கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கலாகேசரி ஆ. தம்பித்துரை

Page 1


Page 2


Page 3

丁尔
3.
羅 『一零。
256)|Gesaff
ஆதம்பித்துரை

Page 4

கலாகேசரி ஆதம்பித்துரை
C6I.9bfa035IITT56. B.A (HONS) முன்னாள் உதவி விரிவுரையாளர், யாழ் பல்கலைக்கழகம், செயற்திட்ட அலுவலர், முறைசாராக்கல்வி, வலயக் கல்வித்திணைக்களம்,
வடமராட்சி
வெளியீடு: காங்கேயன் கலைக் கோட்டம் O6,போக்காலை வீதி, உடுப்பிட்டி, யாழ்ப்பாணம், இலங்கை.

Page 5
IV
KALAKESARI ATHAMBITHITHURAI
MR.W.AMBEGAPAGANLB.A(ONS)
© .de.
First Published: August, 2000.
Published: Kankejan Kalaik Kottam,
O6, Pokkalai Lane, Uduppiddy, Jaffna, Sri Lanka.
கலாகேசரி ஆதம்பித்துரை
GGaI.--Saúdúfa D3BLITT3bGoir, B.A(HONS).
tμώίiυχήίτι έύ0ιIGolf, 2000.
வெளியீடு: காங்கேயன் கலைக் கோட்டம்,
06. போக்காலை வீதி, 9 Ginîi, tijinitmii, இலங்கை,
அச்சாக்கம் மருதம் பதிப்பகம், நெல்லியடி, அட்டை, படங்கள்: பிள்ளையார் அச்சகம், நல்லூர்.
விலை:
1
smrvmma

ஆசியுரை
மகாராஜஞ் சு.து. ஷண்முகநாதக்குருக்கள் ஆதீனகர்த்தாவும் பிரதமகுருவும், மாவிட்டபுரம் கந்தசுவாமி தேவஸ்தானம்.
‘‘முஹோத்தர மகாரதாரூடாய நமஹ” ”, என்றதோர் மந்திரம் கப்ரமண்ய திரிசதியிலுண்டு இத்திரிசதி விஸ்வாமித்ர ரிஷியினாலும் போற்றப்பட்டது. எனவே எத்தனையோ சம்வதிஸ்ரங்களின் முன்னரே ரதங்கள் பற்றியும், மகாரதங்கள். முஹோத்தமகாரதங்கள் பற்றியும் அறியப்பட்டிருக்கிறது. தேவர்களும், அசுரர்களும் மானிடர்களும் ரதங்களைத் தத்தமது ஊர்தியாகப் பாவனைக்குகந்தவகையில் அமைத்துக்கொண்டமையை இதிகாச புராணங்களிலிருந்தும் அறிய முடிகிறது. அரகணிதம்,கேத்திரகணிதம்,உபயோக கணிதம் என்றெல்லாமிருக்கும் கணிதங்களின் ஆதார முளைகள் ரதசிருஷ்டியிலுண்டு.பூலோகத்தில் ரதசிருஷ்டியை விஸ்வகர்மாவிற்கு கற்பித்தபெருமை வசிஷ்டமுனிவரதுபிரதம சிஷ்யனான ரிஷிபுத்திரன்ரிஷ்யசிருங்கரையே சாரும.
* முஹோத்தரமகாரதம் ஈழத்தில் முதன்முதலாக ஆகம, சிற்ப, லலித, சிருங்கார அலங்காரசாஸ்திரங்களின் வழியில், அளவுப்பிரமாணம்,தோற்றப்பிரமாணம், சிருஷ்டிப்பிரமாணம் என்றெல்லாமிருக்கும் பிரமாணங்களின் துணையோடுமாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலின் மஹாராஜரீ மூர்த்தியாக விளங்கும் ஷண்முகப்பெருமானுக்கே சேர்ந்துள்ளது. இன்றும் இவீ மஹாரதம் எதுவித சேதமுமின்றி நிறைகுடமாக விளங்குவதற்கு காரணம் அதில் தேவர்கள் வாசஞ்செய்கிறார்கள்’’. இவ்வாறுஸ்தபதி கலாகேசரி தம்பித்துரை அவர்கள் அடிக்கடி கூறியதுண்டு. இவ்ரதம் 1782ல் உருவாக்கப்பட்டது. இதனை உருவாக்கியவர் இன்று ரதச்சக்கரவர்த்தி' என்று இந்திய அரசினால் பாராட்டப்பட்டுள்ள சோம இலட்சுமணஸ்தபதியின் முன்னோர்களாவர். இந்த ரதத்தை ஒருகால் செப்பனிட இலட்சுமண ஸ்தபதியின் தந்தை சோமசுந்தர ஸ்தபதியார் 1954ல் இங்கு வந்தபோது தம்பித்துரை அவர்கள் அப்போது மகாஜனாக் கல்லூரியில் சித்திரபாட ஆசிரியராகக் கடமையாற்றினார்.திருதம்பித்துரை சோமசுந்தரஸ்தபதியோடு அடிக்கடிசம்பாஷணைகள் மூலம்பலதும் கலந்துரையாடி.ரதங்கள். ரதசிற்பங்கள், சிற்ப

Page 6
WI
துணுக்கங்கள், அதற்கான நூல்கள் என்பவற்றை ஆராய்ந்தவர். குறிப்புகள் ஏராளமாகப் பதியப்பட்டன. இந்தக் குறிப்புகள்தான் திருதம்பித்துரை அவர்கட்கு ரதங்களை நிர்மாணிக்க அஸ்திபாரஞானமாக அமைந்தது.1968ம் ஆண்டில் மாவைக்கந்தனாலய ஷண்முகப்பெருமானுக்கு ஓர் சிம்மாஸனம் நிர்மாணிக்க முனைந்தபோது ரதோற்ஸவ உபயகர்த்தா சார்பாக ஆசிரியர் திரு.கந்தையா அவர்கள் சக ஆசிரியரான திருதம்பித்துரையை அணுகியபோது, திருதம்பித்துரை அவர்கள் சிலவினாடிகள் மெளனாஞ்சலி யிலிருந்துவிட்டு இங்குள்ள ரதத்தின் சாயலில், அதற்கேற்ற அளவு பரிமானங்களோடு இணைந்ததோர் சிம்மாஸனம் திருவருளால் எனது மனசில் தோற்றங்கொண்டுவிட்டது. அதனை விரைவில் நிர்மாணித்துத் தருகிறேன்’ ’ எனக்கூறிவிட்டுஅன்றே சிம்மாஸனநிர்மாண வேலைகளை ஆரம்பித்துவிட்டார். இரவு பகலெண்றும்பாராதுதானுமோர் ஆசானாக அமர்ந்து இச்சிம்மாஸனத்தை ஏழுநாட்களுள் எதுவித ஊதியமுமின்றி தனதுபயமாகத் தந்துதவிமாவைக் கந்தனது அருளுக்காளானார். இத்தகைய சேவை மனப்பான்மையை இக்காலத்தில் யாரும் ஆற்றுவார்களா?
கமனசம்’ என்ற மனசைத் தாங்கிக்கொண்டவர் கலாகேசரிதம்பித்துரை அவர்கள். எதற்கும் விஸ்வகர்மாவை தனக்குள் ஆவாவளித்தே எதையும் கணிப்பதுண்டு. இது வானாச்சிரமத்தின் குலப்பெருமைக்கு மெருகூட்டுகிறது. இதனாற்தான் சிலசமயங்களில்விஸ்வகர்மாவின்நிலையிலிருந்து, இது என்விருப்பப்படி ஆற்றப்படுகிறது எனக்கூறுவார்.
குமாரதந்திரம்’ ’ என்னும் ஆகமம் சுபிரமணியப் பெருமானால் அருளப்பட்டது. குமரதந்திரத்தில் நாற்பத்திநாலாவதுஅத்தியாயம் ரதபிரதிஷ்டாவிதியில், விஜயரதம், காந்தரதம், பூறிகேசரதம். விஸாலாரதம், நிபத்ரதம், விசாலரதம், பத்ரதம். பக்தவிசாலரதம் என எட்டுவகை ரதம்பற்றி கூறப்பட்டுள்ளது. இக்குமாரதந்திர ரதவிபரங்கள் பற்றி இந்நூலாசிரியரான அம்பிகைபாகனுக்கு ஏராளமான தடவைகள் எடுத்துக்கூறியுமுள்ளேன். குமாரதந்திர ரதவிபரங்கள்பற்றி இந்நூலாசிரியர் எங்குமே குறிப்பிடவில்லை. ஆனால் மானசாரம் நூல்பற்றி ஏகப்பட்ட இடங்களில் புகழ்ந்து காட்டியுள்ளார். தேர்கள் பற்றிய செய்தியில் வரலாற்றுச் சான்றிதழ்களை தன்னகத்தே கொண்டுள்ள மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலின் முகோத்ரமகாரதத்தைப்பற்றிய செய்திஒன்றையாவதுஒருவரியிலும் எடுத்துக்காட்டவில்லை. இதுவும் வரவேற்கத்தக்கதே. கலாகேசரி ஆதம்பித்துரை அவர்கள் திருவருட்சக்தியால் உருவகம் செய்த சிம்மாஸனத்தைத்தானும் இவர் இந்நூலில் குறிப்பிடவில்லை. மானசாரம் நூலைப் பதிப்பித்த திரு ஆச்சார்யா என்ற நாமங்கொண்ட சில்பசாஸ்திரவல்லுனரும், மாபெரும் கலைஞானியுமானவர் விஸ்வ பிரம்ம வர்ணத்தைச் சேர்ந்தவர். நூலாசிரியரும் அதே வம்ஸத்தைச் சேர்ந்தவர்.
தெல்லிப்பழை துர்க்கையம்பாள் ஆலயரத வெள்ளோட்டத்திற்கு எமக்கும்,

VII
இலட்சுமண ஸ்தபதிக்கும்பெரியசாமி ஸ்தபதிக்கும் அழைப்புகள் கிடைத்து, ஆங்கு சென்று திருதம்பித்துரையுடன் இணைந்து அத்தேரின் அளவுப்பிரமாணங்கள்.விஸ்தீரண லணங்கள், தெய்வாம்ஸலளிதங்கள், அலங்காரம் என்பனவற்றை அணு அனுவாக ஆராய்ந்த போது, இலட்சுமண ஸ்தபதி அவ்ரதம் சிறப்பாக உருவகம் பெற்றிருப்பதை அறிந்து அவரை ஆரத்தழுவி ஆசிகள் கூறி வாழ்த்தியதை அனேகர் கண்டு ஆனந்தித்தனர்.எம்மோடு கூடநின்ற பெரியசாழிஸ்தபதியும் 'வேதசிவாகம அறிவும், சிற்பசாஸ்திரம்மூலமாகக்கொண்டதேர்ச்சியும், சுமணசமும், விஸ்வகர்மாவை மனதில் கொண்டவருமே ஸ்தபதியாவர் என ஆகமங்கள் கூறும். அவ்வாறு தம்பித்துரை கொண்டிருப்பதனாற்தான் அழகான இந்த ரதத்தை விரைவில் சிருஷ்டிக்க முடிந்தது’’ எனக் கூறி ஆசீர்வாதம் செய்து அவருக்கு ஓர் பரிசும் கொடுத்து மகிழ்ந்தார். பாராட்டுக்களிலும்பார்க்க. உங்களது ஆசீர்வாதங்கள்தான் என்னை இரட்சிக்குமென தம்பித்துரை அன்றே பாராட்டுதல்களுக்கும் ஆசீர்வாதங்களுக்கு மிடையேயுள்ள உண்மைகளை வெளிக்கொணர்ந்தார்.
கலாகேசரி தம்பித்துரை அவர்களது நிர்மாணங்களால் உருவகங்கொண்ட ரதங்கள்பற்றிய விமர்சனங்கள் ஏராளம் எழுந்ததுண்டு.நன்றாகக் கற்று கற்றறிந்த ஞானத்தின் வல்லமைகளோடு, ஆகம சிற்ப சாஸ்திரங்கள் அறியத் தந்தவற்றை உள்ளெடுத்து மகத்தான அளவுப்பிரமாணங்களை ரத நிர்மானங்களில் இணைத்துப் பதித்தனால், வீனர்களின் விமர்சனங்களை அற்பமெனத்தள்ளிவிட்டு.இது எனது சொந்த விருப்பத்தின் சாயல் என விஸ்வகர்மாவை மனதில் ஆலாகித்துவினர்களின்நிலையடக்கியதுமுண்டு. சாதனைகளைத் துணிந்துநின்று ஆற்றி வெற்றியை நிலைநாட்டி ஈழமண்டலத்திலேயே ஆசீர்வதிக்கப்பட்டவர்கலாகேசரிதம்பித்துரை அவர்கள்.
இத்தகைய கலாஞானியின் சிஷ்யர்களுள் ஒருவராக எமது ஆத்ம நண்பன் திரு.அம்பிகைபாகன் அவர்கள் இப்போது பவனிவருகின்றார். இவரோ கலையார்வம் மிகுந்தவர். பொறுமைசாலி, எதையும் சான்றோடும்,சரியான அர்த்தம் விளக்கங்களோடும் ஆராய்பவர். எம்மிடம் தினம்தினம் வந்து இங்குள்ள சிற்ப ஏடுகள், நூல்கள். வரைபடங்கள் என்பவற்றைப் பெற்று நெடுநேரமாக இரவு பகலெண்றும் பாராது படித்தும், ஆராய்ந்தும், குறிப்பெடுத்தும் தனக்கு வேண்டப்படும் கலா ஆதார கருதிகளைச் சேர்த்துக்கொள்வார். இவரது கலாரசனைகளோடு சம்பந்தப்பட்ட ஆராய்வில் இவரது வினாக்களுக்கு விடையளிக்க இயலாது யான் ஓடி ஒழிப்பதுமுண்டு. சிறந்த விவேகி குமாரதந்திரம், மானசாரம், இன்னும் பலநூல்களைக்கொடுத்துதவி இவரதுஞானசக்தியை வளர்த்துவிடவும் யான் அயராது பாடுபட்டுள்ளேன். இவர் மானசாரம் நூலைத்தான் அடிக்கடி ஆராய்வார். இவ்வேளையில் குரும்பசிட்டி சன்மார்க்க சபை சார்பாக குரும்பசிட்டி அம்பாள் ஆலய புனருத்தாரணம் பற்றி ஆராய எம்மிடம் மூவர் வந்தணுகியபோதுமானசாரம் நூலை இவர்கள் பெற்றுத் தமக்குத் தேவையானவற்றை

Page 7
VIII குறிப்பெடுத்துவிட்டு பின்னர் திரும்பத் தருகிறோம் என மறைந்தவர்கள் இன்னுந்தான் அந்நூலை திரும்பத் தரவில்லை. இதனால் எத்தனையோ சிற்பக் கலைஞர்களது தேவைகளைப் பூர்துதி செய்ய இயலாதநிலை தொடர்ந்து தொடருகிறது. திரு அம்பிகையாகண்கூட இதனால் மானசாரநூலறிவை இடையில் நிறுத்தவேண்டிய நிலை ஏற்பட்டதை நினைந்து மனச்சோர்வடைந்ததுபோல் யானும் பெரிதும் வருந்துகின்றேன்.
ஆகமத்தில் சிற்பி இலகடினம் பற்றிய பகுதியில் ‘‘சாந்தம், சத்குணம், ஆசாரம், சில்ப சாஸ்திர அறிவு,ருத்ராசுடிம்,உபவிதம், சிரோமணி, உத்தரீயம், பஸ்பம், என்பவற்றோடு வடக்கு முகமாகவிருந்து சுமனஸ்த்தோடு சில்ப விஷயங்களை ஆராய்பவனேஸ்தபதியாவான்’ எனவுமுண்டு.
இவ்வளவு கைடினங்களும் திரு. அம்பிகைபாகனிடம் உளதாயினும், உலோகாயத தாக்கம்,வேற்றுமத கலாசாரங்களின் ஊடுருவல், பிறமத போதகர்களது பரிகாசங்கள் என்பவற்றால் முழுமையான லகடினங்களையும் இவர் பெற இயலாதாயினும் காலஞ்செல்லச் செல்ல ஞானசக்தியின் வலிமையால் விரைவில் இவற்றை உடன்கொள்வார் என்பது திண்ணம்.
கலைகளைத் தெய்வீகக் கண்கொண்டு அவதானிப்பதும் (திவ்விய திருஷ்டியான் அவயோகயணி) அவதானித்ததை பகுப்பாய்வு செய்து அவற்றின் நுணுக்கங்களையும்,தெய்வாம்ஸங்களையும்,பெறுமானங்களையும்,அருட்சக்தி தரவல்ல ஆளுமைகளையும் ஆராய்ந்துகொள்வது இவரதுநித்ய கடமைகளிலொன்றாகும் எதையும் அவதானத்தோடு அவசியமெனக் கற்று, கற்றதிணிவாயிலாகச் செயற்படுத்த வேண்டியனவற்றைப் பரிசீலனஞ்செய்து சிருஷ்டிப்பதும், அச்சிருஷ்டியின் மூலம் சமூகம் பெறக்கூடிய பலாபலன்கள் எத்தகையதாக அமையவேண்டுமெனச் சிந்திப்பதும் அம்பிகைபாகனுடன் உடன்பிறந்த குணங்களேயாகும்.
" ஆற்றலையும், துடிப்புகளையும் கவசமாகக்கொண்டு கலைகள் மூலம் தெய்வங்களையே பிரத்தியட்சமாக ஆலாபனஞ் செய்யவேண்டுமென்ற நினைப்பும், கலைகளை தெய்வாம்சமான சூழலில் வளர்த்துபிரசைகளைச் சிவத்தமிழ்செல்வர்களாக வாழவைக்கவேண்டுமென்ற எண்ணமும் திரு அம்பிகைபாகனிடம் சேர்ந்துள்ளதால், சிவனருளால் இவர் சிறந்ததோர் சிற்பக்கலைஞானியாக வளர்வார் எண்பது நிச்சயம்.
அவ்வாறு அம்பிகைபாகனை வாழவைக்க வேண்டுமென மாவை முருகப்பெருமானை நினைந்து யான் பிரார்த்திக்கின்றேன்.
எனது ஆசிகளும் இத்திருமகனுக்கு என்றும் உண்டு. சுபமஸ்து
ugmynara armúgangásássi.

அணிந்துரை
uyurdu, disong...LIITED saja seu தலைவர், இந்துநாகரிகத் துறை, யாழ்-பல்கலைக்கழகம்.
இலங்கையில், சிறப்பாக யாழ்ப்பாணம் பிரதேசத்திலே உள்ள ஆலயங்களில் கலைஞரது கைவண்ணத்தில் உருவாகிய அழகிய தேர்கள் எமது கலைய்யாரம்பரியத்தின் பெருமைக்குச் சான்றாக விளங்குகின்றன. இக்கலைத்துறையின் வளர்ச்சிக்கு எண்ணற்ற கலைஞர்கள் காலங்காலமாக பெரும் பங்காற்றி வந்துள்ளனர். இத்தகையே3ர் வரிசையிலே திருநெல்வேலியைச் சேர்ந்த கலாகேசரிஆ, தம்பித்துரை குறிப்பிடத்தக்கவர் ஆவார். இவர்பற்றிய 1ண்முகiபார்வை கொண்டதாக “கலாகேசரி. ஆ. தம்பித்துரை” என்னுமிந்நூல் வெளிவருவதையிட்டு மகிழ்ச்சியடைவதோடு எனது பாராட்டுக்களையும் இந்நூலின் ஆசிரியராகிய திரு. வே. அம்மிகைபாகன் அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இற்றைக்காலத்தில் உயர் கல்வி நிறுவனங்களில் கலைபற்றிய சிறந்தவிதாரு விழிப்புணர்வு ஏற்பட்டு வருகின்றது. கலைசார்ந்த விடயங்களில் புலமையைப் பெறக்கடியவகையில் கற்றல்-கற்பித்தல்-ஆய்வு செய்தல் ஆகிய அம்சங்களில் கவனம் செலுத்தப்பட்டு வருவது வரவேற்கத்தக்க விடயமாகும். இத்துறை சார்ந்த கலைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் நன்கு பயண்படத்தக்க வகையில் ஆலயத்தேர்iபணியில் தம்மை வாழ்நாள் முழுவதும் ஈமுபடுத்திய ஒரு கலைஞனின் வாழ்க்கை, கலைப்படைப்புக்கள், கலைத்திறன் ஆகிய அம்சங்களை உள்ளடக்கியதாக இந்நூல் வெளிவருகின்றது.
இந்நூலின் ஆசிரியர் திரு.வே. அம்ரிகையாகண் எனது மாணவன். யாழ்பல்கலைக்கழகத்தில் இந்துநாகரிகத்தைச்சிறப்புப்பாடமாகப்படித்த பட்டதாரியாவார். தற்பொழுது வடமராட்சி கல்விவலயத்தில் முறைசாராக் கல்விக்குரிய செயற்திட்ட அலுவலராகர் பணிபுரிகின்றார். இத்துறையில் அவர் கொண்டுள்ள ஈடுபாட்டிற்கு அவர் எழுதிய முறைசாராக்கல்விற்புதிய பயிற்சிநெறிகளை அறிமுகம் செய்தல்.ஓர் எண்ணக்கரு நூலே சான்றாகும். யாழ்பல்கலைக்கழகத்தில்பயிலுகின்றகாலத்தில் கலைத்துறைசார்ந்த

Page 8
X
விடயங்களில் அதிக ஈடுபாட்டுடன் செயற்பட்டவர், கலைக்குடும்பத்தைச் சார்ந்தவர் என்ற காரணத்தால்கலைதொடர்பான ஈடுபாடுஅவருக்கு இயல்பாக அமைந்த ஒன்றாக ஆயிற்று. தேர்க்கலையில் இவருக்கு அதிக ஈடுபாடு உண்டு. யாழ்ப்பாணத் தேர்ச்சிற்பங்கள் பற்றி ஆய்வு செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருபவர். கலாகேசரி அவர்களோடும் அவரது சுற்றத்தவரோடும் நீண்டகாலம் தொடர்பு கொண்: தண் காரணமாக அவரைiபற்றிய நூலொன்றினை உருவாக்குவதற்கு சகலநிலைகளிலும் தகுதிபெற்றவராவர். கலாகேசரி பற்றிய இச் சிறு தூல் எட்டு இயல்புகளுடன் கட்டியது. வடிவில் சிறிதாயினும் யாழ்ப்பாணத்துத்தேர்கள்பற்றிஅறிய உதவும் ஒரு சிறந்தகைந்நூலாகும். கலாகேசரியின் அறிமுகம், கலைத்துறையில் அவரது உருவாக்கமும் பன்முகத்திறனும்பற்றி சிறப்பாகக் கறப்படுகிறது. கலாகேசரி தேக்களை வடிவமைத்து உருவாக்கவதில் ஆர்வத்துடன் செயற்பட்டவர். எனவே கலாகேசரியின் தேர்த்திறன் தனி இயலாக ஆய்வு செய்யப்படுகின்றது. யாழ்ப்பாணத்தின் ஆலயங்களில் அவரதுகைவண்ணத்தில் உருவாகிய பல தேர்களை அடிiபடையாகக் கொண்டு அவரது கலைத்திறன் விமர்சன ரீதியாக மதிifடு சிசய்யப்படுகின்றது. முன்றாம் இயல் கலாகேசரியின் கலைக்கருத்துக்கள் பற்றிய ஒரு விமர்சனக் கண்ணோட்டமாக உள்ளது.
இந்நிலையில் ஆசிரியர் தேர்க்கலைபற்றி அறிய உதவும் பிரமான நூல்களாக காமிகாகமம், மானசாரம், மயமதம், காசியாம் ஆகிய நூல்களின் முக்கியத்துவம் பற்றி எடுத்துக் கடறுகின்றார். தேரின் பல்வேறு பாணிகளும் வடிவங்களும் தெளிவாக எடுத்தக்க றப்படுகின்றது. குறிப்பாக நாகர-வேசர-திராவிட வடிவமைப்புக்கள் நன்கு எடுத்துக்காட்டப் படுகின்றன. சமகாலத் தேரிலக்கணம் பற்றி கலைஞரிடையே நிலவும் கருத்துக்களும் அலசிஆராயப்படுகின்றது.
மேலும் யாழ்ப்பாணத்தில் அவ்வவ் ஆலயங்களில் எழுச்சிபெற்ற தேர்களின் கலைச்சிறப்புக்களும் மதிப்பீடு செய்யப்படுகின்றது. கலாகேசரியின் சமகாலக்கலைஞர் வரிசையில் அவரது இனவல் திரு ஆ.ஜீவரட்னம் அவர்களது கலைத்திறன் படைiபுக்களும் சிறப்பாக எடுத்துக்கடிறப்படுகின்றது. ஜீவரத்தினம் வடிவமைத்ததேர்கள் சிறந்த உருவமைதியும், கவர்திறனும் கொண்டு விளங்குவதோடு யாழ்ப்பாணத்துச் சிற்பக்கலை வரலாற்றில் அவருக்குரிய இடம் சிறப்புடையது என்பது இந்நூலாசிரியரின் கருத்தாகும். இச்சகோதரக் கலைஞர்களது கலைத்திறனை இந்நூல் நன்கு எடுத்துக்காட்டுகின்றது. அவர்களது மாணவப் பரம்பரை பற்றியும் விபரங்களுள்ளன. கலாகேசரின் மாணவப்பரம்பரைவற்றாதஜீவநதியாகப்பிரவாதித்துபார்ந்துசெல்வதாகும் என்றவூசிரியரின்கற்று யாழ்பாணக் கலைய்யாரம்பரியத்திற்குப்பியருமைசேர்க்கும் வகை

ΧΙ
யில் உள்ளது. ஏழாவது இயலில் கலாகேசரியின் கலைக்கருத்துக்கள் தொகுத்துத்தரங்படுகின்றன. எட்டாவது இயல் கலாகேசரியம் க்ேகலைஞரது வாழ்க்கையையும் சாதனைகளையும் கொண்டுவிளங்குகின்றது. கலாகேசரிவடிவமைத்த தேர்பற்றியபட்டியல் தரப்பட்டுள்ளதோடு அவரது தேர்களின் வர்ணபடங்களும் இறுதியில் இந்நூலினை அணிசெய்வது குறிப்பிடத்தக்கது. அவர் தி நூலாக்கிய பிற தினூர்திகளும் gigin 6alata.
தொகுத்துப்பார்க்குமிடத்து இந்நூல் யாழ்பாணத்தில் கடந்த நூற்றாண்டில் நிலவிய தேர்க்கலை மரபு பற்றிய ஒரு பரிமானத்தை அறிய உதவுகின்றது. காலத்தால் இக்கருத்துக்கள் மறைந்து போகாவண்ணம் எழுத்தில் பதியப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. கலைத்துறைசார்ந்த ஒரு சிறந்த வரலாற்று ஆவணமாக ஆசிரியரின் முயற்சி அமைகின்றது எனக் கடறின் மிகையில்லை,
ஆசிரியர் திரு.வே அம்பிகையாகண் இதுபோல மேலும் கலைத்துறையைச் சார்ந்த பல நூல்களை ஆக்கி வெளியிட்டு கலைத்தொண்டு புரிய எல்லாம் வல்ல யூரீபார்வதிசமேத பரமேஸ்வரனின் திருவருள் பொலிவதாகுக என வாழ்த்துவதில் மகிழ்ச்சியடைகின்றேன். ஆசிரியரின் இந்நூலை கலையுலகம் மனமுவந்து வரவேற்தும் Síðžngfólio gambliaJPG).
4-09-2000, பேராசிரியர் ப.கோபாலகிருஷ்ண ஐயர்.

Page 9
மதிப்புரை
dbGDIT55 & LIII.GgllJTFT தலைவர், நடனத்துறை, யாழ்பல்கலைக்கழகம்
மர இடைகக் கலையாக்கத்திலே தணித்துவமான நடையியலை உருவாக்கியதிருநெறிச்சிற்றிகளுள் கலாகேசரிதம்பித்துரை அவர்கள் விதந்து குறிப்பிடத்தக்கவர். தேர் வடிவங்களின் வழியாகவும், தேர்ச்சிற்பங்களின் வழியாகவும், தேரில் உட்பொதிந்த அலங்காரங்களின் வழியாகவும் இந்து அழகியலை யாழ்ப்பாணத்துக் கலை வலுவின் வழியாக அவர செழுமையாக வெளிப்படுத்தினார்.
அவரிடத்துப் பொலிவு கொண்டிருந்த அழகியல் சார்ந்த 9 albfljalouiili (Aesthetic Schema) (ppoint of 6676ilian sidhi தேர்க்கலை வடிவம் அமைந்தது. அவர் வடிவமைத்த ஒவ்வொரு தேரும் HaMovóopin komunidb6 Td5 (Perfect Presentation) &MODjöföØ. Blai பயன்படுத்திய சிற்ப மொழியின் ஒத்திசைவுக் கோலங்களிலே திராவிடக் கலைப்பண்புகள் மட்டுமல்ல, யாழ்ப்பாணத்துக்குரிய கலைத் தனித்துவங்களும் பளிச்சீடு கொண்டிருந்தன.
இவ்வாறு பல பரிமாணங்கள் கொண்ட ஓர் மாகியரும் கலைஞரது பணிகளை நடுநிலைநின்று திறனாய்வுசெய்யும் இந்நூலாசிரியரது கருத்தக்கள் கலை ஆய்வாளர்களுக்குப் பிபரிதும் பயன்மிக்கவை. நூலாசிரியரது துணிவுமிக்க கருத்துக்கள் பாராட்டப் படவேண்டியுள்ளன. இக்கருத்துக்கள் கலாகேசரியின் கலை ஆளுமைக்கு மேலும் வளமுட்டுகின்றன
9-09-2000. 456hof g6).257 3FLIT.GleguuIJ T&FT.

சிறப்புரை
கலாகேசரி தம்பித்துரையின் கலை மகாத்மியத் தொடர்புகளே யாழ்ப்பாணக் கலை வரலாறு
guiblf-disguttafit, M.A. முதுநிலை விரிவுரையாளர், வரலாற்றுத்துறை, யாழ்.பல்கலைக்கழகம்.
#gpĝiĝ5öd5@DaD 6Qi JaDIaĝbgĵusaĵZab (Historio graphy of Art Hiistory) TTTTT SLLLLLS S TTL LLLL 00S SELCTTTTTT LLLTTTTLL SttSTtL LOL கலைன்பங்களிப்புக்கள் இன்னும் நோக்கள்யாதஓர் அமிசமாகவேருேத்துவருகின்றது. பலமொழி,பண்மத, பல்லின, சமுகக்கட்டமைப்பு ஒன்றிணைக்கொண்டுள்ள இலங்கைத்தீவில் ஒருமுழுமையான கலைவரலாறுஉருவாகவேண்டுமெனில்முதலில்பிராந்தியமட்டத்திலான கலைய்:ங்களிப்புக்களைi பக்கச்சார்பற்ற முறையில் வெளிக்கொணர வேண்டிய g தேவை எம்மை நோக்கியுள்ளது. ஈழத்திருநாட்டின் கலைவளர்ச்சியின் பருவங்களை முதலில் பிராந்தியரீதியாக நோக்கிக்கொள்ளும்போதே அவ்வவற்றின் உள்ளூர் கலைமரபுக்குரிய தளங்கள் வெளிப்பாடபையும்.
இந்தியய்பெருநிலப்பரப்பில் எவ்வாறு காந்தாரக் கலைக்கடிடம், மதுரா கலைக்கடடம், ஆந்திரக்கலைக்கடம், மாமல்லபுரக் கலைக்கடம் என்கிறல்லாம் கலைவளாச்சியின் பெரு மையங்கள் அடையாளங் காணiuட்டனவே அதனை ஒத்த வகையில் இலங்கைத்தீவிலும் அடையாளங்கான வேண்டிய ஒரு பெரும்பொறுப்பு ஈழத்துக் கலைவரலாற்று ஆசிரியர்களுக்கு திடண்டு. இந்நிலையில் பிராந்திய ரீதியான கலா மையங்கள் அடையாளம் காணiபட்டு அவ்வவ் மையங்களில் கலைய்பெருமைசேர்த்த கலாகேசரிகளை அடையாளம் காணவேண்டும். அய்போதுதான் இலங்கையின் கலை வரலாறானது முழுமையான ஒரு பகைப்புலத்தினைப் பெற்றுக்கொள்ளும் என்பது இதரிவாகும்பல்வேறு பிராந்தியமட்டங்களில் கண்டிருந்த கலைவளர்ச்சியின் தன்மை, வெளிப்பாடு, அது பராமரிக்கப்பட்டு பேணப்பட்டுவந்த வகை, அவற்றின் ரின்னணியில் இணைந்து காணப்பட்ட மரபுகள் போன்றவற்றின் அடியாகவே ஒரு பொதுமையான 伤@@ வரலாற்றினை வரைவதற்குரிய பகைiபுலத்தினைப் பெற்றுக்கொள்ளலாம் என்பது எமது

Page 10
XIV
திடமான நம்பிக்கையுமாகும். இலங்கையைய்பொறுத்தவரையில் கண்டிய கலைமரபு எவ்வாறு மலையாளத்தொடர்புகளினூடாக மலர்ச்சிபெற்று வந்து, தற்போது சிங்களக் கலையின் மகத்துவத்தினை தற்கால உலகிற்கு பறைசாற்றுவதற்கு உதவும் ஒர் இயகமாக உதவுகின்றதோ அதனை ஒத்தவகையில் யாழ்பாணப்பிராந்தியக் கலைமரபும் பல்வேறு வமிச மரபுகளின் வளர்ச்சிஇஜடாக Hாழ்ந்ானத்தாருடைய தனித்துவத்தை எடுத்துக் கர்ட்டுவதற்கு இன்று உலகிற்குப் பறைசாற்றக்கடிய நிலையில் TTTTTTT TT TTTLG0LSHE TT TT0LTTTLLT SLLLLLLL0LLLLL LL LLLCLLS வளர்ச்சிபெற்று வருவதனையே கலாகேசரிதம்பித்துரையின் தேர்சிற்ாஆக்கங்கள்
கண்டியமரக்கலைச் சிற்பங்கள் சிங்கள இனத்துவத்திற்கு ஓர் உரைகல்லாக விளங்குவதனை ஒத்து, யாழ்ப்பாணத் தமிழரின் தனித்துவத்திற்கும் ஓர் உரைகல்லாக கலாகேசரி தம்பித்துரையின் கலை ஆக்கங்கள் மிகவலுவான கலைமரபின் தொடர்ச்சியையே மைக்கு எடுத்துக்காட்டுகின்றன.
அவ்வகையில் நண்பர் வே. அம்ரிகைபாகன் அவர்கள் கலாகேசரியினர் தொடர்புகளால் உந்தப்பட்ட நிலையில் தம்பித்துரையின் ஆக்கங்களின் கலைப்பெறுமானத்தினை நண்குணர்ந்த வகையில் அக்கலைமுலங்களுக்குரிய கலைவரலாற்று முக்கியத்துவத்தினை இந்நூல் வடிவில் வெளிக்கொணர்ந்திருப்பது எம் யாழ்ப்பாண மக்களின் ஒருவரும்பேறே அவர் கலாகேசரியின் படைhபுக்களை முழுமையாக ஆராய்ந்து அக்கலைமலர்ச்சியூடாக யாழ்ப்பான கலைiரம்பரியம் ஒன்றினைத்தற்காலக் கலையுலகிற்கு அடையாளங்கண்டு முன்வைத்திருப்பது அவருடைய கலைத்துறை நாட்டத்தினையும் காரம்பரிய கலைமரபுகளை பாதுகாக்கின்றபெருவிருப்பினையும் மைக்கு உணர்த்துகின்றது.
அவர் கீவ்வழியே தொடர்ந்து சென்று உழைத்து எமது யாழ்ப்ானக்கலை மரரின் ஊற்றுக்கண்களை சரிவர அடையாளங்கண்டு ஒரு கலாவிமர்சகராக உருவாகவேண்டுமென்று அவாவுடன் அவரை வாழ்த்தி நிற்கின்றேன். வளர்க அவரது கலையாாவiபணிகள்!!
1-09-2000. Ghafak pagorurasir

என்னுரை
நவீன சர்வதேச கலை, பண்பாட்டியல், கற்கைநெறிகள், விரிவும் வளர்ச்சியும் பெற்றுவரும் இக்காலகட்டத்திலும்கூட தமிழில் சிற்பக்கலைத்திறனாய்வுகள் குழந்தைப்பருவத்தில் தளர்நடைபயின்று வருவதனை அவதானிக்கலாம். சிற்பக்கலை ஆய்வுகளுக்கான தேவை அவசியமாக உள்ள இந்நிலையில் வெளியாகும் தேர்ச்சிற்பத்திறனாய்வுபற்றிய இந்நூல் கலைபயில் மாணவர்களுக்கும் கலைஞர்களுக்கும் ஓரளவிலாயினும் பயண்தகும் எண்பது நூலாசிரியரின் சிறு நம்பிக்கையாகும்.
இந்நூலிற்கு ஆசியுரை தந்தும் மானசார சில்ப நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பினை தந்துதவியும் எண்வளர்ச்சியில் பெரிதும் கவனம் செலுத்தி நிற்கும் மாவிட்பூரம் கந்தசுவாமி தேவஸ்தான அதிபதி மஹாராஜழுநீ சு.து.ஷண்முகநாதக் குருக்கள் அவர்களுக்கு எனது வணக்கம் கலந்த நன்றி உரியது. அழகியதோர் அணிந்துரை தந்தும் விக்கிரகவியல் அறிவு புகட்டியும் எனக்கு வழிகாட்டி நிற்கும் யாழ்பல்கலைக்கழக இந்துநாகரீகத்துறைத் தலைவர் பேராசிரியர் கலாநிதி ப. கோபாலகிருஷண ஐயர் அவர்களுக்கு எனது வணக்கங்கலந்த நன்றியைத் தெரிவித்துக் கிகாள்கின்றேன்.
பல வேலை நெருக்கடிகளுக்குமத்தியிலும் அழகிய மதிப்புரை வழங்கிய யாழ். பல்கலைக்கழக நடனத்துறைத் தலைவர், கலாநிதி சபா.விஜயராசா அவர்களுக்கும் எமது சிற்ப பாரம்பரியம்பற்றி ஆராய்ந்து சிறப்புரை வழங்கிய யாழ். பல்கலைக்கழக வரலாற்றுத்துறை முதுநிலை விரிவுரையாளர் திரு. விச.கிருஷ்ணராசா.எம்.ஏ., அவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்விகாள்ளக் கடமைப்பட்டுள்ளேன்.
கலாகேசரியும் தேர்ச்சிற்பக் கலையும் என்ற கருத்தரங்கினை ஒழுங்கு செய்தும் அதே பெயரில் எனது கட்டுரையை நூலாக வெளியீடு செய்தும் உதவிய

Page 11
XVI
தெல்லிப்பளை கலை இலக்கியக் களத்தினருக்கும் "கலாகேசரியம்" தொகுப்பின் முதல் நிலைiபிரசுரத்தை கலாகேசரியின் 3ம்நாள் நினைவஞ்சலியாகப்பிரசுரித்த திரு.த. ருதரன், “வில்வராஜஸ்தபதி’ கவிதையைப் பிரசுரித்த திரு.ந. ரவீந்திரன், திரு.வ.கிருபாகரன் ஆகியோர்க்கும் எண் நண்றிகள். இவற்றின் ஒழுந்கமைப்பில் உருவானதே இந்நூல் எண்பதை முதலில் கடறவேண்டியவனாகின்றேன்.
இந்நூலிற்கு ஆதாரமாகிய “கலாகேசரியும் தேர்ச்சிற்பக் கலையும்” என்றநூலுருவாக்கத்திற்குக் காரணகர்த்தாவாக விளங்கிய எமது பேரண்பிற்கும் மதிiபிற்குமுரிய ஆசான், மயிலிட்டி வடக்கு, கலைமகள் மகாவித்தியாலய முதல் அதிபர்பண்டிதர் சி.சுப்புத்துரைஐயா அவர்களுக்கு என்றும் மறத்தற்கரிய நன்றி உரியது.
இந்நூலில் இடம்பெறும் படங்களை எடுத்துதவிய உரும்பிராய் ஜீவாஸ், விதல்லிப்பளை ஜீவ்ஸ், சுண்ணாகம் சித்திராலயா, வண்ணார்பண்ணை இறக்ல் ஆகிய a_iபிடிப்பு நிலையத்தினருக்கு எண் நன்றி. இந்நூலில் இடம்பெறும் 11, 22 23. 24ம் இலக்கப் படங்கள் கணக. செந்திநாதனர் எழுதி குரும்பசிட்டி சண்மார்க்கசபை வெளியீடு செய்த “கவின் கலைக்கு ஓர் கலாகேசரி’ என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்டன. பதிப்பாளர்க்கு எண் நன்றிகள்.
இந்நூல் உருவாகும்போது டிவியடுத்து உதவிய விசல்வி விஜயலக்சுமி விஜயாதசேகரம், ஒப்புநோக்கியுதவிய பண்டிதர் க.முத்துவேறு ஆகியோர்க்கு எண் நன்றி உரியது.
இந்நூலினை ஒளி அச்சுக்கோர்த்தும் அச்சேற்றியும் உதவிய இநல்லியடிமருதம்பதிப்பகத்தினர்க்கும், அட்டை,படங்களை ஒவ்செற் அச்சேற்றிய நல்லூர் பிள்ளையார் அச்சகத்தினர்க்கும் என் இதயபூர்வ நன்றிகள் பல.
இறுதியாக இந்நூல் வெளிவருவதற்குத் துணைநின்ற எண் வாழ்க்கைத்துணை சிவதர்ஷிணிக்கு எண் நண்றி உரியது.
2-09-2000. -667.b.

ஆசியுரை:மஹாராஜரீ சு.து.சண்முகநாதக்குருக்கள். V அணிந்துரை: பேராசிரியர் ப.கோபாலகிருஷ்ண ஐயர். X மதிப்புரை: கலாநிதி சபா.ஜெயராசா. சிறப்புரை: திரு.செ.கிருஷ்ணராசா,M.A. என்னுரை --
உள்முகம்.
சமர்ப்பண உரை
10.
கலாகேசரி அறிமுகம் கலாகேசரியின் கலைத்திறன் கருத்துக்கள் விமர்சனம்
கதிரமலைச் சிவன் தேர் நிர்மாணத்தில்.
கலாகேசரியின் இறுதிக்காலத்தில். LDIT 60016f LJUDLJ60J கலாகேசரியின் கலைக் கருத்துக்கள் கலாகேசரியம் “விஸ்வராஜ ஸ்தபதி”
ULisleB6iT
XII
XK
XV
XVI
XIX
14
2
23
25
29
32
47

Page 12

தாயகத்திலிருந்து வருகை தந்து
மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய கட்டடக்கலை நிர்மாணத்தில்
பெரும் தொண்டாற்றியும் மயிலிட்டி வடக்கு,
சங்கவத்தை பூரீ அம்பலவாணசுவாமி மாணிக்கப்பிள்ளையார்
ஆலயத்தை ஸ்தாபித்தும்
உருவாக்கிய எமது குல முதல்வர்
இலாட சங்கிலித் தவ
ணர்டைக் குருக்கள்

Page 13

கலாகேசரி அறிமுகம்
1. வரலாற்றுப்பின்னணி
தமிழகத்தைச் சேர்ந்த திருவிடை மருதூர் சி.சுப் பிரமணியம் , சென்னை எஸ்.குமாரசுவாமி, இரா.கோவிந்தராஜூ, மாயவரம் ச.ஏகாம்பரம் போன்ற ஸ்தபதிகள் யாழ்ப்பாணத்திற் பணிபுரிந்த இருபதாம் நூற்றாண்டின் ஐம்பது, அறுபதுகளில் உருவாகிய யாழ்ப்பாணத்துத் தேர்க்கலைஞர்களிற் பலரும் அவர்களின் செல்வாக்கிற்கு உட்பட்டோராக விளங்கினர். ஆயிரத்துத் தொளாயிரத்து முப்பதாம் ஆண்டளவில் தமிழகம் சென்று சிற்பக்கலைகளிற் பயிற்சி பெற்று வந்து, வண்ணை வீரமாகாளி அம்மனுக்குத் தேர் அமைத்து புதியதோர் எழுச்சியை ஏற்படுத்தியவர் மட்டுவில் வி.ஆறுமுகம் ஆச்சாரியார். முழுவதும் தமிழக மயமாகியிருந்த அறுபதுகளின் மத்தியில் 'கலாகேசரி’ என்ற ஐந்தெழுத்துச் சுட்டும் ஆற்றல் மிக்க திருநெல்வேலி ஆறுமுகம் தம்பித்துரை ஈழத்துத் தேர்க்கலை உலகிற் பிரவேசிக்கிறார். இவர் மேற்குறித்த ஆறுமுகத்தின் தலைமகனும் பிரதம மாணவனுமாவார். 2. கலாகேசரியின் உருவாக்கமும் மண்முகத் திறனும்
கலாகேசரியின் உருவாக்கம் பன்முகம் கொண்டது. தேர்க்கலையைப் பொறுத்தளவில் இவர் தன் குருவாகத்

Page 14
வேலுப்பிள்ளை அம்பிகைபாகன்
தந்தையாரையே குறிப்பிடுகின்றார். இருப்பினும் அவரிடமிருந்து பெற்றது மிகவும் குறைந்தளவிலான செய்முறையறிவே. சிற்பவடிவமைப்பிற்குத் தேவையான ஒவிய வரைதலை நெறிப்படுத்திய பரமேஸ்வராக்கல்லூரி ஓவிய ஆசிரியர் செ.சண்முகநாதனும் 'வின்சர் ஆர்ட்கிளப்' நிறுவக நெறியாளர் எஸ்.ஆர். கனகசபையும் பரந்ததும் உயிர்த்துடிப்புள்ளதுமான கற்பனையுலகிற் கலாகேசரியை உலாவ வைத்தோராவர்.
சிற்பக் கலைக்கு இன்றியமையாத வடமொழியை சீதாராம சாஸ்திரியிடம் கற்ற கலாகேசரி தமிழகத்திலிருந்து வருகை தந்து மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்திற் கருங்கற் பணிபுரிந்த சிற்பி பெரியசாமி ஸ்தபதியிடம் ‘மானசார சிற்ப சாஸ்திரம்’ பயின்றார். சிற்ப, ஆலய இலக்கணம் முழுமையாகப் பயில்வதற்கான சந்தர்ப்பம் கலாகேசரிக்கு இங்கு கிடைக்கின்றது. இவர் பெற்ற பெரும் பேறு என்று இதனைக் குறிப்பிடலாம். சிற்ப நூல்களிற் சிறந்த மானசாரத்தின் சில பகுதிகளை நுட்பதிட்பமாக அறிந்து கொண்ட கலாகேசரி, யாழ்ப்பாணத்துக் கலைஞர்களில் மிகவும் தகைமையுடையவராகத் தன்னை வளர்த்துக்கொண்டவர்
தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியில் சித்திரபாட உதவி ஆசிரியராக நியமனம் பெற்ற இவர். 1956ல் “கலை இந்தியா’ அடங்கலுமான ஒருமாதகாலக் கலை கலாச்சாரச் சுற்றுப்பயணம் செய்து புராதன கலைச் சிறப்பை அறிந்து கொண்டார். 1968ம் ஆண்டு தொடக்கம் வடமாநிலச் சித்திரக் கல்வி அதிகாரியாகப் பதவி உயர்வு பெற்றவர் கலாகேசரி. “உண்மையான வேலைத் தலத்திற் கைவினை மாணவன் பயிற்றப்படுவதோடு வளர்க்கவும் படுகின்றான். அவன் தன் தந்தையின்
 

கலாகேசரி ஆதம்பித்துரை
சீடனுமாகின்றான். அவன் இந்த நிலைமைகளை இழக்க நேரிடின் உலகிலுள்ள எந்தத் தொழிற்கல்வியும் அதற்கு ஈடுசெய்ய முடியாது. வேலைத்தலத்தில் ஆரம்பமுதல் தொழில்முறை உண்மைப் பொருளோடும் உண்மை நிகழ்ச்சிக் சூழலோடும் தொடர்புள்ளதாகப் பணிசெய்வதன் மூலமும் கற்பிக்கப்படுகின்றது. அங்கு கற்பிக்கப்படுவது தொழில்முறை மட்டுமன்று. வேலைத்தலத்தில் வாழ்க்கையே உளது. அது மாணவனுக்கு உளப் பண்பாட்டோடு வாழ்க்கையின் அடிப்படைத் தத்துவங்களின் அறிவையும் அளிக்கிறது. கலைக்குத் தொழில் முறையைக் காட்டிலும் இவையே இன்றியமையாதன,
என்ற கலாயோகி ஆனந்தக்குமாரசாமி அவர்களின் கருத்திற்கமைய யாழ் தேர்க் கலையுலகில் துலங்கியவர் கலாகேசரி தம்பித்துரை அவர்களே என்பது
fsBILJD3FLDT(bt D.
3 கலாகேசரி கலாலயக் காட்சி
சுதுமலை புவனேஸ்வரி அம்மன் தேர் வடிவமைப்பின் போது கலாகேசரி கலாலயத்தைத் தரிசித்த இரசிகமணி கனக,செந்திநாதன்,
அவை ஒவ்வொன்றும் தங்கள் கதைகளைப் பேசுகின்றன. அழகொழுகச் சிரிக்கின்றன. ஆர்ப்பரித்த மூர்க்கத்தோடு போரிடுகின்றன.
தேரின் நடுவில் வைக்கப்போகும் பூமாதேவியின் அழகுதானென்ன
திருவானைக்காவில் யானையும் சிலந்தியும் வழிபட்ட காட்சி,
திருஞானசம்பந்தருக்கு உமையம்மை ஞானப்பால் கொடுக்கும் அழகு,

Page 15
வேலுப்பிள்ளை அம்பிகைபாகன் சம்பா நதிக்கரையில் அம்பாள் தவ இருக்கை சரவணப்பொய்கையில் அறுமுகன் ஆறு குழந்தைகளாக வளரும் திருக்கோலம்.
மீனாகஜி திருக்கல்யாணம் முருகனுக்கு அம்பாள் வேல் கொடுத்த காட்சி. இவை ஒவ்வொன்றும் எமது பழைய புராணக் கதைகளையே பேசுகின்றன. இவை மாத்திரமா? புவனேஸ்வரி, தட்சணாமூர்த்தி, மனோன்மணி, கைலாசவாகனம், கெளரி, நவமணிச்சக்திகள், விநாயகன், மகிஷாசுரமர்த்தனி, மதுரை மீனாகழி என்பன அழகொழுகச் செதுக்கப்பட்டிருக்கின்றன.
இவை மட்டுமல்லாமல் பிரம்மா-ஞானசரஸ்வதி, மன்மதன்ரதி, விஷ்ணு-மகாலட்சுமி, ஊர்த்துவதாண்டவம் (சிவநடனம் காளி நடனம், தும்புரு-நந்தி) என்பவை கூட்டம் கூட்டமாகச் செதுக்கப்பட்டுப் பார்ப்போரைப் பரவசப்படுத்துகின்றன.
எல்லாவற்றுக்கும் மேலே விசுவகர்மாவின் அழகான சிற்பம். ஆம், அது ஒரு சிற்பப் பூஞ்சோலை, சிற்பவனம்,” என்று கண்ட காட்சியை விபரித்து
‘‘அவற்றை ஒவ்வொன்றாகக் காட்டி அவற்றிலுள்ள நுட்பங்களை விளக்கினார் கலாகேசரி, ஒவ்வொரு தெய்வத்தினதும் அங்க அமைப்புக்கள், ஆயுதங்கள், ஆடை ஆபரணங்கள், அவை சம்பந்தமான செய்திகள் எல்லாவற்றையும் அவர் சொல்லும்போது பிரமிக்கிறோம் ? என்று சொல்லும்போது நாங்களும் சேர்ந்து வியந்து போற்றுவது இயல்பானதே.
 

கலாகேசரி ஆதம்பித்துரை
4.கலாகேசரியின் தனித்திறன்
ஆகம, சிற்ப நூலறிவும் பல கலையறிவும் மூலப் பொருட்களில் சிற்பம் அமைக்கும் ஆற்றலும் உடையவனே ஸ்தபதி என்று இந்து ஆகம, சிற்பமரபு கூறும். கடந்த மூன்று தசாப்த காலமாக ஈழத்துத் தேர்க்கலையுலகில் “ஆகம மரபு' அங்கீகாரம் பெற்ற ஒரேயொரு ஸ்தபதியாக விளங்கியவர் கலாகேசரி ஆறுமுகம் தம்பித்துரை அவர்கள் என்பது ஒர் தனிச்சிறப்பம்சமாகும்.

Page 16
கலாகேசரியின் தேர்த்திறன்
1. தந்தையைத் தொடரும் கலாகேசரி
தந்தையார் ஆறுமுகத்தின் மேற்பார்வையில் குரும்பசிட்டி முத்துமாரி தேரை வடிவமைப்புச் செய்த கலாகேசரி, தந்தையார் காலமாகியபின் அவரால் இயக்கப்பட்ட சிற்பாலயத்தை நிறுவனமயப்படுத்தினார். தன்னிளவல் ஜீவரத்தினத்தை இணை ஸ்தபதியாகக் கொண்டு கொக்குவில் நந்தாவில் மனோன்மணி அம்மன் தேரை 1966ல் வடிவமைத்தார். இந்நிகழ்வின் போதுதான் அவருக்கே உரிய ஆளுமையைக் குறியீடாகக் காட்டும்"கலாகேசரி’ என்னும் கெளரவப் பட்டம் உயர்திரு ம.ழரீகாந்தா அவர்களால் வழங்கப்பட்டது.
2. வண்ணை காமாட்சி அம்மன்
நந்தாவிலிற் தோற்றம் பெறும் கலாகேசரியின் தேர்ப்பணி யாழ்.பாணியில் தன்னை இனங்காட்டும் வளர்ச்சிப் போக்கில் உயர்வதை வண்ணைக் காமாட்சி அம்மன் தேர் வடிவமைப்பில் (1971) அவதானிக்க முடியும். என்கோண வடிவமுடைய இத்தேர் நான்கு சில்லுகள் உடையது. உபபீட அமைப்பில்பெரும் மாறுதல் ஒன்று தோற்றம் பெறுகிறது. சதுரவடிவமைப்பிலிருந்த முன்னைய மரபு மாறிச் சித்துார் மட்டமும் எண்கோண வடிவெடுப்பது ஒர் புதுமைமிகு அம்சமாகும்.
 
 

கலாகேசரி ஆதம்பித்துரை கலாகேசரியின் வாழ்விலும் கலைப்பணியிலும் வண்ணை காமாட்சி தேர் நிர்மாணத்தின்போது ஒர் முக்கிய திருப்பம் ஏற்படுகிறது. ஸ்தபதியின் பங்களிப்புப் போதியதாக இல்லை என்று குற்றம் சாட்டிய தேர்த்திருப்பணிச்சபை இந்தியாவிலிருந்து சிற்பங்களைத் தருவிக்க விரும்பியது. இதற்கு இணை ஸ்தபதியும் கலாகேசரிக்குத் தெரியாமலேயே ஒப்புதல் கொடுத்திருந்தார். நிர்மாணத்தைப் பூர்த்தி செய்ய வேண்டியதோர் இக்கட்டில் அவர் திருப்பணிச் சபையினர்க்கு வழங்கிய ஆதரவு கலாகேசரியின் எதிர்ப்புக்கு இலக்காயிற்று. இந்நிலையில் கலாகேசரி, ஆறுமுகம் சிற்பாலயத்திலிருந்து முற்றாகவே வெளியேற வேண்டியவரானார்.
இப்பின்னணியிலேதான் நீண்டகால வதிவிடமாகிய மயிலிட்டி தெற்கு, குரும்பசிட்டியில் தன் பெயராற் “கலாகேசரி கலாலயம்” என்னும் புதிய சிற்பாலயத்தைக் கலாகேசரி நிறுவுகிறார். ஈழத்துத் தேர்க்கலை வரலாற்றையே மாற்றியமைத்தும் புதியதோர் அத்தியாயத்தை வகுத்தும் தேர்க்கலை நெறியை ஆளும் புதிய பிரம்மாவாக மேற்கிளம்புகிறார் கலாகேசரி.
3. சுதமலை புவனேஸ்வரி
கலாகேசரி தன் புதிய சிற்பாலயச் சார்பில் வடிவமைத்த சுதுமலை புவனேஸ் வரி அம்மன் தேர்02-06-1974ல் வெள்ளோட்டங் கண்டது. யாழ்ப்பாணத் தேர்களில் கலைஉருவமைப்பிலும்சரி, கட்டமைப்பிலும்சரி தன்னிறைவை முறையாகப் பிரதிபலிப்பது சுதுமலையிற்றான் என்பதில் எனக்கு எந்தவித சந்தேகமுமில்லை. தனி யாழ்.பாணியில்

Page 17
வேலுப்பிள்ளை அம்பிகைபாகன்
"சிற்பத்தேர்” எனச் சுட்டத்தகும் முதல் தேராகிய இது சித்துர் மட்டம், பேரூர் மட்டம் என்னும் முதலாம், இரண்டாம் தளங்களில் 30,32 ஆக 62 சிற்பங்கள் கொண்டது உபபீட கீழ்த்தளமாகிய கபோதகத்துச் சிறு கோட்டங்களில் துவாரபாலகியர் இடம் பெறுகின்றனர்.
இங்கு சுட்டத்தகும் பிறிதோர் முக்கிய அம்சம், ஆதார சக்தி அமைப்புமுறை ஆகும். ஆதாரத்தில் தேராதார சக்திகளாகிய ஆதிகூர்மம், பூமாதேவி, ஆதிநாகம் ஆகியன தேரைத் தாங்கும் பாவனையில் அமைகின்றன. தலைப்பாகம் முன்புறமும் காற்பாகம் பின்புறமுமாகப் பொது வழக்கிலமைய, இடம் -வலம் என்னுமிரு புறங்களிலும் கூர்மத்தின் முன்னங்கால்கள் முன்பக்கமும் பின்னங்கால்கள் பின்பக்கமும் அமைவது வேறு இடங்களிற் கண்டு கொள்ள முடியாததோர் சிறப்பம்சமாகும். இது தேர் அமைப்பியல் நிறைவினைப் பிரதிபலிக்கும் அம்சமாகும்.
மணிமண்டபத்தில் சிற்பச் செழுமை மிக்க அம்சங்கள் தோற்றம் பெறுகின்றன. விமானத்தைத் தாங்கும் பெரிய யாளிகளின் கீழே முன்-கீழ்ப்பார்வையுடன் இடம் பெறும் பெரிய பாயும் சிங்கங்கள், யாளித்துணின் பாதமாக புதிய வடிவெடுக்கின்றன. “பல்லவ கட்டடச்சிற்பப் பாணி” இங்கு தேர் அமைப்பில் இடம்பெறுதல் ஒப்புநோக்குதற்குரியது. இவ்வம்சம் பிற்காலத்து யாழ்-பாணியிற் செல்வாக்குச் செலுத்துவதைத் தெல்லிப்பழை துர்க்காதேவி (1978) மாத்தளை முத்தமாரி(1977) என்னுமிடங்களில் கண்டு கொள்ளலாம்.
 

கலாகேசரி ஆதம்பித்துரை
4. குப்பிளாண் கற்பகப் பிள்ளையார்
குப்பிளான் கற்பகப் பிள்ளையாா தேர்(1975) இலங்கை அதுவரையில் கண்டிராத வேசரமரபில் அமைந்தது. இது வட்ட வடிவமுடையது. கலாகேசரியின் தற்றிறனை வெளிப்படுத்தும் பெரு முயற்சி இதுவாகும். உபபீடம் பூசாந்திரமாகவும்அதிஷ்டானத்திலிருந்து பிரதம கோணம் வட்டமாகவும்அமைகிறது. முறையாக 'வட்டவடிவம் எல்லாத் தளங்களிலும் பேணப்படுதல் நடைமுறையிற் சாத்தியமற்றது என்பதையுணர்ந்த கலாகேசரி, வட்டத்துடன் எண் கோணத்தையும் தக்கவாறு இணைத்தார். அதிஷ்டானம் வட்டமாகவும் பேரூர் மட்டம் எழுதக வடிவில் எண் கோணமாகவும் அமைய நராசனத்திலிருந்த மிகுதி அடிப்படை வடிவம் முழுவதும் வட்டமாகின்றமை குறிப்பிடத்தக்கது. விமானமும் எண்கோணக் கலப்புடையதே.
குப்பிளானின் வளாச்சியாகக் கலாகேசரியின் புலோலி புற்றளை விநாயகர் தேர்(1980) அமைகிறது. வடிவ நிலையில் எண்கோண அமசக் குறைகள் நீங்கிய "வேசரவடிவ முழுமை’ யை இங்கு இவர் தோற்றுவித்தமை சிறப்பம்சமாகும்.
5. தெல்லிப்பழை துர்க்காதேவி தேர்
தெல்லிப்பழை துர்க்காதேவி தேர்(1978) திராவிட மரபுநிலைப்பட்ட ஈழத்துத் தேர்க்கலை மரபில் மேலும் ஒரு நுட்பத்தைச் சேர்க்கின்றது. கட்டட அணி அமைப்பில் முகபத்திரமடக்கை மீட்பு என்று முந்திய தேர்கள் உத்திர மட்டநிலையில் அமைதியாக இருக்க திராவிட எண்கோணத் தேரில் முதன்முறையாக முகபத்திர அமைப்பை இங்கே

Page 18
வேலுப்பிள்ளை அம்பிகைபாகன்
கையாள்கிறார் கலாகேசரி. இம்முயற்சிக்கு தமிழகக் கலைஞர் திருவிடைமருதூர் இரா.கோவிந்தராஜூவின் நீர்வேலி வாய்க்காற்றரவைப் பிள்ளையார் தேர்(1963) வடிவமைப்பு ஒர் முன்மாதிரியும் உந்துசக்தியுமாகும். பிரதம வடிவம் முழுவதும்
மடக்கை மீட்கப்பட்ட போதிலும் தாமரை வடிவப் பண்டிகையில் இது குதிரைகளால் உயர்த்திச் செல்லப்படும் குறியீடாக மட்டுமே அமைகிறது. நீர்வேலியில் இவ்வம்சம் தளத்தைப் பொறுத் தளவில (up (g 60) LDuJIT 86 இருப்பது ஒப்புநோக்குதற்குரியது.
உபபீட கபோதகத்தில் துவாரபாலகர்கள் அல்லது மூல தெய்வத்தின் முக்கிய வடிவங்கள் இடம் பெறுகின்றன. இதனை மாத்தளை முத்துமாரி தேரில் ஏற்கனவே கலாகேசரி அறிமுகப்படுத்தியிருந்தார். திசைக் காவலர் அம்சம் தேவாசனத்தில் அமைய வேண்டும் என்பது தேசக்கலை LDJI q. 6. மாத்தளை முத்துமாரி அம்மன்
ஈழத்துத் தேர்க்கலை வரலாற்றில் சகல அம்சங்களும் ஓர் உயரிய எல்லையைத் தொட்டு நின்ற மாத்தளை முத்துமாரி அம்மன் தேர்(1977), 1983ஐத் தொடர்ந்த நெருக் கடியரின் போது தரீக் கிரையாக கப் பட்டமை துரதிஷ்டவசமானது. நாகரம், திராவிடம், வேசரம் என்னும் மூன்று மரபுகளையும் பொருத்தமுற இணைத்தும் சக்தி தத்துவத்தை மணிமண்டப மேல்விதானத்திற் புகுத்தியும் ஒரு புதிய மாதிரியை இங்கே கலாகேசரி உருவாக்கியிருந்தமை குறித்துரைக்கத் தக்கது.

கலாகேசரி ஆதம்பித்துரை
7. கொக்குவில் கிருபாகர சிவசுப்பிரமணிய சுவாமி
புதியமரபை அறிமுகப்படுத்தியும் திராவிட எண்கோண மரபைச் செழுமைப்படுத்தியும் வளமூட்டிய கலாகேசரி "அந்திரம்' என்று சிற்ப இலக்கணம் கூறும் அறுகோண வடிவைக் கொக்குவில் கிருபாகர சிவசுப்பிரமணிய சுவாமி தேரில் அறிமுகப்படுத்துகின்றார். அவரின் தற்றிறன் அதிகூடிய விவேகத்துடன் வெளிப்பட்டது இங்கே என்றுதான் சொல்லுதல் வேண்டும். இருதள சிற்பமுடைய இத்தேர் ஆறு சில்லுகளும் திரிதள விமானமும் உடையது. முகபத்திர மடக்கையைப் பிரதம கோணம் முழுவதும் கொண்டமையும் சிறப்புடையது.
இத்தேர் வடிவமைப்பு நடைபெற்ற காலம், “ ‘அறுகோணத்திலும் தேரா? அப்படியென்றாற் சுவாமியை எந்தப்பக்கத்தால் ஏத்துவது?’ என்று கேள்வி எழுப்பி
“ ‘பின்பக்கத்தாலை தூக்கிவைக்கட்டும்' என்று தாமே பதிலும் சொல்லித் திருப்தியடைந்த ஸ்தபதிகளும் உளர். 'எண்கோணமாயின் எட்டுப் பவளக் கால்கள்; ஆறுகோணமாயின் ஆறு பவளக்கால்கள் ஒரே சுற்று வட்டமைப்பில் வருமென ச் சிலர் தமது மூளைக்குள்ளேயே புதிய தேர் இலக்கணம் வகுத்திருந்தனர். இவர்கள் எல்லோரும் வெறும் கிளிப்பிள்ளையாகச் செயன்முறைப் பயிற்சி மட்டும் பெற்றிருந்தனரே தவிர சிற்ப அரிச்சுவடியையேனும் நூன்மரபாக அறிந்திருக்கவில்லை.
முகபத்திர பங்குமானத்தளவு கொண்டு பிரதம வாசல்கள் ஆறாகவும் ஒவ்வோர் கோண இடம்-வலம் என்னும் பகுதிகளை ஒரே தொடர்பில் இணைத்து உபவாசல்கள் ஆறாகவும் வகுத்த கலாகேசரி பலருக்கும் நடுநின்ற நந்தியாகியபவளக்காலிடத்தே சுவாமி ஏறும் வாசலைத் தோற்றுவித்தார். வெறுமனே செயன்முறைப் பயிற்சி பெற்ற

Page 19
வேலுப்பிள்ளை அம்பிகைபாகன் ஸ்தபதிகள் சிலருக்கு இவ்வடிவமைப்பு இற்றை வரையிலும் விளங்கவில்லை என்பதை அவதானிக்க முடிகிறது. அவ்வளவிற்கு அதியுயர் திறமை கொண்டு இவ்வமைப்பை உருவாக்கியவர் கலாகேசரி.
8. அண்ணுங்கை சிவபூதவராயரும்
கண்னாகம் கதிரமலைச் சிவனும்
அமைப்பு முறைகளில் மிகவும் முன்னேறிய வடிவமாக நாகரம் விளங்குகிறது. கோண்டாவில் அன்னுங்கை சிவபூதவராயர் தேரும் (1988) சுன்னாகம் கதிரமலைச் சிவன் தேரும் நாகர வடிவிலமைவன. ஐந்து தள விமானமும் நான்கு சில்லுகளும் உடைய இவை முறையே இரண்டு, மூன்று தள சிற்பங்களைக் கொண்டுள்ளன. இருப்பினும் பின்னது மூன்றாவது தளம் பூர்த்தியாகவில்லை. "இரட்டைப் பஞசாங்கம் எனப்படும் அணியமைப்பு, சுன்னாகத்தில் திறமுறப் பயன்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. சித்துார் மட்டச் சிற்பவரிசை செங்குத்தான முன்னைய மரபிலிருந்து மாறிச் சிறிது சாய்ந்திருப்பது ஓர் சிறப்பம்சமாகும். வடஇந்தியத் தேர்களின் உருவினை இது பிரதிபலிப்பதும் ஒப்பு நோக்கும் சிறப்புடையது. விமானத்தைத் தாங்கும் யாளிகள் உயிரோட்டம் நிறைந்தன. வீறும் வனப்பும் மிக்க நான்கு குதிரைகளும் இத்தேரின் கவர்திறனை மேலும் அதிகரித்து நிற்கின்றன. ஈழத்துத் தேர்களிற் சமகால வடஇந்திய நாகரமரபை அறிமுகப்படுத்தி நிற்கும் தலைசிறந்த தேர் இது எனலாம்.
 

கலாகேசரி ஆதம்பித்துரை 9. இணுவில் செகராசசேகரப் பிள்ளையார்.
கலாகேசரி கடும் சுகவீனமுற்ற நிலையிலும் வடிவமைத்துப் பூர்த்தி செய்த இறுதி அமைப்பு இணுவில் பரராசசேகரப் பிள்ளையார் தேர் ஆகும். இது திராவிட முகபத்திர அமைப்புடையது.
10. பொதுப் பண்புகள்
கலாகேசரியின் தேர்களிற் சில பொதுப் பண்புகளை அவதானிக்கலாம். சிற்ப அணிகளாகிய அன்னம், சரபம், மகரம், யாளி, குதிரைகள் என்பன உயிரோட்டம் நிறைந்தன. விக்கிரகங்கள் அபிநயச் சிறப்புடையன. அதே வேளையில் செய்நேர்த்தி சற்றுககககக் குறைந்திருக்கும். சுதுமலை கொக்குவில் தவிர்ந்த ஏனைய இடங்களில் உள்ள ஆலயங்களில் நிர்மாணிக்கப்பட்ட தேர்கள் நான்கு சில்லுகள் உடையன. தேர்த்திருவிழாவிற்கு ஒடும் தேர்களுக்கு ஆறு சில்லுகள் என்ற ஆகம, சிற்பக் கோட்பாட்டின் அடிப்படையில் நோக்கும் போது இது குறைபாடுடையதே.

Page 20
கருத்துக்கள் விமர்சனம்
இந்து சிற்ப இலக்கணத்தைப் பொறுத்தளவில் இலங்கையிலேயே அதன் உச்ச எல்லையைத் தொட்டுநின்ற சில கலைஞர்களில் முதன்மையான ஒருவர் கலாகேசரி. சிறு வாகனங்களிலும்சரி அல்லது மஞ்சம், சப்பைரதம், தேர்களிலும் சரி அவர் எட்டியிருந்த அறிவுச் சிகரத்திற் பிற கலைஞர் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ஆயினும் கலாகேசரியின் சில கருத்துக்கள் சிற்பக் கோட்பாட்டின் அடிப்படையில் விமர்சனத்திற்குரியன. 1. நடைமுறையிற் கருத்து வெளிப்பாடு
கலாகேசரியின் உடனிகழ்வுக் கருத்துக்கள் பல காலங்கடந்த நிலையிலும் கூட ஆய்வு முடிபாகச் சிலராற் போற்றப்படுவதை அவர் மறைவைத் தொடர்ந்து நடைபெற்ற வெவ்வேறு நிகழ்வுகளில் அவதானிக்க முடிந்தது. இப்போக்கு எமது கருத்தியலின் வறுமையை வெளிப்படுத்துவதாகும்.
கலாகேசரியின் சுதுமலை புவனேஸ்வரி தேர் வெள்ளோட்டம் கண்ட காலத்திலேயே இரசிகமணி கன.கசெந்திநாதன் அவர்பற்றி எழுதிய ‘கவின்கலைக்கோர் கலாகேசரி’ என்ற நூல் வெளியாகியிருந்தது. அதிலிடம்பெற்ற கலாகேசரியின்,
 

கலாகேசரி ஆதம்பித்துரை
'நந்தாவில் அம்பாள் தேர்தான் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது ? என்ற கருத்து, அக்கருத்துரைக்கப்பட்ட காலகட்டத்திலேயே பொருத்தமற்ற ஒன்றாகிவிட்டது. ஆறுமுகம் தம்பித்துரை என்ற இளைஞருக்கு கலாகேசரி’ என்னும் கெளரவப் பட்டம் வழங்கப்பெற்ற நிகழ்வு ஒன்றுக்காகவே இக்கருத்து அவரிடமிருந்து வரலாயிற்று. ஆயின் அதற்கான உண்மையை உய்த்துணர முடியாத நிலையில் அதிலும் அக்கருத்து வெளிப்பாட்டின் பின்னர் அதிசிறந்த தேர்கள் பலவற்றை அவரே வடிவமைத்த பின்னரும் கூட வழக்கிழந்த, பொருத்தமற்ற கருத்தொன்றை ஆய்வு முடிபு போன்று தலைமேற் கொள்வது தவறான முடிபுகளுக்கு இட்டுச் செல்லத்தக்கதாகும்.
2.திராவிட மரபும் யாழ்ப்பாணமும்
தமிழகத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த தேர் ஸ்தபதிகளுள் திருவிடை மருதூர் சி.சுப்பிரமணியம் மிகவும்முக்கியமான ஒருவர். ‘நாகரம்' அல்லது 'திராவிடம் என்னும் வடிவங்களில் ஏதோ ஒன்றினை மட்டுமே முந்திய சிற்பிகள் கையாண்ட நிலையில் 1960ம் ஆண்டு வரையில் மேற்குறித்த இரு வடிவங்களையும் கையாண்டிருந்தவர் இவர். 1939ல் கொக்குவில் மஞ்சவனப்பதி முருகன் தேரை நாகர வடிவிலும் வண்ணார் பண்ணை பெருமாள் தேரைத் திராவிட வடிவிலும் நிர்மாணித்திருந்தார். யாழ்ப்பாணத்தில் இருபதாம் நூற்றாண்டு ஸ்தபதிகள் அனைவரும் திராவிட மரபையே கையாண்டிருந்தனர்.
இந்நிலையில் 'எண்கோணம்' என்ற வடிவத்தைக்

Page 21
வேலுப்பிள்ளை அம்பிகைபாகன் கொண் ட 'தரிராவிடம் என்னும் 6)l Iọ 6ìi tổ , யாழ்ப்பாணத்திற்கேயுரியது என்ற பாமரத்தனமானதோர் நம்பிக்கை எமது கலைஞர்கள் மத்தியில் ஆழ வேரூன்றி விட்டது. இப்பின்னணியிலேதான் சுப்பிரமணியத்தின் திராவிட வடிவமைப்பு கலாகேசரியின் ஐயத்திற்குரியதாகின்றது. இவ்விடயம்பற்றி என்னுடன் விவாதித்த வேளையில்,
“மஞ்சவனப்பதிக்கு நாகரத்திலை தேர் செய்த சுப்பிரமணியம், பெருமாள் தேரை ஏன் யாழ்ப்பாண முறைப்படி செய்தவர். இந்தியாவிலை இது இல்லைத்தானே?’ என்று கேள்வி எழுப்பி இருந்தார் கலாகேசரி. இங்கு அவர் யாழ்ப்பாண முறைப்படி என்றது திராவிட எண்கோணமரபை, அது மட்டுமன்றி “இந்தியாவில் திராவிட எண்கோண மரபு இல்லை என்பது அவருடைய ஆணித்தரமான கருத்து.
வரலாற்று நோக்கில் சமய, பண்பாட்டு அடிப்படையில் இந்தியாவுடன் பின்னிப் பிணைந்துள்ள யாழ்ப்பாணம் தனக்கென்றோர் சிற்பக் கொள்கையைக் கொண்டிருக்காத நிலையில் திராவிடம் பற்றிய கலாகேசரியின் கருத்து ஓர் உணர்ச்சி நிலைப்பட்டதும், ஆதாரமற்றதும் ஆகும்.
காமி காகமம் , அக் கினி புராணம் என்பன ஆலயத்திற்கான அடிப்படை வடிவங்களை வைராஜம், புஷ்பகம், கைலாசம், மாணிகம், திரி-விஷ்டபம் என்னும் 5 வகையாகப் பாகுபடுத்தும். இவை ஒவ்வொன்றும் 9 வகை உபபிரிவுகளைக் கொண்டமைய மொத்தம் 45 வகையான வடிவங்கள் தோற்றம் பெறுகின்றன.
வைராயம் என்பது சதுரம் அல்லது நீள்சதுர
 

கலாகேசரி ஆதம்பித்துரை
அமைப்புடையது. மேரு, மந்தரம், விமானம், பத்திரம், சர்வதோபத்திரம், சாருகம்(ராக), நந்திக, நந்திவர்த்தன், முரீவற்ச் என்பன இதன் 9 உபவடிவங்கள்.
புஷபகம் என்பது நீள் சதுர அமைப்புடையது. சால, கிரக, வலபி, விசால, பிரம்ம-மந்திர, புவன, பிரபவ, சிவிகவேஸ்ம, சாம, கிரக-ராஜ என்பன இதன் 9 உப வடிவங்கள். கைலாசம் என்பது வட்டவடிவமுடையது. வலய, துந்துபி, பத்ம, மஹா-பத்மஹ, சமஹ, கலச உஷணிவி, வர்த்தனி, முகுலி, ஸ்வ-விர்க்ஷ என்பன இதன் 9 உப வடிவங்கள்.
மானிகம் என்பது நீள்வட்ட வடிவமுடையது. கஜ, வீர்ஷ்ப, ஹம்ஸ, ஹருத்மத்(கருட), ரிஷ்ஷ-நாயக, பூஷான, பூதர(பூமுக), சிம்ஹ.ழரீஜய என்பன இதன் 9உய வடிவங்கள். திரிவிஷ்டபம் என்பது எண்கோண வடிவமுடையது. இது வைஜ்ர, சக்ர, ஸ்வஸ்திக, சித்திர, கட, விஜய, பூறி விஜய, மெஸ்திக, பூரீகந்த என்பன இதன் 9 உப வடிவங்கள். இத்திரிவிஷ்டபம் என்ற எண்கோண வடிவமே சிற்ப நூல்களில் திராவிடம் என்று குறிப்பிடப்படுவதாகும் காசியபம், மானசாரம்,மயமதம், சுப்பிரபேதம், காமிகம் என்பன நாகரம் விஷ்ணுவிற்கு சிறந்தது என்றும் வேசரம் சிவனுக்கு சிறந்தது என்றும் திராவிடம் பிரம்மனுக்கு சிறந்தது என்றும் விதிக்கின்றன. கி.பி.5,6ம் நூற்றாண்டுகளில் உருவாகிய அல்லது இறுதி வடிவம் பெற்ற மானசாரம் என்ற சிறந்த சிற்பநூல், நாகரம் வட இந்தியாவிற்கும் திராவிடம் தென்னிந்தியாவிற்கும் வேசரம் மத்திய இந்தியாவிற்கும் பொருத்தமானதெனக் கூறும்.

Page 22
வேலுப்பிள்ளை அம்பிகைபாகன்
இம்மானசாரமே தேர் அமைப்பு விதிகளை விரிவாகக் கூறும் சிற்பநூலாகும்.சதுரம், நீள்சதுரம், வட்டம், நீள்வட்டம், அறுகோணம், எண்கோணம், முட்டைவடிவம் என்னும் பிறிதோர்வகைத் தேர்க்கோட்பாட்டையும் இது இரண்டாவது நிலையில் சிலகோட்பாடுகளின்படி என்று தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது. சதுர வடிவமான தேர் நாகரம் என்றும் எண்கோண வடிவமான தேர் திராவிடம் என்றும் வட்டவடிவமான தேர் வேசரம் என்றும் அறுகோண வடிவமான தேர் அந்திரம் என்றும் முட்டை அல்லது கோளவடிவமான தேர் கலிங்கம் என்றும் அழைக்கப்படுவதாக மானசாரம் கூறும்.
3.சமகாலத் தேர் இலக்கணம்
வரலாற்றுப் புகழ்பெற்ற சுன்னாகம் கதிரமலைச் சிவன் தேர்நிர்மாணம் நடைபெற்றபோது அங்கு சென்று கலாகேசரியை நான் பலதடவைகள் சந்தித்ததுண்டு. தேர் வேலை பூர்த்தியாகும்வரை பல்வேறு தளங்களிலும் நான் அவருடன் தேர்பற்றி உரையாடியதுண்டு. தேர் இலக்கணம் பற்றி கலாகேசரியுடன் விவாதித்த வேளையில்,
"நாங்கள் செய்கின்ற தேர்களுக்கு இலக்கணம் இல்லை" என்று அவர் கருத்துரைக்க, தேர் பற்றி ஆராய்ந்து கொண்டிருந்த எனக்கு ஒர் அதிர்ச்சியாக இருந்தது.
மானசார சிற்ப நூலில் “தேர் இலக்கணம்' என்னும் அத்தியாயம் உளது. மானசாரம் இந்து சிற்ப நூல்களுள் தலையாயதெனலாம். இங்கு கூறப்படும் தேர் இலக்கணம் பற்றி மிகவும் நுணுக்கமாக ஆராய்ந்து வந்த என்னால் "நாங்கள் செய்கின்ற தேர்களுக்கு இலக்கணம் இல்லை”
 

கலாகேசரி ஆறுமுகம் தம்பித்துரை
என்ற கருத்தை ஏற்கமுடியவில்லை. ‘மானசாரத்தில் தேர் இலக்கணம் உள்ளதே’ என்று நான் சொல்ல, அப்பகுதியைத் தான் பார்க்கவில்லையென்ற கலாகேசரி அதனைத் தன் பார்வைக்குத் தரும்படி கேட்டுக்கொண்டார். யானும் அவர் பார்வைக்குச் சமர்ப்பித்திருந்தேன்.
கலாகேசரி மானசாரத் தேர் இலக்கணத்தை நுணுகி ஆராய்ந்த பின்னர் அதன் அடிப்படையில் தேர் இலக்கணம்பற்றி இருவரும் சற்றுக் காரசாரமாகவே விவாதித்திருந்தமை என்னால் என்றுமே மறக்கமுடியாத அனுபவமாகும்.
4. அறிதிறனும் உணர்வு நிலையும்
கலாகேசரி திராவிட மரபுபற்றி நிறையவே அறிந்தும் உணர்ந்தும் இருந்துள்ளார் என்பதை,
‘'சமராங்கண சூத்திரதானம், ஈசான சிவகுரு தேவபத்ததி ஆகிய நூல்கள் கோயில்களை மூன்று பிரதான பாணிகளாகப் பிரிக்கின்றன. (1) நாகரம், (II) திராவிடம், (III) வேசரம் அல்லது வாராடம் ஆகும். தேர் அமைப்பு முறைகளிலும் இது வழக்கில் இருந்து வருகின்றது. அதாவது சதுர வடிவமான தேரைத் திராவிடம் என்றும் வட்ட வடிவமான தேரை நாகரம் என்றும், எண்கோண வடிவமான தேரை வேசரம் என்றும் சிற்ப நூல்கள்கூறுகின்றன’’
என்ற அவரது கூற்றிலிருந்து அறிந்து
கொள்ள முடிகின்றது. இருப்பினும் தன்னை ஓர் கலைஞன்அதிலும் யாழ்ப்பாணத்து மரபு நிலைப்பட்ட கலைஞன் என்ற வகையில் ஏற்கனவே வேரூன்றியிருந்த மரபுணர்ச்சி நிலையை உள்வாங்கியவராகக் கலாகேசரி தன்னை இனங்காட்டியுள்ளார் என்பது உண்மையாகும்.

Page 23
வேலுப்பிள்ளை அம்பிகைபாகன்
இந்நிலையில் கலாகேசரியின் திராவிடம் பற்றிய, "அது யாழ்ப்பாண மரபே என்ற கொள்கையும் நாம் செய்யும் தேர்களுக்கு இலக்கணம் இல்லை' என்ற கருத்தும் மிகவும் உணர்வு பூர்வமானவை என்பது தெளிவு. யாழ்ப்பாணத்துத் தேர்க்கலை உலகில் நிலவிய பாமரத்தனமான சில நம்பிக்கைகளைக் கலாகேசரி தலைமேற் கொண்ட குறைபாடு உடையவராக விளங்குகின்றார். இது வருந்தக் கூடியதாகும்.
 
 

கதிரமலைச் சிவன் தேர் நிர்மாணத்தில்.
சுன்னாகம் கதிரமலைச் சிவன் தேர்வேலை பூர்த்தியாகும் வேளையில் கலாகேசரி கேட்டார், “தேர் அமைப்பு எப்படி?” என்று. நான் சொன்னேன், “நான் சொன்னால் சொன்னதுதான். சொல்வதில் மாற்றமேதுமில்லை. உங்களுக்கு ஏற்கனவே சொல்லிவிட்டேன்தானே' என்று. நான் அவரிடம் ‘வடமாகாணத்தில் அமைந்த யாழ் பாணித் தேர்களில் சுன்னாகம் கதிரமலைச் சிவன் தேர் மிகவும் உயரிய எல்லையைத் தொட்ட மூன்று தேர்களில் முதன்மையான ஒன்று என்று பலதடவைகளிற் கூறியிருந்தேன். அதுமட்டுமன்றி அதிலுள்ள சிற்சில குறைபாடுகளையும் விமர்சித்திருந்தேன். தேர் நிர்மாணத் தளத்திற் பலர் முன்னிலையில் அவர் எனது விமர்சனத்தை ஏற்றுப் பாராட்டியமை என்னால் மறக்க முடியாததொன்றாகும். ஏனெனில் கலைஞன் ஒருவன் தனது படைப்பைப் பற்றிய விமர்சனம் எதனையும் பாராட்டாகவே எதிர்பார்ப்பது பொது மரபாகிவிட்ட நிலையில் கலைஞனாகவும், அறிஞனாகவும் விளங்கும் ஒருவனுடைய படைப்பை விமர்சிக்க முனையும்போது தவறான கருத்துக்களை முன்வைப்பது flyLDID,

Page 24
வேலுப்பிள்ளை அம்பிகைபாகன்
“இந்தத் தேரைப்பற்றி நீ சொன்னது எனக்குப் பெரிய சந்தோஷம் எல்லாரும் இதைப்பற்றித்தான் கதைக்கினம் எண்டு சொன்னது பெரிய சந்தோஷம்" என்ற கலாகேசரியின் ஏற்புரை எனக்குக் கிடைத்த அங்கீகாரமாகும்.
இச் சந்தர்ப்பத்திலேதான் -இத்தேர் நிர்மாண ஆரம்பவேலைகள் நடைபெற்றபோது "நாகரம் என்றால் என்ன? அப்படி ஒன்று இருக்கிறதா? எனக் கேட்டுத் தேர்த்திருப்பணிச் சபையினர்க்கு ஸ்தபதி ஒருவர் கடிதம் எழுதிய நிகழ்வும் இடம்பெற்றது. இது இலங்கை இந்துக்கலையுலகம் கண்ட "சிகரமும் பள்ளத்தாக்கும் போன்ற அறிவுத்திறன் சந்திப்பாகும்.
 
 

கலாகேசரியின் இறுதிக்காலத்தில்
கலாகேசரி தனது வேலைகளைப் பற்றிய நூலொன்று எழுதவேண்டுமென்று விரும்பியிருந்தார். ஆயினும் அவ்வேலை ஆரம்பிக்கப்படவே இல்லை.
தேரைப்பற்றிய நூலொன்று எழுதும் விருப்பம் கலாகேசரிக்கு இருந்தது. அதற்கு என்னுடைய உதவியையும் கேட்டிருந்தார். “நாமிருவரும் சேர்ந்தே இப்பணியைச் செய்வோம்” என்று அவர் கேட்க நானும் சம்மதித்திருந்தேன். இது கலாகேசரியின் சகோதரி திருமதி.பாக்கியம் சிவகுரு ஆசிரியை அவர்களின் முன்னிலையில் நிகழ்ந்தது.
எனினும் காலச் சூழ்நிலைமைகளால் எமது இம்முயற்சி ஆரம்பிக்கப்படவே இல்லை. கலாகேசரி நோய்வாய்ப்பட்ட நிலையில் இணுவில் செகராசசேகரப் பிள்ளையார் தேர் வேலையைப் பூர்த்தி செய்ய வேண்டியவரானார். பெரும் வேலைகள் செய்யமுடியாத நிலை ஏற்பட்டது. நூல் எழுதும் நிலை இயல்பாகவே அற்றுப்போனது. பழைய நினைவுகள் மீட்கப்படும்போது கண்ணிர் ஆற்றில் மூழ்கும் வேதனை தோன்றுகின்றது.
நாமிருவரும் ஒருயர்ந்த உலகில் சந்தித்தோம். எமக்குள் முரண்பாடு தோன்றுவதாயினும் அது கருத்தளவிற் Gg SISMELD56īy, 6ILDåbFoOLGulUIIGN D (PGDGALLIGöBoso606V

Page 25
வேலுப்பிள்ளை அம்பிகைபாகன்
இந்து மரபின் அடித்தளத்தில் நின்றமையும் இதற்குக் காரணமாகும். நான் கலாகேசரியிடம் கற்ற மாணவனல்ல. ஆயினும் அவர் தனது மாணவர்களுக்கு மேலாக என்னை மதித்துக் கெளரவித்தார். நான் அவரை நேசித்தேன், ஈழம்கண்டகலாகேசரி என்பதற்காக.
இன்று ஈழத்துக்கலை வானில் எல்லாம் தானேயாகப் பிரகாசித்துக்கொண்டிருந்த அந்தக் கலாகேசரி என்னும் அதியுயர் நட்சத்திரம் அஸ்தமித்துவிட்டது.
மீண்டும் ஓர் கலாமேதை யாழ்ப்பாணத்தில் உருவாக அந்தக் கலாமேதை கலாகேசரியின் ஆசீர்வாதம் கிடைக்க வேண்டும்.
 
 

DITGOL6)III 11JZD1160)
1960 களிலிருந்து 1994ம் ஆண்டுவரை ஏறக்குறைய 3 தசாப்தங்களாகத் தொடர்ந்தியங்கிய கலாகேசரி ஆதம்பித்துரையின் மாணவர் பரம்பரை தனித்துவமும் தொடர் பாரம்பரியமும் கொண்டது. கலாகேசரி, தந்தையார் ஆறுமுகத்தின் மேற்பார்வையின்கீழ் குரும்பசிட்டி முத்துமாரி அம்மன் தேரை வடிவமைத்தபோது இணைந்து பணியாற்றிய இளவல் ஜீவரத்தினம் அவரின் முதல் மாணவனும் சிறந்த மாணவனுமாக இன்று விளங்குபவர். கலாகேசரி 1970 களின் ஆரம்பத்தில் தனித்தியங்கத்தொடங்கியதும் எப்படி ஓர் தனிச் செல்நெறியைப் பிரதிபலித்தாரோ அதே போன்றதும் ஆயின் அடிப்படையில் பிறிதுபட்ட சிறப்பம்சமுடையதுமாகிய தேர் நெறியை வகுத்தவர் ஜீவரத்தினம்.
ஜீவரத்தினம் வடிவமைத்த தேர்கள் சிறந்த உருவமைதியும் கவர்திறனும் கொண்டவை. யாழ்ப்பாணத்து சிற்பக்கலை வரலாறு இதுவரையிற் கண்டிராத வகையில் நூற்றிற்கும் மேற்பட்ட தேர்களை வடிவமைத்த தனித்துவம் கொண்டஇவரின் விரைவுத்திறன் சிறப்புடையது. வண்ணார் பண்ணை கலட்டி எச்சாட்டி முத்துமாரி(1973), கோண்டாவில் அரசடி விநாயகர்(1974), இணுவில் சிவகாமி(1977), திருக் கேதரீஸ் வரம் (1981), சுழிபுரம் பறாளாயப்

Page 26
வேலுப்பிள்ளை அம்பிகைபாகன்
சிவசுப்பிரமணியர்(1985), திருநெல்வேலி முத்துமாரி(1996), ஆகிய தேர்கள் இவர் வடிவமைப்புக்களிற் சிறப்புடையன.
கலாகேசரியுடன் தேர் வடிவமைப்பில் ஒவ்வோர் காலகட்டத்திலும் இணை நின்று சிறப்பும் பாராட்டும் பெற்றுத் திழ்ந்தவர்,திகழ்பவர் ஆசீவரத்தினம் என்பது குறிப்பிடத்தக்கது. உதாரணமாக சில தேர்களைச் சுட்டலாம். கலாகேசரியின் சுதுமலை புவனேஸ்வரி தேர் வெள்ளோட்டம் கண்ட அதே காலகட்டத்தில் ஜீவரத்தினத்தின் கோண்டாவில் அரசடி விநாயகர் தேர் நிர்மாணம் பூர்த்தியடைந்தது. இவ்விருவரும் தனித்தனி தம்மை ஸ்தபதிகளாக நிலைநிறுத்திய பின்னர் ஒரே சமயத்தில் ஓடிய இவ்விரு தேர்களும் யாழ்ப்பாணத்துக் கலைஞர் களையும் அறிஞர்களையும் பெரிதும் கவர்ந்திழுத்தமை அவதானிக்கத்தக்கதாகும்.
கலாகேசரியின் சுதுமலைத்தேர் எவ்வகையில் 'முதல் சிற்பத்தேர்' என்று சுட்டத்தக்க சிறப்பைப் பெற்றதோ அதேபோன்று “ஆஜி'வின் கோண்டாவில் தேர் 'முதல் அலங்காரச் சிற்பத்தேர்’ எனத்தகும் சிறப்பைப் பெற்றது. விமானமும் மணிமண்டப மேல்விதானமும் அணிச்சிறப்பும் கவர்திறனும் கொண்டன. "குருவை விஞ்சிய சீடன்' என்று பலர் பாராட்டத்தக்க வகையில் இக்கால கட்டத்திலேயே இவர் தன்னை வளர்த்துக்கொண்டவர்.
இங்கு நாம் முக்கிய விடயம் ஒன்றினை அவதானிக்க முடிகின்றது. தனது சமகாலத்திலும் சற்று முன்-பின்னாக உருவாகிய தேர் ஸ்தபதிகளைப் புறந்தள்ளிய நிலையில் கலாகேசரி எவ்வளவுக்கு உயர்ந்தாரோ அதே போன்று
அவரைத் தொடர்ந்து அவருக்கு இணையாக ஏனையோரைவிட ஜீவரத்தினம் மேற்கிளம்புகின்றார்.
 

கலாகேசரி ஆதம்பித்துரை
திருநெல்வேலி திரு.சு.இராசரத்தினம், மயிலிட்டி திரு.ச.ஜெயராசா, மட்டுவில் திரு.கி.கலாமோகன், திருநெல்வேலி திரு.ந. சற் குணநாதன் ஆகியோர் கலாகேசரியின் குறிப்பிடத்தக்க மாணவர்களாவர். கலாகேசரியிடமும் ஜீவரத்தினத்திடமும் பயின்றவர்களாகிய திரு.ஆதுரைராசாவும், திரு.ஆ.சிவலிங்கமும் உடன் பிறந்தோர் என்பது குறிப்பிடத்தக்கது. இதே போன்று இராசரத்தினம், சற்குருநாதன் ஆகியோரும் கலாகேசரியும் ஜீவரத்தினமும் பிரிந்த பின்னர் பின்னவருடன் சிலகாலம் பயிற்சி பெற்ற நிலையில் கலாகேசரியுடன் இணைந்தவர்கள் என்பது சுட்டத்தகுந்தது.
இவர்களில் சற்குருநாதனும் சிவலிங்கமும் தனித்திறன் கொண்டவர்களாக உயர்வதற்கு அவர்கள் இந்திய சிற்பிகளிடம் பெற்ற பயிற்சியும் அடிப்படையாகும். குரு ஜீவரத்தினத்திடம் ஆரம்பக் கலையைப் பயின்ற பின்னர் கலாகேசரியிடம் சுமார் நான்காண்டுக் காலம் பயிற்சி பெற்றார். இவர் தொடர்ந்து இந்தியாவிலிருந்து வருகைதந்து பொன்னாலை வரதராஜருக்குத் தேர் வடிவமைத்த இந்தியாவின் தலைசிறந்த சிற்பி மாயவரம் ச.ஏகாம்பர ஸ்தபதியிடம் சிற்பப் பயிற்சியைப் பெற்றுக் கொண்டார். இந்தியக் கலைஞர்களுக்கு இணையாக சிறபம் செதுக்குந் திறன் கொண்டவராக சற்குருநாதன் விளங்குவதற்கு இப்பயிற்சியே முக்கிய காரணியாகும்.
இதேபோன்று கலாகேசரியின் இளவலாகிய சிவலிங்கம், திருக்கேதீஸ்வரத்தின் தேர்ச்சிறபங்களை வடிவமைக்க வருகைதந்த ஏகாம்பரம் சுவாமிநாதன் போன்ற சிற்பிகளுடன் இணைந்து பணியாற்றிப் பெற்றுக்கொண்ட பயிற்சியே அவர் சிற்பங்களில் 'அடிப்படை உருவமைப்பு சிறப்பிற்கான காரணியாகும்.

Page 27
வேலுப்பிள்ளை அம்பிகைபாகன்
கலாகேசரியின் மாணவர்களில் சிறப்பிடம் பெறும் ச.ஜெயராசா, மயிலிட் டி கொழு வியன் கலட் டி விநாயகருக்கு(1979) கலாகேசரியின் குப்பிளான்(1975) மரபை அடியொற்றி முதலாவது தேரை வடிவமைத்தார். தொடர்ந்து யாழ் குடாவின் பல்வேறு பாகங்களிலும் தேர்களை வடிவமைத்த போதிலும் தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் (1984) தேர் நிர்மாணத்தில் மாலை கண்டான் சோமஇலட்சுமண ஸ்தபதியுடன் இணைந்து மேல்விமானத்தைப் பொறுப்பேற்று வடிவமைத்தமை சிறப்பம்சமாகும். 1986ல் கனடா சென்ற இவர் யாழ்ப்பாணத்துத் தேர்க்கலைச் சிறப்பினை அங்கும் பரப்புவது குறிப்பிடத்தக்கதாகும்.
ஜெயராஜாவின் இளவல் ஜெயகாந்தன் இன்று கொழும்பு மாநகரில் ஓர் உயரிய நிலையில் தேர் ஸ்தபதியாகத் தன்னை நிலை நிறுத்தியிருப்பது கவனிக்கத்தக்கதாகும்.
கலாகேசரியின் இறுதிக்காலத்தில் சுன்னாகம்(1992), இணுவில்(1994) நிர்மாணிப்புக்களிற் பயிற்சி பெற்ற மயிலிட்டி த.ழரீதரன் வளர்ந்துவரும் இளங்கலைஞராக விளங்குபவர்.
கலாகேசரியின் மாணவர் பரம்பரை வற்றாத ஜீவ கலை நதியாகப் பிரவாகித்துப் பாய்ந்து செல்வதாகும்.
இன்று இலங்கையிற் பணியாற்றும் தேர்க்கலைஞர்களிற் பலரும் கலாகேசரியின் மாணவர்களாவர். தேர்க்கலையைப் பொறுத்தளவில் ‘துறைசார்ந்த அறிவு' இம்மாணவர்களிடம் காணப்படவில்லை. இக்குறைபாடு, இவர்களுக்கு மாத்திரமன்றி மரபு நிலைப்பட்ட குருகுல முறையில் செயன்முறைப் பயிற்சி பெற்று உருவாகும் அனைத்து மாணவர்களுக்கும் பொதுவானதோர் அம்சமே என்பது குறிப்பிடத்தக்கது.

கலாகேசரியின் கலைக் கருத்துக்கள்
“இது வேலையல்ல. ஒரு யோகம். ஒவ்வொரு சிற்பமாகக் கற்பனை செய்து உளி கொண்டு வேலை செய்யும் போது என்னையே மறந்து விடுகிறேன். சில நேரம் உணவையே மறந்துவிடுகிறேன். இந்தச் சிலைகளை நான் ஆக்கவில்லை. என்னிடம் இருக்கும் ஏதோ உணர்வு ஓர் ஆவேசம் ஆக்குகிறது. நான் என்னை இழக்கிறேன். இவற்றுடன் பேசுகிறேன்.”
“சிற்பம்-சித்திரம்-நாட்டியம் என்ற மூன்று கலைகளும் தொடர்புடையவை. ஒரு தேர்ந்த சிற்பி சித்திரக் கலையை நன்கு பயின்றவனாக இருத்தல் வேண்டும். அத்தோடு நாட்டிய முத்திரைகளையும் அவன் அறிந்திருத்தல் நல்லது.”
“சிற்பத்தில் லலித உணர்வை வெளிப்படுத்துவதற்கு ஒவியத்தில் உள்ள ரேகை லயங்களும் நடனத்தில் உள்ள பாவமுத்திரைகளும் சேரவேண்டும். அல்லது உருவத்தின் கை, கால் என்பவை பாவத்தோடு தெரியாமல் வெறும் பிண்டப் பொருளாகவே இருக்கும்”.
“நல்ல வாகனங்கள், சிற்ப அளவு கொண்ட தேர் என்பவற்றைச் செய்ய விரும்புகிறவர்கள் எம்மை நாடி வருகின்றனர். தேர் வேலைக்கு வேண்டிய எல்லாப் பொருள்க ளையும் அவாகளே தருகின்றனர். கூலியை மாத்திரம் நாங்கள் பெற்றுக்கொள்கிறோம். மொத்தமாக இவ்வளவு முடியும் என்று ஒரு மதிப்பீட்டைத் தயாரித்துக் கொடுப்போம். இந்தக்காலத்தில்

Page 28
வேலுப்பிள்ளை அம்பிகைபாகன்
பொருள் விலை ஏற்றத்தால் எதையும் திட்டமாக நிர்ணயிக் கமுடியாது. நாமும் வஞ்சகமில்லாமல் உழைக்கிறோம். அவர்களும் மனத்திருப்பதியோடு தருகிறார்கள்”
“காயமே கோயிலாகக் கடிமணம் அடிமையாக” எண்ணி இவற்றுக்கேற்ப விதிமுறைப்படி அமைக்கப்பட்டவைதான் எமது ஆலயங்கள். மனித உடலுறுப்புக்களுடன் தொடர்புள்ள கோயில்களின் தூபிகளும் அளவுக்கும் அமைப்புக்கும் ஏற்பவே சிற்பாசாரியர்கள் தேர்களை நிர்மாணிக்கிறார்கள். தேருக்கும் கோயில் அமைப்பு முறைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஆலயத் துTபி அமைப்பு முறிைக்கேற்பத் தேர்கள் செய்யப்படுவது மாத்திரமன்றி தேவதைகளின் இரதங்களின் அமைப்பு முறைக்கேற்ப மத்திய காலத்தில் கோயிற் கட்டிடக் கலையை நிர்மாணித்துள்ளனர். பிரமாவின் இரதமான 'வைராஜம் (சதுர அமைப்பு), குபேரனது இரதமாகிய புஸ்பகம் (நீள்சதுரம்), சிவனுடைய இரதமாகிய 'கைலாய'(வட்டம்), வருணனுடைய இரதமாகிய "மானிக(முட்டை வடிவம்). இந்திரனுடைய இரதமாகிய 'திரிவிஷ்டபம்(எண்கோணவடிவம்) ஆகிய ஐந்து விமானங்களில் இருந்து பிரிந்து கிளையான நாற்பத்தைந்து விதமான கோயில்களை அமைத்துள்ளார்கள். “சமராங்கண சூத்திரதானம், ஈசான சிவகுரு தேவபத்ததி ஆகிய நூல்கள் கோயில்களை மூன்று பிரதான பாணிகளாகப் பிரிக்கின்றன.
(1) நாகரம், (II) திராவிடம், (III) வேஸரம் அல்லது வாராடம் ஆகும். தேர் அமைப்பு முறைகளிலும் இது வழக்கில் இருந்து வருகின்றது. அதாவது சதுரவடிவமான தேரை நாகரம் என்றும் எண்கோண வடிவமான தேரை திராவிடம் என்றும் வட்ட வடிவமான தேரை வேஸரம் என்றும் சிற்ப நூல்கள்
 

கலாகேசரி ஆதம்பித்துரை
கூறுகின்றன.
வேஸர பாணியில் அமைந்த தேர் ஆந்திர நாட்டிற் பெருவழக்கில் இருந்தது என்பது காஞ்சி புராணம் (52) வாயிலாக அறிகின்றோம்"
“தேரின் அமைப்பு தாமரை மொட்டுப் போன்று அழகுடையதாக இருக்க வேண்டுமென்பது விதி. தேரிலே சுவாமி வீற்றிருக்கும் தளம் மனிதனது இருதயத் தாமரையையும், தாமரைப் பொருட்டையும் குறிப்பதாகும். கடோபரிஷதத்திலே தேர், குதிரை முதலியன முறையே மனிதனது உடல், புலன்கள் ஆகியவற்றுடன் ஒப்பிடப்பட்டிருக்கின்றன. “மானசாரமி' என்ற சிற்ப நூலிலே தேர் இலக்கணம் என்னும் பகுதி உள்ளது. தேரின் அடிப்பாகத்திலே பூலோக வாழ்க்கை, ஆகாய வாழ்க்கை, சுவர்க்க வாழ்க்கை ஆகியவற்றைச் சித்தரிக்கும் சிறந்த பல உருவங்களைக் காணலாம். அரசன் கொலுவீற்றிருத்தல் , நடனமாதர், காமத்துப் பாலைச்சித்தரிக்கும் பொம்மைகள் ஆகியன பூலோக வாழ்க்கையையும், கின்னரர் பொன்ற உருவங்கள் வான வாழ்வையும், சிவன், அம்பாள், விநாயகர், முருகன், கணநாதர் முதலிய சிற்பங்கள் சுவர்க்க வாழ்வையும் சித்தரிக்கின்றன. நுண்கலைக்கு இருப்பிடம் போன்ற தேரை அமைக்கும்போது அது எந்தத் தெய்வத்துக்காகச் செய்யப்படுகிறதோ அது அந்தத் தெய்வத்தின் அம்சம் பொருந்த அமைக்க வேண்டும். இத்தகைய தேரின் இலக்கணத்தில் இருந்து கடவுள் பரிவாரங்களுடன் தமது கோயிலாகிய தேரிலிருந்து கொண்டே ஒவ்வொருவரையும் தேடிவந்து ஆட்கொள்ளுகின்றார் என்பது இதன் கருத்து”

Page 29
d56DIT6dbdiflunt
1. பொது: வாழ்வும் திருப்பமும்,
1932 :யாழ்.திருநெல்வேலியில் ஈழத்தின் பிரபல சிற்பாசாரியார் மட்டுவில் வி.ஆறுமுகம் ஆச்சாரியார்- பொன்ன்ைவா தம்பதிகளின் தலைமகனாகப் பிறப்பு
1938 திருநெல்வேலி சைவப்பாடசாலையில் ஆரம்பக் கல்வி
தொடக்கம்,
1943 :கல்வியங்காடு செங்குந்த துவிபாஷா பாடசாலையில்
ஆரம்ப இடைநிலைக் கல்வியைத் தொடர்தல்.
1950 திருநெல்வேலி பரமேஸ்வராக் கல்லூரியில் இடைநிலை
உயர்கல்வியைத் தொடர்தல்.
1953 :எஸ்.ஆர்.கனகசபையின் தலைமையிலான யாழ் வின்ஸர் ஆர்ட் கிளப் 1953-1954ம் ஆண்டுக் காலப்பகுதியில் யாழ்-கன்னியர் மடத்தில் நடாத்திய சித்திரப் பயிற்சி நெறியைப் பின்பற்றுதல்,
1954 :இலங்கை அரசின் ஆங்கில சித்திர ஆசிரிய தராதரம்
பெறுதல்
 
 

கலாகேசரி ஆதம்பித்துரை 1955:சித்திர பாட உதவி ஆசிரியராக தெல்லிப்பழை மகாஜனாக் கல்லுரியில் ஆசிரியப்பணி ஆரம்பம், தனது சித்திர ஆசிரியனை வடமாநில சித்திரக்கல்வி அதிகாரியாக 1968ல் பரிணமிக்கச் செய்தது மகாஜனக் கல்லூரி,
1956:இந்திய கல்வி கலாசார சுற்றுப் பயணம் மேற்கொள்ளல்.
1962:இலங்கை நுண்கலைக் கல்லூரி சித்திரபாட ஆசிரியர்களின் பதவி உயர்விற்காக நடாத்திய சிற்ப, ஓவியப் பரீட்சையிற் சித்தி,
1964:மறைந்த தந்தையார் நினைவாக அவர் நடாத்திய சிற்பாலயமாகிய ‘ஆறுமுகம் சிற்பாலயத்தைப் பதிவு செய்து நிறுவனமயமாக்குதல்.
1966 கொக்குவில் நந்தாவில் மனோன்மணி அம்மன் சிற்பத்தேர் நிர்மாணிப்பின் மூலம் ஸ்தபதியாக அறிமுகமாதலும் காணி, நீர்ப்பாசன- நெடுஞ்சாலைகள் மின்சக்தி அமைச் சினால் நிரந்தரச் செயலாளர் உயர்திரு மயூரீகாந்தா அவர்களால் ‘கலாகேசரி’ என்னும் சிறந்த கெளரவப் பட்டம் சூட்டப் பெறுதலும்
1970 அருமை அன்னையார் மறைவு.
1972 தேர் வாகனக் கலை வளர்ச்சியைக் கருத்திற் கொண்டு

Page 30
வேலுப்பிள்ளை அம்பிகைபாகன்
வரலாற்றுப் புகழ் பெற்ற மயிலிட் டி தெற்கு குரும்பசிட்டியிற் ‘கலாகேசரி கலாலயம்' நிறுவுதல்.
I சகோதரர்கள்
திருமதி.பரமேஸ்வரி செல்லையா. திருமதி நாகரத்தினம் வைரமுத்து. சிற்பரத வித்தகன் ஆஜீவரத்தினம். ஆகந்தசாமி,
ஆ.இராசதுரை.
ஆதுரைராசா.
ஆமகாலிங்கம்.
ஆசிவலிங்கம்.
1958:யாழ் நுண்கலைக் கழகம் என்ற கலை ஊக்குவிப்பு அமைப்புத் தோற்றுவிக்கப்பட்டது. யாழ் கனகரத்தினம் மகாவித்தியாலயக் கலைக்கூடத்தைத் தலைமை அலுவலகமாகக் கொண்டு இக்கழகம் செயற்பட்டது. இந்தியக் கலை விமர்சகர் வி.இராகவன் போன்ற விமர்சகர்கள் இக்கழகத்திற் சிறப்பு விரிவுரைகளை ஆற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

கலாகேசரி ஆறுமுகம் தம்பித்துரை
I. பதவிகளும் கெளரவ பதவிகளும்
1955-1967:சித்திர பாட ஆசிரியர்,
யா/தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி.
1968-1992:சித்திர பாடத்திற்கான வடமாநிலக் கல்வி அதிகாரியாகி சிறுவர் சித்திரம், பாடசாலைச் சித்திரக் கல்வி ஆகியவற்றை வளர்த்தல்.
1986 :பிரதம ஆலோசகர் குரும்பசிட்டி முத்துமாரி அம்மன்
தேவஸ்தான புனருத்தாரண சபை.
1986-1994 தலைவர், குரும்பசிட்டி சன்மார்க்க சபை.
1992-1994:நிறுவகப் பணிப்பாளர், சன்மார்க்க நுண்கலை
LD6ö1pBLD, LD(i5g565I TffLDLlíb.
IV எழுதிய நால்கள்
தையல் வேலைச் சித்திரங்கள் -1
தையல் வேலைச் சித்திரங்கள் -2

Page 31
வேலுப்பிள்ளை அம்பிகைபாகன் 1961 :ஓவியக்கலை,
குரும்பசிட்டி சன்மார்க்க சபை வெளியீடு, சுன்னாகம்,
1962:சிறுவர் சித்திரம்,
குரும்பசிட்டி சன்மார்க்க சபை வெளியீடு, 3,616III 35lb.
1971:கலாயோகி ஆனந்தக்குமாரசாமி, சன்மார்க்க சபை வெளியீடு,
குரும்பசிட்டி,
1982 :யாழ்ப்பாணத்து பிற்காலச் சுவரோவியங்கள்,
சன்மார்க்க சபை வெளியீடு, குரும்பசிட்டி,
1992 :பண்பாட்டின் மூன்று கோலங்கள், சன்மார்க்க சபை வெளியீடு. குரும்பசிட்டி,
V. பிரசுரம் பெறாத கையெழுத்தப்பிரதிகள்
01. வாகனங்களும் தத்துவங்களும். 02. இராஜராஜன் தந்த இன்கலைச் செல்வம். (ஆதார மேற்கோள்களுடனும் சில பகுதிகளுடனும் மட்டுமே எஞ்சியுள்ள பிரதி இது)
 

கலாகேசரி ஆதம்பித்துரை
VI. கலாகேசரி வடிவமைத்த தேர்கள்
திருநெல்வேலி ஆறுமுகம் சிற்பாலயம் சார்பில்
1963:குரும்பசிட்டி முத்துமாரி அம்மன் தேர்.
1966:கொக்குவில் நந்தாவில் அம்மன் தேர்
1967:பண்ணாகம் விஷ்பத்தனை முருகமூர்த்தி தேர்.
1970:வண்ணார்பண்ணை விசுவேச விநாயகர்-ஐயனார் தேர். புன்னாலைக் கட்டுவன் ஆயாக்கடவைச் சித்திவிநாயகர் தேர். கோண்டாவில் நாகபூஷணி அம்மன் தேர்
1971:வண்ணார்பண்ணைக் காமாட்சி அம்மன் தேர்.
குரும்பசிட்டி கலாகேசரி கலாலயம் சார்பில்
1974:சுதுமலை புவனேஸ்வரி அம்மன் தேர்.
1975 :குப்பிளான் கற்கரை கற்பக விநாயகருக்கமைந்த
ஈழத்தின் முதல் வேசர மரபுத் தேர்.

Page 32
வேலுப்பிள்ளை அம்பிகைபாகன் 1977:மாத்தளை முத்துமாரி அம்மன் தேர்.
இணுவில் பரராசசேகரப் பிள்ளையார் ஆலய சண்டேஸ்வரர் தேர்.
1978:தெல்லிப்பழை துர்க்காதேவி-ஈழமரபின் முதலாவது
திராவிட முகபத்திர மரபுத் தேர்
1980:புலோலி புற்றளைப் பிள்ளையார் வேசர மரபுத் தேர்.
1982:கொக்குவில் கிருபாகர சிவசுப்பிரமணியருக்கமைந்த
ஈழத்தின் முதல் அந்திரமரபிலான அறுகோணத் தேர்.
1988:கோண்டாவில் அன்னுங்கை சிவபூதவராயர் பஞ்சதள
நாகர முகபத்திர மரபுத் தேர்.
1991:சுன்னாகம்கதிரமலைச் சிவன் பஞ்சதள நாகர முகபத்திர
மரபுத் தேர்.
1994 இணுவில் செகராசசேகரப்பிள்ளையார் திராவிட
முகபத்திர மரபுத்தேர்.
 
 

கலாகேசரி ஆதம்பித்துரை
VII. குறிப்பிடத்தக்க பிற ஊர்திகளிற் சில
இணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் திருமஞ்சம்.
இணுவில் பரராஜ சேகரப்பிள்ளையார் கைலாய வாகனம்.
உசன் கந்தசுவாமி கோயிற் சிங்காசனம்.
நீர்கொழும்பு சித்திவிநாயகர் ஆலய ரதம்.
வண்ணை வீரமாகாளி அம்மன் கடா.
குரும்பசிட்டி முத்துமாரி அம்மன் மகரம்.
அல்வாய் முத்துமாரி அம்மன் கேடகம்.

Page 33
வேலுப்பிள்ளை அம்பிகைபாகன்
1966
1988
1989
1991
1994
VII:கலாகேசரி பெற்ற கெளரவப் பட்டங்கள்
‘கலாகேசரி’,
கொக்குவில் நந்தாவில் மனோன்மணி அம்மன் தேவஸ்தானம்.
*கலாபூஷணம்', -கோண்டாவில் அன்னுங்கை சிவபூதவராயர் தேவஸ்தானம்,
'இராஜஸ்தபதி, -துன்னாலைப்பிள்ளையார் தேவஸ்தானம்.
‘:இரதச்சக்கரவர்த்தி, -சுன்னாகம் கதிரமலைச் சிவன் தேவஸ்தானம்.
‘:சிற்பகலாதிலகம்', -இணுவில் செகராச சேகரப்பிள்ளையார் தேவஸ்தானம்,
 

கலாகேசரி ஆறுமுகம் தம்பித்துரை
X. கலாகேசரி மேற்கொணர்ட கலாசார சுற்றுப்பயணம்.
1956':கலை இந்தியா' அடங்கலுமான ஒரு மாதகால சுற்றுலா நீண்ட கலைப்பாரம்பரியம் கொண்ட இந்திய தரிசனம் ஓர் புதிய உத்வேகத்தைக் கலாகேசரிக்கு அளித்தது.
இப் பயணம் பற்றி கலா கேசரி பின் வருமாறு விபரிக்கின்றார்: ‘'சிற்பம் சித்திரம் என்பவற்றைக் கண்டு அவற்றின் நுட்பங்களைத் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆசையில் ஒருமாதம் முழுவதும் தனியே தமிழ்நாடு தொடக்கம் மைசூர், கல்கத்தா, டெல்கி,பூனாவரை சுற்றுப்பிரயாணம் செய்தேன். ஒவ்வொரு கோவிலிலும் அந்தக் காலச் சிற்பிகள் செய்த கைவண்ணத்தைக் காணும் பொழுதெல்லாம் நாம் எவ்வளவு சிறியவர்கள் - கற்றுக்குட்டிகள்- என்ற எண்ணம்தான் மேலெழுந்து நின்றது. மதுரை மீனாகழியம்மன் கோவிலையும், தஞ்சைப் பெரிய கோவிலையும் பார்க்கப் பார்க்க நெஞ்சு பூரித்தது. வடஇந்தியம் பெருங்கோவில்கள் தென்னிந்தியக் கோவில்கள்போல் அமையாமல் நாம் படைக்கும் தேர் உருவத்தில் ஓரளவில் தாமரை மொட்டு உருவத்தில் இருப்பதை அவதானித்தேன். சித்திரக்கலையைப் பற்றிச் சொல்லவேண்டியதில்லை. மொத்தமாகச் சொன்னால் 'கண்டறியாதன கண்டேன் என்ற தேவார வரியைத்தான் என்னால் ժn_01plգԱյլն՚ .
1984:மலேசிய முருகன் தேவஸ்தான அழைப்பிற்கிணங்க மேற்கொண்ட ஒரு மாத கால ‘சிங்கப்பூர்-மலேசிய Lju 600TLD.
3.

Page 34
வேலுப்பிள்ளை அம்பிகைபாகன்
1994:அவுஸ்திரேலியாவில் வதிந்து கல்விபயின்று வந்த மருமகள் செல்வி வசந்தி சிவகுருவின் திருமணக்காட்சி கானத் தன் சகோதரி பாக்கியம் சிவகுருவுடன் மேற்கொண்ட இந்திய-திருச்சி பயணம் ‘கலாகேசரி காலம் எப்போதோ தீர்மானிக்கப்பட்ட, நிச்சயிக்கப்பட்ட பயணம் இது. 09-09-1994ல் தனது கலைப்பயணத்தை நிறைவு செய்து ‘கலாகேசரி காலம் ஆனார்.
X.திருமண வாழ்வு
திருமண வாழ்விலும் கூட கலாகேசரி ஏனைய சமகாலக் கலைஞர்களிலிருந்து வேறுபடுவதனை அவதானிக்கலாம். ஒன்றுவிட்ட பெரியதாயின் மகளாகிய சகோதரி பாக்கியமும் கலாகேசரியும் மாற்றுக்கு மாறறுத் திருமண அடிப்படையில் சுழிபுரத்தைச் சேர்ந்த திரு.இராமலிங்கத்தின் பிள்ளைகளாகிய சிவகுரு, தவமணி சகோதரர்களை மணம் செய்தனர். கலாகேசரிதவமணி தம்பதிகளின் இல்லற வாழ்வு தெய்வீகத் தடையால் நீடிக்கவில்லை. இது கவலைக்குரியது. சுத்த சைவ உணவும் ஒழுக்கமும் நிறைந்த கலாகேசரி அசைவ உணவுடன் மதுவின் கோரப்பிடிக்குள் அகப்படும் துர்ப்பாக்கிய நிலை இங்குதான் ஏற்படுகின்றது.
கலாகேசரியின் ஏகபுதல்வி செல்வி தவவதனி இன்று வைத்திய கலாநிதியாகப் பரிணமித் திருப்பது ஓர்
தவப்பயனாகும்.

கலாகேசரி ஆதம்பித்துரை
X.கலாகேசரி தொகுத்த வழங்கிய நால்கள் ஈழம் தந்த இன்கலைச் செல்வன், ஆறுமுக சிற்பாலயம்,
திருநெல்வேலி, 1965
XII. கலாகேசரி பற்றிய பிரசுரங்கள் கலாகேசரி நினைவு மலர், . குரும்பசிட்டி, தெல்லிப்பழை. 09:10-1994.
'கலாகேசரி ஆறுமுகம் தம்பித்துர்ை, -வே. அம்பிகைபாகன், பிரசுரம் த.ழரீதரன், சிந்துஜா கலையகம், மயிலிட்டி வடக்கு, காங்கேசன்துறை. 09-10-1994
'கலாகேசரியும் தேர்ச்சிற்பக் கலையும், -வே.அம்பிகைபாகன், கலைஇலக்கியக்கள வெளியீடு, தெல்லிப்பழை,1994.
கவின் கலைக்கோர் கலாகேசரி’, -கனகசெந்திநாதன். குரும்பசிட்டி சன்மார்க்க சபை, குரும்பசிட்டி. 1974,
'கலாகேசரி நினைவு மலர்', ஆறுமுகம் சிற்பாலயம், திருநெல்வேலி, 1994.
கலாகேசரியின் மணிவிழாச் சிறப்புரை'. கலாநிதி.சோ.கிருஷ்ணராஜா, குரும்பசிட்டி சன்மார்க்கசபை, 1992-05-09.

Page 35
“ ‘விளப்வராஜஸ்தபதி
கலைத்தேர் கண்ட தலைமகன் நீ கலைநூல் தந்த கலையறிஞன் நீ இலைநூல் என்ன கற்றவன் நீ தொலைதுாரம் சென்ற முன்னவனும் நீ
வான் தொடும் தேரும் உன்கையில் வளரும் ஏனெனக் கேட்பின் நுட்பம் வாய்தரும்
கலைநூல் கற்ற வித்தக நின்
கலைதெரி வினை திறன் யார்க்கினிக் கிடைக்கும்?
கலாகேசரியே கலைநூல் வித்தக நீ எங்கு சென்றாய்?
பிரமாண மேது மறிந்திடா தெம் பொல்லார் சிற்பிகளாய் உலாவரும் வேளையில் அதன் உயிர்ப்பையும் திட்ப நுட்பத்தையும் ஒர்ந்தளந் தறிந்தவன் நீ
 
 

கலாகேசரி ஆதம்பித்துரை
நாகரம்’ என்றால் என்னவென்று புரியா நாம் அரிச்சுவடி தானுமறிந்திடா (த) வேளை வரலாற்றுப் புகழ்மிக்க கதிரமலைச் சிவனுக்கு நாகரத்தேர் இலக்கணம் கண்டவன் நீ.
சலாகையாற் போடலாமே வட்ட மென்றுன் நூலறிவைக் கேலிசெய் தோருமுலா வந்து வியந்துபார்க்க குப்பிளானில் "வேசரத் தேர்’ அமைத்த
வித்தக கலாகேசரியே நீ எங்கு சென்றாய்?
"அந்திர மென்றால் எதுவெனத் தெரிந்திடா யாழ்ப்பாணம் 'அறுகோண மறுகோணம்-கும்பகோணம்' என்றே கேலி மொழி பகர்ந்திட்ட காலை கலைத்திறன் மிக்க தமிழகமும் வியக்கக் கொக்குவிலிற் கிருபாகர சிவசுப்பிர மணியருக்கு "அந்திரத் தேர் இலக்கணம் கண்ட கலாகேசரியே நீ எங்கு சென்றாய்?
ஈழத்துத் தேர்க்கலையுலகில் உச்ச எல்லையைத் தொட்டு நின்ற மாத்தளை முத்துமாரி தேரமைப்பில் "இந்து தேர்ப் பண்பாட்டையே உருவகித்த வித்தக,

Page 36
வேலுப்பிள்ளை அம்பிகைபாகன்
அளவோடமைவும் அழகும் நிறைந்த தேரும் மஞ்சமும்கிற்றுார்திகளும் தந்த கலைநூல் கற்ற வித்தக
நின்
கலை சொல் வினைதிறன் பார்க்கினிக் கிடைக்கும்?
கலைஞனின் கர்வமும் உன்னிடம் தனிச் சிறப்படைந்தது!
கலாகேசரியே நீ எங்கு சென்றாய்? பூலோக வாழ்வு விட்டு விஸ்வலோகம் சென்ற ஈழத்து ராஜஸ்தடதி கலாகேசரியே நின்திறனுக்கு ஆங்கும் "விஸ்னராஜ ஸ்தபதி பதவி நிச்சயம்'
 

1.வண்ணை காமாட்சி அம்மன்
தேர்த்தேழுந்தமிழ்

Page 37

| – {}; = — !-
.|- Tae-==--F : 통폐7 : ・ , 93;-사秘) 和吡喹。 :
2.வண்ணை காமாட்சி தேரில் மேல் விதானத்தோற்றம்

Page 38

(3) சிவசுப்பிரமணியசுவாமி தேர்த்தோற்றம் கொக்குவில்.

Page 39

தாற்றம். சுன்னாகம்,
த்ே
வன் தேர்
JLIGIGIFEf
கதி

Page 40

(5) துர்க்காதேவி தேரில் ஓர் பகுதித்தோற்றம்,தெல்லிப்பழை,

Page 41

(6) துர்க்கதேவி தேரில் மேல்விதானத்தோற்றம்

Page 42

தோற்றம்.
தித்
ஒர் பகு
தரில்
குப்பிளான்.
கற்பகப்பிள்ளையா

Page 43

புற்றளைப்பிள்ளையார் தேர்த்தோற்றம்புலோலி.

Page 44

|- |- | || || | + s |- sae sae |(L
T
= = = = =
|so
No = = =
" " ) No. |-
sırrrrr!!!!
தாற்றம்
ா
தேரில் மேல்விதானத்ே
(9).கதிரமலைச் சிவன்

Page 45

క్స్టిస్ట్రో
ఫ్లో
11 1 . 51:5
■
10.நந்தாவில் மனோன்மணிதேரில் துர்க்காதேவியின்
அழகிய சிற்பம், நந்தாவில்

Page 46

!*)
印 (3 ܨ ܐ ܕ ፳] 1.&нып

Page 47

ற்றம்
தா
(3
12.காமாட்சி தேரில் பண்டிகைத்
வண்ணார்பண்ணை.

Page 48

ாட்சிதேரில் கலாகேசரி வடித்த சிற்பங்கள்,
13.FILD!
வண்ணார்பண்ணை.

Page 49

Ĥ 露
衫
14.காமாட்சி தேரில் இந்தியசிற்பி மாயாவரம்
ச.ஏகாம்பர ஸ்தபதி வடித்த மகிடாசுரமர்த்தனி
வடிவம்.

Page 50

15.புற்றளை விநாயகர் தேர்த்தளத்தோற்றம்,
புலோலி.

Page 51

ாற்றம்.
தே
த
வரிசைத்
BLI
16.புற்றளைப் பிள்ளையார் தேரில் சித்தூர் மட்ட
虫i

Page 52

BABD,
தித்தோ
ல் ஓர் பகு
கொக்குவில்.
--_--|- :-) :- !! !!!!!!!!! |- |-
|-... *|-sae.引)
|-!No.1)- :--
|× |×
■口
17.சிவசுப்பிரமணியர் தேரி

Page 53

)
---- -
|-|-s.歴|-|-|-|----詞- -!!!!!員釋---- -! |- |-|....||
பூதவராசர் தேர்த்தளத்தோற்றம்-பிற்பகுதி,
கோண்டாவில்.
18.ടിബ

Page 54

19.கதிரைமலைச் சிவன் தேர்த்தளத்தோற்றம்,
சுன்னாகம்.

Page 55

-
|-
----+---+=
|-
தித்
ல் ஓர் பகு
தி
ர்த்தளத்
தே
சிவ
GOTGITTELD.
ன்
岛
BBLD,
20.கதிரைமலை
தோற்

Page 56

21.கதிரைமலைச் சிவன்தேரில் வீரபத்திரரின்
அகோரத் தோற்றம், சுன்னாகம்.

Page 57

22.கலாகேசரி ஆதம்பித்துரை அவர்களின்
நடுவயதுத் தோற்றம்.

Page 58

b
வி.ஆறுமுக
ம்மறி
ரிய
ப்பிர
ஆசசா
23.விஸ்வ

Page 59

. . . . .
24.நந்தாவில் மனோன்மணி தேர் வெள்ளோட்டவிழாவில் காணி,நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் உயர்திரு மயூரீகாந்த அவர்களால் ஆதம்பித்துரை கலாகேசரி என்னும் கெளரவ விருது பெறும் காட்சி.

Page 60


Page 61


Page 62