கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தமிழ் இசை

Page 1
ཊ༽ ཡོན་ཏེ། འདན་ t | 2-2}"2,
தமிழிசை அரங்கு
திரு. எஸ். கே பரராஜசிங்கம் த
டாக்டர். . Lll
சாரதா நம்பி ஆரூரன்
செல்வி,
ஷினி பத்மநாதன் தமி
アg1 ln || || தமிழ் திதி குரங்கநாதன் 6t-/pp. ந்துசமய கலாசார அலுவ
या I
 

ம் டத் தமிழ்ச் சங்கம்
சொற்பொழிவுகள்
மிழிசை பற்றிய சில சிந்தனைகள்
ாபநாசம்சிவன் கீர்த்தனைகளும் - தமிழிசையும்,
ழிசையும் நாட்டிய பாராம்பரியமும்
த்துத் தாண்டவர் கீர்த்தனைகள்
ல்கள் திணைக்கள வெளியீடு.

Page 2
முதற்பதிப்பு டிசம்பரி 1991
வெளியீடு ,
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் 9 agil Dng,
இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம், *காப்புறுதி இல்லம்" "
21, வக்ஷோல் வீதி,
கொழும்பு-2.
இலங்கை.


Page 3

பெ ாருளடக்கம்
முன்னுரை - மாண்புமிகு பி. பி. தேவராஜ் அவர்கள்
இந்துசமய, தமிழ் கலாசார இராஜாங்க
அமைச்சர்,
தமிழிசை பற்றிய சில சிந்தனைகள்:-
திரு. எஸ், கே.பரராஜசிங்கம்.
பாபநாசம் சிவன் கீர்த்தனைகளும், தமிழிசையும் :- டாக்டர் சாரதா நம்பி ஆரூரன்.
தமிழிசையும் நாட்டிய பாரம்பரியமும் - செல்வி சுபாஷினி பத்மநாதன்.
. முத்துத் தாண்டவர் கீர்த்தனைகள் -
கலாசூரி அருந்ததி பூரீரங்கநாதன்.
0.
04
O
盛名

Page 4

முன்னுரை
மாண்புமிகு பி. பி. தேவராஜ் அவர்கள் இந்துசமய தமிழ் கலாசார இராஜாங்க அமைச்சர்
சென்ற தைப்பொங்கல் தினத்தன்று தமிழிசை அரங்கொன்றை தொடர்ச்சியாக நிசழ்த்துவதற்கு முன்னோடியாக ஒரு விழா எடுக் கப்பட்டது. தமிழர் திருநாளாகிய தைப்பொங் 4 ல் தினத்தன்று தொடர்ச்சியான ஒரு தமிழ் இசை அரங்கிற்கு கால்கோல் அமைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு ஒரு முன்னோடி நிசழ்ச்சியாக இந்துசமய கலாசார அமைச்சு இதனை ஏற்பாடு செய்தது.
பாரிய அளவில் 1990-ஆம் ஆண்டில் தியாகராஜ ஆராதனை ஒன்றை நடத்தியதைத் தொடர்ந்து பல இசைக்கலைஞர்களும் இசை ஆர்வலர்களும் அந்த நிகழ்ச்சியைப் பாராட்டி தமிழ் இசை பற்றிய ஆறிவையும் உணர்வையும் வளர்ப்பதற்கு அமைச்சு முன்வரவேண்டு மென்று கேட்டுக்கொண்டார்கள். மேலும் தமிழ் இசைக் கலைஞர் களுக்கு ஒலிபரப்பும், தொலைக் காட்சியும் மாத்திரமே இருக்கின்றன. மேடைக் கச்சேரி பாரம்பரியம் தலைநகரில் சரியான முறையில் இல்லை. இதை நீங்கள் ஆற்ற வேண்டுமென அவர்களது ஆதங்கத்தைத் தெரிவித்தார்கள். இதைத் தொடர்ந்து இசைக் கலைஞர்களோடு பல ஆலோசனைக் கூட்டங்கள் அமைச்சில் நடைபெற்றது. அந்த ஆலோசனையின் பிரதிபலிப்பாகத் தான் தொடர்ச்சியாக தமிழிசை
س-ت
அரங்குகள் நடைபெற்று வருகின்றன.
சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்ட தமிழிசை அரங்கு படிப்படி யாக வளர்ந்து கொண்டு வருவது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும் ஒவ்வொரு நிகழ்ச்சிசளிலும் தமிழ் இசைக்குத் தொண்டாற்றிய விற்பன்னர்கள் பற்றியும், தமிழ் இசை சம்பந்தமான விடயம் பற்றியும், தமிழிசையில் பாண்டித்தியம் பெற்றவர்களைக் கொண்டு ஒரு சொற்பொழிவு நடத்தப்படுகின்றது. முன்னோடி நிகழ்ச்சியில் உரையாற்றிய விவித கலாவினோதன் திரு. எஸ். கே. பரராஜ சிங்கம், தமிழகத்தில் உருவெடுத்த தமிழிசை இயக்கம் பற்றியும் மற்றும் தமிழிசையின் தன்மை பற்றியும் ‘தமிழிசை பற்றிய சில சிந்தனைகள்' என்னும் பொருளில் சொற்பொழிவு நிகழ்த்
தினார்,

Page 5
இதைத் தொடர்ந்து நடந்த முதலாவது தமிழிசை அரங்கில் சென்னை இராணி மேரி கல்லூரி பேராசிரியை கலாநிதி திருமதி. சாரதா நம்பிஆரூரன் பாபநாசம் சிவன் கீர்த்தனைகளும் தமிழிசையும் என்ற தலைப்பில் மிகவும் அருமையான சொற்பொழிவொன்றை நிகழ்த்தினார். அன்று தமிழிசை அரங்கில் பாபநாசம் சிவன் கீர்த் தனைகள் பாடப்பட்டு பாடல்களுக்கேற்ற அபிநயமும் இடம் பெற்றது.
இரண்டாவது தமிழிசை அரங்கிலே நாட்டியகலாசிகாமணி செல்வி சுபாஷினி பத்மநாதன் அவர்கள் 'நாட்டியமும் தமிழிசைப் ப்ாரம்பரியமும்" என்ற தலைப்பில் நல்லதொரு ஆய்வுரைச் சொற் பொழிவினை நிகழ்த்தினார்கள். அதிலே தமிழிசை நாட்டியத் துறையின் பாரம்பரியம் அதன் தொன்மை அது வளர்ச்சியடைந்த விதம் அதன் இன்றைய நிலையாவும் விரிவாக ஆராயப்பட்டிருந்தது. அத்துடன், சிலகீர்த்தனைகளுக்கு பெற அபிநயமும் இடம் பெற்றது.
முத்துத் தாண்டவர் கீர்த்தனைகளுக்கான தமிழிசை அரங்கு மூன் றாவதாக நடைபெற்றது. அதில் கலாசூரி திருமதி அருந்ததி பூரீ ரங்கநாதன் அவர்கள் மிகவும் சிறப்பாக "முத்துத் தாண்டவரின். தமிழிசைச் சிறப்பு' என்னும் தலைப்பில் சொற்பொழிவு நிகழ்த் தினார். அது மட்டுமல்ல முத்துத்தாண்டவரின் பாடல்களில் ஆழ்ந்து கிடந்த தத்துவக் கருத்துக்கள் அனைத்தையும் திருமதி கல்யாணி சுந்தரலிங்கம் அவர்கள் வாயிலாக நாட்டிய அபிநயத்தின் மூலம் வெளிக் கொணர்ந்தார். திருமதி அருந்ததி பூரீ ரங்கநாதன் அவர்கள் சிறந்தஒரு பாடகி மட்டுமல்ல, சொற்பொழிவு ஆற்றும் திறயுைம் இருக்கின்றது என்பதை நிரூபித்து விட்டார்.
இதுவரை நடைபெற்ற தமிழிசை அரங்கு நிகழ்ச்சிகள் சிறப்புற அமைவதற்கு உற்சாகமும் ஊக்கமும் அளித்த அமைச்சின் செயலாளர் திரு. த. வாமதேவன் அவர்களையும், பணிப்பாளர் திரு. க. சண்முக லிங்கம் அவர்களையும். உதவிப்பணிப்பாளர் திரு. குமார் வடிவேல் அவர்களையும், மற்றும் உத்தியோகத்தர்கள் அனைவரையும் மிகவும் பாராட்டுகின்றேன்.
இந்நிகழ்ச்சிகள் யாவும் புதுமெருகு பெற்று அழகுற அமைய ஒத்தாசை நல்கிய பிரத்தியேக செயலாளர் திருமதி கீதா நித்தி யானத்தன் அவர்களைக் குறிப்பிடவேண்டியது அவசியமாகின்றது

தமிழிசை அரங்கு நிகழ்ச்சிகள் யாவும் இந்துசமய கலாசார இராஜாங்க அமைச்சு, இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபன தமிழ்ச் சேவையுடன் இணைந்து நடத்துவதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்கி வரும் ஒலிபரப்பு கூட்டுத்தாபன அதிகாரிகள் அனைவரையும் பாராட்டுவதில் புள காங்கிதம் அடைகின்றேன்.
இந்த நான்கு கட்டுரைகளின் தொகுப்பே இன்று நூலாக வெளி வந்திருப்பது பாராட்டுதற்குரிய தொன்றாகும். இதைப்போன்று அடுத்துவரும் தமிழிசை அரங்குகளில் நிகழ்த்தப்படும் இசை அரங்கு களும் நூலாகத் தொகுக்கப்படுமானால் தமிழ் இசை அரங்கும், தமிழ் இசை விற்பன்னர்கள் பற்றிய உணர்வும் நம் மத்தியில் பெருகும். அத்துடன் தொன்மைமிக்க தமிழிசையின் பாரம்பரியத் தையும் அதன் பெருமையையும் உணர ஏதுவாக இருக்கும்.
இந்துசமய, கலாசார தமிழ் அலுவல்கள் இராஜாங்க அமைச்சு.
6-12-1991.

Page 6
தமிழிசை பற்றிய சில சிந்தனைகள்
விவிதகலாவினோதன் எஸ். கே. பரராஜசிங்கம் பி. எஸ்சி. "இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முன்னாள் அறிவிப்பாளரும்
இசைப்பகுதிக் கட்டுப்பாட்டாளரும்:
'தைத்திருநாளில் தமிழிசை அரங்கு" என்ற தலைப்பில் இன்று இங்கு நடைபெறும் இந்த விழா. பொங்கல் திருநாளைக் கொண் டாடுவதற்கு மட்டும் என்று அமையாமல், இந்த நன்னாளில் மற்று மொரு விடயத்தை இசைத்துறை தொடர்பான ஒரு விடயத்தைக் கவனத்திற்கு எடுத்துக்கொள்ளும் ஒரு நாளாகவும், அமைகிறது. இந்த விழாவுககான அ  ைழ ப் பி த பூழி ல் தமிழிசை அரங்கு, தமிழிசை அறிமுகவுரை, தமிழிசைப் பாடல்கள். தமிழிசை நடனம் என்று எல்லாமே தமிழ், தமிழ் என்று இருப்பதிலிருந்து, அந்த விடயம் என்ன என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். தமிழ் இசையை வளர்க்க வேண்டும், பேண வேண்டும் என்ற கோஷம் பல காலமாக இங்கு மடடுமல்ல, தமிழ் நாட்டிலும், மற்றும் த மிழ் கூறும் நல்லுலகம் தோறும் இருந்து வந்திருக்கிறது.
கடந்த வருடம் இங்கு நடைபெற்ற தியாகராஜ உற்சவத்தின் பின்னர் அதுபற்றி வெளிவந்த ஒரு பத்திரிகைச் செய்தியில், தியாக ராஜ சுவாமிகளுக்கு விழா எடுப்பது பொருத்தமேயானாலும் அதே வேளை தமிழ் இசைக்கும் விழா எடுப்பது அவசியமாகும். என்று குறிப்பிடப்பட்டிருந்தது. தெலுங்குக்கு மட்டும் வருடாவருடம் விழா என்று இல்லாமல், தமிழ் இசைக்கும் வருடா வருடம் விழா எடுக்க வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. இதனைக் கருத்திற் கொண்டே மாண்புமிகு அமைச்சர் பி. பி தேவராஜ் அவர்கள் இன்று இந்த விழாவை பொங்கல் திருநாளில் ஏற்பாடு செய்திருக் கிறார். தமிழிசை என்ற இந்த வேண்டுதல் அல்லது கோரிக்கை இந்தியாவில் தமிழ் நாட்டில் மட்டுமல்ல இங்கும் பலகாலமாக இருந்து வந்திருக்கிறது. அதற்கான சில முயற்சிகளும் இங்கு எடுக் கப்பட்டன என்பதை நாம் மறக்க முடியாது. பல வருடங்களாக பரீ தியாகராஜ கான சமாஜம் என்ற பெயரில் இசைப்பிரியர்களால்
- d -

علام
harr SYANS, YZ
ofе
அருணாசல கவிராயர்
Arunach allai Ka.wiray ar

Page 7

வருடா வருடம் ஐந்து நாட்களுக்கு இசை விழா நடத்தப்பட்டது பலருக்கு ஞாபகமிருக்கலாம். பல வருடங்களாக நடைபெற்றுவந்த அந்த இசைவிழா 1977-ஆம் ஆண்டுடன் நிறுத்தப்பட்டு அதன் பின்னர் இயங்கவில்லை. இந்த விழாவிலும் ஆரம்ப காலத்தில், தியாகராஜ கான சமாஜம் என்ற முறையில் கச்சேரிகளில் தெலுங்குப் பாடல்களே அனேகமாகப் பாடப்பட்டுவந்தன. பலருடைய வேண்டு கோளுக்கிணங்க 1960 களின் பிற்பகுதியில் ஒரு மாற்றம் செய்யப் பட்டு முதல் மூன்று நாட்களும் தமிழ் இசைக்கும் அதாவது தமிழ் பாடல்களுச்கும் மிகுதி இரண்டு நாட்கள் தெலுங்கு, சமஸ்கிருத, தமிழ் உருப்படிகளும் இடம்பெற்று வந்தன.
இதேபோல இ ல ங் கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திலும் பாட்டுக் கச்சேரிகளில் பங்கு பற்றும் கலைஞர்கள் குறைந்தது இரண்டு தமிழ் பாடல்களைப் பாடவேண்டும் என்ற ஒரு நிபந்தனை ஏற்படுத்தப்பட்டது.
இப்படிச் சில நடவடிக்கைகள் இங்கு மேற்கொள்ளப்பட்டன. ஆனால் பல வருடங்களுக்கு முன்னர் 1929-ஆம் ஆண்டிலேயே தமிழிசை என்ற ஒரு இயக்கம் தமிழ் நாட்டில் ஆரம்பமாகியுள்ளது. அண்ணாமலை நகரில் இசைத்தமிழ் கலாசாலை நிறுவிய காலத் திலிருந்தே இந்த தமிழிசை என்ற இயக்கம் ஆரம்பித்திருக்கிறது:
1929-ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பித்த இந்த தமிழிசை இயக்கம் படிப்படியாக வளர்ந்து பல அரிய சாதனைகளைச் செய்தது. இதற்கு முதல்வராக இருந்த செட்டிநாடு ராஜா டாக்டர் சேர். மு. அண்ணா மலைச் செட்டியார் அவர்கள் 1944 ம் ஆண்டு மார்ச் மாதம் 25ஆம் திகதி வரைந்த வாழ்த்துச் செய்தி ஒன்றில் ‘பூரீ நடராஜப்பெருமானை தினந்தோறும் வணங்குவேன். அண்ணாமலை சர்வகலாசாலையின் வளர்ச்சியை ஒவ்வொரு நாளும் சிந்திப்பேன். தமிழ் நாடெங்கும் தமிழிசை முழங்க வேண்டும் என்பது எனது ஆவல். ஈட்டலும் காத்தலும் வகுத்தலும் என் வாழ்க்கையின் கொள்கை" என்று தன் ஆவலை வெளிப்படுத்தினார். இந்த ச் சரித்திரங்கள் எல்லாம் பலருக்குத் தெரிந்ததாக இருக்கலாம். இருந்தாலும், இவைபற்றிச் சொல்ல வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் இன்று ஏற்பட்டுள்ளது
1929-ஆம் ஆண்டில் தமிழ் இசைக்கான வித்து இடப்பட்டது. என்று முன்னர் கூறினேன். என்ன நடந்தது என்பதை புள்ளி விபரமாக, சுருக்கமாகக் கூறுவது தமிழ் இசை என்று அங்கலாய்ப் பவர்கள் அறிய வேண்டிய சில விபரங்களாகும்.

Page 8
1929-ஆம் ஆண்டில் அண்ணாமலை பல்கலைக்கழகத்து இசைக் கலாசாலை விளம்பரத்தில், மாணவர்க்கு இசை கற்பிக்கவும், பெரி யோர்களின் இசைப் பாடல்களைத் தேடித் தொகுத்து பாதுகாக்கவும் இசைக்கலை ஆராய்ச்சி செய்யவும் இக்கலாசாலை நிறுவப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
1932-இல் சென்னையில் நடந்த இசைக் கலைஞர் கழகத்தின் இசை மகாநாடு, 1933-இல் சென்னையில் நடந்த தென் இந்திய இசை மாநாடுகளின் மூலம் மீண்டும் தமிழ் இசைப்பாடல்கள் இசை அரங்குகளில் குறைந்து வருவதை உணர்ந்து. 1940-இல் அண்ணாமலைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், வள்ளல் செட்டிநாட்டரசர் அவர்கள் 10,000/- ரூபாவை தமிழ் இசைக்கு நன்கொடையாக வழங்குகிறார்கள். அத்துடன் சிறந்த தமிழ் இசைப் பாடல் பாடுபவருக்கு ஆண்டுதோறும் ரூபா 1,000/- ஒதுக்கிவைக் ஃப் பட்டது. அதைத் தொடர்ந்து 14.08.1941 முதல் 17.08.1941 வரை அண்ணாமலை நகரில் பெரிய தமிழ் இசைமகாநாடு நடந்தது. இப்படிப் பல நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தமிழ் இசை, தமிழ் இசை என்று நாம் கூறும்போது இது என்ன ஒரு தனி இசையா? அப்படி ஒன்று இருந்து இன்று அழிந்துவிட்டதா? என்ற கேள்வி பலர் மத்தியில் எழுகின்றது. அப்படி தமிழ் இசை ஒன்றும் புதியது அல்ல.
'தொல்காப்பியம்' தான் எமக்கு தெரிந்த மிகப் பழைய தமிழ் நூலாகும். கிறீஸ்துவுக்குமுன் 300 ஆண்டுகளுக்கு முன்னர் எழுந்த இந்த தொல்காப்பியத்தின் மூன்றாவது பாடமான செய்யுள் அதி காரத்தில் அன்றிருந்த இசை பற்றி ஆசிரியர் நன்கு அறிந் திருந்தார் என்பது தெரியவருகிறது. இன்று கர்நாடக சங்கீதம் என்று நாம் கூறுவது தமிழ் இசையைத் தான். கர்நாடக சங்கீதம் என்று பிரபல்யமடைந்துள்ள சாஸ்திரிய சங்கீதம் வேறெதுவுமல்ல தமிழ் இசைதான். கர்நாடக சங்கீதம் என்ற பெயர் ஏற்பட்டதே மிக அண்மைக் காலங்களில்தான்.
தென்னிந்தியாவில் பிற பிரதேச அரசர்களின் ஆதிக்கத்தின் போது ஏற்பட்ட தவறான கருத்துக்களினால் ஏற்பட்டதே இந்த 'கர்நாடக சங்கீதம்' என்ற சொல்லாகும். தமிழ் இசை எப்படி, கர்நாடக இசை என்ற பெயரைப் பெற்றது என்பது பற்றி பல கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.
سس- 6 --

இன்று சங்கீத மும்மூர்த்திகளில் முதல் இடம் வகிக்கும் தியாக ராஜ சுவாமிகளின் தெலுங்குப் பாடல்களை மட்டும் ஏன் பாட வேண்டும் என்று கேள்வி கேட்கும் பலருக்கு அவருடைய இசை உலகப் பயிற்சி பற்றி பெருமளவு தெரியாமல் இருக்கலாம். மிக அருமையான பல தமிழ் கீர்த்தனைகளை இயற்றிய முத்துத் தாண்டவர் பிறந்து 200 ஆண்டுகளுக்குப் பின்னர் பிறந்தவர்தான் தியாகராஜ சுவாமிகள். தியாகராஜ சுவாமிகளின் குடும்பத்தவர்கள் அனைவருமே சிவ பக்தர்கள். திருவையாறு சிவனைத்தான் அவர்கள் எல்லோரும் வணங்கினார்கள்.
தியாகராஜ சுவாமிகள் அவரது இளம் வயதிலேயே, பக்தி மார்க்கத்தில் ஈடுபட்டு இசையில் நாட்டம் கொண்டிருந்தார். தஞ்சாவூர் மேளகாரர்களின் இசையில் ஈடுபட்டு, அவர்களிடம் தான் இசையின் நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டார். சிவ பக்தரான தியாகராஜ சுவாமிகள் சிறு பிள்ளை யாக ராமபக்தரானார்? என்பதற்கும் ஒரு விளக்கம் தரப்பட்டுள்ளது. தியாகராஜ சுவாமிகள் சிறுபிள்ளையாக இருந்தபோது அவரைத் தூங்கவைக்க அவருக்கு முன்னர் வாழ்ந்த அருணாசலக் கவிராயரின் ராமநாடக பாடல்களை தியாகராஜ சுவாமிகளின் தாயார் சீத்தாம்மா பாடித்துரங்க வைத் தார் என்று சொல்லப்படுகிறது.
ஆகவே தியாகராஜ சுவாமிகளே தனது இசை அறிவை தஞ்சாவூர் நாதஸ்வரக்காரர்களிடமும், முத்துத் தாண்டவர், அருணாசலக்கவி ராயர் போன்றோரின் பாடல்கள் மூலமும், அதற்கு முன்னர் இருந்த பண்ணிசை மூலமும் பெற்றார் என்பது இன்று சரித்திரபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆகவே இன்று கர்நாடக இசை என்பது வெறுமனே சரித்திர ரீதியாக ஏற்பட்ட ஒரு பெயரே தவிர அதன் உண்மையான பெயர் தமிழிசை தான். தியாகராஜ சுவாமிகள் தமிழிசையை பயின்று தன்கருத்துக்களை வெளியிட தனது தாய் மொழியான தெலுங்கு மொழியில் பாடல்களை அமைத்தார். அவர் காலத்துக்கு முன்னமே பல அருமையான தமிழ்ப்பாடல்கள் இசை இலக்கணத்துக்கு அமைய எழுதப்பட்டு பாடப்பட்டு வந்திருக்கின்றன இசை இலக்கணத்தில் ஒன்றான பல்லவி, அநுபல்லவி, சரணம் என்ற அமைப்பையே முத்துத்தாண்டவர் கையாண்டிருக்கிறார். எனது உரையை முடிப்பதற்கு முன்னர் பாபநாசம்சிவன் அவர்களின் நூறு தமிழ் கீர்த்தனங்களுடன் 1934 ஆம் ஆண்டு வெளிவந்த கீர்த்தன மாலை என்ற நூலுக்கு, ஆரம்ப காலத்தில் தமிழிசை இயக்கத்தில் பெரும்பங்கு வகித்த ரசிகமணி டி. கே. சிதம்பரநாதமுதலியார் அவர்கள் வழங்கிய சிறப்புரையில் இருந்து ஒரு பகுதியைத் தர விரும்புகிறேன்.
- 7 -

Page 9
'தனக்கென்ற தனிப்பண்பொன்று தமிழ்நாட்டு சங்கீதத்திற்கு உண்டென்பதை யாருமே மறுக்கத் துணியார்கள்"
உலகத்திலுள்ள சங்கீதங்களின் தாரதம்மியங்களை ஆராய்ந் துள்ள நிபுணர்களிற் சிலர் நம்முடைய சங்கீதம் சில அம்சங்களில் ஒப்புயர்வு அற்றுச் சிறந்தது என்றுகூடச் சொல்லுகிறார்கள். ராக வேறுபாடுகளும் ஸங்கதிகளின் நளினங்களும் சேர்ந்து மக்கள் மனதில் எழும் உணர்ச்சி நுட்பங்களை அனாயாஸமாகப் புலப்படுத்தக் கூடியவையாக இருக்கின்றன என்றும் சொல்லுகிறார்கள்.
இவ்வளவு சிறப்பெல்லாம் இருந்தாலும் நம்முடைய சங்கீதக் கச்சேரிகளில் உள்ளம் தணிதல், எழுச்சி பெறுதல் முதலிய மனோ பாவங்களே இல்லையென்று முறையிடுவதைக் கேட்கிறோம். பாகவத சிகாமணிகள் கூட அதை ஆமோதிக்க வேண்டியதாய்த்தான் இருக் கிறது. மனோபாவம் சம்பந்தமாக நம்முடைய சங்கீதம் இப்படி வறண்டு போனதற்கு முக்கிய காரணம் தமிழ்ப் பாஷை மூலமாக சங்கீதத்தைப் பாடாததுதான், கேட்காததுதான், சொல்லிக் கொடா ததுதான். தெலுங்கு, கன்னடம், மராட்டி முதலிய பாஷைகள் பாவத்தோடு எவ்வளவோ நயமாய் இருக்கலாம். அந்தந்த பாஷைக் காரர்களுக்கு அந்த பாஷைகளிற் பயிற்சியில்லாதவர்களுக்கு (தமிழ் நாட்டில் 1000 பேருக்குள் 999 பேர் அப்படித்தான்) வார்த்தை களில் உள்ள ரஸ்பாவங்களை அறியவே முடியாது. அனுபவிக்கிறோம் என்று சொல்லுகிறதெல்லாம் மனப்பால் குடிக்கிறதைத் தவிர வேறில்லை.
வெள்ளைக்கார பாஷையே சதுர்வித புருஷார்த்தங்களைத் தரும் என்றிருந்த நம்பிக்கை நமக்குள் இப்போது போய்விட்டது. ஆனால் சங்கீத் சம்பந்தமாகப் பிறபாஷைகள் தான் கதி என்கிற நம்பிக்கை போனபாடில்லை; போகிற பாடாகவும் இல்லை. பாக வதர்கள் தமிழில் பாட்டே இல்லை என்கிறார்கள் கேட்க வரும் சங்கீத ரசிகர்களோ (தமிழ் மாத்திரம் தெரிந்து ஆங்கிலமும் தெரிந்து விட்ட ரசிகர்கள்) பாகவதர் முன் உட்கார்ந்துகொண்டு கன்னடம், இந்தி, மராட்டி என்று பாகவத ரை ஏவிக்கொண்டே இருந்தால் நம்மவர்க்கு ரஸ்பாவ உணர்ச்சி ‘'என்றைக்குத்தான் வருமே! -ஈசா என்றைக்குத்தான் வருமோ' என்று பல்லவி போட்டுத்தான் ஏங்க வேண்டி இருக்கிறது,
சுமார் நூறு வருடத்துக்கு முன் வரையும் தமிழ் நாடெங்கும் தமிழ்ப் பாட்டே முக்கியமாகப் பாடிக்கொண்டு வந்தார்கள். அப் படிப் பாடுவதற்கு ஆயிரக்கணக்கான தமிழ்ப் பாடல்கள் பல்வேறு
- 8 -

வகைகளில் எல்லாம் இருந்தன. மேலே சொன்ன படாடோப சங்கீதம் புகுந்ததும் அந்தப் பாட்டுக்கள் எல்லாம் ஒதுங்கிப்போய் விட்டன. ஆயிரங்காலத்துப் பயிரல்லவா அழிந்து போய்விட்டது"
பாபநாசம் சிவன் அவர்களின் பாட்டுக் கச்சேரியைக் கேட்க நேர்ந்த ரசிசமணி டி. கே. சிதம்பரநாத முதலியார் அவர்கள் அந்தக் கச்சேரி பற்றி இவ்வாறு கூறினார்:-
**இதர பாஷா மோகமும் சங்கீதப் பெருக்கமும் தாளச்சிலம் பமும் ஒன்றுகூடி நம்முடைய சங்கீதத்திலுள்ள ரஸ்பாவத்தை எல்லாம் உறிஞ்சிவிட்டது என்று நாம் வருந்திக்கொண்டிருந்த சமயத்தில் சில தினங்களுக்கு முன்னர் பூரீமான் பாபநாசம்சிவன் அவர்களின் பாட்டுக் கச்சேரியைக் கேட்க நேர்ந்தது. உடனிருந்து கேட்ட நண்பர்களிற் சிலர் சங்கீதத்தின் ரஸத்தையும், தத்துவத் தையும் நன்கறிந்த நிபுணர்கள். பாடிய பாடல்கள் எல்லாம் தமிழி லேயே இயற்றப்பட்டு இருந்தன. பக்திரஸம் வார்த்தை களில் ஊறி நின்ற நிலை வெளிப்படையாய் இருந்தது. நாங்கள் எல்லோரும் தமிழர்களாய் இருந்ததால் தமிழ்ச்சொற்களின் ரஸ்பாவம் எளிதிற் செவிப்புலன் வழியாக உள்ளத்துட்சென்று உணர்ச்சியோடு ஒன்று பட்டுவிட்டது மனங்சனிந்துவந்த பாடல் இது தா ன் என்று எல்லோரும் சொன்னார்கள். தாளத்துக்கும் சங்கீதத்தின் உண்மை யான மர்ம தத்துவங்களுக்கும், சொல்லின் தொனியும் ஸ்தானமும் ரொம்பப் பொருத்தமாய் இருந்தன. இப்படிப்பட்ட பொருத்தந் தான் பாடல்களின் உண்மையான உயர்வைக் காட்டுவது. சாகித்யம் என்பது கேவலம் ராகத்தையும், தாளத்தையும் தொங்கவிடுவதற் கான "கோட்ஸ்டாண்டு" அல்ல. சங்கீதத்திற்கும் தாளத்துக்கும் அவைகள் உற்பத்தி பண்ணிக்கொள்கிற சாகித்தியத்திற்கும் உள்ள சம்பந்தம் உடலுக்கும் உயிருக்கும் உள்ள சம்பந்தத்தைப் போன்றது. சிவம் அவர்கள் பாடிய பாடல்கள் மேலே சொன்ன இலட்சணங் களுக்கெல்லாம் தக்க இலக்கியமாய் இருந்தன. சங்கீதசாரம் எவ்வளவு இருந்தாலும் அவ்வளவுக்கும் தமிழ்ப்பாஷையும் தமிழ் சாகித்தியமும் இடம்கொடுக்கும் என்பதை அவர்கள் நன்கு நிரூபித்துவிட்டார்கள்".
ஆகவே தமிழ் இசையின் தொன்மையையும், அதனைத் தொடர்ந்து பேண வேண்டிய அவசியத்தையும் மனதிற்கொண்டு நாம் செயற்பட வேண்டுமெனக் கூறி, தமிழ் இசை அரங்கில் இந்த ஆரம்ப விழாவில் தமிழ் இசை அறிமுக உரையை நிகழ்த்த என்னை அழைத்தமைக்கு நன்றிகூறி விடை பெறுகின்றேன்.

Page 10
“பாபநாசம் சிவன் கீர்த்தனைகளும் தமிழிசையும்’
கலாநிதி திருமகி சாரதா நம்பிஆரூரன் பேராசிரியை - இராணிமேரிக் கல்லூரி சென்னை.
"ஏழிசையாய் இசைப்பயனாய்' என்று இறைவனும் இசையும் பிரிக்கமுடியாதது என்று பாடினார் சுந்தரமூர்த்தி நாயனார். "நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தன்' என்று ஞானசம்பந்தரையும் பாராட்டிப் பாடியுள்ளார். தமிழ்இசை காலத்தால் முந்தியது. இறைவனோடு தொடர்புடையது. வேறு எந்த சமயத்தையும் எந்த மொழி வரலாற்றையும் எடுத்துக் கொண்டால் 'இறைவன் அர்ச்சனைப் பாட்டேயாகும். ஆதலால் இம்மண்மேல் நம்மை சொற்றமிழ் பாடுக" எனப் பணிந்ததாக வரலாறு கிடையாது. ஒரு தாய் தன் குழந்தையைத் துரங்க வைப்பதற்காகப் பாடுகின்ற நாட்டுப்புறப் பாடல்கள். இது படித் தவர்களுக்கு மட்டும் அல்ல படியாதவர்கள் மத்தியிலும்கூட இசை எந்தளவு முக்கியத்துவம் பெற்றிருக்கிறது என்பதை புலப்படுத்து கின்றது, என்று தமிழ் தோன்றியதோ அன்றே தமிழிசையும் தோன்றியது.
முதன்முதலாக புல்லாங்குழல் இசை முல்லை நிலத்தில் தோன் றியது. காடும் காடு சார்ந்த இடமும் முல்லை நிலம் என்று சொல்லப் படுகின்றது. ஒரு மூங்கிலின் வழியாக காற்றுப் புகுந்து வெளிப்பட்ட போது தோன்றிய இசை புல்லாங்குழல் இசை, எனவே நான்கு நிலங்கள் என்று தோன்றியதோ அன்றே குழலிசை தோன்றியது எனும் பெருமை உடையது தமிழ்நாடு. இப்படி நமக்கென்று ஒரு மரபு இசை என்று இவ்வளவு சிறப்பாக இருந்த நாம் நம்முடைய ஒற்றுமை இன்மை காரணமாக சமணம், பெளத்தம் போன்ற பிற சமயங்களும் பிற மொழிகளும் தமிழ் நாட்டில் நுழைந்தபோது தமிழிசைக்கு ஒரு தாழ்ந்த நிலை ஏற்படத் தொடங்கியது. அதி லும் குறிப்பாக மணிப்பிரவாளம் என்ற ஒரு ந-ை அதாவது தமிழும் வடமொழியும் கலந்த ஒரு நடை ஏற்பட்டது. அப்போது மறைமலையடிகள் தமிழ்மொழியைக் காப்பாற்ற வேண்டும் என்
H H

戰 幕
பாபநாசம் சிவன்

Page 11

பதற்காக 1911ஆம் ஆண்டு 'தனித் தமிழ் இயக்கம் ஏற்படுத்தினார். மொழி ஒரு மனிதனது வாழ்வில் அவனது இயக்கத்தில் முதலிடம் வகிக்கின்றது. ஒரு இனத்தை அழிக்க வேண்டுமானால் அவனது மொழியை அழித்தால் போதுமானது. எனவே எப்பொழுது நம் மொழி அழியத் தொடங்கியதோ அன்றே அதனோடு இணைந்த இசையும் தன் செல்வாக்கை இழக்கத் தொடங்கியது என்பதை வரலாறு கூறுகின்றது.
குறிப்பாக நாயக்க மன்னருடைய ஆட்சிக்காலத்தில் தெலுங்கு மொழி பெரும் செல்வாக்கைப் பெற்றிருந்தது. அந்தக் கால கட் டத்தில் சங்கீத மும்மூர்த்திகளால் எழுதப்பட்ட தெலுங்குப் பாடல்கள் மேடையிலும், வடமொழி, பேச்சு மற்றும் எழுத்து துறையிலும், ஆங்கிலம் அரசியலிலும் பயன்படுத்தப்பட்டன. இவ் வாறு மூன்று நிலைகளில் தெலுங்கும், வடமொழியும், ஆங்கிலமும் செல்வாக்குப் பெற்றபோது தமிழிசை மரபு குன்றியதை நாம் பார்க்கின்றோம். அந்த சமயத்தில் தமிழிசை செல்வாக்குக் குன் றியதைக் கண்டு மனம் வருந்தி குரல் கொடுத்தவர்கள் பாரதியும் பாரதிதாசனும் ஆவர். மீண்டும் மீண்டும் கச்சேரிகளில் குறிப் பிட்ட சில பாடல்களையே இந்த வித்துவான்கள் பாடுகின்றார் கள், ஏன் தமிழில் சில பாடல்களைக் கற்றுக்கொண்டு штц. னால் என்ன? என்பதனைக் கூறவந்த பாரதி தனது கட்டுரையில் கூறுவார் தமிழ்நாட்டில் எந்த மேடைக்குச் சென்றாலும் வித்து வான் 'வாதாபி கணபதி' எனத் தொடங்கி பிறகு தொடர்ந்து "மரியாத காதுரா’, ‘வரமுலசகி" போன்ற ஒரே தெலுங்குப் பாடல்கள்தான். திரும்பத்திரும்ப இதே பாடல்கள்தான் கச்சேரி களில் பாடப்படுகின்றன. ஏன் தமிழில் சில சில புதிய பாடல் களைக் கற்றுப் பாடினால் என்ன? தமிழர்களுக்கு இரும்புக்காதாக இருக்கின்ற காரணத்தால் இந்த துன்பத்தைச் சகித்துக்கொள்கின் றார்கள். தோல் காதுள்ள தேசத்தில் இந்த துன்பத்தைச் சகித் துக்கொள்ளமாட்டார்கள் தமிழிசையை புரிந்து கொண்டு அதன் அர்த்தத்தை புரிந்துகொண்டு தெளிவாகப் பாடவேண்டும். பிற மொழிகளில் பாடவேண்டாம் என்பதல்ல பொருள். பிற மொழி கள் தெரியாதவர்கள் அதன் பொருள் விளங்காத காரணத்தால் பொருள் சிதைவு ஏற்படும். எனவே, நல்ல தமிழிலே lift L-6 எழுத வேண்டும், பாடவேண்டும் என்றெல்லாம் அத்திவாரமிட்ட வர் பாட்டுக்கொரு புலவன் பாரதிதான். அவனுடைய பாதையை தன்னுடைய பாதையாகக் கொண்டு நடைபயின்ற பாரதிதாசன் எந்த இடத்திற்குச் சென்றாலும் பிற மொழி செல்வாக்கைக் காணுகின்றபோது மனம் கொதித்து சொல்லுவான்,
- 11 anse

Page 12
“மணக் கவரும் தென்றலிலே குளிரா இல்லை?
தோப்பில் நிழலா இல்லை?
தணிப்பரிதாம் துன்பமிது - தமிழகத்தின் தமிழ்த்தெருவில்
தமிழ்தான் இல்லை."
முப்பது வருடத்திற்கு முன்னால் பாரதிதாசன் புலம்பிய அந்த நிலைமையை இன்று நாம் காண்கின்றோம். *தமிழ்நாட்டில் தமிழ்த் தெருவில் தமிழ்தான் இல்லை."
தமிழ்ப் பாடல்கள் பாடவேண்டுமென்று பாரதிதாசன் சொன்ன போது, தமிழ்ப் பாடல்களே இல்லையென சில வித்துவான்கள் குறை பட்டுக்கொண்டார்கள். அப்போது அவர்களது கூற்றை மறுப்பதற்காக இசையமுதம் பகுதி 1, 2, தேனருவி, குயில் பாடல்கள் என எண்ணற்ற பாடல்களை பாரதிதாசன் பாடிக் குவித்தார். ஆயிரக் கணக்கில் அவர் பாடல்கள் உள்ளன. மிக அருமையாக இசையமுதில் ஒரு இடத்தில் சொல்லுவார் "துன்பம் நேர்சையில் யாழ் எடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா கண்ணே' என்று துன்பம் நேரும் சமயம் தமிழிசைப் Lunt L–6iv களைப் பாடினால் இன்பம் சேர்க்கலாம் என தமிழிசைப் பாடல் களைப் பாடி வழிகாட்டியவர் பாரதிதாசன். அவரது பாணியில் இன்று நல்ல தமிழிசைப் பாடல்களை இயற்றி தமிழிசைக்கு உயிர் கொடுத்தவர் பாபநாசம் சிவன். 'தேமதுரத் தமிழ்ஓசை உலக மெங்கும் பரவ வேண்டும்' என்றான் பாரதி. அந்த கனவு இன்று நம்மிடையே ஓரளவு நனவாகியுள்ளதென்றால் அதற்கு காரண கர்த்தா, நன்றி கூறவேண்டியவர்கள் தமிழிசை மும்மூர்த்திகள். முத்துத் தாண்டவர் தமிழில் பாடல்களை அமைத்தார். அருணா சல கவிராயர் ராம நாடக கீர்த்தனைகளை நாடக வடிவில் படைத்துள்ளார். கோபாலகிருஷ்ண பாரதியார் நந்தனார் சரித் திர கீர்த்தனைகளைப் பாடியுள்ளார். அந்த பாணியில் இறை வனை அதிகமாக நேசித்து நினைந்து எல்லா கடவுளர்களையும் இணைத்து கீர்த்தனைகளைப் பாடிய பெருமைக்குரியவர் பாப நாசம் சிவன் அவர்கள்.
எனக்கு இந்த மேடையிலிருக்கும்போது இலங்கைதானா? அல்லது தமிழ்நாட்டில் தஞ்சாவூர் திருவையாறுதானா? என்ற எண்ணம் உருவாகின்றது. ஏனென்றால் இன்னும் எங்கள் நாட்டில் பாபநாசம் சிவனுக்கு நூற்றாண்டு விழா அரசாங்க அளவில் கொண்டாடவில்லை, ஆனால் அமைச்சர் அவர்கள் தமிழிலும்,
۔۔ 12 سے

தமிழிசையிலும் கொண்ட பேரவாவினால் இந்த விழாவினை சிறப் பாக ஆரம்பித்து உள்ளார்கள். எங்களுக்கு முன்னோடியாக நடத்தி காட்டியிருக்கிறார்கள். அது ஒரு பெருமைக்குரிய விடயமாகும். அதற்காக என் சிரம் தாழ்ந்த நன்றியினை தமிழகத்தின் சார்பில் செலுத்துகின்றேன்.
இந்த ஆண்டு ஒரு புண்ணியமான காலமாகும். இந்த சமயத்தில் நாமெல்லாம் வாழக் கொடுத்து வைத்திருக்கின்றோம். இந்த 1991ஆம் ஆண்டு பாட்டுக்கொரு புலவன் பாரதி, புரட்சிக் கவிஞன் என்றெல் லாம் புகழப்படுகின்ற பாரதிக்கு விழா ஏப்ரல் 28 ஆந் திகதி. இவ் விழாவினை 28 ஆம் 29 ஆம் திகதி தமிழகம் மிகவும் சிறப்பாக கொண்டாடியது. அந்த விழாவில் கலந்துகொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை. அந்த ஒரு இழப்பினை இந்த இசைவிழா மேடையில் ஈடுசெய்து கொண்டேன். அவனருளாலே அவன் தாள் வணங்கி என்று, பாபநாசம் சிவன்பற்றி பேசுவதற்கு கூட நாம் ஒரு நல்ல பலனை செய்திருக்க வேண்டும் என நம்புகின்றேன்.
தமிழ் இசைக்கு தாயகமாக விளங்குவது தஞ்சாவூர். சோழர் நாடு சோறுடைத்து என்பார்கள். தமிழ் நாடு நெற்களஞ்சியம் மட்டுமல்ல பல மகான்களையும் தந்த புண்ணிய பூமி. இசை விற்பன்னர்கள் அனைவரும் தோன்றிய பெருமையுடையது தஞ்சாவூர், பாபநாசம் சிவன் அவர்கள் 1890ம் ஆண்டு செ.பரெமபர் 26ம் திகதி நன்னிலம் தாளுகாவில் போளகம் என்னும் இடத்தில் அவதரித்தார். அவருக்கு பாபநாசசிவம் என்பது காரணப் பெயர். பின்னால் வந்த பெயர். பாபநாசததில் பல ஆண்டுகள் வாழ்ந்தமையாலும் காலம் முழுதும் சிவபெருமானை நினைந்து பாடியமையாலும் பாபநாசம் சிவம் என்று ஆனார். 1898ஆம் ஆண்டு முதல் 1907 ஆம் ஆண்டு வரை திருவனந்தபுர மகாராஜ சமஸ்கிருதசாலையில் படிததார் வேடிக்கை என்னவென்றால் முறையாக இசையும் தமிழும் பயின்றவர் அல்ல. அவரது அடிப்படைக் கலவி மலையாளம, சமஸ்கிருதம் இவ்விரண்டு மொழிகளையும் முறையாகப் பயின்றவர்.
தர்மபுர ஆதீனத்தில் இலவசமாக இருப்பிடம் முதலியவை கொடுத்து சைவத்தையும் தமிழிசையையும் வளர்க்க ஆதரவு வழங்கு வதுபோல, திருவனந்தபுரத்தில் மகாராஜாவின் கட்டளைப்படி இலவசமாக உணவு இருப்பிடம் எல்லா வசதிகளையும் செய்து கொடுத்து மலையாளத்தையும் சமஸ்கிருதத்தையும் வளர்த்து வருகின் றார்கள். அங்கு பாபநாசம்சிவன் பயின்று ‘உபாத்தியாய வையா
தரணி" என்ற பட்டத்தையும் பெற்றார். பின்பு தமிழகத்திற்கு
۔سسے 13 سس

Page 13
வந்து தமது இசைப்பணியை ஆற்றினார். இறைவன் அருளை வியந்து பாடி துதித்து எல்லோரது பாராட்டையும் பெற்றார். சுமார் மூவாயிரத்து அறுநூறுக்கு மேற்பட்ட கீர்த்தனைகளைப் பாடி எல்லாரது பாராட்டையும் பெற்றுள்ளார். இவரது பாடல் களின் சிறப்பு எல்லாக் கடவுளரையும் இணைத்து பாடியுள்ளமை யாகும். வேடிக்கை என்னவென்றால் பல கீர்த்தனைகளை நாம் பாடு கின்றோம்; ஆனால் அது பாபநாசம் சிவன் அவர்களது கீர்த்தனை கள்தான் என்பது நமக்கு தெரிவதில்லை. நானும் இந்த விழாவிலே பாபநாசம் சிவன் பற்றி உரையாற்ற வேண்டி பல பாபநாசம் சிவன் கீர்த்தனைகள் புத்தகங்களை வாங்கிப் பார்த்தபொழுதுதான் சிவனுடைய கீர்த்தனைகள் என்று தெரியாமலேயே பாடியது புலனாகியது.
இந்துசமயத்தில் ஒரு பெரிய குறை என்னவென்றால் நம்மிடையே கூட்டு வழிபாடு செய்வதில்லை. ராமகிருஷ்ணமிஷனில் இந்த வழி பாடு நடைபெறுகின்றது. கோவில்களில் நாம் அனைவரும் சேர்ந்து கூட்டு வழிபாடு செய்தோமேயானால் அதற்குரிய சக்திமிக அதிக மாகும். பாபநாசம் சிவன் அவர்களும் தன்னுடைய வாழ்க்கையில் கூட்டு வழிபாட்டை மேற்கொண்டார். வயது முதிர்ந்த நேரத்தில்கூட மார்கழி மாதத்தில் அதிகாலைப் பொழுதில் எழுந்து மயிலாப்பூர் வீதியில் பஜனைகள் நடத்தியுள்ளார். அவரது பாடல்களை செவி வழியாக கேட்டு பாடியவர்கள் அனேகம் பேர். செவி வழியாகக் கேட்கும் பெருமையை 'கற்கிலர் ஆனினும் கேட்க' என்றார் வள்ளுவப் பெருந்தகை.
தன்னுடைய வாழ்க்கை முழுக்க தமிழுக்கும் சைவத்திற்கும். தமிழிசைக்கும் என வாழ்ந்தவர் பாபநாசம் சிவன் அவர்கள், ஊரூராகச் சென்று பஜனைகள் நடத்திக் கொண்டிருக்கும் நிலை மையைக் கண்ட பெற்றோர் இவரைத் திருமணப் பந்தத்தில் ஈடு படச் செய்து, ஒரு இடத்தில் தங்கவைத்தார்கள். ஒருமுறை அவர் திருவாரூருக்குச் செல்கின்றார். தேரிலே அழகு திருவாரூர்த் தேர் தான். அந்த தேரின் அழகைப் பார்க்கின்றார். அழகான கவிதை அவர் உள்ளக் தில் பிறக்கின்றது. திருவாரூரில் உள்ள சிவனுக்கு உள்ள சிறப்பு என்னவென்றால் அஜபா நடனம்தான். திருமாவின் இதயத்தில் வீற்றிருக்கின்ற சிவபெருமானாக சிவன் ஆடுகின்ற தலம் திருவாரூர். கமலாலயம் என்னும் புண்ணிய தீர்த்தமும் இங்குண்டு. திருவாரூர்த் தேர், கமலாலயத் தீர்த்தம் என்னும் இரண்டு பெருமை சார்ந்த விடயங்களையும் மனதில் கொண்டு முதல்முதல் குந்தல வராளி" ராகத்தில்,
a 14

"உன்னை துதிக்க அருள் தா - இன்னிசையுடன் உன்னைத் துதிக்க அருள் தா".
என்ற பாடலை மனமுருகிப் பாடினார். ஆடும் பரிவேல் அணி சேவல் என பாடும் பணியே பணிவாய் அருள்வாய் என முருகப் பெருமானைப் பாடவேண்டும் என்பது போல, இறைவனை இன்னிசை யோடு பாடி மகிழ்ந்து வாழும் வாழ்க்கை பெரிது என்று வாழ்ந் தவர்கள்" பாபநாசம் சிவன் அவர்கள்
இவருடைய இந்தப் பாடல்களைக் கேட்டுவிட்டு அந்தக் காலத் தில் சிமிளி சுந்தரம் ஐயர் சொன்னாராம் தியாகராஜசுவாமிகளுக்கு தெலுங்கு மட்டுமே தெரியும். அதில் திறமையாக கீர்த்தனைகளைப் பாடினார். அவர் இறக்கும் சமயம் தமிழில் கீர்த்தனைகள் பாட வில்லையே, தமிழிசைக்கு ஒரு தொண்டும் செய்யவில்லையே என்ற ஏக்கத்துடன் இறந்திருப்பாராம். அப்படிப்பட்ட தியாக பிரம்மம் பாபநாசம் சிவன்ாக அவதரித்தார் என்று போற்றப்படுகின்றார். பூணூரீ தியாக பிரம்மத்தின் தெலுங்கு கீர்த்தனைகளுக்கு ஈடாக தமிழில் இவரது கீர்த்தனைகள் விளங்குகின்றன. எனவே 'தமிழில் தியாகையா' என்பது பாபநாசம் சிவனை மட்டுமே குறிக்கும்.
பாபநாசம் சிவனது மிகள், மகன் அனைவரும் இவரது பாடலைப் பரப்புகின்ற பெரும் இசைத் தொண்டினை சென்னையில் செய்து வருகின்றார்கள்.
கிட்டத்தட்ட 47 ஆண்டுகள் (1912 முதல் 1959 வரை) சிவன் அவர்கள் பெரும் பணியை தமிழ் இசைக்குச் செய்து வந்திருக்கின் றார்கள். திருவையாறு சப்ததான பஜனையில் கலந்து தினமும் 18 மைல்கள் நடந்துள்ளார். தமிழிசைப் பாடல்கள் தாயுமானவர் பாடல்கள், வள்ளலார் பாடல்கள் யாவற்றையும் பஜனையில் பாடி பெரியதொரு சாதனையை நிலைநாட்டியிருக்கின்றார். அதே பணியை திரும்பவும் மைலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்தில் பல ஆண்டுகள் "கூட்டு வழிபாடு பஜனை என்று இசைத் தொண்டு ஆற்றி யிருக்கின்றார். கூட்டு வழிபாட்டிற்கும் பஜனைக்கும் இவர் ஆற்றிய தொண்டை எண்ணும்போது சில ன் அவர்களது திருவடிக்கு மீண்டும் மீண்டும் வணக்கம் செலுத்தும் உணர்வே ஏற்படுகிறது. அப்படியொரு மகத்தான புண்ணிய காரியத்தை அவர் மேற்கொண்டுள்ளார். அது மட்டுமல்ல பல நாட்டிய நாடகங்களையும் அவர் எழுதியுள்ளார். ஆண்டாள், கிருஷ்ணமாலைக் குறவஞ்சி, கண்ணப்ப குறவஞ்சி என்ற மூன்றும் தமிழிசையில் குறிப்பிடத் தக்கன.
سن' 15 سس۔

Page 14
பாபநாசம் சிவன் அவர்களின் நாடகங்களை நடன நாட்டிய நிசழ்ச் சிகளை அளிப்பவர்கள் செய்து பார்க்கலாம். அது மக்கள் மத்தியில் சிவனது தமிழிசைத் தொண்டினைப் பரப்பவும் பாது 7ாக்கவும் ஒரு வழி எனக் கூறலாம். கீத கோவிந்தம், சாகுந்தலம், தசவதாரம், கூர்ம அவதாரம் போன்ற சமஸ்கிருத நாட்டிய நாட கங்களுக்கும் இவர் இசையமைத்துள்ளார். இவற்றையெல்லாம் நாம் இசை ரசிகர்களுக்கு நடித்துக் காட்டினால் அது சிவன் அவர் களின் பொன்னார் திருவடிக்கு நாம் செலுத்தும் வணக்கமாக இருக்கும். இனி அவர்களது பாடல்களைப் பார்க்கும் பொழுது ஒரு குறிப்பிட்ட சடவுள்மீது பாடாமல் எ ல் லா க் கடவுளரையும் இணைத்து போற்றிப் பாடியுள்ளார். பாரதியார், பாரதிதாசன் போன்றவர்கள் போல் மொழித் தூய்மையினை இவரது பாடல்களில் காணமுடியாது. சிவன் அவர்களது பாடல்களில் வடமொழிக் கலப் பினைக் காணலாம். ஏனெனில் இவரது அடிப்படைக் கல்வி சமஸ் கிருத மலையாளம் என்றிருந்தமையே கூறலாம். இதை ஒரு குறை யாகக் கூறமுடியாது. பாடல் ஆசிரியருக்குள்ள "கவித்துவ உரிமை" எனலாம்.
முத்திரை சரணம் என்று ஒரு சரணம் உண்டு. அதாவது பாட லாசிரியரின் முத்திரை, சரணத்தில் காணப்படும். பூரீ தியாசராஜ ருடைய பாடல்களை எடுத்துக் கொண்டால் "தியாகராஜநுத' என்று அவருடைய பெயர் முத்திரையாகக் காணப்படும். முத்து சுவாமி தீர்க்ஷிதருடைய பாடல்களில் 'குருகுஹ' என்ற முத்திரை காணப்படும். அதேபோல பாபநாசம் சிவனுடைய பாடல்களில் *ராமத ஷன்" என்னும் முத்திரை காணப்படும். உதாரணமாக ரீதிகெளளை ராகத்தில் அமைந்துள்ள,
‘தத்வம் அரியதரமா - மூலாதார கணபதி
சுரபதே உனது"
என்ற பாடலில் சரணத்தில் ராமதாசன் எனும் முத்திரை காணப்படுகின்றது. எல்லாப் பாடல்களிலும் முத்திரையைக் காண முடியாது. எந்தப் பாடலை அவரும் மிகவும் மனமுருகி, மெய் மறந்து ஆத்மார்த்தமான உள்ளுணர்வோடு ஈடுபட்டு பாடுகின் றாரோ அதில் சில சமயம் காணலாம். ஜோண்புரி ராகத்தில் மிக அருமையாக முருகனை நினைந்து உருகிப் பாடியுள்ளார்.
*"முருகனைப் பணி மனமே - திருமால்
மருகனைப் பணி மனமே."
حسی۔ 16 سب

மயிலையில் வீற்றிருக்கும் கபாலீஸ்வரரை நினைந்து “கபாலீஸ் வரரைக் காண கண்கோ டி வேண்டுமென்கின்றார்." இந் த ப் பாடலை மதுரை சோமு ஐயா அவர்கள் பாடிக் சேட்க வேண்டும். மிக அருமையாக அனுபவித்துப் பாடி எங்களையும் இசையில் மூழ்கச் செய்வார். சபாலீஸ்வரர் பவனி வரும் தோற்றம், அவருடைய அழகு யாவற்றையும் கருக்து நிறைந்த சொற்றொட ரைக் கொண்டு பாடியுள்ளமை நன்றாக இருக்கின்றது.
இறைவன் வருகின்றார் கங்கையை தலையில் அணிந்துள்ள சிவபெருமான் அறுகம் புல்லையும், கொன்றை மலர் மாலையையும் அணிந்துள்ளார். புலித்தோலை ஆடையாக அணிந்துள்ளார். யானை உரியைப் போர்த்தியுள்ளார். கபாலீஸ்வரன் வருகின்ற இந்த தோற் றத்தைப் பார்த்தால் பெண்கள் தமது மனதைப் பறிகொடுத்து விடுவார்கள் என்கிறார்.
"மதி புனல் அரவு கொன்றை தும்பை அறுகு மதிபுனை மார் சடையான்."
மோகன ராகத்தில் அமைந்துள்ள இப்பாடலின் மூலம் சிவபெரு மானின் தோற்றத்தை எவ்வளவு அழகாக நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகின்றார்.
கோயில் என்றாலே நம் மனக் கண்முன் தோன்றுவது சிதம்பரத்
தான். இம்மானுட பிறவியே வேண்டாம் என்று நாயன்மார்கள் பாடியபோது, நாவுக்கரசப் பெருந்தனை தில்லை ந ட ரா ஐ ரின் தாண்டவத்தைக் காண இம்மணித்த பிறவி வேண்டும் என்கின்றார்.
'குனித்த புருவமும் கொவ்வை செவ்வாயில்
குமிழ் சிரிப்பும், பனித்த சடையும் பவளம்போல் மேனியிற் பால் வெண்ணிறும், இனித்தமுடைய எடுத்த பொற்பாதமும் காணப் பெற்றால் மனித்த பிறவியும் வேண்டுவதே இம்மானிலத்தே
என்று அருமையாகப் பாடியுள்ளார்.
இடம், பொருள், ஏவல் பார்த்துப் பாடல் எழுதவேண்டும். நாம் சம்பனிடம் இந்த கவித்திறனைக் காணலாம். உறங்குகின்ற கும்பகருணனை எழுப்ப பாடும் பாடலொன்றினை இங்கு பார்க்
Gynrh.
- 7 -

Page 15
'உறங்குகின்ற கும்ப கருணன் உங்கள் மாய வாழ்வெலாம்
இறங்குகின்ற விந்தை காண்.எழுந்திராய் எழுந்திராய்.”
இந்த பாடல் உலக்கை போட்டுக் குத்துகின்ற பாடல். எந்த இடத் தில் எப்படி எழுத்தக்களை அமைக்க வேண்டுமென ஒரு கவிஞன் முடிவு செய்துகொண்டு பாடவேண்டும். இந்த திறமையை பாபநாசம் சிவன் அவர்களது பாடல்களில் முழுமையாக காணலாம். அவர் பாடியுள்ள தில்லை நடராஜ பாடல்கள் அனைத்தும் நடனம் குறித்த பாடல்கள். நடன அமைப்பிற்குத் தேவையான சொற்கட்டுக்கள் அனைத்தையும் அதில் நாம் காணலாம்.
'தத்தை மொழி சிவ%ாமி மணாளன் தத்வ குணன் பதி நான்குல காளன் தத்வ மதி பொருள் ஆய தயாளன் சதானி ஜெகன்பர் வணங்கும் தயாளன்'
நடனம் எப்படி அமையவேண்டுமென சொற்கட்டோடு மிகத் திறயைாக பாடியுள்ளதை இந்தப் பாடல்களில் காணக்கூடியதாக உள்ளது. அவரது பாடல்களில் திரை இசைப்பாடல்கள் என் லாத் துறையிலும் அமைந்திருக்கும் தன்மையைக் காணமுடியும். இப்போது இருக்கின்ற திரைப் படல்கள் அப்படி அமைந்திருப்பதாகத் தெரிய வில்லை. ஆனால் சிவன் அவர்களின் திரை இசை ப் பாடல் கள் மிகவும் அருமையாகவும் அனைவரும் கேட்டு மகிழக் கூடியதாகவும் விளங்குகின்றது. கரகரப்பிரியா ராகத்தில் அமைந்த பழைமையான திரை இசைப் பாடல் ஒன்று,
'முன்வினையால் இன் துன்பங்கள் விளங்கிட
மூட மதகொண்டு உன்னை நோகடிப்பது பேதமை என் விதியால் இடர் ஆயிரம் சூழினும்"
இந்தப் பாடலில் மிக அருமையாக நம் வாழ் க் கை த் தத்துவம் காட்டப்பட்டுள்ளது:
இன்று பொது வாக வே சிவனை வாழ்த்தி வணங்குபவர்கள் விஷ்ணுவை வணங்குவதில்லை. இன்றுகூட நம்மிடையே திருவெம் பாவை படிப்பவர்கள் திருப்பாவை படிப்பதில்லை. அப்படியிருக்கும் நிலையில், பாபநாசம் சிவன் அவர்கள் தில்லை நடராஜனையும் பாடி திருமாலையும் பாடியுள்ளார். தேவகி மைந்தனாக பிறந்தாலும் கூட திருமாலை வளர்க்கின்ற பாக்கியம் பெற்றவள் யசோதை என்றும், அந்த யதோதையை வியந்தும் பாடுகிறார்:

'ள்ன்ன தவம் செய்தனை யசோத
எங்கும் நிறை பரபரம்மம் அம்மா என்று அழைக்க என்ன தவம் செய்தனை"
பொதுவாகவே இறைவனோடு ஈடுபாடு கொண்டவர்கள் அரசி யலைக் கண்டு அஞ்சுவார்கள். சிவன் அவர்களின் இறுதிக்கட்ட வாழ்க்கையைப் பார்த்தால் அவர் மிகுந்த ஈடுபாடு கொண்ட காங் கிரஸ் வாதியாகவும் இருந்திருக்கின்றார். ஜாலியம் வாளாபாத் படு கொலை நடந்தபோது அதைக் கண்டித்து பல மேடைக்ளில் பேசி *ளார். இது வியப்பிற்குரிய ஒன்றாகும். எந்த தனிமனிதரையும் பாடாத சிவன் அவர்கள் மகாத்மா காந்தியைப் போற்றிப் பாடி Hள்ளார். காந்தியிடம் மிகுந்த அன்பும் மரியாதையும் கொண்ட காரணத்தினால்,
“காந்தியைப் போலொரு சாந்த சொரூபனை காண்பது எளிதா மோ"
என்று է մուգ 6Ծrnni,
கைம்மாறு செய்வதுண்டோ காந்திக்கு" என்று இவர் இயற்றி தியாகராஜபாகவதர் அவர்கள் பாடினார். சிவன் அவர்களின் பாடல் கள் மக்களிடம் போய்ச் சேர தியாகராஜபாகவதர் அவர்களின் குரல்வளம் துணையாக இருந்தது. அத்த வகையில் தியாகராஜ பாகவதரும் பாபநாசம் சிவனும் இணைந்து தமிழிசையை வளர்த்த பொன்னான காலமெலாம் தமிழிசை வரலாற்றில் தம்மால் மறக்க முடியாதபடி அமைகின்றது.
'படி ஒருவனுக்கு இறைபற்று முக்கியமோ அதேபோல நாட்டுப்பற்றும் முக்கியம். 'பாரத நாடு பழம்பெரும் நாடு நீர் அதன் புதல்வன் என்ற நினைவை அகற்றாதே' என்றான் பாரதி,
“எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே - அதன் முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
முடிந்ததும் இந்நாடே - அவர் சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்த்து
சிறந்ததும் இந்நாடே - இதை வந்தனை கூறி மனதில் இருத்தி
என் வாயுற வாழ்த்தேனோ'
ー五19ー

Page 16
எந்த இடத்தில் தமிழர் நாம் இருந்தாலும் நம் நாடு பண் பாடு, நம் கலாசாரம் நம்மொழி என்று இவைகளை மறக்காமலிருக் கும் போது தான் தமிழும், தமிழோடு இணைந்த இசையும் வாழ முடியும் வளர மூடியும். எனவே இவைகளை இணைத்துப் பார்க் கின்று பாபநாசம் சிவன் பாட்டுக்கொரு புலவன் பாரதியை பாடினார். பாபநாசம் சிவன் என்ன சொல்கிறார் என்றால் “தமிழ் நாடு செய்த தவப் பயனால் வந்து அவதரித்தாய் மனிதர் மனம் இரு ளோடு அச்சம் தவிர்த்தாய் அமுதினும் இனிது உன் கவிதை நயம் யாரிக்கும் தரமோ உன், அற்புதிக் கற்பனை உன் பாமாலைகசூ இணையுண் டோ, பூமாலைகள் வாடி விடும் ஆனால் தமிழுக்கு நீ செய்து கொடுத்த பாமாலை காலத்தால் அழியாதது" என்றெல்லாம் புகழந்து பாரதியைப் பாடி பாராட்டிய பெருமைக்குரியவர் பாப நாசம சிவன் அவர்கள்.
நாம் இறைவனிடம் கேட்கும் வரங்கள் பல. நான்கு பெண் குழந்தைகளை உடைய சிவன் அவர்கள் அம்பிகையிடம் கேட்கும் வரம ஒன்றுதான் "தாயே என் நா உe எவரை தமிழ் உள்ளவரை உன் ம0  ைதமிழ்ப பாடல்களால் பாடவேண்டும்." சிவன் அவர்களுக்கு தமிழிலும் இசையிலும் உள்ள ஆர்வம் இதனால் புலனாகின்றது. ஒரு இடத்தில் பாரதி சொல்லுவான்,
"வெள்ளை மலர்மிசை வேதக் கருப்பொருள் ளாக விளங்கிடு வாய்! தெள்ளு கலைத்தமிழ் வாணி! நினக்கொரு
விண்ணப்பஞ் செய்திடுவேன்; எள்ளத் தனைப்பொழுதும்பய னின்றி இராதென்றன் நாவினிலே வெள்ளமெனப்பொழி வாய்சக்தி வேல், சக்தி
வேல், சக்தி வேல், சக்தி வேல்!
இந்தப் பாடலின் கருத்து சிவன் அவர்களின் மனதில் ஆழப் பதிந்திருக்க வேண்டும். அதே கருத்துள்ள பாடல் ஒன்றைப் பாடி யுள்ளார். "பைந்தமிழ் மலர் பாமாலை சூடி உன்பாத மலர் பணிந்து பாடவும் வேண்டும்' இந்தப் பாடல்கள் யாவும் காலத்தை வென்ற பாடல்களாக இருந்ததினால்தான் தமிழகத்தில் மட்டுமல்ல கடல் கடந்தும் இன்று வரை அழியாமல் இருக்கின்றன. அதனை நினைந்து நாமும் போற்றுகின்றோம்.
சிவன் அவர்களின் பாடல்களில் பக்தி, அரசியல், சமரசக் கொள்கை இவை மட்டுமல்ல காதல் ரசமும் அதில் நிறைந்து காணப் படுகின்றன. சிவன் அவர்கள் காதல்பற்றி பாடியது போன்று
سس۔ 30 مسسی

வேறெங்கும் காணமுடியாது. அந்தளவிற்கு உணர்ந்து பாடியுள்ளார். பழைய பாடல்களில் இவற்றைக் காணலாம். இன்றும் அவை உயிரோட்டமாக எம்மிடையே இருக்கின்றன. தலைவன் தலைவியை நோக்கிச் சொல்லும்பாங்கில், அமைந்த சாருமதி ராகப் பாடல் நல்ல ஒர் உதாரணமாகும்.
“ “ Dasiv og லீலையை வென்றார் உண்டோடி
என்மேல் உமக்கேன் பாரா முகம்" என்கிறார்.
ஒட்டுமொத்தமாக நாம் பார்க்கும்போது பாபநாசம் சிவன் அவர்கள் ஒரு சிறந்த கவிஞர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த நாடக நடிகன், சிறந்த திரை நடிகன் எல்லாவற்றைக் காட்டிலும் ஆன்மீகத்திற்கு ஒப்பற்ற தொண்டைச் செய்தவன். 47 ஆண்டு கடலம் மைலாப்பூர் வீதிகளில் கூட்டுபஜனை நடத்தி மக்களை ஆன்மீக வழியில் இட்டுச் சென்றுள்ளார். இவருக்கு இணையாக இனி யாரும் பிறக்கப் போவதில்லை. எப்படி சிவன் அவர்கள் 'உன்னைப்போல் ஒரு கவிஞன் இனிப் பிறக்க மாட்டான்' என்று பாரதிக்குச் சொன் னாரோ, அது போல இனி பாபநாசம் சிவன் அவர்கள் போல் எல்லாம் பிறப்பது கடினம். அவர் பிறந்த மண்ணில் பிறந்த நமக்கும் பெருமை. அவர் வரலாற்று இசைத் தொண்டை தமிழிசை அரங்கில் நடத்தும் அமைச்கிற்கும் பெருமை.
- I -

Page 17
நாட்டியமும் தமிழிசைப் பாரம்பரியமும்
நாட்டிய கலாசிகாமணி செல்வி சுபாஷினி பத்மநாதன்
இத்து கலாசார அமைச்சின் ஆதரவுடன் அண்மையில் கொழும்பு இராமகிருஷ்ணமிஷன் மண்டபத்தில் இடம்பெற்ற தமிழிசை அரங் கில் "நாட்டியமும் தமிழிசைப் பாரம் பரியமும்" என்னும் பொருள் பற்றி நாட்டியக் கலாசிகாமணி செல்வி சுபாஷணி பத்மநாதன் ஆற்றிய சிறப்புச் சொற்பொழிவினை இங்கு தருகின்றோம்.
உடலும் உயிரும் போன்றும், பாலும் சுவையும் போன்றும் நாட்டியக் கலையும் இசைக் கலையும் தம்மிடையே பிரிக்க முடி யாத கலைப் பிணைப்புக்களைக் கொண்டுள்ளன.
பரதநாட்டிய சாஸ்திரமானது கிறிஸ்துவுக்கு முன் இரண்டாம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் எழுந்திருக்கலாம் என்று நம்பப்படுகின்றது. இது செவ்வனே நாட்டியத்திற்குத் தேவையான இசை, இசைக்கருவிகள், மற்றும் அவற்றின் பயன்பாடு கள் என்பனவற்றைக் குறிப்பிட்டுள்ளது. வாய்ப்பாட்டை மட்டும் நாம் இசையெனக் கருத முடியாது. இசையை எழுப்பும் பல்வேறு இசைக்கருவிகளையும் நாம் இசைத்துறை எனும் அம்சத்தில் ஆராய் தல் இன்றியமையாததாகும்.
நாட்டிய சாஸ்திரத்தில் இவை முறையே தத, ஸஷர, அவனத்த, கண எனப் பிரிக்கப்பட்டிருந்தன. அவை முறையே தந்திக் கருவி கள், மாற்றுக் கருவிகள், தோற் கருவிகள் மற்றும் கைத்தாளக் கருவிகள் என்ற அடிப்படைக் கருவி அமைப்புக்குள் வடிவமைக்கப் பட்டும் பிரிக்கப்பட்டுமுள்ளன.
நாம் இன்று சாதாரணமாக இந்திய இசை வழக்கினை எடுத்து நோக்குமிடத்து அது இரு பெரும் கூறுகளைத் தன்னகத்தே கொண் டுள்ளது. ஒன்று வட - இந்திய இசைத்துறை, வட - இந்திய இசைத் துறையானது இந்துஸ்தானிய சங்கீதமென்றும் மற்றையது கர்நாடக சங்கீதத்துறை எனவும் பிரிக்கப்பட்டுள்ளது. இப்பிரிவானது கி. பி. 13 ஆம் நூற்றாண்டிற்குப் பிற்பட்ட காலப்பகுதியிலேயே இரண்டா கப் பிரிந்து வளர்ச்சியடையத் தொடங்கியது:

Dancing couple at Doddabas appa Temple, Dambal (Karnataka)

Page 18

தென்னிந்திய நாட்டியங்கள்
தென்னிந்திய கலாசார நடனமாகிய பரதநாட்டியத் துறை யானது இயல்பாகவே தென்னிந்தியக் கர்நாடகச் சங்கீதத் துறை யினை தன் உயிர் நாடித் துடிப்பாகக் கொண்டுள்ளது. கர்நாடக சங்கீதத்துறையை நாம் இன்று சாதாரணமாக எடுத்து நோக்கும் போது அது பின்வருமாறு வகுக்கப்படுகின்றது.
1. தென்னகப் பாடல்கள் அல்லது பக்திப் பாடல்கள்
2. நாட்டுப் பாடல்கள்
3. நாட்டியத்திற்கே உரித்தான நாட்டியப் பாடல்கள் என்ற எல்லைக்குள் வரையறுக்கப்பட்டுள்ளன.
கர்நாடக சங்கீதத்துறையானது தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு தென்னிந்திய மொழிகளில் அதிகம் காணப்பட்டபோதிலும் கூட, ஆங்காங்கே வடமொழிச் சொற்கள், சொற்றொடர்கள் என்ப தைக் கொண்டுள்ளது.
இசைத்துறையானது நாட்டியக் கலையைப் போன்று சிற்பங் களிலும் ஒவியங்களிலும் செவ்வனே வளர்க்கப்பட்டும், பாதுகாக்கப் பட்டும் வந்தது இத்துடன் பல்வேறு இசைக் கருவிகளைச் செவ்வனே சித்திரிக்கும் கல்வெட்டுகள், கோவில் கல்வெட்டுகள், கோபுரங்கள் மணிமண்டபங்கள் மற்றும் தூண்கள் என்பன இன்றும் இசைத்துறை வளர்ச்சிக்குப் பெரிதும் தொண்டாற்றி வருகின்றன. கோவில் தூண் களில் இசை நாதம் ஏற்படுத்தும் பாடல்கள் அரிய கலை நுணுக்கம் செறிந்த தூண்களை, இன்றும் நாம் தஞ்சை, மதுரை அழக கோவில் போன்ற அரிய திருக்கோவில்களில் காணலாம்.
நாட்டியக் கலை எவ்வாறு கோவில்களிலும் கோவில்களை அண்டிய பகுதிகளிலும் பாதுகாக்கப்பட்டு வளர்க்கப்பட்டும் வந்ததோ, அவ்வாறே இசைத்துறையும் கோவில்களிலும் கோவில்களை அண்டிய பகுதிகளிலும் செவ்வனே பாதுகாக்கப்பட்டு வந்தது. இரண்டும் தெய்வீகக் கலைகளே. நாட்டியமானது கூத்தபிரானால் எவ்வாறு பாதுகாக்கப்பட்டு வந்ததோ அவ்வாறே இசைத்துறையும் இறை வனாலேயே வளர்க்கப்பட்டு வந்தது. பின்வரும் புராணப் பாடல் வரிகள் அதனைப் பெரிதும் தெளிவுபடுத்துகின்றது:
معهم 23 حسب

Page 19
'நந்தி மத்தளம்
கொட்ட, நான்முகம் பாட திருமால் தாளம் போட அம்பலத்தே சிவபிரான் நடனமாட’’
'இறை', 'இசை' இவையிரண்டும் சொல்நாத அல்லது ஒளிநாத அமைப்பில் ஒன்றுடனொன்று தனித்துவ இயல்பு களால் ஒற்றுமைகளைக் கொண்டுள்ளன. "இ" என்னும் உயிரெழுத் தையும்"ஐ" என்னும் ஒரே ஒலி நாதத்தையும் கொண்டு முடிவதால் இயல்பான பிணைப்புகளைக் கொண்டுள்ளன.
“முத்தொழில் புரிந்து வருவது முறை
முத்தமிழின் மையமாக இருப்பது இசை'
இறைவனே இசை வடிவினன் என்பதை "ஒசை ஒலியெல்லாம் ஆனாய் நீயே" என்னும் அப்பரின் திருத்தாண்டவ அடிகள் செவ் வனே எடுத்தியம்புகின்றது.
தமிழ்க் கலாசாரத்தைப் பொறுத்தமட்டில் தமிழிசைத்துறை, தமிழ் நாட்டியத் துறை இவையிரண்டும் இறைவனிடம் இரண்டறக் கலந்துள்ளது. இவை இறைவனால் எமக்களிக்கப்பட்டது. இதை அப்பர் சுவாமிகள் பின்வரும் பாடல் வரிகளில் விளக்கியுள்ளார்:-
"பாட்டுக்கும் ஆட்டுக்கும்
பாண்பா போற்றி LumrGGBonumriff untudio உகப்பாய் போற்றி பண்ணின் இசையாகி நின்றாய் போற்றி"
என்ற பாடல் வரிகளில் நாம் இதைச் செவ்வனே காண்கிறோம்;
திருஞானசம்பந்தரோ ஓரிடத்தில் இதைத் தெளிவாக வெளிப் படையாக எடுத்தியம்புகிறார்.
"இறைவனே ஆடல் பாடல் ஆகிய இரு கலைத்துறைசளும் உல கிற்கு உவந்தளிக்கப்பட்டது என்பதை எமக்கு மிகவும் துல்லியமாக
- d -

எடுத்தியம்புகின்றார்.
அபிராமி பட்டனார் நரம்பிசையைப் பற்றிக் குறிப்பிடுகையில் நரம்பிசையுடன் தேவியை ஒப்பிட்டுக் கூறுகிறார்.
நரம்பை அடுத்த இசை வடிவாய் நின்றாய் நாயகியே என தேவியை நரம்பிசையுடன் ஒப்பிட்டு விளித்து நோக்குவதை நாம் காண்கின்றோம்.
அப்பர் சுவாமிகள் வெப்பு நோயால் பாதிக்கப்பட்டபோது,
'தமிழோடு இசை பாடல் மறந்தறியேன்” என்று திருவதிகை வீரட்டான திருத்தலத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை நாம் பண்டைக் காலம் தொடக்கம் நாட்டியக் கலைத் துறையும் தமிழிசைக் கலைத்துறையும் எவ்வாறு ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து கோவில் சந்நிதானங்களில் தெய்வீகக் கலை சிம்சங்கள் வழுவாமல் பக்தி மரபுடன் பாதுகாக்கப்பட்டு வந்தது என்பதை அவதானிப்போம். இனி சங்க காலம் தொடக்கம் 20ம் நூற்றாண்டு வரை எவ்வாறு இவ்விரு நுண் *லைகளும் வளர்க்கப் பட்டு வந்தது என்பதையும், அவற்றின் வளர்ச்சிப் படிநிலைகளை யும் சற்று விரிவாக ஆராய்வோம்,
சிலப்பதிகாரம்
கிறிஸ்துவுக்குப் பின்பு 2ம் நூற்றாண்டில் வாழ்ந்த இளம்கோ அடிகள் தலை சிறந்த தமிழ்ப் புலவர். அவரது சிலப் திகாரம், இசை நாட்டியத்துறை முழுவதற்கும் சிறந்த ஆராய்ச்சி நூலாகக் கருதப்படுகிறது. இசைத்துறையைப் பொறுத்தமட்டில் ஆச்சியார் குறவை, குன்றக்குறவை, வேட்டுவ வரி ஆகிய அரிய இசை நுட் பங்களை இது செவ்வனே எடுத்தியம்புகிறது. அதேபோல நாட்டியத் திற்குத் தேவையான சகல நுட்பங்களையும் சிலப்பதிகாரம் செவ்வனே எமக்கு இயம்புகிறது. நாட்டிய முத்திரைகள், அபிநயப் பிரயோ கங்கள், பக்க வாசதியங்கள், மேடையில் அமர வேண்டிய முறை என்பவற்றை சிலப்பதிகாரம் விபரித்துள்ளது.
தமிழக வரலாற்றிலே இசைத்துறையில் இருண்ட காலப்பகுதி யெனக் கருதப்படுவது களப்பிரர் காலமாகும். அந்நிய ஆட்சியால் நிம்மதி குலைந்து இசை வளர்ச்சி குன்றி கலைத்துறை மங்கிக் கணப் பட்டது. இக்கால கட்டத்தில்தான் இசைத்துறையில் காரைக்கால்
سس را بسته

Page 20
அம்மையாரி அவதரித்தார். இருண்ட வானில் எழுந்த சிற்றொளி என்று அவர் வர்ணிக்கப்பட்டார். திருவாலங்காட்டு மூத்த திருப் பதிகம் என் வற்றைக் கவி வனப்புட்ன் இசைமயத்துடன் பாடி எமக்கு அருளித் தந்தார். இதற்கு பிற்பாடு தமிழக வரலாற்றிலே கி. பி. 7ம் நூற்றாண்டில் பல்லவராட்சி தலைதூக்கியது. நாயன் மார்களும், ஆழ்வார்களும் சமிய வானில் உதித்தனர். 9ம் நூற் றாண்டில் சுந்தரர் அவதரித்தார். சுந்தரர் ஞானசம்பந்தரைப் பற்றிக் குறிப்பிடுகையில்,
*நாளும் இன்னிசையால் - தமிழ் பரப்பும் ஞானசம்பந்தனுக்கு உலகத்தவர் முன் தாளம் ஈந்துநீ"
"நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பிய ஞானசம்பந்தன்" என்னும் அடிகள் தேவாரத்தால் தமிழிசை வளர்க்கப்பட்டதை எமக்கு எடுத்தியம்புகின்றது.
9ம் நூற்றாண்டில் இசைப் புலவர் மாணிக்கவாசகர் அவர்களால், அருளிச் செய்த அரிய கொடைகள் திரு அம் மானை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி என்பன இன்றும் அதே கனிவுடன் பாடப்பட்டும், நாட்டியத் த ரகைகளினால் இன்னும் பக்திச் சுவைசொட்ட ஆடப் பட்டும் வருகின்றன.
ஆழ்வார்கள் கி. பி. 7ம் நூற்றாண்டிலிருந்து 9ம் நூற்றாண்டு வரை வாழ்த்து வைஷ்ணவ மத பக்திப் பாடல்களைத் தமிழிசையில் பாடி வைஷ்ணவ பக்தி நெறியைப் பரப்பினர். பூரி ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை இன்றும் நாட்டியக் கச்சேரிகளில் சிறப் பாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
10ம் நூற்றாண்டில் திருமாலிகைத் தேவர் உட்பட ஒன்பதின்மர்
இயற்றிய இசைப்பாக்கள் பண்ணிசைத் தொகுதிகள், திருவிசைப்பா.
திருப்பல்ல உண்டு என்னும் தலைப்பின்கீழ் செவ்வனே வடிவமைக்கப்,
ULG)an 67gi.
தமிழகத்தை பொறுத்த மட்டில் தமிழிசைத்துறை நாட்டியத் துறை இரண்டும் 13ம், 14ம், 15ம், 16ம் மற்றும் 17ம் நூற்றாண்டு கள் அதுவரை இ குண்ட காலப்பகுதிகளாகும். ஆயினும் 18 ஆம் நூற் றாண்டில் அருணகிரிநாதர் உதித்தார். திருப்புகழை எமககளித்தார். சொல்வளம், சொற்சுவை, கணிச்சுவை, இசை வளமிக்கது திருப்புகழ்
- 86 -

புதிய நோக்கில் வளர்ச்சி
17ஆம் நூற்றான்டில் தஞ்சை நாயக்கர் மன்னராட்சியில் சிக்கியது. 8ம் நூற்றாண்டில் தஞ்சை மராட்டிய மன்னராட்சியில் அடிபணிந்தது இக்காலப் பகுதியில்தான் தமிழிசைத்துறை புதிய வடிவமைப்பை ஏற்றுக்கொண்டு கர்நாடக சங்கீதத்துறை வளர்ச்சிடையத் தொடங் கியது. சாகித்தியங்கள் என்னும் புதிய இசைப் பாக்கள் ஸ்வரங்கள் என்பன சேர்க்கப்பட்ட புதிய இசை வடிவங்களுக்கு நாட்டியத் தாரகைகள் அபிநயத்து நாட்டியமாடத் தொடங்கினர்.
முத்துத் தாண்டவர் அருணாசலக் கவிராயர், கவிக் குறிஞ்சி பாரதியார் போன்றோர் தமிழ் நாட்டில் தோன்றி, தமிழிசையினை வழிநடத்தினர். அருணாசலக கவிராயரின் ராம நாடகக கீாத்தனங் கள் அதனைத் தழுவி எழுந்த கவிக்குறிஞ்சி பாரதியாரின் , கந்த புராணக் கீர்த்தனங்கள், கு மர குருபரரின் மீனாட்சியம் மைக்குறள், குற்றாலக் குறவஞ்சி எனபன நட்டியத்துக்கே உரித்தான தா சக் கொள்ளப்படுகின்றது. இதனால்தான் இவை கூத்துப் பாடல்கள் என அக்காலத்தில் அழைக்கப்பட்டன.
19ம் நூற்றாண்டில் வாழ்ந்த இசைப் புலவர் கோபாலகிருஷ்ண பாரதியார், மற்றும் மயூரம் தேவநாயகம் பிள்ளை போன்றே சர் அவதரித்தனர். கோபால கிருஷ்ண பாரதியாரின் நந்தனார் கீர்த் தனங் கள் இன்றும் நாட்டியத்தில் பெருமளவில் பயன்படுததப்பட்டு வருகின்றது.
20ம் நூற்றாண்டில் கர்நாடக சங்கீதத்துறையில் பல்வேறு இசைக் கர்த்தாக்கள் தோன்றினரி. பாபநாச சிவம் போன்றோர் பக்தி ரசம் சொரியும் நாட்டியத்திற்கே பொருத்தமான பாடல்களை எமக்களித் தனர். இவை இன்றும் பெருமளவு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
வடநாட்டவர் நாடல்
தமிழிசைப் பண்களின் அருமை பெருமைகளை உணர்ந்த வட நாட்டு புலவர்கள் கூட அவற்றைத் தம் இசைத் துறையில் பயன்படுத்த முயன்றனர். உதாரணமாக சாரங்கதேவர் என்பவர் தமிழ் நாட்டுக்கு வந்து சங்கீத ரத்னா காரம் என்னும் நூலில் தேவாரப் பண்ணிசை கனைப் பெரிதும் பாராட்டி எழுதியுள்ளதுடன் அவற்றை அவர் தனது நூலிலும் புகுத்தமுனைந்தார்.
இற்றைக்கு இத்தேவாரப் பண்கள், அதே இசை மரபில் பாடப் பட்டு வருகின்றன. இதை சி. ஆர். பூரீனிவாச ஐயங்கார் அவர்கள் 1927ஆம் ஆண்டு நடைபெற்ற அனைத்து இந்திய இசை மகா நாட்டில் இதனைச் செவ்வனே தெளிவு படுத்தியுள்ளார். தேவாரத்
-به ، 7 ----

Page 21
தில் 24 தமிழ் பண்ணிசைகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. அவை இன்னும் அவ்வாறே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கர்நாடக சங்கீதத்துறைக்கும் இவற்றிற்கும் மிக நெருங்கிய தொடர்புள்ளது. இருவகை இராகங்களும் ஒன்றே எனக் கொள்ளலாம் என்று அருமை aunas sésná6uysitan i.
தண்டபாணி தேசிகர் அவர்கள், அண்ணாமலை பல்கலைக் கழகத்தின இசைத்துறைத் தலைவராக இருந்த காலத்தில் “கீதத்தமிழ்” என்னுழ நூலுக்கு அவரளித்த சிறப்புரையில் பண்டைய தமிழிசையே கர்நாடக சங்கீதத் துறையெனப் பேரறிஞர் கருதுகின்றனர் என ஆணித்தரமாக எடுத்தியம்புகிறார்.
எனவே சங்ககால இசைத்துறையானது பல்வேறு படிநிலைசளில் மாறுதல்களையும் மாற்றங்களையும அடைந்து 20ம் நூறறாண்டில் கர்நாடக சங்கீதத்துறை என்ற எல்லைக்குள் விரிவடைந்து வளர்ச் சியடைந்துள்ளது
நாட்டியத்துறையை எடுத்து நோக்கும்போது பாவப் பயன்பாட் டிலும் நாட்டிய உத்திப் பயன்பாட்டிலும் பல்வேறு மாறுதல்களை அம மாற்றங்களையும் அடைந்துள்ளது என்பதனை நாம் பல்வேறு கால இசை வடிவங்களுக்கு ஆடுமபோது விளங்கக்கூடியதாக உள்ளது:
உதாரணமாக 7ம் நூற்றாண்டை எடுத்து நோக்கும்போது தமிழிசைப் பாடல்களுக்கே நாட்டிய அபிநயம் செய்யக்கூடியதாக இருநதது இப்பாடல்களுக்கு நாம் ‘விபாவம்" என்னும் பாவப் பிரி வினையைப் பெருமளவு பயன்படுத்துகின்றோம். சாதாரண வார்த் தைகளில் விபாவமானது ஓர் உணர்ச்சியை எழ அடிப்படையாக உள்ளது எனப்பொருளபடும. இது அலம்பவ விபாவமாகும். இதைத் தொடர்ந்து இடம்பெறுவது உபாதினை விபாவமாகும். அதாவது தோற்றப்பட்ட உணாச்சியினை அதிகரித்துக் காட்டுவதாகும்.
20ம் நூற்றாண்டில் நாம் விபாவத்துடன் கூடி சஞ்சாரி பாவம் மற்றும், விய பிசாரி பாவம் என்னும் இரண்டு பாவப் பிரிவுகளையும் பயனபடுத்துகின்றோம்.
நாட்டியத்தை பொறுத்த மட்டில் ஒரே பாடல் வரியானது பல் வேறு தடவை திரும்பத் திரும்ப இடம்பெறுவதைக் காணலாம்.
ஒவ்வொரு முறையும் நாம் வித்தியாசமான பாவ உணர்ச்சி பேதங்களை பயன்படுத்துகின்றோம். உதாரணமாக பிரிவுத்துயர் பற்றி ஓர் அடியை எடுத்துக் கொள்வோமாயின் பிரிவுத் துயரானது பல்வேறு
سے 63 سے

உணர்ச்சி பேதங்களை (குமுறல்களை) எமக்கு எடுத்தியம்புகின்றது. பிரிவுத் துயர் இயல்பாகவே சந்தேகம், சஞ்சலம், பயம், சிம்ை, மயக்சம், கோபம், வெகுளி, விரக்தி என்னும் வெவ்வேறு உணர்ச்சி பேதங்கள் எழ அடிப்படையாக உள்ளது.
எனவே பல்வேறு உணர்ச்சி பேதங்களை ஒரே ஆதாரத்தின் மீது சித்திரித்துக் காட்டுவது சஞ்சாரி பாவமாகும். இதை நாம் இன்றைய நாட்டிய வழக்கில் பெரிதும் காணலாம்.
பாவங்கள்
இது தவிர 20ம் நூற்றாண்டில் நாட்டியத்தில் வியாபிசாரி பாவம் என்னும் பாவப்பிரிவினை பயன்படுத்துகிறோம். அதாவது, ஒரு குறிப்பிட்ட உணர்ச்சிக்கு எதிரிடையான உணர்ச்சி பேதத்தை எடுத்துக் காட்டுவதன் மூலம் அக்குறிப்பிட்ட உணர்ச்சிச் சுவையினை பன்மடங்கு எடுத்துக் காட்ட ஏதுவாக அமைகிறது. உதாரணமாகக் கோபம், சினம், கோபத்தால் உண்டான ஆவேசத்தினை அவ்வாறே செய்து காட்டாது அக்கோபத்தினை இழிவுபடுத்தி எள்ளி நகையாடிக் காட்டுவதன் மூலம் அக்குறிப்பிட்ட சுவையைப் பன்மடங்கு அமைத்து ஆடுகின்றோம்
எனவே இசைத்துறையானது எவ்வாறு தமிழிசையிலிருந்து கர்நாடக சங்கீதத்துறையாக மாற்றமடைந்து இன்று 20ம் நூற்றாண் டில் பூரண வளர்ச்சியடைந்துள்ளது என்பதை நாம் அவதானித் தோம். அதேபோல நாட்டியத் துறையிலும் தமிழிசைத்துறையிலும் பயன்படுத்தி வந்த முறைகள் சில பல மாற்றங்களுக்கு உட்படுத்தப் பட்டு சில பல தனித்துவ இயல்புகளாலும் பாவப்பயன்பாட்டின் முறைமைகளினாலும் நாட்டிய உத்திப் பயன்பாட்டிலும் சில பல மாறுதல்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது என்பதை நீங்கள் இதுவரை அவதானித்திருப்பீர்கள். அதிகரித்துக் காட்ட ஏதுவாகின்றது;
இதைத் தவிர அனுபாவம் என்னும் பாவப் பிரிவானது தொடர்ச் சியாகப் பல நூற்றாண்டு காலமாகப் பயன்படுத்தி வருகிறோம். அனுபாவமாவது உணர்ச்சி பேதங்களை நாமாகவே அனுபவித்துக் காட்டுதலாகும். அனுபாவப் பிரிவில் நாம் நாட்டியத்திற்கு த தேவை யான ஆங்கீகம், ஆகாரியம், சாத்வீகம், மற்றும் வாசீகம் என்னும் பாவப் பிரிவுகள் அடங்குகின்றன.
سب 49 --

Page 22
மேலும் 20ம் நூற்றாண்டில் கர்நாடகத்துறையினையே நாட்டியத் திற்குப் பயன்படுதது கன்றோம். எனவே சாகித்தியங்களுடன் கூடிய ஸ்வரங்களுக்கு நாம் அடவுகள் அமைத்து ஆடுகின்றோம்.
எனவே இசைத்துறையானது எவ்வாறு தமிழிசையிலிருந்து கர்நாடக சங்கீதத்துறையாக மாற்றமடைந்து இறுை 20ம் நூற்றாண்டில் பூரண வளாச்சியடைந்துள்ளது என்பதை நாம் அவதானித்தோம். அதேபோல் நாட்டியத்துறையிலும் தமிழிசைத் துறையில் பயன் டடுத்தி வந்த முறை கள் சில பல மாற்றங்களுககு உட்படுத்தப்பட்டு சில பல தனித்துவ இயல்புகள், லும் பாவப் பயன்பாட்டின் முறைமைகளினாலும் நாட்டிய உத்திப் பயன்பாட்டிலும் சில பல மாறுதல்களுக்கு உட் படுத்தப்பட்டுள்ளது என்பதை நீங்கள் இதுவரை அவதானித்திருப்
risair.
-س--- 30 --س--

முத்துத்தாண்டவர் கீர்த்தனைகளும், தமிழிசையும்
கலாசூரி திருமதி அருந்ததி யூனி ரங்கநாதன்
தமிழிசை அரங்கு மூன்று இங்கு இன்று நடைபெற்றுக் கொண் டிருக்கின்றது பெருமகிழ்ச்சிக்குரிய விடயம் இது. மக்கள் வாழ்க் கைக்கு இனியதோர் துணையான இசைக்கு இன்பத்துக்கேயன்றி துன்பத்துக்கும் துணையான இசைக்கு கொடியவரையும் நன்மனப் படுத்தி நன்னெறியில் செலுத்தும் இசைக்கு, அரங்கம் அமைத்து தமிழிசைச் சிறப்பை வெளிக் கொணரும் இந்துசமய, தமிழ் கலா சார இராஜாங்க அமைச்சுக்கு நன்றி செலுத்துவது எமது முதற் கண் கடமையாகும்.
கோபாலகிருஷ்ண பாரதியாருக்கும் பாபநாசம் சிவம் அவர் களுக்கும் அரங்கமைத்த நாம் முத்துத்தாண்டவரின் தமிழிசைத் தொண்டினை பாராட்டவும் அவர் தம் வெளிப்பாடுகளை பாடி ஆடிப் போற்றவும் இங்கு கூடியுள்ளோம்.
தமிழ் என்ற சொல் எவ்வாறு அன்பு என்ற பொருளையும் இன்பம் என்ற பொருளையும் கொடுக்கின்றதோ, அதே போன்று தான், அதனோடு இணைந்துள்ள இ  ைச யும், அன்பு என்ற பொருளுக்கும் இன்பம் என்ற பொருளுக்கும் உரியதொரு சொல்லாக விளங்குகின்றது.
இவ்வாறு சொல் ல ற் க ரிய தமிழிசையினை எமக்கு தமிழிலே வடித்துத் தந்த பெருமை தமிழிசை மும்மூர்த்திகளில் மூத்தவரான முத்துத்தாண்டவரையே சாரும்.
சங்கீத மும்மூர்த்திகளான பூரீ தியாகராஜ சுவாமிகள், சியாமளா, சாஸ்திரியார், முத்துஸ் சுவாமி தீஷிகர் ஆகியோர் தோன்றுவதற்கு 150 ஆண்டுகளுக்கு முன்பே சீர்காழிப்பதியில் சிறந்து விளங்கியவர் முத்துத் தாண்டவர். சங்கீத மும்மூர்த்திகள் போல தமிழிசை மும் மணி  ௗாகப் போற்றப்படுபவர்கள் முத்துத் தாண்டவர், மாரி முத்தாப்பிள்ளை, கோபாலகிருஷ்ண பாரதி ஆகியோராவர். இசை யினை தமிழிலே வடித்துத் தந்த பெருமை தமிழிசை மும்மூர்த்தி களில் காலத்தால் மூ ற் பட்ட முத்துத்தாண்டவரையே சாரும்

Page 23
அவரது பாடல்களை ஆழ்ந்த கண்ணோட்டத்தில் பார்த் தால் தமிழில் அவருக்குள்ள ஈடு 1ாடும், அதனைப் புரியவைக்கும் எளிய வழிமுறையும் தெள்ளெனப் புரியும்
பூரீதியாகராஜ சுவாமிகள் எந்தளவு ராம பக்தனாக விளங்கி தன்வை ராமனிடம் சமர்ப்பனம் செய்து பக்தியைக் கீர்த்தனையில் வெளிப்படுத்தி உள்ளாரோ அதே அளவு முத்துத்தாண்டவரும் தில்லை அம்பலவாணரிடம் தன் மனதைப் பறிகொடுத்து பக்திப் பரவசத்தோடு பாடியுள்ள பாடல்கள் நெஞ்சை நெகிழச் செய்வன
வாக உள்ளன.
இவ்வாறு விவரிக்க முடியாத பேரின்பத்தை இவரது கீர்த்தனங் கிள் வாயிலாக நாம் அறியாமலே நமக்கு உணர்த்கிவிடும், இந்த தமிழிசை முதல்வரின் சரித்திரத்தையும் நாம் சிறிதளவு அறிந் திருத்தல் அவசியம்தான்.
இளமையில் "தாண்டவன்" என்ற பெயரில் சீர்காழியில் சைவ வேளாளர் குலத்தில் பிறந்தவர்தான் முக்துத்தாண்டவர். கன்ம வசத்தால் இவர் குஷ் ரோகத்தால் அல்லற்பட்டாலும், தவறாது கோயிலுக்குச் சென்று இறைவழிபாடு செய்து வந்தார். இந்த வகையிலே அக்கோயிலில் பணிபுரியும் ஒரு மாதின் இல்லத்திற்குச் சென்று அவளால் அன்பு ததும்ப பாடப்பட்ட சில நாமகீதங்களை இடையறாது கேட்டு இ ன் பத் துடன் காலம் கழித்து வந்தார். ஆனால் தாண்டவருடைய சுற்றத்தாருக்கும் கோயில் மாதின் சுற்றத் தாருக்கும் பகைமை ஏற்பட்டதால் தாண்டவர் அங்கு செல்ல தடை விதிக்கப்பட்டார். ஆனால் அவரோடு அதற்குப் பணியாமல் மீண்டும் அங்க சென்று வருவதை அறிந்த சுற்றத்தார் தாண்டவரை ஒதுக்கித் தள்ளிவிட்டனர்.
மனவேதனையாலும் பசியாலும் வாடுற்ற தாண்டவர் கோயில் வழிபாட்டை முடித்து களைப்பால் ஊர்த்திகள் வைக்கப்பட்டுள்ள ஒர் அறைக்குள் சென்று சாய்ந்தவாறே உறங்கி விட்டார். இதை யறியாத கோயில் பணியாளர்கள் நள்ளிரவு வழிபாடு முடிந்ததும் கோயிலைப் பூட்டிச் சென்றுவிட்டார்கள்,
பசிப்பினியாலும் துயராலும் விழித்தெழுந்த தாண்டவர் அம்மை அப்பனின் திருவடிகளை நினைத்து தொழு தார். இவ்வேளையில் எம்பிராட்டியார் குழந்தைக்கு இரங்கும் தாய்போல் ஒரு சிறுபெண் குழந்தை வடிவில் இவரிடத்து பொன் வட்டிலில் சாதம் சுமந்து வந்து அளித்தார். தாண்டவரின் பசிப்பிணி தீரவெ உடற்பிளியை
ܚ- 588 --

శొ=్వవ్లో
శొద్దో
置
முத்துத் தாண்டவர் Muthu Th:Tıkla WaT

Page 24

யும் தீர்க்குமாறு வேண்டினார். இறைவியார் அவரைத் தில்லையம் பதிக்குச் சென்று நடராஜப் பெருமானை இன்னிசையால் வழிபடும் படி பணித்தார்.
"நான் பாடும் வகை அறியேன்” என்று தாண்டவர் புலம்ப அம்மையார் "நீ கூத்தப் பெருமான் திருமுன் வழிபாடு செய்யும் அன்பர் கூட்டத்திலிருந்து எச்சொல் முதலாக வெளிப்படுகின்றதோ அச்சொல்லையே முதலாக வைத்து பாடுக. பாடும் ஆற்றலை எம் பெருமான் அருள்வார் என்று கூறி மறைந்தார். இது இறைவனின் அருளே என்று அச்சமயம்தான் புரிந்துகொண்டார் தாண்டவர்.
காலையில் கதவைத் திறந்தவர்கள் நிகழ்ந்தது அத்தனையையும் கேட்டு இவரது முகத்தில் நிலவிய ஒளியையும் கண்டு அவரை அன்று முதல் முத்துத்தாண்டவர் என்று அழைக்க ஆரமயித்தனர்"
முத்துத் தாண்டவர் சிதம்பரம் சென்று நடராஜப் பெருமானைத் தொழுது நிற்கையிலே அடியார் கூட்டத்திலிருந்து பூலோக கைலாச கிரி சிதம்பரம் என்னும் தொடர்மொழி வெளிபபடவே அத்தொட ரையே முதலாகக் கொண்டு "பூலோக கயிலாசகிரி சிதம்பர மல்லால் புவனத்தில் வேறும் உண்டோ. "என்னும் கீர்த்தனையை பவப்பிரியா ராகத்தில் மிஸ்ரரம்பை தாளத்தில் இறைவன் அருளால் பாடி முடித்தார். பாடி முடி த் ததும் தனக்கு முன் 5 பொற்காசுகள் இருப்பதைக் கண்ட முத்துத் தாண்டவர் இறைவன் அருளை வியந்து மெய்சிலிர்த்தார். அன்றே அவரது உடற்பிணியும் நீங்கியது. இவ் வாறே இறைபாடல்கள் பாடி பொற்காசுகள் பெற்று வந்தார்.
ஒரு சமயம் அடியாரிடமிருந்து யாதொரு சொல்லும் வெளிப் படாதிருக்கவே அப் பேச்சின்மையே முதலாகக் கொண்டு 'பேசாதே நெஞ்சமே" என்று சூர்யகாந்தம் ராகத்தில் மிஸ்ர ஜம்பை தாளத்தி லுள்ள பாடலைப் பாடினார்.
இன்னொரு சமயம் சீர்காழியிலிருந்து சிதம்பரத்துக்கு வந்த சமயம் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தன் வழி பா ட் டி ற் கு இடையூறு நேர்ந்ததை எண்ணி கரச்சலுற்ற முத்துத் தாண்டவர் அக்கரையிலேயே நின்றுகொண்டு ‘காணாமல் வெளியே கடலம் கழித்தோமே" என்ற தன்யாசி ராக மிஸ்ரசாபு தாள கீர்த்தனை யைப் பாடத்தொடங்க வெள்ளமும் வற்றி அவருக்கு வழிகொடுக் கவே கழிப்பிலே 'தரிசனம் செய்வேனே" என்ற வசந்தா ராகப் பாடலைப் பாடி பின் இறைவன் முன்னிலையில் "சென்று கண்ட பின் கண் குளிர்ந்தேன்' என்ற மலய மாருதப் பாடலைப் பாடினார்.
- 33 -

Page 25
வேறு ஒரு சமயம் முத்துத்தாண்டவர் வரும் வழியில் அவரைக் காலம் தீண்டியது. சிறிதும் உள்ளம் கலங்காமல்
தலாந்த தா தா அருமருந்தொரு தனி மருந்து
பதபதஸ் அம்பலத்தே கண்டேன்
திருமருந்துடன் பாடு மருந்து
தில்லையம்பலத்தாடும் மருந்து
இரு வினைகள் அறுக்கும் மருந்து
ஏழை எளியார்க்கு இங்கும் மருந்து
என்ற பாடலைப்பாடி விடம் நீங்கப் பெற்றார். இப் பாடலை நோக்கின் அதனது தத்துவக் கருத்தும் எளிய நடை இலகுவான முறை அத்தோடு அழகுற அமைந்துள்ள எதுகை மோனை யாவும் மேலும் சிறப்பைக் கூட்டுகின்றன. முத்துத்தாண்டவர் தினமும் பஜனையாகப் பாடும் பாட்டு ‘அருமருந்தொரு தனி மருந்து" என்ற இந்தப் பாடலாகும். இவ்வாறாக சந்தர்ப்ப ரீதியாக அமைந்த முத்துத்தாண்டவரது முத்தான பல பாடல்களை குறிப்பிடலாம்
இவ்வாறு கீர்த்தனங்களும் பதங்கரமாக நடராஜப் பெருமான் மீது பற்பல இசைப்பாடல்கள் பாடியும் அருஞ்செயல்கள் பல நிகழ்த் தியும் இறுதியில் ஆவணித்திங்கள் பூச நன்னாளில் இறைவன் திருமுன் நின்று "மாணிக்கவாசகர் பேறெனெக்குத் தரவல்லாயோ அறியேன்" எனும் பாடலைப் பாடிக்கொண்டே பேரொளிப் பிளம்பில் இரண் டறக் கலந்தார்:
முத்துத்தாண்டவரது பாடல்கள் யாவும், அருள் வயமான தென்றும் சிரஞ்சீவித்துவம் உடையதென்றும் பல வேதாந்த சித்தாந்த உண்மைகளைக் கொண்டதென்றும் இவரும் நாயன்மார்களைப் போல் பல அற்புதங்களைத் தம் பாடல் வலிமையால் இறைவனைக் கொண்டு செய்வித்தார் எனவும் இவரது சரிதை கூறுகின்றது. காது, மனது, புத்தி, அறிவு நான்கும் சேர்ந்து உள்ளுணர்வில் ஆத்மாவில் ஆனந் தத்தை உருவாக்கி மாறுகின்ற இப்பாடல்கள் இதுவே தமிழ் இசை யின் உயர்ந்த நிலையாகும். முத்துத்தாண்ட வரின் ஆழ்ந்த பக்தியின் வெளிப்பாடுதான் அவரது கீர்த்தனங்கள் ஆன்ம ஈடேற்றத்தில் கலப மான வழி இசையோடு கூடிய பக்திதான். இதுவே பூரீ தியாகராஜ ஸ்சுவாமிகளுக்குத் தெய்வீகமாக கிடைத்த ஸ்வரார்ணவம் எனும் கிரற்றத்தில் கூறப்பட்டுள்ளது.
- 4 -

வீனா வாதன தத்வஜ்ஞ சாஸ்திர விசாரத
தான ஜ்ஞச் சாப்ரயாஸேன
மோஷமார்க்கம் ஸகச்சதி
அதாவது 'வீணை வாசிப்பதில் தேர்ச்சி பெற்ற வறு ம் சுருதி ஸ்சாஸ்திரத்தில் நிபுணனானவனும் தாள ஞானத்தை அடைந்த வனும் பிரயாசையின்றி ஆன்ம ஈடேற்றத்தை அடைகிறான் என்ப தாகும்.
இந்த வகையில் இசைத்திறமையில் தமிழ் இசையோடு கூடிய பக்தியினால் ஆன்ம ஈடேற்றத்தைப் பெற்றவர் முத்துத்தாண்டவர் எனக் கூறலாம்
இவர் இயற்றிய கீர்த்தனைகள் 60 பதங்கள் 25; இவற்றைத் தவிர இன்னும் பல நூற்றுக்கணக்கான பாடல்களை இவர் இயற்றி யுள்ளதாக குறிப்புகள் கூறுகின்றன.
இவரது பதங்கள் நாட்டியக் கச்சேரிகளில் இன்றைக்கும் பாடி அபிநயம் பிடிக்கிறார்கள். இசைக் கச்சேரிகளிலும் பாடுகிறார்கள்.
தெருவில் வாறானே என்னைச் சற்று
திரும்பிப் பாரானோ
என்ற கமாஸ் ராகப்பதம் முத்துத் தாண்டவர் இயற்றிய பாடல்களில் பிரசித்தமானது:
(1) உருவிலொரு திரிபுரத்தையும் உடன் எரி செய்த நடராஜன். (2) தேசிகள், அம்பலவாணன், நடம்புரி தேவாதிதேவன்,
சிதம்பரநாதன்.
(3) வேதனும் மாலும் மூவாயிரம் பேர்களும் விண்ணவரும்
தொழும் ஆடிய பாதனை.
இந்த நடராஜப் பெருமான் இந்த தெருவில் வந்து என்னைச் சற்றேனும் திரும்பிப் பார்க்க மாட்டானா என்று ஆதங்கத்துடன் தாயகி நாயக பாவத்துடனும் கூடிய ராகத்தில் எவ்வளவு அழகாகப் பாடியுள்ளார்.
மற்றும்
- S -

Page 26
ஆடிக்கொண்டார்’ என்ற மாயாமாலைகெளளை ராக கீர்த் தனையில் சிவனின் தாண்டவத்தைக் காண ஆயிரம் கண்ணாவது வேண்டnமோ என கேட்கிறார்.
சிவன் அணிந்துள்ள ஆர நவமன்னி மா ல்ைகள் கூட ஆடும் அரவமோ படம் விரித்தாட சீரணி கொன்றை மலர்தொடை ஆட ஒரம்பரத் தேர் ஆட பேரணி வேதியர்கள் தில்லை மூவாயிரத்தோர் யாவரும் பூஜித்துக் கொண்டாட காரணி காளி அதிாந்து நின்றாட கைபையிலே அவனது ஆட்டத்தை கான ஆயிரம் கண் வேண் டாமோ.
வார்த்தைகளிலுள்ள அழகிலே லயித்த நாம் இதோ அதை அபி நயத்தில் ரசனையோ இ எடுத்துக் காட்டினால் எப்படி முத்துத்தாண் டவரது தமிழ்க் கீர்த்தனைகளில் ரசத்தைப் பருகிக் கொள்ளலாம் என்பதையும் புரிந்து கொள்வீர்கள்.
அபிநயம் மூலம் தமிழிசையிலே வடித்துத் தந்த பாடல்களில் சிறப்பு இன்னும் மெருகேறுகிறது அல்லவா? முத்துத்தாண்டவரது பாடல்களை ஆழ்ந்த கண்ணோட்டத்தில் பார்த்தால் தமிழில் அவ ருக்குள்ள ஈடுபாடும் அதனைப் புரியவைக்கும் எளிய வழிமுறையும் தெள்ளெனப் புரியும். ×
பக்தி, சங்கீத சாஸ்திர அறிவு, சமய சாஸ்திர அறிவு உண்மையை உள்ளபடி கண்டு காண்பிக்கும் மனத்தெளிவு, விடயத்தில் அந்தரங்க ஈடுபாடு, நுண்மையான ரஸிச உணர்வு, அந்த ரசிப்பைத் தெளி வாகவும் சுருக்கமாகவும் பளிச்சென்று பாடல்களுக்கு உணர்த்தும் உயிரோட்டமுள்ள நடை ஆகிய யாவற்றையும் முத்துத்தாண்டவர் பாடல்களில் காணலாம்.
சொல்லக் கருதிய கருத்துக்களை கேட்போர் விரும்பி ஏற்றுக் கொள்ளும்படி இனிய ஓசையோடு கூடிய சொற்களால் புலப் படுத்தும் தமிழ் இசை மூலம் பெருந்தொண்டு ஆற்றிய முத்துத் தாண்டவரது கீர்த்தனைகள் இன்னும் அழியாவரம் பெற்று இசை உலகில் மிளிர்கின்றன.
சென்னை ராஜா சேரி அண்ணாமலை தமிழ் இசை மன்றத்திலே முத்துத் தாண்டவர் கீர்த்தனைகளில் போட்டி வருடா வருடம் நடத்தப்பட்டு பரிசில்கள் வழங்கப்படுகின்றன. "முத்துத் தாண்டவர் கீாத்தனங்கள்" என்று இவரது கீர்த்தனங்கள் தொகுக்கப்பட்ட நூலும் உள்ளது:
حسسمہ 36 --سے

மாணவர்களுக்கு பாடநெறியில் குறிப்பாக வட இலங்கை சங்கீத சபை பாடநெறியிலும் இவரது கீர்த்தனங்கள் வாழ்க்கை வரலாறு சேர்த்துக்கொள்ளப்பட்டமை மகிழ்ச்சிக்குரிய விடயமே,
இத்தோடு தமிழ் இசைக்கு வெளிநாடுகளில் முக்கியமாக மேற் கத்திய நாடுகளில் உள்ள வரவேற்பு மகத்தானது என்பதையும் நான் இந்தவிடத்தில் கூறிச்செல்ல விரும்புகின்றேன். இதனை ஜேர் மனி, பாரிஸ் மாநகர், லண்டன் ஆகிய நாடுகளில் நான் நடத்திய இசைக்கச்சேரிகள் மூலம் அறிந்துகொண்டேன். மற்றுமொரு மகிழ்ச் சிகரமான செய்தி தென் ஆபிரிக்காவில் வாழும் தமிழர்கள் மலை யாளம், தெலுங்கு, குஜாராத்தி, ஹிந்தி சமூகத்தவர் தென் இந்திய சங்கீத அக்கடமியின் கீழ் தியாகராஜ உற்சவத்தை இந்த வருடம் மிகவும் விமரிசையாக கொண்டாடினார்கள். அதில் பங்குபற்றிய வாய்ப்பும் அனுபவமும் எனக்குக் கிடைத்தது. இதுவரை இந்தியக் கலைஞர் பங்குபற்றிய இடத்தில் இம்முறை இலங்கைக் கலைஞர் களுக்கு வாய்ப்பளித்துள்ளமை எமக்கும் எமது நாட்டிற்கும் பெரு மையே.
இந்த அக்கடமி தியாகராஜ ஸ்சுவாமிக்கு விழா எடுப்பது போல தமிழ் இசை மும்மணிகளில் முதல்வரான முத்துத்தாண்டவருக்கும் இசை விழா எடுக்கக் காரணம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழிசை படித்த கலைஞர்கள் அங்கு உள்ள பூரீ தியாகராஜ சுவாமிகள் முத்துத்தாண்டவர் மற்றும் கதையை ஒட்டிய நாட்டிய நாடகங் களும இடம்பெற ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளார்கள்.
எனவே தமிழிசை உலகெங்கும் வெற்றிவாகை சூடுகிறது, குட் டிக் கொண்டேயிருக்கிறது என்று கூறிக்கொண்டு இச் சந்தர்ப்பத்தை எனக்கு அளித்த இத்துசமய தமிழ் கலாசார இராஜாங்க அமைச் சுக்கும் பார்வையாளர்களாகிய உங்களுக்கும் நன்றி கூறி விடை பெறுகின்றேன்.
as 37 as

Page 27


Page 28
.
The Kumaran Press o
 
 

Dam Street, Colombo-12.