கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அறுபத்து நான்கு கலைகளும் கலையாக்கத் திறன்களும்

Page 1
3) dojLDu.
臀、
(கலை 9 இலக் வாகீசக கனகசபாபதி நாகேஸ்
 
 

n Eതുള്ളെ)
ញ៉ា
கிய ஆய்வு)
Norg
SOMIJGör, B.A (Hons); M.A,

Page 2
நூலின் பெயர் :
துறை
நூலாசிரியர்
முதற்பதிப்பு
gabay
பதிப்புரிமை
அச்சுப்பதிப்பு
filii JLLiLiLi
அறுபத்துநான்கு கலைகளும் கலை
ஆக்கத்திறன்களும் (கலை, இலக்கிய ஆய்வு)
கலை, இலக்கிய விமர்சனம்,
சித்தாந்தபண்டிதர், வாகீசகலாநிதி கனகசபாபதி நாகேஸ்வரன்,B.A (Hons), M.A. முதுநிலைவிரிவுரையாளர், மொழித்துறை. சபரகமுவ பல்கலைக்கழகம்.
தாரண புரட்டாதி (2004)
BLT 190=
ஆசிரியருக்கே
லகஷ்மி அச்சகம், கொழும்பு-13.
ISBN 955-98962-0-2

iப்பம்
Ė. 翻 游 心 疆

Page 3

..
சிவமயம்
அறுபத்து நான்கு கலைகளும் கலையாக்கத் திறன்களும் (கலை, இலக்கிய ஆய்வு)
நாலாசிரியர் நவரஸ்க்கலைஞானி, சித்தாந்தபண்டிதர், வாகீசகலாநிதி, a56oTabaFM uLigi - JJG JG3a56müb6OMIJsor, B.A (Hons); M.A, முதுநிலை விரிவுரையாளர், தரம் 1, மொழித்துறை, சபரகமுவ பல்கலைக்கழகம், ஆலோசகர், தமிழ் இணையப் பல்கலைக்கழகம்,
இலங்கை,
வெளியீடு گذا هتلهای نمo eتیلایایی راک کلاقه زیر ثانه
கொழும்பு, இலங்கை, 30-09-2004

Page 4
dish LDutb
ARLLPATHTHILL NANKILL KALAIKALLIM KALAIYAAKKATH
THIRANKALLIM. (A RESEARCH)
Author Navaracakkalaignani, Siddhanta Pandit, Vaakeesa Kalanithy, KANAGASABAPATHY-NAGESWARAN, B.A (Hons);M.A. Senior Lecturer, Gr. I, Department of Languages, Sabaragamuwa University of Sri Lanka, Advisor, Tamil Virtual University, Sri Lanka.
Published By 食HRల్డ్సెట్టausASAv, hrు
Colombo, Sri Lanka. .
30.09.2004

முகவுரை
அறுபத்துநான்கு கலைகள் பற்றிய ஆய்வு நிகழ்த்துவதற்கு என்னைக் கருவியாகக் கொண்ட கல்வித் தெய்வம் கலை வாணியை இறைஞ்சி நிற்கிறேன். கலை என்பது வற்றாத சுரங்கம். ஈடுபட ஈடுபட இன்பஞ் செய்து புதுமையையும், மனஅமைதியையும், அருளனுபவத்தையுந் தரவல்லன கலைகள். மாபெரும் கலைகளும் கலை வல்ல கலைஞர்களும் மறைந்து வாழ்கின்றனர். கலையை அறிந்து அனுபவிக்கத் தெரிவதே ஒரு தெய்வீகம். இயற்கை தந்த அனைத்தும் கலைக்குள் அடக்கம். கலை எவரையும் ஈர்க்கும் ஆற்றல் கொண்டது. நம் முன்னோர் படைத்துத் தந்த அருங்கலைகள் எம்மாலே பேணிப் பாதுகாக்கப்பட வேண்டியவை. கலை மாண்புகள் புகழ் தந்துநிற்பன. அழியாப் பெரும் புகழைத் தருவன கலைகளே. இந்நூலிலே ஒரு சில கலைகள் விவரிக்கப்படுகின்றன. விஞ்ஞானமும் கலையும் சிற்சில அடிப்படைகளிலே வேறுபடு வதுண்டு. ஆய்வு நிலை எடுகோள் நோக்கு விஞ்ஞானத் திற்குரியது; உணர்வு நிலை அனுபவம் பெறவைப்பவை கலை கள். உள்ளம் கலை களிலீடுபாடு கொள்வதால் மனிதருக்குத் தெய்வீக உணர்வு நலன் வாய்க்கப் பெறுகின்றது. கலையை இரசிக்கவும் கலைஞர்களை மதிக்கவும் பழகிக் கொள்வது அவசியம். மிகப் புனிதமான மனப் பரிபக்குவத்தைத் தருவன கலைகளே. எனவே கலைகள் குறித்த இந்நூலும் மகத்துவத் துக்குரியது; மதித்தற்குறியது. தெரியாதவற்றைத் தெரிந்து கொள்ள வைக்கும் நூல்களின் வரிசையிலே எனது இந்நூல் தமிழ் கூறு நல்லுலகுக்குப் பேருபகாரமாய்ப் பயன் நல்குவதாய் அமையு மாயின் யான் பெரிதும் அகமகிழ்வேன். முத்தமிழின் சுவையும் கலைச் சுவையே. கலை யின்ப அனுபவத்தை ஒவ்வொருவரும் தத்தம் நரம்புத்துய்யிலில் ஏற்றிப் பேரானந்த வாழ்வு வாழ் வோமாக.
அருமையும் கருத்துச் செறிவும் வாய்ந்த அணிந்துரையை எழுதி உபகரித்தும் என் வாழ்வில் ஒளியேற்றியும் நிற்கும் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையின் முன்னாட் தலைவரும் புகழ் பூத்த இலக்கிய கலாவிமர்சகரும் நாடறிந்த பெரும் கல்விமானும் வானுமாகிய பேராசிரியர் கலாகிர்த்தி சி. தில்லைநாதன் அவர்களின் பேருதவிகட்கு நான் என்ன

Page 5
கைம்மாறு செய்வேனோ! அவரது திருவடிகளைத் தொழுது வணங்குகிறேன். இந்நூல் வெளியீட்டிலே எனக்கு ஆலோச னைகள் நல்கி உள்க்கி உதவி புரிந்த அகில இலங்கை இந்து மாமன்றத்திற்கு எனது பணிவான நன்றிகள். குறிப்பாக மாமன்றத்தின் கெளரவ தலைவர் திரு. த.கைலாசபிள்ளை அவர்கட்கும், மாமன்றத்தின் கெளரவ பொதுச்செயலாளர் சட்டத் தரணி கந்தையா நீலகண்டன, உபதலைவரும் கொழும்பு விவேகானந்த சபையின் கெளரவ பொதுச் செயலாளருமான திரு.க. இராஜபுவனிஸ்வரன் ஆகியோருக்கு என் பெருநன்றி.
நூலாக்கத்தில் என்னை ஊக்கும் உங்களுக்குக் கலைக ளினதும், கலைத்தெய்வத்தினதும் பரிபூரண கடாட்சமுங் கிடைப்
பதாகுக.
சிரேஷ்ட தமிழ் விரிவுரையாளர், அன்பன், மொழித்துறை, வாகீசகலாநிதி, சபரகமுவ பல்கலைக்கழகம். கனகசபாபதி நாகேஸ்வரன்.

சமர்ப்பணம்
எந்தையும், கனடாவாழ் தமிழ்பேசும் மக்களால் “அருள்மாமணி” என்னும் கெளரவப்பட்டம் வழங்கப்பட்டுப் பாராட்டப்பெற்றவரும் நயினை ரீ நாகபூஷணி அம்மன் தேவஸ்தானத்தின் மரபுவழிப் பரம்பரை அறங்காவலர் வழியில் உதித்தவருமான நயினையம்பதி ழீமான் பரமலிங்கம் கந்தசாமி கனகசபாபதி, அவர்களுக்கும், எனையின்றுபுறந்தந்த என் தாயாரும், கனடாவாழ் தமிழ் கூறுநல்லுலகால் “வித்துவாட்டி" “கவிஞர்” எனும் கெளரவப்பட்டங்கள் வழங்கப்பட்டுப் பாராட்டப் பெற்றவருமான நயினை பூனிமதி சுந்தரம்பிள்ளை கோகிலாம்பாள் ஆகிய எண் கண் கண்ட தெய்வங்களின் பொன்னார் திருவடிகளுக்கு மிக்க பணிவன்புடன் இந்நூலினைச் சமர்ப்பணம் செய்து தொழுகிறேன்.
வாகீசகலாநிதி, கனகசபாபதி- நாகேஸ்வரன்.

Page 6

'அருள்மாமணி ப.க. கனகசபாபதி 'வித்துவாட்டி', 'கவிஞர் சுந்தரம்பிள்ளை கோகிலாம்பாள் தம்பதி (வாகீச கலாநிதி நாகேஸ்வரனின் பெற்றார்.)

Page 7
"அருள்மாமணியும் - வித்துவாட்டியும்"
 

ിഖഥu
அருட்கலைமாமணி, சித்தாந்த பண்டிதர், வாகீசகலாநிதி, கனகசபாபதி -நாகேஸ்வரன்,B.A(Hons):M.A. (அகில இலங்கை சமாதான நீதிவான்) முதுநிலை விரிவுரையாளர், மொழித்துறை, சபரகமுவ பல்கலைக்கழகம்.
ஈழத்தில் சக்தி பீடங்களுள் ரீபுவனேஸ்வரிபீடம் எனயிளிரும்
நயினை ரீ நாகபூஷணிஅம்மன் தேவஸ்தானத்தின் மரபுவழி அறங்காவலர் வம்சத்தில் தவசிரேஷ்டர் ரீமான் பரமலிங்கம்கந்தசாமி கனகசபாபதி எனும் "அருள்மாமணிக்கும் பூரீமதி சுந்தரம்பிள்ளை கோகிலாம்பாள் எனும் "வித்துவாட்டிக் கவிஞருக்கும் முத்தபுதல்வன் வாகீசகலாநிதி கனகசபாபதி. நாகேஸ்வரன், எம்.ஏ. இலக்கிய ஆய்வா ளர், கவிஞர், கலைஞர், கல்விமான், இன்னிசைச் சொற்பொழிவாளர், மொழிபெயர்ப்பாளர், நேர்முக வர்ணனையாளர், பண்ணிசைக் கலைச்செல்வர், கதாப்பிரசங்கி எனும் பன்முகப்பட்ட உன்னத ஆளு மைகளின் திருவுரு.
நயினாதீவு மகாவித்தியாலயம், நாவலப்பிட்டிச் சின்னக் கதிரேசன், தெல்லிப்பழை மகாஜனக்கல்லுாரி ஆகியவற்றின் பழைய மான வரான இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறையில் பேராசிரியர், கலாநிதி கனகசபாபதி கைலாசபதியின் மேற்பார்வையின் கீழ்த் தமிழ் இலக்கியத்தில் கலைமாணிச் சிறப்புப் பட்டத்தினையும், பேராசிரியர், கலாநிதி ஆ. வேலுப்பிள்ளையின் மேற்பார்வையின் கீழ் முதுகலைமாணிப் பட்டத்தினையும் முறையே 1979, 1988ஆம் ஆண்டுகளிற் பெற்றார். தற்போது பேராதனைப் பல்கலைக்கழ கத்திலே தமது கலாநிதிப் பட்டத்திற்கான ஆய்வினை நிகழ்த் துகிறார்.
சபரகமுவ பல்கலைக்கழகத்து மொழித் துறையிலே முதுநிலைத் தமிழ் விரிவுரையாளராகவும், (தரம்-1) இணைப்பாளராகவும் பணியேற் றுள்ளார். யாழ். பல்கலைக்கழகத்திலும், சபரகமுவ பல்கலைக் கழகத்திலும், தமிழ் இணையப் பல்கலைக் கழகத்திலும் பட்டதாரிகள் பலரை உருவாக்கியுள்ளார்; உருவாக்கிவருகிறார். தமிழின் பல்வேறு துறைகளிலேயும் ஈடுபாடு கொண்டுள்ள இவர் இலக்கியம், சமூகம், கலை, சமயம், வரலாறு, தொல்பொருளியல், அரசறிவியல், இதழி

Page 8
யல், கல்வி, பண்பாடு, மொழி, வாழ்க்கைவரலாறு, பத்திரிகையியல் எனும் துறைகளிலே பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.
1972 ஆம் ஆண்டு முதல் இவரது ஆய்வுக் கட்டுரைகள் கோமுகி, சங்கமம், கலாசுரபி, மல்லிகை, செவ்வந்தி, இந்துநெறி, இனமுழக்கம், தமிழ் ஒலி, பராசக்தி, தேன்பொழுது, ஊற்று, ஆலயமணி, ஜீவசக்தி, தமிழோசை உள்ளம் ஆகிய இலக்கியச் சஞ்சிகைகளிலேயும், ஈழநாடு, உதயன், தினகரன், வீரகேசரி, தினக்குரல் பத்திரிகைகளிலேயும் வெளிவந்துள்ளன.
1980களில் ஈழநாடு பத்திரிகையின் உதவி ஆசிரியராயும், 1985 வரை ஐந்தாண்டுகள் இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் தமிழ்ச்சேவையில் நிகழ்ச்சிகள் தயாரிப்பாளராயும், பகுதிநேர அறிவிப்பாளராயும் பணியாற்றினார். இந்திய அலஹபாத்திலும், மலேசியாவிலும் திருச்சியிலும், நடந்த சமய இலக்கிய மாநாடு களிலே 1979 இலும், 1983இலும் (2000 இலும்) பங்கேற்றார். இலண்டன் கனடா நாடுகளில் வெளியிடப்பட்டுள்ள சமய இலக்கிய மலர்களில் இவரது ஆய்வுக் கட்டுரைகள் பிரசுரமாகியுள்ளன.
நல்லையாதீனம், பருத்தித்துறை சாரதாஆச்சிரமம், கொழும்பு விவேகானந்த சபை, அகில இலங்கை இந்துமா மன்றம், கொழும்புத் தமிழ்ச் சங்கம், அகில இலங்கைக் கம்பன் கழகம், யாழ்ப்பாணம் திருநெறிய தமிழிசைச் சங்கம், ஆரியதிராவிட பாஷாபிவிருத்திச் சங்கம், கலாசார அமைச்சின் கலைக் கழகத்தின் இலக்கியக் கருத்தரங்குகள், தமிழ் இணையப் பல்கலைக்கழகம், பேராதனைப் Lu6ða56d6däsabpat5 DögELDTLD6ögpLib, Sri Lanka Foundation Institute (S.L.FI), யாழ்ப்பாணம் செஞ்சிலுவைச் சங்கம், இந்து சமய கலாசார அமைச்சு, திணைக்களம் ஆகிய நிறுவனங்களிலே இலக்கிய, சமய விரிவுரைகளை நிகழ்த்தியுள்ளார்.
இவர் தேமதுரத்தமிழோசையினை உலகமெல்லாம் பரப்பும் கடப்பாட்டில் கால்நூற்றாண்டுக் காலம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தின் தமிழ் சேவையில் சைவநற்சிந்தனை, அருளமுதம் (இந்துசமய சஞ்சிகை நிகழ்ச்சி), இலக்கியப் பேச்சுகள், இந்து சமயப்பேச்சு, கலந்துரையாடல்கள், சொல்வளம் பெருக்குவோம், ஆலயத்திருவிழா நேர்முகவருணனைகள், கதாப்பிரசங்கம் என்ப வற்றிலே பங்கேற்றுச் சேவையாற்றி வருவதும் தமிழ்கூறும் நல்லுலகம் நன்கு அறிந்ததே.

அருள்மொழிச்செல்வர், செஞ்சொல்வாரிதி, இன்னிசைச்சொல் வேந்தன், செஞ்சொல்வாணர், மணிமொழிவாரி, நவரஸ்க்கலைஞானி, சொற்பேராழி, சித்தாந்தபண்டிதர், அருட்கலைமாமணி, வாகீசகலாநிதி என்னும் கெளரவப் பட்டங்களைப் பெற்றுள்ள இவர் அகில இலங்கைச் சமாதான நீதிபதியும் ஆவார்.
கலாசுரபி (1979), தடுத்தாட்கொண்ட புராணம் (பல்கலைக்கழக உள்வாரி வெளிவாரிப் பட்டதாரி மாணவருக்கான பாடநூல்)(1989). சிவதத்துவமலர்(1996), சத்திதத்துவமலர்(1996), நவநாதம்(1998), பக்திமலர்(2004) என்னும் நூல்களின் ஆசிரியர். நாடறிந்த ஆன்மிக இலக்கியப் பேச்சாளர். இவருக்குத் தம்பிமார் இருவர்; தங்கையர் அறுவர்; கனடாவிலும் நாவலப்பிட்டியிலும் வாழ்கின்றார்கள். இவர் நாரந்தனை வண்ணார்பண்ணை ரீமான் பாலசிங்கம் பூமணி தம்பதியின் மருமகனும் ஆவார். மனைவி இரதிமலர்தேவி; மகன்மார் பிரகாஷ், குருபரன்; மகள் தாரணி என்போர் குடும்பத்தினர்.
பேராசிரியர், கலாநிதி க. அருணாசலம், M.A;Ph.D.
ఏప్రి:Ser. 罗 rs 9ጥቻTb{g ,
தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம், பேராதனை,
இலங்கை.
19.05.2004.

Page 9
disul Duib
ARUDKALIMAAMANI, SIDDHANTHA PANDIT, VAAKEESAKALANITHY. KANAGASABA PATHY NAGESWARANBA (HONS); M.A. (WHOLE - ISLAND JUSTICE OF THE PEACE). SENIOR LECTURER, Gr. 1, DEPARTMENT OF LANGUAGES, SABARAGAMUWA UNIVERSITY OF SRI LANKA
"Waakeesa kalanithy" Kanagasabapathy Nageswaran, M.A (05.08.1952) hails from the hereditary chain of Chieftain's noble and illustrious family of Nainatheevu Shree Nagapooshani Amman Temple, that luminates as "PUVANESWARYPEEDAM" Which is most - revered among sixtyfour Hindu divine-powered chapters of SriLanka. He is the eldest son of "Thavasireshdar' Sriman Paramalingam Kanthasamy Kanagasabapathy alias 'Arulmamani" and "Withthuwaaddi', "Kavignar" Srimathi Suntharampillai Kohilambal.
He is a researcher of literature, Kavignar, Kalaignar, Academician, Lecturer in music, Lecturer in (Thevaram) divotioinal songs, Translator, Commentator, Honarary Doctor holder (Vaakeesa Kalanithy) in hindu devotional songs reciting and could be precisely deservedly called a living idol of multifaceted and multi-skilled governance.
He is old student of Nainativu Maha Vidyalayam, Nawalapitiya Kathiresan College and Tellippalai Mahajana College. He received his special degree in Thamil Literature under the guidance of Professor, Dr. Kanagasabapathy Kailasapathy and his Post - graduate degree under the guidance and supervision of Professor, Dr. A. Veluppillai of Jaffna University in Years 1979 and 1988 respectively.
He has resumed duties as senior lecturer (Gr.1) in Thamil and also as co-ordinator at the Department of Languages of Sabaragamuwa University. He was responsible for producing Several graduates from Jaffna university, Sabragamuwa university and Thamil virtual university. He is involved in research
 

and analysis of many areas and sectors of the Thamil Language. He has presented several Research papers in areas like Literature, Society, Art, Religion, History, Archaeology, Politics, Journalism, Education, Culture, Indigenous medicine, Siddha medicine, Linguistics, Languages, Biography, Comparative religion, Textual criticism, Thamil Literary criticism, Prose, Poetry and mass media Journalism. From year 1972, his articles and research papers were published in LiteratureMagazines such as "Koomuki", "Sevvanthi", Inthu- neri", "Inamulakkam", Thamill-Oli", "Parashakthi", "Thaen- Pozhuthu", "Oottu", "Alaiyamani", "Jeevasakthi", "Thamiloosai", and "Ullam". His articles were published in news papers such as Eelanadu, Uthayan, Thinakaran, Veerakesari and Thinakkural.
He has served in year 1980's (Eighties) as Sub editor at 'Eelanadu'newspaper company. Till year 1985, for five years, he has worked as a part-time announcer& producer at Thamil Service of SriLanka Broadcasting Corporation. He took part at conferences held in Alahabad, Trichi (India) and Malaysia in years 1979 & 1983. His research papers have been published in religious and literary magazines which were published in London and Canada. He has delivered lectures on subjects of religion and literature at Nallai Aatheenam, Nallur, Colombo Vivekanantha Sabai, All Ceylon Hindu Congress, Colombo Thamil Sangam, All Ceylon Kampan Kazhaham, Jafna Thiruuneriya Thamilisai Sangam, Ariya- Dravidian Language development Society, Literary Seminars at Thamil Literary Committee of State Art's council conducted by Sri Lankan Cultural Ministry, Thamil Virtual University, Hindu mantram Peradeniya University, Ministry of Hindu Religious Affairs and Department of Hindu Religious and Cultural Affairs.
It is a known fact to the pleasant Thamil-speaking- world that, he, inspired by the anxiety and responsibility of spreading the meltifluous-Thamil-Speech to the whole world, devoted one- fourth of a century to the Thamil- Service of Sri Lanka Broadcasting Corporation (S. L. B. C). He continues to offer his self-less service in programmes such as saiva-benificialthoughts cum meditation, Arulamutham (Hindu religious

Page 10
magazine programme), Lectures on Literature, Lectures on Hindu religious affairs, Talks, Seminars, improve-word-power programme and Temple festival commentaries.
He was awarded with honorary degrees such as 'Arlmozhichchelvar", "Cencholvarithi", "ManimozhiVaari", "Navarasakkalaignani","Cotperazhli","Siddhantha pandit', Arudkalai-maamani' and "Vaakeesakalaanithy". He is a Whole island Justice of the peace (J.P). Also, he is a well known orator and publisher of Kalaasurabi (1979), Thaduththaadkonda-puranam Thamil Text (curriculam book for undergraduates of University Internal and External degrees) (1989), Saivathaththuvamalar(1996), " Sakthithaththuva malar (1996), Navanatham(1998), Bakthimalar(2004). He is son-in-law of Mr. Balasingam and Mrs. Poomani Balasingam of Vannarpannai. His wife mrs. Rathymalarthevi, Pragash and Guruparan as his sons, his daughter Tharaniare in his loving family.
Professor, Dr K. Arunasalam, M.A.;Ph.D.
foress à se of TAMTL Department of Thamil, University of Peradeniya, Peradeniya,
Sri Lanka.
19.05.2004.

Professor S. Thillainathan 418/9, Welipara, Professor Emeritus, Universityofperadeniya. Thalawathugoda,
Sri Lanka. Member, Oficial Languages Commission. Tel: 011-2774617
அணிந்துரை
கலைகள் குறித்து விளக்கப் புகுவோர் அவை இன்புறுத்தும் நோக்கினைக் கொண்டவை என்றும் அழகுணர்ச்சியைத் தூண்டி வளர்ப்பனவென்றும் பொதுவாகக் கூறுவர். கி.மு. நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்தவரெனக் கொள் ளப்படும் கெளடில் யரின் அர்த்தசாத்திரம், கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவரெனக் கருதப் படும் வாத்ஸாயனரின் காமசாத்திரம் போன்ற வட மொழி நூல்களில் அன்று பயிலப்பட்ட கலைக ளைப் பற்றிய விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. அறுபத்து நான்கு கலைகளைப் பற்றிய விபரம் காமசூத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
தமிழைப் பொறுத்தவைைரயில், அறுபத்துநான்கு கலைகள் பற்றிய குறிப்பு முதலில் காணப்படுவது சிலப்பதிகாரத்திலேயே. “எண்ணெண் கலையோர்”, “எண்ணான் கிரட்டி யிருங்கலை பயின்ற பண்ணியன் மடந்தையர்” முதலான சிலப்பதிகார அடிகள் அதனை உறுதிப்படுத்துவனவாகும்.
காமசூத்திரத்திலும் சிலப்பதிகாரத்திலும் கணிகையர் பயின்ற கலைகளாகவே அறுபத்துநான்கு கலைகள் குறிப்பிடப்படுகின்றன. பட்டின வாழ்வில் செல்வமும் ஓய்வும் உயர்ந்தோர்க்கு மிகுந்த ஓர் சூழ்நிலையில், “நகர நம்பியரின் இன்பப் பொழுது போக்கில் அவர் தம் அறிவார்ந்த அளவளாவுகைக்கான தோழமையாகக் கணிகையர் சேவை அமைந்த நிலையில், அக்கணிகையருக்கு உரியனவாக இக்கலைகள் எடுத்துரைக்கப்பட்டன போலும். ஆயினும், காலப் போக்கில் அவற்றின் நயத்தையும் பயனையும் உணர்ந்த உயர்குடியினரும் அக்கலைகளை விரும்பிப் பயின் றனர் என்பது வெளிப்படை.
கலை என்ற சொல் தமிழ் இலக்கியங்களில் பழங்காலந் தொட்டுக் கல்விப் பொருளைப் பொதுவாகக் குறிக்கும் ஒன்றாகக்

Page 11
கையாளப்பட்டு வருவதையும் காணலாம். "கலை பயிலுங் கருத்தன்" என்று திருநாவுக்கரசரும், "கலையவன் மறையவன்" என்று திருஞானசம்பந்தரும், கலை மலிந்த தென்புலவர்” என்று சுந்தரரும், "கற்றறியேன் கலைஞானம் என்று மாணிக்க வாசகரும், "கலைகளும் வேதமும் நீதி நூலும்" என்று திருமங் கையாழ்வாரும் கூறியுள்ளவற்றை உற்று நோக்குமிடத்து அது விளங்கும்.
*ஆயகலைகள் அறுபத்து நான்கினையும்
ஏய உணர்விக்கும் என் அம்மை"
என்று சகலகலாவல்லியைத் துதிக்கிறார் தர்ே.
இவை இவ்வாறிருப்ப,
அறுபத்துநான்கு கலைகள் எனப்படுபவை குறித்த எந்த ஒரு நூலும் தமிழில் இருப்பதாகத் தெரியவில்லை. ஆதலால், அக்க லைகளைப் பற்றித் தமிழ் மக்கள் அறியவோ ஆராயவோ முடியாதுள்ளது. இந்நிலையில், சப்ரகமுவ பல்கலைக்கழகத் மொழித்துறைச்சிரேஷ்ட விரிவுரையாளரும், தமிழையும் சைவத் தையும் பயில்வதிலும் பயிற்றுவிதிலும் ஆர்வமீதூரப் பெற்ற வருமான வாகீசகலாநிதி கனகசபாபதி நாகேஸ்வரன், எம்.ஏ. அவர்கள் தெரியாதிருப்பனவற்றைத் தெளிவுபடுத்தும் வேட்கை யின் விளைவாக இந்நூலை ஆக்கி வெளியிட முன் வந்தமை உவந்து வரவேற்கப்படத்தக்கதாகும்.
இந்நூலில் திரு.நாகேஸ்வரன் அறுபத்துநான்கு கலைகள் எவை என்பதை எடுத்துரைத்து, அவற்றுள் முக்கியமானவை எனக் கருதப்படும் இருபத் தைந்தினை விளக்கியுள்ளார். அவை சம்பந்தமாக அவரால் திரட்டி விபரிக்கப்பட்டுள்ள பல தகவல்க ளும் பயனுள்ளவையாகக் காணப்படுகின்றன.
திரு.நாகேஸ்வரனின் முயற்சியைப் பாராட்டுவதுடன், இந் நூலை நிறைவு செய்யும் வகையில் ஏனைய கலைகளைப் பற்றியும் தொடர்ந்து எழுதுமாறு அவரைக் கேட்டுக் கொள்கிறோம்.
பேராசிரியர் சி. தில்லைநாதன்.
தகைசார் ஓய்வுநிலைப் பேராசிரியர், பேராதனைப் பல்கலைக்கழகம், O1.09.2004.

முன்னாள் இந்துகலாசார அமைசர்
மாண்புமிகு தியாகராசா மகேஸ்வரன் பா உ அவர்களுடன் பம்பலப்பிட்டி
இந்துக்கல்லூரியில் நவராத்திரி கலைவிழாவின் போது வாகீச கலாநிதி. அதிபர் த. முத்துகுமாரசாமி கெளரவக் கேடயம் வழங்குகிறார்.

Page 12
6LUrssm-disassi
பக்கம்
அக்கர இலக்கணம் 3
கணிதம் 7
வேதம் 9
புராணம் 1
உபபுராணங்கள் 12
வியாகரணம் 14
நீதிசாஸ்திரம் 14
சோதிட சாஸ்திரம் 16
தரும சாஸ்திரம் 20 யோக சாஸ்திரம் 20 சகுன சாஸ்திரம் 24
சிற்பசாஸ்திரம் 24
வைத்திய சாஸ்திரம் 29
இதிகாசம் 30
காவியம் 31
அலங்காரம் 33
நாடகம் 33
நிருத்தம் 37
வீணை 38
வேணு 38
மிருதங்கம் 40
தாளம் 40
கஜபரீட்சை 42
அசுவபfட்சை 42
இரத்தினப் பரீட்சை 42

afshLDub
கலைகளும் கலையாக்கத் திறன்களும்
அக்கர இலக்கணம் முதல் வாக்குத் தம்பம் வரையிலான ஆய கலைகள் அறுபத்து நான்கு என்று அறியப்படுகிறது. அவ்வறுபத்து நான்கு கலைகளையும் முதலிலே வகுத்துரைப்பது பொருந்தும். அதன் பின்னர் ஒரு சில (மகோன்னதக்) கலைகளின் ஆக்கத் திறன் நுட்பங்களையும் அவற்றின் நுணுக்க மேன்மை களையும் இந்நூலிலே நோக்கலாம்.
(l). அக்கரஇலக்கணம். (2). இலகிதம். (3). கணிதம்.
(4). வேதம்.
(5). புராணம்.
(6). வியாகரணம்.
(7). தீதிசாஸ்திரம். (8). சோதிடசாஸ்திரம். (9). தருமசாஸ்திரம். (10). யோகசாஸ்திரம். (11). மந்திரசாஸ்திரம். (12). சகுனசாஸ்திரம். (13). சிற்பசாஸ்திரம். (14). வைத்தியசாஸ்திரம். (15). உருவசாஸ்திரம். (16). இதிகாசம். (17). காவியம். (18). அலங்காரம். (19). மதுரபாடனம். (20). நாடகம்.
(21). நிருத்தம். (22). சுத்தபிரமம். (23). வீணை. (24). வேணு.
1. லிப்கோதமிழ் - தமிழ் ஆங்கில அகராதி (1991), தி லிட்டில் ப்ளவர்
கம்பனி, சென்னை, 600017, ப.72-73.
1

Page 13
(25). (26). (27). (28). (29). (30). (31). (32). (33). (34). (35). (36). (37). (38). (39). (40). (41). (42). (43). (44). (45). (46). (47). (48). (49). (50). (51). (52). (53). (54). (55). (56). (57).
(58)
(59). (60). (61). (62). (63). (64).
மிருதங்கம் தாளம். அத்திர பரிட்சை கனக பரிட்சை, இரதப் பரிட்சை, கஜபரிட்சை, அசுவபரிட்சை, இரத்தின பரிட்சை. பூபரிட்சை. சங்கிராம இலக்கணம். மல்லயுத்தம். அக்ருஷணம். s & FITL600TLib வித்து வேஷணம் மதன சாஸ்திரம். மோகனம். வசீகரணம் இரசவாதம். காந்தர்வவாதம். பைபீல வாதம். கெளதுகவாதம். தாது வாதம். காருடம்.
நட்டம்.
முட்டி. ஆகாயப்பிரவேசம். ஆகாய கமனம் பரகாயப்பிரவேசம். அதிர்ச்யம். இந்திரஜாலம். மகேந்திரஜாலம். அக்னித்தம்பம். ஜலஸ்தம்பம். வாயுத்தம்பம். சுக்கிலத்தம்பம். கன்னத்தம்பம். கட்கத் தம்பம். அவத்தைப் பிரயோகம். திட்டித் தம்பம். வாக்குத் தம்பம் என்பன.
2

அறுபத்து நான்கு கலைகளுக்குள்ளும் இருபத்தைந்து கலைகள் பற்றிய திட்ப நுட்பங்கள் பற்றி இவ்வாய்விலே சற்று விரிவாக நோக்கலாம் என எண்ணுகிறேன். அவ்விருபத்தைந்து கலைகளும் 6JCHLDTDI.
அக்கரஇலக்கணம், கணிதம், வேதம், புராணம், வியாகரணம். நீதிசாஸ்திரம், சோதிடசாஸ்திரம், தருமசாஸ்திரம் ,யோகசாஸ்திரம். மந்திரசாஸ்திரம்,சகுனசாஸ்திரம், சிற்பசாஸ்திரம், வைத்தியசாஸ்திரம். இதிகாசம், காவியம், அலங்காரம், நாடகம், நிருத்தம், வீணை,வேணு, மிருதங்கம், தாளம், கஜபரிட்சை, அசுவபரிட்சை, இரத்தின பரிட்சை. நட்டம் எனும் இருபத்தைந்து கலைகளின் ஆக்கத்திறன்களையும் திட்பநுட்பங்களையும் இனி வகுத்து நோக்கலாம்.
1. அக்கர இலக்கணம்
“மொழி” லை. மொழிக்கு வரம்பு இலக்கணம். இலக்கணத் திட்பநுட்பங்கனிள ஆராய்வதும், பயில்வதும் லையேயெனலாம். இலக்கண மரபு பற்றிய நூல்களையும், பேச்சு மொழி இலக்கணம், எழுத்து மொழி இலக்கணம், ஆக்க இலக்கிய இலக்கணம் என ஆய்வை விரித்து அலசுவது ‘அக்கர இலக்கணம்’ எனப்படும். தமிழ் இலக்கண மரபிலே “அ” கரமுதல எழுத்து எனத் திருவள் ளுவரும், "அ" கரவுயிர்போலறிவாகி என்று திருவருட்பயனும் எழுத்தெனப்படுவது, "ன" கரவிறுவாய் முப்ப.தென்ப எனத் தொல்காப்பியமும் விளம்புவதை ஈண்டு எண்ணத் தோன்றுகிறது. தமிழர் வாழ்வின் சிறப்பினை இலக்கணம் எனப் போதிப்பது தொல்காப்பியம். பல்வகைப்பட்ட வரலாற்று மூலங்களுள் மொழி சார்ந்த மூலமும் ஒன்று. தமிழர் வாழ்வின் சிறப்பினை எடுத்தியம்பும் மொழி சார்ந்த முலங்களுள் முதற் சான்றாகத் திகழ்வது தொல்காப்பியம்.
எழுத்து, சொல், பொருள், எனும் முப்பெரும் பிரிவினைக் கொண்ட தொல்காப்பியத்தில் எழுத்து, சொல் எனும் இரு அதிகாரங்கள் மொழி இலக்கணத்தைப் பகர்வன என்பதை அறிஞர்கள் ஒப்புக்கொள்கின்றனர். பொருளதிகாரம் தமிழ் மக்களுடைய வாழ்க்கைக்குரிய இலக்கணத்தைக் கூறுகிறது என்பர் ஒருசாரார்; இலக்கியக் கோட்பாட்டை வெளிப்படுத்தி நிற்கிறது என்பர் பிறிதொருசாரார்.
தம்கால, தமக்கு முற்பட்ட தமிழரின் சிந்தனைகளைத் தேர்ந்து, தெளிந்து, தம்முடைய சிந்தனைகளையும் இணைத்து அழகுபடத் தொல் காப்பியத்தை யாத்துள்ளார் ஒல்காப்பெரும் புகழ்த்
3

Page 14
  

Page 15
ஆகியவற்றின் பின்புறத்தில் வைத்து நோக்க வேண்டுவதற்கான அவசியம் இப்பொழுது புலனாகிறது.”*
"இலக்கணம்" (Grammar) என்பது செய்யுள், உரைநடை எழுதுவோரின் பொது வழக்குகள் பற்றிய நடைமுறை அறிவாகும். அது ஆறு பகுதிகளை உடையது. ஒன்று யாப்பு விதிகளுக்குட்பட்டு பிழையற உரக்கப்படித்தல், இரண்டு, நூல்களிலுள்ள இலக்கிய வழக்குகளுக்குரிய விளக்கங்கள், மூன்று எடுத்துக்கொண்ட பொருள் அதற்குரிய தொடர்கள் பற்றிய குறிப்புகள். நான்கு சொற்களின் மூலம் வேர்ச்சொல். ஐந்து மொழிகளில் உள்ள ஒத்த ஒழுங்கமை வுகளைக் கண்டறிதல். ஆறு இலக்கிய நூல்களைப் பாராட்டும் முறை. இதுவே மிக உயர்ந்த முறையாகும்"" (ராபின்ஸ், 1967:31)
"தொல்காப்பியம் முழுவதும் ஒருமொழி ஆராய்ச்சி செய்யும் இலக்கணநூலே. அதன் முதலிரண்டு அதிகாரங்கள் வடிவமைப்புப் பற்றிப் பேசுபவை. மூன்றாவதாகிய பொருளதிகாரம் உலகப் பொருள மைப்பு மொழிப்பொருளமைப்பாக மாறிவழங்கும் பழந்தமிழின் பொரு ளமைப்பொழுங்கையே (Semantical System) விளக்குகிறது."
தமிழ் மொழியைப் பொறுத்தவரையில் இலக்கிய ஆய்வின் பயனாக இலக்கணங்கள் தோன்றியிருக்கின்றன." பன்னெடுங்காலப் பழக்கத்தின் விளைவாகத் தோன்றுவது மரபு." தொல்காப்பியத்தின் இருபத்தேழு இயல்களில் நான்கு இயல்கள் மரபு என முடிகின்றன. மரபியல் என்றே இறுதி இயல் முடிகின்றது." இலக்கியத்திற்கு மரபு உண்டு என்பதும், மரபு நிலை திரிதல் கூடாது என்பதும், மரபானது வழக்குமரபு, செய்யுள் மரபு என இரண்டு வகைப்படும் என்பதும் வழக்கு மரபிலிருந்து உருவானது செய்யுள் மரபு என்பதும் தொல்காப்பியரது மரபுபற்றிய கோட்பாடுகளாகும்." "மரபுநிலை திரிதல் செய்யுட்கில்லை" என்பதன் மூலம் செய்யுள் மரபையும் அறிய முடிகிறது."
6. “சிவத்தம்பியின் தமிழ்க்கவிதை வரலாற்றில் தொல்காப்பியக் கவிதையில்
சில வினாக்களும் சிக்கல்களும்" (1998),மு.கு.நூ. 7. பாலசுப்பிரமணியன் "இலக்கணத்தில் தொல்காப்பியப் பொருளதிகாரத்தின்
இடம்" (1998),முது.தா.ப.104. 8. - , மேலது.ப.128. 9. பொற்கோ,டாக்டர். "தமிழிலக்கணக் கோட்பாடுகள்", மு.கு.நூ.ப.135. 10. சத்தியமூர்த்தி,அ, ம, "தொல்காப்பியம் செய்யுளாக்கத்தில் மரபு"(1938),ப.174. 11, மேலிது.ப.176. 12. சத்தியமூர்த்தி, அ.ம. மேலது.ப.180. 1. தொல், பொருள் நூற்.638.
6

கொழும்பு பம்பலபிட்டி இந்துக்கல்லூரியில் நவராத்திரி கலைவிழாவின் போது சிறப்பு விருந்தினராக வாகீச கலாநிதி கனகசபாபதி நாகேஸ்வரன் "தமிழ் மொழியின் தனிச்சிறப்புகள் பேருரை நிகழ்த்தினார். கலை விழாச் சிறப்பு மலரை அதிபர் த. முத்துக்குமாரசாமி கையளிக்கிறார். நடுவில் மலராசிரியர் செல்வன் நா. குருபரன். (2003)

Page 16
ஐந்திலக்கணைமரபு எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி எனும் விடயங்களைப் பேசுவது. தொல்காப்பியம் முதனூல்; நன்னூல் வழிநூல்; இலக்கணச் சுருக்கம் சார்பு நூல். 17ஆம் நூற்றாண்டிலே பிரபந்த இலக்கண நூல்கள் தோற்றம் பெற்றன. வடமொழிமரபில் வீரசோழியம் எனும் இலக்கண நூல் புத்தமித்திரனாராலே ஆக்கப்பட்டது. இலக்கண மரபுகளையுங் சூத்திரங்களையும் விரிவுபட விளக்கியுரைத்தவர்கள் உரையாசிரியர்களே. இன்று இலக்கண ஆய்வு மொழியியலாய்வு என்னுந் துறையாக வளர்ச்சியடைந்து நவீன ஆய்வணுகு முறைகளை அனுசரித்து உலகெங்கும் பெருவளர்ச்சி கண்டுள்ளது. அத்துடன் ஒப்பீட்டு ஆய்வு நோக்கும் நுண்ணாய் வுகளும் பெருகி வருகின்றன. பல்கலைக்கழகங்களிலே மொழித் துறைகளின் ஆய்வுப்பங்களிப்புகள் மேலும் அக்கர இலக்கணக்கலையை விளக்கும் எனலாம்.
2. கணிதம்
அறுபத்துநான்கு கலைகளுட் கணிதமும் ஒன்று. "எண்ணும் எழுத் தும் கண்ணெனத் தகும்.” என்பது தமிழிலே வழங்கும் முதுமொழி யாகும். இந்தியாவிலும், அராபியாவிலும் கணிதத்தின் பல்வேறு கண்டுபிடிப்புக்கள் முன்னதாகவே உண்டாகியிருந்தன. எண்கணிதம், வீசகணிதம், அட்சரகணிதம், கேத்திரகணிதம் , என்னும் கணிதமுறைகள் பாடத்திட்டங்களில் இடம் பெற்றுள்ளமையையும் மனதில் கொள்ளல் வேண்டும். இலக்கங்கள், எண்கள் பற்றிய நுண்ணறிவும், பயில்நிலையும், தமிழ் மரபிலே பெரிதும் செல்வாக் கைச் செலுத்தியுள்ளன. கணிதத் துறையினுட் புகுந்து ஆய்வு செய்தவர்களில் இராமானுஜம் போன்றோர் தேற்றங்களையும் கணிதவிதிகளையும் கண்டுபிடித்துள்ளனர். கணித அறிவுள்ள வர்களின் நுட்பத்திற்குச் சாணக்கியம், செயல்நுட்பம், இயற்கையைக் கட்டுப்படுத்தி ஆட்சிப்படுத்தும் திறன், சிந்தனை வளர்ச்சி என்பன அனைவருக்கும் பயன்படுவதனை அத்துறையிற் பணிபுரியும் பொறியி யலாளர்கள், வங்கியாளர்கள், நிலஅளவையியலாளர்கள், கணித ஆசிரியர்கள், கள ஆய்வாளர்கள், விஞ்ஞானிகள், மெய்ஞ் ஞானிகள் என்ற அனைவரது தொழிலீடுபாடுகளிலிருந்து அறியலாம். காலம், நேரம், தூரம், என்பன கணக்கிடப்படுகின்றன. பணம், திகதி, மாதம், நேரம், வர்த்தகத்தின் எண்ணிக்கை, பரீட்சைப் புள்ளியிடல், வயது, நட்ஷத்திரங்கள் என்று எண்ணிக்கைக்குரிய நடைமுறைகள் இக்கலையில் அன்றாடம் பயிலப்படுகின்றன அல்லவா! மனித அடிப் படை வாழ்வில் கரிைதத்தின் செல்வாக்கு என்றுமே பாரியள விலுண்டு. மொழி, கணிதம், விஞ்ஞானம், எனும் பாடங்களில், மாணாக்கரின், அறிவு பரீட்சிக்கப்படுவது அவசியம்.
7

உலகக் கணிதமேதை கும்பகோணம் ரீநிவாச ஐயங்கார், இராமானுஜ ஐயர் (22-12-1887), இராமானுஜன் சென்னைக்கு வந்து தமது கணிதக் குறிப்புப் புத்தகங்களைப் பேராசிரியர் சேசுஐயர், இராமசாமிஜயர் போன்றோரிடம் காட்டினார். அவர்களின் உதவியால் நெல்லூர் கலெக்டராகவும் செயலாளராகவுமிருந்த இந்தியக் கணிதக் கழகத்தின், திவான்பகதூர் இராமசந்திரனால் ஒருவருட காலத்திற்கு இராமானுஜனுக்கு மாதந் தோறும் 25 ரூபா உதவிவந்தார்.
கணித ஆராய்ச்சிக் குறிப்புக்களை எழுதி வைக்கவே தாள் களின்றி மிகுந்த சிரமப்பட்டார். உணவு உட்கொள்ள மறந்து ஆராய்ச்சியில் முழ்கும் அவருக்கு அவருடைய தாயார், அல்லது மனைவி உணவு ஊட்டிவிடுவதும் உண்டு.
சேசுஜயர், நாராயண ஐயர் போன்றவர்களின் நண்பர்கள் என்போரின் தூண்டுதலால் அவர் தமது ஆராய்ச்சிகள் பற்றி இங்கிலாந்திலுள்ள கணிதப் பேராசிரியர்களுக்கு எழுதினார். கேம்பி ரிட்ஜ் திரித்துவக் கல்லூரிப் பேராசிரியர். ஜி. எச். ஹார்டி அவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். ஹார்டி தமது நண்பர் ஜே.இ. லிற்றில்வுட் அவர்களுடன் சேர்ந்து இராமானுஜன் அனுப்பிய ஆராய்ச்சிக் குறிப்புகளை ஆராய்ந்து பார்த்தார். முறைமையான நிறுவல்களின்றி எழுதப்பட்ட முடிவுகளை ஒருவாறு இணங்கண்டு அவைமிக்க சிறந்த ஆற்றல்களுள்ள கணித மேதையின் செயற்பாடே என்ற முடிவுக்கு வந்தனர். ஹார்டியின் உற்சாகமூட்டும் முதற்கடிதத்துக்குப் பதிலளித்த இராமானுஜன் எனது மூளையின் செயற்பாட்டைப் பேண எனக்கு உணவு தேவை. இதுவே தற்போது எனது முதற்கவலை. உங்களின் கடிதம் இங்குள்ள பல்கலைக்கழகத்திலோ அல்லது அரசாங்கத்திடமோ உபகாரச்சம்பளம் பெற எனக்கு உதவலாம் எனக்குறிப்பிட்டார். ஹார்டியின் தொடர்பால் இராமானுஜனின் உயரிய கணித ஆற்றலுக்கு ஓர் அங்கீகாரம் கிடைத்துவிட்டது. இதன் விளை வாகச் சில ஆங்கில அதிகாரிகள் அவருக்கு உதவ முன்வந்தனர். சென்னைப் பல்கலைக்கழகம் அவருக்கு மாதம் தோறும் ரூ.25 உபகாரச்சம்பளம் வழங்கியது. பல்கலைக்கழகப் பட்டம் எதுவும் பெறாத ஒருவருக்குச் சென்னைப் பல்கலைக்கழகம் (இவருக்கு) உபகாரச்சம்பளம் வழங்கியது அதன் வரலாற்றில் இதுவே முதற் தடவையாகும். இராமானுஜம் இங்கிலாந்துக்கு வருதல் அவசிய மென ஹர்டி விரும்பினார். சென்னைக்கு வந்த கேம்பிரிட்ஜ் பேராசிரியர் இ.எச். நெவில் என்பவரின் வற்புறுத்தலாலும் 1914 மார்ச் மாதம் 17ஆம் திகதி சென்னையிலிருந்து இங்கிலாந்திற்கு கப்பலில் புறப்பட்டார். இங்கிலாந்தில் இராமானுஜர் இருந்த ஐந்து

Page 17
|றி சபாரத்தின சுவாமிகள் குரு பூசை- 2004, தலைப்மை "திருப்பணித்தவமணி எனப். தியாகராசா (8TR) அவர்கள்
இருப்பவர்கள் சுவாமிதந்திரதேவா, சுவாமி ஆத்மகனானந்தஜீ மற்றும் இருவர்
பிரதம நீதியரசர் மானன்புமிகு சி.வி. விக்கினேஸ்வரன் உரை திருமதி சாந்தி நாவுக்கரசன், "அருள்மொழி அரசி” வித்துவான் வசந்தா வைத்தியநாதன், சிவபூரி. பா. சண்முகரத்தின சர்மா, சட்டத்தரணி அரங்காவலர் டி. அம். சுவாமிநாதன், விழாத் தலைவர் சட்டத்தரணி கந்தையா நீலகண்டன், வாகீச கலாநிதி, கம்பவாரிதி இ. ஜெயராஜ் அறங்காவலர் பொன்வல்லிபுரம், அமரர் இ. ஆறுமுகம் ஆகியோர்.
 
 

竄
அறப்பணிகளினாலும், ஆலயப்பணிகளினாலும், எழுத்துப்பணிகளினாலும், சொற்பொழிவுகளினாலும் சைவத்தமிழ் உலகில் பெரும் புகழ் பெற்ற துர்க்கா துரந்தரி, சிவத்தமிழ்ச்செல்வி, பண்டிதை, கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி, ஜே.பி. (தலைவர் அறங்காவலர் சபை, றி துர்க்கையம்மன் தேவஸ்தானம், தெல்லிப்பழை)
திரு. திருமதி துரைராசா. இரத்தினேஸ்வரி தம்பதியுடன்
வாகீச கலாநிதி கனகசபாபதி நாகேஸ்வரனின் குடும்பம்.

Page 18
வருட காலத்தில் இவரின் 21 கட்டுரைகள் கணிதச் சஞ்சிகைகளில் வெளியாயின. அவற்றில் 5 ஹர்டியுடன் சேர்ந்து எழுதப்பட்டவை. “அற்புதமான அந்தக் கணிதர் உண்மையில் வெகுவாக நேசிக்கத் தக்க ஒரு மனித”ரென்பது பேராசிரியர் நெவிலின் கூற்று.
இந் நூலாசிரியருக்கு (வாகீசகலாநிதிக்கு) இத்துறைசார்ந்த ஆழமான விரிவுரைகளை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலே வித் துவப் புலமையுடன் நிகழ்த்தியவர் என் வாழ்நாளில் என்றும் மறக்க முடியாத பெருமதிப்பார்ந்த பேராசான், என் பேராசிரியர், வரலாற் றுத்துறைத் தலைவர், கலைபீடாதிபதி பேராசிரியர் கலாநிதி கார்த்திகேசு இந்திரபாலா அவர்கள்.
3. வேதம்
அறுபத்துநான்கு கலைகளுள் வேதம் என்பதும் அடங்கும். வேதங்கள் இறைவனாலே அருளிச்செய்யப்பட்டன. நான்கு என்று வகுத்தவர் வேதவியாசர் ஆவார். இருக்கு, யசுர், சாமம், அதர் வணம் என்று வேதங்கள் நான்கு ஆகும். வேதங்கள் வடமொழியிலே ஆக்கப்பட்டுள்ளன. இறைவன், வடமொழியும் தென்றமிழும் மறைகள் நான்கும் ஆனவன் காண்” என்று அப்பர் பெருமானின் திருத் தாண்டகம் செப்புகிறது. இருக்கு, வேதம் செய்யுள் வடிவிலுள்ளது; யசுர் உரை நடையிலமைந்தது. சாமவேதம் இசைப்பாடல்களா லானது. அதர் வணவேதமும் அதர்வ அங்கிரஸ் எனும் முனிவர்களாற் செய்யப்பட்ட மந்திரங்களைக் கொண்டது. வேதத்தின் கருத்துக்கள் மிகச்சுருங்கிய சுலோகங்களாலானவை. ‘ஏகம்ஸத் விப்ரா பகுதா வதந்தி’ ‘உள்ள பொருள் ஒன்றே அதனைப் பல்வேறு பெயர்களில் வழங்குவர்” என்று வேதம் கூறுகிறது. மந்திரங்கள் கொண்டு சிவனை வழங்கும் முறை மையே வேத வழக்காகக் கொள்ளப் படுகிறது. வைதிக சமயங்க ளாவன, சைவம், சாக்தம், வைணவம், காணபத்தியம், கெளமாரம், என்பன. வேதங்களைப் பிரமான நூல்களாகக் கொள்ளாத சமயங் களை அவைதிக சமயங்கள் என்று கூறுவர். "வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவதுநாதன் நாமம் நமச்சிவாயவே” என்பார் திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார். சிவனுக்கு "வேதம் ஓதி' என்று பெயர். சனகர், சனாதனர், சனந்தனர், சனற்குமாரர் ஆகிய நால்வருக்கும் சிவபெருமானே வேதங்களை அருளிச் செய்தார் என்றும், வேத நூல்கள் "ஐயாவெனவோங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே” என்று மணிவாசகரும அருளிச் செய்துள்ள திறன்கள் கண்டின்புறத்தக்கன. *வேதசாரமே தமிழ்த் திருமுறைகள்” எனும் கருத்தை அனைவருமே அறிந்துணர்ந்து தெளிவது அவசியம். மந்திரங்களின், மந்திரப் பொருள்களின் சுருங்கிய வடிவமே “ஓம்" எனும் பிரணவம் என்பது
9

மரபாகும். பிரணவ சொரூபி விநாயகர் என்ற வழிபாட்டு மரபும் காலத்தாற் தொன்மையுடையது.
வேதமோதுபவர் வேதியர். சிவன் வேதியர் உருவம் தாங்கியே ஆன்மவர்க்கத்தினருக்கு அருள்புரிவாரென்று உரைக்கின்றன புராணங்களும், ஆகமங்களும், இதிகாசங்களும், திருமுறைகளும், மெய்கண்ட சாஸ்திரங்களும்.
எனவே அந்தணனாகிவந்து ஆட் கொள்ளும் சிவனின் வேதத் தொடர்பை ஆழமாகச் சிந்தித்து ஆராயும் இக்கலைக்கும் எல்லை முடிவு கட்டி வரையறை செய்து விடமுடியாது. ஆதலினாலே கலைகளின் ஆய்வு என்பது முடிவு பெறாத ஒன்று. எப்படித் தத்துவம், கடவுள் ஆன்மா, உல்க்ம், இயற்கை பற்றிய ஆய்வுகள் முடிவிலி (Infinitive) unts அமைகின்றனவோ அவ்வாறே வேத வழக்குப் பற்றிய - வேதக்கலை பற்றிய ஆய்வும் ஆழமும் நீளமும் முடிவற்ற இன்பமும் தந்து பேரின்ப நிலையை வளர்ப்பது. வேதத்தின் இலக்கிய வரலாறுபற்றி (அமரர்) பேராசிரியர் கலாநிதி கா. கைலாசநாதக் குருக்கள் பல்வேறு நூல் களை எழுதியுள்ளார். இன்று இணுவிலில் வேதக்குருகுலம் நடத்து கிறார் சிவறி தா. மகாதேவக்குருக்கள். யாழ்ப்பாணத்தில் இந்துசமய விவகாரஅமைச்சு வேதப்பாடசாலையை நடத்தி வியா கரண சிரோமணிகளைக் கொண்டு வேதம் கற்பிக்கப்படுகின்றது. சிவறி ச.மகேஸ்வரக்குருக்கள், கலாநிதி. ப. கோபாலகிருஷ்ண ஐயர், சிவUர்.வை.மு. பரமசாமிக்குருக்கள், சிவறி.ப. முத்துக்கு மாரசாமிக் குருக்கள் ஆகியோரின் வழிக்காட்டுதலில் பல வேத விற்பன்னர்கள் விரிவுரைகளையாற்றி வருகின்றனர்.
இன்று வேதக்கல்வியும் அதன் தத்துவார்த்தங்களும் ஆண்கள், பெண்கள், விஞ்ஞானிகள், மெஞ்ஞானிகள், குழந்தைகள் அனை வரினதும் செவிகளிலும் சிந்தனைகளிலும் புகுத்து பணியி னைச்செய்து இந்துமத தத்துவ போதனை, பிரசாரம் செய்து மகத் தான தொண்டாற்றி வருகிறார், பகவான் முரீசத்திய சாயிபாபா அவர் கள். வேதக்கலையை ஒதுவதுதான் மகோன்னதமானது. Vibration எனும் ஒலி அதிர்வு கருங்கல்லிலே பட்டு அதிர்வதன்மூலம் ஒருவ கை பக்தியுணர் வுண்டாகிறது எனும் நம்பிக்கை நம்மவர் மத்தியில் உண்டு. அதனைப் பேணுவதும், போற்றுவதும், பாதுகாப்பதும், வளர்த்தெடுப்பதும், அனுபவிப்பதும், மறையுணர்வுக்கு இதஞ்ய்ெயும் என்ற கருத்தை மட்டும் இத் தொடர்பிலே அழுத்தியுரைக்க எண்ணு கிறேன். வேத வழக்கினை யறிந்து ஆலயக் கிரியைகள், திருமணம், மரணம், வீடுகுடிபுகுதல், கிணறு தோண்டுதல், வெள்ளோட்டம் என்பவற்றையும், சிறுபிள்ளை களுக்குக் காது குத்துதல், அன்னப்
10

Page 19
யாழ். பல்கலைக்கழகத்தில் அரச சாகித்திய விழாவில் பிரமுகர்களை வரவேற்று வாகீச கலாநிதி வரவேற்பு உரை நிகழ்த்துகிறார்.
கந்தசஷ்டி பேருரை. (25.10.1989-30.10.1989 வரை.)
 
 

வவுனியா வேப்பங் குளம் பரீ சித்தி விநாயகர் கோவிவில் விநாயக புராணம் பற்றி 21 தினங்கள் தொடர் பேருரை. 1995. திருநெறிய தமிழிசைச் செல்வரும் திருமதி கே.கே.வி. நடராசா அவர்கள்.
திருவாதவூரடிகள் புராண உரை நூல் வெளியீடு 2001, உரை எழுதியவர் புலவர் சி. விசாலாட்சி. தலைவர் திரு. கா. தயாபரன் அருகில் கலாநிதி குமாரசாமி சோமசுந்தரம் எம்.ஏ வாகீசகலாநிதி உரை.

Page 20
பிராசனம், பெயர் வைத்தல், மொட்டையடித்தல், விற்றுவாங்குதல் என்பவற்றையும் மேற்கொள்ளல் வாழ்விலே அவசியம். வேதநாதன், வேதநாயகன், வேதியன் எனும் பெயர்கள் சிவனுக்குரியன என்பத னையே நாம் தெரிந்துணர்தல் வேண்டும். "வேதக்காரர்” எனும் போது அது சைவர்களையே குறிக்கும் என்பதனை நன்கு எண்ணி யறிந்து விளங்கிப் பயன்படுத்துதல் வேண்டும்.
இன்று "வேதக்காரர்”, என்றால் “கிறிஸ்தவர்” எனும் ஒரு புதிய கலப்புமரபு எனும் கருத்துப்பரம்பல் உலகெங்கும் முன்னெ டுக்கப்பட்டு இயற்கைச் சமயமான இந்து, சைவச் செயற்பாடு களுக்கும் கொள்கைகளுக்கும் இடர் செய்யப்பட்டு விஷமத்தனமான உலகப்பிரசாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை கண்டு அவர்களது காழ்ப்புணர்வையும் பொறாமையையும், அழுக்காறுமனோ நிலை யையும் என்னென்பது! இன்று ஒரு நாவலரே” நம்மத்தியில் உதிக்க வேண்டும். இச்சிந்தனைகள் வேறெந்த மாநிலத்தவருக்கும் வராது. இதற்குப்பெயர்தான் யாழ்ப்பாணத்துச் சிந்தனை மரபு. எவர் எது சொன்னாலும் உண்மையே. நீதயே வெல்லும், கலைகளும், இந்துசமயமும் இயற்கையிலேயே பிணைந்துள்ளன. இதற்கு ஊறு விளைப்போரே சமாதானத்தின் எதிரிகள்; யுத்தசன்னத்தர்; அரக்கர்கள்; அசுரத்தன்மை கொண்டவர்கள்; குழப்பக்காரர்கள். ஆகவே இயற்கை யோடிணைந்துள்ள கலையையும் நமது சமயத் தையும் சகிப்புணர்வுடன் நோக்கும் மனோநிலையே அதனை வளர்க்கப் பேருதவி புரியும் என்பது புரிகிறதல்லவா! சிந்திப்போமா? இனி, உங்களது கருத்துக்களையும் நூலாக எழுதலாம்.
4. புராணம்
*புராணம் ஒரு கலைவடிவம் என்ற செய்தி மிகவும் பிரதானமா னதாகும். புராணக் கதைகளுக்குச் செம்பொருள் (வெளிப்படை யானது, குறிப்புப் பொருள் தொக்கி நிற்பது என இரு வகைப் பொருள்படும்.) உள. செம்பொருள் கதையையும் குறிப்புப் பொருள் கதையில் உள்ளார்ந்து நிற்கும் தத்துவத்தையும் கூறும். அவை வேதம், உபநிடதம், ஆகமம், முதலியவற்றில் கூறப்பட்டுள்ள தத்து வங்க ளாகும். புராணங்களிலே கற்பிதங்கள் இடம்பெறுகின்றன. உருவ கங்கள் பெரிதும் இடம்பெற்றுள்ளன. புராணங்கள் படித்த வரையும் பாமரரையும் ஒருசேரக்கவர்ந்து பக்தி மார்க்கத்தில் இட்டுச் செல்லும் வழியாக நடைமுறையில் உள்ளது." பதினெண் புராணங்கள், சிவபுராணம், விஷ்ணுபுராணம், பதுமபுராணம் என்று வகுக்கப்
14. தங்கேஸ்வரி,க, "கந்தபுராணத்தின் தத்துவப்பொருள்", சுத்தானந்தம், 30 பொன்விழா மலர், (19.11.2002), வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்கப் பொன்விழா மலர், வவுனியா, ப.107-108.
11

பட்டுள்ளன. புராதனமான வரலாற்றைக் கூறுவன புராணங்கள். கந்தபுராணம், பெரியபுராணம், திருவிளையாடற்புராணம், திருவாத வுரடிகள் புராணம் முதலியன மிகவும் பிரசித்தமானவை. இந்துக் களோடு இவை இரண்டறக் கலந்துவிட்டவை என்று கூறுமளவிற்குத் தலைமுறை தலைமுறையாக மக்கள் மத்தியில் இவை நின்று நிலவி வருகின்றன. கந்தபுராணம் முருகப்பெருமானின் திருவிளை யாடல்கள் பற்றிக் கூறுகிறது. அதனுள்ளே மக்களறிய வேண்டிய மிகமுக்கியமான சமயத் தத்துவங்கள் அடங்கியுள்ளன. இந்து சமயத்தில் கந்தபுராணம் ஒரு விழுமியபக்தி நூலாகும். வள்ளி தெய்வானை என்ற இந்த இருவரும் மனைவியர் என்று கற்பிக்கப் பட்டிருக்கின்றது. அந்த இருவரும் இச்சாசக்தி, கிரியாசக்தி, என் னும் இரு சக்திகளின் உருவகமாகும். (உருவகம்- அதேபோல).
சிவபிரான் திருக்கோலம் கொள்ளும் போது கொள்ளப்படும் சிறப்பம்சங்களும் தத்துவங்களும் புராணங்களில் உள்ளன. இந்நூல்களில் சிவபிரானின் சாந்தமயக் கோலத்தையும் உக்கிரமய கோலத்தையும் விதந்து கூறுகின்றன. புராணங்கள் இறைபக்தியை ஏற்படுத்துவதோடு அமையாது சைவசமயப் பண்புகளையும், வீடு பேற்றிற்குரிய சாதனை முறைகளையுங் காட்டிநிற்கின்றன. சுருங்கக் கூறின் சிவபெருமானின் பெருமைகள், பழைய அருட்கோலங்கள், வழிபாடுகள் என்பவற்றைக் கூறுகின்றன. புராணங்கள், உபபுராணங்கள் என இருவகைகளில் உள்ளன. இவற்றுள் அடங்காத புராணங்களும் உள்ளன. மகாபுராணங்களே பதினெண்புராணங்களாகும். மத்சயம் மார்கண்டேயம், பிரமவைவர்த்த, வாமனம், வாயு, விட்டுணு, வராகம், அக்கினி, நாரதீயம், பத்மம், இலிங்கம், கருடம், கூர்மம், காந்தம், பாகவதம், என்பன ஒருசில சிவபுராணங்கள்.
5. உபபுராணங்கள்
சனற்குமார, நரசிம்மம், நாரதீபம், சிவரகசியம், துர்வாசம், கபிலம், மாணவம், பார்தவம், வாருணம், காளிகா, சாம்பவம், நந்திகேஸ்வரம், செளரம், பராசரீயம், ஆதித்தம், மாகேஸ்வரம், வாசிட்டம், பாகவதம், என்பன. ஆலயங்களுடன் தொடர்பு பெற்ற தலத்தின் மகிமையைச் சிறப்பாக விரிவுபடுத்திக் கூறும் புராணங்கள் தலபுராணங்கள் எனப்படும்."
"தேசிய இலக்கியம்” என்ற பெயரிலே மிகச்சிறப்பான ஆய்வை நிகழ்த்தி நூலாக்கினார் பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன். டாக்டர்
15. தில்லைநாதன். எஸ்., சைவமும்நாமும், (1991), திருமகள் நிலையம், 55,
வெங்கட்நாராயணா ரோடு, தி. நகர், சென்னை, 600017, ப.65.
12

Page 21
முன் வரிசையில் இருப்பவர்கள் பேராசான்கள் விரிவுரையாளர்கள் பேராசிரியர்கள் வாகீச கலாநிதி, வித்யாபூஷனம் பேராசிரியர் நா. சுப்பிரமணியம், கலாநிதி, இ. பாலசுந்தரம், பேராசிரியர் கலாநிதி. ஆ.வேலுப்பிள்ளை, துணைவேந்தர் பேராசிரியர் கலாநிதி சு. வித்தியானந்தன், பேராசிரியர் கலாநிதி அ. சண்முகதாஸ், பேராசிரியை (திருமதி) சித்திரலேகா மெளனகுரு, கலாநிதி சி. சிவலிங்கராசாவும் பட்டதாரி மானவர்களும். தமிழ்த்துறை யாழ். பல்கலைக்கழகம்
யாழ்ப்பான பல்கலைக்கழகத்தில் இலங்கைக் கலைக்கழக நடத்திய இலக்கியக் கருத்தரங்கில் வாகீச கலாநிதி ஆய்வுக்கட்டுரை சமர்பித்து உரை.
 
 
 
 
 

சபரகமுவ பல்கலைக்கழகத்தின் பொதுபட்டமளிப்பு முன்வரிசையில் கலைபீடாதிபதி பேராசிரியர் ராஜீவ விஜேசிங்க, இரண்டாம் வரிசையில் இரண்டாவதாக இருப்பவர் வாகீசகலாநிதி கனகசபாபதி நாகேஸ்வரன் (கண்ணாடியுடன்)

Page 22
இரா. செல்வகணபதி பெரியபுராணம் பற்றிப் பின்வருமாறு எழுது கிறார்.
மானுட இலக்கியம் பாட முனைந்த சேக்கிழார் சமயஞ்சார்ந்த அருளாாளர்களை வரையறுத்துக் கொண்டமை அருமைப்பாடு மிக்கது. மனிதர்களை ஒருங்கிணைப்பதற்குரிய பல்வேறு சமுக அமைப்புக்கள் உண்டு. உறவு, சாதி, மொழி வழிப்பட்ட இனம், சமயம் என்பன அவை. இவை மனிதர்களை ஒருங்கிணைப்பதில் ஒன்றிலொன்று முறையே சிறந்து நிற்பன. மனித குலத்தை, மனித நேயத்தை, மனித குல ஈடேற்றத்தை, மனித இணக்கத்தை உரு வாக்குவதில் சமயமே மிகப் பெரிய வட்டம் என்பதைப் பெரியபுராண ஆசிரியர் நன்கு உணர்ந்திருந்தமை தெளிவாகிறது."
"சைவசமய இலக்கியங்களில் மணிமுடியாக விளங்குவது பெரியபுராணம். .அறுபத்துமூன்று நாயன்மார்களைப் பற்றி அறிந்து கொள்ள முடிகிறது. . சேக்கிழார் காணும் பொருளில் எல்லாம் சிவத்தைக்காணும் உன்னத நிலையை அடைகிறார். அந்த உயர்ந்த பக்குவப்பட்ட நிலையில் அவருடைய உள்ளம் முகிழ்த் திருந்த பொழுதே பெரியுடபுராணம் மலர்ந்துள்ளது. தொண்டு என்ற பண்பைக் காப்பியப் பொருளாக்கித் தொண்டர்கள், பக்தர்கள் என்பவர்கள் தூய பக்தி மனப்பான்மையுடன் வாழ்க்கை நடத்தும் போது எப்படி எல்லாம் செயற்படுவார்கள் என்பதைச் சேக்கிழார் பெரியபுராணத்தில் விளக்கி யுள்ளார். மிக உயர்ந்த இந்தக் கருத்து எல்லா மக்களிடமும் சென்று பரவவேண்டும் என்று கருதி அவர் செய்த பெரிய புராணம் அனைத்து உலகத்தையும் தழுவும் பண்பு கொண்டு அமைந் துவிட்டது.” தனிப்பெரும் பேரிலக்கியமும் ஞான நூலுமாகிய பெரியபுராணத்தை முழுதும் படித்துப் பயனுற வேண்டியது நம்மனைவரதும் கடனாகும். பக்திக் கவிதையின் திட்ப நுட்பங்களை பெரியபுராணத்திற்
காணலாம்.
16. செல்வகணபதி, இரா., டாக்டர், "பெரியபுராணம் புதிய பார்வை", நால்வர்நெறி (31.08.2002), இலண்டன் சைவ முன்னேற்றச் சங்கத்தின் வெள்ளி விழாச் சிறப்பு மலர், வாசன அச்சகம், ப.19. 17. கிருஷ்ணன்,சி, மேலது, ப.54-56.
13

6. வியாகரணம்
"வேதாங்கங்கள் ஆறு. சிட்சை, வியாகரணம், நிருத்தம், சோதி டம், கற்பம், சந்தோவிசிதி என்பன அவை. “வியாகரணம்” என்பது மொழி இலக்கணம் எனப்படும்." "வியாகரணசிரோமணி” என்னும் பட்டப் பெயர்கள் தமிழகத்திலும் யாழ்ப்பாணத்திலும் வாழ்ந்த வேதங்களிலும் ஆகமங்களிலும் இதிகாசங்களிலும் வல்ல பேரா சான்களுக்கு வழங்கப்பட்டிருந்தமையினால் “குருசீட” மர பொன்று நிலவிய தென்பது அறியற்பாலது. வியாகரணசிரேட்டர்கள் வட மொழிப் புலமைத் திறன் மிக்கவர்களாயுமிருப்பர். வியாகரண விற்பன் ர்கள் சீதாராமசாஸ்திரிகள், சுப்பிரமணியபட்டர், பேராசிரியர் ா.கைலாசநாதக்குருக்கள், சிவபூரீ. குஞ்சிதபாதக் குருக்கள், சிவறி ா. மகாதேவக்குருக்கள், அமரர். நயினைசிவழறி. ஐ.கைலாசநாதக் ருக்கள், சிவபூரீ.வை.மு.பரமசாமிக்குருக்கள், சிவறி ப.முத்துகு ாரசுவாமிக் குருக்கள், சிவறி. சுவாமிநாத பரமேஸ்வரக் குருக்கள், வறு.ச. மகேஸ்வரக் குருக்கள், சுன்னாகம் சிவறி நா.சோமாஸ் ந்தக்குருக்கள், சிவபூரீ நா. சர்வேஸ்வரக் குருக்கள் சிவபூரீ சாம்ப. ரவணபவக் குருக்கள், சிவபூரி கை.வாமதேவக் குருக்கள், நவாலி சிவபூர் விஸ்வநாதக் குருக்கள். என்போரையும் இன்னும் பலரையும் நினைவு கொள்ளுதல் சாலும். செவிவழி மரபே வியாகரணம் எனப்படும்.
7. நீதிசாஸ்திரம்
நீதி சாஸ்திரக்கலை மிகவும் அபூர்வமானது. சமுதாயம், சமயம், மனுநெறி, உலக இயக்கம், இயற்கை வழிபட்டவாழ்வு, அறச் செயல், சிந்தனை அனைத்தையும் ஒருங்கே ஆட்சிப்படுத்தி இலங்குங் கலை நீதிசாஸ்திரம். இறைவனான சிவனையே நீதி' யாகக் கொண்டது நாம் பிறந்துள்ள சைவம். "நாகரிகச் சமுதாயத்தின் இன்றியமையாத கூறுகளிலொன்று குற்றவாளிகளைத் தண்டித்துச் சமூகத்தின் அமை தியைப் பாதுகாப்பதாகும். பண்டைச் சமுதாயங்கள் அனைத்திலும் தொன்று தொட்டு வழங்கிவரும் சமூக வழக்காறுகளே சட்டங்களாக விளங்கியுள்ளன. சமூக வழக்காறுகள் நீதிநூல்களாக வளர்ச்சி யுற்றன. "ஆராய்ச்சிமணி" அரண்மனையில் தொங்கிற்றெனச் சிலப்ப திகாரம் கூறுகிறது. நீதியை "அறம்” என்ற சொல்லாற் குறித்தனர். நால்வகைப் படைகளும் இருந்தாலும் அறமே மன்னனுக்குச் சிறப்பளிப்பது என்பது அந்நாளைய சிறப்பான கொள்கையாகவிருந்தது.
“கடுஞ்சினத்த கொல்களிறும் கதழ்பரிய கலிமாவும் Vash 18. தில்லைநாதன்,எஸ்.மு.கு.நூ.ப.64.
14

Page 23
閭.T玉 T*量
HSSYSS S DDS S SKSSSKSSSS 蠶*曇
மத்திய மலையகத்தில் நவநாதச்சித்தர் சிவாலயத்தில் சைவதிே வளர்ப்பதற்காகத் திருமுறை பண்ணிசை நிகழ்த்துபவர் அருட்கலைமாமணி நாகேஸ்வரன்.
இந்திய ஆதீனத்தினால் "சைவநீதி சஞ்சிகையின் சார்பில் கெளரவம்.
 
 
 
 
 

மலையகத்தில் நாவலப்பிட்டியில் அறநெறிப் பாடசாலை ஆசிரியை திருமதி விஜயலெட்சுமி (வாகீச கலாநிதியின் சகோதரி) அவர்களுக்குக் கருத்தரங்கில் பங்குபற்றியமைக்காகச் சான்றிதழ் வழங்குகின்றனர் கலாசார உத்தியோகஸ்தர் மாத்தளை வடிவேலனும் திரு. க. பொன்னுத்துரையும்,
ஜெசீலா, அல்அகமத், மருதூர்கனி, வாகீசகலாநிதி, முத்துமீரான், ஏ.ஜே. கனகரட்னா, (கண்ணாடிக் கூட்டுடன்) பேராசிரியர் கலாகிர்த்தி சி. தில்லைநாதன், கவிஞர் கலாநிதி இ. முருகையன், பேராசிரியர் கலாநிதி சி. சிவலிங்கராசா, செல்வி, மாகிதா.(யாழ், பல்கலைக்கழகக் கைலாசபதி கலையரங்கின் முன்.)

Page 24
நெடுங்கொடிய நிமிர்தேரும் நெஞ்சுடையபுகல் மறவருமென நான்குடன் மாண்டதாயினும் மாண்ட அறநெறி முதற்றே அரசின்கொற்றம் அதனால் நமரெனக் கோல்கோடாது பிறரெனக் குணங் கொள்ளாது.”
(புறம். 55.)
நீதி வழங்கவேண்டும் எனக் கூறுதல் காண்க. "நீதிவழங்குதல்” முறை செய்தல் எனப்பட்டது. அறநெறி தவறாமைக்கு அடையாளமே செங்கோல் முறை செய்தாளும் வேந்தனே இறைவன் என்றார் வள்ளுவர். மன்னன் நீதி தவறினால் நாட்டில் மழை பெய்யாது என்று அன்று நம்பினர். “கோள்நிலை திரியின் மாரிவறங் கூரும்.” என்று மணிமேகலை கூறுகிறது. அன்றைய தமிழ்ச் சான்றோர் மன்னனை மதிப்பிடுதற்கு நீதி முறைமையே அடிப்படையாகவிருந்தது என அறியலாம்.
மனிதனுக்கு மட்டுமன்றி விலங்குக்குக்கூட நீதி வழங்க வேண டும் என வற்புறுத்தும் வரலாறுகளே மனுநீதிச்சோழன் வரலாறும் சிபியின் வரலாறுமாகும்.
தொல்காப்பியம் அவைச் சான்றோர்க்குரிய தகுதிகளைக் கூறுகிறது. குடிப்பிறப்பு, கல்வி, ஒழுக்கம், வாய்மை, தூய்மை, நடுநிலை, அழுக்காறின்மை, அவாவின்மை என்பனவே அத் தகுதிகள். அவை சான்றோர் அச்சத்தையும் அவலத்தையும் நீக்கிடும் இயல்பும், செற் றமும் உவகையும் அற்ற பண்பும் உடையவர் என மதுரைக்காஞ்சி (489-90வரிகள்) கூறும்.
சான்றுகளே முறைவழங்கிட அடிப்படையாகும். அதனைக் “கரி என்பர். பொய்யாகச் சான்று கூறுபவன் இழித்துரைக்கப்பட்டான். அவனுடைய நாக்கு அழுகிவிடும் என்று "சிறுபஞ்சமூலம்” குறிப்பிடு கிறது. பொய்ச்சான்று கூறுவான் ஒரு மரநிழலில் ஒதுங்கினால் அம்மரம் வாடிவிடும் என்று (செய் - 34) கலித்தொகை கூறுகிறது.
"கன்றிய கள்வன் கையதாகில் கொன்றச் சிலம்பு கொணர்க."
(சிலப்பதிகாரம்) என்று பாண்டியன் கட்டளையிட்டான். கையும் களவுமாகப் பிடிபட்ட கள்வன் கொல்லப்பட்டான் போலும்
பல்லவ மன்னர்களின் காலத்தில் "தருமாசனம்” “அதிகரணம்” என்பவை அக்கால நீதிமன்றங்களாகும். தருமாசனப் பட்டர், அதி
15

கரண போசகர் என்போர் நீதிபதிகளாவர். நீதிமன்றத்தில் கையூட்டு நிலவியதை மகேந்திரன் தன் மத்தவிலாசத்தில் கிண்டல் செய்துள் ளான்.
சோழப் பெருமன்னர் காலத்து நீதியில், பெரிய புராணத்தில் இடம்பெறும் சுந்தரர் பற்றிய வழக்கு அக்கால நீதிமுறை பற்றி அறிய உதவுகிறது. கோயில் சிலைகளையும் நகைகளையும் திரு டியவர் சொத்துக்கள் பறிக்கப்பட்டன. திருட்டு, கள்ளக் கையொப்பம், கற்பழிப்பு ஆகிய குற்றம் புரிந்தோர் ஊரவையில் இடம் பெறத் தடை இருந்தது. ஆதித்த கரிகாலனைக் கொன்றவர்களின் நிலம் பறிக்கப்பட்டது. மாடுகளைத் திருடியோரின் சொத்துக்கள் பறிக்கப்பட்டன.
பிற்காலப் பாண்டிய நாட்டில் நிலவிய நீதிமுறையினைக் கல்வெட் டுக்களில் அறிகிறோம். பாண்டியரின் நேர்மையை மார்க்கோ போலோ பெரிதும் பாராட்டியுள்ளார். சிறைக் கைதிகளை முத்துக் குளிக்கும் பணியில் ஈடுபடுத்தினர் என்று அவரே குறிப்பிட்டுள்ளார். பிராமணனைக் கொன்ற குற்றவாளி எருமையின் காலில் கட்டப் பட்டான்.
சிவத்துரோகத்துக்குக் கடுமையான தண்டனைகள் கொடுக்கப் பட்டன. பழுக்கக் காய்ச்சிய இரும்புத் துண்டைக் கையிலேந்திச் சத்தியம் செய்வது வழக்கிலிருந்துள்ளது. நியாய சபையில் பெண்டி ரும் இடம்பெற்ற செய்தி கல்வெட்டொன்றால் தெரிகிறது". இன்னும் மேலதிக விளக்கத்திற்குக் கொழும்புப் பல்கலைக்கழக சட்டபீட வெளியீடான "நீதி முரசு" சஞ்சிகையைப் பார்க்கவும்.
8. சோதிட சாஸ்திரம்
சோதிடக் கலையிலே பெருநம்பிக்கை கொண்டவர்கள் தமிழ் மக்கள். தொன்மையும் இயற்கையும் வாய்ந்த இக்கலையின் மகோன்னதம் இன்று உலகின் பல நாடுகளிலும் விசாலிப்பைப் பெற்றுள்ளமையையும் காணமுடிகிறது. சோதிடம், உலகக் கிரக மண்டலங்களினதும் மனித இராசிகளினதும், நட்சத்திரங்களினதும் இயக்கப்பாட்டினையும் நுணுக்கமாக ஆராய்கிறது. மக்களின் நாள்முறை வாழ்க்கையிலே சோதிடம் அதிகளவிலே செல்வாக்கினை வகிக்கிறது. சூரியன் உதிப்பதற்குச் சில நாழிகைக்கு முன்பாகவே பெரும்பான்மை மக்களும் துயில்நித்து எழுந்தனர். தூக்கத்தினின்றும் விழிப்பூட்டுவதற்குச் சேவலின் கூவலும், பிற பறவைகளின் ஒலியும் துணைசெய்து வருகின்றன. விடியற் காலத்தில் கீழ்த்திசையில் தோன்றும் விடிவெள்ளியும், ஒலியும் துணைசெய்தன. புறநானூற்றிலே
16 .

Page 25
“வெள்ளி தோன்ற புள்ளுக்குரல் இயம்ப புலரி விடியல்.”
என்று வருகிறது. அதிகாலையில் அந்தணர் ஒதும்ஒலியும், யாழோர் முதலியோர் எழுப்பும் இசையொலியும், கோநகரங்களில் மன்னருடைய அரண்மனையில் ஒலிக்கும். காலை முரசும், அங்கே அரசனைத் துயிலெழுப்புவோராகிய சூதர், மாகதர் வேதாளிகளின் பாடல்களும் மக்களைத் தூக்கத்தினின்று எழுப்பின என்று ஐங்குறு நூறு, மதுரைக் காஞ்சி, பரி. திரட்டு எனும் நூல்கள் கூறுகின்றன. (448), (654-686). கொக்குவில் சோதிட பரிபாலன சபையினர் பஞ்சாங்கம் வெளியிடுகின்றனர். வாக்கிய பஞ்சாங்கம், திருக்கணித பஞ்சாங்கம் என்பது அவற்றின் பெயர்கள்.
குறிசொல்லும் சமுதாய நடைமுறையும் நம்பிக்கையும், நிமித் தங்கள் அறிந்து கொண்டு நடப்பதும் எதிர்காலம் பற்றிய அறிவும் தெளிவும் பெற்றவர்களாகவும் நம்மவர்கள் வாழ்ந்துள்ளனர். சிலப்ப திகாரம், குரவையாட்டம், குரவைக் கூத்துப் பற்றிக் கூறுகின்றது. கலித்தொகையும் குரவையாடித் தெய்வம் பரவும் நிகழ்ச்சிகளைக் குறிப்பிடுகிறது.
“மக்கள் தாங்கள் செய்யப்போகும் நிகழ்ச்சிகளைத் தொடங்கும் முன் நாள்கோள் நோக்கியும் பல்வகை நிமித்தங்களை ஆராய்ந்தும் செயல் தொடங்குவர். நிமித்தங்களில் நன்னிமித்தமும், தீ நிமித்தமும் உண்டு. சுவர்ப்பல்லியின் ஒலி, மனையின் நொச்சியில் உள்ள குயிலின் கூவல், குருகுகள் விசும்பில் எழுந்து பறத்தல், வண்டுகள் புதரில் சூழ்ந்து ஊதுதல், முன்கை வளையும் தோள்வளையும் இறுகுதல், இடக் கண் ஆடுதல், ஆயராது குழல் ஒலி இவை யெல்லாம் நன்னிமித்தங்களாகக் கருதப்பட்டன.”
சோதிடசாத்திரத்தில் எட்டுத் திசையிலும் எரிகொள்ளி எரிந்து விழுதல் (எரிநட்சத்திரம்) பெரு மரத்திலுள்ள இலையில்லாத கொம்பு தீப்பற்றி எரிதல், கொடிய கிரகணம் உடைய சூரியன் பல இடத்தும் நெருங்கித் தோன்றுதல், பன்றியின் மேல் ஏறுவது போலவும், ஆடை யைக் களைவதைப் போலவும் முதலியவையெல்லாம் தீமை நிகழ் வதை அறிவிக்கும்குறிகள் என எண்ணினர்.”
19. தட்சிணாமூர்த்தி,அ., டாக்டர்,(1999), "நீதித்துறையின் வரலாறு” தமிழர் நாகரிகமும் பண்பாடும், யாழ் வெளியீடு, ஏ. பி. 1108, தென்றல் குடியிருப்பு, மூன்றாவது தெரு, மேற்கு அண்ணா நகர், சென்னை, எம். எஸ். பிரிண்டர்சு, சென்னை,ப,455-467.
20. சண்முகம்பிள்ளை,மு., சங்கத்தமிழர் வாழ்வியல்,(1997), உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சீ. ஐ. டி வளாகம், சென்னை, Pavai Printers (Pvt) Ltd. 142, J.J. Khan Road, Chennai, 14, V, 126 - 160.
17

யாழ்ப்பாணத்துச் சோதிடக் கலை மிகப் பிரசித்தியும் உலகக் கீர்த்தியும் வாய்ந்தமையை இரு வேறு பஞ்சாங்கங்களும் தெளிவாக உணர்த்தி நிற்கின்றன. திருக்கணித பஞ்சாங்கம், வாக்கிய பஞ்சாங்கம் என இரு பெயர்களிலே வருடாவருடம் புதுவருடத்திலே பஞ்சாங்கங்கள் இன்றும் வெளியிடப்பட்டு வருகின்றன. "Tamil Almanac" என்று ஆங்கிலத்திலே இது வழங்கப்பட்டு வருகிறது. “யாழ்ப்பாணம் கொக்குவில் இ. சி. இராகுநாதையர் அவர்களின் சகோதரரின் புத்திரர் இ. வெங்கடேச ஜயரால் கணிக்கப்பெற்றது” என்னும் குறிப்புக்களுடன் வெளிவரும் வாக்கிய பஞ்சாங்கம் பிரயாணத்துக்கு விலக்கப்பட்ட சகுனம் எனப் பின்வருவனவற்றை உரைக்கிறது.
“ஒரு பிராமணன், ஒன்றின் மேற்பட்ட சூத்திரர், முன்று கோமுட் டிகள், அம்பட்டன், வாணிபன்,தட்டான், மயிர்விரித்தவன், மொட் டந்தலையர், எண்ணெய்த் தலையர், ஜடாதாரி வேடக் காரர், சந்நியாசி, காவி வஸ்திரதாரி, விதவை, தூரஸ்திரி, ஈரவஸ்திரதாரி, நிருவாணி அலி, சத்துரு, சோரர், ஆசௌசி, ஏழை, நோயாளி, மலடர், கொலைஞர், அடிமை, உன்மத்தர், குருடர், முக்கறையர், ஊமர்,உப்பு, உமி, மை, பஞ்சு, வெறும் பாத்திரம், எண்ணெய்க்குடம்,விறகுகட்டு, புகை நெருப்பு, கயிறு, சிவந்த புஷ்யம், அகாலமழை, பரிவேடம், இடித்தல், மின்னல், பெருங்காற்று, அழுகுரல், அபான வாயு பறிதல், கொக்கரித்தல், கால்இடறல், தலை தட்டல், சரீரம் நடுங்கல், வஸ்திரம்உரிதல், பல்லி விழுகை, முத்திரம்விடுகை, மைதுனம், ஆலிங்கனம், முக்குச் சிந்துகை, துர்ச்சனசகாயம், தனிமை, வீடுபற்றி யெரிகை,உண்டுபோவெனல், போகாதேயெனல், பின்னழைத்தல், கூடவருகிறேனெனல், ஒற்றைத்தும்மல் இவைகளும், எலி, வோட்டான், குரங்கு, நாய், உடும்பு, கீரி, அணில், ஆந்தை இவைகள்வலம்போதலும், காகம், நாரை, செம்போத்து, நரி, கிளி, கொக்கு மயில், கோழி, புலி, முயல், ஓணான்,பெண்மான், பசு, எருமை, நாவி இவைகள் இடம் போதலும் எதிர்ப்படின் பிரயாணஞ் செய்யலாகாது. நஷ்டம், துக்கம், சுகக் குறைவு உண்டாம்."21 இவை இன்றும் தமிழ் மக்களால் இலங்கையிலும் செறிந்து வாழம் பிறநாடுகளிலும் நம்பிக்கையுடனும் திடசித்தத்துடனும் பின்பற்றப் படுகின்றன. முன்னோரது நடைமுறை அனுபவங்கள் பாரம் பரியமாகவே போற்றப்பட்டு வருவதனை இன்றும் பஞ்சாங்க நடை முறை” என வழக்கத்தில் உண்டு. 21. வெங்கடேச ஐயர், இ, வாக்கியபஞ்சாங்கம் (2000-2001), சோதிடப் பிரகாச யந்திரசாலை, கொக்குவில்,143ஆம் வருஷப்பதிப்பு, பிரமாதி வருஷம் தை மாதம்,ப.26.
18

Page 26
இலங்கைக்கலைக்கழகத்தின் சாகித்திய இலக்கியவிழாவில் மங்களவிளக் கேற்றுகிறார் வாகீசகலாநிதி கனகசபாபதி நாகேஸ்வரன்(யாழ். பல்கலைக்கழகம்)
 
 

சைவரீதியின் எழுச்சிப் பெருவிழாவின் போது காஞ்சிபுரம் தொண்டைமண்டலம் ஆதீனத்தினால் கெளரவம் திரு. க. நாகேஸ்வரன், மு. திருஞானசம்பந்த பிள்ளை, திரு. செல்லையா நவநீதகுமார், திருதிருநீலகண்டன் (அதிபர் லசுஷ்மி அச்சகம்), ஆதீனம், "தழிழருவி த. சிவகுமாரன், கலாநிதி க. கணேசலிங்கம்,
வாகீச கலாநிதியும் மனைவியும்

Page 27
நீராடுதல்
துயிலெழுந்ததும் குளிர்ந்த நீரில் நீராடுதலும் பெரு வழக்கமா யிருந்தது. சுனை, ஆறு, குளம் முதலியவற்றிலே நீராடினர். "தைந்நீராடல்” பழக்கம் அதிகாலையில் நீராடுதலின்று பிறந்து பின் நோன்பாக மலர்ந்தது. புதுப்புனலாடல் "தீதுநீங்கக் கடலாடல்” முதலியன மாந்தர் கூட்டங்கூட்டமாகச் சென்று நீராடிய சிறப்பு நிகழ்ச்சியாகும். சில காலங்களில் எண்ணெய் தேய்த்தும் நீராடினர். மகவின்ற மகளிர்க்கு உரியதாகத் தொல்காப்பியர் கூறும் "நெய்யணி மயக்கம்” இவ்வழக்கத்தைக் காட்டும். புதல்வர்ப் பயந்த மகளிர் ஈன்றணிய வருத்தம் நீங்கிய பின் சுற்றத்தாருடன் குளத்தில் சென்று குளித்தலை மதுரைக் காஞ்சியும் கூறுகிறது. (600-603). பெண்கள் மார்பில் கச்சுக்கட்டும் பழக்கம் உடையவராய் இருந்தனர் என்று குறிஞ்சிப்பாட்டும், (197-199), நெடுநல் வாடையும் (145-151) கூறும். முலையை மறைத்துக் கச்சினை இழுத்துக் கட்டுவது மரபு. நக்கீரர் இதனைப் பாடியுள்ளார். மகளிர் தம் முலைமீதும், தோள் மீதும் வண்ணக் குழம்பினால் முறையே தொய்யிலும் கரும்பும் எழுதிக் கொள்வது உண்டு எனத்தெரிகிறது. இவற்றைத் தம் காதலிமார்க்குக் காதலர்கள் எழுதினர் என்றும் குறிக்கப்பட்டுள்ளது.
*உருத்து எழுவனமுலை ஒளிபெற எழுதிய தொய்யில் காப்போர் அறிதலும் அறியார்.”
(குறுந்- 276; 2-4)
"நூலாடையும் பட்டாடையும் அணிதல் பெருவழக்காய் இருந்தது என்று பெரும்பாணாற்றுப்படை, பதிற்றுப்பத்து, மலைபடுகடாம் கூறுகின்றன. காலிலே செருப்பு அணிவது வழக்கம். தொடுதோல்” என்று பெயர் குறிப்பிடுகின்றன பெரும்பாணாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, பட்டினப்பாலை என்பன. சோதிடக் கலையின் செல்வாக்குக் காரணமாகவும் கிரகங்களின் இயக்கம் காரணமாகவும் பெண்கள் நீராடிய பின் தமது கூந்தலைக் கையால் கோதிவிட்டு உலர்த்தியும் அதற்கு நறும்புகை ஊட்டியும் பேணினர். மலையிலும் நிலத்திலும் உள்ள கொம்புகளிலும் கொடிகளிலும் பூத்த மலர்களையும் பறித்து அணிந்தனர். பல நிறங்களையும் பல்வேறு வடிவங்களையும் கொண்ட மலர்களைத் தெரிந்தெடுத்து மாலைகட்டி அணிந்தனர். மாலைகள் பலவகை முறைகளில் ஆக்கப்பட்டன. நெற்றின மாலை கள், கோத்தமாலைகள், தொடுத்த மாலைகள், தூக்கின மாலை எனப் பல்வேறு வகையில் கட்டினர் என்கிறது பரிபாடல். ஆடவர் மார்பிடத்தில் சந்தனம் பூசுதலும் (முருகு 193) (மதுரை. 493) அகநானூறு (26 : 14) பதிற். (8830) மகளிர் கத்தூரி முதலியவற்றால்
19

அரைக்கப்பெற்ற வாசனைக் குழம்பை மயிருக்கு அணிதலும் வழக்கமாயிருந்தது. திலகமிடுதல், செந்நிறத்திலக மிடுதல் பெருவழக்காயிருந்தது பற்றிப் பரிபாடல் (11:99-10),
*நெற்றி விழியன நிறை திலகம் இட்டாளே
கொற்றவை கோலம் கொண்டு ஓர் பெண்." (பரி:11:99-10)
கொற்றவையின் நெருப்பாகிய நெற்றி விழிக்கு ஒப்பாகத் திலகம் இட்டாள் என்பதனால் திலகம் செந்நிறத்தது என்பது போதரும். அணிகள் பூணுதல் பற்றிக் கலித்தொகை கூறுகிறது. கண்ணாடி மங்களப் பொருள், அகநானூறு, பரிபாடல், கலித்தொகை என்பன இதுபற்றிக் கூறுகின்றன.* அலங்காரங்கள் நடந்தன. தானிய உணவு, காய், கிழங்கு, கீரை, கனிகள் என்பனவற்றை உண்டனர்.
9. தரும சாஸ்திரம்
தரும சாஸ்திரங்கள் வேதாகம முறைப்படி மனிதர்களாகிய நாம் வாழவேண்டிய முறைகளைக் கூறுவன. ஸ்மிருதி எனவும் அழைக்கப்படும். ஸ்மிருதி என்றால் நினைவு (நினைத்தல்) என்பது பொருள். தருமம் என்றால் கடமை, நீதி, விதி எனப் பலபொருள்படும். மனு, ஞாஜ்ஞவல்கியர், நாரதர் ஆகிய முனிவர்களால் செய்யுள் வடிவில் இயற்றப்பட்டன. மனுதர்ம சாஸ்திரம் எனும் நூல் மனு எழுதிய நூலாகும். இந்நூல் மனுஸ்மிருதி எனவும் பெயர்பெறும்.
10. யோகசாஸ்திரம்
மகான்கள் மகாத்மாக்கள். மகாத்மாக்கள் முதிர்ச்சியடைந்த ஆன் மாக்கள். ஆன்ம முதிர்ச்சி பக்குவம் எனப்படும். பக்குவம் பெற்றவர்கள் தெள்ளத் தெளிந்தவர்கள். "தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்”. இவர்கள் வள்ளல் பிரானை உள்ளத்தில் வைத்து வழிபடுகின்றவர்கள். காயமே கோயிலாக வாழ்பவர்கள். யோகி களால் பயிலப்படுவது யோகசாஸ்திரம்”*
யோகம் பற்றி - யோகக் கலை பற்றித் திருமந்திரம் பரக்கக் கூறுகிறது. பரியங்கயோகம், அட்டாங்க யோகம் என்பனவும் திரு மந்திரத்திலுண்டு. யோகம் Yoga என ஆங்கிலத்திலே அழைக்கப் படுகிறது. சிவனே யோகி என்றும் போற்றப்படுகிறான். “பிராணாயாமம்" எனும் மூச்சுப் பயிற்சியே யோகத்தில் மகோன்னதமானது என்பர்.
22. சண்முகம்பிள்ளை,மு., மு.கு.நூ. 23. தில்லைநாதன்,எஸ்., சைவமும் நாமும், (1991), ப.66.
20

Page 28
ஆயுளை நீட்டும் தன்மை பிராணாயாமத்துக்கு உண்டு என்பர் யோகியர். சிவயோக சுவாமிகள் பற்றிய வரலாறும் “யோகத்தின்” மகிமைகளை விளக்குவதாகும்.24
*ஆகமங்களின் உட்பொருளையும், சிவன்சக்தி வழிபாட்டின் தத்துவத்தையும், யோகத்தின் உண்மையான தன்மையையும் மாண்பையும் ஆத்ம ஞானத்தின் ஒளியையும் பற்றித் திடமான தமிழ்ப் பாடல்களடங்கிய ஞானக் களஞ்சியம் திருமந்திரம்"
என்று ஏ. வி. சுப்பிரமணிய அய்யரும்,
'திருமுறைகளில் திருமந்திரம் புறநடையானது.
அது தோத்திரமுமாம், சாத்திரமுமாம் அன்றிச்
சில பகுதி சித்த பரிபாஷையோடு கூடியதுமாம்.
திருமந்திரத்தையும் வேதாகம வரிசையில் வைத்துக்
கொள்ளலும் தகும்.” என்று இலக்கியகலாநிதி பண்டிதமணி, சி.கணபதிப்பிள்ளையும் கூறியுள்ளமை எண்ணிப்பார்க்கத் தக்கவையாம்.” என்கிறார் பேராசிரியர் சி. தில்லைநாதன்.
யோகக் கலைக்கு விளக்கம் தந்த ‘பிள்ளைக்கவி வ. சிவராச சிங்கம் பின்வருமாறு கூறியுள்ளார். “அதாவது சிவனை உள்ளத் திலிருத்தி வணங்கல்” என்பதாகும்.
*யோகமும் மந்திரக்கலையும் இணைந்தவை. சுந்தரர் நாவில் நமச்சிவாய(ம்) என்ற மந்திரமே தமிழ் வேதமான திருமுறையினால் நிலைத்து நாவில் ஒலித்தது. நற்றவா உனைநான் மறக்கினும் சொல்லும் நா நமசிவாயவே என்று பாடினார் சுந்தரர். யோகக் கலைக்கும், நாமக்கலைக்கும், மந்திரக்கலைக்கும் நெருங்கிய தொடர்புண்டு”.* 24. முத்தையா,நா.ஆத்மஜோதி, தரிசனம் (1995),(கவிஞர் கலாநிதி வி.கந்தவனம் அவர்களின் அணிந்துரை), இந்துசமயப் பேரவை, கனடா, காந்தளகம், 834, அண்ணாமலை, சென்னை, 600002,ப.07. 25. தில்லைநாதன்,சி.பேராசிரியர், "திருமூலர் கண்டசிவம்", சிவதத்துவமலர், (14.06.1996),(பதிப்.கனகசபாபதி நாகேஸ்வரன்,எம்.ஏ), அருள்மிகு றி அகிலாண்டேஸ்வரி சமேத ரீ அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வெளியீடு, கோவில் குளம், வவுனியா, ப. 110. 26. சிவராசசிங்கம்,வ, "திருமந்திரத்தில் சமய ஒழுக்கம், சிவதத்துவமலர், 14.06.0996, (பதிப் வாகீசகலாநிதி கனகசபாபதி நாகேஸ்வரன்,எம்.ஏ), ப.181.
21

“காற்றில் பறக்கலாம், விண்ணில் மறையலாம்,நோயைத் தீர்க்கலாம், உண்மைகளை அறியலாம், உடலை விட்டுப் பிரயாணம் செய்து மீண்டும் உடலுக்குத் திரும்பி வந்து வெளியே உணர்ந்த விஷயங்களை நினைவிற்குக் கொண்டு வரும் கலையே யோகம் என்பர். பக்தி நிலைதான் யோகநிலை. இதுவே கலையாக வளர்க்கப் பட்டிருக்கிறது எனலாம். “யோகத்தில் மனநிலை மாறுகிறது.”
என்கிறார். "T. S. நாகரத்தினம்.” உலகிலுள்ள எல்லா மதங்க ளும் யோகநிலையில் உருவானவையே.” யோகத்தைப் பற்றியே உபநிஷத்துக்கள் கூறுகின்றன. பகவத்கீதையிலும் இதைப்பற்றித் தெளிவாக ஒரு சுலோகத்தில் கூறப்பட்டிருக்கிறது. “உயிருள்ள பொழுதே ஆத்மாவின் உண்மை நிலையைத் தெரிந்து கொள்ளுதல், மீண்டும் பிறவி எடுக்காமல் மேல்மட்டத்தில் இருத்தல், மனிதன் உணர்வு அல்லது ஆத்மா சாஸ்வதம் என்றும், உடல் அழியக் கூடியது என்றும், நிதர்சனமாகத் தெரிந்துகொண்டு செயல்படுதல் துக்கங்களைத் தவிர்த்தல், சதா ஆனந்தத்தில் மூழ்கியிருத்தல் என்பன. ஹடயோகம் போன்றவற்றில் உறுதிப்படுவது யோகம்.”
“மனத்தை வெளியுலகு நிகழ்ச்சிகளிலிருந்து தொடர்பை அறுக்கவும் பின் ஏதாவது ஒன்றில் மனதை வயப்படுத்தவும் என்று யோகம் பற்றி கிருஷ்ணர் அருச்சுனனுக்கு யோகநிலைப் பற்றி விளக்குகின்றார்”.*
"குண்டலினிபோன்ற அநேக யோகமுறைகளில் பலனை அடையப் பல்வேறு உபாயங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன.”
பெரியபுராணத்தின் காவிய நாயகனான சுந்தரர் பற்றிய செய்தியிலே ‘யோகப்புரவியிற் போனார்” என்று சேக்கிழார் பெருமான் குறிப்பும் மனங் கொள்ளத்தக்கது.
யோகக்கலையையும் மந்திரக்கலையையும் இணைத்தே இன்று யோகவிஞ்ஞானம் என்று அழைக்கப்படுகிறது.
27. நாகரத்தினம்,T.S., கூடுவிட்டுக் கூடுபாயும் அதிசய சக்தி, (1985), மாருதி
பதிப்பகம்,ப.15.
28. - மு.கு.நூ, ப.62.
29. - , Lu. 62.
30. - , U.63.
22

Page 29
"விஞ்ஞான அணுக்களின் செயற்பாடு முக்கியமானது. அணுக்கள் யூரோன்கள் எனப்படும். ஒவ்வோர் அணுவும் பத்துப்பதினைந்து அணுக்களுடன் சேர்ந்து பெருகும் தன்மை வாய்ந்தவை. யோக சக்தியானது இவ்விதமாக மூளைத்திறனை வளர்த்து ஒருமுகப்படுத்த உதவி செய்யும் மூளையின் உயர்பகுதி நுட்பமானது. இது அறிவு, கற்பனை, தியானம் போன்றவற்றை வளர்க்கிறது. முனையின் உயர்பகுதி தொழிற்படும் போது மனிதன் உயர்நிலைக்குப் போகின்றான். இவ்வாறுதான் ரூானிகள் யோகிகள் உருவாகின்றனர்.
"யோகத்தின் அடுத்த நிலை தியானம். இன்று நோய் தீர்க்கும் நிவாரணியாகத் தியானம் உள்ளது. தியானத்தின் முலம் விழிப்பு நிலையில் ஆத்மபலம் அதிகரிக்கிறது. அதனால் கோபம், பயம், பதற்றம் முதலி பன நீங்குகின்றன. மனோசக்தி அதிகரிக்கிறது. மனோ சக்தியினால் நமது யோகிகளும் ஞானிகளும் சாதாரனமாக நிகழ்த்திய சாபமி டுதல், சாபவிமோசனம், ஞான திருஷ்டி முதலியன நமது புராணக் கதைகளிலே இடம்பெறுகின்றன. அவற்றை எள்ளி நகையாடியோர் 325irul Willipower, Telepathy, Thypotism (BUTGöp Ugo Gilgjpg|T601 pÉlobU னங்களால் அவற்றை ஏற்றுக் கொண்டுள்ளனர்."
"இந்து விஞ்ஞானத்தில் யோகம் மூலம் அரிய சாதனைகள்
நிறைவேறுகின்றன. சிவபிரான் மனுக்குலத்திற்குப் போதித்த யோகம் தாந்திரயோகம். இது பின்னர் ராஜயோகம், பக்தி யோகம் கர்மயோகம் எனக் கிளைகளாக விரிந்து மனித சமுதாயத்திற்குப் பயன்பட்டது. மனிதனுடைய உடல், உள்ளம், ஆத்மா என்ற மூன்று நிலைகளுடனும் தொடர்புடையனவாக இந்த யோகப் பயிற்சிகள் அமைகின்றன.
யோகாசனம்- உடற்பயிற்சி
தியானம் - மனப்பயிற்சி
Lily TGNOTIT LLUITLDLÊ - pēFFÜLJuly)f.
"இன்றைய விஞ்ஞான உலகிலே நரம்பியல் நிபுணர்கள் மனித முலையில் நூறு கோடி அணுக்கள் (Atoms) இருப்பதையும் அவை ஒவ்வொன்றும் ஒரு பகுதியை இயக்குவதாகவும் கூறுகின்றன. அதன் கீழ் இருபதினாயிரம் உப செயலகங்கள் வேலை செய்கின்றன. மனித முலையிலே நூறு கோடி அணுக்கள் உள்ளதாயும் அவற்றை வகையறிந்து உபயோகித்தால் மனிதனால் சாதிக்க முடியாதது எதுவுமே இல்லை எனவும் நரம்பியல் நிபுணர் பி.கி. ராமமுர்த்தி கூறுகின்றார்."32
31. தங்கேஸ்வரி.க.திருமதி"இந்துவிஞ்ஞானம்,"நாண்டர்நெறி சைவ முன்னேற்றச்
சங்க வெள்ளிவிழா மலர், கொழும்பு, (2002),ப.94-95. 32.-, ப.தி.
23

量、 鹭 யோகக்கலையை எனக்குக் கற்பித்த எம் நெஞ்சை விட்டகலாத பேராசான் பேராசிரியர், கலாநிதி கே.வி.கே, சிவசுவாமி அவர்கள். (திருச்சி).

Page 30
11. சகுனசாத்திரம் (நிமித்தம் பார்த்தல்)
இந்நூலில் இடம்பெறும் சோதிட சாஸ்திரத்திரம் எனும் பகுதியில்
(ப.16-18) வரும் நிமித்தங்களும் பஞ்சாங்கத்திலிடம்பெறும்
சகுனங்களும் இக் கலையைப்பற்றியறிய உதவுவனவாகும்.
12. சிற்பசாத்திரம்
64 கலைகளுட் சிற்பமும் இடம்பெறுவதனை முதலிலே நாம் அறிந்து கொள்வது மிகமிக அவசியம்.
"கலையுணர்வும், சமயப்பற்றுங் கொண்ட மன்னர்களும், மக்களும் தமிழகத்தின் பல்வேறு ஓவியங்களையும் பெற்றிலங்கும் எண்ணற்ற கலைக் கோயில்களை உருவாக்கி யுள்ளனர். காலச் சூழலில்பேரரசுகள் மறைந்த பின்னரும் அவற்றின் அழியாப் பெரும் புகழை உலகுக்குப் பறைசாற்றி நிற்பவைதெய்வத் திருக்கோயில்களும் அவற்றை அணிசெய்யும் அழகுமிக்க கலைச் செல்வங்களுமாம்.”
சிற்பங்கள் செய்வதற்குக் கல், மண், மரம் ஆகியன பயன் பட்டமை,
"வழுவது மரனும் மண்ணும் கல்லும் எழுதிய பாவை."
என்னும் பகுதியால் தெரியவருகிறது.
*இறைதிருவுருவங்கள் கல்லினாற் செய்யபட்டவை.*
சிற்பங்கள் எனப்படுவன கல்லினால் செய்த இறைத்திருவு ருவங்களை மட்டும் குறிப்பவையல்ல. சுடுமண், சுதை, மரம், உலோகம், முதலிய பொருட்களால் செய்யபட்ட திருவுருவங்களும் சிற்பங்களும் அடங்கும்."36
மண்ணுடன் சுண்ணத்தைக் கலந்து செய்யப்பட்ட உருவங்கள் சுதை உருவங்கள் (Stucco figure) எனப்படும். இவை ‘மண்ணிடு
33. ஏகாம்பரநாதன்,ஏ., டாக்டர், தமிழகச்சிற்ப ஓவியக்கலைகள், நூன்முகம், கழகவெளியீடு, சைவசித்தாந்த நூற் பதிப்புக் கழகம் லிமிட், 79, பிரகாசம் சாலை, சென்னை, 108.
34. மணிமேகலை, 2:30
35. ஏகாம்பரநாதன், ஏ.,மேலது, ப.2.
36. -- , loബg/L.2.
24

எனவும் அவற்றைச் செய்பவர் மண்ணிட்டாளர் எனவும் பெயர் பெற்றனர்.37
களிமண்ணால் வனையப்பட்டுப் பின்னர் அவை உறுதி பெறுவ தற்காக நெருப்பிலிட்டுச் சுடப்பட்ட உருவங்கள் சுடுமண் பாவைகள் எனப்படும். சங்ககாலத்தில் சுடுமண் பாவைகள் (Terracotta figure) இருந்தமை தெளிவுற விளங்கும். மரத்தினால் செய்யபட்ட உருவங் கள் மரப்பாவை’ என அழைக்கப் பெற்றன.* சங்ககாலத்தில் உலோகத்தினதும் திருவுருவங்கள் செய்யப்பட்டிருந்தன. பொன்னால் செய்யபட்ட திருவுருவம் பொன்புனைந்த பாவை எனப்பட்டது.”
தமிழக வரலாற்றில் பல்லவர் காலத்திற்கு முன்னரே உலோகத் திருவுருவங்கள் செய்தமையைக் கலித்தொகை எடுத்துக் காட்டுகின்றது. நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ஆதித்த நல்லூரில் நடைபெற்ற அகழ்வாய்வில் கிடைத்துள்ள தாய்க்கடவுள், நாய், கோழி ஆகியவற்றின் செப்புத் திருவுருவங்கள் வரலாற்றுக் காலத் திற்கு முன்பே தமிழகத்தில் உலோகத்தால் திருவுருவங்களைச் செய்யும் வழக்கம் இருந்ததைப் பறை சாற்றுகின்றன."
"தமிழகத்தின் வடபகுதியாகிய தொண்டைமண்டலத்தைப் பல்லவ அரசர்கள் கி.பி. 6ஆம் நுாற்றாண்டிலிருந்து 9ஆம் நூற்றாண்டுவரை ஆட்சிபுரிந்து வந்தனர். குடவரைக் கோயில்களையும், கட்டடக் கோயில்களையும் உருவாக்கி அவற்றில் ஏராளமான சிறப்புமிக்க சிற்பங்களையும் படைத்துள்ளனர்."
“சீயமங்கலம் குடவரைக் கோயிலிலுள்ள தூண் ஒன்றின் மேற்ப குதியில் நான்கு கைகளுடைய நடராசர் உருவமும் அவற்றை வணங்கிய வண்ணமுள்ள இரு அடியார்கள் உருவமும் இடம் பெற்றுள்ளன. தமிழகத்தில் இதுவே மிகப்பழைமையான நடராசர் சிற்பமாகும். ஆதிவராகர் குகைக் கோயிலில் கங்காதரர், திருமால், அரியரன், பிரமன், கஜலட்சுமி, கொற்றவை, ஆகியோருடைய இறை மைத் திருவுருவங்கள் உள்ளன.
"மாமல்லையிலிருந்து முன்றுகல் தொலைவிலுள்ள புலிக் குகையின் முகப்பில் யாளிகளின் 37. சிலப்பதிகாரம், ப.29. 38. திருக்குறள், 1030, 1068. 39. மதுரைக்காஞ்சி 410.
40. 635ft buygbiTg568, 6.,LITéLif., Cup.g5.sbst, (6)(6) Alexander Rao, Catalogue of
prehistoric antiquities from Adichchanalur and perumbair, (1915), p.4.f.
41.- , மு.கு.நூ, ப.14.
25

Page 31
தலைகள் செதுக்கப்பட்டுள்ளன. அதற்குத் தென்புறத்தில் யானை, குதிரை, முதலிய விலங்கினங்கள் சிறப்புறத் திட்டப் பெற்றிருக்கின்றன. இங்குள்ள அதிரன சண்ட மண்டபத்தின் கருவறையிலும் மண்டபச் சுவரிலும் சோமாஸ்கந்தர் சிற்பங்கள் காணப்படுகின்றன. இக்கோயிலின் தென்புறமுள்ள பாறையில் கொற்றவைமகிடனுடன் போர் புரியும் காட்சியினைக் காணலாம்."
"மாமல்லையிலுள்ள இரதங்கள் அல்லது தேர்கள் என அழைக்கப் பெறும் கோயில்கள் அனைத்தும் மேலிருந்து கீழாகச் செதுக்கப்பட்ட ஒற்றைக்கற் கோயில்களாகும். மாமல்லையிலுள்ள தேர்களில் அரிய சிற்பங்களைக் கொண்டு விளங்குவது தருமராசர் தேராகும்."
பல்லவர்காலக் கோயில்களுள் சிறப்பு வாய்ந்த கைலாசநாதர் கோயில் அழகுமிக்க சிற்பங்களைக் கொண்ட அரிய கலைக் கூட மாகும். சோழப் பெருமன்னர் காலக்கோயில்கள் கட்டடக் கலைக்கும், இறைத்திருவுருவங்கள் சிற்பக் கலைக்கும் சிறந்த சான்றுகளாகத் திகழ்ந்து சோழப் பேரரசர்களின் புகழ்பாடி நிற்கின்றன. சோழராட்சியில் நிலையான முடியரசாட்சி நடைபெற்ற தாலும், பொருளாதார மேம்பாடு இருந்தமையாலும் மன்னர்களும், மக்களும் கலை, சமயம் ஆகியவற்றின் வளர்ச்சிக்கு பெரிதும் ஒரக்கம் அளித்ததாலும் மிகப்பல கோயில்கள் உருவாக்கப்பட்டு அவற்றில் அரிய சிற்பங்கள் இடம்பெறலாயின. சிற்பக் கலை வல்லுநர்களுக்குச் சமுதாயத்தில் சிறந்த இடம் வழங்கப் பட்டமையால், அவர்களுடைய சிற்றுளிகள் உயிரற்ற கல்லையும் உயிரோட்டம் பெற்ற இறைத் திருவுருவங்களாகச் சமைத்து புதிய வரலாறு படைக்கலாயின.
"கும்பகோணம் நாகேசுவரர் கோயிலின் கருவறையைச் சுற்றித் தட்சினாமூர்த்தி, பெனன்னொருபாகன், நான்முகன் ஆகியோர் சிற்பங்களும், அர்த்தமண்டபத்தில் பிச்சாடனர், கொற்றவை ஆகியோருடைய திருவுருவங்களும் அழகுறத் திகழ்கின்றன."
"தமிழகத்தில் பெரும்பாலான சிவன் கோயில்களில் இடம் பெறுவது நடராசர் உலோகத் திருமேனியாகும். பல்லவர், முற்காலச் சோழர் ஆகியோர் ஆட்சியில் நடராசர் படிமங்கள் செய்யப்பட்டிருப்பினும்
ماه 1 - لا و آظ] = بالا بالا) -- .4 آI .لا ، -.-.3 به
44. மேலது. ப. 44.
26

リ
iii.

Page 32

தமிழ்நாடு திருச்சியில் நாகத்தின் சிலைக்கருகே நாகாம்பிகையுடன் கூப்பிய கரத்துடன் பிரார்த்திக்கும் வாகீச கலாநிதி. 2000.

Page 33
முதலாவது இராசராசன் காலம் முதல் ஆடல்வல்லானுக்கு அதி முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது. பிற்காலத்தில் எண்ணிறந்த நடராசர் படிமங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. தஞ்சைப் பெருவு டையார் கோவிலுள்ள நடராசப் பெருமான், சிவகாமசுந்தரி படிமங்கள் முதலாம் இராசராசன் காலத்தவையாகும். நான்கு கைகளையுடைய நட்டப் பெருமான் முயலகன் மீது நின்றாடும் ஆனந்த தாண்ட வத்தினை அன்னை சிவகாமி அழகுறக் கண்டு களிப்பதாகத் திகழ் கிறாள். இடைக்காலச் சோழராட்சியில் உருவாக்கப் பெற்ற திருவாலங் காட்டு நடராசர் படிமம் உலகப் புகழ் பெற்றதாகும். முயலகன் மீது நடமாடும் இவ்விறைவனது குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயும், குமிண்சிரிப்பும் படிமக்கலை ஒன்றின் பண்பட்ட கைவண்ணத்தைப் படம்பிடித்துக் காட்டுபவையாகும். இவையன்றி அக்காலத்திற் செய்யப் பட்ட அழகுமிக்க நடராசர் திரு மேனிகள் சீர்காழி, வேளாங்கண்ணி, மேலைப்பெரும்பள்ளம் முதலிய பல இடங்களிலுள்ள கோவில்களில் காணப்படுகின்றன."
கங்கைகொண்ட சோழபுரக் கோயிலிலுள்ள முதலாம் இரா சேந்திரன் காலத் திருமேனிகளுள் மிகவும் சிறந்தது போர்க் கோலம் பூண்டு நிற்கும் முருகனது படிமமாகும். நான்கு கைகளையுடைய முருகப் பெருமான் கைகளில் சக்தி ஆயுதம் என்னும் வேல், வில், சேவல் கொடி ஆகியவை காணப்படுகின்றன. அழகுமிக்க கரண் டமகுடம், வரிசைவரிசையான கழுத்தணிகள், வேலைப்பாடு மிக்க உதரபந்தம், கேயூரம், கைவறைகள் ஆகியவை இப்படிமத்திற்கு அழகூட்டுகின்றன."
பிற்காலச்சோழர் படிமங்களுட் சிறந்தவை கீழையூர் வேதார னியம், தருமபுரம், தஞ்சை, மஞ்சக்குடி முதலிய இடங்களிலுள்ள வையாகும். பிற்காலச் சோழப்படிமங்களுள் தற்போது ஆம்ஸ் டர்டாம் கலைக் கூடத்தில் காணப்படும் நடராசர் மிகவும் அழகுவாய்ந் ததாகும். பாண்டியர் சிற்பங்களை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலிலே காணலாம்."
"தமிழகத்தில் பல்லவ சோழ, பாண்டியராட்சியில் கட்டப்பட்டுள்ள திருக்கோயிலில் உடலுறவு பற்றிய சிற்பங்கள் இடம் பெறவில்லை. ஆனால் விஜயநகர அரசர்கள் ஆட்சியில் தான் இத்தகைய சிற்பங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. காஞ்சி வரதராஜப் பெருமாள் 45. மேலது, ப. 56-57.
46. மேலது, ப. 58. 47. (3d65, L. 66. (61+G),C. Sivaramamurthi, South Indian Bronzes, P.63. (fig.
60.B).
27

கோயில் கலியான மண்டபத்திலுள்ள சிற்பங்கள் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். இவை மத்திய பிரதேசத்தில் ஹஜூ ராஹோ, ஒரிசா மாநிலத்தில் கொனாரக் ஆகிய இடங்களிலுள்ள கோயில்களை அலங்கரிக்கும் உடலுறவுச் சிற்பங்களைப் போன்று சிறிய அளவில் வழங் கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.” மனித உணர்விற்கும், மருத்துவத்துக்கும், கலையுணர்விற்கும், இயற்கைக்கும் இடங் கொடுப்பனவே உடலுறவுச்சிற்பங்கள். கலா ரசனைக்குரியவை. கிரேக்கத்திலும் பின்னர் திருச்சி, கும்பகோணம், திருப்பெருந்துறை, தஞ்சை, குடுமியாமலை, சுசீந்திரம், கன்னியாகுமரி முதலிய பல் வேறு இடங்களிலும் நாயக்கர் காலத்தில் உருவாக்கப்பட்ட சிற்பங்களைக் காணமுடியும்.
இந்தியப் படிமங்களில் தலைசிறந்தது நடராஜ(ர்) வடிவம். உலக அரங்கிலும் அது சீரிய இடம் பெற்றுள்ளது. கலித்தொகைக் கடவுள் வாழ்த்துப் பாடலும் சிலப்பதிகாரத்தில் காணப்படும் தகவலோடு மட்டும் நடராஜர் பற்றிய இலக்கியம் நின்றுவிடவில்லை. படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற ஐந்தொழில்களின் பொருட்டே இறைவன் ஆடினான் என்பது சைவதூல்களின் துணிபு.
*1917 ஆம் ஆண்டு கலாயோகி ஆனந்தகுமாரசாமி apšu afenu DT6š LGTib (The Dance of Siva) என்ற கட்டுரைத் தொகுதி ஒன்று உலகக் கலையன்பர்களையும், கலைஞர்களையும்,
கலை வரலாற்றாசிரியர்களையும் தட்டியெழுப்பியது.”
*தத்துவக் கருத்துக்கள் பொதியப் பெற்ற நடராஜ(ர்) உருவம் இந்திய மெய்யறிவு வழங்கிய நன்கொடை என்று ரெனே குருஸ்ளே என்ற பிரெஞ்சு அறிஞர் சொல்கிறார்.*
“ஆகாசமாமுடல் அங்கார் முயலகன் ஏகாச மாந்திசை யெட்டுந் திருக்கைகண் மோகாய முக்கண்கள் முன்றொளி தானாக மாகாய மன்றுள் நடஞ் செய்கின்றானே.”
(திருமந்திரம்,2774)
48. Gip65), U.107-108, (6ft(G), (Krishnadava Temples of north India, Plate, 208
26also See Khajaraho), (Pictorial, Plate 6ff).
49. கமலையா,க.சி., தமிழகக்கலை வரலாறு,(1990), கற்பகம் அச்சகம்
சென்னை,600002,ப.64.
۰آ8.لا و -اس- .50
28

Page 34
18. வைத்தியசாஸ்திரம்
"வைத்தியம் ஒரு கலை." "நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" என்பது தமிழரின் பட்டறிவால் உருவான பழமொழி. நோய்களைப் பற்றியும் நோய் தீர்க்கும் முறைகள் பற்றியும் தமிழர் பன்னெடுங் காலத்துக்கு முன்பே நன்குணர்ந்திருந்தனர் என்பதற்கு இலக்கி யங்களும், கல்வெட்டுக்ளும் சான்று பகர்கின்றன. திருக்குறள் அக்கா லத்து மருத்துவக்கலை பற்றிய அடிப்படைக் கருத்துக்களைத் தொகுத்துத் தருகிறது. முறையாக மலசலங்கழிக்கவில்லையெனில் அது நோய்க்குக் காரணமாகும். எனவே உணவு செரித்த பின் மீண்டும் உண்ண வேண்டுமெனத் தமிழ் மருத்துவம் கூறுகிறது. மருத்துவத் துறையில் நோய் இன்னது என்று கான்பதே அடிப்படையானது. மூலிகை மருத் துவம் நிலவியது. சைவ நாயன்மார் செய்த சமுகத் தொண்டுகளில் நோய் தீர்த்ததும் ஒன்றாகும். அப்பரும் சம்பந்தரும் விடந்திண்டியவர்கட்கு உதவியுள்ளனர். சித்தமருத்துவம் தழிழருக்கே உரிய அரும்பெருந் செல்வமாகும். கஷாயம், குளிசை, சூரணம், லேகியம், செந்தூரம், என்னும் பல மருந்துகள் உள்ளன. மருத்துவ நூல்கள் இரசமணி, மந்திரம், மருந்து என்னும் மூன்றைக் கூறு கின்றன. உப்பு, தீநீர், பட்டினி, உடற்பொருள், பாஷணம் உலோகம், சத்து, இரசக்குளிசை, யோகம் என்னும் பத்துமுறைகள் சொல்லப்படுகின்றன.
உறுதியான உடம்பில்தான் ஆன்மா செவ்வனே உறையும், என்பது நம் பெரியோர்கள் கொள்கையாகும்.
"உடம்பார் அழியின் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார் உடம்பை வளர்க்கும் உபாய மறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த்தேனே."
(திருமந்திரம், 724.}
அக்குபஞ்சர், பூனானி, சித்தமருத்துவம், ஆங்கிலமருத்துவம், சிங்கள மருத்துவம், சீனமருத்துவம், தொடுகை மருத்துவம் என்று இன்று பல்வேறு வகை மருத்துவங்கள் நிலவுகின்றன.
"தமிழிலே மருத்துவக்கலை என்பது மிக நீண்ட வரலாற்றை உடையது."51
51. கனகசபாபதி நாகேஸ்வரன், எம்.ஏ, வாகீசகலாநிதி, "தமிழ் இலக்கியங்களும் தமிழ் மருத்துவக் கருத்துக்களும்", சுத்தானந்தம் பிபி, பொன்விழாமலர்,
(19.11.1952-19.11.2002), சுத்தானந்த இந்து இளைஞர்சங்கம், வவுனியா, LI.166.
29

மருத்துவத்துறையைச் சார்ந்த சுப்பிரின்டன் வைத்தியகலாநிதி பக. நவரத்தினராசா (வாகீச கலாநிதியின் சித்தப்பா) திருமதி நவரத்தினராசா அவர்களுடன் அருகருகே அவர்களின் புதல்வியர் இருமருத்துவ கலாநிதிகள். (குடும்பப்படம்.) "

Page 35
“காலை இஞ்சி கடும் பகல் சுக்கு மாலை கடுக்காய் மண்டலம் உண்டிடில் கோலை ஊன்றிக் குனிந்து திரிந்தவர் வாலைக் குமரராய் வழி நடப்பாரே.”
நாடி சாஸ்திரம் பிரதானமானது. இருதயத் துடிப்பே ஆங்கில மருத்துவத்தின் மூலம் ஆங்கில மருந்துகளினாலே பக்கவிளைவுகள் உண்டாகின்றன. ஹேபல்ஸ் (Herbals) எனப்படும் முலிகை மருந்து களால் பக்கவிளைவுகள் குறைவு, இல்லையென்றே சொல்லலாம். முலிகை மருத்துவத்தில் உடற்குளிர்மை பேணப்படுகிறது. ஆங்கில மருத்துவம் எரிவுகள், பக்கவிளைவுகளை உண்டுபண்ணுகின்றன.
14. இதிகாசம்
மகாபாரதம், இராமாயணம், சிவரகசியம் என்பன இதிகாசங்கள் எனப்படும். இவை அறக்கருத்துக்களைக் கதைமுலம் கூறுவன. இந்நூல்கள் முன்னர் நிகழ்ந்தது எனும் அடிப்படையைக் கொண்டு வியாசர் மகாபாரதத்தையும், கம்பன் கம்பராமாயணத்தையும், பேரிதி காசங்களாகக் கவிதையிலே யாத்தளித்துள்ளார். தெய்விக நலன்கள் பொதிந்த அவதாரத் தத்துவமும் அறத்தை நிலை நாட்டிய இராச பாரம்பரியச் செய்திகளுங் கொண்டவை இவ்விதிகாசங்கள். மகாபா ரதத்தை விநாயகப் பெருமானே தமது ஒரு கொம்பை யொடித்து எழுதிய தாகக் கூறுவது மரபு. மகா மேருமலையிலே விநாயகர் மகாபாரதத்தை எழுதினார். திருதராஷ்டிர(ன்) மன்னனது வரலாறு மகாபாரதத்திலே கதையாகப் பேசப்படுகிறது. கெளரவர், பாண்டவர், வரலாறு இதிலுண்டு, தருமன், வீமன், அருச்சுனன், நகுலன், சகாதேவன் என்னும் பாத்திரங்களும், காந்தாரி, குந்தி, திரெளபதி இன்னும் பல பாத்திரங்களைக் கொண்ட நீண்ட நெடும் பாடல்களா லானது மகாபாரதம் . பாரதக் கதையெழுந்த பாரத தேசம் என்றும் இதிகாசங்களாலே நீடு நிலைத்துப் புகழோங்கி வாழும் என்பது திண்ணம்.
இராமாயணம் கவிச்சக்கரவர்த்தி கம்பனால் பாடப்பட்டது. வான்மீகி இராமாயணத்தைத் தழுவியெழுதப்பட்ட இராமாயணம் நடையில் நின்றுயர் நாயகனான இராமனின் பேராண்மையைப் பரக்கப் பாடுவது. “சிவனோ அல்லன் நான்முகனல்லன் திருமாலாம் அவனோ அல்லன்.” எனக் கம்பன் குறிப்பிடும் பரம்பொருள் தத்துவத்திற்குத் தொடர் அமைப்பது போல பூரீகுமரகுருபர சுவாமிகள், "சமயம் கடந்த தனிப்பொருள்” எனப் பண்டாரமும்மணிக்கோவை குறிப்பிடுவதை நினைத்து இன்புறலாம்.
30

"கம்பன் கம்பராமாயணத்தில் பக்தி, அறம், தமிழ், காவிய அமைப்பு, கவிவண்ணம், கிளைக்கதைகள், இலக்கணம், பட்டறிவு, கற்பனை, உவமைகள், உருவகங்கள், தவமேன்மை, பொருளாதாரச் சிந்தனை, இசைவளம், நாடகப்பண்பு, பாத்திரவார்ப்பு, அணிநலன் என்னும் பல்கோணச் சிறப்புக்களை அலசி ஆராய முடியும். தத்துவ உலகிலும் காப்பிய உலகிலும், பெருமைபெற்றவன் கம்பன். பரதன், குகன், இராவணன், சுக்கிரீவன், கும்பகர்ணன், வாலி, சடாயு, மண்டோதரி, இந்திரஜித்து, இலக்குவன், இராமன், சூர்ப்பனகை, கைகேயி, சுமித்திரை, கோசலை, சீதை, போன்ற பாத்திர வர்ணனையும் சொற்களும் படிப்போரது உணர்வை விட்டகலாதவை.
*இம்பர்நாட்டிற் செல்வமெல்லாம் எய்தி அரசாண்டிருந்தாலும்
உம்பர்நாட்டிற் கற்பகக்காவோங்கு நிழலிருந்தாலும்
செம்பொன் மேருவனையபுயத் திறல்சேர்இராமன்திருக் கதையில்
கம்பநாடன் கவிதையிற்போல் கற்றோருக்கு இதயம் களியாதே.* என்பது மூத்தோர் வாக்கு.
*கம்பன் மான உணர்வு மிக்க புலவன்.
மன்னவனும் நியோ வளநாடும் உன்னதோ?
என்று எதிர்த்து நின்று துணிவோடு கூறியவன்.” சிவரகசியம் பார்வைக்குக் கிடைத்திலது.
15. காவியம்
"காவ்யம்' எனும் வடசொல் “காவியம்” என்றும் அழைக்கப்படும். தமிழிலே பெருங்காப்பியங்கள் என்றும் சிறுகாப்பியங்களென்றும் நூல்கள் வகுக்கப்பட்டுள்ளமையை மனங்கொள்வது அவசியம். ஐம்பெருங்காப்பியங்கள் எனவும் ஐஞ்சிறுகாப்பியங்களெனவும் கூறும் வழக்காறுமுண்டு. சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி என்பன ஐம்பெருங்காப்பியங்களாகும். நீலகேசி, உதயணகாவியம், நாகருமார காவியம், குளாமணி, யசோதரகாவியம் என்பன ஐஞ்சிறுகாப்பியங்களாகும்.
பண்டைய ஆசிரியர் சிலருடைய பெயர்களிலேயும் “காப்பியம்” என்ற சொல் இணைந்து நிற்கிறது. தொல்காப்பியர், காப்பியஞ் சேந்த னார் (நற்: 246), காப்பியாற்றுக் காப்பியனார் (பதிற். 4ஆம் பத்து) ஆகிய பெயர்களை அறியமுடிகிறது.
52. ஞானசம்பந்தன்,அ.ச.பேராசிரியர், "கம்பன் கண்ட பக்தியும்அறமும்", கம்பன் மலர்(2000), அகில இலங்கைக் கம்பன் கழகம், 20 ஆம் ஆண்டு நினைவு மலர்,(19802000), யுனிஆட்ஸ் நிறுவனம், 48,B,புளுமெண்டல் வீதி,கொழும்பு. .201.لا و آB]. رنگ طلای) و -- .53
31

Page 36
"காப்பியம்' பண்டே தமிழ் இலக்கிய உலகில் தோன்றியது. தமிழுக்கு எல்லை இல்லாச் சிறப்பைத் தந்தது. நெஞ்சை அள்ளும் புதுமையாய் மலர்ந்தது. அதுவே தமிழின் முதல் காப்பியமான சிலப்பதிகாரம்.
தொல்காப்பியத்தில் செய்யுளியலில் விதந்துரைக்கப்படுகின்ற அம்மை, அழகு, தொன்மை, தோல், விருந்து, இன்புலன், இயைபு என்னும் எட்டு வனப்புக்களும் பெருட்டொடர் நிலைச் செய்யுளோடு தொடர்புடையவை. அவற்றின் இயல்பை விளக்குபவை, என்று வாகீச கலாநிதி கி. வா. ஜகந்நாதையர் அவர்கள் கூறுகின்றார்."
புகழ்பெற்ற வடமொழி நூலான காவியதர்ஷம் என்னும் நூலை அடியொற்றித் தமிழில் இயற்றப்பெற்றது தணர்டியலங்காரம். பெருங்காப்பியம் அமைக்கும் முறைபற்றித் தண்டியலங்காரத்தின் ஏழாம் சூத்திரம் பின்வருமாறு கூறும்,
"பெருங்காப்பிய நிலை பேசுங்காலை வாழ்த்து வணக்கம் வருபொருள் இவற்றின் ஒன்று ஏற்புடைத்துஆகி முன்வர இயன்று நாற்பொருள் பயக்கும் நடைநெறித்தாகி தன்நிகர் இல்லாத் தலைவனை உடைத்தாய் மலை, கடல், நாடு, வளநகள் பருவம் இருசுடர்த் தோற்றம் என்று இனையன புனைந்து நன்மனம் புணர்தல், பொன்முடி கவித்தல் பூம்பொழில் நுகர்தல் புனல் விளையாடல் தேம்பிழி மதுக்களிச் சிறுவரைப் பெறுதல் புலவியில் புலத்தல், கலவியில் களித்தல் என்று இன்னன புனைந்த நன்னடைத்தாகி மந்திரம், தூது, செலவு, இகல், வென்றி சந்தியில் தொடர்ந்து சருக்கம், கீலம்பகம் பரிச்சேதம் என்னும் பான்மையின் விளங்கி நெருங்கிய சுவையும், பாவமும் விரும்பக் கற்றோர் புனையும் பெற்றியது என்ப."
(தண்டியலங்காரம்)
மேலும் "பாவிகம் என்பது காவியப்பண்பே" எனவுங் கூறும்.
(தண்டி, பொருளணி 89.)
ரீ சுப்பிரமணிய தேசிகன் உரையில், "பாவிகம் என்று சொல்லப்படுவது பொருள்
54. ஜகந்நாதன்,கி.வா., வாகீசகலாநிதி, தமிழ்காப்பியங்கள், ப.71.
32

இலங்கைக் கலைக்கழகத் தமிழிலக்கிய குழுவின் இலக்கியக் கருத்தரங்கில் இலக்கிய குழுவின் உறுப்பினரும் ஈழத்திலக்கியத்தின் ஆளுமை கொண்ட எழுத்தாளரும் "மல்லிகை என்னும் கலையிலக்கிய சஞ்சிகையின் ஆசிரியருமான திரு. டொமினிக் ஜீவா அவர்கள் மங்களவிளக்கு ஏற்றுகிறார். வவுனியா கேரி கல்வியியற் கல்லூரிபிஸ் 1
தொண்டர் சபையின் உபதலைவரும் லகழ்மி அச்சக உரிமையாளருமான உயர்திரு. வே. திருநீலகண்டன் அவர்கள் 2004ம் ஆண்டு சரஸ்வதி மண்டபத்தில் நடைபெற்ற திருக்கேதீச்சரம் (ரீ சபாரத்தின சுவாமிகளின் குரு பூசையின் போது சிறப்பு பேருரையாற்றிய வாகீச கலாநி கனகசபாபதி நாகேஸ்வரனுக்கு மலர்மாலை அணிவிக்கிறார்.

Page 37
தொடர் நிலைச் செய்யுள் திறத்துக் கவியியல் கருதிச் செய்யப்படுவதொரு குணம்.” என வருகிறது.
16. அலங்காரம்
ஒப்பனை, அணி, அழகுபடுத்தல், சோடித்தல், அலங்கரித்தல், வண்ணந்தீட்டல், கவர்ச்சிப்படுத்துதல், தலையலங்காரம், உடையலங் 'காரம், நடையலங்காரம், இடையலங்காரம், பேச்சலங்காரம், பாட்டலங்காரம் என்று பலவகை அலங்காரங்கள் காணப்படுவதனைக் கேள்விப்படு கிறோம். இன்று நகையலங்காரம் பெருமளவிலே சமுகத்திலே குறிப்பாக அனைத்துச் சமுகங்களிலேயும் நிலவிவருகின்றமையையும் அவதானிக்க முடிகிறது. கண்ணாடி பார்த்து அலங்கரிக்கும் மரபு சங்ககாலத்திலேயே நிலவியுள்ளமையை இலக்கியங்கள் எடுத்துரைக்கின்றன. அலங்காரம் என்பது கோலம் போடுதல், மாலைகட்டுதல், தோரணந்தூக்குதல், திலகமிடுதல், கச்சுக்கட்டுதல், அரை முடி இடுதல், வளையல், காப்பு, மாலைகளனிதல் என்பனவும் அலங்காரத்திலிடம் பெறும். திருக்கோயில்களிலே அம்பாளை நீராட்டி அலங்கரித்து வழிபாடாற்றுவது மரபு. ஆடை அணிகலங்கள் கையில் பூ என்பன கொடுத்து அலங்கரிப்பதுமுண்டு. திருமணப் பெண்ணையும் (மணமகளையும்) ஆணையும் (மணமகனையும்) அலங்கரித்து மணமேடைக்கு அனுப்புவது தமிழர் தம் திருமண மரபாகும். அம்பாளின் பேரழகு பற்றி அபிராமிப்பட்டர் பின்வருமாறு அபிராமி அந்தாதியிலே பாடுகிறார். அம்பிகையின் அழகு மனக் குறையைத் தீர்ப்பது.
*அழகுக்கொருவரும் ஒவ்வாத வல்லி அருமறைகள் பழகிச்சிவந்த பதாம் புயத்தாள் பனிமாமதியின் குழவித் திருமுடிக் கோமள யாமளைக் கொம்பிருக்க இழவுற்று நின்ற நெஞ்சே இரங்கேல் உனக்கு என்குறையே.”
(அபிராமி அந்தாதி, செய்,70)
17. நாடகம்
"நாடகம் அறுபத்து நான்குகலைகளுள் ஒன்று. கூட்டுக் கலையாக இயங்குவது நாடகம். கிரேக்க நாடகங்கள், இந்திய நாடகங்கள் வரலாற்றுப் புகழ் பெற்றவை. நாடகக் கலையுடன் அரங்கம், ஒப்பனை, இசை கூத்து (அசைவு), மத்தளம், உரைநடை, பிரதி, சபையோர், பாத்திரங்கள் என்னும் அம்சங்கள் இணைந்துள்ளமையைக் காண லாம். முத்தமிழ்க் காப்பியமான (நாடக இலக்கியம்) சிலப்பதிகாரத்தில்
55. இந்திரா,ஆ.ரா.,"கம்பரும் ஹோமரும்”,கலைகள்(1988), கம்பன் கழகம்,
சென்னை. வானதி பதிப்பகம், 13, தீனதயாளு தெரு, சென்னை, ப.65.
33

செம்மை வடிவக்கலையும், கூத்து மரபும் இணைந்துள்ள மையினைக் காணலாம். இளங்கோவடிகளின் நுட்பமும் இலக்கிய செய்தியும் பழந்தமிழரின் நாடகக்கலை வளத்தை எடுத்துக் காட்டுகின்றன. கலித்தொகை, பரிபாடல் என்ற இலக்கியங்களும் நாடகம் பற்றிப் பேசுகின்றன.”*
தமிழர் போற்றி வளர்த்த கலைகளில் கூத்தும் ஒன்று. அக்கலை ஆடவர், பெண்டிர் இரு சாரார்க்கும் பொதுவாகும், மக்களும், மன்னவர்களும், கூத்தர்களைப் பேணினர். கூத்தர், பொருநர், விறலியர், கோடியர், பரதவர், குறவர் எனப் பலவேறு பெயர்களைக் கொண்டிருந்தனர். சங்ககாலத்திற்குப் பின்னர் சமயம் ஆடற்கலை யைப் போற்றி வளர்த்தது. தமிழில் கூத்துக் கலையின் இலக்கணங் களை உணர்த்தும் நூல்கள் பலவுண்டு. பெரும்பாணாற்றுப்படை இழிந்தோர் கூத்துப்பற்றிக் குறிப்பிடுகிறது. மலை வாழ்நர் குரவையாடினர். சமயச் சடங்கோடு ஆடல் கலை நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தது." துணங்கை என்பது இன்னொரு கூத்தாகும். விழாவின் போது தெருக்களில் துணங்கை ஆடினர். இதற்கு ஏற்ப முழவு ஒலித்தது. "தலைக்கோலி’ தலைக்கோலாசான் பட்டங்கள் சூட்டப்பட்டன. நாட்டியத்திற்குப் பாடல் பாடியோர். தோரிய மடந்தை எனப்பட்டனர். திரைச்சீலைகள் ஒரு முகளNனி, பொருமுக எழினி, கலந்துவரல் எழினி எனப்பட்டன.
பதினொரு ஆடல் வகையைச் சிலப்பதிகாரத்து மாதவி ஆடினாள்.
அவை வருமாறு:-
அல்லியம்
கொடுகொட்டி
குடை
குடம்
பாண்டரங்கம்
மல்
Ell)
EL D
பேடு மரக்கால் 11. LJT606
O
56. தட்சிணாமூர்த்தி,அ, டாக்டர். "கூத்துக்கலை”, தமிழர் நாகரிகமும் பண்பாடும் (1999), யாழ் வெளியீடு, கி.பி.1108, தென்றல்குடியிருப்பு, மூன்றாவது தெரு, மேற்கு அண்ணாநகர், சென்னை, 600040, ப.348. 57. -, .351.
34

Page 38
E. மாணிக்கம், மரகதம், இரத்தினகற்கள் பதிக்கப்பட்ட பொன்னகையை அணிந்து புன்னகை பூக்கும் அலங்காரம்.
"புலவர்', செஞ்சொற்கொண்டல் வெள்ளி நாக்குப் பேச்சாளர் புங்குடுதீவு ஈழத்துச் சிவானந்தன் அவர்களுடன் வாகீச கலாநிதி, மனைவி, மகள் பிறந்தநாள் வைபவத்தில் 30.08.1989,
 
 
 

கலை, கணிதம், விஞ்ஞானம், தொழில்நுட்பம், நிர்வாகம் இவற்றில் வல்லப் கனகசபாபதி. சுந்தரேஸ்வரன், B.Com, (வாகீசகலாநிதியின் தம்பி - கனடா)

Page 39
இக்கூத்துக்களுள் முதல் ஆறும் நின்றாடுபவை. பின்னவை ஐந்தும் வீழ்ந்தாடுவன. இவையனைத்தும் புராணத் தொடர்பானவை என்பது குறிப்பிடத்தக்கது.
கண்ணன் யானையை வென்றதைக் குறித்தது அல்லியாகும். சிவபெருமான் முப்புரம் எரித்தபின் ஆடியது கொடுகொட்டியாகும். குடைக் கூத்து என்பது முருகன் அவுணரை வென்றாடியதாகும். சிவன் முப்புரம் எரித்தபின் நான்முகன் காண ஆடியது பாண்டரங்கம். கண்ணன் வாணன் மற்போர் குறித்தது மல்லாடல். சூரனை வென்ற பின் முருகன் ஆடியது துடி. காமன் தன் மகன் அநிருத்தனை மீட்கப் பேடிவடிவில் ஆடியது பேடு. கொற்றவையை வஞ்சனையால் வெல்ல எண்ணி அவுணர் ஏவிய பாம்பு, தேள் முதலியவற்றை மரக்காலால் உழக்கி அவன் ஆடியது மரக்காலாடல். போர் செய்ய வந்த அவுணர் அழியுமாறு திருமகள் ஆடியது. பாவையாடல் என்பது சத்துவம் எனப்படும்; அதுவே மெய்ப்பாடாகும். ஒன்பது கலையும் மெய்யின் கண் புலப்பட ஆடுவதே கூத்தின் சிறப்பு. அவை நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை, சமநிலை என்பன.
சித்தன்னவாசல் நடனமாதர் ஓவியம் அக்காலத்துக் கூத்துக்க லையின் மாட்சியை விளக்குகிறது. இடக்கையில் கஜஹஸ்த நிலையும், வலக்கையில் சதுர நிலையும் காட்டுகிறது. பல்லவர் காலத்தில் குழுநடனம், சிறப்புற்றது. “வலம் வந்த மடவர்கள் நடமாட” என்பார் ஞானசம்பந்தர். சோழர்காலத்திலே தஞ்சைக் கோயிலில் மட்டும் 400 தேவரடியார் இருந்தனர். ‘பூங்கோயில் நாடகத்தலைக்கோலி என்பது பட்டமாகும். கமலா இலட்சுமணன், பத்மா சுப்பிரமணியம் இன்று புகழோடு விளங்குங் கலைஞர்கள்.
ஈழத்திலே தழிழர்களான பேராசிரியர்கள் க. கணபதிப்பிள்ளை, சுவாமி விபுலானந்த அடிகள், சு. வித்தியானந்தன், கா. சிவத்தம்பி, க. கைலாசபதி, அ. சண்முகதாஸ், சி. மெளனகுரு, க. சிதம்பர நாதன், குழந்தைசண்முகலிங்கம் போன்றோரும் கலையரசு சொர்ண லிங்கம், காரை. சுந்தரம்பிள்ளை, கலாநிதி. க. சொக்கலிங்கம், நடிகமணி வி. வி. வைரமுத்து, கலைப்பேரரசு ஏ.ரி. பொன்னுத்துரை, T. அரசு, திருமதி கோகிலா மகேந்திரன், ஆங்கிலவிரிவுரையாளர் கந்தையா றிகணேசன், தாஸிஸியஸ், சட்டத்தரணி தேவராசா, மெட் ராஸ்மயில், முல்லைமணி, அகளங்கன், பாலேந்திரா, திருமறைக் கலா மன்றத்து வண. சேவியர் அடிகளார், அராலியூர் ந. சுந்தரம் பிள்ளை, கலாநிதி. இ.பாலசுந்தரம், அந்தனிஜீவா, இணுவில்
35

வீரமணிஜயர் போன்றோரும் நாடகக்கலையின் எமுத்து, அரங்க நிலைகளில் பங்களிப்பினைச் செய்துள்ளனர்.
*கவின் கலைகளில் நாடகக் கலைக்குத் தனியிடமுண்டு. செவிக்கும் கண்ணுக்கும் கருத்துக்கும் ஒரே நேரத்தில் விருந்தளிப்பது நாடகம். நாடகம் கலைக்கரசு என்கிறார் அவ்வை சண்முகம். நாட்டின் நாகரிகக் கண்ணாடி பாமரர்களின் பல்கலைக்கழகம். உணர்ச்சியைத் தூண்டி விட்டு உள்ளத்தில் புதைந்து கிடக்கும் அன்பையும் அறிவையும், தூய்மையையும் வெளிப்படுத்தி மக்களைப் பண்படுத்தும் மகத்தான கலை.*
நடிகர் காட்ட வேண்டிய 24 வகையான மெய்ப்பாடுகளைப்பற்றி அடியார்க்கு நல்லார் மேற்கோளுடன் காட்டுகிறார். கூத்தும்,நாடகமும் நடக்கும் களம் ஆடுகளம் எனப்பட்டது.
சீர்காழி அருணாசலக் கவிராயர் இராமசரிதத்தை நாடகமாக்கினார். கோபாலகிருஷ்ணபாரதியாரின் நந்தனார் சரித்திரக் கீர்த்தனையும் குறிப்பிடத்தக்கவையாகும். பரிதிமாற் கலைஞர் கலாவதி, ரூபாவதி, மானவிசயம் என்னும் நாடகங்களைப் படைத்ததோடு நாடகவியல்” என்னும் இலக்கணத்தையும் எழுதினார். பேராசிரியர் சுந்தரம்பிள்ளை சேக்ஸ்பியரின் நாடக அமைப்பினை யொட்டித் தமது மனோன் மணியத்தை இயற்றினார். பல சமயத்தவரும் நாடகம் எழுதினர். அல்லிபாதுஷா, அப்பாகநாடகம், ஞானத்தச்சன் முதலியனவாகும்.
19ஆம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த பம்மல் சம்பந்தமுதலியார் நாடகத்தின் தந்தையெனச் சிறப்பிக்கப்படுபவர். 90 நாடகங்களுக்கு மேல் எழுதியுள்ளார். சேக்ஸ்பியர் நாடகங்களை மொழி பெயர்த்துள்ளார். காளிதாசரின் மாளவிகாக்கினி மித்திரம், "இரத்தினாவளி’ ஆகியவற்றை மொழிபெயர்த்தார். மனோகரா, லீலாவதி, வேதாள உலகம், சபாபதி, கள்வர், தலைவன், ஆகியவை சபையினரால் நடிக்கப்பட்டன. நாடகக் கலைக்கு இருந்த இழிவைத் துடைத்த பெருமை இவருக்குண்டு. தாமே நடித்ததோடு ஆர் கே. சண்முகம் செட்டியார், சத்தியமூர்த்தி, சி. பி. இராமசாமி ஐயர் ஆகியோரையும் நடிக்கச் செய்தார். சுகுணவிலாச சபை இவரால் நிறுவப்பட்டதாகும்.
58. மேலது, ப.372.
36

Page 40
மாணவிகளின் நாடகத்தில் பாத்திரமேற்று நடிக்கும் செல்வி. நா. தாரணி. வாகீச கலாநிதியின் மகள். (கொழும்பில் மேடையேறியது.) (கையில் தட்டை ஏந்தியவர்)
 

நாடக உலகின் இமயமலையாகப் பாராட்டப்படுபவர் தவத்திரு சங்கதாஸ்" சுவாமிகளாவார். 40 நாடகங்களுக்கு மேல் எழுதிய பெருமை இவருக்குண்டு. அபிமன்யு, சுந்தரி, பவளக்கொடி, சீமந் தனி சதியநுசுயா, பிரகலாதன், சிறுத்தொண்டர், வள்ளிதிருமணம், சத்தியவான் சாவித்திரி என்னும் புராண நாடகங்களையும் வடமொழி நாடகமான மிருச்சடிகம், ஆங்கில நாடகங்களான ரோமியோ ஜூலி யட், சிம்பலைன் ஆகியவற்றையும் நாடகமாக்கினார். மணி மேகலை, பிரபுலிங்கலீலை ஆகியவற்றையும் நாடகமாக்கினார்.
டாக்டர் ஆறு. அழகப்பன் "திருமலைநாயக்கர்" போன்ற நாடகங் களை எழுதியவர். ஈழத்துப் பேராசிரியர்களான க. கணபதிப்பிள்ளை, சு.வித்தியானந்தன், கார்த்திகேசு சிவத்தம்பி, சி. மெளனகுரு, க.சிதம்பரநாதன், குழந்தை சண்முகலிங்கம், திருமதி. கோகிலா மகேந்திரன், சுரை செ. சுந்திரம்பிள்ளை, கலாநிதி க.சொக்கலிங் கம், கலையரசு சொர்ணலிங்கம், நடிகமணி, வி.வி வைரமுத்து, கலைப்பேரரசு ஏ.ரி பொன்னுத்துரை, தாளபீஸியஸ், பாலேந்திரா போன்றோரும் இன்னும் பலரும் ஈழத்து நாடகக் கலைக்காற்றிய பங்களிப்புகள் விதந்து குறிப்பிடத்தக்கவை. இவர்கள் கலைப்பணிகள் பல்கலைக்கழக மாணாக்கரினால் கற்கப்படவேண்டியவை.
18. நிருத்தம்
நட்டம், தாண்டவம் என்பன நிருத்தத்திற்குப் பதிலாக வழங்கப் படுவன. தில்லையில் திருநடனம் புரிபவன் சிவன். இறைவனுக்கும் காளிக்கும் இடையே நடந்த ஆடல் போட்டியில் ஊர்த்துவ தாண்ட வமாடிக் காளியைத் தோல்வியுறச் செய்தார் சிவனாகிய இறைவன்.
"காளியுடன் ஆடினபடியால் காளிதாண்டவம் என்றும் மிகவேக மாகச் சுழன்று ஆடுவதாகையால்சண்ட தாண்டவம் என்றும் ஒரு காலைத் தலைவரையில் மேலே தூக்கி ஆடுவதாகையில் ஊர்த்துவ தாண்டவம் என்றும், வீடுபேற்றினைத் தருவதாகிய அனுகிரகத்தின் பொருட்டுச் செய்வதாகையால் அணுக்கிரகம் அல்லது அணுக்கிரக தாண்டவம் என்றும் இதற்கு வேறுபெயர்கள் உள்ளன. "ஆடினார் பெருங்கூத்துக்காளிகான்" என்று அப்பர் கூறியபடியால் இதற்கும் பெருங்கூத்து என்னும் பெயரும் உண்டு போலும், "செயற்கரிய திருநடம்" "என்று அப்பரே கூறுகிறபடியால் "இத்திருத்தாண்டவம்" செய்வது கடினமானது" என்று மயிலைசீனி. வேங்கடசாமி எழுதுகிறார். இறைவனுடைய நடனத்தில் கொடுமையில்லை என்பதைக் கட்டிமுடிக்கப்பட்ட சடைகள் காட்டுகின்றன." நிருத்தனேநிமலா
59. கமலையா.க.சி, தமிழகக் கலை வரலாறு, (1990), ப71.
37

Page 41
"நீற்றனே" என்று சிவனைப் போற்றுகிறது திருமுறை.
*குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமின்சிரிப்பும் பனித்த சடையும் பவளம் போல் மேனியில் பால் வெண்னிறும் இனித்தமுடைய எடுத்தபொற் பாதமும் காணப்பெற்றால் மனித்தப்பிறவியும் வேண்டுவதே இந்தமாநிலத்தே' என்று அப்பர் பெருமான் அருளியுள்ள திருவிருத்தம் தினமும் நினைவிற் கொள்ள வேண்டிய அற்புதமான திருமுறைப்பாடலாகும்.
"ஆடுகின்றான் கூத்தன் அம்பலத்தில், பொன்னார்
மேனியன். புலித்தோலை அரைக்கசைத்தவன். வெண்ணிறு தரித்தவன். பிறையும் அரவும் கூடிய தலையினன், கழலார்ந்த காலினன். பேரிரவில் ஈமப்பெருங் காட்டில் பேயோடு ஆடுகிறான். அவன் ஆடும் பொழுது அண்டங்கள் நடுங்குகின்றன. பாதாளம் நொறுங்குகிறது. வானம் சுழல்கிறது. எட்டுத் திக்குகளிலும் அவன் சடைகள் பரந்தாடுகின்றன. சூாயிறு, திங்கள், அக்கினி முன்றும் அவன் கண்கள். வானவெளியில் ஆடும் கூத்தன் அன்பர்களின் இதய தாமரையைக் கோயிலாகக் கொண்டு அங்கும் ஆடுகின்றான். ஆடிக்கொண்டே படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற ஐந்தொழில்களையுஞ் செய்கிறான்."
19. வீணையும்
20. வேணுவும்
நரம்புக் கருவிகளுள் வினையும் ஒன்று. "தந்தி வாத்தியம் நரம்பு வாத்தியம், ஸ்ருதிவாத்தியம் எனவும் அழைக்கப்படுகிறது. இவற்றுள் சில பிரதான வாத்தியமாகவும் சில உபவாத்தியங்களாகவும் சுருதிக்கு அடிப்படையாக உபயோகிக்கப்படும் வாத்தியங்களாகவும் கலைகளாகவும் விளங்குகின்றன.
வீணை, கோட்டுவாத்தியம், வயலின், தம்புரா, சித்தார், சரோட், யாழ், மெண்டலின், வயோலா, தில்ருபா போன்றவை குறிப்பிடக் கூடியவை. இவற்றுள் வீணை, கோட்டுவாத்தியம் என்பன தாள முள்ள கருவிகளாகும்.
60. - , Ġerpell:EI, L. 87-88.
38

இடையர் சேரியில் பகவுடன் குழலூதும் கண்ணன்.

Page 42
"சுசிரவாத்தியம் (துணைக்கருவி) நாதஸ்வரம், புல்லாங்குழல், கிளாரினட், ஷணாய், ஒத்துமுக வீணை சங்கு என்பனவாம். இவை காற்றினால் உந்தப்பட்டு இயக்கப்படுவதால் “த்மானம்” எனப்ப டுகிறது. சுவாசத்தின் தன்மைக்கு ஏற்றவாறு இவைகளில் நாதம் எழுகின்றது. இவ்விசைக் கருவிகள் பெரும்பாலும் பிரதான வாத்தியங்களாகவே திகழ்கின்றன. சில தேவைக்கு ஏற்றவாறுபக்க வாத்தியங்களாகவும் பயன்படுத்தப்படுகின்றன."
"இசையில் வீணா, வேணு, மிருதங்கம் என்பன அதிமுக்கியத் துவம் வாய்ந்தவையாகும். வீணை முதல்நிலையில் வைத்துக் கூறப்பட்டுள்ளது. இசையின் நுணுக்கங்களைத் தெளிவுற எடுத்துககாட்ட உதவும் கருவி வீணையாகும். இது ததவாத்ய (தந்தி வாத்திய) வகையைச் சார்ந்த இசைக்கருவியாகும். இவ்வாத்தியத்தை வாசிப் பவர் வைணிகர் என அழைக்கப்படுவர். இதன் சிறப்பியல்பு தாளமும் சுருதியும் இணைந்து ஒலிக்கும்படி ஆக்கப்பட்டமையாகும். இதில் நான்கு தந்திகள் வாசிப்பதற்கும் மூன்று தந்திகள் சுருதி, தாளம் என்பவற்றைக் காட்டவும் பொருத்தப்பட்டுள்ளன. ஸ்வர ஸ்தா னங்களுக்கேற்ப 24 மெட்டுக்கள் இதில் உண்டு. மூன்றறை ஸ்தா யிகள் எல்லையுடையது. இவ்வாத்யம் பலா மரத்தினால் செய்ய பட்டுத் தந்திகள் பொருத்தப்பட்டதாகும். இவ்வீணை வாத்தியத்தின் அங்கங்கள் யாவும் ஒரே மரத்தினால் செய்யப்பட்டவையாக இருந் தால் ஏகாண்ட வீணை என அழைக்கப்படும். இதில் குடம், தண்டி, கழுத்து, மேற்பலகை, சுரைக்காய், பிரடைகள், மெட்டுக்கள், குதிரை, யாளிமுகம், நாகபாதமென்னும் பாகங்கள் காணப்படுகின்றன. இவ்வாத்தியம் தஞ்சாவூர், மைசூர், விஜயநகரம், திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் தயாரிக்கப்படுகிறது?
வேனு என்பது முங்கிலாலான புல்லாங்குழல். இது துணை வாத்தியங்களுள் ஒன்று. த்யான, சுஷிர எனப்படும் காற்றுவாத்திய அமைப்பைச் சேர்ந்ததாகும். இசையில் முக்கியத்துவம் வாய்ந்த முக்கருவிகளுள் புல்லாங்குழலும் ஒன்றாகும். வேய்ங்குழல் என்றும் அழைப்பர். உலகின் காத்தற் கடவுலாகிய கிருஷ்ண பரமாத்மாவால் ஆதியில் வாசிக்கப்பட்டது.
“இவ்வாத்யம் பொன் முங்கில் மரத்தினால் ஆக்கப்பட்டதாகும். இதன் நீளத்திற்கு ஏற்றபடி இதன் சுருதி அமையும். நீளம் அதிகரித்தால் சுருதி 61. சோமாஸ்கந்தசர்மா,அ.நா., மிருதங்கசங்கீதம் (1989),திருக்கணிதஅச்சகம்,
மட்டுவில், ப.40-41. 62. - , u.56.
39

அளவு குறையும், நீளம் குறைந்தால் சுருதி அளவு அதிகரிக்கும். இவ்வாத்தியத்தின் ஒருமுனை அடைக்கப்பட்டிருக்கும். ஒரு பக்கத்தே வாயினால் காற்றை உந்துவதற்கு ஒரு துவாரமும் ஸ்வரஸ்தானங்களை வாசிப்பதற்கு ஏழு துவாரங்களும் இடப்பட்டிருக்கும். அங்வேழு துவாரங்களை உரியமுறையில் முடித்திறப்பதன் முலம் வெவ்வேறு ஸ்வரங்கள் ஒலிக்கும். இதனைப் பயன்படுத்தியே ராகம், கீர்த்தனை, ஸ்வரங்கள் போன்றவை வாசிக்கப்படுகின்றன.*
21. மிருதங்கமும் 22. தாளமும்
மிருதங்கம் தேவ வாத்தியங்களுள் ஒன்றாகும். இசைக் கருவிகளுள் சர்மவாத்திய வகையைச் சேர்ந்த கருவியாகும். உலகிலே சகல ஜீவராசிகளையும் தனது இசைச் சக்தியில் இறைவனுடன் இசைவுபடச் செய்யவல்ல ஓர் சக்தி பொருந்திய வாத்தியமாகும். இது மத்தளம், தண்ணுமை, முட்டு, முழவு, ஆனந்த வாத்தியம், நந்தி வாத்தியம், போன்ற காரணப் பெயராலும் காலத்திற்கேற்ப அழைக்கப்பட்டு வருகிறது.
மிருதங்க வாத்தியமானது அமைப்பிலும் வாசிக்கப்படும் போது மிருதுவானதாகவும், மிருதுவான நாதத்தைக் கொடுக்கிற காரணத்தாலும் மேலும் மிருத்தினால் (மண்ணினால்) ஆக்கப்பட்ட சாதம் என்னும் பகுதியினைப் கொண்டிருப்பதாலும் மிருதங்கம் என்னும் பெயரைப் பெறுகிறது. இசை எனப்படுகின்ற நாதஓலிகள் யாவற்றிற்கும் ஆதாரமாக நிலம்போல் அமைவதால் மத்தளம் எனவும் அழைக்கப்பட்டது. மத்து என்பது ஓசை, இசை, ஒலி எனப்படும். தளம் என்பது நிலம் எனவும் பொருள்படும். அத்துடன் இரு கைகளினாலும் அடித்து வாசிக்கப்படுவதினால் மர்த்தனம் என்பது மத்தளம் என்றும் பெயர் உண்டாயிற்று. இசை நிகழ்ச்சியில் *காலப்பிரமான நிர்ணயம்” செய்து "லயவாத்தியம்” என்னும் பெயருடன் நிகழ்கிறது.
உலக நடைமுறை சூரிய சந்திர தேவர்களினால் இயக்கப்படுவது போலவே இவ்வாத்தியத்தின் முன் வலந்தரைப் பகுதி சூரியன் போன்றதாகவும், இடந்தரைப்பகுதி சந்திரன் போன்றதாகவும்
63. -ത്ത , U.58,
40

Page 43
அமைப்பு, நாதம் என்பவற்றில் நிரூபித்துக் காட்டப்படுகிறது. ராகு, கேது, என்னும் இரண்டு சாட்டைவார்களினாலே பின்னப்பட்டு அமைக்கப்பட்டுள்ளன. மிருதங்கம் நீண்ட உருளை வடிவமுடைய தாகும்.
1. வலந்தரை
2. இடந்தரை
3. கட்டை
என்னும் மூன்று பகுதிகளையுடையது. வலந்தரை மூட்டிற்கு
"புடா” என்றும் பெயர். இது "நங்கி” என்றும் அழைக்கப்படும்.
இடந்தரை மூட்டு, தொப்பி, கவணை எனவும் அழைக்கப்படுகிறது.
வலந்தரைமூட்டு : இது வெட்டுத்தட்டு, கொட்டுத் தட்டு, உட்காரத்தட்டு, ஆகியவற்றை முறையே மேலிருந்து கீழாக ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கப்பட்டுச் சாட்டைவாரினால் இணைத்துப் பின்னப் பட்ட ஒரு அங்கமாகும். வெட்டுத்தட்டு, கொட்டுத்தட்டு, உட்காரத் தட்டு என்பன ஆட்டுத் தோல், பசுத்தோல் என்பவற்றினால் ஆனவை. இந்த மூட்டானது 48 சாட்டை வார்க் கண்களையும், பின்னலில்வார், கோர்க்கப்படுகின்ற 16 கண்களையும் உடையது.
வெட்டுத் தட்டானது வார்ப்பின்னலின் ஒரமாக உட்பக்கத்தே சுற்றிவர 2 அங்குலம் அகலமுடைய வளையம்போன்றதாக இருக் கும். இது மீட்டு என அழைக்கப்படும். கொட்டுத்தட்டு கட்டையில் வார்ப்பகுதி முழுவதையும் மூடும்படியாக இருக்கும் இதன் மேற்புறத்தே நடுப்பாகத்தின் 3 அங்குல விட்டமுள்ள அளவிற்கு வட்டவடிவமான பகுதிக்குக் கரியநிறமான ‘சாதம்’ எனப்படும் பசையானது பூசப்பட்டிருக்கும். இது ‘கரணை எனப்படும். இக்க ரணையினால்தான் மிருதங்கம் இனிமையான நாதத்தை அளிக் கிறது. இது 'சாப்பு' எனவும் அழைக்கப்படும். வார் அல்லது நாடா எருமைத் தோலினாலானது. சுருதியின் ஏற்ற இறக்கமானது வாரின் இறுக்கத்தில் தங்கியுள்ளது. "சொகசுகா ம்ருதங்க தாளமு” என்று ரீ தியாகராஜ சுவாமிகள் என்று பாடியுள்ளார். (தாளத்திற்கும் சுருதிக்குமியைய வாசிக்கப்படுவது சுகமளிப்பதாகும்) அரிய கலை இது. சிவதாண்டவத்திற்கு "நந்தி” மத்தளம் வாசித்ததாகச் சொல்லப்படுவதுண்டல்லவா!!
41

28. கஜபரிட்சை
24. அசுவபரிட்சை
அரசர்கள், மன்னர்கள் பயிலும் கலைகளுள் கஜபரிட்சை, அசுவ பரிட்சை, விற்பயிற்சி என்பன பிரதானமானவை. கஜ, ரத, துரக,பதாதி என்பன நாற்படைகளுமாம். யானையேற்றம் மன்னர்களின் சிறப்புப் பயிற்சிகளிலே ஒன்று. நாட்டைப் பரிபாலிக்கும் அரசவம்சத்தினருக்கு யானை ஏற்றப்பயிற்சி குலமரபைப் பேணும் கலையாகவே அமைந்துள்ளது. இராசகைங்கர்யங்களிலே யானையின் ஊர்வலம் நிகழ்வதுண்டு. கெம்பீரமும் அழகும் சிறப்பும் கெளரவமும் கொண்ட யானையின் மீது அரசன் கொலுவிருந்து பவனிவரும் போது மக்கள் அவனைப் போற்றி நிற்பர். இவற்றை ஊர்தியாகவும் கொண்டு அவ்வப்போது மக்கள் முன் தோன்றும் தேசத்தலைவன் சிறப்புடன் வாழ்த்தப்படுவான். விலங்குகளுக்கு புகலிடமளித்தல் என்பதும் இதனுளடங்கும். யானைகள் கட்டுமிடம் "பந்தி” என்று அழைக்கப்பட்டது. ஆனைப்பந்தி எனும் இடத்திலே யாழ்ப்பாணத்தரசர்கள் காலத்தில் யானைகள் கட்டப்பட்டன என்ற மெய்ம்மையான வரலாறும் உண்டு. அசுவம் (அஸ்வம்) என்பது குதிரை. குதிரைப்படை மன்னனுக்குப் பெரிதும் படைச் சிறப்பை நல்குவது. முதன்மந்திரி மாணிக்கவாசகர் குதிரை வாங்கிய வரலாறு ஆன்மிகமன்று; அரசியலே.(பிரம்படியும்/ தண்டனைகளும் பெற்றமையால் என்க.)
25. இரத்தினப் பரிட்சை
இரத்தினப்பரீட்சை இலங்கையில் இரத்தினபுரி, பலாங்கொடை, பெல்மதுளைப் பகுதியிலே இன்றும் சிறபுடன் நடைபெறும் ஒரு வணிகக் கலையாகும். நவரத்தினங்கள் என்று அழைக்கப்படும் கல்வகையைத் தெரிவு செய்தலென்பது அனுபவமிக்க கலையெனலாம். வெறும் ஆற்றுக் கற்களைப் பொறுக்கி அவற்றின் தரதம்மியமறிந்து - தரமறிந்து பரிட்சித்து நிர்ணயஞ் செய்து வாணிபம் நடத்தும் வர்த்தகக் கலைஞர்களை இன்றும் நாம் காணலாம்.
இன்று கற்கள் கிடைப்பதரிது என்றும் கூறுவர். ஆபரணங்கள் இழைக்கும் கலையினைப் பொற்கொல்லர்கலை என்றும் கூறுவர். தட்டார் எனப்படும் நகைத் தொழிலாளர்களது நுட்பமான கற்பனைகளுக் கெல்லாம் இக்கற்றொழிற்கலை (இரத்தினப்பரிட்சை) இடந்தந்து பொருள் வளம் பெற்றுச் சிறக்க உதவுகிறது.
கற்கள் பதித்த தோடுகள், மோதிரங்கள், நெக்லஸ், முக்குத்திகள் என்பன தமிழ் மக்களாலே பெரிதும் விரும்பி அணியப்படுவன. எனவே
42

Page 44
இரத்தினப் பரிட்சை, கல்பரிட்சை (கற்பரிட்சை) என்பன இன்றும் என்றும் மிகவும் செல்வம் தரும் ஒரு கலையாகும். *கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா?" பரிட்சிக்கப்பட வேண்டாமா?
சுரங்கத் தொழிலாளர்கள் நிலத்துக்கடியில் தங்கம், நிலக்கரி, நவரத்தினங்கள், இல்மனைற், காரீயம், மணல், கண்ணக்கல், இரும்பு, நிக்கல், வைரம் என்பனவற்றை மிகவும் அபாயகரமான சூழ்நிலை யிலேயே அகழ்கின்றனர். சில வேலைகளில் சுரங்கத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுரங்கத் தொழிலாளர்கள் மரணித்த சம்பவங்களும் இத்தொழிலில் நிகழ்ந்ததுண்டு. எனவே நிலத்தை அகழ அகழ. தோண்டத் தோண்ட கிண்டக் கிண்ட அதனுள் மிகப்பெறுமதியான செல்வங்கள் கிடைக்கும். ஆகவே நீருக்கடியிலும், கடலுக்கடியிலும், ஆறுகளுக்கடியிலும், நிலத்துக் கடியிலும் படை படையாக அற்புதமான செல்வப் பொருட்கள் மனிதர்களுக்குக் கிடைக்கின்றன. இதற்குச் சோம்பியிருக்காமல் தினமும் பெரு முயற்சி செய்து உழைக்க வேண்டும். உழைப்பே ஊதியந் தரும்.
இவ்வளவும் கலைகள் சிலவற்றையும் அவற்றின் ஆக்கத் திறன் களையும் கண்டோம். இந்நூலில் இடம் பெறாத மிகுதிக் கலைகளையும் அவற்றின் கலையாக்கத் திறன்களையும் பிறிதொரு நூலில் ஆராய்வோம்.
"கலையின்பமே நிலையின்பமாம்." முற்றும்.
43
 

| || *上 疆\f* '''Ag'''
இரத்மலானை இந்துமாணவர் விடுதியில் குழந்தைகளின் பிறந்த நாள் வைபவத்தில் "சக்தி தத்துவம்" என்னும் பொருளில் கதாப்பிரசங்கம். 2004 நிகழ்த்துபவர் - அருட்கலைமாமணி கனகசபாபதி நாகேஸ்வரன். வயலின் - சங்கீத பூஷனம் சுவர்ணாங்கி சுகிரதன். மிருதங்கம் - வித்துவான் சுவாமிநாத சர்மா.
சாவகச்சேரிச் சிவன் கோவிலில் பெரியபுரானம் தொடர் சொற்பொழிவில்
நீதிபதி புலவர் மு. திருநாவுக்கரசு அவர்கள் பாராட்டுப் பத்திரம் வழங்கல். 1995

Page 45
அடிகளின் நினைவுப் பேருரை. 2004 தலைமை; திரு. வி. கைலாசப்பிள்ளை. (தலைவர், அகில இலங்கை இந்துமாமன்றம்} நிகழ்த்துபவர் வரிகீச கலாநிதி கனகசபாபதி நாகேஸ்வரன், எம்.ஏ
நாவலப்பிட்டி முத்துமாரியம்மன் கோவிலில் பக்கவாத்தியம் சகிதம் திருமுறைப் பண்ணிசை அரங்கு -24-07-1996.
 
 
 


Page 46
நாவலபிட்டி பூர் முத்துமாரி அம்மன் ே வாகீசகலாநிதிக்கு மலர்மாலை அ
கொழும்பு விவேகானந்த சபையில் வழங்குகிறார் வாகீசகலாநிதி கனகச
Printed by LUXMI PRINTER, 195,
 
 

கோயிலில் ஆன்மீகப் பேருரையின் போது ணிவித்து வரவேற்கும் காட்சி
பண்ணிசை பயிலுவோருக்குத் தாளம் பாபதி நாகேஸ்வரன்.
Wolfendhal Street, Colombo 13, T.P. 24.48545.