து விட்டது.
1943ம் ஆண்டு நாட்டுக்கூத்து அண்ணாவியார் ஆசீர்வாதத்தின் மகள் மேரிதிரேசம்மாவை வாழ்க்கை துணைவியாக்கிக்கொண்
–T.
திரேசம்மா அவர்களின் தமையனார் சிங்கராயர் இராசரட்ணம் அவர்களும் சிறந்த நாடகக் கலைஞர், இவரின் இசை நாடகங் களான, சகோதர விரோதி, ஞான சவுந்தரி, அரிச்சந்திரா போன்ற நாடகங்களுக்கு பிரபல கலைஞர் நடிகமணி V. V.-
வைரமுத்து அவர்கள் தனது இளமைக் காலங்களில் ஆர்மோ
னியம் வாசித்த நாட்களும் உண்டு.
அந்தக் கலைக் குடும்பத்தில் இருந்து ஒரு ஒளிவிளக்காக பிறக்கின்றார் எங்கள் ஆண்டவர் பெஞ்சமின் இம்மானுவல் அவர்கள்.
இன்று இவரை எல்லோரும் ஆண்டவர் என்று அழைத்தாலும் இவர் பிறந்த அன்றே "இதோ ஆண்டவர் பிறந்து விட்டார்" என்று யாழ். பெரியாஸ்பத்திரியில் இவரின் தாயாருக்கு மருத் துவம் பார்த்த பிரான்ஸ் தாதிமார்கள் இமானுவலை மகிழ்ச்சி
யுடன் கொஞ்சுகிறார்கள். அதற்குக் காரணம்: இமானுவல்
அவர்கள் பிறந்தது ஆண்டவர் இயேசு கிறிஸ்து பிறந்த டிசம்பர் இருபத்தி ஐந்தாம் திகதிதான், அந்தப் பிரென்ஸ் தாதிகள்தான் இவருக்கு இமானுவல் என்று பெயரும் தட்டினார்கள்.
இமானுவல் என்றால் "ஆண்டவன் உம்மோடு" என்ற பொருள் உண்டு. வேதகாமத்தில் புனித யோவான் அவர்கள் கூறுகின் றார். "கன்னி ஒருத்தி கருத்தரித்து ஒரு குமரனை பெறுவாள் அவர் இமானுவல் என்று அழைக்கப்படுவார்" என்று.
"ஆண்டவர் உம்மோடு” என்பதை குறித்து இவருக்கு இமானு வல் என்று பெயர் வைத்தார்கள் இன்று ஆண்டவர் என்ற அந்த பெயரே அவரோடு ஒட்டிக் கொண்டுவிட்டது.
27

Page 17
வண்ணைத்தெய்வம்
இம்மானுவலுடன் அன்ரன் ஜீவா, அலோசியஸ், சால்ஸ், டன்சன், சாம்சன் என ஆறு ஆண்பிள்ளைகளும் மெத்திலின் என்ற பெண் பிள்ளையும் பெஞ்சமின் தம்பதிகளுக்கு உண்டு. ஆண்பிள்ளைகள் எல்லோரும் ஒப்பனைக் கலையில் வல்லு னர்களாக இருந்தாலும் அன்ரன் ஜீவா அவர்களே பெஞ்சமின் அவர்களுக்கு நிகராக இத்துறையில் விளங்கினார்.
1965ம் ஆண்டு தமிழ் நாட்டிலிருந்து ஸ்ரன்ட் சோமு - மாதுரி தேவி தலைமையில் வந்த கலைக்குழு மலை நாட்டில் இரண்டு மாதங்கள் தங்கியிருந்து நாடகம் போட்டார்கள். அவர்களின் கலை நிகழ்ச்சிக்கு ஒப்பனை, காட்சிஅமைப்பு போன்ற பணிகளைப் பொறுப்பேற்றவர் பெஞ்சமின் அவர்கள் தான். அப்பொழுது பெஞ்சமின் அவர்களுக்கு துணையாக இருந்தவர் இமானுவலும், அன்ரன் ஜிவாவும் தான்.
அதன் பிற்பாடு வந்த ராஜசுலோசனா நாட்டியக் குழுவின் நாட்டிய, நாடங்களுக்கு காட்சி அமைப்பாளராகப் பணியாற்றிய சிறப்பும் பெஞ்சமின் அவர்களுக்கு உண்டு.
கலைஞர் ரகுநாதன் அவர்களின் "இன்பநாள்" என்ற நாடகம் யாழ். நகர மண்டபத்தில் நடக்கப் போகின்றது. காட்சி அமைப் புகளை செய்து முடித்து விட்டு ஓய்வாக உட்கார்ந்திருக்கின் றார். பெஞ்சமின் அவர்கள். கலையரசு சொர்ணலிங்கம் அவர் கள் மேடைக்கு வந்து காட்சி அமைப்புகளைப் பார்வையிடுகின் றார் "பெஞ்சமின் இந்த வீட்டின் சுவரில் இரண்டு படங்களை மாட்டியிருந்தார்ல் இன்னும் நன்றாக இருந்திருக்கும்" இப்படிக் கூறிவிட்டு, நடிகர்களின் ஒப்பனையைக் கவணிக்க கலையரசு அவர்கள் சென்று விட்டார். திரும்பவும் அவர் வரும்பொழுது
அந்த இடத்தில் இரண்டு படங்கள் மாட்டியிருப்பது போல் வரையப் பட்டிருந்தது. கலையரசு அவர்கள் ஆச்சரியத்துடன் அதையே பார்த்தபடி நிற்கின்றார். அருகில் நின்றவர்கள் கூறு கிறார்கள் "பெஞ்சமின் அவர்கள் கறுப்பு மையை எடுத்து தனது கைவிரலால் தான் கீறினார்" என்று கூறினார்கள். ஓடிவந்து பெஞ்சமினைக் கட்டிப் பிடித்து பாராட்டுகின்றார். 1989ம் ஆண்டு இலங்கை ரூப வாகினி தொகைக் காட்சியில் யாழ். u656066 கழக மாணவர்கள் காத்தவராயன் கூத்து, இசை நாடகம், ஒளிபரப்பாகின்றது. அந்த கலைஞர்களுக்கு ஒப்ப

கதாநாயகன்
னையும், நாடகத்திற்கு காட்சி அமைப்பும் செய்தவர் பெஞ்சமின் அவர்கள். பல்கலைக் கலக மாணவர்களோடு திருமறைக் கலாமன்றமும் இணைந்து பெஞ்சமின் அவர்களுக்கு மாபெரும் பாராட்டு விழாவை நடாத்துகின்றார்கள். அவ்விழாவிலே திரு. பெஞ்சமின் அவர்களுக்கு ஒப்பனைத் திலகம் என்ற பட்டமும் வழங்கி பொற்கிளியும் வழங்குகின்றார்கள். அந்த விழாவிலே பெஞ்சமின் அவர்கள் கூறுகின்றார்கள் "இந்தக் கலை என் குடும்பத்திற்கு சோறு போடும் ஒரு தொழிலாகப் பணியைச் செய்து வரவில்லை. இது ஆண்டவன் எனக்கு கொடுத்த கொடை அந்தக் கொடையை எனது ஆறு ஆண்பிள்ளைகளுக் கும் பகிர்ந்து கொடுத்திருக்கின்றேன். மேலை நாடுகளில் வாழும் அவர்கள் அதைச் சேவை நோக்குடனேயே செய்து வருகின்றார்கள் என்பதை தந்தை சவுரிமுத்து அடிகளார் மூலம்
“அறியும் போது நான் மிகவும் சந்தோஷம் அடைகின்றேன்.
இந்தப் பணி என் பிள்ளைகளோடும் நின்று விடக்கூடாது. அவர்களின் பிள்ளைகளும் இந்தப் பணியை தொடர வேண்டும் என்பது தான் என் ஆசை" பெஞ்சமின் அவர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த பிரமுகர்கள் முதல் பார்வையாளர்கள் வரை மெய்சிலிர்த்து நிற்கின்றார்கள். இந்த நினைவுகள் எல் லாம் இமானுவலின் நெஞ்சினில் நினைவுகளாக எழுந்து வருகின்றது. "என்னுடைய மகிழ்ச்சியில், என்னுடைய வெற்றி யில், என்னுடைய உயர்வில், எல்லாம் எனக்குப் பின்னால் இருக்கும் என் தந்தை பெஞ்சமின் அவர்களோடு இன்னொரு
வரும் இருக்கின்றார்" என்கின்றார் இமானுவேல். "யார்
அவர்?" இது எங்கள் கேள்வி. "ஆண்டவராக இந்தக் கலை உலகிற்கு என்னை அடையாளம் காட்டி அருட்தந்தை மரிய சேவியர் அவர்கள்தான்.
ஆம், இந்த வார்த்தை மிகையான வார்த்தையல்ல. இன்று அருட்தந்தை மரிய சேவியர் அவர்கள் இல்லாமலே அவரு டைய ஆலோசனையில் அவருடைய வளிகாட்டலில் அவரு டைய நெறியாள்கையில் பணியாற்றிய பல கலைஞர்கள் இன்று பாரிசில் இருக்கின்றார்கள். அவர்களில் பெஞ்சமின் இமானு வேலும் ஒருவர். அவரை மறந்து விடமுடியுமா? இமானுவே
Forr RSY

Page 18
வண்ணைத்தெய்வம்
திருமறையோடு இணைந்திருக்கும் அருட்தந்தை கலையே உன் நிலையே நீ பாராம் காவியச் சிலையான கலைஞன் கை உளியாலே.
திருமறையோடு இணைந்திருக்கும் அருட் தந்தை!
கலையே உன் நிலையே நீ பாராய் காவியச் சிலையான கலைஞன் கை உளியாலே. .
பத்து வருடங்களுக்கு முன்னால் யாழ்ப்பாணத்தை பார்த்தவர் கள் இன்று மறுமுறை யாழ்ப்பாணத்தை பார்த்தால் இது யாழ்ப் பாணம் தானா? என்று அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைவார் 356r
எண்ணற்ற அழிவுகள்! ஏராளமான மாற்றங்கள்! அங்கு அழிந்தது எங்கள் மக்கள் மட்டுமல்ல தமிழர்களின் புராதன சின்னங்கள். மத வழிபாட்டுத்தலங்கள், கல்விக்கூடங்கள் இத்தியாதி. . .
இத்தியாதிகள்.
30

கதாநாயகன்
இதற்கு உதாரணம் பல மொழிகளில் பண்டிதம் பெற்ற இந்த மேதை சைவ சித்தாந்தத்தை ஆராய்ந்து அதன் சிறப்புக்களை தொகுத்து ஜேர்மன் மொழியில் விளக்கி வெளியிட்டார். ஜேர் மன் நாட்டின் ஃபஸ்சு(PASSU) என்ற நகரில் உள்ள பல்க ளைக்கழகம் அந்நூலுக்காக இவருக்கு கலாநிதி பட்டம் வழங்கி கெளரவித்தது குறிப்பிடத்தக்கது. இத்தனை சிறப்பிற்குரியவரும் "பலிக்களம்" நாடகத்திற்கு சொந்தக் காரருமான தந்தை மரியசேவியர் அவர்கள் அன்று அங்கு இல்லையே என்ற கவலையும் இமானுவேல் அவர்க ளுக்கு இருந்தது. அ, பபோதுஅவர்களுக்கு பதினேழு வயது. நாடக ஒப்பனை ஒன்றிற்காக தந்தை பெஞ்சமின் அவர்களுக்கு உதவியாக அவருடன் புங்குடுதீவு செல்கின்றார்.
புங்குடுதீவு சவேரியார் ஆலயத்தில் குருவாக இருப்பவர் தந்தை மரியசேவியர் அவர்கள்தான்.
அன்று தான் முதன் முதலாக இமானுவேல் அவரை சந்திக்கின் றார். திரு மறைக்கலா மன்றத்தின் ஆரம்பவிழாவும் அன்று தான். . . அன்று அழைப்பு இல்லா விட்டாலும் தந்தையுடன் உழைப்பிற்காகச் சென்ற இமானுவேல் அவர்களுக்கு திருமறைக் கலா மன்றத்தின் ஆரம்ப விழாவில் கலந்து கொள்ளும் அரிய சந்தர்ப்பமும் கிடைக்கிறது. பின்பு தந்தை மரியசேவியர் அவர் கள் உரும்பிராயில் குருவானவராக பணிபுரிந்த காலத்திலும் பல தடவை அவரின் நாடகங்களுக்கு ஒப்பனை செய்யும் சந்தர்ப்பக் கங்கள் இமானுவேலுக்கு கிடைத்திருக்கின்றது.
இப்படியான சந்திப்புக்கள் இவர்கள் இருவருக்கும் நெருக் கத்தை ஏற்படுத்தினாலும் தந்தை மரியசேவியர் அவர்கள் இமானுவேலை ஒரு ஒப்பனைக் கலைஞனாகத் தான் பார்த் தார். அவரின் எந்த கலைப் படைப்புக்களிலும் நடிக்கும் சந்தர்ப்பம் அன்றுவரை இவருக்கு ஏற்பட வில்லை.
1969ம் ஆண்டு யாழ். பெரிய கோவிலில் இடம் பெற்ற யேசுவின் திருப்பாடல்களின் காட்சியில் இமானுவேல் இயேசுநாதராக நடிக்கின்றார்.
34

Page 19
வணிணைத்தெய்வம்
சிவாஜிக்கும், எம். ஜி. ஆருக்கும் மன்றம் வைத்துக் கலம்பகம் புரிந்த இளைஞர்கள் இன்று அந்த மண்ணில் இல்லை மண் காக்க, மானம் காக்க, எம் மக்களைக் காக்க உறுதியுடன் களத்தில் நிற்கும் இளைஞர்களைத் தான் அங்கு காணலாம். இப்படியான பல அழிவுகளையும் எம்மக்கள் சந்தித்திருக்கிறார் கள் என்பது உண்மைதான். ஆனால் இவ்வளவு இழப்புக ளுக்கு மத்தியிலும் எமது பாரம் பரியமான கலைகளைப் பாது காக்கவும் அக் கலைஞர்களுக்கு புத்துயிரும் புதுவடிவமும் கொடுத்து அக்கலைக்குரிய மூலச்சுவடிகளைத் தேடி எடுத்து மீண்டும் அதை புத்தகமாக பதிப்பித்து பாதுகாக்கவும். அக்க லைகளை வளர்த்த பெரியவர்களை கெளரவித்து அவர்கள் புகழ் பரப்ப செய்யவும் அதே கலைகளை எமது இன்றைய தலை முறையினர்க்கு கற்பித்து அவர்கள் மூலம் மீண்டும் மக்களுக்கு அக்கலையை பரவச் செய்யவும் யாழ்ப்பாணத்தில் ஒரு மன்றம் இருக்கின்றது. என்றால் அது திருமறைக்கலா மன்றம் ஒன்று தான். அம்மன்றத்தின் ஸ்தாபகரும் அதன் தலைவராகவும் இருப்பவர்தான் இன்று இமானுவேலின் வளர்ச்சிக்கு காரண மாக இருப்பவர்களில் ஒருவரான பெருமதிப்பிற்குரிய வன பிதா மரியசேவியர் அவர்கள். தமிழ் மக்களின் கலாச்சாரத்தை காப்பாற்றுவதற்காக ஆரம்பிக்கப்பட்ட திருமறைக் கலாமன்றத் திற்கு இன்று உலகில் பல பாகங்களில் கிளை ஸ்தாபனங்கள் இருக்கின்ற தென்றல் அந்தப் பெருமை எல்லாம் தந்தை மரிய சேவியர் அவர்களுக்குத்தான். எம் மண்ணில் வாழும் மக்கள் மட்டுமல்ல புலம் பெயர்ந்து வாழ்கின்ற எமது மக்களும் முன் னோர்கள் காத்துநின்ற எமது கலை கலாச்சாரத்தை மறந்து விடக்கூடாது என்ற உயர்ந்த நோக்கத்தோடு மேலை நாடுக ளில் இயங்கும் திருமறைக் கலாமன்றத்தின் கிளை ஸ்தாபனங்
கள் அந்தப் பணியைத் தொடர்கின்றன.
அது மாத்திரமல்ல இவர் கிறிஸ்தவ மதத்தில் பொறுப்பான உயர்ந்த பதவியில் இருந்தாலும் எனைய மதங்களில் இருக் கும் உயர்ந்த கொள்கைகளை, மதிக்கும் பண்பாளன்.
அந்த மதங்களின் கொள்கைகளை மற்றவர்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற உயர்ந்த நோக்கம் இவரிடத்தில் இருப்பது இவரின் தனிச்சிறப்பு.
32

கதாநாயகன்
சின்னத் திரையில் வண்ண உருவில்
ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகின்றது இந்த உலகம் பாடும் பாடல் ஓசை.
திருமறைக் கலாமன்றத்தின் பலிக்களம் நாடகம் மட்டும் சுமார் ஐம்பது தடவைகளுக்கு மேல் மேடை யேறியிருக்கின்றது. ஒரு தடவை மேடையேறிய இடத்தில் மறு தடவை அந்த நாடகம் அரங்கேற்றப் பட்டாலும் மக்கள் திரளாகவே வருவார்கள்.
அந்த நாடகத்தை பெருந்தொகையான மக்கள் விரும்பி ரசித் ததை உணர்ந்த தந்தை மரியசேவியர் அவர்கள் அதனை தொலைக் காட்சிக்காக படமாக தயாரிக்க முடிவ செய்தார்.
யாழ்ப்பாணத்தில் அப்பொழுது குறிப்பிட்ட சில வசதி படைத்த வர்களிடம் மட்டுமே தொலைக் காட்சிகள் இருந்தன. படம் பிடிப்பதில் தொழில் நுட்பத்துறையை அறிந்தவர்கள் மிகச் சிலரே, அவர்களில் குறிப்பிடத் தக்கவர் நித்தி கனகரத்தினம் அவர்கள். நித்தி அவர்களையே "பலிக்களம்" படத்திற்கு படப்பிடிப்பாளராக தந்தை நியமித்தார்.
33

Page 20
வண்ணைத்தெய்வம்
ஒளிப்பதிவிற்கு யாழ்ப்பாணத்தில் புகழ் பெற்ற றொலக்ஷ் ஸ்தா பனத்தை ஒழுங்கு செய்தார்.
இன்று பாரிசில் வசிக்கும், சோமு, சர்வேஸ்வரன் போன்றவர் கள் எல்லாம் றொலக்ஷ் ஸ்தாபனத்தின் உரிமையாளர்கள் இவர்களின் தமையனார் அவர்கள் பலிக்களம் படப்பிடிப்பு நடந்த ஒரு மாதமும் இவர்களுக்கு வழங்கிய ஒத்துளைப்பு மறக்க முடியாதது.
ஒப்பனை திருமறைக் கலாமன்றத்தின் ஆஸ்த்தான ஒப்பனைக் கலைஞர் பெஞ்சமின் அவர்களுடன் ஸ்ரனில் மாஸ்டரும்
‘ஆவார்.
பலிக்களத்தின் முதல் படப்பிடிப்பு யாழ்ப்பாணம் குருமடத்தில் ஆரம்பமாகின்றது. (மார்ட்டின் செபினறி) பாலன் இயேசு பிறக்கும் காட்சி படமாக்கப் படுகின்றது.
அதில் பங்கேற்கும் கலைஞர்களுக் கெல்லாம் தாங்கள் gasofluorT. படம் ஒன்றில் நடிப்பது போன்ற ஆனந்தம். நடிகர்களுக்கு மட்டும் தானா? பார்வையாளர்களுக்கும் அப்படித்தான் யாழ்ப்பா ணம் கோட்டையில் இமானுவேல் சிலுவை சுமந்து செல்லும்
காட்சி படமாக்கப் படுகின்றது. ஐநூறுக்கும் மேற்பட்ட பார் வையாளர்கள் கூடி விட்டார்கள். இதனால் படப்பிடிப்பு நடாத்த கலைக்குழுவினர் பட்ட சிரமங்கள் ஏராளம்.
'இன்னொரு நாள் யாழ் புனித யாகப்பர் (குருநகர் சந்தியோகு மையார்) ஆலயத்தில் முக்கிய காட்சியை படப்பிடிப்பு செய்வ தற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
மன்னன் பிலாத்துவிடம் ஆண்டவரை அழைத்து வரும் காட்சி பிலாத்துவின் அரண்மனை போன்று பிரமாண்டமான செட் அமைத்து ஒரு அரண்மானயே உருவாக்கி வைத்திருந்தார்கள்.
பிராத்துவாக நடிக்கும் விக்ரர் ஜேம்ஸ் அவர்கள் கம்பீரமாக நடந்து வருகின்ற காட்சி படமாக்கப் படப்போகின்றது. ஆனால் ஜேம்ஸ் அவர்களால் நடிப்பில் சரியான கவனம் செலுத்த

கதாநாயகன்
அன்றைய அந்த நாடகத்தை அருட்தந்தை ஜோய் கிறிஸ்த் தோத்திரம் தயாரிக்க சென். சாள்ஸ் மகாவித்தியாலய அதிபர் திரு. ஜோன் பிள்ளை அவர்கள் நெறிப்படுத்தியிருந்தார்.
தந்தை மரியசேவியர் அவர்களும் அன்று அந்த நாடகத்தை பிரமுகர்கள் வரிசையில் அமர்ந்திருந்து பார்க்கின்றார்.
அப்பொழுது தான் தந்தை சவுரிமுத்து அவர்களின் மனதில் அந்த எண்ணம் தோன்றுகின்றது.
"அடடா இயேசுநாதரைப் போலவே தோற்றமுடைய இந்த இளைஞனை இதுவரை காலமும் நான் பயன்படுத்தத் தவறி விட்டேன்!" என்ற ஏக்கம் தான் அது.
அந்த ஏக்கத்தை அவர் தன் மனதோடு மறைத்து வைத்துவிட வில்லை. 1970ம் ஆண்டு அவர் உரும்பிராயில் அவரால் மேடையேற்றப்பட்ட "பலிக்களம்" நாடகத்தில் சிலுவைக் காட்சியில் இயேசு நாதராக தோன்றுகின்றார் இமானுவேல்.
அதன்பின் "பலிக்களம்" நாடகம் நாட்டின் பல பாகங்களிலும் மேடையேற்றப்பட்டபோது இயேசு நாதராக நடித்து வந்தவர் இமானுவல் அவர்கள் தான். ஆண்டவர் பிறந்த அதே திகதியில் பிறந்ததால் இந்த உருவ ஒற்றுமை இமானுவேலுக்கு கிடைத்தது என்று பலரும் வியப்பு டன் கூறுவார்கள்.
"பலிக்களம்" நாடகம் மூலம் தந்தை மரியசேவியர் அவர்களு டன் ஏற்பட்ட தொடர்பு தொடர்ந்து "காட்டிக்கொடுத்தவன், களங்கம், ஒருதுளி, அளவு கோல், வாமகனே வா, கல்வாரி யில் கடவுள், சாவை வென்ற சத்திரியன், கதையும் காவிய மும், கன்னி பெற்ற கடவுள்" இப்படி அவரின் பல நாடகங்க ளில் பங்கேற்று பணியாற்றும் சந்தர்ப்பங்கள் இமானுவேலுக்கு கிடைத்தது. இந்த நாடகங்கள் மேடையேற்றப்பட்ட சில வாரங்கள் மக்கள் இதைப்பற்றி பேசிக் கொள்வார்கள் பின்பு மறந்து விடுங்கவார் 56T。
35

Page 21
வண்ணைத்தெய்வம்
ஆனால் பலிக்களம் நாடகத்தை மட்டும் மக்கள் தாங்கள் விரும்பிய எந்த நேரத்தில் பார்க்கும் படியும் எப்பொழுதும் அதைப்பற்றி பேசிக் கொள்ளும் படியும் ஒரு சாதனையை சாதித்தார் தந்த மரியா சேவியர் அவர்கள் என்ன சாதனை அது? 1991ம் ஆண்டு இலங்கையில் தொழில் நுட்ப வசதிகள் குறைந்த அந்நாளில் அந் நாடகத்தை ஒளிப்பதிவு நாடாவில் பதிவு செய்கின்றார்.
முப்பத்தொரு நாட்கள். . . முப்பதிற்கும் மேற்பட்ட கலைஞர்க ளுடன் பணியாற்றிய அந்த நாட்கள். . . மறக்க முடியாதவை.
 

கதாநாயகன்
விலைமதிக்கவொண்ணாப் பொக்கிஷம்
கலையரசு அவர்களுடன்
உன்னை நான் சந்தித்தேன் நீடுகள்) ஆயிரத்தில் ஒருவர்
ஈழத்து கலைஞர் களுக்கெல்லாம் கலையரசு சொர்ணலிங்ம் அவர்கள் ஓர் பல்கலைக் கழகம்.
இந்த பல்கலைக் கழகத்தில் படித்து பட்டம் பெற்ற கலை மாணவர்கள் பலர் இருக்கின்றார்கள். இந்த பல்கலைக் கழகத் தின் தாழ்வாரத்தில் நின்றே பேராசிரியர்களாக இருக்கின்ற மேதைகளும் உண்டு. அதற்கு உதாரணம் கலையரசு சொர்ணலிங்கம் அவர்களைப் பற்றி தெரியாவிட்டாலும் ஈழத்து நாடகத் துறைக்குப் பின் தந்தை என்ற கெளரவத்தை புகழ் பெற்ற கலைஞர்கள் முதல் வளர்ந்து வரும் இளம் கலைஞர்கள் வரை கொடுத்து வருகின் றார்களே! அதுதான் நாடுபோற்றும் நல்லறிர்களை நல்ல கவி ஞர்களை நல்ல கலைஞர்களைப்பெற்றெடுத்த நவாலயூர் தந்த விலைமதிப்பற்ற பொக்கிஷம் தான் கலையரசு சொர்ணலிங்கம். இவரோடு இணைந்து கலைப்பணியாற்றும் வாய்ப்புக்கள் எல்லேருக்கும் கிட்டிவிடவில்லை.
37

Page 22
வண்ணைத்தெய்வம்
இன்று எம்மத்தியில் இருக்கும் கலைஞர்களில் அந்தப் பட்டி யலை எடுத்தால் விரல்விட்டுத்தான் எண்ணமுடியும். அந்த அரிய பாக்கியம் பெற்றவர்களில் எங்கள் பெஞ்சமின் இமானு வேலும் ஒருவர். ஏதோ ஒரு எதிர்பாராத விபத்தாக இமானு வேலுக்கு கலையரசருடன் இணைந்துநடிக்கும் சந்தர்ப்பம் கிடைத்திருக்கலாம் என்று சிலர் இகழ்ச்சியாகக் கதைக்கலாம். இது அவர்களின் மனப்பொருமல்களின் சின்னத்தனமான ஏவ றைகள் என்றே கூற வேண்டும். இப்படியான எதிர்பாராத சம்பவங்கள் கூட எங்களுக்கு ஏற்படவில்லையே என்று இன் னம் ஏங்கிக்கொண்டிருக்கும் எத்தனையோ கலைஞர்கள் எம்மத் தியில் உண்டு. பொறாமைக்காரர்களின் வாயிலிருந்து இப்படிப் பட்ட வார்த்தைகள்தான் வரும். அதற்கு இந்த சமுதாயம் விதிவிலக்கல்ல. தனது எட்டாவது வயதிலேயே கலையரசு சொர்ணலிங்கம் அவர்களைச் சந்திக்கும் பாக்கியம் இமானு வேலுக்கு ஏற்படுகின்றது. யாழ்/சென்ஜோன்ஸ் கல்லூரியில்
அன்று கலையரசு சொர்ணலிங்கம் அவர்களின் "வேதாள உல
கம்" என்ற நாடகம் ஒப்பனை அறையில் கலையரசு அவர்க
ளுக்கு ஒப்பனை செய்துகொண்டிருக்கிறார் ஒப்பனைத்திலகம் பெஞ்சமின் அவர்கள்.
அன்றையநாடகத்தில் பதமாக நடிக்கிறார் கலையரசு அவர்கள். முகத்தையும் உடலையும் விகாரமாக மாற்றவேண்டிய கடின மான ஒப்பனை வேலை. பெஞ்சமின் அவர்களுக்கு உதவியாக இமானுவல் அவர்கள் அருகில் இருந்து அவருக்கு தேவையான ஒப்பனைப்பொருட்களை எடுத்துக்கொடுத்துக்கொண்டிருக்கிறார். ஆனாலும் இமானுவல் இமைவெட்டாது கலையரசு அவர்க ளைப் பார்த்துக்கொண்டிருக்கிறார். என்ன விந்தை ஒப்பனைக்கு முன் எல்லேருடனும் கலகலப்பாகப் பேசிக்கொண்டிருந்த கலையரசு எங்கே? ஒப்பனைக்காக வந்து அமர்ந்ததும் கலகலப் பெல்லாம் பறந்து முகத்தை இறுக்கமாக வைத்திருந்த கலைய ரசு எங்கே? ஒப்பனை முடிந்து பூதமாக அவர் வடிவெடுத்தே பாது இமானுவல் முன்பு பார்த்த கலையரசு அவர்களை அங்கு பார்க்க முடியவில்லை. மேடையில் அவர் தமது சிம்மக்குரலில் ஏற்ற இறக்கத்தைக் கலந்து பேசம் அழகு.
ʻʻQ9R

கதாநாயகன்
முடியவில்லை. காரணர்ம் படப்பிடிப்பை பார்க்க வந்த ரசிகர்கள் கூச்சல் இட்டு தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொண்டிருந் தார்கள். இது கலைஞர்களுக்கு மிகச் சிரமமாக இருந்தது. நேரம் செல்லச்செல்ல சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர் கள் கூடிவிட்டார்கள். சினிமாப்படப்பிடிப்பைப் பார்க்கக்கூடும் மக்களைப்போல் அன்றைய படப்பிடிப்பைப் பார்க்க மக்கள் கூடிவிட்டார்கள். படப்பிடிப்பைத் தொடர்ந்து நடத்த முடியாத நிலை. மரியசேவியர் அவர்களின் உடனடி ஏற்பாட்டால் இருபத்தைந்து தொண்டர்கள் நியமிக்கப் பட்டார்கள். ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு அப்பால் மக்களை நிறுத்திவைப்பதற்காக கயிறு கட்டப்பட்டு தொண்டர்கள் காவல் நிற்கின்றார்கள். அதற்குப்பின்பே படப்பிடிப்பு நடைபெறுகின்றது. இவையெல் லாம் இமானுவேலின் மனதில் நிலைத்திருக்கும் பசுமையான நினைவுகள்.
ஊர்காவற்றுறையில் ஒருவாரம் படப்பிடிப்பு நடந்தது. அங்கு நீதிபதியாக கடமையாற்றிய திரு. தம்பையா அவர்கள் வீட்டில் இரண்டு நாள் படப்பிடிப்பு நடைபெற்றது. திரு. தம்பையா அவர்களின் விருந்தோம்பலையும் ஒத்துழைப்பயும் மறக்க முடியாது என்று கூறும் இமானுவேல் நாடகத்தின் உச்சக் காட்சி பற்றி கூறும் பொழுது "ஊர்காவற்றுறை கடற்கரையில்
சிலுவையில் ஆண்டவரை நிறுத்தும் காட்சி ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு. முறை எடுக்கப்பட்டது. நான்காவது காட் சிஓ, கே செய்யப்பட்டது. நான் மிகவும் களைத்து விட்டேன், ஆனால் படப்பிடிப்பாளர் நித்திக்கு அந்த நான்காவது காட்சியும் திருப்தி அளிக்க வில்லை. இன்னும் ஒருதடவை அந்தக் காட்சியை எடுப்போம் என்று கூறுகின்றார். என்னுடைய நிலையைப் பார்த்த தந்தை மரிய சேவியர் அவர்கள் வேண் டாம் எடுத்தவரை போதும் என்று கூறுகின்றார். நித்தி அவர்க ளின் ஆர்வத்தைப் பார்த்த நான் இல்லை ஃபாதர் இன்னொரு தடவை எடுப்போம் என்கின்றேன் நித்தியின் முகத்தில் மகிழ்ச்சி ஐந்தாவது தடவையாக அந்தக் காட்சி படமாக்கப் படுகின்றது. யாருமே எதிர்பாராத வண்ணம் மிக அற்புதமாக அந்தக் காட்சி அமைகின்றது.

Page 23
வணிணைத்தெய்வம்
இப்பொழுது கூட நான் அந்தக் காட்சியைப் பார்க்கும்பொழுது நானா இப்படி நடித்தேன் என்று ஆச்சரியப் படுவேன்" என்று உணர்ச்சியுடன் கூறினார். இப்படி ஒரு மாதத்திற்கு மேலாக கஸ்டப்பட்டு எடுத்த படம் நித்தி அவர்களின் கற்பனையின் கூடிய சிறப்பான படத்தொகுப்பின் முலம் முழுப்படமாக அமைந்து விட்டது.
யாழ் சென் பற்றிக்ஸ் கல்லூரியில் பலிக்களம் தொலைக்காட்சிப் படத்தின் முதல் காட்சி நடாத்த ஏற்பாடாகி விட்டது. சின்னத் திரையில் வண்ண உருவத்தைப் பார்க்க இம்மானுவேலும் சக கலைஞர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றார்கள். யாழ் ஆயர் தியோகுப்பிள்ளை ஆண்டகை அவ்விழாவிற்கு தலைமை தாங்குகின்றார். டாக்டர் ஏப்பிரகாம், டாக்டர் பிலிப் ஆகியோர் சிறப்பு விருந்தினராக வந்திருக்கின்றார்கள். பலிக்களம் ஒளிபரப்பாகின்றது. கலைஞர்களின் முகத்தில் எல்லாம் ஆனந்த வெள்ளம் இமானுவேலைத் தவிர! ஏன் அந்த சோகம்? இவ்வளவு சிரமப்பட்டு அந்தப் படத்தைத் தயாரித்த தந் ைத மரிய சேவியர் அவர்கள் அந்த நாடகத்தைப் பார்க்க அன்று அங்கு இல்லை. அன்று அவர் திருச்சபையின் பணி ஒன்றிற்காக '. 'மனியில் நிற்கின்றார்.
40

கதாநாயகன்
கலைஞர்களுடன் இணைந்து ஒரு கலைப்பயணம் சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு தென்றலே உனக்கெது சொந்த வீடு மாபெரும் சபையினில் நீ நடந்தால்
நல்ல கலைஞர்கள் ஒன்று சேர்வது இனிய குடும்பத்தினர் ஒன்று சேர்வது போன்று, அப்பொழுது ஏற்படும் மகிழ்ச்சிக்கு நிகரான மகிழ்ச்சியை வேறு எந்த சந்தர்ப்பத்திலும் கலைஞர் கள் அனுபவிப்பதில்லை.
அதிலும் அந்தக் கலைஞர்கள் எல்லாம் ஒன்றிணைந்து ஒரு கலைப்பயணமே செல்லும் பொழுது அந்த ஆனந்தத்திற்கு கேட்கவும் வேண்டுமா? மானிப்பாய் ஓரியன்ரர் கூட்டுறவுக் கழகத்தின் ஆணையாளர் திரு செல்வரட்ணம் அவர்களின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு திருகோணமலை ஆகிய இடங்களில் ரகுநாதன் அவர்களின் தேரோட்டி மகன் நாடகம் மேடையேற்று வதற்காகச் செல்லும் கலைப் பயணம் அது.
4堡

Page 24
வண்ணைத்தெய்வம்
கலையரசு சொர்ணலிங்கம் அவர்களுடன் ஏ. ரகுநாதன் திரு நெல்வேலி விதானையார் செல்வரட்ணம், குழந்தை மாஸ்டர் என அழைக்கப்படும் சண்முகலிங்கம். குரும்பசிட்டியைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் A. T. பொன்னுத்துரை, திருநெல் வேலி மகேஸ்வரன், ஜேனம் பிரான்சிஸ், நிர்மலா அருமைநா யகம், நவாலியூர் நடேசன், மானிப்பாய் இந்துக்கல்லூரி அதிபர் V. K. T. சார்லி மிருதங்க வித்துவான் சங்கீத பூசணம் A. S. ரா மநாதன், வயலின் வித்துவான், சங்கீத பூசணம் சோமஸ்கந்த சர்மா போன்ற இருபத்தைந்துக்கும் மேற்பட்ட புகழ்பெற்ற கலைஞர்களுடன் ஒப்பனைக் கலைஞர் பெஞ்சமின், அன்ரன் ஜீவா, இமானுவேல் ஆகியோரையும் சுமந்து கொண்டு அந்தப் பெரிய பஸ்வண்டி மானிப்பாயிலிருந்து அதிகாலை வேளையில் புறப்படுகின்றது.
பொதுவாக அனைத்துக் கலைஞர்களும் கலையரசு அவர்க ளுக்கு மரியாதை கொடுத்துப் பயபக்தியாகவே பழகுவார்கள். ஆனால் அந்த பயணத்தில் சென்ற பொழுது இமானுவேலுக்குக் கிடைத்த அனுபவம் மிகவும் வித்தியாசமானது.
இளம் கலைஞர்கள் பலர் அடங்கியிருந்த அந்தக் குழுவில் கலையரசு அவர்களும் தன்னை ஒரு இளைஞனாக மாற்றிக் கொண்டார். நகைச்சுவைக் கதைகள் சொல்வதும், பாட்டுப் பாடுவதுமாகக் கலைஞர்களுடன் சேர்ந்து கலையரசு அவர்கள் போட்ட கும் மாளம். . .
அந்த பசுமையான நினைவுகளை எளிதில் மறந்து விடமுடி யுமா? 1
மட்டக்களப்பு வந்தாறுமூலையைக் கலைஞர்கள் குழு சென்ற டைகின்றார்கள். வந்தாறுமூலை மகாவித்தியாலய அதிபரும் கடமையின் எல்லை திரைப்படத் தயாரிப்பாளருமான திரு வேதநாயகம் அவர்கள் கலைஞர் குழுவை முகமலர்ச்சியுடன் வரவேற்கின்றார். வேதநாயகம் அவர்கள் காட்டிய உபசரிப்பும், விருந்தோம்பலும் என்றுமே மறக்க முடியாது.
42

கதாநாயகன்
அந்த நாடகத்தில் அன்று கதாந யகனாக நடித்தவர் சங்கீத பூசணம் பரம் தில்லை ராசா அவர்கள். கதாநாயகியாக நடித் தவர் அவரின் சகோதரி, இவரின் பெயர் இமானுவேலின் நினைவில் இல்லை, ஆனால் அவரும் ஒரு சங்கீத பூசணம் என்று மட்டும் நினைவில் நிற்கின்றது.
இந்த இரு சங்கீத பூசணங்களின் பாடல்களுக்கு நிகராக 560)6)u 8 அவர்கள் பாடி நடித்த விந்தையைக் கண்டு இமானுவேலுக்கு ஏற்பட்ட கலைத் தாக்கங்கள் தான் இன்று இத்துணைபெரும் கலைஞனாக வளர்வதற்கு வழி வகுத்தோ? யாரறிவார்!
1959 ஆண்டு யாழ் நகர மண்டபத்தியில் கலைஞர் ரகுநாதன் அவர்களின் "தேரோட்டி மகன்" நாடகம் அன்றைய நாடகத்தில் இன்று புகழ் பெற்று விளங்கும் பெரும் கலைஞர்களான ரக்சி றைவர் -ராஜேஸ்வரன், நிர்மலா w
திரைப்பட இயக்குனர் அருமைநாயகம். யாழ் கத்தலிக் பிறஸ் ஐச் சேர்ந்த திரு பாய்க்கியநாதர் 'திருநெல்வேலி மகேஸ்வரன் அப்புக்குட்டி ராஜகோபால் ஆகியோர்களுடன் சகுனி வேடத்தில் கலையரசு
அவர்கள் நடிக்கின்றார்.
அப்பொழுது இமானுவேலுக்கு பதினாறு வயது அன்றைய ஒப்பனைக்காக பெஞ்சமின் அவர்களுடன் இமானுவேலும் அவரின் தம்பி அன்ரன் ஜீவா அவர்களும் சென்றிருக்கின்றார் கள். கலையரசு அவர்கள் இமானுவேலை அழைத்து "நீதான் இன்று எனக்கு ஒப்பனை செய்ய வேண்டும்" என்று கூறுகின் றார். அந்தக் கலை மேதைக்கு ஒப்பனை செய்யும் அரிய பாக்கியம் இமானுவேலுக்குக் கிடைக்கின்றது.
இது என்றும் இமானுவேலால் மறக்க முடியாத கலையுலக நினைவுகளில் ஒன்று.
சேக்ஸ்பியரின் பெனிஸ் நகரத்து வணிகன் என்ற நாடகத்தைக் கலையரசு அவர்கள் சைலொக் என்ற பாத்திரத்தில் தனி நடிப்பு
நிகழ்சியாகப் பல தடவை மேடையேற்றி இருக்கின்றார். இந்த
A3

Page 25
வண்ணைத்தெய்வம்
நாடகத்திற்கு இமானுவேல்தான் அனேகமான இடங்களுக்கு ஒப்பனைக்கு சென்றிருக்கின்றார்.
கொழும்பில் இந்த நாடகம் இரண்டு தடவை மேடையேறிய பொழுது அங்கு ஒப்பனைத் துறையில் புகழ்பெற்ற சுப்பு, கதிர் காமத் தம்பி போன்றவர்கள் இருந்த போதும் கலையரசு அவர் கள் இமானுவேலைத்தான் தனக்கு ஒப்பனைக்காக அழைத்துச் சென்றது இமானுவேலின் திறமைக்குக் கிடைத்த பரிசேயாகும்.
ரகுநாதன் அவர்களின் பிரசித்தி பெற்ற தேரோட்டி மகன் நாடகம் கொழும்பு சரஸ்வதி மண்டபத்தில் ஒரு தடவை மேடையேறியபோதும் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் மேடையே றிய போதும் கலையரசு அவர்களுடன் இணைந்து நடிக்கும் அரிய வாய்ப்பு இமானுவேலுக்குக் கிடைத்திருக்கின்றது. கலை யரசு மட்டுமல்ல அந்த நாடகத்தில் நடித்த K. S. பாலச்சந்திரன் குழந்தை மாஸ்டர், சிவா சிவபாலன் போன்றவர்களுடனும் இணைந்து நடிக்கும் சந்தர்ப்பம் அன்று கிடைத்தது. கலைஞர் களோடு சகஜமாகப் பழகும் பண்பு அவர்களைத் தட்டிக் கொடுத்து ஊக்கிவித்து நடிக்க வைக்கும் திறமை இவைகளைக் கலையரசுவிடம் இருந்து கலைஞர்கள் கற்றுக் கொள்ள வேண்
டும்.
இவைகளுக்கு கலையரசு அவர்களுக்கு நிகர் கலையரசுதான். 1982ம் ஆண்டு இமானுவேல் ஜேர்மனியில் வசித்த காலத்தில் தந்தையின் கடிதமூலம் கலையரசு சொர்ணலிங்கம் அவர்கள்
காலமான செய்தியைப் படித்தபொழுது இமானுவேல் இடிந்து போகின்றார்.
அந்த நேரத்தில் அவருடன் பழகிய பழைய நினைவுகள் நெஞ் சில் றீங்காரமிடுகின்றது. முன்னொரு சமயம் ஒரியன்றல் கூட்டுறவுக் கழகத்தின் ஏற்பாட் டில் கலையரசு அவர்களுடன் முப்பதுக்கு மேற்பட்ட கலைஞர் களுடன் சேர்ந்து இமானுவேலும் நாடக சுற்றுலா சென்ற நினைவு இவரின் நெஞ்சில் மிதக்கின்றது.

கதாநாயகன்
மட்டக்களப்பில் நடந்த நாடகத்திற்கு வந்திருந்த மக்கள் கூட்டம் எண்ணிலடக்கி விடமுடியாதது. எள் போட்டால் எண்ணையாகும் என்று சொல்வார்களே! அப்படி.
அதன்பின் திருகோணமலை சென்று நாடகம் போட்டபோதும். அதே வரவேற்பு அதே போன்ற மக்கள் வெள்ளம். ஒரு வாரம் அந்த கலைஞர்களுடன் வாழ்ந்த நாட்களை இமானுவேலால் எப்படி மறக்கமுடியும்.
இதே போன்று புகழ் பெற்ற கலைஞர்களுடன் இணைந்து கலைப் பயணம் செய்த இன்னொரு அனுபவமும் இமானுவே லுக்கு உண்டு.
தமிழ் நாட்டில் அன்றைய காலத்தில் புகழ் பெற்று விழங்கிய திரைப்பட, நாடகக் கலைஞர்களான D. M. சண்முகம், சன்ட் சோமு, மாதுரிதேவி ஆகியோருடன் பதினைந்துக்கும் மேற் பட்ட கலைஞர்கள் இரண்டு மாதகாலம் மலைநாட்டில் தங்கி யிருந்து மலைநாட்டின் பல பாகங்களிலும் நாடகங்கள் போட் டார்கள். அவர்களுக்கு ஒப்பனைக்காகச் சென்ற தந் ை5 பெஞ் சமின் அவர்களுடன், அன்ரன் ஜீவாவும், இமானுவேலும் அந்த இரண்டு மாதகாலமும் அந்தக் கலைஞர்களுடன் பழகியது மறக்க முடியாதது தான்.
தங்கள் கலை நிகழ்ச்சி முடிந்து தமிழகத்திறகுப் புறப்பட்டபோ ழது தங்கள் குடும்பத்தில் உள்ளவர்களை விட்டுச் செல்வது போல பிரிய மனமின்றி கண்கலங்கி அவர்கள் பிரிந்து சென்ற அந்தக் காட்சி. . .
அது நடந்து இருப்பத்திஐந்து வருடங்களுக்கு மேலாகி விட் டாலும் இன்னும் அந்த பசுமையான நினைவுகள் இமானுவே லின் மனதில் துளிர்த் தெழத்தான் செய்கின்றது.
4ö

Page 26
வண்ணைத்தெய்வம்
சாதனை நாயகனுடன் சேர்ந்த கதை.
உனக்கு மாலைகள் விழவேண்டும் - ஒரு மாற்றுக்குறையாத மன்னவன் இவனென்று.
حسر;(---- کسح لمحہ
நகர்கள் என்றால் அவர்கள் தமிழ் நாட்டில் தான் வாழ்கின்றார் கள். தமிழ் நாட்டு மண்ணுக்கும் நடிக்கத் தெரியும். இன்று இந்தியாவில் இருந்து வரும் தமிழ் திரைப் படங்களைப் பார்த்து விட்டு அந்தச் சிறிய வட்டத்தையே கலை உலகம் என்று நம்பிக் கொண்டிருந்த தமிழ் சினிமா ரசிகர்களின் அளவுகோல் மட்டுமல்ல சினிமாவில் நடித்தால் தான் அவர்கள் கலைஞர் கள் என்று எண்ணிக் கொண்டிருந்தது. இது அன்றைய தமிழ் சினிமா ரசிகர்களின் முடிவான முடிவும் கூட. காரணம் அவர் கள் எல்லாம் நாடகங்களைப் பார்த்தே இருக்க மாட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
சிவாஜிக்கும், எம். ஜி. ஆருக்கும் மன்றம் வைத்துச் சண்டை பிடித்துக் கொண்டிருந்த ரசிகர் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் இவர்கள். தமிழ் நாட்டு சினிமாப்படங்களுக்கு நிகராக மட்டுமல்ல அவர் களின் தமிழ்ப் படங்களைவிடச் சிறப்பாக தயாரித்து உலகப் படவிழாக்களில் பங்குபற்றிப் பரிசு பெற்ற சிங்களட் படங்கள்கூட உண்டு. அந்தப் படங்களைப் பார்க்கும் சந்தர்டங்கள் மட்டு மல்ல அவைகளைப் பற்றி அறிந்தும் இருக்காதவர்களின் எண்ணங்கள் தான் மேற் கூறப்பட்டவை.
A6

கதாநாயகன்
//
அந்த ரசிகர்களின் எண்ணங்களுக்கு உரம் சேர்ப்பதற்கு "பாச நிலா", "தோட்டக்காரி" போன்ற ஈழத்துத் திரைப்படங்கள்
அமைந்ததும் ஒருகாரணம்.
கடமையின் எல்லை என்ற திரைப்படம் ஓரளவு நம்பிக்கையை ஏற்படுத்தியது. மேற்கூறிய அந்த ரசிகர்களுக்கு அல்ல ஈழத் துக் கலைஞர்களுக்கு.
V. S. துரைராஜாவின் "குத்துவிளக்கு" மிகுந்த எதிர் பார்ப்போடு வந்தாலும் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைத் தான் கொடுத்தது.
ஆனால் கதை, இசை, பாடல்கள், தொழில்நுட்பம் ஆகியவற் றில் அளப்பரிய முன்னேற்றத்தைக் கண்டிருந்தது. தொடர்ந்து
"நிர்மலா" என்றொரு திரைப்படம் யாழ்ப்பாணத்தில் பெரிய திரைஅரங்குகளில் ஒன்றான ராஜா தியேட்டரில் வெளியாகுகின்
றது. எம். ஜி. ஆர், சிவாஜி கணேசன் போன்ற முன்னணி
நடிகர்களின் படங்களின் போட்டிக்கு மத்தியிலும் ஒரு மாதத் திற்கு மேல் "நிர்மலா” ஓடி வெற்றி வாகை துடுகின்றது. கலைஞர்களுக்கும் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கும் ரசிகர் களுக்கும் முழு நம்பிக்கை ஏற்படுகின்றது.
ஈழத்துக் கலைஞர்களாலும் தரமான தமிழ்த் திரைப்படங்கள்ைத் தயாரிக்க முடியும் என்று.
அந்த வெற்றிப் படத்தைத் தயாரித்த சாதனை நாயகன் வேறு யாருமல்ல திரு ரகநாதன் அவர்கள் தான். a
இந்த சாதனை நாயகனுடன் இமானுவேல் சேர்ந்த கதை சுவார்சியமானது.
1959ம் ஆண்டு யாழ் நகர மண்டபத்தில் ரகுநாதனின் தேரோட்டி மகன் நாடகம் ஒப்பனைக்காக தந்தைக்கு உதவி யாக சென்ற இமாவேல் கலையரசு உட்பட பல புகழ்பெற்ற கலைஞர்களை அங்கு காண்கின்றார். அன்றுதான் முதன் முதலாக ரகுநாதன் அவர்களைச் சந்திக்கும் சந்தர்ப்பம் ஏற்படு கின்றது.

Page 27
வண்ணைத்தெய்வம்
கலைஞர்களின் திறமைகளை அவர்களின் செயற்பாட்டில் இருந்தே அறிந்து கொள்ளும் ரகுநாதன், அன்று ஒப்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இமானுவேலின் திறமையை இனம் கண்டு கொள்கின்றார். அன்று ஏற்பட்ட நட்பு ரகுநாதன் அவர் களின் பல நாடகங்களுக்கு ஒப்பனையாளராக கடமையாற்றவும் அவரின் நாடகங்களில் நடிப்பதற்கும் வழி அமைத்துக் கொடுக் கின்றது.
ரகுநாதன் அவர்களின் "வேதாளம் சொன்ன கதை", "தே ரோட்டி மகன்", சம்பூர்ண ராமாயணம்" இவை போன்ற நாடகங்களில் எல்லாம் இமானுவேல் நடித்திருக்கின்றார். ரகுநாதன் சாதித்த இன்னுமொரு சாதனையை இமானுவேல் மிகப் பெருமையாகக் கூறுகின்றார். அது:
யாழ்ப்பாணத்தில் திறமை மிக்க பல கலைஞர்கள் இருக்கின்றார் கள் அவர்களின் திறமை அனைத்தும் யாழ்ப்பாணத்தோடு நின்றுவிடும். இவர்கள் யாழ்ப்பாணத்தை விட்டுச் சென்று புகழ் பெறுவது நரிக்கொம்பு எடுப்பதைப் போன்றே!
அப்புக்குட்டி ராஜகோபால், K.S. பாலச்சந்திரன் போன்ற ஒரு சிலர்தான் அந்த நரிக்கொம்பை எடுத்திருக்கின்றார்கள்.
ஆனால் பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் யாழ்ப்பாணத்துக் கலைஞர்களான இமானுவேல், டிங்கிரி சிவகுரு, ஜெனம் பிரான்சிஸ், சிவா சிவபாலன், அரியரட்ணம் போன்ற கலைஞர் களை கொழும்புக்கு அழைத்துச் சென்று தன்னுடைய பல நாடகங்களில் நடிக்க வைத்து சாதனை படைத்திருக்கின்றார் ரகுநாதன் அவர்கள். வெள்ளவத்மைதயில் உள்ள 25 பஸ்லஸ் வீதியில் இருந்த ரகுநாதனின் இல்லத்தில் இமானுவேல் தங்கியிருந்த காலங்கள் பசுமையானவை. கொழும்பில் வானொலியிலும் மேடைகளிலும் புகழ்பெற்றிருந்த கலைஞர்க ளான லடீஸ் வீரமணி, டீன்குமார், கலைச்செல்வன், உதயகு மார், ஜவகார், சிலோன் சின்னையா, சுப்புலட்சுமி காசிநா தன், ராஜேஸ்வரி சண்முகம், ஹெலன்குமாரி, சந்திரகலா, சில்லையூர் செல்வராசன், ஒப்பனைக் கலைஞர் சுப்பு போன் றவர்களுடன் எல்லாம் பழகி அவர்களின் நட்பைப் பெறும் அரிய சந்தர்ப்பம் திரு ரகுநாதன் மூலமாக இமானுவேலுக்குக் கிடைத் திருக்கின்றது.

கதாநாயகன்
சில்லையூர் செல்வராசன், ஹெலன்குமாரி உட்படப் பல கலைஞர்களுக்கு ஒப்பனை செய்ருக்கின்ற நாட்களெல்லாம் இமானுவேலின் கலை நினைவுகளில் இருந்து மறக்க முடியாத நாட்கள்.
சில்லையூர் செல்வராசன் அவர்களை பலர் கவிஞனாக, "கதாசிரியனாகப் பார்ப்பார்கள். ஒரு நடிகனாக அதிலும் நாட்டுக் கூத்துப் பாடும்போது அவர்பாடலில் வரும் நயங்கள், இவை களைப் பற்றியெல்லாம் கூறும்போது இமானுவேல் மெய்சி லிர்த்து நிற்கின்றார். யாழ்ப்பாணத்துக் கலைஞர்களை கொழும்புக்கு அழைத்துச் சென்று கலை நிதழ்ச்சிகளை நடாத்துவது போல கொழும்புக் கலைஞர்களை யாழ்ப்பாணத்துக்கு அழைத்து வந்தும் பிரபல நாடகங்களை மேடையேற்றியிருக்கின்றார்.
அதற்கு உதாரணம் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நிழில் நாடகவிழா.
நிழல் நாடகவிழா நடந்த நாட்களில் ரகுநாதன் அவர்களோடு இமானுவேல் வீடுவாசல்களை மறந்து விடுவார்கள். இமானு வேல் அவர்களின் கலைவாழ்வு சிறப்புற அமைவதற்குக் களம் அமைத்தவர்களில் ரகுநாதனும் ஒருவர் என்பது மறுக்கமுடியாத ഉ_ങ്ങTഞഥ.

Page 28
வண்ணைத்தெய்வம்
நாட்டுக்கூடத்தச் சக்கரவ்ர்த்தியோடு.
வந்தேனே. வந்தேனே. வந்தேனே. ராஜாதி ராஜமகன் ராஜ வீரப்பிரதாபன் நானும் வந்தேனே.
நாட்டுக்கூத்தில் பெயர் சொல்லக்கூடிய புகழ் பெற்ற அண் ணாவி மார்கள் பலர் இருந்தாலும் அந்த அண்ணாவி மார்கள் எல்லாம் அண்ணாவியார் என்று அழைக்கும் வணங்காமுடி பூந்தான் யோசப்பு அவர்கள். அவர் மேடைக்கு வரும் காட்சியே தனி அழகு. . . இன்றைய தலைமுறையினரில் அவரின் நாடகங்களைப் பார்த் தவர்கள் மிகக் குறைவு என்றுதான் கூறவேண்டும். இருந்தா லும் அவரின் திறமைகளை அறியாதவர்களாக இருக்க முடி ԱյՈ 5l.
அந்த நடிக வேங்கையுடன் நடித்த சிலர் இங்கு இருக்கின்றார் கள். அவர்களில் பெஞ்சமின் இமானுவேலும் ஒருவர்.
5()

கதாநாயகன்
பூந்தானைப் பற்றி இமானுவேல் கூறும் போது "நான் சிறுவய தில் பூத்தான் யோசப்பு அவர்களின் பரம ரசிகன். நான் மட்டு மல்ல அவருக்கு இருந்த ஏராளமான ரசிகர்களில் நானும் ஒருவன். அவருடைய நாடகங்கள் எங்கு நடந்தாலும் எனது தாயாருடன் நான் அங்கு சென்றுவிடுவேன். இப்படித்தான் ஒருநாள் எனக்கு ஏழு. . அல்லது எட்டுவயது இருக்கும். கொய்யாத் தோட்டம் புதுவீதியில் (தற்சமயம் கிறிஸ்து அரசு ஆலயம் இருக்கும் இடம்) திரு பூத்தான் ஜோசப்பு அவர்களின் "சஞ்சுவான்" நாட்டுக்கூத்து நடைபெறுகின்றது எனது தந்தை தான் அந்த நாடகத்திற்கு காட்சி அமைப்பு ஒப்பனை உடை அலங்காரம் எல்லாம். நான் எனது தாயாருடன் நாடகம் பார்க்க மைதானத்தில் அமர்ந்திருக்கின்றேன். சிறிது நேரத்தில் நான் நித்திரையாகி விட்டேன். நடுச்சாமம் பன்னிரண்டு மணி இருக்கும் பட்டாசு வெடிக்கும் சத்தம் பலமாகக் கேட்கின்றது. எனது தாயார் என்னைத் தட்டி எழுப்புகின்றார் 'தம்பி பூத்தான் வாறார் எழும்படா" என்று. நான் திடுக்கிட்டு எழும்பிப் பார்க் கின்றேன் அரச கொலவில் இருந்து அதிரும் குரலில் பாடியபடி அண்ணாவியார் பூத்தான் யோசப்பு அவர்கள் வருகின்றார். கானேது வானேது பங்கார நிலையேது நானேது நீமிக்க ள்ண்ணினாய்
நஞ்சுண்ட நீர் முடனே. . .
என்ற கல்வெட்டைப் பாடியபடி கொலுவை விட்டு இறங்கி வந்து அவர் பாடும் காட்சியைப் பார்ப்பதற்கு இந்த இரண்டு கண்களும் போதாது. அவர் எழுந்து வரும் வேகம் சிங்கம் ஒன்று சினத்துடன் சீறிவந்து கர்ச்சிப்பது போல் இருக்கும். அந்தக்காட்சியைப் பார்ப்தற்காக எத்தனையோ பேர் அங்கு வந்து என்னைப் போல் நித்திரையாகி விடுவார்கள். அவர்க ளுக் கெல்லாம் பூத்தான் வருகின்றார் எழும்புங்கள் என்று அறிவிப்புச் செய்யவே பட்டாசு கொழுத்துவார்கள். மறுநாள்
வீட்டில் நான் என்னை பூத்தானாக கற்பனை செய்து கொண்டு அவர் பாடிய பாடலைப் பாடி நடித்தும் பார்ப்பேன். அப்பொழுது எனக்குள் ஒரு ஆசை நானும் பூத்தானைப் போல் ஆடிப் பாடி நடிக்க வேண்டும் என்று ஆனால் அந்த நடிகமேதையுடன் பிற்காலத்தில் இணைந்து நடிப்பேன் என்று கற்பனையில் கூட நினைத்ததில்லை. இந்த நினைவுகளை இமானுவேல் கூறும் போது எட்டு வயது சிறுவனாகவே மாறிவிட்டார். இந்தக்

Page 29
வணிணைத்தெய்வம்
கலைஞனின் நினைவுகளில் கலங்கரை விளக்கம் போல இன்றும் பசுமையாக அவை மலர்ந்திருக்கின்றதை எண்ணும் போது எங்களுக்கும் தான் வியப்பு. இமானுவேலின் கற்பனை யில் கூட எண்ணமுடியாமல் நடந்த எத்தனையோ பல சம்ப வங்களில் இதுவும் ஒன்று.
இவரின் தந்தை சாமுவேல் பெஞ்சமின் அவர்களின் கலை ஆர்வமும் அவர் கொடுத்த ஊக்கமும் பிற்காலத்தில் பல தடவைகள் பூந்தான் அவர்களுக்கு இமானுவேல் ஒப்பனை செய்திருக்கின்றார். அவருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை யும் பெஞ்சமின் அவர்களே இமானுவேலுக்கு ஏற்படுத்திக் கொடுக்கின்றார்.
"சஞ்சுவாம்", "ஜெனொவா", "கருங்குயில்", "குன்றத்துக் கொலை", "சங்கிலியன்", "செனகப்பு" போன்ற நாடகங்களில் பூத்தான் யோசப்பு அவர்களின் இயக்கத்தில் அவருடன் இணைந்து நடித்திருக்கின்றார் இமானுவேல் அவர்கள்.
"சிலருக்கு அதிஷ்டம் பணமாக பொருளாக வரும் ஆனால் பூத்தான் யோசப்பு போன்ற பெரிய கலைஞர்களுடன் இணைந்து நடிப்பதற்குக் கிடைத்த வாய்ப்புக்களே எனக்கு அதிஷ்டம் தான்" என்கின்றார் இமானுவேல். இதேபோன்று நடிகமணி வைரமுத்து அவர்களுடன் நடித்ததையும் அவர் அப்படியே எண்ணுகின்றார்.
எண்ணற்ற பல தடவைகள் நடிகமணிக்கு இமானுவேல் ஒப் பனை செய்திருக்கின்றார் சில மேடைகளில் நடிகமணியுடன் இணைந்து அயலாத்து பிள்ளையாக நடித்தும் இருக்கின்றார்.
இப்படியான வாய்ப்புகள் எல்லோருக்கும் கிடைத்து விடுவ தில்லை. அப்படியான கலைஞர்கள் எம்மத்தியில் விரல் விட்டு எண்ணக்கூடிய ஒர சிலரே இருக்கின்றார்கள். அவர்களில் முன்னிலை வசிப்பவர் எங்கள் பெஞ்சமின் இமானுவேல் தான்.
§2

கதாநாயகன்
அல்போன்ஸ் என்ற அரியநாயகத்தடன்.
வேலெடுக்கும் மரபிலே வீரம் செறிந்த மண்ணிலே.
M
இமானுவேல் பெரிய கலைஞர்களின் இயக்கங்களில் நடித்திருக் கின்றார். புகழ் பெற்ற கலைஞர்கள் எல்லாம் தங்கள் நாடகங்க ளில் நடிக்க வைத்திருக்கின்றார்கள். இவையெல்லாம் இமானு வேல் சிறந்த நடிகன் என்று அவர்கள் இனம் கண்டு கொண்ட பின்னர்தான்.
ஆனால் சிறுவயதில் இருந்தே இமானுவேலிடம் இருந்த கலை உணர்வுகளைப் புரிந்து கொண்டு சிறு சிறு பாத்திரங்கள் மூலம் பயிற்சி கொடுத்து சிறந்த நடிகனாக மக்கள் முன் நிறுத்தியவர் அல்போன்ஸ் என்ற அரிய நாயகம் அவர்கள் தான்.
எமது கலைஞர்கள் இன்னமும் தொழில் ரீதியாக முழுமையாக வளர்ந்து விடாத காரணத்தால் கலைஞர்களின் பயணத்தில் சில சமயங்களில் சில தடைகள் ஏற்படுவதுண்டு. அது இன்று அரியநாயகம் அவர்களிடமும் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் நாளை அவர் இன்னமும் பிரகாசமாக கலைவானில் பிரகாசிப் பார் என்பது ‘அனைத்துக் கலைஞர்களினதும் அசைக்க முடி யாத நம்பிக்கை. அதற்கு உதாரணம் சுமார் இருபது வருடங் களுக்கு முன்பே யாழ் நகரில் "நவரச நாடகாலயம்" என்ற

Page 30
வண்ணைத்தெய்வம்
அமைப்பின் மூலம் அவர் அரங்கேற்றிய பிரமாண்டமான bİTLகங்களும். பாரிஸ் வந்தபின் "நாயகம் கலைக்குழு" எனற அமைப்பின்மூலம் மேடையேற்றிய நாடகங்களும் ஐரோப்பிய தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் என்ற அமைப்பின் மூலம் வளாநது வரும் இளம் எழுத்தாளர்களின் ஆக்கங்களை நூலாக 2-(5 வாக்கி வெளியிட்டமையையும் கூறலாம.
பாடசாலையில் படித்துக் கொண்டிருந்த காலங்களில் ஆண்டவ ரின் திருப்பாடற் காட்சியை மேடையேற்றிய அரிய நாயகம அவர்கள் இமானுவேலைச் சிறு. . சிறு வேடங்களில் நடிக்க வைத்திருக்கின்றார்.
பாடசாலை நட்பைவிட கலை உறவே இவர்களிடம் அதிக நெருக்கத்தை ஏற்படுத்தியது. பாடசாலையிலும் சனசமூக நி லையங்களிலும் சிறுசிறு நாடகங்களை தானே எழுதி இயக்கி மேடையேற்றி வந்த அரியநாயகம் பிற்பாடு "நவரசநாடகாலயம் " என்ற பெயரில் ஒரு கலாமன்றத்தை ஆரம்பித்தார். அந்த நாட்களில்பிரமாண்டமான பொருட்செலவில் காட்சிகளை அமைத்து நாடகம் போடும் ஒருசில மன்றங்களில் நவரச நாடகாலயமும் ஒன்று. அல்போன்ஸ் அவர்களின் அனைத்து நாடகங்களுக்கும் காட்சி அமைப்பு, ஒப்பனை என்று சகலவி தங்களிலும் உதவியாக இருப்பவர்கள் இமானுவேலும் அவரின் தந்தை பெஞ்சமினும்தான்.
ஒரு சமயம் யாழ்/ஆசனக்கோவிலிற்கு பின்பாக உள்ள மைதானத்தில் சுவாமி ஞானப்பிரகாசர் விழாவை இரண்டுநாட் கள் பிரமாண்டமாக நடத்தினார் அல்போன்ஸ் அவர்கள். ஒலி, ஒளி, மேடை அலங்காரங்கள் அனைத்தையும் செய்தவர்கள் இமானுவேலும் அவர் சகோதரர் அன்ரன் ஜீவாவும் தான். விழா முடிந்தபின் அல்போன்ஸ் அவர்கள் இமானுவலின் ஒத்துழைப்பை மனம்திறந்து பாராட்டுகின்றார். இமானுவேல் விழா நடத்துவதற்கு முக்கியமான தேவைகளை எல்லாம் பூர்த்திசெய்து விழாவை சிறப்பாக முடித்த பெருமை உன்னைத் தான் சாரும்" இப்படி மகிழ்ச்சியுடன் பாராட்டுகின்றார்.

கதாநாயகன்
அல்போன்ஸ் அவர்களின் பிரமாண்டமான தயாரிப்பான "யூ லியசீசர்" நாடகத்தில் இமானுவேலையே சீசராக நடிக்க வைக்கின்றார். யாழ்/நகரமண்டபத்தில் நடந்த இந்த நாடகம் அவருக்குப் பெரும் புகழைத்தேடிக்கொடுத்தது. யாழ்ப்பாணத் தில் நடைபெற்ற தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் நவரச நாடகா லயத்தின் சார்பில் 'சாணக்கிய சபதம்" என்ற நாடகத்தை லண்டன் கந்தையா புகழ் சான அவர்களைக் கொண்டு இயக்கி மேடையேற்றினார். அந்த நாடகத்தில் பிரபல நடிகர் திருவாளர் பேரம்பலம் அவர்களுடன் இணைந்து நடிக்கும் சந்தர்ப்பத்தை யும் ஏற்படுத்திக் கொடுத்தார் அரியநாயகம் அவர்கள்.
பிற்பாடு இந்த நாடகத்தின் சில காட்சிகள் குத்துவிளக்கு
திரைப்பட தயாரிப்பாளர் திரு V. S. துரைராஜா அவர்களால்
திரைப்படமாக எடுக்கப்பட்டு யாழ் தமிழாராய்ச்சி மாநாட்டு செய்திப்படத்துடன் இணைந்து யாழ் நீகல் படமாளிகையில காண்பிக்கப் பட்டது.
பாரிசில் அல்போன்ஸ் அவர்களின் நாயகம் கலைக்குழுவினரால் மேடையேற்றப்பட்ட "சொந்த மண்" நாடகத்தில் நாரதராக நடிக்க வைத்தார்.
இன்று இமானுவேல் மக்கள் போற்றும் பெரும் கலைஞர் என்று வளர்வதற்கு அன்றே தண்ணீர் ஊற்றி வளர்த்து விட்டவர் இந்த அல்போன்ஸ் அரிய நாயகம்தான் அவரை மறக்கமுடி
ULOT
ལ། 《།། ཡོད་྾《ལེ།།

Page 31
வண்ணைத்தெய்வம்
கலைச்சுடரோடு கலைச்சந்திரன் அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே. நலனபனே.
"நடிப்பிசைச்காவலன்", "கலைச்சுடர்" என்ற பட்டங்கள் கிறகரி தங்கராஜா அவர்களை அலங்கரித்துக்கொண்டிருந்தாலும் "கலைப்
பித்தன்" என்று அழைத்தால் கிறெகரி அவர்களுக்க மிகவும்
பொருந்தும். அன்றும் சரி இன்றும் சரி இவர் சாதாரண கலை ஞனாக இல்லாது -கலைப்பித்தனாகவே வாழ்கின்றார். ஒவ்வொரு கஞனிடமும் ஒவ்வொரு திறமை மேம்பாடாக இருக்கும். ஆனால் கிறெகரியிடம் இருக்கம் பல திறமைகளுடன் விஷேடமாக இன் னொரு திறமை இருக்கின்றது. அது திறமைமிக்க கலைஞர்களை கெளரவித்து அவர்களை ஊக்கவிக்கும் மாபெரும் திறமை.
ஆரம்பத்தில் ஒவ்வொரு வராக ஆங்காங்கே கொரவித்துவந்த கிறகரி அவர்கள் தனது கலைவாழ்வின் வெள்ளிவிழா வைபவத் தில் இருபது கலைஞர்களை ஒரே சமயத்தில் கெளரவித்த நிகழ்ச்சி மறக்கமுடியாதது. "சங்கமம்" என்ற வீடியோப் பத்திரி கைக்கு ஆசிரியராக இருந்து இலைமறைகாயாக இருக்கம் பல திறமைமிக்க கலைஞர்களின் படைப்புகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்திருக்கிறார். இந்த அரிய கலைஞனின் ஐம்பது வயது பூர்த்தியான பொன்விழா அண்மையில்தான் நடைபெற்றது. இந்த ஐம்பதுவருட காலமும் இவரைவிட்டுப் பிரியாது இணைந்து கலைப்பணியாற்றிவரும் ஒரே நண்பன் இமானுவேல் ஒருவர்தான். இவர்களுடைய உறவைச் சின்னவயதுச் சொந்தம் என்றே சொல் 6)6)fts).

கதாநாயகன்
சிறுவயதிலே பாட்டுப் பாடுவதிலே வல்லவர் கிறெகரி அவர்கள். கிறகரியின் பாடலை விரும்பிக்கேட்கும் ரசிகர்களில் இமானுவே லும் ஒருவர். ரசிகர் என்றால் சாதாரண ரசிகர் அல்ல. "ஒன்ஸ் மோர்" கேட்டு திரும்பப் பாடவைத்து கேட்கும் பரமரசிகன். கிறெகரிக்கு நண்பனாய், ரசிகனாய் இருந்த இமானுவேல் அவர் கள் முதன்முதலாக மேடையேற்றிய "மானம் பெரிது" என்ற நாடகத்திற்கு மேடை அமைப்பு, ஒப்பனை செய்ததன் மூலம் கலையுலகு நண்பர்களாகிவிடுகின்றார்கள். அதைத்தொடர்ந்து கிறெகரியின் பல நாடகங்களில் இமானுவேல் நடித்திருக்கின்றார் என்ற சொல்வதைவிட இன்றும் நடித்துவருகின்றார் என்றே கூறவேண்டும். கறெகரியின் இயக்கத்தில் இமானுவேல் அவர்கள் நடித்த "ஊதா ரிப்பிள்ளை" என்ற நாடகம் நாட்டின் பல பாகங்களிலும் மேடை யேற்றப்பட்டு ரசிகர்களின் அளப்பரிய பாராட்டுக்களைப் பெற்றது. இவரின் "அரிச்சந்திரா மயானகாண்டம்" பல பரிசில்களைப் பெற்றது. இப்படி இவர்கள் இருவரும் இணைந்து கலைப்பணியாற் றிய சம்பவங்கள் நிறையவே உண்டு. அந்த சம்பவங்கள் கிறகரி யின் வெள்ளிவிழா வைபவத்தில் ரஜனி பதிப்பகத்தால் வெளியிடப் பட்ட "கலைப்பதையில் இவர்" என்ற நூலில் விபரிக்கப்பட்டுள் ளது. இவர்கள் இருவரும் நண்பர்களாக இருப்பதனால் பல கலையுறவுச் சம்பவங்கள் இருவராலும் நினைவுகூரக்கூடியதாக வும், மறக்கமுடியாததாகவும் அமைந்துவிட்டது. அந்த சம்பவங் களை கிறெகரி அவர்களைப்பற்றிய புத்தகத்தில் குறிப்பிட்டுவிட்ட தாலும், அதே சம்பவங்களை மீண்டும் எழுதினால் அந்தப் புத்கத்தின் பெருமை குறைந்துவிடும் என்பதாலும் பல சம்பவங் களை இங்கு குறிப்பிடவில்லை. வாசகர்கள் புரிந்துகொள்வார்கள் என்ற நம்பிக்கையும் அதற்க ஒரு காரணம். இடம்மாறி வாழ்ந் தாலும் இந்த இருவரின் நட்புமட்டும் மாறவில்லை. கலைஉறவுத் தொடர்புகள் நிற்கவில்லை. பாரிசிலும் கிறெகரியின் இயக்கத்தில் பல நாடகங்களில் நடித்திருக்கின்றார் இமானுவேல் அவர்கள். கிறெகரி அவர்களின் "கலைக்கோயில்" தயாரித்து வெளியிட்ட முதலாவது சங்கமம் வெளியீட்டு விழாவில் இமானுவேல் அவர் களுக்கு "கலைச்சந்திரன்" என்ற பட்டத்துடன் தங்கப்பதக்கமும் வழங்கிக் கெளரவித்தது மறக்கமுடியாத ஒரு நிகழ்ச்சியாகும்.
ஐம்பது வயது கிறெகரி தங்கராஜா, பெஞ்சமின் இமானுவேல் என்ற இரு நண்பர்களுக்கும்தான். அந்த இரு கலைஞர்களின் உறவிற்கு வயது தேவையில்லை. இவர்களின் கலைப்பணிக்க வயது ஒரு தடைக்கல்லாக இருக்கக்கூடாது என்பது எங்கள் 6T6600).
இன்னும் ஐம்பது வருடங்களைத் தாண்டியும் இவர்களின் கலைப் பணி தொடரட்டும்.
て

Page 32
வர்ைனைத்தெய்வம்
லடீஸ் வீரமணி என்ற
புர்ட்சிக்கலைஞருடன்.
காவியமா நெஞ்சில் sluDI ஜீவிதமா தெய்வீக்க காதல் சின்னமா.
லடிஸ் வீரமணி என்ற புரட்சிக் கலைஞனுடன். . . . .
"காவியமா? இல்லை ஒவியமா? ஜீவிதமா? தெய்வீக காதல் சின்னமா?
அந்த மாபெரும் கலைஞன் மறைந்துவிட்டான். ஆனால் அந்தக் கலைநிலவு இன்னும் எங்கள் முகத்தில் மின்னலடிக்கிறது. திறமைமிக்க கலைஞர்களை வாழ்த்துவதில் இந்தப் பெரும்கலை ஞன் என்றைக்குமே பின்னின்றதில்லை. தான் சாகின்ற வரை ஒரு கலைஞனாகவே வாழ்ந்து காட்டியவர். அந்தக் கலைஉபாச கனை ஈழத்துக் கலைஞர்கள் பறிகொடுத்துவிட்டார்கள். இருந்த போதும் சில கலைஞர்களின் கனவுகளில் வந்து கண்ணடித்துவிட் டுச் செல்கின்றார். அந்தக் கனவிற்குச் சொந்தக்காரக் கலைஞன் பெஞ்சமின் இமானுவேல். கனவில் வந்து கண்ணடித்துவிட்டு செல்லும் கலைஞன் லடீஸ் வீரமணி. இமானுவேல் அவர்களுக்கு இருபது அல்லது இருபத்தியொரு வயது இருக்கும். அறுபத்திஇர ண்டு அல்லது அறுபத்தி முன்று என்ற கணிப்பு கொழும்பு வெள்ளவத்தை சைவமங்கையர் கழகம் யாழ் நகரமண்டபத்தில் "சிலம்புச்செல்வி" என்ற நாடகத்தை மேடையேற்றினார்கள்.
முற்றிலும் பெண்களே நடித்த நாடகம் அது அன்றைய நாடகத் திற்கு அரங்க அமைப்பு ஒப்பனை ஆகிய பொறுப்புக்களை ஏற்றிருந்தவர் திருவாளர் பெஞ்சமின் அவர்கள். அந்த நாடகக் குழுவினருடன் லடிஸ் வீரமணி அவர்களும் வந்திருந்தார். ஒலி,
ஒளி, அரங்க நிர்வாகம் அனைத்தையும் கவனித்தவர் அவர்தான்.

கதாநாயகன்
"எனது தந்தையார் லடிஸ் வீரமணி அவர்களைக் கொழும்பில் இவர்தான் பிரபலமான கலைஞர் என்று கூறி அறிமுகப்படுத்தி வைக்கின்றார். அன்றைய சந்திப்பு வீரமணியை இமானுவேலுக்கு நல்ல நண்பனாக்கிக் கொடுக்கின்றது. பின்நாட்களில் ஒப்பனைக் காகக் கொழும்பிற்குச்செல்லும் நாட்களில் விரமணியைச் சந்திக் கும் வாய்ப்புக்களும் கண்டிப்பாக ஏற்படும். திரு. ரகுநாதன் அவர்களின் மூலம் லடீஸ் வீரமணியுடன் இணைந்து நடிக்கும் வாய்யப்பும் இமானுவேலுக்கு ஏற்பட்டது. வீரமணி மேடையேற்றிய நாடகங்களில் "சலோமை" என்ற நாடகம் அவருக்கு பெரும் புகழைத் தேடிக்கோடுத்ததாக பெஞ்சமின் அவர்கள் கூறுவார்கள். 1974ம் ஆண்டு சென். பீற்றர்ஸ் கல்லுரியில் "பலிக்களம்" நாடகம் மேடையேறியபோது லடிஸ் வீரமணி உட்பட சுஹேல் ஹமீட், ஜவாகார், ரகுநாதன் போன்ற சிறந்த கலைஞர்கள் எல்லாம் பாராட்டியதை இன்னும் நினைவு கூறுகின்றார் இமானுவேல், அன்று லடிஸ் வீரமணி கூறினாராம் "தம்பி இமானுவேல் நீர் எனது நாடகம் ஒன்றில் இயேசுநாதராக நடிக்க வேண்டும்" என்று ஒருநாள் வீரமணியிடம் இருந்து அழைப்பும் வந்தது. . . "நீரும் ஜெனம் பிரான்சீசும் "தரிசனம்" என்ற நாடகத்தில் நடிப்ப தற்காக கொழும்பு வரவும்" என்றது அந்தத் தந்தி.
இந்து, கிறிஸ்தவம், புத்தம், முஸ்லீம் இந்த நான்கு மதங்களும் அன்பு என்னும் ஒரே தத்துவத்தையே போதிக்கின்றது என்ற அர்த்தத்துடன் எல்லாம் இமானுவேல் இணைந்து நடிக்கும் சந்தர்ப்பத்தை வழங்கியதும் அந்த நாடகம் தான்.
இயேசு கறிஸ்துவாக இமானுவேலும் யூதராக லடீஸ் வீரமணியும் நடித்தார்கள்.
இதுபற்றி இமானுவேல் கூறும் போது "நல்ல கலைஞர்களுடன் எல்லாம் நான் இணைந்து நடித்த ஒரு இன்ப நாள், அந்த நாள்" என்கின்ாார். ،۰۰۰ - - - - லடீஸ் வீரமணி ஒரு மேடை மின்னல் கண்களைக் கூசனவக கின்ற காந்த சக்தி படைத்த முகம். நடனம், நாட்டியம், நாட கம், வில்லிசை இப்படி ஒரு பல்கலைக் விற்பனர் அவர். அந்த கலைசிறந்த கலைஞர் இன்றும் இமானுவேலின் கனவுக ளில் வந்து கன்னடித்து விட்டு செல்கின்றார்.
... --
سخی دس ک6 a>\خ^P کہتے~\حے N. க
الأمير

Page 33
வண்ணைத்தெய்வம்
நானும் நாயகனும். நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதுே - நெஞ்சில்
நீங்கிடாத எண்ணம் பெருகுதே.
இமானுவேலின் கலைத்துறை அனுபவங்களை எண்ணிப் பார்க் கும் போது எங்களில் பலர் சிறு துரும்பிற்குச் சமமானவர்களாகி விடுகின்றோம். இமானுவேல் நாயகராகவே வீற்றிருக்கின்றார்.
இன்று இவரை விடச் சிறந்த கலைஞர்கள் எம்மத்தியில் இருக் கின்றார்கள் அவர்களுடன் எல்லாம் இவர் நடித்திருக்கின்றார். இந்த க் கலைஞனின் அனுபவங்களின் முன்னால் அவர்களை ஒப்பிட்டுப் பார்க்க முடியாது.
என்னுடைய இயக்கத்தில் இரண்டு நாடகங்களில் இவர் நடித்தி ருக்கின்றார். இந்தக் கலைஞனை நான் இயக்கினேன் என்ற பெயர் மட்டும் இருக்கலாம்! ஆனால் இமானுவேல் எங்களோடு இருந்து நெறிப்படுத்திய நாட்கள் ஏராளம். இந்த உண்மை பலருக்குத் தெரியாது. இது அவருடைய சுபாவம். பெயருக்காக உழைக்காமல் நாடகத்தின் வெற்றிக்காக உழைக்கும் பெரும் கலைஞன் இமானுவேல் என்றால் அது மிகையில்லை.
"சாவுக்கு சவால்" என்ற நாடகம் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறுகின்றது. திரு பெஞ்சமின் அவர்கள் ஒப்பனைக் காட்சி அமைப்பு அன்ரன் ஜீவா அவர்கள் ஒலி, ஒளி அமைப்பு இப்படி ஒரு ஏற்பாடு! ஆனால் சகல வேலைகளையும் இமானுவேல் அவர்களே மேற்பார்வை செய்கின்றார்.
அன்றைய கால கட்டத்தில் கொழும்பில் இருந்து வரும் நாடகங் கள் பணத்தை தண்ணிராகச் செலவு செய்து காட்சிகளை அமைப் பார்கள். கொழும்பு நாடகங்களுக்கு நிகராக விளம்பரங்களிலும், காட்சி அமைப்பிலும் அதிக கவனம் செலுத்தினோம். வீரசிங்கம் மண்டபத்தில் ஒரு மாடிவீட்டையே நிர்மாணித்திருந்தார் திரு பெஞ்சமின் அவர்கள். திரைப்படங்களில் வருவது போல எழுத் துக் காட்சிகள், அன்ரன் ஜீவாவின் கைவண்ணத்தில் திரையில்
50

கதாநாயகன்
எழுத்து விழும் போது ஒரு ஆணும் பெண்ணும் மேல் நாட்டு நடனம் ஆடும் காட்சி மறையாசிரியர் யேசுதாசன் அவர்களின் இசையில் நான்கு பாடல்கள். கவிஞர் காரை சுந்தரம்பிள்ளை, ஹட்டன் நகரில் ஆசிரியராகக் கடமை புரிந்த யேசுநாயகம் ஆகியோருடன் நானும் இரண்டு பாடல்களை எழுதியிருந்தேன். கோண்டாவில் துரையுடன், குருநகர் ஜெயந்தியும் இணைந்து பின்னணி பாடியிருந்தார்கள். எம்மால் முடிந்தவரை நாடகத்தி னைப் பிரமாண்டமாகவே தயாரித்திருந்தோம். நந்தினி கலாமன் றத்திற்கு அந்த நாடகம் பெரும் புகழைத் தேடித் தந்திருந்தாலும் அந்த வெற்றிக்கும் புகழுக்கும் பெரும் காரணமாக உழைத்தவர் இமானுவேல் என்பது பலருக்குத் தெரியாது. அன்று அங்கு சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்த யாழ் தேவன் மாஸ்டர், பல்கலை மணி தம்பிராசா, கலையரசு சொர்ணலிங்கம் ஆகியோ ரில் பல்கலை மணி தம்பிராசாவும் தேவன் மாஸ்டரும் நாடகம் முடிந்ததும் இயக்குநர் என்ற முறையில் என்னைப் பாராட்டி ஊக்கமளிக்கின்றார்கள். கலையரசு சொர்ணலிங்கம் அவர்கள் மட்டும் இமானுவேலிடம் சென்று அவரைப் பாராட்டுகின்றார். அவருக்குத் தெரியும் அந்த நாடகத்தின் வெற்றிக்குப் பின்னர் யாருடைய உழைப்பு அதிகம் என்பது என்னுடைய "இதைய மற்றவன்" என்ற நாடகத்தில் பல மேடைகளில் நடித்திருக்கின் றாா.
வேறு பல நாடகங்களுக்கு ஒப்பனையாளராகக் கடமையாற்றி இருக்கின்றார். இந்தச் சந்தர்ப்பங்களில் அவருடைய பலத்த அனுபவங்களைக் கண்டிருக்கிறேன். இவ்வளவு அனுபவமும் திறமையும் வாய்ந்த இந்தக் கலைஞன் இன்னமும் ஒரு நாடகத் தைத் தன்னும் இயக்கவில்லை! ஏன்? இது என் மனதிற்குள் நீண்டகாலமாக இருக்கும் கேள்வி இப்பொழுது இம்மானுவேலு டன் ஒரு நேர்காணல்.
கேள்வி: பல புகழ்பெற்ற திறமை வாய்ந்த கலைஞர்களின் நெறிப்படுத்தலில் நடித்திருக்கின்றீர்கள். ஒப்பனைக்குச் செல்லும் சமயம் சிறந்த நாடகங்களைப் பார்த்திருக்கின்றீர்கள். பல நாடகங்களின் வெற்றிக் குத் திரைக்குப் பின்னால் நின்று பணியாற்றி இருக்கின்றீர்கள். இவ்வளவு அனுபவம் நிறைந்த நீங்கள் இதுவரையில் ஒரு நாட கத்தைக்கூட இயக்காததற்கு என்ன காரணம்?
இமானுவேல்:
எனது தந்தை பெஞ்சமின் அவர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாடகங்களுக்கு ஒப்பனையாளராக பணிபுரிந்திருக்கின்றார். பல்லாயிரக் கணக்கான நடிகர்களைக் கண்டிருக்கின்றார். அவர்) றில் பாதியையாவது நான் பார்த்திருப்பேன். பல சமயங்களில் நாடகம் முடிந்ததும் இயக்குனர்கள் வந்து நாடகத்தைப் பற்றிய அபிப்பிராயம் கேட்பார்கள். முடிந்த நாடகங்களில் கூட சிறு

Page 34
வண்ணைத்தெய்வம்
குறைகள் இருக்கும் இவற்றையெல்லாம் நுணுக்கமாகப் பார்த்துச் சுட்டிக்காட்டுவார் எனது தந்தை. இவ்வளவு அனுபவம் மிக்க எனது தந்தை இதுவரையில் மேடையேறி நடித்ததில்லை. அத னால் அவருக்கு நடிக்கத் தெரியாது என்ற அர்த்தமில்லை.
நேரமும் சந்தர்ப்பமும் அவருக்குக் கிடைக்காததே காரணம்.
மேலும் அவருடைய கலை வாழ்வில் ஆன்மதிருப்தியைக் கொடுப் பது ஒப்பனையேயாகும். நான் பல நாடகங்களில் நடித்திருக்கின் றேன். ஆனால் நடித்த எல்லா நாடகங்களிலும் திறமையாக நடித்திருக்கின்றேன் என்று சொல்ல முடியாது. நடிப்புத்துறையி லேயே கற்கவேண்டியது இன்னும் நிறைய இருக்கின்றது என்று நான் எண்ணுகின்றேன். அது மாத்திரமல்ல இயக்குனர் என்ற பெயரை வைத்துக் கொண்டால் மட்டும் ஒரு நாடகத்தை ஒப் பேற்றி விட முடியாது. அத்தனை கலைஞர்களின் ஒத்துழைப்பும் வேண்டும். அதற்காக அதிக நேரத்தை ஒதுக்க வேண்டும்.
இவையெல்லாம் முக்கிய காரணங்கள். இந்தச் சூழ்நிலைகள் அமைந்தால் இனிவரும் காலங்களில் அந்த முயற்சியில் ஈடுபடு வேன்.
கேள்வி:
இதுவரை நீங்கள் சந்தித்த கலைஞர்களில் உங்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் நடித்த கலைஞர்களைப் பற்றிக் கூறமுடியுமா?
இமானுவேல்: ஒருவரல்ல, பலர் இருக்கின்றார்கள். எல்லோரையும் இங்கு குறிப்பிட முடியாது. ஆனால் நானும் ஒரு நடிகனாக வர வேண் டும் என்ற அளவிற்குத் தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு கலைஞ னைப் பற்றி மட்டும் இங்கு குறிப்பிடுகின்றேன். சுமார் நாற்பது வருடங்களுக்கு முன், எனது மாமா சிங்கராயர் ராசரட்ணம் அவர்கள் சகோதரவிரோதி என்ற நாடகத்தை யாழ் குருசோவ் வீதியில் மேடையேற்றினார். கதாநாயகனாக நடித்தவர் மாமா தான். கதாநாயகியாக நடிகமணி வி. வி. வைரமுத்து அவர்களின் அரிச்சந்திரா நாடகத்தில் சந்திரமதியாக நடித்துவரும் வி. என். ரெத்தினம் அவர்கள் நடிக்கின்றார். அது ஒரு காதல் காட்சி. மந்திரி குமாரி படத்தில் வரும் உலவும் தென்றல் காற்றினிலே என்ற பாடலுக்கு இருவரும் நடிக்கின்றார்கள். அந்தக் காட்சியில் சிறப்பு என்னவென்றால்? படத்தில் வருவது போலவே மேடையில் ஒரு படகு அமைத்து நீலவர்ணப் பேப்பர்களால் கடல் அலை அமைத்து நடிகமணி வைரமுத்து அவர்களின் பக்கவாத்தியத்துக்கு இவர்கள் இருவரும் சொந்தக் குரலில் பாடி நடித்தார்கள். நான் திரைப்படத்தில் கூட அந்த வயதில் அப்படியான ஒரு காட்சியைப் பார்த்ததில்லை. அப்பொழுது விழுந்த கரகோசங்களை சொல்லில் அடக்கிவிட முடியாது. அந்தக் காட்சி என் மனதில் அன்றே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது.

கதாநாயகன்
எப்படியாவது நானும் ஒரு நடிகனாகி இப்படியான காட்சி அமைத்து பலர் பாராட்டும்படி நடிக்கவேண்டு மென்று. இது போன்ற பல நாடகங்கள் இருந்தாலும் என் மனதில் முதல் தாக்கத்தை ஏற்படுத்தியது இந்த நாடகமும் இந்த நடிகர்களும் தான.
கேள்வி: ஒரு கலைஞனுக்கு பாராட்டுக்களும் விபத்துக்களும் தவிர்க்க முடியாதவை மறக்கமுடியாதவை! உங்களுக்கு ஏற்பட்ட இது போன்ற அனுபவங்களைப் பற்றிக் கூற முடியுமா?
இமானுவேல்: பாராட்டுக்கள் பல, அவை இரு கோடுகள் போன்றவை ஒரு பெரிய கோடு வரும்போது முன்னம் இருந்த கோடு சிறிய கோடாக மாறி விடுவது போல, ஆனால் விபத்துக்கள் அப்படி யல்ல. அவை எந்தக் காலமும் மறக்கமுடியாதவை. நீான் முதன்முதலாக ஆண்டவராக நடிப்பதற்காக யாழ் ஆசண்க் கோவிலில் இறுதிநாள் ஒத்திகை பார்த்து க்கொண்டிருக்கின்றேன். சுமார் இருபது அடி உயரம் கொண்ட பாலை மரத்திலான சிலு வையில் யேசுநாதராக நடிக்கும் என்னை கட்டி நிறுத்தப்போகின் றார்கள். அந்தச் சிலுவையைத் தூக்குவதற்கே இருபது பேருக்கு மேல் வேண்டும். அன்று ஒத்திகையைப் பார்ப்பதற்கு ஐநூறுக்கும் மேற்பட்ட மக்கள் கூடிவிட்டார்கள். என்னை சிலுவையில் ஏற்றி நிறுத்தும் பொழுது சிலுவை ஒரு பக்கமாகச் சாய்ந்து விழுந்து விட்டது. எனது நன்பன் கிறேகறி தங்கராஜாவின் தம்பி உட்பட ஐந்து பேருக்கு ப் பலத்த காயம். ஆண்டவரின் அருளால் எனக்கு எந்தவித சிறு காயம் கூட ஏற்பட வில்லை.
இந்த விபத்தைப் பார்த்த கோவில் குருவானவர் சிலுவையில் ஏற்றும் காட்சிக்கு இமானுவேலை ஏற்ற வேண்டாம். சுருவத்தை சிலுவையில் ஏற்றினால் போதும் என்று கூறிவிட்டார். எனக்கு இதயமே வெடித்து விடும் போல் இருந்தது. எனது தந்தையாருக்கோ அதைவிடக்கூடிய மனவேதனை. அதன்பின்பு எனது தந்தை குருவானவருடன் வாதாடி எனது மகனின் آلابع ருக்கு நான் பொறுப்பு என்று உறுதி கூறி மறுநாள் நாடகத்தில் நானே சிலுவையில் ஏறி நடிப்பதற்கு அனுமதி வாங்கினார்.
இதேபோன்று உரும்பிராயில் அருட்தந்தை மரியசேவியர் அவர்க ளின் சாவை வென்ற சத்திரியன் என்ற நாடகம் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் முன்னிலையில் நடைபெறுகிறது. என்னை சிலுவையில் வைத்து உயர்த்துகின்றார்கள். சுமார் பத்து பதினைந்து அடிக்கு சிலுவை உயர்ந்து விட்டது. சிலுவையின் அடிப்பாகம் சரியான இடத்தில் இல்லாது ஒரு மரக்கட்டையில்
63

Page 35
வணிணைத்தெய்வம்
பொறுத்து விட்டதால் சிலுவையை அதற்கு மேல் உயர்த்த முடிய வில்லை! திரும்ப கீழேயும் இறக்க முடியவில்லை! இக்கட்டான சூழ்நிலை. நான் அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கின்றேன். என் கைகளில் தாங்கமுடியாத வலி. எங்கே கையை விட்டுவிடு வேனோ என்று எனக்குள்ளேயே ஒரு எண்ணம். தந்தை மரிய சேவியர் அவர்கள் மக்களின் சிந்தனை திசைமாறாமல் இருப்பதற் காக ஆண்டவரை சிலுவையில் அறையும் போது அவர் பட்ட கஷ்ரங்களை ஒலிபெருக்கியல் உரைமூலம் சொல்லிக்கொண்டிருக் கின்றார். மக்கள் நான் உண்மையாகவே நடிப்பதாக நம்பிக்கொண் டிருக்கிறார்கள். ஐந்து நிமிடமாகிவிட்டது இனி என்னால் முடி யாது என்ற நிலை. நான் இறைவனையே சிந்தித்துக்கொண்டி ருக்கிறேன். அந்த நேரத்தில் போர்வீரனாக நடித்துக்கொண்டிருந்த குருநகரைச் சேசர்ந்த பிலிப் என்ற இளைஞர் சிலுவையின் அடிப்பாகத்தை தனி ஒருவனாகத் தூக்கி உரிய இடத்தில் வைக் கின்றான். "தொப்" என்ற ஒரு சப்தத்துடன் சிலுவை கிடங்கற்குள் இறங்குகின்றது. அப்பொழுது மேல் பகுதி நிமிர்ந்து உயர்கின்றது. மக்கள் கரகோஷம் செய்து ஆரவாரம் செய்கின்றார்கள். அன்று நான் முடியவில்லை என்று கையைவிட்டிருந்தால் அந்த பத்தாயி ரம் மக்களும் என்னைத் திட்டியிருப்பார்கள் என்பது மட்டும் நிச்சயம். இந்த நிகழ்ச்சிகள் என்றுமே என்னால் மறக்கமுடியா தவை.
கேள்வி: உங்கள் தந்தை உட்பட சகோதரர்கள் எல்லோருமே ஒப்பனைக் கலைஞர்களாகவே இருக்கின்றார்கள். சீங்கள் எப்படி நடிப்புத்து றைக்கு வந்தீர்கள்?
இமானுவேல்,
எமது தந்தையின் முயற்சியால் நாங்கள் எல்லோரும் ஒப்பனைத் துறையில் சிறந்துவிளங்குகின்றோம். எம் ஒவ்வொருவரிலும் ஒவ்வொரு தனி சிறப்புக்கள் உண்டு. எனது தம்பி அன்ரன் ஜீவா ஒலி, ஒளி அமைப்பதில் மிகவும் கெட்டிக்காரன். அதே போல எனக்கு நடிப்பில் ஆர்வம் ஏற்பட்டது. அதற்கு சந்தர்ப்பமும் கிடைத்தது. அதனால் நடிகனாகப் பரிணமித்துவிட்டேன்.
கேள்வி: உங்களைப் போல் உங்கள் பிள்ளைகள் யாராவது கலைத்து றைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கின்றீர்களா? இமானுவேல்: எனக்கு ஒரு ஆண்பிள்ளை, இரண்டு பெண்பிள்ளைகள். இவர் கள் சிறுவயதில் இருந்தே எனது நாடகங்களைப் பார்த்துவருகின் றார்கள். எனது கடைசிமகள் பாடசாலையில் நாட்டியம், நாடகம் போன்ற கலைநிகழ்ச்சிகளில் பங்குபற்றி வருகின்றாள். என்னைப் பொறுத்த வரையில் கலையை ஒருவரிடம் திணித்துப் பெறமுடி யாது. அது இயற்கையாகவே அவர்களிடம் வரவேண்டும். எனது

கதாநாயகன்
பிள்ளைகள் கலைஞர்களாக வந்தால் பெருமைப்படுவேன். காலந்தான் அதற்குப் பதில் சொல்லவேண்டும்.
இப்படிச் சிறய கேள்விகள் ஆழமான - அர்த்தமான பதில்கள். இது அவரின் அநுபவத்தைத்தான் காட்டுகின்றது. தாய், தந்தை, சகோதரர்கள், பிள்ளைகள் இப்படி எல்லோரைப்பற்றியும் கூறி விட்டார். ஆனால் தனது மனைவியைப் பற்றி இதுவரை எதுவுமே கூறவில்லை. அது எமக்கு ஒரு ஏக்கம். அவர் கூறவில்லை கூறவைக்கவேண்டியது எமது கடமையல்லவா? அதையும் கேட்
டுவிட்டோம்.
கேள்வி: உங்கள் கலைவாழ்விற்கு உங்கள் மனைவியின் ஒத்துழைப்பு எந்த வகையில் உதவியிருக்கின்றது?
இமானுவேல்: என்னைத் திருமணம் செய்யும் முன்னமே எனது கலைவாழ்வு பற்றி எனது மனைவிக்கு நன்றாகவே தெரியும். 1971ம் ஆண்டில் எனக்குத் திருமணம் நடந்தது. எனது திருமணத்திற்கு கலையரசு சொர்ணலிங்கம் அவர்கள் கலைஞர் ரகுநாதன் அவர்கள் ஜெனம் பிரான்சீஸ் நாட்டுக்கூத்துச் சக்கரவர்த்தி பூந்தான் ஜோசேப்பு அருட்தந்தை சவிரிமுத்து போன்ற ஏராளமான கலைஞர்கள், அறிஞர்கள் வந்து சிறப்பித்து அதை ஒரு கலைவிழாவாகவே மாற்றியிருந்தார்கள். அநேகமான எனது நாடகங்களுக்கு உடை யலங்காரங்களைக் கவனிப்பது எனது மனைவிதான். பாரிசில் வானொலியில் நான் நடித்த இசையும் கதையும் நிகழ்ச்சிகளில் என்னோடு இணைந்து நடித்திருக்கின்றார். எனது தந்தையைப் போல் அதிக ஊக்கம் அளிக்காவிட்டாலும் -தன்னால் முடிந்த அளவு எனக்க ஒத்துழைப்பு வழங்கிவந்திருக்கின்றார்.
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று ஒரு கவிஞன் பாடிவிட்டான். அது இமானுவேல் போன்ற கலை ஞர்களுக்கு அமையும்போது அப்படியான பாடல்களே சிறப்புப் பெறுகின்றது.
நான் இந்தக் கலைஞனின் நீண்டகால நண்பன். இவர்களின் குடும்பத்தில்ஒருவனாகப் பழகி வந்தவன். இமானுவேலைவிட அவரின் தம்பி அன்ரன் ஜீவாவுடன் நீண்டகாலம் நண்பனாக இருந்தவன். அந்த வகையில் நானும் அதிஷ்டசாலிதான்.

Page 36
வண்ணைத்தெய்வம்
கொடுத்த வைத்தவன். கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் தேடுங்கள் கிடைக்குமென்றார். யேசு.
ஆண்டவர் யேசுகிறிஸ்துவின் பாத்திரத்தை ஏற்று நடிப்பதற்கு ஒரு கொடுப்பனவு வேண்டும். அது எல்லோருக்கும் கிடைத்துவிடுவ தில்லை.
முன்னைய காலங்களில் ஆண்டவர் பாத்திரத்தில் யாரையும் நடிக்கவிடுவதில்லை. ஆண்டவருடைய இடத்தில் ஆண்டவர் போல் அமைக்கப்பட்ட ஒரு உருவமோ அல்லது ஆண்டவரின் சுருவமேதான் இருக்கும். அதற்குக் காரணம் ஆமுண்டவரின் புனிதத் தன்மையை யாரும் கெடுத்துவிடக்கூடாது என்பதுதான்.
காலப்போக்கில் ஆண்டவர் கிறிஸ்துவின்மீது உண்மையான பற்றுமிக்க கிறிஸ்தவர்களை அப்பாத்திரத்தில் நடிக்க வைத்தார் sണ്. அதற்கும் சில கட்டுப்பாடுகள் உண்டு.
நாடகம் பழகி மேடையேறும் காலம் வரை ஆண்டவர் பாத்திரத் தில் நடிப்பவர் மிகவும் தூய்மையாகவே இருப்பார். யாழ்ப்பாணத் தில் முதன் முதலாக யேசுகிறிஸ்து பாத்திரத்தில் தோன்றி நடித் தவர் அன்று யாழ். சம்பத்தரசியர் கல்லூரியில் ஆசிரியராகக் கடமையாற்றிய திரு கிருஷ்ணராஜா அவர்கள் தான். இவர் ஆண்டவராக நடித்த அந்த நாடகம் ஆங்கிலத்தில்தான் நடந்தது. அவருக்க அடுத்து அதே கல்லூரியில் ஆசிரியராகக் கடமையாற் றிய அகஸ்ரின் அவர்கள் கிறிஸ்துவின் பாத்திரத்தில் நடித்தார். இந்த நாடகமும் ஆங்கிலத்தில் தான் நடந்தது.
56
 

கதாநாயகன்
இவர்கள் இருவருக்கும் பின்னர் அதே கல்லூரியின் மாணவன் அலோசியஸ் அவர்கள் நடித்த நாடகம்தான் யாழ்ப்பாணத்தில் ஆண்டவர் மேடையில் பாத்திரமாகத் தோன்றி நடித்து தமிழில் நடைபெற்ற முதல் நாடகமாகும். அதன் பின்பு தொடர்ச்சியாக முததையா என்ற மாணவன் நடித்தான். இவரும் சம்பத்தரிசியார் கல்லூரியில் இருந்தே வந்தார். அவரை அடுத்து குருமட மாண வன். கையிடி பொன்கலன் என்பவரும் அதே பொன்கலன் என்ற பெயரைக்கொண்ட குருமட மாணவனும் ஆண்டவர் பாத்திரத்தில் நடித்திருக்கின்றார்கள்.
யாழ் ஆசனக்கோவிலில் பிரமாண்டமாக நடைபெற்ற ஜேசுவின் திருப்பாடற்காட்சியில் ஜோர்ஜ் என்ற இளைஞன் ஆண்டவராக நடித்துப் பலரின் பாராட்டுதலையும் பெற்றிருக்கின்றார். இவர்க ளுககப பின் அந்தப் பாத்திரத்தில் தோன்றியவர்தான் திரு பெஞ்ச மின் இமானுவேல் அவர்கள். இமானுவேல் அவர்களுக்கு முன்பாக ஆண்டவர் பாத்திரத்தில் தோன்றி நடித்தவர்களுக்கும் இவருக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. 1969ம் ஆண்டு முதல் முதல் ஆண்டவர் வேடத்தில் தோன்றி நடித்த இமானுவேல் அவர்கள் இன்ற வரை அதாவது சுமார் 26 வருடங்கள் ஆண்டவர் வேடத்தில் தொடர்ந்து பல மேடைகளில் நடித்து வருகின்றார்.
ஆண்டவர் ஜேசுநர்தராகத் தோன்றிய மேடைகளின் எண்ணிக்கை ஐம்பதுக்கு மேல் - எழுபத்து ஐந்துக்கம் உள்ளளே என ஒரு உத்தேசக் கணிப்பு.
அண்மையில் தமது ஐம்பதாவது வயதிலும் பாரிசில். . . . . நாற்ப துக்கம் மேற்பட்ட கலைஞர்குழாம் அதில் பாரிசில் உள்ள முன்ன ணிக் கலைஞர்களும் அடக்கம். பகல் பத்துமணிக்கே நாடகத்தில் பங்கேற்கும் கலைஞர்கள் அரங்கத்திற்கு வந்துவிட்டார்கள்.
பொறுப்பை ஏற்றுக்கொண்டால் களைப்பைப் பாராது சிறப்பாகச் செய்துமுடிக்கும் கலைஞர் தி. சாம்சன் அவர்கள் காட்சியமைப்பு வேலைகளை மிகப் பிரமாணட்மாக அமைத்துக்கொண்டிருக்கி றார்.
வழமைபோல் தனது பங்களிப்பையும் சாம்சனுடன் இணைந்து நடாத்திக்கொண்டிருக்கிறார் இமானுவேல் அவர்கள்.
கலைஞர்களுக்கு ஒப்பனை செய்ய ஒப்பனையாளர் அடங்காப்பி டாரி புகழ் அரியாலையூர் குணம், இமானுவேலின் சகோதரர் டண்ஸ்ரன், கலைஞர் சாம்சன் இவர்களுடன் இமானுவேலும் இணைந்து ஒப்பனையில் ஈடுபடுகின்றார்கள்.

Page 37
வண்ணைத்தெய்வம்
இதற்கு முன் ஒரு வாரமாக அனேகமான நடிகர்களின் ஆடை, அலங்கார வேலைகளிலும் இமானவேல்தான் ஈடுபட்டிருந்தார். இப்படி "பலிக்களம்" நாடகத்தின் வெற்றியில் ஒவ்வொரு துறை யிலும் இமானுவேலின் பங்கு கணிசமாகவே இருந்தது. இது நாடகத்தின் இயக்குனர் திரு சூரி அவர்கள் கூறிய கருத்து.
ஒப்பனை முடிந்து விட்டது, அருட்தந்தை போல்ராஜ் அவர்களின் மதவழிபாட்டுக்குப் பின்னர் நடிகர்கள் மேடைக்கு வந்து விட்டா கள். மக்கள் அரங்கத்தின் ஆசனங்களை ஆக்கிரமித்து விட்டார் கள். ஈழநாடு ஆசிரியர் திரு குகநாதன் அவர்கள் சிறப்புரை ஆற்றுகின்றார் "பொதுவாகவே இந்த நாடகத்துக்கு கிறிஸ்தவ மக்களிடம் மட்டுமல்ல சகல மத மக்களிடமும் மதிப்பு இருக்கின் றது. அதேபோன்ற மதிப்பு இந்த நாடகத்தில் நடிக்கும் இமானு வேல் அவர்களிடம் நம் எல்லோருக்கும் இருக்கின்றது. அவர் இந்த நாடகத்தில் ஆண்டவராக வேடமேற்று பல மேடைகளில் நடித்திருக்கின்றார். இதன் காரணமாக ஆண்டவர் என்ற பெயரே அவரோடு இணைந்து விட்டதும் எல்லோருக்கும் தெரியும். இன்று பாரிஸில் வாழும் எங்களுக்கு ஆண்டவரைப் பார்க்கும் சந்தர்ப் பத்தை வழங்கிய திருமறைக் கலாமன்றத்திற்கு நாங்கள் நன்றி சொல்ல வேண்டும். " பலத்த கரகோசம். . . பின் அமைதி. . . திரை விலகி விட்டது, சிலுவையை சுமந்த வண்ணம் முள்முடி யைத் தரித்த ஆண்டவர் மேடையில் தோன்றுகின்றார்.
அவர் பின்னே மதத் தலைவர்கள். . . அருகினில் காவலர்கள். . . அவர்களின் கரங்களில் நீண்ட சாட்டைகள், அந்தச் சாட்டை கள் ஆண்டவரின் முதுகை அடிக்கடி முத்தமிடுகின்றது.
"ஆண்டவருக்கா இந்தக் கொடுமை. " பார்வையாளகளின் மனங் களில் இப்படியான எண்ணங்கள். . . அவர்களின் கண்களில் நீரலைகள் திரையிடுகின்றது. . . . இருந்தும் அமைதி.
நாடகத்தின் எந்தக் காட்சியிலும் ரசிகர்களிடமிருந்து சிறிய சலசலப்புக் கூட இல்லை. பின்னணி இசை வழங்கிக் கொண் டிருந்த இளையநிலாவின் இசையைத் தவிர. அந்த அளவிற்கு அமைதியான நாடகம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. ஆண் டவரைச் சிலுவையில் அறைந்து நிறுத்துகின்றார்கள். அரங்கத் தில் அமர்ந்திருக்கும் பலர் "ஆண்டவரே. ஆண்டவரே. . . " என தங்களது வாய்க்குள் முனுமுனுக்கின்றார்கள்.
"பிதாவே. என் பிதாவே. . . இவர்கள் அறியாமல் தவறு செய்கின்றார்கள், இவர்களை மன்னித்து விடும். . . ஆ. . . ஆ. . . " முடிந்து விட்டது. ஆண்டவர் இயேசுகிறிஸ்து கயவர்க
ளின் சதிக்குப் பலியாகி விட்டார்.

கதாநாயகன்
தில்லை சிவத்தின் ஒர்கனில் முகாரிராகம் மேடையிலே. . . முனுகல் சத்தங்கள் அரங்கினிலே.
நாடகம் முடிந்து விட்டது, ஆண்டவரைப் பார்ப்பதற்கும் அவரிடம் ஆசீர்வாதம் பெறுவதற்கும் மக்கள் அரங்கிற்குப் பின்னால் கூடி விட்டார்கள். அவர்கள் எல்லாம் இமானுவேலை நடிகனாகப் பார்க்கவில்லை, ஆண்டவராகவே பார்க்கின்றார்கள்.
அவரோடு நடித்த சக கலைஞர்கள் இந்த நாடகத்தில் நடித்த தையே பெரும் பாக்கியமாகக் கருதினார்கள்.
அந்த நாடகத்திற்கு சிறப்பைக் கொடுத்த பெஞ்சமின் இமானுவேல் அவர்கள் அப்பொழுதும் ஆண்டவராகத்தான் எல்லோருக்கும் தெரிகின்றார்.
69

Page 38
வண்ணைத்தெய்வம்
இந்தக்குடும்பம் ஒரு கதம்பம்
நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்.
YVs\r
(
ヘン - ،ܝܐ
நமக்குப் பின்பும் உலகம் இருக்கும், நாங்கள் அழிந்து விடு வோம். . . உலகம் நமக்குப் பின்பும். . . பின்பும். . . இருக்கும், நம்மோடு நமது திறமை, அறிவு எல்லாம் முடிந்துவிடும் நமக்குப் பின் மனிதர்களே இருக்க மாட்டார்கள் என்று எண்ணலாமா? நமக்குப் பின்னால் வரும் கலைஞர்களுக்காகவும் தான் தனது குடும்பத்தையே ஒரு கலைக் குடும்பமாக வளர்த்து வைத்திருக் கின்றார் திருவாளர் பெஞ்சமின் அவர்கள்.
ஐந்து ஆண்பிள்ளைகள் ஒரு பெண்பிள்ளை பெஞ்சமின் அவர்க ளுக்கு. ஆண்பிள்ளைகள் அனைவருமே கலை மேதைகள் என்றே கூறவேண்டும். ஜீவா என்று அழைக்கப்படும் அன்ரன் அவர்கள். இந்த ஜீவாவை இன்னொரு கலைஞன் என்று கூடக் கூறலாம். இவன் தனது தந்தையிடம் கற்றதைவிட தந்தை கற்றுக் கொடுத்த கலைக்கு நாகரீக முலாம்பூசி மேடையிலே நயமாக நடனமாடவைப்பதில் விற்பனன்.
 
 
 
 
 
 

கதாநாயகன்
பெஞ்சமின் அவர்களிடம் ஒப்பனைக்காக தேதிகுறிக்கும் கலைஞர் கள் கண்டிப்பாக ஜீவாவையும் அழைத்து வாருங்கள் என்று அன்புக் கட்டளை இடுவது அன்றாடம் நடக்கும் நிகழ்ச்சி. இல்லாத பொருளை இருப்பதைக் கொண்டு உருவாக்கி எல்லாக்
கலைஞர்களையும் மகிழ்விப்பதில் ஜீவா ஒரு தனிப்பிறவி. ஆடையலங்காரம், மேடையலங்காரம், ஒலியமைப்பு, ஒளிய மைப்பு இப்படியாகக் கலைத்துறையில் இவனுக்குத் தெரியாத கலையேயில்லை. மொத்தத்தில் இவன் ஒரு பல்கலைக்கழகம்.
அலோசியஸ். இவன் ஜீவாவிற்குத் தம்பி. இவன் கைகள் ஒப்பனை செய்தால் குரங்குகூட அழகாகக் காட்சிதரும். அப்படி யான திறமைசாலி. • حہ تس۔ ^2۔
சாம்சன்:- இந்தக் கலைஞனின் திறமைகள இன்று யிலும் நீண்டுநிற்கிறது. டண்சன்:- இவனும் இவர்களுக்குச் சற்றும் சளைத்தவனல்ல. இவர்கள் எல்லோருக்கும் மூத்தவன் தான் இமானுவேல். வருங்
காலக் கலைஞர்களின் நலனை எண்ணி பெஞ்சமினால் உருவாக் கப்பட்ட வாரிசுகள் இவர்கள்.
பாரிஸ் வரை
இமானுவேல் நடிப்புத்துறையில் சிறப்புடன் விளங்கினாலும் தனது தந்தையுடன் ஒப்பனைப்பணிபுரிந்த நாட்கள் பசுமையானவை. மன்னார் மாவட்டத்தில் தந்தையருடன் ஒப்பனை புரிந்த நாட் களை நினைவுகூர்ந்தார்.
"நானாட்டான், உயிலங்குளம், மணற்குளம், பரப்புக்கண்டான், முள்ளிக்குளம், அடம்பன், இசைமாலத்தாண்டி, அரிப்பு, சிலாபத் துறை போன்ற குக்கிராமங்களை உள்ளடக்கியதுதான் மன்னார் மாவட்டம். இந்தக் கிராமங்களில் வசிக்கும் அநேகமான மக்கள் வேளாண்மைசெய்து வாழ்பவர்கள்.
வானம் செழுப்பாகப் பொழிந்து வயல் சிறப்பாக விளைந்துவிட் டால் அந்த மக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்த நாடகம் போடுவது வழக்கம். மூன்று, நான்கு மைல் வித்தியாசத்தில் உள்ள கிராமங்கள் எல்லாம் ஒன்றுகூடி "காத்தவராயன்" கூத்து மேடையேற்றுவார்கள். காத்தவராயன் கதையை மூன்று பகுதிக ளாகப் பிரித்து மூன்று நாட்கள் நடைபெறும்.
அதிலும் ஒரு புதுமை வெள்ளிக்கிழமை முதலாம் பகுதி மேடை
யேறினால் சனிக்கிழமை நாடகமில்லை. பின் ஞயிறுதினம்
இரண்டாம் பகுதி மேடையேறும். பின் திங்கள் இல்லை. பின் செவ்வாய்க்கிழமை மூன்றாம்பகுதி மேடையேறும். இப்படி ஒருவா ரமாகக் கொண்டாட்டமாகத்தான் இருக்கும்.
7

Page 39
வண்ணைத்தெய்வம்
மேலும் ஒற்றுமையான வாழ்விற்கு அவர்கள் ஒரு முன் உதார ணம். நாடகத்திற்கு தேதி குறித்துவிட்டு கிராமத்துப் பெரியவர்கள் எல்லாம் ஒன்றாக ஐயாவைச் சந்திக்க யாழ்ப்பாணம் வருவார்கள்.
மேடை, உடையலங்காரம், ஒலி, ஒளி, ஒப்பனை இப்படிச் சகல பொறுப்புக்களையும் பொருத்தம் பேசி ஐயாவிடம் கொடுத்துவிட் டுச் சென்றால் அவர்களுக்கு நிம்மதி "இனி பெஞ்சமின் எல்லாம் செய்வார்" என்ற நம்க்கை அவர்களுக்கு. மன்னார் போவதென் றால் எனக்கு மிகவும் விருப்பம். காரணம் அவர்கள் என் தந்
தைமீது வைத்திருக்கும் அன்பும், மரியாதையும், அளவிடற்கரிய அவர்களின் விருந்தோம்பலும் தான்.
மன்னார் மாவட்டத்தில் உயிலங்குளம் ரெயிலர் என்று அழைக்கப் டும் சண்முகம் அவர்கள் சிறந்த நடிகர். தற்சமயம் அவர் இந்தி யாவில் இருப்பதாக அறிந்தேன். தமிழ்நாட்டைப் பிறப்பிடமாகக் கொண்ட இவரின் கலை ஆர்வம் அனைவரையும் வியக்க வைக் கும். தனது உடைகளைத் தானே தைத்து தனக்குத்தானே ஒப்பனையும் செய்யக்கூடிய சிறந்த கலைஞன். ' கூத்து நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னரே நாங்கள் மன்னார் சென்றுவிடுவோம். காரணம் கூத்து நடப்பதற்கு முதல் நாள் வயல் நடுவில் அம்மனுக்குப்பொங்கி பெரும் விழா எடுத்து அதற்குப்பின் மேடையமைப்பதற்கான முதல்கால் நடுவார்கள். இந்தப் பசுமையான நினைவுகளையும் எனது தந்தையுடன் வாழ்ந்த. . . . . . கலைப்பணியாற்றிய நாட்களும் மறக்கமுடியா தவை.
இப்படிக்கூறும் இமானுவேல் இங்கு கூறியது ஒரு துளி. ஆனால் பெஞ்சமினோ ஒரு சமுத்திரம். அந்தக் கலைஞனுக்கு அண்மை யில் யாழ்திருமறைக் கலாமன்றம் பெருவிழா எடுத்து பொற்கிளி வழங்கிக் கெளரவித்திருந்தமை பாராட்டுக்குரியவை.
நான்கு - ஐந்து சந்ததிக்குத் தொடர்ந்து கலைப்பணியாற்றி வரும் இந்தப் பெருமகனாரும், அவர்தம் குடும்பத்தினரும் காலங்கள் பலவும் தாண்டி
கலைப்பணி தொடர்ந்து போற்றி
ஞாலத்தில் உயர்ந்து நின்று
நானிலம் போற்றும் வண்ணம்
வாழி நீடூழி என்று
வாழ்த்துவோம் வாழி வாழி.
T2

கதாநாயகன்
இவரை இயக்கிய இயக்குனர்கள். . .
அருட் தந்தை நீ மரிய சேவியர் 1. பலிக்களம் 2. களங்கம் 3. கல்வாரியில் கடவுள் 4. காலனை வென்ற சத்திரியன் 5. காட்டிக் கொடுத்தவன் 6. அளவு கோல் 7. ஒரு துளி 8. வா மகனே வா 9. எழுதிய கரம் 10. கதையும் காவியமும் (யாழ். தமிழாராட்சி மாநாட்டில்)
அல் போன்ஸ் அரியநாயகம்
11. சவூல் (புனித சின்னப்பர்) 12. யூலியசீசர் (சீசர்) 13. சொந்த மண் (பாரிஸ்)
கிறெகரி தங்கராசா
14. ஊதாரிப்பிள்ளை
15. பாதுகை 16. ஒளிபிறந்தது
73

Page 40
வணிணைத்தெய்வம்
17. அரிச்சந்திர மயான காண்டம் (பாரிஸ்) 18. கண்டி அரசன் 19. ஆண்டவன் கட்டளை 20. சங்கிலியன் 21. நீரோவின் கொடுமை
கிறெகரி கிறிஸ்யன் 22. காட்டிக் கொடுத்தவன் (பாரிஸ்)
சானா (லண்டன் கந்தையா) 23. சானக்கிய சபதம் (யாழ். தமிழாராட்சி மாநாட்டில்)
சுஹேர் ஹமீட் (தயாரிப்பு ஏ. ரகுநாதன்) 24. தேரோட்டி மகன் 25. 6Ꭷ j6006ᏙᎩ
26. ITLoftu600ff) 27. வேதாளம் சொன்ன கதை
லடீஸ் வீரமணி (தயாரிப்பு வரதன்)
28. தரிசனம்
பூந்தான் ஜோசேப் (நாட்டுக் கூத்து) 29. சஞ்சுவரம் (புனித அருளப்பர்) 30. ஜெனோவா 31. கருங்குயில் குன்றத்துக் கொலை 32. சங்கிலியன்
33. செனகப்பு
வண்ணை தெய்வம்
34. சாவுக்கு சவால்

கதாநாயகன்
35. இதய மற்றவன்
அருந்ததி (பாரிஸ்)
36. பரிநாமம் 37. கருதுகோள்
கலை செல்வன் (பாரிஸ்) (வண்ணை தெய்வத்தின் நாடகம்)
38. பாதை தெரியுது பார் 39. குழப்பத்தில் திருப்பம்
குருநகர் அன்ரன் 40. கண் திறந்தது
V. K. குமரையா 41. பூதத்தம்பி
சிவா, சிவபாலன் (சங்கானை) 42. வினாசி புத்திரன்
அரியாலையூர் புஸ்ப்பராஜன் 43. வசந்த வாழ்வு
அ. வ. டேமியன் ஆரி (அருட் தந்தை சவுரிமுத்து அவர்களின் நாடகம்)
44. பலிக்களம் 45. களங்கம்
இவர் நடித்த தொலைக் காட்சி நாடகங்கள்
அருட் தந்தை நீ மரிய சேவியர்: பலிக்களம்

Page 41
வணிணைத்தெய்வம்
பிரியாலயம் துரைஸ்: நீதியின் சோதனை
ஞானம் பீரிஸ்: தனிப்புறா
T. தயாநிதி: யார் இவர்கள்
வினாக் கோலம்
P. லோகதாஸ்: மலர்கள் இல்லா மாலைகள்
பலிக்களம், நீதியின் சோதனை, தனிப்புறா, நீ ஒரு தெய்வம் போன்றவை வீடியோ திரைப்படங்களாக எடுக்கப்பட்டவை. மேலும் இவரை இயக்கிய கலைஞர்கள் வரிசையில் இவர்க ளும் அடங்குகின்றார்கள்.
இவர் நடித்த வானொலி நாடகங்கள்
1963ம் ஆண்டு சங்கீத பூஷணம் அல்விம் தேவசகாயம் அவர் களிடம் சங்கீதம் கற்றுக்கொண்டிருந்த காலத்தில் அவருடன் இணைந்து இலங்கை வானொலியில் கிறிஸ்தவ பஜனைப் பாடல்கள் நிகழ்ச்சியில் பங்குபற்றியது.
இரண்டாவது தடவை அல்விம் தேவசகாயம் நடாத்திய சங்கீத
நிகழ்ச்சிக்கு பக்கவாத்திய நிகழ்ச்சியில் பங்குபற்றியது.
திருமறைக் கலா மன்றத்தின் பலிக்களம்
காட்டிக்கொடுத்தவன் ஒரு துளி
ஆகிய நாடகங்கள் இவை ஒலிபரப்பான ஆண்டுகள் நினைவில் இல்லை.
ரகுநாதனின் வேதாளம் சொன்ன கதை இந்த நாடகம் 1975 அல்லது 1976ல் ஒலிபரப்பானதாக ஞாப கம்.

கதாநாயகன்
பாரிசில் தமிழீழத்தின் குரல், வானொலி சேவையில், இசையும் கதையும் சில நாடகங்கள் (பெயர்கள் ஞாபகம் இல்லை)
பாரீஸ் முத்தமிழ் மன்றத்தின் தமிழீழ வானொலி சேவையில், இசையும் கதையும்
நாடகங்கள்
கவிதை படித்தல்
நிகழ்ச்சி அறிவிப்பு

Page 42
வண்ணைத்தெய்வம்
நுாலாசிரியர் பற்றி தோழர் சுரேந்திரன்
வண்ணை பற்றி என் - எண்ணத்தில் வந்ததினை எழுத்தில் வடிக்க எழுதுகோல் - வரவில்லை.
ஏகலைவன் - இவன் கலை, கற்றவித்தை, கல்வி யாரிடத்தும் தலைவணங்கும் பண்பு இவனிடத்தில்!
போட்டி - பொறாமை காழ்ப்பு, கசப்பு இதைக் கண்டதுமில்லை - அவன் மற்றார்க்கு விற்றதுமில்லை.
பூபாளம் பாடும் காலை - நேரத்தை கைகோர்த்து நிற்கும் கலைஞன் - இவன் மார்தட்டிச் சொல்வேன் இன்றைய கலைஞர்களின் மகுடி - இவன்!
-"சொல்லின் செல்வர்" எஸ். சுரேந்திரன்

கதாநாயகன
w
விர்
னய நாலக
ஆசிரியரின் ஏை

Page 43
வண்ணைத்தெய்வம்
நுாலாசிரியரின் அடுத்த வெளியீடு.
"எனது காதலர்கள்
கவிதைத் தொகுப்பு)
8)


Page 44


Page 45
戀 惩) 韶) &Q8%綬· !!!!!
X333A 戀
····綬× 密-··- |-···辯 戀-密感·- ·-器)戀 綬* %)穹念)3 % 變 -&·-··|------ -A %%%%%%%%%%%%;:;&褒)- ---·多彩··-器 蹈∞-慈炫-·-·------臻 慈愍-* 蹈-·-----------··-··燃 ~-|-·!ae*---徽!!!!!!!!! 慈-----滔*****---------慈慈 浮窥-·-·鞑----密撥變 器··----密瑟· ·-慈 ×월%...·--·!!!!!!!·----: 怒)!!!!!&贰·《终※)-· 慈|-*袋-----翠-|- 铃突)感-段终 恐·愍--舒兹 寇).........-怒蛟ae密 慈淺-:··|-· ----密) シ&-·-·|--· ::::::::--:-·疑惑 &#x&is;&정 繆『했8&ix%;x·-- |-%怒----蹈 &S&정S&窃恐-&-·· -·-·-!!!!!! 綬辯·-慈 叙) 慈 &&&&&&&&&&&&&&& 綬 慈器 器
·---------- ·邱沁 慈· ·-·戀
密
器
|× 闇☆ 密 泌)※) 3) 泾 * 隧)
戀-**** 翠··辯 |---短蕊 *
ჯჯჯჯ... !慈 澎冷 锚· ae
慈
!
!!!!!!!
长蕊
辯 圈
戀 ※) 鞑额) 器% 器|- 突
籌 颂)蹈 *
 
 

慈
容
• 怒
**
念念 繆
·
·
闇
!!!!
·
R&&
慈 感恐
* 感
羧
;*
·