கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பெண்களின் சுவடுகளில்

Page 1

Buຍນ້ໍາຮaf-
BĦEll||H. EFEris••• -

Page 2

தமிழியல்
சாந்தி சச்சிதானந்தம்
பெண்களின் 66.1656ff)

Page 3
this
7 ili lè :
Author :
C)
First Editio :
Publishers :
Cover Design
book is published in connection with the
International Women's Day, 1989
PEWIWGALAW SUVAD LUGAL (A Feminist Study on Matriarchy)
Shanthi Satch it han andam
Au i hor
March, 1989 TAMILiYAL
var is
Cre-A : 268 Royapet tah High Road
Printers Rasakili Priniers
Adyar Madras 600 020 Couer : Sudarsan Graphics
Madras 600 017
|Price: RS. 2O
Copies
av al la ble at :
McIdrds 600 0 14
Wayat ; 5 Kutchery Lane Mylapore
Madra is 600 004

பொருளடக்கம்
ஒரு விவாதத்தை நோக்கிய முன்னுரை
ஆதிமனிதனின் இரண்டு பசிகள் ஆதிமனிதனின் உணவு வழக்கங்கள் - தகாப்புணர்ச்சிக்கு
எதிரான தடைகள் - மனிதனை உருவாக்கிய அன்னை
யர் - தாயுரிமைக் கணங்கள் - ஆண் என்னும் அந்நியன் ஆண்களை ஒதுக்கிய காலங்கள், தாயுரிமைக் கணங்களின் சமூக வாழ்க்கை
ஒரு நாகரிக வாழ்க்கை - ஏன் இந்த யுத்தங்கள்?
ஆதிகாலப் பெண்களின் ஆக்கப்பணிகள் மிகுதி எல்லாம் பெண்களுடையது - நெருப்பும் பெண் ணும் - கைத்தொழில்களும் பெண்களும் - மண் பானை களில் இருந்து மாளிகைகள் வரை - பெண் குலத்தின் பின்னைய வரலாறு.
குழாம்களிலிருந்து குலக்குழுக்கள் வரை குழாம்களும் இரத்த உடன்படிக்கைகளும் - கலவிக்கு இசைவான உறவு முறைகள் - சமாதானத் தூதுவர்கள் திருமணங்களின் ஆரம்பம்
கலவி மாற்று முறை - மாமி, மனைவி, மருமகன் . கணவன், மனைவி, சகோதரி.
தந்தைக் குடும்பங்களின் தோற்றம் ஆண் தாய் - தாய்மாமன் - சிசுப்பலிகள் - பரிசம் - தந்தை யார்? - விலங்கிடப்பட்ட பெண்.
43
57
87
111
135

Page 4
கலைச்சொற்கள்
இரத்த உடன்படிக்கை உற்பத்தி உறவுகள் உற்பத்திக் கருவிகள் உற்பத்திச் சக்திகள் ஒன்றுவிட்ட சகோதரர்கள் குழாம்
குழுஉக்குறி முறை குலக்குழு
தகாப்புணர்ச்சி தந்தைக் குடும்பம் தாயுரிமைக் கனங்கள் தன்னின உண்ணி
fi (; 6. உடன்படிக்கை
Blood Covenant Relations of production Means of production Mode of production Parale Brothers
Clan
Totemism
Tribe
Incest
Patriarchy Matriarchal Communes
Cannibal
Milk Covenant

ஒரு விவாதத்தை நோக்கிய முன்னுரை
1
பெண் விடுதலை பற்றிய விழிப்புணர்வு பெண்கள் மத்தி யில் முன்னென்றுமில்லாத அளவிற்கு இன்று ஆழ்ந்து வேரோடியுள்ளது. இது நமக்கு மிகுந்த நம்பிக்கை தருவ தாகும்.
பெண்களுக்கு எதிரான ஒடுக்கு முறைகளைக் கண்டித் தும் ஆண்- பெண் வேறுபாடுகளின் அடிப்படையில் பெண்கள் புறக்கணிக்கப்படுவதையும் பாரபட்சம் காட்டப்படுவதையும் எதிர்த்தும் ஆணாதிக்கத்தின் கோர சொரூபங்களைத் தோலுரித்துக்காட்டியும் ஆண்களோடு சமத்துவம் கோரியும் பெண்கள் ஆங்காங்கே ஒன்று திரண்டு குரல் எழுப்பத் தொடங்கி விட்டனர். மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்தும் தீ இன்று ருத்ரம் கொண்டிருக் கிறது.
சிறுபத்திரிக்கைச் சூழலிலும், உயர் கல்விக் குழுவினரி டம் மட்டுமே கருக் கட்டியிருந்த பெண் விடுதலைச் சிந்தனை கள் இன்று அடிமட்டப் பெண்கள் மத்தியிலும் வியாபகம் பெற்று வருகிறது. சமூகச் சுரண்டலுக்கும் ஆணாதிக்க ஒடுக்கு முறைக்கும் நிரந்தரமாய் இரையாகிப் போய்விட்ட உழைக்கும் மாதர் மத்தியில் இந்தச் சிந்தனைகள் வேர் கொண்டால் மாத்திரமே பெண்ணினம் தலை தூக்குவது சாத்தியமாகும்.

Page 5
vi
பெண்களின் சமகாலப் பிரச்சினைகளை, முரண்பாடு களை, போராட்டங்களை அதன் தெளிவான வரலாற்றுப் பின்னணியில் வைத்துப் பரிசீலனை செய்தால்தான் பெண் விடுதலையின் இலக்குகளை நாம் இனங்காண முடியும்.
இங்கேதான் பெண்களின் வரலாறு பற்றிய பேச்சு பிறக்கிறது.
பெண்களுக்கு என்று தனிப்பட்ட வரலாறு என்று ஒன்று உண்டா என்று யாரும் கேள்வி எழுப்பலாம்.
வரலாறு என்பது என்ன?
ஒரு காலகட்டத்தில், ஒரு குறிப்பிட்ட மக்கள் கூட்டத் தின் வாழ்க்கையின் நிகழ்வுகளின் தொகுப்பையே வரலாறு என்கிறோம்.
அந்தந்தக் கால கட்டங்களுக்குத் தகுந்தவாறு ஏட்டுச் சுவடிகள், கல்வெட்டுகள், கட்டிடங்கள் மற்றும் குறித்த மக்கள் கூட்டம் உபயோகித்த கருவிகள் போன்ற பல்வேறு சான்றுகளில் இருந்து வரலாறு என்பது அறியப்படுகிறது. இது மட்டுமல்லாது, இச்சான்றுகளுக்கு நாம் எவ்வாறு அர்த்தம் கற்பிக்கின்றோம், எவை எவற்றிக்கு முக்கியத் துவம் கொடுக்கின்றோம் என்ற அம்சங்களே வரலாற்றின் போக்கையே நிர்ணயிக்கவும் செய்கின்றன.
அதாவது எந்த வாலாறுமே அதைக் கூறுபவரது சார்புநிலைகளுக்கேற்பவும் அவர் அதனைக் கூறும் சூழ் நிலைகளுக்கேற்பவும் திரிபுபடுத்தப்பட்டே நம்மை வந்தடை கிறது.
மக்கள் மத்தியில் பேர்போன புத்தகங்கள் என்று சொல்லப்படுபனவற்றில் உண்மை வரலாறுகள் கிடைப் பதில்லை. அன்று அரசர்கள் வரலாற்றை ஆண்களைக் கொண்டே எழுதுவித்தனர். இன்றும் அரசில் அங்கம்

vii
வகிப்பவர்கள் ஆண்களைக்கொண்டே வரலாற்றை எழுதுகின் றனர். எப்பொழுதும் ஆளும் வர்க்கத்தினரின் கண்ணோட் டங்களும் அவர்களின் வீரப்பிரதாபங்களுமே வரலாறு என்று பெயர் பண்ணப்படுகிறது.
உதாரணமாக தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய இராஜராஜச் சோழனை எடுத்துக் கொள்வோம். அவனு டைய கீர்த்தி பிரசித்தமானது. அவனைப் பற்றி நமது பாடப்புத்தகங்களில் நிறையவே படித்திருக்கிறோம். ஆனால் உண்மையில் தஞ்சைச் கோயிலைக் கட்டியது சோழ அரச னின் கரங்கள் அல்ல; கடல் கடந்த போர்களில் ஈட்டிய வெற்றியும் அவனுடையதல்ல. பெயர் தெரியாத ஆயிர மாயிரம் உழைப்பாளர்கள், கலைஞர்கள் தமது திறமையை ஒன்று திரட்டினர்; அதுதான் தஞ்சைக் கோயில் என்னும் மகத்தான கலைப் பொக்கிஷமாக மலர்ந்தது. ஆயிரமாயிரம் மக்கள் போர்க்களத்தில் ஈக்களென மடிந்தனர்; சோழப் பேரரசு உருவானது. இந்த சாமானியர்களின் கதைதான் சரித்திரத்தை சிருஷ்டித்த கதை. ஆனால் இவர்களுடைய வாழ்க்கை முறைகள், பாரம்பரியங்கள், போராட்டங்கள் என்பன பற்றி எமக்கு எதுவும் தெரியாது. எமது கருத் திலும் சிந்தனையிலும் இவர்கள் துரத்து நிழல்உருவங்களாக மிகவும் கலங்கலாகத்தான் தோற்றமளிக்கிறார்கள்.
இப்படித்தான் பெண்கள் ஆண்டாண்டு காலமாய் சிருஷ் டித்தவை எல்லாம் ஆண்களின் கைவண்ணத்தினால் ஆனவை என்று நமக்குச் சொல்லித் தரப்பட்டிருக்கிறது. எவ்வாறு மன்னர்களின் வரலாறு மக்களின் வரலாறாகப் போதிக்கப் பட்டதோ அதேபோல் சரித்திரங்கள் ஆண்களினால் ஆண்களுக்காக ஆண்களைப் பற்றிக் கூறப்பட டவையாகத்தான் இருந்திருக்கின்றன. பெண்களின் சரித் திரம் முற்று முழுவதுமாக இருட்டடிப்புச் செய்யப்பட்டிருக் கிறது. மாறாக மனிதகுல வரலாற்றின் ஒவ்வொரு வளர்ச்சிக்

Page 6
Viii
கட்டத்திலும் பெண்களுடைய சாதனைகள் எவ்வளவு மகத்தான பங்கினை வகித்துள்ளன என்பதைப்பற்றி இந்த நூல் பேச விரும்புகிறது.
2
இது பெண்களின் வரலாற்று மூலங்களை நோக்கிய ஒரு தேடல் முயற்சி. பெண்களின் வரலாற்றுச் சுவடுகளை அடிதொடர்ந்து ஆராய்வது என்பது சாதாரண காரிய மாகத் தெரியவில்லை. மனித குலத்தின் குழந்தைப் பருவத் திலிருந்தே, அதாவது மனித வரலாற்றின் துவக்க கால கட்டத்திலிருந்தே நாம் எமது தேடலைத் தொடங்கியாக வேண்டியிருக்கிறது. இத்தகைய ஒரு தேடல் முயற்சியில் மானிடவியல் ஆராய்ச்சிகளும், ஆங்காங்கே கிடைத்துள்ள அகழ்வாராய்ச்சிச் சான்றுகளுமே நமக்கு உறுதுணையாக விளங்குகின்றன. இவை இரண்டிற்கும் உயிரியல் ரீதியாக விளக்கங்களைக் கொடுத்து- இவற்றுக்கிடையிலான தொடர்புகளையும் பரஸ்பர உறவுகளையும் ஸ்தாபிப்பதன் மூலம் பெண்களின் வரலாறு பற்றிய ஒரளவு முழுமையான சித்திரம் கிடைக்கிறது எனலாம். -
இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு அமெரிக்க, அவுஸ் திரேலியக் கண்டங்களில் வாழ்ந்த பழங்குடி மக்களது வாழ்க்கை முறைகளைப்பற்றிய குறிப்புக்கள் அளவிடற்கரிய தகவல் பொக்கிஷமாக நமக்கு வந்து கிடைத்துள்ளன. இத்தகைய ஆய்வுகளை ஒரு விஞ்ஞானமாக நெறிப்படுத்தித் தந்தவர்கள் மோர்கன், டைலர் போன்ற வழிகாட்டி களாவர். சமூகத்தின் தோற்றம் பற்றியும், சமூக வளர்ச் சிக்கு அடிகோலும் உலோகாயத சக்திகள் பற்றியுமான ஆராய்ச்சியே மானிடவியல் என இவர்கள் வரையறுத் தனர். இவர்களுடைய ஆய்வுச் சான்றுகளுடன் வேறுபல ஆராய்ச்சியாளர்களின் ஏராளமான ஆய்வுச்சான்றுகளும் இந்நூலில் எடுத்தாளப்பட்டுள்ளன. நூலில் விளக்கப்பட் டுள்ள கருத்துக்கள் எளிதில் புரிந்து கொள்ளப்பட்டு

ix
விவாதிக்கப்படவேண்டியதன் தேவையை முன்னிட்டே பிற ஆய்வாளர்களின் பெயர்கள், அவர்களது நூல்கள் பற்றிய விபரங்களை இங்கே விரிவாகத் தரவில்லை.
**விவாதிக்கப்படுவது” என்றுமேலே குறிப்பிடப்பட்டதன் காரணத்தை இங்கு விளக்க வேண்டும். மனித குலத்தின் ஆதிக்கால சமூக அமைப்பின் தன்மையை யாரும் அறுதி யிட்டுக் கூறிவிடமுடியாது; வெவ்வேறு விவாதங்கள் மூலம் ஒரு ஊகத்தை அல்லது அனுமானத்தை அடைவது மட்டுமே சாத்தியம்.
இதைப்போலவே, மனிதகுல வரலாற்றில் தொடர்பு அறுந்துபோய் காணப்படும் பல சரித்திர இடைவெளி களை கூர்மையான விவாதங்களின் முடிவுகளை வைத்துத் தான் நிரப்பியாக வேண்டியிருக்கிறது. பெளதிகவியலில் நிறுவ முடியாத ஒரு சூத்திரத்தைப் பல விஞ்ஞானிகள் கூடி விவாதித்து வரையறுப்பது போலவே இங்கும் நாம் சிலவற்றை செய்யவேண்டியிருக்கிறது. இதனால் இச்சூத்திரங்களையோ, வரலாற்று முடிவுகளையோ, தவறா னவை என்று தள்ளிவைத்துவிட முடியாது. உண்மையில் இந்த முடிவுகளைச் சார்ந்தே அந்தந்த விஞ்ஞானத் துறை கள் மேலும் வளர்ச்சிபெற்று முன்னேறுகின்றன.
3
நமது பிரபஞ்சம் முழுவதுமே கூர்ப்புத்தத்துவத்துக்கு உட்பட்டே இயங்குகின்றது என்றும் ஆதிமனிதர்களான ஹோமினிட்டுக்கள், குரங்குக் குடும்பத்தில் ஒன்றான மனிதக்குரங்கு இனத்தில் இருந்துதான் உதித்தனர் என்றும் 1817ம் ஆண்டில் சார்லஸ் டார்வின் நிறுவினார். இவரையே இந்த மாபெரும் விவாதத்தினைத் துவக்கி வைத்தவர் என்கிறோம்.

Page 7
X
மனிதக் குரங்குக்கு மிகவும் ஒத்த உருவத்தினராய் இருந்தும் மனிதர்கள் குரங்கிலிருந்து எவ்வாறு வேறுபட்டு வளர்ந்தனர் என்ற கேள்வி உடனே எழுந்தது. இந்தப் புதிரான கேள்விக்கு பிரடெரிக் எங்கெல்ஸ் தாம் 1876ம் ஆண்டு எழுதிய 'மனிதக் குரங்கிலிருந்து மனிதன் தோன்றிய இடைநிலைப்படியில் உழைப்பின் பாத்திரம்' என்ற கட்டுரையில் பதிலளித்துள்ளார்,
இதில் மனிதக் குலத்தின் தனித்துவமான இயல்புகளைத் தோற்றுவிப்பதற்குக் கூட்டுழைப்பின் செயல்பாடுகளும், அவற்றின் விளைவுகளுமே காரணம் என்ற கோட்பாட்டை எங்கெல்ஸ் முன்வைத்துள்ளார்.
ஆதிமனிதர்கள் கருவிகள், உபகரணங்கள் ஆகியவற் றைக் கண்டுபிடித்திருந்ததும் அவற்றின் பாவனையுமே அவர்களை மனிதக் குரங்குகளிடமிருந்து வேறுபடுத்தியது என்பதைப் பல அகழ்வாராய்ச்சிகள் நிரூபணம் செய்தன. இவை எங்கெல்ஸின் கோட்பாட்டிற்கு மேலும் வலுச்சேர்த் தது எனலாம்.
ஏறக்குறைய இதே காலகட்டத்தில்தான் மோர்கனும் தமது மானிடவியல் ஆய்வுகளை வெளியிட்டார். இவரது ஆய்வுகளின் முடிவுகள் எங்கெல்சின் கோட்பாட்டுக்கு ஆத ரவு அளித்தது மட்டுமல்லாமல் உற்பத்தியின் தன்மையும், உற்பத்தியில் ஈடுபடும் சக்திகள் ஒன்றுக்கொன்று கொண் டிருக்கும் பரஸ்பர உறவுமே குறிப்பிட்ட ஓர் இனத்தின் சமூக அமைப்பை உருவாக்குகின்றன என்னும் சமூகவியல் கோட்பாட்டையும் உறுதிசெய்தன.
மேலும் உற்பத்தியின் தன்மையானது தொழில்நுட்ப முன்னேற்றம் போன்ற காரணங்களால் மாற்றமடையும் போது குறிப்பிட்ட இனத்தவரின் சமூக அமைப்பும் பாரம் பரியமுமே மாறிவிடுகின்றன என்பதை எங்கெல்ஸ், மோர் கன் போன்ற அறிஞர்கள் அனைவரும் வலியுறுத்தினர்.

xi
4
மோர்கன் மனிதனின் சமூகப்பரிணாம வளர்ச்சியினை மூன்று சகாப்தங்களாகப் பிரித்தார். அவை:
1. காட்டுமிராண்டி நிலை 2. அநாகரிக நிலை 3. நாகரிக நிலை
ஒவ்வொரு கட்டமும் திட்டவட்டமாகப் பிரித்து இனம் காணக்கூடிய- தமக்கேயுரிய பொருளாதாரக் கூறுகளைத் தம்மகத்தே கொண்டிருந்தன.
ஆரம்ப கட்டமான காட்டுமிராண்டி நிலையில் மனிதர் கள் வேட்டையாடியும் காய், கணிகள், கிழங்குகள் முதலிய வற்றைச் சேகரித்து உண்டும் தமது உணவுத் தேவை களைக் பூர்த்தி செய்தனர்.
அநாகரிக நிலை பயிர்ச்செய்கைக் கூடாகவும் கால் நடை வளர்ப்பிற் கூடாகவும் உணவுற்பத்தி ஆரம்பமான கட்டத்திற்குப் பெயரானது. இதே உணவுற்பத்தி பண்ட மாற்றுக்காக வாணிப நோக்கில் மேற்கொள்ளப்படும் நிலையை அடைந்தபோது நாகரிக சகாப்தம் ஆரம்ப மானது.
இம் மூன்று காலகட்டங்களிலும் காட்டுமிராண்டி நிலையானது பத்து லட்சம் வருடங்கள் நீடித்தது. அதா வது மனித குலத்தினுடைய வயதின் 99 வீதத்தினை இக்காட்டுமிராண்டிக்காலம் தனதாக்கிக்கொண்டு விட்டது. அநாகரிக நிலையோ இன்றைக்கு 8000 வருடங்களுக்கு முன்பும் நாகரிக நிலையானது இன்றைக்கு 3000 வருடங் களுக்கு முன்பும்தான் ஆரம்பம் கொண்டது.
உலகின் சகல பாகங்களிலும் எல்லா இனமனிதர்களும் இந்தக்கால கட்டத்தில் தான் இம்மூன்று நிலைகளையும்

Page 8
xii
அடைந்தனர் என்று இறுக்கமான ஒரு முடிவுக்கு நாம் வந்து சேர வேண்டியதில்லை; மேலே குறிப்பிட்ட கால அளவுகள் ஒரு சராசரியாகவே கணிக்கப்பட்டன. ஒவ் வொரு இனமும் தான் அடைந்திருந்த தொழில் நுட்ப வளர்ச்சிக்கேற்ப அந்தந்தக்கால கட்டத்தினைச் சார்ந்து வளரக் காணப்பட்டது என்பதே உண்மை.
அவ்வாறுதான் 18ம் 19ம் நூற்றாண்டுகளில் dish. -- அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய கண்டங்களின் காட்டு மிராண்டி நிலையிலும் அநாகரிக நிலையிலும் வாழ்ந்து கொண்டிருந்த மனிதர் கூட்டங்களை கண்கூட்ாகவே காண முடிந்தது.
இங்கு பாவிக்கப்படும் காட்டுமிராண்டி, அநாகரிகம் என்னும் பதங்கள் சில காலகட்டங்ளை வேறுபடுத்திப் பார்ப் பதற்காகப் பெயர் இடுவதற்காக உபயோகிக்கப்பட்டிருக் கின்றனவேயன்றி அவை எந்த விதத்திலும் இழிவான அர்த்தத்தில் பிரயோகிக்கப்படவில்லை என்பதைச் சொல்லி யாக வேண்டும்.
காட்டுமிராண்டிகளினதும் அநாகரிக மனிதர்களினதும் அரிய சாதனைகளின்றி மனிதகுலம் நாகரிகத்தின் தலைவாச லில் கூட கால்பதித்திருக்க முடியாது.
5
மோர்கனின் ஆய்வுக்கு அடுத்தபடியாக உலகின் முதல் சமூக அமைப்பு பற்றிய சுவாரஸ்யமான விவாதங்கள் ஆய்வாளர்கள் மத்தியில் எழுந்தன.
உலகின் முதல் சமூக அமைப்பு தாய்வழிச் சமுதாயமா தந்தை வழிச் சமுதாயமா என்பதுவே இந்த விவாதத்தின் மையப் பொருளாகும்.

xiii
வெஸ்டர்மார்க் என்பவர் 1903ல் தான் எழுதிய *மானிடர் திருமணங்களின் வரலாறு” என்னும் நூலில் மனித இனத்தின் ஆரம்ப கட்டத்திலேயே தந்தை தலை வனாயிருக்கும் குடும்பங்கள் தோன்றி விட்டன எனக் கூறினார்.
இது பொருள் முதல்வாத ரீதியில் பரிணாம வளர்ச்சிக் கண்ணோட்டத்தைக் கையாண்ட மோர்கன், டைலர் போன் றோரின் கருத்துக்களுக்கு எதிரானதாக அமைந்திருந்தது. ஆனால் பெரும்பான்மையோரின் சித்தாந்தக்கொள்கைக்கு இது அனுசரணையாக ஒத்துப்போகும் தன்மையைக் கொண்டிருந்ததால் பெரும் ஆதரவைப்பெற்றது.
1927ல் றொபேட் பிறிவோல்ட் என்னும் மானிடவியலா ளர் 'அன்னையர்’ (The Mothers) என்னும் மிகப் பெரிய ஆய்வு நூலினை வெளியிட்டார்.
மனிதக்குரங்குகள் மத்தியில்தான் மற்ற எந்த விலங்கு இனங்களையும் விட நீடித்த தாய்மைப் பராமரிப்பு காணப் படுவதை அவதானித்த இவர் இத்ன் காரணமாகவே சமூக வாழ்வு பரிணமித்தது என்றார்.
குழந்தைகளைப் பெற்றுப் பராமரிப்பதனால் மட்டுமல் லாது வாழ்வின் இன்றியமையாத பல தேவைகளினைப் பூர்த்தி செய்யும் உற்பத்தியாளர்களாகவும் பெண்கள் திகழ்ந்ததனால் ஆதிமுதல் சமூக அமைப்பு தாய்வழிச் சமூகமே என்று நிறுவினார். இவர் எங்கெல்ஸ் முன்வைத்த உழைப்பு பற்றிய கோட்பாட்டினைத் தமது ஆராய்ச்சிக்கு ஆதாரமாகக் கொண்டிருந்தார்.
இந்த விவாதம் தொடர்பாக எவிலின் ரீட் என்னும் பெண் ஆய்வாளர் 1974ல் வெளியிட்ட “பெண்களின் பரிணாம வளர்ச்சி” (Women's Evolution from

Page 9
xiv
matriarchal clan to patriarchas fami/y by Evelyn Reed) என்னும் நூல் முக்கிய இடத்தை வகிக்கிறது. பிறிவோல்டின் கருத்துக்களை எல்லாம் தொகுத்து கூறும் இந்நூலில் ஆதி வாசிகள் மத்தியில் தகாப்புணர்ச்சிக்கு (incest) எதிரான தடையானது தன்னினம் உண்ணும், அதாவது நரமாமிசம் உண்ணும் வழக்கத்தின் அபாயங்களைத் தவிர்க்கவே ஏற்படுத்தப்பட்டது என்பதை எவிலின் ரீட் திட்டவட்டமாக நிறுவினார்.
குலக்குழுக்களின் (Tribe) உறவு முறைகள், திருமண வழக்கங்கள், "ஆண்பெண் விலக்குகள் போன்ற அம்சங்களை இவர் மிகவும் தெளிவாக ஆராய்ந்தார். இவருட்ைய கருத்துக்களை முற்று முழுதாகப் பின்பற்றியே இந்த நூல் எழுதப்பட்டிருக்கிறது. 徽
6
தாய்வழிச் சமூகங்கள் உலகளாவிய அமைப்பாக ஒரு காலகட்டத்தில் இருந்திருக்கின்றன என்பது மட்டுமின்றி அவைதான் மனிதர்களின் முதல் சமூக அமைப்பாகவும் உருக்கொண்டன என்பதுதான் இந்த நூல் மீண்டும் மீண்டும் வலியுறுத்த விரும்பும் உண்மையாகும்.
எமது கருத்தையும் கற்பனையையும் கவர்ந்திழுத்து தன்னிடத்திலேயே தக்கவைத்துக்கொள்ளும் சுவாரஸ்யமான பெண்களின் தொன்மையான வரலாற்றினை விரிவாகச் சொல்வதில் ஆர்வமுற்றதனால் அவர்களின் பின்னைய வரலாற்றினைச் சுருக்கமாக முடித்துக்கொண்டுவிட்டேன் என்றுதான் கூறவேண்டும்.
இதனைவிட தந்தைவழி சமுதாயத்தில் பெண்கள் ஒடுக்கப்படும் முறைகள் என்பன ஓரளவிற்கு வாசகர்களுக்கு பரிச்சயமானது என்பதும் ஒரு காரணமாகும்.

XV
இந்த வரலாற்றினை விவரிப்பதன் மூலம் அன்றைய தாய்வழிச் சமூகங்களின் ‘பொற்காலத்தினை’’ இப்புத்தகம் நாடுவதாக அவசர முடிவிற்கு யாரும் வந்துவிட வேண்டிய தில்லை. அந்த அமைப்பு அதன் சகல குறை, நிறை களோடும்- நுங்கும் நுரையும் வண்டலும் மண்ணும் சேர்ந்து அடித்துச் செல்லும் ஒரு புதிய வெள்ளமே போன்று -நம்மைக் கடந்து சென்றுவிட்ட சகாப்தமாகும். ஆனால், அந்த சகாப்தம் நினைவு கூரத்தக்க ஒரு சகாப்தமேயாகும்; அந்த யுகத்தில் வாழ்ந்த பெண்களின் மகத்தான சாதனைக ளும் அவர்கள் ஆண்களுடன் கொண்டிருந்த உறவுமுறைகளும் இன்றைய பெண்களுக்கு அளவிறந்த தன்னம்பிக்கையை அள்ளித் தருமென்றே நம்புகின்றேன்.
24, ஈச்சமோட்டை வீதி சாந்தி சச்சிதானந்தம்
சுண்டிக்குழி, யாழ்ப்பாணம்

Page 10

ஆதி மனிதனின் இரண்டு பசிகள்

Page 11

ஆதி மனிதனின் உணவு வழக்கங்கள்
இயற்கையின் கட்டுப்பாட்டிலிருந்து தம்மைப் படிப்படியாக விடுவித்துக் கொண்டமை தான் மனித குலத்தின் பரிணாம வளர்ச்சியின் மிகப்பெரிய உந்துதல் சக்தியாக அமைந்தது. தம் மூதாதையரான விலங்கினத்தைப் போலல்லாது மனிதன் தன் சூழலை உழைப்பினாலே தனக்கிசைவானதாக மாற்றினான். இந்த உழைப்பின் தன்மையும் அதனால் மாற்றம் பெற்ற சூழலின் தன்மையும் காலப்போக்கில் மனிதக் குரங்கினை விட தோற்றத்திலும் செயற்பாட்டிலும் வேறுபட்டிருக்கும் மனிதனைத் தோற்றுவித்தது.
இயற்கையினை வெல்லும் இத்தகைய சாதனைகள் தனியொருவரின் முயற்சியினாலன்றி கூட்டுழைப்பினால்தான் சாத்தியமானது. இது அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்தலும் கிடைத்தனவற்றை தம்முள் சமமாய் பங்கிட்டுக் கொள்ளுதலுமான சமூக அமைப்பின் உருவாக்கத்தின் வளர்ச்சியேயாகும். அன்றைய மனிதர் தன் குழுவினுள் ஒருவரையொருவர் வெட்டிச் சாய்த்துக் கொண்டோ அழித்துக் கொண்டோ இருந்திருப்பார்களாயின் கூட்டுழைப்போ அன்றி இயற்கைச் சக்திகளின் எண்ணற்ற அபாயங்களுக்கோ அவர்கள் ஈடு கொடுத்திருக்க முடியாது. மனித குலத்தின் உய்வே அவர்கள் சமுக கூட்டு வாழ்க்கையிலேயே தங்கி யிருந்தது. இயற்கையின் கட்டுப்பாட்டினை விடுவித்துக் கொண்டு ஒரு சமுகம் வரையறுத்த கட்டுப்பாடுகளுக்குள் தம் வாழ்முறையை வகுத்துக் கொண்ட விலங்கு தான் மனிதன்

Page 12
4 ) பெண்களின் சுவடுகளில்,
எனலாம். சமூகம் விதித்த கட்டுப்பாட்டினை உயிர் வாழ் வதற்கு அவசியமான விதிகள் எனவரையறுக்கலாம். இவ்விதி முறைகளே பண்பாடு எனப்படுவதாகும்.
மனிதனுக்குரிய குணாம்சங்கள் எவையெனக் கருதப்படு கின்றனவோ அவற்றையெல்லாம் பண்பாடு உருவாக்கிற்று; அவை ஒவ்வோர் சூழமைவுக்கேற்ப மாறவும் செய்தன. பண்பாடு ஆதிமனிதனுக்கு உடை கொடுத்தது; உண வளித்தது; அரவணைத்து ஆறுதல் தந்தது.
ஒரு பூனைக்குட்டி எங்கிருந்து வளர்ந்தாலும் அது பாலைக் குடிக்கின்ற-மீனைத் தின்கின்ற பூனையாய் தான் வளர்கின்றது. அலாஸ்காவில் பிறந்து விட்ட தென்பதால் அது சறுக்கு வண்டியோட்டப் போவதுமில்லை. சகராவில் பிறந்து விட்டதனால் கூடாரமமைத்து பேரீச்சம்பழம் தின்பதுமில்லை. ஆனால் ஒரு மனிதக் குழந்தை ஆதிவாசிகள் மத்தியில் வளர்க்கப்பட்டால் ஒரு தன்மையதாகவும் ஒரு நவீன நகரத்தில் வளர்க்கப்பட்டால் வேறு தன்மையதாகவும் வளர்கின்றது. அதன் உணவு வழக்கங்கள், உடைவகைகள், சடங்குகள் ஆகிய புறநிலை அம்சங்களில் வேறுபடுவது மட்டுமின்றி சரி எது? பிழை எது? ஒழுக்கம் எது? தர்மம் எது? போன்ற அக நிலை கோட்பாடுகளிலேயும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாட்டினைக் காணக் கூடியதாக உள்ளது. குறிக்கப்பட்ட ஒரு சூழ்நிலையில் பிறந்த ஒரு குழந்தையை நாம் வேறு சூழ்நிலைக்கேற்ப பழக்கியெடுத்து விடலாம். இது பண்பாட்டின் விளைவேயாகும்.
உயிரினங்கள் வாழ்வதற்குரிய இரு அத்தியாவசியமான செயற்பாடுகள் உண்பதும் இனம்பெருக்குவதுமாகும். இவற்றைச் சுற்றி இயற்கை செய்த விதிகளுக்கமையவே அவற்றின் வாழ்க்கை வட்டம் சுழலுகின்றது. மனித இனமோ இவ்விரு செயற்படுகளையும் சுற்றி தாம் ஏற்படுத்திக் கொண்ட விதிகளுக்கமையவே தம் வாழ்க்கை வட்டத்தினை வகுத்துக் கொள்கின்றன. ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர்

சாந்தி சச்சிதானந்தம் () 5
எவ்வாறு தாம் உண்பதற்குரிய உணவினைப் பெறுகின்றனர் என்பதனையும் எந்த முறைகளுக்கமையக் கூடிக் குழந்தை கள் பெற்றுக்கொள்கின்றனர் என்பதனையும் சார்ந்தே அச்சமூகத்திற்கேயுரித்தான வேறுபட்ட பண்பாடு தோன்று கின்றது. குறிப்பிட்ட ஒரு பண்பாடு வழங்கப் பெறும் சூழலில் வளரும் குழந்தையும் அவ்விதிமுறைகளை அனுசரிக்கத்தக்க குணாம்சங்களை உடையதாக உருவாகின்றது. ஆம், மனிதரால் சிருஷ்டிக்கப்பட்ட பண்பாடு, திரும்ப அதே மனப் பாங்குடைய மனிதரை சிருஷ்டிக்கின்றது. மனிதக் குரங்கி லிருந்து மனிதன் தோன்றிய வரலாற்றினை இவ்வாறு ரத்தினச் சுருக்கமாகக் கூறிவிடலாம்.
குரங்கிற்கும் மனிதனுக்குமுள்ள உயிரியல் ரீதியான முக்கிய வேறுபாடு மாமிசம் உண்ணும் வழக்கமாகும். மனிதக் குரங்குகளாக இருக்கும் போது தாவரவுண்ணிகளாகத் திரிந்த வர்கள் மனிதர்களாகமாறும் வளர்ச்சியின் ஏதோவொரு இடை நிலைப்படியில் மாமிச உண்ணிகளாக மாறினர். இந்த நிலையில் தன்னின உண்ணிகளாக (CANNIBAL) - நர மாமிசம் சாப்பிடுபவர்களாக இருந்திருக்கின்றனர் என்ப தற்கும் ஆதாரங்களும் உள்ளன.
தன்னின உண்ணி வழக்கம் மனித குலத்தின் காட்டு மிராண்டி நிலை முழுவதிலும் ஆக்கிரமிப்பு செலுத்திக் கொண்டிருந்தது. ஆரம்ப கற்காலம் என்று அழைக்கப்படும் இந்த யுகத்தின் ஆரம்பத்தில் மனிதனாக மாறும் மனிதக் குரங்கு வகையும் இதன் கூர்ப்பின் ஒரு படிமேலே ஜாவா, பீகிங்மனிதர்களும், இன்னும் உயர்ந்த படியில் சுமார்100,000 வருடங்களுக்கு முன் வாழ்ந்த நியான்டெர்தல் மனிதர்களும், அவர்கள் பின்னே ஹோமே ஸப்பியன்கள் எனவழைக்கப்படும் முழுமையான மனிதர்களும் தோன்றினர் என அகழ் வாராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. மேற்கூறிய ஒவ்வொரு படியிலும் தன்னின உண்ணிகளாக மனிதர்கள் இருந்திருக் கின்றனர் என்பதற்கு ஏராளமான அகழ்வாராய்ச்சியாளர் களின் குறிப்புகள் இருக்கின்றன.

Page 13
8 () பெண்களின் சுவடுகளில்.
'அவுஸ்திரெலோபிகள் எனப்படும் மனிதக் குரங்கு வகையினைச் சேர்ந்த மனிதர்கள் குரூரமாக வாழ்ந்தனர். இவர்கள் எந்தவொரு மிருகத்தையும் அறுத்து உண்பது போலவே வயதில் மூத்தோர் இளையோர் என்று பாரபட்சம் காட்டாது தயவு தாட்சண்யமின்றித் தம்மினத்தவரையே தமக்கிரையாக்கினர். எங்கெல்லாம் இவ்வித உணவு கிடைத்ததோ அங்கெல்லாம் அதனைப் பிடித்தது மட்டுமின்றி அதனை இரவு பகலாக ஏனைய மாமிச சூறையாடிகளிட மிருந்து காப்பாற்றவும் வேண்டியிருந்தது. இடைவிடாத எச்சரிக்கையே அன்று அவனது உயிரின் விலையாக
இருந்தது.”
இற்றைக்கு 500,000-350,000 வருடங்களுக்கு முன் வாழ்ந்த ஜாவா மற்றும் பீகிங் மனிதர்களுடைய குகைகளிலும் கடித்துக் குதறப்பட்ட மனித எலும்புகள் ஏராளமாகக் கண்டெடுக்கப்பட்டன. இவர்கள்காலத்திலேயே மணற்கற்கள் பளிங்குக்கற்கள், சக்கிமுக்கிக் கற்கள் போன்றவற்றால் செய்யப் பட்ட கருவிகளும் பரவலாக உபயோகத்திற்கு வந்து விட்டன. இதே மனிதரே நெருப்பையும் கண்டு பிடித்தனர்
நியான்டெர்தல் மனிதர்கள் காலத்தில் தன்னினம் உண்ணும் வழக்கம் அருகி வருவது காணப்பட்டது. இவர்கள் நரமாமிசம் உண்ணும் வேளைகளிலும் மனித மூளையே இவர்களால் விரும்பப்பட்டது என தெரிய வந்துள்ளது. இறந்தவர்களைப் புதைக்கும் வழக்கமும் இவர்களாலேயே ஆரம்பிக்கப்பட்டது.
காட்டுமிராண்டி நிலையின் தலைக்கட்டத்தில்குறிபார்த்து வேட்டையாடும் வழக்கம் பரவலானது. தன்னினம் உண்ணும் வழக்கங்களின் எச்ச சொச்சங்கள் ஆங்காங்கே காணப் பட்டாலும் பொதுவாக அது ஒரு சடங்காகவே மாறிவிட்டது. ஆபிரிக்காவின் சமவெளிகளில் இந்நிலையில் வாழ்ந்த பூர்வக்குடிக்ள் வானரங்களைக் கூட கொன்றுண்டார்கள்,

சாந்தி சச்சிதானந்தம் () 7
அவை தம்மினத்தவரை ஒத்தவையாகக் காணப்பட்டதினால், ஆங்காங்கே இவ்வகையான கருத்துக்களைக் கொண்ட ஆதிவாசிகளை நோக்கிய பின்பே, விலங்குகளுக்கும் மனிதர் களுக்கும் வேற்றுமை காணப்படாத ஒரு சகாப்தத்தில் தன்னினம் உண்ணும் வழக்கம் இருந்திருக்கக் கூடும் எனவும் மானிடவியல் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
மனிதர்களுக்குத் தங்கள் வரலாற்றின் எந்த நிலையிலே னும் தமக்கும் பிற விலங்குகளுக்குமிடையே வேறுபாடு புரியாமல் இருந்திருப்பரென்பது விந்தையான ஒன்றே. ஆயினும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, விலங்குகளுடன் அதே சூழலில், அவற்றுடன் மிக நெருங்கிய தொடர்பு கொண்டு வாழ்ந்தவர்கள் மனிதர் என்பதை நாம் நினைவுகூர வேண்டும். அம்மிருகங்களின் தேவைகளை யொத்தே இவர்களது தேவைகளும் ஏறக்குறைய ஒரேவித மாகவே அமைந்தன. காட்டுமிராண்டி நிலையின் தலைக் கட்டத்திலிருந்த மனிதர்க்ள் கூட மிருகங்களுக்கும் தம்மை யொத்த அறிவிருக்கின்றதென்றே நம்பினார்கள். $2O5 பாதிரியாருடன் உரையாடிய ஆப்பிரிக்க சமவெளிக் குடிகளைச் சேர்ந்த சிலர், அம்பும் வில்லும் மட்டும் எருமைகள் கையில் கிடைத்திருந்தால் இதுவரை எருமைகள் தம்மை வேட்டை யாடித் தீர்த்து விட்டிருக்குமெனக் கருத்துத் தெரிவித்தனர். ரஷ்யர்கள் அலஸ்காத் தீவொன்றில் போயிறங்கியபோது அவர்களது சட்டைப் பித்தான்களின் உருவ அமைப்பை நோக்கிவிட்டு அவர்களை ஏதோவொருவகைக் கணவாய்கள் என்று அங்குள்ள பூர்வக்குடிகள் நினைத்தனராம்.
இவ்வாறாக, இனவாரியாக வேற்றுமை காண முடியாத பட்சத்தில், நம் மூதாதையர் சமூக உறவுகளினால் பிணைக்கப் பட்ட குழுவொன்றினை ஸ்தாபித்தனர். ஒரு குறிப்பிட்ட கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஒரே இனத்தினர் அல்லது சுற்றத்தவர் எனக் கருதப்பட்டனர். இதற்கு வெளியே வாழ்ந்த உயிரினங்களனைத்தும், மனிதர் உட்பட வேற்று

Page 14
8 () பெண்களின் சுவடுகளில்.
இனத்தவர் எனக் கருதப்பட்டது. ஒரு குழுவின் அங்கத்தினர் களுக்கிடையே ஏற்பட்ட இச்சமூக உறவுகளே தன்னின உண்ணி வழக்கத்தின் வரம்புகளை ஸ்தாபிக்க ஆரம்பித்தன. உறவு கொண்டவர் ஒவ்வொருவருடைய உயிரும் புனிதமான தாகவும் ஊறு விளைவிக்க முடியாததாகவும் கருதப்பட்டது. இதேபோல், இக்குழுவிற்கு வெளியே இருக்கும் எந்த விலங் கும், அது "மனித விலங்கேயாயினும், 'மிருக விலங்கேயாயி னும் வேட்டையாடப் படலாம் என கோட்பாடு வகுத்தனர். ஆம், அவர்கள் வேற்று மனிதர்களையும் விலங்குகளெனவே நம்பினார்கள்.
இந்நம்பிக்கையின் அடிப்படையில்தான் உலகின் பல பாகங்களில் உள்ள மக்கள் மத்தியிலும் தம்மினத்தவரையே உலகின் முதல் மனிதர்கள் என எண்ணிக் கொள்ளும் வழக்கம் காணப்படுகின்றது. அவர்களுடைய மரபுக் கதைகளிலும் தம் இனத்தவரின் தோற்றத்தின் வரலாறே மனிதகுலத் தோற்றத்தின் வரலாறாகப் புனையப்பட்டது. கரிபியன் தீவு களிலும் அவுஸ்திரேலியாவிலும் ஆப்பிரிக்காவிலும் வாழ்ந்த ஏராளமான கோத்திரங்களின் எந்தப் பெயரை எடுத்துக் கொண்டாலும் அது ஒவ்வொன்றும் அவ்வப் பாஷையில் "மனிதர்கள்” என்பதையே குறித்தது. மத்திய கிழக்குப் பகுதிகளில் வாழ்ந்த செமிடிக் இன மக்களும் இதற்கு நல்ல உதாரணமாகும். இவ்வாறான சூழ்நிலையில் காட்டுமிராண்டி கள் ஒருபோதும் தம்மை மனிதர்களை உண்ணுபவர்களாகக் கருதவில்லை. இவர்கள் மத்தியில் விசாரிக்கையில் எப்பொழு தும் தம் அயல் கிராமத்தில் வசிக்கும் ‘விலங்குகள்தான் மனிதரை உண்ணுபவை என்று அடித்துக் கூறப்பட்டது. இது ஆரம்பகால ஆய்வாளர்களுக்குப் பெரும் புதிரைத் தோற்று வித்தது. ஒரு இடத்தில் மனிதர்களைக் கொன்று தின்ற ஆதாரங்கள் இருந்தாலும் அங்குள்ளவர்களோ தாம் தம் இனத்தை உண்ணுவது கிடையாதெனவும் அப்பால் வாழும் இன்னுமொரு கூட்டம்தான் அப்படிச் செய்கின்றதெனவும் சாதித்தனர்.

சாந்தி சச்சிதானந்தம் () 9
இப்படி ஆதிவாசிகள் தமக்குள் அமைத்துக் கொண்ட குழுக்களில் மனிதர்கள் மட்டும்தான் அங்கத்தினராகக் கருதப் பட்டார்கள் என்பதில்லை. அந்தச் சூழலில் காணப்பட்ட சில விலங்கினங்களும் தாவர வகைகளும் குழுவில் அங்கத்துவம் வகிப்பதாகக் கருதப்பட்டது. இந்த விலங்குகளுக்கும் தாவரங் களுக்கும் கூட அக்குழுவின் விதிமுறைகள் அனுஷ்டிக்கப் பட்டன. ஆதிவாசிகள் தமது உயிரே போனாலும் தமது குழுவைச் சேர்ந்த விலங்குகளையும் தாவரங்களையும் பிடித் துண்ண மாட்டார்கள். இவ்வழக்கத்தினை ஆய்வாளர்கள் கீழ்க்கண்டவாறு விவரிக்கின்றனர் :
'ஆதிமனிதனுக்கு விலங்குயிரின் புனிதத் தன்மை யைப் பற்றிய கருத்துப் படிவம் கிடையாது. ஏன், மனித உயிர்களைப் பற்றிக்கூட அப்படி ஒரு எண்ணம் எள்ளள வும் இல்லை. ஆயினும் தன் குழுவைச் சேர்ந்தவனின் உயிர் மிக்க புனிதமான ஒன்றாகக் கருதப்பட்டது; அது ஒரு மனித உயிர் என்பதனாலல்ல; தம்மைச் சார்ந்த சுற்றத்தவனொருவனின் உயிர் என்பதனாலேயே. இதே போலவே குறிப்பிட்ட விலங்குகளும் அவை தம்முடைய குலத்திலுதித்தவை என நம்பப்பட்டு அதனால் போற்றப்
பட்டன.”
மனிதர்களும் விலங்குகளும் தாவரங்களும் ஓரினமாகக் கொள்ளப்பட்ட இந்த முறைதான் குழு உக்குறி முறையாகப் பரிணமித்தது. தன்னினம் உண்ணும் வழக்கத்தினை மனித குலத்தின் வளர்ச்சியின் ஆரம்ப கட்டத்தில் சிறிது கற்பனை செய்து பார்ப்போம். வன விலங்குகளின் அபாயமும் இயற்கைச் சக்திகளின் திடீர் கொந்தளிப்புமாக வாழ்க்கை யென்பது தொடர்ந்த போராட்டமாகவிருந்த காலமது. மனிதன் தப்பும் தவறுமாகச் சிறுகச் சிறுக கருவியுபகரண்ங் களை உருவாக்குவதும் அவற்றினைக் கொண்டு தமது தேவைகளைப் பூர்த்தி செய்தலுமாகக் கழித்தனர். இந்நேரம்

Page 15
10 ( பெண்களின் சுவடுகளில்,
அத்தியாவசியமாயிருந்தவை மொத்த அங்கத்தினர்களின் அனுபவங்களும் அவர்கள் உழைப்புமேயாகும். இத்தகைய கூட்டுச் செயற்பாடு சிக்கலின்றிச் செயற்பட வேண்டுமாயின் பரஸ்பர நம்பிக்கை அவசியமான ஒன்றாகும். தன்னுடன் ஒன்றாக வாழ்பவன் எந்த கூடிணமும் தன்னைத் தாக்கி இரை யாக்கலாம் என்ற நினைவு ஒரு கடுகளவாவது தோன்றியிருந் தாலும் கூட கூட்டுழைப்பு என்பது சாத்தியப்பட்டிருக்காது. எந்த நிலைமையிலும் மீற முடியாத - ஒரு சிறிதும் வளைந்து கொடுக்காத விதியினாலன்றி இதனை சாதித்திருக்க முடியாது. புராதன மனிதரின் குழுஉக்குறி அமைப்பின் (TOTEMISM) நோக்கமும் இதுவாகவேயிருந்தது.
அதுமட்டுமின்றி சுற்றுச் சூழலில் காணப்பட்ட விலங் கினங்களையும் தாவரங்களையும் கட்டுப்பாடற்ற முறையில் உணவாகப் பயன்படுத்தும் வழக்கத்தினையும் குழுஉக்குறி முறை ஒழித்தது. விலங்குகள் பொதுவாகவே உணவு வள மூலங்களை விரயமாக்கும் தன்மை உடையன. அவை இளம் தாவரங்களையும் பெண் விலங்குகளையும் ஒருவித கட்டுப் பாடுமின்றி உண்டு வந்ததனால் நாடுகளின் தாவர விலங்குச் சமநிலை சீர்குலைந்து சுவாத்தியமே மாறுபட்ட உதாரணங் கள் ஏராளம் உள்ளன. எத்தனையோவிடங்களில் ஆட்டு மந்தைகள் மாத்திரமே ஏற்படுத்திய அழிவு அளப்பரியது. குழுஉக்குறி முறையின் கீழோ தாவர வகைகளும் விலங்கினங் களும் முற்று முழுதான அழிவிலிருந்து பாதுகாக்கப்படுவது மட்டுமின்றி அவை முறைப்படி வளர்ந்து பல்கிப் பெருகவும் அவகாசம் அளிக்கப்பட்டது. இதற்கெனவே இவற்றைப் பயன்படுத்துவதில் தற்காலிகத் தடை விதிக்கும் முறையினை யும் கொண்டிருந்தது. தற்காலிகத் தடை விதிமுறையின் கீழ் வேறு சில விலங்குகளையும் தாவரங்களையும் குறிப்பிட்ட காலவரையறைக்குப் பின்பு, அவை வளர்ந்த ஒரு பருவத்தில் தான் உணவாகக் கொள்ள முடிந்தது. இவ்வகையான தற் காலிகத் தடைகள் முன்கூறிய நிரந்தரத் தடைகளுடன் காலப்

சாந்தி சச்சிதானந்தம் () 11
போக்கிற் சேர்க்கப்பட்டு அவையும்கூட வழக்கிலிருந்து வந்திருக்கின்றன. ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பாகாண்டா, கேயு ஆதிவாசிகள் குழுஉக்குறி முறையின் தடைகள் வேட்டை யாடுபவர்களினால் விலங்குகள் முற்றாக அழித்தொழிக்கப் படாதிருக்கவே ஏற்படுத்தப்பட்டன எனத் தெளிவாக எடுத்துச் சொல்கின்றனர். விஞ்ஞான அறிவில் ஏவுகணை வேக முன் னேற்றம் அடைந்த பின்பும் வனங்களும் விலங்குகளும் சூறை யாடப்படுவதைத் தடுக்க முடியாது திண்டாடும் நாம் எங்கே, அறிவில் தாழ்ந்தவர்களாகத் தென்பட்டாலும் இயற்கையின் சமநிலையைப் பேணும் அவசியத்தினை உணர்ந்து செயல் பட்ட அவர்கள் எங்கே? நவீன உலகிற்றான் மனிதன் உண்மையான சமூக விரோதியாக உருவெடுத்திருக்கின்றான் போலும்.
குழுஉக்குறி முறை பரவலாக்கப்பட்டதன் பயனாகவே தன்னினம் உண்ணும் வழக்கம் முற்றுப் பெற்றிருக்க வேண்டும். இம்முறை வழக்கத்தை விட்டொழித்தும் கூட இதனுடன் தொடர்பு கொண்ட பாரம்பரியங்கள் மக்கள் மத்தியில் நீண்ட காலத்திற்கு தொடர்ந்தன. குறிப்பாக, இறைச்சி வகைகள் சிலவற்றை இவர்கள் தவிர்க்கும் குணாம்சத்தில் இதனைக் காணலாம். எகிப்தியர் மற்றும் பீனிவழியர் மனித இறைச்சி உண்டாலும் உண்பார்களே தவிர பசுமாட்டின் இறைச்சியினைத் தீண்டமாட்டார்கள். இதே போன்று யூதர்கள் பன்றியிறைச்சியை உண்ண மாட்டார்கள். பாரசீகர் நாயிறைச்சியைத் தொடமாட்டார்கள். தென்னாபிரிக்காவின் பன்டு குடியினர் மீனை வெறுக்கின் றனர். இவர்களைப்போன்றே கனரித்தீவினர், தஸ்மானியர், சோமாலிக்குடியினர் ஆகியோர் மீன் உண்ண மாட்டார்கள். பசுபிக் தீவுகளைச் சேர்ந்த சில குடியினர் கோழியிறைச்சி யினை ஏற்பதில்லை. சிலர் பாம்பு உண்ணும் வழக்கத்தைக் கொண்டவராயினும் விலாங்கு மீனினை உண்ண அஞ்சுவர்.

Page 16
12 0 பெண்களின் சுவடுகளில்.
உணவு வழக்கங்களை இவ்வாறு நிர்ணயம் செய்த குழுஉக்குறி அமைப்பு (INCEST) தகாப்புணர்ச்சிக்கு எதி ரான பெருந்தடைகளை ஏற்படுத்தியது.
தகாப்புணர்ச்சிக்கு எதிரான தடைகள்
விலங்குகள் யாவும் தமக்குள் எழுகின்ற பால் இச்சை களை தமது இஷ்டம் போல வரையறை எதுவும் இல்லாமல் திருப்தி செய்து கொள்கின்றன. பருவமடைந்த ஆண் விலங்கொன்று தனது இனத்தைச் சேர்ந்த புணர்ச்சிக்குத் தயாராக இருக்கிற எந்தப் பெண் விலங்கினையும் நாடலாம். அது பெற்ற தாயாகவும் இருக்கலாம்; அல்லது அதே தாய்க்குப் பிறந்த பெண்ணாகவும் இருக்கலாம். மனிதக் குரங்குகளும் இப்படித்தான். ஆனால் இதுபோல வரை முறை எதுவுமில்லாமல் யாருடனும் பால் உறவு வைத்துக் கொள்ளும் முறை எந்த நிலைத்த மனிதர் கூட்டத்திலும் காணப்பட்டது கிடையாது. ஆகையினால் இந்தக்கட்டுப் பாடுகள் உயிரியல் ரீதியான அடிப்படையில் அல்லாது பண்பாடு தந்த மனப்பாங்கிலேயே அமைந்திருந்தது என்பது தெளிவாகின்றது
நவீன உலகில், எந்த வித சமூகக்கட்டுப்பாடுகளிலும் விட தகாப்புணர்ச்சிக்கெதிரான கட்டுப்பாடுகள்தான் அதி தீவிர மானவை எனலாம். இவை எந்தக் குறிப்பிட்ட சித்தாந்தத் தினையும் சார்ந்துநிற்காது உலகளாவிய முறையில் தனித் துவமாக நிற்பவை. இரத்த உறவினர்களோடு கொள்ளும் உடலுறவு ஒழுக்கக் கேடானது என்பது மட்டுமல்ல, இக் கூட்டு மூலம் உதிக்கின்ற எதிர்கால சந்ததியினருக்கு உடல் உளக் குறைபாடுகள் தோன்ற இடமுண்டு எனவும் நம்பப்படுகின்றது. தகாப்புணர்ச்சிக்கெதிரான தடைகள் இயற்கை விதித்தவை என்பதும் இவை மனிதருடனேயே

சாந்தி சச்சிதானந்தம் () 13
தோன்றியவை என்பதே பரவலான மக்களின் கருத்து. ஆயினும் ஆதிவாசிகளின் காதல் வாழ்க்கையினை ஆராய்ந்து போனால் அவர்களின் தகாப்புணர்ச்சித்தடைகள் நாம் விளங்கிக் கொள்வது போலல்லாது முற்றிலும் வேறுகாரணி களின் அடிப்படையிலேயே நடைமுறைப்படுத்தப்பட்டதைக் காணலாம். அங்கு ஒருவனுடைய சொந்தத் தாயும் சகோதரிகளும் மட்டுமல்ல வேறு ஏராளமான பெண்களும் அவனுடன் உடலுறவுக்கு தகாதவர்களாகக் கருதப்பட்டனர். இவ்விடயம் சமூகவியலாளரை மிகுந்த குழப்பத்திலாழ்த் தியது. முதலாவதாக, மூலக்கருவினைப் பற்றிய விஞ்ஞான அறிவு சிறிதும் இல்லாத அந்த யுகத்தில் இரத்த உற வினர்கள் புணர்தலின் தீமை எவ்வாறு மனிதனுக்குப் புலப் பட்டது? இது இயற்கை தந்த உள்ளுணர்வு என எடுத்துக் கொண்டால் இரத்த உறவினரல்லாத வேறு பெண்களுடனும் கலவி கொள்ளத் தடை விதித்ததேன்?
தடையொன்று விதிக்கப்படுகின்றதெனில் அதற்குப் புறம்பான வழக்கம் இருந்து வந்திருக்கின்றது என்பதே அர்த்தம். எந்த மனிதருக்கும் மலம் உண்ணக்கூடாது எனத் தடை விதிக்கத் தேவையில்லை. எம்முடைய இயல் பான சுபாவம் மலத்தினை வெறுத்தொதுக்குவதுதான்.
தவிரவும், தகாப்புணர்ச்சி வருங்கால சந்ததியினருக்குத் தீங்கு விளைவிக்குமெனும் கோட்பாடு ஆய்வுகூடத்தில் தகர்க்கப்பட்டுவிட்டது. மேற்குநாடுகளின் அதிகளவு பயன் தரும் கால்நடைகளும் அதிகவிலையுயர்ந்த குதிரைகளும் சண்டைக்காளைகளும் உயர்ந்த ஜாதி நாய்களும் அவைதம் இரத்த உறவினருடன் புணரவிடப்பட்டதனால் தோன்றிய சந்ததிகளேயாகும். சர்வதேச அரங்கில் பெயர் பெற்ற காளை வளர்க்கும் விற்பன்னரொருவர் இதுகாலவரையிலும் கண்டிராத பூரணமான இயல்புகளுள்ள சண்டைக் காளை யினைக் கொண்டிருந்தார். அது, ஒரு நல்ல சண்டைக் காளையினை அதன் மகளுடன் புணர்ந்து, பின்பு அதன் பயனாக உதித்த பேத்தியுடன் புணர்ந்து, பின்பு பேத்தியின்

Page 17
14 () பெண்களின் சுவடுகளில்.
மகளுடனும் புணர்ந்து பெற்றத்ே. இங்கிலாந்தின் அதி சிறந்த பந்தயக்குதிரைகள் உலகிலேயே ஆகக்கூடியளவு உட்புணர்ச்சியினால் பெறப்பட்ட மிருகங்களாகும். இவ் வகைப்புணர்ச்சியில் ஒரு விலங்கிலுள்ள நல்ல குணாம்சங்கள் பன்மடங்காக வாய்ப்புகள் அதிகரிக்கின்றன என டார்வின் கூறுகின்றார். இதனை மேலும் நிரூபிக்க ஆய்வுகூடத்திலும் எலிகளைக் கொண்டு பரிசோதனைகள் நடாத்தப்பட்டன. இங்கும் உட்புணர்ச்சியினூடே இனம் பெருக்கிய எலிகள் கூட்டம் நிறையினாலும் கருவளத்தன்மையினாலும் மற்ற எலிகளைவிட ஒரு படி மேலேயிருப்பது அவதானிக்கப் பட்டது
ஆகவே ஆரம்பகட்ட்த்தில் மனிதக்குரங்குகள் இயங்கும் வகையில்தான் மனிதர்களும் தமது கலவி நடத்தைகளையும் கொண்டிருந்திருக்க வேண்டும் எனலாம். மனிதக்குரங்குகள் மத்தியில் ஆண்குரங்குகள் வருடம் முழுவதும் புணர்ச்சிக்குத் தயாராகவிருக்கும் அதே வேளை பெண்குரங்குகள் ஒரு சொற்ப காலமே வேட்கையுடையனவாக இருந்தன. இச்சையற்ற ஒரு பெண்குரங்கினை ஒரு ஆண் குரங்கு ஒரு போதும் பலாத்காரம் செய்யமாட்டாது என்பதைத் தவிர இவற்றின் நடத்தைகளில் வேறெந்தக் கட்டுப்பாடும் கிடை யாது. பெண்குரங்குகள் வேட்கை கொண்ட மாத்திரத்தே ஆண்குரங்குகள் தம்முள் சண்டையிட்டுக் கொண்டன. ஒரே சமயத்தில் அதிகஅளவு பெண்களையடைவதே ஒவ் வொரு ஆணினதும் குறிக்கோள். இந்தச் சண்டைகளில் பெருத்த உயிர்ச்சேதங்கள் . ஏற்பட்டன. குழு உக்குறி அமைப்பின் நலன்களுக்குப் புறம்பாக இந்நடத்தை இருந் ததை நாம் காணலாம்.
இதன் விளைவாகவே குழுஉக்குறி அமைப்பின்கீழ் ஒரு குழுவைச் சார்ந்தவர்களுக்கு உட்புணர்ச்சி தடை செய்யப் பட்டதென நாம் அனுமானிக்கலாம். ஒரு குழுவில் அங்கத் துவம் வகிக்கும் சகல ஆண்களும் பெண்களும் தமக்குள்

சாந்தி சச்சிதானந்தம் () 15
புணரத் தடை விதிக்கப்பட்டனர். இவர்களெல்லோருமே இரத்த உறவினர்களாக இருக்கவில்லை. குலக்குழுக்கள் மத்தியில் பல்வேறு வகுக்கப்பட்ட உறவுமுறைகளடங்கிய குழுக்களெல்லாவற்றினையும் தாண்டி வெளியிடத்திருந்தே கலவிக்குரிய துணை எடுக்கலாம் என்னும் கடினமான விதி முறைகள் இருந்தன. ஆகவே குழுஉக்குறி அமைப்பின் கீழ் தகாப்புணர்ச்சித்தடை இரத்த உறவினரல்லாத எத்தனை பேரைக் கட்டி வைத்தது என நாம் கற்பனை செய்து பார்க்க லாம். இத்தடைகளை மீறினால் மரணதண்டனையே விதிக்கப்பட்டது. ஆய்வாளர்கள் அவதானித்தபடி எவ்வளவுக் கெவ்வளவு எளிமையான பொருளாதார நிலைமைகள் இருந்தனவோ அதாவது எவ்வளவுக்கெவ்வளவு வளர்ச்சியின் கீழ்ப்படியில் ஒரு இனம் இருந்ததுவோ அவ்வளவுக்கு அவை மத்தியில் தகாப்புணர்ச்சித் தடைகள் வெகு கடுமை யாக அனுசரிக்கப்பட்டனவாம். தன்னினமுண்ணும் வழக்கம் இருந்த காலத்தே தகாப்புணர்ச்சிக்கு மனிதர்கள் எவ்வளவு அஞ்சினாரென்பது தெரிகின்றது. காட்டுமிராண்டி வேட்டைக் காரர்களும் மற்றவர் தொடை நடுங்கப் பண்ணும் போர் வீரரும் அறியாமையால் கூட இத் தடைகளை மீறிய சந்தர்ப்பங்களில் பயத்தினாலேயே இறந்ததாக ஆதாரபூர்வ மான தகவல்கள் கூறுகின்றன. இதிலிருந்து, பாலுணர் வினை வெறுமனே கட்டுப்படுத்தும் விதி என்பதை விட மாபெரும் சக்தி வாய்ந்த சமூகத்திட்டமிது என்பது நமக்குப் புலனாகின்றது.
குழுஉக்குறி அமைப்பின் பிந்திய காலகட்டங்களிலும் கூட அதன் விதிமுறைகளுக்கிணங்க நடக்காவிடில், அதாவது, ஒரே குழுவினை சேர்ந்தவரை கொன்றாலோ அல்லது ஒரே குழுவிலுள்ளவர்கள் தம்முள் புணர்ந்து கொண்டாலோ குற்றமிழைத்தவர் மறுபேச்சிற்கிடமின்றிக் குழுவை விட்டே வெளியேற்றப்பட்டார். இப்படி வெளி யேற்றப்பட்டவர்கள் வேற்று மனிதரென்ற காரணத்தினால் வேறு குழுக்களிலும் அங்கத்துவம் பெறவும் முடியாது.

Page 18
16 () பெண்களின் சுவடுகளில்,
தன்னந்தனியாய் அலைந்து மனக்கிலேசம் அடைந்து இறந்து போகுமாறு சபிக்கப்பட்டனர். இதுவே ஆதிவாசி யொருவனுக்கு அளிக்கக்கூடிய மிகக்கொடிய தண்டனையாக
இருந்தது.
மனிதனை உருவாக்கிய அன்னையர்
உயிர்வாழ இயற்கை வகுத்த நியதி விந்தையானது. விலங்கினங்கள் தாம் உயிர்வாழ வேண்டுமெனில் போட்டி போடும் மனப்பான்மை மிகுந்தவையாயும் தனித்து நிற்கும் தன்மை வாய்ந்ததாயும் திகழ வேண்டி இருந்தது. மந்தை களாகத் திரியும் நரிகளும் காட்டுநாய்களும்கூட இதற்கு விதிவிலக்கல்ல. ஓர் இரையை வேட்டையாடுவதற்கு எல்லாம் ஒற்றுமையாக நடவடிக்கையில் இறங்கியிருந்தாலும் கூட அதை உண்ண முயலும்போது அவை தமக்குள் பலத்த சண்டை போட்டுக் கொள்கின்றன.
இந்தச் சண்டையில் பலம் பொருந்தியவை பலவீனமான வற்றைக் கொன்று உண்டும் விடுகின்றன. அத்துடன் உணவு முடிந்தவுடன் அவை தத்தம் போக்கில் பிரிந்தும் விடுகின் றன. தாவரவுண்ணிகளான ultré060T, to Tsir போன்றவை மட்டும் ஓரளவுக்குத் தம்முள் பூசல்களைத் தவிர்த்து வாழ் கின்றன. இதற்கு முக்கிய காரணம் அவற்றின் உணவாகிய இலை, தழை குழைகளை துரத்திப் பிடிக்க வேண்டிய அவசிய மின்றி ஏராளமாகக் காணப்படுவதும் வேட்டையாடுதலின் ஒரம்சமாகிய தாக்குதல் நடவடிக்கையில் அவை பழக்கப்படா ததுமாகும். பாலூட்டிகளில் உயர்ந்த நிலையிலுள்ள குரங்கு கள்கூட பகிர்ந்துண்பதில்லை. ஆளுமை வகிக்கும் குரங்குகள் தம் குழுவில் பலவீனமானவற்றைப் பயமுறுத்தி வேண்டிய உணவைப் பெற்றுக் கொள்கின்றன. இவ்வாறாக விலங்கினங் களில் எவையும் தம்முடைய எந்தத் தேவைக்கும் பிறிதொரு

சாந்தி சச்சிதானந்தம் () 17
விலங்கினை உணர்வுபூர்வமாகச் சார்ந்து நிற்பதாக நாம் அறியக் கூடியதாக இல்லை. இவ்விதிக்கு ஒரேயொரு விலக்கு பெண்விலங்குகளும் அவற்றின் கருவிலுகித்த இளம் வாரிசு களுமாகும்.
இப் பிரபஞ்சத்தின் பரிணாம வளர்ச்சியில், முதன்முதலாக நீரில் தோன்றிய பிராணிகள் முதல் பாலூட்டிகள் வரை தாய் விலங்கின் பராமரிப்பு கால அளவிலும் தன்மையிலும் படிப் படியாக அதிகரித்து வருவதை நாம் அவதானிக்கலாம். ஒரு விலங்கினம் ஒரே சமயத்தில் எத்தனை குட்டிகளினை ஈனு கின்றனதெனவும் அவற்றின் பராமரிப்பு எவ்வளவு விஸ்தார மாக இருக்கின்றது என்பதனையும் வைத்தே கூர்ப்பின் நிரையில் எவ்வளவு உயரே அது இருக்கின்றது என துல்லிய மாகக் கணக்கிட்டுக் கொள்ளலாம். மீன்கள் ஒவ்வொன்றும் கோடானுகோடி முட்டைகளை ஈனுகின்றன. இவற்றைச் சிறிதும் பராமரிக்காததனால் இரண்டோ மூன்றோ முட்டை கள்தான் இறுதியில் முதிர்ச்சியடைந்த மீன்களாக வளரப் பெறுகின்றன. கூர்ப்பின் நிரையில் மீன்களைவிட உயர்ந்த ஸ்தானத்திலிருக்கும் தம் குஞ்சுகளை அவற்றிற்கு இறகுகள் முளைக்கும் வரை ஊர்வனவற்றில் சில முதலை வகை களும் குறிப்பிட்ட பாம்பு வகைகளும் தங்கள் குட்டிகளைச் சிறிது அதிகமாகவே பேணுகின்றன. இவற்றினும் உயர்ந்த ஸ்தானத்திலிருக்கும் பறவைகள் தமது குஞ்சுகளை சிறகுகள் முளைக்கும் வரை பராமரித்து விட்டு பின் எதிரிகளோவென நினைக்கும் வண்ணம் அவற்றைக் கொத்தித் துரத்தி விடு கின்றன.
தாயின் பராமரிப்பென்பது பாலூட்டிகளுடனேயே உண்மையில் ஆரம்பமாகின்றது. இதன் கால அளவு தாவர வுண்ணிகள் மத்தியில் குறைவாகவும் மாமிசவுண்ணிகள் மத்தி யில் நீடித்தும் காணப்படுகின்றது. தாவரவுண்ணிகளின் குட்டிகள் வெகு விரைவில் முதிர்ச்சியடைகின்றன; ஆதலால் அவற்றிற்குத் தாயின் பராமரிப்பு குறைந்த கால அளவே தேவைப்படுகின்றது. தாய்மையின் உச்சக்கட்ட நிலையை
ஆ-2

Page 19
18 () பெண்களின் சுவடுகளில்.
வாலில்லாக் குரங்குகளிடம் அவதானிக்கலாம். தாயின் பராமரிப்பின் அடிப்படை அம்சங்கள் யாதெனில், ஒரே நேரத் தில் பிறக்கக்கூடிய குட்டிகளின் எண்ணிக்கை குறைதலும் பிறந்த குட்டிகள் தாயிற் தங்கியிருக்கும் இயலாப் பருவம் நீடித்தலுமாகும். குழந்தைப் பருவம் நீடித்தலினால் இயற்கை சுபாவங்களிலும் உள்ளுணர்விலும் சார்தலை விடுத்து அனுப வத்தினால் கற்றுக் கொள்ளும் தன்மை அதிகரிக்கின்றது.
'ஓரினம் எவ்வளவுக்கெவ்வளவு உள்ளுணர்ச்சியின் தூண்டல்கள் குறைவாகப் பெற்றிருக்கின்றதோ அவ்வள வுக்கவ்வளவு அது சூழ்நிலையின் பரவலான நடத்தை களைக் கற்றுக் கொள்ளக் கூடியதாயிருக்கின்றது. இத் தன்மையும், எதனையும் விரைவில் கிரகிக்கும் ஆற்றலும் கூடியே மற்றெவ்வினத்துடனும் ஒப்புமை இல்லாத வகை யில் மனித இனத்தை உருவாக்கியிருக்கின்றது” என்கிறார் ரால்ஃப் லிண்டன்.
கண் சிமிட்டுதல், சமிபாட்டு இயக்கங்கள் போன்ற சில குறிப்பிட்ட நடத்தைகளிலேயே ஒரு குழந்தை இயல்புணர்ச்சி யின் உந்துதலைக் காட்டுகின்றது. ஏனைய நடத்தைகள் முழுவதையும் தாயிடமிருந்து கற்றுக் கொள்ளுகின்றது. (உ-ம்) நெருப்பைக் கண்டு சகல விலங்குகளும் இயல்பாகவே ஒதுங்கியோடும் வேளையில் ஒரு குழந்தைக்கு நெருப்பின் அபாயங்களை கற்றுத்தர வேண்டியதாயுள்ளது.
குரங்குகளிடையேயே தாய்மையுணர்வு மிகத் தீவிரமாக நிலைபெற்றிருப்பதைக் காணலாம். அவை தம் குட்டிகளை மணிக்கணக்கில் உட்கார்ந்து இரசிப்பதையும், பூச்சிகள் மற்றும் நுளம்புகள் தீண்டாமல் பாதுகாப்பதையும் ஆய்வாளர் கள் குறிப்பெடுத்திருக்கின்றனர். பபூன்கள் தம் குட்டிகளை ஆற்றுக்குக் கொண்டு சென்று குளிப்பாட்டிச் சீராக்குவது முண்டு. குட்டிகள் இறந்து விட்டால் தாய் குரங்குகள் புத்திர சோகத்தில் உயிரை விடும் சில குரங்கினங்களும் உண்டு. தாய்க்கும் பிள்ளைக்குமிடையே இவ்வித நீடித்த உறவு ஒரே

சாந்தி சச்சிதானந்தம் 0 19
தாயின் பிள்ளைகளுக்கிடையேயும் இப்பிள்ளைக்கும் மற்றைய அங்கத்தினர்களுக்கிடையேயும் ஒத்துணர்வினை ஏற்படுத்த ஏதுவாகின்றது.
விலங்கினங்களிடையே ஆணின் நடத்தைகள் இதற்கு நேரெதிரானது. இயற்கை நியதிப்படி இனப்பெருக்கத்திற் கான ஒரு கருவியாக மாத்திரமே ஆண் விலங்குகளின் செயற் பாடுகள் வரையறுக்கப்பட்டிருக்கின்றன. இவற்றிற்கும் பெண் விலங்குகளுக்கும் எல்லா உறுப்புகளும் அவயவங்களும் ஒன்றாக இருக்கும் அதேவேளை, தாய்மையடைதற்குரிய அங்கத்தினையும் அதற்குரிய கடமைகளைச் செய்யும் இயற் மனப்பாங்கினையும் பெண் விலங்குகள் கொண்டிருத்தலால் இவற்றினும் ஆண் விலங்குகள் வேறுபடுகின்றன. ஆகவே ஆகக்கூடிய பெண் விலங்குகளுடன் புணர எத்தனிப்பதே ஆண் விலங்குகளின் பிரதான நடவடிக்கையாகும். உணவு உட் கொள்வது தவிர, இவ்வாறு ஒரே நோக்கங்கொண்டு பல ஆண்கள் செயலிலிறங்குவதால் அவற்றுக்கிடையே பெருத்த போட்டியும் பூசல்களும் மலிகின்றன. பறவையினங்களில் ஆண்பறவைகளே பெரிதாகவும் அழகு மிகுந்த இறகுகளையும் உடல் அமைப்பினையும் கொண்டதாகக் காணப்படுகின்றன. வேட்கைக் காலங்களில் கவர்ச்சி நடனமாடிப் பெண் பறவை களைத் தம்பால் ஈர்க்கப் பிரயத்தனப்படுகின்றன. இவ்வேளை களில் எதிரிகளாக உருவெடுக்கும் மற்றைய ஆண் பறவை களை ஒழித்துக் கட்டும் நோக்கத்துடன் சமருக்கும் அழைக் கின்றன. நம்மூரில் சேவல் சண்டைகள் மக்கள் மத்தியில் மிகப் பிரசித்தம்; இதற்கு அவர்கள் கோழிகளை உபயோகிப்ப தில்லை. இதுபோல தன்னினத்தில் இன்னோர் ஆணின்மீது ஆதிக்கம் செலுத்தவே ஒரு ஆண்விலங்கு எத்தனிக்கின்றது. இவ்வாதிக்கத்தின் கீழ் பெண்கள் வருவது கிடையாது. அவை தம் திட்டத்துக்கு வேட்கைக் காலத்தின்போது ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களுடன் புணர்ந்து பின் பேறு காலத்தின் போது ஒதுங்கியிருந்தும் பின்பு தம் குட்டிகளைப் பராமரிப்பதுமாக நாட்களைக் கழிக்கின்றன. குட்டிகளுடன்

Page 20
20 () பெண்களின் சுவடுகளில்.
ஒதுங்கியிருக்கும் அவ்வேளைகளில் அதன் தனிமையில் எந்த ஆணும் குறுக்கிட முடியாது. ஒரு சில பறவையினங்களில் மட்டுமே ஆண் பறவைகள் குஞ்சுகள் வளர்ப்பதில் பங்கெடுக் கின்றன.
இக்கட்டத்தில் இலண்டன் மிருகக்காட்சி சாலையில் நடத்தப்பட்ட ஒரு பரிசோதனையைப் பற்றிக் குறிப்பிட வேண்டும். சுற்றிலும் அடைக்கப்பட்டு பாறைகளினால் சூழப் பட்ட பரந்த இயற்:ைச் சூழலில் ஏறத்தாழ 100 ஆண் பபூன் கள் வளர்க்கப்பட்டு வந்தன. இவற்றுடன் 30 பெண்குரங்கு களை உள்ளே விட்டதுடன் அவற்றின் வாழ்முறையை அவ தானிக்கும் பரிசோதனை 1925இல் ஆரம்பிக்கப்பட்டது. ஐந்து வருடங்களாக அவதானித்து விளைவுகள் குறிக்கப் பட்டன.
பெண் குரங்குகள் உள்ளே விடப்பட்ட நாள் தொட்டு ஆண் குரங்குகள் மத்தியில் தொடர்ந்த சண்டை சச்சரவுகள் உருவாகின. முதலிரண்டு வருடங்களிலேயே இச்சச்சரவு களினாலேற்பட்ட அதிகளவு இறப்புகள் கணிக்கப்பட்டன. முதல் மூன்று வருடங்களுக்குள் முதலில் விடப்பட்ட பெண் குரங்குகள் எல்லாம் இறந்து விட்டன. இவற்றின் காயங்கள் கைகால் எலும்புகள் முறிந்ததனாலும் மார்புக் கூடு மண்டை யோடு வெடித்ததனாலும் ஏற்பட்டிருந்தன. அநேகமாக எல்லாவற்றிற்கும் பிறப்புறுப்புகளில் ரணங்கள் காணப்பட் டன. இறந்த பெண் குரங்குகளில் நாலு முதிர்ச்சியடையாத மிக இளம் பருவத்தினதாக இருந்தன. இரண்டு சண்டையின் கடுமையில் குறைப் பிரசவம் ஏற்பட்டு இறந்தன. இதில் ஆண்குரங்குகளும் சரமாரியாக இறந்தன. 5 வருட அளவில் 60 ஆண்குரங்குகள் இறந்துவிட்டன.
இவற்றின் சச்சரவுகள் எவ்வகையினதாக இருந்தன? ஒரு பெண் குரங்கினை அடைவதற்காக ஒன்றுக்கு மேற்பட்ட குரங்குகள் தம்முள் சண்டையிடும். இந்தப் பூசல்கள் சில வேளை நாட்கணக்கில் தொடர்ந்தன. ஒரு பெண்குரங்கினை

சாந்தி சச்சிதானந்தம் () 21
ஏனைய ஆண்குரங்குகள் மாறி மாறிப் புணர்ந்ததனால் அது பெரும் உடல் அவஸ்தைக்கு உள்ளானதுடன் பசிக்கு உணவு கூட எடுக்க முடியாத நிலைமையில் துன்புற்றது. இறந்த பெண்குரங்குகளின் உடல்களுக்காகவும் சண்டைகள் மூண்டன. குரங்குக் குட்டிகளும் இந்தக் கைகலப்புகளின் நடுவே அகப் பட்டுத் திண்டாடின. பாலூட்டிக் கொண்டிருந்த பெண்குரங் கொன்றின் கையிலிருந்த குட்டி சச்சரவின் களேபரத்தில் கீழே விழ அதனை ஓர் ஆண்குரங்கு தூக்கிக் கொண்டு ஓடியதால் அக்குட்டி இறந்தது. இன்னொரு ஆண் குட்டியைத் தூக்கி வைத்திருந்த தாய் தனக்குப் புணர கிடைக்காததால் அதன் குட்டி மேல் தாவி அதன் பிறப்புறுக்களைச் சின்னாபின்னமாக் கியதால் அந்தக் குட்டி இறந்தது. இப்பரிசோதனைக் காலத்தில் இங்கு பிறந்த பதினைந்து குட்டிகளுள் பதினாலு குட்டிகள் தம்முடைய ஆறாம் மாதத்திற்குள்ளேயே இறந்து விட்டன.
5 வருடங்களின் முடிவில் பரிசோதனை தோல்வியில் முடிந்ததென ஆய்வாளர்களினால் தீர்மானிக்கப்பட்டு எஞ்சி யிருந்த ஐந்து பெண் குரங்குகளும் வேறிடத்துக்கு மாற்றப் பட்டன. இயற்கையில் நடைபெறாத அழிவுகளும் அவலங் களும் தம் ஆய்வுகளில் மட்டும் ஏற்பட்டமை விலங்கியல் நிபுணர்களுக்கு பெருந்திகைப்பாக இருந்தது. காடுகளில் வாழும் குரங்குகளின் வாழ்க்கை முறையினை, ஆய்வுக் கெடுத்த குரங்குகளின் வாழ்க்கை முறையுடன் ஒப்பிட்டு விரிவான ஆய்வுகள் செய்யப்பட்டன. இதன் விளைவாக இரண்டு உண்மைகள் பெறப்பட்டன.
முதலாவதாக, இயற்கை சூழலில் காணப்பட்ட விலங்குக் கூட்டங்களில் எப்போதுமே ஆண் விலங்குகளின் 5 லிண்ணிக்கை வீதம் பெண் விலங்குகளின் எண்ணிக்கையிலும் அரை மடங்கு அல்லது அதற்குக்குறைவாகவே காணப்பட்டமை யாகும். இந்த வீதம் மாறும் பட்சத்தில் காடுகளில் பெண் விலங்குகளே சில ஆண்விலங்குகளைக் குழுவை விட்டுத் துரத்தி விட்டன. அவ்வாறு வெளியேறியவை வேறு குழுக்

Page 21
22 0 பெண்களின் சுவடுகளில்.
களுடன் தம்மை இணைத்துக் கொண்டன. ஆணாதிக்க சமுதாயத்தின் ஆளுமையின் மயக்கத்திலிருந்த மானிடவிய லாளர் இதனை பற்றி அறிந்திருந்திருக்கவில்லை, அல்லது அறிய விரும்பவில்லை. விலங்குகளை மேலோட்டமாக நோக்கிவிட்டு பலதாரங்கொள்வது ஆணின் இயல்பு எனப் பிரகடனம் செய்தனர். எந்த ஆண்விலங்கும் தன் அந்தப் புரத்து நாயகிகளை ஆண்டு ஆதரிக்கும் நாயகன் என்றனர். பெண் விலங்குகள் கூட்டமாய் தம் பாட்டுக்கு ஒதுங்கியிருப் பதைக் கண்டு ஆண் என்பவன் தன் வீரத்தினாலேயே கூட்டத்தின் தலைமைப்பதவியைக் கொண்டவன் என அவன் பராக்கிரமத்தினை போற்றவும் செய்தனர். வேட் கைக் காலத்தின் போது பெண்விலங்குகள் தாம் விரும்பிய எத்தனை ஆண்களுடனும் புணர்வதும் அவர்களுடைய வீரியம்கூட ஆண்விலங்குகளிலும் பன்மடங்கு அதிகமான தென்பதும் மறக்கப்பட்டது. இன்றைய சமுதாயத்தின் மதிப் பீடுகளினை உயிரினங்களின் வாழ்முறை மீதோ அல்லது வெவ்வேறு காலகட்டத்திலிருக்கும் மனிதர்கள் அமைப்பு களின் மீதோ திணிப்பதனால் ஏற்படும் பிசகுகள்தாமிவை,
இரண்டாவதாக அவதானிக்கப்பட்டது பெண்விலங்குகள் தமக்கென ஒரு மறைவிடத்தை இயற்கையில் ஏற்படுத்திக் கொள்ளும் நடத்தையாகும். இது இலண்டன் மிருகக் காட்சிசாலைப் ப்ரிசோதனை சூழலில் சாத்தியப்படவில்லை. மனிதக்குரங்குகளோ பபூன்களோ எந்தப் பாலூட்டிகளா யிருப்பினும் அவற்றின் பெண் விலங்குகள் பேறு காலத்தின் போதும் குட்டிகளைப் பாலூட்டி வளர்க்கும் போதும் ஓர் ஒதுக்குப்புறமாக ஆண்விலங்குகளில்லாத தனி வாழ்க்கை யையே மேற்கொள்கின்றன. தமக்கும் தமது குட்டிகளுக்கு மாக இரை தேடி வாழ்கின்றன. குரங்குக் குடும்பத்துப் பெண்விலங்குகள் தாம் முதிர்ச்சியடைந்த பருவம் தொட்டு இறக்கும்வரை குட்டிகளை ஈன்று வளர்ப்பதால் தன் வாழ் நாளின் ஒரு வீதத்தினை மாத்திரமே ஆண்களுடன் உறவு கொள்வதில் கழிக்கின்றது.

சாந்தி சச்சிதானந்தம் () 23
'விலங்குகளின் குடும்பம் எனக் கருதப்படுவது தாய்மையின் இயல்புணர்வின் விளைவே தவிர வேறில்லை. ஒரு விலங்குக் குடும்பத்தின் மைய கர்த் தாவும் பிணைப்புச் சக்தியும் தாயே ஓர் ஆண் விலங் கினையும் பெண்விலங்கினையும் ஒன்றுக்கொன்று ஈர்க்கும் பாலுணர்வு குடும்ப அமைப்பில் எவ்வித பங்கும் ஏற்பதில்லை. சுருங்கக்கூறில், ஆண்விலங்கு குடும்பத்திற்கு அவசியமான அங்கமுமல்ல; அதற்கென ஏதும் கடமைகளும் கிடையாது. அது பெண்விலங்குகளின் குடும்பத்துடன் தன்னை இணைத்துக் கொள்ளக்கூடும்; ஆனால் அப்படிச் செய்தாலும் அது இறுக்கமில்லாததும் அனிச்சயமானதுமான தொடர்பேயாகும். குடும்பத்தின் பாதுகாப்புக்கடைமைகள் முற்று முழுதாகப் பெண் விலங்குகளினாலேயே நிறைவேற்றப்படுகின்றன. குட்டி களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் உழைப்பில் ஆண்கள் பங்கேற்பதேயில்லை.”
இவ்வாறு றொபேட் பிறிவோல்ட் கூறினர்.
ஆண்மையின் வன்மையான பாலுணர்வுக்கும் பெண் மைக்கு தாய்மை சுமத்திய கடமைகளுக்குமிடையே அடிப் படை முரண்பாட்டினை இங்கு காண்கிறோம். PC3 விலங்குக் கூட்டம் அபாய கட்டத்தினைச் சந்திக்கும்போது ஒவ்வொரு விலங்கும் தன்னையே காப்பாற்றிக் கொள்ள விழையும். ஆனால் அக்கூட்டத்திலுள்ள தாயோ தன் குட்டிகளைக் காப்பாற்றுவதில் சிரத்தையாக இருக்கும். தனிமனித வாதத்திற்கு எதிர்முரணாகவிருக்கும் தாய்மை என்னும் உணர்ச்சியே விலங்கினின்றும் "மனிதன்' தோன்றி யதன் முதல்படி எனக் கூறலாம். ஒருவருக்கொருவர் அனுசரணையாய் கூட்டுவாழ்க்கை மேற்கொள்ளும் இயல்பு முதன்முதலில் தாயிடமிருந்து தோற்றம் பெற்றதன்றோ?
அவ்வாறாயின், கூட்டு வாழ்க்கைக்கான கருவியாயிருந்த சமூக அமைப்பான குழுஉக்குறி முறையினை அன்னையர்களே

Page 22
24 ) பெண்களின்சுவடுகளில்.
கொண்டு வந்தனர் என நாம் கருதலாமா? பகைமை பாராட்டாது ஒரு குழுவினராக செயற்பட்டவர்கள் அவர்க ளென்பதனால், ஏற்படுத்தப்பட்ட விதிமுறைகளை நடை முறைப்படுத்தவும் அவர்களாலேயே முடிந்திருக்கும். தமது குழுவினில் ஆண்விலங்குகளின் எண்ணிக்கையினைக் கட்டுப்படுத்தும் பொறுப்பினைப் பெண்குரங்குகள் ஏற்று நடத்தும் பாங்கிலேயே குழுவினில் இப்பெண் விலங்குகளின் அதிகாரங்கள் எத்தகையதாய் இருந்தனவென்று நாம் அறிந்து கொள்ளலாம். தானின்ற வாரிசுகள் தன்னின முண்ணும் வழக்கத்தின் விளைவாலோ அல்லது வேட்கைக் காலங்களிலேற்படும் கைகலப்புகளின் விளைவாகவோ அழிவைத் தேடிக் கொள்வதை ஒரு தாய் தான் தடுக்க முயன்றிருக்க . முடியும். தவிரவும் நீண்ட காலத்துக்கு குழந்தைகளைத் தம் ஆதிக்கத்தின் கீழ் வளர்த்தெடுப்பதால் இந்த விதிகளை அவற்றிற்கு கற்றுக் கெர்டுக்கும் தன்மையும் அவர்களுக்குத் தான் இருக்கின்றது.
மேற்கூறியவற்றிற்கு ஆதாரமாய் இன்னொரு விடயமு முண்டு. மனிதக்குரங்கின் ஆணினம் மாமிச உண்ணிகளாக மாறிப் பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின்பும் பெண்ணினம் தாவர உண்ணிகளாகவே தொடர்ந்தன. இன்றைய கால கட்டத்திற்கூட பல பழங்குடிகளில் பெண்கள் மாமிசத்தினை அறவே சாப்பிடுவதில்லை. வெகு நீண்ட காலத்தின் பின்னரே படிப்படியாய் பெண்கள் உண்ணவாரம்பித்தனர். இதற்கு பல காரணங்கள் கற்பிக்கப்படுகின்றன:-
* போட்டிச் சண்டையிடும் வழக்கமுடைய தன்மையினால் உரமான தாடைத் தசைகளும் கூரான பக்கவாட்டுப் பற்களும் விருத்திவடையப் பெற்ற ஆண்கள் இறைச்சியை இலகுவில் உட்கொண்டனர் என்பது ஒன்று.
ஆண்கள் சமரில் தேர்ந்தவர்களாகையால், பெருத்த உருவமும் நீண்ட நகங்களுடையவர்களாகவிருந்தவர்கள்,

சாந்தி சச்சிதானந்தம் 0 25
இதன் காரணமாக வேட்டையினை தமக்கே சொந்தமாக்கி கொண்டனரென்பது இன்னொன்று.
* வேட்டையாடும் கருவிகள் கண்டுபிடிக்கப்படும் வரை அதாவது காட்டுமிராண்டி நிலையின் தலைக்கட்டம் வரை, தாயற்ற மதலைகளையும் திக்கற்ற சிறு பிராணிகளையுமே பிடித்துண்பது வசதியாக இருந்ததால் இதற்குத் தமது தாய்மையுணர்வு இடங்கொடாது தாவரவுண்ணிகளாகவே பெண்கள் தொடர்ந்தனர் என்பது மற்றொன்று.
இக்காரணங்களெவற்றையும் இன்னும் ஒருவரும் சந்தேகமற ஸ்தாபிக்கவில்லை. ஆயினும் மேற்கூறிய எல்லாக் காரணங்களும் ஓரளவுக்குப் பொருத்தமானவைகளே. இந்தச் சூழ்நிலையில் தன்னின உண்ணி வழக்கத்தின் முதல் எதிரிகள் பெண்களாய் இருந்ததில் வியப்பேது?
விலங்குகளாய் வாழ்ந்தவர்கள் தமது விலங்குக் குணாம்சங்களைக் களைந்துவிட்டு மனிதர்களாக வாழும் சமூக அமைப்பினைப் பெண்கள் உருவாக்கியிருக்கின்றனர். மனிதக் குரங்கிலிருந்து மனிதனைத் தோற்று வித்தவர்கள் பெண்களே.
தாயுரிமைக் கணங்கள்
ஆதிமனிதர்களுடைய முதற் சமூக அமைப்புகளுக்கு பெண்களே வழிகாட்டிகளாய்த் திகழ்ந்தனர். அதனால் அவர்களே குழுக்களில் தலைமையை ஏற்றனர். சமூகத்தில் கெளவரவ ஸ்தானங்களையும் அவர்களே வகிக்கலாயினர்.
மேலும் ஆரம்பகட்டத்தில் தந்தையாக இயங்கக் கூடிய ஆணின் பங்கு நிலை பற்றி ஆதிமனிதர்கள் சிறிதும் தெரிந் திருக்கவில்லை. அதனால் தாய்வழியினூடேயே பரம்பரை

Page 23
26 () பெண்களின் சுவடுகளில்.
களும் உறவுமுறைகளும் அடையாளம் காணப்பட்டன. உரிமை களும் சலுகைகளும் கூட தாய்வழி உறவினூடாகவே பேணப் பட்டன. ஆயினும் பெண்களின் வழி உறவினரடங்கிய குழுக்களாக வாழ்ந்தனரேயன்றி, குடும்பங்களாக வாழ வில்லை. இதன் காரணம் என்ன?
கூட்டு வாழ்க்கையின் நலன்களும் குடும்பவாழ்க்கையின் நலன்களும் ஒன்றுக்கொன்று முரணானவை. கூட்டுவாழ்க்கை வாழுமினங்களில் குடும்ப வாழ்க்கை கிடையாது. குடும்பங்களாகவிருக்கும் விலங்குகள் கூட்டு வாழ்க்கைக்கு இசைந்து வராது. யானை, மான் போன்ற விலங்குகள் கூட்டு வாழ்க்கையும் சிங்கம், புலி போன்ற விலங்குகள் குடும்ப வாழ்க்கையையும் மேற்கொள்கின்றன. கூட்டு வாழ்க்கை மேற்கொள்ளும் யானை, மான் போன்ற விலங்குகள் தம் குழுமங்களுக்குள் ஒரு ஆண், ஒருபெண் அவற்றின் குட்டிகள் என்ற ரீதியில் ஒரு போதும் வாழ்க்கை மேற் கொள்வதில்லை. மாறாக ஆண் விலங்குகளும் பெண் விலங்கும் ஒன்றோடொன்று புணர்ந்து குட்டிகள் ஈன்று ஒன் றாய் வாழ்வன. ஆனால் சிங்கம், புலிகளோ ஒரு குறிப்பிட்ட தேச எல்லைக்குள் ஒரு ஆண் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பெண் விலங்குகள், அவை தம் குட்டிகள் என உலா வருவன. இவற்றின் குழுவில் மேலும் வேறு விலங்குகள் சேர்வதை அவை எதிர்த்துப் போராடும்.
ஆதிமனிதர்களும் தம் குரங்கு மூதாதையரைப் போன்று கூட்டு வாழ்க்கையினைத் தொடர்ந்து மேற் கொண்டார்கள். அவர்கள் இயற்கையினை வென்று முன்னேறுவதற்கு குடும்ப வாழ்க்கை என்பது ஒரு பெருந்தடைக் கல்லாகவே கூட இருந்திருக்கும். குழுவின் ஒவ்வொரு அங்கத்தவரும் குழுவைச் சார்ந்த அனைவரதும் நன்மை கருதி, தத்தமது பங்களிப்பை வழங்கிய கூட்டுழைப்புத்தான் மனிதகுலத்தினைநாகரிகத்தின் வாயிலுக்குக் கொண்டு வந்து சேர்த்தது.

சாந்தி சச்சிதானந்தம் () 27
ஆதிமனிதர் மத்தியில் குடும்பங்கள் தோன்றாமைக்கு இன்னொரு முக்கிய காரணமும் இருந்தது. விலங்குகளின் உலகில் ஆணினத்திற்கும் பெண்ணினத்திற்கும் இடையே ஏற்படும் உடலுறவானது அன்புக் கூடல்களுக்கு வழி வகுப்பதில்லை. மென்மையான உணர்வுகளும் அன்பின் பிணைப்புகளும் ஒரு தாய்க்கும் அதன் பிள்ளைக்கும் இடையே தான் உருவானது. இச்சைகொண்ட ஆண்விலங்கும் பெண்விலங்கும் தமது உறவை வன்முறையுடனேயே அணுகின. ஆண் பெண்ணினைக் கடித்துக் காயப்படுத்துவதும் பெண்ணும் பதிலுக்குத் தன் நகங்களையும் பற்களையும் கொண்டு பிராண்டுவதும் பாலூட்டிகளிடையே சகஜமாக நிலவுபவை. சில சமயங்களில் உடலுறவு கொள்ளும் விலங்கு கள் இதனால் பலத்த காயங்களுக்கும் உள்ளாவதுண்டு.
ஒட்டகங்களில் அவை தம் புணர்ச்சி முடிந்தவுடன் பெண் ஒட்டகம் ஆண் ஒட்டகத்தை உடனேயே திரும்பி மிகக் கொடூரமான முறையில் தாக்க ஆரம்பிக்கிறது. மாமிச வுண்ணிகள் மத்தியில் இத்தகைய சண்டைகள் குரூரமாகவும் முடிவதுண்டு. ஆண் சிங்கங்கள் கலவியின் பின்பு தமது துணை களைக் கொன்றுண்பதும் அவதானிக்கப்பட்டிருக்கிறது. மிருகக் காட்சி சாலை ஒன்றில் வைக்கப்பட்டிருந்த பூனை யினத்தைச் சேர்ந்த ஜகுவார் மிருகம் ஒன்று தனக்கு அடுத்த கூட்டில் வாழ்ந்த பெண் ஜகுவாரை கம்பிகளுக்கு கூடாக நக்கியும் விரகதாப ஒலிகளை எழுப்பியும் கலவிக்கு அழைப்பு விடுத்தது. பெண் விலங்குடன் அதைக் கூட விட்ட போது, புணர்ச்சி முடிந்த மாத்திரத்தே ஆண்விலங்கு பெண்ணின் கழுத்தைக் கவ்விக் கொன்று விட்டது. இதனால் தான் இயற்கையிலேயே புணர்ச்சி நடந்து முடிந்த பிறகு பெண் விலங்கு விரைவாகப் பிரிந்து தத்தமது இடங்களை நோக்கிச் சென்று விடுகின்றன. எருமைகள், யானை, வெளவால்கள், காட்டுப் பன்றிகள், கரடிகள், குரங்கு ஜாதிகள் என எந்த வகைப்பாலூட்டிகளை எடுத்துக் கொண்டாலும் புணர்ச்சிக்குப் பின் பெண்விலங்குகள் தனியே தாமொரு கூட்டமாய் வாழ்வதைக் காணலாம்.
蒙

Page 24
28 () பெண்களின் சுவடுகளில்.
ஆதிமனிதர்கள் வாழ்வில் ஆண்கள் மத்தியில் சகோதரத்துவத்தினைக் கட்டி எழுப்புவதும் அச்சகோதரத்துவ அமைப்பு பெண்களுடன் கூட்டுச் சேர்ந்து ஒத்துழைப்பை நல்க வைப்பதுமே ஆதிமனிதர்களுடைய சமூக பொருளாதார வாழ்க்கையின் முதற் தேவைகளாக இருந்தன. இத்தகைய சூழ்நிலையில் ஆணும் பெண்ணும் இணைந்த சிறிய அலகினை அவர்கள் கனவு கூடக் கண்டிருக்க முடியாது. இதற்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னரும்கூட ஆண் களும் பெண்களும் ஒருவரையொருவர் சந்தேகித்த வண்ணமே வாழ்க்கையைத் தொடர்ந்து கொண்டிருந்தனர் என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உண்டு. இவற்றில் சிலவற்றை இந்நூலின் பிற்பகுதியில் காணலாம்.
ஆகவே, சமூகத்தின் ஆரம்ப கட்டமானது பாலுறவின் அடிப்படையில் அமையாத-பொருளாதார ரீதியில் தொடர்பு கொண்ட சகோதர்களும் சகோதரிகளும் அன்னையரின் தலைமையின் கீழ் இயங்கிய அமைப்பாகும் என்பது புலனா கிறது. ஆணினத்தினையும் பெண்ணினத்தையும் இரு வேறான பிரிவுகளாக்கி தம் கட்டுப்பாட்டினுள் வைத்திருந் தாலேயே பெண்கள் சகோதரத்துவ அமைப்பைக் கட்டி எழுப்பினர். இதனை வகுக்கப்பட்ட உறவுமுறை (classifi catory kinship) 6T6örgl (55 'i L-6 Tib.
ஆண்களும் பெண்களும் தனித்தனியே குழுக்களாக வாழ்ந்து வந்த இக்காட்டுமிராண்டி நிலை அநாகரிக நிலைக் கூடாக பல்லாயிரம் வருடங்கள் தொடர்ந்திருக் கின்றன என்பது இன்று நிரூபணமாயுள்ளது. அன்று ஒரு குழந்தையின் பிறப்பு தாயின் வழியினாலேயே உறுதிப் படுத்தப் படுவதாய் அமைந்ததால் அவை தாயுரிமையினை நிலைநாட்டும் தாயுரிமைக் கணங்களாகின.
ஒரு குழந்தை ஒரு குறிப்பிட்ட தாய்க்குத்தான் பிறந்தது என்று திட்டவட்டமாகச் சொல்லக் கூடியதாக இருந்த அதே வேளையில் கூட்டுவாழ்க்கை அமைப்பில் அதன் தந்தை யார்

சாந்தி சச்சிதானந்தம் () 29
என்பதை நிச்சயப்படுத்த முடியவில்லை. உண்மையில் ஆதி வாசிகளுக்கு "தந்தை' என்னும் கருத்துப்படிவமே புலப்பட வில்லை.
ஏதோ மந்திர சக்தியினால் பெண்கள் கருவுற்று குழந்தை களைப் பெற்றனர் என்றே ஆதிவாசிகள் நம்பினர். பசுபிக் தீவுகளில் செய்யப்பட்ட ஆய்வுகளிலிருந்து பின்வரும் கருத்து நிரூபணமானது. திருமணங்கள் இறுக்கமற்ற பந்தங்களாக ஆரம்பமாகிய காலகட்டத்திலும் கூட அங்குள்ள பழங்குடிகள் தந்தை என்னும் ஸ்தானத்தினை அறியாதிருந்தனர். ஒரு சந்தர்ப்பத்தில் தனது மனைவியை விட்டு இரண்டு வருடங்கள் பிரிந்த கணவன் மீண்டு வந்த போது அவள் ஒரு குழந் தைக்குத் தாயாக இருப்பதைக் கண்டு மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டான். அத்தாயின் கணவன் என்ற முறையில் அவனே அக்குழந்தையின் தந்தை எனக் கருதப்பட்டான். அவள் வேறொருவனுடன் உடல் உறவு கெர்ண்டதன் விளைவாகவே இக்குழந்தை உண்டாகியதாகையால் இவன் அந்தக் குழந் தைக்கு எப்படித் தந்தையாக முடியும் என்று ஆய்வாளர்கள் எழுப்பிய வினாக்கள் அப்பழங்குடியினருக்கு விளங்கவே யில்லை. இந்த நிகழ்ச்சி நடந்தது மெலனீசியாவில்.
தாயுரிமைக் கணங்களில் அன்னையர்களும் அவர்தம் சகோதரிகளும் குழுவின் அடிப்படை அலகாக வைக்கப் பட்டனர். இவர்களுடன் இவர்களின் சகோதரர்களும் பிள்ளை களும் பேரப்பிள்ளைகளுமாக ஒரு கணத்தினைச் சேர்ந்தவர் களாக கருதப்பட்டிருப்பினும் உண்மையில் அக்கணத்தைச் சேர்ந்த பெண்கள் மட்டுமே அதன் நிரந்தர அங்கத்தினராகக் கருதப்பட்டனர். அத்துடன் பெண்களும் பிள்ளைகளும் உண்டு உறங்கி வாழ ஒரு பகுதியும் ஆண்கள் வாழுவதற் கெனப் புறம்பான வேறொரு பகுதியும் ஒதுக்கப்பட்டது.
தாயுடன் வளர்ந்த சிறுவர்கள் குறிப்பிட்ட வயதுவரை வயது வந்த ஆண்களுடன் தொடர்பு வைக்கத் தடை செய்யப்

Page 25
30 0 பெண்களின் சுவடுகளில்.
பட்டனர். ஒரு குறிப்பிட்ட வயதுவரை தம் அன்னையரு டனும் சகோதரிகளுடனும் வாழ்ந்தவர்கள் வயது வந்தவுடன் ஆண்கள் பகுதிக்கு மாற்றப்பட்டு வேட்டையாடுபவராகவும் போர் வீரராகவும் பயிற்றப்பட்டனர். இவ்வாறு தமது துணை களை ஒரு பெண் வேறு கணங்களினாற்றான் நாடவேண்டிய வர்களாயிருந்தது. இவர்கள் உறவு கொள்ளக்கூடிய கணங் களிலும் கூட அவர்கள் வயதிற்கு மூத்த சந்ததியினரும் இளைய சந்ததியினரும் தீண்ட முடியாதவராயினர். கலவிக் கரன துணைகள் ஒருபோதும் நிரந்தரமான பந்தங்களாக இருக்கவில்லை; அவர்கள் கூடி வாழவில்லை. மானிடவிய லாளர்கள் தமது ஆய்வுகளைத் தொடங்கிய சமீப காலங்களில் இக் கணங்களில் கணவன்-மனைவியாகவும் நிரந்தரமில்லாத அங்கத்தினர்கள் சேர்க்கப்பட்டு விட்டாலும் அவற்றின் சட்ட திட்டங்கள் பெரிதும் மாறுதலின்றியே காணப்பட்டன.
இவ்வமைப்பின் கீழ் ஒருவன் தன் கணத்தைச் சார்ந்த பல பெண்களையும், சிலசமயம் அவர்களிலொருத்தி மழலைப் பருவத்தினளாயிருந்தாலும் கூட, அம்மாவென்றே விளித் தான். ஆதிவாசிகளுக்கு, அம்மா என்பவள் தம்முள்ளொரு வரை ஈன்றவள் என்ப்தனை விட அவள் தம்மோடு வைத் திருக்கும் உறவில் தாய்க்குரிய கடமைகளைக் கொண்டவள் அல்லது கொள்ளப் போகின்றவள் என்பதே முக்கியமாகும். தனியொருவனுக்கு தன்னைப் பெற்ற தாய் எவரென நினை விருந்து அவனுடன் அவளுடனான உறவு நீடிக்கலாம் அல்லது நீடிக்காமலும் ஒன்றாக உழைத்து அக்கணத்தின் சிறார்களை பராமரித்துப் பாதுகாத்த பெண்களெல்லோரும் அக்குழுவினருக்கு அன்னையராயினர். இப்பெண்கள் தனிப் பட்ட முறையில் குழந்தைகள் பெற்றாலும் சரி, பெறாவிட் டாலும் சரி, தாய்மைக்குரிய கடமைகளைச் செய்வதனா லேயே மரியாதைக்குரியவர்களாக கணிக்கப்பட்டனர்.
ஒரு பெண் சிலருக்குத்தான் ஒரு குறிப்பிட்ட சமூக அந்தஸ்துள்ள கடமையினைக் கொண்டிருக்கிறாளென்ற

சாந்தி சச்சிதானந்தம் () 31
முறையில் தாயென்ற உறவு ஏற்பட்டதைப் போல ஒவ் வொரு அங்கத்தினரும் தமது வயது, பால், மற்றவர்களுக்கு என்ன உறவு முறையில் உள்ளனர் என்னும் அடிப்படையில் வெவ்வேறு கடமைகளையும் சமூக அந்தஸ்தினையும் கொண்டிருந்தனர்.
ஆண் என்னும் அந்நியன்
தாயுரிமைக் கணங்களில் ஒரு சிறுவன் தன் தாய் வீட்டை விட்டு ஆண்களுடன் வசிக்கத் தொடங்கியவுடன் அவனுக்குப் புதிய நடத்தைகளும் கற்பிக்கப்படுகின்றன. அதுவரை காலமும் தனது அன்னையர்களுடனும் சகோதரி களுடனும் காய்கறி மசியல், கஞ்சி எனத் தாவர உணவையே உட்கொண்டிருந்தவன் இப்போது ஏனைய ஆண்களுடன் சேர்ந்து இறைச்சியை உண்ணப் பழகுகின்றான்.
தனது சகோதரிகளை எங்கு கண்டாலும் இனிமேல் அவன் விலகி ஓடிவிடவேண்டும். அவர்களுடைய காலடிகள் எங்காவது மண்ணில் தென்பட்டால் கூட அந்தவழியில் அவன் போகக் கூடாது. அவர்களுடைய பெயரைக்கூட அவன் உச்சரிக்கக் கூடாது. வேறு ஏதேனும் ஒரு சொல்லில் அவர்கள் பெயர்கள் ஒரு பகுதியாகவோ அல்லது முழு தாகவோ வர நேர்ந்தால் அந்தச் சொல்லையே உச்சரிக் காமல் கவனமாக இருப்பான்.
சில சமயங்களில் அவன் தாய் வீட்டுக்குச் சென்று உணவு யாசிப்பான். அவ்வேளைகளில் தன் சகோதரிகள் எவரேனும் எதிர்பட்டால் அவன் அப்பால் சென்று விடுவான். அவ்வாறு யாரும் தென்படாத வேளைகளில் தாயானவள் கதவிற்கு வெளியே மகனை அமரவைத்து உணவளிப்பாள். இருவருக்கு மிடையே வெகு சம்பிரதாயப்பூர்வமான சம்பாஷணைகளும்

Page 26
32 () பெண்களின் சுவடுகளில்.
தொடர்புகளுமேயிருக்கும் அல்லது நெருக்கமான உறவேதும் இருக்காது.
பசுபிக் தீவுகளான நியூஹீப்ரைட்ஸ், நியூகலடோனியா பகுதிகளில் அவதானித்தவை மேற்கூறிய பாரம்பரியத்திற்குச் சிறந்த உதாரணங்களாகும், தகாப்புணர்ச்சிக் கெதிரான தடைகளின் வெளிப்பாடுகளாகவே ஆரம்பத்தில் இவை விளங்கிக் கொள்ளப்பட்டாலும் ஆண்பாலாரும் ଗus dist பாலாரும் ஒன்றாக உட்கார்ந்து உண்பதற்கெதிராகவே இத்தடைகள் அழுத்தமாய்ப் பிரயோகிக்கப் பட்டனவென்று பின்பு தென்பட்டது.
சான்ட்விச் தீவுகளில் தாய்வீட்டில் வளரும் பாலகன் தானே உணவெடுக்கக் கூடிய பருவத்திற்கு வளர்ந்த பின் தன் தாயினதும் சகோதரிகளினதும் உணவிலிருந்து வேறாக எடுத்து வைக்கப்பட்ட உணவை அவர்களுக்கு அப்பால் உட்கார்ந்து உண்ணத் தொடங்கினான். உரிபிவில் ஓர் ஆண்குழந்தை எந்நாளுமே தன் சகோதரிகளுடன் இருந்து சாப்பிடுவதில்லை.
பிஜித் தீவுகளில் வாழ்ந்த ஆதிவாசிகளில் சகோதரர் களும் சகோதரிகளும் தம் இளவயதில் ஒரே வீட்டில் வாழ்ந்தும் கூட ஒன்றாக உண்பதும் கிடையாது, ஒருவரோடொருவர் பேசுவதும் கிடையாது. ஆபிரிக்காவிலும் பன்டு குடியினர் மத்தியில் ஒரு தாய்க்கும் மகனுக்கும் ஏற்படும் பிரிவின் முதல்படி அவர்கள் வெவ்வேறாய் உட்கார்ந்து உணவு உண்பதிலேயே ஆரம்பமாகின்றது.
இப்படிப் பலவருடங்கள் கழிந்தபின்னரே மகன் ஆண்கள் பகுதிக்கு அழைக்கப்படும் பருவத்தினனாகக் கருதப்படு கின்றான். இம்மக்களின் அறுவடை விழாக்கள் போன்ற பொதுச் சடங்குகளிலும் கூட ஆண்களினதும் பெண்களினதும் உணவுகள் வெகு சிரத்தையுடன் வெவ்வேறாகத் தயார் செய்யப்படுகின்றன.

சாந்தி சச்சிதானந்தம் L) 33
உணவு விலக்கு கணவன் மனைவிக்கிடையே இன்னும் கடுமையாக அனுஷ்டிக்கப்பட்டன. பொதுவாகவே இவர்கள் ஒன்றாக இருந்து உண்பது அனுமதிக்கப்படவில்லை. பொருளாதார நிலைமைகள் மாறுபட்டு நாகரிக யுகத்தில் குடும்பம் என்ற அமைப்பு தோன்றிய பிற்பாடு கணவன் முதலில் உண்பதும் பின் மனைவியும் குழந்தைகளும் வெவ் வேறாய் உண்பதுமாய் இவ்வழக்கம் தொடர்ந்து வந்திருக் கின்றது.
மேற்காப்பிரிக்காவில் பிராக்நாஸ் இனத்தவரில் கணவ னும் மனைவியும் ஒன்றாய் சாப்பிடுவதில்லை. பியூலாப் பெண்கள் தம் கணவருடன் அருகருகே உட்காரக்கூட மாட் டார்கள். அஷாந்தி, செனகம்பியா, நியாம் நியாம், ப்ரீயா போன்ற ஆப்பிரிக்க கிராமங்களிலும் அவ்வாறே. கிழக்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்காவில் ஒவ்வொரு கிராமத்திலும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியே உணவு விடுதி கள் ஸ்தாபிக்கப்பட்டிருந்தன. ஏன், இந்துக்களின் மனுதர்ம சாஸ்திரத்திலும் ஓர் ஆண் தன் மனைவியுடன் ஒன்றாக உட்கார்ந்து உண்பது தடை செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்க இந்தியர்களில் எந்தவினக் குடிகள் மத்தி யிலும் பெண்களும் ஆண்களும் ஒன்றாக இருந்து சாப்பிடுவது அவதானிக்கப்படவில்லை. சீனாவில் முன்பு ஒரு மனைவி தன் கணவனுடனோ மகனுடனோ சேர்ந்துண்ண மாட்டாள். இன்றும் வங்காளத்தில் ராஜ்மஹால் அருகேயுள்ள மலைவாசி கள் மத்தியிலும் மாலைத்தீவு, கொரியா, பிலிப்பைன்ஸ் நாடு களிலும் முன்பு மனைவிமார் கணவர்களுடன் சேர்ந்து உண்ப தில்லை.
அவுஸ்திரேலியாவில் விக்டோரியா எனுமிடத்தில் முன்பு பெண்களுக்கும் ஆண்களுக்கும் வெவ்வேறான அடுப்புகளே தயாரிக்கப்பட்டன. பசுபிக் பிராந்தியத்தில் பாங்க்ஸ் தீவு களில் ஆண்கள் சுகே எனவழைக்கப்படும் பொதுவிடுதியில் தான் உண்டார்கள்,

Page 27
34 () பெண்களின் சுவடுகளில்.
இவ்வாறு ஒருவருக்கொருவர் முகம் பாராது, பகிர்ந் துண்ணாது ஆண்களும் பெண்களும் சாப்பிட வேண்டுமென என்ன நிர்ப்பந்தம் இருந்தது? இவ்விருபாலாரின் உணவு வகையில் இருந்த முக்கிய வேறுபாடே அந்த நிர்ப்பந்தத் தினை தோற்றுவித்தது ஆண்கள் பிரதானமாக இறைச்சி யுணவுகளை அருந்திய அதே வேளை பெண்கள் மசிக்கப்பட்ட கிழங்கு வகைகள், தானியங்கள், இலை வகைகள் பால் போன்றனவற்றை உட்கொண்டனர்.
நமது தந்தையுடைமை அமைப்பின் மதிப்பீடுகளை வைத்து இவ்வழக்கத்தினைக் கண்ணுற்ற ஆய்வாளர்கள், நல்ல இறைச்சி வகைகள் ஆண்களுக்குக் கொடுக்கப்படுவதாக வும் இரண்டாந்தர காய்கறி உணவுகள் மட்டும் பெண்களுக்கு கொடுக்கப்படுவதாகவும் கணித்தனர். ஆனால் ஆதிவாசி களோ இறைச்சி விலங்குகள் உணவென்றும் காய்கறி வகைகளே ‘மனிதர்கள்’ உணவென்றுமே கருதினார்கள். பல குடிகள் மத்தியில் உணவு என்னும் பதம் இறைச்சிக்குப் பிரயோகிக்கப்படவில்லை. ஆப்பிரிக்கப் பழங்குடிகள் மத்தியில் ஒரு பரிசோதனை பின்வருமாறு நடத்தப்பட்டது. ஒரு தாளில் மை அப்பி அவ்வுருவம் எதனை நினைவுபடுத்துகின்றது எனப் பல இளைஞர்களிடம் வினவினார்கள். ஒருவன் அதனைப் பழ வெளவாலுடன் தொடர்புபடுத்தி பின்வருமாறு எழுதலானான் :
**இது பழ வெளவாலின் படமாகும்; இவ்வினம் பப்பாசிப்பழம், தேங்காய், ஈரப்பலா, வாழைப்பழம் ஆகியவற்றையே உண்ணும். இவை மனிதர் உணவை மட்டும் உண்பதினால் மனிதரைப் போலிருக்கின்றன. இவற்றிற்கு விலங்குகள் உணவை உண்ண முடியாது. மிக நல்ல பிராணிகள். தனியே பப்பாசிப்பழம், ஈரப்பலா, வாழைப்பழம் போன்றவற்றையே உண்பதால் வீட்டில் வளர்ப்புப் பிராணிகளாக வளர்க்க ஏற்றவை.*

சாந்தி சச்சிதானந்தம் () 35
உணவு வகைகளைப் பற்றி இம்மக்கள் கொண்ட மதிப் பீடுகள் உண்ணும் முறைகளிலும் பிரசன்னமாயின. அநேகப் பழங்குடி மக்கள் இறைச்சியையும் பாலையும் கலக்கமாட்டார் கள். இறைச்சி வைத்த பாத்திரத்தில் பாலை ஊற்றமாட்டார் கள், இரண்டுக்கும் வெவ்வேறு ஏதனங்களையே உபயோ கிப்பர். வயிற்றுள் கூட இறைச்சியும் பாலும் கலக்கக்கூடா தென்று இரு உணவுகளையும் ஒருசேர உட்கொள்ளாமல் கவனமாக இருந்தனர். உணவுக்கு ஏற்றுக் கொள்ளப்பட்ட இறைச்சியும் பல நிபந்தனைகளைக் கட்டுப்படுத்த வேண்டிய தாயிற்று,
பெண்பாலாருடன் தொடர்புபடுத்தப்படும் சில குறிப்பிட்ட பறவைகளினதும் விலங்குகளினதும் இறைச்சியை உண்பது சில இனங்கள் மத்தியில் தடைசெய்யப்பட்டிருந்தது. அநேக இடங்களில் எந்தவொரு பெண்விலங்கினதும் இறைச்சியை உண்பது பெருங்குற்றமாகக் கருதப்பட்டது.
இறைச்சி இவ்வகையாக ஒதுக்கப்பட்டு வந்ததினால், ஒவ்வொரு முறையும் ஆண்கள் போருக்கோ வேட்டைக்கோ கிளம்பியபோது கடுமையான விலக்குச் சடங்குகளுக்கு ஆளாக் கப்பட்டார்கள். ஆதிமனிதர்கள் வேட்டையையும் போரினை யும் ஒன்றாகவே மதித்ததினால் இரண்டிற்கும் ஒரே கரணங் களையும் வரைமுற்ைகளையும் நிர்ணயித்தார்கள். இக் கரணங்களின் முக்கிய அம்சம் பெண்களை முற்றாகத் தவிர்த் தல் ஆகும்.
மாஓரிகள் போர் நடக்கும் காலங்களில் சமாதானம் பிரகடனப்படுத்தப்படும் வரை தம் மனைவியரை நெருங்குவ தில்லை. பசிபிக் தீவுகளில் மோனஸ் குடியினர் பெரிய வலை களுடன் மீன் பிடிக்கப் போகுமுன் முதல் ஐந்து நாட்களுக்கும் பிரம்மச்சரியம் காப்பர். போருக்கெனில் மூன்று நாட்கள் இவ்வாறு விரதமிருப்பர். ட்ரோப்ரியான்டர்கள் இரண்டு நாட்கள் விரதம் பூணுவர். நியூகினியில் போர் நாட்களில்

Page 28
36 () பெண்களின் சுவடுகளில்.
போர்வீரர்கள் பெண்களை ஏறெடுத்தும் பார்க்க முடியாது. இவ்வாறே பிரிட்டிஷ் கொலம்பியர்கள், வட அமெரிக்க இந்தியர்கள், தென்னமெரிக்காவில் கொங்கோ பிரதேசத் தினர், கிழக்காப்பிரிக்காவினர், இந்தியாவில் அஸ்ஸாமியர்கள் என பல்வகை மக்களும் இக்கரணங்களை வெவ்வேறு முறை களில் பின்பற்றுகின்றனர்.
போர் முடிந்தபின் ஆண்கள் உட்படுத்தப்படும் சடங்கு முறைகளோ இன்னும் தீவிரமானவை. வேட்டைக்கும் அவ் வாறே, இந்நடவடிக்கைகளினால் ஆண்கள் சிந்திய இரத்தம், உண்ட இறைச்சி, குடித்த இரத்தம் இவற்றிலிருந்து சுத்தி கரிக்கப்பட வேண்டியவர்களெனக் கருதப்படுகின்றனர். இவர்கள் பெண்கள் எவரையும் பார்க்காதிருக்கும் பொருட்டு ஊருக்கு வெளியே தனிக்குடிசையொன்றில் விடப்படுகின் றனர். கொலராடோ இந்தியர்கள் மத்தியில் இத்தனிமைக் காலம் ஒரு மாதம் வரை நீடிக்கும். வேறிடங்களில் ஒரு வாரம் முதல் பத்து நாட்கள் வரை தொடரலாம். இந்நாட்களில் உண்ணாவிரதங்கள் கைக்கொள்ளப்படும். பொதுவாக இவ் விரதங்கள் நீர்ப்பதத்திலிருக்கும் கஞ்சியும் காய்கறி மசியலும் கொடுப்பதனால் படிப்படியாக முறிக்கப்படுகின்றது. எந்த உணவையும் சூடாகப் பரிமாறமாட்டார்கள். கொலைத் தொழிலின் பயனாக பல ஆவிகளின் பழியினைச் சுமந்து ஏற் கனவே உடலுள் வெப்பமுற்றிருக்கும் ஆண்கள் மேலும் சூடாக உட்கொண்டால் உடம்பெங்கும் வீங்கி இறந்து விடுவார்கள் என அவர்கள் நம்பினார்கள். ஆகையினால், ஆறிய உணவை ஒரு பழைய உடைந்த பாத்திரத்திற் போட்டு ஒரு நீண்ட கழியின் முனையில் கட்டி கதவுக்கு வெளியிலிருந்து உள்ளே விரதமிருப்போரிடம் நீட்டுவாள் ஒரு கிழவி. விரதம் முடிவுற்ற வுடன் அங்கு உபயோகிக்கப்பட்ட பாத்திரங்கள், உடைகள் எல்லாம் ஒரு மூட்டையாகக் கட்டப்பட்டு உக்கி அழியும்வரை மரமொன்றில் கட்டித் தொங்கவிடப் படுகின்றது. அக்கிராமத் தினைச் சேர்ந்த பெண்களெல்லோரும் துடைப்பங்களினால்

சாந்தி சச்சிதானந்தம் () 37
கிராமம் முழுவதினையும் கூட்டித் துப்புரவாக்குவதுடன் சடங்குகள் முடிவடைகின்றன.
ஆண்கள் மேற்கொண்ட தொழில்கள் பெருமைக்குரிய விஷயங்களாகக் கருதப்படவில்லையென்பது தெளிவு. தன்னின . உண்ணி வழக்கம் பரவலாய் இருந்த காலத்தே வேட்டையாடும் ஆண்களைத் தம்மிடமிருந்தும் குழந்தைகளிட மிருந்தும் பிரித்து வைப்பதற்கு பெண்கள் கையாண்ட வழிகளே இவை, பிரசவ காலத்தில் ஏற்படுத்தப்பட்ட விலக்குகள் இதனை மேலும் நிரூபணமாக்குகின்றன.
ஆண்களை ஒதுக்கிய காலங்கள்
பாலூட்டிகளின் பெண் விலங்குகள் குட்டிகளை ஈனும் போதும் அவற்றிற்கு பால் கொடுத்து பராமரிக்கும் போதும் தமக்கென ஒரு மறைவிடத்தை தேடுகின்றனவல்லவா? இவ் வேளைகளில் தம்மினத்தைச் சேர்ந்த ஆண் விலங்கொன்று, அது தன்னைப் புணர்ந்த விலங்காகத்தானிருப்பினும், அருகே வந்தால், தன் குட்டிக்குத் தீங்கிழைக்க வரும் எந்த விலங்கினையும் துரத்துவது போன்று தாக்குகின்றது. இவ்வியல்புணர்வு ஆதிமனிதர்களிடையே மொ ழி த் தொடர்பின் வளர்ச்சியால் ஒரு கொள்கையாக நடைமுறைப் படுத்தப்பட்டதில் ஆச்சரியமில்லை. ஆபிரிக்காவின் தோபு வாசிகளைப் பற்றி பின்வருமாறு குறிப்பிடப்படுகின்றது,
"இங்கு ஓர் ஆண் தான் பிறக்கும்போது மட்டுமே பிரசவ நேரத்தில் ஒரு தாயுடன் இருக்க அனுமதிக்கப் படுகின்றான். அதுவும் வேறு வழியில்லாமல் நடை பெறுவதே. அதற்குப் பின் ஒருபோதும் அவன் பிரசவம் நடக்கும் வீட்டில் அனுமதிக்கப்படுவது கிடையாது.”

Page 29
38 0 பெண்களின் சுவடுகளில்.
மனிதகுல வரலாற்றில் எவ்வளவுக்கெவ்வளவு பின் னோக்கி செல்கின்றோமோ அவ்வளவுக்கவ்வளவு பேறுகால விலக்குகளுக்குரிய கால அளவு நீடித்துக் கொண்டு போகின்றது. சாதாரணமாக ஓர் ஆதிவாசித்தாய் 3 - 9 வருடங்கள் வரை தன் பிள்ளைக்குப் பாலூட்டக்கூடும். இவர்கள் பேறுகாலத்தின்போதும் குழந்தைக்குப் பாலூட்டும் பருவத்தின் போதும் எந்த ஆண்களுடனும் உடல் உறவு கொள்வதில்லை. திருமணம், குடும்பம் ஆகியன வேரூன்றத் தொடங்கிய பிற்பாடும் ஒரு தந்தையையும் அவன் பிள்ளை யையும் பிரித்து வைக்கும் வழக்கங்கள் தொடர்ந்திருக்கின்றன. சில இடங்களில் குழந்தைக்கு இரண்டொரு மாதங்கள் கழிந்தபின் தந்தையுடன் ஒன்றுசேர அனுமதியிருந்ததாயினும் பல இடங்களில் குழந்தை தவழ ஆரம்பிக்கும்வரை தந்தை யிடமிருந்து பிரித்து வைக்கப்பட்டது. பசுபிக் தீவுகளின் சில பகுதிகளில் குழந்தை நடக்கத் தொடங்கிய பின்னரே தந்தையுடன் சேர்க்கப்பட்டது. வேறு பிராந்தியங்களில் நாலைந்து வருடங்களுக்கு இப்பிரிவு தொடர்ந்தது. கிரேக்க ஞானியான ஹெரட்டஸ் ஒரு தந்தை முதல் ஐந்து வருடங்களுக்கு தன் குழந்தையைப் பார்க்கவியலாது எனும் புராதன சட்டத்தைக் குறிப்பிட்டதாக சரித்திர ஏடுகள் கூறு கின்றன. இவ்விலக்குகள் குழந்தை வளரும்வரைகூட தன் தந்தையைக் குறித்து நீடிக்கப்பட்டதினால் பிரசவகால விலக்குகள் ஆணுக்கு ஏற்படுத்தப்பட்டவையென நாம் அனுமானிக்கலாம், அசுத்தம், தீட்டு எனப்பற்பல காரணங் கள் கூறி பெண்களுக்கெதிரான விலக்குகளிவை எனக்கூறுவ தெல்லாம் நவீன கட்டுக்கதைகளே. மத்திய கிழக்கு நாடு களில் ஆய்வு செய்த மானிடவியலாளரொருவரின் குறிப்பு இது:
**வட எத்தியோப்பியாவின் போகொஸ் இனத்தவர் மத்தியில் ஒரு பெண் பிர்சவத்திற்குப் படுக்கையில் கிடத்தப் பட்டவுடன் அவளுடைய தோழிகள் வாசலில் நெருப்பு பற்றவைத்து விடுவர். தாயும் சேயும் அந்நெருப்பினை

சாந்தி சச்சிதானந்தம் () 39
மெல்ல வலம் வரும்போது அவர்கள் மரக்கிளைகளினாலும் மணியோசைகளினாலும் பெருமொலி கிளப்புவர். எல்லாம் தீய ஆவிகளை விரட்டுவதற்குத்தான். கிரேக்க புராணத் திலும் இப்படியொரு நிகழ்ச்சி வருகின்றது. கிரேக்க தெய்வங்களின் அரசனான ஜெயஸ் (Zeus) குழந்தையாக இருந்தபோது அதனுடைய காவல் தேவதைகள் ஈட்டிகளைக் கேடயங்கள் மீதடித்து பெருமோசையை எழுப்பி அதனைச் சுற்றி ஆடினவாம். பிறந்தவுடன் தன் சிசுக்களை உண்ணும் வழக்கமுடைய ஜெயஸின் தந்தையின் காதில் இக்குழந்தையின் அழுகுரல் விழாதவாறு இப்படி அவர்கள் செய்ததாக ஐதீகம்.”
எந்த மக்களதும் மரபுக்கதைகளும் அவர்களின் மூதா தையரின் அனுபவங்களின் வெவ்வேறு வெளிப்பாடுகளாக விருக்கின்றன. தன்னினம் உண்ணும் சகாப்தத்தில் மதலை களின் பாதுகாப்புக்கருதி பெண்கள் இவ்வாறான நடவடிக்கை களை மேற்கொண்டனர் போலும். அன்று, சிசுக்களை உண்ணும் தந்தைகளை பிரசவ காலச் சடங்குகளின் பெய ரால் ‘விலக்கி வைத்தார்கள்.
ஆதிவாசிப் பெண்கள் மாதவிடாய் தோன்றும் நாட்க ளெல்லாம் தாம் புணர்ச்சிக்குத் தயாரில்லையெனப் பிரகடனம் செய்யுமுகமாக உடம்பு முழுவதும் சிவப்புமையை அப்பிக் கொண்டனர். இதைக் கண்ணுறும் ஆண்கள் அப்பெண் களைத் தவிர்த்து நடந்தார்கள். இந்த விலக்கிற்கு அம் மக்கள் கற்பித்த காரணங்கள் சுவாரசியமானவை.
தென்னாபிரிக்கக் குலக்குழுக்களைச் சேர்ந்தவர்கள் மாதவிடாய் ஏற்பட்ட பெண்ணை ஒருவன் தொட்டால் அவனுடைய எலும்புகளெல்லாம் மெதுமையாகிச் சோர்ந்து விடும் என நம்பினர். ஆபிரிக்க சமவெளிக் குடியினரே இந்நிலைக்குரிய பெண் ஒருவனைப் பார்க்க நேர்ந்ததாலே அவன் அந்த இடத்திலேயே அசைவற்ற மரமாகி விடுவான்

Page 30
40 () பெண்களின் சுவடுகளில்.
என அஞ்சினர். பசுபிக் தீவுகளின் நியூகினியிலோ அந்த ஆண் உடல் வீங்கி வெடித்து இறந்து விடுவான் எனக் கருதினர். ஒருவன் பெண்ணின் தீட்டினை மிதித்துவிட்டால் வாழ்க்கை முழுவதும் அழிவையும் நஷ்டத்தையும் எதிர் கொள்ள வேண்டிவரும் என்று மலேயாத்தீவு மக்களின் ஐதீகம். இதே போன்று ஆண்மை இழக்கப்படுவானென்றும், திடீர் மரணம் சம்பவிக்குமென்றும் சாபங்கள் எண்ணிலடங்கா. காட்டுமிராண்டிக் குடிகள் மத்தியில் ஆய்வு செய்த ஒருவர், நிலத்தில் தவழக்கூட முடியாதவாறு திடீரென்று பலவீன னாய்ப் போன ஓர் ஆதிவாசியினைச் சந்தித்தார். மரம் விழுந்ததால் இறந்துவிட்ட ஒரு பெண்ணின் குருதியைத் தற்செயலாகப் பார்த்த மாத்திரத்தே தனக்கு இவ்வாறு நேர்ந்துவிட்டதென அவன் இவரிடம் தெரிவித்தான். ஒரு சாதாரண மாதவிடாய் இத்தனை பயத்துடன் அனுசரிக்க வேண்டிய விலக்காக மாறியதன் காரணம் இங்குதான் தெரிந்தது. ஆதிமனிதர்கள் மாதவிடாய் குறித்து அருவருப்பு கொள்ளவில்லை மாறாக பெண்களின் குருதியைக் கண்டே பயந்திருக்கின்றனர்.
நாகரிக நிலையெய்தாத எந்த மக்களிடையேயும் இரத்தம் மிக விரும்பத்தக்க பதார்த்தமாக இருந்து வந்தது. ஒவ்வொரு சடங்குகளையும் நிறைவேற்றும் பொழுது அருந்தப்படும் பானமாகவும் வைத்திய சிகிச்சைக்கு உபயோகப்படும் மருந்தாகவும் குருதி உபயோகிக்கப்பட்டது. ஆயினும் ப்ெண்களின் குருதியைப் பற்றி பயவுணர்ச்சியே கொண்டிருந்தனர். எந்தப் பெண்களின் உயிரையும் எக்காலத் திலும் ஊறு விளைவிக்க முடியாததொன்று என்பதனாலும், மாதவிடாய் பற்றிய விஞ்ஞான விளக்கங்கள் அறியாத நிலையில் ஏதோ பெண்களின் குருதி சூனிய மந்திரம் எனக் கருதியதனாலும் இப்பயம் ஏற்பட்டிருக்கலாம்.
வடமேற்கு ஆபிரிக்காவில் வழங்கி வரும் கதையொன் றுண்டு. ஆதியில் ஆண்களும் பெண்களும் ஒருவரையொருவர்

சாந்தி சச்சிதானந்தம் () 41
அறியாது வெவ்வேறே குடியிருந்தனராம். முதன்முதலாக இருபாலரும் சந்தித்தபோது பெண்கள் தம்மைப் பாதுகாப் பதற்காக ஆண்களைப் போலவே போர்க்களத்தினுள் இறங்கவே பெரும் போர் மூண்டதாம். இப்போரின் முடி விலேயே ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள வேறுபாடுகள் அனைவருக்கும் புரிய ஆரம்பித்ததாம். இது கதை தான். இதே ரீதியில் இது ஆபிரிக்காவின் கிழக்குப் பகுதியையும் ஊடுருவி பசுபிக் தீவுகளிலும் பரவலாகக் காணப்பட்டது. மேற்கூறிய போர் எந்தவகையிலும் பெண்களுக்கும் ஆண் களுக்கும் இடையே நிகழ்ந்திருக்கக்கூடும் என்பது உண்மை எனக் கருதப்படுமானால் அது பெண்களினதும் குழந்தை களினதும் பாதுகாப்பிற்காகவும் குழுவின் மேம்பட்ட செயற் பாட்டிற்காகவும் ஆண்களுக்கு எதிரான பல்வேறு தடை களையும் செயற்படுத்தியவாறு பெண்கள் மேற்கொண்ட போராட்டமாகவே இருந்திருக்க வேண்டும்.

Page 31

தாயுரிமைக் கணங்களின் சமூக வாழ்க்கை

Page 32

ஒரு நாகரிக வாழ்க்கை
ஆதிவாசிகள் மத்தியில் ஆண்களும் பெண்களும் ஒன்றாக வாழ்வது மிக அபூர்வமாக இருந்தது. அவர்களில் ஒருவர் வாழ்முறையைப்பற்றி மற்றவர் தெரிந்திருக்கவில்லை. பெண்கள் செய்யும் தொழில்களைப்பற்றி ஆண்கள் ஒன்றும் தெரியாதவர்களாயிருந்தனர். பெண்களும் ஆண்களும் கூடி யிருந்து அளவளாவுவது காணுதற்கரிய காட்சியாக இருந்தது. ஆண்கள் தம்போக்கில் ஆயுதங்களுடன் அங்குமிங்கும் உலவிக் கொண்டிருக்கும் வேளையில் பெண்கள் ஒன்றாகக் கூடிப் பேசிச் சிரித்து வேலைகளில் ஈடுபட்டுக் கொண் டிருப்பது பழக்கப்பட்ட நடைமுறையாகவிருந்தது.
வருடத்தில் முக்காற்பகுதி வெவ்வேறு தடைகளினாலும் விலக்குகளினாலும் ஆண்கள் பெண்களின் வட்டத்துக்கு வெளியே தள்ளப்பட்டனரெனில் நாம் சாதாரணமாக விளங்கிக் கொள்வது போன்ற ஆண் பெண் இணைந்த வாழ்க்கை இருந்திருக்க முடியாதுதானே.
ஆயினும் அவர்கள் மிகுந்த மனநிறைவோடு வாழ்ந் தனர் என்றே கூறவேண்டும். இதற்கு வழிவகுத்தது தாயுரிமைக்கணங்களின் சமத்துவ அமைப்பே. இவ்வமைப்பின் ஒழுக்கங்களின் வரையறையின்கீழ் ஒரு தனிமனிதனுக்கு உடனடித் தேவையான உடைமைகள் அவனுடைய உடம் பின் இன்னொரு அங்கமாகக் கருதப்பட்டது. இவை தவிர மிகுதி செல்வங்களனைத்தும் குழுவிற்கே சொந்தமானதாக

Page 33
46 () பெண்களின் சுவடுகளில்.
இருந்தன. நிலம், வீடு என உரிமை கொண்டாடியவர் இருக்கவில்லை.
பொறாமை, அடுத்தவனைப் பழித்தல் போன்ற உணர் வுகள் ஓர் அநாகரிக மனிதனின் மனத்தை அலைக்கழித்த தில்லை. அவனுக்கு, தனக்குரியதை இழக்கும் பயமும் இல்லை, அதை இன்னும் பெருக்க வேண்டுமென்ற அவசி யமும் கிடையாது. இந்த மனோநிலை காட்டுமிராண்டி மக்களுக்கு பாதுகாப்புணர்வினையும் அயலவன் மீது அளவிட முடியாத நம்பிக்கையையும் ஏற்படுத்தின.
**நாகரிக உலகம் இவர்களுக்கு ஒழுக்கத்தைக் கற்றுத் தர இயலாது. நாம் அதைப்பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் அதே வேளையில் இவர்கள் அதுவாகவே வாழ்ந்து காட்டு கின்றனர்,' என வியந்தார் ஓர் ஆய்வாளர். மேற்கிந்திய தீவுகளில் கொலம்பஸ7டன் வந்திறங்கிய மாலுமிகள் அங்கு வாழ்ந்த மக்களின் தன்மையினையும் வாழ்முறை யையும் கண்டு சொர்க்கபுரி இதுவாகத்தானிருக்க வேண்டும் என தம்மை மறந்து கூவினராம். இக்குடிகளின் மொழி வழக்கிலும் கூட ‘நான்’ எனும் அர்த்தத்திற்கும் ‘நாம் எனும் அர்த்தத்திற்கும் வெவ்வேறு பதங்கள் கிடையாது. ஓர் ஆதிவாசி ஓரிடத்தைக்காட்டி ‘இங்குதான் நான் இந்தப் பெயருள்ள எதிரியைத் தோற்கடித்தேன்” என்பான். ஆனால் விசாரித்துப் போனால் அக்குறிப்பிட்ட போர் பத்துத் தலைமுறைகளுக்கு முன்பு நடந்ததொன்றாக விருக்கும்.
ஒரு 10,000 ஏக்கர் நிலப்பரப்பினை கைவீசிக் காட்டி **இது என்னுடைய நிலம்” என்று சர்வசாதாரணமாகக் கூறுவான். கேட்டுக் கொண்டிருக்கும் ஐரோப்பியரெல்லாம் இது அவனுடைய சொந்த உடைமை என வியந்து நிற் கின்றனர் என்பது அவனுக்குக் கனவிலும் புலப்படாது. வெள்ளையர்கள் வடஅமெரிக்க இந்தியர்களுடன் நிலங்களின் உரிமை பற்றிய உறுதியினை எழுத முயன்றபோது பெருங் கஷ்டத்துக்காளானார்கள். தனிமனிதர் நிலத்திற்கு சொந்தம்

சாந்தி சச்சிதானந்தம் () 47
கொண்டாடுவது நடக்கக்கூடிய காரியமாவென இந்தியர்கள் குழம்பித் தவித்ததுதான் காரணம். வேட்டைக்குச் செல்லும் போதிலும் எந்தவொருவனுக்கும் வேட்டை அகப்படா விட்டால் அவனுக்குக் கவலையில்லை. மற்றவர்கள் தங்களுடையதை இவனுடன் பகிர்ந்து கொள்வார்கள். இதையொட்டி சண்டை சச்சரவுகள் நிகழ்ந்ததாக எந்தக் குறிப்புமில்லை. என்னுடையது உன்னுடையது என அவர் கள் அன்றாட நடவடிக்கைகளில் உரிமை கொண்டாடியது கிடையாது எனக் கூறுகின்றனர். அவர்கள் மத்தியில் வாழ்ந்த ஐரோப்பியர்கள் இங்கு ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய அயலவனின் பாதுகாவலனாகக் கருதப்படு கின்றான்; மனிதனின் அவ்வகையான சகோதரத்துவ இயல்புகளை வெளிக்கொணரும் சமூக பொருளாதார அமைப்பு கட்டியெழுப்பப்பட்டதுதான் இதற்கு முக்கிய காரணம். இந்த ஒற்றுமையினூடேதான் இயற்கையுடனான தமது வாழ்க்கைப் போராட்டத்தில் தமது குழுவின் நலன் களை இவர்கள் பேணிப் பாதுகாத்தனர்.
தாயுரிமைக் கணங்களில் ஆண்களினதும் பெண்களினதும்
அந்தஸ்து எவ்வாறிருந்ததுவென ஓர் ஆய்வாளர் பின்வரு மாறு விபரிக்கின்றார்:
*வேட்டையாடுதலும் போரிடுதலும் ஆணின் தொழில்கள். அவன் பெண்ணுடன் கொண்ட தொடர்பு நிலையானதாக இருக்கவில்லை. அவளுடன் வீட்டிலும் அவன் தங்கவில்லை. தாயும் பிள்ளையுமே அச்சமூகத் தின் கருப்பொருளாக, ஆண் திரும்பத் திரும்ப வரும் நிலைப்புள்ளியாக இருந்தனர். இதன் விளைவாக இரட்டைச் சமூக அமைப்புகள் உருவாகின; பெண் நிலையான குடியேற்ற வாழ்வைத் தொடர்ந்த அதே வேளை ஒழுங்கற்ற உக்கிரமான வாழ்வுமுறையினை ஆண் மேற்கொண்டான். பெண்ணின் கவனமெல்லாம் பயிர்ச்செய்கை, நெய்தல், குயத்தொழில், தோல் பதனிடல் போன்ற வேட்டையின் பக்கவிளைவையொட்டிய

Page 34
48 ( ) பெண்களின் சுவடுகளில்.
கைத்தொழில்கள் ஆகியவற்றில் திரும்பின. ஆணினை அகத்துக்குரியவனாக்கி அவன் கொண்டு வந்த வன விலங்குகளையும் வீட்டு விலங்குகளாக்குவதற்கு உதவி யவள் பெண்ணே, தன்னுடைய வீட்டையும் தானே கட்டினாள், அது அவள் சொந்தமாக இருந்தது. தன் னுடைய திருமணத்திற்குப் பின்னும் அவள் தன் கண வனின் உறவினருடன் சென்று தங்கவில்லை. அவளுடைய குழந்தைகூட, என்றும் அவள் குழுவிற்குச் சொந்தமான தாகக் கருதப்பட்டது. சமூக அமைப்பின் மையக்கரு வாக பெண்ணும் அவள் பிள்ளைகளும், மகனின் பிள்ளை களும் விளங்கினர். வயது முதிர்ந்த பெண்கள் சமூகத் தின் சமூக அமைப்பிற்கு தலைமை தாங்கினர். நாளடைவில் ஆண்களின் போர்க்கலையும் அதற்குரிய ஸ்தாபனங்களும் இவர்கள் பரிபாலனத்தைக் கபளிகரம் செய்துவிட்டது.”
இக்கணங்களில் ஆண்களே ஆயுதமேந்தும் பலசாலி களாகத் தென்பட்டதினால் அவர்களே அதிகாரமுடையவர் களாகவும் பெண்களை ஆளுகின்றவர்களாகவும் இருந்திருக்க வேண்டும் என்னும் விவாதம், தந்தையுடைமைக் குடும்பங்கள் தான் மனிதர்களின் முதல் சமூக அலகு என்பதனை ஆதரித் தவர்களினால் முன்வைக்கப்பட்டது. ஒரு சமூகத்தில் அடக்கு முறை இருந்தால்தான் அதனைக் கட்டிக் காக்க வன்முறை அவசியமாகின்றது. வன்முறை அவசியமான சமுதாயத்தில் தான் போர்க்கலைகளும் போர் ஸ்தாபனங்களும் அதியுயர்ந்த முக்கியத்துவத்தினைப் பெறுகின்றன. இந்தச் சந்தர்ப்பத்திலே தான் உலகில் முதன் முதலாக அதிகாரம் எனும் கருத்தியல்பே தோன்றலாயிற்று. வீரம் எனும் குணாம்சம் பெருமைக்குரிய ஒன்றாக போற்றப்படவாரம்பித்தது; எமது சங்கத் தமிழ் இலக்கியங்களிலும் இராமாயணம் மகாபாரதம் போன்ற பெருங்காப்பியங்களிலும் வீரம் இவ்வாறே எடுத்தாளப்படு கின்றன. இயற்கை தந்த செல்வங்களை தமக்குள் பகிர்ந்து அனுபவிக்கும் சமத்துவ அமைப்பினைக் கொண்டிருந்த

சாந்தி சச்சிதானந்தம் () 49
தாயுரிமைக் கணங்களிலோ யாரை அதிகாரம் பண்ணுவது, எதற்காகத்தான் அதிகாரம் பண்ண வேண்டும்? அந்நாளில் அதற்கொரு அவசியம் இருக்கவில்லை. பெண்கள் ஆக்கப் பூர்வமான உழைப்பை நல்கி இயற்கையின் செல்வங்களைப் பெருக்கியவர்கள். இதனால் இவர்கள் தெய்வத்தினும் மேலாக மதிக்கப்பட்டனர். இந்தவொரு காரணத்திற்றான் பெண்களுக்கு அவ்வளவு பெரிய அந்தஸ்து வழங்கப்பட்டது.
இதன் காரணத்தினால் ஆதிவாசிகள் மத்தியில் ஒரு தலைவனைப் பணிந்து அவன் காலால் இட்டதைத் தலையால் செய்தல் என்பது யாருமறியா நடத்தைப் பண்புகளாக இருந் தன. அவர்களுடைய தலைவர்கள் வயதில் மூத்தோராயும் மரியாதைக்குரியவர்கள்ாயும் இருந்தனர். நாம் சாதாரணமாக ஒரு தலைவனுடைய கடமைகள் எனக் கருதுவனவற்றிலிருந்து வேறுபட்டனவாகவே இவர்களுடைய பொறுப்புகள் இருந் தன. உதாரணமாக அமெரிக்க இந்தியக் குடிகளான இரோக்குவா, டெலவாரஸ் குடிகளைக் காட்டலாம்.
பிற குலக்குழுக்களுடனும் ஐரோப்பியருடனும் பேச்சு வார்த்தை நடத்துவதும் ஒப்பந்தங்கள் ஏற்படுத்துவதுமே அவர்களுடைய தலைவர்களின் கடமைகளாகவிருந்தன. இவ் வொப்பந்தங்கள் சரிவர நடைமுறைப்படுத்தப்படுகின்றனவா வென்றும் அவர்களே மேற்பார்வையிட்டனர். இதிற் சிறிது பிசகினாலும் தமது குழுவின் கண்டனத்துக்கும் அவச்சொல் லுக்கும் இவர்கள் ஆளானார்கள்.
இரோக்குவா, டெலவாரஸ் போன்ற அமெரிக்க இந்தியக் குடிகளின் குலக்குழுக்கள் ஒவ்வொன்றிற்கும் ஓர் ஆலோசனைச் சபை நிர்மாணிக்கப்பட்டது. இச் சபைகளிலே ஐந்திலொரு பங்கு மட்டுமே ஆண்கள் அங்கம் வகித்தனர். மிகுதியெல்லாம் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தன. குழுத்தலைவன், சமூகத் தின் பிற அங்கத்தினருடன் கலந்தாலோசிக்கப்பட்ட பின்பே அப்பெண்களினால் தேர்ந்தெடுக்கப்பட்டான். தலைவன் தன்னுடைய நடவடிக்கைகள் பற்றி இப்பெண்களுக்கே
鸟一4

Page 35
50 () பெண்களின் சுவடுகளில்.
பதிலிறுக்க வேண்டியவனானான். அவன் தன் கடமையில் தவறினாலோ தேர்ந்தெடுத்த பெண்களாலேயே பதவியிறக்கம் செய்யப்பட்டான்.
மேலும், இக் குலக்குழுக்களின் தாயுரிமைக் கணங்கள் ஒவ்வொன்றினதும் தலைவிகள் கூட்டாகச் சேர்ந்து ஒரு தனிக் குழுவை ஸ்தாபித்திருந்தனர். குலக்குழுக்கள் மத்தியில் போர்களைத் தடுக்கவும் அப்படிப் போர் மூண்டால் கூட அதனைக் குறைந்த காலகட்டத்திலேயே முடிவுறச் செய்யவும் ஆலோசனைகள் வழங்குவது இவ்வமைப்பின் தலையாய கடமையாகவிருந்தது,
இரோக்குவா இனத்தவர்கள் அமெரிக்க வெள்ளையரின் பிரதிநிதியான கவர்னர் கிளின்டனுடன் சமாதானப் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருந்தபோது கிளின்டன், தன் ஆண்மைக்கு இழிவு எனக் கருதி இரோக்குவாப் பெண்களின் கருத்துக்களுக்கு செவி சாய்க்க மறுத்துவிட்டான். இதற்கு இந்தியர்களின் பேச்சாளராகத் தெரிவு செய்யப்பட்ட 'குட் பீட்டர்’ கூறியதாவது :
* சகோதரர்களே! எங்கள் மூதாதையர்கள் பெண் களின் ஆலோசனைகளை, அதுவும் எம் குடும்பத்தலைவி களுடைய ஆலோசனைகளை நிராகரிப்பது பெருங்குற்ற மெனக் கருதினார்கள். இவர்கள் எமது மண்ணின் எசமானிகளன்றோ? யார் எங்களை ஈன்றனர்? யார் எங்களுடைய நிலத்தினைப் பண்படுத்துகின்றனர், நெருப்பைக் கட்டிக் காக்கின்றனர், உலையேற்றுகின் றனர்? பெண்களல்லாது வேறு எவருமில்லையென எமது மூதாதையர் எமக்குக் கற்றுத் தந்தனர். சகோதரரே, எமது பெண்கள் மனக்கிலேசம் அடைந்துள்ளனர்.எமது மூதாதையர் பெண்களைப் போற்றி வந்த பாரம்பரியம் நிராகரிக்கப்படக் கூடாதென வேண்டுகோள் விடுக்கின் றனர். உலகின் மாபெரும் சக்தியே பெண்களைச் சிருஷ்டித்தது. எமது மூதாதையரின் ஆவிகளுக்கிசைவான

சாந்தி சச்சிதானந்தம் () 51
அப் பேச்சு சுதந்திரத்தைத் தமக்குத்தர எமது தலைவிகள் வேண்டுகின்றனர். நீங்கள் உங்கள் முழு முயற்சியும் கொண்டு தம்மை சமாதானத்தில் காக்க வேண்டுகின் றனர். ஏனெனில் எமது இனத்தின் உயிர்நாடியே அவர்கள்தாம்.”
இரோக்குவா இனத்தவரின் குழுக்கள் கூட்டமைப்பின் தலைமைப் பதவியினை ஒரு பெண் ஏற்றதாக எந்த ஆய்வாள ரும் அறியவில்லை. தலைமைப் பதவி, போர் மற்றும் சமாதான ஒப்பந்தம் போன்ற நடவடிக்கைகளுக்கு மட்டுமே பொறுப்பானதாக இருந்ததினால் ஆண்கள் அதனை ஏற்றனர் என்பதே நம் யூகம். இதைத்தவிர பெண்களே உண்மையான தலைமையினைக் கொண்டிருந்தனர். இம்மக்களுடன் நெருங் கிப் பழகிய ஒரு மதகுரு இவ்வாறு கூறியிருக்கின்றார் :
'பெண்களின் ஆதிக்கம் உண்மையில் நிலைப்பெற் றுள்ளது. இவர்களுடைய இனங்களின் அடையாளங்கள், ஜாதி, பரம்பரையின் விபரங்கள், குடும்பங்களின் பாது காப்பு எல்லாம் அடங்குவது பெண்களில்தான். அவர் களுக்குத்தான் உண்மை அதிகாரம் இருக்கின்றது. வயல் வெளிகளும் அதில் வளரும் பயிர்களும் நாட்டுப்புறங்களும் எல்லாம் அவர்கள் சொந்தமாகவேயிருக்கின்றது. ஆலோசனைச் சபைகளின் உயிர்நாடி அவர்கள்தான். போரிலும் சமாதானத்திலும் நடுவரும் அவர்களே.”
இந்த மதகுருவும் சமகால மதிப்பீடுகளை வைத்து அதிகாரம், உடைமை என்ற பலவாறான தப்பபிப்பிராயங் களை வைத்துக் கொண்டார் என்றே கூற வேண்டும். ஆயினும் இவர் தரும் விபரங்களில் இருந்து இது போன்ற சகோதரத்துவ அமைப்புகளின் தன்மையினை நாம் புரிந்து கொள்ள முடியும் .

Page 36
52 0 பெண்களின் சுவடுகளில்.
ஏன் இந்த யுத்தங்கள்?
சமத்துவம் நிலவும் தாயுரிமைக்கணங்களில் அடக்கு முறைக்கு வழியில்லை என்று கூறினோம். அப்படியானால் போர்கள் எப்படி உருவாயின ? அடக்கு முறையின் வெளிப் பாடு தானே போர்கள் ? இக் கேள்விக்கு விடை சொல்ல முன் மீண்டும் குழுஉக்குறி முறைகளின் தடைகளை நோக்கு வோம். இம் முறையின் கீழ் ஒரு குழுவினைச் சேர்ந்தவர்கள் தம்முள்ளொருவருக்கும் ஊறு விளைவிக்க முடியாது, ஆனால் வேற்றுக் குழுக்களின் அங்கத்தினரை கொன்று உணவாகவும் கொள்ளலாம். தன்னினம் உண்ணும் வழக்கம் மிகப் பரவ லாகக் காணப்பட்ட சகாப்தத்தில் இவ்விதிமுறையின் தாற் பரியம் எதுவாக இருந்திருக்கும் ? தமக்குள் மெய்க்காக்கும் நண்பர்களாய் வாழும் ஒரு குழுவின் அங்கத்தினருக்கு வேற்று குழுவினர் உயிர் பறிக்கும் அரக்கர்களாகத் தென்பட்டிருப்பர். இதனால், தன்னின உண்ணி முறைகள் அருகி வந்த காலத் திலும் கூட குலக்குழுக்கள் ஒன்றையொன்று சந்தேகத் துடனும் வன்மத்துடனும் பகைத்தனர்.
ஒரு குழுவில் நிகழும் எந்த அழிவிற்கும் இழப்புகளுக்கும் தமது அயலில் இருக்கும் குழுவினரே காரணமெனக் கருதி அந்த அயலில் இருக்கும் குழுவினர்யார் என்பதை அறிய சூனியக்காரனின் உதவியை தொடர்ந்து நாடிய வண்ண மிருந்தனர். தம்முள் ஒரு மரணம் நிகழ்ந்தாற்கூட அது எதிரிகள் ஏவிவிட்ட பில்லி சூனியத்தாலேயே ஏற்பட்டது என அவர்கள் மனதார நம்பினர்.
ஆதிவாசிகளுக்கு பல நூற்றாண்டு காலங்களாக இயற்கை மரணம் என்றொன்று உண்டென்பது தெரியா திருந்தது. ஒரு காட்டுமிராண்டியின் அறிவுக் கெட்டியவரை எல்லா மரணங்களும் கண்ணாற் பார்க்கக் கூடியதாகவோ அல்லது புலனாகாத முறையிலோ எதிரிகளால் செய்யப்படும் கொலைகளாகவே இருந்தன.

சாந்தி சச்சிதானந்தம் () 53
‘மத்திய அவுஸ்திரேலிய ஆதிவாசிகள் மத்தியில் இயற்கை மரணத்தைப் பற்றிய அறிவு ஏதுமே இருக்க வில்லை. எவ்வளவுதான் வயதில் முதிர்ச்சியடைந் திருந்தாலும் ஒரு ஆணுக்கோ பெண்ணுக்கோ மரணம் சம்பவித்தவுடன் இது எதிரி ஏவிய பில்லி சூனியத்தால் நடந்தது என எண்ணி நடுங்குகின்றனர்.”
*பிரிட்டிஷ் கயானாவில் பழிக்குப் பழி வாங்கும் கொலை கள் சூனியத்துடன் தொடர்புள்ளனவாக இருந்தன. ஒருவன் இறந்துவிட்டால் சூனியக்காரனின் உதவி கொண்டு எந்த மனிதன் தீய ஆவிகளின் உதவியினால் இந்தக் கொலையைச் செய்திருப்பான் எனக் கண்டு பிடிப் பதில் முனைகின்றனர். டொங்கா ரேவா இனத்த வருக்கும் இயற்கை மரணம் என்று ஒன்று உண்டென்பது தெரியாது.அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த டியரி கொளுேட் குடியினர் மாயமந்திரத்தினாலேயே மரணம் சம்பவிக்கின்றதென நினைக்கின்றனர்.கொங்கோ குடி யினரும் அவ்வாறே. பொங்கொஸ் குடியினர் மத்தியில் திடீர் மரணம் ஏற்பட்டால் அங்குள்ள கிழவிகள், தீய ஆவி களுடன் கூட்டுச் சேர்ந்து இதைச் செய்துவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டனர்.கிழக்கு மத்திய ஆபிரிக்காவில் நோய் மற்றும் திடீர் மரணங்கள் சூனியத்தினாலேயே ஏற்படுகின்றன என நம்பப்படுகின்றது.”
"ட்ரோபிரியான்டர்கள் எல்லாவித மரணங்களையும் அவை கண்ணாற் புலனாகும் வகையில் சம்பவித்தா லொழிய, மாயமந்திரத்தினாலேற்பட்டது என்றே நம்பு கின்றனர். தற்கொலை முயற்சி அல்லது நஞ்சருந்துதல் அல்லது ஈட்டியால் குத்தப்படல் போன்ற கண்ணுக்குப் புலனாகும் காரணங்களுடைய மரணங்கள் மட்டுமே விதிவிலக்காகக் கருதப்பட்டன”.
இவையெல்லாம் ஆய்வாளர்களின் குறிப்பேடுகளி லிருந்து பெறப்பட்ட தகவல்கள். குழுஉக்குறி முறையில்,

Page 37
54 () பெண்களின் சுவடுகளில்.
ஒரு கணத்தினைச் சேர்ந்த எந்த அங்கத்தினனுக்கும் ஊறு விளைவிக்கப்படின் அதற்கு மற்ற அங்கத்தினர்கள் பழி வாங்குவதே வழக்கமாகும். சக அங்கத்தவனுடைய துன்பம் தமக்கு நேர்ந்த துன்பமாகவே இவர்கள் கருதினர். ஆகவே ஒருவன் இறந்தவுடன், அயல் கிராமத்திலுள்ள எவன் சூனியம் ஏவி இதனைச் செய்தான் என்று கண்டு பிடிக்க விழைந்தனர். அவ்வாறு ஒருவனை எதிரியாகக் குறித்த பின் கூட்டமாகச் சென்று இரகசியமாய் அவனைக் கொலை செய்தும் விடுகின்றனர். இந்தக் கொலைக்கு மற்ற கிராமத் தினர் அவர்கள் பங்குக்கு இவர்களுக்கு எதிராக வஞ்சம் தீர்ப்பதும் தவிர்க்க முடியாததே. இவ்வாறு பரம்பரை பரம் பரையாக இந்தப் பகைமை வளர்கின்றது. இந்தக் காரணத் தினால் காட்டுமிராண்டிகள் எப்பொழுது எதுநேருமோவென தீராத பயத்துடனும் தொந்தரவுடனும் வாழ்ந்தனர். ஆபிரிக்காவின் தோபுக் குடியினரைப் பற்றிய ஆய்வுகளில் இந்த விவரங்கள் மிகத் தெளிவாக எடுத்துக் காட்டப் பட்டிருந்தன.
இதனால் ஓரளவுக்கு நிம்மதியான வாழ்க்கை வாழ் வதற்கு இம்மாதிரியான பழிக்குப்பழி கொலைகள் ஒரு குறிப்பிட்ட தவணை தோறும் ஒழுங்குடடுத்தப்பட்ட தன்மை யதாக நடத்தப்பட்டன. இந்த சந்தர்ப்பத்தில் இரு குழு வினரும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் குழுமி சென்ற தவணை முழுவதும் ஏற்பட்ட இழப்புகளுக்கு தலைக்குத் தலை வாங்கி ஈடுசெய்து கொண்டார்கள். இதுவே உலகில் போரின் ஆரம்ப மாகும். இதற்கான போர் ஸ்தாபனங்களையும் கட்டி யெழுப்பினர்.
ஆதிவாசிகளின் போரின்போது இரு குழுவின் தலைவர் களும் நடுவர்களாயிருந்து சரியான எண்ணிக்கை கொண்ட உயிர்கள் இருபுறமும் பலியானபின்னர் போரினை நிறுத்தி னார்கள். அதன்பின் இரு பகுதியினரும் பரிசுகள் பரிமாறிக் கொண்டதும் தத்தம் கிராமங்களுக்குப் பிரிந்து சென்றனர்.

சாந்தி சச்சிதானந்தம் 3 55
வழக்கமாக இச் சமர்கள் வருடத்திற்கொருமுறையோ அல்லது ஐந்து வருடங்களுக்கொருமுறையோ தான் நடை பெற்றன. சிலவிடங்களில் ஒரு குழுவினர் அவ்வப்போது விடுக்கும் அழைப்பினை ஏற்று நடத்தப்பட்டன. பசுபிக் பிராந்தியத்திலுள்ள நியூகலடோனியா மக்கள் மத்தியில் நடைபெறும் போர்களைப் பற்றிய கண்கூடாகப் பார்த்த வர்ணனைகள் நமக்கு வந்துள்ளன.
“...இரு பகுதியினருக்கும் போருக்கெனவே உபயோ கப்படும் பொதுவான மைதானமொன்றுண்டு. இவர்கள் ஐந்து வருடங்களுக்கொருமுறை அங்கு சந்திப்பர். குறிப்பிட்ட நாளில் இரு பகுதியிலிருந்தும் இரண்டு கட்டியங்காரர்கள் வந்து ஒழுங்குகளை மேற்பார்வை யிடுவர். விடியற்காலையிலேயே இரு பகுதியினரும் வந்து முதல் வேலையாக ஐந்து வருடங்களாக வளர்ந் திருக்கும் செடிகளையும் முட்புதர்களையும் அகற்றி மைதானத்தைச் சுத்தமாக்குவர். எல்லாம் திருப்திகர மாகத் தயாரானதும் நிரை நிரையாக ஒருவரையொருவர் நோக்கிய வண்ணம் நின்று பேச்சுப் போட்டிகளுடன் ஆரம்பிப்பர். இந்தப் போட்டிகள் முடிவுற்றவுடன் இரு தலைவர்களும் உயிருக்குப் பங்கமேற்படாதவகையில் தனிச் சண்டையில் மோதுவர். இந்நிகழ்ச்சிகள் முடிவுற்ற பின்னரே படைகளிரண்டும் ஒன்றையொன்று தாக்க ஆரம்பிக்கும். முதலில் ஈட்டிகள் எறிந்தும் அம்பால் எய்தும் சண்டையிடுகின்றனர். இது முடிவுற நெருங்கி வந்து கதாயுதங்களோடு ஒருவரோடொருவர் மோதுவர்.
முதல் போர்வீரன் பலியானவுடன் அன்றைய சண்டையெல்லாம் உடனே நிறுத்தப்பட்டு தகுந்த மரியாதைகள் சடங்குகளுடன் அவன் ஈமச் சடங்குகள் நிறைவேற்றப்படும் . அடுத்தநாட்காலை திரும்பப் போர் ஆரம்பிக்கும். இவ்வாறாக, தேவையான எண்ணிக்கை யுள்ள உயிர்கள் பலிவாங்கப்படும் வரையோ அல்லது
அவ்வளவு மனிதர்கள் இறக்காதிருந்தால், போர் வீரர்கள்

Page 38
56 () பெண்களின் சுவடுகளில்.
அலுத்துக் களைக்கும் வரையோ இது தொட்ரும். சில வேளைகளில் இழப்புகளை ஈடுபடுத்தும்போது உயிர்ப்பலி கள் பாரதூரமாகப் போய்விட்டாலும் உடனே நிறுத்தி விடுவர். இதற்கெல்லாம் முத்தாய்ப்பு வைக்குமுகமாக இறந்த ஒவ்வொருவருக்கும் பதிலாக ஒவ்வொரு பன்றி யினை ஒரு பகுதி மற்றப் பகுதிக்குப்பரிசாக அளித்து விட்டு ஒன்றாக விருந்துண்டு களித்துப் பின்பிரிவர்.”
அடுத்தவர் நிலத்தினை அபகரிக்கவும் வியாபார இலா பங்கள் பெருகவும் முடிவில்லா அழிவு ஏற்படுத்தும் நவீன உலகப் போர்களுக்கும் இவற்றிற்கும் எவ்வளவு வேறு பாடுகள். அவுஸ்திரேலிய ஆதிவாசிகள் மத்தியிலும் சொலமன் தீவுகள் மற்றும் அருகிலுள்ள பசுபிக் தீவுகளின் குடிகள் மத்தியிலும் கலிபோர்னியா இந்தியர்கள் மத்தியிலும் இவ்வழக்கங்கள் வெகுவாகக் காணப்பட்டன. அவர்களிடம் வேறு இனங்கள் மத்தியில் மண்ணுக்காக நடத்தப்படும் போர் களைப் பற்றி விளக்கியபோது மிகுந்த வியப்பெய்தினர்.
இவ்வாறு ஆதிவாசிகள் நடத்திய போர்கள் நாளடைவில் போலிச் சண்டைகள்ாகவும் போரினை அபிநயம் செய்யும் நாடக நாட்டியக் கலைகளாகவும் உருமாறின. பின்னர் ஒரு மனிதன் இறந்துவிட்டால் அவன் சாவுச் சடங்கின்போது இரு பகுதியினர் மேற்கொள்ளும் குத்துச்சண்டை மற்றும் விளை யாட்டுப் போட்டிகளாக அவை மருவின.
இக் கரணங்களில் உயிருக்குப் பங்கம் விளைவிக்காத வகையில் அம்மனிதனின் இறப்புக்கு போலிச்சண்டைகள் மூலம் பலிவாங்குவதாகக் கொள்ளப்பட்டது. இவற்றின் ஆரம்பங்களே ஒலிம்பிக், பைதியன், நிமியன், இஸ்த்மியன் போன்ற கிரேக்க விளையாட்டுப் போட்டிகளாகும். ஆனால் ஏற்கெனவே வளர்க்கப்பட்ட போர் ஸ்தாபனங்கள், நாளடை வில் தனியுடைமை சமுதாயங்கள் தோன்றியதன் பிற்பாடு அடக்குமுறைக்கும் சூறையாடலுக்கும் ஒரு கருவியாக உபயோகப்படத் தொடங்கின.

ஆதிகாலப் பெண்களின் ஆக்கப் பணிகள்

Page 39

"மிகுதி எல்லாம் பெண்களுடையது”
'தன்னுடைய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், இனம் பெருக்குவதற்கும், புதிய தேவைகளை உருவாக்கு வதற்குமான காரணிகளை உற்பத்தி செய்யும் கூட்டியக்கமே சமுதாயமாகும்” எனச் சமுதாயத்திற்கு ஒரு வரைவிலக்கணம் உண்டு. -
மனிதகுலப் பரிணாம வளர்ச்சியின் உயிர்நாடி உழைப்பு என்று கூறினால் மிகையாகாது. இன்றைய உலகில் உற்பத்தி நடவடிக்கைகளில் பெரும்பாலும் ஆண்களே முதன்மையாக ஈடுபடுவதனால் என்றும் இவ்வாறுதான் நிலைமைகள் இருந்திருக்க வேண்டுமென்ற தவறான கருத்து நிலவுகின்றது.
அன்று சமுதாயத்தின் முக்கிய ஆக்கப்பணிகளிலெல்லாம் பெண்ணே முதன்மையாகப் பங்கேற்றிருக்கின்றாள். அவுஸ்திரேலியாவில் வாழும் குர்னாய் பூர்வக்குடிகள் மத்தியில் ஒரு பழமொழி வழக்கத்திலுள்ளது:
*வேட்டையாடுதல், மீன் பிடித்தல், போருக்குப் போதல் பின்பு உட்காருதல் ஆண்கள் வேலை. மிகுதியெல்லாம் பெண் களுடையது.”
இவர்கள் குறிப்பிடும் அந்த மிகுதி வேலைகள் எவை யெவையென நோக்குவோம்.
விலங்குகள் தமது அன்றாட உணவுத் தேவைகளை அப்போதைக்கப்போது கவனித்துக் கொள்கின்றன. ஆனால்

Page 40
60 () பெண்களின் சுவடுகளில்.
மனிதர் அவ்வாறே இருக்க முடியாது. அவர்கள் தமக்குக் கிடைக்கக்கூடிய உணவின் அளவில் கட்டுப்பாடு செலுத்து பவர்களாயிருந்தாலொழிய இதர துறைகளில் முன்னேறுவது இயலாத காரியமாகும்; இவர்களுக்குத் தம் அன்றாட உணவுத் தேவைகளைச் சமாளிக்கவே நேரம் போதுமானதாகி விடும். உணவு தொடர்பாக மேற்கொள்ளப்படும் கட்டுப் பாடானது, அன்றாட உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வழிகளை மேற்கொள்ளுவதும்-எதிர்காலத் தேவை களுக்காகச் சேமிப்பதுமாகும்.
உலகெங்கணும் காணப்பட்ட பரந்துபட்ட மக்களின் வரலாற்றிலும் உணவு சேகரிக்கும், சேமிக்கும் தொழில்களை பெண்களே தனியே பொறுப்பெடுத்திருக்கின்றனர். உணவின் மூலங்களைக் கண்டுபிடித்தலும், புதிய வகை உணவுகளைத் தெரிந்தெடுப்பதும், இவற்றை நீண்ட காலப் பாவிப்புக்காகப் பக்குவப்படுத்தலும் பெண்களே செய்த வேலைகள் என்பதற்கு வரலாற்றில் தொடர்ச்சியான ஆதாரங்கள் உண்டு.
காட்டுமிராண்டி மனிதருடைய வரலாற்றின் கடைசி 100,000 வருடங்கள் வேட்டையாடுதல் மற்றும் உணவு சேகரிக்கும் யுகமாகக் கழிந்தன.
உணவு சேகரிப்பதற்கு பெண்கள் உபயோகித்த கருவி தோண்டுகழியாகும். நீண்டதும் நுனியில் கூராக்கப்பட்டது மான இக்கழி மண்ணுக்குள் உள்ள காய், கிழங்கு, வேர் களைத் தோண்டியெடுத்தலை இலகுவாக்கியது. இன்றும் கூட உலகின் பல புராதன சமூகங்களில் தோண்டுகழி என்னும் கருவி பெண்களின் வாழ்க்கையுடன் அன்னியோன்ய மாகப் பிணைக்கப்பட்டதோர் உபகரணமாக இருக்கின்றது. நெவாடா, யோமிங் இடங்களைச் சார்ந்த அமெரிக்க இந்தியப் பெண்களை அங்கு போயிறங்கிய ஐரோப்பியர் "தோண்டுபவர்” என்றே அழைத்தனர். அப்பெண்களைப் பற்றிய விவரணையில் பின்வருமாறு கூறப்பட்டது:

சாந்தி சச்சிதானந்தம் () 81
**பொதுவாக, கிழங்கு, வேர்களைக் கிளறி யெடுக்கும் வேலை பெண்களின் துறையாகவே கருதப் பட்டது. ஒரு முனையில் கூராக்கப்பட்ட நீண்ட கழி யொன்றினை வலது கையில் பிடித்து மண்ணுள் இறுகச் செலுத்தி அசைப்பதன் மூலம், கிளர்ந்து வரும் மண்ணை இடது கையால் அள்ளி வீசுவஈர்கள். இந்த முறையில் விரைவாக அவர்கள் தோண்டிச் செல்வதைக் காணலாம். ஆயினும் பெறும் விளைவுடன் ஒப்பிட்டால் விரயமாகும். உழைப்பு மிக அதிகமாகும். சுமார் 14 செ.மீ. சுற்றளவும் 30 செ.மீ. நீளமும் உள்ள கிழங்கினைப் பெறுதற்கு 30 செ.மீ. அகலமும் 60 செ.மீ ஆழமும் உள்ள குழி யொன்றினை அவர்கள் தோண்ட வேண்டியவர்களா யுள்ளனர். அப்பெண்களுடையதும் அவர்கள் பிள்ளை களுடையதும் உழைக்கும் நேரத்தின் அதிகளவு பங்கு இவ்வாறு செலவழிக்கப்படுகின்றது. மேலும் இந்தக் கருவி பெண்களுக்குத் தற்பாதுகாப்புத் தாக்கும் கருவி யாகவும் பயன்பட்டது”.
வேட்டையாடுதலின் மூலம் அனுதினமும் இரை அகப் படுவது நிச்சயமல்லாததாக இருந்ததனால் பெண்கள் சேகரிக்கும் உணவே ஆதி மனிதரின் வாழ்க்கையில் எல்லோரும் சார்ந்திருக்கக்கூடிய உணவாக இருந்தது. உலகின் வெகுசில இடங்களைத் தவிர (அதுவும் குறிப்பிட்ட வரலாற்றுக் காலங்களிலேயே) மற்றெல்லாவிடங்களிலும் பெண்களின் தொழில், முக்கியமாக, உணவையே மூலமாக கொண்டு இருந்திருக்கின்றது.
மண்ணைக் கிளரும் நடவடிக்கையினால் நிலம் வளம் படுத்தப்பட்டது. இதனால் மண் தரும் விளைச்சல் உருவத் திலும் அளவிலும் பெருகியதோடு புதுவகைப் பயிர்கள் தோன்றவும் ஏதுவாகியது. ஒரு வாய்க்கும் போதாத அளவுள்ள சர்க்கரைக்கிழங்கு வகைகளை பெற்று வந்த அவுஸ்திரேலிய ஆதிவாசிகள் நாளடைவில் ஆறு அடி நீளமும்

Page 41
62 0 பெண்களின் சுவடுகளில்.
ஒரு அடி தடிப்புமுள்ள கிழங்குகளைப் பெற்றனர். இதெல்லாம் அவர்கள் நிலையான பயிர்ச்செய்கையில் ஈடுபடும் முன்னர் நிகழ்ந்தவை. மற்றும் நோக்கோல் தாவரத்திலிருந்து கோவா, கோலிஃபிளவர், பிரஸல்ஸ்ப்ரவுட் ஆகியவை தோன்றியது புதுப் பயிர்கள் தோன்றிய முறைக்கு இதுவே நல்ல உதாரணமாகும். இது மட்டுமின்றி கிளறப்பட்ட மண்ணின் மேற்பரப்பை வந்தடைந்த தானிய வகைகள் காற்றில் தூற்றப்பட்டு தூரப்பறந்து மேலும் புதிய இடங் களில் முளைக்க வழியும் ஏற்பட்டது. தன்னை யறியாமலேயே தம் சமூகத்தின் எதிர்கால உணவுத் தேவை !ளுக்கான வழி வகைகளைப் பெண்கள் செய்திருக்கின்றனர். இவையெல்லா வற்றிலும் சிகரம் வைத்தாற்போல, அன்றாடம் இப்பயிர் களைப் பற்றித் தாம் அவதானித்தவற்றை, தம் அனுபவங்கள் கொண்டு பயிர்ச்செய்கையினை முதன் முதலில் நிலையாக மேற்கொள்ளும் சாதனை படைத்தவர் இவர்களே.
அமெரிக்கா, ஆபிரிக்கா, இந்தோபசுபிக் தீவுகள் ஆகிய விடங்களில் சென்று குடியேறியவர்களும் ஆய்வாளர்களும் அங்கு வாழ்ந்த பழங்குடிகள் மத்தியில் பெண்களே விவசாயம் செய்தார்கள் எனத் தெரிவித்திருக்கின்றனர். இக்கால கட்டத்தில் இந்த ஆதிவாசிப் பெண்கள் கோதுமை, பார்லி, அரிசி, சோளம், மரவள்ளி மற்றும் சிறுதானிய வகைகள் பலவற்றையும் பயன்படுத்த, கண்டுபிடித்துவிட்டனர். விவசாயத்திற்கான கருவிகளான மண்வெட்டி மற்றும் எளிய வடிவிலான கலப்பையையும் உருவாக்கி உபயோகிக்கத் தொடங்கி விட்டனர். ஆண்கள் விவசாயத்தில் ஈடுபடாத காரணத்தினை ஒரினோகோ இந்தியர்களிடம் ஒரு மதப் பிரசாரகர் வினவியபோது அங்கிருந்த ஆண்கள் அவருக்குக் கூறியதாவது:
“பெண்கள் ஒரு தினையை விதைத்தால் இரண்டு
அல்லது மூன்று காம்புத் தினை விளையும், அவர்கள் ஒரு மரவள்ளியை நட்டால் மூன்று கூடை கிழங்குகள்

சாந்தி சச்சிதானந்தம் () 68
கிடைக்கும். அதெப்படியெனில் அவர்களுக்குத்தான் குழந்தைகளை உண்டாக்கவும் தெரியும், பயிர்களை உயிர்ப்பிக்கவும் தெரியும். எங்களுக்கு அவர்களளவு அறிவு இல்லாததினால் இவற்றையெல்லாம் அவர்களே செய்யட்டும்.”
பயிர்ச்செய்கையானது குடியேற்ற நாகரிகத்தினைக் கொண்டுவந்து புரட்சிகரமான தாக்கத்தினை ஏற்படுத்தியது. அதன் புரட்சியாளர்களும் பெண்கள் தாம். இதனால் ஆதிவாசிகள், பெண்களிடம் ஏதோ மந்திரசக்தி இருக்கின்றது என நம்பியிருந்ததில் ஆச்சரியமில்லை. இதுமட்டுமின்றி குடியேற்ற நாகரிகத்தின் இருகண்களில் மறு கண்ணாகத் திகழ்ந்த கால்நடை வளர்ப்புத் தொழிலும் பெண்களால் செய்யப்பட்டதுதான்.
ஆதிவாசி அன்னையர் சர்வசாதாரணமாக தம் ஒரு முலையில் தமது குழந்தைகட்கும் மறு முலையில் யாதுமொரு குட்டிப் பிராணிக்கும் பாலூட்டிக் கொண்டிருக்கும் காட்சியே மேற்கூறிய கருத்தின் வித்தாக இருந்தது. இதனை ஆய்வாளர்கள் மேற்கொண்டு ஆராய்ந்ததில் ஆண்கள் வேட்டையாடியதாலோ அல்லது வேறு காரணங்களினாலோ தாயினை இழந்த இளம் பருவத்து விலங்குகளை பெண்கள் எடுத்து வளர்ப்பது சகஜம். இந்த வழக்கம் நாளடைவில் வனவிலங்குகளை வீட்டு விலங்குகளாக்க உதவியது. பாலும், இறைச்சியும், உரோமமும் வற்றாது வழங்கும் கால்நடை வளர்ப்புத் தொழிலாகப் பின்பு இது விரிவடைந்தது. இளம் பிராயத்து விலங்குகளைக் கொல்லாது வளர்த்து அவற்றைப் பல்கிப் பெருக வைத்தலும் உணவு விநியோகத்தின் கட்டுப் பாட்டின் ஓர் அம்சமே.
சமீப காலம் வரை கூட எஸ்கிமோக்களும் அவர்களுக் கருகில் வாழ்ந்த இந்தியர்களும் வெள்ளி ஒநாய்கள் எனப்படும் மிருகத்தினை இளமையிலேயே பிடித்து அவற்றின் தோலை எடுக்கும் காலம் வரும் வரை வளர்த்து வந்தனர்.

Page 42
64 (1 பெண்களின் சுவடுகளில்.
இவ்விலங்குகளுக்கு தமது முலைப்பாலை ஈன்று பராமரித்து அவற்றை வளர்ப்பதன் முழுப் பொறுப்புகளையும் அந்த இனத்துப் பெண்களே ஏற்று வந்துள்ளனர்.
உணவாக ஏற்றுக் கொள்ளக்கூடிய காய் கிழங்கு வேர் களைத் தேடியும் அப்பயிர்களை நட்டும் விலங்குகளை வளர்த்தும் தமது வாழ்க்கையினை ஒட்டிய பெண்கள் வெவ் வேறு தாவரங்களைப் பற்றிய அறிவிலும் சிறந்து விளங்கியதில் ஆச்சரியமில்லை, ஓர் ஆபிரிக்கவாசியின் கருத்துப்படி சூனியத் தின் சாராம்சம் என்னவெனில் 'சில விளைவுகளை ஏற்படுத் தும் மூலிகைகளைப் பற்றி அறிதலும், அவற்றைக் கலந்து தேவையான விளைவைப் பெறுதலும்” என விளக்கினான்.
'சகல தேசத்து ஆதிவாசிகள் மத்தியிலும், சூனியத் தின் சக்தியானது பெண்களுக்கேயுரித்தானதொன்றாகவே கருதப்படுகின்றது. மந்திர சக்திகள் பற்றித் தீவிரமாக நம்பப்படும் இடங்களில், ஒவ்வொரு பெண்ணும் அவள் பெண் என்ற ஒரே காரணத்தினால் சூனியத்தின் சக்தி களைத் தன்னகத்துள் கொண்டவளாகக் கருதப்பட்டாள். பின்னால் மந்திரவாதி, பரியாரி போன்றவர்களின் கடமைகளை மேற்கொண்ட ஆண்கள் இந்த ஆதிப்பெண் சக்திகளின் போலி ஆண் வடிவங்களாகவே இருந்தனர்”
என்று கூறுகிறது ஓர் ஆய்வுநூல். தந்தையுடைமைச் சமுதா யங்கள் வேரூன்றியபோது இச்சூனியக்காரிகளே பெண் தெய்வங்களாக உருவகப்படுத்தப்பட்டனர்.
ஆதிப்பெண்கள் கண்டுபிடித்த மருந்துகள் சர்ப்பக்கடி தொடக்கம் குஷ்டரோகம் வரை எண்ணற்ற நோய்களைத் தீர்க்கும் தன்மையுடையனவாயிருந்தன. இதில் விந்தை யென்னவெனில், இம்மருந்துகள் சல்ஃபர் மற்றும் நுண்ணுயிர் கொல்லிகள் பழக்கத்துக்கு வந்த இந்த நாள்வரை மிகச் சிறிய மாற்றங்களுடனேயே உபயோகிக்கப்பட்டு வந்திருக்கின்றன.

சாந்தி சச்சிதானந்தம் () 65
மதுபானம் கண்டுபிடிக்கப்பட்டதும் அதன் சில நோய் தீர்க்கும் தன்மைகளினாலேயே என்று ஆராய்ச்சிகள் எடுத் தியம்புகின்றன.
இதன் அடிப்படையில் புளிக்க வைத்த உணவுப் பதார்த் தங்களும் பிசைந்த மாவிலிருந்து பெறப்பட்ட ரொட்டியும் அன்றாட உணவில் சேர்க்கப்பட்டன.
இரசாயன மாற்றங்களைக்கூட விளக்கம் கொண்டு செயற்படுத்தியிருக்கின்றனர் பெண்கள். இன்றுவரை கொங்கோ பகுதிகளில் வாழும் மக்களும் ஆபிரிக்க கிழக்குப் பகுதிகளில் வாழும் மக்களும் முழுக்க முழுக்கப் பெண்களே வைத்தியம் பார்க்க வேண்டுமென விரும்புகின்றனர்.
இவ்வாறாக, பயிர்ச்செய்கை, கால்நடை வளர்ப்பு ஆகிய பணிகளைச் சுற்றியே பெண்களின் வாழ்க்கை பின்னப்பட் டிருந்தது. இவற்றிலிருந்து உணவுகளை எடுத்து, சேமித்து, தயாரித்து, தட்டில் பரிமாறும் வரை எழுந்த தேவைகள் அனைத்தையும் தமது உழைப்பினால் பூர்த்தி செய்தனர். இவர்களின் இந்த உழைப்பின் விளைவு சிறு கைத்தொழில் களின் வளர்ச்சியாகும். இத் தொழில்களுக்கு ஆதாரமாக இருந்த நெருப்பின் தோற்றமும் அதன் உபயோகமும் கூட பெண்களுடன் தொடர்புடையதாகவிருக்கக் காண்கின்றோம்.
O
நெருப்பும் பெண்ணும்
'தீயின் மேல் தான் கொண்ட ஆளுமையின் மூலம் மனிதன் ஒரு பாரிய பெளதிக சக்தியினையும் கண்கூடான சாட்சியாக நிகழும் இரசாயன மாற்றத்தையும் தன் முழுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தான். இயற்கையில் தோன்றிய உயிரொன்று, வரலாற்றில் முதன் முதலாக,
5-س-چ

Page 43
66 () பெண்களின் சுவடுகளில்.
இயற்கையின் மிகப் பெரிய சக்தியினை இயக்கத் துணிந்தது. இந்த அதிகாரப் பிரயோகம் அதனைப் பிரயோகிப்பவனை மாற்றுவது திண்ணம். மனிதன் தன்னுடைய மானுடத்தினை உறுதிப்படுத்துவதன் மூலம் தன்னைத்தானே உருவாக் கினான்.”
பூரண மனிதர்களான ஹோமோ ஸெப்பியன்கள் உரு வாகாத நிலைமையில் இன்றைக்கு சுமார் ஐந்து லட்சம் வருஷங்களுக்கு முன்பு நெருப்பு கண்டுபிடிக்கப்பட்டு விட்டது. ஆரம்பத்தில் இது பிற விலங்குகளில் இருந்து பாதுகாப்புத் தரும் கவசமாகவும் அவற்றைத் தாக்கும் ஆயுதமாகவும் பயன்பட்டது. வெகுநீண்ட காலத்திற்குப் பின்னரே குளிருக்கு இதமேற்படுத்தவும் மற்றும் இதர பாவிப்புகளுக்கும் அது உபயோகப்படுத்தப்பட்டது.
பழங்குடிகளினது மரபுக் கதைகளிலும் புராணங்களிலும் நெருப்பின் தோற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட் டிருக்கின்றது. அநேகமானவற்றில் மனிதரல்லாதோரை மனிதராக்கியது நெருப்பே எனப் பொருள்படக் கதைகள் புனைந்திருக்கின்றனர். உதாரணமாக பசுபிக் பிராந்தியத் தைச் சேர்ந்த பப்புவான் இனத்தவரிடத்தில், பேச்சுத் தொடர் புகளோ உணர்ச்சிகளோ இன்றி விருத்தியடையாத சிந்த னையைக் கொண்ட உலகின் முதல் ஆணினதும் பெண்ணின தும் கதையொன்று பிரபலமானது. விலங்குகளைப் போல் வாழ்ந்த இவ்விருவரும் ஒருநாள் மூங்கில்களுக்கிடையே வெடித்துச் சிதறிய தீயின் நாக்குகளைக் கண்ட மாத்திரத்தே வியப்பும் பயமும் மேலிட்ட தமது முதல் ஒலிகளை எழுப்பின ராம். இதன் பின்னரே இவர்கள் நாக்குகள் கட்டறுத்து மனிதர்கள் போல் பேச ஆரம்பித்தனர் என்பார்கள்.
அத்துடன் ஏராளமான குடிகளின் கதைகளில் பெண்களே நெருப்பைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர்களாகக் கூறப்படுகிறது. பெண்களுக்குள்ளேயே நெருப்பு தங்கியிருக் கின்றதென்றும் பெண்களால் மட்டுமே நெருப்பினை உண் டாக்க முடியுமென்றும்-இவை பலவிதமாகப் புனையப்பட்டன.

சாந்தி சச்சிதானந்தம் () 87
பெண்கள் நெருப்பினை தமது தோண்டுகழியின் அந்தம், கை நகங்கள், கை விரல்கள் போன்று பலவிடங்களிலும் ஒளித்து வைத்திருக்கின்றனர் என்றும் பல கட்டுக்கதைகள் உண்டு. இன்னொரு கதையில், ஒரு கிழவிக்கு இருந்த ஆறு விரல் களில் ஆறாவது விரலில் நெருப்பினைத் தேக்கி வைத்தாள் என்று கூறுகின்றனர். இக்கதையே சிறு மாறுதலுடன், அவள் மின்னலிலிருந்து நெருப்பைப் பெற்று அதனைத் தொலைத்து விட இரண்டு குச்சிகளை உரசிப் பெற்றுக் கொண்டாள் என்று இன்னோரிடத்தில் வழங்கி வருகின்றது.
பெரும்பாலும், எல்லாக் கதைகளிலும் பெண்கள் ஆண் களுக்கு நெருப்பினை 103àpg ಅ 5ಠಾತ್ತು முழுவதும் தமதாக்கிக் கொள்ள முயன்றதாகவே சொல்லப்படுகின்றது. நியூகினி மக்கள் மொழி வழக்கில் இரு குச்சிகளால் நெருப்பை மூட்டும் செயலுக்கு வழங்கப்படும் சொல் "தாய் நெருப்புத் தருகின்றாள்' எனப் பொருள்படவுள்ளது. கிடைக்குச்சியைத் ‘த ய்' என்றும் செங்குத்துக் குச்சியை 'பிள்ளை” என்றும் அழைப்பார்கள்.
சில நூற்றாண்டுகளுக்கு முன்பு கூட பலவித நாகரிகங் களிலும் நெருப்பைக் காக்கின்றவர்கள், ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்துக்கு அதனை எடுத்துச் செல்கின்றவர்கள், புதிய இடத்தில் ஏற்றி வைத்தவர்கள் பெண்கள் என்றே அறிகின்றோம். உரோம சாம்ராஜ்ஜிய காலகட்டம் இதற்கு சிறந்த உதாரணமாகும்.
இத்தகவல்களிலிருந்து, நெருப்பினை ஏற்றவும் அதனை உபயோகிக்கவும் , பெண்களே கண்டுபிடித்திருக்கக்கூடும் எனலாம். இக்கூற்றின் உண்மைகள் எப்படியிருப்பினும் ஆரம்பகால கட்டத்தில் அதனை முற்று முழுதாக உபயோகித் தவர்கள் பெண்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. உணவு தயாரிப்பதற்கும் அதனைப் பாதுகாத்து வைப்பதற்கும் கட்டுமானமாக எரியும் நெருப்பும் அதனால் இயக்கப்பட்ட வெப்பமும் இன்றியமையாதன. புகைத்தல், வேகவைத்தல்,

Page 44
8 பெண்களின் சுவடுகளில்.
வாட்டுதல், ஆவியில் வேகவைத்தல் போன்ற சமையலின் அடிப்படைச் செயல்முறைகள் பெண்களாலேயே உருவாக்கப் பட்டன. இவற்றின் உதவி கொண்டு காய்கறிகள், மீன், இறைச்சி முதலானவற்றை எதிர்கால பாவிப்பிற்காக சேமித்து வைத்தனர். மேலும், உணவு தயாரிப்பிற்கும் பரிமாறலுக்கும் பாதுகாத்தலுக்கும் தேவைப்பட்ட உபகரணங் களும் கருவிகளும் பெண்களாலேயே செய்யப்பட்டன. நெருப்பினால் பாதிக்கப்படாத உறுதியான சமையற் பாத்திரங்களை மரத்தில் கடைந்தெடுத்துச் செய்த சாதனையை இதிலொன்றாகக் குறிப்பிடலாம்.
* அப்பெண்கள் மரக்குற்றியொன்றினை எடுத்து அதன் நடுவே நெருப்பை எரித்து ஒரு குழியினை உண்டாக்கினர். எரியும் நெருப்பு மிகையாகப் பரவ எத்தனிக்கும்போது நீரினாலோ அல்லது சேற்றினாலோ அல்லது பச்சை மரப்பட்டையினாலோ அதனைக் கட்டுப் படுத்தினர். எரிந்த சாம்பலும் கருகிய மரமும் மேலும் நெருப்பு ஊடுருவாத வகையில் தடுக்கும் நிலைமையில் மரக்குற்றியை நெருப்பிலிருந்து அகற்றி, புல்லினால் செய்யப்பட்ட ஒரு துடைப்பத்தினால் கழிவுகளைத் தட்டி அகற்றினார்கள். பின் கல்லினாலான செதுக்குக் கருவியொன்றினால் கிளறியும் சுரண்டியும் சுத்தமான மேற்பரப்பு அமையும் வரை கரித்துண்டுகளை அகற்றி யெடுப்பார்கள். இவ்வாறு மாறி மாறி எரித்தலும் சுரண்டுதலுமாக, தமக்கு வேண்டிய உருவம் வரும்வரை தொடர்ந்து செய்வர். இதன் முடிவில் பாத்திரம் உலையில் ஏற்ற உகந்த பாத்திரமாகி விடும்.”
பெண்கள் தீயினால் அழியும் மூலப்பொருளினால் தீயில் ஏற்றி வைக்கும் கலமொன்றினைச் செய்துகாட்டி விட்டனர். நீர் ஒழுகாத இப் பாத்திரங்களின் செய்முறையின் அடிப் படையில்தான் பின்னர் ஓடங்களும் மரக்கலங்களும் செய்யப் படவாரம்பித்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.

சாந்தி சச்சிதானந்தம் () 69
சூடேற்றுவதனாலும் கொதிக்க வைப்பதாலும் இயற்கை யிலேயே நச்சுத் தன்மையுள்ள உணவுகளை அதன் நச்சுத் தன்மையை அகற்றி உண்பதற்கு ஏற்றதாக மாற்றும் கலையினையும் பெண்கள் கற்றனர். உதாரணத்திற்கு நச்சுத் தன்மை அடைந்த மரவள்ளியை அச்சுக் கூடையினுள் போட்டு அமிழ்த்தி அதன் நச்சுத் தன்மையை வெளியேற்று வார்கள். எஞ்சிய களியினை சூடேற்ற அது முற்றாகச் சுத்திகரிக்கப்படுகிறது. O
கைத்தொழில்களும் பெண்களும்
உலோகங்களின் உபயோகங்கள் பரவலாக்கப்படுதற்கு முன்னர் பின்னற்தொழில், தோல் தொழில், குயத்தொழில் ஆகியவையே மனிதர்களுடைய அன்றாடத் தேவைகளுக்குரிய பாத்திர பண்டங்களையும், உடை மற்றும் கருவியுபகரணங் களையும் செய்யும் தொழில்களாயின.
தாவர மூலங்களிலிருந்து பெறப்பட்ட மரப்பட்டை, வேர், புற்கள் ஆகியவற்றிலிருந்து பின்னற்தொழிலும் அதன் மூலமாக நெய்தல் முறையும் விருத்தியடைந்தன. விலங்கு களிலிருந்து பெறப்பட்ட தோலிலிருந்து தோல் தொழில் வளர்ந்தது, மண்ணை மூலப் பொருளாகக் கொண்டு குயத் தொழில் வளர்ந்தது.
பின்னற்தொழில் : பின்னற் பொருட்கள் பெரும்பாலும் உணவுப் பதார்த்தங்களைச் சேமித்து வைக்கும் தேவை களுக்காக உபயோகிக்கப்பட்டன. பைகள், தூக்குக் கூடைகள், உணவு காயவைக்கும் தட்டுகள், தண்ணிர்ப் போத்தல்கள், அகலப்பாத்திரங்கள், தொட்டில்கள் ஆகியன பொதுவாக பின்னல் முறையில் செய்யப்பட்டனவற்றிற்கு உதாரணமாகும், ஒரு சிக்கலில்லாத தொழிலின் வெளித்

Page 45
70 () பெண்களின் சுவடுகளில்.
தோற்றத்தைப் பின்னல் வேலைகள் கொடுத்தாலும், உபயோகிக்கப்படும் மூலப்பொருளைக் கையாள வேண்டிய அறிவும் அதனைச் சுருட்டிப் பின்னி வழிப்படுத்தும் கை வண்ணமும் இதற்குத் தேவைப்பட்டது.
** மரப்பட்டைகளையும் புற்களையும் கொண்டு இந்த பழங்குடிப் பெண்கள் பின்னும் பக்குவத்தை, நோக்கும் போது, இவை இயந்திரங்களை கொண்டு கூட எந்த ஆணினி லும் செய்ய இயலாத அழகைக் காணலாம் இதற்குச் சிறந்த உதாரணம் நாம் சாதாரணமாகப் பனா மாத் தொப்பிகள் என்றழைக்கும் வைக்கோல் தொப்பிகளாகும். இவற்றிற் சிறந்தனவற்றைக் கசக்கி ஒரு மோதிரத்தினூடாகக் கூடச் செலுத்தியெடுக்க லாம்.”
என்கின்றார் ஓர் ஆய்வாளர்.
மீன், முயல் ஆகியவற்றைப் பிடிக்கும் வலைகளும் பின்னற்தொழிலில் செய்யப்பட்டன. நெருக்கமாகப் பின்னப் படும் வலைகளில் உபயோகப்பட்ட செயல்முறையே ஆடை நெய்தலுக்கு மனிதனை இட்டுச் சென்றது. ஆரம்பத்தில் பருத்தி, கம்பளி போன்ற மூலப் பொருட்களை அவர்கள் உபயோகிக்கத் தெரிந்து இருக்கவில்லை. ஒவ்வோர் இடத் திலும் ஆடை தெய்தற்குரிய தன்மை கொண்ட தாவரம்
பெறப்பட்டது.
பொலினிசியாவில் மல்பெரி மரங்களை பெண்கள், அதன் மரவுரிக்காக வளர்த்தனர். இம் மரவுரியினை அடித்து மென்மையாக்கிய பின் துணிகளாகத் த ய ர ரித் து எல்லோருக்கும் உடைகளும் பைகளும் தயாரித்தார்கள். பிலிப்பைன்ஸில் வாழை நார்களை உபயோகித்தனர். தென்னை மரங்கள் காணப்பட்ட இடங்களில் தும்புகளைப் பயன்படுத்தினர்.

சாந்தி சச்சிதானந்தம் () 71
நெய்தற் றொழிலுக்கு பின்னற்கலையிலும் பல மடங்களவு விஞ்ஞான அறிவினைப் பிரயோகிக்க வேண்டிய தேவையிருந்தது. இதற்கு பருத்தி, கம்பளி போன்ற மூலப் பொருட்களைப் பற்றிய அறிவு மட்டுமின்றி இவற்றைத் தரும் தாவரங்களையுல் விலங்குகளையும் பேணி வளர்க்கும் கலையினையும் கற்க வேண்டியிருந்தது. ஆயினும் இது கற்காலத்தின் தலைக்கட்டத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டு விட்டது குறிப்பிடத்தக்கது. மேலும், நெய்தற் தொழில் தறிகளின் கண்டுபிடிப்புக்கு வழி வகுத்தது.
*மனிதனுடைய சாமர்த்தியங்களின் பெரும் வெற்றி களிலொன்று தறி எனலாம். இது சிக்கலானதொரு இயந்திரம். இதன் உபயோகமோ அதைவிடச் சிக்க லானது. இதனைக் கண்டு பிடித்தவர் யார் என்று எமக்குத் தெரியாது. ஆனால் மனித அறிவைப் பெருக்கு வதில் அவர்களுடைய பங்களிப்பு பெருமளவு இருந்தது எனக் கூறலாம்.’ இவ்வாறு ஓர் ஆய்வு நூலில் கூறப்பட்டுள்ளது. தறி களைக் கண்டுபிடித்தவர்களை நிச்சயமாகத் தெரியா திருப்பினும் கூட அவர்கள் பெண்களாக இருந்திருக்கக் கூடுமென நாம் அனுமானிக்க இடமுண்டு. பின்னல் வேலை களைச் செய்தவர்களும் ஆரம்பத்தில் ஆடைகளை நெய்தவர் களும் பெண்கள். இந்நிலையில் ஆண்கள் திடீரெனப் பிரவேசித்து தறியினைக் கண்டுபிடித்தனர் என்று கூறுவது நம்ப இயலாதது.
நாளும் பொழுதும் தொடர்ந்த உழைப்பின் மூலமும் கடந்தகால அனுபவங்களின் மூலமும் பலவிதமான பரிசோதனைகளினதும் தவறுகளினதும் விளைவாக, பெண் களினால் சிறிது சிறிதாக உருவாக்கப்பட்ட இயந்திரமாகத் தான் இது இருந்திருக்க வேண்டும்.
ஆதிவாசிகளின் தோல் தொழில் முறைகளின் அடிப் படையினை அறிவதற்கு ஓர் உதாரணமாக, அமெரிக்காவின்

Page 46
72 0 பெண்களின்சுவடுகளில்.
ஓனாக் குடிப் பெண்கள் தோலைப் பதனிடும் முறையினை நோக்குவோம்.
'ஓர் ஆண் ஏதேனும் விலங்கின் தோலை உரித்துத் தந்தவுடன் அவன் மனைவி அதன் உரோமப் பக்கம் கீழே பட விரித்துக் காய வைப்பாள். சில நாட்கள் காய்ந்தபின் அதன்மேல் முழுந்தாளிட்டுக் குனிந்து ஒரு பளிங்கு முனையால் கொழுப்புப் படலங்களைச் சுரண்டி எடுப்பாள். பின்பு, அத்தோல் மென்மையாக்கப்படும் வரை தோலின் பாகங்களைக் கைகளினால் பிசைந்து சில வேளைகளில் பல்லினாலும் கடித்துத் தயார்படுத்து வாள். இன்னும் உரோமம் அகற்றப்பட வேண்டுமெனில் திரும்ப பளிங்குக் கருவியினால் சுரண்டியெடுப்பாள்.”
ஆசியாவிலும் ஐரோப்பாவிலும் ஆரியர்கள் என்றழைக்கப் பட்ட குழுக்கள் வாழ்ந்த காலத்தின் சுவடுகளில் இச் சுரண்டி கள் அபரிமிதமாகக் கண்டெடுக்கப்பட்டன. 18ஆம் நூற் றாண்டு அமெரிக்க இந்தியர்கள் உடுத்தது போலவே அன்றும் இக்குழுக்கள் தோலினாலான ஆடைகளைப் புனைந்தனர். அத்துடன் ஆரம்ப கற்கால ஐரோப்பாவில் காணப்பட்ட சுரண்டும் கற்களுக்கு ஒத்ததாகவே தென்னாப்பிரிக்காவிலும் கண்டெடுக்கப்பட்டவை இருந்தன. அங்குள்ள சமவெளி வாசிகள் இவை பெண்கள் உபயோகித்தவை என வாக்கு
மூலமும் கொடுத்துள்ளனர்.
சுவிட்சர்லாந்து மற்றும் இத்தாலியிலும் இவ்வாறு பதப் படுத்தப்பட்ட கற்காலத் தோல் துண்டுகள் கிடைக்கப் பெற் றுள்ளன. மொன்டானா இந்தியர்கள் மத்தியில் பெண்கள் இன்றும் வழிவழியே வந்த இந்தக் கலையினைத் தம் அன்னை யரிடமிருந்து கற்றுச் செயற்படுத்துவதால் அதனை அழியாது காத்து வருகின்றனர். இன்றும் எஸ்கிமோப் பெண்கள் கற் காலத்தில் உபயோகிக்கப்பட்ட அதேயுருவம் கொண்ட சுரண்டும் கருவியினை கலைவண்ணத்துடன் அழகுபடுத்தப் பட்ட எலும்புகளில் பொருத்தி உபயோகிக்கின்றனர்.

சாந்தி சச்சிதானந்தம் () 73
கல்லினாலான சுரண்டிகளும் தோண்டு கழிகளுமே மனித குலத்தின் ஆதிமுதற் கருவிகளாகும். உலகின் முதற் கருவி களைக் கண்டுபிடித்து உபயோகித்து உழைப்பிற்கு வழிகாட்டி யாகத் திகழ்ந்தவர்கள் பெண்கள்.
தோலைப் பதனிடுதல் அதிலொருவித இரசாயன மாற் றத்தினைக் கொண்டு வருகிறது. இதனால் பெண்களுக்கு அந்த விஞ்ஞான விளக்கமும் தெரிய வேண்டியிருந்தது. ஒவ்வொரு விலங்கினதும் தோலின் தன்மையை அறிந்திருப் பதோடு மட்டுமல்லாது எந்தத் தோலை எப்படி உபயோகிக்க லாம் என்பது பற்றியும் தெளிவாக விளக்கம் கொண் டிருந்தனர்.
கூடாரம், கவசம், படகு, காலணிகள், தொட்டில் போன்றவற்றிற்கு கடினமான தோலினையும் மேலணி, சால்வை, சட்டை போன்ற ஆடை வகைகளுக்கு மெல்லிய தோலினையும் போத்தல்கள், உணவுப் பாதுகாப்பு பெட்டகங் கள் போன்றவற்றிற்கு இடைநிலையிலுள்ள தோலினையும் ச.யோகித்தனர். இவர்கள் தயாரித்த கேடயங்கள், அம்பு துளையிடாதவாறு இருந்தது மட்டுமின்றி சில சமயங்களில் துப்பாக்கி ரவைகள் கூட ஊடுருவ முடியாதவாறு இருந்தது.
பூனை, நரி, ஓநாய், சகலவகையான அணில்கள், சகல வகையான திமிங்கிலங்கள், முயல், மான், மரை, ஆடு, எருமை வகைகள், கரடி என இவ்வாறு இவர்கள் தோல் பயன்படுத்தப் படாத விலங்குகளே இருக்கவில்லை எனலாம். எஸ்கிமோப் பெண்கள் இத்தோல் வகைகளைப் பதப்படுத்த நீரிருக்கும் பெரிய கொள்கலத்தில் அமிழ்த்தி ஊறவைத்தனர். தோலை இன்னும் கடினமாக்க வேண்டுமெனில் தணலில் புகைத்தார் கள். இறுதியாக விதம் விதமான நிறங்களில் கோலங்களிட்டு அழகுபடுத்தினர். இம்மாதிரியான கலை வெளிப்பாடுகள் தோல் தொழிலிலும்விட மட்பாண்டத் தொழிலில்தான் தம் சிகரத்தை எட்டின. O

Page 47
74 L பெண்களின் சுவடுகளில்.
மண்பானைகளில் இருந்து மாளிகை வரை
புராதன கிரேக்க சமூகங்களில் வாழ்ந்த பெண்கள் மண் பானைகளை உருவாக்கிய விதத்தினை அங்கு சென்று ஆய்வு செய்தவர்கள் விவரிக்கின்றனர் :
"அவர்களுக்கோ இது ஒரு புதிய வஸ்துவைப் படைக்குந் தொழிலாக, பெண்ணுக்கு மட்டும் தெரிந்த மர்மமாக இருந்தது. இது நடைபெறுந் தருணத்தில் ஓர் ஆண் கூட பார்வையாளனாக இருக்க அனுமதிக்கப் படவில்லை. ஒருத்தி ஓர் அச்சினை உருவாக்கியவுடன் 'நான் படைத்த உயிரைப் பாருங்கள்’ எனக் கூறி கூடி யிருக்கும் மற்றவர்கள் பார்த்து இரசிக்கும் வண்ணம் அதனை உயரப் பிடித்தாள். இதனை வெய்யிலில் காய வைத்த பின்னர் தன் செதுக்கும் கருவியினால் தட்டிப் பார்த்தாள். அது கணிரென்ற ஓசையை எழுப்பியது. இதுவே அந்தப் பிராணியின் குரலாகக் கருதப்பட்டது. பின்பு இந்தப் பாத்திரத்தைச் சூளையினுள் இடும்போது அதன் பக்கத்தில் கொஞ்சம் உணவு வைத்த ஸ் . இந்த உணவு மட்பாண்டப் பிராணிக்கு விசேஷ படைப்பாகக் கருதினர். பதமாகச் செய்யப்படாத காரணத்தினால் பாத்திரம் உள்ளே வெடித்ததால் ஏற்பட்ட ஒசையினை அந்தப் பிராணி கலத்தை விட்டு வெளியேறு ஒசையாக விளங்கிக் கொண்டனர். இதைப் பற்றி பார்வையாளர்கள் ஏதேனும் சந்தேகங்கள் கிளப்பினால், வெடித்த கலம் திரும்ப ஒருபோதும் கணிரென்ற ஒசையை எழுப்பாத 'விந்தை" செய்து காட்டி அவ்வுண்மை சந்தேகமற நிறுவப்பட்டது. இந்த நம்பிக்கைகளினால், தம் வழ மைக்கு மாறாக, குயத்தொழிலில் ஈடுபடும்போது மட்டும் இவர்கள் பாடுவது கிடையாது. பாண்டத்துக்குள் இருக் கும் பிராணிகள் எதிர்ப்பாட்டு பாடப்போய் அவற்றை உடைத்து விடுமோ என்ற பயமே காரணம். ஆதலால் இவர்களுக்கு செய்யப்பட்டது ஓர் உயிரற்ற ஜடப்பொருள்

சாந்தி சச்சிதானந்தம் 75
என்றல்லாது, தனக்கென ஓர் உணர்வினையும் அதை எடுத்தியம்பும் குரலினையும் உடைய உயிராகவே தோற்ற மளித்தது.”
ஆபிரிக்காவின் மாய்து இனப் பெண்களின் மண்கிண்ணங் களில் செய்யப்பட்ட பல வர்ணக் கோலங்களில் இதுவரை ஐம்பது வித்தியாசமான அமைப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள் ளன. இன்றும் இதsன் செய்முறைகளைப் பற்றிய விவரங்கள்
மூத்த பெண்களுக்கே தெரிந்ததாக இருக்கின்றது.
எத்தியோப்பிய வில் மிகச் சிக்கலான மட்பாண்டக் கோலங்கள் குடும்பத்துக்குக் குடும்பம் வேறுபட்டு, தாயிட மிருந்து மிகளுக்குக் கற்றுத் தரப்படும் விசேஷ கலையாகத் தொடர்கின்றது. கயானாவில் பெண்கள் மட்பாண்டங்களில் மட்டுமின்றி வீட்டுச் சுவர்கள், தூண்கள் ஆகியவற்றினையும் வண்ணக் கோலங்களின: ல் அழகுபடுத்தினார்கள். உலகின் முதல் அலங்கார ஓவியர்களாக மிளிர்ந்தவர்களும் பெண்கள் தான் என இத்தருணத்தில் குறிப்பிட வேண்டும். பெண்கள் ஓவியக் கலைகளில் ஈடுபட்டதில் ஆச்சரியமில்லை எனப் பலர் இன்று கருதலாய். ஆனால் கட்டிடக் கலை நிபுணர்களாகவும் பொறியியலt எார்களாகவும் அவ்வக் கலைகளிலும் வழிகாட்டி களாகத் திகழ்ந்தனரென்பது நம்முள் எத்தனை பேருக்குத் தெரியும்?
கட்டிடக்கல்ேல; உணவு தானியங்களைப் பாதுகாத்துச் சேமித்து வைக்கும் பொருட்டு கட்டியெழுப்பப்பட்ட அமைப்பு களே அதியும் வீடுகளையும் விட காலத்தால் முதன்மை யானவை. இக்கருத்து, ஆதிமனிதர்களின் முதல் உறைவிடங் கள் உணவு சேகரித்து வைக்கும் அமைப்புகளின் மறுபிம்பங் களாகக் காணப்பட்ட தரவுகளிலிருந்து ஸ்திரப்படுத்தப்படு கின்றது.
உணவுகளைப் பாதுகாக்க விழைந்த பெண்கள் அதற் குரிய அமைப்புகளை அந்தந்த சுவாத்திய சூழ்நிலைக்கேற்ப

Page 48
76 () பெண்களின் சுவடுகளில்.
கட்டியது சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. வரண்ட பிரதேசங் களில் நிலங்களில் குழி தோண்டி நட்டு வைக்கோலினால் வேய்ந்தனர். ஈரளிப்பான சதுப்பு நிலங்களில் நிலத்துக்குச் சிலவடிகளுக்கு மேல் தூண்களில் நிறுத்தப்பட்ட அமைப்பு களைக் கட்டினர். ஆபிரிக்காவில், சோளம் சேகரித்து வைக்கும் பொருட்டு பெண்களினால் எழுப்பப்பட்ட கட்டமைப் புகளில் பின்னைய இஸ்லாமிய ஸ்தூபிகளின் வடிவின் ஆரம்ப ரூபத்தைக் காணலாம்.
அவுஸ்திரேலியப் பழங்குடிகள், அந்தமான் வாசிகள், பட்டகோனியர்கள், பொட்டோ கியூடோஸ் வாசிகள் ஆகியவர் களின் குடிசைகள் முற்று முழுதாகப் பெண்களினாலேயே கட்டப்பட்டு பராமரிக்கப்படும் உறைவிடங்களாகும். இதே போன்றே அமெரிக்க இந்தியர்களின் தோல் கூடாரங்களும், அரேபிய நாடோடியின் ஒட்டக உரோமக் கூடாரங்களும், மத்திய ஆசியக் குடிகளின் யுர்டா ஒதுங்குமிடங்களும், ஒமாஹா மற்றும் செரி மக்களின் களிமண் வீடுகளும் பெண்க ளாலேயே முற்றுமாகச் செய்யப்பட்டன. இவற்றுள் பல ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்துக்குக் கொண்டு செல்லக் கூடிய அமைப்புகளாக இருந்தாலும் மிகவும் விரிவான திட்டங் களைக் கொண்டு கட்டப்பட்டதாகக் காணப்பட்டன.
யுர்டா உறைவிடங்கள் விஸ்தாரமான வீடுகளைப் போன் றவை. இவை வட்ட வடிவில் நாட்டப்பட்ட கழிகளையும் அவற்றை ஸ்திரப்படுத்த இடையில் மூலைவிட்டங்களாக எதிர்த் திசைகளில் ஒடும் மரக்கட்டைகளையும் கொண்ட சட்டத்தினை உடையன. கூரை கம்பளி போன்ற தடித்த துணியினால் மூடப்பட்டு ஒரு ஸ்தூபி போன்று காட்சியளித்தா லும் உள்ளே பலவறைகளாகப் பிரிக்கப்படக்கூடியதாக
இருந்தது.
இக்குடிகளின் மொழியைக் கற்றுக் கொண்டிருந்த ஆய்வாளரொருவர் இவ்வமைப்பின் பாகங்களின் பெயர்களை அங்கிருந்த ஆண்களிடம் வினவ **இது பெண்களின் வேலை

சாந்தி சச்சிதானந்தம் () 77
யாதலால் எமக்கு ஒன்றும் தெரியாது’ என அவர்கள் கையை விரித்து விட்டனர். ஆபிரிக்காவில் ஹோபி குடிகள் மத்தியில் பெண்களே கட்டிடத்தொழில் முழுவதும் பொறுப்பெடுக்கும் அதேவேளை பக்கத்திலுள்ள கியூனிக் குடிகள் மத்தியில் கடின மான மரவேலைகளில் மட்டும் ஆண்கள் பங்கு கொள்வதைக் காணலாம்.
மெக்ஸிகோ அரிசோனாப் பிரதேசங்களில் வாழும் இந்தியர்கள் முன்பு பெண்களினால் நிர்மாணிக்கப்பட்ட ஊர்களை இன்றும் நினைவு கூருகின்றனர். அந்த ஊர் களில் வீடுகள் உப்பரிகை உள்ள பல மாடிக் கட்டடங்களாக இருந்தன. சாய்ந்த வரிசையிலமைந்த இக்கட்டடங்களின் மேல் மாடிகளுக்கு ஏணிகளினாலோ வெளிப்புறத்திலமைந்த படிக்கட்டுகளினாலோ சென்றடையலாம். உள் முற்றங்களும் சாலைகளும் சந்தை மையங்களும் பொதுக்கட்டடங்களும் இவ்வூரின் மற்றைய அங்கங்களாகவிருந்தன.
பொதுக்கட்டடங்கள் வட்ட வடிவமாக வழிபாட்டிடங் களாகவும் கூடுமடங்களாகவும் உபயோகிக்கப்பட்டன. இவையத்தனையும் பெண்களாலேயே ஸ்தாபிக்கப் பெற்றன. இந்த மக்கள் மத்தியில் முதன் முதலாகச் சென்று குடியேறிய ஸ்பானியப் போதகர்கள் தங்களுக்காகக் கட்டப்பட்ட மாதா கோவில்களும் கன்னியாஸ்திரி மடங்களும் அழகிற் சிறந்தவை யாக இருந்தது மட்டுமின்றி பெண்களாலேயே முழுக்க முழுக்க நிர்மாணிக்கப்பட்டவையாக இருந்தது பற்றி பெரிதும் ஆச்சரியப்பட்டனர். இவர்களில் ஒரு பாதிரியார் ஐரோப்பாவிலிருந்த தன் நண்பர்களுக்கு எழுதிய கடிதம் ஒன்றின் பகுதியில் கூறப்பட்டதாவது :
**இங்கு கட்டடங்களெல்லாம் பெண்களாலேயே கட்டப்படுகின்றன. ...நாங்கள் ஒருமுறை எமதுவீட்டு வெளிச்சுவரினைக் கட்டுவதற்கென கற்களை அடுக்க ஒர் ஆணினை வேலைக்கமர்த்தியபோது பாவம், அவனைச் சுற்றிப் பெண்களும் சிறுவர்களுமாய் ஒரே

Page 49
78 () பெண்களின் சுவடுகளில்.
கேலியும் கலாட்டாவுமாகப் போய் விட்டது. ஓர் ஆண் கட்டடவேலை ஏதாவதொன்றில் ஈடுபடுவது அவ்வளவு அபத்தமாகத் தோன்றியதால் அவனைப் பரிகாசம் பண்ணிச் சிரித்துக் கொண்டிருந்தார்கள்.”
சுமைதாங்கிகள் - ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்துக்குச் சுமைகளைத் தூக்கி செல்லும் வேலைகூடப் பெணகளுடனே ஆரம்பமாகியது. இந்தக் காலகட்டத்திலிருந்து 6T is தனையோ நூற்றாண்டுகளுக்குப் பின்னரே அநாகரிக நிலை யின் ஆரம்பக் கட்டத்தில்தான் விலங்குகள் பொதி சுமக்கும் வேலைக்குப் பழக்கப்பட்டன. அதுவரை பெண்களே இதில் தொடர்ந்து ஈடுபட்டனர். அறிவையும் கைவ விண்ணத்தினை யும் மட்டுமல்லாது தமது உடல் வலிமையையும் பிரயோ கித்து அன்றாட தொழில்களில் பெண்கள் ஈடுபட்டிருக் கின்றனர்.
புராதன வாழ்க்கை முறையில் தினந்தோறும் நீர், விறகு, உணவு என்பவற்றைச் சுமப்பவளாக மட்டுமின்றி குழுக்கள் இடம் விட்டு இடம் பெயரும் வேளைகளில் ஒரு வீட்டுப் பொருட்களைத் தூக்கிச் செல்பவளும் அவளாகவேயிருந் திருக்கின்றாள். தமது கைத்தொழில்களுக்குத் தேவையான மூலப் பொருட்களையும் தூர விடங்களிலிருந்து துரக்கி வந்த வர்கள் பெண்கள்.
சிறு வயது முதலே பாரம் சுமக்கப் பழக்கப்பட்டு விடு கிறார்கள். தன் குழந்தையை நெஞ்சோடணைத்துச் செல்லும் வேளைகளிலும் ஒரு கூடை உணவினையும் ஒரு கட்டு விறகினையும் முதுகில் காவிச் செல்லும் காட்சி நியூகினிப் பெண்கள் மத்தியில் சர்வசாதாரணமாகும். கிழக்கா பிரிக்கக் குடிகளில் இருபது கிலோ ஒரு ஆணினால் சுமக்கக் கூடிய அதிகபட்ச எடையாக இருந்தது, ஆனால் அவர் களின் பெண்களோ 5, 10 மைல் தொலைவிற்கு ஐம்பது கிலோ எடை விறகு சுமந்து வருவது காணப்பட்டது. இந்தியாவிலும் இவ்வாறு 10 மைல் தொலைவிலிருந்து
 
 
 
 
 

சாந்தி சச்சிதானந்தம் () 79
நீரும் விறகும் பெண்கள் சுமந்து வருவதை இன்றும் காண லாம். அஸ்ஸாமிலிருக்கும் காசி (Khasi) பெண்கள் இதற்கு
குறிப்பிடத்தக்க ஓர் உதாரணமாகும் ,
இத்தகைய உழைப்பினால் ஆதிவாசிப் பெண்களின் உடலமைப்பு ஆண்களிலும் விட நன்கு விருத்தியடைந் திருந்தது. தாம் ஆய்வுக்கெடுத்துக் கொண்ட பகுதிகளில் பெண்களைப் பற்றி ஆய்வாளர்கள் தந்த வர்ணனைகளின் பகுதிகளைக் கீழே காணலாம் :
கொங்கோப் பிரதேசத்திலுள்ள அடொம்பிகள் மத்தியில் 'பெண்கள் ஆண்களிலும் வலிமையானவர்களாகவும் புஷ்டி யான வளர்ச்சியுடையவர்களாகவும் இருந்தனர்.” அவtராக் குடிகளில் ‘ஆண்கள் பெண்களைப் போன்ற பெரிய வளர்ச்சி யைக் கொண்டிருக்கவில்லை.”
அஷாந்திப் பெண்கள் 'ஆண்களை விட வலிமையான வர்கள்’.
ஆபிரிக்காவின் டவழிலாங்கா, வடெய்டா, சோமாலிப் பெண்கள் 'மெலிந்து காணப்படும் ஆண்களின் முன் புஜ பலமும் தசைநார்க்கட்டு வளர்ச்சியும் அதிகமுள்ளவர்களாக
இருந்தனர்.”
* கனடிய இந்தியப் பெண்கள் அசாதாரண வலிமையும் சக்தியும் கொண்டவர்கள். அங்குள்ள ஒரு பெண் இரு ஆண்கள் தூக்கும் பளுவிற்கு சமமான அளவு பளுவினைச் சுமப்பாள் எனத் தெரிவிக்கப்பட்டது.
'ஆப்கானிஸ்தான் மத்தியகிழக்கு நாடுகளில் பெண்கள் ஆண்களளவு உயரமும் வலிமையும் கொண்டவர்கள்.”
அன்றைய பெண்கள் வீட்டிலும் வெளியிலும் உழைப்பி லீடுபட்டு வந்தமையால் அவர்கள் தொழிலுக்குரிய கருவி யுபகரணங்களும் மூலப் பொருட்களும் அவர்கள் சொந்த மாகவே இருந்தன. வீடும் வீட்டுச் சாமான்களும் அவர்கள்

Page 50
80 () பெண்களின் சுவடுகளில்.
பொறுப்பிலேயே இருந்தன. இக் காரணங்களினாலே அவற் றைச் சுமந்து ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்திற்குச் செல் வதும் கூடப் பெண்களுடைய வேலையாகக் கருதப்பட்டிருக் கலாம். இதில் குறிப்பிடப்பட வேண்டிய அம்சம் யாதெனில் ஆதிமனிதருடைய அன்றாட வாழ்க்கையில் சுமை தூக்குவது மிக அத்தியாவசியமான தொழிலாக இருந்தது. அன்றாட அவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்யுமுகமாக நீர், விறகு ஆகியவற்றைக் கொண்டு வரவேண்டி இருந்தது. கைத் தொழில் வளர்ச்சியுற அதற்குத் தேவையான மூலப் பொருட் களை அவை எங்கெங்கு கிடைக்கின்றனவோ அங்கங்கிருந் தெல்லாம் கொண்டு வரவேண்டியிருந்தது. சுவாத்தியச் சூழ்நிலை பொருட்டும் புதுமேய்ச்சல் தரைகளை நோக்கியும் குழு இடம்பெயரும் போதும் அதுநாள் வரை திரட்டிய செல்வங்களை சிந்தாமல் சிதறாமல் எடுத்துப் புது இடம் போகவேண்டி இருந்தது. பெண்களாகிய சுமைதாங்கி களின்றி இவற்றை யார் செய்திருப்பர் ?
ஓர் உடைந்த மரக்குச்சியை வைத்தேனும் கூர்மை யாக்கப்பட்ட சிறிய கல்லை வைத்தேனும் செய்யப்படும் மிக எளிமையான உபகரணம் கூட நீண்டகால அனுபவங்களின் பயனாக உருவாக்கப்பட்டதே. இயற்கையில் அவதானித்தவை களையும், மேற்கொண்ட செய்முறைகளையும், அதில் நேர்ந்த தவறுகளையும் நினைவில் கொண்டு ஒருவருக் கொருவர் ஒப்பிடுவதன் மூலமே இவ்வனுபவங்கள் பெறப் படுகின்றன. இவ்வாறு சமூகத்தின் சகல அங்கத்தினருடைய அறிவும் சதா பயன்படுத்தப்படுகின்றன.
அன்றைய காலகட்டத்தில் கைத்தொழில்களின் உறை விடமாகத் திகழ்ந்தது வீடு. இது, இன்று நாம் அர்த்தம் கற்பித்துக் கொள்ளும் தனி நபர்களின் வீடல்ல. இன்றைய ஆபிரிக்கக் கிராமங்களில்கூட ஒரு குடும்பத்தலைவி ஒரு கூடை பின்னவோ பானை செய்யவோ தன்வீட்டின் நான்கு சுவர்களுக்குள் முடங்குவதில்லை. கிராமத்தின் சகல பெண் களும் ஒன்றாகச் சேர்ந்து பேசிச் சிரித்து ஒருவருக்கொருவர்

சாந்தி சச்சிதானந்தம் 0 81
ஒத்தாசை புரிந்துதான் இவ்வேலையை மேற்கொள்வார்கள். அவர்கள் வீடு ஒரு சமூக மைய ஸ்தலமாகத் தொழிற்பட்டது. பெண்களின் தொழில்களின் தன்மை அவர்கள் ஒருவரோ டொருவர் இடையறாது பேசி வாழும் வாழ்க்கைக்கு வழி வகுத்தது. தொழில் ரீதியான தமது அனுபவங்களைத் திரும்பத் திரும்பத் தம்முள் பகிர்ந்து கொண்டனர். இதன் பலனாக அத்தொழிலை மேற்கொள்ள வேண்டிய பரிபாஷை யையும் உருவாக்கினர்.
ஆனால் ஆண்களோ வேட்டையாடுதல், மீன்பிடித்தல் போன்ற தொழில்களிலேயே ஈடுபட்டதனால் முக்கியமாகத் தனிமையில்தான் செயற்பட்டார்கள். கூட்டாகச் செயற்பட்ட போதும் அமைதியாக இருக்கவே நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். இவ்வாறாக மொழிவளர்ச்சிக்கான அஸ்திவாரங்களாகத் திகழ்ந்ததும் பெண்கள்தாம்.
மெக்ஸிகோ மக்கள் மத்தியில் 'பெண்களே மிகச்சிறந்த அகராதிகள்” என்னும் பழமொழி இன்றும் வழங்குகின்றது. ஐரோப்பாவில், மறுமலர்ச்சி காலந்தொட்டு ஏற்பட்ட முறையான கல்விமுறை அங்குள்ள பெண்களுக்கு நிரா கரிக்கப்பட்டிருந்த போதிலும் சிறந்த பேச்சுவல்லமை படைத்த வர்களாகவும் கடிதம் வரைவதில் தேர்ந்தவர்களாகவும் அவர்களே இருந்திருக்கின்றனர். பிரான்சில் லூயி மன்னர் களின் காலத்தில் அரண்மனை வாழ்வு பற்றியும் அங்கு நடந்த அரசியல் தில்லுமுல்லுகளைப் பற்றியும் அங்கு வாழ்ந்த பெண்கள் எழுதிய கடிதங்களே பெரும்பாலும் சான்று பகருகின்றன.
மனிதகுலம் கற்றவையெல்லாம், மொழி வளர்ச்சியின்றி
விரிவடைந்திருக்க முடியாது. தமது அனுபவங்களைப்
பகிர்ந்து கொள்ளவும் அடுத்த சந்ததியினருக்கு அதனை
எடுத்துக் கூறவும் மொழி அவசியம். உழைப்பின் விளைவே
மொழி வளர்ச்சியெனினும் மொழிவளர்ச்சிதான் உழைப்பின்
6-س-چے

Page 51
82 () பெண்களின் சுவடுகளில்.
தன்மையில் பெரும் பண்புநிலை மாற்றத்தினைக் கொணர்ந் தது என்பதில் சந்தேகமில்லை. இந்தச் சாதனைக்கும் காரணகர்த்தாக்கள் பெண்களேயாவர். O
பெண் குலத்தின் பின்னைய வரலாறு
தாய்வழிச் சமூகங்களில் பெண்களின் சமூகப் பொருளா தார வாழ்முறைகளின் பல்வேறு அம்சங்களையும் இதுவரை பார்த்தோம்.
**ஆதிகாலப் பெண், பெண் விலங்குகளைப் போலவே ஆணைக்காட்டிலும் கூடிய விவேகமுள்ளவளாகவும் சாமர்த் தியம் மிகுந்தவளாகவும் எச்சரிக்கை உடையவளாகவும் இருந்தாள். இவளோடு ஒப்பிட்டுப் பார்த்தால் ஆண் மந்த மான போக்குடையவனாகவும் விவேகமற்றவனாகவும் காணப் பட்டான். தாய்மைப்பேறு இப்பெண்ணிற்கு சுமத்திய கடமைகள் ஆக்கபூர்வமான பணி செய்யும் திறமையினையும் அதற்குரிய விழிப்புணர்வையும் அவளுக்கு அளித்தன. இத் தன்மைகள் ஆணின் வளர்ச்சிக்கு அப்பாற்பட்டவையாக இருந்தன. அன்றைய ஆண்கள் ஆலோசனைகளுக்காக என்றும் பெண்களையே நாடும் வழக்கம் கொண்டதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது?’ என்று கேட்கிறார் றொபேட் பிறிஃவோல்ட் என்னும் அறிஞர்.
இத்தனை சிறப்புமிக்க பெண்குலத்தின் பின்னைய வரலாறு எப்படி அமைந்தது?
எங்கெல்ஸ் முதன் முதலாக தன் 'குடும்பம், தனிச் சொத்து, அரசு” என்னும் நூலில் பெண்களின் நிலை பற்றி விவாதித்த போது அக்காலக்கட்டத்தில் கிடைக்கப்பெற்ற மானிடவியற் சான்றுகளையே உபயோகித்தார். அதன்படி

சாந்தி சச்சிதானந்தம் 83
இயல்பாகவே பெண்களுக்கும் ஆண்களுக்கும் வீட்டுவேன ல, வெளிவேலை என்னும் இருநிலைகளில் உழைப்புப் பிரி வினை ஏற்பட்டதே ஆணின் அடக்கு முறையின் ஆரம்பம் என்றார்.
அநாகரிக யுகத்தில் விவசாயமும் கால்நடை வளர்ப்பும் விருத்தியடைய இவை தந்த உபரி உற்பத்தியினைத் தம் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்ததனால் ஆண்கள் அதிகாரம் பெற்றனர் என விளக்கப்பட்டது. ஆயினும், இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மானிடவியலாளர்கள் செய்த ஆராய்ச்சிகள், பெண்கள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக சமூகத்தின் எல்லா ஆக்கபூர்வமான தொழில் களிலும் ஈடுபட்டு வந்திருக்கின்றார்கள் எனத் தெளிவு படுத்துகின்றன. அத்துடன் விவசாயம் விருத்தி அடைந்து பல நூற்றாண்டுகளாகவே பெண்கள் தலைமை ஸ்தானத்தில் விளங்கிய சமூகங்களும் கண்டுபிடிக்கப்பட்டன.
எல்லோரையும் ஆரம்பத்தில் குழப்பமடையச் செய்த விடயம் என்னவெனில், புராதன சமூகங்களெல்லாம் தாய் வழிச் சமூகங்களிலிருந்து தந்தையுடைமைச் சமுதாயத்திற்கு வளர்ச்சியுற்றவையாகிலும், எல்லா சந்தர்ப்பங்களிலும் அவை தந்தையுடைமை சமுதாயத்தின் சகல தன்மைகளையும் கொண்டிருப்பவையாக மாறவில்லை. ஆணாதிக்கம் முற்றாக வேரூன்றி பெரு விருட்சமாக வளர்ந்திருந்தாலும் பல சமூகங்கள் இன்னும் தாய்வழி உறவுமுறைகளைப் பேணிக் கொண்டும் தாயினை உள்ளிட்ட (matri local) வாழ்க்கை முறையினையுமே பின்பற்றிக் கொண்டிருந்தன. அப்படி யாயின் ஒரு முக்கியமான கேள்வி எழுகின்றது. மனிதகுல வரலாற்றின் எந்தக் காலகட்டத்தில் ஆணாதிக்கம் உரு வானது என்பதேயாகும். பெண்களே ஆரம்பம் முதல் எல்லா ஆக்கவேலைகளிலும் ஈடுபட்டது உண்மையெனில் அவர்கள் ஏன் தங்களுடைய ஸ்தானத்தை விட்டுக் கொடுத்தனர்?

Page 52
84 ) பெண்களின் சுவடுகளில்.
பெண்கள் விவசாயத்திலும் பயிர்ச்செய்கையிலும் ஈடு பட்டிருந்த கட்டத்தில் அவர்கள் இன்னும் காட்டுமிராண்டி யுகத்தில் வளர்ச்சி பெற்ற குலக்குழுக்களின் அமைப்பின் சட்டதிட்டங்களுடன்தான் வாழ்ந்தனர். உபரி உற்பத்தி அதிகரித்த போதிலும் சமத்துவ அமைப்பினைக் கொண்ட அச் சமூகங்கள் ஓரளவுக்கு மேல் மாறவில்லை. தனியுடைமை பரவலாக்கப்படும் வேளையில் சமூகத்தில் சில வரையறை களுக்குட்பட்ட வகையில் பொருளாதார ரீதியாக வெவ் வேறு நிலைப்படிகளில் வாழ்ந்த குழுக்கள் இருந்திருக்கலாம்.
இவற்றைத் திட்டமாக வரையறுக்கப்பட்ட வர்க்கங்கள் என்று கூறுவதற்கில்லை. என்று இச்சமூகங்களில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள், பரிவர்த்தனைக்காக என்று உற் பத்தி செய்யப்பட ஆரம்பிக்கப்பட்டனவோ அன்றுதான் ஒரு புரட்சிகரமான மாற்றம் ஏற்பட்டது.
பண்டமாற்று வழக்கம் மனிதனுக்கு முதன் முதலாக இலாபம் எனுமொன்றைக் கொடுத்தது. இலாபத்தினை டைமை கொண்டவர்கள் அதனை மென்மேலும் பெருக் கவே முயற்சி செய்தனர். இங்குதான் உழைப்பு தனது முக்கியத்துவத்தினை முதல்தடவையாக மனிதனுக்கு உணர்த்
திற்று.
உழைப்புத்தான் இலாபத்தைப் பெருக்கும் முன்னோடி யான காரணி. ஆகவே தங்களுடைய உற்பத்தியினை மற்றவர்களைக் கொண்டு செய்ய முற்பட்டனர் மனிதர். தமக்கொரு பயனுமின்றி அடுத்தவர் இலாபம் பெற உழைக்க முன்வருபவர் யாவர்? அவர்கள்தாம் அடிமைகள். கடந்த காலத்தில் தலைக்குத் தலை வாங்குவதற்காக நடத்தப்பட்ட போர்கள் காலப்போக்கில் கைதிகளை இட்டு வருவதற்காக செய்யப்படவாரம்பித்தன. இக் கைதிகளின் உழைப்பால் ஈட்டிய இலாபம் பன்மடங்காயிற்று.

சாந்தி சச்சிதானந்தம் 0 85
இந்த முக்கிய காரணத்தினால் இக்கால கட்டத்தில் போர் ஸ்தாபனங்கள் சமூகத்தில் மதிப்பிற்குரிய அதியுயர்ந்த ஸ்தானத்தை வகிக்கத் தொடங்கின. இவற்றை முற்று முழுதாக நிர்வகித்தவர்கள் ஆண்களேயாதலால் அவர் களுடய அதிகாரத்தின் ஊற்றுக்கண் இதுவேயாகின. பெண்களுடைய நிலைமை வேரனுக்கப்பட ஆரம்பித்தது இந்தக் கட்டத்திற்றான் என்பதே இதிலிருந்து நாம் பெறக் கூடிய முடிவு.
உண்மையில் எங்கெல்ஸ் குறிப்பிட்ட உழைப்புப் பிரி வினை தந்தையுடைமைச் சமுதாயம் நன்கு வேரூன்றிய பின்பே ஏற்பட்டது, அப்போதுதான் ஆண்கள் பெண்களை வலுக்கட்டாயமாக வீட்டிலிருத்தி வேற்று அடிமைகளைக் கொண்டு தமது வேலைகளைச் செய்தனர். ஆகவே ஆண் கள்/ஆளும் வர்க்கம் எனும் குழு ஒருபுறம் பெண்களையும் மறு புறம் உழைக்கும் வர்க்கத்தினரையும் நசுக்க ஆரம்பித்தது. வர்க்கரீதியான அடக்குமுறை ஏற்பட்ட அதே வீச்சில் பெண்களின் ஒடுக்குமுறையும் உருவாகியிருக்க வேண்டும்.
இவ்வகையாக, படைத்துறைப்பண்பு முனைப்படைந்த (highly militarist) சமூகங்களில் தந்தையுடைமைச் சமுதாயம் தனது சகல தன்மைகளுடனும் வளர்ச்சியுற்றதைக் காண லாம். இப்பண்பு அருகிய கலாசாரம் கொண்ட சமூகங் களில் ஆணாதிக்கம் வளர்ந்திருந்தாலும் கூட அது தாய் வழிச் சமூகங்களில் சில நடைமுறைகளைத் துடைத்தெறியப் பலனற்றதாக்கிற்று. இவை மத்தியில் வர்க்கங்கள் கட்ட மைக்கப்பட்ட சமூக அமைப்பும் ஆணாதிக்கமும் இவற்றினை உள்ளடக்கிய அரசும் தோன்றிய பின்னரும் கூட தாய்வழி உறவுமுறைகளும் அவற்றின் நடைமுறைகளும் தொடர லாயின. மொஹஞ்சதாரோ - ஹரப்பா இத்தகைய தாய் வழிச் சமூகத்திற்கு நல்லதொரு எடுத்துக்காட்டாகும்,
இவர்களுக்கு நேர்மாறாக ஆரியர்கள் விளங்கினார்கள். இவர்கள் போரில் வல்லுனர்களாகவும் தந்தையுடைமைச்

Page 53
86 () பெண்களின் சுவடுகளில்.
சமூகத்தின் சகல அம்சங்களும் பொருந்தியவர்களாகவும் காணப்பட்டனர். உரோமர்களும் இவர்களைப் போலத் தான். அவர்களின் ஒழுங்குபடுத்தப்பட்ட சட்ட அமைப்பு பெண்கள் ஆண்களின் அடிமைகள் என்று வெளிப்படையா கவே பிரகடனப்படுத்தியது. இன்றும் தாய்வழிச் சமூக அமைப்பு உறவுகள் தொடர்ந்து திகழ்வதற்கு கேரளநாட்டவரைச் சுட்டிக்காட்டலாம். இவர்களின் மன்னர்கள் இந்தியாவின் ஏனைய மன்னர்களைப் போல போர்க்கலைகளில் சிறக்க வில்லையென வரலாறுகள் கூறுகின்றன. இந்நூற்றாண்டு வரை படைத்துறைப்பண்பு முனைப்படைந்ததான இயல்பு களை ஜெர்மானிய சமுதாயமே வெளிக்காட்டியது. அது ஆணாதிக்கம் மிகுந்ததாகவும் கருதப்பட்டது.
ஒருவரோடொருவர் போரிட்டுப் போட்டியிடாத பெண் களின் தன்மை, ஒருவித பொருளாதார அமைப்பின் கீழ் தலைமை ஸ்தானத்தினையும் இன்னொரு பொருளாதார அமைப்பின்கீழ் அடிமை நிலையினையும் அவர்களுக்கு ஏற் படுத்திக் கொடுத்ததைக் காண்கிறோம்.
ஆணாதிக்கத்தின் ஆரம்பம், வன்முறையின் அடக்கு முறையினால் கட்டியெழுப்பப்பட்ட வர்க்கரீதியான சமுதாயங் களின் ஆரம்பங்களுடன் ஒத்துப்போகிறது என்று கூறுவது மிகவும் பொருத்தமுடையதாகும். O

குழாம்களிலிருந்து குலக்குழுக்கள் வரை

Page 54

குழாம்களும் இரத்த உடன்படிக்கையும்
உலகெங்கும் உள்ள எந்தவொரு சமூகமும் தமது வாழ் நிலைத்தரங்களில் எவ்வளவிற்கெவ்வளவு வரலாற்றின் முந்திய காலகட்டத்திற்கு உரியனவாக இருக்கின்றனவோ அவ்வளவிற்கள்வளவு அவை தாயுரிமையினை நிலைநாட்டும் சமூக அமைப்புகளாகவே காணப்படுகின்றன.
பண்டமாற்று உற்பத்தி ஆரம்பித்த காலகட்டத்திலேதான் இக்கோலத்தில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. சில சமூகங்கள் தந்தையுடைமைச் சமுதாயமாக உருவெடுத்தன. அதே வேளையில் சில சமூகங்களில் ஆணாதிக்கம் முழு அளவில் ஏற்பட்டிருப்பினும்கூடத் தாயுரிமையை நிலைநாட்டுபவை யாகவே அமைந்தன. எந்த வழியில் இவை மாற்றம் பெற்றிருந்தாலும் ஆதியில் இவையெல்லாமே தாய்வழிச் சமூகங்களாகவே இருந்திருக்கின்றன என்பது தெளிவானது
வெஸ்டர்மார்க் போன்ற ஆய்வாளர்கள், தந்தையைத் தலைவனாக ஏற்கும் குடும்ப அமைப்பு மனிதகுல வரலாற்றின் ஆரம்பத்திலேயே தோன்றி அதற்கு இணையாக வளர்ந் துள்ளது எனக் கோரினர். எந்த இடத்திலாவது தாய்வழிச் சமூகங்கள் தென்பட்டால் அவை தந்தையுடைமைச் சமுதாயங் களிலிருந்து மருவியவை என்றுகூட நிறுவத் தலைப்பட்டனர். தனிச் சொத்துரிமையின் பிரதான வெளிப்பாடே குடும்பம் என்ற அமைப்பு. அதில், தன்னுடைய சொத்தினைத் தன் சொந்த மக்களுக்கு அளிக்கும் உரிமை குடும்பத் தலைவ னாகிய ஆணுக்கு இருந்தது. தாயுரிமைக் கணங்களிலோ

Page 55
90 () பெண்களின் சுவடுகளில்.
தனிச்சொத்துரிமைக்கோ தனித்தனிக் குடும்ப அமைப்பிற்கோ இடமில்லை. இதில் எல்லோரும் கூட்டு வாழ்க்கை மேற் கொண்டனர். அவ்வாறு தாய்வழி கோரப்படும் சமூக அமைப்பில் தனிச் சொத்துரிமையும் குடும்பமும் ஏற்பட்டால் கூட, ஒருவன் தன் சகோதரி பிள்ளைகளுக்குத்தான் தன் சொத்தினை அளிக்க வேண்டியவனானான். இந்த நிலைமை யில், குடும்பத் தலைவன் என்கின்ற முறையில் எண்ணிறந்த சலுகைகளை அனுபவித்து வந்த ஆண் அதனையெல்லாம் விட்டுக் கொடுத்து தாய்வழிச் சமூக முறையினை நாடியிருப் பான் எனக் கூறுவது அபத்தமாகும். இதுவரை நாம் விவாதித்து வந்த தரவுகளெல்லாம் தாய்வழிச் சமூக அமைப்பே முதலில் உருவானது என்பதனையே சுட்டிக்காட்டு கின்றன. தவிரவும், தம் ஆய்வுகளின் போக்கில், தந்தை யுரிமையினை நிலைநாட்டும் பாரம்பரியம் படிப்படியாக விரி வடைந்து வந்ததை ஆய்வாளர்கள் பல சமூகங்களில் கண் கூடாகப் பார்த்திருக்கின்றனர்.
இந்தச் சந்தர்ப்பங்களிலெல்லாம் அன்னையரின் சகோ தரர்கள் என்ற முறையில் சமூகத்தில் முக்கியத்துவம் வகித்த ஆண்கள் குழுவிலிருந்தே ஆண்வழி உறவு முறைகளும் அதிகாரங்களும் பரிணமிப்பதை ஆய்வாளர்கள் அவதானித் தனர். இன்றும் தாய்வழி உறவுமுறைகளின் எச்ச சொச்சங்க ளடங்கிய எந்தச் சமூகத்திலும் தாய்மாமன்மார் மிக முக்கிய மான இடத்தினை வகிப்பதைக் காணலாம்.
இவ்வாறாக, தாய்வழி உறவுமுறைகளடங்கிய குழுவின் தலைமை ஸ்தானம் அக்குழுவினைச் சேர்ந்த ஆணினால் அலங்கரிக்கப்பட்டது. பெண் மூதாதையரை புராணங்களில் போற்றியும் சமயச் சடங்குகளில் வழிபட்டும் வந்தாலும், அக் குறிப்பிட்ட பெண் மூதாதையின் சகோதரனே அவ்வக்குலங் களுக்கு தலைவன் அல்லது தெய்வம் எனக் கருதப்பட்டான். ஆயினும் இதுவரை பெண்களே தலைமை ஸ்தானம் வகித்த உலகில் ஆண்கள் அவ்விடத்தைக் கைப்பற்றுவது இலகுவில் நடந்தேறிய ஒரு சம்பவமல்ல.

சாந்தி சச்சிதானந்தம் ) 91
ஆண்கள் தனித்தனியே இருந்து அதிகாரத்தைக் கைப் பற்றியிருக்க முடியாது. அவர்கள் ஒரு சகோதரத்துவ அமைப்பு கொண்ட குழுவாகவே முதலில் தம்மை வெளிக்காட்டினர். இதுவே நாம் குறிப்பிடும் அன்னையரின் சகோதரரின் அமைப் பாகும். ஆனால் இந்த சகோதரத்துவ அமைப்பினைக்கூட பெண்களே ஸ்தாபித்தனர்.
ஆரம்பத்தில் தமக்குள் உருவாக்கப்பட்ட இந்த சகோதரத் துவ உணர்விற்கூடாகவே ஆண்கள் சமூகத்தின் ஆக்கப்பணி களிலெல்லாம் ஈடுபாடு கொண்டிருந்தனர். இவ்வமைப்பு விரிவடைந்த வரலாற்றில்தான் குலக்குழுக்களின் (tribes)
பரிணாம வளர்ச்சியைக் காண்கிறோம்.
மனித குலத்தின் அதிஆரம்ப கட்டத்தில் மனிதர் தனித் தனிக் குழாம்களாகத் (clans) திரிந்தனர். இக்குழாம்கள் தாய் வழி உறவுமுறைகளைக் கொண்டிருந்ததுடன் குழுஉக்குறி முறையின் சகல கட்டுப்பாடுகளையும் கடைப்பிடித்தன. இதனைச் சேர்ந்த ஆண்கள் தம்மை ஒருவருக்கொருவர் இரத்த உறவுள்ள சொந்தச் சகோதரர்களாகக் கருதினர். இதைக்கொண்டு இவர்கள் எல்லோரும் ஒரு தாய் வயிற்றில் பிறந்தவர்களென்றோ அல்லது சொந்த சகோதரிகளினது பிள்ளைகள் என்றோ தவறாக மதிப்பிடல் கூடாது.
ஆதிவாசிகளுக்குக் கருவினூடே தோன்றும் உறவுமுறை கள் பற்றி எதுவும் தெரியாது. ஒரு குழாமிலுள்ள பிள்ளைகள் அனைவரும் அங்குள்ள தாய்மார்கள் எல்லோராலும் பாலூட்டி சீராட்டப்பட்டு வளர்க்கப்படுவதினால் இரத்த, பால் உறவுள்ள மிக நெருங்கிய உறவினராயினர். அப்பிள்ளைகள் தம் பரம் பரைகளை தமது சொந்தத் தாய்மாருக்கூடாக நிலைநிறுத்த நேர்ந்தாலும்கூட உண்மையில் அவர்களுக்குள் ஏற்பட்ட உறவுமுறைகளுக்கும் அந்தஸ்துகளுக்கும் சொந்தத் தாய் மகன் உறவு என்பது அவசியமான ஒன்றாக இருக்கவில்லை.

Page 56
92 ) பெண்களின் சுவடுகளில்.
"ஒரு குழுவிலுள்ள பிள்ளைகளைப் பாதுகாப்பதிலும் வளர்ப்பதிலும், ஏன், குழந்தைகளுக்குப் பாலூட்டுவ திலும்கூட பரஸ்பர ஒத்துழைப்பு வழங்கப்படுகின்றது. அந்தமான் வாசிகள் மத்தியில் ஒரு குழந்தை கிராமத்தி லுள்ள சகல பெண்களினாலும் வளர்க்கப்படுகின்றது. அங்கு முலைப்பால் புகட்டும் நிலையிலிருக்கும் எந்தத் தாயும் பிற பெண்களுடைய குழந்தைகளுக்கும் பாலூட்டு வது சாதாரணமான காட்சியாகும். இதேபோன்று இந்தோனேஷியாவிலும் ஒரு தாய் வேறு வேலைகளில் ஈடுபட்டிருக்கும்போது அவளது சகோதரிகளும் மற்றைய பெண் உறவினர்களும் அவளது குழந்தைக்குப் பாலூட்டு வதுடன் குழந்தை வளர்ப்பில் சகல உதவிகளையும் செய்து கொடுப்பார்கள். ஒரு குழந்தை தன் தாயினால் மட்டுமல்லாது தனது பாட்டி மற்றும் பெண் உறவினர் களினாலும்கூட பாலூட்டப்படுவது என்பது அனைத்து மக்களினதும் வழக்கம் என்றே கூறிவிடலாம்.”
இவை பிறிஃவோல்டின் ‘அன்னையர்” என்ற நூலி லிருந்து காட்டப்பட்டிருக்கும் சில உதாரணங்களாகும். ஒரு குழுவிலுள்ள எல்லா குழந்தைகள்பாலும் காட்டப்பட்ட தாய் மையின் கூட்டுழைப்பே அக்குழந்தைகளை இணைக்கும் நெருக்கமான பந்தமாயிற்று. இதனால் அக்குழந்தைகள் ஒருவருக்கொருவர் இரத்த, பால் உறவுடைய சகோதர ராயினர்,
காலப்போக்கில், தன்னின உண்ணி முறைகள் அருகிவர, ஒரு குழாமிற்குள் நிலவிய இந்த உறவுமுறைகளை அயலில் வாழும் மற்றும் சில குழாம்களுக்கும் பொதுவாக்கினர். ஆண் டாண்டு காலமாய் வழிவந்த பகைமை உணர்ச்சியினையும் பல வேற்றுமைகளையும் தகர்க்கும் இக்கடினமான சாதனை ''gy is all-6öTLut-i60)ds' (Blood Covenant) 6Ts) b Flig5 முறையின் மூலம் நிறைவேற்றப்பட்டது. இரத்த உடன் படிக்கை உலகெங்கணும் மக்களிடையே பொதுவாக காணப் பட்ட சடங்கு முறையாகும். இது இருவருக்கோ அல்லது

சாந்தி சச்சிதானந்தம் () 93
இரண்டுக்கு மேற்பட்டவர்களுக்கு இடையிலோ அவர்களுடைய இரத்தத்தைக் கொண்டு செய்யப்படும் சடங்காகும். சம்பந்தப் பட்டவர்கள் தமது மணிக்கட்டுப் பகுதியில் கீறலை ஏற்படுத்தி ஒருவர் மற்றவருடைய குருதியை சிறிதளவு உறிஞ்சுவத னாலோ அல்லது கிண்ணத்தில் கலந்து அருந்துவதனாலோ அல்லது இதேபோன்று குறிப்புகளைத் தெரிவிக்கும் வேறு சடங்கு முறைகளினாலோ இரத்த உடன்படிக்கை மேற் கொள்ளப்படும். இதன் மூலம் இரு வெவ்வேறு குழாம்கள் இரத்த உறவுள்ள குழுக்களாக்கப்படுகின்றன. இவற்றைச் சேர்ந்தவர்களுக்கு ஒரு குழுவிற்கு குழுஉக்குறி முறை வழங்கும் சலுகைகளும் கட்டுப்பாடுகளும் ஒன்று தவறாது அப்படியே இருக்கும்.
இரத்த உடன்படிக்கை எப்போதும் இரு குழுவினருக் கிடையிலேயே நிறைவேற்றப்பட்டது; இரு தனிமனிதருக் கிடையில் அல்ல. ‘பால் உடன்படிக்கை” என்னும் சடங்கு முறையையும் பொதுவாக உள்ளடக்கியதாகவிருந்தது. சக்கா (Chagga) மக்களின் நடைமுறைகளை நோக்குவதனால் இதனை நாம் பூரணமாக விளங்கிக் கொள்ளலாம்.
ஒரு பாத்திரம் நிறைய கட்டியான பால் இருக்கும். அவ் விரு குழுக்களில் ஏதேனும் ஒன்றைச் சேர்ந்த தாய் ஒருத்தி அந்தப் பாத்திரத்திற்குள் தன்னுடைய முலைப்பாலையும் கலப்பாள். அவ்வாறு கலக்கும்போது அவள் பின்வருமாறு ஒதுவாள் :
'உங்களில் எவனொருவன் தன் சகோதரன் மேல் பழியைக் கொண்டு வருவானோ, எவனொருவன் வஞ்சகம் செய்வானோ, எவனொருவன் மற்றவன் மீது குற்றம் சுமத்துவானோ அவன் உடலினுள் நோயையும் கொப்புளங்களையும் இந்தப் பால் கொண்டு வரக்கடவது. சகோதரத்துவப்பால் இவனை நோயாகப் பீடித்துவிட்டது எனப் பிற மனிதர்களும் தூற்றக்கடவது. ஆனால் $2O5 வருக்கொருவர் விசுவாசமாக இருந்து துன்பகாலங்களின்

Page 57
94 L1 பெண்களின் சுவடுகளில்.
போது ஒற்றுமையாக நின்றால் இது உங்களைக் காப்பாற்றி என்றென்றும் வாழவைக்கும்.”
இதன்பின் பங்குபெறும் ஒவ்வொரு ஆணும் ஒரு மிடறு பால் அருந்துவான். அவர்கள் அதனை அருந்தும் ஒவ்வொரு முறையும்,
* உன்னுடைய சகோதரனுக்கோ அவனுடைய பிள்ளைகளுக்கோ நம்பிக்கைத் துரோகம் செய்தாயானால் அல்லது போரின்போது கைவிடுவாயானால் ஹோஃபா --நீ இறந்து போவாயாக! ஆனால் அவன்மீது அன்பு செலுத்தி அவனுக்குதவி, அவன் கஷ்ட நஷ்டங்களின் போது கைவிடாது காப்பாயானால் என்றென்றும் வாழ்வாய்-ஹாவூ!”
என்று அத் தாய் நெகிழ்ச்சியுடன் கூறுவாள். குடிசைக் குள் நடந்தேறும் இச்சடங்கு முடிவுற்றவுடன் எல்லோரும் வெளியில் வந்து பரப்பி வைக்கப்பட்டிருக்கும் எருமைத்தோல் ஒன்றினைச் சுற்றி நிற்பர். இவர்களுக்குப் பால் கொடுத்த அதே பெண் வந்து அத்தோலைப் பற்றி அங்குமிங்குமாக விசுக்கியபடி,
*ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்களே, நீங்கள் ஒருவரோடொருவர் இன்னும் நெருக்கமாகப் பிணைத்துக் கொள்ள உடன்பட்டு விட்டீர்கள். எவனொரு வன் இச் சகோதரத்துவத்துக்கு எதிராக நடக்கின்றானோ அவன் இந்த எருமைத்தோல் போலவே மலடாகக் கடவது; அதல பாதாளத்தில் விழக்கடவது; அப்போது இத்தோல்தான் அவனைப் பழி வாங்கியது என எல்லோ ரும் தூற்றக்கடவது. ஆனால் நீங்கள் இச்சகோதரத் துவத்திற்கு விசுவாசமாக இருந்தீர்களானால் அதனால் நிரந்தரமாகக் காப்பாற்றப்பட்டு வாழ்வீர்கள்-ஹாவூ!” எனப் பலத்த குரலில் கூறுவாள். இதன் பின்னரே இரத்த உடன்படிக்கைச் சடங்குகள் ஆரம்பமாகும்.

சாந்தி சச்சிதானந்தம் () 95
இதே சடங்கு முறைகள் உலகின் எல்லாப் பாகங்களிலும் சிற்சில வேறுபாடுகளுடன் காணப்பட்டது. இதே சடங்கு முறைதான் பின்பு இரத்தத்தை பானத்துடன் கலந்து அருந்தும் சடங்காகவும் ஈற்றில் இருபகுதியினரும் பானம் மட்டும் அருந்தும் சடங்காகவும் மருவியது. இச்சடங்கில் உபயோகிக்கப்பட்ட பானம் அநேகமாக மதுபானவகைகளா கவே இருந்தன. இன்றும் மேலைநாடுகளில் மது அருந்தும் போது கிண்ணங்களை ஒன்றோடொன்று உரசி "உமது ஆரோக்கியத்திற்காக" எனக்கூறி அருந்துவர். ஒருவர் மது அருந்துவதற்கும் மற்றவர் ஆரோக்கியமாக இருப்பதற்கும் தொடர்பு என்னவாக இருக்க முடியும்? இன்று முதல் நான் உனக்கு ஊறு விளைவிக்க மாட்டேன் என சங்கல்பம் எடுத்து தன்னின உண்ணி முறையினை வேரோடொழித்த காட்டு மிராண்டி மனிதர்களின் பாரம்பரியம் அல்லவா இது?
"இரத்த உடன்படிக்கை” சடங்குமுறையின் பலனாக இரு வேறு குழாம்களைச் சேர்ந்த ஆண்கள் ஒன்று சேர்ந்து இரத்த உறவுள்ள ஒன்று விட்ட சகோதரர்களானார்கள். இதனூடே எத்தனை குழாம்கள் சகோதர குழாம்களாக ஆகியிருப்பினும் ஒவ்வோர் குழாமும் அவை தமது தனித்துவத்தை இழந்து விடவில்லை. அம்மனிதர்கள் சொந்த சகோதரர்களுக்கும் ஒன்றுவிட்ட சகோதரர்களுக்கும் உள்ள வேறுபாட்டை உணர்ந்திருந்தனர். அதற்குரிய வெவ்வேறு அடையாளங் களையும் கொண்டிருந்தனர். சொந்தச் சகோதரர்களுக்கும் ஒன்றுவிட்ட சகோதரர்களுக்கும் உள்ள ஒரு முக்கிய வேறு பாடு அவர்கள் வெவ்வேறு அன்னையர் குழுக்களினால் பராமரிக்கப்பட்டவர்கள் என்பதே. ‘இரத்த உடன்படிக்கை" மட்டும் இல்லாதிருந்திருந்தால் அவர்கள் ஒரு தொடர்பும் இல்லாத வேற்று மனிதரே.
இந்த அமைப்பினால் சிக்கலான ஒரு பிரச்சினை உரு வாகலாயிற்று. ஒரே குழாம் போலவே இவையனைத்தும் குழுஉக்குறி முறையின் கட்டுப்பாடுகள் அனைத்தாலும்

Page 58
96 () பெண்களின் சுவடுகளில்.
பிணைக்கப்பட்டு இருந்தது. இதனால் எழுந்த பிரச்சினை என்னவென்றால் இக்குழுக்களில் உள்ள ஆண்கள் உடல் உறவு கொள்ளக் கூடாது என்று தடை விதிக்கப்பட்ட பெண்களின் தொகை பன்மடங்காக அதிகரித்து விட்டது. எல்லா ஆண்களும் தமது குழுவை விட்டு விட்டு, குழுவிற்கு வெளியில் பெண் எடுக்க வேண்டிய, அதாவது விகோத்திர மண முறையைக் கைக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளானார்கள். சில இனங்கள் மத்தியில் ஒரு முழு மாகாணமே சகோதரத்துவ அமைப்புள்ள குழாம்களினால் சூழப்பட்டிருந்தது.
இத்தகைய நிலைமையில் தனக்குத்துணை தேடும் ஆண் தனக்குப் பரிச்சயமான பூமியை விட்டு வெளிப் பிராந்தியங் களில் அறிமுகமில்லாத குழுக்கள் மத்தியில் பெண் எடுக்கக் கட்டாயப்படுத்தப்பட்டான். இந்தப் பெண் தேடும் நடவடிக் கையில் அவன் உயிருக்கு எந்தவித உத்தரவாதமும் இல்லாது போயிற்று, எந்நேரமும் அவன் மற்றைய குழுவினருக்கு இரையாகலாம் என்ற இடையறாத அச்சத்திற்குள்ளானான். அவ்வாறு அவன் இறந்து போகும் பட்சத்தில் இரு குழுக் களுக்கும் இடையே மூண்ட சண்டைகளும் பழிக்குப்பழி என்ற அடிப்படையில் நிகழ்ந்த கொலைகளும் பெரும் சங்க டங்களை ஏற்படுத்தின. இவற்றைத் தவிர்க்கவே நாளடை வில் இன்னொரு வித சகோதரர்களை, அதாவது மைத்துனர் களை உருவாக்கும் சடங்கு முறை உதித்தது.
கலவிக்கு இசைவான உறவு முறைகள்
பல குழாம்கள் இரத்த உடன்படிக்கை மூலம் ஒன்றோ டொன்று இணைந்து ஏற்படுத்திய அமைப்பு மரபுவழிக் கூட்டமாகும். ஒரு மரபுவழிக் கூட்டத்தில் அங்கம் வகித்த குழாம்களை கணங்கள் எனவும் அழைக்கலாம்.

சாந்தி சச்சிதானந்தம் () 97
இருவேறு மரபுவழிக் கூட்டங்கள் கலவிக்கிசைவான உறவுமுறைகளை ஏற்படுத்தும் பொருட்டு தமக்குள் சமா தான உடன்படிக்கையினைச் செய்து கொண்டன. இதன்படி முன்பு ஒருவரையொருவர் ஜென்ம எதிரிகளாகக் கருதிவந்த ஆண்கள் அன்று முதல் தத்தமக்கு சொந்தமான பூமியில் மற்றவர்களையும் அச்சமின்றி உலவ அனுமதித்தனர்.
இப்பாதுகாப்பு தந்த கவசத்தில் ஒரு மரபுவழிக்கூட்டம் மற்றைய மரபுவழிக் கூட்டத்தில் தமது கலவிக்கு இசைவான துணைகளைத் தேர்ந்தெடுத்தது. இதனைச் சகோத்திர மணமுறை என அழைப்போம். இவ்விரு மரபுவழிக் கூட்டங் களும் இணைந்த அமைப்பு ஒரு குலக்குழுவாகியது.
எந்தக் குலக்குழுவிலும் எதிரும் புதிருமான திருமண உறவு முறைகளைக் கொண்ட இரு மரபுவழிக் கூட்டங்கள் காணப்படும். இவ்வமைப்பின் சகோதரரும் ஒன்றுவிட்ட சகோதரரும் மைத்துனருமாக தன்னிறைவு பெற்ற உறவு முறைகள் நிலவலாயிற்று. இதுவே குலக்குழுக்களினுடைய வளர்ச்சியின் அதியுச்ச கட்டமாகும்.
சில இனங்களில் பெண்கள் 'நாம் எமது எதிரிகளைத் திருமணம் செய்கின்றோம்” என்று சொல்லிக் கொண்டனர். வேறிடங்களில் பெண்கள் 'நாம் எமது மைத்துனர்களைத் திருமணம் செய்கின்றோம்” என்றனர். இந்த இரண்டு கூற் றுக்களுமே வரலாற்று ரீதியாக உண்மையானவைதாம். முந்திய எதிரிகளே பின்பு கலவிமாற்று முறையின் கீழ் மைத்துனர்களாக மாறிவிட்டனர். அவர்களுக்கிடையில் இருந்த வன்மமும் பகையும் இப்போது எவ்வளவோ குறைந்து விட்டது.
இரு மரபுவழிக் கூட்டங்களுக்கிடையேயிருந்த திருமண முறைதான் இன்னும் நம் மத்தியில் மாமன் மகள்|மகன் திருமணங்களாகத் தொடர்ந்து வந்திருக்கின்றது. விஞ்ஞான ரீதியில் விளக்கம் கொடுப்பதானால் இருசகோதரர்களினதோ
ஆ-7

Page 59
98 () பெண்களின் சுவடுகளில்.
அல்லது இரு சகோதரிகளினதோ அல்லது ஒரு சகோதர னுடையதும் சகோதரியினதுமோ வம்சங்கள் ஒரு குடும்பத் தைச் சேர்ந்த சகோதர சகோதரிகளாகவே கருதப்படும். ஆயினும் நம் மத்தியில் இரு சகோதரிகளின் பிள்ளைகள் ஒருவருக்கொருவர் இரத்த உறவுள்ள சகோதரராகின்றனர். ஒரு சகோதரியினதும் சகோதரனதும் பிள்ளைகளோ முறைப் பெண், முறைமாப்பிள்ளை ஆனார்கள். அதெப்படியெனில் இரு சகோதரிகள் ஒரே கணத்தைச் சேர்ந்தவர்களாதலால் அவர்களுடைய பிள்ளைகள் இரத்த உறவுள்ள சொந்தச் சகோதரராக வேண்டும். இச் சகோதரிகளின் சகோதரன் எதிர் மரபுவழிக் கூட்டத்திலேயே பெண் எடுப்பதனால் அவனுக்குப் பிறக்கும் குழந்தைகள் அவற்றின் தாயின் கணத்திற்குச் சொந்தமானதாகவே கருதப்படுகின்றன. ஆகவே இவர்கள் முன்னைய பிள்ளைகளுக்கு கலவிக்கு இசைவான துணைகளாகலாம் என்று கொள்ளப்பட்டது. இதே போன்றே இரு சகோதரர்களும் எதிர் மரபுவழிக் கூட்டத்திலேயே பெண் எடுப்பதால் அவர்களின் பிள்ளைகள் ஒருவருக்கொருவர் சகோதரர்களாகின்றனர். ஆகவே ஏதோ ஒரு யுகத்தில் எமது சமூகத்தில் தாய் வழி உறவு முறைகள் இருந்திருக்கின்றனவென்பதற்கு ஒரு உதாரணமே இந்தத் திருமண முறையாகும்.
மரபுவழிக்கூட்டங்களுக்கிடையே இருந்த இக் கலவி மாற்று முறையினையே மோர்கன் குழுமணம் எனக் குறிப் பிட்டார். அதாவது ஒரு மரபுவழிக்கூட்டத்தினைச் சேர்ந்த ஆண்கள் மற்ற மரபுவழிக்கூட்டத்தினைச் சேர்ந்த எல்லாப் பெண்களையும் தங்கள் துணைகளாக வரித்துக் கொண் டனர் என்பதே அவர் முடிவு. ஆனால் ஆதிவாசிகளின் நடைமுறையில் குழுமணம் எங்கும் காணப்பட்டதில்லை. உதாரணமாக லாவூவான் மக்களில் ஓர் ஆண் தன் மனை வியை வதி" என்று கூப்பிடுவான். அவளுடைய சொந்தச் சகோதரிகளையும், அதாவது அவள் கணத்தைச் சேர்ந்த பெண்கள் எல்லோரையும் கூட ‘வதி' என்பான். இது

சாந்தி சச்சிதானந்தம் () 99
போதாதென்று அவள் மரபுக்கூட்டத்தினைச் சேர்ந்த அவ ளுடைய ஒன்றுவிட்ட சகோதரிகளையும் ‘வதி' என்றழைப் பான். இவ்வாறு, அவனுக்குத் தெரிந்த பெண்கள், தெரி யாத பெண்கள், பார்த்தவர்கள், பார்க்காதவர்கள் எல்லோ ருமே அவனுக்கு வதி" தான். அவர்கள் எல்லோருமே அவனுக்கு கலவிக்கு இசைவான உறவாக முடியும் என்பது தான் அவனுக்கும் அவர்களுக்குமிடையே இருந்த சமூக உறவாகியது.
இப்படி இவர்கள் ஒருவரையொருவர் அழைப்பதனைக் கண்டு இவர்களெல்லோரும் ஒருவருக்கொருவர் கணவன் மனைவியராகத்தான் வாழ்ந்து வருகின்றனர் என்று தவ றான முடிவு கட்டிவிட்டனர். இந்த நூதனமான முறை களில் ஒரு ஆண் தனது மனைவியினுடைய சகோதரனையும் ‘மனைவி' என்று அழைக்கக்கூடும்; அந்தச் சகோதரனும் தன் சகோதரியின் கணவனைக் 'கணவன்" என்று அழைக்க
• نتھا [u +ہا p)
போர்க்களங்களில் இது அவதானிக்கப்பட்டுள்ளது. காயம்பட்ட மனிதனொருவன் தன் சகோதரியின் கணவ னைக் கண்ணுற்றால் 'கணவனே! என்னைக் கொல்கின் றனர்” என முறைப்பாடு செய்யக் காணப்பட்டான். அவன் மைத்துனனும் வீரம் மிகுந்தவனாக இருப்பின் உதவி செய் வது மட்டுமின்றி தன் மனைவியின் சகோதரனுடன் இறக் கவும் தயாராக இருப்பான்.
வேற்று மனிதர்களுக்கிடையே ஏற்படக்கூடிய இத்தகைய மகத்தான நட்பினால் ஆதிவாசிகள் மனைவியின் உறவு மூலம் ஏற்படும் மைத்துனன் உறவுக்காகப் பெரிதும் அவா வுற்றனர். தம் வசமிருக்கும் சிறப்பான உடைமைகளை எல் லாம் தமது மைத்துனர்களுக்குப் பரிசாக அளிப்பதற்கு போட்டி போட்டுக்கொண்டு முன்வருவதை வழக்கமாகக் கொண்டனர். மைத்துனர்களைச் சேர்த்துக் கொள்வதற் காகவே திருமணங்கள் நடக்கின்றனவென்பது நியூகினி

Page 60
100 () பெண்களின் சுவடுகளில்.
மக்களின் கருத்து. பெண் மானிடவியலாளர்களில் முதன்மை பெற்ற மார்கரெட் மீட் என்பவர் அரபேஷ் மக்கள் மத்தி யில் நடத்திய ஆய்வுகளிலும் இதனைக் கண்டறிந்தார். இவர் ஆய்வு செய்த விடயமோ தகாப்புணர்ச்சியைப் பற் றியது. 'நீங்கள் உங்கள் சகோதரிகளை மணம் செய்வீர் களா?” என அங்குள்ள இளைஞர்களிடம் இவர் கேட்ட பொழுது அவர்கள் திரும்பத் திரும்ப 'நாம் வேற்று மனி தர்களுக்கு எமது சகோதரிகளைக் கொடுக்கின்றோம்; அவர் கள் தங்கள் சகோதரிகளை எமக்குத் தருகின்றனர்” எனப் பதிலளித்தனராம். இத்துடன் திருப்தி அடையாது, அம் மரபு வழிக் கூட்டத்தின் மூத்த தலைவர்களிடம் அவ்விளை ஞர்களைக் கொண்டே இவ்வினாவை எழுப்பினர். இதற்குத் தலைவர்களிடமிருந்து இளைஞர்களுக்குக் கிடைத்த பதில் இதுதான் :
‘என்ன, யாரும் தன்னுடைய சகோதரியை மண முடிக்க விரும்புவானா? உனக்கென்ன வந்துவிட்டது. உனக்கு ஒரு மைத்துனன் வேண்டாமா? நீ இன்னொரு மனிதனின் சகோதரியை மணமுடிக்க வேறொருவன் உன் சகோதரியை மணமுடிக்க உனக்கு இரண்டு மைத்துனர்கள் கிடைப்பார்களென்று புரியவில்லையா? அப்படிச் செய்யாது உன் சகோதரியையே முடித்தாயா னால் ஒருவருவரும் கிடைக்க மாட்டாரே! யாருடன் வேட்டையாடப் போவாய், யாருடன் தோட்டம் செய் வாய், நீ போய் சந்திப்பதற்கு யார்தான் இருப் பார்கள்?”
சொந்தச் சகோதரியை மணமுடிப்பது கூட இவர்களுக்கு பிரச்சினையாக இருக்கவில்லை. அதன்மூலம் மைத்துனர்கள் இல்லையே என்பதுதான் பிரச்சினையாக இருந்தது.
மேலும் இவர்கள் கூற்றிலிருந்து தகாப்புணர்ச்சியைப் பற்றி இந்நூலின் ஆரம்பத்தில் முன்வைக்கப்பட்ட கருத்துகள் மேலும் நிரூபணமாகின்றன.

சாந்தி சச்சிதானந்தம் () 101
போர்க்காலத்திற் கூட எதிரிகள் முகாமில் தன் சகோ தரியின் கணவன் இருப்பதை ஒருவன் கண்டால் அவனைத் தாக்காது விடுவது மட்டுமன்றி தன் இனத்தவர்களும் அவனைத் தாக்காதிருக்கும் பொருட்டு தன் உயிரையும் விடத் தயாராக இருந்தான். இவ்வாறு இரு எதிரிக் குழுக் களுக்கிடையே உயர்ந்த நட்பு தோன்றுவதற்கு பெண் ஒரு உறவுப்பாலமாக மாறிய சிறப்பைக் காண்கின்றோம்.
சமாதான உடன்படிக்கைகள் என்பன உணவைப் பகிர்ந்தும் பரிசுகளை வழங்கியும் மேற்கொள்ளப்பட்டன. இன்று கூட உலகின் பலபாகங்களிலும் வாழும் ஆதிவாசிகள் யாருடனும் சேர்ந்து உட்கார்ந்து ஒருமுறை உணவைப் பகிர்ந்து கொண்டுவிட்டால் அது முதல் அவரை தம் உற்ற நண்பராகக் கருத ஆரம்பிப்பர். இதைத் தவிர, விரிவான சடங்கு முறைகளுடனும் பாட்டுக் களியாட்டங்களுடனும் கூடிய விருந்துகள் இரு மரபுவழிக் கூட்டங்களுக்கிடை யேயும் சகஜமான வழக்கமாக இருந்தன. இந்த விருந்து களில் பரிமாறுவதற்கென்றே தாவரங்களையும் விலங்கு களையும் பேணி வளர்ப்பர். விசேஷமாக தம் குழுஉக்குறி முறையின்படி தமக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கும் விலங்கு களையும் காய்களையும் கூடவிருந்தினருக்கு ஆசையுடன் படைப்பர். இவை மட்டுமல்லாது வருடம் முழுவதும் இரு கூட்டத்தினருக்கும் இடையே பரிசுகளின் பரிமாற்றம் தொடர்ந்து நடந்தவண்ணமேயிருக்கும்.
திரும்பத்திரும்ப ஒரேவிதமான பரிசுகளே கொடுத்து வாங்கப்படுவதுண்டு. என்ன பரிசு கொடுக்கப்படுகின்றது, அது தேவையா இல்லையா என்பதுதல்ல பிரச்சினை. இரு பகுதிகளும் பரிசுகள் கொடுத்து வாங்கிக் கொண்டே இருக்க வேண்டும். எந்தவித பகையும் மூண்டுவிடாது அவர் களுக்கிடையிலுள்ள உறவை திரும்பத் திரும்ப உறுதிப் படுத் துவதுதான் இதன் நோக்கம்.

Page 61
102 ) பெண்களின் சுவடுகளில்.
சில இடங்களில் இவ்வழக்கத்தின் ஆரம்பங்களை உணர்த்தக் கூடிய குறிகளுடன் சமாதானச் சடங்கு முறைகள் செய்யப்படும் பசுபிக் தீவுகளின் மத்தியிலுள்ள கிவாக்கி யுடுல் (kWatiutt) மக்கள் முறைப்படி சமாதானச் சடங்கு முறை போருக்கு சமமானதாகக் கருதப்படும். இதற்குரிய அழைப்புகளைத் தெரியபடுத்தும் தூதுவர் போர்வீரர்கள் என அழைக்கப்படுவர். வரும் விருந்தினரும் போர் கீதங்களை இசைப்பர். முன்னொரு காலத்தில் இவ்விரு குழுவினரும் எதிரிகளாக இருந்தவர்கள் என்பதையே இது குறிக்கின்றது.
நியூகினியைச் சேர்ந்த ஒரோகாயவா மக்களிடையே காணப்படும்வழக்கம் இன்னும் வேடிக்கையானது. விருந்து நடக்கும் நாளில் எல்லாவகையான உணவுப் பதார்த்தங் களும் எல்லோருக்கும் தெரியும் வண்ணம் மேடைகளில் பிரமாண்டமான அளவுகளில் அடுக்கப்பட்டிருக்கும். விருந் தினர்கள் கும்பல் கும்பலாகப் போருக்கு அணிவகுப்பது போலவே ஒரு நிரையில் கிராமத்துக்குள் நுழைவர். அவர்கள் அதற்குரிய அணிகளையும் சிறகுகளையும் தரித்திருப்பதுடன் தோளில் ஒரு கதாயுதத்தினையும் தாங்கியிருப்பர். இந்த அலங்காரங்களுக்குப் பொருத்தமான வகையில் முகத்தையும் உர்ரென வைத்துக் கொண்டு நடந்துபோய் தமக்குரிய இடங்களில் அமர்ந்திடுவர். அங்கு ஒரு புறத்தில் கிராமத்து பெண்கள் காய்கறிகளை நறுக்கிக் கொண்டிருப்பர். மறு புறத்தில் ஆண்கள் பன்றிகளை துண்டாக்கிக் கொண் டிருப்பர். இந்தப் பன்றிகளை வெட்டும் விஷயம் மிகுந்த ஆர்வத்துடன் வந்திருக்கும் விருந்தினரினால் அவதானிக் கப்படும். விருந்துண்ட பின்னர், நாள் முடிவில், கிராமத் தவர்கள் தங்களுக்குள் கலந்தாலோசித்து விருந்தினர்களின் எண்ணிக்கைக்குச் சமமாக வெட்டிய காய்கறிகளையும் பன்றி யிறைச்சியிளையும் தனித்தனியே குவிப்பர். பின் மிகுந்த சிரத்தையுடன் திரும்பத் திரும்ப எண்ணிப்பார்த்து எண்ணிக் கைகள் திருப்திகரமாக அமைந்தபின் அதனை வினியோ கிப்பர். கிராமத்துத் தலைவரும் அவர் உதவியாட்களும்

சாந்தி சச்சிதானந்தம் D 103
கூச்சலிட்டபடி பதார்த்தங்களைத் தூக்கி ஓடிச் சென்று ஒவ்வோர் விருந்தினர் மேலும் வீசுவார்கள். விருந்தினரும் அதனை அசிரத்தையுடன் ஏற்றுக் கொள்வதைப் போலி ருப்பர். கடைசியில் எல்லாப் பதார்த்தங்களையும் இறைச்சி களையும் தத்தமது பைகளில் கட்டிக் கொண்டு விடை பெறுவர்.
இச்சடங்கு சிலசமயம் உணவினால் போரிடுதல் என்றும் குறிப்பிடப்படும். முன்பு ஆயுதங்களினால் செய்ததை இப் போது உணவினாற் செய்கின்றனர் எனப் பொருள்படவே இவ்வாறு இதனை அழைப்பர். O
சமாதானத் தூதுவர்கள்
இதுவரை போர்களிலும் சமாதான உடன்படிக்கை களிலும் ஆண்கள் தமக்கிடையே கொண்டிருந்த பழக்க வழக்கங்களைப் பார்த்தோம். அவர்களுடைய போர்களிலும் சமாதான உடன்படிக்கைகளிலும் பெண்கள் எவ்விதமாக ஈடுபட்டனர்? இவற்றில் பெண்களுடைய பங்களிப்பு எத் தகையதாக இருந்தது என்பதை இனிப்பார்ப்போம்,
இதற்கு முன் ஒரு முக்கிய விஷயத்தை மனதில் பதித் துக் கொள்ள வேண்டும். வேட்டையாடுபவர்களும் போரிடு பவர்களும் பெண்களாக இருக்கவில்லை. இதன் காரண மாக இயற்கை மரணம் பற்றி இப் பெண்களுக்கு எதுவுமே தெரியாதிருந்தாலும் கூடத் தமது இனத்தவர் அல்லாத பெண்கள் மீது இவர்கள் எந்தவிதமான கரவும் பகைமையும் கொண்டிருக்கவில்லை. இரத்த உடன்படிக்கைளும் சமா தான உடன்படிக்கைகளும் ஆண்களுக்குத்தான் தேவைப் பட்டது; பெண்களுக்கு அல்ல.

Page 62
104 ) பெண்களின் சுவடுகளில்.
காட்டுமிராண்டி யுகத்தின் கடைக்கட்டத்திலும் கூட அறிமுகமில்லாத பெண்களுக்குக்கூட ஒருவரோடொருவர் தொடர்பு கொள்வதில் பிரச்னைகள் இருந்ததாக குறிப்புகள் இல்லை. இந்நாள் வரை ஆதிவாசிப் பெண்கள் ஒருவரோ டொருவர் இணைந்து மிகுந்த களிப்புடன் உழைப்பதையே எல்லோரும் அனுபவத்தில் கண்டிருக்கின்றளர். மார்கரெட் மீட் நியூகினிப் பெண்களின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் போது பின்வருமாறு குறிப்பிட்டார் -
". . . . . . . . . இங்கு பெண்கள் கூட்டமாகவே வேலை யிலீடுபடுவர். அவர்கள் தமது நுளம்பு வலை பின்னும் தொழிலைக்கூட டஜன் கணக்கில் கூடியிருந்து செய் வதைக் காணலாம். ஏதாவது விருந்து நடந்தால் ஏராளமான களிமண் அடுப்புகளை பக்கம் பக்கமாக வைத்துக் கொண்டு ஒன்றாய் சமையலில் ஈடுபடுவர். ஒவ்வொரு வீட்டிலும் 12 - 24 அடுப்புகள் இருக்கும். ஒருபோதும் ஒருபெண்ணும் தனியே ஒரு மூலையில் இருந்த வண்ணம் சமைக்க வேண்டிய அவசியமே இல்லை. தொடர்ந்த அரட்டையும் சிரிப்பும் கலகலப்பு முள்ள சந்தோஷமான உழைப்புச் சூழ்நிலைக்கும் தோழ மைக்குமே இங்கு அழுத்தம் கொடுக்கப்படுகின்றது.” ஆனால் இதற்கு நேர்மாறாக ஆண்களின் நடத்தை இருப்ப தாக அவர் குறிப்பிடுகின்றார்:
“எப்பொழுதும் பரஸ்பர அவநம்பிக்கையும் அவ தானிப்பும் இரு பொருள்படத் தெறிக்கும் வெட்டிப் பேச்சுக்களும் அவர்களிடையே காணப்படும். சில்ல றைச் சண்டைகளும் தப்பபிப்பிராயங்களும், திரும்ப ஒன்று சேர்தலும், உறுதி மொழிகள் கூறுவதும், அதனைப் பின்பு நிராகரித்தலும், இதன் காரணமாக ஆட்சேபணைகளும் ஈற்றில் பரிசுகள் கொடுத்து சமா தானமாவதும் ஆண்களின் அன்றாட வாழ்வில் மலிந் திருந்தன.

சாந்தி சச்சிதானந்தம் () 105
அதே வேளையில் கலகங்களோ தனிப்பட்ட கெளரவ நலன்களோ இன்றி பெண்களின் வாழ்க்கையோ தெளிந்த நீரோடை போல் ஓடுகின்றது. ஆண்கள் மத்தியில் ஐம்பது சண்டைகள் காணப்பட்டால் மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரு சண்டையே பெண்களுக்கிடையே தோன்றலாமென நாம் இலகுவில் கணக்கிடலாம். மொட்டையடித்து, அணியாபரணங்கள் இன்றிய வதனங் களுடன் உறுதிமிக்கவர்களாய் வேலையிலீடுபட்டுக் கொண்டு இவர்கள் சிரித்து மகிழ்வர். சில இரவு களைத் தாம் மட்டும் தனியே குழுமி ஆடிக்கழிப்பதற் கென ஒதுக்குவர். இந்நிகழ்ச்சிகளில் ஒரு ஆணும் கலந்து கொள்ள முடியாது. ஒவ்வொரு பெண்ணும் தனக்குக் கிளர்ச்சியூட்டும் நாட்டிய அசைவுகளை சுறு சுறுப்புடன் ஆடிக் காட்டி மகிழ்வாள். இங்கு மீண்டும் பெண்களின் ஒற்றுமையான போக்கும், அவர்களைப் பொறுத்தவரை ஆண்களின் முக்கியமற்ற பாத்திரமும் நிரூபிக்கப்படுகின்றது.
ஆண்களுக்கிடையே சகோதரத்துவ அமைப்பினை ஏற் படுத்துவதற்கான அடிப்படை உழைப்பு பெண்களினுடைய தாகவேயிருந்தது. அவர்களுக்கிடையே தோன்றும் விரிசல் களைப் பிணைக்க உதவும் விருந்துகளையும் விழாக்களையும் ஏற்பாடு செய்வது முழுக்க முழுக்கப் பெண்களின் கையிலேயே தங்கியிருந்தது. சமாதானத்திற்கு வழிவகுக்கும் பரிசுப் பொருட்களையும் பெண்களே செய்து ஆண்களுக்குக் கொடுத்தனர். ஆண்களோ சடங்குகளை முறை தவறாது செய்வதுடன் சடங்கு விளையாட்டுக்களை விளையாடு வதிலேயே தம் கருத்தையும் நேரத்தையும் செலவிட்டனர். இவ்வகையான விருந்துகளும் விழாக்களும் இடையறாத வேலைப்பளு நிறைந்த பெண்களின் வாழ்க்கையில் வர வேற்கப்பட்ட மாற்றங்களாயிருந்தன. அங்குமிங்கும் சுறு சுறுப்பாக உலவி லாவகமாகக் கைவேலைகள் செய்து

Page 63
106 () பெண்களின் சுவடுகளில்.
குதூகலித்தபடி வேண்டிய ஆயத்தங்களைச் செய்தனர் இப் பெண்கள்.
ஆண்களின் விளையாட்டுக்களும், நாடகங்களும், முக மூடி ஆட்டங்களும் இவர்களால் மிகவும் விரும்பப்பட்டன. ஆண்களுக்கும் பெண்களின் நல்லெண்ணத்தைப் பெறுவது முக்கியமானதொன்றாக இருந்தது. "ஒவ்வொரு ஆணுக்கு முள்ள முக்கியமான பிரச்னை, தன்னைப் பற்றியும் தன் நடவடிக்கைகள் பற்றியும் பெண்கள் என்ன அபிப்ராயம் கொண்டிருக்கின்றனர் என்பதை அறிவதே எனவும் மார்கரெட் மீட் குறிப்பிடுகின்றார். ஆண்களைக் குறித்துப் பெண் களின் மனப்பாங்கோ "சகிப்பு'தன்மை மிக்கதாகக் காணப்
படுகின்றது என்றும் இவர் கூறுகிறார்,
இதைத்தவிர, இரட்டை அமைப்பு முறையின் கீழ் ஒரு மரபுவழிக் கூட்டத்தினைச் சேர்ந்த பெண்கள் எதிர்க் கூட்டப் பெண்களுடன் தமது புத்திரரையும் புத்திரிகளையும் கலவிக்கு மாற்றிக் கொள்வதாக ஒப்பந்தம் கூடச் செய்து சமாதானத்தை உறுதிப்படுத்துவதுண்டு.
இவற்றைத் திருமணங்கள் எனத் தவறாக எடை போடக்கூடாது. திருமணங்கள் இன்னும் தோன்றாத காலமிது. ஆண்களும் பெண்களும் புணர்வதற்கே ஒன்றுகூடும் நடவடிக்கை எனக் கூறலாம். ஆண்களும் பெண்களும் இவ்வாறு கூடிக் களித்தபின் தத்தம் கணங்களுடன் திரும்ப வந்து விடுவர். இச்சம்பவத்தின் பின்பு அவர்கள் ஒன்றாய் வாழ்வதில்லை, அயலில் வாழும் குலக்குழுக்கள் வருடத்தில் சிலநாட்கள் வந்து இதற்கெனவே தங்கி இருந்து விட்டுச் செல்வது அவதானிக்கப்பட்டுள்ளது.
சில பிராந்தியங்களில் சமாதானத்தைப் பிரகடனப் படுத்த விசேஷ நடனங்களும் உருவாகியிருக்கின்றன. இந்த யுத்த நிறுத்த நடனங்களில் முக்கிய பங்கு வகித்த வர்கள் பெண்களே. அந்தமான் தீவுகளில் நடைபெறும்

சாந்தி சச்சிதானந்தம் () 107
இவ்வகை நடனங்கள் இதற்குச் சிறந்த உதாரணங் களாகும். இம்மக்கள் மத்தியில் சமாதானப் பேச்சுவார்த் தைகள் எல்லாம் பெண்களினால்தான் நடத்தப்பட்டன. இதெப்படியெனில் ஒரு குழுவின் சில பெண்கள் மற்றக் குழுவின் பெண்களைச் சந்தித்து, நடந்து முடிந்ததை மறந்து நட்பு நாட அவர்கள் தயாராக இருக்கின்றனரா என வின வுவர். அவுஸ்திரேலிய குலக்குழுக்கள் எல்லாம் அபாயகர மான கட்டங்களில் பெண்களையே தூதுவராக அனுப்பின. தென் அமெரிக்காவைச் சேர்ந்த ஓனாக்குடிகள் எந்த சமாதானப் பேச்சுவார்த்தைக்கும் ஒரு கிழவியையே அனுப்பு வார்கள். வயதில் மூத்த பெண்ணொருத்தி மரியாதைக் குரியவளாக ஏற்றுக் கொள்ளப்படுவாள் என்பது மட்டுமல்ல இதன் காரணம். வேற்று இனங்கள் மத்தியில் செல்லும் போது பெண்கள்தாம் ஒருவித விக்கினமும் இன்றி எங்கும் சென்று வர முடியும் என்பதுமே, ஆண்கள் அன்னியர் பூமியில் காணப்பட்டால் அவர்கள் உடனே கொல்லப்படுவர். இன்றைய உலகில் இந்நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. இன்று பெண்கள் தனியே எங்கு சென்றாலும் ஆபத்து தான.
வட அமெரிக்க இந்தியர்கள் மத்தியில் கடைசிவரை பெண்களே சமாதானத்தின் சின்னமாக இருந்துள்ளனர். சென்ற நூற்றாண்டில் அவர்கள் குலக்குழுக்களெல்லாம் ஒன்று திரண்டு, குடலவாரஸ் குடியினரை தம்முள் சமா தானத்தைப் பேணிக் காக்கப் பொறுப்பெடுக்கும் தலைமைக் குழுவாக நியமித்தன. இந்தச் சந்தர்ப்பத்தில் இவ்வமைப் பின் பிரகடனம் பின்வருமாறு அமைந்தது -
“டெலவாரஸ் குழுவினை எமது மனைவியாக நியமித்திருக்கின்றோம். மற்றைய போரிடும் குலக் குழுக்கள் யாவும் அவளுடைய கணவர்களாக அவளைச் சுற்றி இருக்கட்டும். இந்த ஆண்கள் அப்பெண் சொன்னபடியே கேட்டு அதன்படி நடக்கட்டும்.

Page 64
108 () பெண்களின் சுவடுகளில்.
இத்துடன் உங்களுக்கு (டெலவாரஸ் குழுவினருக்கு) ஒரு சோளக்கற்றையையும் மண்வெட்டியையும் (பெண் களின் சின்னங்கள்) பரிசாக அளிக்கின்றோம்.”
ஆதிவாசிகள் பெண்களை இவ்வாறு மிகுந்த மரியாதைக் குரிய இடத்தில் வைத்துப் போற்றியதனால் அங்குள்ள ஒருவன் பெண்களின் பாதுகாப்பில் வந்து விடுவானாயின் அறிமுகம் இன்றிய இடங்களுக்கெல்லாம் அவனால் அச்ச மின்றிச் செல்ல முடிந்தது. மொரோக்கோவில் சில பகுதி களில் ஒரு புனிதர் அல்லது ஒரு பெண் துணையுடனேயே புது இடங்களுக்கு ஆண்கள் செல்ல முடியும் கோஜிரா குடாநாட்டு சிவப்பிந்தியர்கள் மத்தியில் ஒரு வேற்று மனி தனின் முழுப் பாதுகாப்புக்கு பெண்கள் அவசியமாயிருந் தனர். பல மதப்பிரசாரகர்களும் பயணிகளும் இவ்வுண்மை புரியாது பெண்கள் துணையின்றி தனியே சென்று தமது உயிரை இழந்துள்ளனர். இம் மா தி ரி சம்பவங்கள் தென்னமெரிக்கா, நியூகலடோனியா, மடகாஸ்கர், நியூசிலாந்து போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளன. அங்குள்ள ஆதிவாசிகளுடன் பரிசுப் பொருட்களைப் பரி மாற்றம் செய்தனரேயன்றி இவர்கள் அப்பெண்களின் மூலம் தமது நட்பினை ஸ்திரப்படுத்தும் முக்கியத்தினை உணர வில்லை.
மேலும், ஆதிமனிதர்கள் பெண்களை எப்பொழுதுமே *மனித இனத்தை சேர்ந்தவர்கள் என்றே கருதினர். ஆனால் ஆண்களோ அவர்களுக்கு, அன்னையர் மூலம் கொண்ட சமூக உறவினாலேயே சகோதரகள்ானார்கள். இல்லாவிடில் அவர்கள் பார்வையில் ஆண்களும் விலங்கு களில் ஒரு வகையினரே. ஆகையினால் ஆதிமுதற்கணவர் களும் தந்தைகளும் இவ்வகையான விலங்கு அந்தஸ்து
உடையவர்களாகவே வர்ணிக்கப்பட்டனர்.
ஏராளமான இனங்கள் பற்றிய மரபுக்கதைகளில் ஒரு பெண் ஏதேனுமொரு ‘விலங்குடன் புணர்ந்ததே தமது

சாந்தி சச்சிதானந்தம் () 109
ஆரம்பம் தொடங்குகிறது எனப் பொருள்படுமாறு எடுத்துக் கூறுகின்றன. இந்த ‘விலங்கு அநேகமாக குறிப்பிடப் பட்ட அந்த ஆணின் குழுஉக்குறி முறையின் சின்னமாக இருக்கலாம் என நம்பப்படுகின்றது.
ஒரு பெண் முறையே கரடி, மான், ஓநாய் ஆகிய விலங்குகளுடன் புணர்ந்ததனால்தான் தாம் தோன்றியதாக வட அமெரிக்காவின் இரோக்குவா குலக்குழுக்கள் ஒவ் வொன்றும் நம்புகின்றனர். எஸ்கிமோ குலக்குழுக்கள் ஒவ் வொன்றும் ஒரு பெண் கரடி, நாய், திமிங்கிலம் போன்ற விலங்குடன் புணர்ந்ததனால் தாம் தோன்றியதாக நம்பு கின்றனர். ஜப்பானைச் சேர்ந்த ஐனுாகுடியினர் ஒரு பெண் நாயுடன் உறவு கொண்டதன் விளைவே தமது ஆரம்பம் என்கின்றனர். இலங்கையிலுள்ள சிங்களவர்கள் ஒரு பெண் சிங்கத்தினைப் புணர்ந்ததினால் தாம் தோன்றியதாக நம்பு கின்றனர். ஒரு பெண்சர்ப்பத்தைப் புணர்ந்ததன் விளை வாகவே தோன்றியதாக நம்பும் குழுக்களும் ஏராளம். ஐரோப்பாவிலும் நோர்வே பகுதிகளிலும் ஒரு பெண் அன்னத்துடன் குலவியதனால் தாம் தோன்றியதாக நம்பும் குழுக்கள் இருந்தன. விலங்கொன்று அழகியை மணமுடித்த தனால் மனித உருவம் பெற்ற சிறுவர்கதை இவ்வரலாற்றை யொட்டியே புனையப்பட்டிருக்க வேண்டும்.
திருமணங்கள் வேரூன்றியபின் "விலங்கு அம்சம் கதை களில் மாற்றப்பட்டு அது தெய்வமாக உருவெடுத்தது. எகிப்தில் பெண்கள் விலங்குத் தெய்வங்களுடன் கூடி இனங் களைத் தோற்றுவித்ததாகப் பல கதைகள் உண்டு. அந்த நிலையிலும் பெண்ணுக்குத் தரப்பட்ட மானிட அந்தஸ்து மாறவேயில்லை. இதனற்றான் ஆதிவாசிகளுக்கு வேற்றினப் பெண்களும் மரியாதைக்குரியவர்களாக இருந்தனர். இது அவர்கள் பெண்கள் என்ற காரணத்தினால் மட்டுமே உரு வானதாகும்.

Page 65
110 ) பெண்களின் சுவடுகளில்.
இம்மரபுக் கதைகள் ஒரு இனத்தின் தோற்றத்தைப் பற்றியது என்பதை விட, திருமணங்களினதும் குடும்பங்களி னதும் ஆரம்பத்தைப் பற்றியது என்றே கூறிவிடலாம். குடும்பத்தின் தோற்றமே பெண்களின் வரலாற்றின் ஒரு திருப்புமுனையெனில் மிகையாகாது. மனித வரலாற்றில் குடும்பங்கள் மிகவும் பிந்திய காலகட்டத்தில்தான் தோன்றின. இந்தக் கட்டத்தில் ஆண்களும், தமது தன்மை களிலும் அன்றாடத் தொழில் முறைகளிலும் பெரும் மாறு தலுக்குட்பட்டிருந்தனர். அவர்கள் படிப்படியாகப் பெண் களின் தொழில்களில் ஈடுபடத் தொடங்கி விட்டனர். முதலில் காட்டை அழித்தல் போன்ற கடினமான வேலை களில் கைகொடுத்தவர்கள் பின்பு தோட்டப்பயிர்ச்செய்கை யிலேயே பெண்களுக்கு இணையாக வேலையிலீடுபட்டனர். கால்நடை வளர்ப்பிலும் அவர்கள் கூடிய பங்கேற்றனர். வேட்டையாடுதல் இக் கட்டத்தில் ஒரு சுகஜீவனத் தொழி லாகிவிட்டது. உயர்ந்த வாழ்நிலைத்தரமானது தனியுடை மைக்கு வழிகோலியது. தனியுடைமை வேரூன்றிய வரலாறே கணவன் தோன்றிய வரலாறாகும்.

திருமணங்களின் ஆரம்பம்

Page 66

கலவி மாற்று முறை
மனிதர்களின் முதல் சமூக அமைப்பினைத் தாங்கும் அத்திவாரங்களாக தன்னின உண்ணி முறைக்கும் தகாப் புணர்ச்சிக்கும் எதிரான தடைகள் இருந்ததை முன்னைய அத்தியாயங்களில் பார்த்தோம்.
இந்த முறையின்படி ஒரு குழுவினர் எந்த மனிதர்களைத் தமது உணவாக எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டிருந் தனரோ அவர்கள் மத்தியிலேயே உடலுறவு கொள்வதற் கான தமது துணைகளைய்ம். தேடி எடுக்க வேண்டிய தாயிற்று. இதனால் தான்ேர்:என்னவோ ஆதிவாசிகளின் மொழி வழக்கில் உண்பதற்கும் உடலுறவு கொள்வதற்கும் ஒரே பதம் பிரயோகிக்கப்பட்டு வருகிறது போலும் 1 தர்க்க ரீதியாகப் பார்த்தாலும் இதனைத் தவறு என்றே சொல் வதற்கில்லை. வாழ்க்கையின் இந்த இரு அத்தியாவசிய மான செயற்பாடுகளை உடலில் எழும் இருவகைப் "பசிகள் என்றும் விவரிக்கலாமல்லவா ? தன்னின உண்ணி முறைகள் அற்றுப்போய் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் சென்ற பிறகு தான் இப்பதப்பிரயோகங்களும் மெதுவாக மா ற த் தொடங்கின.
பதினான்காம் நூற்றாண்டில் பிறேசில் வாழ்ந்த ஆதி வாசிகள் மத்தியில் பயணம் செய்தவர்கள் விட்டுச்சென்ற குறிப்புகளின் மூலமே தன்னின உண்ணி முறை பரவலாக இடம் பெற்றிருந்த ஒரு காலத்தில் ஆதிவாசிகளின் காதல் வாழ்வு எவ்வாறு இருந்தது என்பது பற்றிய சில தகவல்கள்
ஆ-8

Page 67
114 () பெண்களின் சுவடுகளில்.
நமக்குத் தெரியவந்துள்ளன. டுபினாம்பா மக்களுடைய சடங்கு முறைகளைப் பற்றியும் இந்தப் பயணிகள் விபர மான குறிப்புகளைத் தந்திருக்கிறார்கள்.
இந்தப் பயணிகள் ஆதிவாசிகள் மத்தியில் தங்கியிருந்த காலத்தில் தான் அந்த ஆதிவாசிகளின் இரு குழாம்களுக்கு இடையில் போர் நிகழ்ந்திருக்கிறது.
இது பழிதீர்த்துக் கொள்ளும் போர்; தலைக்குத் தலை வாங்கும் பொருட்டு நடக்கும் போர். இந்தப் போர் வழக்க மான பாணியில் நடுவர்கள் மத்தியஸ்துவம் வகிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒவ்வொரு போர்வீரனும் போகும் போதே கைதிகளை இழுத்து வருவதற்காக நீண்ட கயிறு களைத் தன் உடல் முழுவதும் சுற்றி எடுத்துக் கொண்டு போகிறான். போர் ஆரம்பித்தது. முதலில் தூரத்தூர நின்று சண்டையிட்டவர்கள் சிறிது நேரம் கழித்து நெருங்கி வந்து ஒருவரை ஒருவர் நிராயுதபாணிகளாக்க முயன்றனர் இந்தச்சண்டையில் எவன் முதலில் மற்றவனைத் தொடு கின்றானோ அவன் தொடப்பட்டவனைத் தனது கைதியாகக் கொள்ள முடியும் என்பதே அவர்கள் விதி.
இந்த ரகளையில் சிலர் கொல்லப்பட்டனர். கொல்லப் பட்டவர்களினதும் கைதியாக்கப்பட்டவர்களினதும் எண்ணிக் கையானது இரண்டு பகுதியினருக்கும் ஏற்றவாறு சமப் படுத்தப் பட்டவுடன் போர் முடிந்தது.
அதன்பின் போர்க் களத்திலேயே எல்லாருமாக இறந் தவர்களின் உடலைச்சுட்டு உணவாக உண்டனர். எஞ்சிய இறைச்சியை தத்தமது ஊர்களுக்கு எடுத்துச் செல்லத் தயாராய் கட்டி எடுத்தனர். திரும்ப ஊருக்குச் செல்ல ஆயத்தமானவுடன் தமது கைதிகளை “நான் பிணைக்கும் விலங்கு நீதான்” என்று கூறியபடி தமது கயிறுகளினால்
ட்டி அவர்களையும் கூட்டிச் சென்றனர்

சாந்தி சச்சிதானந்தம் () 115
கிராமங்களுக்குள் காலடி எடுத்து வைப்பதற்கு முன்பு எல்லாருமே தனிமைப்படுத்தும் சடங்குகளுக்கூடாக விலக்கு நீக்கப் பெற்றனர். இந்த விரதம் ஒரு மாதம் வரை நீண்டது. இது முடிவுற்ற பின்னரே போரை ஒட்டிய விருந்துகளும்
கொண்டாட்டங்களும் ஆரம்பமாகின.
முதன் முதலாகக் கிராமத்துக்குள் கைதிகள் நடந்து வரும்போது தாம் வழியில் சந்தித்த கிராமத்துப் பெண்களை நோக்கி 'உனது இறைச்சியாகிய நான் இதோ வருகிறேன்” எனப் பலத்த குரலில் பிரகடனம் செய்யக் காணப்பட்டனர். பின் விருந்துகளிலும் களியாட்டங்களிலும் கூட அவர்கள் சமபங்கேற்றனர். இந்த விருந்துகளில் கைதிகளும் அவர் களைக் கைப்பற்றியவர்களும் மாறி மாறி உரை நிகழ்த்தி னார்கள். 'உங்களை வெற்றி கொண்டு உணவாகக் கொள்ள நாம் வீரமுள்ள ஆண்களாக வந்தோம். நீங்கள் எமது எதிரிகள். உண்மையான வீரர்கள் தம் எதிரிகளின் பூமியிலேயே உயிரை விடுவர். ஆனால் எங்களுடைய சுற்றத்தவர் எங்களுக்காக உங்கள் மீது வஞ்சம் தீர்த்துக் கொள்வார்கள்” எனக் கைதிகள் உரையாற்றினர். அதற்கு, 'உங்கள் இனத்தவர் எங்களில் பலரைக் கொன்று விட்டனர். அதற்கு நாம்தாம் வஞ்சம் தீர்த்துக் கொள்ள வேண்டும்” என கைப்பற்றியவர்கள் பதிலிறுத்தனர்.
இந்த நிகழ்ச்சிகளின் பின் கைதிகள் எல்லோரும் விடுவிக்கப்பட்டு கிராமம் முழுவதும் சுதந்திரமாக உலவ அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு விசேஷ விருந்தினர் களுக்குக் கொடுக்கப்படும் சகலவித கெளரவங்களும் அளிக்கப் பட்டன. ஆயினும் கைதிகள் தாம் தப்பித்துப்போக சிறிதும் முயலவில்லை. உரிய சடங்குகளுடன் எதிரிகளால் உண்ணப் படுவதே இந்நிலையில் தமக்குக் கிடைக்கக்கூடிய மிகப் பெரிய கீர்த்தி என்று அவர்கள் நம்பினார்கள். அத்துடன் இவர்கள் தப்பியோடித் திரும்ப தம் மக்களிடையே சென் றிருந்தால் கூட, தமது கடமைப்பாடுகளினைத் தவற விட்டதாகக் கருதி அம்மக்களே இவர்களைக் கொன்றிருப்

Page 68
116 () பெண்களின் சுவடுகளில்.
பார்கள். இக்காரணங்களுக்காக மாதக்கணக்கிலும் சில சமயம் வருடக்கணக்கில் கூட எதிரிகளின் ஊர்களில் தங்கி யிருப்பர்.
இக்காலம் முழுவதும், இவர்களுடைய கழுத்தைச் சுற்றிக் கட்டப்பட்ட கயிறொன்றுதான் கிராமத்தவரிடமிருந்து இவர்களை வேறுபடுத்திக் காட்டிய ஒரே அடையாள udst G5ub.
இவர்கள் இக் கிராமத்துப் பெண்கள் யாரையேனும் மணமுடிக்க விரும்பினால் அது பெருமைக்குரிய விடயமாகக் கருதப்பட்டு பெரிய திருமண விழாவே நடத்தப்பட்டது. அதாவது எதிரிகளெனினும் கலவிக்கு இசைவான துணை களானார்கள். அதன் காரணமாகவே வரும்பொழுது எல் லாப் பெண்களிடமும் தம்மை அவர்களின் இறைச்சி என அறிமுகம் செய்து கொண்டார்கள் போலும்.
இப்படியாகத் திருமணங்கள் நடைபெற்றாலும் அவை எந்த விதத்திலும் அக்கைதிகளுக்கு விதிக்கப்பட்ட முடிவை மாற்றவில்லை. கிராமத்தின் மூத்தோர்கள் குழு இவர்கள் கொல்லப்படவேண்டிய நாளைக் குறித்து தம்முடன் சமா தானத்திலிருக்கும் குழாம்களுக்கெல்லாம் அழைப்பு விடுத்தது. ஏராளமான ஆயத்தங்களுடன் ஆரம்பித்த விழாவானது பல நாட்களுக்கு நீடித்தது. கடைசி நாளில் ஒரு குறித்த நேரத்தில் நெருப்பை மூட்டினார்கள். சடங்கில் உபயோ கிக்கப் படப்போகின்ற கதாயுதத்தினைக் கைதிக்கும் காட்டி னார்கள். அவன் அதனைச் சிறிது நேரம் கையில் வைத் திருக்கவும் அனுமதிக்கப்பட்டான்.
இந்தக் கருவியைக் கொண்டுதான் அவனுடைய கபாலத்தைப் பிளந்தார்கள். அவன் இறந்தபின் அவனு டைய இறைச்சியினை விருந்தினர் உட்பட எல்லோரும் சுட்டுச் சாப்பிட்டனர். அந்த இறைச்சியின் சிறிய துண் டொன்று அவனை மணமுடித்த பெண்ணுக்கும் உண்ணக்

சாந்தி சச்சிதானந்தம் () 117
கொடுக்கப்பட்டது. அச்சடங்கில் கலந்து கொண்ட ஒரே யொரு பெண் இவளாகவே இருந்தாள். பெரியதொரு விலங்கினைக் கொன்றாலும் கூட இதே விதமான சடங்கு முறைகளின் பிரகாரமே அதனையும் உண்டனர் என்பதையும் அறிகின்றோம்.
தன்னின உண்ணிமுறைகள் குறையத் தொடங்கவே ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே உறவினை ஒழுங்கு படுத்து முகமாக மரபுவழிக் கூட்டங்களும் அவற்றின் கலவி மாற்று முறையும் நடைமுறைக்கு வந்தன. இதன்படி ஒரு பகுதியினர் மற்றப்பகுதியினருக்கு உணவு மாற்று முறையின் கீழ் உணவும் கலவிமாற்று முறையின் கீழ் துணைகளும் கொடுத்து வாங்கிக் கொண்டார்கள். மார்கரெட்மீட், அரபேஷ் மக்கள் மத்தியில் வழங்கும் ஒரு பழமொழித் தொகுப்பைத் தருகின்றார் :
உன்னுடைய தாய்,
உன் சொந்த சகோதரி, உன் சொந்த பன்றிகள், நீ கூட்டிக் குவித்த உன் கிழங்குகள் நீ உண்ண முடியாது. மற்றவர்களுடைய தாய்மார் மற்றவர்களுடைய சகோதரிகள் மற்றவர்களுடைய பன்றிகள் மற்றவர்கள் கூட்டிக் குவித்த அவர் கிழங்குகள் நீ உண்ணலாம்.
இவை குழுஉக்குறி முறைகளின் சகலத் தடைகளையும் சுருங்க விளக்கும் வசனங்களாகும். தன்னினம் உண்ணும் வழக்கம் முற்றாக அற்றுப்போன இம்மக்கள் மத்தியில் தாயையும், சகோதரியையும் உண்பதைப் பற்றிக் கூறப்படுகின்றதே யென நாம் கலக்கம் கொள்ளத் தேவையில்லை. உறவு கொள்வதையே இவர்கள் இப்படிக் குறிப்பிட்டனர். மாற்று முறையின் கீழ் துணை தேடுவதில் நிலவும் பயங்கரங்கள்

Page 69
118 () பெண்களின் சுவடுகளில்.
பெருமளவு குறைக்கப்பட்டனவாயினும் முன்னைய சந்தேகங் களும் பயங்களும் தொடவே செய்தன. தோபுக் குடிகளைப் பற்றி ஒரு ஆய்வாளர் கூறுகின்றார் :
**எதிரிகளும் சூனியக்காரரும் நிறைந்த கிராமத்தில் தான் ஒருவன் பெண் எடுக்க வேண்டியவனாகின்றான். அதுவும் இவர்களில் சிலர், தன் சொந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்களை கொன்றவர்களாகவோ அல்லது அப்படிக் கொன்றவர்க்குப் பிறந்தவர்களாகவோ இருக்கக் கூடும் என்று கருதப்படுகின்றனர். அத்துடன், பின்னிரவிலோ சுற்றியுள்ள கிராமங்களில், இதுவரை இறந்த ஆண்களினதும் பெண்களினதும் ஆவிகள் கொலைப்பசியுடன் உலாவரும். ஆகவே தன் துணைவி யுடன் கலந்துறவாடப் புறப்படுகின்றவனுக்கு இரு கிராமங்களுக்கிடையில் இருக்கும் பத்து கெஜ தூரமும் நூறு கெஜ தூரத்துக்கு சமானமாகும். மேலும் முன்னிரவி லேயே தமது காதல் விளையாட்டுக்களை முடித்துக் கொள்ள வேண்டியவர்களாகின்றனர். உண்மையில் இளைஞர்களெல்லாரும் மிகுந்த துணிவுடன் உயிரைக் கையில் பிடித்த வண்ணமே தமது கிராமத்து எல்லை யைத் தாண்டி காதலைத் தேடிச் செல்கின்றனர்.”
இவ்விளைஞர்கள் தாம் துணையெடுக்கும் கிராமத்தில் ஏதேனும் இசகு பிசகாக நடந்து கொண்டாலும் மரணத்தை எதிர்நோக்க வேண்டியிருந்தது. இதனால் ஆண் பிள்ளைகள் ஒரு குறிப்பிட்ட வயது வந்தவுடன் நடத்தப்படும் 'தொடக்க”ச் சடங்குகளில் தன்னினம் உண்ணும் வழக் கத்தின் தீமைகளும் தம் மனைவியரின் ஊரில் கொள்ள வேண்டிய நடத்தைகளும் முக்கியமாகப் புகட்டப்பட்டன. ஒரு ஆண் தன் மனைவியின் ஊரில் இருக்கும்போது கவனத் துடன் நடக்கவும், மெல்லப் பேசவும், மனைவியின் உற வினரின் கண்காணிப்புக்குப் பணியவும், மனைவியின் தாயைத் தவிர்க்கவும் இச்சடங்குகளின் மூலம் கற்றுக் கொள்

சாந்தி சச்சிதானந்தம் () 119
கின்றான். இவற்றுள் மனைவியின் தாயைத் தவிர்த்தலே மிகக் கடுமையான விதியாகும்.
ஒரு இளைஞனுக்கு மாந்திரீக சூனியங்களை விடவும் பயப்படும்படியான ஒரு விடயம் உண்டெனில் அது அவன் மனைவியின் சமூகத்தில் உள்ள வயது முதிர்ந்த பெண்கள் கொண்டிருப்பதாகக் கருதப்படும் அமானுஷ்ய சக்தியே என்று கூறலாம். அதுவும் அவர்களில், மனைவியின் தாயையோ பாட்டியையோ பார்த்து விட்டானாயின் காணாத பூதத்தைக் கண்டு விட்டவன் போல் நடுநடுங்கி விடுவான். சிலவிடயங்களில் மனைவியின் தாய்மாமனையும் பார்க்காது தவிர்த்துக் கொள்வார்கள்.
ஒவ்வொரு கிராமத்திலும் பெண்களும் குழந்தைகளும் இருக்குமிடமே மிகப் புனிதமான பகுதியாகக் கருதப்பட்டது. எந்த வேற்று மனிதனும் கிராமத்துக்குள் பிரவேசிக்க அனு மதிக்கப்பட்டாலும் இந்தக் குறிக்கப்பட்ட பகுதியை நெருங்கவும் அனுமதிக்கப்பட மாட்டான், அதுதான் வேற்று பெண்களுக்கெதிராக இம்மாதிரியான விலக்கினை அனுஷ்டித் தவர்களோ என்னவோ ? அத்தோடு, வயது முதிர்ந்த பெண்களின் மாந்திரீக சக்தி பற்றி பொதுவாகவே ஒரு அபிப்ராயம் நிலவும் வேளையில் அவர்கள் வேற்றுக் கிராமத்தைச் சேர்ந்தவர்களாகவும் இருந்துவிட்டால் ஏற்படும் அச்சத்திற்கு அளவில்லைதான்.
அவுஸ்திரேலியாவில் ஒருவனுடைய மாமியாரின் வர வைத் தெரிவிக்க பெரும் ஓசை கிளப்பும் வழக்கம் பொது வாகப் பல இடங்களிலும் காணப்பட்டது. அங்கொரு மனிதன் தான் தூங்கிக் கொண்டிருக்கும் போது மாமியாரின் நிழல் தன் கால்கள் மீது படர்ந்த ஒரு காரணத்தினால் பயத்தில் விறைத்து மூர்ச்சையாகிவிட்டான். இங்கெல்லாம் முந்திய காலகட்டத்தில் மாமியாருடன் பேச விரும்புபவனுக்கு மரணதண்டனையே விதிக்கப்பட்டது.

Page 70
120 () பெண்களின் சுவடுகளில்.
காலப்போக்கில் இத்தண்டனை அத்தகைய நபரை ஊர் விட்டு ஊர் துரத்துவதாக மாறி அமைந்து பசுபிக் பிராந்தியந்திலுள்ள பாங்க்ஸ் தீவுகளிலும் மாமியாரும் மருமகனும் நேருக்குநேர் ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்வதில்லை.
வட அமெரிக்க இந்தியர் மத்தியில் பெரும் ஆயுதங் களைத் தாங்கிய போர் வீரர்களும் தமது மாமியார் எதிரே வரக்கண்டால் வெலவெலத்துப் போய் புதர்களுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டனர். ஆபிரிக்காவிலுள்ள ஸாலூ குடியினர் மத்தியிலும் நிலை இதுவே, நாவாகோஸ் (Navahos) மக்கள் மத்தியில் மாமியாரைக் குறிக்கும் பதமான 'தொயிஷினி” என்பது ‘நான் பார்க்கக் கூடாதவள்” பொருள்பட அமைந்திருக்கிறது.
மாமி, மனைவி மருமகன்
மாமியார்களைக் குறித்தே தடைகளும் விலக்குகளும் கடுமையாக இருப்பினும் இன்னும் கூர்மையாக அவதானித் தால் இச்சமூகங்களில் இத்தகைய தடைகள் பெண்ணி னுடைய மூத்த உறவினர்கள் எல்லாருக்கும் விரிவாக்கப் பட்டிருந்ததை அறிந்து கொள்ளலாம்.
சமாதான உடன்படிக்கைகள் ஏற்படுத்தப்பட்ட பின்பும் வேற்று மனிதனைப் பற்றிய சந்தேகமே இவ்வாறு அவனைத் தூரவைத்தே பழக வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாக் கிற்று எனலாம். இதனால் திருமணங்கள் என்பவை இருளில் காடுகளில் கணநேரம் கூடல்களை அனுபவிப்ப தாகவே நீண்டகாலமாகத் தொடர்ந்து கொண்டிருந்தன.
இதற்குப் பின்னர் தோன்றிய வழக்கம் “வந்து காணும் கணவர்” முறை ஆகும். இதற்கு ஒவ்வொரு கிராமத்திலும்

சாந்தி சச்சிதானந்தம் () 121
அறிமுகமில்லாத விருந்தினரும் வேற்று கிராமங்களிலிருந்து வரும் கணவர்களும் தங்குவதற்கென பொது விடுதிகள் ஸ்தாபிக்கப்பட்டன. அங்கு வந்து தங்கம் கணவன் தன் மனைவியின் ஆண் உறவினர்களின் நெருங்கிய கண்காணிப் பின் கீழ் உண்டு உறங்கி இருப்பான்.
அநேகமான ஆண், பெண் சந்திப்புகள் ஒரு இரவு மட்டும்தான் நீடிக்கும். விடிந்ததும் கணவன் தன் ஊருக்குப் போய்விடுவான். பீஜித் தீவுகளில் ஒவ்வொரு கிராமத்திலும் இரு விடுதிகளாவது இந்த உபயோகத்திற்கென கட்டப்பட் டிருந்தன. பீஜிக் கணவர் தம் மனைவியரின் வீட்டில் தங்கியதில்லை. மனைவியரின் கிராமத்தை அடைந்த வுடன் தம் ஆயுதங்களை ஒருபுறம் வைத்துவிட்டு அவள் உறவினர்கள் வந்து விடுதிக்கு அழைத்துச்செல்லும் வரை வெளியில் காத்திருப்பர்.
நாளடைவில் இந்த வந்து காணும் கணவர்கள் இரவில் இரகசியமாய் மனைவியின் அறைக்குள் நுழையும் அந்தஸ் தினைப் பெற்று விட்டனர். ஜப்பானிய மொழியில் திரு மணத்திற்கு வழங்கப்படும் பதங்களிலொன்று “இரவில் வீட்டுக்குள் நுழைதல்’ எனும் பொருள்பட அமைந்திருக் கின்றது.
மத்திய ஆசியாவைச் சேர்ந்த குலக்குழுக்கள் மத்தியிலும் கணவர்கள் இரகசியமாகவே மனைவியின் வீட்டிற்குள் நுழைவார்கள். காலையில், அவளுடைய ஆண் உறவினர் பார்க்கா வண்ணம் கவனமாக வெளியேறுவர். ஆனால் அவர்களிடம் அகப்பட்டுக் கொண்டாலோ கணவர்கள் நையப்புடைக்கப்பட்ட சம்பவங்கள் நிறையவே உண்டு.
காசி, குடிகள், திக்பராக்கள், யாகூட்டுக்கள் குறில்குடி கள் ஆகியோர் மத்தியிலும் கணவர்கள் மனைவியின் வீட் டுக்கு இரவில்தான் வந்துபோவார்கள்.

Page 71
122 0 பெண்களின் சுவடுகளில்.
இந்தியாவில் கேரளமாநிலத்தில் வந்து காணும் கணவர் முறை இந்நூற்றாண்டின் ஆரம்பத்திலும் பரவலாகக் காணப்பட்டது. ஒரு ஆணும் பெண்ணும் கூடலுக்கு இரசிய Lo Tuiu இரவில் மட்டும் சந்திப்பதற்கு அதை யொட்டிய கூச்சங்களே காரணம் என நாம் பொதுவாகக் கருதுகின்றோம். ஆனால் இவ்வழக்கத்தின் ஆரம்பங்கள் வேற்று குழுவினரைப் பற்றி ஆணிற்கு ஏற்பட்ட பயத்தினா லேயே தோன்றின என்றே எண்ணத் தூண்டுகின்றது.
விடுதிக்கு வந்துபோன கணவன் பெண்ணின் அறைக் குள்ளேயே வரும் யோக்யதை பெற்றது மாமியாரினால்தான். காலப்போக்கில் மாமியார்தான் தன் மகளுக்கும் இன்னொரு ஆணிற்கும் தூதுசென்று அவர்களிருவரும் கூடி மகிழ அந்த ஆடவனை இரகசியமாகப் பின்கதவினால் உள்ளேவிட்டாள். அத்துடன் தன் சமூகத்தைச் சேர்ந்த ஆண்களுக்கு இதைப் பற்றி ஒன்றும் தெரியப்படுத்துவதில்லை. மந்திரக்காரியாக வும் பயங்கரமானவளாகவும் தென்பட்ட மாமியார், வரலாற் றின் இந்தக்காலகட்டத்தில் தன் மருமகனின் உற்ற தோழி யாகி விட்டாள்.
மேற்கூறிய வழக்கங்களைத் தவிர, சற்று நீண்டகாலத் துக்குத் தொடரும் காதல் உறவை ஏற்படுத்தும் இன்னொரு வழக்கமும் உண்டு. அது, மணமாகாத பெண்களுக்கும் ஆண்களுக்கும் ஸ்தாபிக்கப்பட்ட பிரம்மச்சாரிய விடுதிகள் மூலம் உறவுகளைத் தொடரும் வழக்கமாகும். மெலனீசியா ட்ரோபிரியாண்ட் தீவுகள் போன்ற அநாகரிக காலகட்டத் திலிருந்த பல சமூகங்களில் இது காணப்பட்டது. ஒரு கிராமத்தின் வயது வந்த பெண்கள் அடிக்கடி இவ்விடுதி களில் இரவுகளைக் கழிப்பர். இருளானதும் அயல் கிராமங் களிலுள்ள இளைஞர்கள் இங்கு வந்து தாம் துணை எடுக்கத் தயாராயிருப்பதை குறிக்குமாறு வாசலில் குந்தி யிருப்பர் பெண்களும் அதில் தமது மனதுக்குப் பிடித்த மானவர்களைத் தேர்ந்தெடுத்து பொழுதை அவர்களுடன் அங்கேயே கழிப்பர். ஒரு ஜோடிகள் ஒருவரையொருவர்

சாந்தி சச்சிதானந்தம் () 128
நன்கு பிடித்திருந்தால் அவர்கள் நீண்ட காலத்துக்கு இவ் வாறு அடிக்கடி சந்தித்துக்கொள்ளலாம். ஆனால்இருவருக் கும் பொதுவான தேவையாக உடலுறவு ஒன்றே காணப் பட்டது. அவர்களுக்கிடையே வேறெந்தக் கொடுக்கல் வாங்கல்களும் இருக்கவில்லை. ஒன்றாக உட்கார்ந்து உண்ணவும் மாட்டார்கள்; ஒருவருக்கொருவர் எதும் பணி விடை செய்து கொடுக்கவும் மாட்டார்கள்.
இதன்பின், பகிரங்கமாக மாமியார் தன் மருமகனை அங்கீகரித்து தனது மகளுடன் வீட்டில் தங்குவதற்கு அனு மதிக்கும் நிலை உருவானது. தோபுக் குடியினரிடம் இது அவதானிக்கப்பட்டது. இரவில் இரகசியமாக ஒரு பெண்ணு டன் தங்கவரும் வாலிபன் வழக்கம்போல விடியவும் முன்னும் எழுந்து ஓடிவிடமாட்டான். விடிய விடியத் தூங்கிக்கொண் டிருப்பதுபோல் பாசாங்கு பண்ணுவான். இதுவே திருமணத் திற்கான அவன் விண்ணப்பம், தூக்கத்திலிருந்து எழுந்த மாமியார் இந்த விண்ணப்பத்தினை ஏற்றுக் கொண்டதற்கு அடையாளமாக முன் வாசலை முழுவதும் மறைத்தபடி அமர்ந்துகொள்ளுவாள்.
இதனைப் பார்த்ததும் அண்டை, அயல் என ஊரெல் லாம் வாசலைச் சுற்றிக் குழுமிவிடும். எல்லோரும் சம்பந்தப் பட்ட வாலிபன் எவனென்று அறிவதிலேயே ஆர்வமாயிருப் பர். அளவான கூட்டம் சேர்ந்தவுடன் வாசலிலேயே ஒரு பாய் விரித்து தன் மகளையும் அவ்விளைஞனையும் அமர வைப்பாள். அடுத்த அரை மணி நேரத்திற்கு எல்லோரும் இமைகொட்டாமல் அவ்விருவரையும் பார்த்துக்கொண்டே யிருப்பர்.
இதுகாறும் இருட்டில் இரகசியமாகத் தொடர்ந்த உறவு உறவினர்களுக்கு இவ்வாறு பகிரங்கப் படுத்து தலே அவர்களின் நிச்சயதார்த்தமாகும். ஊரார் எல்லோரும் கலைந்து சென்ற பின்னர், ஒரு தோண்டு கழியினை எடுத்து மருமகனிடம் கொடுத்து தோட்டம்

Page 72
124 () பெண்களின் சுவடுகளில்.
செய்யச் சொல்லி உத்தரவிடுவாள் மாமியார், மருமகனும் மிக்கத் தாழ்மையுடன் அதனைப் பெற்றுக்கொண்டு வேலை யிலீடுபடுவான்.
தோட்டவேலை மட்டுமல்ல, மாமியார் தன்னுடைய வேலைகளையெல்லவற்றையும் ஒன்றன்பின் ஒன்றாக அவன்மேல் சுமத்துவார். அவனும் எல்லாவற்றையும் திறமையாகச் செய்துமுடிக்க முயற்சிப்பான். ஆண் தன் உழைப்புத் திறமையினால் அங்கீகாரம் பெறுவதனூடேயே கணவன் என்னும் அந்தஸ்து பெற்று சமூகக் கணிப்பில் உயர்ந்து நிற்க முடியும்.
இந்த மாதிரியான ஒரு பரீட்சைக்காலம் பொதுவாக ஒருவருடத்திற்கு நீடிக்கும். யூனிக்குடிகள் வழக்கத்தில் மருமகன் தோட்டக்கலையில் ஈடுபடுவது மட்டுமின்றி விற கொடிப்பது, தோல்பதனிடுவது, ஆடை நெய்து கொடுப்பது போன்ற தன் மாமியாரின் நானாவித வேலைகளையும் சிரமேற்கொண்டு செய்துகொடுக்கவேண்டும்.
மனிதகுல வரலாற்றில் முதன் முதலாக மனைவியுடன் வந்து தங்கும் கணவன், அவள் உறவினர்களுக்கு வேலைக் காரனாக, முக்கியமாக தோட்டக்காரனாகவே வெளிப்படு வதைக் காண்கிறோம்.
தன் மனைவியின் ஊரில் வேலைசெய்யும் இந்த ஒரு வருடமும் தினமும் ஒரு ஆண் அதற்குச் சென்று வந்தாலும் அவன் அங்கு ஒரு குவளை நீரும் குடிக்க அனுமதிக்கமாட்டான். உச்சி வெய்யிலில் களைக்க களைக்க வேளை செய்துவிட்டு அவன்தன் கிராமத்திற்கு ஒடிச் சென்றுதான் தாகசாந்தி கூடச் செய்ய முடியும். இவ்வகையாக தனக்கு வைக்கப்பட்ட ப்ரீட்சையில் ஒருவாறு சித்திபெற்றவுடன் அவனுடைய கணவன் அந்தஸ்து நிரந்தர மாக்கப்படும்.

சாந்தி சச்சிதானந்தம் ) 125
அதற்கு அவன் முன்னெப்போதும் செய்திராதவொன் றைப் பலர் முன்னிலையிலும் செய்வான்: ஆம். அவன் தன் மனைவியுடன் சேர்ந்து உண்பான். எமது நவீன யுகத்தில் திருமணத்திற்கு முன் உடலுறவு கொள்வது எவ்வளவு தகாததாக இருக்கின்றதோ அதே போல் பழங்குடி மக்க ளுக்கு திருமணத்திற்குமுன் ஆணும் பெண்ணும் சேர்ந்துண் பது அங்கீகரிக்ழுடியாதவொன்றாக இருக்கின்றது. இவ் வாறு கணவன் தோன்றிய கால கட்டத்தில் ஆண் பெண் ணிற்கு இடையிலான உணவுத்தடையும் தகர்க்கப்படும் நேரம் வந்து விட்டது.
மேலும், அக்கணவன் மனைவியின் ஊரில் உழைப்பது போக தன் சொந்த ஊரிலும் உழைத்து திருமணத்திற்கு வேண்டிய பரிசுப் பொருட்களையும் உணவினையும் சேர்க்க வேண்டியவனான். திருமண காலத்தில் அவன் உறவினர் கள் அணிகலன்களையும் பலவித பரிசுப் பொருட்களையும் எடுத்துச்சென்று மணப்பெண்ணின் தாய்க்குக் கொடுப்பார் கள். அவள் அவற்றைத் தன் ஊராருடன் பகிர்ந்து கொள்வான். பின்பு தன் உறவினருடன், கூடை நிறைய காய்கறிகளும் வேறு தயார் செய்யப்படாத உணவுப்பதார்த் தங்களும்கொண்டு மணமகனின் கிராமத்திற்குச் செல்வான். அங்கு அவற்றை எல்லோருக்கும் வினியோகித்துவிட்டு சில பெண்களை துணைக்கு அழைத்துக்கொண்டு அக்கிரா மம் முழுவதையும் கூட்டித் துப்புரவாக்குவாள். பின்னர் தான் கொண்டுவந்த உணவுப் பதார்த்தங்களில் எஞ்சிய வற்றை அங்கேயே சமைத்து மணமகனின் உறவினர்களுக் கும் கொடுத்து அதற்குப் பதிலாக சமைத்த உணவு சிறிதினை அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டு எல்லோருடனும் திரும்ப ஊர்வந்து சேர்வாள்.
இதற்கு அடுத்த நாள், மணமகனின் உறவினர்கள் அதே போன்று சமைக்காத உணவுப் பதார்த்தங்களை எடுத்துச் சென்று மணமகளின் கிராமத்தில் வினியோகம் செய்துவிட்டு

Page 73
126 () பெண்களின் சுவடுகளில்.
எஞ்சியவற்றை சமைத்துக் கொடுத்துவிட்டு சமைத்த உணவைப் பதிலுக்குப் பெற்றுக்கொண்டு ஊர் வந்து சேர்வர். ஒவ்வொரு சடங்கும் இரு பகுதியினருக்கும் பொதுவாக இருக் கும் வேளையில் கிராமத்தினைத் துப்புரவாக்கும் சடங்கு மட்டும் மணமகளின் உறவினர்களே செய்வதை அவதானிக் கலாம். ஓர் ஆணுக்கும் பெண்ணுக்குமிடையே உணவுத் தடையை நீக்குமுன்பு ஆணுக்குச் செய்யப்படும் புனிதமாக்கப் படும் சடங்கே இது.
திருமணத்தன்று, மணமகளின் கிராமத்தில், அவளுடைய தாயார் தான் தயாரித்த உணவை மணமகனுக்கு ஊட்டுவாள். அதேபோன்று மணமகனின் ஊரில் அவன் தாய் தன் உணவை மணமகளுக்கு ஊட்டுவாள். இந்த முக்கியமான சடங்குடன் திருமணச் சடங்குகள் முடிவுற்றதாகக் கருதப்படும்.
அநேக குடிகளில் ஆணும் பெண்ணும் சேர்ந்துண்பது திருமணச் சடங்குடன் முதலும் கடைசியுமாக செய்யப்படுகின் றது. அதற்குப் பின்பு அவர்கள் ஒருபோதும் சேர்ந்துண்ப தில்லை. திருமணங்கள் வேரூன்றிய காலத்திற்குப் பின்பும் கூட ஆணும் பெண்ணும் சேர்ந்துண்ணும் வழக்கம் பெரும் இடர்ப்பாடுகளுக்கு மத்தியிலேயே நடைமுறைக்கு வரலா யிற்று.
யாக குழுவினர் மத்தியில் திருமண விருந்தின்போது கூட மணமகனும் மணமகளும் ஒன்றாக இருந்து உண்ண மாட்டார் கள். அவர்கள் ஒரு மூலையில் சுவரைப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருக்க அவர்களுடைய உறவினர்கள்தாம் தம்முள் உணவைப் பகிர்ந்து கொள்வர்.
இவ்வாறு, பகை மூளும் இரு கிராமத்தவர்க்கிடையே நட்பு நாடி திருமண உறவுகளை ஏற்படுத்தியவர்கள் பெண் களே. அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தைச் சேர்ந்த பழங்குடிகளில் எப்பொழுதும் பெண்களே தமது விருப்பத்தை முதலில் தெரிவிப்பார்களாம். அதனை நிராகரிக்கக்கூடிய

சாந்தி சச்சிதானந்தம் () 127
தகுதிகூட அந்த ஆண்களுக்கு இல்லை என்கின்றனர் ஆய் வாளர்கள். அவுஸ்திரேலியாவின் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த குர்னாய் குடிகள் மத்தியிலும் இதே வழக்கம் காணப்படு கின்றது, மெலனீசியா, நியூ இங்கிலாந்து, நியூகலோப், நியூ அயர்லாந்து, பபுவாநியூகினி, ரொறஸ் ஸ்ட்ரேய்ட்ஸ் ஆகிய இடங்களிலும் பெண்களே தம் கணவர்களைத் தேர்ந் தெடுப்பர். ரொறஸ் ஸ்ட்ரேய்ட்ஸில் இளம் வாலிபர்களுடைய தொடக்கச் சடங்குகளில், பெண்களுடன் தாமே முதன்முதலில் மணங்கோரும் ஒழுக்கக்கேடான நடத்தைகளைப் பற்றிய பாடமும் புகட்டப்படுகின்றது. எகிப்திலும்கூட ஏட்டுச்சுவடி களில் கண்டெடுக்கப்பட்ட காதல் கவிதைகளும் மடல்களும் பெண்களாலேயே வரையப்பட்டனவாகக் காணப்பட்டது. அக்காலத்துப் பெண்கள் ஆண்களிடம் காதல் வார்த்தை கூறி அவர்களுக்கு வலை வீசுவதைத் தமது உரிமையாகவே கொண்டிருந்தனர்.
கணவன், மனைவி, சகோதரி
விவசாயத்தில் ஏற்பட்ட முன்னேற்றங்களினால் உபரி உற்பத்தி அதிகரிக்கத் தொடங்கியது. இதனால் உச்சக் கட்டத்தினை அடைந்துவிட்ட கூட்டுக் குழுக்களின் வளர்ச்சி இந்நிலையினால் இடிபாடடையலாயிற்று. தனியுடைமை ஒரு உரிமையாக வளர்ந்ததனால் ஒவ்வொரு கணங்களும் தமக்கென சில கிராமங்களை அமைக்கலாயின. சில சமயங் களில் ஒரு கணம் கூட பிளவுபட்டு வேறுவேறு கிராமங்களை அமைத்தது. இவ்வாறு மெல்ல மெல்ல அதிக நிலத்தை ஆக்கிரமிக்கும் வண்ணம் மரபுக் குழுக்கள் பரந்து செல்ல லாயின.
மரபுவழிக் கூட்டங்களுக்கிடையே இதுவரை நடந்துவந்த மணவினைகள் இப்போது தனியான இரு கணங்களுக்கிடையே

Page 74
128 () பெண்களின் சுவடுகளில்.
ஏற்படுத்தப்படும் தொடர்புகளாகச் சுருங்க ஆரம்பித்தன. நாளாவட்டத்தில் கணங்கள் ஈடுபடாத வகையில் இரு கிராமங் களுக்கிடையில் நடைபெறும் சம்பந்தப் பேச்சுகளாகி ஈற்றில் இரு குடும்பங்களுக்கிடையில் நடக்கும் நிகழ்ச்சியாகி விட்டது. குழுக்களாக வாழ்ந்தவர்கள் தமக்கென ஒரு இடத்தை ஒதுக்கிக்கொண்டு குடும்பங்களாகப் பிரிந்தார்கள்.
இந்தக் குடும்பங்களில் கணவன் என்பவன் மனைவியுடன் வந்து குடியிருப்பவனாக மாறிவிட்டான். ஆயினும் இவை தாய்வழி உறவு முறைகளைப் பின்பற்றுபவையாகவே தொடர்ந்தன. ஒவ்வொரு குடும்பத்தில் தாயும் தாய்மாமனுமே முதலிடம் வகித்தனர். இங்கு கணவனாக வாழ்ந்த ஆண் களுக்கு இது ஒரு இக்கட்டான சூழ்நிலையையே உருவாக் கிற்று. அவர்களுடைய நெருங்கிய உறவுகளும் பொறுப்பு களும் தமது சகோதரிகளுடனும் சகோதரிகள் பிள்ளைகளுட னும் இருக்க இங்கு வந்து மனைவியுடனும் அவள் உறவினர் களுடனும் வாழ்ந்தனர். ஆனால் கல்யாணம் போன்ற எந்த பொதுச்சடங்குகளிலும் சகோதரர்கள், சகோதரிகள், சகோதரி பிள்ளைகள் என்றே குடும்பம் குடும்பமாய் முன்னின்று நடத்தினர். எங்கும் கணவன்மனைவி அவர்கள் பிள்ளைகள் அடங்கிய குழு ஒரு குடும்பமாய் மதிக்கப்படவில்லை. இந்தக் கண்ணோட்டம் கணவன் மனைவிக்கிடையில் பெரும் பிரச்னைகளைக் கிளப்பியது. மனைவியின் குடும் பத்தில் ஏதேனும் அழிவுகளோ இறப்புகளோ அல்லது வியாதிகளோ வந்தால் வேற்று மனிதனாகிய கண வனே அதற்கு மூலகர்த்தாவாகச் சந்தேகிக்கப்பட்டான். இதனால் கணவனுக்கும் மனைவிக்குமிடையில் சுமுகமான உறவிருக்கவில்லை; விவாகரத்துகள் மலிந்துபோய் காணப் பட்டன. பல சந்தர்ப்பங்களில் மனைவியின் சகோதரனின் விருப்பங்களைக் கணவன் பூர்த்தி செய்யவில்லை என்பது மட்டுமே திருமணங்கள் முறியப் போதுமான காரணமாக விருந்தது.

சாந்தி சச்சிதானந்தம் () 129
ஒரு பெண் தன் கணவனுக்கெதிராக எப்போதும் தன் சகோதரனையே ஆதரித்திருந்ததனால் இதுவொரு தீராப் பிரச்னையாயிற்று. கணவனை வீட்டை விட்டு வெளியேற்றும் படி மனைவியின் சகோதரனே மனைவியிடம் உரிமையுடன் கூறிவிடுவான். இதற்கு மறுபக்கத்தில், மனைவியின் உறவு நிரந்தாமல்லாததாக இருந்ததனால் ஓர் ஆணும் தன் சகோதரி யையே முற்றாக நம்பினான், மனைவி இறந்தாலோ அல்லது விவாகரத்து ஏற்படும் பட்சத்திலோ கணவனுக்கு அடைக்கலம் கொடுப்பது அவன் தாய் அல்லது சகோதரியினுடைய வீடல்லவா? மனைவியின் வீட்டின் மீதோ அல்லது அவள் பிள்ளைகள் மீதும் தானோ அவனுக்கு கடுகளவும் உரிமை இருக்கவில்லை. முன்வாசலில் மனைவியின் பிணம் வெளியேற பின்வாசலோடு கணவன் வெளியே தள்ளப்பட்டான். இச் சூழ்நிலைகளில் எவ்வளவுதான் அன்னியோன்யமாகக் கணவ னும் மனைவியும் வாழ்ந்து விட்டாலும் அவர்கள் உறவு ஒரு எல்லையுடன் நிற்க வேண்டியதாயிற்று.
சகோதரர்கள் சகோதரிகள் உறவிலும் இக்கால கட்டத் தில் ஒரு திருப்பம் ஏற்பட்டது. ஒரு கணத்தின் சகோதரர் களெல்லாம் அங்குள்ள பெண்களின் நலன்களைக் கவனித்த அமைப்பு போய் தனியொரு குடும்பத்தில் ஒவ்வொரு சகோதர னும் ஒரு சகோதரிக்கு இணைக்கப்பட்டு அவளுடைய பிள்ளை களின் நலனைக் கவனிப்பவனானான். இதன் ஒரு விளை வாக, இரு கணங்களுக்கிடையே நிலவி வந்த பரிசுகள் பரி மாற்றம் இப்பொழுது சகோதரனுக்கும் சகோதரியின் கணவ னுக்குமிடையில் வலுக்கட்டாயமாக நிகழ்த்தப்படும் ஒரு கொடுக்கல் வாங்கல் போல ஆகிவிட்டது. அநேகமாக உணவு பதார்த்தங்களையே இவ்வாறு கொடுத்து வாங்கினார்கள்.
ஓர் ஆண் தன் நிலத்திலிருந்து வரும் விளைச்சலையெல் லாம் தன் சகோதரியின் கணவனுக்குக் கொடுத்துவிட்டு தன் னுடைய தேவைகளுக்கு மனைவியின் சகோதரனை நாடி நிற்க வேண்டியதாயிற்று. அறுவடை நாட்களில் சகோதரி
ஆ-9

Page 75
130 O பெண்களின் சுவடுகளில்.
யின் வீடும் சேமிப்புக் கிடங்கும் எவ்வளவு தூரமாக இருந் தாலும் சரி, வேலையோடு வேலையாக விளைந்தவற்றை யெல்லாம் அங்கு கொண்டு செல்ல வேண்டியவனாகின்றான். ட்ரோபிரியான்டர்கள் மத்தியில் காணப்பட்ட இவ்வழக்கத் தைப் பற்றிய விவரணைகள் பின்வருமாறு:-
'அறுவடை காலத்தில் பாதைகளெல்லாம் கூடை நிறைய உணவுகளைச் சுமந்து கொண்டோ அல்லது வெறுங்கூடைகளுடனோ அங்குமிங்கும் செல்லும் ஆண் கள் கூட்டத்தினால் நிரம்பி வழியும், கிரிவின என்னும் இடத்தின் வடக்கிலிருந்து ஒரு கூட்டம் 12 மைல் ஓடி வந்து டிக்வாக்வா கரைக்கு வந்து ஓடங்களில் ஏறி ஆழ மில்லாத ஏரி வழியே துடுப்பு வலித்து சினக்கேட்டாவில் இறங்கி இன்னும் பலகாத தூரம் நடந்தது; எல்லாம் எதற்காக? தன்னுடைய சகோதரியின் கணவனுக்குத் தன் விளைச்சலையெல்லாம் கொடுக்க மட்டும் தேவை யில்லையெனில், தனக்குப் போதுமான அளவு விளை விக்கக்கூடிய ஒரு மனிதனின் சேமிப்புக் கிடங்கினை நிரப்புவதற்காக!”
எவ்வித பொருளாதார இலாபங்களுமற்ற இந்த ஏற்பாட் டினால் உழைப்பு விரயமாவதுடன் மைத்துனர்களுக்கிடை யிலும் மனஸ்தாபங்கள் தோன்றலாயிற்று. இதற்கு மேல்ாக, ஒரு கணவன் இன்னும் மனைவிக்கும் அவள் உறவினர்களுக் கும் தன் உழைப்பினைக் கொடுக்க வேண்டியவனானான். இதனால் ஒரு வருடத்தில் மாறி மாறி இங்குமங்குமாய் தன் சகோதரியின் நிலத்திலும் தன் மனைவியின் நிலத்திலும் உழைத்தான்.
இவ்வாறு கணவனுக்கு ஏற்படக்கூடிய சில குறை களைத் தவிர்க்கும் பொருட்டு மனைவியும் சில சமயங் களில் இடம்பெயர்ந்து கணவனுடைய கிராமத்திற்குப்போய்த் தங்கும் வழக்கம் படிப்படியாகத் தோன்றலாயிற்று. ஆயினும் ஒரு பெண்ணுக்கும் அவள் கணவனின் உறவினர்களுக்கு

சாந்தி சச்சிதானந்தம் () 131
மிடையே நிலவிய உறவுமுறை மேலோட்டமான சம்பிரதாய பூர்வ உறவாகவே கடைசி &ரை இருக்க முடிந்தது. வட மத்திய ஆசியாக்கண்டத்தின் சகல இன மக்கள் மத்தியிலும் மனைவி ஒரு சிறிது காலமே கணவனின் வீட்டில் தங்கும் அதே வேளை மிகுதி நாட்களையும் கணவன் மனைவியுடன் அவள் வீட்டிலேயே கழிக்கின்றாள். டச்சு நியூகினிக் கணவன் தன் மனைவியை ஒரே வருடம்தான் தன் வீட்டில் வைத் திருக்க இயலும்; அதன்பின் அவளை அவளுடைய வீட் டிலேயே வந்து காண்பான்.
ஆபிரிக்காவின் பலபகுதிகளில் இது இருபக்கத்திற்கும் நியாயமானதோர் ஒழுங்காக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அங்கெல்லாம் ஒரு கணவனுக்கும் மனைவிக்கும் அவரவர் கிராமத்தில் ஒரு வீடும் வளவும் கொடுக்கப்பட்டது. வருடா வருடம் அவர்கள் தங்கள் குழந்தைகளுடன் மாறி மாறி ஒவ்வொரு வீட்டிலும் குடியிருப்பர். தமக்கிடையே அடிக்கடி மூண்ட சண்டைகளை தத்தம் கிராமங்களிலிருக்கும்போது தத்தமக்குச் சாதகமாகத் தீர்த்துக் கொண்டனர். வழக்க மாக இத்தகைய மனுக்களெல்லாம் தாய்மாமனிடமே எடுத்துச் செல்லப்பட்டது. அவரும் ஒரு தயக்கமுமில்லாது தன் மருமகனையோ மருமகளையோ அவமதித்ததாகக் கருதப்படும் மற்றப் பகுதியைப் பகிரங்கமாக வசைபாடி விட்டு ஊரை விட்டு விரட்டி அனுப்பிவிடுவார். அவ்வாறு மானபங்கப்படுத்தப்படும் அங்கத்தினர் தம்முடைய சொந்தக் கிராமத்தில் இதற்கெல்லாம் வஞ்சம் தீர்த்துக் கொள்வார்கள், இப்படி ஏற்படும் பிரிவுகள் போதாதென பேறுகாலம் வந்து விட்டால் அதைச் சாக்காக வைத்தே மனைவி மாதக்கணக்கில் கணவனைப் பிரிந்து தன் வீட்டுக்கு வந்து விடுவாள். ஆபிரிக்காவின் பக்கரெவே மக்கள் மத்தியில் வாழ்ந்த ஒரு ஐரோப்பிய மத போதகரின் முரண்பாடுகள் இவை:-
**இங்கு திருமணங்களில் நல்ல புரிந்துணர்வும் ஸ்திரப்படுத்தும் தன்மையும் ஏற்படுவதற்குத் தடை

Page 76
132 ( ) பெண்களின் சுவடுகளில்.
யாக நிற்பது, சின்னக் காரணங்களுக்கும் தம் வீட்டுக் குச் சென்று விடும் இப்பெண்களின் வழக்கமே. அவளுக்கு உடல்நிலை சரியில்லையென்றால் 'நான் வீட்டுக்குப் போகின்றேன்” என்பாள். அவளுடைய உறவினர் ஏதும் விழா கொண்டாடுகின்றனரெனில் 'நான் வீட்டுக்குப் போகின்றேன்” என்பாள். அவ் வாறு வீட்டுக்குச் செல்லும் நேரங்களிலும் அங்கே தங்கும் நாட்களை நீடித்துக் கொண்டே போவாள். இதனால் தனியே விடப்படும் கணவன் ஏமாற்றமடைந் தாலும் இவ்வழக்கத்தை மாற்ற வலுவில்லாதவனாகி யிருக்கின்றான். மனைவி கணவனுடன் வந்து வாழும் காலகட்டம் உரு வான போதும் பிள்ளைகள் தாயினுடையதாகவே கணிக்கப் பட்டனர். விவகாரத்து ஏற்படும் பட்சத்தில் குழந்தைகள் தாயுடன் சென்று விடுவர். குழந்தைகளின் இறப்பின் போதும் அவர்களின் தாயும் பிள்ளைகளும் தாயுடைய உறவினருடன்தான் புதைக்கப்பட்டனர். கணவனோ தன் தாய்வழி உறவினருடன் புதைக்கப்பட்டான்.
ஒரு ஆணும் பெண்ணும் ஒன்றாய் வாழ்ந்து வாழ்க் கையின் இன்ப துன்பங்களைத் தமக்குள் பகிர்ந்து கொள்வது எவ்வளவுக்கெவ்வளவு இயற்கைநியதி என நாம் நினைக் கின்றோமோ அவ்வளவுக்கவ்வளவு அது வலுக்கட்டாய மாகத் திணிக்கப்பட்ட ஒரு சம்பிரதாயமாக அன்றைய தாய்வழிச் சமூகங்களிலிருந்த மக்களுக்குத் தோற்றியிருக் கின்றது. மரபுவழிக்கூட்டங்களுக்கிடையே இருந்த இப் பகைமையுணர்ச்சி படிப்படியாக மறைய எதிரெதிர் கூட்டங் களிலிருந்த ஆண்களினதும் பெண்களினதும் தொடர்புகள் அதிகரிக்கப்பட்டதையும் நீடிக்கப்பட்டதையும் கண்டோம்.
சகோதரனும் சகோதரியும் முக்கிய அங்கத்தவராக நின்று கொண்டிருக்கும் குடும்ப அமைப்பின் ஒரு மூலையில் 5666.T.& நின்றுகொண்டிருந்தவன் மெல்ல மெல்ல

சாந்தி சச்சிதானந்தம் 0 188
விசுவரூபம் எடுத்து சகோதரனை அப்புறப்படுத்தியது மட்டு மல்லாமல் தனது மனைவிக்கும் தலைவனாகி விட்டான். மேற்கூறிய ஒரு தனிக்குடும்பத்தின் வளர்ச்சி நிலையின் முக்கிய அம்சம் மணமக்கள் தமக்கெனவோர் உறைவிடத் தினை அமைத்துக் கொண்டதாகும். ஊருக்குள் வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்த ஆண்களுக்கிடையே, அதாவது கணவனுக்கும் மனைவியின் சகோதரனுக்கும், விளையக் கூடிய மனஸ்தாபங்களைக் குறைப்பதற்கு தனித்தனி வசிப் பிடங்களை ஏற்படுத்திக் கொண்டார்கள். இது தனியுடை மைக்குச் சாதகமான, அதற்கு வழிவகுக்கும் ஒரு படிக் கல்லாக அமைந்து விட்டது. மரபுவழிக் கூட்டங்களின் சடங்குகள் சுருங்கி ஒரு குடும்பத்திற்கு மட்டும் ஏற்றதாக மாறியதும் இதனாலேயே பசிபிக் தீவுகளைச் சேர்ந்த மலேகியூலா மக்களைப் பற்றி ஆய்வாளர்கள் கூறுகின்றனர்:
“கிராமத்துக்குள் ஒவ்வொரு மணமுடித்த ஆணும் தனக்கென்று ஒரு உறைவிடத்தை ஏற்படுத்திக் கொண் டான். இவ்வுறைவிடங்களைச் சுற்றிக் கற்களாலும், அதன் மேல் பின்னிய நாணற் புதர்களாலும் ஆன வேலி கட்டப்பட்டிருந்தது. எந்த ஒரு ஆணும் அழைப்பின்றி இன்னொரு ஆணின் உறைவிடத்தினுள் நுழைய மாட்டான். கிராமத்திலுள்ள சமூகத்தினரின் பரந்த மனப்பான்மையும் அதையொட்டிய பொது வுடைமைவாத வாழ்க்கை நெறியும், ஒவ்வொரு ஆணும் தனது காணி நிலத்தைப் பற்றிக் கொண்ட ஆழமான பற்றுதலுடன் சமப்படுத்தபட்டதென்றே கூறலாம்.
இதனை ஆதிச் சமத்துவ வாழ்முறைக்கும் இன்றைய தனியுடைமை வாழ்முறைக்கும் இடையே காணப்படும் ஒரு மாறும் காலகட்ட நிலைக்கு சிறந்த உதாரணம் எனலாம். இம்முறையில் நுண்ணியதாக ஆனால் வெகு தீர்க்கமாக தாய்வழிச் சமூகங்கள் வேரனுக்கப்பட்டன. எந்தச் சமூக அமைப்பும் வரலாற்றின் யாதுமொரு கட்டத்தில் மனித

Page 77
134 0 பெண்களின் சுவடுகளில்.
குலத்தின் தேவைகளுக்கேற்பவும் அதன் பொருளாதார வளர்ச்சியுடன் பொருந்தத்தக்கவாறுமே உருவாகின்றது. அக் காலகட்டம் மாறுதலடைய சமூக அமைப்பும் பயனற்ற தாகி அழிந்து விடுகின்றது. விலங்கியல்புகளையும் தன்னின உண்ணி முறைகளையும் தகர்க்கவே தாய்வழிச் சமூகங்கள் தோன்றின. இது நிறைவேற்றப்பட்டவுடன் மேற்கொண்டு ஏற்படும் வளர்ச்சிக்கு இவ்வமைப்பு இடையூறாகவே அமைந்துவிட்டது.
இரத்த உறவினருக்கும் இரத்த உறவினரல்லாதோருக்கு மிடையே நிலவிய முரண்பாடுகள் தீர்க்கப்படவேண்டிய காலகட்டம் உருவாகி விட்டது. இந்த முரண்பாடு தீர்க்கப் பட்ட வரலாறே தந்தை எனும் ஸ்தானத்தில் ஆண் என் பவன் அதிகாரத்தினைக் கையில் எடுத்ததன் வரலாறாகும். இதுவரை, கணவன் எனும் நிலையில் படிப்படியாக ஆண் தன்னை - ஸ்திரப்படுத்திக் கொண்டதும், தனியுடைமை மக்களிடம் வேரூன்றியதும் ஒரே சீராக ஒன்றுக்கொன்று முரண்பாடில்லாமல் நிகழ்ந்ததைக் கண்டோம். அதே போன்று பிந்திய கட்டத்தில், தந்தை எனும் ஸ்தானத்தில் ஆண் தனது அதிகாரத்தினை நிலைநாட்டியதும் வர்க்க வேறுபாடுள்ள சமூக அமைப்பு தோன்றியதும், முரண் பாடின்றி ஒரே சீராக வளர்ந்ததை நோக்குவோம்.
திட்டமாக வரையறுக்கப்பட்ட - வர்க்க வேறுபாடுகள் அடங்கிய சமுதாயம் தோன்றிய வரலாறே ஆண்கள் தங்தை ஸ்தானத்தில் தமக்கு அதிகாரத்தினைக் கைப்பற்றி எடுத்துக் கொண்ட வரலாறாகும்.

தந்தைக் குடும்பங்களின் தோற்றம்

Page 78

ஆண்தாய்
அநாகரிக நிலையின் ஆரம்ப கட்டத்திலேயே குடும்பங் கள் தோன்றிவிட்டன. ஆனால் இந்தக் குடும்பங்கள் தாய் வழிக் குடும்பங்களாகவே இருந்தன. அப்போதெல்லாம் ஆண்கள் தந்தை என்னும் ஸ்தானத்திற்கூடாகத் தமது அதிகாரத்தினை நிலைநாட்டத் தொடங்கவில்லை.
மேலும் பெண் ஒருத்தி கருவுறுவதற்கும் கலவிக்கும் இடையில் இன்றியமையாத தொடர்பு இருப்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. ஒரு குழந்தையின் தோற்றத்தில் அதன் தந்தையின் பங்கு என்ன என்பது பற்றி அவர் களுக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை.
ஆஸ்திரேலியா, நியூகினி, நியூகலடோனியா, ட்ரோ பிரியாண்ட் தீவுகள், மத்திய போர்னியோ போன்ற இடங் களில் இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் செய்யப்பட்ட ஆய்வுகள் அங்குள்ள ஆதிவாசிகள் குழந்தையின் பிறப்பி னுடைய தன்மை பற்றி எதுவும் தெரியாத நிலையில் இருந் ததைக் குறிப்பிட்டுச் சொல்கின்றன.
ஒரு பெண் கருவுறுவது என்பது சில மந்திர சக்திகள் அப்பெண்ணின் உடலில் புகுவதால்தான் என்றோ அல்லது அப்பெண் சில உணவு வகைகளை உட்கொண்ட தனால்தான் என்றோ அவர்கள் நம்பினர்.
ஒரு பெண் கர்ப்பமடைவதில் ஒரு ஆணின் பங்கை ஓரளவு ஊகிக்க முடிந்த இனங்களின் மத்தியில்கூட ஆணும்

Page 79
138 ( பெண்களின் சுவடுகளில்.
பெண்ணும் ஒன்றாக இருந்து உணவு உட்கொண்டதனா லேயே குழந்தை உண்டாவதாகவே கருதப்பட்டது.
அரபேஷ் மக்களைப்பற்றி மார்க்ரெட் மீட் இவ்வாறு குறிப்பிடுகிறார்.
*தன் துணையினைக் கருவுறச் செய்யும் அந்த ஒரு நடவடிக்கையின் பின் ஒருவன் பிரிந்து எங்கேயும் சென்று விட்டு ஒன்பது மாதங்கள் கழித்துத் தன் குழந்தையைக் கொஞ்சுவதற்காக மனைவியைத் தேடி வரலாமென்பது அரபேஷ் மக்களுக்கு புரியாதொன்று. இது அருவருக்கத் தக்கதும் நடக்க முடியாத காரியமுமாக அவர்கள் கருது கின்றனர். ஒரு கணநேர மோகத்தின் விளைவு அல்ல இது. கணவனும் மனைவியும் ஒன்றாக வாழ்வதால்- பல நாட் களுக்கூடாக இருவரினாலும் கவனமாக வளர்க்கப்படுவதே குழந்தையாகத் தாயின் வயிற்றிலிருந்து உதிக்கின்றது என்று இவர்கள் திடமாக நம்புகின்றனர்.”
சகல இன மக்கள் மத்தியிலும் குடும்பங்கள் தோன்றிய காலகட்டத்தில் இத்தகைய அறியாமை காணப்பட்டது என்ப தற்குப் பல சான்றுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. ஆயினும் தந்தை என்பவன் சமூகத்தினால் உருவாக்கப்பட்டான். ஆரம்பத்தில் இவனை 'ஆண்தாய்’ என்றே குறிப்பிட்டனர்.
தந்தை உருவகத்தின் தோற்றத்திற்கு இருகாரணங் களை முக்கியமாகக் குறிப்பிடலாம். மனைவிக்கு உடலுற வுக்கான துணையாகி அவளுடன் நிரந்தரமரகக் குடிவந்து விட்ட கணவன், குழந்தை வளர்ப்பில் தன் மனைவிக்கு ஒத்தாசை புரிய வேண்டிய தேவையேற்பட்டது என்பது ஒன்று. அவ்வாறு ஒத்தாசை புரிந்தவன் தனக்கும் அவள் குழந்தைகளுக்குமிடையே ஒரு நிரந்தரமான உறவினை நாடியது.
மற்றது குடும்பங்களாகி விட்டதன் பின் சமூ கத்தின் மற்றைய பெண்களின் சேர்க்கையும் உதவியும்

சாந்தி சச்சிதானந்தம் () 139
குறையவே மனைவியும் கணவனுடன் தனது வீட்டுப் பொறுப்புக்களைப் பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தாள். கணவ னுக்கும் மனைவிக்கும் இடையில் இவ்வாறு ஏற்பட்ட அர்த்தம் நிறைந்த உறவுதான் தந்தையை உருவாக்கியிருக்க வேண்டும்.
தன் மனைவியின் குழந்தைகளுக்கு தாய்மைக்குரிய கடமைகளைச் செய்வதற்கு ஒரு கணவன் சமூக அங்கீகாரம் பெறவேண்டியிருந்தது. ஏனெனில் தாய்வழி உறவு முறைப்படி அவன் இன்னும் வேற்று மனிதனே. கொலம்பஸ7ம் அவர் சகாக்களும் கரிபியன் தீவுகளில் இறங்கியபோதே இச்சடங்குமுறை முதன்முறையாக அவ தானிக்கப்பட்டது,
இச்சடங்கின்படி, மனைவி குழந்தையைப் பிரசவித்த வுடன் அவள் கணவன் தானே அக்குழந்தையைப் பெற்ற வனாகப் பாவனை செய்து சில நாட்களுக்கு ஓய்வெடுப் பான். இந்தச் சந்தர்ப்பங்களில் குழந்தைபெற்ற பெண்களே வெகு சாதாரணமாக ஓடியாடித் தம் அன்றாட வேலை களைக் கவனித்துக் கொண்டிருப்பர்; ஆனால் அவர்கள் கணவர்களோ நோயாளிகளோவென எண்ணும் வண்ணம் படுத்தபடுக்கையாய் இருப்பர். இந்நாட்களில் அக்கணவன் வேலை செய்யவோ, மாமிசம் உண்ணவோ, வேட்டை யாடுதல் போன்ற வன்முறை சம்பந்தப்பட்ட தொழில்களில் ஈடுபடவோ அனுமதிக்கப்படமாட்டான். ஆரம்ப நாட்களில் பூரண உண்ணாவிரதமும் அனுசரிப்பான். இது காய்கறி மசியல், கஞ்சி ஆகியவற்றுடன் படிப்படியாக முறிக்கப் படும். சமூகத்தின் வயது முதிர்ந்த பெண்களே இச்சடங்கு களை மேற்பார்வையிட்டு நடத்துவர்.
இக்கரணங்களின் முடிவில் மனைவியின் கணவனுக்கும் அவள் குழந்தைகளுக்கும் ஒரு பந்தம் ஏற்படுத்தப்பட்ட தாகக் கொள்ளப்படும். இக்குறிப்பிட்ட பந்தம் ஏற்படும் முன்பு அந்தக் குழந்தைக்கு ஏதேனும் தீங்கு நேர்ந்தால்

Page 80
140 0 பெண்களின் சுவடுகளில்.
அதற்கு கர்த்தாவாகக் கணவன் குற்றம்சாட்டப்படுவதைத் தடுக்கவே அவன் விரத காலத்தில் பூரண ஒய்வு கொண் டான். நாள் முழுவதும் ஒரு வேலையிலும் ஈடுபடாதிருந் தால் சூனியம் செய்யவோ இரத்த வஞ்சம் கொண்டுவரும் வன்முறை சம்பவங்களில் ஈடுபடுதலோ முடியாதல்லவா? இதனால் மனைவியின் உறவினர்களின் கண்ணில் அவன் நிரபராதியாகத் தீர்க்கப்படும் சாத்தியக்கூறு இருந்தது.
சொலமன் தீவுகளிலுள்ள புகா மக்களின் வழக்கப்படி மனைவியின் பேறுகாலத்தில் ஒரு கணவன் பாரமான பொருட்களைத் தூக்கவோ கோடரி, கத்தி போன்ற கூரான கருவிகளைத் தொடவோ அனுமதிக்கப்படமாட் டான், அப்படிச் செய்தால் குழந்தைக்குக் காயமேற்பட்டு விடும் என நம்பப்பட்டது.
தென்னமெரிக்காவில், குழந்தை இறந்தால் அதன் தாயின் கணவன் பல்வேறு காரணங்களை ஆசாரத்துடன் பின்பற்றாதே காரணம் எனக் குற்றஞ்சாட்டப்படுகின்றது.
கரிபியின் தீவுகளில் பிள்ளைப்பேற்றின் பின் நீண்ட காலத்துக்கு குழந்தையின் தந்தை பெரிய 'மிருகங்களை வேட்டையாடுவதிலிருந்து தடைவிதிக்கப்படுகிறான். சூடான் நாட்டிலும் மனைவி கருவுற்ற காலங்களிலும் குழந்தை பிறந்த பின் இரண்டு மாதங்களுக்கும் கணவன் புல், மரம் வெட்டுதல் போன்ற வேலையிலும் ஈடுபடமுடியாது.
இவ்வகையாக விரதகாலம் முடிவுற்றதும் கணவன்தன் மனைவியின் குழந்தையின் சேவைக்கு தன்னை முழுவது மாக அர்ப்பணித்துக்கொண்டான். இந்தச் சடங்கினாலேயே மனைவியின் ஆண்குழந்தைக்கும் அவனுக்கும் ஒரு விசேஷ பந்தம் ஏற்படுத்தப்படுவதாக நம்பினர். இது மறைமுகமாக, இருவேறு மரபுவழிக் கூட்டங்களைச் சேர்ந்த ஆண்களை இணைக்கும் வழி என்பதும் கண்கூடு.

சாத்தி சச்சிதானந்தம் () 141
ட்ரோபிரியான்டர் தந்தையைப் பற்றிப் பின்வருமாறு விவரிக்கின்றனர்.
''. . . . . . அவன் தன் குழந்தையைத் தூக்கிக் கொஞ்சி கழுவிச் சுத்தப்படுத்துவான். தாய்ப்பாலுடன் அது உண்ணும் காற்கறி மசியலை அவனே ஊட்டுவான். அதனைத் தாலாட்டுவதும் மடியிலிடுவதும் தந்தையின் விசேஷ கடமை களாகக் கருதப்படுகின்றன. குழந்தையின் மலத்தினையும் சலத்தினையும் அளைவதனாலேயே தந்தைக்கும் குழந்தைக் குமிடையே நெருங்கிய உறவுமுறை உண்டாகின்றது என்பர்”
‘இவ்வளவுக்கும், அது தன் குழந்தையாக இருக்கக் கூடும் என்பதனை அக்கணவன் அறிந்திருக்கவில்லை. தந்தைக்கும் பிள்ளைக்கும் எவ்வளவுதான் நெருங்கிய உறவுமுறை தோன்றினாலும் தந்தை “வேற்றுமனிதன்' எனப் பொருள்படவே அழைக்கப்பட்டான். அவ்வாறாயின் அக்குழந்தைகட்கு "சொந்தம் உள்ள’ மனிதனாக கருதப் பட்டது யார்? அவன்தான் அவர்களுடைய தாய்மாமன். ()
தாய் மாமன்
தாய்வழிக் குடும்பங்களின் தலைவர்களாகத் தாய்மாமன் களே திகழ்ந்தனர். எந்த முக்கிய சடங்குகளிலும் தமது சகோதரிகளுடனும் அவர்கள் பிள்ளைகளுடனுமே சமூகம் தந்தனர். அவர்கள் பட்டம், பதவி, சொத்து, சுகம் அனைத்திற்கும் சகோதரியின் பிள்ளைகளே வாரிசுகளா யினர். தாம் தமது மனைவியருடன் குடும்பமாய் வாழ்ந் தாலும் தமது மருமக்களுக்கு கல்வி மற்றும் தொழிற் பயிற்சிகள் அளித்து அவர்கள் வருங்காலத்திற்கு வகை செய்தலும் அவர்களைத் திருத்தி நன்னெறிப் படுத்துவதும் தாய்மாமன்மாரின் கடமைகளாக இருந்தன.

Page 81
142 0 பெண்களின் சுவடுகளில்.
தந்தையோ இருதலைக் கொள்ளி எறும்பாகத் தவித் தான். தான் சீராட்டி வளர்த்த பிள்ளைகள்மேல் அவனுக்கு எந்தவித உரிமையும் இருக்கவில்லை. அவர்கள் தவறு செய்தாலும் குறைந்த பட்சம் அவர்களைத் தட்டிக் கேட்டுத் திருத்த அதிகாரமற்றவனாக இருந்தான், குழந்தைகளும் ஆரம்பத்தில் தந்தையுடன் மிக ஒட்டுதலாக வளர்ந்திருப் பினும் நாளா வட்டத்தில் தம் சொந்த உறவு முறைகளைத் தெரிந்து கொண்ட பின்னால் தந்தையிடமிருந்து சிறிது சிறிதாகத் தம்மை வேற்றுமைப்படுத்திக் கொண்டனர். அவர்களுக்கிடையில் உள்ளத்தால் மட்டுமின்றி உடலாலும் பிரிவு ஏற்பட்டது. ஒரு சிறுவன் ஏறக்குறைய பத்துவயதில் தன் கல்விப் பயிற்சியைத் தொடரும் நிமித்தம் தாய்மாமன் வீட்டுக்கு அனுப்பப்பட்டான். அதே போன்று பெண்களும் தமது தாயையும் பிற பெண் உறவினர்களையுமே தமக்கு பக்க பலமாக நாடினர். தாய் இறந்துவிட்டால் தந்தைக்கும் பிள்ளைகளுக்குமிடையே உள்ள உறவு முற்றாகத் துண்டிக்கப் படும் வழக்கம் இன்னமும் தொடர்ந்தது.
இவை போதாதென்று, மரபுவழிக்கூட்டங்களுக்கிடையே நடந்த துரோகங்கள் இப்போது குடும்பங்களுக்கிடையில் தீர்க்கப்படும் பழியாயிற்று. எத்தனை விரதங்களுக்கூடாகக் கணவன் தன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்டாலும், அவன் மனைவியின் குழந்தை என்ன காரணத்தினாலும் இறந்து போனால் ஏதோவொருவகையில் பழிதீர்க்கப்பட் டான். அவன் மனைவியின் உறவினர்களெல்லாம் ஒன்று சேர்ந்து கணவனின் உடைமைகளைச் சூறையாடினர்; குலக்குழுக்களின் காலத்திற்போல் அவனை ஊரை விட்டுத் துரத்துவதோ கொள்வதோ இல்லை.
மாஓரி இனத்தவர்களில் ஒரு குழந்தை எந்தக் காரணத் தால் இறக்க நேர்ந்தாலும் ஏதும் விபத்தில் காயமுற்றா லும் அதன் தாயின் உறவினரெல்லோரும் கூடி அவள் கணவனைத் தாக்க வருவர். கணவனும், முறைப்பாடு

சாந்தி சச்சிதானந்தம் () 143
எதுவுமின்றி இப்போரில் தன்னைப் பாதுகாக்கவேண்டிய நடவடிக்கைகளில் ஈடுபடுவான். இப்போரில் அவனுக்கு ஏற்படும் இரத்தம் வெளிப்படும் முதல் காயத்துடன் போர் நிறுத்தப்படும். ஆனால் உடனேயே அவன் வீட்டிலுள்ள உடைமைகள் அனைத்தையும் சூறையாடுவார்கள். ஈற்றில், அந்தக் கணவன் அளிக்கும் விருந்தில் பங்கேற்பதுடன் கூட்டம் கலைந்து செல்லும் .
நியூஸிலாந்திலும் இவ்வாறே திடீர் விபத்திற்குள்ளாகும் பிள்ளைகளின் தந்தையர் தமது சொந்த உடைமைகள், உழைப்பிற்கான கருவியுபகரணங்கள் யாவற்றையும் இழந் தனர். சிலவிடங்களில் கதாயுதத்தாலும் தாக்கப்பட்டனர். இச்சண்டைகளில் தலையில் பெருத்த காயமுண்டானால் அது இன்னும் விசேஷமாகக் கருதப்பட்டது.
இதே கணவர்கள், தம் சகோதரிகளுக்கு சகோதரர்களாய் நின்று அவர்கள் கணவர்களைப் பழி தீர்த்தனர். ஆயினும் தந்தையாய் தாய்மாமனாய் முரண்பாடுகள் உள்ள இரு வேறு நிலைகளில் நின்று வாழ்வது கடினமாகத்தான் இருந்தது. இதற்கோர் உதாரணமாக ட்ரோபிரியான்டர்களின் கிராம மொன்றில் நடந்த சம்பவத்தினைக் குறிப்பிடலாம்.
அக்கிராமத்தின் தலைவன் மனைவியுடனும் மகனுடனும் அங்கு வாழ்ந்து வந்தான். இந்தத் தலைவன், தன் சகோதரியின் மகன் என்றொருவன் இருந்தபோதிலும் தூக்கி வளர்த்த அன்பின் நிர்ப்பந்தத்தினால் தனது மகனுக்கு பல சலுகைகள் அளித்தான். இதனால் அவனுடைய மகனுக்கும் மருமகனுக்கும் பகை மூளலாயிற்று. ஒரு சந்தர்ப்பத்தில், மகனுடைய சில நடவடிக்கைகளினால் அவன் மருமகன் அந்நாட்டின் காலனித்துவ சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்டு சிறையில் தள்ளப்பட்டான். இதனால் வெகுண்டெழுந்த மருமகனின் தாய்வழி உறவினர்கள் ‘நீ வேற்று மனிதனாக இருந்தும் உனக்கு உண்ண உணவும் இருக்க இடமும் எமது கிராமத்தில் தந்தோம். ஆனால்

Page 82
144 0 பெண்களின் சுவடுகளில்.
நீயோ எமது இனத்தைச் சேர்ந்த ஒருவனுக்கெதிராகவே நடந்து கொண்டாய். உடனே ஊரை விட்டுக் கிளம்பு' என தலைவனின் மகனிடம் கூறி அவனை ஊரை விட்டே துரத்தி விட்டனர். அவனும் தன் சொந்தக் கிராமமான தன் தாயின் கிராமத்திற்குச் சென்று விட்டான். இவனுடைய தந்தை கிராமத்தலைவனாக இருந்தும் தன் உறவினர்களுக் கெதிராக ஒன்றும் செய்ய முடியவில்லை. ஏனெனில் அவன் மனைவியின் மகன் அவர்களைப் பொறுத்த வரையில் வேற்று மனிதனே. இச் சம்பவம் நடந்து மூன்று நாட் களுக்கு தலைவன் தன் குடிசையை விட்டு வெளியே வர வில்லை. கடைசியில் அவன் வெளிப்பட்டபோது துயரத்தின் சுமையினால் பல வருடங்கள் முதுமையடைந்தாற்போல் தோற்றமளித்தானாம். அவனுடைய மனைவி, இறந்த வருக்கு ஒப்பாரி வைப்பது போன்று ஒலமிட்டபடி இருந் தாள். இதன் பின்னர், அவள் உணவை வெறுத்ததனாலும் ஆறாத்துயரில் அமிழ்ந்ததனாலும் ஒரு வருடத்திற்குள் இறந்து விட்டாள். இவ்வாறு இரண்டு வெவ்வேறு சமூக அமைப்புகளுக்கு விசுவாசம் காட்டியதனால் அவர்கள் குடும்பம் சீர்குலைந்தது.
மேற்கூறிய சமூக அமைப்பு ஒரு சுவாரசியமான இடை நிலை அமைப்பாகும். மனைவி இடம்பெயர்ந்து கணவ னுடன் வாழவேண்டிய "தந்தைக் குடும்பம் தோன்றி விட்டது; ஆயினும் மகன் தாயுடையதாகவே கணிக்கப்படு கின்றான். தந்தை தன் மகன் மீது அன்பு செலுத்தினாலும் தன் சகோதரி பிள்ளைகள் மீதே விசுவாசமாக இருக்கக் கோரப்படுகின்றான். இவ்வாறாக தன் பிடியினைத் தளர்த்த மறுத்த அமைப்பு மனிதகுல வரலாற்றின் ஆரம்பக்கட்டம் முதல் கைக்கொள்ளப்பட்ட இரத்த உறவுமுறைகளடங்கிய சமூக அமைப்பாகும். இதனைத் தகர்க்க முற்பட்ட அமைப்போ புதிய பொருளாதார உறவுமுறைகளின் அடிப் படையில் எழுந்ததும் அதன் அனுகூலங்களைத் தன் சார்பில் கொண்டதுமான தந்தையுடைமைச் சமுதாயமாகும். இப்

சாந்தி சச்சிதானந்தம் () 145
போராட்டம் ஒரு இரத்தக் களரியினூடாகவே தீர்க்கப்பட்ட தில் ஆச்சரியம் எதுவும் இல்லை. r
சிசுப்பலிகள்
காட்டுமிராண்டி யுகத்தின் சின்னமாக தன்னின உண்ணி வழக்கம் எவ்வாறு இருந்ததோ அதே போன்று அநாகரிக நிலையின் சின்னமாக இரத்தப்பலி கொடுக்கும் வழக்கம் உருவாகிற்று. இரத்தப் பலி கொடுக்கப்பட்டதன் ஆதாரங்கள் வரலாற்றிலும் புராணங்களிலும் காணப்படுகின்றனவாயினும் இதன் காரணங்கள் பெரும்பாலும் மர்மமாகவே இருந்தன. பசுபிக் தீவுகளைச் சேர்ந்த மலேகியூலா மக்கள் மத்தியில் இந்நூற்றாண்டின் ஆரம்பத்திற் செய்த ஆய்வுகள், ஓரள விற்கு இதனைப் பற்றிய உண்மைகளை வெளிக் கொணர்ந் தன. உலகின் ஏனைய பாகங்களில் மனிதர்களைப் பலி கொடுக்கும் வழக்கம் சிறிது காலத்திற்கு நீடித்து அதன் பின்னரே ஆடு மாடுகளைப் பலி கொடுக்கும் வழக்கமாய் மருவிய அதே வேனையில் மலேகியூலாவில் வெகுசீக்கிர மாகவே இந்த மாற்றம் நிகழ்ந்து விட்டது. இந்த முக்கிய காரணத்தினால் அந்த மக்கள் மனதில் நரபலி கொடுக்கும் சடங்குகளின் காரணகாரியங்களும் தன்மைகளும் இன்னும் ஆழமாகப் பதிந்திருந்தன.
இவர்கள் பலிகளுக்காக கொம்புள்ள காட்டுப்பன்றி களை வளர்த்தெடுத்தார்கள். மனிதர்களுக்குப் பதிலாக பன்றிகளைத்தாம் இப்போது பலி கொடுப்பதாக அந்த மக்களே ஆய்வாளர்களிடம் வாக்குமூலம் தந்தனர்.
ஒருவன் மனைவிக்கு ஆண்குழந்தை பிறந்ததும் அக் குழந்தையைப் பலியிடுவதுதான் உண்மையான முறை. இப் பொழுது அக்குழந்தைக்குப் பதிலாக ஒரு பன்றி பலி
10-سeچ

Page 83
146 ) பெண்களின் சுவடுகளில்.
கொடுக்கப்பட்டது. இவ்வழக்கத்தின்படி குழந்தையொன்று பிறந்ததும் பொய்ச்சண்டைகள், நடனங்கள் போன்றவை அரங்கேறும், உறவினர்கள் ஒருவருக்கொருவர் பரிசுகள் பரிவர்த்தனை செய்து கொள்வர். இவையெல்லாம் முடி வுற்றதும் சடங்குகள் ஆரம்பமாகும்.
இவற்றின் முதல் பகுதியில் ஒரு தொகைப் பன்றிகள் **ஆண்கள் உருவாவதற்கா’கப் பலி கொடுக்கப்பட்டன. அடுத்த சடங்கில் அத்தொகையிலும் இருமடங்கு பன்றிகள் "தந்தை, மகன் எனத் தொடர்ந்து வரும் பரம்பரைக்கா’கப் பலி கொடுக்கப்பட்டன. இவ்விரு சடங்குகளைத் தவிர, 'தன் மூத்த மகனுக்கு தான் தந்தையாவதற்கா’க அந்தக் கணவனினால் விசேஷ பலிகள் கொடுக்கப்பட்டன. இவ்வள வும் யாருக்குக் கொடுக்கப்பட்டன? அக்குழந்தையின் தாயின் சகோதரனுக்கும் அவன் பெயரால் அந்தக் கணம் முழு வதற்கும் என விளக்கப்பட்டது.
மலேகியூலா மொழியில் தந்தையினால் விசேஷ பலி கொடுக்கப்படும் பன்றிக்கு ‘மூத்த மகன்’ என்றே பெயரிடப் பட்டுள்ளது. ஆகவே முன்பு இப்பன்றிக்குப் பதிலாக மூத்த ஆண் குழந்தை தான் பலியிடப்பட்டிருக்க வேண்டுமென நாம் யூகிக்கலாம் பலி கொடுக்கப்படும் தாய்மாமன் உருவமும் பாதுகாக்கும் ஆவியாக தேவதையுருவில் சஞ்சரிப்பதாய் கட்டுக்கதைகளும் இயற்றப்பட்டு விட்டன. இந்தத் தாய் மாமன், மகனுக்குச் செய்த வஞ்சகத்திற்காக, தனது சகோதரி மகனைக் கொன்று விட்டு ‘இன்று முதல் நான் தான் லெவ்-ஹெவ்-ஹெவ் எனும் ஆவி” என்று கூறி வானத்துக்குச் சென்று விட்டானாம். இந்த நாள் தொட்டு இது, வானத்திலிருந்து கொண்டு இரத்த பலி நைவேத்தியங் களைக்கோரும் பயங்கர பூதமாகி விட்டது.
ஒரு ஆய்வாளர் கூறுகின்றார்
*அந்த மனிதர்கள் தந்தை வழி உறவு முறைகளைக் கொண்டு வருவதன் மூலம் தாய்வழிச் சமூகத்திற்கு

சாந்தி சச்சிதானந்தம் ( 147
தாமிழைத்த துரோகத்தினை ஈடு செய்ய வேண்டியவர் களானார்கள், நானாவித பொருட்களும் இவ்வகையான பலிகளுக்குப் பயன்பட்டன; பன்றிகள், பாய்கள், கிழங்கு வகைகள் (நாளடைவில்) பணம் துணி எனப் பலவாகும். இது ஓர் அநாகரிக நிலை, மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை இந்த நிலை தொடர்ந்தது.” ஒரு புறத்தில் தாயின் சகோதரனினால், தனக்கும் தன் சகோதரிக்கும் சகோதரி பிள்ளைகளுக்குமிடையே இருந்த இரத்த உறவினைத் துண்டிக்க முடியவில்லை. மறுபுறத்தில், தன்னின உண்ணி வழக்கமிருந்த காலத்திலிருந்து வேற்று மனிதனாய் தன்னோடு கொண்டு வந்த இரத்த வஞ்சத் தினைத் தந்தையினால் போக்க முடியவில்லை. விளைவு? மூத்த ஆண்பிள்ளையை தாய்மாமனுக்கு இலஞ்சமாகக் கொடுப்பதனால் இக்கடன் அடைக்கப்பட்டது. சில பிராந்தி யங்களில் இப்பலி 'பிள்ளையைப் பாகம் பிரித்தல்” எனவும் பொருத்தமாகவே அழைக்கப்படுகின்றது.
இதன் பின்னரே உலகில் பலவிதமான தேவதைகள், பூதங்கள் பற்றிய நம்பிக்கைகள் தோன்றின, தந்தையருக்கும் அன்னையரின் சகோதரர்களுக்கும் இடையே ஆரம்பிக்கப் பட்ட இவ் விவகாரமானது மனிதர்களுக்கும் மனிதர்களினால் உருவாக்கப்பட்ட தேவதைகளுக்குமிடையே நடத்தப்படும் கொடுக்கல் வாங்கல்களாக மாறியது. காட்டுமிராண்டி யுகத்தில் விலங்குகளையும் வேற்று மனிதர்களையும் உணவினாலும் பரிசுப் பொருட்களினாலும் சந்தோஷப்படுத்த முயன்ற மனிதர், அநாகரிகநிலையில் இயற்கைக்கப்பாற்பட்ட சக்திகளின் ஆதரவை நாட முயன்றனர். இந்தச் சூழ் நிலையில்தான் மதங்கள் ஆரம்பித்தன. தனியுடைமை பரவலாக்கப்பட்டதனால் ஏற்பட்ட முரண்பாடுகளின் பலனாக மனிதர்கள் முன்னெப்போதும் கண்டிராதவகையில் போரும் அழிவுகளும் ஏற்பட்டன. இது தேவதைகளாலேயே ஏற்படு கின்றனவெனக் கருதப்பட்டு பலிகளுக்கு மேல் பலிகளாய்க் கொடுத்து. அவற்றைத் திருப்தி செய்ய முயன்றனர். முன்பு

Page 84
148 () பெண்களின் சுவடுகளில்.
பிறந்த, முதல்ஆண் குழந்தையுடன் முடிவுற்ற பலி, இப்போது ஆயிரமாயிரம் குழந்தைகளை வெட்டுவதாலும் எரிப்பதாலும் நிறைவேற்றப்பட்டது. வ ர ல |ா ற் றில் இதற்கான உதாரணங்கள் ஏராளம், ஏராளம்.
கார்த்தேஜ் நகர மக்கள் அகதொகிஸ்ஸினால் தோற் கடிக்கப்பட்டபோது பால் தேவதையின் கோபத்தைத் தணித் தால் இப் போரின் அழிவைத் தவிர்க்கமுடியும் என்று எண்ணி ஒரு பெரும் பலிக்கு ஏற்பாடு செய்தனர். உயர்ந்த குடும்பங் களிலிருந்து இருநூறு குழந்தைகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பிள்ளைப் பேறடையாதவர்கள் ஏழைக் குடும்பங்களிலிருந்து குழந்தைகளை விலைக்கு வாங்கிப் பலிக்காகக் கொடுத்தனர். நாட்டுக்காகத் தம் குழந்தைகளைத் தியாகம் செய்ய வந்த பெற்றோரும் ஏராளம். இவ்வாறு மொத்தம் ஐநூறைத் தாண்டிவிட்டது. இப் பிள்ளைகளை தேவதையின் சிலையின் கைகளிலிருந்து ஒன்றன் பின் ஒன்றாக ஒரு நெருப்புக் குழியினுள் உருட்டி விடுவதன் மூலம் பலி கொடுத்தனர்.
இக்கரணங்களின் போது குழந்தைகளின் அழுகுரலும் ஒலங்களும் கேட்காவண்ணம் தோற்கருவிகளும் பேரிகைகளும் முழங்கின. ஒவ்வொரு குழந்தையின் தாயும் இதைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டப்பட்டாள். ஆயினும் ஒரு கண்ணிரையோ விம்மலையோ அத் தருணத்தில் அவள் வெளிக்காட்டினாளாயின் இப்பலியின் மூலமாகக் கிடைக்கக் கூடிய பேறுகளனைத்தையும் இழந்து விடுவாள் என நம்பப் பட்டது, ஐநூறு வருடங்களுக்கு முன்பு கூட மெக்ஸிகோவில் நடைபெற்ற யாகத்தில் சிறுவர்கள் பலி கொடுக்கப்பட்ட போது அவர்கள் சென்ற நிரையே இரண்டு மைல் நீளத்துக்கு இருந்தது என ஏடுகள் கூறுகின்றன. இதில் சுமார் 70,000 இருதயங்கள் அத் தேவதைக்கு நிவேதிக்கப்பட்டன! எவ்வளவு தான் பலி கொடுத்தாலும் உலகில் போர்களும் பஞ்சங்களும் மலிந்தவண்ணமேயிருந்தன. இந்த துர்தேவதை களுக்குத்தான் வாயைத் திறந்து தெளிவாக ‘போதும்" என்று கதற முடியவில்லை.

சாந்தி சச்சிதானந்தம் () 149
எப்பொழுது முதன்முறையாக குழந்தைகள் பலி கொடுக்கப்படத் தொடங்கினரோ அப்போதிருந்துதான் மனிதர்களிடம் 'பாவம்’ என்னும் உணர்வு ஆரம்பமானது. கிரேக்க புராணங்களிலேயே முதன் முதல் பாவம் என்னும் சொல் உபயோகிக்கப்பட்டிருக்கின்றது. டயனீசஸ் என்னும் குழந்தையைப் பலி கொடுத்து பாகம் பிரித்ததனால் ஏற்பட்ட குற்ற உணர்வில் வாழ்ந்த டைட்டன்களின் வம்சத்தினரே மனிதர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் குற்றத் தினால் உலகம் பிளவுபட்டு அதனின்று உதித்த எல்லா வற்றிலுமே இப்பாவம் தொற்றிக் கொண்டதனால்தான் மனிதகுலம் அதற்குரிய தண்டனைகளை அனுபவித்துக் கொண்டிருக்கின்றது என விளக்கப்பட்டது. இக் கருத்து நாளடைவில் கிரேக்க தத்துவத்தில் சேர்க்கப்பட்டது. கிறிஸ்தவ சமயநெறி தழுவலுக்கும் இது ஆதாரமாகியது.
ஆயினும் இரத்தப்பலிகள் நாகரீக நிலையின் ஆரம்ப காலத்துடனேயே முடிவுற்று விட்டன. இந்தக் கட்டத்தில் பண்டமாற்று பெரிய அளவில் ஒரு வியாபாரமாகச் செய்யப் பட ஆரம்பிக்கப்பட்டது. இதனால் மனிதர்களின் உழைப்பும் கால்நடைகளும் தாறு மாறாக மதிப்பில் உயர்ந்து நின்றன. பண்டமாற்று மிக எளிமையான முறையில் நடைபெற்ற போதும் கூட இப் பலிகளினால் தனிப்பட்ட மனிதர்களின் பொருளாதாரம் அவ்வளவு பாதிக்கப்படவில்லை. மனித உழைப்பும் கால்நடை விலங்குகளுமின்றி உபரி உற்பத்தி எதுவும் இல்லை என மனிதன் தெரிந்து கொண்ட பின்னர் எல்லா வித பலிகளும் முடிவுற்றன. அதுவும் பண்ட மாற்றில் உபயோகிக்கப்படும் முக்கிய பண்டமாக வீட்டு விலங்குகள் மாறியவுடன் வானிலுள்ள தேவதைகளெல்லாம் அம்போ வெனக் கைவிடப்பட்டன. முன்போல் அவற்றுக்கு மனிதர் பயப்படவில்லை.
இக்காலந்தொட்டு பொன்னோடும் பொருளோடும் கடவுள்கள் திருப்திப்பட வேண்டியதாயிற்று. ஓர் ஆண்,

Page 85
150 L) பெண்களின் சுவடுகளில்.
தன் மனைவியின் மகனைத் தன் மகனாக்கும் சடங்கினைக் கூட சில வெள்ளி நாணயங்க்ளுடன் நிறைவேற்றிக் கொண்டான். இவ்வழக்கம் பழைய ஏற்பாட்டிலும் குறிப்பிடப் பட்டுள்ளது. அதில், ஒரு தந்தை தன் மூத்த மகனை மீட்பதற்கு, கோயில் பூசாரிக்கு 5ஷிகல் நாணயங்கள் அல்லது அதற்குச் சமனான பண்டங்கள் கொடுக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறாகத் தாய்வழி குடும்பங்கள் பணத்தால் தந்தை வழி குடும்பங்களாக மீட்டார்கள். தனியுடைமையும், அதன் பலனான பண்டமாற்றும் வியாபாரமும் முற்றாக வேரூன்றாத சமூகங்களில் தான் அநாகரிக பெயர்ச்சி நிலை ஏராளமான பலிகளுடன் தொடர்ந்தது. இதற்குச் சிறந்த உதாரணம் தென் அமெரிக்காவின் அஸ்கா மற்றும் அஸ்ரெக் இந்தியர்கள் ஆவர்.
Lifth
மரபுவழிக் கூட்டங்களுக்கிடையே திருமணங்கள் நிச்சயிக்கப்பட்ட போது இரு பகுதியையும் சேர்ந்த ஆண்கள் ஒருவருக்கொருவர் பரிசுகள் கொடுத்து வாங்கினர். தன் சகோதரி மகளுடன் வந்திருக்கப் போகும் வேற்று ஆடவனுடன் தனது உறவுகள் சுமுகமாக இருக்கவேண்டுமே என தாய்மாமன் விரும்பிச் செய்வதே இதன் முக்கிய அம்ச மாகும்.
கால்நடை வளர்ப்பு மக்கள் மத்தியில் பரவலாகியவுடன் ஆடு மாடுகளையே பரிசுகளாகக் கொடுத்தனர். ஆனால் ஆரம்பத்தில் இவை எந்தக் குடும்பத்திற்கும் சொந்தமாக நிலைக்கவில்லை. ஒவ்வொரு குடும்பத்தினரும் மாறி மாறி தமக்குள் இவற்றைக் கொடுத்து வாங்கிக் கொண்டனர்.

சாந்தி சச்சிதானந்தம் () 151
நாளாவட்டத்தில் உபரி உற்பத்தி பெருக பண்டமாற்று வியாபாரமாகியது.
இதனால் கால்நடைகளின் மதிப்பும் கணிசமான அளவில் உயர்ந்தது. இதன்பின்னர் இவற்றை ஒருவரும் பரிசுகளாகக் கொடுத்து வீணடிக்க விரும்பவில்லை. இவற்றை உரிமை கொண்டு சமூகத்தில் தமது அந்தஸ்தினையும் எதற்கும் பேரம் பேசக் கூடிய தகுதியையும் உயர்த்திக் கொள்ளவே முயன்றனர். இவ்வழக்கம் திருமணங்களுக்குள்ளும் நுழைந்தன. அதிக அளவு செல்வம் இருந்தவனையே மணமகனாக விரும்பினர்; மணமகனும் தன் உடைன் மகளைக் கொண்டு பேரம் பேசிப் பெண்ணைக் கொண்டான்.
மணப் பெண்ணிற்கு ஆகக்கூடிய விலை கொடுத்து மனைவியாக்கும் வழக்கமே பரிசம் போடும் வழக்கமாகும். கால்நடைகள் தான் ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்துக்கு பெயர்ந்து செல்லக்கூடிய, மனிதர்களினால் உடைமையாகக் கொள்ளப்பட்ட முதல் செல்வங்களாகும். ஆகவே உலகில் கால்நடை வளர்ப்பு காணப்பட்ட பிராந்தியங்களிலேயே பரிசம் போடும் வழக்கம் நடைமுறைக்கு வந்தது. அவுஸ்திரேலியா, மெலனீசீயா, பொலினீசியா, அமெரிக்க போன்ற இடங்கள் கால்நடைப் வளர்ப்புப் பிரதேசங்களாக இல்லாததனால் இங்கு பரிசம் போடும் வழக்கம் ஒரு போதும் காணப்படவில்லை. மாறாக, ஆசியா, ஆபிரிக்கா, ஐரோப்பா ஆகிய கண்டங்களில் இது நன்கு வேரூன்றியிருந்தது. இதன் விளைவாக முன்பு இரு பகுதியினரின் தாய்மாமன்களுக் கிடையில் பரிவர்த்தனை செய்யப்பட்ட நல்லெண்ண நடவடிக்கைகள் இன்று இரு தனிமனிதர்களுக்கிடையில் பேசப்படும் பேரமாகப் போய்விட்டது.
தந்தைக் குடும்பங்களின் வரவால் தாய்மாமன்களும் தனியே பிரிந்து தத்தம் குடும்பங்களுக்குத் தந்தைகளாகி விட்டதனால் பெண்களுக்கு இருக்கக்கூடிய கடைசி ஆதர வாளர்களும் கழற்றப்பட்டு விட்டனர். ஒருபுறம் கணவனும்

Page 86
152 0 பெண்களின் சுவடுகளில்.
மறுபுறம் தந்தையுமாக, தாய்வழிச் சமூகத்தின் இரு “வேற்று
மனிதர்கள்’ பெண்ணை வியாபாரச் சரக்காக மாற்றினர்.
பரிசம் போடும் வழக்கத்தினால், தான் முழுவதுமாக சொந்தம் பாராட்டக் கூடிய தன் வாரிசுகளைக் கொள்ளும் உரிமையே ஆண் அடைந்த மிகப்பெரிய ஆதாயமாகும், தன் திருமணம் விவாகரத்தில் முடிவுற்ற போதிலும் தான் திருமணத்தின் போது கொடுத்த கால்நடைகளை திருப்பித் தரப்படாத பட்சத்தில் தன் பிள்ளைகள் மீது அவன் தொடர்ந்து உரிமை கோரக்கூடியதாகவிருந்தது. ஏனெனில் இவ்வாறான பண்டமாற்றின் மூலம்தானே அவனே தன் தந்தை என்ற ஸ்தானத்தை வாங்கியிருக்கின்றான். அவ் வாறு கடனை அடைக்காது அவன் மனைவி வேறொரு வனுடன் வாழப்போய்விடுவாளாயின் அதற்குப் பின்னால் அவளுக்குப் பிறக்கும் குழந்தைகளும் முதல் கணவனால்
உரிமை பாராட்டப்பட்டன.
ஒரு பெண், குழந்தைப் பேறடையாத சந்தர்ப்பங்களில் அவளுடைய கணவன் அவளுக்குப் பதிலாக இன்னொரு பெண்ணை மனைவியாக்கும் உரிமையையும் பெற்றிருந்தான். இதனை அந்த முதல் மனைவியும் அவள் பெற்றோரும் பேரம் பேசி ஏற்ப்ாடு செய்யவில்லையெனில் கணவன் தன் ஆடுமாடுகளைத் திரும்பப் பெறமுடியும், ஆனால் எடுத்த கால்நடைகளைத் திருப்பிக் கொடுப்பது அவ்வளவு சுலபமான காரியமாக இருக்கவில்லை. அவை அநேகமாக அப் பெண்ணின் சகோதரனுக்கு மனைவி எடுக்க பரிசமாகக் கொடுக்கப்பட்டிருக்கும்; அல்லது ஒன்றிரண்டு இறந்திருக்கும். வழக்கமாக இம்மாதிரி சந்தர்ப்பங்களில் பெற்றோர் அப் பெண்ணின் தங்கையை அவள் கணவனுக்கு மணமுடித்து விடுவதுண்டு. m
இந்தச் சிக்கல்களினால் பொதுவாக, ம  ைன வி கணவனுக்குத் தர வேண்டிய குழந்தைகளின் எண்ணிக்கை

சாந்தி சச்சிதானந்தம் () 153
சில விதிமுறைகளாக விவாக ரத்து வழக்குகளில் நிறை வேற்றப்பட்டன.
மத்திய ஆபிரிக்காவின் சில குடிகள் மத்தியில் ஒரு பெண் ஐந்து பிள்ளைகளைப் பெற்றுக் கொடுத்தால் தன் திருமணத்தை முறித்துக் கொண்டு தாய்வீட்டிற்குச் செல்லும் சுதந்திரம் அளிக்கப்பட்டாள்.
சொங்கே மக்கள் வழக்கில் ஒரு பெண் சுதந்திரம் பெற மூன்று பிள்ளைகளே போதுமானது. ஆனால் மடகஸ்காரில் விவாகரத்துகளின்போது கால்நடைகளைத் திரும்பப் பெறு தலோ அல்லது ஒருத்திக்குப் பதிலாக வேறொருத்தியை மணம் செய்து கொள்வதோ சமூகத்தில் அங்கீகாரம் ப்ெற வில்லை.
இவையெல்லாவற்றிற்கும் பதிலாக ஒரு மனைவி இன் னொரு நிபந்தனைக்குக் கட்டுப்பட்டிருந்தாள். இன் னொருவன் அவளைத் திருமணம் செய்ய முன் வந்தால் அவர்களுக்குப் பிறக்கப் போகும் முதல் மூன்று குழந்தை களை அவள் தன் முதல் கணவனுக்குக் கொடுத்து விட வேண்டும். இவ்வாக்குறுதியின் பேரிலேயே இரண்டாவது திருமணத்திற்கு முதல் கணவன் தனது ஒப்புதலைத் தந்து அதை நிறைவேற்றியும் வைப்பான். ஆகவே உண்மையில் பரிசமென்பது ஒரு ஆணுக்கு வாரிசுகளைப் பெற்றுத்தரும் கூலியாகும்.
இப்படி திருமணம் வியாபாரமாக ஆகிவிட்ட பின்னர் பெண்கள் தம் மனத்துக்குகந்த மணாளனைத் தேர்ந் தெடுக்கும் உரிமையினை சிறிது சிறிதாக இழக்கத் தொடங் கினர். அதுமட்டுமல்லாது விவாகரத்தும் கடினமான விடய மாகி விட்டது. எந்தப் பெண்தான் பெற்றுச் சீராட்டிய பிள்ளைகளை வேறொருவனிடம் ஒப்படைத்துவிட்டு வெளிக் கிளம்ப மனம் ஒப்புவாள் ?

Page 87
154 () பெண்களின் சுவடுகளில்.
இந்தக் காலகட்டத்தில் விவசாயம், பயிர்ச்செய்கை ஆகியவற்றில் ஆண்கள் ஈடுபட ஆரம்பித்து விட்டதனால் தாம் ஈட்டிய செல்வங்களை ஒரு புறம் மனைவியைக் கொள்வதற்காகப் பெண்ணின் தந்தையிடம் கொடுத்தனர்; மறுபுறம் தாம் இறக்கும்போது தமது ஆண்வாரிசுகளுக்கே கொடுத்தனர். இவ்வாறு சமூகத்தின் ஆதிக்கம் ஆண்களின் கையிலேயே செறிய ஆரம்பித்தது.
இங்குதான் ஆணாதிக்கம் வெளிப்பட ஆரம்பித்தது எனலாம். பெண்களோ தமக்கென்று சொத்துஎதுவுமின்றி பெரும் விலங்கைத் தமக்கு மாட்டிக் கொண்டனர்.
ஆயினும் பரிசம் போடும் வழக்கத்தினால் ஒரு நன்மை விளைந்தது எனலாம். தந்தைக் குடும்பங்களின் வளர்ச்சியின் பெயர்ச்சி நிலையில் ஆண்களின் சொத்துகளுக்கு வாரிசு களாகக் கருதப்பட்ட மூத்த பெண் குழந்தைகளை கொல்லும் வழக்கம் இருந்து வந்தது. பரிசம் வந்தபின்னர் பெண்களை வளர்ப்பது இலாபமாகக் கருதப்பட்டது.
ஆபிரிக்காவில் பொதுவாக ஒரு பெண்ணுக்கு 30 மாடு களைக் கொடுத்து திருமணம் செய்தனர். ஹோமர் காலத்து கிரேக்கத்தில் ஒருவன் நூறு எருமைக்கடாக்களைக் கொடுத்து பெண் எடுத்தான். அது மட்டுமல்லாது பரிசம் பெற்றுக் கொண்ட தந்தை அதனைத் தன்னிஷ்டப்படி சுதந்திரமாக அனுபவிக்கவும் உரிமை பெற்றிருந்தான். இதிலிருந்து, ஒரு சந்தோஷமில்லாத திருமணத்திலிருந்து மீட்சி பெற நினைக்கும் பெண்ணுக்கு அவளது தந்தை என்னவகையான ஆதரவு கொடுத்திருப்பான் என்பதனையும் நாம் அனு மானிக்க இயலும். O

சாந்தி சச்சிதானந்தம் () 155
தந்தை யார் ?
தந்தைக்கும் பிள்ளைக்குமிடையே இருந்த இரத்த உறவுமுறை அறியப்படுமுன்னரே தந்தைக் குடும்பங்கள் தோன்றிவிட்டன. பன்று மக்கள் 'கால்நடைகள் பிள்ளை களைத் தரும்” எனக் குறிப்பிடுவார்கள். ஒரு பேரத்தினால் ஏற்பட்ட சமூக உறவே தந்தை பிள்ளை தொடர்பினை முதன் முதல் ஸ்தாபித்தது.
சில ஆய்வாளர்கள் குழந்தைக்கும் தனக்குமுள்ள இயற்கை பந்தத்தினை தந்தை அறிந்திருந்தும் சமூக உறவினையே அவன் முக்கியமாக மதித்ததனால் இப் பேரங்கள் ஏற்பட்டிருக்கலாமென கருத்து தெரிவித்தனர். எந்த வரலாற்றிலும், குழந்தையுடனான தன்னுடைய உண் மைத் தொடர்புகளை அறிந்த ஆண் குழந்தை ரீதியாகத்தன் உரிமைகளை விட்டுக் கொடுத்ததே கிடையாது. மாறாக, அவையெல்லாவற்றையும் பிரயோகித்து தன் மனைவியை இன்னும் கடுமையான விதிகளுக்குள்ளாக்கியதாகவே சான்றுகள் பகருகின்றன.
ஆண்களின் சகல உரிமைகளையும் விசுவரூபம் கொடுத்து எடுத்துக் காட்டிய மனுதர்ம சாத்திரத்தில் கூட 'ஒரு பசுவை உரிமை கொண்டவன் அதன் கன்றுக்கு எசமான னாவது போல ஒரு மனைவியை உரிமை கொண்டவன் அவள் பிள்ளைக்கும் எசமானனாகின்றான்’ என்றே குறிப் பிடப்பட்டுள்ளது. ஆகவே குழந்தைகள் தாயினூடாகவே தந்தையுடையதாக்கப்பட்டன.
அநாகரிக நிலையின் இடைக்கட்டத்தில் ஓர் ஆண் தன் சொத்தைக் கொடுக்கக் கூடிய வாரிசுகளைத் தேட ஆரம் பித்து விட்டான். இதற்கு அவர்கள் கையாண்ட வழிமுறைகள் சுவாரசியமானவை. ஒரு பெண் தனது முதல் கணவனு டைய கடனை அடைக்காது வேறொருவனுடன் வாழ்ந்தால்

Page 88
156 () பெண்களின் சுவடுகளில்.
அவளுக்குப் பிறக்கும் ஆண்கள் முதல் கணவனுக்கே வாரிசு காளானதை முன்பு நோக்கினோம். மேலும், ஒருவன் மனைவி யிருந்தும் வாரிசுகளின்றி இறந்து விட்டால் அவன் சகோதரன் முன்னவனுடைய சொத்துக்களுக்குப் பாதுகாவலன் என்ற முறையில் அவ் விதவையை மணம் செய்யத் தூண்டப் படுவான்.
இவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளும் இறந்த வனுடையதாகவே கருதப்பட்டு அவனுக்கு வாரிசுகள் ஆயினர். அவ்விதவை சகோதரனுடன் வாழ விரும்பாது வேறொருவனைத் திருமணம் செய்துகொண்டால் அவர் களுக்குப் பிறக்கும் குழந்தைகளும் இறந்தவனுடைய வாரிசு களாகவே கருதப்பட்டன. சாவு நேர்ந்தால் கூட கணவன் மனைவிக்கிடையே இருக்கும் வியாபார ஒப்பந்தம் முடிவடை வதில்லை போலும், ・
இன்னொரு வழக்கத்தில், இறந்தவனுடைய சகோதரன் வேறு எந்தப் பெண்ணுக்கும் கூலி கொடுத்து அவன் யார் மூலமோ பெற்றுத் தந்த பிள்ளையை இறந்தவனுடைய வாரிசாகக் கொள்ளலாம்.
ஆபிரிக்காவிலுள்ள நுவர் மக்கள் மத்தியில் ஓர் ஆண் மணமுடித்தாலும் முடிக்காவிட்டாலும் ஆண் சந்ததியின்றி இறந்து போவானாயின் அவனுடைய உறவினனொருவன் அவனுக்காகத் திருமணம் செய்து கொண்டு இறந்தவனுக்கு வாரிசுகளைப் பெற்றுக் கொடுப்பது வழக்கிலிருந்திருக் கின்றது. இவனும் தனக்கென இன்னொரு திருமணம் செய்ய வசதியற்றவனாய் இறந்து விட்டால் இன்னொரு உறவினன் இவனுக்காக வாரிசுகளைப் பெற்றுத் தர முன் வருவான். இப்படியே இது சங்கிலித் தொடராய் நீளும், இங்கு பாதித் திருமணங்களில் அவர்கள் பிள்ளைகள் பெற்றோருடையதாகக் கருதப்பவடுதில்லை. யாரோ இறந்தவனுடையதாய் இருப்பர்.

சாந்தி சச்சிதானந்தம் () 157
பழைய ஏற்பாட்டிலும் தொன்மையான ஏட்டுச் சுவடி களிலும் மலடிகளைப் பற்றி நிறையவே குறிப்பிடப் பட்டிருக்கின்றன. அத்தனை பெண்கள் குழந்தைகளின்றித் தவித்தனராவென்றால், ஆண்குழந்தை இல்லாதவள் மலடி யாகவே கருதப்பட்டாள் எனும் உண்மை வெளிவருகின்றது. தனியுடைமை எத்தனை அவஸ்தைகளை இந்த மனிதனுக்கு ஏற்படுத்தி விட்டது ?
சில வேளைகளில் வாரிசின்றி இறந்து போகும் ஆண் ஒருவனின் உறவுப் பெண்கூட இன்னொரு பெண்ணையணுகி அவளுக்குத் தகுந்த சன்மானம் கொடுத்து அவளுடைய பிள்ளைகளை இறந்தவனுக்கு வாரிசாக்கலாம். மேற்காபிரிக் காவைச் சேர்ந்த டஹோமினியன்கள் மத்தியில் இது காணப் படுகின்றது. அங்கு வாரிசுகள் தராத பெண் தன் கணவனுக்கு வாரிசுகள் கிட்டும் வகையில் இன்னொரு பெண்ணுக்கு பொருட்களைக் கொடுப்பாள். அந்தப் பெண் யார்மூலமும் பெற்றுத் தரும் குழந்தைகள் முதற்பெண்ணின் கணவனது வாரிசுகளாகும் . அவை அந்த முதற்பெண்ணையே "அப்பா' வென விளிப்பார்கள். ஏனெனில் அவள்தானே அவர்களுக் குரிய கூலியைத் தந்தவள். தர்க்கரீதியாக இதில் தவறேதும் காணமுடியுமா ?
இக்காரணங்களினால் தந்தைக் குடும்பங்கள் தோன்றிய காலகட்டத்திலும் பெண்களுக்கு கற்பு பற்றியோ, ஒரே ஆணுக்கு அதாவது தம் கணவனுக்கு மட்டும் விசுவாசமாக நடக்க வேண்டுமென்பது பற்றியோ ஒழுக்க வரைமுறைகள் கற்பிக்கப்படவில்லை. இவை கடைசி மூவாயிரம் வருட்ங் களுக்குள்ளேயே ஏற்பட்ட மாற்றங்களாகும்.
அநாகரிக நிலையிலும் நாகரிக நிலையின் ஆரம்ப கட்டத்திலும் வாழ்ந்த மக்கள் மத்தியில் அவரது வேறு ஆண்களுடன் உறவு கொள்ளும்படி மனைவியரை அவர்களது கணவர்கள் தூண்டும் சந்தர்ப்பங்களே அதிகமெனக் கூறலாம் தம் நண்பர்களுடனும் மனைவியைப் பகிர்ந்து கொண்டனர்

Page 89
158 ) பெண்களின் சுவடுகளில்.
மேலும், ஒருஎதிரியை நண்பனாக்கவோ அல்லது போரினைத் தடுக்கவோ வேற்று மனிதருடன் உறவு கொள்ள மனைவி யின் தயவு வேண்டியிருந்தது.
இந்தக் காலத்து மக்கள் மொழியில் பிறர் மனை நயக்கும் குற்றத்துக்கு ‘களவு என்றே பெயரிடப்பட்டது. ஏனெனில் இன்னொருவனுடன் ஓடும் மனைவி தன் கணவனுக்குச் சேரவேண்டிய கால்நடைகளைத் திருப்பித்தராது அவற்றைக் களவாடிச் செல்கிறாளென்பதே அவர்கள் கற்பித்த அர்த்த மாகும்.
நமது சங்ககால இலக்கியங்களில்கூட களவு என்னும் பதம் உபயோகிக்கப்பட்டிருப்பதைக் காண்க. "களவு நடந் தால் கால்நடைகள் மற்றும் பண்டங்கள் பற்றி ஏராளமான பிரச்சினைகள் இருதரப்பு ஆண்களுக்கும் ஏற்பட்டது. இரத்த வஞ்சத்தினைத் தீர்க்கும் தகராறுகள் ஆண்களுக் ல்ே முடிவுற்றதும் முடிவுறாத்துமாக சொத்துக்களைப் பற்றிய புதிய வகைத் தகராறுகள் அவர்களிடையே மூண்டு விட்டன.
விலங்கிடப்பட்ட பெண்
இவ்வாறு தமது நிலைமையின் கீழே தாழ்ந்து போய்க் கொண்டிருந்த பெண்கள், அடிமைகள் ஒரு வர்க்கமாகவே நிலைநிறுத்தப்பட்டபோது தாமும் முற்றாக விலங்கிடப் பட்டனர்.
சமூகத்தின் உற்பத்தி சார்ந்த உழைப்பிலிருத்தும் இல்லங்களில் செய்யக்கூடிய ஆக்கப்பூர்வமான பணிகளில் இருந்தும் அவர்கள் தள்ளி விலக்கி வைக்கப்பட்டனர். ஆண்கள் உறவு கொள்ளவும் அவர்களுக்கு வாரிசுகளைப் பெற்றுத்தரவும் அவர்களுக்கு தனிப்பட்ட சேவைகளைப் புரியவுமே பெண்கள் உரிமை கொள்ளப்பட்டனர்.

சாந்தி சச்சிதானந்தம் () 159
இதற்குப்பின் திருமண பேரங்கள் தலைகீழாக மாறின. பெண்களை மனைவியராய் எடுக்க சீதனம் மூலமாக ஆண்கள் ஊக்குவிக்கப்படும் நிலை உ ரு வா கி ற் று. கணவனுக்கு சேவை செய்வது தவிர பெண்ணுக்கு வேறு நோக்கம் எதுவும் இருக்க முடியாது எனும் மனப்பாங்கு வேரூன்றியது. அதென்ஸ் நகர மக்களின் வாழ்க்கை முறை யில் சீதனத்தின் முதல் சுவடுகளைப் பார்க்கின்றோம். யூரிபிடிஸின் கிரேக்க நாடகத்தில் அவர்கள் கதாநாயகியான மெதியா இவ்வாறு குமுறுகின்றாள் :
"அவனியிலே வாழ்கின்ற அறிவுள்ள உயிர்களிலே கடையெனக் கருதியது காரிகையர் தம்மினமோ உயிருள்ள காலமெல்லா ம் உனக்கேயுடைமையென்று கணவன் என்றொருவனைக் கனபொருள் கொடுத்துக்
கொள்வாரே?.
இந்த நிலைமையின் பின் ஆண்களுக்குச் சாத்தியப்படாதது ஒன்றுமே இருக்கவில்லை. குழந்தைகள்கூட ஆணினாலேயே உருவாக்கப்படுகின்றன எனவும் சாதிக்கத் தொடங்கினர் ! கிரேக்க நாகரிகத்தின் உச்சக்கட்டத்தில் வாழ்ந்த சிந்தனை யாளர்கள் ஒரு தாயின் கருப்பை குழந்தை வளர்வதற்கான பொருத்தமான ஏதனமாக மட்டுமே இருக்கின்றதெனவும் குழந்தை பிறந்த பின் தாதியாகவே நின்று தாய் வளர்க் கின்றாள் எனவும் முடிவாக விளக்கினர்.
இந்தக் காலகட்டத்திற்கூட குழந்தை உருவாவதன் முழு விஞ்ஞானமும் மனிதர்களுக்குப் புரியவில்லை. ଶିଣ୍ଡା தெரிய வருவதற்கு முன்னமேயே உரோமச் சட்டங்கள் **அதிகாரம் யாவும் தந்தைக்கே” என விதித்துவிட்டன. உரோம சாம்ராஜ்யத்தின் செனட் அங்கத்தினரும் சரித்திர ஆசிரியருமான கேட்டா உரோமச் சட்டங்களை விளக்குகை யில் கூறினார் :
“பெண்கள் தங்கள் தந்தையினதும் சகோதரர் களினதும் கணவர்களினதும் ஆதிக்கத்தில் இருக்க

Page 90
160 0 பெண்களின் சுவடுகளில்.
வேண்டுமென எனது மூதாதையர் உறுதிப்படுத்தி யிருக்கின்றனர். எங்களுடைய தந்தையர் பெண்களின் சுதந்திரத்தினைக் கட்டுக்குள் அடக்க ஏற்படுத்திய சட்டதிட்டங்கள் உங்கள் ஞாபகத்திலிருக்கட்டும்; இவற் றின் மூலமாகவே ஆண்களின் அதிகாரத்திற்குள் அவர் களை வளைக்க முடிந்தது. அவர்கள் என்று எமக்குச் சமமான நிலை எய்துகின்றனரோ அன்றே எம்மை ஆளத் தொடங்கி விடுவர்"
ஆண்கள் பெண்களைப் பற்றிய தமது நோக்கங்களை என்றும் மறைத்தது கிடையாது. இஸ்லாத்தின் வரவுக்கு முன்பு எழுதப்பட்ட ஓர் அரேபிய நூலில் கீழ் கண்டவாறு குறிப் பிடப்பட்டு இருக்கின்றது :
*அண்ணன் புகழை என்றுமே தங்கை பேசாதிருப்பாளாக தந்தை மாண்டாரென்று மகள்
ஓலமிட வேண்டா தம தெல்லைக்கப்பால் வெகு
தூர தொலைவில் கொத்தடிமை வாழ்வு அவளின்று வாழ்ந்தால் அத்தனையும் அன்னவரே அவளுக்கிழைத்த இன்னல் காணிர்


Page 91
1981-ல் இலங்கை மொறட்டுவ பல்கை 1985-gi) GuglioTLGofg|Lb (Royal Institute of கலைத்துறையில் பட்டம் பெற்ற சாந்தி பற்றிய தீவிரமான விசாரணைகள் உள் சமகால அரசியல் சமூக வாழ்க்கையில் நிலைப்பாடுகளைத் தயங்காமல் வெளிப் கர்நாடக இசையில் முறையாகப் பயி இலங்கையின் நவநாடக முயற்சிகளில் மு இலங்கை ரூபவாஹினி நாடகங்களிலும் தொழில் மற்றும் கலை ஈடுபாடுகளை கப்பட்ட வெளிப்பாடுகளாகக் கணக்கில்ெ குறித்த சிந்தனையும் செயல்பாடுகளும் அ புள்ளி எனலாம். பெண்ணின் இன்றைய சிக்கல்களுக்கான தீர்வினைத்தேடும் போ! சமூகப் பின்னணியைப் புறக்கணிக்கலாக தினை முன் வைக்குமுகமாக வருகிறது யாழ்ப்பாண அன்னையர் முன்னணியி முக்கிய பங்கு வகித்த சாந்தி தற்சமய பேரணி என்னும் மகளிர் அமைப்பின் த வருகிறார். மூன்று குழந்தைகளுக்குத் தா ஸ்நேகிதனும் கணவனுமான மனோ ரா கொழும்பில் வாழ்ந்து வருகிறார்.
H
 

லைக் கழகத்திலும் பின்னர் British Architects) 5’ Lq d, சச்சிதானந்தம், வாழ்க்கை ாள ஒரு மனுவி. தனது , தான் சரியென நம்பும் படுத்தி இயங்கி வருபவர். ற்சி பெற்றுள்ள சாந்தி, ணைப்புடன் ஈடுபட்டவர்.
பங்கேற்று நடித்ததுண்டு. இவரது தேடலின் பன்மு படுத்தால், பெண்விடுதலை |ந்த பிரக்ஞையின் மையப்
நிலையில் தோன்றியுள்ள தில் கடந்துபோன சரித்திர ாது என்ற அவரது கருத்
இப்படைப்பு முயற்சி.ட
ன் ஆரம்ப அமைப்பில் ம் மாதர் மறுமலர்ச்சிப் லைவியாகச் செயல்பட்டு பான சாந்திசச்சிதானந்தம், * சிங்கத்துடன் இணைந்து
ܓܠ
ரஸன்னா ராமஸ்வாமி -