கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தவில் மேதை தட்சிணாமூர்த்தி

Page 1
S) , (1Չ, ١_؟ى
-1የፍ
தவில் மேதை
கலாநிதி , வ.
கொழும்புத் த
20C

தட்சிணாமூர்த்தி
மகேஸ்வரன்
மெய்ப்பொருள் காண்பதறிவு
மிழ்ச் சங்கம்,
)7

Page 2


Page 3

இலங்கைத் தமிழர்: வாழ்வும் வகிபாகமும்
தவில் மேதை தட்சிணாமூர்த்தி
கலாநிதி வ.மகேஸ்வரன்
தமிழ்த்துறை பேராதனைப் பல்கலைக்கழகம்
Simbarat dignadalahun
கொழும்புத் தமிழ்ச் சங்கம் 2007

Page 4
சர்வசித்து வருடம் சித்திரை தவில் மேதை தட்சிணாமூர்த்தி கலாநிதி வ. மகேஸ்வரன் ே வெளியீடு கொழும்புத் தமிழ்ச் சங்கம் விலை: ரூபா 100.00
ii i miBili
April 2007 Thadchina Imoorth y Dr. W. MaheshwaranČ Published by Colombo Tamil Sanngaill Price : 1.O.O.OO
நீர் சங்க வெளியீடுகளில் உள்ள கருத்துக்கள் அவ்வவ் ஆசிரியர்களுடையவை; அவை சங்கத்தின் கருத்துக்கள் அல்ல.


Page 5

தலைநகரின் தமிழ்ச் சங்க மேலோன் பல்கலை பயின்று பயன் விளைத்த ஆசான் கல்வி உலகின் கனதிமிகு சேவையாளன் நாளும் நற்பணி செய்துயர்ந்த பண்பாளன் அமரர் இரா.சுந்தலிங்கம் அவர்களுக்கு
இந்நூல் சமர்ப்பனம்.

Page 6

வெளியீட்டுரை
ஈழத்துத் தமிழ் ஆளுமைகளை அறிமுகம் செய்யும் முயற்சியை தனது பணிகளுள் ஒன்றாக வரித்துக் கொண்ட கொழும்புத் தமிழ்ச் சங்கம், ‘இலங்கைத் தமிழர்: வாழ்வும் வகிபாகமும்’ என்னும் பொதுத்தலைப்பில் தொடர் நூல்களைச் சங்கத்தின் பதிப்புக்குழு மூலமாக வெளியிட்டு வருகின்றது. அந்த வகையில் கலாநிதி வ.மகேஸ்வரன் அவர்கள் எழுதிய 'தவில் மேதை தட்சிணாமூர்த்தி என்ற நூல் இப்போது வெளிவருகின்றது.
“கர்நாடக சங்கீதம்’ என வழங்கும் தென்னிந்திய இசை மரபில் மங்கல வாத்தியமாகவும் ஆகமரீதியான கோவில் வழிபாட்டு மரபுகளில் இன்றியமையாப் புனித வாத்தியமாகவும் அமைவன தவில்-நாதஸ்வரம் என்னும் இணைக்கருவிகள். அவை தமிழ்ப் பண்பாட்டின் தனித்துவ அடையாளமாகவும் விளங்குவன.
தவிலானது அடிப்படையில் ஒரு தாளவாத்தியமாகும். பிற தாள வாத்தியங்கள் எப்போதும் துணை வாத்தியங்களாக - பின்னணி இசைக்கருவிகளாக அமைய, தவில் ஒன்றே நாதஸ்வரம் என்னும் இசைக் கருவியோடு இணைந்ததாய் சமானமான அந்தஸ்தை வகிப்பது. சங்கீத வித்துவான்கள் விரும்பும் நுட்பங்களையும் சாதாரண இரசிகர்களையும் கவரும் திட்பத்தையும் உடையதாய் விளங்குவது. தவிலுக்கு குறிப்பிடத்தக்க வேறு தனித்துவங்களும் உண்டு.
இத்தகையதான தவிலை மிக இலாவகமாகக் கையாண்டு தன் வித்துவம் உணர்தியவர் அமரர் தட்சிணாமூர்த்தி அவர்கள். சங்கீதத் துறையில் தென்னிந்தியக் கலைஞர்களையும் விஞ்சியவராய், ஈழத்தின் புகழை அங்கு தாபிதம் செய்தவர் அவர் ஒருவரே எனலாம். அத்தகையரான ஒருவரைப் பற்றிய நூலொன்றை வெளியிடுவதில் கொழும் புத் தமிழ்ச் சங்கம் பெருமிதம் கொள்கின்றது. நூலைச் சிறந்த முறையிலே ஆக்கியளித்த கலாநிதி வ.மகேஸ்வரன் அவர்களுக்கு எமது நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
பதிப்புக் குழு, கொழும்புத் தமிழ்ச் சங்கம்.

Page 7

தவில் மேதை தட்சிணாமூர்த்தி
அறிமுகம்
தொல்காப்பியத்துக்குப் பாயிரம் பாடிய பனம்பாரனார் "வடவேங்கடம் தென் குமரியாயிடைத் தமிழ் கூறு நல்லுலகு" என்று தான் குறிப்பிட்டுள்ளார். ஆயின் காலமாற்றங்களும் புலப்பெயர்வுகளும் பனம்பாரனாரின் அவ்வாறான எல்லை நிர்ணயிப்பை விசாலிக்கச் செய்தன. அந்தவகையில் முதல் விசாலிப்பு தமிழகத்தின் தென்கோடியிலுள்ள ஈழத்திலிருந்து தான் ஆரம்பித்தது. தமிழகத்துக்கு அடுத்தபடியான தமிழ்கூறு நல்லுலகாக ஈழமே விளங்கியது. இதனால்தான் தாய்நாடு சேய்நாடு என்ற கருத்துநிலை நம்மிடையே நீண்டகாலம் நிலவியது. எனினும் கால மாற்றங்களும், வேற்றுப் புலத் தாரின் உள் வருகைகளும் பல மாற்றங்களை இப்பிராந்தியங்களில் நிகழ்த்தியபோது ஈழம் என்ற புலம் தனித்துவமான அடையாளங்களையுடையதாகத் தன்னை இனங்காட்டத் தொடங்கியது. குறிப்பாக ஐரோப்பியரது வருகையினால் ஈழத்தில் குறிப்பாகத் தமிழ்ப்புலத்தில் விரைவான பல மாற்றங்கள் ஏற்பட்டன. இந்த மாற்றங்களின் பின்னணியில் ஈழத்தவர் பல்வேறு துறைகளிலும் தனித்துவ அடையாளங்கள் கொண்ட ஆளுமைகளாக மேற்கிளம்பினர். இவ்வாறாக மேற்கிளப்பியவர்கள் ஈழத்தில் மட்டுமல்ல தமிழகத்திலும் செயற்கரிய கருமங்களைச் செய்து பெருஞ் செல் வாக்குப் பெற்றனர். பூரீலழறீ ஆறுமுகநாவலர், சி.வை.தாமோதரம்பிள்ளை, த.கனகசபைப்பிள்ளை முதலியோரை இவற்றுக்கு முன்னுதாரணங்களாகக் கொள்ளலாம்.
இவ்விடத்தில் ஒரு குறிப்பைச் சொல்லுவது அவசியம். ஈழத்து அறிஞர்கள் எவ்வளவுதான் திறமையுடையவர்களாக இருந்தாலும் அவர்களுடைய திறமைகள் ஈழத்திலே - குறிப்பாக வடக்குக்கிழக்கு மாகாணத்துக்குள்ளேயே மட்டுப்படும்போது அவர்களது திறமைகள் குடத்துள் இட்ட விளக்குப்போல மழுங்கிப் போய்விடக் கூடிய சூழல் இருந்தது. இதற்கு மறுதலையாக அவர்கள் பரந்த நிலப்பரப்பும் மக்கட் தொகையும் உடைய தமிழ் நாட்டில் தமது திறமையை, புலமையை வெளிப்படுத்தும்போது தான் அவர்களுக்கான தமிழ் கூறு நல்லுலக அங்கீகாரமும், ஏற்புடைமையும், புகழும் கிடைக்கக் கூடியதாகவிருந்தது.

Page 8
மேற்குறித்தோரது புலமைக்குப் புறம்பாக, தமிழ்நாட்டு வெகுஜன ஏற்புடமை என்பதும் முக்கியமான விடயமாகும்.
இந்த வகையில் தாம் பிறந்தகத்தில் புகழ் சமைத்து, தமிழ்நாட்டிலும் தம்மை நிலைநிறுத்தியோராகப் பலரைக் குறிப்பிடலாம். துரதிர்ஷ்டவசமாக சிலருடைய தகவல்கள் மட்டுமே நமக்கான தடயங்களாகக் கிடைக்கின்றன. அண்மைக்காலத்தில் நமது தமிழ் ஆய்வாளர் பலர் இவ்வாறான புகழ் படைத்தோராக விளங்குகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறானதொரு பின்புலத்தில் தான் தன்னுடைய கலைப்புலமையால், தான் பிறந்த நாட்டில் புகழ் படைத்துத், தமிழ்நாட்டிலும் தன்னை நிலை நிறுத்தி, அகில உலகப் புகழ் கொண்ட “லயஞான குபேர பூபதி” தட்சிணாமூர்த்தி அவர்களையும் அடையாளப்படுத்த முடிகின்றது.
நமது கலைமரபு தென்னிந்தியக் கலைமரபின் தொடராகவே அமைந்துள்ள அதேவேளை சில தனித்துவங்களையும் உடையது என்பதில் சந்தேகம் இல்லை. எனினும் சில மரபுகள் பொதுமையானவை. இந்தக் கலை மரபின் தொடர்பும் நீட்சியும் வரலாற்றுக் காலத்துக்கு முந்தியே இடம் பெற்றிருக்க வேண்டும். எனினும் காலத்துக்குக் காலம் இந்தத் தொடர்பு நீண்டு கொண்டு வந்தது; கலைஞர்களுக்கு இடையேயான கொள்வனவுகளும் கொடுப்பனவுகளும் தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளன. தமிழகத்தில் இயல், இசை, நாடகம், ஆகிய கலைகளில் துறைபோனவர்களின் ஈழத்து ஊடாட்டம் குறிப்பாக யாழ்ப்பாண சமூகத்துடனான ஊடாட்டம் இடையறாது நிகழ்ந்து வந்துள்ளதற்கான பல தடயங்கள் உள்ளன.
தமிழகத்துக்கு யாழ்ப்பாணத்துடனான புவியியல் அண்மை, மொழி, கலாசார ஒற்றுமை என்பன இவ்வாறான ஊடாட்டங்களுக்கான காரணங்களாயின. இதனால் கலை, இலக்கியங்களும் செறிந்துவளர்ந்தன. இங்கும் அங்கும் கலைகள் பயிலப்பட்டன; பரப்பப்பட்டன; வளர்ந்தன. இவ்வாறானதொரு கலாசார ஊடாட்டத்தின் விளைவாகப் பிற்காலத்தில் பல ஊர்கள் கலை மரபில் தனித்துவம் மிக்கனவாகத் திகழ்ந்தன. இணுவில், தாவடி, அளவெட்டி முதலான கிராமங்களை இவ்வகையில் குறிப்பிடலாம். வடமராட்சியில் இவ்வாறான பாரம்பரியம் நிலவியது எனச் சிவத்தம்பி குறிப்பிடுகிறார். இவ்வாறானதொரு கலைத்தொடர்பின், ஊடாட்டத்தின் அடையாளமாக வளர்ந்த தவில்மேதை தட்சிணாமூர்த்தி தவில் என்ற இசைக் கலையின் வித்துவத்தால் உச்சங்களைத் தொட்டவர். தவில் என்ற இசைக்கருவியில் பல்வேறு பரிமாணங்களை நிகழ்த்திக் காட்டியவர். தான் பிறந்த மண்ணிற்கும், புகுந்த மண்ணிற்கும், தொழில் புரியச் சென்ற தமிழ்நாட்டிற்கும் புகழ் சேர்த்தவர். தன் தனித்துவமான கலைத்துவத்தால் 'தவில்’ என்ற தோற்கருவிக் கலைக்குச் சர்வதேசப் புகழ் தேடித் தந்தவர். அவ்வாறான மேதை எமது ஈழத்தவர்; எமது ஈழத்துக் கலைப் புலமையைத் தமிழ் நாட்டில்நிலை நிறுத்தியவர்; அந்தப் புலமையாளனது, கலைஞனது வகிபாகம் பற்றி ஆவணப்படுத்துவது நமது கடமையாகும்.
தவில் மேதை தட்சிணாமூர்த்தி

O
இசைக் கருவிகள் - ஓர் அறிமுகம்
பொதுவாக இசைக்கருவிகளை தோற்கருவி, துளைக்கருவி, மிடற்றுக் கருவி, நரம்புக் கருவி, கஞ்சக்கருவி என ஐந்தாக வகைப்படுத்துவர். இந்த ஐந்து வகையுள் நாதசுரம் அல்லது நாகசுரம் துளைக்கருவியாகும். 'தவில்' என்பது தோற்கருவியாகும். இக்கருவிகள் பற்றி நீண்ட வரலாறு உண்டு. இவையிரண்டும் தனித்தனியான கருவிகளாக இசைக்கப்பட்டன. எனினும் இடைக்காலத்தில் இவை ஒன்றிணைந்து மங்கல வாத்தியமாக இசைக்கத் தொடங்கின. இதற்கான சமூக ஏற்புடைமையும் பலமானதாக அமையவே நாகசுரமும் தவிலும் இணைந்து வாசிப்பதற்குரிய கருவிகளாக இன்று நிலை பெற்றுவிட்டன.
நாகசுரக் கருவியை நாகசின்னம், நாகசாரம், நாதஸ்வரம் என்றும் அழைப்பர். நாதஸ்வரம் என்று சொல்கின்ற வழக்கம் இந்த நூற்றாண்டின் முப்பதுகளில் ஏற்பட்டது என்று பேராசிரியர் சாம்பமூர்த்தி குறிப்பிடுகின்றார். எனினும் நாகசுரம், தான் இதற்குச் சரியான சொல். நாதசுரம்” என்ற சொல் கருதும் பொருள் இவ்வாத்தியத்துக்குப் பொருந்தாது என்று பேராசிரியர் ராகவன் குறிப்பிடுறார்.
ஆரியர்கள் இந்தியாவில் நுழைந்தபோது இங்குள்ள சுதேசிகளை நாகர்கள் என அழைத்தனர். இப்பழங்குடியினர் பாம்பினை ஆடச்செய்யும் மகுடியை அவர்கள் ரசித்தனர். நாகத்தை ஆட்டும் மகுடிபோலவே ஒத்த தன்மையுடைய கருவியை அவர்கள் நாக என்னும் அடை கொடுத்து அழைத்தனர் என்பார் சோழநாடன்."
நாக சின்னம் என்ற பெயரும் ஏலவே இதற்கு வழக்கில் இருந்து வந்துள்ளது. “சின்னம்’ என்பது இன்னிசை வாசிக்கின்ற நீண்ட குழல் கருவி என்று பொருள்படும். ‘திருச்சின்னம்’ என்ற குழற் கருவி இன்னும் கோயில்களிலும் மடங்களிலும் பயன்படுத்தப்படுகின்றது. இது உலோகத்தால் செய்யப்பட்டது. திருச்சின்னம் போலவே நாகசுரமும் இருந்ததால் நாகசின்னம் என அழைத்திருக்கலாம். அது மருவி நாகசுரமாக வந்திருக்கலாம் என்ற கருத்தும் உண்டு
நாகசுரம் என்ற இசைக்கருவி மனிதப் பண்பாட்டின் வளர்ச்சியுடன் இணைந்து வளர்ந்து வந்தது. வெறும் ஊது குழலாகிப் பயன்பாட்டில்
கலாநிதி வ. மகேஸ்வரன் 3.

Page 9
வந்த அது காலம் செல்லச் செல்ல பல்வேறு உருமாற்றங்களைப் பெற்றுக் கொண்டு முக வீணையாகிப் பின் நாகசுரம் என்ற கருவியானது என்றும் ஒருசாரார் கருதுவர்.
தமிழ் மரபில் இந்த வாத்தியம் ஆலயங்களில் தொன்று தொட்டே வாசிக்கப்பட்டு வந்தது என்பதனை நிலை நாட்ட அறிஞர் முனைவர். மணிவாசகரது திருவெம்பாவையில் வரும் “எழில் இயம்ப இயம்பும் வெண் சங்கு எங்கும்’ என்ற அடிக்கு விளக்கம் தரவந்த செங்கல்வராயபிள்ளை 'எழில்’ என்பதை நாகசுரம் என்றே குறிப்பிட முனைந்தார். மாதர்மடப்பிடியும் என்று தொடங்கும் யாழ்முரிப்பதிகத்தில் இடம்பெறும் 'எழில் பயில் குயில்’ என்பதில் வரும் எழில் என்பது இதனையே குறித்திருக்க வேண்டும் என்பர். ஏழு ஸ்வரங்களையுடைய நாகசுரமே ஏழில் என்பதன் சுருக்கமாக எழில் என அமைந்தது என்றும் விளக்கம் தர முனைவர். இதன் பெயர், இது தமிழகத்தில் குறிப்பாக இந்துப்பண்பாட்டுச் சூழலில் எவ்வாறு இணைந்து கொண்டது என்ற வாதப்பிரதிவாதங்கள் அறிஞரிடையே இன்றுவரை நிலவியபோதும், இது தமிழ்ச் சூழலில் மிகவும் நிலை பெற்ற மங்கல வாத்தியமாக விளங்குகின்றது என்பதில் ஐயமில்லை.
நாகசுரத்தின் இணைவாதி தியமாக இன்று தவிலி விளங்குகின்றது. எனினும் இவ்விரண்டும் தனித்தனியே வாசிக்கப் பெற்ற இசைக் கருவிகளாகும். கால மாற்றங்களால் இவை ஒன்றிணைந்த மங்கல வாத்தியங்களாயின.
'தவில்' என்ற இசைக்கருவி எமது பண்டைய தோற்கருவியான பறை என்பதின் பரிமாண வளர்ச்சியாகும். எனினும் இதற்கும் இந்திய இசை மரவில் நீண்ட வரலாறு உண்டு என்பதனையும் அறிஞர் சுட்டிக்காட்டுவர்.
வடமொழியில் எழுதப்பட்ட பண்டைய இசைநூல்களில் டிண்டிமம்’ என்ற முழவு பற்றிப் பேசப்படுகின்றது. வால்மீகி இராமாயணம் சுந்தரகாண்டத்தில் “ஆடம்பர கலசீ டிண்டிம படஹ’ என்று குறிப்பிடப்படுகின்றது. பரதமுனிவரின் பரத நாட்டிய சாஸ்திரம்', நாரதரால் எழுதப்பட்டதாகக் கருதப்படும். ‘சங்கீத மகரந்தம் முதலிய நூல்களில் டிண்டிமம் பற்றிய குறிப்புகள் வருகின்றன. சிறிய உடுக்கை போன்ற தோற்றத்துடன் அமைந்து ஒரு புறம் குச்சியாலும் மறுபுறம் கையாலும் அடித்து முழக்கப்படும் சிறியதொரு பறையே ‘டிண்டிமம்’ ஆகும் என்பது இவரது கருத்தாகும். தஞ்சை சரசுவதிமகாலில் இசை ஆய்வுப் பேராசிரியராகக் கடமையாற்றிய கே.வாசுதேவ சாஸ்திரி
4. தவில் மேதை தட்சிணாமூர்த்தி

டிண்டிமமே தவில் என மாறியது என்று குறிப்பிடுகின்றார். அமரகோசம் என்ற நூலில் டிணி டிமத்தின் மறுபெயர் 'தவில்' என்றே
குறிப்பிடப்பட்டுள்ளது.'
‘மட்டுகம்’ என்ற முழவு பற்றிய செய்திகள் ஆகம நூல்களில் இடம் பெறுகின்றன. ஆலயங்களில் பிரம்மோற்றசவம் நடைபெறும் காலங்களில் வாசிக்கப்படும் முக்கியமான தோற்கருவியாக இது குறிப்பிடப்படுகின்றது. இன்றுவரை ஆலயங்களில் தவில் கருவியே பிரம்மோற்சவ காலங்களில் கொடியேற்றம் தொடங்கிக் கொடியிறக்கம் வரை வாசிக்கப்படும் பிரதான வாத்தியமாக விளங்குகின்றது. ஆகவே ‘மட்டுகம்' என்று ஆகமங்களில் குறிப்பிடப்படுவது தவில் என்ற இசைக் கருவியாக இருக்கலாம் என்பது அறிஞர் துணிபு
தமிழ் மரபில் நீண்ட காலம் இசைக்கருவிகளாகப் பேசப்பட்ட பறை, முரசு, முழவம், பேரிகை ஆகிய வாத்தியங்களின் பின்னைய வடிவமாகத் தவிலைக் கொள்ளவும் வாய்ப்புண்டு. திருமண காலங்களில் வாசிக் கப்பட்டவை ‘மண முரசு’ என்றும் , மரணச்சடங்குகளில் வாசிக்கப்பட்டவை பிணப்பறை' என்றும் போர்களங்களில் வாசிக்கப்பட்டவை ‘போர்ப்பறை' என்றும் பெயர் பெற்றுள்ளன. இவற்றைவிட "கொடைமுரசு’ என்றும் கொடை வழங்கும் போது இது இசைக்கப்பட்டதாகவும் அறிய முடிகின்றது. இவ்வாறான செயற்பாடுகளின் தொடராக நிலை பெற்ற முரசு அல்லது முழவமே பின் நாட்களில் தவிலாக உருமாறியது என்று கருதவும் இடமுண்டு. அறிஞர் க.வெள்ளைவாரணார் பண்டைய மணமுரசே இன்றைய தவிலின் மூலம் எனக் கருதுகின்றார்?
இன்னோர் பண்பாட்டுத் தளத்திலும் இதனை அணுகலாம். பண்டைக் காலத்தில் பறை அல்லது முரசம் என்று அறியப்பட்ட வாத்தியம் அதன் வாசிப்புத் தன்மைக்கேற்ப அல்லது சந்தர்ப்பத்துக்கு ஏற்ப தாளக்கட்டுகளுடன் வாசிக்கப்படுவதால் மணமுரசு, பிணமுரசு, போர்முரசு என்று பெயர்கொண்டு இருந்துள்ளது. ஆயின் சமூக மேல் நிலையாக்கம் காரணமாக பறை என்பது பிணப்பறை என்ற கருத்தமைவுடன் நின்றுவிட மணமுரசு அல்லது கொடை முரசு என்பது உருமாற்றம் பெற்று மேல் நிலையாக்கத்தால் 'தவில்' என்ற பெயருடன் ‘மங்கலவாத்தியம்’ என்று மட்டுப்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும் கருத இடமுண்டு. தவிலுக்குரிய தேவனாக யமன் விளங்குகின்றான் என நடனாதிவாத்திய ரஞ்சனம்' என்ற நூல்-குறிப்பிடுகின்றது. இதனை ‘யமபேரி’ எனக் கொள்ளலாம் எனவும் அறிஞர் கருத்துரைப்பர். எனவே,
கலாநிதி வ. மகேஸ்வரன் 5

Page 10
யமனுடன் தொடர்புடைய மரணத்தில் ஒலிக்கப்பட்ட பறை பின்னாட்களில் மேனிலையாக்கம் காரணமாக உருமாற்றம் பெற்றது என்ற கருத்து வலுச் சேர்க்கின்றது.
எனினும் தவில் என்ற சொல்லும் அது பற்றிய செய்திகளும் 15ஆம் நூற்றாண்டுக்கு முன்பு தமிழில் இடம் பெறவில்லை. அருணகிரிநாதரது திருப்புகழிலேயே இச் சொல் முதன்முதலாக இடம் பெறுகின்றது.
“முழவு வளைபேரி தவில் கணப்பறை” “தபலை, குடமுழவு திமிலை படாகம் அடிதசாலிகை தவில்”
“தமிலை தவில் துந்துமிகள் முழங்கும்” என்று ஆலயங்களில் இசைக்கப்படும் பல்வேறு வாத்தியங்களுடன் இணைந்து இக்கருவி வாசிக்கப்பட்ட தகவல்களை அது தருகின்றது.
தவில், நாகசுரம் ஆகிய இரு கருவிகளும் தமிழ் நாட்டின் தொன்மையான வாத்தியங்கள் அல்ல. அவை - கி.பி. 14 ஆம் நூற்றாண்டின் பின் ஆந்திரமாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு புலம் பெயர்ந்தோராலேயே தமிழகத்தில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது என்ற கருத்தும் உண்டு. தமிழக கலை வரலாற்றில் தெலுங்கு மூலகங்கள் முக்கிய இடத்தை வகிக்கின்றன என்பது அறிஞரது கருத்தாகும். எவ்வாறெனினும் நாகசுரத்தைப் போலவே தவிலும் நீண்டகாலமாகத் தமிழ்ப்பண்பாட்டுடன் இணைந்து நிலைபேறாக்கம் பெற்ற இசைக் கருவியாக நிலைத்து விட்டது என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை.
மேற்குறித்த இசைக் கருவிகளை இசைத்தோர் யார் அவர்களது மூலம் யாது என்பது தொடர்பான கருத்துக்கள் அறிஞரிடையே வாதப்பிரதிவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. அது தொடர்பான ஆய்வு பிறிதொருடத்தில் வேண்டப்படுவதொன்றாகும். எனினும் தவில் நாகசுரம் எவ்வாறு மங்கல வாத்தியங்களாக இணைந்தன என்று நோக்குவதும் ஆய்வுலகத்தின் தேவைகளுள் ஒன்றாகும். பண்டைக் காலத்தில் பல்வேறு சந்தர்ப்பங்களில் இசைக் கருவிகள் நிகழ்வுகளுக்கு ஏற்ற வகையில் இணைந்தே வாசிக்கப்பட்டன. சிலப்பதிகாரத்து அரங்கேற்று காதை குறிப்பிடும் இசைக் கருவிகளும் பின்னணி இசையாளரும் இதற்குச் சான்றாகும்."
‘இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்’ என்ற திருப்பள்ளி எழுச்சிப்பாடலிலே மணிவாசகர் இசைக் கருவிகளின் கூட்டு வாத்தியம்
6 தவில் மேதை தட்சிணாமூர்த்தி

பற்றிக் குறிப்பிடுகின்றார். ‘முழவதிர மடவார்கள் நடமாடிய செய்தயைச் சம்பந்தர் தமது திருவையாற்றுப் பதிகத்தில் குறிப்பிடுகின்றார்."
இடைக்காலத்தில் கோயில்களிலும் இசைக்கலைஞர்கள் ஒன்று சேர்ந்து சந்தர்ப்பத்துக்கு ஏற்ப இசை வழங்கிய செய்திகளை கல்வெட்டுக்கள்மூலம் காண முடிகின்றது." எனினும் தவிலும் நாகசுரமும் எப்போது இணைந்து மங்கல வாத்தியக் குழுவாக இடம்பெற்றது என்பதற்கான சான்றுகள் இன்னமும் தெளிவாகவில்லை.
நாகசுரம், ஒத்து, தவில், தாளம் ஆகிய இசைக் கருவிகளை இசைப்போர்களே இன்று கச்சேரிகளை நிகழ்த்துகின்றனர். இக்கலைக் குழுவைப் “பெரியமேளம்' என்று அழைக்கும் வழக்கம் உண்டு. இக் குழுவின் நிகழ்த்து கலையானது முதலில் கோயில் கிரியைகளுடன் இணைந்தே வளர்ந்திருக்க வேண்டும். கோயிலில் பூசைக்கான ஆரம்பம், சுற்றுப்பலி, பஞ்சாரத்தி, யாகசாலைப் பூசை, சுவாமி புறப்பாடு, கட்டியம்கூறல் வீதியுலா, வீதியுலா நிறைவு, ஆரத்தி ஆகிய கிரியைகளைப் பிறர்க்கு உணர்த்தும் வகையிலான ஒரு இசைமுறைமை, கோயில் கிரியைகளுடன் வளர்ந்து வந்துள்ளது. இதன் அடுத்தகட்ட நகர்வாகத்தான் மேடைக் கச்சேரிகள் இடம் பெற்றிருக்க வேண்டும்.
மங்கல வாத்திய நிகழ்ச்சியில் நாகசுரம் வாசிப்பதற்கு முன்னர் தவில் வாசித்தல் தான் ஒரு கச்சேரியின் ஆரம்பமாக அமையும். இது ஒரு சம்பிரதாயமாக நிகழ்ந்து வருகின்றது. தவில் முதலில் வாசிக்கப்படுவதால் அதில் வாசிக்கப்படும் சொற்கட்டுக்கள் மூலம் நாகசுரக் கலைஞர்களுக்கு உற்சாகமும் கால நிர்ணயமும் ஏற்படும். அடுத்து நாதஸ்வரத்தில் கீர்த்தனைகள், இராகம் என்பன வாசிக்கப்படுகின்றன. இந்த ராக வாசிப்பிலும் ஒரு காலப் பிரமாணத்தை அமைத்துக் கொண்டு அவர்கள் வாசிப்பர். இதில் தவில் வாசிப்போருக்குக் கற்பனை பிறக்கிறது. அவர் இடையிடையே சில ஜதிகளை வாசிப்பார்கள். அதன் பின் உருப்படிகள் வாசிக்கப்படும். இவ்வாறு தவில், நாதஸ்வரம் மாறி மாறி வாசிப்பது இவ்விரு கலைஞர்களுக்கிடையேயான லயிப்புத்தன்மையின் வெளிப்பாடாக அமையும். இதனால் அந்த மங்கல இசைக்கச்சேரி உன்னத நிலையை 960)LU வாய்ப்புண்டு." கொள்ளலும் கொடுத்தலுமான ஒரு இசைவு அங்கு நிகழும் போது அக்கச்சேரி சோபிக்கின்றது. இந்த ஒத்திசைவே இவ்விரு கருவிகளையும் இணைத்து வைத்துள்ளது.
கலாநிதிவ. மகேஸ்வரன் 7

Page 11
கலைஞர் தட்சிணாமுர்த்தி:வாழ்வும் வளமும்
இணுவில் தட்சிணாமூர்த்தி, அளவெட்டித் தட்சிணாமூர்த்தி என இரு ஊர்களின் பெயர்களை இணைத்துக் கூறுவது இன்று மரபாகிவிட்டது. இவ்வாறான இரு நிலைகளின் தாற்பரியத்தை அவரது வாழ்க்கை வரலாற்றுடன் இணைத்துப் பார்க்கும் போது விளங்கமுடியும். தட்சிணாமூர்த்தி அவர்கள் பிறந்தது, வளர்ந்தது, கலை பயின்றது இணுவிலில், அவரது ரிஷி மூலம் இணுவிலாகும். எனினும் அவர் புகுந்தது, மணந்தது புகழ்பெற்றது அளவெட்டியிலிருந்தாகும். எனவே, தான் இரு ஊரவரும் தட்சிணாமூர்த்தியைத் தத்தமது ஊர்காரர் எனப் பேசிப் பெருமைப் படக் காரணமாயிற் று. அவரை அடையாளப்படுத்தியவர்களும் அவ்வாறே அடையாளப்படுத்தினர். எனினும் அவர் ஈழத்தவர் யார்க்கும் பொதுவானவரே.
யாழ்ப்பாண நகரில் இருந்து வடக்கு நோக்கிய காங்கேசன்துறை செல்லும் பெருவீதியில் நான்காம் மைல்கல் தொடக்கம் மருதனார் மடம் வரை நீண்டு கிடக்கும் ஒரு கிராமம் இணுவிலாகும். விவசாயத்தையும் கைத் தொழிலையும் பொருளாதாரத்தின் ஆணிவேராகக் கொண்ட இக்கிராமம், சமயம், மொழி, பண்பாடு ஆகியவற்றை மிகவும் கவனம் கொண்டு பேணிப்பாதுகாத்து வருகின்ற பெருமைமிக்கதாகும்.
“சிவபூமியாகிய இலங்கையில் ஞான பூமியாகத் திகழும் கிராமம் இணுவில் பதியாகும். பிற சமயப்பிடிக்குள் அகப்படாது இன்றுவரை சிவமணம் கமழும் தனித்தமிழ்ச் சைவக்கிராமமாக இணுவில் திகழ்வதையிட்டு நாம் அனைவரும் பெருமையடைகின்றோம். இக்கிராமத்தில் அறிஞர்கள் அருளாளர்கள், சித்த புருஷர்கள், சித்த வைத்தியர்கள், தமிழ்ப்பண்டிதர்கள், சைவசித்தாந்த அறிஞர்கள், ஒதுவார்கள் எனப் பலதரப்படடவர்களும் வாழ்ந்து வந்ததுள்ளனர். “கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்பதுதான் முது மொழியாகும். ஆனால் “கோயில் இல்லாக் குறிச்சியில் குடியிருக்க வேண்டாம்” என்ற வாக்கினை உறுதிப்படுத்துவதுபோல இணுவில் கிராமம் முழுவதும் இருபத்தியொரு கோயில்கள் இருந்து அருளாட்சி செய்து வருகின்றது.’ எனச் சிவத்தமிழ் வித்தகர் சிவ.மகாலிங்கம்
குறிப்பிடுகின்றார்."
8 தவில் மேதை தட்சிணாமூர்த்தி

“தெய்வீகத் திருத்தலங்களால் சிவநெறி தழுவிய சான்றோரால் நித்தம் இறைவனுடன் பேசும் சித்தர் பரம்பரையினரால், வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து தெய்வத்தை அண்மித்த சிவநெறித் தொண்டர்களால், சைவமும் தமிழும் தீந்தமிழ்க் கலைஞர்களும் வளர்ந்த திரு நெறிய மன்றங்களால் கல்விப் பெருஞ் செல்வப் பெருக்கை வழங்கிய அருந்தமிழ்ப் புலவர் அவையினரால் கலைமரபும் இசைமரபும், புலமை மரபும் நிரம்பிய சான்றோர் திருக்கூடலினால் நவீன புலமைத்துவமும் புத்தாக்கத் தொழில்களும் நிரம்பிய பொருண்மியச் சூழலினால் தென் பொதிகைச் சந்தனமாய் மணம் வீசும் பெரும்பேறு பெற்ற பொற்கமலத் திருவூராக விளங்குகிறது. இணுவை என்னும் அழகுப் பேரூர்” என்று பேராசிரியர் சபா.ஜெயராசா குறிப்பிப்டுவது மிகைப்படுத்தப்பட்ட கூற்றல்ல."
இவ்வூரின் கோயிற்பண்பாடு தனித்துவம் மிக்கதாகும். கோயில் என்பது சமூக நிறுவனமாகவும் இயங்கியது என்பதற்கு இங்குள்ள பல கோயில்கள் உதாரணமாகத் திகழ்கின்றன. குறிப்பாக இணுவில் கந்தசுவாமி கோயில் இவ்வாறானதொரு பண்பாட்டின் களமாக விளங்குகின்றது. கோயில் சேவையினரான அருச்சகர், வீரசைவர், இசைவேளாளர், இன்னும் கோயிலுடன் தொடர்புடைய பல சேவையாளர்களின் குடியிருப்புகளைத் தன் அயலிற்கொண்டதாக இது விளங்குகின்றது. அளவுக்கதிகமான கோயில்கள் காரணமாக இங்கு எல்லா நாட்களும் விழாக்காலமாக விளங்குகின்றன.
“இணுவில் கிராமம் பல ஆலயங்களைத் தன்னகத்தே கொண்ட ஒரு கிராமம். இங்கு வசந்த காலத்திலே ஏதோவொரு ஆலயத்தில் மஹோற்சவம் நடந்து கொண்டேயிருக்கும். ஆலயத்தில் சேவை செய்யும் அந்தணர்கள், இன்னிசைக் கலைஞர்கள், பூமாலை தொடுப்பவர்கள் நிறைந்த நிறைவான ஊர் இணுவைத் திருப்பதியாகும்’ என்ற கூற்று இதனை மேலும் அரண்செய்யும்."
இவ்வாறானதொரு பின்புலத்திலேதான் கோயில் சேவையினரான இசை வேளாளரது சனவேற்றம் பற்றிச் சிந்திக்க வேண்டியுள்ளது. கோயில் கலாசாரத்துடன் தொடர்புடைய இவர்களது இணுவிலுக்கான சனவேற்றம் தொன்மையானது. நீண்ட காலமாக இவர்கள் இவ்வூர்க் கோயில் பிரகாரங்களிலும், சூழலிலும் குடியேறித் தமது கோயிற்சேவையை நிறைவேற்றி வந்துள்ளனர். இவர்களது கோயிற்சேவை இருவகைப்பட்டது. ஒன்று கோயில் நித்திய, நைமித்தியக் கிரியைகளின்போது நிரந்தரமாக கோயிலில் இசைச்
கலாநிதி வ. மகேஸ்வரன் 9

Page 12
சேவை செய்தல். இதனைக் கோயில்மேளம் எனவும் அழைத்தனர். இது அவர்களது பரம்பரை உரிமையாகப் பேணப்பட்டு வந்தது. மற்றையது உற்சவ காலங்களில் விசேடமாக வாசிப்பது இதனைச் * சேவகம்” என்றும், “கச்சேரி” என்றும் குறிப்பிடுவர். கோயில் பிரம்மோற்சவங்களின்போதும், விசேட தினங்களின்போதும் இவ்வாறான கச்சேரிகளை இவர்கள் நிகழ்த்தினர். இன்னோர் வகையில் இங்குள்ள கிராம மக்களுடன் தமது உறவைப் பலப்படுத்தினர். தாம் வாழும் கிராமத்தில் நடைபெறும் மணவிழா மற்றும் விசேட விழாக்களில் கலந்து கொண்டு இசைக் கச்சேரி செய்வதாகும். இந்த இசைக்கச்சேரி செய்தல் என்பது பணத்துக்காக நிகழ்த்துவது என்பதற்குப் புறம்பாக கிராமத்தின் செயற்பாடுகளுள் தம்மை இணைத்துக் கொள்வதனூடாகத் தமது அந்நியோன்யத்தை வெளிப்படுத்தும் ஒரு செயலாக இதனைக் குறிப்பிடலாம். இது இன்றுவரை தொடர்ந்து நிலவி வருவது குறிப்பிடத்தக்க அம்சமாகும். இவற்றுக்குப் புறம்பாகத்தான் அவர்கள் பிற ஊர்களில் விசேட சேவகங்களுக்குச் சென்றார்கள். தமது பொருளியல் வளத்தைப் பெருக்கினர். புகழ் பெற்றனர். மேலாகத் தமிழகத்துக்கும் ஈழத்துக்குமான கலைப்பாலமாகவும் திகழ்ந்தனர்.
இவ்வாறான பண்பாட்டுச் சூழலில்தான் பல இசைவேளாளர் குடும்பங்கள் இணுவிலில் வாழ்ந்தன. தவில்காரர் சடையர், இரத்தின நாகசுரக்காரர், பெரிய பழனி, முதலியோர் இவ்வூரில் வாழ்ந்து சேவையாற்றிய இசை வேளாளர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள். அக்குடும்பங்களில் ஒன்றே விசுவலிங்கம் தவில்காரரது குடும்பமாகும். இவர்களது பூர்வீகம் தஞ்சாவூர் மாவட்டம் என்று பி.எம்.சுந்தரம்
குறிப்பிடுகின்றார்." இவர் ஆரம்பத்தில் காரைதீவில் குடியேறிய குடும்பத்தவரைச் சேரந்தவர் என்றும் பின்னர் இணுவிலில் புலம் பெயர்ந்தவர் என்றும் அவர் குறிப்பிடுகிறார். இவர் பெரிய பழனியிடம் பாடம்கேட்டார் என்று கா.ச.நடராசா குறிப்பிடுகின்றார்."
“வித்தகர் பெருந்தகை பெரிய பழனி அவர்களை ஈழத்தின் கலையுலகும் இந்தியக் கலையுலகும் நன்கறியும். தவில் அவரின் தோளில் ஏறினால்- சுவை பொருந்திய நாத ஓசை மக்களை இன்புறச் செய்யும் அவரது ஒவ்வொரு உறுப்பும் நாத ஓசைக்கேற்ப அசைவதனையும் நாத ஓசை அவரின் இசைவிற்கேற்ப கண்டு கேட்டு உற்றறிந்தவர்களே அதன் தகைமையை அறிந்து இன்புற முடியும். இவர் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் கலைப்பாலமாகத் திகழ்ந்தவர். இந்தியக் கலைஞர்கள் பலரை அழைத்து இணுவில் ஊருக்கும் - ஈழத்தவர்க்கும் கலைவிருந்து படைத்தார். ஈழத்தின் புகழ்பெற்ற தவில்
1Ο தவில் மேதை தட்சிணாமூர்த்தி

வித்தகர்களான திரு.ச.விசுவலிங்கம், திரு.பொ.சின்னப்பழனி, திரு.பொ.கந்தையா, திரு.சின்னத்தம்பி, திரு.இரத்தினம் ஆகியோருக்கு கலையிற் பிதாமகராகத் திகழ்ந்தார்’ என அவர் குறிப்பிடுகின்றார். தவில் வித்தகர் ச.விசுவலிங்கம் அவர்கள் அன்னம்மாள் என்ற பெண்ணைத் திருமணம் செய்தார். இவர்களுக்கு உருத்திராபதி, கோதண்டபாணி, மாசிலாமணி, திருமதி கெளரி ராஜ", திருமதி புலனேஸ்வரி கிருஷ்ணமூர்த்தி ஆகிய ஐந்து பிள்ளைகள் பிறந்தனர். பின்னர் முதல் மனைவி இறக்கவே - இரத்தினம்மாள் என்ற பெண்ணைத் திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒன்பது பிள்ளைகள் பிறந்தனர். இவர்களுள் மூன்றாவது மகனாக 26.08.1933இல் பிறந்தவரே தவில்மேதை தட்சிணாமூர்த்தியாவார். நாகேஸ்வரி, மகாலிங்கம், பவானி, நாகரத்தினம், பாலாம்பிகை, சகுந்தலாம்பிகை, சந்திரோதயம், கருணாமூர்த்தி ஆகியோர் ஏனையோராவர்.
இவ்விடத்தில் இவர்களுக்கான தமிழ்நாட்டு ஊடாட்டத்தையும் அது கலைப்பாலமாகத் திகழ்ந்ததையும் அறிய முடிகின்றது. திருவாளர் விசுவலிங்கம் தனது புதல்வியரைத் தமிழ்நாட்டைச் சேர்ந்த கலைஞர்களுக்கே மணமுடித்துவைத்தார். தனது மகள் கெளரியை மதுரையைச் சேர்ந்த நாதஸ்வரக் கலைஞரான திரு.ராஜ" என்பவருக்கு மணமுடித்துக் கொடுத்தார். இவர்களது புதல்வர்களே புகழ்பெற்ற நாதஸ் வரக் கலைஞர் K.R.சுந்தரமூர்த்தி, தவிற் கலைஞர் K.R.புண்ணியமூர்த்தி ஆகியோராவர். அடுத்தமகள் புவனேசுவரியை திருமெஞ்ஞானத்தைச் சேர்ந்த தவில்கலைஞர் கிருஷ்ணமூர்த்திக்கு மணமுடித்துக் கொடுத்தார். இவர் மிகச் சிறந்த தவல் பயிற்றுவிப்பவராகத் திகழ்ந்தார். மேலும், திரு.விசுவலிங்கம் தவிற்காரரது இரண்டாவது மனைவி இரத்தினம்மாளது பூர்வீகமும் தஞ்சாவூர் மாவட்டமாகும். “தஞ்சை மாவட்டம் திருவாரூருக்கு அருகில் உள்ள திருப்பயற்றங்குடி என்ற கிராமத்தைச் சேர்ந்த கந்தசுவாமி நாகசுரக்காரர் என்பவரது மகளையே இவர் மணந்தார்’ எனச் சுந்தரம் குறிப்பிடுகின்றார். இவ்வாறான தொடர்புகள் இவர்களுக்கான கலைப்பாலத்தை வளர்ந்தெடுக்கவும், உறவுகளைத் தொடர்ந்தும் பேணவும் உதவின. இந்த, இரண்டாவது மனைவியின் சகோதரர்தான் பிரபல மிருதங்க வித்துவான் - சண்முகம்பிள்ளை (இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்), சுப்பிரமணியம்பிள்ளை, நாச்சிமார் கோயிலடி கணேசபிள்ளை என்பதும் குறிப்பிடத்தக்கது. சண்முகப்பிள்ளையின் இன்னோர் சகோதரியின் பிள்ளைகளே நாதஸ்வரக் கலைஞர் N.R.கோவிந்தசாமி, N.R.சின்னராசா ஆகியோராவர்.
கலாநிதி வ. மகேஸ்வரன் l

Page 13
விசுவலிங்கம் தவிற்காரரது முதல் திருமணத்தின் மூலம் பிறந்த ஆண்மக்கள் மூவரும் புகழ்பெற்ற கலைஞர்களாகத் திகழ்ந்தார்கள். மூத்த மகன் திரு.உருத்திராபதி நாகசுரம், வயலின், புல்லாங்குழல் முதலிய இசைக்கருவிகளை வாசிப்பத்தில் வல்லவர்; பல்லவி வித்துவான்; இசைபயிற்றுவிப்பதில் சிறந்த ஆசானாகத் திகழந்தவர். இவரது மூத்த புதல் வனே பிரபல வயலின் வித்துவான் திரு.இராதாகிருஷணன் ஆவார். இலங்கையின் புகழ்பெற்ற இசைக் கலைஞர்களுக்கு பக்கவாத்தியம் வாசித்தது மட்டுமன்றி, தமிழகத்தின் புகழ்பெற்ற இசைக் கலைஞர்கள் குறிப்பாக மதுரைச் சோமசுந்தரம் முதலானோருக்குக்கூடப் பக்கவாத்தியம் வாசித்துப் புகழ் பெற்றவர். யாழ்ப்பாணப் பல்லைக்கழக, நுண்கலைத்துறையின் வருகை தரு விரிவுரையாளராகக் கடமையாற்றியவர்.
இரண்டாவது மகனான திரு.கோதாண்டபாணி புகழ்மிகுந்த நாகசுரக் கல்ைஞராகத் திகழ்ந்தவர். நாகசுரம் வாசிப்பதில் கோதண்டபாணியின் பாணியென ஒரு மரபை உருவாக்கியவர். பல்லவி-கீர்த்த்னம் என்பவற்றினை வாசிப்பதில் தன்னிகரற்றுச் சிறந்தவராக விளங்கினார். தென்னிந்திய நாகசுவர வித்தகர் வேதமூர்த்தியோடு நாகசுவரம் வாசித்துத் தன் வித்தகத்தினை நிறுத்தியவர்' எனினும் இவர் இளமையில் காலமாகிவிட்டார். இவரது புதல்வர்களே நாதசுரக் கலைஞர்களான கானமூர்த்தி-பஞ்சமூர்த்தி சகோதரர்களாவர். தமது மூதாதையரின் புகழை நிலை நிறுத்துவதில் இவர்கள் உழைத்து வருகின்றனர். கானமூர்த்தியின் மகன் கிருஷ்ணதாஸ், பஞ்சமூர்த்தியின் மகன் குமரேசன் ஆகியோர் தமது மூதாதையரது கலையை வளரப்பதில் ஆரம் காட்டி வருகின்றனர்.
திருவாளர் விசுவலிங்கத்தின் மூன்றாவது மகனான திரு.மாசிலாமணி பல்கலைப் புலவராகவும் கலைஞராகவும் திகழந்தவர். இணுவிலின் இசைமரபின் இன்னோர் பரிமாணமான இசைநாடக மரபில் தன்னை இணைத்துக் கொண்டவர்.
மேற்குறித்த கலைப் பாரம்பரியத்தைக் கொண்ட ஒரு குடும்பப் பின்னணியில் இருந்து தான் தவில்மேதை தட்சிணாமூர்த்தி அவர்கள் மேற்கிளம்புகின்றார். தனது மகனை ஒரு கலைஞனாகவே வளர்த்தெடுத்து விட வேண்டுமென்ற தந்தையின் அவா காரணமாக பள்ளிப்படிப்புக்குப் பதிலாகக் கலைப் பயிற்சியே சிறுவன் தட்சிணாமூர்த்தியின் மீது சுமத்தப்பட்டது.
12 தவில் மேதை தட்சிணாமூர்த்தி

ஒரு பிறவிக்கலைஞன், மேதையின் இயல்பான கலையார்வம் இதற்குத் துணை செய்தது. தந்தையாகிய விசுவலிங்கம் தவில்காரர் தனது இளம் மகனுக்குத் தனக் குத் தெரிந்த வித்தை யெல்லாவற்றையும் கற்பித்தார். அதனைத் தனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் பயிற்சி செய்வித்தார். ஒழுங்கான குருவிடம் கற்க வேண்டும் என்பதற்காக இணுவில் சின்னத்தம்பி என்பவரிடம் அனுப்பித் தவில் பயில வைத்தார்.
“காலை ஐந்து மணிக்குக் குருவின் வீட்டுக்குச் சென்று சுமார்
எட்டுமணி நேரம் வாசித்துவிட்டு பிற்பகல் இரண்டு மணிக்குத் திரும்பும் அச்சிறுவன், வந்ததும் வராதுமாகத் தவிலைக் கொடுத்து வாசிக்கச் செய்வார் தந்தை. இவ்வாறு நாளொன்றுக்குச் சுமார் பதினாறு மணிநேரம் தவில் வாத்திய சாதகம் இடைவிடாது நடந்தது.” என்று சுந்தரம் தட்சிணாமூர்த்தியினது இளமைக்கால பயிற்சியில் அசுரசாதகம் பற்றிக் குறிப்பிடுகின்றார்? இவ்வாறான ஒரு பயிற்சியையே தட்சிணாமூர்த்தியின் மேதமைக்கான அடிப்படையாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து காமாட்சி சுந்தரம்பிள்ளை என்பவரிடம் பல நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டார். இவ்வாறான பயிற்சிக் காலங்களிலேயே இவரது தந்தையார் இவரை இன்னமும் அனுபவரீதியாக, கேள்விஞானத்தையும் வளர்க்க முற்பட்டார்.
“தனது ஊருக்கோ அல்லது சுற்றுப்புற ஊர்களுக்கோ, திருவிழாக்களில் வாசிக்க வருகின்ற பிரபல கலைஞர்கள் லயவின்யாசம் செய்கின்ற நேரத்தில் மகனைத் தோளில் தூக்கிக் கொண்டு அங்கு சென்று மணிக்கணக்கில் நின்று, அவர்களுடைய வாசிப்பைக் கேட்கச் செய்வதோடு, வீடு திரும்பியதும் சிறப்பு
அம்சங்களையும் வாசிக்குமாறு பணிப்பார் விசவலிங்கம் பிள்ளை’**
இவ்வாறாக, தந்தையின் விடாமுயற்சியும், அர்ப்பணிப்புடனான ஈடுபாடும்தான் தவில் வாசிப்பின் சக்கரவர்த்தியாகத் தட்சிணாமூர்த்தி மிளரக் காரணமாகியது எனலாம்.
ஈழத்திலே தவில் பயிற்சிபெற்றால் மட்டும் போதாது தமிழத்தில் தலைசிறந்த வித்துவான்களிடமும் பயிற்சி பெற வேண்டும் என்ற நோக்கில் தந்தை விசுவலிங்கம் சிறுவன் தட்சிணாமூர்த்தயைத் தமிழகம்
கலாநிதி வ. மகேஸ்வரன் }3

Page 14
அழைத்துச் சென்று நாச்சியார்கோவில் இராகவப்பிள்ளை என்பவரிடம் பயிற்சி பெறுமாறு விட்டுச் சென்றார். சிறுவனான தட்சிணாமூர்த்தியின் தவில் வாத்தியத்தில் காணப்பட்ட லயிப்பையும், வித்துவத்தையும் நுணுக்கமாக அவதானித்த இராகவப்பிள்ளை "உனக்குச் சொல்லிக் கொடுக்க இனி ஏதும் பாக்கியில்லை. ஒரு அபிப்பிராயம் காதிலே விழுவதுக்குள்ளாகவே உன் கைகளில் அது ஒலித்து விடும்படியான அளவுக்குக் கடவுளின் வரப்பிரசாதம் பெற்றுள்ள நீ இனி ஊருக்குத் திரும்பலாம். மகோன்னதமான பேரும்புகழும் உன்னை வந்தடைய அதிக காலம் இல்லை" என வாழ்த்தி ஊருக்குத் திருப்பி அனுப்பி வைத்தார்’ ஆனால் "பலரிடம் நான் தவில் பயின்றேன், பலமேதைகளின் வாசிப்பைக் கேட்டேன் ஆனால் லயசம்பந்தமான விவகாரம் என்ற அம்சத்தில் என் கண்களைத் திறந்த மானசீகக் குருநாதர் திருமுல்லைவாயில் முத்துவீர்பிள்ளை தான்’ என்று அவர் பின்னாட்களில் கூறியதுண்டு:
ஈழத்துக் குத் திரும் பிவந்த தட் சினா மூர்த்தி தனது கலைப்பயணத்தை ஆரம்பித்தார். யாழ்ப்பாணத்துக் கோயில்களில் எல்லாம் தட்சிணாமூர்த்தியின் தவில் கச்சேரிகள் களைகட்டத் தொடங்கின. யார் இந்தத் தட்சிணாமூர்த்தி என்று பலரைத் திரும்பிப்பார்க்க வைத்தார் அவர் விஷயம் அறிந்த கலைஞர்கள் முதல் விஷயம் அறியாப் பாமரர் வரை தட்சிணாமூர்த்தியின் கைவேலைப்பாடு கவர்ந்திருந்தது. இக்காலத்திலே தமது தந்தையார் காலமாகிவிடவே, தன் மூத்த தமக்கையர் (இராஜேசுவரி-கணேசு) வாழ்க்கைப்பட்ட அளவெட்டிக்கு இணுவிலில் இருந்து புலம் பெயர்ந்தார். இணுவிலைப் போலவே கலைஞானப் புலமை கொண்டது அளவெட்டி, அங்கு நிலவிய கோயில் கலாசாரம் காரணமாக இசை வேளாளரது சனவேற்றமும் அதிகரித்தது. கிரிமலை நகுலேஸ்வரம், மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில், கும்பிளாவளைப்பிள்ளையார் கோயில் ஆகியவற்றின் விழாத் தேவைகள் இவர்களை அளவெட்டியில் குடியேறி நிலைக்கச் செய்தது. தட்சிணாமூர்த்தி அங்கிருந்தவாறே கச்சேரிகளுக்கும் சென்றார். அளவெட்டியில் வசித்த தவிற்கலைஞர் செல்லத்துரைப்பிள்ளையின் மகள் மனோன்மணியை மணமுடித்தார். அவரது வாழ்வும் வளமும் அளவெட்டியென்றானது. இப்போது அவர் அளவெட்டியூர் தட்சிணாமூர்த்தியானார், கலாதேவி, உதயசங்கர், ரவிசங்கர், உதயசெல்வி, ஞானபண்டிதன் என்ற மக்களையும் பெற்று இன்புற்றார்.
தவில் மேதை தட்சிணாமூர்த்தி

திருதட்சிணாமூர்த்தி அவர்களது மேதைமை தமிழ்நாட்டிற்கு அறிமுகம் செய்து வைத்தவர் நீடாமங்கலம் சண்முகவடிவேல் ஆவர். அவரது அறிமுகத்துடன் தட்சணாமூர்த்தி தமிழகத்தின் இசையரங்குகளில் நட்சத்திர அந்தஸ்த்தைப் பெற்றார். அவர் வாசிக்காத இசையரங்குகள், திருவிழாக்கள், திருமணவரவேற்பு நிகழ்ச்சிகளே இல்லை என்ற அளவிற்கு அவர் புகழின் உச்சியில் ஜொலிக்கும் நட்சத்திரமாகத் திகழ்ந்தார். ‘லயஞான குபேர பூபதி என்ற தனித துவமான பட்டத் துடன் அவர் இசையுலகின் சக்கரவர்த்தியாகக் கோலோச்சினார். 1959 தொடக்கம் 1975 வரையான ஒன்றரைத் தசாப்தம் தமிழகத்திலும் ஈழத்திலும் தட்சிணாமூர்த்தி சகாப்தமாகவிருந்தது.
நீடாமங்கலம்
சண்முகவடிவேல்
மேதைகள், அசாதாரண தண்மைகள் கொண்டவர்களது வாழ்நாட்காலம் குறுகியது. பாரதி, புதுமைப்பித்தன் கணித மேதை இராமானுஜன் முதலியோர் இதற்கான உதாரணங்கள். தவில்மேதை தட்சிணாமூர்த்தியும் இதற்கு விலக்காகவில்லை. தனது 42வது வயதில் 13.05.1975இல் தனது மூச்சை நிறுத்தி கொண்டார். தவில் கலையின் ஒரு துருவ நட்சத்திரம் எரிந்துபோனது ஆயின் அதன் கலை ஒளி என்றும் பிரகாசமான ஒளியாக நின்று வழிகாட்டியாய் இன்றுவரை தொடர்கின்றது.
கலாநிதி வ. மகேஸ்வரன்

Page 15
கலைத்துவத்தின் ரிஷி முலங்கள்
தவில்காரர் விசுவலிங்கத்தின் மகன் சிறுவன் தட்சணாமூர்த்தி அவர்களை “லயஞான குபேர பூபதி என்ற உயர் விருதுத் தளத்துக்கு உயர்த்துவதற்குத் துணை நின்ற பல காரணிகளைக் குறிப்பிடலாம். அவரது கலைக் குடும்பப் பாரம்பரியம் தான் இதற்கு அடிப்படையாக இருந்துள்ளது என்பதை அறிவியல் பூர்வமாக ஏற்றுக்கொள்ளலாம். அந்த இயல்பான கலைப்பாரம்பரியத்துக்குத் தன்னாலான பல செயற்பாடுகளைப் புரிந்து தன் மகனை அவையத்து முந்தியிருப்பச் செய்த தந்தையார் விசுவலிங்கம் அவர்களது முயற்சிகள் சற்றுமிதமானதாக இருந்திருக்குமேயானால் தவில் மேதை தட்சிணாமூர்த்தியை நாம் தரிசித்திருக்க முடியாது போயிருக்கும். கலைப் பின்புலமுள்ள ஒரு தந்தை தன் மகனுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை அவர் சரியாகச் செய்துள்ளார் என்றே குறிப்பிட வேண்டும்.
மேற்குறித்த இரு கருத்துக்களுக்குப் புறம்பாக, கலைஞர் வாழ்ந்த சூழலும் அவரது திறமையைத் தீர்மானித்தது எனலாம். இந்த வகையில் இணுவில் கிராமம் தவில் மேதை தட்சிணாமூர்த்தியின் வித்துவத்துக்கு ஆற்றிய பங்களிப்புப் பற்றி நோக்குவதும் அவசியமானதாகும். தட்சிணாமூர்த்தியின் தவில் வாசிப்பில் அவருக்குப் பெரும் புகழைக் கொடுத்தது அவரது லயப்பிரமாணம் எனும் காலப் பிரமாணமாகும். அட்சரந்தவறாத காலப்பிரமாணமே அவரது லயவின்யாசங்களின் சிகரமாக அமைந்தது. அவரது தமிழ்நாட்டுக் குரு நாச்சியார்கோயில் இராகவப்பிள்ளை குறிப்பிட்டது போல மற்றச் சேதிகளைக் காது வாங்கிக் கருத்தில் கொள்ளுமுன் அவரது கைகளுக்குள் அந்த லயப் பிரமாணம் வந்துவிடும். அது கண்டம், மிஸ் ரம், சதுஸ் ரம் , திஸ் ரம், சங்கீர்ணம் என்ற லயப் பிரஸ்தாரங்களையெல்லாம் தாண்டிக் காற்று வெளியில் சஞ்சாரம் செய்யத் தொடங்கிவிடும். ஆயின் லயத்தில் ஒரு அட்சரம் கூடப் பிசகாது. இது தான் அவரது தனித்துவம். இதனால் தான் அவருக்குக் கிடைத்த பட்டங்களுள், விருதுகளுள் “லயஞான குபேர பூபதி” என்பது அர்த்தமுள்ளதாகியது. லயத்தில் ஞானம், அந்த ஞானத்தின் செல்வனாக விளங்கும் குபேரன் - தேவலோகத்தில் செல்வத்துக்கு அதிபதி குபேரன், பூலோகத்தில் லயஞானத்துக்கு குபேரன் - அதிபதி
l6 தவில் மேதை தட்சிணாமூர்த்தி

தட்சிணாமூர்த்தி. இந்த உயர்ச்சியை அடைவதற்கு அவரது இளமைப்பருவ ஊடாட்டம் பெற்றுக்கொண்ட செல்வாக்கை நோக்குவது அவசியமானதாகும்.
இந்நூலின் இரண்டாம் பகுதியில் விபரித்தபடி இணுவில் கிராமம் இசை முதலான கலைத்துறைகளுக்கு முதன்மையளித்த ஊராகும். இசைக் கலைஞர்கள், நாடக, நாட்டுக் கூத்துக் கலைஞர்கள், தாளக் காவடிக் கலைஞர்கள் எனப் பல கலைஞர்கள் இங்கு வாழ்ந்து வந்துள்ளனர். இதனால் தான் இவ்வூரை யாழ்ப்பாண மாவட்டத்தில் “சின்ன இந்தியா’ என்று அழைக்கும் வழக்கம் நீண்ட காலமாக இருந்து வந்துள்ளது.
இணுவில் கிராமத்தில் நீண்ட காலமாக கூத்து, இசை நாடகப் பாரம்பரியம் ஒன்று நிலவி வந்துள்ளது. ‘கோவலன் நாடகம்’ என்பது இணுவைச் சின்னத்தம்பிப் புலவரால் எழுதப்பட்டது என்றும் கருதப்படுகின்றது. இது தவிர இவரால் ‘வள்ளித் திருமணம்’, ‘அனுருத்தன் நாபூகம்’ என்பனவும் எழுதி மேடையேற்றப்பட்டதாகக் கூறப்படுகின்றது.
இணுவில் நாடகப் பரம்பரையில் அண்ணாவியார் சுப்பையாவும் (1875) அவரது சகோதரர் நாகலிங்கமும் (1880) குறிப்பிடக் கூடியவர்கள். இவரது தந்தையார் அண்ணாவியார் முருகேசு குரவைக் கூத்து அண்ணாவியாராக விளங்கியிருக்கின்றார். சுப்பையாவும், நாகலிங்கமும் 1890 களில் மிகவும் பிரபலம் பெற்ற நாடகக் கலைஞர்களாகத் திகழ்ந்தனர். அண்ணாவி சுப்பையர் அக்காலத்தில் நாடக உலகில் புகழுடன் விளங்கிய எம்.ஆர்.கோவிந்தசாமிக்கு ஈடாகப் பேசப்பட்ட கலைஞர். அவரது சகோதரர் நாகலிங்கம் இராஜபாட் நடிகராக நடித்தவர். "இலங்தை ராஜ சிங்கம்’ என்பது அவரது நாடக வழிவந்த பட்டப் பெயராகும்.
இசை நாடகங்கள் இலங்கையில் பரவத் தொடங்கியதும் அரங்கமைப்பிலும் ஒப்பனைகளிலும் பல மாற்றங்கள் படிப்படியாக உண்டாகின. மக்கள் மத்தியில் இவை நல்ல செல்வாக்குப் பெற்றன. காட்சிகள் புதுவகையான உடுப்புகள் என்பனவும் பார்வையாளரின் கவனத்தை மிகவும் கவர்ந்த காரணத்தால் இந்த நாடகங்களுக்கு நல்ல வரவேற்பிருந்தது. துரைராசா நிறுவிய தகரக் கொட்டகையில் அக்காலத்தில் அடிக்கடி நாடகங்கள் நடப்பதுண்டு. இந்தியக் கலைஞர்களுடன் கலந்து நடிக்கத் தொடங்கிய இலங்கைக் கலைஞர்களில் மூத்த தலை முறையினராக விளங்கியவர்கள் அண்ணாவியார் சுப்பையாவும் நாகலிங்கமுமேயாவர். அண்ணாவியார் சுப்பையா இராமனாகவும்
கலாநிதி வ. மகேஸ்வரன் 7ן

Page 16
தம்பியார் நாகலிங்கம் சீதையாகவும் பல தடவைகள் நடித்து இந் தயக் கலைஞர் களதும் இலங்கை இரசிகர் களதும் பாராட் டுக் களைப் பெற்றனர் என் கலிறார் காரை செ. சுந்தரம்பிள்ளை."
இவர்களைப் போலவே நாட்டுக் கூத்துக் கலைஞனாகவும், காவடியாட்டக் கலைஞனாகவும் திகழ்ந்தவர் அண்ணாவியார் ஏரம்பர் ஆவர். இவரது மகன்களுள் ஒருவரே. பின்னாட்களில் பிரபலம் மிக்க நடனக் கலைஞனாகத் திகழ்ந்த - ஏரம்பு சுப்பையா ஆவார்.
இவ்வாறான ம நாடகக் குழுக்களுடன் தவில் மேதை தட்சிணாமூர்த்தியின் குடும்பத்துக்கும் தொடர்பு இருந்துள்ளது. அவரது சகோதருள் ஒருவரான மாசிலாமணி புகழ்பெற்ற நாடக நடிகராகவும் விளங்கியுள்ளார். 1933 இல் ‘டப்பா செற்’ நாடகசபை இணுவிலில் ஆரம்பிக்கப்பட்டது. இதன் நாடக ஆசிரியராக - கலையரசு க. சொர்ணலிங்கத்துடன் லங்கா சுபோத விலாச சபையில் நடிகராகவிருந்த புகழ்பெற்ற மெய்கண்டான் க. சரவணமுத்து என்பவர் இணைந்து கொண்டார். இவரிடம் பல மாணவர்கள் நாடகம் பயின்றார்கள். கீரிமலை பொன்னுச்சாமி தேசிகர், அளவெட்டி நாகலிங்கம், இணுவில் எஸ்.வி.மாசிலாமணி, இணுவில் ஏ. சுப்பையா (அண்ணாவியார் ஏரம்புவின் மகன்) பிரபல நடிகர் வேல்நாயக்கரின் மகன் சரவணமுத்து, கந்தையா வேலுப்பிள்ளை, இணுவில் தணிகாசலம், எஸ்.எம். நடராசா ஆகியோர் பிற்காலத்தில் பிரபல நடிகர்களாகத் திகழ்ந்தார்கள். இதுபோலவே - 1940 ஆம் ஆண்டு மெய்கண்டான் சரவணமுத்து என்பவரால் உருவாக்கப்பட்ட 'சாந்தி நிலையம்' என்ற நாடகக் கல்லூரியுடனும் தொடர்புடையவர்களாக என்.வி.வடிவேலு, கே.சரவணமுத்து முதலியோர் விளங்கினர்.”
இந்தவிடத்திலே நோக்க வேண்டிய விடயம் யாதெனில் விசுவலிங்கம் குடும்பத்தாருக்கும், கூத்து, இசை நாடகத் துறையினருக்கும் இடையேயான ஊடாட்டம் எவ்வாறானது என்பதேயாகும். திரு.விசுவலிங்கத்துக்கும், ஏரம்பருக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருந்துள்ளது. அத்துடன் அவரது மகன் மாசிலாமணி இசை, நாடகப் பாரம்பரியத்துள் தம்மை இணைத்துக் கொண்டுள்ளார். இவ்வாறானதொரு பின்புலம் - தட்சணாமூர்த்தி குடும்பத்தில் செல்வாக்குச் செலுத்தியிருக்க வேண்டும். லயமும், ஜதியும் சேர்ந்த ஆட்ட மரபும், இசை மரபும் சிறுவனான தட்சிணாமூர்த்தியின் செவி வழியூடாகவோ, அனுபவ ரீதியாகவோ அவரது ஆளுமைப் புலத்தில் செல்வாக்குச் செலுத்தியிருத்தல் வேண்டும்.
18 தவில் மேதை தட்சிணாமூர்த்தி

இணுவிலில் நிலவிய இன்னோர் கலைவடிவம் தாளக்காவடி என்பதாகும். இதுவும் ஜதிகளுடன் கூடிய ஆட்ட மரபையும், இலகுவான இசைச் சேர்க்கையையும் இணைத்துக் கொண்ட கலையாகும். இது "நேர்த்திக் கடன் காவடி’ என்ற வகையில் சடங்கு ரீதியாகவும், நிகழ்த்துகலை என்ற வகையில் பொதுமக்கள் கலையாகவும் விளங்கியுள்ளது.
“மஞ்சத் திருவிழாவில் ஆட்டக் காவடிகளும் - பாட்டுக் காவடிகளும் - புராண காவிய நாட்டுக் கூத்துகளும் இடம் பெற்றன. அனுமான் எனப் புனை பெயர் கொண்ட கதிர்காமர், நம்பியரசன் எனப் புனை பெயர் கொண்ட பொன்னையா, அண்ணாவி ஏரம்பர், அண்ணாவி சுப்பையர், இவர் உடன் பிறந்தவரான இலங்கை இராசசிங்கம் நடிகவேள் நாகலிங்கம், கந்தர் தாமோதரம்பிள்ளை, பொருத்தர் ஆறுமுகம், புளியடி முருகேசு ஆகியோரின் ஆட்டக் காவடிகளும் பாட்டுக் காவடிகளும் குடாநாட்டவரின் கவனத்தை ஈர்த்தன”
என்று க.செ.நடராசா குறிப்பிடுகின்றார்." இந்தத் தாளக் காவடிக்கான இசைச்சேர்க்கை தாளக்கட்டை அடிப்படையாகக் கொண்டதாகும். இணுவில் கந்தசுவாமி கோயில் முன்றலிலும், மஞ்சத்தடி முருகன் கோயில் வீதியிலும் ஆடப்பட்ட தாளக் காவடியின் தாளக் கட்டுக்களும் அதன் லயமும் கோயில் சூழலில் வாழ்ந்த சிறுவன் தட்சிணாமூர்த்தியின் லயப்பதிவில் செல்வாக்கினை ஏற்படுத்தியிருத்தல் கூடும்.
இன்னோர் வகையில் இங்கு நிலவிய ஆதி முழவுக் கலையான பறை மேளக் கலையும் இங்கு நீண்ட காலமாக நிலைபெற்று வந்துள்ளது. 'பறைமேளம்' என்ற வாத்தியம் பண்டைக் காலத்திலிருந்தே ஆலய வழிபாட்டுடனும், சமூகச் சடங்குகளுடனும் தொடர்புடைய கலையாகும். இந்த வாத்தியம் பண்டைக் காலந்தொட்டே யாழ்ப்பாண மாவட்டத்தில் பல நிலைகளில் வாசிக்கப்பட்டுள்ளது.
“யாழ்ப்பாணத்தில் பறை, கோவில்களில் காவடிகள், கரகங்கள், சாமி ஆட்டம் போன்றவற்றிற்குப் பயன்படுத்தப்படுகின்றது. அத்துடன் சில சமூகத்தவரின் இறுதி ஊர்வலத்துக்கும் பயன்படுத்தப்படுகிறது. அத்துடன் அரசாங்கச் செய்திகளையும், பொதுச் செய்திகளையும் மக்களுக்கு அறிவிக்கும் பொருட்டும் பறையடித்துக் கூறப்படுதல் வழக்கில் உள்ளது." பறை வாத்தியம் என்பது காலப்பிரமாணமும், அதிர்வுகளுடனும் கூடிய வாத்தியமாகும். தட்சணாமூர்த்தியின் 'தவில் பேசும்’ என்று ஒரு கருத்து நிலை பலமாகப் பேசப்பட்ட விடயமாகும்.
கலாநிதி வ. மகேஸ்வரன் 9

Page 17
தாளக்கட்டுக்களை, ஜதிகளைக் கைக்குள் கொண்டு வந்து அதனைப் பேசுங்கலையாக்கியவர் தட்சிணாமூர்த்தி.
இந்தப் பேசுங்கலை - பறை வாத்தியத்தின் ஊடாட்டத்தாலும் ஏற்பட வாய்ப்புண்டு. ஆபிரிக்கப் பழங்குடி மக்கள் இன்னும் 'பறை' ஒலி மூலமாகவே கருத்துக் களைப் (செய்திகளையல்ல) புலப்படுத்துகின்றனர். அவர்களது பறை வாத்தியத்தில் ஆண் பறை, பெண் பறை என்ற பேதங்களும் உண்டு என்பர்.
பறை என்ற கருவியை வாசிக்கும் கலைஞர்கள் இணுவிலில் நீண்ட காலமாக விாழ்ந்து வந்துள்ளனர். கோயில் விழாக்களில் பறை இசைக் கருவியாகவே பயன்பட்டு வந்துள்ளது. காவடிகளுக்கும், கரகத்துக்கும் இது இசை சேர்த்துள்ளது. இணுவிற் கந்தசுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழாவில் திருமஞ்சம் வீதியுலா வந்த காலங்களில் பறை வாத்தியம் அதற்குரிய தாளக்கட்டுகளுடன் நீண்ட காலமாக வாசிக்கப்பட்டு வந்துள்ளது. சிறு தெய்வக் கோயில்களில் நடைபெற்ற 'வேள்வி’ மற்றும் ‘மடை’ நிகழ்ச்சிகளில் பறை முழக்கப்பட்டது.
இவ்வாறான பெருமைமிக்க தொன்மைக் கலை இன்றைய மேல்நிலையாக்கச் செயற்பாடுகளினால் ஒதுங்கு நிலை பெற்ற போதும் அது நமது தொன்மைக் கலை என்பதும், அதன் தாளக்கட்டுகளும், லயமும் எமது இசைப் பாரம்பரியத்தில் நீண்ட காலமாகச் செல்வாக்குச் செலுத்தி வந்துள்ளது என்பதும் அழுத்திக் கூறப்பட வேண்டியதாகும். இவ்வாறான கலைச்சூழல் நிலவிய இணுவில் இசைப்பாரம்பரியம் கலைஞர் தட்சிணாமூர்த்தியின் ஆரம்ப கால லயத்துக்கும் ஜதிக் கட்டுகளுக்கும் மறைமுகமாகவேனும் செல்வாக்குச் செலுத்தியிருக்க வேண்டும் என்று யூகிக்க இடமுண்டு.
தாளம் அல்லது லயம் என்ற சொல்லிற்கு தட்டி வருதல் அல்லது அடித்து வருதல் என்பது பொருள். இசை சம்பந்தமாகப் பேசும் போது அது ஒரே அளவாகத் தட்டி வருதலையே குறிக்கிறது. ஒரே அளவாகத் தாளத்தைத் தட்டி வரும் போது அதில் ஓர் இசை உணர்ச்சி உண்டாகின்றது. இது லய உணர்ச்சி எனப்படும். எப்படி ஏழிசைச் சுர நரம்புகளெல்லாம் ஆதார சுருதியிலே சேர்ந்தொலிக்கும் போது ஓர் உணர்ச்சி உண்டாகின்றதோ அதே போல தாளத்தையும் ஓர் அளவாய்த் தட்டிப் போட்டு வரும் போது அது மாதிரியான உணர்ச்சி உண்டாகின்றது. ‘லயம்’ என்ற சொல்லிற்கு ஒன்றுதல் என்பது பொருள்.
இந்த லய அறிவு அல்லது தாள அறிவு என்பதில் தெரிந்து
3Ο தவில் மேதை தட்சிணாமூர்த்தி

கொள்ள வேண்டியது காலம் மாற்றுதலேயாகும். முதற்காலம் இரண்டாங்காலம், மூன்றாங்காலம், நான்காம்காலம் எனத் தாள நடையைப் பகுத்துரைத்தல் மரபு. அவற்றுள் விளம்பம் அல்லது சவுக்கம் எனப் பெறும் முதற்காலமாவது தாள எண்ணிக்கைக்கு ஓரெழுத்து என்ற முறையில் அமைவது. இரண்டாம் காலமாவது தாள எண்ணிக்கைக்கு இரண்டெழுத்து என்ற முறையில் இரட்டித்து வருவது. மூன்றாம் காலமாவது தாள எண்ணிக்கைக்கு நான்கெழுத்து என்ற வகையில் அது இரட்டிப்பாக அமைவது. நான்காம் காலமாவது தாள எண்ணிக்கைக்கு எட்டெழுத்து என்ற முறையில் அதனிலும் இரட்டிப்பாக அமைவது. இவ்விதி முறைகளே நான்கு காலங்களுக்குரிய அளவு நிலையாகும். இவ்வளவு நிலையை முதனடை, வாரம், உடை, திரள் என்று கூறுவது தமிழ் மரபு.
தாளம் பிசகாத லயம் தான் தட்சிணாமூர்த்தியின் ஆதார சுருதி. அது தான் அவரை ஞானத்தின் உச்சிக்கு உயர்த்தியது.
'தவில் வித்வான்களின் திறமை பல திறப்பட்டது. சிலருக்கு லய சம்பந்தமான கணக்குகளில் நிறைந்த புத்திசாலித்தன மிருக்கும். ஆனால் கரத்திலே வேகம் அல்லது குறைவாகவோ அல்லது பேச்சு இருக்கும் வேறு சிலருக்கு பேச்சு அதிகம். ஆனால் விவகாரப்புலமை குறைந்து காணப்படும். சிலர் உருப் படிகளுக்குப் பொருத்தமாக வாசிப் பதில் தேர்ந்திருப்பார்கள். அதிநுட்பங்களில் போதிய திறமையிருக்காது. இந்த எல்லா அம்சங்களையும் முழுமையாகப் பெற்ற தவிற் கலைஞர்களை விரல் விட்டு எண் ணிவிடலாம். அவ் வகைப் பட்ட மிகச் சிலரில் நீடாமங்கலம் மீனாட்சிசுந்தரம்பிள்ளைக்கு அடுத்துச் சொல்லக் கூடிய ஒரே வித்வானாகத் திகழ்ந்தவர் தட்சிணாமூர்த்தி’.
என பி.எம்.சுந்தரம் குறிப்பிடுகின்றார்.
கடுமையான அசுர சாதகமும், பலவகைப்பட்ட திறமை செறிந்த நாதஸ்வரக் கலைஞர்கள் பலருக்கு வாசித்து வாசித்துப் பெற்ற அனுபவமும் இவற்றுக்கெல்லாம் மேலாக இறைவனின் அருட்கொடையும் தட்சிணாமூர்த்திக்கு ஈடிணையற்ற பெரும் ஸ்தானத்தைத் தேடித் தந்தன.
என அவர் மேலும் குறிப்பிடுகின்றார்.” இந்த அசுர சாதகத்திலும், இறைக்கொடை என்ற விடயத்திலும் இணுவிலின் பங்களிப்பு உண்டென்பதை மனங்கொள்ளல் அவசியமானதாகும்.
கலாநிதி வ. மகேஸ்வரன்

Page 18
தட்சிணாமூர்த்தியின் தவில் கச்சேரிகளின் "லயவின்யாசம்’ முக்கியமான அம்சமாக அமையும். எப்பேர்ப்பட்ட லய விசேடங்களையும், எந்தத் தாளத்திலும், எத்தனை வேகத்தில் வேண்டுமானாலும் மணிக்கணக்கில் வாசிக்கும் வல்லமை பெற்றிருந்தவர் தட்சிணாமூர்த்தி. தனக்கு விருப்பமான தாளத்தில், தனக்குச் செளகரியமான காலப்பிரமாணத்தில் 'தனி' வாசிப்பரல்லர் அவர். நாதஸ்வரக்காரர் ஆலாபனையின் போதோ கீர்த்தனையிலோ அல்லது பல்லவியிலோ எப்போது லயவின்யாசத்துக்கு இடமளிக்கிறாரோ அப்போது அங்கு காலப்பிரமாணம் சற்றும் சிதையாமல் நாணயத்துடன் தட்சிணாமூர்த்தி லயவின்யாசம் செய்வதே வழக்கம். ‘என்ன பல்லவி’ என்று நாதஸ்வரக் கலைஞரிடம் முன்னமே கேட்டுக் கொள்வது, அல்லது இன்ன கீர்த்தனையில் லயவின்யாசத்துக்கு இடந்தாருங்கள் என்று முன்பே தெரிவித்துக் கொள்வது என்பது அவரிடம் கிடையாது. எந்தப் பல்லவியில் எந்த இடத்தில் நாகசுரக்காரர் இடந்தருகிறாரோ அந்த இடத்தில் விஸ்தாரம் செய்வது தான் தட்சிணாமூர்த்தி பாணி.
லயவின்யாசம் நடைபெறும் கால அளவில் கூட வேறுபாடுகள் இருந்தன. தமது திறமைகளில் நம்பிக்கையுள்ளவர்களே அதில் நுழைந்து நேரக் கட்டுப்பாட்டை மறந்து சஞ்சாரம் செய்தனர். தட்சிணாமூர்த்தி பங்குபெறும் லயவின்யாசங்கள் குறைந்தது இரண்டு மணி நேரத்துக்காவது அமைந்தது.
“ஒரு சமயம் புதுக்கோட்டையில் திரு. மெய்ஞானம் நடராசசுந்தரம் பிள்ளையின் நாகசுவரக் கச்சேரியில் ரஸிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஐந்து முறை தட்சிணாமூர்த்தி லயவின்யாசம் நிகழ்த்தினார். அன்றைய தினம் முதல் லயவின்யாசம் 'இந்த பராகா’ (நாதநமக்கிரியா) என்ற கீர்த்தனையின் 'அதி துரித கால ஸ்வரப்பிரஸ்தாரத்துக்குப் பின்பு நடைபெற்ற சிறப்பினைக் கேட்டுய்ந்தவர்களுக்கு அது ஒரு மறக்கமுடியாத லயவின்யாச நிகழ்ச்சியாகும்.
என்கிறார் சுந்தரம். அன்று இவருடன் தவில் வாசித்தவர் வடபாதி மங்கலம் தட்சணாமூர்த்திப் பிள்ளை ஆவார்.
கண்டமோ, சங்கீர்ணமோ எந்தக் கதியை அமர்த்திக் கொண்டாலும் கடைசி வரை மோஹரா, கோர்வையுட்பட அந்த ஜதிக்கான சொற்களைக் கொண்டே, தட்சிணாமூர்த்தி வாசித்து முடிப்பார். சங்கீரணம் அவருக்கு விருப்பமான ஒன்று கடுமையான சத்தங்களில் லய வின்யாசம் செய்வது அவருக்குத் தேனில் தோய்த்த பலாச் சுளை. இவருடைய வாசிப்புத்திறனைப் பரிசோதிக்கப் பலர் முயன்றனர். சிறந்த
** தவில் மேதை தட்சிணாமூர்த்தி

நாகசுரக் கலைஞர்கள் இவருக்கு வாசிக்க வேண்டும் என்பதற்காகவே மிகவும் கடினமான பல்லவிகளைத் தயார் செய்து கொண்டு வந்து வாசித்திருக்கிறார்கள். ஆனால் அவற்றுக்கெல்லாம் துணிவுடன் முகங்கொடுத்தார் தட்சிணாமூர்த்தி. அவர்கள் வாசித்த பல்லவியை ஒரு முறை அவர் உள்வாங்குவார் அடுத்த கணம் பல்லவி அவருக்கு அடிவணங்கி ஏவல் செய்யத் தொடங்கிவிடும். லயவின்யாசம் களைகட்டும். திரு.மெய்ஞானம் நடராசசுந்தரம்பிள்ளையும் தருமபுரம் கோவிந்தராசபிள்ளையும் தட்சிணாமூர்த்திக்குக் கற்பூர மூளை’ என்று குறிப்பிட்டுள்ளனர்.
“தட்சிணாமூர்த்தி வாசிப்பதை எண்ணுகையில் அந்தப் பையனின் லயக் கணிசம், மூளை வேகம், கர வேகம் எல்லாம் பிரமிப்பதைத் தான் உண்டாக்குகின்றன.”
என்று மூத்த நாதஸ்வரக் கலைஞர் சிதம்பரம் ராதாகிருஸ்ணபிள்ளை வியந்து பாராட்டியுள்ளார்.
இந்த லயக்கணிப்பும், அதனால் ஏற்பட்ட சுரவேகமும், கரவேகமும் தான் தட்சிணாமூர்த்தியின் பெயருக்கும் புகழுக்கும் காரணமாக அமைந்தன். இந்தக் கொடை அவருக்கான இயல்பாலும், அவரது தந்தையின் கடும் முயற்சியாலும், அவரது சிறுவயது கலைப்பாரம்பரிய ஊடாடல்களினாலும், அவரது கலைஞர்களின் அணுக்கத்தாலும் மேலாக கடவுள் கொடையாலும் தான் இது நிகழ்ந்தது.
“சங்கீரணம்” என்ற தாளஜதியை மகேந்திரவர்ம பல்லவன் என்ற மன்னன் தோற்றுவித்ததாகவும் அதன் காரணமாக அவன் ‘சங்கீர்ண ஜாதிப்புலி’ என்ற சிறப்புப் பெயர் பெற்றதாகவும் கூறப்படும். தட்சிணாமூர்த்தி மற்றொரு மகேந்திரவர்மனாகப் பதினொரு அட்சரமுடைய தாளஜாதியை உருவாக்கிப் பல முறை அதில் 'தனி' ஆவர்த்தனம் வாசித்திருக்கிறார். அரித்துவார மங்கலத்தில் நடைபெற்ற ஒரு கச்சேரியில் இந்த 'ருத்ரகதியில் சுமார் மூன்று மணிநேரம் தட்சிணாமூர்த்தி தவில் வாசித்ததைக் கேட்ட நாகசுரத் தவில் வித்துவான்களும் ரசிகர்களும் இந்தப் புதுமையான சிறப்பையும், தட்சிணாமூர்த்தியின் மேதா விலாசத்தையும் புகழ்ந்தனர். இதைப்போன்றே பதின்மூன்று மற்றும் பதினேழு அட்சரங்களைக் கொண்ட ஜதிகளையும் உருவாக்கி அதில் மிகச்சரளமாகத் தவில் வின்யாசம் செய்வார் தட்சிணாமூர்த்தி எனச் சுந்தரம் விபரித்துள்ளார்*
கலாநிதி வ. மகேஸ்வரன் 23

Page 19
இசையுலகில் தட்சிணாமுர்த்தி
தட்சிணாமூர்த்தி அவர்களுடைய இசைப்பயணம் சிறுவயதிலேயே ஆரம்பித்து விட்டது என்பது ஏலவே நோக்கப்பட்டது. அவர் ஈழத்திலும் தமிழகத்திலும் பலருடன் இணைந்து கச்சேரிகள் செய்துள்ளார். சுமார் ஆறு வயதிலிருந்தே அவர் தவில் வாசிக்கத் தொடங்கிவிட்டார் என்றும் அவரையும் அவரது தவிலையும் தந்தையார் காவிச் செல்வார் என்றும் அவரது உறவினரும் ஊரவரும் குறிப்பிடுகின்றனர். 14 ஆவது வயதிலே அவர் கோயில் கச்சேரிகளில் தவில் வாசிக்கத் தொடங்கிவிட்டார் என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். தந்தையின் மறைவுக்குப் பின்னர் தனது தமக்கையாரின் வீட்டில் அளவெட்டியில் வசித்தார். இக்கால கட்டங்களில் அவர் இலங்கையில் பல உள்ளுர்க் கலைஞர்களுடன் தவில் வாசித்துள்ளார். யாழ்ப்பாணம் முருகையாபிள்ளை பி.எஸ்.ஆறுமுகம்பிள்ளை அளவெட்டி பத்மநாதன், அளவெட்டிப் பாலகிருஸ்ணன் எம்.பி.பாலகிருஸ்ணன், சாவகச்சேரி பஞ்சாபிகேசன், இணுவை K.R.சுந்தரமூர்த்தி முதலிய ஈழத்து நாகசுரக் கலைஞர்களுக்கு அவர் தவில் வாசித்துள்ளார். இளம் தவில் வித்துவான் தட்சிணாமூர்த்தி அளவெட்டியில் வசித்த காலத்திலேதான் அவரது மேதைமையை வளர்த்துக் கொள்ளச் சந்தர்ப்பங்கள் பல வாய்ந்தன. மாவட்டபுரம் - ராஜ", அளவெட்டி N.K.பத்மநாதன் அகியோருடன் இணைந்துதான் இவர் ஆரம்பத்தில் தவில் வாசித்தார். இந்தக் காலங்களில் தமிழ் நாட்டிலிருந்தும் கலைஞர்களை வரவழைத்து அவர்களுடன் சேர்ந்து வாசிப்பதும் வழக்கமாகவிருந்தது. தமிழ்நாட்டு மங்கல இசைக் கலைஞர்கள் பலர் இலங்கை வந்து, இணுவில், அளவெட்டி முதலான கிராமங்களில் பலகாலம் தங்கி இலங்கை வித்வான்களுடன் இணைந்து தவில், நாகசுரம் வாசித்ததைக் குறிப்பிடல் வேண்டும். 1980 வரை இந்த ஊடாட்டம் மிகவும் இயல்பாக நடைபெற்றது. எனவே, தட்சிணாமூர்த்தி தமிழ்நாட்டுக் கலைஞர் திருமுல்லைவாயில், லயபிண்டம் முத்துவீர்பிள்ளை அவர்களை வரவழைத்துத் தமக்குச் சோடி வாத்தியக்காரராக அமர்த்திக் கொண்டு பல கச்சேரிகளை நிகழ்த்தியுள்ளார். குறிப்பாக பருத்தித்துறை கோட்டுவாசல் அம்மன்கோயில் திருவிழாக் கச்சேரியின் போதுதான் இந்தச் சேர்க்கைக்கான அத்திவாரமிடப்பட்டது. அந்தக் கோயில் திருவிழாவின் ‘வடக்கு வீதிச் சமாவில்' முத்துவீர்பிள்ளை அவர்களது லய ஞானத்தைக் கவனத்திற் கொண்ட தட்சிணாமூர்த்தி அவரால்
24 தவில் மேதை தட்சிணாமூர்த்தி

ஆகர்ஷிக்கப்பட்டார். எனவே அவரிடமிருந்து பல நுணுக்கங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற அவாவினால் தொடர்ந்தும் அவரையே தனக்கு இணை வாத்தியக்கரராகச் சிபார்சு செய்தார். இலங்கையின் பல பாகங்களிலும் அவர்களது கூட்டுக் கச்சேரி இடம் பெற்றது. அவரிடமிருந்து தட்சிணாமூரத்தி பல நுணக்கங்களைக் கற்றுக் கொண்டார். சுதுமலை அம்மன் கோயில திருவிழாவில் இருவரும் வாசித்த போது, முத்துவீர் பிள்ளை தட்சிணாமூர்த்தியை மனந்திறந்து பாராட்டினார் என்று திருகேதீஸ்வரன் குறிப்பிடுகின்றார். முத்துவீர் பிள்ளையிடம் தான் கற்றுக் கொண்டதை தட்சிணாமூர்த்தி
“பலரிடம் நான் தவில் பயின்றேன்; பல மேதைகளின் வாசிப்பைக் கேட்டேன். ஆனால் லயசம்பந்தமான விவகாரம் என்ற அம்சத்தில் என் கண்களைத் திறந்த மானசீகக் குருநாதர் திரு.முல்லைவாயில் முத்துவீர் பிள்ளைதான்”
என்று குறிப்பிட்டுள்ளார்.
அதுபோலவே யாழ்ப்பாணம் காமாட்சிசுந்தரம் பிள்ளை, இணுவில் சின்னத்தம்பி, நாச்சிமார் கோவிலடி கணேசபிள்ளை (இவர் தட்சிணாமூர்த்தியின் தாய் மாமன்) இணுவில் என்.ஆர்.சின்னராசா, கே.ஆர்.புண்ணியமூர்த்தி ஆகிய தவில் வித்வான்களுடனும் இணைந்து ஈழநாட்டின் பல பாகங்களிலும் தவில் வாசித்துள்ளார்.
அவருடன் இணைந்து தவில் வாசித்த தவில் கலைஞன் தாள அலங்கார கற்பனை சோதி, லயஞான திலகம் என்.ஆர்.சின்னராசா அவர்களே தட்சணாமூர்த்தியின் லயஞானத்தை உள்வாங்கியவர் என்று இன்னோர் தவில் மேதையும் என்.ஆர்.சின்னராசாவின் சிஷயனும், தட்சிணாமூர்த்தியின் மூத்த தமக்கையாரின் மகனுமான லய நான சிரோன்மணி கே.ஆர்.புண்ணியமூர்த்தி குறிப்பிடுகின்றார். “நான் எனது வாழ்க்கையில் எனது தமையனார் தட்சிணாமூர்த்தியின் நடைகள் கோர்வைகள்அதைத்தான் நான் கையாண்டு வாசித்து வந்தவன். அவருக்குப் பிறகு நான் யார் வாசிக்கிறதையும் U fT (b 60) L- u நடையையோ கோர்வையோ வாசிப்பது கிடையாது. எனது சொந்தத் தயாரிப்பில் தான் நான் வாசித்து வருகிறேன் யாரையும் பின்பற்றுவது கிடையா.” தட்சிணாமூர்த்தியுடன் 67ஆம் ஆண்டு தொடக்கம் 71 அம் ஆண்டு வரை இணைந்து லயவின்யாசம் செய்த காலங்களை புண்ணியமூர்த்தி மிகுந்த பணிவுடனும், பெருமையுடனும் நினைவு கூருகின்றார். “அவருடன் இணைந்து வாசிப்பது என்பது ஞானத்துடன்
கலாநிதி வ. மகேஸ்வரன் 2S

Page 20
இணைந்த ஒரு சுகானுபவம்” அது என்று அவர் குறிப்பிடுகின்றார்.
உள்ளுர் கலைஞர்களுடன் சேர்ந்து வாசித்தது போலவே தமிழ்நாட்டிலும் பல இசை மேதைகளுடனும் இணைந்து வாசித்துள்ளார். நாச்சிமார் கோவில் இராகவப்பிள்ளை, திருவிழுந்துார் ராமதாஸ்பிள்ளை, வலங்கைமான் சண்முகசுந்தரம்பிள்ளை, வடபாதி மங்கலம் தட்சணாமூர்த்திப்பிள்ளை, கும்பகோணம் தங்கவேற்பிள்ளை, நீடாமங்கலம் சண் முகவடிவேல் முதலிய பிரபல தவிற் கலைஞர்களுடன் வாசித்துள்ளார்.
இதுபோலவே சீர்காழி திருநாவுக்கரசுப்பிள்ளை, திருவாவடுதுறை ராஜரத்தினம்பிள்ளை, திருவெண்காடு சுப்பிரமணியம்பிள்ளை, குழிக்கரை பிச்சையப்பாபிள்ளை, காரைக்குறிஞ்சி அருணாசலம் பிள்ளை, டாக்டர் ஷேக் சின்னமெளலானா, திருவிடைமருதூர் வீராசாமிப் பிள்ளை, திருவீழிமிழலை கோவிந்த ராஜாப்பிள்ளை சகோதரர்கள், சித்ம்பரம் ராதாகிருஷ்ணபிள்ளை, திரு.மெய்ஞானம் பல்லவி நடராசசுந்தரம் பிள்ளை, தருமபுரம் கோவிந்தராஜபிள்ளை, கோட்டுர் ராஜரத்தினம்பிள்ளை, நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன், வேதாரணியம் வேதமூர்த்தி, மதுரை சேதுராமன் சகோதரர்கள் ஆகிய கலைஞர்களுடனும் இணைந்து தவில் வாசித்துள்ளார்.
இலங்கையில் பிரலபலமான கோயில்களில் திருவிழாக்களின் போதும், திருமண நிகழ்ச்சிகளின்போதும் அவர் தவில் கச்சேரி செய்துள்ளார். அதுபோலவே இலங்கைத் தலைநகரில் நடைபெறும் பெருவிழாவான ஆடிவேல் விழாக்களில் அவர் வாசித்துள்ளார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திலும் லயவின்யாசங்கள் செய்துள்ளார். அதுபோலவே தமிழ்நாட்டில் புகழ்பெற்ற இசைவிழாக் காலங்களில் பல மன்றுகளில், பிரபலமான பண்ணையார்கள், தொழிலதிபர்கள் வீட்டுத் திருமண வரவேற்பின் போதும், கோயில் திருவிழாக்களின் போதும் அவர் கச்சேரிகள் நிகழ்த்தியுள்ளார். இது மாத்திரமன்று மலேயா, சிங்கப்பூர் முதலிய நாடுகளுக்கும் சென்று தவிற்கச்சேரி நிகழ்த்தியுள்ளார். சுமார் இரண்டு தசாப்தங்கள் (1950 - 1970) இசையுலகில் தட்சணாமூர்த்தியின் தவிற் தசாப்தங்களாகவே விளங்கின. இளமைக் காலத்தில் நாகசுவரச் சக்கரவர்த்தி திருவாவடுதுறை இராஜரத்தினம் பிள்ளை அவர்களுக்கு அராலி அம்மன் கோயில் திருவிழாவில் 'தவில் வாசித்துள்ளார். நாமகிரிப்பேட்டை கிருஷ்ணனுடனும் கோவிலுள்ள இராமலிங்கத்துடனும் சேரந்து புத்தூர் சிவன் கோயிலில் தவில்வாசித்தார். சுழல் மேடையில் நடந்த முதல் கச்சேரி அதுவென்று குறிப்பிடுகின்றனர். மேலும்
26 தவில் மேதை தட்சிணாமூர்த்தி

காரைக்குறிச்சி அருணாசலம், ஷேக் சின்ன மெளலானா, கும்பகோணம் சண்முக வடிவேல், வலைங்கைமான் சண்முகசுந்தரம்பிள்ளை ஆகியோருடன் இணைந்து ஆடிவேல் விழாக்களில் தவில் வாசித்துள்ளார்.
தவில் மேதை தட்சிணாமூர்த்தி அவர்களைத் தமிழகத்துக்கு அறிமுகம் செய்து வைத்த பெருமை நீடாமங்கலம் சண்முக வடிவேல் அவர்களையே சாரும். தட்சிணாமூர்த்திக்கும், சண்முக வடிவேலுவுக்கும் இருந்த நட்பின் ஆழம் அவ்வாறான செயற்பாட்டை நிகழ்த்தியுள்ளது எனலாம். பொதுவாகப் போட்டிகளும் பொறாமைகளும் நிறைந்த கலையுலகில் தனது நண்பனைப் போட்டியாளனாக நினைக்காமல், தனது துணையாக நினைத்துத் திறந்த மனத்துடன் இந்திய ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்த நீடாமங்கலம் சண்முக வடிவேலுவுக்கு ஈழத்து இசை உலகினரும், பிறரும் நன்றிக்கடன் பட்டவர்களாவர்.
இனி இந்திய இசை மேடைகளில் அவரது மேதைமைப் புலப்பாட்டை நோக்குவதும் அவசியமானதாகும். 1959 ஆம் ஆண்டு மார்கழி மாதம் இசைவிழாக்காலம் ஒன்றில் சென்னை சென்ற தட்சிணாமூர்த்தியை நீடாமங்கலம் சண்முகவடிவேல் சந்தித்தார். அன்று இரவு சென்னைத் தமிழிசைச் சங்கத்தால் நடத்தப்படும் இசை விழாவில் காரைக்குறிச்சி அருணாசலத்தின் நாகசுரத்துக்குத் தன்னுடன் இணைந்து தவில் வாசிக்குமாறு கேட்டுக் கொண்டது மட்டுமன்றி அன்றைய கச்சேரியை ஆரம்பித்து வைக் கும் கெளரவத்தையும் கொடுத்தார். தட்சிணாமூர்த்தியின் தவில் ஒலிக்கத் தொடங்கியதும் இசை மேதைகளாலும், இசைப் பிரியர்களாலும் நிறைந்து வழிந்த மண்டபம் சபாஷ் கூறிக் கரகோஷம் செய்தது. வழமையாக இரவு 12 மணியுடன் தமது நேரடிஅஞ்சலை நிறைவு செய்யும் அகில இந்திய வானொலி தட்சிணாமூர்த்தி, சண்முகவடிவேல் தவிற்காரர்களின் லயவின்யாசத்தின் லயவிறுவிறுப்பால் கவரப்பட்டு கச்சேரி முடியும் வரை அதனை ஒலிபரப்பி இவர்களைக் கெளரவித்தது.
இவருடைய தமிழகத்து கச்சேரிகள் தொடர்பான தகவல்களை திரு சுந்தரம் அவர்கள் பல இடங்களில் சுவாரசியமாக விபரிக்கின்றார். தட்சிணாமூர்த்தி தமிழகத்துக்கு அடிக்கடி கச்சேரிகளின் நிமித்தம் விமானப் பயணம் செய்ய வேண்டியேற்பட்டது. வாரத்துக்கு இருமுறை கூட அவர் அவ்வாறு சென்ற நாட்கள் உண்டு என என்.ஆர். புண்ணியமூர்த்தி குறிப்பிடுகின்றார். இவ்வாறு கச்சேரிகளுக்காக விமானப் பிரயாணம் செய்யும் போது சிலவேளைகளில் தவிலைக்
கலாநிதி வ. மகேஸ்வரன் 冕了

Page 21
விமானப் பிரயாணம் செய்யும் போது சிலவேளைகளில் தவிலைக் கொண்டு செல்ல முடியாத சந்தர்ப்பங்கள் ஏற்பட்டதுண்டு. அவ்வாறான சந்தர்ப்பங்களிலெல்லாம் பிறரது தவிலை வாங்கியே வாசிப்பார். என்னவோ தவில் அவரது கைக்கு வந்ததும், வெறும் தட்டுக்கு மாத்திரம் உபயோகமாகும் தவில்கள் கூட நாதம் பெற்றுவிடுவதுண்டு என்று இரு சந்தர்ப்பங்களை விபரிக்கிறார் சுந்தரம். கேரள மாநிலத்தில் தலைச்சேரிக்கு அருகிலுள்ள ஜகந்நாதர் கோயிலில் வாசிப்பதற்காக இலங்கையிலிருந்து இவர் சென்றுள்ளார். தவிலைக் கொண்டு செல்லவில்லை. தவிலை ஏற்பாடு செய்கின்றோம் என்பவர்களும் தம்மிடமுள்ளது திருப்தியாயில்லையென்று கொண்டு வரவில்லை. கோயிலில், கோயில் மேளகாரர் (கோயில் மேளம்) வாசித்துக் கொண்டிருந்த தவிலை அவர் கேட்டு வாங்கினார். கோயில் வாத்தியகாரருக்கும் உடன்பாடில்லை. ஆயின் தட்சிணாமூர்த்தி தவிலைத் தட்டிப் பார்த்தார். வார்களை இறுக்கிச் சரி செய்தார். மன்னார்குடி பரமசிவம் பிள்ளைதான் அன்று நாகசுரம். பிள்ளையவர்கள் மல்லாரியை வாசிக்கத் தொடங்கினார். தட்சிணாமூர்த்தி மந்தமான தவிலில் தட்டத் தொடங்கினார். மற்றையோரது தவில்கள் ஆதிக்கஞ் செலுத்தின. அரைமணி நேரம் சென்றிருக்கும் தட்சிணாமூர்த்தி தட்டிய மேளம் - கன கண என்ற ஒலியுடன் இசைக்கத் தொடங்கியது. இசைத்த மற்றத் தவில்களெல்லாம் மந்த கதியில் ஒலிக்கத் தொடங்கின. இது அவரது மேதைமைக்கு ஒரு பதச்சோறு. இது போன்ற இன்னோர் சந்தர்ப்பத்தையும் அவர் விபரிக்கின்றார்.
குன்னியூர் என்ற இடத்தில் பண்ணையார் வீட்டுத் திருமணத்துக்கு தட்சிணாமூர்த்தி தவில் வாசிக்க வருகை தந்திருந்தார். அவ்வூரில் நண்பரொருவரிடம் தமக்கு ஒரு தவில் தரவேண்டினர். நண்பருக்கோ தம்மிடம் உள்ள தவிலைத் தரத் தயக் கம். எனினும் அந்த மந்த கதித் தவிலைப் பெற்றுக்கொண்டார். தட்சிணாமூர்த்தி வாசிக்க ஆயத்தமானார். விரிபோணி வர்ணத்துடன் கச்சேரி ஆரம்பமானது. தட்சிணாமூர்த்தியின் கையிலிருந்த தவில் பேசியது. மற்றைய தவில்களெல்லாம் மந்தமாயின. தட்சிணா மூர்த்தியின் அந்தத் தவிலில் ‘கண கண’ என்ற நாதம் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியது.
இவ்வாறான கலைத்துவமும் நம்பிக்கையும் தட்சிணாமூர்த்தியின் ஆழ்ந்த ஞானத்தின் வெளிப்பாடுகளாகும்.
s28 தவில் மேதை தட்சிணாமூர்த்தி

“தன் கையின் தன்மையென்ன, தவிலில் பொருத்தப் பெற்றுள்ள தோலின் தன்மையென்ன, தவிற் கட்டையின் நாதம் எத்தகையது என்றெல்லாம் அறிந்திருப்பது, தவிற்காரனுக்குரிய இலக்கணம் என்று நூல்கள் விரித்துரைப்பதற்கு ஒப்ப இவ்விலக்கணத்தைத் தட்சிணாமூர்த்தி நன்கறிந்திருந்ததனால் தான் அவர் "இரவலாகப் பெற்று முழக்கிய தவில் வாத்தியங்கள் கூடச் சிறப்பாக ஒலித்தன. என அவர் இதன் காரணத்தையும் குறிப்பிட்டுள்ளார்.
இசைக் கச்சேரி மரபில் இருவிதமான தன்மைகள் உண்டு. ஒன்று
கச்சேரியில் நுணுக்கமான வேலைப்பாடுகள் அதிகம் இருக்கும். அந்தக் கச்சேரி பெரும்பாலும் வித்வான்களது ரசிப்புக்கான கச்சேரிகளாக அமைந்து விடும். ஆயின் சில கச்சேரிகள் அதற்கு எதிர்மாறாக அமையும். இவ்வாறான கச்சேரிகளில் மக்கள் அதிக நாட்டம் கொள்வதுமில்லை. சில சபாக்களில் கச்சேரிகள் இடம் பெறும் போது ரசிகர்கள் டிபன் (சிற்றுண்டி) சாப்பிடுவதற்காக சிற்றுண்டிச் சாலைக்குச் சென்றுவிடுவது வழக்கம். இந்த இரு தன்மைகளுமற்று தவில் வாசிப்பில் தனித்துவஞானமும் அதேவேளை ஜனரஞ்சகத் தன்மையும் இணைந்த ஒரு வாசிப்பு முறைமை தட்சிணாமூர்த்தியினது. அதனால் தான் அவரால் பல்லாயிரக்கணக்கான இரசிகர்களைக் கட்டிப்போட வைத்தது. நாகசுரச் சக்கரவர்த்தி திருவாவடுதுறை இராஜரத்தினம் பிள்ளையவர்கள். ஊர்களில் ஒப்புக் கொண்ட கச்சேரிகளுக்கு பெரும்பாலும் காலதாமதமாகிச் செல்லும் வழக்கமுடையவராம். ஆனால் காடு, களனிகளில் தொழில்புரியம் ஜனங்கள் அவருக்காக மணிக்கணக்காகக் காத்துக் கிடப்பார்களாம். பிள்ளையவர்கள் வந்து மேடையேறி தோடிராக ஆலாபனை செய்யும் போது மகுடி கேட்ட நாகமாகக் கட்டுண்டு கிடந்து விட்டு, அதிகாலையில் மகராசர் நல்லாயிருக்கணும்' என்று வாழ்த்திப் போவார்களாம். இது இராசரத்தினம் பிள்ளைக்கு இருந்த வெகுஜன அங்கீகாரம்.
இதுபோலவே தட்சிணாமூர்த்தியினது வாசிப்புக்கும் வெகுஜன அங்கீகாரம் இருந்தது. யாழ்ப்பாணத்தில் சில குறிப்பிட்ட கோயில்களில் தட்சிணாமூர்த்தி வாசிக்கிறார் என்றால் குடாநாடே அந்தக் கோயிலில் குவிந்த காலமொன்றிருந்தது. அரச உயர் பதவிகளை வகிக்கும் பெரிய அதிகாரிகளிலிருந்து, நிலங்கொத்தி ஜிவிக்கும் சாதாரண குடிமகன் வரை அவரது இராஜ வாத்தியத்துக்கு அடிமையாக விருந்தனர். இசை விழாவில் தட்சிணாமூர்த்தி வாசிக்கிறார் என்றால் அகில இந்திய வானொலி அதை அஞ்சல் செய்வதைக் கேட்பதற்காக
கலாநிதி வ. மகேஸ்வரன் vn 29

Page 22
வானொலிப் பெட்டி வைத்திருப்பவர்களது வீட்டில் பெருங்கூட்டம் கூடிவிடும். அவ்வாறான வெகுஜன அங்கீகாரம் அவருக்கிருந்தது. இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தை சுந்தரம் பின் வருமாறு விபரிக்கின்றார்.
“சேலத்தில் ஒரு இசைக் கலைஞர் வீட்டுத் திருமணம் மாப்பிள்ளை அழைப்பு நடைபெற்ற போது தட்சிணாமூர்த்தியின் தவில் வாசிப்பைக் கேட்பதற்காகவே மங்களுர், ஹைதராபாத் போன்ற நெடுந் தொலைவிலுள்ள ஊர்களிலிருந்து அழைப்பில்லாமலேயே சுமார் ஆறாயிரம் பேர் வந்து கூடிவிட்டனர். தவிலிசை விருந்தோடு திருமணக் கூடத்து விருந்தையும் இவர்கள் சுவைத்ததன் விளைவாகக் காலை உணவு முதல் மற்ற நாட்களுக்கான அரிசி, மளிகை முதலியவற்றையெல்லாம் விடியற்காலையில் அவசரமாகக் கடையைத் திறக்கச் செய்து பொருட்களை வாங்கவேண்டி ஏற்பட்டது”
இதுபோலவே ஈழத்தில் காரைநகரில் நடைபெற்ற திருமண வைபவமொன்றிலே தட்சிணாமூர்த்தியின் தவில் கச்சேரி நடந்தது. ஜனத்திரள் அலைமோதியது, திருமணப்பந்தல், முற்றம் என மக்கள் கூட்டம் நிறைந்துவிட்டது. இறுதியாகப் பக்கத்துக் காணியின் வேலி வெட்டிவிட்டுத்தான் ரஸிகர்களைக் கட்டுப்படுத்த முடிந்தது. என்று சம்பவத்தைத் திரு.கேதீஸ்வரன் நினைவு கூருகின்றார்.
இவருக்கிருந்த வித்துவ வெகுஜன அங்கீகாரத்தை பேராசிரியர்
கா.சிவத்தம்பி பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
“நானும் நண்பர் சமீமும் இசைவிழாக் காலம் ஒன்றில் தமிழகத்தின் தலைநகர் சென்னையில் இருந்தோம். அன்று கிருஷ்ணகான சபா என்று நினைக்கிறேன். தட்சிணாமூர்த்தியும் நீடாமங்கலமும் தவில் வாசித்தனர். பொதுவாகச் சபாக்களில் கச்சேரி நடைபெறும் போது லயவின்யாசம் நடைபெறும் போது ரசிகர்கள் சூடாக டியன் காப்பி சாப்பிட கன்ரீனுக்கு வந்துவிடுவர். ஆனால் அன்றுதான் பார்த்தேன் தட்சணாமூர்த்தி வாசிக்கத் தொடங்க, அவர் அருகிலிருந்து அந்த வாசிப்பைக் கேட்க வேண்டுமென்று தமிழ்நாட்டு பிரபல புள்ளிகள் குறிப்பாக கொத்தமங்கலம் சுப்பு முதலியோர் முன் வரிசையில் அமர்ந்திருந்து இசையை இரசித்ததைக் கண்டேன்.
3O
தவில் மேதை தட்சிணாமூர்த்தி

இது - தட்சிணாமூர்த்தியின் கலைத்துவ அங்கீகாரத்தின் இலங்கைச் சாட்சி. இதுபோலவே தமிழகத்தில் இசை விழாவில் இவரது வாசிப்பைக் கேட்ட ஒருவர். எழுதிய ஆங்கில விமர்சனத்தில் -
“இதுவரை காலமும் தவில் வாத்தியம் என்பது. செவிப்பறையைச் சிதைக்கும் ஒரு வாத்தியம் என்றே என் அனுபவம் சொல்லி வந்தது. ஆனால் இந்த இசை விழாவில் தட்சிணாமூர்த்தியின் தவில் என்ற வாத்தியத்தில் அதிவன்மையான ஒலியை மட்டுமன்றி அதிமென்மையான ஒலியையும் எழுப்ப முடியும் என்பதை உணர்ந்து கொண்டேன். தட்சிணாமூர்த்தியின் வாத்தியத்தை ரசிக்க நிச்சயம் தேவர்களும் இந்த விழாவிற்கு வந்திருப்பார்கள்’ எனக் குறிப்பிட்டுள்ளார்."
தமிழ் நாடு தருவளம் புத் துTரில் இவருக்கு ஏற்பட்ட வித்துவசோதனைபற்றி திரு.கேதீஸ்வரன் பின்வருமாறு விபரிக்கின்றார்.
திருவளப்புத்துாரில் ஒரு கச்சேரி. திருமெஞ்ஞானம் நடேசபிள்ளை அவருடன் கூட வாசித்தார். சில பொறாமை கொண்ட கலைஞர்கள் கடுமையான பல்லவிகளை வாசிக்கச் சொல்லி நடேசபிள்ளையைத் தூண்டினர். அவரைச் சோதிக்க மனமில்லாத நடேசபிள்ளை கலைஞர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி சில கடினமான பல்லலிகளை வாசித்தார். தட்சிணாமூர்த்தி அவற்றைச்சடுதியாக உள்வாங்கினார். அவரது பாணியிலே பதிலடியாக அநாயசமாக வாசிக்கத் தொடங்கினார். மெய்மறந்துபோன நடேசபிள்ளை ஒலிவாங்கியை எடுத்து தட்சிணாமூர்த்தியை வாயாரப் புகழந்தாராம். அன்று தட்சிணாமூர்த்தியுடன் இணைந்து வாசிக்கச் சென்றவர்தவில்மேதை N.R.சின்னராசா ஆவார்.
1969 ஆம் ஆண்டு இசைவிழாவின் போது சென்னை கிருஷ்ணகான சபாவில் ஷேக் சின்ன மெளலானாவிற்கு இவர் தவில் வாசிப்பதைக் கேட்ட பிரபல இசை விமரிசகர் சுப்புடு இவரை வெகுவாக வியந்து பாராட்டினாராம். (அவருடைய வார்த்தைகளில் அந்தப் பாராட்டை பெற முயற்சித்தும் முடியாது போய்விட்டது) வசிட்டர் வாயால் பிரம்மரிஷி என்பது போல தட்சிணாமூர்த்திக்குக் கிடைத்த கெளரவம் அது. மிருதங்க வாத் தயத் தில் ஜாம் பவானாக விளங்கிய பாலக்காடுமணிஜயரும், பழனி சுப்பிரமணிய பிள்ளையும் இவரை முறையே “தட்சிணாமூர்த்தி உலகின் எட்டாவது அதிசயம்” என்றும் “ஒரு முறை மனதால் நினைத்தாலே நம்மை வியப்பில்
கலாநிதி வ. மகேஸ்வரன் s Sl

Page 23
ஆழ்த்தும் மேதை” எனவும் புகழாரம் சூட்டியுள்ளனர்.
இவை மட்டுமல்ல தமிழகத்து இசை வேளாளர்களிடையேயும், கலாரசிகர்களிடையேயும் தட்சிணாமூர்த்தி பாடுபொருளாகத் திகழ்ந்திருக்கின்றார். திண்ணைப் பேச்சுகளில் கூட தட்சிணாமூர்த்தியின் வித்துவம் பேசப்பட்டது. மாதிரிக்கு ஒரு உரையாடல். “நம் மை அவருடைய வாசிப்புப் பிரமிக்கச் செய்கிறது. ஆனால் சட்டென்று புரிவதில்லையே” இது ஒருவர். “அவன் வாசிப்பு தெய்வீகமானது, அவனே கடவுளின் அவதாரம் தெரியுமா?’ இது திருத்துறைப்பூண்டி சொக்கலிங்க நாகசுவரக்காரர். “தட்சிணாமூர்த்தி வாசிப்பதைப் புரிந்து கொள்ளும்படியான தவிற்காரன் இப்போதைக்கு எவரும் இருப்பதாக எனக்கே தெரியவில்லை அவன் வாசிப்பு உனக்குப் புரியாமல் இருப்பதில் அதிசயம் என்ன?’ இது - "லயபிண்டம்’ தவில்வித்துவான் முத்துவீர்பிள்ளை. (இவரைத் தான் லயசம்பந்தமான தனது, மானசீகக் குரு என்று தட்சிணாமூர்த்தி குறிப்பிட்டிருந்தார்.)
தனது வாசிப்பு ஞானத்தில் எவ்வளவு திறன் இருந்தபோதும் “மேதைக்கிறுக்கு அவரிடம் இருந்ததில்லை என்று அவருடன் பழகிய பலர் குறிப்பிடுகின்றனர். ஆனால் தமது கலைத்துவத்தை மலினப்படுத்த அவர் ஒருபோதும் விரும்பியதில்லை என்பர். ஒருமுறை புகழ்மிக்க பாடகர் சிலர் தமது கச்சேரியில் தவில் வாசிக்க வேண்டும் என்று கேட்டார்களாம். “தவில் என்பது நாகசுரத்துக்குத் தொன்மைக் காலமாகவே இணைந்து வாசிக்கப்பட்ட வாத்தியம். இந்த மரபை நான் பாழாக்க விரும்பவில்லை.” என்று கூறி அதை மறுத்துவிட்டார். மறுத்தது மட்டுமல்ல தமது இறுதி மூச்சுவரை இதையொரு கொள்கையாகவே கடைப்பிடித்து வந்தார். இவரைப் பலர் தனித் தவில் கச்சேரி செய்யுமாறு வற்புறுத்திய போதெல்லாம் “ஒரு நாகசுவரத்தை ஏற்பாடு செய்யுங்கள் அதனுடன் இணைந்தே நான் வாசிப்பேன்’ என்று கூறித் தனியாவர்த்தனம் செய்ய மறுத்த சம்பவங்கள் பல உண்டு என்று அவருடன் அணுக்கமாக இருந்தவர்கள் பலர் குறிப்பிட்டுள்ளனர்.
இற்றைக்கு முப்பது வருடங்களுக்கு முன்னரே மூன்று அல்லது நான்கு மணிநேரம் தவில் கச்சேரி செய்வதற்கு குறைந்த பட்சம் ஆயிரத்து ஐநூறு ரூபாய் சன்மானம் பெற்ற முதல் தவில் கலைஞர் யாழ்ப்பாணம் தட்சிணாமூர்த்திப் பிள்ளை தான் என்று தமிழ்நாட்டுக் கலைஞர்கள் பெருமையுடன் குறிப்பிடுகின்றனர். அதேவேளை பணத்தின் பின்னால் அவர் அலைந்ததுமில்லை. பல ஆயிரம் ரூபாய் வருமானம்
32 தவில் மேதை தட்சிணாமூர்த்தி

வரக்கூடிய பல கச்சேரிகளை அவர் நிராகரித்தார் என்று கே.ஆர். புண்ணியமூர்த்தி குறிப்பிடுகின்றார். தமது மனதுக்குச் சரியென்று பட்ட இடங்களிலேயே அவர் தவில் வாசிக்கச் சம்மதம் கொண்டார் என்று அவர் குறிப்பிடுகின்றார்.
அவர் தமது சக கலைஞர்களை நேசித்தார். அவர்களது ஆளுமைக் கு எந்தவித சவால் கள் வந்தாலும் அதற்கு முகங்கொடுத்தார். கச்சேரிகளில் தாம் தவிலால் மிரளச் செய்யாது அமைதியாக அவர்களையும் அரவணைத்து, விஷயங்களை எடுத்துக் கொடுத்து, கொடுக்கல் வாங்கல் செய்து அக்கச்சேரியைச் சோபிக்கச் செய்து விடுவார். (அவருடன் சேர்ந்து தவில் வாசிக்கப் பலர் பயந்து ஒதுங்கியதுண்டு. ஆயின் அது தட்சிணாமூர்த்தியின் தனிப்பட்ட குணங்களுக்காக அல்ல, அவரது வாசிப்புக்கு நம்மால் ஈடு கொடுக்க முடியுமா என்ற தயக்கம் தான் காரணமாக அமைந்தது.)
தட்சிணாமூர்த்தி அவர்களுக்கு “கற்பனைச் சுரங்கம்’, ‘கரவேக கேசரி’, ‘தவில் வாத்திய ஏகச்சக்கிராதிபதி’, ‘லயஞான குபேர பூபதி’ போன்று பல பட்டங்கள் கிடைத்தன. சென்னையில் ‘தங்கக் கோபுரம் வழங்கிக் கெளரவிக்கப்பட்டார். திருவாவடுதுறை ராஜரத்தினம்பிள்ளை நினைவு விழாச்சபை 12.12.68 இல் கருரில், தங்கக் கேடயம் வழங்கிக் கெளரவித்தது. அவர் இவ்வாறு பல கெளரவங்களைப் பெற்றாலும். அவருக்கான அடையாளமான பட்டமாக விளங்கியது ‘லயஞானகுபேர பூபதி’ என்பதேயாகும். இந்தப்பட்டம் அவருக்கு யாழ்ப்பாணத்தில் வழங்கப்பட்டது. 1959 ஆம் ஆண்டு இசை விழாவின் போது தமிழ் இசைச் சங்கத்தில் இவர் வாசித்துப் புகழ்பெற்றதைக் கெளரவிக்குமுகமாக யாழப்பாணச் சமூகம் அவருக்கு ஒரு விழா எடுத்தது. பலாலி விமான நிலையத்தில் இருந்துஅவர் யாழ் வைத்தீஸ்வர வித்தியாலயம் வரை ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு, வித்தியாலயத்தின் அப்போதய அதிபர் ச.அம்பிகைபாகன் தலைமையில் நடந்த பாராட்டு விழாவில் இப்பட்டம் வழங்கப்பட்டது. இந்தப்பட்டத்தை வடிவமைத்தவர் பண்டிதர் உமாமகேஸ்வரம் பிள்ளையாவார். இவ்வாறாக உள்ளுரிலும் தமிழ் நாட்டிலும் பல பட்டங்களும் விருதுகளும் வழங்கிக் கெளரவிக்கப்பட்டார். விரிப்பில் பெருகும் இந்தக் கெளரவங்களுக்கும் மேலாக அவர் கலா ரசிகர்களது மனதில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து கொண்டார் என்பதே பொருத்தமுடையது. அதனால் தான் இன்றுவரை அவர் மேதைமை பற்றிப் பேசப்படுகின்றது.
கலாநிதி வ. மகேஸ்வரன் 33

Page 24
(V)
வகிபாகம்
கலைகள் என்பவை மனிதச் செயற்பாடுகளின் வெளிப்பாடுகள் அல்லது அவர்களது இயல்பூக்கங்களின் வழி வெளிக்கொணரப்பட்ட அழகியல்கள் எனக் கூறலாம். மனித சமூகம் எப்போது மகிழ்வை, சோகத்தை, பிறவிருப்பு வெறுப்புக்களை இனங்காட்டத் தொடங்கினவோ அப்போது கலைகளும் அவற்றுள் தோற்றம் பெறத் தொடங்கிவிட்டன. மனிதன் நாகரிகமடைய அடைய அக்கலைகள் தாமும் புதிய புதிய நுட்பங்களுடனும், சேர்க்கைகளுடனும் வளர்ச்சி பெற்றன. அத்துடன் அது பல்வேறு பரிமாணங்களையும் பெற்றது. இசை, கருவிகள், ஆட்டம், ஓவியம், சிற்பம், கட்டடம், கைவினைப் பொருட்கள் என அது பலவாறாக விரிந்தது. இவற்றுட் சில மேல்நிலையாக்கம் பெற்று உன்னதக் கலைகளாக நிலைநிறுத்தப்பட்டன. இனத்தின் கலாசாரத்தின் அடையாளங்களாக நிலை நிறுத்தப்பட்டன. சில வழக்கற்று அழிந்து போயின. இன்னும் சில விளிம்பு நிலையில் தம்முடைய இருப்பைத் தக்க வைத்துக் கொண்டு இருப்பிற்கான தேடலை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றன.
இவ்வாறானதொரு பின்புலத்தில் எமது வாத்திய இசைமரபில், குறிப்பாக கோயில் கலைசார்ந்த இசை மரபில் “பெரியமேளம்' என்று அடையாளப்படுத்தப்பட்ட தவில்+நாகசுரக் கூட்டுக் கலைமரபு என்பது மிகவும் செழித்து வளர்ந்த கலையாக நிலைபெற்றிருந்தது. இந்தக்கலைக்கான சமூக அங்கீகாரம் என்பது கோயில் சார்ந்தது, சமூகம் சார்ந்தது என இரு நிலைப்பட்டு விளங்கியது. கோயிற் சடங்கில் அதன் சகல நிலைகளிலும் இக் கருவிகளின் பயன்பாடு முக்கியப்படுத்தப்பட்டது. இதனால் சடங்கு நிலைப்பட்ட அங்கீகாரம் இதற்குக் கிடைத்தது. இன்றுவரை அது நீடித்தும் வருகின்றது. இதற்கு அடுத்த நிலையில் இக்கருவிகள் சமூகத்தின் நிகழும் மங்கலச் சடங்குகளில் முக்கியத்துவம் பெற்றன. திருமணம், பூப்புச்சடங்கு, புதுமனைபுகுதல் ஆகியவற்றில் இதன் சேவை முக்கியப்படுத்தப்பட்டது. கலைத்துவம் என்ற கருத்தியல்களுக்கு அப்பால் இவ்வாறான சடங்குகளில் இவற்றை ஒதுக்கிவிட்டுச் சடங்குகளை நிகழ்த்த முடியாத அளவிற்கு இவற்றின் தேவை உணரப்பட்டிருந்தது. அல்லது அது
34 தவில் மேதை தட்சிணாமூர்த்தி

இன்றியமையாத சடங்காசாரமாக நிலைத்தது. இவ்விரு தளங்களுக்கும் மேலாக இவை நிகழ்த்து கலைகளாகவும் நிலைபேறாக்கம் பெற்றன.
இந்த நிகழ்த்துகலை' என்பது இக் கருவிகளைப் பொறுத்தவரையில் இரு நிலைப்பட்டதாகவே இருந்தது. ஒன்று கோயில் சேவையில் அவற்றின் ஆற்றுகை ஆகும். சுவாமிக்கு அபிடேக ஆராதனைகள் நடக்கும் போது கோயில் மண்டபத்தில் ‘சமா’ நிகழ்த்துதல், சுவாமி உள்வீதி வரும்போது 'மல்லாரி’ வாசித்தல், வெளிவீதியில் குறிப்பாக வடக்கு வீதியில் ‘சமா’ நிகழ்த்துதல் என்பவை கோயில் கிரியை நிலைகளுடன் தொடர்புடைய ஆற்றகை அம்சங்களாக விளங்குகின்றன. சமூகத்தில் நடைபெறும் மங்கல நிகழ்வுகளின் போதும், நிகழ்ச்சிகளின் போதும் நிகழ்த்தப்படும் ‘கச்சேரிகள் இக்கலையின் மிக முக்கமான நிகழ்த்துகைகள் ஆகும். இவற்றுக்கும் மேலாக ஊர்வலங்களிலும் காவடி ஆட்டங்களுக்கான பின்னணியாகவும் இவை இசைக்கப்படுவ துண்டு. கோயில் கலாசாரத்துடன் இணைந்து வளர்ந்த தமிழர் பண்பாட்டில் இவ்வாறான இசைக்கலை மரபு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்கியது.
மேற்குறித்த செயற்பாடுகள், சமூக அங்கீகாரம் என்பவை காரணமாக மங்கல வாத்தியத்துக்கும் அவற்றை இசைப்போருக்குமான அதீத முக்கியத்துவம் சமூகத்தில் நிலவியது. வேறு எக்கலைக்கும் இல்லாத வகையில் இவற்றை இசைப்போர் ஓர் இனக்குழுமமாக வளருமளவிற்கு இதன் தேவை உணரப்பட்டிருந்தது. இசைவேளாள சமூகம் என்பது தனித்துவ அடையாளம் கொண்ட சமூகமாக வளர்ந்து நிலைத்தது. தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டமே இக்கலை மரபினதும் கலைஞர்களதும் தாய் வீடாகத் திகழ்ந்தது.
காவிரி நதியால் வளம் பெற்ற மருத நிலமான காவிரிச் சமவெளியில் பண்டைக் காலத்திலிருந்தே கலைகள் செழிந்து வளர்ந்தன. (சமூக அசைவியக்கத்தில் கலைமரபின் அனுபவிப்புக்கும், பேணுகைக்கும் மருத நிலத்துக்கும் முக்கிய பங்குண்டு) தமிழகத்தில் அரசுகள் உருவாகி அவை பேரரசுகளாக நிலைபெற்ற காலங்களில், கோயிற் கலாசாரத்தை வளர்ப்பதில் அவர்கள் மிகவும் கவனங் கொண்டனர். கோயிற் கலாசாரத்துடன் கவின் கலைகளையும் அவர்கள் ஊக்குவித்தனர். நடனம், இசை, சிற்பம், ஓவியம் என்பவை இவ்வாறே வளர்ந்தன. இவ்வாறான கோயில் சார்ந்த கன்ல வளர்ச்சியின் மையப்புள்ளியாகவே சோழமண்டலம் அல்லது காவிரிச் சமவெளி நிலவியது. இந்தச் சமவெளியிலிருந்தே பல கலைஞர்கள் மேற்கிளம்பினர். இந்த வயிைல் மங்கல வாத்தியத்துக்கும் மையமாக
கலாநிதி வ. மகேஸ்வரன் 3s

Page 25
காவிரிச் சமவெளியின் பிரதான மையமான தஞ்சாவூர் மாட்டமே விளங்கியது. தஞ்சாவூர் மாவட்டத்திலேயே பிரபலமான மங்கல வாத்தியக் கலைஞர்கள் உருவாகினர் (பாண்டி நாட்டிலும் இவ்வாறான உருவாக்கம் நிலவியது எனினும் சோழ நாடே இதில் முதன்மை பெற்றிருந்தது) இக்கலைஞர்கள் தமது புலமைத்துவத்தால், மேதைமையால் புகழ்பெற்றனர். தமக்கும் தமது கலைக்கும் சமூகமதிப்புத் தேடித்தந்தனர். நாம் அறிந்தவரையில் திருவாவடுதுறை இராசரத்தினம்பிள்ளையின் புலமைத்துவமும், சமூகமதிப்பும், மேதமையும் வியக்கத்தக்கது. இவர் போலவே பலகலைஞர்கள் இக்கலையைக் கெளரவப்படுத்தினர்.
இவ்வாறானதொரு இசைக்கலைப் பாரம்பரியத்தினர் ஈழத்தில் குறிப்பாக யாழ்ப்பாணத்திலும் வாழ்ந்தனர். இங்கு “யாழ்ப்பாணம்’ என்ற சொல் பொதுநிலைப்பட்டது. குடாநாடு முழுவதையும் அடையாளப் படுத்தக் கூடியது. இப்பெருவட்டத்துள் கோயிற்பண்பாட்டுடனும் கிராமிய விவசாயப் பண்பாட்டுடனும் தம்மை இணைத்துக் கொண்ட இணுவில் அளவெட்டி, மாவிட்டபுரம் ஆகிய வலிகாமத்து ஊர்களிலும், வடமராட்சியில் கரவெட்டி முதலான ஊர்களிலும் இவர்களது இருப்பு நிலை பெற்றது. இந்த இருப்புக்கு அக்கிராமங்களிலுள்ள அளவிற்கு அதிகமான ஆலயங்களும் இவர்களைப் போஷிக்கக் கூடிய கிராமியப் பொருளாதார வளமும் இருந்தமையே காரணங்களாகும். இவற்றுக்கும் மேலாக இக்கிராமங்கள் பாரம்பரியமான கலை மரபுகளைப் பேணுவதில் ஆர்வம் காட்டி வந்தமையும் இதற்கான காரணங்களாக அமைந்தன. யாழ்ப்பாணத்தில் பல ஊர்கள் ஆங்கில, கிறிஸ்தவ மயமான போது இவை அந்த நீரோட்டத்துள் அகப்படாது தம்மைத் தனியே இனங்காட்டிக் கொண்ட கிராமங்களாகும். இதனால் பண்பாடுகாத்த இக்கிராமங்களில் இவர்கள் நிலைத்தனர், தொழில் நிகழ்த்தினர், கெளரவம் பெற்றனர்.
இவ்வாறாக நிலைபெற்ற கலைக்குடும்பங்களிலிருந்து புகழ்பெற்ற மங்கல வாத்தியக் கலைஞர்கள் உருவாகினர். இணுவில் சின்னத்தம்பி, விசுவலிங்கம், கந்தையா முதலானோரின் வழிவழி கலைஞர்கள் உருவாகினர், கோதண்டபாணி, உருத்திராபதி, மாசிலாமணி, தட்சணாமூர்த்தி, கோவிந்தசாமி, சின்னராசா, சந்தானகிருஷ்ணன், சுந்தரமூர்த்தி, புண்ணியமூர்த்தி, பாலகிருஷ்ணன், கந்தசாமி, இராதாகிருஷ்ணன், அளவெட்டி கணேசு, பத்மநாதன், பாலகிருஷ்ணன், குமரகுரு, சிதம்பரநாதன், கேதீஸ்வரன், கைதடி சின்னப்பழனி, சாவகச்சேரி பஞ்சாபிகேசன், யாழ்ப்பாணம் ஆறுமுகம்பிள்ளை, நாச்சிமார்
36 தவில் மேதை தட்சிணாமூர்த்தி

கோயிலடிக் கணேசு, நெல்லியடி பெரியசாமிப்பிள்ளை ஆகிய புகழ்பெற்ற
கலைஞர்கள் இவ்வாறு இக்குடும்பங்களிலிருந்து உருவானவர்களே.
இவர்கள் தமது மேதைமையால் யாழப்பாணக் குடாநாடு, குடாநாட்டுக்கு
வெளியே இலங்கை என்ற அளவில் மட்டும் நின்றுவிடாமல்
தமிழகத்திலும் மேதைமை நிலை நிறுத்திப் பகழ் கொண்டனர்.
ஐக்கியநாடுகள் சபையில் நாகசுரம் வாசித்து எமது பாரம்பரியத்தை
நிலைநிறுத்தியவர் நாகஸ்வர இசைமேதைகலாசூரி அளவெட்டி பத்மநாதன் ஆவர்.
இந்தப்பாரம்பரியத்தின் அடுத்த தலைமுறை வாரிசுகளான தட்சிணாமூர்த்தி உதயசங்கர், சின்னராசா சுதாகரன், பஞ்சாபிகேசன், பஞ்சமூர்த்தி, கந்தசாமி, நித்தியானந்தன் ஆகியோர் இன்று வேகமாக வளர்ந்துவரும் கலைஞர்களாகத் திகழ்கிறார்கள். இவர்கள் தமிழகத்தில் மட்டுமன்றி தமிழர் புலம்பெயர்ந்த நாடுகளுக்கும் சென்று தமது கலைத்துவத்தை நிலைநாட்டி வருகின்றனர். இதனூடாக ஈழத்தின் இசை மரபின் மேன்மையை நிலைநிறுத்துகின்றனர்.
இந்த பாரம்பரியத்தின் பின்புலத்திலேதான் லயஞான குபேர பூபதி தட்சிணாமூரத்தி அவர்களது வகிபாகத்தை நோக்க வேண்டியுள்ளது. தட்சிணாமூர்த்தி என்ற ஈழத்துக் கலைஞன் ‘தவில்’ என்ற மங்கலவாத்தியத்தை மேன்மைப்படுத்தியவர்; ‘லயம்’ என்ற கருத்தாடலின் சூத்திரத்தின் எல்லைகளைக் கடந்து தடம் பதித்தவர்; ஈழம் என்ற தீகவக எல்லைகளைத் தாண்டி தமிழகம் அல்லது தென் இந்தியா என்ற எல்லைகள் வரை இவர் தமது மேதைமையை நிலை நாட்டியவர்; கலைஞன் ஒருவன் தன் கலையின் மீதான ஆர்வம், சாதகம், மதிப்பு, புதியது காணும் மனோபாவம், லயிப்பு, அர்ப்பணிப்பு ஆகிய அம்சங்களுடன் இணைந்துசெயற்படும் போதே அவன் கலையின் உச்சங்களைத் தொடமுடியும் என்பதை நிலைநாட்டியவர்; இதனால் ஒரு கலைஞன் பெறவேண்டிய சகல கெளரவங்களையும் பெற்றவர்; தமக்குப் பின்னர் வரும் கலைஞர்கள் எவ்வாறான பாதையில் செல்ல வேண்டும் என்பது மாத்திரமல்ல யாழ்ப்பாணத்துக் கலைஞர்களுக்கான சமூக மதிப்பிற்கான ராஜபாட்டையை நிறுவியவர்.
* ஒரு சமூகத்திலிருந்து, பிராந்தியத்திலிருந்து, இனத்திலிருந்து மேற்கிளம்பும் ஒருவர் தன் அறிவால், ஆளுமையால், மேதைமையால், திறன்களால் தன் புகழ் நிறுத்தி, தன் இனத்துக்கு சமூகத்துக்கு பிராந்தியத்துக்கு மதிப்புத் தேடிக் கொடுக்கும் போது அவன் கெளரவத்துக்குள்ளாகின்றான்.”
கலாநிதி வ. மகேஸ்வரன் 37

Page 26
இது தட்சிணாமூர்த்திக்கு மிகவும் பொருத்தமானதே.
நிறைவுரையாக ஒரு குறிப்பு:-
01.03.2007 இல் பி.பி.சி (B.B.C) யின் ‘தமிழோசை கலை தொடர்பான பெட்டகம் ஒன்றைத் தயாரித்தளித்தது. அதைத் தொகுத்தவர் "மங்கல இசைக்கலையென்பது நீண்டபாரம்பரியத்தைக் கொண்டது, தமிழகத்தில் இதைப் பலர் வளர்த்தனர். மங்கல இசைக் கலை என்று பேசுகிறபோது, யாழ்ப்பாணத்துக் கலைஞர்களை மறக்கவியலாது. குறிப்பாக யாழ்ப்பாணம் தட்சிணாமூர்த்திப்பிள்ளை இதில் முக்கியமானவராவார்” என்று குறிப்பிட்டார். இது ஈழத்து இசை மரபில் தவில் மேதை தட்சிணாமூர்த்தியின் வகிபாகத்துக்குச் சமர்ப்பணம்.
அடிக்குறிப்புக்கள்
01.சிவத்தம்பி.கா - (2005) வடமராட்சியில் இசைப்பாரம்பரியம் ஒரு அறிமுகக் குறிப்பு, இராசம்மா மரியாம்பிள்ளை - நினைவு வெளியீடு கொழும்பு பக் -74,75
02. சோழநாடன்.ப (2005) நாகசுரச் சக்கரவர்த்தி திருவாவடுதுறை
டி.என்.இராசரத்தினம் பிள்ளை வரலாறு, சென்னை.ப.8
03. மேலது. U.8 04. மேலது. Lu.8 05. சுந்தரம்- பி.எம் (2000) தவில் வாசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்,
மணிமேகலைப் பிரசுரம் சென்னை. ப.99
06. சோழநாடன். ப.-மு.கு.நூ - ப.8 07. சுந்தரம் .பி.எம். மு.கு.நூ ப.8 O8. மேலது. U.8 09. மேலது. L.10 10. சுந்தரம் . பி.எம் - மு.கு.நூ (2000) - ப.7 11. சிலப்பதிகாரம் அரங்கேற்றகாதை 12. மணிவாசகர் திருப்பள்ளி எழுச்சி, அப்பர் திருவையாற்றுப் பதிகம் 13 IPS-956
பள்ளுற்கு தவிலும் முரொசும் சேமக்கலமும் 14. சோமாஸ்கந்த சர்மா அ.நா.பிரம்மறி (1998)
மிருதங்க சாஸ்திர சங்கீதம், கொழும்பு ப71
38 தவில் மேதை தட்சிணாமூர்த்தி

திருவூர், சைவத்திருநெறிக் கழகம், இணுவில் - பXiv, 16. மேலது- . X 17. மேலது U. xi 18. சுந்தரம் பி.எம்., (2001) - மங்கல இசை மன்னர்கள்,
மெய்யப்பன் தமிழாய்வகம், சிதம்பரம், ப341.
19. நடராசா.க.செ.(1978), இணுவை அப்பர், இணுவில், ப.90. 20. நடராசா.க.செ. மு.கு.நூ ப91 21 சுந்தரம்.பி.எம். (2001) , மு.கு.நூ ப.338.
22. மேலது -- U. 339. 24. மேலது - Lu. 340 25. மேலது U. 340
26. சுந்தரம் பிள்ளை. செ. காரை , (1995), இசை, நாடக, வரலாறு
நாட்டார் வழக்காற்றியல், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம். கொழும்பு. ப.320
27. சீர் இணுவைத் திருவூர், பக் 367-373
28. சுந்தரம் பிள்ளை. செ.காரை. , ப . 322.
29. மேலது L.323
30. நடராசா.க.செ., (p.5-bist U.99
31. சோமாஸ்கந்த சர்மா. அ.நா.பிரம்மறி , மு.கு.நூ ப.59
32. கோமதி சங்கர ஐயர். வா.சு., (1984), இசைத்தமிழ் இலக்கண
ヘブ விளக்கம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம். ப.12 33. சுந்தரம். பி.எம்., (2001) மு.கு.நூ.பு.342
34. மேலது Lu. 342
04. ഥസെg| U. 343 36. சீர் இணுவைத் திருவூர், பக். 57 - 58 உரையாடல் - பேராசிரியர் கா.சிவத்தம்பி
பேராசரியர் சபா.ஜெயராசா கலாசூரி எஸ்.சண்முகம்பிள்ளை லயஞான சிரோன்மணி கே.ஆர்.புண்ணியமூர்த்தி சங்கீதநாத சாகரம் - ஆர்.கேதீஸ்வரன் தட்சிணாமூர்த்தி உதயசங்கர்
நன்றி : தம்பு.சிவசுப்பிரமணியம், க.இரகுபரன், மதுசூதனன்,
ரீ பிரசாந்தன், வ.சிவஜோதி, ஹம்சகெளரி சிவஜோதி, சந்திரபாவானி பரமசாமி, ஆள்வாப்பிள்ளை கந்தசாமி, பதிப்புக்குழு கொழும்புத் தமிழ்ச்
F585LD.
கலாநிதி வ. மகேஸ்வரன் 39

Page 27
பின்னிணைப்பு
கட்டி என்னை அணைக்கும் போதும்
கறுத்தக் கரையின் வெள்ளை வேட்டிக்
கமகமக்கும் நீல மேனிக் காரரே - மேனிக் கருமை மின்னுந் தங்கச் சங்கிலிக் காரரே-ரசிகர்
கறுப்பு வெள்ளைத் தலைகள் கோடி
களிப்பி லாடத் தவில்மு ழங்கும் வீரரே-இரவில் கருணை இன்றி எனைப்பி ரிந்தீர் தூரமே!
ஒப்பில் ரசிகன், மேதை யாகி
ஒயா தூர்கள் பட்டங்கள் சூட்டும் விண்ணனே - அகில உலகும் மயங்குந் தவிலில் மன்னர் மன்னனே!-
இரவில் இப்பொழு தெந்தக் கோயில் மேடையில்
இன்ப மாரி பொழிந்து கொண்டி ருப்பீரோ! - ஏங்க என்னை யிங்கு மறந்து விட்டி ருப்பீரோ!
ஆதி, ரூபகம், மிஸ்ர சாப்பு,
அள்ளுஞ் சந்தக் கண்ட சாப்புத்தாளங்கள் - விரல்கள் அசைவில் தாங்கள் சிந்துந் தங்கப் பாளங்கள்!-குழலின்
நாதப் புனலின் வரம்பு தந்து
நறுமை ஜீவன் ஒளியுந் தந்து துய்ப்பீரே-தவிலின் நாதச் சரளம் கனிகள் தாங்க வைப்பீரே!
சாமி நிற்க வடக்கு வீதியில்
தவில் சமாவிற் தலைக்க டாவாய் நிற்பீரே-கைகள்
தவில் மேதை தட்சிணாமூர்த்தி

தட்டும் ரசிகர் வெள்ளம் நடுவில் நிற்பீரே-நிற்குஞ் சாமி முன்னே சதுஸ்ர நடையில்
தனித்தொ டங்கித் தவில்கு முவையே ஊக்குவீர்
இன்பச் சங்கீர் ணநடைவரைக்கும் முழங்கி ஆர்க்குவீர்!
"கலையில் சின்ன இந்தியா என்று
கலைஞர் வணங்கும் இணுவில் என்றன் ஊரடி' - என்றே கட்டி என்னை அணைக்கும் போதுங் கூறுவீர்-தூக்க நிலையில் கூடத் தில்லானா தம்மை
நீக்கி இன்று சினிமாப் பாட்டே விரும்புறார்-ரசிகர் நிலையிழிந்த்தார்’ என்று சொல்லி வருந்துவீர்! எண்ணஞ் செயல்கள் மட்டு மன்றி
இதயம் உயிருங் கலைக்குத் தந்த கலைஞரே - என்றன் எல்லாங் கொள்ளை கொண்டி னிக்கும் தலைவரே - “மயக்குங் கண்ணிர்! நெஞ்சை உனக்குத் தந்தால்
கலைம றந்துணைச் சுற்ற நேரும்” என்றிரே-கோடி காதைக் கலையைக் காத்தெ னைத்தான் கொன்றிரே!
கவிஞர் ச.சே.பஞ்சாட்சரம் ‘இன்ப வானில்’
கலாநிதிவ. மகேஸ்வரன் 4.

Page 28
தட்சிணாமுர்த்தி அடியெடுத்துக் கொடுக்கிறார்.
பூசை தொடங்கும் “சுத்துப் பல்லி சுத்தும், விழாத் தொடங்கும். அம்மாள் வீதி உலா வருவார். அப்பா பிரதட்டை பண்ணிக் கொண்டு வருவார். பக்கத்தில் அம்மா அடியழித்து வருவா. வடக்கு வீதி வந்தவுடன் அம்மாள் நிற்பார். அம்மாள் நின்று ரசித்து கேட்க அங்கொரு நிகழ்ச்சி இருந்தது. அளவெட்டித் தட்சிணாமூர்த்தி, இணுவில் சின்னராசா, கைதடிப் பழனி, நாச்சிமார் கோயிலடி கணேசு.
மேளச்சமா தொடங்குகின்றது. வயர் இழுத்து பெருத்த "மைக் கொண்டு வந்து நடுவில் வைக்கின்றார்கள்.
அழகனாய் ஆட்களைக் கவர்கின்ற அளவெட்டித் தட்சிணாமூர்த்தி அடியெடுத்துக் கொடுக்கிறார். நெஞ்சில் சங்கிலி புரள்கின்றது. சங்கிலியில் மீன் வடிவில் ஒரு பதக்கம். சிரித்துச் சிரித்து ரசித்து ரசித்து தட்சிணாமூர்த்தி தவில் கொட்டுகின்றார். மழையாகப் பொழிகின்றது தவில். இடி மின்னல்! இதே யாவும் அவர் தவிலில் வெடித்துக் கிளம்புகின்றது. தாளம் தப்பாது கால்கள் நிலத்தை உதைக்கின்றன. சாடையாகப் புழுதி சிறு கோடாக எழுகின்றது. இடையிடை ரசிப்பு, இடையிடை சிரிப்பு. தட்சிணாமூர்த்தி யாவற்றையும் கலந்து குழைத்துத் தருகின்றார். லயித்துப் போகின்றோம். மேளத்தில் முத்துவிரல்கள் விளையாடி தாளலய ஞான தரிசனங்கள் காட்டிய நம் ஈழத் தவிலரசன் எழிலார் இசைக் கணித வேழமெனவே திகழ்ந்த வித்தகன். எம் சொத்தான தட்சிணாமூர்த்தி தவிலிற் பொழிந்த தாள வரிசையைத் தப்பாமல் தனக்குள் வாங்கி இனிய லயத்துடன் இணுவில் சின்னராசா வெளிப்படுத்துகின்றார். கறுத்த, பெருத்த, மலைப்பான உடல். நீ எதைத் தவிலிற் தட்டினாலும் எனக்கென்ன என்று சிரித்து ரசித்து லயித்து தாளக் கட்டில் பிசகாது தருகின்றார் இணுவில் சின்னராசா. தட்சிணாமூர்த்திக்கு நேர் நின்று நிகர் நின்று இதோபார் என்று சின்னராசா பகர்கின்றார். பார்த்து நாங்கள் நிற்கின்றோம். சிறுவர்கள் நாங்கள் விழி விரிய ஆச்சரியமாகச் சிரிக்கின்றோம். சிலிர்த்துப் போகின்றோம்.
பட்டினியப்பா! விரதம் ஐந்து மணியாகின்றது. அதற்கென்ன? மேளச்சமா என்றால் சும்மாவா? இரவும் திருவிழா அதிலென்ன? நீயே
42 தவில் மேதை தட்சிணாமூர்த்தி

கதி ஈஸ்வரி’ என்று பாடுவதற்காகப் பார்வதியக்காவும் காத்துக்கொண்டு நிற்கின்றார். அதனாலென்ன? இப்படியொரு சமா எங்கு கிடைக்கும்? அது இனி அடுத்த வருசம் தானே?
எங்கு விட்டோம். இணுவில் சின்னராசாவிடமா? அவர் தாளம் தப்பாமல் பொழிகின்றது. ஒருவர் கூர்ந்து கவனிக்கின்றார். கட்டையான கறுத்த உடல்தான். பார்வையில் கூர்மை. வாசிப்பில் லாவகம், அவர் கை துருதுருக்கின்றது. கைதட்டித் தாளத்தை மெட்டுப்போட்டுத் தனக்குள் வாங்குகின்றார். தாளத்தை இரு கைகளாலும் சின்னராசாவிடமிருந்து ஏந்துகின்றார். கைகளில் வேகம். அது கைதடிப் பழனி. கடகடவென்று ஒலிக்கின்றது. சோர்வில்லைப் பார். சுறுசுறுவென்று தாளம் வேகம் ஏறுகின்றது. தன் தாளத்திற்கு இதோ தக்கபதில் என்று புன்னகைக்கின்றார் தட்சிணாமூர்த்தி. தவிலுக்கு மன்னன்தான் தட்சிணாமூர்த்தி என்றாலும் மற்றவர்கள் சும்மாவா?
பசியா? இது எங்கு வயிற்றை எட்டிப் பார்த்தது. அம்மா குந்தியிருக்கிறா. எனக்குப் பசிக்குமோ என்று என்னைப் பார்க்கின்றா. அப்பா பிரதட்டை பண்ணியபடி. படுத்தபடி மேளச்சமா பார்க்கின்றார். அம்மாளோவொன்றால் எங்கள் கோயில் அம்மாள் பட்டுத்துணி உடுத்து, முகத்தில் வழிந்த கருணையுடன் வாயில் வழிந்த புன்னகையுடன் மேளச்சமாவை ரசிக்கின்றார். எங்கள் அம்மாள். அம்மாள் என்றால் நாங்கள் அழுது விடுவோம். அத்தனை அன்பு. அத்தனை ஆசை. அம்மா போல அக்கா போல அம்மாளிலும் அத்தனை விருப்பம். அம்மாள் புன்னகைக்கின்றாள் என்றால்அது அத்தனை திறம் என்று தான் அர்த்தம், அம்மாளுக்குத் தெரியும் எது சரியென்று எது திறமென்று எது நல்லதென்று.
இரவில் விடிய விடியவா ஊரை ஒருக்கால் சுற்றி வந்து எங்களை எல்லாம் காப்பவரல்லவா அம்மாள்? அம்மாள் சுற்றி வருவதை கந்தியாத்தை கண்டிருக்கின்றா. மூத்தம்மான் கண்டிருக்கின்றார். செல்லதுரையண்ணை கூடப் பார்த்திருக்கின்றார். அதிருக்கட்டும். எங்கு விட்டோம். ஆ! இது தான் இடம்.
மேளச்சமா கண்ணிமைக்கும் நேரத்தில் கைதடிப் பழனியிடமிருந்து நாச்சிமார் கோயிலடிக் கணேசுவிடம் பாய்கின்றது. தாளக்கட்டைக் கால்களினுடாகவும் கைகளினூடாகவும் வாங்குகின்றார் கணேசு. தாளம் தப்பித் தட்டியவனை முறைத்துப் பார்க்கின்றார். அமைதியான சுபாவம் ‘வாக்கன் கணேசு’ என்றும் சொல்வார்கள். வெளுத்து வாங்குகின்றார். அந்த நாதம் அவர் தவிலிருந்து மாத்திரம் தான் கிளம்புகின்றது.
கலாநிதி வ. மகேஸ்வரன் 43

Page 29
கணேசுவின் தவில் சொல்லும் கதை மற்றத் தவில்களிலிருந்தும் வேறுபட்டது. அது வேறொரு நாதம். உடம்பு குலுங்காது நாசூக்காய் நின்று தன் நாதத்தை நிலை நிறுத்துவார்.
நாங்கள் விழி விரியப் பார்த்து நிற்போம் தட்சிணாமூர்த்தியின் தவிலுக்கும் தாளத்துக்கும் ஒருவரின் தவிலும் தாளமும் தப்பாது. ஒருவராவது தடக்குப்பட வேண்டுமென்று தட்சிணாமூர்த்தி படும்பாடு அவர் தவிலில் தெறிக்கும். ஒருவரும் தடக்குப் படார். தட்சிணாமூர்த்தி கொடுத்து தாளக்கட்டைத் தம்முள் வாங்கி வீச்சுக் குறையாது வெளிப்படுத்துவர். தடக்குப்பட்டவர் யாரும் இல்லை. நாங்கள் கண் இமைக்காது பார்த்து நிற்போம். தட்சிணாமூர்த்தி வேகம் பிடிப்பார். வேகம், கதி, கதியிலும் சுதி பிசகாது மற்றவர்கள் தடக்குப்படத் தொடங்குவார்கள். தொடங்குவது சாடையாகத் தெரியும். தட்சிணாமூர்த்தியின் வாயில் புன்னகை அரும்பும் நாங்கள் ஓடிப்போய் லவுட்ஸ்பீக்கரிலும் கேட்டுப் பார்ப்போம். கண கண வென்று நாதம் பாயும். அம்மாள் கோயிலின் முன்னே இருந்த அரச மரத்தில் "கோண்” கட்டியிருப்பார்கள். அரசமர இலைகள் சரசரக்கும். ஆனால் அதிலும் மேலாகத் தவில் சத்தம் கேட்கும். பால் நிலவு வழிகிற அரச மர இலைகள் இப்போது பொட்டுப்பொட்டாகச் சூரிய ஒளியை அனுப்பி சலசலத்துக் கிடக்கிறது. தவிலின் தாளக் கட்டிற்கு தன் காதுகளையும் சோளகக் காற்றின் வீச்சுக்கு தன்கிளை பரப்பி நிழலாற்றி நின்ற அரசமரம் இப்போதும் நிற்குமா?
இப்போது அப்பாவும் இல்லை. அம்மாள் கோயிலும் இல்லை. அரசமரம் இருக்குமா? இருக்கலாம். சிலவேளை அதனடியில் இப்போ புத்தர் சிலையும் இருக்கலாம்.
இரவி.அருணாசலம்.
44 தவில் மேதை தட்சிணாமூர்த்தி


Page 30


Page 31
ܘ ܐܬܐ
என்றோ ஒருநாள், இருந்துபார் மா நின் றந்தக் கோயில் நிமிர்ந்து, ெ பார்த்துப் பயன்கள் விளைக்கின்ற வீதிகளும் நூறு விளக்கும் பரதத்த சேதிகளைக் கூறும் சிலம்புச் சிறு ஆடும் அரங்கும் அறிந்த சுவைஞ நாடிப் புகுந்து நயந்திட நீ சோமனு ஊதும் குழலில் உயிர்பெற்று உட ஆதி அறையில் அமரும் கடவுளு என்றோ ஒரு நாள் எழும்பும், இரு நன்றாய் இருக்கும் நினைத்தாலும் நாளெல்லாம் தேவாரம் கேட்கும், திருவாசகம் 6 பா, ஈரமாக்கும் பலர் கண்ணை, கந்த புராணப் படிப்பும் நடக்கட்டுப் இந்த ஊர் முற்றும் இருந்ததனைச்
 

ாணிக்கம்! நடுந்துாரம்
கோபுரமும் நின்
பாதம் ர்கள் றுடன் ல் புளதித்து DITu ந்துபார்!
ன்னும் 5)ëF5FuULDITus
)
கேட்க வரும்!
('மஹாகவி' - கோடை)