கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இலக்கிய இசைச் சாரல்

Page 1


Page 2


Page 3

இலக்கிய இசைச்சாரல்
பழந்தமிழ் இலக்கியங்களில் இசைபற்றிய குறிப்புகளை எடுத்து விளக்குகின்ற நூல்
* எஸ். சிவானந்தராஜா

Page 4
நூல்: இலக்கிய இசைச்சாரல் முதற் பதிப்பு: மே- 2000
ஆசிரியர் எஸ். சிவானந்தராஜா
செட்டி குறிச்சி, பண்டத்தரிப்பு
உரிமை ஆசிரியருக்கு
அச்சுப் பதிப்பு: ஆனந்தா அச்சகம்
226, காங்கேசன்துறைச்சாலை, யாழ்ப்பாணம்,
Gísladav eşLunt: 160/-
LSL LeSqMSLLLSL LSLLLLL LL LMMAMqSAAL ALqLLA SqLLSqAASLLL LL SL qLLAMSMSLLLSL LSLSeMeMMeA MLMLMM LMLSAMLMLM MLMLMLLLLLSLSSSMMSLLSL LMLMLAS
9 - 2 - 2000ல் இவ்வுலக வாழ்வை நீத்து இறைவன் திருவடியைச் சேர்ந்த எமது அன்புத்தாயார்
திருமதி பொன்னம்மா சிற்றம்பலம்
இந்நூல் சமர்ப்பணம்
vapomo* ஆசிரியர்
|
: : : 8
அவர்களின் நினைவுக்கு 8 8 8
qLMLLMLLLLSLLL MALMMMLM LALSLALSMLM LMLMLSLLLAAA AAALALS LSMALLALALALALAAAAALLAMAMAMA MLMMLL LALqMLSSLMA ALMLMLL LMMM LMSMqL SLSqMBMLL MSMSMS
 

முகவுரை
பண்டைத் தமிழரின் சீரிய வாழ்க்கையில் இசையானது இரண்டறக் கலந்து நிற்பதை இலக்கியங்கள் வாயிலாக அறியமுடிகின்றது. அவர்கள் தாம் வாழ்ந்த நில இயல்புகளுக் கேற்ற யாழ். பறை- பண் வகைகளை அமைத்து ஆடலும் பாடலும் மிக்க இன்பவாழ்வை மேற்கொண்டனர். இயற்கை அழகையும், அரசர்களின் வீரம் - கொடைத்திறத்தையும், காதலையும், தெய்வபக்தியையும் பொருளாகக் கொண்டு பாணரும், கூத்தரும், இயலிசைப்புலவரும் தமது கலைத்தி றனால் ஒதியும், இசைத்தும், கருவியிசை மீட்டியும் மன்னரி னதும் மக்களினதும் மனங்களைக் கவர்ந்து மதிப்புற்று வாழ்ந்தனர். மன்னரும், மக்களும் இசையறிவுடையோராய் கலைஞர்களைப் போற்றி வாழ்ந்தனர்.
இலக்கியங்கள் சங்ககாலம் முதல் இன்றுவரை இசையின் தனித்துவத்தையும் பறைசாற்றுகின்றன. இயற்கை ஒலிகளில் கேட்ட ஒலிநுட்பத்தை, குழல், யாழ், முரசங்களில், கருவி யிசையாக்கிக் கேட்டு இன் புற்றனர். மன்னரின் அரசவையில் இடம்பெறும் விழாக்களிலும், போர்க்களங்களிலும், தமது தேவைகட்கேற்ப ஆடலும் பாடலும் இன்றியமையாதன வாகக் கருதப்பட்டன.
சங்க இலக்கியங்களிற் காணப்பட்ட யாழ்வடிவங்க ளை, "யாழ்நூல் மூலம் தந்த சுவாமி விபுலாநந்தர், தமது * நாச்சியார் நான் மணிமாலை'யில் - இலக்கிய இசைமரபி னைத் தந்த இயலிசைப்புலவர்களைப் போற்றி நிற்கின்றார். இசைத்தமிழை ஒலிநெறியாகவும், நாடகத்தமிழை ஒளிநெறி யாகவும் கொண்டு, எமது உள்ளத்துணர்ச்சியை மெய்ப்பொ ருட் காட்சியாக்கி உருவகப்படுத்த இலக்கியங்களில் காணப் படும் இசைபற்றிய சிந்தனைகளைச் சுமார் எமுநூற்றைம்பது மேற்கோள்களிற் கண்டு, மேலும் விரிவாக ஆராய்வதற்கு வழிகோலுவோம்.
II

Page 5
இந்நூலின் கையெழுத்துப் பிரதியைப் பார்வையிட்டு நூலிற்கான தலைப்பையும், விடயங்களுக்கான உபதலைப் புக்களையும் தந்ததுடன் நல்லதோர் அணிந்துரையுந்தந்து ஊக்க மளித்த யாழ் பல்கலைக் கழக சிரேஷட விரிவுரையT?" ரும், இசைத் துறை த் தலைவருமாகிய திரு நா. வி. மு. நவரத்தினம் M. Phil. (Music) அவர்களுக்கு நான் மிகக் கடமைப்பட்டுள்ளேன். மேலும் நூலின் கையெழுத்துப் பிரதி யைப் பார்வையிட்டு, அவசிய திருத்தங்களைச் செய்து உதவி, பாராட்டுரையும் தந்த மூதறிஞர் , வித்துவான், திரு. க. சொக்கலிங்கம் M. A. அவர்களுக்கும், வாழ்த்துரை வழங்கி ஆசீர்வதிக்கும் மகாவித்துவான் திரு.ந. வீரமணிஐயர் அவர்க ளுக்கும். பாராட்டுரை வழங்கிய அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பேராசான் திரு.K. சிவபாலன் M.A அவர்களுக்கும், மதிப்புரை வழங்கிக் கெளரவிக்கும் கலாபூஷணம் திரு, fiSLTG Faulh M. A. அவர்களுக்கும், மற்றும் இந்நூலாக்கத் துக்குதவிய ஏனையோர்க்கும் நல்ல முறையில் அச்சேற்றி நூலுருவாக்கிய யாழ்ப்பாணம். ஆனந்தா அச்சகத்தினருக் கும் எனது உளமார்ந்த நன்றிகள்.
இந்நூல் பற்றிய கருத்துக்கள் பெரிதும் வரவேற்கப் படுகின்றன. தங்களின் தரமான நல்ல கருத்துக்கள் இந்த நூலின் அடுத்த பதிப்பை திருத்தமுடன் வெளியிட உதவும்.
நன்றி
1. அலுக்கை, அளவெட்டி, சங்கீத கலாவித்தகர்
இலங்கை. எஸ். சிவானந்தராஜா
பண்டத்தரிப்பு, இலங்கை.
0 0 20 - 05 صہ 3 O

வாழ்த்துரை
செந்தமிழ் இலக்கியத்துள் சேர்ந்த இசை
செழும் நயமும் இன்னிசையின் தத்துவங்கள்
பந்தமிகு பண்ணிசையும் பரந்து ஆய்ந்து
பைந்தமிழின் நூல்சமைத்தான் இளம் புலவன்
நந்தமிழ் இணுவையூர்ச் சிற்றம் பலம்
நயந்த சுதன் சிவானந்த ராஜாதந்த
சிந்தையில் இலக்கியமும் இசையினிக்கும்
சிறந்த நூல் வாழிஇளம் புலவன் வாழி
மஹாவித்துவான், பிரம்மபூரி மா. த. ந. வீரமணிஐயர் M. A.
இணுவில்,
சுன்னாகம், இலங்கை

Page 6
வாழ்த் துரை
மனத்தால் ஒருமைப்படுவதையும் இனத்தால் புகழப்படுவ தையும் இசை என்ற ஒரே சொல்லால் குறித்த தமிழ் மொழியின் மாட்சி வியக்கத்தக்கதாகும் தமிழ் இசையோடு பிறந்து வளர்ந்த மொழியாகும்.
‘ஏழிசையாய் இசைப்பயனாய்’ என்கிறார் சுந்தரர்பெரு i : T 667
தொல்காப்பியரும் அளபிறந்து உயிர்க்தலும் ஒற்றிசை நீடலும் உளவென மொழிய இசையொடு சிவணிய நரம் பின் மறைய என்மனார் புலவர்' எனும் வரிகளால் பாடலில் ஒலிநீள்வது அளபெடை எழுத்துக்களுக்கும் இசைக்கும் இடையேயுள்ள தொடர்பினை நன்கு விளக்குகின்றார்.
சங்க இலக்கியங்களிலிருந்து பண்டைத் தமிழர்கள் ஒலியை ஏழாகப் பகுத்து முறைப்படுத்தி, அவற்றை ஏழிசை யென அழைத்து, அவற்றில் பண்களை உருவாக்கினர். இவ் வகைச் சிறப்புமிக்க தமிழிசை உலக இசைக்கே அடிப் படையானது என்னும் கருத்து தற்போது வலுப்பெற்று வருகின்றது.
இந்நிலையில் எமதருமை நண்பர் எஸ். சிவானந்தராஜா அவர்கள் இசைநூல் கண்டிருப்பது போற்றுதலுக்கும் பாரா ட்டுதலுக்கும் உரியதாகும். இந்நூலில் இலக்கிய இசைபற்றி பல தலைப்புகளில் சிறப்பாக விளக்கியதோடு நூலின் அட் டையையும் நன்கு வடிவமைத்துள்ளார்.
அவர் பணி சிறக்க எல்லாம் வல்ல ஆடல்வல்லானை இறைஞ்சி வாழ்த்துகின்றேன்.
பண்ணிசைக்கலாநிதி, சங்கீதவிததுவான்
பேராசிரியர் எஸ். கே. சிவபாலன் M. A., Ph, ),
இசைப்பேராசிரியர் - அண்ணாமலைப் பல்கலைக்கழகம் முன்னாள் விரிவுரையாளர் -தமிழ்நாடு அரசு இசைக்கல்லுாரி 09 - 09 - 1999
W

அணிந்துரை
நம் தமிழ் முன்னோர்களான நாகர்களே நாகரிகத் தின் தந்தையர்கள். நாகர்களது கலாசாரமே நாகரிகம் ஆயிற்று. அவர் பாடிய பண் பாடல்கள் பண்பாட்டின் மூலம் ஆயிற்று.
உலகிற் காணும் நாகரிக வளர்ச்சிகளதும் பண்பாட்டு வளர்ச்சிகளதும் மூலபுருஷர்கள் நாகர்களே, அவர் தம்மி னத்தின் பண்களை வளர்த்தவர்கள். பாணர் மிடற்றுப்பா ணர், யாழ்ப்பாணர், குழற்பாணர்முழவுப்பாணர் என வகை யுறுவர். இன்று காணும் இசைத்தமிழ் நூல்களில் முதன் மையாகக் கர்ணப்படுவது பரிபாடல். பரிபாடலை யாத்த வர்களும் இசை அமைத்தவர்களும் மேற்கூறப்பட்டவர்களாக விளங்குதல் காண்போம். - •
இலக்கியம் சுட்டும் இசை முன்னோடிகளான இவர் சு ளை வைத்தே நமது இசைவரலாறு, பண்பாடு, நாகரிகம்
சங்க இலக்கியம் சுட்டும் முல்லை, குறிஞ்சி, பாலை இசை மாண்பை நிறுத்துமாறு முல்லைப்பாட்டு, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை போன்ற நூல்களின் தலைப்பு கள் புராதன இசையைச் சுட்டுவதும் பெரும்பாணாற்றுப் படை சிறுபாணாற்றுப்படை, முதலாம் நூல்கள் பேரியாழ் சீறியாழ் முதலாம் யாழ்களது சிறப்பைக் காட்டுவதும் சங்க இசைகளின் அடிநாதம் எனலாம்.
அன்றியும் சங்ககா லத்தில் விளங்கிய பண்களான ஆம் பல், காஞ்சி, காமரம், குறிஞ்சி, செவ்வழி, நைவளம் பஞ்சுரம், படுமலை, பாலை, மருதம், விளரியுள் காஞ்சி
V l

Page 7
தவிர்ந்த ஏனையவை இன்றுவரை நம்மாற் காப்பாற்றறுப் பட்டு வருவதும் நமது கலைப்பண்பாட்டுக்குக் கிடைத்த வெற்றி என்றே கருதலாம்.
சங்கீத கலாவித்தகர் எஸ். சிவானந்தராஜா அவர்கள் சங்க இலக்கிய இசைப்பொழிலுக்குள் புகுந்து இசைத்தேனி யாகப் பலவிடயங்களை நமக்குத் தேனிசைக்கூடாக்கித் தருகின்றார். அவை இலக்கிய இசைச்சாரல் என்னும் பெயரில் இசையார்வலர்களின் நுகர்ச்சிக்காக நூலுருவில் வெளிவருகின்றது. இலக்கியங்களில் காணும் இசைபற்றிய நுண்ணறிவைப் பெறும் இசைமாணவருக்கு இவை வழித் துணை நலம் தரும்.
அன்பர் இசைக்குழவி சிவானந்தராஜா இன்னும்பல நூல்களை இசைமாணவருக்குப் பயன்படுமாறு ஆக்கித்தர வேண்டும் என எல்லாம் வல்ல பார்வதி சமேத பரமேஸ் வரப்பெருமானது திருவடிகளை வழுத்துவதுடன் இவரின் இசை ஆய்வின் ஆர்வத்தை நன்கு பாராட்டுகின்றேன்.
"கலையின்பமே நிலையின்பமாம் இசைக்
கவியின்பமே அமுதின்பமாம்,
வாழ்க!
நா. வி. மு. நலரத்தினம்.M. Mas Philே
மூத்த விரிவுரையாளர், தலைவர், இசைத்துறை, 0 - 09 - 1999 யாழ். பல்கலைக்கழகம், இலங்கை
8

நயந்துரை
‘தெய்வநலம் ஐந்தூற்றால் சிறந்தெழும்
கருத்துணர்ந்து தெளிந்து தேர்தல் தொய்வில் பெரும் உணர்வாற்றல் சூழ்
கருத்திற்கு உருவொடு சொல் தோற்றுவித்தல் செய்யநற் சொல் கலையினொடு சிந்ததனி இன்னிசையமைப்பு சேர்த்திவற்றை மெய்யிணைத்துப் பிணைத்தல் ஐந்தும்
கவிதையினொடுசேர இசைநலம் விளங்கச் செய்யும்
6raši ஆகவேதான் மேற்கூறிய கவிதைக்கு இலக்கியமாகத் திருமுறைகள், திருப்புகழ், ஆழ்வார்பாடல்கள், சங்கீத மும் மணிகள் மற்றும் கோபாலகிருஷ்ணபாரதியார், பாபநாசஞ் சிவன் போன்றோரது சாகித்தியங்கள் விளங்குகின்றன.
இன்றைய நவீன இசை உருப்படிகள், திரையிசை உருப் படிகள் அவைதோன்றிய சின்னாட்களுக்குள் அவை அழிந்து விடுகின்றன.
‘இலக்கிய இசைச்சாரல் பற்றி நண்பர் சங்கீதகலாவித்த கர் சிற்றம்பலம் சிவானந்தராஜா ஆதாரபூர்வமாகப் பல இலக்கியங்களிலும் அமைந்த இசைச்சிறப்பம்சங்களைப் பற்றி எழுதித்தந்துள்ளார் சங்க இலக்கியங்களிலிருந்தும் ஆதாரம் காட்டியுள்ளார்.
இசையாய்வுகளில் ஈடுபட்டுள்ளோர்களுக்கு இந்நூல் பெரிதும் பயன் தரும் .
அநேகமாக இலக்கிய இசை, பக்திச்சுவை திருவன. அவை எக்காலத்திற்கும் பெருத்தாமானவை. ܀܀
IX

Page 8
இசையின் நோக்கம் அறிவுக்கும் இதயத்திற்கும் ( Rmotions) இன்பமூட்டுவது. இசையில் நடனப்பிரிவு நாடகப்பிரிவுகட்கு எழுத்தாளர் காட்டியுள்ள இலக்கிய ஆதாரங்கள் குறிப்பிடத்தக்கவை.
நடனத்திற்குரிய பதங்களில்தான் இலக்கிய இசையின் உச்சநிலை இன்பம் எமக்குத் தெரிய வருகின்றது.
தமிழோடு இசைபாடல் மறந்தறியேன்" என்கிறார் நாயனார். சங்கீதத்துடன் சாகித்தியம் சேரும்போதுதான் சங்கீதம் பூரணத்துவம் அடைகிறது. "பண் என்னாம் பாடற்கியைபின்றேல் என்பர்.
இலக்கியம், இசை ரஸனையைப் பற்றியும் சொல்கின் றது. இரசிகர்கட்கு அது அமுதமானது. உணர்ச்சி ஊ. டப் பெறுவதே இசையால் நாம் பெறக்கூடிய பிரதான இன்பமாகும். புல்லாங்குழல், வீணை, நாகசுரஇசை உணர்ச் சியை எழுப்புவது.
சங்கீதம் ஒசை நயத்திலே - இசை வெள்ளத்திலே மக் களை லயிக்கச் செய்வது. 3
இலக்கியமின்றி இலக்கணம் இன்றே
எள்ளின்றாயின் எண்ணெயு மின்றே
எள்ளினின் றெண்ணெய் எடுப்பதுபோல
இலக்கியத்தினின் றெடுப்பதாகும் இலக்கணம்' என்றனர்.
சென்ற பலநூற்றாண்டுக் காலமாக மக்கள்மத்தியிலும் சரி பாடசாலைகளிலும் சரி, பொதுவாக இசைத்திறனாய்வு செயல்முறைத் திறனாய்வாகவே - பயிற்சி முறையாகவே நடந்து வருகின்றது. -
நண்பர் எழுதும் "இந்த இலக்கிய இசைச்சாரல்’ ஆய்வு வுக் கட்டுரை மேற்படி குறைகளை நீக்கி . முழுநிறைவான
X.

இலக்கணம் நிரம்பிய இலக்கிய இசையை அறிந்து கொள் ளப் பெரிதும் உதவும்.
கிராமிய இலக்கிய இசைகளான உழவர்பாட்டு, தண் னிர் இறைத்தல், அரிவுவெட்டு, கிளிக்கண்ணி, வில்லுப் பாட்டு, நலுங்கு. தாலாட்டு. ஒப்பாரி - லாலி ஆதியன மக் களது அன்றாட வாழ்க்கையில் பாடப்படுகின்றன. இவ்வித இலக்கிய இ சைகளும் ஒரளவு இலக்கணம் நிறைந்தவை கேட்பதற்கு மிகவும் ரம்யமாக இருக்கும்,
கருநாடக இசை வரலாற்று இலக்கியங்கள் சமஸ்கிரு தம் தெலுங்கு இரண்டு மொழிகளிலும் இருந்து வந்துள்ளன.
ககுநாடக சங்கீதத்திற்கு முன்பு தமிழில் இசை இலக் கியகள் இருந்து வந்தன.
பழைய தமிழிசை இலக்கியங்களாக இசைநுணுக்கம், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, சிலப்பதிகாரம் ஆகியவை இருந்தன.
கர்நாடக சங்கீதத்திற்கு முன்பு தமிழில் இலக்கியங் கள் இருந்து வந்தன.
பழைய தமிழிசை இலக்கியங்களாக இசைநுணுக்கம் பத்துப்பாட்டு இந்திரகாளீயம் எட்டுத்தொகை பரத சேனாபதியம் சிலப்பதிகாரம் என்பன இருந்தன. பரிபாடலின் 22 பாடல்களுக்கும் பண்வகுத்தவர்கள்
கண்னக்கனார் நல்லச்சுதனார் கேசவனார் பெட்டன்நாகனார் நந்தாகர் மருத்துவன் நல்லச்சுதனார்
X.

Page 9
நாகனார்
பித்தாமத்தார்
இளங்கோவடிகள் பாடிய கானல்வரி - குன்றக்குர வை வேட்டுவவரி ஆச்சியர் குரவை போற்றத்தக்கன. சிலப் பதிகாரம் அரங்கேற்றக்காதையில் இசைபற்றிச் சொல் லப்படுகிறது. இலக்கிய இசை இவ்வாறாகத் தமிழிசைக் காலம் செங்கோலோச்சிய காலம் திரு பிவந்துள்ளது.
தமிழிசை, நாயக்கர் அரசுபுரிந்த காலம் வழக்கொழிந்து வேற்று மொழியில் இசைத்தது. இசைஇலக்கியம் மொழி யை ஒட்டியே இருந்தது எமது பழையமுறைப் புராண படனம் இதை உறுதிப்படுத்துகின்றது.
இலக்கியஇசைக்கு பாவம் - ராகபாவம் - லயபாவம் அவசியம். ஒரே சமயத்தில் இலக்கியமும் சாகித்தியமும் அதற் குரிய சங்கீதத்துடன் வெளிவருவதே முறையான இலக்கிய
இசையாகும்.
தமிழிசையே இப்பொழுது உச்ச நிலையில் வழக்கலுள் ளது. சங்ககாலத் தமிழிசை மீண்டும் உருவாகக் காலம் மாறி வருகிறது இச்சந்தர்ப்பத்தில் நண்பர் திரு. சி, சிவா னந்தராஜாவின் இலக்கிய இசை ஆய்வுக்கட்டுரை வெளிவ ருவது மிகப் பொருத்தமாகும்.
நல்லூர், சங்கீத பூஷணம் யாழ்ப்பாணம், P சந்திரசேகரம், M. A.
XIII

பாராட்டுரை
சங்கீத கலா வித்தகரும் அரசுப்பணியிலிருந்து குறித்த வயது வரமுன்பே ஓய்வு பெற்றவருமான எஸ். சிவானந்த ராஜா அவர்கள் முத்தமிழ் வித்தகருமாவார் என்பதைத் தமிழ் கூறும் நல்லுலகிற்கு எடுத்துக் காட்டுவதாய் அவரு டைய இலக்கிய இசைச்சாரல்’ என்னும் நூல் விளங்கு கின்றது, அவர்தம் நுண்மாண் நுழைபுலமும் "மெய்வருத் தம் பாராது பசிநோக்காது கண்துஞ்சாது உழைக்கும் வினைத்திறமும் இந்த அரிய நூலாய் உருக்கொண்டுள் ளன என்பதற்கு ஐயம் இல்லை.
மலையின் உச்சியைத் தொடுவது செயற்கரும் செயல். வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவனே மலை உச்சியினை ஒத்த முதல் நூலினை ஆக்கவல்லவன். ஆனால் மலைச்சாரலிலே மணம் பரப்பிடும் எழில் மலர்களில் சென்றமர்ந்து தேன் மாந்தும் வண்டோ தானும் சுவைத்து தேன் கூட்டிலே சேமித்தும் வைத்துப் பிறர்க்கும் கைமாறு கருதாது உதவுகின்றது. இந்த வண்டு போல்வாருள் ஒரு வராய்ச் சிவானந்தராஜா அவர்களைக் கொள்வது சாலவும் பொருத்தமே. ஆசிரியர் பண்டு தொட்டு இன்றுவரை தமிழி சை சார்ந்த பல தகவல்களையும் அரிதின் முயன்று தொ குத்து "தமிழ் இசையியற் கலைக் களஞ்சியம் எனத்தகும் இலக்கிய இசைச்சாரல் நூலினை எமக்கு வழங்கியுள்ளார். இத்தகைய அரும் பெரும் பணியினை எவ்வளவு பாராட்டி ஒனும் அது தகும் . தமிழ்க்கலையுலகிற்குக் காலத்தாற்செய்த அரிய நன்றியாக கொள்ளத்தக்கவகையிலே இந் நூல் அமைந்துள்ளதெனலாம்.
Xl

Page 10
இசை, இலக்கியம் சுட்டும் இயற்கையிசை, இலக்கியம் தரும் இசையின் வியத்தகு பெருமை, மன்னர் வளர்த்த இசை, இலக்கியம் சுட்டும் பாணர், இலக்கியம் சுட்டும் இசைக்கருவிகள், இசையும் கூத்தும், தொகுப்புரை ஆகிய எட்டு இயல்களில் தமிழிசை சார்ந்த பல்வேறு விடயங்கு ளையும் இயன்ற அளவு முழுமை என்று கூறத்தக்க அளவு இலக்கியச் சான்றுகளுடன் ஆசிரியர் தந்துள்ளமை குறிப் பிடத்தக்கது.
மேற்கோள்களிளை அடுத்துச் சுருக்கமாக அவர் தந் துள்ள விளக்கங்கள் மிகவும் பயனுள்ளவை. தெளிவுக்கும் தெளிவு மூலம் பெறவேண்டிய அறிவிற்கும் அவை பெருந் துணை புரிகின்றன.
எடுத்துக் காட்டு ஒன்று பின்வருமாறு:
*நாடகத் தமிழின் பதினொரு ஆடல்களும் அசுரரைக் கொல்வதற்காக அமரராடிய கூத்துக்களாகும். இக் கூத்தி னை மாதவி ஆடினாள்,
*பதினொ ராடலும் பாட்டும் கொட்டும்"
(சிலம்பு / அரங்கேற்றுகாதை 14)
*பண்ணிசைக் கூத்துப் பதினொன்றும்-மண்ணின் மேற்
போக்கினாள் பூம்புகார்ப் பொற்றொடி மாதவி
(சிலம்பு அரங் 14 = உரை)
* கடைய மயிராணிக் கால்விந்தை கந்தன்
குடைதுடிமா லல்லியமற் கும்பம் - சுடர்விழியாற் பட்டமதன் கோடுதிருப் பாவையரன் பாணரங்கன் கொட்டியிவை காண்பதினோர் கூத்து’
(சிலம்பு / அரங் - வெணபா)
XIV

இப்பதினொராடலின் விளக்கம் சிலப்பதிகாரத்தில் தரப்பட்டுள்ளது (கடலாடுகாதை 42 - 66)
இவ்வாறே விளக்கம் சுருக்கமாகவும் மூலாதாரங்கள் பெருமளவிலும் தரப்பட்டுள்ளமை ஆய்வாளர்களின் துல்லிய ஆய்விற்கு ஆற்றுப்படுத்த வல்லது என்பது எனது கருத்து.
தொகுத்துக் கூறுவதாயின், தமிழிலக்கியப் பெருங்கட லிலே நுழைந்து சங்கப்புலவரிலிருந்து கவியரசு கண்ணதாசன் வரை தமிழிசைக்கு உறுதுணையாக, பலரது கூற்றுக்கள் வாயிலாக வெளிக்கொணர்ந்து நன்முத்துக்களாய் வழங்கி யுள்ள சங்கீத கலாவித்தகர் எஸ் சிவானந்தராஜா அவர் கள் தமிழிசைக்கலைஞர், ஆர்வலர், ஆய்வாளர், அனைவ ருக்கும் பயன்தரவல்ல எய்ப்பில் வைப்பாகத் தந்துள்ள அருங்கொடையே,
* இலக்கிய இசைச்சாரல்.
நூலாசிரியர்க்கு எனது மனங்கனிந்த வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் வழங்குவதில் பெருமகிழ்ச்சிபடை கின்றேன்
வித்துவான், க, சொக்கலிங்கம், எழ். ஏ.
(சொக்கன்)
செம்மணி வீதி, நாயன்மார்கட்டு, யாழ்ப்பாணம்
XV

Page 11
பொருளடக்கம்
1. இசை
பொது 0. நாதம் O3 கடவுள் வணக்கம் 0,5 Luger 11
2. இலக்கியம் சுட்டும் இயற்கையிசை 24 3. இலக்கியம் தரும் இசையின் வியத்தகு பெருமை 35 4 மன்னர் வளர்த்த இசை 52 5. இலக்கியம் சுட்டும் பாணர் 67 6. இலக்கியம் சுட்டும் இசைக்கருவிகள் 85
frtifugao. 607 89
யாழ் 89 வில்யாழ் 03 சீறியாழ் 104 பேரியாழ் 106 LD5uurb 108 சகோ டயர்ழ் 1 09 செங்கோட்டுயாழ் O பிறவகை யாழ்கள் 1 11 யாழும் வீணையும் 13 குழற்கருவிகள் 115 முரசங்கள் H 22
7. இசையும் கூத்தும் 30 8. தொகுப்புரை 148 9. உசாத் துணை நூல்கள் 154
XVI

இலக்கிய இசைச் சாரல்
1. இசை ་་
1. பொது 2. நாதம் 3. கடவுள் வணக்கம் 4. பண்
1. பொது
நாம் எமது செவியினால் கேட்டு உணரத்தக்க ஒலியணுத் திரட்சியே இசையாகும். இனிய யாழ், குழல், தண்ணுமை ஒலிக்க ஆடலுக்கிசைந்த பாடலே இசை வடிவமாகும்.
"யாழுங் குழலுஞ் சீரும் மிடறுந்
தாழ்குரல் தண்ணுமை ஆடலொ டிவற்றின் இசைந்த பாடல் இசையுடன் ' (சிலம்பு / அரங். 26-28)
முத்தமிழின் முதலாசிரியரான சிவபெருமானே முத்த மிழை அகத்திய மாமுனிவருக்கு உபதேசித்தான். முருகனி டம் தமிழின் இனிமையைக் கற்று அகத்தியம் என்னும் நூலை இயற்றி, தொல்காப்பியர் முதலாம் பன்னிரண்டு
மாணவர்கட்கும் உபதேசித்து, அகத்தியர் தமிழைத் தழைக் கச் செய்தார்.

Page 12
" தழற்புரை சுடர்க் கடவுடந்த தமிழ் தந்தான்" (கம்ப/அகத் 4) "ஆதியிற்றமிழ் நூலகத்தியற் குணர்த்திய மாதொருபாகன்"
(பழம் பாடல்)
"குறுமுனிக்குந் தமிழுரைக்குங் குமர" (திருப்புகழ்-அருணகிரிநாதர்) "சிவனை நிசர் பொதியவரை முனிவனக மகிழவிரு
செவிகுளிர இனியதமிழ் பகர்வோனே" (திருப்புகழ் - பொதி அருணகிரிநாதர்)
இறைவன் கலைவடிவமாகவும், கலைப்பொருளாகவும்,
கலையாசானாகவும் உள்ளான்.
"கலையாகிக் கலைஞானந் தானேயாகி" (நாவுக்கரசர்) "கலைகள் வந்திறைஞ்சுங் கழல்" (நாவுக்கரசர்) "கலைக்கெல்லாம் பொருளாய்" (சுந்தரர்)
இசைக்கு முதற் காரணராக இருக்கும் இறைவனைக் *" கானாதிகாரணர்' என ஆனாயநாயனார் புராணம்(38)
கூறும்.
இனிமை பொருந்திய இத் தெய்விக இசையானது வாழ்க்கைப் பெருநலத்தையும், வானுலகை வழங்கும் பண் பையும் தன்னகத்துக் கொண்டது. எம்மனத்தின் அழுக்கு நீங்கி ஒன்றாகும்படியான பேருணர்வைத் தந்து இசை விக்கும் தன்மையை இசை உண்டாக்கும். உள்ளம் புகுந்து மனத்திலும் அறிவிலும் அருளுணர்வைத தரும். இவ்விசை யைக் கேட்டபின்பும், அது மீண்டும் மீண்டும் ஒலித்து உடம் பையும், உள்ளத்தையும் அடிமை கொள்ளும். இதை உணர் ந்த நெஞ்சம் மெய்ம் மறந்து உருகி இசை வெள்ளத்தில் மிதக்கும். இவ்விசைக்கு ஈடாக உலகில் எதுவும் இல்லை. இவ்விசையில் ஈடுபாடு அதிகமானால் பாலைநிலங்கூடப் பண்பட்டு வளமடையும். (ஈரடிஇரு இசை. 1-10 உரை)
இசை என்ற சொல்லுக்கு, புகழ், பாட்டு, சொல் எனப் பலபொருள்கள் உண்டு. மேலும் அச் சொல்லுக்கு
2

கொளை, வரி, பாணி, கந்தருவம், பண் என்ற ஒரு பொரு ஞணர்த்தும் சொற்களும் உண்டு.
"cானம் கொளையே வருகந்தருவ கீதமிராகங்
கேயம் பாணி நாதமிசை பண் காமரம்' (பிங்கலம் 1374
அறிவியற் கலையான இசை அழகியற் கூறுகள் இணைந்து நுண்கலையாகவும், இலக்கிய மரபில் பண்பாட்டுக் கலை யாகவும் மிளிர்கின்றது.
2. நாதம்
இறைவன் நாத வடிவினன். உலகத் தோற்றத்துக்கு அதுவே காரணமாயும், ஆதியாகவும், உள்ளது. அந்த நா தத்தை உபாசித்திருப் பவர்களாலேயே இறைவனை அறிய முடியும்.
"நாதமே முக்கலை நாதம் மூவெழுத்து
நாதமே முக்குணம் நாதமே முப்பொருள் நாதமே மூவுலகாகி விரிந்து நாதமாம் பரத்தில் லயித்திருப்பாரே நாதம் பரத்தில் லயித்திடு மதனால் நாதம் அறிந்திடப் பரமும் அறியலாம்"
(அகவற்பாடல்)
*நாதங்கொள் வடிவாய் நின்ற நதிபொதி சடையர்" 'ஒசை ஒலியெல்லாம் ஆனாய் நீயே" (நாவுக்கரசர்)
இறைவனது நாத தத்துவத்தைப் பெரும்பறை பல காலும்பயின்றொலிக்க அவன் அவ்வடிவமாக உள்ளான்.
"வேத மொழியர் வெண்ணிற்றர் செம்மேனியா, நாதப் பறை யினர்" (அன்னைப்பத்து 1-1)
"நாதப் பெரும் பறை நவின்று கறங்கவும்'
(திருப்படைஎழுச்சி 108)

Page 13
தமிழர் முழங்கிய முழவோசை- குழலோசை என்பவற் றில் நாத ஒலியான “ஓம்’ ஒலிக்கும் உண்மையை உணர்ந் திருந்தனர்.
*கூடியதிண் முழவங் குழலோ மென்ன?
திருமந்திரம் 2730-1)
பத்துவிதமான நாத முழக்கத்தில் யாழ் - குழல் ஒன்று
கூடி வரும் நாதமே நிலையானது. அது ஒரு யோகக் காட்சியாகும்.
(உரை. திருமந்திரம் 2888)
வீணையின் நாதம் 'இன்பம் தரவல்லது. இறைவனின் திருவடிநீழலுக்கு இணையானது.
‘வீணை முரன்றெழுமோசையில் இன்பமிகுத்திடு மாகாதே’’
(திருப்படையாட்சி க6) "மாசில் வீணையும் . - ஈசன் எந்தை இணையடி நீழலே"
(திருநாவுக்கரசர்)
இறைவன் தனது பஞ்ச முகங்களினின்றும் ஏழிசையைப் பிறப்பிக்கின்றான்.
("நாத தனும் அனிசம்" - க்ருதி - சித்தரஞ்சனி-தியாகராஜர்)
வேத சொரூபியான சிறீசங்கரராலேயே ஏழிசையிலான சங்கீத வித்தை தோற்றுவிக்கப்பட்டது.
(“விதுலகு - க்ருதி - மாயாமாளவகெளளை - தியாகராஜர்)
இராகம் என்ற அமிர்த ரசத்தைப் பருகி நாதோபா சனை செய்ய, அந்த நாதமானது ஒங்காரமாகப் பரிண மித்து ஏழிசையாகிக் கானமாக அலங்கரிக்கப்படுகின்றது.
("இராகசுதா' - க்ருதி - மத்யூரத்வனி -தியாகராஜர்)
4

மூலாதாரத்தினின்றும் எழும் ஏழிசை நாதத்தைப் பக்தி யுடன் அநுபவிப்பதே மோட்சமாகும்.
(" ஸ்வாராகசுதா -க்ருதி - சங்கராபரணம் - தியாகராஜர் )
தும்புரு - நாரதர் முதலிய கான வல்லுநர்கள் யாழ்மீட்டி மதுரமாகப் பாடி நாதோபாசனை செய்கின்றனர்
ஆத்மா உணரக்கூடிய இசைஞானத்தைப் பிரமன்
தலையில் எழுதினாலே நாதோ பாசனை மூலம் சீவன் முத்தியடையலாம்.
( "சீதாவர - தேவகாந்தாரி - தியாகராஜர் )
3. கடவுள் வணக்கம்
பரங்குன்றத்து முருகனை வணங்க மலர் ஏற்றி, அவியூட்டி, பாட்டுடன் கிணை யொலி எழுப்பினர் (பரி,8/80 - 82(உரை)
நம் முன்னோர் யாழிசை மீட்டி இசையுடன் புலவர் பாட்டொலிக்க அகில் சந்தன தூபத்துடன் வணங்கினர்.
"புரியுறு நரம்பும் இயலும் புணர்ந்து சுருதியும் பூவும் நீருங் கூடி எரியுறு ககிலொ டாரமுங் கமழும்"
இனிய சீர் அமைந்த தாளத்திற்கு முருகன் புகழ்பாடி வேலன் வெறியாடுவான் " (அக. 98-16 -19 உரை)
ரோகிணி நட்சத்திரம கூடிய ஒரு திருமண நாளன்று தமது மனையை அழகுபடுத்தி மணமுரசு ஒலிக்கப் பண்டைத் தமிழர் கடவுள் வழிபாடு செயதனர்.
'கடிநகர் புனைந்து கடவுட்பேணி படுமண முழவொடு பரூஉப் பணையிமிழ வதுவை மண்ணிய மகளிர் விதுப்புற்று"
(ሓሣ$• 186/ 6-8)

Page 14
இனிய இசை தன்னிடத்தே பொருந்திய முறுக்கிய நரம்பின் கட்டுடைய பண் முற்றுப் பெற்ற வளைவான கோட்டை யுடைய நல்ல யாழை மகளிர் சுமக்க, பண்ணமை முழவம், பதலை எனப் பிறவாச்சியங்களை மூங்கிற் கணுக்களில் அறுத் துச் செய்யப்பட்ட காவுதடியிற் கட்டியுள்ள ஆடற்றுறை வாச்சியங்களைப் பைகளிற் கட்டிய இளையவர்கள் முழவு முதலியவற்றை வாசித்துக் கடவுளை வாழ்த்துவர்.
(பதிற்றுப்பத்து உரை 41/1-6)
தெய்வங்களுடைய சாரலில், இனிய தாளத்தில் கின்ன ரம் என்னும் பறவைகள் பாடும்
"இன்சீர்க் கின்னரம் முரலும் அணங்குடை சாரல்"
(பெரும்பா 493-4) யாழிசை வண்டார்ப்ப பூக்களை நாழியிடத்தே கொண்டு சென்ற நெல்லுடனே தூவிப் பெருமுதுபெண்டிர் வணங்கினர்
* யாழிசையின வண்டார்ப்ப நெல்லொடு நாழி கொண்ட நறுவீ முல்லை யரும்பவி ழலரி தூஉய்க் கைதொழுது (முல்லைப்பாட்டு 8 -1 )
திருமாலை வாழ்த்தி, கரியதண்டினையுடைய இனிய யாழை வாசித்தனர்.
"அவ்வயின் அருந்திறல் கடவுள் வாழ்த்கிநுங் கருங்கோட் டின்னிய மியக்கினிர் கழிமின்"
பெரும்பாணாற்றுப்படை 390-92)
ஒருதாய் தன் முதற் பிள்ளைப் பேற்றின் பின் அத்தாயும் சேயும் நோய்- துன்பம் அணுகாது இருக்க, நீராடிய பின் தெய்வத்தை வேண்டிச் சுற்றஞ் சூழ யாழில் செவ்வழிப் பண் ணிசைத்து குரல் நரம்பும் கூடிய இசையில் ஒத்திசைக்க
6

முழவும் சிறுபறையும் சேர்ந்தொலிக்கக் கடவுளைவனங்
கியபின் மகளிரின் குரவைக் கூத்துடன் ஏனைய கூத்துக்
களையும் ஆடினர்.
(மதுரைக் காஞ்சி உரை. 602-10)
கடவுளை வணங்கும் கோவில்களில் தெய்விகமான ஏழிசை யுடன் இசைக்கருவிகள் ஒலிக்க வேதங்கள் இசைக் கப்படும்
ஒதல் அந்தணர் வேதம் பாடச்
சீர் இனிது கொண்டுநரம்பு இனிது இயக்கி யாழோர் மருதம் பண்ண' (மதுரை, 656-58 )
"வேத மோ டேழிசை பாடுவர்" (சம்பந்தர் - "மாதர்மட) "குழலொலி யாழொலி சுத்தொலி" சேந்தனார் -திருப்பல்லாண்டு) "ஏதமில் தண்ணுமை எக்கம் மத்தளி யாழ் குழல் முழவ மோடிசை திசைசெழுமிக் கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்"
(தொண்டரடிப்பெnடியாழ்வாா)
முருகனுக்கும் பிற தெய்வங்கட்கும் திருநாள் கொண் டாடுகையில் மகளிரின் ஆடலுக் கேற்பக் குழ - யாழ் முரசங்கள் ஒலித்தன. (பட்டின உரை 155-8)
குறமகள் வெறியாட்டு, வழிபாட்டில் குறிஞ்சிப் பண் பாடி, இசைக்கருவிகள் முழக்கினர். குறவர் தொண்டகப் பறையை முழக்கினர் (திருமுரு உரை 239 - 42)
கோடும் மணியும் ஒலிக்க குறமகள் வேல் கொண்டு வெறி யாட்டுச் செய்ய வீடுகள் தோறும் மகளிர் குரவையாடுவர். (மதுரை. 611-15 உரை)
நன்னனது கரிய பக்க மலையிலே அதிசயம் நெருங்கின இனிய யாழுடன் ஆடும் மகளிர் குறிஞ்சிப் பண்பாடி வழி
7

Page 15
பட, நீவிர் தெய்வங்களைக் கைதொழுது "எம்குறை முடித் தால் இவை தருவேன்’ எனக் கடன் பூண்டு வாழ்த்துவீர்.
". இன் குரல் விறலியர், நறுங்கார் அடுக்கத்து, குறிஞ்சி பாடி கைதொழு உப்பரவி பழிச்சினிர் கழிமின்"
(மலைபடு. 358. 60)
இசை வடிவமாகவுள்ள உமைபங்கனை, நாம் எண்ணிய கருமம் முடிந்தாலும் முடியாவிட்டாலும் குளத்தில் நீராடித் தாமரை மலர் கொண்டு மனத்தில் இருத்தி ஐந்தெழுத்தோ தித் தொழுதலே புண்ணியமாகும்.
“பண்ணிய விசுையின் படிவமாந் தெரிவை பங்கனை"
(மகாபாரதம் / செளப்திக. 6)
இறைவன் பண்ணாகவும் பண்ணின் இசையாகவும், பண்ணின் பயனாகவும் உள்ளான்.
"பண்ணும் பதமேழும்" (சம்பந்தர்) "பண்ணின் இசையாகி நின்றாய் போற்றி" (நாவுக்கரசர்) "ஏழிசையாய் இசைப் பயனாய்" (சுந்தரர்) *தென்னன் தமிழும் இசையுங் கலந்த சிற்றம் பலம்"
(திருவாலியமுதனார்) "ஏழினில் ஏழாய்" (திருமூலர்) "பண்ணும் இன்னிசையும் (திருவிளையாடற் புராணம்
இசைபட இசைதரு ஆதிதோற்றமும்" (அருணகிரிநாதர்)
கந்தர்வகளான கம்பளர் - அசுவதரர் இருவரும் இறைவனின் காதுகளில் குண்டல வடிவினராகி, இசைபாடி இடையறாது இறைவனை மகிழ்விப்பர்.
தோடுவார் செவியிலுாட்டுந் தொண்டு, (திருவிளை, 13. ) சீறியாழ் மதுரப் பாடற்குத் தோடுவார்காதும் "
(மதுரைக்கலம்பகம்) இறைவன் சாமகானத்தைப் பெரிதும் விரும்புவான் "சாம வேதம் பெரிதுகப்பானை" (சுந்தரர்- திங்கள் தங்கிய)
8

இறைவனது நீலமணி மிடற்றிடத்தே சாமவேத கீதம் இருந்ததை சீவக சிந்தாமணி (2038) பின்வருமாறு கூறும்.
"மணி மிடற்றிடைக் கிடந்த சாம கீதம்"
அகங்காரங் கொண்ட இராவணன் கைலாய மலையை எடுக்க முயன்றபோது, அதன் கீழ் அகப்பட்டான். அப் பொழுது ச.மகானஞ் செய்தான். விளரிப்பண் இசைத் தான். தனது கை, தலையாலான வீணையில் நாற்பெரும் பண்களையும் இசைத்துப் பாடி, தனது முக்கோடி வாழ்
நாளையும் சந்திரகாசம் என்னும் வாளையும் பெற்றான்.
"சைநரம்பால் வேதகீதங்கள் பாடப் படுத்தவன்"
(சுந்தரர் - "கடுத்தவன்") "பாடலின் இன்னிசை கேட்டு கோலவாளொடு நாளது கொடுத்த"
(சுந்தரர் - "அறிவினால்" "கைநரம்பால் வேதகீதங்கள் பாடக் கொடுத்தனர் கொற்ற வானாள்'" (நாவக்கரசர் - எடுத்தனன்")
"வெள் ைமலைக் கீழிருந்து விளரிபாடும் இராவணன்" 'ஆடினான் புகழ் அங்கை நரம்பினால் நாடி நாற்பண்ணும் நயப் புற" (கம்ப/ ஊர்தேடு. 178)
அரம்பையர்கள்,
தம் மனைகளில் உறையும் தெய்வத்தைப் போற்றித் தாளமிட்டு, மங்கல கீதம் பாடி, மலர்தூவி வழிபட முரச ங்களும் ஒலிக்கும்.
"சங்கொடு சிலம்பு நூலும் பாதசா லக முந் தாழப் பொங்குபன் முரசமார்ப்ப இல்லுறை தெய்வம் போற்றி கொங்கலர் கூந்தற்செவ்வாய் அரம்பையர் பாணி கொட்டி மங்கல கீதம் பாட மலர் பலி வகுக்கின்றாரை'
( கம்ப/ ஊர்தேடு, 115

Page 16
கண்டக் கருவியை யாழாகப் பாவித்து நாம் வணங்கு வோம்.
"யாழாய் மிடற்றால் வணங்குதும் யாமென்பார்"
(மூவருலா / இராச 216)
சீர்காழி திருஞானசம்பந்தரின் திருமண நாளன்று பல வகை இசைக்கருவிகள் ஒலிக்க, மறையொலி - மங்கல வாழ்த் தொலியும் சேர்ந்தொலிக்க அவர் இறைவனை வழி
ul LTri.
(பெரியபுராணம் திருஞான 1199-1240 உரை)
தும்புரு - நாரதர் இருவரும் யாழேந்தி, இசைமீட்டிப் பாட இறைவன் ஆடுகின்றான்.
"நாரத தும்பூர் கீதமோத நின்றேயாடும்"
(அருணகிரிநாதர் - *வாருமிங்கே") யாழிசையும், குரலிசையும் ஒன்றிய தெய்விககானத் தைக் கேட்க கின்னர மிதுன இசைப்பறவைகள் வானத்தில் வட்டமிடும். ஏழிசையில் வல்ல கந் தரவர்- வித்தியாதரர் வந்து இவ்விசையைக் கேட்டுத் தாமும் பாடிக் களித்தனர் . (பெரியபுராணம் திருஞான, 136 உரை)
இவவாறான இசையினால் இறைவன் புகழ்பாடி மகிழ் வதே இன்பம். அவ்விசையக் கற்பதற்கு இறையருள் வேண்டும்.
"தமிழோடிசை பாடல் மறந்தறியேன்" (நாவுக்கரசர்-சலம்பூவொடு) "பண்களி கூர்தரு பாடலொ டாடல்
பயின்றிடு. மாகாதே’, (மணிவாசகர் - கண்களிரண்டு "இசைபயில் சடாட்ச ரமதாலே இகபர செளபாக்ய மருள்வாயே" (அருணகிரிநாதர்) சுபாடும் பணியே பணியா யருள்வாய்" "பண்ணும் பரதமும் கல்வியும் தீருசொற் பனுவலும்யான் எண்ணும் பொழு தெளிதெய்த நல்காய்" (குமரகுருபரர்).
10

கலைவாணியானவள் யாழில் ஏழிசையைத் தந்து மறைகளைப் பாடும் துடியிடையாள்,
"துள்ளுமொரு நாத முகிழ் யாழுடை நரம்புதற துங்கமுற ஏழி னோசை தூண்டுதரவல்லி தமி ழாடு மறைபாடுங்குயில்"
(காஞ்சிகாமாட்சி பி. தமிழ், )
இறைவன், இசை பொருந்திய வேதமாகிய குதிரையை உடையவன்.
"இசை மருவு ஆரணங் குதிரை யாரை" (மறைசையந்தாதி - 1)
4. ш6іот
இயற்றமிழிற்கு எழுத்து, சொல், பொருள் என மூன்று உறுப்புக்ளிருப்பதுபோல் இசைத்தமிழிற்கு இசை, பண், நிறம் என மூன்று உறுப்புக்கள் உண்டு பண்ணைத் தோற்றுவிக்கும் பாடல்கள் ‘பாட்டின் பொருளையும், இயல்பையும் உடையன என்பதை " பாட்டிடைக் கலந்த பொருளவாகிப், டாட்டினியல பண்ணத்தியே’ என தொல் காப்பியம் சொல்லும். தமிழ்ப் பண்களை "யாழின் பகுதி' எனவும், இசைநூலை ‘நரம்பின் மறை" எனவும் தொல்காப் பியம் கூறும் யாழினை நிலைக்களனாகக் கொண்டே, பண்களும் வகுக்கப்பட்டன
சிலப்பதிகாரத்தில் ஆதி இசைகள் 1 1991 பற்றியும் பண்கள் 103 பற்றியும் அரங்கேற்றுக்காதையிற் கூறப் படுகின்றன. (சிலம்பு, உரை 45)
இவ்விசைகள் அகம் - புறம் - அருகு - பெருகு பிரிவு நான்கிலும்
பாலையாழில் 15 12 இசைகளும் அந்தரப்பாலையாழில் 600 இசைகளும் குறிஞ்சியாழில் 3448 இசைகளும் மருதயாழில் 233 6 இசைகளும் நெய்தல் யாழில் 2888 இசைகளும்

Page 17
விளரியாழில் 600 இசைகளும் சிறுவிளரியாழில் 600 , சேர்ந்து
*** --==লক করুa=অ=
மொத்தம் 11984 இசைகளாகிற்று.
மேலும்,
1984 ஆதி இசைகளுடன் ஏழிசையும் சேர்ந்து 11991 ஆதி இசைகளாகிறது.
ஏழிசைக்குமுரிய தமிழ்ப் பெயர்கள் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் ஆகும். இவ்வி 3Ꮘ) ᏪᎨᏪ56ir முறையே ஆ~ ஈ- ஊ - ஏ - ஐ - ஓ - ஒள என்னும் ஏழு
எழுத்துக்களாலும் அழைக்கபபட்டன. இன்று இவ்வே ழிசையும் ச. ரி- க - ம - ப -த - நி என அழைக்கப்படுகின்றது, ( சிலம்பு, அரங். உரை, 69 )
ஆ ஈ ஊ ஏ ஐ ஒ ஒள எனும்
இவ் வேழெழுத்தும் ஏழிசைக்குரிய" (திவாகரம்)
பண்கள் நான்காகும், ஏழு சுரமும் அமையப் பெறுவது -பண். ஆறு சுரங்கள் அமையப் பெறுவது பண்ணியற்றிறம். ஐந்து சுரங்கள் அமையப் பெறுவது திறம் நான்கு சுரங்கள் அமையப் பெறுவது-திறத் திறம் ஆகும்
பண்முதலிய நான்கையும் பண் - திறம் என இரண்டா கவும்அடக்கிக் கூறுவர். (சிலம்/புறஞ், 110| 2உரை)
இசைப்புகல் பண், பண்ணியல், திறம், திறத்திறம் என நான்காகும் எனப்பெரியபுராணம் (ஆனாயபுராணம், 262 உரை) கூறும்
பண் - திறம் இரண்டையும் திவாகரம்
12

"நிறைநரம் பிற்றே பண்ணென லாகும்" "குறை நரம் பிற்றே திறமெனப் படுமே" எனக் கூறும்
தமிழில், ஜந்திணைக்குமுரிய பண்கள் குறிஞ்சியாழ், பாலை யாழ், முல்லை யாழ், நெய்தல்யாழ், மருதயாழ் என் பன. இவற்றுள் நெய்தல் யாழுக்கு விளரி என்றும் பெயர் உண்டு, இது திறனில் யாழ் ஆகும். எனவே திறங்களுடைய
ஏனைய நான்கும் பெரும் பண்கள் எனப்படும்.
(சிலமயு|அரங். உரை 69 )
ஏழு நரம்பிற் பிறக்கும் நாற்பெரும் பண்கள்
*தாரத் துழை தோன்றப் பாலையாழ் தண்குரல் ஒருமுழை தோன்றக் குறிஞ்சியாழ் - நேரே இளி குரலிற் றோன்ற மருதயா துத்தம் இளியிற் பிறக்கநெய்த லியாழ் (சிலம் / ஆய்ச்சி உரை.
இந்நாற் பெரும் பண்கள் பற்றி திவாகரம்
* யாமயாழ்ப் பெயர் குறிஞ்சியாழும் "செவ்வழியாழ்ப் பெயர் (ypã60. Gv - numrph
பாலையாழும் மருதயாமுமென நால்வகையாழும் - நாற்பெரும்
பண்ணே" எனவும்
நாற் பெரும் பண்களும், அவற்றின் திறங்கள் பற்றிப் பிங்கலம்.
"ஈரிருபண்ணும் எழுமூன்று திறமும்" எனவும் கூறும்
மேலும் நால்வகைப் பண்களை
"பாலை குறிஞ்சி மருதஞ் செவ்வழியென
நால்வகைப் பண்ணா நவின்றனர் புலவர்" என்றார் வாய்ப்பியனார்.
13

Page 18
இந் நால்வகைப் பண்களுக்குமுரிய திறங்கள் 21 ஆகும்
பண் திறம் பெயர் பாலையாழ்:- (5) அராகம், நேர்திறம், உறுப்பு
குறுங்கலி, ஆசான் 2. குறிஞ்சியாழ். (8) நைவளம், காந்தாரம், படுமலை
மருள், மெய், பஞ்சுரம், அயிர்ப்பு, ஆற்றுச் செந்நிறம் மருதயாழ்:- (4) நவிர், படு, குறிஞ்சி, பியந்தை செவ்வழியாழ்:- (4) நேர்திறம், பெயர்திறம்,
சாதாரி, முல்லை
I
மேற்படி நாற்பெரும் பண்ணும் 21 திறங்களாகி, அவை ஒவ்வொன்றும் அகநிலை - புறநிலை - அருகியல் - பெருகியல் என நான்கு பிரிவுகளாக (4 x 21) 84 பண்களா கும். இவற்றுடன் தாரப்பண்டிறம், பையுள்காஞ்சி, படு மலை மூன்றும், பெரும் பண்கள் பதினாறும் சேர்ந்து (84+3 + 16) 103 பண்கள் ஆயின.
(சிலம்/அரங். உரை 69)
இவற்றுள் காலநேர அடிப்படையில், நாம் 28 பண்க ளையே கொள்கின்றோம்.
பகற்பண்கள் 14, இராப்பண்கள் 11, பொதுப்பண்கள் 3
நிற శ్రీl
பகற்பண்கள் இராப்பண்கள் பொதுப்பண்கள்
புறநீர்மை தக்கராகம் செவ்வழி காந்தாரம் பழந்தக்கராகம் செந்துருத்தி பியந்தைக்காந்தாரம் சீகாமரம் திருத்தாண்டகம் கெளசிகம் கொல்லி
இந்திளம் கொல்லிக்கெளவாணம்
திருக்குறுந்தொகை திருநேரிசை
4

தக்கேசி திருவிருத்தம் நட்டராகம் வியாழக்குறிஞ்சி சாதாரி - மேகராகக்குறிஞ்சி நட்டபாடை அந்தாளிக்குறிஞ்சி பழம்பஞ்சுரம்
காந்தாரபஞ்சமம்
Lu(GháF LDub
யாழ்முரி
தமிழர் தம் வாழ்வில்
விடியற்காலையில் மருதப்பண்ணும்
மாலையில் செவ்வழிப்பண்ணும் நண்பகலில் பாலைப்பண்ணும் நடுயாமத்தில் குறிஞ்சிப்பண்ணும் இசைத்தனர்
முல்லை நிலமக்கள் முல்லைப்பண்ணையும்
இடையர் ஆம்பற் பண்ணையும் இசைப்பர்,
மருதநிலத்துக்குரிய பண் காமரம் எனவும்
பாணலப் பண்ணின் கிளையாக நைவளப் பண்ணும் அமைத்தனர்,
(உமாபதிசிவாச்சாரியாரின் திருமுறை கண்ட புரா ணத்தில் திருமுறை வகுத்த விபரங்கள் 25- S9பாடல்களிலும் பண்கள் வகுத்த விபரங்கள் 31 - 34 பாடல்களிலும் பண்களுக்கான கட்டளை விபரங்கள் 35 - 45 பாடல்
களிலும் தரப்படடுள்ளன )
இலக்ககியங்களில் காணப்படும் சில பண் பற்றிய பாடல் அடிகள் .
5

Page 19
1. மருதப் பண்
*மருதம் பண்ணி யசையினிர் கழிமின்" (மலைபடு 470) மருதம் பண்ணிய கருங்கோட்டுச் சீறியாழ்' ( LD GOp vu(t), 534 ) சீர் இனிது கொண்டு, நரம்பினிது இயக்கி யாழோர் மருதம்
பண்ண" (மதுரைக், 657-8) "யாழோர் மருதத்து இன்னரமபுரள" (மணிமே, 5-135)
2. குறிஞ்சிப் பண்
"குறிஞ்சி பாடுமின் நறும் புகை எடுமின்" (சிலம்பு/குன்ற, 18) "குறத்தியர் பாடிய குறிஞ்சிப் பாணியும் (சிலம்பு/நீர்ப்படை,224) அம் தீங் குறிஞ்சி யகவன் மகளிர்" (சிலம்பு/நடுகற். 35) நறும்புகை எடுத்துக் குறிஞ்சி பாடி" (திருமுருகாற்று. 24 ) *வில்யா ழிசைக்கும் விரலெறி குறிஞ்சி" (பெரும்பா. 182) "குழல்செய் வண்டினங் குறிஞ்சியாழ் முரல்
வன குறிஞ்சி" (பெரியபு/திருக்குறிப்பு 10)
3. செவ்வழிப் பண்
"தீந்தொடை பையுள் நல்வழி செவ்வழி பிறப்ப" (அகநா. 314)
"சீறியாழ் செவ்வழி பண்ணி வந்ததை (புறநா. 147-2) "சீறியாழ் செவ்வழி பண்ணி யாழநின்" (புறநா. 144-2) "திவவு மெய்ந் நிறுத்து செவ்வழி பண்ணி" (மதுரைத் 604)
* பாலை யாழொடு செவ்வழி பண்கொள, மாலை
வானவர் வந்து வழிபடும்" (திருநாவுக்கரசர்)
4. விளரிப் பண்
"விளரி யுறுதருந் தீந்தொடை" (புறநா. 260-2)
விளரிப்பண் கண்ணினார் பாணனார் களிறெறிந்து வீழ்ந்தார்க்கு" (புறப்பொருள். 137)
*நுளையர் விளரி நொடிதருந் தீம்பாலை" (சிலம்பு/கானல், 48) *அளிதேர் விளரி ஒலி நின்ற பூம்பொழில்" (நீத்தல்விண்ணப்பம்10) *வெள்ளி மலைக்கீழ்க் கிடந்து விளரிபாடும் இராவணன்"
16

5. காந்தாரம்
காந்தாரம் இசையமைத்துக் காரிகையார் பண்பாட"
(திருஞ*னசம்பந்தர் )
6. சீகாமரம்
* காமரு தும்பி காமரம் செப்பும்" (சிறுபாணாற்று, 77
7. IIT 606)
விரல்கவர் பேரிய ழ் பாலை பண்ணி" (பதிற்று. 57-8)
8. நைவளம்
"நைவளம் பழுநிய நயந்தெரி பாலை" (சிறுபாணாற்று, 36)
* நைவளம் பழுநிய பாலை வல்லோன்" (குறிஞ்கி.146) *நைவளம் தெரிந்த வேமநாதனும் விறகு" (பெரிய. / விறகு 26)
செய்யுள் இலக்கணத்தில் வெண்பா முதலிய பாக் களுக்குப் பண்ணையும் , வெண்டாழிசை முதலிய இனங்க ளுக்குதிறங்களையும் உவமையாகக் கூறியுள்ளனர்.
பண்ணுந் திறமும்போற் பாவு மினமுமாய்
வண்ண விகற்ப வகைமையால்-டன்ணின்
திறம்விளரிக் கில்லதுபோற் செப்ப லகவல்
இசைமருட்கு மில்லை யினம்”
பண் எனப்படும் இசைக்குரிய பாடல்களின் கால அள வை உணர்த்தும் கிரியை பாணி (தாளம்) ஆகும். இதற் குரிய நான்கு அங்கங்கள்
கொட்டு - அமுக்குதல் - அரைமாத்திரை II அசை - தாக்கியெழுதல் - ஒரு மாத்திரை
17

Page 20
11 தூக்கு - தாக்கித்தூக்குதல் - இரண்டுமாத்திரை IV அளவு - காலம் - மூன்று மாத்திரை
இந்நான்கு அங்கங்களும் "க "எ" "உ" "ஃ" என்னும் வடிவங்களையுடைய இடுகுறிகளாகும்.
"கொட்டும் அசையுந் தூக்கும் அளவும்
ஒட்டப் புணர்ப்பது பாணி யாகும்"
"ககரங் கொட்டே எகரம் அசையே உகரத் தூக்கே அளவே யாய்தம்"
தூக்குக்கள் 7 வகை:-
செந்துாக்கு, மதலைத்தூக்கு, துணிபுத்துக்கு, கோயிற் றுரக்கு, நிவப்புத்தூக்கு, கழற்றுாக்கு நெடுந்தூக்கு,
பாணியின் நடை 4 வகை,
முதல்நடை - விளம்பம், வாரம் - மத்திமம் 68) - GoÖ) - - துரிதம் திரள் = அதிதுரிதம்.
தமிழிசையில் ஏழிசைப்பிறப்பைக் கூறும் பாடல்கள்
1. "தாரத்துட் டோன்றும் உழையுழை யுட்டோன்றும் ஒருங் குரல்குரலி னுட்டோன்றிச் - சேருமிளி யுட்டோன்றுந் துத் தத்துட் டோன்றும் விளரியுட் கைக்கிளை தோன்றும் பிறப்பு? (சிலம்/அரங், 69 உரை)
2. "தாரத்து ஞழையும் உழையுட் குரலும்
குரலு விளியும் இளியுட் டுத்தமும் துத்தத்துள் விளரியும் விளரியுட் கைக்கிளையும் தம்மிற் பிறக்குந் தகுதிய வென்ப? (பிங்கலம் 1411 }
18

காந்தாரத் தைந்தாய்க் கனிந்த நிஷாதமெழும் செய்ய நிஷாதச் செழுஞ்சுரத்தின் பஞ்சமமே வையம் புகழுகின ற மத்திமமாம் மத்திமத்திற்கு அஞ்சாஞ் சுரமாம் அணிசட்ஜம் சட்ஜத்தின் பஞ்சமமே பஞ்சமமாம் பன்னு ரிஷபமதற்கு அஞ்ச ஞ் சுரமாய் அடையும் அணிரிஷபத் தெஞ்சாத பஞ்சமமாய் எய்திநிற்குந் தைவதமே தைவதத்திற்  ைஎந் தாய்த் தனித்த காந் தாரமெழும் இவ்வகையே ஏழாகி இன்னிசையாழ் தீங்குழலில் '
('நீரரமகளிர்" - யாழ்நூல்)
ஒரு ஸ்தாயியில் ஏழு சுரங்கள் உருவாகி 12 சுரநிலை களையடைவதைத் 'தொன்றுபடுமுறை' என அழைத்தனர். இதேபோல் கோள்கள் செல்லும் ஒரு வட்டத்தை 12கூறுக ளாக்கி அதில் 7 நரம்புகளும் நிற்கும் 12 சுரநிலைகளை சோதிடத்துக்காதாரமான 12 இராசி மண்டலங்களுடன் ஒப்பிட்டனர்.
பாட்டானது இசையுடன் ஒன்றி எமது மிடறாகிய சாரீர வீணையில் நெஞ்சு, மிடறு, நாக்கு, மூக்கு, அண் ணாக்கு, உதடு, பல், தலை என்ற எட்டு உறுப்புக்
களாலும்,
எடுத்தல், படுத்தல், நலிதல், கம்பிதம், குடிலம், ஒலி உருட்டு, தாக்கு என்ற எட்டுக் கிரியைகளாலும் உருவெ டுத்து நிறை நரம்புகளுடைய பண்ணாக அமையும்.
* பாவோ டணைதல் இசையென்றார் பண்ணென்றார் மேவார் பெருந்தானம் எட்ட லும் - பாவாய் எடுத்தல் முதலா யிருநான்கும் பண்ணிப்
படுத்தமையாற் பண்ணென்று பார்."
19

Page 21
ஆம். பாட்டும் பண்ணும் எமது உடலும் உயிரும் போன்றன. பாடல் இன்றிப் பண்ணின் பயன் நிறைவுறாது. பொருளும் சுவையும் வெளிப்படாது. இதனைப்
* hண்ணேன்னாம் படி டற்கியைபின்றேல் கண்ணென்னாம்
கண்ணோட்ட மில்லாத கண்" என்றார் திருவள்ளுவர்.
பண்ணானது ஒருபாடலுக்கு அவசியமானது போன்று தாள வோசையால் அளவிட்டுப்பண்ணுடன் பாடாத பாடல் இன்பந்தராது என்பதை
"கொட்டி யளந்தமையாப் பாடலும் என நல்லாத னார் தமது திரிகடுகம், என்னும் நூலின் 37 வது பாடலில் குறிப்பிடுகின்றார்.
செல்வத்துள்ளே தலையாய செல்வம் "செவிச் செல் வமே' எனக்கூறும் (குறள், 411) வள்ளுவர், அச்செவி யுணவாகிய கேள்வியுடையவர் தேவர்கட் கொப்பானவர் எவுைம் (குறள். 413 ), அக்கேள்விச் சுவையை உணராத வர் உயிருடன் வாழ்ந்தும் பயனில்லை எனவும் (குறள் 420 ) கூறுவர்.
செல்வமே நோக்காக வாழ்ந்தாலும் தெளிவான சிந்தை யை நோக்கமாகக் கொண்டு வாழ்ந்தாலும் (குறள் 374) செவிச் செல்வமுடையவர்கள் இசை ஓசையை, ஒலிவடிவில் இறைவனாக உணரமுடியும். எனவேதான் கலையின் பெரு மையை நம் முன்னோர்கள் போற்றிவாழ்ந்தார்கள்.
மக்கள் நிலத்துக்குரிய வேறுபண்களை அல்லது கால த்துக்குமாறான பண்களைப் புறநடையாகப் பாடியமையும்
20

காணப்படுகின்றது. பொதுவாக நிலம் காலம் என்பவற் றிற்கு ஏற்பவே பண் இசைக்கப்படும்.
மாலைக்காலமாகியும் தனது தலைவன் வீடு திரும்ப வில்லை யெனத் துயருற்றிருக்கும் தலைவி ஒருத்தியிடம் பாணன் ஒருவன் சென்று 'தலைவனின் தேர் கண்டேன்" என, மாலைப் பண்ணாகிய செவ்வழி இசைத்து ஆறுதல், கூறுவது அகநானூற்றில் ( 4/12 21 ) கூறப்பட்டுள்ளது.
மாலையிற் செவ்வழிப்பண்ணும் காலையில் மருதப், பண்ணும் இசைத்தல் மரபாயிருக்க, மாறாகக் காலையிற். செவ்வழிப் பண்ணையும் மாலையில் மருதப் பண்ணையும், ஓரிசைப்பாணர் பாடியமை, நள்ளி என்னும் கொடையா, ளியின் பெருங்கொடை மயக்கத்தால் என்று வன்பரணர், சமாதானம் கூறினார்.
*நள்ளி வாழியோ நள்ளி நள்ளென் மாலை மருதம் பண்ணிக் காலைக் கைவழி மருங்கிற் செவ்வழி பண்ணி வரவெமர் மறந்தன ரது நீ புரவுக்கடன் பூண்ட வண்மை யானே
{ புறந னுாறு . 149/1-6)
நெய்தல் நிலத்துப் பரதவர் குறிஞ்சிப்பண் பாடுவதும், முல் லைக்குரிய கானவர் மருதப் பண்பாடுவதும் அவர்களின் நிலத் தில் விளையும் பொருட்களை வாங்குவதன் சிறப்பேயன்றோ?
"குறிஞ்சி பரதவர் பஈட. கானவர் மருதம் பாட" (பொருநராற்று.218 - 20)
தேனுண்ட மயக்கத்திலே வண்டுகள் மருதப் பண்ணி ற்குப் பதில் காலையில் செவ்வழிப் பண் பாடின,
21

Page 22
"குயிலினம் வதுவை செய்யக் கொம்பிடைக் குளிக்கும் மஞ்ஞை அயில்விழி மகளிர் ஆடும் அரங்கினுக்கு அழகு செய்யப் பயில் சிறை அரச அன்னம் பன் மலர்ப் பள்ளி நின்றும்
துயில் எழத் தும்பி காலைச் செவ்வழி முரல்வ சோலை"
தேவாரப் பாடல்களும், நாலாயிரந் திவ்ய பிரபந்தப் பாசுரங்கள் மற்றும் அருட்பாடல்களும் பண்ணுடனேயே பாடப்பட்டு வந்தன.
“காந்தாரம் இசையமைத்துக் காரிகையார் பண்பாட" சம்பந்தர் "தமிழோடிசை பாடல் மறந்தறியேன்" - நாவுக் ரசர் "நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தனுக்கு" - சுந்தரர் "கோதை இன்னிசையால் சொன்ன மாலை" - ஆண்டாள் "பண் பல பாடி பல்லாண்டிசைப்ப" - பெரியாழ்வார் "குலசேகரன் இன்னிசையில் மேவி" - குலசேகராழ்வாரி
'இசைபயில் சடாட்சரமதாலே
இகபர செளபாக்ய மருள்வாயே" - அருணகிரிநாதரி
'ஆளத்தி" என்பது இசையானது பாவுடன் அணை யாத நிலையில் ‘தென்னா - தெனா" என இசைக்கப்படும் செயலாகும்.
இசைப்பாட்டானது தாளவொழுங்குக்கமைய எழுத்துசீர் - அடி - பொருள் ஒழுங்குகட்கமைய இசைக்கப்படும். பாடலானது இசையுடன் அணைந்த நிலையில் அப்பாட் டின் எழுத்தோசைகளுடன் இசைந்து வரும். இதைப் "பண் ஆளத்தி’ என்று சொல்வர்.
மகர ஒலியினின்றும் இசையெழுப்ப அ, இ, உ, எ, ஒ குற்றெழுத்துக்களாலும், ஆ, ஈ, ஊ, ஏ, ஓ நெட்டெழுத் துக்களாலும் ஏழு சுரநிலைகளில் நிறுத்தி இயங்கச் செய்தல் ஆளத்தியின் இயல்பாகும். குற்றெழுத்துக்களின் அடிப்
22

படையில் எழும் இசையியக்கம் *காட்டாளத்தி? என்றும்
நெட்டெழுத்துக்கள் அடிப்படையில் எழும் இசையினியக்
கம் 'நிறவாளத்தி’ என்றும் அழைக்கப்படும்.
(சிலம் / அரங், 26 உரை)
எனவே நல்லதொரு இசைப்புலவன் ஆளத்தி வைத்த பண்ணிர்மையை அறிந்து, தனது தளரா முறையால் தாளச் சீரிற்கேற்பக் கவி இயற்றுவான்.
"இசையோன் வக்கிரித் திட்டத்தை யுணர்ந்து
அசையா மரபின் அதுபட வைத் து" (சிலம் அரங்/ 41 - 2)
இன்று கோயில்களில் நாள்தோறும் நடைபெறும் வழி பாட்டில் வேதமானது உதாத்தம் - அனுதாத்தம் - சுவரி தம் என மூன்று நிலைகளில் ஒதப்படுகிறது. முற்றிலும் இசையினாலான சாமவேதம் வேள்விகளிலும் யாகங்களி லும் இசையறிவு மிக்கவர்களாலேயே ஓதப்படுகின்றது. இறைவனுக்குரிய 16 உபசாரங்களில் கீதம் - வாத்தியம் நிருத்தம் இடம் பெறுவதும், ஆசீர்வாதத்தின்போது இரா கங்களால் கூறுவதும் உண்டு. மங்கள இசை நவசந்திக் குரிய பண் - தாளம் - இராகம் - நிருத்தம் - வாத்தியம் என் பன இசைக்கப்படுவதுடன் திருப்பள்ளி எழுச்சி, ஊஞ்சல், பஞ்சபுராணம், புராணபடனம் எனப் பலவாறாக இறை வனை இசையின் வடிவமாக ஏத்தியும் வழிபடுவர்.
எமது முன்னோர் இசைவடிவான இறைவனை இசையி னால் வழிபாடியற்றினர் நாதத்தின் உட்பொருளை அறிந்து குரல், குழல், நரம்புக்கருவிகளால் இசைவடிவங்களை உண் டாக்கினர். தமிழ் உயிரெழுத்துக்களுக்கும் தமிழிசைக்கு உரிய எழுத்துக்களுக்கும் உள்ள தொடர்பை உருவாக்கினர்,
23

Page 23
பண்வகைகளை உருவாக்கி, பாடலுடன் ஒன்றத் தாளத் துடன் பொருந்தும் இலக்கணங்களை வகுத்தனர், இப்பண் முறைகளை வாழ்க்கையில் கடவுள்வழிபாட்டிற்கும், காரிய நிறைவேற்றங்கட்கும் பயன்படுத்தி இன்புற்றனர்.
2. இலக்கியம் சுட்டும் இயற்கையிசை
இயற்கையோடிசைந்த வாழ்வை நம் முன்னோர்கள் தமது பண்பாட்டு வாயிலாக அமைத்தனர். இயற்கை அன்னையின் நிலஇயல்புகளுக்கேற்ப விலங்குகள் வண்டுகள் பறவைகள், மரங்கள், செடிகள் கூட வேறு படுகின்றன. குறிப்பிட்ட ஒரு நிலஇயல்புகளுக்கமைவாக வாழும் உயிரி னங்களின் ஒலிகளின் நுட்பத்தை அறிந்து அவர்கள் அவற் றின் பண்புகளையும், ஒழுங்கான ஒலிவடிவத்தின் பெயர் களையும் குறிப்பிட்டனர்; இவற்றிற்கு ஏழிசையோசைகள் என ஒலி வடிவம் கொடுத்தனர்.
வண்டு, சுரும்பு, தும்பி என்ற வண்டினங்களிலே வண் டானது யாழொலிபோல் பாடும். தும்பியினமோ பாட் டொலியுடன் தாளமும் ஒத்திசைக்கப்பாடும் மிDறு இனமோ குழல் இசைபோல ஒலி தருவன எனவே வண்டினங்கள் பண்பாடி யாழ் - குழல் ஒலிகளைத் தந்து, தரும் இசை வடிவத்தை நாம் ஒர்ந்து கவனிக்கவேண்டும். முல்லை நில மானது இசைக்கேற்ற இயல்புகள் பலவற்றையும் கொண் டது. எனவேதான் குழல் - யாழ் இசைக்கருவிகள் தோன்ற அந்நிலம் காரணமாக இருந்தது.
பாலையிசையானது இயற்கையாகவும் தொன்மையாக) வும் வந்ததாகும். இயற்கையின் ஆடல் பாடல் இசையில் பாலையிசையைக் கண்டார்கள்.
24

வண்டினங்கள் பூவை ஊதி இசைபாடுவதைப் புலவர் ஒருவர் நோக்குகின்றார். யாழிசையைப் போலப் பாடு ம் வண்டினங்களின் பாடலிசையின் பொருள் தெரியவில்லை. ஆனால் தாளத்திற்கேற்பவும் பாடும் வண்டின் இசைக்கேற் பவும் சிறகை விரித்தாடும் போது உழை குரலாக வரும் அரும்பாலையிசையான மருதப்பண் எனக் காண்கிறார் புலவர்.
பூவூது வண்டினம் யாழ்கொண்ட கொளை கேண்மின் கொளைப்பொரு டெரிதரக் கொளுத்தாமற் குரல்கொண்ட கிளைக்குற்ற வுழைச்சுரும் பின் கேழ்கெழுபாலை யிசையோர்மின் பண்கண்டு திறனெய்தாப் பண்டாளம் பெறப் பாடிக் கொண்டவின் னிசைத் தாளங் கொளைசீர்க்கும் விரித்தாடும் தண்டும்பி யினங்காண்மின் ??
(பரிபாடல். 11 / 125-130
வண்டினம் யாழிசையை ஒத்த இசையைத்தர விரல் செறிந்து விடும் வங்கியத்தின் துளைகளினின்றும் எழும் இசையைப் போன்று தும்பியினம் குழலிசையைத் தந்து மலர்கள் விரிய, நீல ஆலவட்டம் விரித்தாற் போன்று இள மயிலானது தனது இரண்டு இறக்கையையும் விரித்து ஆட முழவின் தாளத்துக்கு ஒலிக்கும் ஒலிபோன்ற அருவியின் இசையும் ஒருங்கு ஒலித்து இன்பத்தைத் தரும்.
** இசைபடு பக்க மிருபாலுங் கோலி
விடுபொறி மஞ்ஞை பெயர்ப்புட னாட விரல்செறி தூம்பின் விடுதுனைக் கேற்ப முரல்குரற் றும்பி யவிழ்மல ரூத யாணர் வண்டினம் யாழிசை பிறக்கப் பாணி முழவிசை யருவிநீர் ததும்ப ஒருங்கு பரந்தவை யெல்லா மொலிக்கும்." W
(பரிபாடல் 21:31-38)
25

Page 24
ஒரு கூட்டிசையிலே இசைபாடுநர், நரம்புக்கருவியாளர், ஆடலரிவையர் சேர்ந்து ஒரு குன்றின் கண்ணே இன்பம் தருவது போன்று குயிலும், வண்டுகளும், மயிலும் ஒப்பு நோக்கி இயற்கையின் ஒலிப்பண்பை நிலைநாட்டுகின்றன.
*" நறவுண் வண்டாய் நரம்புளர்நரும்
சிகைமயிலாய்த் தோகைவிரித் தாடுநரும்
கோகுலமாய்க் கூவுநரும்'
(பரிப ட்ல் 9/63-65)
மயிலானது அகவும் ஒலியானது எதிரொலியாகக் கேட் கும் போது தாளஒலியும், முழவொலியும் சேர்ந்து ஒலிப் பது போற் கேட்கும். குயிலின் கூவுதல், குழலொலியும் மிடற்றுப் பாடலும் எதிரொலியாக கேட்கும். இங்கு குயில் கூவுதலும், மயில் அகவுதலும் எதிரொலியாகக் குழலும் தாளமும் ஒருபுறமும்; மிடற்றுப் பாடலும், முழவோசையும் மறுபுறமும் எதிர்த்தாற் போன்றதாகும்.
"" மடமயிலகவ
குருகிலை யுதிரக் குயிலினங் கூவப் பகர்குழல் பாண்டி லியம்ப வகவுநிகர்
நா நவில் பாடன் முழவதிர்ந் தன்ன. "
(பரி 15 40-43)
வண்டும் தும்பியும் யாழும் குழலும் போன்று இயற்கை இசை பரப்பிற்று. அருவிநீர் பாய்ந்தோடும் இசை, முழவி னிசை போன்று ஒலித்தது. அங்கு இவ்விசைகளுக்கேற்பப் பாடினியின் பாலையிசையுடைய மிடற்றுப்பாடலும், சீருக் இசைய ஆடும் மயிலினது குரலும் ஒலித்தது. பாடல் விறலி யரின் நுடக்கமானது, பூங்கொடியின் நுடக்கத்தைப்
போன்றதாக இருந்தது.
26

" ஒருதிறம் டாணர் யாழின் நீங்குரலெழ ஒருதிறம் யாணர் வண்டி னிமிரிசையெழ ஒருதிறம் கண்ணார் குழலின் கரைபெழ ஒருதிறம் பண்ணார் தும்பி பரந்திசை யூத ஒருதிறம் மண்ணார் முழவி னிசை யெழ ஒருதிறம் அண்ண னெடுவரை யருவீநீர் ததும்ப ஒருதிறம் பாடனல் விறலிய ரொல்குபு நுடங்க ஒருதிறம் வாடை யுளர்வயிற் பூங்கொடி நுடங்க ஒருதிறம் பாடினி முரலும் பாலையங் குரலின் நீடுகிளர் கிழமை நிறைகுறை தோன்ற ஒருதிறம் ஆடுசீர் மஞ்ஞை யரிகுர றோன்ற (பரிபாடல் 1719-19)
அசையும் மூங்கிலில், வண்டுகளால் துளைக்கப்பட்ட துளைகளிலே தென்றற் காற்று பாய்ந்து குழலிசையாகப் பரிணமிக்கின்றது. ஓடிவரும் அருவி நீரின் ஒலி முழவொலி யாகவும், கலை மான்களின் தாழ ஒலிக்கும் குரல் பெருவங்கி யமாகவும் மலைச்சாரலின்கண் ஒலிக்கும் வண்டொலி யானது யாழிசையாகவும் ஒலிக்கின்றன. இக்கூட்டிசை இன்பத்தை மந்திகள் வியப்புற்றுக் கேட்கும். இவ்விசைக் கேற்ப, பக்கயலைகளில் ஆடும் மயில்கள், களத்தில் புகுந் தாடும் விறலியர் போலத் தோற்றமளிக்கும்
*" ஆடமைக் குயின்ற அவிர்துளை மருங்கில்
கோடை யவ்வளி குழலிசை யாகப் பாடின் அருவிப் பனிநீர் இன்னிசைத் தோடமை முழவின் துதை குரலாகக் கணக்கலை இகுக்கும் கடுங்குரல் தூம்பொடு மலைப்பூஞ் சாரல் வண்டியா ழாக
இன்பல் இமிழிசை கேட்டுக் கவிசிறந்து மந்தி நல்லவை மருள்வன நோக்கக் கழைவளர் அடுக்கத் தியலியா டும்மயில் நனவுப்புகு விறலியில் தோன்றும் நாடன்"
(அகநானூறு82/1-10)
27

Page 25
--~ஆடமைத் தும்பி குயின்ற சிகலா வந்துளை கோடை முகத்தலின் நீர்க்கியங் கினநிரைப் பின்றை வார்கோல் ஆய்க்குழற் பாணியின் ஐதுவந் திசைக்கும்"
அகநானூறு 225) இளவேனிற் காலத்தே ஆற்றங்கரையினில் பூங்கொத் துக்கள் நிறைந்த சோலையில், புகை போன்ற வெண் மேகங் *ள் தவழ அவ்வின்பத்தை துகரும் குயிலின் குரலோ சையைக் கேட்பவர்களின் கண்கள் நீரைப் பெருக்கும். ( அகநானுரறு. 97/ 16 -23 உரை )
நீண்ட கால்களையுடைய நாரையின் ஒசையும், வளைந்த அன்றிற் பறவையின் ஒசையும், காட்டில் உள்ள பெண் மயில்அகவும் ஒசையும் ஊதுகொம்பின் (வயிர்) ஒசையைப் போன்றன.
"தடந்தாள் நாரை,செறிமடை வயிரிற் பிளிற்றி"
(அகநானூறு 40/14-15) * கானமஞ்ஞைக் கமஞ்சூன் மாப்பெடை
அயிரியாற் றடைகரை வயிரின்நரலும்" (அக. 177/10.12) "ஏங்கு வயிரிசைய கொடுவாயன்றி லோங்கிடும் பெண்ணைவயகமடலக" ( குறிஞ்சி.29-20)
புள்ளிகளையும் வரிகளையுமுடைய வானம் Lust 19-U பறவைகள் பாடும்.
"பொறிவரி வானம் வாழ்த்திப்பாடவும்" (அக.67-11-2)
உழையின் ஒலிக்கீடாகக் கூகையின் கூவல் ஒலிக்கும். 'உழைக்குரற் கூகை அழைப்ப" (புற.261-12)
28

யானயிைன் ஒலி தாரஇசைக்கீடானது. அது பறையினது ஓசையைச் செவி தாழ்த்திக் கேட்கும்.
'யானை நெடுநகர் வரைப்பிற் படுமுழாவோர்க்கும்"
(புற 68/16-17)
பெரிய களிற்றினடி போல, ஒருகண்ணுடை பெரிய பறை தோன்றும்
*பெருங்களிற் றடியிற் றோன்று மொருகண் இரும்பறை"
(புற. 263 / 1 -2 )
'வன்கா" என்ற பெண்பறவை தனது ஆண் துணையைக் காணாது ஒலிப்பது குழலோசை போன்றது.
(குறுந், 151 1-8உரை)
மலர்கள் குறித்த காலத்தில் மலர்ந்து பொழுதை அறி விப்பதால் "போது’ எனப்படும். வரிவண்டுகளின் இசையில் மொட்டுகள் மலரும்.
"வண்டு போது அவிழ்க்கும்" (அக.74-8)
"புதலும் வண்டூத வாய் நெகிழ்ந்தனவே" குறுந் 26011-2)
"சுரும்பு செவ்வழிப்பாண் செயக் கொன்றைப்பொன் சொரிவ"
( திருவிளை, நாட்டு.39) 'வண்டு வாய் திறப்பு நெடுநிலாவிரிந்த வெண்கோட்டு மல்லிகை ( சிலம்பு.{மனையறம் 32-33
யாழ் ஒலி செய்யும் வண்டின் கொளைக்கேற்ப வாழை.
தென்னை அருகில் நின்று மயில்கள் நடனமிடும்.
"யாழ் வண்டின் கொளைக் கேற்பக் கலவம்விரித்த படமஞ்ஞை" (பொருநர், 208 . 12)
29

Page 26
முரசங்களின் முழக்கங்களை இயற்கை ஒலிகளான இடிமுழக்கம், கடல்ஒலி, அருவியொலி, மழை, பறவையொலி கிழநரியின்ஒலி என்பவற்றிற்கு ஒப்பிடுவர்.
"முழங்கு கடல் முழவின் முசிறிஅன்ன" (புற. 343-10)
*இடியிசை முரசமொடு" (பதிற்று. 66 -4) "கொல்வா யோசி முழவாக" (s; 65. 119-1) "இமிழிசையருவி யொடு இன்னியங்கறங்க" (திருமுரு 241) "புள்வாய் முரசமொடு” (சிலம்.அந்திமாலை 77) "மண்ணுறு முரசின் மழையி னார்ப்ப" (கம்ப. அயோத்தி 4)
வண்டினங்களின் ஒலிகளை யாழ் ஒலிக்கும், வேய்ங்குழ லொலிக்கும், சுருதியொலிக்கும், இன்னிசைப்பண் செய்யும் ஒலிக்கும் ஒப்பிடுவர்
(அ) யாழொலியை ஒத்த வண்டினம்
"பாணர் கையது பண்புடைச் சீறியாழ்
யாணர் வண்டின் இம்மென இமிரும்" (நற்றிணை) "மழலைவண்டின் யாழ் செய்ய" மணி4-4) பொங்கர் வண்டினம் யாழ் செய்ய' (Lp 53of 19-58) பயிலிளந்தாமரை பல்வண்டு யாழ் செய" (சிலம். நீர்ப்படை294 வரிய சிறை வண்டி யாழ்செய" (சுந்தரர்/கரிய கறை') வண்டினம் க லை யாழ்செய" (புறப்பொருள். 318) யாழிசை கொண்டவின வண் டிமிர்ந்தார்ப்ப" (கலித்.131/9/
(ஆ) வேய்ங்குழலிசையை ஒத்த வண்டினம் ஏழ்புழை யைம்புழை யாழிசை ஈேழ்த்தென்னவினம் வீழ்தும்பி வண்டொடு மிஞ்றார்ப்ப" (பரி 8/*2. 3)
(இ)சுருதியா யொலிக்கும் வண்டினம்
முல்லை யாழொடு சுருதி வண்டலம்ப" (கல்லாடம்.1415)
30

(ஈ) இன்னிசைப் பண் செய்யும் வண்டினம்
"பாண்செய் வண்டு நேர்திறம் பாட சிலம்பு./அந்திமாலை .75) 'மதுகரம் ஞமிறொடு வண்டினம் பாட" (சிலம்பு. (காட்சி. 20) "செவ்வழிப் பண்ணிற் சிறைவண் டரற்றும்" (சிலம்பு (காடு.88) "வண்டு பண்செயு மாமலர்ப் பொழில்" சம்பந்தர்/பண்டுநால்") "பாணிகர் வன்டினம் பாட" (மணிவாசகர்/திருக்கோவை 183)
"காந்தாரஞ் செய்து களிவண்டு முரன்றுபாட' (சீவகசிந்தாமணி1657) "தும்பிகாலைச் செவ்வழி முரல்வ" (கம்பர் "குயிலினம்") "தேம்பிழி மகர யாழின் வண்டுகள் இனிதுபாட" (கம்பர்/"தண்டலை") "சாதாரி தேசி நாமக்ரியை முதல்
கோலால நாதகித மதுகர மடர்சோலை" (அருணகிரிநாதர் "பாதாள")
(உ)இளி என்னும் ஏழிசையின் ஒலியான வண்டினம் 'இஸ்ரீவாய் வண்டினொடு இன்னிள வேனிலொடு" சிலம்பு.இந்திர. 202 * இளிவாய்ப் பிரசம் யாழாக" (சீவகசிந்தாமணி2691)
ஆயன் ஒருவன் கரியதுளைகளாற் செய்யப்பட்ட குழலில்
பாலைப் பண்ணை யிசைத்தபின்னர், தனதுவில்யாழில் குறிஞ்சிப் பண்ணை வாசித்த ஒலிகேட்டு, அவ் விசையைத் தேன் வண்டுகள் தமது இசையெனச் செவிமடுக்கும்.
( பெரும்பாணாற்று. உரை. 180-83 )
இளியென்னும் ஒலியுடைய வண்டு யாழாகவும், கரியகண் தும்பியின் ஒலி குழலாகவும், களிக்கின்ற வாயுடைய குயில் களின் ஒலிமுழவாகவும் உடைய சோலையரங்கில் இளவேனில் ஆடலுக்கான இசை புரிந்தான். ( சீவக. 2691 உரை. )
சோலை வண்டினங்களின் யாழிசைக்கு குயில்கள் பாட அழகிய மயிலினங்கள் ஆடும். இக்காட்சியை மணப்பந்தரில் குழல்- யாழ் - குரல் இசைக்கான ஆட்டத்துடன் ஒப்பு நோக்கி மகிழ்ந்ததை மணிமேகலை (19 ( 57 - 60) கூறும்.
3

Page 27
மேலும் வண்டின கள் குழல் யாழ் ஒலிபரப்ப, ஆடும்மயிலின் அழகை மந்திஇரசிப்பதை (மணிமேகலை, 411-6) கூறும்,)
மிDற்றைப்பாணனாகவும், மழையைப் பறையாகவும் கொண்ட கூட்டிசைக்கு மயில்கள் தேகைவிரித்தாடும்
"பாணிள மிஞராக படுமழை பறையாக" (கம்ப, /அயோ, 705)
தேனைப் பருகிய ஆண்வண்டுகள், கண்விழித்தும் மயக்
கந்தீராமல், இசை பாடிச் செல்லும் பெண்வண்டினத்தின் பின்னே அவ்விசை பற்றிச் செல்லும்.
(கம்ப. /அயோத்தி கூடியநறை" உரை)
மருத அரசி வீற்றிருக்கும் சோலைகளான நடன
அரங்கிலே வண்டுகள் மகர யாழ் போன்றிசை பாட மேகங் கள் மத்தள மாக முழங்க மயில்கள் ஆடும். இவ்வின்பத்தை குவளை மலர்கள் கண்டு களிக்கின்றன.
" தண்டலை மயில்கள் ஆடத் தாமரை விளக் ம் தாங்கக் கொண்டல்கள் முழவின் ஏங்கக் குவளை கண்விளித்து நோக்க தெண்டிரை எழினி காட்ட தேம்பிழி மகர யாழின் வண்டுகள் இனிது பாட மருதம் வீற்றிருக்கும் மாதோ'
(கம்ப. / நாட்டுப்படலம்)
"இளி’ என்னும் ஏழிசையின் ஒலியை நாகணவாய்ப் பறவை கொண்டிருக்கும்.
"இளிக்கறையின் சொல் இயைந்தன பூவை (கம்ப/அயோமுகி37)
இவ்வாறு பறவை, விலங்குகள் என்பன நில இயல்பு களுக்கேற்பவும் பருவ காலங்களுக்கேற்பவும் வாழ்கின்றன. வண்டுகளும் அவ்வாறே வாழ்வதனால் இவற்றின் ஒலிகளின் அடிப்படைகளை அறிந்தனர். நீர் வளச்சூழ்நிலைக் கேற்ப இயற்கைவளமும், மக்களின் தொழில்களும் மாறுபடும்.
32

முல்லையும், குறிஞ்சியும் தமது இயல்புகள் கெட்டுப் பாலை நிலமாவதுண்டு எனச் சில ப் ப தி கா ர மும் (காடுகாண் உரை64-66), சீவகசிந்தாமணியும் (2106உரை), திருத்தொண்டர் பெரியபுராணமும் (திருக்குறிப்பு. 15) கூறும். எனவே ஏழிசையின் ஒலிகளை நிர்ணயிப்பதற்கு மயில், மாடு, ஆடு, கிளி, குயில், குதிரை, யானை, அன்னம் வண்டு, தேனு, தவளை, மான் எனச்சில குறிப்பிட்ட நில இயல்புகளுடைய உயிரினங்களை நம்முன்னோர், தெரிவு செய்தனர். சில தகவல்கள்பின்வருமாறு :-
நாரதர், மதங்கர் முதலிய பூர்வாச்சாரியர்கள் ஏழி சையோசைகளை முறையே மயில், ரிஷபம், ஆடு, கிரெளஞ் சம், கோகிலம், குதிரை, யானை, என்பன எழுப்பும் ஒலிக்கு ஈடாகக் கருதினார்கள் என சங்கீதஞான பூஷணி (ஸ்வர சப் தார்த்தம்) கூறுகின்றது (இவ் வோசைகளே எல்லோரா லும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. )
வண்டொடு கிள்ளை வாசி மதயானை தவளை தேனு ஒண்டிறல டென்றேழு மோது மேழிசையி லோசை'
(சூடாமணிநிகண்டு 10 391 -2)
சங்குகுயி லோடியானை மயில்வாம் புரவிப் பொங்கு புனலன்னம் புகைக்காடை -துங்கமாம் யாழிசையின் உட்பொருளைச் சொன்னார் இசைப்புலவோர் ஏழிசையும் என்றார் இவை" (பஞ்சமரபு)
வண்டு கிள்ளை வாசி மதயானை தவளை தேனுவாடே பூழிசையோசை" (திவாகரம்)
வேண்டிய வண்டும் மாண்தகுகிளியும் குதிரையும் யானையும் குயிலும் தேனுவும் ஆடும் என்றிவை ஏழிசை யோசை"
(பிங்கலந்தை)
93.

Page 28
பிரபந்த தீபிகையில் 'சங்கீத முறைமை கேள்" என்ற 50 ஆவது பாட்டில் "மயூரம், ரிஷபம், மேஷம், கிரெளஞ்சம் குயில், குதிரை, யானை" என ஏழிசையோசைகளைக்
குறிப்பிட்டுள்ளது.
"சம்பந்தர் தேவாரம்’-தருமபுர ஆதீன வெளியீட்டில் (290) திருவெழுக்கூற்றிருக்கை - எச்சனேழிசையோன், என்ற வரிக் கான அடிக்குறிப்பில் ஏழிசை யோசைகள், சங்கத்தொனி, பிளிறு, குதிரை, மான், மயில், கடல், றால் எனத்தரப்
பட்டுள்ளன.
மகாகவி பாரதியார் இவ்வேழிசை யோசைளின் உண்மைத் தன் மையை அனுபவித்து, இயற்கையிசையில் இன்பம் காண்கின்றார். ሓ
" கானப்பறவை கலகலவெனு மோசையிலும் காட்டுமரங் களிடைக் காட்டுமிசைகளிலும் ஆற்றுநீ ரோசை அருவி யொலியினிலும் நீலப்பெருங்கட லெந்நேரமுமே தானிசைக்கும் ஒலத்திடையே யுதிக்கு மிசையினிலும்"
(குயிலின்காதற் காதை)
சுவாமி விபுலாநந்தர் தமது யாழ் நூலில்-நீரர மகளிர் பகுதியில் இலங்கையின் மட்டக்களப்பு வாவியில் எழுந்த இன்னிசை நாத ஒலியைக் கேட்டுக்களிப்படைந்து “இவ்வற் புதத்தை என்னென்றுரைப்பேன்" என ஏழிசைப் பிறப்பைக் கூறுகின்றார்.நீருளிருந்து எழுந்த அரமகளிர் தமது ஏழிசைப் பெயர்களைக் கூறினார். அவர்களின் பாதிவடிவம் அரையின் கீழ் மீன்வடிவம் ஆகும். இந்நாதத்தை ஊரி பாடுதல் (சங்கினம்) என ஊர்மக்களும், Luit Gld Lisai (Singing fish)
என மேனாட்டாரும் சொல்வர்.
34,

ஆம் வண்டினங்களான வண்டும்தும்பியும் வரிக்கடைப் பிரசமும் யாழிசையைப் போல் நரம்பிசையையும் குழ லிசையாயும், பண்பாடும் ஒலியையும் கொண்டு இசை யைத்தர குயில்பாட, மயிலினம் தோகை விரித்தாட, பறவை அருவி, கடல், ஒலிகள் முரசங்களாயொலிக்க இளவேனியில் சோலையே ஒரு அரங்காகமிளிரும், கூட்டிசை யின்பத்தை ஒருங்கே அங்கு காணமுடியும்.
பறவைகளினதும் விலங்குகளினதும் ஒலிகளின் அடிப்படை யில் ஏழிசையோசைகளை நிர்ணயித்தனர், இயற்கையொலி களின் அடிப்படையிலேயே குழல், யாழ், பறைக் கருவிகளைச் செய்தனர், எமது குரலானது (வாய்), இயற்கையாகவே தந்திவாத்தியங்களின் அமைப்பை ஒத்தது
எமது குரலானது எமது கருத்துக்களையும் சொல்லி பிறருக்கு உணர்த்துவதால் வாத்தியங்களில் மேலானது எனக்கருதப் படுகின்றது.
எனவே இயற்கையின் ஒலிகளைக் கேட்டு, அதன் இசைக் கோலங்களை, எமது செயற்கையாலமைந்த கரு யிசைகளுடன் ஒப்பிட்டு மகிழ்வோம்.
3. இலக்கியம் தரும் இசையின்
வியத்தகு பெருமை
நமது முன்னோர் யாவரும் இசையறிவு மிக்கவர்களாக வாழ்ந்தனர். தமது வாழ்க்கையின் எல்லா நிகழ்வுகளுக்கும் இசையைப் பயன்படுத்தினர் இயற்கையின் ஒலிகளில் உள்ள நுட்பத்தையறிந்து தோல் துளை - நரம்பு-கஞ்சம் என நால் வகைக் கருவிகவிளைச் செய்தனர். அக்கருவிகளிலும், தமது குரலிலும் இசையைத் தோற்றுவிக்கும் கலைப்பண்பைப்
35

Page 29
பெற்று ஓரறிவுள்ள உயிர்கள் முதல் ஆறறிவுள்ள மனிதன் வரைஇசைக்கு இசையச் செய்தான். தனது எண்ணக் கருத் துக்களை வெளிப்படுத்தும் வகையில் பாடல்கள் மூலம் குரல்குழல்-யாழ் இசையின் துணையுடன் யாவரையும் தன்வசப்ப டுத்தினான். பாடலாகவும், ஆடலாகவும் இசைக்கருவிளுடன், ஒன்றி மக்களினதும், மன்னர்களினதும் உள்ளத்தைக் கவர்ந்து பாணராகவும், கூத்தராகவும், பெருமையுடன் வாழ்ந்தான். இயற்கையும், காதலும், வீரமும், தெய்வீக மும் இயலிசைப் புலவர்களால் போற்றப்பட்டன மன்னர் களும் கொடையாளிகளும், புலவர்களையும், பாவாணர் களையும், பாணர்களையும் தம்மாலான கெளரவத்தைக் கொடுத்து, அவர்களின் இலக்கிய இசையின் விளக்கங்ளைக் கேட்டு மகிழ்ந்தனர்.
"இசைக்குக் கல்லும் உருகும் என்பதற்குப் பல சான்று கள் உள.
அகத்திய மாமுனிவரும், தென்னாட்டையாண்ட இராவணனும் இசையில் வல்லவர்கள்,
* மன்னுமகத்தியன் யாழ்வாசிப்ப" என்ற திருக்கைலாய ஞான உலா அடியும்' ‘தமிழ்க்குன்றில் வாழுஞ் சடாதாரி பேர் யாழ்தழக்குந் திருக்கை’ என்ற (தக்க 539) அடியும் அகத்தியர் யாழ் வாசிப்பில் வல்லவர் என்பது தெரியவருகின்றன. இராவணனும் யாழ்வாசிப்பில் வல்லவர் என்பது கைலாய மலையில் அகப்பட்டு நாற்பெரும் பண்ணை வீணையி லிட்டு வாசித்து விடுபட்ட செய்தி மூலம் தெரியவருகின் ADğ5I •
தென்னாட்டையாண்ட இராவணன், பலருக்கும் துன்பம் செய்துவந்தான், அவனை அங்கிருந்தும் அகற்ற,
அகத்திய மாமுனிவர் இசைப்போரினால் அவனை வெற்றி கொள்ளத்தீர்மானித்தார். இருவரும் இதற்குச்
36

சம்மதித்து இசையால் வொதியமலைக் கல்லை உருக்குபவரே வென்றவர் என ஒப்புக்கொணடனர். அகத்தியரின் இசைக்கு உருகிய பொதிய மலை, இராவணனின் இசைக்கு உருகிய கற் குழம்பு இறுகிற்று.
* பொதியிலின் கண் இருந்து இராவணனைக் கந் தருவத்தாற்
பிணித்து- இராக்க தரை ஆண்டுஇயங்காமை விலக்கினார்"
(தொல்காப்பியம் சிறப்பு பாயிரவுரை ,ந)
"மலை முன்னா ளுருக்கு முனிநிகர்வை' (திருவெங்கை யுலா 319)
* இனிய பைந்தமிழின் பொதிய மால்வரைபோலிசைக்குருகாது
(சோணசைலமாலை 26)
* இசைச் குருப்கபடுகிலை" (தஞ்சைவாணன்கோவை. 345)
ஆனாயனாரின் குழலிசைக்குக்கல் உருகிற்று.
"ஆனாயனார் தமரிய விசைக் கல்லாமல்
கானார் மலர்க்குழலாள் காமமொடு தானாளும்
இன்னிசை கேட்டுள்ளுருகற் கிம்மலைதான் அம்மலையோ"
(திருவெங்கையுலா 330 3)
மாணிக்கத்தா ற் செய்யப்பட்ட மனைகளில், அம்பிகையின் வேய்ங்குழல் போன்ற பாட்டிற்கு மாணிக்கக்கல் உருகி பணியாகி நீர்த் துளி சிந்தியது.
* கொத்து மணித்திர விற்செயு மம்மனை
குயிலின் மி ழற்றியநின் குழலினி சைக்குரு கிப்பணி தூங்கு
குறுந்துளி சிந்தியிட
(மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ். 80-2)
"சுருக்கா விசையின் மணிகரைந்து"
(திருக்கழுக்குன்றத்து உலா 10:2)
37 .

Page 30
நீண்மணிதான், காழொப் பினுதின் னிசைகேட்குங் காற்கரைந் தேகுமன்றே"
W ( தமிழ்நாவலர் சரிதம்.) திரிகூடத்துத் துணைமணி இசைக்கு உருகும்.
ஒவிய சாலையெல் லாங்கொல்லி யாவுள் ளுருகும் ரத்ன மேவிய கூடமெல் லாந்திரி கூடத்தின் மேற்படுமே
(தமிழ்நா, 249)(குலோத்துங்கி சோழனுலா உரை 146)
கன்னனின் 'திரிபங்கி’ என்ற குழலினிமையால் கருங் கல் கூட வெண்ணெய் போல் உருகி வழிந்தது.
குறித்த முகில் பந்தரிட்டு குறுந்துளிதூற்றிட
கருங்கற்றான் வெண்ணெயெனக் கரைந்துருக"
(அழகர் கலம்பகம்)
கல்லுருகும் படியும், துன்பப்படும் பசுக்கள் அழகிய புகுமிடத்திற்கு வந்து சேரும்படியும் நின்று மூங்கிலால் அமைத்த புல்லாங்குழலில் வாசித்தவர் கண்ணபிரான்.
கல்லுருக வேயின்கண் அல்லல்படு கோவம்பு கல்வருக வேநின்று குழலூதுங் கையன்’
(அருணகிரிநாதர்- தொல்லைமுதல்")
தம்முள் யாவர் பெரியர் என வாதாடிய தும்புரு நார தர் முன்னே மலை உருகும் வண்ணம் குண்டக்கிரியா" என்னும் இராகம் பாடி, அனுமான் அவர்களின் கருவமட க்கி அனுப்பிவைத்தார்.
( தெய்வீக ஆடற்கலை’ பக்.5)
இனிய இசை, எமது உள்ளம் ஊன் மட்டுமல்ல, கல் லையும் உருக்கும் அதி சக்தி வாய்ந்தது என்பதை இங்கு நாம் உணரமுடியும்.
38

யானையானது இசைக்கு வசமாகும் தன்மையுடையது. குறிஞ்சி நிலமகள் ஒருத்தி, தனது நீண்டகூந்தலை வாரிய வண்ணம் குறிஞ்சிப்பண் பாடுகின்றாள். இவ்விசையைக் கேட்ட யானையானது தினைப்புனத்திலே தின்றுகொண் டிருந்த திணைக்கதிரை உண்ணாது, நிலையகலாது பின்பு துயில்வரப் பெறாத அழகிய கண், துயில்வரப் பெற்று விரைந்து தூங்கும்
" ஒலியல் வார்மயிர் உளரினள் கொடிச்சி
பெருவரை மருங்கில் குறிஞ்சி பாடக் குரலுங் கொள்ளாது நிலையினும் பெயராது படாஅப் பைங்கண் பாடுபெற் றொய்யென மறம்புகல் மழகளி நூறங்கும். '
(அகநானூறு 102/ 5.9)
யானையின் ஒலி தார இசைக்கு நிகரானது. யானை
நாதத்திற் றோற்றுதலின் அதற்கு வணங்குதல் இயல்பாகும். யாழிசைக்கு வணங்கும்
'காழ்வரை நில்லாக் கடுங்களிற் றொருத்தல்
யாழ்வரைத் தங்கியாங்கு"
(கலித்தொகை. 2126.27) *மத்த யானை வணங்கு நல்லியாழ்"
(பெருங்கதை. 32/-102)
*அணியிழை மகளிரும் யானையும் வணங்கு
மணியொலி வீணையும்"
(பெருங்கதை. 1/35| 100.1
'வகையுடை நல்யாழ் வரத்திற் பெற்றதூஉம் விசையுடை வேழம் வணங்கும் விச்சையும்"
(பெருங்கதை 2/ 11| 144. 45
'வீணை யெழீஇ வீதியி னடப்ப
ஆணையாசாற் கடியுறை செய்யு மாணி போல மதக்களிறு படிய'
(பெருங்கதை 2/9/ 57. 59)
39

Page 31
இசையினி லிவட்குத் தோற்றாம் யானையால் வேறுமென்னி னிசைவதொன் றன்று கண்டீர்"
y (சீவகசிந்தாமணி 748) "ஜம்புல வேழத்தின் வெந்தொழில் வீயக்
கருணை வீணை காமுறத் தழீஇ'
(ஞானாமிர்தம். 4.10/10.11 "மகர- யாழ் வல்லமைந்தன்
ஒருவனைக் கண்ட மத்தப் புகர் முகக் களிற்றின்" -
(மேருமந்தர புராணம் வச்சிராயுத.31) "யாழாய் மிடற்றால் வணங்குதும்"
(மூவருலா. குலோ 216 **வீணைக் ககப்பட வேழ மிடற்றுக்கும் "
(மூவருலா இராஜ, 269 -71 )
இங்கு யானை இசைக்கு வயப்படு தும். பணிவதும் மதம் அடங்குவதும் ஆகிய பல செயல் நடைமுறைகளைக் காண்கின்றோம்.
"அசுணமா' என்பது ஒரு இசையறி பறவை என்று ஒரு சாராரும் இயைறி விலங்கு என்று மற்றொரு சாராரும் கூறுவர்.
கலித்தொகையிலே ஒருவன் முன்னர் ஒருத்தியை வஞ் சித்து இன்பத்தை உண்டாக்கிப் பின்னர், அவளைக் கை விட்டுத் துன்பத்தைக் கொடுத்தான். இந்நிகழ்வை அசுண மாவை யாழ்வாசித்து அது இன்பமுற்றிருக்கையில், அதனை கொல்பவர் பறையொலியை முழக்கி வஞ்சிப்பதுற்கு ஒப்பி டுவர். (கலித்தொகை 143/10-16உரை)
கரிய சிறகுடைய வண்டின் கூட்டம் ஒலிக்க, அவ்வொலி யை யாழிசையெனக் கருதிப் பெரிய மலையின் குகையில் உள்ள அசுணங்கள் உற்றுக் கேட்கும்.
40,

"இருஞ்சிறைத் தொழுதி யார்ப்ப யாழ்செத் திருங்கல் விடரளை அசுணம் ஒர்க்கும்"
(அகநானூறு 88 / 11. 12 ,
வண்டியாழ் என்னா வசுண மிறைகொள்ளு"
(தஞ்சைவாணன்கோவை, 225)
குழலிசையைக் கேட்டு மயங்கி அருகில் வரும் அசுணங்களை வேட்டையாடுபவர்கள் இலகுவில் பற்றிக் கொள்வார்கள்.
** அசுணம் கொல்பவர் கைபோல்'
(தற்றிணை 304 . 8 *" கோவலர் கொன்றையந் தீங்குழல்
உலவுநீள் அசுணமா உறங்கும்’
(சூளாமணி 34 - 3 *" களைகளின் துளை தொறும்
கால்பரந் திசைக்கின்ற ஏழிசைக் குளமுருகி புளகெழ இசைகொளும் அசுணங்கள்’’
(வில்லிபாரதம்)
சிறியாழின் இசையில் மயங்கிய அசுணமா, பறையொலி கேட்டுத் தன்னுயிர் நீத்து விடும். இனிய இளி? என்னும் நரம்போசை கேட்டு மகிழ்வதும் இந்த அசுணமா ஆகும்.
இசைகொள் சீறியாழ் இன்னிசை கேட்ட, அசுன நன்மா அந்நிலைக் கண்ணே, பறையொலி கேட்டுத்தன் படி மறந்ததுபோல்" (பெருங்கதை , 1- 4. 241) இன்னளிக் குரல்கேட்ட அசுணமா வன்னளாய் மகிழ்வெய்து வித்தாளரோ"
(சீவகசிந்தாமணி 1402)
“யாழ் நறையடுத்த அசுணநன் மாச்செவி பறை யடுத்த போலுமென் பாவரோ"
(கம்ப / பாயிரம், 7
"பறை படவாழா. வசுணமா?
(கம்ப./அயோ.772உரை)
4】

Page 32
வேங்கை முதலிய மரங்களிற்றொடுத்த ஊசலில் இருந்து கொடிச்சியர் குறிஞ்சிப் பண்ணைப் பாட, அப்பாடல் இசைக்கு அசுணங்கள் ஓடிவரும்.
"குனிந்த வூசலிற் றொடிச்சிய ரெடுத்த வின்குறிஞ்சி கனிந்தபாடல் கேட்டசுணமா வருவன காணாய்"
(சம்பSI அயோத்தி. 77)
இங்கு அசுணமா யாழிசைக்கும், குழலிசைக்கும், குறிஞ் சிப் பண் குரலிசைக்கும் தன்னை மறந்து உருகி ஒடிவரும் என்பதும், அதே நேரம் அபசுரம் அல்லது பறையொலி கேட்டால் தன்னுயிரையே மாய்த்துவிடும் என்பதும், வேட்டையாடுபவர்கள் கூட இசையைத் தமது தொழிலுக் காகப் பயன்படுத்தினர் என்பதும் புலனாகின்றது.
இயற்புலவர்களாயினும், இசைப்புலவர்களாயினும் மன் னர்களின் உள்ளத்தில் உயர்ந்த இடத்தில் உறைபவர்கள். புலவர்களின் வறுமையைப் போக்கி, பொன்னும், பொருளும் கொடுத்து அரசர்கள் அவர்களை நன்றாக உபசரிப்பர்.
மன்னன் குமணன் 'கூத்தரது மிடியைக் கெடுக்கும் குடியிற் பிறந்தோய்" எனப் பெருந்தலைச் சாத்தனார் பாடுவார்.
* பண்ணமை நரம்பின் பச்சை நல்யாழ்
மண்ணமை முழவின் வயிரியர் இன்மை தீர்க்குங் குடிப் பிறந்தோயே"
(புறநானூறு 64/11-13)
புலவர் தனது வறுமையப் போக்க, அரசைத்துறந்த நிலையில் குமணனைக்காட்டிற் சந்தித்தார். அந்நிலையிற்
42

கூட, குமணன் புலவர்க்கு இல்லை என்னாது, தன்வாளைக் கொடுத்து தனதுதலையைக் கொய்து சென்று மன்னன் இளங்குமணனிடம் கொடுத்து வேண்டிய பரிசில்களைப் பெறச்சொன்னான்.
(புறநானூறு 165. உரை) முழவு போலும் தோளையுடைய சேரமான், தகடு ரெறிந்த பெருஞ்சேரலிரும்பொறை மன்னன், முரசுக்கட்டி லென அறியாது துயின்ற இயற்புலவர் மோசிகீரனாரின் துாக்கத்தைக் கலையாது, கவரிகொண்டு வீசினான். தமிழின் டாலும்/ இயலிசைப் புலவர்கள் பாலும் வைத்த மன்னனின் மதிப்பையே இது காட்டுகின்றது.
(புறநானுறு. 50 உரை.)
தினைப் புலக்காவலர்கள் திணைப்புலத்தைக் காக்க கொம்போசையை ஒலிக்கச் செய்வர் சிறிய கண்ணையுடைய பன்றிக் கூட்டங்கள் பெரிய கொம்பின் பெரிய ஒசையினால் தினைப்புலத்தை அழிக்காதுசெல்லும்என அகநானூறு (94/9-11) கூறும் )
பன்றிப் பறையைக் கொட்டி நிற்கும் காவலர்களால் பன்றிகள் சேம்பு, மஞ்சள் கிழங்கையுண்ணாது.
* சேம்பும் மஞ்சளும் ஒம்பினர் காப்போர் பன்றிப்பறையும்" (மலைபடுகடாம்g 343-44)
ஊதும் கொம்பின் ஒசையும், பறையினோசையும் வெகுதூரம்வரை கேட்கும். எனவே தூரத்திலிருந்தே காவல் செய்வது எளிது.
பண்டைத் தமிழர், ஊருக்கு ஊர் நடந்து செல்லும் பொழுது பாலைநிலத்தில் கள்வர்களின் துன்பத்துக்குள்
ளாகுவர். பாலைநிலத்தைக் கடந்து செல்பவர்களின் உயி
43

Page 33
ருக்கும் உடைமைக்கும் அச்சுறுத்தலிருக்கும். கள்வர்களின் மனத்தைக் கொள்ளையடிப்பதில் பாலைப்பண்ணுக்கு ஒரு வலிமையுண்டு. பாலைப் பண் பாடும் இசை கேட்டு, தமது கொடிய தொழிலையும் கொலைக் கருவிகளையும் கைவிட்டு, மனமுருகி, நல்ல மனிதர்களாக அன்புடன், அடக்கத்துடன் நிற்பர்.எனவே பாலைப் பண்பாடி. பாலை நிலம் கடந்து பயமின்றி பயணஞ் செய்பவர்கள் துன்பத்துக்குள்ளாகார்.
"ஆறலைக் கள்வர் படைவிட மருளின்
மாறுதலைப் பெயர்க்கும் மருவின் பாலை”
(பொருநராற்றுப்படை 21-22)
மலைப் புனங்களில் தினைப்பயிர் காக்கும் பெண்களும் திணைகுத்தும் பெண்களும் இனிமையாகப் பாடுவர்.
தினைப் புனங்காக்கும் மகளிர், உயரமான பரண்களி லிருந்து கிளி போன்ற குருவிகள் வந்து தினைக்கதிர்களைக் கொய்ந்து செல்லாவண்ணம் இனிமையான பண்களைப் பாடுவர். அவ்விசையில் மயங்கும் பறவைகள் அப்படியே தினையை உண்ணாது இருக்கும்.
*" சாந்தம் எறிந்துழுத சாரற் சிறுதினைச்
சாந்தம் எறிந்த இதண்மிசைச் - சாந்தம் கமழக் கிளிகடியும் காரிமயி லன்னாள் இமிழக் கிளிஎழா ஆர்த்து"
(திணைமாலை-நூற்றைம்பது
தினைகுத்தும் மகளிர் பாடும் இசைமிகும் பாடல் வள்
ளைப் பாட்டாகும்.
திணைக்குறு மகளிர் இசைபடு வள்ளையும்"
(மலைபடு.342)
44

இங்கு இனிமையாகப் பாடல்களைப் பாடும் மகளிர் தமது தொழிற்களைப்புத் தெரியாதிருப்பதற்கும், காவற் கடமை யைச் செய்வதற்கும் இசையைப் பயன்படுத்தினர். ஒலிக்கும் மூங்கிலாற் செய்த தட்டை, கிளியை விரட்டப் பயன்படுத் தினர் என மலைபடுகடாம் (328) கூறுகின்றது.
“ஒலி கழை தட்டை புடையுநர் புனந்தொறும் கிளி கடி மகளிர்”*
முல்லை நிலத்தில் ஆவினம் மேய்க்கும் கோவலர்கள் குழலிசையால் அவற்றைக் கூட்டிச் செல்வர்.
* ஒழுகிய கொன்றைத் தீங்குழல் முரற்சியர்
வழுஉச்சொற் கோவலர் தத்தம் இனநிரை பொழுதொடு தோன்றிய கார்நனை வியன் புலத்தார்"
(முல்லைக் கலித்தொடர்)
ஆயனின் குழலோசை கேட்டு ஆவினங்கள் திரளும்.
* கனைத்த மேதி காணாதாயன் கைமேற் குழலூத
அனைத்துஞ் சென்று திரளும்சாரல் அண்ணாமலையாரே'
(சம்பந்தர்" எனைத்தோ") இசையின் அபரிமிதமான சக்தியால் பட்டமரங்கள் கூடத் தழைக்கும் என்பது புலனாகின்றது. பாலைநிலங் கூடப்பண்பட்டு நன்னிலமாகும்.
"பாலையும் பண்படுஉம் பட்டமரம் தழைக்கும்"
is is (ஈரடிஇருநூறு) "நீரறு தருக்களும் தழைக்க நின்றுமுன்
நாரதன் முதலியோர் நவிற்று நாதயாழ்"
(மகாபாரதம் 13ம்-5 பார்ச் சுருககம்)
கோவலன் தீராக் காதலுடன் கண்ணகியை நோக்கி
"பொன்னே, முத்தே..."என்று விளித்து “யாழினிற் பிற வாத இசையே என்பான்.
(சிலம்பு. /மனையறம் 83 - 89)
45

Page 34
யாழிசையினால் உலகையே தம்வசப் படுத்தியவன் சீவக நம்பியாவான். இவனது யாழிசையின் அதியுன்னத சக்தி யால், காந்தருவதத்தை என்னும் அரசிளங்குமரி யாழ் இசைப் போரில் தோற்று மணமாலை சூடினாள். மண வணிநாளில் நடந்த இசைப்போரில், அங்குள்ள யாழ்கள் பலவற்றுள்ளும் குற்றமற்ற யாழ் ஒன்றிலேயே இசைமீட்டி யாவரையும் பரவசப்படுத்தினஏன் என்ற செய்தி சீவகசிந்தா மணியில் (722) வருகின்றது, காந்தருவதத்தை சீவகநம்பி யின் இசைக்குத்தன் வாழ்நாளையே அர்ப்பணித்து மாலை குட்டினாள்.
அந்த மணவணி நாளில் சீவக நம்பியானவன் யாழிலே குரல் குரலாக வரும் செம்பாலையிசையை விரல்களால் மாடகந் தழுவி எழுப்பும் போது, அவ்விசை குரலிசையென எண்ணித் தேவரும் உலகமக்களும் மயங்கித் திளைத்தனர். இசையை நுகர்ந்த கின்னர அசுணப் பறவைகள் கூடச் சோர்ந்தன. மரமுங் கல்லும் உருகின. w
*" குரல்குர லாகப்பண்ணிக் கோதைதாழ் குஞ்சியான்றன்
விரல்கவர்ந் தெடுத்தகீத மிடறெனத் தெரிதறேற்றார் சுரரோடு மக்கள்விழ்ந்தார் சோர்ந்தன புள்ளுமாவு முருகின மரமுங்கல்லு மோர்த்தெழி இப்பாடுகின்றான்"
(சீவக சிந்தாமணி 723)
ஆடவரைப் பார்ப்பதில்லை என விரதம்பூண்ட சுரமஞ் சரி என்னும் நங்கையை, சீவகன் வயது முதிர்ந்த அந்தணன் வேடத்திற் சென்று இசைபாடி தன்வயப்படுத்தினான். சீவ கனின் இசை கேட்டு அவ்விடத்திற்கு வந்த மகளிரின் வருகையானது, வேடன் பறவைபோற் கத்தும்போது கூட்ட மாக மயங்கி வரும் காட்சியைப் போன்றதாகும்.
46

கள்ள மூப்பினந்தணன் கணித்த கீதவீதியே வள்ளிவென்ற நுண்ணிடை மழைமலர்த் தடங்கணார் புள்ளுவம் மதிமகன் புணர்த்தவோசை மேற்புகன் றுள்ளம்வைத்த மாமயிற் குழாத்தினோடி யெய்தினார்?
(சீவகசிந்தாமணி. 2039)
" பாடினான் றேவகிதம் பண்ணினுக் கரசன்பாட ச்
சூடக மகளிர் சோர்ந்து செருக்கிய மஞ்ஞை யொத்தார்"
(சீவக சிந்தாமணி" 205 s
ஆம், இசையினால் உயிர்கள் ஈர்க்கப்பட்டன. காத லிசை பரவிற்று.
இசையினால் மனிதரும், தேவரும், மிருகங்களும், பறவை களும் மயங்கின. தெய்வங்கள் இசைவடிமாகவே நின்று இசையைக் கேட்டு அருள் செய்வன. நாயன்மார்களும் ஆழ்வார்களும் தெய்வீக இசைபரப்பி யாவரையும் ஆன்ம
ஈடேற்றத்துக்கு உட்படுத்தினர். பல அறபுதங்களை நிகழ்த் தினர்.
யாழிசை எத்தகைய சீற்றத்தையும், மதத்தையும் போக்கி உள்ளத்தை அமைதிப்படுத்தும் ஒலிஅலைகளைத் தரும் என்பர்.
சிவபெருமானின் நெற்றிக்கண்ணாகிய தீயையும் குளிரச் செய்யும் இசையில் வெற்றிகொண்ட மகதி என்னும் யாழை யுடையவர் நாரதர் என்று நளவெண்பா (76) கூறும்.
* நெற்றித் தனிக்கண் நெருப்பைக் குளிர்விக்கும்
கொற்றத் தனியாழ்'
குவளை மலர்களிலே வண்டுகள் பண் மிழற்றுகின்றன. அக்குவளை மலரை ஆண்எருமை ஒன்று வாயினால் கெளவு கின்றது. அவ்வெருமைக்கு, அச்சிற்றுயிரான வண்டுகளின் இன்னிசை கேட்கின்றது. அம்மலரை உண்ணாது அம்படியே இசையைசக் கேட்டு இன்புறுகின்றது அவ்வெருமை.
47

Page 35
இக்காட்சி நளவெண்பாவில்(1 48)வருகின்றது.ஒருசிற்றுயிரின் இசையே, மற்றொரு உயிருக்கு இன்பமெனில் காலத்துக்கும், சுவைக்கும் உரிய கருத்துச் செறிவுள்ள பாடல்கள் தரும் பாணரின் இசையும் நாயன்மார்களின் இசையும் தெய்வீக
மானதல்லவா..?
பன்னிரு ஆழ்வார்களுள் பெரியாழ்வார் கண்ணனின் குழ லோசையின் மகத்துவத்தை தமது பாடல்களில் அனுபவித்துப் பாடியுள்ளார். கண்ணன் ஆனிரைகளை மேய்த்துக் குழலூ திவர வானுலக அரம்பையர் முதலிய நடனமாதரும் தங்கள் ஆடல்பாடல்களை மறந்தனர். வானுலகோர் மெய்ம்மறந் தனர். புல்மேய்ந்து கொண்டிருந்த மான்கள் வாயிலுள்ள புல்லைக் கடைவாய் வழிசோரவிட்டு அசைவின்றி சித்திரங் கள் போல்இருத்தன.
ஊதுகின்ற குழலோசை வழியே மருண்ட மான் கணங்கள் மேய்கை மறந்து மேய்ந்த புல்லும் கடைவாய்வழி சோர'
( பெரியாழ்வார். " திரண்டெழ" )
கண்ணனின் குழலூதற் சிறப்பைக் கூறும் மற்றுமொரு .69-LחנL
சிறுவிரல்கள் தடவிப் பரிமாறச் செங்கண் கோடச்
செய்ய வாய் கொப்பளிப்பக் குறு வெயர்ப் புருவம் கூடலிப்பக் கோவிந்தன்
குழல் கொண்டு ஊதினபோது பறவையிள் கணங்கள் கூடுதுறந்து வந்து சூழ்ந்து
படு காடு கிடப்பக் கறவையின் கணங்கள் கால்பரப்பிட்டுக் கவிழ்ந்து
இறங்கிச்செவி ஆட்ட கில்லாவே"
(பெரியாழ்வாா)
4 ድ '

தேவரும், மாந்தரும், விலங்கினமும் மட்டுமல்ல, மரங் கள் மதுதாரை பெய்தும், மலர்கள் சொரிந்தும், கொடிகள் தாழ்ந்தும், மலர்கள் கூம்பியும் திருமால் நின்றபக்கமாக
வணங்கின.
"மரங்கள் நின்று மது தாரைகள் பாயும் மலர்கள் வீழும் வளர்கொம்புகள் தாழும்"
(பெரியாழ்வார். "கருங்கண்")
ஆம். குழலோசையைக் கேட்டவர்கள் வைகுந்தப்பத
வியை அடைந்து ஆனந்தம் எய்தினர்.
திருஞான சம்பந்தரின் தேவாரப் பாடல்களைக் கேட்டு மனமிரங்கிய இறைவன், உலகத்தவரின் காதுகளில் இசை யின்பத்தைப் பெருக்கவும், மேலும் மேலும் அவ்விசை யின்பத்தைப் பருகவும் எண்ணி உலகவர் முன் பொற்றா ளம் ஈந்தான்.
"நாளுமின்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தனுக்கு
உலகவர்முன் தாளம் ஈத்து அவன் பாடலுக்கிரங்கும்"
(சுந்தரர்-தேவாரம்)
"இன்னிசை பாடின வெல்லாம் யாழ்ப்பெரும் பாணனார் தாமும் மன்னு மிசைவடி வான மதங்ககு ளாமணி யாரும் பன்னிய வேழிசை பற்றிப் பாடப் பதிகங்கள் பாடிப்
பொன்னின் திருத்தாளம் பெற்றார் புகலியிற் போற்றி யிருந்தார்
(பெரியபுரணம் / திருஞான 278)
‘ஏழிசையின் வண்டமிழ்ப் பாடலோத கையிட்ட மின்வட்ட
பொற்றாள மோடொலிசெய் கல்லெனுஞ் சப்தமீந்து
(காஞ்சிகாமாட்சி பி. த | சப்பாணி.5)
திருஞானசம்பந்தரின் தேவாரப் பாடல்களை யாழி லிட்டு வாசித்து மகிழ்ந்தவர் திருநீலகண்ட யாழ்ப்பா
49

Page 36
ணர் ஆவார். அந்தயாழின் பண் நரம்புகளில் அமைவு பெறாத யாழ்முரிப் பண்ணிலமைந்த "மாதர் மடப் பிடியும் பதிகத்தைக்கூட ஒருமுறை திருஞான சம்பந்தர் Litig-Gottri.
"பதிகத்து இசை நரம்பிலிட அடங்கிற்றில்லை"
(பெரியபுராணம் / திருஞான.44)
ஆனாய நாயனார் குழலிசையின் நுட்பம் தெரிந்தவர். சிவபெருமானின் திருவைந்தெழுத்துக்களை உள்ளுறையாக வைத்து இசைமாரிபொழிபவர். குழல்வாயும், தன்வாயும் இணைந்தொழுக அவரது இசையைப்பருகிய பசுக்கூட்டங் கள் மெய்ம் மறந்து, தின்ற அறுகைமீட்காது நின்றன. கன்று கள் பால் பருகுவதை மறந்தன. மயில்கள் ஆடுவதைமறந்து அயர்ந்தன, பறவைக்கூட்டங்கள் நெருங்கிவந்தன பாம்பும்மயிலும், புலியும்- மானும், சிங்கமும் - யானையும் அருகருகே தம்மை மறந்து திரண்டன. மேகங்கள் அசையவில்லை. மரக் கிளைகள் அசையவில்லை. கடலலைகள் ஒய்ந்தன வையமனைத்தும் அவரது குழலிசைக்கு வசமாயிற்று என ஆனாயநாயனார் புராணம் ( 30 - 35) கூறும்.
தெய்வீக இசைபரப்பும் அடியவர்கட்கு பொற்பலகை யிட்டு இறைவன் அகமகிழ்ந்தான் எனப் புராணங்கள் கூறும். தினமும் கோவிற்றரிசனஞ் செய்து பக்தியிசை பரப்பிய வீணைப் பாடகன் பாணபத்திரனுக்கு பொற்பலகை ஆச னந்தந்து இறைவன் மகிழ்ந்தார் என திருவிளையாடற் புராணம் (பலகையிட்ட 13-14) கூறும்.
இறையரு ளாணையஞ்சி யிட்ட பொற் பலகையேறி பாடிய பாணற்கன்று வலியவே பலகையிட்டார்"
(திருவிளையாடற்/சங்கப்பலகை, 24)
50

பாண்மகற் கலர் பொற் பலகை நீட்டுங் கடவுள்
(மதுரைக்கலம்பகம் 46-3)
* பாணபத்திரனின் அடிமை என இறைவன் வேடமிட்டு இசையில் வல்ல ஏமநாதனை, தனது இசையால் நாட்டைவிட் டோடச் செய்தார் எனத்திருவிளையாடற் புராணம் (விறகு விற்ற படலம் 48-51) மேலும் கூறும் முருகனின் சந்நிதியில் அடியவர்களின் கீதத்தினைக் கேட்டு, வேடிக்கை காணவந்த பேய்கள்கூடத் தாளம் போடுவதை முருகனே பாராட்டுவது வியப்பல்லவா?
* பாணிகள் கொட்டும் பேய்கள் பிதற்றும்
பாடலை மெச்சும் . கதிர்வேலா"
(திருப்புசழ்- “காவியுடுத்து"
இபற்கையின் வளங்களைக் கூட இசையினால் கட்டுப் படுத்தியவர்கள் நம் முன்னோர்களான நாயன்மார்கள், மழை வளங்குன்றிய காலத்தில், மழையை வேண்டி மேகராகக்குறிஞ் சிப் பண்பாடியும், அமிர்தவர்ஷணி இராகம் இசைத்தும் மழை யை வருவித்தனர் எமது தமிழிசைவாணர்கள். முத்துச்சாமி தீட்சதர் ஒருமுறை எட்டயபுரம் நோக்கி குடும்பமாகச் செல்கையில் தாகம் ஏற்பட்டது, அவர் அமிர்தவர்ஷணி இராகத்தில் ஒருபாடலைப்பாடிய (ஆனந்தாமிர்த) பொழுது மழை பொழிந்தது. அவர்கள் தாகமும் தீர்ந்தது.
புல்லாங் குழலிசைப்ப, இளமகளிரின் குரலும் குழலும் இணைந்து கின்னரர் தரும் இசையானது சில்லரி.ாண்டில் மத்தளத்துடன் ஒன்றி வரும் அமுத இசையைப் புற்றிலே வாழும் அரவம் கேட்டு, விஷத்துக்குப் பதில் அமிர்தத்தை வாயாற் சொரியும்
" தொளையுறு புழைவேய்த் தூங்கிசைக் கானந்
துயலூறா வொருநிலை படர் w ሥዃ இளையவர் மிடறு மிந்நிலை யிசைப்பக்
கின்னரர் முறைநிறுத் தெடுத்த
51

Page 37
கிளையுறு பாடல் சில்லரிப் பாண்டில்
தழுவிய முழவொடுங் கெழுமி அளையுறு மரவு மமுதுவா யுகுப்ப
வண்டமும் வையமும் அளப்ப"
(கம்ப. சுந்தர 417
வீணையும் குழலும் பாலுமமுதும் போன்றது, கரும் பும் தேனும் போன்றது இது சீவக சிந்தாமணியில் (1500) கூறப்பட்டுள்ளது.
நாயன்மார்களால் இசைப் பாடல்கள்பண்ணுடன் மிடற் றுப் பாடலாகவும்,
திருநீலகண்ட யாழ்ப்பாணர், கம்பளர், அசுவதரர் லி s முதலிய யோரால் யாழிசையாலும்,
ஆனாயநாயனார், குழலிசையாலும் இசைக்குருகும் இறைவனை ஏத்தி வழிபட்டு ஈடேறினர்.
மற்றும் வண்டினங்களின் குழல் யாழ் போன்ற இசை யினாலும குரல் - குழல் - நரம்பு இசைகளாலும் மரஞ்செடி கொடிகள் முதல் மக்கள் வரை இசையினால் வசப்படுத் தப்பட்டனர் என்பதும், இன்னும் நோய்களைக்குணப்படுத்த வும், மிருகங்களைக் கட்டுப்படுத்தவும் இசையை ஒரு அரிய சாதனமாகக் கொண்டார்கள் என்பதும் புலனாகின் றன. கல்லும் கனியும் இசையின் ஆற்றல் எளிதோ?
5. மன்னர் வளர்த்த இசை
அன்று முதற் சங்கம், இடைச்சங்கம், கடிைச்சங்கம் என்ற
மூவகைச் சங்கங்கள் நிலவின. திரிபுரமெரித்த விரிசடைக்
கடவுளும், குன்றெறிந்த முருகவேளும், அகத்தியனாரும்
தலைச் சங்கத்துள் இருந்து முத்தமிழை ஆராய்ந்தனர்.
52.

கலைவளர்ச்சிக்காக இறைவனே தலைமை தாங்கி முத்த மிழையும் வளர்த்தார்எனத் திருவிளையாடற் புராணம் (நகரச்சிறப்பு. 57) கூறும் .
ஏழிசைச்சூழல், என மணிவாசகர் போற்றிய கூடலில், இறைவனும் உடனிருந்து முத்தமிழையும் ஆராய்ந்தார் என அவர் இயற்றிய திருக்கோவையாரில் வரும் "சிறைவான்"
என்னும் பாடல் கூறும்.
இசைத் தமிழை மன்னர்களே முன்னின்று வளர்ப்பதற்கு பாணரும், கூத்தரும் குற்றமின்றி இசைக் கின்ற இசைக்கு ரிமையுடையவர்களாகக் காணப்பட்டதனால் அவர்களுக்கு அரசவையில் மிக்க கெளரவம் கொடுத்தனர்.
'அருங்கறை யறையிசை வயிரிய ருரிமை”
(பரிபாடல் 10/130)
"உலகாளும் மன்னவ, இயலறிந்த புலவ, யாழையுடைய பாண" எனத் திருமாலை விளித்துக் கடுவனிளவெயினார் பாடியதிலிருந்து "அவர்இறைவனையேபாணனாகக் கருதி இய லிசைப் புலவராக எண்ணினார் என்பது தெரியவருகின்றது.
"மாயா மன்ன வுலகாண் மன்னவ தொல்லியற் புலவ நல்லியாழ்ப் பாண"
(பரிபாடல் 3/85. 86)
மன்னர்களில் பாண்டியன் முத்தமிழை வளர்த்தான்
என்பதை,
‘ஏழிசை நூற்சங்கத் திருந்தான் என நளவெண்பா (144) வும்,
"மருவும் முத்தமிழை முன்னாள்வளர்த்த பாண்டியனே? எனச்சூடாமணி நிகண்டும் (சிறப்புப்பாயிரம் 5கூறும்.)
53

Page 38
பண்பாட்டின் காவலர்களாகிய பாணரும் கூத்தரும் மன்னரின் போர்த்திறனையும், கொடைத்திறனையும், நாட்டு வளத்தையும் போற்றிப் பாடினர், ஆடினர்.
அரண்மனையில் யாழ்மீட்டி மங்கலப்பாடல்களைப் பாடி மன்னரைத்துயில் எழுப்பினர். காலைமுரசங்க ளையும், காவல் முரசங்களையும் முழக்கினர். போர்க்களங் களிலும்சரி அரண்மனையிலும்சரி, பாணரும் கூத்தரும் ஆடல் பாடல்களால் வீரவெற்றிகளைப் புகழ்ந்து யாழி சைத்து வீரத்தின் இசைபரப்பினர். (இசை-புகழ்)
மன்னர்கள் தம்கொடைத் திறனைக் காத்து நாடு, உணவு, உடை, தேர், குதிரை, குடை, அணிகலன்கள் களிறு, எனப் பரிசில்களையும் பட்டங்களையும் பாணருக் கும் கூத்தருக்கும் கொடுத்தனர்.
அரசவையானது பாணர் இன்றிப் பூரணமாகாது. இசை யை எக்காலத்தும் கேட்கும் செல்வத்ததையுடையது அர சரது அவைக்களம் ஆகும். அவ்வாறான அரசவையில் இசையின்பத்தை விரும்பி நுகருபவர்கள் "நன்று எனத் தலையசைத்துக் கொண்டாடும் படி பாணர்கள் இசைமழை பொழிவர்.
* களங்கனி யன்ன கருங்கோட்டுச் சீறியாழ் நயம்புரிந் துறையுநர் நடுங்கப் பண்ணி"
(புறநானூறு 145 5= 6)
* இசைபெறு திருவின் வேத்தவை ஏற்ப
துறைபல முற்றிய பைதீர் பாணரொடு"
மலைபடுகடாம் 39-40)
பாணர்கள் பிறகொடையாளிகளிடம் செல்லாதவாறு மிகுதியாக பரிசில்கள் கொடுத்துத் தம்வசம் வைத்திருக் கும் கோமானாக அரசன் இருந்தான்.
54

* பாடுநர்த் தொடுத்த கைவண்கோமான்"
(syaspır69/Tgol 1 0 0-11
மன்னன் அதியமானிடம் எத்தனைமுறை நாடினாலும் பரிசில்களை நாடிவருவவர்க்கு உவந்தளித்து மகிழ்வான் எனப்புறநானூறு (101) கூறும்.
இவ்வரசனைப்பாடிப் பெறற்கரிய நெல்லிக்கனியைப் பெற்று நீண்டகாலம் வாழ்ந்தவர் ஒளவையார்.
'நெல்லி அமிழ்து விளை தீகனி ஒளவைக்கீந்த அதிகன்’ எனச் சிறுபாணாற்றுப்படை (101) இதைக் கூறும்,
அதியமான் போரில் மாண்டபோது உள்ளம் வெதும்பினார் ஒளளையார். அவன் சுவைமிக்க உணவாயினும் புலவருக்கே கொடுப்பான். இரவலர், சுற்றத்தார், இசைப்பாணர் என யாவருக்கும் அவனது பிரிவு பெருந்துயர் விளைவிக்கின்றது. அவனது மார்பில்தைத்த வேலானது பாணரது மண்டையை ஊடறுத்தது. சுற்றத்தாரின் கண் ஒளிமழுங்கிற்று. இரப் போரது கையைத் துளைத்து புலவரது நாவிற்பட்டது இனிப் பாடுவோருமில்லை, இரப்போருமில்லை, (புறநானூறு 235/1-17 உரை)
இசைப் பாணரும், புலவர்களும் அதியமான் மன்னரால் நன்றாக உபசரிக்கப்பட்டிருந்தனர் என்ற உண்மையை உணரமுடிகின்றது.
பல்வளங்களுமுடைய பாரிமன்னனிடம் சென்று, வடித்து முறுக்கப்பட்ட நரம்பினையுடைய சீறியாழில் இசையைப் பிறப்பித்து, விறலியருடன் ஆடினிராய்ப் பாடினிராய்ச் செல்லின் அவன் நுமக்கு நாட்டையும்,மலையையும் தருவன்
55

Page 39
உமதுவாள்வலியாலோ, யானைகள் தேர்கள் ஆகிய படை
வலியாலோ கூட அவன் இப்பரிசைத்தாரான் என்பதை அறிவீர்
"சுகிர்புரி நரம்பின் சீறியாழ் பண்ணி விரையொலி கூத்தனும் விறலியர் பின்வர ஆடினிர் பாடினிர் செலினே
நாடுங் குன்று மொருங்கி யும்மே”
(புறநானூறு 109/15-18)
இம்மன்னன் இசைக்கலைப் பண்பைப் போற்றும் நெறி யைக் கொண்டிருந்தான் என்ற உண்மை புலனாகின்றது
நம்பி நெடுஞ்செழியன் என்ற அரசன் அவைக்களத்தின் கண் தனது உயர்ந்த புகழை வெளிப்படுத்தினான். இரந் தோருக்கு யாதும் இல்லையென்று மறுத்தலை அறியான் . பாணர் உவப்ப அவர் பசியை மாற்றினான். இதைப் புற நானுாறு (236),
*பிறரைத்தா னிரப்பறியலன்
இரந்தோர்க்கு மறுப்பறியலன். பாணுவப்பப் பசிதீர்த்தனன்"
எனக்கூறும். இவ்வாறு பல புகழையுடையவனாய்ப்பாண
ரையும் இவன் ஆதரித்தான்.
மன்னன் கோப்பெருஞ்சோழன் பாடுநர்க்குக் கொடுத்த லாகிய பல புகழினையும் உடையவன், அதுபோலக் கூத் தர்க்கும் கொடுத்த அன்பினையுடையவன் அவன் கேடில் லாத புகழ்ச்சிமாலை சூடிநடப்பட்ட கல்லாயினான். அவ னது இனிய உயிர்போயுற்றே" எனக்கவலையுற்று தமது சுற்றத்தை அணைத்துச் சென்று, மன்னனின் உயிர்பறித்த
56

கூற்றுவன்ை வைதற் பொருட்டு ஒன்று கூடுமாறு உறையூர் கண்ட பொத்தியார் அறைகூவுவார். மன்னனின் கொடைத்திறன் போற்றி, இறந்த பின்பும் அப்புலவரின் நெஞ்சம் உருகுவதை நாம்காண்கின்றோம். இச்செய்தி புறநானூற்றில் (221) வருகின்றது
சேரமான் வஞ்சன் என்ற அரசனின் உபசரிப்புக்களை யும் பரிசில்களையும் வியந்து திருத்தாமனார் என்ற புல வர் பாடியபாடல் நோக்கத்தக்கது.
விடியும் பொழுதைக் கோழிகள் கூவுதலால் அறிவிக்கின் றன. குளங்களிலுள்ள பூமுகை மலருகின்றது. சீறியாழில் இசைத்துப் பாணர் துயில் எழுப்பினர். விடிகாலை நேரம் பரிசு பெற்றேக வருகின்றான் பொருநன். அவனை இன் முகத்துடன் வரவேற்று அவனது அழுக்கான ஆடைகளைக் கண்டு தனது பூந்துகிலைக் கொடுத்து அணியச் செய்கின்றான் அந்த அரசன். பின்பு அப்பொருநனின் உண்கலத்தில் கட் டெளிவையும், தனக்குரிய மானிறைச்சிப் பொரியல் உண வையும், சோற்றையும் உண்ணக் கொடுப்பான். தனது விலை யுயர்ந்த மாலை அணிகலன்களைக் கொடுத்து அணியச் செய்து இன்புறுவான். இச்செய்தியை புறநானூறு (398) தருகிறது.
சேரமான் பாலைபாடிய பெருங்கடுங்கோ அரசனின் புறக்கொடையைப் பெற்ற வீரத்தைப் பாடிய பாடினி பொலிவுடைய அணிகலன்களைப் பெற்றாள். அவ்வணிகலத் தைப்பெற்ற விறலியின் முதற்றானமாகிய குரலிலே வந்து பொருந்தும் அளவையுடைய பாட்டைப் பாடவல்ல பாண ஒக்கு, வெள்ளி நாராற்றொடுத்த பொற்றாமரைப் s பரிசாகக்கிடைத்தது. இவ்வரலாற்றுண்மை புறநானூறு (11)தருகின்றது.
57

Page 40
எவ்வி என்ற அரசன் பாணர்களுக்கு மிகுந்த உணவ ளித்து உபகரிப்பவன். அவன் உணவளிப்பதற்கு யாழே கார ணமாக இருப்பதாலும், யாழில் தெய்வம் உறைதலாலும் அதனைத்தொழுது பரவுவார். பாணர் எவ்வி இறந்தபின்னர் ‘தம் பாட்டிசையைக் கேட்டுப் பரிசளிக்க யாருளர் எனக் கவலையுறுவார் பாணர்கள்.
* எவ்வி வீழ்ந்த செருவிற் பாணர்
கைதொழு மரபின்முன் பரித்தீடு உப் பழிச்சிய வள்ளுயிர் வணர் மருப்பு"
(அகநானூறு , 115, 8.10)
மக்கள் எத்தனை ஆயிரம் இருந்தாலும் மன்னர்களின் அரவணைப்பிலேயே, ஆடலும் பாடலும் வல்ல பாணரும் கூத்தரும் தமது கலையை தெய்வமாகக் கருதிப் போற்றி னர் என்று நாம் அறியமுடிகின்றது.
மன்னன் கரிகால்வளத்தான் கலையைப் போற்றி வழி பட்டது ஒருதனி முறைமை ஆகும். அவனை அணுகிய யாழ்ப்பாணரின் அழுக்குப்படிந்த உடைகளுக்குப் பதில் தூயபட்டாடைகளை அணியச்செய்வான். பொன்கலத்திலே பாணர் உவப்ப போதிய உணவுவகைகளையும், மதுத்தெளி வையும் உண்ண வைப்பான். பின்னர் பாணரின் கரிய கலை யிலே பொற்றாமரையைச்சூட்டி, பாடினிக்கு பொன்னரிமா லையில் தொடுக்கப்பட்ட வெண்முத்துக்களைச்சூட்டி, அவர் களை, யானைக் கொம்பாற் செய்த தாமரைமுகையுடைய தேரிலே அமரச்செய்து, பால்வண்ணக் குதிரைகள் நான் இனைத் தேரில் பூட்டியபின், ஏழிசைக்கு வழிபாடு செய்யும் முகமாக ஏழடி பின் சென்று, ஏனைய யாழ்ப்பாணகர்ளுக்குக்
58

கொடுக்கும் பரிசில்களை இவர்களுக்கும் தருவான். இச் செய்தி பொருநராற்றுப்படையில் (149-177) வருகின்றது.
அரசன் ஏழிசைக்கு மரியா தைசெய்யும் வண்ணம் ஏழடி பின் செல்லுதல் புதுமையல்லவா! ஆம், ஏழடி வருதல்
ஒரு மரபு.
" காலின் ஏழடி பின்சென்று? (பொருநராற்று. 166) * பின்னேழடியோ சேட் சென்று (திருவிளை./திருமுகம் 29)
இவ்வாறு இசைச்செல்வத்தை நுகர்ந்த நன்னன்சேய் நன்னன் என்பான் கூததர் தலைவனுக்குப் பொற்றாமரை சூடி, விறலியர்க்கு "பேரணிகள் பல கொடுத்து பரிசில்களை உவந்து அளிப்பான்
* தலைவன் றாமரை மலைய விறலியர் சீர்கெழு சிறப்பின் விளங்கிழை யணி
(மலைபடுகடாம், 569-70)
இசையை அளந்து பாடும் புலவர்களுக்கு அரசரும் கொடை வள்ளல்களும் பரிசில்களைக் கொடுப்பதைப் புறப் பொருள் வெண்பாமாலை (கொடைவஞ்சி)யும் பின்வருமாறு கூறும் .
" நீடவும் குறுகவும் நிவப்பவுந் தூக்கி
பாடிய புலவர்க்குப் பரிசில் நீட்டின்று'
காவிரிப் பூம்பட்டினத்திலே மன்னன் கரிகாற்பெரு வளத் தான் காலத்தில் இந்திர விழா நடைபெற்ற 28 நாட்களிலும் இசையரங்கத்தில் ஆடல் பாடல் இடம்பெற்றன.
விழாவின் தொடக்கத்தில் தலைக்கோலுக்குப் பூசனை செய்து அரசர், அமைச்சர், அந்தணர், சேனாதிபதி சூழப் பட் டத்து யானையில் தலைக்கோலை நகர்வலம் வந்து ஆடல் ரங்கத்தில் வைத்த பின்னரே ஆடல் பாடல் இடம்பெற்றது
59

Page 41
மாதவியானவள் அரசர்கள் முன்னிலையில் பல்லியங்கள் முழங்க பதினொருவகைக் கூத்துக்களையும் தாண்டவம் - நிருத்தம் - நாட்டியம் என்ற மூன்று கூறுபாடுகளையும் ஆடிக்காட்டிப் பச்சைமாலை, தலைக்கோல், 1008 கழஞ்சு பொன் என்பவற்றைப் பரிசாகப் பெற்றாள்.
இந்த பரிசமாலையை இட்டுக் கோவலன் மணமகனா னான். சிலப்பதிகாரத்தின் அரங்கேற்றக் காதையில் (114163) இவை அழகாகச் சொல்லப்பட்டுள்ளன.
அரசர்கள் நாடகக் கணிகையருக்குத் தலைவரிசைப்படி 1008 கழஞ்சு பொன் கொடுத்தல் மரபாகும் என நூல்கள் கூறும்.
* முட்டில் ப7ணரும் ஆடியன் மகளிரும் எட்டொடு புணர்ந்த ஆபிரம்பொன் பெறுப?
(சிலம்பு / அரங்கேற்ற 162 உரை
“எட்டுக் கடைநிறுத்த ஆயிரத்தெண் கழஞ்சு"
(சிலம்பு ஊர்காண், 158
(பெருங்கதையையும் 1 35.83), சீவக சிந் தாமணியும் 107)இதைக் கூறுகின்றன
இவ்வாறான கூத்தையும், பாட்டையும் அரசர்களின் ஏவலின் பெயரிலேயே அமைச்சர் செய்வித்தார் எனச் சீவக சிந்தாமணி கூறும்.
" வடிநீர் நெடுங்கண்ணார் கூத்தும் பாட்டும் வகுத்தாரே' (260 '.-1 /
இவ்வாடல் பாடல்களை நெறிப்படுத்தும் சாலைகள் கூட இருந்தன.
"மாதரார் கூத்தறாத பள்ளியும்" (சீவக. 154)
60

இவ்வாறு ஆடல், பாடல், கூட்டிசை இன்பத்தைத் தரும் பாணருடனும், கூத்தருடனும் மன்னர் களித் திருப்பர்.
* ஆடலின் னரவமு மங்கை கொட்டி நெஞ்சுணப் பாடலின் னரவமும் பணை முழவ் வரவமுங் கூடுகோலத் தீஞ்சுவைக் கோல யாழரவமும்
s s (R வாடலில்ல வோசையால் வைகனாளும் வைகிற்றே"
(சீவகசிந்தாமணி, I 56
"ஆடற் கூத்தினோ டவிநயந் தெரிவோர்
நாடகக் காப்பிய நன்னூல் நுனிப்போர் பண்ணியாழ் நரம்பிற் பண்ணுமுறை நிறுப்போர் தண்ணுமைக் கருவிக் கண்ணெறி தெரிவோர் குழலொடு கண்டங் கொளச்சீர் நிறுப்போர் பழுநிய பாடல் பலரொடு மகிழ்வோர்"
(மணி மேகலை. 19| 79 84)
பக்தியிலக்கியங்கள் தோன்றிய நாயன்மார்களும், ஆழ் வார்களும், பல்லவர் காலத்தில் வாழ்ந்து, மொழிக்கும் இலக் கியத்துக்கும், இசைக்கும் அரும்பெரும் தொண்டாற்றினர். எனவே தெய்வீக இசையும், ஆன்மீகநெறியும் மக்கள் மன தில் தூய சிந்தையை வளரச்செய்தன எனலாம்.
பல்லவ மன்னனாகிய மகேந்திரவர்மன் இசைவளர்ச்சிக் குச் செய்த தொண்டை புதுக்கோட்டை குடுமிமலையான் கல்வெட்டு சாட்சி பகருகின்றது. இவன் பரிவர்த்தினி என்ற வீணை வாசிப்பதில் திறமைபெற்றிருந்தான். அன்றியும் "சங்கீர்ணஜாதி” என்ற சிறப்புப் பெயரும் இவனுக்குண்டு. தமிழிசையை வடமொழியில் கூறும் கல்வெட்டாகவே குடுமி மலையான் சாசனம் விளங்குகின்றது.
பல்லவர் காலத்தில் அமைக்கப்பட்ட கோயில்களில்
நடன மண்டபங்கள், தருக்க மண்டபங்கள் எனப் பல மண்
61 حلم

Page 42
டபங்கள் அமைக்கப்பட்டு சமயம், சாத்திரம், இசை, நடனம் யாவும் வளர்க்கப்பட்டன. இவர்கள் காலததிலேயே தேவா ரங்கள் ஒதப்பட்டன.
சோழராட்சியில் முன்னர் திருப்பதிகம் ஒதும் வழக்கமே யிருந்தது. "இராசராச மன்னன் அபயகுலசேகரன்' எனத் திருமுறை கண்ட புராண முதலாம் பாடலில் வரும் சோழ மன்னன் இராசராசன் "அபயகுல சேகரன்' எனப்பட்டம் பெற்றவன். அவன் தெய்வீகம் தரும் தேவார இசையைக் கேட்டு மகிழ்பவன். இவன் தில்லைக்குச் சென்று தேவாரத் திருப்பதிகங்களைக் கண்டெடுத்து, நம்பியாண்டார் நம்பி மூலம் ஏழுதிருமுறைகளாக வகுத்தான்.
பின்னர் திருவாசகம் - திருகோவையார் எட்டாந்திரு முறையாகவும், திருவிசைப்பா - திருப்பல்லாண்டு ஒன்பதாம் திருமுறையாகவும் திருமந்திரம் பத்தாம் திருமுறையாகவும் சேர்க்கப்பட்டன. (திருமுறை கண்டபுராணம் இருபத்தா றாம் பாடலில் இச்செய்தி கூறப்பட்டுள்ளது ) மேலும் முதலாம் இராசராசன் நம்பியாண்டர் நம்பியினது துணை யுடன் பதினொராந் திருமுறையை வகுத்தான் இவனே பதினொரு திருமுறைகளையும் செப்பேடுகளில் பொறித்து திருவாரூர் தியாகேசர் சந்நிதியில் வைத்தான்.
"அநபாயன்' என்ற பட்டப் பெயருடைய முதலாம் இராசேந்திரன் சேக்கிழாரை வணங்கி, அவரின் திருத் தொண்டர் பெரிய புராணத்தை பன்னிரண்டாந் திருமுறை யாக மலர ஊக்குவித்தான்
சுந்தரமூர்த்தி நாயனார் செய்த திருத்தொண்டத் தொகையையும், நம்பியாண்டார் நம்பிகளது திருத்தொண்
62

டர் திருவந்தாதியையும் துணையாகக்கொண்டு திருத்தொண் டர் பெரியபுராணம் என்னும் பன்னிரண்டாந் திருமுறை கேக்கிழாரினால் பாடப்பட்டது.
கி. பி. 1070 - 1120 வரை ஆட்சி செய்த முதலாம் குலோத்துங்க சோழனின் பண்டைத்தலைவர்களுள் ஒருவ னாகிய மணவிற்கூத்தன் கலிங்கராயன் என்பவன், மூவர் பாடிய தேவாரங்களை செப்பேடுகளில் எழுதி தில்லையில் சேமமுற வைத்தான். இது தில்லையிலுள்ள கல்வெட்டுப் பாடல் ஒன்றின்மூலம் புலப்படுகின்றது.
*" முத்திறத்தா ரீசன் முதற் திறத்தைப் பாடியவாறு
ஒத்தமைத்த செப்பேட்டினுள் எழுதி - இத்தலத்தின் எல்லைக் கிரிவாய் இசையெழுதினான் கூடத்தின் தில்லைச்சிற் றம்பலத்தே சென்று '
திருமுறை கண்ட சோழன் என்று அழைக்கப்படுபவன் முதலாம் இராசராசனே. திருமுறைகளுக்குப் பண்ணயைப் பித்த பெருமை முதலாம் இராஜராசனுக்கும் நம்பியாண் டார் நம்பிகளுக்குமே உரியது. திருப்பெருத்தம் புலியூரில் திருநீலகண்ட யாழ்ப்பாணர் மரபில் வந்த பெண்ணொருவ ரின் இசைப்புலமையால் பண் அமைக்கப்பட்டது. திருமுறை கண்ட புராணத்தில் (பாடல் 32) இவ்வரலாறு தரப்படு கிறது.
இராசராசன் தஞ்சைப்பெரிய கோயிலில் 48 ஒதுவார் மூர்த்திகளையும், கொட்டிமத்தளம் - உடுக்கை வாசிப்ப தற்கு இருவருமாக மொத்தம் ஐம்பதின்மரை நியமித்தான். இவர்களின் பெயர் விபரம் சாசனத்தில் உண்டு. ஆலயங்க ளில் இன்றும் தேவாரப்பாடல்களும், நாலாயிரந்திவ்யப் பிரபந்தப் பாடல்களும் பண்ணுடன் பாடப்பட்டு வருவது போற்றுதற்குரியதே.
63

Page 43
ர்கள் இசைவளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தது மட்டுமன்றி தாமே இசைக்கலையிலும் பாண்டித்தியம் பெற்று விளங்கினர். என்பது சரித்திரவாயிலாகத் தெரி கின்றது,
முதலாம் குலோத்துங்க சோழன் கொடைத்திறத்தால், புகழ்பெற்றதோடு, பல கலைகளிலும் பாண்டித்தியம் பெற் றவன். இசைநூல் முறைப்படி பாடலும் இசையும் தாள மும் பிழையுறா வண்ணம்பாடி நரம்பிசை மீட்டவும் ஆற் றல் பெற்றிருந்தான்.
இவனது இசைமுறைப்படி நரம்பிசையில் பாடியவர்க்கு ஊதுகொம்பும், யானையும் பரிசில்களாக வழங்குவான்.
" தாளமுஞ் செலவும் பிழையாவகை
தான் வகுத்தன தன்னெதிர் பாடியே காளமுங் களிறும் பெறும்பா ணர்தங்
கல்வியிற் பிழை கண்டனன் கேட்கவே "
(கலிங்கத்துப் பரணி,324)
இம்மன்னரின் இசைப்பாடல் முறைகளை ஏழிசை வல்லி என்ற பெண்மூலம் பாடச்செய்ததுடன் அவளைத் தனது மூன்றாவது மனைவியாக்கி அரசவையில் தொடர்ந்து இசைக்கலையைப் போற்றச் செய்தான்
இவன் தனது வாழ்நாளைக் கலை, கலைவாணரின் கவி, இசை இம்மூன்றிலும் ஈடுபடுத்தியதுடன் மனுநீதி வேதப்பயிற்சிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டான்.
" கலையி னொடுங் கலைவாணர் கவியினொடுங்
இசையி னொடுங் காதல் மாதர் முலையி னொடு மனுநீதி முறையினொடு
மறையி னொடும் பொழுது போக்கி **
(கலி பரணி 277)
64

தலைவன் ஏகம்பவாணனை எதிர்கொண்ட பாணருக்கு யானையும், ஏனையபரிசுபெற்ற தனது விருதுகளையும் கொடுத்தான். மேலும் பாணன் ஒருவனை மதுரையில் ஒர் ஊரில் ஆட்சி செய்யும் படிசெய்து குடை, பல்லக்கு, அங்கி, கொடி, யானை, குதிரை என்பவற்றையும் கொடுத்தான்.
" என் சிவிகை யென்கவிகை யென்றுவச மென் கவசம்
என்பரியீ தென்கரியீ தென்பரே - மன்கவன மாவேந்தன் வாணன் வரிசைப் பரிசுபெற்ற பாவேந்தரை வேந்தர் பார்த்து "
(கம்பர் - தனிப்பாடற்றிரட்டு
சோழநாட்டினின்றும் இரண்டு கண்ணும் குருடான கவிவீராகவன் இலங்கையரசன்பால் கவிபாடி, யாழில் அதை இசையுடன் பாடினான். செங்கடகநகர் மன்னனாம் வால சிங்கமகாராசன் தன்மேற்பாடப்பட்ட பிரபந்தத்திற்கும் அவனது இசைக்கும் கெளரவமாக, வடதிசையிலுள்ள மணற்றிடல் ஒன்றை அக்குருடனுக்கு பரிசளித்தான். இவ் வரலாற்றுண்மையை யாழ்ப்பாண வைபவமாலை ‘மணற் றிடல்' எனவும், கைலாய மாலை நகரம்" எனவும் குறிப்பி டுகின்றன.
* பாவலர்கள் வேந்தன் பகருமி யாழ்ப்பாணன்
காவலன்றன் மீது கவிதை சொல்லி நாவலர்முன் ஆனகவி யாழின மைவறவா சித்திடலும் மானபரன் சிந்தை மகிழ்வாகிச் சோமவனக் கருமுகி நேருங் கரன்பரிசி லாக வருநகர மொன்றை வழங்கத் தருநகரம் அன்றுமுதல் யாழ்ப்பாண மானபெரும் பெயராய் நின்ற பதியினெ டுங்காலம் வென்றிப் புவிராசன் போலப் புகழினுட ன ண்ட கவிராசன் காலங் கழிய"
கைலாயமாலை - முத்துராச கவிராயர் 39-45
65

Page 44
யாழ்ப்பாடியின் சரிதத்தை ஆதாரமாகக் கொண்டு இந்த யாழ்ப்பாண நகரமானது உலகத்திலேயே உயர்ந்தது என்பதைக் கண்மணியாள் காதையில் மஹாகவி குறிப்படு கின்றார். சிலவரிகள் பின்வருமாறு.
* யாழைக் கொணர்ந்திங்கு மீட்டிய தாலொரு
யாசகன் மன்னனி டமிருந் தோர் பாழைப் பரிசு பெற்றான்.
வையத்துயர்ந்தது யாழ்ப்பாணம்"
இலங்கை வள நாடானது
" நாடெல். லாங்கதிர்ச் சாலி தழைக்க
நரம்பெல் லாமிசை யேழே யழைக்கும்" என
*பறாளை விநாயகர் பள்ளு பிரபந்தத்தில் (8) கூறிய நல்லூர்ச் சின்னத்தம்பிப் புலவர், அதன் இருபத்தைந்தா வது பாடலில், பண்ணிசைப் புலவர்களுக்கு ஈந்திட பொற் கிழி' களைக் கட்டி வைப்பர் என்ற இலங்கை மக்களின் கொடைத் திறத்தைப் பின்வருமாறு கூறுகின்றார்.
பண்ணிற் றோயப் பொருண்முடிப் புக்கட்டிப் பாடும் பாவலர்க் கீந்திட வென்றே யெண்ணிப் பொன்முடிப் புக்கட்டி வைத்திடு
மீழ மண்டல நாடெங்க ணாடே"
சுவாமி விபுலாநந்தர் “யாழ் நூல்" மூலம், சங்க இசை நூல்களில் உள்ள யாழின் வரலாற்றுண்மையைக் கூறினார். அவர் இலங்கையின் மட்டக்களப்பு நகர வாவியில் துேன் றிய 'நீரர மகளிரின் இசை உண்மையை யாழ்நூலில் நன் றாக எடுத்துரைத்தார்.
66

மேலும் யாழ்ப்பாணம் பலவகை அறிஞர்களால் இன்று உயர்ந்துள்ளதை அவர் இயற்றிய ஆறுமுக நாவலர்' பற்றிய பாடல்கள் ஒன்றில் அழகாகக் குறிப்பிடுகின்றார்.
தொல்லியல் வழுவாச் சைவ நூற் புலவர் தூ நெறித் தமிழுரையாளர் நல்லியற் புலவர் இசைதரும் புலவர் நாடக நவிற்றிய புலவர் சொல்லிய தொகைநூல் வானநூல் தருக்கம் தோமறு கணித நூல் முதலாம் பல்கலைப் புலவர்க்கு உறைவிட மாகிப் பரத்திசை யெய்தும் யாழ்ப்பாணம்"
இங்கே மன்னர்களின் வழியில், மக்களும் கலைத்திறம் போற்றி, தாமும் கலைததிறன் படைத்தவர்களாக வாழும் உண்மையை அறிகின்றோம்.
எனவே மன்னர்கள் தமது கொடைத்திறத்தால் இய லிசைப் புலவர்களையும், பாணர், கூத்தர், விறலியர் யாவ வரையும் வாழவைத்து, அவர்களின் கலைத்திறன் வெளிப் பட முன்னின்றனர் என்பதும், மன்னர்கள் இசைக் காற்றிய பணிகளாக அரசவையிலும், கோயில்களிலும் இசை வல்லுநர்களை நியமித்து அவர்களின் வாழ்க்கைக்குதவும் முகமாக நிலம், நெல், தானங்களைச் செய்து அரும்பெரும் பணியைத் தொடர பணியாற்றினர் என்பதும் புலனாகிறது.
6. இலக்கியம் சுட்டும் பாணர்
செந்தமிழ்ப் புலவர்கள் பலர் சங்ககாலத்தில் இசைவா ணர்களாகவும், இசை நுணுக்கங்களையாராய்பவர்களாகவும் வாழ்ந்து தமிழுக்கரிய பணிகள் செய்தனர். தமது இலக்கியச் சிந்தனைகளைக் கவிபாடும் புலமையினாலும், யாழில் இசை மீட்டி இசைபாடுந்திறமையினாலும் பலருடைய போற்
67

Page 45
றலுக்குள்ளாயினர் இசைவாணர்கள் பாணர்களாகவும் பாடினிகளாகவும், கூத்தர்களாகவும் தமது ஆடல் பாடல் களால் யாழ் மீட்டி அரசவையை மகிழ்வித்து, அரசனிடமி ருந்து பரிசில்களும், பட்டங்களும் பெற்றனர். கெளரவிக் கிப்பட்டனர் கலையே நாட்டின் செல்வமாகவும், வாழ்க் கையின் குறிக்கோளாகவும் கொண்டு கையில் யாழேந்தி, மெய்யிற் பசியைச் சுமந்து பாணரும், கூத்தரும், புலவரும் பரிசில் வாழ்க்கையுடைவராய்ச் சென்றதிசையெல்லாம் சிறப் புற்றனர். தாம் பெற்ற செல்வம்போல் தம்மினத்திவரான கூத்தர், பாணர், பொருநர், விறலி யாவரையும் செல்வம் பெறும் பொருட்டுக் கொடைத்திறன் மிக்கவர் பால் ஆற் றுப்படுத்துவர்.
* கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்
ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப் பெற்ற பெருவளம் பெறா அர்க்கு அறிவுறிஇச் சென்று. பயன் எதிரச் சொன்ன பக்கமும்"
(தொல்./பொருள். 1034)
வறுமையில் வாடிக் கொடையாளியைத் தேடிச் செல் லும் பாணரைப் பரிசில் பெற்றுவரும்பாணண் வாழ்த்தி அனுப்புவான்.
" யான் வாழும் நாளும் பண்ணன் வாழிய"
(LH υιο. 1 73 - 1)
புலவன் ஒருவன் புரவலனிடத்திற் சென்று பரிசில்
பெறுமாறு ஆற்றுப்படுத்தி அதற்கான நல்ல சகுனத்தையும் சொல்வான். (மலைபடு. உரை 64-66, 446 -48)
சோழ அரசன் கரிகாற் பெருவளத்தானிடம் சென்று தனது கலைத்திறனைக் காட்டிய பாணன், தான்பெற்ற பொருள் - கெளரவம் பற்றி வறுமையில் வாடும் பொரு
68

நனைக்கண்டு அரசன் பால் ஆற்றுப்படுத்துவதைப் பொரு நாரற்றுப் படை கூறும் .
இவ்வாறே பெரும் பாணன் ஒருவன் வறுமையுற்ற நிலையில் தொண்டைமான் இளந்திரையனிடம் சென்று பெரும் பரிசு பெற்று வருகையில் வறுமையில் வாடும் பெரும் பாணன் ஒருவனை, இளந்திரையன்பால் ஆற்றுப் படுத்துவதைப் பெரும்பாணாற்றுப்படை கூறும்.
அகவொழுக்கத்துக்குரிய கற்பின் வாயில்களாகக் கூறப் படும் பன்னிருவரில் பாணரும், கூத்தரும் அடங்குவர்.
* தோழி தாயே பார்ப்பான் பாங்கன்
பாணன் பாடினி இளையர் விருந்தினரி கூத்தர் விறலியர் அறிவர் கண்டோர் யாத்த சிறப்பின் வாயில்கள் என்ப"
(தொல். பொருள் 1137)
இப்பாணர், கூத்தர் முதலிய பன்னிருவரே களவொழுக் கத்தைப் பற்றிக் கூறுதற்குரியர் ஆவர்.
* பாணன் கூத்தன் விறலி பரத்தை
யாணஞ் சான்ற அறிவர் கண்டோர்
தொன்னெறிமரபிற் கற்பிற் குரியர்
(,ொல், பொருள். 1438)
தலைமகன் பிரியுங்காலத்து தலைவிக்குப் பின் நிகழக் கூடியவற்றைக் கூறுதலும், பிரிந்து வந்தான் பால் தலைவி யின் நிலையை உண்ர்த்துதலும் பாணரினதும் கூத்தரின தும் தொழிலாகும்.
நிலம் பெயர்ந் துரைத்தல் அவள்நிலை உரைத்தல் கூத்தர்க்கும் பாணர்க்கும் யாத்தவை உரிய"
(தொல், பொருள் 1113)
69

Page 46
பாணரும், கூத்தரும், விறலியரும் தலைமகனின் நிலை யை, வந்து குறைபுற்றுத் தோழியிடத்து ஞ் சொல்வர்.
* பாணர் கூத்தர் விறலியர் என்றிவர்
பேணிச் சொல்லிது குறைவினை எதிரும்"
( தொல்,பொருள் 1094.).
"பாவினமானது (பண்ணத்தி) பண்ணத் தோற்றுவிப்ப னவாய், பாட்டினிடத்துப் பொருளையுடையனவாகி, பாட் டுக்களின் இயல்பையுடையனவாம்" எனத் தொல்காப்பியம் (1429) கூறும் ,
" பாட்டிடைக் கலந்த பொருள வா கிப் பாட்டி னிய ல பண்ணத் திப்யே"
மேற்படி பாவினம் பற்றியும், பண்ணைத் தோற்றுவிக் கும் முறையையும் அறிந்த இசைப்பாணர்கள், இயலிசைப் புலவர்கள், ஐந்திணையும் அவற்றொடு பொருந்திக் கெடுதற் கரிய சிறப்புடன் பொருந்திய ஐந்நிலங்கட்கும் உரிய ஒழுக் சுங்களையுடையவர்கள்.
" முதலொடு புணர்ந்த யாழோர் மேய
தவலருஞ் சிறப்பின் ஐந்நிலம் பெறுமே"
(தொல், பொருள். 1050)
இனிய இசைதரும் வண்டினங்களுக்கும் பாணர்களுக்கும் இடையே இசைப்பரப்புவதிலும், கள்ளுண்டலிலும் ஒத்த தன்மை காணப்படுகின்றது.
பாணர் யாழில் இன்னிசை எழுப்புவது போன்று யாழிசை போன்ற வண்டுகளும் குழலிசைபோன்ற தும்பிகளும் இசை பரப்பும்.
ஒருதிறம் பாணர் யாழின் நீங்குர லெழ ஒருதிறம் யாணர் வண்டி னிமிரிசையெழ
70

ஒருதிறம், கண்ணார் குழலின் கரைபெழ
ஒருதிறம், பண்ணார் தும்பி பரந்திசையூத"
(பரிபாடல் 17/9.12)
யாழ் நரம்பின் புரியை நெகிழ்த்து இசைகூட்டும் பாண ரின் கைகளானவை தும்பி கட்டவிழ்பனவாகிய காந்தண் முகை போன்றன.
" கவின்முகை கட்டவிழ்ப்ப தும்பிகட் டியாழின்
புரிநெகிழ்ப்பார் போன்றன கை"
(பரிபாடல். 1836-37)
இன்னும் வண்டுகள் மாருதம் இளவேனில் பற்றுக்கோடா கத் திரிவதுபோல் பாணர் பரத்தையர் பற்றுக் கோடாகத்தி ரிவர் என சிலப்பதிகாரம் (இந்திர. 200-3) கூறும். அத்துடன் பாணர் குரலெனும் இசைபாடும் வாயுடையவர். வண் டுகள் குரலுக்குக் கிளையாக வரும் இளியென்னும் இசை யைப் பாடுவன. இளவேனிற் காலத்தே, ஆடவர் நாகரை போலப் பாகுடன்கூடிய மதுவை உண்பர். இப்பாணர்கள் இனியதாளமமைந்த பாடலின்பத்தால் தங்கள் செவியை நிறைப்பர்.
"சீரமை பாடற் பயத்தாற் கிளர் செவி' (பரி. 11/69 )
பண்டைத்தமிழர்கள் தாம் வாழ்ந்த ஐவகை நிலங் களிலும் ஆயர், குறவர், உழவர், நுளையர், எயினர் என் னும் பிரிவினராய் வாழ்ந்தனர். இவர்களில் துடிமுழக்கும் துடியனும், பண் இசைக்கும் பாணனும், பறைமுழக்கும் பறையனும், கடம்பனைவழிபடும் கடம்பனும் என நான்கு வகைக் குடியினர் வாழ்ந்தனர்.
* துடியன் பாணன் பறையன் கடம்பனென்
றிந்நான் கல்லது குடியு மில்லை”
(புறநானுறு 335 7.8)
71

Page 47
சங்ககாலத்தில் இசையறிவு மிக்கவர்களே கேட்பவர்க ளுமாக இருந்தனர். எனவே தமது நோக்கங்களை 965) 3 պ டனேயே தமது கருதுச்செறிவுள்ள பாடல்களாகச் சொல் வர். அண்மையில் திருமணஞ்செய்த ஒரு பெண்ணை, அவள் தோழி அவர்களின் வாழ்க்கை பற்றி வினவுகின்றாள். அவளோ "பாணனானவன் அதியமான் தெடுமானஞ்சியின் புகழை இசைப்பாட்டில் நிறுத்தி இசைமரபுப்படி புதுமை யாக இயற்றிய திறத்தைவிட காதலன் இனியன்’ எனச் சொல்வாள்.
தொல்லிசை திறீஇய உரைசால் பாண்மகன் எண்ணுமுறை நிறுத்த பண்ணி னுள்ளும் புதுவது புனைந்த திறத்தினும் வதுவை நாளிலும் இனியனால் நமக்கே?
(அகநானூறு 352/14.17).
இதேபோல பலர் முன்னிலையிலே யாழ்வாசிக்கும் ஒரு பெண், தனது காதலனுடன் கூட எண்ணுகின்றாள். அங்கு தனது குறிப்பைக் காதலனுக்குத் தெரிவிக்க மிக நுட்பமாகக் குறிஞ்சிப்பண்ணை வாசித்து மகிழ்கின்றாள்.
* பாடல் பயிலும் பணிமொழிதன் பணைத்தோள் கூடல் அவாவால் குறிப்புணர்த்தும் ஆடவர்க்கு மென்றீந் தொடையாழின் மெல்லவே தைவந்தாள்
இன்றிங் குறிஞ்சி இசை"
(தண்டியலங்காரம்)
இசையின்பத்தைப் பரப்பும் இசையில் வல்ல பாணர்க ளின் இசையின்பத்தை நுகருபவர்கள், மிக நன்றென்று தலையசைத்துக் கொண்டாடும்படி தமது இசைத்திறமை யைக் காட்டவல்லவர்கள் பாணர் ஆவர்.
72

இப்பாணர்கள் அரிய இசைத்துறையில் முதிர்ச்சிய டைந்தவர்கள். இருபத்தொரு பாடற்றுறையும் இசைக்க வல்லவர்கள். ஏழிசையை வலிவு, மெலிவு, சமம் என்னும் மூன்று தானங்களிலும் (ஸ்தாயி) இசைத்து இன்பம் தருபவர்கள்.
* மூவேம் துறையு முறையுளிக் கழிப்பி"
புறநானூறு. 155/20) * மூவகை இயக்கமும் முறையுளிக் கழிப்பி"
(சிலம்பு.வேனில் 42-44) வரன் முறை வந்த மூவகை தானத்து"
(சிலம்பு./புறஞ்சேரி. 110.12)
உறங்கியவர்க்குக் கேடில்லாத நற்புகழை உண்டாக்கும் வண்ணம் சூதர் என்பார் துயில் எழுப்புவர் எனதொல் காப்பியம்
"தாவில் நல்லிசை கருதிய கிடந்தோர்க்குச்
சூதர் ஏத்திய துயிலெடை நிலையும்" (பொருள் 034
கூறுவதுபோன்று யாழிசை கேட்டுத்துயிலெழும் முறை யும் பழந்தமிழர் கைக்கொண்டனர்.
பொய்கை பூமுகை மலரப் பாணர்
கைவல் சீறியாழ் கடனறிந் தியக்க
இரவுப் புறம்பெற்ற ஏம வைகறை"
(புற நானூறு 3984.6)
தமிழர் வாழ்வில் செவ்வழிப்பண் இரண்டறக் கலந் திருந்தது.
தலைவன் வரும் வழியெங்கும் செவ்வழி பிறக்கும். மாலையாகியும் செவ்வழிப்பண் பிறந்தும், தன் தலை வன் திரும்பவில்லையென்ற ஏக்கத்தில் தலைவி பாணன்
ஒருவனிடம் வினவுகின்றாள்.
73

Page 48
* ஈர்மபுறவு இயங்குவழி அறுப்பத் தீந்தொடைப்
பையுள் நல் யாழ் செவ்வழி பிறப்ப இந்நிலை வாரார் ஆயின் தந்நிலை எவன் கொல் பாண" ;
(அகநானூறு 214/12-15)
தலைவனைக் காணாத தலைவியிடம் பாணண் ஒருவன் யாழில் செவ்வழிப் பண்ணையிசைத்து, தலைவனின் தேர் கண்டேன் என்று உரைத்து ஆறுதல் சொல்லுவதாக அகநா னுாறு (14/12-21) கூறுகின்றது.
வையாவிக் கோப்பெரும்பேகன் என்னும் குறுநில மன்னனும் மனைவி கண்ணகியும் பிரிந்திருந்த காலத்தில் பரணர், அரிசில்கிழார், பெருங்குன்றுார்க்கிழார் மூவரும், இவர்களது ஊடலை தீர்க்க, சீறியாழில் செவ்வழிப் பண்ணி சைத்துப் பாடினர். இதை புறநானூறு (144.147) பாடல் கள் கூறும்
அருளா யாகலோ கொடிதே யிருள் வரச்
சீறியாழ் செவ்வழி பண்ணி யாழநின் காரெதிர் கா ம்ை பாடினே மாக"
(புறநானூறு 144, 1-3)
யாழிசைப்பவர்கள் இரவில் தூக்கம் வரும்வரை இனிமை யான செவ்வழிப் பண்ணை வாசிப்பர் என நளவெண்
பாப் பாடல் (122) கூறும்.
இவ்வாறு செவ்வழியாகிய இரங்கற் பண்ணிசைக் கும் பாணர்கள், தலைவன் - த லை வியர் க ட் கிடை யிலான ஊடல்களைத் தீர்க்கும் வல்லமைபடைத்தவர் களாக, ஆறுதல் சொல்பவர்களாக வாழ்ந்தனர். மன்னர்கள் போர்மேற் சென்று திரும்பும் போதும், வேட்டையாடித் திரும்பும் போதும் இன்னிசையால் உற்சாகப் படுத்துவதுடன்
74

போர்க்களங் களுக்குச் சென்று கூட தமது பங்களிப்பைச் மlசய்தவர்களாக இருந்துள்ளனர். இவர்கள் விளரிப்பண்ணை இசைத்தனர்.
* பாடுதலில் வல்ல பாண்மக்களே, துடிப் பறை கொட் டுபவர்களே, சிறுவர்களே, புண்பட்டவீரர்களையும், குற்று யிராய்க்கிடக்கும் வீரர்களையும் பறவைகளிடமிருந்தும், நரி களிடமிருந்தும் பாதுகாக்க விளரிபாகிய இரங்கற்பண்ணைப் பருந்தின் சுழற்சி போலப்பாடி அவற்றை விரட்டுவேன்’ என நெடுங்கமுத்துப்பரணரின் புறநானூறு பாடல்(291/1-4) கூறுகின்றது. இதேபோல,
* விளரிப்பண் கண்ணினார் பாணர்
களிறெறிந்து வீழ்ந்தார்க்கு "
எனப்புறப் பொருள் வெண்பாமாலையும் (பாண் பாட்டு 137) கூறும்.
தம்மனைகளில் காஞ்சிப்பண்பாடி புண்பட்டவீரர்க ளைக் காப்பாற்றினர். போரிலே அந்த வீரர்களைப் பேய்கள் அணுகா திருக்க வேப்பந்துளிரை வீட்டின் முற்பக்கத்திற் செருகி வெண்சிறுகடுகைப் புகைத்து காஞ்சிப்பண் பாடுதல் மரபு என புறநானூறு கூறும்.
"வேம்புசினை யொடிப்பவும் காஞ்சி பாடவும்
நெய்யுடைக் கைய ரையவி புகைப் வும்"
(புறநானூறு. 296-1-2)
நெடிய மனையில் போரில் புண்பட்ட கணவனைக் கண் போற் காத்திட யாழும் பிறவாத்தியங்களும் ஒலிக்க ஆம்பற் குழலூதி இசைமணியை ஒலித்து காஞ்சிப் பண் பாடி நறுமணங்கழும் அகில் வாசனைகளைப் புசைத்து இருப் பாள் இசையறிவுடைய மனைவி என புறநானூறு (281/1-9)
கூறும.
75

Page 49
இவ்வாறு குற்றுயிரான ப்ோர்வீரரையும், காயப்பட்ட வீரரையும் போர்க்களங்களிலும் வீடுகளிலும் வாணரும் அவர் சுற்றமும் காப்பாற்றினர். பாண் சுற்றத்தினர் தமது இசைக்கருவிகளை ஊருக்கு ஊர் பைகளிலிட்டு காவுதடி களிகட்டி சுமந்து செல்வர். பலாக்கனிகள் நெருங்கி ஒன் றின்மேல் ஒன்று இருப்பது போன்று இவ்வாத்தியங்களை எடுத்துச் செல்லுதல் தோன்றும்
(1) "ஒருதலைப் பதலை தாங்க வொருதலைத்
தூம்பகச் சிறுமுழாத் தூங்கத் தூக்கி"
(புறநானூறு 103)
(2) "வணரமை நல்யா ழிளையர் பொறுப்பப்
பண்ணமை முழவும் பதலையும் பிறவும் கண்ணறுத் தியற்றிய தூம்பொடு சுருக்கிக் காவிற் றகைத்த துறைகூடு கலப்பையர்"
(பதிறறுப்பத்துA12-5)
(3) 'திண்வார் விசித்த முழவொ டாகுளி.
கார்கோள் பலவின்காய் காய்துணர் கடுப்ப நேர்சீர் சுருக்கிக் காய கலப்பையிர்"
(மலைபடு , 3-13)
இங்கு யாழ், முழவு, தூம்பு முதலிய பிறவும் கூத்தரா லும் கைவல் இளையராலும் எடுத்துச்செல்லும் இசைக் கருவிகளை காட்டுவழிகளில் செல்லும்போது பாதுகாத்துச் செல்வதை மலைபடுகடாம் 380-83 அடிகளும், மழையில் நனையாதவாறு பாதுகாக்கபடுவதை மலைபடுகடாம் 231 -33 அடிகளும் கூறுகின்றன. இடையூறு மிக்க காட்டுவழி யைக் கானவர் காட்டினாலும் 'இம்" என்னும் ஒசையுடைய சுற்றத்தாராயிருப்பதால் மகிழ்ந்து செல்வர்.
"இம்மென் கடும்போடு இனியிராகுவிர்" (மலைபடுகடாம் 286-87)
76

பாணர் தம் மனைகளிலும் தம் மனைவி மக்களுடன் இசையா ற் கட்டுண்டு இன்பமாக வாழ்ந்தனர்.
முல்லைப்பந்தரின் அருகேயுள்ள மலர்த்தோட்டத்தில் உள்ள அகலமான மேடையில் முல்லைப்பண்ணை முல்லையாழில் இசைக்க, பாணன் தன் சிறுமகனை மடியில் இருத்தி யாழில் இசைக் கேற்பத் தாளங்கொட்டுவித்து மகிழ்ந்தான். பாணனின் மனைவியோ இதைக்கண்டும் கேட்டும் தொ டுத்த முல்லை மாலையை மகனுக்குச் சூட்டி தானும் சூடி மகிழ்ந்தாள்.
"பாணர் முல்லை பாடச் சுடரிழை வாணுத லரிவை முல்லை மலைய இனிதிருந் தணனே நெடுந் தசை துனிதீர் கொள்கைத்தன் புதல்வனொடு பொலிந்தே"
(ஐங்குறுநூறு 408 )
நற்றிணையிலும் (380), ஐங்குறுநூறிலும் (416) இவ் வாறான செய்திகள் மேலும் உண்டு.
கலைப்பண்பாட்டின் வாயில்களாகத் திகழ்ந்த பாணர் கள், புலவர்கள், அந்தணர்கள் என்போருக்கு அரண்மனை வாயில்களில் உள்ளே செல்லத் தடையே இருக்காது.
பொருநர்க்காயினும் புலவர்க்காயினும் அருமறை நாவின் அந்தணர்க் காயினும் . ... அடையா/வாயில் /வணங்/கடை"
(சிறுபாணாற்றுப்படை 203 6) 'நசையுணர் தடையா நல்பெரும் வாயில்"
(பொருநராற்றுப்படை*66)
இவர்கள் மக்களுள் மிக உயர்வாகக் கருதப்பட்டனர். "நற்குலத்துள் தோன்றிய நல்லிசையாழ்த் தொல்புலவீர்” என புறப்பொருள் வெண்பா மாலையும் (கையறுநிலை) கூறும்
77

Page 50
இப்பாணருள் சிறுபாணர், பெரும் பாணர் எனவும் பொருநர், வயிரியர், செயிரியர், மதங்கர் எனவும், இசைப் பாணர் மண்டைப் பாணர் எனவும் ஆண்களில் இருந்தனர். பெண்களில் பாடினி, விறலி, மதங்கி என உட் பிரிவினர் இருந்தனர்.
பேரியாழில் ஏழிசையைத் தருபவர்கள் பெரும்பாணராவர்
இடனுடைப் பேரியாழ் முறையுளிக் கழிப்பி"
( பெரும்பாணாற்று. 46 -64)
யாழுடன் அவர்கள் குழலிலும் ஏழிசையைத் தருபவர் களாயிருந்தனர். இப்பெரும்பாணர்கள் இருக்குமிடங்கள் பல இருந்தன
" குழலினும் யாழினும் குரல்முத லேழும் வழுவின் றிசைத்து வழித்திறங் காட்டும் அரும்பெறன் மரபிற் பெரும்பா னிருக்கையும்"
(சிலம்பு. இற்திர 35. 37) " அழுந்துபட் டிருந்த பெரும்பா னிருக்கையும்"
(மதுரைக்காஞ்சி. 342)
யாழ்ப்பாணருள் சிறியயாழினால் (சீறியாழ்) இசைத்துப் பாடுபவர்களைச் சிறுபாணர் என்று அழைக்கப்பட்டனர்.
* இன்குரற் சீறியா ழிடவயிற் றழிஇ "
சிறுபாணாற்று,35.)
பிச்சையேற்கும் ‘மண்டை" என்னும் கலத்தினை உடைய
பாணர்கள் மண்டைப் பாணர் எனப்பட்டனர்.
"பாணர் மண்டை நிறையப் பெய்ம் மார்" (புறந னுாறு 115/-2)
இசைப்பாணரில் கண்டத்தாற் டாடுகின்றவர் பாடற்பா
ணர் எனப்பட்டனர்.
78.

"டண்ணியாழ்ப புலவர் பாடற் பாணரோடு”
(சிலம்பு இந்திர 185)
யாழிலும் மிடற்றிலும் இசையெழுப்புதலைத் 'தெள்ளி சைக்ரணம்’ என்று சொல்வர் (சிலம்பு வேனில் 432 உரை)
மேலும் பொருநர்களில் ஏர்க்களம் பாடுநர், போர்க்களம் பாடுநர், பரணி பாடுநர் எனப்பல உட்பிரிவுகள் இருந்தன.
பாடல் மகளிர் வளைந்த தண்டுடைய சீறியாழில் பாலையிசைகளையும் குறிஞ்சிப் பண்ணையும் இசைக னிந்த பாடல்களையும் மண்கணை முழவோசையுடன் தருவர்
(சிலம்பு, நடுகற். உரை, 37-36; 55-56)
பாணர்கள் சிலர் மீன்பிடித் தொழிலையுஞ் செய்தனர். பாண்மகளிர் மீனினை விற்று நெல் போன்ற பொருட்க ளை வாங்கினர். இது பெரும்பாணாற்றுப் படையிலும் (283-87), ஐங்குறுநூற்றிலும்(47,49) சொல்லப்பட்டுள்ளது. பாணர்களிற் சிலர் புலையர் இனத்தவராயும் இருந்துள்ளனர்
‘புதுவன வீகை வளம்பாடிக் காலிற்
பிரியாக் கவிகைப் புலையன்றன் யாழிற்
(கலித்தொசை)
இயலிசைப் புலவர்கள் முத்தமிழிலும் துறைபோனவர் ஆவர் இவர்களில் இயற்புலவனது பாடல்களையும் நாடக துறைக்குரிய பாடல்களையும் வகுக்கவும் விரிக்கவும் வல்ல வனாய்த் தளராத இசையறிடையவவுனாய் யாழ் குழல் மிடற்று இசைகளில் பாடல்களை சுவைகொள்ளும்படி பொ ருளுணர்ந்து இசையாசிரியன் தாளநிலையில்ஒன்றப்பாடுவான் (சிலம்பு. அரங்கேற் 26.38உரை)
79

Page 51
யாழ் குழல் கருவிகளில் குரலும் இணைந்துதண்ணு மையின் தாழ்ந்த குரலுடனும், பாட்டின் நடைகளான முதல் வாரம் கூடை திரள் நான்கும் சரிவரக்கடைப்பிடித்து எழுத்து பொருளுணர்ந்த அறிவை இசையால் வெளிப்படுத் துவான் இசைக்கலைஞன். இவன் இசை நூல் வழக்காலே இணைநரம்பு தொடுத்தும் பாடும் அறிவினையுடையவன். தண்ணுமை முதல்வனுடன் பொருந்தி இளி என்னும் நரம் பிணையாழில் ஒலிக்கசெய்து பாட்டின் இயல்பு பண்ணுக்க்
மைவாகப்பாடும் அறிவினன்.
பண்ணமை முழவின் கண்ணெறி யறிந்து தண்ணுமை முதல்வன் தன் னொடும் பொருந்தி வண்ணப் பட்டடை யாழ்மேல் வைத்தாங்கு இசையோன் பாடிய இசையி னியற்கை'
(சிலம்பு. அரங்கேற்!61-64)
பாணர்கள் நன்மைதரும் பண்ணும் திறனும் கூடி நிலம், கலம் , கண்டம் ஆகிய மூவிடத்தும் இசைபரப்பும் திறனுடையவர்கள். (மணிமேகலை 28/41-33 உரை) "
யாழில் நிறை நரம்புகளமைத்து யாழில் பாணன்தரும் இசையானது, வேனிற் பருவ அரசனான மன்மதன் தனது அம்புகளால் எய்த வரும் குளிர்ந்த வாடைகக்காற்றுப் போன்றது. இவ்வாறு மூவருலா (விக்கிரம சோழன் 274-79 உரை) குறிப்பிடுகின்றது.
இசையோன் பருந்தினியக்கம் போன்று முறையே உயர்ந்து நிலத்தைக்கவனிப்பது போன்று பாட, இவ்விசை பின் அகலாது யாழிசை செல்லும் என்ற உண்மையைத் தரும் LJTL dio -9.466ir.
80

"பாணர்தம் பிரானைக் காப்பான் பருந்தொடு நிழல்ப்ோக் கென்ன
யாணரம் பிசையின் செல்ல விசைத்த வின்னிசைத்தேன்’
(திருவிளையாடற் விறகு 36)
* நீழலும் பருந்துமென்ன நெறிப்பட இசைத்துப் போனார்"
(கந்தபுராணம் 'ஆழியில்")
அப்பாடல் இசையானது செய்யுளோசை- இசையோசை வழுவாமல் மந்தர - மத்திம - தாரம் வரையில் இசைக்க அவ் விசை தேன்போன்று ஒலிக்கும். (திருவிளையாடற் / விறகு 32. உரை)
இவ்வாறு பாடும் போது உலகமே எழுதுசித்திரங்களா யின என மேற்படி 37வது பாடல் கூறும்.
வெண்டுறைப் பாட்டும் செந்துறைப் பாட்டும் வேறுபாடு தோன்ற, கின்னரத்தின் ஒசைபோன்று இணை-கிளை -பகைநட்பு இனம் என்னும் வகையில் கிளையோசையிலமைந்த தித்திக்கும் கோவையுடைய யாழில், மந்தர- மத்திம - தாரம் மூன்று நிலைகளிலும் ஆராய்ந்து பெண் ஒருத்தி பாடுவதைப் பின் வரும் பாடல் காட்டுகின்றது.
" வண்டுறையுங் கூந்தல் வடிக்கண்ணாள் பாடினாள்
வெண்டுறையும் செந்துறையும் வேற்றுமையாக் கண்டறியக் கின்னரம் போலக் கினளயமைந்த தீந்தொடையாழ் அந்நரம்பும் அச்சுவையும் ஆய்ந்து "
(புறப் பொருள் வெண்பாமாலை)
இவ்வாறு இசைக்கும் கலைஞர்களின் இலக்கணம் அமையப் பாடிய பாடல்கள், திருவிளையாடற் புராணத்தில் காணும் இசைவாது வென்ற படலத்திலும் வருகின்றது. கந்தருவர் இசைக்கும் இசைபோன்று உடற்குற்றம் - பாடற் இன்றிப் பாடிய பாணன் தேவியின் பாடலமைந்தது என்று கூறக்காண்கிறோம்.
8.

Page 52
*கண்ணுதல் மதுரைப் பிரானை' என்ற பாடலில் (37) இசைத்தொழில் எட்டும், இசைகரணம் எட்டும் குறிப்பிடப் பட்டுள்ளன. உடலில் இசையானது மூலாதாரத்தில் எழுவது "இடையினோ டேனை' என்றபாடலில் (38) வருகின்றது.
இவ்வாறு இசையைப் பாடுவோர் தவிர்க்க வேண்டிய குற்றங்கள் இவையென்று நூல்கள் பலவும் கூறும். கண்கள் இமைப்பது, கழுத்துவீங்குவது, அழுமுகம் காட்டல், வாயும் பல்லும் தெரியப் பாடுதல் என்பன உடற்குற்றங்களாகும். நாசிப்பாட்டு, மிக்க குறைந்த ஒசை, முறைதவறிப்பாடுதல் காகம்போற் கத்துதல் என்பன பாடற்றொழிற் குற்றங்க
ளாகும்"
* கண்ணிமையா கண்டந்துடியா கொடிறசையா
பண்ணளவும் வாய் தோன்றா பற்றெரியா - எண்ணிலிவை கள்ளார் நறுநதெரியற் கைதவனே கந்தருவர் உள்ளாள ப் பாட லுனர்"
(சீவகசிந்தாமணி658-உரை இசைமரபு)
* உள்ளாளம் விந்துவுட னாதமொலி யுருட்டுத் தள்ளாததுக் கெடுத்தறான் படுத்தன்-மெள்ளக் கருதி நலிதல்கம் பித்தல் குடில
மொருபதின்மே லொன்றேன்றுரை
(சீவகசிந்தாமணி 658மேற்.)
‘கருங்கொடிப் புருவம்ஏறா கயல்விழி நெடுங் கண்ணுமாடா அருங்கடி மிடறும்விம்மாது அணிமணி எயிறும் தோன்றா"
(சீவகசிந்தாமணி 658)
'வயிறது குழிய வாங்க லழுமுகங் காட்டல்" . .
(திருவிளையாடற் /விறகு.29)
* வெள்ளைகா குளிகீ ழோசை".
(விறகுவிற்றபடலம்.30)
82

‘விரனான் கமைந்த வணிகுரல் வீங்காது
(கல்லாடம், 21/40-44)
பாணர்கள் வெற்றி பெற்ற களத்தை வாழ்த்திப்பாடி யும், துர்க்கையின் வெற்றிப் போர்க் கோலத்தையும் பாடி வீரத்தை அரசர்க்கு ஊட்டுவர் என சிலப்பதிகாரம் (புறஞ் சேரி. 103-105 கூறுகின்றது. அவ்வாறு போர்க்களங்களில் உள்ள பானர்களைப் போர்வீரர்கள் எவரும் கொல்லமாட் டார்கள். இது மரபாகும் எனவே தோற்றவீரர்கள் தமதுயி ரைப் பாதுகாக்க ஆடுங்கூத்தர் போலவும், தோளில் இசைக் கருவிகளினைத்தாங்கி பாடுபவர்களாகவும் வேடமிடுவர்.
பாடுபாணியர் பல்லியத் தோளினர் ஆடு கூத்தர்"
(சிலம்பு/கால்கோட்"225)
வேறு சிலர் பாணர் வேடமிட்டவராய், வென்ற அரச னின் புகழ்பாடி, யானைகளின் கழுத்து மணிகளினால் தாளம் போட்டு உயிர் பிழைப்பர்.
* ஆனை மணியினைத் தாளம் பிடித்துக் கும்பிட்
டடிப் பானரெனப் பிழைத்தா ரனேகரங்கே?
(கலிங்கத்து பரணி. 469)
திருநீலகண்ட யாழ்ப்பாணநாயனார்ை யாழின் தலைவ ராகச் சேக்கிழார் குறிப்பிடுவார்,
*தரு நீர்மை யிசைகொள் யாழின் றலைவரா யுலகமேத்தும்
திரு நீல கண்டப்பாணர் திறம் . "
(கோச்செங்கட் சோழனார் புராணம்19)
திருஞானசம்பந்தரின் பாடல்கள் மூன்று இடங்களில் பதியப் பட்டன திருநீல கண்ட யாழ்ப்பாண நாயனாரின் யாழிலும் (கலம்) , மதங்கசூளாமணி அம்மையாரின் மிடற்றுப்பாடலி
83

Page 53
லும், யாழ்ப்பாணரின் மிடற்றிலும், சம்பந்த சரணாலயர் எழுதும் ஏட்டிலும் இருந்தன என்பதைத் தரும் ஒருவெண்பா
"பிள்ளையார் பாடற் பதிவுமோர் மூவிடத்தாம் உள்ளுகலம் ஏடும் உறுமிடறும்- தெள்ளுமிசைப் பாணர்ச்சர ணாலயர் பாடினியார் வாயில்வெளிக்
காண நின்ற தோர்பால் கனிந்து"
திருப்பாணாழ்வார் ஆழ்வார்களுள் குறிப்பிடத்தக்கவர். இவர் தினமும் வைகறைப் பொழுதில் யாழிசைத்து இன் னிசை பாடித் திருவரங்கத்தம்மான் புகழைப் போற்றுபவர். தீண்டாமை காரணமாக ஒதுங்கி, பல இன்னல்களில் அகப் பட்டும் தனது யாழிசையையும், இன்னிசைப் பாட்டையும் கைவிடாதவர். ஈற்றில் "அமலனாதிபிரான்’ என்று தொடங் கிப் பத்துப்பாடல்கள் பாடி நெடுமாலின் திருவடிகளில் இரண்டறக்கலந்தார்
பாண்டி நாட்டின் வரகுண பாண்டியனின் அரச வைப் பாணராக பாணபத்திரன் இருந்தான். ஏமநாதன் என்ற வட நாட்டு யாழ்ப்பாணனை வெற்றி கொள்வதற் காக, இறைவனே பாணபத்திரனின் அடிமையாக வேடமிட்டு யாழில் இசை கூட்டிப்பாடி அவனை நாட்டைவிட்டோ டச் செய்தமை பத்தியும், பணிவும், அன்பும் மிக்க தெய்வீக இசைக்குக் கிடைத்த பெருமையல்லவா? திருவிளையாடற் புராணத்தில் வரும் விறகுவிற்றபடலத்தில்(48-51) இச்செய் தியை அறியக்கூடிய தாக உள்ளது.
இவ்வாறு அரசரும் பிறரும் கொடுக்கும் வரிசில்களைத் தமக்கெனப் பாதுகாக்காது, வறிய பாண் சுற்றத்தினருக் குத் தானஞ்செய்து மீண்டும் வள்ளல்களை நாடுவது, பாண னது வழமையாகும் செல்வத்தை நிலையற்ற பொருளாகக்
84

கருதி இசையையே செல்வமாக அவன்கருதினான். பாணரில் தெய்விக இசைபரப்பிய பாணர்களின் பக்திநெறியில் நின்று இன்றும் பண்ணுடன் பாடிப் பரவுவார் போற்றப்பட வேண் டியவர்களே.
பாடற் கலைஞர்கள் தமது துறைசார்ந்த பாடற்கலை யின் அம்சங்கள் யாவற்றிலும் தேர்ச்சி பெற்று, இசைக் கருவி பற்றிய அறிவுத்திறனும், மொழியறிவும் உடையவராய் இருத்தல் வேண்டும் என்பதும் உடற்குற்றம், பாடற்குற்றம் இன்றி பாட்டிசைக்கவேண்டும் என்பதும் கலனிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு கலையின் மேம்பாட்டை யறிந்த கம்பர், கலைஞர்கள் தமது கடமைகளைச் செய்தபின் ஒய்ந்தபோது வாச்சியங்களின் இமைகள் மூடின என அவரின் பாடல் ஒன் றில் குறிப்பிடுகிறார்.
பண்ணிமை யடைத்தன பலகட் பொருநர் பாடல் விண்ணிமை படைத்தன விளைந்திருள் வீணை தண்ணிமை யடைத்தன தழங்கிசை வழங்குங் கண்ணிமை யடைத்தன வடைத்தன கபாடம்"
(கம்பர்./சுந்தரகாண்டம்.162)
பாணரும், பாடல் மகளிரும் இலக்கியங்களில் தரும் இசை மேம்பாட்டால் யாவரும் எழுதாச் சித்திரங்களாக இருந் சுவைத்தார்கள் என்பதை அறிகின்றோம்.
6. இலக்கியஞ் சுட்டும் இசைக்கருவிகள்
இயற்கையின் நிலம் - காலம் என்ற தன்மையால் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என நால்வகை நிலங் களை நம்முன்னோர் பகுத்தனர்.
85

Page 54
* முல்லை குறிஞ்சி மருதம் நெய்த லெனச்
சொல்லிய முறையால் சொல்லவும் படுமே”
(தொல்காப்பியம்951) இந்நிலங்களுக்குரிய கருப்பொருளாக தெய்வம் உணவு விலங்கு மரம், பறவை, பறை, யாழ், என பிறவும் கொண் டிருந்தனர்.
* தெய்வம் உனாவே மாமரம் புட்பறை
செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ அவ்வகைப் பிறவும் சுருவென மொழிப"
தொல் காப்பியம் 966) இந்நிலங்களில் யாழோர் கூட்டத்தினர் சிறப்புடன் பொருந்திய ஐவகை நிலத்தையும் பெற்றிருந்தனர் .
முதலொடு புணர்ந்த யாழோர் மேன தவலருஞ் சிறப்பின் ஐந்நிலம் பெறுமே"
(தொல் - 1050) நம்முன்னோர்தாம் வாழும் நில இயல்புகளுக்கேற்ற மனவுணர்ச்சிகளுக்குத்தக்க பண்களையும் யாழினையும் பறையினையும் தோற்றுவித்தனர்.
நிலம் மக்கள் யாழ் பண் பறை குறிஞ்சி குறவர் குறிஞ்சி குறிஞ்சி தொண்டகம், முருகியம்,துடி
Ꭵ ᏗfᎢᎧᎧᎧᏂᏪ வேடர் பாலை , பஞ்சுரம் | துடி, நிரைகோட்பறை நெய்தல் பரதர் விாரி செவ்வழி மீன்கோட்பறை முல்லை இடையர்முல்லை சாதாரி ஏறுகோட்பறை
LIDOTE 5 Lb உழவர் மருதம் மருதம் கிணை, மணமுழவு
இசைக்கருவிகள் பா, பண், பாணி என்ற உறுப்புடைய இசைப்பாட்டை வழுவின்றிக் இசைக்க கூடியனவாகும். இசைக்குரிய ஓசைகளை தோல், துளை, நரம்பு, கஞ்சம், மிடறு என்ற ஐந்து வகைக் கருவிகளில் பிறப்பிக்கலாம்,
86

"கருவியைத்துந் தழங் கொலி"
(திருவிளையாடற் | திருநகர 45 ) ஒசைகொண்ட தோற்கருவி உற்ற துளைக் கருவி நேசச் சுருதிமிடக்கருவி . மாசிலா நாதந ரம்புக்கருவி நல்லகஞ் சக்கருவி பேதமுறு மோசைப் பிறப்பு"
(LD5rrupt gigsLit LD6 of 837
"கஞ்ச. நரம்பு தோல் கண்டகுழ லாதியொலி"
(சிவஞானபாலையசுவாமிகள் தாலாட்டு24
பொதுவாக இசைக்கருவிகள் மிடற்றுக்கருவி, குயிலுவக் கருவி என இரண்டு வகைப்படும்.
மனிதனின் வாய், சை, விரல் முதலிய உறுப்புக்களால் கரு வியை இயக்கிப்பிறப்பிக்கும் இசை ‘குயிலுவக் கருவி இசை ஆகும். குயிலுவக் கருவிகளை இயக்கும் கருவியாளர் குயிலு வர்" எனப்படுவர்,
* கூடிய குயிலுவக் கருவிகளெல்லாம் (அரங்138)
மிடற்றுக் கருவியானது மனிதனின் குரல் மூலம் ஏழிசை யைப் பிறப்பிக்கும் நிலையில் சரீரவீணை, (சாரீர விணை) என்றும் காத்ரவீணை என்றும் அழைக்கப்படும்.
சரீரவினை. (சிலப்பதிகாரஅரங்கேற்றக்காதை 26 உரை)
இத்தகைய இசைக் கருவிகளின் ஒசையைக்காண்போம். ஓயாது ஒலிக்கும் அருவியில் ஆடுந் தெய்வ மகளிர் அதனைக் கையாற்குடையு மோசையானது, இசைக்கருவிகளினின்றும் தாளத்திற்கமைய எழும் இனிய ஓசை போன்றதாகும்.
அருவி நுகரும் வானர மகளிர்
வருவிசை தவிராது வாங்குபு குடைதொறும்
தெரிஇமிழ் கொண்ட நும்இயம் போல் இன்இசை"
(மலைபடு 294-96)
87 -

Page 55
இசைவாணனைத் தொடர்ந்து யாழ் போன்ற ஏனைய கருவிகள் பருந்தும் அதனது நிழலும் போன்றிருக்கும்
பருந்தொடு நிழல்போக் கென்ன யாணரம் பிசைபின் செல்ல"
(திருவினளயாடல். விறகு"36
குயிலுவக் கருவிகள் பருந்தும் நிழலும் போல் இசைதரும்
" ஆமந்திரிகையொடு அந்தரம் இன்றி"
(சிலம்பு/ அரங்கேற்ற* 17 )
* பருந்தும் நிழலும் பாட்டும் ஏழாலும்'(சீவகசிந்தாமணி,730)
இனிய இசைக்கருவிகள் இன்னியம் எனப்படும்.
* கூடுகொ வின்னியம்" (அகநானூறு 189.14)
வாரால் வலித்துக் கட்டப்பட்ட பலகருவியும் தொகு தியும் கொண்ட இன்னியங்கள்.
* விசிபிணிக் கூடுகொ வின்னியம்"
(புறநானுரறு 153-}
முழங்கும் ஓசையுடைய அருவியுடன் இனிய பல்லியங்க ளும் ஒலிக்கும்.
* இமிழ் இசை அருவியொடு இன்னியங் கறங்க"
(திருமுருகாற்றுப்படை 204)
அரித்தெழும் ஓசையுடைய சல்லி, கரடி முதலியவற்று டன் கூடியஇனிய ஏனையவாச்சியங்கள் ஒலிக்கின்றன
*அரிக்கூ டின்னியங் கறங்க"
(மதுரைக் காஞ்சி, 61)
88

என்ற பாடலடி காட்டும். பல்லியம் என்பதுமிடற்றுக்கருவியு டன் ஏனையநால்வகைக் கருவிகளும் சேர்ந்தொவித்தல் ஆகும்.
வாங்குமருப் பியாழொடு பல்லியங் கறங்க"
(புறநானூறு 81-2) சாரீர வீணை உடம்பினளவு தனது கையால் 96 அங்குலமாகும். இதில் மேலும் கீழும் தனித்தனி 47, 5 அங்குலம் தவிர்த்து நடு நின்ற ஓரங்குலம் மூலாதாரமாகும். மூலாதா ரந் தொடங்கி எழுத்தின் நாதம் ஆளத்தியாய்த் தோன்றி பெருந்தானம் எட்டினும் இசைக்கரணங்கள் எட்டாலும் பண் அல்லது இசை என்ற பெயரா யிற்று
சிலப்பதிகார அரும்பத உரையாசிரியர் பின்வருமாறு விளக்குன்றார் א • *
** மூலாதாரந் தொடங்கிய மூச்சைக்
காலாற்கிளப்பிக் கருத்தால் இயக்கி ஒன்றெனத் தாக்கி இரண்டெனப் பகுத்துப் பண்ணீர்மைகளைப் பிறப்பிக்கபட்ட
பாடலிய்லுக்கு அமைந்த பாடல் மிடற்றுப்பாடல்"
யாழ் பொதுவாக யாழ் என்பது இசைக்கருவியையும், அக்கரு வியில் எழும் இசையையும் குறிக்கும்,
யாழ்க்கருவிக்கு கூரம், கலம், இயம் என்ற பெயர்சன் த்.ண்டு.
"கர நாண்குரல் கொம்மென வொலிப்ப" " கண்டத்துங் கலத்தினிலும்" (பரிபாடல் 19,44) (பெரியபுராணம்/திருஞான 447)
"கலத்தொடு புணர்ந்தமைந்த கண்டத்தாற்பாட"
w ( சிலம்பு I கானல் 24.6)
89

Page 56
"நிலம் கலம் கண்டம் நிகழக் காட்டும்"
(மணி'28/42-43)
பாலைக் கோவைகளைக் கொண்டது யாழாகும்.
"கவர்தொடை நல்பா ழிமிழ" i (பரிபா டல்22 38) கூடுகொ Oன்னியங் குரல்குரலாக".(சிறுபாணற்றுப்படை229)
பாலை யேழினையுமுடைய புரி நரம்பின் கண் இனிய இசையை யாழ் தரும்.
"புரிநரம்பி ன்கொளைப் புகல்பாலை யேழும்"
(பரிபாடல்,7-77)
யாழி ணிளிகுரல் சமங்கொள் வோரும்"
(பரிபாடல். 19- 24)
பச்சையோடு வாயமைக்கப்பட்ட வனப்பினையும், திவ வினையும், அகளத்தினையும், நரம்பினையுமுடைய தனது பயன் விளங்கும் இசைகள் அனைத்தையும் கொண்டது
இனிய யாழ் ஆகும்.
இக்கருவியினை நிலைக்சுளனாகக் கொண்டே பெரும் பண்களும் திறன்களும் பிறக்கும் நுட்பங்களை ஆராய்ந்து கண்ட பண் வகைகளை "யாழின் பகுதி" எனவும், பண்களின் இயல்பை விளக்கும் நூலை, ‘நரம்பின் மறை, எனவும் நம்
முன்னோர் குறிப்பிட்டனர்.
யாழின் ஏழு நரம்புகளும் விரும்புபவர்க்குத் தக்கபடி விரலால் வாசிக்கப்படும். அவை தானக்கோலில் அகப்பட் Lால், நரம்புகள் அற்றுப்போனால், அந்தயாழைக் காட்டி
90

இம் நிலைபேறில்லாத ரொருளைப்பாணர் விரும்பமாட் டார்கள். யாழே காட்டிலும் பாணர்க்கு 'நிலை பேறா? பொருளாகும்.
" வீழுநர்க் கிறைச்சியாய் விரல்கவர் பிசைக்குங்கோ லேழந்தம் பயன்கெட விடைநின்ற நரம்பனூஉம் யாழினுந் நிலையிலாப் பொருளையு நச்சுபவோ"
(கலித்தொகை 8,9-11)
சந்தண்மும் ,முத்தும் தாம் பிறந்த இடங்களுக்குப் பலனளிக்காததன்மை போல, ஏழுநரம்புகளுடைய இனிய ஒசையைத் தரும் யாழானது, அவ்விசைகொண்டு பாடுபவரு கும், கேட்பவருக்குமே பயன்படும்.
‘ஏழ்புணரின்னிசை முரல்பவர்க் கல்லதை
யாழுளே பிறப்பினும் யாழ்க்கிவைதா மென் செயும்"
(கலித்தொகை 9/78 - 19)
அந்த யாழ் வாசித்தலாற் கவிழ்ந்த கையினையுடைய பாணனின் இசைக்கு யாவரும் செவி சாய்ப்பர்,
யாழி னிகுத்த செவிசாய்த் திணியினிப் பட்டன "
(கலித்தொகை 9 / 0.11)
யாழில் தோன்றிய இனிமையான இசையைச் செவி கொண்டு இன்புறும் முன்னே, யாழ் நரம்பை வீக்குதல் செய் தால் அந்தஇன்பம் பயனற்றுவிடும்.
* பண்ணினுட் செவிசுவை கொள்ள "து
நயநின்ற பொருள்கெடப் புரியறு நரம்பினும் பயனின்று "
(கலித்தொகை 14213.5)
9.

Page 57
சுறாவினது - மருப்பாற்செய்த பலகையில் நெய்தற் பூத் தொடுத்த நாரினால் கட்டிய யாழில் இசையெழுப்பினர் (கலித்தொகை 131 ! 7-9 உரை)
நன்றாக யாழ்மீட்டி வாசிக்க வல்லவரது யாழோசை போன்று வண்டுகள் ரீங்காரம் செய்யும்.
* வல்லவர் யாழ்போல வண்டார்க்கும்
(கலித்தொகை 32 / 9)
செவ்வழிப்பண்தரும் யாழினது நரம்புகள் இரங்கி ஒலித் தல் போலக் கணவரைப்பிரிந்த காலத்தில் மகளிர் வருத் திக் கூறுவர்.
* செவ்வழியாழ் நரம்பன்ன கிளவியார்
(கலித்தொகை 118:15)
மாலைக் காலத்தில் பூவின் தேனுண்ணும் கரியதும்பி யினது யாழோசையை ஒத்த ஒசை வருத்தத்தைத் தரும்.
வீழ்கதிர் விடுத்தபூ விருந்துண்ணு மிருந்தும்பி
யாழ்கொண்ட விமிழிசை யியன்மாலை யலைத் தரூஉம் "
(கலித்தொகை 29, 17 48) )
யாழிற்குரிய தெய்வம் மாதங்கி, முற்குறித்த இலக்க னங்கள் பொருந்திய யாழில் தெய்வம் உறைதலாலும், பாணராகிய தமக்கு உணவளிப்பதற்கு உறுதுணையாக அது இருப்பதனாலும் அதனைக் கைதொழுதல் மர
பாகும்.
* கைதொழு மரபின் முன் பரித்திடுஉப் பழிச்சிய *
(அகநானூறு 115/97
S2

* அணங்கு மெய்ந்நின்ற வமைவரு காட்சி "
(பொருநராற்று 20)
யாழ் கையில் தொழுது வாங்கி "
(சிலம்பு / கானல் க. 4)
* யாழ்க் கணங்கொ டெய்வ
(சீவகசிந்தாமணி 550)
" தெய்வஞ் சான்ற தீஞ்சுவை நல்யாழ் மெய்பெற வணங்கி "
(சிலப்பதிகார உரை)
பர்ழின் ஒலியை மகளிரின் மொழிக்கு ஒப்பிடுவர்.
* நல்யாழ், நரம்பிசைத் தன்ன இன்றீங்கிளவி
நல நல் கொருத்தி "
(அகநானூறு 109 1-3)
ஏழினிசை யாழின் மொழி' (சம்பந்தர் - ‘பாழியுறை")
யாழிசையினோசை தெருக்களில் ஒலித்துக் கொண்டி ருக்கும் நகரங்கள் முன்னர் இருந்தன.
யாழிசை மறுகின் பாழி ஆங்கண் *
(அகந னுாறு 396 /3)
விடிகாலையில் யாழிசை கேட்டு துயிலெழும் முறைமை முன்னர் இருந்தது.
தீந்தொடை விளரி நரம்பின் நயவரு சீறியாழ்
மலியூம் பொங்கல் மகிழ்குரற் குயிலொடு
புணர்துயில் எழும்பும் புனல்தெளி காலை S.
(அகநானூறு 279 / 10.13)
93

Page 58
* பொய்கை பூமுகை to GT LIT 6007th
கைவல் சீறியாழ் கடனறிந் தியக்க இரவுப் புறம்பெற்ற ஏம வைகறை "
(புறநானூறு 398 /4-6)
* சீர்இனிது கொண்டு நரம்பு இனிது இயக்கி
யாழோர் மருதம் பண்ண "
(மதுரைக் காஞ்சி 657-58)
யாழின் கோடடில் மாலை சுற்றுதல் மரபாகும்.
நரந்தப் பல்காழ்க் கோதை சுற்றிய ஐதமை பாணி வணர்கோட்டுச் சீறியாழ்' 4-5 302 புறநானூறு( م. - : در بی؟ مه ۹۹، ۹ -
* செழுங் கோட்டின் மலர் புனைந்து"
(சிலம்பு / கானல் க1ை)
* மணிசெய் நல்யாழ் போந்தன வுருவமாலை "
(சீவகசிந், 630)
* மாலை, சூழ்மணிக் கோட்டு வீணை "
(சீவகசிந், 728)
* சோல மாலையை வீணையிற் சூட்டி"
(சீவகசிந், 14662
* அன்ன மாலையை யாழிடைப் பிணித்து"
{கம்ப |அகலிகை )ே
யாழின் நரம்புகளின் ஒசையை ஒர்ந்து பார்த்து, வடித்து முறுக்கியதாகக் கட்டுவர்.
* சுகிர் - புரி நரம்பின் சீறியாழ்"
(புறநானூறு 109 - 5
குரல் ஒர்த்துத் தொடுத்த சுகிர்புரி நரம்பின்"
(மலைபடு 23)
g4

யாழை மீட்டுவோர் எட்டுவகைத் தொழில்களான -பண் ணல் பரிவட்டணை, ஆராய்தல் தைவரல், செலவு, விளை பாட்டு, கையூழ், குறும்போக்கு என்பவற்றில் இசையெ ழுப்பி, பண்வகையிற் குற்றம் நீங்கி, நரம்பின் மீதுள்ள விரல்கள் வார்தல் வடித்தல். உந்தல், உறழ்தன், உருட்டு தல், தெருட்டுதல், அள்ளல், பட்டடை என்ற எண் வகைக் காரணங்களால் உண்டாக்கிய கூறுபாட்டைக் கூர்ந்து கேட்டு ஏழிசையைத் தருவர்.
* வணர் கோட்டுச் சீறியாழ் கைவார் நரம்பின்"
புறநானூறு 302 / 5.9)
*வாரியும் வடித்தும் உந்தியும் உறழ்ந்தும் "
(பொருநராற்று 23)
*பண்ணல் பரிவட்டனை யாராய்தல் தைவரல். * பட்ட வகை தன் செவியி னோர்த்து'
(சிலம்பு கானல்வரி க,5.16) * கலைத் தொழில்பட வெழிஇப் பாடினாள் "
(சீவகசிந் தாமணி, 657-2 உரை) " பண்ணுதல் பரிவட்டணை முதலிசைநூல்
பகர் முதற்றொழில் இருநான்கும் எண்ணுற வர்தல் வடித்திடன் முதலா
மெட்டிசைக் காரணமும் பயப்ப "
(திருவிளையாடற் / இசைவாது 37)
இனிய பாலைக் கோவைகளுடைய யாழின் கண் பா லைப்பண்களை வாசிக்க வல்லவன் ஒவ்வொரு பாலையை யும் வாசிக்கும்போது, ஒன்றையொன்று ஒவ்வாத இன்பத்தை உண்டவர்க்குக் கொடுக்கும் அதுஒவ்வொன்றும் வெவ்வேறு சுவையுடையது ஆகும
* தீந்தொடை நரம்பின் பாலைவல்லோன்
பையு ளுறுப்பிற் பண்ணுப் பெயர்த் தாங்கு"
(பதிற்றுப்பத்து 65 11495

Page 59
இவ்வாறு பண்களைநல்லயாழில் மாற்றி மாற்றி வாசிக் கும் போது, ஒவ்வொரு பண்ணும் கேட்பதற்குத் தனித்து வமாயும் இனிமையாயும் இருக்கும். அதுபோல ஊர்கள் தோறும் நுகரும் கொருட்களும் நல்லவையாகவேயிருக்கும்
* நல்லியாழ்ப் பண்ணுப் பெயர்த்தன்ன . நன்பல வுடைத்தவன் றண்பனை நாடோ"
- (மலைபடுகடாம் 450-53)
இந்தயாழான்து தெய்விக அலங்காரத்துடன் மணப் பெண் போலத்தோற்றமளிக்கும்.
* மனங்கம்ழ் மாதரை மண்ணி அன்ன. காட்சி "
(பொருநராற்று 19)
* மைத்தடங்கண் மணமகளிர் கோலம்போல வனப்பெய்தி"
(சிலம்பு / கானல் க, 1-2)
இசைத்தேனமுதத்தைத் தன்னிடத்தே பொதிந்து துளிக் கும் நரம்புகளையுடையது யாழாகும்.
தேம்பெய்து அமிழ்து பொதிந்து இலிற்றும் அடங்கு புரிநரம்பு"
(சிறுபாணாற்று 225 - 26)
* தீந்தேனணி பெறவொழுகியன்ன வமிழ் துறழ் நரம்பினல்யாழ்' (சீவக சிந். 722)
கந்தர்வ ஆடவர் வெண்புகை போன்ற சுத்தமான ஆடையணிந்து மார்பில்மாலை சூடி தமதுசெவியால் ஒசைக் கேற்ப அளந்து கட்டிய இனிய நரம்புகளையும் சுற்றுதலையு டைய வார்க்கட்டுடனான நன்மை பொருந்திய யாழினால் இசைமீட்பர்எனத் திருமுருகாற்றுப்படை (138 - 45) கூறும்
96

“யாழின் போர்வையானது செந்நிறத்தோலையும் இரண் டுதுளைகளையுமுடையது. பெரியதண்டுடையது கடைசிப் பாகம் பிறைபோன்றவடிவுடையது. தண்டில் காணப்படும் திவவுகள் (வார்க்கட்டுக்கள்) மகளிரின் கைகளில் உள்ள இறுக்கமும் நெகிழ்ச்சியும் உள்ள காப்பணிகள் போன்றது. எனப்பெரும்பாணாற்றுப்டை (3-15) கூறும்.
யாழ் வாசித்தற்குரிய இருக்கை இன்பத்தைச் செய்யும்
"இன்ப விருக்கையுள் யாழிடந் தழீஇ'
( பெருங்கதை 43 - 1 7 )
*நன் பால் அமைந்த இருக்கைய ளாகி"
(சிலம்பு/வேனிற் 27)
இவ்விருக்கைகள் ஒன்பது வகைப்படும் என சிலப்பதிகா ரம் (வேனிற் 27 உரை) கூறும்
*யாழ்க்கோட்டில் திவவுகள் அசைவது, பாம்பொன்றின் தலையைப் பிடித்த கருங்குரங்கொன்றின் கையைச்சுற்றி பாம்பானது இறுக்கியும் நெகிழ்ந்தும் அசைவது போன் |றது" எனச் சிறுபாணாற்றுப் படை (220-22) கூறும்.
யாழானது பத்தர்-கோடு-ஆணி-நரம்பு என்ற உறுப்பு களையுடையது. நரம்புகளின் ஒலியினைப் பெருக்குவதற்கு வீணையில் குடம் இருப்பது போன்று, யாழில் பந்தர் இருந் தது. பத்தருடன் இணைந்து மேலாக எழுந்து நரம்பு களைத் தாங்கியிருப்பது யாழ்க்கோடு ஆகும் வட்டவடிவ மான திவவுகள் கோட்டில் கட்டப்பட்டிருக்கும். இவற்றை மகளிரின் கைவளையல்களுக்கு உவமை கூறுவர். முறுக்காணி யற்ற யாழ்களில் திவவு, நரம்புகளை இறுக்கவும் தளர்த்தவும் பயன்படும். முறுக்காணியுள்ள யாழ்களில் திவவுகள் நரம்
97

Page 60
துவக்குவதற்கு மட்டுமே பயன்படும் முறுக்காணியை Gf T டகம் என்பர். பத்தரினது வாயை மூடுகின்ற தோல் போர் வை எனப்படும். தோலானது பத்தருடன் ஆணிகளினால் சிறு துளைகளில் இறுக்கப்படும். யாழைத் தொழுது இருகையி னாலும் வாங்கி, இடப்புறம கத் தழுவி பத்மாசனமாக இருந்து, இடக்கையின் நான்குவிரல்களால் மாடகந்தழுவி எண்வகைத் தொழில்பட, எண்வகை இசைக் கரணங்கள்
செய்து வாசிக்கவேண்டும்.
இடந்தோளின் பக்கமாக யாழை அணைத்து வாசிப்ப தை ‘இன் - குரற் சீறியா ழிடவயிற் றழிஇ' என சிறுபாணற் றுப் படையிலும் (35), தொடையமை கேள்வி யிடவயிற் றழீஇ' என பெரும் பாணாற்றுப்படையிலும் (16) வருகின் றது. இதைப்பின்வரும் பாடலும் உணர்த்துகின்றது.
* நல்லிசை மடந்தை நல்லெழில் காட்டி அல்லியம் பங் யத் தயணிது படைத்த தெய்வம் சான்ற தீஞ்சுவை நல்யாழ் மெய்பெற வணங்கி மேலொடு கீழ் புணர்த்தி" இருகையின் வாங்கி, இடவயின் இரீஇ மருவிய விநய மாட்டுதல் கடனே வலக்கைப் பதாகை கோட்டோடு சேர்த்தி
இடக்கை நால்விரல் மாடகந் தழீஇ'
சிலம்பு.8.23. உரை
இத்தகைய சிறப்புடைய யாழ்கள் பேரியாழ் மகரயாழ் சகோடயாழ், செங்கோட்டுயாழ் என நான்குவகை எனவும் இவற்றுக்குரிய நரம்புகளின் எண்ணிக்கை முறையே 21, 19
98

14, 7 எனவும் சிலப்பதிகாரம் அரங்கேற்றுக்காதை (29) உரையிலும் சீவகசிந்தாமணி (608) உரையிலும் காணப்படு கின்றன.
* ஒன்று மிருபது மொன்பதும் பத்துடனே
நின்ற பதினான்கும் பின்னேழும்-குன்றாத நால்வகை யாழிற்கு நன்னரம்பு சொன்முறையே மேல்வகை நூலோர் விதி"
நரம்பினிசையாற் பிறந்த பொல்லாமையாவன:-
"செம்பகை ஆர்ப்பே அதிர்வே கூடம்
வெம்பகை நீக்கும் விர குளி அறிந்து" (சிலம்புவேனில்,29,30
"செம்பகிை யார் பே கூடமதிர்வு"
( சீவகசிந்தாமணி, 717உரை)
நரம்பினிசையாற் பிறந்த பொல்லாமை மரக்குற்றத் தால் பிறக்கு மென்பர். அவையாவன:
* நீரிலே நிற்ற லழுகுதல் வேத னிலமயங்கும் பாரிலே நிற்ற லிடிவீழ்த னே ய்மரப் பாற்படல்கோ ணேரிலே செம்பகை யார்ப்பொடு கூடமதிர்வு நிற்றல் சேரினேர் பண்க ணறமயக் கம்படுஞ் சிற்றிடையே’
( சிலம்பு, வேனில், 30 உரை") (சீவகசிந்தாமணி, உரை 717)
நங்கையின் குலம்போல யாழின் நலங்களும் உடைத்து
கொன்றை கருங்காலி குமிழ்முருக்குத் தணக்கே’
(பொருநராற்று. உரை 20-22) " சொல்லிய கொன்றை கருங்காலி மென்முருக்கு
நல்ல குமிழுந் தணக்குடனே- மெல்லியலா
யுத்தமமான மரங்க ளிவை யென்றார் வித்தக யாழோர் விதி"
- சீவகசிந்தாமணி 719 உரை)
99

Page 61
இத்தனை நற்குணங்களும் அமைய மீட்டி இசைக்கின்ற பாண் மகன் இறந்துபோனாலும் அழியாத்தன்மை கொண் டது யாழினம் ஆகும்.
* பாண்மகன் பட்டுழிப் படூஉம் பான்மையில் யாழினம் போலும் இயல்பினம்’
(மணிமேகலை 18/17-18
யாழானது பண் முற்றுப் பெறுதலிற் கேட்போர் நெஞ்சுருகுதற்குக் காரணமானதாகும்.
பண் கனிந் துருகு நல்யாழ்' (சீவகசித்தாமணி.628)
ஒருபெண் இவ்வாறு கலைத்தொழில் செய்து வளைந்த தண்டுடைய யாழில் பத்மாசனமாக இருந்து பாவை போல் பா டி ய போது பொ ழி ல் உ ரு கி வளைந்தது. தூண் தளிரையீன்றன. கின்னர மிதுனப் பறவைகள் மயங்கி வீழ்ந்தன.
"வளை யாழ் தழிஇ யிருப்ப" (சீவகசிந் .656) "கலைத் தொழில் படவெழீஇப் பாடினாள் (சீவகசித் 657 )
யாழில் இமையார் மடமகள் போல இருந்து எழுப்பும் இசையில் கின்னரர்கள் கூட மயங்கினர்.
"இமையார் மடமகள் போலிருந்து நல்யாழ்
தொட்டெழீஇப் பண்ணெறிந்தாள் கின்னரரு மெய்ம்மறந்து
சோர்ந்தாரன்றே" சீவகசிந் 647)
மாதர் யாழ் வாசிக்கும் பொழுதும் கண்டத்தாற் பாடும் பொழுதும் இசையறிவுடைய கின்னரப் பறவை நெருங்கி வந்தது. ஆனால் மைந்தர் வாசித்துப்பாடும் பொழுது அக்
00

கின்னாமானது இசையின் கனிவற்ற தன்மையால் துராவில கிச் சென்றது.
*மாதர் யாழ் தட வரவந்த மைந்தர் கைக்
கீதத்தான் மீண்டன கேள்விக் கின்னரம்"
(சீவகசிந்தா. 660)
ஆனால் தலைவன் யாழ் நரம்பை ஆய்ந்து வாசித்த தன்மையும் அவ்விசையுடன் மிடற்றாற் பாடியவண்ணமும் கண்டு, வீணை வாசிப்பதில் வல்லவரான கின்னரர் கூட வீணையை மறந்து வைத்தார் விஞ்சையர்களோ நெஞ்சுரு கித தம்மை மறந்தனர். மண்ணவரோ இத்தகைய இசை யைத் தம்வாழ்வில் சுவைக்காததன்மையால் அறிவு மயங் கினர். இருடிகள் கூட இதுவல்லவா பேரின்பம் என இசை யின்பத்தை நுகர்ந்தன.
"அண்ணலியாழ் நரம்பையாய்ந்து " (சீவகசிந்தாமணி 727)
யாழின் இணை கிளை பகை நட்பு ஒசைவகைகளில் ஐந் தாம் கிளை முறையில் அமைந்த தித்தித்த கோவையின் ஒசை, கின்னரத்தின் ஓசைபோன்றது. (தொடை - கோவை
"கின்னரம் போலக் கிளையமைந்த தீந்தொடையாழ்'
(புறப்பொருள் வெ. மா. 360)
இவ்வாறு நரம்பிசையுடன் பாடும்போது. வீணையே நரம் 1ால் பாடியதோ என வியப்புறுவர் எனவும், கருவியும் கண்டமும் ஒன்றே எனக் கேட்டு வியப்புறுவர் எனவும் சீவகசிந்தாமணிப்பாடல்கள் கூறும்.
"நரம்பொடு வீணை - நாவால் நவின்றதோ என்றுநைந்தார்"
658) " சூழ்மணிக் கோட்டுவீணை சுகிர்புரி நரம்புநம்பி ஊழ்மணி மிடறும் ஒன்றாய் பணிசெய்த வாறுநோக்கி" ί 728)
101

Page 62
இத்தனை இசையின் இனிமையால் யாவரையும் வசப் படுத்தவும் வல்ல இசைக்கருவியாம் யாழை இறைவனே அமைந்தான் என மணிவாசகர் தனது திருக்கோவையாரில்
(375) கூறுவார்
"தில்லை யிறையமைத்த திறலியல் யாழ்'
பெண்ணொருத்தி பொன்வளைக் கரத்தால் மாடகத் திவவியாழை மார்பு மீது அனைத்து, வலிவு மெலிவு சமம் என்னும் மூவகை நிலையத்திலும் மென்னரம்புகளால் ஏழி சையைப்பிறப்பித்து கின்னரப்பறவை கூட மயங்கும் குயி
லின் குரலெனத்தன் கொவ்வை வாயினால் பாடினாள்.
"ஆடகத் தியன்ற சூடகக் கரத்தால் மாடகத் திவவியாழ் மருமமி தனைத்து மூவகை நிலையத் தேழுசுர நிறீஇக் கொவ்வைவாய் திறந்து குயிலென மிழற்றுபு மென்னரம் புகிரான் விரன்முறை தடவிக் கின்னரம் வியக்குங் கீதம் பாட ,
(குமரகுருபரசுவாமிகள், பண்டார மும்மணிக்கோவை, 12- 17)
சங்ககாலத்தில் நிலங்களின் பெயர் கொண்டே யாழ்க் கருவிகள் அழைக்கப்பட்டன வில்யாழ், சீறியாழ், பேரியாழ் என்பன சங்ககாலத்திலும், சகோடயாழ், மகரயாழ் சிலப் பதிகாரம், மணிமேகலை காலத்திலும், சகோடயாழ் பல் லவர் காலத்திலும், திருநீலகண்டயாழ்ப்பாணர் காலத்திலும் இருந்தமைக்குச் சான்றுகள் உண்டு. உதயணன் காவியத் துள்ளே "கோடபதி என்னும் யாழ் இருந்ததாகக் கூறப் பட்டிருக்கின்றது சீவகசிந்தாமணியில் யாழ் செய்வதற்குரிய மரங்கள் யாவை என்பனவும், செய்யக் கூடாத மரங்கள்
102

எவை என்பனவும் கூறப்பட்டுள்ளன. கூரம், கலம், இயம் எழால் என்ற பெயர்கள் யாழ் என்ற கருவியைக் குறிப்பன
இடையன் கையில் வில்யாழாக உதித்து. பாணர்களின் கைகளிலே சீறியாழாக வளர்ந்து, மக்களினதும் மன்னர்க ளினதும் கொடைத் திறங்களையும், வீரத்தையும் LuTuq., அரசவையில் மங்கையாக, மணப்பெண்ணாக மாலையிட்டு ஆடல் அரங்கங்களிலே பாலைத்திறங்களின் கோலங்களில் காதல் மழை பொழிந்தாள். பேரியாழாகவும், மகரயாழா கவும் செங்கோட்டுயாழாகவும் கோலம் பூண்ட யாழ்நங் கை பாணர்களுடன் திருக்கோயில்களில் வலம் வந்து இசை வடிவங் கண்டாள். தமிழரின் பண்பாடு கலைத்திறன்க ளைப் போற்றவும் ஓங்கி வளர்ந்தாள். தமிழரின் மூச்சி லும் பேச்சிலும் இசைக் கலைவடிவாகி நிலைபெற்றாள்.
யாழின் தோற்றம், அதன் அங்கங்கள், இசை மீட்கும் முறை என்பன பரிபாடல், அகநானூறு, புறநானூறு,ஆற் றுப்படை, சிலப்பதிகாரம், மணிமேகலை, சிந்தாமணி
ஆகிய நூல்களில் கூறப்பட்டுள்ளன.
யாழில் நரம் களை அமைத்தற்குரிய முறை பாலை எனப்படும். யாழின் நரம்புகளினின்றும் ஏழ்பெரும்பாலை கள் பிறக்கும். சிலப்பதிகாரத்தில் கானல் வரியிலும் (1. 47,48 , வேனிற்காதையிலும் (23 - 42), புறஞ்சேரியிறுத்த காதையிலும் (106 - 113) ஆய்ச்சியர் குரவையிலும் (எ), நடுகற் காதையிலும் (31 - 36) யாழ்வாசிக்கும் முறை, பண்கள் தோன்றும் முறை என்பன தரப்பட்டுள்ளன.
வில் யாழ்
இடையர் கையில் இருந்த வில்லினது தெறிக்கும் ஒலி யினடிப்படையில் வில்யாழ் உருவானது. இதில் குழிழமரக்
103

Page 63
கொம்புகள் வில்லாகம், மர நாரிலான நாண் நரம்பாக வும் அமைந்தது. குமிழங்கொம்பு துளையுடையதாதலால் அதுவே கோடாகவும் பத்தராகவும் அமைந்தது.
இந்த யாழில் குறிஞ்சிப்பண்ணை வாசித்து இடையன் மகிழ்கின்றான். இக் குறிஞ்சியிசையைத் , தமது இன வண்டு களால் எழுப்பப்படும் இசை எனக்கருதி, அவ்வண்டுகள் கேட்டு மகிழும்.
"குமிழின் புறங்கோட்டுத் தொடுத்த மரற்புரி நரம்பின்
வில்யா ழிசைக்கும் விரலெறி குறிஞ்சி
பல்காற்பறவை கிளை செத் தோர்க்கும்"
(பெரும்பாணாற்று 180 - 83)
சிறியாழ்
சீறியாழின் விளரி என்னும் நரம்பின் கண்ணே வரும் இசையுடன் குரற் குயிலின் ஒலியுடன் சேர்ந்தொலிக்க, காலைப் பொழுது விடியும் என அகநானூறு (279/10-13) கூறும்.
சீறியாழின் இசையின் இனிமைக்கு அசுணமா என்ற இசையறிபறவை நெருங்கி ஓடிவரும்.
இதற்குப் பத்தர், போர்வை திவவு, வறுவாய், மருப்பு (கோடு) தந்திரிகரம், புரிநரம்பு, வணர் ஆகிய பல உறுப்
கள் உண்டு.
இச்சீறியயாழை வறியோர் வெத்திருந்தனர். "சீறியாழ் இல்லோர்" (புறநாநூறு 176 7)
I 04

இவ்வகையாழின் கோடு, கரிய களாம்பழத்தின் நிறமுடையது. பொன்கம்பிகளாற் செய்து முறுக்கிய கம்பிகளையுடைய இனியத், நரம்பு தீந்தொடையைக் கொண் டது, மின்னலை ஒத்ததோலையும், வண்டின் குரல் போன்ற நரம்போசையையும் கொண்டது வளைந்த தண்டினையு டைய கோடு, நரம்பு, பத்தர் உடைய இச்சிறிய யாழில் குரல் குரலாக வரும் செம்பாலைப்பண்ணையும், துத்தம் குரலாக வரும் படுமலைப் பாலையையும், அவ்வழியே செவ் வழிப் பாலையையும், குறிஞ்சிப்பண்ணையும் பாடும்மகளிர்
இசைவிருந்தளிப்பர்.
*வாங்கிரு மருப்பிற் lந்தொடைச் சீறியாழ்'
(புறநானூறு 285-3)
"பொன்வார்ந் தன்ன புரியடங்கு நரம்பின் மின்னேர் பச்சை மிஞற்றுக்குரற் சீறியாழ்'
(புறநானூறு 308 1-2)
"பொன்வார்ந் தன்ன புரியடங்கு நரம்பின்
வரிநவில் பனுவல் புலம்பெயர்ந் திசைப்பப் படுமலை நின்ற பயங்கெழு சீறியாழ்'
(புறநானூறு. 135/5 7)
"களங்கனி யன்ன கருங்கோட்டுச் சீறியாழ்
(புறநானு று127-1)
இந்தயாழில் செவ்வழிப்பண், மருதப்பண், பாலையி சைகள் இசைத்து மகளிர் பாடி ஆடுவர். பாணர் பரிசில்
பெறுவர்.
சீறியாழ் செவ்வழி பண்ணி"
(புறநானூறு 147 - 2)
105

Page 64
"ஏழ்புனர், சிறப்பி வின்றொடைச் சீறியாழ் 。,甲 -,
தாழ்பயற் சுணைகுரல் சுடுப்பப் பண்ணுப்பெயர்த்து"
(மதுரைக்காஞ்சி 559-60)
"மருதம் பண்ணிய சுருங்கோட்டுச் சீறியாழ், நரம்பு மீதிறவா துடன்புணர்த் தொன்றிக் । ताः। கடவ தறிந்த வின் குரல் விறலியர்
(மீன்லபடுகடாம் 54. 36'5"
"மண்ணிமை முழவின் பண்டனமை சீறியா
ழொண்ணுதல் விறலியர் பாணி துர்ங்க்'
(பொருநராற்றுப்படை 109'0')"
i i Fམ་"
"குரல்குர வாசு வருமுறைப் பாலையில்
துத்தங் குரலாத், தொன்முறை யியற்கையின் ti ஆந்திங் குறிஞ்சி யசுவன் மகளிரின்"
. ॥ (சிலம்பு நடுகற்கானத83-35)
நியூ * 生 " تم الة 1 . . "பண்ணுக்கிளை பயிரும் பண்ணியாழ்த் தீந்தொடை"
ཅ ། دي سي " يا رة tணிமேகல்ை73:46
܂ - ܐܶ. மகளிர் தமது தளிர்க்கைளால் பரிாடகம் பற்றி, முறுக் காணிகளைத்திருகி, ஒழுகும் தேன்போன்ற நரம்புகளை இசை கூட்டி, விரல்களுடன் மனநிலையும் பொருந்த இசை *ட்டி,வெண்ணகை சிந்தும் பாடல்கள்ைப்பாடுவது நீந்தேன் போன்று காதுகளில் இனித்தது
"வள் உகிர்த் தளிர்க்கை قوقIT Gijقتل ہ ?t' கம்பர்ர் மாயனம்)
1 - * - А л " " சீறியாழிசையால் வெள்ளிமாடத்தில் மங்கையரைத் துயில் எழுப்பும் என 'தெள்விளிச்சிறியாழ்' என்றபாடலில் *= . it. ' ஆம்பர் குறிப்பிடுகின்றார்.
= في نة
பேரியாழ் \ 1+= __ا۔ 1 ما *ஆதிப் பேரியாழ் ஆயிரம் நரம்புடைத்துதான்பூர் பேரி யாழின் நரம்புகள் எண்ணிக்கையைப் பொறுத்தளவில்
1 Սճ. 1

பெருங்கதை, கல்லாடம் ஆயிரம் தந்திகள் எனக்குறிப்பிடு கின்றன. பெருங்கதையில் பல இடங்களில் பேசியாழ் பற்றிய செய்திகள் வருகின்றன .
༈ ༈ །
பெருங்களி றடக்கிய பெறற்கரும் பேரியாழ்' ) i / اث fi || . ارثیه தெய்வப் பேயாழ் சுைவயிற் றரீஇ' '4 IQA
" வனப்புடைத் தம்மலிவ் வள்ளுயிர்ப் பேரியார் F, . 3 | 15 και 7 )
புலமகளாளர் புரிதரப் பாயிரம்
" வலிபெறத் தொடுத்த வாக்கமை பேfயாழ்" {4/3 Ãö ፵- 5& }
படைப்பரும் பேசியாழ்ப் பண்ணொலி யிதுவென" 속 3/ I
பெரும் பாணர்கள் இலக்கண முன்றப்படி அமைக்கப் பட்ட பேரியாழில் பாலைப் பண்களை வாசித்து, த மது கலைத்திறனமயைக் காட்டுவர்.
" தொடைபடு பேரியாழ் பாலை பண்ணி
பணியா மரபி னுழிஞை பாட (பதிற்றுப்பத் து" 4 6 35- ti
" பாணர் கையது பணிதொடை தரம்பின் விரல்கவர் பேரியாழ் பாலை பண்ணி
(பதிற்றுப்பத்து, 57 7.5
t
வாங்கிரு மருப்பிற் றீத்தொடை பழனிய
இடனுடைப் டேரியாழ் பாலை பண்ணி"
(பதிற்றுப்பத்து" 66; 1.2
பத்துப்பாட்டில் ஒன்றான I resingil 'I J3)3. I rith ( 21 - 3 7
கள்) இதன் அமைப்பைக் கூறுகின்றது
இந்த பாழில் ஏழிசையைப் பெருக்கிய அனுபவம் நிக்க
டானர்கள் அரசவையில் இருந்தனர்.
1ο 7

Page 65
'இசைபெறு திருவின் வேத்தவை ஏற்ப துறைபல முற்றிய பைதீர் பாணரொடு"
(மலைபடுகடாம் 38-40)
வீறுபெறு பேர்யாழ் முறை புளிக் கழிப்பி"
பொருநராற்றுப்படை. 167.68)
'இடனுடைப் பேரியாழ் முறையுளி கழிப்பி"
(பெரும்பாணாற்றுப்படை. 482)
இதற்குப் பெருங்கலம், பரவையாழ் எனவும் பெயர்கள் உண்டு. சீவகசித்தாமணி (பாடல் 530) பரவையாழ் எனக் குறிப்பிட்டுக் கூறும்
ஆயிரம் தந்திகளையுடைய பேரியாழ் எனக்குறிப்பிட்ட யாழ் தோன்றி மறைந்திருக்க வேண்டும். சிலப்பதிகார உரையாசிரியர் பேரியாழிற்கு 21 நரம்புகளையே குறிப்பிடு வது கவனத்திற்குரியதே.
LID35 J uJ Tijp
இது மகர மீனின் வடிவிலமைந்ததும் 19 நரம்புகளைக் கொண்டதுமாகும். இதற்குப் போர்வை, திவவு, பத்தர், மருப்பு, மாடகம், நரம்பு, என யாழுறுப்புக்கள் உண்டு.
"மகரயாழின் வான்கோடுதழிஇ’ எனப்பளிக்கறை புக்ககாதையில் (6.6) கோடுபற்றிக் கூறி, மகர யாழின் கிளை நரம்பாகிய ஐந்தாம் நரம்பினைத் தெறித்த இசை யுடன் கலந்த இணிய தாள ஒற்று உள்ளத்தைத் துளைக்கும் என நரம்பிணினிமையை மணிமேகலை கூறும்.
"மகர வீணையின் கிளை நரம்பு வடித்துக
இளிபுனர் இன் சீர் எஃகுளம் கிழிப்ப"
(சிறை, 325 26)
1 O 8

மகர யாழில் ஏழிசையைத்தரும் புலமைமிக்க காந்தருவ தத்தையை, சீவகநம்பியானவன் யாழிசையால் வென்று மனமாலை சூடியதைச் சீவகசிந்தாமணிச் செய்யுட்கள் குறிப்பிடும்.
தீந்தொடைகளையுடையது மகரயாழ் ஆகும்.
* நீந்தொடை மகர வீணை"
சீவகசிந்? 608
மகரயாழினின்றும் எழும் பாலையாகிய, பண் நீர்ப் பெருக்கத்திலே அரசர் அழுந்துவர்.
" திருமணி வீணைக்குன்றத் திழிந்ததீம் பாலைநீத்தத்
தருமுடி யரசாழ்வரம் மனையறிவ லென்றாள்"
(சீவகசிந், 169)
பண்களைத் தன் நரம்புகளில் வைத்திருக்கும் மகர வீனை
* பண்ணமை மகரவீணை நரம்புரீஇப் பாவைபாட"
(சீவக, 1984)
வண்டுகள், மகரயாழின் இசைபோலப் பாடும் எனக் கம்பராமாயணத்தில் (பாடல் - 'தண்டலை') வருகின்றது.
மகரயாழிசை மிக்க இன்பந் தருவது. அதைக் கேட்கும் செவிகள் தெய்வத் திருச்செவிகளாகும்.
* மகரயாழ் கேட்டருளும் தெய்வத் திருச்செவி"
(நளவெண்பா, 271)
சகோட யாழ்
இதற்கு, 14 நரம்புகள் உண்டு
"பிழையா மரபின் ஈரேழ் கோவையை"
(சிலம்பு/வேனில் 31)
09

Page 66
量
"சிம் தோடுத்த செம்முறைக் கேள்வியின்
1, ཁོ ། ” -
(சிலம் அரங்
'ஈரேழ் சகோடமும் இடைநிலைப் பாலையின்'
या या (சிலம்பு நாடு கட்டுரை :) )
"Լյrreմ են ஈரேழ் கோத்த பண்ணினாற் கிருவிவீக்கி' '
(பெரியபுராணம் திருநீஐ జ్EF_-j
... " ∎ ܕ ܸ ܡ ݂ சிப்பதிகாரத்தில் (வேனில் 23 . 42) சகோடயாழின்
།
ITதவி இசை' 'டி.ப்பாடும் முறை தரப்பட்டுள்ளது.
- - -* :
'கவி பதுபாசனம் எலும் தலையாய இருப்பினை .பினையுடைய சகோ" تم تر r و rر علاقة ب IT ITI , II rة 577 للاس " (59 / لا 'சிக் கையில் ஏந்தினாள் வலக்கையைப் பதாகையாகக் கோட்டின் மேல் வைத்து, இடக்கை நான்கு விரல்களால் PTடகத்தைத் தழுவி, செம்ப்கை - ஆர்ப்பு-அதிர்வு - கூடம் என்றும் நி" பின்து பகை நரம்புகளும் வராது இருக்கும் '' பTTத்துக் கொண்டாள்.
குர ல் நரம் ாகிய தTம் நரம்பு ம், இளி நரம்பாகி:
ஐந்தTம் நரம்பும் ஒத்திசைத்தலை அறிந்தாள்
! ନାଁ ନାଁ &at if தான்கு வகைப் பண்களையும் வவிவு- மெலிவு
". - சம்ே என்னும் மூைைக இயக்கத்தாலும் முறையாக அவள்
47 மீட்டிப் பாடினாள்.
திரு தோன சம்பந்தரின் ே தவாரத்திருப்பதிகங்களை திரு நீலகண் - 'ழ்ப்பான தனது சகோடயாழில் இட்டுத்
தெய்விக இசைபரப்ப உதவினார்.
செங்கோட்டு யாழ்
இதற்கு 7 நரம்புகள் உண்டு. இதன் உறுப்புகளாகக்
இத கோடு திவ,ை ஒற்று, தந்திரிகரம், செழி நரம்புகள் -4. தாளத்துக்கும் சுருதிக்குமான நரம்பு
நரம்புகளில் பண்
II ()

॥_ "ता। ܨܒܐ
கள் .3 என்பவை உண்டு. நரம்புகளை வலிபெறக்கட்டும்
வார்க்கட்டு திவை எனப்பிடும்." 『
༥ ཀན། ༈ ༩ ༈ ། ༈ ༼
சிலப்பதிகாரத்தில் (புறஞ்சேரி 106-12) இவ்வகை
பாழில் அரும் பாலையிசை பிறப்பித்தலைக் -Fi 'ಛೀ':51 IT ಗೆ.
நன்றாக அமைக்கப்பட்ட செங்கோட்டுயழில் தந்திரி கTம் (மெட்டு), திவ  ை (வார்க் கட்டு), இரண்டையும் மிருப்பு புடன் (கோடு) கட்டி பண்மொழி நரம்புகளை (மீட்டுத் தந்திகள் 4) உழை குரலாகவும், கைக்கிளை தாரம்ா கவும் நிறு த்தி சுருதி கூட்டி இசை நூல் மரபுப்படி வலிவு, மெலிவு சரின் பாண்ணும் மூன்றுவகைத் தானங்களிலும் இயக்கும்
r Tது அரும்பாலை இசை பிறக்கும். யாழில் ஏழு க்ரம்
T 'T
. ܡܩ புகளைப் பற்றிக்கூறும் பாடல்:-
町 匣
"குரலே துத் தங் சைக்கி 4ள 2_inful
இளியே விளரி தாரம் என நிலை , י ייו ( g யாழிசைக் கெழு "That" (பிங்கலம்-1400
॥ பிறவகை யாழ்கள் "Ti, | = பழந் தமிழிசை மு:ைபில் குரல் இளி அடிப்படையில் (சப முறையில் ) இசைகள் தோன்றிற்று.
l". குறிஞ்சியாழ், Pல்: "ழ் மருதபாழ். பாலையாழ் ான்ற பிரிவுகள் இவ்விதமே தோன்றின. 'நால்வகை tti "ப்பெரும் பண்" என்பர். , . ।।।।
' ' - ...) iוו וח, ו \ ', ۔ لا, اف
ஐந்திசை கொண்டி முல்லையாழானது ஏழிசையும் பிறக்
விசார்ந்தது எனக் கல்:Tடர் சிதும். = 1 + + + ( , ا , , ... --
1芷直冒

Page 67
முல்லை யாழின் உறவு. இணை. கிளை- நட்பு நரம்புகள் கேட்போர் வியக்கும்படி ஏழிசைபொருந்த வண்டுகள் சுரு தியாகவும் மேகங்கள் முழவமாகவும் அதிர்ந்தன எனக் கல்லாடம் மேலும் கூறும்.
"முல்லை யாழொடு சுருதி வண்டார்ப்ப" (கல்லாடம் 4/13)
மருதம் என்ற, காலைப் பண்ணுடைய யாழ் மீட்டினர் என்று சீவகசிந்தாமணி(1991) கூறும்.
"மங்கையர் பண்ணிய மருத யாழ் குழல்" " யாழோர் மருதத்து இன்னரம் புளர'
பாலையாழானது முழுதாக அலங்கரிக்கப்பட்ட நிலை பில் மணப்பெண் போலக்காட்சியளித்தது எனவும், அதன் குடுக்கை, தண்டு, நரம்புகள், வார்க்கட்டுக்கள், ஆணி, என்பவற்றின் வர்ணனைகளும் பொருநராற்றுப்படையில் (4-24) கூறப்பட்டுள்ளன.
பாலையாழின் ஒலிபோன்ற மழலைச்சொல் உடைய வள்" என ஒப்பிட்டு கூறுவர்.
* பாலை மணியாழ் மழலை பசும்பொனிலத்திழிவாள்"
(சீவக. 2018)
பாலையாழில் செவ்வழிப்பண்ணிசைத்தனர் ‘பாலையா ழொடு செவ்வழிப் பண்கொள' எனத்திருநாவுக்கரசர் திருவிழிமிழலைப்பதிகத்தில் குறிப்பிடுவார்.
கல்லாடம் நூலில் நாரதப் பேரியாழ் பற்றியும் (8211-10),
தும்புரு யாழ்பற்றியும் (82/12 -13), கீசகயாழ்பற்றியும்) (82 19-21), தேவயாழ் மருத்துவயாழ்பற்றியும் (82/22-29 தகவல்கள் உண்டு.
ll 2 ,

நாரதப் பேரியாழ் முக்கோண வடிவிலமைந்தது. 100 ? ஒலி வகைகளைத்தரும் 1000 தந்திகள் பூட்டப்பட்டவை. 32 விரலகலமும், 84 விரலளவு நீளமும் உடைய இந்த யாழ் மணிகள் பொறிக்கப்பட்டது. நிலத்திலே கிடத்தி வைத்தே இயக்கப்படும்.
தும்புருயாழானது 12 விரலளவு சுற்றமைந்த குறுக்க ளவும், 94 விரல் நீளமும், 9 நரம்புகள் இணைக்கப்பட் டதுமாகும் ஒரு சுருதி நரம்பு தனித்திருக்க, ஏனைய எட்டு நரம்பும் இரண்டு இரண்டாகச் சேர்த்துக் கட்டப்பட்டிருக் கும். இக்கருவியைத் தோளிலும் தொடையிலும் வைத்து இயக்கப்படும்.
தேவயாழானது (மருத்துவயாழ்) வட்டவடிவினதாய், முயலின் தோலால் கட்டப்பட்டு, நடுவில் ஒரு நரம்பு பத்த ரின் மேல் செங்குத்தாக நிறுத்தப்பட்ட தண்டில் கட்டப் பட்டிருக்கும். இதை இடதுபுறம் வைத்து வலக்கையின் 3 புற விரல்களாலும், நுனிவிரல்களாலும் வருட 62 வகை இசைகள் தோன்றும்.
கீசக யாழானது 80 விரலளவு நீளமும், கனமான உடம்புடன் 100 நரம்புகள் பூட்டப்பட்டது. இதைக் "கீசப் பேரியாழ்' என்றார்.
யாழும் வீணையும்
நால் வகை யாழ்களுள்ளும் நரம்புகளின் எண்ணிக்கை, தோற்றம், கையாளும் திறன் ஒவ்வொன்றும் வேறுபடுகின் றன. இவ்வாறே யாழ் - வீணை இரண்டுமே நரம்புக்கரு வியாக இருந்தாலும் ஒவ்வொன்றிலும் துறைச்சார்ந்தவர் கள் இருந்துள்ளனர்.
I 13

Page 68
யாழும் வீணையும் பாடல்களி ல், சேர்ந்து வரும் போது வினையை மிடற்றுப் பா டலுக்கான சாரீர வீண்ண ஓர்ன்க் கொள்ளுதலே பொருத்தமாகு ம். மிகப் பழைய காலத்து வினைக்கும், தற்காலத்தில் இருக்கும் வினை களிடையேயும்
சிறுமாறுதல்கள் காணப்படுகின்றன.
யாழ், வீணைஒவ்வொன்றிலும் புலமையுடையவர் பலர்
இருந்தமையை நூல்கள் கூறுகின்றன.
" தெய்வப் பிரமஞ் செய்குவோரும். யாழினினிசமங்கொள்வோரும்" (_i f_TL su 19 s) :5)
வேதமில் விபஞ்சி வீனை யாழொலி யொருபா:ேத்தும்"
(பெரியபுராணம் திருஞான. 1207)
i GT GJIT யாழ் குழறண்ணுமை வல்லவர் ன்ேறுவேறிவை நூ7றுவிதம்படக் காணலாம்".
(கலிங்கத்துபரணி,323;
- :Escrı II. . . . . . " ணிையில் 3331 " stå i F3' ໃຊ້ ຕາມ கலWங்கதது. பரணரிய 5 < -3 || ... ' ITL-a. JP s 37 TA'A'GET' , ĠIETF வீணை, பிரமவினை , உருத்திரவீணை, கந்தர் வலினை 10கதிவினை என்னும் வகைகள் குறிப்பிடப்பட்டுள்ளன
விசுவாசு, தும்புரு, நாரதர், சரசுவதி ஆகியோர் தம்
கரங்களில் பிருகதி, தலாவதி, மகதி கச்சபி என்னும் வீணை
களை ஏந்தி மீட்டுகின்றனர்.
சங்கீதரத்னாகரத்தில் 10 வீணை வகைகளும், பரத
சாஸ்திரத்தில் 22 வீணை வகைகளும் தரப்பட்டுள்ளன.
வீணையில் எழும் பண்களையும் இராகங்களையும் அரு னகிரிநாதர் குறிப்பிட்டுள்ளார்.
II

"இசையினிவினிய கயிசிகை கவுடவராளித
னாசி தேசி பயிரவி குச்சரி பஞ்சுரத் தெரிந்து வீணைக்கிசைந்தன"
- (புயவகுப்பு-" கிளிசதவிர்"
"கால மாறாத வராளிசி கண்டிகை
பாலசி காமர மான விபஞ்சிகை கடை பயிரவி வளிதை சுயிசிகை
கவுளி மலாரி பவுளி யிசைவன. . .குறிஞ்சிப் பண் குறித்து யாழை யேந்துவ" 莒、 (கடிபயிர"-பூதவேதாள வகுப்பு
குழற் கருவிகள் ii r I
சங்கநூலான கூத்த நூல் 9 வகையான வங்கியங்கள்
r . பற்றிக்கூறும். ஊதுகுழற்கருவிகளை வங்கியம் எனவும் தாளங்கொட்டும் கருவிகளை வாச்சியம் எனவும் அழைப்
புர். சங்ககாலத்தில் பல்லியம் என்றி கூட்டின்சக் கருவிகளுள்
-H முதலிடம் வகுத்தது குழிலாகும்.
. குழலின் சுருதிய்ை ஆதாரமாகவைததே யாழ தரை
ஓமை முழவு முதலிய கூட்டிசைக் கருவிகள் ஒலித்தனே
"யாழு மிசையுங் கூடக் குழலளந்து நிற்ப" "
பரிபாடல்,778-9)
'ஒத்த குழலினொலியெழ முழவிமிழ்
மத்தரி தடாரி குளி ஒத்தளந்து'
பரிபாடல் 1340-41)
"ஊதுசீர்த் தீங்குழ வியம்ப"
(பரிபாடல் 23'10) F ה "י ו - "விரல்செறி தூம்பின் விடுதுளைக்கேற்ப "'
)3/ 2 ,பரிபாடல்( ܊ - *
5

Page 69
* நரம்பின் தீங்குர னிறுக்குங் குழல் போல்"
(கலித்தொகை 33 - 22
குழல்வழி யாழெழீஇத் தண்ணுமைப் பின்னர் முழவியம்ப லாமந்திரிகை"
(கூத்தநூல்)
' குழலகவ யாழ்முரல "
(பட்டினப்பாலை 150
" குழல்வழி நின்றது யாழே.
(சிலம்பு / அரங்கேற்ற 137.43)
இக்கூட்டிசையில் சுருதியைக் குன்றாமல் சீராகவைத்
ருப்பது குழற்கருவியேயாகும்.
' பகர்குழல் பாண்டி லியம்ப லகவுநர் நாதவில் பாடன் முழவதிர்ந் தன்ன"
(பரிபாடல். 15/42-43)
* ஊது சீர்த் தீங்குழ லியம்ப
( ufu'ntı-dö. 22-40)
" விளிப்பது கவருந் தீங்குழல் "
(மலைபடுகடாம், 8)
இக்குழற்கருவியில் 5 துளைகளிலானதும், 7 துளைகளி
லானதுமான வகைகள் இருந்துள்ளன.
ஏழ்புழை யைம்புழை யாழிசை கேழ்த்தன்ன"
(பரிபாடல், 8-22)
கைவைத் திமிர்பு குழல் காண்கு வோரும்"
(Luífutrdio, 19-41)
அசையும் மூங்கிலில் வண்டுகள் துளைத்த துவாரங்க "சில் வளி புகுந்து , மதுரமான ஒலிபிறப்பதைக் கண்டனர்,
I 6

* ஆடமைக் குயின்ற அவிர்துளை மருங்கில்
கோடை யவ்வளி குழலிசையாக "
(அகதானுநூறு 82)
சிறிய மூங்கிலில்செய்த குழலில் தெளிவான ஒலியை ஆயர்கள் எழுப்புவர் எனவும், பசுவினங்களை அழைத்துச் செல்லக்குழலோசையைக் கோவலர் இசைப்பர் எனவும் அகநானூறு (399-12, 354-45) கூறும்.
கோவலரின் குழலோசை “தை” என்னும் ஒசைப்பட ஒலிக்கும். இனிய குழலோசை நெஞ்சை வருத்தும்.
* தையெனக் கோவலர் தனிக்குழ லிசைகேட்டு’
(சலித்தொகை 118-13)
* கோவலர் தீங்குழ லினைய வரோ"
( கலித்தொகை 30 - 15 )
கோவலர் நீளவளர்ந்த கொன்றைக் காயில் அமைத்த இனிய குழலிசை எழுப்புவர். வீடுகள் தோறும் அது ஒலிக்கும்.
"ஒழுகிய கொன்றைத் தீங்குழன் முரற்சி பர்"
(கலித்தொகை. 106 – 3)
கொன்றையந் தீங்குழல் மன்றுதோறும் இயம்ப"
(நற்றிணை- சொல்லிய" )
"கோவலர் கொன்றையங் குழலர் பின்றைத் தூங்க”
(அகநானூறு. 54 10 - l
கோவலர் ஆம்பற்பண்ணையும், முல்லைப்பண்ணையும்
இசைக்க வல்லவர். சிறியகுழலூதுவர்.
* கல்லாக் கோவல்ர் ஊதும்
வல்வாய்ச் சிறுகுழல் வருத்தாக்காலே"
(அகநானூறு 74| 16-17)
1 1/

Page 70
" கோவல ராம்பலத் தீங்குழற் றெள்விளி பயிற்ற"
(குறிஞ்சி. 221 - 22)
* கோவலர் முல்லை குழல்மேற் கொள்ள"
( மணிமேகலை மணிமேகலா. 13 மீ)
குழல் இரங்கிஒலிப்பது, பெண்கள் அழுவது போன்ற தாகும்.
' குழவினை வதுபோ லழுதனள் பெரிதே'
(புறநானூறு. 143-15) "குழலேங்கு மாறேங்கி Iழதார்
(சீவகசித்தாம்ணி 3945)
இடையன் ஒருவன் நீக்கண்ட கோலால் துளையிடப்பட்ட குழவில் பாலைப்பண் வாசித்தமையை பெரும்பாணா ற்றுப் 1டையும் கூறும்
"" செந்தித் தோட்ட கருத்துளைக் குழலின் ரீம் பாலை"
fபெரும்பாணாற்று. 177-80)
ஆம். கீக்கடைக் கோலால் துளையிடப்பட்டே குழல் அப்பைக்கப்படும். -
" செந்தீக் கிருந்துளைய நீங்குழல்"
சீவகசித்தாமரிை. 3ர2)
தாள வறுதியை உடைய குழலோசையின் தTrத்துக் கமைய மகளிர் ஆடுவர்.
". . " ... ' அறற் சூழற் பர்னரி தூங்கி யவரொடு"
சிறுபாணாற்றுப்படை. 162)
சிலப்பதிகாரத்தில் கண்ணன் வாயில் வைத்தூதும் *ொன்றைக்குழல், ஆம்பற்குழல், முல்லைக்குழல் பற்றி ஆய்ச்சியர் குர்வையிலும், இசைபாடுபவனை ஒட்டிச்சிறப்
8

! ;) குழல் இசைக்க வேண்டும் என்பது பற்றி அரங்கேற் நரக் காதையிலும் (84-89) எடுத்துக் காட்டியதுடன் குழல் செய்யும் முறைபற்றியும் உணரயுள் கூறப்பட்டுள்ளது.
குழவின் நீளம் 20 விரலாகும். துரபமுகம் அடைக்கப் பட்டு இடப்புறமாகவும், அதனின்றும் 2 விரலளவு தூரத் தில் முதல்வாயான ஊதுதுளை (முத்திரை அமைக்கப்ப டும். 44 சுற்றுவிரலளவான இக்குழவின் இடமுகம் அடைக் கும் மபாழுது வெண்களித்தால் அனைசு பண்ணியும் வலமு கடம் திறந்தும் விடப்படும். இம்முதல் வயினின்று L, 7 குலம் விட்டு வளைவாயினின்றும் 2 விரல் அளவு நீக்கி நடு
ܕ ܐ .
நின்ற 9விரலளவிலும் 8 துளையிடப்படும்.
இடக்கையின் 3 விரலாலும் வலக்கையின் பெருவிரல்
தவிர்ந்த 4 விரலாலும் ஏழிசையைப் பிறப்பிப்பர்.
" சரிகமபதறிய்ென் றேழெழுத்தாற் றானம்
வரிடரந்த கண்ணினாய் வைத்துத் தெரிவரிய ஏழிசையுந் கோன்று மிவற்றுளே பண்பிறக்கும் கழ்முதலாஞ் சுத்தத் துளை"
அரங்கேற்ற tே உரை :
#
"" சொல்லு பிதற் களவு நாவைந்தாம் சுற்றளவு
நல்லுவிரல் நாலரை யாம் தன்னுதலாய் - பெல்சுத் துளைபளவு நெல்லரிசி துரம்பிடமாம் நல்ல
வளை வலுமேல் வங்கியம் என்"
(பஞ்சமரபு
" முந்தைம்றை நூன்மரபின் மொழிந்தமுறை யெழுந்தவேய்
அந்தமுதனா லிரண்டில் அரிந்து நரம் புறுதானம்
வித்த துனை நிரையாக்கி வாயு முதல் வழங்கு நுனை
பந்தமில் சீர் இடையீட்டி னங்துவியெண் சுளமைத் து"
(பெரியபுராணம்|ஆனா ப. 13)

Page 71
இக்குழல் செய்வதற்குரிய மரங்கள் பற்றியபாடல் பின்
வருமாறு
" ஓங்கிய மூங்கி லுயர்சந்து வெண்கலமே
பாங்குறு செங்காலி கருங்காலி. பூங்குழலாய் கண்ணனுவந்த கழைக்கின வக ளாமென்றார்
பண்ணமைந்த நூல்வல்லோர் பார்த்து" - * Mr.
(சீவகசிந்தா, உரை" 675)
புல்லாங்குழல் இசை தேன் போன்றது.
"வங்கியம் பல தேன் விளம்பின (கம்ப./ அயோத்தி. 237)
"கிளை முகத்திற் கிளரிசை விம்மின " (கம்ப. அயோத்தி,818)
இசை முறைப்படி அமைக்கப்பட்ட குழலில் சுருதிபெற வாசித்து, உலகம் அனைத்தையும் தன்னிசையால் ஈர்த்து ஆனாயநாயனார் இசை பொழிந்தார் எனவும் (பாடல். 14), அந்த அமுதவிசைக் குழலொலியில் முல்லைப்பண் ணையும் பாலையாழுக்குரிய தாரமும் உழையும பொருந்த இளிகுரலாகவுள்ள பாலைப்பண்ணை வாசித்தார் எனவும் (பாடல். 25), இசைப்புகல்களான பண்-பண்ணியல்-திறம் -திறத்திறம் என்பவற்றிற்கேற்ப சரிவர விரல்கள ைசத்து இசைக்கிளைகளான ஆயத்தம், எடுப்பு, உக்கிரம், சஞ்சாரம், இடாயம் ஐந்தும் முறைகொள்ள மெலிவு, சமன், வலிவு மூன்று நிலைகளிலும்சஞ்சரித்து தாளத்திற்கமைய இனிமை யான குழலிசையைப்பரப்பினார் எனவும்(பாடல்கள். 26,
27, 28) ஆனாயநாயனார் புராணம் கூறும்.
120

கண்ணனின் குழந்தை விளையாடல்களைப் போற்றிப் பாடியுள்ள பெரியாழ்வார், பிருந்தாவனத்தில் ஆயர்பாடியில் ஆனிரைகளை மேய்த்து குழலூதி வையகத்தையும் வான கத்தையும் மயங்கிடச்செய்த கண்ணனின் இசையினால் தேவர்கள் தேவா மிர்தததுக்குப் பதில் இசையழுதத்தைக் காதால் பருகி இன்பமெய்தினர் என்பார்.
"அவியுணா மறந்து வானவ ரெல்லாம் ஆயர் பாடி நிறையப் புகுந்து ஈண்டி செவியுணாவின் சுவை கொண்டு மகிழ்ந்து கோவிந்தனைத் தொடர்ந்து என்றும் விடாரே'
அருணகிரிநாதர் தமது ‘களபமொழுகிய என்ற திருப் புகழில் கண்ணனின் குழலோசை பற்றிக் குறிப்பிடுவார் . குழலிசையானது அங்கு பிறழ்தலின்றி ஒலிக்க, பல இசைவடி வங்கள் பிறக்கின்றன. இதைக்கேட்ட புலியும், பசுவும் தம்மை மறந்த நிலையில் நிற்கின்றன. புலிக்குட்டிகள் பசு வின் பாலையும், பசுவின் கன்றுகள் புலியின் பாலையும் பருகுகின்றன. பட்டமரங்கள் கூடத் துளிர்க்கின்றன. யானைகளோ மதம் நீங்கி மயங்குகின்றன. மலைகூட 2-○ குகின்றது. என்னே இசையின் விந்தை.
துரமபு
தூம்பு என்பது வங்கியம் என்னும் வாச்சியம் ஆகும்,
இது குறுந்தும்பு - நெடுந்தூம்பு என இரண்டுவகைப்படும்.
விரல்செறி துரம்பின் விடுதுளைக்கேற்ப" (பரிபாடல் 21/33)
* குறு நெடுந் தூம்பொடு முழவுபுணர்ந்திசைப்ப"
(அகநானூறு 30 1/17)
கூத்தரின் புகழினைக்கூறத் தூம்பு பயன்படும்.
121

Page 72
" தொகு சொற் கோடியர் தூம்பின்"
(அகநானூறு. 11/9)
மூங்கிலாகிய மரத்தின் கணுக்களை அறுத்து இயற்றப் பட்டது நெடுந்தூம்பாகும்" இதுமூங்கிலாகிய இசைவளரும் நெடுவங்கியம் ஆகும்.
* கண்ணறுத் தியற்றிய தூம்பொடு சுருக்கி"
(பதிற்றுப்பத்து. 41/4)
* கழைவளர் தூம்பின் கண் இடம் இமிர
(மலைபடு. 533)
இத்தூம்பானது யாழுடன் சேர்ந்தொலிக்கும்
இயம் புணர் தூம்பு" (இயம்-யாழ்) (ஐங்குறுநூறு. 377)
முரசங்கள்
பழந்தமிழர் வாழ்க்கையில் ஆடலும் பாடலும் நிறை ந்த இசைமயமான பண்பாட்டில் தோற்கருவிகளின் முழக் கங்கள் இன்றியமையாதனவாயின. பல வகையான தோற்கரு விகளை உபயோகித்த அத்துறைசார்ந்த வல்லுனர்களை மன்னரும் மக்களும் போற்றினர்.
ஐவகை நிலங்கட்கும் உரிய பறைகள் இருந்தன. இருப் பினும் வீரமுரசு, தியாகமுரசு, நியாய முரசு என மூன்று வகையான முரசங்கள் இருந்தன. அதுபோன்று முழவுகளை ஏழு பிரிவாகக்கூறினர்.
1. அகமுழவு - மத்தளம், சல்லிகை, இடக்கை, கரடிகை,
பேரிகை, Lடகம், குடமுழா
122

அகப்புற முழவுமதண்ணுமை, தக்கைத,குணிச்சம் புறமுழவு-கணப்பறை புறப்புறமுழவு - நெய்தற்பறை . பண்மைமுழவு - முரசு,நிசாளம், துடுமை, திமிலை . நாண்முழவு - நாழிகைப்பறை
. காலைமுழவு - துடி
(சிலப்பதிகார உரையில் வரும் தோற்கருவிவகைகள் பற் றிப்பின் சொல்லப்படும். )
இப்பறைகளும், முழவுகளும், முரசங்களும் பிற தோற்கரு விகளும் முழங்காத நாளும், ஊரும் இல்லை எனலாம்.
'பறையறைந்த செய்திகள் கேட்டு ஊரே கிளர்ந்தெழும்
* பறையெழ வூரொலித்தது" (பரிபாடல் 6 124) ஊர்கள் தோறும் பறைகள் ஒலிக்கும்.
ஊரூர் பறையொலி கொண்டன்று (பரிபாடல். 20/75, முழாக்களும் பெரும்பறைகளும் ஒலிக்கும்
* முழவு பனை முரல (பரிபாட்ல், 7/16)
பாணித்தாளத்தை உடைய பாட்டைப்பாடி கினை யொலிக்கும்.
* கேட்டுதும் பாணி யெழுதுங் கிணை" (பரிபாடல். 881}
குழலிசையுடன் முழவு, மத்தரி, தடாரி, தண்ணுமை,
மகுளி கருவிகளின் ஒசையுடைய தாளத்தையளந்து நிருத் தம் ஆடுவர்.

Page 73
'ஒத்த குழலி னொலியெழ முழவிமிழ்
மத்தரி தடாரி தண்ணுமை மகுளி
ஒத்தளந்து சீர்தூக்கி யொருவர் Sibt u rrif
தித்தந் திகழு நேரிறை'முன்கைய7ல்
அத்தக வரிவைய ரளத்தல் காண்மின்"
(பரிபாடல். 12,40 - 44)
யாழினொலி கொம்மென ஒலிக்கும். அத்தாளத்திற்கு. முரசினொலி" எழுப்புவர்.
*கூரநாண்குரல் கொம்மென வொலிப்ப ஊழற முரசி னொலிசெய் வோரும்"
பரிபாடல் 19 44-45)
பல அவைக் கண்ணும் ஆடுதற்கு தலைவி (tpէք6յւ -6ձr வருவாள்.
‘முழவின் வருவாய் நீ"
(பரிபாடல், 20-75)
அங்குள்ள சிறு குடியின் மன்றத்தில் பண்ணமைந்த இனிய தாளத்தையுடைய குரவைக் கூத்திற்குத் தண்ணுமையும் தாளந் தளராது ஒலிக்கும்.
'தண்ணுமைப் பாதி 567 UV ar Gasp 25
பண்ணமை பின் சர்க் குரவையுள்?
கலித் தொகை 102 / 34 35.) பறை கொட்டுகின்றவன் தன்மனத்தில் ஒர்த்த ஒசை யையே பறையில் எழுப்புவான்.
'ஒன்றி நிறைவதை ஒர்த்த திசைக்கும் பறையோனின் நெஞ்சத்து" (கலித்தொகை 91/20-21) போர்க்களங்களிலே யானைக்கு முன்பே பறைகள் *செல்வது மரபு.
“நிறையழி கொல்யானை நீர்க்கு விட்டாங்கு
*ற4°றத் தல்லது செல்லற்க" (கலித்தொற்க. ச6 32 - 38 ‘தென்கினை முன்னர்க் களிற்றினியலி?
(புறதானூறு 79 /3)
及24

பலிக்குரிய பண்டமான சிவந்த தினையை குருதியு டன் கலந்து தூவி பலிகொடுத்து முரசு முழங்கும் வீரர் (o) faivari.
* செங்கள விருப்பொடு கூல முற்றிய
உருவச் செந்தினை குருதியொடு தூஉய் பண்ணுறு முரசங் கண்பெயர்த் தியவர்"
(பதிற்றுப்பத்து 1915-7)
முரசின்கண் உறையும் தெய்வம் அரசனுக்கு வெற்றி யை ஈட்டித்தரும், எனவே முரசுறை கடவுளை வழிபடும் அரசனுக்கும்,போர்வீரருக்கும் உள்ளத்தில் உறுதியைத்தரும்.
*அருந்திறன் மரபிற் கடவுட் பேணியர், . .
கடுஞ்சின வேந்தேதின் றழங்குரன் முரசே'
(பதிற்றுப்பத்து 30 / 34 - 44)
தோல் போர்த்த பறையின் முழக்கொலியால் ஆற்று நீரை அடைத்தனர்.
போர்த்தெறிந்த பறையர் புனல்செறுக் குநரும்
(பதிற்றுப்பத்து 22 - 28)
பகைத்தெழுந்த மன்னரை முரசத்துடன் கைப்பற்றுவர்
* பிணியுறு முரசங் கொண்டகாலை” (புறநானூறு 25-17) "விசி பிணி முரசமொடு மண்பல தந்த" (புறநானூறு 1794)
போருக்குரிய பூவைச் சூடுவதும் முரசு போன்ற வாத் தியங்கட்கும் போருக்குரிய பூவைச் சூடுதலும் மரபாகும்.
"விரிதார் அடுகொள் முரசின் ஆடுபோர்ச் செழியன்"
(அகநானூறு 335 9-10) "சிலைத்தார் முரசங் கறங்க"
(புறநானூறு 36 -12)
125

Page 74
போர்க்களத்தில் வீரவெறியூட்டும் இசைக்கருவிகள் பல இருந்தன. பறை, பம்பை, திட்டை, தடாரி, முழவு, முருடு கரடிகை என்னும் தோற்கருவிகள் பாசறையில் முழங்கி அச் சத்தைத்தரும்
"இடி உமிழ் முரசம் பெ7ருகளத்தியம்ப" (அகதானுநூறு 354-2)
'பலிபெறு முரசம் பாசறைச் சிலைப்ப"
புறநானூறு 362.31
“முரசு முழங்கு பாசறை"
(முல்லை 79 )
காவன் மரமாகிய கடம்பினைவெட்டி அதனால்
பண்ணுதல் அமைந்த வெற்றி முரசினைச் செய்தனர்
"கடம்பு அறுத்து இயற்றிய பண்ணமை முரசின்"
(அகநானூறு 347/4-5) தண்ணுமைப் பறையின் அகன்ற கண்ணினின்றும் எழும்ஒலி கேட்பவர் நெஞ்சு நடுங்குற ஒலிக்கும் 'அகநானுரறு. 8 7 18 10 உரை)
"மடிவாய்த் தண்ணுமை யிழிசினன் குரலே (புறநானூறு 289/10) "மடிவாய்த் கிண்ணுமை நடுவணார்ப்ப" நற்றிணை 130
*மடிவாய்த் தண்ணுமை நடுவட் சிலைப்ப"
(பெரும்பாணோற்று 144.)
மூவகை முரசுடன் அரசர் நாட்டை யாண்டனர்,
"இமிழ் குரல் முரசம் மூன்றுடனாளும் புறநானூறு 58-12)
மக்களைத் துயில் எழுப்ப முரசங்கள் அறையப்பட்டது.
"நாண் முரசிரங்கு மிடனுடை வரப்பில்" (புறநானூறு161-29) காலை முரசங் கனைகுர லியம்ப" சிலம்பு'ஊர்காண்.14)
26

முழவினதும் முரசினதும் ஒலிகளைக் கடலோசை, அருவியொலி, இடிமுழக்கம், நரிகளின்ஒலி, பறவையொலி, மேகம்- மழை யொலி என ஒப்பிடுவர். புலிக்கூட்டத்தின்
குரலையும் ஒத்தது ஆகும்.
"முழங்குகடல் முழவின் முசிறி அன்ன" (புறநானூறு 343.10)
பறையிசை யருவி" (புறநானூறு 126, 8) "இடியிசை முரசமொடு" (பதிற்றுப்பத்து 66 4 "மறப்புலிக் குழுக்குரல்" (பதிற்று பத்து 41-7) கொல்வா யோரி முழவாக " ( கலி'119.1) வெவ்வா யோரிமுழவாக" (சீவகசிந், 309.1) * புள்வாய் முரசமொடு" (சிலம்பு அத்தி 77) * கார் கருதி வார் முரசமார்க்கும் " (புறப்பொருள் 103) "மண்ணுறு முரசின மழையினார்ப்ப" கம்ப/அயோத்தி 4
வதுவை நிகழும் மனையில் ஒலிக்கும் முழவானது தன் னை "வா’ என்று அழைப்பது போற் கேட்கும்.
* இமிழ்கண் முழவின் இன் சீர் அவர் மனம்
பயில்வண போல வந்திசைப்பவும்"
அகநானூறு. 66, 22
முழவினதும், முரசினதும் தோற்றங்களைத் தோள், பலாக்கனி, பனைமர அடி, கை, பேய்க்கண், களிற்றின் கால் கள் எனப் பலவாறாக ஒப்பிடுவர்,
* முழவுறழ் திணித்தோள்" (அகநானுTறு 61.5) * கலை யுணக் கிழிந்த மருள் பெரும்பழம்' (புறநானுறு236 1) * முழா வரைப் போந்தை" (புறநானூறு 375-4) " முழவுறழ் தடக்கையில்" (திருமுருகாற்று 216) பறைக்கட் பேய் மகள்" ( 6F avutu 2 6 / 2 0 8 )
"தசநான் கெய்திய பனைமருள் நோன்தாள்" (நெடுநல், 115)
127

Page 75
முரசங்கங்களின் இடக்கண் இளியாகவும் வலக்கண் குரலாகவும் அமைய, திண்ணியவாராலே இறுகவலித்துக்கட்
டப்பட்டது ஆகும்.
* பண்ணமைத்துத் திண்வார் முரசமொடு" (மல்ைபடு 2-3)
* இடக்கண் இளியா வலக்கண் குரலா நடப்பது
தோலியற் கருவியாகும் " (நச்சினார், மேற்கோள்.)
மத்தளம் வாசிக்கும் கலைஞனானவன் ஆடல்-பாடல் வகைகளையும் இசை நயம் பண், பாணி தூக்கு முடம் தேசிகம் என்பவற்றை நன்கறிந்தவராய் யாழ்-குழல்-குரல் ஒசைகளைக் கேட்கும் வண்ணம், தனது குறைவற்ற புலமை யும், தாளக் கணிப்பினாலும் வாசிக்கும் திறன் படைத் தவன். (சிலம்பு 345 - 56 உரை)
மத்தளம் வாசிக்கும் போது உடல் அசையாது கைவிரல் மட்டுமே அசையும். இது மீன்கொத்திப் பறவையானது மீன் மேற் பாய்வதற்கு முன்னர், அந்தரத்தில் உடலசையாது சிறகுமட்டும் அசைவது போன்றதாகும்.
* விரலசைந் தாடலன்றி மெய்யசையாமல்" (சீவகசிந்தாமணி)
" சிரலசைந் தாடாநின்ற சிறகர்போல் மத்தளத்தை விரலசைந் தறைதலின்றி மெய்யசையா மனின்றான்"
{சிவப்பிரகாச சுவாமிகள் )
இவ்வளவு சிறப்புமிக்க தோற்கருவிகளில் தா-தீ-தொம் நம் என்ற சொற் கட்டுக்களே ஒலிக்கும். இவ்வோசைகள் சிவனின் தாண்டவத்தின் போது பாதச் சிலம்பொன்று கழன்று புயம், தொடை, பாதம், நிலம் என விழுந்தபோது
1 28

உண்டானதாகும். நான்முகன் மத்தளம் முழக்குவதால் "நான்முகன்' என்ற பெயர் இதற்கு உண்டு சிவனின் தாண்டவத்தின் போது உடுக்கை பாதச்சிலம்பு ஆகிய வற்றினின்றும் ஒலித்த ஒசைகளினின்றும் பிரமனே இவ்வாத் தியத்தை (மத்தளத்தை) அமைத்தார்
முரசங்களும் பறைகளும் ஒலிக்கும் நோக்கத்திற்காக குறிப்பிட்ட பெயர் கொண்டழைத்தனர்.
1. போருக்காக ஒலிப்பது வீரமுரசாகும்
' குருதி வேட்கை உருகெழு முரசம்" (புறநானூறு, 50-5)
2 மக்களைத் துயில் எழுப்புவதற்கு ஒலிப்பது காலை முர
சம் ஆகும்.
* காலை முரசங் கனைகுர லியம்ப" (சிலம்பு / ஊர்காண், 14)
3. ஊர்க்காவலர் அறைவது எறிதுடி ஆகும்.
* ஊர்க்காவலர் எறிதுடி ஓசையும்" (மணி, / துயில் 707)
4. செய்திகளை வள்ளுவன் அறிவிப்பது படுமுரசு ஆகும்.
'முரசறைத்தனர் வள்ளுவருரைத்தனர்" (கம்ப | சுந்தர,872)
5. மணநிகழ்வைக் குறிப்பது மணமுரசு ஆகும்.
படுமண முழவொடு பருஉப் பணை இமிழ" ( அக, 186-7)
6. மன்னர் மாளிகையில் சாமந்தோதும் யாமமுரசு ஒலிக்
கும்.
* யாம முரசாலிழந்த நிறை நினது தாமமுரசு தரப்பெற்றேன்"
(முவருலா விக் 294)
7. பெருமாளின் பவனியின் போது பவனி எழுச்சி முரசு
ஒலிக்கும்
128 = gy

Page 76
" பெருமாள்பவனி எழுச்சி முரசோ ந்திருந்தாள் (மூவருலா/குலோ 276)
8. போரில் சீர் குலைந்து ஒலிப்பது அவிந்த முரசு ஆகும்
* குரல்கள் அவிந்த முரசங் கொள்ளிரே" (கவி, பரணி 525)
9. இறந்த செய்தி அறிவிப்பது நெய்தற்பறை ஆகும்
" ஒரில்னெய்தல் கறங்க வோரில் ஈர்ந்தண் முழவின் பாணிததும்ப"
(புறநானூறு 194- )
10, கள்வர்கள் கொள்ளையிடும் போது ஆறெறிபறை ஒலிக்
கும்
" ஆறெறிபறையும் சூறச் சின்னமும்" (சிலம்பு / வேட் 40))
11. கூடலின் மணம் பொருந்திய மணிமுரசம் ஒலிக்கும்
*கூடல் மன்றல் கலந்த மணிமுரசினார்ப்பெழ" (Luilurr Li 8-30)
12. நாறுகின்ற கமழ் வீசும் இசை முழவம் ஒலிக்கும்.இக்ஸ்
* நாறு கமழ் வியுங் கூறுமிசை முழவம்" பரிபாடல் 8.99'
நகரின்கண், முழவின் ஒலியானது கண் உறக்கமின்றி ஒலிப்பதையும் சிலநூல்கள் குறிப்பிட்டுள்ளன.
" முழவு துயில் அறியா வியலுள்" lda.G 350)
* முழவிமிழு மகலாங்கண் விழவு நின்ற" (மதுரை 327)
* முழவங் கண் துயிலாத முதுநகர்" (சீவக 856)
இவ்வாறு எமது வாழ்க்கையின் இன்ப துன்பங்களின் செய்திப் பிரதிபலிப்பாக இத்தோற்கருவிகள் ஒலித்தன என
லாம்
سس- 8 ? Il

சிலப்பதிகார அரங்கேற்றக்காதை (53) உரையில் பின்வரும் தோற்கருவிகள் கூறப்பட்டுள்ளன.
பேரிகை, படகம், இடக்கை, உடுக்கை, மத்தளம், சல்லிகை, கரடிகை, திமிலை, குடமுழா, தக்கை, கணப் பறை, தமருகம் தண்ணுமை, தாவில், தடாரி, முழவு, சந்திரவளையம், மொந்தை, முரசு, கண்விடுதூம்பு நிசாளம், துடுமை, சிறுபறை, தகுணச்சம், துடி, பெரும்பறை.
அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடல்களில் தோற் கருவிகள், இசைக்கருவிகள் பல கூறப்பட்டுள்ளன.
பேரிகை, சங்குவீணை --- (மகுடக்கொப்பாட) முரசு, கரடிகை, டமருகம், முழவு, தவில், தம்பட்டம், மத்தளம், பறை, திமிலை, -- (*ககுபநிலை, *)
யாழ்ப்பாணம் முத்துராசகவிராசரின் கைலாயமாலையில்
இசைக்கருவிகள் பல கூறப்பட்டுள்ளன.
பேரி, சங்கு, தண்ணுமை, சல்லாரி, தடாரி, திமில் ,
முரசு, முருடு, தம்புரு, வேய், வீணை, சரமண்ட
லம், தவில், துந்துபி, யாழ்.
சீற்றங்கொண்ட புலியை, பெருங்காளை தனது கொம் பால் வீறுடன் தாக்கிக் கொன்றபின், அக்காளையின் தோ லாற் செய்யப்பட்டது வீரமுரசம் என அகநானூறு (334/1.2) மதுரைக்காஞ்சி (732 33), சீவகசிந்தாமணி (2899) கூறுகின்றன.
தடாரிப்பறையானது முழுமதிபோன்றதென புறநா னுாறும் (398-12), யானையின் சுவடுபோன்றது என புறநா
129

Page 77
னுாறும் (368| 14-15), கண்ணகன்ற படம் விரித்த பாம்பின் பொறியை ஒத்தது என பொருநாராற்றுப்படையும் (69.70) ஆமையின் வயிறுபோன்ற கண்ணுடையது என புறப்பொ ருள் வெண்பா மாலையும் (186,206) கூறும். பொருநர் விடிகாலையில் இப்பறை கொட்டிப்பாடி, பரிசில் பெறுவது வழக்கமாகும்.
7, இசையும் கூத்தும்
பண்டைத்தமிழரின் வாழ்க்கையில் ஆடலும் பாடலும் பெரும் ஆதிக்கத்தைச் செலுத்தி வந்தன. அரசர் மூவரும் கூடியிருந்த சபையின் தோற்றம் அரசவைக்குச் சிறப்பளித் தல் போல, கீதம்- வாத்தியம் - நிருத்தம் மூன்றும் கூடிய பாட்டின் இசை வண்ணங்கண்டு ஆடலும் பாடலும் சிறப் புற்றன .
மன்னரும் மக்களும் நாடகமகளிரின் ஆடலையும் பா டலையும் கண்டு கேள்வியுற்று அதன்பயனாம் எட்டுவகைச் சுவைகளை உணர்ந்தனர். ஆடலையும் பாடலையும் தமது இருகண்களாகப் போற்றினர்.
யாழின் இசையும் மிடற்றுப்பாடலும் ஆடலுடன் சேர்ந்து மனத்தினை உருகச் செய்தன. மனத்தின் திண்மை
யைக் கரைத்தன.
பாடலோர்த்தும் நாடக தயந்தும்" (பட்டினப் பாலை. 13,
பருக் கோட்டி யாழ்ப்பக்கம் பா.லோ டாடல் அருப்ப மழிப்ப" (பரிபாடல். 10/56-57)
* ஆடல் கண்டும் பாடல் கேட்டும்" (பெருங்கதை. 323.29 )
3 O

மேன்மைக்குரிய பாணரும் கூத்தரும் குற்றமின்றித் தமது ஆடல் பாடல்களைத்தரும் திறன்மிக்க இசைக்குரிமையுடைய
வர்களnவர்.
* அருங்கறை யறையிசை வயிரிய ருரிமை”
(பரிபாடல். 10/130)
இவர்களின் ஆடலும் பாடலும் அதற்குப் பொருந்திய சீருடன் கூடியதாளத்துடன் அமையும் .
* பாடுவார் பாடல் பரவல் பழிச்சுதல்
ஆடுவா ராட லமர்ந்த சீர்ப் பாணி"
(LiflumL-d). 10/l 1 6 - 1 l 7)
* பாடுவார் பாணிச்சீரு மாடுவா ரரங்கத் தாளமும்"
(பரிபாடல், 8/109)
இன்ப உணர்ச்சியை ஊட்டி உள்ளத்தைப் பரவசப்ப
டுத்தும் இவ்விசையும் கூத்தும் காமத்தையும் தோற்று விப்பனவாகும்.
*மடவிரலால், 'இட்டார்க் கியாழார்த்தும் பாணியி லெம்மிழையைத் தொட்டார்த்து மின்பத் துறைப்பொதுவி"
( பரிபாடல். 20156-58)
* சீறியாழ் பண்ணுப் பெயர்த்து. வீழ்துணை தழீஇ'
(மதுரைக்காஞ்சி. 559- 61 உரை)
"கிளை நரம் பிசையுங் கூத்துங் கேழ்த்தெழுந் தீன்ற காம
விளைபயன் இனிதிற் றுய்த்து"
{சீவகசிந்தாமணி. 2598)
* ஒளவிய மதர் வேற் கண்ணா ரந்தளிர் விரன டாத்துந்
திவ்விய நரம்புஞ் செவ்வாய்த் தித்திக்கு மெழாலுந் தம்மிற்
3.

Page 78
கெளவிய நீரவாகிக் காளையர் செவிக்கா லோடி வெவ்விய காமப் பைங்கூழ் விளை தர வளர்க்கு மன்றே
( திருவிளையாடற். நகர 52
சங்ககாலத்திலே தமிழரின் வழிபாட்டு முறையிலே சிறப்பான 'வெறியாட்டு’ என்னும் ஆட்டமும்
• வெறியறி சிறப்பின் வெவ்வாய் வேலன் வெறியாட்டு அயர்ந்த காந்தளும்
(தொல்காப்பியம், 1009/ 1 - 2)
வாடுகின்ற கொடியல்லாத வள்ளிக்கூத்தும்,
9
* வாடா வள்ளி வயவர் ஏத்திய
(தொல்காப்பியம், 1009/ 6 )
பகைவரை வென்ற அரசிளங்குமரனை, நாட்டுமக்கள் பாராட்டி, பறைமுழங்க அரசுகொடுத்து, அவனது பிள்ளைப் பருவத்தைக் கொண்டாடும் ஆட்டமும்
" வாள்மலைந்து எழுந்தோனை மகிழ்ந்து பறைதூங்க
நாடவற்கு அருளிய பிள்ளை யாட்டும்"
(தொல் 100 117-18
தேர்ப்படை அரசனை, வென்ற அரசனின் தேர் முன்னும் , பின்னும் ஆடும் குரவைக் கூத்தும்
தேரோர், வென்ற கோம சன் முன்தேர்க் குரவையும் ஒன்றிய மரபிற் பின்தேர்க் குரவையும்"
(தொல்காப்பியம் 1021)
களிற்றுடன் இறந்தொழிந்த அரசனை வென்ற அரச னின் மறவர்கள் வியந்து ஆடும் ஆட்டமும்
" பட்ட வேந்தனை அட்ட வேந்தன்
வாளோர் ஆடும் அம்லையும்"
(தொல்காப்பியம். 1018)
132

பாகுபாட்டின் மரபையறிந்த பொருநரின் L_tíTL-ü-
ஆடல் முதலாம் போட்டிகளில் வெல்லுதலும்
* பாலறி மரபில் பொருநர் கண்ணும்’
(தொல்காப்பியம் OO2
இடம் பெற்றுள்ளன.
அரங்கேறிய தலைக்கோல் மகளிரும், பாணரும் ஆட லைத் தொடங்குவதற்கு ஏழ்வகைப்பாலையும் நரம்பின் கண்தரும் யாழும், மிடற்றுப்பாடலும் சேர்ந்தொலிக்க, குழலானது சுருதியை அளந்து நிற்கும். முழவானது அவ் விசைக்குத் தகுந்தவாறு ஒலி எழுப்பும்,
* புரிநரம் பின்கொளைப் புகல்பாலை யேழும்
எழுப்புணர் யாழு மிசையுங் கூடக்
குழலளந்து நிற்ப முழவெழுந் தார்ப்ப மன்மகளிர் சென்னிய ராடல் தொடங்க (பரிபாடல் 71 77-80)
காவிரிப் பூம்பட்டினத்தில் சோழனின் அரண்மனையில் 28 நாட்களாக நடைபெற்ற இந்திரவிழாவின் ஆரம்பத்தில் மேளதாளத்துடன் தலைக்கோலுக்கு நீராட்டி மாலையிட்டு பூசனைச்சிறப்புச் செய்யப்பட்டது. பின்னர் அத்தலைக் கோல் பட்டத்து யானையின் கையிற் கொடுத்து தேரின் மீது இருக்கும் ஆடலாசிரியடம் கொடுக்கப்பட்டது. அத் தேரில் ஊர்வலம்வந்த தலைக்கோல் அரங்கத்தில் வைக்கப் பட்டு ஆடல்பாடல் நிகழும் எனச்சிலப்பதிகார அரங்கேற் றுக்காதை 114-128) கூறும். f
அகத்தியரின் சாபத்தினால் இந்திரன்மகன் சயந்தனும் உருப்பசியும் மண்ணில் பிறந்தனர் எனச் சிலப்பதிகாரத்தில் அரங்கேற்று காதை(1-7), கடலாடுகாதை(21-23) இரண்டும் குறிப்பிடும். உருப்பசி மாதவியாகப் பிறந்தாள்.
133

Page 79
சயந்தகுமானுக்கு அறிகுறியாகத் தனலக்கோலைப் போற்றி வணங்கினர். ஆடல் பாடலுக்குத்தெய்வமாகக் கருதினர்.
* நனிசிறந்த சயந்தன் வடிவின் தலைக்கோல்"
(சிலம்பு | தடுகற் 99.100)
* இந்திர சிறுவன் சயந்த னாகென
வந்தனை செய்து வழிபடுந் தலைக்கோல்"
( சிலம்பு | அரங்கேற்ற 1 19-20)
குரவைக் கூத்து
குரவைக் கூத்தென்பது காமமும், வென்றியும் பொருளா கக் கொண்டு எழுவர் அல்லது எண்மர் அல்லது ஒன்ப தின்மர் கை பிணைந் தாடுவதாகும். குறிஞ்சிநில மக்கள் குன்றக்குரவையும், முல்லை நில மக்கள் ஆய்ச்சியர்குரவை யும் ஆடுவர். ஆயர்களின் சிறுகுடியின் மன்றத்தில் பண்ண மைந்த இனியதாளத்திற்கும், தாளந்தவறாத தண்ணுமை யின் ஒலிக்கும் ஏற்ப குரவைக் கூத்து இடம்பெறும்
* தண்ணுமைப் பாணி தளரா தெழுஉப்
பண்ணமை யின் சீர்க் குரவையுள்"
( கலித்தொகை 102 34-35)
* குரவை தழிஇயா மரபுளி பாடி"
(கவித்தொகை 103.75)
இரவும் பகலும் குரவைக் கூத்தாடுவதைப் பதிற்றுப்பத்து நூல் (73/5-6) கூறுகின்றது
கோடும் மணியும் ஒலிக்க இசைக்கேற்பக் குறமகள் ஆடு வாள். தமது கவலைகளைப் போக்க, முருகனை மனதில் நிறுத்தி வீடுகள் தோறும் மகளிர் கைகோத்துக் குரவைக் கூத்தாடுவர்.
* அசிக்கூ டின்னியம் கறங்க நேர்நிறுத்துக்
கார்மலர் குறிஞ்சி சூடிக் கடம்பின்
34

சீர்மிகு நெடுவேட் பேணி தழுஉப்பிணையூஉ
மன்று தோறும் நின்ற குரவை"
(மதுரைக்காஞ்சி. 612-615)
குறவர்கள் மதுவருந்தியபின் தம்பெண்டிரொடும் மான் தோற் சிறுபறை ஒலிக்கேற்பக் குரவையாடுவர்.
* நறவுநாட் செய்த குறவர்தம் பெண்டிரொடு
மான்தோற் சிறுபறை கறங்கக் கல்லென வான்தோய் மீமிசை அயரும் குரவை"
(மலைபடுகடாம் 320-22)
கடற்கரையில் பரதவ மகளிரும் (மதுரைக்காஞ்சி 97) வெண்மணற்குன்றில் மகளிரும் (ஐங்குறுநூறு 181-3) மலை களில் குன்றரெல்லாரும் குரவையாடுவதை (திருக்கோவை யார் 127-2) நூல்கள் கூறும். வேங்கை மரநிழலிலும், காஞ்சி மரநிழலிலும் மதுவருந்தியபின் குரவையாடுவர்.
மன்னனின் வெற்றித்தேர் முன் வலிமைகொண்டு ஆடுவது முன்றேர்க் குரவையாகும். வலியகழல் வீரருடன் பாணிச்சியர் தேரின்பின் ஆடுவது பின்றேர்க் குரவையாகும். இதைப் புறப்பொருள் வெண்பாமாலை (143, 144, 161,165 கூறுகின்றது.
முன்றேர்க் குர்வை முதல்வனை வாழ்த்தி
பின்றேர்க் குரவை பேயாடு பறந்தலை ,
(சிலம்பு/கால்கோட், 240.41
மணிமேகலையில் ஆயர்பாடி எருமன்றத்தே e.g., tilt குரவைக் கூத்து இதுவே என ஒருகாட்சி ( 19/6 - 66 தரப்படுகின்றது
35

Page 80
வெறியாட்டு
முருகவழிபாட்டுடன் தொடர்புடைய வெறியாட்டு என் னும் கூத்தில் இறைவன் தம்மில் வெளிப்படுவான் என்ற நம்பிக்கையில் இசைக்கேற்ப ஆடுவர்.
இனிய சீரமைந்த தாளத்திற்கு முருகனின் புகழ்பாடி வேலன் வெறியாடுவான்.
* இன் சீர் ஐதமை பாணி இரீஇக்கை பெயராச்
செல்வன் பெரும்பெயர் ஏத்தி வேலன் வெறியார் வியன் களம்"
(அகநானூறு 98/16.19)
வெறியாட்டில் தெய்வம் ஏறியதால் விறலியானவள் பாம்பின் ஆட்டம் போல அசைந்து ஆடுவாள் என பதிற் றுப்பத்து நூல்(51/13) கூறும்.
வெறியாட்டு மகளிரின் பாட்டுடன் குழலும் யாழும் முழவும் ஒன்று பட்டு ஒலித்தன
* செவ்வேள் வெறியாடு
மகளிரொடு செறியத்தா அய்
குழல் அகவ யாழ்முரல
முழவ அதிர முரசுஇயம்ப"
பட்டினப்பாலை 154-57) .
துணங்கைக் கூத்து
துணங்கைக் கூத்து எமது முன்னோரின் ஒரு ஆடல்
வகையாகும்.
இது விலாப்புறத்தில் இருகைகளையும் முடக்கியடித்துக்
கொண்டு ஆடும் கூத்தாகும். இவ்வாடலைப் பேயாடல்,
சிங்கிக்கூத்து என்றும் அழைப்பர். இவ்வாடல் பற்றிப் பல
நூல்களும் குறிப்பிடும்.
136

முழவிமிழ் துணங்கை தூங்கிய விழவின்"
(அகநானூறு 336-16) "கலிகெழு துணங்கை யாடிய மருங்கின்"
O (பதிற்றுப்பத்து. 13-5) 'துணங்கையந் தழுஉவின் மணங்கமழ் சேரி
f (மதுரைக்காஞ்சி,329) துணங்கையா குரவையர் அணங்கெழுந் தாடி"
p சிலம்பு./இந்திர 70 பழுப்புடை யிருகை முடக்கி யடிக்கத் தொடக்கிய நடையது துணங்கை யாகும்"
(சிலம்பு/இந்திர, 70 உரை)
வள்ளிக் கூத்து
இது ஆண் பெண் இருபாலாரும் ஆடும் நாட்டுக் கூத்
தாகும். நாட்டுக்கு வளமும் கொற்றமும் தந்த வள்ளியின் பெருமையைப் பாடியாடுவர்.
ா வாடா வள்ளியின் வளம்பல தருஉ நாடுபல கழிந்து பின்றை" (பெரும்பாணாற்று 370.77)
கூத்துக்களில் வெறியாட்டு, குரவைக்கூத்து, துணங்கைக் கூத்து, வள்ளிக்கூத்து என்பன சாதாரண மக்களால் ஆடப் பட்டவை. இவர்களை விட, ஆடல்பாடல்களைத் தொழிலாகக்கொண்டவர்கள் பலர் இருந்தனர்.
வயிரியர், கண்ணுளர், கோடியர், பொருநர் என்போ ர் இசைக் கருவிகளைச் சுமந்தவராய், தாம் செல்லும் ஊரின் அரங்கிற் சென்று, தெருவின் இருபுறத்தும் உள்ள வீடுக ளின் பக்கமாகப் பாடிச்செல்வர்.
வாங்குபு தகைத்த கலப்பையர், ஆங்கண்
மன்றம் போந்து மறுகுசிறை பாடும்
வயிரிய மாக்கள்" பதிற்றுப்பத்து 234-6)
ஆடற்றுறைக்குத் தேவையான யாழ் - முழவு - தூம்பு முதலிய பல்லியங்களுடன் செல்லும் கூத்தர், விறலியர் பாடலிலும் மிக வல்லவர்கள்.
157

Page 81
விறலியர் நரம்பு சேர் இன்குரலாலும், கேட்போரை வெற்றி கொள்ளத்தக்க வகையிலும் இனிது பாடுவர். இவர்களைக் கலத்தொடு புணர்ந்த கண்டத்தவர்கள் எனக் கூறுவர்.
அமிழ்து பொதி துவர்வா யசைநடை விறலியர் பாடல் சான்று நீடினை யுறைதலின்"
(பதிற்றுப்பத்து, 51/21-22)
நரம்பின் முரலு நயம்வரு முரற்சி 69p69ui"
(மதுரைக்காஞ்சி 217) * சீறியாழ், நரம்புமீ திறவா துடன்புணர்ந் தொன்றிக்
கடவதறிந்த வின்குரல் விறலியர்"
(மலைபடுகடாம் . 534,36) இத்தனை சிறப்புமிக்க கூத்தரும் விறலியரும் பல்லியங் களுடன் காடுகளினூடாகத் தாம் செல்லும் வழியில் கள்வரி னாலும், கொடிய விலங்குகளினாலும் தீங்கேற்படா
வண்ணம் கடவுளை வாழ்த்திச் செல்வர்,
* காடுறை கடவுட்கடன் கழிப்பிய பின்றை" (பொருநராற்று,52) "இன்குரல் விறலியர்,
நறுங்கா ரடுக்கத்துக் குறிஞ்சி பாடிக் கைதொழுஉப் பரவிப் பழிச்சினர் சழிமின் மலைபடு 358-60) இக்கூத்துக்களை அகம் புறம் எனவும், வேத்தியல் பொது வியல் எனவும், சாந்தி வினோதம் எனவும் பிரித்துக் hn றுவர். வேத்தியல் என்பது அரசர்க்காடுவது எனவும், பொதுவியல் என்பது மற்றையோர்க் காடுவது எனவும் சொல்லப்படும்.
ஆடன் மகளிர் இவ்விருவகைக் கூத்துக்களையும் அறிந்
தவர்களாவர்
'வேத்தியல் பொதுவியல் எனவிரு திறத்து"
(சிலம்பு./ஊர்காண் 148)
138

இருவகைக் கூத்தின் இலக்கண மறிந்து"
சிலம்பு / அரங்கேற்ற, 12)
"வேத்தியல் பொதுவியல் என்றிரு திறத்தின்"
(சிலம்பு அரங்கேற்ற 39)
"வேத்தியல் பொதுவியல் என்றிவ் விரண்டின் கூத்தியல்பு அறிந்த கூத்தியர்"
(மணிமேகலை. 28/48-47)
"வேத்தியல் பொதுவியல் என்றிரு திறத்து"
(மணிமேகலை.2.18)
மதுரை மாநகரில் உள்ள பரத்தையர் வீதியில் வாழும் பாணர், கூத்தர், விறலியர், பரத்தையர் யாவரும் கூத்தின் இயல்புகள் அறிந்து, குயிலுவக் கருவிகளை மீட்டிப் பாடவும் ஆடிவும் வல்லவராயிருந்தனர். நாடகக் கணிகையர், தோரிய மகளிர், கூத்தியர் யாவரும் ஆடலும் பாடலும் பரப்புவர் இவர்கள் 64 கலைகளையும் பயின்றனர் என்பர்.
எண்ணெண் கலையோர் இருபெருவீதியும்"
(சிலம்பு/.ஊர்காண். 167
"எண்ணான் கிரட்டி யிருங்கலை பயின்ற
பண்ணியல் மடந்தையர்"
(சிலம்பு அழற்படு 138)
"எண்ணெண் கலையும்"
(சிலம்பு,|வேனில். 64
யாழ்முத லாக அறுபத் தொரு நான் கேரிள மகளிர்க் இயற்கை" (பெருங்கதை 13584)
அகத்திய முனிவரின் சாபத்தினால் மண்ணிற் பிறந்த மாதவி, பூம்புகாரில் வளர்ந்து கூத்துக்கள், unt L-6) யாழ்க்கரணவகைகள், தாளங்களின் தூக்கு தெறிகள், தண்ணுமை குழற்கருவிகளை சைக்கும் பயிற்சிகள்
I 39

Page 82
யாவற்றிலும் கைதேர்ந்தவளானாள், இவள் ஆடலரங்கத்தில் வந்து, எண்- எழுத்து, இயற்றமிழின் ஐந்து பாகுபாடு என்ப வற்றையும், இசைத் தமிழின்நாற்பெரும் பண்களையும் நாட கத் தமிழின் பதினொரு ஆடல்களையும் தனது வாக்கினா லும், ஆடலாலும் புவிமுழுதும் புகழும்படி செய்தாள்.
"எண்ணும் எழுத்தும் இயலைந்தும் பண்ணான்கும் பண்ணின்ற சுத்துப் பதினொன்றும் - மண்ணின்மேற் போக்கினாள் பூம்புகார்ப் பொற்கொடி மாதவிதன் வாக்கினால் ஆடரங்கில் வந்து"
(சிலம்பு, அரங்கேற்றக்காதை)
கூத்திற் பயிற்சியுடையோர் ஓவியநூற் பயிற்சியும் பெற வேண்டியவர்கள். மாதவியும் ஓவியச் செந்நூற்துறை போன வள் என மணிமேகலை கூறுகின்றது.
'நாடக மகளிர்க்கு நன் கனம் வகுத்த
ஓவியச் செந்நூல் உரைநூற் கிடக்கையும்
கற்றுத் துறைபோகிய பொற்றொடி நங்கை" m
(காதை, 230-32)
ஆடலானது மிடற்றுப் பாடலின் இசை, பொருள், பாவத் திற்கேற்ப குழல், தண்ணுமையின் தாளச்சீர்வழியில் அங்கங் கள் அசைந்து பாடலின் பொருளை வெளிப்படுத்துவதா
கும்.
"யாழுங் குழலும் சீரும் மிடறும்
தாழ்குரல் தண்ணுமை ஆடலோ டிவற்றின் இசைந்த பாட லிசையுடன் படுத்து வரிக்கும் ஆடற்கும் உரிப்பொருள் இயக்கி"
(சிலம்பு. 3/ 26.29)
40

பாட்டும், கூத்தும், வாச்சியமும் பொருந்தி நின்று உள்ளத்துணர்ச்சியைக் கண்ணும் புருவமும் கை கால்களின் அசைவினால், கருத்தை வெளிப்படுத்தும்போது, இதைக் கண்டு களிக்கும் ஆடவர் வெண்ணெய் தீயினில் விழுந்தது போன்று உருகுவர்.
பாடலொடி யைந்தவாடல் பண்ணமை கருவிமூன்றும் கூடுயு சிவணி நின்று குழைந்திழைந் தமிர்தமூற"
(சீவகசிந்தாமணி, 1256)
" தண்ணுமைமு ழவம்வீணை குழலொடுகு யிலத்தண்பூங் கண்ணொடுபுருவங்கைகால் கலையல்கு னுசுப்புக் காம ரொண்ணுதல் கொண்டவாடற் றோட்டிமை யுருவநோக்கி வெண்ணெய்தீ யுற்றவண்ண மாடவர் மெலிகின்றாரே"
(சீவகசிந்தாமணி, 1255)
பாவம் இராகம் தாளம் இம்மூன்றும் இணைந்தே பரதம் ஆயிற்று
"பாவமோ டராகந் தாளமிம் மூன்றும்
பகர்ந்திடு முறையி னாற்ப ரதம்"
(திருவிளைய டற்/மாறியாடின 8)
பண்ணினோசையும் களிநடனவிசையும், வாத்திய இகை யும் ஒருங்கேயமைந்த இசை விருந்தானது மண்ணிலுள்ளவர் களுக்கும் விண்ணிலுள்ளவர்க்கும் பெருவிருந்தாக அமைந்தது.
"கண்கனிய நாடகங் கண்டமரர் காமக் கொழுந்தீன்று தந்தவந்தா மகிழ்ந்தாரன்றே (சீவகசிந்'3138)
' பண்ணி னோசையும் பாணலை வென்றிடுங்
கண்ணி னார்கள் களிநட வோசையும் தண்ண ரம்பிய தந்திரி யோசையும் விண்ணிலுள் ளோர்க்கும் விருந்தென லாமே"
(கந்தபுாரணம்|திருநகர 51)
141

Page 83
இத்தகைய மகளிரின் நாடக அரங்கிலே மகரவீணையும் தண்ணுமையும் ஒருங்கிசைக்கக் கையினால் அபிநயமும், கண்வழி மனமுஞ் செல்லும் ஆடல்களைக் காணலாம்.
" நெய்திரள் நரம்பில் தந்த மழலையின் இயன்ற பாடல்.
(கம்பராமாயணம் / மிதிலை 8)
அரசனின் அவையில் ஆடல் மகளிரின் ஆடற்தோற்ற மும், அவ்வாடலுக்கேற்ற பாடலும், யாழிசையின் பயன் களும் அரசனின் நெஞ்சினைக் கவரும்
" கூடன் மகளிர் ஆடற்றோற்றமும்
Lunt L-fið பகுதியும் பண்ணின் பயன்களும் காவல னுள்ளம் கவர்ந்தன"
(சிலம்பு, 1 கொலை. 131-33)
ஆம் மன்னர்கள் ஆடல் பாடல்களில் வல்லவர்களுடன், இருந்து அவர்களது கலைத்திறனைப் போற்றினர். அவர்க ளைக் கெளரவித்தனர். பரிசில்கள் வழங்கினர். அரசன் தரும் விருந்தில் ஆடல் மகளிர் மண்ணமை முழவுக்கேற்ப யாழிசைத்து ஆடுவர் என பொருநராற்றுப் படை (108-10) கூறும்.
கூத்தாடுந் தொழிலுடைய கூத்தச் சாக்கியன் என்ப வன் ‘கொட்டிச்சேதம்’ என்னும் கூத்தினை ஆட அரசனா கிய செங்குட்டுவனும், அவனது தேவியாகிய வேண்மாளும் தமது அரண்மனை நிலாமுற்றத்தில் இருந்து மாலை நேரம் கண்டு களித்தனர் எனச் சிலப்பதிகாரம் (நடுகற்காதை 65-77) கூறுகின்றது.
ஆடற் கூத்து வகையுடன் தொடர்புடைய ஆடல் மக ளிர், பண் யாழ் விறலியர், தண்ணுமையாளன், குழலோன்,
【4罗

பாடுநர் யாவரும் கூட்டாகப்பாடி மகிழும்போது மன்னனும் கூடிமகிழ்வான்என மணிமேகலை ("9/79-84) கூறுகின்றது.
நரம்பினோசையை விட்டு விலகாத முழவானது, இடக்கண் இளியாகவும், வலக்கண் குரலாகவும் ஒலிக்க குழலும் யாழின் நரம்பொலிக்கமைய இசைதர, கிண்கிணி -சிலம்பொலிக்க அரங்கின் மீது வந்த பாவையானவள் கூத்தாடி அரசனை மகிழ்வித்ததைக் கீழ் வரும் பாடல் விளக்கும்.
* நரம்புபீ திறத்தல் செல்லா
நல்லிசை முழவும் யாழும் இரங்குதீங் குழலும் மேங்கக்
கிண்கிணி சிலம்போடார்ப்ப பரந்தவா னெடுங்கட் செவ்வாய்த்
தேசிகப் பாவை கோல அரங்கின் மேலாடல் காட்டி
யரசனை மகிழ்வித்தாளே”
(சீவக சிந்தாமணி 2596)
அரசர்கள் கூடக் கூக்தரைப் போல ஆடுவர் என இலக்
கியக்கள் பகர்கின்றன.
சூடிய பொன் முடியும் பூணுமொளி துலங்க வாடிய கூத்தரின் வேந்தாடினான்'
ஒருமுறை இராவணன் சந்நியாசி வேடம் பூண்டு சிதை யிடம் வந்து நடனத்துக் கேற்ற பாடலைப் பாடுபவனாய் நின்றான். ؟ . .
* பாணியின் நடத்திடை பலிக்கின்றானென
வீணையி னிசைபட வேதம் பாடுவான்"
(கம்ப. / ஆரணிய 21)
14

Page 84
அரசர்களால் இசையும் நடனமும் வளர்க்கப்படும் இட மாக, கோயில்களில் நிர்மாணிக்கப்படும் பல மண்டபங்களுள் நிருத்தமண்டபம் இருப்பதை திருவிளையாடற்புராணம் (திருநகரம் காண்படலம் 37) சுட்டிக்காட்டுகின்றது.
சிவபெருமான் திரிபுரத்தை எரித்த பின்னர் 2-LDITG56? யாரை ஒருபாகமாகக் கொண்டு வெற்றிக்களிப்பில் <鹦 L9 யது.கொடுகொட்டி, ஆடலாகும். மகாபிரளய காலத்தில் உயிர்களைத் தன்னிடத்தே ஒடுக்கி, குதித்தும் சுழன்றும் ஆடும் ஆட்டத்திற்கேற்ப பறைகள் ஒலிக்க, அம்மை 35 frarlb
கொட்டுவாள்
* படுபறை பல இயம்பப் பல் உருவம் பெயர்த்து
கொடுகொட்டி ஆடுங்கால் கோடு உயர் அல்குல் கொடியுரை நுசும்பினாள் கொண்டசீர்தருவாளே”
(கலித்தொகை . கடவுள்வாழ்த்து)
* கடையு கந்தன்னில் எல்லா உலகமும் கடவுள்தீயான் சுடலை செய்தமலை தாளம் அறை தர நடிக்கும் ஈசன்
(கலித்தொகை.)
நாடகத்தமிழின் பதினொரு ஆடல்களும் அசுரரைக் கொல்வதற்காக அமரராடிய கூத்துக்களாகும். இக்கூத்தி னை மாதவி ஆடினாள்.
* பதினொராடலும் பாட்டுங் கொட்டும்"
(சிலம்பு/அரங்கேற்ற, 14)
* பண்ணின்ற கூத்துப் பதினொன்றும் - மண்ணின் மேற்
போக்கினாள் பூம்புகார்ப் பொற்றொடி மாதவி"
(சிலம்பு. / அரங்; வெண்பா)
* கடையமயி ராணிமரக் கால்விந்தை கந்தன்
குடைதுடிமா லல்லியமற் கும்பம் - சுடர் விழியாற் பட்டமதன் கேடுதிருப் பாவையரன் பாண்டரங்கன்
144

கொட்டியிவை காண்பதினோர் சுத்து"
(சிலம்பு /அரங். 14. உரை)
இப்பதினொராடலின் விளக்கம் சிலப்பதிகாரத்தில் (கடலாடுகாதை 42-66) தரப்பட்டுள்ளது.
சிவபெருமான் நடிப்புத்திறனுடன் நடமாடும் போது கருத்துக்கேற்றபடி திருவடிச் சிலம்புகள் ஒலிக்கின்றன. கையி லுள்ள தமருகம் ஒழுங்கான ஒலியினைத் தருகின்றது. கண்களோ ஆயிரமாயிரம் திருக்குறிப்புக்களை அள்ளி வீசு கின்றன. செஞ்சடையோ நாலாபக்கமும் அசைந்துவருகின் Дgi.
ஆம். உள்ளக் கருத்துக்கேற்ப, முகக்குறிப்புடன் கண் களின் திருக்குறிப்புக்கள், நன்றாக இறைவனின் ஆட்டத் தில் வெளிப்பட்டது.
" திருநிலைச் சேவடிச் சிலம்புவாய் புலம்பவும்
பரிதரு செங்கையிற் படுபறை ஆர்ப்பவும் செங்கண் ஆயிரம் திருக்குறிப் பருளவும் செஞ்சடை சென்று திசைமுகம் அலம்பவும்"
(சிலம்பு ! நடுகற் 67-70)
பண் பொருந்தும் வீணை குழல் முழவு இசையுடன் ஒன்ற இறைவன் ஆடுவான்.
* பாடில் வீணை முழவங்குழன் மொந்தை பண்ணாகவே ஆடும்
(சம்பந்தர் - "கோடல்")
* பண்ணின்மிசை நின்றுபல பாணிபட வாடவல பான்மதியினான் (சம்பந்தர் - கண்ணின்மிசை ")
அவனது நடனம் சதிவழி வந்த சதிர் ஆகும், "சதிவழி வருவதொர் சதிருடையீர்" (சம்பந்தர், 'விதிவழி') ஏழிசையுடன், வாத்தியங்கள் முழங்க இறைவன் ஆடுகி ன்றான்.
145

Page 85
* துத்தம் கைக்கிளை விளரி தார முழை
யிளியோசை பண்கெழுமப் பாடிச் சச்சரி கொக்கரை தக் கையொடு
தகுனி தந்துந்து பி தாளம் வீணை மத்தளங் கரடிகை வன்மை மென்றோல்
தமிருகங் குடமுழா மொத்தை வாசித் தத்தனை விரவினோடாடு மெங்கள்
அப்பனிடந் திருவாலங் காடே"
(காரைக்காலம்மையார்
நாதத்தை ஆதாரதத்துவமாக்கி, தொம் - திம் எனத் தாளமிசைத்துத் திருக்கூ த்தாடும் சிவனின் நடனம், ஆடும் அரங்கம், வாத்திய ஒலி யாவுமே இன்ப மயமானவை எனத் திருமந்திரப்பாடல்கள் (2679, 26.83, 2689) கூறுகின்றன. நடனம் பற்றிய கருத்த்தூன்றிய பாடல் ஒன்று திருநாவுக் கரசர் புராணத்தில் (420) - பெரியபுராணத்தில் வருவதும்
சவனிக்கத் தச்சது. (பாடல் . கற்பகப்பூந் ?)
* வேதப் பதியன் பொற்றாளந் தித்திக்கும் தகும்" என்று அரன் ஆடுவான் என நல்லூர்ச் சின்னத்தம்பிப்
புலவர் மறைசையந்தாதியில் (86) குறிப்பிடுகின்றார்.
கீத வாத்திய-திருத்த சொ ரூபங்களே பிரம்மா விட்டுணு உருத்திரன் என மகாபரதகுடாமணி(822) கூறுகின்றது.
சிவபெருமனின் திருநடனத்தை அகக்கண்களாற் கண்டபலர் தமதுபலபாடல்களில் பாடி இன்புற்றனர்.
* ஆடிக்கொண்டார் அந்தவேடிக்கைசுாண" - முத்துத் தாண்டவர்
"காலைத்தூக்கி நின்றாடுந் தெய்வமே' * மாரிமுத்தாபிள்.ை *ஆனத்தக் கூத்தாடினார்" - கோபாலகிருஸ்ணபாரதி *ஆனந்த நடமாடுவார் தில்லை? தீலகண்டசிவன்
I 46

ஆனந்த நடமிடும் பாதன்" பாபநாசம்சிவன் ? "ஆடுஞ் சிதம் பரமோ ' അ பாபநாசம்சிவன் 'ஆனந்த நடனமாடினான் - யோகி சுத்தானந்த பாரதி
உலக வாழக்கையில் ஆடலும் பாடலும் தரும் இன்ப மானது போகிகள் யோகிகள் இருபகுதியினருக்குமே இன்பந் தருவதாக அமைகின்றன. மகாகவிசுப்பிரமணிய תזונ_ן $( யாரின், மது' என்ற தலைப் பில் வரும் பாடல்கள் கவனிக்கத் தக்கன. வேதமந்திர நாதமும், பாணரின் பண்னொன்றிய பாடல்களும், குழலிசையும், மாதராடலும் போகிகளுக்கு நேரடிக்காட்சியாகத் தெரியும் அதேசமயம் யோகிகளுக்கு அவ்வாடலானது அவர்களின் அகக் கண்களில் சிவத்தனி நாதமாகவும் சிற்சபையின் திருநடனமாகவும் தெரியும், என்னே மகிமை
குறவஞ்சி, என்ற சிந்து நடையிலான பாடல்கள் குறவன் குறத்தியரால் ஆடிப்பாடும் இசை மிகுந்த நடனமாகும் கடவு ளைத் தலைவனாகவும் தன்னைத் தலைவியாகவும் கொண்டு தலைவனை அடையும் பேறு கிட்டுமோ” என ஏங்கி நின்று தெய்வத்தை வாழ்த்தி, மலைவளத்தையும் குறியையும் சொல்லுவதாக இது அமையும் பல புகழ் பெற்ற குறவஞ் சிகள் தமிழ் நாட்டிலும் இலங்கையிலும் இசைப் புலவர்க ளால்அளிக்கப்பட்டுள்ளன.
* திருக்குற்றாலக் குறவஞ்சி" இயற்றியவர் திரிகூடராசப்ப கவிராயர் * அழகர் குறவஞ்சி' கவிகுஞ்சர பாரதி
மன்னராலும் மச்களாலும் ஆடலும் பாடலும் வளர்க்
கும் பள்ளிகள் இருந்தன. "மாதரார் கூத்தறாத பள்ளியும் எனச் சீவகசிந்தாமணி (154), மாதரார் நாடகசாலை
147

Page 86
யைக் குறிப்பிடும். அன்றியும் இசைக்கும் கூத்துக்குமான நிருத்த மண்டபங்களும் இருந்ததையும் கோயில்களின் நிர் மாணப் பணிகள் பறைசாற்றின
ஆடல்வகைகளான நாட்டுக்கூத்து, சமயக்கிரியைக்கான வெறியாட்டு, மற்றும் அரசர்க்கான ஆடல்கள், குரவையா டல் யாவற்றிலும் உள்ளக் கருத்துக்கள் இசையொன்றிய பாடல்களாக ஒலிதர, கண் - முகம் - கைகள் கருத்தினை வெளிப்படுத்த, கால்கள் - முரச ஒலிகளுக்கான தாளச்சீரு டன் அடியெடுத்து வைப்பதைக் காணலாம். ஆடலரங்க தில் இசைத்துறை சார்ந்த புலமையுடையவர்கள் ஆடலி லும், பாடலிலும், கருவியிசையினிலும் கவனம் செலுத்து வதுடன் ஆடல் மங்கையின் அழகை மேம்படுத்தவும் தவற மாட்டார்கள்.
இவ்வாடலையும், பாடலையும் கொண்டு நல்ல கருத் துக்களை மக்கள் மனதில் பதியவைத்து, அவர்களது வாழ்க் கைக்கு நல்லவழி காட்டுவதே கூத்தர்களின் நோக்கமாக இருந்தது. கூத்தாடுமிடத்தில் கூட்டம் அதிகமாக சேரும் . அங்கு அக் கூத்து முடிவுற்றதும் அவ்விடத்தே கூட்டம் உட னடியாகக் கலைந்தாலும், அவர்களின் வாழ்க்கைக்கான நல்ல நெறியினைப் பெருஞ்செல்வமாக ஏற்று, மக்கள் அக் கூத்தின் இலட்சியத்தை முன்னெடுத்துச் செல்வர். அந்த நல்ல உள்ளப் பதிவை இசையும் கூத்தும் அள்ளி வழங்குவது போற்றற்குரியதே. தற்கால கூத்துக்கள், நாட்டிய நாட கங்கள் இவ்வகையைச் சார்ந்ததாகும்.
8. தொகுப்புரை
பழந்தமிழர் தமது பண்பாட்டின் சின்னமாக நுண்கலை களைப் போற்றி வளர்த்து வந்தனர். மக்களினதும், மன்
148

னர்களினதும், பங்களிப்புக்கள் இக்கலைகள் செழித்து வளர்தற்குத் தூண்டுகோலாகவும் பேருதவியாகவும் இருந்
தன
இயற்கையின் ஒலி நுட்பங்களைக் கேட்டுணர்ந்து இசைக் கருவிகளை உருவாக்கி அக்கருவிகளில் எழும் இசையை அவ் வியற்கை ஒலிகளுடன் ஒப்பிட்டு மகிழ்ந்தனர். கண்ணால் கண்டும், காதாற்பருகியும் கிடைக்கும் இன் பவுணர்வைத் தமிழில் இயலிசைப் புலவர்கள் சொல்லோவியங்களாக்கி, கவிதை வடிவினில் இலக்கியப் படைப்புக் களை உரு வாக்கினர். இந்த இலக்கியப் படைப்புக்கள் சங்ககாலத்துக்கு முற்பட்ட காலம் முதல் எமது கலைப்பண்பாட்டு வாழ்க்கை நிலைகளைத் தரூபமாகக்கான வழிகோலுகின்றன. ஆட லும் பாடலும் நிறைந்த இன்ப வாழ்வின் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் இலக்கியக் கருவூலங்களாகக் கவிதைகளில் ஒளிர்கின்றன. அச்சீரிய பண்பாட்டை எமது அகக் கண்ணில் நிறுத்தி, எமது சிந்தனைக்கு விருந்தாக்கிய இலக்கியப் படைப் புகளே எமது அறிவுக்கும், உணர்வுக்கும், புத்துயிரளித்துத் தெவிட்டாத இன்பத்தை அள்ளி வழங்குகின்றது.
* கற்போர்க் குணவாகி கற்றவர்க்கு இன்பமாய்
நிற்கு நூல் நீள்நாள் விருந்து" என்ற ஈரடி இருநூறு குறளுக்கமையக் கற்றவர்க்கும், இன்பமாய் விளங்குபவை இலக்கியங்களே.
இவ் விலக்கியப் படைப்புகள் யாவற்றிலும் இசை, வாழ்க்கையின் இன்றியமையாத ஒரு பண்பாக அமைகின் றது. தமிழ் எழுத்துக்களில் உயிரெழுத்துக்களை உடலாகக் கொண்டு ஏழிசையும் பிறந்தன. பறவை - விலங்குகளின் ஒலிகளை அவதானித்து ஏழிசைக்குரிய ஒசைகளைத் தனித்தனியாகக் குறிப்பிட்டனர். குழல் இசையில் தோன்
149

Page 87
றிய இசை வடிவங்களைக் குரலிலும் யாழ்க்கருவியிலும் பிறப்பித்து இன்பம் துய்த்தனர். உள்ளக் கருத்துக்கமை வான பாடல்களின் சுவைக்கேற்பவும், காலத்துக்கேற்பவும் அதற்கான பண்களை நிர்ணயித்ததனர்.
ஏழ் பெரும் பாலையிசைகளைச் சீறியாழிலும், பேரியாழ், மகரயாழ், சகோடயாழ் கருவிகளிலும் மீட்டி, ஆடலும் பாடலும் வாழ்க்கையின் செல்வமாக மதித்து பாணர்களா யும், கூத்தர்களாகவும் வாழ்ந்து மக்களினதும், மன்னர்களி னதும் மதிப்பைப் பெற்றனர்.
மன்னர்களும் கொடை வள்ளல்களும் முத்தமிழைத் தாமும் கற்று திறனெய்தியவர்களாய் கலைத்திறன் படைக் தவர்களை வரவேற்று உபசரித்தனர். ஆடலையும், பாட லையும் கண்டுகளித்த மன்னர்களும், மக்களும் இசைவயப் பட்டவராயும், காதல் வசப்பட்டவராயும் நெஞ்சம் உரு இனர் .
நில இயல்புகளுக்கேற்ற பண் - யழ் - பறைவகைகளை ஏற்படுத்தினர். முரசங்களும் பறைகளும் ஊர்கள் தோறும் ஒலித்துச் செய்திகளை வெளிப்படுத்தின. போருக்குரிய பறைகள் வீர உணர்ச்சியைத் தந்து வெற்றிக்கு அடிகோ லின. ஆடல், பாடல்களில் வல்லவர்களுக்குப் பரிசில்களாக நாடு, யானை, குதிரை தேர், பொற்றாமரை பிற அணிக லன்கள், கெளரவப்பட்டங்கள் கொடுத்து மன்னர்கள் தமது கொடைத்திறன் காத்தனர்.
குலமகளிரின் கலைகளாக கூத்தும், பாட்டும், கருவியி சைகளும் வளர்க்கப்பட்டன. கட ள் வணக்கம், விழாக்கள் மண நிகழ்வுகள், பொழுது போக்கு, காவற்றொழில் என
எக்காரியத்துக்கும் இசையைப் பயன்படுத்தினர்.
50

இசையும் கூத்தும் வளர்க்கப்படுவதற்காக நாடகசாலை கள் இருந்தன. கோவில்களில் நிருத்த மண்டபங்கள் இருந் தன. அரசவையில் ஆடல் - பாடலில் வல்லவர்கள் நிரந்தர மாக அமர்த்தப்பட்டிருந்தனர்.அவர்களின் இசையும் கூத்தும் மக்களின் மனதை நெகிழ்வித்து, ஊனுக்குணவாகி, அறி வுக்கி விருந்தாகி இன் பவுணர்வை ஊட்டி தித்திக்க வைத்
தன.
இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்தில் மாதவியின் ஆடலும், பாடலும், அழகும் யாழ் குழல் - சீர் - மிடற் றிசை ஒலியுடன் கலந்து கேட்டோர் உள்ளத்தைக் கவர்ந் தன. கோவலனின் மனமாகிய குன்று கரைந்தது, அசைவுற்
Ag5! .
சிலப்பதிகாரத்தின் மூலம் இசைக்குரிய g லக்கணங்கள் யாவற்றையும் அழகாக இள கோவடிகள் எடுத்துக்காட்டி னார். இதற்கு முன்பிருந்த நூல்கள் யாவும் முத்தமிழையும் கொண்ட இலக்கியப்படைப்புகளாகவே விளங்கின. எனவே அவற்றில் இசைபற்றிய இலக்கணங்கள் சிறப்பாகக் கூறப்ப டவில்லை. சங்ககாலத்தில் இசைநூல்கன் பெருகியிருந்ததை சிலப்பதிகார இசை கூறுகின்றது.
பெருநாரை, பெருங்குருகு, இசைநுணுக்கம், பஞ்சபாரதி யம், பஞ்சமரபு, தாளசமுத்திரம் பதினாறுபடலம் என்பன இசைத்தமிழ் இலக்கண நூல்களாகும்.
பரிபாடல், கலித்தொகை என்பன இசைத்தமிழ்ச் செய்யுள்நூல்களாகும். திருமுறைகளும், திருமுகப் பாசுரங்க ளும் இசைநூல்களே சிந்தாமணி, சூளாமணி, கல்லாடம், தி ரு விளையா ட ற் புரா ண ம் , திருத்தொண்டர் பெரிய புராணம், 35 lib U UT FT LDT ULu 6DOT 1b மு. த லி ய வ ற் றில் இசை யி லக் க ண ம் இடையிடையே குறிப்பிடப்படுகின்
151

Page 88
றது. குறவஞ்சி, சிந்து, பள்ளு முதலிய பிரபந்தங்களும் பிற்கால இலக்கிய இசைநூல்களே.
தமிழிசையை வளர்க்க, இலங்கைவாழ் மக்களும் தமது பங்களிப்பை அன்றுமுதல் செய்து வருகின்றார்கள். திரு விளையாடற் புராணத்தில் வரும் இசைவாது வென்ற பட லத்தில் ஈழத்தினின்றும் விறலியானவள் அழைக்கப்பட்ட தை பாடல்கள் 4, 14, 17, 40 குறிப்பிடுகின்றன. யாழின் வகைகளையும் தோற்றங்களையும் சுவாமி விபுலானந்தர் *யாழ் நூல் மூலமாகத் தந்து, யாழிசைக்குப் புத்துயிரளித் துள்ளார்.
ஆட்சி மாற்றங்களால் பாணர்களை ஆதரிப்பவர்கள் குன்றி நாளடைவில், அவர்கள் யாழும் கவனிப்பாரன்றி அழிந்து போயிற்று.அதன் இடத்தில் கர்நாடக இசை வளர்ந்தது. இவ் விசைக்குத் தமிழிசையே ஆதாரமாக அமைந்தது எனலாம்.
இயற்கையையும் இறைவனையும் அரசனையும் பாடிய புலவர்கள் இசையானது வாழ்க்கையில் ஆன்மாவுக்குரிய உணவாகவும், பேரானந்தப் பெருவாழ்வைத் தரும் மார்க்க மாகவும் கண்டனர். தெய்விக இசைமழையில் திளைத்த நாயன்மார்களும் ஆழ்வார்களும் இசைவடிவங்களைத்தமது பாடல்களில் பதியவைத்தனர். இயற்கையையும் உயிர்களை யும் தன் பாவீர்த்து இசையவைக்கும் தன்மையால் தம்மை மறந்து இசையின்பத்தால் ஏற்றத்தாழ்வின்றி மன்னரும் மக் களும் வாழ்ந்தனர். பிறர் கையில் ஏற்ற பொருளால் வாழ்க் கை நடத்தும் பாணரும் கூத்தரும் மக்கள் மத்தியிலும் மன்னரின் மாளிகையிலும், இறைவன் கோவிலிலும் நடக் கும் விழாக்களில் யாவரையும் இசையின்பத்தால் கட்டி தமது கலைத்திறனை உயர்த்தினர். பண்ணினாற் களிப்பிக் கும் பாணன் எனப் பலரும் போற்றினர்
15

எனவே, மேன்மையுற்றிருந்த எமது தமிழிசையை, பிறமொழியாளர்களும் "தென்னாட்டிசை எனப் போற்றும் நிலையில் நாமும் இலக்கியக் கண் கொண்டு பார்த்து தமிழிசையை மேன்மையுறச் செய்வோம். இலக்கிய இசை யின்பத்தைப் பருகுவோம்.
இயற்கையி லெழுந்த இன்னிசை நாதம் குழல்வழி தோன்றி யாழ்வழி வளர்ந்து விபத்தகு இசைதரும் கருவிகள் தம்மிலே அமிழ்தென ஏழிசை ஒலியினைத் தந்தே தமிழிசை மரபாய்த் தனிநடம் புரிந்து புவிதனில் யாவரும் போற்றிட நிலைத்துக் காதலும் வீரமும் கவினுறப் பேசிக் காவியங் களிற்சொல் லோவிய மாகி இலக்கிய மரபினில் இசைவளந் தந்து ஆடலும் பாடலும் அமுத இசையுடன் மூவிசை மரபாம் குரல்குழல் நரம்புடன் பாணியும் ஒன்றப் பாங்குடன் சேர்ந்துநாட்டவர் போற்றும் கூத்திசை தந்து அரங்கினில் சீர்தரும் நடம்பல புரிந்து நடையறி புலவர்கள் கருத்தினில் உதித்து இசையறி புலவர்கள் கலைத்திறம் போற்றி பாவினில் பல்வண்ணப் பண்ணெனத் தோன்றி எழிலுறத் தமிழ்த்தாய் புகழ்தனைப் பரப்பி மன்னரும் மக்களும் போற்றிட மகிழ்த்து தாரணி யெங்குமே தமிழிசை செழித்திட காரண மானநற் கலைஞரைப் போற்றி நாடுந லம்பெற நல்லிசை வளம்பெறக் கூடி யாவரும் போற்றி மகிழ்வோம். இலக்கிய இசையாம் இன்பக் கடலின் ஆடலும் பாடலும் ஆடலின் தோற்றமும் பாடலுக் கேற்ற பண்ணின் பயன்களும் நாட்டவர் வாழ்வினில் நலமே தந்திட <器一 லரசனின் மலரடி தொழுவோம். அமுதத் தமிழில் ஆரஞ் சூட்டி m இலக்கிய மரபினில் இசைவளங் கூட்டி மன்னுயிர் போற்றிடும் தமிழன்னை வாழ்த்த இலக்கியம் காத்து இன்பம் அடைவோம்.
53

Page 89
இந்நூலாக்கத்திற்கு உதவியநூல்களும் கட்டுரைகளும்
.
0.
ll.
2.
13.
l4.
15.
6.
17.
அகநானுரறு - திரு. வெ பெரி. பழ. மு. காசிவிசுவநாதன்
செட்டியார் வெளியீடு
- புலியூர்க் கேசிகன் தெளிவுரை அபிநயதர்ப்பணம் - வீரராகவன் மொழிபெயர்ப்பு இசைப்பண்பு - K. C. தியாகராஜன் ஈரடிஇருநூறு - இளவழகனார் உரை கம்பராமாயணம்-வை. மு. கோபாலக்ருஷ்ணமாச்சாரியார் உரை
திருவல்லிக்கேணி மு. சடகோபராமனுஜாசா ரியரும் சே. கிருஷ்ணமாச்சாரியரும் இயற்றிய
תפ(60- פ2 கந்தபுராணம் - திருப்பனந்தாள் சிறீ, காசிமடத்து வெளியீடு கல்ல டம் - உரையாசிரியர் திரு.வே.பொ. சோமசுந்தரனார்
கலிங்கத்துப்பரணி - தமிழ்ப்புலவர் ஆ. வி. கன்னையா நாயுடுஉரை
கலித்தொகை - திரு. வெ. பெரி. பழ. மு. காசிவிசுவநாதன் செட்டியார் வெளியீடு
கண்மணியாள் காதை - "மஹாகவி' அன்னை வெளியீட்டகம், யாழ்ப்பாணம்
குறுந்தொகை - உ. வே. சாமிநாதையர் பதிப்பு
கைலாயமாலை - முத்துராச கவிராசர் - (சுழிபுரம் திருமதி வள்
ளியம்மை முத்துவேலு நினைவு வெளியீடு)
சங்கத்தமிழும் பிற்காலத்தமிழும் - டாக்டர் உ. வே. சாமிநாதை
யர் உபந்நியாசங்கள்
சிதம்பர மரபில் சீர்பெற்ற மங்கள இசை: "கட்டுரை' வீரகேசரி
இதழ் 16.10.1988.
சிலப்பதிகாரம் - நாவலர்.பண்டித ந.மு.வேங்கடசாமி நாட்டார் DORM: UT
訳54

18. சிலப்பதிகாரச் செங்கோட்டியாழ் - முனைவர் . புரட்சிதாசன்.
19 சிவப்பிரகாச சுவாமிகள் பிரபந்தத்திரட்டு - திரு. வெ. பெரிபழ. மு காசி. விசுவநாதச் செட்டியார் வெளியீடு (சோணசைல மாலை, திருவெங்கையுலா, சிவஞானபாலய சுவாமிகள் தாலாட்டு)
20, சிறி. குமரகுருபரர் பிரபந்தங்கள் -- L-srðu-f. 2-• வே. சாமிநாத தையர் குறிப்புரை (மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ், சகலகலா வல்லி மாலை, பண்டார மும்மணிக்கோவை)
21. சீவகசிந்தாமணி - நச்சினார்க்கினியர் உரை
22. சேக்கிழாரும் நுண் கலைகளும் - "கட்டுரை திரு. செ. வைத்தி
66ără să M. A. (Lit)
23 தமிழர் இசை - டாக்டர் ஏ. என். பெருமாள் 24. தமிழர் சால்பு - பேராசிரியர். சு. வித்தியானந்தன் M.A. Ph P
25. தமிழர் சாசனங்கள் - வித்துவான் வ. தங்கையா நாடார் உரை 26. தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் - மயிலை, சீனி, வேங்கடசாமி
27. தமிழும் இசையும் - கட்டுரை (கொங்குமலர்)
28. தஞ்சைவாணன் கோவை - சொக்கப்ப நாவலருரை 29. STnT6Nurf g)GMF V. 556ắsv.Lu nr 6 of B. E., M. Sc (Eng.)
30 திருக்குறள் - டாக்டர் மு. வரதராஜன் உரை 31. திருமந்திரம் - சைவசித்தாந்த நூற்பதிப்பு - கழகவெளியீடு 32. திருவாசகம் - திரு க. சு. நவநீத கிருஷ்ண பாரதியார் உரை
33. திருக்கோவையார் - மாணிக்கவாசகர் அருளியது 34. திருப்புகழ் - திரு. ஜெ. மு.மு. குரு நமசிவாயன் வெளியீடு.
35. திருமுறைகண்டபுராணம் - சைவசித்தாந்த நூற்பதிப்பு கழகம், திருநெல்வேலி
36. திருத்தொண்டர் பெரியபுராணம் - சைவ சித்தாந்த நூற்பதிப்பு V கழகம், திருநெல்வேலி
37. திருவிளையாடற் புராணம் - சைவசித்தாந்த நூற்பதிப்புக்
கழகத்தார்
I 55

Page 90
38. திருஞானசம்பந்தர் தேவாரம் - தருமபுர ஆதீன 39. திருஞானசம்பந்தர் தேவாரம் - கழகவெளியீடு 40. திருநாவுக்கரசர் + சுந்தரர்தேவாரம் - கழகவெளியீடு 41. தியாகராஜர் கீர்த்தனைகள் - சிறீ. T. S. வாசுதேவன் B. A.
Dip. in. Music. 42. தொல்காப்பியம் - புலியூர்க் கேசிகன் உரை 43. நல்லூர் சின்னத்தம்பி புலவர்பாடல்கள் (கல்வளையந்தாதி யாழ்ப் பாணம் சைவபரிபாலன சபை பதிப்பு 1934, மறைசையந்தாதி ட யாழ்ப்பாணம் சைவபரிபாலனசபை பதிப்பு 1933, பறளை வின யகர் பளளு - சே. வே. ஜம்புலிங்கம்பிள்ளை 1932) 44. நற்றிணை - சைவசித்தாந்தக் கழகவெளியீடு 45. நள மவண்பா - திரு. செ. ரெ. இராமசாமிப்பின்ளை உரை 46. நாகசுரச்சக்கரவர்த்தி டி. என். இராஜரத்தினம் பிள்ளை - ப. சோழநாடன் 47 "பண்ணிசையும் இராகமும்" - பண்டிதமணி. கணபதிப்பிள்ளை 48. பண்ணார் இன் தமிழ் (கட்டுரை) திரு. N. V. M. நவரத்தினம் M. Mus. Phill 49. பஞ்சமரபு - அறிவனார் 50. பழந்தமிழிசை இராவ்சாகிப் கு. கோதண்ட பாணிப்பிள்ளை B.A 51 பத்துப்பாட்டு - உ. வே. சாமிநாதையர் பதிப்பு 52. பரிபாடல் மூலமும் பரிமேலழகர் உரையும் - டாக்டர், உ. வே. You சாமிநாதையர் 53. பதிற்றுப்பத்து - உரையாசிரியர் - ஒளவை துரைசாமிப்பிள்ளை . 54. பாரதியார் கவிதைகள் - சி. சுப்பிரமணியபாரதி 55. பாண்மக்கள் மூவர் - வித்துவான் சிவபார்வதியம்மையார் 56 புறநாநூறு - டாக்டர் உ. வே. சாமிநாதையர் ஆராய்ச்சிக்குறிப்பு 57 புறப்பொருள்வெண்பாமாலை -டாக்டர் உ. வே. சாமிநாதையர் 58 பெருங்கதை - உ வே சாமிநாதையர் பதிப்பு 59 மகாபரத சூடாமணி ரா. விசுவநாதையர் (பதிப்பாசிரியர்) 60 மணிமேகலை - புலியூர்க் கேசிகன் தெளிவுரை 6 மிடற்றுப்பாடல் - பேராசிரியர் வஜ்ரவேல் முதலியார் 62 மூவருலா - சிறிமதி ருக்மணிதேவி அவாகளின் பதிப்பு 63 யாழ்நூல் - சுவாமி விபுலானந்தர் 64 வழுவூரரின் தெய்வீக ஆடற்கலை - பத்மசிறீ வழுவூர்,
prar Gao Louny sir Gaspar 65 விபுலானந்தக் கவிமலர்கள் - அருள்செல்வநாயகம் M. A.

பக்கம்
11
12
13
5
6
19
20
21
25
26
32
34
35
45
48
55
70
74
79
80
& 8
96
97
07
09
1
I25
128
135
143
3
12
17
25
25
1
10
01
0.
18
2
பிழை திருத்தம்
பிழை
ானம்வருகந்தருவ
色岛A
சமகானஞ தமிழாடு குால்
மருதயா பாணலப்
இன்னரம்புரள
எட்டலும் ண்ணென்னாம்
4 11 2- 21 விடுதுனைக்கேற்ப வகவுநிகர்
41 1-6
யோசைளின் இளிவேணியில் 13ம்=5பார்ச்சுருக்கம் பறவையிள
தீகனி
பண்ணத்
u rro007 667 தெள்ளிசைக்ரணம் யாழோர்மேன
ஏழாலும்
27
பத்மாகனமாக குறிம்பிடுகின்றார் 169
எண்னும் தக்கைத குணிச்சம் முரசங்கங்களின் 354 45
9 79 - 84
திருத்தம்
கானம் வரிகந்தருவr
குழல் dirt LDssroot (5 தமிழோடு குரல் மருதயாழ் பாலைப் இன்னரம்புளர எட்டாலும்
167 GoGor6örGoTnT ub 14/12-21 விடுதுளைக்கேற்ப வகவுநர் 41-6 யோசைகளின் இளவேனிலில்
3ம்போர்ச்சுருக்கம் பறவையின்
தீங்கனி பண்ணைத் பாணன் தெள்ளிசைக் கரணம்
யாழோர்மேய எழாலும் 26
LuġiāLDT gf 67 u cnres குறிப்பிடுகின்றார் 6 Ι9
என்னும் தக்கை தகுணிச்சம் முரசங்சளின் 354 / 4 - 5 19.1 79 - 84

Page 91


Page 92
《