கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: காணிக்கை (சிறுகதைகள்)

Page 1


Page 2


Page 3

காணிக்கை
சிறுகதைகள்
யூ. எல். ஆதம்பாவா
இஸ்லாமிய நூல் வெளியீட்டுப் பணியகம்
வெளியீடு  ை13

Page 4
காணிக்கை சிறுகதைத் தொகுதி ஆசிரியர் : யூ. எல். ஆதம்பாவா முகவரி : 546 B, "ரயீஸா மன்வில்" சாய்ந்தமருது - 16, இலங்கை, வெளியீடு : இஸ்லாமிய நூல் வெளியீட்டுப் பணியகம், சாய்ந்தமருது, கல்முனை, இலங்கை, அச்சு : ஸ்டார் அச்சகம், சாய்ந்தமருது. ஒவியம் : ருத்ரா முதற் பதிப்பு : ஜனவரி, 1997 உரிமை : ஆசிரியருக்கு.
பக்கங்கள் : 112 + 16 விலை : ரூபா : 8000
KAANIKKAI
(A Collection of Short Stories)
Author : U. L. Athambawa
Address,: ʻʻRaieeza Manzilʼʼ
546 B., Sainthamaruthu - 16, Sri Lanka.
Publishers: Islamic Book Publishing Centre
Sainthamaruthu, Kalmunai, Sri Lanka.
Printers : Star Printers, Sainthamaruthu.
First Edition : January 1997
Copy Right : Author
Pages : 112 -- 16
Price : Rs : 80.00

அன்னைக்கு

Page 5
வெளியீட்டுரை
ஜனாப் யூ.எல்.ஆதம்பாவா அவர்களின் "காணிக்கை" எனும் இச்சிறுகதைத் தொகுதிக்கான வெளியீட்டுரையை வழங்குவதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
1961 இல் கவிதை எழுதுவதன் மூலம் இலக்கிய உலகில் பிரவேசித்த ஆதம்பாவா அவர்கள் கடந்த மூன்றரை தசாப்தங்களாக கட்டுரை, சிறுகதை, உருவகக்கதை, கவிதை ஆகிய பல்வேறு வடிவங்களிலும் தனது இலக்கியப் பங்களிப்புக்களைச் செலுத்தி வருகின்றார்.
அவரது உருவகக் கதைத் தொகுப்பொன்று "நாங் கள் மனித இனம்” எனும் பெயரில் 1991 நவம்பர் மாதத்தில் கல்முனை ஸாஹிறாக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் ஆறாவது வெளியீடாக வந்தது. தற்பொழுது இச்சிறுகதைத் தொகுதி இஸ்லாமிய நூல் வெளியீட்டுப் பணியகத்தின் பதின்மூன்றாவது வெளியீடாக வருவது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.
இருபது வருடங்களுக்கு முன்னர் கல்முனை பழைய மாணவர் சங்க நூல் வெளியீடுகளையும், பதின்மூன்று வருடங்களுக்கு முன்னர் இஸ்லாமிய நூல் வெளியீட்டுப் பணியக நூல் வெளியீட்டு முயற்சிகளையும் நண்பர்கள் சிலருடன் சேர்ந்து ஆரம்பித்து வைத்த காலத்தைப் பின் னோக்கிப் பார்க்கும் பொழுது மன நிறைவு ஏற்படுகிறது.
"சிறுகதை" என்பது ஐரோப்பிய இலக்கிய வழி முறையில் இருந்து தமிழுக்கு வந்த ஒர் இலக்கிய வடிவ மாகும். பொதுவாக வ. வே. சு. ஐயரின் “குளத்தங்கரை அரச மரம்‘ என்பதே சிறுகதை இலக்கணத்துக்குட்பட்ட தான முதலாவது ஆக்கம் எனக் கொள்ளப்படுகிறது. அன்றி லிருந்து இன்றுவரை இந்தியா, இலங்கை, ஏனைய தமிழ் பேசும் பிரதேசங்களிலும் இத்துறை வெகுவாக வளர்ச்சி யடைந்துள்ளது.
"காணிக்கை" எனும் இத்தொகுப்பு யூ. எல். ஆதம் பாவா அவர்களால் 1966 ஆம் ஆண்டில் இருந்து 1995 ஆம் ஆண்டு வரையான 30 வருடங்களுள் எழுதப்பட்ட

கதைகளை உள்ளடக்கியுள்ளாது, கால முதிர்ச்சிக்கேற்ப கதைகளின் சமூகப் பிரக்ஞை, பொது ஒழுக்க நெறி, யதார்த்த நிகழ்வுகள், கிராம வாழ்க்கை என்பன பிரதி பலிப்பதைக் காண்கிறோம்.
புனைகதை, ஓர் எழுத்தாளனின் கனவு நிலையிலோ கற்பனைச் சூழ்நிலையிலோ தோன்றியதல்ல. அன்றாட வாழ்வில் நடைபெறும் பல சம்பவங்கள் எழுத்தாளனின் மனதைப் பாதிக்கின்றன. அத்தகைய சிறு சம்பவங்களில் ஒன்றைக் கருப்பொருளாகக் கொண்டு கூட்டியும், குறைத் தும், திரித்தும், மாற்றியும், மெருகூட்டியும் எழுதப்படு வதே புனைகதையாகும். எனவே, புனைகதை வகைகளுள் ஒன்றான சிறுகதையை வாசிக்கும் பொழுது வாசகனை அதனோடு ஒன்ற வைத்து அவனையும் அச்சம்பவத்தினுள் ஈர்த்தெடுக்கும் கதையே இலக்கிய உலகில் நிலைத்து நிற்கக் கூடியதாகும்.
இந்நோக்கில் பார்க்கும் பொழுது யூ. எல். ஆதம் பாவா அவர்களின் சிறுகதைகள் அவர் வாழும் கிராமத்தின் சமூகப் பிரக்ஞையின் யதார்த்த நிலையைப் பிரதிபலிப் பதைக் காண்கிறோம்.
இத்தொகுப்பை இஸ்லாமிய நூல் வெளியீட்டுப் பணியகத்தின் மற்றுமொருபிரசுரமாக வெளிக்கொணர் வதில் மகிழ்ச்சியடைகிறேன். இந்நூலுக்கான ஆதரவினை வாசகர்கள் வழங்குவதன் மூலம் ஆதம்பாவா அவர்களுக்கு அல்லாஹ்தஆலா அளித்துள்ள அருட்கொடையான எழுத்து வன்மையை அவர் மேன்மேலும் விருத்திசெய்ய முடியும்.
அல்-ஹாஜ் எஸ். எச். எம். ஜெமீல் பி. ஏ. (சிறப்பு); கல்வி டிப்ளோமா; எம். ர. ஸ்தாபகத் தலைவர் - இஸ்லாமிய நூல்
வெளியீட்டுப் பணியகம்.
மேலதிகச் செயலாளர் - கலாசார, சமய 10- 05 - 1996. அலுவல்கள் அமைச்சு.

Page 6
அணிந்துரை
ஜனாப், யூ. எல். ஆதம்பாவா அறுபதுகளில் இருந்து ஆக்க இலக்கியப் பணியில் ஈடுபட்டு வருபவர். உருவகக் கதைகள் எழுதி முத்திரை பதித்த இவர், சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் என தனது படைப்பிலக்கியப் பணியை விசாலப்படுத்தியுள்ளார். இவரது உருவகக் கதைத் தொகுதி "நாங்கள் மனித இனம்” என்ற பெயரில் ஏலவே நூலாக வெளிவந்து பலரது பாராட்டையும் பெற்றுள் ளது. இப்பொழுது அவரது முதலாவது சிறுகதைத் தொகுதி “காணிக்கை" என்ற பெயரில் நூலுருப் பெறு கிறது.
ஜனாப், ஆதம்பாவா ஆரவாரம் காட்டாத ஒருவர். பழகுவதற்கு மிக இனியவர். கடந்த மூன்று தசாப்தங் களுக்கு மேலாக, படைப்பிலக்கியத்துறையில் தனது பங்

களிப்பைச் செய்து வருகிறார். இலக்கிய சம்வாதச் சர்ச்சை கள், சித்தாந்த உரசல்கள் போன்றவற்றில் தன்னைச் சங்கமப்படுத்திக் கொள்ளாதவர். இத்தனைக்கும் இவர் ஒரு புத்திஜீவி. அனுபவ முதிர்ச்சி வாய்ந்த பயிற்றப்பட்ட தமிழ் ஆசிரியர். நல்ல வாசகர். கலை இலக்கியக் களங்கள் பலவற்றைத் தன்னகத்தே கொண்ட கல்முனை ஸாஹிறாக் கல்லூரியில் நீண்ட காலமாக ஆசிரியப் பணி புரிந்து வரு பவர். புலனடக்கம் வாய்க்கப் பெற்ற கர்மயோக சித்தர் என்று இவரை நான் நினைப்பதுண்டு.
"வீடு முதல், "நினைவுகளும் நிகழ்வுகளும் ஈறாக பன்னிரு சிறுகதைகளை இத்தொகுதி கொண்டுள்ளது. இரண்டைத்தவிர தொகுதியிலுள்ள மற்றையக்கதைகள் அனைத்தும் இலங்கையின் தேசியப் பத்திரிகைகளில் பிரசுர மானவை. தியாகம்" 1966ல் சிந்தாமணியில் பிரசுரமாகி யுள்ளது. எண்பதுகளில் பிரசுரமான கதைகள் ஆறு. தொண் ணுாறுகளில்வெளியான கதைகள் ஐந்து, தொகுதியில் அடக்க மான எட்டுக் கதைகள் தினகரன் வார, நாளிதழ்களில் பிரசுரமாகியுள்ளன. எனவே, தினகரன் களத்தில் விளைந்த வராக ஜனாப், யூ. எல். ஆதம்பாவாவைக் குறிப்பிட வேண்டியுள்ளது.
எழுபதுகளில் எழுதிய கதைகள் எதுவும் இத்தொகுதி யில் இடம் பெறவில்லை. எழுபதுகள், இலங்கைத் தமிழி லக்கிய வரலாற்றில் முக்கியமானதும் சர்ச்சைக்குரியதுமான ஒரு காலப்பகுதியாகும். அறுபதுகளில் தேசிய இலக்கியக் கோஷமும், மண்வாசனைப் பண்புக்கு அழுத்தம் கொடுப் பது பற்றியும் ஓங்கி ஒலிக்கப்பட்டு, இலங்கைத் தமிழிலக் கியம் புதிய பரிமாணத்தை அடைய வழிவகுத்தன. எழுபது களில் எஸ். எல். பி., சமசமாஜ கொம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து அமைத்த கூட்டு முன்னணி அரசாங்கம், சோவு லிச ஜனநாயக இலங்கையை வடிவமைக்கப் புறப்பட சிங்கள தமிழ் மக்களிடையே வாழ்ந்த முற்போக்கு இலக் கிய கர்த்தாக்களும் ஊக்கம் மிகவுடையராகி, சோஷலிச யதார்த்த இலக்கியங்களின் அவசிவத்தை வலியுறுத்தினர்.

Page 7
அதன் எதிரொலி கல்முனையிலும் ஓங்கி ஒலித்தது. இடது சாரிகளின் மத்தியிலிருந்த மாக்ஸிஸ் லெனினிஸ் மாவோ யிஸ்டுகள் கூட்டு முன்னணி அரசைத் திரிபுவாதிகளின் கைப் பொம்மை என்றும், அரசின் நடவடிக்கைகளும், நிறுவ னங்களும் மக்கள் விரோதமானவையென்றும் கண்டித் தனர். இலக்கியத்திலும் இது பிரதிபலிக்க அந்தப் பிரதி பலிப்பு கல்முனையில் மூர்க்கம் பெற்று ஓங்காரமாக ஒலித் தது. 'கவிஞர் காங்கிரஸ் நக்ஸலைற் பாணியிலான மக்கள் இலக்கியத்தை வலியுறுத்தியது. மாறுபட்டவர்களை எந்த அளவுக்கு விளாச முடியுமோ அந்த அளவுக்கு விளாசியது. அதே ஆட்கள் எண்பதுகளின் பின் மனம் மாறி எழுபது களின் கோஷங்கள் அபத்தமானவை, படைப்புகளும் அத் தகையனவே என்று பேசவும் எழுதவும் முற்பட்டார்கள்.
இவற்றையெல்லாம் அரங்குகளில் அமர்ந்து செவி மடுத்தும் ஏடுகளில் படித்தும் பெற்ற அனுபவம் காரண மாகவோ என்னவோ, சர்ச்சைகளைத் தவிர்த்துக் கொள் ளும் தன்மையரான ஆதம்பாவா எழுபதுகளில் எழுதிய எதையும் இத்தொகுதியில் சேர்த்துக் கொள்ளாது விட்டார் போலும்.
தொகுதியில் இடம் பெற்றுள்ள "காsணிக்கை" கதை குறிப்பிடத்தக்க ஒன்று. தொகுதி முழுவதுக்குமான தலைப் பாகவும் "காணிக்கையே? அமைந்திருப்பதிலும் சிறப்புண்டு. தமிழ்ச் சிறுகதைப் பரப்புக்குத் தான் வழங்கும் காணிக்கை இத்தொகுதி என ஆதம்பாவா கொண்டுள்ள நம்பிக்கை தான் அந்தச் சிறப்பது.
ஆதம்பாவாவின் கதைகளுக்கு இரு முகங்கள் உண்டு. எளிதில் எவரும் படித்து விளங்கக்கூடிய பத்திரிகைக் கதை களாக இருப்பது ஒரு முகம். வியாபார நோக்கங் கொண்ட பத்திரிகைகளின் தேவைக்காக மாத்திரம் எழுதப்பட்டவை யல்ல இக்கதைகள் என்பது கதைகளின் மறு முகம். கதா சிரியர் ஒரு சமூகப்பங்களிப்பைச் சமூக யதார்த்தப் பாணி யில் செய்ய முற்பட்டிருக்கிறார் என்பதைக் கதைகள் துல்லி யமாக உணர்த்துகின்றன.

சொல்லும் பொருளும் சொல்லப்படும் முறையும் தான் ஒரு இலக்கியப்படைப்பின் தரநிருணயத்துக்கான முக்கிய அளவு கோலாகும். மற்றவையெல்லாம் இரண்டாம் பட்சமே, சொல்லும் பொருள் நேர்த்தியானதாகவும் சொல்லப்படும் முறை அழகு சார்ந்ததாகவும் அமைந்து கதை மனதைத் தொட்டு உருக்குமாக இருந்தால், அது ஒரு கலைப்படைப்பாக நிமிர்ந்து விடும். தொனிப் பொருள் தனி மனிதனுக்கும் சமூகத்துக்கும் பயன் படத்தக்க படிப் பினையைக் கொண்டிருக்குமாயின் அது சமூகப் பெறுமதி யிலும் உயர்ந்து விடும். སལ་ -
ஆதம்பாவாவின் கதைகளின் கருப் பொருள்கள், சமூகப் பெறுமதி வாய்ந்தவை. கற்பனையானவை அல்ல. தான் வாழும் சமூகத்தின் நிகழ்வுகளில் இருந்து, தனது புலநூணர்வுகளால் உள்வாங்கப்பட்டுத் தெரிவு செய்யப் பட்ட சம்பவங்களே கதைப்பொருளாக அமைந்துள்ளன. காணிக்கை. வீடு, ஆசை, நினைவுகளும் நிகழ்வுகளும், நஸிருக்கு இன்று நோன்புப் பெருநாள், தந்தையை விஞ்சிய தனயன் ஆகிய கதைகள் மனதைத் தொடவே செய்கின்றன. "வீடு", "ஆசை" இரண்டு கதைகளும் கணிப்பில் எடுக்க வேண்டிய கதைகளாகும்.
காணிக்கை" கதையின் டாக்டர் பலினா என்ற பாத்திர வார்ப்பு நன்றாக உள்ளது. பாடசாலையில் தனக்குத் தமிழ் படிப்பித்தவரும், பள்ளிப்படிப்பைக் கை விட இருந்த வேளையில் தக்க புத்திமதி கூறி படிப்பைத் தொடரச் செய்தவருமான ஆசிரியர் அனிஸ் அவர்களுக்குத் தனது முதல் மாதச் சம்பளத்தை காணிக்கையாகத்தர முன்வருகிறார் டாக்டர் பஸினா. ஏ. எல் வகுப்பில் பிரவேசித்ததும் ஒ எல் வகுப்பில் படிப்பித்த ஆசிரியர் களையே மதிக்கக் கூசும் மாணவர் சமுதாயத்தைத்தான் இன்று எங்கும் காண்கிறோம். (ஒரு சிலர் விதிவிலக் காக இருக்கலாம்.) மறைந்து கொண்டிருக்கும் குரு சிஷ்ய பாரம்பரியத்தையும், நன்றி உணர்வின் மேம்பாட்டையும் இக்கதை உணர்வு பூர்வமாகச் சித்தரிக்கிறது. இதெல்லாம் நடைமுறையில் இல்லாத விஷயங்கள் வலிந்து வரவழைக் கப்பட்ட முடிவு

Page 8
கதை இயல்புத் தன்மை இழந்து பிரச்சார நெடி வீசுகிறது என்று யாரும் கூறவும் கூடும். உள்ளதை உள்ளவாறு சொல்லுவது கலைஞனின் பணியல்ல. அது நிருபர்களின் வேலை. உள்ளதைத் தன் மனோரதியத்திற் கேற்ப புனைந்து கலைமயப்படுத்தவதும், தான் விரும்பும் கருத் துணர்வை வெளிப்படுத்துவதும், தான் சரிகாணும் சமுதாய விழுமியங்களை வலியுறுத்துவதும் கலைஞனின் கடமை. அது அவனது உரிமையும் கூட. நிழற்படம் உள்ளதை உள்ளவாறு காட்டும். ஒவியம் உள்ளதை, ஓவியனின் கற்பனைவளம், கருத்துச் சிறப்புகளின் கலவையாக வெளிப் படுத்தும். ஒவியனின் இடத்திலேயே கதாசிரியனை வைத்துக் கணிக்க வேண்டும்.
"வீடு" கதையில் வரும் தாயின் உணர்வுகள் ஆசை களுக்காக மனச்சாட்சிக்கு மதிப்பளிக்கும் எவரும் உருகாமல் இருக்க முடியாது. மகளின் வக்கரிப்பை வெறுக்காமல் இருக்க முடியாது. மாறி வரும், சமுதாய மனப்பாங்கை கதை வெளிப்படுத்துகிறது. 'ஆசை" கதையில் வரும் வயற் காரப் போடியாருக்குத் திருக்கைவால் அடி கொடுக்கலாம். அத்தகைய மன எழுச்சியைக் கதை தருகிறது. இதை ஆதம்பாவாவின் வெற்றி எனலாம்.
கதைகளில் ஆதிக்கம் பெற்றுள்ள உரையாடல்களைக் கறைத் 8 ம், மண்வாசனைப் பண்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தும் கதைகள் புனையப் பட்டிருக்குமாயின் உயர்ந்த இலக்கியத்தரத்தை இத்தொகுதி பெற்றிருக்கும்.
கரை அணைந்து பாயும் பொங்கு நீர்க் கங்கைப் பிரவாகமல்ல ஆதம்டாவாவின் கதைகள் மெல்லிதான சல சல ஓசையுடன் அரித்தோடி ஊட்டம் தரும் ஆற்றுப் பாய்ச்சல்தான் ஆதம்பாவாவின் கதைகள்.
இலக்கிய வேந்தன் மருதூர்க்கொத்தன் வி. 6 D. இஸ்மாயில் • دره -- به سده
மருதம்", மருதமுனை, 30 - 04 - 1996

தகவுரை
"யூ எல்' என எல்லோராலும் அன்போடு அழைக் கப்படுகின்ற யூ. எல். ஆதம்பாவா அவர்கள் கல்முனை ஸாஹிறாக் கல்லூரியில் நீண்ட காலமாக தமிழ் மொழி யைக் கற்பிக்கின்ற ஓர் ஆசிரியர்.
"நாங்கள் மனித இனம்’ எனும் உருவகக் கதைத் தொகுதி மூலம் இலங்கையின் இலக்கியப் பரப்பிலே விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சிலரோடு தன்னையும் இணைத் துக் கொண்டவர்.
"காணிக்கை" எனும் இச் சிறுகதைத் தொகுதி மூலம் சிறுகதை எழுத்தாளனாகவும் தன்னை ஸ்திரப்படுத்திக் கொள்கிறார்.
இத்தொகுதியில் இடம் பெற்றுள்ள கதைகளிலே இரண்டைத் தவிர ஏனையவை ஏலவே இலங்கையின் பிர பலமான பத்திரிகைகளான 'தினகரன்", "சிந்தாமணி", "சூடாமணி" போன்ற பத்திரிகைகளில் வெளிவந்து வாசகர் களின் ஏகோபித்த பாராட்டுதலைப் பெற்றமைக்கு நான் சாட்சியம் பகர் வேன். இஃதே வேளை மற்றைய இரு கதை களும்,'யூ எல் அவர்களது ஏனைய கதைகளுக்கு, சற்றுமே சோடை போகாதவை என்பதையும் நான் அறிவேன்.

Page 9
"யூ எல்” அவர்களின் சிறுகதைகள் பலவற்றை நான் பத்திரிகைகளில் படித்திருந்தாலும் மொத்தமாக - தொகுதியாக - காணிக்கையை படித்த போதுதான் அவரை நான் நன்கு இனங் காணக்கூடியதாக இருந்தது.
அவர்மீது நான் வைத்திருந்த இலக்கியப் பெறு மானம் அதிகரித்தது.
அவர் தேர்ந்தெடுத்துள்ள கதைகளின் கருக்கள் சற்று வித்தியாசமானவை.
வழமையாக சிறுகதையாசிரியர்கள் தேர்ந்தெடுக் கின்ற சீதனம், சாதிப் பிரச்சினை, குடும்ப உறவுப் பிரச் சினை, காதல் போன்றவற்றிற்கு அப்பாற்பட்டு மனித மனங்களைப் படம் பிடித்துக் காட்டுகின்றார்.
எடுத்துக்காட்டாக வீடு, காணிக்கை, ஆசை, நினைவு களும் நிகழ்வுகளும், தண்டனை போன்ற கதைகளைக் கூற முடியும். மேலும், "சிறுகதையென்ற பெயரில் நெடுங் கதைகளை நான் எழுதவில்லை" என்ற புதுமைப்பித்தனின் கருத்துக் கூட இவர் கதைகளைப் படித்த போது எனக்கு ஞாபகம் வந்தது.
சிறுகதையென்ற ஊடகத்தின் நோக்கத்தைப் புரியாது இன்றும் பல சிறுகதையாசிரியர்கள் நெடுங் கதைகளையே எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.
"யூ எல்" அவர்களின் எந்தக் கதையுமே அப்படி யில்லாமல் சிறுகதையம்சங்களோடு மிக மிக இறுக்கமாக பின்னப்பட்டிருப்பதால் தொய்வின்றியே வாசிக்கக் கூடிய தாயுள்ளது. தவிர, இவரது கதைகளை வெறும் பிரச்சாரத் தன்மை கொண்டவைகள் என்றோ, அல்லது, வெறும் கலைப் பிரசவங்கள் என்றோ தள்ள முடியாது. காரணம், இவர் தனது கதைகளை, மனிதப் பண்புகளைத் தேர்ந் தெடுத்து கலையம்சங்களோடு கலந்து அதீதக் கற்பனை என்ற கோட்டினைத் தாண்டிப் படைத்துள்ளார். அதனால்,

படிப்பவர் மனத்திலும் எதிர்கால வாழ்விலும் தாக்கத்தை யேற்படுத்தும் வண்ணம் இக்கதைகள் அமைந்துள்ள்ன. இவ்வாறு கதைகள் அமைவதற்கு இவரது தனிப்பட்ட சமூக அமைப்போடு சேர்ந்து கொள்கின்ற தன்மைகள் காரணமாக இருக்கலாம்.
கதாசிரியரும் நானும் சிறு வ்யதிலிருந்தே நண்பர்கள்.
இன்றுவரை அவரிடம் எதுவித கூடாத பழக்கத்தை யும் நான் காணவில்லை.
மது போதையில் இருந்து கொண்டு மதுப்பழக்கம் கூடாது என்றோ உள்ளொன்றும் புறமொன்றுமாக இருந்து கொண்டு வஞ்சகம் கூடாது என்றோ பக்குவமற்ற மனத் தோடு சமூக இணக்கமில்லாது இருந்து கொண்டு பண்புள்ள மனித ஜீவனே சமூகத்தின் உயிர் நாடி என்றோ இவர் கதைகளைப் படைக்கவில்லை,
நட்பிற்கும் ஒழுக்கத்திற்கும், வழிகாட்டும் ஆசிரியத் தன்மையோடும் இருந்து அவைகளுக்கு இலக்கணமாகத் திகழ்பவர்.
இதனால்தான் இவரது கதைகள் உயிரோட்டமுள்ள வையாக அமைந்து இலக்கியத்தரமும், சமூகப் பெறு மானமும், தாக்கமும் கொண்டவையாக அமைந்துள்ளன 6T6N anrib.
நண்பர் "யூ எல்' அவர்கள் எதிர் காலத்தில் புதுமைப் பித்தன், மாப்பசான், கலீல்கிப்றான் போன்ற சிறுகதை மன்னர்களின் வழி தொடர்ந்து மேலும் பிரகாசிக்க எனது வாழ்த்துக்கள்.
மணிப்புலவர் மருதூர். ஏ. மஜீத்
பி. ஏ. (சிறப்பு); கல்வி டிப்ளோமா
பிரதிக் கல்விப் பணிப்பாளர், பிரதேசக்கல்வி அலுவலகம், கல்முனை.

Page 10
மனந்திறந்து சில வார்த்தைகள்
நான் முப்பத்தைந்து வருடங்களாக, ஆக்க இலக்கியத் துறையில் ஈடுபட்டு வருகிறேன்.
இக்காலப்பகுதியில், உருவகக்கதை, சிறுகதை, கவிதை, கட்டுரை என்று இலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் எனது படைப்புகள் வெளிவந்திருக்கின்றன.
அவற்றிலே, உருவகக் கதைத் துறையிலே எனது ஆக்கங்களில் இருபத்தொரு உருவகக் கதைகளைப் பொறுக்கியெடுத்து நாங்கள் மனித இனம்" என்ற பெயரில், 1991 நவம்பரில், உருவகக் கதைத் தொகுதி யொன்றினை வெளிக் கொணர்ந்தேன்.
தற்போது, சிறுகதைத் துறையிலே, எனது படைப்பு களில் பன்னிரண்டு சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து "காணிக்கை" என்ற இத்தொகுதியினை வெளிக்கொணர் கிறேன். இதில், இடம் பெற்றுள்ள சிறுகதைகளில், "ஒரு விடிவெள்ளி உதயமாகிறது", "தந்தையை விஞ்சிய தனயன்’ ஆகிய இரு சிறுகதைகளைத் தவிர, ஏனையவை, தினகரன் வாரமஞ்சரி”, 'தினகரன்", "சிந்தாமணி", "சூடாமணி" ஆகிய இதழ்களிலே பிரசுரமானவை.
தத்தம் இதழ்களிலே, எனது சிறுகதைகளுக்கு களம் அமைத்துத் தந்து, ஆர்வமூட்டிய முன்னாள் 'தினகரன்' பிரதம ஆசிரியர், திரு. ஆர். சிவகுருநாதன், உதவியாசிரியர், திரு. எம். ஆர். சுப்பிரமணியம், தற்போதைய 'தினகரன்' பிரதம ஆசிரியர் திரு. எஸ். அருளானந்தம், முன்னர் வெளி வந்த "சிந்தாமணி" இதழின் பிரதம ஆசிரியராகவிருந்த வரும், தற்போது வெளிவருகின்ற "சூடாமணி" இதழின், பிரதம ஆசிரியராகவிருப்பவருமான, திரு. எஸ். டி. சிவ நாயகம் ஆகியவர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த நன்றி.

விஷேடமாக, 'தினகரன் வாரமஞ்சரி மூலமும், தனிப்பட்ட வகையிலும் எனக்கு ஊக்கம் தந்து நான் சிறு கதைத் துறையில், வளர்ச்சிகாண முக்கியமான ஓர் உந்து சக்தியாக விளங்கிய 'தினகரன்" உதவியாசிரியர், ஜனாப். ஏ. எச். சித்தீக் காரியப்பர் அவர்களை தான் மிக்க நன்றி உணர்வோடு எண்ணிப் பார்க்கிறேன்.
எனது இத்தொகுதி, இஸ்லாமிய நூல் வெளியீட்டுப் பணியகத்தின் மூலம் வெளிவருவதற்கு, வழி சமைத்த, பணியகத்தினருக்கும், குறிப்பாக, அப்பணியகத்தின், ஸ்தாபகர், கலாசார, சமய அலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளர், அல்-ஹாஜ் எஸ். எச். எம். ஜெமீல் அவர்களுக்கும், எனது இதய பூர்வமான நன்றி. இத்தொகு திக்கு வெளியீட்டுரை வழங்கியவர் என்ற வகையிலும் அவருக்கு மேலும் ஒரு நன்றி சொல்வேன்.
அத்தோடு, இக்காணிக்கை" க்கு அணிந்துரை வழங் கிய, ஒய்வு பெற்ற அதிபர், இலக்கியவேந்தன் மருதூர்க் கொத்தன் - வி.எம். இஸ்மாயில், தகவுரை தந்த, பிரதிக் கல்விப் பணிப்பாளர், மணிப்புலவர் மருதூர் ஏ. மஜீத், அட்டைப்படத்தை அழகுற வரைந்தளித்த,வெஸ்லி உயர்தர பாடசாலை ஆசிரியர், ஒவியர் ருத்ரா, இந்நூல் வெளி வருவதில் மிகவும் தூண்டு கோலாக விளங்கிய அதிபர், ஜனாப். ஏ.கே.எம். நியாஸ் ஆகியவர்களுக்கும் நான், நன்றி கூறக் கடமைப்பட்டவன்.
மேலும், இந்நூலை நேர்த்தியாக அச்சிட்ட, ஸ்டார் அச்சகத்தினருக்கும், இது, சிறப்பாக வெளிவர உதவிய ஜனாப். ஏ. எச். ஜஃபர் காரியப்பர் அவர்களுக்கும் எனது இனிப்பான நன்றி.
யூ. எல். ஆதம்பாவா
சாய்ந்தமருது - 16, இலங்கை - 07 - 08 - 1996

Page 11
வீடு 1 நளிருக்கு இன்று நோன்புப் பெருநாள் 10 ஒரு விடிவெள்ளி உதயமாகிறது 17 காணிக்கை 24
மீண்டும் அவன் சவூதிக்குப் போகிறான் 30 திருந்திய உள்ளங்கள் 43 இணையும் ஒரு குடும்பம் 51
தியாகம் 63
தண்டனை 71
ஆசை 88 g
தந்தையை விஞ்சிய தனயன் 96 நினைவுகளும் நிகழ்வுகளும் 195

*என்ன நம்மி. ஊட்டுக்க கூட்டிக் கொண்டு காட்டுங்க மகள்." தனது குடிசையின் முன்னால் போய்க் கொண்டிருந்த தன் மகள் பர்ஸானாவிடம் சல்மா தனது கோரிக்கையை முன் வைத்தாள். பர்ஸானாவோ, பல முறை கேட்டுக் கேட்டுப் புளித்துப்போன அவ்வார்த் தையை வெறும் புலம்பல் என்று கருதியவளாய் அதற்கு எதுவித பதிலுமே கூறாது நடையைத் தொடர்ந்தாள். ஆனால், அந்தி வீடோ, சல்மாவும் கணவனும் பர்ஸா னாவின் திருமணத்தின் போது அவளுக்கும் கணவனுக்கும் சீதனமாக வழங்கியதுதான். அப்படியிருந்தும் பர்ஸானா அவளின் அவ் வேண்டுகோளை கருத்திலே எடுத்துக் கொள்ளவில்லை.
சல்மா, தனது மகளின் இப்புறக்கணிப்பான போக் கை ஒரு மாதிரியாகச் சமாளித்துக் கொண்டு குடிசைக்குள் அடங்கிக் கொண்டாள். என்றாலும் அவளின் ஆசை அடங்கவில்லை.

Page 12
02 யூ. எல். ஆதம்பாவா
ஒரே வளவுக்குள் அவ்வீட்டின் பின்புறமாய் மூன்று நான்கு மீற்றருக்கு அப்பால் அமைந்திருந்த அக்குடிசைக் குள்ளேதான் அவள் உட்கார்ந்திருந்தாள். அவளின் பார் வையோ, விரிந்துகிடந்த அக்குடிசையின் கதவு வழியால் அவ்வீட்டையே ஊன்றி அவதானித்துக்கொண்டிருந்தது.
சல்மாவுக்கோ வயது எழுபது எழுபத்தைந்திருக் கலாம். அவள் அக்குடிசைக்கு வந்து ஏறக்குறைய ஐந்து வருடங்கள் ஆகின்றன. அவளால் எழுந்து நடமாடமுடி யாது. அதிகமான பொழுது படுக்கையிலும், இருப்பிலுமே கழிவதுண்டு. மிக அத்தியாவசிய தேவைகளுக்காக வெளி யிலே செல்லவேண்டியேற்பட்டால் மற்றவர் துண்ை தேவைப்படுகிறது. அவளுக்குள்ள ஒரேயொரு நோய் வயிற்றுப்போக்குத்தான். சில வேளைகளில் குடிசையிலே - அவளது படுக்கையிலோ அல்லது தரையிலோ அவளையும் மீறிக்கொண்டு மலம் வெளியேறி மகளுக்கு வேலையை வைத்துவிடும். அடிக்கடி ஏற்படுகின்ற இவ்வயிற்றுப் போக்கினைக் குணப்படுத்த இயலாமற்போனதாலேதான் அவளுக்கென்றே அக்குடிசை உருவாக்கப்பட்டதும், அதிலே அவள் வாழ்ந்துவரவேண்டிய நிலை ஏற்பட்டதுமாகும்.
அவள் அக்குடிசைக்கு வருவதற்கு இரு வருடங்க ளுக்கு முன்பே அவளின் கணவன் இவ்வுலகிலிருந்தே விடைபெற்றுக்கொண்டான். அன்று முதல் அவள் தனது மகள் பர்ஸானாவின் பராமரிப்பிலும் வாழ்ந்து வருகிறாள்.
அவளின் வாசஸ்தலமாக விளங்கிய அக்குடிசையோ, சாதாரண ஒரு வீட்டின் ஓர் அறைக்குச் சமமானதுதான். சுவர்கள் கற்களினால் கட்டப்பட்டு, கூரை கிடுகுகளினால்

காணிக்கை m 03
வேயப்பட்டிருந்தது. தரைக்கு சீமெந்து இடப்பட்டிருந்தது. அக்குடிசையின் முன்பக்கக் கதவைத் திறந்துவிட்டதும் பார்வை வெளியே படக்கூடிய வகையிலே தரையில் போடப்பட்டிருந்த தும்பு மெத்தைதான் அவளது படுக்கை. பழுப்பு நிறமாக நிறம்மாறிப்போயிருந்த அம் மெத் தையிலே மிகவும் தொய்ந்து ஓரங்கள் பிய்ந்து போன ஒரு பாய் விரிக்கப்பட்டிருந்தது. அதிலே சல்மா கையை ஊன்றியவாறு உட்கார்ந்திருந்தாள். உடம்பெல்லாம் பட படவென்று நடுங்கிக் கொண்டிருந்தது. அவளின் உடலை மிகவும் நீண்ட நாள் உழைத்துக் களைத்துப்போன ஒரு சேலையும், ஒரு சட்டையும் மறைத்திருந்தன.
தற்போதைய நிலையில் தாயைத் தனது வீட்டுக்குள் தடமாட விடுவதுகூட பர்ஸானாவுக்கு கொஞ்சமும் விருப் பமாக இல்லை. தனது தாயின் வேண்டுகோளுக்கு இசைந்து அவளை வீட்டுக்குள் அழைத்துச் சென்று காட்டினால், அங்கு அவள் நிரந்தரமாகவே தங்கிவிடப் பிடித்துக்கொள்வாள். பின்னர் நிலைமையைச் சமாளிக்க முடியாமற்போய் அவளை வீட்டிலேயே வைக்க வேண்டி வந்துவிடும். அவ்வாறு அவளை வீட்டிலே வைத்து விட்டால் திடீர் திடீரென்று மலங்கழித்து விடுபவள் வீட்டுக் குள்ளும் அவ்வாறு நடந்துகொள்ளவேண்டி வந்துவிடும். அதனால் வீடு அசிங்கமாகிவிடும். எதற்கும் அவளை வீட்டுக்குள்ளே எடுக்காமலிருந்தால் நல்லது என்று ஏற் கனவே அவள் தனக்குள் முடிவுசெய்திருந்தாள். அதனா லேயே தனது தாயின் கோரிக்கையை அவள் தட்டிக் கழித்துவந்தாள். இத்தனைக்கும் சல்மா, சாதாரணமான ஒருவளும் அல்லள். அவள் பர்ஸானாவுக்கு அவ்வீட்டைக் கொடுப்பதற்கு முன்னர் அவ்வீடு அவளின் ஆட்சியிலிருந்த போது அவள் அவ்வீட்டை உயிரைவிடவும் மேலாகப் பேணிவந்தாள். அவளின் கணவன் தனது மனைவியின் இந்த அதீத உணர்வுக்கு உடன்பாடு இல்லைதான்.

Page 13
04 யூ. எல். ஆதம்பாவா
என்றாலும் அவன் அவளுக்கு இடையூறாகவும் அமைந்து விடவில்லை.
சல்மா அந்த வீட்டைப் பேணிய முறைக்கு அந்தக் கிராமத்தில் என்ன இந்த உலகத்திலேயே யாருமே நிகராகமுடியாது. ஆனால், அவளின் அந்த வீடு பெரிய மாளிகையென்றும் சொல்வதற்கில்லை. என்றாலும் மிகவும் குறைந்த தரத்தில் உள்ளது என்றும் கூறிவிடமுடியாது. பெரும்பாலும் போடியார் மாரும், வணிகர்களும் நிறைந்த அந்தக் கிராமத்திலுள்ள சராசரி வீடுகளில் ஒன்றாகவே அது விளங்கியது.
அப்போது சல்மா, அவ்வீட்டில் பெண்கள் வீட்டுக் குள் நுழையும் கதவின் வெளிப்பக்கமாகவுள்ள படியிலே எப்பொழுதும் ஒரு வாளியிலே நீரை நிரப்பி, அதனுள்ளே ஒரு பாத்திரத்தையும் இட்டு வைத்திருப்பாள்.
வீட்டுக்குள் போகவரும் எந்தப்பெண்ணும் முதலில், வெளியே உள்ள அந்தப்படியிலே செருப்பைக்கழற்றி வைக்கவேண்டும். பின்னர், படியிலே வைக்கப்பட்டிருக்கும் நீரினால் கால்களைக் கழுவிக்கொள்ளவேண்டும். அதன் பின்புதான் அப்பெண் அவ்வீட்டுக்குள் நுழையலாம். ஆண்களைப்டொறுத்தவரையில் அவர்கள் வீட்டுக்குள் செல்லும் வழியும் வேறாகவிருந்தது. அவர்கள் கால்களை நீரினால் கழுவிக்கொண்டு உள்ளே நுழைவதை அமுல் படுத்துவதும் அவளுக்கு இயலாத காரியமாகவிருந்தது. ஆண்களுக்குரிய வழியில் அவர்களது செருப்புகளை மட்டும் படியிலே கழற்றிவைத்துவிட்டு உள்ளே நுழையும் முறை யைத் தனது கணவனைக் கொண்டு செயற்படுத்தி வந்தாள் அவள் .
ஒரு முறை ஒரு பெண், தான் காலில் அணிந்து வந்திருந்த செருப்பை கழற்றி வைக்காமலும், கால்களை நீரினால் கழுவிக் கொள்ளாமலும் திடீரென்று அவ்வீட்டி னுள்ளே நுழைந்துவிட்டாள். அவளுக்கு அவ்வீட்டிற்குரிய

காணிக்கை 05
நடைமுறைகள் தெரியாது. அவ்வாறு உள்ளே நுழைந்த அவளைப் பார்த்ததும் சல்மா பதறிப் போனாள்.
‘என்னகா செருப்போட ஊட்டுக்கவந்த, சீ. வெட்டயிலபோய் படியில செருப்பைக் கழற்றிப் போட் டுட்டு, படியில ஒரு ஏனத்துக்க தண்ணி லச்சிருக்கன், காலயும் கழுவிக்கிட்டு உள்ளுக்கவா.'
**விஷயம் எனக்குத் தெரியா மகள், வந்திட்டன். ’’ வீட்டுக்குள் வந்தவள் திரும்பி வெளியே விடு விடு வென்று விரைந்து நடந்தாள்.
இன்னுமொரு முறை வேறொரு பெண் தனது கிைக்குழந்தையோடு அவ்வீட்டிற்குள் வந்தாள். அவளோ, அவ்வீட்டு நிலைமையை ஒரளவு தெரிந்தவள் , வீட்டுப் படியிலே செருப்பைக்கழற்றி வைத்துவிட்டு கால்களை நீரினால் கழுவிக்கொண்டு உள்ளே வந்தாள். வீட்டு நடை (up 60fp65) it அனுசரித்துவந்த அவளைப் பார்த்ததும் சல்மாவுக்குச் சந்தோஷமாகவிருந்தது. அவளைக் கதிரை யிலே உட்காரவைத்து உரையாடிக் கொண்டிருந்தாள். இடை நடுவில் வந்திருந்தவளின் மடியிலிருந்து குழந்தை மெல்லக்கீழே இறங்கி சீமெந்துத்தரையில் விளையாடிக் கொண்டிருந்தது. திடீரென்று அக்குழந்தை அங்கு சிறுநீர் கழித்துவிட, அது தரையில் தேங்கி நின்றது. அதைப் பார்த்ததும் சல்மா துடித்துப்போனாள். தீயிலே மிதித்து விட்டவள் போல் துள்ளி எழுந்தாள்.
“சீ..! இந்தப் பிள்ளை மூத்திரம் உட்டுட்டுதே' என்று கூறியவளாக சமையல் கட்டுப்பக்கமாக ஓடினாள். ஒரு பாத்திரத்திலே நீர் அள்ளிவந்து சிறுநீர் தேங்கி நின்ற இடத்தில் ஊற்றி அதனைத் தும்புக்கட்டினால் வெளியிலே ஒதுக்கிவிட்டாள். பின்பு அவ்விடத்திலே சாக்கொன்றைக் கொண்டுவந்து போட்டாள். இந்த நடவடிக்கைகளைப்

Page 14
06 y. Sts. 23.5 L air
பார்த்ததும் வந்தவள் பயந்துபோனவளாய் தன் குழந் தையை அள்ளிக்கொண்டு ஒதுங்கி நின்றாள்.
' கொளந்தப் புள்ளக்கி என்ன தெரியும். மூத்திரம் உட்டுட்டுது. நான் வாறன்’ என்று கூறியவளாய் வீட்டி லிருந்து வெளியே கிளம்பினாள்.
இவ்வாறாக மனிதத்தன்மையற்ற வகையிலே, மிக வும் பேணிப்பாதுகாத்துவந்த அவ்வீட்டிற்குள் இன்று சல்மாவினால்கூட போகமுடியாத நிலை வந்துவிட்டதே. அவ்வீட்டிற்குள்ளே இருந்துபார்க்க, உறங்கிப்பார்க்க முடியாவிட்டாலும் நடந்தாவது பார்க்கவேண்டுமென்ற ஆசை பெரிதாக வளர்ந்துகொண்டுவந்தது. இதனை உணரமுடியாத பர்ஸானா, தனது தாயின் ஆசையைச் சாதாரணமாக உதாசீனம் செய்துவந்தாள். என்றாலும் அதனை விட்டுவிட சல்மாவின் மனம் சம்மதிக்கவில்லை.
சல்மாவின் நெஞ்சில் துன்பத்தின் தகிப்பு சற்று அதிகரிக்கவே அவள், தனது மகள் பர்ஸானாவின் வீட் டையே ஊன்றி அவதானித்துக் கொண்டிருந்த தன் பார்வையை வலிந்து இழுத்துக் கொண்டு படுக்கையிலே மெல்லச் சாய்ந்து கொள்கிறாள். சிறிது நேரத்தின் பின் அவள் மீண்டும் கைகளை ஊன்றியவாறு எழுந்திருந்தாள். தன் மகள் பர்ஸானா தனது குடிசையின் முன்னால் எப்போது வருவாள் என்று எதிர்பார்த்திருந்தாள். வந்த தும், ''மகள் பர்ஸானா, நம்மிட ஊட்டுக்க என்னக் கொஞ்சம் கூட்டிக்கொண்டு காட்டுங்க. எனக்கு அதுக்க போறத்துக்கு uáláfar ub விருப்பமாரிக்கு”* என்றாள். அதனைக் கேட்ட பர்ஸானா , "டக் கென்று நின்றாள். தனது தாயைக் கூர்ந்து பார்த்தாள். 'உம்மா, அந்த வீட்டுக்க என்ன பொன்னாரிக்கு. போட்டுட்டு சும்மா

காணிக்கை 07
இருங்க. உங்களாலதான் பெரிய கணகட்டா இருக்கு" என்று விட்டு அங்கிருந்து அகன்றாள்.
தனது விருப்பம் தட்டிக்கழிக்கப்பட, தட்டிக்கழிக் கப்பட மேலும் அது மிகவும் ஆவேசத்தோடு வளர்ந்து கொண்டிருந்தது. பர்ஸானா அதனை எங்கே அறிவாள்? சல்மா மீண்டும் ஏமாற்றத்தோடு படுக்கையிலே சாய்ந்து கொள்கிறாள். அவளிடமிருந்து, "ம் .ஹ"...' என்று நெடு மூச்சொன்றும் வெளிப்பட்டது.
அன்று முற்பகல் பத்தரை பதினொரு மணியிருக் கும். சல்மா திரும்பவும் தனது நடுங்குங்கரங்களை மெல்ல ஊன்றியவாறு படுக்கையிலே எழுந்திருந்தாள். தனது குடிசையின் வாசல் வழியே பார்வையைச் செலுத்தினாள். எவரின் நடமாட்டமும் அங்கு தென்படவில்லை. தனது மகளது வீட்டின் பின்பக்கக்கதவொன்று திறந்து கிடப்பது அவளின் பார்வையிலே பட்டது.
அவ்வீட்டினுள் சென்று நடந்து பார்க்கவேண்டு மென்ற ஆசை இப்போது பூதாகரமாக வளர்ந்து ஒரு வெறியாகவும் மாறிக்கொண்டிருந்தது. தனது மகள் அவ் வீட்டினுள் தன்னை அழைத்துச் செல்லமாட்டாள் என்ற எண்ணமும் கூடவே எழவே, அவள் மெல்ல எழுந்து சுவரிலே பிடித்துக்கொண்டு நடுங்கி நடுங்கி நடந்துவந்து குடிசைப்படியைத் தாண்டி வெளியே கால்வைக்க முயன் றாள். சரியாக நின்றுகொள்ள இயலாமல் தள்ளாடி குடி சையின் முன்பக்க ஒரமாகக் குவிக்கப்பட்டிருந்த "முண்டுக் கல்’ குவியலின் மேல் தெறித்து விழுந்தாள். ஒரு கல்லின் கூர் அவளது தலையின் பின் பக்கத்தைக் குத்திப் பிளந்துவிட, குருதி ஆறாய்ப்பெருக மயங்கிப்போனாள்.
நீண்ட நேரத்தின் பின், தைத்து முடிக் , தனது சட்டையை அப்படியே இதயல் 'இழசிரிர்ந்துவிட்டு

Page 15
08 யூ. எல் ஆதம்பாவா
தற்செயலாக வீட்டின் பின்பக்கக் கதவு வழியாக வெளியே வந்த பர்ஸானா, தனது தாய் தரையிலே கற்குவியலின் பக்கத்தே இரத்தம் தோய்ந்த நிலையிலே மயங்கிப்போய்க் கிடப்பதைப் பார்த்தாள். பதறிப்போனாள் ஓடோடிச் சென்று அள்ளி அணைத்தவளாய், " "ம்மா. என்ட உம்மா." என்று வாய்விட்டு அழுதாள். அவ்வேளை கணவரும் வீட்டில் இல்லாததால், சில வினாடிகளிலேயே தன்னைச் சுதாரித்துக்கொண்டு செயலிலே இறங்கினாள். தன் தாயை விரைவாக அயலிலே வாழ்கின்ற தனது குடும்பத்தவர் ஒருவரின் துணையோடு ஊரிலுள்ள அர சாங்க மருத்துவமனைக்குக் கொண்டுசென்று சேர்த்தாள். விடயமறிந்து அவளின் கணவனும் உடனேயே அங்கு வந்து சேர்ந்தான்,
சல்மா, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது முதல் போதிய சிகிச்சைகள் செய்யப்பட்டும், ஏற்கனவே அதிக இரத்தம் வெளியேறிவிட்ட காரணத்தினால் அவளின் உயிரைக்காப்பாற்ற இயலாமற்போய்விட்டது.
அன்று பிற்பகல் நான்கு மணியளவில் அவளின் வெற்றுடலே வீட்டுக்குத்திரும்பிவந்தது.
'உம்மாவ உம்மா இருந்த குடிலுக்கயே வைப்பம். வாற ஆக்கள வெளியிலயும், காணாட்டி நம்மிட ஊட்டுக் கயும் இருப்பாட்டுவம். பாக்கிறவங்க போய்ப் போய்ப் பார்க்கட்டும்.’’ பர்ஸானா தனது கணவனையும் முந்திக் கொண்டு இவ்வாறு கூறினாள்.
அதனைச் செவிமடுத்ததும், அவளது கணவனின் உள்ளத்திலே சற்று முன்புதான் முளைவிட்டிருந்த, "தனது மாமியின் மையித்தை தமது வீட்டிலே வைத்தால் என்ன?’ என்ற எண்ணம் அப்படியே கருகிப்போனது. தனது மனைவியின் நிலையை நன்கு அறிந்து வைத்திருந்த

காணிக்கை 09
அவன் பேசாமல் அவளின் வார்த்தைகளுக்குக் கட்டுப் பட்டுக் கொண்டான்.
சிறிது நேரத்தில் சல்மாவின் "மையித்து? அனைவ ரின் தரிசனத்திற்காகவும் குடிசையிலே போடப்பட்டிருந்த கட்டிலிலே வைக்கப்பட்டது.
இப்பணி மாலை ஐந்தரை, ஆறு மணி வரை தொடர்ந்தது. பின்னர், "மையித்தை அடக்கம் செய் வதற்கான அனைத்துப்பணிகளும் நிறைவேற்றப்பட்டு அது *சந்தூக்கிலே’ வைக்கப்பட்டது.
சல்மாவின் மையித்தை உள்ளடக்கிய அச் சந்தூக் கைத் தோள்களிலே தாங்கிய நான்கு நெருங்கிய உறவி னர்களும், அவள் இறுதியாக வாழ்ந்த குடிசையை விட்டு, அவள் உயிரைவிடவும் மேலாக நேசித்த-தற்போது அவளது மகளும், மருமகனும் வாழ்கின்ற வீட்டின் பக்கமாகவுள்ள பாதையிலே அடிபதித்தார்கள். அவர்களைத்தொடர்ந்து இனசனங்களும், அறிமுகமானவர்களும் மெல்ல நகர்ந்து கொண்டிருந்தனர்.
‘'என்டதங்கம்மா. எங்களவிட்டிட்டுப் போறிங்களா. என்ட அல்லா.* பர்ஸானாவின் அழுகைச் சத்தம் பெரி தாக வெடித்துச் சிதறியது. அதனைக் கிஞ்சித்துமே கவனியாததுபோல அந்த "மையித்து தனது பயணத் தைத் தொடர்ந்துகொண்டிருந்தது.
அங்கு நின்ற சல்மாவின் உற்றார் உறவினர்களதும் மற்றும் அவளை நன்கு தெரிந்த சிலரினதும் விழிகளிலி ருந்து கண்ணீர் சொரு சொரு வென்று பெருகி கன்னங் களை நனைத்துக்கொண்டிருந்தது.
தினகரன் வாரமஞ்சரி 1995 D ja 19

Page 16
நவமீருக்கு இன்று நோன்புப் பெருநாள்
*அல்லாஹ" அக்பர். அல்லாஹ" அக்பர். அல்லாஹ" அக்பர். * வானொலிப்பெட்டிகளிலிருந்து தக்பீர் முழங்கிக் கொண்டிருக்கின்றது.
ʻul—... lul — ... ul-... Lul—fTrf.. . , Lul—... lu L— . . . lul' .. படார். பட. பட. பட். படார்." பட்டாசுகள் தொலைவிலே அதிர்ந்து கொண்டிருக்கின்றன.
இன்று நோன்புப் பெருநாள். அதிகாலை நேரம்
கல்முனையிலிருந்து புறப்பட்டு, சாய்ந்த மருதை நோக்கி விரைந்து கொண்டிருக்கின்ற பஸ்வண்டி ஒன்றிலே மக்கள்கூட்டம் நிரம்பி வழிந்து கொண்டிருக்கின்றது. நல்ல நெரிசல். அந்த பஸ்வண்டியிலே.சாளரத்தின் அருகேயுள்ள முன்ஆசனம் ஒன்றிலே எப்படியோ இடம்பிடித்துக்கொண்ட நளிர் ஒன்றரை மாதத்தின்பின் தன் மனைவி வளிரா வைச் சந்திக்கப்போகிறோமே என்ற பூரிப்பில் ஆழ்ந்திருக் கின்றான்.

காணிக்கை 11
இருபத்தெட்டு இருபத்தொன்பது வயது மதிக்கத் தக்க அவன் நல்ல உடற்கட்டு, அளவான உயரம், மானிற மேனி ஆகியன உடையவன். வகிடெடுத்து வாரிவிட்ட சுருள் முடி, அரும்பு மீசை என்பன அவனது அழகை மிகைப்படுத்தி நின்றன. ஜி. ஸி. ஈ. சித்தியடைந்திருந்த அவன் கொழும்பிலே உள்ள ஹோட்டல் ஒன்றிலே மாதந் தோறும் உணவோடு நானூறு ரூபா சம்பளத்துக்குத் தொழில் செய்து வந்தான். அவன் அந்த ஹோட்டலிலே சேர்ந்து இன்றோடு சரியாக நாற்பத்தாறு தினங்கள் இன்று அவன் நோன்புப்பெருநாளுக்காகத் தனது ஊருக்கு மீண்டு கொண்டிருக்கிறான். அவன் மடியிலே ஒரு பொட் டலம். அது ஒரு சேலையையும், பாவாடைக்கும், ரவிக் கைக்குமான துணிகளையும் தன் வயிற்றிலே புதைத்து வைத்திருக்கின்றது. அவன் அவற்றைத் தனது மனைவிக் காகவே கொண்டுவருகின்றான். தன் துணைவியை விரை விலே காணவேண்டுமென்ற ஆவல் கணத்துக்குக் கணம் அவன் அகத்திலே பரவிக்கொண்டே வருகின்றது. அவனின் மன நிலையை பஸ்சாரதி அறிவானா? அவன் வழமைபோல
டஸ்வண்டியைச் செலுத்திக் கொண்டிருக்கின்றான்.
பஸ்வண்டியோ பருத்த ஒரு பெண்ணைப்போல ஆடி அசைந்து விரைந்து கொண்டிருக்கின்றது. பஸ்ஸினுள் பேச்சின் சப்தமும், சிரிப்பின் ஒலியும் கலந்து கேட்டுக் கொண்டேயிருக்கின்றன. இருந்தும் அவனின் நெஞ்சமோ அவற்றிலே நிலை கொள்ளவில்லை.
நஸிர் பஸ்வண்டிச் சாளர வழியாக வெளியே ஒரு முறை பார்த்துவிட்டு மீண்டும் வசதியாகச் சாய்ந்து கொள் கிறான். சிறிது நேரத்தின் பின் திடீரென்று அவனின் மனத் திரையிலே கடந்த வருடம் நிகழ்ந்த சம்பவமொன்று நிழலாடுகின்றது.

Page 17
12 யூ, எல். ஆதம்பாவா
அன்று. புனித ரமழான் மாதத்தின் இறுதிப்பகுதி யிலே ஒரு தினம், சாய்வு நாற்காலியிலே சரிந்திருந்த நளிர் மெல்ல நிமிர்ந்து உட்கார்ந்துகொள்கிறான். எதிரே கதவு நிலையோடு ஒட்டி நின்ற அவன் மனைவி வளிரா தாழ்ந்திருந்த தனது தலையை நிமிர்த்தித் தன் கணவனான தளிரை நோக்கி மெல்லியமுறுவலொன்றை உதிர்த்துவிட்டு அடக்கிவைத்திருந்த வார்த்தைகளை மிகவும் அவதான மாக அவிழ்த்து விடுகின்றாள்.
‘'இஞ்சப்பாருங்க . புனிதமான இந்த ரமழான் மாதத்தில நோன்பு பிடிப்பது எல்லா ஆண்கள் பெண்களின தும் கடமையாகும். நீங்க இத மறந்து இந்த மாதத்தில மிக வும் அலட்சியமாக நடந்துகொண்டு வருவது எனக்கு மிக வும் மனவருத்தமாகவிருக்கிறது. ஒருவன் அல்லது ஒருத்தி ஒரு முஸ்லிமுக்கு பிறந்துவிட்டதாலோ அல்லது முஸ்லிமுக் குரிய பெயரைப் பெற்றிருப்பதாலோ முஸ்லிமாகிவிடமுடி யாது. இஸ்லாத்தின் சகல கடமைகளையும் எடுத்து நடக்க வேண்டும். அப்பதான் அவர்களை முஸ்லிம்களென்று நாம் சொல்ல முடியும். நான் இவ்வளவு நாளும் நீங்க திருந் துவிங்க திருந்துவிங்க என்று எதிர்பார்த்தன். அது நடக் கல்ல. அதனாலதான் நான் இப்படிக் கதைக்கவேண்டிய நிலைக்குள்ளானேன். இதற்காக என்னைக் கோபிக்கவேண் டாம்" என்றுவிட்டு மார்பிலிருந்து சற்று நீங்கிக்கிடந்த சேலையைச் சரிசெய்து கொண்ட வளிரா தன் எழிலான இருவிழிகள் படபடக்க நின்றிருக்கின்றாள்.
“ ‘புள்ள. நீங்க சொல்றது சரிதான். ஆனால், நோன்பு பிடித்தா எனக்கு வாய்வு வாற. உங்களக் கலியாணம் முடிக்கிறத்துக்கு முதல்ல இப்படித்தான் ஒரு முறை நோன்பு பிடித்து வாய்வு வந்து என்ன ஆஸ்பத்தி ரிக்குக் கொண்டு போன. அதில நான் மிகவும் கஷ்டப்

காணிக்கை, 13
பட்டுப்போனன். அதனாலதான் நான் இப்படி நோன்பு பிடிக்கப் பயப்பர்ரன்" இவ்வாறு வெகு அமைதியாகக் கூறிவிட்டு நெற்றித்திடலிலே வந்து கவிந்து கிடந்த தலை மயிரை ஒதுக்கிவிட்டுக் கொள்கிறான் நஸிர்.
'நோன்பு பிடித்தாத்தான் வாய்வு வருமென்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அது நோன்பில்லாதபோதும் வரலாம். அல்லது எந்த வேளையிலும் வராமலும் விடலாம், ஒருவருக்கு வாய்வு வருகிறதிண்டா அது அவர் ர உடம் பிலுள்ள நோயின் காரணமாகவிருக்கலாம். அல்லது அவர் உண்ட உணவின் தன்மை காரணமாகவிருக்கலாம். உங்க ளுக்கு நடந்தது காகம் குந்த பனம் பழம் விழுந்த மாதிரி. உண்மையைத் திறந்து சொன்னா, இதெல்லாம் நோன்பு பிடிக்காம விர்ரத்துக்குரிய காரணங்களில்ல. இத வெளியில சொன்னாலும் வெட்கம்’
‘புள்ள. நீங்க என்னதான் சொன்னாலும் எனக்குப் பயமாத்தா னிருக்கு. எப்படியோ என்ன இந்த முற மன்னி யுங்க. இன்னும் நோன்பு முடியிற த்துக்கும் மூன்று நான்கு நாட்கள் தானே இருக்கு. என்ட சீவன் கிடந்தா எனக்கு என்ன வருத்தம் வந்தாலும் சரி, வாற வருசம் ரமழான் மாதம் முழுவதுமே நான் நோன்பு பிடிப்பன். இது சத்தி யம்.’’ உறுதியும், வேகமும் விரவிய வார்த்தைகள் நஸிரின் வாயிலிருந்து தெறித்தன. ஆனால் அதனைச் செவிமடுத்த அவளோ, எதுவுமே உரைக்காது புன்னகை ஒன்றை மட் டுமே மலர விடுகிறாள்.
O O O
இவ்வாறு நீண்டு கொண்டே வந்த நஸிரின் நினை
வோட்டம், ''சாய்ந்த மருது டிக்கெட்டெல்லாம் இறங் குங்க" என்ற பஸ் கண்டக்டரின் சப்தத்தினால் துண்டிக்

Page 18
14 யூ. எல். ஆதம்பாவா
கப்பட்டு அவன் சுய நிலைக்குள் தள்ளப்படுகின்றான். மறுகணம் அவன் நிமிர்ந்து பரபரவென நோக்குகிறான். பள்ளிவாயிலின் எதிரேயுள்ள பஸ் தரிப்பு நிலையமொன் றிலே பஸ்ஸை விட்டுப் பிரயாணிகள் இறங்கிக் கொண்டி ருக்கிறார்கள். அவனும் தன் பொட்டலத்தோடு இறங்கிக் கொள்கிறான்.
'அல்லாஹ" அக்பர். அல்லாஹ" அக்பர். அல்லாஹ" அக்பர். பள்ளிவாயிலில் பொருத்தப்பட் டிருந்த ஒலிபெருக்கிக் குழல்களிலிருந்து தக்பீர் முழங்கிக் கொண்டிருக்கின்றது.
... سL لا . . سالL ... الا « ... Tri الا ... تشLلا ... سالا ... سالا " UL-Tsf..., Lul-... Ul - பட். படார். பட்டாசுகள்
அதிர்ந்து கொண்டிருக்கின்றன.
அந்த இளங் காலைப் பொழுதிலேயே பல சிறுவர்கள் புத்தாடை புனைந்து வந்து அங்குமிங்கும் கூடிநின்று சந்தோஷ ஆரவாரம் செய்ய ஆரம்பித்தனர்.
பஸ் வண்டியை விட்டு இறங்கிய நஸிரின் உடலோ உவகையினால் சிலிர்த்துக்கொள்கிறது. இருந்தும் அவன் அவ்விடத்திலே சற்றுமே தாமதியாது வீட்டை நோக்கி விரைகின்றான்.
இல்லத்தையடைந்த அவன் திண்ணைக்குள் நுழைந்து நின்று நிமிர்ந்தபோது அவன் மனைவி வ ஸிரா விரைந்து அவனருகே வந்து புன்னகை தூவி வரவேற்கின்றாள்.
இருபத்தைந்து இருபத்தாறு வயது மதிக்கத்தக்க அவள் மானிற மேனியும் மெல்லிய தோற்றமும் உடை யவள். அவளின் அந்தப் புன்னகை அவளது அழகுக்கு மேலும் மெருகூட்டவே, அவன் அந்த அழகிலே சற்று நிலை குலைந்து போகிறான். இருந்தாலும் அவன் சில வினாடிகளில் தன்னைச் சுதாரித்துக் கொண்டு தலை

காணிக்கை 5
நிமிர்கிறான். அவ்வேளை வளிரா தன் கணவனை நோக்கி பின்வருமாறு பகர்கிறாள்:
‘இன்னும் பிடிக்கவேண்டிய இரண்டு மூன்று நோன்பு களைத் தவிர மற்றெல்லா நோன்புகளையும் நோற்று விட்டதாகவும் மிச்சத்தையும் தான் நோற்க விருப்பதா கவும் நீங்க எழுதியிருந்த கடிதம் எனக்குக் கிடைத்தது. நான் அதைப் படித்தபோது மிகவும் மகிழ்ந்து போனேன்’’ என்ற வஸிரா தன் கன்னத்தை வருடிவிட்டுக் கொள் கிறாள்.
அவளின் இந்தக் கனிவான உரையைச் செவிமடுத்த நளிர், ஒரு புன்முறுவலைப் பரவ விடுகிறான். ஒரிரு வினாடிகளின் பின் அவனே தன் உரையைத் தொடர் கிறான்.
‘நான் இந்த முறை ரமழான் மாதம் முழுவதும் நோன்பு பிடிச்சன். இவ்வளவு நாளும் எனக்கு எவ்வளவோ சந்தோஷமாக விருந்திச்சி. நோன்பு பிடிச்சா வாய்வு வருமென்பது தவறுதலான எண்ணம் என்பதையும் நான், உணர்ந்து கொண்டேன். இந்த முறை ரமழான் மாதத் தில் நான் ஒழுங்காக நோன்பு நோற்று வந்தது போல தொழுகையையும் எடுத்து நடந்து வந்தேன். இனிமேல் நான் எப்படியான நிலை வந்தாலும் சரி, நானும் உங் களைப் போல அல்லாட பாதையில செல்றத்துக்குத் தீர்மானிச்சிட்டன். அறியாமையில் மூழ்கியிருந்த என்னை இவ்வளவு தூரம் திருத்திவிட்ட தங்களுக்கு இந்தப் பெரு நாளைக்கு ஒரு விசேஷமான உடுப்புச்சாமான்கள் எடுத் துத்தர வேண்டுமென்று எண்ணினேன். அதன் விளை வாகவே இந்தப் பார்சலுக்க இருக்கின்ற ஒரு சாரி, பாவாடைக்கும் ரவிக்கைக்குமான துணிகள் ஆகியவற்றை உங்களுக்காக வாங்கி வந்தேன். இன்னாங்க' என்ற நஸிர், அகமும் முகமும் மலர தனது கரத்திலேயிருந்த பொட்டலத்தைத் தன் மனைவியிடம் வழங்குகிறான்.

Page 19
16 , . ST dið. -g5b Lu Tsnu fr
தன் கணவனிடமிருந்து அந்தப் பொட்டலத்தை மிக்க மகிழ்ச்சியோடும், மன நிறைவோடும் பெற்றுக் கொண்ட வளியீரா, 'அது சரி..உங்களுக்கொண்டும் வாங்க வில்லையா?? என்கிறாள்.
"இல்ல. முதலாளி அறுநூறு ரூபாக் காசிதான் தந்தாரு, அதில, இவ்வளவு சாமான்களுக்கும் ஐநூற்று ஐம்பது ரூபாய் செலவழிஞ்சி போச்சி. எனக்கென்னத்துக்கு வஸிரா, எனக்கிட்ட இருக்கிற உடுப்புகளைக் கொண்டே தான் ஒரு மாதிரியாச் சமாளிச்சுக்குவன்.""
நஸிர் சேர்ட்டை இழுத்து விட்டுக் கொண்டு நிமிர்ந்து நிற்கிறான்.
““சே.இந்தக் காசுக்க நாம ரெண்டு பேருக்குமே உடுப்பெடுத்திருக்கலாம். நீங்க ஒண்டு' என்று அங்க லாய்த்துக் கொள்கிறாள் வளிரா.
‘ம். அத விடுங்க.? இது அவன்.
‘‘சரி.இஞ்சப்பாருங்க முன்பு எப்படியோ இருந்த நீங்க இப்ப எவ்வளவோ மாறிட்டீங்க. இவ்வளவுக்குத் திருந்திவிட்ட உங்களுக்கு நானும் ஏதாவது பரிசு தரவேண் டாமா? இதைத் தவிர உங்களுக்குத் தருவதற்கு என்னிடம் வேறு என்ன பரிசிருக்கு.?’ என்ற வஸிரா தன் கணவனை மிக்க கனிவோடு நோக்குகின்றாள். அவளின் கரத்திலி ருந்த அந்தப் பொட்டலம் பக்கத்திலிருந்த ஸ்ரூலில் மெல்ல நழுவி விழுகிறது. அவள் வதனமோ, அன்றலர்ந்த செந் தாமரை மலராக, இதழ்களோ துடிக்கின்றன. மறுகணம் அவள், அசையாது அப்படியே நின்ற தன் கணவனை ஆர்த் தழுவிக் கொள்கிறாள்.
தினகரன் வாரமஞ்சரி 1981 ஆகஸ்ட் 02

ஒரு விடிவெள்ளி உதயமாகிறது
அந்த வீட்டின் முன் மண்டபம் பளிரென்று சுத்த மாய்க் காட்சி தந்தது. அங்கே, கிழக்குத் திசையை நோக்கி யவாறு போடப்பட்டிருந்த ஒரு சாய்வு நாற்காலியில் உட்கார்ந்திருந்தார் சுலைமாலெவ்வை. முன்புறமாய் அவ ரின் மூத்த மகள் சபீனா, ஒரு, கைக் கதிரையில் அமர்ந் திருந்தாள். இருவரின் வதனங்களிலும் ஆர்வமும், உவகை யும் அலைமோதின.
சுலைமாலெவ்வையின் உடல் சற்றுத்தளர்ந்து காணப் பட்டபோதிலும் அவரின் இதழ்கள், உருட்டி விட்டுக்கொண் டிருந்த வார்த்தைகளில், தளர்ச்சியைச் சற்றுமே காண முடியவில்லை. ஒரு முக்கியமான விடயத்தை தன் மகளிடம் எடுத்துச் சொல்லிக்கொண்டிருந்தார்.
**மகள், கலிபாணரோட்டில பெரிய சில்லறைக் கடை வச்சிருக்கிற அலியார்ர மகனத் தெரியுமா உங்க ளுக்கு?"
"" அவர ஒரளவுதான், எனக்குத் தெரியும் வாப்பா.”*
*அவர் நல்ல வசதிக்கார ஒரு புள்ள , கெதியிலg நல்லா முன்னேறிட்டார். கிட்டத்தில அவர் தனது பர
fa. புக்காக, விலை கூடிய ஒரு புதிய மொடல் காரும் எடுத்ல் கார். நேரத்தோட அவர்ர பேரில ஒரு லொறியூஓேடுது. இப்ப இருபது இருபத்தைந்து நாளைக்கு சாளம் பைக்க, பதினைந்தேக்கர் காணியும் வாங்இஜ்ச்சிருக்காஸ்

Page 20
18 யூ. எல். ஆதம்பாவா
நல்ல வடிவான ஒரு புள்ளயுந்தான். அவருக்கும் நம்மிட ஹிதாயாவக் கலியாணம் முடிக்கிறத்துக்கு நல்ல விருப்பம் போலவும் தெரியிது. நான் இன்டைக்குக் காலயில அந்தக் கடைப்பக்கமாப் போனாப் போல அவர் ர வாப்பா, என்னக் கடைக்குள்ள கூட்டி வச்சி, உங்கட மகளுக்கும், மருமக னுக்கும் நீங்க சீதன ஆதனமா எழுதிக் கொடுத்த - இப்ப அவக இருக்கிற அந்த வீடு வளவ மாத்திரம் தந்தாப் போதும்; வேற சீதன ஆதனம் எதுவுமே வேணா. உங்கட மருமகனுக்கிட்டயும், மகளுக்கிட்டயும் கேட்டு விருப்ப மிண்டாச் சொல்லுங்க இன்னா பொறக்கிறமாதமே கலியா ணத்தையும் வச்சிக்கலாம். அப்படிண்டு சொன்னாரு.
மகள், நீங்க இப்ப நாலு பொம்பிளப் பிள்ளைகளை யும் வச்சிக்கிருக்கீங்க. ஒண்ட விட ஒண்டு நான் முந்தி நீ முந்தி எண்டு வளந்துக்கிட்டிருக்கு. இதற்கிடையில உங்களுக்கிட்ட நல்ல வசதியுமில்லாமலிருக்கு. இவகளக் கரையேத்திறண்டா, இன்னும் எவ்வளவோ ஒழுங்கு களைச் செய்ய வேண்டியிருக்கு. மருமகன்ட யாபாரம் அண்டண்டைய வாழ்க்கைய நடத்தத் தான் காணும். இதையெல்லாம் யோசிச்சுக்கங்க வலியவருகிது சீதேவி. தட்டிவிட்டிராதிங்க?"
‘ஹா.நல்ல ஒரு மாப்பிள்ள தான். லேசா வருகிது. அவர, மகள் ஹிதாயாவுக்குக் கலியாணம் முடிக்கிறத்துக்கு எனக்கும் நல்ல விருப்பமாத்தா னிருக்கு. எதுக்கும், அவட வாப்பாக்கிட்டயும் கேட்டுச் சொல்றன்.'"
அதே தினம். வீட்டின் அதே மண்டபத்தில் மதிய உணவை அருந்திவிட்டு, சாய்வு நாற்காலியில் சாவகாச மாய்ப் படுத்திருந்தார் இஸ்மாயில். அப்போது அங்கு வந்த சபீனா, தன் கணவனான இஸ்மாயிலின் பக்கமாக இடப்
பட்டிருந்த ஒரு கதிரையிலே அமர்ந்து கொள்கிறாள்,

காணிக்கை 19
இரண்டு மூன்று நிமிடங்கள், மெளனமாகவே விடை பெற்றன. சாய்வு நாற்காலியில் படுத்திருந்த இஸ்மாயில் மெல்ல நிமிர்ந்து உட்கார்ந்து கொள்கிறார்.
ஏதோ, கதைக்க வேண்டுமென்பதற்காக,
*புள்ள, ஊர்ப் புதினங்கள் ஏதும்.’’ என்கிறார். இதழ்களில் புன்னகையொன்று நெளிந்து மறைகிறது.
காரணத்தோடு வந்திருந்த சபீனா, சந்தர்ப்பத்தைப் பயன்படுத்த முனைந்தாள்.
"இண்டைக்கு அப்படி ஒண்டுமில்ல. ஆனா. நம்மிட குடும்ப விஷயம் ஒண்டுதான் கதைக்க இருக்கு.” தனது முதுகை கதிரையிலே இணைத்துக் கொண்டு உஷா ரானாள்.
"ஆ.அப்படியா, அது முக்கியமே.சரி, அதைச் சொல் லுங்க. " இஸ்மாயிலின் புருவங்கள் சற்று மேலே உயர்ந்து பழைய நிலைக்கு மீள்கின்றன.
இப்போது சபீனா, தனது தந்தையான சுலைமா லெவ்வை சொன்ன திருமண விடயத்தையும், தமது நிலை யையும் தன் கனவனிடம் முழுமையாக எடுத்து இயம்பி னாள். அதனை நன்கு கிரகித்துக் கொண்ட இஸ்மாயிலின் வதனம் சற்றுச் சிவந்து போனது.
"புள்ள சபீனா, நம்மிட மகள் ஹிதாயா, ஜீ. சீ. ஈ. ஒயெல்ல ஏழு டியும், ஒரு சீயும் எடுத்து நல்ல கெட்டித் தனமாப் பாஸ் பண்ணியிருக்கு. இப்ப ஏயெல்லயும் நல்ல ஆர்வத்தோட படிச்சிக்கிட்டிருக்கு. இந்த நிலையில புள்ள யத்திடீரெண்டு நிப்பாட்றதா? என்ன மடத்தனம். அவவும் படிச்சு கொஞ்சமாவது ஒரு நல்ல நிலைக்கு வந்திரட்டுமே. இத அவ கேள்விப்பட்டா எவ்வளவு வேதனைப்படுவா. இப்ப என்ன அவவுக்கு வயதா போச்சி. கலியாணத்த முடிச்சிக்கேலாதா, பெரிதாக வருகிறது என்கிறத்துக்கா கவும் நாம மயங்கிப் போகப்படா. நடக்கிறது எப்பயும்

Page 21
20 y 6T6). 235 but Al T
நடந்தே தீரும். நிதானமாக நடந்து கொண்டு வருவம். எதற்கும், இன்னும் கொஞ்சக் காலம் பொறுங்களன் "' என்றார்.
அதனைக் கேட்ட சபீனாவின் வதனம், ஓங்கி அறைந் துவிட்டது போல சிவந்துபோனது. கண்களும் கலங்கிக் கொண்டன.
'நீங்க அவ்வளவு பொறுப்புணர்ச்சியோட இருக்கி றதாகவும் தெரியல்ல. உங்களப் பாக்கிறவெள எனக்கும் பெரிய யோசனையாயிருக்கு. நாமெல்லாம் இந்த உல கத்தில நீட்டுக்கு இருக்க வந்தவங்க என்பதுபோல உங்கட எண்ணமிருக்கு. உங்கள நம்பினா இந்த நாலு பொம்பிளப் பிள்ளைகளையும் சும்மா அப்படியேதான் வச்சிக்கிருக் கணும் போலவும் தெரியிது.” பட பட வென்று பொரிந்து தள்ளினாள் சபீனா.
‘‘நம்மிட புள்ளைகள சும்மா வச்சிக்கிருக்க வேண்டு மென்று எனக்கு மட்டும் ஆசையா என்ன? ஒரு சமூகத் தினுடைய முன்னேற்றம் பிரதானமாக, பெண்களின் கல்வி யிலேதான் தங்கியிருக்கிறது என்று பலரும் கருதுகின் றார்கள். அதனால, நம்மிட பிள்ளைகளும், கொஞ்சம் நல்லாப் படிச்சிரட்டுமே என்றுதான் நானும் நினைச்சன். ஆனா.உங்களப்பாத்தா என்னிலதான் முழுக்க முழுக்கப் பழியப் போர்ராப் போலவும் தெரியிது. இந்தக் காரியத்த புள்ளையும் விரும்பிட்டிண்டா, எனக்கொண்டுமில்ல."
"என்ட புள்ள என்ட சொல்லக் கேட்காம விட LDT L - L-nr. ' '
"அப்படிண்டா நாம என்னத்துக்கு அத நமக்குள்ள வச்சிக்கிட்டு யோசிச்சு யோசிச்சு இருப்பான். அவவயும் இப்பவே இஞ்ச கூப்பிட்டு விஷயத்துக்கு ஒரு முடிவு கட்டுவமே." இது இஸ்மாயில்.

காணிக்கை 2.
a
ஓம். ஓம்.அப்படியே செய்வம்' என்றாள் சபீனா,
அதன் பின்னர், சில நிமிடங்களிலேயே ஹிதாயா அங்கே வரவழைக்கப்பட்டாள்.
வந்தவள். தமது பெற்றோரின் பணிப்பின் பேரில், அவர்களின் எதிரே ஒரு கதிரையில் உட்கார்ந்து கொள் கிறாள். மறுகணமே, அவளிடம் சபீனா, தான் வேண்டிக் கொள்ளவிருந்த விடயத்தின் முன்னுரையாக, தனது தந்தை கொண்டுவந்த திருமண விடயத்தைப்பற்றியும், தமது நிலைமையை இட்டும் எடுத்துக் கூறினாள்.
அதனைச் செவிமடுத்த ஹிதாயா, முதலிலே, அங்கே வீற்றிருந்த தனது தந்தையை நோக்கியே பார்வையை வீசினாள். சோகம் அவள் முகத்தில் கொந்தளித்துக் கொண்டிருந்தது.
‘‘வாப்பா, நீங்களுமா இதற்குச் சம்மதிச்சிங்க' என்றாள்.
*சேச்சே.இது எனக்குச் சம்மதமில்ல. உங்கட படிப்ப இடையில நித்தாட்டிப்போட்டு அதச் செய்யிறத் துக்கு எனக்கு விருப்பமில்ல. நீங்க நல்லாப்படிச்சு, நல்ல ஒரு நிலைக்கு வரணும். அதுக்குப்பிறகுதான் கலியாணம் எண்டு ஒண்டச் செய்யணும். அதுதான் என்ட விருப்பம். உங்கட மூத்தப்பாதான் இந்தக் கலியாணத்தக் கொண்டு வந்த, உங்கட உம்மாவும் அத நல்லா விரும்புறா, நீங் களும் அத விரும்பினா எனக்கொண்டுமில்ல."
இந்தச் சந்தர்ப்பத்தில், சபீனாவும் வாய் திறந்தாள். ‘‘மகள், உங்கட வாப்பா நீட்டுக்கு இப்படித்தான் கதைத்துக்கொண்டிருப்பார். அத விட்டிட்டு என்ட சொல்லக் கேளுங்க. மாப்பிள்ள நல்ல ஒரு பிள்ள. நல்ல

Page 22
22. யூ, எல். ஆதம்பாலா
வசதியோட இருக்கார். நாம, கஷ்டமான நிலையில இருக்கம். இது நல்லதொரு சந்தர்ப்பம். தட்டி விட்டிரா தீங்க.”*
'உம்மா, நாம கஷ்டமான நிலையில இருக்கிறம் என்பதும், அந்த நிலையிலும் ஒரு நல்ல மாப்பிள்ளை லேசாய் வருகிறார் என்பதும் உண்மைதான். என்டாலும், அதற்காக என்ட படிப்பை இடை நடுவில் விட்டுவிட நான் ஆயத்தமில்ல. நல்ல ஒரு கலியாணமெண்டு செய்து வைத்த சில கலியானங்கள், சில நாட்களிலேயே வெடித்துச் சிதறிப் போனதை நாம் அறியக்கூடியதாகவிருக்கிறது. ஆகை யினால, நாம மிகவும் நிதானமாகவிருந்து செயற்பட்டுக் கொண்டு போவம். எல்லாத்துக்கும் அல்லாஹ் வழி வகுத்துத் தருவான்.
நாம விஷயங்கள குறுகிய வட்டத்துக்குள்ள இருந்து பார்க்காம உலகத்த சற்று விரிவாகவும் நோக்க வேண்டும்.
ஒரு மனிதன்ட வாழ்க்கையில திருமணம் முக்கிய மானதுதான். அதுக்காக, கல்வியை அப்படியே உதாசீனம் செய்துவிடுவது மடத்தனம். நல்ல கல்வியைத் தேடிக் கொள்வதற்காக திருமணத்தைக் கொஞ்சம் பின்தள்ளி வைத்துவிடுவது கூட பிழையில்ல.
நம்மிட சமூகத்தில, பெண்களைப் பொறுத்தவரை யில, இன்னும் நாம பின்தங்கிய நிலையிலேயே இருக்கம். பெண்கள் நல்ல கல்வி அறிவுடையவர்களாக இருந்தால் தான், நமது பிற்சந்ததியினரும் சிறப்பாக விளங்குவார்கள். அதற்காக தாம் ஒவ்வொருவரும் கொஞ்சம், கொஞ்ச மாவது தியாகங்களையும் செய்யத்தான் வேண்டியிருக்கு.
என்னடா, நம்மிட புள்ள நம்மிட சொல்லக் கேட்காம எதை எதையோ கதைத்துக்கொண்டு போகுது என்டு நீங்க என்ன வித்தியாசமா நினைக்க வேண்டாம்.

காணிக்கை 23.
உங்களையும் வாப்பாவையும் என்ட உயிரிலும் மேலான வர்களாகவும், மிகவும் உயர்ந்தவர்களாகவும் மதிக்கன். நான் படிப்பில நல்ல ஒரு நிலைய அடைந்தத்துக்குப்பிறகு நீங்க ஆரச் சொன்னாலும் அவர நான் திருமணம் செய்து கொள்ள ஆயத்தமாக இருக்கன். இப்ப நான் தொடர்ந்து கல்வி கற்க வழி விடுங்க.”* ஹிதாயா, தாயிடம், விடயங் களை விரிவாகவும், துல்லியமாகவும் எடுத்து இயம்பினாள்.
அதனைச் செவியுற்ற சபீனா, அதிர்ந்து போனாள்; எதுவுமே பேசமுடியாது சிலைபோல் அமர்ந்திருந்தாள்.
இவ் வேளையிலே இஸ்மாயில், தன் மனைவியை கனிவாக நோக்கி, ‘புள்ள சபீனா, இப்பவாவது உங்களுக்கு விஷயங்கள் விளங்கியிருக்கு மெண்டு நினைக்கன். நாம இப்படியான ஒரு பிள்ளயப் பெற்றதுக்காகப் பெருமைப் படனும், இன்னும் பிடிவாதமா நிற்காம, பிள்ள படிக் கட்டும். வழிய விடுங்க" என்றார்.
அப்போது அங்கு வந்த ஹிதாயாவின் மூன்று தங்கை மாரும், தமது 'ராத்தா' வின் முடிவைக் கேட்டு மகிழ்ச்சி யடைந்ததோடு தமது பாராட்டையும் அவருக்குத் தெரி வித்துக் கொண்டனர். மறுகணம் அவர்கள், தமது தாயின் பக்கமாகத் திரும்பி, ஒருமித்த குரலிலே,
'உம்மா, ராத்தா எடுத்த முடிவு சரியானதுதான். அவவ நாங்க ராத்தாவாகப் பெற்றதையிட்டு பெருமைப் பர்ரம். அவ தொடர்ந்து படிக்கட்டும். தடுக்காதீங்க' என்றனர்.
இப்போது சபீனாவின் முகத்தில் அப்பிக்கிடந்த கடுமை மெல்ல மெல்லக் கரைகிறது.
1992 ஜூன் 16

Page 23
காணிக்கை
அந்த அரசாங்க மருத்துவ மனை அன்றும் வழமை போல் ஜனத்திரளால் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. இரண்டு டாக்டர்கள் இருந்து பணி புரிகின்ற அந்தச் சிறிய வைத்தியசாலையில் அன்று ஒருவர் விடுமுறை எடுத் திருந்தார்.
டாக்டர் பஸினா மட்டும் அந்த நோயாளர்களோடு போராடிக் கொண்டிருந்தாள்.
டாக்டரின் அறையிலிருந்து மருத்துவ மனையின் முன் மண்டபம் வரை நீண்டு கிடந்த வரிசை மெதுவாகக் கரைந்து கொண்டிருந்தது.
காலை எட்டு மணியிலிருந்து மத்தியானம் பன்னிரண்டு மணி வரை மருந்து கொடுப்பதற்காக அந்த மருத்துவ மனையில் இருநூறு நோயாளர்களுக்கு இலக்கங்கள் கொடுப்பது வழக்கம். தாமதமாக வந்ததினால் இலக்கம்

காணிக்கை 25
கிடைக்காத ஆசிரியர் அனிஸ், ஒரு தூணோடு ஒட்டினாற் போல் ஒதுங்கி நின்று கொண்டார். காய்ச்சலும் உடல் வலியும் அவரை மிகவும் சோர்வடையச் செய்திருந்தன. சென்றுவிட்டு பிற்பகலில் வருவதற்கும் அவரின் மனம் சம்மதிக்கவில்லை.
* சனமெல்லாம் குறையட்டும் பாப்பம்’ என்று நின்று கொண்டார்.
அங்கே நோயாளர்களைப் பரிசோதித்துக் கொண் டிருந்த டாக்டர், தனது மாணவி என்பதும் அவருக்குத் தெரியாமலில்லை. என்றாலும் முந்திக்கொண்டு சென்று அவளிடம் சலுகை பெற அவர் விரும்பவில்லை. இது அவரின் பெருந்தன்மையை வெளிப்படுத்தியது.
ஆசிரியர் அனிஸிற்கு டாக்டர் பஸினா மாணவி யாகவிருந்த அந்தக் காலம் அவர் மனத் திரையிலே பட மாக விரிந்தது.
ஆசிரியர் அனிஸ், ஆண்டு ஆறு முதல் பஸினாவுக்குத் தமிழ்ப்பாடம் கற்பித்து வந்தார். தொடர்ந்து எல்லா வகுப்புகளிலும் முதலாவதாக வரும் அவளுக்குத் தமிழ் கற்பிப்பது அனிஸிற்கு சற்றுப் பெருமையாகவும் இருந்தது.
இந்தச் சந்தர்ப்பத்திலேதான் கண்ணுக்குள் தூசு விழுந்தது போல அவள் வாழ்விலும் ஒரு சோதனை ஏற் - لقي -سا-Lلا
அப்பொழுது பளபீனா, ஆண்டு பத்தில் கல்வி பயின்று கொண்டிருந்தாள். ஆசிரியர் அனிஸ் அவ் வகுப்பில் தமிழ்ப்பாடம் கற்பித்து வந்ததோடு வகுப்புப் பொறுப் பாசிரியராகவும் பணியாற்றி வந்தார்.

Page 24
26 y. GTsi. egiounai T
இந் நிலையிலேதான் அவளின் தந்தை நிஸாம் திடீ ரென்று மாரடைப்பினால் மரணமடைந்தார்.
மூன்று மைல்களுக்கு அப்பாலுள்ள மகளிர் கல்லூரி ஒன்றின் விடுதியிலே தங்கியிருந்து கல்வி பயின்று வந்த பஸினாவைப் படிப்பிக்க வேண்டிய பொறுப்பு அவளின் தாய் பெளஸியாவின் தலையில் விழுந்தது.
பொருளாதார நிலையைப் பொறுத்தவரையில், பளினாவைப் படிப்பிப்பது அவளுக்குச் சிரமமாக இருக்க வில்லை.
ஆனால், வீட்டுக்குள்ளே வாழ்ந்து பழகிப்போன பெளஸியாவுக்கு மூன்று மைல்களுக்கப்பால் உள்ள அவ் விடத்திற்குச் சென்று பஸினாவைக் கவனிப்பதுதான் கஷ்டமான காரியமாகத் தோன்றியது.
அப் பிரதேசத்தில் நிலவிய பிரச்சினையான சூழ் நிலை காரணமாகத் தன் மகள் தன்னுடன் இருப்பதையே அவள் விரும்பினாள். அதனால், பஸினாவின் பாடசாலைக் கல்விக்கதவை அடைத்துவிட்டாள் அவள்.
தாயை எதிர்க்கும் தைரியம் அவளுக்குத் தோன்ற வில்லை. பெட்டிப் பாம்டாக அடங்கிப்போனாள்.
ஐந்து மாதங்கள் வீட்டுக்குள்ளேயே புதைந்து கிடந்தாள்.
ஆசிரியர் அனிஸிற்கு இதற்கு மேலும் பொறுமை யாக இருக்க முடியவில்லை. பஸினா கல்வி கற்பதை நிறுத் திக் கொண்டது அவருக்கு மிகுந்த கவலையைத் தந்தது.
ஒரு நாள் அவர், பளியீனாவின் வீட்டுக்குச் சென்று அவளின் தாயிடம் தன்னை அறிமுகஞ் செய்து கொண்டு நிலைமையை எடுத்து விளக்கினார்.

காணிக்கை 2.
ஆசிரியரின் அறிவுரைகளை அந்தத் தாய் ஏற்றுக் கொண்டாள். அவளைத் திரும்பவும் பாடசாலைக்கு அனுப்ப சம்மதித்தாள்.
விடை பெற்றுக்கொண்ட ஆசிரியர் அனிஸ், “ ‘பஸினா . மறந்திராதீங்க. திங்கக் கிழமையிலிருந்து பாடசாலைக்கு வந்திரனும்’ என்று பஸினாவை அன்புடன் தட்டிக் கொடுத்துவிட்டுப் புறப்பட்டார்.
பஸினாவிற்கு, தன்மேல் மலர்களை அள்ளிச் சொரிந் தது போல் இருந்தது.
அவள் மீண்டும் கல்வியைத் தொடர்ந்தாள். பரீட்சை களில் சித்தி எய்தினாள். உயர் நிலையையும் எட்டினாள்.
‘என்ன சேர். ஒரு மாதிரியாக இருக்கீங்க. கன்நேரமா நீங்க இஞ்ச வந்து..?? டாக்டர் பஸினாவின் குரல் கேட்டு சுய நிலையை அடைந்தார் ஆசிரியர் அனிஸ்.
எதிரே டாக்டர் பஸினா புன் முறுவல் சிந்திய வண்ணம் நின்றிருந்தாள்.
‘‘மகள்.இப்ப கொஞ்ச நேரத்துக்கு முதல் லதான் நான் இஞ்ச வந்தன். நீங்க இஞ்ச வந்திருக்கீங்க என்டு ரெண்டு மூணு நாளைக்கு முதல் லதான் நான் கேள்விப் பட்டன், நேத்தையிலரிந்து உடம்பெல்லாம் ஒரு மாதிரி யாக இருக்கு காச்சல் குணமாகவுமிருக்கு. உங்களுக்கிட்டக் காட்டி மருந்தெடுக்கலா மெண்டுதான் நான் வந்தன்' குறுநகையொன்றை உதிர்த்து விட்டுக்கொண்டு நிமிர்ந்தார் ஆசிரியர்.
"நீங்க இஞ்ச வந்தவுடனேயே உள்ளுக்க வந்திருக் கலாமே சேர், என்னத்துக்கு இஞ்ச நிண்டீங்க?"

Page 25
28 யூ. எல். ஆதம்பாவா
"ஆட்கள் நம்பர் எடுத்துக்கிட்டு போளின்ல நிக்காங்க. நாம அதுக்குள்ள பூர்ரது சரியில்லயே மகள், அதுதான் நின்டன்.""
‘‘சரி.இப்ப என்னோட உள்ளுக்க வாங்க.?" டாக்டர் பவினா, ஆசிரியர் அனீஸை அழைத்துக் கொண்டு நோயாளரைப் பரிசோதிக்கும் அறைக்குள் நுழைந்தாள்.
தனது ஆசிரியரை ஆசனத்தில் அமரச் செய்துவிட்டு அவளும் தனது ஆசனத்திலே அமர்ந்து கொண்டாள்.
தனது ஆசிரியரை நன்கு பரிசோதனை செய்தாள். அவருக்குரிய மருந்து வகைகளை ஒரு பெண் தாதி மூலம் உடனேயே வரவழைத்து அவரிடம் ஒப்படைத்தாள். பாவிக்கும் காலம், அளவு என்பவற்றையும் விபரமாக் எடுத்துச் சொன்னாள்.
புறப்பட்ட ஆசிரியரைத் தடுத்து நிறுத்தினாள் டாக்டர் பளூனா,
'உங்களோடு கொஞ்சங் கதைக்கணும். சோதிக்கிற நோயாளர்களும், கொஞ்சப்பேர்தான் இருக்காங்க. தயவு செய்து கொஞ்ச நேரம் இந்தக் கதிரையில இருங்க சேர்.'" டாக்டர் பஸினா தனக்கு எதிரே இருந்த கைக் கதிரை ஒன்றைச் சுட்டிக் காட்டினாள்.
அவளின் கட்டளையை மீற முடியாமல் அனிஸ் அக் கதிரைக்கு இடம் பெயர்ந்தார்.
டாக்டர் பஸினா மீண்டும் தன் பணியைத் தொடர்ந் தாள். நாற்பத்தைந்து நிமிடங்களில் தன் பணியினை முடித்துக் கொண்டு தன் ஆசனத்திலே சாவகாசமாக அமர்ந்து கொண்டு தனது ஆசிரியரின் தற்போதைய நிலை மையைக் கேட்டறிந்து கொண்டாள் டாக்டர் பஸினா.

காணிக்கை S. 29
**மகள். என்னப்பத்தி எவ்வளவோ அக்கறையோடு விசாரிக்கீங்க. என்மேல் எவ்வளவு நன்றியுடையவராக இருக்கீங்க.??
**உங்கள நான் எப்படி சேர் மறப்பேன். நீங்க இல்லாமலிருந்திருந்தா நான் இந்த நிலைக்கு வந்திருக்கவே மாட்டேனே...' என்றவள், தன் கைப்பையிலிருந்து ஒரு கவரை எடுத்தாள்.
அவளது முதல் மாதச் சம்பளம் அந்தக் கவருக்குள் இருந்தது.
“என் முதல் மாதச் சம்பளம். இது என்னுடைய காணிக்கை" என்றவாறு அதனை ஆசிரியர் அனிஸிடம் நீட்டினாள்.
ஆசிரியர் அனிஸ் சட்டென்று கதிரையை விட்டு எழுந்து நின்றார்.
"என்ன மன்னிக்கணும் மகள் அத அப்படியே நீங்களே வச்சுக்கங்க. நான் உங்களுக்குச் செய்த உதவிக்கு கைமாறாக எந்தப் பெயரிலும் எந்த உதவியையும் பெற்று என்ட பணியின் புனிதத்தைக் கெடுத்துக்கவிரும்பல்ல.இஞ்ச நீங்க எனக்கிட்டக் காட்டின மதிப்பும் மரியாதை யுமே பெருங் கைமாறுதான். என்ட வாழ்க்கையில இதுவரையில, இப்படி மகிழ்ச்சிகரமான ஒரு நாள நான் சந்தித்ததே இல்லை. நன்றி மகள்.'
ஆசிரியர் அனிஸ், தனது அறுபத்தைந்து வயதிலும் திடமாக நடக்க ஆரம்பித்தார். அவரது காய்ச்சலும் உடல் வலியும் பறந்து போயின.
டாக்டர் பஸினாவின் கையிலிருந்த அந்தக் கவர், அவளை அறியாமலேயே நழுவி மேசை மேல் விழுந்தது.
சூடாமணி 1995 செப்டம்பர் 03

Page 26
மீண்டும் அவன்
சவூதிக்குப் போகிறான்
வீட்டின் முன் ஹோலில் கிழக்கு நோக்கிப் போடப் பட்டிருந்த சாய்வு நாற்காலியிலே சரிந்து படுத்திருந்தான் நெளபல். எதிரே ஜன்னலில் தெரிந்த முற்றத்தின் ஒரு பகுதி அவன் விழிகளிலே விழுந்தது. அங்கே, செழித்து வளர்ந்து நின்ற தாள் ரோஜா மரங்களும் ரோஜாச் செடிகளும் வெயிலிலே குளித்து நின்றன. ஆனால் இலைகள் அடர்த்தியாக நெருங்கிக் கிடந்த சில இடங்களிலே வெயில் உட்புக இயலாது பின்வாங்கிக் கொண்டிருந்தது.
வெயிலின் அகோரம் பெரும் பகுதி தணிந்துவிட்டி ருந்த போதும், தாள் ரோஜா மரங்கள், ரோஜா ச் செடிகள் ஆகியவற்றைவிட்டு இன்னும் வாட்டம் ஒட்டம் பிடிக்க வில்லை. அம் மரங்களும் செடிகளும் காற்றிற்கு வளைந்து கொடுத்து மெல்ல அசைந்து கொண்டிருந்தன. அவற்றின் நிழல்களோ பக்கத்துச் சுவரிலே படம் வரைந்து கொண்டி ருந்தன.
அம் மரங்களினதும், செடிகளினதும் தோற்றங்களும், கிளைகளினது அசைவுகளும், "நீங்கள் போகவேண்டாம்.

காணிக்கை 31
நீங்கள் போகவேண்டாம்" என்று கெஞ்சிக் கேட்டுக்கொள் வது போல அவனுக்குக் காட்சியளித்தன. அவன் அங்கிருந்து தன் பார்வையைப் படீரென்று ஹோலுக்குள் இழுத்துக் கொண்டான். பின்பு, அவன் பார்வை அவனுக்கு எதிரே ஹோல் சுவரில் மாட்டப்பட்டிருந்த ஒரு புகைப்படத்திலே சென்று படிந்தது. தன் மனைவி, தனது புதல்வன் ஆகியவர்களோடு தானும் இணைந்து எடுத்துக் கொண்ட அப் புகைப்படத்தைப் பார்த்ததும் அவன் விழிகளில் நீர் சொரு சொருவென்று ஊறிவந்தது.
தன் மனைவியையும், ஒரே ஒரு மகனையும் விட்டுப் பிரிவதென்றால் அவனுக்கு வேதனை ஏற்படாதா என்ன? உடனேயே அவன் தன் பார்வையைக் கீழே தாழ்த்திக் கொண்டான்,
தன் வதனத்தை முழுமையாய் ஒரு முறை அழுந்தத் துடைத்து தன்னை ஒருவாறு சமாளித்துக் கொண்டு மீண்டும் தலையை மேலே கிளப்பினான். இம்முறை அவனின் பார்வை ஜன்னலின் ஊடாய்த் தொலைவில் தெரிந்த வான் வெளியிலே சென்று நிலைத்தது, சில வினாடிகளின் பின் அவன் நினைவிலே அவன் வாழ்வில் நிகழ்ந்த சில சம்ப வங்கள் நிழலாடின.
O O O அன்று ஞாயிற்றுக் கிழமை. காலை பத்து பத்தரை மணியிருக்கலாம். தனது வீட்டின் முன் ஹோலில் அவனும் அவன் மனைவி மசூராவும் எதிர் எதிராக நாற்காலியில் உட்கார்ந்திருந்தனர்.
அவனின் முகம் காலை வான் போல் மிகவும் தெளி வாய்த் திகழ்ந்தது. ஆனால், அவளின் வதனமோ LDn)/67th தளிர் போல் சற்றுச் சிவப்பேறிக் காணப்பட்டது.
முதலில் அவளே கணவனை நோக்கி மெல்ல இதழ் களைப் பிரித்தாள்.

Page 27
32 யூ, எல். ஆதம்பாவா
'நம்மிட வாழ்க்க ஒரேயே கடன்பர்ர வாழ்க்கை யாத்தானிருக்கு' என்றுவிட்டு, ‘ம்.ஹ"..” என நெடு மூச்சொன்றையும் உதிர்த்து விட்டுக் கொண்டாள்.
"அதுக்கு நாம என்ன செய்யிற, என்ட சம்பிளத் துக்க வாழ்றதா லதான் இந்த நில. இதோட நமக்கு வேற ஒரு வருமானமாவது வருமிண்டா நாம இப்படிக் கஷ்டப் படத் தேவையில் லத்தான். அப்படி வருமானம் வாறத் துக்கும் நமக்கு ஒரு வழியுமே இல்லாமல்தான் இருக்கு. என்ன செய்யிற, ஒரு மாதிரியாச் சமாளிச்சுக் கொண்டு போறதுதான். '
“ ‘ஒரு மாதம் ரெண்டு மாதம் இல்லாட்டி ஒரு வருசம் ரெண்டு வருசம் எண்டாலும் பறுவாயில்ல, இது நீட்டுக்கு இப்படித்தான் இருக்கணும் போலல்லவா தெரியிது. உங் களப் போல உத்தியோகம் பாக்கிற சீனிக்காக்காட மகன் றசாக்கும், அசன் நானாட மகன் சபீக்கும் சவூதிக்குப் போய் இண்டைக்கு அவங்கட குடும்பம் எவ்வளவோ நல்லா ரிக்கி. நீங்களும் சவூதிக்குப்போனா என்ன? உங்களுக்கும் லீவு எடுக்கலாந்தானே!"
மேலும் அவள் கன்னங்களில் செம்மை ஊறிக் கொண் டது. இமைகளும் படபடவென அடித்துக் கொண்டன.
"லிவு எடுக்கலாந்தான். அதப்பத்தி ஒண்டுமில்ல. ஆனா...' என்று இழுத்தான்.
'ஆனா என்ன? போறத்துக்கு பதினைந்து இருபது வேண்டுமே அத எப்படி எடுக்கலாமெண்டு யோசிக்கிங்க போலரிக்கு நம்மிட ஊடு வளவு மெயின் றோட்டுக்குக் கிட்ட இருக்கிறதால அத ஈடுவச்சி இருபதுணாயிர மென்ன நாப் பதுணாயிரம் வேணுமெண்டாலும் காசு எடுக்கலாம். நீங்க அதப்பத்தி யோசிக்கத் தேவல்ல."
'சேச்சே.நான் அதப்பத்தி யோசிக்கல்ல. அப்படிக் காசு எடுக்கலாமெண்டு எனக்கும் தெரியுந்தான். ஆனா

காணிக்கை 33
உங்களையும் நம்மிட ஒரே மகன் இர்சாத்தையும் விட்டுப் பிரிஞ்சிருக்கணுமே அதப்பத்தித்தான் யோசிக்கன்.
போன வரிசம் தொடக்கத்தில வெளிநாட்டுக்குப் போறத்துக்கு நானும் நினச்சான். ஆனா.உங்களையும் மகனையும் பிரிஞ்சிருப்பதுதான் அப்பயும் எனக்கு மிச்சம் கஷ்டமாக இருந்திச்சி. அதனால நான் அவ்வெண்ணத் தையே கைவிட்டிட்டன். என்டாலும் நீங்க என்ன விட்டு விடுவதாகத் தெரியல்ல, சரிவின்ன நான் போறன்.”*
"'உங்கள விட்டுப் பிரிஞ்சிருப்பது எனக்குமட்டும் சந்தோஷமா என்ன. அத நினச்சாலே எனக்கும் நெஞ்சு பதறத்தான் செய்யிது. என்ன செய்யிற நம்மிட சந்தோஷ மான வாழ்க்கைக்காக ஆரம்பத்தில சில தியாகங்களச் செய்யத்தான் வேணும். ஆர எடுத்துக்கிட்டாலும் சரி ஆரம் பத்தில சில தியாகங்களச் செஞ்சவங்கதான் இன்டைக்கு மிச்சம் நல்லா ரிக்காங்க."
அவளின் வதனத்தில் மகிழ்ச்சி வற்றிக் கிடந்தது. என்றாலும் அவளின் யெளவனம் அதனையும் மீறிக் கொண்டு பிரகாசிக்கத் தவறவில்லை,
"வீணாக என்னத்துக்கு கதையை வளர்த்துக்கொண் டிருப்பான். நான் போறன் .'"
அவன் தன் நெற்றியில் கவிந்து கிடந்த தலைமயிரை ஒதுக்கி விட்டுக் கொண்டான்.
அன்று முதல் நெளபல் சவூதிக்குச் செல்வதற்கான பணிகளிலே ஈடுபட்டு வந்தான்.
ஏறக்குறைய மூன்று மாதங்கள்தான் கழிந்திருக்கும் அதற்குள் அவன் தனது பயணத்துக்கான சகல ஒழுங்கு களையும் பூர்த்தி செய்துகொழி, சவூதியின், தலைநகரான

Page 28
34 யூ. எல். ஆதம்பாவா
றியாத்தில் வீட்டுக் கார்ச்சாரதியாக வேலையும் பெற்றுச் சென்றான்.
இவ்வளவு குறுகிய காலத்துள் ஒன்பதாயிரம் ரூபாய் சம்பளத்தில் ஒரு தொழில் கிடைத்தது. அதுவும் வீட்டுக் கார்ச்சாரதியாகத் தொழில் கிடைத்தது நெளபலுக்கு மிக்க திருப்தியையும், புளகாங்கிதத்தையும் ஏற்படுத்தியதுமட்டு மல்ல அதற்காகச் செலவு செய்த இருபதினாயிரம் ரூபாய்க் காசுகூட அவனுக்குத் தூசாகவே தோன்றியது.
O O O நெளபல், வீட்டின் கார்ச் சாரதியாகப் பணிபுரியத் தொடங்கி, இருபத்திரண்டு மாதங்கள் நிறைவு பெற இன்னும் சரியாக இரு வாரங்களே இருந்தன.
மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலை வாய்ப்புப் பெற்றுச் செல்பவர்களில் சிலரது இடங்கள் ஏதோ ஒருவகையில் குறைபாடுள்ளதாகவும் வந்து அமைவதுண்டு. ஆனால், நெளபல் வேலைவாய்ப்புப் பெற்றுச்சென்ற இடமோ எல்லா வகையிலும் ஒரு நல்ல இடமாகவே வந்து வாய்த்தது. அதனால் அங்கு, அவனது வாழ்வு மிக்க நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் அமைந்தது. அதுமட்டு மல்ல அவ்வளவு காலமும் மிக விரைவாகவே கழிந்துவிட்டது போலவும் அவனுக்குத் தோன்றியது.
அன்று வெள்ளிக்கிழமை. பிற்பகல். நெளபலின் எஜமான் அவனைத் தன் அறைக்கு அழைத்திருந்தார்.
சகல வசதிகளோடும் கூடிய அந்த அறையிலே இதமான ஒரு சுகந்தமும் பரவியிருந்தது.
நெளபல் அங்கு நுழைந்ததும் வழமைபோல அன்றும் இதமான ஒரு சுகம் அவனைத் தழுவிக்கொள்ளத் தவற வில்லை. தன்னைச் சுதாரித்துக்கொண்ட அவன் மெல்ல நடந்து சென்று தன் எஜமானின் முன்னே அடக்க

காணிக்கை 35
ஒடுக்கமாய் நின்று கொண்டான். அவன் இதழ்களில் ஒரு புன்னகை மட்டுமே நெளிந்தோடியது.
தெளபலைப் பார்த்ததும் எஜமான் அவனைத் தனக்கு எதிரே ஒரு நாற்காலியில் உட்காரச்செய்தார். பின்பு அவனோடு ஆங்கிலத்தில் உரையாடினார். நெளபலும் தன் எஜமானோடு சரளமாய் ஆங்கிலத்தில் உரையாடி னான்,
அரசனொருவனுக்காக உருவாக்கப்பட்டது போல் தொற்றமளித்த ஓர் ஆசனத்தில் நிமிர்ந்து அமர்ந்து கொண்ட எஜமான் மலர்ந்த முகத்தோடு நெளபலை நோக்கினார்.
'நீங்கள் இங்கே வந்து கார் ட்றைவர்த் தொழிலில் சேர்ந்து இன்னும் இரண்டு வாரங்களில் சரியாக இருபத்தி ரண்டு மாதங்கள் ஆகிவிடும் என்ன?’ என்றார்.
**ஆம்." இது நெளபல். "அப்படியென்றால் இன்னும் இரண்டு வாரங்களில் ஊருக்குப் போகவேண்டும் என்ன?"
**ஆம்." நெளபல் தலையையும் மெல்ல அசைத்துக் கொண்டான்.
"சரி.சந்தோஷமாய் ஊருக்குச் சென்று அங்கே உங்களுக்குரிய இரண்டு மாத லீவையும் இனிமையாகக் கழித்துவிட்டு மீண்டும் இங்கே வந்து இன்னும் இரண்டு வரு டங்கள் என்னிடம் இதே தொழிலைச் செய்யுங்களன் ଖtଙtଶ] ? ' '
'நாங்கள் வெளிநாட்டுக்குச் சென்று தொழில் செய் வதற்கு மூன்று வருடங்கள் தான் லீவு எடுக்கலாம். அதில் ஏறக்குறைய இரண்டு வருடங்களை நான் இங்கே கழித்து

Page 29
36. யூ. எல். ஆதம்பாவா
விட்டேன். வேண்டுமானால் நான் இன்னும் ஒரு வருடம் லீவு எடுக்கலாம். ஆனால் எனது மனைவி இரண்டு வருடங் களுக்குமேல் ஒரு நிமிடம்தானும் என்னைப் பிரிந்திருப்ப தைத் தான் விரும்பவில்லை போல் தெரிகிறது. இரண்டு வருடங்கள் முடிந்ததும் உடனேயே ஊருக்குத் திரும்பி விடுங்கள் என்று கூட ஒரு முறை எனக்கு எழுதியிருந்தார். நானும் ஊருக்குத் திரும்பி குடும்பத்தைப் பிரியாது அங்கு மீண்டும் எனது பழைய தொழிலைச் செய்து கொண்டு வாழவே விரும்புகிறேன்.' நெளபலின் வதனத்தில் பூரிப்பு பூத்துக்கிடந்தது.
அவர்களின் உரையாடல் தொடர்ந்தும் ஆங்கிலத் திலேயே நிகழ்ந்தது.
'இலங்கையிலிருந்தோ அல்லது வேறு எந்த நாட்டி லிருந்தோ நான் வேறொருவரை எனது காருக்கு ட்றை வராக எடுத்துக் கொள்ள முடியும். ஆனால் அவர் உங்க ளைப்போல் வந்து வாய்ப்பாரோ என்றுதான் எனக்கு யோசனையாய் இருக்கிறது. நீங்களோ சிறந்த பல பண்பு களுள்ள ஒரு நல்ல பிள்ளை. எந்தக் காரியத்தையும் செய்து முடிக்கக் கூடிய திறமையும் ,ஆற்றலும் தங்களிடம் உண்டு. நீங்களிருந்தால் எனது எந்த வேலையும் மிக இலகுவிலே நிறைவேறிவிடும். ஆகையினால், எதிர்வரும் ஆண்டு மட்டும் நீங்கள் மீண்டும் இங்கே வந்து இதே தொழிலைச் செய் யுங்கள். உங்களுக்கு இன்னும் ஒரு வருடமாவது லீவும் எடுக்கக் கூடியதாகத்தானே இருக்கிறது. எனக்காகக் கொஞ்சம் விட்டுத்தாருங்கள். நான் உண்மையைத் திறந்து கூறுகிறேன். எனக்கு எதிர்வரும் ஆண்டு நிறைய நிறைய வேலைகள் இருக்கின்றன. அதனாலேதான் நான் உங்களை இப்படி விடாப்பிடியாய்ப் பிடித்துக் கொண்டு நிற்கிறேன். இல்லை எனில் நான் உங்களை உங்கள் விருப்பப்படியே விட்டுவிடுவேன்' என்றுவிட்டு நெளபலை ஊன்றிக் கவனித்தார் எஜமான்.

காணிக்கை: .ht .யூ 3.
தன்னை தம் குடும்பத்திலுள்ள ஒருவரைப்போல் நடத்தியது மல்லாமல் நிறைய நிறையச் சலுகைகளும் வழங்கி வந்த தனது எஜமான் இவ்வாறு விநயத்தோடு வேண்டிக்கொண்டதும் நெளபலால் அதனைத் தட்டிக் கழிக்க இயலவில்லை.
"சரி.நான் எதிர் வரும் ஆண்டும் கார் ட்றைவராகத் தங்களிடம் பணி புரிவேன்.' 3 , ነ ' ነጆ ኛ &: &- }
"வீட்டுக்குப் போனதும் உங்களின் மனைவி தடுத்து விடுவாரோ என்னவோ'
"சீச்சீ.இனி அதெல்லாம் நடக்காது." "அப்படியென்றால். எனது கையில் தொட்டுச் சொல்லுங்கள்.' Y
எஜமான், நெளபலை நோக்கித் தனது வலது கரத்தை நீட்டிக்கொண்டார்.
நெளபலோ, சரேலென்று எழுந்து சென்று எஜமா னின் கையில் தொட்டுச் சொன்னான்.
"நிச்சயமாக நான் இங்கு மீண்டும் வந்து, எதிர் வரும் ஆண்டும் தங்களிடம் பணி புரிவேன்.'
"அப்படியென்றால். சரி. நீங்கள் ஊருக்குப் போய்த் திரும்புவதற்காக டிக்கெட் ஒழுங்குகளைச் செய்கிறேன்."
வெகு கம்பீரமாகக் காட்சி தந்தார் எஜமான். குறுந் தாடியும், மீசையும் அவரின் முகத்திற்கு அழகாகவே இருந்தன.
O () O நெளபல் றியாத்திலிருந்து ஊர் திரும்பி ஆறு வாரங்கள் அகன்றன.
ஒரு தினம். அந்தி சாயும் வேளை. வீட்டு முற்றத்திலே பரப்பப்பட்டிருந்த கடற்கரை மணலிலே. தன் கணவன்

Page 30
38, யூ. எல். ஆதம்பாவா
நெளபலோடு அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்த மகுரா அங்கு திடீரென்று ஒரு சந்தேகத்தைக் கிளப்பினாள்.
'நீங்க பழய தொழில் ல சேர்ரத்துக்கான ஒழுங்கு களச் செய்யா 10 சும்மா தெர்ரிங்க. அழிச்சும் வெளிநாட் டுக்குத்தான் போப்பிறிங்களா என்ன..?"
தன் நிலையினை எப்படிக்கூறலாம் என்று சிந்தித்துக் கொண்டிருந்த அவனுக்கு அது ஒரு நல்ல சந்தர்ப்பமாக வந்து வாய்த்தது. அதனை அவன் நழுவ விடுவானா?
“ஓம் " என்றான் நெளபல் எவ்விதச் சலனமுமின்றி. 'சே. பொய் சொல்றீங்க?" "இல்ல, உண்மதான்.""
"நீங்க, இந்த ரெண்டு வருசமும் உழச்சதில சாமானு' களத் தவிர காசி மாத்திரம் ஒரு லெச்சத்தி எண்பதினா யிரம் மட்டில இப்ப நமக்கிட்ட இரிக்கி, அதக் கொண்டு ஒரு தொழில ஒழுங்கு செஞ்சி ஒரு வருமானத்த நாம உண்டாக் கிக்கலாம். அதோட, உங்கட பழய தொழிலயும் பாத்துக் கொண்டா, நம்மிட குடும்ப வாழ்க்கைக்கு நல்லாக் காணும். எவ்வளவுதான் கொட்டிக் குவிக்கலாம் என்டா லும், வெளிநாட்டுக்கு இனிப் போற வேல வாணா. உங்களை விட்டுப்பிரிஞ்சி இனிக் கொஞ்ச நேரமும் என்னால வாழ ஏலா. சும்மா போட்டுட்டு வேலயப்பாருங்க." ஒதுங்கிக் கிடந்த நெஞ்சுச் சீலையை மேலே இழுத்துவிட்டுக் கொண்டாள்.
'நானும் ஊருக்குத் திரும்பி முக்கியமா என்ட பழய தொழிலச் செய்துகொண்டு உங்களயும், மகனையும் விட்டுப் பிரியாது வாழ வேணுமெண்டுதான் எண்ணியி ருந்தன். ஆனா.நான் ஊருக்குத் திரும்பிறத்துக்கு ரெண்டு கிழமைக்கு முன்ன என்ட எஜமான் என்னக் கூப்பிட்டு, வாற வருசம் அவருக்கு கொள்ளயா வேலைகள்ளாம் குவிஞ்சு

காணிக்கை 39.
கிடக்குதெண்டும் அப்ப நான் அவரிடமிருந்தால் அவ் வேலைகள்ளாம் மிச்சம் லேசா முடிஞ்சிரும் எண்டும், ஆனபடியால வாற வருசமும் நான் அவரிடம் வந்து வேலை செய்ய வேண்டு மெண்டும், தயவாக என்ன வேண்டிக் கொண்டார். நான் வேல செய்யக்க எவ்வளவோ உதவிகள் ளாம் செய்த என்ட எஜமான் என்ன இவ்வாறு வேண்டிக் கொண்ட போது அவர்ர வேண்டுகோள தட்டிக் கழிக்க முடியல்ல. நான் அவ்வாறே செய்வதாக வாக்கும் கொடுத் திட்டன். என்ன செய்யிற. ஒரு வருசந்தானே. அது கெதியா ஒடிரும்.'
"ஒரு வருசமென்ன, இனி ஒரு நிமிசங்கூட உங்களப் பிரிஞ்சிருக்க ஏலா. என்ன வாக்கும் கீக்கும் விட்டிட்டு வேலயப் பாருங்க."
"உலகத்தில வாக்குத்தான் பெரிசு. மனிசன்டா கொடுத்த வாக்க எப்படி எண்டாலும் காப்பாத்தித்தான் தீரணும். எனக்கு இப்படி வாக்குக் கொடுக்க வேண்டி வந்ததும் உங்களாலதான். நான் வெளிநாட்டுக்கே போகாம இருந்திருந்தா எனக்கு இந்த நில வந்திருக்காதே! ஆனபடி யால என்னத் தடுக்காதீங்க."
"அப்படிண்டா, நீங்க போகத்தான் போறிங்க?"
'ஒம், போகத்தான் போறன் .'
"'உங்களக் கெஞ்சிக் கேக்கன் நீங்க போக வேண்டாம்.'
'இல்ல, நான் போகத்தான்போறன்.' நெளபலின் வதனத்தில் உறுதி ஒளிவிட்டது.
'உங்களுக்கு போறதுதான் முக்கியமாத் தோணுது. எங்களப் பத்தி கொஞ்சங்கூடப் பொருட்படுத்திறதாத் தெரியல்ல. சரி.போங்க. ஆனா.தயவு செஞ்சி நீங்க

Page 31
40. யூ. எல். ஆதம்பாவா
போற அண்டைக்கு உங்கட சாமான் கீமான் எல்லாத் தையும் எடுத்துக்கிட்டு ஒரே போக்காப் போயிருங்க, அதுக்குப்பொறகு நம்மஞக்குள்ள எந்த விதமான தொடர்பு களுமில்ல என்கிறதையும் நெனவில வெச்சிக்கங்க, ” மசூராவின் கன்னங்கள் அந்திவான் போல சிவப்பாகிக் கிடந்தன.
'நீங்க என்னப்பத்தி வித்தியாசமா நெனைக்க வேணா. நான் உங்களயும், மகனையும் என்ட உயிரிலும் மேலாகவே மதிக்கன். என்டாலும், இந்த விஷயத்தில கொடுத்த வாக்க நான் காப்பாத்தியே தீருவேன். நீங்க எப்படித்தான் முடிவு செய்தாலும் எனக்குக் கவலயில்ல. ஆனா, எதயும் ஆற அமர யோசித்து முடிவு செய்வதுதான் நல்லது. நான் அவ்வளவுதான் சொல்லுவன்."
அத்தோடு அவர்களின் உரையாடல் முற்றுப் பெற்றது. பின்பு அவர்களிருவரும் அங்கிருந்து அகன்று வீட்டுக்குள் பிரவேசித்தனர்.
() O O சுவர்க் கடிகாரம், ‘டிங்.டிங்.." என்று ஒலி எழுப் பியது. சுயநிலை எய்திய நெளபல் வான் வெளியிலே நிலைத் திருந்த தன் பார்வையை ஹோலுக்குள் இழுத்து சுவரிலே மாட்டப்பட்டிருந்த அக் கடிகாரத்தின் மேல் செலுத் தினான். மணிக்கம்பியும் நிமிடக்கம்பியும் மணி மூன்று என்பதை விளம்பிக் கொண்டிருந்தன.
அவன் சாய்வு நாற்காலியைவிட்டு ‘விசுக் கென்று எழுந்து அறைக்குள் விரைந்து அவசர அவசரமாய் உடை மாற்றிக்கொண்டு மீண்டும் ஹோலுக்குள் வந்தான்.
ஹோலில், கிணற்றிற்கு எதிரே இடப்பட்டிருந்த கதவு நிலையிலே சாய்ந்தபடி நின்றிருந்தாள் மசூரா. அவள் அருகே பன்னிரண்டு வயதை எட்டிக்கொண்டிருந்த அவர்கள் புதல்வன் இர்சாத்தும் நின்றிருந்தான்.

காணிக்கை 41
நெளபல், அவர்களைப் பார்த்ததும் அருகே படர்ந் தான்.
மசூராவின் இமைகள் உப்பியும், விழிகளும், வதன மும் சிவப்பாகியும் கிடந்தன. நெடு நேரம் அழுதிருக்க வேண்டும் போல் தோன்றியது. m
இர்சாத்தோ சோகமே உருவாக நின்றிருந்தான். அவன் கண்கள் இரண்டும் நீரில் மிதந்து கொண்டிருந்தன.
அவர்களைப் பார்த்ததும் நெளபலுக்கும் விழிகள் குளமாகி விட்டன. உதட்டைக் கடித்து தன்னை ஒருவாறு சமாளித்துக் கொண்டான். மறுகணம், அவன் தன் மனைவியை நெருங்கினான். ی
“ ‘புள்ள. எனக்கு நாளப்பொறத்தைக்குக் கப்பல் இருக்கி. எல்லாத்துக்கும் இண்டைக்குப் போனாத்தான் வசதியாக இருக்கும். நான் போயிட்டு வாறன்,' அவனின் குரல் கரகரத்தது.
v r s p v n w v. அவள் எதுவுமே பேசவில்லை. "புள்ள...நான் போயிட்டுவாறன்." மீண்டும் அவன்.
அப்போதும் அவள் எதுவுமே பேசவில்லை.
சுவரில் வரைந்த சித்திரம்போல் அசையாமல் நின்றி ருந்தாள். ஆனால், அவள் நயனங்கள் இரண்டும் மாரிகால மழை மேகமென நீரைப் பொழிந்து கொண்டிருந்தன.
அவனுக்குத் தன் நெஞ்சில் ஒரே முறையில் பல கணைகள் வந்து பாய்ந்ததுபோல் இருந்தது.
நெளபல் அங்கிருந்து மெல்ல அகன்று தன் புதல்வன் இர்சாத்தை நெருங்கினான். அவனின் தலையை வருடிவிட்டு முத்தமிட்டுக் கொண்டான்.

Page 32
42 யூ. எல். ஆதம்பாவா
“ ‘நான் போயிட்டு வாறன் மகன்.'"
'போயிட்டு வாங்க வாப்பா.’’ இர்சாத்தின் விழி கிளிலிருந்து அணையை உடைத்துக் கொண்டு பாயும் வெள்ளமெனக் கண்ணிர் வழிந்து கொண்டிருந்தது.
தன் மனைவி, மகன் ஆகிய இருவரின் தோற்றங் களும் செயல்களும் இம் முறை நெளபலின் கண்களில் "பொலு பொலு வெனக் கண்ணீரைப் பொங்கி எழ வைத்தன.
அவனுக்கு வாய்விட்டே அழ வேண்டும் போல் இருந்தது. "டக் கென்று நீளக் கால்சட்டைப் பைக்குள் இருந்த கைக்குட்டையை எடுத்து முகத்தை அழுந்தத் துடைத்து தன்னை மீண்டும் கட்டுப்படுத்திக் கொண்டான்.
தான் நின்றால் துன்பம் மேலும் பெருகும் என்பது மட்டுமல்ல சில வேளை தன் பிரயாணமே தடைபட்டு விடவும் கூடும் என்பதனாலும் நெளபல் உடனேயே அங்கி ருந்து அகன்று சாய்வு நாற்காலியின் அருகே வைக்கப்பட் டிருந்த அலுமாரியின் பக்கமாய் அடியெடுத்து வைத்தான்.
சில வினாடிகளின் பின் அவன் அலுமாரியோடு ஒட்டியவாறு தரையிலே வைக்கப்பட்டிருந்த பெரிய "லெதர் சூட்கேஸை எடுத்துக் கொண்டு தன் மனைவியையும் மகனையும் ஒரே பார்வையில் நோக்கி, "நான் போயிட்டு வாறன்’’ என்றுவிட்டு அவர்களின் பதிலுக்குக்கூடக் காத்திருக்காது வீட்டை விட்டு வெளியேறி, பாதையிலே இறங்கினான். அவன் விழிகளிலிருந்து கண்ணீரும் கன்னங் களில் இறங்கியது.
தினகரன் வாரமஞ்சரி 1984 நவம்பர் 04

திருந்திய உள்ளங்கள்
அக்ரம் மெளலவியின் புத்தம் புதிய வீடு அது, அள வான முன் ஹோல். அழகாகவும் புனிதமாகவும் காட்சி தந்தது. மேற்குப் புறச் சுவரிலே கஃபத்துல்லாவின் படம் பொறிக்கப்பட்ட ஒரு சீலை பொருத்தப்பட்டிருந்தது. கிழக் குப்பக்கச் சுவரில் பெரிய அளவிலான மாதக் கலண்டர் ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது. அதன் முன்னே விரிந்து கிடந்த தாளின் மேற்பகுதியில் மதீனாவிலுள்ள மசூதி யொன்று காட்சியளித்தது. கீழே, தரையின் தென் மேற்குப் புறச் சுவர் மூலையிலே ஒரு கிண்ணத்திலிருந்து ஊது பத்திகள் எரிந்து எங்கும் நறுமணத்தைப் பரப்பிக் கொண் டிருந்தன.
இவ்வாறான இதமான ஒரு சூழலைக் கொண்ட அந்த ஹோலின் மத்தியிலே இடப்பட்டிருந்த ஆசனங்களில் அக்ரம் மெளலவியும் நான்கு இளைஞர்களும் உட்கார்ந் திருந்தனர்.

Page 33
44 யூ. எல். ஆதம்பாவா
‘எங்கிருந்து வாறிங்க?' மெளலவி அக்ரமே பேச்சை ஆரம்பித்தார்.
"ஒரு வெடத்தையுமில்ல. இஞ்சதான் வந்த' வந்திருந்தவர்களிலே வாயாடியான ஓர் இளைஞன் பதில எரித்தான்.
‘'என்ன விஷேசம்?" இது மெளலவி அக்ரம்,
'நோன்புக்கு இன்னம் அஞ்சாறு நாளிருக்கி, இந்த முற நீங்கதான் நோன்புக்கு ஹதீஸ் சொல்லணும். போன முற ஹதீஸ் சொன்ன ஹரீஸ் மெளலவி இஞ்சரிந்த அவர்ர வீடு வளவ வித்துப்போட்டு அடுத்த ஊருக்குப் போய் அங்க வீடு வளவு வாங்கி தன்ட பெண் சாதி பிள்ளைகளோட குடியிருக்கார். அவருக்கு இஞ்ச வந்து ஹதீஸ் சொல்றத் துக்கு இனி வசதிகள் இல்ல. அதுமட்டு மில்ல, நீங்க மிகவும் திறமையான ஒரு மெளலவி எண்டு பலரும் சொல்றாங்க. இந்த முற உங்களக் கொண்டுதான் ஹதீஸ் சொல்லுவிக் கணும் எண்டும் எங்களுக்கு விருப்பமாரிக்கி. அதுதான் நாங்க உங்களுக்கிட்ட வந்த, அந்த இளைஞனே, அனை வரின் சார்பிலும் தமது கருத்தை வெளிப்படுத்தினான்.
'ஆ. அப்படியா..சரி..பாப்பமே.”*
'போன வருசம் நோம்புக்க நம்மிட இந்தக் குறிச் சிக்க சுபைதீன்ட வளவுக்கதான் பொத்துவிலுக்குப் போயி ருக்கிற ஹரீஸ் மெளலவி ஹதீஸ் சொன்ன. அவருக்கு நல்லாக் காசு, சாமான்லாம் சேந்திச்சு, காசு மட்டும் ஆறாயிரம் ரூபா, ஆறு ஏழு மூடை அரிசி, ஏழெட்டுச்சாறி, சாறனும் எட்டொம்பது, லோங்ஸ் சீலையும் ஒரு ஆறுக் கிட்ட இருக்கும், சட்டச் சீலையும் ஒன்பது பத்துக்கிட்ட இருக்கும். அங்கு ஏற்பட்ட செலவச் சமாளிக்கிறத்துக்கு காசில இரண்டாயிரத்த மட்டும் எடுத்துக்கிட்டு, மீதிக் காசையும், மற்ற எல்லாச் சாமாங்களையும் அவருக்கிட் டயே கொடுத்திட்டம்.போன வருசம் நம்மிட ஊரில மத்தச்

காணிக்கை AS
குறிச்சிகள்ளயெல்லாம் ஹதீஸ் சொன்ன மெளலவிமார் களுக்கு நம்மிட் குறிச்சியில ஹதீஸ் சொன்ன அந்த மெளலவிக்குக் கிடைச்சது போல கிடைச்சிருக்கா,
என்டாலும் அவங்களுக்கும் நல்ல நியாயமாக் கிடைச் சிருக்கும். உங்களப் பொறுத்தவரை கூடுதலாத்தான் சேரும். ஏனென்டா, உங்களப்பத்தி இங்க ஒரு நல்ல அபிப்பிரா யமும் நிலவுது. பாப்பம் கீப்பம் எண்டு சொல்லாம வாங்க. உங்களத்தான் நாங்க எதிர் பார்த்துக்கிட்டிருக்கம்.' வாயாடி இளைஞன், அக்ரமை ஊன்றி அவதானித்தான். ஏனைய மூன்று இளைஞர்களின் வதனங்களும் அப்பேச்சிற்கு ஆதரவு தெரிவித்தன.
"ஹதீஸ் சொல்றத்தப்பத்தி ஒண்டு மில்ல, பணம் பொருட்களுக்காக ஹதீஸை விக்கிறத்துக்கு எனக்கு விருப்ப மில்ல. எனக்குப் புத்தி தெரிந்த காலம் முதல் இன்று வரை கவனித்துக் கொண்டுதான் வாறன். நம்மிட ஊரில மட்டு மில்ல, இந்தப் பகுதிகள்ள அதிகமான இடங்கள்ள நோன்பு காலங்கள்ள ஹதீஸ் சொல்வது வியாபாரம்போல மாறிக் கொண்டு வருகிது. பகிரங்கமாக அது தெரியாவிட்டாலும் உள்ளூர நிலைமை அதுதான்.
நம் முன்னோர் தங்கள் உடைமை, உயிர் அனைத் தையுமே இஸ்லாத்திற்காகத் தியாகம் செய்திருக்காங்க. அதன் காரணமாகத்தான் இஸ்லாம் இண்டைக்கு உலக ளாவிய ஒரு மதமாக வளர்ந்து காணப்படுகிறது. அந்தப் பரம்பரையிலே வந்த நாம் இப்படி நடந்து கொள்வது மிகவும் அவமானம். அது மட்டுமல்ல, நமது சமூகத்தில இவ்வாறானவர்கள் பெருகிக்கொண்டு போனால் அது இஸ்லாத்துக்கே பாதகமாகவும் அமைந்துவிடும். ஆகையி னால், நீங்க விரும்பினா நான் இந்த முற நோன்புக்க முன் மாதிரிக்காக ஒரு, ஹதீஸ் மஜ்லிஸையே நடத்திக்காட்றன்.' மெளலவி அக்ரமின் வதனம் சற்றுச் சிவந்து போயிற்று.

Page 34
46 y. 6T6). ஆதம்பாவா
'சரி. அப்படியே செய்ங்க, ஆனா, நீங்க அத எப்படிச் செய்யப் போறிங்க என்கிறத எங்களுக்கிட்டயும் சொன்னா அதற்கேற்ற வகையில நாங்களும் சில ஒழுங்கு களைச் செய்து கொள்ளலாம்." அந்த இளைஞனே இப்போதும் முன்னே குதித்தான்.
A
சரி . சொல்றன் . நானும் இன்னும் ரெண்டு மெளலவிமாரும் சேர்ந்து ஹதீஸ் சொல்றம். மாதம் முழுக்க தனி ஒருவர் சொல்றது மிகவும் சிரமமான ஒரு வேல. நல்லாத் தொண்டையும் கம்மி, கடைசியில அவர் பேசவும் ஏலாமற் போகும். இப்படியான பலரை நாம் பார்த்திருக்கிறம், இத நாம நல்லா அறிஞ்சிருந்தும் இப்படிச் சிரமத்துக்குள்ள போய் மாட்டிக் கொள்வது, தேவல்லாத வேல. அதனாலதான் நான் இப்படி யோசிச்ச. என்னோட ஹதீஸ் சொல்ற அந்த ரெண்டு மெளலவிமாரையும் நானே ஒழுங்கு செய்துகொண்டு ஹதீஸ் சொல்வதற்கான ஏற்பாடு களையும் நானே செய்து கொள்றன். ஆனா, ஒரு முக்கிய மான விஷயம் . எங்களுக்கிட்ட ஹதீஸ் கேட்க வாரி சனங்களுக்கிட்ட எங்களுக்காக காசோ அல்லது பொருட் களோ கொண்டுவர வேண்டாமென்றும், அதில எதையுமே நாங்க எடுக்கமாட்டோ மென்றும் கட்டாயப்படுத்திச் சொல்லுங்க. அதையும் பொருட்படுத்தாம யாராவது சந்தோஷம், காணிக்கை என்று ஏதாவது கொண்டு வந்தா அத பொது வேலைக்காக நம்மிட பள்ளிவாசலுக்குக் கொடுப்பம். இத நீங்க நினப்பில வச்சிக்கொண்டு ஒழுங்கு களச் செய்ங்க. முக்கியமாக ஹதீஸ் மஜ்லிஸ் ஒன்றை அமைத்துக் கொள்வதற்கும், அதனை ஒழுங்காக நடத்து வதற்கும் உங்களுக்கு ஏற்படுகின்ற செலவைச் சமாளிக்க, நம்மிட ஊரிலரிக்கிற கொடுக்கக்கூடிய வசதி படைச்ச சில ருக்கிட்டப்போய், விஷயங்களச் சொல்லி, தேவையான அள வுக்கு காச அறவிட்டுக் கொள்ளுங்க. தலப்பிற காண்ற

காணிக்கை 47
அண்டு இரவைக்கு நேரத்தோட ஒலி பெருக்கி மூலம் சகல விபரங்களையும் ஊரறிய ஒலிபெருக்குங்கள், சரிதானே."
"ஒம்.சரிதான்.' வாயாடி இளைஞனோடு சேர்ந்து ஏனையோரும் தமது சம்மதத்தை முன்வைத்தனர்.
அடுத்த தினம்.
அக்ரம் மெளலவியின் அதே வீடு, முன் ஹோலில் மெளலவிகளான சக்கூர், சனுரஸ், காதர் ஆகியவர்களோடு அக்ரமும் அமர்ந்திருந்தார்.
"'உங்கள ஹதீஸ் சொல்றத்துக்கு ஒழுங்கு பண்ணின பிள்ளைகள் மூலம் நாங்கள் எல்லா விஷயத்தையும் கேள் விப்பட்டம்.? சக்கூர் மெளலவி அனைவர் சார்பிலும் அக்ரமைப் பார்த்தவாறு பேசினார்.
'ஆ. அப்படியா' குறுஞ்சிரிப்பு ஒன்றையும் உதிர்த்து விட்டுக் கொண்டார் மெளலவி அக்ரம் .
'பல வருடங்களாக நாங்களும் இந்த ஊரில ஹதீஸ் சொல்லிக் கொண்டுதான் வாறம், நாங்களோ அல்லது மத்த மெளலவிமார்களோ ஹதீஸ் கேட்க வாறவங்களுக் கிட்ட காசோ, மற்றும் பொருட்களோ கொண்டுவரச் சொல்லிச் சொன்னதே இல்ல. அவங்கதான் எங்க மேலுள்ள முஹப்பத்தில காசு, சாமான்கள்ளாம் கொண்டு வரு வாங்க. அதத்தான் நாங்க வாங்குவம். இத எப்படி வியா பாரம் எண்டு சொல்ற?" சக்கூர் சதைப்பிடிப்பான தனது கன்னத்தைத் தடவி விட்டுக் கொண்டார்.
'ஹதீஸ் கேட்க வாறவங்க காச, அல்லது பொருள் களக் கொண்டுவந்தவுடன் அத நாம பேசாம வாங்கி

Page 35
48 யூ. எல். ஆதம்பாவா
அப்படியே வச்சிக்கிறம் அதனால அவங்க நாம ஹதீஸ் சொல்றத்துக்குப் பிரதிபலனாக பணம், பொருள்கள விரும் பிறம் எண்டு எண்ணி, ஹதீஸ சும்மா கேக்கிறது சரியில்ல எண்டு ஏதாவது கொண்டுவந்து தாறாங்க இத நாம நல்லா யோசிச்சிப்பார்த்தா, அங்க வியாபார நிலம மறை முகமாச் செயல்பர்ரத்த எம்மால உணர்ந்து கொள்ளக் கூடியதாரிக்கி, '
''. . . . . . . . . . . . ** சக்கூர் மெளலவி மெளனமானார். அவரோடு வந்திருந்த மற்றைய மெளலவிகளும் அதில் இணைந்து கொண்டனர்.
இப்போது அக்ரம் மெளலவி இவ்வாறு இயம்பு 5.prtri.
'ஹதீஸ் கேட்கவாற சனங்கள் எம்மை வாய்விட்டுக் கேட்டுக் கொண்டாலும் சரி,கேட்கா விட்டாலும் சரி ஹதீஸ் சொல்ற நாங்க அதன் பெயரால் பணமோ, பொருளோ எதுவுமே வாங்காம விடுவம். இது நாம தொடங்கி1ை ஒரு பழக்கமுமில்ல. நம்மிட ஊரில நமக்கு முன்ன இருந்த வங்க செய்துவந்த பழக்கத்தத்தான் இன்று நாமும் செய்து கொண்டு வாறம். இன்று பார்த்தா இஞ்ச பல இடங் கள்ள நோன்பு காலங்கள்ள ஹதீஸ் சொல்றது ஒரு வியா பாரம் போலவே தோன்றத் தொடங்கியிருக்கு. ‘அந்தக் குறிச்சியில ஹதீஸ் சொல்லப்போனா மிச்சம் குறையத் தான் காசு, சாமான் சேரும், ஆனா, இந்தக் குறிச்சியில ஹதீஸ் சொல்லப் போனா நல்லாக் காசு, சாமான் கூடும். இஞ்ச கூப்பிடுவாங்கண்டா போகலாம்” என்று ஹதீஸ் சொல்ல முனைகின்றவர் எண்ணுகின்ற அளவுக்கு நிலம மோச மாகிக்கொண்டு வருகிறது. பிற்காலத்தில நம்மிட ஊரைப் பொறுத்த வரையில மட்டுமல்ல நம்மிட இந்தப் பகுதியைப் பொறுத்த வரையிலயும் நோன்பு காலங்கள்ள ஹதீஸ் சொல்வது பகிரங்கமான ஒரு வியாபாரமாய் நன்கு முற்றிக்

காரிைக்கை 49
கொண்டு வந்துவிடவும் கூடும். ஆகையினால், இஸ்லாத்தின் நன்மைக்காக இப்போதே இந்த நடைமுறையைத் தடுத்து நிறுத்துவம்" என்று விட்டு நெடு மூச்சொன்றை உதிர்த்து விட்டுக் கொண்டார் மெளலவி அக்ரம்.
மேலும் அவரே தொடர்ந்தார்.
'மெளலவிமார்கள் மற்றவர்களுக்கு முன்மாதிரி யாக நடக்கவேண்டியவர்கள். இந்த விடயத்திலும் மிகவும் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். பொதுவாக நான் சொல்றன், நாம் எல்லா விடயங்களையும் வருவாயைப் பார்த்துக் கொண்டு போகக்கூடாது. சில விடயங்கள்ள தியாகங்கள் கூட செய்ய முன்வர வேண்டும்.
தோழர்களே, நமது விடயத்தைப்பற்றி கொஞ்சம் ஆழமாகச் சிந்தித்துப் பாருங்க" என்றவர் வலைத் தொப்பி யைக் கழற்றி தலை மயிரை மேலே ஒதுக்கிவிட்டு மீண்டும் அதனை அணிந்து கொண்டார். முதுகை ஆசனத்திலே பொருத்தி வசதியாகவும் அமர்ந்து கொண்டார்.
'ம்.சரி. பாப்பமே, நாங்க இஞ்ச வந்து மிச்சம் நேரமாகவும் போச்சி. நாங்க போயிட்டு வாறம். பொறவு சந்திப்பம்' என்றுவிட்டு மெளலவி சக்கூர் தனது இருக்கை யிலிருந்து எழுந்தார். கூடவந்த நண்பர்களும், காந் தத்தில் ஒட்டிய இரும்புத் துண்டுகள்போல் அவருடன் இணைந்து கொண்டனர்.
மூன்றாவது நாள்.
சக்கூர், சனுரஸ், காதர் ஆகிய மூன்று மெளலவி களும், மீண்டும் மெளலவி அக்ரமின் வீட்டிற்கு பிரசன்ன மாயிருந்தனர்.

Page 36
50 யூ. எல். ஆதம்பாவா
அங்கே, முன்ஹோலில், அக்ரமோடு அவர்களும் சாவதானமாக அமர்ந்து கொண்டதும், அவ்விருசாராருக்கு மிடையே பேச்சு வார்த்தைகள் முளைவிட்டு வளரத் தொடங்கின.
‘என்ன யோசிச்சிங்களா..இப்ப என்ன சொல்றிங்க” என்றார் மெளலவி அக்ரம்.
'நீங்க விஷயங்கள நல்ல விளக்கமாச் சொன்னதா ல நாங்களும் சிந்தித்துப்பாத்தம், நீங்க சொன்னதெல்லாம் சரியாத்தான் தெரியிது. முன்பு நாங்க சும்மா மேலோட்ட மாப் பாத்ததால அது அவ்வளவு பெரிசாத் தெரியெல்ல. ஆழமா யோசிச்சுப் பார்க்கக்கதான் நாங்க பின்பற்றி வந்துள்ள முறையிலுள்ள பாரதூரம் விளங்கிது. நீங்க எங்கள விட வயதில குறைஞ்சவராக விருந்தாலும் எங்களத் திருத்தி விட்டீங்க. அல்ஹம்துலில்லாஹ்! இனி நாங்களும் உங்களப் போலவே ஹதீஸ் சொல்லப் போறம். அது மட்டு மில்ல, அந்த விடயத்தில உங்கட நடைமுறை எல்லாத் தையும் பின்பற்றப்போறம். எங்களைத் திருத்திவிட்ட உங்களுக்கு எங்கட மனப்பூர்வமான நன்றிகள்,' அனை வரின் சார்பிலும் மெளலவி சக்கூர், இவ்வாறு கூறிவிட்டு நரைத்த தனது சிறிய தாடியை வருடிவிட்டுக் கொண்டார்.
'ஆ.ஆ.மிகவும் சந்தோஷம்." இது மெளலவி அக்ரம்.
எல்லோர் வதனங்களிலும் புளகாங்கிதம் கடலாய் பொங்கிக் கொண்டிருந்தது.
தினகரன் 1990 ஏப்ரல் 07

இணையும் ஒரு குடும்பம்
வெகு நாட்களாக "காதி சனூஸினது வீட்டின் முன் "ஹோலே" அப்பகுதியின் காதிக் கோடாக இயங்கி வரு கிறது. வழமை போல் அன்றும், காதி சனூஸ் தன் கடமைக் காக, காலை எட்டு மணிக்கே தன் ஆசனத்தில் வந்து அமர்ந்து கொண்டார். விரிந்து கிடந்த பைலுக்குள், சிறிது நேரம் மூழ்கியிருந்துவிட்டு தமிழிலே, கையெழுத்தில் அழகாக எழுதப்பட்டிருந்த பத்துப் பன்னிரண்டு காகிதங் களைப் பொறுக்கி எடுத்துக் கொண்டார். "பைலை மூடி தனக்கு முன்னே போடப்பட்டிருந்த மேசையின் வலது பக்கமாய் வைத்துவிட்டு அக் காகிதங்களை அதே மேசையில் தனக்கு முன்னே வைத்து "பேப்பர் வெயிட் டையும் அதன் மேல் இட்டுக் கொண்டாரி,

Page 37
52 யூ. எல், ஆதம்பாவா
மூக்குக் கண்ணாடியைக் கழற்றி "பேப்பர் வெயிட் டின் பக்கமாய் வைத்துவிட்டு நிமிர்ந்து அமர்ந்து கொண் டார் எதிரே. வலது புறமாய் இடப்பட்டிருந்த ஆசனங் களிலே ஆண்களும், இடது புறமாய் சற்று பின்னே போடப் பட்டிருந்த ஆசனங்களிலே பெண்களுமாய் நிரம்பி வழிந்து கொண்டிருந்தனர்.
எல்லோரையும் சுற்றிப்பார்த்து புன்னகை பூத்துக் கொண்டார் காதி சனூஸ். பேப்பர் வெயிட்டை நகர்த்தி மேலே வைக்கப்பட்டிருந்த காகிதத்தை மீண்டும் பார்த்து விட்டு நிமிர்ந்தார்.
‘'நிஸார் மாஸ்டர் வந்திருக்கா? அவர் மனைவி சித்தி நிஹாறா..?"
இருவரும் ஆசனங்களிலிருந்து எழுந்து நின்று தத்தம் வருகையைத் தெரிவித்துக் கொண்டனர்.
'ரெண்டுபேரும் இஞ்ச வாங்க."
கையைக் காட்டினார்.
தனக்கு முன்னே
இருவரும், அவரின் முன்னே இரு பக்கங்களிலும் வந்து நின்று கொண்டனர்.
வலது புறமாய் நின்றிருந்த ஆசிரியரான நிஸாருக்கு நாற்பது, நாற்பத்தொரு வயதிருக்கலாம். அளவான உயரம், அதற்கேற்ற பருமனும் கொண்டவர். கருகரு வென்று வளர்ந்து கிடந்த முடியை வலது பக்கமாய் வாரி விட்டிருந்தார்.
இடது புறமாய் நின்றிருந்த அவரின் மனைவியான நிஹாறாவோ, பத்தாம் வகுப்பு வரை கல்வி பயின்றிருந் தாள். முப்பத்தைந்து முப்பத்தாறு வயதிருக்கலாம். செழிப் பான நிலத்திலே வளர்ந்திருக்கும் ஒரு மலர்ச்செடி.போல்

காணிக்கை S3
வளர்ந்திருந்தாள். முழு மதி முகத்தில் நயனங்கள் நாணத் தில் நீந்தின. அவள் அழகாக முக்காடுமிட்டிருந்தாள்.
"பொருத்தமான சோடி. என்ன பிரச்சினை இவர் களுக்குள்???
பார்வைகள் அனைத்தும் அவர்களிலே பாய்ந்தி ருந்தன. ஒரு மண் விழுந்தாற்கூட விண்னென்று கேட்கு மளவிற்கு நிசப்தம் நிலவியது.
காதி சனூஸே அங்கு நிலவிய அமைதியை முதன் முதலில் குலைத்தார். சித்தி நிஹாறாவை நோக்கி, "'உங்கட புருசன் நிஸார் மாஸ்டர், உங்கள வேணா மெண்டு வழக்குப் போட்டிருக்கார். ரெண்டு பேரையும் விசாரிக்கிறத்துக்குத்தான், நான் இண்டைக்கு தவண போட்ட' என்றார்.
பொங்கி வந்த கண்ணீரை ஒருவாறு கட்டுப்படுத்திக் கொண்டாள் நிஹாறா. இப்போது நிஸாரை நோக்கினார் காதி சனூஸ், அவனோ, மலர்ந்த முகத்தோடு அநாயாச மாய் நின்றிருந்தான்.
"நீங்க, ஏன் உங்கிட பெண்சாதிய வேணாமெண்டு சொல்றிங்க? விஷயங்களச் சொல்லுங்க. நீங்க, நேரத் தோட இந்த விஷயங்கள எனக்கிட்டயும் சொல்லித்தான் இருக்கிங்க. என்டாலும் இஞ்சதான் அத முக்கியமாச் சொல்லணும். சொல்லுங்க” என்றார் காதி.
நிஸார் புன்முறுவல் பூத்தான், கீழுதட்டைப் பற்க ளாற் கடித்துக் கொண்டு சற்றுச் சிந்தித்துவிட்டுச் சொன் னான். -
"நான் இத விரிவாகச் சொல்லிக்கொண்டு போக விரும்பல்ல, சுருக்கமாகவே சொல்றன். கொஞ்சக் காலமா, இவ குடும்ப விஷயங்கள் எல்லாத்திலயும் அலட்சியமா

Page 38
54 யூ, எல். ஆதம்பாவா
நடந்துவந்தா, புருசண்டு என்ன அவ்வளவா மதிக்கவுமில்ல. என்ன சம்மதமிண்டா இருங்க, இல்லாட்டி விட்டிட்டுப் போங்க என்று சொல்ற அளவுக்கும் வந்திட்டா. இவவோட இன்னும் வாழ்றத்துக்கு என்ட மனம் விரும்பல்ல. அதுதான் நான் வழக்குப் போட்ட, என்ன பிரிச்சிவிட்டிருங்க" என்றான். அவனது நெற்றி மேலே சுருங்கி, மெல்ல மெல்ல பழைய நிலைக்கு மீண்டது.
"மாஸ்டர், டக்கிண்டு இப்படியெல்லாம் சொல்லப் படா. கொஞ்சம் பொறுங்க" என்ற சனூஸ், சித்தி நிஹாறாவை நோக்கி, "எல்லாத்தையும் இப்ப கேட்டுக்கிட் டுத்தானே இருந்திங்க. இதுக்கு நீங்க என்ன சொல்லப் போறிங்க?' என்றார். தலையிலே அணிந்திருந்த வலைத் தொப்பியைச் சரி செய்து கொண்டு அவளை ஊன்றி அவதானித்தார்.
நிஹாறா ஆரம்பத்தில் நன்கு நாணமுற்றவள் போல் காணப்பட்டாலும் பின்பு தன்னைச் சுதாரித்துக் கொண்டு தலை நிமிர்ந்தாள். சிறிது நழுவிக் கிடந்த முக்காட்டை ஒழுங்குபடுத்திக் கொண்டு இவ்வாறு கூறினாள்:
"நாங்க திருமணம் செய்து சரியாக எட்டு வருசம். எங்களுக்கு ஆறு வயசில ஒரு மகன்கூட இருக்கு. இவக என்னத் திருமணம் செய்யும்போது, க. பொ. த. சாதாரண தரப் பரீட்சை சித்தியடைந்துவிட்டு ஆசிரியராக வேலை செய்து வந்தாங்க. எனது பெற்றோர் எங்களுக்குச் சீதன ஆதனமாக சாதாரண மட்டத்திலிருந்து சற்று உயர்வாக மதிக்கக்கூடிய ஒரு வீட்டையும், கைக்கூலியாக பதினையா யிரம் ரூபாக் காசையும் தந்தாங்க. குடுக்கல் வாங்கல் விஷயத்தில, அவர்கள் எங்களுக்குள் எந்த வகையிலும் பிரச்சினைகளை வைக்கவில்லை. நானும் எனது கணவரும் மிகவும் சந்தோஷமாகவே வாழ்க்கை நடத்தி வந்தோம், இவக என்னக் கலியாணம் முடிச்சத்துக்குப் பிறகு, அதாவது

காணிக்கை 55
ஏறக்குறைய் மூன்று வருசங்களுக்குப் பின், தான் ஒரு பட்ட தாரியாக வரவேண்டுமென்று மிகவுமே ஆசைப்பட்டாங்க. அதன் காரணமாக, க.பொ.த. உயர்தரப்பரீட்சை எடுத்து அதிலே நன்கு சித்தியடைந்து பல்கலைக்கழகஞ் சென்று இன்று பி. ஏ. பட்டதாரியாகவும் இருக்காங்க. பல்கலைக் கழகத்திலே கல்வி கற்றபோது சம்பளமற்ற லீவு மட்டுமே இவகளுக்கு வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலைமையில,
எனது கணவர் எப்படியோ பட்டதாரியாகிவிடவேண்டும்.
அவருக்கு எவ்விதமான பிரச்சினைகளையும் நாம கொடுக்
கக் கூடாது என்ற நல்ல நோக்கத்தில குடும்பப் பொறுப்
புக்கள் அனைத்தையும் நானே பொறுப்பேற்றேன். முக்கிய
மாக, இவக பல்கலைக்கழகத்திலிருந்த போது முழுக்க முழுக்க எங்கள் குடும்ப வாழ்க்கையை எனது பெற்றோரின் உதவியைக் கொண்டே நடத்தி வந்தேன். அதுமட்டுமல்ல,
அக்காலங்களிலே பல சந்தர்ப்பங்களில், தனிப்பட்ட வகை யில் கூட நான் எனது பெற்றோரின் உதவியைப் பெற்று
இவகளுக்கு உதவியும் வந்திருக்கிறேன்.
இவக பட்டதாரியாக வந்தவுடன் இதையெல்லாம் முற்றாக மறந்துவிட்டு என்ன அலட்சியப்படுத்தத் தொடங் கினாங்க. இவக கூறுவது போல குடும்ப வாழ்க்கையில நான் எச்சந்தர்ப்பங்களிலும் இவகள அலட்சியப்படுத்தி யதே கிடையாது. சோர்வான ஒரு நிலையிலோ, அல்லது சுகவீனமான சந்தர்ப்பங்களிலோ என்னையறியாமல் சில வேளைகளிலே நான் அவ்வாறு அலட்சியமாக நடந்து கொண்டிருப்பேனோ என்னவோ தெரியாது. இனி என்னத் துக்குத் தான் விஷயங்கள ஒழிப்பான். திறந்து சொல்றன். பி. ஏ. பசீட்சை டாஸ் பண்ணினத்துக்குப் பொறகு இவக ஒழுப்பம் என்டால் போதும், நான் ஒரு பட்டதாரி. உன்ஐ விட்டிட்டுப்போய் நல்ல ஒரு இடத்தில கலியாணம் முடிச் சிருவன். மிகவும் கவனம் எண்டும், ஒண்டும்” இல்லாத உன்ன முடிச்சிக்கிட்டுப் பெரிய கணகட்டிர்யிருக்கு. நல்லாக் காணியும், காரும், காசியும் சீெங்கிக்கிட்டு கலியாணம்

Page 39
56 யூ. எல். ஆதம்பாவா
முடிச்சிருவன். ஜாக்கிரதை எண்டும் கதைப்பாங்க. அது மட்டுமல்ல, வெளியில சிலரிடமும், எப்படியோ என்ன விட்டிட்டுப்போய் நல்ல ஒரு இடத்தில கலியாணம் முடிக் கணும் எண்டும் கதைத்திருக்காங்க' என்றுவிட்டு தனது உரையைத் திடீரென்று நிறுத்தினாள் நிஹாறா. அவளின் விழிகளிலிருந்து பலபல வென்று பொங்கிவந்த கண்ணிர் இமைக் கரைகளை உடைத்துக் கொண்டு கன்னங்களை நனைத்தது. கண்ணிரைச் சேலைத் தலைப்பினால் மெல்லத் துடைத்துவிட்டுக் கொண்டு மேலும் தனது உரையைத் தொடர்ந்தாள்.
‘ஒரு சந்தர்ப்பத்தில. நான் இவகள சம்மதமிண்டா இருங்க, இல்லாட்டி என்ன விட்டிட்டுப் போங்க எண்டு சொன்னது உண்மைதான். அது எப்படிண்டா அதையும் விபரமாகச் சொல்றன் கேளுங்க.
ஒரு நாள் இவக வாய்க்கு வந்தபடி கதைத் தாங்க. "ஹேய் நிஹாறா, உங்கட வாப்பா, உம்மா நல்ல ஆக்கள், அவக பழைய மொடல் வீடொன்றையும், பதினையாயிரம் ரூபாக் காசையும் தந்து என்ன ஏமாத்திப் போட்டாங்க. எங்களுக்கு இன்னுமொரு பொம்பிளப்பிள்ளதான் இருக்கு. நாங்க ஒழைக்கிறதெல்லாம் அவங்க ரெண்டு பேருக்குந் தான். அதுவும்,எங்கட மூத்த மகள் நிஹாறாவைக் கவனிச் சுப்போட்டுத்தான் மத்தப் பிள்ளயப் பாப்பம் எண்டு சொன் னாங்க. இப்ப பாத்தா அவகள இந்தப் பக்கத்திலயுமே காணல்ல.
இது ஒரு பட்டதாரி இருக்கிற வீடா? ஊரில எத்தனையோ பட்டதாரிகள் எவ்வளவு அழகான வீட்டில எவ்வளவோ சுகத்த அனுபவிச்சுக் கொண்டு வாழ்றாங்க, உங்களுக்கெல்லாம் சரியான Lunt Llib படிப்பிச்சுக் காட்றன்" என்று நற நற வென்று பல்லைக் கடித்துக் Gam Akvitrijas.

காணிக்கை 57
அதற்கு நான், 'எனது பெற்றோர் நமக்குத் தாற தெல்லாம் தந்திட்டாங்க. ஆனா. அவங்க ஒண்டு சொன்னாங்க நாங்க மேலதிகமாத் தேடினா உங்களத்தான் முதல்ல கவனிப்பம் எண்டு. அது உண்மைதான். ஆனா, அவங்க இண்டைக்கு அண்டன்டைய வாழ்க்கையை யும் நடத்த முடியாத நிலையில கஷ்டப் பர்ராங்க. குமரொண்டு அப்படியே பெருமூச்சுவிட்டுக் கொண்டிருக்கு. அவங்க அதைக் கரை சேர்க்கமுடியாத நிலையில் இண்டைக் குத் தத்தளிக்காங்க, கொஞ்சம் சிந்தித்துப் பாருங்க. எல்லா ரும் வாங்கினவங்கதான் நல்லாரிக்காங்களா? வாங்காத வங்களும் நல்லாரிக்காங்க. அவங்கள விட்டிட்டு நாங்க இன்னும் முன்னுக்கு வரணு மிண்டா வேறு ஏதாவது முயற்சி களச் செய்வம். எங்களுக்கும் அல்லாஹ் தருவான்' என்றேன்.
அதற்கு இவக, "என்னடி, பெரிய ஆள்போலக் கதைக்கிறாய். உங்களுக்கெல்லாம் செய்து காட்றன் வேல' என்டாங்க.
கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக்கொண்ட நான், 'செய்து காட்டிறன் ஒரு வேல. நல்ல பாடம் படிப்பிக்கிறன் என்றெல்லாம் ஒரேயே சொல்றிங்க. என்ன விட்டிட்டுப் போய் வேற கலியாணமா செய்யப்போறிங்க? என்னதான் வேல செய்யப்போறிங்க?' என்று கேட்டேன்.
'ஓம் . ஓம் . நான் நல்ல ஒரு இடத்தில கலியாணம் முடிக்கப்போறன். புள்ள ஒண்டிருக்கு. அதுக்கு வேணு மிண்டா, செவ, வைக்கட்டுவன். இன்னும் கொஞ்ச நாளைக் குப் பொறுத்துக்க’’ என்றாங்க.
எனக்கு இந்த உலகமே வெடித்துச் சிதறுவது போலி ருந்தது. அருவிடோல் கண்களிலிருந்து வழிந்த நீரைத் துடைத்துக் கொண்டேன்.

Page 40
58. y, ST dë. Jessibuna T
'உங்கள என்ட உயிரிலும் மேலாக எண்ணி, இறுதி வரை என்னைக் காப்பாத்துவீங்க என்று நம்பியிருந்தேனே, சீ.நீங்களும் ஒரு மனிதனா? மிருகம்! துரோகி!" என்று புலம்பினேன்.
அதற்கு இவக, "என்னடி சொன்னாய்! மிருகமா, துரோகியா' என்றவாறு வேங்கை போல் பாய்ந்து வந்து என்னைத் தாறுமாறாக அடித்து மிதித்து நொறுக்கினாங்க. வேதனை பொறுக்க முடியாத நான், 'சம்மதமிண்டா இருங்க. இல்லாட்டி நமக்கென்னவின்ன என்ன விட்டிட்டுப் போங்க" என்றன்.
அன்று போனவங்கதான். இதுதான். விஷயம்' என்றுவிட்டு நெடு மூச்சொன்றை உதிர்த்து விட்டுக் கொண் டாள். முக்காட்டைச் சரிசெய்து கொண்டு காதி சனுரஸை நோக்கினாள். இமைகள் இரண்டும் வண்டின் இறக்கைக ளைப்போல படபடவென இருமுறை அடித்துக்கொண்டன.
'பிரியிறத்துக்கா கலியானம் முடிச்ச? எனக்குப் பிரியிறத்துக்குச் சம்மதமில்ல' என்றாள்.
மெல்ல வலது புறமாய்த் திரும்பினார் சனூஸ். எவ்வித சலனமுமின்றி, இவற்றிற் கெல்லாம் அசைந்து கொடுப்பேனா என்றவாறு நின்றிருந்த நிஸாரை நோக்
$ରି ଜୟ rft.
'இப்ப நீங்க என்னயும் சொல்றண்டா சொல்லுங்க" என்றார்.
‘'என்னத்தச் சொல்ற, இவ வேணு மிண்டா இன்னும் என்னன்டான சொல்லட்டும், நான் எதுவும் சொல்லல்ல. நேரத்தோட நான் சொன்ன அவ்வளவும்தான் விஷயம். எப்படியோ என்னப் பிரிச்சி விட்டிருங்க. இவவோட என்னால சேர்ந்து வாழ ஏலா." இது நிஸார்.

காணிக்கை 59.
அனைத்தையும் நன்கு அவதானித்துக் கொண்ட காதி சனுாஸ், தாடியை வருடி விட்டுக் கொண்டார். நிஸாரை நோக்கி பின்வருமாறு பகர்ந்தார்: -
“உங்களப் பார்த்தா, உங்களுக்குள்ள நடந்திருக்கின்ற விஷயங்கள யோசிச்சா நீங்க கூறுகின்ற காரணங்கள்தான் பிரச்சினைகளைத் தோற்றுவித்தது என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. உண்மையாகப் பார்த்தா, நீங்க பட்டதாரியானதால தான் பிரச்சினைகள் ஏற்பட்டிருக் கிறாப் போல தெரியிது.”*
'சே.அதில்ல. ஆ..' என்று நெளிந்தான் நிஸார். * 'இல்லல்ல . நான் ஏத்துக்கல்ல. அதுதான் உண்மை' என்ற காதி சனூஸ் மேலும் தொடர்ந்தார்:
"மாஸ்டர். நீங்க பட்டதாரியான ஒரேயொரு காரணத்துக்காக மட்டும் உங்கட மனைவிய விட்டுப் பிரியிற தெண்டா அது மிகவும் பெரிய பாவம். அது மட்டுமல்ல, உங்களப் பொறுத்த வரையில் அது, நியாயமானதுமல்ல. அது எப்படியெண்டா கொஞ்சம் விளக்கமாகச் சொல்றன் கேளுங்க.
நீங்க இவவக் கலியாணம் முடிச்சி இவவோட இருக்கக்கதான் க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு ஆயத்தம் செய்து பரீட்சையும் சித்தியடைந்து அதற்குப் பின் டல் கலைக்கழகம் சென்று பட்டப் பரீட்சைக்குப் படித்து பட்டப் பரீட்சையும் சித்தியடைந்திருக்கிங்க, சித்தியடைந் திருப்பது நீங்கதான். என்டாலும் அதில கணிசமான பங்கு உங்கட மனைவிக்கும் இருக்கு. ஒரு கணவனின் வருவாயில, உழைப்பில ஒரு மனைவிக்கு எவ்வாறு பங்கிருக்குமோ அது போல உங்கட பட்டத்திலும் உங்கட மனைவிக்குப் பங் கிருக்கு. இத எவருமே மறுக்க முடியாது. உங்கட மனைவி பிரச்சின உள்ள ஒருவராக இருந்திருந்தா நிச்சயமாக நீங்க ஒரு பட்டதாரியாக வந்திருக்க முடியாது. திரு

Page 41
Ճն யூ. எல். ஆதம்பாவா
மனத்துக்குப் பின் ஒருவர் முன்னேறுகிறார் என்றால் அதற்கு முக்கியமான காரனம் மனைவிதான் இதனை எவருமே மறுக்கமுடியாது.
நீங்க திருமணம் செய்பிறத்துக்கு முன் பட்டதாரி பாக வந்திருந்தா உங்கட இஷ்டம் போல நடந்து கொண் டிருக்கலாம், அதை எவருமே கேட்கவும் முடியாது.
நல்லரச் சிந்தித்துப்பாருங்க. அதுமட்டுமல்ல, உங்க ரூக்கு ஒரு மகனுமிருக்கு. கலிபா சினம் எண்டு முடிச்சா அதனோடயே கிடந்து கழிஞ்சிரணும். பாவம்! வேறு ஏதா துெ சின்னப் பிரச்சினைகள் இருந்தாலும் கூட அதனையும் மறந்திட்டு உங்கட மனைவியைக் கூட்டிக்கொண்டு போங்க." காதி சனூஸ் நிஸாரை நோக்கி புன்னகை பூத்துக் கொண்டார்.
'நீங்க எப்படின்டான நினைச் சிக்கங்க. அதப்பத்திப் பறுவாயில்ல. எனக்கு இவ வேனா என்னப்பிரிச்சு விட்டி நுங்க. நான் கூட்டிக்கிட்டுப் போகல்வ."
நிளாரின் இவ்வார்த்தைகள் அம்புகளாய் நிஹாறா வின் நெஞ்சில் பாய்ந்தன.
. 'ம்.ஸ்.ஹ"." என்று விம்மி வெடித்தாள்.
"மீண்டும் காதி. சனுரஸ் நிஸாரை நோக்கினார். "விசிற மாதம் இருபத்தைந்தாம் திகதி தவன போர்ரன், இாட்டியில் சிரியாக ஒருமாதம் இருக்கி, நல்லா யோசிச்சிட்டு வாங்க. அநியாயமான ஒரு முடிவுக்கு வந் நிராதிங்' என்றுவிட்டு வலைத் தொப்பியைக் கழற்றி தரப் பயி: சி சற்று ஒதுக்கிவிட்டு அதைத் திரும்பவும் அணிந்து கொண்டார்.
அ. இ. 3 ..
திகதி இருபத்தைந்து: --- -

T G1
காதிக்கோடு அன்றும் உயிர்த்துடிப்புடன் விளங் கியது. ஆண்களுக்குரிய பகுதியில் ஆண்களும், பெண்களுக் குரிய இடத்தில் பெண்களுமாய் நிரம்பி வழிந்து கொண் டிருந்தனர். காதி சனூஸ் தனது இருக்கையில் வெகு கம்பீரமாய் உட்கார்த்திருந்தார். அங்கு அவரின் அதிகாரம், கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்தது.
நிஸ்ாரின் வழக்கு விசாரணைக்காக எடுத்துக் கொள் னப்பட்ட போது அனைவரின் கவனமும் அதன் பக்கமாகத்
திரும்பியிருந்தது.
காதி சனுரஸ் சதைப்பிடிப்பான தர்க் ஆ கிண்ணத்தை வருடி விட்டுக் கொண்டார். தனக்கு எதிரே வலது புறமாய் நின்றுகொண்டிருந்த நிஸாரையும், இடது பக்கமாய் நின்றி ருந்த அவனது மனைவி சித்தி நிஹாறாவையும் அவளோடு ஒட்டிக்கொண்டு நின்ற ஆறு வயது நிரம்பிய அவர்களது மகனையும் ஒரு முறை பார்த்துப் புன்முறுவல் சிந்திக் கொண்டார்.
தனது தடித்த மீசையை இலேசாய்த் தடவி விட்டுக் கொண்டு நிஸாரை நோக்கி, "நீங்க இப்ப ஒரு நல்வ முடி வோடத்தான் வந்திருப்பிங்க எண்டு நினைக்கன். போட் டிட்டு உங்கட மனைவியக் கூட்டிக்கொண்டு போங்க. என்ே சொல்றிங்க?" என்றார்.
நிஸாரோ நீளக் காற்சட்டைப் பைகளுக்குள் கை களைப் புதைத்துக் கொண்டு அமைதியில் ஆழ்ந்தான். சற்று நேரத்தின் பின் இவ்வாறு இயம்பினான்:
"நான் விஷயங்களத் திறந்து சொல்றன். தனக்கு ஒரேயொரு பிள்னதானே இருக்கு. அதுக்குச் செலவைக் கட்டிக்கலாம். எப்படியோ இவவோட இருந்து பிரிஞ்சி நல்ல

Page 42
62 யூ. எல். ஆதம்பாவா
ஒரு இடத்தில மாளிகை போன்ற ஒரு வீடும் நல்லாக் காணியும், காசும், காரும் வாங்கிக்கிட்டுத் திருமணம் செய்து நன்கு சொகுசாக வாழலாம் என்ற ஓர் ஆசை என்னுள்ளே பேயாக ஆட்டியது. அதனால் நான் எனது மனைவி விட்ட சின்னச்சின்னப் பிழைகளைக் கூட பெரிதாக எடுத்துக் கொண்டேன். எங்கள் குடும்பம் இவ்வளவுதூரம் காதிக்கோட்டுக்கு வருவதற்கு எனது பிழையான எண்ணம் தான் காரணம்.
திருமணத்துக்குப் பின் ஒருவன் முன்னேறுகிறான் என்றால், அதில் கணிசமான பங்கு அவனது மனைவிக்கே உண்டு என்பதை எடுத்துக் காட்டியதோடு, எனது பட்டத் தில் பிரதானமான பங்கு எனது மனைவிக்கே இருக்கிறது என்பதையும் நிரூபித்து தக்க சந்தர்ப்பத்தில் எனது பிழை யைச் சுட்டிக்காட்டி என்னைத் திருத்திவிட்டீர்கள். அநியா பமாகப் பிரிந்துவிட இருந்த எங்கள் குடும்பத்தை அதிலி ருந்து காப்பாத்தி விட்டீர்கள். தங்களுக்கு நான் என்ன கைமாறு செய்வேன்' என்றுவிட்டு நிமிர்ந்து நின்றான்
'நீங்க எந்த விதமான கைமாறும் எனக்குச் செய்ய வேணா. ஆனா, நீங்களும் உங்கள் குடும்பமும் என்றும் இனிதாக வாழ்ந்தால் அதுவே போதும். சரி, இப்ப நீங்க உங்கட மனைவியையும் கூட்டிக்கிட்டு வீட்டுக்குப் போங்க ** என்றுவிட்டு காதி சனுரஸ், நிஸாரின் மனைவியை அவதா னித்தார்.
அவளின் முகமோ அன்றலர்ந்த செந்தாமரை மலர் போல் காட்சி தந்தது. அவர் விசுக்கென்று வலது புறமாகத் திரும்பி மேசை மேல் வைக்கப்பட்டிருந்த ஒரு வெள்ளைக் காகிதத்தை எடுத்தார்.
தினகரன் வாரமஞ்சரி 1988 9śGLuft, 16

தியாகம்
"மகன்.கொஞ்சம் நில்லுங்க"
சைக்கிலை விட்டு இறங்கி நின்ற சறுக் தன்னருகே வந்து நின்ற, நாற்பத்தைந்து ஐம்பது வயது மதிக்கத்தக்க சுலைகா வீவியை ஏறிட்டு நோக்கி,
'என்ன?" என்றான்.
'நீங்க இப்ப பின்னேரங்கள்ள லீவாத்தானே இருக் கீங்க இல்லவா?"

Page 43
64 யூ. எல். ஆதம்பாவா
** என்ட தங்க மகளாருக்கு இந்தக் கணக்குப்பாடத் தைத் தவிர, மத்ததெல்லாம் போகுது மகன். நீங்க பின்னேரங்கள்ள நாலு ஐந்து மணிக்கு எங்கட ஊட்ட வந்து கணக்குகளைக் கொஞ்சம் சொல்லிக் கொடுத்தீங் கண்டா, என்ட புள்ள இந்த முற எஸ். எஸ். சி. பாஸ் பண்ணிரும். வாறிங்களா மகன்! அல்லாஹ் உங்களுக்கு நன்மையைத் தருவான், ஏலாண்டு மட்டும் சொல்லிரா தீங்க?"
'பாவம் ஏழை ! உதவி செய். ஒய்வோடுதானே இருக் கிறாய்” என்றது சறுரக்கின் மனம். அடுத்த கணம் அவன்,
‘சரி.நாளை முதல் நான் நாலு மணிக்கு வருகி றேன். அவ்வளவுதானே?" என்றான்.
‘‘ஒம் மகன்.'"
‘‘சரி வருகிறேன்' என்று சொல்லிவிட்டு அவன் சைக்கிலில் ஏறி விரைந்தான். அவன் போகும் திக்கையே பார்த்துக் கொண்டிருந்த சுலைகா வீவியின் ஒளி மங்கிய விழிகளில், எழில் வற்றிய கன்னங்களில் பூரிப்பு: உடலிலும் ஒரு புதுத் தெம்பு, திரும்பி வீட்டை நோக்கி நடந்தாள்.
அடுத்த நாள் அரும்பிய படிப்பித்தல் வளர்ந்து கொண்டே வந்தது.
ஆறு மாதங்களின் பின், ஒருநாள். நாலரை மணியிருக்கும், படிப்பிக்கும் அறையில் மேசையின் முன்னே, நாற்காலி ஒன்றில் அமர்ந்திருந்தான் சறுாக். அவனுக்கு வலது பக்கத்தில், சற்றுத்தள்ளி இன்னும் ஒரு நாற்காலி அதில்தான் சுலைகா வீவியின் மகள் பரீதா

65
காணிக்கை
உட்கார்ந்து படிப்பாள். ஆனால், அப்போது அக்கதிரை காலியாக இருந்தது அவளோ, அடுத்த அறையில் ஆசிரிய ருக்கு தேநீர் தயாரித்துக் கொண்டிருந்தாள்.
அவளுக்கு வயது பத்தொன்பது இருபது இருக்கலாம். ஏழையாக இருந்தாலும், வறுமையின் சுவடுகளைக் காண முடியவில்லை. அவள் ஓர் அழகி.
"அவள் வரும்வரை இன்று செய்யவேண்டிய கணக்கு களைப் பார்ப்போம்” என்று நினைத்த அவன், உடனே கணக்குப் புத்தகத்தை எடுத்து பக்கங்களைப் புரட்டினான். அதிலே இருந்து கடிதமொன்று நழுவி, "டக்" கென்று கீழே விழுந்தது. அதிலே தனது பெயர் பொறிக்கப்பட்டி ருப்பதைக்கண்டு அவசர அவசரமாகப் பிரித்து வாசித்தான்.
அன்புள்ள ஆசிரியருக்கு,
உங்கள் அழகும். பேச்சும், நடத்தையும் என்னை அப்படியே கவர்ந்து விட்டன. நீங்களில்லாமல் ஒரு நாளும் என்னால் மகிழ்ச்சியோடு இருக்கவே முடியாது. இடையிலே சில நாள் நீங்கள் வராமலிருந்தீர்களல்லவா? அப்போது நான் எவ்வளவு வேதனைப்பட்டேன் தெரியுமா?
நான் ஏழை! ஆனால், மானமுள்ளவள். எனது ஆசை உங்களை மணந்து கொள்ள வேண்டுமென்பது. இது உங்க ளோடு பழகியதன் பின்தான் ஏற்பட்டது. உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன். என்னை ஒதுக்கி விடா தீர்கள்.
இப்படிக்கு உங்களையே பணிக்கத் துடிக்கும்
பரீதா

Page 44
ц. Лії, ஆதம்பாலா
அதனை அவன் மீண்டும் படித்து முடித்த நேரத்தில் தான் தேநீர் கோப்பையை மேசையில் வைத்துவிட்டு தனக் குரிய நாற்காலியில் ஒயிலாக அமர்ந்தான். பக்கத்திலிருந்த அவன் வதனம் மலர்போல் வாடிக்கிடந்தது.
அவள் வதனமோ மாலை நேரத்து மேற்கு வான் போல் சிவப்பேறிக்கிடந்தது. அவளை நானம் அரித்துத் நின்று கொண்டிருந்தது. அவளை நிமிர்ந்து பார்த்த அவன் 'இந்தக் கடிதம் யாருக்கு" என்றான்.
"அதைச் சொல்லுகிறேன், முதல்ல தேநீரைக் குடி யுங்கள்."
"சரி, தாங்க..' வாங்கித் தேநீரைப் பருகிவிட்டு கோப்பையைக் கீழே வைத்தான். பின் அவன்,
"அதைச் சொல்லுங்கள்" என்றான்.
அவளோ, 'அதுவா.உங்களுக்குத்தான் ' சொல்லிவிட்டுக் குனிந்து கொண்டாள்.
என்று
"என்னை பன்னிக்கனும் பரிதா, எனக்கு ஏற்கனவே கல்யாண ம் நிச்சயிக்கப்பட்டுவிட்டது. எங்கட வீட்டுக்குப் பக்கத்திலிருக்காவே சல்மா அவட மகளுக்குத்தான். கல் வீடும், நாலு ரக சுர் காணியும் எங்கள் இருவருக்கும் எழுதப் படவிருக்கின்றன. அதுமட்டுமல்ல, எனக்குத் தனியாக ஐயாயிரம் ரூபாய் பணமும் தருகிறார்கள். இது எனது பெற்றோர் பார்த்து நிச்சயித்தது. இதை நான் ஒதுக்கி விட்டால், பெற்றோரும் என்னை ஒதுக்கிவிடுவார்கள். தயவு செய்து என்னை மறந்துவிடு" என்று கூறிவிட்டு முகத்தைத திருப்பிக் கொண்டான்.
வெறுப்பைச் சம்பாதிக்க நேரிடும் என்பதற்காக மட்டுத்தான் ஒதுக்கி விடுகிறான் சறுக் என்பதை அவளின் மனம் நம்ப மறுக்கிறது. முக்கியமாக எதற்காகத் தன்னைச்
 

காணிக்கை GT
சறுரக் வெறுக்கிறான் என்று எதை நினைத்தாளோ அதை அப்படியே வெளியே பிட்டுவைத்தாள் அவள்
"நான் ஏழை என்பதனால்தானே என்னை ஒதுக்கி விடுகிறீர்கள். நான் உங்கள் மேல் என் உயிரையே வைத்தி ருந்தேனே, பனம், வீடு வளவு காணியென்றால், எதையும் செய்யத்துணிவீர்கள் போல் தெரிகிறது."
"நிறுத்து பரிதா.நிறுத்து. எனக்குப் பணம்,காணி வீடு வனவு பெரிதல்ஃப். அன்பு அறிவு அழகு நல்ல நடத்தைதான் பெரிது.'
"அப்படியென்றால் என்னிடம் அன்பில்லையா? அறிவில்லையா? அழகில்லையா? நல்ல தடத்தையில் ಫ್ಲ:gu#?'
"இருக்கிறது பரீதா இருக்கிறது.' "அப்படியென்றால் என்னை ஏன் வெறுக்கிறீர்கள்
" "ான் தாய் தந்தை பேசிய கல்யாணமல்லவா? அதனை முடியாவிட்டால் ரக வார்கள் கோபிப்பார்கள். இதனை நினைத்துத் தான் என்ரிக மறந்து விடச் சொன் னேன்."
'தாய் தந்தையரின் கோபம் எவ்வளவு நாளைக்கு இருக்கப் போகிறது. அவர் கனக் கொஞ்ச நாளையால் சரிக்கட்டி விடலாம்.'
'இப்ப என்னை என்ன செய்யச் சொல்லுசிறாய் பரீதா.என்னை என்ன செய்யச் சொல்லுகிறாய்."
"இனி அது உங்கள் விருப்பம்' என்று சொல்வி விட்டுத் திரும்பிய அவரின் கன்ஷத்து மேடுகளிலிருந்து கண்ணீர் முத்துக்கள் உருண் டTே

Page 45
ዕ$ யூ. எல். ஆதம்பாவா
"பாவம் ஏழை உன்னில் மனதைப் பறிகொடுத்து விட்டாள். நீ இல்லாவிட்டால், அவள் வாழ்க்கை மண்னாகி விடும். துரோகம் செய்துவிடாதே. அவளுக்காக, காணி, பணம், வீடு வளவு ஆகியவைகளைத் துறத்துவிடு! அவை களைப் பின் உன்னால் தேடிக் கொள்ள முடியும், அல்லாஹ் உனக்குத் தருவான். உனது சம்பளத்தைக் கொண்டு வாழ்க் விகயைச் சிக்கனமாய் நடத்திக் கொண்டு வா. உனது பெற்றோரைப்பற்றிக் கவலைப்படாதே. அவர்கள் மிகவும் நல்லவர்கள் கொஞ்ச நாளைக்கு உன்னைக் கோபிக்கத் நீரின் செய்வார்கள், பின் எல்லாம் சரியாகிவிடும். அவளை ஏற்றுக்கொள்!" என்றது சறுக்கின் உள் மனம்,
அவன் மெதுவாக அவள் பக்கத்தே சென்று, நடுங்குங் சுரங்களால் அந்தக் கண்ணிரைத் துடைத்தான்.
'பரீதா அழாதே! நான் உன்னை மணந்து கொள் கிறேன். இனி அவளை நினைத்துக்கூடப் பார்க்க மாட் டேன். இது உறுதி" என்று அவளிடம் சொன்னான்.
அதைக் கேட்டஅவளின் முகத்தில் ஒரு தெம்பு. அன்ற லர்ந்த சிவப்பு ரோஜாவாக ஒரு மலர்ச்சி. அதன் பின்புதான் அவள் நன்றாக மனம் விட்டுப் பேசினாள் பழகினாள். இப்பொழுது அவர்களுக்குள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்ட விழிப்பு
அவர்களின் காதல், வெகு விரைவில் பரவிவிடும் வதந்திகளைப் போல மெல்லப் பொசிந்து ஊர் முழுக்கப் படர்ந்துவிட்டது.
இந்தச் சந்தர்ப்பத்திலேதான் ஒரு நாள். பிற்பகல் மூன்று மூன்றரை மணியிருக்கும். சறுக் தனது வீடடிவ் அன்றைய பத்திரிகையைப் படித்துக்கொண்டிருந்த போது,

காணிக்கை
"மகன் சறுக். இஞ்ச வா கொஞ்சம்' என்ற தந்தையின் குரல் கேட்டு அவன் பதறிப்போய் அவரருகே சென்றான்.
"என்ன வாப்பா கூப்பிட்ட." என்றான்.
'ஒன்று மில்ல.நீ அந்தப் பரீதாவோடத் தொடர் பாம். அவனைத்தான் கல்யாணமும் செய்து கொள்ளப் போகிறதாகக் கேள்விப்பட்டன். இது உண்மை தானா?”
. . . . . . . . . . . . . . . துவன் மெளனமாக நின்றான்.
" 's TriT LI l-FTI II நிக்காய் சொல்வன்.""
"ஒம்." என்று தலையை ஆட்டினான் அவன்.
என்னடா சொன்னாய்' என்று சீறிய அவர் வேல் பட்ட வேங்கையெனப் பாய்ந்து அவன் சுன்னத்தில் பளிர் பளிர்!! என அறைந்தார். அடிபட்ட சிறுரக் சிலை யாக நின்றான். அவனை ஏறிட்டு நோக்கினார் அவனது தந்தை.
"உனக்கு ஏற்கனவே கல்யாணம் பேசி திட்டமாக் கினோம். அதனால, உனக்கு பணம், கானி, வீடு வளவெல் லாம் வரவிருக்க இவையெல்லாம் ஒதுக்கிவிட்டு அந்த ஏழை சுலைகாட மகளைக் கல்யாணம் செய்யத் தீர்மானித் திருக்கிறாய் மடையா! உனக்குப் புத்தியில்லையா, கொஞ் சம் யோசித்துப் பாரு, அவள் ஏழை, அவளிடம் பனமோ, கானியோ, வீடு வளவோ எதுவுமேயில்லை. அவளைக் கல்யாணம் செய்தால் மிச்சம் கஷ்டப்படுவாய். உன்னைக் சுேக்கிறன், இது நானும் உன்ட உம்மாவும் பேசின கல்யாணம், இதைமுடி, நிம்மதியாக வாழலாம்' என்று பொழிந்து தள்ளினார் அவர்,

Page 46
70 யூ, எல். ஆதம்பாவா
அவ்வார்த்தை செவிடன் காதில் ஊதிய சங்கானது அவனுக்கு. அவன் வதனத்தில் எவ்வித சலனமும் தோன்ற வேயில்லை. அப்போதும் அவன், அசையாதுதான் நின்றான். ஆனால், அவன் வாயோ,
'முடியாது! பணம், காணி, வீடு வளவு இல்லா விட்டாலும் பறுவாயில்லை. நான் பரீதாவையே மணப் பேன். இது நிச்சயம்' என்ற வார்த்தைகளை உமிழ்ந்தது.
"எனக்கெதுக்க நில்லாத்டா. இப்பவே இந்த வீட்ட விட்டுப் போயிரு. திரும்பிகள் வந்திராத" என்று எரிந்து விழுந்தார் தந்தை.
வீட்டை விட்டு வெளியே வந்த அவனோ, அழுது வடிந்து கொண்டே பரீதாவின் வீட்டை நோக்கி நடந்தான். அந்த வீடும் வளவும் வேறொருவரின் உடைமை. அதில் தற்காலிகமாகத்தான் சுலைகா வீவியும் மகளும் வாழ்ந்து வந்தார்கள். கடையப்பம் விற்று வாழ்ந்த வாழ்க்கையை முடித்து விட்டார்கள், இல்லை அவனுடைய தந்தை அவர் களின் வாழ்க்கையை முடித்து வைப்பதில் முந்திக்கொண் டார்.
* புள்ளயக் காட்டி பொடியங்களைப் புடிக்கிறவள்! என்ற சுடு சொல்லைத் தாங்க முடியாத அந்த ஏழைத் தாயும், மகளும் அந்த ஊரைவிட்டே ஓடிவிட்டார்கள்.
அந்தக் குடும்பத்தைத் தேடி அலுத்துப்போய்விட்ட சறுாக், இன்று காலத்தின் விளிம்பில், நடைபோடும் ஒரு கிழம். ஆம், பரீதாவின் சுவடுகளையே, தேடித் திரியும், ஒரு சாதாரண மனிதன் அவன்.
சிந்தாமணி 1966 நவம்பர் 04

தண்டனை
றிஸ்மி அன்றும் வழமைபோல பாடசாலைக்குப் புறப் படும் நேரத்திலேயே புறப்பட்டுக் கொண்டான். ஆனால் வீட்டு முற்றத்துக்கு வந்த அவனோ இயந்திரக் கோளாறு காரணமாக இடைநடுவே நின்றுவிடும் "கார்" போல அப்படியே நின்றுவிட்டான்.”
ஏழு வயதை எட்டிக்கொண்டிருந்த அவன் முதலாம் வகுப்பிலே கல்வி பயின்று கொண்டிருந்தான். அளவான உயரம் அதற்கேற்ற உடல் வாகு, வட்ட முகம், வடிவான இரு விழிகள், சுருண்ட கேசம் ஆகியன அமையப் பெற்றவன். இளம் நீல வண்ண கட்டைக் காற்சட்டை வெள்ளை நிற அரைக்கை சேர்ட், கறுப்பு வண்ணச் சப்பாத்து ஆகியன அணிந்திருந்தான். தோளிலே புத்தகப்பை ஒன்றும் தொங் கிக் கொண்டிருந்தது

Page 47
72 , . 6Ti, 45 DJ Sast
மொத்தத்தில் அவன் வெகு கவர்ச்சியாகக் காணப் பட்டான். ஆனால், அவனின் வதனமோ, வெயிலிலே கிள்ளி யெறிந்த மலர் போல வாட்டமுற்றிருந்தது. அவன் தன் பக்கத்திலே நின்றிருந்த ஒரு தெம்பிலித் தென்னையின் உறுப்புகளைத் தொட்டும், தடவியும், இழுத்தும் விட்டுக் கொண்டதோடு, நெளிந்தும், வளைந்தும், கால்களால் நிலத்திலே சித்திரம் வரைந்தும் நேரத்தை நகர்த்திக் கொண்டிருந்தான். மணி ஏழரையை எட்டியிருந்தும்கூட பாடசாலைக்குச் செல்வதற்கான எதுவித அறிகுறியுமே அவனிலே தென்படவில்லை. இது அவன் தாய் அனிஸ்ா வுக்கு மிக்க ஆச்சரியத்தை ஊட்டியது.
அவன் முதலாம் வகுப்பிலே கல்வி பயின்று கொண் டிருந்தாலும், பாடசாலைக்குச் செல்வதில் மெத்தவே ஆர்வம் காட்டுவான். அதன் காரணமாய் காலை எட்டு மணிக்கெல்லாம் ஆரம்பமாகிவிடுகின்ற அந்தப் பாடசாலை பத்து நிமிடங்களிலே சென்று சேர்ந்துவிடக்கூடிய தொலை லே அமைந்திருந்தும் கூட வழமையாய் காலை ஏழு மணிக்கே புறப்பட்டுப் போய்விடுவான். அப்படியான அவன் அன்று நடந்துகொண்ட விதம் யாருக்குத்தான் ஆச்சரி யத்தை ஏற்படுத்தாது?
இழைத்துக் கொண்டிருந்த பாயை அரை குறையில் அப்படியே அநாதரவாய் விட்டுவிட்டு ‘விசுக் கென்று எழுந் தாள் அனிஸா ,
‘'சோறும் திண்டிட்டிங்கதானே.வேற என்ன..?’’ என்றவாறு அவனின் அருகே பறந்து போனாள். அவனோ பக்கத்திலே வந்து நின்ற தன் தாயை நோக்கி, "ஒண்டு மில் லம்மா...' என்றவாறு இழுத்தான்.
*"ஒண்டு மில்லாட்டி வேற என்னத்துக்கு வின்ன நிக்கிங்க? விஷயத்தச் சொல்லுங்க." அவசரப்படுத்தினாள்
ayawfourt .

காணிக்கை 73
"சிபானா டீச்சர்ர மகன் பெறோஸ் எனக்கு நேத்து பள்ளிக்கொடத்துக்கவச்சி செருப்பால அடிச்சுப்போட்டான். அவன் இண்டைக்கும் அடிப்பாண்டு . பயமாரிக்கி . அது தான்.' விஷயத்தைச் சுருக்கிச் சொன்னான்.
அவன் வதனத்தில் சோகம் நிழல் பரப்பியிருந்தது.
"'என்ன..செருப்பால அடிச்சானா. அவகட ஆட்சி தான் நடக்குதோ'
அனிஸாவின் நெஞ்சில் ஆத்திரம் பகீரென்று பற்றியெ ழுந்தது.
அவர்கள் வாழ்க்கையில் மலர்ந்த இரு மலர்களிலே ஒன்று இளமையிலேயே மடிந்துபோக எஞ்சிய ஒன்றுதான் அந்த றிஸ்மி. ஒன்று என்பதால் அவன்மேல் உயிரையே வைத்திருந்தனர். அதன் காரணமாய் யாராவது அவனைச் சற்றுக் கடிந்து பேசிவிட்டாற்கூட அவர்களால் அதனைப் பொறுத்துக் கொள்ளவே இயலாது. அப்படியாக வைத்தி ருந்க அவனைச் செருப்பால் அடித்துவிட்டால் கேட்கவும் வேண்டுமா? அவளது கண்கள் இரண்டுமே செம்பகத்தின் கண்களாகின.
சில நிமிடங்களில், தன்னை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த அனிஸா, தன் மகனுக்குப் பாடசாலையில் நடந்த சம்பவத்தை விபரமாக அறிய விரும்பினாள்.
** மகன், அந்தப் பொடியன் என்னத்துக்காக உங்களை அடிச்சான்.நீங்க ஒண்டும் செய்யல்லியா? " என்று ஒரு வினா வைப் போட்டாள். அதில் மாட்டிக் கொண்ட நிஸ்மி அப் படியே விடயத்தைப் பிட்டு வைத்தான்.
'இல்லம்மா. நேத்து எங்கட வகுப்புக் கலையக்க சிபானா டீச்சர்ர மகன் பெறோஸிட புத்தகம் அவன்ட கையிலரிந்து கீழ விழுந்திச்சி. அவன் அத எடுத்துத்தரச்

Page 48
7.3 y. 56' 25tbf) is
சொன்னான். நான் அத எடுத்துக் குடுக்கல்ல. நான்தான் அவருக்கு ஒரேயே வேல செய்து குடுக்கணும், நான் வேணு மிண்டுதான் அதச் செய்து குடுக்காம இருந்த, அதனால, அவன் என்ன ஏசினான். நானும் அவனை ஏசினேன். பொறகு அவன் பள்ளிக் கொடத்து வளவுக்கயே என்னத் தெரெத்தி வந்து செருப்பால அடிச்சுப் போட்டான்."
'அப்படியா விஷயம் . ம் . இண்டைக்கும் அவர் அடிக்கிற சமத்தப் பாப்பம். இப்ப நேரமும் எட்டுக்கிட்ட வந்திருக்கும். நீங்க இப்ப பள்ளிக்கொடத்துக்குப் போங்க. வயலுக்கருந்து வாப்பாவும் இன்னும் கொஞ்ச நேத்தை யால வந்திருவாரு. வந்ததும், எல்லா விஷயங்களையும் விபரமாச் சொல்லி உடனேயே நான் அவர அங்க அனுப் பிறன்.'
**ériflub LDIT.’’
றிஸ்மியின் முகத்தில் முற்றுகையிட்டிருந்த சோர்வு நீங்கிச் சுறுசுறுப்பு சுடர் விட்டது. விசுக்கென்று திரும்பிப் பாடசாலையை நோக்கி விரைந்தான்.
காலை ஒன்பது ஒன்பதரை மணியிருக்கலாம். வயலி லிருந்து வீடு திரும்பிய தன் கணவன் நிஜாமுத்தீனுக்கு அவசர அவசரமாய் காலை உணவு பரிமாறினாள் அனிஸா,
உணவு அருந்தி முடிந்த மறுகணமே தன் கணவனி டம் அவள், நேற்றுப் பாடசாலையில் தமது புதல்வன றிஸ்மிக்கு நடந்த சம்பவத்தையும், அதன் பிரதிபலிப்பாய் அவன் இன்று பாடசாலைக்குப் போக மறுத்து நின்றதை யும், தான்.ஒருவாறு அவனைச் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்ததையும் விபரமாக எடுத்துக் கூறியதோடு, பாடசா லைக்குச் சென்று நேற்று நடந்த சம்பவத்திற்குத் தக்க

காணிக்கை w 75
நடவடிக்கை மேற்கொண்டு வருமாறும் வேண்டிக் கொண் டாள்.
அனைத்தையும் செவிமடுத்த நிஜாமுத்தீன் பதறிப் போனான். விழிகள் குளமாகியே விட்டன. எழுந்து பாட சாலையை நோக்கிப் பறந்தான்.
அவன் கேற்றைத் திறந்து கொண்டு பாடசாலை வளவில் எட்டி அடி வைத்ததுதான் தாமதம், றிஸ்மி வகுப்பி லிருந்து எப்படித்தான் வந்தானோ தெரியவில்லை. வில்லி லிருந்து விடுபட்ட கணை போல தன் தந்தையிடம் வந்து சேர்ந்தான். நிஜாமுத்தீனைச் சுற்றி இரண்டு மூன்று மாண வர்களும் மொய்த்துக் கொண்டனர்.
நிஜாமுத்தீன் அவர்களைக் கடந்து தன் பார்வையை அப்பால் செலுத்தினான்.
எதிரே அமைந்திருந்த பாடசாலையின் 'ஹோல்' களிலிருந்து மாணவர்கள் படிக்கும் சப்தம் பொங்கிவந்தது. ஆசிரியர்களையோ, ஆசிரியைகளையோ எங்குமே காண வில்லை. அவர்களுக்குப் பதிலாக வளர்ந்த மாணவர்கள் கையில் பிரம்போடு வகுப்புகளிலே அதிகாரம் செலுத்திக் கொண்டிருந்தனர், அவர்களின் அதிகாரமோ கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்தது. என்றாலும் மாணவர்களின் சில அத்துமீறல்களும் அங்கு நடைபெறவே செய்தன.
திடீரென்று அங்கு தன்னைச் சூழ நின்றவர்களின் நினைவு தட்டவே, தன் பார்வையைப் பக்கத்தே இழுத்து விட்டுக் கொண்டான் நிஜாமுத்தீன்,
‘'சிபானா டீச்சர்ர மகன், உங்கிட Lರ್oವಾ ಛಕ್ಖgಿಳೆ பால ரெண்டு மூண்டு அடி முகத்திலயும் ழதுஇத்ஜ் அடிச் சுப்போட்டான்’ என்றான் பக்கத்தி திறிே ஒரு மான வன். ஐந்தாம் வகுப்பிலோ, நசிெ வகுப்பிலோதல்வி

Page 49
76 யூ. எல். ஆதம்பாவா
கற்றுக்கொண்டிருக்க வேண்டும். அவன் மெல்லிய பச்சை நிறத்திலான கட்டைக் காற்சட்டையும், வெள்ளை நிறத்தி லான அரைக்கைச் சேர்ட்டும் அணிந்திருந்தான். தலை ஒரு பக்கமாக வாரி விடப்பட்டிருந்தது. வட்டமான முகத்திலே சற்றுப் பெரிய இரு விழிகள் படபடத்துக் கொண்டிருந்தன. அம்மாணவனின் பேச்சைக் கேட்ட நிஜாமுத்தீன் நற நற வென்று பற்களைக் கடித்துக்கொண்டான். சினம் பற்க ளுக்கிடையில் நொறுங்கிப் போயிற்று.
'தன் மகன் சண்டை சச்சரவுக்குப் போக மாட்டான். மிகவும் அமைதியான சுபாவம் உள்ளவன். என்ன நடந்தி
ருக்கும். சிந்திக்கத் தொடங்கினான் நிஜாமுத்தீன்:
"இஞ்சப்பாருங்க.நானும் உங்கட மகனோடதான் படிக்கிற ... நேத்து இந்த விஷயம் எல்லாத்தையும் நான் பாத்துக்கொண்டுதா னிருந்த .உங்கட மகன் அவனை ஒண் டுமே செய்யல்ல. அவன்தான் சும்மா அநியாயமா அடிச்சுப் போட்டான். பாவம்!’ என்றான் இன்னொரு மாணவன். மிகவும் வாயாடி போல் காணப்பட்டான். றிஸ்மியின் உயரந்தான் இருப்பான். இவன் அணிந்திருந்த கட்டைக் காற்சட்டையும், சேர்ட்டும் சந்தனக்கலரிலே தைக்கப்பட் டிருந்தன. தலைமயிர் கட்டையாக வெட்டிவிடப்பட்டிருந் தது. சற்று நீளமான மூக்கின் நுனியில், கசக்கி விட்டது போல் செம்மை படர்ந்திருந்தது.
இம் மாணவனின் வார்த்தைகள் நிஜாமுத்தீனின் எண்ணத்தை உறுதிப்படுத்தின. அதனால் நிஜாமுத்தீன் ஆரம்பத்திலேயே தன் மகனிடம் கேட்க வேண்டிய ஒரு கேள்வி தானாகவே மறைந்து கொண்டது. என்றாலும் அவ் விடயம் தொடர்பான வேறு சில தகவல்களை அறிவதற் காக அவனோடு உரையாடினான்.
'சியானா டீச்சர்தானே உங்களுக்குப் படிச்சித்தாற உங்கட வகுப்பெங்கரிக்கி?" என்று உரையாடலை ஆரம் பித்தான் நிஜாமுத்தீன்.

காணிக்கை 77
‘'சிபானா டீச்சர்தான் படிச்சித்தாற. அன்னாரிக்கி எங்கட வகுப்பு.’’ எதிரே அமைந்திருந்த ஹோலுக்குப் பின்னால் தெரிந்த இன்னுமொரு ஹோலைச் சுட்டிக்காட் டினான் றிஸ்மி.
நிஜாமுத்தீனோ, தன் மகனைக் கையில் பிடித்த வண்ணம் அந்த ஹோலை நோக்கி நடக்கத் தொடங்கி னான். சுற்றி நின்றவர்களும் அவனுடன் இழுபட்டுச் சென் றனர்.
"அப்படின்டா, இந்த விஷயத்த உங்கட டீச்சருக் கிட்டச் சொல்லல்லியா?' ' தன் மகனை நோக்கிக் கேட் Lln Gir.
"எங்கட வகுப்பு கலையக்கதான் இது நடந்த, அத னால, நான் சொல்லல்ல. அப்படியே வீட்ட வந்திட்டன்.""
'ம் . இப்ப அவ எங்க? வகுப்புக்க இருக்காவா?’’ இப்போது முன் ஹோலின் அருகே வந்துவிட்ட நிஜாமுத்தீன் இவ்வாறு வினவினான். -
* 'இல்ல வாப்பா, பெரிய சேர் ர அறைக்க போனா' மைந்தன் தனது சேர்ட்டை கீழ் நோக்கி இழுத்துவிட்டுக் கொண்டான்,
"பெரிய சேர் ர அறைக்க சேர்மார்ர கூட்டம் நடக் கிது. அவவும் அங்கதான் இருப்பா." கூடவந்த வளர்ந்த மாணவனொருவன் கூறினான். V
'ம்..”* நிஜாமுத்தீன் டக்கென்று திரும்பி அதிபரின் அறையை நோக்கி அடி வைத்தான்.
நிஜாமுத்தீன் அதிபரின் அறையில் நுழையும் போது அங்கே அப்பாடசாலை ஆசிரியர் சங்கக் கூட்டம் சிறிது குடு கண்ட நிலையிலே நிகழ்ந்து கொண்டிருந்தது. அறையில்

Page 50
'78" யூ. எல். ஆதம்பாவா
நுழைந்த அவனோ, சுவரின் ஒரமாய் மெல்ல ஒதுங்கி நின்று பார்வையை உள்ளே சுழல விட்டான். சற்று விஸ்தீரணமான அந்த அறையிலே கிழக்குப் புறமாகவும் , மேற்குப் புறமாக வும் சுவரோடு ஒட்டியவாறு அலுமாரிகள் இடப்பட்டி ருந்தன. சற்றுத் தள்ளி வடக்குப் புறமாக அமைந்திருந்த ஜன்னலின் முன்னே ஒரு பெரிய மேசை போடப்பட்டிருந் தது. பச்சை வண்ணச் சீலை விரிக்கப்பட்டிருந்த அம்மேசை யிலே வரவு இடாப்புகள், பைல்கள், வெவ்வேறாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. “லொக்புக்கும் ஒரு புறமாக வைக் கப்பட்டிருந்தது. ஜன்னலின் வழியாக, உள்ளே குபுகுபு வென்று வீசிய காற்றினால் அம்மேசை சடசடத்துக்கொண் டிருந்தது. அம்மேசையின் பின்னே தெற்கே நோக்கியபடி இடப்பட்டிருந்த கைக் கதிரையிலே அதிபர் வெகு கம்பீர மாக அமர்ந்திருந்தார். அவரின் தலைக்கு மேல் சுவரிலே, ஜனாதிபதி, பிரதம மந்திரி, கல்வி மந்திரி ஆகியவர்களின் படங்கள் சிரித்துக் கொண்டிருந்தன. வலது பக்கச் சுவரிலே கண்ணாடி பிறேம் செய்யப்பட்ட கால அட்டவணை தொங் கிக் கொண்டிருந்தது. அதற்குச் சற்றுத் தள்ளி ஆசிரியர்க ளின் லீவுவிபர அட்டை சுவரோடு பொருத்தப்பட்டிருந்தது. இடது பக்கச் சுவரிலே சிறிது தொலைவில் மாதக் கலண்டர் ஒன்று தொங்கிக்கொண்டிருந்தது.
எங்குமே ஒரு தனிக் கவர்ச்சி இழையோடிக்கிடந்த அந்த அறையிலே இரு மருங்கிலும் ஆசிரியர்களும், ஆசிரி யைகளும் வீற்றிருக்க அதிபரின் தலைமையிலே கூட்டம் நிகழ்ந்து கொண்டிருந்தது. இப்போது நிஜாமுத்தீன், அறை யிலே துழாவிய தன் பார்வையைக் கட்டுப்படுத்திக் கொண்ட வனாய் மிகவும் மரியாதையோடு நின்றான்.
அவனைப் பார்த்ததும் அனைவரது பேச்சும் அப்படியே தடைப்பட்டுப்போக பார்வைகள் அவனிலே பாய்ந்து கொண்டன. கூட்டத்தை நடத்திக் கொண்டிருந்த அதிபர் அனைத்து நிகழ்ச்சிகளையும் மறந்து அவனை ஒரு முறை முற்றாக நோட்டமிட்டுக் கொண்டார்.

காணிக்கை 79
“ “gjuh9 Graira ?” ”
நிஜாமுத்தீன் பின்னால் நின்ற தன் புதல்வனை முன்னால் இழுத்துவிட்டுக் கொண்டான்.
‘'சேர்.நேத்து சிபானா டீச்சர்ர மகன் என்ட மகன் றிஸ்மியைச் செருப்பால அடிச்சுப் போட்டாராம், அதனால என்ட மகன் இண்டைக்குப் பள்ளிக்கு வர ஒண்ணாண்டிட்டு வீட்டில நிண்டிருக்காரு, அவர் ர உம்மாதான் அவரத் தெண்டிச்சி இண்டைக்குப் பள்ளிக்கு அனுப்பியிருக்கா. நானும் இப்ப ரெண்டு மூணு நாளா வீட்டில இல்ல, சாளம் பைக்க சூடடிக்கம். அங்கருந்து, நானும் இப்பதான் வந்த, எல்லா விஷயமும் எனக்கு இப்பதான் தெரியும், இது என்னண்டு கேப்பம் எண்டு போட்டுத்தான் நான் இஞ்ச வந்த .'"
றிஸ்மியை சிபானா ரீச்சரின் மகன் செருப்பாலடித்த விஷயம் அதிபருக்குத் தெரியாமலில்லை. நேற்றுப் பாட சாலை கலைந்து சற்று நேரத்தில், அவரது நம்பிக்கைக்குரிய ஒரு மாணவனின் வாயிலாக அதனை அறிந்து வைத்தி ருந்தார். என்றாலும் அவர் அதனை வெளியிலே காட்டிக் கொள்ளவில்லை.
நிஜாமுத்தீன் தன் புதல்வனின் அச்செய்தியை வெளி யிலே பிட்டு வைத்தும்கூட அதிபர் அதற்கும் அசைந்து கொடுக்கவில்லை.
'அப்படியா விஷயம். எனக்குத் தெரியாதே. அவர் அடிச்ச உடனேயே இங்க சொல்லல்லியா? எந்த வகுப்பு உங்கட மகன்?’’
அதிபரின் வதனத்தில் எவ்விதச் சலனமும் அலை மோதவில்லை.

Page 51
80 யூ, எல். ஆதம்பாவா
'முதலாம் வகுப்பு சிபானா டீச்சர் தானாம் படிப் பிக்கிற வகுப்புக் கலையக்கதான் அடிச்சதாம். அதுவுமில் லாம அவரும் ஒடிட்டாராம். அதுதான் சொல்லல்லியாம்,' தலையைச் சொறிந்து கொண்டான் நிஜாமுத்தீன்.
அதிபர் தனக்கு எதிரே இரு மருங்கிலும் கூட்டத் திற்காக வந்து குழுமியிருந்த ஆசிரியர் ஆசிரியைகளிலே தன் பார்வையை விரித்துவிட்டார். அனைவரும் விசாரணையில்
ஆழ்ந்திருப்பது தெரிந்தது.
நிஜாமுத்தீன் பகர்ந்தவற்றைச் செவிமடுத்துக் கொண் டிருந்த சிபானா ரீச்சர், அதற்கென்ன இயம்புகிறாள் என்பதை அறிவதற்காக வலது பக்கமாகவிருந்த வரிசையில் நான்காவதாகவிருந்த அவளிலே தன் பார்வையைச் சற்று நிறுத்தினார் அதிபர்.
தன் மகன் பெறோஸ், றிஸ்மியை அடித்ததையும், அதில் பிழை தன் மகனிலேதான் என்பதையும் சிபானா நேற்றே அறிந்து வைத்திருந்தாள். என்றாலும் அதனை அவள் அவ்வளவு பெரிதாகப் பொருட்படுத்தவில்லை. மறு கணமே அதனை மறந்து போயுமிருந்தாள். திடீரென்று அவ் விடயம் இவ்வாறு அம்பலத்திற்கு வந்ததும் அதிர்ந்து போனாள். இந்தச் சந்தர்ப்பத்திலேதான் அதிபரின் அந்தப் பார்வை சிபானாவில் விழுந்தது. அப்பார்வையின் பொருளை அவள் புரிந்து கொண்டாலும், எதுவுமே பேசாது பல்லைக் கடிப்பதும், மெல்ல நகைப்பதுமாய் அமர்ந்திருந்தாள். ஆனால் அவளின் பார்வையோ என்னிடம் எதுவும் கேட் காமல் பிரச்சினையைச் சுமுகமாகத் தீர்த்துவிடுங்கள் என்பதுபோல் கெஞ்சின.
சிபானா ரீச்சரின் நிலையும், தோற்றமும், பார்வை . யும் அவள் விடயத்தை அறிந்து வைத்திருக்கிறாள் என்ப தையும அவ்விடயம் அவளுக்குச் சாதகமாய் இல்லை என்பதையும் உணரவைத்தன.

காணிக்கை: ** 81.
அவசரப்பட்டு விடயத்தைக் கெடுத்துவிட விரும்ப வில்லை அதிபர். சிபானாவில் நிலைத்திருந்த தன் பார் வையை மெல்ல இழுத்து மீண்டும் அங்கு வந்திருந்த நிஜாமுத்தீனின் பக்கமாய்ச் செலுத்தினார். பக்கத்தில் நின்ற அவனின் மகனைச் சுட்டிக்காட்டி அவனிடம் மிகக் கனிவாகப் பேசினார்.
'நிஸ்மி. என்ன விஷயம் நடந்த, உண்மையைச் சொல்லு.”* -
பேசத் தொடங்கிய காலம் முதலே உண்மையே பேசப் பழக்கப்பட்டவன் றிஸ்மி. அதன் காரணமாய் அவன் எச். சந்தர்ப்பத்திலும் உண்மையே பேசுவான். அப்படியான அவன் அதிபர் வினவியவுடனே நடந்த விடயங்களை அப்ப டியே அப்பட்டமாய் வெளிப்படுத்தினான். சம்பவம் நடந்த போது கூடநின்ற அவனது வகுப்பு மாணவனும் அங்கு அதனை உறுதிப்படுத்தினான்.
ஏற்கனவே அதிபர் தன் நம்பிக்கைக்குரிய மாணவ னின் வாயிலாய் அறிந்து கொண்ட விடயமும் அதே போலவே அமைந்திருந்தது
சிபானா ரீச்சரின் புதல்வனிலேதான் பிழை என்ப தைத் தெளிவாய் உணர்ந்து கொண்ட அதிபர், இப்போது வேகமாய்ச் சிந்திக்கத் தொடங்கினார். கூட்டத்தில் வீற்றி ருந்த அனைவரது கவனமும், அதிபர் எவ்வாறு தீர்ப்பு வழங்கப் போகின்றார் என்பதிலேயே இலயித்துப்போயிருந் தது. ஆசிரியை சிபானாவின் கவனமும் அதிபர் எவ்வாறு நடந்துகொள்ளப் போகின்றார் என்பதிலேயே ஆழ்ந்திருந் தது. அதிபர் தன் முன்னே இா வரிசைகளிலும் வீற்றிருந்த வர்களை அவதானித்துவிட்டு சிபானாவையும் ஒரு முறை ஆழ்ந்து நோக்கிக் கொண்டார். * R -

Page 52
32 யூ. எல். ஆதம்பாவா
*சிபானா தனக்குக் கீழ் படிப்பிக்கின்ற ஆசிரியை மட்டுமல்ல நெருங்கிய உறவினளும்கூட, அதேவேளை வந்தி ருந்த நிஜாமுத்தீனையும் சமாளிக்கவேண்டும். இதற்கிடை யில் சிபானா ரீச்சரின் மகன் பெறோஸ"ம் பாடசாலைக்கு வந்திருக்கிறான். அவனை அழைத்து வினவினாலும் விஷ யம் பிழைத்துவிடும். ஆகையினால் அவனையும் அழைக்கா மலே சமாளிக்கவும் வேண்டும். எவ்வாறு நடந்து கொள்ள லாம்" என்று தீவிரமாகச் சிந்திக்கத் தொடங்கினார். அப்போது ஒரு மாணவன் நிஜாமுத்தீனின் பக்கமாய் நின்ற வாறு எட்டிப்பார்த்தான்.
"பெரிய சேர்..டிச்சர்ர மகன் இவரத் தெரத்திவரக்க நாலாம் வகுப்புப்படிக்கிற ஜெஸில்தான் இவரப் பிடிச்சுக் கொடுத்த' என்றான் அம்மாணவன்.
நீருக்குள் மூழ்கிவிடப்போன ஒருவருக்குப் பிடித்துக் கொள்வதற்கு ஒரு பெரிய மரக்கட்டையே கிடைத்தது போல இருந்தது அதிபருக்கு. ‘ரியூப்லைட்” போட்ட மாதிரி பக்கென்று அவர் முகத்தில் மகிழ்ச்சி பரவியது. ஆனால், திடீரென்று ஒரு சந்தேகமும் உள்ளே புகுந்து கொண்டு வண்டு போல் அறுக்கத் தொடங்கியது. உடனே அதிபர், 'இதச் சொல்லல்லியே.மெய்தானா' என்று அச்சந்தே கத்தை வெளிப்படுத்தினார். நிஜாமுத்தீனோ தன் மகனைப் பார்க்க, மகனோ அதிபரைப் பார்த்து பின்வருமாறு பகர்ந்தான்.
"மெய்தான் சேர். அது எப்படிண்டா. டீச்சர்ர மகன் பெறோஸ் செருப்பக் கழத்திக் கையிலெடுத்துக் கிட்டு என்னத் தொரத்தி வந்தான். நான் அவனுக்கிட்ட எம் படாம ஓடி வந்தன். அப்படி ஒடி வரக்க எதுக்க நிண்ட ஜெஸில் என்ன மறிச்சி அப்படியே பிடிச்சுக் கொடுத் திட்டான். ஆனா...அவன் எனக்கு வேறொண்டும் செய் யல்ல. அதனால நான் அதச் சொல்லல்ல."

asTafásan 36 83
இப்போது அதிபரின் உள்ளம் தெளிவடைந்து முன்னைய நிலைக்கு மீண்டது. சதைப்பிடிப்பான கன்னத்தை வருடிவிட்டுக் கொண்டு சொன்னார்.
* நீங்க ஜெஸில் பிடிச்சுக் கொடுத்தத்த சின்ன விஷயம் என்டு நினச்சிக்கிட்டிருக்கிங்க. அது சின்ன விஷய மில்ல.பெரிய விஷயம்.'
தந்தையும் மைந்தனும் மெளனமாகிப் போயினர்.
மறுகணம் அதிபர் முதலில் அச்செய்தியைச் சொன்ன அம்மாணவனை "இஞ்சே வா" என்று முன்னே அழைத் தார்.
நிஜாமுத்தீனின் பின்னால் மறைந்து கொண்டு நின்ற அம்மாணவனோ எட்டி அடி வைத்து முன்னே குதித்தான்.
""ஜெஸில் எங்கே? இன்டைக்கு பள்ளிக்கு வந்திருக் கானா??" அது பர் அம்மாணவனிடம் வினவினார்.
"ஒம் சேர் .'
'ஒடிப் போய் பெரிய சேர் வரட்டாம் என்டு கெதி யாகக் கூட்டிக்கிட்டு வா."
வேகமாய் விரைந்தான் அம்மாணவன். சில நிமிடங் களிலே ஜெஸிலோடு அதிபரின் அறையை அடைந்தான். ஜெஸில் தன்னை அழைத்து வந்த மாணவனின் பின்னால் ஒதுங்கி நின்று கொண்டான். அவனை முன்னால் இழுத்து விட்டுக்கொண்டு, 'இன்னாரிக்கான் சேர். ' அழைத்து வந்த மாணவன்.
என்றான்

Page 53
84 யூ. எல். ஆதம்பாவா
‘இவன் அனிபாட மகன்ல்லவா?" என்றார் அதிபர் தன் முன்னே வீற்றிருந்த ஆசிரியர்களை நோக்கி
'ஓம்." அதனை உறுதிப்படுத்தினார் இடது புற வரிசையிலிருந்த ஒர் ஆசிரியர்.
தான் எண்ணியவர்தான் அவர் என்று இப்போது அதிபருக்குத் தெளிவாயிற்று. அதற்கு அடையாளமாக 'இம்' என்று கொண்டார். −
ஜெஸிலின் தந்தையைப்பற்றியும், அவரது குடும்பத் தைப்பற்றியும் தெரிந்து வைத்திருந்ததுபோல, றிஸ்மியின் தந்தையைப்பற்றியும், அவரது குடும்பத்தைப்பற்றியும் நன்கு தெரிந்து வைத்திருந்தார் அதிபர். இவ்விருசாராரும் சமூகத்திலே மற்றவர்களோடு சண்டை, சச்சரவுக்குப் டோகாமல் ஒதுங்கிக்கொண்டு தாங்களும் தங்கள் பணியும் என்று வாழ்பவர்கள். அவர்கள் தனக்கு எதிராக எச்சந் தர்ப்பத்திலும் கிளம்பமாட்டார்கள் என்பதும் அவருக்குத் தெரியும்.
பொதுவாக அவ்விரு சாராரது நிலைமைகளும் சிபானா ரீச்சரது மகனின் விடயத்தைச் சமாளிக்க அதிப ருக்கு மேலும் வாய்ப்பாக அமைந்தன.
மூக்குக் கண்ணாடியைக் கழற்றி மேசையிலே வைத்து விட்டு, பக்கத்திலே வைக்கப்பட்டிருந்த தன் சுட்டுவிரல் அளவு பருமனையுடைய பிரம்ப்ை எடுத்துக்கொண்டு விசுக் கென்று கிளம்பி ஜெஸிலை நோக்கிப் பாய்ந்தார் அதிபர்.
மின்னல் வேகத்தில் தன் அருகே வந்துவிட்ட அதிபரின் தோற்றம் அவனைப் பயம் கொள்ளச் செய்தது. உடம்பெல் லாம் குளிரில் நடுங்குவதைப் போல வெடவெடவென

காணிக்கை 8S
நடுங்கத் தொடங்கியது. விழிகள் மிரண்டன. சோகம் அவனது வதனத்தில் உறைந்து கொண்டது.
'மாட்டுப்பண்டி! உன்னாலதாண்டா இவன் அடி பட்ட. இவன் நல்ல ஒசாராரிக்கான். நீ இவனப் பிடிச்சிருக் காட்டி இவன் எப்படியோ தப்பியிருப்பான். இது ஒண்டும் நடந்திருக்கா. நீட்டிடா கைய."
அதிபர் பிரம்பை நீட்டியவாறு ஆவேசம்ாக நின்று கொண்டிருந்தார். கையை நீட்டாமலும் இருக்க முடியாது. பயமாகவுமிருந்தது ஜெஸிலுக்கு. என்ன செய்வது, கையை மெல்ல நீட்டினான். ஓங்கி, சுள் சுள் என இரண்டு அடிகள் கொடுத்தார். அவ்விடங்களில் இரு இரத்தக் கோடுகள் தலை காட்டின.
** நோகுது சேர். அடிக்காதிங்க சேர். இனிமேல் செய்யமாட்டன்." ஜெஸில் கையைப் பின்னே இழுத்துக் கொண்டான்.
'நீட்டிடா கையை.'
ஜெஸில் கையை நீட்ட நினைத்தான். கை அவனுக்கு ஒத்துழைக்க மறுத்தது. நீட்ட முயன்றவாறு "இல்ல சேர் . இல்ல சேர்.’’ என்று நெளிந்தான்.
*' என்னடா.நான் சொல்றன்' அதிபரின் கண்கள் தீயைக் கக்கின. பாய்ந்தார் வேங்கைபோல். அவரின் கையி லிருந்த பிரம்பு ஜெஸிலின் முதுகையும், தொடையையும் நான்கு ஐந்து முறைகள் பதம் பார்த்து மீண்டது. ή
* 'இனிமேல் கவனம் றாஸ்கல், போ வகுப்புக்கு" இது அதிபர்.

Page 54
86 யூ. எல். ஆதம்பாவா
"இம்.ஊ. இம்.ஊ." என்று அவன் வலிதாங் காது அழுதவாறு அதிபரின் அறையைவிட்டு வெளியேறி னான். அவன் விழிகளிலிருந்து நீர்ப்பழங்கள் பொலு பொலு வென உதிர்ந்து கொண்டேயிருந்தன. அறையை விட்டுச் சென்றும் அவனது அழுகுரல் வெளியிலிருந்து இலேசாய்க் கேட்டுக் கொண்டேயிருந்தது.
அதிபர் தன் பார்வையை நிஜாமுத்தீன் மேல் திருப் u96asamorri.
'தம்பி,நீங்க போங்க.கூட்டம் முடிந்ததும் டீச்சர்ர மகனையும் தான் இங்க எடுத்து அவருக்கும் ரெண்டு மூண்டு அடி கொடுக்கணும். அவகட வகுப்புக் கலைய இன்னும் நேரம் இருக்கி. மகன, விட்டிட்டுப் போங்க. இனிமேல் எதுவும் நடக்காம நாங்க பாத்துக்கிறம்."
அதிபரின் இவ் வார்த்தைகளைச் செவிமடுத்த நிஜாமுத்தீன் சினமும், சோகமும் கலைந்து சாதாரண நிலையை எய்தினான். என்றாலும் சிபானா ரீச்சரின் புதல் வனைத் தண்டிக்காமல் விட்டது அவனுக்குப் பெருங்குறை யாகவே பட்டது.
உமிழ் நீரோடு அதனையும் விழுங்கிக் கொண்டான்.
அதிபரைக் கனிவாக நோக்கி, "நான் வாறன் சேர் "" என்று விட்டு அங்கிருந்த ஏனைய ஆசிரியர்களிடமும புன் சிரிப்பால் விடை பெற்றுக் கொண்டு தன் மகனோடு
அறையை விட்டு வெளியேறினான்.
ஆசனத்தில் வந்தமர்ந்த அதிபர், ஆசிரியர்களை நோக்கிப் புன் சிரிப்பை உதிர்த்து விட்டுக் கொண்டார்

காணிக்கை 87
"'என்ன செய்யிற. நமக்குள்ள வந்து கிடக்கு' என் றார். அங்கு கூட்டத்தில் அமர்ந்திருந்த அனைவருமே எதுவுமே பேசாது அமைதியில் ஆழ்ந்திருந்தனர். இப்போது அதிபர் தன் பார்வையை ஆசிரியை சிபானாவை நோக்கிப் படர விட்டார்.
"ஆள் கொஞ்சம் துண்டாக்காரன் போலரிக்கி. உறுக்கிக் கொஞ்சம் பயமுழுத்தாட்டி வையுங்க. ' அதிபர், சிபானாவை நோக்கி மெல்லியதாய்ப் புன்முறுவல் ஒன் றையும் சிந்திக் கொண்டார்.
சிபானா ரீச்சரோ, அதிபரை நோக்கி, சரி என்பதற்கு அடையாளமாக நகைத்தவாறு மெல்லத் தலையை அசைத் துக் கொண்டாள்.
அவளின் பார்வையோ, இக்கட்டான நிலையில் உதவிய அதிபருக்கு நன்றி செலுத்துவது போலத் தோன்றியது. அதிபரும் இதனை உணர்ந்து கொண்டிருக்க வேண்டும். அவரின் வதனம் மகிழ்ச்சியில் மலர்ந்து போய்க் காணப் பட்டது. ஆனால், அங்கிருந்த ஏனையவர்களின் வதனங் களோ, அதிபரின் செயலால் உலர்ந்துபோய்த் தோன்றின. அதே வேளை அவர்களின் இதயங்களோ, றிஸ்மியின் சம்பவத் திற்குப் பிரதான காரணியாக விளங்கிய சிபானாவின் புதல் வன் பெறோஸ் முற்றாகவே தண்டிக்கப்படாமல் விட்டதை யும், அச்சம்பவத்திற்கு துணைக் காரணியாய்த் திகழ்ந்த ஜெஸில் மட்டும் பிரதான காரணி போல் பெரிதாகத் தண் டிக்கப்பட்டதையும் நினைத்துக் குமைந்து கொண்டுமிருந் தன.
தினகரன் வாரமஞ்சரி 1986 ஜூன் 01

Page 55
ஆசை
கரீமுக்கு இருபத்தைந்து இருபத்தாறு வயதிருக்க லாம். நல்ல உடல்வாகு உடையவன். அவன் தன்னிலும் இரண்டு மூன்று வயது இளையவளும் சுமாரான அழகியு மான சரீனாவைத் திருமணம் செய்து ஒரு வருடம் உருண் டோடி விட்டது. ஆரம்பமுதல் வறுமை அவர்களது வாழ்க் கையோடு விளையாடத் தவறவில்லை. என்றாலும், அவன் தனது குடும்ப ஒடத்தை அன்றன்றைக்குக் கூலி வேலை செய்து நகர்த்திக் கொண்டே வந்தான். அவன் தினமும் தம் கிராமத்திலேயே எங்காவது எப்படியோ ஒரு வேலையைப் பற்றிப்பிடித்துக் கொள்வான். அதில் மகா கெட்டிக்காரன். ஆனால், இன்றோ அவன் காலை முதல் மத்தியானம் வரை சந்தை, கடைத்தெரு, கடற்கரை என்றெல்லாம் பம்பரம் போலச் சுற்றிச் சுழ்ன்றும் எந்த வேலையுமே அகப் படவில்லை. அதனாலே, நிறைந்த மனச் சோர்வு அவனைச் சிறை பிடித்துக் கொள்கிறது. ‘இனி இன்று தொழில் தேடி எங்குமே திரிவதில்லை’ என்று எண்ணியவனாய் உடனேயே வீடு திரும்பினான்.
பிற்பகல் இரண்டரை மூன்று மணி இருக்கலாம். கரீம் தம் வீட்டுத் திண்ணையிலே சாவகாசமாக உட்கார்ந்திருக் கிறான். பக்கத்தில் அவன் மனைவி சரீனாவும் அமர்ந்தி, ருக்கிறாள். நாணம் மலர, அவள் கன்னங்களிலும், மூக்கின் நுனியிலும் செம்மை படர்கிறது. அவள் ஒருவாறு தலை நிமிர்ந்து தன் உள்ளத்திலே கிளர்ந்தெழுந்த ஆசையைத் தனது கணவனிடம் வெளியிட்டு வைக்கிறாள்.

காணிக்கை 89
"இஞ்சப்பாருங்க.வெள்ளத்தால நம்மிட குளமெல் லாம் நிரம்பி அதுக்குப்பக்கத்தில இருக்கிற கரவாகுப்பத்து வயலுங்கூட தண்ணீரில தாண்டு கிடக்குதாமே, அந்த வயலுக்கதான் நம்மிட பக்கத்து வீட்டு பரிதாட புரிசன் நேத்து நல்ல சள்ளல் மீன்களெல்லாம் வீசிக்கந்திருக்காரு, சள்ளல் மீன் தின் க எனக்கும் நல்ல விருப்பமாத்தானிருக்கு. அதுவுமில்லாம நாலஞ்சி நாளா நமக்கு நல்ல கறியுமில் லல்லவா? இப்ப நீங்க சும்மாதானே இருக்கிங்க, ஒருக்காப் போய்ப்பாருங்க" என்றுவிட்டு, தன் நெற்றியிலே அலை மோதிய தலை மயிரை ஒதுக்கிவிட்டுக் கொள்கிறாள் சரீனா.
அவள் நான்கு மாதக் கர்ப்பிணி. அவளுக்கு ஏற்பட்டி ருக்கும் இந்த ஆசை மிக மிகச் சாதாரணமானதுதான், என்றாலும் அவளின் நிலையிலிருந்து நோக்கின் அது அந்த அளவுக்கு நினைக்கக்கூடிய ஒன்றல்ல என்பது புலனாகும். இதனை நன்கு உணர்ந்து கொண்ட கரீமை, சரீனாவின் வார்த்தைகள். அப்படியே காந்தமெனக் கெளவிக் கொள் கின்றன. உடனேயே அவன் தன் மனைவியை நோக்கி, "புள்ள . உங்கட ஆசையையும் ஏன்தான் கெடுப்பான். நான் இப்பவே போறன்' என்றவாறு திண்ணையிலிருந்து எழுந்து நிற்கிறான்.
பொங்கிவந்த ஒருவித வேகம் முன்னே தள்ள அவன், மனையின் நடு அறையிலே நுழைந்து நிறம் மாறிப்போன ஒரு வலையையும், ஒரு பையையும் எடுத்துக்கொண்டு தன் துணைவியிடமிருந்து விடை பெற்று வீதியிலே இறங்குகி றான்.
அந்தக் கிராமத்தின் மேற்குப் புறமாக நீண்டு நெளிந்து கிடந்தது ஒரு பெரிய குளம்.அண்மையிலேற்பட்ட வெள்ளப்

Page 56
9. யூ. எல். ஆதம் பாவா
பெருக்குக் காரணமாக, அது தன் இரு பக்க எல்லைகளைக் கூட சற்று விஸ்தரித்திருந்தது. அக்குளத்தின் அருகாகவே கரைவாகுப்பற்று வயல் வெளி பரந்து விரிந்து கிடந்தது. அவ் வயல் வெளியிலே, நீரில் மூழ்கா திருந்த திடல்களிலே ஒன்று தன் பரந்த நெஞ்சை நிமிர்த்தியவாறு படுத்திருந்தது.
அத்திடலுக்கு வ்ந்து சேர்ந்த கரீம் தன் நெற்றியிலே வந்து கவிந்து கிடந்த தலைமயிரை ஒதுக்கிவிட்டுக்கொண்டு நெற்செய்கை மேற்கொள்ளாதிருந்த அந்த வயல் வெளி யைத் தன் கண்களுக்கெட்டிய மட்டும் நோட்ட மிடுகிறான்.
நீர் நன்கு நிறைந்து கிடந்த அவ்வயல் வெளியிலே ஆங்காங்கே பலர் வலை வீசிக் கொண்டிருப்பது அவன் விழி களிலே விழுகின்றது. அவசர அவசரமாய் அவன் தனது கை யிலே இருந்த பையை அத்திடலிலே வைத்துவிட்டு சாரனை முழங்காலுக்கு மேல் மடித்துக் கட்டிக்கொண்டு வயல் நீரிலே இறங்குகிறான். " சுர்.ர்’ எனத் தேகமெங்கும் மெல்லிய குளிர்மை பரவுகிறது. வாயிலே புகைந்து கொண்டிருந்த பீடியை எறிந்துவிட்டு தன் தோளைத் தழுவிக் கிடந்த வலையை எடுத்து வெகு இலாவகமாய் விரித்து வீசி எறிகி றான,
குறட்டை, பனையான், சள்ளல், கெழுத்தி, பொட் டியான் இத்தியாதி மீன்களெல்லாம் அவன் வலையிலே சிக்குகின்றன. ஒவ்வொன்றையும் வெகு பக்குவமாகக் கழற் றிப் பையிலே வைத்துவிட்டு மீண்டும் மீண்டும் வயல் நீரிலே வலை வீசுகிறான். மீண்டும் மீண்டும் அதே மீன்கள் பையிலே தஞ்சமடைகின்றன.
இவ்வாறு இயங்கிக் கொண்டிருந்த அவன் திடீரென்று வலை வீசுவதை நிறுத்திக் கொண்டு சுற்றும் முற்றும் நோட் டமிடுகிறான். எங்கும் மெல்லியதாய் இருள் படர்ந்து

காணிக்கை 91.
கொண்டிருப்பதும் தொலைவிலே கிராமப் பக்கமாகத் தெருக் கம்பங்களிலும், கட்டடங்களிலும் அவ்வேளைதான் மின் சார பல்புகள் பளீரென்று ஒளியை உமிழ்ந்து கொண்டு சிரிப்பதும் அவன் பார்வையிலே படுகின்றன. நேரம் ஆறு மணியிருக்கலாம் என ஊகித்துக் கொண்ட அவன் மீன் பையின் அருகிலே விரைந்து தான் பிடித்து வைத்திருந்த மீன்களை நன்கு அவதானிக்கிறான். அம்மீன்களுக்கிடையே . பல அளவுகளிலும் கிடந்த எட்டுச்சள்ளல் மீன்கள் மட்டுமே அவன் கவனத்தை ஈர்க்கின்றன. அவன் அவற்றைப் பார்த் ததுமே, "கர்ப்பிணியான தன் மனைவியின் ஆசை நிறை வேறப்போகிறதே? என்ற எண்ணத்தினால் மிக்க உவகை யெய்துகிறான். அவன் ஊறிவந்த உமிழ் நீரை விழுங்கிக் கொண்டு மீளவும் ஒரு முறை மீன் பிடிக்க நினைத்து வயல் நீரிலே இறங்கி வலைவீசுகிறான். நீரின் மேல் விழுந்த வலை மெல்ல மெல்ல நீரிலே ஆழ்கிறது.
அந்த வேளையிலேதான்." "என்னப்பா கரீம், மிச்சம் ஒசாரா வீசுறாய் காட்டு பாப்பம் மீன்கள' என்ற வார்த் தைகள் கரீமின் செவிகளிலே மோதுகின்றன. படீரென்று திரும்புகிறான்.
திடலிலே தன் மீன் பையின் அருகிலே றகீம் போடி யார் வெகு கம்பீரமாக நின்றிருந்தார். அவர் தன் தலை யிலே அணிந்திருந்த தொப்பியும், தோளிலே தொங்கவிட்டி ருந்த அங்க வஸ்திரமும், இடுப்பிலே தரித்திருந்த பெரிய தோல்வாரும் அவரை ஒரு பெரிய மனிதராகவே விளம்பிக் கொண்டிருக்கின்றன. கரீம் அவரை அவதானித்த மறு கணமே அவரின் அருகிலே படர்கிறான். தன் தலையைப் பின்னால் வருடிவிட்டுக்கொண்டு றகீம்போடியார் வேண்டிக் கொண்டபடி அவரின் பார்வைக்காய்ப் பையிலிருந்த அத்தனை மீன்களையும் வெளியிலே கொட்டி விடுகிறான். நிலத்திலே வீழ்ந்த அம் மீன்களிலே சள்ளல், பொட்டியான் ஆகியவை தவிர்ந்த ஏனையவையாவும் துடிதுடிக்கின்றன.

Page 57
92 யூ. எல். ஆதம்பாவா
சகல மீன்களையும் ஊன்றி அவதானித்துக் கொண்ட றகீம் போடியார், "சா.நல்ல மீன்களெல்லாம் பிடிச்சிருக் கியே, அது சரி.என்ட வயலுக்க கிடந்த இந்த மீன்கள என்ட கேள்வி பாரில்லாம நீ எப்படிப் பிடிப்பாய்?" என்கி றாா.
போடியாரின் இவ் வார்த்தைகளைச் செவிமடுத்த கரீமை பக்கென்று சினம் பற்றிக் கொள்கிறது. இருந்தும், அவன் தன்னைச் சுதாரித்துக் கொண்டு விடை பகர்கிறான்:
"காக்கா. இந்த மீன்கள் உங்கட வயல்ல விளைஞ் சதா இல்லையே. வெள்ளத்தில வந்த மீன்கள்தானே"
கரீமின் இவ்வுரையைக் கேட்ட றகீம் போடியார் பாம்பெனச் சீறி எழுகிறார்.
'ஏய்.கரீம் உனக்கு வேறுகதை வேணாம். என்ட வயல்லதானே பிடிச்ச. மறுகா என்ன" என்கிறார்.
அவன் அதற்கு, தான் என்ன இயம்புவதென்றே தோன்றாது மெளனமாகி நிற்கிறான். ஆனால், றகீம் போடி யாரோ அந்த மீன்களுக்கிடையே அங்குமிங்குமாகச் சிதறிக் கிடந்த எல்லாச் சள்ளல் மீன்களையும் சொல்லி வைத்தது போல் பொறுக்கி எடுத்து கரையிலே ஒதுங்கிக்கிடந்த இரு தாமரை இலைகளுக்குள் புதைத்துக் கொண்டு "'நான் வாறன்..நீயும் போ.ம்" என்று விட்டு, விடு விடென்று நடந்து கொண்டிருக்கிறார். இப்பொழுது கரீமுக்கு ஆத்திரம் கடலலையெனப் பொங்கி எழுகிறது. றகீம் போடியா ரைப் பற்றிப் பிடித்து அவர் பிடரியிலே நன்கு நாலு வைக்கத் துடிக்கிறான்.
"போடியார் செய்தது அநியாயந்தான். என்றாலும்
வயதுபோன ஒரு மனிதரென்றும் பாராது அவரிடம் அவ்வாறு நடந்து கொள்வது நல்ல பண்பல்ல" என்று

காணிக்கை 93
கரீமின் உள்ளமே அவனைத் தடுக்கிறது. அதனால் செய் வதறியாது அவர் செல்வதையே பார்த்தபடி நிற்கிறான். பார்வையிலிருந்து அவர் மறைந்ததும் 'தன் மனைவி ஆசை யோடு கேட்ட மீன்களெல்லாம் போய்விட்டனவே, அவ்வா சையை நிறைவேற்ற முடியாமலா வீட்டுக்கு மீள்வது" என்று உள்ளூரக் கவலைப்பட்டுக் கொள்கிறான். பின்பு அவன் எஞ்சிய மீன்கள் அனைத்தையும் திடலிலே விட்டு விட்டு வெறிகொண்டவன் போல் விரைந்து குளத்திலே இறங்கி இரண்டு மூன்று முறை வலை வீசினான். அவன் எண்ணிய மீன்கள் ஒன்றுமே அகப்படவில்லை. இதற்கிடையில் இருளும் நன்கு கனிந்து வந்து கவிந்து கொண்டதால் இனி எதுவுமே செய்ய முடியாது என்ற தீர்மானத்துக்கு வருகிறான்.
‘ம்.ஹ".." என நெடு மூச்சொன்றை உதிர்த்து விட்டு மீண்டும் திடலுக்கு வந்து மிக்க வெறுப்போடு அங்கு எஞ்சிக்கிடந்த அத்தனை மீன்களையும் எடுத்துக் கொண்டு மனைக்கு மீள்கிறான். •
இல்லம் திரும்பிய அவன் தன் மனைவியை அழைத்து நடந்த விடயங்களை எடுத்து இயம்பினான். அதனைச் செவிமடுத்த சரீனாவோ, சினங்கொண்டு கொதிக்கிறாள்.
'றகீம் போடியார் ஊரிலேயே பெரிய புள்ளி, ஹாஜியார், மரைக்கார், சமாதான நீதவான், அப்பப்பா. பெரிய பதவிகள். அவரப்பார்த்தா ஆருக்குமே மரியாத செய்யத்தான் தோன்றும். ஆனா.அவர்ர செயலென்ன? மிச்சம், கீழ்த்தரமாரிக்கி. இவர்களுக்கெல்லாம் அழிவு வராதா" என்று படபடத்துக் கொள்கிறாள். அவளின் நெஞ்சோ, உயர்வதும் தாழ்வதுமாயிருக்கிறது.
‘‘கெட்டவர்களுக்குக் கெதியில அழிவுவராது. அது கிடக்கட்டும். நீங்க கவலைப்படாதிங்க. நாளைக்கு எப் படியோ நான் சள்ளல் மீன்கள் வீசிக்கொண்டு வருவன்.

Page 58
9. யூ எல். ஆதம்பாவா
இல்லாட்டி விலைக்கு வாங்கிக் கொண்டின்டான வருவன்."
கரீம் தன் துணைவியைத் தேற்ற முற்படுகிறான். அதற்குச் சரீனாவோ, "நான் சள்ளல் மீன் இல்லாததப் பத்திக் கவலப்படல்ல, ஆனா, இந்தப் பெரிய மனிசன் செய்த அநியாயம், அக்கிரமத்தப்பத்தித்தான் கவலப்பர்ரன்" என்கிறாள். அவள் வதனத்தில் சோகத்தின் ஆட்சி,
Li. .." நான் கரீம்.
பெரு மூச்சொன்றை விட்டுக்கொள்கி
மீண்டும் சரீனாவே தன் உரையைத் தொடர்கிறாள்.
'சரி. இனி இந்த விஷயத்த விடுங்க, இப்ப நான் உங்களுக்குக் கோப்பி போடப்போறன், கை கால்களைக் கழுவிக் கொண்டு வாங்க" என்றுவிட்டு மார்பிவிருந்து சற்று நீங்கிக் கிடந்த சேலையைச் சரி செய்து கொள்கிறாள்.
"புள்ள. எல்லாத்துக்கும் கொஞ்சம் பொறுங்க. எனக்கு தலைக்கெடிக்கிறாப்போலரிக்கி. கடைத் தெருவுக் குப் போப் டிஸ்பிறின் வாங்கிட்டு வந்திர்ரன்." இதகரீம்.
சரீனா திண்ணையிலே விடப்பட்டிருந்த வலையை யும், மீன் பையையும் எடுத்துக்கொண்டு அடுக்களைக்குள் நுழைகிறாள். ஆனால், கரிமோ, கசங்கிச் சுருங்கியிருந்த தன் அரைக்கைச் சேர்ட்டைக் கீழ் நோக்கி இழுத்து விட்டுக் கொண்டு வீட்டுக்கு வெளியே அடி வைக்கிறான்.
O ᎦᏑ
கடைத் தெருவை நோக்கி விரைந்து வந்து கொண் டிருந்த கரீமை, திடீரென்று வெடித்துச் சிதறிய உரை பாடற் சப்தம் தெருக்கரையின் ஓர் இடத்திலே நிறுத்தி விடுகிறது. தலையை நிமிர்த்தி ஒலி வந்த திசையிலே நோக்கு

காளிக்கை 5
கின்றான். அங்கே, தெருக்கரையைத் தொட்டவாறு அழகுற அமைந்திருந்த றம்ே போடி பாரின் பெரிய வீட்டின் முன் பகுதியும், திண்னையும், மின்சார ஒளி விரிந்து கிடந்த அத்திண்ணையிலே போடியாரும் மனைவியும் எதிரெதிராக நின்றிருப்பதும் அவன் பார்வையிவே விழுகின்றன.
கரீம் அவர்கனைப்பார்த்ததுமே சற்று முன் தான் கேட்டது அவர்களது உரையாடற் சப்த மாசுத்தானிருக்க வேண்டுமென்று ஊகித்துக் கொள்கிறான். மறு வினாடி றகீம் போடியாரும் மனைவியும் தன்னைக் கவனிக்காத வாறு ஒதுங்கிக் கொண்டு மீளவும் அவர்களையே உற்று நோக்குகிறான்.
அந்த வேளையிலேதான் றம்ே போடியாரை நோக்கி "சள்ளல் மீனா எனக்கு இந்த மீன்சீ னென்றாலே வயித்தப் பேரட்ர.எப்ப பார்த்தாலும் இதப் போல மீன்களத்தான் அள்ளிக் கொண்டு வருவீங்சு.சீ.' என்றுவிட்டு தாமரை இலைகளுக்கள்ளிருந்த அச்சள்ளல் மீன்களை அப்படியே வெளியிலே வீசி எறிந்துவிடுகிறாள்.
அவரின் மனைவி,
றகீம் போடியார் இப்பொழுது தன் மனைவியின் வதனத்தில் வெடித்துச் சிதறிய சினத்தையும், அருவருப் பையும் எதிர்கொள்ள முடியாது தலை கவிழ்ந்து கொள் கிறார்.
இவை ; ஈனத்தையும் அவதானித்த கரீம் மேலும் அவ்விடத்திலே நிற்க விழையாது தனது பயனத்தைத் தொடர்கிறான். ஆனால், தன்னிடமிருந்து அபளிரித்துவந்த மீன்களால் றகீம் போடியாருக்கேற்பட்ட அவல நிலையை எண்ணை எண்ண அவன் மன வானிலே திரண்டிருந்த கோப மேகங்கள் மெல்ல மெல்ல விலகிக் கொண்டிருக்கின்றன.
தினகரன் வாரமஞ்சரி 18 பெப்ரவரி 07

Page 59
தந்தையை விஞ்சிய தனயன்
இன்று அவ்வீடும் ஊரோடு சேர்ந்து அதிகாலை யிலேயே விழித்துக் கொண்டது. கதிரவனின் ஒளிக் கதிர்கள் அவ்வீட்டின் திறந்து விடப்பட்டிருந்த கதவுகள், ஜன்னல்கள் வழியாக உள்ளே பிரவேசித்து இருளை மிரட்டிக்கொண் டிருந்தன.
"" அல்லாஹ" அக்பர் . அல்லாஹ அக்பர் . லாயி லாஹ இல்லல் லாஹ" அல்லாஹ" அக்பர் . " என்ற தக்பீர் முழக்கமும்,
" " LU - LJL -... Luul... Lul-mri... LI L- lu...-... LUL... Lu-Trif
.." என்ற பட்டாசுகளின் முழக்கமும், அவ்வீட்டுக்குள்
நுழைந்து இன்று ஹஜ்ஜ"ப் பெருநாள் என்பதை அங்கும் பகிரங்கப்படுத்திக் கொண்டிருந்தன.

காணிக்கை 9יך
சல்கா உம்மா மகிழ்ச்சியில் தன்னை மறந்து போகா மல் வெகு நிதானமாக செயற்பட்டுக் கொண்டிருந்தாள்.
திடீரென்று, அவ்வீட்டின் முன் மண்டபத்துள் தனது மருமகனின் பக்கமாக அமர்ந்து உல்லாசமாக உரையாடிக் கொண்டிருந்த தன் மகள் சரீனாவை அடுக்களைக்குள் அழைத்தாள். அவர்கள் இருவருக்காகவும் தயார் செய்து வைத்திருந்த காலைத் தேநீரைக் கொடுத்தனுப்பினாள். பின்னர், அங்கு தனது அருகே கிடந்த ஒர் இருக்கையிலே உட்கார்ந்து தானும் தேநீரைப் பருகிக் கொண்டாள்.
சற்று நேரந்தான் சென்றிருக்கும்.
'மகள். '' என்று கூறியவாறு அவளின் சம்பந்தன் இஸ்மாயில் வட்டானை அவ்வீட்டின் முற்றத்துள் அடி பதித்தார்.
மகளும், மருமகனும் அங்கு விரைந்தனர்.
'வாங்க மாமா உள்ளுக்க' என்று மகளும்,
"வாங்க வாப்பா உள்ளுக்க' என்று மருமகனும் அன்போடு வரவேற்றனர்.
சல்கா உம்மாவும் அடுக்களையின் பின்பக்கக் கதவு வழியால் வெளியே வந்து,
'வாங்களன் உள்ளுக்க' என்று அவரின் மேல் தான் வைத்திருந்த மதிப்பையும், மரியாதையையும் வெளிப் படுத்தினாள்.
அவர்களின் அழைப்புக்குத் தலை சாய்க்க இஸ்மாயில் வட்டானைக்கும் விருப்பம் தான். என்றாலும், சந்தர்ப்பம் தான் சரியாக அமையவில்லை.

Page 60
98 yg. STi salbum air
"நேரத்தோட பள்ளிக்கும் போகணும். இப்ப எனக்கு ரெண்டொரு வேலையுமிருக்கு. மறுகா வாறன். நான் இப்ப சுபஹ"த் தொழுதிட்டு வரக்க சந்தைக்குள்ள ஆடறுத்துப் பங்கு போட்டாங்க. நானும் அதில ரெண்டு பங்குகள எடுத்தன். இன்னாங்க உங்களுக்கும் ஒண்டு' என்று வட் டானை தனது மருமகள் சரீனாவிடம் தான் வாங்கி வந் திருந்த இறைச்சிப் பங்குகளில் ஒன்றைக் கையளித்து விட்டு அங்கிருந்து வெளியேறினார். சரீனாவோ, அவ்விறைச்சிப் பங்கை தனது தாய் சல்கா உம்மாவிடம் ஒப்படைத்து விட்டு வீட்டின் நடு அறைக்குள் நுழைந்தாள்.
சல்கா உம்மா, அடுக்களைக்குள் வந்து இறைச்சியைச் சுற்றியிருந்த தாளை அகற்றி இறைச்சியைச் சட்டிக்குள் இட்டு மூடிவிட்டு, மீண்டும், அங்கே கிடந்த அவ்விருக்கை யிலே வந்தமர்ந்தாள்.
சல்கா உம்மா தனது மகளோடு இற்றைக்கு ஐந்து வருடங்களுக்கு முன்பு அகதியாக அக்கிராமத்துக்கு வந்து சேர்ந்தாள். அக்குடும்பத்தோடு சேர்ந்து இன்னும் சில குடும்பங்களும், அன்று அக்கிராமத்தைத் தஞ்சமடைந்தி ருந்தன. என்றாலும், மற்றவர்களையெல்லாம் மேவும், வகையிலே, அதிட்டவசமாக இஸ்மாயில் வட்டானையினால் கட்டப்பட்டு பூசாமல் கிடந்த ஒரு வீடு, சல்கா உம்மாவும், மகளும் வசிப்பதற்காக இலவசமாகக் கிடைத்தது. ஏற் கனவே, தலைவனை இழந்திருந்த அக் குடும்பத்தின் சுமை யைச் சல்கா உம்மாவே தாங்கிக் கொண்டாள். இங்கே வந்த நாள் முதல் தான் வைத்திருந்த சிறு தொகைப்பணத் தைக் கொண்டு பாய், பெட்டி இழைத்தல், அப்பம்,பிட்டுச்

காணிக்கை 99.
சுடுதல் போன்ற தொழில்கள் செய்து தனது குடும்ப வண்டியை மெல்ல நகர்த்திக் கொண்டு வந்தாள்.
அடிக்கடி ஏற்படுகின்ற நெஞ்சு வருத்தம் அவளைப் பயமுறுத்திக் கொண்டிருந்தது.
இருபத்தாறு, இருபத்தேழு வயதை எட்டிக் கொண் டிருந்த தனது மகள் சரீனாவை ஒழுங்கான ஒருவரின் கையில் ஒப்புவித்துவிட வேண்டுமென்று எண்ணினாள்
வீடு, வளவையும். காணி, பணம் , பொருட்களை யுமே பெரிதாக எதிர்பார்க்கின்ற இந்தக்காலத்திலே, அவை எதுவுமேயின்றி அழகோடு நல்ல பண்புகளை மட்டுமே ஏக சொத்தாக வைத்துக்கொண்டு ஒழுங்கான ஒரு மாப்பிள் ளையைத் தேடிக்கொள்வது அவளுக்கு இயலாத காரியமா கவே தோன்றியது. மகளை எண்ணியெண்ணிக் கவலையில் மூழ்குவதைத் தவிர அவளுக்கு வேறு ஒரு வழியும் புலனாக வில்லை. இவ்வாறு மூன்று ஆண்டுகள் கடந்தே விட்டன.
நான்காவது ஆண்டு பிறந்து மெல்ல நடை பயின்று துல்கஃதா மாதம் என்ற பருவத்துள் பிரவேசம் செய்தி ருந்த காலப்பகுதியிலே, இஸ்மாயில் வட்டானை ஹஜ்ஜ"க் குச் செல்ல ஆயத்தங்கள் செய்வதாக சல்கா உம்மா அறிந் தாள். அவளுக்கு, தனது எண்ணம் நிறைவேற இது ஒரு நல்ல சூழ்நிலையாகவும் பட்டது. கூடவே, "தானே நேரிற் சென்று தனது மகளின் நிலையை எடுத்துக்கூறி அவரிடம் உதவி கோரினால் என்ன?" என்ற எண்ணமும் அவளிடம் முளை விட்டது. அத்தோடு, ‘‘வட்டானை நல்ல மனிசன், உங்கட மகள்ர கலியாணத்துக்கு அவர் உதவி செய்தாலும் செய்திருவார்.அவருக்கிட்டப் போய் உங்கட நிலய எடுத்துச் சொல்லுங்க" என்று அவளோடு பழகுகின்ற அயல் வீட்டுப் பெண்கள் பலர் காணும் போதெல்லாம் ஊக்க ஊசி மருந் தைப் பாய்ச்சினர். இவற்றினால் வேகம் பெற்ற சல்கா

Page 61
00 யூ. எல். ஆதம்பாவா
உம்மா, ஒரு நாள் இஸ்மாயில் வட்டானையின் வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்றாள். அவ்வீட்டின் முன் மண்டபத்தில் மிகவும் ஆறுதலாக அளவளாவிக் கொண்டிருந்த வட்டா னையையும் மனைவியையும் சந்தித்தாள்.
அவ்விருவரும், அவளை தமக்கு எதிரேகிடந்த ஒரு கைக் கதிரையிலே உட்காரச் செய்து உபசரித்தனர்.
இப்போது அகதிகள் பற்றியும், ஊர் விஷயங்கள் பற்றியும் அங்கே உரையாடல் விரிந்தது.
தனது விடயத்திலே கண்ணும், கருத்துமாகவிருந்த சல்கா உம்மா இடையிலே அதனை அப்படியே பிட்டு வைத் தாள் :
'காக்கா, நான் நெஞ்சு வருத்தக்காரி, எப்ப என்ட சீவன் போகுமெண்டு சொல்ல ஏலாமலிருக்கு. இந்த உலகத்தில என்ன நம்பியிருக்கிற ஒரேயொரு ஜீவன் என்ட மகள்தான். நான் கண்ண மூர் ரத்துக்கு முதல்ல அவவ ஒருவனுக்கிட்ட ஒப்படச்சிட்டா நிம்மதியாப் போய்ரலாம். என்னோட இஞ்ச வந்திருக்கிற அகதிகள் குடும்பத்தில நல்ல நல்ல பிள்ளைகள்ளாம் இருக்காங்க, வீடு, வளவு, காணி இல்லாட்டியும், காசாவது இருந்தா அவர்கள்ள ஒருவர மாப்பிள்ளயா எடுக்கலாம் எனக்கு உதவி என்டு கேக்கிறத் துக்கும் வேறு எவருமேயில்ல. உங்களுக்கிட்டச் சொன்னாத் தான் இதற்கு ஏதாவது வழி பிறக்கும் என்டு எண்ணித்தான் நான் இஞ்ச வந்த' என்றாள் சல்கா உம்மா.
அதனைச் செவிமடுத்த இஸ்மாயில் வட்டானை நெஞ்சம் நெகிழ்ந்து போனார்.
"சரி, பாப்பம் உங்கட மகள்ள கலியாணத்துக்கு, நான் ஏதோ ஒரு வகையில உதவி செய்யிறன்' என்று நம்பிக்கையை ஊட்டினார்.

காணிக்கை 10.
"நாங்க அகதிகளாக இஞ்ச வந்து சேர்ந்தவுடன் எங்கள ஆதரிச்சு, எதையும் யோசிக்காம நீங்க புதிசாக் கட்டிப் போட்டிருந்த ஒரு வீட்ட வாடக இல்லாம நாங்க இருக்கிறத்துக்கும் தந்திங்க. அதுக்கு உங்கட பொஞ்சாதி யும் மகனுங்கூட எவ்வளவோ ஆதரவா இருந்தாங்க. நல்ல மனம் படைச்ச உங்களுக்கும், உங்கட குடும்பத்துக்கும் நாங்க எவ்வளவோ நன்றியுடையவர்களாக விருக்கணும்?" என்று சல்கா உம்மா தனது உரையை முடித்துக் கொண் டாள்.
இந்நிகழ்வு நடந்து பன்னிரண்டு பதின்மூன்று நாட்கள் கடந்திருக்கும்.
அன்று! இஸ்மாயில் வட்டானை தனது ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றுவதற்காக வீட்டிலிருந்து கொழும் புக்குப் புறப்பட்டுப் போகவிருந்த தினத்துக்கு முதல் நாள்.
இம்முறையோ, சல்கா உம்மா, இஸ்மாயில் வட்டா னையை ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றச் செல்பவர் என்ற வகையிலே பார்ப்பதற்காக அவரின் வீட்டுக்குச் சென்றி ருந்தாள். முற்றத்தில் நின்றிருந்த அவரும், அவரது மனைவி யும், அவளை, முகம் மலர்ந்து வரவேற்று அவ்வீட்டின் முன் ஹோலினுள் அழைத்துச் சென்றனர்.
அங்கு போடப்பட்டிருந்த ஆசனங்களிலே அம்மூவரும் அமர்ந்து கொண்டதும், சல்கா உம்மாவைப் பார்த்து இஸ் மாயில் வட்டானையே முதலில் பேச்சை ஆரம்பித்தார்.
"நாங்க இன்டு ரா வைக்கு உங்கட வீட்ட வரலாம் என்டுதான் யோசிச்சுக்கிட்டிருந்த, இப்ப நீங்க இஞ்ச வந்த தும் நல்லதாப் பேய்த்து. உங்கட மகள்ள விஷயமா நீங்க இஞ்ச வந்திட்டுப் போனத்துக்குப் பிறகு, அவ்விஷயத்த நானும் என்ட பொஞ்சாதியும் மdனும் கலந்து பேசி நல்ல தொரு முடிவும் செய்திருக்கம், நாங்க அவ்விஷயத்தக்

Page 62
102 யூ, எல். ஆதம்பாவா
கலந்து பேசிக்கிருக்கக்க நான் என்ட தீர்மானத்தத் திறந்து சொன்னன். எப்பிடிண்டா.நான் ஹஜ்ஜுக்குப் போறத்த உட்டுட்டு எனக்கு அதால ஏற்பர்ர செலவுகள் எல்லாத் தையும் உங்கட மகள்ள கலியாணத்துக்காக உங்களுக்கிட் டயே கொடுக்கப் போறதாச் சொன்னன். நான் எப்படியோ ஹஜ்ஜுக்குப் போயே ஆகவேண்டுமென்பதில மிச்சம் உறுதி யாக இருந்த என்ட மகன், நான் திடீரென்று எடுத்த இந்த முடிவுக்குக் கடுமையான எதிர்ப்புக் காட்டியதோடு, அதுக்கு ஒரு மாற்று வழியாக அவனே உங்கட மகளக் கலியாணம் செய்து கொள்றத்துக்கும் முன்வந்தான். அதுக்குப் பிறகு நானும் யோசிச்சுப் பாத்தன் . அது, நான் செய்யவிருந்த செயலயும் விட சிறந்ததாகவே எனக்கும் பட்டிச்சு. அதையே என்ட பொஞ்சாதியும் மனப்பூர்வமா ஆதரிச்சா ஆன படி யால, நானும் என்ட மகன்ட விருப்பப்படியே நடந்து கொள்றதாக வாக்களிச்சிட்டன்’ என்று தனது பேச்சை இடை நிறுத்தினார்.
சல்கா உம்மாவோ, "அல்ஹம்துலில்லாஹ் . ' என்றவாறு முக்காட்டைச் சரி செய்து கொண்டாள்.
மீண்டும் இஸ்மாயில் வட்டானை, சல்கா உம்மாவைப் பார்த்தவாறு தனது உரையைத் தொடர்ந்தார்:
"என்ட மகன் படிச்சிக் கொடுக்கிற பள்ளிக்கொடத் துப் பிறின் சிப்பலும், ஊரில நல்ல வசதியாரிக்கிற ரெண்டு மூண்டு பேரும் என்ட மகன மருமகனாக்கிக்கச் சரியான விருப்பம் வச்சிருந்தாங்க. நான் புகழுக்காகச் சொல்லல்ல. என்ட மகன எந்த வகையிலும் ஒதுக்கிவிட ஏலா. அப்படி யான ஒரு புள்ள. நான் அவர்ர பேரில நீங்க இருக்கிற அந்த வீடு வளவையும், சாளம்பைக்க நாலேக்கர் காணியை யும் எழுதியும் வச்சிருக்கன். நான் மக்காவுக்குப் போயிட்டு என்ட சீவன் கிடந்து வந்தா, வந்தவுடனேயே என்ட மகனுக் கும், உங்கட மகளுக்கும் நானே முன்னின்று கலியாணத்த நடத்தி வைப்பன். நான் மெளத்தாப் பேய்த்தண்டா என்ட
பொஞ்சாதியே முன்னின்று இந்தக் கலியாணத்தச் செய்து

காணிக்கை 103
வைப்பா. இந்த ஏற்பாட்டைப்பத்தி நீங்க என்ன நினைக் கிங்க' என்றார் வட்டானை.
அதற்குச் சல்கா உம்மா பின்வருமாறு கூறினாள்:
"இந்த உலகத்தில இதைவிட ஒரு உயர்ந்த காரியம் நடக்கு மெண்டு நான் நினைக்கல்ல. உங்கட மகன என்ட மகள் புருசனாகப் பெறுவது நாங்க பெற்ற பெரும் பாக்கி யம் என்றே நான் கருதிறன். என்ட மகள்ள கலியான விசயத்தில நான் ஒர் அளவுதான் உங்களிடமிருந்து எதிர் பார்த்தன். ஆனா.இப்ப பழம் நழுவிப் பாலில விழுந்தது போலவும் காரியங்கள் நடந்திருக்கு. உங்களுக்கு என்ன சொல்ற தென்றே தெரியாமலிருக்கு. எல்லாத்துக்கும் உங்க ளுக்கு அல்லாதான் கூலி தரணும்' என்று தனது உரையை நிறைவு செய்து கொண்டாள்.
நாட்கள் நகர்ந்தன. இஸ்மாயில் வட்டானை ஹஜ்ஜுக் கடமையை முடித் துக் கொண்டு வீட்டுக்கு மீண்டார்.
சில தினங்களிலேயே அவர் சொல்லி வைத்தது போல சல்கா உம்மாவினது மகள் சரீனாவின் திருமணமும் இனி தாக நடந்தேறியது.
அன்று முதல் இன்றுவரை, அதாவது, ஒரு வருட காலமாக சரீனாவின் இல்லற வாழ்வு இன்ப மயமாகவே' கழிகிறது. சல்கா உம்மாவும், தனது மகளின் நிழலிலே " குடும்ப பாரம் எதுவுமே இன்றி வாழ்ந்து வருகிறாள்.
இன்று ஹஜ்ஜுப் பெருநாளாகையால் அதிகாலையிலி ருந்தே அவளது மனம் மிகவும் இரம்மியமான ஒரு நிலையிலே காணப்படுகிறது.

Page 63
04 யூ எல். ஆதம்பாவா
அடுக்களைக்குள் இறைச்சியை வைத்துவிட்டு அங்கே கிடந்த ஓர் இருக்கையிலே உட்கார்ந்திருந்த சல்கா உம்மா, திடீரென்று இரண்டு கரங்களையும் மேலே உயர்த்தி இறை வனிடம் பிரார்த்திக்கத் தொடங்கினாள்.
"" அல்லாஹ் . என்ட குடும்பம் சிறப்பாக வாழ்றத் துக்கு, முக்கியமாக என்ட மகள்ள வாழ்க்க இத்தனை சிறப்பாக அமைநத்துக்குக் காரணமாகவிருந்த இஸ்மாயில் வட்டானைக்கும், அவர்ர மகன், மனைவி ஆகியவர் களுக்கும் இவ்வுலகத்தில யும், மறுஉலகத்திலயும் சகல பாக் கியங்களையும் கொடு! இஸ்மாயில் வட்டானையினதும், அவர்ர மகனினதும் தியாக மனப்பான்மையை எங்க. சமூகத்தில மிகவும் அதிகமானவர்களுக்கு, விஷேடமாக, நல்ல வசதி படைத்தவர்களிலே மிக மிக அதிகமானவர்க ளுக்குக் கிொடு!" என்று சல்கா உம்மா பிரார்த்தித்து விட்டு அமைதியானாள்.
அப்போது அங்கு வந்த சரீனா, "உம்மா, நானும் மச்சானும் குளிச்சிட்டம். நீங்களும் சொணங்காமப் போய் குளிச்சிக்கிட்டு வாங்க. நாம இன்டைக்கு நேரத்தோடயே தொழுகிறத்துக்குப் போவம்' என்றாள்.
அதனைச் செவிமடுத்த சல்கா உம்மா, தான் உட்கார்ந்
திருந்த இருக்கையைவிட்டு விசுக்கென்று எழுந்தாள்.
"" அல்லாஹ" அக்பர். அல்லாஹ" அக்பர். லாயி லாஹ . இல்லல்லாஹ" அல்லாஹ" அக்பர் . "" என்ற தக்பீர் முழக்கமும்,
... من الL ... سالا - الL و... Tri-سالا ... سلالا سالا سالا " " படார்.' என்ற பட்டாசுகளின் முழக்கமும், இப்போது எங்கும் எதிரொலித்து இன்று ஹஜ்ஜுப் பெருநாள் என்ப தைப் பகிரங்கப்படுத்திக் கொண்டிருந்தன.
1994 மே 10.

நினைவுகளும் நிகழ்வுகளும்
அந்தக் "கபுரை”ச் சுற்றிலும் பெருந்திரளான மக்கள் மொய்த்து நின்றனர், அவர்களின் வதனங்கள் சோர்ந்தும், வாடியும் கிடந்தன. நெஞ்சங்களோ மரணத்தை எண்ணி 'இது என்ன வாழ்க்கை, இது என்ன வாழ்க்கை" என்று முணு முணுத்துக் கொண்டிருந்தன.
பாயிஸோ, “கபுரின் கரையிலே சோகமே உருவாக நின்றிருந்தான். அவன் விழிகள் இரண்டும் அருவியெனி நீரைக் கொட்டிக் கொண்டிருந்தன. மேனியோ, பட படத் துக் கொண்டிருந்தது. தன் உடல் தரையிலே சாய்ந்து விடாத வண்ணம் தாங்கிப் பிடித்துக் கொண்டு ஒருவாறு நின்றிருந்தான்.
இருபத்தைந்து முப்பது வருடங்கள் தன்னோடு இணைந்து வாழ்ந்து வந்த தன் மனைவி ஹசீனாவின் திடீர் மறைவு பாயிஸை மெத்தவும் வருத்தி ஆட்டி வைத்ததில் வியப்பில்லைத்தான்.
இவ்வாறு பாயிஸ் சோகத் தீயில் வெந்து கொண்டி ருந்த வேளையிலுங்கூட 'கபுரின் கரையிலே நின்று நிதான மாக அங்கு நிகழ்ந்து கொண்டிருந்த தன் மனைவியின்

Page 64
106 யூ. எல். ஆதம்பாவா
நல்லடக்கத்தை ஆரம்பமுதல் ஊன்றி அவதானித்து வந் தான்.
இப்போது அப்பகுதியெங்கும் அமைதியின் உச்சநிலை
பெரிய பள்ளிவாசல் “லெவ்வை”, “கபுரி"ல் அடக்கம் செய்யப்பட்ட அந்த "ஜனாஸா'வின் முகப்பக்கமாகக் குந்தி யிருந்து ஒதிய ‘தல்கீன் ஒசை அங்கு நிலவிய அமைதியைக் குத்திக் கிழித்துக் கொண்டு ஓங்கியும் தாழ்ந்தும் ஒலித்துக் கொண்டிருந்தது. "லெவ்வை', 'தல்கீன்? ஒதத் தொடங்கி ஒரிரு நிமிடங்கள்தான் உருண்டிருக்கும். அவ்வேளை, பாயிஸ் அந்தச் சூழலையே மறந்தான். அவன் நினைவில், சில வாரங்களுக்கு முன் நடந்த ஒரு நிகழ்ச்சியும், இப்போது சில மணித்தியாலங்களுக்கு முன் நிகழ்ந்த சம்பவமும் விரிந்தன.
O O ()
அன்று ஞாயிற்றுக்கிழமை. பிற்பகல். வீட்டின் முன் ஹோலில் நடு அறைக் கதவின் அருகே சுவரோடு ஒட்டிய வாறு போடப்பட்டிருந்த கட்டிலிலே “ஸ்பிரிங் மெத்தை யில் அவன் மிகவும் களைப்புற்றவனாக சுருண்டு படுத்தி ருந்தான். அவ்வேளை, அங்கு விரைந்து வந்த அவன் மனைவி ஹசீனா, கட்டிலின் கரையிலே மெல்ல அமர்ந்து, "இஞ்சப் பாருங்க . இப்ப குளிச விழுங்கணுமில்லவா? என்ன படுக் கிற ... எழும்புங்க" என்று அவனை மெல்ல அசைத்து விட்டாள். அவன், கண் மலர்ந்து எழுந்திருக்க முயன்ற போது தோளைப் பிடித்து அவள் உதவி புரிந்தாள். அவன் முதுகை நிமிர்த்தி, கைகளை ஊன்றி நன்கு அமர்ந்து கொண் டதும் அவள் மதிய போசனத்தின் பின் அவனுக்குக் கொடுக்க வேண்டிய மாத்திரைகள் அனைத்தையும் பக்கட் டுகள் ஒவ்வொன்றாக வாசித்து வாசித்து அவற்றிலே குறிப் பிட்டிருந்தபடி கொடுத்தாள். எல்லா மாத்திரைகளையும் உட்கொண்ட பின் அவன் மெத்தையிலே இருந்தவாறு

காணிக்கை 107
சற்றுப் பின்னே நகர்ந்து சுவரிலே வசதியாகச் சாய்ந்து கொண்டான். அவன் மனைவி ஹசீனாவோ, கட்டில் கரையிலிருந்து எழுந்து பக்கத்திலே கிடந்த கைக்கதிரையில் தன் கணவனுக்கு எதிரே அமர்ந்து கொண்டாள். இருவருக் குமிடையில் சிறிது நேரம் அமைதி நிலவியது.
அதனை முதலில் அவளே கலைத்தாள்.
"இஞ்சப் பாருங்க . நேத்துக்காலயில உங்களுக்குக் கிறு கிறுப்புப் போல வந்து உழப்பாத்திங்க . அவடத்த நானும் நம்மிட பிள்ளைகளும் நிண்டத்தால டக்கிண்டு நாங்க உங்களைத் தாங்கிப் பிடிச்சுக்கிட்டம். இல்லாட்டி என்ன நடந்திருக்கும் . அல்லாஹ்தான் காப்பாத்தினான். அத நெனச்சாலே இப்பவும் எனக்கு நெஞ்சு பதறுது. நேரத் தோட உங்களுக்கிட்ட டாக்குத்தரும் சொல்லித்தானே இருக்காரு . நீங்க நெஞ்சு வருத்தக்காரரு . நிக்கக்க, இல்லாட்டி நடக்கக்க, கிறுகிறுப்புப் போல வந்தா உட னேயே கீழுக்குக் குந்திக்கணும் அப்படிண்டு. நீங்க ஏன் நேத்து கிறுகிறுப்பு வந்தவுடன் அப்படிச் செய்யல்ல?" என்ற ஹசீனா நெஞ்சுச் சீலையைச் சரி செய்து கொண்டு தன் கணவன் பாயிஸை ஊன்றி அவதானித்தாள்.
பாயிஸோ தன் வதனத்தைத் துவாயினால் அழுந்தத் துடைத்து விட்டுக் கொண்டு அமைதியாகக் கூறினான்:
"புள்ள. எனக்கு விஷயம் தெரியும்தான். ஆனா. நேத்து எனக்கு கிறுகிறுப்பு வந்தவுடன் என்ன செய்யிற, ஏது செய்யிற எண்டு ஒண்டுமே செய்யத் தோணல்ல. அவ் விடத்த நீங்களும் பிள்ளைகளும் நிண்டதும் நல்லதாத்தான் பேய்த்து." அவன் வதனத்தில் மெல்லியதாய்க் கருமை கவிந்திருந்தது. விழிகளிலோ ஒளி குன்றியிருந்தது.
தன் கணவனையே உற்று நோக்கிய வாறிருந்த ஹசீனாவின் வதனம் வாடிய மலரானது.

Page 65
  

Page 66
10 யூ. எல். ஆதம்பாவா
அதனை அவனும் அறிந்து கொண்டிருக்க வேண்டும் மெல்ல தன் வறண்ட இதழ்களைப் பிரித்தான்:
"என்ட பேரிலரிக்கிற ஐந்தேக்கர் நெற்காணியையும் உங்களுக்கு எழுதி வைக்குமாறு இப்ப நீங்களாகவே எனக் கிட்டக் கேக்கீங்க.நான் அதப்பத்தி வித்தியாசமா எதுவும் யோசிக்கல்ல . என்ட நிலய அவதானித்ததாலேயே நீங்க அவ்வாறு கேக்கீங்க என்பதும் எனக்கு நல்லா விளங்கிது. சரி...சரி.வீணாக என்னத்துக்கு கதைத்துக் கொண்டிருப் பான் . இப்பவே என்ட பேரிலரிக்கிற அந்த ஐந்தேக்கர் காணியையும் உங்கட பேரில எழுதி வைக்கன் . இப்பவே டக்கிண்டு உங்கட தம்பிய அனுப்பி நொத்தாசிய எடுப் பிய்ங்க” என்று விட்டு நெற்றியில் வந்து கவிந்து கிடந்த கேசத்தை ஒதுக்கி விட்டுக் கொண்டான் பாயிஸ்,
'சரி . நான் தம்பிர ஊட்ட போய் அவர அனுப் பிட்டு வாறன், நீங்க எழும்பி அங்க இங்க நடக்காதீங்க: ஹசீனா எழுந்து தலையிலே முக்காடிட்டுக் கொண்டு முற்றத் திலே அடியெடுத்து வைத்தாள். -
சிறிது நேரத்துக்குள் பிரசித்த நொத்தாரிசு ஒருவர் அங்கே அழைத்துவரப்பட்டார். பின்பு, அவரைக்கொண்டே பாயிஸின் பெயரிலிருந்த ஐந்தேக்கர் நெற்காணியும், அவன் மனைவி ஹசீனாவின் பெயரில் எழுதி வைக்கப் பட்டது. இறுதியில், பாயிஸ் அங்கு வைத்தே அவ்வுறுதி யையும் அவளிடம் கையளித்தான். அவ்வேளை மாலைப் பொழுதின் மெல்லிய இருள் எங்கும் படர்ந்து கொண்டி ருந்தது. அங்கு அவர்களிடையே நிலவிய பெருஞ் சோகத் தைக் காண இயலாமையால்தானோ என்னவோ பரிதியும் மேற்கு வானில் மறைந்தான்.
.. ... − காலமென்ற கொடியில் நாட்களென்ற மலர்கள் மலர்ந்து உதிர்ந்து கொண்டேயிருந்தன,

காணிக்கை 111
ப்தினைந்து தினங்களுக்குள் நெஞ்சு வருத்தம் மெல்ல மெல்லத் தணிந்து பூரண குணமாகிப் பழையபடி எழுந்து நடமாடவும் தொடங்கினான் பாயிஸ்.
இவ்வாறு பாயிஸ் எழுந்து நடமாடத் தொடங்கி ஆறு, ஏழு நாட்களின் பின், அதாவது இன்று காலை பத்து பத்தரை மணியிருக்கலாம், அவன் மனைவி ஹசீனா கிணற் றிலே நன்கு குளித்துவிட்டு வந்து உடை மாற்றிக் கொண்ட பின் திடீரென்று தனக்கு ஒரு மாதிரியாக இருக்கிறது என்று விட்டுக் கட்டிலிலே மெல்லச் சாய்ந்தாள். அவளின் நிலை கண்டு பீதியடைந்த அவளின் பிள்ளைகள் "ஒ"வென்று அழுதனர்.
விடயமறிந்து அங்கு வந்து திரண்ட அக்கம் பக்கத் திலுள்ளவர்கள் "கொஞ்ச நேரத்தைக்கு முதல்ல தானே நல்லா இருந்தா. இப்ப குளிர்கிளிர் போட்டிட்டா என்ன" என்று அங்கலாய்த்தனர். • . ܫ
தன் மனைவியின் நிலைமை மேலும் மோசமடை வதை உணர்ந்து கொண்ட பாயிஸோ, டாக்டர் ஒருவரிடம் விரைந்து விடயத்தை எடுத்துக் கூறி உடனேயே அவரை அங்கு அழைத்து வந்தான்.
டாக்டர் அவளை நன்கு பரிசோதித்து விட்டு, "நெஞ் சடைப்பு: உயிர் போய்விட்டது" என்றார்.
ஒரு கணம் பாயிஸும் பிள்ளைகளும் அதிர்ந்து போனார்கள். பின்பு, டாக்ட்ர் கூறியது உண்மை என அறிந்ததும் பாயிஸ் செய்வதறியாது நின்ற இடத்திலேயே நின்றுகொண்டு வான் கிழிய வாய் பிளந்து அழுதான். ஆனால், பிள்ளைகளோ ஒடி விழுந்து தம் தாயின் பூதவு டலைத் தழுவிக் கொண்டு புலம்பிப் புலம்பி அழுதார்கள்.

Page 67
11 யூ, எல். ஆதம்பாவா
'எக்கட தங்க உம்மா..எங்கள விட்டிட்டுப் போயிட் டிங்களா! எங்கட ஈரத்துளிரான உம்மா. எங்கள விட் டிட்டுப் போயிட்டிங்களா! எங்கட ஈமான் பெத்த உம்மா. எங்கள விட்டிட்டுப் போயிட்டிங்களா!" என்று பிள்ளைகள் புலம்பிப் புலம்பி அழுதது அங்கு நின்ற கலங்காத மனிதர் களைக் கூட கண்ணிர் வடிக்க வைத்தது.
O O O
'மெளலவி துவா ஒதுங்க.." லெவ்வையின் சப்தம் கணிரென்று ஒலித்தது.
சுயநிலை எய்திய பாயிஸ் நிமிர்ந்து நோக்கினான்: கபுரின் அருகே நின்ற சாலி மெளலவி கைகளை ஏந்தியபடி பிரார்த்தனை புரிந்து கொண்டிருந்தார்.
சுற்றிலும் நின்றவர்களும் கைகளை ஏந்திய வண்ணம் ܙ அதில் பங்கு கொண்டிருந்தனர்.
தனது கரங்களால் வதனத்தை அழுந்தத் துடைத்து விட்டு உடனேயே அவனும் கைகளை ஏந்திப் பிரார்த்தனை யில் கலந்து கொண்டான்.
பிரார்த்தனை (Մ)ւգ-aվ பெற்றதும் ஒருவரோடு ஒருவர் கைகளை இணைத்து "சலாம்" சொன்னார்கள். முக்கியமாக அனைவரும் அவனோடு "சலாம் சொல்லத் தவறவில்லை.
சற்று நேரத்தில், "சலாம்" சொல்லும் நிகழ்ச்சியும் நிறைவு பெற்று அவ்விடத்தை விட்டு யாவரும் நகர்ந்து பாதையில் இறங்கினர். பாயிஸ் அவர்களோடு ஒருவனாக ஆனால், சோகத்தின் வலிய கரங்களால் நசுக்கப்பட்டுத் தள்ளாடியவனாக அடிவைத்துக் கொண்டிருந்தான்.
தினகரன் வாரமஞ்சரி 1983 w säT 05


Page 68


Page 69
།
ܪ) -. |- Ti, ت"_پی" + +=--;
甲 المية # lig_=""==" =
(i. - * .
" لیبیا"
-
*ܛܠ
། །.J
و یا "T'" * عليم .
■ ".
ܕܣ̈ܩ.
._ܡܢܘ
நார் ஆக்க இலக்கியத்துை முப்பத்தைந்து வருடங்களில் எனினால் படைங்கப்பட்ட சி பொறுகிகி எடுங்கப்பட்ட
விரவர்டு சிறுகதைகளை உள்ளடங்கியதுதான் இத்தொ
|- ଗର୍ଭା

\°°܇ܠ"ܢ
"T,
ரீம் ஈடுபட்ட
கதைகளிலே
2.
குதி
ஆதம்பாவா