கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கலப்பை 2004.01

Page 1
ဗွို‘် ကွ္ဆန္တိ
 

町3
歴 而
歴 邻 历

Page 2
அரங்கேற்றங்கள், கலைநிகழ்ச்சிகளுக்குரிய Guo Laylandsir (Stage Backdrops & Settings) கோலஅமைப்புக்கள் (Designs of Kams) Ugrassir (Banners), Gaussu Liassir (Devotional Paintings உங்கள் அன்புக்குரியவர்களின் உருவப்படங்கள்(Portraits) இயற்கைக்காட்சிகள் (Natural Seates) முதலிய சகலவிதமான ஓவியவேலைகளுக்கும்
ஓவியக் கலைஞர் ஞானம் (O2)992DD5OBWO412145.047 E-mail': ganam_ars[ptuടne.cാന്നു.
 

ܢܠ / மனித மனத்தை உழுகின்ற
Ehhl)LIöllL உலகத் தமிழர்தம் உணர்வை உயர்த்தி நிற்கும்
O
கலப்பை
அவுஸ்திரேலியப் பட்டதாரிகள் தமிழர் சங்க ஆதரவில் வெளிவரும் காலாண்டுச் சஞ்சிகை
O
g50xú6 ) : Aus. S2,50 ஆண்டுச் சந்தா e cithr(6) : Aus. Sl 0.00 („leasflb IIG): Aus. S20.00 O பிரசுரிக்கப்படாத படைப்புகளைத் திரும்பப் பெற இயலாது. ஆசிரியர் குழுவுடன் தொடர்புகொள்ள. Tele: (02) 47379007
O KALAPPAI P.O. Box 40, Homebush South, NSW2140 AUSTRALIA E-mail: kalappaiyahoo.com
O அட்டைப்படம் வடிவமைப்பு நேசராஜா பாக்கியநாதன்
N ノ
محم CAS GY zen. O * ܢܠ
உள்ளே.
வாசகர் கடிதம் அமுதசுரபி - சிறுகதை 5 உயிர்க்கவிதை' 9 ஆடலுக்கு விடை கொடுக்கும் 11 பெருந்துயர் கேளிர் 15 Miraculous return of a dead person 17 முதுமை 21 கோயில்களும் திருவிழாக்களும் 35 Generation Gap AB அனுமார் வால் 51 திருமணக் கோலங்கள் 55 எழுத்துச் சிறப்பு 70

Page 3
LOVe should be a tree Whose r branches extend into heaven
அன்பென்னும் ஆணிவேர் ஆழம் தெரியாத அளவுக்கு அடியில் இருக்கின்றது. யாருக் கும் தெரியாத இந்த வேர்கள். கோபுரங்கள் உயர்ந்தாலும் அத்தி வாரங்கள் எப்போதும் அடியில் தானே. எம் பெற்றோர்களைப் போல. ஆளுயரம் வளர்ந்து நிற்கும் குழந்தைகளைப் பார்த் துப் பெருமைப் பட்டுக் கொள் ளும் பெற்றோர்கள்.
முதிய சமுதாயம். எம் முன் னோடிச் சமுதாயம். பாரம்பரியப் பழக்கவழக்கங்களுடன் ஊறிப் போன ஒரு சந்ததி. செம் மண்ணின் பூத்துக்குலுங்கிய கனி
oots deep in the earth but whose
Eertrand Russel
வளர்த்தால் வளருமா? இல்லை வாழுமா?
பீடிகையோடு கதைக்கும் பெரியோர்களைப் போல் நாமும் கதைப்பது நல்லதல்ல.
ஆம். அவுஸ்திரேலியாவில் வாழும் முதியோர்களின் வாழ்க்கை எப்படி இருக்கின்றது என்பதைச் சிறிது சிந்தித்துப் பார்க்கலாம் போலத் தோன்றி யது. எமக்கு வரும் ஆக்கங்கள் பல இதைப் பற்றியதாகவே அமைகின்றன. இங்கு வாழும் எம் முதுமையடைந்த பெரி யோர்களின் வாழ்க்கை இனிப் பாக இருக்கிறதா? இல்லையா
கொடுத்த மரங்கள். அந்த என்று வாதிப்பதை விட்டு அப்படி மண்ணின் சுவை, சுற்றாடல் யொரு இனிமையான வாழ்க்கை அறிந்து வளர்ந்த யாக மாற்றிக் வர்கள். அப்பிள் O கொடுப்பதைப் வளரும் இந்த உழவன பற்றி நாம் எல் அவுஸ்திரேலிய லோரும் சிந்தித்
:: உள்ளத்திலிருந்து சிே:
 

86)60)u
இயந்திர வாழ்க்கையில் இவர் களுக்காகவும் ஒடியோடி உழைக் கின்றோமா? எம்பெற்றோரை யும் காப்பாற்றி எம் குழந்தை களையும் முன்னேற்றப் பாடு படுகின்றோமா? நாம் என்ன முதியோரை மதியாதார் சந்த தியா? எனக் கோபங் கொள்ளும் உரிமை தங்கள் குழந்தை களுக்கும் உண்டு என்பதை இந்த முதியோரும் அறிந்திருப்பார்கள் என நம்புகின்றோம்.
நம் வீட்டுத் தோட்டம். அதில் வளர்ந்து முடித்த மரங்கள். செழிப்பாக வளரும் செடிகள். மொட்டாகி நிற்கும் செடிப் பூக்கள். யார் நீரூற்றினால் என்ன? பூப்பூத்தால் சரி?
நர்சரியில் வளரவேண்டிய பூக்கள். நர்சிங்ஹோமில் வளர் வது சாத்தியமா? நீங்கள் பார்த் துக் கொண்டிருக்கின்றீர்கள் என்பதற்காகபூேத்துக் கொண் டிருந்த மரங்கள். வாடி விழுவ தற்காக ஏன் வாடகை கொடுக்க வேண்டும். எத்தனைப் பூக்கள்
பாஷை தெரியாத வண்டுக ளுடன் p&s முடியாமல் தவிக்கின்றன. பூக்கும் மரங்
களின் பூக்கள் விழுந்தாலும் தம் வேரைச் சுற்றித்தானே வீழ்ந்து கிடக்கும். காலடியில் இருப் பார்கள் எனக் கனவு கண்டவர் கவலைப்படுவதில் நியாயம் இல்லையா?
நீங்கள் பூங்காவில் வளர்ந்த பூமரங்கள். நாங்கள் தனிமரமாய் நிற்கும் ஒற்றைப் உறவு மரங்கள் உங்களோடு இருந்ததனால் உதவி இருந்தது.
பனைகள்.
தை 2004
தனிமரங்களுக்குத் தன்னைப் பார்ப்பதே தவிப்பாக இருக் கிறது. வீதியிலே விடுவதைவிட விடுதியில் விடுவது பாவமா? பிள்ளைகள் வாதமும் பிழை யல்லவே.
தர்க்கம் செய்வதால் ஒன்றும் நிகழப் போவதில்லை. சந்ததி களுக்கு இடையில் இருக்கும் இந்த இடைவெளிகள் குறைய வேண்டும். முதியோர்களே உங்கள் காலம் வேறு. இவர்கள் வாழ்க்கை வேறு. பிள்ளைகளை மதிக்கத் தெரியாத, அவர்களுக்கு ஒத்தாசையாக இருக்கத் தெரி யாத பெரியோர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள் என்ப தையும் ஏற்றுக் கொள்ளத்தானே
வேண்டும். தவறுகள் தம்
பிள்ளைகளில்தான் என்பது
கூடத் தவறானதே.
விவாதத்துக்கு நேரமல்ல.
மனங்களில்தான் தேவை மாற்றம். பெற்றோர்களே! நீங்கள் பெருமை பெற்றோர் அநுபவம் பெற்றோர்! அன்பு பெற்றோர் பெற்றுக் கொண்ட தனாற்றான் "பெற் றோர்கள் ஆகினீர்கள். முதியோர் ஆகட்டும், அவர்களின் பிள்ளை களாகட்டும். நீங்கள் எல்லோரும் இன்று பெற்றோர்கள் தானே. பெற்றோரை பேணிக்காப்பது பெருமையன்றோ
சிலைசெதுக்கிய சிற்பியைக் காப்பாற்றத் துடிக்கும் கலை யுள்ளம் கொண்டவர் மனம் போல்தான் நாமும் ஆளாக்கிய பெரியவர்களை ஆதரிக்க நினைக்
கின்றோம்.
ஆர்

Page 4
தலைவர் கேரள மாநிலத் தமிழ்ச் சமுதாய முன்னேற்றச் சங்கம் குமாரனூர் வண்ணமடை,
கேரள, இந்தியா.
பெருமதிப்பிற்குரிய கலப்பை இதழ் நிர்வாகிகட்கு
கலப்பை இதழ் ஒன்று கிடைத்து வாசித்தேன். அவுஸ்திரேலி யாவிலிருந்து தமிழின் மீது இவ்வளவு பற்றுடன் ஒரு பத்திரிகை வருவது மிகவும் மனநிறைவைத் தருகிறது. பெயரோ அருமை. வாழ்க உங்கள் பணி. வாழ்க புகழ். வாழ்த்துக்கள்.
களைகளை உழுகின்ற கலப்பை இதழ்
தாரண வருஷத்தில் தருமம் விளைந்திட கலப்பை இதழ் களைகளை உழட்டும் மனித மனக் களைகளை உழுது பண்படுத்தட்டும் கலப்பை இதழ் உழுத பண்பட்ட இதயத்தில் பாசம் விதைக்கட்டும் நேசம் உரம் இடட்டும் நிம்மதி கொய்யட்டும் வாசிக்கும் வாசகர்கள் வாழ்வினில் வளம் பெறட்டும்
வாழ்த்துக்களுடன் சி.ஏ. செல்வகிருஷ்ணன் (எம்.ஏ.,)
 

于T山川伊曲
| சிறுகதை
அந்தப் பல்கலைக்கழக வளாகத்துள் ஆங்காங்கே இருந்த நிழல் தருக்களும் பூஞ்செடி களும் பூத்துக் குலுங்கி வசந்தத் திற்கு வாழ்த்துக்கூறின. பல வகையான புஷ்பங்கள் மனத் திற்கும் கண்ணுக்கும் மிகவும் ரம்மியமாக இருந்தன. பிரசித்தி பெற்ற கொழும்புத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுப் பொன் விழா வையும் கண்டு இன்றும் சிறிதும் மெருகு குன்றாமல் அனைத்துத் துறைகளிலும் சிறந்த பட்டதாரி களை நாட்டுக்கும் உலகிற்கும் வழங்கி வரும் சிட்னியின் மிகப் பிரபல்யமான அந்தப் பல்கலைக் கழகத்தின் சட்டப் பிரிவின் ஒரு விரிவுரை மண்டபத்திற்குள் விரிவுரையாளர் ஹெலன் மில்லர் கடந்த இரண்டரை மணித்தி யாலங்களாக "ஆஸ்திரேலிய வரு மான வரிச்சட்டத்தில் குடியி ருக்கும் வீடுகளுக்கு வருமான வரி விலக்கு என்ற பகுதியை மாணவர்கட்கு விளக்கி கொண்டி ருந்தார். காலை வகுப்பின் மிகுதி நேரத்தையும் அதற்குத் தான் செலவிடப் போகிறார் என்பது அங்கிருந்த மாணவர் கட்கு நன்கு புரிந்தது. ஹெலனிடம் உளள ஒரு பழககம, ஒன்றையே திரும்
மாணவர்களுக்குச் சலிப்பூட்டுவது. அது எப்பொழு தும் சத்தியா போன்ற கற்பூரப் புத்தியுள்ள மாணவரின்
பொறுமைக்கு மிகப்பெரிய
சோதனையாக அமையும்.

Page 5
கலப்பை
அன்றும் அப்படித்தான். வகுப் பிலிருந்த சத்யாவுக்கு அலுப்பாக இருந்தது. இதற் கிடையில் ஹெலனைப் பல்வேறுகோணங் களில் படம் வரைந்து வகுப் பிற்குள் உலா வர விட்டு, தனது ஒவியத் திறமைக்கான பாராட்டு களைச் சேகரித்துக் கொண்டாள். அத்துடன் அன்றையப் பாடமும் அவளுக்குப் பிடிக்கவில்லை. என்ன இது? ஒவ்வொரு ஆஸ்தி ரேலியப் பிரசையும் சொத்து
ஆதாய வரி செலுத்தாமல் ஒரு
வீடு வைத்திருக்கலாம் என வேலையைச் சுலப மாக்குவதை விட்டுவிட்டு வீட்டில் வசித்த பின் விற்றால் வரிவிலக்கு. வசிக்காமல வாங்கியவுடனோ அல்லது வாடகைக்கு விட்ட பின்னரோ விற்றால் வரி என அனைத்தையும் சிக்கலாக்கி இருக்கின்றார்களே எனச்சலித்துக் கொண்டாள். எப்படா ஹெலன் இதற்கொரு முடிவு கட்டும் எனக் காத்திருந்தாள்.
அவர்களின் குறும்புகள் அனைத்தையும் கண்டும் காணா மல் தான் சொல்ல வேண்டிய அனைத்தையும் கூறி முடித்த ஹெலன் இந்தப் பகுதி பரீட் சைக்குக் கட்டாயம் வரும் என்ற குண்டையும் மிகவும் லாவக மாகத் தூக்கிப் போட்டுவிட்டுப் போனாள். எப்படா வெளியேறு வோம் என ஆயத்தமாக இருந்த மாணவா படடாளம ஒரு நொடியில் வகுப்பை விட்டு வெளியேற அந்த மண்டபத்தில் மேசைக் கதிரைகள் தான் எஞ்சி யிருந்தன. சத்யா எல்லாவற்றை யும் எடுத்துக்கொண்டு வெளியே
தை 2004
போகத் திரும்பியபோது பின் வரிசையில் ஒரு மேசையில் யாரோ இன்னும் கவிழ்ந்து படுத் தி ரு ப் ப  ைத க் க ன் டா ள் . ஹெலனின் தாலாட்டில் யாரோ நல்ல தூக்கம் போலும் எனச் சத்தியாவுக்கு வேடிக்கையாக இருந்தது. பாவம் எழுப்பி விடு வோம் என அங்கே சென்றவள் "ஹலோ என அந்த மேசையின் விளிம்பில் மெதுவாகத் தட்டி னாள். "ம்" எனத் தலையை நிமிர்த்திய பெண்ணைப் பார்த் ததும் சத்யா அதிர்ந்தாள். அது அவளுடன் மேல் வகுப்பில் படித்த ஜஸ்மின். கலைந்த தலையும் கசங்கிய உடையுமாக அவளைப் பார்த்த சத்தியாவுக் குப் பேரதிர்ச்சியாக இருந்தது. அவளிடமிருந்து மதுவாசனை யும் வந்த மாதிரி இருந்தது. தன்னை அறியாமல் சத்யா, ஜஸ் என்ன இது கோலம் என அலறினாள்.
வகுப்பிற்கு வெளியே சத்யா வுக்காகக் காத்திருந்த பூர்ணிமா "பேசாமல் விட்டுவிட்டு வா" எனச் சைகை காட்டினாள். ஆனால் அது சத்யாவின் சுபாவத் திற்கு எதிர்மாறானதே! கஷ்டத் தில் இருப்பவரைத் தவிக்க விட்டு விட்டுப் போனால் அது சத்தியா இல்லையே! அதுவும் ஜஸ்மின் அவளுடன் சிட்னியின் மிகச் சிறந்த தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் படிக்கும் பாட சாலையில் படித்தவள். சிறந்த திறமைசாலி, பெற்றோரின் ஒரே மகள், அன்பான பெற்றோர், அவளைக்கண்ணுக்குள் வைத்துக் காத்தனர். சத்தியாவும் ஜஸ் மினும் பாடசாலையில் நெருங்கிய

கலப்பை
நண்பர்களாகத் தான் இருந்தனர். பல்கலைக் கழகம் சென்ற பின்னர் பாடங்கள் வகுப்புக்கள் மாறப் படிப்படியாகத் தொடர்பும் விட்டுப் போனது. இப்பொழுது காணு மிடத்தில், ஹாய் ஜஸ்! என்பதுடன் சரி. அவளும் ஹாய் சத்தி என்று விட்டுப் போவாள். அதனால் ஜஸ்மினின் கஷ்ட நஷ்டங்கள் வாழ்வில் நடந்த மாற்றங்கள் எதுவும் அவளுக்குத் தெரியாது. ஆனால் இப்படியா போதையில் வந்து வகுப்பில் படுத்திருப்பது? சத்தியா அறிந்த ஜஸ்மின் இப்படிச் செய்ய மாட் டாள். இவள் வாழ்வில் பயங்கர மாக என்னவோ நடந்திருக்க வேண்டும் என நினைத்தவள், என்ன ஜஸ், "நீ எப்பவும் இப்படி இருக்க மாட்டாயே! என்னம்மா நடந்தது" என அவள் கைகளைப் பற்றினாள். அவளை மிகவும் வேதனையுடன் பார்த்த agóul Bait, "a gigs I lost my Parents (நான் என் பெற்றோரை இழந்து விட்டேன்)" என்றாள். அதிர்ந்த சத்தியா Whar! (என்னி) எனக் கத்தினாள். ஜஸ்மின் பதில் கூறுவதற்கு முன்னரே சத்தியாவின் எண்ணங்கள் வாயு வேகத்தில் சென்றன. கிறிஸ்ஸும் நான்சியும் எத்தனை நல்ல மனிதர்கள், இரு வருக்கும் ஒரே நேரத்தில் என்ன நடந்திருக்கும்? ஏதாவது விபத் தாகஇருக்குமோ? இந்த இழப்பை இவள் எப்படித் தாங்குவாள் பாவம் என நினைத்தாள். சத்தி யாவின் கண்களும் கலங்கின. ஜஸ்மினை அன்புடன் அணைத்
தவள் என்ன நடந்தது ஜஸ்"
எனக் கேட்டாள்.
ஜஸ்மின் பதில் சொல்லச்
தை 2004
சிறிது நேரம் எடுத்தது. அது ஒரு யுகமாகச் சத்தியாவுக்குக் கழிந்தது. பின் ஒருவாறு மென்று முழுங்கி "அவர்கள் விவாகரத்தாகிப் பிரிந்து விட்டார்கள்" என்றாள். சத்தி யாவுக்கு அப்பாடா என்றிருந்தது. 'கடவுளே உனக்கு என் நன்றிகள்' எனப்பெருமூச்சு விட்டாள். இவ்வளவு தானா என ஆறுதல் அடைந்தாலும் இதை இவள் மனம் ஏற்காது. அதைச் சுற்றியே ஒரு துயர வலையைப் பின்னி அதற்குள் இருந்து தன்னைத் தானே வருத்துகிறாள். மெதுவாகத்தான் வெளியே கொணர வேணும் எனத் தீர் மானித்தவள், "அப்படியா ஜஸ் எனக்கும் மிகவும் கவலையாக
இருக்கிறது" என்றாள். இதற் கிடையில் வெளியே நின்ற பூர்ணிமாவும், ஸ்டெல்லாவும்
வா! வா! எனச்சைகை காட்டிக் கொண்டிருந்தனர். அவர்களுக்குச் சைகை யாலேயே நீங்கள் போங்கோ எனச் சொன்னவள் "விரிவுரை முடிந்து விட்டது ஜஸ். வா நாங்கள் வெளியே போய்ப் பேசுவோம் என அவள் புத்தகப்பை பேனா பென்சில் அனைத்தையும் ஒவ்வொன்றாக எடுத்தாள். அவளுடன் எழுந்து நடந்த ஜஸ்மினுக்குத் தன்நிலை சத்தியாவுக்குத் தெரிந்துவிட்டதே என வெட்கம் பிடுங்கித்தின்றது. "என்னை மன்னித்து விடு சத்தி எனத் தலையைக் குனிந்து கொண்டாள்.
"அதொன்றும் பரவாயில்லை, நீவா என அழைத்துக் கொண்டு போய் வெளியே தனிமையாக ஓரிடத்தில் வழக்கமாக மாணவர் கள் அமரும் புல்வெளியில்
7

Page 6
கலப்பை
தை 2004
அமர்ந்தாள். சத்தியாவுக்கு அவளைப் பார்க்கத் திருவிழாவில் பெற்றோரை இழந்து தவிக்கும் ஒரு சிறுகுழந்தை போல மிகவும் பரிதாபமாக இருந்தது. ஜஸ் மினின் பெற்றோர் இதுவரை காலமும் ஆதர்சத் தம்பதியராகத் தானே இருந்தனர். சத்தியா அதைப் பார்த்துப் பல தடவைகள் வியந்திருக்கிறாள். இப்பொழுது என்ன நடந்திருக்கும். இந்தப் பிரிவில் இவள் நிலையென்ன என நினைத்தாள்.
சத்தியா யோசிப்பதைக் கவனித்த ஜஸ்மின், "உனக்குத் தொந்தரவு கொடுத்ததற்கு என்னை மன்னித்துவிடு சத்தி. இனி நான் சமாளிப்பேன். நீ வகுப்புக்குப் போ என்றாள். "எனக்கு இனி வகுப்பில்லை, அது சரி ஜஸ் இதெல்லாம் எப்போ நடந்தது? எனக்கொன்றும் தெரியாதே" என்றாள். ஜஸ் மினின் இதழ்கள் துடித்துக் கண்களும் கலங்கின. 'இரண்டு மாதமாகிவிட்டது" என்றாள். "அவர்கள் பிரிந்தால் நீ எங்கே இருக்கிறாய்" எனக் கேட் டாள். "மம்மியுடன் இருக்கிறேன், ஆனால் எனக்குப் பிடிக்கவில்லை சத்தி. அங்கே அந்தப் பீட்டர் அவன் பிள்ளைகள் எல்லோ ருடனும் இருக்க எனக்குப் பிடிக் கவேயில்லை சத்தி என்றாள். அவள் குரல் தழதழத்துக் கன்னங்களில் நீர் கோடிட்டது. அது யார் பீட்டர் எனக் கேட்க வாயெடுத்துப் புரிந்ததால் நிறுத் திக்கொண்டாள். இரண்டு மாதத் திற்குள் அடுத்த திருமணமா? என்னே பரிதாபம் என நினைத் தாள். என்ன சொல்வதெனத் தெரியாமல் தவித்த சத்தியா
"ஏன் ஜஸ், நீ உன் டாடியிடம் போய் இருக்கலாமே?" என்றாள். ஆனால் ஏன் கேட்டேன் என்பது போல, "அங்குமட்டும் என்ன வாழுதாம் அங்கே அந்த மேரி யும் அவள் குரங்குப் பையனும் இருக்கிறார்களே' என்றாள். ஒ இவளுக்கு அந்த வழியும் அடை பட்டு விட்டதா? என வருந்தி யவள் எதைச் சொல்லி இவளைச் சரிப்படுத்துவது எனத் தெரி யாமல் தவித்தாள்.
"அவர்கள் என்னைப் பற்றி நினைக்கவே இல்லை சத்தி. நீ என்ன செய்வாய் என்று கேட்கவே இல்லை. தாங்களே தீர்மானித் துக் குடும்பக் கோர்ட்டில் போய்ச் சொத்துக்களைப் பிரித்தார்கள். அந்தப் பீட்டரும் பிள்ளைகளும் எங்கள் வீட்டுக்கு வர டாடி அந்த மேரி வீட்டுக்குப் போய் விட்டார். நீ எங்கே வேண்டுமா னாலும் இருக்கலாம். படித்து முடியும் வரை மாதம் ஆயிரம்
டாலர்கள் இருவரும் உனது வங்கிக்கணக்கிற்கு அனுப்பு கிறோம் என்றனர்" என அழு
தாள். அதைக் கேட்ட சத்தியா உனக்கு இவ்வளவுமே அதிகம். நீ இருபத்திரண்டு வயதுப் பெண். மேலைத் தேய நாகரீகத்தில் நீ சொந்தக்காலில் நிற்க வேண்டி யவள். உன்னை அவர்கள் பார்க்க வேண்டிய அவசியமே இல்லை. ஆனால் அவர்கள் கருணை கூர்ந்து உனக்கு இருக்க இடமும் செலவுக்குப் பணமும் தருகிறார்கள். நீ மேலும் எதிர் பார்க்கிறாயே! எனத்தனக்குள் நினைத்துக் கொண்டாள்.
2ம் பக்கம் பார்க்க.
8

உயிர்க்கவிதை
எயிட்ஸ் நோயே நீ வாழ்க!
அம்மையே "எயிட்ஸ்" பயங்கர நோயே நீயொரு பேயென நான் அறிவேன் அந்தோ பரிதாபம் . சிறியான் தொடர்பால் ஆபிரிக்காவில் ஆரம்பமானாய்!
ஆண்மோகம் பெண்போகம் காரணமான மேகக்கலப்பினால் பல்கிப்பெருகினாய் ஆனாலும் அதிகம் பலியாவது அப்பாவிக் குழந்தைகள் என்பதே கவலை!
இல்லற ஈரலிப்பு ஒட்டுமொத்தமாக ஆண்மகனிடம் இற்றுப் போய்விட்டால் இல்லாத பொல்லாத எண்ணங்கள் அவன் மனதைப்பற்றிப் படர்ந்துவிட்டால்!
ஈனத் தொழில் புரியும் பரத்தை விலைமாதர் தித்திப்பார்கள் ஈரப்பசை கரையும்வரை தினம் கொள்ளையின்பம் கொடுப்பார்கள்!
உல்லாச மொழி பேசிப் பொல்லாத விழியாலே கற்காத வழிகாட்டி உருக்கத்தோடு துடிதுடித்துப் பத்தினிபோல் நெருக்கமாக நடிப்பார்கள்!
ஊருக்கு உபதேசம் உனக்கல்ல என்ற நிலையில் ஆண்களிருக்கும்வரை ஊடலைத்தினம் நாடும் மிருகங்கள் ஒழியும் வரை உலகம் திருந்தாது!

Page 7
கலப்பை
தை 2004
எச்சில் குணம் படைத்தவரின் கொட்டம் அடங்கும்வரை "நட" வாழ்க. எச்சரிக்கை இது என்ற எண்ணம் மனதில் என்றென்றும் இருக்கட்டும்!
ஏனென்று சொல்கின்றேன் கேள் குரங்கான மனதை மேயவிட்டால் ஏவற்பேய்ச் "சிரங்கு" தொற்றுமையா சொறியச் சொறியச் சுகம்தான்!
ஐயா உன் ஆட்டத்தால் உடலினுள் அரிக்கும் - கடிக்கும் - தடிக்கும் ஐயையோ ஊனமெல்லாம் புரையோடி எரிந்துருகிக் கரையுமையா!
ஒதுங்கி வாழ்ந்தாலும் ஓடாகி
எலும்புக்கூடாகி உள்ளே மறையுமையா ஒழுக்கம் கெட்டதற்குத் தண்டனை இதுவென்று பட்டினத்தார் ஆகிவிடு!
ஒலமெதற்காக? ஒப்பாரியெதற்காக? அலங்கோலமானபின்னர் எங்கு ஒடி ஒளித்தாலும் "எயிட்ஸ்" அம்மை உன்னை ஒரு போதும் விட்டகலாது!
ஒளவை சொன்னாள் ஒருத்தனுக்கு ஒருத்தியென்று - ஏட்டளவில்தானம்மா ஒளடதம் "நீ” யின்றேல் பண்பான வீட்டிற்கும் பகட்டான இருட்டடிப்பு வந்து விடும்!
O
ஆக்கம்
நல்லைக்குமரன்
10

கிண்களில் வழிந்த நீரைத் துடைத்தபடி, பார்வையாளர் சிட்னி சீமோர் அரங்கிலிருந்து வந்து கொண்டிருந்தார்கள். அங்கே ஆரவாரம் இல்லை, பரபரப்பு இல்லை, மெளனமே மொழியாக எல்லோரையும் இணைத்துக் கொண்டிருந்தது. மனம் நிறைவு பெற்ற அமைதி. இந்த "சஹிருதய அனுபவம் நிகழ்ந்தது, சென்ற மாதம் நவம்பர் 22ம் திகதி நர்த்தகி ஆனந்தவல்லி நடன உலகுக்குப் பிரியாவிடை அளித்தபோதுதான். மனம் நிறைந்தால் பேச்சற்றுப் போம் என்ற உண்மை புலனா கியது. ஆனந்தவல்லியின் இந்த நடனம் விமர்சனத்திற்கும் அப் பாற்பட்டது. அது ஓர் அனுபவம். அதன் முழுமையை விமர்சனத் திற்குள் அடக்கிவிட முடியாது. ஆனாலும், ஏதோ ஒரு வகையில் இது கட்டாயம் பதிவு செய்யப் படவேண்டும். இது வரலாற்றுக்
பராசக்தி சுந்தரலிங்கம்
கடமை. ஒரு தலைசிறந்த கலை ஞரின் பிரியா விடை என்பதால் அந்த அனுபவத்தை இரசிகர் களுடன
வேண்டும்.
பகிர்ந்து கொள்ள
11

Page 8
கலப்பை
கடந்த நான்கு தசாப்தங்களாக ஆனந்தவல்லி நடனக் கலையின் பல பரிமாணங்களையும் தொட் டவர். ஈழத்திலும் இந்தியா விலும் ஐரோப்பிய நாடுகள் பல வற்றிலும் தனது நடனத்தால் முத்திரை பதித்தவர். இப்பொழுது அவுஸ்திரேலியாவிலே 'லிங்கா லயம் என்னும் நடனக் கல்லூரி மூலம் இந்தக் கலையை வளர்த்து வருகிறார். அவர் நடனக் கலைக்கு விடை கொடுக்கவில்லை. ஆனால் தானாடலுக்குப் பிரியாவிடை கூறிவிட்டார்.
தனது அனுபவத்திற்கும் அன்றைய சந்தர்ப்பத்திற் கும் பொருத்தமான முறை யிலே நிகழ்ச்சி நிரலைத் திறம் பட அமைத்திருந்தார். விநாயகர் அஞ்சலியுடன் ஆரம்பித்த நடன நிகழ்வு பக்திமயமாகப் பரிணமிக் கத் தொடங்கியது. முழு நிகழ் விலும் பக்தியே அடிநாதமாக விளங்கியது. காமாகூஜி ஸ்வர ஜதியிலிருந்து 'நாதவிந்து களாதி நமோநம" என்று மங்களமாக நிறைவடைந்த திருப்புகழ் வரை இரசிகர்கள் பக்தி மழையில் நனைந்து சிலிர்த்தார்கள்.
சங்கீத மும்மூர்த்திகளில் ஒரு வரான ஷியாமா சாஸ்திரி அவர் களின் காமாகூஜி ஸ்வரஜதி இந் நடன நிகழ்ச்சியின் நடுநாயக மாகத் திகழ்ந்தது. அம்மனின் அழகிய தோற்றம் பார்வையாளர் கண்ணில் விரிந்தது. அந்தக் கருணை பொங்கும் கண்களை யுடைய தெய்வத்தை நேரிலே
தை 2004
காண்பது போலிருந்தது. காமாகூரி அம்மனின் தரிசனம் ஒரு சுகானு பவம். மனதை விட்டகலாத ஆடல் அனுபவம்.
தொடர்ந்து வந்த பதங்களிலே கண்ணனையும் இராமனையும் இலக்குவனையும் சிவனையும் முருகனையும் கண்டு பரவச மடைந்தோம். ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு உணர்வு மேலோங்
கியது. சின்னக்கண்ணனின் லீலைகளையும், யசோதையின் தவிப்பையும், கிருஷ்ணா is
பேகனே என்ற பாடலில் பல தடவைகள் பார்த்து இரசித்திருந் தாலும், ஆனந்த வல்லியின் அன்றைய அற் புத ஆடலும் அபிநயமும் சொல் லில் அடங்காதவை. வெண்ணை உண்ட கண்ணன், மண்ணை உண்ட வாயிலே பிர பஞ்சத்தையே காட்டி அன்னையை அதிசயிக்க வைத்த நிகழ்வு மெய் மறக்க வைத்தது. தாய் சேய் உறவிலே வாத்சல்ய பாவம் பரிபூரணமாய் வியாபித் திருந்தது.
சற்றும் எதிர்பாராத விதமாக சீதையின் தாக்குண்ட இலக்குவன்'யாரென்று இராகவனை நினைத்தீரம்மா என்று அண்ணனின் பெருமை யைச் சித்தரித்த நிகழ்வில் அண்ணன் தம்பி பாசம் மிகுந்தது. மாய மாரீச மானாக மருண்ட பார்வையுடன் அங்கும் இங்கும்
சொல்லம்புகளால்
12

கலப்பை
ஓடியதும் சீதையாக மாறி மானைப் பிடிக்க நாடியதும் நழுவித் திரியும் மானைப்
பிடித்துத் தரும்படி இராமனிடம் வேண்டுவதும் இரசனையூட்டும் காட்சிகள்.
தாமரைக் கண்ணனான இராம பிரானை நினைந்து பக்திப் பரவசத்தில் மெய்மறந்து பாடும் பக்தனை ரா ரா ராஜீவ லோசனா என்னும் பாடலில் அபிநயித்து ஆடியபோது அவருடைய முகத் திலே கொப்பளித்த பாவம் சொற் களை விஞ்சியது. மொழி புரியாத குறையும் மறைந்தது. அபிநய மொழி ஆக்கிர மித்து நின்றது. அந்த ஆடலை வாாததைகளுக குள் அடக்கிவிட முடி Ամո51.
நடனப் பெண் ஒ ரு வ ரி ன் அழகிய அசைவு களையும் தாள லயங்க ளையும் வர்ணிக்கும் ஸ்வாதித் திருநாளின் இந்துஸ்தானி தில்லா னாவிலே ஆனந்தவல்லியின் அழகு, மென்மை, விறுவிறுப்பு விரவி ஆடலில் புலமை தெரிந் தது. நிகழ்ச்சியை வழமையாகத் தில்லானாவோடு நிறைவு செய் யாமல் பக்திபூர்வமாக நிறை வேற்றியது அன்றைய சந்தர்ப் பத்திற்குப் பொருத்தமாக இருந்தது.
குனித்த புருவமும் கொவ் வைச் செவ்வாயின் குமிழ் சிரிப் பும், பனித்த சடையும் எனத் தொடரும் அப்பர் தேவாரத்திற்கு
தை 2004
நடராஜ தத்துவத்தைக் காட்டி, இதனை அனுபவிக்க மனித்தப் பிறவியும் வேண்டும் இம்மாநி லத்தே என்று அபிநயித்து நடராஜ ராகவே மாறினார். தொடர்ந்து முக்தி அளிக்கும் மூலஸ்தான னைப் பக்தி பண்ணாதவன் பாமரன் அல்லவோ என்னும் பாடலுக்கு ஆடி, வீசி நடந்த மெய்யும் பொய்யாகவே ஓசை அடங்கும்போது ஒருவரும் அங் கில்லை, தூசியும் வாராதே, காதற்ற ஊசியும் வாராதோ தவிந் துகளாகி நமோநம என்னும் திருப்புகளுக்கு ஓங்காரத்தைக் காட்டி நிகழ்ச்சியை நிறைவு செய்தபோது அங்கே ஓங்காரம் எழுந்தது, அமைதி சூழ்ந்தது, சாத்வீகம் நிறைந்தது, ஒரு கணப் பொழுது ஆணவம் அடங்கியது, ஆனந்தக் கண்ணிர் பெரு கியது. அது ஒரு பரவச நிலை. ஒரு தலை சிறந்த கலை ஞனுக்கு இதைவிட வேறு. என்ன வேண்டும். அவர் கொடு முடியைத் தொட்டுவிட்டார்.
ஆனந்தவல்லி ஒரு பூரண மான நடனக் கலைஞர். நடனத் துக்கு வேண்டிய ஆற்றல் அழகு, அலங்காரம், மேடைத் திகழ்வு எல்லாமே பொருத்தமாக அமைந் திருந்தன. அவருடைய குரு உடுப்பி லக்ஷமணனின் சிறப்பான நடன அமைப்பு பல இடங் களிலும் தெரிந்தது. நடன அமைப் பாண்மையில் ஆனந்தவல்லி தனது கற்பனைத் திறனையும் காட்டியிருந்தார். சிறுவயதிலே
85-2
13

Page 9
86)6Ou
தை 2004
அவருடைய அரங்கேற்றத்திலே பாடிய அவருடைய தாய் மாம னாரான ஈழநல்லூர் சத்திய லிங்கம் அவர்களே ஆடலுக்குப் பிரியாவிடை கூறும் அரங்கிலும் பாடியது நிகழ்ச்சியின் சிறப்பை மேலும் உயர்த்திவிட்டது. அவ்ரு டைய கனமான குரலிலே பாடல் கள் பாவபூர்வமாக அமைந்தன. சத்தியலிங்கம் அவர்களின் மகள் மோகனா பூரிரேந்திரனும் தனது இனிய குரலாலும் எடுப்பான நட்டு வாங்கத்தாலும் நடனத் திற்கு மெருகேற்றினார்.
புல்லாங்குழல் கலைஞன் ரமணியின் மகன் திரு தியாகரா ஜனின் இனிமையான வயலினி சையும், திரு. சக்திவேலின் மிருதங்க இசையும், திரு கோவிந்த ராஜலு நாயுடுவின் புல்லாங் குழல் இசையும் ஒன்றுடன் ஒன்று இசைந்து பாடலுடனும்
ஆடலுடனும் நிரம்பி வழிந்தன. ஒரு இசைப் பாரம்பரியமே மேடையில் கொலு வீற்றிருந்து அரசோச்சியது என்றால் மிகை யாகாது.
தனது நன்றியுரையில், தன்னை இந்த நிலைக்கு உயர்த்திய தாயாரை நினைந்து ஆனந்த வல்லி கண்கலங்கினார். உலகப் புகழ்பெற்ற இசை நடனக் கலை ஞர்களோடு தனக்கிருந்த தொடர் புகளையும், அந்த உறவுகளின் மூலம், தான் பெற்ற உயர்வு களையும் நன்றியுடன் நினைவு கூர்ந்தார். தனது நடனக் கலைக்கு ஆதரவுதரும் அவுஸ்திரேலிய நாட்டுக்கும் நன்றி கூறினார்.
நடனத்தில் ஊறித் திளைத்து, நடன உலகில் முத்திரை பதித்த ஒருவர், தனது நாற்பது வருட நடன அனுபவத்தை எல்லாம் ஒருங்கு திரட்டி, சாரமாக, ஒரு சில மணி நேரத்திலே வழங்கி சாதனை புரிந்துவிட்டார். ஆனந்த வல்லியின் நடனத்தில் அடக்கம் இருந்தது, பணிவு என்னும் பண்பு தெரிந்தது. அர்ப்பணிப் பால் வந்த அடக்கம், முதிர்ச்சி யால் வந்த பணிவு, இதுவே தான் ஆனந்தவல்லி என்னும் நடனக் கலைஞரின் வெற்றியின் இரகசியம்.
இந்த நடன நிகழ்ச்சி, நீண்ட நாட்களுக்குப் பார்த்தவர்கள் மன தில் நிலைத்து நிற்கும். எமது ஈழத்திருநாடு ஈன்ற நடனக் கலைஞர் ஆனந்தவல்லி மேன் மேலும் தனது கலையைப் பரப்ப உளமார வாழ்த்துவோம்!
O
14
 

JITG If ösãöIJITGfM
O
புலம் பெயர்ந்த மூத்த பிரஜைகள் சிலர் வாழ்க்கையின் பெரும்துயர் கேளிர் O
இவர் துயர்கேட்டுக் கவலை கொண்டநான் கருத்தினில் உதித்தவற்றை வடித்தேன் கவிதையில் பொறுமையுடன் படித்திடுவீர் பதித்திடுவீர் நெஞ்சதனில் இன்று இவர்களுக்கு நாளை உங்களுக்கு விதைப்பதை அறுவடையும் செய்ய வேண்டாமோ? நாட்டுப்பிரச்சனையால் நாடுவிட்டு நாடகன்றார் நாம் பெற்ற மக்கள் பெற்ற பாசம் தலைதூக்க பெற்றோர் நாமும் கூட வந்தோம்
பிள்ளைகளின் அன்பான உபசரிப்பில் சொக்கினோம் பின்னால் வரப் போவதறியாப் பேதைகளtய் நாம் செய்த புண்ணியமே இந்நாடு கிடைத்ததென நாட்டிற்குத் தினமும் நன்றியும் கூறினோம்
பிள்ளைகள் சாப்பிட விதம்விதமாய்ச் சமைத்தோம் பிரியமாய் அவர்கள் ருசித்துச் சாப்பிட பக்கத்தில் நின்று பாசமாய்ப் பரிமாறி ரசித்தோம் சமையல் அறையிலிருந்து கழிவறை மட்டும் கழுவினோம்
பேரப்பிள்ளைகள் கண்போல் காத்து வளர்த்தோம் நாயையும் பூஞ்செடிகளையும் கவனமாய்ப் பார்த்தோம் உழைத்தோம் உழைத்தோம் உற்சாகமாக உறக்கமின்றி உழைத்தோம் இரவு பகலாக
காலச்சக்கரமும் கடுகதியில் ஓடிற்று கஷ்டகாலமும் வெகுவேகமாய் வந்திற்று முதிர்ச்சியும் தளர்ச்சியும் போட்டியிட்டு அனைத்திற்று இளைப்பும் களைப்பும் தவிர்க்க முடியாதொன்றாயிற்று
வேலை செய்யப் பலமுமில்லை வீட்டைக் காக்கத் துணிவுமில்லை குளிரால் நடுங்குவதோ பெரும் பாவம் கூதலுக்கு அணியும் ஆடைகளே மிகப்பாரம்
15

Page 10
கலப்பை
தை 2004
அம்மா அப்பாவென ஆசையாய் அழைத்த மக்கள் அரவமின்றி எம்பக்கம் பாராமலே போகின்றார் மாமாமாமியெனக் குழைந்து வேலை வாங்கிய மருமக்கள் ஏனோதானோவென எடுத்தெறிந்து பேசுகின்றார்
பாட்டன்பாட்டி பக்கம் பார்த்தாலே பாதிமதிப்புக் குறைந்திடுமே
தமிழில் பேசுவதால் நம் தரமும் குறைந்திடுமே பக்குவமாய்ப் பேரமார் போட்டுக்கொண்டனர்
தப்புக்கணக்குகள் அவர்கள் சொல்வதிலும் பிழையில்லை அயல்நாட்டு நாகரீகம் தந்த மோகம் அந்த நாகரீகத்திலும் தப்பில்லை சரியானதைத் தேர்ந்தெடுக்கத் தவறிவிட்ட எம்மக்கள்
அம்மா அப்பாவால் நாம் படும் கரைச்சல் ஆருக்குச் சொல்லி ஆறுவதென்கிறார்கள் அருமையாகப் பெற்று வளர்த்த நம் செல்வங்கள் மூத்த பிரஜைகள் விடுதிக்குச் செல்லலாமே சமூக நலன் உதவி கேட்டும் சமர்ப்பிக்கலாமே விண்ணப்பம்
கோவில் குளமென்றும் சொந்த பந்த வீடென்றும் குதூகலமாய்ச் சுற்றித் திரிந்த சுதந்திரவாழ்வு இப்பிறப்பில் எப்போகிட்டுமென இப்போ ஏங்குகின்றோம் தினம்தினம் இறைவனிடம் இதையே கேட்கின்றோம்
கற்பனையில் சுகம் காணப் புலம் பெயர்ந்தோம் நிஜம் தந்த வேதனைகள் போதுமடா சாமி விண்ணுலக வாழ்வின் பிரஜா உரிமைக்கு விண்ணப்பம் செய்யச் செல்வோமா விரைவாக
திக்குத்திசை தெரியாமல் திகைத்து நின்ற எம்மை அரவணைத்து ஆறுதல் அளித்த புலம் பெயர்ந்த நாடுகளின் அரசாங்கத்திற்குச் செப்புகிறோம் நன்றிகள் கோடிகோடி பலகோடி
பாசமுடன் நாமுமே அன்னையும் பிதாவும் முன்னறிதெய்வம். தந்தை தாய் பேண்.
அறிவிற் சிறந்த ஒளவைப்பிராட்டியர் ஆழ்ந்து சிந்தித்துக் கூறிய பொன்மொழிகள் பொய்யாமோ? புலம் பெயர்ந்த நாடுகளில் பெற்றோரைப் பாசமுடன் பேணிக்காக்கும் பிள்ளைகளையும் மருமக்களையும் பெற்றவர்கள் உண்மையில் நீங்கள் பாக்கியசாலிகளே.
16

missing Tamil person A. Shanmuganathan who could not speak Sinhala language seventeen years ago and have now come back with little knowledge of Tamil Language but he is very fluent in Sinhala Language."
"The Prison Officer called fifteen Tamils and ordered all of them to run for their lives."
Batticaloa is the Worst affected district where many families were victims of enormous maltreatment by Government troops on detainees. The detainees were missing when the freedom struggle of Tamils changed to armed resistance movement. Several hundreds of families exist with soul-searching sorrows not knowing the whereabouts of their missing souls arrested and detained by the Special Security Forces and Sri Lankan Army during 1980's and 1990s. The grieving families are fed up in their efforts to trace the missing ones' whereabouts for several years. A person missing for the last seventeen years have now returned home. It is a miraculous return of a 'dead' person. He is from Siththandy, Batticaloa. His family had done relevant religious rituals for his 'death'
and remembers him as one of their 'dead' ancestors.
He is Mr. Kanagaratnam Shanmuga nathan called as Koddan coming from Navalar Road, Vinayagar Village Situated in Ward 1 of Siththandy, Batti caloa who is now reborn after 17 years.
His sudden arrival had given a pleasant surprise to his family and the villagers. At the same time the families who are still Worried Over the disappearances of their beloved ones are wondering whether their loved ones are still kept in some camps alive. They have started to renew their hopes of finding their loved Ones.
Those who are still desperate about the missing status of their beloved ones are now approaching the humanitarian organizations with the photographs of missing persons requesting their help. They are visiting Shamuganathan’s home to check up the details.
The talks of General Elections and Karuna Affair have now Subsided and it is the bustling talk of all families about the arrival of Shanmuganathan from "death'. Humanitarian organizations are very slow in tackling the issues of "missing
Translation Miraculous return of a
'dead Person
17

Page 11
கலப்பை
persons' and the politicians appears to be not keen over it.
Shanmuganathan had no knowledge of Sinhala language when he was found "missing'. But now he speaks only a little bit of Tamil language but whereas he is very proficient in Sinhala language. This shows his whereabouts during the "missing period of 17 years. He is finding difficult to tell his sorrowful tale to the journalists. He gives corroborating news about his whereabouts. It appears that he had been mentally affected by circumstances such as inhuman Conditions, detaining without any contact with the outside world and departing from his affectionate family for a lengthy time. He has given a clear verbal statement about his 'displacemeniť to a humanitarian association.
"I was working in a Paddy Mill at Nintavur. While I was travelling in a Ceylon Transport Board Bus, the bus stopped in front of the camp at Kaluwanchikudy. I do not remember the exact date. About 15 passengers including me were asked to get down from the Bus. The passengers from Kalmumai, Santhiveli, Kiran and Siththandy were the persons requested to get down from the bus. We were taken into custody and detained at the camp of Kaluwanchikudy Special Task Force. We were severely tortured for ten days. Later one day they dispatched me and the 14 arrested along with 35 others in a Bus that took us towards Amparai. The Bus stopped in a jun
தை 2004
gle area. They told us to get down from the bus and vanish. While We started running, they started to oper fire from behind. There were about 25 deaths. I had a gunshot injury in my leg.
Then they took the injured and proceeded. After about 5 hour running, the Bus reached a Hospital. was given to understand that it is the Colombo General Hospital. was detained at Welikade Jail after 20 days of treatment. They never took me to any Court. I was changed to another place after 1990. I do not remember the date.
There were 15 Tamils at this camp. There were about 300 Sinhala and Muslim teenagers at this place. (The Humanitarian Association has refused to divulge the place where the camp is situated). The camp where we were detained is situated along a jungle. I could hear intermittent running sound of train. The roaring sound of Sea also Could be heard. I can say that this place is situated between Keleniya and Hunupitiya. Huge boundary barbed wire fencing is in place right round the detention camp. There is a vegetable garden in the camp. They engaged us in chopping firewood and other camp duties. They said they are detaining us, as we are 'tigers'. About 500 Special Task Forces reside in that camp.
We were not allowed to have any type of communication with our homes or ourselves. We were not allowed to speak even a single word
1A

86)60)
with truck drivers who bring vegetables. was detained without any Communication from outside World. On 4th of February this year new batches took over the camp. The Officer-in-charge of the prison ordered fifteen Tamils inclusive of myself to escape from the camp. We walked along the jungle for about three hours and reached the main road. From there we reached the Main Bus Stand in Colombo. We did not have money. We pleaded with the driver of the Polonnaruwa bound bus and he brought us up to Polonnaruwa. We started at 9.00 p.m. in the night from Pettah Bus Stand and reached Polonnaruwa On the next morning. I got hold of a vehicle at Polonnaruwa and managed to come to Siththandy. While I was walking along the street, even though saw several familiar faces, they did not identify me.
was given to understand that my wife is dead when I went and inquired in my house. When I was arrested at the age of 20, had a girl child of two years. I was very happy when I learnt that my daughter had grown up, married and become a mother of a child. Even though my daughter failed to identify me, yet she accepted the fact when my relatives and villagers witnessed the truth.
I am unable to work as have Suffered immense mental suffering on account of tortures. Therefore I must be compensated for the damages." This is what Siththandy resident,
தை 2004
Kanagarat- nam Shanmuganathan who had returned 'alive' after an absence of 17 years told friends and reporters.
He elaborated, " I wanted to escape from the Hospital while I was given treatment. But I was chained to the bed and also an armed army man stood as guard with a gun. Later they gave me a gun and recorded my statement that the gun was in my possession. I do not know the political changes that took place after my arrest. I was also not aware of the arrival of Indian Peace Keeping Force in this country. I was neither allowed to listen to radio news nor to study any newspapers. was also compelled to set fire to those who were shot in the camp.
never dreamt that Would be able to get back home. At the start had hope. But it faded gradually and have now returned home unexpectedly. An Army officer's wife helped my release, as have served her for a long period. I do not have any ldentity Card or any other documents. My family is having only my death certificate. They have obtained fifty thousand rupees as compensation after recording that I am not more since I am missing for several years. My wife got married to another person from Batticaloa. am given to understand that she Committed suicide by pouring kerosene to herself and setting fire.
Now I am actually a living Corpse. do not know how I am going to carry on with the rest of my life. Not only
19

Page 12
86)60)
that have ruined my adulthood but am unable to earn for my living on account of the tortures and Several mental stress undergone during the last 17 years." This is the story as told by "Koddan" Shanmuganathan.
Tigers' too came and investigated me when returned home. They suspected me, as I am fluent in Sinhala speech and very weak in Tamil speech. But when I recollected the past about my old friends they accepted that I am one of them.
Nilojini who met her father in a surprising situation similiar to that sequence in a cinematic film said, "I thought that my father died in 1987. My mother also died when I was very young. My grandmother looked after me. I had to stop going to school with 6th standard because of extreme poverty. I am meeting my father who missed me when was just 2 years old. He told his tale of tortures, and mental stress while in detention. feel sorry for his plight."
“Koddan” Shanmuganathan's comeback from the "missing' cannot be taken for granted as a minor incident and forgotten. It is absolutely essential to make further inquiries after getting clear statements from him. This may create a turning point in the issue of the long list of "missing persons'. It is also necessary to trace the whereabouts of the balance 14 persons who escaped with him and obtain their statements. There is Some loose talk and belief that Some of those who went missing in Batticaloa are being employed in the
தை 2004
homes and farms of Army officers. The Batticaloa people are under the impression that if the particular camp mentioned by Shanmuga-nathan is located more shocking news may be obtained. --
The Presidential Commission appointed to investigate the missing persons in the North and Eastern Provinces has recorded 1100 Tamil youths as missing from Batticaloa District between years 1988 to 1996.
Refugees who were publicly marched off from Vantharumoolai, Eastern University, Siththandy
refugee camps have never come back to their homes. i
Several families in the Batticaloa District are struggling with the tormenting agony whether their beloved Ones are alive or not because of slow action by those responsible to trace the “missing persons’. The humanitarian associations say that they are unable to proceed above a stipulated limit.
O in Tamil by : G. NADESAN (Virakesarillustrated Weekly of 2-5-2004, page 9.)
O Translated in English by Kandiah Kumarasany (Nallaikumaran) Melbourne
O
E-Mail : nallaikumaran2002Gyahoo.com.au
O
20

CypģJOODUD
கவிஞர்- வாலி
ഗ്രluതൃ/ álu Uമരിറ്
O பற்றுக் கெல்லாம் புலன்கள் வைக்கும் முற்றுப் புள்ளி முதுமை! உடல் இச்சை விடைபெற இறைவன் காட்டும் பச்சைக் கொடிதான் முதுமை ! கூட்டம் முடித்துக் கும்பல் பாடும் நாட்டுப் பண்போல் முதுமை! - முதல் போட்டு நடத்திய கடையை மூடிப் பூட்டுப் போடுதல் முதுமை!
நரையுந் திரையும் நல்லுடலைத்தான் இரையாய்த் தின்பது முதுமை! - தாயின் கருவறை தோன்றிக் கதிர்முற்றிடவும் அறுவடை செய்வது முதுமை ! நின்றிடு முன்னே நெடுமூச் சுரைக்கும் நன்றியுரைதான் முதுமை! - நீள் நித்திரை கொள்ள உத்தர வானதன் முத்திரை தானே முதுமை! கடவுள் எழுதிய படைப்பு நூலில் கடைசிப் பக்கம் முதுமை! - ஐம் புலன்கள் புரிந்த பிழைகளுக்கெல்லாம் பலன்கள் சொல்வது முதுமை!
O
(திரையிசைக் கவிஞர் வாலி அவர்களின் "அம்மா என்ற கவிதைத் தொகுப்பிலிருந்து இந்தக் கவிதை பிரசுரிக்கப்படுகின்றது.) ஆர்
21

Page 13
கலப்பை
தை 2004
8ம் பக்கத் தொடர்ச்சி.
ஆனால் அவள் வழியில் போய் தான் இதைப் புரிய வைக்கவேண்டுமென நினைத் தவள், "ஏன் ஜஸ் உனக்கு அந்தப் பீட்டரை முதலே தெரியுமா? எனக் கேட்டாள். "தெரியும் சத்தி அவர் மம்மியுடன் தான் வேலை செய்கிறார். அந்த லிசாவும் தோமஸ"ம் கூட வீட்டுக்கு வந்தி ருக்கிறார்கள். அண்மையில் தான் அவர் மனைவி இறந்தார். அதன் பின்தான் மம்மி அதிகமாக அவருடன் போக ஆரம்பித்தார். அதனால்தான் வீட்டில் மம்மி க்கும் டாடிக்கும் பிரச்சனை வந்து பிரிந்தார்கள் என்றாள். "அப்போ மேரி எப்படி உன் அப்பாவுக்கு ரெடிமேட் ஆகக் கிடைத்தாளா? என நினைத்துத் தனக்குள் சிரித்தாள். பின் "அவர் கள் உனக்கு முதலே தெரிந்தவர் கள் தானே, பிறகு ஏன் உனக்குப் பிடிக்காமல போனது ஜஸ்" எனக் கேட்டாள். "நண்பர்களாக வந்து போவது வேறு வீட்டி லேயே இருப்பது வேறு சத்தி, அதுவும் அதுகள் இரண்டும் வாலுகள். வீட்டை எனது அறை யைப் புரட்டி வைக்குங்கள். அதனால் எனது தனிமைக்குப் பங்கம் ஏற்படுகிறது. அத்துடன் எனக்கு என் மம்மியின் கவனமே இல்லாமல் போய் விட்டது தெரி யுமா? மம்மி வேலையிலிருந்து வந்தால் அவர்களைக் கவனிக் கவே நேரம் சரி. என்னைப் பற்றிய எண்ணமே இப்பொழுது
மம்மிக்கு இல்லை தெரியுமா? இப்போதெல்லாம் மம்மி ஜஸ் நீ சாப்பிட்டாயா? தூங்கினாயா? என்று கூடக் கேட்பதில்லை. சில நாட்களில் மம்மியைக் காணவே முடிவதில்லை" என்ற வளின் விழிக்கடைகள் நனைந்தன. சத்தி யாவின் தோளில் தலை சாய்த்து விம்மினாள். அவளைக் கனிவு டன் அணைத்த சத்தியா, இவள் இன்னும் மனத்தளவில் தாயன் புக்கு ஏங்கும் ஒரு குழந்தை தான். கிறிஸ்ஸும் நான்சியும் இவளிடம் இத்தனை காலமும் அவ்வளவு அன்பைப் பொழிந்து விட்டுத் திடீரென இப்படித் தனிமையில் தள்ளியிருக்க வேண்டாம்" என நினைத்தாள்.
சத்தியா மெதுவாக அவளி டம் பேச்சுக் கொடுத்தாள். "ஜஸ் நீ சில உண்மைகளைச் சந்திக்கத் தயாராக இருக்கவேண்டும். அடுத்த வருடம் உனது படிப்பு முடிந் ததும் வேலை கிடைத்து எங்காவது போக வேண்டி வரும். எப் பொழுதும் வீட்டிலேயே மம்மி, டாடி என இருக்க முடியாது. பிறகு நீயும் உன் ஸ்டீவனும் என்ன செய்வீர்களோ! எங்கு போவீர்களோ சிலவேளை லண்டன், அமெரிக்கா என்றுகூடப் போகலாம். அப்போதெல்லாம் உன் பெற்றோர் வரமாட்டார்கள். நீ தனித்து இருக்கப்பழக வேண்டும்" என்றாள். "நீ இல்லாத நேரத்தில் உன் பெற்றோர் தனித்துவிடுவார்கள் இல்லையா? அதனால்
22

கலப்பை
தை 2004
முன்கூட்டியே இப்படி ஒரு ஏற்பாடு செய்திருக்கலாம்' எனச் சொன்னாள். "ஏன் அவர்கள் இருவரும் இல்லையா? ஒரு வருக்கு மற்றவர் துணையாக இருப்பதுதானே!
"எத்தனையோ வயதான தம் பதிகள் அப்படித்தானே இருக் கிறார்கள் எனச் சீறினாள். பின் "பெரிய தத்துவம் எல்லாம் பேசு கின்றாயே! உனக்கு இப்படி ஒரு நிலை வந்தால் நீ என்ன செய்வாய்?" எனக்கேட்டாள். சத்தியாவுக்கு ஒரு நொடி இதயம் அப்படியே ஸ்தம்பித்தது. ஆனால் உடனே சமாளித்தவள் "நிச்சய மாக உன்னைப் போல் இப்படிப் போதையில் படிப்பைக் கெடுத்து என் எதிர்காலத்தையே பாழாக்க மாட்டேன்" எனப் பதிலுக்குச் சீறினாள்.
ஜஸ்மின் வெட்கித் தலை கவிழ்ந்தாள். "தவறு தான் சத்தி. மன்னித்துவிடு" என அவள் கைகளைப் பற்றினாள். "உனக்கு இந்த மதுப்பழக்கமெல்லாம்
தெரியாதே ஜஸ், நீ பார்ட்டி களில் கூட அதன் பக்கம் போவ தில்லையே வெறும் குளிர்
பானம் தானே குடிப்பாய். இதை யெல்லாம் உனக்கு யார் காட்டித் தந்தது?" எனக் கோபமாகக் கேட்டாள். "ஸ்டீவ் தான் தந் தான். நான் அழுது கொண்டே இருந்தேன். இதைச்சாப்பிட்டால் நீ உன்னை மறக்கலாம் எனச் சொல்லித் தந்தான். அது சுகமாக இருந்தது சத்தி. எனக்கு வேறு
வழி தெரியவில்லை" எனக் கண் கலங்கினாள். சத்தியாவுக்கு ஸ்டீவன் மேல் பிலுபிலுவெனக் கோபம் வந்தது. அவனை ஒரு வரி பண்ண வேண்டுமெனத் தீர்மானித்துக் கொண்டாள். ஸ்டீவனும் சத்தியாவுடன் படித்தவன் என்பதால் நட்பு முறையில் அவனைக் கண்டிக்கும் உரிமை அவளுக்கு இருந்தது.
சத்தியாவுக்கு ஜஸ்மினைப் பார்க்கவும் பாவமாக இருந்தது. எல்லாப் பெற்றோரும் தம் பிரச்சனைகளை முன் வைத்துத் தான் தீர்மானம் எடுப்பார்கள். அந்த முடிவு அவர்களுக்கிடையே இருக்கும் குழந்தைகளை எந்த அளவுக்குப் பாதிக்குமென்று ஒரு சிறிதும் சிந்திக்கமாட்டார்கள். அதனால்தான் இந்து சமயம் திருமணத்தை ஒரு பந்தமாக்கிப் பெண்ணுக்குப் பூமாதேவி என்ற பட்டத்தையும் கொடுத்து என்ன அடி, உதை, இடி, மின்னல், குத்து, வெட்டு விழுந்தாலும் அனைத்தையும் தாங்கிக் கொண்டு தன் குழந்தைகளின் நலன்கருதி அந்தக் குடும்பத்துக்குள்ளேயே தாயை இருக்கச் செய்திருக்கிறது. புராண காலத்திலிருந்து அன்னை சீதா தேவி போன்ற எத்தனையோ பெண்கள் எல்லாத் துன்பங் களையும் தாங்கிக் கொண்டு நன் மக்களை உருவாக்கி உலகுக்கு அளித்துள்ளார்கள். ஆனால் மேலைத் தேசத்தவர்களிடம் இத் தகைய கட்டுப்பாடுகள் இப் பொழுது இல்லை. இவர்களுக்குத்
23

Page 14
கலப்பை
திருமணம் என்பது வெறும் ஒப்பந்தம். அதை எந்த நேரமும் முறிக்கலாம். அனைத்தையும் சம பங்காகப் பிரித்துக் கொண்டு நீயும் நானும் நண்பர்கள் எனக் கூறிப்பிரியலாம். சிறு குழந்தைகள் என்றால் குழந்தை யாரிடம் வளர்வது, யார் ஜீவனாம்சம் கட்டுவது போன்ற வினாக்கள் எழும். ஜஸ்மினுக்கு இருபத் திரண்டு வயது, அடுத்த வருடம் ஒரு பட்டதாரி, யாரிலும் சார்ந் திருக்கத் தேவையில்லை. அதனால் அவளைப் பற்றி அவர்கள் கவலைப் படவில்லை. தம் முடிவைத்தாமே செயலாக்கிக் கொண்டார்கள். ஆயினும் திடீ ரென அனாதரவாக விடாமல் மிகவும் தாராளமாக நீ எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம், படித்து முடியும் வரை பணமும் தரலாம் எனச் சொல்லி இருக்கின் றார்கள். இதை இவள் புரிந்து கொள்ள வேணுமே!
இன்றும் சத்தியாவின் அன்னை
விடுதியில் இருக்கும் அவளை அடிக்கடித் தொலைபேசியில் அழைத்து, சாப்பிட்டாயா?
நல்ல சாப்பாடு கிடைத்ததா? எப்படி இருக்கிறாய்? என்று கேட்கத் தவறுவதில்லை. ஜஸ்மினின் பெற்றோரும் அப் படித்தான் இருந்தார்கள். அதைச் சத்தியா பல தடவைகளில் கன் கூடாகக் கண்டிருக்கிறாள். பாட சாலையில் பிக்னிக் போகும் நாட்களில் அவள் அன்னை பஸ் போகும் வரை காத்திருந்து
தை 2004
அழைத்துச் செல்வதையும் பார்த் திருக்கிறாள். அப்படி வளர்ந் தவள் இன்று தனிமை என்ற இருளில் தள்ளப்பட்டதால் அந்தத் தனிமை கொடுத்த ஏக்கத்தைப் போதையின் மூல மாக விரட்ட முயல்கின்றாள். இந்த ஏக்கமே பயமாகி வேறு ஏதாவது முடிவு எடுத்திருந்தால் என்னவாகி இருக்கும்? இப்ப டியே போனால் இவள் எதிர் காலம் என்னவாகுமோ? இந்தப் பழக்கத்திலிருந்து எப்படியாவது மீட்டுப் படிப்பில் கவனம் செலுத்தச் செய்யவேண்டு மெனத் தீர்மானித்தாள்.
சத்தியாவின் பேச்சுத் தந்திரம் எல்லோரும் அறிந்த ஒன்று. அதை மெதுவாகப் பிரயோகிக்க ஆரம்பித்தாள். "ஜஸ் அந்தப் பீட்டரும் குழந்தைகளும் உன்னி டம் எப்படி? அன்பாக இருக்கின் றார்களா? அல்லது நீ வீட்டில் இருப்பதை ஒரு இடைஞ்சலாகக் கருதுகின்றார்களா? எனக் கேட் டாள். "அவர்கள் என்னிடம் அன்பாகத் தான் இருக்கிறார்கள் சத்தி. அந்தக் குழந்தைகளுக்கு என்னுடன் பேசுவதில் விருப் பம். என்னையும் குடும்பத்தில் ஒருவராகத்தான் மதிக்கின்றார்கள். நான் வீட்டுக்குப் போகாவிட்டால் மம்மியுடன் சேர்ந்து அவர்களும் கவலைப்படுவார்கள். இரண் டொரு தடவை நான் இரவில் ஸ்டீவுடன் இருந்தபோது பீட்டர் தான் வந்து வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு போனார் என்றாள்.
24

86)60)u
போதையில் தான் இருந்திருப் பாள் என்பது சத்தியாவுக்குப் புரிந்தது. ஆனாலும் காட்டிக் கொள்ளாமல், "பிறகென்ன ஐஸ் அவர்கள் உன்னுடன் அன்பாகத் தானே இருக்கின்றார்கள். நீ ஏன் வெறுக்கிறாய்? அந்தக் குழந்தை கள் தாயை இழந்தவர்கள். அவர் களுக்குத் தர்யன்பைக் கொடுத்து உன் மம்மி எவ்வளவு பெரிய உதவி செய்கின்றார். தான் பெற்ற பிள்ளை மேல் அன்பு செலுத்து வது சாதாரணம் ஜஸ். ஆனால் பெறாத பிள்ளைகளுக்குத் தாயாகி அன்பு செலுத்துவது மிகவும் உன்னதமானது. அதைச் செய்யும் உன் மம்மிக்கு நீ ஆதரவாக இருக்க வேண்டாமா? தனித்து இருந்த உனக்கு மூன்று சகோதரர்கள் கிடைத்திருக்கிறார் கள். அவர்களை அணைத்து அன்பு செலுத்தி எல்லோருமாகச் சந்தோசமாக இருப்பதைவிட்டு விட்டுப் போதையில் ஆழந்து உன் படிப்பைக் கெடுத்து வாழ் வையும் பாழாக்குகின்றாயே! படித்த உனக்கு இதெல்லாம் புரியவில்லையா ஜஸ்?" அன்பு ஒன்று தான் அள்ள அள்ளக் குறையாதது. மற்றவர்கள் மேல் அன்பு செலுத்தச் செலுத்த உனக்குக் கிடைக்கும் அன்பும் பெருகிக் கொண்டே போகும். அது ஓர் அமுத சுரபி. அத்துடன் நம்மை நன்னிலைப்படுத்திப் பண்புள்ள மனிதராக்கும். நீ அவர்களிடம் அன்பாக நடந்து பார். பின் உன் மனஅமைதி
தை 2004
தானாக உன்னைத் தேடி வந்து விடும். எந்தப் பயமோ ஏக்கமோ! இருக்காது. எந்த நேரமும் உன்னைச் சுற்றி யாராவது இருப் பார்கள்" என்றாள். ஜஸ்மின் எதுவுமே பேசாமல் கேட்டுக் கொண்டிருந்தாள்.
சத்தியா மேலும் தொடர்ந் தாள். "உன் பெற்றோர் பிரிந்தது கவலைக்குரியது தான். ஆனால் மனித வாழ்வில் எதுவும் நிரந்தர மில்லை ஜஸ். அன்பு ஒன்று தான் நிரந்தரமானது என எல்லாச் சமயங்களும் சொல்கின்றன. "அன்பு தான் தெய்வம். எங்கு அன்பெனும் அருவி பாய்கின் றதோ அங்கு அமைதி, மகிழ்ச்சி, ஒற்றுமை, சாந்தி யாவும் நிறைந்து இன்பப் பூஞ்சோலையாகத் திகழும். இதை நாம் உணர்ந்தால் மலை போல் தெரியும் எத்தனையோ பிரச்சனைகள் பணிபோல் மறைந்து விடும். வயதாக உன் பெற்றோரின் நோக்கங்களும் தேவைகளும் மாறுபடலாம், வேறுபட்ட எண்ணங்களுடைய இருவர் ஒன்றாக இருந்து ஒருவரை மற்றவர் வருத்துவதைவிடப் பிரிய நினைத்திருக்கலாம். ஆனால் அவர்கள் எவ்வளவு பெரிய சேவை செய்கின்றார்கள். தாயில்லாத குழந்தைகளுக்கு உன் அன்னை தாயாகி அன்பு காட்டுகின்றார். அதை நீ நிச்சயம்
பாராட்ட வேண்டும் ஜஸ்"
என்றாள்.
ஜஸ்மின் அனைத்தையும்
25

Page 15
கலப்பை
மெளனமாகக் கேட்டுக் கொன் டிருந்தாள். அவள் சிந்திக்கத் தெளிய ஆரம்பித்திருக்கிறாள் என்று கவனித்த சத்தியா சிறிது நேரம் அமைதியாக இருந்தாள். அவளருகே வந்து கைகளைப் பற்றிய ஜஸ்மின், "சத்தி நான் தவறு செய்கின்றேனா?" எனக் கேட்டாள். சத்தியாவுக்கு இது முதல் வெற்றி. இதழ்களில் புன்னகை தவழ இல்லை ஜஸ் நீ குழம்பிப் போயிருக்கிறாய், உன் வாழ்வில் நீ சிறிதும் எதிர்பாராத ஒன்று திடீரென நிகழ்ந்தவுடன் நீ அதிர்ந்து போய் விட்டாய். அவ்வளவு தான் என அ வ  ைள அ  ைண த் து க் கொண்டாள்.
"உண்மை தான் சத்தி, என் பெற்றோர் பிரிந்துவிட்டார்கள் என்ற போது எனக்குள் ஏற்பட்ட அதிர்ச்சியால் நான் என்னை இழந்துவிட்டேன். அது மிகப் பெரிய துக்கமாக எனக்குத் தெரிந்தது. அதனால் வேறு எதையும் என்னால் சிந்திக்க முடியவில்லை" என்றாள்."உனது சோகத்தைப் பார்த்த ஸ்டீவ் உடனடித்தீர்வாக உனக்கு மதுப் பழக்கத்தை ஏற்படுத்தினான். அதில் நீ உன்னை மறந்தாய். யாருமே பின் விளைவுகளை யோசிக்கவில்லை. அப்படித் தானே ஜஸ்" என்றாள். வார்த் தைகள் சூடாக வந்தன. ஜஸ்மின் ஆமாம் எனத் தலை கவிழ்ந்தாள்.
"எங்கே ஸ்டீவ் அவனை நான் காண வேண்டுமே" என்றாள்.
தை 2004
அப்பொழுது அவர்களை நோக்கிக் கையில் ஒரு பார்சலுடன் ஸ்டீவ் வந்து கொண்டிருந்தான். அதைப் பார்த்த சத்தியா "இதோ எங்கள் கதாநாயகன் வந்து விட்டார் என்றாள். அவளது கைகளைப் பற்றிய ஜஸ்மின் "அவனை ஒன்றும் சொல்லாதே சத்தி எல்லாம் என் தவறு தான். நான் அழுது கொண்டிருந்தால் அவன் என்ன செய்வான்'? என்றாள். "அதற்கு இது ஒன்று தானா வழி? வகுப்பில் போதையில் கிடக்கச் செய்வது. ஏன் ஸ்டீவ் உனக்கு வேறு எதுவுமே தெரியவில் லையா? அல்லது வேறு யாரிட மாவது சொல்லக் கூடவா தோன்றவில்லை? எனக் கோப மாகக் கேட்டாள். அது வந்து சத்தி. என ஸ்டீவ் அசடு வழிந்தது. "போனது போகட்டும் ஸ்டீவ். இனி ஜஸ் குடித்தது கண்டால் தண்டனை உனக்குத் தான். நீ என்ன வேணுமா னாலும் செய். ஆனால் அவளுக்கு இதெல்லாம் வேண்டாம்" என்றாள். "பார்த்தாயா என்னை இப்படி அந்நியன் ஆக்குகின் றாயே சத்தி ஜஸ்க்கு முதலே நாங்கள் ஆரம்பப் பாடசாலையி லிருந்து மறந்து விட்டாயா?" எனச் செல்லமாக முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு கேட்டான். சிரித்தவள் "அந்த நினைப்பு இருந்திருந்தால்
நண்பர்கள்
என்னுடன் ஆலோசித்திருப் பாய். ஜஸ்மினின் நிலை பற்றிச் சும்மாவாவது சொல்லியிருக்
26

86)60)
கலாம்தானே! நீ தான் மறந்து விட்டாய் ஸ்டீவ்' என்றாள்.
மன்னித்துக்கொள் சத்தி, இதையெல்லாம் உன்னிடம் கூறலாமோ என்று எனக்குத் தெரியவில்லை. பெற்றவர்கள் பிரிவது, விவாகரத்தாவது எல்லாம் உங்கள் கலாசாரத்தில் இல்லையே! அதனால் உனக்கு இவை புதுமையாக இருக்கும் என நினைத்தேன் என்றான். "விவாகரத்துச் சட்டம் எல்லா நாடுகளிலும் தானே இருக்கிறது. அதெப்படி எனக்கு அது புதுமை யாக இருக்கும் ஸ்டீவ்'? எனக் கேட்டாள். "இருந்தாலும் உங்கள் பண்பாட்டில் இதெல்லாம் விதி விலக்குத்தானே? எங்களிடம் இருப்பது போல இல்லையே? என் பெற்றோர் எனது பன்னி ரண்டாம் வயதிலேயே பிரிந்து விட்டார்கள். நான் அங்குமிங்கு மாக வளர்ந்தேன். ஜஸ்க்கு இப்பொழுது தானே பிரிந்தார் கள். ஜஸ் தாரளமாகத் தன் காலில் நிற்கலாம். ஆனால் பயந்து போய் அழுதால் நான் என்ன செய்ய சத்தி?" என்றான். அவனைப் பார்க்கவும் பரிதாப மாகத் தான் இருந்தது.
"ஸ்டீவ் சொன்ன மாதிரி இது எல்லோர் வாழ்விலும் நடக் கலாம் என உனக்குப் புரிய வில்லை ஜஸ். உன் பெற்றோரின் அன்பு உனக்கு மட்டுமென்றே
நினைத்ததால் தான் உனக்கு இவ்வளவு மனக்கஷ்டமும் வந்தது. பரந்த மனத்துடன்
தை 2004
அனைவரிடமும் அன்பு காட்டப் பழகியிருந்தால் வீட்டுக்கு வந்த இரண்டு குழந்தைகளையும் அன்புடன் அணைத்திருப்பாய். இதனால் வீட்டில் அன்பும் அமைதியும் நிலைத்திருக்கும். நீ ஒன்றும் குழந்தையில்லை ஜஸ். இன்னும் அம்மாவின் மடியில் தலை வைத்துப்படுப்பதற்கு. உனது இந்தச் செய்கைகள் உன் பெற்றோருக்கும் மற்றவர்களுக் கும் எவ்வளவு மனவருத் தத்தைக் கொடுத்திருக்கும். அவர் களுக்கு உன் மேல் அன்பும் பாசமும் இல்லை என்றா நினைத்தாய்? அப்படி இல்லை ஜஸ் அவர்கள் பாதைகள் மாறி யதால் பிரிந்தார்கள். ஆனால் இன்னும் நீ அவர்கள் பெண் தான். அதில் எந்த மாற்றமும் இல்லை. இதை உன் டாடி, மம்மி உன்னிடம் குறைந்தது ஆயிரம் தடவைகளாவது கூறியி ருப்பார்கள் இல்லையா?" எனக் கேட்டாள். கண்ணீருடன் ஆமாம் என ஜஸ்மின் தலையை அசைத் தாள். அது தான் உண்மை. எத்த னையோ குழந்தைகள் பிறந்ததி லிருந்தே பெற்றவர்கள் அன்புக் காக ஏங்குகின்றன. ஒரு நாளைக்கு என்னுடன் வா. அத்தகைய வர்களை உனக்குக் காட்டு கின்றேன். அதைப் பார்த்தால் நாம் எவ்வளவு அதிர்ஷ்ட சாலிகள் என்று உனக்குப் புரியும். நீ உன்னிடம் இருப்பதைப்
பகிர்ந்து கொடுக்க மறுக்கிறாய்.
அதற்காக உன்னையும் கஷ்டப்
27

Page 16
கலப்பை
படுத்தி மற்றவர்களையும் கஷ்டத்திற்கு ஆளாக்குகின்றாய். செய்வது கொஞ்சமும் சரியில்லை ஜஸ். அதுவும் ஒரு படித்த பெண், படித்த பன் பட்ட, ஆன்மீக நம்பிக்கை யுள்ள பெற்றோர்களால் வளர்க் கப்பட்டவள், உன் செய்கை யைப் பார்த்து, என்ன நம் பெண் இவ்வளவு சுயநலவாதி யாக, பண்பற்றவளாக இருக் கிறாளே என்று உன் பெற்றோர் நிச்சயம் வேதனைப்பட்டிருப் பார்கள் என்றாள்.
"அவர்கள் உன்னிடம் சொல் லவோ உன்னைப்பற்றிச் சிந்திக் கவோ இல்லை என்று குறை சொன்னாயே? அவர்கள் உன் மேல்வைத்த நம்பிக்கைதான் அதற்குக் காரணம் ஜஸ். ஒவ் வொரு ஞாயிறும் சர்ச்சுக்குப் போய் அன்பே தெய்வம் என ஜீசஸ் காட்டிய வழியில் உன்னை வளர்த்த உன் பெற்றோர் நம் பெண் நமது முடிவை ஆதரிப் பாள். எல்லோரையும் சமமாகப் பாவித்து அன்பு காட்டுவாள் என நம்பியிருப்பார்கள். உனது இந்தச் செய்கையால் அவர்கள் எவ்வளவு ஏமாற்றம் அடைந் திருப்பார்கள் தெரியுமா? விரைவில் ஒரு வக்கீலாகி மற்றவர்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப் போகும் நீ எப்படிச் சோகம் என்ற ஒரு சிறு வட்டத்துக்குள் உன்னை முடக்கிக் கொண்டாய்? இது பயித்தியக்காரத்தனமாக உனக்குத் தோன்றவில்லையா? நீ
தை 2004
உன் பெற்றோருக்கு மிகப் பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்து விட்டாய் ஜஸ். அவர்களுக்கு மட்டுமல்ல, எனக்கும் பெரிய ஏமாற்றமாக இருக்கிறது. நான் உன்னை எவ்வளவு. உயரத்தில் வைத்திருந்தேன். நீயா இப்படி? என்ற சத்தியாவின் குரல் கலங்கியது.
அதைப் பார்த்த ஜஸ்மினின் கண்கள் நீர் கோத்தன "எல்லாம் தப்பு தான் சத்தி. இந்த இரண்டு மாதமாக நான் நானாக இல்லை. என்னை விட்டு எல்லாமே போன மாதிரி உணர்ந்தேன். யாரோ சிலர் என் வீட்டுக்குள் ஆக்கிரமித்து என்னுடையது எல்லாவற்றையும் அபகரித்த மாதிரியும் நான் தன்னந்த தனியள் ஆண்மாதிரியும் பயமாக இருந்தது. ஆனால் இன்று புரிந்தது. அன்பைக் கொடுத்து அன்பைப் பெற்று அனைவருமே மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று. லிசாவும் தோமசும் என்னிடம் பேச வரும் போதெல்லாம் நான் அவர்களை அவமதித்தேன் அல்லது கண்டும் காணாமல் போனேன். இனி அவர்களுடன் பேச வேண்டும். அவர்கள் பாடங்களில் சந்தேகம் கேட்கும் போதெல்லாம் எனக்கு எதுவும் தெரியாது என்று கோபமாகப் பேசிஅனுப்பினேன்.அப்பொழுது அவர்களின் முகத்தைப் பார்க்கப் பாவமாக இருந்தது. பாவம் அந்தப் பிஞ்சு மனங்கள் எப்படி வாடியிருக்கும்? மம்மி இரண்
28

கலப்பை
டொரு தடவை சொல்லிப் பார்த் தார், நான் என்னால் முடியாது எனக் கண்டிப்பாகக் கூறிவிட் டேன். கடைசியில் ஒரு நாள் "உன் செய்கைகளைப் பார்த்து நான் வெட்கப்படுகிறேன் ஜஸ், உனக்கு இங்கிருக்கப்பிடிக்கா விட்டால் நீ வேறு இடம் பார்க் கலாம்" என்று சொன்னார்கள். யாரையோ கொண்டு வந்து என் வீட்டுக்குள் வைத்துவிட்டு என்னை எப்படிப் சொல்லலாம் என்று பயங்கர மாகக் கோபம் வந்தது. நான் அறியாமையால் முரண்டு பிடித் துக் குடும்ப அமைதியைக் கெடுத்திருக்கின்றேன் இப்பொழுது புரிகிறது. மிக்க நன்றி சத்தி, இது தான் உண்மை நட்பென்பது. நீ என் கண்களைத் திறந்துவிட்டாய். நீ சொன்னது போல இப்பொழுது என் குடும்பம் பெரியது. என்னிடம் அன்பு செலுத்தப்பலர் இருக்கி றார்கள். அன்பைக் கொடுத்து அன்பைப் பெற்றால் அனை வரும் எந்தவிதமான விரோதமும் இல்லாமல் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கலாம். இவ்வளவு நாட் களும் இந்தச் சிறிய உண்மை எனக்குப் புரியவில்லையே என வருந்தினாள்.
"நல்லது ஜஸ் நீ இவ்வளவு விரைவில் புரிந்து கொண்டதைப் பார்க்க எனக்கு மிகவும் பெரு மையாக இருக்கிறது. இனி படிப் பில் கவனம் செலுத்தி நன்கு சித்தியடையப் பார்" என்ற
என்பது
Gurrasë
தை 2004
சத்தியா அங்கு நின்ற ஸ்டீவைப் பார்த்து "அதென்ன பார்சல் ஸ்டீவ்" எனக் கேட்டாள். "அதொன்றுமில்லை சத்தி என ஸ்டீவ் நெளிந்தது. உரிமையுடன் அவன் கையிலிருந்த பார்சலைப் பறித்துப் பிரித்து அதற்குள் இருந்த மதுப்போத்தலைத் திறந்து அங்கிருந்த தண்ணிர்த் தொட்டிக் குள் ஊற்றிக் குழாயைத் திறந்து அதனுடன் ஒடவிட்டாள். ஸ்டீவும் ஜஸ்மினும் புன்முறுவலுடன் அதைப் பார்த்துக் கொண்டு நின்றனர். எப்போதாவது வேடிக் கையாக வேண்டுமானால் மது குடிக்கலாம், மதுவால் சோகம் தீராது. அது வேறு பிரச்சனை களை உருவாக்கித் துன்பத்தை மேலும் அதிகரிக்கச் செய்யும். எல்லாவற்றிற்கும் அன்பு ஒன்று தான் சிறந்த வழி. அனைவரையும் சமமாகப் பாவித்து அன்பு செலுத்திப் பாருங்கள். மன அமைதி தானாகக் கிடைக்கும். அன்பெனும் அருவி எல்லாத் திசைகளிலிருந்தும் சுற்றிப் பாய்ந்து நம்மை ஆனந் தத்தில் ஆழ்த்தும்" என இரு வருக்கும் சத்தியா போதித்தாள். உண்மைதான் என இருவரும் ஒப்புக்கொண்டு சத்தியாவுக்கு நன்றி கூறிப் பிரிந்தனர்.
சத்தியா அறைக்குப் போனதும் பூர்ணிமா பிடித்துக் கொண்டாள். "ஆஹா வந்துவிட்டார் நம்ம ஆபத்பாந்தவன், அனாதரட்ஷகன், சமூக சேவகி. இவர் இல்லா விட்டால் இந்தச் சமுதாயம்
நம்மைச்
29

Page 17
கலப்பை
தை 2004
என்னவாகுமோ? சர்வதேசச் சமூக விருது அன்னை திரேசாவுக்குப் பின் வெகுவிரைவில் உங்களுக்கு அளிக்கப்பட இருக்கிறதாம் எனக் கோபமாகக் கூறினாள். அதைக் கேட்டுப் புன்னதைத்த சத்தியா "ஏன் பூர்ணி எதுவானாலும் நேரடியாகத் திட்டேன். அப்ப தான் உன் சூடு ஆறும்" என்றாள். "எனக்கென்ன பயமா? ஜஸ்மி னுக்கு இப்போ கொஞ்ச கால மாகக் குடிப்பதும் விழுவதும் பழக்கமாகிவிட்டது. அவளைக் காப்பாற்றப் போய் நீ உன் பெயரைக் கெடுத்துக் கொள்ளப் போகிறாயா? எனக் கேட்டாள். "ஜஸ் இப்படியானது எல்லோ ருக்கும் தெரிந்திருக்கிறது, எனக்கு மட்டும்தான் தெரியாமல் போய் விட்டது. நீயாவது சொல்லியிருக்
சேவையாளர்
கலாம் பூர்ணி. அவள் பாவம்?
தெரியுமா? எனக் கேட்டாள். ‘என்ன பாவம்? குடித்துவிட்டுப் போதையில் வகுப்புக்கு வரு கிறாள். நீ பாவம் என்கிறாய். அவளுக்கு அறிவுரை கூறக் கூட்டிக்கொண்டுபோகிறாய். குடிகாரன் பேச்சு விடிந்தால் போச்சு என ஒரு பழமொழி இருக்கிறது. உனக்குத் தெரியுமா? எனக் கேட்டாள்.
சத்தியாவுக்குக் கோபம் தலைக் கேறி அவள் குரல் உயர்ந்தது. "குடிக்கிறாள் என்கிறாயே ஏன் குடித்தாள்? இவ்வளவு நாளும் ஒழுங்காக இருந்தவளுக்கு இப்பொழுது என்ன நடந்த
தென்று நினைக்கத் தோன்ற வில்லை இல்லையா? மதுரா, அபிநயா யாராவது இப்படிச் செய்தாலும் அப்படியே விட்டு விடுவாயா பூர்ணி?" எனக் கேட்டாள். அடி போடி அவர்கள் இப்படியெல்லாம் குடிப்பார் களா? என்ன கஷ்டம் என்றாலும் நாங்கள் அழுது அரற்றி ஆற்றிக் கொள்வோமே அல்லாமல் இவர் களைப் போல் போதையின் பக்கம் போகவே மாட்டோம். இங்கு உள்ளவர்களுக்கு மது, போதை எல்லாம் சர்வசாதாரணம். கஷ்டத்தை எதிர்கொள்ளப் பயந்து தன்னை மறக்கக் குடிப்பவள் புத்தி சொன்னால் கேட்பாளா? அது புறக்குடத்தில் ஊற்றிய நீராகத் தான் இருக்கும். மாலை விரிவுரையையும் வீணாக்கி இவ்வளவு நேரமும் அவளுக்கு என்னவோ அளந்துவிட்டு வந்தி ருக்கிறாய். வேணுமானால் நான் உன்னுடன் பந்தயம் கட்டு கின்றேன். நாளைக்கும் அவள் அதே போதையில் வருவாள் பார் என்றாள்.
அதைக் கேட்க சத்தியாவுக்கு வெறுப்பாக இருந்தது. ஏன் இவள் எல்லோரையும் அப்படி நினைக்கிறாள். மேலைத் தேசத் தவர் குடிகாரர் என இவர்கள் மனத்தில் பதிந்து விட்டது. அது அவர்களின் கலாச்சாரம் . வாழ்க்கையுடன் ஒன்றிவிட்டது எனப் புரிந்துகொள்ளமாட்டார்கள். ஆனால் ஜஸ்மின் மிகவும் திறமைமிக்க ஒரு மாணவி,
30

கலப்பை
திடீரென ஏன் போதைக்கு அடிமையானாள் என யாராவது மனிதாபிமான முறையில்
சிந்தித்து ஆவன செய்திருக்கலாம். எதுவுமே செய்யாமல் எல்லோரும் அவளை வேடிக்கை பார்த்திருக் கிறார்கள். "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" எனச் சிறு வயதில் படித்ததெல்லாம் இவர் களுக்கு மறந்துவிட்டது. ஆஸ்தி ரேலியா, அரசு சம வேலை வாய்ப்பு, 'பல் கலாச்சாரம் 66 எல்லாவற்றையும் ஊக்குவித் தாலும் இவர்கள் இந்த வெள்ளை கறுப்பு, எனது உனது என்பதை விடவே மாட்டார்கள். அனைவ ரையும் ஒரே நோக்குடன் பார்க் காமல் நான், எனது குறுகிய வட்டத்துக்குள் தான் இருப்பார்கள். 'பண்பாடு என்பது பரவலாகும்போது வெறும் தேசிய அடையாளப் புள்ளி நீங்கி மானிடம் என்னும் சர்வ தேச அடையாளப் புள்ளி வந்து விடுகிறது. அனைவரையும் சம மாகப் பார்ப்பதற்கும் மதிப் பதற்கும் மனப்பக்குவமும், மன முதிர்ச்சியும் வரவேணும். அவை இவர்களுக்கு வர இன்னும் நீண்ட காலம் எடுக்கும்" என நினைத்தவள் பேசாமல் எழுந்து போனாள்.
என்ற
அதைக் கவனித்த பூர்ணிமா "உன் நிவாஷ் வந்தான் என்றாள்.
"ஏதாவது சொன்னாரா? எனக்
● AA O ● 8. கேட்டாள். "வரச் சொன்னாயாம்.
வந்து நீ இல்லை என்றதும் நல்ல கோபமாகத் திரும்பிப்
தை 2004
போனான்" என்றாள். திடீரென இதய வீணையின் ஒரு தந்தி அறுந்த மாதிரி மிகப் பெரிய ஏமாற்றம் அவளைக் கவ்வியது. இவள் ஏதாவது சொல்லியிருப் பாள். அதனால் கோபம் வந்தி ருக்கலாம். ஆனால் நிவாஷ"ம் பூர்ணிமா போன்றோரின் கூட்டத்துள் ஒரு வனோ? அதனால்தான் அவனுக்கும் கோபம் வந்ததோ? நிவாஷ் விசயத்தில் தவறு செய்துவிட் டேனோ? எனச் சிறுதயக்கம் எழுந்தது. ஆனால் நிவாஷ் அப்படி இல்லையே என்றும் அவள் இதயத்திலிருந்து ஒரு குரல் கேட்டது.
முகம் கழுவி உடை மாற்றித் தனது வழமையான மாலைப் பிரார்த்தனையை முடித்த சத்தி யாவுக்கு மனம் மிகவும் ஆறு தலாக இருந்தது. ஜஸ்மினுக்காக இறைவனிடம் மனமுருகிப் பிரார்த்தித்தாள். பிரார்த்தனை யை விட வலிமை யானது வேறொன்றுமில்லை என எல்லாச் சமயங்களும் கூறுகின்றன. சத்தி யாவும் அதை முழுமையாக நம்பிப் பல சந்தர்ப்பங்களில் பலனும் பெற்றிருக்கிறாள். பின் தொலைபேசியில் நிவாஷைக் கூப்பிட்டு மன்னிப்புக் கேட்டாள். "அதெல்லாம் பரவாயில்லை, உன்னைப் பார்க்காதது சிறிது ஏமாற்றம் தான், ஆனால் எங்கு போனாய் சத்தி? வழக்கம் போலத் தேவையில்லாத வேலையில் மூக்கை நுழைக்கிறாள் என்று
31

Page 18
கலப்பை
பூர்ணிதான் கோபப்பட்டாள்" என்றான். விபரம் கூறியதும் ஐயோ பாவமே! நான் ஏதாவது செய்யவா டார்லிங் O கேட்டான். அந்த ஆறுதல் வார்த்
665
தையில் இதுவரை இருந்த மனக்,
கலக்கம் மறைந்து மழுக்கென்று சில கண்ணிர்த் துளிகள் கைகளில் தெறித்தன. என் தேர்வு தவறான தல்ல, என் நிவாஷ் என்னைப் புரிந்து கொள்வார், என் தொல்லை களுடன் ஒத்துப் போவார் என மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. "கேட்டதே போதும் நிவாஷ். உன் உதவி தேவைப்பட்டால் நிச்சயம் கேட்கிறேன்" எனக் கூறி மேலும் சிறிது நேரம் பேசி விட்டுத் தொடர்பைத் துண்டித் தாள். இதுவரை இருந்த கனம் இறங்கி இதயம் லேசாகிக் காற்றில் மிதப்பதுபோல் இருந்தது. இதுவரை எங்கோ ஒளிந்திருந்த பசி திடீரென் வயிற்றைக் கிள்ளியது. ஏய் பூர்ணி, வா சாப்பிடுவோம் என அவளை உலுக்கினாள்.
பூர்ணிமா அவளைப் பார்த்து
வேடிக்கையாகச் சிரித்தவள் "மெய்வருத்தம் பாரார் பசி நோக் கார், கண் துஞ்சார். கருமமே
கண்ணாயினார்" என்றவள் பின் "அப்பாடா உனக்குப் பசி கூட வந்ததா சத்தி? மத்தியானம் எடுத்த சாப்பாடு அப்படியே இரு க் கிற தென் றாள்'
"மத்தியானம் சாப்பாடு எடுத் தாயா? மிக்க நன்றி பூர்ணி, இது தான் பூர்ணி. எப்போதும் ஓர்
தை 2004
இளநீர், வெளியே கடுமை, உள்ளே இனிமை" என்றாள். "நீ செய்வது தவறு என எனக்குத் தோன்றியதால் கண்டித்தேன். அதனால் உன்மேல் அன்பில்லை யென்று அர்த்தமா? இவ்வளவு நேரமும் நீ ஜஸ்மினுக்கு அதைத் தானே செய்துவிட்டு வந்தாய். அவள் சிலகாலமாகப் போதையில் திரிவது எல்லோருக்கும் தெரியும். உன்னிடமிருந்து ஒளிந்து திரிந் தாள். இன்று என்னவோ போதை கூடியதால் படுத்திருந்து உன்னிடம் அகப்பட்டாள். யாராவது உன்னை அவளுடன் பார்த்தால் உன் பெயர் கெடும் என்று எனக்குப் பயமாக இருந்தது. பின் பனைமரத்தின் கீழிருந்து பால் குடித்த கதையாகிவிடும். அதுதான் கோபித்தேன் என்றாள். "நான் வேறு பதிலுக்குக் கத்தி விட்டேனா? மன்னித்துக் கொள் பூர்ணி எனச் செல்லமாக அவள் கழுத்தைக் கட்டித்தோளில் முகம்
புதைத்தாள். "இதற்கொன்றும் குறைச்சலில்லை, பாயவேண் டியது பின் பாகாக உருகி
மன்னிப்புக் கேட்க வேண்டியது எனக்கூறித் தன்னை விடுவித்த பூர்ணிமா சத்தியாவுடன் உணவ ருந்தச் சென்றாள்.
அதன்பின் சத்தியா, ஜஸ் மினை அடிக்கடி கவனித்தாள். இருவரும் படிக்கும் பாட வகுப்புகளுக்கு அவள் வருகி றாளா? எனப் பார்த்தாள். மற்றைய நாட்களிலும் தொலை பேசி, இ-மெயில் மூலமாவது
2う

கலப்பை
தை 2004
எப்படி இருக்கிறாய் எனக் கேட்கத் தவறுவதில்லை. அவள் மகிழ்ச்சியாக இருப்பது தெரிந்தது. இடையில் ஒரு நாள் சத்தியா வைக் கண்ட நான்சி 'உன்னால் தான் இப்பொழுது என் குடும் பத்தில் அமைதி நிலவுகிறது. உனக்கு என் நன்றிகள் சத்தி எனச் சொன்னார். வருட இறுதியில் சத்தியாவிடம் வந்த ஜஸ்மின் உனக்கு நான் எப்படி நன்றி சொல்வது சத்தி. அதற்கு என்னிடம் வார்த்தைகளே இல்லை. என் வாழ்க்கையை மீட்டுத் தந்தவள் நீ, அன்பின் மகிமையை எனக்குப் புரிய வைத்தவள் நீ. நான், மம்மி, பீட்டர், குழந்தைகள் எல்லோரும் இந்த விடுதலையில் தெற்கு ஆஸ்திரேலியாவுக்கு ஒரு சுற்றுலா போகின்றோம். வரத் தாமதமானாலும் இப்பொழுதே எனக்கு எங்கள் புது வருட வாழ்த்துக்கள். மம்மியும் சொல்லச் சொன்னார் என்றாள். என்னைப் பார்க்க எனக்குப் பெருமை யாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது ஜஸ். உன் பிரயாணம் மிகவும் ரம்மியமானதாக அமையட்டும் என வாழ்த்தி அனுப்பினாள்.
அன்பை அன்பினால் தான் அடையமுடியும். வாழ்க்கை அன்புமயமானால் அதன் மூலம் பல சாதனைகள் புரிய முடியும் என்பதை அடுத்த வருடம் ஜஸ்மின் மிகச்சிறப்பாகச் சித்தி யடைந்து நிரூபித்தாள். அவளிடம் சத்தியாதுய அன்பில் சுயநலமோ
உள்நோக்கமோ இருக்காது. அத்தகைய அன்புதான் தெய்வீக மானது. அதை நீ உன் குடும் பத்தினரிடம் கண்டிருப்பாய் என நினைக்கிறேன்" என்றாள். "உண்மைதான் சத்தி, பட்டம் பெறுவதற்குப் பரிசாக மம்மி, டாடி, பீட்டர், மேரி எல்லோரு மாகப் பணம் போட்டு எனக்கு ஒரு புதுக்கார் வாங்கித் தந்துள் ளார்கள். உனக்குத் தெரியுமா லிசாக்குட்டி கூடத் தன் கைசெலவுப் பணத்தில் நூறு டாலர்கள் சேர்த்துக் கொடுத் ததாம்" என நெகிழ்ச்சியுடன் கூறினாள்.
அன்பின் தன்மையால் அருள் சுரக் கும் , அ ன் பிலிருந்து கருணையும் தயையும் பிறக்கும். அதன்மூலம் பிறருக்கு உதவும் தயாளகுணம் உண்டாகும் எனப் பத்திரிகையில் வந்த புத்தாண்டுச் செய்தியைப் படித்து வியந்த பூர்ணிமா "இதைத் தானே சத்தி அடிக்கடி சொல்வாள். அவள் காட்டிய அந்த அன்புவழி தானே ஜஸ்மினின் வாழ்வில் ஒளியேற் றியது. நான்கூட அவளை அன்று கோபித்தேனே என வருந்தினாள். "உன்னால் எப்படிச் சத்தி இந்த வயதில் ஒரு பூரண ஞானி போல அனைவரையும் எந்த வேறுபாடுமின்றிச் சமமாகப் பாவித்து அன்பை வாரிவழங்க முடிகிறது? எனப் பூர்ணிமா கேட்டாள். f
"அன்பில் விளைவது தான்
33

Page 19
கலப்பை
தை 2004
உண்மையான சாந்தி. ஒவ்வொரு வருக்கும் மனச்சாந்தி ஏற்பட்டு விட்டால் உலகில் அமைதி தானாக நிலைத்து விடும். முதலில் வேற்றுமை என்ற அறியாமை இருள் விலக வேண்டும். அந்த இருள் நீங்கினால் எங்கும் அன் பெனும் ஒளி தானாகப் பிறக்கும் எனக் காஞ்சிப் பெரியவர் கூறியிருக்கிறார். வரிடமும் எந்த வேறுபாடும் இன்றிச் சமமாக அன்பு செலுத் திப்பார், அது எத்தகைய அமிர் தமான உணர்வென்பது உனக்குப் புரியும்" என்றாள்.
"உன்னை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன் சத்தி. உன்னைப் போல மனப்
நீயும் அனை
பக்குவம்
எனக்கு இன்னும் ஏற்படவில்லை. ஆனால் முடிந் தவரை அனைவரிடமும் அன்பு செலுத்தப் பார்க்கிறேன்" எனப் பூர்ணிமா, சத்தியாவை அன்புடன் அணைத்துக் கொண்டாள். அங் கேயும் அன்பு தான் வென்றது.
ஒவ்வொரு நாளையும் அன்பு டன் தொடங்கி, அன்பினால் நிரப்பி அன்பினில் கழித்து, அன்புடன் நிறைவு செய்தால் அனைத்தும் அன்பு மயமாக் இருக்கும். சர்வம் ப்ரேம மயம்.
O யாவும் கற்பனை
R4
 

கோவில்களும் திருவிழாக்களும்
á面,画T岛面画血町耐
திமிழர்கள் வாழும் பிரதேசங் களில் வருடந்தோறும் கோவில் களிலும் தேவாலயங்களிலும் உற்சவங்கள் நடக்கும். மாதந் தோறும் புண்ணிய தினங்களில் நடைபெறும் திருவிழாக்களை விட, ஒவ்வொரு வருடமும் இந்து ஆலயங்களில் 10 நாட்கள், 18 நாட்கள், 25 நாட்கள் என்று கோவில்களில் திருவிழாக்கள் செய்வார்கள். கிறிஸ்தவத் தேவா லயங்களில் பூசைகள், புனித மான திருவிழாக்கள் முதலியன வற்றை மிகவும் ஒழுங்கான முறையில் நடைமுறைப்படுத்து வார்கள். தேவாலயங்களுக்குப் போகும்போது சுத்தமான, பகட் டான உடைகளைத்தான் அணிந்து
கொண்டு போவார்கள். பக்தர்கள்
அமைதியாகவும் விசுவாசமா கவும் தெய்வத்துக்கும் குருவான வருக்கும் , உரிய மரியாதை,
வணக்கம் செலுத்தி ஒழுங்காக நடந்துகொள்வார்கள். தினமும் நடக்கும் பூசையின் போதாவது, வருடாந்தரத் திருவிழாக்கள் நடக்கும் போதாவது பக்தர்கள் அமைதி குலையாமல் பார்த்துக் கொள்ளுவார்கள். பூசையின் போது குருவானவரின் பிரசங்க வார்த் தைகளைத் தவிர வேறு சத்தமே இராது. எங்கும் நிசப்தமாகவே யிருக்கும். அநேகமாக் எல்லாக் கிறிஸ்தவர்களும் ஞாயிற்றுக் கிழமைகளில் தவறாமல் தேவா லயம் சென்று வழிபடுவார்கள்.
35

Page 20
86)60)u
தேவாலயம் செல்லவேண்டியது கட்டாயமும் கூட.
இனி சைவ ஆலயங்களைக் கவனிப்போம். சைவ ஆலயங் களில் மேற்கூறிய ஒழுங்கு முறைகளுக்கு முற்றிலும் மாறு பட்ட விதத்திலேயே பக்தர்கள் நடந்துகொள்ளுவார்கள். ஏறக் குறைய நாலு தசாப்தத்துக்கு முன்னர் கோவிலுக்குப் போகிற பக்தர்கள் வெள்ளை வேட்டியும் அரையிற் கட்டிய சால்வையுமே தவிர, உடம்பில் சட்டையொன்றும் அணிவதில்லை. அந்த வழக் கத்தை ஒரு எழுதாத சட்டம் போல நடைமுறையில் அனுட்டித் தார்கள். கோவிலுக்குப் போகிற வர்கள் குளித்து, விபூதி அணிந்து, மச்ச, மாமிச உணவைத் தவிர்த்து, ஈசுவர தியானத்துடன் கோவி லுக்குப் போவார்கள். அநேக மானோர் காலை உணவருந் தாமல் விரதமிருந்து கோவிலி லிருந்து திரும்பியதும்தான் ஒரு வேளைசோறு (வாழைஇலையில் பரிமாறி) சாப்பிடுவார்கள். இரவுச் சாப்பாடு பாலும் பழமும், அல்லது ஏதாவது மெல்லிய சாப் பாடு, பலகாரம்.
ஒவ்வொரு சைவ ஆலயத் திலும் வருடாவருடம் அந்தந்தக் கோவிலுக்கென நியமிக்கப்பட்ட திகதிகளில் திருவிழாக்கள் நடை பெறும். சில கோவில்களில் 10 நாட்கள், சிலதில் 18 நாட்கள், வேறு சில கோவில்களில் 25 நாட்கள் தொடர்ந்து திருவிழாக் கள் நடக்கும். ஒர் ஊரிலுள்ள
தை 2004
கோவிலில் திருவிழாக்கால மென்றால் அவ்வூரிலுள்ள அநேகமானோர் விரதம் அனுட் டிப்பார்கள். மச்ச மாமிச உணவு வகை, தாம்பத்திய உறவு முதலி யவற்றைத் தவிர்த்து, கேளிக் கைகள், கும்மாளங்களையும் குறைத்துக் கொள்வார்கள். ஆதலால், அந்த ஊரில் திரு விழாக்கள் நடக்கும் நாட்களில் காய்கறி, பழங்களின் விலைகள் ஏறியும், மீன் இறைச்சியின் விலைக்ள் சரிந்தும் காணப்படும்.
பக்தர்கள் பல ரகம். பலர் கோவிலுக்குப் போய் மூன்று முறை கோவிலை வலம் வந்து சுவாமியைக் கும்பிட்டுத் திரும்பு வார்கள். வேறு சிலர் கோவிலைச் சுற்றி அங்கப் பிரதிஷ்டை செய்து கும்பிட்டு வருவார்கள். இன்னும் சிலர், தாம் வைத்த நேர்த்தியை முடிப்பதற்காக சுவாமிபேரில் காவடி எடுப்பார்கள். காவடி களைத் திருவிழாக்காலங்களில் நிறைய காணலாம். ஊரிலுள்ள சிறு கோவிலொன்றில் காவடி தொடங்கி மேளதாளத்துடன் ஊர்வலமாகச் சென்று திருவிழா நடக்கும் கோவிலை வந்த டைந்து, கோவிலை வலம்வந்து கும்பிட்டு, காவடியை இறக்கு வார்கள். சிலர் பஜனைப் பாடல் களுடன் காவடியைக் கொண்டு செல்வார்கள்.
காவடிகள் பலவிதம். பால் காவடி, பன்னீர்க்காவடி, ஆட்டக் காவடி, பிரதிட்டைக்காவடி, செடிற்காவடி, தேர்க்காவடி,
36

கலப்பை
தை 2004
பறவைக்காவடி, அன்னக்காவடி, தூக்குக்காவடி, மற்சக்காவடி, துலாக்காவடி இப்படி அநேக விதமான காவடிகள் எடுப்பார் கள். இவற்றுள் செடில்குத்திக் காவடி, பறவைக்காவடி, தேர்க் காவடி, போன்ற காவடிகள் உடம்பை மிகவும் வருத்தும். அந்த வலியையும் பொருட்படுத் தாமல் கடவுள்மேலுள்ள பக்தி விசுவாசத்தினால் மனதைத் தைரியப்படுத்தித் தங்கள் இஷ்ட தெய்வத்திற்குக் காவடி எடுப் பார்கள். செடில்காவடி - இது பக்தரின் முதுகுப்புறத்தே இரு பக்கங்களிலுமுள்ள தோலில் 40, 60 கொழுக்கி ஊசிகளைக் கொழுவி, அக்கொழுக்கிகளைக் கயிற்றின் ஒரு முனையிற் பொருத்தி, கயிற்றின் மற்றப் பக்கத்தை
இரண்டாகப் பிரித்து அண்ணா வியார் (ஆட்டம்பழக்கு பவர்) இரண்டு கைகளிலும் பிடித்துக்
கொள்ளுவார். பக்தர் காவடியைத் தூக்கியதும் அவர் மேளத்தின் தாளத்துக்கு ஆடும்பொழுது, அவரின் ஆட்டத்துக்குத் தகுந்த வாறு செடில் பிடிக்கும் அண்ணா வியார் தானும் ஆடிக்கொண்டு பக்தரின் ஆட்டத்தையும் அந்தக் கயிற்றை இழுத்தபடியே நிரைப் படுத்திக் கொள்ளுவார். பறவைக் காவடி - இது உருளக் கூடிய ஒரு சகடையில் துலா போன்ற ஒரு கம்பத்தைச் சரித்துக்கட்டி, அதன் நுனியில் கயிறுகள் கட்டித் தொங்கும். முன்பு கூறியது போல் பக்தருக்குச்செடில் கொழுக்கிகளில் பொருத்திய அந்தக் கயிற்றின் மற்றத் தொங் கலை அந்தத் துலாவின் நுனியிற் கட்டியிருப்பார்கள். அவர் உறியில் தொங்கும் பாவனையில், குப்பு றக்கிடந்து கைகளை விரித்தும் கால்களை நீட்டியும் வைத்துக் கொண்டு, ஊஞ்சல் ஆடும் பாவனையில் மேலும் கீழுமாக ஆடியாடி வீதிவழியாக மேள தாளத்துடன் கோவிலை வந்த டைவார். தோளில் சிறுகாவடி ஒன்று பொருத்தப்பட்டிருக்கும். அவருடைய முழுப்பாரத்தையும தாங்கிக் கொண் டி ரு ப் பது அவரின் முதுகுத்தோலில் ஏற்றப் பட்டிருக்கும் அந்தக் கொழுக்கி ஊசிகள்தான் என்பதும் இங்குக் குறிப்பிடத்தக்கது. இதே போலத் தான் தேர்க்காவடி - பக்தரின் முதுகில் குத்திய செடில்களில் பொருத்திய கயிற்றின் மற்றத் தலைப்பு ஒரு சிறிய தேரில்
37

Page 21
86)60)u
பொருத்தப்பட்டிருக்கும். அவர் அந்தத் தேரை முதுகில் பொருத் தியிருக்கும் அக்கயிற்றினால் இழுத்துக்கொண்டு கோவிலைச் சென்றடைவார். தூக்குக்காவடி யும் இதே பிரகாரம் பக்தர் சப்பாணிகட்டியபடி இருக்க, பாதங்கள், தொடை, பீடம், முதுகு முதலிய இடங்களில் ஊசிகள் கொழுவி, கயிற்றில் தொடுத்து, சகடையின் துலாவில் தொங்கவிடுவார்கள். அவர் உட் கார்ந்த நிலையில் ஆடியாடி, கடவுளைத் தோத்தரித்துக் கொண்டு, கோவிலுக்குப் போய்ச் சேருவார். இவர்களெல்லாம் தாங்கள் செய்த பாவங்களுக்குப் பிராயச்சித்தமாக ஆண்டவனிடம் நேர்த்திக்கடன் வைத்து, இப்படி யாக விரதமிருந்து, தாங்களே தங்களை வருத்திச் சுயதண்ட னைக்கு ஆளாக்கி, அதன் பயனாக மனத்திருப்தியும் சாந்தியும் பெறுவார்கள்.
சுவாமி கோவிலை வலம் வரும்பொழுது, சுவாமிக்குப் பின்னால் சிவநாமம் பாடி பஜனை பண்ணிக் கொண்டு போவார்கள். ஆண்பக்தர்கள் சு வா மிக் குப் பின் னா ல் பிரதிட்டை பண்ணிக் கொண்டு போவார்கள். தேவாரம் பாடிக் கொண்டும் பிரதிட்டை செய்வார் கள். பெண்களும் பிரதிட்டை பண்ணுவது வழக்கம். சில பெண்கள் சுவாமி போன வழியில் அடியழித்துக்கொண்டு போவார் கள். அடியழிப்பதென்றால்,
தை 2004
ஒவ்வொரு 2 அல்லது 3 அடிக்கு ஒருதரம் (முழங்காலை மடித்துத் தலையைத் தாழ்த்தி, தரையைத் தொட்டு, கற்பனையில் சுவாமி விட்டுப் போன அடிச்சுவடு களைக் கைகளால் அழிக்கும் பாவனையில்) அடியழித்துக் கொண்டு போவார்கள்.
இதைவிட, பெண்கள் விரத மிருந்து கரகம் ஆடுவார்கள். ஒரு செம்பில் பால் அல்லது நீர் நிரப்பி, அதன் வாயில் தேங்காய் வைத்து, அதனடியில் வேப்பில் லையும் பூவும் சொருகி வைத்து, நிறைசெம்பை வெறும் தலை யில் வைத்துக்கொண்டு (அது விழுந்திடாதபடி) தாளத்துக்குச் சாதுரியமாக ஆடிக்கொண்டு வீதி வலம் வருவார்கள். ஆண்களும் கரகம் ஆடுவார்கள். சில பெண்கள் சட்டியில் கற்பூரத்தை நிறையப் போட்டு எரித்துக்கொண்டு அதைத் தலையில் ஒரு திருவ ணைக்கு மேல் வைத்துக் கொண்டு கோவிலைச் சுற்றி வருவார்கள்.
சில கோவில்களின் முன்றலில் தீக்குளிப்பார்கள். 15, 20 அடி நீளத்துக்கு நிலத்தில் ஓரடி ஆழக் கிடங்கு வெட்டி அதனுள் விறகு நிரப் பித் தீ வைத்து அது அணைந்ததும், தணல் கொதித்துக் கொண்டிருக்கும் போது , அப்போது தான் குளித்துவிட்டு வந்த பக்தர் சுவாமிபெயரைச் சொல்லிக் கும்பிட்டுக்கொண்டு அந்தத் தணலில் ஒரு பக்கத்தி லிருந்து மற்ற கரைக்குச் சாதாரண மாக நடந்துபோவார். தணல்
38

கலப்பை
பாதத்தை எரிக்காது. இப்படித் தீக்குளிப்பதைப் பெண்களும் செய்வர். இவை எல்லாம் சுவாமிக்கு நேர்த்தி வைத்துச் செய்யும் தொண்டுகள்.
சில பெண்கள் நேர்த்தி வைத்து அதைப் பூர்த்திசெய்யும் வண்ணம் முருகன் கோவிலுக்குத் தேன், தினைமா, நெய் முதலியவற்றை எடுத்துச்சென்று, கோவில் மண்ட பத்தில் மா விளக்கு போடு வார்கள். மாவினால் தகழி விளக்குப் போற் செய்து, குங்குமம் பூசி, நெய் விட்டுத் திரியும் பொருத்தி, அதை விளக்காக எரிப்பார்கள். நெய் சூடாகி மாவை வேக வைக்கும். வெந்ததும் அது சாப்பிடக்கூடிய மாவிளக்காக மாறும். அதைச் சுவாமிக்குப் படைப்பார்கள்.
திரு விழாக் காலங்க ளில் பக்தர்களின் பசி, தாகம் தீர்க்க வெனக் கோவில் வீதிகளில் இருக்கும் மடங்களில் அன்ன தானம் செய்வார்கள். அந்தச் சலுகையைப் பயன்படுத்திக் கொள்ள அங்கு ஏராளமான ஏழை மக்கள் குவிவார்கள். கோவில் வீதிகளிலும், கோவிலுக்குப் போகும் வழிநெடுகிலும் பக்தர் களின் களைப்பை ஆற்றவெனத் தண்ணிர்ப் பந்தல்கள் அமைத் திருப் பார்கள். ஊறுகாய்த் தண்ணீர், சர்க்கரைத் தண்ணீர், மோர்த்தன்னணிர், என்று பந்த
லுக்குப் பந்தல் வித்தியாசமாக
இவற்றிலொன்றை, விநியோகிப்பார்கள்.
இரண்டை
தை 2004
திருவிழாக்களில் இன்னு மொரு விதமும் இருக்கின்றது. திருவிழாக்காலங்களில் ஒவ் வொரு நாள் திருவிழாவையும் ஒருவர் பொறுப்பெடுத்துத் தனது செலவில் செய்வார். வசதி படைத்தவர்கள் கோவிலுக்கெனக் கொஞ்சப் பணத்தை வருடத்தில் ஒதுக்கிவைத்து அதைக்கொண்டு தங்கள் திருவிழாவை ஒழுங்கு பண்ணிச் செய்து முடிப்பர். விசேஷ திருவிழாக்களுமுண்டு. விசேஷ திருவிழாக்கள் செய்ப வர்களுக்கிடையில் போட்டிகள் வருவது வழக்கம். மற்றத் திருவிழாக்களிலும் பார்க்கத் தன்னுடைய திருவிழாதான் சிறப்பாக அமைந்தது என்று ஊரார் பேசிக்கொள்ளுவதற் காகவும் கூடிய ஆட்களைக் கோவிலுக்கு வருவிக்கும் நோக் கத்துடனும் உபயகாரர் பெருந் தொகைப் பணத்தைச் செல வழித்துத் திறமான நாதஸ்வரக் கூட்டத்தை அமர்த்து வார். (நாதஸ்வரக்கூட்டம் என்பது 2 நாதஸ்வரம், 2 தவில், தாளக் காரர், ஸ்ருதிபோடுபவர் என எல்லாமாக 6 பேரைக் கொண்டது). சனங்கள் கச்சேரி கேட்டு மகிழ்ந்து திருவிழாக்காரரை மெச்சுவார்கள். இதைக் கவனித்த அடுத்த திருவிழாக்காரர் தன்னு டைய திருவிழா நாளன்று அதற்குமேலும் பிரபல்யமான இரண்டு, மூன்று மேளக் கூட்டங் களைத் தருவிப்பார். சிலர் இந் தி யா வி லி ரு ந்து கூட
39

Page 22
கலப்பை
தை 2004
கலைஞர்களை அழைப்பார்கள். வேறு திருவிழாக்காரர் சங்கீத உபந்நியாசம் செய்பவர்களை அழைப்பார்கள். இன்னும் சிலர் சங்கீதக் கச்சேரியை ஒழுங்கு செய்வார்கள்.
இன்னும் அதிகமாகச் சனங் களைக் கோவிலுக்கு அழைக்க விரும்பினால் வேறொரு யுக்தி இருக்கிறது. அதுதான் தேவ அடி யாளின் சதிர்க்கச்சேரி. இதற்குச் சின்னமேளம் என்றும் கூறு வார்கள். (தவில் என்பது பெரிய மேளம். சதிர்க்கச்சேரிக்குப் பாவிக் கப்படும் மிருதங்கம் சின்ன மேளம்1). இதற்குச் சனங்கள் ஏராளமாக வந்து சேருவார்கள். அநேகமாக இந்தியாவிலிருந்து தான் தேவடியாளைத் தருவிப் பார்கள். இப்பெண்களிற் சிலர் அங்கிருந்து வந்து யாழ்ப்பாணத் தில் குடியேறித் தங்கள் தொழி லைச் செய்தவர்களும் உண்டு. திரு விழா வுக் கு இரண்டு நாளைக்கு முன்பாகவே தேவடி யாள் வந்து சேர்ந்து அந்த உபய காரர் (திருவிழாக்காரர்) வீட்டில் தான் தங்கியிருப்பார். சாதாரண மாக இறைச்சி, குடிவகை, பாவிப் பார்களாம் என்று சொல்லக் கேள்வி. உண்மை, பொய், தெரியாது. குறிப்பிட்ட திருவிழாவன்று கோவில் மண்ட பத்தில் நீள்வட்டமான ஒரு சிறு மேடை அமைத்திருப்பார்கள். அதில் சதிர்க்கச்சேரி நடைபெறும். ஒருவரும் அந்தக் கட்டமைப் பைக் குழப்பக் கூடாது. குழப்
பினால் அடி விழும். சனநெருக் கடியோ சமாளிக்க முடியாது. திடகாத்திரமான தேகமுடைய சிலரை உபயகாரர் அன்று சனம் விலக்குவதற்கென அமர்த்தி யிருப்பார். அவர்கள் சால் வையை முறுக்கி வைத்துக் கொண்டு புரளி பண்ணுபவர் களுக்கு நல்ல அடிபோடுவார்கள். குடித்துவிட்டு வந்து சதிர்ஆடு பவளை நெருங்க முற்படு பவர்களும் உண்டு. சில வேளை களில் சதிர்க்கச்சேரி குழம்பி, கைகலப்பிலும் கலகத்திலும் முடிந்த நாட்களும் எனக்கு ஞாபகமிருக்கிறது.
சதிர்க்கச்சேரி முடிந்ததும் சனமெல்லாம் வீடுபோய்ச் சேர்ந்து விடுவார்கள். சதிர் முடிந்ததும், சுவாமி வீதிவலம் வருவார். சில வேளைகளில் சுவாமி காவுவ தற்கே ஆட்களைத் தேடவேண்டிய கட்டம் கூட வந்திருக்கிறது. காலப்போக்கில் சதிர்க்கச்சேரிகள் குறைந்து கொண்டுவந்து இப் போது ஒரு மூன்று, நாலு தசாப்தமாக அது அற்றே போய் விட்டது எனலாம். ஆனால் மேளக்கச்சேரியும், பல நாதஸ்வர வித்து வான்களின் போட்டிக் கச்சேரிகளும் கோவில்களில் இப்போதுகூட இடம் பெறத் தவறுவதில்லை.
கோவில்களில் சதிர் ஆட இறக்குமதி செய்யப்பட்ட பெண் களிற் சிலர் இந்தியாவுக்குத் திரும்பிச் செல்லாமல் இங்கேயே தங்கித் தமது வாழ்க்கையை
Af

86)6OL
அமைத்துக்கொண்டார்கள். சிலர் விவாகம் செய்து குடும்பம் நடத்தினார்கள். சிலர் நாடகக் குழுக்களிற் சேர்ந்து நடிகைகள் ஆகினர். அவர்களிற் சிலர் நாட கங்கள் கூலிக்கு நடிப்பதை ஒரு தொழிலாக மேற்கொண்டார்கள். அவர்களுள் கன்னிகா பரமேஸ்வரி என்ற பெண் பிரபல்யமானவள். நன்றாக நடிப்பாள்.
இந்தக் காலகட்டத்தில்தான் அச்சுவேலி இராஜரத்தினம் நடித்த சக்கடநத்தார் குட்டி நாடகம் கோவில்களிலும் நடிக்க ஒழுங் குகள் செய்தார்கள். இராஜரத்தி னமும் நானுமாக, இருவர் நடித்த நாடகம்தான் சக்கடத்தார். அந்த நாடகத்துக்கு நல்ல வரவேற்பு இருந்தது. (எங்கள் அதிர்ஷ்டம்!)
சைவக்கோவில்களில் நல்லூர் கந்தசுவாமி கோவில்தான் மிகவும் பிரபல்யமான கோவிலாகும். அதற்கு அடுத்தாற் போல, தொண்டமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலயம், மாவிட்டபுரம்
கந்தசுவாமி கோவில், தென்னி லங்கையிலுள்ள கதிர்காமம் முருகன் கோவில் இவைக
ளாகும். இனக்கலவரத்துக்குப் பிறகு தமிழர்களுக்கு அங்கு செல்வாக்கு இல்லாதபடியால் கதிர்காமம், இப்போது (கத்தி றகம), சிங்கள மக்களின் ஆதிக்கத் துக்கு உட்பட்டிருக்கிறது. அடுத்த படியாகச் சொல்லப் போனால்,
ந யி னா தீவு நாகபூஷணி அம்மன்கோயில், திருக்கேதீஸ்
தை 2004
வரம் இன்னும் பல கோவில் களைச் சொல்லலாம். நாகபூஷணி அம்மன்கோவிலுக்கு, கடல் கடந்து படகுமூலம்தான் போகலாம். அந்தக் கடற் பிரயாணம் போகிற வர்களுக்கு ஒர் (திரில்) உணர்ச்சிச் சிலர்ப்பு. அம்மன் பக்தியில் போவார்களோ, அல்லது கடற் பயணம் அனுபவிக்கப் பிக்னிக் போவார்களோ, அது அவர வரைப் பொறுத்தது. சில சமயங் களில் மேலதிகமாகப் பக்தர் களை ஏற்றிக்கொண்டு போகும் தோணிகள் கடலில் சங்கமமாகி, ஆட்கள் பலர் இறந்துபோன நிகழ்வுகளும் நேர்ந்ததுண்டு.
நல்லூர் முருகன் வருடாந்தரத் திருவிழாக்களில், கொடியேற்றம், 10ந் திருவிழா, கார்த்திகை, தேர், தீர்த்தம், பூங்காவனம் இவை தான் சிறப்பான திருவிழாக் களாகும். கவனிக்கவேண்டிய விஷயம் ஒன்று - மேற்கூறிய கோவில் களில் சதிர்க்கச்சேரிகள், பாட்டுக் கச்சேரிகள் நடைபெறுவ தில்லை. நல்லூர்த் திருவிழா மூட்டம் ஆயிரக் கணக்கில் பக்தர்கள் இலங்கையின் பல பாகங்களிலுமிருந்தும் வந்து சேருவார்கள். தேர், தீர்த்தத் திருவிழாநாட்களில் கோவிலின் நாலு வீதிகளிலும் சனக்கூட்டம் நிறைந்து வழியும். இந்த இரு நாட்களிலும் இலங்கை ஒலிபரப் புக் கூட்டுத் தாபனத்திலிருந்து விசேஷ அறிவிப்பாளர்கள் குழுவொன்று வந்து கோவிலில் நடக்கும் வைபவங்களை
41

Page 23
கலப்பை
ஒன்றுவிடாமல் நேர்முகவர்ணனை செய்து கொண்டிருப்பார்கள். கோவிலுக்கு நேரில் வந்து சுவாமியைத் தரிசிக்க முடியாத அடியார்கள் வீட்டிலிருந்து கொண்டு இந்த நேர்முக வர்ண னையை ரேடியோவில் கேட்டு ரசித்துப் பக்திப் பரவசத்தில் ஆழ்ந்திருப்பார்கள்.
தீர்த்தத் திருவிழா கடைசிநாள் நடக்கும். இது இருவகைப் பட்டது. ஒன்று, கோயிலுக்குப் பக்கத்தில் கட்டப்பட்டிருக்கும் கேணியில் சுவாமி தீர்த்தமாடு வது. உதாரணமாக, நல்லூர் கோவிலின் தீர்த்தக் கேணி. இது சதுரமாக இருக்கும். நடுவில் தண்ணீர்க்குண்டு. அதில்தான் சுவாமியைத் தீர்த்தமாட்டு வார்கள். இக்குண்டைச் சுற்றிக் கீழிருந்து மேலாக நாலுபக்கமும் கட்டப்பட்டிருக்கும் 50, 60 வரிப்படிக்கட்டுகளில் பக்தர்கள் முன்டியடித்து இடம்பிடித்து உட்கார்ந்துகொண்டு சுவாமி தீர்த் தமாடும் கண்கொள்ளாக் காட்சி யைத் தரிசிப்பார்கள். மற்றது, கடற்தீர்த்தம். கடலுக்கு அண்மை யிலுள்ள கோவிலெனில் (உதாரணம் சந்நிதி முருகன்) சுவாமியைக் கடற்கரைக்குக் கொண்டு சென்று அங்கு, கடலில் தீர்த்தமாட வைப்பார்கள்.
திரு விழாக் காலங்களில் கோவிலுக்கு மறுபக்கத்திலுள்ள தெரு ஓரங்களில் தற்காலிகக் கடைகள் நிறைய முளைத்து விடும். அவற்றில் சிறுவர்களுக்
தை 2004
கான விளையாட்டுப் பொருட்கள், சமையலுக்கு உதவும் உபகரணங் கள், உடுபுடவைகள், கடலை, பலகாரம், (சுடச்சுடத்) தின்பன் டங்கள் முதலிய பல்வேறு பட்ட பொருட்கள் விற்பனைக்கு வைத்திருப்பார்கள். இவற்றை விட, பாதுகாப்புக் கருதி தற்காலி கக் காவல்நிலையம் ஒன்று அமைத்திருப்பார்கள். பொலிஸ் உத்தியோகத்தர்கள் எல்லா இடங் களிலும் பரந்து நின்று மேற் பார்வை செய்து கொண்டிருப் பார்கள். பக்தர்களுக்கு ஏதாவது ஆபத்து அல்லது விபத்து நேர்ந் தாலும் அவற்றிற்குரிய சிகிச்சை களை மேற்கொள்ளவென (சென் ஜான் ஆம் புலன்ஸ்) வைத்திய முதலுதவிப்படை ஒன்று எப்பொழுதும் ஆயத்த நிலையில் நிற்கும். g
திருவிழாக்கள் முடிந்து அடுத்த நாள் சைவர்களின் வீடுகளில் விரதமும் விசேட பூசைகளும் நடைபெறும். சிலர் அன்ன தானம் வழங்குவார்கள். சிலர் சிவனடியார்களை அழைத்து ஆதரித்து, விருந்தளித்து அனுப்பு வார்கள். இங்கு, சிவனடியார் களைப் பண்டாரிகள் என்றும் அழைப்பார்கள். இவர்கள் காவி தரித்து, முகத்தில் சடை வளர்த்து, தலையில் முன்டாசு கட்டிக் கொண்டு, கையில் கமண்டலம் ஏந்தியபடி அசல் சிவபக்தர்கள் போல் காட்சியளிப்பார்கள். சில தேவார, திருவாசகங்களை மனப் பாடமாக்கி வைத்துக்கொண்டு,
42

கலப்பை
தெருத்தெருவாகக் காட்சிதரு வார்கள். திருவிழாக்காலத்தில் யாராவது அவர்களை அமுதுண்ண அழைத்துவிட்டால் போதும். அடித்து விழுந்து கொண்டு ஒடிப்போய் இரண்டு தேவாரம் பாடிவிட்டு, வீட்டிலிருப்பவர் களையும் போற்றி அவர்களிட மிருந்து பெறக் கூடியவற்றை யெல்லாம் பெற்றுக்கொண்டு நழுவி விடுவார்கள். சிவபக்த ராக வேடம் தரித்த சில வேட தாரிப் பண்டாரிகள் ஒரு வீட்டுக் குப் போய் உண்டு விட்டு, யாரும் காணாவிடில் அங்குள்ள விலையான சிறு பொருள்களை மறைத்துக் கொண்டு மெல்ல மறைந்து விடுவார்கள். எல்லாப் பண்டாரிகளையுமே "சோத்துப் பண்டாரிகள் வரிசையில் சேர்த்து விட முடியாது. சில உண்மை யான சந்நியாசிகள் இருக்கத்தான் செய்தார்கள். இவர்கள் சாப்பாட் டுக்காக அலைபவர்கள் அல்ல. உண்மையான சிவபக்தர்கள், சிவனடியார்களில் விசுவாசம் வைத்திருப்பவர்கள். இவர்களின் வீடுகளிலேயே அமுதுண்ண இசைவார்கள். இவர்களிற் பெரும் பாலோர் உயர்ந்த சமய ஞானம்
கொண்டவர்களாகவே இருப் பார்கள்.
அந்தக் காலத்தில் எல்லா
வயதுடைய ஆண்களும், சிறுமி களும், விவாகமாகிய அல்லது வயதான பெண்கள் மட்டும்தான் கோவிலுக்குப் போவார்கள். குமரப்பிள்ளைகளைக் கோவிலில்
தை 2004
காண்பது அரிதினும் அரிது. ஆயினும், நாட்கள் செல்லச் செல்ல அவர்களையும் பகட்டான உடுப்புகளுடன் கோவில்களில் காணக்கூடியதாக இருந்தது. அதனாலோ என்னவோ, பல இளைஞர்களுக்குக் கடவுள் மேல் பக்தி திடீரென மேலிட்டிருந் ததை அவதானிக்கக்கூடியதாக இருந்தது 3, 4 தசாப்தங்களுக்கு முன்னர் தொடக்கம், கலியாணப் பேச்சு கடைசியாக ஒப்பேற முன்னர் மாப்பிள்ளையையும் (ஒளித்துப் பார்ப்பதற்காக அவர் களைப் பெற்றோர் கோவிலுக்குக் கூட்டிச்சென்று காட்டுவார்கள். அவர்களும் காணாத மாதிரிக் கண்டு கொள்ளுவார்கள்
"அம்மாள் வருத்தங்கள்
வருடந்தோறும் கோடைகால மாகிய பங்குனி, சித்திரை மாதங்
43

Page 24
866)Ü6(OU
களில் அனேகமாகச் சிறுபிள்ளை களுக்கு சின்னமுத்து, கொப் புளிப்பான் முதலிய தொற்று நோய்கள் பீடித்து, அவர்களைக் கஷ்டத்துக்கு உள்ளாக்கி விடும். கவனயீனமாக இருந்தால் பெரிய வர்களுக்கும் இந்த நோய்கள் வரும். இவற்றை அம்மாள் வியாதி என்று கூறுவார்கள்.
அதனால், அந்தக் கோடை காலத்தில், ஊரிலுள்ள அம்மன் கோவில்களில் விசேடப்பூசைகள் நடைபெறுவது வழக்கம். அத்துடன், மூன்று ஆண்கள் வேடம் தரித்து, தலையில் கரகம் வைத்துக்கொண்டு, வீடு வீடாகச் சென்று மாரியம்மன் பாடல் களைப்பாடிய வண்ணம் ஆடு வார்கள். அவர்களில் ஒருவர் பாடல்களைப் பாட, மற்றவர்கள் அப்பாடல்களுக்கு உடுக்கு அடிப்பார். மூன்றாமாவர் பெண்
வேடம் பூண்டு, தலையில் கொண்டை முடிந்து, கை, கால் கழுத்தில் (பொய்) நகைகள்,
காலுக்குச் சலங்கை முதலியன அணிந்தபடி, கரகத்தைத் தலை யில் வைத்து உடுக்கடிக்கும் தாளத்துக்கு ஆடுவார்.
கரகம் என்பது ஒரு செம்பில் தன்னிர் நிரப்பி, அதன்மேலே தேங்காய் வைத்து, தேங்காயைச் சுற்றி வேப்பிலையும் பூக்களும் சொருகி, அச்செம்பைத் தலை யில் வைத்து ஆடுவதாகும். ஆடும்பொழுது கைகள் கரகத் தைத் தொடக்கூடாது. ஆனால் அந்தக் கரகம் (செம்பு) விழுந்து
தை 2004
விடாமலும் ஆடவேணும். அது தான் கெட்டித்தனம்
இந்தக் கரகஆட்டத்தை எல் லோரும், முக்கியமாகச் சிறுவர் கள், ஆர்வத்துடனும், பயபக்தி யுடனும் பார்த்து மகிழ்வார்கள். ஆடிமுடிந்ததும் இவர்களுக்கு வீட்டிலுள்ளவர்கள் காசு, அரிசி, துணிமணி முதலியன கொடுத்து அனுப்புவார்கள். இப்படிச் சேரும் அரிசியை இவர்களுடன் கூடவரும் ஒருவர்தான் கொண்டு வந்து துணிப்பையில் வேறாகப் போட்டுத் தோளிற் சுமந்து கொண்டு போவார்.
புராணப் படிப்பு
அந்தக்காலத்தில் மதியம் திரும்பிய மக்கள் - அதாவது, நடுத்தர வயதைத் தாண்டிய
வர்கள் - சமய விடயங்களில் மிகவும் ஈடுபாடு கொண்டவர் களாகக் காணப்படுவர். வீட்டில் சுவாமியின் படத்தை அல்லது விக்கிரகத்தை வைத்து, காலை மாலை ஒழுங்காகப் பிரார்த் தனை செய்வார்கள். சமய அறிவும், புராணங்கள், இதிகாசங் கள், தேவாரங்கள், திருவாசகம் இவற்றின் பொருள் விளக்கமும் அவர்களுக்குக் குறைவாகவே இருக்கும். சமயவிடயங்களைப் பற்றிய புத்தகங்கள் அநேகம் இருக்கவில்லை. இருந்தாலும் அவர்களுக்கு அவற்றைப் பெற்றுக் கொள்ளச் சந்தர்ப்பம் வராது. பெற்று க் கொண் டாலும் புத்தகங்கள் மூலம் அறிவைப் பெருக்குதற்கு அவர்களுக்கு
44

கலப்பை
நேரமும் பொறுமையும் இல்லை யென்றே சொல்லலாம்.
இந்தக் குறையைத் தீர்ப்பதற் குப்போலும், கிராமங்களிலுள்ள பெரியார்கள் சேர்ந்து ஆண்டு தோறும் சிலசில தினங்களில் கோவில்களில் அல்லது பகிரங்க மேடைகளிலாவது சமயசம்பந்த மான பிரசங்கங்கள், புராணம்
படித்தல், கதாப்பிரசங்கம், சங்கீத
உபந்நியாசம், கதாகாலஷேபம் என்று வெவ்வேறு நிகழ்ச்சி களை ஒழுங்குபண்ணி, மக்கள் சமயம் பற்றிய விடயங்களை அறிந்து வாழ்வில் கடைத்தேற வழிவகுத்திருந் தார்கள்.
சமய அறிவில் மேம்பட்ட பிரசங்கிமார், கோவில்களில் பிள்ளையார்கதை, கந்தபுராணம், பெரியபுராணம் இவற்றிலிருந்த கதைகளும், தேவார, திருவாசங் களுக்குப் பொருள் விளக்கமும் விரிவாக எடுத்து விளக்குவர். சில கோவில்களில் ஒருவர் புராணத்திலிருந்து பதிகங்களை வாசிக்க, சமய அறிஞர் ஒருவர் பக்கத் தி லிருந்து கொண்டு அந்தப்பதிகங்களுக்கு விளக்கமும், அவற்றிற்கு உதாரணங்கள், உப மானங்கள் சொல்லியும் வந்தி ருக்கும் அடியார்களுக்கு விஸ்தார மாக விளக்குவார். அடியார் களும் மிகவும் கரிசனையுடன் அவ்விளக்கங்களை மனதிற் பதித்து வைத்துக்கொண்டு வீடு போய்ச் சேருவர்.
கோவில்களில் திருவிழாநாட்
தை 2004
களில், சுவாமி வலம் வருகை யில் சுவாமிக்குப் பின்னால் பஜனை பண்ணிக்கொண்டு (சிவநாமம் சொல்லிக் கொண்டு) பக்தர்கள் போவார்கள். தேவார திருவாசகங்களில் ஆற்றலுள்ள ஒருவர் அடியெடுத்துப்பாட, கூடப் போகும் பக்தர்கள் அதைத் திரும்பச் சொல்லிப்பாடுவார்கள். இது கூட்டுப்பிரார்த்தனை போன்று மக்களிடையே ஒற்றுமையை வளர்க்கும்.
நேர்த்திக்கடன்
சாதாரணமாக வைத்தியத் துக்குக் கட்டுப்படாத வியாதி
தீராதநோய்கள்,
கள், பிறவி
யிலேயே உடலுறுப்புக்களிற் பின்னடைவுள்ள மக்கள் தங்கள் விதியை நொந்து, கஷ்டப்படு பவர்களுக்குக் கைகொடுக்கும் தெய்வத்தை நினைத்து, உருகி,
45

Page 25
கலப்பை
தை 2004
அழுது, தங்கள் வருத்தத்தைக் குணப்படுத்துமாறு இரங்கி வேண்டிக்கொள்வார்கள். இந்த வேண்டுதலுடன், தமது வியாதி யைச் சுகப்படுத்தினால் தெய்வத் துக்கு இன்ன இன்ன உபகாரம் தாம் செய்வோம் என்று பிரதிக் ஞையும் எடுத்துக் கொள்வார்கள்.
இப்படித் தன்னலம் கருதித் தெய்வத்துக்குச் செய்யும் சேவை, தியாகம், நோன்பு சுயவதை இவற்றை முழுமனதுடன் செய்து, தாங்கள் எண்ணித் தவமிருந்து வேண்டிக் கொண்ட விடயம் கைகூடியதும் தெய்வத்துக்கு நன்றி சொல்வதுடன் அவருக்குச் சொன்னபடி தவறாமல் உப காரம் செய்து உறுதிப்படுத்திக் கொள்வார்கள். இதில் தெய்வ நம்பிக்கை பெரும் பங்கை வகிக்கின்றது. மனச்சுத்தியுடன் இப்படி நோன்பிருந்து தெய் வத்தின் அனுக்கிரகத்தைப் பெறும் வாய்ப்பு சாதாரண மனிதருக்குக் கிடைப்பது சுலபமல்ல . தெய்வத்தில் அசையாத, முழு நம்பிக்கை இருக்கவேணும்
(தற்கால இளைஞர்கள் சொல்
வதை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகின்றேன் - அதாவது, பரப்பிரம்மமாகிய கடவுளை,
மனிதனின் நிலைக்கு இழுத்து வந்து, அவருடன் பேரம் பேசி, பண்டமாற்று வியாபாரம் செய் வதுபோலல்லவா இருக்கிறது, இந்த நேர்த்திக்கடன் அவர்கள் சொல்வதிலும் நியாயமில்லா மலில்லை!)
வேள்வி
வேள்வி செய்வது என்பது புராண, இதிகாச காலத்துக்கு
முன்பிருந்தே வந்துகொண்டிருக் கும் ஒரு வழக்கம். இந்தியாவில் பரவலாகவும், இலங்கையில் தமிழ்மக்கள் வாழும் பகுதிகளிலும் வேள்விகள் செய்வார்கள். சிறு தெய்வங்களுக்கு நேர்த்தி வைத்து, அந்தக் கடனைத் தவறாமல் நிறைவேற்றுவார்கள். அதாவது, கிராமங்களில் அநேகர் வீடுகளில் தெய்வத்துக்கு நேர்ந்துவிட்ட ஆடு, கோழி முதலியன வளரும். அவற்றுக்குத் திறமான தீனி கொடுத்து, நன்றாகக் கொழுக்க வைத்து, மிகவும் பக்குவமாகப் பராமரிப்பார்கள். ஆண்டுதோறும் வரும் தீபாவளி, தெய்வங்களின் திருவிழா நாட்கள், இப்படி வேள்விக் கென்று நியமிக்கப் பட்ட நாட்களில் வேள்வி ஆட்டைக் குளிப்பாட்டி, விபூதி, குங்குமம், சந்தனம், பூ இவை களால் அலங்கரித்துப் பவனி யாகத் தெருவில் அழைத்துக் கொண்டு போவார்கள். சிலர் மேளதாளத்துடனும் ஆட்டை அழைத்துச் செல்வர். கிராமங் களின் பல கோணங்களிலி ருந்தும் பல ஆடுகள் தெய்வ சந்நிதிக்கு வந்து சேர்ந்திருக்கும். பூசை நேரம் வந்ததும் தெய்வத் துக்குத் தீபம் காட்டித் தொழுது விட்டு அர்க்சகர் ஒரு நீண்ட வாளுடன் (அல்லது கொடுவாள் கத்தியுடன் ஆடுகளை நிப்பாட்டி
46

கலப்பை
தை 2004
யிருக்கும் இடத்துக்கு வந்து ஆடுகளை ஆசீர்வதிப்பார். பின்னர், ஒவ்வொரு ஆடாக, ஒருவர் ஆட்டின் கொம்பிலும் இன்னொ ருவர் அதன் பின்னங்கால்களை யும் இழுத்துப்பிடித்துக் கொள்ள, இதற்கென நியமிக்கப்பட்ட கொலையாளி ஒருவர் வாளை ஓங்கி ஒரே வெட்டில் ஆட்டின் கழுத்தைத் துண்டாடிவிடுவார். அதன்பிறகு மற்ற ஆடு வெட்டப் படும். இப்படி எல்லா ஆடுகளும் வெட்டப்பட்டு முடிந்ததும், அவற்றைப் புறம்பான இடங் களுக்கு இழுத்துச் சென்று, அங்கு அவற்றிற்கு விலைபேசி விற்பார்கள். நல்ல இறைச்சி யுள்ள கொழுத்த ஆட்டிற்குக் கூடிய விலை ஆட்டின் பருமனைப் பொறுத்தே விலை மதிப்பு. அதாவது, ஆட்டை வளர்க்கும் பொழுதே இதை நன்றாகக் கொழுக்க வைத்தால் கூடிய விலைக்கு விற்கலாம் என்று நினைத்துத்தான் அதை நன்றாகப் பராமரிப்பார்களேயொழிய, தெய்வத்துக்கு நேர்ந்து விட்ட ஆடு என்றபடியால் அல்ல!
அதன்பின்னர், செத்த ஆடு களை வாங்கியவர்கள் தூரத்தில் ஒரு தனி இடத்துக்குக் கொண்டு போய் அவற்றின் தோலை உரிப் பார்கள். இறைச்சியை வெட்டிப் பங்குகளாகப் பிரித்து, யோலையாற் செய்த குடலையில்
G)
ஒவ்வொரு பங்கையும் அடைத்து வைத்து, அதை ஆவலுடன் வாங்கக் காத்திருக்கும் ஆட்களுக்கு விற்பார்கள். வெட்டப்படும் ஆடுகளின் இரத்தத்தை ஒரு பாத்திரத்தில் ஏந்தி, அதைச் சட்டியில் போட்டு அடுப்பில் வறுத்து அதனையும் விற்பார் கள். அதற்கும் நல்ல கிராக்கி. வேள்வி நாட்களில் சனக்கூட்டம் நிறைந்திருக்கும் - தெய்வத்தைத் தரிசிக்கவல்ல - இந்த இறைச்சிக் குடலையை மற்றவர்களை முந்திக்கொண்டு வாங்குவதற்கு வாங்கிக்கொண்டு வீட்டுக்குப் போய், அன்று எண்ணெய் முழுக்கு முழுகிவிட்டு, ருசியான இறைச்சிக் கறியுடன் சாப்பாடு ஒருபிடி பிடிப்பதற்காகத்தான்!. ஆகவே, தெய்வம் எங்கே, வாயில்லாப் பிராணியான ஆடு எங்கே, நேர்த்தி எங்கே, வாய் ருசிதான் எங்கே? எல்லாம் இந்த அருமையான ருசி உண்பவரின் நாக்கின் நீளத்தைக் கடக்கு மட்டும் தானே!
ஆடு வாங்கிப் பராமரிக்க முடியாத சிலர் ஆட்டுக்குப் பதி லாகக் கோழிச் சேவலை நேர்த்தி வைத்து வளர்த்து தெய்வத்தின் முன்பாக அதை வெட்டி, பின்னர் சமைத்துச் சாப்பிடுவார்கள். இந்த மூடநம்பிக்கை இப்போது சிறிது சிறிதாக அற்றுப் போகின்றதுபோல் தெரிகின்றது.
47

Page 26
Dear Grand Niece,
When I visited your home after a lapse of time I observed that some unrest prevailing at home which I thought that it may be due to lack of proper
understanding of the Hindu cul
ture. And its impact on the present youths. Well this situation is not in your house only but it has become a common feature every where now. I know very well that you have been a good girl taking part in Sunday School - balavikas classes and their activities, from your young days. But
. KEETHEESWARANATHAN
system now. To begin with, this system which has to play an important role in raising the quality and standard of human life is severely handicapped today. As a result, even universities have lost their honoured status which they had for centuries. Righteous living, Peace, Truth, Non-violence, Love, discipline, Spirit of sacrifice, Observing justice, these laudable traits have been driven to the jungles. Do you know why? These traits have to confront powerful
(Views of the first generation (a great uncle) and a third generation (a grandniece, A University student)
your parents presume that your life is gradually changing a little after entering the University. This may be due to the influence of the company you keep. It is not wholly your fault.
Causes of the Generation gap 1) Eddicational System
When I think of the situation that prevailed during our school days about five decades back, I
must say that a big change has taken place in the educational
opposing forces. Sadly there are no genuine statesmen to rule the countries with a selfless motive. Due to the selfish motive of the present rulers state of the politics has come down very low. Today leaders and statesmen of Nehru and Gandhi's caliber with high sense of duty and loyalty are badly needed all over the world. These type of leaders have to come only from your 'Student Community. Imagine the "Great Expectation we are looking for
48
 

கலப்பை
ward from you all. You are going to be the future leaders who are going to shape the destiny of our countries. There is nothing in the world that cannot be achieved if you youths have the will and strength of character.
(2) Devotion and discipline
During our time devotion to God was a part and parcel of education. Fear of sin and other discipline followed it. Parents, teachers, elders and even private tutors laid great emphasis on this. I remember when I was very young, my private tutor insisted that we worship our parents daily in the morning by laying a flower at their feet. This is because our Hindu scriptures give great importance to parents and say that they are our first Gods and we must never displease them but respect and honour them. Our school started with an assembly for morning prayer where devotional songs was sung and a short prayer followed it. Today under the present educational system none of these connected with the school is permissible.....
Except in the case of few, other children are growing up without knowing their religion properly and are following the western ways treating their parents as friends and sometimes ending up as enemies. In some state schools, on Fridays a scrip
தை 2004
ture class is held. That too not on a compulsory basis. Those who do not want to join can stay away.
3) University and the state of its students ۔۔۔۔
In the early days, universities were considered a highly respected place of learning and culture. The students then had high regard and respect for their teachers, lecturers and professors and were loyal and obedient to them. Hence, the product too was of a high caliber. Today of course, with some exceptions, most of our teenagers are blindly enamoured of the modern, western civilisation. They are becoming slaves to the so-called modernity and have become unmindful of their own innate divinity.
It is very necessary that you have to be cautious and vigilant against some of the whims and fancies of the western habits and customs. Some of these casual or common habits (not all) are looked down as immoral and indecent habits by the standard of our Hindu culture. Attending late night parties, (Specially young girls) returning home after midnight, sleeping overnight at friends houses, sipping beer, tasting liquor, going about with boy or girlfriends in public before marriage, are some of the things that are causing a lot of anxiety and stress to your parents. They are also alarmed at
49

Page 27
கலப்பை
the rate in, which divorces, nervous breakdowns, fatal accidents and suicides that are taking place among youth.
If you have to fight against these social evils, (which can be avoidable), you have to build a fortress of self-control, self-confidence, and other similar disciplines. You must understand that self-discipline is very important, without that many of these social evils cannot be. eradicated easily. Now, no one pays any care for morality. God has been put onto the backbench and churches are getting closed.
I still believe that you are a good girl but you must be very careful in all your dealings with others. So, in the first instance think of God and your parents, and love them. That will promote fear of sin, which will automatically lead to morality. Pray to God daily and listen to your conscience before you decide on anything. Conscience is the voice of God within you. Chant the Gayathri Manthra daily and it'll remove all types of ignorance and illumine your intellect.
Love and blessings
Yours sincerely Great uncle
This letter made her express her opinion and views of her present life. This is her personal opinion only.
தை 2004
Dear Great Uncle,
I am sure you must have expected my reaction to your letter, which gave me a nice surprise. I find it a bit odd to try and explain myself to you but since no one has asked my views on this subject I thought it is a good opportunity to express myself. You have said that there was some unrest in our home due to lack of understanding the Hindu religion and culture, that is not so at all. I think that I understand the Hindu religion quite well and have little or no problem with it. It is with the Hindu or rather Tamil culture that I have a problem. I do not really think that religion and culture are the same. I feel that Hindu religion makes sense but the Hindu culture has gone and stuffed it all up. When I talk to my Tamil friends who are Hindus about our culture, our life and our problems, we get rather upset. We feel that most of the Hindu elders, in the height of arrogance (for what else could it be) proclaim our culture/race (though not outright) to be "the chosen race". Even if they don't say so, that is how they behave, as if they know all the answers and that our culture is right and to hell with all the rest.
to be continued..... on p62
50

历T,LD岛伍öF面
அனுமார்வாலுக்கும் கலைநிகழ்ச்சிகளுக்கும் என்ன தொடர்பு? அதைத்தெரிந்து கொள்ள வேண்டுமானால், முதலில் அனுமார்வாலின் கதையைத் தெரிந்து கொள்ள வேண்டும். சீன்தயைத் தேடிச் சென்ற அனுமான், அவளை இலங்கையிலே அசோகவனத்தில் கண்டான். கதைத்தான். கணையாழி பெற்றான், அரக்கர்மேல் கடுங்கோபங் கொண்டான். அசோகவனத்தைச் சிதைத்தான். அரக்க வீரர்கள் சும்மா இருப்பார்களா?
அனுமானைப் பிடித்தார்கள், கட்டினார்கள். அவனுடைய வாலிலே சீலையைச் சுற்றிக் கொளுத்திப் பொசுக்கிவிட நினைத்தார்கள். செயலிலும் ஈடுபட்டார்கள். அனுமான் அரக்கர் சீலையைச் சுற்றத் தனது வாலை நீட்டிக்கொண்டே போனான். சீலை தேடி அரக்கர்கள் களைத்தே போனார்கள். என்ன செய்யலாம் என்று திகைத்தபோது, ஒருவன் உரத்த குரலில் "சீதையின் சீலையை உரிந்து வாருங்கள் என்று கத்தினான். அதைக் கேட்ட அனுமான் தனது வாலை ஒட்டச் சுருக்கிக் கொண்டான். இந்தக் கதை உண்மையோ பொய்யோ தெரியாது. ஆனால், இந்தக் கதையின் அடிப்படை யில்தான், எந்த ஒரு பேச்சும், நிகழ்ச்சியும் அளவுக்கு அதிகமாக நீளுவதைக் காணும்போது என்ன அனுமார்வால்போல் நீள்கிறதே! என்ற பேச்சுவழக்கு வந்துவிட்டது.
இப்போது தெரிகிறதல்லவா? அனுமார் வால் கலை நிகழ்ச்சிகள் என்றால் என்ன என்று. கடந்த் பல ஆண்டுகளாக சிட்னி நகர்ப் புறங்களில் நடைபெற்ற, நடைபெறுகின்ற தமிழ்க்கலை நிகழ்ச்சி களில் தொண்ணுாறு சத விகிதமான கலை நிகழ்ச்சிகள் இந்த அனுமார் வால் கலை நிகழ்ச்சிகள்தான். மாலை 6.00 மணியளவில் ஆரம்பிக்கும் இந்நிகழ்ச்சிகள், இரவு பன்னிரெண்டு, ஒரு மணிவரை செல்வது வழக்கமாகிவிட்டது. நேரவரையறையின்றி, பார்வையாளரின் வசதியைப் பற்றிச் சற்றும் சிந்தியாது, "நாங்கள் காட்டுகிறோம், நீங்கள் பாருங்கள், அல்லாவிட்டால் போங்கள் என்ற தன்னிச்சைப் போக்கில்
STS)6SA) நிகழ்ச்சிகன்
51

Page 28
56)60)
நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள். பொது சேவைக்கு நிதி திரட்டுகிற நிகழ்ச்சிகளாக இருக்கட்டும், தமிழ்ப்பாட சாலைக் கலை நிகழ்ச்சிகளாக இருக்கட்டும், வேறெந்த நிகழ்ச்சியாக இருக் கட்டும், இதே போக்குத்தான். யார் இந்த நேர வரையறையை எடுத்துக் கூறினாலென்ன, எழுதி னாலென்ன, இந்த நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்வோர் கவனிப்பதே இல்லை. இது ஒரு வியாதிபோல் சிட்னி மக்களைப் போட்டு உலுக்கு கிறது.
கலை நிகழ்ச்சிகள் மூன்று அல்லது மூன்றரை மணிநேரம் வரை நீடிப்பதுதான் நாகரீகம், பண்பு, பயன், மகிழ்ச்சி, 'அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பார்களே. அதுபோலத்தான் இந்தக் கலை நிகழ்ச்சிகளின் தன்மையும். எவ்வளவு சிறந்த கலைப் படைப்பாக இருந்தாலும் கால, நேரக்கட்டுப்பாடுகளைக் கவனிக் காது நடத்தினால்
பார்வையாளருக்கு அலுப்புத்
தட்டிவிடும். சிலருக்கு உடலும், உள்ளமும் கூடக்களைத்துவிடும். ஏன் இதைப் பார்க்க வந்தோம் என்றாகிவிடும். இவையெல்லாம் நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய் வோருக்குத் தெரியாமல் இல்லை. அப்படியிருந்தும் ஏன் இப்படி அனுமார்வால் நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்கிறார்கள்? தமிழ்ச் சமுதாயத்தின் மானத்தை வாங்கு கிறார்கள். யாராவது "தமிழ்ச் சமுதாயத்தின் சீலையை உரிகி றார்களே என்று உரக்கக் கத்தினால் வாலைச் சுருக்கிக் கொள்வார் களோ, தெரியவில்லை.
தை 2004
இந்த நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்வோருக்குப் பெரும் சிக்கல்கள் இருப்பது உண்மை. அனுமதிச் சீட்டுகளை விற்று விட்டோம். அதற்குப் பெறுமதியான நிகழ்ச்சி களைக் கொடுக்க வேண்டும். மற்ற நிகழ்ச்சிகளிலும் பார்க்க நமது நிகழ்ச்சிதான் திறமான நிகழ்ச்சி என்று பிறர் பாராட்ட வேண்டும் என்று பலவாறாக என்ணிக்கொண்டு நிகழ்ச்சிகளை ஆயத்தம் செய்கிறார்கள். அநேக மான நிகழ்ச்சிகளைக் கதம்ப நிகழ்ச்சிகளாகவே அமைக்கின் றார்கள். கதம்ப நிகழ்ச்சி என்றால், ஆடல், பாடல், வாத்தியஇசை, நாடகம், நகைச்சுவைத் துணுக்கு வில்லுப் பாட்டு, கவியரங்கு என்று எல்லாம் சேர்ந்த ஒரு சாம்பார் நிகழ்ச்சியையே மக்கள் விரும்புகிறார்கள் என்ற ஒருவகை மாயையிலே சிக்கித் தவிக்கி றார்கள். பார்வையாளர்களையும் இந்த மாயைக்குள் இழுத்துப் பழக்கி விடுகிறார்கள்.
மேலே குறிக்கப்பட்ட கலை வடிவங்கள் அத்தனையும் தனித் தனியே இரண்டரை மூன்று மணிநேரம் வரை பார்வையாளர் களுக்கு அலுப்புத் தட்டாமல் மகிழ் விக்கக் கூடிய கலை வடிவங்கள். இவற்றைச் சிறிது சிறிது கிள்ளித் தெளித்து அரை குறையாக அகால நேரத்திலே, அரைப்பங்குப் பார்வையாளர்கள் கலைந்து சென்று விட்ட வெற்று இருக்கைகளுக்குக் காண்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. இக்கலை வடிவங்களிலே இரண் டுக்கு மேற்படாமல் இணைத்து மூன்றரை மணிநேரத்துக்குள்
52

கலப்பை
நிகழ்ச்சிகளை ஒழுங்குசெய்து வழங்கினால் மிகவும் வரவேற் கத்தக்கதாக இருக்கும். ஆனால் அப்படிப் பலரும் நினைப்ப தில்லை. அவர்கள் கூறும் பெரும் காரணம் அனுமதிச் சீட்டுகளை விற்க முடியாது. பல கலை வடிவங்களை ஏற்பாடு செய்தால் பங்கு பற்றுவோருடைய அண்ணன், தம்பி, மாமன், மச்சான் என்று கூட்டம் பெருகும். பங்கு பற்று கிறவர்களிடமே கொடுத்து அனு மதிச் சீட்டுகளை விற்று விட
லாம் என்பதே. எனவேதான் கதம்ப நிகழ்ச்சிகள் ஒழுங்கு செய்யப்படுகின்றன.
இப்படிப் பலகலை வடிவங் களைச் சேர்த்துக் கலை நிகழ்ச்சி களை ஒழுங்கு செய்வோரில் பலரிடம், கலைமன்றங்களோ அல்லது கலை வடிவங்களில் ஈடுபாடோ கிடையாது. இவர்கள் கதம்பக் கலை நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்ய நாட்டிய, நாடக, இசைக் கலைஞர்களையோ அல்லது மன்றங்களையோ நாடு கிறார்கள். இவர்களிடம் இரந்து கேட்டுப் பல கலைவடிவங் களை ஒன்று சேர்க்கிறார்கள். கலை வடிவங்களை வழங்கு வோரோ, கிடைத்த சந்தர்ப் பத்தை வைத்து வாங்கவேண்டும் என்பதுபோல் கலைவடிவங்கள் எடுக்கும் நேரத்தைச் சரியாகவே முன்கூட்டித் தெரிவிப்பதில்லை. முன்கூட்டியே தெரிவித்த நேரத்தைவிட அதிக நேரத்தை எடுத்து விடுகிறார்கள். இது தவிர தலைவர்உரை, முக்கிய விருந் தினர் உரை, நன்றியுரை என்பன வற்றிற்கு வேண்டிய நேரத்தைக்
தை 2004
குத்துமதிப்பாகக் கணக்கிட்டு நிகழ்ச்சியின் முழு நேரத்தில் சேர்த்துப் பார்ப்பதில்லை. மேடை அலங்காரம், காட்சி மாற்றங்கள், ஒலி ஒளி அமைப்பு , மு ன் அறிவித்தல்கள் முதலியவற்றிற்கு வேண்டிய நேரமும் கணக்கிடப் படுவதில்லை. இது போன்ற பல காரணங்களினால் தான் இந்தக் கதம்ப நிகழ்ச்சிகள் வரை முறை இன்றி நீள்கின்றன.
நாகரீகமானதும், சமுதாயத் துக்குப் பயன் தரக்கூடியதுமான கலை நிகழ்ச்சிகளை நடத்த விரும்பும் பெருமக்கள் பின்வரு வனவற்றைக் கவனித்து நிகழ்ச்சி களை ஒழுங்கு செய்தாலன்றி இக் குறைபாடு தீரப்போவதில்லை.
1. முழு நிகழ்வும் மூன்று அல்லது மூன்றரை மணிநேரத் துக்குள் நிறைவுபெற வேண்டும்.
2. கூடியவரை இரண்டு மூன்று கலை வடிவங்களுக்கு மேற் படாமல் முழுநிகழ்வும் இருத்தல் வேண்டும்.
3. கலை வடிவங்களைத் தர முன்வருவோருடைய ஒத்திகை களை முன் கூட்டியே பார்வை யிட்டு நேரத்தை நேரடியாகக் கணக்கிட்டுக் கொள்ளவேண்டும்.
4. நேரக் கட்டுப்பாட்டுக்கும், ஒத்திகைகளைப் பார்ப்பதற்கும் இசையாதவர்களிடம் கலை வடிவங் களைப் பெற்றுக் கொள்ளக் கூடாது.
5. அனுமதிச் சீட்டு விற்பனை செய்யும் முயற்சியையும், கலை வ் டிவங்களைச் சேர்க்கின்ற முயற்சியையும் பின்னிப் பிணைக்காது இரண்டு முயற்சி
53

Page 29
கலப்பை
தை 2004
களையும் வேறுவேறாகக் கவனிக்க வேண்டும்.
6. நம்பிக்கையையும், சமுதா யத்தின் நற்பெயரையும், கட்டுப் பாட்டையும் திடமாக விரும்பு கிறவர்களிடமே கலை வடிவங் களைப் பெறல் வேண்டும்.
7. முழுநிகழ்ச்சியின் நேரப் பொறுப்பை ஒருவரிடம் ஒப் படைத்து, நிகழ்ச்சியோடு சம்பந் தப்பட்டோர் அனைவரும் அவருடன் ஒத்துழைக்க வேண்டும்.
இது சம்பந்தமாக இருசாரா ருடைய கவனத்திற்குச் சில கூற வேண்டும். ஒன்று, சமுதாயப் பொதுப் பணிகளுக்காக நிதி சேகரிப்போர். மற்றையது தமிழ்ப் பாடசாலைக் கலை விழாக்களை ஒழுங்கு செய்வோர்.
l. சமுதாயப் பொதுப் பணிகளுக்காக நிதி சேகரிப்போர் இவ்வகைக் கலை நிகழ்ச்சிகளிலே தங்கியிருப்பதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். பணியின் தேவையை நேரடியாகவே மக்களிடையே பிரச்சாரம் செய்து நேரடியாகவே நிதியைத் திரட்ட வேண்டும். அறக்கொடைகளையும் கலைநிகழ்ச்சிகளையும் பின்னிப் பிணைத்துப் பழக்கப்பட்டு விட்ட சமுதாயத்திலே இது மிகக் கடினமான ஒன்றுதான். சமுதா யத்தை நேரிய வழியில் பழக்க வேண்டியதும் ஒரு பணியெனக் கருதி நமது மக்களைப் பொதுப் பணிகளுக்கு நேரடியாகவே உதவும் பழக்கத்தை ஏற்படுத்து வதும் இவர்கள் பொறுப்பெனக் கருதவேண்டும்.
2. தமிழ்ப் பாடசாலைக் கலைவிழாக்களை ஒழுங்கு செய்
வோருக்குப் பல சிக்கல்கள் உண்டு. பாடசாலையில் பயிலும் எல்லா மாணவர்களும் ஒரே நிகழ்ச்சியில் பங்குபெற வேண் டும் என்ற ஒரு கட்டாயம். அல்லாவிட்டால் மாணவர்களும், பெற்றோர்களும் மனச்சோர் வடைந்து விடுவார்கள் என்ற ஏக்கம். நூறுக்கு மேற்பட்ட மாண வர்கள் பயிலும் பாடசாலைகளில் இது எப்படிச் சாத்தியமாகும்? இதைப் பெற்றோரும் மாண வரும் உணர வேண்டும். ஒன்று விழாவை இரண்டு நாட்களில் வைக்க வேண்டும், அல்லது ஒரு வருடம் பங்குபற்றிய வகுப்புகள் மற்ற வருடம் பங்கு கொள் ளாமல் இருக்கவேண்டும். மாண வரின் தமிழ் பேசும் திறனைக் காட்டுகின்ற கலைவடிவங்களை மட்டுமே விழாவில் சேர்த்துக் கொள்ளவும் வகை செய்தல் வேண்டும்.
எல்லா மாணவர்களும் ஒரே நிகழ்வில் பங்குபெற வேண்டும் என்று கருதினால், அரச பாட சாலைகளில் நடைபெறுவது போன்ற நிகழ்ச்சிகளைப் பற்றி மூன்று மணி நேரத்துக்குள் விழாவை நிறைவு செய்ய வேண்டும்.
இவையெல்லாம் சொல்வது சுலபம், செயற்படுத்துவது கடினம் என்று பலர் சொல்வார்கள். ஆனால் "எறும்பூரக்கற்குழியும் என்பதையும் நினைவிற்கொள்ள வேண்டும். நமது சமுதாயம் வாழும் சூழலுக்குத் தகுந்தவாறு முன்னேற வேண்டுமே தவிர,
"விடிய விடியக்கூத்துப்பார்க் கின்ற நிலைக்குப் போகக் கூடாது.
O
4.

LDங்கலம் என்ப மனையாட்சி மற்று அதன் நன்கலம் நன் மக்கட்பேறு.
திருவள்ளுவரின் குறள் இது.
திருமணம் எனப்படுவது இன
விருத்திக்காகவே காந்தியடிகள்.
என்கின்றார்
திருமணம் எனப்படுவது அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு நற்பயன்களைப் பெறுவதற்கான ஒரு வாழ்க்கைத் துணையைத் தேடிக்கொள்ளும் ஒரு தெய்வீகப் பயணம் என ஆன்மீகப் பெரியோர்கள் கூறு கின்றார்கள்.
சைவசமய ஆசாரவிதிமுறை களின் பிரகாரம் இசைவான ஒரு துணையைத் தேர்ந்தெடுத்து இல்லறம் நல்லறமாக நடத்தும் வகையாகவே அது அமையும். பண்டைய காலந்தொட்டு விவாகப் பொருத்தம் பார்த்து மணமகனதும் மணமகளதும் பூரணச் சம்மதம் பெற்று நிச்சய தார்த்தம் செய்தலே தமிழ் மக்களின் பாரம்பரியமாகும்.
இன்றைய காலகட்டத்தில் இலங்கைத் தமிழ் மக்கள் புலம்
e. 56Ö6)GI) ö (ÖLDJő ITLÓ
பெயர்ந்து அமெரிக்கா, அவுஸ்தி ரேலியா, இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளில் குடியேறி வாழ்
மாநகரிலும் பெரும் எண்ணிக் கையான தமிழ் மக்கள் இடம் பெயர்ந்து வாழ்கின்றார்கள். இத்தகைய மக்களில் சைவத் தமிழ் மக்கள் அநேகர் தத்தம் பிள்ளைகளின் திருமண வைப வங்களைச் சிறப்பாக நடத்து வதற்கு ஏதுவாக ஆணித் தரமான கருத்துக்கண்ணோட்டத்துடன் சமுதாயமாற்றங்களுக் கேற்ப
நடைமுறைச் சாத்தியமான வகையில் கட்டுரை வடிவில் சமர்ப்பணமாகின்றது.
இக்கட்டுரையில் கூறப்பட்டு உள்ள சமயாசார விதிகள் அவரவர் பாரம்பரியப்படி சிறிது மாற்றப் பட்டாலும் ஒட்டு மொத்தமாகத் திருமணவைபவம் சிறப்பாக அமைவதற்கான அடிப்படைக் காரணிகள் மட்டும் மாற்றப்பட லாகாது.
பாடம் படித்துப் பார்!
பட்டம் பெற்றுப் பார்!

Page 30
கலப்பை
கல்யாணம் பண்ணிப் பார்! வீட்டைக் கட்டிப் பார்! பிள்ளையைப் பெற்றுப்பார்! பெற்று வளர்த்துப் பார்! என்று முன்னோர்கள் கூறியிருப் பதன் அர்த்தம் அவைகளைச் செவ்வனே நிறைவேற்றுவது எவ்வளவு கடினமான காரியம் என்பதை அநுபவ ரீதியாக அறிந்துதான். படிக்கும் காலங் களில் மனம் படிப்பில் செலுத் தாது விட்டால் ஏற்படுகின்ற தாக்கம் பரீட்சை முடிவுகள் வெளி யான பின்னர்தான் தெரிய வரும். வீடு ஒன்றைக் கட்டி முடித்துக் குடிபுகுந்த பின்னரே நிவர்த்திக்க முடியாத சில அசெளகரியக் குறைபாடுகள் தென்படுவதுண்டு. ஆரம்பத்திலிருந்தே மிகக் கவன மாக அனைத்தையும் அலசி ஆராய்ந்து அதன் பிரகாரம் வீடு கட்டப்பட்டிருந்தால் அக்குறை கள் தவிர்க்கப்பட்டிருக்கும். அவ சரக் கோலத்தில் எழுந்த மான் மாகத் திட்டம் போட்டு தன்னிச் சையாகத் தீர்மான மெடுத்துக் கட்டியிருந்தால் கவலைப்பட வேண்டிய நிலை ஏற்படுமல் லவா? பல்வேறானவர்களின் பங்களிப்புடன் வெவ்வேறு துறைகளைச் சார்ந்தவர்களையும் அணுகி நுணுக்கமாக அலசி ஆராய்ந்து கவனமாகத் திட்டம் தீட்டி ஒருங்கிணைவாகச் செயல் பட்டால்தான் வீட்டின் நிர்மானம் பூரணத்துவம் பெறமுடியும் அதே போன்று திருமண வைபவமும் பலருடைய மனமார்ந்த பங்களிப் புடன் வரையறுக்கப்பட்ட கால
தை 2004
அவகாசத்துள் சிறப்பாகச் செய்து முடிக்க வேண்டிய பொன்னான ஒரு நற்காரியமாகும். ஒரு சிலரின் சிறிய தவறும் பெரிய குறையாக மாறக்கூடிய மனவேதனையைத் தோற்றுவிக்கக்கூடிய இக்கட்டான சூழ்நிலையையும் ஏற்படுத்தலாம். ஆகவே தான் திருமண வைபவம் எத்தகைய முன்னேற் பாடுகளுடன் தெளிவான சிந்த னையோடு கவனிக்கப்படல் வேண்டும் என்பதற்கான வழி முறைகள்-வரைவிலக் கணங்கள் தொகுக்கப்பட்டு எல்லோருக்கும் எல்லாக் கால கட்டத்திலும் பயன்படும் வகையில் ஒரளவு விரிவாக இக்கட்டுரையின் மூலம் சமர்ப்பணமாகின்றது.
இக்கட்டுரையில் திருமண வைபவங்களுக்குப் பங்களிப்புச் செய்பவர்கள் எப்படிச் செய லாற்றவேண்டும் - பார்வையா ளர்களாக வருகை தந்திருப்பவர் களும் எப்படி நடந்துகொண்டு திருமணக் கொண்டாட்டங்களைச் சிறப்பிக்க முடியும் என்பதையும் விளக்கமாகத் தந்திருக்கின்றேன். யாவும் எமக்குத் தெரிந்த விடயங்கள்தானே - பல்லாண்டு காலமாகப் பார்த்தவைகள்தானே என்று கவனக்குறைவாக இருப் பதனால் தவறுகள் ஏற்படும் வாய்ப்புகள் அனேகம் உள்ளன. அவை தொடர்பான விளக்கங்கள் வழிகாட்டல்கள் குறிப்புரை களுடன் தரப்பட்டுள்ளன. அத் துடன் திருமணநாளுக்கு முன்ன தாகவும் பின்பும் நடைபெறும்
56

கலப்பை
சம்பிரதாயக் கொண்டாட்டங்கள் பற்றிய விவரங்கள் இக்கட்டுரையில் தரப்படவில்லை. காலம் மாற மாற, சம்பிரதாயங்களும் மாற்றம் பெற்றுத்தான் ஆகவேண்டும். எழுதாத சட்டங்கள் சிலவற்றைக் கடைப் பிடிப்பதோ செயற் படுத்துவுதைத் தவிர்ப்பதோ அவரவர் விருப்பம்.
பெருந்தொகையான பணச் செலவில் உற்றார் உறவினர் நண்பர்கள் பிரமுகர்கள் முன்னி லையில் நடைபெறும் ஒருநாள் சுபகாரியம் கவர்ச்சிகரமாக - சிறப்பாக அமைவதற்குச் சிறிய விடயங்களில்கூட என்னென்ன கவனம் யார்யாரால் கவனிக்கப் படவேண்டும் - என்னென்ன பொருட்கள் கைவசம் வாங்கி  ைவத் திருக்க வேண் டு ம் , திருமண வைபவம் சம்பந்தமாக யாருக்கு முன்கூட்டியே தெரியப்படுத்துதல் வேண்டும் என்பன போன்றவற்றை ஒழுங்கு முறைப்படி சுபநேர காலம் தவறாமல் செயற்படுத்துவதற் கான முன்னேற்பாடுகளையும் விளக்குகின்றது. பெற்றோரும் மற்றோரும் வாழ்நாளில் மறக்க முடியாத அந்த இனிய நன்னாள் வெகு நேர்த்தியாக - கூடுமான வரை சிக்கனமாக - கவர்ச்சி கரமாக அமைவதற்கு ஒழுங்கான செயல்திட்டம் அவசியம் என்பதை வலியுறுத்தி உறுதிப் படுத்துவதே இக்கட்டுரையின் உண்மையான நோக்கமாகும்.
இன்றைய
u_Iniĩ
காலகட்டத்தில்
தை 2004
திருமண வைபவ நிகழ்வுகள் ஞாபகார்த்தமாக வீடியோ படம், நிழல்படம் பிடித்தல் ஆகியன முக்கிய இடத்தைப் பிடித்திருக் கின்றன. காலம் காலமாகப் பார்த்து இன்புறப் பல்வேறு கோணங்களில் வர்ண ஜாலங்கள் காட்டும் நவீன டிஜிட்டல் முறையில் பார்ப்பவர்களைப் பரவசப்படுத்தப் பொன்னான அந்நன்னாளை இலட்சக்கணக் கான பணச்செலவில் நடத்தி முடிக்கப்பட்ட வைபவத்தின் நினைவாக மணமக்களுக்கும் மற்றவர்களுக்கும் காலம் கால மாக நினைவுபடுத்த மிஞ்சுவது வீடியோ படம் நிழற்படங்கள் மட்டும்தான் என்பதால் மட்டுப் படுத்தப்பட்ட காலஅவகாசத்துள் சிறந்த முறையில் நுட்பமாகப் படம் பிடிப்பவர்களைத் தேர்ந் தெடுப்பதோடு அழகாகப் பட மாக்குவதற்கு அவர்களுக்கும் போதிய ஒத்துழைப்பு நல்கு வதும் மிக அவசியமாகும். அதே சமயம் சமய சம்பிரதாயங் களைப் பாதிக்காத வகையில் படப்பிடிப்பாளர்கள் நிச்சயம் நடந்து கொள்ள வேண்டும். திருமண வைபவ ஆரம்பம் முதல் முடியும்வரை வீடியோப் படம் பிடிக்கப்படுவதால் அப் படமாக்கலுக்கு இடைஞ்சலாக எவரும் இருக்காததோடு குறுக் கீடுகள், தடைகள் கூடிய வரையில் தவிர்க்கப்பட வேண்டும். மண மகளின் அலங்காரம் குறிப்பிட்ட கால எல்லைக்குள் முடிவடையு

Page 31
கலப்பை
மானால் முகூர்த்த நேரத்துக்கு முன்பாகப் பல்வேறு கோணங் களில் மணமகளை வீடியோ படம் பிடிப்பதற்குப் போதிய நேரம் கிடைக்கும். முகூர்த்த நேரம் பின் தள்ளிப்போடவோ மாற்றப்படவோ முடியாத காரியம் என்பதால் வீடியோ படப்பிடிப்பாளருக்கு உதவி யொத்தாசையாக மணமகளைக் குறிப்பிட்ட நேரத்துள் அலங் காரம் செய்து முடிக்கவேண்டிய கடப்பாடு மணமகளை அலங் காரம் செய்யும் பெண்மணிக்கு உண்டு. அதே போன்று அலங் காரம் செய்பவருக்கு மணமகள் பூரண ஒத்துழைப்பும் நல்க வேண்டியதும் மிக அவசிய மாகும். சுருங்கக் கூறின் அனை வரும் தமக்கென ஒதுக்கப்பட்ட கடமைகளை மட்டுப்படுத்தப் பட்டுள்ள கால அவகாசத்துள் கச்சிதமாக நிறைவேற்றப் பரந்து பட்ட புரிந்துணர்வுடன் செய் லாற்ற வேண்டும். திருமண வைபவத்தில் அனேகமானோர் மனம்போன போக்கில் கதைத் துக்கொண்டிருக்கும் மனோ பாவம் நிச்சயம் மாறவேண்டும். கோவிலில் எப்படிப் பயபக்தி யுடன் நாம் நடந்துகொள்கின் றோமோ அப்படித் திருமண வைபவங்களிலும் நடந்து கொள்ளுதல் வரவேற்கத்தக்க செயலாகும்.
திருமணம் நிச்சயிக்கப்பட்டதும் மணமகன் வீட்டினரும், மண மகள் வீட்டினரும்,
தை 2004
1. திருமண முகூர்த்த நாள் நேரம் பற்றிய நிர்ணயம்.
2. திருமணப்பதிவு செய்யும் நாள் நேரம் பற்றிய நிர்ணயம்.
3. பிள்ளையார் பூசையா அல்லது ஓம குண்டம் வளர்த்துத் தாலி கட்டுவதா என்ற நிர்ணயம். 4. மணமகள் நீராடல் நாள் நேர நிர்ணயம்.
5. தாலிக்கான பொன்னுருக் குதல் நாள் நேரம் நிர்ணயம்.
6. மணமகள் வீட்டில் கன்னிக்கால் நடுதல், நாள் நிர்ணயம்,
7. மணமகன் வீட்டில் கன்னிக்கால் நடுதல், நாள் நிர்ணயம்.
8. திருமணம் நடத்தும் குருக் கள் யார் என்று தீர்மானித்தல்.
9. திருமண அழைப்பிதழ் யார் யாருக்கு அனுப்புதல் வேண்டும் எனத் தீர்மானித்தல்.
மேற்படி விடயங்கள் இரு சாராரின் புரிந்துணர்வுடன் கவனிக்கப்படவேண்டும்.
திருமண வைபவத்துக்கான பொருட்கள் விவரம்
எவர்சில்வர் குத்துவிளக்குகள் 4
எவர் சில்வர் நிறைகுடம் 2 . சந்தனக் கும்பா 2 பன்னீர்ச்செம்பு 2 தேங்காய்கள் 12
எவர்சில்வர் ஆரத்தித் தட்டு 2 பெரிய பித்தளைத் தட்டங்கள் 3 பித்தளைச் செம்பு 1 . பெரிய குடம் 1 10. கருங்கல் அம்மி 11. கும்பங்களுக்கான செம்புகள் 6
58

கலப்பை
12. திருநீறு, சந்தனம், மாவிலை கள், கற்பூரம், தோரணங்கள், உதிர் பூக்கள், மலர்மாலைகள், நாகசட மாலை, சரமாலைகள், அறுகம் புல், பசும் பால், தேன், நெய், தூபம், பசுச் சாணம், நூல்பந்து.
13. அரசாணி, அரசாணிப் பட்டு, கும்பப்பட்டுக்கள், மஞ்சள் தூள், நெல்.
14. தேங்காயென்னை, தீப் பெட்டி, விளக்குத்திரிகள், பன்னீர். 15. கொம்புமஞ்சள், நவதானி யங்கள், வெள்ளைத்துணி, தலை வாழையிலை.
16. தீட்டல்பச்சைஅரிசி, கதலி வாழைப்பழங்கள், எலுமிச்சம் பழங்கள்.
17. வெற்றிலைகள், கற்கண்டு, பாக்குகள்.
18. பாக்குச் சீவல், வெற்றிலை சுண்ணாம்பு.
19. குளிர்பானங்கள், சிற்றுன் டிகள், சாப்பாடு.
20. பரிமாறுவதற்கான பாத்தி ரங்கள்.
21. பசுக்கன்று. 22. மாப்பிள்ளைத் தோழனுக் கான தலைப்பாகை உத்தரீயம்.
23. மணமகனுக்கான பட்டு வேட்டி ஆடைவகைகள்.
24. மணமகனுக்கான தங்க மோதிரம்.
25. மணமகன், மணமகள் போட்டிக்கான மோதிரம்.
26. திருமணத்தை நடத்தும் குருக்களுக்கான சன்மானம்.
தை 2004
27. மணப்பெண்ணுக்கான உச்சிப்பட்டம், சந்திரப்பிறை, சூரியப்பிறை, றாக்கொடி, நாக சடம், மயிர்மாட்டி, ஒட்டியாணம், தலைஜோடனை அலங்காரப் பொருட்கள்.
28. வைபவ வாயில் அலங் காரத்துக்கான பழக்குலைகள் அடங்கிய இரு கதலிவாழைகள்.
29. ஒமகுண்டப் பூசைக்கான ஆகுதிப்பொருட்கள்.
30. அலங்கரிக்கப்பட்ட மண மேடை.
31. அலங்கரிக்கப்பட்ட மண
வறை.
32. மின்சார அலங்காரம், சோடனை, கம்பளங்கள்,
கதிரைகள்.
33. வீடியோ படப்பிடிப்பு,
நிழற்படப்பிடிப்பு.
34. மேள தாள நாதஸ்வர
இசைக்கலைஞர்கள்.
மணமகள் வீட்டினர் மண மகன் வீட்டினர் அவசியமாகக் கவனிக்கப்படவேண்டியவை.
1. திருமண அழைப்பிதழ் களில் புனித மஞ்சள் பூசப் படவேண்டும். உற்றார் உறவினர் நண்பர்கள் பிரமுகர்களுக்கு நேரகாலத்துடன் கொடுக்கப்படல் வேண்டும். தூர இடங்களிலுள்ள வர்களுக்குத் தபாலில் அனுப் பலாம்.
2. மணமகனுக்கோ மண
மகளுக்கோ கருமைசார்ந்த உடுப் புகள் எடுப்பது தவிர்க்கப் படவேண்டும்.
59

Page 32
கலப்பை
3. மணமகனுக்கான தலைப்
பாகையும், மணமகன் தோழ னுக்கான தலைப்பாகையும், உத்தரீயங்களும் முன்னேற்
பாடாக (அளவு பார்த்து) சலவைத் தொழிலகத்தில் வாடகைக்குப் பெற்றுக் கொள்ளவேண்டும்.
4. மணமகளுக்கான தலை அலங்காரப் பொருட்கள் நகை மாளிகை ஒன்றில் வாடகைக்குப் பெற்றுக்கொள்ளவேண்டும்.
5. மணமகனுக்கான தங்க மோதிரம் (மோதிரவிரல் அளவு எடுக்கப்பட்டு) மணமகள் வீட்டி னரால் புதிதாகச் செய்விக்கப்பட வேண்டும்.
6. மணமகளுக்கான தங்க மோதிரம் (மோதிரவிரல் அளவெ டுக்கப்பட்டு) மணமகன் வீட்டி னரால் புதிதாகச் செய்விக்கப்பட வேண்டும்.
7. மணமகன் தோழனுக்கான தங்க மோதிரம் (மோதிர விரல் அளவு எடுக்கப்பட்டு) மண மகன் வீட்டினரால் புதிதாகச் செய்யப்படவேண்டும்.
8. மணமகனின் தாயாரால் மணமகளுக்கு அன்பளிப்பாகக் கொடுப்பதற்கு (மணமக்களாக வீட்டிற்கு வருகை தரும் சமயம்) மணமகன் வீட்டினரால் அளவான தங்கமோதிரம் செய்விக்கப்பட வேண்டும்.
9. திருமணவைபவம் நடை
பெறவிருக்குமிடத்தில் (மணமகள்
தை 2004
வீட்டில் அல்லது கல்யாண மண்டபத்தில்) மணவறை, மின்சார அலங்காரம், ஒலி - ஒளி இணைப்புக்கள், மணப்பந்தல் அலங்காரம், இருகதலிப் பழக் குலைகளுடனான வாழைகள் ஆகியவற்றுக்கு உரிய ஒழுங் குகள் மணமகள் வீட்டினரால் மேற்கொள்ளப்பட வேண்டும். மணவறை வைக்கும் இடத்தின் உயரம் மணவறையின் உயரம் முன்கூட்டியே கவனத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். கல்யாண மண்டபமானால் பதி வான சீலிங் (Ceing) இருக்கு மாயின்மணவறை முழு உயரத்தில் வைக்க முடியாத நிலைமை ஏற்படலாமல்லவா? மணவறை கிழக்குத் திசை நோக்கியே வைக்கப்பட வேண்டும்.
10. மணமகன் வீட்டிலும் மணமகள் வீட்டிலும் கன்னிக் கால் (அரசாணி) நடப்படுதல் மங்கள வைபவம் நடைபெறப் போகின்றது என்ற சம்பிரதாயப் பூர்வமான அறிவித்தலாகும்.
11. வீடியோ படம், நிழல் படம் எடுப்பவர்களுக்கு முன் கூட்டியே நேரகால நிகழ்ச்சி நிரல் விவரமாகக் கொடுக்கப் படல் வேண்டும். அத்தோடு மணமக்களுக்கு எப்பொழுதும் பிரதான இடம் வழங்கும் நிலைக்கு எவரும் எச்சந்தர்ப் பத்திலும் தடையாக முன்னிற் காமல் நிகழ்வுகளைத் தெட்டத் தெளிவாக வீடியோ படம் பிடிப்
60

86)60)u
பதற்கு உதவியாக நடந்துகொள்ள வேண்டும்.
பார்வையாளர்கள் முதல் சிறுபிள்ளைகள் ஈறாக அனை வரும் இவ்விடத்தில் அவதானிப் புடன் இருக்கவேண்டும்.
12. திருமண வைபவம் நடத் துவதற்கு மணமகள் வீட்டினர் குருக்கள் ஒருவரைத் தேர்ந் தெடுத்து மணமகன் வீட்டினரின் சம்மதம் பெற்று அவருக்கு அழைப்பிதழ் கொடுக்கவேண்டும். 13. பிள்ளையார் பூசையா அல்லது ஒமகுண்டப் பூசையா என்பதைக் குருக்களுக்குத் தெரியப்படுத்தவேண்டும். (ஒம குண்டப் பூசையாயின் குருக் களுக்கு உதவியாளர் தேவைப் படும்).
14. மேளதாள நாதஸ்வர இசையாளர்களுக்கு முன்கூட்டியே ஒழுங்குசெய்தல் வேண்டும். அவர்கள் மணமேடைக்குச் சமீப மாக அமர்ந்து கம்பளங்களில் இருக்கக்கூடியவாறு செயற்பட்டுத் திருமண நிகழ்ச்சி அனைத்தையும் காணக்கூடிய தாக இடஒதுக்கீடு செய்யப்படவேண்டும்.
15. திருமண வைபவத்துக்கு வருகைதரும் விருந்தினர்களுக்கான குளிர் பானங்கள் சிற்றுண்டிகள் சாப்பாடு வகைகள் முதலியவற் றுக்கான ஒழுங்குகளையும் முன் கூட்டியே மணமகள் வீட்டினரால்
கவனிக்கப்படல் வேண்டும்.
(திருமணம் மண்டபத்தில் நடை
தை 2004
பெறுவதானால் அதற்கேற்ற ஒழுங்குகள் அங்கேயே கிடைக் கலாம்.)
16. மணமகள் வீட்டினர் திருமண வைபவம் நடத்தும் குருக்களிடமிருந்து ஒமகுண்ட அக்கினி வளர்த்தல் அர்ச்சனைக் கிரிகைகள் போன்றவற்றுக்கான பொருட்களின் பட்டியலைப் பெற்று அவற்றைச்சுதேசவைத்திய மருந்துக்கடையில் பெற்றுத் தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும்.
17. மணமகன்வீட்டு வாசலிலும் மணமகள் வீட்டு வாசலிலும் (கல்யாண மண்டபத்திலும்) மேசைகளில் இரண்டு குத்து விளக்குகள் நீருடனான நிறைகுடம் ஒன்று தலைவாழையிலையில் நெல் பரவி முடியுள்ள தேங்காய், மாவிலை 5 வைத்து, சந்தணக் கும்பா, நறுமணமுள்ள பன்னீர் கொண்ட பன்னீர்ச்செம்பு, மஞ்சள் குங்குமம் உள்ள குங்குமச் சிமிழ் -அதாவது பூரணக்கும்பம் வைக் கப்பட்டிருக்கவேண்டும். வாசலில் கோலம் இட்டிருத்தல் வேண்டும். (ஆரத்தித்தட்டு திரிநூல்கள் தேங்கா யெண்ணை தீப்பெட்டி போன்ற அத்யாவசியப் பொருட்கள் மேசை யின் கீழ் தயார் நிலையில் வைக் கப்பட்டிருக்க வேண்டும்).
18. தேங்காய் உடைப்பதற்கான கத்தி, இளநீர் ஊற்ற, பாத்திரம் முன்கூட்டியே தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
67ம் பக்கம் பார்க்க.
61

Page 33
கலப்பை
தை 2004
50th page continue.
They indulge in open racism and show prejudice against the westerners. (whom according to the omniscient Hindu Tamils are completely immoral, dirty and without values). Besides this, they have the audacity to assume that their children (suffering from hybrid- identity crisis) are prepared to hurt their families and renounce their Hinduism in order to blindly and fervently embrace the whims and fancies of the westerners. How absolu tely presumptuous of them and how very wrong to.
Do you realise that culture is only what the people make it? Just like we have our culture, others too have their own culture, and we have no right to think that our culture is any more correct or better than others are. You have no right to call their culture immoral and indecent, because to them it's right. I don't think that I can explain it better. By saying don't do what other white people do because it is wrong, and by not giving us any solid reason or proof why they are so wrong all you succeed in doing is making the youth resent you, they expect us to follow them blindly.
Furthermore you said that the Westerners have an undisci
plined way of life but the youths counter that by saying, "yes they do but so do the Hindus, only we are too hypocritical to admit it". Hindu Tamils have an abundance of pride which is one of mans greatest downfalls. We are so determined to have something to be proud of and we spend our whole life trying to be better than "others" do. We are competitive, to the point of obsession, and our whole society exists on pretenceS.
We all want our kids to do well in school, but the catch is, we have to do something that is acceptable by our community Eg. Go to university become a doctor or lawyer, earn lot of money, marry into a good family, have the currently fashionable number of children - only then will we have the respect of our people. Our character and personality are worth nothing if we do not have prestige. We want respect, honour, fame and immortality and so on it goes. Are you not ashamed Great Uncle to think this way? Do you realise that you forgot to mention happiness, peace and contentment with whatever you do and who you are?
Now coming to the question of loving and respecting our parents, what makes you think that we do not already do this? Do
62

கலப்பை
தை 2004
you go by the fact that we "think for ourselves" or by the fact that we refuse to be our parents' puppets? Why did God give us the power of discrimination if we are not allowed to use it? If He had meant for our parents to discriminate between what is right and wrong for us then wouldn't He have made sure that we only receive their power of discrimination upon entering adulthood or even parenthood?
We understand that we must listen to our parent's advice because they care about us and have only the best intentions. However, we also understand (yet you do not seem to) that parents can be wrong, that despite their good intention they themselves can cause us a lot of misery. You said that our parents are aware of how many youths are leading a miserable life because they did not listen to their parents or elders. Do they also know how many are living in misery because they did listen? They did not have to deal with the two conflicting sets of values that we have to deal with. So then tell me how can they possibly know what the right thing to do is? If they have experienced it themselves, how do they know that their way is the right way to handle things?
I could go on forever. My friends and I have spent many hours discussing these things and I can assault you with our theories and arguments for another ten pages, but I won't. Please understand that I am not being impertinent or disrespectful to you, or anyone else for that matter. I am only telling you the way things are from our end. I know that you think that I am just an immature, idealistic teenager, but I hope you can get over that and try and understand what I have said. Know that I am not "renouncing" spirituality or religion but only refusing the way of my "culture". I pray to God, talk to him, chant the Gayathri and listen to my conscience and I always will.
Yours sincerely Your Grand Niece
The reply received indicates that she has not properly understood what our Hindu culture is, and I believe so with her knowledge of Hinduism even though she says that she understand Hinduism well.
She seems to be wild with the Hindu elders and she thinks that they have praised Hinduism and Culture very high and comparatively led down the Westerners and their way of life.
She accuses the elders for not
63

Page 34
கலப்பை
providing enough reason and explanation when they find faults in them. It is not possible to agree that youths too are living in misery because they listened to their parents
The youths of today have to face two conflicting set of values is quite acceptable.
Now follows the final reply and observation made on the let
terS.
Dear Grand Niece,
Thank you for the reply. It seems to have helped you to give out some views, which have been worrying you for some time. However it is helping me to explain certain facts, which appears to be incorrect in my opinion.
(1) You seem to have got an erro
neous view of our Hindu culture. It is revolting to common sense to dub such a valuable Hindu culture as a source of pain and discontentment. You are very fortunate today to know some profound truths on our Hindu culture which you would have never learnt before. It is coming from a very great spiritual leader who is considered as the Avatar of the day by millions of His followers.
“CULTURE DIS THE REALIZATION OF INHERENT QUALITIES
og 2004
OF A PERSON AND MAKING TT MANIFEST IN ONE'S WAY OF LIFE, EVERY PERSON IS AN INHERITOR OF TRUTH AND RIGHTEOUSNESS. CULTURE IS A PROCESS OF REFINEMENT, REFINEMENT ALWAYS PURIFES THE PRODUCT AND ENE ANCES ITS VALUE. CULTURE REINES
THE HUMAN SPIRIT AND MAKES A MAN A COMPLETE HUMAN BEING.IT SEEKS TO INTERGRATE
THE VARIOUS ASPECTS OF
DAILY LIFE AND DEVELOP A
USEFULOUTLOOK. HINLDU CULTURE IS THE MANIFESTATION
OF THE ETERNAL TRUTHS
WHICH DOES NOT CHANGE WITH TIME, DOES NOT GET CORRUPTED BY HISTORY, DOES NOT GET DESTROYED BY ELEMENTS,
IT IS EXTREMELY NOBLE AND
SACRED. ABOVE ALL IT CAN
CONFER ATHMIC BLISS. IT IS FOR
THESE VALUES MANY WEST
ERNERS GO TO INDIA TO LEARN
HINDU CULTURE. A LIFE WITH
OUT CULTURE IS LIKE A TEMPLE
WITHOUT GOD.IT WILL BE ONLY
A HAUNTING PLACE FOR SNAKES AND BATS"
With all these, yet it is the characteristic of a good Hindu not to claim that Hindu culture is the best as he embraces all religions and culture as good and never criticize them. I am sure that your prejudiced view cf cul
64

கலப்பை
தை 2004
ture will get cleared and your intellect will be illumined once you read, understand and assimilate the above facts.
(2) As for your doubts whether culture and religion are same it is said that our religion Hinduism has profoundly influenced the lives and thoughts of countless millions of Hindus from their cradle to grave and it has left an indelible impression on the Hindu culture.
(3) You have shot an arrow of accusation indirectly at me misquoting from my letter that I have called the western culture as immoral and indecent. Read those relevant lines again. You have taken my words out of context and only confusing the word habit with 'culture'. Now you have known a lot about culture and now let us see what a habit
is:
Habit is an acquired aptitude or inclination to a particular action, instilled by repetition.
In this modern age everyone need to be trained because they have so much temptation placed before them so it is a matter of developing a taste for better habits and conquer bad and evil habits such as smoking and drinking.
(4) You say that parents too
make mistakes and make the life
of some youth miserable. I think this is the last thing a Hindu parent will do. They are even prepared to sacrifice their lives to see that their children lead a good life. Do you know that the mother's love for her child is the greatest thing in the world. A child is made of its mother's blood and food (she took while carrying the baby in her womb along with the lofty ideas and ideals)
Food does not mean only what you take through the mouth, it refers to what one takes in through her five senses. You may have acquired lot of bookish knowledge during your studies which a mother need not know, You may know how to manipur late electronic devices which she may not know. These do not mean that you are superior to her and that she is ignorant and liable to do wrong things to her
children.
Love and blessings Yours sincerely
Great Uncle
How to deal with the Gene ration gap?
The above three letters is only a minute fraction of the views of parents, grand parents and the grand children. This is only an inkling of a vast field of views. Views can be as many as the
65

Page 35
கலப்பை
a 2004
number of children and parents there are in this world.
However, we are aware that there is a generation gap and we must give our best attention to narrow the gap as much as possible without causing unnecessary unpleasantness among the parents and children. This generation gap is not a new thing born after our immigration to foreign countries. This was there earlier in a mild form in our countries. As civilization grows, our ways of thinking, behaving, speaking, working, eating everything changes. While one generation who are used to one way of living embrace their ways while the next generation cling on to the developments and new inventions The best part is while in
our motherland we tolerate the
changes and even boast about them. This is because there is no clash in culture. The ways of living also changes gradually and not instantly as it is happening
OW.
1. Some parents manage to maintain some discipline at home from the very young days of the children and are able to narrow the gap.
2. Some give all the comforts and knowledge and find that they are unable to narrow the gap as they are unable to
spare enough time with the children and they ar' ('a lit up in the usual rat- race ('on mon to civilized countries.
3. We must also understand that the children here spend most of the time in Nchools and outside with the children of this country. Therefore, they follow their habits a hill foot. We must understand that this is a period of transition where our youths are exposed to an entirely different culture. This is causing a certain amount of confusion in their minds.
4. We have to explain coolly what is correct and what is wrong in a very understantlable way. Parents must move very closely with the children and explain things in a reasonable way, so that they may be able to take to their hearts and not the heads.
5 One side the parents are trying to influence and on the other side the classmates and friends are trying to influence the youths. Unless they have acquired a clear vision of their culture from their young days the youths will try to follow the friends' side only.
66

கலப்பை
தை 2004
61ம் பக்கத் தொடர்ச்சி.
இரு வீட்டினரும் யாரால் தேங்காய் உடைக்கப்படவேண்டும் என்பதை முன்கூட்டியே தீர் மானித்து (அனேகமாக மணப் பெண்ணின் தாய்மாமனால்) அவர் அவ்வப்போது செயற் படக்கூடியதாக ஏற்பாடு செய்ய வேண்டும்.
19. மண்டபத்தில் திருமணம் நடைபெறுவதானால் மணமகள் திருமண சுபநேரத்துக்கு 1 மணித் தியாலத்துக்கு முன்னதாகவே திருமண மண்டபத்துக்கு வந்து சேரத்தக்கதாக நேர அட்டவணை தயாரிக்கப்பட்டு நிகழ்ச்சிகள் துரிதப்படுத்தப்பட வேண்டும்.
20. மணமகளைப் பல்வேறு
கோணங்களில் வீடியோபடம் எடுப்பதற்குக் குறைந்தது 15 நிமிடங்களாவது ஒதுக்கப்பட
வேண்டும். அதற்கு ஏற்றவாறு மணமகள் அலங்காரம் குறிக்கப் பட்ட நேரத்துக்குள் தயார்படுத் தப்படுவதை அலங்காரம் செய் பவர் மனதில் வைத்து இருக்க வேண்டும்.
21. மணப்பெண் வீட்டாரும் மணமகன் வீட்டாரும் திருமணக் கொண்டாட்டங்களில் கலந்து சிறப்பிக்க வருகை தந்திருக்கும் விருந்தாளிகள் அனைவரையும் இன்முகத்துடன் வரவேற்று ஒழுங்கு முறையாகக் குளிர் பானங்கள் சிற்றுண்டிகள் கொடுத்துக் கெளரவிக்கப்படுவதை உன்னிப்பாகக் கவனித்து துரிதப் படுத்திக் கொள்ளவேண்டியது
அவசியம் என்பதனால் அதற்
கெனச் சுறுசுறுப்பானவர்களைத்
தேர்ந்தெடுத்து யார் என்ன செய்யவேண்டும், எப்போது செயல்படவேண்டும் என்று அவரவர்களிடம் பொறுப்பு கொடுக்கப்பட்டு இன்னொரு வரால் அவையனைத்தும் கன் காணிக்கப்படவேண்டும்.
22. யார் மணமகளின் தோழி யார் - மணமகனின் தோழன் யார், யார் மணமக்களுக்காகச் சங்கற்பம் செய்யும் சுமங்கலிப் பெண்கள்என்பதை முன்கூட்டியே தீர்மானித்து ஒழுங்கு செய்ய வேண்டும்.
23. திருமணத்தை நடத்தும் குருக்களின் கவனத்துக்காக மண மகன் மணமகள் இருவரது பூர் வீகப் பெயர் விவரங்கள் எழுதிக் கொடுக்கப்படல் சாஸ்திரப்படி அவசியமான ஒன்றாகும்.
இப்படியும் தவறுகள் ஏற்
Ll 6) T. D.
1. திருமண வைபவ இடத் துக்கு மணமகன் வீட்டினர் பொன்னுப்பெட்டி (தங்கத் தாலி யுடனான கொடி கூறைச் சேலை யாகியன)யை எடுத்துவர மறந்து விடுவதால் காலதாமதம் ஏற் படல்.
2. மணவறைப்படலின் உயரம் 12 அடி வைத்து அலங்கரிக் கப்பட வேண்டிய மாடி வீடு அல்லது சீலிங் உயரம் 10 அடியானதால் மணவரையை அரைகுறையாக்கப்படாமல் கவனித்திருக்கலாம்.
3. மணமகன் மண்டப வாசலில் வந்து சேர்ந்த பின்பு தான் கால்கழுவத் தேவையான செம்புக்கும் தண்ணிருக்கும்
67

Page 36
கலப்பை
ஆளாய்ப்பறந்த சம்பவங்கள் நிறைய உண்டு. அவதானமாயி ருந்தால் 5 நிமிடச் சுணக்கம் தவிர்த்திருக்கலாம்.
4. ஆரத்தி எடுப்பதற்கான சமயங்களில் அக்கடமைக்கென நியமிக்கப்பட்ட சுமங்கலிப் பெண்கள் அவ்விடத்தில் இல்லாத தால் தாமதம் ஏற்பட இடமுண்டு.
5. ஆரத்தி வலப்பக்கமாகவா அல்லது இடப்பக்கமாகவா சுற்றி எடுப்பது என்று இருபெண்களும் சில சமயங்களில் தடுமாறுவ துண்டு. எப்பொழுதும் மணமக் களை நோக்கி வலப்பக்கமாகவே ஆரத்தி எடுத்தல் வேண்டும்.
6. விவாகப் பதிவுக்காரர் வந்த பின்னரே ஆவணங்களுக்கும் பொறுப்புள்ள சாட்சிகளுக்கும் ஒடித்திரிந்த சம்பவங்களுமுண்டு.
7. பூதாக்கலம் என்றழைக்கப் படும் புதுமணத்தம்பதிகளுக் கான மணமகள் வீட்டினரால் முன்கூட்டியே தயாரிக்கப்பட்டுக் கொண்டு வராத காரணங்களினால் சாதாரண உணவைக் கொடுத்த சம்பவங்களும் உண்டு.
8. தாலிக்கொடியிலுள்ள சுரை சரியாக இயங்குகின்றதா என்று முதல் நாளே மணமகன் வீட்டி னரால் சரி பார்க்கப்பட வேண்டும். 9. மணமகளின் முக்காடு எனப்படும் முத்திரைச்சீலை (wel) பளபளக்கும் (glittering) வேலைப் பாடுகள் உள்ளதைத் தேர்ந்தெ டுப்பதால் வீடியோ படப்பிடிப் பின்போது நன்றாகக் காட்சி தரா தென்பதால் சாதாரண முக்காடு அணிதல் நன்று.
இரு வீட்டினராலும் நாட வேண்டியவர்கள் பட்டியல்:
தை 2004
1. வீடியோ படப்பிடிப் பாளர், நிழல் படப்பிடிப்பாளர் வாழ்வாங்கு வாழவேண்டுமென் பதற்காகவே பூரீதனம் எனப் படும் மூலதனம் (dowry), அன் பளிப்புக்கள் (presents) கொடுக்கப் படவேண்டும் என்ற எழுதாச் சட்டம் தமிழ் மக்களிடையே பண்டைய காலம் தொட்டு வழங்கப்பட்டு வருகின்றது. பூரீதனக் கொடுப்பனவின் உண்மை யான நோக்கம் என்று துஷ்பிர யோகப் பட்டாலும் அதன் ஆரம்ப கால நோக்கம் மிக நல்லதே.
வழிபாட்டுத்தலமொன்று பக்தர்களின் ஈர்ப்புச் சக்தியாக மாறுவதற்கு தெய்வச் சிலை களின் கலையம்சம், கோயிலின் அழகு, புனிதத்தன்மை, பூசகர் களின் அன்பான, பண்பான, பக்திபூர்வமான நடைமுறைகள், அபிஷேக ஆராதனைகள் மேள தாள நாதஸ்வர ஆரவார ஒலி, ஒளி, எழில் காட்சிகள் யாவும் துணைநிற்பதுபோல நல்ல என் ணங்களின் கலப்பில் உண்டாகும் தெய்வீகப் பேருணர்ச்சியின் அன்புப் பிணைப்பு மட்டுமே தாம்பத்ய வாழ்வின் இணைப் புப்பாலமாக அமையும் என்பது எல்லோரும் ஏற்றிப் போற்றிக் கைக்கொள்ளப்படவேண்டிய உன்னதமான தத்துவமாகும்.
உலகப் பொருளாதாரத்தின் ஆணிவேர் தங்கம் என்பது நான் சொல்லி நீங்கள் தெரிந்திருக்க வேண்டியதில்லை. அன்று மண மகனின் குடும்ப ஆதிக்கத்தை நிலை நாட்டி வலுப்படுத்து வதற்குக் காரணமான மஞ்சள் நூல் மூன்று முடிச்சாகி இன்று
68

கலப்பை
பொருளாதாரப் பரிமாணம் பெற்றுப் புனிதமான பொருட் காட்சிப் பண்டமாக மாற்றப் பட்டுள்ள பொற்தாலியானது நியாயமான பெண்ணியச் சிந்தனையாளர்கள் மத்தியில் மங்கை யொருத் தி யின் மீது திணிக்கப்படும் தங்கத்திலான சுருக்குக் கயிறாகவே கருதப் படுகின்றது.
இந்தத் தப்பான நிலை மாற வேண்டும். அதற்காகச் சகல சம் பிரதாயங்களும் ஒட்டுமொத்தமாக மாற்றப்படவேண்டுமென்பது என் வாதமல்ல. இன்றைய சில இளைஞர்கள் ஒரு காதில் கடுக்கன் அணிகின்றனர். அது தமிழ் நாகரீ கத்தின் பாதிச் சின்னம்.
விவாக மேடையில் மண மகனுக்கு மணமகள் இரண்டு காதுகளிலும் பகிரங்கமாகக் கடுக்கன் அணிவித்த பின்ன தாகவே அவள் கழுத்தில் மண மகன் தாலி அணிவிக்க அவனுக்கு உரிமையுண்டு என்று தமிழ் மகளிரின் சமத்துவ உரிமைக்காக நாம் ஆணாதிக்க உலகில் போர்க் கொடி எழுப்பவேண்டும் என்பது எனது புத்திமதியாகும். அதை விரும்பாதவர்கள் பெண்ணின் சமத்துவத்தைப் பிரதிபலிக்கும் வகையில் மணமகனுக்கு மண மகளின் தந்தையானவர் தலைப் பாகை அணிவிக்கும் வழக்கத்தைக் கைவிட்டு மணமேடையிலே மணமகளானவள் தனக்குத் தாலி அணிவிக்கப் போகும் மணவாள னுக்குப் பகிரங்கமாகவே தலைப் பாகை அணிவித்து மணமகளின் சுயாதிபத்தியத்தை நிலைநாட்டப்
தை 2004
பெரியோர்கள் அனுமதிக்க வேண்டும். அத்துடன் மணமகன் கொண்டு வரும் ஆடைகளை அணிந்துதான் மணமகள் மணி மேடைக்கு வரவேண்டும் என்ற நியதி அகற்றப்பட வேண்டும். அது மணமகளை அடிமை என்ற நிலைக்கு இட்டுச் செல்லும் சம்பிரதாயங்களில் ஒன்று என்பதனா லேயே அதை அகற்றவேண்டும் என்கின்றேன்.
ஆஸ்திகர்களின் சட்டதிட்டங் களுக்கு அடிப்படை ஆகம விதிக ளாகும். அதை எதிர்க்கும் நாஸ்தி கர்களின் சில வாதங்களில் நியாயங்கள் இல்லாமலில்லை. பழையன கழிதலும் புதியன புகுதலும் நன்மைக்காகவே. என் றாலும் மாற்றங்கள் எதிர்மாறான ஏமாற்றங்களை ஏற்படுத்தக் கூடாது என்பது முக்கியம். என்ன தான் அவர் அடித்துக் கூறினாலும் பண்டையப் பாரம்பரியங்கள் சிற்சில மாற்றங்களுடன் கட்டாயம் பேணப்பட வேண்டும் என்பதில் தமிழ் மக்கள் பல நூற்றாண்டு களாக மிக விழிப்பாகவே இருக் கின்றதைக் காணக்கூடியதாக இருப்பதால் இத்தகையதொரு புதிய சமத்துவ நடைமுறையே புதுமணத் தம்பதிகளிடையே தன்னம்பிக்கையை ஊட்டிப் புரிந் துணர்வுக்கு வழிவகுத்து ஆண் பெண் சமத்துவம் பேணி உண்மை யான தாம்பத்ய உறவுக்கு நிச்சயம் அடிப்படைப் பாலமாக வழி வகுக்கும் என்பது என் அபிப் பிராயமாகும். O
(சுபம்)
69

Page 37
த்
சி
சி D
9.
r
வாசித்த போது
பிறமொழி எழுத்துக்களுக்கு இல்லாத ஒரு சிறப்பு தமிழ் எழுத்துக்களுக்குண்டு. அவற்றில் ஒன்று 'ழ' என்ற எழுத்து. ல, ள என்ற இரு எழுத்துக்களோடு 'ழவும் நின்று, தமிழ் எழுத்துக்களுக்கே ஒரு தனிச்சிறப்பை அளித்து வருகின்றது.
ஆங்கிலம், பிரஞ்சு, இலத்தீன், கிரேக்க, சீன, ஜப்பானிய, அரேபிய, உருது, வங்காள, குஜராத்திய, மராட்டிய, சமஸ்கிருதம் போன்ற பழைய மொழிகளும், நேற்று வந்த இந்திமொழியிலும் கூட'ழ' என்று ஒலிப்பதற்குரிய எழுத்து இல்லை.
உலகில் எந்த மொழியிலும் இல்லாத ஒரு சிறப்பு எழுத்து தமிழ் மொழியில் மட்டுமே இருந்து தமிழைச் சிறப்பித்து வருவதால், இது 'சிறப்பு ழகரம் எனக் குறிப்பிடப்பெற்று வருகின்றது.
தமிழ் நடையில் பாதிரித் தமிழ் என்றும் ஒரு நடை உண்டு. அது 'பிறியமானவர்கலே நான் உங்கலைக் கேட்டுக் கொல்லுவது என்ன வென்றால் என்றிருக்கும். கொல்லுவது என்று வந்தபிறகு, கேட்டுக் கொல்லு வானேன். கேளாமலே கொல்லலாமே என்று எண்ணத் தோன்றும். பாவம் அவர்களைக் குறைகூறிப் பயனில்லை. அவருக்கு ’ள, 'ல, 'ழ'என்ற எழுத்துகளின் வேற்றுமை தெரியாது. இம்மூன்று எழுத்துக்களுக்கும் அவர்களிடம் 'எல் என்ற ஒரே ஒரு எழுத்துதான் உண்டு. அந்த ஒன்றை வைத்தே இந்த மூன்று ஒலிகளையும் ஒலித்துத் தீர வேண்டிய நிலையில் இருந்து வருகிறார்கள்.
தமிழின் ஒரு சொற்றொடரிலும் இம்மூன்று எழுத்துக் களையும் காணலாம். இதற்கு எடுத்துக்காட்டாக 'மாலைப் பொழுதில் காளை வந்தது என்பதைக் குறிப்பிடலாம். இதைப் பாதிரிமார்களில் சிலர்'மாலைப் பொழுதில் காலை வந்தது என்றே கூறுவர். ‘மாலையில் காலை எப்படி வரும்? என்று கேட்டால் அவர்களும் நம்மோடு சேர்ந்தே சிரித்துவிடுவர்.
'தொழிலாளி என்ற ஒரே சொல்லில் இம்மூன்று எழுத் துக்களையும் காணலாம். அவர்களின் எழுத்துக்களைக் கொண்டு 'தொலிலாலி என்றுதான் எழுதமுடியும். இதற் காக நாம் வருந்தாமல் அவர்கள் மீது இரக்கம் காட்டியே ஆகவேண்டும். காரணம் அவர்களிடம் இருப்பது ஒரே ஒரு 'எல் மட்டுமேயாகும். அதை எண்ணும்பொழுது
ஆங்கிலம், அழகான பாஷை தான் அதற்கேற்ற எழுத்துத்தான் அவர்கிட்ட இருப்பதெல்லாம் ஒரு ஒரு எல்லுதான்
 

86)60)L ; தை 2004
என்று பாடலாம் போலத் தோன்றுகின்றது. தமிழிசை இயக்கம் என்ற ஓர் இயக்கத்தைத் தமிழறிஞர்கள் சிலர் கூடித் தமிழகத்திலேயே நடத்தித் தீரவேண்டிய இழிநிலை கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டிருந்தது. அதுபோது தமிழ் மக்கள் தமிழகத்தில் தமிழரிடையே நடத்தும் தமிழ் விழாக்களில் தமிழறிஞர் களைக் கொண்டு தமிழ்மொழியில் பாடச் செய்து தமிழ் இசையை வளர்த்தாக வேண்டும் எனக் கூறி வந்தோம்.
தமிழில் பாடத்தெரியாத சிலர் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துத் தமிழினப் பகைவர்களோடும், தமிழிசைப் பகைவர்களோடும் சேர்ந்து கொண்டு தமிழில் இசை இல்லை எனக் கூறிவந்தனர். தமிழில் உள்ள 11,991 வகையான பண்களையும், தமிழிசையில் உள்ள இசை நுணுக் கங்களையும் கொட்டிக் குவித்துக்காட்டினோம். எதிர்ப்பு அயரத் தொடங்கியது.
சிறிது காலஞ்சென்று, சென்னையிலிருந்து எதிர்ப்பு ஒன்று கிளம்பி தமிழில் இசை இருக்கலாம். இசைப் பாடல்கள் இல்லையே எனக் கூக்குரலிடத் தொடங்கியது. சங்க காலத்துப் பரிபாடலிலிருந்து, சைவ வைணவ காலத்துத் தேவார திருவாசக நாலாயிரப் பிரபந்தங்களை என்ணி, தாயுமான அடிகள், பட்டினத்தடிகள், இராமலிங்க அடிகள் ஆகியவர்களின் திருவடிகளைத் தொட்டு, அருணகிரி நாதரின் திருப் புகழைப்பாடி, அண்ணாமலையாரின் காவடிச் சிந்துகளை எடுத்து ஆடி, அருணாசலக் கவிராயரின் இராமநாடகத்தைப் பார்த்து, குணங்குடி மஸ்தான்சாகிபு, மாயூரம் வேதநாயகம்பிள்ளை ஆகியவர்களின் பாடல்களைப் பாடிப்பாருங்கள் என ஒரு பட்டியலையே தயாரித்து விட்டோம். எதிர்ப்பு படுக்கைக்குப் போய்விட்டது. w
மறுபடியும் கும்பகோணத்திலிருந்து ஒரு எதிர்ப்புக் கிளம்பி, இந்துப் பத்திரிகையின் துணைகொண்டு, தமிழில் இசை இருக்கலாம், இசைப்பாடல்கள் இருக்கலாம், ஆனால் இசைக் கருவிகள் இல்லையே எனக் கூறிக்கொண்டு வெளிவந்தது. இதைக் கண்டதும் 1800 ஆண்டு களுக்கு முன்பு தோன்றிய சிலப்பதிகாரத்தை எடுத்து முன் வைத்து சந்தனம், மூங்கில், கருங்காலி, செங்காலி ஆகியவற்றால் செய்த துளைக் கருவிகளாகிய குழல்களை ஊதி
7 - நரம்புகளையுடைய செங்கோட்டு யாழ் 16 - நரம்புகளையுடைய சகோட யாழ் 17 - நரம்புகளையுடைய மகர யாழ் 12 - நரம்புகளையுடைய பேரியாழ் ஆகிய நரம்புக்கருவிளை எடுத்து மீட்டி பேரிகை, படாகம், இடக்கை, உடுக்கை சீர்மிகு மத்தளம், சல்லிகை, கரடிகை தொக்க உபாங்கம், துடி, பெரும்பாறை
என மிக்க நூலோர் விரித்துரைத்துக்காட்டி தோற்கருவிகள் அனைத் தையும் கொட்டி முழக்கினோம். எதிர்ப்பு சாகத் தொடங்கியது.
செய்தி இவ்வளவோடு நின்று விடவில்லை. இரண்டாயிரம் ஆண்டு களுக்குப் பின்பு கும்பகோணத்திலிருந்து எவனாவது ஒருவன் தோன்றி
71

Page 38
கலப்பை (ÀY தை zoo
الامر ح\
தமிழில் இசைக்கருவிகள் இல்லை எனக் கூறுவான் என்பதை அறிந்த தமிழன்'இந்த இசைக்கருவிகள் யாவும் தமிழகத்தில் தமிழனால் கண்டு பிடிக்கப் பெற்றவை என்பதை மெய்ப்பிக்க அவற்றிற்குத் தமிழ் மொழியிலேயே சிறப்பாக உள்ள சிறப்பு 'ழ'கரத்தை ஒவ்வொன்றிலும் பதியவைத்து, தோற்கருவிக்கு முழவு எனவும், துளைக்கருவிக்கு 'குழல் எனவும், நரம்புக்கருவிக்கு யாழ் எனவும், பெயரிட்டு இவை அனைத்தும் தமிழனின் சொந்தச் சொத்து என்பதையும் அன்றே பதிவுசெய்து வைத்திருக்கிறான் எனவும் மழையும், புயலும் கலந்து இடி, இடியென இடித்தோம். எதிர்ப்புச் செத்து மடிந்து மண்ணோடு மண்ணாய்ப் போய்விட்டது. எப்படி, தமிழிசை இயக்கம் வெற்றிபெற இந்த 'ழ'கரம் செய்த உதவி?
தமிழ்ச்சொற்களைப் பல மொழிகள் கடன் வாங்கியிருக்கின்றன. வடமொழியில் 'பழம் என்ற சொல்லே இல்லை. அதனால் அவர்கள் தமிழ்ச் சொல்லையே கையாண்டு வருகின்றனர். சொல்லைக் கடன் வாங்கினாலும் எழுத்தைக் கடன் வாங்க முடியவில்லை. அவர்களிடம் 'ழ' இல்லாத தால் 'ல வை வைத்தே பலம் என்கின்றனர். இவ்வுண் மையை 'கதலீபலம் என்பதால் நன்கு அறியலாம்.
தமிழுக்குச் சிறப்பாக உள்ள இச்சிறப்பு 'ழ'கரம் தமிழரி டையே படும் பாடுகளை என்ன, எண்ண நமதுள்ள மெல்லாம் புன்னாகிறது.
தமிழகத்தின் தெற்கே உள்ள சிலர் ழ வை 'ள வாக்கி ஐயா கடைக்காரரே உம்மிடம் வாளப் பளம் உண்டுமோ? என்று கேட் கின்றனர். கிழக்கேயுள்ள சிலர்'ழ'வை 'ஷ வாக்கி 'மார்கSத் திருவிஷா என்கின்றனர். வடக்கே உள்ள சிலர் ழ வை 'ய வாக்கி 'வாயப்பயம் என்று கூறுகின்றனர்.
கோவைப்பக்கத்தில் ஒருவன் 'வாயப்பயம் 'வாயப் பயம் என்று கூறிக்கொண்டே போனான். புன்பட்ட உளத்தோடு அவனை அணுகி என்ன விற்கிறாய் என்றேன். 'வாயப்பயம் என்றான். நீ எந்த ஊர்? என்றேன். 'கியக்க என்றான். எனக்குக் கடுங் கோபம் வந்து ஏனப்பா தமிழை இப்படிக் கொலை பண்ணுகிறாய்? என்று கேட்டேன். அதற்கு அவன் அது எங்க வயக்கங்க என்றான். அவ்வளவுதான். அதற்கு மேல் நான் அவனிடம் பேசவில்லை. போய்விட்டேன். எப்படி தமிழுக்கே சிறப்பாக உள்ள 'ழ'கரம் தமிழரிடையே படும்பாடு?
தமிழ் என்ற மொழிப் பெயரிலும் இந்த 'ழ' எழுத்து "இருக்கின்றது. பேசு என்று ஏவுகிற மொரி என்ற சொல்லிலும் கூட இந்த 'ழ' எழுத்து இருக்கின்றது. இது நம்மிடத்தில் 'ழவை உடைய மொழி. தமிழ் என்ற பொருளையும் காட்டி நம்மை மகிழ்விக் கின்றது. இது காறுங் கூறியவைகளால் தமிழ் மொழியின் எழுத்துச் சிறப்பை ஒருவாறு அறியலாம்.
முத்தமிழ்க்காவலர், கலைமாமணி, டாக்டர் கி.ஆ.பெ. விகவநாதன்
அவர்களின் "தமிழின் சிறப்பு" என்ற நூலிலிருந்து இந்த ஆக்கம் வெளியிடப்படுகின்றது.
72
 

சஞ்சிகையின்
ωήήλωή ஆண்டுல்டி
இந்த விழாவில் பிரபல தமிழ்ப்பிரமுகர்கள் கலந்துகொள்ளவிருப்பத்துடன் இருநூல்களும் வெளியிடப்படவுள்ளன. கலப்பையில் வெளிவந்துஉங்கள்நெஞ்சங்களில்
நிறைந்த அந்தக் காலத்து=யாழ்ப்பாணம்
என்றதொடர் ==நூலாகமலர்கின்றது.
=அத்துடன் கலப்பையின் நீண்டநாள் 를 எழுத்தாளரும் கவிஞருமான திருமதிமனோஜெகேந்திரன்
= அவர்களுடைய கவிதைத்தொகுப்பையும்
சஞ்சிகைக்கனவிழாவிற்கு கலப்பை SIFrsssf.
அன்பர்கள் அனைவரையும்

Page 39
Dr. Jey C - Dr. S. Seen, D.
D AU S
Phone: O2
Opening Mon - Fri. 量 Sat3 Sun. Pub. Holidays.
 

ncan S.nini SeeGin goincinald