கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கமநலம் 1991.12

Page 1
கழி December
 
 


Page 2
மார்கழி
பிரதம ஆசிரியர் :
டி. ஜி. பி. செனிவிரத்ன
ஆசிரியர்
ஆர். எம். ஆர், பண்டார ஐ. ஆர் பெரேரா
எம். எஸ். சேனாநாயக்க
பக்கம் பொருளடக்கம்
1 பொது முதலீட்டில் விவசாயத்தின் பங்கு
11 விவசாயப் பொருளியலும் குடியான் ஆய்
16 இலங்கையில் விவசாய ஆராய்ச்சியின் மு
19 சிறிய நெற் கமக்காரர்களுக்கான நிறுவன இலங்கையில் தோல்வி: கையாண்ட முறை அல்லது நம்பகமற்ற விளைச்சல் தன்மைய
23 கிராமியக் கமக் கடன் பிரச்சனை
கமக்காரர்களின் மத்தியில் தன்னம்பிக்கையை யையும் ஏற்படுத்தி, அவர்கள் கிராமிய நிறுவ வடிக்கைகளில் பூரண பங்கெடுத்து அவற்று உள்ள தொடர்பினை மேலும் வலுப்படுத்தி தொன்றாக்கிக்கொள்ள இச்சஞ்சிகை உதவும்.
 
 
 
 
 
 
 

1991 O இதழ் 4
ஆசிரியர் :
சோ. ராமேஸ்வரன்
(Ց(Լք :
எல். டி. ஐ. விஜேதுங்க டி. தென்னக்கோன்
ஜி. ராமநாயக்க
5
வுகளும்
மக்கியத்துவம் க் கடன் வழங்கல்
) 76mfláv uavaeslav Dm7 tr?
அட்டைப்படம் :
பயும் மன உறுதி* ரஞ்சித் திஸாநாயக்க வனங்களின் நட டன் ஏற்கனவே நிரந்தரமான
ஆண்டுச் சந்தா ரூ. 40.00
விலை (தனிப்பிரதி) ரூ.

Page 3
பொது மு விவசாயத்
1990 ஆண்டுக்காலப்பகுதியில் விவ சாய உற்பத்தியானது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 23 சதவீதத்தைக் காட்டி யது. இதில் பிரதான ஏற்றுமதிப் பயிர் களான தேயிலை, இறப்பர், தெங்கு என் பனவற்றுடன் அரிசி என்பவற்றின் பங்கு 10 சதவீதமாகவும், கால்நடை மீன்பிடி என்பவைவுட்பட்ட ஏனைய விவசாயத் துறைகள் மிகுதியையும் வகை கூறின. விவசாய பதப்படுத்துதலும்,சேவைத்துறை
பொருளாதாரத்திற்கான பிரதான ஏ
19
ஏற்றுமதி வருவாய்கள் 5
வரவு செலவுத்திட்ட வருவாய் 2
மொத்த உள்நாட்டு உற்பத்தி 14
1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பருவகால பயிர்ச் செய்கையின் செயற் பாடு முன்னேற்றம் கண்டு, மிக சாதக மான போக்குக் காணப்பட்ட 1988 ஆம் ஆண்டில் பதிவுசெய்யப்பட்ட பயிர்ச் செய்கை விரிவாக்க மட்டங்களுக்குச் சம மான மட்டங்களை 1991 இன் முற்பாதி யில் அடைந்தது. எவ்வாறெனினும் குறைந்தளவு உரப்பாவனை காரணமாக அறுவடைகள் பாதிப்புற்றன. நீண்ட காலப் பயிர்களின் துறையில் தெங்குற் பத்தி முன்னைய ஆண்டின் போக்குகளிலி

முதலீட்டில் தின் பங்கு
களும் பெருமளவு விவசாய உற்பத்தியி னைச் சார்ந்திருப்பதால், அதன் முக்கியத்து வம் இந்த எண்ணிக்கைகளினால் சுட்டிக் காட்டப்படுவதைவிட முக்கியம் வாய்ந்த தாகவுள்ளது. மேலும், இயக்கமுள்ள தொழில் அணியின் 45 சதவீதத்தை உட் கிரகித்து வேலை வாய்ப்பு வழங்கும் மிகப் பெருந்துறையாகவும் இது இன்னமும் இருந்து வருகின்றது.
ாற்றுமதிப் பயிர்களின் உதவுகை (%)
78-82 1983-87 1988 1989 1990
7.3 46.7 39.0 38.0 32.4
8.0 9. O 4.3 3.0 3.5
... 2 1.0 9.5 89 7.4
ருந்து குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் காட்டவில்லை யெனினும், இறப்பர் உற் பத்தி வீழ்ச்சியடைந்து காணப்பட்டது. விளைவில் சிறிதளவு முன்னேற்றமே காணப்பட்டபோதிலும் தேயிலையுற்பத்தி 1990 ஆம் ஆண்டில் சாதனை மட்டத்தை எய்தியது.
இவ்வாண்டில் இத்துறையில் முக்கிய கொள்கை மீள் ஆற்றுப்படுத்தல்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. விதைப் பெருக்கத்தினையும், வினியோகத்தினை
سسسسسه il

Page 4
யும் தனியார் துறையிடம் விடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
அரச ஆதரவிலான விவசாயிகள் கழகங் கள் தங்கள் அலுவல்களை சுதந்திரமான முறையில் கொண்டு நடாத்துவதற்கான சட்டபூர்வ சாதனங்கள் வழங்கப்பட்டன. விவசாயத் துறை சேவைகள் சட்டத்திற் கான திருத்தங்கள் மூலம் சட்ட ரீதியில் நெற் பயிர்ச் செய்கையை மட்டும் அனு மதித்த காணிகளில் பரந்த விருப்பப் பயிர்ச்செய்கைகளை மேற்கொள்ளக்கூடிய வாய்ப்பு வழங்கப்பட்டது. வர்த்தக செயற்பாடுகளை ஆற்றிவந்த பல அர சாங்க முகவர் நிலையங்கள், உரித்து மாற்றம் செய்யப்பட்டதுடன், அரசாங்க தலையீட்டின் அளவினைக் குறைப்பதை நோக்கமாகக்கொண்ட ஏனைய நிறுவன ரீதியான திருத்தங்களும் கருத்திற்கெடுக் கப்பட்டன.
உள்ளூர் நுகர்வுக்கென பிரதானமாக உற்பத்தி செய்யப்பட்டுவந்த பல மரக்
 

கொள்கை திட்டமிடல் அமு லாக்கல் அமைச்சு 1991 - 19934 கான பொது முதலீடு சம்பந்த மாக நூல்ஒன்றை வெளியிட்டும் ளது இவ் வெளியீடானது அடுத்த ஐந்தாண்டு காலித் திற்கான அரசாங்கத்தின் முழு மையான பொருளாதார உபா யத்தையும், கொள்கைகளை யும், நிகழ்ச்சித் திட்டங்களை பும் வி தீ க ப் படுத்தும் நோக்கத்துடன் தLரிக்கப் பட்டுள்ளது. இந்த வெளியிட்டில் "விவசாயம்" என்ற தலைப்பின் ழ்ே வெளியிடப்பட்டுள்ள முக் விய அம்சங்களை இங்கு தரு கின்றோம்.
கறி வகைகளுக்கான ஆரம்ப ஏற்றுமதிச் சந்தைகள் அபிவிருத்தி செய்யப்பட்டன. இத்தகைய ஏற்றுமதி நளின் அளவு இன்ன மும் சிறிதாகவே இருப்பினும், அவை மிகத் துரிதகதியில் அதிகரித்து வருகின் றன. சேர்க்கின் போன்ற (வெள்ளரி வகை) சில பயிர்கள் ஏற்றுமதிக்கென மட்டும் தனியாக அறிமுகப்படுத்தப்பட்டு திட மான வெற்றியையும் கண்டுள்ளன:
தேயிலை
இலங்கையின் பொருளாதாரம் இன்ன மும் தேயிலை ஏற்றுமதியில் தங்கியிருப்ப தால் பின்வரும் உபாய முறைகள் பிரே ரிக்கப்பட்டுள்ளன.
(அ) மேம்படுத்தப்பட்ட தரங்களினூ டாகவும், உயர் பெறுமதி சேர்க் கப்பட்ட உற்பத்திகளான திடீர் தேநீர் தேயிலைப் பைகள், பச்சைத் தேயிலை, தகரத்திலடைக்கப்பட்ட
தேநீர் பேன்றவற்றின் பங்களிப்

Page 5
பினை அதிகரிப்பதன் மூலமாகவும் தேயிலை ஏற்றுமதி உண்மை விலை களில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சிப் போக் கினை மீள மாற்றுதல்.
(ஆ) இலங்கையின் ஏற்றுமதிகள் நிலை நாட்டப்பட்டுள்ள இடங்களில் இலங்கைச் சந்தைப் பங்கினைப் பேணுதலும், தேயிலை தேவை அதி கரித்துள்ள சந்தைகளுக்கு ஏற்று மதி அளவுகளை அதிகரித்தலும்.
(இ) மாறிவரும் கேள்விப் பங்குகளை யும் நுகர்வோர் விருப்பங்களையும் எதிர்கொள்ளும் விதத்தில் தேயிலை உற்பத்தியையும், தயாரித்தலையும் மேம்படுத்தல்.
(ஈ) மொத்த உற்பத்தியின் மூன்றில் இரு பங்கினை உற்பத்தி செய்யும் பொதுத் துறையானது எல்லா மட் டங்களிலும் முகாமைத்துவ செயற் றிறனைப் பெறும் வகையில் LDgiOi சீரமைப்பு செய்யப்படுதலை உறு திப்படுத்தல்.
இறப்பர்
கடந்தகால வரிவிதிப்புக் கொள்கை யானது மீள் முதலீட்டுக்கான மட்டுப் படுத்தப்பட்ட மிகையையே உற்பத்தியர் ளருக்கு வழங்கியது. தேசிய திட்டமிடற் திணைக்களத்தினால் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தொழில்நுட்ப உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட பயிர் ஊக்குவிப்பு ஆய்வானது மரப் பயிர்களின் மீதான ஏற்றுமதி தீர்வைகளையும், வரிகளையும் படிப்படியாக நீக்குவதை சிபார்சு செய் தது. இந்தச் சிபார்சுகள் அரசாங்கத்தி னால் ஏற்கப்பட்டுள்ளது. 1995 ஆம் ஆண் டளவில் ஏற்றுமதி வரிகள் முற்றாக நீக்கப் பட்டுவிடும். இதற்கான ஆரம்ப நட வடிக்கை ஏற்கெனவே எடுக்கப்பட்டுள்ள தென்பதுடன், இறப்பர் மீதான ஏற்று மதித் தீர்வைக்கான ஆரம்ப விலை யானது கிலோகிராமிற்கு ரூபா 17 என்ற

விலையிலிருந்து கிலோகிராமிற்கு ரூபா 21 எனவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
தெங்கு
புதிய நிலங்களை திறப்பதைவிட ஏற்கெனவேயுள்ள நிலங்களின் உற்பத் தித் திறனை அதிகரிப்பதே எதிர்கால அபிவிருத்தியின் அழுத்தமாகவுள்ளது. நுகர்விலேற்படவுள்ள அதிகரிப்பினை எதிர்கொள்ளவென 2,000 ஆம் ஆண்டள வில் தேசிய உற்பத்தியை 4,000 மில்லி யன் காய்களாக அதிகரிப்பதை அரசாங் கம் இலக்காகக் கொண்டுள்ளது.
** உயர் உள்ளீடு - உயர்வெளியீடு " முறைக்கும், மீள் நடுகை மூலம் தரங்களை புதுப்பிக்கும் முறைக்கும் சிறு உடமை யாளர்களை ஈடுபடுத்துவதில் தெங்குப் பயிர்ச்செய்கையில் செல்வாக்கு செலுத்தும் முக்கிய காரணியாக விளங்குவது, போதி யளவு விளைவினை பெறுகின்ற கோட் பாடாகும். எனவே, தெங்குப் பயிர்ச் செய்கை வருவாயினை அதிகரிக்கும் விட யத்தில் ஊடுருவல் பயிர்ச் செய்கையும் உட்படுத்தப்படல் வேண்டும்.
இத்துறைக்கான எதிர்கால அபிவி ருத்தி உதவிகள் மீள்நடுகை, ஈரலிப்புப் பேணுதல், தெரிந்தெடுக்கப்பட்ட பயிர் களுக்கான பயிர்ச்செய்கை போன்றவை யுள்ளடக்கும், உயர் தெரிவு அணுகுமுறை யைக் கொண்டிருக்கும்.
வாசனைத் திரவியங்களும் குடிவகைப் பயிர்களும்
பிரதான நோக்கமாக வர்த்தக ரீதியி லான விவசாயிகளில் கவனம் செலுத்து தலும், முதலீட்டுக்கான விளைவுத்திறனை யும், பெறுபேறையும் உச்சமாக்கும் அதே சமயம் அபாயத்தை பரவலாக்கக்கூடிய நீண்டகாலப் பயிர்களுடன் கலப்புப் பயிர்ச் செய்கையினையும் ஊக்குவிப்பதாகும்.
அத்தியாவசியமான எண்ணெய்களுக்
கான வடிகட்டல் பொறித்தொகுதிகளை நிர்மாணிப்பதற்கான நிதியுதவியையும்,

Page 6
வாசனைப் பயிர்ச் செய்கையையும், புதி தாகப் பயிரிடல், மீள்நடுகை, புனருத் தாபனம் என்பவற்றிற்கான மானிய முறை களையும் ஏனைய முக்கிய நிகழ்ச்சித் திட்டங்கள் உள்ளடக்கும்.
உணவுப் பயிர்கள்
இத்துறையில் வளர்ச்சியை துரிதப் படுத்தும் நோக்குடன் இதுவரை உள்ளூர் நுகர்வுக்கென முக்கியமாக ஒதுக்கப்பட் டிருந்த ஏற்றுமதி செய்யப்படக்கூடியதும், இறக்குமதிப் போட்டியுடையதுமான ஏனைய களப் பயிர்களுக்கு முன்னுரிமை கவனம் செலுத்தப்படும். இத்துறையில் பரிகார நடவடிக்கைகளை அடையாளங்
பழங்கள் மரக்க
குடைபமிளகாய் லீக்ஸ், ஏனைய துணை மரக்கறிகள் வெள்ளரி
மரவள்ளி
உளுந்து
பதனிடப்பட்ட மரக்கறிகள் ஏனைய மரக்கறிகள் அன்னாசி
எலுமிச்சை
Gň pyrrr Gourf ஏனைய பழ வகைகள்
விவசாய சேவைகளை வழங்கும் முக வர் நிலையங்களின் திறனை மேம்படுத் தும் பாரிய மறுசீரமைப்பு நிகழ்ச்சித் திட்டமொன்றும் ஆரம்பித்து வைக்கப்பட் டது. இந் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் நெற்சந்தைப்படுத்தும் சபை மீளமைக்கப் பட்டு, மிகையான சொத்துக்களின் விற் பனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. விவசாயக் காப்புறுதிச் சபையும், கமநல ஆராய்ச்சி பயிற்சி நிறுவகமும், விவசாய

கண்டு, முன்மொழியவென 1990 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் பாரம்பரியமற்ற ஏற்றுமதி இறக்குமதி போட்டி விவசாயத் தின் மீதான ஜனாதிபதி பணிக்குழு வொன்று அமைவாக்கப்பட்டது. இடைத் தர, பெரிய அளவு முயற்சிகளின் அபி விருத்தியைப் பேணுவதற்கென பயிற்சி அடிப்படையிலான ஊக்குவிப்புத் தொகு தித் திட்டமொன்று உருவாக்கப்பட்டு வருகின்றது. அரச ஆராய்ச்சி, விரிவாக்க, பயிற்சி நடவடிக் கைகளும், தொற்று தடுப்பு, பெருக்கம் சம்பந்தமான தடை ஒழுங்கு விதிகளை திருத்தியமைத்தலும் இந் நோக்கத்தைக் கொண்டு செயற்படும்.
அமைப்புக்களின்,
பயிர்ப்
றிகளின் ஏற்றுமதி
1991 1989 19 ஜூன்கடைசி
264.3 249.0 0. A 165.0 236.0 0 0.0 6555.8 2871.3 abbe 290.2 4.08.2 ogę 4578.8 4436.7 3008 53.5 18.9 O OB 3789 101 7.4 900.7 65.7 4746 9 16.2 10.3 46.9 10.9 59.5
892.8
அபிவிருத்தி அதிகாரசபையும் மறுசீரமை ப்பிற்கென நுணுக்கமாக கவனிக்கப்பட்டு வருகின்றன.
இனிே
சீனிக் கம்பனிகள் தங்களின் கரும்பு வழங்கலுக்கு, குடியேற்றத்தாரினாலும், வெளி வளர்ப்போரினாலும் ஆதாரப்படுத் தப்படும் தோட்டங்களில் தங்கியுள்ளன.
4 m

Page 7
குடியேற்றத்தினருக்கு குடியிருப்பு வசதி வழங்கப்பட்டு கரும்புப் பயிர்ச்செய்கைக் கென கடன் அடிப்படையில் காணி பண் படுத்தற் செலவுகள், கரும்புவிதை போன் றவை வழங்கப்படுகின்றன. தங்கள் சொந் தக் காணிகளில் கரும்புச் செய்கையை மேற்கொள்ளும் வெளி வளர்ப்பாளர் கள் பொதுவாக இந்த மே ற் கூறிய வச தி க  ைள ப் பெறுவ தி ல்  ைல. ஆதார தோட்டங்களின் கீழ்வரும் நிலப் பரப்புகளை குடியேற்றவாசிகளுக்கு பகிர்ந் தளித்து கம்பனி முகாமைத்துவத்தின் கீழ் விதையுற்பத்தி செய்வதற்கும், பரிசோத னைகளை கொண்டு நடாத்துவதற்கு மென குறைந்தளவு நிலப்பரப்பினை கம் பனி வைத்திருக்கும் நோக்கத்தினை எதிர் கால திட்டங்கள் எதிர் நோக்கியுள்ளன.
இக் கைத்தொழிலின் தாபனமும், அபிவிருத்தியும் சமீப காலம் வரை முக்கி
சீனி உற்பத்தியிலும், இறக்குமதி
இறக்கு மதிகள் சராசரி சி.ஐ.எவ் 9 ਕੰ" |
1981 204 611 982 34 315 1983 315 250 1984 263 96 1985 388 185 986 322 166 1987 376 167 1988 319 25 1989 320 293 1990 305 212
சீனிக் கம்பனிகளை மக்கள் மயமாக் கலுடன் மேலும் உள்ளூரில் தயாரிக்கப் படும் சகல சீனியின் வினைத்திறன் விலையை உத்தரவாதப் படுத்துவதென வும் அதன்படி சுத்திகரிக்கப்பட்ட சீனி தொன்னொன்றிற்கு அமெ. டொலர் 500
a

யமாக அரசாங்கத்தின் வழிப்படுத்தலின் கீழ் இருந்து வந்தது. இத்தகைய நிலை யானது இலங்கை சீனிக் கூட்டுத்தாப னத்தை இலங்கை சீனிக் கம்பனி என்னும் பகிரங்கக் கம்பனியாக மாற்றி, கந்தளாய், ஹிங்குராணை, செவனகல என்னும் இடங் களிலுள்ள பெருந்தோட்டங்கள், தொழிற் சாலைகளை அக்கம்பனி உரிமையாக்கி, நிருவகிக்கும் உரிமையை வழங்கியதுடன் மாற்றமடைந்துள்ளது. 1991 ஆம் ஆண் டில் மீண்டுமொருமுறை இக் கம்பெனி யானது பற்றுடைக் கம்பனியாக மாற்றப் பட்டதுடன், மூன்று பெருந்தோட்டங் களும், தொழிற்சாலைகளும் மக்கள் மய மாக்கலுக்கான ஒரு முன்னோடியாக மூன்று சுயாதிக்க பகிரங்க கம்பணிகளாக மாற்றப்பட்டன. 1992 ஆம் ஆண்டில் இந்த 3 கைத்தொழில்களின் மக்கள் மய மாக்கல் நடைமுறையானது பூர்த்தியாக் கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
களிலும் காணப்பட்ட போக்குகள்
உள்ளூர் உற்பத்தி நுகர்வு (தலையொன்
芭· *000 தொ. றிற்கு கி.கி.)
23.7 16.0 22.8 14.4 32.8 5.8 22.5 16. 17.7 24.2 34.4 22.2 29.3 22.8 53.5 22.6 53.8 22.2 57.2 21.3
ஆகவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதே முறைக்குள் பெல்வத்தை சீனிக் கைத்தொழிலை கொண்டுவரும்பொருட்டு நிலையான விலையிடல் உடன்படிக்கையை மீண்டும் பேச்சுவார்த்தைக் குட்படுத்த முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன:

Page 8
கால்நடை வளர்ப்பு
தற்போது ஒரு கிலோகிராம்கால்நடை ஊட்ட உணவிற்கும் ஒரு லீட்டர் பாலுக்கு மான செலவு விகிதம் 1:1 ஆகவும், வெளிச்சந்தையில் பாலின் விலையோடு ஒப்பிடுகையில் பண்ணை வளர்ப்பு இலாப கரமற்றதாகவும் உள்ளது. மாட்டிறைச்சி யின் உயரிய விலையின் மத்தியில், பண்ணை மிருகங்கள் மிக செறிவாக வெட்டப்படுவதால், பண்ணை அபிவிருத் தியினைப் பொறுத்தவரை பாரதூரமான விளைவுகளைக் கொண்டுள்ளது. எல்லா வற்றிற்கும் மேலாக ஏற்றுமதி செய்யும் நாடுகளில் இறக்குமதி செய்யப்படும் பாலிற்கு குறைந்த வரிகளுடன் மிக அதிக மாக மான்யம் வழங்கப்படுவது பண்ணை உற்பத்தியாளர்களுக்கு 6)ETLİ 525 puru DNT 6öT விலையைக் கொடுப்பதில் பெரும் இட ராக உள்ளது.
பால் சேகரிப்பினதும், பால் உற்பத்தி
ஆண்டு பால் சேகரிப்பு
மில், லீற்றர்கள்
1981 58 1982 55 1983 54 1984 57 1985 67 1986 67 1987 68 1988 65 1989 60 1990 64
கால்நடை ஊட்டத்தை உற்பத்தி செய்யும் இலங்கை எண்ணைகள், கொழு ப்புகள் கம்பனியானது மக்கள்மயமாக்கப் பட்டுள்ளது. பாலை பதனிட்டு சந்தைப் படுத்தும் மில்க் இன்டஸ்ரீஸ் லங்கா கம் பணியையும் (மில்கோ) மக்கள் மயமாக்கு வதற்கான நடவடிக்கை எடுக்கப்படுகிறது" விலங்குற்பத்தி நலன்பேண் திணைக்கள

எனவே, அரசாங்கம் பாலின் உற் பத்தியாளர் விலையை 1991 ஆம் ஆண்டு ஒக்டோபர் 15 ஆந் திகதியிலிருந்து லீற் றர் ஒன்று 8-50க்கும் ( ரூபா 1-70 ஆல் ) உயர்த்த தீர்மானித்துள்ளதோடு, 1992ல் ரூபா 10 ஆக உயர்த்தவும் உள்ளது. அத் தோடு முழு ஆடைப்பால் மாவுக்குரிய வரியினை, தற்போதைய ஆரம்பவிலையை மெட்ரிக் தொன் ஒன்றிற்கு அ.டொ. 1800 லிருந்து அ. டொ. 1950க்கு உயர்த்துமள விற்கு கூட்டவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது, ஏனைய பால் பொருட்களுக்கு இதேவகை யில் வரிகள் சரிப்படுத்தப்படும். இந்த வரிசைரிப்படுத்தலில் இரண்டாவது படி 1999 இல் மெட்ரிக் தொன்னின் விலை ஆரம்பவிலை அ. டொ. 2100 இருக்கத் தக்க வகையில் பாலின் உற்பத்தியாளர் விலை உயரும்போது மேற்கொள்ளப்ப டும்.
யாளரின் விலைகளினதும் போக்குகள்
உற்பத்தியாளருக்க செலுத்தப்படும் ரூபா | லீற்றர்
மும் அதன் விலங்குப் பண்னைகளை வர்த் தக ரீதியாக்கும் நோக்குடன் அனேகமான வற்றை தே. கா. அ. சபையிடம் கைய ளிக்கும். தனியார் துறையினரின் பங்கு பற்றலானது இந்நிறுவனங்களை திறம் படக் கொண்டு நடாத்துவதற்கு இயலச்
செய்யுமென்பதே இந்நடவடிக்கையின் நோக்கமாகும்.
6 .ை

Page 9
மீன்பிடி
இத் துணைத்துறையின் தற்போதைய நோக்கமாவது மீன் உற்பத்தியை மீன், நீர்வாழ் மூலவளங்களின் நியாயமான
பயன்படுத்தல் மூலம் அதிகரித்தல்,
மீன் உற்பத்தி
துரிற
சு தர போரம் ஆழ்கடல் உள்நாட்டு
சொத்தம்
மீன்பிடித் துறை நீர்வாழ் விளங்கள் அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்பட்ட பல்வேறு அபிவிருத்தி மானிய திட்டங் கள் நியாயமாக்கப்பட்டுள்ளன. மீன் -ற் பத்தியை அதிகரிப்பதற்கு பொறிமுறைப் படுத்தலை அறிமுகப்படுக் தப்படுவதையும் பிழைப்புமட்ட மீன்பிடிகாரருக்கு மான்
 

வேலைவாய்ப்பு சந்தர்ப்பங்களை வழங்கு தில் மீன்பிடி குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துதல், மீன், நீர்வாழ் பொருட்களின் ஏற்றுமதிமூலம் வெளி நாட்டு செலவாணி வருவாயினை அதிகரித் த ல் என்பனவாகும்.
(தொன்களில்)
1989 1990
133,306 35,256
6,9|C) 9,557
33,649 17,866."
173,856 162,679
யப் படுத்தப்பட்ட உள்ளிடுகளை வழங்கு வதையும் இந்த மான்ய திட்டங்கள் ஊக்குவிக்கின்றன.
மீன் பிடி சமூகத்தவரிடையே மீன் பிடி கூட்டுறவுச் சங்கங்களை உருவாக்குவதன் மூலம் அவர்களின் பேரம் பேசும் சக்தியை

Page 10
அதிகரித்து, இணைந்த முயற்சிகள் மூலம் அவர்களின் ஆதாரத் தேவைகள் நிறை வேற்றப்படும் நோக்குடன் மீன்பிடி சமூ கத்தவரிடையே ஒழுங்கு முறையில் குழு முயற்சிகள் ஊக்குவிக்கப்படுகின்றன. 1990 ஆம் ஆண்டு இறுதிவரை இவ்விதம் உரு வாக்கப்பட்ட கூட்டுறவுச் சங்கங்களின் எண்ணிக்கை 741 என்பதுடன், அவற்றின் அங்கத்துவ எண்ணிக்கை 63,850 ஆகும்.
அரசாங்க மறுசீரமைப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இலங்கை மீன்பிடி துறை முகக் கூட்டுத்தாபனமானது மறுசீரமைக் கப்பட்டுள்ளது. அதன் செயற்பாடுகள் தற் போது தொழில் நுட்பத்திற்கும், வர்த்தக மயமற்ற நடவடிக்கைகளுக்கும் மட்டும்
மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இ  ைத யொத்த வழிகளில் அதன் நடவடிக்கை
● @)@s『 மறுசீரமைக்கும் நோக்குடன்
இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனமும் ஆராயப்பட்டு வருகின்றது.
காணி நீர் வளங்கள்
குறைந்துவரும் மனித - காணி விகிதா சாரமும், நீர்ப்பாசன வசதிகளை தாபிப் பதிலேற்படும் உயர் செலவுகளும் இந்த வளங்களை முகாமைப் படுத்துவதற்கான செயற்றிறன் மிக்க முறைமையை வளர்க்க வேண்டிய தேவையை சுட்டிக்காட்டுகின் றன. விசேடமாக மலைநாடுகளில் மண் அரிப்பினைத் தடைசெய்தலும், நீர்ப்பா சன முறைகளில் நீர் ஊறுதலை தடை செய்தலும் முக்கியமானவையாகும். வன வியல் வனவாழ் ஜீவிகளின் பசிபாலனத் தின் கீழ் வரும் இடங்களை நியாயமாக ஒதுக்கீடு செய்தலும் வேறுமொரு முன்னு ரிமைப் பணியாகும்.
சனசக்தி பங்குபற்றுநர்களுக்கு, பயன் படுத்தப்படாத காணிகளை வழங்கவென தேசிய காணிப் பாவனையையும் பகிர்ந் தளித்தலும் மீதான ஜனாதிபதி பணி அணிபொன்று நியமிக்கப்பட்டது. 1991 ஆம் ஆண்டு ஜ"ன் 15 ஆந் திகதியன்று முடிவடைந்த காலப்பகுதியில் வீடமைப்பு, விவசாய நோக்கங்களுக்கென மொத்த மாக 273,231 ஒதுக்கீடுகள் கையளிக்கப் பட்டன. -

வனவியலும் வனவாழ் ஜீவிகளும்
இதன் முக்கிய நோக்கம் முறைமை யான முகாமைத்துவத்தின் மூலமாக நாட் டில் சட்டவிரோத வழிகளில் மரம் வெட்டு தலைத் தடுத்தலும் வனங்களின் பொரு ளாதாரப் பயன்பாடுமாகும்.
இந்நிகழ்ச்சித் திட்டத்தின் முதற் செயற்திட்டம், இவ்வாண்டின் மூன்றாம்
காலாண்டில் ஆரம்பமாகும். வனவியற் துறை அபிவிருத்தி செயற்திட்டமாகும்: &ቻö፭6ስ) வனப்பெருந் தோட்டங்களும்,
தெரிந்தெடுக்கப்பட்ட இயற்கை வனங்க ளும், தீவிர முகாமைத் துவத்தின் கீழ் கொண்டுவரப்படும். புதிய பெருந்தோட் டங்களை அமைப்பதன் மூலம் வள அடிப் படை விரிவாக்கப்படும், வனவியல் அறி வும், தொழில் நுட்பப் பயிற்சியும் தீவிர மாக்கப்படும். இவற்றுடன் நிறுவனரீதி யான ஆதாரமும் வலுப்படுத்தப்படும்.
நீர்ப்பாசனம்
நீர்ப்பாசனத்துறையின் தற்போதைய கொள்கை பற்றிய குறிப்பிடத்தக்க அம் சங்களின் முதலாவது புனர் நிர்மானம், முகாமைத்துவம் என்பனவற்றின் மீதான முதலீடுகளை ஆற்றுப்படுத்தலுடன், புதிய திட்டங்களை ஆரம்பிப்பதைவிட ஏற் கெனவேயுள்ள திட்டங்களின் இயக்கத்தை யும், பேணுதலையும் மேம்படுத்துதலுமா கும். இரண்டாவதாக நீர்ப்பாசன முறை களின் பங்குபற்றல் முகாமைத்துவத்தை கோட்பாடொன்றாகக் கடைப்பிடித்தலும் இந் நோக்கத்திற்கென விவசாயிகள் அமைப் புகளை அபிவிருத்தி செய்தலாகும் விவசா யிகளிடமிருந்து செயற்பாடுமுறை, பேணுத லென்பவற்றிற்?ான சட்டணங்களை சேக ரிப்பதற்கென 1984 ஆம் ஆண்டில் ஆரம்பிக் கப்பட்ட நிகழ்ச்சித் திட்டம் வீழ்ச்சியடைந் ததையடுத்து, அரசாங்கத்தின் பங்கினைக் குறைத்து விவசாயிகளின் பங்குபற்றலை யும் கடப்பாடுகளையும் அதிகரிக்கும் வகையில் அணுகுமுறையில் மாற்றத்தை கோரி நின்றது
8 or

Page 11
1979 ஆம் ஆண்டின் கமநல சேவை கள் சட்டமானது 1991 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் திருத்தப்பட்டு, கமநல சேவைகள் திணைக் களத்திற்கு நீர்ப்பாசனத் திட்டங்களிலுள்ள விவசாயிகள் கழகங் களை சட்டபூர்வமாக பதிவு செய்து அங்கீ கரிக்கும் அதிகாரத்தை வழங்கியது. 1968 ஆம் ஆண்டின் நீர்ப்பாசன கட்டளைச் சட்டமானது நலன் பெறுனர்களிடமிருந்து செயற்பாடு பேணுதற் கட்டணங்களைச் சேகரிக்கும் உரிமையை விவசாயிகளுக்கு வழங்கவும், பிரதான நீர்ப்பாசன செயற் றிட்டங்களுக்கான முகாமைத்துவ குழுக் களின் சட்ட அதிகாரங்களை வரையறுக்க வுமென திருத்தப்படும்.
மகாவலி அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம்
1970 ஆம் ஆண்டில் மகாவலித்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது முதல் தேசிய வரவு செலவுத் திட்டத்திலிருந்து ரூபா 52,000 மில்லியன் ரூபா அதற்கென செலவளிக்கப் பட்டுள்ளது. ஐந்து நீர்த்தேக்கங்கள், பிர தான கால்வாய்கள், நீர் மின்னியக்க முறைகள் என்பனவையுட்பட்ட பிரதான கட்டமைப்பு வேலைகள் பூர்த்தியாக்கப் பட்டுள்ளன. ஜி. எச். எல். பகுதிகளில் சமூக ஆதார அமைப்புகளும், குடியேற் றங்களும் திருப்திகரமான முன்னேற்றத் தைக் காட்டுகின்றன. இந்நிகழ்ச்சித் திட் டத்தின் மிக முக்கிய பெறுபேறான விவ சாய உற்பத்தியும் வேலைவாய்ப்பும் ஆரம்ப கட்டத்தில் உள்ளன.
தற்போது மகாவலியின் விவசாய விளைத்திறனின் பெரும்பகுதி "எச்" பகுதி யிலிருந்தும், உடவளவையிலிருந்தும் மட் டுமே பெறப்படுகிறது. இலங்கையின் நெல் லுற்பத்தி பிரதேசங்களில் 12% மட்டுமே மகாவலியின் கீழிருந்த போதிலும் நாட் டின் மொத்த அரிசி உற்பத்தியில் 18.5 சதவீதத்தினை 1989 ஆம், 1990 ஆம் ஆண்டுகளில் மகாவலி உற்பத்தி செய்தது.
மின்சக்தி உற்பத்தியில் ரன்தம்பே நீரியல்வலுக்கூறின் பூர்த்தியாக்குதலுடன்

மகாவலி மின்நிலையங்களின் ஆற்றலளவு 600 மெகா வாற்றாக அதிகரித்தது. 1991ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங் களில் மகாவலி மின்நிலையங்கள் தேசிய மொத்தத்தின் 55 சதவீதத்தினை உற் பத்தி செய்துள்ளன.
நாட்டின் மொத்த விஸ்தீரணத்தின் 1/8 பகுதிக்கு மேலான 10, 490 சதுர கிலோ மீற்றர்களை, உடவளவை நீங்கலாகக் கொண்டிருக்கும் மகா வலி நீர் பிரதேசத் தைப் பாதுகாப்பதில் உயர்கவனம் செலுத் தப்படவுள்ளது. இது மேல், கீழ் நீர்த் தேக்கப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மகாவலி மேல் நீர் ஏந்து பரப்பு அபி விருத்தி செயற்றிட்டமானது நுவரேலியா, கண்டி ஆகிய மாவட்டங்களுடன் பதுளை, மாத்தளை ஆகிய மாவட்டங்களின் பகுதி களினது மேல் நீர் ஏத்து சூழல் பிரச்சினை களில் கவனம் செலுத்துகின்றது.
மகாவலி நிகழ்ச்சித் திட்டத்தினை நடைமுறைப்படுத்தும் மகா வலி அதிகார சபை பற்றியும் மறுசீரமைப்பு நோக்கத்திற் கென ஆராயப்படும். இது 1992ஆம் ஆண்டு பூர்த்தி பெறு மென எதிர்பார்க்கபபடு கின்றது.
ஏனைய நீர்ப்பாசனங்கள்
1980ஆம் ஆண்டில் கிரிந்தி ஒயா நீர்ப் பாசனத்தினதும், குடியேற்றத் திட்டத்தின தும் முதலாம் கட்ட வேலைகள் ரூபா 1890 மில்லியன் மொத்த மதிப்பிட்டுச் செலவில் ஆரம்பிக்கப்பட்டு 1992ஆம் ஆண்டில் பூர்த்தியாக்கப்படுமென எதிர்பார்க்கப்பட் டுள்ளது. இக்கட்டத்தில் லுனுகம் வெஹர நீர்த்தேக்கம் கட்டமைக்கப்பட்டு தற் போதுள்ள 4,584 ஹெக்ரார் நிலப்பரப் பிற்கும், 4,567 ஹெக்ரார் புதிய நிலப் பரப்பிற்கும் நீர்ப்பாசன வசதிகள் வழங் கப்பட்டுள்ளது. இடது கரைமேடுகளின் 1 ஆம் 2 ஆம் நிலப்பகுதிகளிலும் வடக்குக் கரையோர மேடுகளின் 1ஆம், 2ஆம் நிலப் பரப்புகளிலும் 4,040 குடும் பங்கள் குடி யேற்றப்பட்டன.
943 ரூபா மில்லியன் செலவிலான கிரிந்தி ஒயா நீர்ப்பாசன குடியேற்றத்திட்டத்
سے 89 ,

Page 12
தின் 2ஆம் கட்டத்திற்கான நிதியுதவி ஆசிய அபிவிருத்தி வங்கியினால் வழங்கப்படுகின் றன. இக்கட்டத்தின் கீழ் 1,228 ஹெக்ரார் நிலப்பரப்பிற்கு நீர்ப்பாசன வசதிகள் வழங்கப்பட்டுள்ளதுடன், 1035 குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டுமுள்ளன.
கிராமிய நீர்ப்பாசன புனர்நிர்மாண செயற் திட்டத்தின் கீழ் நீர்ப்பாசனத் திணைக் களத்தினால் 1200 கிராமிய நீர்ப்பாசனத் திட்டங்கள் புனர்நிருமாணம் செய்யப்பட வுள்ளன என்பதுடன், கமநல சேவைகள் திணைக் களத்தினால் 500 சிறு திட்டங் களும் மேம்படுத்தப்படவுள்ளன. 1991ஆம் ஆண்டு ஏப்ரல் இறுதியில் 1100 கிராமிய குளங்கள் கமநல சேவைகள் திணைக்களத் தினால் புனரமைக்கப்பட்டு 78700 ஏக்கர் நிலப்பரப்பும் 635 குளங்கள் நவீனமயப் படுத்தப்பட்டு 35,300 ஏக்கர் நிலப்பரப் ւյւն at 6065-i 360T.
1988ஆம் ஆண்டில் 600 மில்லியன் ரூபா ஜப்பானிய நிதிப்படுத்தலுடன் மினிப்பே நாகதீப (விதிகளும் கிணறுகளும்) செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இத்திட் டத்தின் மூன்று கட்டங்களில் இரண்டு கட்டங்கள் பூர்த்தியாக்கப்பட்டுள்ளன: முதலாம் கட்டத் தி ல் நாகதீபவில் 44 குழாய்க் கிணறுகளும், 53 ஆழமற்ற கிணறுகளும் அமைக் கப்பட்டதுடன் 67 கிணறுகளும், 19 கி. மீ. வீதி வழிகளும் புனரமைக்கப்பட்டன. 11ஆம் கட்ட கட்ட மைப்பில் மினிப்பேயில் 115 குழாய்க் கிணறுகளும் 174 ஆழமற்ற கிணறுகளும் அமைக்கட பட்டதுடன 287 ஆழமற்ற கிணறுகளினதும் 47 கிலோ மீற்றர் தளம் பாவப்பட்ட லிதிகளும் புனரமைக்கப்பட் டன. 111ஆம் கட்டத்தில் மகாவலி மீதான பாலங்களின் கட்டமைப்பு வேலைகள்
இடம்பெறவுள்ளன. இது 1993இல் ஆரம் பிக்கப்படவுள்ளது.
மினிப்பே நாகதீய (நீர்ப்பாசனத்) திட்டம்: ஜப்பானிய அரசாங்கத்தினால் நிதிப்படுத் தப்பட்ட 505 ரூபா மில்லியன் செலவிலான இத்திட்டமானது அதன் செயற்பாடுகளை 1990ஆம் ஆண்டில் ஆரம்பித்ததுடன், நீர்ப் பாசன கால்வாய்களையும், தொடர்பான கட்டமைப்புகளையும் மினிப்பே நாகதீப

திட்டத்தில் உள்ள வீதிகளையும் புன ரமைத்து மேம்படுத்தும் திட்டங்களும் உட்படுத்தப்பட்டுள்ளன.
பிரதான நீர்ப்பாசன புனர் நிருமான செயற்றிட்டமானது 44,480 ஹெக்ரார்களை உள்ளடக்கும் ஏழு பிரதான நீர்ப்பாசன திட்டங்களையுள்ளடக்கியுள்ளது. ஏனைய மூலங்களில் நிறுவன ரீதியான வலுப்படுத் தல் ஊக்குவிப்பும் செயற்திட்டங்களின் ஒன்றிணைந்த முகாமைத்துவமும், திட்டங் களிலுள்ள அத்துமீறிக் குடியேறிய காணி களின் ஒழுங்காக்கலும், பண்ணை வீதி களை புனர்நிருமாணம் செய் த லும் அடங்கும்.
நீர்ப்பாசனத்திட்ட முகாமைத்துவ செயற் றிட்டம் 764 ரூபா மில்லியன் செலவுடனான இச்செயற்றிட்டம் யுஎஸ்எய்ட் இனால் நிதிப்படுத்தப்படுகின்றது. இச் செயற் திட் டத்தின் நோக்கமாவது பிரதான நீர்ப் பாசன திட்டங்களைச் செயற்படுத்தி பேணுவதற்கு காணி, நீர்ப்பாசன மகாவலி அபிவிருத்தி அமைச்சின் நிறுவன ரீதியான செயற்றிறனை அபிவிருத்தி செய்வதாகும். பல்லேறு கட்டமைப்பு திருத்தங்களினதும், முகாமைத்துவ அணுகுமுறைகளினதும் பய னுறு தன்மையை பரிசோதித்து செய்து காட்டுவதற்கென ஏழு பிரதான நீர்ப் பாசன திட்டங்கள் தெரிந்தெடுக்கப்பட் டுள்ளன.
வடமேற்கு மாகாணத்தில் 12 நீர்ப்பாசனத் திட்டங்களை புனரமைப்புச் செய்தல்; வட மேற்கு மாகாணத்தில் குருநாகல், புத் தளம் ஆகிய பகுதிகளில் அவசர நீர்ப் பாசனத் தேவைகளை எதிர்கொள்ளவென உள்ளூர் நிதிகளுடன் 1990 ஆம் ஆண்டின் 452 மில்லியன் ரூபா செலவில் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இத்திட்டத்தின்மூலம் ஏற்கனவேயுள்ள 2, 150 ஹெகரார் நிலப் பரப்பும் 2,090 ஹெக்ரார் புதிய நிலப் பரப்பும் அடங்கிய 4,240 ஹெக்ரார் மொத்த நிலப்பரப்பு பயனடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது. புனரமைக்கப் படவுள்ள 12 குளங்களில் 10 குளங்களின் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 1991 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இரு குளம் களின் வேலைகள் முடிவடைந்துள்ளன,
10 aran

Page 13
விவசாயப் ெ
குடியான்
விளர்ச்சியடை ந்துவரும் நாடுகளின் gugust air feup&sig67 ( Peasant Society ) பொருளியல் அமைப்பு சில தனி இயல்பு களைக் கொண்டுள்ளது. இத்தனி இயல்பு கள் பொருளியல் ஆய்வில் கவனத்திற் கொள்ளப்பட வேண்டியன ஆகும். அவ் வாறு கவனத்திற் கொள்ளாமல் தவறான அனுமானங்களில் ஆரம்பிக்கப்படும் ஆய்வு கள் வாழ்க்கை நிலைமைகளோடு பொருந் தாதன வைாய் அமையும். இந்த நாடு களின் விவசாயப் பொருளியலைக் கற் கின்ற மாணவர்கள் எதிர்நோக்கும் சிக்கல் களில் ஒன்றைக் கவனித்தால் இதன் உண்மை புரியும்.
Gausomt uiu" Gumr(56ffluudio (Agricultural Economics) பற்றிய பாடநூல்கள் பல ஆங் கிலத்தில் ஆண்டுதோறும் வெளியிடப்படு கின்றன. இப்பாடநூல்கள் குடும்பப் பண் 606007 usa560 (Family Farm) pygju 60 L 96) காகக் கொண்டு விவசாய சந்தைப் பொரு ளியல் விதிகளை விளக்குவனவாக அமை கின்றன. நுண்பொருளியல் (Micro Economics) விதிகளை விவசாய உற்பத்திக்குப் பொருத்திப் பார்க்கும் முறையில் இந் நூல்களில் விவசாயப் பொருளியல் விளக் கப்படும். ஒரு பாடநெறி என்ற வகையில் சுவையான பல விடயங்களை நாம் இந் நூல்கள் மூலம் தெரிந்து கொள்கின்றோம் என்பது உண்மையே. எனினும், எமது நாட் டிலும் இதர ஆசிய, ஆபிரிக்க, தென் அமெரிக்க நாடுகளிலும் உள்ள விவசாய சமூகங்களின் பொருளியலை விளங்குவதற்கு இந்நூல்கள் எந்த அளவு உதவமுடியும் என்ற சந்தேகம் மாணவர்கள், ஆசிரியர் மத்தியில் ஏற்படுவது இயல்பு. இதற்குரிய காரணங்கள் வெளிப்படையானவை.

பொருளியலும் ஆய்வுகளும்
ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா ஆகிய நாடுகளில் வெளியிடப்படும் விவசாய பொருளியல் நூல்கள் முதலாளித்துவ முறையில் செயற்படும் உற்பத்தி நிறுவ னம் ஒன்றாகவே குடும்பப் பண்ணையை (Family Farm) 5055 5th -etta J. Goof ஆரம்பிக்கின்றன. இலங்கை, இந்தியா போன்ற நாடுகளின் குடியானும் (Peasant) அவனது குடும்பம் என்ற பொருளியல் அல கும் நியோகிளாசிக்கல் பொருளியலின் வழிவரும் நுண்பொருளியல் விதிகளின்படி விளக்கப்பட முடியாதவை ஆகும். இந் நூல்களில் விளக்கப்படும் பொருளியல் விதி கள் எமது நாடுகளின் நடைமுறை வாழ்க்கையோடு தொடர்புபடுத்திப் புரிந்து
க. சண்முகலிங்கம் (பீ.ஏ.எல்.எல்.பி) பணிப்பாளர், இந்து சமய கலாச்சாரத் திணைக்களம்:
கொள்வதற்குச் சிரமமானவை. கைத் தொழில் உற்பத்தித் துறைக்கு வர்த்தக மயப்படுத்தப்பட்ட சேவைத் துறைகளுக் குமே இவை பொருந்துவன ஆகும். குடி யா ன் விவசாயத்திற்கு இ  ைவ பொருத்தமற்றன.
விவசாயப் பொருளியலின் அனுமானங்கள்
விவசாயப் பொருளியல் நூல் ஒன்றின் ஆய்வுமுறை அடிப்படை உற்பத்தி அல கான குடும்பம் அல்லது உற்பத்தி நிறுவ னம் பற்றிப் பின்வரும் அனுமானங்
asis

Page 14
களுடன் தொடங்குகிறது. இந்த அனுமா னங்கள் தடையற்ற போட்டிச் சந்தைய்ை மாதிரியாகக் கொண்டவையாகும்.
1.
வங்கிகளும், நிதி நிறுவனங்களும் வழங்கும் கடன்கள் தடையற்ற முறை யில் விவசாயிகளுக்குக் கிடைக்கின்றன. வட்டிவீதம் தடையற்ற சந்தையில் போட்டி முறையில் நிர்ணயமாகிறது.
பசளை, விதைநெல், ஏனைய விதை கள், எரிபொருள் விலை, இரசாயனப் பொருட்களின் வழங்கல் ஆகியவற்றில் தடையற்ற சந்தை நிலவுகிறது.
விவசாயிகள் மிக நவீனமான தொழில் நுட்ப முறைகளைக் கூட உடனுக் குடன் பெறக்கூடியவர்களாய் உள்ள னர். இத்தொழில் நுட்ப முறைகள் பற்றிய செய்திகள் விவசாயம் பற்றிய சஞ்சிகைகள் மூலம் பரப்பப்படுகின் AD60.
நிலம் வாங்குதல், விற்றலில் தடை யேதும் இல்லை. எல்லைநிலை விவ eru a-bLé9uTerri ( Marginal Agricultural Producers) ia) is 60s விற்றுவிட்டு நீங்குவதும், புதிய உற் பத்தியாளர் விவசாய உற்பத்தியில் சேருவதும் தடையற்றுச் செயல்படுகி
Déile
உள்ளீடுகள் (inputs), வெளியீடுகள் (Outputs) இரண்டினதும் விலைகள் பற்றிய தகவல்கள் விபரமாகத் தெரிய வருகின்றன. தடையற்ற போட்டிச் சந்தையொன்று செயற்படுகிறது.
கடன், பசளை, விதைநெல், விவசாய
இரசாயனப் பொருட்கள் ஆகிய உள்ளீடு களின் வழங்கலில் தடையற்ற போட்டிே சூழல் நிலவுகிறதா? விவசாய உற்பத்திப்

I
பொருட்களின் சந்தைப்படுத்தல் கட்டுப் பாடற்ற போட்டி விதிகளின்படி விளக்கக் கூடியதொன்றா? இலங்கை, இந்தியா போன்ற நாடுகளின் விவசாய உற்பத்தி யாளர்களில் எத்தனை வீதத்தினரை தொழில் முயல்வாளன் (entrepreneur) என்ற வரையறைக்குள் அடக்கலாம்?
குடியான் பொருளியல் ஒன்றை புரிந்து கொள்வதற்கு இப்பாட நூல்களின் அணுகு முறை எந்தளவு எமக்குத் துணைபுரியும் என்பன போன்ற கேள்விகள் மாணவர் கள், ஆசிரியர்கள் மனதில் எழுவது இயல்பே.
எமது நாட்டின் குடியான் பொருளி யலின் தனித்துவமான இயல்புகள் எவை? இக்கேள்விக்குரிய விடையிலேயே குடியான் பொருளியலின் அடிப்படை அம்சம் அடங் கியுள்ளது. "குடியான் பொருளியல் செயற் படும் சந்தைச் சூழலை நிறைவில் போட்டி (imperfect competition) GT Gör go spavirrib இங்கே நிதிச்சந்தை வளர்ச்சி பெற்று இருக் காது. நிலச்சுவாந்தர்கள், வியாபாரிகள். வட்டிக் கடைக்காரர்கள் ஆகியோரிடம் குடியான்கள் கடன்களைப் பெறுகின்றனர். கடன் வழங்கல் நிறைவுப் போட்டி நிலை, மைகளுக்கு உட்பட்டதல்ல. கடனும், கடன் வட்டி வீதமும் நிலம், உழைப்பு ஆகிய ஏனைய உற்பத்திக் காரணிகளோடு பிணைக்கப்பட்டனவாய் உள்ளனரு சமூக உறவுகளிலும், அதற்கு அடிப்படையான பொருளியல் உறவுகளிலும் தங்கியிருத்தல் நிலவுகின்றது. இதனால் உற்பத்திக் காரணி கள் தடையற்ற பொருளியலில் விதிகளுக்கு அமைய செயற்படுவதில்லை.
விவசாய உள்ளீடுகள் தடையற்று எங் கும் கிடைப்பதில்லை. தேசிய ரீதியான சந்தையொன்று இந்நாடுகளின் விவசாயத் துறையில் இருப்பதில்லை. இச்சந்தை

Page 15
- "="#", "__=
曹
பிளவுண்டதாய் உள்ளது. செய்திப் பரிவர்த் தனையும், போக்குவரத்தும் நிறைவுப் போட்டிக்குத் தடையாக உள்ளன. சந் தைத் தகவல்கள் பூரணமாகக் கிடைப்ப தில்லை. இக்காரணங்களால் விவசாயப் பொருளியலின் அனுமானங்கள் குடியான் பொருளியலுக்கு உகந்தவையல்ல என்பது வெளிப்படை, குடியான் பொருளியலின் முக்கிய இயல்பினை புரிந்து கொள்ளுதல் அவசியம், குடியரின் சந்தையுடன் அரை குறையாக (Partially) பிணைக்கப்பட்டவன் என்னும் உண்மை கவனிக்கப்படல் வேண் டும். அவன் நிறைவில் போட்டிச் சந்தை யில் செயல்படுகின்றான். இருப்பினும், முற்றா சுச் சந்தையில் இருந்து விடுபட்ட வனுமல்ல. அவன் விரிந்த பொருளியல் அமைப்பின் பாகமாகச் செயல்படுகின்றான்
அரசியல் பொருளியல் (Political Economy)
விவசாயப் பொருளியல் பற்றிய ஆய்வு சளின் அடிப்படை அம்சமாக
 

நுகர்வோன் நடத்தை அமைகிறது. தனி நபரான நுகர்வோன் நடத்தை போன்றே குடும்பம் என்ற உற்பத்தி நிறுவனத்தின் செயல்முறைகள் ஆராயப்படுகின்றன. இத னின்றும் பெறப்படும் பொருளியல் விதிகள் முழுப்பொருளியல் அமைப்பிற்கும் பொருத் தப்படுகின்றன. சுருங்கக் கூறின் குடும்பப் L u GiaT GATE ST LI TIT ġI ( Farm Household ) பொருளியல் ஆய்வின் அடிப்படை அலகா கக் கொள்ளப்படுகிறது. இம்முறைக்கு மாறான அணுகுமுறை யொன்று உள்ளது. அதை அரசியல் பொருளியல் ( Political ேே000Iay) அணுகுமுறை என்று கூறு பர். இம்முறையானது பொருளியலை அரசியல் சமூகம் என்பவற்றுடன் இனைத்து நோக்கு கிறது. ஒட்டு மொத்தமான சமூக அரசி யல்செயற்பாடுகளின் பாகமாகவே குடியான் பொருளியவை இம்முறையானது நோக்கு கிறது. குடியான் சமூகத்தின் அமைப்பு இயல்புகள் ஆகியவற்றிலிருந்து பொருளி யல் ஆய்வு ஆரம்பிக்கப்படும். பொருளியல்
-

Page 16
ஆய்வை நியோகிளாசிக்கல் பள்ளி அல் லது நவீன பழம் பொருளியலாளர் அர சியல், சமூகவியல் ஆய்விலிருந்து தனி மைப்படுத்தி நோக்குவர். அரசியல், சமூக வியலோடு இது இணைக்கப்படும் அவசியம் இல்லை எனக் கருதும் இக்கோட்பாட்டினரி கூடிய அளவில் கணித முறைகளைக் கையாண்டு புற நிலை  ைம க ரூ க்கு ப் பொருத்தமற்ற மாதிரிகளை (models) புனை வதில் ஈடுபடுகின்றனர்:
நவீன பழம் பொருளியலாளர் கருத் துக்களிலும், ஆய்வு முறைகளிலும் உள்ள இன்னோர் அனுமானமும் மிக முக்கிய மானதாகும். அரசியல், சமூகவியல் ஆகிய வற்றிலிருந்து பொருளியலினை இவர்கள் பிரித்து நோக்குவதால், சமூக முரண்பாடு களின் விளைவுகளை பொருளியல் ஆய்வு வெளிப்படுத்துவதில்லை. சமூகம், அதன் அமைப்புமுறை, பல்வேறு சமூகக் குழுக் களின் பொருளியல், அரசியல் நோக்குகள் எப்படி அமைந்துள்ளன? அவை எவ்விதம் முரண்பாடுகளை உருவாக்குகின்றன? அம் முரண்பாடுகள் எவ்விதம் பொருளியல் அமைப்பிலும், அதன் இயக்கத்திலும் வெளிப்படுகின்றன? இவை போன்ற விட யங்கள் பொருளியல் ஆய்வில் வெளிப்படுவ தில்லை. தனிப்பட்ட பொருளியல் அலகு கள், பரிவர்த்தனையூடாக சந்தையில் பங்கு கொள்கின்றன. தனிநபர்களும், நிறுவனங் களும் சந்தையில் சுதந்திரமாகப் புகு கின்றன, விலகிக் கொள்கின்றன. இம் முறையில் பொருளியல் ஆய்வு செய்யப் படும் பொழுது சமூக ஒற்றுமை (social harmony ) அடிப்படை அனுமானமாகின் றது. இதற்கு மாறாக அரசியற் பொருளி யல் ஆய்வுமுறை முரண்பாட்டினை(Conflict) அடிப்படையாகக் கொள்கிறது. பெருமட்

டான பொருளியல் அமைப்பின் விதிகள் நுண்நிலையில் தனி அலகுகளான நிறுவ னம், நுகர்வோன், குடும்பம் ஆகியவற் றின் நடத்தை விதிகளிலிருந்து பெறப்ப டும்போது அத்தகைய ஆய்வுமுறையில் afelps (up Taiarum G4S air (social conflict) முக்கிய விடயமாக வெளிப்படா. ஆனால் அரசியல் பொருளியல் சமூக அமைப்பினை ஆய்வின் தொடக்க நிலையாகக் கொள்வ தால் முரண்பாடுகளைப் பிரதான அனு மானமாகக் கொள்கிறது.
அரசியல் பொருளியல் ஆய்வின் இன் னோர் பிரதான இயல்பு யாதெனில் சமூக மாறுதல்களை அது விளக்குகின்றது. நவீன பழம் பொருளியலாளர் ஆய்வுகள் அரசியல், சமூகவியல் அம்சங்களை பொருளியலில் இருந்து தனிமைப்படுத்துவதால், சமூக மாற்றம்பற்றிய விளக்கங்களில் அக்கறை செலுத்துவதில்லை. குறித்த வரலாற்றுக் கால எல்லையுள் சமூகம் எவ்விதம் மாறி யது என்பதையும், அம்மாற்றத்தின் பொருளியல் உந்து சக்திகள் எவை என்ப தையும் அரசியல் பொருளியல் தன் ஆப் வின் மையப் பொருளாகக் கொள்ளும், இம்மாற்றங்கள் எவ்வாறு முரண்பாடுகள், மோதல்கள் மூலம் ஏற்படுகின்றன என்ப தையும், அதன் பயனாக சமூகத்தில் எழும் விறைப்பு நிலையையும் (Tension) பொருளி யல் சித்தரிக்கும். இதன் பொருள் பொரு ளியல் சமூகக் கொந்தளிப்புப் பற்றிய ஆய்வு என்பதோ அது பற்றிய சித்தரிப் புத்தான் என்பதோ அன்று. பொருளியல் அமைப்பின் முரண்பாடுகளும் விறைப்பும் கவனத்தில் கொள்ளப்படும் போது, சமூக பொருளியல் மாற்றங்கள் சரியான முறை யில் புரிந்து கொள்ளப்படும் என்பதையே அரசியல் பொருளியலாளர் வற்புறுத்திக்
கூறுவர்;
sim

Page 17
குடியான் ஆய்வுகள்
குடியான் ஆய்வுகள் இன்று பல்கிப் பெருகியுள்ளன. இவ்வாய்வுகள் பொருளி யலையும், சமூகவியலையும் இணைக்கின் றன. எமது நாட்டுப்பொருளியலாளர்களும் இவ்வாய்வுகளைப் புறக்கணித்தல் முடி யாது. எமது நாட்டின் கமநல பிரச்சனை &s6ir (Agrarian Problems) gegnum Gör giù வுகளின் பின்னணியில் ஆராயப்பட வேண் டியவை ஆகும். குடியான் ஆய்வுகள் அர சியல் பொருளியல் (Political Economy அணுகு முறையைக் கடைப்பிடிப்பன: விவ சாயப் பொருளியல் பாடநூல்களின் அணுகுமுறையினின்றும் வேறுபட்டவை என் பதைத் தெளிவுபடுத்தும் நோக்கோடு தான் இருவகை முறைகளுக்கும் இடையி லான வேறுபாடுகளை மேலே விரிவாகக் குறிப்பிட்டோம்.
இயற்கை விஞ்ஞானங்களான பெளதி கம், இரசாயனம், உயிரியல் ஆகியவற்றின் வரலாற்றில் சில கண்டுபிடிப்புகள் அத் துறைகளின் அடிப்படைகளையே மாற்றி விடுவதுண்டு. நியூற்றன், ஐன்ஸ்டைன், கலீ லியோ, டார்வின் ஆகியோரின் கண்டு பிடிப்புக்களை இத்தகைய வரலாற்று முக் கியத்துவம் வாய்ந்த கண்டுபிடிப்புகள் என்று கூறலாம். அரசியல், பொறியியல், வரலாறு, சமூகவியல் ஆகிய சமூக விஞ் ஞானத்துறைகளில் இத்தகைய கண்டு பிடிப்புகள் அரிது இத்துறைகளில்

அடிப்படை அனுமானங்களை முற்றாகத் தகர்க்கும் விஞ்ஞானப் புரட்சிகள் நிகழ்வி தில்லை. ஆனால் 1960 க்களிலும், 1970க் களிலும் சமூக விஞ்ஞானத் துறையில் @@ கண்டுபிடிப்பு நிகழ்ந்தது என்று கூறுகி pTitř S)Gulumturi F6f6ăr (Theodor Shanin) என்னும் சமூகவியலாளர்,
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக எம் மத்தியில் வாழ்ந்து வந்தவர்களும் இன்று குறை விருத்தி நாடுகளின் பெரும்பான்மைச் சமூகக் குழுவினருமான குடியான்கள் பற் றிய ஆய்வுகளையே ஒரு கண்டுபிடிப்புக்கு நிகரான ஆய்வுகள் எனக் குறிப்பிடுகிறார். தியோடர்சனின் 1971ம் ஆண்டில் பதிப்பி is Gal Gifu'll - 'Peasants and Peasant Societics" என்னும் நூலின் பல்லாயிரம் பிரதிகள் விற்பனையாயின. அந்நூல் பெற்ற வரவேற்பு குடியான் ஆய்வுகள் பெற்ற மதிப்புக்கு ஒரு உதாரணமாகும் குடியான் ஆய்வுகள் சமூக விஞ்ஞானத் துறையில் ஒரு கண்டு பிடிப்புக்கு நிக ரானவை என்ற தமது கருத்தை மேற்குறித்த நூலின் 1937 ம் ஆண்டின் பதிப்பின் முன் னுரையிலேயே தியோடர் சனின் குறிப் பிட்டுள்ளார். குடியான் ஆய்வுகள் பொறி யியல் கல்வியின் பிரிக்கமுடியா அங்கமாக ஆகியுள்ளன. குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளின் பொருளியல் ஆய்வுகளில் இவற் றின் பாதிப்பினைக் கவனத்தில் கொள்ளு தல் அவசியம் .

Page 18
இலங்
விவசாய ஆராய்ச்சி
இலங்கை ஒரு விவசாய நாடு என்ப தனால் அதன் பொருளாதாரமும் விவ சாயம் சார்ந்ததாகவே வளரவேண்டியுள் ளது. ஏனைய வள ர் முக நாடு களை ப் போலவே இலங்கையினதும் அபிவிருத்திக் குக் கைத்தொழில் மயவாக்கத்தை ஒரு கருவியாக முன்வைத்தபோதும் இலங்கை யைப் பொறுத்தவரை அதனை முன்னெடுத் து ச் செல்வதற்கான பொருளாதார, சமூக, நிறுவன ரீதியான சாதகங்கள் குறைந்தள லுலேயே காணப்படுகின்றன. எனவே முழுமையான கைத்தொழில்மயமாக்கம் என்பது எமது நாட்டைப் பொறுத்தவரை எளிதில் அடையப்படக் கூடிய தொன் றல்ல.
இலங்கையைப் பொறுத்தவரை விவ சாயச் சார்பற்ற கைத்தொழில்களைவிட விவசாயச் சார்புடைய கைத்தொழில் அளின் வளர்ச்சி எளிதில் அடையப்படக் கூடிய தொன்றாகும். மேலும் விவசாயச் சார்புடைய கைத்தொழில்கள் இயற்கை யோடு பெருமளவில் இணைந்து மேற் கொள்ளப்படக்கூடியவை. எளிதில் சூழல் மாசடைதலுக்குக் காரணமாகாதவை. தீங்கு பயக்கும் பக்கவிளைவுகள் குறை வானவை. ஒப்பிட்டளவில் குறைந்த முத லீட்டுடன் கூடிய இலாபமீட்டக்கூடியவை, இன்னொரு வகையில் உற்பத்திச்செலவு குறைவானவை.
உற்பத்தி அமைப்புக்கள் படிப்படியாக விவசாயச் சார்பினின்றும் விலகி, கைத் தொழில் சார்ந்தவையாக LDTsò so மடைந்து அவற்றின் மூலம் பெறப்படும் விளைவுகள் உள்நாட்டு நுகர்ச்சியிலும் வெளிநாடுசட்கான ஏற்று ம தி யிலும் போட்டியிடக்தக்க நிலையை எய்துமட்டும் விவசாயம் இலங்கையின் பொருளாதாரத்
= 1

கையில்
யின் முக்கியத்துவம்
தில் காத்திரமான இடமொன்றையே வகிக் கும். எனவே முதன்மைப்பட்டியலில் எந் தப் பிரமாணம்கொண்டு வகுத்தாலும் விவ சாயம் முதலிடம் பெறும் என்பது திண்ணம்.
பண்டைய நாட்களில் சனத்தொகை குறைவாக இருந்தபடியால் சாதாரண பயிர்ச்செய்கை முறைகள் மூலம் பெற்ற விளைவுகளைக்கொண்டு மக்கள் தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடியதாயி ருந்தனர். ஆனால், காலப்போக்கில் துரித வளர்ச்சியடைந்த விஞ்ஞானம் காரணமாக; மருத்துவ சுகாதார வசதிகள் அதிகரித்தமை
செ. ரூபசிங்கம், விவசாய உத்தியோகத்தர், விவசாயத் திணைக்களம், வடக்கு - கிழக்கு மாகாணம்.
யால் சனத்தொகை பல்கிப்பெருகலாயிற்று. அதிகரித்த சனத்தொகையின் வாழ்க்கைத் தர மேம்பாடுகளும் படிப்படியாக விவசாய விளைப்பொருட்களுக்கான கேள்வியை அதி கரிக்கச் செய்தன. விவசாய நிலங்கள், குடி யிருப்புகட்காகப் பயன்படுத்தப்பட்டமை யாலும், மண்ணரிப்பு, சூழல் மாசடை தல் போன்றவற்றாலும், உரியமுறையில் பயன்படுத்தப்படாமையாலும் செழிப்பான விவசாய நிலத்திற்குப் பற்றாக்குறை ஏற் படலாயிற்று.
விவசாய உற்பத்தியில் அதிகரிப்பை ஏற்படுத்துவதற்கு, 1. பயிரிடப்படும் நிலப்பரப்
பினளவை அதிகரித்தல் 2. ஒரலகு நிலப்பரப்பிற்கான வெளி யீட்டனளவை அதிகரித்தல்

Page 19
விவசாய உற்பத்தியில் அதிகரிப்ை
நிலப்பரப்பினளவை
என்னும் இரண்டு அடிப்படை முறை களுள்ளும முதலாவது முறையில் இலங்கை யில் நிலவளம் முற்றாகப் பயன்படுத்தப் படாத ஒன்றாகவே இன்றுவரை இருந்து வந்தபோதும் நிலம் ஒரு வரையறுக்கிப் பட்ட காரணியாதலால், மற்றைய முறை யில் ஏனைய காரணிகளையே கருத்திற் கொள்ள வேண்டும். இந்நிலையில் வினைத் திறனான தொழில்நுட்ப நடவடிக்கைகளை மதியூகத்தோடு மேற்கொள்வதன் மூலம் ஓரலகு நிலப்பரப்பினின்றும் பெறப்படக் கூடிய வெளியீட்டினளவை அதிகரித்துக் கொள்ளலாம், தொழில்நுட்ப விடயங் களைத் தீர்மானிப்பதில் ஆராய்ச்சியின் பங்களிப்பு இன்றியமையாததாகும்.
நிலப்பண்படுத்தல், பொருத்தமான பயிர்களின் தேர்வு, பயிர்ச்செய்கை முறை சுள், உரம், பீடை, கிருமி, களை நாசினி கள் முதலான விவசாய இரசாயனங்களின் பயன்பாடு, நீர்ப்பரிபாலனம் போன்ற நட வடிக்கைகள் மூலம் தீவிர விவசாயத்தில் ஈடுபட்டு உற்பத்தியை அதிகரித்துக் கொள்ளலாம். விவசாயத்துக்கு வேண்டிய சூழல் வாய்ப்புக்கள் அருகிவருவதனால் முன்னேற்றகரமான தொழில்நுட்பங்களை
 

ப ஏற்படுத்துவதற்கு பயிரிடப்படும் அதிகரிக்க வேண்டும்.
யும், சகிப்புக் தன்மையுடன் கூடிய பிரயத் தனங்களையும் விவசாயிகள் Giriri வேண்டியுள்ளது. எனவே, கிடைக்கின்ற நில ததிற்கான விளை திறனை அதிகரிக்கும் வகையில் ஆராய்ச்சியின் போக்குகள் அமையவேண்டும்.
இ ல ங் கை யி ன் விவசாய நிலங் களைப் பொறுத்தவரை தரைத்தோற்றம், மண்ணின் அமைப்பு, பெளதிக இரசாயன இயல்புகள், புவிச்சரிதவியல் நிலமைகள். காலநிலைக் காரணிகள் ஆகியன இடத்துக் கிடம் பரந்த வேறுபாடுகளைக் காண்பிப் பன. எனவே, விவசாய முயற்சிகளின் போது இடத்துக்கிடம் தனித்துவமான பிரச்சினைகள் தலையெடுக்கும். இப்பிரச் சினைகட்கு அவ்வச் சூழல் நிபந்தனைகளி லேயே பொருத்தமான் தீவுகள் காண்ப தற்கு ஆராய்ச்சி அத்தியாவசியமானது. ஆராய்ச்சிகள், தொழில்நுட்பப் பிரயோ சுமி, பயிரிடப்படும் வாக்கம், விவசாய இரசாயனங்களின் பிரயோகம், மண்வகை கள், காலநிலைக்காரணிகள், பயிர்ச் செய்கை முறைகள், ஆதாரசேவைகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்
டும்,
7

Page 20
உற்பத்தி அதிகரிப்பிற்காக உள்ளீடுகள் அதிகமாகத் தேவைப்படுகின்றமையால் கிடைக்கின்ற உள்ளிடுகளை விளைத்திறனா கப் பயன்படுத்தவும், விவசாய உற்பத்தி முறைகள், பண்ணைமுறைகளைத் தீர் மானிக்கவும், அவ்வுற்பத்திமுறைகளைப் பரி பாலிக்கவும், பாதுகாக்கவும் ஆராய்ச்சி நட வடிக்கைகள் அவசியமானவை. இன்னொரு முறையில் கூறுவதாயின், வெவ்வேறு விவ சாய முறைகளின் கீழ் உச்ச விளைத் திறனை அடைவதற்கும், புதிய உற்பத்திகளைப் பெற்றுக்கொள்வதற்கும் உற்பத்திச் செல வைக் குறைத் து க் கொள்வதற்கும் ஆராய்ச்சி வேண்டியதொன்றாகிறது. எனவே இவ்வாறு பல பரிமாணங்களில் விவசாய அபிவிருத்திக்கு ஆராய்ச்சிவேலை கள் அவசியமாகின்றன. மாறிச்செல்லும் சாதனங்களின் பயன்பாடு, அறிவு, அவற்று டன் தொடர்பான விளக்கங்கள் போன்ற வற்றின் முக்கியத்துவம் முதலானவை ஆராய்ச்சி மூலம் வெளிக்கொணரப்பட லாம்.
நாட்டுக்கு நாடு விவசாய ஆராய்ச்சி தொடர்பான வரலாற்றை நோக்கும் போது அவை வேறுபட்டுள்ளமையை அவ தானிக்கக் கூடியதாயுள்ளது. குறிப்பான நுணுக்கங்களும், ஆய்வுநடவடிக்கைகளும் கூடப் பெரிதும் வேறுபடுகின்றன. ஒட்டு மொத்தமான தேசிய அடிப்படையிலான நோக்கங்கள் பல்வேறு காரணிகளாலும் கட்டுப்படுத்தப்படுகின்றன.
தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருக் கின்ற விவசாய நடவடிக்கைகள் தொடர் பாக "ஆராய்ச்சி" என்ற பதத்திற்கு நன்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. "ஆராய்ச்சி" என்பது மிகக் கவனமாகவும், திருத்த மாகவும் மேற்கொள்ளப்படும் தேடல் அல்லது பரிசீலனை ஆகும். இதனை விளக்க மாக நோக்கும்போது, யாதேனும் ஒரு பிர தேசத்தில் விவசாயிகளால் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ள ந  ைட முறை களுள் பொருத்தமானதைத் தீர்மானிப்பதும்; வெவ்வேறு பிராந்தியங்களில் அல்லது பகுதிகளில் தொழில்நுட்பம், உள்ளிடுகள், செயல்முறைகள் தொடர்பாகப் பrஒலிப்

பதும், அவ்வப்பகுதிகள் பொருட்டு தேவைப்படுமிடத்து பொருத்தமான முறை யில் மாற்றங்களைப் புகுத் துவதும் ஆராய்ச்சியாகும்.
விவசாயத்தை மேம்படுத்தும் நவீன யுக்திகளும் நடைமுறைகளும் தொடர் பான பரிசீலிப்புகளும் கூட விவசாய ஆராய்ச்சியின் அ ம் சங்க ளே யா கும். எனினும் பெரும்பாலானோர் இதனை மட்டுமே விவசாய ஆராய்ச்சியாகக் குறிப் பிடுவது பொருத்தமறறதாகும்.
சிலவேளைகளில் ஒருநாட்டின் வெவ் வேறு பிரதேசங்களில் அல்லது பிராந்தியங் களில் செய்கைபண்ணப்படும் ஒரு பயிரினது ஒரே இனத்தைச் சார்ந்த வெவ்வேறு வர்க்கங்கள் அவ்வாறு செய்கைபண்ணப் படும் பிராந்தியத்தில் அல்லது வேறோர் பிராந்தியத்தில் உயர் விளைவையோ அல்லது குறைந்தளவு பீடைநோய்த் தாக் கங்களுக்கு உள்ளாகும் தனமையையோ கொண்டிருக்கலாம். இத்தன்மையை இவ் வர்க்கங்களை ஒரே இடத்தில் வெவ்வேறு பிராந்தியங்களில் நிலவும் நிபந்தனைகளின் கீழ் பயிரிட்டுப் பரிசீலனை செய்வதன்மூலம் மதிப்பிடலாம். இதன் மூலம் இயல்பாகவே ஓரிடத்தில் பயிரிடப்படும் பயிர்வர்க்கம் ஒன்று பிறிதோரிடத்துக்குக் கூடியளவு பொறுத்தமானதாய் இருப்பதைக் கண்டு கொள்ளலாம். ஆகவே இது போன்ற நட வடிக்கைகளும் ஆராய்ச்சிகளே. ஆராய்ச்சி பின் வாயிலாகக் கண்டறியப்பட்ட முடிவு கள் தொடர்ந்தும் பலபடிகளில் விவசாயி களின் பயிர்ச்செய்கை நிலங்களில் பரிசீவிக் கப்பட்டு உறுதி செய்யப்படவேண்டும். இதற்கு அவ்வப் பிராந்தியங்களில் வாழும் விவசாயிகளின் ஒத்துழைப்பும் அவர்களின் கல்வியறிவும் இன்றியமையாதவை ஆகும். இலங்கையில் இதற்கு ஓரளவு சாதகமான தன்மைகளே காணப்படுகினறன.
இவ்வாறாக இலங்கையில் விவசாய ஆராய்ச்சியின் மு க் கி ய த் துவத் தை உணர்ந்தமையினாலேயே அரசாங்கம் அர சியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை மேற்கொண்டபோது மத்தியதா வர பிறப் புரிமையியல் வளநிலையம் பெருந்தோட் டப் பயிர்கட்கான ஆராய்ச்சி நிலையங்கள் போன்ற ஒரு சில நீங்கலாக ஏனைய பிராந்திய விவசாய ஆராய்ச்சி நிலையங் கள் அனைத்தையும் மாகாணசபை நிர்வா கங்களின் கீழ் கொண்டுவந்தது.

Page 21
சிறிய நெற் கம நிறுவனக்கடன் வழி தோல்வி ; கையா பலவீனமா அல்
விளைச்சற்
மேச்செய்கை பொதுவாக மாறுபடும் காலநிலை, சுவாத்திய தாக்கம் ஆகியவற் றுக்கு உட்படுகிறது. சில சமயங்களில் பூச்சி பீடைகள் விளைச்சலைக் குறிப்பாகப் பாதிக்கிறது. பயிர்ச்செய்கை காலப்போகப் படி நடப்பதால் முதலீட்டுக்கான பலன் துரிதமாகக் கிடைப்பதில்லை. அத்தோடு உடல் உழைப்பையும் கிரமமாகப் பிர யோகிப்பதும் கஷ்டமாகும். காணித் துண் டாடல் அல்லது அளவில் சிறிய விளை திலங்களில் பயிரிடுவதால் செலவு கூடு வதுடன், மேற்பார்த்து நடத்தும் ஆற்ற லும் பாதிப்படைகிறது: சந்தைப்படுத்தும் பகுதிகளிலிருந்து வயற் பிரதேசங்கள் அாரத்திலிருப்பதும் வேறு சிக்கல்களைத் தோற்றுவிக்கின்றன. களஞ்சியப்படுத்தல், பதப்படுத்தல் போன்றவற்றில் உள்ள சிக்கல்களும் சிறிய நெற் கமக்காரர்களுக்கு இடைஞ்சலாகிவிடுகின்றன.
இலங்கையில் நெற் செய்கையின் நீடித்த ஸ்திரத்தன்மைக்கு மற்றும் பல சிக்கல்களும் ஊறு விளைக்கின்றன. குடும்ப உழைப்பை நம்பிப் பயிர் செய்யும் சிறிய கமக்காரர்கள் ஏராளம் பேர் இருக்கிறார் கள். அவர்களுக்குள்ளும் பலர் குத்தகைக் கமக்காரர்களாக இருக்கிறார்கள். விளைச் சலில் மேலதிகமாக உள்ளது விற்பனை செய்யப்பட்டபோதிலும், ஒரு மட்டான அளவிலேயே கமச்செய்கை வர்த்தகரீதியில் நடக்கிறது. நிலத்துக்கும், உடல் உழைப் புக்கும் உள்ள சந்தை மானம் இன்னும் வளர்ச்சி காண வேண்டியுள்ளது.
i ) {

க்காரர்களுக்கான ழங்கல் இலங்கையில் ாண்ட முறைகளில் லது நம்பகமற்ற தன்மையா ?
குத்தகைப்பணம், வட்டி, திருப்பிது செலுத்தும் கடன் தொகை போன்றவை காசாகவோ அல்லது பண்டமாகவோ கொடுக்கப்படுகின்றன. இப்படியான சிறு கமங்களின் முதலீட்டு மட்டம் தாழ்வாகவே உள்ளது. அதிகமான கம வேலைகளுக்கு அதிகம் சுவி வேண்டியிருப்பதால், அத னுடன், பார்க்கும்போது உற்பத்தி மட்ட மும் தாழ்வாகக் காணப்படுகிறது. இவை தவிர, கிராமங்களுக்கும், நகரங்களுக்கும் இடையில் நடைபெறும் வர்த்தகம் சம மில்லாதிருப்பதும், சந்தைப்படுத்தல்
குமுது குசும் குமார ஆராய்ச்சி பயிற்சி உத்தியோகத்தர்
வாகன ஏற்றியிறக்கல் பணி போன்றவற் றுக்காக முடக்கும், கிடைக்கும் பணமும் திருப்திகரமாக இல்லாதிருப்பதும் நெற் செய்கையினால் கிடைக்கும் ஆதாயத்தைப் பாதிக்கிறது.
இத்தகைய காரணிகளினால் இலங்கை யில் நெற்செய்கை நெருக்கடிக்கு உட்படு கையில், அதன் ஸ்திரத்தன்மை அத்தகைய காரணிகளின் வேறுபட்ட தொகுப்பிலேயே தங்கியுள்ளது. எனவே, கமக்காரர்களுக்குத் துணைவாரு வாய் வாய்ப்புக்கள் இருந்தாலே தவிர, நெற்செய்கைக்கு நிறுவனக் கடன் களை அவர்கள் பெற்று அறுவடைக் காலங்களின் திருப்பிச் செலுத்துவதற்கு, கமத்தொழிலில் ஸ்திரத் தன்மையைப்

Page 22
பாதிச்கும் பாரிய காரணிகள் தடையின்றிச் சாதகமாக இருக்கவேண்டும். ஆயினும் துணைவருவாய் உள்ள சில கமக்காரர்கள் தானும் பாரிய பயிர்ச்சேதம் ஏற்படும் போது, நிறுவனக் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய கால எல்லையினுள் சட்டமுடியாது தவிக்கிறார்கள். இதனால் எதிர்காலத்தில் குறைந்த வட்டிக்கடன் பெறும் தகுதியையும் இழக்கிறார்கள். நெற் செய்கையின் ஸ்திரத்தன்மையைப் பாதிக் கும காரணிகள் தொடர்பான தரவுகள் இலங்கையின் உலர்வலய மாவட்டங்களில் ஈரவலய மாவட்டங்களிலும் பார்க்கச் சாதகமாக இருப்பதைக் காட்டுகின்றன. பொதுவாகப் பயிர்ச்செய்கையைப் பாதிக் கும் பாரிய காலநிலை வேறுபாடு ஒரு ாமானிய நிகழ்வாகும். இதற்குப் பிர தான காரணமாக இருப்பது மழைவீழ்ச் யும், பருவப்பெயர்ச்சி மழையில் ஏற்படும் பெரும் மாறுதலுமேயாகும். பெரிதும் சீரற்ற மழைவீழ்ச்சி வரட்சியையோ, வெள்ளப்பெருக்கையோ ஏற்படுத்தி முழுப் பயிர்ச் செய்கையையே பாழடித்துவிடக் கூடும். காலந்தவறிப் பெய்யும் மழை அல்லது வரட்சி நிலை விளைச்சலையே கடுமையாகப் பாதித்துவிடும்.
பாரிய மழைவீழ்ச்சி மாற்றங்களினால் ஏற்படும் விளைவுகள் துணைப்பாசன வசதி களாகும் தண்ணீர்க் சட்டுப்பாட்டின் மூல மும் சீர்படுத்தப்படுகின்றன. உலர் வலயத் தில், அதிலும் சிறுபோகத்தின் போது மழை வீழ்ச்சி பொதுவாகவே குறைவாக இருக் கும. ஆயினும், அப்பிரதேசங்களில் பாரிய பாசனத்திட்டங்கள் நிறுவப்பட்டிருப்பத னால் பயிர்ச்செய்கை ஒரளவிற்கு ஸ்திரப் படுத்தப்படுகிறது. இதனால் வரட்சியின் தாக்கம் பரப்பளவிலும், எண்ணிக்கை அளவிலும் குறைந்துவிடுகிறது. அப்படி யிருந்தும் இன்னும் சிறிய பாசனத்திட்டத் தையும், மழையையும் நம்பிய பெரும் பான்மையான உலர்வலய பயிர் நிலம் காலநிலை மாற்றத்தினால் பாதிக்கப் படவே செய்கிறது. இரண்டு போகங்களுக் கும் பாசன வசதி பெறும் நிலப்பிரதேசம் கூட மோசமான காலநிலைத் தாக்கத்தி

லிருந்து முற்றாக விடுபட முடிவதில்லை : காலநிலை மாற்றங்கள் இப்பகுதிகளையும் கடுமையாகப் பாதிக்கின்றன. உலர்வலயப் பகுதிகளில் அவ்வப்போது ஏற்படும் வெள்ளப்பெருக்கினாலும் விளைச்சல் சேத. மடைகிறது.
ஈரவலயத்திலோ இரண்டு போகங்களி லும் போதிய மழைவீழ்ச்சியுண்டு. இங்கு தலையிடி தருவது அடிக்கடி ஏற்படும் வெள்ளப்பெருக்குகளேயாம். இ  ைவ போதிய வடிகால் வசதிகள் இல்லாத மை யால் ஏற்படுகின்றன. அத்தோடு வரட்சிப் பாதிப்பும் இப்பகுதிகளில் இல்லாமலில்லை. தண்ணீர்த்தேக்கம், சதுப்புத் தன்மை போன்ற பிரச்னைகள் வடிகால் வசதியின் மையால் ஏற்படுகின்றன.
இலங்கையில் சராசரி நெற்செய்கை நிலத்தினது பரிமாணம் மிகவும் சிறிது . உலர் வலய மாவட்டங்கள் பலவற்றில் நெற்செய்கை நிலங்கள் ஒப்பீட்டளவில் பெரிதாக இருப்பதுடன், அவற்றின் எண் ணிக்கையும் உயர்வாக உள்ளது. இலங்கை யிலே நெற்செய்கையில் ஈடுபடும் குடும்ப உறுப்பினர் உழைப்பு கணிசமாக இருக்கும் அதேவேளை, பாசன வசதிகொண்ட பல பகுதிகளில் கூலி உழைப்பைப் பெரிதும் பயன்படுத்துகின்றனர். ஈரவலய மாவட் டங்களில் இந்நிலை எதிர்மாறானது. வாரக் குத்தகை முறை ஈரவலயத்தில் அதிகமாக இருக்கையில், உலர் வலயத்தில் அது குறைவாகவுள்ளது. உலர்வலயப் பகுதிகளில் நவீன பயிர்ச்செய்கை முறை களும் பெருமளவில் கையாளப்படுகிறது. அத்தோடு உலர்வலயத்தில் அதிக சமச் செய்கை இயந்திரங்களும், உபகரணங்களும் பாவிக்கப்படுவதுடன் அவை பெரும் பாலும் கமக்காரர்களுக்குச் சொந்தமாக வும் உள்ளன. இவ்வகையில் உலர் வலயத் தில் கமச்செய்கை அதிக முதலீட்டையும் ஈர்க்கிறது. உலர் வலயத்துக்குள்ளேயே வாய்ப்பு மிக்க பகுதிகளும், வாய்ப்புக் குறைந்த பகுதிகளும் இருப்பதைத் தரவு க்ள் சுட்டிக்காட்டுகின்றன. இங்கும், பயிர் நாசம் ஏற்படுகையில் துணை வருவாய் அற்ற சிறிய கமக்காரர்களே பெரிய கமக் காரர்களை விடப் பாதிக்கப்படுகிறார்கள்
20 -

Page 23
இலங்கையில் நெற் செய்கையில் FF
கணிசமாக இ
எனவே, குறைந்த வட்டிக்குக் கிடைக் கும் நிறுவனக் கடன் வசதியினால் தொடர்ந்து நன்மை பெறக்கூடியவர்கள் ஸ்கிரமான அடிப்படையில் கமஞ்செய்ய வல்ல துணை வருமானம் உள்ளகமக்காரர்க ளேயார்ை நீண்டகால அடிப்படையில்பார்த் தால் அப்படியான சுமக்காரர்களுக்கே நிறு வனக் கடன் வெற்றியளிக்கும்.
கடன் எடுப்பவர்களது எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் தஈறந்துள்ள போதிலும், அண்மைக்காலத்தில் வழங்கப் பட்டுள்ள கடன்தொகை அதிகரித்துள் ளது. கடன் செலுத்தத் தவறிய சிறிய கமக்காரர்கள் தகைமை இழந்து ஒதுக்கப் பட நடுத்தர கமக்காரர்களும், பனம் படைத்த சுமக்காரர்களும் சலுகையுடன் கூடிய கடனை அதிக அளவில் பெற்றிருக் கிறார்கள் என்பதையே இது காட்டுகிறது. நிறுவனக் கடன் ஏற்பாடு பெரும்பான்மை
2.
 

படும் குடும்ப உறுப்பினர் உழைப்பு இருக்கின்றது
யான சிறிய கமக்காரர்களுக்கு உதவத் தவறிவிட்டதற்கான கர ஒனங்கள் சில வற்றை மேல்ே காணக் கூடியதாக இருந்த போதிலும், அவர்கள் தொடர்ந்தும் வெளி யார் கடனை ஏன் நம்பியிருக்கவேண்டி யுள்ளது என்பது விளக்கப்படவில்லை. இந் நிலைமைக்குப் பல காரணங்கள் உள்ளன.
முதலாஃதாக வர்த்தக வங்கிகள் எவ் வளவு தான் உத்திகளைக் கொண்டுள்ள போதிலும், வட்டிக்குப் பணம் கொடுத்து வாங்கும் தனிப்பட்டவர்கள் கையாளும் முறைகளை வங்கிகள் கையாளவும் முடி யாது. அவர்கள் கமக்காரரோடு வைத் துள்ள உறவுநிலையை வைத்துக்கொள்ள ம்ெ இயலாது. வட்டி முதலாளிமார் பொதுவாகக் கதிர் புேக்கும் கனத்திலேயே நின்று தங்கள் கடனை நெல்லாகவே பெற்றுக்சொள்வர். கமக்காரர்களுக்கும் பன்னத்தைக் கையாளாது கீ ட  ைஎ ச்
-

Page 24
செலுத்திவிடுதல் வசதியாகிவிடுகிறது. வட்டி முதலாளி கிராமத்திலேயே வாழ் வதும், அவருக்கும் கடனாளிச்கும் உள்ள உறவும் கடனை மீட்க வசதியாகிறது. பயிர் முற்றாக அழிந்தாலே தவிர, பயிர்ச் சேதம் ஏற்பட்டாலும் கூட கடன் கொடுத் தவர் கிடைத்த விளைச்சலிலிருந்து கடனை மீட்டுக்கொள்வார். அவரி கதிர் அடிக்கும் களத்தில் நிற்கும்போது இதற்கு முன் னிடம் கொடுப்பதைவிட வேறு வழி கமக் காரர்களுக்கு இருக்காது. முழுச்சேதம் ஏற் பட்டாலும் கூட, வட்டி முதலாளி ஊரவ ராகவும், உறவினராகவும் இருப்பதனால் திரும் டவும் கடன் கொடுக்க முன்வருவார். கடவை அடைக்க முடியாத பட்சத்தில் கடன் பெறுமதிக்குக் கமஞ்செய்யும் வார உரிமையைப் பெறுவார். அப்படியும் இய லாது போனால் சில சந்தர்ப்பங்களில் நெற் காலணியை தனக்குச் சொந்தமாக்கிக் கொள் வா. கடனை மீட்டுப் பெறுவதில் வட்டி முத 1ளி கடும் அக்கறை காட்டுகிறார். அதற்கு ஏற்படும் செலவோ மிகக் குறை வாக இருந்தபோதிலும், அதனையும் அதற்கு ஏற்படும் சிரமத்தையும் அவரது வட்டி வீதம் ஈடுசெய்துவிடுகிறது.
இரண்டாவதாக, வங்கிகளின் கடன் வழங்கும் திட்டத்தையே இங்கு ஆராய முனைகிறோம். கடன் பிரயோகம், கடனை மீளப்பெறுதல் போன்ற அம்சங்களைச் சீராக்கும் நோக்கத்துடனே வங்கிகள் பல கடன் திட்டங்களைத் தொடர்ந்து முன் வைத்து வந்துள்ளன. ஆயினும், கடன் தொடர்பான மேற்பார்வைப் பணிகள் வங்கிகளின் செலவையே பெருக்கியுள்ளன. மேற் பார்வைப் பணிசள் செலவை அதிக ரித்துள்ள போதிலும் பயிர் விளைச்சல் பாதிக் சப்பட்டமையால் கடன் கட்டாது விடும் நிசழ்வும் நடக்கவே செய்கிறது. இத னால் வங்கிகள் மத்திய வங்கியிடமிருந்து உத்தரவாதத்தையும் சடன் தவணைகளை மீட்டமைக்சவும் முனைகின்றன இவற்றால் அரசுக்கு ஏற்படும் செலவுகளே அதிகரிக் கின்றன. கடந்த காலங்களில் பயிர்ச்சேதத் திகை நிமித்தம் கடன் செலுத்தப்படாது போவ சமயங்களில் அத்தகைய கடன்கள்

தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இன்றும் அப்படியான கஷ்டங்களின் போது அத்த கைய தள்ளுபடிகள் செய்யப்பட வேண்டும்என வற்புறுத்தப்படுகிறது.
மூன்றாவதாக, பயிர்ச்சேதத்தைக் கமக்காரர்களுக்கு ஈடுசெய்யும் நோக்குடன் கொண்டுவரப்பட்ட பயிர்காப்புறுதி,
கமக்காரர் பெறும் வங்கிக் கடனுடன் பிணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கமக் காரர் தம் கடனைச் செலுத்துவதிலிருந்து பிசகா திருந்து, வங்கி க விட மிருந் து தொடர்ந்து தங்கள் கடனைப்பெற்று பயிர்ச்செய்கையில் ஈடுபட உதவும். ஆயி னும் பயிர்க் காப்புறுதித் திட்டம் நிலை மையை முற்றிலும் சீர்ப்படுத்தவில்லை. நஷ்டத்தைக் கணிப்பதிலும், நஷ்ட வீதம் வழங்குவதிலும் பயிர்க்காப்புறுதித் திட்டம் தங்களுக்கு gium u terras | |-Ul-1 தில்லை என பல கமக்காரர்கள் கருது கிறார்கள். இவர்கள் சுட்டிக்காட்டும் கார னங்கள் சில வருமாறு; ஏக்கர் ஒன்றுக் கான நட்டஈட்டு வீதம் மிகவும் குறைவு ஓரளவு பயிர்ச் சேதக் காரணங்கள் பல வற்றுக்கு நட்டஈடு கிடைப்பதில்லை; பயிர்ச்சேதத்தைக் கணிக்கும் (poõD உண்மை நிலைக்கு இசைவாக இல்லை; என்பனவாகும். அத்தோடு, பயிாச்சேதத் தைக் கணிப்பிடுவதில் ஊழல்கள், சார்புச் சலுகைகள் போன்றவை நடப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்நிலை காரணமாக அற்ப விஸ்தீரண நெல் நிலங்களே காப் புறுதி செய்யப்படுகின்றன. எனவே, பயிர் நட்டத்தை ஈடு செய்தற்குப் பயிர்க்காப் புறுதிச் சபைக்கு மானியமாக அரசு செலுத் தும் தொகைகூட கமக்கடன் திட்டத்தை செயற்படுத்துவதில் ஏற்படும் செலவின் ஒரு பாகமேயாகும். இவ்வகையாக, கமக் 5TTř கமக்கடனைச் செலுத் துவதில் பிசகாதிருக்சச் செய்ய y dir முனைந்த போதிலும், கடன்கள் செலுத் தப்படாதே இன்னும் இருந்துவருகின்றன,
எனவே, கமக்கடன் வழங்குவதும் திரும் பப் பெறுவதும் உற்பத்தித் துறையுடன் தொடர்பு பட்டிருப்பதிலேயே அதன்
(27ம் பக்கம் பார்க்க)
in

Page 25
கிராமியக் கமக்
கிராமிய கமக்கடன் பிரச்சனை கமத் துறையின் நீண்டகாலச் சிக்கலாக இருந்து வந்துள்ள போதிலும் அதற்கு இன்னும் சரியான தீர்வு காணப்படவில்லை. இப் பிரச்சனை இலங்கைக்கு மாத்திரமன்றி, இதனை ஒத்த ஏனைய பல நாடுகளுக்கும் பொதுவானதாகும். இப்பிரச்சனையின் சிக் கற் தன்மையையும் அதனைத் தீர்ப்பதி லுள்ள சங்கடங்களையும் இங்கு ஆராய் வோம்.
கமக்கடன் பெறுவதற்கான தேவைப்பாடு
கிராம மக்கள் கமக்கடன் எடுப்பதற் குக் காட்டிய ஆர்வத்துடன் இப்பிரச்சனை யும் தோன்றியது. கடன் தேவைப்பாடு நவீன கமச்செய்கை முறையுடன் பெரிதும் தொடர்புபட்டது. நெல், மற்றும் பயிரி வகைகளை விளைவிப்பதற்குக் கடைப் பிடிக்கப்பட்ட பண்டைய நுட்பங்களுக்குக் கடன் தேவைப்படவில்லை. காரணம் அன்று பிரயோகிக்கப்பட்ட நுட்பங்களுக் குப் பணம் அதிகம் வேண்டியிருக்கவில்லை. நிலத்தை உழு தற்குத் தங்களது மாடுக ளையே பாவித்தனர்; அறுவடை தொடர் பான வேலைகளுக்கு "கைம்மாற்று" அடிப் படையில் ஒருவருக்கொருவர் all-di உழைப்பைப் பரிமாறிக் கொண்டனர். தேவையான விதைப்பொருளை முன்னர் கிடைத்த அறுவடையிலிருந்து தேர்ந் தெடுத்து வைத்துக் கொள்வர். பயிருக்கான பசளையையும் இலை குழைகளைக் கொண்டும். ஆடு, மாடு, கோழி போன்ற விலங்குகளின் கழிவுகளிலிருந்தும் தயாரித் துக் கொண்டனர். பயிர்நோய்களுக்கும் கிரா மத்திலேயே தயாரிக்கப்பட்ட தூள்வகை களையும், கலவைகளையும் பாவித்தனர்.

கடன் பிரச்சனை
முன்னர் நிலைமை இப்படி இருந்த போதிலும், இந்த நூற்றாண்டின் பிற் பகுதியில் இந்நாட்டின் நுகர்வுத்தேவையை ஈடுசெய்தற்காக விளைச்சலையும் வரு வாயையும் பெருக்குதற்காக நவீன உக்தி களையும் அதற்காக அதிக பணத்தையும் செலவிட வேண்டியிருந்தது. இத்தகைய நவீன உத்திகள் பல அறுபதாம் ஆண்டுத் தொடரின் முற்பாகத்தின்போது முகிழ்ந்த பசுமைப் புரட்சியின்போது அறிமுகமாகின. இதன்படி, பல மடங்கு அதிக விளைச்சல் தரும் நெல், கோதுமை, உருளைக்கிழங்கு போன்ற பல பயிர் விதைகள் விருத்தி செய்யப்பட்டன. நாற்று நடுதல், நீர் இறைத்தல், கட்டுப்படுத்தல், பூச்சி அழித்
ஜே. கே. எம். டி. சந்திரசிறி,
ஆராய்ச்சி பயிற்சி உத்தியோகத்தர்.
தல், களை அழித்தல் போன்றவற்றுக்குப் பல உபகரணங்களும், உள்ளிடு சளும் பாவ னைக்கு வந்தன. பயிர்ச் சுழற்சி, இடைப் பயிர்ச்செய்கை போன்ற முறைகளும் கையாளப்பட்டன. புதிதாக அறிமுகமான விதை இனங்கள் குறுகிய காலத்தில் மிகுந்த விளைச்சலைத் தரவல்லனவாக இருந்ததைப்போலவே, பலவித பயிரி நோய்களுக்கும் உட்படக்கூடியனவாக இருந்தன. குறிப்பிட்ட விளைச்சலைப் பெறுதற்குக் குறித்தகாலத்தில் தண்ணிர் பாய்ச்சுவதுடன் இரசாயன உரவகைக ளையும் பிரயோகிக்க வேண்டியிருக்கும். இவற்றுக்காக அதிக பணம் முதலீடு செய் யும் அவசியம் ஏற்படுகிறது. முன்னரோ கமச்செய்கைக்கு இப்படியான தேவை இருக்கவில்லை. ஆனால், இப்போதே" அதிக பணம் செலவிடவேண்டியுள்ளது.
مسیس 8

Page 26
பயிர்ச்செய்கைச் செலவு அதிகரிப்ப பதற்கு மற்றொரு காரணமும் உள்ளது. ஜீவனோபாயத்துக்காகக் கமஞ்செய்யும் கமத்துறையில் பெரும்பாகம் குடியேற்றத் திட்டங்களும் வருகின்றன. இந்நிலங்களில் கமச்செய்கை ஒரு குறித்த கால எல்லை யினுள் நடந்து முடியவேண்டும். சுதந்தி ரத்துக்கு முன்னர் தொடங்கி ஆரம்பித்த காணிக்குடியேற்றத்தின் கீழ் இன்றுவரை ஏழு இலட்சம் ஏக்கர் நிலம் வருகிறது. தவிர, இந்நாட்டு நுகர்வுப் பயிர்களுள் முக்கியமாகவுள்ள நெல்விளைக்கப்படும் நிலப்பரப்பு மொத்தப் பயிரி விளை நிலத்தில் 42 சதவீதமாகும். எனவே, இத் தகைய பாரிய குடியேற்றத்திட்டங்களில் தண்ணிரை விரயமாக்காது காலஅட்ட வணைப்படி செம்மையாகப் ulturëar வேண்டும். பண்டைய முறைப்படி தற் போதைய கமக்காரர்களுள் பெரும்பான் மையினர் 5 ஏக்கர் நிலத்துக்கும் குறை வாக உடையவர்களே. கமக்காரர்களுள் 70 சதவீதத்தினர் 2 ஏக்கருக்கும் குறை வான நிலத்திலேயே பயிர் விளைவிக்கின் றனர்; 40 சதவீதத்தினர் 1/2 ஏக்கருக்கும் குறைவான நிலத்தைக் கொண்டுள்ளனர். அதலிருந்து இவர்கள் குறைந்த வரு மானத்தைக் கொண்டவர்கள் என்பது தெரியவரும்.
இத்தகைய நிலையில் உள்ளவர்களுக்கு கடன் அவசியப்படுகிறது. இவர்கள் தனிப் பட்ட முதலாளிமாரிடமிருந்து கடன்பட் டால் வருடாந்தம் அதிக வட்டிச்செலவு வரும். அவ்வட்டிக்காக அவர்கள் தங்கள் விளைச்சலை கடன்கொடுத்தவர் குறிக்கும் விலைக்கு விற்க வேண்டிய வாய்ப்பற்ற நிபந்தனைக்குக் கட்டுப்பட வேண்டி ஏற் படுகிறது. இதனால் வறியவர்களின் வறுமை மேலும் அதிகரிக்கும். ஆகவே சிறு கமக்காரர் சளை இந்நிலைக்கு உட் படுத்தாது, நவீன உத்திகளைக் கையாண்டு நாட்டின உணவு உற்பத்தியைப் பெருக்க அரசு பல தடவடிக்கைகளை எடுத்தது. இதன் படி வறிய சிறிய கமக்காரர்கள் é5.-6öv பெறவேண்டியவர்கள் எனக் கருதப்பட்டார்கள்.

கடன் பெறும் வழிகள்
இந்நூற்றாண்டின் இருபதுகளிலிருந்து கிராமியக்கடன் வழங்க அரசு ஏற்பாடு செய்திருந்தபோதிலும், 1960 ஆம் ஆண் டுத் தொடருக்குப் பின்னரே கடன் வழங் குதல் அவசியமானது. கமக்கடன் வழங் குவதற்காகவே முக்கியமாக மக்கள் வங்கி தொடங்கப்பட்டதோடு, இலங்கை வங்கி யும் அத்தகைய கடன வழங்க ஊக்குவிக் கப்பட்டது. இதன் பின்னர் ஹற்றன் நஷனல் வங்கியும் கமக்காரர்களுக்குக் கடன்வழங்க முன்வந்தது. இவற்றின் மூலம் கமக்காரர்களுக்குக் குறைந்த வட் டியில் கடன்கிடைக்க வகை செய்யப்பட் டது. அத்துடன் கிராமமக்களுக்கு உதவு வதற்கென அண்மையில் கிராம அபிவிருத்தி வங்கிகளும் திறக்கப்பட்டுள்ளன. மிரு டிங் களைக்கொண்டு நிலத்தை உழுது, கமச் செய்கைக் கால அட்டவணைக்கு ஏற்ப நிறைவேற்றிவிட முடியாது.
கிராமங்களில் கமக்காரர்கள் தங்கள் கமவேலைகளை பரஸ்பர உதவி அடிப் படையில் செய்து முடிக்கக்கூடும். ஆனால் இன்றைய குடியேற்றத் திட்டங்களில் அவ்வாறு செய்ய வசதிப்படும் எவச் சொல்ல முடியாது. மாட்டு உழவுக்கு அதிக நாட் பிடிக்கும். மாட்டினால தன வயலை உழுது முடித்துவிட்டு அடுத்தவ ருக்கு உதவப்போக முன்னர் உழவு காலம் கடந்துவிடும். இக்காரணங்களினால் பரஸ் பர உதவிக்காக குழல் இல்லாது போகி றது. அத்தோடு, குடியேற்றத் திட்டங் களில் பல்வேறு, இன, மத, குல பிர தேச மக்கள் குடியேற்றப்பட்டமையால் அவர்களிடையே கலாச்சார வேறுபாடு கள் இருப்பதால் பரஸ்பர உதவி வழங்கும் வழக்கம் ஏற்படுவதும் சாத்தியமில்லை. இவை காரணமாகக் கமக்காரர்கள் உழவு இயந்திரங்களைப் பாவிப்பதும் வேலைக்குக் கூலியாட்களைப் பிடிக்க வேண்டியதும் கட்டாயமாகிறது. இதனால் மிகுந்த செலவும் ஏற்பட்டது.
கடன் பெற வேண்டியவர்கள்
இவ்வாறு உழவு இயந்திரத்தையும் கூலித்தொழிலையும் பயன்படுத்திக் கமத்
'4 un

Page 27
தொழிலை விசாலமான விளைநிலங்களைக் கொண்ட குடியேற்றத் திட்டங்களில் மேற்கொள்ளவிருப்பதால் அதிகரித்த செலவு கமக்காரர்களுக்கு ஒரு பிரச்சனை யாகியுள்ளது. கமத்தொழிலை வயிற்றுப் பிழைப்பாகக் கொண்ட சிறிய கமக்காரர் களுக்கும், வறிய கமக்காரர்களுக்குமே குறிப்பாக இப்பிரச்சனை ஏற்படுகிறது. பணக்காரர்களான பெரிய நிலச்சொந் கக் காரர்களுக்கு இப்படியான பிரச்சனை எழமாட்டாது. நவீன உத்திகளைப் பிர யோகிக்க அவர்களுக்கு வசதியுண்டு. அப் படிப் பிரயோகிக்கும்போது அவர்களது ஆதாயம் பெருகும். அவ்வாறு கிடைக்கும் ஆதாயத்தை அவர்கள் மீளவும் முதலீடு செய்வார்கள். சீவியத்துக்குக் கமத்தொழி லைச் செய்பவனுக்கு வேறு வருமானம் இல்லை; கமச் செய்கையால் மேலதிக ஆதாயமும் இல்லை;
பெற்ற அனுபவம்
சிறிய கமக்காரர்களுக்குக் கமக்கடன் வழங்க அரசு நீண்டகாலமாக அக்கறை காட்டியபோதிலும் அம் முயற்சிகள் வெற்றி பெறவில்லை என்பது தெரியவந் துள்ளது. வழங்கிய கடன்களை மீளப் பெறுதல் சிக்கலாகியுள்ளது. கடந்த 22 வருட காலத்தினுள் அதாவது 1967 - 1988 கால எல்லையினுள் பயிர்செய்கைக்கான கடனாக ஏறக்குறைய 330 கோடி ரூபா கொடுக்கப்பட்ட போதிலும் 221 கோடி ரூபா மாத்திரமே அறவிடப்பட்டுள்ளது: 1989 இல் வழங்கிய கடனில் 33 சதவீதமே அறவிடமுடிந்தது. இதனால் கடனைத் திருப்பிச் செலுத்தக்கூடியவர்களுக்கு மட் டுமே வங்கிகள் கடன் கொடுக்கும் நிலை யில் உள்ளன. வங்கிக்கடன் செலுத்தாத வர்கள் எவரெனக் குறிக்கப்பட்டு மீண்டும் அவர்கள் கடன் பெறத் தகுதியற்றவர்க ளாக்கப் பட்டமை குறிப்பிடத்தக்க அம் சமாகும். இதனால் இப்படிப்பட்டவர்கள் தனிப்பட்ட முதலாளிமாரிடமிருந்து கடன் பெற முனைந்தார்கள்.
தற்போதைய கமக்காரர்களில் நூற் றுக்கு ஐம்பது பேர் தனிப்பட்டவர்களி டம் வட்டிக்குப் பணம் பெறுகிறார்கள்

எனத் தெரியவருகிறது. கடன் கொடுக்கும் உறவினர், நண்பர் இதில் அடங்கவில்லை. கமத்தேவை ஏற்பட்டதும் அவர்கள் அங்கு கடன் கிடைத்தாலும் எடுத்து கடும் நிபம் தனைசளுக்குக் கட்டுப்பட்டு மேலும் தரித் திர நிலைக்கு உட்படுகிறார்கள். இதனால் தனிப்பட்டவர்களிடம் கடன்பெறுதல் ஒரு பிரச்சனையாகியுள்ளது.
உறவினர், நண்பர்கள் நீங்கலாக ஏனையவர்களிடம் பெற்ற கடனுக்கு வரு டாந்தம் 30 சதவீதத்திலிருந்து 250 சத வீதம்வரை வட்டி செலுத்துகிறார்கள் எனத் தெரியவருகிறது. அரச வங்கிசளின் 9 சதவீதத்துக்குக் குறைந்த வட்டி வீதத் துடன் ஒப்பிடுகையில் இது எவ்வளவு அதிகம் என்பது புலப்படும். சிறிய கமக் காரர்கள் கடன்படும்போது தங்கள் விளைச் சலைக்கொண்டு கடனை அடைக்க இணங்க வேண்டி ஏற்படுகிறது. இதனால் கடன்கொடுத்தவர் நியாய விலைக்கு அல் லாது தனக்கு வசதிப்பட்டவிலைக்கே விளைச் சலை எடுத்து தனது முதலையும், வட்டியை யும் அறவிட்டுக்கொள்கிறார்; கமக்கார ருக்கோ நல்ல விலை தருபவருக்கு வி6ைாச் சலை விற்கவும் முடிவதில்லை, நல்ல விலை வரும் வரை நெல்லைக் களஞ்சியப்படுத்தி வைக்கவும் முடிவதில்லை.
குடியேற்றத் திட்டங்கள் பலவற்றில் கமக்கடன் செலுத்தப்படாதபோது, விளை நிலத்தில் பயிர் செய்யும் உரிமையைக் கடன் கொடுத்தவர் எடுத்துக்கொள்ளுதல் அல் லது வயலையே கணக்குப் பார்த்து வாங் கிக்கொள்ளுதல் அடிக்கடி நடக்கும் இக் கட்டான நிகழ்வுகளாகும். ஒரு காலத்தில் வயல் சொந்தக்காரர்களாக இருந்தவர்கள் அதிலேயே கூலி வேலை செய்பவர்களாக அல்லது குத்தகைக்குப் பயிர் செய்பவர்களா கும் சம்பவங்கள் அநேகம் குடியேற்றத் திட்டங்களில் நடக்கின்றன.
கமக்காரர்களை வட்டி முதலாளிமாரின் பிடியிலிருந்து மீட்பதானால் அவர்களுக் குக் குறைந்த வட்டிக்குக் கடன் கிடைக் கச் செய்யவேண்டும். அத்தோடு கடன் நிபந்தனைகளும் கடுமையாக இருக்கக்
5 ng

Page 28
கூடாது? இதனால் மட்டும் நிலைமை ஒரே படியாகத் திருந்திவிடாது. கமக்காரர் களுக்கும், கடன்கொடுத்த வங்கிகளுக்கும் இடையில் நல்ல உறவும் நிலவ வேண்டும் ஆயினும், பல காரணங்களை முன்னிட்டு இந்த இரு சாராருக்குமிடையில் இப்படி யான நல்லுறவு ஏற்பட முடியவில்லை. இதன் பலனாக அரசு எதிர்பார்த்தபடி க மக்காரர்களுக்குக் கடன் வழங்கப்பட வில்லை. கடந்த 22 வருடங்களிலும் 5.4 சதவீத விளை நிலத்தின் FrtriunfasGal airi கிக் கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில் இருந்து கிராமியக் கடன் வழங்குவதில் சிக்கல் இருப்பது தெரிகிறது. எனவே, இத னைத் தீர்க்க வழிகாணவேண்டும்8
கமக்காரனுக்குள்ள பிரச்சனை
கமக்காரன் அதிக சிரமங்கள் இல்லா மல் சீக்கிரத்தில் கடன் பெறவே முனை கிறான். ஆனால், வங்கியில் கடன் எடுக்க முன்னர் அடையாள அட்டை, காணி இடாப்பில் வயல் பெயர் பதிவு போன்ற பல விடயங்களைப் பூர்த்தி செய்ய வேண்டி ஏற்படுகிறது. இவ்வாறு வங்கியில் கடன் Guad விண்ணப்பித்த நாள் தொடங்கி, கடன் எடுத்து அதனை மீளக்கட்டும்வரை கமக்காரன் எத்தனையோ நாட்களையும் போக்குவரத்துக்குப் பணத்தையும் செலவிட வேண்டி உள்ளது. உலர் வலயத்தில் மழை வீழ்ச்சி குறைவாக இருப்பதுடன் ஒரு போசத்தில் மாத்திரம் பெய்கிறது. அங்கும் எதிர்பார்க்கும் காலத்தில் மழை பெய்யா தும் இருக்கும். இதனால் விளைச்சல் பாதிக்கப்படுவதுடன் பயிர்ச்செய்கையை நம்பியுள்ள சிறிய கமக்காரர்கள் தங்கள் கடனைத் திருப்பிச் செலுத்தும் ஆற்றலை யும் பாதிக்கிறது. பயிர் அழிவு ஏற்படும் போது வங்கிகள் எப்படியும் தம் கடனை சிறிய கமக்காரர்களிடமிருந்து அறவிட முடியாது போகிறது
விளைநிலங்கள் சிறிதாக இருப்ப தாலும், கடனைக் கட்டும் அளவுக்கு சிறிய கமக்காரர்சளுக்கு ஆதாயம் போதியதாக இல்லாதிருப்பதும் ஒரு பிரச்சனையாக வுள்ளது.
sts

தீர்வுகளும் விதப்புரைகளும்
சீவியத்துக்குக் கமத்தொழிலைச் செய் வோரது நிலையை மேம்படுத்தவும், அவர் களது கடன் தேவையை ஈடுசெய்யவும், கமத்தொழிலை நவீனமயப்படுத்தவும் ஆரம்பிக்கப்பட்ட வங்கிக்கடன் திட்டம் பல பிரச்சனைகளுக்கு உள்ளாகியுள்ளது. கடன் வழங்குவதில் ஏற்படும் தாமதம், வங்கிகள் விதிக்கும் நிபந்தனைகளைப் பூர்த்தி செய் வதிலுள்ள கஷ்டம், நிலையற்ற காலநிலை, இறிய விளைநிலங்கள் போன்றவை இத் தகைய பிரச்சனைகளுக்கு அடிப்படையாக வுள்ளன.
வங்கிக்கடன் திட்டம் வெற்றியடை வதற்குக் கமக்காரர்கள், வங்கிகள் ஆகிய இரு சாராரது ஒத்துழைப்பும் அவசியம். வங்கி அதிகாரிகள் கமக்காரர்கள் இருக்கும் இடங்களுக்குச் சென்று கடன் வழங்குவதும், கடன் பிணையாக ஒரு வயற் பிரதேசக் சுமக் காரர்கள் அனைவரையும் ஏற்பதும் வங்கித் திட்டம் வெற்றிகரமாகச் செயற்பட உத வும். இப்படியான ஒரு முறையை இலகு படுத்தினால் கடன்பெற முன்னர் நிறை வேற்றவேண்டிய நியதிகள் சில நீக் சப்பட லாம். இதனால் பல செலவுகளும் குறை யும். இதன் பலனாக வட்டி வீதமும் குறை யும். அப்போது கமக்காரர்களும் வங்கி களை அதிகம் நாடி வரச் செய்வர். பயிர் அழிவின்போது அறவிடப்படும் கடனை அடுத்த விளைச்சல் காலத்துக்குப் பின் போடுவது பற்றியும் அக்காலத்துக்கு வட்டி அறவிடாது இருப்பது பற்றியும் வங்கிகள் அக்கறை காட்டவேண்டும்.
இப்படியெல்லாம் கஷ்டப்பட்டு எடுக் கும் பணத்தினால் ஏற்படும் பயன் என்ன என்ற கேள்வியும் எழுகிறது. அத்தோடு பிணை நிற்பதற்கு ஒருவரைக் கண்டு பிடிப் பதும் கஷ்டமாகிறது. விளைச்சலை நேர காலத்துக்கு விற்று வாங்கிக் கடனைக் கட்டுவதிலும் சிக்கல்கள் பல ஏற்படுகின் றன. பயிர்ச்சேதம் ஏற்படும்போது காப் புறுதி பெறுவதும் கஷ்டமாகிறது. தவ ணைப்படி கடனைக் கட்டாவிட்டால் வட்டி பெருகி மேலும் சிக்கல் ஏற்படுகிறது. w
حسن 16

Page 29
வங்கிக்குள்ள பிரச்சனை
அன்றாட அலுவல்களுக்கு உதவுவதன் மூலம் கமக்காரர்கள் ஆதாயம் பெறத் துணை புரிதலே சகாய வட்டிக்குக் கடன் வழங்கும் வர்த்தக வங்கிகளின் நோக்க மாகும். அதனால் அவ்வங்கிகள் வழங்கிய கடனை அறவிடவே முனையும். இதற்குக் கூட படிவங்களைப் பூர்த்தி செய்யும் சில நடைமுறைகளை வங்கிகள் அனுசரிக்க வேண்டும். இது தொடர்பாகக் கமக்காரர் களுக்குள்ள பல சிரமங்களை நீக்குதல் கஷ்டமான காரியம். சில கமக்காரர்கள் வேண்டுமென்றே கடனைக் கட்டுவதைத் தட்டிக் கழிக்கின்றனர் எனவங்கிகள் அனுபவ வாயிலாகக் கருதுகின்றன. ஆகவே கடன் வழங்குவதில் சட்டரீதியான நியதிகளைப் பின்பற்றுதல் வங்கிகளைப் பொறுத்தவரை யில் அவசியமாகிறது. ஆவணங்களைத் தயாரிப்பதில் ஏற்படும் பலவித செலவுகளின் நிமித் தம் செங்கிகள் அறவிடும் வட்டி வீதத் தையும் குறைக்க முடியாது.
சிறிய நெற்.
(22ம் பக்கத் தொடர்) வெற்றி தங்கியுள்ளது. கமக்கடன்கள் பெரும் பாலானவை திருப்பிச் செலுத்தப் படாது போவதற்கு கம உற்பத்தி அமைப் பும் தனிப்பட்டவர்களது பயிர் நிலப்பரி மாணமுமே காரணங்களாகின்றன:
இவையே கமக்காரரது பணப்பலத்தை நிர்ணயிக்கின்றன. சிறிய நெற் கமக்காரர் களை மானியக் கடன்கள் மூலம் நிலைத் திருக்கச் செய்தல் தற்போதைய கமச் செய்கை அமைப்பைச் சாதகமற்ற கம சுவாத்திய நிலைமைகளின் கீழ் நீடிக்கச் செய்வதேயாகும். கடன் வழங்குதலையும் மீட்டலையும் மாத்திரம் செம்மைப்படுத் தும் உத்தி, பயிர்ச்செய்கைக்கு ஏற்படும்
தாக்கங்களையோ அல்லது அவற்றை எதிர்த்து நிற்கக்கூடிய கமக்காரர்க ளையோ நீக்கப் போவதில்லை. தற்
போதைய சூழலில் சிறிய கமக்காரர் களைக் காப்பாற்ற வேண்டிய அவசியத்  ைத ப் புரிந்து கொள் ள முடி யும். எனினும், உள் நாட் டு க் க ம த்

கமத்தொழிலுக்குள்ள பிரச்சனை
சிறிய கமக்காரர்களது முயற்சிகள் வெற்றி காண முடியாத வகையிலேயே இந் நாட்டுக் கமத்தொழிலின் தன்மை அமைதி துள்ளது. கடும் மழை கடும் வரட்சி, நிச்சய மற்ற காலநிலை போன்றவையே கமத் தொழில் எதிர்நோக்கவேண்டிய முச்கிய கார ணிகளாகும்.ஈரவலயத்தில் மழைவீழ்ச்சி கடு மையாக இருக்கும். அதுவும் எதிர்பார்க்க முடியாத விதத்தில் முன் பின்னாகவும், கூடி யும் குறைந்தும் பெய்யும். சிறிய வயல் நிலங் களை ஒர் அமைப்பின் கீழ் கொண் வெந்து ஒரே முகாமையின்கீழ்வைப்பதனால் செயற் பாடுகள் செம்மையாக நடைபெறுவதுடன் ஆதாயமும் அதிகரிக்கும். இதன் மூலம் உற் பத்திச் செலவுகளையும் பலவிதத்தில் குறைக்க முடியும். கூட்டுறவு அடிப்படை யில் உழவு இயந்திரங்கள் மற்றும் உபசர ணங்களை உடமையாகக் கொண்டிருப் பதனாலும், கமச் செலவுகளைக் குறைக்க Փւգպւն:
தொழிலை வளர்க்கையில் சிறியக மக்காரர் கள் தனிப்பட்ட கடன் வழங்குநர்களை நாடுவதையும் அதன் விளைவுகளுக்கு உள்ளாவதையும் தவிர்ப்பதைநோக்கமாகக் கொண்ட கமக்கடன் திட்டம் வெற்றிய டையவில்லை என்றே சொல்ல வேண்டும்
எனவே, உள்நாட்டுக் கமத்தொழில் வளர்ச்சியை மேம்படுத்தல், சிறிய நெற் கமக்காரர்களுக்கு மானியக் கடன் வழங்கி அவர்களை நிலைக்கச் செய்கல் ஆகிய இரு விடயங்களையும் வெவ்வேறாகவே அணுக வேண்டும். கடன் பெறத் தகுதி யுள்ளவர்களே கடன் பெற வேண்டும். கடனைப் பயன்படுத்தி உபரி விளைச்சல் காணக்கூடியவர்கள் தான் கடன் பெறும் தகுதி உள்ளவர்கள். அவர்களே கமத் தொழில் வளர்ச்சிக்குப் பங்களிப்புச் செய் யக்கூடியவர்கள் தங்களுக்கு அப்பாற்பட்ட காரணிகளின் நிமித்தம் கடன் வசதிக ளைப் பயன்படுத்த முடியாதிருப்பவர்க ளுக்கு மாற்று வழிகள் காணும் வரை மானியம் வழங்கப்படலாம்.
ܝܚ 27

Page 30
*கமநலம்
"கமநலம்" சஞ்சிகைக்கு இதுவரை பூர்வமான பணிக்கு உறுதுணை புரிந்தீர்க மார்சழி இதழுடன் உங்கள் சந்தா தொ6 ஆண்டு தொடர்ந்தும் "கமநலம்" சந்தா எமக்குண்டு.
இந்த ஆண்டுக்கான சந்தா தொ.ை யிடுவதில் அதிக செலவினத்தை நாம் எ விலையை 10 ரூபாவாக்கியுள்ளோம்,
இதுவரையும் உங்களை வந்தடைந்த கிடைத்த பயன்களை உங்கள் நண்பர்களு எமது பேரவா. ஆகவே, அவர்களையும் யத்தை உங்களிடம் விட்டுவிடுகின்றோம். { முயற்சியிலும், ஊக்கத்திலுமே தங்கியுள்ள
இங்கு நாம் உங்களுக்காக “கமதல உங்கள் நண்பர்களுக்கு அல்லது உறவினர் எங்களுக்கு எழுதுங்கள் அல்லது g')(35 ont பூர்த்தி செய்து அனுப்புமாறு கூறுங்கள்.
உங்கள் ஊக்கமும், உதவியும், உறு படுத்தும் என்பதில் ஐயமில்லை. “கமநலம் தாங்கி வரும் என உறுதிமொழி அளிக்கி
ays·
. இங்கே
"கமநலம்" சஞ்சிகையில் ஒரு வரு கட்டளையை/அஞ்சற்கட்டளையை இத்து
Golu uuri : • . . . . . . . . . . . . • • • • • • • ** ****
су да ћ:................. -- - - - - - - - - - - - - - -
is see ess so 9 se v 8 s
அனுப்ப வேண்டிய முகவரி:-
DIRE Agrarian Research
114, Wijera
COLOM

தாதாரருககு
பும் சந்தாதாரராக இருந்து எமது ஆக்க ள். இதற்கு உங்களுக்கு நன்றி கூறுகிறோம். கை முடிவடைந்து விட்டது. எனினும், இந்த தாரராக இருப்பீர்கள் என்ற நம்பிக்கை
க 40 ரூபாவாகும். "கமநலத்தை வெளி ாதிர்நோக்குகின்றபடியால் இச்சஞ்சிகையின்
"கமநலம்" சஞ்சிகைகளினால் உங்களுக்குக் ம், உறவினர்களும் பெறவேண்டும் என்பதே
"கமநலம்" சந்தாதாரராக்கும் கைங்கரி இக்கைங்கரியத்தை நிறைவேற்றுவது உங்கள் து என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
ம்" சந்தா படிவத்தை வெளியிட்டுள்ளோம். "களுக்கு சந்தாபடிவம் தேவை என்றால் திரியான படிவத்தை தயாரித்து அதைப்
துணையும் எங்களுக்கு உற்சாகத்தை ஏற் * தொடர்ந்தும் தரமான கட்டுரைகளைத் றோம்.
syfilä50|úb ... SLLLLLLLL LLL 0LLLLL SSL0LLL S LSLL L S 0L LLL0LLL LLLL CCCCC
டச் சந்தாவாக 40 ரூபாவுக்கான காசுக் டன் அனுப்புகிறேன்.
S SLSLSLSSS LLC C L LLL L SLLLL LL LLLL LLLLLL LSLLLLL LLLL0L0 0LL LL0LL
CTOR, and Training Institute, ma Mawatha,
BO — 7.
8 -

Page 31
RECENT PUBLICATION
RESEARCH AND TR
Research Study
O SOCIO ECONOMIC AND CONDITI
HOLDING SECTOR IN SRI LANK Asoka C. K. Sepala
A NEO TRADITIONAL INSTITUTI MANAGEMENT Kasyanathan, N. P., Manoharan, R.
SOCIAL SCIENCE RESEARCH MET SOCIAL SCIENCE RESEARCHERS Oreilly, J. P., Nikahetiya, S.B.R
SHIFTING FARMING-TOWARDS FOUR RAINFED FARMING SYST Fredrick Abeyratne, Gunasena, H.P.
INPUT USE EFFICIENCY AND PR PRODUCTION
GAL OYA FARMER ORGANIZAT AND PROSPECT Ranasinghe Perera, I.
GAL OYA WATER MANAGEMEN' MID-TERM IMPACT ASSESSMEN Widanapathirana, A. S., Brewer, J.
A PROCESS EVALUATION OF CO KURUNEGALA DISTRICT-SUB S INTEGRATED RURAL DEVELOPM Henegedara, G. M.
SMALLIHOLDIER RUBBER REHAB ECONOMIC CONDITIONS OF RUI SRI LANKA -- A PRE-PROJECT ST KALUTARA AND KEGALLE DIST Jayasena, W. G., Herath, H. M. G.
A PRELIMINARY ASSESSMENT O MAJOR IRRIGATION REHABILIT, CASE OF TANK IRRIGATION MC Abeysekera, W. A. T.

S OF THE AGRARIAN
AINING INSTITUTE
Price
ONS OF COCONUT SMALL A
50.00
ON FOR RRIGATION WATER
B. 40.00
HODOLOGY A MANUAL FOR
35.00
STABILITY-A STUDY OF EMS IN SRI LANKA M., Ten nakoon, D. 45.00
ODUCTIVITY OF RICE
10.00
ION PROGRAMME PROGRESS
20.00
T PROJECT: T
D. 50.00
CONUT CULTIVATION IN THE TUDY OF THE KURUNEGALA MENT PROJECT 30.00
ILITATION PROJECT: SOCIO 3BER SMALL HOLDERS IN UDY OF RATNAPURA,
RICTS
50.00
F THE PERFORMANCE OF A ATION PROGRAMME: THE DDERNIZATION PROJECT 25.00

Page 32
PUBLICATIONS
Research Series
CHANGE AND CONTINUITY IN SYSTEMS Abeyratne, Mrs. S., Jaya
COMMUNITY FORESTRY PROJEC Gamage D., (1987) (76)
AGRICULTURAL CREDIT IN GA SETTLEMENT SYSTEM Wickram
IRRIGATION AND WATER MAN SETTILEMENT SCHEME OF SRI L WATER MANAGEMENT PROJECT
A STUDY ON THE EMPLOYMEN" OYA IRRIGATION AND SETTLE) Senanayake, S. M. P., Wijetunga, L,
SOCIO ECONOMIC SURVEY - THE AREA (KURUNEGALA DISTRICT Jayantha Perera Dr., Kumarasiri Pa
A STUDY OF NGN-CONVENTION IN SRI LANKA Chandrasiri, A., K Ranawana S., (1987) (82)
KURUNE GALA INTEGRATED RU EX-POST EVALUATION
Sepala A. C. K., Chandrasiri, J. K. | Tudawe, III., Abeysekera, W. A. T., W
KIRINDI OYA IRRIGATTON AND MIDPROJECT EVALUATION. Gamage, D., Wanigarathne, R. D., V Tudawe, I. (1988) (85)
INQUIRIES :
DIRECTOR, Agrarian Research and T 1 14, Wijerama Mawatha, Colombo-7.
PRO INTED AT THE KUMARAN PRESS

OF THE ARTI
Price
ILLAGE IRRIGATION
tha Perera Dr. (1986) (7:5, 45.00
T BASELINE SURVEY
60.00
L OYA IRRIGATED singe G. (1987) (77) 25.00
AGEMENT IN A PEASANT ANKA (A STUDY OF THE
OF MINIPE) (1987) (78) 45.00
I GENERAT1ON IN KIRIND1 MENT --
D II. (1987) (79) 35.00
GAL.GAMUWA A. S. C. ) Senakarachchi R. B., thirana (1987) (80) 30.00
AL ANIMAL FEED RESOURCES Kariyawasam T.,
65.00
JRAL DEVELOPMENT PROJECT
M. D., Gamage, D., Jayasena, W. G., anigarathne, R. D. (1988) (84) 70.00
SETTLEMENT PROJECT :
Vijetunga, L. D. I.,
50.00
aining Institute, P. O. Box 1522
20, DAM STREET COLOMBO-2,