கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கற்காலக் கலையுஞ் சுவையும்

Page 1
.% 参 غییر %。 A སྙིང་རྗེས་
f ീഗ്ഗ
(' O
கறகாலக
Gణా
కP ச. பெண் इ्छ् .¬ ( བཀྱི་ཡི་གེ་ཁ་
 
 
 
 
 
 
 
 


Page 2

ஈழக் கலைமன்ற வெளியீடு. 1
கலைப்பெருமாட்டி வாழ்க
கற்காலக் கலையுஞ் சுவையும்
ஆக்கியோன் : ஓவியர், ச. பெனடித்து என்னும்
ஆசிநாதன்
ஈழக்கலமன்றம், இராசமலை, (மனையாவெளி) திருக்கோணமலை, இலங்கை,
d @. ui, அச்சகம் மானிப்பாய்
1959,

Page 3
முதற் பதிப்பு: 1959.

முன்னுரை
அறிவுணர்ச்சியும் அழகுணர்ச்சியும் பொருந்தி யதே வையக வாழ்வு என்னும்போது, அவ்வாழ் விலே தோன்றி வளரும் அறிவு - அழகுக் கலை களை நாம் உணர்ந்து, அறிந்து மகிழ்கின்ருேம்.
அழகுக் கலைகளையும் அவற்றின் ஆதி வர லாறுகளையும் சிறப்புறத் துருவி ஆராய்ந்துள்ள ஆய் வாளர் பலர், வெவ்வேறு கருத்துக்களையும் கால எல்லைகளையும் காட்டிக் கணித்துள்ளனர் எனினும், அக் கவின் கலைகளின் உதயகாலத்தை முதன் முதலில் நாம் நுணுகி ஆராயுமிடத்து, கற்காலமே அழகுக் கலைகளின் தொடக்ககாலம் என்று தெரிய வருகிறது.
குழந்தைப் பருவம் முதல் முதுமைப் பருவம் வரையும் கூடியுள்ள மனித மெய்ப்பாட்டுச் சுவை களை இன்று நாம் கண்ணுறும்போது, அவற்றின் ஆரம்பகாலத்தை எண்ணி ஆராய மனம் விழை கிறது என்ருல், அவ் வழகுச் சுவைகளின் தொடக்க காலமும் அக் கற்காலமே என்று கலேநோக்குடன் இந்நூலுள் கூறியுள்ளோம்.
இன்னும், கண்டு - அறியப்படாதனவாயுள்ள சிற்சில உண்மைக் கருத்துக்களை இந்நூல் சுருங்கக் கூறி விளங்கவைக்க முற்படுமாயின், அவ்வகையிற் பெரும் பயன் அளிக்கும் என நம்புகின்ருேம்.
அன்பு ச. பெனடித்து.
(ஆசிநாதன்)

Page 4
நன்றியுரை
* செய்யாமற் செய்த உதவிக்கு, வையகமும் வானகமு மாற்றலரிது"
இந்நூலே அழகுபடுத்தும் ஒன்பான் சுவை ஒவியங்களை வரைவதற்கு முன்னின்று உதவிய, திருக்கோணமலை இளைஞர் அருள்நெறிமன்றத்துத் தொண்டர் இ. சண்முகராசா அவர்களுக்கும், எமது வேண்டுகோளுக்கு இணங்கி இந்நூலை வழுக்களைங்கு திருத்தியமைத்து எமக்கு உதவிய, நவாலியூர் சோமசுந்தரப்புலவர் (தங்கத் தாத்தா) அவர்களின் புதல்வர் நவாலி கிழார் இளமுருகனுர் அவர்களுக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக்கொள்ளுகின்ருேம். அதனுடன், நூல் அழகு தெளிவுறவும், அதன் அமைப்புமுறை விளக்கம் பெறவும் மிக்க ஆதரவு சிரத்தைகொண்டு எம்முடன் ஒன்றித்து உழைத்த அமெரிக்க இலங்கைத் திருச்சபை அச்சகத்தார்க்கும் எமது நன்றியைத் தெரிவித்துக்கொள்ளுகின்ருேம்.
ஒரு நாட்டின் கலாசாரத்தைக் காத்து வளர்க் கும் புனிதக் கலைகள் குன்றும்போது, ஆங்காங்கே வள்ளல்கள் தோன்றி அக் கவின் கலைகளை மாள விடாது வாழ்வதற்கு வழிவகுக்கின்றனர். அத் தகையினரில் திரு. சி. ஆறுமுகநாதன் அவர்களும் ஒருவர். ஆம். நூல் வடிவைப்பெறுதற்கு வள் ளற் பண்புடன் பெருநிதி வழங்கிய திருக்கோண மலை அன்பர் திரு. சி. ஆறுமுகநாதன் (வடிவேல் பிறதசு) அவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றி யைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேம்.
옷
ஈற்றில், நம் புனிதக் கலைப் பணிக்கு வேண் டிய கல்லூக்கம், பேராதரவு முதலியனவற்றை ஆங்காங்கு வாரி வாரி இறைத்தது மட்டுமன்றி, திலகம்போன்று இந் நூன்முகத்தில் மிளிரும் மதிப் புரையை மெய்யன்புடன் வழங்கி உதவிய கலா நிதி மு. வரதராசனுர் (M.A., M. O.L., Ph.D.) அவர்க ளுக்கும், உலகம்சுற்றிய பேரறிஞர் வண. கலாநிதி Gg. g56yips TuJ3. gy19.J.GTTi (D. D. M.A, M. Lit; Ph. D.) அவர்களுக்கும் எமது நன்றியையும் வணக்கத்தை யும் ஈழக் கலைமன்றத்தின் சார்பால் தெரிவித் அதுக் கொள்ளுகின்ருேம்.
ச. பெனடித்து, (ஆசிநாதன்)

GLUnr9fuuř கலாநிதி மு. வரதராசனுர் அவர்கள் வழங்கிய
மதிப்புரை
ஓவியக் கலைஞர் திரு. ச. பெனடித்து (ஆசி நாதன்) எழுதியுள்ள ' கற்காலக் கலையுஞ் சுவை யும் ' என்ற இந்நூலில் கலைஞரின் உள்ளம் உள் ளது; கலைஞரின் கற்பனைப் பார்வை உள்ளது; விறுவிறுப்பான விழைவும் உள்ளது.
இந்நூலில் பல கலைகளுக்கும் பொதுவான தோற்றம் ஆராயப்படுகிறது. கலையுணர்ச்சி தொ டக்கத்தில் மனிதனின் தொழிலோடு எவ்வாறு தொடர்புற்றுப் பயன்பட்டது என்பதும் விளக் கப்படுகிறது. கிறங்கள் முதலியவற்றில் கற்கால மனிதனுக்கு இருந்த ஆர்வம், எழுத்துக்களின் வளர்ச்சியிலும் அமைப்பிலும் அவன் இயங்கிப் புரிந்த பணிகள், ஒலிகளைக்கேட்டு அவன் பெற்ற முன்னேற்றம் முதலியன உரைக்கப்படுகின்றன. சுவைபற்றிய பகுதி கலைநோக்கத்தோடு ஆய்ந்து கூறப்பட்டுள்ளது. ஆங்காங்கே விளக்கத்திற்காக ஒவியங்கள் அமைந்து இந்நூலாசிரியரின் கலைக் கற்பனையை விளக்கம் செய்கின்றன.
இவர் ஓவியக் கலைஞர்; ஆயினும் பல கலை களையும் ஒரு சேர வைத்துக் கண்டு மகிழ்கிருர், அந்த மகிழ்ச்சியில் பிறந்தது இந்நூல். இவர் தம் முயற்சி வெல்க.
மு. வரதராசன்.
செல்லம்மாள் தெரு, சென்னை, 30

Page 5
வண. கலாநிதி சே. தனிநாயகம் அடிகளார் அவர்கள் வழங்கிய மதிப்புரை
A critical examination of the classical literature of Tamil and the Etymology of the more ancient Tamil words should give several revealing indications into the primitive origins of the Fine Arts, including poetry. This is an unexplored fill eld. What is remarkable is that Mr. S. Benedict proceeding from the intuitive Vision of an artist has outlined with original skill the origins of primitive art, and shown how the environment and the primary needs and functions of primitive man give ri se to movement , rhythm, dance , Song, paint.) ng and sculpture. In this respect how revealing are the Tamil words அசை, அடி, ஆடல், பாடல், விளையாடல், போரா டல், நீராடல், கொண்டாடல் etc,
I am myself of the opinion that
Sangam Literature clearly demonstrates that the primitive "shaman" or 95@ 1G)Gör is the source to which literary and artistic functionaries may trace their distant Origin. While reading Mr. Benedicts study I have been reminded of the best pages of Some of the Western Writers who have dealt With Primitive Art-Herbert Read, Herbert Kuhn, and taken in imagination to the cave paintings of Spain and France, to Altamira and Lascaux.
Mr. Benedic t, ha s brought original thinking to the problem of Primitive Art which incidentally is so similar to children’s art. His is the first study to be published in Tamil on this subject. He has succeeded remarkably Well because his thinking and his Writing are both

original, clear and racy. Mr. Benedict has also illustrated his Writing with his OWn drawings. I am hoping he will give Uus many more books in Tamil on Art , its Origins, its theory, its history in different countries, the lives of famous paint er s and sculptors , and introduce famous masterpieces to the Tamil reading public. I am hoping he will also write about that integral education and balanced development which education through art Confers.
Original books of this kind are the ones which educationist s Will unhe Sitatingly recommend to be prescribed among the books meant for study in the higher forms of our schools. Mr. Benedict deServes to be better known, Since we Shall be the poorer if We failed to make use of his talent and his art.
ΟΧασιετ 7כי .(کےBarzt 2Vayagam.
University of Ceylon, Peradeniya .
光
தமிழாக்கம்
சிங்க இலக்கியத்தின் திறனய்வும், பண்டைத் தமிழ்ச் சொற்களின் தோற்றக் கலையும், கவின் கலைகளின் பிறப்பைப்பற்றி வியத்தகு உண்மைகளை எடுத்துக்காட்டுகின்றன. இதுகாறும் ஆராயப் படாத இத்துறையில் ஆசிரியர் ஆசிநாதன் இசை யும் பண்ணும் காட்டியமும் ஓவியமும் சிற்பமும் மக்களின் அ டி ப் ப  ைட் த் தேவைகளிலிருந்து தோன்றுகின்றன என்னும் உண்மையை ஓவியனுக் குரிய அகநோக்காற் கண்டு விரித்துரைத்துள் ளார். இவ்வுண்மையை அசை, அடி, ஆடல், பாடல், விளையாடல், போராடல், நீராடல், கொண்

Page 6
iii
டாடல் முதலிய சொற்கள் எங்ங்ணம் புலப்படுத்து கின்றன!
நம் கவின் கலைஞர் அனைவரும் பண்டை அக வலன், அகவல் மகளிர் முதலியோருடைய வழித் தோன்றல்கள் என்பதைச் சங்க இலக்கியமே தெளிவாகக் காட்டுகின்றது. திரு. ஆசிநாதனின் கட்டுரையைப் படிக்குங்கால் முதற்காலக் கலை களேப்பற்றி மேலைநாட்டு ஆசிரியர் எழுதிய நூல் களைப்பற்றியும், ஐரோப்பாவிலுள்ள அல்தாமீரு, லஸ்கோ முதலிய பண்டைக் குகைகளைப்பற்றி யும் கான் கினைவூட்டப்பெற்றேன். திரு. ஆசிகா தன் குழந்தை ஒவியத்துடன் நெருங்கிய தொடர் புள்ள முதற்காலக் கலைகளைப்பற்றி ஆழமாகச் சிந்தித்துள்ளார். இவரே இத்துறையில் தமிழ் மொழியில் முதன்முதல் நூலாக்கியவராவர். இவ ருடைய சிந்தனையும் எழுத்தும் தெளிவாகவும் சு  ைவ யு ள் ள தாகவும் இருக்கின்றன. தனது கைப்பட வரைந்த படங்களைக்கொண்டு தம் நூலினை விளக்கியுமுள்ளார்கள், கலை, அதன் தோற் றம், அதன் தத்துவம், அதன் வளர்ச்சி, பல்வேறு நாடுகளில் அதன் வரலாறு, உலகம்போற்றும் ஒவியங்கள், ஓவியர் சிற்பிகளின் வரலாறு, இன்னே ரன்ன துறைகளில் புதிய நூல்களைத் திரு. ஆசி 15ாதன் எதிர்காலத்தில் ஆக்கித் தருவார்களென்று நம்புகின்றேன். கலைக் கல்வியின் வழியாக மாணவர் பெறும் நிறைவான வளர்ச்சியையும் சால்பை யும் பற்றித் தமிழ் மக்களுக்கு இவர் எழுத்தினல் அறிவுறுத்தல் வேண்டும்.
ஆக்கப் பண்பு கிறைந்த இத்தகைய நூல் களையே உயர்நிலை வகுப்புக்களிற் பாட புத்தகங்க ளாக மாணவர் பயில்தல் வேண்டும். திரு. ஆசி நாதன் தமிழ் உலகில் இன்னும் நன்முக அறியப் பட வேண்டியவர். இவர் ஆற்றலையும் கலையையும் நாம் பயன்படுத்தாவிடின் நாமே இத்துறையில் வறியவராவோம். இலங்கைப் பல்கலைக் கழகம். பேராதனை,
•59 ح۔ 11 ہے 16
சே. தனிநாயகம்

S. ARUMUGANATHAN, ESQ., F. C. I. (BIRM.) M. I. S. A. (INDIA) A. M. I. E. T. (LOND.) DIPLOMA IN
BUILDING & WATER ENGINEERING, (Proprietor Messrs: V. M. Vadivelu, & Bros. & Managing Director Trincomalee Wharfage Co., Ltd.)

Page 7

பொருளடக்கம்
கற்காலக் கலைகள்
கோடு
நிறம்
குகை வாழ்க்கை ஒலி - ஓசை
இசை
பண்
கற்காலச் சுவைகள் அமைதி
அச்சம்
அவலம்
வெகுளி
வீரம்
வியப்பு
a 60 (5
இழிவு
அன்பு
8
பக்கம்
14
21
26
33
35
37
38
40
42
43
45
4?
49
51

Page 8

கலைப்பெருமாட்டி வாழ்க!
கற்காலக் கலையுஞ் சுவையும்
AMAMMMAM
கற்காலக் கலைகள்
8arwaaa.
உலகில் வாழுகின்ற உயிர்க்கோடிகள் அனைத் திலும், மனிதகுலம் மட்டும் சிந்தித்துச் செய லாற்ற முடியும் என்பது ஒரு வெளிப்படையான விளக்கம். உண்ண உணவும், உடுக்க உடையும், இருக்க இடமுந்தான் அம் மனிதகுலத்தின் சிங்தனு சத்திக்கு மெருகுகொடுக்கும் அரிய சாதனங்களா கின்றன.
ஆதிகால மனித சரித்திரத்தை ஆய்ந்து பாருங் கள். பகுத்தறிவு படைத்த மக்கள் குலத்தைப் பாழ்படுத்திய பசியின் கொடுமைக்கு அஞ்சிக் காட்டி லும் மேட்டிலும் பள்ளத்திலும் வெள்ளத்திலும் அவர்கள் உணவுதேடி அலேக் து திரிந்தார்கள் என்று, நாம் அறிகின்ருேம் அன்ருே ? வாழப் பிறந்த மனித சமுதாயத்தின் அன்றைய வயிற்றுப்

Page 9
2
பசிதான், இன்று நாம் கண்ணேபோற் காத்து வளர்க்கும் கைத் தொழில்களையும் கலாசாரங்களே யும் படைத்துத் தந்தது என்பதில், வியப்பு என்ன இருக்கின்றது ?
தம் வாழ்வுக்குத் தேவைப்படும் காய், கனி வருக்கங்களை ஓரிடத்தில் மட்டும் பறித்துப் புசிக்க முடியாமையினுல், பசியின் கொடுந்தண்டனையா கிய மரணம் அந் நாடோடி மக்களை எதிர்கொண்டு அழைத்தது. தன் மானம் காக்க வழியறியாது திகைப்புற்ற ஆதி மனிதர், ஒருவரை ஒருவர் பார்த்து நின்றனர். அந்நேரம் அவர்களின் கண்க ளில் ஏதேதோ கருத்துக்கள் - கலேயுணர்ச்சிப் பார்வைகள் தோன்றி மறைந்தனபோலும் !
எழுத்தும் மொழியும் தோன் ருக் காலம்தான் அது. வாய்விட்டுப் பேசத்தெரியாத மக்களினக் தான் அவர்கள் என்பதையும் நாம் நன்கு அறி வோம். அவர்களின் உணர்ச்சிப் பார்வை நெளிவு கள் கருத்துக்களே எழுப்ப, அக்கருத்துக்களின் கரு வில் கலை ஒன்று உருவாகப் போவதை அவர்கள் கண்டாரில்லே என்பதையும், நாம் உணர வேண்
டும்.
அஃது உண்மைதான். கண்ணில் தவழ்ந்த கருத் இன் குறிகள்தான் சைகை; அதாவது நடிப்புக் கலை யாகப் பிறந்தது என்று கூறுவதில் ஐயம் எதுவும் இல்லை. கைகளேயும் கால்களையும் ஆட்டி அசைத்தே ஆதிகால மக்கள் தத்தம் மனக்கருத்துக்கள் மற்ற வர்க்கு விளங்கும் வண்ணம் சைகை செய்து வந்த னர். ஆதிக்குடி மக்களின் சிந்திக்கும் ஆற்றலைக் குறிப்பிடும்போது, அம்மக்களின் எண்ணக் குவியல் களின் புற உருவமாகிய நடிப்புக்கள், உணர்ச்சிகள் தோய்ந்த கடிப்புக் கலையாக மட்டும் இருக்கவில்லை என்பதையும், காம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்

8
டும். நடிப்பில் வெளிப்படாத சிலபல உண்மைகளை அங்நேரம் வரைதற்கலை (ஓவியம்) தோன்றி அவர் களுக்கு உணர்த்திற்று என்ருல், அதிலும் அதிச யம் என்ன இருக்கிறது. இவ்விதமாக, எண்ணற்ற உயிர் இனங்கள் இயங்கி வாழும் இப்பாரிய பூப் பரப்பில், நாம் எல்லாம் பகுத்தறிவின் சின்னங்கள் என்று ஒப்பித்துக் காட்டுவதற்கு, அவர்களின் வாழ்வு, வளம் ஆதியன மெய்ச்சான்றுகளாம் என் முல், அச்சான்று உறுதுணை கோலியவைதான் இசை, நாட்டியம், ஓவியம், காவியம், இலக்கியம், சிற்பம், நாடகம் முதலிய தூய இன்கலைகள் என Gu)ff ዚ [ጋ •
எனவே, பகுத்தறிவின் பக்குவ நிலையால் உந்தப் பட்டு எழுந்த சிற்சில அழகுக்கலைகளையும், அக் கலை அறிவுகளின் ஆய்வு ஆக்கங்களையும் பற்றிச் சிறிதளவு நோக்குவாம்.
கோடு
உள்ளத்தின் அழகுணர்ச்சிதான் "கலை" எனப் பொருள் பெறுகின்றது. கலே வல்லுனர்களால் காண - கணக்கிடப் பெற்ற ஆயகலைகள் அறுபத்து நான்கும், அறிவு - அழகுக் கலைகளின் கூட்டு எண் ணிக்கையாகும். ஒலி-ஒளியின் சேர்க்கைதான் இந்த அகிலம் முழுமையும் என்ற முடிவை நாம் ஒப்புக்கொள்ளும்போது, அறிவு - அழகுக் கலைகள்* அத்தனையுங்கூட அதனுள் வாழ்கின்றன என்றே கூறிவிடலாம். ஆதலின் அவைகள் ஒலி-ஒளிக் கலைகள், 5ாத - உருவ கலைகள், கேர - தூரக்
* ஓவியம், சிற்பம், இலக்கியம், இசை, காட்டியம் முதலியன அழ குக் கஃலகள் எனப்படும். கணிதம், விஞ்ஞானம், வான நூல் முதலியன அறிவுக் கலைகள் எனப்படும். "ஆய கலைகள் அறுபத்து5ான் " கென் பர் பழந்தமிழ்ச் சான்ருேச்.

Page 10
4.
கலைகள் என்ற சிறப்புப் பெயர்களில் இக்காலம் வாழ்ந்து வளம் பெறுகின்றன.
வன விலங்குகளின் குழலில் சுற்றித் திரிந்த ஆதி மனிதரிடம் உண ர் ச் சி மட்டுமென்ன, உணர்ச்சியுடன் கூடிய மிருக ஒலியும்தான் காலப் போக்கில் கலந்து கொண்டது. யானையின் பிளி றல், சிங்கத்தின் கர்ச்சனை, புலியின் உறுமல், நரி யின் ஊளை, ஆதிய பயங்கரத் தொனி வகைகள், அவர்களுக்குப் பெருங் திகைப்பைக் கொடுத்து வந்தன. ஆதலின், முதன் முதலில் அம்மக்களிடம் தோன்றிய மெய்ப்பாட்டுச் சுவை அச்சம் எனலாம். அச்ச உணர்வு அவர்களுக்கு சிந்திக்கும் ஆற் றஃல எழுப்பவே, அத் திகில்மிக்க ஒலிவடிவுகள் ஒன்றன்பின் ஒன்ருக, அவர்களிடத்தில் வந்து பதிந்தன. எனவே, வன வேடர்களாகிய ஆதி வாசிகளின் பிதற்றல் ஓசை வடிவங்களுடன் பிளி றல், கர்ச்சனை, உறுமல், ஊளே முதலிய விதம் விதமான ஒலிவடிவுகளும் வெளிவந்திருக்க வேண் டும் என நம்பக்கிடக்கின்றன.
இவ்வண்ணமாக, ஆதி கா ல வேடர்களின் வாழ்வு மொழியாகச் சைகைகள், மிருக ஒலிவடிவு கள் இடம் பெற்றனவாயினும் அவர்களுடைய மனக்கருத்துக்கள் ஓரளவாகத்தான் வெளியிடப் பட்டிருந்தன எனலாம்.
உணர்ச்சியும் ஓசையும் நடிப்புக்கு மெருகு கொடுக்க, அங்கடிப்பில் இருந்து ஓவியக்கலை பிறக் கின்றது.
ஆதி மனிதரிடத்திற் புதிதாகத் தோன்றிய அச்சம் என்னும் மெய்ப்பாடானது ஓர் ஆயுதத்தை உண்டாக்க உதவிற்று என்ருல், அவர்களால் இயற்றப்பட்ட வில்லும் வேலும் ஓவியக்கலையின்

வளைவு-நேர் கோடுகளையும் ஆய்வு- அறிவுகளின் விளக்கங்களையும் உதவ முன்வந்த அரிய சாதனம் என்றே கூறவேண்டும்.
கிறுக்கியதினுல் "கீறு (வரை) தோன்றிக், கீற்றி ஞல் ஓவியம் தோன்றி, ஓவியத்தினுல் எழுத்துப் பிறந்தது என்பது உண்மை ஆய்வின் முடிபாகும். "எழுதல்' என்ருல், அகப்பாட்டிலுள்ள கருத்துக்க ளைப் புறப்பாட்டில் வெளியிடக் கிளம்புதல் என் லும் பொருள் பொருந்துவதை இங்கு நாம் காண முடிகிறது. இன்று நம்மால் கீறப்படும் ஒவ்வொரு வளைவு, டுே ர் கோடுகள் நம் மூதாதையராகிய வேடர்களின் அரும்பெரும் முயற்சிகளின் விளை வாகும் எ ன் ப  ைத உணர்ந்தோம் அல்லேம்.
சில புள்ளிகளின் தொடர்பால் கீறு (கோடு) வளர் கி ன் ற து என இ ன் று க T ம் கொள் வோ மா யின், இக்கீற்றை அன்று அவர்கள் வரைவதற்கு முன் னர் அதே புள்ளி உதய மா கி விட் டது எனலாம்.
வானத்தில் மின்னும் விண்மீன் புள்ளிகள ஓவியக்கலைக்குத் தம்மை அன்பளிப்புச் செய்தன வாக இருக்கலாம் எ ன் ரு ல், அன்னவர்களின் பார்வை நோக்கு, இரவு வானத்தின் விண்மீன் கூட்டங்களிற் கலந்திருக்க வேண்டும் என்றும் சிங் இக்க இடமுண்டு அன்ருே ? *

Page 11
Tெ மு த அது க s களின் மூலச் சின் 、"、"、" 、""、" ",
4. னம் ஓவியமாகவும் , $மே هs:هه வியச் * vir ». « go யத்தின் மூலச ه• • s"" *リv .ʻ° v a 9
Vy d சின்னம் புள்ளிக *. ; ‘."."
8
ளாகவும் பெற ப் பெ ற் ரு ல், அப் டி' S புள்ளிகளின் தூய "ே
{ 4P 'a *S** * புறத் தோற்றத்தை *. . 3' மு த லி ற் பதிக்க نے '2 ' ہ” ح மு தி லி ற ് , •
உதவிய அங்காள், அம்மக்கள் கூட்டத்திற்கு ஒரு பெரும் நன்னளாக அமைந்திருக்க வேண்டும்.
மனத்தின் அச்சத்தை மாய்ப்பதற்கு வழி தேடிய மக்கள் இனத்துக்கு, மண்ணிற் பதிக்கப் பட்ட அப்புள்ளி, மகிழ்ச்சியை அ ள் வி அள்ளி இறைத்ததுமட்டுமன்று, தொடக்க - முடிவின் எல்லைகளையும் அவற்றின் இடைவெளித் தூரங்க ளையும் கணக்கிட்டுக் காட்ட முன்வந்தது. இதனுல் அவர்கள் கினைத்த, பார் த் த பொருள்க ளின் தோற்றங்களைக் கீற்றினல் வரையும் அறி  ைவ ப் பெறுவ தற்கு முன்னர், வேண் டியஇடங்களிற் புள்ளி களைப் பதித்து, அவற் றின் வடிவத்தையும் பிர மாண த்தையும் மதிப்பிட்டுக் கொண் டனர் என்று தெரிய வருகிறது.
 

இதற்கு எடுத்துக்காட்டாகத் தமிழரின் புராதன பண்பாட்டுக் கலைகளில் ஒன்றென விளங் கும் 'கோலம் இடுதலை நாம் உற்று 5ோக்கும் போது, அக்கால அலங்காரக் கலை உருப்பெற்ற வரலாற்றுக்கு, அச்செய்கை மிகத்தெளிவான விளக்கம் கொடுப்பதையும் உணர்ந்துகொள்கின் ருேம். இத்தன்மைகளில் இருந்து கோலமிடு தல், பொட்டிடுதல் முதலிய அலங்காரக் கலை களின் ஆரம்ப காலம் கூட, அப்புள்ளிகள் தோன்றிய காலத்தில் இருந்தே பிறந்திருக்க வேண்டும் என்று எண்ணவருகிறது.
இன்னும், வானக்கலையின் ஆய்வுக் கண் பார் வையில் இலங்கும் ஈராறு இராசிகளும் இரவு வானத்தின் தாரகைப் புள்ளிகளினுல் வடிவுருவம் பெறவில்லையா ?
தத்தமக்குத் தேவையான பொருள்களைச் சித் திரிப்பதற்குப் பல புள்ளிகளை ஒன்றன்பின் ஒன் முக இணைத்துப் போகும் செய்கை, நாளடைவில் ஒரு பெரும் வெற்றியை அவர்களுக்கு அளித்தது எனலாம். அடுக்கி இணைத்த புள்ளிகளின் இடை வெளித் தூரம் குறுகக் குறுக, அவ்விடத்தில் கோடு கள் பரிணமிப்பதையும் அக்கோடுகள் வளைந்து வளைந்து செல்வதையும் நேர்முகமாகக் கண்டனர். இச்செயலை நன்கு ஆராயுமிடத்து ஓவியக் கலை யைப் படைத்துத் தர முன்வந்த வேடர் முதன் முத லில் வளைவு கோடுகளையே வரைந்து உதவினர் என்பது தெளிவாகிறது. ஆரம்ப வரைதல்களில், கேர்கோடு இடம்பெறவில்லை என்பதை, இக்காலத் திற் கண்ட புற உருவக் கோட்டுச் சித்திரங்களை அவதானித்துப் பார்க்கு மிடத்அது 15மக்குப் புலன கின்றது.
மக்களுடைய மனம் - அறிவு முதலியவற்றின் திடவலிமைகளைப் பொறுத்தே அவர்கள் இயற்

Page 12
8
றும் எச் செயலும் விளக்கமுறும். வேட்டுவ மக்கள் வரைந்த வளைவு கோடுகள் அத்தனையும் அவரின் மனம், புத்தியின் வளர்ச்சியை ஓரளவு நமக்கு எடுத்துக் காட்டிக் கொண்டு இருக்கின்றன என்பது, இதனுல் தெரிய வருகிறதன்ருே? ஒரு நேர் கோட்டை ஒருவரால் வரைய முடியவில்லை என்று கண்டால், அல்லது ஒரு சுர (ஸ்வர) ஓசை அலையை ஏற்றத்தாழ்வின்றி அவரால் இசைக்க முடியவில்லே என்று
கண்டால், அவரிடத் தில் உள அல்லது - உடல் வலிமை குன்றி யி ரு க் கின்றது என நாம் எண்ண இட முண்டு. இன்று 15ாம் வரையும் -பார்க்கும் வளைவு, கேர் கோடு w
N
கள் அ த் த னே யும்
படிப்படியாக அவர்
களின் மனப் பயிற் சியினல் வளர்ந்து வந்த அற்புதச் சிருட்டிகள் என் பதையும் 15ாம் மறக்க முடியவில்லை.
இவ்விதமாக, அதிக வளைவு, நெளிவுகளால் ஆக்கப்பட்ட ஆதிகால வளேவு கோடுகள், 5ாளடை வில் நேர் கோடுகளாக உருமாறி, அவ்வேடர்களின் சிந்தனை வளர்ச்சிக்குத் தூண்டுகோலாக விளங்கின.
நேர், வளைவு கோடுகளின் பயிற்சியைப் பெற் றதும், தத்தங் கருத்துக்களே மற்றவர்க்கு வெளி யிடுவதில் அதிக நேரம் செலவுசெய்திருக்க மாட் டார்கள், என்றும் எண்ண இடமுண்டு. ஏனென் முல், கண்ணுற் காணும் எப்பொருளிலும் அவ் இரு கோடுகள் தனித்தோ சேர்ந்தோ இருக்கும் என்பதை அவர்கள் உணர்ந்துதானே இருப்பார் கள். ஆதலின், இக்கால ஆரம்ப நிலைக் கல்விக்

9
கழகங்களில் கீழ், மேல் வகுப்புச் சிறுவர்களுக்குச் சித்திரம் ஆக்க அறிவுகளைப் புகட்ட உதவியாக இருப்பதுபோல், அக்கால வேடருக்குப் புள்ளிக ளும் கோடுகளும் அவற்ருல் உருப்பெறும் ஓவி யங்களும் அவ் வறிவாற்றல்களை உண்டுபண்ணி வந்தன.
உணர்ச்சியினல் உந்தப்பட்ட அம்மக்கள், தம் முள் எழுந்த வினக்களுக்கு விடையாகப் புள்ளி களையும் கீற்றுக் களையும் அவற்றி ஞல் வி ள க் கப் படும் ஓவியங்களை யும் வரைந்து உத
வினர் என்று நாம் у ) i அறியும் போ அது. M. 7 7 அவற்றுடன் சில 久R M. பல ஆக்கச் செயல் ( V களையும் ஆராய முன் வங் த ன ர் என்று தெரியவருகிறது. புள்ளிகள் கோடுகளாக உருமாறிய அக்காலம் தொட்டே சிந்தனையில் தோய்ந்த அவர்களின் பார்வை, பார்வையில் அவ தானம் ஆதியன கலந்து புதியதோர் ஆய்வுத் திற அணுக்கு வழிவகுத்தது.
நிறம் இயற்கையும் அதன் கால மாறுபாடுகளும், பசியும் அதன் உணர்ச்சியும் ஓவியக் கலையை உண் டாக்க, ஒவியம் இன்றைய விஞ்ஞானப் பாடத்தின் ஆரம்ப வகுப்பை அன்றே ஆரம்பித்து வைத்தது எனலாம்.
கதிரவனின் காலேக் கதிர்கள், திங்களின் மாலைக் கதிர்கள், அவற்றின் தட்பவெப்ப நிலைகள்

Page 13
፲0
ஆகிய இயற்கையின் மாறுபாடுகளையும் அவற்றின் தன்மைகளேயும் மக்கள் அவதானிக்கத் தொடங் கினர் என்ருல், இயற்தை அழிகும் அதன் அகப் பொருட் டத்துவமும் அதனுடன் ஆராயப்பட்டி ருக்க வேண்டும் என்றுதான் கூறவேண்டும்.
பார்க்குமிடங்தோறும் புள்ளிகள் புள்ளிகளின் இணேப்பால் இரேகைகள், இரேகைகளின் கூட்டுற வால் சித்திரங்கள் மட்டுமல்ல : அவற்றின் அழ கும் குணமும் கூடவேதான் தோன்றுகின்றன. புறப்பொருள் வடிவ அழிகையும் அதன் உணர்ச் சிச் சுவைகளையும் காண விழைந்தவர்கள், நிறங் களேயும் அவற்றின் உணர்ச்சி கிலேகளையும் ஆராய முனேக்திருக்க வேண்டும்.
அண்ட சராசரங்களின் இரண்டு பெரும் தத்து வப் பொருள்கள் நாதமும் உருவமும் தான். நாதத் தின் ஒலியலைகளும் உடு வத்தின் நிற ஒளி அலே களும் சேர்ந்து, வாழ் வுக்கு வாழ்வு கொடுக் கும் அக, புற தோற்றப் பொருள்களாக இயங்கு கின்றன. நாத அலேக ளாகிய ஓசைகள் ஏழும்,
அ ர் உருவ
வி ரு ன ங் த ஸ் ஏழும்,
2 அழகுக் க லே களி ன் உயிர் க ச டி கள து இருந்து வருகின்றமையால் ஓசை, வருணம் ஆகிய அவ்விரண்டும் மனித வாழ்வை வளம் பெறச் செய்யும் இயற்கையின் உபகரணப் பொருள்கள் என இங்கே இடம் பெறுகின்றன. அக கிலேகளேயும்
fகுரிய ஒளியின் எழு மிறங்கள்: மஞ்சள், செம்மஞ்சள், நீலம், கரு நீலம், விவப்பு, பச்சை, ஊதா என்பனவாம்.
 

f
அதன் உணர்ச்சி மெய்ப்பாட்டுச் சுவைகளேயும் எழுத்து, மொழி இன்றியே புரிய ச் செய்யும் ஒப்பற்ற கருவிகளாக அவை இன்றும் திகழு கின்றன. எனினும், ஆதி மனிதகுலத்தின் விழிப் புக்கும் கவனத்துக்கும் பாத்திரமான பொருள் ஒலி-ஒசை வடிவுகளாக இருந்தாலுங்கூட, அவற் றின் ஆய்வுத் திறனுக்கு வழிகாட்ட முன் கின்ற வைகளில் அழகு வருண அஃலகளும் ஒன்று என்று தான் கூறவேண்டும்.
வனவிலங்குகளுடன் போராடிய கோரச் செயல் களில் இருந்து வழிக்தோடிய இரத்தத்தின் செக் கிறம் ஒன்றே, இயற்கையின் எழில் கலந்திருந்த ஏழு வண்ணங்களேயும் அவர்களது பார்வைக்குக் கொண்டுவக்கு சேர்ப்பதற்கு உதவியாக இருந்த முதல் வண்ணம் எனலாம்.
எண்ணிய-பார்த்த பொருள்களின் உருவங்க ளுக்குப் புறக்கோடுகளே இட்ட மக்களினம், அவற்றிற்கு அழகுணர்ச்சியை எழுப்பவேண்டி அவ்வேளைகளில் வண்ணங்களே ஆராய முற்பட்டது போலும். மனத்தில் கிலவும் விருப்பு, வெறுப்பு உணர்ச்சிகளின் பேத கிலேக்கு ஏற்றவாறே வண் னங்கள் வகுக்கப்படுகின்றன என்பதற்கு, வேட ரின் பார்வைக்குத் தென்பட்ட செவ் வண்ணம் ஒன்றே ஆதாரமாக அமைந்திருக்கிறதைப் பார்க் கின்ருேம்.
பயங்கர மிருகங்களின் அட்டகாசச் செயல் களுக்கு இலக்காகிய வேடர்களின் வன வாழ்க்கை யில், முதற் சத்துராதிகளாக வந்து சேர்ந்தவை அக் கொடிய மிருகங்கள்தான். தமது உயிரின் வாழ்விற்காகவும் மனிதச் சுதந்தரத்தின் மகிமைக் காகவும் அம்மிருகங்களுடன் போராடிய நிகழ்ச்சி களில் கண்ட இரத்த வெள்ளம், அவ்வேடர்களின் மனத்தில் அச்சத்தையும் ஒரு புரட்சி கிலேயையும்

Page 14
12
உண்டுபண்ணியிருக்கின்றது. அச்ச வுணர்ச்சியின் விளைவாக வெகுளி நிலையும் அதன் விளைவாக அவர்களுக்கு வீரமும் தோன்றி முடிவிற் போர் நிகழ்ந்திருக்கின்றது.
மனித - மிருகப் போர், வெற்றியோ தோல் வியோ என்பதை அவர்கள் ஒரு பொருட்டாக மதித்திருக்கமாட்டார்கள் என்ருலும், மண்ணில் விழுந்து வழிந்து ஓடிய இரத்தத்துளிகளும் சிந்தல் களும் அவர்களின் கவனத்தை ஈர்த்தெடுத்த செம்பொருளாகத் திகழ்ந்திருக்கின்றன. சிந்தனை யில் வடித்த சித்திரங்களைப்போல் அச் செங்கிறத் துளிகள் அவர்களுக்கு நல்லுணர்ச்சியை ஊட்டும் வண்ணக் குழம்பாக மாறியிருக்கின்றன.
விஞ்ஞானக் கலையின் ஆரம்ப முயற்சிகளில் ஒன்ருகிய சேர்க்கைப் பயிற்சியின் தொடக்க காலத் தில், வண்ணங்களும் அவற்றின் தன்மைகளும் ஆராயப்பட்டிருக்க வேண்டும்.
கற்கால மக்களின் களஞ்சியச் செல்வமாகக் கல் இனங்கள் மதிக்கப்பட்டன. அக் கல்லில் இருந்தும் கலை அறியப்பட்டது, என்னும் உண்
மைக்கு ஆதாரமாகக் கற்காலக் கல் ஆயுதங்களே இக் காலச் சிற்பக் கலேவளர்ச்சிக்கு உதவிய மூலச் சிற்ப வடிவங்களாய் விளங்கின.
 

8
கற் கருவிகளை அவர்கள் முதலில் கண்டறிதற் காகக் கற்களைப் பாரிய கற்களினுல் உடைக்கும் போது, மின்னி எழுந்த தீப்பொறிகள் தீயை உண் டாக்கி, அம் மக்களின் ஆக்க வேலைகள் பலவற் றிற்கு உதவின என்னும்போது, வண்ண ஆய்வுக் கும் வழிபிறந்திருக்கிறது என்று எண்ணலாம். மனித வாழ்வின் உதயகாலமாகிய கற்கால மனித இனம், வருங்காலத் தம்மினத்தின் சீர்வாழ்வுக்கான ஒளி விளக்கை அக்காலத்தில் ஏற்றி வைக்கும் போது, ஒளி அலைகளாகிய இயற்கையின் ஏழு கிறங் களும் அவர்களின் ஆய்வுப் பயிற்சிக்கு ஒன்றன்பின் ஒன்ருகத் தோற்றப்பட்டிருக்கிறது. குரியவொளி யில் உள்ள ஏழு வண்ணங்கள் இயற்கையில் விளங்கு கின்றன என்று இன்று நாம் உணர்ந்து இருப்பதிை அவர்கள் அன்றே ஆராயத் தலைப்பட்டனர் போலும். கற்கால மனிதரின் வாழ்க்கை, குழந்தை அறிவுள்ள வாழ்க்கையாக இருந்திருக்கிறது என் ரு ல், நிற அழகு அவர்களால் நன்கு விரும்பப்பட் டிருக்கும் என்பது இதனல் பெறப்படுகின்றது. ஆதலின், வேட்டுவப் பிற்காலச் சந்ததியாரால் தீட் டப்பட்ட மிருகச் சித்திரங்களைக் கூர்ந்து பார்க்கும் போது, அம் மக்களின் கண் அயராத பெரு முயற்சி கள் எத்தகையன என்பதை ஓரளவு எம்மால் மட் டிட்டுக்கொள்ள முடிகிறது. இன்னும், அவர்களது செங்கிறக் குழம்பின் அழகுணர்ச்சியினுல் இப் போது எத்தனை யெத்தனை வண்ணச் சுவைகள் காட்சியளிக்கின்றன.
மனித வாழ்வின் ஆரம்பமே அச்ச மெய்ப்பாட் டுடன் ஆரம்பமாயினும், அவ்வாழ்விற்காக வேண்டி மலர்ந்த மாண்புக் கலைகளும் பண்புக் கருவிகளும் நம் முன்னேரின் மனக்கவலைகளையும் மாற்றி மகி ழச் செய்யும் சத்திப் பொருள்களாகத் தோன் றின. ஆமாம்! கவலையைப் போக்க வந்த கலைச் செல்வங்கள்தான் அவைகள்.

Page 15
1.
குகை வாழ்க்கை
இஃது இவ்வாறிருக்க, கலை அறிவின் ஆராய் வும் அதன் ஆக்கச் சத்திகளும் அக் காட்டு மக்க ளுக்கு முன்னேறும் வழிகளைப் படிப்படியாகத் திறந்துகொண்டே வந்தன என்பதற்கு, அம்மக் களின் குகை வாழ்க்கை ஓர் உதாரணச் சின்னமாக அமர்ந்து இருக்கின்றது என்பதையும் நாம் அறிக் தேம் அல்லேம். எனவே, குகைவாசிகளின் வாழ்க் கை வரலாறுகளில் சில குறிப்புக்களைப்பற்றி இவ் விடத்தில் சுருங்கச் சொல்வோம்.
இயற்கையின் தத்துவப் பொருள்களாகிய பஞ்ச பூதங்களின் அசைவு-அமுக்க நிலைகளினுற் பெறப் படும் இடியும் முழக்கமும் இரவும் பகலும் அதன் தட்பமும் வெப்பமும் அவர்களின் கவனத்துக்கு முதலில் தெரிவுபெற இல்லையாயினும், அழகுக் கலை களினல் எழுப்பப்பட்ட அவதான சத்தி, சில கால எல்லைக்குள் அம்மக்களுக்கு அவற்றினை உணர்த்தி வைத்தஅ.
வெயிலும் மழையும் குடும் குளிரும் அவர் களின் அறிவுப் பார் 4 வைக்கு அகப்படவே ஒதுங்கும் இடங்களைத் தேடிச் சென்றனர். அதனுடன், மிரு க ங் களின் துன்பச் செயல் களுக்கும் ஓரளவு தப் பித்துக் கொள்ள வழி பிறந்தது என்றும்கூட
போலும்.
 

15
நன்னகரிக வாழ்வின் தோற்றமாகிய இக்காலத் தில் இயங்கும் கட்டிட நிருமாணக்கலையின் ஆரம்ப அரங்கேற்ற விழாவும்,அக்குகையினுள் அடிஎடுத்து வைத்த அன்றையத் தினத்திற்ருன் நிகழ்ந்திருக் கின்றது என்று சொல்லின், சாலப் பொருந்தும் அன்ருே ?
ஆம். வில்லையும் வேலையும் அவர்கள் பெற் றுக் கொள்வதற்கு முற்பட்ட கால த் தி லே யே இரேகைகளின் அறிவு ஆற்றல்களைப் பெற்றனர், என்பதை நிரூபித்துக் காட்டுவதற்கு, வேடர்களால் ஆக்கப்பட்ட கூரிய கல், எலும்பு முதலிய கருவி களும் வரைதற் பயிற்சிகளும் அழகுணர்ச்சிக்கு வேண்டிய பலவித வண்ணச் சேர்க்கை அறிவுகளும் அவர்களிடம் ஒப்படைக்கப் பட்டிருக்கின்றன. அப்படிப்பட்ட அரிய சாதனைகளை யெல்லாம் ஒப் பேற்றி முடித்த-முடிக்கச் சித்தங்கொண்ட அப் பெருமக்கள், கட்டிட கிருமாணக் கலையையும் உரு வாக்க இருக்கின்றனர் என்ருல் ஆச்சரியம் என்ன தான் இருக்கின்றது?
இயற்கையின் பரிசாக அளிக்கப்பட்ட இருண்ட குகைகளில் குடிபுகுந்த முதற் குகைவாசிகளின் மன மகிழ்வுக்கு, எதையும் ஒப்பிட முடியாத நிலை அப் பொழுது ஏற்பட்டிருக்கின்றது.
வன விலங்குகளின் நடமாட்டம், பணி, வெயில், மழை ஆதியனவற்றின் ஏற்றத் தாழ்வுக் கால நிலை போன்றவைகளில் இரு ந் து தப்பித்துக் கொள்ள ஒரு தற்பாது காப்புக் கூடம்போல அவர்களுக்குப் பயன் பட்டன, அக் குகை வரிசை கள். இவ்விதமாகத் தமது எதிர்கால இன்ப வாழ் வுக்கு உறைவிடமாகிய அக்குகைகளின் உட்புறத் தோற்றங்களை ஆராய முன்வரும் வேளையில், அவர் களின் ஆய்வுத்திறனுக்குக் குறுக்கே கின்று குழ்ந்த

Page 16
፲6
இருளைப் போக்கும் வேலையிலேயே முதன்முதலா கக் கைவைத்தார்கள் என்று சொல்லும்போது, குகையின் வெளிப்புறத் தோற்றம் நமது பார் வைக்கு வருகின்றது.
இக்காலத்தில், குச்சுவீடுகள்முதல் மச்சுமாடி வீடுகள்வரை எங்கும் சாதாரணமாகக் கட்டப்பட் டிருக்கின்றன. அவைகளின் முற்போக்கான அமைப் புமுறைகளையும் அலங்கார மாதிரி வடிவுகளையும் நாம் கண்டு பாராட்டுகின்ருேம். வேண்டிய வேண் டி ய இடங்களில் அலங்கார நிலைக் கதவுகளும் பல கணிகளும் பயன் படுத்தப்படுகின் றன. இவைகளின் நல்வளர்ச்சிக்கான வகையில் உதவிய மூலக் கட்டிட நிரு மாணக் கலையின் தொடக்க ஆக்க வேலைகள் தான் கற்காலக் குகைச்சிற்பிகளால் ஒழுங்குகிரல் செய்யப் பட்ட குகை வரிசைகள் என்னும்போது, 15ாம் அனைவரும் அவர்களுக்கு நன்றிசெலுத்தக் கடமைப் பாடுடையவர்களாக இருக்கின்ருேம் அல்லவா?
குகையின் மிக்க இரு ளை ப் போக்குவதிற் சிரத்தை கொண்ட அம் மக்கள், மலைக்குகைகளின் வெளிப்புறத் தோற்றத்தில் அ  ைம ங் துள் ள பாழும் அதுளைகளையும் அதன் ஒழுங்கற்ற ஒட்டை இடை வெளிகளையும் முதலில் கண்டிருப்பர். சிற்ப ஓவியக் கலையறிவில் அனுபவம் பெற்ற அக்கலை ஞர்களுக்குக் குகைவாசல் செதுக்கும் தொழில்
 

1?
என்ன கடினமானதா யிருக்குமா ? குகைகளின் வெளிப்புறத் துளை களை ப் பிரமாணத்துடன் பெரிதாக்கியிருப்பர். வாசல்கள் செதுக்கி முடிக் கப் பட்டதும் குகையின் உட்புறம் வெளிச்சம், காற்றினுல் நிரப்பப்பட்டுத் தங்குவதற்கு ஏற்ற இடமாக அவர்களுக்குக் காட்சி கொடுத்திருக் கும் என்று எண்ணும்போது, வேடர்களின் மன மகிழ்வு நிலைக்கு அங்நேரம் ஓர் எல்லைகாண முடியா திருந்திருக்கும். கற்குவியல்களிலும் முட்செடி களிலும் கண்ணயர்ந்த காட்டுவாசிகளுக்கு, அக் கற்குகை அப்போது ஒரு களஞ்சியசாலைபோன்று விளங்கியது என்றும் சொல்லவேண்டும்.
எப்படி இருப்பினும், வனத்து மிருக இனங் களுடன் அடிக்கடி போர்தொடுத்து உயிர்ப்பிச்சை வாங்கிய வனவாசிகளுக்கு, அம் மிருகங்களின் நினை வும் பயங்கர தோற்றங்களும் மறைந்தபாடில்லை என்பது, அவர்களாலும் அவரது சந்ததியாராலும் தொடர்ந்து செயலாற்றப்பட்ட சில செயல்கள் மூலம் நிரூபணமாகிறது.
குடியிருக்கும் பெருநோக்குடன் குகை வாசல் களேயும் உட்புறங்களையும் வகுத்துச் செப்பனிட்ட வர்கள், குகையின் வெளிப்புற உட்புற மலைப்பார் களையும் மட்டநிலைக்குச் செதுக்கி, அவற்றில் சிங் கம், புலி, காட்டெருமை முதலிய ஆட்ட மிருகங் களை வரைந்து அவற்றில் அழகுவருணங்களைத் தீட்டினர்கள் என்று அறிகின்ருேம். அக்காலத் தில் அவர்களால் வரையப்பட்ட சித்திரங்களை ஏன் நாம் நினைத்து ஆச்சரியப்படவேண்டும்? இன்றும் நாட்டின் தென்னந்தோப்புக்கள், வயல்கள் முதலிய விளைநிலங்களில் பாம்பின் உருவங்களையும் பயங் கரப் பொம்மைகளையும் பயன்படுத்துவதைப் பார்க் கின், இவைகள் யாவும் குகை வாசிகளின் விவே கப் போக்கில் இரு க் து பிறந்தனவே எனக்

Page 17
18
காணலாம். மனித மெய்வாடையை மோப்பங்கண்டு வந்தடையும் கொடிய விலங்குகளை அப்புறப்படுத் ஆதும் நல்லறிவினை அம் மக்கள் அன்றே பெற்று விட்டனர் எனலாம்.
ஆதிவாசிகள் கற்குகைகளை நாடிவந்த காலத் தில் இருந்து, அவர்களின் அழகுணர்ச்சிகள் ஓவி யக் கலைக்குப் பூரண வளர்ச்சியைக் கொடுத்தன என்பதை விளக்க நாளடைவில் வளர்ந்துவந்த ஓவியப் பாங்குமுறைகள் சான்ருக விளங்குகின்
றன.
உதாரண விளக்கம் ஒன்று கொடுக்கப் பட் டால், காண்டா மிருகச் சித்திரத்தை வரைய விரும்பும் ஒரு வேட்டுவச் சைத்திரிகன், அதன் கண் களையும் வாயையும் கொம்புகளையும் கோரப் பற் களையும் பிரமாணத்துக்கு அப்பாற்பட்ட அளவிற் பெரிதாக்கி வரைந்து, கொடிய குணங்களை வெளிப் படுத்த உதவும் வருணப் பூச்சுக்களினல் உணர்ச்சி வெளிப்பாடாக அதை மிகைப்படுத்திச் சித்திரித்து இருப்பான் என்பதாம். இக்கால உணர்ச்சிகேலிச் சித்திரங்களாக வரையப்படும் தன்மைவிதிமுறைகள் யாவும் அவற்றின் வழித்தோன்றலே என்றும் அறிக:
இவ்வண்ணமாக, இடத்துக்கிடம் திரிந்து வேட் டைத் தொழிலைத் தம் வாழ்க்கைத் தொழிலாய்க் கொண்ட மக்கள், சென்ற இடங்களில் எல்லாம் தம் வாழ்வின் தற்பாதுகாப்புக்காகச் சித்திரங்கள், சிற்பங்களைச் சித்திரித்தும் செதுக்கியும் வந்தனர் என்று நாம் அறிந்துகொள்ளும்போது, இன்பம் பயக்கும் காட்டியக் கலையும் அக்காலங்களில் ಙ್ಗೇಹ தோன்றி வளர்ந்துவந்ததாக உணர்கின்
(ԱՐւ0,

19
அமைதி மனத்தின் அசைவு - ஆட்டத்திற்கு அதன் விருப்பு - வெறுப்பு உணர்ச்சிகளே காரணமாக இருக்கின்றன.
கலை யறிவு தொ ட ங் கி ய கற்காலத்தில் ஒலி-ஒசை - மொழி இன்றி கண்களைக்கொண்டே மக்கள் கருத்துக்களைப் புரிந்து கொண்டார்கள் என் னும் போது, சைகையும் அதனு ற் ருேன்றிய சிற்ப - ஒவியங்களும் அவர்களின் வாழ்விற்குப் பெரிதும் பயன்பட்டு வந்தன.
கற்கால மக்களின் வாழ்க்கை வரலாறுகளையும் அவர்களின் அழகுக் கலைகளேயும் அதுருவியாராய்ந்து பார்க்கும்போது, அச்சமெய்ப்பாடுமுதல் எத் தனையோ சுவைகள் ஆங்காங்கே பயன்படுத்தப் பட்டிருக்கின்றன என்பது, அவர்களால் ஆக்கப் பட்ட, அக்கவின் கலைகளிலிருந்து விளக்கப்படு கின்றது.
உள்ளத்தின் உவகையும் உந்தலும் அதன் புறச்செயலாகிய ஆட்டக்கலையை அவர்களுக்கு அளித்தது என்று சொல்ல எக்தனிக்கும்போது, அவர் களால் படைக்கப்பட்ட புள்ளிகளும் கோடுகளும் சித்திர - சிற்பங்களும், அழகு வண்ண அலைகளும் 15ம் அகக் கண்களின் முன் தோற்றம் அளிக்கின்றன அன்ருே ? ஆம். அவ்வாக் கப் பெரு முயற்சிகளின் ஒவ்வோர் வெற்றியிலும் இருந்து எழும்பிய பேரு வகைகளினுல் அவர்கள். துள்ளிக் குதித்திருப்பார்கள் என்பதற்கு நம்

Page 18
20
வாழ்க்கையில் நிகழும் பற்பல அனுபவங்களே தகுந்த ஆதாரமாயிருக்கின்றன.
சடுதியாகத் தோன்றும் மனமகிழ்ச்சி எழுச்சி யினுல் தூண்டப்பட்டு 15ாம் குதித்துத் துள்ளும் போது, அப்பெரு மகிழ்வுக்குக் காரணமாகிய கருத்துக்கள் உ ட னே வெளிப்படாததுடன் அவற்றை வெளியிடவும் முடிவதில்லை அன்ருே ? அதுபோன்ற ஆதிவாசிகளின் அக் களிப்பாட்டங் கள், பேச்சு - மனக்கருத்துக்கள் எதுவும் அற்ற வெறும் குதிப்புத் துள்ளல்கள்ாகமட்டும் இருக் திருக்கின்றன. அதே குதிப்பும் அதுள்ளல்களும் பொழுதுபோக்கிற்காக உதவ முன்வந்த காலத்திற் முன் சைகைகளுடன் கூடிய மெய்ப்பாடுகளும் அவற்றின் கருத்துக்களும் ஒன்றின் பின் ஒன்ருகச் சேர்க்கப்பட்டு, நாளடைவில் கலை உருப்பெற்றிருக் கிறது என்று தெரியவருகிறது.
நடனக் கலையின் தொடக்ககாலத்தைச் சிறி தளவு கற்பனை செய்து பார்ப்போ மானல், பேச்சுக்கள் அற்ற பயங் கர ஒலி - ஓசை - இசைப்புகளும், பற்கடிப்புகளும், உவகை, அச்சம், வியப்பு, வெகுளிபோன்ற வெவ் வேறுவிதமான மெய்ப்பாடுகளும், ஊமைக் கூத்தாட்டங்களும் அவ் வேடர்களால் வெளியிடப்பட்டிருப்ப தாக நமக்குத் தெரியவரும். எனி லும், அக்காலத்து ஆட்டக் கலை كه ، ப்ெ யில் உவகைச்சுவை ஒன்றே முக் கிய சுவையாக அமைந்திருந்தது என்பது குறிப் பிடத்தக்கதாம்.
محمبر .
 

f
அக்காலத்தில் ஆக்கப்பட்ட சித்திர - சிற்பக் கலைகள் எப்படிக் கருத்து விளக்கங்களைக் கொடுக்க உதவினவோ, அப்படியே நடனக் கலையும் அவர்களுக்கு நற்கருத்து - விளக்கங்களைக் கொடுத்து மன மகிழ்ச்சியைப் பயக்கக்கூடிய ஓர் ஆரம்ப ஆட்டக் கலையாக விளங் கிற்று எனலாம். அருங்கலைகள் ஒவ் வொன்றும் கற் காலம் தொட்டே ஒன்றிற்கொன்று தொடர்புடையன − வாக விளங்குகின்றன என்பதற்கு, நாட்டியக்கலிை ஒரு சிறந்த உதாரணமாக இருந்து வருகின்றது.
காட்டில் வாழ்ந்துவந்த வேடர் குகைகளி லும் குடிசைகளிலும் பிரிந்து வாழ்வதற்கு முக் கிய காரணமாயிருந்தது, அவர்களின் பசியும் பசிக்கு வேண்டிய உணவும் என்றே முன் கூறி யிருந்தோம். வயிற்றுவளர்ப்புக்காக உணவுதேடும் முக்கிய தொழில் அவ் வோரினமக்களையும் பிரித் துப் பிரித்து உலகின் பற்பல கோணங்களுக்கும் அனுப்பிய செயலைப் பார்க்கும்போது, அவர்களின் தொழில், கலை, பண்பாடு முதலியவைகளும் வேறு பட்டு வளர ஆரம்பித்தன என்று காணக்கிடக் கின்றன. காலகதியில் அவர்கள் தாம் வாழ விரும் பிய * நீர் - நிலப் பரப்புக்களைத் தமக்கு வேண்டிய வசதிப்படி ஆக்கிக்கொண்டனர் என்று பின்னர் அறிகின்ருேம். அக்காலங்களிலே அவர்கள் நாக ரிக மக்களாக வாழ்ந்து வந்தனர் என்பதற்கு
* குறிஞ்சி. பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்பன.

Page 19
22
அவர்களால் இயற்றப்பட்ட கலை, மொழி, பண்பு, சமயம் முதலிய எத்தனையோ ஆதாரங்கள் கிடைக் கப்பெறுகின்றன. நாகரிக மக்கள் என்று குறிப்பிடும் போது, அவரவர்களின் கலை, பண்பு முதலியவைகளை முதலில் நாம் ஆராய விழைகின் ருேம் அன்ருே ?
மாண்புமிக்க இன்கலைகளில் ஒன்றெனவிளங் கும் ஓவியக் கலைக்குச் சமானமாகிய இலக்கிய - காவியக் கலைகளும் நன்னகரிகம் அடைந்த நாட்டு மக்களாற் போற்றி வளர்க்கப்பட்டு வந்தனவென் ருல், அவற்றின் மூலப் பிறப்பிடமாகிய சொல், சொல்லுக்கு முன்னின்ற எழுத்து, எழுத்துக்கு உதவிய ஒளி புள்ளி, வடிவங்களும், ஒலி இசைப் புக்களும் மிகமிக ஆற்றல்படைத்தனவாக இருத் தல் வேண்டுமன்ருே ?
வரிவடிவினதாகிய எழுத்துக்களின் பிற ப் பிடத்தை நாம் ஆராய விரும்பும்போது, முற்கால மூதாதையர் வரைந்த சித்திரங்களே திரிந்து எழுத் துக்களின் உருவங்களைப் பெற்றிருக்கின்றன எனத் தெரியவருகின்றது. அவ்வப்போது அம் மக்களால் எழுப்பப்படும் கேள்விகளுக்கும் அவற்றின் பதில் களுக்கும் சித்திரங்களே அமைந்திருக்கும். இக் காலத்திற்கூட புகைரதம், கப்பல் முதலிய வ்ாக னங்களுக்குக் கொடி, வண்ணம், வெளிச்சம் ஆகியவைகளினற் கேள்வி மறுமொழிகள் கொடுக் கப்பட்டு வருவது, அக்காலத் தொடர்பினை நம் மவர்க்கு ஓரளவு ஞாபகப்படுத்துவதாக இருக் கின்றதன்ருே ?
சூழலில் தென்பட்ட இலை, பூ, காய், செடி, கொடி, மரம், வீடு, ஆயுதம் முதலிய பொருள் களின் புற வுருவங்களும், மனக் கருத்துக்களை உடனுக்குடன் வெளிப்படுத்த உதவிய வளைவு -

38
நேர்கோட்டுப் புற வுருவங்களும் கால மாற்றத் தில் வரிவடிவினதாகிய எழுத்துக்களாகத் திரிங் தன. புராதன மொழிகளில் ஒன்றென விளங்
中國/鉑_
物 分 /会ー/*
கும் சீனத்து மொழியே இதற்குத் தலைசிறந்த உதா ரணமாக இருப்பதை இன்றும் நாம் பார்க்கலாம்.
வரிவடிவினதாகிய எழுத்துக்கள் தோன்றியது போலவே நம்மாற் பேசப்படும் ஒலி, ஓசை, இசைப்பு உருவங்களும் தோன்றியிருக்கின்றன என்பதை நாம் நன்கு தெரிந்துகொள்ள வேண்டு மாயின், கற்காலவாசிகளை அணுகிகின்று பார்க்கும் போது மிக இலகுவில் விளங்குகிறது.
ஆதியிலே வார்த்தையானது. ஆம். உலகங்கள் உண்டாவதற்கு முன்னுள்ள காலத்தில், நாதம் ஒன்றே நித்தியப் பொருளாக இருந்தது. அந்நாதம் உயிராக இருந்து வந்தது. அவ்வுயிர் உடலைப்பிறப்பித்தது. ஆத லின், நாத தத்துவத்தில் இருந்தே உருவ - உயிர்த் தத் துவங்கள் பிறந்திருக்கின்றன. எக்காலத்தில் இருந்து மனித உடல் இயக்கப்பட்டதோ, அக்காலத்திலிருந்தே ஒலிவடிவங்களும் வளரத்தொடங்கின. நாதத்தில் இருந்து உருவமும் உருவத்தில் இருந்து நாதமும்

Page 20
24
பெறப்படுகின்றன. ஆதலின், நாதம் இன்றேல் உருவ மில்லை; உருவம் இன்றேல் நாதம் இல்லை.
ஆதிகால மக்களின் முதல் தொனி வடிவுகள் உயிரோசையாகவும் ; மெய், உயிர்மெய் ஓசை வடிவுகளாகவும்; தனித்துத் தனித்தும் இயங்கி வந்திருக்கின்றன. இதற்கு உதாரணமாக, மிக மிகச் சிறு குழந்தைகளை நீங்கள் உற்று நோக்கி ஞல் தெரியவரும். பேச்சுவாசனை அற்ற குழந்தை கள் ஒரு பொருளைப் பார்த்தோ, பாராமலோ ; கேட்டோ, கேளாமலோ ; அதன் பெயரை உச் சரிப்பதற்கு ஆற்றல் அவர்களுக்கு அமைக்கப்பட வில்லை. இயற்கையாகவும் சுயேச்சையாகவும் ஆ. ஊ, ஈ போன்ற உயிர் ஒலிவடிவுகளையும் ம், ன் ; மா, தா, பா போன்ற மெய், உயிர்மெய் ஒலி வடிவுகளையுமே மு த லி ல் வெளியிடுகின்ருர்கள். நாட்கள் செல்லச் செல்ல குறைச்சொற்கள், மழலை மொழி ஓ  ைச க ள் அவர்களிடத்திற் கண்டுபிடிக்கப்படுகின்றன. ஈற்றில், கீழ்ப்பிரிவு மேற்பிரிவுகளிலே இலகுவான இசைப்புச் சொற் களின் உச்சரிப்புக்கள் அவர்களிடத்தில் பதிவு செய்யப்படுகின்றன. சித்திர விளக்கங்களுடன் எழுத்து - சொற்களை அவர்கள் இசைத்து அவ்வய தில் பாடம்பண்ணுகிருர்கள் என்பதை இங்கு குறிப் பிட வேண்டியிருக்கிறது.
இன்னும் ஓர் எடுத்துக்காட்டாகச் சொல்லப் புகின், நமக்கும் திடீரென ஓர் அபாய நிகழ்ச்சி தோன்றும்போது, நாம் சொற்களைப் பிரயோகம் செய்யமுடியாது, ஆ, ஐ, ஓ, ஊ, ஏ என்பன போன்ற உயிர் எழுத்து ஓசைகளை மட்டும் இசைக்க முடிகிறதை நாம் உணருகின்ருேம் அன்ருே ? இவைகளை அவதானிக்கும்போது அக்காட்டு மக்க ளிடையே எழுத்து, சொல் அறிவுவளர்ச்சி நிலவா விடினும், ஒலி இசைப்புக்களும் மழலைமொழி

25
ஓசைகளும் கிளம்பி இருக்கின்றன என்று தெரிய வருகிறது.
எழுத்து - சொற்கள் பிறப்பதற்கு முன்னே, உணர்ச்சி - கருத்துக்களின் ஒலி - வரி வடிவங்கள் பிறப்பதற்கு முன்னே இரண்டே இரண்டு சொற் கள் மட்டும் கற்கால ஆதிமனிதர்களால் பேசப்பட் டிருக்கிறது என்று சொல்லும்போது, 15ாம் ஆச் சரியப்பட என்ன இருக்கிறது? என்றும் பேச முடியாத ஊமைகளாயினும் சரி, கலை அறிவு பெருத கல்லாதவராயினும் சரி, அன்று பிறந்த குழந்தைக ளாயினும்சரி அவ்விரண்டு இயற்கை மொழிகளும் அவர்களால் என்றும் - எங்கும் பேசப்பட்டுவருகின் றன. எனவே, அவ்விரு மொழிகளே மூலவேர் மொழிகள் என்றே அழைத்து மதிக்கவேண்டும். அவைதாம் அம்மா அப்பா! ஆம். அவ்விருசொற் களும் மனிதவுடல் அமைப்புத் தத்துவத்தின் இயற்கைச் சொற்களாகும். இதுபோன்றே அக் காலத்தில் சில பல எழுத்தோசைகளும் சொற்க ளும் தாமாகப் பிறக்கும் சத்திபெற்றனவாக இருக் திருக்கின்றன.
மனித உணர்ச்சி உச்சநிலையில் ஏறும்போது தான் எழுத்து - சொற்களின் ஒலியோசை இசைப்பு கள் கிளம்புகின்றன என்பது தெளிந்த உண்மை யாக இருக்கின்றது.
சொல்லாக்கத்தைக் கொடுக்க முன்வந்த எழுத் குக்கள், முதலில் அம், அ அ; அ ப், அ அ போன்ற குறில் ஓசைகளாக இசைக்கப்பட்டதினுல் நெட் டெழுத்துக்களின் தோற்றத்திற்கு வழிவகுத்த அதுடன் அளவுகால எண்ணிக்கை - மாத்திரைகளை யும் கணிக்க முடிந்தது. ஒலி இசைப்பு உயிராகி, மெய்யாகி, உயிர்மெய்யாகிக் குறிலாகி, நெடிலாகிக் கூட்டெழுத்துச் சொல்லாகி, பின்னர் வாக்கியமா

Page 21
26
கின்றது. சொல்லாக்க காலத்தில் பெயர்ச் சொற் கள் தாம் முதலிற் ருேற்றப்பட் டிருக்கவேண்டும் என்பதற்கு அடையாளத் தோற்றமாக, முற்கால மக்களால் செதுக்கப்பட்ட ஆயுதம், மிருகம், பட்சிவகைகளையும் அவற்றின் உறுப்புச் சித்தி ரங்களையும் 15ம் ஆய்வுக் கண்களாற் பார்க்கின்ருேம். நாளடைவிற் காரணத்தினுலும் இடுகுறியினுலும் காரண இடுகுறியினலும் பலப்பல பெயர்ச் சொற் கள் தோற்றப்பட்டன என்றும் அறிகின்ருேம்.
இவ்வண்ணம், வரிவடிவு - இசைப்புக்களினல் பிறந்த எழுத்தும் பேச்சும் இலக்கியக் கலைக்கு உடலும் உயிரும்போல் அமைய வழிவகுத்த ஒளிப் பதிவாகிய சித்திரச் சிற்பக் கலைகளை மட்டும் நாம் மதித்துப் பாராட்டுதல் போதாது. ஒலிப்பதி வாகிய எழுத்து, சொல்லோசை வடிவுகளை எழுப்பு வதற்கு முன்னின்ற 5ாதத்தைப் போற்றுவ அதுடன், ஆதி மனிதகுலம் அதை எவ்வாறு பயன் படுத்த விரும்பியது என்பதையும் சிறுக நாம் ஆராய முயலவேண்டுமன்ருே ?
இசை
மாணமோ, மரியாதையோ ... அவர்களுக் கென்ன ? அக் காட்டு மக்களுக்கு அது தெரிய வில்லை. பசியும் பசிக்கு உணவுக்தான் அவர்க ளுடைய அன்றையத் தேவை என்ருல், அத் தேவைக்கு உத விய வையே பகுத்தறிவாற்  ைக ஆா க் கப் பெற்ற வில்லும் வேலும் என்று முன்பதாகக் கூறியிருங் தோம். பயங்கரக் காட் டின் மத்தியில் பயப்பா
 

27
டுடன் காலங் கடத்திய அம் மனிதகுலத்துக்கு, இயற்கையும் அதன் காலநிலைகளும் அவ்வப்போது துணை செய்யவில்லையாயினும், வீரத்தின் சின்னம் என்று பெயர்தாங்கிய வில்லும் வேலுமே அவர்க ளிடம் தோன்றிய அச்ச மெய்ப்பாட்டுக்குத் தக்க முறையில் அபயம் கொடுத்திருக்கின்றது.
கொடிய வனத்து விலங்குகளை வதைத்துப் பழிவாங்கும் எண்ணம் ஒருபுறம்; உணவின் தேவை இன்னெருபுறம். இவைகளுக்கிடையில் உருவான கற்காலத்தின் நவீன ஆயுதமாகிய வில்லும் வேலும் அவ் வேடர்களின் குறிக்கோள்களுக்கு மட்டும் அதுணேயாக இருக்கவில்லை என்பதையும் நாம் நன்கு உணரவேண்டும்,
பசியும் தாகமும், குடும் குளிரும், வானத்தின் முழக்கமும், வாயுவின் வேகமும், வனத்தின் விலங் குகளும், அவற்றின் கர்ச்சனைகளும் மக்கள் குலத் அதுக்கு ஒன்றன்பின் ஒன்ருக உணர்த்தப்பட்டு வங் திருக்கின்றது எனக் கூறும் போது, இசையின் தொடக்ககாலமும் அக்காலத்திலேயே தோன்றி யிருக்கிறது எனவும் அறிந்து கொள்ளுகின்ருேம். இயற்கையின் மாறுபாட்டினல் ஒலி, ஓசைகள் ஆங் காங்கு வேறுபாட்டுடன் இசைக்கப்பட்டாலும் மக் களின் உள்ளத்தை மிக எளிதில் ஈர்த்தெடுக்கும் ஓசையானது, கற்கால வேடரின் வில்லிலிருந்தே முதன்முதலில் பெறப்பட்டிருக்கின்றது. ஆம். வீறிட்டுப்பறக்கும் வேலின் வில்லிலிருந்து இன் னிசை கிளம்பியிருக்கின்றது என்று நாம் தெரிந்து கொள்ளுகின்ருேம், மெய், வாய், கண், காது, 15ாசி இவற்றிற்கு அப்பால் கின்று இயங்கும் ஆன்ம தத்துவத்துடன் அவ் வோசையின் எழிலுணர்ச்சி கலக்கப்பட்டிருத்தலால், மனித உடலானது இசை
* இசைத்தலினுல் இசை தோன்றியது எனக் காண்க

Page 22
28
யின்பத்தை அக்காலக்தொட்டே அனுபவித்து வக் திருக்கிறது என்று கூறவேண்டும்.
காட்டுக் கொம்பரும் அதன் கொடியும் கற் கால மனிதர்களின் உடற் கவலையுடன் உள்ளக் கவலையையும் அதுடைத்துவைத்த அருமருந்து என்று சொல்ல விழையும்போது, மனித வெற்றியின் மறை யாச் சின்னமாகிய வேலையும், மனத்தின் நல் அமைதிக்கு வழிகாட்டிய வில்லையும் 15ம் அறிவுக் கண்களுக்கு எடுத்துக்கொள்ள வேண்டுவது அவ சியமாகு மன்ருே ? இன்று நம்மால் கேட்டு இன் புறப்படும் வாத்திய இசையை ஆய்ந்து பார்க்கும் போது, அக் காட்டு வேடரால் மீட்டப்பட்ட வில் லின் விண்ணிலிருந்தே தொடர்ந்து வளர்க்கப்பட் டிருக்கிறது என்று புலப்படுகின்றது.
பாமரர் முதல் பண்டிதர்வரை இக்காலத்தில் புகழ்க்அது ஏற்றும் முற்கால வில்லுப் பாட்டைச்
சிறிது சிந்தித்துப் பார்க்கும்போது, வேடரின் ஆரம்ப இசைஞானமும் அவரின் ஆய்வுத்திறனும் நம் அறிவுப்பார்வைக்கு எட்டுகின்றன. சுவையோ சைகள் இசைக்கப்பட்டுப் பலப் பல விகற்பப் பண் களாக உருமாறும் அக்காலங்களில், அப் பண் ணரினங்களுக்கு இன்றியமையாததாகிய நாத சுர அலைகளும் அவற்றின் கால அளவுகளும் தோற்றப் பட்டிருக்கின்றன என்பதற்கு, பிற்கால வளர்ச்சி பெற்ற வில் வடிவ யாழ்க் கருவிகளைப் பார்க்கும் போது நன்கு தெரியவருகின்றது.
 

வில் வடிவ யாழினங்கள்
1 வில் யாழ் I சீறி யாழ்
III JF(3ss a L— யாழ் IW பேரி யாழ்

Page 23
80
வில்யாழ், சீறியாழ், சகோடயாழ், பேரியாழ் முதலிய பூர்வீக இசைக்கருவிகள் வில்லின் வடிவை ஆதாரமாகக் கொண்டு ஆக்கப்பட் டிருக்கின்றன என்பதற்கு, அவற்றின் உருவ அமைப்பு - வடிவம் முதலியன நமக்கு மிகவும் உதவுகின்றன. இக் காலத்தில் நாம் கேட்டுணர்ந்து மகிழும் இன்னி சைக் கலைகளுக்கு அத்தியாவசிய பக்க இசைக் கரு விகளான நரம்புக் கருவிகளும், தோற்கருவிகளும், அதுளேக்கருவிகளும், கஞ்சக்கருவிகளும் முற்கால மூதாதையரின் விடாமுயற்சியின் விளைவாகும் என்ப தற்கு, அவர்களின் வாழ்க்கை வரலாறுகள் ஆங் காங்கே ஆதாரமாக இருக்கின்றன. இவைகிற்க.
வேடரால் இயற்றப்பட்ட செயற்கை வில்லின் நாதம், இசைக்கலையை மு த லில் அவர்களுக்கு உணர்த்திவைத்த தன்மையைப் பற்றி ஆராயும் இத் தருணத்தில், அவர் க ள |ால் இசைக்கப்படும் ஒலி, ஓசைகள் அப் புனிதக்கலைக்கு எவ்வண்ணம் உதவிற்று என்பதையும் சிற்றளவு உ  ைர த் த ல் வேண்டும்.
மனித ஒசையிசைப்பு அவற்றின் கருத்து முதலி யனவற்றை நாம் தெரிந்து கொள்ளும் இத் தரு ணத்தில், பறவை - மிருக இனங்களின் ஒலியிசைப்புக் களினல் பெறப்படும் தன்மைகளையும் முதலில் நாம் அறிதல் இங்கு தகும்.
முதன் முதலில் ஓர் உருவத்தைப் பார்க்கும் போது விருப்பு-வெறுப்பு அற்ற நிலையில் நாம் இருந்தாலும், பின்னர் அதன் குரல் ஓசையைக் கேட்கும்போது ஒருவித உணர்ச்சி இயல்பாகவே நம்மில் தோன்றுவதை அறிகின்ருேம். பார்க்கப் படும் உருவம் மிக அழகாக இருந்தாலும் அதன் பயங்கர நாதத்தைக் கேட்ட அக் கணப்பொழுதிற் ருனே அவ்விடத்தைவிட்டு அகன்றுபோக நமக்கு

31
மனம்வருகிறதன்ருே? பயங்கரக் கர்ச்சனை ஊளை, உறுமல், அலறல், குலைத்தல்போன்ற அவலச் சத்தங் களைக் கொடுக்கும் எவ்வகையான மிருகங்களை நாம் நினைத்தாலும், அவற்றின்மேல் இயற்கையாக ஒரு வெறுப்புணர்ச்சி வெளிப்படுகின்றது அல்லாது விருப்பன்று.
கூரிய கொம்புகள் பெரிதாக நீண்டு வளைந்து இருந்தாலும் பசுவின் அமைதியான ஓசை அதன் மீதுள்ள விருப்புணர்ச்சியை மக்களிடத்தில் அதி கம் தூண்டச் செய்கிறது என்று நாம் நினைக்கும் போது, கொம்பில்லாத சாதுப் பிராணியாகிய கழுதையின் அலறற் குரலை 5ாம் கேட்க மறுப்ப அதுடன் அதன் குரலின் ஒசையால் அவமதிப்புப் பிராணியாகவும் அது இழிவுபடுத்தப் படுகின்றது.
பறவைகளிற் பொதுவாக எல்லாம் இனிய ஒசைகளை இசைத்தாலும் காகம், ஆக்தை முதலிய சில பறவைகளின் ஒலிகளைக்கேட்டு இன்புற முடிவ தில்லை. குயிலின் உருவம் நிறத்திற் கருமையாக இருந்தாலும் அதன் இன்னிசை ஓசையினல் மனித உள்ளத்துக்கு ஓர் அமைதிநிலை தோன்று கிறது. எனவே, நாத இசைப்பை வெளியிடுவதில் குயில் மக்களின் விருப்புகிலைக்குப் பாத்திரமாக வாழுகின்றது என நாம் கண்டுகொள்ளுகின் ருேம்.
இவ்வண்ணமாக, அவைகளின் ஒலி யிசைப் புக்களினல் எமக்கு விருப்பு-வெறுப்புக்கள் மட்டும் தோன்றுவதில்லை. அவற்றின் குணங்களும் மன நிலைகளும் இலகுவில் பெறப்படுகின்றன என்பதை நாம் அறிகின்ருேம்.
காட்டில் வனவேட்டை ஆடிவந்த வேடரின் ஒலி யோசை வடிவுகள் மிகத் தொடக்க காலத்தில் கருத் துக்களை வெளியிடாது இருந்தாலும், நாளடைவிற்

Page 24
32
காட்டுமிருகங்களின் வெவ்வேறு விதமான ஒலி வடிவுகள் அவர்களின் மனத்தில் நன்கு பதிவு செய் யப்பட்டு அதன் நிமித்தம் அச்சம், வெகுளி, வீரம், வியப்பு, உவகை, அதுக்கம் முதலிய மெய்யுணர்ச்சி யின் சுவைத் தொனிகளாக அவை மாறி அம் மக்களால் இசைக்கப்பட்டிருக்கின்றன. மிருகம் பறவைகளிலுள்ள ஒலியிசைப்புக்களினுல் மக்க ளுக்கு மன நிலைகள் எவ்வண்ணம் மாறுபாடு அடைகின்றனவோ அவ்வண்ணமே அவர்களது ஒ லி யோ  ைச இசைப்புக்களினலும் விருப்பு, வெறுப்பு நிலைகள் விளங்கத்தொடங்கின என்று சொல்ல முன்வரும்போது, ஆதி மக்களின் இசைப் பொலிகளாகிய உயிர், மெய், உயிர்மெய் ஒலிவடிவு களினல் மட்டும் அச்சுவைகள் முதலில் வெளி யிடப்பட்டிருக்கின்றன என்பதை நாம் இங்கு கூறவேண்டும்.
ஆதிக் குடிகளின் காட்டுவாழ்க்கையில் அவர்க ளுக்குப் பயன்பட்ட சித்திர - சிற்பக் கலைகளின் அறிவும், சைகையில் இருந்து பெற்ற செய்கைக ளும் ஒருவரின் மனக்கருத்தை மற்ருெருவருக்கு வெளிப்படுத்த உதவிய புறக் கருவிகளாக உரு வெடுத்தனபோல, அம்மனிதரின் இயற்ருெணிக களாகிய உயிர், மெய், உயிர்மெய் எழுத்தோசைக ளிற் சிலவும் அவர்களுக்கு அக்காலத்தில் அகக் கருவிகளாக அமைந்திருந்தன. சித்திரங்களை வரைந்த தொடக்க காலத்தில் அவர்களின் அகப் பாட்டு உணர்ச்சிகள் மெய்ப்பாடாகியதுபோல, சொற்கள் தோன்ருத அதே காலத்திலும் ஒலி வடிவுகளால் உணர்ச்சிச் சுவைகள் அவர்களிடம் இருந்து வெளிப்பட்டன என்பதற்கு, அத்தொனி வகைகளின் இசைப்பு முறைகள் ஓர் எடுத்துக்காட் டாக விளங்குகின்றன.

33
நாத - உருவத்தின் பேத நிலைகளுக்கு ஏற்றவாறு உணர்ச்சியும் அதன் சுவையும் வேறுபடுகின்றது.
நிற அலைகளினல் குண பேத நிலைகளை அறியத் தொடங்கிய அக்காலத்து மனிதர், 15ாத அலைகளினு லும் அவற்றை நன்கு புரிந்து கொள்ளக் கூடியவ ராக இருந்தனர் என்றும் அறிகின் ருேம்.
பண்
காட்டு வாழ்க்கையில், வேட்டுவ மக்களால் இசைக்கப்பட்ட ஒலியிசைப்புக்கள் அக்காலத்து வாழ்வு மொழியாக அவர்களுக்குப் பயன்படுத்தப் பட்டன என்று நாம் கூறப் புகும்போது, அவ்வித இசைப்புக்களில், * பண் (இராகம்) கலக்கப்பட்டி ருந்தது என்று சொல்லினும் 5ாம் வியக்கவேண் டியதில்லை. தொலைவில் இருக்கும் இன்னெருவரை அழைப்பதற்கு உபயோகப்படுத்தும் குறியாக உயி ரோசைகளை நீண்ட குரற்ருெனிகளாகப் பயன் படுத்தும் வேளைகளில், அவலம், அச்சம், வீரம் போன்ற பற்பல சுவைகள்பட இசைத்துக் கருத்துக் களை விளக்கியிருக்கிருர்களென்றும் தோன்றுகிறது. ஏன்? இன்றும்கூட அடர்ந்த காடுகளிலும், பரந்த வயற்பரப்புகளிலும், சமுத்திர வாழ்க்கையிலும் அத் தகைய குரற்ருெனிகளினல் தத்தம் கருத்துக்களை மிக எளிதில் தெரிந்து கொள்ளுகிருர்கள் என்று நாம் அறிகின்ருேம் அன்ருே ?
ஆதி மனிதரின் காட்டு வாழ்க்கையில் அச்ச உணர்ச்சியே ஆரம்ப உணர்ச்சியாக இருந்திருக் கிறது என்று முன் கூறியிருந்தோம். அவர்களின் ஒலி, ஓசை, இசைப்புக்களிலும் அச்சச் சுவைப் பண்ணே முதன்முதலில் இசைக்கப்பட்டிருக்கின்
-rr
* பண்பை உணர்த்தும் இசைப்பொலி பண் எனப்படும்,

Page 25
34
றது என நாம் அறிகின் ருேம். கண்ணினல் காணப் பட்ட மெய்ப்பாட்டுச் சுவைகளை அக்காலத்தில் காதினுலும் கேட்டு உணர முடிந்தது என்ருல், 15ம் மூதாதையரின் ஒலியிசைப்புப் பேதங்களினற்பண்ணி னங்கள் தோன்றியும் வில்லிற் பொருந்திய விண் ணுேசை விளக்கம் பெற்றும் இருந்தது என்று நாம் எண்ணிக் கொள்ள முடிகிறது.
பேச்சுக்கள் பேசப்படாத அக் காலங்களில் இசைக்கலையின் தொடக்க காலம் வேட்டுவ மக் களுக்கு இன்பம் கொடுத்தது என்ருல், அவ்வித மெய்யின் பத்துக்குக் காரணம் அவர்களின் உணர்ச் சிச் சுவைகள் அடங்கிய இயற்ருெனிவகைகளும் அவர்களால் ஆக்கப்பட்ட வலிய வில்லின் செயற் கை அழகோசையுமே எனக் காணலாம். உணர்ச் சியும் அவ்வுணர்ச்சியில் இருந்து எழும்பிய இசைச் சுவைகளும் சிற்சில பண்வரிசைகளை வேடருக்கு அளித்தன ஆதலின், அப் பண்ணினங்களின் உயிர் 15 ர டி யா கி ய சு ர அலைகளும் அதன் 5 TGN) அளவுகளும் அக்காலத்திலேதான் உணர்த்தப்பட் டிருக்கின்றன என்று நாம் தெரிந்துகொள்ளுகின் ருேம்.

கற்காலச் சுவைகள்
உள்ளத்து அழகுணர்ச்சியின் மெய்ப்பாடே சுவை எனப்படும்.
ஆதியந்தம் அற்ற ஓர் உண்மை உயிர்ப் பொருளின் சத்திப் படைப்பே இயற்கை என்னும் ஐம்பெரும் பூதங்களாகிய மண் நீர் தீ காற்று ஆகாயம் என்பனவாம். ஓரறிவு முதல் ஆறறிவு வரையுமுள்ள பலகோடி உயிரினங்கள் யாவும் அவ் வியற்கைச் சத்தியைத் தாயகமாகக் கொண்டே இயங்குகின்றன. அவற்றுள் மனித இனம் ஒன்று மட்டும் பகுத்தறிவின் துணை கொண்டு வாழுகின் றது என்ருல், அவ் வாழ்க்கையிற் கலந்துள்ள இன்ப - துன்ப நிலைகளின் புறப்பாட்டு வடிவமாக அக் கவின் சுவைகள் தோற்றப் படுகின்றன. உலகி லுள்ள உயிரினங்கள் தத்தம் மனநிலைகளை ஆங் காங்கு வெளிப்படுத்துகின்றனவாயினும், அவற் அறுள் ஒன்ருகிய மனித இனத்தினலேயே அகம்-புற வடிவங்லைகள் நன்கு தெளிவுறுகின்றன.
ஆதிமனித வாழ்வு இன்ப - துன்பமற்ற நிலையில் இருந்தது. அந்நிலை விருப்பு, வெறுப்பு முதலிய மன நிலைகளாக மாற்றமடைந்தன. அவ்விருப்பு- வெறுப்புக் கள் கவின்சுவைகளாக வடிவெடுத்தன.
இம் மனிதகுலம் என்று உண்டாக்கப்பட்டதோ அன்றே பகுத்தறியும் வாழ்க்கையையும் அவ் வாழ் வின் மெய்ப்பாட்டுச் சுவைகளையும் பெற்றுக் கொண் டது. மிகத் தொடக்க காலத்தில், அதாவது, மனித உற்பத்திக் காலத்தில் வாழ்ந்த ஆதிமனிதரின் மன நிலைகளை இன்பமும், துன்பமும், விருப்பும், வெறுப் பும் அற்ற மிகச் சிறிய குழந்தைக்கு உவமானமாய் ஒப்பிடலாம் என்று கூறும்போது, அக்காலத்திலே

Page 26
36
அவர்கள் செயற்படாத மனவமைதியுடன் தோற் றப்பட்டார்கள் என்று தெரியவருகின்றது. காலப் போக்கில் அவர்களின் உணர்ச்சிகளும் அவற்றின் வழியாக விருப்பு, வெறுப்பு முதலான குணங் களின் பிரதிபலிப்புக்களும் பெறப்பட்டிருக்கின்றன என்று பின்னர்த் தெரிந்து கொள்ளுகின்ருேம். இதற்குச் சான்ருகச் சிறு குழந்தைகளின் உறக்க நேரத்தில் தென்படும் அச்சம், அழுகை, உவகை முதலிய புற நிகழ்ச்சிகளை நோக்கும்போது, ஆன்ம நிலைகளின் அறிவும் அவற்றை ஆயும் தன்மைகளும் நமக்கு எளிதிற் புலப்படுகின்றன.
அமைதி மனம் பெற்று வாழ்ந்த ஆதிகால மனித ருக்கு உணர்ச்சி நிலை வளரத் தொடங்கிய காலத்தில், அறிவும் அதன் தேவைப் பற்றும் வளரத் தொடங்கின.
பசியும், தாகமும் அம் மனிதரின் தேவைக்கு ஏற்ற உணவுப் பொருள்களை வகுத்துக் கொடுக்க முன்வந்த காலத்திலிருந்தே, அவர்களிடத்திற் பல மெய்ப்பாடுகள் தோன்றிவளர ஆரம்பித்தன என் றும் அறிந்து கொள்ளுகின்ருேம்.
மெய்யின்பம் பெறுதலே மனித வாழ்வின் குறிக்கோள் என்ருல், அழகுச் சுவைகள் யாவும் அவ்வின் பத்துடன் இணைக்கப்பட்டிருக்கின்றன. இன்னும், வாழ்வின் தேவைக்கு வழிவகுக்கும் மக்கட்குலத்துக்கு அச் சுவைகள் நன்கு உதவுகின் றன என்பதையும் 15ாம் உணருகின்ருேம்.
உண்ணும் உணவுகளில் சுவைகள் அமைந்திருப் பதுபோல, நாம் வாழும் வாழ்க்கையிலும் கவின் சுவை கள் கலந்திருக்கின்றன. சுவையின்றி உணவில்லை : அதுபோல், உணர்ச்சியின்றி வாழ்க்கையில்லை.
சுவைகள் இரண்டு வகைப்படும், அவை: அகச்சுவை, புறச்சுவை என்பனவாம். "உணவின்


Page 27

37
சுவைகளாகிய புறச்சுவைகள் * ஆறு வகையாகப் பிரிக்கப்பட்டிருப்பது போலவே கவின் சுவைகளா கிய அகச் சுவைகளும் ஒன்பதாக வகுக்கப் பட்டிருக் கின்றன. அவை :
அமைதி, அச்சம், அவலம், வெகுளி, வீரம், வியப்பு, உவகை, இழிவு, அன்பு என்பனவாம்.
இனி, அவ் வழகுச் சுவை வரிசைகளினது வரலாறுகளை இங்கு சுருங்கக்கூறி விளங்க வைப் பாம்.
அமைதி
உள்ளத்தின் உணர்ச்சி மனித உடலிற் பிரதிபலிப் பதற்கு முன்னுள்ள காலத்தில், ஒரேயொரு அழகுச் சுவை மட்டும் இருந்திருக்கின்றது.
ஒன்பான் சுவை அனைத்துக்கும் ஒராவது சுவையாக அக் கவின்சுவை காட்சியளிக்கிறது என்ருல், அதன் அறிவுப் பெயர்தான் அமைதி என்று பொருள் பெறுகின்றது.
அண்டமும் அதனுள் இயங்கும் இயக்கங்களும் அமைதியிலிருந்தே தோற்றப்பட்டிருக்கின்றன என் முல், (தாமாக அடங்கி என்றும் இருக்கும் தத்து வச் சுவையாக அவ்வமைதி விளங்குகின்றது. மனி தரால் உணரப்பட முடியாத அமைதி நிலையிலிருந்தே மனிதகுலம் சிருட்டிக்கப்பட்டது என்று கூறும் போது, மனித அழகுச் சுவைகளின் அடிப்படைச் சுவையாக இருந்துவந்ததும் அவ் வமைதியாகும். மண் நீர் அனல் அனிலம் வான் வடிவாகிய மெய்வளங்களில் வாழுகின்ற ஊர்வன, நீந்துவன,
* தித்திப்பு, உவர்ப்பு, அதுவர்ப்பு கார்ப்பு, கைப்பு, புளிப்பு என்பனவாம். (lp of tuto its 1 தத்துவம் என்பது மூல உண்மை

Page 28
ჯ8
பறப்பன, நடப்பன முதலிய உயிரினங்கள் யாவி லும் சிறப்புற விளங்கும் மனிதகுலம், தனது பகுத் தறிவின் பக்குவ நிலையாகிய அமைதி நிலையில் அன் ருெருகாலம் இருந்தது. ஆண் - பெண் என்னும் பேதகிலைகள் அற்றுவாழ்ந்த அக்கால எல்லேயில், ஆதிமனிதரின் உளப் பக்குவ நிலைகளின் அந்தமாக இருந்ததுவும் அவர்களுள் விளங்கிய அமைதி கிலேயே என்று கொள்ளல் வேண்டும்.
பிரபஞ்சத்தின் நாத-உருவ வரலாறுகள் தோற்றப் படுவதற்கு முன்னர், ஏகமும் அநேகமு மாக ஒன்றித்திருந்த அமைதிச் சுவை ஒன்றே அரு வாகி, உருவாகி, அருவுருவாகி ; ஒலியாகி, ஒளியாகி, ஒலியொளியாகி; ஆணுகி, பெண்ணுகி, ஆண் பெண் ணுகித் தோற்றியது. இன்ப - துன்பப் பற்றுகிலே கடந்த இறைவடிவின் புனிதச் சாயலாகிய ஆண், பெண் வடிவத் தோற்றங்கள் அவற்றின் உற்பத் திக் காலத்தில் அமைதிச் சுவை ஒன்ருல் மட்டும் அழகுபண்ணப்பட்டிருந்ததாக அறிந்து கொள்ள முடிகின்றது.
ஆதி மனிதரின் மனம், வாக்கு, காயங்கள் செயற் படத் தொடங்கிய காலத்தில், இயற்கையின் நேரமும், தூரமும் அவர்களுக்குத் தோற்றப்பட்டன.
ஆம். முக்குண, முக்கால, மூவிடங்களற்ற மா பெரும் தத்துவப் பொருளின் சிருட்டிப் பொருளா கிய ஆதி மனித உருவத்துக்குப் பொறியுணர்வும், புலனறிவும் தெரியப்பட்ட காலத்திலேதான் அச்சம் தோன்றியிருக்கின்றது, என்று நாம் தெரிந்து கொள்ளுகின்ருேம்.
அச்சம்
உளவலிமை குன்றும்போது அச்சம் உண்டாகின் pg.


Page 29

99
ஆதி மனிதன் அச்சப்பட்டான். "நான் யார்," * நான் யார்?' என்று அகம் எண்ணும்போது புறம் தோன்றுவதில்லே ; புறம் சொல்லும்போது அகம் விளங்குவதில்லை. அச்ச விழிப்பின் தொடக்க நிலையில், அவன் எழுப்பிய தத்துவ வினவில் அகித்தியத்தின் எல்லையளவும், அகம்புற வேதனை களும் நன்கு உணர்த்தப்பட்டிருக்கின்றன.
விநாடியும், நிமிடமும், மணியளவும், நாளும், வாரமும், மாதமும், வருடமும், யுகமும் அவனுக்கு அத்தருணத்தில் புலப்படுத்தப்பட்டன என்ருல், பகலிரவு அறியாது பதுமைபோலிருந்த மனிதன், பகல் வான சூரியனின் பதைபடு வெயிலாலும், கரு-வெண் முகிலினத்தின் இடி, முழக்க, மின்னல் களாலும் தாக்கப்பட்டிருந்தான். பசி, தாகம் அற் றிருந்த மனிதன் பாழும் வயிற்றின் பதைபதைப் பைக் கண்டு அஞ்சி நடுங்கினன். அம்மனிதனுக்கு உண்டாகிய அமைதியின் சீரழிவு நிலை, அவனே ஆரணியத்தின் அஞ்ஞாத வாசத்தில் முதன்முதலில் புகச் செய்தது என்றே கூற வேண்டும்.
ஆம். ஆதிமனிதன் தொடக்க காலத்தில் ஒரு காட்டு மனிதனுக வாழ்ந்து வந்தான்.
* கிர்க்குண தத்துவத்தின் புறப்பாட்டுச் சொரூப மாகிய அம்மனித உருவத்துக்கு உணர்ச்சியும், அறிவும் வளரவளர அக் காட்டினுள் வாழுகின்ற பாம்பினங்களும், பலவகையான விலங்குகளும், பிறவும் மாறுபாடுடன் தோற்றப் பட்டிருக்கின்றன. ஓரறிவு முதல் ஆறறிவு வரையுமுள்ள உயிரினங் களின் பேதகிக்லகள் அவர்களுக்கு ஒன்றன்பின் ஒன்ருகத் தெரியப்படவே, அவைகள் அக்கொடிய காட்டின் முதல் விரோதிகளாக அவ னு க் குத்
* குணமின்மை

Page 30
40
தோற்றப்பட்டன. அக்காரணத்தினுல், அமைதி யின் குழலில் வாழ்ந்து வந்த மனிதன், அச்சப் பாடுடன் அக்காடுகளின் ஊடாக ஓடியோடி அலைக் திருக்கின்ருன், எனவும் அறிகின் ருேம்.
ஐயறிவு படைத்த விலங்குகளின் பயங்கரக் கர்ச்சனைகளுக்கும் அவற்றின் அட்டூழியச் செயல் களுக்கும் அஞ்சி ஓடிய ஆதிமனிதனுக்கு, அத்தரு ணம் ஆறறிவு ஒன்றுமட்டும் உதவியளித்தது என் முல், அப் பகுத்தறிவின் பழுதுற்ற கிலேயின் தோற்றம் அச்சச் சுவையாக அவனுக்கு அழகு செய்திருப்பதை இப்போது நாம் பார்க்கின்ருேம் அன்ருே?
அந்தமாதியற்ற பரம் பொருளின் அற்புதச் சிருட்டிப்பாகிய அம் மனிதனில் இருந்து தோன்றிய அழிவுச் சுவைதான், இப்போது தென்படும் அச் சச் சுவையென்றும் நாம் எளிதில் விளங்கிக் கொள்ளுகின்ருேம்.
அவலம்
அறிவும், ஆற்றலும் சீனிக்கும்போது தோன்றிய அச்சம், அவல நிலையாக வெளிப்படுகின்றது,
அலைந்து திரியும் அக் காட் டு மனிதனிடம் இருந்து அமைதி கிலே என்று அகற்றப் பட்டதோ, அன்றிலிருந்து ஆரம்பமாகிய அச்சச் சுவையின் அயல் நிலையான அவலநிலை, இத்தருணத்தில் அவ னது உடலில் நன்கு பிரதிபலித்துக் காட்டு கின்றது.
* எங்கிருந்து வந்தாய், எங்கே செல்லுகின் முய், ஏது நீ செய்யப் போ கிருய்? உள்ளமும் உடலும் ஒன்றித்து உணர்ந்த * அனந்த ஆனந்த
* முடிவற்றது


Page 31

41
நிலை எங்கே, உயிர் வேருே, உடல் வேருே என்று ஐயுறவு கொள்ளும் இவ் விழிவான உனது அவல நிலை எங்கே? திணை, பால், எண், இடம் அற்ற ஒலியொளி வடிவின் அவ் வுன்னத தோற்றம் எங்கே, நீ எங்கே? சொல் 1"
இவைகள், நாடோடியாகிய அக் காட்டுமனித லுள் எழுந்த தத்துவ விசாரணைகள்தாம் என்று நாம் எண்ணிக் கொள்ளல் வேண்டும்.
அச்சச் சுவையின் ஆரம்ப காலத்தில், நான் யார்? எனக் கேட்டுகின்ற ஆன்மவுடல், அவலச் சுவையால் இவ்வண்ணம் அழகு படுத்தப்பட்டிருக் கின்றது என்பதை, இங்கு காம் காண்கின் ருேம்.
உலகமும் சரீரமும் மாயையினின்றும் சிருட்டி காலத்தில் தோற்றப்பட்டன.
ஆம். உலகம், சரீரம், முதலியன அம் மனி தன் தோன்றிய காலத்திலிருந்தே அவனுடன் எதிர்த்துப் போராட எத்தனித்து விட்டன. மாயை யில் மதிமயங்கிய மனித சு பா வம், அங்கே வேதனை கொண்டது. தன்னைத் தானே கண்டு உணர முடியாத துன்ப நிலையுடைய மனிதன் எப்படி அவைகளை வெல்லப் போகின் முன் ? அகம் புறப் பற்றுக்களற்று வாழ்ந்தவன் வெறும் புறப்பற் றில் நாட்டங் கொள்ள முயன்றதால், ஆன்ம தத்து வத்தின் உட்பொருளே அப்பொழுது அவனல் அறிந்துகொள்ள முடியவில்லை. அவனுக்கு எல்லாம் துன்பத்தின் சாயலாகத் தோன்றியது என்றே கூறவேண்டும்.
அச்ச, அவலச் சுவைகளின் தத்துவ விசாரணை களினல் அக்காட்டு மனிதனுடைய அகம் அவத்தை அடைந்ததின் விக்ளவாக, புறத்தில் ஓர் அழகுச்

Page 32
42
சுவையும் கூடவே தோன்றி வளர்ந்து வந்தது என 5ாம் இப்போது அறிந்து கொள்ளுகின்ருேம்.
பொறி - புலனடக்கமும், தெய்வத் தன்மையும் கொண்டிருந்த மூல மனித வடிவத்தின் கோலச் சுவையன்று அச்சுவை ; தருமநெறி கெடும்போது தோன்றுகின்ற அழிவுக்குக் காரணமான அலங் கோலச் சு  ைவ தா ன் அது. மனித உற்பத்திக் காலத்தில் நிலவிய சாத்துவிக, குணசீல முறைகள் சீரழிந்த பின்னர், அழிவின் வளர்ச்சிக்கான பஞ்சமா பாதகச் செயல்கள் மல்கிப் பெருகின, என்பதற்கு அறிகுறிச் சு  ைவ ய ர க எழுந்த சினந்தான் அவ் வெகுளிச் சுவையாகும்.
வெகுளி
சீற்றம் உண்டாவதற்கு அச்சம் அடிப்படையாக இருக்கின்றது. மனத்தின் வேதனை மட்டுப்படுத்தப் படாமையினுல் அச்சீற்றம் மெய்ப்பாடாகின்றது.
ஆக்கச் செயல்களுக்கு உதவுகின்ற ஐம்பெரும் பூதங்களாகிய, வானும், வானில் வழியும் வாயுவும், மண்ணும், மண்ணெடு கலந்த ருேம், நெருப்பும் அழிவின் காலத்துக்கு உதவ வரும் அச் சீற்றச்சுவை யால் அவ்வப்போது அழகுபடுத்தப்படுகின்றன. அது போன்றே அவற்றில்வாழும் உயிர்ப்பிராணிகள் யாவையும் அச் சினச் சுவை அழகு செய்கின் றது என்பதை இங்கு 15ாம் அறிந்து கொள்ளுகின் ருேம்.
சர்வாதிகாரம் உள்ள சத்திப் பொருளின் சாயலாகத் தோற்றப்பட்ட மனிதன், தன்னிலும் கீழ் அறிவுள்ள உயிர்ப்பிராணிகளை அடக்கியாள முற்படுகின் ருன்.
ஆம். தன்னிலே உருமாறும் மெய்யின் பத்தின் வடிவமாக விளங்கிய ஆதிமனிதன், வெகுளி கிலே

جيج ്യ NM 欧 ല്ലബ
2

Page 33

45
யுடன் அக் காட்டின்மத்தியில் கவர்ச்சிமையமாக அவ்வேளை தோற்றப்பட்டான். ஐம்பூதங்களினலும் அ வ ற் றி ன் காலமாறுபாடுகளினலும் மற்றும் கொடிய உயிர்ப்பிராணிகளினுலும் அவலநோய் அடையப் பெற்ற அம்மனிதன், வெ ஞ் சி ன ங் கொண்டு அங்கே தோற்றப்பட்டான். அவனிடத்தி லுள்ள அவ் வெகுளிச் சுவை, ஐயறிவுள் அடங்கிய அத்தனை உயிரினங்களையும் வீறு கொண்டு அவ் வேளையிற் கணித்தது என்ரு ல், அவ்வுயிர்க்கோடி களின் ஆதித் தலை அதிகாரியாக இடம் பெற்ருன் என்றே நாம் கூறவேண்டும்.
"நான்', ' எனது' அற்ற அமைதிநிலை அகன்று, இப்போது "நான் மனிதன்”, “யாவும் எனது' என் லும் ஆணவ மலத்தின் சாயற் சுவையாகிய வெகு ளிச் சுவை தோற்றுகின்றது என நாம் கண்டு கொள்ளலாம்.
அகமும் புறமும் சினத்தினுற் சீர்கெட்டுப் போகின் றது. அகத்தின் சீர்கேடு அழிவை உண்டாக்குகின்றது.
அக் காட்டு மனிதனுக்கு உண்டான வெகுளி நிலையினல் அவனுடைய ஆருவது அறிவு ஐயறிவா கத் திரிந்து, பலப்பல பழிச்செயல்களை அவ்வேளை யில் ஆக்கத் தொடங்கிற்று என்று நாம் அறியும் போது, அவனது ஆற்றலுக்கு ஆதாரமாக மறைக் திருந்த வீரநிலை உடன் தோற்றுகிறது என்றும் காணமுடிகிறது. மக்களிலிருந்து வெளிப்படும் சினத் துக்கும், மற்றைப் பிராணிகளின் சினத்துக்கும் உள்ள வேறுபாட்டை நாம் நன்கு ஆய்ந்து அறியும் போது, அவர்களுக்குள்ள பகுத்தறிவும், வீரநிலையும் நன்கு புலப்படுகின்றன.
வீரம்
பூதங்களிலிருந்து இயற்கையாற்றல் பிறப்பதுபோல்,
அவற்றில் வாழும் பிராணிகளிலிருந்து வீரம் தோற்றப் படுகின்றது.

Page 34
44
ஐம்பூதங்களின் தனி ஆற்றலே விளக்குகின்ற கடுவெயில், மின்னல், இடி முழக்கம், பேய்மழை, பெரும்புயல் என்பனவற்ருல் உலகிலுள்ள உயி ரினங்கள் அச்சம் அடைந்திருந்தாலும், அவற்றுள் ஒன்ருகிய மனித இனம் மட்டும் அவற்றினல் மிக வாக மனவேதனை அடைந்து வருகின்றது. ஆதி காலந்தொட்டு இன்றுவரை நடைபெற்றுவரும் பூதவணக்கம், அம் மனிதர் கொண்டுள்ள அச்சப் பாட்டுக்குத் தக்க சான்ருக அமைந்திருக்கிறது. எனக் காணுகின்ருேம். ஆதலால், இயற்கையின் வீரநிலை அவர்களின் ஆரம்ப இறைவணக்கத்துக் குக் காரணப் பொருளாக விளங்கிற்று எனக் கூற வேண்டும்.
பூதவழிபாடு தோன்றிய தொடக்க காலத்திலேயே வீர வழிபாடும் தோன்றியது.
சகல தத்துவங்களின் தனிநாயகமாக விளங் கும். பரமாத்மனின் பிம்பமான மனிதன், அச்சப் பாடுடன் கூடிய வீரகிலேயுடனும் தோற்றப்பட் டான் என்று சொல்லுகையில், அவனுடன் அக் காட்டில் வாழ்க்குவரும் அதுட்டப் பிராணிகளுடன் தொடுத்த போர் நிகழ்ச்சிகள் (5மக்கு எளிதில் எட்டு கின்றன. காட்டு வாழ்க்கையில் மனித - மிருகப் போரானது வீர வழிபாட்டைத் தொடக்கி வைத் தது எனக் கூறப் புகும்போது, அம் மனிதனின் அகப் புறத் தத்துவங்களையும் அவற்றின் அறிவு, ஆற்றல்களையும் 15ம்மால் அறிந்து கொள்ள முடி கிறது அன்ருே ? சாகாத வரம் உடைத்தான ஆன்ம ஒளியின் மேற் கவசமாகிய மெய்யையும், அதன் தேவையாகிய இன்ப அதுன்பப் பேறுகளை யும் வகுத்துக்காட்ட அவனுடைய வீரம் நன்கு துணை செய்திருக்கின்றது.

*్క སྣང་
རྙི་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་ ܗܝ

Page 35

45
வீரம், உச்சநிலை அடைந்த அக்காலத்தில், உணர்ச்சியுடன் உண்டாக்கப்பட்ட போர்க் கருவி களின் துணைகொண்டு அவன் போர்செய்யத் தொடங்கினன். மனிதனுக்கும் ஏனைய பிராணி களுக்கும் உள்ள வேறுபாடுகளை, அவனுடைய வீரம் அத்தருணத்தில் நன்கு விளக்கியிருந்தது என்ருல், அப்போர் நிகழ்ச்சிகளின் புறப்பயணுகிய வெற்றி, தோல்விகள் அங்கு பெறப்பட்டிருந்தன என்று தெரிந்து கொள்ளல் வேண்டும்.
பஞ்ச பூதங்களின் வாயிலாகத் தோற்றபட்ட மனிதன், அப் பூ த ங் களை நன்கு ஆய்ந்தறிந்து கொள்ளவும் அடக்கியாளவும் சத்தியற்று இருக் தான் என்று நாம் அறியும்போது, போரில் அவன் கண்ட வெற்றியும் தோல்வியும் அவனிடம் தோன் றிய வீரப் பார்வைக்குத் தடையாக இருந்து வக் தன என்றும் உணருகின்ருேம்.
வியப்பு
அறிவுக்கு அப்பாலுள்ள நிலை தத்துவநிலை; அந் நிலை உணரப்படாமையினுல் வியப்புநிலை தோற்றப்படு கின்றது. அவ்வியப்பு ஆராய்வை உண்டாக்குகின்றது.
இவ்வுலகிலுள்ள பிராணிகளுள் மனிதர் மட்டும் சிந்திக்கவும் செயலாற்றவும் கூடிய பகுத்தறிவுடன் வாழுகின்றனர் என்ருல், அவர்களது சிந்தனைகளி னதும் கிரியைகளினதும் பலாபலன்களாக அறு பத்துகான்கு கலைகளும் ஆய்ந்து ஆக்கப்பட்டிருக் கின்றன, என்று நாம் அறிந்து கொள்ளுகின்ருேம். அத்தகைய கலைகள் யாவும் அறிவு அழகுக்கலைக ளாக வகுக்கப்பட்டு விரிவுற விளக்கப்படுகின்றன என்று கூறும்போது, அகப்புறப்பொருட் டத்து வங்கள் அவற்றிலிருந்து பெறப்படுகின்றன என வும் கண்டுகொள்ள முடிகிறது. அவற்றுளொன்று இயங்கும் இயற்கையை ஆராய்ந்தறிய முற்படுகிறது

Page 36
46
என்ருல், மற்ருென்று, அவ்வியற்கைக்கு அப்பால் கின்று இயக்கும் ட்ரம் பொருளே உணர்ந்து கண்' டறியப் பேராவல் கொள்ளுகின்றது. இன்னும், வேதாந்த சித்தாந்த வாதிகளாகவும் ஞான - விஞ் ஞானக்கலைஞர்கள், அறிஞர்களாகவும் ஆவதற்கு மனிதசிந்தனை ஒன்றுதான் முக்கிய காரணமாகிறது என்று குறிப்பிடும்போது, அவர்களிடம் இயல் பாகத் தோன்றிய வியப்புணர்ச்சியே அச் சிந்தனை யைப் பெருக்கிற்று என இங்கு நாம் அறிகின் ருேம். இவை நிற்க.
பிறப்பிறப்பில்லாத முழுமுதற் பொருளின் சாட்சி யான மனித அறிவுக்கு, உடல், உயிர் முதலானவை களின் தோற்றம், திரிவு, கெடுதல்களும் அவற்றின் தன்மைகளும் அப்பாற்பட்டு விளங்குவதால், வியப்புநிலை தோற்றப்படுகின்றது.
ஆமாம் 1 ஆதிமனிதன் அக்காட்டினுள் வியப்பு நிலைப் பார்  ைவ யு டன் தோற்றப்பட்டிருந்தான் என்று அறியும்போது, அம் மனிதனுடைய வியப் புணர்ச்சி அவனுக்குச் சிந்திக்கும் ஆற்றலை அளித் திருக்கின்றது எனக் கொள்ளல் வேண்டும். ஆம். வியப்பினுல் சிந்தனையையும் சிந்தனையினல் வியப் பையும் அவ்வப்போது அம் மனிதன் பெற்றுக் கொண்டான்.
காந்தத்தினுல் இரும்பு கவரப்பட்டு இழுபடு வதுபோல, உயிர் உடலறிவின் உண்மைகளையும் அவற்றின் தொடக்கம் - முடிவுகளையும் மற்றும் செயல்களையும் மனிதனுடைய அறிவு அதுருவித்துருவி ஆராய்ந்த வேளைகளிலே, வியப்புச் சுவை ஒன்று தான் அவனது அகத்தையும் புறத்தையும் அழகு செய்தது என நாம் கண்டு கொள்ளுகின்ருேம். இன்னும், அகப் புறப் பற்றுக்கள் மனிதனுடைய வாழ்வுக்குக் காரணமாக உள்ளன என்று அறியும்


Page 37

4?.
போது, அவற்ருல் பெறப்படும் நன்மை தீமை என்னும் காரியப் பொருள்கள் அவனுக்குப் பெரு வியப்பை அளித்து வந்தன என்றும் தெரிக்கு கொள்ளுகின்ருேம்.
இவ்வண்ணமாக, ஆதிமனிதனுக்கு உண்டா கிய பசியும், பசிக்குத் தேவைப்பட்ட உணவும், அதன் பொருட்டு அம் மனிதன் அச்சமடைந்து கொடிய வனவிலங்குகளுடன் தொடுத்த போர் களும், அவற்றினல் அவன் பெற்ற பெறுபேறு களும் அவனுக்கு வியப்புணர்ச்சியை அளித்த பொழுதில், மற்ருேர் இன்சுவையும் தோற்றப் பட்டிருக்கிறது என்று நாம் கூறிக்கொள்ள முடி கிறது.
Ω - 6) Φ.Ο.Ε.,
அகம் மகிழும்போது இன்பம் பிறக்கின்றது. அவ் வின்பத்தின் வடிவம் உவகையாகத் தோற்றப்படுகிறது.
பொறி, புலன்களால் உணரப்படும் நாத, உருவங் களின் நுகர்தலின்பமே உவகைச் சுவையாகத் தெரியப் படுகின்றது. கண்ணுற் காணமுடியாத ஆன்ம தத்து வத்தின் பேரழகுச் சுவையே தன்னைத்தான் கண்டு வியக்கும் மெய்யின்ப உணர்ச்சிச் சுவையாகத் திரிகின் றது. நித்திய ஆனந்தத்தின் மகிமைக்கு என்றும் பாத்திரமான பேருவகையில் ஆன்மாவின் பிரதிபலிப்பு நன்கு விளங்குகின்றது என்ருல், உள்ளத்தின் புறப் பாடாக எழுகின்ற அகப்பூரிப்பின் ஆனந்தச் சுவையே அவ் வுவகைச் சுவையாக உருவெடுக்கின்றது.
தீய குணங்கள் யாவற்றிற்கும் தலையாக இருக்கும் ஆன்மவிரோதிகளாகிய அக ங் கா ர மமகாரங்களை வென்று, தெய்வீக உவகையுடனும் நகையுடனும் விளங்கும் மனிதன், வெறும் உடல் வெற்றிகளினுல் மகிழ்ச்சி கொள்ளுகின்ருன்.

Page 38
48
அச்சம், அவலம், வெகுளி முதலான குணங் களுக்கு ஆளான ஆதிமனிதன் உவகையடைங் தான் என்று கூறுகையில், அம் மனிதனுடைய வீரமும், போரும், அப்போரின் பயனும் 15மக்கு நன்கு தெரியவருகின்றன அன்ருே ? உயிர்ப்பிராணி களுள் மனிதன் மேம்பாடுள்ளவனுக வாழுகின்ரு ன் என்ருல், அவற்றை அடக்கியாளும் ஆற்றலானது அக்காட்டு மனிதனிடத்தில் மகிழ்ச்சிநிலையை ஏற் படுத்திற்று என்றே சொல்ல வேண்டும். ஆம். அம்மனிதன் கொடிய வனவிலங்குகளுடன் போர் செய்து கொள்ளுவதற்கு உதவியாகப் போர்க்கருவி களைத் தேட விழைந்தான். அதன் விளைவாக, அவன் முதன் முதலாகக் கண்டெடுத்த கல்வரிசைகள் அவ லுக்கு அளப்பெரும் மகிழ்வை உண்டுபண்ணின. அதுபோன்றே, அக்காலத்தில் அவனல் உருவாக் கப்பட்ட பல வகையான கல்லாயுதங்களும், அம்பு வில்லுகளும், மற்றும் தீ, எலும்புபோன்ற பொருள் களும் அவனுக்கு மன மகிழ்ச்சியை மிகவாகக் கொடுத்து வந்தன என்று கூறல்வேண்டும். இன் னும், மனித - மிருகப் போரின் புறப்பயணுகிய வெற்றி தோல்விகளினல் அம் மனிதன் பேருவகை அடைந்துள்ளான் என்னும்போது, அப்போரில் அவனுடன் பொருதிய வனவிலங்குகள் இறந்து, அழிந்து போகவும் அவன் உயிர்வாழவும் முடிந்தது என்றும் நாம் தெரிந்துகொள்ளுகின்ருேம்.
பூத வீர வழிபாடுகள் மனிதனுக்கு வணக்கம், உவகை நிலைகளை ஏற்படுத்துகின்றன.
ஆதிகால மனிதன் தொடக்கத்தில் ஐம்பெரும் பூதங்களுக்கு அஞ்சிப், பின், அவற்றைக் கண்டு வணங்கி மகிழ்ந்ததுபோல, அவன் தனது போர்ச் செய்கைகளிலிருந்தும் கீழ்ப்படிதல், மனமகிழ்ச்சி முதலியவைகளை அக்காலத்தில் பெற்று வாழ்ந் திருக்கின்றன் என்று அறிகின்ருேம்.


Page 39

49
ஈற்றில், இன்ப வடிவமுள்ள இறைவனுடைய அந்தமாதியற்ற இயக்கங்களையும் அவற் று ஸ் தோன்றும் இன்ப துன்ப நிலைகளையும் அவற்றின் எல்லேகளையும் மனிதன் ஆராய்ந்தறிய விழையும் போது, முடியாமையினுற் களைப்படைகின்ருன் என் முல், அவ்வேளையில் அவனிடத்திற் சலிப்புத் தன்மை தோற்றப்படுகிறது என்று நாம் அறிந்து கொள்ளு கின்ருேம்.
இழிவு
நாத உருவ த த் து வங்களை அடிப்படையாகக் கொண்டு இயற்கை இயக்கப்படுகின்றது. அவ்வியற் கையிலிருந்து உயிர் மெய்த் தத்துவங்கள் பெறப்படு கின்றன. அவ்வுயிர், மெய்களிலிருந்து அறிவு அழகுத் தத்துவங்கள் வகுக்கப்படுகின்றன என்ருல், அவ் வறிவு, அழகுணர்ச்சிகளை ஆதாரமாகக் கொண்டே மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
மக்கள் தமது அறிவு அழகுணர்ச்சிகளினுல் இன்பத்தைப் பெறும்போது உயர் வு நிலையையும் துன்பத்தைப் பெறும்போது தாழ்வு நிலையையும் அடை கின்றனர் என்ருல், அவர்களின் சிந்தனையும் செயல் களும் அவ் வுயர்வு, தாழ்வு நிலைகளை அவர்களுக்குக் கற்பித்து வருகின்றன.
மனம், வாக்குக் காயங்களுக்கு அப்பால் நின்று இயங்கும் ஒலி-ஒளித் தத்துவத்தின் பேரியக்கத்தை மனிதன் சிந்தித்து அறிய முடியாமையினுல் தாழ்வு நிலையடைகின்ருன். படைக்கப்பட்ட பொருள்கள் யாவற்றிலும் உயர்ந்து விளங்கும் மனிதன், தன்னைப் ப  ைடத் த பரதத்துவத்தின்முன் குறைவு நிலை யடைகின்ருன்.
ஆதிமனிதன், தனக்குண்டான சினத்தினல் காட்டில் வாழும் அதுட்டப் பிராணிகளுடன் போர்

Page 40
50
செய்து அவைகளை வென்றபோதே, கீழ் மேல் என்னும் பாகுபாடுகள் தோற்றப்பட்டிருக்கின்றன. அவனுடைய போர், வேட்டை முதலான செயல் களினல் கீழ்மை, இகழ்ச்சிப் பண்புகளை அவன் அக்காலத்தில் பெற்றுக்கொண்டான் என்னும் போது, ஒரு பொருளை மற்ருெரு பொருளுக்குத் தாழ்வாகவும் இழிவாகவும் கருதுகின்ற பண்பு, அவனிடம் தோற்றப்பட்டிருக்கிறது என்று 15ாம் அறிகின்ருேம்.
வன விலங்குகளினுல் அச்சத்தையும், கேட்டை யும் அடைந்த ஆதிவாசிக்குக் காட்டுவாழ்க்கை காலகதியில் வெறுப்புணர்ச்சியைக் கொடுத்தது என்றும் பின்னர் நாம் தெரிந்துகொள்ளுகின்ருேம். மனித மிருகப்போரும் வேட்டைத் தொழிலும் அக் காட்டுமனிதனுக்கு உயிர்வதைகளை நன்கு உணர்த்தியிருத்தலினல், அவற்றிலிருந்து பெறப் படும் அதுன்ப நிலையானது அவனுக்குப் பெரும் இழிவுகிலையைக் கொடுத்திருந்தது என்று கூறின் சாலப் பொருந்தும்.
வேட்டுவ மனிதனிலிருந்து தோன்றிய சிந்தனை களும் செயல்களும், அவற்றிலிருந்து பெறப்பட்ட சித்தியும், சித்தியின்மைகளும், அதன் பொருட்டு உண்டாகும் விருப்பு, வெறுப்பு, மனமாற்றம், பேதைமைகள் முதலாம் குணங்களும் அம் மனி தனுக்குப் பற்பல உணர்ச்சிச் சுவைகளை அளித்து வந்தன என்று சொல்ல விழையும்போது, அவ னிடமிருந்து வெளிப்பட்ட இழிவுச் சுவையானது அவனுடைய வாழ்க்கையில் ஒரு பெரும் மாற் றத்தை உண்டுபண்ணிற்று என்பதை நாம் நன்கு அறிந்துகொள்ளவேண்டும்.
ஆம். காட்டு வேடனது சிந்தனையின் விளை வினல் உண்டாகிய கல், எலும்பு, வில், வேல் முதலான ஆயுத வரிசைகளும், வனப் போரும்,


Page 41

51
போரினல் அடைந்த துன்பமும் அவனுக்குப் பேர் இழிவுநிலையைக் கற்பித்ததினுல், என்றும் அழியாத அவனது ஆன்ம விசாரணை மறுபடியும் தொடக்கப்பட்ட அது.
அன்பு
தோற்றத்தின் தொடக்க காலம் அமைதியாக உள் ளது போல, அதன் முடிவு காலமும் அமைதியாக இருக்கின்றது. ஆதியும், அந்தமும், அக - புறப்பற்றற்ற அமைதிநிலையால் ஆக்கப்பட்டிருக்கின்றது என்ருல், அவ் வமைதிச் சுவையிலிருந்தே ஒன்பான் சுவைகள் அனைத்தும் தோற்றப்பட்டிருக்கின்றன. அக வுருவப் பாடிலே தோன்றிய அத்தனை அழகுச்சுவைகளும் புற உருவப்பாடாக வெளிவருகின்றன என்னும்போது, அன் புச்சுவை ஒன்றுதான் அவற்றின் அந்தமாக விளங்கு கின்றது.
* தாணுகி நிற்கும் அப்பாரிய தத்துவப் பொருள் தனித்திராமல், 1 தாமாகச் சேர்ந்து, பரந்தியங்கும் ஐக் கியப்பாட்டுடன் கூடிய மெய்யின்பப் பேறுக்கு மனிதன் உரித்தாகிருன் என்ருல், மெய்ஞ்ஞானத்தின் வெளிப் பாடாகிய அன்புநிலை ஒன்றே மூலப்பொருளாக அவ னுக்குத் தோற்றப்படுகின்றது. ஆம். அன்பின் அடிப் படையில் உருவாகிய உலகங்கள் அத்தனையும், அவற் றின் நிகழ்ச்சிகள் யாவும் மக்களின் பேரின்ப நிலை யைக் குறிக்கோளாக வைத்தே இயக்கப் படுகின்றன.
உயிர்வாழ்வதின் உண்மை, மனிதருக்கு எளிதில் எட்டுவதில்லை! பற்றின் காரணத்தினுல் அவ்வுண்மை விளக்கப்படாதிருந்தாலும், உழன்றுழன்று வாழ்வதாற் பெறப்படும் அன்புநிலை ஒன்ருல் மட்டும் அதை உணர்ந்துகொள்ளமுடிகின்றது.
* ஒன்ரு கி i Lusaur &

Page 42
53
ஆதிகாலம்தொட்டு இன்றுவரை மக்கள் இவ் வையகத்தில் வாழ்ந்துவருகின்றனர் என்னும் போது, அவர்களின் பலவிதமான சிந்தனைகளையும், அச் சிந்தனைகளாற் பெறப்படும் மன நிலைகளையும், அங் நிலைகளினல் உண்டாகும் பற்பல அழகுச் சுவைகளையும் நம்மால் எளிதில் உணர்ந்து, கண்டு கொள்ள முடிகிறது. ஒன்றன்பின் ஒன் ருக அச் சுவைகள் அவர்களிடமிருந்து தோன்றியும், திரிங் தும், ஈற்றிலே கெட்டும் போகின்றன என்பதை 15ாம் அறிந்துகொள்ளுகின் ருேம்.
எல்லாப் பிராணிகளிலும் மனிதர் மிக உயர்ந்த நிலையில் வாழ்ந்து வருகின்றனர் என்பதற்கு, அவர் களிடம் தோன்றும் அழகுச்சுவைகள் தக்க சான்முக இருந்துவருகின்றன என்று கூறுகையில், அவற் றில் ஒன்ருக உள்ள அன்புச்சுவையே அச் சுவை கள் யாவற்றிலும் தலைசிறந்து விளங்குகின்றது என நாம் தெரிந்து கொள்ளுகின் ருேம். இன்னும், பகுத்தறிவு கிலேயால் அவர்களது வாழ்க்கையிற் பலவகையினதான உணர்ச்சிச் சுவைகள் அவ்வப் போது தோற்றப் பட்டாலும், அன்பு, அருள் போன்ற இன்சுவைகளே அவ்வாழ்வின் முடிவில் கற்பிக்கப்படுகின்றன என்பதை நன்கு உணர முடிகின்றது. நிற்க.
ஆதிகால மனிதனின் வாழ்க்கை வரலாற்றினை நாம் ஆய்ந்து பார்க்கும்போது, அம் ம னித ன் வாழ்ந்துவந்த குழலில் இருந்து பல விகற்பமான பண்புகளை அவன் பெற்றுக்கொண்டான் என்று தெரிந்து கொள்ளுகின் ருேம். அத்தகைய பண்பு களிலிருந்து அவன் பல்வேறு விதமான சுவைகளை வெளிப்படுத்தி வந்திருப்பினும், ஈற்றில், அவ னிடத்தில் ஒரேயோர் அழகுச்சுவை மட்டும் தென் பட்டிருக்கிறது என்று காணுகின்ருேம். ஆம். அச்சுவை அன்பு என்று அழைக்கப்படுகின்றது.


Page 43

53
வேட்டைத் தொழிலால் உணவைத்தேடி அலைந்த வேட இனம், வேளாண்மை செய்து வாழக் கற்றுக் கொண்டது.
ஆதிகால வேடன், காட்டு வாழ்க்கையிலிருந்து நாட்டு வாழ்க்கையை ஏற்படுத்தியதின் விக்ள வாக உயிர்வதை செய்து வாழும் அவனது அற்ப வாழ்க்கைநிலை, க் ர ல க தி யி ல் உளத்தூய்மை கொண்ட உழவு வாழ்வாகக் காட்சியளித்திருக் கின்றது. பூமி திருத்தியுண்ணும் அத்தகைய புனித வாழ்வில், உயிர்களை அன்புடன் பரிபாலிக் கும் பண்பும் அக் காலத்திலேயே அவனுக்குக் கற்பிக்கப்பட்டிருக்கின்றது என காம் கொள்ளல் வேண்டும். இன்னும்,
அன்புச்சுவையின் அந்தமாகிய அமைதிச் சுவை, அவ் வுழுதூண் சுவையினுற் பெறப்படுகின் றது என்னும்போது, எல்லாம் அன்பின் வடிவ மாக ஆதி உழவனுக்குத் தோற்றப்பட்டிருக்கின் றன என்று கூறுதல் தகுமன்ருே ?
ஆம். இன்பத்தின் இருப்பிடம் அன்பு என் ருல், அறிவின் எல்லேயும் அதுவேதான், என்பதை யும் இங்கு நாம் உணர்ந்துகொள்ளுகின்ருேம்.
முற்றிற்று.

Page 44
அ. இ. மி. அச்சகம் மானிப்பாய்.


Page 45
ஈழக் க
வெ6

ல மன்ற
--