கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கலப்பை 2003.07

Page 1
ISSN: 1328-1623 களம் 10 ஏப் 1
gV ND p R O ჭჯ°. 56)6.555th UI
Kalappai 37
 
 

Aus. S2.50

Page 2
கலப்பை 2003 واطيب
H
SAI DRIVING
SCHOOL
by an Experienced Instructor
Contact:
ANANDARAJAN(Raj)
Phone: 9763 751.5/9763. 1620
Mobile: 0411 091 013
இணையத்தில் தமிழ்க் கையேடு 2003/4 NSW TAMIL GUIDE 2003/4 On Internet Web Site for your convenience VISITWWW.tamilguide.com.au
தமிழ்க் கையேட்டின் 2003/4 ஆண்டுக்கான பதிப்பு இப்போது இணையத்தில் வெளிவந்திருக்கின்றது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத் தருகின்றோம்.
இதுவே சிட்னித் தமிழருக்கென வெளிவரும்
சமூக வர்த்தகக் கையேடு இதுவாகும். இதனை சிட்னியிலுள்ள தமிழ் வர்த்தக நிலையங்களிலும் இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம்.
தொடர்பு 0402012 124
ஒன்பாதாவது ஆண்டு நிறைவு மலர்

களம் 10
ଲା ।
ஜி
KALAPPA
r
மனித மனத்தை உழுகின்ற "கலப்பை" உலகத் தமிழர்தம் உணர்வை உயர்த்தி நிற்கும் “கலப்பை, அவுஸ்திரேலிய பட்டதாரிகள் தமிழர் சங்க ஆதரவில் வெளிவரும் காலாண்டுச் சஞ்சிகை
560s Jijé :-Aus. $2.50 ஆண்டுச்சந்தா 6TbT (6) :- Aus. S10.00 Q6l6fbT(B) :- Aus. $20.00 பிரசுரிக்கப்படாத படைப்புகளைத் திரும்பப் பெற இயலாது. ஆசிரியர் குழுவுடன் தொடர்பு கொள்ள. Tele 612 - 4737 9007
"KALAPPA” P.O. Box 40, HOMEBUSHSOUTH, NSW2140 AUSTRALIA Email:
ஏர் 1
kalappai(а)yahoo.com ノ
ஒன்பாதாவது ஆண்டு நிறைவு மலர்
பொதுப் பரீட்சை. 2 அந்தக் காலத்து யாழ்ப்பாணம்.5 UNIFUNDabo6voisasibub 2003. 11 காத்தவன் கூத்து. .........13 வாழ்க்கை நிலை ஏழு. 19 தந்தப் பேழை. 21 தெ/மகாஜனக்கல்லூரி. 31 வாழா வெட்டி வேர்கள். 37 தாய்க்குப் பின் தாரம்.45 நட்பு 48 Miridanga Arangetram.................. 49 பரிசு பெற்றோர் பட்டியல் 2003.51 என்று தணியும் இந்த. 55 வெளிநாடுகளில் முதியோர். 57 இறுதி யாத்திரை . . .................. 58 உலகத்தை உலுப்பிய பொல்லாத
ஒரு நாள் . 59
萃 བརྗེ་ལས་ཀྱི་
அட்டைப்படம்: திரு. A. J. மரியதாசன் வடிவமைப்பு: பொ. கேதீஸ்வரன் ஓவியம் :
திருமதி மனோ ஜெகேந்திரன்

Page 3
கலப்பை
2003 ,2وا26ے
கலப்பை பத்தாவது ஆண்டில் காலடி வைத்திருக்கின்றது. 37 ஆவது இதழ் வெளிவந்துள்ள நிலையில் பொதுப் பீட்சை பற்றி சற்று சிந்திக்கலாம் என்று விரும்புகின்றோம்.
தமிழர் புலம்பெயர்ந்த நாடுகளில் தமது மொழி, மதம், கலாசாரம் பற்றி சிந்தித்து, இவை காலாகாலமாக எமது பரம்பரைக்குக் கடத்தப்பட வேண்டும் என்ற நோக்கில் இயங்கி வரும் பல அமைப்புக்கள் பற்றியும், அவை சார்ந்த நடவடிக்கைகள் பற்றியும் அறிந்திருக்கின்றோம். இதன் பலன்களை நாம் இன்று கண்டும், அனுபவித்தும் வருகின்றோம்.
தமிழ் மொழியை பேணவும், எமது சிறார்களுக்கு கற்பிக்கவும் அமைக்கப்பட்ட பல தமிழி கல்வி நிலையங்கள் அவுஸ்திரேலியாவின் பல மாநிலங்களிலும் உள்ளன. இவற்றின் நிர்வாகத்தை கவனித்து வருவது அந்தக் கல்வி நிலையங்களின்
கூட்டமைப்பு. இநீதகீ கூட்டமைப்பின்(குறிப்பாக சிட்னியில்) முயற்சியினால் இநீததி தமிழி கல் விநிலையங்கள் , அரசாங்க அங்கீகாரத்துடனும் , அரசாங்க
உதவிகளுடனும் சிறப்பாக இயங்கி வருகின்றன. இந்தக் கூட்டமைப்பின்
ஊடாக பல நிலைகளிலும் மாணவர்கள் படிக்கக் கூடிய பாடநூல்கள் தயாரித்து வெளியிடப்பட்டதுடன், பாடசாலையின் உயர்தரப் பரீட்சையில் தமிழை ஒரு பாடமாக கற்பிக்க வழிவகுக்கப்பட்டது. எமக்குக் கிடைத்த ஒரு பெரு வெற்றியே. அதனி அனுபவிக்கும் மாணவர்களும், அதனால் மனங்குளிரும்
பெற்றோரும் பலர். இந்த அரிய சந்தர்ப்பத்தை உதாசீனப்படுத்தும் சிலரும் எம்மிடையே இருக்கத்தான் செய்கிறார்கள்.
LJ 6ს) 60) წ0]f
இந்தப் பொதுப் பரீட்சை மாணவர்களை மாநில அளவில் எடைபோடுவதுடன், பலரையும் தமிழ் கற்க ஊக்குவிக்கின்றது. எப்படியும் தமிழ் படிக்கலாம் என்ற நிலைவிலகி, இப்படித்தான் தமிழ் படிப்பிக்க வேண்டும் என்ற நிலை உருவாகியது.
இதேபோல அவுஸ்திரேலிய பட்டதாரிகள் தமிழர் சங்கத்தினால் சிட்னியிலும், கன்பராவிலும் நடாத்தப்படுகின்ற தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகளையும் கருதலாம். தனியே தமிழ்ப் பாடசாலைகள் (தமது அந்த நீதப் பாடசாலைகளில்) நடாத்தி வந்த போட்டிகளை மாநில அளவிற்கு கொண்டுவந்து, தமிழ் மாணவர்களை
மாணவர்களுக்கு
முதல் முதலில் ஊக்கப்படுத்தியவர்கள் அன்றைய சிட்னிப் பல்கலைக்கழக தமிழ்
2
ஒன்பாதாவது ஆண்டு நிறைவு மலர்
 

2003 ,2واجہ
கலப்பை
ணவர்களே. சிட்னி தமிழ் மன்றமும் சந்தனைச் சுடர் போட்டிகளை சிட்னியில் திறம்பட நடாத்தி வருகின்றனர். தமிழ் மொழியில் பல மதம் சார்ந்த போட்டிகளும் நடாத்தப்பட்டுவருகின்றன. இப்படியாக தமிழிலும், எமது மதங்களிலும் மாநிலப் பொதுப் போட்டிகள் அல்லது பரீட்சைகள் பல இருக்கின்றன. இவைமூலம் ஒரு பொது முறை கையாளப்படுகின்றது. இதன்மூலம் மாணவர்கள் தேர்ச்சியடைகிறார்கள். இறுதியில் மாணவர்கள் அங்கீகாரம் பெறுகின்றனர். அவர்களது பெறுபேறுகளும், தேர்ச்சியும் பிற்காலத்தில் மேம்பட்ட தொழில் வாய்ப்புப் பெறவும் உதவுகின்றன.
புலம்பெயர்ந்த தமிழர்கள் மொழிமீது கொண்டிருக்கின்ற பற்றுப்போல, கலை மீதும் அதிக நாட்டம் காட்டுவது கண்கூடு. இங்கு வாழுகின்ற சிறுவர் ஒவ்வொருவரும், ஏதோ ஒருவகையான கலையை பயில்வது பொதுவான விடயம். இந்தக் கலைகளை பயிற்றுவிப்பதற்குப் பல ஆசிரியர்களும் கலைக் கூடங்களும் நல்ல சேவையாற்றிவருகின்றனர். கலை சார்ந்த இந்த அமைப்புக்கள், பொதுவாக தனிப்பட்ட நிறுவனங்களாகவே காணப்படுகின்றன. யார், யாரிடம் எந்தக் கலையை பயின்றாலும், அந்தக்கலையில் அடிப்படைகள் பேணப்படவேண்டும். அந்தக் 606) 6D சரியாக, அதனி விதிமுறைகளுக்கிணங்க மாணவர்கள் கற்றுத் தேறவேண்டும். இந்த வகையில், வட இலங்கை சங்கீத சபை நாடளாவியT.T. Thurairajah's ad if its 65 560) sus, 6f 65
பரீட்சைகள் வைப்பதன் மூலம்
மாணவர்களின் தராதரத்தை நெறிப்படுத்தி வருகின்றது. பல்கலைக்கழக மட்டத்தில் கலையை ஒரு பாடமாகவோ அல்லது பாடநெறியாகவோ பயிலாத மாணவர்களுக்கு இந்தப் பீட்சை முறை கைகொடுக்கின்றது.
எமது கலைவடிவங்களில் பல்கலைக்கழக கற்கை நெறி இல்லாத அவுஸ்திரேலியா போன்ற தமிழர் புலம்பெயர்ந்த நாடுகளில் இதுபோன்ற முறையையோ அல்லது அதற்கொப்பான ஒரு நெறிமுறையை (with syllabus) இங்குள்ள மாணவர்களுக்கும் அறிமுகப்படுத்தினால் இருக்கும் என்பது ஒரு அபிப்பிராயம். இந்த கற்கை நெறிகளில் ஈடுபட்டவர்கள் பலர்
பயனுள்ளதாக
எம்மிடையே இருக்கலாம். அவர்கள் உதவியுடன் இங்குள்ள கலைக்கூடங்களும், அவற்றின் ஆசிரியர்களும் இதற்கான
வழிமுறைகளை வகுக்கவேண்டும் என்பது
எமது அவா! மாணவர்கள்
இதனால் நிட்சயம் பயனடைவார்கள், அவர்களுக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கும். வாசர்களாகிய உங்கள் கருத்துக்களையும் அறிய விரும்புகின்றோம்.
உழவன் உள்ளத்திலிருந்து
ஒன்பாதாவது ஆண்டு நிறைவு மலர்

Page 4
கலப்பை
2003 وا9bي
70 COUNTRY DRIVE, CHERRYBROOK NSW 2126
Ph: (02) 9634 1170 -
Fax: (O2) 9659 1555
THE CHAMBERS-LEVEL11,370 PTT STREETSYDNEY 2000
Ph: (O2) 9
267 8810
* Administrative LaW 8 Business Agreements & Banking / Finance
X Bankruptcy
Commercial Leases
Criminal Matters Corporation Law Debts / Insolvency & Environmental Law & Family Law & General Legal Advice & Immigration Problems
Public Liability Claims Personal Injuries &
Damage Claims & Power of Attorney
Real Estate Sales & Purchases Small Business Advice
Traffic Offences & Trade Practices Law & Wills Probates & Estate Claims 8 Workers Compensation
For Appointments call: (O2) 9634 1170
ஒன்பாதாவது ஆண்டு நிறைவு மலர்
 
 

2003 .وہابیہ
கலப்பை
LITSE 10
áğózűzlagay :
குழந்தைகள் வளர்ந்து வரும்பொழுதே பெற்றோரும் மற்றோரும் அவர்களை அணைப்பதும், கொஞ்சுவதும், அதே நேரத்தில் அவர்களை விரட்டியும் பயமுறுத்தியும், அவர்கள் மனதைக் கலக்கியும் விடுவார்கள். பிள்ளைகள் பெற்றோருடைய சொல்லுக்குக் கட்டுப்பட்டு அவர்களுடைய அபிலாசைகளுக்குத் துணைபோகவேண்டும் எனபது நியதி. மீறினாலி தண்டிக்கப்படுவார்கள
வீட்டில் பிள்ளைகளைத் தன்னிச்சைக்குத் திரியவோ, விளையாடவோ விட மாட்டார்கள் . அவர்கள் பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பியதும் பெற்றோர் செய்யும் வேலைகளில் தாங்களும் சிறிதளவாவது பங்குகொள்ள வேண்டும். பள்ளிக்கூடம் போகவேண்டும், வீட்டு வேலை களில் உதவ வேணி டுமி, சமைதி து வைதீதிருக்கிற சாப்பாட்டைதீதானி சாப்பிடவேண்டும், வீட்டுப் பாடங்களைப் படித்துவிட்டுத்தானி நிதி திரைக்குப் போகவேணி டும். அநேகமாக எல்லா வீடுகளிலும் இப்படித்தான் சிறுவர்களின் வாழ்க்கை. சில பிள்ளைகள் அடம்பிடித்து அழுது குளறி அனுமதி எடுத்துக்கொண்டு விளையாடப் போய் விடுவார்கள். அப்படிப் போபவர்கள் பொழுதுபடமுன்னர் வீட்டுக்குத் திரும்பவேண்டுமென்று கட்டாயம்.
பிள்ளைகள்
கீழ்ப்படிவுடன் வளரவேண்டும் என்பது ஒரு எழுதாத விதி. முதலில் அவர்கள் பெற்றோருக்குக் கீழ்ப்படிய வேண்டும். பிள்ளை ஏதாவது குளப்படி செய்திருந்தால், எடே/ வாடா இங்கை என்று தகப்பன்
கூப்பிட்ட உடனே பிள்ளை என்னவேலை செய்து கொணர்டிருந்தாலும் அதை விட்டுப்போட்டுத் தகப்பனின் காலடியில் வந்து கை கட்டிக் கொண்டு நிற்கவேண்டும். அப்படிப் பழக்கி வைத்திருக்கிறார்கள் அந்தப் பெற்றோர். தநீதை கேட்குமி கேள்விகளுக்கு உடனுக்குடன் பதில்கள் வர வேண்டும். கணங்கினால் அடி விழும். அடிகள் விழுவது பலவிதம். சில பெற்றோர் கைகளைப் பாவிப்பார்கள் - காது புளித்துப் போகுமீ. சிலர் இதறி கெனிறு வாங்கிவைத்திருந்த பிரம்பால் முதுகிலோ, காலிலோ, குண்டியிலோ சாத்துவார்கள். இன்னும் சிலர் வேலிக்கதியாலிலிருந்து தடி முறித்துவந்து அதைப் பாவிப்பர்கள். இது ஒரு விதத்தில் பரவாயில்லை எனலாம். ஏனென்றால், வேலிக்கு நடந்துபோய் திரும்பி வருவதற்கு எடுக்குமி நேரத்தில் தகப்பனுடைய கோபம் கொஞ்சமாவது தணிந்து விடக்கூடும். அத்துடன், தாய் குறுக்கிட்டு பிள்ளைக்கு அடிவிழாமற் தடுக்கவும் வாய்ப்புண்டு.
தமது பெற்றோர் அல்லது தமக்கு மூத்தோர் முன்னிலையில் இளையவர்கள் கதிரையிலாவது திண்ணையிலாவது உட்காரமாட்டார்கள். ஒன்றில் எழுந்து கதிரையில் மூத்தோரை அமரச்செய்வார்கள், அல்லது நிலத்தில் சப்பாணிகட்டி உட்காருவார்கள். முதியோர் வருவதைக் கண்டால் இளையோர் உடனே எழுந்து நிற்பார்கள். தெருவில் போகும் போது எதிர்ப்பட்ட முதியோருக்கு மரியாதைகாட்டி, ஒடுங்கி, ஒதுங்கிப் போவார்கள். மூத்தோர்
ஒன்பாதாவது ஆண்டு நிறைவு மலர்

Page 5
கலப்பை
2003 .وہابیہ
ஏதாவது வேலை ஏவினால், இளையோர் அதைத் தட்டிக்கழிப்பது மிகவும் அபூர்வம்.
கல்வியின் பயனர் :
அந்தக் காலத்தில் இப்போது gobius Gu Toi (Kindergarden), முன்பள்ளி முதலிய குழந்தைகள் கல்வி ஆரம்பவகுப்புகள் இருக்க வில்லை. 4, 5 வயதில் ஏடு தொடக்குவார்கள். அதுவும், விஜயதசமி தினத்தன்று, அல்லது குழநீதையினி வயதினி படி அது வசதியில லாவிடில் , ஒரு நல்ல நாளாகப்பார்த்து, அக்கிராமத்திலுள்ள ஒரு பெரியாரைக் கொண்டு குழந்தைக்கு ஏடுதொடக்குவார்கள். ஒரு சுத்தமான இடத்தில் மணல் பரப்பி, அந்தப் பெரியார் பிள்ளையை அ, ஆ வாயாற் சொல்லும்படி கற்றுக்கொடுத்தும், பின்னர் பிள்ளையின் வலது சுட்டுவிரலைக் கொண்டு, அந்த மணலில் அ, ஆ என்று அந்த மணலில் எழுதக் காட்டிக் கொடுத்தும் வாழ்த்திவிடுவார். பின்னர் பள்ளிக்கூடத்தில் சேர்த்து விடுவார்கள்.
குழந்தை, சிறுவன் (சிறுமி) ஆகி, வளர்ந்து
இளம் பருவத்தை அடையும் வரை பெற்றோர்கள் அவரது கல்வி முன்னேற்றத்தில்
கணினும் கருத்துமாக இருப்பார்கள்.
அநேகமான மாணவர்கள் 10ஆம், 12ஆம்
வகுப்புடனி பள்ளிக்குப் போவதை நிறுத்திக்கொள்வார்கள். 12ஆம் வகுப்புச் சோதனையில் திறம் சித்தி எய்தினால்
பல்கலைக்கழகம் புகுவார்கள். அதுகூட, பணம் படைத்தவர்களுக்குத்தான் அந்த அதிட்டம் கிடைக்கும்.
அக்காலத்தில் புத்தகங்கள் இப்போது இருப்பனபோல் பருமனாகவும் எண்ணிக்கை அதிகமாகவும் இருக்கவில்லை. உயர்ந்த வகுப்புக்குக்கூட சுமாரான அளவான புத்தகங்களே பாவிப்பார்கள். அப்பியாசக் கொப்பிகளும், 2, 3 புத்தகங்களும்தான் மாணவர்கள் வகுப்புக்குத் தினமும் கொண்டு செல்வார்கள்.
பெரும்பாலோர் வேட்டி, சட்டையுடன்தான் பள்ளி செல்பவர்களானதால், வேட்டியை மடி தீது, பிணி பக்க மடிப்புக்குள் (சணிடிக்கட்டுக்குள்) புத்தகங்களை வைத்துக் கொணி டு கைகளை வீசி நடந்துபோவார்கள். தேவையேற்பட்டால் அத்துடன் ஒடவும் செய்வார்கள்.
புத்தகங்களைப் பயபக்தியுடன்தான் பாவிப்பார்கள். தற்செயலாகப் புத்தகத்தில் கால் பட்டுவிட்டால், உடனே குனிந்து அதை தீ தொட்டுக் கணிணில் ஒற்றிக்கொள்வர்கள். பள்ளிக்குப் போகும்போது புத்தகங்களை ஒன்றாகச் சேர்த்து (துணியால் செய்த) வாரால் கட்டிக்கொண்டு போவார்கள். ஏதாவது அவசர அலுவல் வந்துவிட்டால், அந்தக் கட்டை அப்படியே துாக்கி ஒரு பக்கத்தில் போட்டுவிட்டு, அலுவல் முடிந்ததும் திரும்ப வந்து எடுப்பார்கள். (இப்போதைய மாணவர்களிற் சிலர் அப்புத்தகக் கட்டைப் பந்தாடுவதும் உண்டு) Y
வெள்ளைக்காரன் அரசாண்ட காலம் அது. படித்தவர்களுக்குத் தான் உத்தியோகம் கிடைக்கும். வயலை உழுது நெல் விதைத்து, பின் அறுவடைசெய்து அல்லது காய்கறித் தோட்டம் வைத்து, பனை தென்னஞ் சோலைகளைப் பராமரித்து, அல்லது சாமான்கள் வாங்கி விற்றல், கடை நடத்துதல், ஆசிரியத் தொழில், சுருட்டுத் தொழில் - இவ்வகையான தொழில்கள் செய்து வருமானம் ஈட்டுவதைவிட அரசாங்க உத்தியோகம் பார்ப்பதை எவ்வளவோ மேலாகக் கணிக்கப்பட்ட காலம் அது (ஏன், இந்தக் காலத்துக்கும் அது பெருந்தும்.) அரச உத்தியோகம் குறிக்கப்பட்ட நேர அளவைக்குள் வேலை முடிந்துவிடும். வீட்டுக்கு வந்து நிம்மதியாக இருக்கலாம். மறுநாளையைப் பற்றிய கவலையே இல்லை.
6
ஒன்பாதாவது ஆண்டு நிறைவு மலர்

2003 .وہابیہ
666)
மாதம் முடியச் சம்பளம் வரும். செலவைச் சமாளிப்பதுடன் மிச்சமும் பிடிக்கலாம். உணவுக்குத் தேவையானவைகள், உடுப்புகள்,
ஆபரணம், வீடு, கார், காணி முதலியன
எல்லாம் வாங்கலாம். கோழி மேய்க்கிற உத்தியோகமா னாலும் கொறணமேனர் (Government) உததரியோகமாய
இருக்கவேணும் என்றதே மக்களின் பொது அபிப்பிராயம்.
ஆகவே, ஊரில்
எவருடைய பிள்ளையாவது படிக்காமல் குளப்பியடித்தால், அவருக்கு நல்ல தண்டனை கிடைக்கும். அக்காலத்தைய படிப்பின் உடனடி நோக்கம் அறிவு வளர்ச்சி அல்ல! படித்துப் பட்டம்பெற்று அரசாங்கத்தில் உத தியோக மீ வகிப் பதறி காகவே! உத்தியோகஸ்தனுக்கு பணம், கெளரவம், மரியாதை, இவை தாராளம். பெண்ணைப் பெற்றவர்கள் நான், நீ என்று முண்டியடித்துக் கொண்டு நிற்பார்கள் அவரை மாப்பிள்ளையாக Tவாங்குவதற்கு" கொழுத்த சீதனமும் கிடைக்கும், வீட்டுடன்
வெள்ளையன் ஆண்ட காலத்தில் அதிகாரம் கூடிய பதவிகளை எல்லாம் வெள்ளைக்காரனே வைத்திருந்தான். ஊர்ப்பிறந்தவன் படித்து நன்றாக முன்னேறினால் அவனுக் குமி உயர் பதவிகள் கொடுக்கவேணி டி வரும், அதனால் தம்முடைய பதவிகள் பறிபோய்விடும் என்ற எணணத்தில் வெள்ளைக் காரன (9/16 Iristis) (Senior or Matriculation) பத்தாம் வகுப்பு அல்லது (Inter Arts / Science) பதினொராவது வகுப்பில் சித்தி அடைந்தவர்களுக்கு சிறு சிறு அடிமட்ட உத்தியோகங்களைக் கொடுத்து அவர்களை மடக்கிவிட்டான். வறுமையின் நிமித்தம், படிப்பை மேலும் தொடராமல், அந்தச் சிறு உத்தியோகங்களை ஏற்று, திருப்தி கொண்டார்கள்.
பறை அறிவிப்பு :
அரசகருமங்கள், பொதுசனத்தைப் பாதிக்கக்கூடிய விடயங்கள், அரசாங்கத்தின் திட்டங்கள், இவற்றை நடைமுறைப்படுத்தும்போது மக்கள் அதற்கு அனுசரண்ையாக ஒத்துழைப்பு நல்கி, ஒத்தாசை புரியவேணி டிய தேவை ஏற்படுமி போதெல்லாமி அரசாங் கமீ தெருத்தெருவாகப் பறை அடித்தல்மூலம் அறிவித்தல் விட்டு மக்களை எச்சரிக்கும். சனங்களுமி 2–母T门 நிலையில வைக்கப்படுவார்கள். சாதியிலே பறையனாகப் பிறந்தவர் தான் இந்த பறை அறிவித்தலைச் செய்வார். அவர் தனது மார்பில் ஒரு மேளதீதை (பறையை) தொங்கவிட்டுக்கொண்டு, வட்டாரத்திலுள்ள ஒவ்வொரு தெருவுக்கும் போய், அரசாங்க அதிபர் அலுவலகம் அல்லது நகரசபை, அல்லது கிராம சபையில் கொடுத்த 91s5655565 (Public Notice) 66TÉLUi 605 உரத்து வாசிப்பார். இடையிடையே தனது பறையையும் அடித்துக் கொள்வார். பறைச்சத்தம் கேட்டதும் வீட்டிலிருப்பவர்கள் படலைக்கு ஓடிவந்து இன்று என்ன பறை அறிவித்தல் செய்தி என்று ஆவலோடு கேட்பர். பறையறிவத்தவருக்கு அரசாங்கம் உரிய சம்பளம் கொடுக்கும். பறையறிவிப்பவர் செய்திகளை வாசிக்கும்போது தானே அரச
அதிபர் என்ற நினைப் பில், தானே கட்டளையிடுபவர் போலி , உரதீதும் கம்பீரமாகவும் வாசிதீதுமுடிப் பார்.
விளம்பரத்தில் விளங்காத பகுதிகளை விளக்கச்சொல்லி யாராவது கேட்டால் அவருக்கு அது பிடிக்காது. அங்கே, பெரியதுரையைப் போய்க் கேளுங்கள் என்று நறுக்கான பதில் வரும்.
ஒன்பாதாவது ஆண்டு நிறைவு மலர்

Page 6
கலப்பை
2003 ,2وا{{
சிக்கனமான சீவியம் :
அந்த நாளையில் மக்கள் மிகவும் சிக்கனமான வாழ்க்கையையே மேற்கொணிடார்கள். படாடோபமான வாழ்க்கைக்குத் தேவை ஏற்படவும் இல்லை, அதை ஊக்குவிப்பதற்கு ஏற்ற பொருள்களும் அப்போது புளக்கத் திலில்லை. அப்படிப்பட்ட பொருள்கள் சந்தையில் விற்பனையானது இல்லை எவரும் சாதாரண தேவைகளையும் அடிப்படை வசதிகளையும் பொறுத்துத் தான் நாளாந்த வாழ்க்கையை நடத்தினார்கள்.
ஒரு (மரக்)கொத்து அரிசி 8 சதம் தொடக்கம் 10 சதம் வரை. (மரக்கொத்து என்பது இப்போதிருக்கும் கொத்தைவிட ஒன்றரைப் பங்கு கூடியது). முத்துச்சம்பா அரிசிதான் திறமானது, சோற்றுக்கு உருசி தருவது, விலை கூடியது, பணக்காரர் வாங்குவது - கொத்து 12 சதம், ஒரு தேங்காயின் விலை 2 சதம், 3 சதம். முட்டை 1 சதம், ஒன்றரைச் சதம். அடுத்தவீட்டு மாமி சுட்டு விற்கும் அப்பம் 1சதம். (முட்டைஅப்பம் சேதம்). சாப்பாட்டுக் கடைகளில் நாலு கறிகள், ரசம், மோர், அப்பளத்துடன் ஒரு நேரச்சோறு 8 சதம். இறைச்சி, மீன் சாப்பாடு 8 சதம், இடியப்பம் 1 சதம், தோசை 2 சதம். இரண்டாவது உலகமகா யுத்தத்தின் போது இவைகளின் விலைவாசி இரண்டு மடங்காக அதிகரித்து விட்டன.
காய் கறிகள் வீட்டுத்தோட்டத்திலேயே
கிடைக்கும். சந்தையில் வாங்கப்போனாலும் மிகவும் விலை மலிவு. சாதாரணமாகக் கறிகளுக்குப் பாவிக்கும் முருங்கைக்காய், கத்தரிக்காய், வெண்டைக்காய், பயிற்றங்காய், புடலங்காய், வாழைக்காய், முளைக்கீரை, பசளிக்கீரை, முருங்கையிலை, வாழைப்பூ மரவள்ளிக்கிழங்கு, இராசவள்ளிக்கிழங்கு, பழப்புளி, எலுமிச்சம்பழம், கறிவேப்பிலை,
இஞ்சி, வெங்காயம். மிளகாய், பயறு முதலிய காய்கறிகள் வீட்டு வளவில் அல்லது அந்த அயலிலேயே கிடைக்கும். துவரம்பருப்பு, மைசூர்ப்பருப்பு, கடுகு, சீரகம், வெந்தயம், உள்ளி, பம்பாய் வெங்காயம், செத்தல் மிளகாய், மஞ்சள், வேர்க்கொம்பு, (சுக்கு), அப்பளம் முதலியன இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன. உருளைக்கிழங்கு, கோவா, (beans) GJITGF660d35, carrots, raddish, beet-root, வத்தாளங்கிழங்கு, கறுவாப்பட்டை, மிளகு, முதலியன (இலங்கையின் தெற்கே) மலை நாட்டிலிருந்து தருவிப்பார்கள். சில வருடங்களின் பின் உருளைக்கிழங்கு, வத்தாளங்கிழங்கு, போஞ்சிவகை, கோவா, பீட்ரூட், சின்னவெங்காயம், முதலியனவற்றை யாழ்ப்பாணத்திலேயே பயிர்செய்தார்கள். தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், இலுப்பெண்ணெய், முதலியன உள்ளூரிலேயே எண்ணெய்ச்செக்குகளில் ஆட்டியெடுத்து விற்பனைக் கிருக்கும். பசுப்பால், ஆட்டுப்பால், தயிர், மோர், வெண்ணெய் முதலியனவற்றை வீட்டில் அல்லது உள்ளூரிலேயே தயாரிப்பார்கள்.
மக்களிற் பெரும்பாலோர் அரிசி, பருப்புவகை, உப்பு, 5L6ö)6U, அப்பளம் முதலியவற்றை வாங்குவதற்குமட்டும்தான் கடைகளுக்குப் போகவேண்டி வரும். உணவுக்குத் தேவையான மற்றப் பொருட்கள் வீட்டு வளவில் , அலி லது அயலவரிடம் இலவசமாகவே பெற்றுக்கொள்வார்கள்.
அக்காலத்தில் ஒரு குறைந்தவீத மக்களே அரசாங்க உத்தியோகத்தில் இணைந்திருந்தார்கள். பெரும்பாலோர் கமம், தோட்டம் , சுறுபட்டு தீ தொழிலி , ஆசிரியத் தொழில், கடை நடத்துதல், கூலிவேலை செய்தல், இப்படியான தொழில்களில் ஈடுபட்டு வருமானம்
8
ஒன்பாதாவது ஆண்டு நிறைவு மலர்

2003 .وہابیہ
கலப்பை
ஈட்டினார்களே தவிர, மேற்படிப்புப் படிப்புப் படித்து அரசாங்க உத்தியோகத்தை நாடினவர்கள் குறைவென்றே கொள்ளலாம். அவர்களுக்கு அரசாங்க உத்தியோகந்தான் பார்க்கவேண்டுமென்ற அவசியம், அதற்கேற்ற பணவசதி, சூழல், இவை ஏற்படவில்லை.
முன்பு சொன்னதுபோல, வெள்ளைக்காரனின் ஆட்சியில் நாட்டிலுள்ளவர்கள் மேற்படிப்புப் படித்து, பெரிய உத்தியோகங்களைத் தட்டிக் கொள்ளும் சந்தர்ப்பத்துக்கு வெள்ளைக்காரத்துரை இடமளிக்க வில்லை. வறுமையில் வளர்ந்து வந்த இளைஞர்கள் படிப்பை வேளைக்கு முடித்துக்கொண்டு எங்கே உழைக்கலாம், அரசாங்க உத்தியோகம் கிடைக்கும் அதிர்ஷ்டம் கிட்டுமா என்று ஏங்கிக் கிடந்தவர்களை, (ClericalService) எழுதுவினைஞர் சேவை என்ற அடிமட்ட சேவையைக் காட்டி மயக்கி, அவர்களை வேலைக்கு அமர்த்திவிட்டார்கள். உயர்ந்த, அதிகாரத்துக்குரிய உத்தியோகங்களைத் தாங்களே வைத்துக்கொணி டார்கள். சம்பளமும் மிகவும் குறைவு.
எழுதுவினைஞருக்கு
அப்போதைய சம்பளம் ஒரு மாதத்துக்கு 40 ரூபாய்கள். இந்த உத்தியோகத்துக்கே பெரிய கிராக்கி. சோதனைக்குத் தோற்றி, அதிகப்படியான புள்ளிகள் எடுப்பவர்களுக்கே உத்தியோகம் கிடைக்கும். தனிமனிதன் என்றாலும், குடும்பஸ்தன் என்றாலும் இந்த 40 ரூபா சம்பளத்தை வைத்துக்கொண்டுதான் மாதத்தில் ஏற்படும் சகல செலவுகளையும்
சமாளிக்க வேணடும். அந்தக் காலத்து
உத்தியோகத்தர்கள் பாவம், எப்படி இந்தச் சொற்ப சம்பளத்துடன் சமாளித்தார்களோ என்று எண்ணத் தோன்றுகின்றதல்லவா! ஆனால், விடயம் அப்படியில்லை! அதிசயம் என்னவென்றால், ஒவ்வொரு குடும்பமும் இந்த 40 ரூபா சம்பளத்தில், ஏறக்குறைய
25 ரூபாவுக்குள் தங்கள் மாதாந்தச் செலவுகளை முடித்துக்கொண்டு, மிகுதியை வங்கியில் போட்டுவைத்தோ, சீட்டுப் பிடித்தோ, வட்டிக்குக் கொடுத்தோ ஏதோ ஒரு வழியில் சேமித்து வைப்பார்கள். இப்படிச் சேமிக்கும் பணம்தான் பின்னர் ஒரு வீடு கட்டிக் கொள்ளவோ, நகை வாங்கவோ, மகளுக்கு 2,000 - 3,000 ரூபா சீதனம் கொடுக்கவோ மிகவும் பிரயோசனப்படும் இது எதைக் காட்டுகின்றது என்றால், அக்காலத்தில் பொருள்களும் உணவுப்பணிடங்களும் எவ்வளவு விலை குறைவு, அதற்குத் தக்கதாக வேலைக்குக் கிடைக்கும் ஊதியமும் குறைவு என்பதைத்தான். அத்தோடு, மக்கள் கூடியவரை இயற்கையுடன் சேர்ந்தே வளர்ந்தார்கள். நாகரிகம் தலைகாட்டாத காலம் அது. உதாரணமாக, குளிப்பதற்கு நல்லெண்ணெய், சிகைக்காய். அரைப்பு, தேசி(கை)க்காய், (சிலவீடுகளில் சவர்க்காரம்), முதலியனவற்றைத்தான் பாவிப்பார்களே தவிர, Shampoo, Conditioner, After-shave lotion, Body cream, Shower-bath, Spa, Anti-deodorant, Anti-perspirant இவைகளின் நாமமே அப்போது கிடையாது (குளிப்பதென பது அநேகமானோர் தலையில்தான் குளிப்பார்கள். Body wash மட்டும் எடுப்பவர்கள் குறைவு) கிணற்றில் தண்ணிர் மொண்டு, அல்லது குளத்தில், கேணியில் மூழ்கிக் குளிப்பார்கள்.
நேர்த்திக்கடனர் :
சாதாரணமாக வைத்தியத்துக்குக் கட்டுப்படாத வியாதிகள், தீராத நோய்கள், பிறவியிலேயே உடலுறுப்புக்களிற் பின்னடைவுள்ள மக்கள் தங்கள் விதியை நொந்து, கஷ்டப்படுவர்களுக்குக் கைகொடுக்கும் தெய்வத்தை நினைத்து, உருகி, அழுது, தங்கள் வருத்தத்தைக் குணப் படுத்துமாறு
ஒன்பாதாவது ஆண்டு நிறைவு மலர்
9

Page 7
கலப்பை
2003 .وہابیہ
இரங்கி வேண்டிக்கொள்வார்கள். இந்த
வேணிடுதலுடன், தமது வியாதியைச் சுகப்படுத்தினால் தெய்வத்துக்கு இன்ன இன்ன உபகாரம் தாம் செய்வோம் என்று பிரதிக்ஞையும் எடுத்துக்கொள்வார்கள்.
இப்படித் தனி நலம் கருதிதி தெய்வத்துக்குச் செய்யும் சேவை, தியாகம், நோன்பு, சுயவதை, இவற்றை முழுமனதுடன் செய்து, தாங்கள் எண்ணித் தவமிருந்து வேண்டிக்கொண்ட விடயம் கைகூடியதும் தெய்வத்துக்கு நன்றி சொல்வதுடன் அவருக்குச் சொன்னபடி தவறாமல் உபகாரம் செய்து உறுதிப் படுத்திக்கொள்வார்கள். இதில் தெய்வநம்பிக்கை பெரும் பங்கை வகிக்கின்றது. மனச்சுத்தியுடன் இப்படி நோன்பிருந்து தெய்வத்தின் அனுக்கிரகத்தைப் பெறும் வாய்ப்பு சாதாரண மனிதருக்குக் கிடைப்பது சுலபமல்ல. தெய்வத்தில் அசையாத, முழு நமீபிக்கை இருக்கவேணும் (தற்கால இளைஞர்கள் சொல்வதை உங்களுடன் பகிர்ந்துகொள்ளுகின்றேன் - அதாவது, பரப்பிரம்மமாகிய கடவுளை, மனிதனின நிலைக்கு இழுத்துவந்து, அவருடன் பேரம் பேசி பனடமாற்று வியாபாரம செயவது போல லலவா
இருக்கின்றது, இந்த நேர்த்திக்கடன்)
வேள்வி :
வேள்வி செய்வது என்பது புராண, இதிகாச காலத்துக்கு முன்பிருந்தே வந்துகொண்டிருக்கும் ஒரு வழக்கம். இந்தியாவில் பரவலாகவும், இலங்கையில் தமிழ் மக்கள் வாழும் பகுதிகளிலும் வேள்விகள் செய்வார்கள். சிறு தெய்வங்களுக்கு நேர்த்தி வைத்து, அந்தக் கடனைத் தவறாமல் நிறைவேற்றுவார்கள். அதாவது, கிராமங்களில் அநேகர் வீடுகளில்
தெய்வத்துக்கு நேர்ந்துவிட்ட ஆடு, கோழி முதலியன வளரும். அவற்றுக்குத் திறமான தீன் கொடுத்து, நன்றாகக் கொழுக்க வைத்து, மிகவும் பக்குவமாகப் பராமரிப்பார்கள். ஆண்டுதோறும் வரும் தீபாவளி, தெய்வங்களின் திருவிழா நாட்களிலொன்று, இப்படி, வேள்விக்கென்று நியமிக்கப்பட்ட நாட்களில் வேள்வி ஆட்டை குளிப்பாட்டி, விபூதி, குங்குமம், சந்தனம், பூ இவைகளால் அலங்கரித்து பவனியாகத் தெருவால் அழைத்துக்கொண்டு போவார்கள். சிலர் மேளதாளத்துடனும் ஆட்டை அழைத்துச் செலி வர். கிராமங்களினி பல கோணங்களிலிருந்தும் பல ஆடுகள் தெய்வசந்நிதிக்கு வந்து சேர்ந்திருக்கும். பூசை நேரம் வந்ததும் தெய்வத்துக்குத் தீபம் காட்டித் தொழுதுவிட்டு அர்ச்சகர் ஒரு நீண்ட வாளுடன் (அல்லது கொடுவாள் கத்தியுடன்) ஆடுகளை நிற்பாட்டியிருக்கும் இடத்துக்கு வந்து ஆடுகளை ஆசீர்வதிப்பார். பின்னர், ஒவ்வொரு ஆடாக, ஒருவர் ஆட்டின் கொம்பிலும் இனி னொருவர் அதனி பினி னங் கால களையுமீ இழுத்துப் பிடித்துக்கொள்ள, இதற்கென நியமிக்கப்பட்ட கொலையாளி ஒருவர் வாளை ஓங்கி ஒரே வெட்டில் ஆட்டின் கழுத்தைத் துண்டாடி விடுவார். அதன் பிறகு மற்ற ஆடு வெட்டப்படும். இப்படி எல்லா ஆடுகளும் வெட்டப்பட்டு முடிந்ததும், அவற்றைப் புறம்பான இடங்களுக்கு இழுத்துச் சென்று, அங்கு அவற்றிற்கு விலைபேசி விற்பார்கள். நல்ல இறைச்சியுள்ள கொழுத்த ஆட்டிற்குக் கூடிய விலை. ஆட்டின் பருமனைப் பொறுத்தே விலைமதிப்பு. (அதாவது, ஆட்டை வளர்க்கும்பொழுதே இதை நன்றாகக் கொழுக்க வைத்தால் கூடிய விலைக்கு விற்கலாம் என்று நினைத்துத்தான் அதை நன்றாகப் பராமரிப் பார்களேயொழிய, தெய்வத்துக்கு நேர்ந்துவிட்ட ஆடு என்றபடியால் அல்ல)
48ம் பத்தம் பார்த்த
10
ஒன்பாதாவது ஆண்டு நிறைவு மலர்

2003 وہابیہ
கலப்பை
UNIFUND 366oo6ois365DLID 2003
ஆனிமாதம் 7ம் திகதி மாலைப் பொழுதில் கலைநிகழ்ச்சிகளை மாலையாகக் கோர்த்து கலைக்கதம்பம் 2003 லிட்கொம் உக்ரேனியன் மண்டபத்தில் அரங்கேறியது.
அவுஸ்திரேலிய பட்டதாரிகள் தமிழர் சங்கம் காலதி தினி தேவைக் கேற்ப பரிணாமவளர்ச்சியடைந்த ஒரு சங்கமாக மிளிர்ந்து இக் கலை நிகழ்ச்சியை நடாத்தியது.
கலைநிகழ்ச்சிகள் ஆரம்பமாவதற்கு முன்னர் தமிழ் ஊக்குவிக்குப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிமீட்டிய மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. பாடல் மனனப் போட்டி, வாய் மொழித்தொடர்பாடல் போட்டி, பேச்சுப்போட்டி, எழுத்தறிவுப் போட்டி, வினாவிடைப் போட்டி ஆகியவற்றை சிட்னியிலும், கன்பராவிலும் நடாத்தியமை ஒரு பரியமுயற்சி என்றே சொல்ல வேண்டும். ஓங்கி வயர்ந்து நிற்கும் மரங்களைப் பார்த்துப் பூரிக்கும் மனதானது அந்த மரங்களுக்கு தண்ணிர் ஊற்றியவனை
ஓர் பார்வை
நினைத்துப் பார்ப்பதில்லை.காலத்தின் ஓட்டத்தில் இந்நிலை தோன்றினாலும் தண்ணீர் விட்டவன் மரங்களின் வளர்ச்சியில் மகிழ்ச்சியடைவான். தமிழ் ஊக்குவிப்புப் போட்டி உபகுழுவினர் பாராட்டுக்குரியவர். தமிழ்த்தாய் வாழ்த்துடன் ஆரம்பமாகியது, "கலைக்கதம்பம் 2003", சிட்னியின் இளம் மாணவக் கவிஞர்கள் ஒன்று கூடி வழங்கிய "தமிழே பொங்கு" என்னும் கவியரங்கம் தமிழி ஆர்வலர்களினி மனதில் நம்பிக்கையூட்டுவதாக அமைந்தது.
இந்த இடத்தில் ஒன்றைச் சொல்ல வேண்டும். மேடைக்குப் பக்கத்திலேயே நல்ல அகன்ற திரையிலே மேடையில் நடக்கும் நிகழ்ச்சிகளைக் காண்பித்துக் கொண்டிருந்தது அருமையிலும் அருமை. இப்படியான நிகழ்ச்சிகள் தொடர வேண்டும்.
அடுத்து தம் நாட்டுக்குச் சென்றுவந்த டாக்டர் வாசுகி மயில்வாகனம் அழகாகத் தாயகத்தில் செயற்படுத்தப்படும் திட்டங்களை
ஒன்பாதாவது ஆண்டு நிறைவு மலர்
11

Page 8
கலப்பை
2003 ابھی
விபரித்தார். அவை பயனுள்ள விதத்தில் அமைந்துள்ளது.
அடுத்த நிகழ்ச்சியைப் பற்றிய அறிவிப்பாளர் இப்படிச் சொன்னார். "ரஞ்சன கானம் என்ற இந்த நிகழ்வில் இன்னிசையும், வீணாகானமும் , மேலைத்தேய கீழைத்தேய வாத்தியக் கருவிகளின் இசையுடன் கூடி வருகின்றது. இதில் கர்நாடக சங்கீத இசையுடன் கூடிய மெல்லிசைப் பாடல்களும், திரையிசைப்பாடல்களும் உங்கள் ரசனை கி க விருநீ தாக அமைகின்றன." இப்போதெல்லாம் அனுபவமில்லாத சின்னஞ்சிறுசுகளிடம் பெரிய நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும் பொறுப்பை ஒப்படைக்கிறார்கள். அதுகளும் வாய்க்கு வந்தபடி வர்ணனைகளை அள்ளித் தெளித்து விட்டுப் போய்விடுதுகள். ஆனால் சும்மா சொல்லக் கூடாது. இந்த அறிவிப்பில் உண்மை இருந்தது. அறிவிப்புக்கும் நிகழ்வுக்கும் சம்பந்தம் இருந்தது. வீணை, மிருதங்கம், தபேலா, ஒக்ரோபாட் (Octopad), வயலின், Keyboard, தம்புரா சகிதம் மேடையேறிய குழு செவிக்கு விருந்து படைத்தது. டாக்டர் சிவரதி கேதீஸ்வரன் வீணை வாசித்தபடியே பாடினார். அரங்கம் நிறைந்திருந்த ரசிகர்களைக் கவர்ந்தார். ஈர்க்கும் சக்தி இவரிடத்தில் உள்ளது. அவுஸ்திரேலியாவில் ஒளிபரப்புவர் என்பதில் சந்தேகமில்லை. வாழ்க! வளர்க!
சிறீமதி பத்மரஞ்சனி உமாசங்கள் வழங்கிய "சொல்லும் தமிழ் வெல்லும்" நாட்டியம் உணர்வுகளைத் தொட்டது. தமிழ் இனம் ஆண்ட காலத்தையும், மாண்ட காலத்தையும், மீண்டும் எழும் காலத்தையும் உருவாக்கி அழகாகச் சொன்ன அந்த பாங்கிற்குத் தலை வணங்கலாம். உணர்வு பூர்வமாக
இடைவேளையும் முடிந்தது. கலப்பையின் வளர்ச்சியையும், கடந்த கால தமிழ்
ta
ஊக்குவிக்குப் போட்டி நிகழ்வுகளையும் திரையில் காண்பித்தார்கள். அன்று அவுஸ்திரேலியாவில் மாணவர்களாக இருந்தவர்கள் இன்று பெரிய தொழில் புரியும் குடும்பஸ்தர்களாக இருக்கிறார்கள். இளைய தமிழர்கள். மகிழ்ச்சியாக இருந்தது. அதுவும் முடிந்தது. நன்றியுரை சொன்னார்கள். ஒத்துக்கொண்டேன். நேரம் நகர்ந்தது. ஆனால் எதிர்பார்த்திருந்த "காத்தவன் கூத்து" வரவில்லை. கூத்து என்றாலே Late ஆகத்தான் வரவேண்டும் என்று விதி முறையா? ஆல்லது நன்றாக நடந்த நிகழ்ச்சிகளுக்குத் திருஷ்டிப் பரிகாரமா? எப்படியோ கூத்துத் தொடங்கி நள்ளிரவிற்கு முன்னாக முடிவடைந்து 6ill gil. Australian Theatre is is, JITGOT வித தீதில் இளைய பத்மநாதனின் கைவண்ணத்தில் நவீனமாக நன்றாக அமைந்திருந்தது. ஆனால் பாடுவதும் பேசுவதும் சரியாக விளங்கவில்லை. ஒலிபரப்புச் சாதனமும் சில இடங்களில் கைவிட்டுவிட்டது. கூதி தென்றால் அப்படித்தான் இருக்க வேண்டுமோ? பக்கத்தில் இருந்த இளைஞனிடம் 'விளங்குகிறதா? ஏன்று கேட்டேன். "அண்ணை எனக்கு இந்தக் கூத்து முழுவதும் மனப் பாடம்" என்று சொன்னான். கப்சிப் ஆகிவிட்டேன்.
நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. ஒவ்வொரு வருடமும் சிறார்களை ஊக்குவித்து தாயகத்தின் மேம்பாட்டிற்கு உதவி செய்து நல்ல இசை நடன நிகழ்ச்சிகளில் புதுமைகளைப் புகுத்தி அதனை அரங்கேற்றி, பழையகலை வடிவங்களுக்கு புத்துயிர் கொடுத்து, தாயக உணர்வுகளை வெளிப்படுத்தி நிற்கும் அவுஸ்திரேலிய பட்டதாரிகள் தமிழர் சங்கமே இனி வரும் ஆண்டுகளிலும் நீ புதுமை
படைப்பாய் ! எனக்கு சந்தேகமில்லை.
a/tatagai
12
ஒன்பாதாவது ஆண்டு நிறைவு மலர்

2003 ,gا({{G
66V6)
காத்தவன் கூத்து
ஓர் அனுபவம் - சுப
கூத்து முடிந்து வீடு நோக்கி வரும் பொழுதும், வந்த பின்னரும், ஏன், இப்பொழுது இதை எழுதும் பொழுதும்கூட, "நான் விடமாட்டேன், அம்மா நான் விடமாட்டேன்" என்ற பாடல் வரிகள் காதுகளில் ரீங்காரமிடுகின்றன. அப்படியான ஒரு தாக்கத்தைக் "காத்தவன் கூத்து" மனதில் ஏற்படுத்திவிட்டது.
பலரும் காத்தான் கூத்தை (காத்தவராயன் நாடகம்) பார்த்தோ, கேட்டோ அல்லது அறிந்தோ இருப்போம். ஆனால், அந்தக் கூத்து வடிவில் வேறு ஒரு கூத்தை, சிட்னி
மேடையில் பார்க்க முடியும் என்று நினைத்திருப்போமா? 76.2003 சனிக்கிழமை இரவு 1030 மணிக்கு, இளைய பத்மநாதனின் "காத்தவன் கூத்து" லிட்கம் யுக்கிறேனியன்' மண்டபத்திலே மேடையேறியது. இது "இனி றையது" என்று அறிமுகமீ செய்யப்பட்டது. இது எல்லோருக்கும் ஒரு புது அநுபவம். பாட்டு, இடைப்பாட்டு, தாளம், உடுக்கு, மிருதங்கம், கஞ்சிரா, முகர்சிங், பறை, ஹார்மோனியம் என்று அண்ணாவியார் ஆளுமையில் கலகலப்பாகக் கூத்து ஆரம்பமாகியது. வாத்தியக் கலைஞர்கள் எல்லோரும் ஒத்திசைவாக வாசித்தார்கள். ஆரம்பக் கொட்டிலேயே களை கட்ட தீ தொடங்கிவிட்டது. விறுவிறுப்பான பாடல்களுடன், விரைவான காட்சி மாற்றங்களோடு, கூத்தர்கள் மேடையில் ஆடத் தொடங்குகிறார்கள். சரியாகப் 1145 மணிக்கு கூத்து முடிந்தது. அந்த ஒன்றேகால் மணி நேரம் மண்டபத்தில் நிறைந்திருந்த கூட்டம் அசையாமல் அப்படியே இருந்தது. "ஊரிலே விடியவிடியக் கூத்து நடக்கும். எல்லோரும் விழித்திருந்து பார்ப்பார்கள்" என்ற நினைவு தானி அப்பொழுது ஏற்பட்டது.
பழைய காதீத வராயண் கூதி தைப் பார்த்தவர்களுக்கு இது குழப்பமாக இருநீ திருக்கும். புதிதாகப் பாரப்பவர்களுக்குமே செய்தியைப் புரிந்துகொள்வது சற்றுக் கடினமாக இருக்கும். காத்தவனும் தாயாருமே இங்கு பிரதான பாத்திரங்கள். அருமை மகன், கலைகள் பல கற்று, உத்தமனாக, மதிப்போடு
ஒன்பாதாவது ஆண்டு நிறைவு மலர்
13

Page 9
கலப்பை
2003 ,gا{
வாழவேணும் என்று விரும்பும் ஓர் அன்னை. கல்வி கற்று வந்த அந்த இலட்சியவாதி மகன், மாலையைத் தேடிப் போவதுதான் கதை. இந்த மாலையை மறக்கும்படி அன்னை வேண்டுகிறாள். மகனின் மனதைத் திசைதிருப்பப் பல கட்டளைகள் இடுகிறாள், அந்தப் பேதை, மகனோ விரைவாகவும் சிறப்பாகவுமீ கட்டளைகளை நிறைவேற்றுகிறான். பாசம்மிகு அன்னையைப் பணிகிறான், ஆனால் கொண்ட கொள்கையில் உறுதியாக இருக்கிறான். "மாலையை மறக்க முடியவில்லையே, அம்மா நான் விடமாட்டேன், அம்மா நான் விடமாட்டேன்" என்று தாயாரை வேண்டுகிறான். கூடப் பிறந்தது என்று அன்னைக்குத் தெரியும் அவள் அழுது புலம்ப, மகன் மாலையை அடையக் கழுமரத்தை நோக்கிப் போகிறான். அவன் இலட்சிய வீரனாகக் கழுமரம் ஏறுகிறான் என்று கதை முடிகிறது. அன்னையின் கட்டளைகளும் கழுமரமும் ஆனால் இங்கே பேசப்படும் விவரங்கள் வேறு.
மாலையுடன் கழுமரமும்
பழைய கதையில் வருவனதான்.
இங்கே கழுமரமும் மாலையும் குறியீடு: இந்தக் குறியீடுதான் கதையின் கரு - மையம் கூத்து ஆரம்பிக் குமி பொழுதே "கதைக்குள்ளே கதை இருக்கு" என்று அறிவுறுத்தப்படுகிறது. பார்வையாளர்கள் உன்னிப்பாக இருக்கவேண்டிய தேவை. பழைய கதை தெரிந்த கதை. பாரதி பாடியதுபோல், இங்கே பொருள் புதிது, சுவை புதிது. காலத்திற்கு ஏற்ற வகையில் களமும் மாறிவிட்டது. கதையின் பொருளும் மாறிவிட்டது.
இந்த மாலையோ பழைய காத்தவராயன் கூத்திலே நாம் பார்த்த ஆரியப்பூமலை என்ற அழகிய நங்கை அல்ல. மாலையை ஒரு சொல்லில் "இலட்சியம்” என்று கூறிவிடலாம். ஆனால், "மாலையைப் பெற்றவர்தான், ஊர் ஆளும் உரிமை பெற்றார்" என்பதில் அரசியல் அதிகாரத்தைக் காணி கிறோம். அந்த மாலையை அடையும் போராட்டமே கழுமரமாக முன் நிற்கிறது. மாலையை அடையக் கழுமரத்தில் ஏறியே ஆகவேண்டும், அது விதி. இது ஆழமான அரசியல்.
"மாலை என்ற சொல் வசனம்" வேறு ஒரு பொருளில் சிந்தையைத் தாக்குகிறது. இந்தக் கழுமரத்தில் எத்தனை உயிர்ப்பலிகள் "தாகம் தீர்க்கும் மாலையணிந்த" உயிர்கள் எத்தனை அவர்கள், அந்த இன்னுயிர்கள், தாமே தேடிப்பெற்ற "மாலைகள்" சுற்றமும் இனமும் புலம்ப, திடமான சித்தத்துடன் கழுவேறும் விடுதலை வீரர்கள்.
இந்த வீரர்கள் சாமான்யர்கள் அல்ல - மதுவையும் மாதையும் தங்கள் இலட்சியம் நிறைவேறும் வரை தவிர்தீத வர்கள். பொன னையுமீ பொருளையுமீ வேண்டாதவர்கள். இல்லறவாழ்வையும் பிற்போட்ட துறவிகள். அகத் தூய்மை மிக்க சுத்த வீரர்கள் காத்தவர்கள். இவர்களே குறியீடாக கீ உருவகிக்கப்படுகிறார்கள். அந்த இலட்சிய வீரர்களை இங்கே தரிசிக்கிறோம். அவர்களே இன்று கழுமரத்தில்.
காதி தவனாக
பொருமுக எழினியும், அதன் பின்னே உருக்கொள்ளும் ஆதிதாயும் குறியீடு: தேடுகினம் தேடுகினம் ஆதி தாயே - மக்கள் தேடுகினம் தேடுகினம் ஆதி தாயே
14
ஒன்பாதாவது ஆண்டு நிறைவு மலர்

எனக் கூத்தின் ஆரம்பத்தில் கரகமெட்டில் தொடரும் பாடலுக்குப் பொருமுக எழினியின் (ஊடுகாண் திரை) பின்னே முடி தரித்த தாய் அபயகரத்துடன் உருவாடித் தோற்றுகிறார். அவரே முடி இல்லாது சாதாரணத் தாயாக காத்தவனின் அம்மாவாக வருகிறார். நாடகத்தின் முடிவிலும் (கழுமரக் காடசிக்குப் பின்) அதே முடிதரித்த தாய், அபயகரம், உருவாடல் அவர் பொருமுக எழினியை விட்டு வெளிவரவில்லை. அதே கரகப் பாடல்:
உருவாடி நடமாடித் திருநடனம் - அம்மா ஊழிக்கூத்துக் காண்பதெப்போ ஆதி தாயே
ஆதி தாயின் ஊழிக்கூத்துக் காண்பதெப்போ என்ற கோரிக்கையுடன் நாடகம் முடிகிறது.
ஆதி தாயே அன்னையே தமிழே ஓதி உணர ஒரு வரம் தா
எனக் கூத்தின் ஆரம்பத்தில் துதிப்பாடலில் வேண்டிய வரத்தின் நோக்கம் கூத்தின் முடிவில் தெளிவாகிறது. ஆதி தாயை இனங்கண்டுகொள்ளுகிறோம்.
இந்தக் கூத்தை ஆடுபவர்கள் பழைய காத்தவராயன் மரபுக் கூத்தை மறக்கவில்லை. நாங்கள் உண்மையில் காத்தவராயன் கூத்தைத்தானே பார்க்கிறோம் என்னும் பிரமை ஏற்படுகிறது. ஆனால் "கூத்துக்குள் கூத்து" நூலிழையாக ஓடுகிறது. இப்படி ஒரு கூத்தைச் சிந்தித்து, எழுதி, இயக்கிய அணிணாவியார் இளைய பத்மநாதன் மண்ணை மறக்காது அரங்கில் வரலாறு படைக்கிறார் - அவர் மண்ணின் மைந்தன்.
3
இளங் கோவையும் வள்ளு வரையும் சித்தர்களையும் ஒளவையாரையும், எமது இன்றைய பாரதியையும் இந்தக் கூத்தில் பார்க்கிறோம். எமது முந்தையர் வழியிலே வந்த ஆசிரியரும் நாமும், அந்த இலட்சிய வெறிகொண்ட விடுதலை வீரரும், இந்தக் கூத்திலே ஒன்றாக இணைகிறோம். கூத்தியர் சிறப்பை சிலப்பதிகாரக் கருத்துகள் மூலம் கூத்தில் கொண்டுவரும் ஆசிரியர், கூத்தியர் விலைமகளல்ல, அவள் கலைமகளே என்று மாதவியை மனதில் வைத்துக் கூத்தியர் பெருமை படி, அரங்கேற்று காதையில் வரும் மேடைக் காட்சியையும், கூத்தியரின் ஆடை ஆபரணங்களையும் இணை தீது காட்சிப்படுத்துகிறார். தொடர்ந்து மதுவின் கேட்டையும், போதை பற்றியும் பாடுகிறார். திரைகடலோடித் திரவியம் தேடிய தமிழர் இன்று திசை தெரியாது அகதிகளாகத் தத்தளிக்கும் நிலையைக் காட்டுகின்றார். எமது கலாச்சார இலக்கியப் பண்புகளை சாரமாகப் பிழந்தெடுத்து கூத்து வடிவத்தில், எளிமையான சொற்களில், எளிமையான இசையில், சுவைபடப் பாடுவதும் ஆடுவதும், இந்தக் கூத்துக்குக் கிடைத்த வெற்றி. காத்தவன் கூத்துப் பனுவலை படிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. இது ஒரு சிறந்த அரங்கப் படைப்பு மட்டுமல்ல, சிறந்த இலக்கியப் படைப்புமாகும்.
"போற்றுதும் போற்றுதும் திங்களைப் போற்றுதும்" என்ற சிலப்பதிகார வரிகளோடு ஆரம்பித்து `தண்ணொளி வீசிடவே சமாதானம் வெண் கொடியாய் வருதலான்" என்றுமீ "ஞாயிறைப் போற்றுதும் போற் றுது மீ" என்று திருமி பவுமி சிலப்பதிகாரத்துள் நுழைந்து "சாயாம் பட்டொளியாய் சுதந்திரம் ஓயாதென வருதலான்" என்றும் இன்றைய அரசியல்
ஒன்பாதாவது ஆண்டு நிறைவு மலர்
15

Page 10
கலப்பை
2003 والطبيعي
காலகட்டத்திற்குள் புகுந்து "சமாதானம் சுதந்திரம் சமத்துவம்" என்னும் மனிதநேயக் கருத்துகளை, வாழ்வின் அடிப்படைத் தத்துவத்தைப் போற்றுவதோடு ஆரம்பப் பாடல் முடிகிறது.
காத்தவனைக் கல்விகற்க அனுப்பும் அன்னை எமது விழுமியங்களை கீ போதிக்க திருக்குறளைத் துணைக்கு அழைக்கிறாள். "கற்றோர்க்குச் சிறப்பு எங்கும், பெற்றுவா கற்றறிவு" என்று பாடுகிறாள். இன்னும், கல்விபற்றிப் பல பாடல்கள் "மலை வாழை அல்லவோ" என்றும் தொடர்கின்றன. காத்தவனும் சின்னவனும் நட்பின் சிறப்புப் பற்றிப் பாடுகிறார்கள்: "முகநக நட்பது நட்பன்று, அகநக நட்பது நட்பாகும்" எனத் திருக்குறள் "நட்பு" அதிகாரத்தையே பார்க்கிறோம் வரைவில்லா உறவு கொள்வார் பற்றிக் கூறும்போது, "பொருளுக்காய் கொள்ளும் உறவு, இருட்டில் பிணந் தழுவல் போலாகும்" எனவும், குதுபற்றிக் கூறும்போது "வேண்டாம் சூது வென்றாலும் வென்றவர் தூண்டில் விழுங்கிய மீன்" எனவும் திருக்குறள் பாடம் தொடர்கிறது.
முகமாட ஒருமுக எழினியுமாட - கூத்தியர் புகுந்தாட வலக்கால் முன் மிதித்தாட
அடிமுதல் முடிவரை அணிமணியாட -
கூத்தியர் அடிபோட்டு வந்தாராம் எழினி விட்டாட
என்ற "திரை நோக்கு" வரிகள் சிலப்பதிகார மாதவி ஆடிய "அந்தரக் கொட்டு" என்பதனை நினைவூட்டுவன. "அந்தரக் கொட்டென்றும் முகமென்றும் ஒத்தென்றும் இதற்குப் பெயர். இந்த ஒத்து ஆடிய பினி னரல்லது உருவுகாட்டுகை வழக்கல்ல என்றவாறு" என அரும்பதவுரையாசிரியர் விளக்கிக் கூறுவார். திரை நோக்கில் "ஆட
ஆட” எனத் தொடரும் பாடலில் கூத்தியர் அங்கங்களை வர்ணிக்காது ஆபரணங்களை ஒவ்வொன்றாகக் காட்டுகிறார். விரசம் தவிர்க்கப்படுகிறது இத்தனை ஆபரணங்கள என்று பிரமிப்பு ஏற்படுகிறது. இந்தக் காட்சி, கூத்துக்கு நல்ல விறுவிறுப்பை ஏற்படுத்துகிறது. இந்த விறுவிறுப்பு சூதாட்டத்தில் தொடர்கிறது. காத்தவனின் வெனிறுவிட் டேனி என்ற வரிகள் எக்களிப்பையும், கூத்தியரின் தோற்றுவிட்டேன் என்ற வரிகள் ஆதங்கத்தையும் காட்டி நிற்கின்றன. அவர்களின் ஆட்டத்திலும் முகபாவத்திலும் அவைகள் வெளிப்படுகின்றன.
விலைமகளே இல்லை அம்மா அம்மாவே கூத்தியரே - நீயும் கலைமகளாய் வாழ்வாய் அம்ம
எங்கள் கலைச் செல்வம் அம்மா அம்மாவே கூத்தியரே - யாவும் உங்கள் வாழ்வேதான் அம்மா
என்று கூத்தியர் பெருமை கூறி, அவரை வாழ்த்த ஓர் இலட்சியவாதிக்கே சாத்தியம்.
போதையின் தீமையை விளக்கவும், "போதை தொட்டாலே தொடரும் தீமை" என்ற பாடலும், இதற்கேற்ப ஆடலும் தொடர்கிறது.
ஊர்குடி கெடுக்கவந்த சண்டாளத் துரோகி
- உன்னை ஊரை விட்டே ஒட்டிடுவோம் போ போ போ
என்ற வரிகளில், "சுற்றி நில்லாதே போ! பகையே, துள்ளிவருகுது வேல்" என்று பாரதி ஆவேசமாகப் பாடுவது நினைவுக்கு வருகிறது.
16
ஒன்பாதாவது ஆண்டு நிறைவு மலர்

2003 gا{>
கலப்பை
"திரைகடல் ஓடியும் திரவியம் தேடு" என்ற தாயாரின் கட்டளையில் செல்வச் சிறப்புப்பற்றிய ஒளவையார் அடிகளையுமி திருக்குறளையும் கேட்கிறோம். தொடரும் கப்பல் பாட்டில் "அகப்பட்டுப்போனாலோ அகதிக்கோலம், அகப்படாது போனால் என எமீமவரினி அவலங்களைக் காண்கிறோம்.
பாடல்
சாவினி கோலம்"
"காலனைக் காலால் உதைப்பேன்" என்ற பாரதியாரின் வீராவேசத்தோடு "அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே” என்ற பாரதியாரின் வீர சுதந்திர முழக்கத்தைப் போராளி காத்தவனின் உறுதியில் பார்த்துச் சிலிர்ப்படைகிறோம்.
4.
இந்தக் கூத்தின் பாத்திரத் தேர்வும் சிறப்பாக அமைந்துள்ளது. இங்கேயும் அண்ணாவியார் ஒரு புதுமையைச் செய்துள்ளார். தாயாராக வருபவரும், அவரிடம் விடைபெற வரும் காத்தவனாக வருபவரும் தொடர்ந்து (அதே நடிகர்கள்) வருகிறார்கள். அவர்கள்தான் இந்தக் கூத்தின் முக்கிய பாத்திரங்கள். தாயாரின் ஒவ்வொரு கட்டளையையும் நிறைவேற்றும் பொழுது வெவ்வேறு காத்தவனைப் (நடிகர்களைப்) பார்க்கிறோம். சின்னவன் பாத்திரமும் மாறிமாறி வருகிறது. இதனால் ஆடல் பாடலிலும் பல்வகை வேறுபாடு கிடைக்கிறது. சாராயப் பூதரும் கலகலப்பை ஏற்படுத்தினார். இவர்கள் எல்லோருமே சிறப்பாகப் பாடியும் ஆடியும் நடித்தார்கள்.
தாயாராக நடித்தவர்பற்றிக் குறிப்பாகச் சொல்லவேண்டும். மிகவும் சிறந்த நடிப்பு. ஓர் அன்னையின் பாசத்தையும் பரிதவிப்பையும் அங்கலாப்பையும் கண்டிப்பையும், ஈற்றில் அவரின் கையாலாகாத்தன்மையையும், அவரின்
முகத்திலும் குரலிலும் அசைவிலும் பார்த்து இரசித்தோம். இவர் பரதம் பயின்றவர் என்பது அவரின் ஒவ்வோர் அசைவிலும் பளிச்சிட்டது. அந்த அன்னையின் ஒப்பாரி நெஞ்சைவிட்டு நீங்காது.
கூத்தியராக வந்தவரின் நடிப்பும் ஆடலும் பாடலும் பாத்திரத்துடன் ஒன்றி இருந்துன. பாத்திரத்திற்கு ஏற்ப இவரும் பரதம் பயின்றவர். திரை நோக்கு சிறப்பாக அமைந்ததற்கு அதுவும் ஒரு காரணம். சூதாட்டத்தில் தோற்றபொழுதும், கூத்தியர் பெருமைகளைப் பிறர் கூறக் கேட்டபோழுதும், இரக்கம், சோகம், நன்றி, வியப்பு, என்று மாறி மாறி தன் உணர்ச்சிகளை வெளிப்படுத்தினார். பால காத்தவனாக (மணி உடுப்பில்) வந்த குழந்தையின் துள்ளல் நடையும் பாடலும் முகபாவமும் கம்பீரமும் எல்லோரையுமே வசீகரித்துவிட்டது. முதல் காட்சியில் வந்த அந்தக் குழந்தையின் ஆட்டத்திலேயே கூத்துக் களை கட்டிவிட்டதெனிறு கூறவேண்டும் காத்தவனாக (மணி உடுப்பில்) தொடர்ந்து நடித்தவர் ஆடலும் பாடலும் பாரம்பரியக் கூத்தைப் பார்க்கும் உணர்வை ஏற்படுதீதிக் கொணி டே இருநீதது. இலட்சியவிரனாக மாறும் காத்தவனின் நடிப்பை விசேஷமாகக் குறிப்பிடவேண்டும். ஒரு வீரனுக்குரிய கம்பீரமான நடை, துணிவோடு கழுமரம் நோக்கி வைக்கும் ஒவ்வொரு அடி, ஒவ்வொரு படியிலும் நின்று காட்டும் வீராவேசம் - இவைதான் கூத்தின் உச்சகட்டம் அந்தக் கழுமரக் காட்சி எம்மை மெய் சிலிர்க்கவைத்துவிட்டது.
கொண்டகொள்கை மாறாத கர்மயோகம் அம்மா இது தண்டனைகள் தாங்கிநிற்கும் தியாகத்தவம் அம்மா இது
ஒன்பாதாவது ஆண்டு நிறைவு மலர்
17

Page 11
கலப்பை
2003 ,2وا(G2
செத்தாலும் மாறாத சித்தயோகம் அம்மா இது வித்தாகிப் போனாலும் வேர்விடுமே அம்மா இது
எனிற வரிகள் கணிணில நீரை வருவித்துவிட்டன. வித்தாகிப் போனவர்கள் மனக்கண்ணில் தோன்றினார்கள்.
காட்சி அமைப்பும் எளிமையாக, நன்றாக இருந்தது. இரு வர்ணப் பின் திரைகளுக்கு ஊடாகப் பாத்திரங்கள் வருவதும் போவதும், பாத்திரப் பிரவேசத்தின் போது கைப்பிடித் திரை பிடித்து இருவர் ஆடி வருவதும், அதன் பின்னே பாத்திரங்கள் மறைந்து வந்து, திரை விலக்கித் தோற்றுவதும், தோற்றும் முறையில் திரை சால்வையாவதும், விதானமாவதும், பளிங்காவதும் (ஊடுகாணி திரை) என எத்தனை வர்ணத் திரைகள், எத்தனை வகைத் தோற்றங்கள். இன்று இது புதுமை, ஆனால் எமது பாரம்பரிய அரங்கிற்கு இவை மிகவும் பழையன. பாரம்பரியங்களைப் பொருத்தமான இடங்களில் பொருத்தமான முறையில் அண்ணாவியார் கையாளுவதைச் சிறப்பாகக் குறிப்பிடவேண்டும்.
பத்து அடி உயரக் கூரான மரம் ஒன்று, படிக்கட்டுகளுடன் இணைத்து, மேடைக்கு வெளியே ஒரு பக்கத்தில், பார்வையாளர் முன்னிலையில், கூத்து ஆரம்பிக்கு முன்னரே நிறுத்தப்பட்டிருந்தது. அது மேடைக்கு வெளியே ஒரு சிறு மேடையாகத் தோற்றியது. மரத்தின் உச்சியில் ஒரு சிவப்புத் துணியும் கட்டப்பட்டிருந்தது, ஆரம்பத்திலேயே கவனத்தை ஈர்த்தது. அது கழு மரம் என்பதும், ஆடுகளத்தின் ஒரு பகுதி என்பதும் கடைசியிலேதான் விளங்கியது. கழுமரக் காட்சி மேடைக்கு வெளியே நிகழ்ந்தது. ஒரு கட்டத்தில் காத்தவனை
யேசுநாதராகச் சிலுவையில் தரிசித்தோம். இது கூத்தின் உச்சம்.
சில வேளைகளில், தாளம் பிசகியது, சுருதியும் சற்றுப் பிசகியது, பாடல் அடிகளும் தடுமாறி வந்தன. ஆனாலும் , இடைப்பாட்டுக்காரர் திருத்திப் பாடிச் சமாளித்தார். கூத்து முடியுமுன் நடிகர் மேடைக்குக் குறுக்கே போனதையும் தவிர்த்திருக்கலாம். ஆடலும் பாடலும் இனினும் பணி படவேணி டும். இதை அரங்கேற்றமாகக் கொண்டு மேலும் பயின்று நடிகர்களின் திறமையை முழுமையாக வெளிக்கொண்டுவரவேண்டும்.
ஒலி, ஒளி இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம். ஒலி தவறிய போது கூத்தியருமி இடைப் பாட்டுக் காரருமி அதை எதிர்கொண்டமுறை மெச்சத்தக்கது. தாயாரும் மகனுக்கு உடை திருத்துவது போல, விழுந்த ஒலிவாங்கியை மாட்டிவிட்டார். மேடை அநுபவம் தெரிந்தது. இப்படிச் சிறு சிறு தவறுகள் பலவற்றைக் கூறலாம், ஆனால் அவை யாவும் கூத்தின் தரத்தை எந்த வகையிலும் குறைத்துவிடவில்லை. கூத்து முடிந்ததும், மூத்த நாடகக் கலைஞர்கள், திரு. மைக்கின்ரையர் போன்றவர்கள் மேடைக்குள் வந்து கூதி தர்களை பாராட்டியதைக் காணமுடிந்தது.
இது ஒரு நல்ல முயற்சி. இந்தக் கூத்தை இத்துடன் நிறுத்திவிடாது, தொடர்ந்தும் மேடையேற்றவேண்டும். இது தமிழர்கள் எல்லோரும் பார்க்க வேண்டிய கூத்து. இதை தமிழர் புலம்பெயர்ந்த நாடுகளில் மட்டுமல்ல, ஈழத்திலும் அரங்கேற்றவேண்டும்.
kathavan kottu was staged as part of UNIFUND KALAIKKATHAMPAM 2003 in aid of disadvantaged students in the Universities of north and east by
AUSTRALIAN SOCIETY OF GRADUATE TAMILS(ASOGT).
18
ஒன்பாதாவது ஆண்டு நிறைவு மலர்

g 2003 கலப்பைاچھے
வாழ்க்கை நிலை ஏழு
பருவத்தின் வாசல் கடந்து தரணியில் கால் பதித்து நடக்கும் புதுக் குழந்தை தாண்டும் படி ஏழு
ஐந்து வயதுவரை நிம்மதியான உறக்கம். வாழ்வின் மீதிக்கே இது போதுமென்றால் ஐந்து வயதுக்கும் முதலே அரிவரியாமென்று மெல்லெனத் தொடரும் கல்விச்சாலையின் சேட்டை ஆண்டு ஐந்து Scholarshipஆம் அகிலமெல்லாம் புகழுமென்று கண்ணுறக்கம் கெட்டு, போராடிப் பரிதவித்து, சின்னதொரு சைக்கிளைப் பரிசாகப் பெற்றிட முதன்முதலாய் கடந்திட்ட வாழ்க்கை நிலை ஒன்று.
ஆண்டு ஒன்பதே சாதாரண அடிப்படையென்று அருகிலிருந்தோரெல்லாம் கொட்டில் என்று ஒட விடியவும் சாப்பாடின்றி பொழுதுபட்டும் ஓயாது கண்மூடிப் படுத்தாலும் கனவுகாண நேரமின்றி, எட்டுநாள் அலைச்சலில் மெல்ல விடுதலையாகி காற்சட்டைகள் நீள சைக்கிள்கள் உயர இப்போது கடந்த வாழ்க்கை நிலை இரண்டு.
கணிதமா, விஞ்ஞானமா, கலையா, வர்த்தகமா, அடிபட்டுத் திரிந்து மெஞ்ஞானமே என்று தாவரவியல், விலங்கியல், பெளதிகத்துடன் இரசாயனம் ஆங்காங்கே சிறப்புப் பயிற்சிகள் பெற்றிட மண்ணெண்ணெய் கூட காட்டுக்கே கிடைக்குமென்றால், நாட்டிலே இனிமேல் இது கிடையாதென்று,
ஒன்பாதாவது ஆண்டு நிறைவு மலர் 19

Page 12
கலப்பை اکہg, 2003
இரசாயனவியல் அறிவிலே தயாரிக்கலாமா என்று பரிசோதனைகள் செய்து பார்த்துக் கொண்டிருக்க ஆவணி வந்து வாசலில் தட்ட சமுதாயப் பாதை திசைமாறும் நிலை மூண்று.
வரலாறு மாறுமென்று வாசலில் விழித்தெழுந்து இனியாகிலும் இங்கே இன்பமாய் இருக்கவென்று படிகளில் மேலேறி உள்நுழைந்து ஒய்வெடுக்க அருகில் இருந்தவன் மெல்ல தான் சொன்னான் Gray's 576, 3E65 good book. இருவருட முடிவில் மும்முனைத் தாக்குதல் தோட்டாக்களும் கிரனைற்றும் மொத்தமாய்த் தீர தப்பியோர் அனைவரும் Hospital உள்நுழைய தாண்டிய படலம் வாழ்க்கையின் நிலை நாண்கு.
Welcome Party - Block Lunch : Medicos Week, Medicos Night
épis 616trify 55.56i Additional factors Stethoscope Herohonda 2-Lóór Läuj 9 603lfi ftpá(35b. Clinical world 6b 6JThi605 E.6061) (ogs TL (bib. 3" M.B.B.S. Part I Girijdos, 560 aig/. 3rd M.B.B.S. Part II 6.Jfyjdjh60d35 560D6) -glgmy. Final M.B.B.S. - 6Typió0); Élsou vap. முடிந்ததும் அங்கே காத்திருப்பது விமானம்.
காலமெல்லாம் காத்திருந்து கற்று முடித்தோரது சைக்கிளிலிருந்து Herohonda, ship, plane 6T6), தொடர்ந்திடும் வாழ்க்கையின் பருவங்கள் ஏழு. நீந்திக் களைத்தவர்கள் கரையேறும் நேரம் வேஷம் கலைக்கவும் ஒய்வெடுக்கவும் வேளை வந்த நேரம் புதிதாகக் கதவு தட்டப்படும் ஓசை அலுப்பின்றி எழுந்து fresh ஆகத் திறக்க கடமை உள்ளே வந்து கதைப்போம் என்றமர்கின்றது!
க ஜா ன்
20 ஒன்பாதாவது ஆண்டு நிறைவு மலர்

2003 .وہا{{{ھے
கலப்பை
பகுதி 3
g5 (DDT66
Tuijff
அதில் ஒரு சுகமும் காண்கின்றாள்.
சிறு வயதில் அஞ்ஜனாவின் இதயத்தில் அவள் அத்தான் கேசவன் மேல் தோன்றிய அன்பின் தன்மையை அறிவதற்கு முன்னரே இனக் கலவரத்தில் பெற்றோரை இழந்து தம்பி தங்கையுடன் மாமாவின் உதவியால் ஆஸ்திரேலியா சென்று அங்கு பல இன்னல்களுக்கு ஆளானாள். அவளுக்குப் பிரேமா என்ற ஒரு ஆஸ்திரேலியச் சமூகநலத்துறை அலுவலரின் உதவி கிடைத்தது.அவர்களின் உதவியால் படித்து ஒரு சிறந்த டாக்டரானாள். தம்பி தங்கைகளும் நன்கு படித்து அவாகள் விரும்பியவர்களையே மணந்து சிறப்பாக வாழ்கின்றார்கள். அஞ்ஜனா திருமணம் செய்யவில்ல. கேட்போருக்கு எதையாவது சொல்லி மழுப்பும் அஞ்ஜனா இன்றும் தன் அத்தான் கேசவனின் நிவுைகளையே சுமக்கின்றாள்
இதுவரை
அன்று கொழும்பில் அந்தத் தனியார் மருத்துவ மனையின் டாக்டர் பிரியங்காவுக்கு வீட்டில் இருப்புக் கொள்ளவில்லை. உரிய நேரத்திற்கு முன்னரே கடமைக்கு வந்துவிட்டாள். அன்று தான் ஆஸ்திரேலியாவிலிருந்து அந்த இருதய சத்திர சிகிச்சை நிபுணர் வருவதாக இருந்தது. பிரியாங்காவும் ஒரு இருதய சிகிச்சை வல்லுனர் தான் அதனால் அந்த டாக்டரைப் பற்றி நிறையக் கேள்விப் பட்டிருக்கிறாள். அவர் மருத்துவ சஞ்சிகைகளில் எழுதும் கட்டுரைகளைத் தேடிப் போய்ப் வாசிப்பாள். எல்லாவற்றிலும் வெறும் ஏ சேகள் என்று தான் இருக்கும். கட்டுரையாளர் பற்றிய விபரங்களோ ஆகக் குறைந்தது அவர் படம் கூடப் பிரசுரிக்க மாட்டர்கள். இது நம்ம அஞ்ஜனா சந்திரசேகராக இருக்காதா? எனப் பிரியங்கா ஏங்குவாள். அவளது மற்றத் தோழிகள் ஆஷா, நிஷங்கா மைத்ரேயி எல்லோரிடமும் "இது நம்ம அஞ்சுவாக இருக்குமா”?
அவளும் நம்மைப் போல டாக்டராகி இருப்பாள் இல்லையா?" என மிகவும் ஆவலாகக் கேட்பாள். ஆனால் யாரிடமிருந்தும் "ஆமாம்" என்ற உறுதியான பதில் வராது ஒரு சோகமான வெறும் புன்னகை தான் வரும்.
ஒன்பாதாவது ஆண்டு நிறைவு மலர்

Page 13
566)
2003 ,2واہیے
ஏறத்தாழ இருபது வருடங்களுக்கு முன்னர் கொழும்பில் அந்தத் தனியார் பாடசாலையில் அவர்கள் ஐவரையும் தெரியாதவர்கள் கிடையாது அவர்கள் நட்பைப் பற்றிப் பேசாதவர்கள் கிடையாது. ஐந்து பேரையும் எங்கும் எப்போதும் ஒன்றாகத் தான் காணலாம். தற்செயலாக ஒருவரைக் காணாவிட்டால் ஆசிரியர்களே எங்கே மற்றவர் என்று கேட்பாாகள். அப்படி ஒரு இன, மத, மொழி பேதமற்ற நட்பு, சினேகிதம் மட்டுமல்ல அவர்களின் புத்தியும் அப்படித் தான். யாருக்கு அதிகம் புள்ளிகள் கொடுப்பதென ஆசிரியர்கள் தடுமாறுவார்கள். அநேகமாக எல்லா விடைகளும் ஒரே மாதிரித் தான் இருக்கும். ஒன்றாகப் படிக்கிறார்கள் சரி. ஒன்றாகவுமா நினைவில் வைத்து எழுதுவார்கள் என வியப்பாகள். ஆயினும் ஆசிரியர்களுக்கு அவர்களை நினைத்து என்றும் பெருமை தான். நிச்சயமாக அந்த வருடம் ஐந்து பேர் தம் பாடசாலையிலிருந்து மருத்துவம் படிக்கப் பல்கலைக் கழகம் போவார்கள் என்று நம்பினார்கள். அப்படித் தான் நடந்தது. ஐவருக்கும் வேண்டிய மதிப் பெண்கள் கிடைத்தன. ஆனால் கண்ணுறு பட்டது போல இனக் கலவரம் வந்து அவர்களிடமிருந்து அஞ்சுவைப் பிரித்துவிட்டது. அதன் பின் அஞ்சுவிடமிருந்து இந்த இருபது வருடங்களாக எந்தத் தகவலுமே இல்லை.
ஆனால் மற்ற நால் வரும் அஞ்சுவை மறக்கவில்லை. தவறாமல் அவளது பிறந்த நாளுக்குப் பிள்ளையார் கோவிலில் போய் அர்ச்சனை செய்வார்கள். எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்தால் முடிவில் பேச்சு அஞ்சுவிடமே போய் எப்படி இருக்கிறாளோ என நினைத்துச் சோகமாகப் பிரிவாாகள். பிரியாங்கா பல தடவைகள் அந்த ஏ சேகருக்கு ஒரு இ-மெயில் அனுப் பவா என நிதிைதிருக்கிறாள். ஆனால் இத்தனை காலத்தில் அஞ்சுவுக்குத் திருமணமாகிப் பெயர் மாறியிருக்கும்.
அதனால் இது அவளாக இருக்க வாய்ப்பில்லை என மற்றத் தோழிகள் கூறியதால் பேசாமல் விட்டு விட்டாள். கொழும்பிலுள்ள அவளது மருத்துவ மனையும் வேறு சிலவும் இருதயச் சத்திர சிகிச்சைக்காக அஞ்சுவைப் பல முறை அழைத்தும் வர மறுத்தவள் இந்தத் தடவை நான் வருகிறேன் என அறிவித்ததும் அனைவருக்கும் மட்டற்ற மகிழ்ச்சி. அப்போது தான் பிரியங்கா தன் தலைமை டாக்டரிடம் அந்த டாக்டர் பற்றிய விபரங்களைக் கேட்டறிந்தாள். அவர் கூறிய தகவல்களைக் கொண்டு வருவது அஞ்சு தான் என்பது அவளுக்கு உறுதியானது அது நம்ம அஞ்சு தான் என மற்றவர்களிடம் மகிழ்ச்சியுடன் சொல்லித் தம் அருமைத் தோழியை ஆவலுடன் எதிர்பாாத்தாள். மற்றவாகள் "சும்மா ஏமாறாதே பிரி, நம்ம அஞ்சு எப்படி இருக்கிறாளோ? இத்தனை வருடங்களாக ஒரு தொடர்புமே இல்லை. ஆனால் வருவது அவளாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்குமி. அவளானால் உடனே சொல்லு பிரி’ என்றனர். அது தான் ஆபரேஷன் தொடங்க முதல் அந்த டாக்டரை ஒருமுறை பார்த்துவிட வேண்டும் என நேரத்தோடேயே * வந்து காத்திருந்தாள்.
கொழும்பு என்று நினைத்தாலே அஞ்சுவுக்கு ஒரு பயம். இதயம் நடுங்கும். யாரிடமும் காட்டிக் கொள்ளாமல் வளைய வந்தாலும் அந்த மண்ணில் பதிய அவள் கால்கள் அஞ்சின. அதனால் வந்த அழைப்புக்கள் யாவையுமே மறுத்துவிட்டாள். ஆனால் இப்பொழுது அஞ்சு கொழும்புக்குச் செல்ல நினைத்ததற்கு இரு காரணங்கள் இருந்தன. முதலாவது எல்லோரும் ஊருக்குப் போகின்றார்கள் என்றதும் "சிறு வயதில் வந்தது ஒரு தடவை போகவா" என அவினாஷ் கேட்டபோது அவளுக்குப் பயமாக இருந்தது. விழிகள் சுரக்க "வேண்டாம் தம்பி’ என்றாள் அவள் பயம் அவளது குரலின் நடுக்கத்தில் தெரிந்தது. அவள் உடல் நடுங்குவதை அவன் கவனித்தான். அப்பொழுது தான் அவனுக்குப் புரிந்தது தங்களைவிட அக்காவின் மனம்
s?
ன்ொகாவது ஆண்h நிறைவு மலர்

big. 2003
கலப்பை
எவ்வளவு பாதிக்கப் பட்டிருக்கிறது. எதுவோ எங்களுக்காக அனைத்தையும் மனத்தின் ஒரு மூலையில் புதைத்துவிட்டு வளைய வருகிறார் ஆனால் அவர் மனப்பயம் அப்படியே இருக்கிறது என உணர்ந்தான். அவளை அணைத்தவன் ‘எப்பவோ நடந்ததற்கு இப்போதும் பயமா அக்கா இப்போ ஒன்றும் இல்லை. நான் ஆஸ்திரேலியப் பிரசை, என்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது” என்றான். "அப்படியானால் சரி கவனமாகப் போய் வா அதிக நாட்கள் நிற்காதே’ என ஆனுப்பி வைத்தாள். போய் வந்தவன் "கேசவ் அத்தான் இன்னும் திருமணமே செய்யவில்லை இனியும் செய்ய மாட்டாராம், மாமாவும் அண்மையில் இறந்துவிட்டார். ரஷ்மியும் திருமணமாகி லண்டனில் வசிக்கிறாளாம். அத்தான் தனித்து இருக்கிறார் பார்க்கப் பாவமாக இருக்கிறது” என்றான். அதைக் கேட்டதும் அவளுக்கு வருத்தமாக இருந்தது. அதன் காரணமறிந்து அவனுக்கு ஒரு திருமணம் செய்து வைப்பது தனது ஒரு தார்மீகக் கடமை என நினைத்தாள். அது அத்தைக்குச் செய்யும் ஒரு நன்றிக் கடன் எனத் தீர்மானித்தாள்.
அத்துடன் இளமைப்பருவத்து உணர்வுகள் அந்த வயதுப் பெண்களின் கேளிக்கைகள் எதையும் அனுபவிக்காமல் தம்பி தங்கைக்காக வாழ்ந்தது. எப்பொழுதும் ஏதாவது ஒரு பிரச்சனை தோன்றித் தலையில் ஒரு பாரமாக அழுத்தியது சிரிக்கவோ! சிந்தித்து மகிழவோ! நேரமே இல்லாமல் அலைந்தது அனைத்தும் அவள் உள்ளத்தில் தேங்கி ஒரு பாறை போல உறைந்து அவ்வப்போது வலிக்கும். அதை அவள் என்றும் சட்டை செய்வதில்லை. ஆனால் ஒருநாள் ஒரு இருதய ஆபரேஷன் செய்யும் போது அந்த வலி வந்து அவளை நிலை குலைய வைத்தது. அதன் பின்னர் தான் என்ன இது ஓர் உயிரைக் கொல்ல இருந்தேனே என மேலும் உறைந்து போனாள். அன்றே ஒரு மனோ தத்துவ டாக்டரிடம் போனாள்.
அவர் "இதற்குக் காரணம் உங்கள் அடி மனத்தின் பயங்கள், ஏக்கங்களாக இருக்கலாம். அவற்றை வெளியே கொணர்ந்து உங்கள் மனத்தை இலேசாக்க வேண்டும். ஒரு முறை நீங்கள் வளர்ந்த படித்த இடத்திற்குப் போய் உங்கள் நண்பர்களைப் பார்ப்பது நல்லது” என்றார். அதைக் கேட்டு அஞ்சு வியந்தாள். நண்பர்களா எனக்கு அங்கே யார் இருக்கின்றார்கள். நீருவைத் தவிர எனக்கு வேறு யார் சினேகிதர் என நினைத்தாள் என்ன முயன்றும் யாரையும் நினைவில் கொணர முடியவில்லை. ஆனால் அந்த டாக்டரோ "அங்கேயே வளர்ந்து படித்தது என்கிறீர்கள் ஒருவருமா இல்லை?” என வியந்தார். துயரங்கள் புதைக்கப் பட்டது போல அவளது இளமைப் பருவ வாழ்க்கையும் மறைக்கப் பட்டிருந்தது. கொழும்பை நினைக்கும் போதெல்லாம் அம்மா அப்பா இனக்கலவரம், தம்பி தங்கைகளை வைத்துக் கொண்டு என்ன செய்வதெனத் தெரியாமல் பயந்து போய் இருந்தது போன்றன வந்து வேதனைப் படுத்தியதால அந்த நிவுைகள் வேண்டாம் என ஒதுக்கியதால் வேண்டியவைகளும் மறைக்கப் பட்டுவிட்டன. இத்தனை காலமும் அந்த நால்வரின் மேலான நட்பு ஒரு நாளும் அஞ்சுவுக்கு நினைவில் வரவேயில்லை. ஆனால் இதே உடல் நிலை தொடர்ந்தால் என்னவாகுமோ? ஆபரேஷன் செய்ய முடியுமோ என்ற பயம் வந்தது அதனால் டாக்டர் சொல்வது போல ஒருமுறை அங்கு போய் ஏதாவது நினைவில் வருகிறதா பார்ப்போம் என நினைத்தாள். பயம் தயக்கம் எல்லாம் இருந்தது பிரேமா தான் ‘ஒன்றுக்கும் பயப்படாதே எல்லாம் பகவான் பார்ப்பார்” எனச் சொல்லி அனுப்பினாள். அதன் பின் தான் இதுவரை தன் னை அழைத் த ஆஸ்பத்திரிகளுக்குத் தன வருகையைத் தெரிவித்தாள். முதலாவதாகப் பிரியங்கா வேலை செயப் யும் பராக் கிரமபாகு மருத்துவமனைக்குப் போனாள்.
அங்கே தன்னை நோக்கி டாக்டர் அங்கியுடன் வந்த பிரியங்காவைக் கண்ட அஞ்சுவின்
ஒன்பாதர்வது ஆண்டு நிறைவு மலர்
23

Page 14
கலப்பை
2003 ,gاچھے
உள்ளத்தில் எதுவோ ஓர் இருள் விலகுவது போல இருந்தது. பிரியங்காவுக்கும் அவளைத் தூரத்தில் கண்டதுமே தெரிந்துவிட்டது. சும்மாவா? உயிரும் உணர்வும் ஒன்றிய நட்பல்லவா? எத்தனை வருடம் ஆனால் என்ன இதயம் கண்டு கொண்டது. அவசரமாக அவளருகே வந்த பிரியங்கா அவளை ஏற இறங்கப் பார்த்துவிட்டு “அஞ்சு’! எனத் தயங்கித் தயங்கிக் கேட்டாள். "ஆமா” என்றவளுக்கு உள்ளத்தில் ஒரு வெளிச்சம் தெரிந்தது திடுக்கிட்டவள் பிரி! எனக் கூவினாள். அஞ் சூ!! என அவளை அணைத்துக் கலங்கியவள் சட்டெனப் போடி எனத் தள்ளிவிட்டு மீண்டும் விம்மினாள். விம்மலிடையே "எப்படி மறந்தாய் அஞ்சு” எனக் கேட்டாள். அஞ்சு வெட்கித் தலை குனிந்தாள் உன்னைக் காணும் வரை எனக்கு உன் நினைவே இல்லை என்று எப்படி ஓர் உயிர்ச் சினேகிதியிடம் சொல்வாள். அவள் கண்களும் கலங்கின. பிரியங்காவும் ஒரு டாக்டர் தான் என்றாலும் அவளுக்குத் தன் நிலையைச் சொல்ல இது நேரமில்லை எனத் தீர்மானித்தவள் "தப்புத் தான் பிரி என்ைைன மன்னித்துவிடு. ஆஷா, நிஷா மைத்தி எல்லோரும் எங்கே எப்படி இருக்கிறாாகள் எல்லோரையும் நான் பார்க்க வேண்டுமே பார்க்கலாமா? இங்கு தானே இருக்கிறாகள் அல்லது எங்காவது வெளிநாட்டிலா?’ என வினாக்களை அடுக்கினாள். "ஆமாம் இருபது வருடங்கள் எண்ணமே இல்லாமல் இருந்தவள் இப்போ வந்து எல்லோரையும் பார்க்க வேண்டுமாம் எப்படி அஞ்சு? எப்படியடி எங்களை மறந்தாய்?” என மீண்டும் கலங்கினாள். அஞ்சு மெளனமாக நின்றாள். "இங்கேயே இப்போதே எல்லாவற்றையும் எப்படிச் சொல்வேன் பிரி ஆபரேஷன் வேறு இருக்கிறது" என்றாள். "ஒரு நிபந்தனை அஞ்சு நீ ஹோட்டலை விட்டு என்னுடன் வந்தால் எல்லோரையும் பார்க்கலாம் வருகிறாயா?” என்றாள். அவளைப் பார்த்துப் புன்னகைத்தவள் "இதைவிட எனக்கு வேறென்ன வேண்டும்.
இந்த ஆபரேஷன் முடிந்ததும் வருகிறேன். இங்கேயே இரண்டு மூன்று இருக்கும் போல் தெரிகிறது மாலையிலும் வரவேண்டுமென நினைக்கிறேன் அதற்கிடையில் முடிந்தால் வருகிறேன் அல்லது மாலையில் வருகிறேன்” என்றாள். "நிச்சயமாக வருவாயா ஓடி ஒளியமாட்டாய்தானே? எனக் கேட்டாள். பழைய நினைவுகள் ஒவ்வொன்றாகக் கிளர்ந்தெழ "நீ மாறவே இல்லைப் பிரி சத்தியமாக உன்னுடன் வருகிறேன் போதுமா? இப்போ போய் ஆபரேஷன் செய்யவா?’ எனக் கேட்டாள். சரியென அனுப்பி வைத்தாள். ஆனால் அஞ்சு அந்த சத்திர சிகிச்சையை முடித்து வெளியே வர அந் நால்வருமே அங்கு காத்திருந்தனர். அறையைத் திறந்ததும் இடம் பொருள் ஏவல் எதையுமே சிந்திக்காமல் தாயைக் கண்ட குழந்தைகளாக ஓடிச் சென்று அவளை அணைத்துக் கொண்டனர். இப்பொழுது அஞ்சுவின் கன்னங்களில் நீர் கோடிட்டது. இந்த மதுரமான நட்பை இத்தனை நாட்களும் எப்படி மறந்திருந்தேன். பெற்றவர்களின் திடீர் மறைவு. அதனால் தலையை அழுத்திய தம்பி தங்கை என்ற சுமை எல்லாம் சேர்ந்து என் மனத்தை அவ்வளவுக்கா பாதித்திருக்கிறது? அந்த மனோ தத்துவ டாக்டர் இது ஒரு வகை ஞாபக மறதி. சில விஷயங்களை நினைத்தால் உங்களுக்குப் பயம் என்பதால் அவற்றை உங்கள் மூளை மறைத்துவிட்டது” என்று சொன்னார்.
இதைச் சொல்லி இவர்களைக் குழப்ப வேண்டாம் என நினைத்தவள் பழைய குறும்பு கிளர்ந்தெள "என்ன உங்களுக் கெல்லாம் வேலையே இல்லையா?” என வேடிக்கையாகக் கேட்டாள். அதை யாரும் பொருட்படுத்தவில்லை. “எப்படி அஞ்சு" என மீண்டும் கேட்டனர். ஆனால் அஞ்சுவுடன் மிக நெருக்கமான நிஷங்கா மட்டும் அஞ்சுவாக மறக்கவில்லை இதற்குள் வேறு எதுவோ இருக்கிறது அஞ்சு சொல்லத் தயங்குகிறாள் எனப் புரிந்து "சரி வாங்கோ கன்டினில் போய் இருந்து பேசுவோம் இது
ஒன்பாதாவது ஆண்டு நிறைவு மலர்

g 2003 கலப்பைاہیے
ஒன்பாதாவது ஆண்டு நிறைவு மலர் 25

Page 15
கலப்பை
2003 ,2وا{{ھے
வாழ்க்கை வாழ்வதற்கே
கீதாகரனி நடராஜா
ஆப்பிரேஷன் தியேட்டர் வாசல்" என அழைத்துச் சென்றாள். அங்கே தேனீர் அருந்திவிட்டு அவரவரே பிரிந்தனர். அஞ்சுவுக்கும் அடுத்த ஆபரேஷன் காத்திருந்தது. அன்று மாலை பிரியங்கா வீட்டில் சந்திப்பதாகத் தீர்மானித்தனர்.
மாலையில் திரும்பவும் அதே பேச்சு எழுவதற்கு முன் அஞ்சு முந்திக் கொண்டாள். “சரி எல்லோரும் உங்களைப் பற்றிச் சொல்லுங்கோ இங்கே வந்து பிரியின் மணியான இரண்டு குழந்தைகளையும் அவள் கணவர் அனில்
ஐயும் பார்த்தேன். மிகவும் மகிழ்ச்சியாக
இருக்கிறது. நீங்களும் குடும்பத்துடன் வருவீர்கள் எனக் காத்திருந்தேன். தனித்து வந்திருக்கிறீர்கள்" என்றாள். “எப்போதும் போலவே." என நால்வரும் ஒரே நேரத்தில் கோரசாக ஆரம்பித்து “பேச்சை மாற்றாதே அஞ்சு' எனப் பிரியங்கா முடித்தாள். தனது ஒவ்வொரு அசைவையும் அவர்கள் மறக்கவில்லையே. இது எத்தகைய நட்பு எப்படி என் நினைவிலிருந்து மட்டும் அழிக்கப்பட்டது என வேதனைப் பட்டவள் மெளனமானாள்.
“எப்படி அஞ்சு எங்களை மறந்தாய்?" என ஆஷா கேட்டாள். விழிக்குளம் நிறைய அவளை நிமிாந்து பாத்தவள் பேசாமல் தலை குனிந்தாள். எப்போதுமே உணர்ச்சி வசப்படும் மைத்ரேயி, "அகதிகள் முகாமுக்குப் போயிருந்தாயாம் ஏன் அஞ்சு நாங்கள் இருப்பது அப்போதே மறந்து போய்விட்டதா? அல்லது எங்களையும் எதிரிகளாக நினைத்தாயா?" எனக் கோபமாகக் கேட்டாள். திடுக்கிட்டுத் தலையை நிமிர்த்தியவள் மீண்டும் நிலம் நோக்கினாள்.
"நீ பரீட்சை முடிந்ததுமே அத்தை வீட்டுக்குப் போவதாகச் சொன்னாய். அதனால் நாங்கள் கவனக் குறைவாக இருந்து விட்டோம். ஏன் அஞ்சு என்ன நடந்தது” என ஆஷா கேட்டாள். “நீ யாழ்ப்பாணம் தானே
போயிருக்கிறாய் வகுப்புத் தொடங்கியதும் வருவாய் எனக் காத்திருந்தோம். ஆனால் நீ வரவேயில்லை. பேராதனையிலிருந்த மருத்துவ பீடத்திற்குச் சேர்ந்தவர்களின் லிஸ்டில் உன் பெயர் இல்லை. அதன் பின் தான் எங்கோ தப்பு நடந்துவிட்டது எனப் பதறிப்போனோம். உடனே கல்லூரிக்கு போன் பண்ணிப் பிறின்ஸியிடம் கேட்டோம் அவர் பயப்பட வேண்டாம் அஞ்சுவுக்கு ஒன்றுமில்லை. அவள் ஆஸ்திரேலியா போய்விட்டாள். அவள் அப்பா, அம்மா தான் இல்லை என்றார். நாங்கள் நால்வர் உன் தோழிகளாக இருந்தும் உன் பெற்றவர்களைக் காப்பாற்ற முடியவில்லையே! உன் துயரத் தரில் பங்கு கொள்ள முடியவில்லையே என எவ்வளவு வேதனைப் பட்டோம் தெரியுமா”? எனப் பிரியங்கா குரல் தழதழக்கக் கூறினாள்.
"நாம் ஐவர் என்ற நினைப்புப் போக எவ்வளவு நாட்கள் எடுத்தது தெரியுமா?’ என நிஷா தன் பங்குக்குத் தொடங்கினாள். "வகுப்பில் அஞ்சுவுக் கென்று இடம் பிடிப்போம். வகுப்புத் தொடங்கும் போது தான் ஓ! அஞ்சு இல்லை என்ற நினைப்பு வரும். எதையும் ஐந்தாகவே வாங்கிவிட்டு அல்லது ஐந்து பங்காகப் பிரித்துவிட்டு ஐந்தாவது கையில் மிஞ்சி இருக்கும் போது தான் நம்ம அஞ்சு இல்லையே! என்ற எண்ணம் வந்து வேதனையாக இருக்கும்".
அஞ்சுவின் கண்கள் அருவியாயின மெளனமாகக் கண்ணிர் வடித்தாள். "உன் கடிதம் இன்று வரும் நாளை வரும் என எதிர் பார்த்து ஏமாந்தது தான் மிச்சம்” எனப் பிரியங்கா குறைப் பட்டுக் கொண்டாள். "பின் உனது கட்டுரைகளைப் படிக்கும் போது இது நம்ம அஞ்சுவாக இருக்காதா என நினைத்துக் கொள்வேன். இமெயில் அனுப்பவா என்று கூட நினைத்தேன். ஆனால் தயக்கமாக இருந்தது உனது பிறந்த நாளுக்கு வழக்கம் போல நீ போகும் பிள்ளையார் கோவிலுக்குப் போய் அர்ச்சனை செய்வோம்" என்றாள்.
26
ஒன்பாதாவது ஆண்டு நிறைவு மலர்

2003 ,gانچھے
கலப்பை
“போதும் பிரி போதும்" என அஞ்சு கதறினாள் தொடர்ந்து விம்மி விம்மி அழுதாள். நால்வரும் அவளைச் சூழ்ந்து கொண்டனர். நிஷா அணைத்துக் கொண்டாள். மற்றவர்கள் கையைப் பற்றிக் கொண்டு அமைதியாக இருந்தனர். அவர்களின் விழிப் பூக்களும் உதிர்ந்தன. அழுது ஒய்ந்த அஞ்சு எழுந்தாள். கண்ணைத் துடைத்துவிட்டுப் போய்த் தண்ணி குடித்துவிட்டு வந்தாள்.
அமைதியாக அவர்களைப் பார்த்தவளின் கண்கள் மீண்டும் பனித்தன. ஆனால் இவர்களுக்குத் தகுந்த விளக்கம் கொடுக்க வேண்டியது என் கடமை என நினைத்தாள். அதனால் அவர்களைப் பார்த்து "ஆஷா! பிரி! நிஷா! மைத்தி! நாமெல்லோரும் டாக்டர்கள். நான் பிரிந்து போனாலும் எப்படியோ படித்து எம் கனவை நனவாக்கிவிட்டோம். அதனால் எமக்கு மற்றவர் களைவிட மனித உணர்வுகளை, அதன் பாதிப்புக்களை அதற்கான காரண காரியங்களை நன்கு அறிய முடியும் இல்லையா? நான் சொல்வதைத் தயவு செய்து அதிர்ச்சி அடையாமல் கேளுங்கள்” என்றவள் பின் “ஏன் மறந்தாய் எனக் கேட்டீர்களே? பிரியைக் காணும் அந்த நிமிடம் வரை எனக்கு உங்கள் யாரையுமே ஏன் எமது பாடசாலை வாழ்க்கை எதுவுமே நினைவில் இல்லை என்றால் நம்பமுடிகிறதா?” எனக் கேட்டவள் மேசையில் முகம் புதைத்து விம்மினாள் எல்லோரும் துடித்துப் போனார்கள். அங்கே நரம்பியல் நிபுணராக இருந்த நிஷங்கா அனைவரையும் மெளனமாக இருக்கும்படி சைகை காட்டினாள். சிறிது நேரத்தில் தெளிந்த அஞ்சு தொடர்ந்தாள்.
“கலவரம் நடக்கும்போது உங்களிடம் வரவில்லை எனக் கூறினீர்களே யாவும் என்ன திட்டமிட்டா நடந்தது? வீட்டின் முன்பக்கத்தை காடையர்கள் உடைத் துத் தகர்க்க முயன்றபோது பின் பக்கத்தால்
வெளியேறினோம். அது எத்தகைய பயம் தெரியுமா? உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடுவது என்பார்களே அதை அன்று நான் நிதர்சனமாக உணர்ந்தேன். எங்கு போவதென்றே யாருக்கும் தெரியவில்லை. வழியில் கண்ட போலிஸ் கொண்டு போய் அகதிகள் முகாமில் விட்டார்கள். அங்கே இருக்க எங்களால் முடியுமா? நிலத்தில் படுத்து நுளம்புக் கடியெல்லாம் தாங்கிப் பழக்கமா? எமது கஷ்டத்தைப் பார்க்க முடியாத அப்பாவும் அம்மாவும் வீட்டில் போய் ஏதாவது பொருட்கள் இருந்தால் எடுத்துவருகிறோம் அல்லது வாங்கி வருகிறோம் எனப் போனவர்கள் வரவே இல்லை நிஷா!' எனக் கதறினாள். அதைத் தொடர்ந்து ஏங்கி அழுதாள். இதுவரை தான் தளர்ந்தால் தம்பியும் தங்கையும் துவண்டு விடுவார்கள் எனப் பயந்து அனைத்து உணர்வுகளையும் காட்டாமல் மறைத்ததால் அவள் உள்ளத்திலேயே உறைந்திருந்த துயரம் யாவும் கண்ணிராகக் கரைந்து கொண்டிருந்தது. நால்வரும் கண்கலங்க அஞ்சுவைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
அழுது ஓய்ந்தவள் தொடர்ந்தாள் "அதன் பின் புயலில் அகப்பட்ட சருகுகள் போல எப்படியோ அடிபட்டு ஆஸ்திரேலியா போய்ச் சேர்ந்தோம். அங்கே என்னென்ன கஷ்டங்கள் தெரியுமா? பதினேழு வயதில் இரு குழந்தைஞக்குத் தாயானேன் என்று தான் கூற வேண்டும்” என விழி சுரக்கக் கூறி இதழ்களைக் கடித்து எழுந்த விம்மலை அடக்கினாள் "ஆனால் அதற்கான பலன் கிடைத்தது. அவினாஷ்ம் ஆரபியும் இன்று நன்றாக இருக்கிறார்கள். அது எவ்வளவு பெரிய ஆறுதல் தெரியுமா? அத்துடன் எப்படியோ சில நல்லவர்கள் உதவியால் நானும் படித்தேன். அது ஒரு அதிசயம் கடவுள் செயல் என்று தான் சொல்ல வேண்டும். கொழும்பை அம்மா அப்பாவை நினைக்க மனம் நடுங்கும். அதனால் அதை ஒதுக்கி ஒதுக்கி அத்துடன் சேர்ந்த என் இளமைக் காலமும் மழுங்கிவிட்டது. பின் உங்கள் நினைப்பு எப்படி வரும்?"
ஒன்பாதாவது ஆண்டு நிறைவு மலர்
27

Page 16
கலப்பை
2003 .وہابیہ
"அவ்வப்போது நெஞ்சில் ஒரு வலி இருந்தது. அண்மையில் அதிகமாகி டாக்டரிடம் காட்டியபோது உங்கள் இளமைக்கால நண்பர்களைக் கண்டு பேசுங்கோ என்றார். யார் யார் என்று நினைத்தேன் வரவே இல்லை மைத்தி!” என மைத்ரேயியின் கைனயப் பற்றினாள். "பிரியைக் கண்டதும் தான் புற்றிலிருந்து வெளியாகும் ஈசல் போல எல்லா நினைவுகளும் ஒவ்வொன்றாக வந்தன. எத்தகைய உயர்ந்த நட்பை இவ்வளவு நாட்களும் மறந்திருந்தேன் உங்களுடன் கடிதத் தொடர்பாவது இருந்திருந்தால் என் மனப் பாரத்தை ஓரளவுக்காவது இறக்கியிருக்கலாம். ஆனால் நான் அதிர்ஷ்டமற்றவள்” எனக் கண்ணிரிடையே கூறி முடித்தாள்.
அங்கே ஒரு பலத்த மெளனம் நிலவியது. அனைவர் கண்களிலும் ஆழ்ந்த ஒரு சோகம் தெரிந்தது. அதைப் பிரியங்கா தான் கலைத்தாள் "போதும் அஞ்சு, பழசையெல்லாம நினைத்து உன்னை மேலும் வருத்தாதே நீ திரும்பக் கிடைத்ததே எமக்குப் போதும், எல்லோரும் வாங்கோ சாப்பிடுவோம்” என அழைத்தாள். யாரால் சாப்பிட முடியும் சாப்பிட்டதாக எதுவோ பெயர் பண்ணிவிட்டுக் கனக்கும் நெஞ் சங்களுடனும் குற்ற உணர்வுடனும் சென்றனர். ஆனால் பல வருடங்களுக்குப் பின் அன்று அஞ்சுவின் உள்ளம் மிகவும் அமைதியாக எந்தச் சலனமுமற்று இருந்தது நிம்மதியாக உறங்கினாள்.
மறு நாள் காலையில் அவ்ஸ் எழுவதற்கு முன்னரே பிரியங்கா ஆஸ்பத்திரிக்குப் போய்விட்டாள். அஞ்சுவுக்கு அடுத்த ஆபரேஷன் அன்று மாலையில் தான் இருந்தது. வீட்டு வேலைக்காரியிடம் எல்லாம் சொல்லிவிட்டுப் போனாள். ஆனால் அவள் கண்விழித்த போது அவள் கட்டிலின் ஒரு பக்கத்தில் நிஷங்கா இருந்து அவளையே பாாத்துக் கொண்டிருந்தாள். அவள் கண்கள் கலங்கியிருந்தன. விழித்த அஞ்சு "என்ன
நிவழி உனக்கு இன்று வேலை இல்லையா இங்கே இருக்கிறாய்?" எனக் கேட்டாள். “இரவெல்லாம் தூக்கமே இல்லை அஞ்சு" என வேதனையுடன் கூறினாள். "நான் இன்று
தான் நன்றாகத் தூங்கினேன்' என்றாள் புன்னகையுடன். அவளைப் பார்த்து வேதனையாக முறுவலித்தவள் "எதுவும்
மற்றவர்களுககு வந்தால் தெரியாது அஞ்சு நம்மைச் சேர்ந்தவர்களுக்கு வந்தால் தான் புரியும். உன் கஷ்டங்கள் உன்னை ஒரு நோயாளியாக்கும் அளவுக்குக் கொண்டு போனதைப் பாக்கும் போது தான் நம் நாட்டில் எவ்வளவு அநியாயம் நடக்கிறது என உணர முடிகிறது. நாங்கள் நால்வர் உன் நண்பர்கள் என இருந்தும் நீ இப் படியெல்லாம் அவதிக்குள்ளாக வேண்டியிருந்ததே என நினைக்கும் போது என்னால் தாங்க முடியவில்லையே! அஞ்சு" என விம்மினாள்.
அவள் கைகளை அன்புடன் பற்றியவள் "நிவழி டார்லிங் நடந்ததெல்லாம் நடந்துவிட்டது. இதைத்தான் விதி என்பது. ஆனால் கடவுள் செயலால் மீண்டும் ஒன்று சேர்ந்துவிட்டோம். நல்ல வேளையாகப் பிரியைக் கண்டதும் எனக்கு மறுபடியும் யாவும் ஞாபகம் வந்தது. இல்லாவிட்டால் எவ்வளவு கொடுமை நினைத்துப் பார்? என்னால் எதையும் உங்களுக்கு விளக்கி இருக்க முடியாது. நான் உங்களைப் பார்த்தும் பாராமல் போக நீங்கள் என்ன நினைத்திருப்பீர்கள். எவ்வளவு உயிராக இருந்தோம் இப்படிக் கர்வம் பிடித்துக் கண்டும் காணாமல் போகிறாளே! என்று தானே நினைத்திருப்பீாகள். நம்ம அஞ்சுவா! இது என எவ்வளவு வேதனைப் பட்டிருப்பீர்கள். அல்லது மைத்தி கேட்டது போல எங்களையும் எதிரிகளாக நினைத்துவிட்டாளே! என வருந்தியிருப்பீர்கள். ஆனால் அதிர்ஷ்டவசமாக அப்படி எதுவும் நடக்கவில்லை. எனக்கு இது போதும். எல்லோரும் பாராட்டி அதிசயித்த அந்த அமிர்தமான நம் நட்பு மீணடும் புத்துயிர் பெற்றுவிட்டது. இன்று நான் இத்தனை
28
ஒன்பாதாவது ஆண்டு நிறைவு மலர்

ഷ്ട്. 2003
дѣ6хош6oош
வருடங்களும் இல்லாத பாதுகாப்பை உணர்கிறேன் என்னைச் சுற்றிப் பாதுகாப்பாக நான்கு அரண்கள் இருக்கின்றன எனக்கு இது போதாதா?’ எனக் கேட்டாள்.
நிஷா அவளையே பார்த்துக் கொண்டு புன்னகை மாறாமல் இருந்தாள். "என்ன அப்படிப் பார்க்கிறாய்” எனக் கேட்க "அதே அஞ்சு உன்னில் ஒரு சிறிதும் மாற்றமில்லை” என்றாள். "நீ மட்டும் என்னவாம்" எனச் செல்லச் சிணுங்கலாகத் தோழியை அணைத்துக் கொண்டாள். “இல்லை அஞ்சு நாங்கள் அன்று தப்புச் செய்துவிட்டோம் உன்னைக் காக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லையே! வருவாய் எனக் காத்திருந்தோம் நீ வரவில்லைப் பின்னரும் உன் கடிதத்தை எதிர் பார்த்தோமே ul 65 6) TLD 65 [b6 TLD FT 85 எதுவும் செய்யவில்லையே!” என வேதனையுடன்
கூறினாள் "போதும் நிஷி எதுவும் யார் தவறும்
இல்லை. அனைத்தும் அவரவர் கர்மா. அனுபவித்துத் தானே ஆக வேண்டும். ஆகவே வீணாக வருந்தாதே. எனக்காக வேதனைப்பட்டு உன்னைக் கஷ்டப்படுத்தாதே நிவழி. எனக்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்குத் தெரியுமா இத்தனை வருடமும் எந்தத் தொடர்புமே இல்லாமல் கல்லுப் போல இருந்த என்னைக் கண்டதும் வாரி அணைத்துக் கொண்டீர்களே இதைவிட வேறென்ன வேண்டும்? இந்த அன்புக்கு நான் என்ன கைமாறு செய்ய?” எனக்கேட்டாள். நிஷாவும் விடாமல் அதைப் பிடித்துக் கொண்டாள். "ஒன்றே ஒன்று செய் அஞ்சு என்னுடன் ஆஸ்பத்திரிக்கு வா உன்னை நான் பூரணமாகப் பரிசோதிக்க வேண்டும். ஆஸ்திரேலியாவில் நவீன வசதிகள் அதிகம் இருக்கென்று எனக்குத் தெரியும் ஆனால் இது என் மன ஆறதலுக்காக"என்றாள். அஞ்சு நெகிழ்ந்து போனாள். “கட்டாயம் வருகிறேன். உன் மனத் திருப்திக்காக நீ எதுவும் செய்யலாம் போதுமா?" எனக் கேட்டாள். சரியென நிஷா போனாள். அங்கு நின்ற அந்த ஒரு வாரமும் அஞ்சுவின் வாழ்வில் மிகவும் அமிர்தமான நாட்கள்.
ஐவரும் தம் வயது குடும்பம் குழந்தைகள் அனைத் தையும் மறந் து தாமி குழந்தைகளாகிக் கொட்டமடித்தனர். அவர்களுடன் பழகப் பழக அஞ்சுவுக்குத் தன் இனிமையான பாடசாலை நினைவுகள் ஒவ்வொன்றாக வந்து அவளது பிற்காலத் துயரங்கள் சிறிதாகியது, அஞ்சுவின் மன அழுத்தமும் நாளுக்கு நாள் குணமடைந்து அவள் புதிய பிறவி எடுத்துக் கொண்டிருந்தாள். அந்த நான்கு டாக்டர்களின திட்டமும் நோக்கமும் கூட அது தானே. அதில் அவர்கள் வெற்றியும் கண்டனர்.
அஞ்சு தனக்குள் வியந்தாள். எத்தகைய ஓர் உன்னதமான அன்பு அனைவருக்கும் திருமணமாகிக் குடும்பம் குழந்தை இருந்தது. அவர்களுக் கென்று தொழில் இருந்தது. எல்லோரும் சிறந்த பதவியில் இருந்தனர். ஆஷாவும் மைத்தியும் மகப்பேற்றில் சிறப்புப் பட்டம் பெற்றிருந்தனர். டாக்டர்களாக அந்த நால்லருக்கும் நல்ல பெயரும் புகழும் இருந்தது. ஆனால் எதுவும் அவர்கள் நட்பைப் பாதிக்கவில்லை. போதாதற்குத் தன்னையும் அள்ளி அணைத்துக் கொண்டார்களே. இவர்கள் அல்லவா உண்மைச் சினேகிதிகள் என அகமிகமகிழ்ந்தாள். அவர்கள் மட்டுமா? அவர்களின் கணவர்கள், குழந்தைகள் பெற்றோர்கள் கூட அவளிடம் அன்பு காட் டினர். நரி ஷா வின் அன்னை மாத்தறையிலிருந்து அவளுக்காக வந்திருந்தார், "இவ்வளவு தூரம் ஏன் வந்தீர்கள் அம்மா?” என அஞ்சு கேட்டாள். "நீ வந்திருக்கிறாய் என்று நிஷா சொன்னதும் உன்னை ஒரு தடவை பார்க்க வேண்டுமென்று வந்தேன். ஐந்து பேராக இருந்து நீ போனதும் அவர்களுக்குத் தங்களில் ஒரு பகுதியே போன மாதிரி. அடிக்கடி கவலைப் படுவார்கள். நானும் கதிர்காமம் போகும் போது அஞ்சு எங்கிருந்தாலும் நன்றாக இருக்க வேண்டுமெனப் பிரார்த்திப்பேன்" என்றார். விழிகள் பனிக்கக் கேட்டுக் கொண்டிருந்தவள்
ஒன்பாதாவது ஆண்டு நிறைவு மலர்
29

Page 17
கலப்பை
2003 ,gاbھٹھہ
“உங்கள் எல்லோரின் பிரார்த்தனையும் தான் எங்களை இவ்வளவுக்குக் காப்பாற்றி இருக்கம்மா" என்றாள். யாரோ செய்த தவறை நினைத்துப் பயந்து இந்த உன்னதமான நட்பை மறந்தேனே! என வருந்தினாள். பின் அது இப்போதாவது கிடைத்ததே! என்றும் மகிழ்ந்தாள்.
அஞ்சுவுடன் மற்ற நால்வரும் பிள்ளையார் கோவிலுக்குப் போனார்கள் அங்கே நின்ற குருக்கள் “என்ன ஐந்து பேராக வருகின்றீர்கள் 5 IT 600 TLD 6 போன வரைக் கண் டு பிடித்துவிட்டீர்களா?" எனக் கேட்டார். அஞ்சு நல்ல மன நிலையில் இருந்ததால் "என்ன அவிவேக பூரணகுருவின் மட்டி மடையன் கதையா? எண்ணத் தெரியாமல் எண்ணிவிட்டு குருக்களிடமும் அழுதீர்களா” எனக் கேலி செய்தாள். "ஆமா இப்ப சொல்லு எங்கள் வேதனை எங்களுக்குத் தான் தெரியும்” என்றனர். "மக்குகளா! நான் எங்கே போனேன்? என்றும் உங்களுடன் உங்கள் நினைவில் கலந்து தானே இருந்திருக்கிறேன்” என்றாள். "ஆமா என்றைக்கு நாங்கள் உன்னை மறந்தோம்? எப்படியும் பேச்சு முடிவில் உன்னைப் பற்றித் தானே இருக்கும்” எனப் பிரியங்கா வியந்தாள். "இதற்குத் தான் அஞ்சு வேண்டுமென்பது. எவ்வளவு பெரிய உண்மையைச் சுலபமாகச் சொல்லி விட்டாள்" என அனைவரும் அவளைப் பாராட்டினர். "இதைச் சொல்ல இருபது வருடம் கழித்து நான் ஆஸ்திரேலியாவிலிருந்து வரவேண்டி யிருந்தது” என மேலும் கேலி செய்தாள். உனக்குச் செய்கிறோம் பார் என நிஷா அவள் காதைக் கிள்ளினாள். அதைப் பார்த்த கோவில் குருக்களும் இதுவல்லவோ நட்பு இனம் மொழி அறியாதது என நெகிழ்ந்து நின்றார்.
அஞ்சு யாழ் நகள் போக வேண்டுமென்றதும் “ஆமா அஞ்சு அங்கே உட்ன் அத்தை ஆ! உன் கேசவ் அத்தான் எல்லோரும் எப்படி”
என நிஷா கேட்டர்ள் "அங்கே அவர் மட்டும் தான் இருக்கிறார்” என்றதும் “அவரைப் பார்க்கத்தான் நீ போகிறாயா அஞ்சு? அவருக்குத் திருமணமாகி விட்டதா?’ எனப் பிரியங்கா கேட்டாள். இன்னும் இல்லை என்றதும் "ஆஹா! அதற்குத் தான் வந்தாயா?” எனக் கேலி செய்தனர். “போங்கடி’ எனக் கோபித்துக் கொண்டவள் “முடிந்தால் அவருக்கு ஒரு திருமணம் செய்து வைக்கலாமென நினைக்கிறேன்’ என்றாள். "ஏன் அஞ்சு அவரைத் தானே நீ விரும்பினாய்? நீயே செய்யலாம் தானே!” என ஆஷா கேட்டாள். “இல்லை ஆஷா” என்றதும் மைத்ரேயி வழக்கம் போல "என்ன இல்லை, உன்னைப் பிடித்து அவர் கையில் கொடுக்கிறோம் பார்” என்றாள் அதிகாரத் தோரணையில் எல்லோரும் மனம் நிறைந்து சிரித்தனர். அஞ்சு முயன்று அந்தப் பேச்சைத் திசை திருப்பினாள். திட்டமிட்டபடி அஞ்சு மறுகாலை யாழ்நகள் செல்வதற்காக விமான நிலையத்தில் நின்றபோதும் அவள் மனம் குளப்பமாகவே இருந்தது.
தொடரும்
856)6OLUl601 மின்அஞ்சல் தொடர்பு
கலப்பையின் புதிய மின்அஞ்சல் (p56) if kalappaisayahoo.com 6T6iru605
அறியத் தருகின்றோம். கலப்பை சநீ தாதாரர்கள் , வாசகர் களர் அனைவரதும் மரின் அஞ சல்
முகவரிகளை சேகரித்து வருகின்றோம். உங்கள் மின்அஞ்சல் முகவரிகளை எமக்கு அனுப்பி வைப்பதன் மூலம், நீங்கள் இந்த முயற்சியை இலகுவாக்கலாம். எதிர்காலத்தில் கலப்பை பற்றிய புதிய விடயங்களை உடனுக்குடன் அறிந்து கொள்வதற்கும், உங்கள் கருத்துப் பரிமாற்றத்திற்கும் (விமர் சிக்கவோ அல் லது விவாதிக்கவோ) இது மிகவும் உதவியாக இருக்கும் என்பது எமது நம்பிக்கை. - ஆசிரியர்.
30
ஒன்பாதாவது ஆண்டு நிறைவு ID6Of

கலப்பை 2003 ,2وا{{ھے
புகழ்பெற்ற ஈழத்துப் பாடசாலைகள்
கலப்பையில் புகழ்பெற்ற ஈழத்துப் பாடசாலைகள்' என்ற தொடரில் வாசகர்கள் எவரும் தமது பாடசாலைகளைப் பற்றி எழுத முன்வரலாம். அல்லது உங்கள் பாடசாலையின் பழைய மாணவரையோ அல்லது ஆசிரியரையோ உங்கள் பாடசாலையைப் பற்றி எழுதும்படி கேட்கலாம்.
இந்த வகையில் இவ்விதழில் தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி இடம் பெறுகின்றது. எம்மையெல்லாம் கல்வி, கலை, கலாசாரத்தில் மட்டுமல்லாமல் விளையாட்டுத் துறையிலும் மேன்மையடையச் செய்த எமது பாடசாலைகளை மீண்டும் ஒரு முறை நினைவுருவோம்.
ஆசிரியர்.
தொண்ணுறு வருட சேவையில் ஒரு கிராமத்துக் கல்விக்கூடம் தெல்லிப்பழை மகாஜனக்கல்லூரி
விக்கி பா. விக்னேஸ்வரன்
ஒன்பாதாவது ஆண்டு நிறைவு மலர் 31

Page 18
S6
2003 .وہابیہ
திரும்பும் இடமெல்லாம் பாடசாலைகளைக் கொண்டதென்று புகழ்ந்து பேசப்படும் யாழ்ப்பாணக் குடாநாட்டின் முன்னணிக் கல் விக் கூடங்களுள் தெல்லிப் பழை மகாஜனக்கல்லூரியும் ஒன்று. ஒருபுறம் வயல்களையும் மறுபுறம் பனங்கூடல்களையும் கொண்ட அம்பனை எனும் அழகிய சிறு கிராமத்தில் அமைந்திருக்கும் இக்கல்லூரி, மகாஜன ஆங்கில உயர் பாடசாலை (Mahajana English High School) 6150) b பெயரில் தொண்ணுாறு வருடங்களின் முன்னால் ஒரு கிடுகுக் கொட்டகையில் ஆரம்பிக்கப்பட்டது. மகாஜன மாணவர்கள் கல்வித்துறையுடன் மட்டும் நின்றுவிடாது கடமை உணர்வும் சேவை மனப்பாங்கும் கொண்ட ஆசிரியர்களின் ஆதரவுடன் விளையாட்டு, கலை, படைப்பிலக்கியம் உட்பட்ட பல துறைகளில் தமது முத்திரையைப் பதித்தனர். எல்லாவற்றுக்கும் மேலாயப் , மகாஜனா நன் மக்களை உருவாக்கிற்று. போர்க்காலச் சூழ்நிலையில் கடந்த சில ஆண்டுகளாகச் சோதனைகளை எதிர்கொள்கின்ற போதிலும் மாணவர்களது சாதனைகள் சளைக்காமற் தொடர்கின்றன.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் இடம்பெற்ற மிஷனரிகளின் (missionary) வருகை யாழ்ப்பாணக் கல்வி முறைகளில் ஒரு பெரிய மாற் ற தி தை ஏற்படுத் தரிற் று. திண்ணைப்பள்ளிகள் ஆங்கில அரச நிர்வாகத்தில் பதவிகளைப் பெறுவதற்கோ சீமைக்குப் போவதற்கோ உதவ மாட்டா என்று உணர்ந்த யாழ்ப்பாணப் பெற்றோர் தமது பரிள்ளைகளை மிஷனரிப் பாடசாலைகளுக்கு அனுட்பத் தலைப்பட்டனர். இப்பிள்ளைகளின் துரித வளர்ச்சி குறித்துத் திருப்திப்பட்ட அதேவேளை தமிழ் மற்றும் சைவ ஈடுபாடுகள் குன்றி அவர்கள் அக் கலாசாரங்களிலி இருந்தும் பாரம்பரியங்களிலிருந்தும் விலகிப் போவது
தமிழ்-சைவப் பாடசாலைகளை ஆரம்பிப்பதே இச்சவாலைச் சந்திக்க உகந்த வழி என்று யாழ் ப் பாணக் கல வரி மான் கள் கண்டுகொண்டனர். ஆறுமுக நாவலரின் திட்டப்படி உருவான சைவ பரிபாலன சபையின் முன்னெடுப்பில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் யாழ் குடாநாடெங்கும் சைவப் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டன.
தெல்லிப்பழை அமெரிக்கன் மிஷன் JTLFIT606)66 (3 (8LT605u Union College) தலைமை ஆசிரியராக இருந்த பாவலர் தெ. அ. துரையப்பாபிள்ளை அவர்கள் (1872 - 1929) ஆங்கிலக் கல்வியின் அவசியத்தை நெடுநோக்குடன் வலியுறுத்திய அதேவேளை சைவச் சூழலில் தமிழ் மொழியில் கற்பிப்பதே எதிர்காலச் சந்ததி தனது அடையாளத்தைப் பேண வழிவகுக்கும் என்று உணர்ந்தார். ஒரு திருச்சபைப் பாடசாலையில் தன் நோக்கம் சித்திக்காது என்று தெளிந்த அவர் 1910ஆம்
ஆண்டில் தமது பதவியைத் துறந்து மகாஜன
ஆங்கில உயர் பாடசாலையை நிறுவினார். ஒரு கிராமத்தில், மிகவும் எளிமையான நிதிப் பின்னணியும் மாணவர் தொகையும் இருந்த போதிலும் நிறுவுநரின் எதிர்பார்ப்புகள் பெரிதாக இருந்தன. ஏற்கெனவெ பிரபலமாக இருந்த திருச்சபை சார்ந்த யாழ் மத்திய கல்லூரி, பரியோவான் கல்லூரி மற்றும் யாழ்ப்பாணக் கல்லூரி போன்றவைக்குத் தமது பாடசாலை எவ்விதத்திலும் தாழ்ந்ததாக இருக்கக்கூடாது என்று அவர் கனவு கண்டார். பெண்கல்வி ஆரம்பப் பாடசாலைகளுடன் முடிவுற்றுப் போகின்ற அக்காலத்தில் தனது பாடசாலை மூலம் பெண்களுக்கு உயர்கல்வி தரவும் அவர் விரும்பினார். சரியான நிர்வாகத்தையும் ஒழுக்க நெறிகளையும் கொண்டு இருபாலாருக்கான ஒரு பாடசாலையை வெற்றிகரமாக நடாத்த
பெற் றோருக்குக் கவலையையும் முடியும் என்று பாவலர் கருதினார். ஏற்படுத்திற்று.
32 ஒன்பாதாவது ஆண்டு நிறைவு மலர்

bL9, 2003
6606)
1929 ஜூன் 24 அன்று பாவலர் துரையப்பாபிள்ளை அவர்கள் காலமான பின்னர் தலைமை ஆசிரியராக வந்த திரு கா. சின்னப்பா அவர்கள், நிறுவுநர் திட்டமிட்டபடி, இரு ஆணி டுகளுள் மகாஜனாவை இருபாலாருக்கான பாடசாலையாக மாற்றினார். 1945இல் சின்னப்பா அவர்கள் காலமானதைத் தொடர்ந்து நிறுவுநரின் புதல்வர் திரு தெ. து. ஜெயரத் தினம் அவர்கள் தலைமை ஆசிரியராகப் பதவியேற்றார். அதே ஆண்டில் பாடசாலை மகாஜனக்கல்லூரி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. துரித வளர்ச்சி காரணமாக கல்லூரியானது 1947இல் Grade II College SB56||lib 1949g6io Grade I College ஆகவும் தரமுயர்த் தப் பட்டது. மாணவர் களுக்கான வகுப் பறைத் தேவைகளைத் திருப்தி செய்யும் நோக்கில் பணச்சேகரிப்புக்காக யாழ் முற்றவெளியில் ஒரு மாபெரும் களியாட்ட விழாவை (carnival) 1954இல் மகாஜனக் கல்லூரி நடாத்தியது. 1960இல் இ மகாஜனக் கல் லுTரிப் GLT66T6ipT66 (SuTg5 56ügrf Supra Grade College ஆகவும் தரம் உயர்த்தப்பட்டது. அதே ஆண்டில் ஆகம முறைப்படி ஒரு கோயிலும் கல்லூரி வளவினுள் அமைக்கப்பட்டது.
அடிப்படைக் கல்வியுடன் நின்றுவிடாது அடுத்த மட்டத்துக்கு மாணவர்களை பெருமளவில் அனுப்பும் நோக்கத்துடன் 1947இல் விசேட ஆசிரியர்கள் சேவைக்கு அமர்த்தப்பட்டனர். கணிதம் மற்றும் விஞ்ஞானப் பாடங்களைக் கற்பிக்கக் கேரளத்திலிருந்து ஆசிரியர்கள் வந்தனர். கல்லூரி நேரத்துக்கு முன்னரும் பின்னரும் தோட்டத்துக்கும் வயலுக்கும் சென்று வந்த மாணவர்கள் கல்லூரிக் காலத்தின் முடிவில் பொறியியல், மருத்துவம் , விஞ்ஞானம், விவசாயம், கலை, வர்த்தகம் என்று எல் லாத் துறைகளிலும் பல்கலைக்கழகம் புகுந்தனர். ஐம்பதுகளிலேயே கிராமத்து மாணவிகளையும் மகாஜனா பெருமையுடன் பல்கலைக்கழகம் அனுப்பிற்று.
யாழ்ப்பாணத்துடன் நின்றுவிடாது, இலங்கைத் தீவின் தமிழ் பேசும் பிரதேசங்கள் எல்லாவற்றிலுமிருந்து மாணவர்களை மகாஜனா ஈர்த்தது. கணிசமான எண்ணிக்கையில் கிறிஸ்தவ மாணவர்களும் முஸ்லிம் மாணவர்களும் மகாஜனாவிற் பயின்றனர்.
விளையாட்டுத் துறையிலும் மகாஜனா முன் னணியில் நின்றது. முந் திய அறுபதுகளிலிருந்து உடைந்தாட்டத்தில் (Soccer) மகாஜனா யாழ் குடாநாட்டின் அதிசிறந்த கல்லூரியாகத் திகழ்ந்தது. 1961இல் யாழ்ப்பாணப் பாடசாலைகளின் விளையாட்டுச் சங்க உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியின் இறுதியாட்டத்தில் மகாஜனா முதல் அணி இரண்டாவது இடத்தையும் இரண்டாவது அணி முதல் இடத்தையும் பெற்றன. 1970ஆம் ஆண்டு இலங்கைப் பாடசாலைகளின் உதைபந்தாட்டச் சங்கப் போட்டிகளில் முதல் இடத்தைப் பெற்று சேர் ஜோன் தாபற் (35Lugs 605th (Sir John Tarbat Shield) கைப்பற்றிய மகாஜனா 1971இல் சிங்கர் சவால் (35Luugi,605ub (Singer Challenge Shield) அகில இலங்கை மட்டத்தில் வென்றது. மகாஜனாவின் முதல் அணி 1964இல் விளையாடிய அத்தனை போட்டிகளிலும் வெற்றி பெற்றதுடன், 1967இலிருந்து தொடர்ந்து எட்டு வருடங்களாக யாழ்ப்பாணப் பாடசாலைகளின் விளையாட்டுச் சங்க உபைந்தாட்டச் சுற்றுப் போட்டிகளின் வெற்றி வீரர்களாக (champions) வந்து சாதனை படைத்தது. மகாஜனாவின் கிறிக்கெற் (Cricket) அணியினர் 1963இலும் 1965இலும் வட இலங்கையின் வெற்றி வீரர்களாக வந்தனர். யாழ்ப்பாணப் பாடசாலைகளின் ஹொக்கி (hockey) சங்கச் சுற்றுப் போட்டிகளில் 1965இலும் 1967இலும் மகாஜனாவின் மூத்த (senior) LDiab 36061Tu (junior) 960 fluisof, இறுதிப்போட்டிகளில் வெற்றி பெற்றனர். மகாஜன மாணவர்கள் பல தடவைகளில் யாழ்ப்பாணம் மற்றும் அகில இலங்கைப்
ஒன்பாதாவது ஆண்டு நிறைவு மலர்
33

Page 19
கலப்பை
sibly 2003
பாடசாலை அணிகளில் இடம் பெற்றனர். இரண்டு முறை இலங்கைப் பாடசாலைகளின் ஹொக்கி அணிகளின் தலைமை மகாஜன மாணவர்களுக்குத் தரப்பட்டது. 1963இல் தேசிய மட்டத்திலான உடற்பயிற்சிப் (ELITL9uiet) (Physical Training) Gué0örds6ir பிரிவில் மகாஜன அணி முதலிடம் பெற்று தேசாதிபதி வெற்றிக்கேடயத்தைப் (Governor General's Trophy) Glub Bg5). (ppbgu அறுபதுகளிலேயே இலங்கை மட்டத்திலான மெய்வல்லுநர் (athletics) போட்டிகளில் மகாஜன மாணவர்கள் பங்குபற்றி தங்கப் பதக்கங்களையும் பெற்றனர்.
தேசிய மட்டத்திலான முதற் பரிசு உட்பட, தமிழ் நாடகப் போட்டிகளில் மகாஜனக் கல்லூரி பல தடவைகள் வெற்றி பெற்றுச் சாதனை புரிந்தது. இசை, நடன, நாவன்மை, சமய மற்றும் விநாடி வினாப் (quiz) போட்டிகளில் மகாஜன மாணவர்கள் வெற்றிகளைப் பெற்றனர். கல்லூரிச் சூழல் வேறுபட்ட பல கருத்துகளை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை வளர்த்த அதே வேளை தேசிய உணர்வின் களமாகவும் சமூக சீர்திருத்த முயற்சிகளின் தளமாகவும் மகாஜனா திகழ்ந்தது. பல வேறு வடிவங்களில் தேச சேவை செய்ய முற்பட்ட இளைஞர்களும் மகாஜனாவில் விளைந்தனர்.
கலைக்கும் இலக்கியத்துக்கும் மகாஜனா ஆற்றிய பங்கு பெரிது. கவிதை, சிறுகதை, நடனம், நாட்டியம், நாடகம், கூத்து என்று பல துறைகளிலும் பிரகாசித்த - பிரகாசிக்கின்ற - கலைஞர்களை மகாஜனா உருவாக்கியது. முன்னைநாள் மகாஜன அதிபர் பொ. கனகசபாபதியின் "ஓர் அதிபரின் கூரிய பார்வையில்" என்ற நூலுக்கு வழங்கிய முன்னுரையில் பேராசிரியர் சி. சிவசேகரம் அவர்கள் மகாஜனா குறித்து பின்வருமாறு எழுதுகிறார்.
ஒரு பாடசாலையிலிருந்து நல்ல இலக்கியவாதி ஒருவர் வந்தால் அது
அப்பாடசாலையின் சிறப்பாக இருக்க அவசியமில்லை. ஒரு சிலர் வருவது கூடத் தற் செயலான ஒன்றாக இருக்கலாம். எக்கச்சக்கமான தொகையில் வந்தால் அங்கே என்னவோ விஷயம் இருக்கத்தான் வேண்டும். அதற்கும் பாடசாலையின் கல்விச் சூழலுக்கும் ஒரு தொடர்பு இருக்க வேண்டும். வெறும் ஏட்டுப் படிப்புக்கு மேலாக சமுதாயச் சார்பான விடயங்கள் பற்றி அக்கறை காட்டும் ஒரு நிறுவனமே அதை இயலுமாக்க வல்லது. அதன் கல்விச் சூழல் நல்ல மாணவர்களை சிறந்த மனிதர்களாக்க வல்லது. ஆற்றலுள்ள ஆசிரியர்களை உயர்ந்த வழிகாட்டிகளாக்க வல்லது. இவ்வாறான நிறுவனங்கள் ஒரு நாளில் உருவாவதில்லை. இவற்றுக்குப் பின்னால் உள்ள கடுமையான அக்கறையும் ஆரோக்கியமான சிந்தனை உடையோரது பங்களிப்பும் வெளியிலிருந்து பார்க்கும் போது தெரியாது. அவை காலப் போக்கில் மறக்கப்படலாம். எனவே சில விஷயங்கள் பற்றிய பதிவுகள் தேவை. அதையும் மகாஜன மாணவர்கள் செய்கிறார்கள்.
குடாநாட்டின் பல பாடசாலைகளைப் போலவே ஒடுக் குமுறைப் போரின் வடுக் கள்
மகாஜனாவிலும் ஆழமாகப் பதிந்துள்ளன. முந் திய எணி பதுகளில் இலங்கை இராணுவத்தின் தாக்குதல்களிலிருந்து மாணவர்களைக் காக்கும் நோக்கில் விளையாட்டு மைதானத்தைச் சுற்றியுள்ள மாமரங்களின் கீழ் பதுங்கு குழிகள் வெட்டப்பட்டன. இந்திய இராணுவம் தமிழ் மண்ணில் குடிகொண்டிருந்த பொழுது துரையப்பாபிள்ளை நினைவு மண்டபத்தைச் சேதப்படுத்தியது. இலங்கை இராணுவத்தின் மறுவரவு மகாஜனாவை மிகவும் தாக்கிற்று. அளவெட்டியிலும் பண்டத்தரிப்பிலும் இணுவிலிலும் மருதனார் மடத்திலும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் மகாஜன வகுப்புகள் நடைபெற்றன. இப்போதும் வலிகாமம் வடக்கில் இராணுவத்தாற் பிரகடனப்படுத்தப்பட்ட அதி உச்சப் பாதுகாப்பு வலயத்தினுள்ளேயே மகாஜனக் கல்லூரி அடங்கியிருக்கிறது.
34
ஒன்பாதாவது ஆண்டு நிறைவு மலர்

2003 او>
SSDs)
ஏற்றமிகு அந்த நாட்களிலிருந்து சிக்கல் நிறைந்த இந்த நாட்கள் வரை மகாஜனா ஒரு குடும்பம் போலவே இயங்கி வந்திருக்கிறது. கல்லூரியின் பழைய மாணவர்கள் குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் போல அக்கறையுடனும் பொறுப்புடனும் செயற்பட்டு வருகிறார்கள். அவர்களது உழைப்பிலேயே கல்லூரி வளவினுள் கட்டடங்கள் எழுந்தன. தெல்லிப்பழையிலும் கொழும்பிலும் இயங்கும் பழைய மாணவர்கள் சங்களுடன் ஐக்கிய இராச்சியம், கனடா, அவுஸ்திரேலியா மற்றும் பிரான்ஸ் கிளைகள் ஒன்றிணைந்து பணி புரிகின்றன. சிட்னியரிலிருந்தும் மெல்பேணிலிருந்தும் தனித்தனிக் கிளைகள் இயங்கிவருகின்றன. மகாஜன பழைய மாணவர் சங்கங்கள் வகுப்பறைகள் அமைத்தல், தற்காலிக ஆசிரியர்களுக்கு வேதனம் வழங்கல் போன்றவற்றிற்கு நிதி தருவதுடன் வசதி குறைந்த மாணவர்களுக்கும் பண உதவி செய்கின்றன. இது தவிர, ஐக்கிய இராச்சியக் கிளையின் முன்னெடுப்பில் ஓர் இலட்சியம் நோக்கிய நிதி சேகரிப்பு நடந்து வருகிறது. மகாஜனக் கல்லூரியின் நூற்றாண்டு விழாவுக்கு (2010) முன்னால் தமிழ் மண்ணின்
நிகழ்வுகளைத் தமிழரே தீர்மானிக்கும் நிலை
வந்துவிடும் எனும் நம்பிக்கையுடன் - அப்போது மீண்டும் மகாஜனாவைக் கட்டியெழுப்பும்
தார் மரீகப் பொறுப்பு Լl 602 ք եւ மாணவர்களுடையதே எனும் கடமை உணர்வுடன் - கருமங்கள் நடக்கின்றன.
மகாஜனக் கல்லூரிப் பழைய மாணவர் சங்கம் பற்றிய தம் அவதானிப்பைப் பேராசிரியர் சி. சிவசேகரம் பின்வருமாறு வெளிப்படுத்துகிறார்.
"எல்லாப் பழைய மாணவர் சங்கங்களுமே சமுதாயத்த7ல சறர் றே மேலெழுந்தவர்களது ஆதி ம திருப்திக்காகவும் கூடிக் களிப்பதற்கான வாய்ப்பை அளிக்கும் நோக்குடனும் இயங்கும் இல்லங்களாகத் தெரிந்ததால்
இவ்வாறான அமைப்புகளில் எனக்கு அக்கறை இருக்கவில்லை. ஆனால் லண்டன் வந்து மகாஜனக் கல்லூரிப் பழைய மாணவர் சங்க உறுப்பினர்களது செயற்பாட்டைப் பார்த்த பிறகு, எல்லாப் பழைய மாணவர் சங்கங்களும் இம்மாதிரி இயங்கினால் எவ்வளவு நன்றாக இருக்குமென்று தோன்றியது. இவர்கள் மற்றவர்கள் செய்கிற காரியங்களைச் செய்கிறார்கள் ஆனாலும்இ மற்றவர்கள் செய்யாத பல காரியங்களையும் செய்கிறார்கள்"
சவால்களுக்கு மத்தியில் தொண்ணுாற்று மூன்று ஆண்டுகளின் முன்னால் ஊன்றப்பட்டது மகாஜனாவின் வித்து. இந்த இடைக்காலத்தில் சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் இராணுவ நெருக்கடிகளுக்கூடாகஇ சீரிய சேவையாலும் தன்னலமற்ற தியாகங்களாலும் முழு இலங்கையினதும் முன்னணிப் பாடசாலைகளுள் ஒன்றாக மகாஜனக் கல்லூரி வளர்ந்திருக்கிறது. இன்று தாயகத்தை இறுக்கிக் கொண்டிருக்கும் கொடுந்தளைகள் விரைவில் அறும் , அன்று அம்பனை வயல்களில் பசுங்கதிர்கள் தலையசைக்கும். கல்லூரி மாமரங்கள் பூரித்துக் கனி சொரியும். சைக்கிள் கொட்டகைகள் திரும்பவும் நிரம்பும், ஒரு நவீன கல்விக்கூடமாக மகாஜனா தனது பணியை இன்னும் பல தசாப்தங்களுக்குத் தொடரும்.
(19 மே 2000 ஈழமுரசு கட்டுரையிலிருந்து)
அவுஸ்திரேலிய மகாஜனப் பழைய மாணவர் சங்கத் தொடர்புகளுக்கு: vignes 1961 (a)aol.com (அல்லது 0419361273)
ஒன்பாதாவது ஆண்டு நிறைவு மலர்
35

Page 20
கலப்பை
2003 ,gاہیے
வாழாவெட்டி வேர்கள்(பாகம் 2) (கீழ்க்காணும் பாகம் கடந்த இதழில் தவறுதலாக விடப்பட்டுவிட்டது. கதையின் இந்தப் பகுதி, கலப்பையின் சித்திரை 2003 இதழின் 32ம் பக்கத் தொடர்ச்சி தவறுதலுக்கு வருந்துகின்றோம் -ஆசிரியர்)
அவள் கன்னத்தோடு கன்னம் வைத்துக் கொண்டு கிரி அவள் காதோரமாய் கதை சொல்லவர அப்பாவைத் தள்ளி விட்டும் தானும் அந்தப் பவழ மல்லிகை மணத்தை நுகர்ந்து பார்க்க வேண்டும் அன்று அடம்பிடித்த அண்ணனும் தம்பியுமாய் இரு குட்டிப்பயல்கள் ஓடி வந்து அவள் மடிமீது விழுந்து, நாசியைக் கோணலாக இழுத்து வைத்துக் கொண்டு மூச்சை இழுத்துப் பிடித்துச் சுவாசிப்பதை, அவளும் கிரியுமாயப் பார்த்துச் சிரிக்க. , . சிரிக்க தன்னை மறந்து சிரித்துவிட்டாள் சிந்து.
அடடா கையிலிருந்த சற்றே நழுவித் தொப்பென்று மடியில் உருண்டு விழுந்து ஓடிய சிக்கன் சூப் அவளை இந்த உலகிற்கு இழுத்து வந்தது. அவசரமவசரமாக ரிசூ (tisSue) ஒன்றை எடுத்து மடியில் கொட்டியிருந்த சூப்பைத் துடைத்துச் சுத்தப் படுத்திக் கொண்டாள் மடியைக் கழுவித் துடைத்துக் கொள்ளத் தெரிந்த சிந்துவுக்கு, ஏனோ அவள் மனதையும் துடைத்துக் கொள்ளத் தெரியவில்லை. அடிமனதில் ஒரு வலி சே அதற்காக அந்தப் பழைய குப்பையை எல்லாம் மறுபடியும் பல்லக்கில் ஏத்த வேண்டும்? குழந்தை இல்லை என்ற ஒரே காரணத்திற்காக அவளை விரட்டி விரட்டி ஏமாற்றி விட்டு ஓடிய அந்த ஆளைப் பற்றி இந்த நேரத்தில் என்ன நினைப்பு வேண்டிக் கிடக்கிறது, என்று வலுக்கட்டாயாமாக அந்த நினைவுகளுக்குக் கும்பிடு போட்டுக் கொண்டாள் சிந்து எஞ்சியிருந்த சூப்பை மடக்கு மடக்கென்று ஒரே முறடாகக் குடித்து முடித்ததும் தெளிவு பிறந்த மாதிரி இருந்தது. மற்ற நாட்களில் எல்லாம் அவள் மனம் இப்படிச் சஞ்சலப் படுவதேயில்லை. இன்றுமட்டும் ஏன் இப்படி? ஒருவேளை சாதனா, சோபனா, அஜய், விஜய என்ற அந்தக் குழந்தைகளின் பெயர்கள் நம் நாட்டைச் சேர்ந்தவர்களா? என்ற நினைப்பால்
தான் மனம் அதையும் இதையும் நினைத்துக் கொள்கிறது என்று தன்னைச் சமாதான படுத்திக் கொண்டாள் சிந்து.
கைகடிகாரத்தைப் பார்த்தாள் சிந்து சரியாக 8.30 அபிகெய்ல் மைல்ஸ் தொலை பேசியில் தொடர்பு கொள்ளக் குறித்த நேரம். தொலை பேசி எண்களை அழுக்கியவுடனே அவள் தொலைபேசியில் தொடர்பு கொண்டுவிட்டாள். தன்னை அறிமுகப்படுத்தி, தன் பணியை ஆரம்பித்தாள் சிந்து. வழக்கமான வினாக்கள், வழக்கமான பதில்கள் தான். ஆனால் வழக்கத்திற்கு மாறாக அந்தக் குரல் எங்கேயோ, எப்பவோ கேட்ட குரலா? ஆனால் சிந்துவுக்குத் தான் எந்த அபிகெய்லையும் தெரியாதே? தெளிவான ஆங்கிலம் , அமைதியான பேச்சு. மிக மிக அழுத்தமான விளக்கம். கடுகைத் துளைத்துக் கடலைப் புகுத்துகிற மாதிரி, கணக்கு வழக்கில் கறாரான வியாக்கியானம். ஒரு கூரையின் கீழ் 1999ம் ஆண்டு தொட்டுப் பிரிந்து வாழ்ந்த காலத்திற்கான செலவுகள், அதன் பின் கடந்த ஆறு மாதங்களாய் வேறு வீட்டிற்குத் தான் குழந்தைகளுடன் குடி போன நாள் தொட்டு ஏற்பட்ட வரவு செலவுகள் அத்தனையும் அப்படித் தத்வரூபமாக நறுக்குத் தெறித்த மாதிரி அபிகெய்லிற்கு ஞாபகம். சொல்லி வைத்தாற் போல் முக்கால் மணியில் கொன்பரன்ஸ் (Conference) சை முடித்துக் கொண்டாள் சிந்து. அடுத்தது 9.30க்கு டரன் மைல்ஸ் ஐத் தொடர்பு கொள்ள வேண்டும். சிறிது நேரம் தான் அபிகெய்லுடன் பேசியபோது எடுத்திருந்த குறிப்புகளைச் சரிபார்த்துக் கொண்டு கைக்கடிகாரத்தை பார்த்தாள். கைக் கடிகார முள் 9.30 ஐத் தொட்டது. சரியான நேரம் தான் மீண்டும் தொலைபேசி எண்களை அழுத்தினாள் பதில் இல்லை.
நாலு ஐந்து தரம் அடித்த பின் தான் அழைப்புக் கிடைத்தது. சிந்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு தன் பணியை ஆரம்பிக்க. விட்டால் தானே அந்த டரன்.
(தொடர்ந்து கலப்பையின் சித்திரை 2003 இதழின் 53ம் பக்கத்தைப் படிக்கவும்)
36
ஒன்பாதாவது ஆண்டு நிறைவு மலர்

2003 واbی
கலப்பை
வாழா வெட்டி வேர்கள்
மனோ ஜெகேந்திரன்
பகுதி 3
தாயாகாத காரணத்திற்காகக் கணவனால் திருமண வாழ்விலிருந்து வெட்டிவிடப்பட்ட விந்து, பிள்ளை பராமரிப்பு ஸ்தாபனத்தில் சிரேஷ்ட அலுவலகராகப் பணியாற்றுகிறாள். மேலதிகப் பராமரிப்புப் பணத்தை நிர்ணயிப்பதற்காக விண்ணப்பம் ஒன்று அவள் பரிசீலனைக்கு வருகின்றது. பெற்ற பிள்ளையைப் பேணுவதற்குக், கட்டிய கணவனிடம் கணக்குக் காட்டிக் கூலிகேட்கும் கருத்துக் கொண்ட அபிகெய்வின் விண்ணப்பத்திற்குச் சிந்து வழங்கும் முடிவான, சட்ட விதிமுறைகளுக்கும், ஸ்தாபனக் கொள்கைகளுக்கும் அமைய டரனிற்குச் சார்பாக நியாயத்தின் அடிப்படையில் அமைகிறது. சிட்னிக்கு விடுமுறையில் வந்திருக்கும் நண்பி நிஷ்மிக்கும், சிட்னியைச் சுற்றிக் காட்டும் நோக்குடன் சென்ரர் பொயின்ற் கட்டிடத்திற்குள் நுழைகையில், எதிர்பாராதவிதமாக அவர்களை எதிர்கொள்கிறாள், அவர்களுடன் கொஸ்டலில் ஒன்றாகத் தங்கி வேலை பார்த்த அவிராமி.
இதுவரை
சிட்னி வாசம் அவள் வெளித் தோற்றத்தை நன்றாகத் தான் மாற்றியிருந்தது. எத்தனையோ வருஷங்களுக்கு முன் அவர்களுடன் ஹொஸ்ரலில் தங்கியிருந்த அந்தக் கட்டுப்பட்டி அபிராமியா இவள்? ஆனால் நிச்சயமாக அவளே தான். அப்படியென்றால் இந்தக் குழந்தைகள்? அபிகெய்ல்! அப்படியானால்
அந்த அபிராமி தான் அந்த அபிகெய்லா?
மூச்சு விடக்கூட மறந்து உறைந்து விட்ட சிந்துவை இந்த உலகுக்கு இழுத்து வந்தது நிஷமி தான். என்ன தான் முன்பு ஒட்டாத குறையாய்த் தான் அபிராமியுடன் நிஷமி பழகுவாள் என்றாலும் இத்தனை வருஷங்களின் பின் அந்நிய நாட்டில் அவளைக் கண்ட போது நிஷமிக்கும் சற்றுச் சந்தோஷமாகத் தான் இருந்தது. இழுத்துக் கொண்டு அருகிலிருந்த காபி ஷொப்புக்குள் அமர்ந்து அபிராமியுடன் அரை மணி நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். பழைய கதைகள், பழைய வாழ்க்கை, புதிய மண், புலம் பெயர்ந்த சூழல், புலம் பெயர்ந்த வாழ்க்கையில் ஏற்பட்ட மாறுதல்கள் என்று பலதும் பத்தும் அலசிக் கொண்டார்கள். திடீரெனக் கைக் கடிகாரத்தைப் பார்த்த
அபிராமி பரபரப்புடன் எழுந்து கொண்டாள். “ஷொப் பரிங் செய்வதற்காக மற்ற இரட்டையர்களை அது தான் ஷோபனாவையும், சாதனாவையும் பராமரிப்பு நிலையத்தில் விட்டு விட்டு வந்திருக்கிறேன். சரியான நேரத்திற்குப் போக வேணும். ஐந்து நிமிஷம் பிந்தினால் கூட அடுத்த அரை மணிக்கான தொகையைக் கட்ட வேண்டி வந்து விடும்” என்று சிந்துவின் தொலை பேசி இலக்கத்தைக் குறித்துக் கொண்டு, தனது விசிற்றிங் கார்ட்டை அவள் கைக்குள் திணித்துவிட்டு அபிகெய்ல் என்ற அந்த அபிராமி போய் விட்டாள்.
அவள் போன திக் கையே பார்த்துக் கொண்டிருந்த சிந்துவைப் பார்த்துச் சிரித்தாள் நிஷமி. “என்னடி அப்படியே மலைச்சுப் போயிட்டாய்? அப்பவே சொல்வேனே! கணக்குப் பார்த்துப் பார்த்து வாழ்க்கைக்கும் கணக்கு விடப் போகிறாள் என்று, இப்ப பார்த்தியா அவள் பிடித்த கணக்கு வழக்கு பெனன்ற்ஹில்ஸ் மாடி வீட்டின் மாடிகளின் எண்ணிக்கையை கூட்டிக் கூட்டிக் கட்டத்தான் பயன்பட்டதே ஒழிய, ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக்
ஒன்பாதாவது ஆண்டு நிறைவு மலர்
37

Page 21
கலப்பை
2003 ,2وا({
கொள்ள வழி காட்டவில்லையே” என்று பேசிக் கொணி டே போனவள் முன் வாயப்
திறக்கவில்லை சிந்து என்ன தான் அந்தரங்கத்
தோழி என்றாலும் தன் தொழில் வாழ்க்கையில் சந்தித்த அபிகெய்லின் அந்தரங்க விஷயங்களை அவளுடன் பகிர முடியாமல் அவளது தொழில் தர்மம் தடுத்தது.
இரவு வெகு நேரமாகியும் சிந்துவால் தூங்க முடியவில்லை. கையில் எடுத்து வைத்திருந்த சில கடிதங்களை ஒருபுறம் வைத்துவிட்டு அந்த ஒரு புகைப்படத்தை மட்டும் எடுத்து மீண்டும், மீண்டும் பார்த்துக் கொண்டாள். பிறகு சின்னச் சின்னதாய் வந்திருந்த அந்தக் கடிதங்களையும் படித்தவள், பக்கத்துக் கட்டிலில் படுத்திருந்த நிஷமியை மெல்லிய குரலில் கூப்பிட்டாள். தனிமைக் கூட்டை உடைத்துக் கொண்டு யாருடனாவது பேசித் தன் சுமையை இறக்கி வைக்க வேண்டும் போல் இருந்தது சிந்துவிற்கு, சிந்துவின் குரல் கேட்டது தான் தாமதம். அபியைச் சந்தித்த நேரம் தொட்டு சிந்துவின் முகத்தில் சூழ்ந்திருந்த இருள். அபியின் சந்திப்பு ஏனோ சிந்துவை அதிகம் பாதித்திருந்ததை உணரக் கஷடமாய் இருக்காததால் எப்போதடா சிந்து கூப்பிடுவாள், ஏதாவது பேசமாட்டாளா? அப்படியாவது அவள் துயரம் குறையாதா? என்று ஆதங்கப்பட்டுக் கொணி டே தூங்கிப்போன நிஷ்மி, போர்வையை விலக்கிக் கொண்டே சட்டென்று எழுந்து உட்கார்ந்தாள்.
சிந்து மெளனமாக எழுந்து வந்து நிஷ்மியின் மடியில் அதுவரை தான் பிரித்தெடுத்துத் தன் கையில் வைத்திருந்த அந்தச் சின்னக் குழந்தையின் புகைப்படத்தைப் போட்டாள். சிந்துவையும் அந்தப் புகைப்படத்தையும் மாறிமாறிப் பார்த்தாள் நிஷமி. சிந்துவே பேசட்டும் என்று மெளனமாகக் காத்திருந்தாள். “யார் இந்தப் பெண் குழந்தை என்று பார்க்கிறாயா நிஷமி? கடந்த நான்கு வருடங்களாக ஐந்து குழந்தைகளை இலங்கையிலுள்ள ஒரு குழந்தைகள்
காப்பகத்தில் பராமரிக்கும் (Sponser) பொறுப்பை ஏற்றிருப்பதாகச் சொன்னேனே நினைவிருக்கிறதா? அந்தக் குழந்தைகளில் ஒரு குழந்தை தான் இது. இதைச் சொல்ல இந்த அர்த்த ராத்திரியில் என்ன அவசரம் வந்தது என்று பார்க்கிறாயா? இந்த. இந்தச் சின்னப் பூ என் வயிற்றில் பூத்திருந்தால்.” பேச முடியாமல் தவித்தாள் சிந்து. என்ன பேசுகிறாள் இந்தச் சிந்து .? புரியாமல் விழித்தாள் நிஷமி.
"இது வேறு யாருடைய குழந்தையும் இல்லை, கிரியினுடைய குழந்தை தான். கிரிக்கும் லிண்டாவுக்கும் பிறந்த குழந்தை தான். எப்படி என்னிடம் இந்தப் படம் வந்ததென்று பார்க்கிறாயா நிஷமி? இது நடந்து நாலு வருஷம் இருக்கும். கிரி என்னை விட்டிட்டுப் போனது உனக்குத் தெரியும், கிரிக்கும் லிண்டாவுக்கும் ஒரு பெண்குழந்தை பிறந்தது எனக் கேள்விப்பட்டதையும் கூட உனக்குத் தெரிவித்தேன் தானே? கிரி பேர்த் போனதும் அந்த உறவும் என்னைப் பொறுத்தவரை முடிந்துவிட்டதாகத் தான் நினைத்திருந்தேன். அவர் போய் இரண்டு வருடங்களாக எங்களுக்கிடையே எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால் ஒரு நாள் திடீரென ஒரு தொலை பேசி அழைப்பு வந்தது 'குழந்தை வேண்டுமென்ற ஒரே காரணத்திற்காகத் தான் உன்னைத் தூக்கிப் போட்டுவிட்டு வந்தேன். வேண்டுமென்று தவங்கிடந்த அந்தக் குழந்தை ஒன்று எனக்கு வந்தது. ஆனால் கிடைத்த அந்தக் குழந்தையை விட்டுவிட்டு, என்னையும் தூக்கி எறிந்துவிட்டு லிண்டா ஜேர்மனி போய் ஒரு வருடமாகிறது. அந்தக் குழந்தைக்காக . அந்தக் குழந்தைக்குத் தாயாக நீ என்னுடன் வந்து வாழச் சம்மதமா?” என்று கிரி கேட்டார்.
"என்ன நெஞ்சழுத்தம் .? உன்னை வேண்டாமென்று போனார். 'ர்ர்’ என்ன? 'ன் ன் தான் ஆமா போனான். அவன் உன்னை விட்டிட்டுப் போனான். அது தான் அவனைத் தேவையில்லை என்று அந்த லிண்டா
38
ஒன்பாதாவது ஆண்டு நிறைவு மலர்

2003 واbېږدي
கலப்பை
விட்டுவிட்டுப் போய்விட்டாள். அவள் போனபிறகு அவள் குழந்தையை வளர்க்க நீ ஆயாவாக அவனுக்குத் தேவைப்பட்டாயா சிந்து? நீ லிண்டாவின் குழந்தையைத் தத்தெடுப்பதா? தத்தெடுக்கவேணுமென்று
இதைத் தானே அன்று நீ அவனிடம் கேட்டாய்.
குறை உனக்கில்லாமல் அவனுக்கிருந்தால் நீ அதை மனப்பூர்வமாகச் செய்திருப்பாய் தானே? அவனது ஆண்மையை நிரூபிக்க அவனுக்கு ஒரு குழந்தை தேவைப்பட்டதா? பின் அதை வளர்க்க நீயா”? என நிஷ்மி தனக்கு வந்த ஆத்திரத்தில் ஏதேதோ பொரிந்து தள்ளினாள். சிந்து தன் தோழிட்ை பாாத்துச் அமைதியாய்ச் சிரித்தாள். பின் "அப்போதிருந்த மனநிலையில் எனக்கும் அப்படித் தான் இருந்தது நிஷமி. என்ன பேசினேன் என்று நினைவில்லை "நறுக்கென்று நாலு வார்த்தை காரசாரமாகக் கேட்டுவிட்டுப் போனை வைத்துவிட்டேன். ஆபீஸில் என் பக்கத்து மேசையில் இருந்த பெண் ‘என்ன சிந்து? உன் சத்தம் கூட வெளியே கேட்டதே. அவ்வளவு கஷ்டமான கிளையண்டா? எனக் கேட்டாள் என்றால் பாரேன். ஒரு வாரம் கழித்து
கிரியிடமிருந்து ஒரு கடிதம் கூட வந்தது.
அப்போதிருந்த மன நிலையில் அதைப் பிரித்துப் படிக் காமலேயே கிழித்துப் போட்டுவிட்டேன்" என்றாள்.
"அப்பாடி உருப்படியான ஒரு காரியம் செய்தியே சிந்து’ எனச் சிந்துவின் செய்கையை மனமார ஆதரித்துப் பேசினாள் நிஷமி. அவளைப் பார்த்துப் புன்னகைத்த சிந்து "அதன் பின் அதை நான் அடியோடு மறந்துவிட்டேன். சிலமாதங்களின் பின் தன் தாயாருக்கு உடம்பு முடியவில்லை என்று கிரி. ஊருக்குப் போனதாயும், தாயார் போய்விட்டதாயும், கிரி குடித்துக் குடித்துச் சீரழிந்து போவதாயும் என் காதில் விழுந்தது. எது எப்படியோ தாயும் சரியில்லை, தந்தையும் ஒழுங்கில்லை. யாரோ அந்தக் குழந்தையை வன்னியில் இருந்த
குழந்தைகள் காப்பகத்தில் கொண்டு போய்ச் சேர்த்திருக்கிறார்கள். அந்த இல்லத்தின் அதிபர் யார் என்று தெரியுமா நிஷ்மி? உனக்கு ஞாபகம் இருக்கிறதா? எங்கள் ஹோஸ் டல் அதிபராயிருந்தாவே சிஸ்டர் அன்ரனிட்டா அவர்தான்” என்று நினைவுபடுத்தினாள் சிந்து.
"ஓ! நல்லா ஞாபகம் இருக்கு, அதை விட்டி விட்டுவிட்டு விஷயத்திற்கு வா சிந்து” என அவசரப்படுத்தினாள் நிஷமி. “அதிபருக்கு கிரியைத் தெரியும். அவர் என்ன சொன்னாரோ தெரியாது. அந்தக் காப்பகத்தில் இருந்து சில குழந்தைகளின் பராமரிப்புக்கு உதவுமாறு கேட்டுச் சிஸ்டர் எழுதியபோது சந்தோஷமாக ஐந்து குழந்தைகளை ஸ்பொன்ஸர் பண்ணி மாதா மாதம் பணம் அனுப்புவேன். பணம் கிடைத்ததும் சிஸ்டரிடமிருந்து கடிதம் வரும். திடீரென்று ஒரு நாள் அந்தக் குழந்தைகளில் ஒரு குழந்தை-ஷைலஜா, நாலு வயதுக் குழந்தை. தன் கைப்பட இரண்டு வரிகள் எழுதியிருந்தாள். அப்புறம். அப்புறம் சின்னச் சின்னப் பவளமல்லிப் பூப்போலச் சின்னச் சின்னதாய் ஆசைகள், ஆதங்கங்கள், எதிர்பாாப்புக்கள், ஏக்கங்கள் எனப் பகிரத் தொடங்கிய எங்களிடையே ஏற்பட்ட தொடுபாலம் அது தான் இந்தக் கடிதங்கள்”.
பேசிக் கொண்டே போன சிந்துவுக்கு அன்று நடந்தது இன்னும் நன்றாக ஞாபகம் இருக்கிறது. இது நடந்து ஏறத் தாழ ஒரு மாதம் இருக்கும். அன்றும் அப்படித்தான். அலுவலகத்திலிருந்து அலுத்துக் களைத்து வீடு வந்தவளுக்கு ஆசிரமத்தில் இருந்து ஒரு கடிதம் வந் திருந்தது. புகைப் படம் இணைக்கப்பட்டுள்ளது (Photograph enclosed) என்று கவரில் இருக்கவே ஆர்வத்துடன் அதைப் பிரித்தாள். அதிலிருந்து சின்னதாய் ஒரு படம் நழுவிக் கீழே விழுந்தது. விழுந்த அந்தப் படத்தை எடுத்த சிந்துவின் கண்கள் நிலை குத்தி நிற்க. வியர்த்துப் போனாள் சிந்து. அந்தக்
ஒன்பாதாவது ஆண்டு நிறைவு மலர்
39

Page 22
கலப்பை
2003 وہابیہ
குழந்தை. அந்தக் குழந்தை அப்படியே. அவளுக்குத் தொண்டையை அடைத்தது. நிச்சயமாக அது கிரியின் குழந்தை தான். அந்தக் கண்கள், தலையைச் சாய்த்துக் கண்களை அகல விரித்துப் பார்த்தபடியே, சிரிக்கும் சாயல். அப்படியானால் அந்தக் குழந்தை? அந்தப் புகைப்படத்துடன் இரண்டு வரிகள் அந்தக் குழந்தை தன் கைப்பட எழுதப்பட்டிருந்தது.
அப் படியானால் சைலஜா என்ற குழந்தையிடமிருந்து அதுவரை வந்து கொண்டிருந்த சின்னச் சின்னக் கடிதங்களுக்குச் சொந்தக்காரி இந்தப் புகைப்படத்தில் இருக்கும் சைலஜா தானா? அவசர அவசரமாகக் காட்பகத் தொலை பேசி எண்ணைத் தேடி எடுத்து இலக்கங்களை அழுத்தினாள் சிந்து. அவசரத்திற்கு அழைப்புக் கிடைத்தால் தானே! எண்களை அழுத்தி, அழுத்திக் கைகள் வலித்தன இருப்பினும் தன் சந்தேகத்திற்கு விடை தேடி விடாப்பிடியாக அழுத்திக் கொண்டே இருந்தாள் சிந்து. இறுதியில் ஒருவாறு தொடர்பு கிடைத்து அந்த அதிபரைப் பிடித்து அந்தக் குழந்தை யார். யார். என்று திக்கித் திணறிக் கேட்ட போது அவர் சொன்ன பதில் சிந்துவின் சந்தேகத்தை ஊர்ஜிதமாக்கியது.
“இவ்வளவு தூரத்திற்கு நீ துருவித் துருவிக் கேட்பதால் மட்டுமல்லச் சிந்துஜா உன்னை எனக்கு நல்லாத் தெரிஞ்சதால் தான் இதையெல்லாம் சொல்கிறேன். நீ நினைப்பது சரிதான் சிந்துஜா, குழந்தை சைலஜாவின் அப்பாவும் அவுஸ்திரேலியாவில் இருந்தவர் தான், உனக்கும் நன்கு தெரிந்தவர் தான். அவர் ஓர் அல்ககோலிக், குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். குழந்தை வைஷலஜாவின் அம்மாவும் ஒரு போதை வஸ்துக்களின் அடிமையாம். குழந்தை பிறந்த சில மாதங்களிலேயே ஜேர்மனி போய்விட்டாராம். அந்தக் குழந்தையின் தந்தை அது தான் அந்தக் கிரிஷாகரன் தன் குழந்தை
ஷைலஜாவை வளர்க்க மிகவும் கஷ்டப்பட்டு ஒரு வருடம் அங்கிருந்து முயன்று பாாத்துவிட்டுப் பின் தன் தாய்க்குச் சுகமில்லாமல் போகையில் இங்கு தாயைப் பார்க்க வந்தார். தாயும் போய்ச் சேர்ந்து விட அந்தக் குழந்தையை யாரோ துணையுடன் இங்கு கொண்டு வந்து சேர்த்தார். காரணம் மதுவின் போதை அவரை நல்லா அடிமைப் படுத்தியிருக்கிறது. எப்போதாவது வருவார் போவார். அப்படி வந்த போதுதான் ஒரு நாள் "ஏன் இந்தக் குழந்தைக்காய் உங்கள் பழக்க வழக்கங்களை மாற்றக் கூடாது" என்று கேட்ட போது, "குழந்தைக்காய் என்று முன்பு ஒரு தடவை நான் மாறியது போதாதா”? என்றுவிட்டுத் தன்னைப் பற்றிச் சொன்னார். அவர் சொன்ன மனைவி நீ என்று தெரிந்தபோது நான் அவரிடம் அதைக் காட்டிக் கொள்ளவில்லை" என்றார் அதிபர். “உன் வாழ்வுக்கு ஒரு பிடிப்பு வேணும். கடவுள் இணைத்ததை மனிதன் பிரிக்கலாமா? உன் வாழ்க்கையைச் சீர்ப்படுத்தக் கடவுள் எனக்குக் காட்டிய வழி தான் இது என்று எனக்குத்
தோன்றியது. அது தான் ஷைலஜாவையும் அந்த மற்றக் குழந்தைகளுடன் சேர்த்துப் பராமரிக்கக் கேட்டேன். எப்படியும் ஷைலஜா உனக்கு ஒரு விதத்தில் உரிமையானவள். அவளை விடுத்து மற்றவர்களின் பராமரிப்பை உன்னிடம் கேட்பது அந்தக் குழந்தையின் நியாயமான உரிமையை நானே மறுப்பது போல எனக்குத் தோன்றியது. மனித மனங்கள் மாறும் சிந்துஜா. ஒரு நேரம் கிரியின் குழந்தையைப் பற்றி என்னிடம் நீங்கள் ஏன் சொல்லவில்லை என்று நீயே கேட்கலாம். அதனால் தான் விபரம் எதுவும் சொல்லாமல் அவளையும் ஒரு குழந்தையாகச் சேர்த்தேன்” என மேலும் கூறினார்.
தன் நினைவுகளை ஒரு நிலைப்படுத்தி மீண்டும் பேச்சைத் தொடர்ந்தாள் சிந்து. எனக்கு அப்போது அந்தச் சிஸ்டர் மீது
40
ஒன்பாதாவது ஆண்டு நிறைவு மலர்

கலப்பை 2003 واbچ
ஒன்பாதாவது ஆண்டு நிறைவு மலர் 41

Page 23
கலப்பை
2003 وہاک
ஒரே கோபம். இந்தச் சிஸ்டர் எதற்காக இத்தனை வருடங்கள் ஏறக்குறைய மூன்று, நான்கு வருடங்கள் என்னிடம் எதுவுமே சொல்லவில்லை என்று. தொலைபேசி இணைப்புச் சரியாக இல்லை, அப்புறம் பேசுகிறேன் எனத் தொடர்பைத் துண்டித்துவிட்டேன் நிஷமி. பிறகு நான் அவரை இதுவரை தொடர்பு கொள்ளவில்லை. விதியின் விளையாட்டைப் பார்த்தாயா? குழந்தை வேண்டுமென்ற ஒரே காரணத்திற்காக என்னை வெட் டிவிட்டுப் போனவரை வேண்டாமென்று வெட்டிவிட்டு லிண்டா போய்விட்டாள். கன்று தான் வேண்டுமென்று பசுவைத் துரத்தியவனை அவன் கொண்டு வந்த மாடே தன் கொம்பால் முட்டி விட, கடவுளும் அவனுக்கு 'கன்று தானே வேண்டுமென்று கேட்டாய் பசுவல்லவே' என்று பாடம் கற்பிக்கிறாரா?”
மீண்டும் தொடர்ந்த சிந்துவின் மெளனம் அவள் பழைய நினைவுகளில் ஆழ்ந்து கிடக்கிறாள் என்பதைச் சொல்லாமற் சொல்லியது. முகம் தெரியாத அந்தக் குழந்தை ஷைலஜாவிடம் அவள் அத்தனை வருடங்களாக வைத்திருந்த தாமரை இலைத் தண்ணிரான உறவு, தாமரைக் கொடியாக மாறி அவள் காலைச் சுற்றி உறவாடப் பார்க்கிறதா? மூச்சு முட்டியது அவளுக்கு. அவன் செய்த பாவம்! அவள் அடைந்த சாபம்! அவள் தண்டிக்கப்பட்டு விட்டாள். ஆனால் அந்தக் குழந்தை என்ன பழி பாவம் செய் தாள்? சிஸ் டர் அன்ரனிட்டாவோ மன்னிப்பதே மனித மாண்பென, மாண்ட யேசுவின் பாதங்களைப் பணிபவர். அவள் குணத்தை, அவள் பண்பை நன்கு புரிந்தவர். கிரியைத் தெரிந்தவர், அந்தக் குழந்தை வைஷலஜாவுக்கு ஆதரவு காட்டி அன்னையாய் மாறியவர். அவனைத் திருத்தி, அவளுக்கு ஒரு விடிவு வருவதற்கு அந்தக் குழந்தை ஏன் ஒரு தொடுபாலமாய் இருக்கக் கூடாது என்று அன்பு ஒன்றையே மையமாய் வைத்துப் புள்ளிகளை இணைத்துக் கோலம் போடப் பார்ப்பதில் என்ன தவறு? அவர்.
அவர் எதுவோ நல்லெண்ணத்தில் அப்படிக் கணிக்கப் பார்ப்பதை அவள் ஏன் தவறாகக் கொள்ள வேண்டும்? ஆனால் அதற்காக அவர் எப்படி அவளைக் கேட்காமல் அவள் வாழ்க்கை நியதியை மாற்றுவதற்குக் கணக்குப் போட முடியும்? அவள் வாழ்க்கையை நிர்ணயிக்கும் உரிமை அவளுடையது தானே? அவர் கணக்குப் போடுவதா? சே. சே . கணக்குக் கணக்கென்று இந்த அபியைப் போலவா அவளும் மாறிவிட்டாள்? பின் அந்த அபிக்கும் அவளுக்கும் என்ன வித்தியாசம்?
சிந்து யோசித்தாள். பெற்ற குழந்தைகளைப் பேணக் கட்டியவனிடம் கணக்குக் கேட்பது தவறென்றால், கட்டியவன் அவளைக் கைவிட்டான் என்ற காரணத்திற்காகத் தவறேதும் செய்யாத பிஞ்சு மனம் கொண்ட ஒரு குழந்தையின் பசியைப் போக்கி அதற்குப் பாசத்தைக் காட்ட அவள் மட்டும் கணக்குப் பார்ப்பது சரியா? அப்படியானால் அவள் மட்டும் எந்த விதத்தில் உசத்தி? நெருஞ்சி முள்ளெல் லாம் எப்படியோ அவள் நெஞ்சுக்கூட்டைச் சுற்றிப் படர்ந்து விட்ட மாதிரித் துடித்துப் போய்விட்டாள் சிந்து.
ஒரு கணம் தான் அந்தத் தடுமாற்றம். ஆனால் மறு கணம் . அப்படித் துடித்த மறுகணம் அவள் உள்ளத்தில் அது வரை கட்டுடைத்துத் தடம் புரண்டு ஓடிக் கொண்டிருந்த அந்தக் காட்டாற்று வெள்ளம் அத்தனையுமே திடீரென்று வடிவதற்கு வழி வந்துவிட்டதா? அவள் மனதிலும் ஒரு சின்னஞ் சிறு நீரூற்றுப் புடைப்பெடுத்துவிட்ட மாதிரி ஒரு திடீர் மாற்றம். திடீரென்று பொங்கும் பாலின் மேல் நீர் சொரிந்து விட்டதா? கோடை வெய்யிலில் சுருளும் அரும்பின் மேல் அந்தப் பனித்துளி பட்டுவிட்டதா? ஆமாம் அந்தச் ஷைலஜாவின் கண்ணின் மணியில் நிழலாடிய அந்தப் பனித்துளியின் ஈரம், இந்த வாழாவெட்டி சிந்துவின் இதயத் தைத் தொட்டு நனைத்துவிட்டதா? மறுகணம் அவசர
42
ஒன்பாதாவது ஆண்டு நிறைவு மலர்

2003 ,gا25
கலப்பை
அவசரமாக வன்னித் தொலை பேசி இலக்கங்களை அழுத்தினாள். அந்தக் கிரியை மன்னிக்கவோ, தண்டிக்கவோ, ஆண்டவன் இருக்கிறார். அந்தக் கிரியை இந்தச் சிந்து மன்னித்தது மட்டுமல்ல மறந்தும் விட்டாள். ஆனால் அந்தச் ஷைலஜாவுக்கு மட்டுமல்ல, அந்த ஐந்து குழந்தைகளுக்கு மட்டுமல்ல, இன்னும் இரண்டு குழந்தைகளைப் பராமரிக்க நானும் நிவஷ்மியும் தயாராக இருக்கிறோம் சிஸ்டர். அதுமட்டுமல்ல, சட்ட ரீதியான ஒழுங்குகள் செய்துவிட்டு, விரைவில் அங்கு வந்து குழந்தை வைஷலஜாவை என் குழந்தையாக முறைப்படி தத்தெடுத்து இங்கு கூட்டி வருகிறேன்" எனச் சொன்னபோது அந்தச் சிஸ்டர் அன்ரனிட்டாவின் உதட்டில் அரும்பிய புன்னகை, அவரது வழமையான அந்த அமைதியான மென்னகையின் எதிரொலி தொலை பேசியூடே அவள் செவிகளில் ஒலித்து, அவள் உள்ளத்தில் இதுவரை அனுபவித் திராத ஓர் அற்புதமான அமைதியைப் பிறப்பித்தது. "சிந்து யூ ஆர் fubliss S(8B'LL (You are simply great) என்று கூவியவாறு நிஷ்மி கட்டிலில் இருந்து பாய்ந்து வந்து பெருமையுடன் தன் தோழியை இறுக அணைத்துக் கொண்டாள்.
"வாழாவெட்டி, வாழா வெட்டி என்று வையும் இந்த வாய்களுக்கு வெறும் அவல் தான் நீயும், இந்த அபியைப் போன்றவர்களும். வெறும் வாயை மெல்லுபவர்கள் எல்லாம் அவள் ஏன் வாழாவெட்டியானாள்? அதற்கு ஏதும் காரணம் இருக்கலாம் அல்லவா என்று யோசனை செய்கிறார்களோ, இல்லையோ, எனக்குத் தெரியாது. அவர்களையெல்லாம் விட்டுத் தள்ளு சிந்து,அவர்களைப் பொறுத்த வரை நீ ஒரு வாழாவெட்டி, அபியும் ஒரு வாழாவெட்டி. ஆனால் எனக்கு, அந்தச் சிஸ்டர் அன்ரனிட்டரா போன்றவர்களுக்கு, ஏன் உன்னைப் புரிந்தவர்களுக்குத் தான் தெரியும் நீ ஒரு வாழாவெட்டியல்ல, வெட்டி வேரென்று. தான் வெட்டுண்டு போய் வாழாவிட்டாலும் மற்றவர்களை வாழ வைக்கும் "வெட்டி வேர்”என்று.
அந்த வெட்டிவேர் தான் வெட்டுப்பட்டுத் துண்டாகித் தன் வாழ்க்கையை இழந்த பிறகு கூட அடுத்தவர்களுக்கு எவ்வளவு வாசனை தருகிறது தெரியுமாடி உனக்கு”
பொங்கி வரும் உற்சாகத்தோடு தொடர்ந்து பேசினாள் நிஷமி. “சிந்து வெட்டி வேரை நீ பார்த்திருக்கிறாயா? உயர்ந்து வளரும் ஒரு வகைப் புல 29ل5 إ . தாவர ஆராய்ச்சியாளரான எனது கணவருடன் ஒரு முறை இந்தியச் சுற்றுப்பயணம் சென்ற போது அதை நான் பார்த்திருக்கிறேன். இந்த வெட்டிவேரை இந்தியாவின் தெற்கு, மேற்குப் பகுதிகளில் மட்டுமல்லாது உத்தரப் பிரதேசத்திலும் கூடப் பார்த்திருக்கிறேன். அங்கெல்லாம் சில சில இடங்களில் பாத்தி, பாத்தியாய், வயல் மாதிரி இந்த வகைப் புல்லை முளைக்க வைப்பார்கள். பக்குவமாய் ஒரு வருஷம் ஒன்றரை வருஷத்திற்கு அந்தப் புல் வளர்ந்த பின், வெய்யிற் காலத்திலே அதன் வேரை வெட்டிக் கிண்டி எடுத்துக் காயவைத்து விடுவார்கள். அந்த வேருக்குள் தான் அத்தனை வாசனை தரும் ஒருவகை எண்ணெய் இருக்கிறது. அங்கு சிலர் இந்த வேரிலிருந்து ஒருவகை வாசனைத் தைலம் தயாரிக்கிறார்கள். வேறு சிலர் இந்த வேரை வைத்துத் தான் அழகாய்த் தட்டித் தடுப்புக்கள், பாய் விரிப்புக்கள், விசிறிகள் எல்லாம் அலங்காரமாய் செய்து வைப்பார்கள். கோடை காலத்திற்காய் வீடுகளில் கட்டி வைத்திருக்கும் தட்டிகளில் மழைத்துளி பட்டாற் போதும், ஜிலு ஜிலு என்று காற்று வீசும் போது அந்த வெட்டி வேரின் வாசனையும் கலந்து வியாபித்து வரும் போது மனதுக்கு மிகவும் ரம்மியமாக இருக்கும். அது மாதிரித் தான் நீயுமடி. உன் வாழ்க்கை பூக்காத, காய்க்காத மரமாய்ப் போனதென்று உன்னைக் குடும்பம் என்ற மரத்திலிருந்து வெட்டி எறிந்துவிட்டான் கிரி என்ற அந்த மானிட ஜென்மம். அபிராமி - அவள் தனக்கு நிழல் கொடுக்க வந்த மரத்தை - டரனை வெட்டிக்கொண்டு, அந்த
ஒன்பாதாவது ஆண்டு நிறைவு மலர்
43

Page 24
கலப்பை
ஆடி 2003
மரத்தையும், அந்த மரத்தில் பூத்த பூவையும் பிஞ்சையும் நோகடித்து வாட விடுகிறாள். வெறும் விஷ வேராய் மாறி மற்றவர்களை வதைக்கிறாள். கிரி உன்னைத் தன் வாழ்க்கையிலிருந்து வெட்டி விட்டாலும் அபி மாதிரி நீ காய்ஞ்சு கருகிப் போகவில்லை. வெட்டிவிட்ட பின்னும் உன் வாழ்க்கைக்கு மட்டுமல்ல மற்றவர் வாழ்க்கைக்கும் உன்னால், தட்டியாய் நிழல் கொடுத்தும், தைலமாய் மணம் கொடுத்தும் வளம் பரப்ப முடிகிறது." சுருக்கமாகச் சொல்லப் போனால் அபி வாழாது வெட்டியாகிப் போண்விட்ட ஒரு வேர். நீயோ வாழ்ந்தபின்னும் ஏனையோர்க்கு வளம் கொடுக்கும் வேர். வெட்டி விடப்பட்டவர்கள் வெட்டி வேராய் வாசம் வீசுவதும், வெட்டியான வெற்று வேராய் மாறிவிடுவதும் அவரவரைப் பொறுத் தது. ஆக மொத்தத் தரில் எம்மவரிடையே எத்தனை விதமான வாழா வெட்டி வேர்கள் இருக்கிறார்களோ. அவர்களுடைய அந்தரங்கத்தை அறியாமல் வையும் இந்தச் சமுகத்தின் மனநிலையை ஒரே நாளில் நாம் திடீரென மாற்ற முடியுமா? நாம் நம் பாட்டுக்கு வாழவேண்டியது தான். அவர்கள் மாறுகிறபோது அவர்கள் மாற வேண்டியது தான்"
“என்ன சிந்து அப்படி என்னை விழித்துப் பார்க்கிறாயப் ? உண்மையைத் தான் சொல்லுகிறேன். தானும் அழிந்து தன் குடும்பம் என்ற அந்தக் கனி தொங்கும் மரத்தையும் அழிக்கும் அபி போன்ற சில விஷமான வெட்டியான வேர்களும் இருக்கத்தான் செய்கிறாாகள். நீ அப்படிப் பட்ட வேர் இல்லையே! அடுத் தோர்க்கு இதம் தருவதற்காகவே வளர்க் கப் பட்ட,
ஆண்டவனால் படைக்கப்பட்ட வாசம் மிக்க
வெட்டி வேர் தானடி உன்னைப் போன்றவர்கள். இனியாவது இந்த கிரியையும் கமூகத்தையும் பற்றிய யோசனைகள் எல்லாவற்றையும் மூட்டை கட்டி வைத்துவிட்டுப் போய்த் தூங்கு” என ஒரு குட்டிப் பிரசங்கமே செய்து முடித்த நிஷமி எழுந்து அவளை அன்புடன் அணைத்து
நெற்றியில் முத்தமிட்டுவிட்டுத் தன் கட்டிலில் போய் அமர்ந்தாள்.
சிந்து பதில் ஏதும் பேசவில்லை. "ஆமாம் நிஷமி நீ சொல்வது போல், இந்த ஊருக்கும், உலகுக்கும் வேண்டுமானால் நான் ஒரு வாழாவெட்டியாகக், காய்க்காத மரமாக இருக்கலாம். ஆனால் அந்தக் குழந்தையைப் பொறுத்தவரை நான் என்றும் அன்பெனும் மணங்கமழும் வெட்டி வேர்தானடி” எனத் தனக்குள் நினைத்துக் கொண்டாள். அவளையுமே அறியாமலேயே மேசை மீதிருந்த அந்த இரட்டை போட்டோ பிரேமைப் (photoframe) பார்த்தாள் சிந்து வலப்பக்கம் அவள் படம். இடப்பக்கம் வெறுமையாக இருந்தது. குழந்தை சைலஜா வின் புகைப்படத்தை மெதுவாக எடுத்து, அதனுள் அழகாகப் பொருத்தி மீண்டும் அதே மேசை மேல் அவதானமாக வைத்தாள். இந்தக் குழந்தையின் வருகைக்காகத்தான் இந்தப் படத்தில் இந்த இடம் வெறுமையாக இத்தனை நாள் இருந்ததா? மனம் திடீரெனப் பளிச்சென்று வெளித்த மாதிரி இருந்தது. அடேயப்பா! அவள் எடுத்த அந்த முடிவு அதுவரை அவள் *இதயத்தை மறைத் திருந்த அத்தனை இருளையும் அகற்றி விட்டதே. அவள் வாழ்விலும் ஒளி பிறந்துவிட்டதே. அதன் பிரதிபலிப்பாய் அவள் முகத்திலும் மெல்லிதாய் ஒரு முறுவல் அரும்பியது. கட்டிலில் சிறிது ஒருக்கழித்துக் கையை நீட்டி யன்னலைத் திறந்து, திரைச்சீலைச்ை சிறிது விலக்கினாள் சிந்து. காற்றோடு கலந்து வந்த அந்த வசந்தத்தின் சுகந்தம் வெட்டி வேராய் அவள் வாழ்விலும் மணம் பரப்ப வந்துவிட்டதா? தலையைத் திருப்பிப் பார்த்தாள், சிந்து. கட்டிலின் ஒரு பக்கத்தில் இருந்த குழந்தை ஷைலஜாவின் புகைப்படம் மெதுவாகத் தலையைச் சாய்த்து "அம்மா” என அழைப்பது போல உணர்ந்த சிந்துவின் உள்ளத்தில் ஒரு சிலிர்ப்பு.
முற்றிற்று
44
ஒன்பாதாவது ஆண்டு நிறைவு மலர்

2003 وايي
கலப்பை
தாய்க்குப் பின் தாரம்
வாய்மொழியாய் வந்ததுவோ - அன்றி வாய்மையுள்ள முதுமொழியோ நானறியேன் என் தாய்மொழியில்தான் கற்றேன் தாய்க்குப் பின் தாரம் என்று.
இதை ஆய்வுசெய்ய அறிவெனக்குப் போதவில்லை அது உண்மை - ஆனாலும் என் எண்ணக் கருவறையில் - இது
எத்தனையோ நாட்குடைச்சல்
காலங்கள் பல கடந்தும் - விடை காணப் பெருங்குழப்பம். மாதங்கள் அல்ல - வருடங்கள் பல கடந்தும் கண்ட விடைகூட கொண்ட முதலுக்கே நட்டம்போல் என் சிற்றறிவுக் குழப்பம் தீர்க்க சிறு கவியாய்ச் செப்புகிறேன்.
என் முடிவு தவறென்றால் நல்ல பதில் தந்திடுவீர் நானும் அதை ஏற்று நிற்பேன்.
இனி, கவிதைக்குள் செல்வோமா? இல்லை, இல்லை - என் சிந்தை தனைக் குடைந்த அந்த சிங்கார வரிகட்குள்
தான் செல்வோம்.
“தாய்க்குப் பின் தாரம்” என்று யார் சொன்னார்?
துள்ளித் திரிகின்ற பள்ளிப் பருவத்தே ஒர்நாள் கண்மூடி நான் ஓடி கல்லினிலே கால் இடறி வீழ்ந்திடவே சும்மா கிடந்த கல்லை முந்நூறு தரம் திட்டி தன் முந்தானை கொண்டு என் முகம் துடைத்து முத்தமிட்டு மிட்டாயும் கொடுத்து எனைத் தேற்றும் என் தாய்க்கு ஈடாக வருவாளா ஒருத்தி? தாய்க்குப் பின் தாரம் என்று
யார் சொன்னார்?
விளையாடும் வேளைதன்னில் வீண் தகராறு தானெடுத்து நாள் தவறாது அடிதடியில் நான் எடுக்கும் பெரும் போரதனை காத்திருந்து என் அண்ணன்
ஐயாவிடம் கோள்மூட்ட
முற்றத்துப் பூவரசில் ஐயா முறித்த தடி - என் மேனி தழுவ முன்னர் தாவி வந்து இடைபுகுந்து என் பிள்ளை தங்கம் என்று பிணை எடுக்கும்
என் தாய்க்கு ஈடாக
ஒன்பாதாவது ஆண்டு நிறைவு மலர்
45

Page 25
கலப்பை
2003 واچاهي
வருவாளா ஒருத்தி? தாய்க்குப் பின் தாரம் என்று
யார் சொன்னார்?
தாரம் என்ற சொல்லின் தகுதிதனை அறியாத வாலிபனாய் நானிருந்த வேளைதனில் என் சிந்தையிலே செருக்குடனே குடியிருந்த கேள்விக் கணைகள் அவை.
இல்லறம் எனும் நல்லறம் காணும்வரை அது வாலிபத்தின் இயல்புதானே!
நான் இல்லறம் கொண்டபின் இனியதோர் நாள் . . எனை உட்காரச் சொன்னாள் உணவருந்த என் மனையாள் பசியில்லை என மறுத்தேன் கனிமொழியாள் கடையிதழில் ஓர் புன்சிரிப்பு தட்டினிலே உணவிட்டாள் தளிர் விரலால் பிசைந்தெடுத்தாள் கட்டியவன் என்னை கைக்குழந்தை போல் நினைத்து உணவு ஊட்டி விட தொண்டைக் குழிவரையில் என் தாயின் நினைவு வந்து (உணவு) புரையேறிப் போன
என் நிலைக்காய் தான் பதறி உச்சியிலே தட்டி தண்ணிரும் ஊட்டிவிட்ட தாரமிவள் செயல் கண்டு தாய் நினைவு தாலாட்ட இதுதானா தாய்க்குப் பின் தாரம் என்றார், என மலைத்தேன்.
காலங்கள் ஓடின கருவுற்றாள் என் தாரம் தந்தை எனும் அந்தஸ்தை எந்தனுக்குத் தந்திடவே ஒன்றிரண்டு நாள் அல்ல தாரமிவள் பட்ட துன்பம் ஐயிரண்டு திங்கள் - தினம் அடிவயிறு தான் கணக்க
நிற்கவும் நடக்கவும் - ஏன் நித்திரையில் கூட நித்தம் இவள் பட்ட துயர் நினைக்கையிலே நெஞ்சுருகும் இதயத்தில் நீர் பனிக்கும் சத்தியமாய்ச் சொல்லுகிறேன் சாவு என்ன சாவு பிள்ளை பெற்றெடுக்கும் போது
பெண் பிழைப்பதல்லோ வாழ்வு!
இத்தனையும் பட்டா - என்னை
ஈன்றாள் என் அன்னை
46
ஒன்பாதாவது ஆண்டு நிறைவு மலர்

2003 gا
கலப்பை
என்னும் பக்குவம் ஆண்களுக்கு தாரத்தால் கிட்டும் என்றோ தாய்க்குப் பின் தாரம் என்றார் என நினைத்தேன் - தான்
மடிசுமந்த மகனை என் தாரம் சுமக்கும் அழகு கண்டு எண்மனையாளின்
முகம் மலர்ந்து நின்றபோது.
மகன் பிறந்த மகிழ்வில் - எம் மனை நிறைந்து பொங்க மாதங்கள்கூட நாட்கள்போல் விரைந்தோடிப் போயின. முன்னிரவு வேளையிலே முழுமதிபோல் தாயான பூரிப்பில் - அவள் தங்கமேனி பளபளக்க தொட்டிலிலே மகன் உறங்க கட்டிலிலே ஒருக்களித்து காமன் கணைதொடுத்த என் இனியவளின் கண் மையாய் நான் கரைந்தே கட்டி அணைத்து - அவள் கனியிதழில் முத்தமிட நாணிக் குனிந்த தலை - என் மார்பில் தடம் பதிக்க கணி சிவந்து வாய் வெளுக்கும் கவிதை வரி தான் படித்தோம்.
அவ்வேளை தான் பார்த்து
எம் அருமை மகன் அழுதிடவே துடித்துப் பதைத்து எழுந்து தொட்டிலை நாடியவள் - மகனை அள்ளி அணைத்து எடுத்து ஆசையுடன் முத்தமிட்டு அழுத மகன் வாயினிலே அமுதூற முலை சொரிந்தாள். தாயாக அவள் கொண்ட அழகினிலே மனம் நெகிழ அருகிருந்த பேனாவைக் கரமெடுத்து இக்கவிக்கு முடிவுரை எழுதியது.
“தாய்க்குப் பின் தாரம்” என்று ஏன் சொன்னார்?
பெண்மை என்றால் தாய்மை. தாயாக இருப்பதில் தான் தாரமும் நிறைகின்றாள். என் தாயாகட்டும் - அன்றில் என் தாரமாகட்டும் - இல்லை தாரணியில் பெண் யாராகட்டும் பெண் முதலில் தாய் :
பின்னர்தான் அவள் தாரம்
- ந மண் நி -
இரத்தினம் யோகமூர்த்தி
டெண்மார்க்
ஒன்பாதாவது ஆண்டு நிறைவு மலர்
47

Page 26
கலப்பை 2003 .وہاہے
நட்பு பணம் பொருள் தேடி வருவதல்ல நட்பு பாசம் பண்புக்காய் வளர்ந்து கொள்கிறது நட்பு
பெற்றோருடன் பகிர்ந்து கொள்ள முடியாததைக் கூட பகிர்ந்து கொள்கிறது நட்பு
சிரிப்பு கட்ட சில வேளை மறைந்துவிடலாம் . ஆனால்
இறுதிவரை மறையாத பூ நட்பு சிரிப்பில் மட்டுமல்ல துண்பத்திலும்
பங்கெடுப்பதே சிறந்த நட்பு
உனக்கு சிறு துண்பம் என்றால் கூட - எண் உள்ளம் கலங்குகின்றதே அதுதான் நட்பு நான் நல்லாய் இருக்க வேண்டும் என நீயும் நீ நல்லாய் இருக்க வேண்டும் என நானும் நினைக்கின்றோமே இதில் உணர்கின்றேண்
நமது நட்பை
ஆக்கம் சுவேதன்
10ம் பக்கத் தொடர்ச்சி அதன் பின்னர், செத்த ஆடுகளை வாங்கியவர்கள் துாத்தில் ஒரு தனி இடத்துக்குக் கொண்டுபோய் அவற்றின் தோலை உரிப்பார்கள். இறைச்சி யைப் பங்குகளாகப் பிரித்து, பனையோலையாற் செய்த குடலையில் ஒவ்வொரு பங்கும் அடைத்துவிட்டு அதை ஆவலுடன் வாங்கக் காத்திருக்கும் ஆட்களுக்கு விற்பார்கள். வேள்வி நாட்களில் சனக்கூட்டம் நிறைந் திருக்கும் - தெய்வத்தைத் தரிசிக்கவல்ல - இந்த இறைச்சிக் குடலையை மற்றவர்களை முந்திக்கொண்டு வாங்குவதற்கு! வாங்கிக்கொண்டு வீட்டுக்குப்போய், அன்று எண்ணெய்
முழுக்கு முழுகி விட்டு ருசியாகச் சமைத்த இறைச் சிக் கறியுடன் சாப்பாடு ஒரு பிடிபிடிப்பதற்குத்தான் (ஆகவே, தெய்வம் எங்கே, வாயில்லாப் பிராணியான ஆடு எங்கே, நேர்த்தி எங்கே, வாய்ருசிதான் எங்கே? எல்லாம் இந்த இறைச்சிக்கறியின் ருசி நாக்கின் நீளத்தைக் கடக்குமட்டும்தானே!)
ஆடு வாங்கிப் பராமரிக்க முடியாத சிலர் ஆட்டுக்குப் பதிலாக கோழிச் சேவலை நேர்த்திவைத்து வளர்த்து தெய்வத்தின் முன்பாக அதை வெட்டி, பின்னர் சமைத்துச்
சாப்பிடுவார்கள். இந்த மூடநம்பிக்கை
இப் போது சிறிது சிறிதாக
அற்றுப்போகின்றதுபோல் தெரிகின்றது. தொடரும்
48
ஒன்பாதாவது ஆண்டு நிறைவு மலர்

2003 واوليني
கலப்பை
Scintillating Mridangam Arangetram by Rahuram
Selvan Rahuram Sivasubramaniam, son of Smit Rohini & Sri Thambiah Sivasubramaniam, and a student of the well known Mridanga Virtuoso Sri Mathiaparanam “Ravi” Ravichandhira performed his Mridangam Arangetram at the Sir John Clancy Auditorium of Sydney University on the 27th of April 2003. It was as if the audience were witnessing an experienced artist, as Rahuram's skill exceeded the expectations from a Mridangam debutant.
The program showcased Rahuram's talent in concert as he accompanied two renowned Karnatic instrumentalists.
These were Yuva Kala Bharathi Sri B. V. Balasai on Flute and Yuva Kala Bharathi Allam Sri Durgaprasad on Gottuvadyam. The audience was treated to a highly virtuosic and melodious musical feast by the combination of Flute and Gottuvadyam.
The two instrumentalists beautifully rendered compositions in different ragams and musical forms: Varnam, Keertanams, Rägam Thänam Pallavi, Sai Bhajan, Thirupugal and Mangalam. This variety showcased, as in a dance Arangetram, the versatility of Rahuram to accompany in a wide selection of formats, a prerequisite for any concert Mridangist, Further to this, three of the songs were setto Talams other than Adi the regular 8 beat cycle. These Were the 7-beat Misra Chapu Talam, the 1 1-beatMisraJäthi Triputa Talam andthe 5-beat Kanda Chapu Talam, and each of these would have been a challenge to master for any Mridangam student. The Thani-Avarthanam that displayed individuality, intricate rhythmic patterns, tonal quality and modulation, was performed at the end of the famous
ஒன்பாதாவது ஆண்டு நிறைவு மலர்
49

Page 27
கலப்பை
piece Nagumomu” in the Ragam Abheri Setto Adi Talam.
Rahuram's rhythmic dexterity has its foundations in solid groundwork and training from his various Gurus. Having learnt from Sri M. N. Sellathurai of Jaffna and Sri V. Venilan of Colombo, Rahuram came to Australia from Sri Lanka at the age of twelve with an “abiding” interest and a level of skill in Karnatic music. Since coming to Australia he has learnt from Sri Suthanthiraraj and from his current Guru Sri Ravichandhira. Sri Ravi's influence on Rahuram's Mridangam playing was evident in his style. In addition, two of the compositions rendered are favourites of Sri Ravi and appear on his CD titled “Rhythms and Ragas”. Rahuram has also spent some time in India learning under the renowned Mridanga Maestro Sri Karaikudi R. Mani.
The choice of instrumentalists was most appropriate as it allowed the focus of each piece to rest more on the musical elements rather than the lyrical content.
The chief guest at the occasion Smt
Bhavani Govindan, Artistic Director of the
Rasikapriya School of Indian Music and Rahuram's Karnatic Music Guru, and the Guest of Honour Mr William Hilliard, Deputy Principal of Homebush Boys' High School that Rahuram attended spoke very highly of Rahuram's dedication and commitment, which took him several times to Melbourne for his training.
This dedication and commitment will definitely take Rahuram to greater heights and give us many more opportunities to listen to him.
Mahesh & Meena Radhakrishnan
,.}}, lp 2003
மிருதங்க அரங்கேற்றம்
செல்வன் இரகுராம் சிவசுப்பிரமணியத்தின் மிருதங்க அரங்கேற்றம் சிட்னியில் திறம்பட நடந்தேறியது. அவரது அரங்கேற்றத்தைப் பற்றி வாசித்து அறிந்த உங்களுக்கு, இரகுராமின் மிருதங்க கலைத்திறனை உங்களுக்கு சிட்னி மட்டுமல்லாமல், மெல்போர்ன் மேடைகளில் பார்க்கவும், கேட்டு ரசிக்கவும் சந்தர்ப்பம் கிடைத்திருக்கும். எந்த கலைநிகழ்ச்சி என்றாலும் மிருதங்கம், ஹடம் என்ற இரு வாத்தியங்களையும் மிகவும் லாவகமாக வாசிக்க வல்லவர், இரகுராம். எந்தக் கலை நிகழ்ச்சிக்கும், கேட்போருக்கு மறுப்பு தெரிவிப்பதில்லை. தனது மருத்துவ உயர்படிப்புக்களுக்கு மத்தியிலும், தான் கற்ற கலையின் மரியாதையின் நிமித்தம் அதன் உயர்வு பேணுபவர். இவர் கலைக்கு கொடுக்கும் மதிப்புக்கு இது சான்று.
ஹோம் புஷ ஆணிகள் உயர்தரப் பாடசாலையில் பயின்று சிறந்த மாணவனாக தேர்ச்சியடைந்த இரகுராம், இப்பொழுது நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு மருத்துவ மாணவனாவார். 2001ம் ஆண்டில் சரத்வீல்ட் நகரசபையின் சிறந்த இளைஞன்' என்ற பரிசு பெற்றவர். இந்த ஆண்டுக்கான சிட்னி தமிழ் மன்றத்தின் சிறந்த தமிழ் இளைஞன்' என்ற விருது பெற்றவர். பல்கலைக்கழக தமிழ்ச் சங்கங்களில் பங்குகொணிடுவரும் இவர் கலப்பை சஞ்சிகையின் வெளியீட்டில் சேவையாற்றி வருகிறார்.
திறமைமிக்க மிருதங்கக் கலைஞனான இரகுராம், தமிழர்கள் மத்தியில் ஒரு சமூக சேவையாளார். எதிர்காலத்தில் நல்ல மருதீது வராகவுமி விளங்கி, பல துறைகளிலும் எமது தமிழ்ச் சமுதாயத்திற்கு சேவையாற்ற எமது வாழ்த்துக்கள்.
ஆசிரியர்
50
ஒன்பாதாவது ஆண்டு நிறைவு மலர்

2003 gاوي
கலப்பை
பரிசு பெற்றோர் பட்டியல் 2003 கன்பரா
TAMIL COMPETION 2003 WINNERS LST CANBERRA (இந்தப் போட்டிகள் அவுஸ்திரேலிய பட்டதாரிகள் தமிழர் சங்கத்தினால் நடாத்தப்பட்டது)
பாடல்மனனப் போட்டி - பாலர் பி Trophy செல்வன் விருத்தன் யோகநாதன் Winners: செல்வன் சஞ்ஜித் சுகிர்தநாதன் செல்வி கெளசல்யா கணேசானந்தம் செல்வன் மத்யு பிலிப் செல்வன் தேவ டிலுஷன் அருளானந்தராஜா
Donated by lanPhilp Family
பாடல்மனனப் போட்டிட ஆரம்ப பிரிவு Trophy
செல்வி மெலனி முரளிதரன் Donated by Arulanandam Sons & Families
வாய்மொழித் தொடர்பாற்றல் -ஆரம்பய் பிரிவு Trophy
செல்வி அபினயா றாஜேந்திரா Winner: Gay 6)65 bbi ST (3600 fooi Donated by Rajendra Family
பாடல்மனனப் போட்டி - கீழ்ப் பிரிவு Trophy
செல்வன் லக்ஷ்மன் சிவகுமார் Winners:
செல்வன் கீதன் யோகநாதன் செல்வி கெளரி சிவசபேசன செல்வி அஷ்லியா அருளானந்தம் செல்வி அஞ்சலா சிரோமினி சுகிர்தநாதன் செல்வி ரதினி யோகானந்தம் செல்வி தனுஷா தவவரன் செல்வி நிவாஷினி சந்திரமோகன்
Donated by Jaccomuttu Joseph & Family
வாய்மொழித் தொடர்பாற்றல்d5pitifo Best Performer
செல்வி சர்மிளா ஜெயமனேகரன் Winner:செல்வி கீர்த்தனா யோகநாதன்
Donated by Tamil Resource Centre- Sydney
எழுத்தறிவுப் போட்டி-மத்திய
1st PRIZE
செல்வன் மாதவன் மணிவண்ணன் 2ND PRIZE
செல்வன் தினேஷ் யோகானந்தம் 3RD PRIZE
செல்வன் பவன் தயாளகிருஷ்ணன் Donated by ASOGT-Executive Committee
வாய்மொழித் தொடர்பாற்றல் - மத்திய பிரிவு 1ST PRIZE
செல்வி சிவ்வோன் பிலிப்
1ST PRIZE
செல்வன் கபிலன் ருக்மணிகாந்தன் 3RD PRIZE
செல்வன் லவன் தயாளகிருஷ்ணன்
விஷேட பரிசுகள் செல்வன் பவித்திரன் மோகனதாஸ்
Donated by ASoGT-Executive Committee
பேச்சுப் போட்டி - மத்திய பிரிவு
1ST PRIZE
செல்வன் கேசவன் அயிலானந்தன்
Donated by Nirojan & Narmatha Thambipillay
பாடல்மனனப் போட்டி - மத்திய பிரிவு
1st PRIZEGS 6io66, L2(36063 d6 (5LDITs
2ND PRIZE செல்வன் கெளதம் பத்மநாதன் Donated by ASoGT-Executive Committee
ஒன்பாதாவது ஆண்டு நிறைவு மலர்
51

Page 28
, ዓl,lp 2003
கலப்பை
---- வாய்மொழித் தொடர்பாற்றல் - மேற் பிரிவு 1ST PRIZE
செல்வன் யாதவன் அயிலானந்தன் 2ND PRIZE
செல்வி மிற்றி- பவித்திரா 3D PRIZE
செல்வி சுபாஷினி ஞானேந்திரன் விஷேட பரிசுகள் செல்வி அஞ்சலா அருளானந்தம்
Donated by Thavavaran & Family
மோகனதாஸ்
வாய்மொழித் தொடர்பாற்றல்
- அதி மேற் lவு
1ST PRIZE
செல்வன் ராகுலன் (ருக்மணிகாந்தன்
2ND PRIZE
செல்வன் கோபிநாத், இராகவன்
Donated by Canberra lainil Association
பரிசு பெற்றோர் பட்டியல் 2009 TAMIL COMPETION 2003 WINNERSLISTSYDNEY f6 2003
பாடல்மனனப் போட்டி - பாலர் பிரிவு பெண்கள் Trophy செல்வி இன்பனா ஜெறோம் எமிலியானஸ் Winners: செல்வி கவிதா போல் றெமீசியன் செல்வி ப்ரணிதா பாலசுப்பிரமணியன் செல்வி சுவாதி திருநாமம் செல்வி ஆருதி சசீந்திரன் செல்வி சமந்தா விக்னேஸ்வரன் செல்வி தர்சனா சிறிதரன் செல்வி ஜனனி ஜெகன்மோகன் செல்வி திரேசி ரைற்ரஸ் செல்வி கெளசிகா ஓம்கரன் செல்வி துளசி ஜெயராமன் செல்வி மகிஷா பூபாலசிங்கம் செல்வி கல்யாணி மணிவண்ணன் செல்வி மதுமிதா சந்திரகாசம்
Donated by Mr. & Mrs. Jehenthiran
பாடல்மனனப் போட்டி - பாலர் பிரிவு - ஆண்கள் Trophy: செல்வன் பிரதீபன் திருநாமம் Winners: செல்வன் ரமணன் ஜெகதீஸ்வரன் செல்வன் பகஜன் நரேந்திரன் செல்வன் அருணன் பிரபாகரன்
செல்வன் சாய்கரன் (சூரியகுமார் செல்வன் சிவசாய் தI/Iஜா செல்வன் மிதுரன் நரேந்திரன் செல்வன் லக்சாந் சிவபாலன் செல்வன் பிரணவன் குமாரலிங்கம் செல்வன் சாரங்கன் Iலகிருஷ்ணன் செல்வன் றுாபன் தேவசீலன் Donated by Mr & Mrs Sivaanandah
பாடல்மனனப் போட்டி - ஆரம்பப் பிரிவு
Trophy: செல்வன் அனோஜன் முரளிதரன் Winners:
செல்வி காயத்திரி இராசகுமார் செல்வன் ரமணன் ரதன் செல்வன் மாறன் ரிஷிகேசன் செல்வன் பிலிப் றொகான் செல்வி ஜெனித்தா சரவணபவான் செல்வி ரிஷானி கெளரிதாசன் செல்வன் சரவணன் சிவகுமார் செல்வி காருண்யா பாஸ்கரன் செல்வன் வேந்தன் பிரபாகரன் செல்வி பிருந்தா தவராசா செல்வன் பாரத் சந்திரகாசம் செல்வி சகானாஜெறோம் எமிலியானஸ் செல்வன் சிவன் பாலகிருஷ்ணன் Donated by Mr & Mrs Pari
52
ஒன்பாதாவது ஆண்டு நிறைவு மலர்

2003 ,gا5{{ہ
கலப்பை
வாய்மொழித் தொடர்பாற்றல் - ஆரம்ப பிரிவு Trophy செல்வன் கல்யாண் ரகுராம் Winners: செல்வன் ஏரன் அருள்ஷான் தேவபாலன்
Donated by Packianathan Sons
பாடல்மனனப் போட்டி - கீழ்ப் பிரிவு
Trophy: செல்வி பானு போல் றெமீசியன்
Winners:
செல்வன் பிரவீன் அருட்சிவா செல்வி பிரியங்கா செந்தில்வாசன் செல்வி ஜனனி குலராஜா செல்வன் விதுரன் ஜெகதீஸ்வரன் செல்வி வருணி சாந்தகுமார் செல்வி பிரியங்கா விஜயகுமார் செல்வி தானியா ஈஸ்வரி தரன் செல்வி நிகிதா தயானந்தன் செல்வி சிந்துஜா பிரபாகரன் செல்வி அபிராமி ராஜ்குமார் செல்வி கீர்த்தனா பூரீரிழீரன் செல்வி அஸ்டலக்ஸ்மி கண்ணன் செல்வி கிரிஸ்ரினா ஸ்ரனிஸ்லாயுஸ் செல்வி சஜிக்கா ஜெயமோகன் செல்வி சுவப்னா இராஜலிங்கம் Donated by Mr & Mrs Balendra & Miss Srithari Sri Dharmanathan
எழுத்தறிவுப் போட்டி - கீழ்ப்பிரிவு Trophy செல்வி கஸ்தூரி முருகவேல் Winners: செல்வன் கிரிசாந் கிரிதரன் செல்வி கீர்திகா ஜெகதீஸ்வரன் செல்வன் ஓங்காரன் சிவநேசன் செல்வி இலட்சுமி லோகதாசன் செல்வி உமை புருஷோத்தமர் செல்வன் மாதுளன் சிவப்பிரகாசம் செல்வன் மாதீபன் சிவப்பிரகாசம் செல்வன் மாதங்கன் சிவப்பிரகாசம் செல்வன் மாறன் புர்ஷோத்தமன்
Donated by Dr. V. Kanagaratnam & Family
வாய்மொழித் தொடர்பாற்றல்
- கீழ்ப் பிரிவு Trophy: செல்வன் ஷேர்வின் ரைற்ரஸ் Winners:
செல்வி ஆரணி சசீந்திரன் செல்வன் பிரசாந் சிவபாலன் செல்வி வர்ஷனி ஜீவகுமார் செல்வன் கிரிஷான் இரவீந்திரதேவன் செல்வன் கோகுலன் இராமச்சந்திரன்
Donated by Mr. & Mrs. Karunakaran
எழுத்தறிவுப் போட்டி - மத்திய լիրի
6의 1ST PRIZE
செல்வி லக்ஷ்னி ரங்கநாதன் 2ND PRIZE
செல்வி மயூரிகா ஜெகதீஸ்வரன் 3RDPRZE
செல்வன் சிவசரன் சூரியகுமார்
Donated by Ms. Kunthavai Chelvanathan
வாய்மொழித் தொடர்பாற்றல் - மத்திய பிரிவு 1ST PRIZE
செல்வி பைரவி பரிமளநாதன் 2ND PRIZE
செல்வி தனுஷியா இரவீந்திரன் 3RD PRIZE
செல்வி தர்ஷTகா 3RD PRIZE
செல்வன் விக்னசாய் தர்மராஜா விஷேட பரிசுகள்
செல்வன் பூரீரி பிரகாஷ் பூரீதரன் Donated by a well-wisher
இராமச்சந்திரன்
பேச்சுப் போட்டி - மத்திய பிரிவு 1ST PRIZE செல்வன் சிவாயன் சரவணபவானந்தன் 2ND PRIZE செல்வி யாதவி லோகதாசன் Donated by Sithamparapillai Family
ஒன்பாதாவது ஆண்டு நிறைவு மலர்
53

Page 29
கலப்பை
பாடல்மனனப் போட்டி - மத்திய பிரிவு
1ST PRIZE செல்வி அபிராமி பரமேஸ்வரன் 2ND PRIZE செல்வி தன்யா வரதராஜ ஐயர் Donated by ce. Anjali Tamil Society of UNSW
எழுத்தறிவுப் போட்டி - மேற் பிரிவு 1ST PRIZE செல்வி அபிராமி புருஷோத்தமர் 2ND PRIZE செல்வன் காங்கேயன் நாகேந்திரன் 3ND PRIzE செல்வி சுஜி சத்தியசீலன் விஷேட பரிசுகள் செல்வன் பூரீராம் ஜெயராமன் செல்வி பிரதீபா சிவப்பிரகாசம் செல்வன் டர்ஷான் வசந்தன் செல்வன் சுஜன் சத்தியசீலன் செல்வன் மிதுனன் ஜெயமோகன் செல்வன் திலக்ஷன் ஜெயமோகன் Donated by Tamil School of Canberra
வாய்மொழித் தொடர்பாற்றல் - மேற்பிரிவு
1ST PRIZE செல்வி நிஷேவிதா பாலசுப்பிரமணியன் 2ND PRIZE செல்வி மாதுமை நிர்மலேந்திரன் 3ND PRZE செல்வி தாட்சா சிவானந்தன்
விஷேட பரிசுகள் செல்வன் தனுஷன் இரவீந்திரன் செல்வன் சுதன் கரன் Donated by Ponnampalam Family
பேச்சுப் போட்டி - மேற் பிரிவு 1STPRZE செல்வன் பூரீஷன் இளங்கோவன் Donated by Satcunarajah Family
பேச்சுப் போட்டி - அதிமேற் பிரிவு 1ST PRIZE செல்வி சுகன்யா பாலசுப்பிரமணியன்
2ND PRIZE செல்வி பூரீர்த்திகா குலசிங்கம் Donated by Saiva Munrum & ASoGT
எழுத்தறிவுப் போட்டி - அதிமேற்பிரிவு 1ST PRIZE செல்வி மாதுமை சக்திவடிவேல் 2ND PRIZE செல்வன் ராஜ்தீபன் ராஜேந்திரன் 3rd PRIZE செல்வி நித்திலா விஜயநாதன் விஷேட பரிசுகள் செல்வன் அல்பிரட் வி செல்லத்துரை
Donated by Elam Tamil Association(Australia)
வாய்மொழித் தொடர்பாற்றல் - அதிமேற்பிரிவு
1ST PRIZE செல்வன் ஜனன் சற்குணநாதன் 2ND PRIZE செல்வி இந்து சற்குணநாதன் 3rd PRZE செல்வன் மயூரன் குணரத்தினம் விஷேட பரிசுகள்
செல்வன் மயூரன் கரன் செல்வன் கிரிஷாம் குலராஜா செல்வன் நிருத்தன் சண்முகநாதன் Donated in memory of Sivam Karunalaya Pandianar
எழுத்தறிவுப் போட்டி - விஷேடபிரிவு 1ST PRIZE
செல்வன் பிரஷாந் குலராஜா
1ST PRIZE செல்வி விதுஷ்யா 3Rd PRIZE செல்வி மேரி சகுந்தலா செல்லத்துரை விஷேட பரிசுகள் செல்வி சுகன்யா பாலசுப்பிரமணியன் செல்வி நிஷேவிதா பாலசுப்பிரமணியன் Donated by Kalappai Magazine
நாகேந்திரன்
56ம் பக்கம் பார்க்க
54
ஒன்பாதாவது ஆண்டு நிறைவு மலர்

கலப்பை 2003 واbږي
(விசேட திறமைத்தேர்வுப் பிரிவினைக்கான எழுத்தறிவுப் போட்டியில் முதல் பரிசு பெற்ற கட்டுரை.)
என்று தணியும் இந்த கதந்திர தாகம்
"என்று தணியும் இந்த சுதந்திர தாகம்
என்று தணியும் எங்கள் அடிமையின் மோகம்" என்று
அன்று முழங்கினான் புரட்சிக்கவி மகாகவி பாரதி. பாரத தேசம் தன் அடிமைவிலங்கை உடைத்தெறிய அன்னை மண்ணின் சுதந்திரத்திற்காய் சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பு பாடப்பட்டது அது. ஆனால் இன்று ஈழத்திருநாடாம் எம் அன்னை மண் அந்நியர் ஆக்கிரமிப்பால் அவதியுற்று, அல்லலுற்று அடிமையாய் அந்நியர் தம் கைவிலங்கினுள் அகப்பட்டுக்கிடக்கிறது. அந்த அடிமை விலங்கு உடைத்து எறியப்பட வேண்டும். சுதந்திரம் என்னும் சூரிய ஒளி சுகம் தரவேண்டும்.
"ஆயிரமாயிரம் ஆண்டுகள் ஆண்ட பரம்பரை மீண்டும் ஆள வேண்டும் என்று புயலாக புரட்சிக்கவிஞன் ஒருவன் பாடினான். சுதந்திர வேட்கை கொண்டு பாடிய அக்கவிஞனின் வரிகள் தமிழனாகப் பிறந்த ஒவ்வொருவரதும் தன்னின உணர்வை, உணர்ச்சிகளைத் தூண்டி விட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. அப்படிப்பட்ட சுதந்திரத்தாகத்துடன் இருக்கூடிய இனம் எம்மினம். சுதந்திரத் திருநாட்டை அடையும் வரை ஆறாது எம் சுதந்திரத் தாகம்.
அன்று சேர, சோழ, பாண்டியர் சேர்ந்து வளர்த்திட்ட இனம் எம்மினம், இன்று இன வெறியர்களின் பிடியில் சிக்கித்தவிக்கிறது. எம் தாய்த்திருநாட்டிலேயே எம்மின மக்கள் ஏதிலிகளாய் எதிரியின் சித்திரவதைகளை அனுபவிக்கின்றார்கள். உண்பதற்கு உணவின்றி, உடுப்பதற்கு உடையின்றி, அரிய அடிப்படைத் தேவைகளே அற்று வெய்யிலிலும், மழையிலும் வெந்து மடிகிறார்கள். எதிரியின் தாக்குதல்களால் தம் சாவு இன்றா? நாளையா? என்று ஏங்கித்தவிக்கும் எம்மக்கள் ஆயிரம். பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த மண்ணை விட்டு, உற்றார், உறவினர் நண்பர்களை விட்டுத் தம் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஆயிரம் ஆயிரம் மைல்கள் தாண்டி வந்த அகதிகளில் நானும் ஒருவன். ஏன் எம்மினம் எதிரியின் கையில் அகப்பட்டு எரிகின்ற நெருப்பில் விழுந்த எறும்புபோல் துடிதுடிக்க வேண்டும்? சிந்தித்துப் பாருங்கள்.
அதனால் தான், தாய்மணிணிற்காய் வீரச்சாவடைந்த வீரபாண்டிய கட்டப்பொம்மனும், வண்டமிழ் வீரம்காத்த வன்னியர்க்கோன் பண்டாரவன்னியன் பரம்பரையில் வந்த வீரத்தமிழ் மறவர்கள் தம் ஊனையும் உயிரையும் உருக்கி தம் தாய் நாட்டை
ஒன்பாதாவது ஆண்டு நிறைவு மலர் 55

Page 30
கலப்பை 2003 .وہانچے
மீட்க தம்முயிர் ஈய்கிறார்கள். பெற்ற அன்னையின் அன்பைத் தவிர்த்து, அரவணைப்பை மறந்து போர்க்களத்தில் பலியாகிறார்கள். அவர்கள் கொண்டுள்ள அந்த சுதந்திரத்தாகம் எம்மினம் சுதந்திரம் அடைந்த பின்புதான் தீரும். சுதந்திரமடைந்த பின்புதான், சூரியன் தன் கதிர்களைப்பரப்பி ஒளி பரப்புவதுபோல் எம்மினமும் ஒளிவீசிப் பிரகாசிக்கும். அன்றுதான் எம் தாகத்திற்கு சுதந்திரம் என்னும் பானம் கிடைக்கும்.
எம் சுதந்திரதாகம் இன்று, நேற்று உருவானதல்ல. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அந்நியர் அன்னை நாட்டை அபகரிக்கமுயன்ற போது பல்லவ, சேர, சோழ, பாண்டியர் கொண்ட தாகம். பின் ஐரோப்பியர் வருகையை எதிர்த்து சங்கிலியன் கொண்ட தாகம். இப்படியாக அன்று தொட்டு சுதந்திர வெறிகொண்டு வாழ்ந்து வரும் இனம் எம்மினம். இன்று ஈழத் திருநாட்டில் ஆக்கிரமிப்பாளரின் பிடியில் அகப்பட்டு எழுந்துள்ள தாகம் இப்போது நாம் கொண்டுள்ள சுதந்திரத்தாகம். இது ஆயிரம் ஆயிரம் மைல்கள் தாண்டி வந்து அவுஸ்திரேலியாவில் வாழ்ந்தபோதும் குறையாது. வற்றாத ஆறுபோல் ஊற்று எடுத்துக் கொண்டே இருக்கும் கடலெனும் சுதந்திரத்தைக் காணும் வரை. ஆகவே ஆவுஸ்திரேலியத் தமிழர்களாகிய நாமும் எம்மாலியன்ற உதவிகளைப் புரிந்து சுதந்திரத்திற்கு வழி காட்ட வேண்டும். எம்மின மக்கள் எதிரியின் பயமின்றி, எதிரிகள் அற்று எழுச்சியுடன் எம் நாட்டில் அடியெடுத்து வைக்கும் அன்றுதான் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கும் அன்றுதான் எம் சுதந்திரத் தாகம் தணியும்.
நன்றி. செந்தூரன் சிதம்பரநாதன்
54ம் பக்கத் தொடர்ச்சி வினா விடை போட்டி
1ST PRIZE 3 rÉlöb LJITUğ5 SANGA BARATHI செல்வி சுகன்யா பாலசுப்பிரமணியன் செல்வி நிஷேவிதா பாலசுப்பிரமணியன்
1st PRIZE - 66T6O)6) AVA செல்வி விதுசா நாகேந்திரன் செல்வன் வைகுந்தன் ராஜ்குமார் செல்வன் காங்கேயன் நாகேந்திரன் செல்வி ஆரணி சோமஸ்கந்தன் செல்வி ஆரணி மகாதேவா செல்வன் சரவணன் சோமஸ்கந்தன் செல்வன் திலக்ஷன் ஜெயமோகன் செல்வன் கஜன் சிவானந்தா Donated by Parameswaran Family
56
ஒன்பாதாவது ஆண்டு நிறைவு மலர்

2003 وہابیہ
கலப்பை
வெளிநாடுகளில் முதியோர்?
அவதானி
மனிதரை மனிதர் ஒதுக் கிவைக்கும் வழக்கம் . சாதிபேதத்தினால் மட்டும்தான் ஏற்பட்டது என்று நினைக்காதீர்கள். கீழைத்தேய, முக்கியமாக ஈழத்தமிழரின், பண்பாட்டில் இப்படியும் ஒரு ஒதுக் குமுறை இருக்கிறது. அது நடைமுறையில் இதுவரைகாலமும் இருந்திராத போதும், இப்போது புலம்பெயர்ந்த அநேக குடும்பங்களில் காணக்கூடிய தாக இருப்பது மனதுக்கு வேதனைதரும் ஒரு அனுபவம். அதுதான் முதியவர்களை மதிக்காமை. பிறந்த மண்ணில் தனியே துன்பப்படாமல் தம்மோடு வந்து சேர்ந்துகொள்ளுமாறு பெற்றோரை வருந்தி அழைத்துக் கொள்ளும் பிள்ளைகள், புலம்பெயர்ந்த நாடுகளில் அவர் களைத் தமி செயற்பாடுகளால் மனம் நோகச்செய்வதை இங்கு குறிப்பிடாமல் இருக்கமுடியாது. தமது விருப்புக்கு அமையவே நடை, உடை, பழக்க வழக்கங்கள், உறவாடல், ஆசாபாசங்கள், அனைத்தையும் பெற்றோர் மீது வலிந்தோ மிரட்டியோ திணிப்பார்கள். வெளியே போய் தாமும், தாம் பெற்ற பிள்ளைகளும் கொண்டுவரும் மேல்நாட்டு உணவுகளைத் தம் பெற்றோருக்கு முன்னால் வைத்து உண்டு மகிழ்வர். நமது மணிணில் தீணடாமைக்குக் காரணமானது சாதீயம், புலம்பெயர்ந்த நாடுகளில் தீணடாமை எண்பது முதியோரை-பெற்றோரை ஒடுக்குவதாகும். இப்படித் தமக்கும் தம் பிள்ளைகளுக்கும் பணிசெய்யும் முதியவர்களை அடக்கி ஒடுக்கும் முறை, கிணற்றிலே தணிணீர்
காணும்வரை ஆழக்கிணற்றைத் தோணடும் "கீழ்சாதியினன் தண்ணி ஊற்றுச் சுரக்கமுன் வெளியே வந்துவிட வேணடும் என்ற சாதீய ஒடுக்குமுறைக்கு ஒப்பானதாகும். பெற்றோருக்கு வேறாக சாப்பாட்டுக் கோப்பை, வேறாக கப், இப்படி, ஒரு சாதி குறைந்தவனை அல்லது வேலைக்காரனை எப்படி நடத்துவார்களோ, அதே கதிதான் இந்தப் பெற்றோருக்கும். ஆனால் அவர்களிடம் நன்றாக வேலைகள் மட்டும்
வாங்கிப்போடுவார்கள். சுகவீனமாகப் படுகி கையில் விழுந்து விட்டாலி மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு,
அவர்களை விசிற் பண்ணி விடுப்புப் பார்ப்பார்கள். அந்தப் பெற்றோர் ஆஸ்பத்திரித் தாதிகளினி தய ைவதி தானி எதிர் பார்த்திருக்கவேண்டும். புண்ணியஞ் செய்திருந்தால் நல்ல தயவுள்ள தாதி வந்து கிடைப்பார். இல்லாவிடில் நரகம்தான்!
ஊரிலிருக்கும்பொழுது பெற்றோருக்கு எத்தனை வயதானாலும், நுண்மையான அறிவு குறைந்திருந்தாலும், பிள்ளைகள் அவர்களைக் கனம் பண்ணியும் அவர்களுக்குப் பணிந்தும் நடப்பார்கள். பெற்றோர் இடும் ஆணைகளை இலகுவில் தட்டமாட்டார்கள். முக்கியமான அலுவல்களைப் பெற்றோரை மேவாமல் செய்யத் துணியமாட்டார்கள். ஆனால், புலம் பெயர்ந்த நாடுகளில் நிலைமை வேறு. அங்குள்ள சட்டங்களின்படி பெற்றோராவது பிள்ளையாவது ஒவ்வொருவருக்கும் தனிச்சுதந்திரம் இருக்கிறது.
64ώ υιόδώ υ/τίτόσο
ஒன்பாதாவது ஆண்டு நிறைவு மலர்
57

Page 31
கலப்பை
2003 وہا,{{-
இறுதி யாத்திரை . . .
இது எம் முகத்தின் முடிவுரை
கனவுகளைT இமைக்குள் கட்டிவைத்த இருட்டிய விழிகளின்
ஊமைக் கதை இது
வெளிச்சப் பார்வையில்
கானல் நீராய் வெள்ளி முளைத்து வெருளியான கதை!
முகாம்களும் முட்கம்பிகளும் அதிகரித்த தேசத்தில் இருப்பிழந்த நிலையில் எம் இனத்தின் இறுதி யாத்திரை
துப்பாக்கி ரவைகள் பட்டாசாய் முழங்க குருதி மழையில் பன்னிர் தெளிக்க குதுாகலமாய் பின வாடையுடன்
பாடையில் எங்கள்
பகற்கனவுச் சுதந்திரம்
கொள்ளிக் குடத்துடன் ள்ம் இன
அரசியல்வாதிகள்!
இது எம் இனத்தின்
இறுதி யாத்திரை?
- அணு அருள் =
58
ஒன்பாதாவது ஆண்டு நிறைவு மலர்

2003 والطبيعي
கலப்பை
உண்மையாக நடந்த பிரளயம்
உலகத்தை உலுப்பிய
பொல்லாத ஒரு நாள் !
egliidaepaulh; 60), Losof sills of GeF6)Lj (The Day The World Exploded)
தமிழாக்கம் :
"$2 y Ts, @y T6).JPr' (Krakatoa) எரிமலைக்குள் 20 மணித்தியாலங்கள் 56 நிமிடங்கள் நடந்த பயங்கரக் கொந்தளிப்புகள் பல்வேறு காட்சிகளைக் கொண்டன:
1883 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 7.00 மணியளவில் ஆரம்பித்த தொடரான எரிமலைக் குழம்புக் குமுறல்கள் பல தீத வெடிச் சதி தங்களுடனி படிப் படியாக உக்கிரமமான சீற்றத்துடன் உயரப் பாயத் தொடங்கின. மாலை நேரத்துக்கு முன்னதாகப் பல தீத மழையுடனி பாரம் குறைந்த சுணி னாம்புக் கற்கள் வீசி எறியப்பட்டு எரிமலைச் சாம்பல் விசிறிக் கொட்டத் தொடங்கின. இரவு 8.00 மணியளவில் எரிமலையின் சக்திப்பிரவாகம் தணிணிர்ப் பிரளயமாக மாறி அகோரமாகப் பாய ஆரம்பித்தது. இரவு நேரமானதும் ஜாவா (Java) 6Ayitið SLOTifJIT (Sumatra) 6Ayitið இடையேயுள்ள கிராக ரோவா தீவினுக்கிடையேயிருக்கும் சுண்டாநீரிணை (Sunda strait) i 35L6V60D6v556ssố
கந்தையா குமாரசாமி
(நல்லைக்குமரனி)
மூர்க்கத்தனம் கட்டுக்கடங்காத அளவிற்குச் சென்றது.
பின்னர் நடுநிசிக்குச் சற்றுமுன்பாகப் பலமான விசைகொண்ட சுழல்காற்றையும் கண்ணுக்குப் புலப்படாத பூமிஅதிர்ச்சியையும் உண்டாக்கிய அந்த எரிமலை வெடிப்பானது மேலெழுநீது வேக வீச்சுடனி 150 கிலோமீட்டர்களுக்கு அப்பால் உள்ள ugi (6 gp6nfuu T ( Batavia) (தற்போதய ஜக்கார்த்தா(Jakarta) வரை எரிமலைக் குழம்புகளைக் கொட்டத் தொடங்கின. இடையறாத அதிர்வுகள் காரணமாகத் துறைமுகத்திலிருந்த நேரம் காட்டும் வான சாஸ்திர மணிக்கூடு செயலிழந்துவிட்டது. கேட்க கீ கூடியதான வெடியோசை களி வெளிவானில் அதிர்வுகளை ஏற்படுத்தின. அந்தச் சமயத்தில் சிங்கப்பூரி (Simgapore) லிருந்தும் பினாங்கி (Penang)லிருந்தும் தொம்தொம் என்ற சப்தங்கள் கேட்டதாகத் தகவல் ஒன்று கிடைத்தது. அநீத எரிமலை வெடிச்சத்தங்களால் பற்றேவியா (Batavia)வில்
· nooNESA
ஒன்பாதாவது ஆண்டு நிறைவு மலர்
59

Page 32
கலப்பை
2003 ,5L2{{ہ
வாழ்ந்த மக்கள் அநேகர் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக இரவில் விழிப் பாகி கொனிங் ஸ் பிளெயினி (Koningsplein) என்னும் இடத்தைச் சுற்றிச் சுற்றி நடக்கத் தொடங்கினார்கள். அதிகாலை 155 மணியளவில் வாயுவிளக்குகள் சடுதியாக ஒளிமங்கத் தொடங்கின. அந்த சமயத்தில் பிரதான வியாபார வீதியான றிTஸ் விஜ்க் (Riswik) கில் உள்ள பல கடைகளின் யன்னல்கள் சடுதியாக விவரிக்கமுடியாத காரணிகளால் துTள்துTளாக நொருங்கி உடைந்துபொயின.
அதிகாலை 4.00 மணியளவில் வெடியோசைச் சத்தத்தின் தன்மையில் மாற்றம் ஏற்பட்டு இடையிடையே மாத்திரம் சப்தங்கள் கேட்டன. எனினும் அவ்வோசைகள் மிகவும் பலத்த ஒலிகளைத் தந்தன. நீராவியால் இயக்கப்படும் இயந்திர வாகனமானது வேகம் கூட்டிச் செல்லும் போது எப்படி உச்ச ஸ்தானியில் ஒசையெழுப்புமோ அதேபோன்று அந்த சப்தங்கள் கேட்டன என்று யாரோ விவரித்தார்கள். ஒரு மணித்தியாலத்தின் பின்பாக நிலக்கரிவாயு உற்பத்தித் தொழிலகத்தில் மிவும் சக்திவாய்ந்த காற்றமுக்க அலை இருப்பது கணிடுபிடிக்கப்பட்டது. அந்தச்
சமிக்ஞையிலிருந்து 150 கிலோமீட்டர் து T ர த’ து க" க பட் பா லரிரு க" கு ம கிராகாரோவா(Krakatoa) எரிமலையின்
இதயத்துள் ஏதொவொரு பயங்கரமீ நடந்து கொணடிருக்கின்றது என்பது தெளிவாகியது. வெடியோசையினி உச்சக் கட்டமாக - அந்த சமயத்தில் அங்கேயிருந்த எவருக்கும் தெரியாமலேயே விரைவில் அநீத அனரதி” தங்கள் சம்பவிக்கவிருந்தன.
அதன் பின்பாக நான்கு பாரிய வெடிச்சத்தங்கள் காத்திருந்தன. காலை 5.30 மணிக்கு முதலாவது பயங்கர வெடியோசை கேட்டது. இந்தத் துரதிர்ஷ்ட மரணகாண்ட சமீப வங்களை விவரித்துச் சொனி ன உயிர்பிழைத்தவர்களின் கூற்றுப்படி காலை 6.15
க்கு சுமாத்திராவின் பட்டணமான கெற்றிம்பாங் (Ketimbang) முற்றாக அழிவுக்குள்ளானது. அத்தோடு நீரிணைக்கு மறுபக்கத்தில் இருந்த ஜாவாவினி உபதுறைமுகமான அன்ஜர்(Anjer) வெள்ளக்காடாகிப் பயங்கர அழிவுக்குள்ளானது. இரண்டாவது பாரிய வெடியோசை காலை 8.44 க்குக் கேட்டது. அதாவது சூரியன் எழுச்சிகண்ட நேரம் முதல் 41 நிமிடங்களுக்குள் அது நடந்தது. அன்று
மேற்கு ஜாவாவிலிருநீது எவரும் அவி விடத்துக்கு வர வேயிலி லை, பறிறேவியாவெங்கும் எரிமலைச்
சாம்பல்தூசிமழை காலை 7.00 மணிக்கு விழத்தொடங்கியது. பின்பு காலை 8.20க்கு மூன்றாவது அதிக பயங்கரமான வெடியோசையினால் பற்றேவியாவில் பல கட்டிடங்கள் நொருங்கும் சப்தங்கள் உணரப்பட்டன. இறுதியாகச் சகல ஒசைகளையும் மேவும் வகையில் பகல் 10.02 மணிக்கு உச்சக்கட்டமாகத் திகிலளிக்கக்கூடிய வெடியோசை கேட்டது.
அந்த நேரத்தில் கிடைக்கப் பெற்ற தகவல்களின் பிரகாரம் 2 நிமிடங்களுக்குப் பின்னர் சுமாத்திராவின் தென்பகுதி வானம் முழுவதும் இருள் மயமாகியது. மிகவும் குறுகிய சுண்டாநீரிணையின் லாம்பொங் குடா (Lampong Bay) i 6L6шењffilib bioflotip மூன்று ஐரோப்பிய கப்பல்களில் ஒன்றான லோடன் (Laudon) பலத்த வெப்ப எரிமலைச் சாம்பல் வீழ்ச்சியால் பலவகைச் சிதைவுகளுக்கு உள்ளாகியது. அக்கப்பலருகே நின்ற மாரீ (Marie) என்னும் கப்பல் 3 உயரமான கடலலைகள் ஒன்றுக்குப் பின்னொன்றாக வந்தன என்றும் ஒரு கட்டத்தில் திகில் தரக்கூடிய வெடியோசைக்குப் பின்பாக வானம் முழுவதும் தீ மயமாகக்காட்சி கொடுத்து ஈரமான காலநிலையைத் தோற்றுவித்ததாகவும் அறிவித்தது. அன்னேர்லி (Annerley) என்னும் இன்னுமொரு கப்பல் தனது கப்பலெங்கும் வெளிச்சமயமாக்கும் பாரம் குறைந்த கற்கள் வானத்திலிருந்து மழையைப்போன்று
ᏲᏛ0
ஒன்பாதாவது ஆண்டு நிறைவு மலர்

2003 ,gا(?>
άδουίσου
பொழிந்ததாகக் குறிப்பிட்டது. கடல் மட்டத்திற்கு மேல் ஓரிடத்தின் உயரத்தை அளக்கவும் கால நிலையை முன்னதாகவே அறியவும் உதவும்கருவி (வாயு பார மானி) நிமிடமொன்றுக்கு நூறில் ஒரு பங்கு மீட்டர் ஏறியிறங்கிக் கொண்டிருந்ததாகவும் அறிவித்தது. பற்றேவியாவில் மீண்டும் வானம் மிகவும் இருள் மயமாகிக் குறிப்பிடத்தக்க வகையில் மிகவும் குளிரான காலநிலையைக் கொடுக் கதீ
தொடங்கியது. பகல் 10.00 மணியிலிருந்து மதியகாலமான 4 மணித்தியாலங்கள் முழுவதும் வெப்பம் 9 பாகையளவுக்குக் குறைய ஆரம்பித்தது.
ரெலொக்
Gu@JITši (Telok Betong) îly 655 @ DĚJS5th பீரங்கி வேட்டுக்கள் தீர்ப்பது போன்ற வெடியோசைகள் கேட்டன. தெனி சுமாத்திராவிலுள்ள வலாக்கே ஹொக் (Vlakke Hoek) என்னுமிடத்தில் இருந்த வெளிச் வீட்டை மின்னல்கள் தாக்கின. அன்ஜர் என்னுமிடத்திற்குச் சிறிது தெற்கேயுள்ள போர்த் QuTssi" (Fourth Point)6Tsiigi Sifasciis வெளிச்ச வீடு பெரியதொரு கடலலையினால் அதி திவாரத்துக்கு மேலாக அள்ளிச் செல்லப்பட்டுக் கிழித்தெறியப்பட்ட அடித்தள
கட்டுமான வேலைகள் மட்டும் பூரணமான அழிவுக்குள்ளானது. அனேகமாகக்
மிஞ்சிப்
காலை 10.00 மணியாகியதும் - 2 நிமிடங்களுக்குப் பின்னர் அச்சமயத்தில் பல்வேறு கருவிகள் கணித்த புள்ளிவிவரங்களின்படி சகல வெடியோசைகளிலும் ஆகக்கூடிய காத்திரமான நான்காவது வெடியோசை கேட்டது. அவிவெடியோசை ஆயிரக் கணக்கான கிலோமீட்டர் தூரத்துக்கப்பாலும் கேட்டதாகவும் இக்கால மானிடர்கள் தங்கள் வாழ்நாளில் அத்தகையதொரு வெடியோசையை இதுவரை கேட்டது கிடையாது என்றுமி சொல்லப்படுகின்றது. வானத்தை நோக்கி 40 கிலோமீட்டர் தூரத்துக்கு அப்பால் முகிலான வாயுமண்டலத்துடன் வெள்ளை நிறச் சூடான சூளைக்கற்கள் சகிதம் நெருப்பும் புகையும் சேர்நீது வெளிக் கிளமீபியதாகச் சொல்லப்படுகின்றது. அவையனைத்தும் ஒரு பெரிய பீரங்கிக்குள்ளிருந்து வானத்தை நோக்கி வெடிக்கவைத்துத் தூர வீசப்பட்டதைப்போன்று தோன்றியதாம்.
ஆங்கிலேய நாட்டினது நோரஹம்காசில் (Norham Castle) 6T6oig Lô 5ú u6Úlsi தலைவன் சாம்சன் (Sampson) என்பவர்
ஒன்பாதாவது ஆண்டு நிறைவு மலர்
61

Page 33
கலப்பை
2003 .وہابیہ
தனது உத்தியோக பூர்வ ஏட்டில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்:
* ஒரு திகில் மிக்க வெடியோசை” . * பயம் தரக்கூடிய ஒரு சப்தம்”
“கடுமையான இருட்டு நேரத்தில் நான் இதை எழுதுகின்றேன். எமி மீது தொடர்ச்சியான வெப்பமான சூளைக்கற்களும் தூசிகளும் மழைபோலப் பொழிகின்றன. இந்த வெடியோசைகளின் மூர்க்கத்தனத்தால் எனது கப்பல் சிப்பந்திகளில் அரைவாசிப் பேருக்கு காதுச் சவ்வுகள் வெடித்துவிட்டன. எனது கடைசி எண்ணங்கள் என் இனிய மனைவியையே நாடு கினிறன. எமது இறுத7 ந767 வந்துவிட்டதாகவே நான் நம்புகின்றேன்.”
அன்ஜரில் வாழிந்துகொணிடு பற்றாவியாவுக்கும் அங்கிருந்து அன்ஜருக்கும் வந்து செல்லும் கப்பல்களுக்கு வழிகாட்டிகளாக இருப்பவர்களுள் ஒருவரான டச்சு(Dutch) நாட்டைச் சேர்ந்த வயதான துறைமுக வழிகாட்டி திங்கட்கிழமையன்று சூரியன் உதயமாவதற்கு சற்று முன்பாகக் கடற்கரையில் நடந்து உலாவிக் கொணடிருக்க கி காணப்பட்டார். அவரால் அன்றிரவு முழுவதும் உறக்கம் கொள்ள முடியவில்லை. இடையிடையே ஆலங்கட்டி மழைபோன்று சூடான சூளைக் கற்கள் வீழ்வதனால் வீட்டுக்குள் நித்திரை கொள்வது ஆபத்தாகவே இருக்கும் என அவர் எண்ணிக்கொண்டார். அக் கற்களில் அனேகமானவை மிகுந்த வெப்பத்துடன் காணப்பட்டதால் அவர் வசிக்கும் வீட்டின் கூரை எரிந்து வீடு சாம்பராகலாம் அல்லது அக்கற்கள் கூரையைப் துளைத்துக்கொணிடு உள்ளே வீழ்ந்து ஆபத்தைக் கொடுக்கலாம் என்று எண்ணினார். உள்ளே என்னென்ன பாதிப்புக்கள் உள்ளனவோ என்று யாருக்குத் தெரியும் என்ற எண்ணங்கள் அவரிடம் காணப்பட்டன. எனவே ஒப்பு
நோக்கில் உள்ளவற்றுள் ஓரளவு பாதுகாப்பான இடமாக அலைவாய்க் கடற்கரையைத் தேர்ந்தெடுத்து நடக்கும் சம்பவங்களை அங்கிருந்தே பார்க்க எண்ணினார்.
அரையிருட்டுக் காரணமாக எதையுமீ நனி கு பார் கிக அவரால் முடியவில்லை. மணிக்கூடுகள் சூரியன் உதிக்கும் நேரம் வந்துவிட்டது என்று காட்டினாலும் எந்தத் திசை நோக்கினாலும் சிறிது மீட்டருக்கப்பால் பார்வையைச் செலுத்த முடியாதவாறு சுழனிறு சுழன்று வீழ்ந்துகொண்டிருக்கும் எரிமலைச் சாம்பல் வெகுவாகப் பார்வையை மங்கச் செய்தது. மேற்குப் பக்கமாக உள்ள கிராகாரொவா எரிமலை கோபத்துடன் முழங்கினாலும் அந்த மலை தென்படவில்லை. ஆயினும் வானத்தில் சிவந்த மஞ்சள் நிறமும் கருமை நிறமும் கலந்த முகில் சாம்பல் படலம் உயரத் தென்பட்டது. தூரத்தில் இருக்கும் ஒரு ஆலையினி உலையொன்றிலிருநீது வெளிக்கிளம்பும் முகில்களையொத்த புகைகளுடாக அதன் அரைவாசிப் பகுதியை ம்ட்டும் பார்ப்பதைப் போன்ற உணர்வைக் கொடுத்தது.
ஆனால் திடீரென அந்தக் காட்சியில் மாற்றம் காணப்பட்டது. சடுதியாக தீ தன்னுடைய வாழ்நாள் முழுவதையும் முன்கூட்டியே எதையும் ஊகித்துச் செயலாற்ற முடியாத பயங்கரமான கடல் நீரிலி கப்பல்களுக்கு வழிட்காட்டிய அந்தவயதான வழிகாட்டிக்கு அங்கு இருக்கக்கூடியதல்லாத ஏதோவொன்று அவர் கணிணுக்குப் புலப்பட்டது. பற்றேவியாவில் இருந்த ஆங்கிலேய குருவான வணக்கத்துக்குரிய (565). A65 (Reverend Phillip Neale) அவர்கள் நடந்த சம்பவங்கள் பற்றி அடுத்த வருடம் ஆரம்பித்த தகவல் சேகரிப்புக்களுக்குத் தனது அநுபவங்களைக் அவர் கூற அவை தொகுக்கப்பட்டன:
62
ஒன்பாதாவது ஆண்டு நிறைவு மலர்

2003 ,g2اج
கலப்பை
“கடலை நோக்கிப் பார்த்த பொழுது அங்கே அரையிருட்டில் கன்னங்கறுத்த ஒரு உருவம் கடற்கரைநோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. ஆரம்பப் பார்வை நிலையில் சிறிய மலைத்தொடர் ஒன்று நீரிலிருந்து வெளிவந்து கொண்டிருப்பதாகத் தோன்றியது. ஆனால் அத்தகைய எதுவும் சுண்டாநீரிணைப் பக்கமாக இல்லை என்பது எனக்கு நன்கு தெரியும். எனவே மீண்டும் அவசர அவசரமாக நான் உற்று அவதானித்துப் பார்த்தபோது அது ஒரு பிரமாண்ட கனதியான கடல்நீரின் எழுச்சிப்பிரவாகத்தை நான் பல அடி உயரதி தில் காண பதாக நாணி நிச்சயப்படுத்திக்கொண்டேன்.”
கிராகாரொவா எரிமலையின் அக்கினிக் குழம்பு கக்குதலாலும் அதன்பின் ஏற்பட்ட தொடர்ச்சியான கடலநீர்ப் பிரளயங்களினாலும் 165 கிராமங்கள் அழிந்தொழிந்தன என்றும் 36417 மக்கள் மாண்டனர் என்றும் எண்ணற்ற மக்கள் காயங்களுக்குள்ளானார்கள் என்றும் அவர்களில் அதிகமானவர்கள் கிராமவாசிகள் என்றும் அவர்களனைவரும் நேரடியாக எரிமலைக் கொந்தளிப்பால் மாளவில்லை என்றும் கடந்த இரவு நடந்த பலத்த வெடியோசை தந்த எரிமலையின் உந்து சக்தியால் பனையளவு உயரம் எழும்பிய கடலலை நீரால் இழுக்கப்பட்டு அலை கீ கழிக்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்டு மாணிடார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.
கிராகாரோவா மிகவும் அழிவுகளைத் தரக்கூடிய உற்பத்தியான கடலலை எழுச்சிப்பிரவாக விடயத்தில் மட்டும் மற்றைய பாரிய எரிமலைச் சீற்றங்களிலும் பார்க்க வித்தியாசமானதொன்றாக அன்றும் இன்றும் கருதப்படுகின்றது. அதனுடைய பரிமாணம் அபூர்வமானதாகக் காணப்பட்டது. கற்பனைக்கெட்டாத அளவு பாரிய உயிர்ச்சேதங்களை அது ஏற்படுத்தியது. ஆனால் அது மக்களை அழித்த விதமே
எரிமலை
கிராகாரோவா வைக்கின்றது.
மற்றைய எரிமலைக்குமுறல்கள் நேரடியாக எதிர்பார்க்கத்தக்கதாக உலகெங்கும் நடந்து முடியும் அனர்த்தங்களாகும். உலகமடங்கிலும் உள்ள மக்கள் தொகையில் பத்துக்கு ஒன்று என்ற விகிதத்தில் தற்சமயம் அக்கினிக் குழம்பு உறங்காமல் அல்லது சடுதியாக வெடிக்கக்கூடிய எரிமலைப் பிராந்தியங்களில் வாழ்கின்றனர் என மதிப்பிடப்பட்டுள்ளது. எரிமலைகள் பற்றிய எண்ணத்தைப்பொறுத்த மட்டில் பிலிப்பைன்ஸ் (Philippines), GoiáGs, T. (Mexico), ஜாவா (Java) போன்ற இடங்களில் வாழும் மக்கள் தற்போது ஆபத்தான சூழலில் வாழ்கின்றார்கள் என்று கொள்ளலாம்.
எரிமலையை வேறுபடுத்தி
இத்தகைய இடங்களில் வாழும் மக்கள் எத்தகையான ஆபத்தான விபத்துக்களுக்கு ஆளாக இருக்கின்றார்கள் அல்லது முற்பட்ட காலங்களில் அவர்களின் முன்னோர் எவ்வாறு பாதிக்கப்பட்டனர் வெளிப்படையானதாகும். அக்கினிக்குழம்பில் தோய்க்கப்பட்டு உறைந்தும் உறையாததுமான பெருங்கூழாங் கற்களும் வெப்பமான சாம்பல்துாளும் வான்நோக்கி விசிறப்பட்டு அவை பூமியை நோக்கி வானிலிருந்து திரும்பப் புவியீர்ப்பினால் விழும்போது அதன் பாதையில் அகப்படும் எதையுமி தரைமட்டமாக்கும் தன்மை கொண்டதாகும். சில சமயம் எண்ணிக்கையில் ஆயிரத்துக்குக் குறைவான சிறு தொகையான மக்களே கிராகாரோவா எரிமலை வெடித்து இவ்வாறான தாக்கத்தினால் மரணமாயிருக்கலாம். அவர்கள் அனைவரும் தென் சுமாத்திராவில் அப்போது காணப்பட்ட எரிமலைக் காற்றுத்திசையில் வாழ்ந்தவர்களாகும். கிரகாரோவா எரிமலை உச்சிப் படுக்கையிலிருந்து பயங்கர வெப்பத்துடன் உதறிய கொதிக்கும் சாம்பல்
என்பவையனைத்தும்
ஒன்பாதாவது ஆண்டு நிறைவு மலர்
63

Page 34
S606
ஆவியானது உயிரோடு
எரித்துக்கொண்டு மேற்குப்பக்கமாக வேகமாகச்
சென்றது.
மகிகளை
மற்ற இடங்களில் நடைபெறும் எரிமலை அனர்த்தங்கள் போன்ற அநுபவ சம்பவங்கள் இங்கே இருக்கவில்லை. மற்றைய எரிமலைக் குமுறல்களில் அக்கினிக் குழம்பு மலையுச்சியிலிருந்து பீறிட்டுப்பாய்ந்து மக்கள் வாழும் இடங்களைச் சுற்றி அவர்களை அகப்படுத்திப் பொசுக்கிக் கொல்லும் தன்மை வாய்ந்தது. எரிமலை வெடிப்புடன் பூகம்பமும் ஏற்பட்டுக் கட்டிடங்கள் அழிவதற்கும் நிலம் இரண்டாகப் பிளந்து அவ்விடத்தில் வாழும் மக்களையும் கட்டிடங்களையும் அந்த பாரிய வெடிப்பு அகழிக்குள் அகப்படுத்தி விழுங்கிவிடும் . அதிவேக பயங்கர விசையுடன் வரும் அக்கினிக்குழம்பும் அதன் வெப்பமான கூழாங்கல் சாம்பலும் உஷ்ணத்தால்
2003 gا5?>
பிரகாசிக்கின்ற எரிமலை வாயுக்களும் ஒன்றுசேர்ந்து கூட்டாகவே மக்களை ஒருசில வினாடி நேரத்துக்குள் பொசுக்கி அழித்துவிடும். உதாரணமாக 1902ம் ஆண்டு மே மாதம் மார்ரினிக் (Martinique) என்ற மாகாணத்தில் Qs áîsi îGugó (Saint Pierre) STsip நகரத்தில் வாழ்ந்த 28000 மக்கள்
முகி கியமெனக் கருதப்பட்ட 39 (5 தேர்தலுக்காகச் சகலரும் அங்கேயே வாழவேணி டுமென அரசாலி பணிக்கப்பட்டிருநீதனர். ஆனால்
gluijsilous LDT, isé (Mount Pelee) எரிமலையிலிருந்து சடுதியாகக் கக்கிய அக்கினிக் குழம்பிற்கு அனைத்து மக்களும் பொசுங்கிப் பலியாகினார்கள்.
தொடரும்
57ம் பக்கத் தொடர்ச்சி
பெற்றோர்தானும் பிள்ளைகளை மனம் நோக ஏசக் கூடாது, கணிடிக்கக் கூடாது. அடித்தால் பொலீஸ்காரர் வீட்டுக்கு வநீது விடுவார். கணவனி மனைவிக்குமிடையில் கூட அதே சட்டங்கள்தான். ஒரு அளவுக்கு வாயால் கண்டிக்கலாம். ஆனால் மனத்தைப் பாதிக்கும்படி ஏசவோ, அடிக்கவோ கூடாது! இந்தச் சட்டங்களில் நன்மை இருக்கிறது: தீமையும் இல்லாமலில்லை. பிள்ளை சுதந்திரமாக வளர்ந்தால் அதன் அறிவு நன்றாக விருத்தியடையும். பெற்றோர் ஏசுவார்களோ என்னும் பயத்துடன் அலுவல்கள் செய்யும் குழந்தையின் மூளை வளர்ச்சி குன்றியிருக்கத்தான் செய்யும். மாறாக, கண்டித்து, புத்திமதி சொல்லி வளர்க்கப்படாத பிள்ளைகள்
முன்னேறாமலும், போக்கிரிகளாகவும் வளருவதையும் காணலாம்.
எங்கள் நாட்டில் வயதானவர்கள் தங்கள் சொந்த வீட்டிலேயே தங்கியிருந்து வாழ்க்கையை முடிப்பர். அதனால் அவர்களுக்கு ஒரு உரிமை, தற்கெளரவம் மனதில் உறைந்திருக்கும். புலம்பெயர்ந்த நாடுகளிலோ அக்கா வைத்துப் பார்க்கட்டும், அண்ணன் பார்த்தாலென்ன என்று பெற்றோரைப் பேணும் பொறுப்பைத் தட்டிக் கழிதீது மற்றவர்கள் மேல் சுமத்திவிடுவார்கள். முதியவர்களுக்கென்று ஒரு தனிப்பட்ட வாழ்க்கை இந்த நாடுகளில் இல்லை. பிள்ளைகளுடனேதான் வாழ்ந்து அவர்களுக்கு அனுசரணையாக நடந்துகொண்டு தமது வாழ்நாளைக் கழிக்கவேண்டும் என்றொரு நியதி.
64
ஒன்பாதாவது ஆண்டு நிறைவு மலர்

g2, 2003 கலப்பைا,{{،
1 PARK VIEWN / ܓܠ
MEDICAL CENTRE T 26/12-16 Toongabbie Road, Toongabbie
> Emergency > X-Ray Services > Women's Health - (Open 7 days next door) > Antenatal Care > ECG > Minor Surgery > Child Health > Pathology blood tests > Immunisation > Worker's compensation > Stress Management > In-house Physiotherapy > Allergy Tests
Dr Jeya Chandran Dr S T Seelan, Dr Shanthini Seelan Dr Anu Singanamala
PhOne : 029636 7757
Opening hours : Mon - Fri...... 8am - 8pm Sat & Sun.... 9am - 4pm Pub. Holidays. 9am - 1 pm
Bulk Billing
Open 7 Days
ஒன்பாதாவது ஆண்டு நிறைவு மலர்

Page 35
W.
: W. = ଅଧ୍ 、 11 ܢܥܘܠ ܠܡ1 ܩܨ