கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அழகியற் கல்வி

Page 1


Page 2

அழகியற் கல்வி
பேராசிரியர் சபாரத்தினம் ஜெயராசா தலைவர் கல்வியியல் துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
ിഖണീ யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி ungjÜLITUOTh 23.

Page 3
தலைப்பு pa
ஆசிரியர்
முதற்பதிப்பு தாள் அளவு - பிரதிகள் வெளியீடு
Title Author
Papser Size - 9No of Copies - Publishers -
(Price r
First Edition -
அழகியற் கல்வி பேராசிரியர். சபா. ஜெயராசா தலைவர். கல்விப்பீடம். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
2003.01.19
1/8
000 யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
Aesthetic Eduction
Prof. Saba jeyarasa
JHead-Department of Eduction
Iniversity of Taffna.
1/8
1000 Taffna National College of Education 200/=
2003. 01.19

யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரிப் பீடாதிபதி கலாநிதி திருநாவுக்கரசு கமலநாதன் அவர்களின் வெளியீட்டுரை - அழகியல் கல்வியாக்க, கலையாக்கச் செயன்முறை மனித விடுதலை
உணர்வின் உன்னத வெளிப்பாடுகளாகும்.
s
- “அழகியலுணர்வு மனிதப்பண்புகளை வளர்க்கும் ” என்றார் ரவீந்திரநாத் தாகூர். “சாதாரண மனிதன் அழகிய பொருட்களை விரும்புகின்றான் கல்வியியல் ஞானி அழகை விரும்புகின்றான்” என்று கிரேக்க தத்தவஞானி பிளேட்டோ கூறியுள்ளார். - இந்த வகையில் பேரானந்த அழகை விரும்பும் கல்விச் சமூகம் ஒன்றினை உருவாக்க அழகியல் கல்வி, அழகியலுணர்வு, இரசனை என்பன இளம் சிறார்களிடம் வளர்க்கப்பட வேண்டும். - இதற்கு ஆசிரிய கல்வியியலாளர்கள் ஆசிரிய பயிலுநர்கள், இத்தறை சார்ந்த பரந்த கல்வியனுபவங்களைப் பெறவேண்டும் என்ற நோக்குடனேயே யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கல்வியியற் தறை, நண்கலைத் தறைத்தலைவர் பேராசான். பேராசிரியர் சபா.ஜெயராஜா அவர்களால் எழுதப்பட்ட அழகிய்ற்கல்வி என்ற நூலை எமது யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி வெளியிடுகின்றத. - இந்நாலாசிரியர் பேராசிரியர் சபா.ஜெயராசா அவர்கள் கல்வியியல், கலையியல் தறைசார்ந்த பல்பரிமாண ஆக்க கர்த்தா. பல வெளியீடுகளையும், ஆய்வுக்கட்டுரைகளையும் எழுதியுள்ளார். - ஆவரது கல்வியியல் பயிற்சி வழங்கல் ஊடாக பயில்வினூடாக பல ஆற்றல் உள்ள மாணவர்கள் உருவாக்கப்பட்டுள்ளார்கள். மனிதத்தவம் பொருந்திய அப்பெரு மனிதரத நாலை வெளியிடும் பேற்றை எண்ணிப் பூரிப்படைகின்றோம்.
200ጂ0//9 திருநாவுக்கரசு கமலநாதன்
ய7. தே. க. க.

Page 4
முன்னுரை
கலைகள் அழகுடையன. அழகியற் கலைகள் ; புதியன புனைதல், புதியன கண்டு பிடித்தல், அகக்காட்சி பெறுதல். புதிய பொருட்களை ஆக்குவதற்கான மனித ஆற்றலை, இரசிப்பை, உணர்வு ரீதியான உன்னத மெய்ப்பாடுகளை இயம்புகின்றன. அவை ஆன்மீகம், லெளகீக, கவின்கலை, விஞ்ஞானம், தொழில்நுட்பம் சார்ந்த பெறுமானங்களாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. கல்வியியல் உன்னதங்களை அழகியல் கலையாக்கச் செயன்முறைகள் மனித விடுதலை -சுதந்திர உணர்வுகளின் வெளிப்பாடுகளாகின்றன. இலட்சிய வடிவிலான மானுடவியல் சுயத்திற்கு; யதார்த்த வடிவிலான கலையாக்கச் செயன்முறைகள் பல்வேறு அழகியற் குறியீடுகளாக, அறிகை, காட்சி, உணர்ச்சி, தொடர்பாக்க வெளியீடு களாக வழிகாட்டுகின்றன.
இவ்வழிகாட்டல்கள் அழகியல் கலை கல்வி வெளிப்பாட்டு ஆக்கச்சக்திகளுக்கு வலுச்சேர்க்கின்றன. ஒவ்வொரு அழகியற்கலை - கல்வி வெளிப்பாடுகளும் அதற்கான வரலாற்றுச் சூழமைவைக் (Historical Context) கொண்டன. ஒவ்வொரு வரலாற்றுச் சூழமைவும் பண்பாட்டின் பல்வேறு நிகழ்வுகளின் ஒட்டு மொத்த விளைவுகளா கின்றன. அழகியற் கலை - கல்வி வரலாற்றுச் சூழமைவைக் கண்டு தரிசித்தல் என்பது இன்றைய இளம் சந்ததியினரின் அடிப்படைத் தேவையாகவுள்ளன. இதற்குப் பேராசிரியர் சபாரத்தினம் ஜெயராசா அவர்கள் எழுதிய அழகியற்கல்வி என்ற இந்நூல் பெரிதும் உதவுகின்றது.
அழகியற் கலைப்படிமங்களின் தர்க்க பூர்வமான மதிப்பீட்டு வெளிப்பாட்டை மீள் படைத்தலுக்கும் (Re-Create) 955,606) வரலாற்றை எல்லோரும் அறிய வழிகாட்டலுக்கும் இந்நூல் சான்று பகர்கின்றது. இங்கு அழகியற் கலை வரலாறு என்பது ஒரு சிறப்பு வகையான பிரக்ஞையாகும். நிகழ்காலத்தில் இருந்து கடந்த காலத்தைப் பார்த்தலும், அந்த அனுபவப்பின்னணியில் இருந்து எதிர்காலம் பற்றிய உணர்வைப் பெறுதலும் அதன் நடைமுறைகளாகும். அடிப்படையில் இது காலம் - இடம் சார்ந்த ஒருவகைத் தர்க்கமாகவே வெளிக்கிளம்புகின்றது. இந்நோக்கிலிருந்து அழகியற் கல்வியின் படிமங்கள் இந்நூலில் , இந்திய மரபில் அழகியற்கல்வி,

இந்துக்கல்வி மரபும் தர்ம அழகியலும், ரசக்கோட்பாடு, தமிழ் மரபில் அழகியற் கல்வி, பின் நவீனத்துவம், மார்க்கிச நோக்கியல், கலையாக்கச் செயன்முறைகள் என்ற வகையில் எடுத்தாளப்படுகின்றன.
புதுமை, வரலாற்றியல், பொருத்தமான தன்மை, மாற்றிப் பயன்படுத்தல், சுருக்குதல், திறனாய்தல், மதிப்பிடல் போன்ற அணுகு முறைகளினூடாக அழகியற்கல்வி தொடர்பான தரிசனங்கள் இந்நூலில் ஆழமாக இயம்புகின்றன. புதுமைகளை விதைப்பவரும், புதுமைகளின் விளைவுகளுக்கு வழிவகுக்கும் ஆக்கத்திறனுடைய வருமான இந்நூலின் ஆக்க கர்த்தா பேராசிரியர் சபா. ஜெயராசா அவர்கள் கல்வியியல் - கலையியல் - திறனாய்வியல் துறைகளில் தன் ஆளுமை களை ஆழப்பதித்த பெருமனிதர். புதிய வார்ப்புக்களாக மாணவ பரம்பரை ஒன்றை வார்த்து வருபவர். கல்வித்துறைச் சமூகத்தினருக்கு சேவையாற்றும் உயர் பெறுமானமுள்ள சிற்பி. அவர் செதுக்கிய ஆக்கங்கள் பல்வேறு நூல்களாக வெளிவந்துள்ளன. யாழ்ப்பாணக்கல்வி பாரம்பரீய ஈழத்தமிழர்களின் கல்விப்பாரம்பரியத்திற்குப் பெரிதும் தொண்டாற்றி வரும் அப் பெருமனிதனின் பல்பரிமாண ஆக்கங்கள் தொடர்ந்து வெளிவர வேண்டும். பேராசிரியர் அவர்கள் செய்த கல்விச் சேவைகள் வெளியீடுகள், உயர்கல்வியில் மாணவர்களுக்கு மேற்கொண்ட ஆய்வறிக்கை வழிகாட்டல்கள் தொடர்பான ஆய்வுகள் நூல் வடிவில் வெளிவரவேண்டும். அதன் ஒரு முன்னோடி நிகழ்வாகவே இந்நூலில் அவர் எழுதிய ஒரு தொகுதி நூல் பட்டியலில் வெளியிடப்பட்டுள்ளது. பேராசிரியர் அவர்களின் கல்விப்பணி மேலும் தொடர இறையருள் துணை நிற்பதாக,
200309 பாலசுப்பிரமணியம் தனபாலன்
உப பீடாதிபதி (கல்வியும் தரமேம்பாடும்) யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி

Page 5
பொருளடக்கம்
வெளியீட்டுரை முன்னுரை
1) இந்திய மரபில் அழகியற் கல்வி
2) இந்துக் கல்வி மரபும் தர்ம அழகியலும்
3) இந்திய அழகியற் கல்வியில் ரசக்கோட்பாடு
4) தமிழ் மரபில் அழகியற் கல்விச் சிந்தனைகள்
5) சிங்களப் பாரம்பரியத்தில் அழகியற் கல்விச்
சிந்தனைகள்
6) மேலை நாட்டு அழகியற் கல்விச் சிந்தனைகள்
7) பின்-நவீனத்துவமும் கல்வியும்
8) அழகியலும் ஆற்றுகையும்
ii
18
22
35
41
55
65
9) அழகியற் கல்வியில் மார்க்சிசமும் நவமார்க்சிசமும் 71
10) அழகியலும் கலையாக்கச் செயல்முறையும்
11) உசாத்துணை நூல்கள்
80
92

இந்திய மரபில் 1 அழகியற் கல்வி
தொன்மையான நாட்டார் மரபுகளில் அழகியற் கல்வியானது வாழ்க்கைத் தொழில்களோடு ஒன்றிணைந்த செயற்பாடாக விரவி நின்றது. வரன் முறையான கல்விச் செயற்பாடு சமூக முறைமை யோடு ஒன்றிணைந்து வளர, அழகியற்கல்வியை முறைமை சார்ந்த வகையிலே ஒழுங்கு அமைத்தல் நிகழலாயிற்று. வரன் முறைசார்ந்த வகையிலே அழகியற் கல்வியைக் கையளித்தல் வரன் முறைசார வகையிலே நாட்டார் மரபுகள் வழியாக அழகியற் கல்வியைக் கையளித்தல் என்ற இருவகைக் கோலங்கள் இன்று வரை இந்திய மரபிலே காணப்படுகின்றன.
இந்திய அழகியற் கல்வி மரபை ஆராய்வோர் வேதங்களில் இருந்து தமது விளக்கங்களை ஆரம்பித்தல் மரபாகிவிட்டது. வேதம் என்பது நிறையறிவு அல்லது முற்றறிவு என்றும் பரிபூரண ஞானம் என்றும் குறிப்பிடப்படுகின்றது. இருக்கு வேதம், யசூர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் ஆகியவை, இறையியல், அழகியல், வாழ்வியல் அனைத்தையும் உள்ளடக்கியவையாக வேத காலக் கல்வி மரபு விளங்கியது. எழுத்து வடிவின்றி செவி வழியாகவே ஆரம்பத்தில் அறிவு கையளிக்கப்பட்டு வந்தது.
செவி வழியாகக் கையளிக்கப்பட்டவை பின்னர் வியாசரால் தொகுக்கப்பெற்றன. வேதங்கள் ஒவ்வொன்றும் ஒழுங்குறப்

Page 6
பிரிக்கப்பட்டிருந்தமை வரன் முறையான கல்வி வளர்ச்சியோடிணைந்த தோற்றப்பாடாகும்.
நான்கு வேதங்களும் சம்கிதை, பிராமணம், உபநிடதம் என்ற முப்பெரும் பிரிவுகளாக ஒழுங்கமைக்கப் பெற்றன. சம்கிதை என்பது தொகுதி எனப் பொருள்படும். வேள்விகளிலும் சடங்குகளிலும் பயன் படுத்துவதற்கான பாடல்கள் இங்கு இடம்பெறும். பிராமணம் என்பது யாகத்தின் போது செய்ய வேண்டிய சடங்குகளையும், அவற்றின் சிறப்புக்களையும், எடுத்துக் கூறுகின்றது. உபநிடதங்கள் ஆன்மீகக் கல்வியை எடுத்துரைக்கின்றன.
அறிந்து ஓதுதல், தெளிந்து ஒதுதல், இறையுணர்வோடு ஒன்றிணைந்து ஒதுதல் முதலியவை இருக்கு வேத சம்கிதைகளில் வற்புறுத்தப்படுதல் அழகியற் பரிமாணங்களின் ஒன்றிணைப்பைப் புலப்படுத்துகின்றது. யசூர் வேத சம்கிதைகளில் வேள்விகளின் போது பின்பற்ற வேண்டிய விதிகளைக் குறிப்பிடுதல் கல்வி வளர்ச்சி யோடிணைந்து நின்ற கட்டுப்பாட்டு முறைமையை (CONTROL SYSTEM) எடுத்துக் காட்டுகின்றது. சமூக ஒழுங்கமைப்பை கட்டிக் காக்கும் செயல்களோடு கல்வி இணைந்து கொண்டது. இன்று வரை கல்வியின் இந்தச் செயற்பாடு தொடர்ந்து கொண்டேயிருக்கின்றது.
வேள்விகளின் போது இசையுடன் பாடுவதற்குரிய பாக்களைச் சாமவேத சம்கிதை கொண்டுள்ளது. இசையோடு இணைந்த செயல்கள், இசையோடு இணைந்த அசைவுகள், இசையோடு இணைந்த தியானம் முதலியவை இந்திய மரபில் அழகியற் கல்வியோடு நேரடியாக ஒன்றிணைந்திருந்தன. அதர்வண வேத சம்கிதைகள் இறையின்பத்தை அடையும் ஞான பாகத்தை விபரிக்கின்றன. தொகுத்து நோக்கும் பொழுது அழகியற் கல்வியும் இறையியற் கல்வியும் ஒன்றிணைந்து வளர்ந்த முறைமையை இந்தியக் கல்வி மரபிலே காண முடிகின்றது.
பயிர்ச் செய்கையின் வளர்ச்சி சமூகத்தில் ஏற்படவும், பூர்விக வர்த்தக முறைமைகள் வளர்ச்சியடையவும் தொழில் முறை தழுவிய செல்வாக்குகள் அழகியற் கல்வியிலே வளரலாயின. பயிர்ச் செய்கைச் சமூகத்தில் “நிறைவு’ என்பது அழகியல் சார்ந்த வலுவைக் கொடுத்தது. தானிய மணிகள் நிறைதல், பட்டி நிறைதல், நீர் நிலைகள்
2

நிறைதல் என்றவாறு "பூரணத்துவம்” அழகென வலியுறுத்தப்பட்டது. வர்த்தகப் பண்பாட்டில் குறையவும் வற்கடமும் நிலவும் காலங்களில் பொருட்களின் மதிப்பு உயர அத்தகைய நிலவரங்கள் வணிகர்களுக்கு மகிழ்ச்சியை வழங்கின. இவ்வாறாக சமூகத்தில் ஏற்பட்ட தொழிற் பிரிவுகளுக்கும் அழகியல் நோக்கினுக்குமிடையே தொடர்புகள் காணப்பட்டன.
இந்திய சமூகத்தில் ஏற்பட்ட பெருநிலையான தொழிற் பிரிவுகள் நான்கு வகையான வருணப் பகுப்புக்களால் உணர்த்தப் படுகின்றன. பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்ற நிலைகளுக்கேற்றவாறு குணங்களும் கடமைகளும், கல்விச் செயல் முறைகளும் வகுத்துக் கூறப்பட்டுள்ளன. தத்தமது வருணத்துக் குரிய ஒழுக்கத்தைச் சார்ந்திருத்தலும், சிந்தித்தலும், நெறிப்படலும் , அழகென வலியுறுத்தப்பட்டமை, ஒரு வகையிலே சமூகக் கட்டுமானத்தைக் கல்வியால் வலியுறுத்திய செயல் என்றும் குறிப்பிடலாம்.
சமூக ஒழுங்குக்கான கல்வி போன்று தனி மனித நெறிப்படுத்தற்கான கல்வி நான்கு வகை ஆச்சிர நிலைகளாக வகுத்துக்கூறப்பட்டது. பிரம்மச்சாரியம், கிரகஸ்தம், வானப் பிரஸ்தம், சந்நியாசம் என்ற நால்வகை நிலைகளுக்கேற்ப வாழுதல் அந்த அந்த நிலைகளுக்குரிய அழகென வலியுறுத்தப்பட்டது. மனுவினுடைய பனுவலில் இவற்றின் பண்புகள் விரித்துரைக்கப்படுகின்றன. இந்நான்கு வகை ஒழுக்கங்களையும் ஒன்றன் பின் மற்றையதாக ஒழுங்காக மேற்கொள்ளல் விரும்பத்தக்கதென்றும், சிறப்பானதென்றும் ஒழுக்கத் திற்கும் அழகுக்குமிடையேயுள்ள தொடர்புகள் வலியுறுத்தப்பட்டன. தொன்மையான இந்திய அழகியற் கல்வியில் நன்மை தீமை (அநிருதம்) ஆகிய எண்ணக் கருக்கள் விளக்கப்படலாயின. நல்ல சிந்தனை, நல்லொழுக்கம், சத்தியம் பேணல், அறவழி நடத்தல், துன்பம் செய்யாதிருத்தல், தானம் செய்தல், பிறருக்கு துன்பம் செய்யாமை, பொறுமை, பொய்யின்மை, கோபமின்மை, அகங்கார மின்மை, உடல் உள்ளத் தூய்ம்மை, நேர்மை, தவம் முதலியவை நன்மையும் அழகும் தருவதாக வலியுறுத்தப்பட்டன.
இவற்றை அடியொற்றிய தன்னலப் புண்ணியச் செயல்கள் விளக்கப்பெற்றுள்ளன. தனி மனிதர் ஒவ்வொருவரதும் நன்மை சார்ந்த

Page 7
செயல்களின் அடிப்படையாக ஒழுக்கமேம்பாடு, அறமேம்பாடு, அழகுமேம்பாடு முதலியவை ஏற்படுவதாகக் கொள்ளப்படுகின்றது.
மனித உடம்பு பலவகையான தொகுதிகளால் ஆக்கப் பட்டதென விளக்கும் தொன்மையான இந்திய அறிகை முறைமை அவற்றையடியொற்றிய அழகியற்சிந்தனைகளையும் கொண்டிருந்தது. மனித உடல் ஆக்கப்பெற்ற கோசங்கள் வருமாறு
1. தூலகோசம் - இது அன்னமயம், பிராணமயம் ஆகியவற்றை
உள்ளடக்கியது.
2. இந்திரியகோசம் - இது காமகோசம் எனவும் அழைக்கப்
படும்.
3. மனோமய கோசம் - இது அறிக்கைச் செயற்பாடுகளை
உள்ளடக்கியது.
4. ஆனந்தமய கோசம் - இது தேவாம்ச அழகை அடையும்
நிலையாகும்.
தூல உடம்பைச் சுத்தமாக வைத்திருத்தல், உணர் வுகளைச் சுத்தமாக வைத்திருத்தல், சிந்தனைகளைச் சுத்தமாக வைத்திருத்தல் ஆகிய அடிப்படை நிலைகளில் இருந்து பேரானந்த அழகு தோன்றுதலை தனிமனிதரை நிலைப்படுத்தி இந்திய அழகியற் கல்விக் கோட்பாடுகள் விளக்குகின்றன.
நன்மை, தீமை ஆகிய வேறுபாடுகள் சத்துவம், இரஜசம், தமஸ் ஆகிய மூன்று குணங்களை ஆதாரமாகக் கொண்டவை யாகக் குறிப்பிடப்படுகின்றன. மந்தநிலையையும், பின்தங்கிய நிலை யையும் தமஸ குணம் குறிப்பிடுகின்றது. சுறுசுறுப்பையும் விடாமுயற்சியையும் இரஜ குணம் சுட்டிக் காட்டுகின்றுது. சத்துவ குணம் உயர் நிலையான ஆன்மீக விடயங்களோடு ஒன்றித்ததாகவுள்ளது.
தர்ம சாஸ்திரத்திலே குறிப்பிடப்படும் சம்பத்துக்கள் பற்றிய எண்ணக்கருவும் இந்திய அழகியலோடு தொடர்புபட்டுள்ளது. சம்பத்துக்கள் தெய்வ சம்பத்து, அசுர சம்பத்து என இரு வகைப்படும். பயமின்மை, தெளிந்த மனம், உய்யும் வழி அறிதல், தானம் செய்தல், ஐம்பொறிகளையும் கட்டுப்படுத்தல், பிறருக்கு துன்பம் செய்யாமை,

பொறுமை, பொய் கூறாமை, அகங்காரமின்மை, புறங் கூறாமை, செந்தண்மை பூண்டொழுகல், சாந்தமுடைமை, சபலமின்மை, நேர்மை, தூய்மை, கர்வமின்மை முதலிய தெய்வ சம்பத்துக்கள் அழகியலுடன் தொடர்புடைய குணவியல்புகளாகக் கருதப்படுகின்றன.
இந்திய அழகியற் கருத்துக்கள் ஐந்தாம் வேதம் என்று கருதப்படும் மகாபாரதம், இராமாயணம் ஆகியவற்றிலும் செறிந்து காணப்படுகின்றன. அவதார அழகு, நீதி வழி நிற்றல் வெற்றியைத் தழுவும் அழகு, அநீதி வீழ்ச்சி பெறும் அழகு, அன்பின் அழகு, ஒழுக்கம் வென்றிடும் அழகு முதலியவை இவ்விரு காவியங்களாலும் எடுத்துக் கூறப்படுகின்றன.
பிராகிருதசாஸ்திரத்திலும் அழகியலுக்குரிய கட்டமைப்புக்கள் தரப்பட்டுள்ளன. அவையாவன
(1). அத்தியயன முறை (2). கிரியை முறை (3). வியாகரணம்
சுரக் கட்டமைப்புக்களை அறிந்து வேத வாக்கியங்களை ஒதுதல் சிறப்பென்றும் அழகென்றும் அத்தியயன முறை விளக்கு கின்றது. சடங்குகள் செய்தலும், அவற்றின் ஒழுங்கு முறைகளும் ஏற்படுத்தும் நிறைவையும் அழகையும் கிரியை முறை விளக்கு கின்றது. இலக்கண விதி முறைகளைப் பின்பற்றலின் செம்மை வியாகரணத்தால் விளக்கப்படுகின்றது. தொடர்பாடலில் சொல் அடிப்படை அலகாக விளங்குதலால் சொல் உற்பத்தி முறைமை களை நிகண்டு விளக்குகின்றது. கவிதை அழகியலின் சொல் சார்ந்த வடிவமாகக் கருதப்பட்ட நிலையில் கவிதை இலக்கணத்தை சந்தஸ் குறித்து நின்றது. மனித சிந்தனைகள், ஆற்றுகைகள் கோள்களுடன் தொடர்புபட்டு நிற்றலை சோதிடம் விளக்கியது.

Page 8
இந்திய சிந்தனை மரபில் விளக்கப்படும் ஆறு தரிசனங்களும் அழகியற் கட்டமைப்பைப் புரிந்து கொள்வதற்குத் துணை நிற்கின்றன. ஆறு வகை தரிசனங்களும் வருமாறு: சியாய சாஸ்திரம் வைசேசிகம் சாங்கியம் யோக சாஸ்திரம் பூர்வ மீமாம்சை உத்திர மீமாம்சை
அளவை நிலை அடிப்படைகளை விளக்கும் நியாய சாஸ்திரம் அழகை விளக்குவதற்குரிய அறிகைக் கட்டமைப் புக்களை முன் வைத்தது. அடைமொழிகள் மொழிசார்ந்த கலையழகிலே சம்பந்தப்படுதல் தொடர்பான விளக்கங்கள் வைசேசிகத்தில் காணப்படுகின்றன. அழகை எண்ணிக்கை வடிவில் விளக்க சாங்கியம் துணை நின்றது. உயிர் கடவுள்ோடு சங்கமமாகி அழகு தோன்றுதலை விபரிக்க யோக சாஸ்திரம் துணை நின்றது. வேதத்தின் கரும காண்டத்தோடு இணைந்த அழகை விபரிக்க பூர்வ மீமாம்சை பயன்பட்டது. வேதத்தின் பிரம்ம ஞான காண்டத்தோடு இணைந்த அழகை விளக்க இது உதவியது.
இந்திய அழகியற் கல்வியைக் கையளிப்பதற்கு 'புராண மரபு பெரிதும் துணை நின்றது. வேதங்களை உணர்ந்து கொள்வதற்கு அதன் வழியாக எழும் அழகை விளங்கிக் கொள்வதற்கும் புராணங்கள் துணை நின்றன. பழைமையான வரலாற்றைக் கூறுபவை புராணங்கள் ஆகும். மக்கள் மனத்திலே ஆழ்ந்து வேரூன்றிய தொன்மங்கள் புராணங்களின் உள்ளடக்கமாக அமைந்தன. புராணங்கள் முக்கிய புராணங்கள் என்றும் உப புராணங்கள் என்றும் இந்திய மரபிலே வகைப்படுத்தப்பட்டுள்ளன.
முக்கிய புராணங்கள் வருமாறு :
1. சிவ புராணம் 2. விசஷ்ணு புராணம் 3. பிரம்ம புராணம்

4. பத்ம புராணம் 5. பாகவத புராணம் 6. நாரத புராணம் 7. மார்க்கண்டேய புராணம் 8. அக்கினி புராணம் 9. பவிசஷ்யத் புராணம் 10. இலிங்க புராணம் 11. பிரம்ம வைவர்த்த புராணம் 12. வராக புராணம் 13. ஸ்கந்த புராணம் 14. வாமண புராணம் 15. கூர்ம புராணம் 16. மத்ச்ய புராணம் 17. கருட புராணம் 18. பிரம்மாண்ட புராணம் உப புராணங்கள் வருமாறு:
1. நரசிம்ம புராணம்
சனத்குமார புராணம் பிரகந்நாரதீய புராணம் சிவரகசிய புராணம் துர்வாசஸ் புராணம் கபில புராணம் வாமன புராணம் பார்க்கவ புராணம் வாருண புராணம் . கல்கி புராணம் . சாம்ப புராணம் . நந்தி புராணம் . சூரிய புராணம் பராசர புராணம் . வசிசஷ்ட புராணம் . தேவி பாகவத புராணம் . கணேச புராணம் . கம்ச புராணம்

Page 9
இந்திய மரபில் அழகியற் கல்வி வழிபாட்டு முறைமை களோடும் இணைந்திருந்தது. தொடக்க காலத்தில் வருணன், சூரியன், இந்திரன், அக்னி, சோமன், பிரிதிவி போன்ற இயற்கைத் தெய்வங்களை வழிபடுதலோடும், சடங்களோடும், யாகங்களோடும் அழகியற் கல்வி இணைந்திருந்தது. சமூக வளர்ச்சியோடு தெய்வ வழிபாடு நிலைகொள்ளத் தொடங்கியது. பிரமன், விக்ஷணு, சிவன் ஆகிய தெய்வங்களை வழிபாடு செய்தல் தொடர்பான அழகியல் வளரலாயிற்று.
இந்திய அழகியலும் கலையாக்கமும் ஆடலும் சமூகக் கட்ட மைப்புக்களை அடியொற்றி எழுந்தமைக்குப் பல ஆதாரங்களைக் காட்டலாம். பூர்வீக வேட்டையாடற் சமூகத்தில் வாழ்வியலோடு இணைந்த பொருட்கள் குலக்குறிகளாகவும், புனிதமான பொருட்க ளாகவும், அழகுணர்ச்சியோடு இணைந்த பொருட்களாகவும் வளர்ச்சியடைந்தன. குலக்குறிகளாக அமைந்த பறவைகளையும் விலங்குகளையும் தமது மேனிகளில் வரைந்தும், தாம் வாழ்ந்த குகைகளின் சுவர்களில் வரைந்தும் அழகுப் பொருட்களாக்கினர்.
மந்தை மேய்ப்புப் பொருளாதாரம் வளர்ச்சியடைய பசுவின் வடிவத்தோடு தமது அழகியற் கற்பனையும் ஒன்றிணைந்து காராம்பசு போன்ற அழகியற் வடிவத்தை உருவாக்கினர். நிலப்பிரபுத்துவ சமூகவமைப்பு இந்தியா வெங்கணும் பரந்துபட்டு வளர்ச்சியடைய, தானியக்கடவுள், நீர்க்கடவுள், நிலமகள் போன்ற கடவுளரின் வழிபாட்டு முறைகளும் அவற்றோடிணைந்த கலை இலக்கிய ஆக்கங்களும் வளர்ச்சியடையலாயின.
 

இந்துக் கல்வி மரபும் 2 தர்ம அழகியலும்
இந்துக்கல்வி மரபில் தர்மமே அழகென்று வலியுறுத்தப் பட்டு வந்துள்ளது. தர்ம வழியில் வாழ்வதும், தொழில் செய்வது, கலைகளை ஆக்குதலும் அழகென குறிப்பிடப்பட்டுள்ளது. இந்து மதக் காவியங்களிலும் கலைகளிலும் தர்ம வலியுறுத்தலே உள்ளடக்க மாக அமைந்துள்ளது.
இந்துக் கல்வி மரபில் 'தர்மம்' என்ற எண்ணக்கரு பல்வேறு பரிமாணங்களில் கல்வியிலும் அழகியலும் வலியுறுத்தப்பட்டு வந்துள்ளது. அறிகை வழியான மேலோங்கல், எழுச்சி வழியான மேலோங்கல், உடலியக்க வழியான மேலோங்கல் என்ற வாறு கல்வியியலின் முப்பெரும் ஆட்சிகளை (DOMAIN) முன்னெடுத்தலில் 'தர்மம்' என்பதன் வலியுறுத்தல் இந்துக் கல்வி மரபில் ஆழ்ந்து குறிப்பிடப்பட்டுள்ளது. தனி மனித மேம்பாடு, சமூக மேம்பாடு, ஆட்சி நிலை மேம்பாடு முதலியனவும் தர்மம் என்ற உயரிய நோக்கினால் நெறிப்படுத்தப்பட்டு வந்துள்ளது. தர்மமே அழகாயிற்று.
சம்ஸ்கிருத மொழியில் தர்மம் என்பது “தர்” என்பதன் அடிப்படையாகப் பிறந்தது. மேலோங்கச் செய்தல், பராமரித்தல், வளம் மிக்குடையதாக்குதல் என்பதை அது குறித்து நின்றது. நல்லவற்றை மேலோங்கச் செய்தல், நல்லவற்றைப் பராமரித்தல், நல்லவற்றை வளம் மிக்குடைய தாக்குதல் என்றவாறு அதன் அறிகை சார்ந்த விளக்கம்

Page 10
விரிவு பெற்றது. இருக்கு வேதம், அதர்வண வேதம் முதலிய பனுவல்களில் விளக்கப்பெறும் தர்மம் சமயக் கடமைகளையும், சமயச் சடங்குகளையும் பெரும் ஞானிகள் விதித்தவாறு மேற்கொள்வதால் விளையும் உன்னதமான பேறு என்பதைக் குறித்து நின்றது. சமூக வளர்ச்சியின் போது அறிகை சார்ந்த எண்ணக்கருக்கள் விரிவும், விளக்கமும் கூர்ப்பும் பெறுதல் இயல்பு. காலக்கிரமத்தில் அனைத்துச் சமயக் கடமைகளும் தர்மம் என்ற எண்ணக்கருவால் விளக்கப்படலாயிற்று.
சமூக வளர்ச்சியின் பிறிதொரு நிகழ்வாக அமைவது usi(p5LDTÉ5. Glysis) is 0.5IIbibi,56) (DIVISION OF LABOUR) ஆகும். கல்வி நிலையில் தொழிற்பிரிவுகளை அனுசரித்து தர்மம் என்பது விளக்கப்படலாயிற்று. தவமுனிவர்களுக்குரிய தர்மம், இல்வாழ்வார்க்குரிய தர்மம், மாணாக்கருக்குரிய தர்மம் என்ற விளக்கங்கள் வளரலாயின.
இந்துக்கல்வி மரபில் தவமுனிவர்களே வேத, உபநிடத கால ஆசிரியர்களாக விளங்கினர். உண்மைப் பழுதின்றி உரைத்தல் தவமுனிவர்களுக்குரிய தர்மமாயிற்று. தியாகம், தானம், கற்றல் முதலியவை இல்வாழ்வாருக்குரிய தர்மமாயிற்று. ஆசிரியர் இல்லத்தில் வாழ்ந்து, அவ்வில்ல உறுப்பினராகத் தொழிற்பட்டு, சேவை புரிந்து தொண்டுகள் பல இயற்றிக் கல்விச் செல்வத்தைப் பழுதின்றிப் பெறல் பிரமச்சாரியராகிய மாணவருக்குரிய தர்மமாயிற்று. தர்மத்தின் வழி ஒழுகுதல் இந்துக்கல்விச் செயல்முறையின் ஒன்றிணைந்த நடவடிக்கைகளால் மேற்கொள்ளப்படலாயிற்று.
வரன்முறையான கல்விச்செயற்பாடுகளிலும் (FORMAL EDUCATION), வரன்முறைசாராக் கல்விச் செயற்பாடுகளிலும் (NON FORMAL) தர்மம் நாட்டல் இந்து மரபில் தீவிரமாக வலியுறுத்தப் படலாயிற்று. தர்மவழி நடப்போர்க்கு இவ்வுலக இன்பங்களும், தெய்விகப் பேறுகளும் உரித்தாகும் என்பது கல்விச் செயல் முறைகளில் பலதள முன்மொழிவுகளாக அமைந்தன. இந்துக் கல்வி மரபின் சிறப்பார்ந்த முன்மொழிவுகளுள் ஒன்றாக அமைந்த இலக்கு மேதகு தெய்விக வியாபகம் ஒவ்வொருவரதும் உள்ளங்களிலும் நிறைந்துள்ளது என்பதன் அடிப்படையில் தர்மம் என்ற கோட்பாட்டின் வேர்கள் பலம் பெற்று
10

நிலைநிறுத்தப் பட்டுள்ளமையாகும். இந்தக் கோட்பாடானது அறவொழுக்க கல்விச் செயல் முறைகளால் மீள வலியுறுத்தப்பட்ட வேளைகளில் ஒருவர் எத்தகையவற்றைச் செய்யலாகாதோ அவற்றைப் பிறருக்கும் செய்யலாகாது என முன்மொழியப்பட்டது. இந்நிலையில் ஒருவர் மனத்தாலும், வாக்காலும், உடலாலும் பிறருக்குத் தீங்கு இழைக்க முற்படக்கூடாது என்ற ஒழுக்கநெறி வாழையடி வாழையாக இந்துக் கல்விமரபில் வலியுறுத்தப்பட்டது.
இந்து (Ff) புராண இதிகாசங்களிலும், வாய்மொழி இலக்கியங்களிலும், தொன்மங்களிலும் (MYTHS), கலையாக் கங்களிலும், இசை நடனக் கல்வியிலும் தர்ம வலியுறுத்தலே முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளது.
பத்ம புராணம், அக்கினி புராணம், கூர்ம புராணம், கருட புராணம் முதலியவை தர்மத்தின் வகைகளைக் குறிப்பிடப்படுதல் சமூக வளர்ச்சியின் போது நிகழும் பன்முகமாதலுக்கும், கல்விக்கு முள்ள தொடர்புகளை இனங்காணக் கூடியதாகவுள்ளது. பிறருக்கு இன்னா செய்யாமை, தற்கட்டுப்பாடு, தானம், தூய்மை, சத்தியம், தியாகம், விட்டுக் கொடுத்தல் என்றவாறு தர்மத்தின் இயல்புகள் விரித்துரைக் கப்பட்டன. வருணப்பாகுபாட்டுக்குரிய தர்மங்கள் இந்துக் கல்வியில் விளக்கப்பட்டமை, சமூக நிரலமைப்பைக் கட்டிக் காக்கும் கல்விச் செயல் முறையாக அமைந்தது.
பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்ற சமூக வகுப்பினருக்குரிய தனித்துவமான கடமைகள் இந்துக்கல்வி மரபில் விளக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு சமூக வகுப்பினருக்குமுரிய அறிகைக்கட்டமைப்பு (COGNITIVE MAKEUP) குணங்கள் எனவும், அவர்களுக்குரிய தொழிற்பாடுகள் செயல்கள் அல்லது கர்ம எனவும் அழைக்கப்பட்டன.
தர்ம எண்ணக்கருவின் பிறிதொரு பரிமாணம் அது நான்கு வகையான ஆச்சிரம அறிகையுடன் தொடர்பு படுத்தப்பட்டிருந்தமை யாகும். உடற் சுகத்தை நோக்காது கருமமே கண்ணாக இருந்து கற்றலே பிரமச்சாரிகளுக்குரிய தர்மமாயிற்று. இல்வாழ்வான் தியாகமும் சேவையும் கொண்டவனாக மனித குலத்தைப் போசித்து வளர்த்தல்
11

Page 11
தர்மமாயிற்று. உணவு, உடை மற்றும் சுகங்களைத் துறந்து இறையருளைத் தேடுதல் வானப்பிரஸ்தனுடையை தர்மமாக வலியுறுத் தப்பட்டது. இல்வாழ்க்கை நிலையிலிருந்து சன்னியாச நிலைக்கு மாறுதல் இவ்வகை ஆச்சிரமத்தின் தர்ம இலக்கு ஆயிற்று உலகியலிலிருந்து விடுபடல் சன்னியாச நிலைக்குரிய தர்மமாகக் கருதப்பட்டது. பழுதிலாச்சிந்தனையும், பழுதிலாச் செயலும் சன்னியாசிக்குரிய இலக்குகளாக வலியுறுத்தப்பட்டது. ஆச்சிரமத்தின் உயர்ந்த இலக்காக வீடுபேறு அமைந்தது.
கல்வி என்பது வாழ்க்கை தழுவிய அனைத்து அனுபவங்களையும் குறித்து நிற்கின்றது. இந்துக்கல்வி மரபின் உன்னத இலக்காக அமைவது வீடு பேற்றினைப் பெற்றுக் கொள்வதாகும். அசத்திலிருந்து விடுபட்டுச் சத்துப் பொருளை நாடுதலும், இருளில் இருந்து ஒளிக்கு நகர்த்தலும், இறப்பிலிருந்து இறவாமைக்குச் செல்லுதலும் இந்து மரபில் வலியுத்தப்பட்டுள்ளது.
இந்து மரபில் கல்விச் சிந்தனைகள் பின்வருமாறு தொகுத்துக் கூறத்தக்கவை.
(அ) தெய்வீக உணர்வுகளை மாணவர் உள்ளங்களிலே நிலை
நிறுத்துதல்
(ஆ) அவற்றைத் தொடர்ந்து பராமரித்தல்
(இ) தர்மத்தை நிலை நிறுத்தும் சிந்தனைகளையும்
செயல்களையும் பின்பற்றச் செய்தல்
(FF) தர்மங்களால் வளப்படுத்தப்படும் மனவெழுச்சிகளை
(EMOTIONS) வளர்த்தெடுத்தல்.
(உ) அறியாமையில் இருந்து மீண்டெழ தர்ம ஒளியைக்
காட்டுதல்.
(ஊ) உய்வதற்கும் உயர்வதற்கும் கல்வியைத்துணையாகக்
கொள்ளல்.
12.

(எ) தெய்விக உணர்வுக்கும் தெய்விக நிராகரிப்பு
உணர்வுக்குமிடையே நிகழும் உள முரண்பாட்டை தர்மம் பற்றிய அறிவே தீர்த்துவைப்பதை உணர்த்துதல்.
இந்து மரபில் கல்வியும் கல்வி சார் ஒழுக்கங்களும், இலட்சியங்களும் வாழ்வியல் சார்ந்த நெறி முறைகளும் என்றவாறான விரி நிலைப் பண்புகள் அனைத்தும் தர்மம் என்ற எண்ணக் கருவால் புலப்படுத்தப்பட்டது. சுமூக வாழ்க்கையும், தொழில் வாழ்க்கையையும் நெறிப்படுத்தும் கருத்தியல்களை இந்து சமயம் தாங்கிநின்றது. அக்கருத்தியல் சுய நிறைவு ஒளியையும், உள்ளார்ந்த அகநிலைத் தேடல் களையும் வலியுறுத்தியது. நடப்பியல் நிலையில் கல்வியைப் பொருத்தமான குருவின் வழியாகப் பெறவேண்டும் என்பது மரபாயிற்று, சமூக அடித்தளத்தின் மேலமைந்த வடிவமாக (SUPER STRUCTURE) அமையும் கல்வி சமூகத்தைப் பிரநிதித்துவப் படுத்துவதாயும், உற்பத்தி நடவடிக்கைகளை மீள் உற்பத்தி செய்வதாகவும் அமையும் நிலையை இந்துக்கல்வி மரபுடன் தொடர்புபடுத்திப் பார்க்கும் பொழுது கல்வியின் செயல்வடிவமாகிய கலைத்திட்டம், தெய்விக இலக்குகளையும், உலகியல் சார்ந்த கைவினை அறிவினையும் ஏககாலத்தில் உள்ளடக்கிநின்றது. மேற்கூறிய கருத்துக்களின் அடிப்படையில் இந்துக்கல்வி மரபுக்குரிய கலைத்திட்டத்தை (CURRICULUM) விளங்கிக்கொள்ள முடியும்.
இருக்குவேதக்கல்வி மரபில், ரிசவியின் இல்லவிபரணம் பின்வருமாறு அமைந்துள்ளது. கல்விநிலையில் மனித இயல்புகளுக்கு ஏற்றவாறு வெவ்வேறு உளப்பாங்கும், வெவ்வேறு இயல்புகளும் காணப்படும். "உடைந்த பொருள்களை மரவேலை செய்பவர் நோக்குவார். வைத்தியர் நோயாளியை நோக்குவார், பிராமணர் தியாகம் (சன்வந்தனம்) செய்பவரை நோக்குவார்”, “நான் ஒரு கவிஞன், எனது தந்தையார் ஒரு வைத்தியர், எனது தாயார் தானியங்கள் அரைப்பவர்”.
கல்வி கற்கும் பிரமச்சாரி பிச்சை எடுத்தலிலும் ஈடுபட வேண்டும் என விதிக்கப்பட்டிருந்தமை, ஒருவித உளப்பயிற்சி யாகவும்,
மனவெழுச்சிப்பயிற்சியாகவும், சமூகப் பயிற்சியாகவும், உளவியல் நிலைப்பட்ட இசைவாக்கப் பயிற்சியாகவும் அமைந்த தென்று கொள்ள
13

Page 12
இடமுண்டு. இத்தகைய ஒரு பயிற்சி தொழில் களின் மகத்துவத்தை உணர்த்தும் கல்விச்செயற்பாடாகவும் அமைந்தது.
சமூகத்தின் பரிணாம வளர்ச்சி தொழிற் பன்முகப் பாடுகளின் வளர்ச்சியையும், தொழிற்பிரிவின் வளர்ச்சியையும் உருவாக்கிய வண்ணமிருக்கும். சமூக வளர்ச்சியைத் தழுவிச் செல்லும் கல்வி பாடங்களின் பெருக்கத்தையும் சமாந்தரமாக ஏற்படுத்திய வண்ண மிருக்கும். நாரதர் சனத் குமாரருக்கு விண்ணப்பிக்கும் பொழுது, தாம் பின்வரும் பாடங்களைக் கற்றதாகக் குறிப்பிட்டுள்ளமை பல்வேறு அனுபவங்களைத் தாங்கிய பாட ஏற்பாட்டு முறைமையைப் புலப்படுத்து கின்றது. இருக்குவேதம், யசுர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம், ஐந்தாம் வேதமாகிய இதிகாச புராணங்கள், இலக்கணம், உயிரியல், வருகுறி விளம்பியியல் (DIVINATION), தருக்கம், அரசியல், வணக்க முறைமைசடங்கு முறைமை, யாப்பு, மாயஉருவியல் (NECROMANEY), போரியல், வானியல், சர்ப்ப அறிவியல், நுண்கலைகள், இசை, நடனம்
சமூக வளர்ச்சியின் போது பொருள் நிலைப்பட்ட நிரலாக்கம் (HIERARCHY) தோன்றிய நிலையில் நிரலாக்கத்தின் அடிநிலை மாந்தருக்குரிய கல்விச் செயற்பாடுகள் தொழில் சார் அனுபவங்களைத் தழுவியும் சுருக்கிக் கொடுக்கும் செயற்பாடுகள் தழுவியும் வளரலாயின. இந்துக் கல்வி மரபில் இவ்வாறு சுருக்கிக்துக் கொடுத்தல் சூத்திரமாக்கற் செயற்பாட்டினால் புலப்படுத்தப்பட்டது. புதியவற்றை சாராம்சமாக்குதலே சூத்திரமாக்கலின் சிறப்பார்ந்த தொழிற்பாடாயிற்று.
இந்துக் கல்வி வளர்ச்சியில் ஏற்பட்ட பிறிதொரு பண்பு மனுதர்ம சாஸ்திரத்தில் குறிப்பிடப்படும், "இரகசியம்’ என்ற எண்ணக் கருவாகும். தனியுரிமை நிலைப்பட்ட சமூகவளர்ச்சியில் அறிவைத் தனியுரிமையாக்கலின் வெளிப்பாடாக "இரகசியம்’ என்ற செயற்பாடு அமைந்தது. குறிப்பட்ட சிலருக்கே ஆழ்ந்த கருத்துக்களையும் விளக்கங்களையும், நேர்வுகளையும் வழங்குதல் இரகசியத்தினுள் அமைந்தது.
சமூகத்தின் பன் முகப்பாடுகளுக்கேற்றவாறு அறிவின்
பன்முகப்பாடுகள் நிகழ ஆசிரியத் தொகுதியிலும் பன்முக்ப்பாடுகள், (PLURALITY) நிகழ்ந்தமை இந்துக்கல்வி மரபில் குறித்துரைக்கத்
14.

தக்க பிறிதொரு பண்பாக அமைந்தது. அத்துடன் ஆசிரியரது பன் முகப்பாடு ‘உபாத்தியாய' என்ற எண்ணக்கருவாலும் விரித்துரைக்கத் தக்கது பணம் பெறாது கற்பித்தோர் "ஆச்சார்யா” எனவும் பணம் பெற்றுக்கற்பித்தோர் ‘உபாத்தியாய' எனவும் அழைக்கப்பட்டனர்.
இந்துக் கல்வி வளர்ச்சியில் ஏற்பட்ட பிறிதொரு பண்பு, சிறப்பு நிலை (SPECIALISATION) சார்ந்த பாடங்கள் என்ற வகையில் சிறப்புத்தேர்ச்சிகள் வெளியரும்பியநிலையாகும். பாடங்களின் எண்ணளவிலும் அதிகரிப்பு ஏற்பட்டது. பண்பளவிலும் ஆழ்ந்த போக்குகள் ஏற்படத்தொடங்கின. இவ்வாறு ஏற்பட்ட புதிய வளர்ச்சிகளும் தர்மத்தைத் தழுவிநின்றன.
கல்வியின் முக்கியத்துவம் சமூகத்தில் ஆழ்ந்து வேர் பதிக்கத்தொடங்க உபநயனம் என்பது ஆழ்ந்த பொருண்மை கொண்ட செயற்பாடு ஆயிற்று. துாய்மைப்படுத்தல், அறநிலையிலும், ஒழுக்க நிலையிலும், தெய்வீக நிலையிலும் மேலோங்கச்செய்தல் என்றவாறு உபநயனத்துக்கு விளக்கங்கள் தரப்பட்டன. உபநயனத்தை இரண்டாவது பிறப்பென்றும், விளக்குவர்.
இயற்கையான பிறப்பிலும், மேலோங்கிய, உயர்ந்ததான, தூய்மை யான பிறப்பாக அமைகின்றதென்றும் மனுவினால் விளக்கப்பட்டுள்ளது. அதாவது, கல்வியை வரன்முறையாகக் கற்கத் தொடங்குதல் ஒரு புதிய பிறப்பின் ஆரம்பம் என்பது இந்துக் கல்வி மரபில் வலியுறுத்தப்பட்டது.
இந்துக் கல்வி மரபின் வளர்ச்சியானது சொல் சார்ந்த கற்றல் கற்பித்தல் நுட்பவியல்களிலும் பன்முகமான விரிவுகளை ஏற்படுத்தியது.
960)6) LIT660:
(அ) சொற்களை நிதானித்துக் கேட்டல்
(அத்யாயன) (ஆ) சொற்களில் பொதிந்துள்ள
கருத்துக்களைஅவதானித்தல் (சப்த) (இ) பொதுமையாக்கற் காரணங் காணல்
(ஊக)
15

Page 13
(FF) உறுதிப்படுத்தல் (உ) செயற்படுத்துதல் (தன)
ஆச்சாரியார் வழியாகவும், தனது நுண்மதியாற்றலைப் பயன்படுத்தியும், நண்பர்களின் உதவியைப் பயன்படுத்தியும் அனுபவங் களைத் துணைக் கொண்டும் கற்றல்.
இந்துக் கல்வி மரபில் தர்மத்தின் வியாபகம் அர்த்த என்ற பொருள் சார் நலங்களிலும், காம என்ற இன்ப நுகர்ச்சிக் கோலங்களிலும் விரவி நின்றது. தர்மவழி வாழ்தல் இரு பெரும் காவியங்களான இராமாயணத்திலும், மகாபாரதத்திலும் எடுத்துக் கூறப் பட்டுள்ளது. இராமர், சீதை, தருமர் முதலியோர் தர்மத்தின் இலட்சிய வடிவினராகக் காட்டப்பட்டு வரன் முறையான கல்வி வழியாகவும் வரன் முறைசாராக் கல்வி வாயிலாகவும் அறிவுக் கையளிப்பு (TRANSMISSION OF KNOWLEDGE) இந்துக் கல்வி மரபில் மேற்கொள்ளப்படுகின்றது. தர்மமே இறுதியில் வெற்றி கொள்ளல் என்பதும் இரு பெரும் காவியங்களினதும் சாராம்சமாகத் தரப்படு கின்றது.
இந்துக் கல்வி மரபில் தர்மமே அழகென்றும், வீடு பேற்றினுக்கு வழி வகுக்கின்றதென்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. மனிதரால் உருவாக்கப்படும் கேடுகளில் இருந்து மனிதரைக் காப்பாற்றுவதற்கும் தர்மமே துணை நிற்கின்றது.
மனித இருப்புக்குத் தர்மத்தை அடிப்படையாகக் கொள்ளல் இந்துக்கல்வி மரபில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்துக் கல்வி மரபில் ஆயகலைகள் அறுபத்து நான்கு என வகுக்கப்பட்டன. இராமாயணம், மகாபாரதம் போன்ற காவியங்களில் இவை பற்றிய செய்திகள் பரக்கக் காணப்படுகின்றன. காமசூத்திரம், ஆயகலைகள் அறுபத்து நான்கினையும் பட்டியலிட்டுக்காட்டுகின்றது. ஆயகலைகளைக் கற்றலிலும் ஆற்றுகை செய்தலிலும் தர்ம நெறி பின்பற்றப்பட வேண்டுமென்பதும் இந்துக் கல்வி மரபில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
16

காலவோட்டத்தில் தர்மம் பற்றிய கருத்துக்களில் வெவ்வேறு வியாக்கியானங்கள் தரப்பட்டாலும், தர்ம அடிப் படைகள் இந்துமதக் கோட்பாட்டில் நீடித்து நிற்கின்றன. தர்ம அழகியலே இந்து கல்வியில் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டுள்ளது.
17

Page 14
G5}u ១rpus) យou Θδgrσείο (359 π.ΧΩκΌ6
இந்திய மரபில் அழகியல் இன்பம் ரசம்’ என்ற எண்ணக் கருவால் விளக்கப்படலாயிற்று. இந்த எண்ணக் கருவின் ஆரம்பம் இருக்கு வேதமாகும். இருக்கு வேதத்தில் ரசம் என்பது சோம என்ற தாவரத்திலிருந்து பெறப்பட்ட பானத்தைக் குறித்து நின்றது. பல்வேறு சுவைகளை உள்ளடக்கிய பண்பு ரசம் என்ற எண்ணக் கருவின் வளர்ச்சிக்குத் துணை நின்றது.
ரசத்தின் ፵r6õ)6)! வேள்விகளோடும் சடங்குகளோடும், தியானத்தோடும் பண்டைய ஆடல்களோடும் ஒன்றிணைந்து உயர்ந்த நிலையான அழகியல் இன்பத்தை வருவித்தது. தன்னொளி காணலுக்கும் அது துணை நின்றது.
ரசத்தை கலைவடிவ அமைப்புக்குள் கொண்டு வந்த முன்னோடிகளுள் வான்மீகி விதந்து குறிப்பிடத்தக்கவர். கற்பனைச் சிறப்பு, உவமை, உருவகங்கள், வருணனைகள், கதையமைப்பு, முதலியவற்றால் வான்மீகியின் இராமாயணம் பல்வேறு சுவைகளைத் தூண்டின. இந்திய மரபில் வரன்முறைக் கல்வியிலும், வரன்முறை சாராக் கல்வியிலும் இராமாயணம் தனித்துவமான இடத்தைப் பெற்று வருகின்றது.
ரசக்கோட்பாட்டின் விரிவான வளர்ச்சியை பரதரின் நாட்டிய சாஸ்திரத்தில் காணமுடியும். நாட்டிய சாஸ்திரம் மிக தொண்மையான
18

நூல் என்று கருதப்பட்டாலும், சமஸ்கிருத காவியங்களின் வளரச்சியின் பின்னரே அது தோன்றியிருத்தல் வேண்டும். நாடகங் களின் மனவெழுச்சி விளைவுகளைத் துல்லியமாக இனங்காட்டக் கூடியவாறு ரசக்கோட்பாட்டினை பரதமுனிவர் முன்வைத்தார். (பொதுவாக இந்திய மரபில் நுண்மதியாளர்கள் முனிவர் எனப்பட லாயினர்) சாகுந்தல நாடகம் ரசவேறுபாடுகளை எடுத்துக்காட்டவல்ல கலைக் கட்டமைப்பைக் கொண்டிருந்தது. ரசப்பாகுபாடுகளைப் பரதமுனிவர் பின்வருமாறு வகைப்படுத்தினார்.
1. சிருங்காரம் அல்லது காதல்
2. ஹாஸ்யம் அல்லது நகைச்சுவை
3. கருணை அல்லது இரக்கம்
4. ருத்திரம் அல்லது கோபம்
5. வீரம் அல்லது திண்டிறல்
6. பயானகம் அல்லது அச்சம்
7. பீபஸ்தம் அல்லது வெறுப்பு
8. அற்புதம் அல்லது வியப்பு
மேற்கூறிய ரசங்கள் வெளிப்படும் பொழுது உடற் கோலங்களில் நிகழும் மாற்றங்களையும் பரதமுனிவர் விளக்கினார். ரசங்களுக்கும் அபினயங்களுக்கும் உள்ள தொடர்புகள் இதன் வளரச்சியை மேலும் தெளிவுபடுத்தின. உடலால், உரையால், உடையால், ரசவெளிப்பாடுகள் துலக்கமடைந்து நிற்கும்.
சமூகவளர்ச்சி, கல்விவளர்ச்சி, ரசக்கோட்பாட்டின் வளர்ச்சி முதலியவற்றுக்கிடையே பல்வேறு இணைப்புக்களைக் காண முடியும்.
தொன்மையான வேட்டையாடல், காட்டுவளம் நுகர்தல், மந்தைமேய்த்தல், பயிர்த்தொழில் முதலியவற்றிலிருந்து விசாலித்த 6615 Tu
19

Page 15
நடவடிக்கைகள் வளர்ச்சியடையவும் வர்த்தக நடவடிக்கைகள் விரிவடையவும், நிலைபேறுகொண்ட அரசுகளின் வளர்ச்சியும் பன்முகமான உணர்வுகளை மனிதமனங்களிலே தோற்றுவித்தன. அத்தகை நேர், எதிர் மனவெழுச்சிகளும் சிந்தனையாளர்களின் அறிகை கட்டமைப்புக்குள் கொண்டுவரப்பட்டன.
அறிவு வளர்ச்சியின்போது ரசக்கோட்பாட்டுக்கு மேலும் மேலும் விளக்கங்களும், விரிவுகளும் வழங்கப்படலாயின. அலங்காரம், குணம் முதலாம் துறைகள் பற்றிய ஆய்வுகள் சிறப்படையத் தொடங்கின. இலக்கியத்திறனாய்வை முன்னெடுப்பதற்கு அலங்காரகோட்பாடும், குணக் கோட்பாடும் துணை நின்றன.
அவற்றைத் தொடர்ந்து றிதி பற்றிய எண்ணக்கரு வாமன என்பவரால் வளர்த்தெடுக்கப்பட்டது. அழகே ஆனந்தம் என்ற கருத்து றிதியால் வலியுறுத்தப்பட்டது. கவிதை நடையியல் மீது கவனம் செலுத்தப்படுவதற்கு றிதி துணைநின்றது. பரதருடைய நாட்டிய சாஸ்திரத்துக்கு உரையெழுதிய உத்பாதர் ரசக்கோட் பாட்டினை மேலும் விபரிக்கலானார். ரசக்கோட்பாட்டின் வளர்ச்சி எட்டு ரசங்களில் இருந்து ஒன்பது ரசங்கள் என்ற விரிவை ஏற்படுத்தியது. சாந்தமும் ஒரு ரசமாகக் கொள்ளப்படலாயிற்று. ரசம் எவ்வாறு உண்டாகின்றது, அவற்றின் வெளிப்பாடுகள் எவ்வாறு வீச்சுப் பெறுகின்றன என்பன பற்றிய ஆய்வுகளும் கருத்து மோதல்களும் இந்திய அழகியற்கல்வியில் தொடர்ந்து வளர்ச்சி பெறலாயின.
தவனி
தவனி பற்றிய எண்ணக்கருவும் இந்திய அழகியலில் விதந்து பேசப்படலாயிற்று. ஆனந்தவரதனாவால் அறிமுகப்படுத்தப்பட்ட தவனி கோட்பாடு இலக்கண ஆசிரியர்களாற் பயன்படுத்தப்பட்ட தவனி என்ற எண்ணக்கருவை அடியொற்றி எழுந்தது. ஒலி எழுப்பும் செயற்பாட்டோடு தவனி தொடர்புபட்டு நின்றது. ஒலித்திரள் சொல்லாகி, மொழியாகி அகிலப்பண்பு பெறுகின்றது. கேட்போர் உணர்வுகொள்ளும் நிலையில் சொல்லையும் பொருளையும் குறிக்கும் இலக்கண ஆசிரியர் தவனி என்ற சொல்லைப் பயன்படுத்தினர். சொற்கள் கருத்தையும் சூழமைவுக்குரிய பொருளையும் தருவதோடு நின்றுவிடாது
20

கேட்போரிடத்து உணர்வுகளையும் தூண்டி விடுகின்றது. அழகியல் சார்ந்த தொடர் பாடலில் உணர்வைத் தூண்டும் நிலை விதந்து பேசப்படுகின்றது.
21

Page 16
தமிழ் மரபில் அழகியற் 4 கல்விச் சிந்தனைகள்
அழகியற் கல்விச் சிந்தனைகளைப் பொறுத்தவரை உலகளாவிய பொதுத்தன்மைகள் காணப்பட்டாலும், குறித்த பண்பாடுகளை அடியொற்றிய தனித்துவமான இயல்புகளும் காணப்படுகின்றன. இவ்வகையில் தமிழ் மக்களிடத்துக் காணப்படும். நீண்ட இலக்கிய மரபுகளின் வழியாக முகிழ்த்து நிற்கும் அழகியற் கல்விச் சிந்தனைகளை நோக்கும் பொழுது குறித்துரைக்கக் கூடிய தனித்துவமான பரிமாணங்களைக் கண்டறியக் கூடியதாகவுள்ளது.
பழந்தமிழகத்தில் நிலவிய ‘முத்தமிழ்’ என்ற பாகுபாடு அறிகைக் கட்டமைப்பின் வளர்ச்சியைப் புலப்படுத்தும் முத்தமிழ்க் கல்வியும் வித்தகக் கல்வியும் காட்டுதற்கு சிலப்பதிகாரம் அடியார்க்கு நல்லார் உரை அறிவு வளர்ச்சி யோடு நிகழ்ந்த ஓர் எடுத்துக் காட்டாகும். இயல், இசை, நாடகம் என முத்தமிழ் விளக்கப்பட்டாலும், இவை ஒவ் வொரு பிரிவினுள்ளும் அடங்கி நின்ற அழகியற் கருத்துக்கள் ஆழ்ந்து நோக்கப் பெற்றன. இயற்றமிழ் இலக்கணங்கள் எழுத்திலக் கணம், சொல்லிலக்கணம், பொருளிலக்கணம், யாப்பிலக்கணம் அணியி லக்கணமென ஐந்து வகைப்படுத்தப்பட்ட வேளை அணியிலக்கணம் நேரடியாக அழகு பற்றிய விபரணங்களைக் கொண்டிருந்தது. அணியியல், தண்டியலங்காரம், குவலயாநந்தம், மாறனலங்காரம்
22

முதலியவற்றில் தமிழ் மரபிலும், வடமொழி மரபிலும் காணப்பெற்ற அணியழகியலைத் தொகுத்து விளக்குகின்றது.
அழகியலோடு இசை நேரடியாகத் தொடர்புபட்டிருத்தல் உலகளாவிய பொதுப் பண்பு. பெருநாரை, பெருங்குருகு, இசை நுணுக்கம், பஞ்ச மரபு, தாள சமுத்திரம, சச்சபுடவெண்பா, இந்திர காளியம, பதினாறு படலம், தாளவகை யோத்து இசைத்தமிழ்ச் செய்யுட்டுறைக் கோவை முதலாகப் பல இசைத் தமிழ் நூல்கள் இருந்தனவென்றும் இவற்றிற் சிலவற்றின் சூத்திரங்கள் மாத்திரமே இன்று கிடைக்கப்பெற்றுள்ளன என்றும் கூறுவர். இன்றைய கர்நாடக இசையில் குறிக்கப் பெறும் சுரவரிசைகளாகிய சட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்தியமம், பஞ்சமம், தைவதம், நிசாதம் முதலியவை தமிழ் மரபில் முறையே குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளி, தாரம் என அழைக்கப்பட்டது. சுரங்கள் நரம்புகள் என தமிழ் மரபிலே குறிக்கப் பட்டது. ஏழு சுரங்களும் அமையப்பெற்ற இசை நிறை நரம்பு இசை எனப்பட்டது. இதை கர்நாடக இசையில் சம்பூரண இராகங்கள் எனவும் மேளகர்த்தாக்கள் எனவும் குறித்துரைப்பர். ஏழிலும் குறைந்த சுரங்களை உடைய இசை குறை நரம்பிசை எனவும் அழைக்கப் பட்டது. கர்நாடக இசையில் இது ஜன்னிய ராகங்கள் எனப்படும். இவை பற்றிய விளக்கம் திவாகரத்திற் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
“நிறை நரம் பிற்றேபண்ணென லாகும்
குறை நரம் பிற்றேதிறமெனப்படும்”
ஐவகை நில வேறுபாடுகளை அடிப்படையாகக் கொண்ட தொழில் வேறுபாடுகளும் அவற்றின் அடிப்படையில் அழகியல் நோக்கு வேறுபடலும், தமிழ் மரபிலே காணப்படுகின்றது. ஐந்திணைக்குமுரிய பண்கள் ஒழுங்கு படுத்தப்பட்டன. பகற்பொழுது இராப்பொழுது ஆகிய வற்றுக்கு ஏற்ப அழகு நுகர்ச்சி மாறுபடல், பகற்பண்கள், இராப்பண்கள் என்ற வேறுபாட்டினால் அறிந்து கொள்ள முடியும்.
இசைவடிவங்களைத்தாளவடிவமைப்புக்களுடன் இணைத்து
செவ்விய இசைக்கட்டமைப்புக்களை ஏற்படுத்துதலும் தமிழ் மரபிலே காணப்பட்டது. செந்துறை, வெண்டுறை, பெருந்தேவபாணி,
23

Page 17
சிறுதேவபாணி, சிந்து, திரிபதை, சவலை, சமபாதவிருந்தம் முதலியவை தாளக்கட்ட அமைப்புக்களுடன் இணைந்த இசை வடிவங்களாயின.
இசைக்கருவிகள் நிலைப்பட்ட அழகுணர்ச்சியும் தமிழ் மரபில் விளக்கப்பட்டுள்ளது. யாழ், வேய்ங்குழல், முழவு, ஆகுளி, பாண்டில், கோடு, வங்கியம், சிறுபறை, கஞ்சதாளம், கொம்பு, நெடுவங்கியம், குறுந்தும்பு, தட்டை, சல்லி, பதலை முதலாம் இசைக்கருவிகள் பற்றிய செய்திகள் காணப் படுகின்றன. இசைவல்லவர்கள் பாணர், கண்ணகனார், கண்ணனாகர், கேசவனார், நந்தநாகனார், நல்லச்சுதனார், நன்னாகனார், பித்தாமத்தர், பெட்டனாகனார் என்றவாறு அழைக்கப்பட்டனர்.
நாடக வழியான அழகிய கருத்துக்களும் தமிழ் மரபிலே காணப்பட்டது. அகத்தியம், பரதம், முறுவல், சயந்தம், குணநூல், செயற்றியம், பரதசேனாபதீயம், மதிவாணர் நாடக தமிழ்நூல் முதலிய பல நாடக நூல்கள் வழக்கில் இருந்தன. வரன் முறையான கல்விவளர்ச்சியோடும், சமூக நியமங்களோடும் அழகியல் சார்ந்த எழுத்தாக்கங்கள் தோன்றுதல் உலகளாவிய முறையிலே காணப்படும் ஒரு பொதுத் தோற்றப்பாடாகும்.
தமிழ் மரபில் திணைமரபு, தழுவியதாக சமூக நியமங்கள் அமைந்தன. ஐவகை நிலம் தழுவிய சமூக வாழ்க்கையும் அவற்றை அடியொற்றிய அனுபவங்களும் அழகியல் ஆக்கத்தின் களமாக அமைந்தன. சமூக அசை வியக்கத்தின் பெறுபேறாக ஒருதிணைப் பொருளை மற்றொரு திணையில் கூறும் இயல்பும் அழகியல் ஆக்கமாகக் கருதப்பட்டது. ‘உருப்பொருள் அல்லன மயங்கவும் பெறுமே" என தொல்காப்பியம் குறிப்பிட்டுள்ளது.
திணையும் திணைமாற்றங்களின் பின்புலத்தில் உருவாகிய பாத்திரங்களின் உணர்வுகளை வெளிப்படுத்துதலும் அழகியற் கல்வியில் இடம்பெற்றன. தலைவன், தலைவி, தோழன், தோழி, நற்றாய், செவிலித்தாய், கண்டோர், பாணர், விறலியர், புலவர், முதலாம் பாத்திரங்கள் நேரடியாகக் கூறும் அனுபவங்களும், கூறக்கேட்டு முன்மொழிந்த அனுபவங்களும் அழகென எழுந்தன.
24

சொல்லாலும், பொருளாலும், உவமையாலும், உருவகத்தாலும், கவிதைக் கட்டமைப்பாலும் அழகு பற்றிய கருத்துக்களின் வெளிப்பாடு வரன் முறைக் கல்வியோடு தமிழகத்தில் மேம்பாடு கொள்ளத் தொடங்கியது. அகம், புறம் என்ற வேறுபாட்டுக்கும் கல்வி வளர்ச்சிக்கும் நேரடியான தொடர்பு உண்டு.
தன்னிலைப்பட்ட (subjective) அனுபவங்கள் அறிவு வளர்ச்சியின் போது புறநிலைப்படுத்திப்(Objective) பார்க்க வேண்டிய தேவை எழ அகம் என்ற பாகுபாடும், புறம் என்ற பாகுபாடும் தமிழ் மரபிலே தோன்றின. தொல்காப்பிய நூலமைப்பு வரன் முறையான கல்விச்செயல்முறையின் வெளிப்பாடாகவுள்ளது. ஒரு வருக்குமட்டுமுரிய தனிநிலை அனுபவங்கள் அகத்தில் அடங்கி யிருந்தன. அகப்பாடல் அழகியலின் வளர்ச்சியானது பிற்காலத்தைய சமய இலக்கியங்களில் மேலும் அகவயமெய்தி வளரலாயிற்று.
அறிவுத்துறையில் நிகழும் வளர்ச்சி சிக்கலான சமூக நிகழ்ச்சிகளோடு தொடர்புபட்டு நிற்றல் இயல்பு. அறிவின் வளர்ச்சியில் தமிழ் மரபில் தோன்றிய அழகியற் கட்டமைப்புக் காவியங்கள் அமைந்தன. தமிழகத்தில் இடம்பெற்ற வட மொழிக்கல்வியின் செல்வாக்கினால் தமிழர்களது அழகியற் கல்விச்சிந்தனைகள் பரந்தும், அகல் விரிபண்பு கொண்டும் வளர்ச்சியுற்றன. இப்பண்புகளைத் தண்டியலங்காரம் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது. மொழியின் அழகை விளக்கும் அணியிலக்கணம் இதற்கு உதாரணமாகின்றது. காவிய தரிசனம் என்னும் வடமொழி நூலின் பெயர்ப்பாக தண்டியலங் காரம் அமைந்தது. இந்நூல் பொதுவியல், பொருளணியியல், சொல்லணியியல் என இயல்களாக அமைக்கப்பட்டுள்ளது. பொது வியலில் செய்யுள் வகையும், செய்யுள் நெறியும் விளக்கப்படுகின்றன. செய்யுள் நெறியில் செறிவு, தெளிவு, சமநிலை, இன்பம்,ஒழுகிசை, உதாரம், உய்தலின் பொருண்கை, காந்தம் முதலியவை குறிப்பிடப் பட்டுள்ளன.
பொருளணியியலில் தன்மையணி, உவமையணி, உருவக வணி, தீவகவணி, பின்வருநிலையணி, முன்ன விலக்கணி, வேற்றுப்பொருள் வைப்பணி, வேற்றுமையணி, சிபாவனையணி, ஒட்டணி, அதிசயவணி, தற்குறிப்பேற்றவணி, ஏதுவணி, நுட்பவணி,
25

Page 18
இலேசவணி (புகழ்தலும், இகழ்தலும்)நிரநிறையணி, ஆர்வமொழியணி, சுவையணி, தன்மேம்பாட்டு உரையணி, சமாகிதவணி, உதாத்தவணி, அவநுதியணி, சிலேடையணி, விசேடவணி, ஒப்புமைக்கூட்டவணி, விரோத வணி, மாறுபடுபுகழ்நிலையணி, புகழாப் புகழ்ச்சியணி, நிதரிசன வணி, புணர்நிலையணி, பரிவருத்தனையணி, சங்கீரண வணி, பாவிகவணி முதலியவை விபரிக்கப்பட்டுள்ளன.
சொல்லணியில் மடக்கு இலக்கணமும், சித்திரகவி அமைப்பும் வழுக்களின் வகையும், மலைவும் விளக்கப்பட்டு உள்ளன.
நிலமானிய சமூகவமைப்பில் நிலம் சார்ந்த சொத்துடை யோரும் பண்ணைக் கூலிகளும் என்றவாறு சமூகத்தில் இருநிலைத் துருவப்பாடுகள் வளரலாயின. சொத்துடைய உயர்ந்தோருக்குரிய அழகியற் கல்வியும் சொத்திலாதார்க்குரியஅழகியற் கல்வி அனுபவங் களும் வேறு பிரிந்து வளரலாயின. சொத்திலாதார்க்குரியஅழகியற் கல்வி நாட்டார் இலக்கியங்கள் வழியாகவும், நாட்டார் கலைகள் வாயிலாகவும் முன்னெடுக்கப்படலாயிற்று.
நிலமுடையோருக்குரிய கல்வியில் நிகழ்ந்த ஒருவித செயற்கை நிலையானதும் நுட்பவகையால் அழகுணர் தலானதுமான செயற்பாட்டினை தண்டியலங்காரம் குறிப்பிடும். இதனை மடக்கு, சித்திரகவி முதலிய வடிவங்கள் புலப்படுத்தும். “எழுத்தின் கூட்டமிடை பிறிதின்றியும் பெயர்த்தும் வேறு பொருடரின் மடக் கெனும் பெயர்த்தே”
என மடக்கை தண்டியலங்காரம் அறிமுகம் செய்கின்றது. அதாவது, எழுத்துக்களின் தொகுதியானது பிறவெழுத்தானும், சொல்லானும், இடையிடாதும், இடையிட்டும் வந்து பெயர்த்தும் வேறு பொருளைத் தருவது மடக்கு என்று கொள்ளப்படுகின்றது. இங்கு வேறு பொருளைத் தருதலுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. ஆனால் சாமானியர்களுக்குரிய நாட்டார் இலக்கியங் களில் நேர்ப்பொருளைத் தருதலே சிறப்பிடம் பெற்றிருக்கும்.
இந்த முரண்பாட்டினை உயர்ந்தோருக்குரிய சித்திர கவி
இலக்கணத்தை ஆராயும் பொழுதும் விளங்கிக் கொள்ளலாம். கோமூத்திரி, கூடசதுக்கம், மாலை மாற்று, எழுத்துவருத்தனம்,
26

நாகபந்தம், வினாவுத்தரம், காதைகாப்பு, கரந்துறைச் செய்யுள், சக்கரம், சுழிகுளம், சருப்பதோபத்திரம், அக்கரச்சுதகம் என சித்திரகவி விளக்கப்பட்டுள்ளது. மாறாக சாமானியங்களின் நாட்டார் கலைகளில் உருவம், வடிவங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப் படாது உணர்ச்சி களுக்கே முன்னுரிமை தரப்பட்டன.
இனக்குழுமங்களை இனங்காணத்தக்க சிறப்பார்ந்த கூறுகளுள் ஒன்றாக விளங்கும் ஆடல்கள் பண்பாட்டின் ஆதாரங்களை வெளிப்படுத்தும் குறியீட்டுப்பாங்குடையதாகவும், எதிர்பார்ப்புக்களை முன்னெடுக்கும் இலட்சியப்பாங்குடைய தாகவும் விளங்குகின்றன. பண்பாட்டை அறிந்து கொள்வதற்கும், கற்றுக் கொள்வதற்கும், பங்கீடு செய்து பகிர்ந்து கொள்வதற்கும் குறித்த பண்பாட்டுக்குரிய ஆடல்கள்
அழகியல் வடிவங்களாகவும் ஆற்றுகை வடிவங்களாகவும் அமைகின்றன. பண்பாட்டின் அடி ஆதாரங்களுள் விளங்கும் விழுமியங் 56061T (VALUES) அறிந்து கொள்வதற்கும் கையளிப்பதற்கும்
ஆடல்கள் பயன்படுகின்றன.
பண்பாடு என்பது அடிப்படையில் அறிகையை (COGITION) ஆதாரமாகக் கொண்டது. அறிகை என்பது பல்வேறுதளங்களில் இடையுறவு கொண்டதும், சிக்கலானதும் தொடர்ந்து வளர்ச்சியுறும் பண்பினதாகவும் இருக்கும். அறிகையால் ஆடலும், ஆடலால் அறிகையும் இடைவினை கொள்ளல் பூர்விக பண்பாட்டு இயக்கங்களில் விசை கொண்டிருந்தன.
தமிழர் அழகியற் சிந்தனைகளும், கலையாக்கங்களும், ஆடலும், சமூகக்கட்டமைப்பு, சமூகப்படிமலர்ச்சி முதலிய வற்றை அடியொற்றிய ஆக்கங்களாக அமைந்துள்ளன. தமிழர் தம் அழகியல் ஆற்றுகையில் அறிகை, எழுச்சி, உடலியக்கம் முதலாம் ஆட்சிகளை (DOMAIN) வளர்க்கவும், வலுப்படுத்தவும், வல்ல ஆற்றுகைச் சாதனமாக ஆடற்கலை விளங்கிற்று. அகத்தியம், முறுவல், சயந்தம், குணநூல், செயற்றியம் முதலாம் தொன்மையான நூலாக்கங்களும் அவற்றைத் தொடர்ந்து எழுந்த காவியங்களும், கூத்தநூலும், இலக்கண நூல்களும், சமய இலக்கியங்களும், தமிழர் பண்பாடில் வாழ் வியலோடு இணைந்த ஆடற்கலை வளத்தினைப் பலவாறு விளக்குகின்றன.
27

Page 19
தொன்மையான வாழ்க்கை முறையில் இயற்கையை விளங்க முயற்சித்தலும், அறியாப் பொருள்களை அறியத் துணிதலும், மாயவித்தைகள் வாயிலாக, சடங்குகள் வாயிலாக, முன்னெடுக்கப் பட்ட வேளை ஆடலின் சிறப்பு உணரப்படலாயிற்று. மனித உடலியக்கமும், வேண்டுதற்கேற்ற UlquirT607 அசைவுகளும், நாளாந்த நடைமுறைவாழ்விலும், நாளாந்தஅறிகை வாழ்விலும் (COGNITIVE LIFE) முக்கியத் துவம் பெற, மனித அசைவுகளோடு இணைந்த ஆடல் வாழ்வியலோடு இணைந்த பிரயோகமாயிற்று.
உடலசைவுகளும் அவற்றோடிணைந்த உளச் செயற்பாடு களும் சூழலைத்தன்மயமாக்கிக் (ASSIMLATION) கொள்வதற்கும், புதிய அனுபவங்களை உள்வாங்கி மூளையின் அறிகைஅமைப்பில் தன்அமைவாக்கலை (ACCOMODATION) ஏற்படுத்திக்கொள்வதற்கும் ஆடல்கள் துணைபுரிகின்றன.
உடலசைவுகளே சூழலை விளங்குவதற்குரிய அடிப் படைகளை விளங்குதலை அறிகை உளவியலாளர் சுட்டிக் காட்டி யுள்ளனர்.
தமிழ் மரபில் பாணர், பொருநர், பாடினியர், ஆடுநர், விறலியர், கோடியர், வயிரியர், கூத்தர் முதலியோர் ஆடல் ஆற்றுகையுடன் தொடர்புடையோராய் விளங்கினர். ஆடலின் உலக நிலவரங்களை ஆராயும் பொழுது தமிழகத்துக்கும் உலக நாடுகளின் தொன்மையான நடன இயல்புகளுக்குமிடையே பல்வேறு ஒப்புமைகளைக் காணமுடியும். சமூக சடங்குகளுக்கும் ஆடலுக்குமிடையேயுள்ள தொடர்புகள், சமயத்துக்கும் நடனத்துக்குமிடையேயுள்ள தொடர்புகள் தொன்மங்க ளுக்கும் ஆடல்களுக்குமிடையேயுள்ள தொடர்புகள் முதலியவை உலகளாவிய முறையிலே காணப்படும் பொதுப்பண்புகளாகும்.
இந்நிலையில் ஆடல்கள் உலகமாந்தர் அனைவருக்கு முரிய
பொதுவான உடல்மொழியாக வளர்ந்தெழுதலையும் மனங்கொள்ள வேண்டியுள்ளது.
28

ஆடல் என்பது இலக்குள்ள அறிகையைக் கொண்ட உடல் மொழியை அடிப்படையாகக் கொள்கின்றது. உடல் மொழியில் உடல்சார் குறியீடுகள் சிறப்பார்ந்த இடத்தைப் பெறுகின்றன. இயற்கை சார்ந்த அனுபவங்களில் இருந்து பெறப்பட்ட குறியீடுகள் (NATURAL SYMBOLS), ஒவ்வொருவரும் தத்தமது பட்டறிவின் வாயிலாக உருவாக்கும் குறியீடுகள் (PRIVATE SYMBOLS) சமூக மரபுகள் 615uits, 9 (56. It issuGli (5iif(956ir (TRADITIONAL SYMBOLS) முதலியவை ஆடல் ஆக்கங்களிலே பயன்படுத்தப்படுகின்றன. "ஆடற் கூத்தனோ டவிநயந் தெரிவோர்’ என்ற மணிமேகலைச் செய்தி தமிழகப் பின்புலத்தில் குறியீடுகள் பற்றிய அறிகையைப் புலப்படுத்துகின்றது. குறியீடுகளின் வளர்ச்சி அறிகைக் கோலங்களின் மேம்பாட்டினைப் புலப்படுத்தும்.
எளிமையான குறியீடுகளில் இருந்து சிக்கலான குறியீடுகள் தமிழர் ஆடல் மரபுகளில் வளர்ச்சியுற்றமையைப் பின்னர் காணலாம். பூர்வீக வாழ்வில் வரன் முறை சாராத (NON FORMAL) கல்விச் செயற்பாடுகளுடன் இணைந்த ஆடலானது, பண்பாட்டு வளர்ச்சி யோடு வரன் முறையான கல்விச் செயற்பாடுகளுடன் தழுவி வளரும் போக்கினை சிலம்பு தெளிவாகக் காட்டுகின்றது. நட்டுவனார் ஆடல் வகைகளும் அறிந்திருத்தல் வேண்டும் என வரன்முறைக் கல்வியில் வற்புறுத்தப்படுகின்றது. இதன் விரிவினை பின் வந்த அடியார்க்கு நல்லார் பின்வருமாறு விளக்குகின்றார்.
மாயவனாடும் அல்லி விடையேனாடும் கொட்டி ஆறுமுகன் ஆடும் குடை குன்றெடுத் தோன் ஆடும் குடல், முக்கண்ணன் ஆடும் பாண்டரங்க நெடியோன் ஆடும் துடியாடல் வேல் முருகன் ஆடும் துடியாடல் அயிராணி ஆடும் கடையம் காமன் ஆடும் பேடு துர்க்கை ஆடும் மரக்கால் திருமகள் ஆடும் பாவைக்கூத்து
29

Page 20
முதலியவை நட்டுவனரால் அறிந்திருக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
பூர்வீக அறிகைச் செயற்பாட்டில் தொன்மங்கள் (MYTHS) சிறப்பார்ந்த இடத்தைப் பெற்றன. மனிதரின் பிறப்பு, இறப்பு முதலாம் மர்மங்களைத் துருவுதல், பிரபஞ்சத்தின் இயக்கங்களைத் தேடுதல், ஐம்பொறிகளையும் கடந்த உணர்வு களின் இருப்புப் பற்றிய ஊகங்களை முன்னெடுத்தல் முதலியவற்றில் தொன்மங்கள் சிறப்பார்ந்த இடத்தைப் பெற்றன. நம்பிக்கை கலந்த பழைமையின் அழியா நினைவுகள் தொன்மக் கதைகளிலே உட்பொதிந்துள்ளன. கலை யாக்கத்திற்கும் ஆடலாக்கத்துக்குரிய பல்வகை கருவூலங்கள் தொன்மங்களிலே காணப்படுகின்றன. தமிழகத்தில் வளர்ச்சி பெற்ற ஆடல்களை நோக்கும் பொழுது, சடங்குகள், தொன்மங்கள், ஆடல்கள் என்பவற்றுக்கிடையே பல நிலைகளிலே தொடர்புகள் காணப்படுதல் தெளிவாகத் தெரிகின்றது. உலகப்பரப்பில் இவ்வகையான தொடர்புகளை மானிடவியலாளர் தெளிவாக விளக்கியுள்ளனர்.
சமூகத்தின் பிரதான பண்பாக அமைவது அதன் படி மலர்ச்சியின் (EVOLUTION) போது சிக்கலாகும் தன்மை மேலோங்க லாகும். சங்ககால இலக்கியங்களையும் சிலம்பு மணி மேகலை முதலியவற்றையும் ஒப்பு நோக்கும் பொழுது சமூக வளர்ச்சியினூடே நிகழ்ந்த தொழில் சார்ந்த, குடும்ப உறவுகள் சார்ந்த சிக்கலாகும் தன்மைகளைக் காணலாம். சமூகம் சிக்கலாகும் பொழுது கலை வடிவங்களும், கலை வடிவங்களில் உள்ளமைந்த கூறுகளும் சிக்கலாகிச் செல்லும். புதிது புதிதாகத் தோன்றும் தொழிற் பிரிவுகள் தமிழக ஆடல் ஆக்கங்களிலும் வேறுபாடுகளைத் தோற்றுவித்த இயல்பு களைக் காணலாம். வேத்தியல் பொதுவியல் என்றவாறு ஆடல் இரு வகையாகப் பிரிந்தது. தெய்வத்தின் முன் ஆடும் மார்க்கமும், மன்றங்களில் ஆடும் தேசியும் என்ற பாகுபாடுகள் முகிழ்ந்தன.
அரசருக்காக ஆடும் வேத்தியல் அகமென்றும், பிறருக்காக ஆடுதல் புறமென்றும் பிரிக்கப்படும் நிலையும் காணப்பட்டது. சாந்தி, விநோதம் என்று ஆகக் கூத்து இருவகையாயிற்று. விநோதக் கூத்து ஏழு வகையாகப் பாகுபடுத்தப்பட்டது. அவையாவன
30

1) குரவைக் கூத்து (ஒன்பதின்மர் கூத்து) 2) கழாய்க் கூத்து (கலியாட்டம்)
3) குடக் கூத்து (கரகம்)
4) கரணம் (உடல் மடக்கு)
5) பாவைக் கூத்து
6) வசைக் கூத்து (விதூடக் கூத்து)
7) வெறியாட்டு(சாமியாட்டம்)
சாந்திக்கூத்து பின்வருமாறு அமையும்.
1) அபிநயக் கூத்து (கதை தழுவா ஆடல்)
2) நாடகக் கூத்து (கதை தழுவி
வரும் ஆடல்)
3) மெய்க் கூத்து (அகப் பொருள் தழுவிய
ஆடல்)
4) சாக்கம் (தெளிந்தாடல்)
சமூக நிரலாக்கம் (SOCIAL HIERARCHY) வலுப் பெறுதலும் சுரண்டுவோர் சுரண்டப்படுவோர் என்ற துருவப்பாடு தோன்றுதலும் இயல்பு. இந்நிலையில் ஒரு சாராரைப் புகழ்பாடும் துதிக் கூத்தும், இன்னொரு சாராரை இழிந்துரைக்கும் நிந்தைக் கூத்து அல்லது இழிக்கூத்தும் என்ற வகையிலே தமிழக ஆடற் கோலங்கள் துருவநிலை பெற்று வளர்ந்து வந்தமையைக் காண முடியும்.
சமூக நிரலாக்கத்தின் வளர்ச்சியும், சுரண்டற் கோலங்களின் வளர்ச்சியும், ஆடலில் ஆண் _ பெண் வேறுபாடுகளைத் தோற்று வித்தன. வலிமையும் எழுச்சியும் தழுவிய வகையில் ஆண்கள் ஆடும் தாண்டவமும், மென்மையும் நெகிழ்ச்சியும் கொண்டவாறு பெண்கள் ஆடும் லாஸ்யமும் வளரலாயின.
ஆடலுக்கும் தொன்மங்களுக்கும் இடையில் உள்ள தொடர்புகளும், ஆடலுக்கும் வழிபாட்டுக்கும் இடையிலுள்ள தொடர்பு களும் ஆடலுக்கும் இசைக்கட்டமைப்புக்களுக்குமிடையிலுள்ள தொடர்பு களும் தமிழகச் சமூக வளர்ச்சியோடு மேலும் பன்மையடையத் தொடங்கின. தொன்மங்கள் வழியாகவும், ஆடல்கள் வழியாகவும் சமூக
31

Page 21
பண்பாட்டு நம்பிக்கைகள் ஒழுங்கமைக்கப்பட்டு நடைமுறைக்குரிய அறவொழுக்கம் வலியுறுத்தப்பட்டது.
இவ்வாறன வளர்ச்சிகளோடு தமிழ் இசைப்பாடல்களில் ஏற்பட்ட வளர்ச்சிக்குப் பின்வரும் எடுத்துக்காட்டுக்களை கூறலாம். அக்கைச்சி, அச்சோ அப்பூச்சி, அம்மானை, ஆற்றுவரி, இம்பில், உந்தியார், ஊசல், எம்பாவை, கப்பற்பாட்டு, கழல், கந்துக வரிகாக்கை, காளம், கானல்வரி, கிளிப்பாட்டு, குணலை, குதம்பை, குயில், குரவை, குறத்தி கூடல், கொச்சகச்சார்த்து, கோத்தும்பி, கோழிப்பாட்டு, சங்கு, சாயல்வரி, சார்த்துவரி, சாழல், செம்போத்து, சரச்சராண்டு, தச்சாண்டி, தாலாட்டு, திணைநிலை வரி, திருவாங்கமாலை, திருவாந்திக்காப்பு, தெள்ளேணம், தோணோக்கம், நிலைவரி, நையாண்டி, பகவதி, படைப்புவரி, பந்து, பல்லாண்டு, பல்லி பள்ளியெழுச்சி, பாம்பாட்டி, பிடாரன், பொற்சுண்ணம், மயங்கு திணைநிலைவரி, முகச்சார்த்து, முகமில் வரி, மூரிச்சார்த்து வள்ளைப்பட்டு என்றவாறு பாடல்களிலும், இசைக்கோப்புக்களிலும் பன்முகப்பாங்குகள் வளரலாயின.
தமிழர்களுடைய நடன வெளிப்பாடுகளை ஆராயும் பொழுது அவை வெறுமனே செயற்படுத்தும் கலையாக மட்டும் (ART OF EXECUTION) அமையவில்லை. ஆக்க மலர்ச்சியோடு சமூக நிபந்தனைப்பாடுகளும் அவற்றுடன் தொடர்புபட்டு நின்றன. நடனங்கள் அண்மையங்களுடன் (PROXYMICS) இணைந்து வளர்ந்தன. கல்விக் கவிநிலை, பண்பாட்டுச் சூழல், வாழ்க்கை நெருக்குவாரங்கள், உளவியற் கல்விநிலை முதலியவற்றால் அண்மையங்கள் உருவாக்கப் படுகின்றன. இருத்தலையும் (BEING) பிரதிநிதித்துவப்படுத்தலையும் (REPRESENTATION) நடனமாடியோர் அண்மையங்களுடன் தொடர்பு படுத்தி வெளிப்படுத்தினர்.
உயர்ந்த தெய்வீக இலக்குகளை இருத்தலாக்கி தெய்வீக கற்பனைகளை பிரதிநிதித்துவப்படுத்தி ஆடுதல் பக்தி நெறிக் காலத்திலே வளர்ச்சியுற்றது. ஆடலின் போது உடலை விக்கிரகப் பண்பினதாக்கும் மரபும் பக்திநெறிக் காலத்திலே காணப்பட்டது. இறை சார்ந்த கற்பனைகள் காட்சிவடிவாக்கப்படுதல் “விக்கிரகப் பண்பு” என்று கூறப்படும்.
32

பக்தி நெறிக்காலத்தில் இறைபக்தியோடிணைந்த மனவெழுச்சி களின் ஆற்றுமை மேலும் கூர்ப்படையத் தொடங்கிது. உடல் மொழியால் பக்தி சார்ந்த மனவெழுச்சிகளை வெளியிடுதலும் பக்திக்கு அனுசரணையான நுண் சமிக்ஞை முறைமைகளை (MICRO GESTURAL SYSTEM) 6.16|Tirissyli SIT600TLILL607.
‘குனிந்த புருவம்' என்ற தொடர் ஒன்றே நுண் சமிக்ஞை முறைமைக்கு ஒரு சிறந்த எடுத்துக் காட்டாகும். பக்தி யோடிணைந்த இயல்புநிலைப் புத்தாக்கநடனங்கள் 6õOŠዎ6እ] நாயன் மார்களது பாடல்களிலே பரவலாகக் காணப்படுகின்றன.
தெய்விக இலக்குகளை உள்ளடக்கிய ஆடல்களில் மூன்று தெளிவான படிநிலைகளைக் காண முடியும்.
1. 2 (56). Ti(5Li 555lb (WILL TO FORM)
2. உள்ளடக்கி நிறைவு கொள்ளும் சித்தம் 3. ஆற்றுகைக்கான சித்தம்
(WILLTOPERFORM)
தமிழகத்தில் நிகழ்ந்த பக்திச் செயற்பாடுகள் ஆடலுக் கென திட்டவட்டமான கருத்தியலை (IDEOLOGY) வகுத்தன. பக்திக் கருத்தியல் தழுவிய ஆடல் தெய்விக நிறைவு கொண்ட உணர்வுகளை அனுபவிக்கும் ஆடலாக வளர்ச்சியுற்றது. உயர்ந்த உண்மையை நோக்கிய தேடலே இன்றைய பரதத்தின் உன்னத இலக்காகக் கொள்ளப்படுகின்றது.
சமூக ஆதாரங்களுக்கும் ஆடல்களுக்குமுள்ள தொடர்கள் ஆடல் மொழியாகிய கூர்ப்படைந்த முத்திரை களினாலும் வெளிப்படும். பூர்வீக (66) IL 60LLITL if சமூத்திலும், குலக்குழு வாழ்விலும் (356loj (356a56 (TOTEM) வாழ்வியலுடனும், உணர்வுகளுடனும், கலையாக்கங்களுடனும் இணைந்திருந்தன. குலக்குறி களை உடலில் வரைதலும், அவற்றைப் பாவனை செய்து ஆடலும் சிறப்புப் பெற்றிருந்தன. மந்தை மேய்ப்புப் பொருளாதாரத்தில் பசுக்களும் அவற்றோடிணைந்த செயற்பாடுகளும் குறியீடுகளாக்கப்பட்டன. காராம் பசு போன்ற புனித எண்ணக்கருவும் வளராயிற்று. பசுவை, அன்னை யாக, தெய்வமாக எண்ணிக்குறியீடு கொண்டு ஆடலும்,ஒழ்த்ரி
33

Page 22
யுற்றது. பயிர்த்தொழிலுடன் நிலமானிய சமூகவமைப்பு வளர்ச்சி யுற்றது. பயிர்த்தொழிலுடன் நிலமானிய சமூகவமைப்பு வளர்ச்சியடைய நிலமகள், நீர்மகள், மழைக்கடவுள், தானியக்கடவுள், போன்றவாறான பயிர்வளத் தெய்வங்களோடிணைந்த முத்திரைகள் ஆடலில் எடுத்தாளப்பட்டன.
ஒற்றைக்கை முத்திரை தமிழ் ஆடல் மரபில் பிண்டி (வடமொழி-அஸம்யுக்தம்) எனவும் இரண்டு கைகளையும் பயன் படுத்தும் முத்திரைகள் இயற்றல் பிணையல்(வடமொழி-ஸம்யுக்தம்) எனவும் அழைக்கப்படலாயிற்று.
34
 

fisgr Isrsrbufluido அழகியற் கல்விச் சிந்தனைகள்
பெளத்த மதத்தாலும், நாட்டார் மரபுகளினாலும் ஊட்டம் பெற்ற அழகியற் கல்விச்சிந்தனைகள் சிங்களமக்களின் பாரம்பரியத்தில் வேரூன்றியுள்ளன. அரச நிலைகளுக்கும் சாமானியர்களது நிலை களுக்கும் ஈடுகொடுக்கக் கூடிய ஒரு வித கோட்பாட்டுப்பலம் பெளத்த தத்துவத்திலே காணப்படுகின்றது. ஆசிய நாடுகளில் பெளத்தத்தின்
பரவலுக்கு இந்த இருநிலை விசைகளும் சிறப்பார்ந்த காரணிகளாயிற்று.
வேதங்களில் பின்பற்றப்பட்ட வேள்வி முறைமையை மறுதலித்தலும் தருக்க நிலையான சிந்தனைகளை முன்னெடுத்தலும், ஐவகைச் சீலங்களைக் கடைப்பிடித்தலும், எண் வகை ஒழுக்கங்
களைப் பின்பற்றலும், இன்பம், துன்பம் ஆகியவற்றிலே சார்ந்து கொள்ளாத நடு வழியைக் கடைப்பிடித்தலும் பெளத்த தர்மத்திலே வலியுறுத்தப்பட்டன. அவற்றை அடியொற்றியே அழகியற் கல்விச் சிந்தனைகளும் வளர்த்தெடுக்கப்பட்டன.
இருப்பு என்பதெல்லாம் துன்பமானவை. அனைத்துத் துன்பங்களுக்கும் காரண காரியத் தொடர்பு உண்டு, துன்பங்களுக் குரிய முடிவை நோக்கி நகர்தலை பெளத்தம் விளக்குகின்றது. சரியான காட்சி, சரியான சிந்தனைத் தெளிவு, சரியான பேச்சு, சரியான செயல்,
35

Page 23
சரியான முயற்சி, சரியான உள்ளம், சரியான தியானம் என்றவாறு பெளத்த செயல் முறைகள் வலியுறுத்தப்படுகின்றன. பெளத்த சிந்தனைகள் ஆசிய நாடுகளில் வியாபித்து வளர்வதற்குரிய இவ்வாறான பலபரிமாணங்கள் எடுத்துக் காட்டுக்குரியன.
ஆயினும் காலவோட்டத்தில் இவ்வகையான சிந்தனைகள் பல்வேறு வியாக்கியானங்களையும் பெற்று பரிணாம வளர்ச்சிக்கு உட்பட்டுச்சென்றன.
பெளத்த கோட்பாடுகளை அடியொற்றிச் சிங்கள மக்களின் அழகியற் கல்விச் சிந்தனைகள் ஊட்டம் பெறலாயின. நாட்டார் மரபுகளினாலும் பின்னர் ஏற்பட்ட செப்பனிடல் நடவடிக்கைகளும் (MODIFICATIONS) அவர்களது அழகியற் கல்விச் சிந்தனைகளில் இடம்பெற்றன. பெளத்த மதத்தின் செல்வாக்கு சிங்கள மக்களின் அழகியற் கல்விச் சிந்தனைகளில் செல்வாக்குச் செலுத்தியுள்ளமை போன்று, பெளத்தம் சாராச் சிந்தனைகளின் செல்வாக்கும் விரவியுள்ள இரு நிலைப்பரிமாணங்களைக் காண முடியும்.
சிங்கள மக்களின் அழகியற் கல்விச் சிந்தனைகள் வரலாற்று நிகழ்ச்சிகளால் ஊட்டம் பெற்றும், திரிபுபட்டும் வளர்ச்சியடைந்து வந்துள்ளன. பூர்விக வழிபாட்டு முறைகள் தழுவி இசை, நடனம் முதலியவை பெளத்த வருகைக்கு முற்பட்ட இலங்கையிற் காணப் பட்டன. இன்றும் அவற்றின் தொடர்ச்சியினை வேடர்களின் வாழ்க்கைச் செயல்முறைகளிலே காண முடியும். இவ்வகையான அழகியற்கல்வி, வளப் பெருக்கத்தோடும், தேவதைகளைச் சாந்தி செய்து மகிழ்ச்சி யூட்டுவதோடும் தொடர்புடையனவாகக் காணப்பட்டன.
வேடர்களின் வழிபாட்டுக்குரிய தெய்வமாக யக்கு (YAKU) விளங்கியது. கிறிகோறகா (KIRIKORAHA) மற்றும் கோலமடுவே (KOLAMADUWE) முதலாம் சடங்குகள் வேடர்களிடத்து சிறப்பிடம் பெற்றிருந்தன. பெண் தெய்வ வழிபாடோடிணைந்த சடங்குகளும், அழகியல் உணர்வுகளும் வேடர்களிடத்து நிலைபேறு கொண்டிருந்தன. “கிரி அம்மா’ என்ற பெண் தெய்வம் அவர்களிடத்து சிறப்புப் பெற்றிருந்தது. வேடர்களின் இசையும் நடனங்களும் அதிக வீறும், துரித நடையும் கொண்டவையாக அமைந்தன.
36

இலங்கையில் பெளத்த சமயம் நிலைபேறு கொண்டாலும், இந்தப் பூர்விக அழகியற் பண்புகள் இன்றும் நிலைத்து நிற்கின்றன.
பெளத்தின் தேரவாதக் கருத்தியல் புலன் உணர்ச்சிகளை அருட்டித் தூண்டி விடக்கூடிய அழகியல் ஆக்கங்களுக்கு இடம் தரவில்லை. பெளத்த சூத்திரங்களை உச்சரித்துச் சொல்லும் பொழுது எந்தவிதமான இசை அழகியற் பண்புகளும் விரவியிருக்கக் கூடாதென வலியுறுத்தப்பட்டது (KULATILLAKE, 1982 pp 19-30). இந்து சமயத்தில் வளர்ச்சி பெற்ற பக்தி இயக்கம், வழிபாட்டில், இசை, நடனம், சிற்பம், ஓவியம் முதலியவற்றை ஒன்றிணைத்தது. அதன் செல்வாக்கு பெளத்த மதத்திலும் ஊடுருவ, பெளத்த மதத்தின் கோட்பாடுகளைத் தழுவிய இசை, நடனம், சிற்பம், ஓவியம் முதலியவை வளர்ச்சியடையத் தொடங்கின.
இவையனைத்தையும் தொகுத்து நோக்கும் போது சிங்களவர் களின் அழகியற் கல்விச்செயற்பாடுகள் பன்முகத்தளங்களில் இருந்து வளர்ச்சி பெற்று வந்துள்ளமையைக் காணக் கூடியதாகவுள்ளது.
பூர்விக சடங்குகள், நிலை பேறு கொண்ட விவசாய வளர்ச்சி, கிராமிய வாழ்க்கை முதலியவற்றோடிணைந்த அழகியற் கல்விச் செயற்பாடுகள் வளரலாயின. வளப்பெருக்கும் அதனோடிணைந்தவாறு தானியங்களை பெளத்த ஆலயங்களுக்கு வழங்குதல் தொடர்பானதுமான, ஆடல், பாடல், இசை முதலியவை சிங்கள மக்களிடத்து வளர்ச்சி பெற்றிருந்தன. இவை வரன்முறை சாரா (NONFORMAL) வகையில் அறிவுக் கையளிப்பையும் அனுபவக் கையளிப்பையும் வழங்கின. விவசாயிகள் மத்தியில் நிலவிய பாடல்களில் அறுவடைப் பாடல்களும் நாற்று நடுகைப் பாடல்களும் சிறப்பிடம் பெற்றிருந்தன. அவை முறையே “கமத்கீ’ எனவும் “நெலும் எனவும் அழைக்கப்பட்டன (KULATILLAKA, 1991).
பெளத்தப் பெரு வழிபாடு தவிர வேறு இரண்டு வழிபாட்டு
முறைகளும், அவற்றோடிணைந்த அறிவுப் பகிர்வும் சிங்கள மக்களிடத்து நிலவி வருகின்றன. அவையாவன:
37

Page 24
1) இந்து சமயத்திலிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட
தெய்வங்களை வழிபடும் மரபு
2) பூர்விக நிலையிலிருந்து இடம் பெற்று வரும்
தேவதைகளையும் பூதகணங்களையும் வழிபடும் மரபு
மேற்கூறிய இருமரபுகளோடும் இணைந்த அழகியற் கல்விச் செயற்பாடுகள் சிங்கள மக்களிடத்து வளர்ச்சி பெற்றிருந்தன. சிறப்பாக சிங்கள மக்களின் நடனக் கல்வி வளர்ச்சிக்கும் நாடக வளர்ச்சிக்கும் இந்த மரபுகள் பெரும் பங்களிப்புக்களைச் செய்துள்ளன. தேரவாத பெளத்த நெறி நடனக் கல்விக்கு எதிரான கருத்தியல்களை முன் வைத்த பொழுதும் மேற்கூறிய இரு பாரம்பரியங்களும் அழகியற் கல்வியின் வளர்ச்சிக்குத் தொடர்ச்சியாகத் துணை நின்றன. ஆயினும் தேரவாத பெளத்தத்தின் செல்வாக்கினால் ஆண்களை முன்னிலைப் படுத்தும் நடனங்கள் மேலோங்கின. பெளத்தம் பெண் தெய்வ வழிபாட்டுக்குச் சிறப்பார்ந்த இடம் தராமையால், பெண் நடனங்களும், பெண்களைச் சிறப்பிடம் செய்யும் இசையும் ஒப்பீட்டளவில் பின்தங்கிய நிலையை அடைந்தன. ஆயினும் அரச அவைகளும், கிராமிய மரபுகளும் பெண்களின் நடனத்துக்கும், பெண்களை முன்னிலைப் படுத்தும் இசைக்கும் ஒவியங்களுக்கும் உற்சாகமளித்தன.
இந்து மதத்தினை முதன்மைப்படுத்தி இலங்கையை ஆட்சி புரிந்த அரசர்கள் பத்தினித் தெய்வ வழிபாட்டையும் அதனுடன் இணைந்த அழகியற் கல்வியையும் முன்னெடுத்தனர். கஜபாகு(கி.பி. 114-136) மன்னன் காலத்திலிருந்து பத்தினித் தெய்வ வழிபாடு சிங்களக் கலை மரபில் ஆழ்ந்து வேர் பதிக்கத் தொடங்கியது. இந்து சமயத்திற் இடம்பெற்ற பக்தி இயக்கம் சக்தியை பலவாறு பரவும் பெண் தெய்வ வழிபாட்டுக்குச் சிறப்பிடம் அளித்த வேளை, பெளத்த சமயம் வலிமை மிக்க ஆண் சார் ஒழுக்கங்களை முதன்மைப்படுத்தியது.
சிங்கள மக்களது அனைத்துச் சடங்குகளிலும் நடனம் முக்கியத்துவம் பெற்றிருந்தது. குருவிடம் வரன் முறையாகப் பயின்று நடனத்தை ஒப்புவிக்க வேண்டும் என்பதும் (MAKU LLOLUWE , 1964) சிங்களக் கல்வி மரபிலே காணப்பட்டது.
38

சிங்களப் பாரம்பரியத்தில் இசை, நடனம், சிற்பம், ஓவியம் முதலாம் அழகுக் கலைகளின் வளர்ச்சியில் அரசர்கள் நேரடியாகப் பங்கேற்றமை இந்திய அரச மரபுகளிலும் காணப்பெற்ற பொதுப் பண்பாகும். சிங்களஅரசர்கள் அரண்மனைகளில் அமைத்த இசைப் பிரிவு “கவிகார மடுவ” என அழைக்கப்பட்டது. அவர்கள் அமைத்த நடனப்பிரிவு 'நற்றும் இலங்கம” எனப்பட்டது. அங்கு வாழ்ந்த இசை வல்லுனர்கள் உருவாக்கிய இசை கட்டமைப்புக்கள் இன்னமும் சரியாக அறிந்து இனங் காணப்படவில்லை. ஆனால், “சிவ்பத’, ‘சிந்து', 'வன்னம் முதலாம் யாப்பு வகைகள் அவர்களால் பயன்படுத்தப் பட்டமைக்குப் பரவலான சான்றுகள் உள்ளன. (KULA TILLAKE, 1982) சிங்கள மக்களின் மிகத் தொன்மையான இசை வடிவம் “கீ’ என்பதாகும். இது “தெபத” எனவும் அழைக்கப்பட்டது. அதாவது இரண்டடிகளை உள்ளடக்கிய இசை நீட்சியை இது கொண்டிருந்தது. இன்று நான்கு அடிகளைக் கொண்டதாகவும் கீ’ எழுதப்படுகின்றது. பிற்காலக் கல்வி வளர்ச்சியில் சிங்கள இசை பல்வேறு படி மலர்ச்சிகளை அடைந்துள்ளது.
சிங்கள மக்களின் அழகியற் கல்விச் சிந்தனைகள் இசைக்கருவிகளின் கையாட்சி தொடர்பாகவும் வளர்ச்சியடைந் திருந்தன. “பெற’ எனப்படும் பேரிகையினை உடலியக்கங்களோடு தொடர்புபடுத்திக் கற்றலும் கற்பித்தலும் அவர்களிடத்துக் காணப் படுகின்றன. பஞ்ச தாளங்கள் ஆடுவோரது ஐந்து ஆட்ட நிலை களுடனும் தொடர்புபட்டிருந்தன. ஒவ்வோர் உணர்ச்சிக்கும் ஒவ்வொரு மனவெழுச்சிக்குமுரிய முழவுப் பிரயோகங்களும் வளர்ச்சி பெற்றுள்ளன.
சமஸ்கிருத பேரிகையிலிருந்து "பெற" என்ற சிங்களப் பதம் மலர்ச்சி கொண்டதாகக் கூறுவர். பலவகையான பேரிகைகள் சிங்கள மக்களிடத்து வழக்கில் உள்ளன. சிங்கள மக்களினது இசையினதும், அழகியல் உணர்வுகளினதும் தனித்துவங்களைக் கண்டறிவதற்கு அவர்களது பேரிகைகளைப் பற்றிய ஆய்வு சிறப்பிடம் பெறுவதைச் சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது. பேரிகையுடன் பலவகையான வீணை வகைகளும் வழக்கிலிருந்தமைக்கு கோட்டை அரசர் 956) இலக்கியங்கள் சான்றாகவுள்ளன.
39

Page 25
ஐரோப்பியர் ஆட்சிக் காலத்தில் சிங்கள மக்களிடத்து வளர்ச்சி பெற்ற தேசிய உணர்வும் அதனை வலுவூட்டிய கல்விச் செயல் முறைகளும் சிங்கள மக்களுக்குரிய தனித்துவமான இசை, தனித்துவமான நடனம், தனித்துவமான அரங்கு முதலியவற்றை வலுவூட்டுவதற்கு உதவின.
40
 

மேலைநாட்டு அழகியற் கல்விச் சிந்தனைகள்
வரன்முறையான கல்வி வளர்ச்சியோடும் கலைத்திட்ட வளர்ச்சியோடும் அழகியற் கல்வி பற்றிய சிந்தனைகள் ஒன்றிணைந்து வந்துள்ளன. அழகியலை அறிகையோடும், ஒழுக்கவியலோடும் தெய்விகப்பண்புகளுடனும் ஒன்றிணைத்தல் கல்விக்குரிய தேவையாக வும், சமூகத்துக்குரிய தேவையாகவும் அமைந்தன. மனித ஒழுக்க நிலை நிறுத்தலில் கலையின் பங்குபற்றி பிளேட்டோ பேசியமை சமூகக் கட்டுக்கோப்பை நிலை நிறுத்துதலில் கல்வியின் பங்களிப்பை ஒருவிதத்திலே சுட்டிக் காட்டுகின்றது.
அறிவு வளர்ச்சியில் ஏற்பட்ட இருமைத் தன்மைகளின் விளைவாக இருபெரும் அசைவுகளை ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டினர். ஆவை
1) 5(555, GBf55(gsful glio (RATIONAL KNOWLEDGE) 2) தருக்க நெறிதழுவாத உணர்ச்சி கலந்த அறிவு (EMOTIONAL
KNOWLEDGE)
அழகு பற்றிய கோட்பாடு இரண்டாவது வகையைச் சேர்ந்தே வளரத்தொடங்கியது. உள்ளுணர்வும், ஆக்கவுந்தலும், கட்டற்ற கற்பனைகளும், மனவெழுச்சிகளும் கலைப்படைப்பை உருவாக்கும் விசைகளாதலை பிளேட்டோ தமது குடியரசு நுாலிலே குறிப்பிட்டார். இந்த விசைகள் அறநியமங்களை அடியொற்றி எழும்பொழுது கலையாக்கம் முகிழ்த்தலும் அவராற் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
41

Page 26
உண்மையைக் கண்டறிதல் முதலியவற்றில் கலைகளின் பங்கு என்ன என்பது பற்றிய சிந்தனைகள் பிளேட்டோ உட்பட அனைத்துக் கிரேக்க கல்வியியலாளர்களால் எழுப்பப்பெற்ற வினாக்களாகவுள்ளன.
அரிஸ்ரோட்டில் நாடக அரங்கியலை அடியொற்றி துன்பியல் அழகை வரன்முறையாக ஆராய்ந்தார். கலைகள் கதாட்டிக் விளைவை (CATHARTIC EFFECT) 916üaug5) மனவெழுச்சி இயம்பலைக் கொண்டிருத்தல் வேண்டுமென்பது அவரது கருத்தாகும். துன்பியல் படைப்புக்கள் பயமும் இரக்கமும் கலந்த மனவெழுச்சி இயம்பல்களைக் கொண்டிருக்கும். இன்பியல் படைப்புக்கள் நகைச்சுவை இயம்பல் களைக் கொண்டிருக்கும்.
புறயதார்த்தங்களைப் பாவனை செய்வதை அடிப்படையாகக் கொண்டே கலைப் படைப்புக்குரிய கருத்துக் கண்டறியப்படலாமெனக் கிரேக்கக் கல்விச்சிந்தனையாளர் கருதினர்.
உண்மையும் அழகும் நன்மையும் ஒன்றிணைந்த நிறைவை நோக்கிய சிந்தனைகள் அவர்களிடத்தே நிலைபேறு கொண்டிருந்தன.
அழகியற் கல்விக்கு கிரேக்க அறிஞர்கள் தந்த கருத்துக் களுக்கு மாறுபாடான முன்மொழிவுகளை அகஸ்தின் தரலானார். தருக்க நெறியும், காரணங்காணலும், விகிதசம அளவுகளும், சமச்சீர்மைக் கோலங்களும் அழகின் உருவாக்கத்துக்கு அவசியம் என்பது அகஸ்தியனுடைய கருத்தாக அமைந்தது. எண்பெறுமானங்கள் பற்றிய உணர்வின்றி கலைப்படைப்பை உருவாக்குதல் சாத்தியமன்று என்று அவர் கருதினார். ஒரு பறவையின் ஒலிக்கும் ஓர் இசை ஞானியின் இசைக்குமிடையே காணப்படும் வேறுபாடு பகுத்தறிவு பூர்வமானதும் காரண காரிய உள்ளடக்கத்தாலும் தீர்மானிக்கப்படுவதாக அவர் விளக்கினார்.கலைப்படைப்பு உள்ளுணர்வால் தோன்றுவதில்லை என்றும் பகுத்தறிவால் மலர்ச்சி பெறுவதாகவும் அவர் விரித்துரைத்தார். ஒழுங்கு, கட்டமைப்பு, விகிதசமம், எண்பெறுமானம், ஆகியவை ஒன்றிணையும் பொழுது நன்மையும், அறமும், அழகும் தெய்விகமும் ஒன்றிணையும் என்பது அவரது கருத்தாகும்.
42

ஆடலாக, பாடலாக, ஒவியமாக, சிற்பங்களாக, இலக்கியங் களாக, நாடகங்களாக அழகிற் கல்வியானது வரன்முறையான கல்விச் செயற்பாட்டிலே ஒன்றிணைக்கப்பட்ட வேளை இவ்வாறான கலை வடிவங்களை அடியொற்றி அழகுசார்ந்த சிந்தனைகளை கட்டி யெழுப்பும் செயற் பாடுகளும் வளரலாயின. லியோனார்டேடாவின்சி ஒவியத்தின் வழியாகத் தமது அழகியற் கல்விச் சிந்தனைகளை முன்வைக்கலானார். ஒவியப்படைப்பை தெய்விகப்படைப்பு என்றும், ஒவியருடைய மனம் இலட்சிய மனம் என்றும் குறிப்பிடலானார். மெய்ப் பொருள் காணும் செயற்பாடும் ஒவியங்களும் ஒரே நோக்கினைக் கொண்டவை என அவர் முன்மொழிந்தார். ஒவியத்தின் கல்வித்தளத்தை அவர் தொடர்ந்து வற்புறுத்தினார். (LEONARDU DA VINCE, PHILOSOPHICAL DIARY , NEWYORK, 1956, D. 26) ஓவிய அழகியலுக்குக் கணித அறிவும், உடற்கூற்றியல் அறிவும் தவிர்க்க (plQUII5j வேண்டப்படுபவை என்பதை அவர் தெளிவுறுத்தினார்.
பதினெட்டாம் நூற்றாண்டுக்குப் பின்னர் ஐரோப்பாவில் அழகியற் கல்விச் சிந்தனைகள் மேலும் பரந்து பட்டு வளரலாயின. பரந்து பட்ட முறையில் நிகழ்ந்த கல்வி விரிவாக்கமும் தொழில் நுட்ப வளர்ச்சியும் அழகியற் கல்விச்செயற்பாடுகளுக்கு வலுவூட்டின. நகரவளர்ச்சியும், தனிச்சொத்துரிமை வளர்ச்சியும் சமூக சுரண்டற் கோலங்களும் அறவொழுக்கம் தொடர்பான பிரச்சினைகளைக் கல்வியுடனும் அழகியலுடனும் தொடர்புபடுத்தின. சாற்பெறி (SHAFTSBURY) எழுதிய எழுத்தாக்கங்கள் அழகு என்பது அறவுண்மைகளின் தெளிந்த வெளிப்பாடுகள் என்பதை உணர்த்தின. அறவுண்மைகள் இயற்கைப் பொருட்களின் நம்பகரமான இருப்பில் இருந்து முகிழ்ப்பதென அவர் குறிப்பிட்டார். அழகு என்பது பொருளில் தங்கியிருக்க வில்லையென்றும் நுகர்வோரது உள்ளத்தையே சார்ந்துள்ள தென்பதும் அவரது வாதம்.
கலைப் படைப்பு அழகினை முப்பெரும் கட்டங்களாக வகைப்படுத்தி அவர் விளக்கினார். அவை:-
1) உள்ளமைந்த வகையிலே அழகு வெளிவராத நிலையில்
முடங்கி இருத்தல், 2) கலையாக்கம் வெளிவருவதற்குரிய உள்ளார்ந்த ஆற்றலைக்
கொண்டிருத்தல்,
43

Page 27
3) உன்னதமான அழகை வெளிப்படுத்துதல் நிறைவானதும்
மூன்றாம் கட்டமாகவும் அமைகின்றது.
இயற்கையை வெறுமனே பிரதிபலிப்பது கலையாகாது என்றும் கலைஞர் படைப்பின் சிருகூழ்டியாளராக மலரும் நிலையே ஆக்கத்தின் உன்னத நிலையென்பதும் அவரது கருத்தாகும். கலைஞர் தன்னை அறிதலும், தன்னை உணர்தலும் கலையாக்கத்துக்கு அடிப்படை களாகும். தமது கலைக்கண்டு பிடிப்புகளின் வாயிலாக கலைஞர்கள் பிறரின் சுவைகளை வளர்த்தெடுக்கலாம் என்பது அவரது கருத்தாகும். கல்விச் செயல் முறையால் கலைச் சுவை வளர்க்கப்பட முடியும் என்பது அக்கருத்தின் வளர்ச்சியாகும்.
மேலைப்புலக் கல்விவளர்ச்சியில் அழகியல் தொடர்பான கருத்துக்களை சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவர். அடிசன், அவர் அழகைச் சுவைப்பதற்கும் அழகால் மகிழ்ச்சி கொள்வதற்கும் கற்பனையின் இன்றி யமையாமையை விளக்கினார். இயற்கை சார்ந்த பொருள் களும் கலைப்படைப்புக்களும் என்ற வகையில் பிரித்து நோக்கும் பொழுது இயற்கை வடிவங்கள் கற்பனை இன்பத்தின் முதல் f606) Friisg06JuJITuli (PRIMARY PLEASURES OF IMAGINATION) கலைகள் இரண்டாம் நிலை சார்ந்தவையாயும் அமையுமென அவர் கருதினார். அழகு நுகர்ச்சியில் இவை இரண்டும் ஒன்றுக்கு மற்றையது துணையாக நிற்கும் என்பது அவரது கருத்தாகும்.
மேலைப்புல அழகியற் கல்விச் சிந்தனையில் குறிப்பிடத்தக்க பிறிதொருவர் புறுாக்(BURKE). இவர் அழகியலை அதித பெளதிகத் துடனோ, கணிதவியற் கட்டுமானத்துடனோ தொடர்புபடுத்த வில்லை. எந்த அழகியலாக்கத்துக்கும் ஒரு குறிப்பிட்ட விகிதக் கட்டமைப்பு (PROPORTION) வேண்டுமா? என்ற வினாவை எழுப்பினார்.
அழகியலுக்கு எதிராக அமைவது விகிதசமமின்மை அல்ல Gou6iguh 96usul #60076ud 6TGigih (THE TRUE OPPOCITE TO BEAUTY IS NOT DIS PROPORTION BUT UGLINESS) 656ITiflaoIIIi. ஆழகியலை ஒரு சுயாதீனமான புலம் ஆக்குதலே அவரின் இலட்சியமாக இருந்தது. அழகியலை அறவொழுக்கங்களுடனோ, ஆன்மீகத்துடனோ அறிகை நியமங்களுடனோ இணைத்தல் தெளிவற்ற
44

தடுமாறிய செயல் என்பது அவரின் வாதம். எத்தகைய ஒருகலைச் செயற்பாட்டிலும் ஊக்கல் தரும் உந்து விசையாக அமைவது “கற்பனா gstuh' (PLEASURE OF IMAGINATION) 6T6OT 96iiii வலியுறுத்தினார்.
மேலைப்புல அழகியற் சிந்தனைகள் மெய்யியல் அறிவுத் துறையில் நிகழ்ந்த வளர்ச்சிகளோடு சங்கமித்து எழுந்ததுடன் பலவகையான கருத்துப் பரிமாறல்களோடும் இணைந்து வளரலாயின. அழகியலை அறவொழுக்கவியலில் இருந்தும், அறிவாய்வியலில் இருந்தும் இம்மானுவல் கான்ற் பிரித்து சயாதீனப்படுத்தும் முயற்சியைத் தொடர்ந்து முன்னெடுத்தார். அழகியல் ஆட்சியை தனித்துவமான புலம் ஆக்குவதிலும் அழகியல் தொடர்பான தீர்மானங்களை முன் னெடுப்பதிலும் அவரது முயற்சிகள் தீவிரமடைந்தன. அழகியல் தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்வதில் அகவயப்பாங்கான அணுகு முறையின் முக்கியத்துவத்தை அவர் முன்னெடுத்தார். அழகுதரும் உணர்வு தனிமனிதருக்கு மட்டும் உரியது அன்று எனவும் அது அகிலப்பண்பு (UNIVERSAL) கொண்டதெனவும் விளக்கினார். கலை நயத்தல் என்பது மிகைப்படுத்தல் தாழ்மைப்படுத்தல் என்ற அபத்தங்களில் இருந்து பாதுகாக்கப்படுதல் வேண்டும் என்பது அவரது வைராக்கியம்.
மேலைப்புல அழகியற் கல்விச் சிந்தனைகளில் மாற்று வகையான கருத்தை முன்மொழிந்தவர்களுள் சிக்மண்ட பிராய்ட் (SIGMUND FREUD) தனித்துவமானவர். மனித ஆளுமையின் பரிமாணங்களை இட், ஈகோ, சுப்பர் ஈகோ என மூன்று பிரிவாக விளக்கிய அவர் இட் மகிழ்ச்சி முதன்மையை அடிப்படையாகக் கொண்டதெனவும், சமூக நியமங்களும் அழுத்தங்களும் மகிழ்ச்சிக்குத் தடையாக அமையும் பொழுது இட் என்ற மகிழ்ச்சிப்பபுலத்தின் ஒரு பகுதி ஈகோவாக மாறுகின்றதென்றும் குறிப்பிட்டார். இட் என்பது மிருகவுந்தல்களையும் காரணகாரியத்தொடர்புகளுக்கு அப்பாட்பட்டு மகிழ்ச்சியை அனுபவித்தலையும் முதன்மையாகக் கொண்டது. ஈகோ என்பது யதார்த்த நிலவரங்களோடும், காரணகாரியத் தொடர்புகளோடும் இணங்கிச் செல்வது ஈகோவில் இருந்து மேம்பட்ட விழுமியங்களுடன் வளர்ந்து செல்வது. சுப்பர் ஈகோவாகும்.
45

Page 28
இட் என்பதன் இன்பநுகர்ச்சிக்கு சமூகம் கொடுக்கும் கட்டுப்பாடுகளும் அழுத்தங்களும் ஆழ்மணமாகிய நனவிலியிலே அடக்கியும் அழுத்தியும் வைக்கப்படுகின்றன. இந்த அழுத்தங்கள் கனவுகளிலும், கட்டுப்பாடுகளற்ற கலையாக்கங்களிலும் வெளிப் படுகின்றன. குழந்தை நிலையிலிருந்தே அழுத்திவைக்கப்படும் நனவிலி உணர்வுகளுக்கும் கலைப் படைப்பாக்கங்களுக்குமிடையே தொடர்புகள் காணப்படும். ஆழ்மனவுந்தல்களின் குறியீட்டு வெளிப்பாடே கலையா கின்றது-அழகியலாக்கமாகின்றது.
உளப்பகுப்புக் கலைக்கோட்பாட்டினைப் பின்வருமாறு சுருக்கிக் -Jim TJ sal-TLC. அ) கலைப்படைப்புக்கள் யதார்த்த உலகில் நின்றும்
விடுபட்ட யதார்த்தமற்ற உலகை உருவாக்குகின்றன. ஆ) கலைப்படைப்புக்களின் ஆழ்மன உள்ளடக்கம் முக்கியத்துவம் பெறுகின்றதேயன்றி அதன் வெளிக்கட்டுமானங்களோ முக்கியத்துவம் பெறுவதில்லை. இ) கனவுகளின் செயற்படும் கலையாக்கச் செயற்படும்
தம்முள் ஒப்புமை கொண்ட ஒரே தன்மையானவை. ஈ) கலைப்படைப்புக்களும் கனவுகளும் யதார்த்த
வாழ்வில் நிறைவேறாத உந்தல்களைக் கொண்டவை. உ) கலைப்படைப்புகளுக்கும் கனவுகளுக்கும்
குறிப்பிடத்தக்க வேறுபாடுகளும் உண்டு.கலையாக்கம் நுண்மதிச்செயற்பாடுகளுடனும் திட்டமிட்டு முனையும் ஒரு செயற்பாடாகவும் ஆக்கப்படுவதில்லை. நனவு நிலைச் செயற்பாடுகளின்றி முற்றிலும் நனவிலியின் இயக்கமாகவே கனவுகள் பரிணமிக்கின்றன.
ஆழ்மனதினது குற்றவுணர்வுகள் மற்றும் புறநிை நெருக்குவாரங்களினால் எழும் JULf முதலியவை ձեEնն
படைப்புக்களில் ஊடுகடத்தப்பட்டு நிற்கின்றன.
46
 

நடப்பியல் வாழ்வில் சமூகத்தால் அங்கீகரிக்கப்படாதவை, கலைப்படைப்புக்களில் அங்கீகாரத்தைப் பெறுகின்றன. ቇùùùŠly கலைக்காக என்ற கருத்தை பிராய்ட் ஏற்றுக் கொள்ளவில்லை நனவிலியின் ஆழ்ந்த வெளிப்பாடுகளுக்குக் கலை இலக்கியங்கள் துணைநிற்றல் வேண்டும் என்ற பிராய்ட்டின் கருத்து கல்வியியலிலும், கலைத்திட்ட ஆக்கத்திலும் கருத்திலே கொள்ளப்பட வேண்டிய தொன்றாகும்.
அழகியற் கல்விச்சிந்தனை வளர்ச்சிக்குப் பங்களிப்புச் செய்தவர்களுள் குரோசி (CROCE) யும் குறிப்பிடத்தக்கவர். கல்வியும் மனித ஆற்றல் வெளிப்பாடுகளும் பற்றிய சிந்தனைகளில் இவரது கருத்துக்கள் தனித்து ஆராய்யப்பட வேண்டியுள்ளன. அழகியலும், அளவையியலும் வேறுபட்ட அறிவாதாரங்களைக் கொண்டுள்ளன. அழகியல் என்பது ஒவ்வொருவரிடத்தும் உள்ளொளிரும் குறித்த அறிவாதாரத்தை அடிப்படையாகக் கொண்டது. அளவையியல் என்பது அனைவருக்கும் பொதுவான அகிலத் தன்மை கொண்ட எண்ணக் கருப்பற்றிய அறிவை ஆதாரமாகக் கொண்டது.
உள்ளுணர்வு (INTUITION) என்பது காலம், இடம் ஆகிய |கட்டுப்பாடுகளை கடந்தது. அளவை இயல் பிடிகளில் இருந்து விடுபடும் சுயாதீனமானது உள்ளுணர்வுகளை வெளிப்பதிவு களாக்கும் |பாழுது அழகியலாக்கங்கள் ஏற்படுகின்றன என்பது குரோசியின் ருத்தாகும். கற்பனைத் தொழிற்பாடும் உள்ளுணர்வுத் தொழிற்பாடும் ன்றிணைந்தவை, உருவங்கள் வடிவங்கள் பற்றிய கற்பனைக் ாட்சிகளை உள்ளுணர்வு தருகின்றது. உள்ளுணர்வின் அழகியல் ர்ந்த வெளியீட்டுக்கு கல்வி துணைநிற்க வேண்டியுள்ளது.
பல்வேறு வெளியீட்டு வடிவங்களை மனிதர் சந்திக்க ரிடுகின்றது. அவை மனிதரின் உள்ளத்திலே கற்பனைத் தொழிற்பாடு ளைத் துாண்டிக் கொண்டிருக்கும். அவற்றின் வெளிப்பாடுகள் ாற்களாக, காட்சிகளாக, படிமங்களாக வெளிவந்து அழகியலாக்கமாகப் னேமிக்கும். இந்நிலையில் உள்ளுணர்வே வெளிப்பாடுகளாகி XPRESSION) நிற்கும். உள்ளுணர்வுகளையும் வெளிப்பாடுகளையும் விர்ந்த வேறு அழகியல் வடிவங்கள் ஏது மில்லை. ஒரு கலையாக்கம் ல்லது அழகியலாக்கம் பின்வரும் பண்புகளைக் கொண்டிருக்கும்.
47

Page 29
(அ) மனதிலே நிகழும் பதிவுகள் (ஆ) வெளியிடும் பதிவுகள் (இ) அழகியற் துாண்டலும், சுவையும்
மகிழ்ச்சியும் (ஈ) அழகியல் நேர்வுகளை பெளதிக
தோற்றப்பாடக மாற்றுதல்
உதாரணமாக ஒலியாக, ஒளியாக, சொல்லாக, அசைவாக மாற்றுதல். அதாவது தெளிவானதும், பொருத்தமானதும். தொடர்பாடற் பண்புகள் கொண்டதுமான படிமங்களைக் கலைஞர்களால், வெளியீட்டு நிலையிலே பயன்படுத்தப்படும் கற்பனை இன்பத்துக்கு குரோசி முதன்மை வழங்குகிறார்.
ಇb கலைப்படைப்பு தொடர்பான தீர்மானங்களை வழங்குவதற்கு முன்னேற்பாடான விதிகள் எதுவுமில்லை. குறித்த கலைப்படைப்பே அது பற்றிய தீர்மானங்களை உருவாக்கிக் கொண்டிருக்கும். கலைப்படைப்பு பற்றிய தீர்மானங்களிலும் கரோசி உள்ளுணர்வுகளுக்கே முக்கியத்துவம் தருகின்றார். கலை என்பதும் புறவுலகைப் பிரதிபலிப்பதன்று. அது மனித ஆன்மாவின் கட்டற்ற வெளிப்பாடாக இருத்தல் வேண்டும்.
அழகியற் கல்விக்கும் மொழியியற் கல்விக்கும் இடையேயுள்ள ஒப்புமைகளையும் குரோசி விரிவாக விளக்கினார். மொழியின் ஒவ்வொரு சொல்லும் தனித்துவத்தின் வெளிப்பாடு. ஒருமொழியின் இரண்டு சொற்களுக்கிடையே ஒப்புமை காணுதலும் இலகுவானதன்று. மொழி என்று கூறும் பொழுது அவர் இலக்கிய மொழியையே கருத்திற் கொண்டார். அழகியற் கல்வியில் உள்ளுணர்வுக்கும், கற்பனைகளுக்கும், வெளியீட்டுப்பதிவுகளுக்கும், அருவமாக்கலுக்கும் அவர் தந்த பங்களிட் குறிப்பிட்டுக் கூறக் கூடியதாகும்.
அழகியற்கல்விக் கோட்டினைப்பண்பாட்டுத்தளத்திலிருந் விளக்குதலை இவர் முன்னெடுத்தார், உலகை அறியும் வித
நம்பிக்கைகள், சடங்குகள், அறவொழுக்கங்கள், LDJL5 அனைத்தினதும் கூட்டு மொத்தமாகப் பண்பாடு திரண்டெழுத
48
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மட்டுமல்ல அதன் உள்ளார்ந்த வலு கலையாக்கங்களிலே விசை கொள்ளுகின்றது.
வரலாற்று நிகழ்ச்சிகளே மக்களுக்குரிய பொதுவான ஆன்மாவை உருவாக்குகின்றது. வரலாறு உருவாக்கும் உலகுபற்றிய படிமத்தின் வாயிலாகவே மக்கள் கலைகளை நோக்கு கின்றனர். மனித உயிர்வாழ்வுக்கு வரையறை இருத்தல் போன்று பண்பாட்டு வாழ்வும் மனிதருக்குரிய வரையறையை வழங்குகின்றது.
அனைத்து இருப்புக்குமுரிய உள்ளார்ந்த வலுவாக ஆன்மா அமைகின்றது. ஆன்மாவுக்கும் உலகுக்கும் அடிப்படை முரண்பாடு உண்டு. தன்னியலை அறியும் ஆற்றல் ஆன்மாவுக்கு உண்டு. ஆனால் உலகோ புறநிறைவைக் கொண்டது.
ஊலக இருப்பு கலைகளாலும், சமயத்தாலும், வாழ்க்கை முறை மையாலும் வெளிப்படுத்தப்படுகின்றது. பண்பாட்டுக் குரல் தனிமனிதர் வாயிலாகவே நேரடியான வெளிப்பாடு கொள்ளுகின்றது. பண்பாட்டுக்குரல் கலைகளினால் வெளிப்பாடு கொள்ளுகின்றது. ஒரு கவிதையென்றோ ஒரு காவியமென்றோ ஒருகலைப்படைப்பு என்ற பேச்சுக்கு இடமில்லை. பண்பாட்டு மலர்ச்சியின் போது பலப்பல கலை வடிவங்கள் தோன்று கின்றன.
குலக்குறி (TOTEM)யானது பண்பாட்டின் பொதுவான ஆண்மாவை வெளிப்படுத்துகின்றது. சமூகத்தின் வெளிப் பட்ையான துலங்கலை விலக்கு (TAB00) உணர்கின்றது. சூழலோடு பொருத்தப்பாடு கொள்ள "பாவனை செய்தல்' துணை செய்கின்றது. பாவனை செய்தல் பாவனை செய்யப்படும் பொருள் என்ற இருமை நிலை தோற்றம் பெறுகின்றது. பண்பாடு பாவனை செய்வதால் வெளிப்படுத்தப்படுகின்றது.
பண்பாட்டுச் சூழமைவைத் தவிர்த்துக் கலைக்குக் கருத்து
வழங்க முடியாது. தனிமனித வெளிப்பாட்டு உந்தலே கலைகளின் தோற்றுவாயாயிற்று.
49

Page 30
கலைக் கோட்பாடுகள் ஒவ்வொன்றும் அவை தோன்றிய பண்பாட்டுப் பின்புலத்தில் வைத்து ஆராயப்படுதலே பொருத்த மானதும், பொருண்மை கொண்டதுமான செயற்பாடாகும். ஒவ்வொரு பண்பாட்டுப் பின்புலமும் தத்தமக்குரிய கலை நடை யியலை உருவாக்கியுள்ளன. ஒவ்வொரு பண்பாட்டுப் பின்புலத்திலும் ஒவ்வொரு வகையான கலை வடிவங்கள் ஆட்சி செலுத்தியுள்ளன. உதாரணமாக சிலகுறிப்பிட்ட பண்பாட்டுப் பின்புலங்களில் இசை மேலோங்கியிருந்தது. வேறு சில பண்பாட்டுப் பின்புலங்களில் சிற்பக்கலை மேலோங்கியிருந்து.
ஒவ்வொரு கலைவடிவங்களுக்குமுரிய வேறுபாட்டை குறிப்பிட்ட கலை மூலங்களாலோ, ஊடகங்களாலோ கறாராக எல்லைப் படுத்தி வேறுபடுத்த முடியாது. வரலாற்று எல்லைகளால் மட்டுமே கலை வடிவங்களின் வேறுபாடுகளைக் குறிப்பிட்டுக் கூறமுடியும்.
இவ்வாறு இஸ்பென்ஜிலர் அழகியற் கல்வியை வரலாறு மற்றும் பண்பாட்டுச் சார்பு நிலைகளை அடியொற்றி விளக்க முயன்றார். ஆனால் அழகியலாக்கம் இவ்வாறன எல்லைகளுக்குள் மட்டும் கட்டுப்படுத்தி விடக்கூடியதன்று.
அழகியற்கல்வியிலும் 56)6) இலக்கிய ஆய்வுகளிலும் அமைப்பியல் (STRUCTURALISM) என்பது புதிய புலக் காட்சிகளை ஏற்படுத்தியது. அமைப்பியல் என்பது கட்டமைப்பியல் என்றும் தமிழில் வழங்கி வரும். ஓர் அமைப்பு என்பது தன்னளவில் நிறைவு கொண்டது என்றும் அதன் சேர்மானங்கள் ஒண்றிணை வதால் அதற்குரிய வலு உண்டாகின்றதென்றும் குறிப்பிடப் படுகின்றது. ஓர் அமைப்பு அதற்கென உரிய தனித்துவமான தொழிற்பாட்டைக் (FUNCTION) கொண்டிருக்கும். பிற அமைப்புக்களுடன் ஓர் அமைப்புக் கொண்டுள்ள தொடர்புகளும், இடைவினைகளும், அந்த அமைப்பின் இயல்புக் கேற்றவாறு விசையும்திறனும் கொண்டிருக்கும். இவற்றிலிருந்து ஒரு கலை வடிவத்தின் அமைப்பியலை விளங்கிக் கொள்வதன் முக்கியத்துவம் புலப்படுகின்றது.
ஓர் இலக்கிய அமைப்பின் உட்கூறுகளை அந்த அமைப்பின் கூட்டுமொத்தமான இயல்புகளை அடியொற்றியே ஆராய வேண்டி
ՀՈ

யுள்ளது. மொழியியல் நோக்கில் அழகியற்கல்வியை முன்னெடுத்தலும் மேலைநாடுகளில் வளரலாயிற்று இந்த மரபு சுவிஸ் மொழியிய லாளராகிய பேர்டினன்ட்டி சசுறேயினால் திடகாத்திரமாக ஆரம்பித்துவைக்கப்பட்டது. மொழியியல் என்பது மொழியைப் பற்றிப் படிப்பது மட்டுமல்ல. அதன் பரப்பளவு பரந்து விரிந்து செல்லும் என்பது அவரது கருத்தாகும். அவர் மொழியை இரண்டு செயலமைப்புகளாக வகுத்தார். அவற்றுள் ஒன்று லங்கியு (LANGUE) என அழைக்கப்படும். மொழியியலின் இலக்கண நிலைப் பிரயோகங்களை இது விளக்கும். மற்றையது பறோலி (PAROLE) நடைமுறையில் மொழி எவ்வாறு பயன்படுத்தப் படுகின்றது என்பதை இது விளக்கும்.
சொல்லமைப்புக்கள் கலையமைப்புக்களாக எவ்வாறு நிலை மாற்றம் பெறுகின்றன என்ற வினாவே திறனாய்வில் மொழியயிலின் சிறப்பை ஒருவகையிலே எடுத்துக்காட்டுகின்றது. சொற்களின் நிலைத்துவமான பண்பும் அவற்றின் மாற்றமுறும் பண்பும் கருத்திற் கொள்ளப்பட வேண்டியுள்ளன. மொழிபல்வேறு செயற்பாடுகளைக் கொண்டது. அறிகைச் செயற்பாடுகளைக் கொண்டது. அறிகைச் செயற்பாடு, குறிப்பிடும் செயற்பாடு, எழுச்சிச்செயற்பாடு மொழியைக் கொடுப்போர் பயன்படுத்தும் விதம், மொழியை நுகர்வோர் பயன்படுத்தும் விதம், மொழியோடு இணைந்த பண்பு, மொழியை மீறிய பண்பு போன்ற பல விரிவுகளைக் காணலாம்.
மொழியை அறிதல் குறித்த மக்களது பண்பாட்டையும் உளவியலையும் புரிந்து கொள்ளலாகின்றது. இதனால் இலக்கியங் களையும் கலைகளையும் விளக்குவதற்கு மொழியியல் உரிமை கொண்டுள்ளது.
மொழி என்பது நடைமுறைச் செயலமைப்பின் வடிவம். ஒரு சமூகத்தின் உற்பத்திப் பொருளாக அமையும் மொழி அந்தச் சமூகத்தின் புலப்பாட்டு வடிவமாகவும் அமைகிறது. அகவயப் பண்புகளும் புறவயப்பண்புகளும் கொண்டது பல்வேறு நிலைகளில் கட்டுமானம் செய்யும் நெகிழ்ச்சியும் அதே வேளை கட்டுப்பாடுகளும் கொண்ட ஊடகமாக மொழி அமைந்துள்ளது.
51

Page 31
உளப்பகுப்புத்திறனாய்வில் இன்று பல புதிய வளர்ச்சிகள் ஏற்பட்டு வருகின்றன. கலை இயக்கயங்களை விளங்கிக் கொள்வதற்கு நேர்மன்என் கொலண்ட் என்பவர் ஈகோ உளவியலைப் (EGO PSYCHOLOGY) பிரயோகித்துள்ளமை புதிய வளர்ச்சிக்கு ஓர் எடுத்துக் காட்டாகின்றது. கலைப்படைப்புக்கும் அதை நுகர்பவனது இனங்காண் கட்டமைப்புக்குமுள்ள (IDENTITY STRUCTURE) தொடர்பு கலைப்படைப்பின் கருத்தையும் பொருண்மையையும் தீர்மானிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலைப்பாட்டிலிருந்து புதிய உளப் பகுப்புத் திறனாய்வு வளர்ச்சியடையத் தொடங்குகின்றது.
&B6õ)6፯)6Ö)!!! நுகர்வோர் எவ்வாறு அதனை நுகர்ந்து கொள்ளுகின்றார்கள் என்பதை ஆழ்ந்து நோக்க வேண்டியுள்ளது. நுகர்வோரின் கலை நுகர்ச்சியை 'DEFT” என்ற தொடரால் அவர் விளக்குகின்றார். இது நான்கு சிறப்பார்ந்த எண்ணக்கருக்களால் விளக்கப்படும். அவையாவன.
1) இசைவாக்கல் முனையம் (DEFENCE) 2) Gifhuil (EXPECTATION) 3) 663 bu60601 (FANTASY) 4) 1560)su LDITjöpiń (TRANSFORMATION)
கலை இலக்கியத்தைச் சுவைப்பவர் தமக்கு ஏற்றவாறு இசைவாக்கிக் கட்டமைப்புச் செய்தல் இசைவாக்கல் முனையம் எனப்படும். நடப்புநிலை உலகிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்ளல் விடுகற்பனை எனப்படும். காலம் கடந்த வகையில் கலைப்படைப் புக்குக் கருத்துத்தருதல் நிலை மாற்றம் எனப்படும். ஒருவரிடத்துக் காணப்படும் மேற்கூறிய நான்கு பரிமாணங்களும் மனித அனுபவங்களின் உள்ளார்ந்த நிலைக்கும் புறவுலக நடப்புக்கு மிடையே ஊடுருவலை ஏற்படுத்துகின்றன. காலத்துக்கும் காலமின்மைக்கும் இடையே ஊடுருவலை ஏற்படுத்துகின்றன.
தொல்வகையியல் (ARCHETYPAL) அணுகு முறையானது
மானிடவியல் நோக்கில் அழகியற்கல்வி ஆய்வுகளை முன்னெடுப் பதற்குத் துணை செய்கின்றது. சடங்குகள், மாயவித்தைகள் இனக்
52

குழுமங்களின் பாரம்பரியங்கள் முதலியவற்றை நிலைக்களங்களாகக் கொண்ட அழகியற் கல்விக்கு தொல்வகையியல் அணுகுமுறைமை சிறப்பளிக்கின்றது.
பல்வேறு அறிவியல் வளர்ச்சிகளின் மத்தியில் பரதநடனம் போன்ற தொல்சீர் நடனங்கள் இன்றும் நிலைத்து நீடித்து நின்று அழகியல் வெளிப்பாட்டை மலர்ச்சியுடன் வழங்கிக் கொண்டிருத் தலை விளக்கிக் கொள்வதற்கு தொல்வகையியல் அணுகு முறை துணை நிற்கின்றது. உளப்பகுப்புச் சிந்தனை மரபையும், தொல் குடியினரது உணர்வுகளையும் தொடர்புபடுத்தி யுங் (YUNG) என்பவர் வெளியிட்ட “கூட்டு நனவிலி” பற்றிய கருத்து தொல் வகையியல் அணுகு முறைக்குப் பெரும் பங்களிப்பைத் தந்தது. மானிடவியலாளர் பிறேஸர் (FRAZER) 6T6tusi 0.66ftfl'L "Billsidad6Ir' (THE GOLDEN BOUGH) என்னும் தொகுதி நூல்களில், தொன்மங்கள் பற்றிய விபரங்களும் வியாக்கியானங்களும் செறிந்து காணப்படுகின்றன.
விரைவான சமூக மாற்றங்கள் பண்பாட்டு மாற்றங்கள் நிகழ்ந்து வந்தாலும் மூதாதையரின் சிந்தனைகளும், கலையாக் கங்களும், இறுகிப்படிந்து உறைந்த அனுபவங்களும் அழியாததும், ஆற்றலுள்ளது மான சுவடுகளாக புதிய மாற்றங்களுடே நிலைத்து நிற்கின்றன. மனிதவாழ்வில் சாரம்சமாகி உறைந்த இந்த வடிவங்கள் தனித்துவ மான அடிப்படை வகைகளாகக் (PREMORDIAL) கொள்ளப்படுகின்றன. இந்த அடிப்படை வகைகள் தொன்மங்களாக, தொல்சீர் கலைகளாக தொல்சீர் வணக்க முறைகளாக பொருத்தமான சந்தர்ப்பங்களிலே வெளியிடப்படுகின்றன.
முன்னோர்கள் நனவு நிலையிலே ஆற்றிய அத்தகைய தொல்வடிவங்கள் சமகாலத்தவர்களின் நனவிலியின் பதிவுகளாகி நிலைத்து நிற்கின்றன. ஒவ்வொர் இனக்குழுமங்களினதும் தனித்துவங் களுக்கு ஏற்றவாறு உடல் உள்ள மரபுக் கூறுகளில் அல்லது மரபணுக்களில் ஊடுருவிய “முன்னமைந்தகோலங்களாக” (PROTO. PLASTIC PATTEENS) அவை காணப்படுகின்றன என்றவாறு உளப்பகுப்புச் சிந்தனா கூடங்களில் விளக்கப்படுகின்றன. மனித
S3

Page 32
நனவிலியிலே புதைந்துள்ள தொன்மங்கள் ஆடலாக மீளமைக்கப் படுகின்றன. கவிதைகளாக உருவாக்கம் செய்யப் படுகின்றன.
ஒவ்வொரு பண்பாட்டினதும் அழியாத சுவடுகளாகத் தொல் வகைகள் அமைகின்றன. அதனால் அவற்றைக் கலைகளும் இலக்கியங்களும் எடுத்தாளும் பொழுது வலிமை பொருந்திய மூலகங்களாக அமைகின்றன. கூட்டு நனவிலியின் வடிவங்களாக அவை அமைவதால் அவை கருத்து நிலையிலும் உணர்ச்சி நிலையிலும் மக்களை ஒன்றுபடுத்தி நிற்கின்றன. மனித வளர்ச்சியினதும், பண்பாட்டு வளர்ச்சியினதும், இணைப்புக் கோடுகளாக அவை அமைகின்றன. அவை மட்டுமல்ல நனவு மனத்தையும் நனவிலி மனத்தையும் இணைக்கும் உளவியற் பாலங்களாகவும் அவை விளங்குகின்றன. நனவிலி உள்ளத்தின் இயக்கச் செயற்பாட்டுக்கும் நனவு மனத்தின் அடக்கற் செயற்பாட்டுக்கு மிடையே தொல் வகைகள் ஒரு வித உளவியல் இசைவாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
தொல் வகைகள் காலத்திற்கு ஈடு கொடுக்கும் 6) ILq6/5 களாகும். இவற்றிலிருந்து எழும் பிறிதொரு திறனாய்வு எண்ணக் கருவாக “தேடல் நிலைத் தொன்மம்' (QUEST MYTH) அமை கின்றது. தொன்மங்கள் வழியாக உண்மையைத் தேடுதல் கலைப் பிரவாகத்தை தேடுதல், முதலிய தேடல் நிலைகளுக்குரிய நீண்ட வாயில்களைத் தொன்மங்கள் திறந்து விடுகின்றன. பரத நடனம் தொன்மங்கள் வழியாக சிவத்தைத் தேடும் தொல்சீர் ஆடல் வடிவமாகின்றது. கல்விச் செயல் முறையில் தேடல் நிலைத் தொன்மங்கள் சிறப்பார்ந்த இடங்களைப் பெறுகின்றன. ஆழ்மனப் பதிவுகளை மீட்டெடுப்பதற்கும், புதிய தொடுவானங்களை நோக்கி அறிகைச் செயற்பாடுகளை நகர்த்துவதற்கும் அவை துணை நிற்கின்றன.
 

7 பின்நவீனத்துவமும்
கல்வியும்
அரசியல், பொருளாதாரம், கல்வி, கலை, பண்பாடு, தொடர்
பாடல் முதலிய துறைகளில் “கோள்மயமாக்கல்’ (GLOBALIZATION) என்ற அலையின் எழுச்சிக்குப் பின்புலமாக அமைந்த ஒருவகை கருத்தியலே பின் நவீனத்துவம் (POST MODERNISM) என்பதாகும். கலை இலக்கியங்களைத் தழுவி முகிழ்த்த இக் கோட்பாடு பல்வேறு அறிவுத் துறைகளிலும் ஊடுருவி வருகின்றது. மிச்சேல் பூக்கோ, ரோலந் பார்த், ழாக் தெரிதா, ழாக் லக்கான், கேபமர்ஸ், பிரான்சே லையோத்தோ, பிரட்ரிக் ஜேம்சன், போத்திரியா, டெலுாஸ், சசூர் முதலானோரின் சிந்தனை கள் பின் நவீனத்துவக் கருத்தியலாக்கத்துக்குரிய பன்முகப்பட்ட விசைகளாக அமைந்தன.
பாரம்பரியமான சிந்தனை மரபுகள், கோட்பாடுகள் முதலியவை பின் நவீனத்துவக் கோட்பாட்டாளரால் மீளாய்வுக்கு உட்படுத்தப் படுகின்றன. மரபு வழிச்சிந்தனைகளின் கட்டுமானத்தை அவர்கள் நிராகரிக்கின்றனர். அச்சிந்தனைகளில் மேலதிகப்பண்பு, ஒன்று திரட்டியப் பண்பு (TOTALISING) வன்மைமுனைப்பு (HEGEMONISING) முதலியவை காணப்படுவதாக அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். உணர்வு, அறிவு, சமூகம், மானிடப்பண்பு முதலாம் அறிபுள்ளிகளை ஆதாரமாகக் கொண்டு உலகநோக்கு, கல்விநோக்கு முதலானவை உருவாக்கப் படுதலைப் பின் நவீனத்துவ வாதிகள் நிராகரிக்கின்றனர். மேற்கூறிய
எண்ணக்கருக்கள் “திரட்டிய” பண்புகள் கொண்டவை. வன்மை
55

Page 33
முனைப்பு அவற்றிடையே காணப்படுகின்றது. இவற்றுக்கு மாறாக தொடர்பற்ற தன்மைகள் மீதும் பின் நவீனத்துவ வாதிகளின் கவனம் செல்கின்றது. பல்லினப் பண்புகளைக் காணுதல், உதிர்ந்து செல்பவற்றைக் காணுதல் முதலாம் அவதானிப்புக்களை அவர்கள் முன்னெடுக்கின்றனர். அத்தகைய அவதானிப்பே வலிமை மிக்குடைய தென்று கருதுகின்றார்கள்.
பின் நவீனத்துவ நோக்கியல் கல்வியையும், கல்விச் செயல் முறையையும் நோக்கும் பொழுது சில அடிப்படை வினாக்கள் எழுப்பப்படுத்தலுண்டு. பின் நவீனத்துவ வாதிகள் அறிவுக்கும் உண்மைக்கும் இடையே நேர்த்தொடர்புகள் காணப்படுவதில்லை என்று குறிப்பிடுகின்றனர். இக்கருத்து ஆழ்ந்து நோக்குதற்குரியது.
அறிவு
அறிவு என்பது ஏற்றத்தாழ்வான சமூக அமைப்பை நியாயப்படுத்தும் கருவியாகின்றது. அது அதிகாரத்தின் கருவியாகச் செயற்படுகின்றது என்று மிசேல் பூக்கோ குறிப்பிடுகிறார். அறிவுக்கும் உண்மைக்கு மிடையே உள்ள உறவானது மிக்க பலவீனமானதாகவே உள்ளது என்ற கருத்து அதிலிருந்து மேற்கிளம்புகின்றது. அதிகாரத்தைப் பலப்படுத்தும் தேவையை அறிவு நிறைவு செய்து கொண்டிருப்பதனால், அறிவுக்கும் உண்மை- பொய், நல்ல முயற்சி கெட்ட முயற்சி என்றவாறன வகைப்படுத்தல் முயற்சிகள் சமூகத்தில் அதிகாரத்தைச் செயற்படுத்துவதற்கான கருவிகளாகின்றன. அவை நேர்நிலையிலும் எதிர் நிலையிலும் சிந்தனைகளை நெறிப்படுத்தி அதிகாரத்துக்கு ஆட்படவைக்கின்றன.
அதிகாரத்திலுள்ளவர்களது கருத்துக்களுக்கு அந்தஸ்தும், மதிப்பும், கெளரவமும் அறிவினால் பெற்றுத்தரப் படுகின்றது. அறிவே சில கருத்துக்களுக்கு அந்தஸ்தும், மதிப்பும், கெளரவமும் அறிவினால் பெற்றுத்தரப்படுகின்றது. அறிவே சில கருத்துக்களுக்கு மதிப்பின் மையை ஏற்படுத்துகின்றது. அதிகாரத்துக்குச் சமூக ஒப்புதல் கிடைப்பதற்குரிய வழிவகைகளை அறிவு” மேற்கொள்ளுகின்றது. அதிகார வளர்ச்சியின் போதும், ஒடுக்குமுறை வரலாற்றின்போதும்,
é 6
56

அடக்கப்பட்ட அறிவுகளையும் மாற்று அறிவுகளையும் கல்விச் செயல் முறையின் வழியாக வெளிக்கொண்டுவருதல் வேண்டும்.
ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் நிகழ்ந்த அறிவு உற்பத்தியானது பொருள்கள் மீது ஆதிக்கம் செலுத்தவும், இயற்கை மீது ஆதிக்கம் செலுத்தவும் பெருமளவில் முடுக்கி விடப்பட்டது. ரூசோவின் கல்விச் சிந்தனைகள், டுயியின் கல்விச்சிந்தனைகள் முதலியவற்றில் முறையே இயற்கையைக் கையாளுதல், பொருள் வழிப் பயன்பாடு முதலியவை மேலோங்கியிருந்தன. 966)6) பின்னர் வளர்ச்சிபெற்ற ஆட்சி முறைமைக்கு சாதகமாயின. மரபு வழி இந்திய அறிவு உற்பத்தியானது வருணப்பாகுபாட்டு முறைமை சார்ந்த அதிகார நிரலமைப்பை நியாயப்படுத்துவதற்குப் பெருமளவிலே உதவியது.
அறிவின் மேற்குறித்த பெறுமானங்களை போலோ பிறேறியும் பல எடுத்துக்காட்டுக்களினால் விளக்கினார். அறிவு என்பது ஒடுக்கப்பட்ட மக்களுக்குப் பாதகமாகவே பயன் படுத்தப்படுகின்றது.
கல்வியும் மொழியும்
பின் நவீனத்துவ வாதிகள் மொழியின் அமைப்பியலை மீளாய்வு
செய்கின்றனர். உலகம் பற்றிய காட்சியை மொழிபற்றிய மரபு வழிக்
கருத்துக்கள் விமர்சனத்துக்கு மிடையே இடை வெளிகள்
காணப்படுகின்றன. பொருளைத்தர முடியாது சொற்கள் விரிசலடைந் துள்ளன.
அறிவுக்கும் உண்மைக்குமிடையேயுள்ள இடைவெளியை நிரப்புவதற்கு மொழியமைப்பும், மொழிவழி உருவாக்கப்படும் உள அமைப்பும், துணை செய்கின்றன. சொல்லுக்கும் அது குறிக்கும் பொருளுக்குமிடையே இடை வெளிகள் காணப்படுகின்றன. தேடிக்கண்டறிய முடியாதவற்றையும் உண்டென்று கூறி வலியுறுத்தும் சொற்களும் உண்டு. உண்மை என்பது கண்டறியப்படாத நிலையில் “உண்மை’ என்ற சொல் வெறும் ஒலியாகவே நிற்கின்றது. மொழியை ஆதாரமாகக் கொண்ட கோட்பாடுகளும், தர்க்கங்களும் கல்விக் கருத்துக்களும் வெறும் சொற்கூட்டமாக, அதிகார அணிகளாகக் (PHARASE REGIMES) உள்ளன. நவீன உலகின் தொழில் நுட்ப
57

Page 34
வளர்ச்சியும், தொழில் முறைகளின் பன்முகப்பாங்கும் பழைய மொழிக்கட்டமைப்பைப் பயனற்றதாக்கிவிட்டன என்றும் பயனும் உபயோகமும் குன்றிய மொழியே இன்று எஞ்சி நிற்கின்றதென்றும் பெளடிலாத் (BAUDRILLARD) குறிப்பிடுகின்றார். மொழியும் கல்வியும் பற்றிச் சிந்திக்கும் பொழுது இவரின் எதிர் அறிவுவாத நோக்கின் ஆழத்தையும் கருத்திற் கொள்ளவேண்டியுள்ளது. அதாவது உண்மை நிலையை மொழியால் நேரடியாகப் பிரதிபலிக்க முடியாதிருக்கும் இக்கட்டான நிலை இருப்பதைக்குறிப்பிட வேண்டியுள்ளது. மொழி என்பது குறிப்பான்களினால் (SIGNIFIERS) ஆக்கப்படுகின்றது. அதன் வழியாகக் குறிப்பீடுகளை அல்லது கருத்துப்பிம்பங்களைத் (SIGNIFIERS) தரமுடியுமேயன்றி வஸ்துவை அல்லது இயங்கும் பொருளை நேரடியாகத் தரமுடியுயாது என்பது சசூர் என்பாரின் கருத்தாகும். மொழித் தொடர்பாடலிலே காணப்படும் நிறைவிக்க முடியாத இடைவெளியை இது குறிப்படுகின்றது.
மொழியின் இந்தப்பலவீனமான நிலையை கல்விச் செயல் முறையினால் வெளிப்படுத்த வேண்டியுள்ளது. ஆசிரியரும் மாணவரும் மொழிக்கட்டமைப்பின் இந்த அவலத்தை உணர்ந்து செயற்பட வேண்டியுள்ளது. மொழியின் இந்தப் பலவீனத்தை ஆசிரியர்கள் மாணவர்க்குத் தெரியப்படுத்துதல் பின் நவீனத்துவக் கற்பித்தலின் ஒரு சிறப்பார்ந்த பரிமாணமாகக் காணப்படுகின்றது.
கல்வியும் தேடலும்
பின் நவீனத்துவக் கோட்பாட்டின்படி "இயல்பானது” “சரியானது” ”பொதுவானது” என்று நம்பப்படுபவற்றைப் பரிசீலனை செய்வதற்குக் கல்வி கைகொடுத்தல் வேண்டும். காலம், இடம், கட்டளைகள் அனைத்தும் மாறிய வண்ணமுள்ளன. அவற்றை அடியொற்றிய நியமங்கள் அனைத்தும் மாறிய வண்ணமுள்ளன. இந்நிலையில் மாற்றமடையாத நடுவம் அல்லது மையம் (CENTRISM) என்பதைப் பரிசீலிக்க வேண்டியுள்ளது. மாற்ற மடையாது காலத்தையும்
இடத்தையும் கடந்து அவை வருகின்றன என்பதை பின்- நவீனத்துவ வாதிகள் நிராகரிக்கின்றனர்.
58

எந்த ஓர் அமைப்பும் முற்று முழுதான முழுமை கொண்டதும் ஒத்திசைவு கொண்டதுமான அமைப்பாக அமை வதில்லை. அதில் முழுமை உண்டென்று நம்பிக்கை கொள்ள வைப்பதற்குரிய உபாயமாகப் பாரம்பரியக் கல்விச் செயல்முறைகள் பயன்படுத்தப் பட்டுள்ளன. வரலாற்றைக் கடந்து முழுப்பொருளாக மாறாமல் நிலைத்து நிற்பதாகப் பாரம்பரியங்கள் நம்பவைக் கப்படுகின்றன. இதன் காரணமாகப் பாரம்பரியங்கள் அனைத்தும் புனிதமானவை என்று ஏற்க வைக்கப்படு கின்றன. இதனால் பாரம்பரியத்திலே காணப்படும் எதிர்மறைப் பண்புகளையும் ஏற்கவேண்டி வருகின்றது. இந்நிலையில் அவற்றை விமர்சிக்கவேண்டிய தேவையை பின் நவீனத்துவக் கல்விச்சிந்தனை முன்னெடுக்கின்றது.
நூலாக்கம்
நுாலாக்கம் பற்றிய பல புதிய சிந்தனைகளைப் பின் நவீனத்துவம் முன்வைக்கின்றது. ஒரு நூலை இப்படித்தான் படிக்கவேண்டும், இப்படித்தான் விளங்கிக் கொள்ளவேண்டும் என்ற பாரம்பரியமான பண்டிதத் தன்மை இங்கு நிராகரிக்கப்படுகின்றது. ஒரு நுாலை எப்படியும் அணுக முடியும், அந்நூலிற் கூறப்பட்டுள்ளவற்றுக்கு எப்படியும் விளக்கங்களைத்தரமுடியும் என்று பின் நவீனத்துவாதிகள் குறிப்பிடுகின்றனர். நுாலைப்படிப்பவனாலே அதற்குரிய அர்த்தம் உருவாக்கப்படுகின்றது. அதாவது வாசகரது முக்கியத்துவம் பின் நவீனத்துவத்தில் சிறப்புப் பெறுகின்றது.
நுாலாக்கம் என்பது முடிந்த முடிவான ஒரு வடிவமல்ல, வாசகரது உருவாக்கத்துக் கேற்ப ஒரு நூல் தொடர்ந்து வளர்ந்த வண்ணமோ, மாறியவண்ணமோ இருக்கும். வாசகரது இயல்புக் கேற்றவாறு ஒரு நூலின் அர்த்தம் உருவாகிக் கொண்டிருக்கும்.
அரசியலும் கல்வியும்
நாட்டினம், மொழி, சமயம், பிரதேச உணர்வு, வர்க்கங்கள்,
முதலியவை நிறுவனமாக்கப்பட்ட வடிவங்கள் என்பது பின் நவீனத்துவாதிகளின் கருத்து. நிறுவனமயமாக்கப்பட்டவை தாம்
59

Page 35
“இயற்க்கையானவை” என நம்பவைக்கப்படும் பொழுது அவை வன்முறைக்கு இட்டுச்செல்கின்றன என்று அவர்கள் மேலும் விபரிக்கின்றார்கள். மொழி, சமயம், வர்க்கம் முதலியவற்றைப் பயன்படுத்தி அரசியற்களத்திலும், தேர்தற்களத்திலும் இறங்கும் பொழுது அதிகாரத்தைக் கோரும் பொழுதும் அங்கு வன்முறை வெளிப்படுவதாக பின் நவீனத்துவாதிகள் தொடர்புபடுத்திக் காட்டுகிறார்கள். நிறுவனமாக்கப்பட்டவை அனைத்தும் தம்மை “இயற்கையானவை' என்று வரிந்துகட்டும் பொழுது வன்முறை தோன்றுகின்றது. நிறுவனமாக்கப்பட்டவற்றை இயற்கையானவை என்று அறியவைப்பதிற் கல்வியும் பங்கெடுத்துக் கொள்ளுகின்றது.
அரசியலும், அரசியல் தொடர்பான தீர்மானங்களும் வன்முறையோடு தொடர்புடையது என்றகருத்து பின்-நவீனத்துவ வாதிகளால் தொடர்ந்து வலியுறுத்தப்படுகின்றது. அனைத்தும் வன் முறைகளாக இருக்கும் பொழுது, பல செறிவுகள் கொண்ட தீர்வுகளைத் தெரிவு செய்வதற்குக் கல்வி உதவமுடியும். அதாவது தாக்கத்தை குறைப்பதற்குக் கல்வி துணை செய்யமுடியும்.
தத்துவவியலாளர்கள் நித்தியமானவை (ETERNAL) நித்திய மற்றவை அல்லது குறித்த காலத்துக்குரியவை என்று தீர்வுகளைப் பாகுபடுத்துகின்றனர். அத்துடன் நித்தியமானவற்றை மேலானவை என்றும், குறுங்காலத்துக்கு உரியவற்றை கீழானவை என்றும் பாகுபடுத்துகின்றனர். இது ஓர் எளிய தீர்வாக இருப்பதுடன், வழுக்கள் நிறைந்ததாக இருத்தலைக் கல்வியறிவின் வழியாகச் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. காலத்தின் சுருக்கவியலாத் தன்மையைக் (IRREDUSIBILITY) கல்வி வெளிப்படுத்துதல் வேண்டும். இந்நிலையில் ஏதேனும் ஒரு தீர்வுகளை எட்ட முடியாத முரண்களின் அழுத்தங்களை தொடர்ந்து நீடிக்கச் செய்வதே பொருத்தமான அணுகுமுறையாக இருக்கும் என்று கூறப்படுகின்றது. முரண்களின் அழுத்தங்களைத் தக்க வைப்பதற்குக் கல்வி உதவ முடியும். சாதி மதம் முதலானவற்றின் அடிப்படையில் வேறுபடுத்தும் பண்புகளை முதன்மைப்படுத்தும் அரசியற்சமூகம் குறித்து எச்சரிக்கை யாயிருத்தல் வேண்டும் என்பது பின்-நவீனத்தாரின் தொடர்ச்சியான வற்புறுத்தலாக வுள்ளது.

ஒவ்வோர் அரசியல் ஒழுங்கமைப்புக்கும் அதன் எஞ்சிய வடிவத்துக்கு (REMAINDER) குமிடையேயுள்ள வேறுபாட்டை அறிதற்செயல் முறையின் வழியாகக் கண்டுபிடிக்க வேண்டும். இந்நிலையில் எஞ்சிய வடிவம் யாது என்பது பற்றித் தெளிவு கொள்ள வேண்டியுள்ளது. அதாவது அரசியல் ஒழுங்கமைப்பு ஒன்றினை வரையறுக்கும் பொழுது அதற்கு அடங்காது எஞ்சி நிற்பதே ‘எச்சம்” அல்லது “மிஞ்சிநிற்கும் பகுதி” என்று கொள்ளப்படும். இந்த மிஞ்சங்கள் தமக்குரிய அரசியலைத் தெரிந்தெடுப்பதற்குரிய அறிவுப்பலம் கட்டியெழுப்பப்படல் வேண்டும் என்பது பின்-நவீனத்துவத்தின் குரலாக ஒலிக்கிறது. அதாவது முன்னரிலும் வேறுபட்ட “வித்தியாசமான” அரசியற் சிந்தனைகள் பின்-நவீனத்தாரால் முன்னெடுக்கப்பட்டன.
Sjö15 9já)usÓsö 5ísjí)usguð (POLITICS OF DIFFERENCE) என்ற கண்ணோட்டம் வலிமை பெறுகின்றது. இதனை ஓர் எடுத்துக்காட்டினால் விளக்கலாம். உதாரணமாக கறுப்பின மக்களின் பிரச்சினையை எடுத்துக் கொண்டால் அம்மக்களிடம், பொருளாதாரக் கட்டமைப்பு, தொடர்பான வித்தியாசங்கள் அல்லது வேறுபாடுகள் காணப்படுகின்றன. கறுப்பினமக்கள் என்ற பெருந்தொகுதியானது அவர்களிடையே காணப்படும் பொருளாதார வேறுபாடு என்ற வித்தியாசத்தைப் புறக்கணித்து விடுகின்றது. இந்நிலையில் நிறம் என்ற உயிரியல் அடித்தள வாதத்திலிருந்து விடுபடல் வேண்டும் என்ற கருத்தை இவர்கள் வலியுறுத்துகின்றார்கள். அதனால் , அந்த இனத்துக்குரிய தனித்துவங்களை கைவிட வேண்டுமென்பதும் அல்ல. வித்தியாசங்களை விரிவாக நோக்கும் பொழுது பல்வேறு சாத்தியக் கூறுகள் பற்றியும், பன்மை நிலைகள் பற்றியும் விரிவாக ஆராய்ந்து கறுப்பின மக்களின் போராட்டத்தை மேலும் வலிமைப்படுத்த முடியும்.
மூடிய சிந்தனைக்குப் பதிலாக திறந்து விரிந்த சிந்தனைகளை வளர்ப்பதே பின்-நவீனத்துவத்தின் கல்வி இலக்குகளாக அமைகின்றன. லக்காவ் என்பார் இக்கருத்தை பல எடுத்துக் காட்டுக்களினால் அணிசெய்கின்றார்.
அரசியலும் கல்வியும் பற்றிய பின்-நவீனத்துவ சிந்தனைகள் அரசியலின் பன் முகத்தன்மைகள் பற்றியும் அறிந்து கொள்வதற்குத்
61

Page 36
துாண்டுதலளிக்கின்றன. ஒரு சந்தர்ப்பத்தில் கூடுதலான முக்கியத் துவம் குறைந்த கருத்தாக மாறுகின்றது. அரசியற் குறிக்கோள்களும் இவ்வாறே அசையும் குறிக்கோளாக மாறுகின்றன. அரசியற் தந்திரோ பாயங்களும் பன்முகப்பட்டவையாய் வளர்வதை அறிதற்செயல் முறையின் வழியாகச் சுட்டிக்காட்டப்பட வேண்டியுள்ளது.
பின் நவீனத்துவத்தின் அடிப்படையில் இலங்கையின் அரசியல் பற்றி நோக்குவோமாயின் ஓரினப்பண்பு கொண்ட இலங்கை அரசியல் என்று கூறுவதிலும் பல்லினப்பண்பு கொண்ட இலங்கை அரசியல் என்று கூறுவதே பொருத்தமானது.
இந்நிலையில் அரசியலின் பல்லினப்பண்புகள் கல்வியிலும் தாக்கங்களை ஏற்படுத்தும் அரசியலில் அவர்கள் குறிப்பிடும் வன் முறைப்பண்புகளும் கல்வியின் மீது தாக்கங்களை ஏற்படுத்தும். அரசியலை அடியொற்றி, நித்தியமான கல்விநோக்கு என்றவாறன கருத்துக்களும் வடிவமைப்புச் செய்யப்படுகின்றன.
உலகம் முழுவதற்கும் பொதுவான கல்விக் கோட்பாடு ஒன்று இருக்க முடியாது. அப்படியொருதிட்டம் இருக்குமாயின் அது பன்முகத் தனித்துவங்களையும் நிராகரிப்பதாகவே இருக்கும் என்பது பின்-நவீனத்தாரின் கருத்தாகும்.
திறனாய்வு
பின்-நவீனத்துவம் தனித்த ஒரு சிந்தனையாளரால் உருவாக்கப் பெற்ற ஒரு கோட்பாடல்ல. பலரால், பலதுறைகளில் பல சந்தர்ப்பங்களில் ஏற்படுத்தப்பட்ட சிந்தனை இழைகளைக் கொண்ட கோவையாக அது அமைகின்றது.
பின்-நவீனத்துவம் எழுப்பும் பிரச்சினைகள் நவீன முதலாளித்துவத்தின் கோள்மயப்படுத்தல், நுகர்வோர் தொடர்பான பல்லினப் பாங்கு முதலியவற்றுடன் தொடர்புடையன. மார்க்சிய, நவமார்க்சிய வாதிகளிள் இன்று பின்-நவீனத்துவம் எழுப்பும் பிரச்சினைகளை ஏற்கனவே முன்னர் எழுப்பியுள்ளார்கள். அறிவு, உலக நோக்கு ஆகியவை வர்க்கநலன்களை உட்பொதிந்திருக்கும் என்ற
έςO

யதார்த்தத்தை மார்க்சியம் ஏற்கனவே துல்லியமாக வெளிப்படுத்தியது. பின்-நவீனத்துவவாதிகள் அறிவுக்கும் உண்மைக்கும் இடையே நேரிய இணைப்பு இல்லை என்பதை இன்று தெளிவுபடுத்துகின்றார்கள். அதற்கு மேல் மார்க்கச்சியவாதிகள் போல் அவர்களால் நகர முடியாதுள்ளது.
பின்-நவீனத்துவம் முன்வைக்கும் பன்முகமாகிய பண்புகள் என்ற கருத்தும் முரண்பாடுகளைத் தக்கவைத்தல் தொடர்பான கருத்தும் மார்க்சிய சிந்தனைகளில் பரக்கக் காணப்படுகின்றன. மேலும் அரசியலுக்கும் அதிகாரத்துக்குமுள்ள தொடர்புகள் பற்றிய பின்நவீனத்துவ வாதிகள் குறிப்பிடும் கருத்து மார்க்சிய வாதிகளால் ஏற்கனவே விளக்கப்பட்டுள்ளது. ஆனால் பின்-நவீனத்துவ வாதிகள் புதிய நடையியலையும், சொல்லாடல்களையும் கையாண்டு மேற்கூறிய கருத்துக்களை நுண்ணிதாக விளக்குகின்றனர்.
ஆனால், சுரண்டலற்ற, தன்நலமற்ற புதிய ஒரு சமூகத்தை எவ்வாறு உருவாக்கலாம் என்பதை பின்-நவீனத்துவம் திட்டவட்டமாக விளக்கத்தவறிவிடுகின்றது. உலகின் புதிய வளர்ச்சிகளைப் பின்நவீனத்துவம் விபரித்து விள்க்குகின்றது. ஆனால் எவ்வாறு அவற்றின் அவலங்களை மாற்றியமைக்கலாம் என்ற முன்மொழிகள் பின்-நவீனத் துவத்தில் வறிதாகவே உள்ளன. ஆனாலும் கல்விக் கோட்பாடுகள் பற்றிய ஒரு "மறுவாசிப்பு’ வேண்டப்படுகின்றது. என்ற பின்நவீனத்துவத்தின் அழுத்தமான குரல் வரவேற்கப்படக் கூடியதாகும்.
பின்நவீனத்துவ அழகியல்
உயர்ந்த நிலை அழகியற் பண்புகளும், வெகுசனக் கலை அழகியலுக்குமிடையேயுள்ள எல்லைக் கோட்பாடுகளை பின்-நவீனத்துவ அழகியற் கல்விச் சிந்தனைகள் அழித்தன. அவ்வாறே பழைமை தழுவிய அழகியலுக்கும் புதுமை தழுவிய அழகியலுக் குமிடையேயுள்ள எல்லைகளையும் பின்-நவீனத்துவம் அழித்தது.
பாரம்பரியமான அழகியற் கல்விச்சிந்தனைகளுக்கு மாற்று வகையான சிந்தனைகளைப் பின்-நவீனத்துவம் முன்னெடுத்தது. கலை
63

Page 37
இலக்கியங்கள் தொடர்பாக ஏற்கனவே வரிந்து தீர்மானிக்கப்பட்ட முடிவகள் கலையைச் சுவைப்பவர்கள் மீது செலுத்தும் அழுத்தங்களாய் இருப்பதால் அவற்றில் இருந்து விடுபடவைக்கும் முயற்சிகள் பின்நவீனத்துவத்தினால் தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்றன. நிலைபேறு கொண்ட கலை இலக்கியங்கள் ஏற்கனவே உருவாக்கிய காட்சிகளில் இருந்து நழுவவிடப் பட்டவர்கள் மீதும், புறக்கணிக்கப்பட்டவர்கள் மீதும் இக்கருத்தியல் ஆழ்ந்த கவனம் செலுத்தப்படுகின்றது.
நடைமுறையிலுள்ள கலை வடிவக்கூறுகளை உள்வாங்கு வதற்கும் அவற்றை அடியொற்றி மாறுபாடான எதிர்க்கலைப் பண்புகளை உருவாக்குதலும் பின்-நவீனத்துவ அழகியற் கல்வியில் இடம் பெறுகின்றன. சாதாரண எழுத்தறிவுடையோரால் விளங்கிக் கொள்ளத்தக்க காத்திரமான படைப்புக்களை உருவாக்குதல் இதன் தொடர்பிலே முக்கியத்துவம் பெறுகின்றது. கனங்காத்திரம் என்ற ஒரு துரவத்தை மிகுந்த எளிமை என்ற இன்னொரு துரவத்தால் எட்டிப்பிடித்தல் மிகவும் சிக்கலான பணியாகும். இதை மேலும் விளக்கிகூறுவதானால், மிகவும் எளிமையாகச் சொல்லமுற்படும் பொழுது ஆழமும் கனகாந்திரமான பண்பும் வீழ்ச்சியடையக் கூடும். மறுபுறம் கனகாந்திரமாகச் செல்லும் பொழுது எளிமை வீழ்ச்சி யடையக் கூடும்.
சனரஞ்சகமான எழுத்தாளர்களிடத்தும் கலைஞர்களிடத்தும் காணப்படும் எளிமைபம், கவர்ச்சியும் மிக்க மலின நுண் உபாயங்களை உள்வாங்கிக் கலைப்படைப்பை உருவாக்குதல் எதிர்க்கலைப் போக்கின் ஒரு சிறப்புப்பண்பாகும்.
64
 

அழகியலும் ஆற்றுகையும்
"ஆற்றுகை' என்பது கல்வியளிலும் அழகியலிலும் உணவியலிலும் விரிந்து ஆழ்ந்த ஆய்வுகளுக்கு உட்படுத்தப் பட்டு வருகின்றது. மொழிக்கும் செயலுக்குமிடையே இணைப்பை ஏற்படுத்து வதும், எவற்றை வெளிப்படுத்த எண்ணுகின்றோமோ அவற்றை வெளிப்படுத்தி நிற்பதும், ஆற்றுகையாகின்றது. வெறுமனே TTTTTTTTTTTT S TOMTTLLLLSSSLLL LLLLLS LLLGLLLLLLL S TTTT ஆற்றுகை அமைவதில்லை. ஆக்க மலர்ச்சியை வெளிப்படுத்துதலும் மீள வெளிப்படுத்துதலும் ஆற்றுகையில் உள்ளடங்கி நிற்கின்றன.
ஆற்றுகையில் இருந்து சடங்குகளும் தொன்மங்களும் விரிவுபெற்றன. தனியாளுக்குரிய உணர்வுகள் கூட்டுணர்வுகளாக மீள்பிரதி நிதித்துவம் (REPRESENTATION) செய்யப்படுகின்றன. ஆற்றுகையின் போது "வெளி (SPACE) என்பது “ஆற்றுகை வெளியாக' மாற்றப்படுகின்றது. இந்நிலையில் வெறும் வெளி, ஆற்றுகை வெளி என்ற இருநிலைகள் ஏற்படுகின்றன. ஆற்றுகை வெளியுடன் அண்மையங்கள் (PROXEMICS) தொடர்புடையன. கல்விக்கவிநிலை, பண்பாட்டுச்சூழல், உளவியற்கவிநிலை முதலியவற்றால் “அண்மை
Iங்கள்’ உருவாக்கப்படும். அதாவது இவை ஆற்றுகை உருவாக்கு மிடத்தின் பின்புலங்களாக அமைகின்றன.

Page 38
இருத்தல், (BRING) பிரதிநிதித்துவப்படுத்தல் (REPRESEN. TATION) இரண்டையும் ஆற்றுகை செய்வோர் அண்மையங்களுடன் தொடர்புபடுத்தி வெளிப்படுத்த வேண்டியுள்ளது. “அதுவாக இருத்தல்” பற்றிய உணர்வு பிரதிநிதித்துவப்படுத்தலுடன் தொடர்புடையது. உதார ணமாக கடவுளாக இருத்தல் அதுவாக இருத்தலாகவும் பிரதிநிதித் துவப்படுத்தி ஆடுதல் நடராஜ தாண்டவங்களாக அமையும். உணர்வும் இலக்கும் பிரதிநிதித்துவப்படுத்தலுடன் தொடப்புபட்டு நிற்கும்.
ஆற்றுகையின் போது உடலானது இயக்கமுள்ள விக்கிரகப் பண்பினை எடுக்கின்றது. குறியீடுகள், படிமங்கள், முதலியவை காட்சி வடிவினை எடுத்தல் திண்வடிவம் (ICON) எனப்படும். ஆற்றகையில் இபக்கநிலைத் தின்ை வடிவங்கள் உருவாக்கப் படுகின்றன. இவற்றை மேலும் விளங்கிக் கொள்வதற்குப் பின்வரும் எண்ணக்கருக்கள் பற்றிய விளக்கங்கள் அவசியமாகின்றன.
1, 2,617 LTI si PLAYING 2. ஒத்திகை செய்தல்_REHEARSING 3. ஆற்றுகை செய்தல் _PERFORMING
விளையாடல் என்பது சுயவெளிப்பாட்டுக்குரிய கற்றலுடன் இணைந்தது. ஒத்திகை செய்தல் என்பது நடிபங்கை அல்லது பாத்திரத்தை உருவாக்கும் செயல் முறையாகும். ஆற்றுகை என்பது மற்றவர்களுடன் தம்மை இடையுறவு கொள்ளவைக்கும் நடவடிக்கை யாகும.
மேற்கூறிய மூன்று செயற்பாடுகளுடனும் கற்றலுட இணைந்தவையாகும். கற்றல் என்று கூறும் பொழுது அறிகை எழுச்சி, உடலியக்கம் என்ற முப்பரிமாணங்களைக் கொண்டது. உடலியக்கம் என்பது ஒருவித விலங்கின நடவடிக்கையாகும். தசை நாருடன் தொடர்புடைய இந்த நடவடிக்கை மூளையினால் நெறிப் படுத்தப்படுகின்றது. உடலியக்கம் முழு உடலுடன் தொடர்புடைய பாய்தல், கெந்துதல், தாவுதல், நீந்துதல் போன்றவையாக இருக்கலாம். அல்லது நுண்ணிய இயக்கத்திறன் களாகிய கண்ணசைவு
 
 
 
 
 

கழுத்தசைவு போன்றவையாக இருக்கலாம். ஒலி எழுப்புதலும் ஒரு வகை நுண்ணிதான உடலியக்கச் செயற்பாடாகும்.
எழுச்சித்திறன்கள் என்பவை மனவெழுச்சிகளையும் உணர்வு களையும் வெளிப்படுத்தவும் கட்டுப்படுத்தவும் வல்ல ஆற்றல்களுடன் தொடர்புடையனவாகும். மனவெழுச்சிகளை வெளிப்படுத்துதல் சந்தர்ப் பங்களுடனும் பண்பாட்டுக் கோலங்களுடனும் தொடர்புடையன வாகும். உடல் மொழியால் மனவெழுச்சிகளை வெளியிடுதல் என்ற செயற்பாடு மட்டுமல்ல. நுண்சமிக்ஞை psogn GTLD (MICROGESTURAL SYSTEM) தொழிற்பாடும் எழுச்சித்திறன்களுடன் இணைந்ததாகும். தசைநார்கள் வழியாக மனவெழுச்சிகளை நுட்பமாக வெளிப்படுத்துதல் நுண்சமிக்ஞை முறையாகும். உதாரணமாக ஒருவரது முகத்தில் பலவகையான நுன்ைதசைநார்கள் உள்ளன. அவை குறிப்பிட்ட மனவெழுச்சிகளை வெளிப்படுத்தவல்ல உள்ளார்ந்த ஆற்றல்களைக் கொண்டுள்ளன. எடுத்துக் காட்டாகக் கூறுவதனால் நெற்றிப்புருவ அசைவுகளுக்கும் மனவெழுச்சிகளுக்கும் நேரடியான தொடர்புகள் இருப்பதைக் குறிப்பிடலாம்.
அறிகைத் திறன்களே மனிதர்களை விலங்குகளில் இருந்து வேறுபடுத்துகின்றன. மொழித்திறன்கள் அறிகை ஆற்றலுடன் தொடர் புடைய சிறப்பார்ந்த திறன்களாகும். தகவல்களை ஒருங்கிணைத்தல், திரட்டுதல், நிரலாக்குதல், பிரயோகித்தல் முதலியனவும் இப்பிரிவில் அடங்கும் திறன்களாகும்.
அறிகை ஆற்றல், எழுச்சி ஆற்றல், உடலியக்க ஆற்றல் ஆகியவற்றை இணைத்தும், சமநிலைப்படுத்தியும் நெறிப்படுத்தியும் ஆற்றுகை மேற்கொள்ளப்படுகின்றது. அறிகையில் முயற்சிக் கனம் LLLLLLL SLLL LLLLLLL TTTTLLLLLL TTST TTTTTTTTTS சூழலில் உள்ள தூண்டிகளை அதிக பிரயத்தனமின்றியும், இடரில்லாத சுகத்துடனும் உள்வாங்கும் ஒரு செயல்முறையை முயற்சிச் சிக்கனம் குறிப்பிடுகின்றது. சிறிய சிறிய விடயங்களில் ஆற்றல் பெற்ற பின்னரே பெரிய பெரிய விடயங்களை நோக்கி நகரமுடியும். இவ்வகையிலே தான் சிக்கல் பொருந்திய மொழித் தொகுதியைக் கற்றுக் கொள்ள முடிகிறது. கற்றல் என்பது நெடுங்கோட்டுநிலையில் படிப்படியாகவும் பராமரிக்கத் தக்க வேகத்திலும் நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒரு செயல்முறையாகும்.
(7

Page 39
இவ்வகையான கற்றற் செயற்பாடு இயல்புநிலைப் புத்தாக்கம் (MODERATE INNOVATION) 6T6OTu(Sh (RUTH AULT, CHILDRENS COGNITIVE DEVELOPMENT, NEW YORK 1997). அதாவது கற்றல் சராசரியானதும் பராமரிக்கத்தக்க வேகத்திலும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது.
பியாசே கற்றலை விளக்கும் பொழுது அந்தச் செயல் முறையின் முதற்படி உளத்திரளமைப்பை உருவாக்குதல் என்று குறிப்பிட்டுள்ளார். (ஐடினை 18-22) எமது நடத்தைகளுக்குரிய அடிப்படை அலகாக உளத்திரளமைப்பே (SCHEMA) அமைந்து மொழியைப்புரிந்து கொள்ளும் திறவு கோல்களை வழங்குகின்றது. உளத்திரளமைப்பின் ஆக்கம் உயிர்ப் பாரம்பரியங்களுடனும் மரபுஅணுக்கட்டமைப்புடனும் தொடர்புடையது. சூழலுடன் இடைவினை கொள்வதால் உளத்திரளமைப்பு தொடர்ச்சியான வளர்ச்சியைப் பெறுகின்றது. ஒத்திகை என்பது பியாசே குறிப்பிடும் தழுவிக்கொள்ளல் (ADAPTATION) என்ற செயற்பாட்டுடன் தொடர் புடையதாகும். அதாவது இருக்கும் அறிவுக்கட்டமைப்பை மாற்றிக் கொள்ளாது சூழலுடன் இடைவினை கொள்ளும் தன்மயமாக்கலும், அறிவுக்கட்டமைப்பை மாற்றி இடை வினை கொள்ளும் தன்னமைவாக்கலும் தழுவிக்கொள்ளலிலே இடம் பெறுகின்றன.
T66)6. செய்தல், மகிழ்ச்சியுறல், ஓர் ஒழுங்குக் கட்டுப்பாட்டினுள் வருதல் முதலியவை விளையாட்டுடன் தொடர்புடை யவை. விளையாட்டானது குறுங்காலத்தில் மகிழ்ச்சிக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டதாகவும் நெடுங்காலத்தில் யதார்த்தக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டும் நிகழ்வதாகவும் குறிப்பிடுவர் (HERBERT MARCUSE, EROS AND CIVILISATION, LONDON, 1969, pp30-5).
விளையாட்டுக்கும் ஆற்றுகைக்குமுள்ள தொடர்புகளை விளக்க வந்த சில்லர் என்பவர் மனிதரின் வெளிப்பாடுகளை மூன்று நிலைகளில் விளக்கினார்.
1. உருவாக்கும் சித்தம்
2. உள்ளடங்கி நிறைவு கொள்ளும் சித்தம்
3. விளையாடலுக்கான சித்தம்
68

இவருடைய கருத்தின்படி விளையாட்டு இரு கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டது. ஒன்று விளையாடல் மற்றையது ஆற்றுகை. அழகியலை ஆக்குதற்கான விளையாட்டு ஆற்றுகை. இதுவே மனித சாரம்சத்தின் வெளிப்பாடாக அமையும். விளையாட்டு ஆற்றுகையின் போதே ஒரு மனிதன் நிறைவு கொண்ட உணர்வுகளை அனுபவிக்கின்றான் என்பது பொருளாகும். இந்நிலையில் எழும் கட்டுப்பாடுகளற்ற விடுதலை உணர்வும் விடுதலை இணைப்புகளும் அழகியல் சார்ந்த விளையாட்டு ஆற்றுகையை நோக்கிய பாய்ச்சலை ஏற்படுத்துகின்றது.
ஒத்திகை என்பது முன்னர் குறிப்பிட்ட ‘தன்மயமாக்கல்”, 'தன்னமைவாக்கல்’ என்ற இரு தொழிற்பாடுகளையும் உள்ளடக்கியது. ஆற்றுகைச் செயல் முறையில் ஆற்றுகை செய்பவரின் உற்று நோக்கல்திறன் முக்கியத்துவம் பெறுதலை பிறெச்ற் பலவாறு சுட்டிக்காட்டியுள்ளார். உற்று நோக்கும் கலையில் ஆற்றல் மிக்கோரே ஆற்றுகையிலும் வல்லவர்களாக இருப்பர். உளவியலடிப்படையில் நோக்கும் பொழுது பரத நடன ஆற்றுகையைப் பொறுத்தவரை தன்மயமாக்கும் செயல் முறையே ஒப்பீட்டளவில் மேலோங்கியுள்ள அடவு களைத் தன்மயமாக்கல், அபிநயங்களைத் தன்மயமாக்கல், முத்திரை களைத் தன்மயமாக்கல் என்றவாறு அது விரிவடைந்து செல்லும். ஆற்றுகையின் அடிப்படையாக அமையும் காரணிகளுள் அசைவு சிறப்பிடம் பெறுதலை லாபன் விதந்து குறிப்பிட்டுள்ளார். எவ்வாறு அசைதல் என்பதைக் கற்றல் பின்வரும் படிநிலைகளை உள்ளடக்கி (1135.J.
உடல் பற்றிய விழிப்புணர்வு உடற்பாரமும் நேரமும் பற்றிய விழிப்புணர்வு வெளி பற்றிய விழிப்புணர்வு உடற்பாரத்தை வெளியிலும் நேரத்திலும் ஒடவிடுதல் பற்றிய விழிப்புணர்வு சேர்ந்து ஆற்றுகை செய்வோரோடு இசைவாக்கம் செய்தல் உடலின் கருவிசார் பயன்பாடு தனிமைப்பட்ட அசைவுகள் பற்றிய உணர்வு தொழில் சார் ஒத்திசைவுகள்
69

Page 40
9. அசைவு வெளி 10. முயற்சிச் செயல்கள் பற்றிய கண்டுபிடிப்பு 11. வெளியில் நிகழ்த்தும் அறிபரவல் 12. உடலின் பகுதிகளின் செயற்பாடுகள் 13. நிலத்தளமும் அசைவின் உயரமும் 14. குழு உணர்வு 15. g.g. fijos (GROUP FORMATION) 16. பல நிலை வெளியீட்டுப் பண்புகள்
ஆடலை ஆற்றுகை செய்பவர் பின்வருவன பற்றி ஆழ்ந்து
அறிந்திருத்தல் வேண்டியுள்ளது.
ஆடல் உள்ளடக்கம்
கையளிக்க வேண்டிய கருத்து
ஆடற் பாத்திரம் பற்றிய உணர்வு
தாளக் கட்டுக் கோப்பு
அடவு, அபிநயம், முத்திரைகள்
எச்சந்தர்ப்பங்களில் எவ்வகை மாற்றங்களை வருவிக்க வேண்டும்
என்பது பற்றிய உணர்வு அசைவுகள் பற்றிய உணர்வு 8. உணர்வு வெளிப்பாடுகள் பற்றிய பிரக்ஞை
7.
ஆற்றுகைக்குள் ஆடல் ஆற்றுகைகள் தனித்துவ மானவை. பரத நடன ஆற்றுகை, இறையருள், குருவருள், பெற்றோர் மூத்தோர் அருள் எல்லாவற்றோடும் இணைந்து மேற்கொள்ளப்படும். சடங்கு நிலைப்பட்ட ஆற்றுகையாக முகிழ்த்தெழுந்துள்ளது.
 

அழகியற் கற்வியில் மார்க்சிசமூம் 9 நவமார்க்சிசமூம்
சமூக யதார்த்தங்கள், மற்றும் வரலாற்று நடப்பியல் முதலியவற்றுடன் தொடர்புபடுத்திக் 560)6) இலக்கியங்களை விளங்கிக்கொள்ளல் வேண்டும் என்பது மார்க்சிச அணுகுமுறையின் அடியாதாரம். பொருளாதாரக் கட்டுமானமே சமூகக் கட்டு மானத்தையும், அந்தச் சமூகத்திற்குரிய கருத்தியலையும், நிறுவனங் களையும் கலை இலக்கியங்களையும் தீர்மானிக்கும் அடிப்படை யாகின்றது என்பது மார்க்சிச திறனாய்வில் பரிசீலனைக்கும் மீள்பரிசீலனைக்கும் உட்படுத்தப்பட்டு வருகின்றது. மார்க்சிய திறனாய்வின் தீவிரமான இயங்கும் பண்பு, இன்றைய நிலையில் புதிய புதிய பரிமாணங்களை ஏற்படுத்தியுள்ளது.
மார்க்சிச சிந்தனை மரபுக்களில் பலதரப்பட்ட கிளைவிடும் வளர்ச்சிகள் படிமலர்ச்சி கொண்டு வருதலை சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. மார்க்சிய திறனாய்வில் பன்முகப்பாங்குகள் செறிவுடன் வளரத் தொடங்கியுள்ளன.
1960 ஆம் ஆண்டின் பின்னர் மார்க்சிய கலை இலக்கியச்
சிந்தனைகளில் மேலும் பன்முகப் பாங்குகள் வளர்ச்சியடையத் தொடங்கின. லுயிஸ் அல்துஸ்ஸர் கட்டமைப்பியல், மற்றும் உளப்
71

Page 41
பகுப்பியல் முதலிய இயல்களை மார்க்சிய சிந்தனைகளுடன் இணைத்து வீச்சினை மேலும் அதிகரிக்கச் செய்தார். பல்வேறு மட்டங்களில் சமூக ஆக்கம் நிகழ்கின்றதென்பது சமூகத்தின் ஒவ்வோர் கட்டமைப்பியலும் சார்பு நிலையில் சுதந்திரமாகத் தொழிற்படுகின்றதென்றும் அவர் விளக்கினார். பாரம்பரிய மார்க்சிய கருத்துக்களில் இருந்து அகல விரிந்தும் பரந்தும் சென்ற இவரது கருத்துக்களை அடியொற்றி ரெறிஈகல்ரன் பின்கட்டமைப்பியல் (POST STRUCTURAL) கருத்துக் ፴6õ)6II வளர்த்துச் சென்றார். லக்கானுடைய உளப்பகுப்பியல் அணுகுமுறை, றோலன்ட் பார்த்தீசின் S/Z சுட்டிகள் முதலியவை மார்க்சிய சிந்தனைகளின் அடியாதாரத்தில் இருந்து விரிந்தவையாகும். இவற்றையெல்லாம் தொகுத்து நோக்கும் பொழுது மார்க்சியக் கலை இலக்கியப் பார்வை ஒடுங்கியதென்றோ, சுருங்கியதென்றோ, ஒரே வாய்பாட்டுக்கு உட்பட்டதென்றோ கூற முடியாது. பன்முகத்தன்மையான விரிவும் மலர்ச்சியும் மார்க்சிய திறனாய்வின் பலத்தை ஒருவிதத்திலே விளக்கி நிற்கின்றன. மறுபுறம் அவற்றின் விரிவும் மலர்ச்சியும் மார்க்சிசத் தின் ஆன்மாவை நழுவவிட்டு இறகுகளைப் பற்றிப் பிடித்தனவாக வுளளன.
மார்க்சிச கலை இலக்கிய திறனாய்வின் வளர்ச்சியில் விமர்சன BLius) (CRITICAL REALISM) சோசலிச நடப்பியல் என்ற இருகிளைகளையும் ஒப்புநோக்குதல் கூர்ப்படையத்தொடங்கியது. மனித ஆற்றல்களையும் திறன்களையும் புதிய சமூக ஒழுங்கமைப்பை நிர்மானிப்பதற்கான பணி சோசலிச நடப்பியலின் கடப்பாடாக அமைகின்றது. சோசலிச நடப்பியல் சரியான உணர்வுகளில் இருந்து கட்டியெழுப்பப்படும் கலை இலக்கியங்களை இனங்காட்டுகின்றது. முதலாளித்துவக் கலை இலக்கியங்கள் முன் வைக்கும் போலி d 600th 63,6i, 56 pr.60T p 600Tiro,56ir (FALSE CONSCIOUSNESS) முதலியவற்றை இனங் காண்பதற்கு இந்த அணுகுமுறை வினைத்திறன் வாய்ந்த அளவீடுகளை முன்வைக்கின்றது. நடப்பியலை நம்பகரமாகப் பிரதிபலிக்கும் பொழுது சரியான கருத்தியலும் பொருத்தமான அழகியலும் ஒன்றையொன்று தழுவிநிற்கும் சமூகம் பற்றிய சரியான அழகியற் பார்வையும் விளக்கமும் நடப்பியலின் முன் நிபந்தனைக ளாகின்றன.
72

மார்க்சிச கருத்தியல் வலுவும், அதனூடாகப் பரிணமிக்கும் அழகியல் வலுவும் அவற்றின் சமூகப்பயன்பாடும் நடப்பியலின் பலத்துக்கு வலுவூட்டுகின்றன. விமர்சன நடப்பியலும் சோசலிச நடப்பியலும் நடப்பியல் அழகியலின் மேன்மையும் பிரதியீடில்லாத சிறப்பையும் எடுத்துக் காட்டுகின்றன. முன்னோக்கி நகள்வதற்கும் பிற்போக்குத் தனங்களில் இழுபடுவதற்குமுரிய முரண்பாடுகளையும் நடப்பியல் கலை இலக்கியங்களினால் மட்டுமே பொருத்தமான அக்காட்சியுடன் சித்தரிக்க முடியும். எழுச்சிக்கும் வீழ்ச்சிக்கு மிடையேயுள்ள முரண்பாடுகளை விளக்காத எதிர் நடப்பியற் கோட்பாடுகள் தழுவிய கலை இலக்கியங்கள் கழுவுண்டு செல்வதையும் காண முடிகின்றது.
66
மார்க்சிச கலை இலக்கியங்களிலே விளக்கப்படும் 6)ዘ6Ö)ቇ› Driff'(TYPOLOGY) ப்ற்றிய தெளிவின்மையும் காணப்படுகின்றது. வகை மாதிரி என்ற எண்ணக்கருவை மலினமாக்கியும் கொச்சைப் படுத்தியும் வரும் திறனாய்வுகள் பரவலாகக் காணப்படுகின்றன.
வகை மாதிரி என்பது சமூகத்தின் சராசரி நிலவரங்களைக் குறிக்கும் பாத்திரக் குறியீடு அன்று. சமூக விசைகளை உள்வாங்கி வரலாற்றுப்போக்கில் முன்னோக்கி நகரும் பாத்திரமே “வகை மாதிரி’ யாகும். இருக்கும் நிலவரங்களோடு மாறுபட்டு நிற்கும் அடுதலை மாற்றுப்பாத்திரமும் (ECCENTRIC) வகை மாதிரியாக ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. சராசரியாக எமது கலை இலக்கியங்களிலே சித்தரிக்கப்படும் பாத்திரங்களை "வகைமாதிரி” என்று கூற முடியாது, தலைப்புமாதிரிகள் என்று கூறலாம். (NOT TYPICAL BUTTOPICAL GEORGE LUKACS, THE MEANING OF CONTEMPORARY REALISM LONDON, 1963 PP-93-127) 6603, LDT.gifu ITSOT ஒருபாத்திரம் தமது காலத்தின் வாழ்க்கை விசைகளோடு இடைவினை கொண்டு வரலாற்றுப் போக்கை முன்னே நகர்த்தும் அழகியல் விசை கொண்ட பாத்திரமாக அமையும்.
கலை இலக்கியங்கள் கருத்தியலின் உற்பத்தி வடிவங்களாகும்.
கருத்தியல் என்ற கருவியானது உள்ளடக்கங்களை கலை இலக்கிய உற்பத்தியாக நிலைமாற்றம் செய்கின்றது. அதாவது, 956)6)
73

Page 42
இலக்கியங்களால் கருத்தியல் உற்பத்தி செய்யப்படுகின்றது. (LITERATURE PRODUCES IDEOLOGY) (GLT65uJITGO, 6 Jarlsbp உணர்வானது போலியான கருத்தியலாக்கத்துக்கு கலை இலக்கியங் கள் வாயிலாகத் துணை போகின்றது. கருத்தியல் பற்றிய தெளிவானது கலை இலக்கியங்களின் உள்ளடக்கம் பற்றிய தெளிவை ஏற்படுத்து கின்றது.
மார்க்சிசமும், நவ மார்க்சிசமும் கலை இலக்கிய ஆக்கங் களுக்குரிய மொழிக்கருவி பற்றியும். ஆழ்ந்து சிந்திக்கின்றன. சமூக முரண்பாடுகள் தழுவிய கூர்மையும் தெளிவும், மனவெழுச்சித் தூண்டலும் கொண்ட மொழியைப் போலி மொழிப்பிரயோகங்களில் இருந்து வேறுபடுத்திய வெற்றி தமிழ் மரபில் ஈழத்து மார்க்சிய எழுத்தாளர்களுக்குரிய தனித்துவம் எனலாம்.
றொசலின்ட் கவார்ட் மற்றும் ஜோன்எலிஸ் ஆகியோர் எழுதிய மொழியும் பொருள் முதல் வாதமும் என்ற நூல் ( ROSLIND COWARD AND JOHN ELLIS, LANGUAGE AND MATERIALISM, LONDON, 1997) மார்க்சிச திறனாய்வு வரலாற்றிலே சுட்டிக் காட்டப் படத்தக்கது. மொழி எவ்வாறு நடப்பியல் சார்ந்த இலக்கிய உட்பொருளை உருவாக்கு கின்றது என்பது S/Z அமைப்பினால் இவர்களால் விளக்கிக் காட்டப்படுகின்றது. இலக்கிய உட்பொருள் என்பது நடப்பியலை விளக்கும் கருத்தின் உற்பத்தி யாகின்றது. நடப்பியலின் குறியீடாக மொழி உற்பத்தி செய்யப் படுகின்றது.
ஒரு குறிப்பிட்ட சமூக அமைப்பு என்பது சில வரையறைகளுக்கு உட்பட்டிருக்கும். நடப்பியல் என்பது மொழியின் பன்முகப் பாங்கினை வரையறைக்கு உட்பட்ட வகையிலே பிரதிநிதித்துவப்படுத்துகின்றது. நடப்பியலுக்கும் மொழியின் பன்முகப் பாங்குகளுக்கும் தொடர்பு உண்டு. எத்தகைய பொருள்கள் ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டாலும் அவை இறுதியில் பணப் பெறுமதி என்ற அமைப்புக்குள் கொண்டு வரப்படுகின்றது. பணத்தால் பொருளின் பெறுமதி சுட்டப்படுதல் போன்று மொழியின் ஒரு வகைப் பயன்பாட்டின் வழியாக நடப்பியல் (REALISM) உற்பத்தி செய்யப்படுகின்றது. இது ஒரு சிக்கலான முறையில் உருவாக்கப்படுகின்றது. சமூகம் பற்றிய தெளிந்த புலக்காட்சியாலும் வாழ்க்கை உண்மைகளைத்தேடுவதனாலும்
74

நடப்பியல் உருவாக்கப்படுகின்றது. நடப்பியல் எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது. (PRODUCTION) என்ற செயல் முறையை நாம் பொதுவாக நோக்கு வதில்லை. மாறாக உற்பத்தியின் முடிவையே (PRODUCT) பொதுவாக நோக்குகின்றோம்.
மொழியின் விளைவே நடப்பியல். நடப்பியல் என்பது தனக்குரிய அடிப்படை மொழிக் கோட்பாட்டைக் கொண்டுள்ளது. மொழியின் குறியீட்டுச் சங்கிலித் தொடர்புகளால் பொருண்மை கொண்ட மொழி வெளியீடு நிகழ்த்தப்படுகின்றது. மொழிக்குறிப்பான் (SIGNIFIER) மொழிக்குறிப்பிட (SIGNIFIED) 6Jsb3,607(66) நிலைநிறுத்தப்பட்ட எண்ணக்கருக்களை நிலைநிறுத்துதல் மட்டும் மொழியின் நோக்கமல்ல. தொடர்பாடலை மேற்கொள்வதே அதன் நோக்கமாகும்.
நடப்பியலை மொழி வெளிப்படுத்தி நிற்பதனால், நடப்பியலை மாதிரியாக்கும் மொழியைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. மொழி என்பது பல்வேறு பண்புகள், சந்தர்ப்பங்கள் மரபுகள் முதலியவற்றை பெரும் வளக் குவியலாகவுள்ளது. இந்தப் பன்முகப்பாங்குகளின் தெரிவுடன் நடப்பியல் இணைந்துள்ளது.
பண்பாட்டுப் பொருள் முதல் வாதமும் புதிய வரலாற்றுவாதமும் (CULTURAL MATERIALISM AND NEW HISTORICISM) பண்பாட்டுப் பொருள்முதல்வாதம் என்ற தொடரை றேமன்ட் வில்லியம்ஸ் உருவாக்கினார். மார்க்சிச சிந்தனைகளிலும் திறனாய்விலும் நெகிழ்ச்சியற்ற இறுக்கம் இருப்பது போன்ற உணர்வு அவருக்கு ஏற்பட்டது. மரபு வழி மார்க்சிசவாதிகள் குறிப்பிட்டமை போன்று பொருளாதாரக் கட்டமைப்புக்கும் அதன் மேலமைந்த அமைப்புகளுக்குமிடையேயுள்ள தொடர்புகள் அத்துணை எளிதானவை அல்ல என்றும் மிகச் சிக்கலானவை என்றும் அவரது அறிகை வீச்சுக்குத் தெரிந்தன.
ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் பொருளாதார அடிக்கட்டு மானத்தின் மீது பல பண்பாட்டு விசைகள் தாக்கம் விளைவிக் கின்றன என்றும் ஆனால் அவற்றை அடிக்கட்டு மானத்தினால் கட்டுப்படுத்த முடியாதுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பண்பாட்டின் பன்முகப் பாங்கானது நிலப்பிரபுத்துவம் முதலாளித்துவம் போன்ற
75

Page 43
ஒவ்வொன்றுக்குமுரிய மரபுகள், நிறுவனங்கள் ஆக்கப் பண்புகள் முதலியவை தொடர்ந்து நீடித்து நிற்பதனால் காணப்படுகின்றது. அதாவது நிலப்பிரத்துவத்தின் பண்பாட்டுத் துணிக்கைகள் முதலாளித்துவ சமூக அமைப்பிலும் நீடித்து நிற்றலையும், வலுவுள்ள தாயிருத்தலையும் சிக்கலாயிருத்தலையும் பண்பாட்டுச் சுவடுகளின் இயக்கமுள்ள உள்ளமைந்த தொடர்புகளை ஆராயும் பகுப்பாய்வு முறைமையை அவர் முன்னெடுத்தார். எத்தகைய ஒரு பண்பாடும் பழைமையின் சுவடுகளைக் கொண்டிருக்குமாயினும் அவற்றின் சமகால இருப்பு மாறும் பண்புடையதாகக் காணப்படும். பொருளாதார அடிக்கட்டு மானத்துடன் நேரடியாக இணைந்த பண்பாட்டுச் செயல்முறையும் முகிழ்த்தெழும் வாய்ப்பு உண்டு.
மார்க்சியத் தளத்தில் விசை கொண்டெழுந்த பிறிதொரு மலர்ச்சியாக அமைவது மார்க்சிய உளவியலாகும். மனித இருப்பும், உணர்வுகளும், மனவெழுச்சிகளும், முரண்பாடுகளும், சமூகத் தளத்துடன் கொண்ட இடையுறவுகளை மார்க்சிய உளவியல் அறிகை தெளிவாகப் புலப்படுத்துகின்றது. மார்க்சிச நோக்கில் உளப்பகுப்பு உளவியலை அணுகிய உளவியலாளர்கள் வீரியம் மிக்க கருத்துக்களை முன்னெடுக்கின்றனர்.
கலை இலக்கிய ஆக்கங்களின் சிறப்பார்ந்த பரிமாணங்களுள் ஒன்றாக அமைவது படைப்பாளியின் உள்ளார்ந்த மனக்கோலங்களை வெளிப்படுத்தி நிற்றலாகும். படைப்பாளியின் உள்ளம் சுவைப்பவரின் உள்ளத்தோடு தொடர்புபட்டு நிற்கின்றது. இது வர்க்க நிலைத் தொடர்பைப் புலப்படுத்தும் உளப்பகுப்புக் கோட்பாட்டின் அடிப் படையில் இதனை விளக்குவதாயின், கலை இலக்கியங்கள் வாயிலாகப் படைப்பாளியின் நனவிலி மனக்கோலங்கள் படைப்பைச் சுவைப்பவரது நனவிலி மனக்கோலங்களுடன் தொடர்பாடல் கொள்ளும் உளவியல்
நிலை தோன்றுகின்றது.
கலை இலக்கியங்கள் 'மாய’ ஆற்றல்கள் கொண்ட செயற்பாடுகளாக அமைகின்றன. மனத்தை ஈடுபட வைக்கும் மாய ஆற்றலே கலையாக்கத்தின் மூல ஊற்றாக அமைகின்றது. நனவிலி மனத்திலே குழந்தைப் பருவம் தொடக்கம் புதைக்கப்பட்டும் அடக்கப்பட்டும் வரும் நிறைவேறாத ஆசைகள் வினோத வடிவங்கள்
76

கொண்ட விடுகற்பனைகளாகவும் (FANTASY) கலை ஆற்றல்கள் கொண்ட கனவுத் தோற்றங்களாகவும் வெளிவருதலை உளப்பகுப்பு உளவியலாளர் சுட்டிக்காட்டுவர். அவை தான் கலை ஆக்கங்களுக்குரிய வளம் மிக்க சொற்களஞ்சியங்களையும், படிமக் களஞ்சியங்களையும் கொண்டுள்ளன.
நனவிலி மனத்தின் புதையல்களை விடுகற்பனைகளாக வெளிப்படுத்துவோரும் வெளிப்படுத்த அச்சங் கொண்டவர்களும் கலைப் படைப்பின் வழியாக உள்ளார்ந்து அவற்றை அனுபவித்துக் கொள்ளுகின்றார்கள்.
படைப்பாளியின் நனவிலி மனத்தோடு சுவைப்பவரது நனவிலி மனமும் ஒன்றுபடும் நிலையில் தோன்றும் ஒத்துணர்வு (EMPATHY) கலைத் தொடர்பாடலை மேலும் வலிமை பெறச் செய்கின்றது. இதை மேலும் விளக்குவதாயின் கலைஞரது ஆழ்மனத்தில் ஏற்படுதல் ஒத்துணர்வைப் புலப்படுத்தும். கலைப் படைப்பில் ஈடுபடத் தூண்டும் உளவியல் விசையை ஒத்துணர்வுத் தூண்டியும், வளர்த்து விடுகின்றது. இந்த ஒத்துணர்வு மனித உணர்வுகளை அந்நியப் படுத்தாது. உளவியல் தளத்திலே மனிதர்களை ஐக்கியப்படுத்தி விடுகின்றது.
ஒவ்வொரு கலைப்படைப்பிலும் படைப்பாளியின் நனவிலி மனம் வெளிபட்டுக் கொண்டிருக்கும். சமூக நிபந்தனைகளும், கட்டுப்பாடுகளும் நனவிலி மனத்திலே புதைந்த பாலியற் கோல்ங்களை வெளியிடுவதற்கு தடைகள் விதிக்கின்றன. கலைப் படைப்புகளின் வழியாக அவற்றை வெளிப்படுத்தும் பொழுது கலைஞருக்கு ஏற்படுகின்ற மனச்சுகம், கலைப்படைப்பைச் சுவைப்பவர்க்கும் கிடைக்கப் பெறும். அதாவது ஒரு வித உள அழுத்திலிருந்தம் சுமையிலிருந்தும் விடுதலை இருவருக்கும் கிடைக்கப் பெறுகின்றது.
இந்நிலையில் 56)6) இலக்கியங்கள் சமூக அடக்கு முறைமைக்கு எதிரான வடிவங்களாக உளப்பகுப்பு உளவியல் வெளிவருதலை நவமார்க்சியவாதிகள் சுட்டிக் காட்டுவர். நடப்பியல் வாழ்வில் நிறைவேற்றுவதற்கு சமூகம் தடை விதிக்கும் ஒரு பாலியற் செயலை கலைஞர் தமது கலையாக்கத்திலே நிறைவேற்றி வைத்து
77

Page 44
விடுகின்றார். கலைப் படைப்பிலே அது சித்திரிக்கப்படும் பொழுது சமூக அங்கீதாரம் கிடைத்து விடுகின்றது. எமது புராணங்களில் இடம்பெற்றுள்ள பாலியற் விகாரச் சித்திரிப்புக்கள் கற்பிக்க ஏற்புடைமை கொண்ட உருவங்களாகக் கையளிக்கப் படுகின்றன.
நனவிலி மனம் இன்பம் நாடி இன்பம் துய்க்கும் மனமாக விளங்குகின்றது. நனவிலியிலே கிளர்ந்தெழும் இன்ப ஊக்கல் கலையாக்க ஊக்கலாகப் புறநிலைப்படுத்தப்படுகின்றது. இவ்வாறு புறநிலைப்படுத்தும் பொழுது நனவு மனத்தின் தருக்க ஒழுங்குகளும், நனவிலி மனத்தைச் சமாதானப் படுத்தும் நனவு மனத்தின் செயற்பாடுகளும் கலையாக் கத்திலே பங்கு கொள்ளுகின்றன. அதாவது கலைப் படைப்புக்கள் முற்று முழுதான கனவுகள் போன்று அமைவதில்லை. ஒருபுறம் கனவும் மறுபுறம் நிஜமும் கலந்த தோற்றங்களாக வருதலையும் விளங்கிக் கொள்ள முடிகின்றது.
நனவிலி மனத்தை கட்டுப்பாடில்லாத நிலையில் வெளிப் படுத்தும் பொழுது காட்சி வடிவம் கருத்து வடிவமாக மாறுதலும், கருத்து வடிவம் காட்சி வடிவமாக மாறுதலும் என்ற இரு தள நிலை மாற்றம் நிகழும். அதாவதும் அருவம் உருவமாக மாறுதலும் உருவம் அருவமாக மாறுதலும் என்ற நிலைகளிற் கட்டற்ற வெளிப்பாடு வீச்சுக் கொள்ளும். கட்டற்ற உரையாடல், வரையறைகளை மீறிய பாத்திரங்கள், விநோதமான படிமங்கள், முதலியவை நனவிலியின் வெளிப்பாய்ச்சலாக வரும் சில எடுத்துக் காட்டுகள் வருமாறு:
(அ) "வறுமை நுகத்தடியில் தொங்கிக்
கொண்டிருக்கும் நிலவு’ (ஆ) "ஏழ்ம்மைப் பொந்துக்குள் நுழைந்த
மண்டியாறு” (இ) 'திறந்த சந்தைக்குள் அக்கினிக்
குஞ்சு”
கலை இலக்கியங்களின் மறைந்து நிற்கும் பரிமாணங்களை விளங்கிக் கொள்வதற்கு மார்க்சிய நோக்குடைய உளப்பகுப்பு உளவியல்
78

ஒரு வகையில் கைகொடுத்து உதவுதலைச் சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது.
இவ்வாறாகப் புதிய புதிய வளர்ச்சிகள் தோன்றினாலும், மார்க்சியத்தின் மூலதாரமான கருத்துக்கள் நித்தியப் பொருளாகி நிற்றலே மேலும் மேலும் துலக்கமடைகின்றன. புதிய வளர்ச்சிகளின் மத்தியில் ஈழத்து மார்க்சியத் தடத்து எழுத்தாக்கங்களை மீள ஆராய வேண்டிய தேவை கூர்ப்படைதலைச் சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது.
79

Page 45
1. அழகியனும் கலையாக்கச்
செயல்மூறையும்
கலையாக்கம் என்பது சூழலுக்கும் சுயத்துக்குமிடையே நிகழும் உரையாடல் என்றும் விளக்கப்படுகின்றது. பொருண்மை கொண்ட புதியதை உருவாக்குதல், கலையாக்கச் செயல்முறையாகக் கருதப்படுகின்றது. கலையாக்கம் கற்பனையை அடியொற்றி எழுகின்றது. ஆனால், கற்பனைகள் அனைத்தும் கலையாக்க மாகிவிடாது. யதார்த்த நிலைகளில் இருந்து கற்பனை நிலைமாற்றம் கொண்டு திரண்டெழுகின்றது. நடப்பியல் உணர்வோடு இணைந்த கற்பனையே கலையாக்க மூலக்கூறில் வலிமை பெறுகின்றது.
நடப்பியல் உணர்வோடு இணைந்த கற்பனையின் அடுத்த பரிமாணம் கற்பனையின் நெறிப்பாடாகும். கனவுகளில் கற்பனைகள் பொதிந்திருந்தாலும், அவற்றில் நெறிப்பாடோ, கட்டுப்படுத்தும் திட்ட மிடலோ பொதுவாக இடம் பெறுதல் இல்லை. கற்பனைகள் எவ்வாறு தூண்டப்பெறுகின்றன என்பதில் உளவியலாளரிடையே கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன. உளப்பகுப்பு உளவியலாளர் நனவிலி உள்ளத்திலிருந்து கற்பனைகள் தோன்றுவதாகக் கூறுவர். நடத்தை நிபந்தகைளில் இருந்து கற்பனை தோன்றுவதாக அதாவது தூண்டிதுலங்கல் இணைப்புக்களில் இருந்து கற்பனைகள் விரிவடை வதாக நடத்தைவாதிகள் விபரிப்பர். அறிகைத் தளங்களில் இருந்து கற்பனைகள் முகிழ்ப்பதாக அறிகை உளவியலாளர் விளக்குவர்.
80

வாழ்நிலை இருப்பிலிருந்து கற்பனை வளர்வதாக மார்க்சிய உளவியலாளர் குறிப்பிடுவர். கற்பனைகளுக்குக் கட்டுப்பாடு (CONTROL) இல்லையாயினும் கலையாக்கக் கற்பனைகளுக்கு நெறிப்பாடு (MONITORING) உண்டு. கற்பனைகள் கலையாக்கங்களோடு அண்மித்து வரும் நிலை 'விளைவு தரும் கற்பனை’ எனப்படும். ஒழுங்கிலிருந்து விடும் கற்பனை ஓர் ஒழுங்கை நோக்கி மீண்டெழுதல் கலையாக்கத்தில் குறிப்பிடப்படும் பிறிதொரு பண்பாகும். விஞ்ஞானக் கற்பனைகளில் தருக்க ஒழுங்குகள் கறாராக இருக்கும். ஆனால் கலைக்கற்பனைகளில் ஒருவித அழகியல் ஒழுங்குபடுத்தல் காணப்படும். அழகியல் ஒழுங்குபடுத்தல் என்பது உணர்ச்சிப் படிமங்களின் ஒழுங்குபடுத்தல் என விரித்துரைக்கப்படும்.
கலையாக்கச் செயல்முறையில் அடுத்து வலியுறுத்தப்படும் பரிமாணம் மரபு ஆகும். மரபு என்பதற்கும் பல்வேறு வரைவு இலக்கணங்கள் தரப்படுகின்றன. மரபை வரலாற்று அடியொற்றியும், பண்பாட்டை அடியொற்றியும், மொழியை அடியொற்றியும், சமூகக் கட்டுமாணங்களை அடியொற்றியும், கல்விக் கவனிப்பை அடியொற்றியும் விளக்கும் பன்முகமான சிந்தனைகள் காணப் படுகின்றன.
அழகியல் நோக்கில் மரபு அல்லது பாரம்பரியம் என்பது பரந்த கண்ணோட்டத்தில் வேறொரு விதமாக நோக்கப்படுகின்றது. கலையாக்கத்துக்குச் சாதகமான அனைத்துச் செல்வாக்குகளும்
மரபுக்கட்டமைப்புக்குள் அடக்கப்படுகின்றது.
கலையாக்கச் செயல்முறை இருப்பியக் கண்ணோட்டத்தில் வேறொருவிதமாக நோக்கப்படுகின்றது. மனிதரிடத்து உட்பொதிந்துள்ள பாதுகாப்பற்ற பயமும், அச்சமும் தமது ஆற்றல்களை வெளிப்படுத்த ஒருவகையிலே தூண்டிகளாக இருக்கின்றன. இந்நிலையில் அறியா நிலைகளை நோக்கி நகர்வதற்கு ஒரு வகையிலே கலையாக்கங்கள் துண்ைநிற்கின்றன. இருப்புப்பற்றிய பயம் அனைவரிடத்தும் காணப் பட்டாலும் ஒருசிலர் மட்டுமே கலையாக்கங்களில் ஈடுபடுகின்றார்கள். ஏனையவர்கள் ஏன் ஈடுபடவில்லை என்ற வினாவும் இச்சந்தர்ப்பத்தில் எழுப்பப்படுதல் உண்டு.
8

Page 46
இதற்குரிய விளக்கத்தைச் சொல்ல முற்படுவோர் கலையாக்கச் செயல்முறை ஒவ்வொருவரிடத்தும் மறை நிலையில் உட்பொதிந்துள்ள தன்றும் கல்விச் செயல் முறையால் அதனை வளர்த்தெடுக்கலாம் ன்றும் கூறுகின்றனர்.
கலையாக்கச் செயல்முறை விடுதலை உணர்வின் ஒருவித வெளிப்பாடு எனவும், தம்மை முனைப்புப்பெறச் செய்யும் சுயவெளிப்பாடு என்றும் இலட்சிய வடிவான சுயத்துக்கும் யதார்த்தவடிவிலான கலையாக்கச் செயல்முறையை அனுபூதி அனுபவங்களுடன் (MYSTIC EXPERENCE) தொடர்பு படுத்தி விளக்கும் மரபும் இன்னொரு புறம் வளர்ச்சியடைந்துள்ளது. “துடிக்குதென் உதடும் நாவும் சொல்லு சொல் என்றே வாயில் இடிக்குது குறளி’ என்ற பாரம்பரியம் தமிழர்களிடத்தே காணப்பட்டது. இறையருளாலே ஆக்கம் பிறக்கின்றதென்றும், இறைவனே கலையாக்கத்தை வழிப்படுத்தி ஆக்கத்தை முன்னெடுத்தல் வேண்டுமெனவும் இறைஞ்சும் “காப்பு’ எழுதும் மரபும் தமிழகத்திலே காணப்பட்டது.
A. · · AWA
கலை என்பது பாவனையால் (IMITATION) எழுந்தது என்ற கருத்துக்கு மாறுபாடான எதிர்வாதங்கள் இருக்கின்றன. கலைப் பொருளைப் பாவனை செய்யும் பொழுது அசலுக்கும் பாவனைக்கு மிடையே இடைவெளி அல்லது 360 gigs/IUL) (DISTANCE) ஏற்படுகின்றது. அசலை அல்லது நிஜத்தை அப்படியே பிரதி பண்ணல் கலையாகிவிடாது. அதாவது உள்ளதை உள்ளவாறே சித்திரித்தல்
கலையாகாது. உள்ளதுடன் மேலதிகமான அழகியற் பரிமாணங்களை இணைத்துக் கலையாக்கத்தை மேற் கொள்ள வேண்டியுள்ளது.
நிஜத்தை அறிதல், நிஜத்தை பாவனை செய்தல், நிஜத்துக்கு மெருகுதருதல் முதலியவை கல்விச் செயல்முறையால் வளம்படுத்தப் படலாம். அசற்பொருள் தந்த உணர்ச்சியை மெருகு செய்தல், உணர்ச்சிக்குச் செறிவூட்டுதல், குறியீட்டு வடிவமைப்புக்களைக் கண்டறிதல், ஒருங்கிணைவை ஏற்படுத்துதல் முதலியவற்றுக்கு அறிவு சார்ந்த நடவடிக்கைகள் துணை நிற்கும்.
82

கலைப்பொருள் அழிந்து விடலாம், நடைபெற்ற நிகழ்ச்சிகள் மீண்டும் நிகழாதவையாயிருக்கலாம். அவை கலை வடிவம் பெறும் பொழுது நீடித்த வாழ்வைப் பெறுவதற்கு முன்னதாக கலைப்படைப்பை உருவாக்கியவனது உள்ளத்திலே நிகழ்ந்த பதிவுகளும், உளப்படிமங் களும் முக்கியத்துவம் பெறுகின்றன.
புறப்பொருள்கள் நிலையற்றதாக இருக்கும் பொழுது அவற்றை அடியொற்றி எழும் கலைப்பொருள்கள் எவ்வாறு நிலையாகும் என்ற பிறிதொரு வினாவும் எழுதல் உண்டு. இந்நிலையில் தொடர்ச்சியான தேடலின் இன்றியமையாமை புலனா கின்றது. தொடர்ந்த தேடலுக் இடந்தரும் கல்விச் செயல்முறையை வலியுறுத்தும் :: முறைமையோடு அழகியல் இணைந்து கொள்கின்றது.
ம் குறியீடுப்
கலையாக்கத்திற்கு குறியீடு என்பது கலைப் பொருளை ஒருவிதத்தில் அருவப்படுத்தியும் அறிகைப்படுத்தியும் உணர் வூட்டியும் நிற்கின்றது. கலைத்தொடர்பாடல் குறியீடுகளினால் பலமும் வளமும் பெறுகின்றன. குறியீடுகள் இன்றிக் கலைத்தொடர்பாடல் சாத்தியமற் தாகிவிடும். அழகியலின் பிறப்பாக்கமும் குறியீடுகளினால் விசை பெறுகின்றன.
குறித்த ஒரு பொருளுக்கு ஒரே குறியீடுதான் அறிவியலிலும், கணிதவியலிலும் பயன்படுத்தப்படும். ஆனால் குறித்த ஒரு பொருளைக் கலைஞர்கள் வெவ்வேறு குறியீடுகளால் வெளிப்படுத்துதல் கை குறியீட்டுக்குரிய தனிச்சிறப்பியல்பாகும். ஒரு கலைக்குறியீடு அதனோடு தொடர்புடைய பல்வேறு உணர்ச்சிக் குறியீடுகளைத் தொடர்புபடுத்தி நிற்கும்.
பொதுவாக கலைக்குறியீடுகள் பின்வரும் பரிமாணங்களை உள்ளடக்கி நிற்கும். அவை
83

Page 47
அறிகைப் பரிமாணம் தொடர்புப் பரிமாணம் காட்சிப் பரிமாணம் உணர்ச்சிப் பரிமாணம்
மேற்கூறிய நான்கு பரிமாணங்கள் சுட்டிக் காட்டப்பட்டாலும் கலைக் குறியீடுகளில் உணர்ச்சிப் பரிமாணமே மேலோங்கி நிற்கும். கலைக்குறியீடுகள் அனைத்தும் ஒரே வகையானவையன்று. சில கலைக்குறியீடுகளில் அருவப் பண்புகள் மேலோங்கி நிற்கும். வேறு சில வகையான கலைக்குறியீடுகளில் காட்சிப்பண்புகள் மேலோங்கியிருக்கும்.
கலைக்குறியீடுகள் அவற்றை ஆக்கும் கலைஞரது உளவமைப் புக்கு ஏற்றவாறு முகிழ்ந்தெழும் பொழுது, சுவைப்பவருடைய உளவமைப்பு அதற்கு ஏற்றவாறு பொருத்தப்பாடு கொள்ளாது இருக்குமாயின் அழகியலாக்கத்தில் இடைவெளி தோன்றும். அந்த இடைவெளி “உளநிரல் இடைவெளி’ என்று குறிப்பிடப்படும். உளநிரல் இடைவெளி களிடையே இசைவை ஏற்படுத்தும் அழகியற் கல்விச்
செயல்முறை "நிரவற்கல்வி’ எனப்படும்.
ஆக்கும் கலைஞருக்கு மட்டும் நிறைவுதரும் குறியீடு “பிரத்தியேகக் குறியீடு’ எனப்படும். பிரத்தியேகக் குறியீடு நிரவற் கல்வியால் பொதுமையாக்கப்பட்ட குறியீடாக நிலை மாற்றம் செய்யப்படுகின்றது.
மேலும் ஒருபண்பாட்டுப் பின்புலத்தில் உருவாக்கப்படும் இன்னொரு பண்பாட்டில் சத்தற்றதாகியும் விடலாம். இந்நிலையிலும் பண்பாடு நிலையான விளக்கங்களை ஏற்படுத்தும் பொறுப்புப் பற்றிய கல்விச் செயல் முறையிடம் தரப்படுகின்றது. பண்பாட்டுப் புரிந்துணர்வுக்கான கல்வி இன்றைய நிலையில் தவிர்க்க முடியாத தேவையாகவுள்ளது.
மொழிக்குத் திட்டவட்டமான இலக்கண விதிகளும் விளக்கங்
களும் இருத்தல் போன்று கலைக்குறியீடுகளுக்குரிய பொதுவான விதிகளை வரையறுத்தல் அத்துணை இலகு வானதன்று. கறாரான
84

விதிகளுக்குக் குறியீடுகள் கட்டுப்பட்டு நிற்பதில்லை. குறிப்பிட்ட சூழலமைவுகளுக்கேற்றவாறு கலைக்குறியீடுகளின் கருத்து மாறுபடு தலும், மீள்வடிவம் பெறுதலும் உண்டு.
ஒவ்வொரு கலைவடிவங்களுக்கும் ஏற்றவாறு குறியீடுகளும் பலவகைப்பட்டு விரிவடைந்து செல்லும். கவிதையில் ஒரு சொல் அல்லது ஒரு தொடர் அல்லது ஒரு முழுக்கவிதை குறியீட்டு வடிவம் பெறும். ஒவியத்தில் வண்ணம், வடிவம், ஆழம், பருமன், செம்பரவல் முதலியவை குறியீடுகளாக அமையும். நடனத்தில் பாதங்கள் தொடக்கம் கேசம் வரையிலான உடல் உறுப்புக்கள் ஒவ்வொன்றினதும் குறியீடுகள் கலையழகைக் கையளிக்கும். இவ்வாறு குறியீடுகள் அறிகைக்கும் ஆய்வுக்கும் உட்படுத்தப்படுதல் அழகியற் கல்வியின் செயற்பாடாக வுள்ளது.
கலைப்பரிமாணங்களில் விதந்து குறிப்பிடப்படுவது அவற்றில் பொதிந்துள்ள தனித்துவமாகும். தனித்துவம் பின்வரும் கூறுகளால் ஆக்கம் பெறுகின்றது.
1. யாதாயினும் ஒரு பகுப்புக்குள் அடக்க முடியாதாயிருத்தல். 2. ஏற்கனவேயுள்ள கட்டளைகளைப் பயன்படுத்திப் பகுப்
பாய்வு செய்தல் சாத்தியமற்றதாயிருத்தல். 3. முன்னைய அளவு கோல்களைப் பயன்படுத்தி வரையறை
செய்ய இயலாதிருத்தல். 4. பிறரிடமிருந்து பிரதிசெய்யப்படாது, கலைஞருக்கே சொந்த
மான படைப்பாகக் காணப்படுதல். 5. ஏதோ புதுமைத்தன்மை உட்பொதிந்திருத்தல்.
மேற்கூறிய கூறுகள் மறுதலிக்கப்படக் கூடியதாகவுமுள்ளன. தனித்துவமுள்ள கலைப் படைப்புக்களை வகைப்படுத்தமுடியும். பகுப்பாய்வு செய்ய முடியும் என்றவாறான மாற்றுக் கருத்துக்களையும் நிராகரிக்க முடியாதுள்ளது.
85

Page 48
கலைப்பொருள் தனிமனிதரால் உருவாக்கம் பெறுவதால் தனித்துவம் தோன்றுவதற்குரிய அடிப்படையான உயிரியற் கட்டமைப்பு என்பர். ஒவ்வொரு மனிதரதும் புறத்தோற்றமே தனித்து வத்தை புலப்படுத்தும். புறத்தோற்றம் போன்று ஒவ்வொருவரதும் சிந்தனைக் கோலங்களிலும் தனித்துவம் நிலைபேறு கொள்கின்றது.
ஒவியம், சிற்பம், கட்டடக்கலை முதலியவற்றில் தனித்து வத்தை வெளிப்படுத்துதல் ஒப்பீட்டளவில் எளிதென்றும் நடனம், இசை முதலியவற்றை ஆற்றுகை செய்யும் கலைஞர்கள் தனித்துவத்தை வெளிப்படுத்துதல் அத்துணை எளிதன்று எனவும் குறிப்பிடப் படுகின்றது. இந்நிலையில் தனித்துவங்களை கண்டறிவதற்கும், தனித்துவங்களை ஒப்பீட்டு நோக்கில் விளக்குவதற்கும் கல்விச் செயற்பாடு சிறப்பார்ந்த இடம் வகிப்பதை மறுக்கமுடியாது.
பொருத்தமான குறியீடுகளைக் கண்டறிதல், பிரயோகித்தல், புதிய குறியீடுகளை வடிவமைத்தல் தனித்துவ ஆக்கத்துக்கு அடிப்படை களாக இருப்பதால் அழகியற் கல்விச்செயற்பாட்டில் குறியீடுகள் பற்றிய உள்ளடக்கத்தையும் இணைக்க வேண்டியுள்ளது.
தனித்துவங்களை முனைப்படுத்தும் வேளையில் தனித்துவங் களை தாங்கி நிற்கும் கலைப்படைப்பு அகிலத்தன்மை கொண்ட தாக இருத்தல் வேண்டுமெனவும் குறிப்பிடப்படுகின்றது. அதாவது தனித்துவத்தை வெளிப்படுத்தும் கலையாக்கம் சுவைப்பவருக்குரிய தெளிவான விளக்கத்தையும் கையளிப்பதாக இருத்தல் வேண்டும்.
தனித்துவம் என்பது அகிலப்பண்பு கொண்டது. அகிலப்பண்பு என்பது தனிமனித உணர்வைக்கடந்து பொதுத் தன்மையாகும் பொழுது "கூட்டு அகவய’ப்பண்பாக மாறுகின்றது. கலைப்படைப்பின் உள்ளார்ந்த வலு தனிமனித எல்லையினைக் கடக்கும் வல்லமை கொண்டது. பல்வேறு இயல்புகளைக் கொண்டவர்களையும் ஈடுபடவைக்கும் ஆற்றலே அகிலத்தன்மை யாகும்.
அகிலத்தன்மை என்பது பல்வேறு வீச்சுக்களைக் கொண்டது. ஒரு கலைப்படைப்பு குறித்த ஒரு சிறு குழுவினரால் மட்டும்
86

சுவைக்கப்படும் பொழுது அதன் அகிலப்பரப்பு மட்டுப்படுத்தப் படத்தக்கதாக இருக்கும். முழுவுலகும் அதன் சுவையை அனுபவிக்கும் பொழுது அகிலப் பண்பு மிக விரிந்ததாக இருக்கும். உலகப் பெருங்காவியங்கள், பெருங்கலைப் படைப்புக்கள் முதலியவற்றின் அகிலப்பண்பு வீச்சு மிக நீண்டதாக இருக்கும். ஒடுக்கப்படுபவர்கள், நசுக்கப்படுபவர்கள், பாட்டாளிகள், சுரண்டலுக்கு உள்ளாவோர் முதலி யோரின் உணர்வுகளோடு இணைந்த படைப்புக்களில் அகிலப்பண்புகள் மேலோங்கியிருக்கும் என்பது மார்சிய அழகியலாளரின் கருத்து. நித்தியப் பொருள்களை உள்ளடக்கிய கலைப்படைப்புக்களில் அகிலப் பண்பு மேலோங்கியிருக்கும் என்பது ஆதர்ஸ் நோக்குடை யோரின் கருத்து.
உலகம் முழுவதும் வியாபித்துச் செல்லும் கல்வி நடவடிக்கைகள் மொழிபெயர்ப்புச் செயற்பாடுகள், ஒப்பியல் ஆய்வுகள் முதலியவை அழகியல் தொடர்பான அகிலப்பண்பு வளர்ச்சிக்கு உறுதுணையான செயற்பாடுகளாகும்.
ஒருக்கப்பட்டோர் அழகியல்
உலக வரலாற்று வளர்ச்சியில் நிகழ்ந்த கரண்டற் கோலங்களும், குடியேற்ற ஆட்சிக்கு உட்பட்ட மூன்றாம் உலக நாடுகள் அனுபவித்து வரும் சுரண்டல் நெருக்குவாரங்களும், நவீன முதலாளித்துவ முறைமையின் வளர்ச்சியும், ஒடுக்குவோருக்குரிய அழகியல், ஒடுக்கப் பட்டோருக்குரிய அழகியல் என்ற இரு துருவ நிலைகளை ஏற்படுத்தி யுள்ளன. இத்துருவ நிலைகளுக்கு ஏற்றவாறான கல்வி ஒழுங்கமைப்புக் களும், அழகியல் சார்ந்த கருத்துருவங்களும் வளர்க்கப்பட்டுள்ளன.
ஒடுக்குவோர் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திய அழகியற் கல்வி நடவடிக்கைகள் பன்முகப்பட்டவையாக அமைந்தன. உலக நடப்பியலையும், யதார்த்த வாழ்க்கையும் திரிபுபடுத்திக் காட்டுதல், போலி நிலை இன்பங்களை உருவாக்குதல், ஏற்கனவே பொதி செய்யப்பட்ட தமக்குச் சார்பான கருத்தியல்களைக் கலை வடிவங்கள் வழியாக புகுத்தி விடுதல், கலை வடிவங்களைக் கையளிக்கும் ஊடகங்களைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருத்தல் முதலியவை ஒடுக்குவோர் பயன்படுத்தும் சில நுட்பவியல்களாகும். பாரம்பரியமான கலை வடிவங்களை நவீன தொடர்பியற் சாதனங்களிலே தங்கியிருக்க வைத்
87

Page 49
தலையும் மிக விரிவான முறையிலே அவர்கள் மேற்கொண்டு வருகிறார்கள்.
நவீன சந்தைகளுக்கு ஏற்றவாறு கல்விச் செயல்முறைகளைக் கட்டமைப்புச் செய்வோர் பாரம்பரியமான கலைகளும், அழகியற் பரிமாணங்களும் காலத்துக்கு ஒவ்வாதவை என்ற கருத்தையும் மாணவர்கள் மனதிலே நிறுத்திவிடுகின்றார்கள். இதுவும் ஒடுக்கு வோருக்கு சாதகமாகவும் ஒடுக்கப்படுவோருக்கு பாதகமாகவும் அமைந்து விடுகின்றது.
ஒடுக்கப்படுவோருக்கு தமது உற்பத்திப் பண்டங்களை விற்க முயலும் ஒடுக்குவோரது விளம்பரத் தந்திரோபாயங்களுக்கு மட்டும் ஒடுக்கப்படுவோர் மத்தியில் நிலவும் கலை நுணுக்கங்கள் எடுத்தாளப் படுகின்றன.
இயற்கை வளங்களையும் சுற்றுப்புறச் சூழலையும் தமது இலாப நோக்கத்துக்காக தீவிரமாகச் சுரண்டி வரும் ஒடுக்குவோர் தமக்குரிய அழகியல் நுண் உபாயங்களைப் பயன்படுத்தி அவற்றை 'அபிவிருத்தி' அல்லது "மேம்பாடு' என்று சித்தரிக்க முயல்கின்றார் கள். மிகுந்த செயற்கையாக உருவாக்கப்படும் வாழ்க்கை முறையே இங்கிதமானது என்பதை விளக்குவதற்குரிய இசையும் நடனங்களும், கலைப்படைப்புக்களும் உருவாக்கப்பட்டு வருகின்றன. செயற்கை மலர்கள், செயற்கை இலைகள், செயற்கை நீர்வீழ்ச்சிகள், செயற்கை நறுமணங்கள், மின் அலங்காரங்கள் என்றவாறு செயற்கை சார்ந்த அழகுக் கட்டமைப்புக்களை ஒடுக்குவோர் உருவாக்கி வருகின்றார்கள்.
கலைத்தொடரில் வேகமான மாற்றங்களை உட்புகுத்தி உள ஒருங்கு குவித்தலைத் தொடர்ச்சியாகச் சிதறடித்து விடுதலும் ஒடுக்கு முறை ஆற்றுகைச் செயற்பாடாக அமைந்து விடுகின்றது.
எடுத்துக்காட்டாக ஒரு பாடல் அல்லது ஒரு நடன
நிகழ்ச்சியை எடுத்தக் கொண்டால் காட்சிகளை விரைந்து சடுதியாக மாற்றி மாற்றி மனமொருங்கு குவித்தலை சிதறடிக்கும். இவற்றுக்குத்
88

துணையாக நவீன தொழில்நுட்பமும் கணனி உயிர்ப்பூட்டலும் (ANIMATION) பயன்படுத்தப்படும்.
பள்ளிக்கூடக் கலைத்திட்டத்தின் வழியாகவும் அழகியற் கல்வியை ஒடுக்குவோர் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்துகின்றார்கள். அழகியற் பாடங்கள் வெறும் பொறிமுறையாகவே கற்பிக்கப்படுவதற்குரிய ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அழகியற் கல்வி வாயிலாக முன்னெடுக்கப்பட வேண்டிய படைப்பாற்றல் மலர்ச்சிக்கு இடமளிக்கப்படு வதில்லை. வெறும் பரீட்சைக்குரிய பண்டமாக அழகியல் மாற்றப் பட்டுள்ளது. அச்சொட்டாக மனனம் செய்து ஒப்புவிக்கப்படும் பாடமாக அழகியற் பாடம் வளர்க்கப்பட்டுள்ளது.
அழகியற் கல்வியுடன் இணைந்த சமூக ஊடாட்டம், சமூகக் கூட்டுறவு இயல்புகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. மிகுந்த போட்டியுணர் வுகளும், சுயநல நோக்கும் அழகியற் கல்வி வாயிலாக ஒடுக்குவோரால் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளன. தமக்கென ஒரு தனித்துவமான பாணியை ஒவ்வொரு மாணவரும் வளர்த்துக் கொள்வதற்குரிய ஊக்கமும், ஏற்பாடுகளும் ஒடுக்குவோரால் தரப்படுதல் இல்லை. மாறாக, ஆசிரியரைப் பிரதிபண்ணுவோராக மாணவர்கள் மாற்றப்படுகின்றார்கள். இவ்வாறான உருவாக்கம் ஒடுக்குமுறைக்குச் சாதகமாக அமைகின்றது.
மேற்கூறிய அறைகூவல்களை ஒடுக்கப்படுவோர் எவ்வாறு எதிர் கொள்ளலாம் என்பது பற்றியும் எவ்வாறு அழகியற் கல்வியை வடிவமைக்கலாம் என்பது பற்றியும் அடுத்து நோக்கலாம்.
அண்மைக் காலமாக மூளை வளப்பகுப்பு (SPLT BRAIN THEORY) கோட்பாட்டினர் வலமூளைக்கும் மனித மனவெழுச்சி களுக்கும், ஆக்க எழுச்சிகளுக்குமுள்ள தொடர்புகளை விளக்கி யுள்ளனர். வலமூளையினது வளமாக்கலில் நன்கு பிரயோகிக்கப்படும் அழகியற் கல்வியின் பங்களிப்பு விளக்கப்பட்டுள்ளது. அழகியற் கல்வியின் வழியாக வலமூளை வளமாக்கப்படும் பொழுது மூளையின் ஆற்றலில் அதிகரிப்பு ஏற்படவும் மனித ஆளுமையில் சமநிலையான ஒருங்கிணைப்பு ஏற்படவும் வாய்ப்பு ஏற்படுகின்றது. ஒடுக்கப்பட்டோர் மீட்சிக்குரிய அழகியற் கல்விச் செயற்பாடுகளினால் இவ்வாறான
89

Page 50
மலர்ச்சியை ஏற்படுத்துதல் வேண்டும். இது விடுதலைக்கான அழகியற் கல்வி என்றும் குறிப்பிடப்படும்.
w இயந்திரப்பாங்கானதும், பரீட்சைப் பாங்கானதுமான அழகியற் கல்விச் செயல்முறை மாற்றியமைக்கப்படல் வேண்டும். ஒடுக்கப்படு வோர் தமது உணர்வுகளையும், விடுதலை வேட்கைகளையும் வீரியத்துடன் வெளியிடுவதற்கு ஏற்றவாறு அழகியற்கல்வியை இவ்வகை நோக்கங்களுக்குப் பயன்படுத்தும் போது அழகியற் கூறுகள் சிதைந்துவிடும் என்பது ஒடுக்கு முறையாளரின் முகாமிலிருந்து எழும் கருத்தாகும்.
கூட்டுணர்வை வளர்த்தல், குழுச்செயற்பாடுகளை வளமாக்குதல், அந்நியமாகும் உணர்வுகளில் இருந்து மாணவர்களை மீட்டெடுத்தல், சுயநலமுனைப்புகளிலிருந்து மாணவர்களை விடுத்தல் முதலியவற்றுக்கு ஏற்றவாறு அழகியற் கல்வியை மீள்கட்டமைப்புச் செய்தல் வேண்டும்.
செயற்கைநிலை அழுத்தங்களில் இருந்துவிடுபட்டு மீண்டும் இயற்கைக்குத் திரும்பச் செய்யவும், பழைய கலை வடிவங்களைப் பயன்படுத்திப் புதியதும் வீரியம் மிக்க கருத்துக்களை புலப்படச் செய்யவும் வல்ல நடவடிக்கைகளை விரிவாக்கி கலைத்திட்டத்தை வளம்படுத்தல் வேண்டும்.
புதிய கல்வி முறைகளும், புதிய கலைத்திட்ட மாற்றங்களும், நவீன முதலாளித்துவ விசைகளின் தேவைக்கேற்ப இழுத்துச் செல்லப்படுதலும், அந்த இழுவிசையை நியாயப்படுத்தும் கருத் தேற்றங்கள் வளர்ந்து வருதலுமாகிய இன்றைய சூழலில் ஒடுக்கப் படுவோர் தமக்குரிய அழகியற் கல்வியை மிகுந்த நிதானத்துடன் முன்னெடுக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது.
ஒவ்வொருவரதும் ஆளுமையை நிறைவு பெறவைத்தல், ஒவ்வொருவரதும் தனித்துவ மலர்ச்சிக்கு உதவுதல், ஒவ்வொரு வரையும், சுரண்டல் அவலங்களில் இருந்து மீட்டெடுத்தல், ஒவ்வோர் உழைப்பாளியையும் ஒன்றுபடவைத்தல், ஒவ்வோர் அநீதியையும் முறியடித்தல், ஒவ்வொருவரதும் அறியாமைக்குரிய பொறுப்பை ஏற்றல்
90

ஒவ்வொருவரிடத்தும் அழகியல் மலர்ச்சியை ஏற்படுத்தல் முதலிய பல்வேறு இலக்குகளை நோக்கிய ஒன்றிணைந்த அழகியற் கல்வியை முன்னெடுக்க வேண்டியுள்ளது. இவ்வகை அழகியல் “வினைகொள் அழகியல்” எனப்படும். வினைகொள் அழகியற் கல்வியே காலத்தின் தேவையாகவுள்ளது.

Page 51
References
Amaladass, Anand S.J., Philosophical Implications of Dhvani:
Experience of Symbol Language in Indian Aesthetics, Vienna: De Nobili Research Library, 1984.
Barthes, Ronald, CriticalEssays, tr. by R.Howard, Evaston, III:
Northwestern University Press, 1972.
Byrsky, Cristopher, Concept of Ancient Indian Theater, Delhi:
Munshiram Manoharlal, 1974.
Chari, V.K., Sanskrit Criticism, New Delhi:
Motilal Banarsidass, 1993.
Charlton, W., Aesthetics, London:
Hutchison University Library, 1970.
Langer, Susanne K., Feeling and Form, New York: Scribner's,
1953.
Ragahavan, V., Some Concepts of Alamkara Sastra, Adyar:
Theosophical Publishing House, 1942.
Seldan, Raman, The Theory of Criticism, London: Longman, 1988. Shakespeare, William, King Lear, ed. By Russel Fraser, New York: Signet, 1963.
Walimbe, Y.S., Abinavagupta on Indian Aesthetics, Delhi: Ajanta Publications, 1980. Yeats, William Butler, Selected Poetry, London: Pan Books, 1974.
92

ஆசிரியரின் வேறு கல்வியியல் நூல்கள் சில:
01.
02.
03.
04.
05.
06.
07.
08.
09.
10.
11.
12.
13.
14.
15.
16.
17.
18.
19.
20.
21.
22.
23.
24.
25.
26.
கல்வியும் கலைத்திட்டமும் கல்வித்திட்டமிடல் பியாசேயும் அறிகை உளவியலும் சுதந்திர இலங்கையில் தமிழ் மக்களின் கல்வி வளர்ச்சி ஆசிரியரும் உளவியலும் எண்ணக்கரு கற்றல் உளவியலும் நவீன கற்பித்தலியலும் உளநெறிக்கதைகள் பாலர்கல்வி (அரசவிருது பெற்றநூல்) ஆற்றுப்படுத்தலும் சீர்மியமும் புதிய கற்பித்தலியல் தியானமும் கல்வியும் (அரசவிருது பெற்ற நூல்) மனித விழுமிய மேம்பாட்டுக்கான சத்திய சாயி கல்வி (மொழிபெயர்ப்பு) ஆய்வு முறையியல் தமிழர் உளவியலும் கல்வியும் கல்விச்சீர்மியம் யாழ்ப்பாணத்து மரபுவழிக்கல்வி குழந்தைக்கல்விச் சிந்தனைகள் புதிய கல்விச் சிந்தனைகள் குழந்தை உளவியல் பாலர்கதைகள் (அரசவிருது பெற்றநூல்) கல்வியில் புதிய சீர்திருத்தங்கள் பாலர் விளையாட்டுக்கள் பாலர் கல்விப் பாடல்
ஆசிரியர் இயல்.
93

Page 52


Page 53
ਤੇ ਓਥੇ । ஜெயராக பாணத்து பிறந்தார் பல்கலைக
Cਠੰ ਓ ।
வருபவர்
விதைப்ப விளைவுகளுக்கு வழிவகுச் வருமாவார். அழகியல், க துறைகளில் தன் ஆளுமைக மாணவர் பரம்பரை ஒன் கல்வியியல் சமூகத்தவர்களு பெறுமானமுள்ள சிற்பி இ பல்வேறு நூல்களாக ஆ நினைவுப் பேருரைகள யாழ்ப்பாணக் கல்விப் தமிழர்களின் கல்விப் பார பெரிதும் தொண்டாற்றி வ ஆக்கங்கள் தொடர்ந்து ெ மனம், உயர்ந்த அறிவு, மனப்பாங்கு, நல்லாசிரியரின் இப்பெரு மனிதரின் சே பின்பற்றுதற்குரியன. கலாநிதி திருநாவுக்கரசு கப் Z ýŻ /Zá?//G? (President)
/////////76007ZŽ (5:557// 56ž6)ý%
t་
 
 

LLJ (i. கலாநிதி UFL ! / T. ா அவர்கள் யாழ்ப் இணுவில் கிராமத்திலே நல்லாசிரியராக, கழக விரிவுரையாளராக, ய ராகச் சேவையாற்றி அவர் புதுமைகளை வரும், புதுமைகளின் கும் ஆக்கத் திறனுடைய ல்வியியல், திறனாய்வியல் ளை ஆழப்பதித்தவர். நன் "றை வளர்த்து வருபவர். க்குச் சேவையாற்றும் உயர் வர் செதுக்கிய ஆக்கங்கள் ஆய்வுக் கட்டுரைகளாக ாக வெளிவந்துள்ளன. பாரம்பரியம் ஈழத்துத் ாம்பரியம் ஆகியவற்றிற்குப் ரும் இவரது பல்பரிமாண வளிவர வேண்டும். பரந்த எல்லோருக்கும் உதவும் ன் உயர் குணம் பொருந்திய
வைகள் எம்மவர்களால்
லநாதன்
2ற் கல்லூ77