கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: 1999ல் வாழ்ந்து கொண்டிருக்கும் இசை நாடக-கூத்து மூத்த கலைஞர் வரலாறு

Page 1
1999ல் வாழ்ந்து
 

கொண்டிருக்கும்
நூலாசிரியர்
GF666D
மெற்றாஸ்மயில்
Alons)

Page 2
த்தின்
டுக்க
றாள் மயில்
நாட் மேற் எல்விஸ்
கின்றனர்.
து" ஆ
ன் சுத்
1 கான்பப
፶፱ !፡ኻ፥ ❖፡öኔ Lኸኳ ll III
୍
ருடன் உடுப்புடம்
잃 예 堀 心
ம் ஆசிரியப்
[g]
(SIII
ûኛ
ஆடப்ப
յII sl:
பனாகவும் r
ரியாகவு
ILL
த்தீவி FF, TI T.
!ና፡ ኣነሩll
էII: பாண்பு மந்தி
էlյ։ եւ
ჭj]
 

'___'
.ே
1999-ல் வாழ்ந்துகொண்டிருக்கும்
இசைநாடக - கூத்து மூத்த கலைஞர் வரலாறு
உசாத்துணை حتى رى تا இரவல் எடுப்பதற்தன்று
Distinguished Folk Opera and Folk Drama Artistes Living in 1999 - Biographical Sketches
செல்லையா - மெற்றாஸ்மயில் பி. ஏ. ( சிறப்பு ) - இலங்கை.
常
வெளியீடு :
பூg மீனாட்சி அச்சகம் 3/5, கச்சேரி நல்லுரர் விதி, நல்லுரர்.

Page 3
Title:
Author :
Publisher :
Printed by .
Cover Design by:
Cover Printed at:
Block :
Copy Right :
First Edition :
No of Pages :
Prize :
ISAI NADAKA KOOTHUI
Mootha Kalígar Varalaru
(A Biography of Distinguished Folk Opera and Folk Drama Artistes Living in 1999)
Seliah Madrasmyle B. A. (Hons) Cey.
Meenadchi Publication Kachcheri Nallur Road, Jaffna.
Meenadchi Press
Kachcheri Nallur Road, Jaffna.
Author
Unic Arts (Pvt.) Ltd. Colombo
Arun' Block Makers, Jaffna.
Author
July - 1999
(1-108)+8+ (1-36) = 152
Rs. 200/-
முன் அட்டைப்படம்
கலா வினோதன் சின்னமணி
காத்தவராயனாக தோன்றும் காட்சி

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளை அவர்களின்
برالامlیۓ نیشنھz/A4&
நாடறிந்த கலைஞன் செல்லையா மெற்றாஸ் மயில் ஏற்கனவே பல நாட்டுக்கூத்து நூல்களை எழுதிய பெருமைக்குரியவர். தற்போது இவர் ஈழத்துத் தமிழ் நாட்டுக்கூத்து இசை நாடகக் கலைஞர்கள் பற்றிய நூலொன்றை எழுதி, வெளியிடுவதையிட்டு மிக்க மகிழ்ச்சிடைகின்றேன். பாரம்பரிய கிராமியப் பாடல்கள் கூத்துக்கள் என்பன இன்றைய காலத்தில் பல்வேறு தாக்கங்களுக்கு உட்பட்டு வருகின்றன. இத்துறையில் முன்னின்று உழைத்த பழம்பெரும் கலைஞர்களும் இன்று வயதில் முதிர்ந்தவர்களாக விளங்குகின்றனர். அவர்களின் துறைசார்ந்த அறிவையும் அனுபவங்களையும் எழுத்துருவாக்காது விடின், இக்கிராமியக் கலைகள் கால
வெள்ளத்தில் அடிபட்டுப் போய்விடும்.

Page 4
O4
எமது பாரம்பரிய வாழ்வியற் செய்திகளையும், பண்பாட்டுப் பெருமைகளையும் உணர்த்தும் ஆதாரங்களாக நாட்டார் பாடல்களும், ஆடல்களும் விளக்குகின்றன. இவற்றை அழியவிடாது காப்பதுடன், இத்துறை சார்ந்த கலைஞர்களையும், அவர்கள்
வாழும்போதே கெளரவிப்பதும் அவர்கள் பெருமைகளை நூல்வடிவில் நிலைநாட்டுவதும் கட்டாய தேவைகளாகும் இப்பணியை நிறைவாகச்செய்வதாயின், இத்துறையில் ஈடுபட்டவர்களால் தான் அதுமுடியும,
இவ்வகையில் மெற்றாஸ் மயில் ஒரு பட்டதாரி, நிர்வாகி, கலைஞன், நூலாசிரியர் என்ற முறையில் தன் பணியைச் சிறப்பாக செய்துள்ளார்
இனி வரும் காலங்களிலும் இவர் பணி தொடர என் நல்லாசிகள்,
பேராசிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளை துணைவேந்தர் பல்கலைக்கழகம்
αυσφού υσιοδοσώ. | 4 - 7 - 99
*S్స

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர்
கலாநிதி - எஸ். சிவலிங்கராஜா அவர்களின்
கல்விப் பகுதிக்கும் ஈழத்து நாட்டார் வழக்காற்றிய லுக்கும் நீண்ட காலமாகவே தொடர்பு இருந்துவருகின் றது. கல்வி அதிகாரியாகப் பணியாற்றிய முகாந்திரம் தி. சதாசிவ ஐயர் மட்டக்களப்பு வசந்தன் பாடல்களைத் தொகுத்து வெளியிட்டு, ஈழத்து, நாட்டார் வழக்காற் றியல் வரலாற்றிலே அழியாத ஒர் இடத்தைப் பெற்றுள் ளார். ஈழத்தில் கல்வி அதிகாரிகளாகப் பணியாற்றிய பலர் (வெளிநாட்டவர் உட்பட அவவப்போது ஆங்கி லத்திலும் தமிழிலும் நாட்டார் வழக்காற்றியல் பற்றிக் கட்டுரைகள் வரைந்துள்ளனர்.
நண்பர் செல்லையா மெற்றாஸ்மயில் கல்வித் திணைக்கள நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றுகின் றார். நிர்வாகப்பணிகளோடு அவர் நின்று விடாமல் கலை இ லக் கி ய ஆர்வலராகவும், ஆய்வாளராகவும் தன்னை வளர்த்துக் கொண்டுள்ளார்.
βόδοτ υ ή மெற்றாஸ்மயிலின் வன்னிவளநாட்டுப் பாடல்கள் தொகுதியையும் ஆனையை அடக்கிய அரியாத்தை எனும் நூலையும் குறிப்பிடாமல் ஈழத்து நாட்டார் இலக்கியம் பற்றி ஆய்வு செய்வது கடினமானது.

Page 5
06
இசை நாடகக் கூத்துக்கலைகளில் பயிற்சியும் , தேர்ச்சியும் உடைய இவர் நாட்டார் கலைகளின் வளர்ச் சிக காகத் தன்னை அர்பணித்துள்ளார். சென்றவருடம் இவர் நடத்திய இசை நாடகக் கூத்துப் போட்டிகள் இவரது பல்பரிமான ஆளுமையைப் பறைசாற்றுபவை ധff9; b
ஈழத் தமிழ் மக்களுக்கு நீண்டதோர் கலை இலக் கியப் பாரம்பரியம் உண்டு என்பதை ஆய்வாளர்கள் அனைவரும் ஒத்துக்கொள்ளுவர். ஆனால் ஆரியச்சக்கர வர்த்திகள் என அழைக்கப்பட்ட யாழ்ப்பாண மன்னர் காலத்திற்கு முந்திய கலை இலக்கியங்களுக்கான தட பங்களை இன்று பெற முடியாமல் இருக்கின்றமை விச னத்திற்குரியது.
நாம் நமது அரிய பெரிய கலைப் பொக்கிஷங்களை நாளா ந்கம் இழந்துகொண்டிருக்கின்றோம். இந்த இழ ப்புத் தொடரக் கூடாது என்ற மன உந்துதலே இந்நூல் எழுதுவதற்கான அடிப்படைக் காரணமாகலாம். இத்த கைய ஒருநூல் 19ம் நூற்றாண்டிலோ அதற்கு முன் னரோ தோன்றியிருந்தால், நமது இசை நாடக க் கூத்து மரபுகளின் மூலவேர்களை நாம் கண்டுகொள்ள உதவி யிருக்கும்.
முன்னோர் விட்ட தவறுகளை நாம் விடக்கூடாது எனக்கருதியதாற்போலும் நண்பர் மெற்றாஸ்மயில் இத் தொகுப்பு முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றார். இத்தகைய ஒரு நூலை எழுதுவதற்குக் குன்றா உழைப்பும் குறை யா உளக்கமுமே மூலதனமும் ஆகும். நண்பர் மெற்றாஸ் மயில் இந்த நூலுக்காகப் பாராட்டப்பட வேண்டியவரே.
ஈழத்து இசை - நாடக கூத்து வரலாற்றை ஆப்வு செய்து இன்று எம். ஏ, பி. எச் டி. முதலான பட்டங் களைப் பெறும் வாய்ப்புண்டு நாடகமும் அரங்கியலும்

07
எமது பல்கலைக் சழகத்தில் ஒரு கற்கை நெறியாகப் பயிலப்பட்டு வருகின்றது. விஞ்ஞான ரீதியாக அரங்க கலைகள் ஆராயப்படும் இக்கால கட்டத்திலே இந்நூலின் வருகை எமது கலைப்பாரம்பரியத்திற்கு ஒளியூட்டுவதாக அமையவேண்டும்.
இந்நூலில் இடம் பெறும் அண்ணாவியார்களின் வாழ்க்கை வரலாறு - அவர்களின் செவ்வி - ஈழத்து இசைநாடக - கூத்து வரலாற்றை ஆய்வு செய்பவர் களுக்குப் பேருதவியாக அமையுமென்று திடமாக ØዕCJ6ህጦ © •
எமது கலைப்பாரம்பரியத்தின் ஊற்றுக்களையும் ஓட்டங்களையும் காணவிரும்புவோர் இந்நூலை நிச்சயம் படிக்கவேண்டும்.
இந்நூலில் இடம் பெறும் கலைஞர்களின் வாழ்க்கை வரலாறு வெறுமனே அண்ணாவிமாரின் வரலாறாக அமையாது ஈழத்து இசைநாடக கூத்துக்கலை வரலா றாக அமைவது இந்நூலுக்குள்ள சிறப்ப மிசமாகும் .
ஒவ்வொரு கலைஞருக்கும் உள்ளே ஒரு 'மானுடம்" 'மனிதாயம்' உறைந்திருப்பதை ஒவ்வொருவரின் பேட் டியும் ஏதோ ஒரு அளவில் புலப்படுத்துகின்றன. அத்துடன் அவர்களது ஆசைகள், நிரா ைசகள் ஆகியனவும் பதிவா கியுள்ளன.
கலைஞனை மதிக்காத சமூகம் உயர்ந்தபண்பாடு உடைய சமூகம் என்று தன்னை எந்தக்காலத்திலும் உரிமைகோர முடியாது. இந்த உண்மையை உணர்ந்த இந்நூலாசிரியர் தனது அறிவுக்கும், ஆற்றலுக்கும் ஏற்ற அளவிலே தொகுத்து இந்த நூலைத்தீந்திருக்கின்றார்.

Page 6
O8
அழகான அட்டையமைப்புடனும், அச்சுக்கலை நேர்த் தியுடனும் வெளிவரும் இந்நூல். ஈழத்து இசை நாடக கூத்துக் கலைஞர்களின் மனங்களிற் தேனைப்பாய வி டும என்று திடமாக நம்பலாம.
கலைஞர்களை வாழும்போதே கனம்பண்ண வேண்டுமென்ற கருத்துடைய இந்நூலாசிரியரின் முயற்சிகளைப் பராட்டுவோம். அவர் பணி தொடர வாழ்த்ததுவோம்

இலங்கையின் வடபகுதியிலுள்ள ஆனையிறவுக்கு வடக்கே யுள்ள யாழ்ப்பாண மாவட்டத்தையும், பளை பிரதேச செயலர் பிரிவையும் உள்ளடக்கிய பிரதேசத்தில் 1999ம் ஆண்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் இசை நாடக - நாட்டுக்கூத்து கலைஞர்களின் வர லாற்றை அவர்களிடம் தகவல்களைப் பெற்று இந்நூலில் தருவதற்கு விளைகின்றேன். " மூத்த கலைஞர்கள்" என்ற பதம் துறையில் பல சேவை செய்ததுடன் வயதில் மூத்தவர்களானவர்களையும், வயது குறைந்தவர்களாக இருந்தாலும் பல சேவைசெய்து துரை யில் கூடுதலான அனுபவங்கள் உள்ளவர்களையும் , துறையில் * மூத்தவர்களாக" கருதி வரலாறு மேற்கொள்ளப்படுகின்றது.
குறிப்பிட்ட எல்லைக்குட்பட்ட 15 பிரதேச செயலர் சிரிவுகளி லும் குறைந்தது ஒருவரையாவது கண்டுபிடித்து அவர்கள் வரலாறு எழுதப்பட்டுள்ளது. சில சந்தர்ப்பங்களில் எனது ஆய்வுக்குத் தெரி யாமல் துரையில் அனுபவம் உள்ள மூத்த கலைஞர்கள் விடுபட்டி ருக்கலாம். அவர்கள் என்னுடன் தொடர்பு கொண்டால் அவர்கள் வரலாற்றை இரண்டாவது பதிப்பு ஒன்றின் மூலம் வெளிக்கொணர முயற்சி எடுக்கப்படும்.
இம்முயற்சி என்னால் எடுக்கப்படுவதற்கு , நான் இத்துறையில் ஈடுபட்டு அதன் அவசியத்தை அனுபவ வாயிலாக தெரிந்துகொண் டமையே, இம்முயற்சியை மேற்கொள்ளத் துரண்டியது எனலாம் : நான் கலைஞராக மாறியபோது ஒரு கலைஞர் படும் கஸ்டங்கள், இழப்புக்கள், வேதனைகள் என்பவற்றை அனுபவ ரீதியில் கண்ட துடன் அத் துன்பங்களுக்கு மத்தியிலும் அக் கலைஞர்கள் கலைத் தொண்டு செய்வதில் ஆத்ம திருப்தி அடைவதையும் கண்டேன் அவர்களால் இனத்தின் கலாசார விமு மி பங்கள் எந்தளவுக்கு ά σιλυ το νού εν δ' ή oό7 νέου στόσο, σ’ αού 9 μυου ου μνιό 3ν αθαν και στη φαν,

Page 7
0
தாக இருந்தது. அவர்களின் நாட்டுக் கூத்து, இசைநாடக கலை யின் முக்கி பத்துவத்தையும் காணக் கூடியதாக இருந்தது. எனவே நாட்டுக் கூத்து இசை நாடகங்கள் வரலாற்றை இச் சந்தர்ப்பத்தில்
நோக்குதல் நல்லதென்று எண்ணுன் கிறேன் .
மரபுவழிக் கூத்து
" "கூத்து நாட்டிற்கு அணிகலம். நாகரிகத்தின் அளவுகோல் நாட்டின் பிரதிபலிப்பு. பாமர மக்களின் பல்கலைக்கழகம். சமு தாயச்சீர்கேடுகளைத் தகர்க்கும் வாள் வீச்சு. இகிய நாதத்தின் எழுச்சி காலத்தின் கண்ணாடி . இலட்சியக் கனவுகளை எல்லாம் ஈடேற்றி வைக்கும் அற்புதச் சாதனம். வாழ்க கையின் விளக்கம் வரலாற்றின் பொன்னே டு கற்பனைக் கருவூலங்களை விளக்கும் அற்புத ஒளிவிளக்கு உலக கலை அனைத்தையும் கொண்ட உயி ரோவியம். ஞானக் கலை புகட்டும் நற்பள்ளி, காதற்கருவூலம் , கலைகளின் பிறப்பிடம் , தத்துவங்களின் சித்திரக்கோவை . உண் மையின் ஒளிப்பிளம்பு, உணர்ச்சிகளின் உயிர்த்துடிப்பு " என வர்ணித்து அத்தனை சிறப்புக்களுக்கும் உரிய ஆற்றல்கள் அத்த னையும் பெற்ற அரிய கலைதான் கூத்துக்கலை என்கிறார் சென்னை நாடக ஆசிரியர் கவிஞர் கு. சா. கிருஷ்ணமூர்த்தி.
'தமிழ்மொழி, தமிழ்க் கலை, கலாசாரம் முதலியவற்றில் அபிமானமுடைய பெரியவர்கள் இவற்றைச் சேகரித்து அழியா வண்ணம் காப்பாற்ற உதவி புரிவீர்களாக " "
*" சென்ற பல வருடங்களாக நான் யாழ்ப்பாணம் உத்தியோ கத்திற்காக வந்த காலந்தொட்டு எதாவது ஒரு நாட்டுக் கூத்தாவது பார்க்கவேண்டுமென்று ஆசைப்பட்டேன். நான் எங்கு விசாரித் தும் சிட்டவில்லை. சமீபத்தில் வட்டுக்கோட்டையில் தருமபுத்திரன் விலாசம், மகாபாரதத்தின் ஒரு பாகம் பழைய முறைப்படியே நடித்தார்கள் , அதைப்பார்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. பாடல்களும் பழைய பாணியிலேயே. இக்காலத்து மெட்டுக்கள் கலப்பில்லாமல் இருந்தன. ஆட்டங்கள் மிகத் துரிதமாகவும் இருந் தன . இக்காலத்து நாடகங்களிலேயே அனுபவமுடைய எனக்கு எவ்வாறு இப்படிச் சற்றேனும் சளைக்காமல் 8, 10 மணிநேரம் வரையில் ஆடுகின்றார்கள் என்று ஆச்சரியமாக விருந்தது. * இவ்வாறு கலையரசு க. சொர்ணலிங்கம் அவர்கள் தனது 79 ம் வயதில் அதாவது 1968 ம் ஆண்டு எழுதிய 'ஈழத்தில் நாடகமும்

நானும், என்றநூலில் குறிப்பிட்டுள்ளார். இக்கால நாடகங்கள் சுமார் 500க்கு மேல் தயாரித்தவரும் பல நாடகங்களில் முக்கிய பாத்திரங்களை ஏற்று நடத்திய முது பெ ரூம் இக்கால நாடகக் கலைஞருமான அமரர் கலையரசு அவர்கள் கூறிய கூற்றுக் களிலிருந்தே கூத்துக்கலையானது ஜனரஞ்சக் கலை என்பதையும், அக்கலை மக்களைத் தன்வசப்படுத்தும் அதி ஈர்ப்புச்சக்தி வாய்ந் தது என்பதையும் நான் கூறித்தான் தெரியப்படுத்த வேண்டிய அவசியமில்லை ,
கூத்துக்கள் 1950 ற்குப் பின் ஆய்வாளர், அரசியல்வாதிகள், அறிஞர்களினால் "நாட்டுக் கூத்து" என்ற புதிய பெயரைச் சூட்டி னர். அவர்கள் தமக்குச் சாதகமான காரணங்களாக பங்குகொள் ளும் நடிகர்கள், அண்ணாவிமார்கள், ஆகியோர் பெரும்பாலும் பாமர மக்களாக இருந்தாலும்; பாடல் ஆடல், உடை, நடிப்பு வளர்ச்சியடைந்த நாடகங்க்ளில் உள்ளதுபோல் செம்மைப்படுததப் படாமல் இருந்ததாலும் , கிராமப் புறங்களிலேயே கூத்துக்கள் மேடையேற்றப்ட்டதாலும், நவீன நாடகங்கள் படித்தவர்களினால் மேடையேற்றப்பட்டதாலும் நாட்டுக் கூத்து" என நாமம் சூட்டினர். கூத்தை நகர்ப்புறத்தினர் மாற்றா ந்தாய் மனப்பான்மையுடன் நோக் கினர் ஆனால் கூத்தின் கதைகளை இயற்றிய பண்டைப் புலவர்கள் நாடகம் என்ற சொல்லையும் பயன்படுத்தியுள்ளனர். உதாரணமாக காத்தவராயன், கோவலன் கூத்தில் காப்பு விருத்தத்தில் "இந் நாடகததை சிறப்புடன் நடத்திமுடிக்க நல்லருள் தாவம்மா" என வருகின்றது .
எனவே, கூத்து என்ற சொல்லோ , நாட்டுக் கூத்து என்ற சொல்லோ நாடகம் என்ற சொல்லில் இருந்ததற்கு ஆதாரமாக 3ாலநிதி மெளனகுரு தனது 'பழையதும் புதியதும்' என்ற நூலில் குறிப்பிடும் பின்வரும் செய்திகள் ஆதாரமாகவுள்ளன
முன்பு கூத்துக்களே நாடுதழுவிய நாடகமாக இருந்ததால் இதனை நாட்டுக் கூத்து என்று அழைத்தாரில்லை நாட்டுச்சினிமா . நாட்டு நாடகம், நாட்டுப்பத்திரிகை என்று நாம் அழைப்பதில்லையே எமது நாடக மரபிளை நாட்டுக் கூத்து என நம்மவரே புறக்கணிக் கும் நிலையும், அது கிராமத்திற்கே உரியது என ஒதுக்கி வைக்கும் நிலையும் ஐரோப்பிய தாக்கத்தினாலேயே ஏற்பட்டன. இத்தாக்கம் இலங்கையில் மாத்திர மல்ல ஆசிய நாடுகள் அனைத்திலும் நடந் தேறியது .

Page 8
2
... நாட்டுக்கூத்து என்ற பெயரை படித்தவர் நாடகமென பெயர் இட்டாலும், எமது பொதுமக்கள் பழைய பெயரிலேயே இப்போ தும் வழங்குகின்றனர். அவர்கள் இதனை நாட்டுக் கூத்து என்று கூறாமல் கூத்து எனவும் நாடகம் எனவும் அழைக்கின்றனர். நாட்டுக் கூத்துக்களை எழுதிய பாடலாசிரியர்கள் அனைவரும் இவற்றை நாடகங்கள் என்று திட்டவட்டமாக அழைத்தனர், எல்லாக் கூத்து நூல்களிலும் வரும் காப்பு விருத்தத்தில் இந்த நாடகத்தை ஆடப் போகிறோம் , என்று கூத்து , நாடகம் என்ற பெயரிலேயே அழைக் கின்றது நாட்டுக் கூத்து என்ற பெயரில் அல்ல, ஐரோப்பியர் வருகைக்கு முன்னர் இவை தமிழர் அனைவரினதும் நாடகங்களாக இருந்தபோதும், இவை நாடகங்கள் என்று அழைக்கப்பட்டன. ஐரோப்பியர் வருகைக்குப் பின் இந்நாடக ங் கள் கிராமப்புற மக் களையடைந்தபோது மக்களினாற் கூத்துக்கள் என அழைக்கப் பட்டன. எனினும் பாடிய புலவர்கள் பழைய பெயரில் இவற்றை நாடகம் என்றே அழைத்தனர் .
நாட்டுக்கூத்துப் பற்றிய இக் கருத்தை ஏற்றுக்கொள்ளும் நான் , வேறு ஒரு கருத்தையும் இங்கு கூறிவைக்க விரும்புகின் றேன். ‘நாட்டுக்கூத்து’ என்ற சொற் பிரயோகம் அருங் கலைச் சொற்பிரயோகம் என்பது எனது கருத்தாகும். தொன்மைக் காலத் திலோ, ஐரேயப்பியர் வருகைக்கு முன்பாகவோ கிராமங்களே கூடுதலாகக் காணப்பட்பன. நகரங்கள் மிகக் குறைவு . ஐரோப் பியர் வந்த பின் நகரத்தில் உள்ளவர்கள் கலாசார மோகத்தினால் உந்தப்பட்டுக் கூத்துக் கலையைவிட்டு நவீன நாடகங்களைப் பின் பற்றினார்கள் நகர்ப்புறங்களில் உள்ளவர்கள் பெரும்பாலும் படித் தவர்களாக இருந்ததனால் பாமர மக்களே கூடுதலாகப் பின்பற்றி வந்த கூத்தைக் கைவிட்டனர். எனவே கூடுதலான மக்களை உள்ளடக்கிய கிராமிய மக்கள் கூத்தைத் தமது சொத்தாக உரி மையாக்கி ' நாட்டுக் கூத்து' என்ற (நாடு - கிராமம்) நாமத்தின் மூலம் சொந்தமாக்கிக் கொண்டனர். இதனால் நகரத்தவர் கூத்தை இழந்தவர்களாகவே கருதப்பட்டனர் நாட்டுக்கூத்தை உரிமை யாக்கிய அவா கள் தமது கலாசாரத்தை , தமது பண்பாட்டை, தமது தெய்வ நம்பிக்கையை வெளிப்படுத்தும் தெய்வீகக் கலை யாகப் போற்றினர். இதனால் தேசத்தில் வாழ்கின்ற பெரும்பான்மை மக்களுடைய கலையாக இருந்து ஜனரஞ்சகக் கலை பாகக் மகிழ் வித்தது இக்கூத்து வடிவமே நாடக வடிவங்களில் சிறந்தது. என்பதை கிராமிய மக்கள் எப்பொழுதும் அறிந்திருந்தார்கள் : இதனால் அவர்களால் எப்பொழுதும் தூக்கி எறியப்படவில்லை; அன்று நகரத்தினர் கை விட்டு கைவிட்டு ஏளனம் செய்து, துரற்றிய

3
இக்கூத்தினை, ஆகோ" "ஒகோ’ என பெருத்திரளாக மணித்தி யாலக் கணக்கில் ரசித்து இக்கலையின் பெருமையைக் கூறி வரு கின்றனர் எமது கூத்துக்கலைச் சொத்தைப் பாதுகாக்க வேண் டும். என்று கூக்குரலிட்டு வருகின்றனர். இக்கூத்து வடிவமானது கிராமம். நகரம் என்று பாரபட்சமில்லாது எல்லா மக்களாலும் இரசிக்கும் கலையாக மாறிவருகின்றது. உரையாடல், பாடல், ஆடல் அதாவது இயல், இசை, நாடகம் எனும் முத்தமிழும் கலந்து ஒரே மேடையில் அவையினர் விருப்பத்தை நிறைவு செய்யும் முக் கூட்டுப் பழரசமாகும்.
பழமை என்பதற்காக எல்லாவற்றையும் ஒதுக்கி விடுவதும், புதுமை என்பதற்காக எல்லாவற்றையும் ஏற்றுத்தான் ஆக வேண் டும் என்ற கட்டுப்பாடடுக்கும். நாம் அடங்கித்தான் ஆகவேண்டும் என்று எண்ணவும் வேண்டியதில்லை. நாடக மாடப்பட்ட இடத்தை திருவள்ளுவர் * கூத்தாட்டவை" (குறள் 332) எனக் குறிப்பிட்டுள் ளார். நாடகவரங்கினைக் குறிக்கும் 'கூத்துப்பள்ளி" கூத்தறா ப் பள்ளி" என்ற சொற்களும் பயன்பட்டு வந்துள்ளமையை பெருங் கதை காட்டு கின்றது .
அகத்தியம் முதல் சிலப்பதிகாரம் வரையிலுள்ள காலத்தை நாடகக் கலையில் முற்காலமாகக் கொள்கின்றனர்.
* நாடக வழக்கிலும் உலகிலும் பாடல் சான்ற குலநெறிவழக் 9 ம்" என வருவதனால் தொல்காப்பிய காலத்திலேயே நாடகம் சிறப் புற்று இருந்தது என்பதனை அறியலாம் ஒருவரிடம் செல்வம் வந்து சேர்வது கூத்தாடுமிடத்தில் கூட்டம் வந்து சேர்வதுபோலும் , கூத்து முடிந்த தும் சனம் கலைவதைப்போலும் என்று உவமைகாட்ட வந்த திருவள்ளுவர்.
* கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம் போக்கும் அது விளித்தற்று” எனக் கூறுவதிலிருந்து திருவள்ளுவர் காதத்தில் கூத்துக்கலைகளுக்கு மக்களுடம் எவ்வளவு மெளக இருந்தது . என்பதை ஊகித்துக்கொள்ள முடியும். கூத்து என்ற சொல் ‘நாட்டியம் 'நாடகம்" ஆகிய இரு கலைகளுக்கும் பொதுவான தாகவே வழக்கப் பெற்றுள்ள த. சிலப்பதிகாாத்தில் முழுக்க முழுக்க தடனக் கலை மகளாகவே அறிமுகம் செய்யப்படும் மாதவியை
"நாடகமேத்தும் நாடகக் சனிகை" என்று இளங்கே? வடி கள் குறிப்பதைக் கொண்டும்,

Page 9
14
நடமே நாடகம் கண்ணுள் நட்டம் படிதம ஆடல் தாண்டவம் பரதம் ஆறுதல் துரங்கல் வாணி குரவை நிலையம் நிருத்தம் கூத்தெனப்படுமே
என்று திருவாசகம் தரும் விளக்கத்தைக் கொண்டும் அறியக் கூடும்.
வெளிநாடுகளில் கூத்துக்கள்
ஜப்பானிய நாட்டு நோ. காபூசி, சீன இசைக் கூத்துக்கள் இன்றும் உலச அரங்கில் செல்வாக்குப் பெற்று வருகின்றன. இவை பண்டைக்காலத்தில் நிகழ்ந்த முறைகளுடன் மேடையேற்றப் பட்டு வருகின்றன. மிகத்தொன்மையான நாகரீக வளர்சியைக் கொண்ட கிரேக்க, உரோம, சீன இந்திய நாடுகளில் கி. மு. 5ம் நூற்றாண்டிலேயே இக் கலை செழித்து வளர்ந்திருந்தமையை வர லாறு காட்டுகிறது .
எல்லா நாடுகளிலும் சமயச் சடங்குகளுடன் சேர்ந்த ஆடல்
பாடல்களின்றே கூத்துக்கள் வளர்ச்சிபெற்று வந்துள்ளன கிரேக் கத் திறந்த வெளி அரங்குகளில் பாக்கஸ் , டையானியஸ் , அப்போ
லோ போன்ற தெய்வ வழிபாடுகளின் போது ஆடப் பெற்ற ஆடல் களிலிருந்தே நாடகக் கலை தோன்றி வளர்த்தது என்பர். சிரியா
வில் மக்கள் போற்றி வழிபட்டு வந்த நீர் நிலைக் கடவுளாம் தம் முஸ்
வேளாண்மைக் கடவுளாம் * அடோனிஸ்" ஆகியோரைப் பற்றிப் பாடி, ஆடிய கூத்துக்களினின்றே நாடகம் தோன்றிய து ஐப்பா
னிய நாட்டில் எரிமலைக் கொந்தளிப்பு நேராவண்ணம் மக்கள் ஆடி வந்த ‘சம்போசா” என்ற நடனத்திலிருந்தே நாடகம் தோன் றியது இங்கிலாந்தில் கிறிஸ்தவ சமய ஆலயங்களிலும், சமாதி களிலும் ஆடப்பெற்ற ஆடல்களும் பாடல்களுமே இன்றைய கூத் துக்களின் தோற்று வாயாக அமைந்தன தமிழகத் தி லும் தொல்
காப்பியர் காலத்திற்கு முன்னரே குரவை வெறிப்பாடல்போன்ற சமயக்கூத்துக்களினின்றும் நாடகம் வளர்ச்சி பெற்றது . இன்னும் இறைவனைக் கூத்துப் பிரானாக தில்லை கூக்தனாக , ஆடவல்ல வனாக க் கண்டு வழிபடும் தமிழர் மரபு சமயத்திற்கும் , கூத்திற்கும் உள்ள உறவைக் காட்டும் எனவே கூத்து இறையின் கலை . இறைவன் விரும்பும் கலையை மக்கள் எவ்வளவு ரசித்தார்கள் என் பதை கூறாமலே புரிந்து கொள்ள முடியும் .

I 5
இக்கூத்துக்கலையான தை சிலர் எள்ளி நகையாடுகின்றனர் ஒதுக்குகின்றார்கள், வெறுக்கின்றனர், உலக வரலாற்றை எடுத் துக்கொண்டால் கூத்துக்கலையானது பிறந்தது வெளிநாடுகளி லேதான். அரண்மனைக் கலையாக இருந்திருக்கின்றது. பல ஆயி ரம் மக்கள் அவையோரை மகிழ் வித்த கலையாக இருந்திருக்கின் றது. இரவிரவாக நாட்கணக்கில் பார்வையாளராக மக்கள் ரசித்த கலையாக இருந்திருக்கிறது. கிரேக்க உரோம, ஆசிய நாடுகளில் இருந்த தொன்மைக்கால அரங்கில் பாடல், ஆடன் களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது, உலக நாடக வர லாற்றின் ஆரம்ப வளர்ச்சி கிரேக்கத்தில் ஏற்பட்டது என்பதனை
எல்லோரும் ஒப்புக்கொள்வர்.
கிரேக்கமும் - கூத்தும்
நாடக நூலாசிரியர்கள் " நாடகம்" என்றே கூறிவருவது நடை முறையாகவுள்ளது. எனினும் அக்காலத்து நாடகத்திற்கு பாடல் அதிகமாகவும் , ஆடலும், பாடலும் கூடியதாக இருந்ததினால் அதை 'கூத்து" என்ற சொற்பிரயோகத்தையே பிரயோகிக்கி றேன்.
ரேக்கத்தில் துன்பியல், இன்பியல், எள்ளல் கூத்துக்கள் அரங்கேறி வந்திருக்கின்றன. இந்நாட்டு நாடக ஆசிரியர்களின் வரலாறு தெஸ்பிஸ் என்ற கவிஞனைக் கொண்டு தொடங்குகிறது. அதற்குப்பின் தோன்றிய ஈஸ் கிலஸ் (கி. மு 525) ல் கிரேக்கத்தில் முக்கியத்துவம் பெறுகிறார். சிரேக்கத்தில் முதன்முதல் "டானியஸ்" என்னும் தெய்வத்தை வழிபடத் திரண்டிருந்த மக்கள் கூட்டத்தின் முன்னால் சமயக்கூத்துக்கள் ஆடப்பட்டன. கோயில்களின் அருகே திறந்தவெளியில் ஆடப்பெற்ற கூத்து பின் மலைச்சரிவுகளில் அரங் கமைத்து கூத்துக்கள் ஆடப்பட்டன. பல்லாயிரக்கணக்கான மக் கள் கண்டு களித்தார்கள் விழாக்கோலம் பூண்ட அரங்கின் நடுவே, மக்கள் கூத்தைக் காண ஆவலோடு காத்திருக்கை பில், புல்லாங்குழ லிசை கீழேயிருந்து ஐம்பது பேர்கொண்ட கோரஸ்" எனப்பட்டி பாடற்குழுவினர் வட்டப்பாறையில் அரைவடிவில் வந்து θύμή அவர்கள் பல்வகை வேலைப்பாடுகளைக் கொண்ட உடையணிந்தி, ருப்பர் உயரமான குதிக்கால் செருப்பு, மணிமுடியும் அணிந்து வேலைப்பாடான முகமூடியணிந்து பாடற் குழுத் தலைவன் வந்து நிற்க அவர்களுக்கிடையே சென்று நடனமாடி நடிகர்கள் தோன்று வார்கள். இவ்வாறு கிரேக்க ஆரம்ப காலக் கூத்துக்கள் இடம் பெற்றன. மக்கள் தாம் விரும்பிய கூத்துத்களை இயற்கையோடு

Page 10
16
ரசிக்கச் செய்த ஏற்பாடுதான் இது. கிரேக்க நாடக ஆசிரியர் ஈக்கிலவின் துன்பியலுக்கும், அவருக்குப் பின்வந்தோர் படைத் துள்ள நாடகங்களுக்கும் கதைக்கூத்துப் பாடல்களாகவே இருந் தன. காலப்போக்கில் பாடல்கள் உரையாடல் போக்கில் உருவா கத் தொடங்கின .
சமகாலப் பிரச்சனைகள் கூத்து வடிவங்கள் மூலம் மக்கள் முன் கொண்டு செல்ல வேண்டும் என்று குரல் எழுப்பும் காலத்திற்கு முன்னோடியாகவே கிரேக்க அறிஞர்கள் அக்காலத்தில் சமுதாய த்திற்கு காட்ட வேண்டியதை, செ1 ல்ல வேண்டியதை, கருப் பெ7 ருளாக வைத்து கூத்தினை மக்கள் (?ன் கொண்டு சென்று மக்கள் செல்வாக்கைப் பெற்றனர். ரேக்க டி றிஞர்களின் நாடகக் கருப்பொருளில் இடம்பெற்ற ஒரு சில கருத்துக்கள் பின்வருமாறு
ஈஸ் கிலஸ் (கி. மு. 575 - 456) தனது " ஆக மெம்னான்" எனும் டகம் மூலம் அழிவு தரும் ஆணவத்தை விளக்குகிறார் .
02. "பாரசீகர்கள்’ எனும் கூத்து மூலமாக 'முடிசார்ந்த மன்னரும் முடிவில் பிடி சாம்பலாகி விடுவர்” என்ற உண்மையை விளக்கிறார்.
03. "மனிதனுடைய தீமை அவனை அழிக்கிறதே தவிர கடவுளர்களின் பொறாமை அழிப்பதில்லை" என்று வாதாடும் ஈக்லிஸ் "அகமென்னான்’ நாடகம் மூலமாக ** செல்வம் செழிப்பு உச்ச நிலை அடையும் போது அது கூடவே ஒரு வாரிசையும் உருவாக்குகிறது. அது தான் துன்பம் நல்ல இன்பத்திலிருந்து துன்பம் என்ற குழந்தை பிறந்தே ஆகவேண்டும் " என்பதைக் காட்டுகின்றார் சோபாக்லீஸ் தனது எடிப்பஸ்வேந்தன்' என்ற கூத்து மூலமாக அளவு கடந்த தன் நம்பிக்கையின், தற்பெருமை கொண்ட எவரும் எந்த நாளும் கண்ணிருந்தும் குருடராய் அவல முடிவு பெறுவர் என்ற எச் சரிக்கையை மக்கள் முன்வைத்தார்
இவ்வாறான கிரேக்க, உரே ம மரபு வழிக் கூத்துக்களி ஆடல் அசைவுகளில் அக்கறை கொண்டிருந்தனர். (9க முடிகளுக்கு முக்கியத்துவம் அளித்தனர். உணர்ச்சி வெளிப்பாடுகளுக்கு முஃபாவங்கள் தேவைப்படவில்லை, அவர்கள் மக்களின் கவனத்தை கவரவும் ஆர்வத்தை தூண்டவும நாடகத்தின் சிறப்பை உயர் த்கவும் நீண்ட பெரிய முக முடிகளை அணிந்து வந்தனர். இவைகள் உணர்ச்சி வெளிப்படுத்தும் குறியீடுகளாக இருந்தே வந்தன. கொடுமை தந்திரம், கோபம் ஆகியவற்றை விளக்க ஒருவகை இதிகாச பாத்திரங்களில் காட்ட வேறு முகமூடி என்று முகமூடி

17
வெவ்வேறு வகையாக அமைந்தன. உணர்ச்சிகளுக்கேற்ப முகமூடி கள் வெவ்வேறாகச் செயற்பட்டன. நடிகர்கள் பெரும்பாலும் உச்சத்தொணியில் பாடி வந்தனர். நடிகர்களைப்போலவே பாடி கர்குழு உணர்ச்சிப்பாத்திரத்திற்கேற்ப வெவ்வேறு முகமூடிகளை அணிந்திருந்தனர். பாடகர் குழு தேவையான போது கோன் ரீ மறைவர். கூத்தின் சிறப்பு நிகழ்ச்சிகளை வெளிப்படுத்த இக்9ே4 வினர் மேற்கொண்ட நடன அசைவுகள் போன்ற நடை, உணர்ச்
களுக்கேற்ப கை அசைவுகள் துணையாக அமைந்தன. இக்குசி வினர் கூத்தின் கதை நிகழ்ச்சிக்கேற்ப வச்சம், திகில், நம்பிக்கை, மகிழ்ச்சி போன்ற உணர்ச்சிகளை பின்னணி சிலிருந்து Ձ6)յhr*մ படுத்கிக்கொண்டிருந்தனர் இக்குழுவினர் எப்பொழுதும் unre 4 கொண்டிருந்ததில்லை. நடிகர்களுடன் சேந்து உரையாடுபவர் களும் உண்டு ,
uu ňn Tav grš55
ஜப்பானிய அரங்குகள் தொடக்க காலத்தில் சமயக்கூத்துக்கள் ஆே தற்கேற்ற களங்களாகவே இருந்தன. "சம்போசா" என்ற வழி பாட்டு நடனங்களிலிருத்து ஜப்பானின் கூத்துக்கள் தோன்?ன." பண்டைக்காலத்தில் பாமர மக்களை கவருதற்கேற்ற கதையமைப் பையும், ஆடல்களையும் கொண்ட 'காபூகி" நாடக அரங்கும், மன் னர்களினால் ஆதரிக்கப்பெற்ற வீரர்களில் வெற்றிச் செயல்களை விளக்கும் சதைக் கருவைக் கொண்டதாக "நோ நாடக அரங் கும் காணப்பட்டது . அவ்வரங்குகளில் பாடலோடு கூடிய நடிப்பு இடம்பெற்றது காபூகி என்பது (கா-பாடல், பூ. ஆடல், கி-நடிப்பு/ ஆடல், பாடல், நடிப்பு என்ற மூன்றும் சேர்ந்ததேயாகும். இதுவே கூத்தின் அடிப்படையுமாகும்.
காபூகி அரங்கின் தாயார் "ஒக்மி" என்ற பெண் பூசாரி என் பர் நடனப் பெண்கள் பலரை ஒன்றுசேர்த்து நாட்டிய நாடகம7 கத் தம் கூத்துக்களை அரங்கேற்றினர். புராதன நாடகங்களை நடத்தத் தொடங்கியபின்னர் மக்கள் வாழ்வியல் கதைகளை கூத் தின் கருவாக்கினர். ஜப்பானிய நாடக அரங்கின் சேக்ஸ்பியர் என்று அழைக்கப்படும் சிகாமத்சு (1653 - 1724) கவிதை உரைநடை என்ற இரண்டையும் கலந்து நாடகங்களை எழுதி மேடையேறறி னார். 'காபூசி நடிகர்களும் செயற்கையான மரபுவழி அசைவு களை மேற்கொண்டிருந்தனர்.

Page 11
18
தொடக்கத்தில் மேடையில் விளக்கொளியமைப்பு நிலையாக அமைக்கப்படவில்லை. நடிகன் மேடையில் தோன்றும்போது அவ னுக்குப் பின்னால் ஒருவன் மூங்கில் தடியில் விளக்கை ஏந்திக் கொண்டு நிழல்போல் தொடர்ந்து மேடையில் அமாந்து நாடகக் ககையை பாடலாகப் பாட, நடிகர்கள் அபிநயத்தைக் காடடினர் நாடக நிகழ்ச்சி அமைப்பு பாவைக் கூத்து அமைப்பினைப் Gcሥ ጠ`ጨፅ இருந்தது. ஒரே கூத்து தொடர்ச்சியாகப் பல நாட்கள் நடைபெற் ற துண்டு. அவையோர்கள் குடும்பத்துடன் வந்த மர்ந்து அவையி லேயே உணவருந்திப் பேசி மகிழ்ந்து இடையிடையே நடனத்தை யும் கண்டு கழித்தனர்.
* நோ" நாடக அரங்கு தலைமுறை, தலைமுறைய பக எந்தவித மாறுதலுமின்றி ஆடப்பெற்று வருகின்றது نبی / 97ھ محلاتی طر0ن محمدp677 பேணுவதிலும், ஜப்பானிய பண்பாட்டையும், புத்த சமயக் கொள் கைகளையும் வலியுறுத்துவதிலும் இக்கூத்து அக்கறை கொண்டு ளது . " நோ" நாடக வரங்கின் நடிகர்கள் முகமூடிகள் அணிந்திரு தனர். இவர்களின் நடன அசைவுகள் மென்மையானவை இ/ஆறுக்க மான பொருள் வெளிப்பாட்டை உணரவியலாவிடில் இக்கூத்தி னைச் சுவைப்பது சிறிது கடினம்
சீனக் கூத்து
சீன நாட்டில் இரண்டாவது அரச இன ஆட்சியிலேயே (இ. cp. 2205- 1766) சமயச் சடங்ங்குகளின், பல்வேறு தொழில்களையும், உண்ர்ச்சிகளையும் காட்டும் நடனங்கள் இடம்பெற்றிருந்தன. சீன நாடகங்கள் இடம்பெற்றிருந்தன. சீன நாடகங்கள் தமிழ் நாட கங்களைப்போன்றே இசைப பாடல்களாகிய கீதைக் கூத்து நாட கங்களாக இருத்தன. ஒன்ரிரண்டு உரைப்பாடல்கள் அமைந்ததும் உண்டு . சீனா கள் பண்டைக்காலத்து தமிழர்களைப்போல் நீண்ட நேர நாடகங்களாகக் காண்பதில் விருப்பம் கொண்டவர்கள்.
வட இந்தியக் கூத்து
இ) கலை நமது நாட்டிற்கு வட இந்தியாவிலிருந்தும், தமிழகத் திலி சுந்தும் கால் எடுத்து வைத்த்து என்பது பிழையாகாது வட இந்தியாவில் அக்காலத்தில் அறுவடைக்குப் சின்னர் கோயில்களில் நடைபெற்ற விழாக்களில் நாடகம் இன்றியமையாத நிகழ்ச்சி யாக இருந்து வந்தது. மக்கள் ஒன்று கூடி "ஜாத்திரா? என்ற நாடகவகை நடைபெற்று வந்தது. மக்கள் ஒன்று கூடிக் கோயில்

'
முற்றங்களில் அ மாந்து, உண்டுகளித்து கலைவளர்க்க முயன்ற போது தோன்றிய நாடக வகையே ஜாத்திரா. மங்கள நிகழ்வு களான மன்னனின் முடிசூட்டு விழா , வசந்தவிழா, மன்னனுக்கு மகவு பிறந்த விழா , மங்களவிழா போன்ற விழாக்களில் மன்னன் அாண் மனையிலும் ஊர்ப் பொது மன்றங்களிலும நாடகங்கள் நிகழ்த் தப்பட்டன . கலா பிரியநாதர் என்ற தெய்வ வழிபாட்டின் போது பவபூதியின் நாடகங்கள் அரங்கேற்றப்பட்டன. விக்குருஸ்தா, திரியஸ்ரா , சதுஸ்ரா என்ற அரங்குமூலமாக வடஇந்கிய நாடகங் கள் மேடையேற்றப்பட்டன . நாடக அரங்கு பொதுவாக நடிப்பவர் பகுதி, அவையோர் அமரும் பகுதி என்று இரண்டு பிரிவாக இருந் தது. அவையோா பகுதியில் துரண கள் நிறுத்தப்பட்டிருந்தன . வெள்ளித் தூண்களினருகே அந்தணர்களும் சிவப்புத் தூண்களுக் கருகே சத்திரியர்களும் வடமேற்குப் பகுதியில் மஞ்சள் நிறத்துரண் கர்னருகே தத்திரா களும் உட்கார வேண்டும் என்ற விதிக்கமைய எல்லா சாதியினரும் ரசித்த கலை, வளர்த்த கலை, ஜனரஞ்சகத் கலை கூத்து ஆகும்
தமிழகமும் கூத்தும்
தமிழகத்தில் தொல் (ாப்பியர் காலத்திலிருந்தே நாடகங்கள் நடைபெற்றமைக்கான இலக்கியச் சான்றுகள் காணக் கிடைக்கின் றன. தமிழகத்தில் வேத்தியல் பொதுவியல் என்ற இருவகை sssr கங்கள் அரங்கேற்றப்பட்டன. வேததியல் என்பது அரசரும் அரச ரைச் சார்ந்த அந்தணரும் வணிகர்களும் காணக்கூடியவாறு முறைப் படி அரங்குகளில் இடம்பெற்றன. இந் 25s7 (-15sävsarfa) கால், வீரம போன்ற விழுமிய உணர்வுகளைத் திறம்படவே வெளிப்படுத்துவனவாக வேத்தியல் நாடகங்கள் அமைத்தன. பொதுவியல் நாடங்கள் அன்றாட வாழ்வின் நிகழ்ச்சிகை உள்ளவாறே படம்பிடித்து காட்டுவனவாக இருந்தன ஒர மொழியில் அமைந்து காண்போர் எளிதில் புரிந்து கொள்ள கூடிய நிலையில் ஊர்ப்பொது மன்றங்களின் களத்து மேடைகளிது அவ்வப்போது அமைக்கப் பெற்ற மேடைகளில் நடிக்கப்பட்டன. விழாக்காலங்களில் கூத்தர்களின் ஆடல்கள் மக்களை மகிழ்வித்தன
அக்காலத்தில் தமிழ் நாடகம் ஆடலும் பாடலும் இணைந்து கலையாக இருந்தமையினால் நாடகக்கஞர்கள் ஆடல் பாடலில் வல்லவர்களாக விளங்கினர். மக்கள் இக் கூத்துக்களை நள்ளிரவு வரை பார்த்து ரசித்தனர். இந்நாடகங்களை நிகழ்தப் பாணர்

Page 12
2份
எனப்பட்ட இசைக்குழுவினரும் துணையாக இருந்தனர். அவர் களும் கூத்தர் குழுவினருடன் ஊர் ஊராகச்சென்று நிகழ்ச்சிகளை நடாத்திவந்தனர். அவர்கள் முழவு, எல்லரி, ஆகுளி, பதலை, குழல், குறிக்பரை, தூம்பு, சிறுபறை சீரியாழ் தட்டை தண் ணுமை, துடி, பன்றிப்பறை, பாண்டில், பேரியாழ் போன்ற பல் வேறு இசைக்கருவிளைக் கையாண்டு வந்தனர் என்று கலாநிதி சக்திப்பெருமாள் கூறுகின்றார். அக்கலைக் கூத்து நிகழ்ச்சிகள் கூடிய பாடல்களைக் கொண்ட நீண்ட நாடகங்களாக அமைந்த மையை உணர்த்தும். இவ்வுண்மைகளைச் சங்க இலக்கி பங்களும் சிலப்பதிகாரமும் நன்கு விளக்குகின்றன. கி பி 10 ல் நூற்றாண் டின் பின்னர் கூத்து நலிவுற்று கி. பி. 17ம் நூற்றாண்டின் பின் னர் நாட்டுப்புறக்கலை செழித்தோங்கியது. கோயிலுக்கு அருகில் இருந்த திறந்த வெளிகளிலும், கெருக்களிலும், நாற்சந்திகளிலும், நிகழ்ச்சிகளுக்கென அவ்வப்போது நாடகமேடைகள் அமைக்கப் பட்டன. விழாக்காலங்களில் சிற்றுார்களின் கோயில்களில் அமைக் கப்பட்ட மேடைகளில் கூத்துக்கள் ஆடப்பட்டன. பள்ளு, குறவஞ்சி, நொண் டி போன்ற கூத்துக்கள் நூற்றுக் கணக்கானவை இந் நூற் றாண்டுகளில் இயற் ரப்பட்டு அரங்கேற்றம் 'பெற்றுள்ளன . இவ் வாறு செழித்தோங்கிய கலை அண்மையிலுள்ள ஈழத் தமிழகத்தி லும் கால் எடுத்து வைத்தது.
நமது நாட்டில் கூத்து
இந்தியாவிலிருந்து காலத்துக்குக் காலம் நாடகக் கலைஞர்கள் ஈழத் தமிழகத்திற்கு வந்து நாடகங்கள் நடத்தினர் நமது நாட்டின் நாகரீகத்தையும் பண்பையும் உயிராக ஒம்பி வளர்த்த பெருமை கிராமங்களுக்கேயுரியது. இயற்கைக்கு மிக அருகாமையில் இருக் கும் காரணமாக வாழ்வு என்னும் உயிறுாற்றுடன் கிராமங்கள் நெருங்கிப் பிணைக்கப்பட்டன இத்தகைய கிராமங்களில் வாழும் மக்கள் வளர்த்த கலையே கூத்து. இது பல்லாயிரக்கணக்கான பொதுமக்களின் விலைமதிக்க முடியாத சொத்து அவர் கரிேன் உணர்ச்சிகளையும் செயல்காையும் வெளியிடும் சாதனம் அவர்கள் உள்ளத்திற்கு அழகையும் இன்பத்தையும் ஆறுதலையும் மகிழ்ச்சி யையும் கொடுக்கும் ஆற்றல் இதற்குண்டு. அது நமது நாட்டின் கலாச்சாரப்பாரம்பரியத்தின் முககிய அம்சமாக விளங்குவதுடன் முக்களின் உள்ளக்கருத்து குணச்சிறப்பு கலை, பண்பாடு வாழ்க்கை ഗ്രങ്ങഴ முதலியவற்றை எரித்து விளக்கும் தேசிய முக்கியத்துவமான கலை. பல நூற்றண்டுகளாக ஈழத்தில் யாழ்ப்ாணம், மன்னார்" மJடக்களப்பு, முல்லைத்தீவு, சிலாபம், மலைநாடு ஆகிய பகுதி

21
களில் கூத்துக்கள் ஆடப்பட்டுள்ளன, ஆடப்படுபட்டுவருகின்றன.
மட்டக்களப்பில் வடமோடி, தென்மோடி கூத்துக்களும், விலாசங்களும் , மன்னார்ப் பகுதியிலே கிறிஸ்தவ அடிப்படையில் அமைந்த வடபாங்கும் தென்பாங்கும் சபாக்களும் வசாப்புகளும் , முல்லைத்தீவில் வடமோடி, தென்மோடி சிந்து நடைகூத்துகளும் , யாழ்ப்பாணத்தில் இசையுடன் கூடிய அசைவுக் கூத்துக்களும் , அதாவது மன்னாரில் காணப்படும் வடபாங்குக் கூத்துப்போலவும் தென்மோடி, வட மோடிக்கூத்துக்களும், நீர் கொழும்பு தொடங்கி புத்தளம் வரையுள்ள பகுதிகளில் யாழ்ப்பாணம் மட்டக்களப்பு ஆட்ட முறையான சற்று வித்தியாசமான கூத்துக்களும், மலைநாட்டில் ஆடல் பாடல் நிறைந்த காமன் , அருச்சுதன் தபசு , போன்ற கூத்துக்களும் நமது நாட்டின் பண்பட்ட ப யன்பாட்டை கலாச் சார பண்பாட்டை இக்கூத்துகள் மூலம் காட்டிநிற்கின்றன.
மேற்கூறிய இடங்களிலேயுள்ள கிராமங்களிலே கூடுதலாக தமது வாழ்க்கையில் கடைப்பிடிக்கும் அன்றாட நிகழ்ச்சிகளின் வெளிப்பாடுகளில் தோன்றிய பண்பாட்டு பரிமாற்றங்களையும் பண்பாட்டுக் கலாசாரங்களையும் எடுத்துக்காட்டி நிற்கின்றன. அவை இன்றும் பல கிராமங்களிலே எச்சங்களாக நிலைத்து நின்று கலாச்சார வெற்றிடத்தை நிரப்பி நிற்கின்றன.
கூத்து மேடை ஏறும்போது ஊரே மேடை ஏறுகிறது எனலாம் . கிராமத்திலுள்ள எல்லோருமே மேடையேறும் நாளை ஒரு விழா வாகவே கொண்டாடுகிறார்கள். நடிகர்கள் சல்லாரிக்காரர். எடு பிடிப்போர், பக்கப்பாட்டுப்பாடுவோர், மத்தளக்காரர், கோவில்க் காரர் என்போர்கள் நாடகம் மேடையேற்றக் காரணமாக இருக்க , ஊரார்கள் அதற்கு வேண்டிய சகல ஒத்தாசை, ஏனைய ஆதரவு களை வழங்கினார்கள். இக்கூத்தினை பார்க்க ஏனைய கிராமங் களிலிருந்தும் அழைப்பர். அவர்கள் சாட்டுவண்டிகளில் குடும்பமாக வந்து கூத்தினைக்கண்டு ரசித்தார்கள்.
இக்கூத்து மேடையேற்றத்தின் போது சம்பிரதாயச் சடங்கு களும், சரபுமுறைகளும் இடம்பெற்றன. வோளாண்மை வெட்டி முடிந்ததும் ஆரம்பிக்கும் கூத்துக்கு ஆக்களைத் தெரிவது * சட்டம் கொடுத்தல்" எனப்படும் ஆடவிருப்பமுள்ளவர்களை அழைத்து பாடச் சொல்லி குரலுக்கும் தோற்றத்துக்கும் ஏற்ப பாத்திரங்களைத் தெரிவு செய்வர். சில முக்கிய பாத்திரங்கள் பரம்பரை ரீதியாகவே கொடு க்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தில் வட்டுக்கோட்டையில் இடம்

Page 13
2芝
பெற்றது. பாத்திரத்திற்குரிய பாடல்கள் ஒலையில் எழுதப்பட்டு பாத்திரத்திற்குரியவரின் கையில் ஊரிற் பெரிய ஒருவரால் கொடுக் கப்படும். தொடக்கத்தில் ஒவ்வொரு இரவும் பத்துமணிவரை கூத்துப் பழகுவர். நான்கு ஐந்து மாதம் பழகியபின்னர் ‘சதங்கை அணிதல் இடம்பெறும் முதன்முதலில் சதங்கை அணியும் இவ் வைபவத்திற்கு ஏனைய கிராமங்களில் உள்ளவர்களையும் அழைப் பர், காலை 7 மணி தொடக்கம் இரவு 7 மணி வரையும் இவ்வைப வம் நடைபெறும் . இதன் பின் பகலில் ஒருதடவை சதங்கை அணிந்து ஆடுவர். இது கிழமைக் கூத்து எனப்படும். அரங்கேற்றத்திற் த ஒரு கிழமைக்கு முன்னர் நாடக உடுப்பு அணியாமல் இரவு முழுவதும் கூத்தினை ஆடுவர். இதை வெள்ளுடுப்பு என அழைப்பது உண்டு .
அரங்கேற்றம் நடைபெறும் அன்று பெருவிழாவாகக் கொண் டாடப்படும். வெடி , மத்தாப்பு கொழுத்தி மகிழ்வார்கள் . வெளித் கிராமங்ககலிருந்து வந்தவர்கள் பெரும்பாலும் அக் கிராமத்தின் உறவினர்களாகவே கூடுதலாக இருப்பார்கள் இதனால் அன்று விருந்தோம்பி சுகம் விசயங்கள் பரிமாறி தமது உறவையும் அழுத் திக் கொள்வார்கள் இதனால் இக்கூத்து மூலம் உறவுமுறையிலான உணர்வினை நெருங்கிக்கொள்ளும் ஒன்று கூடலாகவும் இவ்விழா அமைந்து காணப்பட்டது.
கூத்து ஆரம்பமானதும் நடிகர்களுக்கு அவர்களுடைய உற வினர்களுமி , நண்பர்களும் மாலை அணிவதும் சால்வை போடு வதும் காசு, சட்டையில் குத்துவதும், நகைகள் அணிவதும், நடை பெறும் , இந்நிகழ்ச்சி ஒருவகையில் நடிகர்களை உற்சா சகப்படுத் துவதாகவும், மறுபுறத்தில் உறவினர்களின் கடமையாகவும், கொள் ளப்பட்டது. சாதாரணமாக கல்யாண , பூப் புனித நீராட்டு விழா வில் அன்பளிப்பு செய்வதைவிட மிகவும் சிறப்பான முறையில் நாடக பாணியில் நடைபெறும் . கூத்து முடிந்த பின் கோவிலுக் குச்சென்று ஆடுவார்கள் பின் ஊர்ப் பெரிய மனிதர்களுடைய வீடு சென்று ஆடுவார்கள். பின் தொடர்ந்து விட்டுக்கு வீடு சென்று ஆடுவார்கள். அவர்கள் போகும் வீடுகளில் நல்ல வரவேற்பும் சன் மானமும் வழங்கப்பட்டன. திருமணமாகாத ஆண்கள் இக்கூத்து முடிந்ததும் திருமணம் செய்து கொள்வார்கள் கூத்துமேடை ஏற் ரப்படும் மேடை, பெண் மாப்பிள்ளையைப் பார்க்கும் தெரிவு செய்யும் மேடையாகவும் இருந்தது.
கூத்தான ஆத்மீகக் கதைகளை அடிப்படையாகக்கொண்ட நல்ல உபதேசம் வழங்கும் கலையாக விளங்கியது. அக்கருத்துகளை மக்கள் நம்பி அவற்றின் மூலம் நல்ல உபதேசங்களைப் பெற்று வாழ்க்

፬ ,ፃ
கையிலும் அன்பு , பாசம், இரக்கம், உண்மை, நேர்மை என்ப வற்றைக் கடைப்பிடிக்கும் நல்ல சமுதாயமாக வாழ்ந்தார்கள். விழாக்கோலம் கொண்ட கூத்துமேடையின் முன் அவையில் உள்ள மக்கள் பக்குவமான பார்வையாளராக இருந்து விழாவில் கலந்து நல்ல உபதேசம் பெறும், நல்ல வைபவமாக கருதிக்கொண்டார்கள் . இதனானேயே ஜனரஞ்சகக் கலையாக கூத்து திகழ்கிறது"
1960 க்குப்பின் கூத்து
இக்கூத்து வடிவம் அதனுடனான சடங்குகள், நிகழ்வுகள் இன் றும் தொடர்ச்சியாக பேணிக்கருதப்பட்டு வருகின்றன. ஆனால் நகர்ப்புறத்திலே உள்ளவர்களுக்கு பல நூற்றாண்டுகளுக்குப் பின் னால் கண் திறந்தது. உண்மை நிலையை அறிந்தார்கள். அதா வது, 1960 க்குப் பின் நகர்ப்புற அறிஞர்கள், கலைஞர்கள் பேரா சிரியர்கள்,, தயாரிப்பாளர்கள் " கூத்து வடிவத்தைப் பாதுகாக்க வேண்டும்? என்று ஒருமித்துக் குரல் எழுப்பினர். 1956 ம் ஆண்டு சிங்களம் மட்டும் சட்டம் கொண்டுவரப்பட்ட பின் தமிழ், சிங்கள மக்களிடையே தனித்தனிய தமது கலாசாரங்களைப் பேணிப்பாது காக்க வேண்டும் என்ற புத்துணர்ச்சி ஏற்பட்டது . இதன் உணர் வால் உந்தப்பட்ட தமிழர்கள் தமது பாரம்பரியக் கலை, கலா சாரத்தை சிந்திக்கத்தொடங்கினர் . அவற்றில் ஒன்றான கூத்து க் கலையையும் ஆழ்ந்து சிந்திக்கத் தொடங்கினர் அந்த வகையில் ஏற்பட்ட முயற்சிகளினால் நாட்டுக் கூத்து நகர்ப்புறத்தில் நல்ல மெளக" ஏற்படும் காலம் தொடங்கியது பேராசிரியர் க. வித்தி யானந்தன் அவர்கள் பேராதனைப் பல்கலைக்கழகத்தை தளமாக வைத்து இப்பணியில் தம்மை ஈடுபடுத்தினார். அவர் முயற்சிக்கு 1960 க்குப் பின் இலவசக்கல்வி ஏற்பட்டதனாலும், தாய்மொழி கல்வி முறை ஏற்பட்டதாலும், கிராமப்புற மாணவர்கள் பல்கலைக் கழகம் வந்தது சாதகமாக இருந்தது.
வசதிகள் அற்று இருந்த பழைய காலத்தில் கூத்துக்களும் அக்காலத்திற்கேற்ப நெறியாள்கை, 2-60U- Go60-cu600U qá காணப்பட்டன என்பது உண்மையே. வசதியுள்ள இக்காலத்தில், மக்கள் அறிவுபூர்வமாக முன்னேறிய இக்காலத்தில், கூத்தின் இத யத்தில் வைக்காமல் மரபு வழி பிரளாமல் கூத்தின் மேடையேற்றும் முறையினை செம்மைப்படுத்தி மக்கள் முன்கொண்டு வரவேண்டும் என்ற நோக்கத்தில் பேராசிரியர் கூத்தினைச் செம்மைப்படுத்தி மேடையேற்றினார். அதனால் பேராசிரியரின் " இராவண சேன்"

Page 14
罗4
கூத்து 25 முறைக்குமேல் நகர்புறத்திலும் நாட்டுப்புறத்திலும் மேடையேற்றியும் மக்கள் சலிக்காமல் ரசித்து. வரவேற்றனச். இவர் மேடையேற்றியும் "கர்ணன்" கூத்துக்கு விமர்னசம் எழுதிய தினகரன் ஆசிரியர் ' நாட்டுக் கூத்து முறை இக்காலத்துக்கு ஒத்து வராது என்ற எண்ணத்தை இந் நாடகம் பொய்யாக்கி விட்டது , இசையும் ஆடலும் இணைய நாடகம் அமைக்கப்பட்டி ருந்த சிறப்பு ** இக்காலத் தமிழ் நாடங்கள் இதுவரை அடையாத தாகும்" என எழுதினார். கிராமதிலுள்ள கூத்தினை நகர்புறம் எடுத்துச்சென்று செம்மைப்படுத்தி அக்கிராமங்களிலேயே திரும் பவும் கொண்டு சென்று அவர்களுடைய வியக்கத்தக்க வரவேர் பைப் பெற்றார். இதன் பின்பு கிராமங்களிலும் நகரங்களிலும் செம்மைப்படுத்தி பலரினாலும் மேடையேற்றும் முயச்சி மேற்கொ ள்ளப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது . இன்று வரவேற்கும் அளவில் நின்றுவிடாது கூத்து வடிவங்களை பாதுகாக்க வேண்டும் என்ற குரல் பல இடங்களில் எழுப்பப்பட்டு மக்களிடம் உற்சாகம் ஏற்பட்டு வருகிறது .
மறுமலர்ச்சிக்காலத்திற்குப் பின் ஏற்பட்ட நாடக வளர்ச்சியி னால் நவீன பல நாடகங்கள் இயக்கங்களினால் புதியன புகுத் தப்பட்டன. அரங்கியல் முறையில் மாற்றங்கள் ஏற்பட்டன. க'-த்த இரு நூற்றாண்டுகளில் இயயியல் (Naturalissm) நடப் 'va (Realism g its of "g wai) (Symbolism) Gay of just 4 was (FExpression) , iš 55 afuv Giò (Connstruct irisim) abo GM) s sul-ü (Sou só (Sub- aேlism) போன்ற பல்வேறு இயக்கங்களினால் தோன்றிய நவீன நாடக வளர்ச்சியினால் அமுக்கப்பட்ட பாரமபரிய கூத்துக் கள் திரும்பவும் அதன் அமைதியை கடந்த 10 ஆண்டுகளுக்குள் பெருமளவில் பெற்றுக்கொண்டது என்றால், மக்களால் பெரிதும் வரவேற்கப்படுகின்றது என்றால், அதன் காரணத்தை அறியவேண் டிய அவசியம் ஏற்படுகின்றது .
மக்களுக்கு கலைவடிவங்களில் பொழுதுபோக்கு அம்சங்க ளில் புதுமை (Novelty) தேவைப்பட்டது, இந்தத் தேவைகளில் தான் மின்சாரமே கால் வைக்காத கிரமாங்களில் கூட வீடியோப் போட்டிகள் ஊடுருவி வந்தன. உண்மையில் இந்த நவீன சாத னங்கள் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில்லை . புதுவை க்கான தேவைகளைப் பூர்த்தி செய்யாதது மட்டுமன்றி மக்களது உணர்வுகளை ஒரு குறிப்பிட்ட விதத்தில் மழுங்கடிக்கச்செய்தன. கோவில் திருவிழாக்கள் கிராமப்புறத்து சிறுதெய்வ வழிபாடுகள் இவற்றின் உடைக்கமுடியாத சடங்கா சாரங்களையெல்லாம் இவை

உடைத்தெறிந்து ஊடுருவி விடுகின்றன என்பதனையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும் . அத்தோடு இத்தகைய பாரம்பரி யமான கலைவடிவங்களை மக்கள் தங்களுடையதென்று பெரு மிதம் கொண்ருடிந்தாலும் தங்களது பின் தங்கிய நிலமையின் ஒரு பகுதிதான் என்பதை அறிய த்தலைப்பட்டார்கள்.
மக்களது "புதுமை" தேடலுக்கு ஈடு கொடுக்கும் அளவுக்கு நாட்டுப்புறக் கலைகள் வளர்த்தெடுக் கப்படவில்லை என்பதனையும் உணர்ந்தார்கள். இவற்றை வளர்த்தெடுக்க முன்வந்தவர்கள் எல் லோரும் இக் கலைகளை நகர்ப்புறத்து படித்தவர்கள் கலையாக மாற்ற முயன்றதையும் உணர்ந்தார்கள். இவ்வுணர்ச்சிகள் ஊசலா டும் வேளையில் நாட்டில் ஏற்பட்ட குழப்பம் பாரம்பரியக்கலை களை வளர்த்தெடுக்க உதவியது.
இன்று ஈழத்தமிழகத்தில் ஏற்பட்ட மோதல் நடவடிக்கைகளினால் அரசாங்கத்தின் பொருளாதாரத் தடைகளினால் ஈழத்தமிழகத்தின் பெரும்பானமையான இடங்களில் மின்சார மில்லை, நவீன சாத னங்கள் இல்லை . போக்குவரத்து வசதிகள் இல்லை. பொழுது போக்கு சினிமாக்கொட்டகை கள் இல்லை. இதனால் மக்களின் பொழுதுபோக்கைப் பெருமளவு நிவர்த்தி செய்யும் கலையாக நாடகக் கலை திகழ்கிறது கிராமப் புறத்து கூத்துக் கலையானது நகர்ப்புறத்தில் மேடையேற்றப்படுகின்றது எப்பொழுதுமே கூத் தினை நேரடியாகக் காணும் வாய்ப்பை பெறாதவர்கள் கூத்தினை நேடியாகக் காணும் சந்தர்ப்பத்தைப் பெற்றார்கள். ஆட்டம் , பாட்டு , நடிப்பைக் கண்டு ஆனந்தம் கொள்கிறார்கள். நகரங்களிலே கூத்துக்கள் மேடையேற்றப்படும் பொழுது நெரிசலாக அவையோ ரைக் காணக் கூடியதாக விருக்கிறது. மக்கள் கலை பாரம்பரியக் கலை தான் என்று கோசம் எழுப்புகின்றார்கள். ஏனைய நவீன நாடகங்ளிலும் பார்க்க கூத்துக் கலையை மக்கள் அமோகமாக வரவேறகும் காலமாக மாறி வருகின்றது. ;
இசை நாடகப் பாரம்பரியம்
இசைநாடகப் பாரம்பரியம் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்திருந்தாலும் குறிப்பாக யாழ்பாண மக்களின் கலைப்பாரம் பரியமாக விளங்குகின்றது ஈழத்து இசைநாடக வரலாறு காலநிதி காரை. சுந்தரம பிள்ளை அவர்களால் பதிவுசெய்யும் முயற்சி மேற் கொள்ளப்பட்டதனால் கலைஞர்களின் முழுமையான வரலாற்றைப் பெற முடியாவிட்டாலும் ஓரளவு கலைஞர்களைப்பற்றி அறியக்

Page 15
26
கூடியதாகவுள்ளது. ஐரோப்பிய " "மெலேன்" டிராமா மரபை உள்வாங்கிய பம்பாய் பார்ஸி : Parsi) நாடகக் கம்பன இந்தியா வில் மேற்கத்தைய மரபு நாடகங்களை மேடையேற்றியதன் விளை வாகப் பார்ஸித் தியேட்டர் மரபு தமிமகத்திலும் அறிமுகமாகி தமிழ். நாடக மரபிலமைந்த நாடகங்களே இசை நாடகங்களாயின. இசையே நாடகத்தின் முக்கிய அச்சாணியாகும். இசைப்பாடல் களால் அதாவது கர்நாடக ச யலையுடையனவாகவும், இடை இடையே சிறிது உரையுடன் கூடியதாகவும் அமைந்திருந்தது. இந் நாடகங்களை அண்ணாவி மரபு நாடகம், கொட்டகைக்கூத்து ஸ்பெசல் நாடகம், டிறாமா மோடி, இசை நாடகம் என பலவித மாக அழைப்பதுண்டு.
இசைநாடகங்கள் குறிப்பாக 19 ம் நூற்றாண்டின் நடுப்பகுதி யிலிருந்து தமிழ் இசை நாடக மரபாக உருவெடுத்து நாடகக் குழுக் களினால் மேடையேற்றப்பட்டு வந்துள்ளன. இலங்கையிலும், இந் தியாவிலும். அப்பொழுது "சபா" என அழைக்கப்பட்டுள்ள குழுக் கள் பல , மேடையேற்றங்களை இலங் ையில் செய்துள்ளார்கள் , முறையே தஞ்சை நவாப் கோவிந்த சாமிராவ், கல்யாண ராமப்யர் குழு , தவத்திரு சங்கரதாஸ் சுவாமியின் "சமரச சன்மாாக்க நாடக சபா, பாய்ஸ் கம்பனிகள், இலங்கையில் நாட்டுக்கோட்டைச் செட்டி மார், இசைநாடகக் குழுக*ள் , பிற்க, லத்தில் நிரந்தர மடுவங்கள் ஸ்பெசல் நாடக் குழுக்கள், என்பன மூலமாக வளர்ச்சியடைந்த இசை நாடக மரபு இந்தியாவிலும், இலங்கையிலும் நாடக வர லாற்றில் ஒரு இருப்பிடத்தைப் பெற்று ஒரு கலை மரபையும் வேர் ஊன்றச் செய்தது .
இலங்கையில் வேர் ஊன்றிய இசை நாடக மரபை மூன்று தலைமுறையாக வகுக்கலாம்.
1. நாடகமணி கிருஸ்ணாழ்வார் தலைமுறை. 2. எஸ். எஸ். இரத்தினம் பிள்ளை ஜெயராசா தலைமுறை 3. நடிகமணி வி. வி. வைரமுத்து தலைமுறை
இவர்கள் தலைமுறையில் நூற்றுக்கணக்கான பிரபல்யமான கலைஞர்கள் இசைநாடகக் கலையை வளர்த்து , இந்தியக்கலை ஞர்களால் போற்றுமளவுக்கு சிறந்த கலைஞர்களாக விளங்கினார் கள். இவர்களில் நடிகமணி வி. வி. வைரமுத்து நாடகமணி கிருஸ் ணாழ்வார் ஆகிய இரு கலைஞர்கரின் வரலாறும் நூல் உருவில் வந்துள்ளது. ஏனையோர் வரலாற்றுப்பதிவு இல்லாததினால் அவர்களை முமூக்க முழுக்க அறிய முடியாதுள்ளது.

ሯ7
எனவே அவசிய முயற்சிகளாக தலைமேல் எடுத்து, இன்று எம்முடன் வாழ்ந்து கொண்டு இருக்கும் இசை நாடகக் கலைஞர் களினதும் வரலாற்றை அவர்கள் வாயிலாகக் கேட்டு, உறுதி செய்து 1999ல் எம்முடன் வாழ்ந்து கொண்டிருந்கும் மூத்த கலைஞர்களின் வரலாற்றைப் பதிவு செய்துள்ளேன் இசை நாடக மரபை மு 4 கியமாக யாழ்ப்பாணத்தில் வேருன்றச் செய்த கலைஞர்கள் எம்முடன் இன்று இல்லாவிட்டாலும் அவர்களையும் நினைவுகூற முனைகின்றேன்.
கலைவளர்த்து கையளித்த கலைஞர்கள்
இணுவில் முருகர், காரைநகர் கோபாலு, நெல்லியடி தபசர் முடமாடி சீனித்தம்பி, அரியாலை மருகையர், இணுவில் அண்ணா வியார் சுப்பையா, நாகலிங்கம், புத்து வாட்டி ക് ഞUuff', புத்து வாட்டி இரத்தினம், கொக்குவில் நமசிவாயம், நல்லூர் சுந்தரம்பிள்ளை, இணுவில் சின்னமோனை, கொழும்புத்துறை ராஜபார்ட்குட்டி, ஸ்தி ரீபாட் சிவகுரு, பபூன் கெளுத்துக்குஞ்சு முத்தையா, சவரிமுத்து, தசை, காங்கேசன்துறை வைரவி, இராமர், கரவெட்டி கிருஸ்ணாழ்வார். கைவெட்டி கந்தரம், வேல் நாயர் கர் செந்தில் தேசிகர் கறுப்பையா, எஸ், எஸ், சண்முகதாஸ் , வரகவி பொன்னாலை கிருஷ்ணன், ஜெயராசா திருமதி, கன்னிகா பரமேஸ்வரி அச்சுவேலி இரத்தினம், எஸ். வி. மாசிலாமணி, சின்னையா தேசிகா, கரவெட்டி எம். பி அண்ணா சாமி. மெய்கண்டான் க. சரவணமுத்து கீரிமலை பொன்னுச் சாமிதேசிகர், அளவெட்டி நாகலிங்கம், இணுவில் தணிகாசலம், எஸ் எம் நடராசா, சி. ரி. செல்வராசா, வி. வி. வைரமுத்து, அச்சுவேலி எஸ். ஆர் மார்க்கண்டு, வசாவிளான் மார்க்கண்டு வி. நற்குணம் குருநகர், பக்கிரி, விவேகானந்தன், சிதம்பரம் செல்வராசா, ஆகியவர்களை முக்கியமாகக் குறிப்பிடலாம் (மேலதிக தகவல்/ இசைநாடக வரலாறு. காலநிதி. கா7ை சுந்தரம்பிள்ளை)
ஈழத்தில் மேடையேற்றிய நாடகங்கள்
பதிவிரதை விலாசம், அரிச்சந்திர விலாசம், தமயந்தி, பக்தசிசவி கலதா, சதிசுலோசனா, அபிமன்யூசுந்தரி, வள்ளி, திருமணம் , பவளக்கொடி, லங்கா தகனம், சத்தியவான் சாவித்திரி, குலேய காவலி, இராமாயணம், அருச்சுனன் தபசு , நந்தன் சரித்திரம் கலாவரிஷி, பாதுகாபட்டாபிஷேகம், கண்டியரசன், பூதத்தம்பி,

Page 16
28
ஞானசெளந்தரி, அல்லி அருச்சனா, அதிரூப அமராவதி, அப்பூ தியடிகள், அம்பிகாவதி, அரிச்சத்திர மயான காண்டம் சகுத்தலை
சாரங்கதாரா, நல்லதங்காள், பாமா விஜயம், மனோன்மணி சூரபன்மன், பிரகலாதன், சந்திர வண்ணன் முதலியவைற்றை நினைவுகூறலாம்.
அவசரமும் அவசியமுான தேடல்
எனவே நாட்டுக்கூத்து இசைநாடக வரலாறனது. பதியப்பட வேண்டிய முக்கிய பதிவுகளில் ஒன்றாகவுள்ளது மேற்படி வர லாற்றை அறிவதற்கு அச்சாணியாக இருந்த கலைஞர்களின் வர லாறு அத்தியாவசியமாகவுள்ளது . இசை நாடகத் துறையிலும் நாட் டுக் கூத்துத் துறையிலும் ஒருசிலரின் வரலாறுகள் புத்தகமாக வெளிவந்துள்ளதாக இருந்தாலும் ஏனையவர்கள் வரலாறுகளை அறியமுடியாத துர்ப்பாக்கிய நிலையில் இருக்கின்றோம்.
எனவே இன்று வாழ்ந்து கொண்டு இருக்கும் கலைஞர்களிடம் தகவலைப்பெற்று அவர்கள் வரலாற்றுடன் கலை வரலாற்றையும் பெற்று நூல் வடிவில் கொண்டு வரவேண்டும் என எண்ணினேன் கலைக்கிாக தம்மை அர்ப்பணிதது, இன்று கலைச்சொத் ையே மிச்சமாகக் கொண்டு , வாழ்க்கைப் புயலில் அகப்பட்டு மிகவும் ஏழ்மைநிலையில் இருக்கும் பெரும்பாலான கலைஞர்கள் இந் நூலின் மூலம் தமது சாதனங்களை உலகமெலாம் பரவும் சந் தோசத்தில் அவர்கள் கவலைகள் ஒாளவு மறக்கக்கூடியதாக இருக் கும் என எண்ணுகிறேன். எதிர்காலத்தில் இளைஞர் இம்முயற்சி யில் ஈடுபடுவதற்கு ஒரு உந்து சக்தியாகவும் இருக்கும் என்ற நம் பிக்கையுமுனடு இந்நூல் சாதாரண மக்களும் வாசித்து விளங் கக்கூடியழுறையில் இலகு மொழிநடையில் எழுதப்பட்டுள்ளது,
இடப்பெயர்வின் போது நாடகப் படங்களை இழந்த நிலை யில் உள்ளார்கள். எனவே படங்களை இழந்தவர்களில் ஒரு சில ரின் நாடகப் படங்களை மட்டும் இந்நூலில் பிரசுரிக்கப்பட்டுள் எ7து .
எமக்கென ஒரு நாடக மரபை உருவாக்க வேண்டிய நாம் மரபுவழி நாடகங்களைச் செம்மைப்படுதகி, யப்பானியர் "க புக், நோ" அரங்குகளையும், இந்தோனிசியார் "வயாங்யையும், வங்காாளிகள் 'யாத்ராவையும்" கேராளர் கதகளியையும்" கன்னடர்" யஷகான்த்தையும் தமது நாடக மரபுகளாக மார்தட்டி

29
பெருமைப்பவேதைக் காதில் கேட்டுக்கொண்டு இருக்கின்றோம். இக்காலத்தில் தமிழர்கள் தமக்கென ஒருநாடக மரபை ஏற்படுத்த வேண்டும் என்று கூக் குரல் இட்டால் மட்டும் போதாது.
எனவே எமது தமிழ்நாடக மரபை ஏற்படுத்த இருக்கும் அச் சாணிகளான எஞ்சிய நாட்டுக் கூத்து, இசை நாடகக் கலைஞர் களை ஊக்குவிக்கும் முயற்சியில் பல கோணத்திலும் முயற்சி எடுக்க வேண்டும் என சகல மட்டத்திலுள்ளவர்களையும் கேட்டுக் கொள்கின்றேன்.
இந்நூலினை வெளியிடுவதற்கான தகவல்களைத் தந்துதவிய கலைஞர்களுக்கும், இந்நூலினை அச்சிட்டு வெளியிடும் மீனாட்சி பதிப்பகத்தினருக்கும் இந்நூலுகுக் ஆசியுரை வழங்கிய எனது மதிப் முற்ைகுரிய பேராசான், உபவேந்தர், பேராசிரியர் பொ பாலசுந்தரம் பிள்ளை அவர்களுக்கும், வெளியீட்டுரைவழங்கிய அன்பு மிகு நண் பன் கலாநிதி. சு சிவலிங்கராசா-தலைவர், தமிழ்த்துறை, யாழ். பல்கலைக்கழகம், அவர்களுக்கும், அறிமு கரை வழங்கிய வைத்திய கலாநிதி வை. தியாகராசா அவர்களுக்கும் நூல்வடிவில் அமைக்க தட்டச்சில் பொறித்து தவிய செல்வி சசிரேகா பஞ்சலிங்கத்திற்கும் இந்நூல் வெளிவா உதவிய ஏனைய நண்பர்களுக்கும் எனது நன்றி யைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
SA
செல்லையா மெற்றாஸ்மயில்
பி. ஏ. சிறப்பு இலங்கை
SeL00J0Le0L000LLeLeeLeeLJJLL00LLLJLeLJLLLYJLLesL0LeLeLeLLLLLLeLLseeL దిరిeeరిడి424
Α - 8 காணிக்கை 8 { Ο
ஈழத்தில் இசைநாடக, நாட்டுக்கூத்து, கிரா
8 மியக் கலை வளர்ச்சிக்கு, தம்மை அப்ப்பணித்து,
* காற்றோடு தென்றல் காற்றாக எம்முடன் கலந்து,
ற3றாடு மதனற () )
இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும், அமரத் 8
- - - .కి - م۔ ۔ ۔ --
$ துவம் அடைந்த கலைஞர்களுக்கு இந் நூலினை
காணிக்கையாகச் சமர்ப்பிக்கின்றேன்.
' සප්තපcoඑසෙපළුතපෙළුනෙෆෙරෙස්ෙග් පෙළුනපතතථපනංපශපෙර $5

Page 17
30
பாரம்பரிய கலைகள் மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர்
வைத்திய கலாநிதி வை. தியாகராசாவின்
«ө%A) D|Sл
இந்நூலாசிரியர் நண்பர் Q( 9° 6ת: (ס2 ע( uזח மெற்றாஸ்மயில் (முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் 1945 ம் ஆண்டு பிறந்தவர். இவர் புதுக்குடியிருப்பு மாக வித்தியாலயத்தில் கல்வி கற்று க: பொ" த. க. (சா. ப ) யில் சித்திய `டந்தபின், யாழ்ப்பாணம் புத்தூர் சோமஸ் கந்தாக் கல்லூரியில் உயர்தர வகுப்பு படித்து 1965 ம் ஆண்டு கொழும்பு 11ல் கலைக் கழகப் சென்றவர். பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண் 14 ருக்கும் காலத்தில், புதுச் குடியிருட்பு சமூக கலாசார முன்னேற்றக் கழகத்தின் தலைவராக விளங்கி, பல நாடகப் போட்டிகளை நடாத்தி நாட்டார் வழக்கியலிற்குப் புத்துயிர் வழங்கும் முயற்சியிலீடுபட்டார்.
1966 ம் ஆண்டு இலங்கை அரசாங்க எழுதுவினைஞர் சேவைப் போட்டிப் பரீட்சையில் முதற் தொகுதியில் சித்தியடைந்தார். இத னால் பல்கலைக் கழகப்படிப்பை இடைநிறுக்தி எழுது வினைஞராக நியமனத்தை ஏற்று கடமை புரிந்தார். இவர் எழுதுவினைஞராக, மாத்தறைக் கச்சேரி, கொழும்பு தேசிய வீடமைப்புத் திணைக்களம், கண்டி தேசிய வீடமைப்புத் திணைக்களம், பேராதனை விவசாயத் திணைக்களம், யாழ் கல்வித்திணைக்களங்களில் கடமைாாற்றினார். 1983 ம் ஆண்டு முல்லைத்தீவு கல்வித் திணைக்களத்தில் பிரதம எழுது வினை யராக கடமையேற்று, பின் நிர்வாக உத்தியோகத்தராக கட ை யாற்றினார். 1992 ம் ஆண்டு யாழ்ப்பாணக் கோட்டக் கல்விக் காரியாலயத்திற்கு இடமாற்றம் பெற்று பதவிநிலை உத்தியோகத் தராக கடமையாற்றியபின், வேலனைக் கோட்டக் கல்விக் காரியாலயத்திலும் யாழ்ப்பாணம், நல்லூர், வேலனை, ஊர்காவற்துறைக் கோட்டங் களின் ஒன்றிணைக்கப்பட்ட கt ரியாலயத்திலும் பதவிநிலை உத்தி யோகத்தராகக் கடமையாற்றிய பின், தற்பொழுது தீவக வலயக் கல்விக் காரியாலயத்தில் நிர்வாக உத்தியோகத் தராக கடமையாற்று ன்ெறார்.

3.
நண்பர் மெற்றாஸ்மயில், தனது கடமைகளை திறம்படச் செய் யும், ஆளுமை நிறைந்த சிறந்த நிர்வாகியாவார். இவர் நல்ல ஒழுங் கமைப்பாளர். இவர் கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணத்தில் எழுது வினைஞராக கடமையாற்றிய காலத்தில் "கோடீஸ்வரன்’ தலமை யிலான அரசாங்க எழுதுவினைஞர் சங்கத்தின் மத்திய செயற்குழு உறுப்பினராகவும், உதவிச் செயலாளராகவும், யாழ் மாவட்டச் செய லாளரரகவும் பதவி வகித்து தன்னை தொழிற் சங்கப்பணியில் ஈடு படுத்திய தொழிற்சங்க வாதியுமாவார்.
கண்டியில் கடமையாற்றிய காலத்தில் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் தன்னை வெணிவாரி மாணவனாக பதிவு செய்து, புவியி யலை விசேட பாடமாகக் கற்று வெளிவாரியாகப் பரீட்சை எடுத்து இலங்சையில் முதல் முதலாக 2-ம் வகுப்பில் சித்தியடைந்த சாதனை இவருக்குரியதாகும். இவர் புவியியற் சிறப்புப் பட்டதாரியாகியபின், அப்பொழுது வாழ்ந்து கொண்டிருந்த கண்டிப் பிரதேச ஏழை மாண வர் கல்வி நிலையை உயர்த்துவதற்காக, பேராசிரியர் சு. வித்தியானந் தனைத் தலைவராகக் கொண்டு நண்பர் மெற்றாஸ்மயில் செயலாள ளராகவும் பதவி வகித்து 'இலவச வகுப்புக்களை" சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் பல ஆசிரியர் மூலம், சுமார் 3 ஆண்டுகளுக்கு மேலாக ஏழை மாணவர்களுக்கு கல்வி கற்க உதவி செய்தார். இத்து துடன் நின்றுவிடாது கலாசார விழாக்களை ஒழுங்குசெய்து கலாசார எழுச்சியை ஏற்படுத்த பங்கு கொண்டார்.
1978 ம் ஆண்டு, நல்லூரில் திருமணம் செய்துகொண்ட இவர், தான் பிறந்த வன்னி நாட்டின் மரபு வழி இலங்கியங்கள், கலைகள் வரலாற்றை அழிந்து செல்லும் நிலையிலிருந்து காப்பாற்றப்படவேண் டும் என்ற உணர்வினால், சிதிலமான ஏடுகளில் இருந்த நாட்டார் பாடல்களை சேகரித்து, ஒழுங்குபடுத்தி 'வன்னிவள நாட்டார் பாடல்" என்னும் நூலுருவில் வெளியிட்டு இருந்தார் இந்நூல் வெளிவர அவர் எடுத்த முயற்சியை இன்னும் தமிழ்கூறும் நல்லுலகம் போற் றிக் கொண்டிருப்பதை என்னால் அறியக் கூடியதாகவுள்ளது.
1983-ம் ஆண்டிலிருந்து முல்லைத்தீவில் கடமையாற்றிய காலத் தில், அங்குள்ள கிராமங்களில் ஆடப்படும் கோவலன் கூத்தை கண்டு களித்து, ரசித்த இவர் இக்கூத்தின் சிறப்பை, ஆட்டமுறையை, வெளி யிடங்களிலும் மேடையேற்ற வேண்டுமென அவர் எண்ணினார். தனது 45 வது வயதில் இக்கூத்து ஆட்டமுற மைகளை "அண்ணாவியர்' ஒருவரிடம் கற்று கூத்தை பழகியதுடன், ஏனைய நடிகர்களாக ஆசி சியர்கள், ஆசிரியைகள், அதிகாரிகள் பலரை சேர்த்து தானே தயா சித்து, அவர்களுக்கும் அண்ணாவியார் மூலம் கூத்தைப் பழக்கி, மேடையேற்றி, முல்லைதீவு மாவட்ட மக்களின் ஏகோபித்த பாராட்

Page 18
32
டைப் பெற்றார். கொழும்பு ரூபவாகினியிலும் ஒளிப்பதிவு செய்யப் பட்டதுடன், பல அன்றைய தமிழ் அமைச்சர்களினாலும் பாராட் டப்பட்டார்.
1992-ம் ஆண்டு யாழ்ப்பாணம் இடமாற்றம் பெற்ற பின், யாழ்ப்பாணத்திலுள்ள ஆசிரியர், ஆசிரியைகளையும், முல்லைத்தீவி லுள்ள ஆசிரியர்கள், ஆசிரியைகளையும் இணைத்து, கோவலன் கூத்தை முக்கியபாத்திரத்தை ஏற்று தனது நெறியாள் கையாலும், தயாரிப் பாலும், மேடையேற்றி யாழ் மக்களின் ஏகோபித்த பாராட்டைப் பெற்றார்.
யாழ்ப்பாணத்தில் இக்கூத்து மேடையேற்றியபின், யாழ்ப்பாணத் ல்ெ ஆடப்படும் கூத்துக்களில் ஆட்டங்கள் கூடுதலாக இடம் பெறத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
இவர் பிறந்த வன்னி மண்ணின் வீரவரலாறான, ஆனையைக் கட்டிய அரியாத்தையின் வரலாற்றை ஆய்வு செய்து, இலக்கியத்தில் அவ்வரலாறு பெறும் சிறப்பை வெளி உலகுக்கு கொண்டு வரும் வகையில் "ஆனையை அடக்கிய அரியாத்தை" என்னும் நூலை எழுதி 1994-ல் நூலுருவில் வெளியிட்டார்
யாழ்ப்பாணத்தில் அழிந்து செல்லும் கிராமியக் கலைகள் பாது காக்கப்பட வேண்டும் என அசையாத நிலைப்பாடு கொண்ட இவர் கட்டுவன் ‘குருசாமி அண்ணாவியாரிடம் ஒயிலாட்டம் கலையைக் கற்று 1994-ம் ஆண்டு மேடையேற்றி பலரினதும் பாராட்டைப் பெற்றார்.
யாழ்ப்பாணம் புனித மரியாள் கல்லூரி மாணவ, மாணவி களுக்கு பழக்கிய காத்தவராயன் சிந்து நாடகக்கூத்து யாழ்ப்பாண மாவட்ட தமிழ்த்தினப் போட்டியில் முதலிடம் பெற்றது இவரின் கலை ஆழத்தை எடுத்துக் காட்டுகின்றது
இடம் பெயர்ந்தபின் யாழ்ப்பாணம் மீளவும் வந்து சேர்ந்த பின் வேழம் படுத்த வீராங்களை என்னும் நாட்டுக் கூத்தைப் பழக்கி, தயாரித்து, தானும் அரசன் பாத்திரமேற்று நடித்து, பலருடைய பாராட்டுக்களைப் பெற்றதுடன் ஒருவருடத்திற்குள் யாழ் மாவட்டத் தில் 23 மேடைகள் வெற்றிகரமாக மேடை ஏறி வெள்ளி விழா ஓரிரு மாதங்களில் கொண்டாடும் நாட்களை எட்டி நிற்கின்றது.
தனது 53 வது வயதில் இசை நாடகத்துறையில் பிரவேசித்து 'சத்தியவான் சாவித்திரி' நாடகத்தில் சத்தியவானாக நடிக கலா மணி வ. செல்வரத்தினம் (அரியாலை) கலாவினே தன் சின்னமணி ஆகியோருடன் சேர்ந்து நடித்துப் பாராட்டுதலைப் பெற்றுள்ளார்.

83
எனவே தனது இாத் தத்திலேயே ஊறிய கிராமிய உணர்வு களின்பின்னணியில் பாரம்பரிய கலைகளை, பாதுகாக்க வேண்டிய முயற்சியாலும், அக்கலைஞர்களை ஊக்குவிக்க வேண்டும் என்ற முயற்சி யாலும், பாரம்பரிய கலைகள் மேம்பாட்டுக் கழகம் என்ற அமைப்பை அமைத்து அதன் செயலாளராகப் பணிபுரிந்து வருகின்றார்.
நூலாசிரியர் வன்னியின் மைந்தனாக இருந்தாலும், தான் வாழும் கடமை புரியும் பிரதேசங்களில், அவ் அப் பிரதேசத்தின் மைந் தனக தன்னை எண்ணிகலைப்பணி, சமூகப்பணி செய்வது இவருடைய சிறந்த நல்லெண்ணத்தைக் காட்டுவனவாகும்.
எனவே இவரைப்பற்றி செங்கை ஆழியான் கூறுவது போல பிரதேசக்கூத்து மரபினைப் பேணுவதற்காக, மூலத்தை முளிபடாது சுருக்கியும், அமுத்தியும் இவரால் மேடையேற்றப்பட்ட நாட்டுக் கூத்துக்கள் இவரை ஈழமக்கள் ஆழமாகப் பார்க்க வைத்துள்ளன. இவர் சிறந்த நாட்டுக்கூத்து இசை நாடக நடிகர், ஆய்வாளர், கிராமியக்கலைஞர், நிர்வாக தெளிவான சிந்தனையும், ஞானமும், பிரத்தியோக தனித்திறமையும், இவரை முழுமையான கலைஞனாக உருவாக்கியுள்ளது.
தமது வாழ்வில் பெரும் பகுதியை கலைக்காக அர்ப்பணித்து, அக்கலையைக் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டு இசைநாடக கூத் துக்கலைஞருடைய வரலாற்றை, தனது பல அர்ப்பணிப்புக்கள் மூலம் வெளிக்கொண்டு வந்து மொத்தமாக தமிழ் சமூகத்திற்கு தொண்டு செய்கிறார்.
அவர் முயற்சிகள் மேலும் வெற்றிபெற வாழ்த்துகின்றேன்.
வைத்திய கலாநிதி வை. தியாகராசா
இருபாலை. 1999-7-20

Page 19
34
(ususn) je igrīņasusteori og i
qi-17 se ugi (84,119úloģos
uosog)ņoặg)ơi ųjfgysoro uso Įıs@ąogi quaesun ņđfilm Joostcoasrisg) są90,9 ĝ-s @9國奧匈99n
寸T o £I *ZI * H I *01 * 6 *8
(bazı reso) (so) (87) uson-ins Inırısı Eog) 119trofıņQsąooĚC) iņu riņŲosti legs £ 4月98949阅B (Útgs sūqitus , ses Iīsā leséggoso)
qızı ıse ılgı (fium
1,9% hoŲUı Įos melo) foĝ90 yı
- Oi e N u No N
 

பொருளடக்கம்
S5
வரலாறாகும் மூத்த கலைஞர்களின் விபரம்
பிரதேச செயலர் பிரிவின்படி
யாழ்ப்பாணம்
திரு. திரு. திரு. திரு. திரு. திரு. திரு.
நல்லூர்
திரு. திரு. திரு. திரு. திரு.
Gassmrunruiu
திரு. திரு. திரு.
உடுவில்
திரு.
வின்சன் டீ போல் - நாவாந்துறை மலக்கியார் சுவமிநாதர் - குருநகர் பஸ்தியாம்பிள்ளை ஜேக்கப் (அல்பிரட்) - பாசையூர் அ. பாலதாஸ் - பாசையூர் ஆசீர்வாதம் மரியதாஸ் - குருநகர் வேக்மன் ஜெயராசா - கொழும்புத்துறை ம. பொ. தைரியநாதன் - யாழ்ப்பாணம்
நா. சின்னத்துரை - அரியாலை கதிர்காமு இரத்தினம் - அரியாலை வி. ரி. செல்வராகா - அரியாலை கா, மதியாபரணம் - அரியாலை வ செல்வரெத்தினம் (செல்வம்) - அரியாலை
இராமன் மார்க்கண்டு - அச்சுவேலி க. நா. கணபதிப்பிள்ளை (சின்னமணி) . அச்சுவேலி வே. சிதம்பரநாதன் - நீர்வேலி
வே. சரவணமுத்து - இணுவில்
திருமதி சந்திரா சரவணமுத்து - இணுவில்
சண்டிலிப்பாய்
திரு.
சங்கானை
திரு.
வி. என். செல்வராசா = சண்டிலிப்பாய்
அ. முருகவேள் - வட்டுக்கோட்டை
பக்கம்
4.
7
10
3
16
19
22
24
27
30
32
35
39
73
46
48
51
6.

Page 20
தெள்ளிப்பளை
ஒரு க. உருத்திரபதி - தெல்விப்பளை
வடமராட்சி (கீ பேட்டி
ilווי וה Iול, וו.!
பகுத்தித்துறை
ஒரு ஈ. இராசதுரை - மாதனை திரு. வே . டிரிங் ரப் - பே விகண் 1+ திரு. ந. திரைப்பிரமணியம் - r தள்ளி
திரு வே , நந்தகே பாவின் - பருத்தித்து 13ற
மருதங்கேணி
திரு. வயிரமுத்து ஈப்பிரமணியம் - மருதங்கே வி
முT3 கச்சேரி
திரு. சனடபன் சிவஞாாம் - ந்ைத 14
திரு. வீரகத்தியார் காபிநாதர் - மிருகவில்
3eTitlayt all'
திரு. நா. வை. விசுவலிங்கம் - நயினாதீவு
நெடுந்தீவு
திரு. ஜேமிஸ் அண்டர்கலம் - நெடுந்திவு
தளர் காவற்றுறை
1ார்காவற்று எந்) திரு மனுவல் அலெக்சாண்டர் - tெnவிஞ்சிமு1ை:1
திரு. நா. தாமோதரம்பிள்ளை - தம்பாட்1
LITT
திரு. செ. இரத்தினகுமார் - 11
磁
s
s
1
98.
1 |

பெயர் :
திரு. நீ. வின்சென் டிபோல்
முகவரி
/4/3, கடற்கரை விதி,
நாவாந்துரை.
பிறந்த திகதி ? - 05 - 1924
நாட்டுக்கூத்துக் கலைஞர்
பாடசாலையில் படிக்கும் பொழுது தனது ஒன்பதாவது வய திலேயே கலை வாழ்வில் பிரவேசித்தார். "நீத்தூஸ்" என்னும் சமய நாடகத்தில் 'சுப்ரியேல் தூதன்' பாத்திரத்தில் நடித்தார். தனது 16 வயதில் எம். கே. தியாகராசபாகவதர் நடித்த "அசோக்குமார்" படக்கதை பாடல்களை நாடகமாக அரங்கேற்றி "குணாளன்" பாத்திரத்தை நடித்தார். பாகவதரின் பாடல்களில் கவரப்பட்ட இவர் அவரது பாணியிலேயே இன்று வரை குரல்வளத்தை அமைத்து நாட்டுக்கூத்து, இசை நாடகங்கள் மூலம் பல ரசிக மக்களின் பாராட் டுக்களைப் பெற்றுள்ளார். 23 வயதில் "ஏழையின் கண்ணீர், என்னும் நாடகத்தில் பரதம் பாத்திரத்தை ஏற்று நடித்து கலை வாழ்வில் பிரகாசிக்கத் தொடங்கினார். இவரது சகோதரர் நீ. பர்னாண்டோ சிறந்த அண்னாவியாரா கையால் அவர் தனது சகோதரனின் குரல் வளம், சாரீரத்தைப் பயன்படுத்த விரும்பி புனித யுவானியா, பார்பராம்மாள் நாடகங்களில் முக்கிய இட மனித்துப் பத்துக்கு மேற்பட்ட முறைகள் மேடையேற்றப்பட்டது பவருடைய பாராட்டுக்கள் கிடைத்தன.
அவர் அப்போதைய நாட்டுக்கூத்து நிகழ்வைப் பற்றிக் குறிப்பிடுகையில் "அப்போது தாட்டுக்கூத்துக்கு பின்னணி இசை மத்தளம், கைத் தாளம், பின்பாட்டு மீட்டுமே இருந்தது. அப்போது ஆர்மோனியம் இல்லை. ஒலிபரப்பி (ஸ்பீக்கர் இல்லை. மிடற் திசை நூலில் குறிப்பிட்டபடி வாயால் மிரடரால், வயிற்றால் பெரும் குரலெடுத்துப் பாடவேண்டும். வசனமும் ராக ஓசையுடனே தான் பேசவேண்டும். பாத்திரங்களுக்கேற்ற ஆட்டமும் உண்டு: எனது சரீர வளமும் 34 சுருதிவரையாக வளர்ந்தது. நான் குறிப் பிடும் காலகட்டத்தில் கரையோரப்பகுதி கிறீஸ்தவ மக்களே நாட்டுக்

Page 21
2 மூத்த கலைஞர்கள் வரலாறு
கூத்தின் புகழேணியில் இருந்தவர். இவர்களில் மிகத்திறமையான ஒரு கலைஞர் இயக்குனர், காலஞ்சென்ற திரு. பூந்தான் யோசேப்பு அவர்கள் . நான் நடித்த நாடகங்களை இவர் பார்த்துள்ளார். என்னைச் சந்தித்து தனது நெறியாள்கையில் இயங்கும் நவரசக் கலா மன்றத்தில் இணையும்படி அழைத்தார். ம. யோசேப்பு அவர்கள்தான் என்னன நாட்டுக்கூத்தில் சற்று மேன்மையடையச் செய்தவர்." என்றார். பூந்தான் யோசேப்பின் நவரசக் கலா மன்றத்தில் இணைந்து அவரது நெறியாள்கையில் தேவசகாயன், ஜெனோவா, சங்கிலியன், கருங்குயில், குன்றக்கோவை, மனம்போல் மாங்கல்யம், சவேரியார் போன்ற நாட்டுக்கூத்தில் பிரதான பாத்திர மேற்று நடித்துள்ளார். இந்நாடகங்களை இவர்கள் மாலை 8 மணி தொடங்கி அடுத்த நாள் காலை 6 மணி வரை நடத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந் நாட்டுக்கூத்துக்களும், இசை நாடகங்களான ஞானசவுந்தரி, புதுவாழ்வு ஆகிய இசை நாடகங்களையும் சுமார் 90க்கு மேற்பட்டமுறை மேடையேற்றியுள்ளார்.
இவர் பலாலி, மயிலிட்டி, தாளையடி, நாவாந்துறை, சுண்டிக்குழி, அல்லைப்பிட்டி முதலான இடங்களில் யூவானியார், தேவசகாயன், அரிச்சந்திரன், தானியேல், ஏழையின் கண்ணீர், நீக்கிலாஸ், யூதாததேயு, வேளாங்கண்ணி, புதுவாழ்வு, பாவிகளைத் தேடி, ஞானசவுந்தரி ( இசை ) ஆகிய நாட்டுக்கூத்து, இசை நாடகங்களைப் பழக்கி நெறியாள்கை செய்து பல கலைஞர்களை
உருவாக்கியவர்.
எழுதிய நாட்டுக்கூத்து, இசை நாடகங்கள் :
1 : தானியேல் 2. யூதாததேயு 3. பிரான்சீஸ் அசீஸ் 4. சத்தியவான் சாவித்திரி 5. நாய் குதிரை மனிதன் 6. இலங்கையர்கோன் 7. அருளானந்தர் 8. நீக்கிளஸ் 9. வேளாங்கண்ணி 10. புது வாழ்வு 11. புனித பேதுரு 12. பாலைவனத்தில் சவுல் 13. சாம்ராச்சியமன்னன் 14. பாவிகளைத் தேடி
15. குழந்தை யேசுவின் பிறப்பு 16. மோசே 17. புனித சின்னப்பர்.
என்பவற்றுடன் நினைவுக்கு எட்டாதவைகளுமாகும். இந் நாடகங்களில் தானியேல் , ஞானசவுந்தரி, யூதாததேயு, நீக்கிலஸ், வேளாங்கண்ணி, புதுவாழ்வு, பாவிகளைத்தேடி, ஆகிய நாட்டுக் கூத்துக்களே மேடையேற்றப்பட்டனவாகும். இந் நாட்டுக்கூத்து

செல்லையா மெற்றாஸ்மயில் 3.
அண்ணாவியாருக்கு நவரசக்கலாமன்றத்தால் "எழிலிசைக் கலைஞன்” என்ற பட்டமும், குழந்தைக்கவிஞர் சத்தியசீலனால் "இசைநம்பி" என்ற பட்டமும் வழங்கிக் கெளரவிக்கப்பட்டவர். முல்லைக்கவி, திருமறைக் கலாமன்றம் ஆகியவர்கள் பொன்னாடை போர்த்துக் கெளரவித்தார்கள்.
இன்று வயதாகியும் பாடசாலை மாணவர்கள், இளைஞர்களுக்கு நாட்டுக்கூத்தினை பழக்கி மேடையேற்றிக் கொண்டு இருக்கிறார்.
அவர் பணி தொடர அவருக்கு நல்ல ஆயுள் கிடைக்க இறை வனைப் பிரார்த்தித்து, அவர் பணியை வாழ்த்துகின்றேன்

Page 22
Gvu di : திரு. மலக்கியார் .
சுவாமிநாதர்
முகவரி
2. சென்ஜேம்ஸ் மகாவித்தியாலய விதி,
பிறந்த திகதி
நாட்டுக்கூத்துக் கலைஞர்
WW - (? - 934
குருநகரை பிறப்பிடமாகக் கொண்ட மலக்கியார் விாமிநாதர் 3-ம் வகுப்புவரை கல்வி பயின்றவராவார். அண்ாைவிதுருசு இவருக்கு அளக்கமளித்தார். இவர் அண்ணாவியார்
மனுவல் இளையப்பா , அண்ணாவியார் பக்கிரி சி அண்ணாவிமார்களிடம் நாட்டுக்கூத்தைக்
இவருடைய பேரன்
ன்னத்துரை ஆகிய சிற்றுக் கொண்டரர்
மிகவும் குரல்வளம் மிக்க நடிகராவார். ஒலிபரப்பு கருவியில்லாமல் பாடிய காலத்தில் படித்துப் பழகியவர்களில் ஒருவி'Ti Tர் .
இவர் நடித்த நாட்டுக் கூத்துக்களின் பெயர்கள்
. அக்கினேக கன்னி 2. தேவசகாயம்பிள்ளை .ே நவீனக பத்திரா
s ஞான சீலி
எஸ்தாக்கியார்
齿 கருங்குயில் குன்றத்துக் கொலை
அத்தோரிையார் 8 மெய்காப்போன்தன்கடமை 9 . சங்கிகளின் 10. வரதமனோகரி 11. தொண்டி
I , போருக்குப்பின் 13 , οι Γιαπίδυσή 14 வேவங்கன்னி 13. மனம்போல் மாங்கல்யம் I fi. Lëri; Trafit
卫岛卓置
57
T盟了当
7
구 5
"5
I ፵ 8É
I }
I }
I E E}}
1 Կ Ալ}
கீதா நTuதி நிTபகன் நாயகி தாயகி தாயகி வில்லி
g 65Fי_שת" לזן זחלה,#. நTயகன் நாகன் у ти . 8. நாயகன் தTபகன் அதிகாரி நாகத்
 

செல்லையா மெற்றாஸ்மயில்
பழக்கிய நாட்டுக் கூத்துக்கள்
1. ஜெனோவா 2. அக்கினேசுகன்னி
3. சுபத்திரா 4. கருங்குயில் குன்றத்துக் கொலை
5. எஸ்தாக்கியார் 6. போருக்குப்பின்
7. தொண்டி 8. ஞானசீலி
9. கண்டியரசன் 10. மரிசிலியன் 11. துன்பத்தின் பின் 12. வாழ்க்கைப்புயல் 13. வீரமாதேவி 14. புரட்சித்துறவி 15. படைவெட்டு 16. பங்கிராசா
17. அமலமரித்தியாகிகள் 18, யூதகுமாரன்
இவர் மாதகல், மாரிசன்கூடல், பருத்தித்துறை, முல்லைத்தீவு, செம்பியன் பற்று, மணற்காடு, குடத்தனை, கட்டக்காடு, வெற்றி வைக்கேணி, ஆகிய இடங்களில் கூத்துப் பழக்கி மேடையேற்றி புள்ளார்.
முதன்முதல் 1984-ம் ஆண்டு குருநகரில் "வாழ்க்கைப்புயல்' என்னும் நாட்டுக்கூத்தை பெண்பிள்ளைகளுக்கு பழக்கி மேடை யேற்றியவராவார்.
அண்ணாவியார் பல இடங்களிலும் தானும் நடித்து, பல இடங்களில் கூத்துப் பழக்கி கலைபணி செய்துள்ளார்.இவர் தாளம் போடும் திறமையும், பின்னணி பாடக்கூடிய திறமையும் கொண் டுள்ளார். தனது குடும்பத்தில் ஏற்பட்ட உயிர் இழப்பின் #Triór மாக 1990-ம் ஆண்டுக்குப்பின் கலைப்பணியாற்றுவதை கைவிட்டு விட்டார்.
நாட்டுக்கூத்தைப் பாடும் பொழுது அண்ணாவிமார்கள் மூல இசையுடன் பாடுவதும், சற்று கர்நாடக சாயல் கலந்த இசைகலந்து பாடுவதும் உண்டு. பெரும் பாண்மை அண்ணாவிமார்கள் இசை கலப்பதை விரும்புவதில்லை. ஆனால் இவர் இசைகலந்து பாடுவ தையே விரும்புகின்றார்.
இவர் தனது அனுபவங்களைக் கூறும்பொழுது இரண்டு முக்கிய விடயங்களைக் கூறியுள்ளார்.
1) நாட்டுக்கூத்து 1940 அளவில் குருநகரில் நீண்டமேடையில் அதாவது 18 அடி மேடையிலும், 85 அடி மேடையிலும் 2 பிரிவாக மேடை அமைத்து ஆடப்பட்டதாகக் கூறுகிறார்:

Page 23
மூத்த கலைஞர்கள் வரலாறு
2) 1957-ம் ஆண்டு "மீகாமன்' ஆட்ட நாட்டுக்கூத்து கரை ஊரில் ஆடப்பட்டதாகவும், கரப்பு உடுப்பு, கெருடம் வைத்து வட்டக் களரியில் இக்கூத்து ஆடப்பட்டதாகவும் கூறுகிறார்.
இவ்வாறான அனுபவமும், ஆற்றலும், வளமுமுடைய இக்கலைகு குக்கு வாழ்க்கையில் ஏற்பட்ட, குடும்பத்தில் ஏற்பட்ட துன்பத்தில் பங்குகொண்டு அவர் செய்த பணியை மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டு அவர் கலைப்பணிக்கு செய்த சேவைக்கு நன்றியை தெரிவிப்போம் .
 

Glyceu di :
திரு. வஸ்தியாம்பிள்ளை .
ஜேக்கப் (அல்பிரட்)
முகவரி:
15/2, சென். அன்ரனிஸ் விதி, பாஷையூர், யாழ்ப்பாணம்.
பிறந்த திகதி 07 - 2 - 1939
நாட்டுக் கூத்துக் கலைஞர்
1953-ம் ஆண்டு முதல் கலைத்துறையில் தம்மை #t ஆண்டு களாக இனனத்துக் கொண்ட இவரது அறுபவங்கிளில் நாட்டுக் கூத்து, தாடகம், இசை நாடகம் முதல் மிருதங்கவாத்தியம் வாசிப்பதிலும் பல பாத்திரங்களில் தன்னை வெளிப்படுத்தியதுடன் புதியவர்களைக் கொண்டு பல நாடகங்களை, நாட்டுக்கூத்துக் சுனையும் அரங்கேற்றுவதில் முன்நின்றமை /ம் கலைத்துறைக்கு செப்த பெரிய சேவையாகும்.
திரு. அல்பிரட் அவர்கள் அண்ணாளியார் பர ம்பரையைச் சேர்த்தவர் இவருடைய தகப்பனார் ஞானப்பு - வஸ்தியாம்பிள்ளை சிறந்த நாடறிந்த அண்ணாவியாராவார். இவருடைய வழித் தோன்றவாக அல்பிரட் தனது 13-வது வயதிலேயே புனிதவதி நாட்டுக்கடத்தில் நடித்து நாட்டுக்கூத்துக் கலையை வளர்த்தெடுக்கும் பங்ணிக ஆரம்பித்தவராவார் .
நாட்டுக்கூத்தில் 6 கட்டை சுருதியில் வீரம், காதல் பாட்டுக் களைப் பாடக்கூடிய குரல்வளம் கொண்டவர்.
கண்டியரசன் நாட்டுக்கத்தின் அரசன் பாத்திரத்தை ஏற்று நடித்து பெரிதும் பாராட்டுப் பெற்றவர். ஏறத்தாள 1000 மேடைக்கு மேல் நாட்டுக்கூத்தினன நடித்த சு லைஞராவார்.
நடித்த தாடகங்கள், நாட்டுக் கூத்துக்களும் பாத்திரங்களும்:
1. புனிதவதி - அரசன், துற்குனன் 2. வித்தியானந்தன் - வித்தியானந்தன் 3. ஞானசவுந்தரி - பிலேந்திரன் 卓 கண்டி அரசன் - கண்டியரசன்

Page 24
O.
I
I.
If.
.
I 6.
I 규’,
S.
[),
& I。
翌岛。 3. &4。
盟品。
.
?",
.
3.
.
.
32.
韶、。
3 մ.
மூத்த கலைஞர்கள் வரலாறு
சந்தியோமையர் - பாகப்பர் வீரத்தளபதி - வீரத்தளபதி சற்குணானந்தன் - கதன் அந்தோனியார் - லெவ்வை கவாவதி - சீசன் சகோதர பாசம் - கள்ளன் கிளிபோ பெற்றா - யூலியசீசர் போ சவ்வாஸ் - யோசவ்வாஸ் கனகசபை - கொர்னல் சங்கிலிபன் - சங்கிவியன் இம்மனுவல் - இம்மனுவல் பண்டாரவன்னியன் - பண்டாரவன்னியன் யூலியசீசர் - யூலியசீசர் சவேரியார் - சவேரியார் பவுலினப்பர் - பவுலினப்பர் செனகப்பு - அரசன் தேவசகாயம்பிள்ளை - அரசன் அதிகாரி கற்பலக்காரன் - அரசன் விசயமனோகரன் - விசயமனோகரன் தியாகராகம் - தளபதி மயானகாண்டம் - அரசன் சஞ்சுவான் - அருளப்பர் படைவெட்டு - சந்தியோமையர் செந்தூது - யாகப்பர் மனோகரா - மனோகரன் மரியகொநற்றி - அரசன் மனம்போல் மாங்கல்யம் - வேடன் போகு - த ஃபன் செபஸ்தியார் - அதிகாரி எஸ்தாக்கியர் - கப்பல்காரன் பூதத்தம்பி - பூதத்தம்பி
இசை நாடகங்கள்
பத்துக்கட்டளை - மோசேஸ் சங்கிவியன் - தளபதி வளையாபதி - புலவர் ஞானசவுந்தரி - சிமியோன் தங்கையின் காதலன் - தகப்பன் விதி - அரசின் யேசுவின் திருப்பாடுகள் - செத்தாரியன்

"வீரபாண்டிய கட்டபொம்மன்’ நாட்டுக்கூத்தில் வீர பாண்டிய கட்டபொம்மனாக
"எழிலிசைமன்னன்" வ. ஜேக்கப் (அல்பிரட்)

Page 25

செல்லையா - மெற்றாஸ்மயில் 9
இயக்குனராக நெறியாள்கை செய்த நாடகங்கள் நாட்டுக்கூத்துக்கள்
1. புனிதவதி 10. எஸ்தாக்கியர் 2. ஞானசவுந்தரி 11. படைவெட்டு 3. கிளியோ பெற்றா 12. சங்கிலியன் 4. வீரபாண்டிய கட்டப்பொம்மன் 13. கனகசபை
5. சஞ்சுவான் 14. பந்த பாசம் 6. பண்டார வன்னியன் 15. சஞ்சுவான் 7. பிரான்சிஸ் அசிசியார் 16. அருளானந்தம் 8. கண்டியரசன் 17. பத்திரிசியார்
இவரது கலைப்பணியை கெளரவித்து அளித்த பட்டங்கள்:
ஆயர் தியோ குப்பிள்ளையினால் "" தேசியக் கலைவேந்தன் ?? என்ற பட்டம் சூட்டி கெளரவிக்கப்பட்டார்.
1977-06-22ல் தேவசகாயம்பிள்ளை நாடகத்தில் அதிகாரியாக நடித்ததைக் கெளரவித்து " " நாடக மாமன்னர் ” பட்டம் வண. பிதா குலாஸ் அடிகளால் கொய்யாத்தோட்ட கிறிஸ்து அரசர் முன்றலில் அளிக்கப்பட்டது.
1990-02.10-ல் வீரபாண்டிய கட்டப்பொம்மன் மன்னனாக நடித்ததை பாராட்டி பேராசிரியர் யுகபாலசிங்கம் அவர்களால் ஈச்சமோட்டை ச. ச. நிலைய முன்றலில் பொன்னாடை போர்த்தி கெளரவித்து " " எழிலிசை மன்னன் ' என்னும் பட்டம் சூட்டப் till-l-gil.
1993-ல் திருமறைக் கலாமன்றம் அண்ணாவிமார்களைக் கெளரவித்த மன்ற இயக்குனர் வண. பிதா. மரியசேவியர் பொன் னாடை போர்த்தி கெளரவித்தார்.
* கலைப்பணியில் யாழ். திருமறைக் கலா மன்றத்தில் நாட்டுக் கூத்து, இசை நாடகங்கள் பழக்குவதிலும், மிருதங்கம் வாசிப்பதி லும் பங்களிப்பு செய்ததுடன், பல பாடசாலைகள் கிராமங்கள், பாடசாலை மன்றங்களில் நாடகம் பழக்குவதிலும் இலங்கை வானொலி, ரூபவாகினியிலும் பலகலை அரங்குகளிலும் தன் கலைச் சிறப்பினை வெளிப்படுத்தி மக்களின் பாராட்டைப் பெற்றதுடன் ஈழத்து பாரம்பரிய கலை வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி வருவது குறிப்பிடத்தக்கது. பாரம்பரிய கலைகள் மேம்பாட்டுக் கழகத்தில் நாட்டுக்கூத்து நிரந்தர மிருதங்க வித்துவானாக கடமையாற்று கிறார். இவருடைய கலைப்பணி தொடர எமது வாழ்த்துக்கள்.

Page 26
பெயர் :
திரு. அ. பாலதாஸ்
முகவரி :
W?' கடற்கரை விதி, பாஷையூர்,
பிரத்த திகதி : 2க் - 0 - 1940
நாட்டுக்கூத்துக் கலைஞர்
திரு பாவதான் அவர்களின் கலைப் பிரவேசமானது "கண்டி அரசன்" நாடகத்தில் குமாரியாமினியின் பிள்ளைகளில் ஒருவராக நடிப்புடன் எட்டு வயதில் ஆரம்பமாகியது. இவர் நாட்டுக்கூத்து, இசைநாடகத்துறையில் நடித்து, தயாரித்து, நெறியாள்கை செய்து தமது பங்களிப்பை அளித்து வருகின்ற ஒரு சிறந்த அண்ணாவியார் ஆவார். இவருடைய ஆரம்ப குரு அண்ணாவியார் தியோ இராசேந்திரர் அவர்களாகும். இவருடைய உபதேசம் தாட்டுக் கூத்திலும், இசைநாடகத்திலும் ஈடுபட வைத்தது. இவரிடம் தாளம், இராகம், என்பவற்றை முறையாகக் கற்றுக் கொண்டார்.
தனது இளமைப் பருவத்தை கனவுத்துறையில் ஈடுபடுத்திய இவர், ஆர்மோனியம் வாசிப்பதை 1981-ம் ஆண்டில் கொழும்புத் துறை மரியாம்பிள்ளை ஆர்மோனிய சக்கரவர்த்தியிடம் முறையாகக் கற்றுக் கொண்டார். இதனால் நாட்டுக்கூத்து, இசைநாடகம் என்பவற்றில் சிறப்பாக வாசிக்கும் ஆர்டோ விட வித்துவானாகவும் இருக்கிறார். அத்துடன் புனித அந்தோனியார் பாடகர் குழுவி லும், பல பாடசாலைகள், திரு மீனறக்கலாமன்றம் முதலிய நிலையங் களிலும் சிறந்த ஆர்மோனிய வித்துவானாகவும் நிகழ்கிறார்.
கண்டி அரசன் நாடகத்தை பாபு. புலவர் மதுரகவி நீ பிக் கோர்சிங்கம் அவர்களிடம் நாடக எழுத்துரு வடிவங்களையும், பாடல்கள் இயற்றும் தன்மையும் நன்கு பயின்றதால் இவரும் பாடல் கன் எழுதுவதிலும், ட்ெடு அமைப்பதிலும் சிறந்தவராக விளங்கி দুয়াr TIF .
 

செல்லையா மெற்றாஸ்மயில் 直直
இவர் நடித்த நாட்டுக்கூத்து, இசை நாடகங்களும்
பாத்திரங்களும்
ஞானமூருடன் - அரசன், சிப்பாய், தோழி கட்டப்பொம்மன் - அரசன் எஸ்தாக்கியோர் = t தேவசகாயம்பிள்ளை - அரசன் பூதத்தம்பி - மகன் நீ ஒரு பாறை - நீரோ மன்னன் சங்கிலியன் - சங்கிவி மன்னன் தீர்க்கக மங்கலி - Ir I i I siiT
போன்ற வேறும் பலவாகும்.
நாட்டுக்கூத்தில் கூடுதலாக ஈடுபட்ட இவர் இசைநாடகத்துறை யில் கூடுதலான கீனெத்தைச் செலுத்தினார். அதற்கு அவர் கூறிய காரணமாவது "நடிகமணி வைரமுத்துவின் மயான காண்டம் பிரபல்யமாகிக் கொண்டிருந்த காலம் 1962-1984களில் இசைநாடகம் பெரிதும் மதிக்கப்பட்டு வைரமுத்துவின் நடிப்பும் இசையும் என்னைக் கவர்ந்தது. ஆர்மோனியம் வாசிக்கக் கற்றுக் கொண்டதால் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இசை நாடகத்தில் கால் வைத்தேன்'
என்றார்.
கண்டி அரசன் இசை நாடகத்தை இயக்கினார். கண்டி அரச னாகத் திரு. யோ. பாக்கியன் ஒத்துழைப்பு வழங்காததால் தானே 'அரசன்" பாத்திரத்தை ஏற்று நடித்து கலைக்கழக நாடகப் போட் டியில் முத்ற் பரிசு பெற்றுக்கொண்டதுடன், கலையரசு சொர்ன லிங்கத்தின் பாராட்டையும் பெற்றார். இந் நாடகம் (2000) தட வைக்குமேல் மேடையேற்றியது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் பின் இவருக்குப் புகழீட்டுக் கொடுத்த நாடகம் "நீர்க்க சுமங்கலி' இந் நாடகத்தில் 'இயமன்" பாத்திர மேற்று நடித்துள்ளார். இன்றும் மேடையேறிக்கொண்டிருக்கின்றது.
இன்று பல இளங்கலைஞர்களை உரு வி ரீ க்கு ம் பணியில் முதன்மை வகிக்கும் அண்ணாவியார் இவரேயாகும். பல பாடசா லைகளில் நாட்டுக்கூத்து, இசை நாடகங்கள் பழக்கி பல மாணவர் களை இத்துறையில் ஈடுபடுத்தியுள்ளார், ஈடுபடுத்திக்கொண்டு இருக்கிறார். பாரம்பரிய கலைகள் மேம்பாட்டுக் கழகம் தடாத்திய நாட்டுக் கூத்துப்போட்டி, இசை நாடகப் போட்டியில் பங்குபற்றிய இவரது நெறியாள்கையில் உருவான மாணவர்களின் நாடகங்கள் அனைத்தும் பரிசுகள் பெற்றுள்ளன.

Page 27
மூத்த கலைஞர்கள் வரலாறு
பாடசாலை மட்டம் )
1. வீரத்தளபதி (நாட்டுகூத்து) - இரண்டாம் பரிசு 2. விசுவாமித்திரர் சபதம் (இசை நாடகம்) - மூன்றாம் பரிசு 3. சத்தியவேள்வி (இசை நாடகம் ) - இரண்டாம் பரிசு
மன்றங்களினால் மேடையேற்றப்பட்ட நாட்டுக்கூத்துப் போட்டி யில் இவரது நெறியாள்கையில் உருவான "முத்தா மாணிக்கமா' நாட்டுக்கூத்து முதலாம் இடத்தைப்பெற்றது.
இவர் ஒரு கிறிஸ்தவன், எனவே பல கிறிஸ்தவ நாடகங்களை எழுதியும் பாடியும் மேடையேற்றியுள்ளார். அவையாவன: நீ ஒரு பாறை, அனைத்தும் அவரே, கோடியற்புதர், பிலிப்புநேரியார், பத்திரிசியார், யோசவ்வாஸ் முனிவர், யூடித் தாவீது கோவியாத் , அன்பியம் மலர்ந்தது, பியன்வெறு, ஞானப்பிரகாசியார், இட மில்லை, புரட்சியில் பூத்தயேசு, தோமஸ் அடிகளார், ஏமாந்தன் ஏரோதன் இவைகள் எல்லாம் கிறிஸ்தவ நாடகங்களே. அத்துடன் அச்சில் வராதனவையாகும். இந்நாடகங்களில் ஒரு சிலவற்றையா வது அச்சிட்டு வெளியிடமுன்வருவார்களா என்ற அவாவில் இருக் கிறார்.
இவர் தற்போது ஆற்றிவரும் பங்களிப்பால் பாடசாலைகளிலும், பல கிராமங்களிலும், புதிய பல கலைஞர்களை வெளிக்கொ0ைரும் மேன்மை செழித்து வளர ஆற்றிவரும் பணிசிறக்க வாழ்த்துகின்
繫
錢

*சத்தியவான் சாவித்திரி" இசைநாடகத்தில் இயமனாக "இசைநாடக இளங்கோ'
9H.LIrTalog5IT aü).

Page 28

பெர்
திரு. ஆசிர்வாதம் -
மரியதாஸ்
முகவரி:
சென். ரோக் ச. ச. நிலையம் யாழ்ப்பாணம்.
பிறந்த திகதி 26 - 0 - 1941
நாட்டுக் கூத்துக் கலைஞர்
குருநகரைச் சேர்ந்த ஆசீர் வாதம் தம்பதிகளின் புதல்வனாக குருநகரில் பிறந்த இவர் சிறு வயது முதலே பாரம்பரிய நாட்டுக் கூத்தின் கலைஞரானார். சிறு வயதிலேயே அப்பொழுது நாட்டுக் கூத்தில் குருநகரில் பிரபல்வம் பெற்று விளங்கிய நடையர் - னத்துரை அவர்களின் "ஆட்டு வனிகன்' என்ற நாட்டுக் கூத் தைப் பார்த்ததும் இவர் மனதிலே தானும் நாட்டுக்கூத்து நடிக்க வேண்டும் என்னும் ஆசை இவரது 9வது வயதில் நிறைவேறியது. 1950-ஆம் ஆண்டில் நாட்டுக்கூத்தினை பலவற்றை மேடையேற்று வதற்கு ஆடுகளமாக இருந்த யாழ் குருநகர் புனித ஆரோக்கிய நாதர் ஆலயத்தில் மேடையேறிய பாலசூரன் என்னும் நாடகத்தில் கட்டியக்காரன் வேடத்தில் முதன்முதலில் தோன்றி நடித்தார். அதைத்தொடர்ந்து இவர் வசாவிளாள். வடமராட்சி கிழக்கு, குடாரப்பூ, பருத்தித்துறை, கொழும்புத்துறை , நீர் வேலி, சக் கோட்டிட, அச்சுவேலி, ஊர் காவற்றுவிப் கிளிநொச்சி, விளான் போன்ற பகுதிகளில் முழுவது:ான இற்ரை வணி" 50க்கு மேற்பட்ட நாட்டுக் கூத்துக்களில் தோன்றி முந்நூறுக்கு மேற்பட்ட மேடை களைக் கண்டுள்ளார்.
இவர் தன்னுடைய குருக்களாக குருநகரைச் சேர்ந்த அண்ணாவி மார்களான வைரமுத்து அத்தோனிப்பிள்ளை (ஊசோன்) GLIrráFLT (மச்சுவாய்) சின்னத்துரை , சின்னக்கிளி ஆகியோ விர நன்றியுடன் நினைவு கூருகிறார். பல நாட்டுக் கூத்துக்களை தனது சொந்தச் செலவிலேயே மேடையேற்றியுள்ளார். 1870களின் பின்பு நாட்டுக் கூத்து வளர்ச்சியில் முன் நின்று உழைத்த அண்ணாவியார் சாமி நாதன், சுவாம்பின்ளை, ராசாத்தம்பி, பெண் அண்ணாவியார் திருமதி. திரேசம்மா, சில்லையூர் செல்வராசன், பூந்தான் யோசேப்பு, நீர்வேலி அந்தோனிப்பிள்ளை, பெலிக்கியான், அருமைத்துரை

Page 29
4 மூத்த கலைஞர்கள் வரலாறு
ஸ்ரனிஸ்லாஸ், வ. அல்பிரட், பேக்மன் ஜெயராசா, ஆகியோர் பலவற்றுடன் இணைந்து பல மேடைகளில் நடித்துள்ளார்.
இவர் பாடிய கூத்துக்களுள் பல நாட்டுக்கூத்து இரசிகர்களின் பாராட்டுதல்களைப் பெற்றுள்ளது.
இவர் நடித்த கூத்துக்களும் பாத்திரங்களும்
பாலசூரன் கட்டியன் (சேடி) பாலசூரன் முன் பாலகு ரன் சஞ்சுவன் சஞ்சுவன் மலர் மாலை அல்லது மல்லிகா குமாரன் மருதநாட்டு இளவரசி இளவரசன் உடைபடா முத்திரை அர்பரித்து செனபோன் முன் அக்காளந்தன் ராசகுமாரி ரரசகுமாரன் வரத மனோகரன் மனோகரன் கருங்குயில் குன்றத்துக் கொலை ஜெமீன்தார் மருதநாட்டு இளவரசி பின் இளவரசன் சென போன் அக்காளந்தன்
பாலசூரன் விவசார விளக்கம்
பின் பாலசூரன் பின் குமாரன்
பொன்னுரல் செபமாலை குமாரன் சென போன் சேனாதிபதி நொண்டி நாடகம் முன்ராசா செனகப்பூ தோம்பானு உடைபடா முத்திரை ஆத்தோ மனோகரன் மந்திரவாதி மனோகரன் எஸ்தரக்கியார் கப்பல்காரன் விஜய மனோகரன் விக்கிரமன் மருதநாட்டு இளவரசி பின் குமாரன் செனகப்பூ பின் மந்திரி எஸ்தாக்கியார் முன் எஸ்தாக்கியார் செனகன்னி நாடகம் குமாரன் மர்மக்கொலை வேடுவ மகன் மத்தேஸ் மவுரம்மா மத்தோன் elpaigstafft தளபதி தனிப்பாடல் நிகழ்ச்சி அரச பாடல்கள் சங்கிலியன் சங்கிலியன் சீரடிப் பிரபு பிரபு தெய்வ நீதி வேடன்

செல்லையா - மெற்றாஸ்மயில் 15
கூத்தின் பெயர் ஏற்ற பாத்திரம் சங்கிலியன் காக்கை வன்னியன் ஞானசெளந்தரி பிலேந்திரன் கருங்குயில் குன்றத்துக் கொலை பிலேந்திரன் எஸ்தாக்கியார் எஸ்தாக்கியார் தேவசகாயம்பிள்ளை 3-ம் அதிகாரி கண்டி அரசன் தளபதி பண்டாரவன்னியன் தம்பி செந்தூது அருளப்பர் தியாக ராகங்கள் வக்கீல் ஜெனோவா பின் மந்திரி நொண்டி நொண்டி
ஆரம்பத்தில் நாட்டுக்கூத்து நடிகனாக இருந்த இவர் அண்ணா வியார் ஸ்தானத்திற்கு உயர்ந்துள்ளார். சீரடி பிரபு, விஜயமனோ கரன், மருதநாட்டு இளவரசி, "ஆட்டு வணிகன், வேதத்தின் வெண் புறா, ஜெனோவா, நொண்டி நாடகம் போன்றவற்றை நெறிப் படுத்திய அண்ணாவியரானார். எஸ்தாக்கியார் நாட்டுக்கூத்தை யும், நாட்டுக் கூத்து பாடல்கள் கொண்ட தனிநிகழ்ச்சியையும், இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்திற்கும், எமது உள்ளூர் வானொலிக்கும் தயாரித்து வழங்கியுள்ளார்,
இவருடைய பயிற்றுவித்தல் காரணமாக இன்று பல இளைய தலைமுறையினரும், ஏனையோரும் நாட்டுக் கூத்து உலகில் பிர காசிக்கின்றார்கள். இவருடைய கலைச்சேவையை நினைவு கூர்ந்து யாழ் சென். றோக்ஸ் சனசமூகநிலையம், யாழ் திருமறைக் கலா மன்றம், யாழ். கிறின் கிங்ஸ் விளையாட்டுக் கழகம் ஆகியவை இவருக்கு பொன்னாடை போர்த்தி கெளரவித்துள்ளது. இன்றும் வயது போயினும் சிறந்த சரீர வளமுள்ளவர். இவர் பாடியும் நடித்தும் நாட்டுக்கூத்துக் கலைக்கு அரும் பணியாற்றி வருகின் றார். குருநகர் சென். நோக்ஸ் சனசமூக நிலையத்தின் கலைப்பணி ஸ்தாபனமான யாழ். வான்மதி கலாலயத்தின் நாட்டுக் கூத்துப் பிரிவிற்குப் பொறுப்பாகவுள்ள இவர் தொடர்ந்தும் கலைப்பணி வருகின்றார்.
இவருடைய கலைப்பணி தொடர வாழ்த்துவதுடன் தகவல்கள் பெற உதவிய குருநகர், வி. எம். ஜெறாட் அவர்களுக்கும் நன்றி யைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
Sస్తా rays

Page 30
பெயர் : திரு. வேக்மன் Сgu о пап
முகவரி :
கொழும்புத்துரை.
பிறந்த திகதி : 2 - O - 94.5
நாட்டுக்கூத்துக் கலைஞர்
யாழ்ப்பாணம் பறங்கித் தெருவைப் பிறப்பிடமாகக் கொண்ட வேக்மன் ஜெயராசா 1975-ம் ஆண்டிலிருந்து கொழும்புத்துறையில் வசித்து வருகிறார். இவர் கொழும்புத்துறை புனித GILTF LT -- சாலையில் கல்வி கற்றார். இன்று இவர் தொலைத் தொடர்புத் திணைக்களத்தில் பணிபுரியும் உத்தியோகத்தராவார்.
a f அண்ணாவியார் பரம்பரையைச் சேர்ந்தவராவார். பெரிய தகப்பனார் நாவாந்துறையைச் சேர்ந்த மரிசலினும், சிறிய தகப்பனார் சூசை மரியானும் சிறந்த அண்ணாவிமார்களாகும். இவர்களுடன் சேர்ந்து இளம் வயதில் ஒப்பாரிப் பாடல்களைப் பாடி வந்தவராவார் - 8-ம் வகுப்புப் படிக்கும்போது யுவானியார் நாடகத்தில் ஏரோலியான்' பத்திரமேற்று நடித்து 5'து குரல் வனத்தை ஒளிப்படுத்தினார். இவருடை! குரல் வளத்தைக் கண்ட நாட்டுக்கடத்து மன்னன் 'பூத்தான் யோசேப்' தனது நாட கிங் களின் சேர்த்துக்கொண்டார்
இவர் நடித்த நாடகங்களும், பாத்திரங்களும் ரங்கிவியன் - பரநிருடன் தேவசகாயம்பிள்ளை - 2-வது தேவசகாயன் ஜெனோவா - மந்திரி வானொலியிலும் இடம்பெற்றது) ாஸ்தாக்கி - எஸ்தாக்கியார் அலங்கார ரூபன் அலங்காரரூபன்
சம்போல் மாங்கல்யம் " ஒலாண்டோ மரியதாசன் - மரியதாஸ் யுவானியார் - யுவானியார் (காப்போன் கிடனியி " தமயன்
 
 
 

செல்லையா மெற்றாஸ்மயில் I7
நீ ஒரு பாறை - இராசப்பன் போகு - யோகு சோழன் - முனிவர்
இசை நாடகங்கள் சகுந்தலை - முனிவர் ஏரோதன் - முனிவர் போன்ற பல நாட்டுக்கூத்து இசை நாடகங்களை நடித்துள்ளார்
இவர் பழக்கிய நாடகங்கள்
1. பரம்போல் மாங்கல்பம் 2. எஸ்தாக்கியார் 3. தேவசகாயம்பிள்ளை * சங்கிலியன் (சில்லாலையில் பழக்கியது) 5. பூலியசீசர் (ஒட்டகப்புலத்தில் பழக்கியது) 6. கருங்குயில் குன்றத்துக் கொலை (மயிலிட்டியில் பழக்கியது) 7. மனுநீதிகண்ட சோழன் (ஆங்கில திருக்குடும்ப பாடசாலை) 8. சோழன் மகன் (ஜோண் பொஸ்கோ பாடசாலை)
இவர் நடித்த நாடகங்கள் நாவாந்துறை, பாசையூர், கொய் பாத்தோட்டம், குருநகர், ஊர்காவற்றுறை, கரம்பன், சில்லாலை, இளவாலை, மயிலிட்டி, அன் ர ரிை, அச்சுவேலி, தாளையடி, கொழும்பு, கிளிநொச்சி, வவுனியா ஆகிய பல இடங்களில் மேடை யேற்றப்பட்டன. ஐரோப்பிய நாடுகளிலும் இவர் சென்று நடித் துள்ளார்.
இவர் தனது கருத்தினைத் தெரிவிக்கும் பொழுது " " " or if 1978-ம் ஆண்டுக்கு முன்பு யாழ்ப்பானத்தில் நாட்டுக்கூத்துக்கு நல்ல மெளசு இருந்தது. ரசிகர்கள் ஏராளம் இருந்தார்கள் ஆண்ால் பொப்பிசையும், சினிமாத் தாக்கமும் இளைஞர்களை மிகவும் வேகத் தில் கவர்ந்துகொண்டதால் நாட்டுக்கூட்டுக்களை ரசிக்கும் தன்மை குறைந்து நாட்டுக் கூத்துக்களை மேடையேற்றும் பொழுது ரசிகர் கூட்டம் இல்லாத நிலை தோன்றியது.
1980-ம் ஆண்டு நாட்டுக்கூத்து மேடையேற்றியபொழுது கல் லெறியும் ஏற்பட்டது. சுல்லெறி வாங்கியவர்களில் நானும் ஒருவன். அதனால் ஒரு இடைப்பட்ட காலத்தில் நாட்டுக்கூத்தில் இளைஞர் கள் பங்குபற்றாததினால் இடைப்பட்- காலத்தில் இளங்கலைஞர் தோன்றவும் முடியவில்லை. ஆனால் இன்று அந்நிலை மாறி நாட் டுக்கூத்தின் கலைத் தன்மையை ரசித்து இளைஞர்களும் சேர்ந்து

Page 31
3 மூத்த கலைஞர்கள் வரலாறு
நாட்டுக்கூத்துக் கலை வளர்ச்சியடைந்து வருவதையிட்டு மகிழ்ச்சி யடைகின்றேன்" என்றார்.
இவரின் குரல் வனத்தை மெச்சாதவர்கள் எவரும் இல்லை. 1972-ம் ஆண்டு கனக்கர் சந்தியில் பேராயர், தியாகுப்பிள்ளை மெல்லிசை மன்னன் ' என்ற பட்டத்தை அளித்துப் பொன் னாடை போர்த்திக் கெளரவித்தார்.
1975-ம் ஆண்டு அண்ணாவியார் தியாகு இராசேந்திரம் பொன் னாடை போர்த்திக் கெளரவித்தார்.
1978-ம் ஆண்டு அருட்திரு. P. M. இம்மானுவல் அடிகளார் பொன்னாடை போர்த்திக் கெளரவித்தார்.
1993-ம் ஆண்டு திருமறைக் கலாமன்றத்தில் பேராசிரியர், சவிரிமுத்து அடிகளார் பொன்னாடை போர்த்திக் கெளரவித்தார்.
இளம் வயதையுடைய முத்தகலைஞரான வேக்மன் ஜெயராசா அண்ணாவியார் இளைய சமுதாயத்திற்குச் செய்யவேண்டிய சுலைப் பணி பல உண்டு. அவற்றையும் அவர் செய்யவேண்டும் எனக் கேட்டு, பலகாலம் வாழ வாழ்த்துகின்றேன்.
 

'நீ ஒரு பாறை" நாட்டுக்கூத்தில் இராயப்பராக "இசைக் குயில்" அருளப்பு பேக்மன், ஜெயராசா.

Page 32

பெயர் :
திரு. ம.பொ. தைரியநாதன்
முகவரி :
9. டேவிற் விதி, யாழ்ப்பாணம்.
பிரந்த திகதி 5 - 06 - 1949
இசை நாடகக் கலைஞர்
யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் பிறந்த இவர், 1981-ல் தனது 12 வது வயதில் நடிப்புத்துறையில் கால்பதித்து இசைநாடகங்கள் வாயிலாக, தன் குரல் வளத்தாலும், நடிப்புத்திறனாலும் பல அரங்குகளில் தன் திறமைகளை வெளிப்படுத்திக்கொண்டு வரும் சிறந்த கலைஞராவார்.
இவரது கலைப்பணியில் இவரது குடும்பமே இணைந்து செயல் படுவது தனிச்சிறப்பம்சமாகும். குடும்ப அங்கத்தவர்களில் வயது வந்த மூன்று ஆண் பிள்ளைகளும், வயது வந்த பெண் பிள்ளையும் சிறந்த நாட்டுக்கூத்து, இசைநாடக , நாடகக்கலைஞராக வளர்ந்து வருகிறார்கள். இவர்கள் கல்வித்துறையில் தமது உயர்வுக்காகப் படித்துக்கொண்டு இத்துறையில் ஈடுபட்டுக்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
திரு . தைரியநாதன் அவர்கள் எல்லாப் பாத்திரங்களையும் ஏற்று நடிக்கக்கூடிய வல்லுனராவார். அதன்பின் சுன்னாகம், எம். கோபால் ரத்தினம் சங்கீத ஆசிரியரிடம், சங்கீதம் கற்று, இ#ைநாட கங்கள் பலவற்றில் நடித்துள்ளார். இவரே தனது முதல் வழிகாட்டி என தைரியநாதன் நினைவுகூறுகிறார்.
சுன்னாகம் இனத்தென்றல் மன்றத்தில் பிரதான பாடகராகவும் நடிகராகவும் பிரசித்திபெற்ற திரு. தைரியநாதன் 1988-ம் ஆண்டு வன பிதா மரியசேவியர் அடிகனாரின் சீடன் வழியில் ஆதாம் ஏவாள் நாடகத்தில் "ஏவாள்' பெண் பாத்திரம் ஏற்று நடித்தார்:

Page 33
Es) செல்லையா மெற்றாஸ்மயில்
1989-ம் ஆண்டு நடிகமணி வி. வி. வைரமுத்துவின் வசந்தகான சபாவில் சிறந்த நடிகையாகத் தேர்ந்து எடுத்து தொடர்ந்து பெண் பாத்திரங்களை ஏற்று நடித்து புகழ் பெற்றார். சங்கரதாஸ் சுவாமி களின் நவரச நாடகங்களை நடிகமளி வி. வைரமுத்துவுடன் இணைந்து பெரும்பாலும் பெண் பாத்திரங்களை ஏற்று நடித் துள்ளார்.
நழகமணி வி. வி. வைரமுத்துவுடன் இணைந்து நடித்த நாடகங்களும் பாத்திரங்களும்:
அரிச்சந்திரா - சந்திரமதி பூதத்தம்பி - அழக வல்லி நல்லதங்காள் -- -ଞ qVisakrit if ஞானசெளந்தரி - லேனாள் நந்தனார் - பெரியகிழவர் பவளக்கொடி - பவளக்கொடி சத்தியவான் சாவித்திரி - சாவித்திரி சாரங்கதாரா - சித்திராங்கி அல்லி அருச்சுனா - அல்லி க்ோவலன் அண்ணகி - கண்ணகி
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன நாடக ஒலிபரப்பில் பின் வரும் நாடகங்கள் இடம் பெற்றன.
ஞானசெளந்தரி - லேனா ள் பக்த நத்தனார் - பெரியகிழவர் அரிச்சத்திரா - சத்தியகீர்த்தி
கும்மாள நிகழ்வில் குறத்தி
திருமறைக்கலாமன்ரத்தினூடாக ரூபவாகினியில் ஈடுபட்ட நாடகங்கள்:
ஞானசெளந்தரி - பிலேந்திரன் ஏரோதன் - ஏரோதன்
1997-ம் 1998-ம் ஆண்டு ஐரோப்பிய நாடுகளிலுள்ள பரிஸ், ஜேர்மனி, இங்கிலாந்து, சுவிஸ்லாத்து, நெதர்லாந்து ஆகிய இடங்களில் திருமறைக் கலாமன்றத்தால் மேடையேற்றப்பட்ட வடலிக்கூத்தரின் நாடகங்களில் பின்வரும் பாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார்.

"அரிச்சந்திர மயானகாண்டம்" இசைநாடகத்தில் அரிச்சந்திரனாக "கலைவேந்தன்' ம.பொ. தைரியநாதன்.

Page 34

மூத்த கலைஞர்கள் வரலாறு 21
ஜெனோவா - அரசன் சத்தியவேள்வி - அரிச்சந்திரன் சகுந்தலை - துஷ்யந்தன்
இவரின் கலைப்பணி திருமறைக்கலாமன்றத்தின் ஊக்குவிப்பால், மெருகு ஊட்டப்பட்டது. என்று கூறலாம். யாழ் திருமறைக்கலா மன்றத்தால் தைரியநாதன் புகழ்பெற, தைரியநாதனால் திருமறைக் கலா மன்றம் சிறப்புப் பெற்றது என்று கூறினால் மிகையாகாது. வண. பிதா. மரியசேவியர் அடிகளாரின் கை வண்ணங்களில் உரு வாகும். நாடகங்களில் கதாநாயகனாக ஏற்று நடித்து, ஐம்பெரும் காப்பிய நாடகங்களில் வளையாபதி, குண்டலகேசி, சீவகசிந்தா மணி நாடகங்களிலும் ஞானசெளந்தரி, சத்தியவேள்வி நாடகங் களிலும் புகழ் அடைந்தார்.
திரு. தைரியநாதன் ஒரு கிறிஸ்தவராவர். இதனால் வண: பிதா. மரியசேவியர் அடிகளின் தயாரிப்பில் உருவான திருப்பாடு காட்சிகளில் பல பாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார்.
G அன்பில் மலர்ந்த அமரகாவியம் - இராயப்பர் G களங்கம் - வழக்கறிஞர் இது சிலுவை உலா - ஒருவன்
S) கல்வாரி பரணி - இராயப்பர் S பலிக்களம் - இராயப்பர் S சாவை வென்ற சத்தியன் - பரிசேயர்
S கல்வாரிச்சுவடு - இராயப்பர்
என்பனவாகும்.
இவர் தற்பொழுது சிறந்த நெறியாளராகவும் கலைப்பணி புரிந்து வருகிறார். 1978-ம் ஆண்டு யாழ் பல்கலைக்கழக மாணவர் கட்கு சத்தியவான் சாவித்திரி நாடகம் பழக்கி நெறியாளராக இருந்தார். பல பாடசாலைகளிலும் மன்றங்களிலும் சனசமூக நிலையங்களிலும், ஆலயங்களிலும், ஒப்பனை செய்வதிலும், நாட கங்கள் பழக்குவதிலும் ஈடுபடுகிறார்.
இவருக்கு 1970-ம் ஆண்டு நெல்லண்டைப் பத்திரகாளி அம்பன்
கோவில் " "நடிப்பிசைச் செல்வன்' என்ற பட்டத்தை ஆசிரியர் அண்ணாச்சாமி வழங்கிக் கெளரவித்தார். திருமறைக்கலாமன்றத்தி னால் 'கலைவேந்தன்' என்ற பட்டம் வழங்கிக் கெளரவிக்கப்
பட்டார். வேறு பல மேடைகளில் பொன்னடை போர்த்துக் கெளரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
இவர் தொடர்ந்து கலைப்பணி புரிய எமது வாழ்த்துக்கள்

Page 35
Guary if
திரு. நா. சின்னத்துரை
முகவரி:
|25, கனகரத்தினம் வீதி, அரியாலை மேற்கு, யாழ்ப்பாணம்.
பிறந்த திகதி 04 - 10 - 1926
நாட்டுக் கூத்துக் கலைஞர்
இவரது தந்தையார் நாட்டுக்கூத்து மத்தள அண்ணாவியார் . பல நாட்டுக்கூத்துக்களில் நடித்தவர். அவர் வழியாக வந்த கலை உணர்வை தன்னளவில் வளர்த்துக் கொண்டார். இளமையிலேயே சங்கீதத்திலே விருப்பங் கொண்ட சின்னத்துரை அவர்கின் நாதஸ் வரம் கற்றுக்கொண்டார். பல வாத்தியக் குழுவினருடன் சேர்ந்து பல இடங்களில் நாதஸ்வர இசை வழங்கியுள்ளார்.
நாடகத்துறையிலே, ஆர்மோனியம் வாசிப்பதும் கற்று இருந்த மையால் பல நாடகங்களுக்கு ஆர்மோனியம் வாசித்து வந்துள்ளார் மரபுவழி இசை நாடகங்களுக்கும், கதைவழிக் கூத்துக்களுக்கும் ஆர் மோரியம் வாசித்துள்ளார். இப்போதும் வாசிக்க முடியும் என்று கூறுகின்றார்.
நடித்த நாடகங்கள் 1) கதைவழிக் கூத்து கோவலன் நாடகத்திலே கோவலனாக, புலேந்திரன் களவில் புலேந்திரனாக அல்லி அருச்சுனாவில் கிருஷ்ணராசு, பவளக்கொடியில் கிருஷ்ணனாக நடித்துள் մiTr rք
2) மரபுவழி இசை நாடகம்: அரிச்சந்திராவில் சத்தியகீர்த்தியாக, பூரீவள்ளியில் நாரதராசு, பொன்னிரவு (சிவராத்திரி) நாரதராசு, சத்தியவான் சாவித்திரியில் நாரதராக மார்க்கண்டேயரில் நாரதராக நடித்துள்ளார்.
3) நாட்டுக் கூத்து! எம்பரதோரில் எம்பரதோராக, ஏகலைவனில் ஏகலைவனாக, அனுபுத்திரனில் குமாரனாக, குசலவனில்
 

செல்லையா மெற்றாஸ்மயில்
இலட்சுமணனாக, தாடகை வதத்தில் இலட்சுமணனாக நடித்துள்ளார்.
பழக்கிய நாடகங்கள்
1) பவளக்கொடி - கதைவழிக் கூத்து 2) சங்கிலியன் - நாட்டுக் கூத்து 3) கோவலன் - நாட்டுக்கூத்து
(பல்கலைக்கழகத்திலே பழக்கி அரங்கேற்றியுள்ளார்.)
பாரம்பரிய கலைகள் மேம்பாட்டுக் கழகத்தினர் நடாத்திய நாடகப்போட்டியிலே "பவளக்கொடி' நாடகத்தினை அரங்கேற்றி னார்.
வயதுபோன நிலையிலும் துள்ளி ஆடும் கலைஞர், நாட்டுக் கூத்தில் வரும் ஆட்டங்களை இப்பொழுதும் ஆடக்கூடியவராக இருக்கின்றார். அவர் மேலும் பல காலம் வாழ்ந்து பாரம்பரிய கலைகள் மேம்பாடடைய அவர் கலைத்தொண்டு செய்ய இறைவன் அருள் புரியவேண்டும் எனக் கேட்டு அவரை வாழ்த்துகின்றேன்

Page 36
பெயர் : திரு. கதிர்காமு 1
இரத்தினம்
முகவரி
கலைமகள் விதி, அரியாலை, யாழ்ப்பாணம்.
பிறந்த திகதி 06 - 04 - 1928
இசை நாடகக் கலைஞர்
அரியாவையைப் பிறப்பிடமாகக் கொண்ட கதிர்காமு இரத்தினம் 'ரித்த கலைஞராவர். இவருக்கு வயது ? பி. தனது வாழ்க்கையைத் தொடர கட்டிட ஒப்பந்தர் காரராகத் தொழில் புரிந்து, தமது வாழ்க்கையில் பெரும்பகுதிக் காலத்தை இயல், இசை நாடகத் துறையில் ஈடுபடுத்தியவர். இவர் அரியா:ை "கலைமகள் நாடக சபா'வில் சேர்ந்து, திரு. ரீன் செல்லக்கண்டுவை குருவாகக் கொண்டு, இசை நாடகத்துறையில் முன்னேறியவர். சுவைஞர் அவர்கள் பெண் பாத்திரம் ஏற்று நடித்தனமயம், பல நாடகங்களை நெறியாள்கை செய்தமையும், பல நாடகங்களை இயக்கிய மையும் அவருக்குப் புகழைத் தேடிக் கொடுத்தன.
நடிக ம னணி வைரமுத்துவுடன் இனைந்து மயானகாண்டத்தில் , சந்திர மதியாக 2000 மேடைகளில் ஏறி பல ரசிகர்களின் பாராட் டைப் பெற்றார் . இதுtட்டுமன்றி, அரிச்சந்திரா , சத்திய வான் சா வித்திரி, நல்லதங்கிாள், பூgவள்ளி, ஞானசெளந்தரி, கண்ணகி, சாரங்கதரன் முதலிய இசைநாடகங்களில் நடித்தனர். அத்துடன் ஞானசெளந்தரி, பண்டார வன்னிபன், அரிச்சந்திரா, வள்ளி திருமண்ம் , நந்தனார், பிரகலாதன் போன்ற நாடகங்களும் நெறி யாள்கை செய்துள்ளார்
காங்கேசன்துறை 'வசந்தகான சபா' வும் அரியாவை "கலைமகள் நாடக சபா' வும் பல காலம் இணைத்தே சொற்பட்டு வந்துள்ளன. சுலைமகள் நாடக சபாவின் தயாரிப்பிலான "ஆரியமாலா' பதவி மோகம்" "வள்ளி திருமணம்" "சத்தியகுமார் 'அமரநாத் இன்னும் பல நாடகங்களுக்கு வசந்தகான சபா நடிகர்கள் சேர்ந்து நடித்தும் வாத்தியங்களை இசைத்தும் பங்கு கொண்டுள்ளார். அதேபோல்
 

செல்லையா மெற்றாஸ்மயில் 器昂
வசந்தகானசபா நாடகங்களிலும் கலைமகள் நாடக சபாவின் பங்கு கொண்டார்கள். இதற்கெல்லாம் முக்கிய காரணமாக இருந்தவர் இரத்தினமே.
இவர் குடும்பமே கலைக் குடும்பமாகும் மாமனார் அமரர் செல்லக்கண்டு நாடகப் பாடல்கள் எழுதுவார். இவரின் சகோதரர் கள் ஆசிரியர் பாலசிங்கம், செல்லத்தம்பி, இவர் மருமகன் வரதராசா ஆகியோர் நாடகக்கலை வல்லுனர்களாகவும் இசைக் கலைஞர்களா வும் விளங்குகிறார்கள்.
இவர் பிரபல நடிகர்களான நடிக மணி வி. வி. வைரமுத்து, அல்வாயூர் தம்பிஜயா, வி. நற்குணம், குருநகர் பைக்கிரி சின்னத் துரை , திெரி அண்ணாச்சாமி ஆசிரியர், வி. செல்வரத்தினம், தைரிய நாதன், பி. சண்முகவிங்கம், வி. மார்க்கண்டு, கவிஞர் ஐயாத்துரை, வி. என் செல்வராசா அரியாலை பீ. சண்முகலிங்கம், வி. கே. பால சிங்கம் போன்ற நடிகர்களுடன் சேர்ந்து நடித்தவராவார்.
இவரின் நடிப்புத் திறமைக்கும், இசைப் புலமைக்கும், சொக்கிய பல மன்றங்கள், பெரியோர்கள் பல பட்டங்களையும், கெளரவிப்புக் கனையும் வழங்கினர்.
G 1983ல் வசாவிளான் மத்திய கல்லூரி அதிபரினால் சோக சோபித சொர்னக் கவிக்குயில்' என்ற பட்டத்தை வழங்கி ாைர்கள் .
8 1984ல் அரியாலை பூg கன30கள் சனசமூக நிலையம் பாராட்டிக்
கெளரவித்தது.
டு 1993ல் அரியான ைசனசமூக நிலைய காசிப்பிள்ளை அரங்கில் 'பன்டாரவன்னியன்'" நாடகத்தை நெறியாள்கை செய்ததி னால் பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்களினால் பாராட்டிக் கெளரவிக்கப்பட்டார்.
G தென்னிந்திய நடிகர் குலதெய்வம் புகழ் சின்னக் கலைவாணர் திரு . இராசகோபாவின் தலைமையின் கீழ் நடித்து "ஈழத்து கண்னம்மா' என்னும் பட்டத்தைப் பெற்றார்.
டு கண்டி, பேராதனை மண்டபங்களில் துணைவேந்தர் சு. வித்தி
யானந்தன் அவர்களால் பாராட்டப்பட்டவராவார்.
இன்று நோய்வாய்ப்பட்டிருந்தாலும், இசை நாடகத்துறையின் வளர்ச்சிக்கு தன்னால் எவ்விதத்தில் உதவி செய்ய முடியுமோ, அந்த

Page 37
:
மூத்த கலைஞர்கள் வரலாறு
வகையில் உதவியும், இளைஞர்களுக்கு ஊக்கமும் அளித்துக் கொண் டிருக்கும் நல்ல ஒர் கலைஞராகும்.
அவர் மேலும் பலகாலம் வாழ்ந்து, தமது அனுபவங்களை கலைச் சமூகத்துக்குப் பகிர்ந்து கொள்ளவேண்டும் என இறைவனை வேண் டிக் கொள்கின்றேன்.
நேர்காணலில் ஒரு சில :
கேள்வி :
பதில் :
கேள்வி : பதில் :
கேள்வி :
பதில் :
கேள்வி :
பதில் :
தங்களது முதலாவது மேடைப் பிரவேசத்தின் போது தங் கள் மனநிiை எப்படி இருந்தது. முதன் முதலில் சபையின்முன் தோன்றும் போது சற்று கூச்சம் ஏற்படச் செய்தது. இருப்பினும் நாடகத்தில் சிறப் பாக நடிக்கவேண்டும் என்ற ஆர்வம் உள்ளத்தில் இருந்த தால் துணிந்து நடிக்க முடிந்தது.
இசையை எவ்வாறு சுற்றுக் கொண்டர்கள். எனக்கு மூத்த உறவினர்களும் அக்காலத்தில் நாடகத்துறை களில் ஈடுபாடு கொண்டிருந்ததால் அனுபவ ரீதியாக நான் இசையைக் கற்றுக் கொண்டேன்.
தங்கள் காலத்து அண்ணாவிமார்கள் பற்றி சற்றுக் கூறு வீர்களா. என்னுடைய காலத்து அண்ணாவிமார்களில் பெரும்பாலா னவர்கள் பழைய கர்நாடக இசையுடன் பாடக்கூடியவர் கள். அத்துடன் நாடகமேடைகளில் இயல்பாகவே பாடி நடிக்கும் ஆற்றல் உள்ளவர்கள். குறிப்பாக என்னுடைய காலத்தில் அண்ணாவிமார்களில் அல்வாயூர் சோதிடர் தம்பியையா , ஆரியகுளம் ஆறுமுகம், கொக்குவில் கனப திப்பிள்ளை ஆகியோர் குறிப்பிடக்கூடியவர்கள்.
"குரு" என்று அழைக்கும் அன்றைய அண்ணாவிமாரின் தடிப்பிற்கும், தற்காலத்து இசை வடிவு நாடகங்களுக்கும் உள்ள வேறுபாடுபற்றிக் கூறுங்கள். அன்னறய அண்ணாவிமார் பாடல்களைத் தாமே இயற்றி, தாமே மேடையில் தோன்றி பாடி, நடிக்கும் ஆற்றல் உடையவர்கள் ஆனால் தற்காலத்து இசை நாடகங்கள் மேலைத்தேய இசைவடிவம் கலந்தவையாகவும் காணப்படு கின்றன.

"அரிச்சந்திரன் மயானகாண்டம்" இசைநாடகத்தில் சந்திரபதியாக "சோக சோபித சொர்ணக் கவிக்குயில்" திரு. சு.இரத்தினம்.

Page 38

பெயர் :
திரு. வி. ரி. செல்வராசா
முகவரி :
வசந்தகான சபா, கண்டி வீதி, அரியாலை.
பிறந்த திகதி 30 - 07 - 1935
இசை நாடகக் கலைஞர்
சாங்கேசன்துறையில் பிரபலமான கலைக் குடும்பத்தில் ஒருவரா கப் பிறந்தார். அவரது தகப்பன் வழிப் பேரனார் வைரவியும், தந்தை யார் தில் வையரும், சிறிய தந்தையார் பிள்ளைநாயகமும் இசைத் துறை, நாடகத்துறை ஆகியவற்றில் சிறந்து விளங்கியவர்கள். தாயார் வழிப் பேரனார் அண்ணாவி இராமர் சிறப்பான புகழ் பெற்ற நாடறிந்த நாடக - காவடி அண்ணாவியாராவர். மாமனார் நாகமுத்து சிறந்த நாடக நடிகர். காவடி அண்ணாவியாராகத் திகழ்ந்த ர், தாயார் சின்னம்மாவும் இசைஞானம் உடையவர். இவர்களது வழிகாட்டவில் இனச நாடகத்துறையில் திரு. செல்வராசா அவர்கள் சிறந்து விளங்கினார்.
இவர் 12-வது வயதியிலே சாவித்திரி பாத்திரமேற்று நாடகத் தில் நடித்துள்ளார். இதன் பின்னர் தனது மைத்துனர் ஈழத்துப் புகழ்பெற்ற நடிகமணி, வி. வி. வைரமுத்து அவர்களின் நெறியாள் கையில் பல இனச நாடகங்கள், சமூக சரித்திர நாடகங்களில் பங்கேற்று நடித்துள்ளார்.
நடித்த இசை நாடகங்களின் பெயரும், பாத்திரங்களும்
1. சத்தியவான் சாவித்திரி - சாவித்திரி 2. அரிச்சந்திரா - அரிச்சந்திரன் 3. கோவலன் கண்ணகி - கண்ணகி, மாதவி 4. பூதத்தம்பி - சின்னதாந்தேசு 5. ஞானசவுந்தரி - புலேந்திரன் 6. வள்ளி திருமணம் - வள்ளி, நாரதர் 7. சாரங்கதாரா - சித்திராங்கி 8. பவளக்கொடி - சுபத்திரை

Page 39
28 மூத்த கலைஞர்கள் வரலாறு
9. அல்லி அர்ச்சுனா - அல்லி 10. அம்பிகாபதி - அமராவதி 11. கந்தலீலா - வள்ளி 12. அசோக்குமார் 13. ஏழுபிள்ளை நல்லதங்காள் - நல்லதங்காள் 14. சகுத்தலை - சகுந்தலை, துஷ்யந்தன் 15. குசேலர் - மனைவி 16. கர்ணன் - குந்தி
பழக்கிய இசை நாடகங்கள்
1. சத்தியவான் சாவித்திரி 5. ஞான செளந்திரி 2. அரிச்சந்திரா 6. வள்ளி திருமணம் 3. கோவலன் கண்ணகி 7. சாரங்கதாரா 4. பூதத்தம்பி
இவர் கடமையாற்றிய சீமேந்துக் கூட்டுத்தாபனத்தில் நாடக மன்றம் இயக்கப் பங்களிப்பு வழங்கியதுடன் பல நாடகங்களில் நடித்துள்ளார். கூட்டுத்தாபன நாடக மன்றம் பாராட்டி உபவேந்தர், சு. வித்தியானந்தன் அவர்களால் 'கலைமணி ' என்னும் பட்டம் வழங்கிக் கெளரவித்தனர். இந்த வைபவத்தில் புகழ்பெற்ற மாவிட்ட புரம், நாதஸ்வர வித்துவான் உருத்திராபதி அவர்கள் தன்னை ஆசீர்வதிக்கும் பாக்கியம் கிடைத்தது எனப் பெருமை கொள்கிறார்;
கலைத்துறையில் பல பிரபலமான நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்புக்களை பயன்படுத்தி பிரபல நடிகர் அண்ணா ச் சாமி (ஆசிரியர்) கவிஞர் ஐயாத்துரை, முத்துத்தம்பி குழந்தைவேலு, வி. என் செல்வராசா, சி. ரி. செல்வராசா, சிதம்பரம்-செல்வராசா, சோக சோபித சொர்ணக்குயில் கே. வி. இரத்தினம், செல்வரத் தினம், தைரியநாதன், மார்க்கண்டு, நற்குணம், சரவணமுத்து ஆகியவர்களுடனும், ஆரம்பமுதல் மறைவு வரை நடிகமணி அவர்க களின் வசந்தகான சபாவில் இணைந்து எல்லாவித பாத்திரங்களி லும் நடித்து வந்துள்ளார். வி. வி. வைரமுத்து அவர்கள் ஈழத்தில் பல பாகங்களிலும் நாடகங்களை நடித்தபொழுது அவருடன் சேர்ந்து நாடகங்கள் நடித்துள்ளார். இலங்கை ஒளிபரப்புக் கூட்டுத் தாபனம் , ரூபவாகினி ஆகியவற்றில் நடிக மணியுடன் இணைந்து பங்கேற்று நடித்துள்ளார். நடிகமணியவர்களின் மறைவின் பின்னர், அவர் விட்டுப்போன கலைத்துறையை முன்னெடுத்துச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இளங்கலைஞர்களை இசை நாடகத்துறையில் பங்குகொள்ள வைத்து, நாடகங்களை நெறிப்படுத்தி பல இடங் களில் மேடையேற்றி புகழும், பாராட்டுக்களும் பெற்றுள்ளார்.

செல்லையா மெற்றாஸ்மயில் 29
*"வசந்தகான சபா' நடிகமணி அவர்களின் நாடகக் கலைச் சேவையை தொடர்ந்தும் சிறப்பாக முன்னெடுத்து வருவேன் என்கின்ற உறுதியோடு செயற்படுகின்றேனெனக் கர்ச்சிக்கின்றார்
இவர் கர்ச்சிப்பது போல் பல இளங்கலைஞர்களைக் கொண்ட மன்றத்தின் மூலம் நாடகங்களைக் கொண்ட மன்றத்தின் மூலம் நாடகங்களை பயிற்றுவித்து புதிய இளங்கலைஞர்களை உருவாக்கு கின்றார் என்பது உண்மையே. அவர் சீரும் சிறப்புடனும் மேலும் பல காலம் வாழ்ந்து கலைப்பணி செய்ய வேண்டும் என வாழ்த்து கின்றேன்,

Page 40
Gului
திரு. கார்த்திகேசு
மதியாபரணம் முகவரி :
32/3, பூமகள் விதி,
அரியாவை
பிறந்த திகதி: 25 - 03- 1937
நாட்டுக் கூத்துக் கலைஞர்
இவருடைய தந்தையார் பரமு - கார்த்திகேசு ஓர் நாட்டுக்கூத்து அண்ானாவியார் மத்திள் அண்ணாவியார் பல நாட்டுக்கூத்துக்கள் கதைவழிக் கூத்துக்களிலே நடித்தவர். பல கூத்துக்களைப் பழக்கி பவர் .
தடுக்கிலே குழந்தையாக இருக்கும்போதே தனது தந்தையாரின் கூத்துப் பாடல்களையே தாலாட்டாகக் கேட்டு வளர்ந்தவர். தந்தையார் ஓய்வாக, சத்தோசமாய் இருக்கும்போது பாடிய கூத்துப் பாடல்களைக் கேட்டதாலும் அவர் பழக்கிய, நடித்த கூத்துக்க ளைப் பார்த்ததாலும் ஏற்பட்ட ஈடுபாடு காரணமாக இத்துறை யிலே தன்னை வளர்த்துக்கொண்டார்"
1969ல் அவரது தந்தையார் பழக்கிய * குசலவன்' நாட்டுக் கூத்திற்கு கொப்பி பார்ப்பவராக இருந்து இக் கூத்தினை முழுமை யாகக் கற்றுக்கொண்டார். 1968, 1970, 1974, 1975, 9 F3 r. ஆண்டுகளில் குரும்பசிட்டி, புங்குடுதீவு, அரியான ல ஆகிய இடங் சுனில் அரங்கேற்றியுள்ளார். 1gg8ல் பாரம்பரிய கலைகள் மேம் பாட்டுக் கழகம் நடாத்திய நாட்டுக்கூத்துப் போட்டியில் , ஒரு நாட்டுக்கூத்துக்குரிய (1) கதையம்சம் (2) வரவு (3) விருத்தகம் ) தரு ( 5 ) கொச்சகம் (t) கொச்சத்திரு (ஆட்டம்) (7) கல்வெட்டு (8) ஆசிரியம் (9) நாட்டுக் கூத்துக்குரிய வசன நடை (10) நாட்டுக் கூத்து ஆட்டமுனி போன்ற சகல அம்சங்களும் அமையக்கூடியதிTபி * குசவன்' நாட்டுக் கூத்தினை அரங்கேற்றியுள்ளார். இரண்டா வது பரிசும் கிடைத்துள்ளது.
மேலும் "வாளபீமன்" நரட்டுக் கூத்தினை தனது சகோதரன் நா. கணபதிப்பிள்ளை அவர்களோடு இனைந்து பழக்கி அரங்கேற்றி
 

செல்லையா மெற்றாஸ்மயில்
யுள்ளார். தாட்டுக்கூத்து மட்டுமல்லாமல் கோவலன் கதை (சிலம்பின் வெற்றி என்ற பெயரில்) புலந்திரன் களவு, அல்லி அர்ச்சுனா ஆகிய மூன்று கதைவழிக் கூத்துக்களையும் பழக்கி அரங்கேற்றியுள்ளார்:
இவரது கலைப் படைப்புக்கள் யாவும் அரியாலை, பத்மா கலா மன்றத்தின் தயாரிப்பாகவே அரங்கேற்றப்பட்டன. தனது காவில் சுகவீனமாக இருந்தபோதும், அதையும் பொருட்படுத்தாது ஆட்டம் பழக்க மற்றவர்களின் உதவியை வேண்டி கலைத்தொண்டு புரிகிறார்.
இன்றும் மாற்றங்களைப் புகுத்தாது மரபு வழியில் நாட்டுக் கூத்தினைப் பழக்கி மேடையேற்றும் கலைஞர் மதியாபரணம்: அவர்களின் சேவை கட்டாய தேவையாகவுள்ளது. இவர் மேலும் பல நாட்டுக் கூத்துக்களை மரபுவழி தவறாமல் தயாரித்து நெறி யாள்கை செய்து மேடையேற்ற வேண்டுமென வேண்டி அவரைப் பலகாலம் வாழவேண்டுமென வாழ்த்துகின்றேன்:

Page 41
பெயர் :
திரு. வடிவேலு
செல்வரத்தினம்
முகவரி :
அரியா வை, யாழ்ப்பாணம்.
பிறந்த திகதி 26 - 0 - 1947
இசை நாடகக் கலைஞர்
1954-ம் ஆண்டில் பூஜி கலைமகள் நாடக சபாவின் நாடக மேடையானது, கன்னிக் கோட்டை என்னும் நாடகத்தில் "மணி மாறன்" என்னும் குழந்தை நபுகனாக இவர் 7 வயதில் கனன் உலகில் பிரவேசிக்க அத்திவாரமிட்டது. கல்வி கற்ற அரியாலை ஆனந்தா வித்தியாசா வை, யா / கனகரத்தினம் ம. ம. வித்தியாலயம் என்பன இவருடைய கலைத்துறை வளர்ச்சிக்கு ஊக்கமளித்தன. அத்துடன் இவருடைய இனிய குரலும், நடிப்பும் நடிப்புத் துறையில் சிறந்த ஒரு கதாநாயகி ஆக்கிவிட்டது.
இவர் "பெண் வேடம்" போட்டு மேடையில் ஏறினால் அவரின் தோற்றம். குரல், நளினம் ஒன்றுசேர்ந்த அசல் பெண்ணாகவே தோற்றமளித்தது. அரிச்சத்திர மானகாண்டத்தில் சந்திரமதியாக சுமார் 28 கதாநாயகர்களுடன் பல்வேறு பேடைகளில் நடித்துப் பாராட்டுப் பெற்றுள்ளார். இன்று "ஸ்பெசல் நடிகராக" விளங்கு கிறார்.
நடிகமணி வி. வைரமுத்து அவர்களுடன் சேர்ந்து பெண்பாத்திர மேற்று யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், மட்டக்களப்பு, வவுனியா , கொழும்பு, கண்டி, கம்பஹா ஆகிய இடங்களில் நாடகங்கள் மேடையேற்றப்பட்டன.
இவர் கலைத்துரை பில் பங்களிப்பாக நடித்த நாடகங்களும் பாத்திரங்களும்
1. அரிச்சந்திர மயானகாண்டம் - சந்திர மதி
3. சத்தியவான் சாவித்திரி - சாவித்திரி 3. நல்லதங்காள் - நல்லதங்காள்
 

செல்லையா மெற்றாஸ்மயில்
# பூரீவள்ளி - வள்ளி 5. சாரங்கதாரா - சித்திராங்கி ,ே ஞானசவுந்திரி - ஞானசவுந்திரி 7. பவளக்கொடி - பவளக்கொடி 8. கண்ணகி - கண்ணகி, மாதவி 9 . பூதத்தம்பி - அழக வல்வி 10. பாமா விஜயம் - ருக்குமணி 11. அடங்கா பிடாரி - அடங்கா பிடாரி 12. மந்திரிகுமாரி - குமாரி 13. அம்பிகாபதி - அமராவதி 14. பராசக்தி - கல்யாணி 15. பண்டாரவன்னியன் - நல்லநாச்சியார் 16. அல்வி அர்ச்சுனா - அல்லி
பாண்டியன் வீழ்ச்சி. சகோதர விரோதி, கிருஷ்ணா அர்ச்சுனா, பதவிமோகம், அலாவுதீன், பாண்டிய மகுடம் மனோன்மணி, கொஞ்சும் குமாரி ஆகிய நாடகங்களும்,
பழக்கிய நாடகங்கள்
1. சத்தியவான் சாவித்திரி வசாவிளான் சுட்டியம்புலம் மகா வித் தியாலய மாணவர்களுக்கும், யாழ். மத்திய கல்லூரி மாணவர் களுக்கும் பழக்கியது
8. ஞானசவுந்தரி திருமறைக் கலா மன்றத்தில் வே னாள், ஞான சவுந்திரி ஆகிய பாத்திரங்களைப் பழக்கியும், பாடல்களை ஒலிப்பதிவு செய்து கொடுத்தும் மேடையேற்றி அந் நாடகம் பலரது பாராட்டைப் பெற்றது.
3. பூஜிவள்ளி தனியார் கல்வி நிறுவன மாணவர்களின் கலை நிகழ் வுக்கு பழக்கியும், பூம்புகார் ஆரம்ப பாடசாலை ஆசிரியர்க ளுக்கு ஆசிரியர் தின விழாவுக்கு பழக்கியும் மேடையேற்றிப் பாராட்டுப் பெற்றது.
4. அரிச்சந்திர மயான காண்டம் கைதடி தனியார் நாடகமன்றத்
தினருக்குப் பழக்கி மேடையேற்றப்பட்டது.
இலங்கையில் தயாரிக்கப்பட்ட நிர்மலா திரைப்படத்தில் நடிக மணி வி. வைரமுத்துவுடன் இணைந்து நடித்த 25 நிமிடக்காட்சி. சிலோன் தியேட்டர் மண்டபத்தில் காட்சி காட்டப்பட்டது தனது மறக்கமுடியாத பதிவாக உள்ளது என்றார்.

Page 42
மூத்த கலைஞர்கள் வரலாறு
இவ்வாறு கலைத்துறைக்கு இவர் ஆற்றிய பணியைப் பாராட்டிப் பல கெளரவிப்புகள் இடம்பெற்றுள்ளன.
1969-ல் கொழும்பு சரஸ்வதி மண்டபத்தில் பெண் வேடத்தில் சிறப்பான நடிப்பினைப் பாராட்டி இலங்கை ஒளிபரப்புக் கூட்டுத் தாபனத்தின் சார்பாக பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட் i rri",
1991-ம் ஆண்டு கம்பன் கழகத்தில் சிவதமிழ்ச்செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களால் பொன்னாடை போர்த்தி பாராட்டப் பெற்றார்.
1976-ம் ஆண்டு அகில இலங்கை ரீதியில் லும் மினிய மண்ட பத்தில் நடாத்தப்பட்ட நாடகத்தில் "சந்திரமிதி" பெண் பாத்திர மாகப் பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது.
199t-t-14-ல் அரியாலை சுதேச பவளவிழாவில் அரியாலை புகழ் பூத்த தலைவர்கள் வரிசையில் யாழ், அரச அதிபர் செ. பத்ம நாதன் அவர்களால் பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது.
1980-ல் கரவெட்டி காரையம்பதி கலைக் கூடத்தினால் கெளர விக்கப்பட்டு "நடிக கலாமணி" என்ற பட்டம் சூட்டி கெளரவிக்கப் பட்டார்.
இசைநாடகத்துறையில் தன்னை ஈடுபடுத்திய இவர் இன்று பல பாடசாலை மாணவர்களுக்கும், தனிப்பட்ட மன்ற இளைஞர்களுக் கும் பாட்டு, நடிப்பு என்பவற்றைச் சொல்லிக் கொடுத்து நெறி யாள்கை செய்து ஒரு இளைஞர் பரம்பரையை இசை நாடகத் துறையில் உருவாக்கி வருகிறார். இவருடைய கலைப்பணி தொடர்ந்து மேலோங்க வாழ்த்துகின்றேன்.
 

Glyciu f '
திரு. இராமன் - மார்க்கண்டு
முகவரி:
அச்சுவேபி.
பிரந்த திகதி 30 - 05 - ??
இசை நாடகக் கலைஞர்
1919-ம் ஆண்டு வைகாசி மாதம் 30-ஆம் திகதி அச்சுவேலியில் பிறந்த இவர் அச்சுவேலி சரஸ்வதி வித்தியாலயத்தில் கல்வி கற்ற வர். தனது பதின்மூன்றாவது வயதிலேயே நாடகத்துறைக்குள் புகுந்து "சிறுத்தொண்டன்" நாடகத்தில் பிரதான பாத்திரமாகிய சிறுத்தொண்டனாக நடித்து சிறந்த நடிகன் என்று புகழ் பெற்றார்.
அச்சுவேலியைச் சேர்ந்த சின்னப்பொடியர் இராமன், தென் இந்தியாவைச் சேர்ந்த சின்ன வடக்கனிடம் "கருநாடகம்' என்ற கூத்து வகையினைப் பயின்று அக்கூத்துக்களான மதுரை வீரன், தேசிங்குராசன், எஸ்தாக்கியர் நாடகம், வரப்பிரகாசம் நாடகம் தமயந்தி சரிதம் என்ற பல்வேறு நாடகங்களைப் பல மேடைகளில் ஏற்றி பின் "அண்ணாவியர்" எனப்படும் நாடக ஆசிரியராக, பல நடிகர்களை உருவாக்கினார்.
இவரின் வழித்தோன்றலான திரு. எஸ். ஆர். மார்க்கண்டு அவர் வழியைப் பின்பற்றி கொட்டகைக்கூத்து என்னும் இசை நாடகத்தினைப் பயின்று பல்வேறு நாடகங்களை மேடையேற்றி
GTTrf ,
இவரது இசை ஞானம் கர்நாடக சங்கீதத்தைக் கற்க வைத்தது.
இதனைத் தொடர்ந்து "பவளக்கொடி" என்ற நாடகத்தில் கிருஷ்னன் பாத்திரம் ஏற்று நடித்து நடிப்புத் துறையில் முத்திரை பதித்தார். இந்நாடகத்தில் வதிரியைச் சேர்ந்த அண்ணாச்சாமி ஆசிரியர் அருச்சுனனாகவும், திரு. வீ. வீ. வைரமுத்து பவளக் கொடியாகவும். காலம்சென்ற சுண்டிக்குழி இரத்தினம் அல்லிப் பாத்திரத்தையும் ஏற்று இந்நாடகத்துக்கு மெருகூட்டினார்.

Page 43
36 மூத்த கலைஞர்கள் வரலாறு
17 வயதளவில் சுண்டிக்குழி மகளிர் கல்லூரியில் சத்தியவான் சாவித்திரி என்ற நாடகத்தைத் தானாக நெறிப்படுத்தி மேடை ஏற்றியபோது இயமனாக வேடம் தரித்து நடித்த இவர் காங்கேசன் துறை வீ. வீ. வைரமுத்துவை சாவித்திரியாகவும் - திரு. அண்ணாச் சாமியை சத்தியவானாகவும், திரு. குழந்தைவேலுவை நாரதராக வும் நடிக்கச் செய்து யாழ்நகரில் ஒரு புதிய நாடகப் பரம்பரைக்கு வழிவகுத்தவர். அச்சுவேலியில் இவர் ஆரம்பித்த 'இராமானந்த நாடக சபா'வின் மூலம் இவர்கள் ஒரு குழுவாகச் சேர்ந்து பல நாடகங்களை மேடை ஏற்றினார்கள். யாழ் குடாநாட்டில் அக் காலத்தில் சிறந்த நாடகக் குழுவாக இயங்கிய இவர்களில் திரு. மார்க்கண்டு அவர்கள் அண்ணாவியாராக முதல்முதலில் "ஞான சவுந்திரி" என்ற நாடகத்தை வண. பாலசுந்தரம் அடிகளாரின் வேண்டுதலுக்கிணங்க அச்சுவேலி கிறிஸ்தவக் கல்லூரி மாணவர் களுக்கு பழக்கி மேடை ஏற்றி தனக்கு நடிக்க மட்டுமின்றி சிறப்பாக நடிக்க கற்றுக் கொடுக்கவும் முடியும் என்றளவில் பெரும் பாராட் டுக்களைப் பொற்றார். இதைவிட அரிச்சந்திரா (வளலாயில்) சத்தி யவான் சாவித்திரி (அச்சுவேலியிலும், கச்சாயிலும்) பவளக்கொடி (நவக்கிரி) போன்ற பல நாடகங்களைப் பழக்கி மேடையேற்றுவித் தாா .
1964-ம் ஆண்டு யாழ்ப்பாணத்தின் முக்கிய மண்டபமாக இருந்த "யூடீசி' யில் திரு. மார்க்கண்டு அவர்களால் பழக்கி மேடை ஏற்றப்பட்ட "பூதத்தம்பி’ என்னும் நாடகம் யாழ் முழு தும் பலரது பாராட்டைப் பெற்றது.
சோவியத் தூதுவராக அக்காலத்தில் கடமை புரிந்தவரும், அவரது அதிகாரிகளும் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தபோது மேற்படி 'பூதத்தம்பி’ நாடகமே தெரிவு செய்யப்பட்டு அக்காலத் தில் உடுவில் பா. உ. திரு. தர்மலிங்கம் அவர்களினால் குரும்ப சிட்டியில் வைத்து மேடை ஏற்றிக்காட்டப்பட்டது.
'புத்துவாட்டி சோமு பாதையில் ஒரு மார்க்கண்டு' என்று தலையங்கம் தீட்டி இந் நாடகத்தைப் புகழ்ந்து "வீரகேசரி’ விமர் சனக் கட்டுரை ஒன்றை அக்காலத்தில் வெளியிட்டு இவரைப் பாராட்டியது.
இதைத் தொடர்ந்து பல்வேறு இசை நாடகங்களைப் பழக்கிய துடன் தனது 65-வது வயது வரையும் தொடர்ந்து நடிப்புத்துறையில் பணியாற்றி இறுதியாகவும் ஆரம்பத்தில் நடித்த "சிறுத்தொண்டன்" நாடகத்துடன் நடிப்பில் இருந்து ஒய்வு பெற்றார்.

செல்லையா - மெற்றாஸ்மயில் 37
இவர் நடித்த இசை நாடகங்களும் கதாபாத்திரங்களும்
8.
9.
10.
I l.
(நினைவில் நிற்பவை)
நாடகம் ஏற்று நடித்த பாத்திரம்
சிறுத்தொண்டன் (4 தடவைகள்) - சிறுத்தொண்டன் பவளக்கொடி (சுமார் 50 தடவைகள்) - கிருஷ்னன் . சத்தியவான் சாவித்திரி (சுமார் 100க்குமேல்) - இயமன்
சாரங்கதாரா (சுமார் 50 தடவை) - நரேந்திரன் அல்லி அருச்சுனா (சுமார் 25 தடவை) - கிருஷ்ணன் . பூதத்தம்பி (125க்கு மேல்) - அந்திராசி . அரிச்சந்திரா (சுமார் 45 வரை) - விசுவாமித்திரன், அரிச்சந்திரன் அம்பிகாவதி (20 முறை) - குலோத்துங்கன் கிருஷ்ணலீலா (10 தடவை) - கம்சன் கோவலன் சரித்திரம் 15 தடவை) - கோவலன் மார்க்கண்டேயர் (15 தடவை) - இயமன்
பழக்கிய நாடகங்கள்
சிறுத்தொண்டன்
ஞானசெந்தரி சத்தியவான் சாவித்திரி அரிச்சந்திரா (3 இடங்களில்) பவளக்கொடி (3 இடங்களில்) சாரங்கதாரா (5 முறை) பூதத் தம்பி (பல தடவை) அல்லி அருச்சுனன் (6 முறை) அம்பிகாபதி (4 தடவைகள்) கோவலன் சரித்திரம் (5 தடவை)
கலையரசு சொர்ணலிங்கம் - திரு. ஏ. ரீ. பொன்னுத்துரை
போன்ற நாடக அறிஞர்களால் பலமுறை போற்றப்பட்ட இவருக்கு அச்சுவேலியில் 1977-ம் ஆண்டில் கலாநிதி சனசமூக நிலையத்தில் பேராசிரியர், கலாநிதி அ. சண்முகதாஸ் அவர்களால் 'நாடகமணி" என்று பட்டமளித்து பொன்னாடை போத்தி, கிரிடம் அணிவித்துப்
பாராட்டப்பட்டார்.
* இன்று எண்பது வயதை எட்டியும், நாடகத்துறையின் புதிய உத்திக்களையும் இசை நாடகத்தில் புதிய பரீட்சார்த்த முறை

Page 44
முத்த கலைஞர்கள் வரலாறு
களையும் புகுத்த வேண்டுமென்றும் - பழமை குலையாது புதுச் சந் ததிக்கு அவர்களின் இரசனைக்கு ஏற்றதாக அவை மாற்றப்பட வேண்டுமெனவும் அங்கலாய்ப்புக் கொண்டவராகவும் இன்றும் சிறந்த குரல்வளம் உடையவராகவும் காணப்படுகின்றார்.
"சூம்" பிடித்து வட்டக்களரியில் நடிப்பை ஆரம்பித்த காலத்தில் முழு இரவுக் கூத்து" என்று கூறி அவற்றைப் பார்க்கக் கூடிய இரசிக கூட்டத்தைப் போலன்றி குறுகிய நேரத்தில் மின் ஒலியிலும்தொலைக்காட்சி ஊடாகவும் பழமையில் புதுமை காணக்கூடியதாக எமது நாடகப் பாரம்பரியம் நவீனமடைய வேண்டும் என்று கருதும் இவர் - சிங்கள பாரம் பரியக் கலைவடிவில் இந்த அளவில் வெற்றி கண்டுள்ளதென்று கூறுகிறார்
தமிழ்நாட்டில் 5 வருடங்களாக பல இடங்களில் கலைச் சுற்று லாச் செய்து தற்போது யாழ். திரும்பியுள்ள இவர் தனது முது மையிலும் தனது வயதுக்கேற்றளவில் இப்பணிக்கு உதவத் தயா ராகவுள்ளார்.
இவரின் கலை உணர்வு அடுத்த பரம்பரைக்கு உதவட்டும் இவர் மேலும் பல ஆண்டுகள் வாழ்க! கலை வாழ்க! வாழ்க!
 

பெயர் திரு. க.நா.கணபதிப்பிள்ளை
( சின்னமணி )
முகவரி :
அச்சு வேறி.
பிறந்த திகதி 30 - 03- 1936
இசை நாடகக் கலைஞர்
பருத்தித்துறையிலே மாதனை என்னும் கிராமத்திலே திரு க. நா. கணபதிப்பிள்ளை பிறந்தவர் இக்கிராமத்தில் வாழும் மக்கள் கலையறிவு மிக்கவர்களாகவும் இருந்தார்கள். இவர்கள் இயற்றுகின்ற தொழில் வாழும் முறை யாவுமே ஏதோ ஒரு வகை பில் கலையுடன் தொடர்பு கொண்டிருப்பதை அறிஞர்கள் பலர் வியத்துள்ளனர். கலை மனம் கமழும் இந்தக் கிராமத்திலே, கலை யறிவிற் சிறந்த குடும்பத்திலே, நாகலிங்கம் இராசம்மா தம்பதிக ளுக்கு இரண்டாவது மகனாகப் பிறந்த சின்னமனியின் இயற் பெயர் கணபதிப்பிள்ளை. இவர் திமீது ஆரம்பக்கல்வியை பTதி னை மெதடிஸ் மிஷன் பாடசாலையில் பெற்றுக் கொண்டார். ஆறாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்புவரை புலோலி ஆண்கள் ஆங்கில பாடசாலையில் கற்றும், ஏழாலை அரசினர் உயர்தர பாடசாலை யில் ஒன்பதாம் பத்தாம் வகுப்புவரை படித்தும் தமது சிரேஷ்ட கல்வித்தராதரப் பரீட்சையில் தோற்றினார். ஏழாஜையில் இவர் கற்றபோது பல கலை நிகழ்ச்சிகளில் பங்குபற்றினார். திரு. கீதாஞ்சவி நல்லையா அவர்களினால் தயாரிக்கப்பட்டு அப் பாட சாலை மாணவர்களுடன் இவர் பங்குபற்றி காவடி I listh, கொழும்பு விக்றோறியாப் பூங்காவிலே முடிக்குரிய எவிஸ்பேத் மகாராணியார் முன்னாவையில் அரங்கேற்றப்பட்டு அவரது பரிசை யும் பெற்றது. 1949 இல்- அதேபாடசாலை மானவர்களுடன் இவர் நடித்த கப்பற்பாட்டு கலைநிகழ்ச்சி ஒன்று கொழும்பு றோயல் கல்லூரி மண்டபத்தில் அரங்கேற்றப்பட்ட போது இவருக்கு அகில இலங்கை ரீதியில் பரிசும் பாராட்டும் வழங்கப்பட்டது. இவர் பங்கு பற்றிய உழவர் நடனம் மாவட்ட அடிப்படையில் முதற் பரிசைப் பெற்றது.

Page 45
皇p மூத்த கலைஞர்கள் வரலாறு
1949 - 1951ம் ஆண்டுகளில் சின்னமணி ஏழாலை அரசினர் உயர்தர பாடசாலையில் படித்துக் கொண்டிருந்தபோது வண்ணார் பண்னை பில் திரு, நல்லையா அவர்கள் சிறந்த நடன ஆசிரியர் : தென்னிந்திய நாட்டிய மேதையான பிரபல கோபிநாத் அவர்களி டம் நாட்டிய துணுக்கங்களைக் கற்று "கீதாஞ்சவி' என்ற பட்டத் தையும் பெற்றுக் கொண்டவர். இவர் "யாழ் கலாஷேத்திரா" என்ற நாட்டியப் பள்ளியை நடாத்தி வந்தார். அந்தப் பள்ளியின் மூலம் சின்னமணியும், அவரது தமையனாரும் இயலிசை நாடகத்துறையில் அடிப்படை அறிவினைப் பெற்றுக் கொண்டதோடு, நடனத்துக் குரிய முத்திரைகள், அபிநயங்கள் ஆகியவற்றையும் அறிந்து கொண் டனர். அதன் பின் பலதரப்பட்ட நடனங்கள், கரகங்கள், காவடி கள் ஆகிய கலை நிகழ்ச்சிகளை பாடசாலைகளுக்கும். தனிப்பட்ட ஸ்தாபனங்களுக்கும் இணைந்து பழக்கிய சகோதரர்கள் இருவரும் பல பரிசுகளையும் பாராட்டுதல்களையும் பெற்றனர்.
1962-ம் ஆண்டு திரு. கோ. செல்பையா, திரு. தா. க பசுபதி திரு. ச. செல்லத்துரை, திரு . எஸ் இராஜதுரை , திரு. கா த. சோமலிங்கம் ஆகிய கலா பி. பணிகளின் முயற்சியால் மாதனை கலா மன்றம் ஆரம்பிக்கப்பட்டது. அரிச்சந்திரா என்னும் நாடகம் பழக்கப்பட்டு மேடையேற்றப்பட்டது. இக்காலத்தில் நடிகம கணி வி. வி. வைரமுத்து அவர்கள் 'ய' எனகாண்டத்தில் அரிச்சந்திர னாகத் தோன்றி நடித்து ரசிகர்களால் கவர்த்திருத்த காலம். பழம் பெரும் நடிகர்களான கரவை கிருஷ்ணாம்வார், திரு. மாசிலாமணி, தாவடி 3. S. வடிவேல் நாரதராக நடித்துப் புகழ் பெற்றகால r . இக்காலத்தில் மேடையேற்றப்பட்ட அரிச்சந்திர மயான காண்டத் தில் சின்னமணி, நான்கு வேறுபட்ட குண இயல்புகள் கொண்ட பாத்திரத்தில் தடித்து, அமோக வரவேற்பைப் பெற்றார். அதா வது தெய்வீக அம்சம் கொண்ட நாரதராகவும். ஹாஸ்ய வெடி களை உதிர்க்கும் நட்சத்திரராகவும், அயல்ாத்துப் பிள்: எ களில் ஒருவராகவும், சுடலையில் மேளம் அடிப்பவராகவும் நடித்து மக்கள் மனதைக் கொள்ளை கொண்டார் .
தீர்க்க சுமங்கலி நாடகத்தில் அவர் நடித்த யமன் பாத்திரம் , பலராலும் பாராட்டப்பட்டதோடு யமன் பின்னமணி' என்ற பட்டப் பெயரினையும் அவருக்குச் சம்பாதித்துக் கொடுத்தது. கன்னங்கள் கறுத்து, கண்கள் கோபத்தால் சிவந்து, முத்தலைச் சூ பத்தைக் கையில் தாங்கி, வெடிச் சிரிப்புக்களை உதிர்த்துக் கொண்டு யமனாக நடித்த சின்னமணியைக் கண்டு சிறுவர்கள் பயந்து நடுங்கிய துண்டு என பார்த்த ரசிகர்கள் கூறுகிறார்கள்.

縱縫
縱
溪
心 & &&&&&&&&&&
정8-88-88888.8%%%%%%%%%%%%%%%% 臀)
&&&邙
இபமனாக
கத்தில்
வித்திரி" இசைநாட
ETT
சத்தியவா
ாவிநோதன்"
சின்னமணி.

Page 46

செல்லையா மெற்றாஸ்மயில் 4.
மாதனை கலாமன்றத்தினர் அரிச்சந்திராவைத் தொடர்ந்து பல நாடகங்களை மேடையேற்றினார். பூரீ ஸ்கந்தலீலா, பவளக் கொடி, பூணூரீவள்ளி, இராமாயணம், காத்தவராயன் ஆகியவை அவற்றுட் குறிப்பிடத்தக்கது. இசைநாடகமான காத்தவராயனில், சின்னமணி, முன்காத்தானாக, கிருஷ்ணராக நடித்து அனைவரை யும் கவர்ந்தார். இதன் பின் கதாநாயகி ஆரியமாலாவாகவும், வண்ணார நல்லியாகவும், மந்தரையாகவும் நடித்து தம்மால் பெண் பாத்திரங்களிலும் சோபிக்க முடியும் எள்று நிரூபித்தார். இவருக்கு காத்தவராயன் கூத்து புகழ் தேடிக் கொடுத்தது.
மாதனை கலா மன்றத்தினர் மேடையேற்றிய பல புராண இதிகாச நாடகங்களில், சின்னமணியுடன் நடித்தவர்கள் அனேகர், அவர்களுள் கலைஞானி திரு. ரி. மகாலிங்கம் , திரு. எஸ். இராஜ துரை, திரு. வி கிருஷ்ணபிள்ளை, திரு. பொ. சிவப்பிரகாசம் , திரு. கே. என். நவரத்தினம் ஆகியோர் குறிப்பிடத்தகுந்தவர்கள். இவர்களைப்பற்றி சின்னமணி ஐயா தெரிவிப்பவை :-
திரு. ரி. மகாலிங்கம்
இவர் கதாநாயகனாகப் பல நாடகங்களில் நடித்தவர். g)|Trr கங்கள் கலையாது கச்சிதமாகப் பாடி நடித்து கலைஞானி என்ற பட்டத்தையும் பெற்றுக்கொண்டவர். சஹானா, முகாரி ஆகிய இராகங்களில் அமைந்த பாடல்களைப் பாடும்போதே இரசிகர் களின் கண்களிலிருந்து கண்ணீரை வரவழைக்க வல்லவர். இவர் சின்னமணியுடன் நடிக்கும் போது நடிப்பதற்குரிய சம்பாஷணைகள், சம்பவங்கள் ஆகியவற்றை உருவாக்கிக் கொடுத்து தாமும் சிறந்த நடிப்பினைக் காட்டி சின்னமணியின் நடிப்பிலும் மேலும் மெரு கேறச் செய்தவர்.
திரு. எஸ். இராஜதுரை
இவர் சிறந்த இசைஞானம் உள்ளவர். கனிவான சாரீரமும், உருக்கமுடன் பாடும் திறமையும் உள்ளவர். 'உங்கள் பாட்டுக் களைக் கேட்டு நான் மெய்மறந்து போனேன்' என்று நடிகமணியால் பாராட்டப்பட்டவர்.
திரு. வி. கிருஷ்ணபிள்ளை
சிறந்த சங்கீத ஞானம் கொண்டவர். இவர் சாதாரணமாகப் பாடும்போது கூட சங்கதிகளை வைத்தே பாடும் திறமை உள்ளவர். விஸ்வாமித்திரராக நடித்து பாடல்களினாலும், முகபாவங்களினா லும் ரசிகர்களைக் கவர்ந்தவர். அதே நாடகத்தில் காலகண்டி

Page 47
42 மூத்த கலைஞர்கள் வரலாறு
யாகப் பெண்வேடமிட்டு நடித்து பலரது பாராட்டுக்களையும் பெற்றவர்
திரு. பொ. சிவப்பிரகாசம்
இவர் சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக காத்தவராயன்
இசை நாடகத்தில் பல பாத்திரங்கள் தாங்கி நடித்த சிறந்த சிரிப்பு
நடிகர். இவர் ஒரு அபூர்வக் கலைஞர்.
திரு. இ. பாலசுப்பிரமணியம்
ஒரு காட்சியில் வசிட்டராக நடித்து அனைவரின் பாராட்டை யும் பெற்றவர். பின்னாளில் இவர் பல நாடகங்களில் நடித்துப் பாராட்டும் பரிசும் பெற்றவர்:
இவ்வாறு மேலும் பல நடிகர்களை நினைவுறுத்துகின்றார்.
நாடகங்களில் இரட்டையர்களாக சின்னமணியும், சின்னமணி யின் தமையனார் க. நா. நவரத்தினமும் பல மேடைகளில் தோன்றி புகழ் பெற்றார்கள். நவரத்தினம் அவர்களும் ஒரு சிறந்த நடன நாடகக் கலைஞர். சத்தியவான் சாவித்திரி நாடகத்தில் சாவித்திரியாக திரு. நவரத்தினமும் - இயமனாக சின்னமணியும், இலங்கேஸ்வரனில் - மண்டோதரியாக நவரத்தினமும், இராவண னாக சின்னமணியும், மயானகாண்டத்தில் சந்திரமதியாக நவரத் தினமும் - அயலாத்துப் பிள்ளையாக சின்னமணியும் நடித்தார்கள் . இவர்கள் சேர்ந்து சோடியாக நடிப்பது கண் கொள்ளாக் காட்சி யாக இருந்ததினால் 'நாடக இரட்டையர்கள்” என்று பெயர் சூட்டி னார்கள், கலையரசு சொர்ணலிங்கம் இலங்கேஸ்வரன் நாடகத்தைப் பார்த்த பொழுது பாராட்டி "நாடக இரட்டையர்கள்' எனச் சிறப்பு அமைத்து அதைத் தமது வாழ்வியல் நூலிலும் பொறித்து வைத்துள்ளமை இவர்களது நடிப்புக்கு நல்லதோர் சான்றாகும்.
சின்னமணி அவர்களுக்கு பல இடங்களில் பல பட்டங்கள் வழங்கப்பட்டன. கொழும்பு கொட்டாஞ்சேனை விவேகானந்த சபை மண்டபத்திலே திரு. எஸ். டி. சிவநாயகம் போன்ற புத்தி ஜீவிகளின் முன்னிலையிலே அன்றைய கல்வி அமைச்சர் பி. வி. ஜி. கலுகல்ல அவர்களினால் "நடனகலா மணி’ என விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார். இவருக்கு "கலா விநோதன் "முத்தமிழ் மாமண்" "பல்கலைவேத்தன்' 'வில்லிசைப் புலவர் ஆகிய பட்டங்களும் வழங்கப்பட்டுள்ளன. இவருடைய கலைவளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர்களில் முதன்மையானவர் இவருடைய

செல்லையா மெற்றாஸ்மயில் 43
மனைவியராகும். 1960-ல் அச்சுவேலியைச் சேர்ந்த திரு. விஸ்வ லிங்கம் அவர்களின் மூத்த புதல்வியை திருமணம் செய்து கொண் டார். அப்போது பண்டாரவளை, புனித மேரி தமிழ் பாடசாலை யில் ஆசிரியையாக இருந்த இவர் திருமணம் செய்த பின்பும் கணவனின் கலைச் சேவையின் வளர்ச்சிக்காக அல்லும் பகலும் அயராது உழைத்துள்ளார் என சின்னமணி அவர்கள் இன்னும் பெருமைப்படுகிறார். வில்லிசை வித்துவானாகவும், இசைநாடக கலைமணியாகவும் திகழும் சின்னமணி அவர்களும் அவர்கள் பாரி யாரும் பல காலம் வாழ்ந்து கலைப்பணியாற்ற வேண்டும் என பிரார்த்திக்கின்றேன்.
28-11-98-ல் சின்னமணி அவர்களை நேர்கண்ட பொழுது எனது கேள்விகளுக்கு கிடைத்த முக்கிய பதில்கள்
S நடிகர்கள் எவ்வளவுதான் கற்பனை செய்து அதீத முயற்சி எடுத்து, சிறந்த நடிப்பினைக் காட்டினாலும் இணைந்து நடிப் பவர்கள், அல்லது உடன் நடிப்பவர்கள், தாமும் சோடை போகாது, போட்டி போடுவது போல நடிக்காது விட்டால், சிறந்த நடிகர்களின் நடிப்பும் எடுபடாது போய்விடும்:
G அந்த நாள்களில் விடிய விடிய நாடகங்கள் நடிக்கப்பட்டன. முன் அரிச்சந்திரன், பின் அரிச்சந்திரன், முன் சத்திய கீர்த்தி, பின் சத்தியகீர்த்தி என்ற முறையிலே ஒரு பிரதான பாத் திரத்தை இருவரே நடித்து வந்தனர். பல மணித்தியாலங் கள் தொடர்ந்து ஒரே பாத்திரத்தில் ஒருவரே நடித்தால் அந்த நடிகரது தோற்றம், நடிப்பு ஆகியன ரசிகர்களுக்கு அலுப்பையும், சலிப்பையும் கொடுக்குமெனக் கருதியே இருவரை நடிக்க வைத்தனர்.
G ஆரம்ப காலத்தில் வருமானத்திற்காக நாடகங்களில் நடிக்க வில்லை. கலைச் சேவையாகவே செய்தோம். கிராம மக்கள் நாடகம் பழகும் பொழுது செலவைப் பொறுத்தார்கள்? நாடகம் மேடையேற்றும் பொழுது செலவை ஏற்றார்கள். கிராமமக்கள் தாங்கள் எடுக்கும் விழா என்ற மனப்பான்மை யிலேயே நாடகங்கள் மேடையேற்றப்பட்டதால் எங்களுக்கு செலவுகள் எதுவும் இருக்கவில்லை. ஆனால் பிற்காலத்தில் வருவாய்க்குரிய தொழிலாகவும் மாறிவிட்டது என்பதை மறுக்கவில்லை.
G நாடகம் ஆரம்பிக்க முன்பு கூத்துவிளக்கேற்றி கும்பம்வைத்து, அம்மன் வலாயம்பண்ணி, கதிரைக்குப் பூசைசெய்து, விநாயகர்

Page 48
44
மூத்த கலைஞர்கள் வரலாறு
தோத்திரம் பாடி, சிலவேளை குருக்களைக் கொண்டு பூசை செய்வித்துத்தான் நாடகம் ஆரம்பிப்பதுண்டு காப்புப் பாடலில்,
"கஜமுக வதனா . . .
" "அருள் செய்வாய் வாணி அழிய வேக புராணி'
" "ஒரானைக் கண்ணே கண்ணே'' என்பனவற்றைக் கூறலாம். இன்னும் நெல்லியண்டி பத்திர காளி அம்மன் கோவிலில் இப் பண்பாடு உண்டு. இந்நிகழ்வை மறுபக்கத்தில் நோக்கின் - இக்காலத்தில் "கோரஸ்’ நாடகம் ஆரம்பிக்க முன் சுதியை "ஒற்றுமைப்படுதல் நிகழ்வு நிகழ்வது போல், எல்லா நடிகர்களுடைய சாரீர சுருதியையும் 'ஒன் றாக்குதல்’ நிகழ்வாக காப்புப்பாடல் அமைந்துள்ளது என்றும் கூறலாம.
பார்வையாளர் கைதட்டி மகிழ்வித்து உற்சாகப்படுத்துவர், ஒவ்வொருவர் வரவிற்கும் கைதட்டுவார்கள். ஒவ்வெருவரின் பாடல், பேசிய வசனங்கள், தாங்கள் ரசிக்கும் கட்டங்கள் என்பனவற்றிற்கு கைதட்டி நடிகர்களை ஊக்கப்படுத்தி நடிக்க
GO)6 fig6.
ஆரம்ப காலத்தில் ஒரே நாடகத்தை 4, 5 நாட்கள் தொடர்ந்து வேறு வேறு, கலா மன்றங்களினால் மேடையேற்றுவார்கள். இதனால் எந்த திருவிழா சிறந்தது என்பது போல, ஒரே நாட கத்தை, யார் சிறப்பாக நடிப்பார்கள் என்ற போட்டியில் கலைஞர்கள் வளர்ந்தார்கள்.
இந்தியாவிலிருந்து கலைஞர்கள் இங்கு வந்ததினால் இங்குள்ள கலைஞர் எத்தனையே விடயங்களை இந்தியாக் கலைஞரிட மிருந்து கற்றுக் கொண்டார்கள். இலங்கையின் இசை நாடக வரலாற்றில் இந்தியர் வருகை முக்கிய திருப்பத்தை ஏற்படுத் தியது எனலாம்.
எந்த ஒரு நடிகனும் கதாநாயகன் வேடம் போட வேண்டும் என எண்ணினால் அவன் கலைஞனாக முடியாது. சிறு பாத்தி ரங்களையும் ஏற்று நடிக்கக் கூடிய மனப்பான்மை வேண்டும். நான் அயலாத்துப்பிள்ளையாக நடித்த பொழுது, சிறு பாத்திரம் மூலம் எனக்கு மிகவும் புகழ் கொடுத்தது. எனவே கதாயாயக னாக நடிக்க வேண்டும் என்று ஒரு கலைஞன் எண்ணினால் அவனால் முன்னேற முடியாது. உதாரணமாக பறைமேளம்

செல்லையா மெற்றாஸ்மயில் 45
அடிப்பதில் சிறந்தவர் ஒருவர் இருந்தார். அவர் பெயர் - வளப்பான். காத்தவராயன் கூத்தில் பிற்பகுதியில் பறை மேளத்தை அடிக்கும் ஒரு பாத்திரத்தை சிறப்பாகச் செய்தேன் அதனால் எனக்கு "வளப்பான்' என பெயர் வந்துவிட்டது. சிறிய பாத்திரமானாலும் சிறப்பாகச் செய்ததால் அந்தப் பட்டம் கிடைத்தது.
நாடகத்தை பழக்க ஆரம்பிக்க முன் நடிகர்களை தேர்ந்தெடுக் கும் பொழுது எல்லோரையும் ஒரே முறையில் பாடச் செய்து, சாரீரம், உருவம், தேக அமைப்பு, சொற்சுவை, தாளம், சுருதி, நளினம் இவைகள் பார்த்து நடிகர்கள் தேர்வு செய்யப்படுமே ஒழிய வேறு எந்த ஊழலுக்கும் இடம் கொடுப்பதில்லை. நடிக்க வருபவர்கள் சொந்தக்காரர். பெரிய பாத்திரம் எடுக்க வேண்டும் என்ற எண்ணமுடையவர்கள், செல்வாக்கு காட்டி நல்ல பாத்திரம் பெறவேண்டும் என்பவர்கள் வருவதுண்டு. இவர்கள் வரும்பொழுது சிக்கலான பிரச்சினையாக இருக்கும். இதற்கு இடம் கொடுத்தால் நாடகம் நன்றாக வராது. எனவே தயாரிப்பாளன், உறவு, அறிமுகத்திற்கு முதன்மை கொடுப்பது தவறு.
கலைஞன் தெய்வீகமானவன். சங்கீதம் படியாத புத்திசாலி களாகவும் சங்கீதம் கேட்டு, பரம்பரையாக வந்த ஞானமுள் ளவர்கள் மிகவும் சிறப்பாகச் பாடுகிறார்கள். இதைக் கேள்வி ஞானம் என்பர் புதிய நடிகர்களுக்கு பழக்கும் பொழுது கேள்வி ஞானம் இல்லாதவர்களுக்கு இசை நாடகம் பழக்குவது மிகவும் கஸ்டம். இது கடவுளால் கொடுக்கப்பட்ட கொடை. இதனால்தான் கலைஞன் தெய்வீகமானவன் என்றேன்.

Page 49
βλιμαν ή
திரு. வேலுப்பிள்ளை -
சரவணமுத்து
முகவரி:
மஞ்சத்தம, இணுவில்.
பிறந்த திகதி: 02-02 - 1921
இசை நாடகக் கலைஞர்
யாழ்ப்பானத்திலுள்ள இணுவையூரிலே நாடக வல்லுனர் திரு. லே ஒப்பிள்ளைக்கும் , அன்னலட்சுமிக்கும் ஏக புதல்வனாக 1921 -ம் ஆண்டு மா சித் திங்கள் 2-ம் நாள் திரு. சரவணமுத்து பிறந்தார். ஐந்து வயதிலே தற்போது யா கோண்டாவில் இந்து மசாவித்தியாலயம் பாடசாலையில் ஆரம்பக் கல்வியை சண்முக GL TRIl Tri a 67 L Fir L h பயின்றார். தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பயின்ற பின்னர், கல்வி கற்கும் வசதி, பெருனாகாரம் குன்றிய காரணத்தினால் தனது பாடசாலைக் கல்வியினை நிறுத் திக் கொண்டு யாழ்ப்பாணத்திலேயே சிறு கைத்தொழில்களில் ஈடு பட்டு தனது வாழ்க்கையை ஒட்டினார். இவ்வாறு தனக்கு பன்னி ரண்டு வயது நெருங்கியதும் நம் நாட்டிலே வளர்ந்து வந்த நாடகக் கலை பெரிதும் பிரசித்து பெற்று சிறுவர் முதல் பெரியவர் வன: மிகவும் இரசித்து வந்த காலத்தில், இவரும் ஈர்க்கப்பட்டு விருப்ப மும் , பேரார்வமும் கொண்டார். அக்காலத்தில் இணுவி:ே நாடகத்தை வழிநடத்திய " " கனேஜர்' கதிர்காமு திரு. சரவணை முத்துவின் நாடகப் பிரவேசத்திற்கு உழனன்று கோலாக இருந்தார் .
அக்காலத்தில் "மனேஜர் கதிர்காமு " " இசையில் ஆர்வம் மிக்க சிறுவர்களை ஒன்று சேர்த்து நாடகங்களை உருவாக்கி, பழக்கி கோவில்களிலேயே அரங்கேற்றி அதனை வளர்த்து வந்தவர் இவரும் அணுகி தனது விருப்பத்தைக் கூற அவரும் இசைந்து பொருத்தமான பெண் பாத்திரமே என்று கூறி அவரைச் சேர்த்துக் கொண்டார். அவர் தனது நாடகப் பிரவேசம் மூலம் பிராகா சிக்கத் தொடங்கினார்.
""முதன்முதலில் சாவித்திரி' இசை நாடகத்தில் 'சா வித்திரி"' பெண் பாத்திரத்தை நடித்து பல பாராட்டுக்களைப் பெற்றார்.
 

செல்சிையா - மெற்றாஸ்மயில் 星置
அப்போது சிறந்த நடிகர்களான நெல்லியடி திரு ஆழ்வாப்பிள்ளை, கன்னிகா, பரமேஸ்வரி, திரு, இராசசிங்கம், திரு. நாகசிங்கம், எஸ். கே. செல்லையாபிள்ளை அவர்களுடன் சேர்ந்து அவர்கள் நாடகங்களையும், நடிப்பையும் ரசித்து அவர்கள் போல் நடிக்க வேண்டும் என்று ஆசை கொண்டார்.
அதன் பின் "வள்ளி திருமணம்' நாடகத்தில்- வள்ளியாகவும், பவளக்கொடி நாடகத்தில், பவளக்கொடியாகவும் நடித்து பலரது ஆசிகளை பெற்றேன்' என்றார்.
அக்காலங்களில் நாடகங்களுக்கு "சர்மா நாஸ்ரர்" "" ஹார் மோனியம்' வாசிப்பது கண்டு இவரும் ஹார்மோனியம் வாசிப் பதில் சிறந்தவராக வரவேண்டும் என்ற விருப்பில் அவரையே அணுகி தனது விருப்பத்தைக் கூற அவரும் இசைந்து, அவரிடம் ஆர்மோனியம் பழகினார். அவரிடம் 5 வருடங்கள் ஹார்மோனியம் கற்று_தேர்ச்சியடைந்தார். இவ்வாறிருக்கையில், இந்தியாவிலிருந்து ஒரு பெரிய நாடகக் கம்பெனி ஒன்று யாழ்ப்பாணம் வந்தது. அது முதன்முதல் இலுவையூர் மஞ்சத்தடி முருகன் ஆலயத்தில் "கண்ணகி" நாடகம் மேடையேற்றினார்கள். அதற்கு முதன்முதல் இவரே ஹார்மோனியம் வாசித்து தனது ஊருக்கும், சமூகத்திற்கும், புசு ழைத் தேடிக் கொடுத்தார். இந்தியாவிலிருந்து விஸ்வநாதன் என் பவர் பதிவினைத்து பேர் கொண்ட நாடக கம்பனி ஒன்றை இலங் விைக்கு அதாவது மட்டக்களப்பிற்கு கொண்டு வந்தார். அது இலங்கையில் ஒன்பது மாதகாலம் இருந்தது. அதற்கு ஒன்பது மாதமும் இவரே ஹார்மேனியம் வாசித்து புகழ் பெற்றார் . தொடர்ந்து நடனங்கள், வில்லுப்பாட்டுகள் போன்றவற்றிற்கு இரண்டு ஆண்டுகள் ஹார்மோனியம் வாசித்தார், அதன்பின் இந்தி யாவிலிருந்து நடனங்களுக்காக கூட்டிக் கொணர்ந்த "சந்திரா" என்பவனா திருமணம் செய்து நாடகத்துறையிலும், நாட்டியத் துறையிலும் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேல் இருவரும் கலைத் தொண்டாற்றினார்கள்.
இன்றும் இவர் இசை நாடகங்களிற்கு ஹார்மோனியம் வாசித்துக் கொண்டிருக்கிறார் ஹார்மோனியம் வாசித்தால் கதை சொல்லுப் சிறந்த இசைநாடக நடிகரும், ஹார்மோனிய வித்துவாணுமாகிய திரு. சரவணமுத்துவின் தேவை கலை உலகிற்கு கட்டாய தேவையாக உள்ளது. அவர் பல்லாண்டு காலம் மேலும் வாழ இறைவனை வேண்டுகின்றேன்.
Anak

Page 50
Li Ji .
திருமதி. சந்திரா
f .சரவணமுத்து '#೧) ' '
மஞ்சத்தடி, இணு வில்,
பிரத்த திகதி 2 - 08 - 1939
இசை நாடகக் கலைஞர்
திருமதி சத்திரா - சரவணமுத்து 1937-ம் ஆண்டு ஆவணித் திங்கள் பன்னிரண்டாம் நாள் இந்தியாவிவே, மலையான தேசத் திலே திரிசூர் எனும் ஒளரிலே பிறத்தவர். ஐந்து வயதிலே பொள் எாச்சி நகரிலுள்ள மிஷன் பாடசாலையில் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் கல்வி கற்றார். கல்விகற்றுக் கொண்டிருக்கையில், தனது தந்தை வேலை செய்த மலைபாரிற்கு பாடசாலை விடு முறை காலங்களில் போப்வருவதுண்டு. இவரது தந்தை இசையில், இசை நிகழ்ச்சிகளில் பேரார்வம் கொண்டிருந்தார். அத்தோடு புல்லாங்குழல் வாசிக்கக் கூடியவர். தனது பிள்ளைக90ளயும் இசை பில் ஆர்வம் மிக்கவர்களாக உருவாக்க வேண்டும் என்ற பெரு விருப்புக் கொண்டு பல்வேறு இசை நிகழ்ச்சிகள், நாடகங்கள். நாட்டியங்கள், நடனங்கள் போன்றவற்றைக் காண்பிப்பதற்காக அவர்களை அழைத்துச் செல்வதுண்டு. பிள்ளைகளும் பொழுது போக்காக பல்வேறு நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கு விருப்பத்துடன் செல்வதுண்டு. சந்திரா அவர்கள் இயல்பாகவே சங்கீதம் (வாய்ப் பாடல்) பாடும் திறனுடையவராக இருந்தார். இசை நிகழ்ச்சிகளை பார்க்க, பார்க்க சந்திரா வுக்கு இசையில் கலையில் பேரார்வத்து டன் கூடிய பெருவிருப்பு ஏற்பட்டது. இதனால் தனது கலைத் திறனை வளர்க்கம் பொருட்டு, பாடசாலைக் கல்வியினை அத் தோடு நிறுத்திக் கொண்டு, தனது பத்து வயதில் அக்காலத்தில் கோயாமுத்தூரில் உள்ள "பாய்ஸ் கம்பெனி'யில் சேர்ந்தார்.
அக்காலத்தில் கோயாமுத்தூரிலுள்ள "பாய்ஸ் கம்பெனி' என் பது 'ஐயப்ப தமிழ் நாடக சபா" என்று பெயர் கொண்டது. இது தடனம், நாடகம் என்பவற்றை ஆர்வம் மிக்கோருக்கு பழக்கி வித்து பல்வேறு ஊர்களுக்கு சென்று அங்கே அரங்கேற்றி வந்தது.
 

செல்லையா மெற்றாஸ்மயில்
சந்திராவும், சகோதரியும் "பாய்ஸ் கம்பெனி'யிலே பரத நாட்டியம், நாடகம் என்பவற்றை அங்கே சிறந்த முறையில் பயின் றனர். இவ்வாறாக முதல்முதலில் சந்திரா "சீதா கல்யாணத்தில்' சிறு பாத்திரம் தாங்கி நடித்து, நாடக உலகில் பிரவேசித்தார். இவர் பாய்ஸ் கம்பெனியில் நடித்த நாடகங்களும் பாத்திரங்களும்:
நத்தனார் - வேதியன் மனைவி சத்தியவான் சாவித்திரி - சாவித்திரி வள்ளி திருமணம் - வள்ளி பவளக்கொடி - அல்லி
கண்ணகி - கண்ணகி, மாதவி சம்பூர்ண ராமாயணம் - சீதை
இத்துடன் நாடகங்களிற்கு நடனமாடுவது நாட்டியமாடுவது என்பதை செய்து வந்தார். இவ்வாறாக 3 ஆண்டுகள் இயங்கி வந்த " "பாப்ஸ் கம்பெனி' மூடப்பட்டது.
இதனால் பின் தொடர்ந்து சந்திராவும், சகோதரியும் 'மாடன் தியேட்டரில்' படம் நடிப்பதற்காக சென்றார்கள். அங்கே ஆறு மாதம் வரை இருந்தார்கள். அங்கே படத்தில் குழு நடனத்திற் காக தேர்ந்தெடுத்து "லக்ஷ்மி விஜயம்' என்ற படத்தில் சிறு கட்டங்களில் நடித்தார். அதன் பின் பொள்ளாச்சி நகரிலுள்ள சிறு நாடக கம்பெனி ஒன்றில் இணைந்து அங்கே நாடகம் நடித்து வந்தார். அவர் நடித்துக் கொண்டிருக்கையில், 1949-ம் ஆண்டு தா. சின்னத்துரை என்பவர் நடனக் குழு விற்காக சந்திராவையும் சகோதரியையும் அவரது தந்தையுடன் இலங்கைக்கு கூட்டி வந்தார் கள்.
இiங்கையில் யாழ்ப்பாணத்திலே இரு ஆண்டுகள் நடினம் ஆடி வந்தார்கள். நடனம், கதைகளி, நாடகம் என்பன சந்திராவும், சகோதரியும் செய்து வந்தனர். இரண்டு ஆண்டுகள் கடந்த பின்னர் இந்தியாவிற்கு செல்வதற்காக ஆயத்தமானார்கள். அப்போது நாடகங்கள் , நடனங்கள் போன்றவற்றிற்கு இசையமைத்துக் கொண்டிருந்த சரவணமுத்துவை விவாகம் செய்தமையால் இந்தி யாவிற்கு செல்வது தடைப்பட்டது.
திருமணம் செய்த பின்னர் முப்பத்தைந்து ஆண்டுகள் இலங்கை யிலுள்ள அனைத்துப் பாகங்களிலும் சென்று, பல்வேறு நாடகங் கள் நடனங்கள் போன்றவற்றை சந்திராவும், கணவர் திரு. சரவண முத்துவும் சேர்ந்து செய்து வந்தனர். நடித்துக் கொண்டிருக்கையில் இவருக்கு ஐந்து பிள்ளைகள் பிறந்தார்கள். பிள்ளைகள் பிறந்தும்

Page 51
岳凸 முத்த கலைஞர்கள் வரலாறு
கூட நாடகங்கள். நடனங்கள் எல்லாம் செய்து வந்தது குறிப்பிடத் தக்கது இவர் இலங்கையில் நடித்த நாடகங்களும் பாத்திரங்களும் :
பூgவள்ளி - வள்ளி சத்தியவான் சாவித்திரி - சாவித்திரி பவளக்கொடி - பவளக்கொடி அல்வி அர்ச்சுனா - அல்லி நல்வதங்காள் - நல்லதங்காள் கண்ணகி - மாதவி அசோக்குமார் - காஞ்சனா ஞானசெளந்தரி - ஞானசெளந்தரி அரிச்சந்திரா - சந்திர மதி பாமா விஜயம் - ருக்குனரி
சரித்திர நாடகங்களும், சமூக நாடகங்களும் நடித்தனர். பிர பல்யமான கலைஞர்களான சி. ரி. செல்வராசா, திரு. வி. என். செல்வராசா, நடிகமணி வி. வி. வைரமுத்து, திரு. தற்குணம், சின்னமணி, செல்வம் ஆகியோருடனும், இராமலக்சுமி, கன்னியா பரமேஸ்வரி, சகுந்தலா, சாந்தா, கனகா போன்ற பெண் நடிகர் களுடன் பிரதான பாத்திரமேற்று சந்திரா நடித்துள்ளார்.
சமூக நாடகங்களில் "வீரனமந்தன்' நாடகத்தில் முதன்முதல் நடித்தார். இந்த நாடகம் முதன்முதலில் வண்ணார்பண்ணையி லுள்ள 'மனோகிரா தியேட்டரில்' அரங்கேற்றிய பொழுது பல பாராட்டுகளைப் பெற்றார். அத்துடன் 'சங்கிளியன்' 'அத்தை மகள்' போன்ற நாடகங்களிலும் நடித்தார். இவர் நடித்த நாட கங்களுக்கு பத்திரிகை வாயிலாகவும் பல பாராட்டுக்கள் கூடிய புகழ் கிடைத்தது என்று இன்றும் புகழாங்கியதமடைகிறார்.
யாழ்ப்பாணத்தில் "வீர மைந்தன்'" நாடகத்தை மேடையேற் றிய பொழுது "இரசிக இரஞ்சன சபா" மூலம் சுலையரசு சொர்னலிங்கம் தற்சான்றிதழ்கள், பரிசில்கள் வழங்கி பாராட்டி யுள்ளார்.
தன்னையும் தனது குடும்பத்தையும், கனல் வாழ்க்கையில் அர்ப்பணித்து இன்று ஏழ்மை வாழ்விலும், நிறைவான மனத்திருப் தியுடன் சந்தோசமாக வாழ்ந்து கொண்டிருக்கும் அக்கலைக் குடும் பத்திற்கு தலைவனங்கி வாழ்த்துகின்றேன்.

பெயர்
திரு. வி. எஸ். செல்வராசா
முகவரி
சீரணி, சண்டிவிப்பாய்,
பிறந்த திகதி 29, 02 - 1934
இசை நாடகக் கலைஞர்
纖
இவர் யாழ்தகரில் ஏழாலைப் பகுதியிலே நல்லையா. அன்னம்மா என்னும் தம்பதியினருக்கு இரண்டாவது புதல்வனாக 1934-ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 29-ம் திகதி பிறந்தார். இவர் இளமை யில் ஏழாலை சைவ வித்தியாசாலையில் தனது ஆரம்பக் கல்வியைப் பயின்றார். சிறு வயதிலேயே இசையில் ஆர்வங்கொண்ட இவர் பாடசாலை நிகழ்ச்சிகளிலும் போட்டிகளிலும் பங்குபற்றிப் பரிசில் களையும் பெற்றுக்கொண்டார். தனது ?-வது வயதில் தெல்லிப் பழை, வீமன்காமம் என்னும் இடத்தில் ஆசிரியர் இரத்தினசிங்கம் Gr Girl Gar Irrit Eis நெறிப்படுத்தப்பட்ட "சம்பூரண அரிச்சந்திரா" " எனும் நாடகத்தில் முதன்முதலாக லோசுதாசன் என்னும் பாத்திரம் ஏற்று நடித்துள்ளார். கீரிமலை செல்லையா தேசிகரிடம் பண்ணி சையையும் முறையாகப் பயின்றார். இவரின் இசையாற்றலையும் நடிப்புத் திறனையும் கண்ட ஆசிரியர்களும் பெரியோர்களும் "பாட்டுக்கார செல்வராசா' என்று அழைத்து வந்தனர்.
அதன்பின் 1947-ம் ஆண்டு சண்டிலிப்பாயில் அவர் தன் குடும் பத்தினருடன் குடியேறி தற்போது சண்டிலிப்பாய் இந்து மகா வித்தியாலயம் என்று அழைக்கப்படும் ' ராஜா' பாடசாலையில் தனது கல்வியைத் தொடர்ந்தார். அங்கு எஸ். எஸ். சி. வரை கல்வி பயின்றார். அங்கு கல்வி பயிலும் போதும் பல போட்டிகளில் பங்குபற்றி பரிசில்களையும், பாராட்டுக்களையும் பெற்றார். நாட கீத்தில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக இவருடைய மைத்துனர் பெரியவிளானைச் சேர்ந்த சி. சி. செல்வராசா என்பவரைக் 岛岛 வாகக் கொண்டு அவருடன் இணைந்து பல இசை நாடகங்களை நடிக்கத் தொடங்கினார்.

Page 52
52 மூத்த கலைஞர்கள் வரலாறு
அப்பொழுது பழம்பெரும் நடிகர்களான எஸ். வி. மாசிலாமணி (தவில் வித்துவான் தட்சணாமூர்த்தியின் சகோதரன்) மல்லாகம் சின்னையா தேசிகர், ஜே. எஸ். ஜெயராசா, நெல்லியடி கிருஸ் ணாழ்வார் என்பவர்களுடன் இணைந்து பல இசை நாடகங்களில் நடித்துப் புகழ் பெற்றார். வரகவி பொன்னாலை கிருஷ்ணன் என்ப வருடன் சில நாடகங்களில் இணைந்து நடித்து வந்தார். பின்பு இவர் 1958-ம் ஆண்டு தென்னிந்தியாவிலுள்ள திருநெல்வேலி ஜில்லாவில் உள்ள நாதஸ்வர வித்துவான், எஸ். எஸ். ரங்கப்பாவிடம் சில காலம் கர்நாடக இசையை முறையாக கற்று வந்தார். அக் காலத்தில் நாதஸ்வர வித்துவான், காரைக்குறிச்சி அருணாசலத்தின் இல்லத்திற்கு இவருடைய குருநாதருடன் சென்றார். அங்கு இவர் பாடிய கல்யாணி இராக ஆலாபனையையும் கீர்த்தனையையும் கேட்ட வித்துவான் அருணாசலம் இவரது சாரீர வசீகரத்தையும், இசை ஞானத்தையும் வெகுவாகப் பாராட்டினார்.
1959-ம் ஆண்டு பிரபல பின்னணிப் பாடகரும் , நடிகருமான திருச்சி எம். எம். மாரியப்பா குழுவினர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தபோது அவர்களின் நாடகக் குழுவில் இணைந்து பல நாடகங்களில் இவர் கிருஷ்ணனாகவும், மாரியப்பா அருச்சுன னாகவும் தோன்றி நடித்துப் புகழ் பெற்றார். அனேகமாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் முக்கியமான இடங்களில் இவர்களின் இசை நாடகங்கள் பல மேடையேறின. இவர் கீரிமலை பூg பார்வதி கான சபையின் நாடக மன்றத்தில் பிரபல தென்னிந்திய நடிகைகள் ரி. பி. இராமலட்சுமி, சி. ஆர். சந்திரா, கன்னியா பரமேஸ்வரி, பாலகிருஷ்ணன் சரஸ்வதி போன்றோருடன் பல நாடகங்களில் நடித்தார். அக்காலத்தில் பெண் பாத்திரங்களை பெண்களே நடித் தனர். நாளடைவில் அந்த நிலை மாறி பெண் பாத்திரங்களை ஆண்கள் நடிக்கும் நிலை உருவாகியது. இவ்வேளையில் அரியாலை யூர், வ, செல்வரத்தினம் என்பவர் பெண் பாத்திரம் ஏற்று நடிக்கத் தொடங்கினார். அவருடன் இணைந்து ஆயிரக் கணக்கான மேடை களில் இவர் நடித்தார்.
ረ 1968-ம் ஆண்டளவில் காங்கேசன்துறை ""வசந்தகான சபா' வின் பிரதம நடிகரான வி. வி. வைரமுத்துவுடன் இணைந்து நூற்றுக்கணக்கான மேடைகளில் நடித்தார். இலங்கை வானொலி கலையரங்கத்திலும் வி. வி. வைரமுத்து அந்திராசியாகவும், இவர் பூதத்தம்பியாகவும் நடித்துப் புகழ் பெற்றார். இதைவிட தனிப்பட்ட ரீதியிலும் இவருடைய பல நாடகங்கள் இலங்கை வானொலி கலை யரங்கத்திலும் மேடையேற்றப்பட்டன. இத்தோடு இவரது பல நாடக மேடைப் பாடல்களையும் நாடகங்களையும் இலங்கை

'செல்லையா மெற்றாஸ்மயில் 53
வானொலியினர் ஒலிப்பதிவு செய்து ஒலிபரப்பினார். 1979-ம் ஆண்டு சண்டிலிப்பாய் வாழ் மக்கள் அவருக்கு பாராட்டு விழா
செய்தபோது அதிலே இவருக்கு "இசை நடிகமணி" என்ற பட்டத்தை கலையரசு சொர்ணலிங்கம் என்பவர் வழங்கினார். அக்காலத்திலே இவர் "சண்டிலிப்பாய் ஈஸ்வரி நாடக மன்றம்'
என்ற மன்றத்தை ஸ்தாபித்து அதிலே பாடி நடிக்கக்கூடிய சிறந்த கலைஞர்களான வி. செல்வரத்தினம், வி. கனகரத்தினம், எஸ். வடிவேல் போன்றோருடன் இன்னும் சிறந்த நடிகர்களையும் ஒருங்கு சேர்த்து பல இசை நாடகங்களை மேடையேற்றி வந்தார். இவரது நாடகங்கள் அதிகமாக வரமராட்சிப் பகுதிகளில் மேடையேற்றப் பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றன. அங்கே பூரீ நெல்லண்டைப் பத்திரகாளி அம்மன் ஆலய பரிபாலன சபையினரால் 'நாடக கலா ஜோதி' என்னும் பட்டமளித்து கெளரவிக்கப்பட்டார்.
1990-ம் , 91-ம் ஆண்டு காலப் பகுதியில் யாழ். பல்கலைக் கழகத்தில் கைலாசபதி கலையரங்கில் பேராசிரியர் கா. சிவத்தம்பி யினால் ஒழுங்கு செய்யப்பட்டு இவரது 'பூஞரீவள்ளி' நாடகம் மேடை ஏற்றப்பட்டது. அதன்பின் தற்போது உபவேந்தராய் இருக் கும் பாலசுந்தரம்பிள்ளை அவர்களின் தலைமையில் இவரது 'சத் தியவான் சாவித்திரி' என்ற இசை நாடகம் மேடையேற்றப்பட்டு அன்றைய தினம் இவருக்கு பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை அவர்களால் பொன்னாடை போர்த்திக் கெளரவிக்கப்பட்டார். இக் காலத்திலேயே கம்பன் கழக அமைப்பாளர் இ. ஜெயராஜ் அவர்க ளால் ஒழுங்கு செய்யப்பட்டு இவரது இசை நாடகங்களான "பூரீவள்ளி' "மயான காண்டம் ‘’ ‘சத்தியவான் சாவித்திரி' போன்ற நாடகங்கள் கம்பன் கோட்டத்தில் மேடையேற்றப்பட்டு பல கல்விமான்களதும் பெரியோர்களினதும் பாராட்டுகளைப் பெற் றன. நாதஸ்வர வித்துவான் என். கே. பத்மநாதனின் மணிவிழா வில் நல்லை ஆதீனத்தில் இவரின் சத்தியவான் சாவித்திரி நாடகம் நடைபெற்றது. அப்பொழுது முன்னைநாள் நல்லை ஆதீன முதல் வரின் 10-வது ஆண்டு நிறை வையொட்டி இவரது ' பக்த நந்த னார் ?? நாடகம் முதன் முதலாக மேடையேற்றப்பட்டது. இவரது நாடகங்களைப் பார்த்த சிவச்செல்வி தங்கம்மா - அப்பாக்குட்டி அவர்கள் தெல்லிப்பளை துர்க்கையம்மன் ஆலய அன்னபூரணி மண்டபத்தில் இவரின் "பூரீ வள்ளி' நாடகத்தை மேடையேற்றி னார். இவரது நாடகக் கலையை பேராசிரியர் மெளனகுரு, கலாநிதி காரை. சுந்தரம்பிள்ளை போன்றோர் வெகுவாகப் பாராட்டினர். கலைப்பீடாதிபதி அ. சண்முகதாஸ் தலைமையில் கைலாசபதி கலையரங்கில் இவரது நாடக மேடைப் பாடல்கள்

Page 53
54 மூத்த கலைஞர்கள் வரலாறு
மேடையேற்றப்பட்டன. இவர் நடித்த இசை நாடகங்களும் பிரதான பாத்திரங்களும் வருமாறு:
1) புற வள்ளி - வேலன், வேடன், விருத்தன் 2) சத்தியவான் சாவித்திரி - சத்தியவான் 3) சம்பூர்ண அரிச்சந்திரா - அரிச்சந்திரன் 4) பவளக்கொடி - கிருஷ்ணன், அருச்சுனன் 5) அல்லி அருச்சுனன் - அருச்சுனன் 6) லலிதாங்கி - அழகேசன் 7) பூதத்தம்பி - பூதத்தம்பி 8) சாரங்கதரன் - சாரங்கதரன் 9) கோவலன் கண்ணகி - கோவலன் 10) கிருஷ்ணா அருச்சுனா - சித்திரசேனன் 11) ஞான செளந்தரி - பிலேந்திரன் 12) நல்லதங்காள் * நல்லண்ணன் 13) தூக்குத் தூக்கி - சுந்தராங்கதன் 14) மகாகவி காளிதாஸ் - காளிதாஸ் 15) பக்த நந்தனார் - நந்தனார் 16) பாமா விசயம் - கிருஷ்ணன் 17) அசோக்குமார் ண குணாளன்
வேறும் பல.
கொழும்பு விவேகானந்தா மண்டபத்திலே கொழும்பு சட்டக் கல்லூரி மாணவர்களால் நடாத்தப்பட்ட விழாவிலே இவருடைய
"அசோக்குமார்’ நாடகம் முன்னைநாள் மந்திரி செல்லையா - குமாரசூரியர் தலைமையில் மேடையேற்றப்பட்டது. அத்தோடு கொழும்பு சரஸ்வதி மண்டபத்திலும் இவரது ' பூரீ வள்ளி ''
*" கோவலன் கண்ணகி ' நாடகங்கள் அரங்கேறின.
நல்லூரில் அமைந்துள்ள இளங்கலைஞர் மன்ற தொடக்க விழா வில் இசைக் கலைஞர்கள் பொன். சுந்தரலிங்கம், எஸ். பத்மலிங்கம் ஆகியோருடைய வேண்டுகோளுக்கிணங்க இவருடைய "பூனி வள்ளி' நாடகம் அரங்கேறியது. அங்கே கலைப்பேராசு ஏ. ரி. பொன்னுத் துரை அவர்களின் பாராட்டைப் பெற்றார். ஆரம்ப காலத்தில் ஆலயங்களில் மட்டும் மேடை ஏறிய இவரது இசை நாடகங்களை பல்கலைக்கழகத்திலும், பிரபல பாடசாலைகளிலும் கல்விமான்கள் மத்தியிலும் அறிஞர்கள் மத்தியிலும் பிரபல்யப்படுத்திய பெருமை புனர்வாழ்வுக் கழகத்தில் பணிபுரிந்த காலஞ்சென்ற திருவாளர் கனகசபாபதி அவர்களையே சாரும் என்று கலைஞர் குறிப்பிட்டார் அண்மையில் "இசை நாடக அரசு' என்ற பட்டம் மானிப்பாய் கிழக்கு பாரதி சனசமூக நிலையத்தினரால் வழங்கப்பட்டது,

செல்லையா மெற்றாஸ்மயில் 55
3-10-98 அன்று ‘நேர் காணல்" செய்தபொழுது இடம்பெற்ற ஒரு சில கேள்வியும் பதிலும்.
இசை நாடகத் துறைக்கு மிகவும் ஆர்வம் கொடுத்தவர்கள் வடமராட்சி மக்கள். உத்தியோகம் கிடைத்திருந்தும் உதறிவிட்டு இசை நாடகத்தை வளர்த்தேன். கர்நாடக - இசை நாடக சங்கீதங்களுக்கிடையே சாயல் வேறுபாடு. இசை நாடக சங்கீத, கேள்வி ஞானமுள்ளவர்கள் இசை நாட கத்தை நடிக்கலாம். என் மனைவி பொட்டு வைத்து நாடகத்துக்கு அனுப்பி வைப்பார்: நடிகர்கள் ஒழுக்க சீலர்களாக இருக்கவேண்டும்.
கேள்வி : இசை நாடகத்துறையில் பாடசாலையில் இருக்கும்போதே
ஈடுபட்டதாகக் கூறினீர்கள் அதற்கு ஊக்குவித்தவர் யார் என்று சொல்லமுடியுமா?
பதில்: நான் பாடசாலையில் படிக்கும்பொழுது பண்ணிசை படித்துக்கொண்டு இருந்தேன். எனது குரல் வளத்தைக் கேட்டு பாடசாலை முதன்மை ஆசிரியர் நாடகப் போட்டி யில் பங்குபற்றச் செய்து ஊக்கமளித்து உற்சாகப்படுத்தி னார். பருத்தித்துறையைச் சேர்ந்த சந்திரசேகரம்பிள்ளை அவர்களே தலைமை ஆசிரியராக இருந்தவர். அவர்கள் தான் என்னை இந்த நிலைமைக்கு வர அத்திவாரமிட்ட வர் ஆவார். எனது பெற்றோர்கள் இசை ஞானமுள்ளவர் களாக இருந்ததால் அவர்களும் ஊக்கமளிக்க நான் முன் னேறி வந்தேன்.
கேள்வி : ஆரம்ப காலத்தில் இசைநாடகம் எவ்வாறு இருந்தது
என்பதனைக் கூறமுடியுமா?
பதில்: ஆரம்ப காலத்தில் மிகவும் சிறப்பாக இருந்தது. ஆனாலும் சில கலைஞர்கள் நடக்கக்கூடாத முறையில் நடந்து இசைநாடகத்துறைக்கு மாசு கற்பித்தார்கள். என்னைப் பொறுத்தவரையில் நான் கட்டுக்கோப்பாக இருந்து சில கலைஞர்களையும் உருவாக்கினேன். இசைநாடகங்களுக்கு அப்பொழுது மிகவும் கெளரவம் கொடுத்தவர்கள் வட மராட்சி மக்களாகும், தீவகமக்களும் நன்றாக கெளரவம் தந்திருக்கிறார்கள்.

Page 54
56
'மூத்த கலைஞர்கள் வரலாறு
கேள்வி :
கேள்வி :
கேள்வி :
கேள்வி :
நீங்கள் பாடசாலையில் என்ன படித்தீர்கள். உத்தியோகம்
பார்க்கக்கூடிய ஏதும் தகைமை பெற்றுள்ளீர்களா?
நான் எஸ். எஸ். சி. ஆங்கிலம் படித்திருக்கின்றேன்: எத்தனையோ உத்தியோகம் பார்க்கக்கூடிய தகைமை
இருந்தும் இசை நாடகத்தில் ஆசையிருந்தபடியாலும்,
சங்கீதத்தில் ஆசையிருந்தபடியாலும் இசை நாடகத்துறை யில் எனது வாழ்நாளைக் கழித்தேன். எனக்கு "பாங் ஒவ் சிலோனில் "காசியர்" பதவியும் "புறவேசன் ஒவ்விசில்" "கிளார்க் வேலையும் கிடைத்தது. நான் உதறித்தள்ளி விட்டு இசைநாடகத்தில் சேர்ந்து இந்தியா சென்று கர் நாடக சங்கீதத்தை திருநெல்வேலியில் படித்துவிட்டு இங்கு வந்து பெரிய இசைநாடகக் கலைஞர்களுடன் நடிக்கத் தொடங்கினேன். பிரசித்தி பெற்ற பின்னணிப் பாடகர், திருச்சி எம். எம். மாரிமுத்து 1959-ம் ஆண்டு இலங்கைக்கு வந்தபோது அவர்களுடன் சேர்ந்து வடக்கு கிழக்கு மாகாணம் முழுவதும் நடித்தேன்,
நீங்கள் இந்தியா செல்ல பணவசதியிருந்ததா?
எனது பெற்றோர்கள் சரியான வறுமையில் இருந்தவர் கள். நான்தான் கொஞ்சக் காசை சம்பாதித்து இந்தியா வுக்குச் சென்று படித்து வந்தேன்.
நீங்கள் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறீர்கள். இளைஞ ராக இருக்கும்பொழுது எந்தளவு அழகாக இருந்திருப்பீர் கள். எனவே நீங்கள் காதல் திருமணம் செய்து கொண் டீர்களா? அல்லது பேசித் திருமணம் செய்து கொண்டீர் களா ?
என்பெற்றோர்கள் விருப்பப்படி பேசியே திருமணம் செய்து கொண்டேன்.
நாடகத்துறையில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கும் பொழுது நல்ல சிறந்த நடிகனாகவும், அழகுடையவனாகவும், மற்றவர்களை மயக்கத்தக்க குரல் வளமுடையவனாகவும் இருந்த உங்களுடன் பெண்கள் நடித்தபோது, உங்கள் நடிப்பினால் உங்களைக் கவர்ந்த பெண் ரசிகர்கள் இருந்தபோது, அவர்களில் ஒருவரோ, பலரோ உங் களைக் கணவனாக அடையவேண்டும் என்று நினைத்து உங்களை விரும்பியதுண்டா..?

செல்லையா மெற்றாஸ்மயில் 57
கேள்வி :
கேள்வி :
கேள்வி :
(சிரித்துக்கொண்டு) நிட்சயம் விரும்பினார்கள். எத்த னையோ பெண்கள் என்னை கணவனாக்க எண்ணிய போதும், என்மேல் விருப்பப்பட்ட போதும், நான் பெற்றோர்கள் விருப்பப்படி திருமணம் செய்ய வேண்டு என்ற ஒரு கட்டுப்பாட்டை நானே ஏற்படுத்தி இருந்த தால், அவர்கள் விருப்பப்படி பேசித் திருமணத்தைச் செய்து கொண்டேன்.
நீங்கள் நடிக்கத் தொடங்கிய காலத்தில் சினிமா ஒகோ' என மக்களினால் ஆதரிக்கப்பட்ட காலம். அப்படியான சூழ்நிலையில் உங்களுக்கு இசை நாடக மேடையேற்றத் தின் போது வெற்றியளித்ததா?
முழுமையாக வெற்றியளித்தது. சினிமாவில் நடிக்கிற தென்றால் பெரிய திறமை என்று நினைக்கக்கூடாது. ஒரு காட்சியை நடிக்கும்போது பிழைவிடும் பொழுது "டக்" என்று சொல்லிவிட்டு திருப்பிச் செய்வார்கள் நாடகத்தில் நடிக்கும் பொழுது பாத்திரத்தின் தன்மை உணர்ந்து அதன்படியே நடிக்க வேண்டும். பிழை விட் டேன் என்று அந்த மேடையில் கூறமுடியாது.
இசை நாடகத்தில் படிக்கப்படும் பாட்டுக்களின் ராகங்
களைக் கூறமுடியுமா?
கூறமுடியும். அடனா, கரம்போதி, சண்முகப்பிரியா, கரகரப்பிரியா, வரகேஸ்வரி, முகாரி, பைரவி, ஆபேரி, சகானா , gFT" It Of , தோடி, சங்கராபரணம் என தொடர்ந்து கூறலாம்.
இராகங்களைப் பொறுத்தவரையில் நாடக நடிகர்கள் படிக்கின்ற இராகங்களுக்கும் கர்நாடக சங்கீத வித்துவான் கள் படிக்கின்ற ராகங்களுக்கும் பெயர் ஒன்றாக இருந்த பொழுதிலும் பாடும்போது சாயல் வேறுபாடு காணப் படுகின்றதே, அது பற்றிக் கூறமுடியுமா?
நிட்சயமாக சாயல் வேறுபாடு உண்டுதான். கர்நாடக சங்கீதம் பாடும் ஒருவர் தனது பக்கத்தில் தம்பூரா சுருதி வைத்துக்கொண்டு, அதுவும் காணாது என்று "சுருதி பொக்ஸ் சும் வைத்துக்கொண்டு பாடுவார்கள். இவைகள் பின்னாலே இருக்கப் பாடும்போது சுருதிகள் எல்லாம்
சேர்ந்து குழைத்து பாடுவார்கள்,

Page 55
58
மூத்த கலைஞர்கள் வரலாறு
கேள்வி :
கேள்வி :
,ே பதில் :
ஒரு இசைநாடக நடிகன் பாடும்பொழுது, கொஞ்சத் தூரத்துக்கப்பால் ஆர்மோனியம் இருக்கும். அவர் பாடும் போது சிலவேளை ஆர்மோனியக்காரன் கைவிரலை விட்டு
விட்டு பேசாமல் இருப்பார். நல்ல ஞானம் உள்ளவனாக
இருந்தால் அவன் எந்தச் சுருதியில் எடுத்தானோ அந்தச் சுருதியில் பாடிநடிப்பான். ரொம்பக்கஸ்டம், நல்ல அனு பவம் நல்ல ஞானம் வேண்டும். நடிப்பின் போது பாடும்
பொழுது பாத்திரத்தின் தன்மைக்கேற்ப மேலே உயர்த்
திப் பாடவேண்டும். இந்த வகையில் சாயல் வேறுபாடா
கவே இருக்கும்.
சாயலைப்பற்றி மேலும் கூறுவதென்றால், கர்நாடக சங்கீத ராகம் பாடும்போது அவர் ஒவ்வொரு சுரங்களி லும் நின்று நின்று பாடுவார்கள், ஒரே ராகமாகவே இருக்கும். தோடி ராகம் பாடுவதென்றால் கோமள சுரம் கொண்டது தோடி ராகம். எல்லாம் சுத்தமாகப் பேசும் சுரங்களாக ஒவ்வொரு சுரத்திலும் நின்று நின்று ஒவ் வொரு சுரத்தையும் காட்டிக் காட்டி மத்துவம், பைரவம் தைவதம், நிசாப்தம், சற்பம் எனக்காட்டிக் காட்டி சங்கீத வித்துவான்கள் பாடுவார்கள். ஆனால் இசை நாடக நடிகன் பாடும் பொழுது அப்படி ஆலா வர்ணித்து கீழே இருந்தாற்போல் மேலேயும் எடுத்துப் பாடவேண்டிய சந்தர்ப்பம் இசைநாடக நடிகனுக்கு உண்டு ஆனால் நல்ல இசை ஞானம் உள்ளவன் இரண்டு சாராரையும் ரசிக்கக்கூடிய முறையில் பாடி நடிப்பான். கர்நாடக சங்கீத ஞானமில்லாதவர்களும் அதைப்பற்றிய அறிவில்லாதவர்களும் இசை நாடகப் பாடலைப்பாடி நடிக்க முடியுமா?
நடிக்கலாம் ஆனால் போதுமான அபாரமான, முழுமை யான, கேள்வி ஞானம் வேண்டும். அபாரமான கேள்வி ஞானம் இல்லாதிருந்தால் இராகங்கள் பாடும் பொழுது தாளம் கட்டுப்படாது, லயப்படாமல் இருக்கும்.
நீங்கள் சண்டிலிப்பாய் ஈஸ்வரி சபா அங்கத்தவர்களாக இருந்ததாகக் கூறினீர்கள். அதுபோல் அக்காலத்தில் இருந்த வேறு சபாக்களின் பெயர்களைக் கூறமுடியுமா ?
நடிகமணி வைரமுத்துவின் வசந்தகான சபா, பெரிய விளானில் லந்தீஸ்வர நாடக சபா, கீரிமலையில் பார்வதி

செல்லையா மெற்றாஸ்மயில் 59
கேள்வி :
கேள்வி :
கானசபா, மாதனையில் ஒரு சபா இருந்தது. பெயர் ஞாபகமில்லை. இதைப் போன்று வேறு பல சபாக்கள் இசை நாடகத்துறையை வளர்த்தெடுத்தது.
1950களில் இசை நாடகத்துறையில் பெண் பாத்திரங் களை பெரும்பாலும் பெண்களே ஏற்று நடித்ததாகக் கூறினர்கள். பின்னர் பெரும்பாலும் ஆண்கள்தான் நடித்தார்கள் என்றும் கூறினீர்கள். காரணம் என்ன?
யாழ்ப்பாணப் பெண்கள் நடிப்பது ரொம்பக் குறைவு இந்தியாவிலிருந்து வந்தவர்கள் இலங்கையில் திருமணம் செய்து இருந்தார்கள். உதாரணத்திற்குச் சொல்லப் போனால் கீரிமலை இராமலட்சுமி, உடுவில் சந்திரா கல்வியங்காட்டு சரஸ்வதி ஆகியோர் இந்தியா வம்சா வாளியினர்தான். அவர்கள்தான் நடித்தார்கள். பெரிய நடிகர்களான ஏரம்பு சுப்பையா, இணுவில் சரவணமுத்து போன்றோர்களும் பெண் பாத்திரம் ஏற்று நடித்தார்கள்.
பிற்காலத்தில் குறிப்பிட்ட பெண் நடிகர்கள் வயது வந்ததினால் பாத்திரங்கள் ஏற்று நடிக்கக்கூடிய வசீகரம் இல்லாமல் போய்விட்டது. யாழ்ப்பாணத்தில் நாடகத்தை நடிப்பது ஒரு இழிவான தொழிலாகக் கருதி அக்காத் தில் யாழ்ப்பாணப் பெண்கள் முன்வரவில்லை. இந்த வெற்றிடத்தை நிரப்ப ஆண்களே பெண்களாக நடித் தார்கள். இவர்களுடைய நடிப்பு அசல் பெண்களிலும் திறமையாக இருந்ததினால் ஆண்களே பெண் பாத்திரம் நடிக்கும் மரபு தொடர்ந்து இருந்து வந்தது. இப்பொழுது கல்விமான்கள் இத்துறையில் ஈடுபட்டு பல பெரியவர்கள் ஈடுபட்டு நடிப்பதினால் நிலைமை மாறிவருகிறது. எனக் குறிப்பிட விரும்புகின்றேன்.
இந் நாடகத்துறையில் ஈடுபடுவதற்கு உங்கள் மனைவியின் ஒத்தாசை முழுமையாகக் கிடைத்ததா?
ஆரம்ப காலக்கட்டத்தில் கொஞ்சம் ஒரு மாதிரித்தான் (சிரித்துக் கொண்டு) (மனைவியார் பக்கத்தில் இருந்து கேட்டுக் கொண்டிருக்கிறார்) பின்பு எனது குணாதிசயம் அறிந்தும், பெரியோர்கள் கல்விமான்கள் வரவேற்றுப் பாராட்டிக் கெளரவித்ததினாலும் அவவுக்கு சந்தோசம், பின்பு ஊக்கமாக என்னை வழியனுப்புவார்

Page 56
ዕ§ []
மூத்த கலைஞர்கள் வரலாறு
கேள்வி :
பதில் :
கேள்வி :
பதில் :
கேள்வி :
பதில்
மேடையில் பல அழகான பெண்களுடன் நடித்துவிட்டு வீடுவரும்போது அக்காட்சிகளைப் பார்த்துவிட்டு வீட்டுக் குத் திரும்பிய தங்கள் மனைவி இன்முகத்துடன் வரவேற்று சந்தோசப்படுத்துவரா?
நிச்சமாக வரவேற்றார். ஏனெனில் ஒரு புருஷனுடைய குணம் மனைவிக்கு தெரிந்திருக்க வேண்டும். நான் எப் பட்டவன் என்று எனது மனைவிற்கு நன்றாகத் தெரியும். மேடையில் மட்டும் நான் கணவராக நடிகைக்கு இருப் பேன். மேடையிலிருந்து இறங்கியவுடன் அவர் எனது சகோதரி. எனவே எனது மனைவி என்மேல் முழு நம் பிக்கை வைத்திருந்தார். சிலவேளை நான் நாடகத்திற்கு செல்ல வெளிக்கிடும் பொழுது பொட்டும் போட்டு அனுப்பி வைப்பார். (மனைவியும் சிரிக்கிறார்.)
குடும்ப வாழ்க்கைக்கு பண வருமானமில்லாமல் வாழ முடியாது. எனவே நீங்கள் வெறுமனவே நாடகங்களில் நடித்துவரும் வருமானத்தைக் கொண்டு குடும்பத்தை நடத்தக் கூடியதாக இருந்ததா?
இல்லை. நாடகம் மூலம் கிடைக்கும் வருமானம் வளர்ந்து வரும் பிள்ளைகளைக் கொண்டுள்ள எனது குடும்பத்திற்கு போதாது. நான் ஒரளவு சிக்கனமாக இருந்தும் கமம் செய்தும் கிடைத்த வருமானத்தைக் கொண்டுதான் எனது குடும்பத்தை நடத்தினேன்.
தற்பொழுது இசை நாடக கலைஞர்களுக்கு என்ன சொல்லப் போகிறீர்கள்.
எனக்கு நண்பன் நடிகமணி வைரமுத்து அடிக்கடி சொல் லுவார். தானும், நீயும் இல்லாத காலத்தில் நாடகம் அழியப் போகிறது என்பார். ஆனால் அக்கூற்று பொய்த்து விட்டது. இன்று கல்விமான்கள் இசை நாட கத்திற்கு நல்ல ஊக்கம் கொடுக்கிறார்கள் பல்கலைஞர் உருவாகிக்கொண்டு வருகிறார்கள். நடிகர்கள் ஒழுக்கி சீலர்களாக இருக்க வேண்டும். அப்படியானால் இனப் நாடகத்துறை என்றும் வாழ்ந்துகொண்டேயிருக்கும்.
岑、长辈

*சத்தியவான் சாவித்திரி" இசை நாடகத்தில் சத்திய வானாக "இசைநாடக அரசு" வி.என்.செல்வராசா தோன்றும் காட்சி,

Page 57

GNUил :
கலாபூசனம் திரு. அ. முருகவேள் முகவரி :
வட்டுக்கோட்டை
பிறந்த திகதி 24 - 0 - 1928
நாட்டுக்கூத்துக் கலிைருர்
யாழ்ப்பாணத்தில் "வடயோடி' நாட்டுக்சுத்துக்கு பெயர் பெற்ற இடம் வட்டுக்கோட்டை. "நாட்டுக்கூத்து மரபு கலப்படாமல் பாதுகாத்து வருகின்றவர்கள் வட்டுக்கோட்டை நாட்டுக்கூத்து அபி விருத்திக் குழுவினராகும். அதன் ஆயுட்காலத் தலைவராகவும், நாட்டுக்கூத்து பற்றிய நல் அறிவும், ஆட்டமுறையும் தெரிந்த சிறந்த ஒரு அண்ணாவியார் திரு. அ. முருகவேள் அவர்கள் . நாட்டுக்கூத்துப் பாரம்பரியம் 50 ஆண்களுக்கு முன் எப்படி இருந் ததோ அதேபடி ஆடப்படும் முறை இவரினால் இன்னும் அரங்கேற் றப்படுகின்றது. பல இளைஞருக்கு இன்றும் பழக்கி மேடையேற்றிக் கொண்டுவருகிறார் , அண்மையில் பல்கலைக்கழக மாணவர்களை பெரும்பான்மையாகக் கொண்ட குழுவுக்குப் பழக்கி, பாரம்பரிய கலைகள் மேம்பாட்டுக் கழகம் நடாத்திய ஆட்ட நாட்டுக்கூத்துப் போட்டியில் முதலிடம் பெற்றுக்கொண்டார். இவருடைய கலைப் பயணத்தை இவரிடம் கேட்டபோது இவ்வாறு கூறினார்.
"எங்கள் ஊரவர்கள் பல்வேறு கலைத்துறைகளிலும் ஈடு பாடுடையவர்கள். யாம் சிறு வயது முதற்கொண்டே இலக்கியம், சிற்பம், கூத்து முதலிய கலைத்துறைகளில் புகழ் பெற்ற பெரியார் களுடன் பழகிவருவதை ஒரு சிறந்த பொழுது போக்காகக் கொண் டிருந்தேன். அவர்கள் மூலமாகப் பாரதம், இராமாயணம் முதலிய இலக்கியங்களைப் பற்றிப் பெரிதும் தெரிந்திருந்தேன்.
தமிழ் கூறும் நல்லுலகில் இலைமறையாய் போல இருந்த "சேதுபேரன்" என்னும் புனைப்பெயரைக் கொண்ட முருகுப்பிள் ளைப் புலவருடன் பழகினேன். அவர் செய்யுள் செய்வதில் மட்டுமல் லாமல் நாட்டுக்கூத்துக் கலையிலும் நல்ல புலவராய் இருந்தார்: மேலும் இலங்கை சுதந்திரம் பெற்ற நாளில் மரதன் ஒட்டக் கவி

Page 58
62 மூத்த கலைஞர்கள் வரலாறு
தைப் போட்டியில் முதற் பரிசுபெற்ற முதுதமிழ்ப் புலவர் பண்டிதர். நல்லதம்பி அவர்களதும் புகழ்மிக்க வித்தியா தரிசகராகத் திகழ்ந்த மு. வே. சீவரத்தினம் அவர்களும், மதுரைத் தமிழ்ச்சங்கப் பண்டி தரும், யாழ்ப்பாணம் ஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்க பண்டிதருமாகிய புலவர்மணி, செந்தமிழ்ச் செல்வர் க. மயில் வாகன னார் அவர்களதும் நெருக்கமான தொடர்பு இருந்து வந்தது.
அத்தொடர்புகள் எனது பொதுநலச்சேவையிலும் ஆசிரியர் சேவையிலும் கலைத்துறைச் சேவையிலும் பெரும் ஈடுபாட்டை உண்டுபண்ணின.
எல்லாவற்றிற்கும் மேலாக நாட்டுக்கூத்துக் கலையில் எனக்குப் பல நுட்பங்களையும் தாள அமைதிகளையும் என்னுடைய பெரிய தந்தையார் சிறுவயது முதற் கொண்டே சமயம் வாய்க்கும் பொழு தெல்லாம் சொல்லித்தந்துள்ளார். இவை எனது கலை வாழ்வுக்குப் பெரும் பயன் அளித்தன.
பாலிய வயதிலே "பாலர் கலை வளர் சங்கம்" என்னும் பெயருடைய சங்கத்தினைச் சிறுவர்களோடு சேர்ந்து அமைத்துக் கொண்டேன். தருமபுத்திர நாடகத்தினை (சம்பூரணம்) விளையாடிக் காட்டி ஊர் மக்களது பெரும் பாராட்டைப் பெற்றோம்.
இந்நிகழ்ச்சி என்கலைப் பணிக்கு என்னை மிக (உத்தமனாக ) ஈடுபடவைத்தது. வட்டுக்கோட்டைக் காந்திஜி சனசமூக நிலைய கிராம முன்னேற்றச் சங்கச் செயலாளராக இருந்த முதுநிலை எழுதுவினைஞர் திரு. பெ. பரராசசேகரம் அவர்களுடைய ஒத்தா சையுடன் 1961-ம் ஆண்டு தருமபுத்திர நாடகத்தினை முழுமை யாக மேடையேற்றினோம்.
அக்காலையில் நாட்டுக்கூத்து அபிவிருத்திக்குழு எனப் பெரிய அமைப்பினை நிறுவிப் பலருடைய வேண்டுகோளின்படி ஆயுட்காலத் தலைவராக இருந்து நாட்டுக்கூத்துத் துறையில் அயராது உழைத்து வந்துள்ளேன். இக்காலப் பகுதியிலேதான் முப்பதுக்கும் மேற்பட்ட நாட்டுக்கூத்துக் கையெழுத்துப் பிரதிகளையும் சேகரித்துப் படி எடுத் துக்கொண்டேன். அத்துடன் பல நாட்டுக்கூத்துக்களைப் பலமுறை மேடையேற்றினேன்.
அவற்றுள் சில வருமாறு:
1. தருமபுத்திர நாடகம் 4. இந்திரகுமாரன் நாடகம் 2. விராட நாடகம் 5. வாளபிமன் நாடகம் 3. குருக்கேத்திரன் நாடகம் என்பனவரம்,

செல்லையா மெற்றாஸ்மயில் 63
யான் ஆசிரியப்பணியை மலையகத்திலும் யாழகத்திலும் நாற் பது ஆண்டுகள் புரிந்துள்ளேன். அப்பொழுதெல்லாம் பல பாடசாலை களில் மாணவர்களுக்கு ‘சிவ வேடனும் தவ வேடனும் "அனுமனும் வீமனும் முதலிய பல்வேறு நாட்டுக்கூத்து நிகழ்ச்சிகளைப் பயிற்றிப் போட்டிகளில் முதலிடத்தைப் பெற்று மாணவரை ஊக்கப்படுத்தி னேன்.
எம்மூரில் நாட்டுக் கூத்தினைப் பழக்கும் பொழுதெல்லாம் கல்வி யிற் தேர்ந்த அரச உத்தியோகத்தர்கள், பல்கலைக்கழக மாணவர் கள் என்போர் ஈடுபட்டனர் என்பதனைச் சொல்லாமலிருக்க முடிய வில்லை.
நாட்டுக்கூத்தின் வாயிலாகத் தமிழ் மரமையும் சைவ சமய ஒழுக்கங்களையும் பேணிக்காத்து வந்துள்ளேன். என் பழைய நிகழ்ச்சி களில் என் நெஞ்சை விட்டகலாத நிகழ்ச்சியொன்றினைக் குறிப் பிடுவதில் மகிழ்ச்சியடைகின்றேன்:
பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் ஒருபொழுது "அணு மனும் வீமனும்’ என்னும் நாடகத்தைப் பயிற்றுவித்தேன். அப் பொழுது அனுமன் பாத்திரத்தை ஆசிரிய மாணவர் ஒருவர் ஏற்றுக் கொண்டார். அவரை அசல் வானரநிலையில் நடிப்பிக்க பெரும் டாடுபட்டேன்.
அந்த நண்பர் பேராசிரியரொருவரிடம் தான்ப்ட்ட சங்கடத்தைக் கூறி எங்கள் எல்லோரையும் சிரிக்கவைத்தார். பல சந்தர்ப்பங்களில் யான் பாத்திரமேற்று நடித்துள்ளேன். சிறப்பாகக் கண்டிமாநகரில் கல்லூரிகளுக்கிடையிலான போட்டியில் ஒருபொழுது வேடனாகவும் ஒருபொழுது வீமனாகவும் நடித்து முதற்பரிசு பெற்றுள்ளேன். நாட் டுக்கூத்து ஆய்வாளர்கள் பல சந்தர்ப்பங்களில் எம்முடன் நேர்முக உரையாடல் நிகழ்த்தினர் பல தகவல்களைப் பெற்றுக்கொள்ள விரும்புகின்றனர்.
அண்ணாவியார் முருகவேள் அவர்கள் ஒரு இளைப்பாறிய
ஆசிரியராவார். இவருடைய கலைப்பயணம் மேலும் தொடரவேண்டு மென ஆண்டவனை வேண்டி அவரை வாழ்த்துகின்றோம்

Page 59
பெர் :
திரு. கந்தையா -
உருத்திராபதி
முகவரி:
தெல்லிப்பழை.
பிறந்த திகதி 14. 12 - 1927
இசை நாடகக் கலைஞர்
திரு. கந்தையா உருத்திராபதி வட்டுக்கோட்டை சைவப்பிர காச வித்தியாசாலையில் கல்வி கற்கும் பொழுது நன்றாகப் பாடக் கூடிய ஆற்றல் உள்ளவராகக் காணப்பட்டதினால் ஆண்டு ஆறு படிக்கும் பொழுது பாடசாலையில் நடைபெற்ற 'இராமாயணம்" நாடகத்தில் இராமராக நடித்து பலரது பாராட்டுக்களைப் பெற் றார். இப் பாராட்டுக்கள் அவரை கலைத்துறையில் ஈடுபட மிகவும் தூண்டியது. இவருடைய குரல் வளத்தைக் கண்ட இவரது மாமனார் மாணிக்கம் முறைப்படி வட்டுக்கோட்டை பிளவத்தையில் இருந்த திரு. செல்லத்துரை ஆசிரியரிடம் சங்கீதம் கற்பித்தார். அத்துடன் தான் ஸ்தாபித்த பாலபாஸ்கர சபாவில் நாடகமான " அல்லி அர்ச்சுனா" நாடகத்தில் அர்ச்சுனனாக நடிக்க வைத்தார். அந் நாடகம் யாழ் யூடிஸ் மண்டபத்தில் தொடர்ச்சியாக ஐந்து நாட்கள் நடைபெற்று போட்டியில் முதற் பரிசு பெற்றதும் குறிப் பிடத்தக்கது. அப்பொழுது இவருக்கு 18 வயது. இவர் தனது 17 வது வயதிலே ஞான சவுந்தரி, சத்தியவான் சாவித்திரி போன்ற நாடகங்களில் கதாபாத்திரமேற்று நடித்தார்.
1947-ம் ஆண்டு தெல்லிப்பழையில் திருமனம் செய்து அங்கி ருந்து கொண்டு தமது கலைப்பணியைச் செய்து வந்துள்ளார். 1953-ம் ஆண்டு நடிகர் மணி வி. வி. வைரமுத்துவின் வசந்தகான சபாவில் சேர்ந்தார். ஆரம்பத்தில் வி. வி. வைரமுத்து பெண்வேட மேற்று நடித்த காலமாகும். வைரமுத்து பெண்வேடமேற்று சாவித் திரியாகவும், உருத்திராபதி சத்தியவானாகவும் தடித்தார்கள்.
இவர் நடித்த இசை நாடகங்களும் பாத்திரங்களும்
1. இராமாயணம் - இராமர் 2. அல்லி அர்சுனா - அர்ச்சுனன்
 

செல்லையா மெற்றாண்மயில் 占岳
3. சத்தியவான் சாவித்திரி - நாரதர்
4. வள்ளி திருமணம் - வேலன் வேடன்,
விருந்தன், நார்தர் 5. பூதத்தம்பி - கைலாயபிள்ரை 8. சாரங்கதாரா சாரங்கதாரா, சுமந்திரன் 7. JTGTyjögf - லேனாள்
郸
8. கோவலன் கண்ணகி - கோவலன் ့်မျိုး ... 8 9. பவளக்கொடி - அரிச்சுனா' ::::::::::: 10. மார்க்கண்டேயன் - மிருகண்டமுனிவர்த்; ” 11. nயான காண்டம் - சத்தியகீர்த்தி, நாரதர்
இசை நாடகங்களை பல இடங்களிலும் அரங்கேற்றிய பொழுது நடித்துள்ளார். உடப்பு முந்தல் திளெரபதி அம்மன் கோவில்,பருத் தித்துறை சாத்தா தோட்டம், மானிப்பாய், சங்கானை, ஊர்காவற் நூறை , வசவிளான், அச்சுவேலி நெல்லியடி, கரவெட்டி, சாவகச் சேரி, மிருசுவில், கோப்பாய், சுழிபுரம், வட்டுக்கோட்டை, நவாலி. அராவி, கொழும் ஆகிய இடங்களில் நாடகங்கள் நடித்துள்ளார்.
இவர் தந்த தகவல்களில் மிகவும் ருசிகரமாக இருந்தது என்ன வென்றால், 43, 44-ம் ஆண்களில் ஒருவர் நடிப்பதற்கு வழங்கப் பட்ட பனம் 3 ரூபா. 50-ம் ஆண்டுகளில் வழங்கப்பட்ட பணம் 10 ரூபா. 85-ம் ஆண்டுகளில் வழங்கப்பட்ட பனம், 50 ரூபா.
எனினும் வெறும் பணத்திற்காக மட்டுமல்லாது நாடகம் நடிப் பதில் ஏற்படும் ஆத்ம திருப்திக்காகவே நாடகத்தை நடித்து வந்துள் ளேன் என் உணர்வு பூர்வமாக கூறினார். அத்துடன் பார்வையா எார் . அதாவது ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தார் கள். அவர்கள் தந்த உற்சாகம் எம்மை மேலும் மேலும் நாடகங் களில் நடிக்க உதவியது என்றார். ::
இவருடன் நடித்தவர்களில் நடிகமணி வி. வி. வைரமுத்து, திரு. சி. ரி. செல்வராசா, திரு. வி. என். செல்வராசா, திரு. கண்க ரத்தினம் ஆகியோருடன் 1000 மேடைக்கு மேல் நடித்ததுடன், வானொவி இசை நாடகங்களிலும் நடித்துள்ளார். 1973ம் ஆண்டு இவரது வானொலி நாடகம் பிரபல்யமாக இருந்தது குறிப்பிடத் தக்கது
இவர் தெல்லிப்பழையிலிருந்து இடம்பெயர்ந்து மாணிப்பாயில் தற்காலிகமாக தங்கி இருந்தாலும், வயது முதிர்ந்த நிலையிலும் இன்னும் பாத்திரமேற்று நடிக்க வேண்டும் என்ற ஆசையில் இருக் கிறார். இவர்களுடைய கலை உணர்வுகள் இளஞ் சமூதாயத்தின ருக்கு ஊறுதா? இவர் மேலும் பல கலைப்பணியில் ஈடுபட வேண் டும் என வாழ்த்துகின்றேன். 1

Page 60
Glu LL di :
திரு. வேலு-செல்வமணி
முகவரி கொத் ஆல் கொக்கனைவளவு, கே. கே. எஸ். போஸ்ற் uturo.
பிறந்த திகதி 0ர். 08. 1935
இசை நாடக கிராமியக் கலை
கலைஞர்
தனது குடும்ப வாழ்வில் பலவிதமான சோதனைகள் வேதனை கள் ஏற்பட்ட பொழுதும் தனது கலைவாழ்வில் தனது மிகப் பெரியபங்கு அளித்து பிரபல்யமான ஒரு அண்ணாவியராக வந்தவர் வேலு செல்வமணி, அவர் தனது பொதுவாழ்வையும், கலை வாழ்வையும் இணைத்து ஒரு கதையாகவே என்னிடம் கூறியதை கதையாகவே அவருடைய வரலாற்றை எழுதுகின்றேன்.
அன்பின் மக்களே, கலைஞர்களே எனது தமிழ்த்தாயின் துணை கொண்டும், எனது குருவின் துணை கொண்டும், நான் எப்படி அண்ணாவி ஆகினேன் என்பதை கூறுகின்றேன். பத்து வயது பாலகனாய் இருந்த பொழுது எனது தந்தையார் சித்திய வன் சாவித்திரி நாடகத்தில் இயமன் பாத்திரத்தை ஏற்று தடித்தார். வசாவிளான் கண்ணகை அம்மன் ஆலயம் முன்பாக 4 முறைகள் அந்நாடகம் மேடையேற்றப்பட்டது. ஒருமுறை என்னை அழைத்துப் போய் நாடகமேடையின் அருகில் அமர வைத்து நடித்தார். நான் கண்தூங்காது ஆசையோடு பார்த்துக் கொண்டிருந்தேன். நாடகம் பார்க்க வந்தவர்களோ ஏராளம். கைதட்டுவதும், சீக்கா அடிப்பதுமாக மக்கள் கோசம் எழுப்பிக் கொண்டிருந்தார்கள். அடிக்கொருதரம் பாட்டின் முடிவில் என் தத்தை சூலத்தை மேடையில் குத்தினால் அதன் அடியில் வைத் திருந்த எறிவெடி வெடிக்கும். அப்போது நானும் பயப்பட்டேன். மக்களும் திகைப்பார்கள் நாடகம் முடிந்த பின் ஒரு மனிதன் ாள்னை நன்கரத்தால் அனைத்து இது உன் மகனா என என் தந்தையைக் கேட்டார். என் தத்தை ஆம் என்து Cyfrasiwgwr i'r rff. அப்போது என் முதுகில்தட்டி அடே பையா நீயும் வருங்காலத் தில் உன் தந்தையைப் போல் கூத்து ஆடிப் போர் எடுக்க வேண்டும்
 

செல்லையா - மெற்றாஸ்மயில் 8 ፳
என்று முதுகில்தட்டி உற்சாகமளித்தார். அந்தமனிதன் சென்ற பின் என் தந்தையிடம் அவரைப்பற்றி விசாரித்த பொழுது, அவர் எனது தந்தையின் அண்ணாவியார் குட்டிப்பிலம் மார்க் கண்டு என தெரிவித்தார்:
அதன்பின் ஒவ்வொரு நாடகங்களையும் தத்தையுடன் சென்று பார்த்து ரசிப்பதுண்டு. பலாலி பாடசாலையில் படித்துக் கொள்டு இருந்தேன். அப்போது "மில்ற்றி வந்தகாலம் சிலநாள்கள் செல்ல நான் படித்த பாடசாலையை வெள்ளைக்காரன் பன்றி வளர்ப் பதற்கு பயன்படுத்திக் கொண்டான். அவனுக்கே சொந்தமாகி விட்டது. அதன்பின் காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரியில் படித்தேன். படிக்கும்போது நானும் சின்ன நாடகங்களில் பங்கு பற்றினேன்.
இக்காலத்தில் நிரு. சின்னையா, திரு. தேசிகரீ, திரு செல் வராசா, திரு. மாசிலாமணி என்ற குழுவினர் சிறீவள்ளி, பவ ளக்கொடி என்னும் நாடகங்களை நடித்தார்கள். மற்றொரு குழுவாக திரு. அண்ணாச்சாமி, திரு. குழந்தைவேலு, திரு முத்துத் தம்பி, திரு. நாகமுத்து, நடிகமணி வி. வி. வைரமுத்து திரு: மார்க் கண்டு, திரு. இரத்தினம் போன்றவர் சத்தியவான் சாவித்திரி, அரிச்சந்திர மயானகாண்டம் நாடகங்களை நடித்தார்கள். அவரி கள் நடிக்கும் நாடகங்கள் ஒன்றும் தவறாமல் பார்த்து வந்தேன்.
நானும் நாடகங்களில் நடிக்க வேண்டும் என்று ஆவலாக இருக்கும் பொழுது, எனது தந்தை, எனது தாயாரையும், எனது இரு சகோதரியையும் விட்விட்டு வேறு திருமணம் செய்து கொண் டார். இதனால் நாங்கள் மிகவும் கஷ்டத்தில் வாழ்ந்து வந்தோம் அப்போது நான் ஆறாம் வகுப்பு படித்து வந்தேன். கஷ்டத்தின் காரணமாக சிலவேளை பாடசாலை போவேன். சிலவேளை போகமாட்டேன். இதைக் கவனித்த என்னைப் படிப்பிக்கும் திரு. குருநாதப்பிள்ளை வாத்தியார் எனது அஷ்டத்தைக் கவனித்து என்மேல் இரங்கி புத்தகம் , கொப்பிகள் வாங்கித் தந்தார். சில வேளை தனது வீட்டிற்கு அழைத்து பாடமும் சொல்லித்தரு வார். நான் வயதாகியபின் நன்றிக்கடனைச் செலுத்துமுகமாக அவருடைய வீட்டுத்தோட்டத்திற்கு தண்ணீர் கட்டிக் கொடுப் பேன்.
என்னோடு அன்பாக இருந்த அந்த வாத்தியார் சிலவேளை என்னை அழைத்து எனக்கு நல்ல புத்திமதி சொல்லுவார். சிலவேளை எனக்குப் பணமும் தந்து என்னை வீட்டுக்கு அனுப்பி

Page 61
68 மூத்த கலைஞர்கள் வரலாறு
ைெவப்பார். அவர் எனக்குத்தந்த அறிவுரைதான் என் குடும்பத் தில் நல்லவனாகவும், பெரியோர்களினால் போற்றப்பட்டவனா கவும் வாழவைத்தது என இன்றும் நிறைவு கூறுகின்றேன்.
நான் முதலில் பார்த்த படம் வாய்பேசா படம். வாய் பேசாத படம் சிலகாலங்கள் செல்ல வாய்பேசக்கூடிய படங்களாகிவிட்டன. எனக்கு புராணப் படங்கள் பார்பது என்றால் விருப்பம். அதில் வரும் பாடல்கள், மெட்டுக்கள் யாவையும் தவறாது பாடிக் கொள்வேன். அதன் பின் இனத்தவர்களின் கொண்டாங்களில் என் நண்பர்களோடு சேர்ந்து போய் பாடி பெரியவர்களின் பாராட்டு பெற்றேன்.
என் தாயாரும், என்னை வளர்த்த பாட்டி இருவரும் இறந்து விட்டார்கள். அப்போது ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந் தேன். கஸ்ரத்தின் காரணத்தால் படிப்பை நிறுத்திக் கொண் டேன்,
எனக்கு சோதனையும், வேதனையும் மேலிட்டது என் இரு பெண் சகோதரிகளை எப்படி பார்க்கப் போகிறேன் என்ற நிலையில் ஏங்கும் போதெல்லாம் உறவினர்கள் வந்து ஆறுதல் கூறுவார் கள். ஒரு சகோதரியை மாமியாரிடமும், மற்றச் சகோதரியை சிறியதாயாரிடமும் ஒப்படைத்தேன். நான் ஒரு முடிவுக்கு வந் தேன். அதாவது என் சகோதரிகளை கண்கலங்காது பார்க்க வேண்டுமானால் நான் உழைக்க வேண்டும் என புறப்பட ஆயத்த மானேன்.
அப்போது எங்களைவிட்டுப் பிரிந்து மறுமணம் செய்த தந்தை எங்கள் துயரத்தை அறிந்து, கவலை கொண்டு என்னிடம் வந்து கதைத்தார். நான் அவரிடம் கேட்டேன் "ஐயா எங்கள் தாயார் நோய்காரியாக இருந்தார் என்பதற்காக, எங்களைப் பார்க்க வேண்டும் என்பதற்காகத்தானே எங்களை தவிக்கவிட்டு வேறு திரு மணம் செய்து கொண்டீர்கள். இப்போது வா என்று கேட்டால் எப்படி வருவது, இதற்கிடையில் நாங்கள் அனுபவித்த துன்பங்கள். துயரங்கள் எத்தனையோ ஒரு தாய் பெற்றுவிட மறுதாய் வளர்ப் பதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். இப்போது நான் பெரியவனாகிவிட்டேன். உழைத்தது போல் உழைத்து என் சகோ தரிகளை என் தாயின் சொல்படி காப்பாற்றுவேன். இப்பவாவது எங்களைத்தேடி வந்ததற்கு தந்தை பாசத்துக்காக நன்றி கூறுகி றேன்' என்று நான் சொன்னேன். தந்தை "ஒ" எனக் கதறி அழு தார். நாங்களும் சேர்ந்து அழுதோம்.

செல்லையா மெற்றாஸ்மயில் 69
சில நாட்கள் செல்ல உழைப்புக்காக முல்லைத்தீவு சென்றேன்: அங்கு கடல்தொழில் செய்பவர்களுடன் சேர்ந்து கடல்தொழில் கற்றுக்கொண்டேன். அங்கேதான் என் குரல் இனிமையாக படிப் பதற்கு பயன்படுத்தினேன். வள்ளத்தில் போகும்போது அம்பா பாட்டு படிப்பார்கள். அவற்றை மனதில் பதித்துக்கொண்டு படிக்க ஆரம் பித்தேன். நாளடைவில் நான் படிப்பது எல்லோருக்கும் இனிமை யாக அளித்தது. என்னையே பாடச் சொல்லுவார்கள், கடலில் வள்ளம் போகும்போது எனது இஸ்ரப்படி பாடுவேன்; அந்தப் பாடல் எழுதிப் பாடமாக்குவது இல்லை. சில பெரியோர்கள் "கண்டம் திறக்க வேண்டுமானால் கடல் தண்ணீரில் நின்று பாட வேண்டும்' என்று சொல்லுவார்கள். சில வேளைகளில் கடலில் நீந்துவது, நிற்பது வழக்கம். நான் கழுத்துமட்டத் தண்ணிரில் நின்று பாடு வேன். அப்போது தண்ணிர் நெஞ்சை வந்து இறுக்கும். படிக்கும் சத்தம் கடலில் பரவி கேக்கும் சத்தம் அவ்வளவு பெரிதாக கேளாது: ஆனால் கரையில் வந்து பாடினால் பன்மடங்கு பெரிதாய் கேட்கும்: என் தொழிலும், கடலின் உதவியும் என் பாடலுக்கு உதவியாக இருந்தது.
உழைத்து பணத்தைக் கொண்டு மூத்த சகோதரியை முறை மைத்துனருக்கு திருமணம் செய்து வைத்தேன். சில வருடங்கள் செல்ல நானும் திருமணம் செய்து கொண்டேன். எனது இளைய சகோதரியையும் திருமணம் செய்து வைத்தேன். அப்போது பலாவி யில் வாழ்ந்து வந்தோம்.
இதன்பின் நாடகத்துறையில் என்னை கூடுதலாக ஈடுபடுத்திக் கொண்டேன். எனது மாமனார் அண்ணாவியார் திரு. S. மயில்வாக னத்துடன் சேர்ந்து வசாவிளான் கண்ணகை அம்மன் ஆலயத்தின் முன் இருக்கும் வாசிகசாலையில் "மனோன்மணி" என்னும் நாடகத்தைப் போட்டு முடித்தோம். அதன்பின் அவர் பழக்கிய காத்தவராயன் கூத்தில் பின் அம்மன் பாத்திரத்தை ஏற்று நடித்து புகழ் பெற்றேன் பல பரிசுகளும் பெற்றேன். நான் நாடகம் பழக்கக்கூடிய தகமை பெற்றிருந்ததால் அண்ணாவியார் பதவியை உனக்கே தரப்போகி றேன் எனக்கூறி, கலைமகள் மன்றத்தின் மேடையில் வைத்து கும்பத்தை தூக்கி என் சிரசின் மேல் வைத்து, ஒருபிடி வேப்பம் குழையும் எனக்குத் தந்தார். அப்போது சந்தோசத்தினால் எனக் குப் புல்லரித்தது. நான் அவரின் காலில் விழுந்து வணங்கினேன்:
அதன்பின் "விதியின் சதி மதியின் கண்ணீர்' என்னும் நாட கத்தை எழுதி, நானே பிரதான பாத்திரத்தையும் ஏற்று நடித்து மேடையேற்றினேன்; நாங்கள் பல நாடகங்களை, கொடிகாமம்,

Page 62
70 * மூத்த கலைஞர்கள் வரலாறு
அச்சுவேலி, புத்தகலட்டி, யாழ்ப்பாணம், ஆரியகுளம், முத்திரைச் சந்தை, இருபாலை ஆகிய இடங்களில் மேடையேற்றி நடித்துள்ளேன்
முல்லைத்தீவு அளம்பில் என்னுமிடத்தில் கடற்தொழிலுக்காக இருந்த காலத்தில் மட்டக்களப்பைச் சேர்ந்த அகம்மது அலியாசு என்னும் குருவிடம் ”சிலம்பு விளையாட்டை" யும் கற்றுக் கொண்டேன். நான் பலாலி வந்த பின்பு 32 பிள்ளைகளுக்கு என் குருவின் உதவி யால் விளையாட்டுப் பழக்கிக் கொடுத்தேன்.
எனக்கு உடுக்கு அடிப்பதென்றால் நல்ல விருப்பம். அதை கற்று தந்தவர் திரு. வா. கிருஷ்ணபிள்ளை. அவரிடம், "காவடி" "கரகம்" தெய்வப் பாடல்களையும் கற்றுக் கொண்டேன். நாங்கள் சன்னதி முருகனுக்கும், நல்லூர் கந்தனுக்கும் காவடி, கரகம் என்பவற்றுக்கு உடுக்கு அடித்துச் செல்வது வழக்கம்.
எனது மாமனார் திரு. கிஸ்னபிள்ளையின் வேண்டுதலுக்கிணங்க அவருடன் சேர்ந்து நடித்தேன். நந்தனார் நாடகத்தில் அவர் நந்த னாகவும் நான் ஐயனாகவும், காத்தவராயன் கூத்தில் நான் அம்ம னாகவும், அவர் காத்தவராயனாகவும் நடித்து பல இடங்களில் மேடையேற்றி புகழ் அடைந்தேன்.
காத்தவராயன் கூத்தைப் பழக்கி பல இடங்களில் போட்டேன். காங்கேசன்துறை துர்கை அம்மன் ஆலயத்தின் முன்பாக ஒரு கோஸ் டியினரையும், தையிட்டியில் இரு குழுவினரைப் பழக்கி, ஒரு குழு வினரை தெல்லிப்பழை, விறுத்தலை , விளான் மல்லாகம் ஆகிய இடங்களிலும், மற்றக் குழுவினரை (பெண்கள் உட்பட) மயிலிட்டி தேவியார் கண்ணகை அம்மன் ஆலயத்திற்கு முன்பாகவும் மேடை யேற்றினேன்.
எங்கள் புகழ் மேலோங்கிச் சென்றதினால் 1972-ம் ஆண்டு தைமாதம் கொழும்புக்கு அழைத்து இலங்கை வானொலியில் பாட் டுக்கள் பதிவு செய்ததுடன் இராமகிருஷ்ண மண்டபத்தில் எங்கள் நிகழ்ச்சிகள் மேடையேற்றப்பட்டன. எங்கள் பாடல்கள் தைப் பொங்கல் அன்று ஒலிபரப்பு செய்யப்பட்டது.
1974-ம் ஆண்டு எனது ஒன்றுவிட்ட சகோதரன் மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு பிள்ளைகள் 3 பேர் இருந்தனர். எனது மனைவியின் விருப்பத்துடன் அப்பிள்ளைகளின் தாயையும் இரண்டாவது மனைவியாக்கினேன். எனது மனைவியின் பிள்ளைகள் ஐந்து பேர். இரண்டாவது மனைவியின் பிள்ளைகள் மூன்று பேர். சிலகாலம் செல்ல இளைய மனைவிக்கு எனக்கோர் மகள் பிறந்தாள்:

செல்லையா மெற்றாஸ்மயில் 71
எல்லோரும் மணம் முடித்து பிள்ளைகளோடு சுகமாக வாழ்கின் றார்கள். 20 வயதுடைய இளைய மகன் ஒருவன்தான் இருக்கின் றான் அவனும் ஒரு நடிகனாக வளர்ந்து வருகிறான்.
வடமயிலை கலைமகள் நாடக மன்றத்தை மயிலிட்டியில் உரு வாக்கி காத்தவராயன் கூத்து மேடையேற்றினேன். கதை வசனம் நாடகங்களான மலர்புரியின் மணிமுடி மலைக்கோட்டை மன்னன் முதலிய பல சரித்திர நாடகங்களை மேடையேற்றினேன். "பண்டார வன்னியன்’ நாடகத்தை பழக்கி மேடையேற்றினேன்.
எனக்கு எத்தனை வாழ்த்துக்கள், மலர்மாலைகள் கிடைத்த போதும், நான் திமிர் பிடித்தவன் போல் வாழவில்லை. அமைதி யோடும், அன்பாகவும் எல்லோரிடமும் பழகி வந்தேன்.
நான் வசதிபடைத்து வாழ்ந்த காலத்தின் பின் ஏற்பட்ட இடப் பெயர்வு, அதாவது 1990-ம் ஆண்டு ஆனி மாதம் 15-ந் திகதி வெள்ளிக்கிழமை தொட்டு இன்றுவரை படவேண்டிய கஷ்ரமெல் லாம் பட்டுக் கொண்டே இருக்கிறோம். "பணத்தை வைத்துக் கொண்டு கொடிகட்டிப் பறப்பவன், பணம் இழந்து படி இறங்கினால் அவன் மனம் உடைந்து போகிறான்' அருணோதயா பாட சாலைக்கு அருகாமை எங்களுக்கு முகாம் அமைத்து தந்தார்கள்" அப்போது போர் ஓய்ந்திருந்தது.
"காத்தவராயன் கூத்து பழக்க வேண்டும் என்று பலர் என்னைக் கேட்டுக் கொண்டபடி, பழக்கி அருணோதயா பாடசாலை அரங் கில் மேடையேற்றப்பட்டது. இக்குழுவினரைக் கொண்ட கூத்தானது சுன்னாகம் தமிழ் கந்தையா பாடசாயிைல் 2 தரமும், சங்குவேலிக் கிராமத்தில் 3 தரமும், உட்பட 15 மேடைகள் ஏற்றி பெரும் பாராட்டைப் பெற்றேன்.
மீண்டும் 1995-ம் ஆண்டு இடம்பெயர்ந்து தென்மராட்சிக்குச் சென்றோம். அங்கேயும் சிவராத்திரிக்காக மேடைப்பாடல் பாடி மகிழ்வித்தேன்
மீண்டும் யாழ்ப்பாணம் வந்த நான் இளவாலையில் வசித்து வருகின்றேன். ஒரு குடும்பம் மானிப்பாயில் வசித்துவருகின்றார்கள். அவர்களைப் பதிவு செய்வதற்காக மானிப்பாயிலுள்ள கிராம சேவையாளர் திரு. சிவகுமார் அவர்களிடம் சென்றேன். அவர் என்னை இனங்கண்டு அவரின் முயற்சியால் மானிப்பாய் வாசிக சாலையில் இடம்பெற்ற முதியோர் கெளரவிப்பில் என்னை கெளர

Page 63
『 மூத்த கலைஞர்கள் வரலாறு
வித்தார்கள். அன்று நானும்- சின்னத்துரையும் சேர்த்து அரிச்சந்திர மயான காண்டப் பாடலை மாறி மாறிப் பாடி மக்கள் மனதைக் கவர்ந்தோம். எமக்கு மாலை அணிந்து பொன்னாடை போட்டுக் கெளரவித்தார்கள் .
கிராமசேவையாளர் சிவகுமார் முயற்சியினால் என்னை பாரம் பரிய கலைகளின் மேம்பாட்டுக்கழகச் செயளாளரிடம் அறிமுகம் செய்து வைத்துள்ளார். நான் என்னால் ஆன பங்களிப்பு முழுவதை யும் அவர்களுக்கு கொடுக்கின்றேன். மேலும் கொடுப்பேன். என் உடல் மண்ணுடன் சேரும் வரையும் கலைப்பணி புரிவேன்.
"உண்மையான கலைஞன் எவ்வளவு கண்கலங்கினாலும் திண் மையாக, சாகும்வரை தன் கலைப்பணி தொடர்வான்'
திரு. வே. செல்வமணியின் கலைப்பணி இன்றைய காளிக்கட்டத் தில் மிகவும் அவசியமாகவுள்ளது. அவர் சேவை தொடரவேண்டு மெனக் கேட்டு அவரை வாழ்த்துகின்றேன்.
 

பெர்
திரு. வேலுப்பிள்ளை -
சிதம்பரநாதன்
முகவரி: தற்காலிகம்,நீர்வேலி.
பிறந்த இடம்:
மடத்தடி, மா விட்டபுரம்,
பிறந்த திகதி 14 - 0 - 1952
காத்தவராயன் கலைஞர்
யாழ்ப்பான மாவட்டத்தில் மாவிட்டபுரம் கிராமத்தில் படத் தடி என்னுமிடத்தில் வாழ்ந்த விஸ்வகர்ம குலத்தவர்களில் கா6:ஞ் சென்ற கதிர்காமு வேலுப்பிள்ளைக்கும், அவர் மனைவி தங்காச்சி யம்மாவுக்கும் சிரேஷ்ட புத்திரனாகப் பிறந்தவர் வே. சிதம்பர நாதன் என்னும் பெயர் கொண்ட நாடக கலைஞர்.
இவர் 1952-ம் ஆண்டு பிறந்து தமது கல்வியை அயலில் உள்ள மாவிட்டபுரம் அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை
லேயே கற்றவர்.
விளையும் பயிரை முளையில் தெரியும்' என்ற முது மொழிக் கிணங்க இவரது கலை ஆர்வம் பள்ளிப் பிராயத்திலேயே ஆசிரியர்க
ளால் கண்டறியப்பட்டது.
பாடசாலையில் கல்விபயிலும் காலத்தில் தமது 13 வது வயதி லேயே நாடகத்தில் ஆர்வமுள்ளவராகக் காணப்பட்டார். இதனால் பாடசாலையில் மார்க்கண்டேயர் நாடகத்தில் "மார்க்கண்டே யராகப்" பாத்திரமேற்று நடித்து பாராட்டுதலையும், பரிசிலையும் பெற்றுக்கொண்டார். தனது 14வது வயதில் பள்ளிக்கூடத்தில் நடந்த "சத்தியவான் சாவித்திரி' நாடகத்திலும் சத்தியவானாகப் பாத்திரமேற்று அதிலும் பரிசிலைப் பெற்றுக் கொண்டார்.
சங்கீதத்தில் ஆர்வம் கொண்ட இவர் தமது 20வது வயதில் கொல்லங்கலட்டி என்னுமிடத்தைச் சேர்ந்த இசைமணி க. செல்வத் துரை அவர்களைக் குருவாகக் கொண்டு சங்கீதக் கலையையும் சுற்றுக் கொண்டார்.

Page 64
74 மூத்த கலைஞர்கள் வரலாறு
தமது 22வது வயதில் மாதனைக் கலாமன்ற உறுப்பினரும் நடிகர் திலகமாக விளங்கியவருமான நாடக ஆசிரியர் காலஞ்சென்ற து. மகாலிங்கம் அவர்களைக் குருவாகக் கொண்டு அவரது நெறி யாள்கையில் 'சம்பூரண அரிச்சந்திரா" நாடகத்தில் நாரதராகவும், சத்தியகீர்த்தியாகவும் பாத்திரமேற்று நடித்து பல ரசிகர்களின் பாராட்டுதல்களையும் நன்மதிப்பையும் பெற்றுக்கொண்டார்.
தனது பெரிய தந்தை காலஞ்சென்ற வயிரவப்பிள்ளை என்பவ ரிடம் தனது குலத் தொழிலைக் கற்றுக் கொண்ட இவர் தனது ஓய்வு நேரங்களிலெல்லாம் கலை உணர்வோடும் சங்கீத ஞானத்தை வளர்ப் பதிலும் செலவழித்துக் கொள்ளுவார்.
இவர் ஒரு கலைக் குடும்பத்தைச் சேர்ந்தவரென்றால் மிகையா காது. நாடகக் கலையில் "காத்தவராயன்' சிந்து நடைக்கூத்து இவர்களது குடும்பக்கலை. இவரது தாய்வழிப் பேரனார் ஆறுப் பிள்ளை பராக்கிரமசிங்கம் என்பவர் ஒரு புகழ்பெற்ற அண்ணாவி யார். அவர் திருநெல்வேலி அண்ணாவியார் பொன்னப்பாவின் நன்மாணாக்கர் அண்ணாவியார் பொன்னப்பாவின் நெறியாள்கை யில் அக் காலத்தில் காத்தவராயன் நாடகத்தை மேடையேற்றி இன்றும் அதனால் அழியாப் புகழ்பெற்ற நடிகர்களாகத் திகழ்ந்த வர்கள். சிதம்பரநாதனின் குடும்பத்து மூத்த உறுப்பினர்களாவும் வழிகாட்டியாகவும் இருந்து மறைந்த மாமனார் குழந்தைவேலு இராசரத்தினம, கந்தப்பிள்ளை செல்வநாயகம், முருகேசு நாகலிங் கம், சிறியதந்தை கதிராமு அம்பலப்பிள்ளை, நல்லதம்பி வெங் கையா, வீரவாகு செல்லையா ஆகியவர்களின் வழிகாட்டலிலேயே தாத்தவராயன் சிந்து நடைக்கூத்தில் ஆர்வம் மிக்கவராகத் திகழ்ந் தார்.
அண்மைக்கால அசம்பாவிதங்களினால் தமது சொந்த இடமான மாவிட்டபுரத்தை விட்டு இடம்பெயர்ந்து வெளியேறி சிறுவிளானில் வசித்துவந்த நாட்களில் சிறுவிளான் இளைஞர்களுக்கு காத்தவ ராயன் நாடகத்தைப் பழக்கி அதனால் பெருமதிப்புப் பெற்றுக் கொண்டதோடு சுழிபுரம் பத்திரகாளி கோவிலடியிலும் இளைஞர் களுக்கு இருந்த கலை ஆர்வத்துக்கு விருந்தாக அங்கு 'காத்தவ ராயன்' நாடகத்தைப் பழக்கி மதிப்பும் பெற்றுக் கொண்டார்.
அங்கிருத்து இடம்பெயர்ந்து நீர்வேலியில் வசித்த காலத்தில் நீர்வேலி ஐடியஸ் கல்வி நிலையம், நீர்வேலி கலைமகள் கல்வி நிலை பம், புத்தூர் குருபரன் கல்வி நிலையம் ஆகியவற்றில் மாணவர்க ளுக்கு காத்தவராயன் சிந்துநடைக் கூத்தைப் புதிய பாணியில் பழக்கி மேடையேற்றி நன்மதிப்பை பெற்றுக் கொண்டார்.

செல்லையா - மெற்றாஸ்மயில் 75
1992-ம் ஆண்டு திருநெல்வேலி இளைஞர் மன்றத்தினருக்கு 'காத்தவராயன்' நாட்டுக் கூத்திற்கு அண்ணாவியாராகவிருந்து பழக்கி மேடையேற்றி "இளங்கலைஞர்" என்னும் கெளரவப் பட் டத்தையும் பெற்றுக்கொண்டார்:
1997-ம் ஆண்டு ஏழாலை சைவ சன்மார்க்க வித்தியாசாலை மாணவர்களுக்கு 'காத்தவராயன்' நாடகத்தைப் பழக்கி மேடை யேற்றியதால் மேற்படி பாடசாலைச் சமூகத்தால் கெளரவிக்கப் பட்டு 'இளங்கலை வேந்தன்' என்னும் கெளரவப் பட்டத்தையும் பெற்றுக்கொண்டார்.
இவர் ஒரு வளர்ந்து வரும் கலைஞன் என்று கூறுவது சாலவும் பொருத்தமாகும். கலை ஆர்வம் வளர எனது வாழ்த்துக்கள்

Page 65
பெயர் : திரு. சின்னத்தம்பி கனகன்
முகவரி
செல்வபுரம், கரண வாப் தெற்கு,
பிறந்த திகதி 22 - 07 - 1936
காத்தவராயன் கூத்துக் கலைஞர்
இவர் கலைத்துறையில் 21 வயதில் ஈடுபட்டார். முதன் முதலில் 'குலோபாவலி' என்னும் சினிமா மேடை நாடகத்தில் கெளரவ பrத்திரம் ஏற்று முதலில் நடித்துள்ளார். இந்த நாடகம் அனைத்து நாடக ரசிகர்களையும் கொள்ளைகொண்டு மனதில் இடம் பிடித் 孟J·
இவருடைய மாமனார் சின்னத்தம்பியும் உடுப்பிட்டி மாநகர சபையில் கடமையாற்றிய இவரது தமையனார் அமீரர் சின்னத் தம்பி - சுந்தரமும் கலைத்துறையில் 'குரு" ஆக இருந்தனர். அவர் களின் வழிநடத்தலில் உருவாகிய திரு. கனகன் அவர்கள் அரிச்சந்திர மயான காண்டம், சத்தியவான் சாவித்திரி, குலோபாவலி, மாலைக்கு வாதாடிய மைந்தன், ஆகிய இசை நாடகங்கள் மூலம் பேரும் புகழும் பெற்றார். சிறந்த கலைஞராக விளங்கிய இவர் அண்ணாவி யாராகவும் உயர்வு பெற்றார்.
பாரம்பரிய கலைகள் மேம்பாட்டுக் கழகத்தினால் நடத்திய இசை நாட்டுக் கூத்துப் போட்டியில் காத்தவராயன் நாட்டுக்கூத் தைப் பங்குபற்றச் செய்து 3வது இடத்தைப் பெற்றுக்கொண்டார் இந்த நாடகம் 25 மேடைகள் ஏறியதாக குறிப்பிட்டார். 'நல் ஐ கலைஞர்களும், அவர்களது பங்களிப்பும், நிர்வாக ஆளுமையும் ஒன்று சேர்த்தால் சிறந்த நாடகங்களை மேடையேற்ற முடியும்' என தனது அனுபவரீதியான செய்தியைக் கூறினார்.
"ஒரு தேசிய மட்டம் என்று சொல்லும் அளவுக்கு மரவு ரீதியான கலையை அழிய விடக்கூடாது என்றும் கலைஞர்களின் வளர்ச்சிக்கு பாரம்பரிய கலைகள் மேம்பாட்டுக் கழகம், எடுக்கும் முயற்சியை என்னால் கலை வாழ்க்கையில் மறக்க முடியாது.' என்றும் கூறினார்.
கலைஞர் நீடூழி வாழ்ந்து, தொடர்ந்து சேவையாற்ற வேண்டு மென்று வாழ்த்துகின்றோன்.
 

பெயர் :
திரு. சந்திரசேகரம்
இராசதுரை முகவரி:
மாதனை, பருத்தித்துறை
பிறந்த திகதி 12 - 04 - 1918
இசை நாடகக் கலைஞர்
வடமராட்சி வடக்கு பிரதேசத்தில் பருத்தித்துறை நகரில் கனவகள் மிளிரும் "மாதனை" என்னும் கிராமத்தில் பிறந்தார் இவர் தனது கல்வியை மாதனை மெ. மி. த. க. பாடசாலையில் கற்றார். இளமைக் காலத்திலிருந்தே கர்நாடக சங்கீதம், நாடகம் ஆகிய துறைகளில் மிகவும் ஈடுபாடு கொண்டவராக விளங்கியவர். 1932-ம் ஆண்டிலிருந்து நாடகங்களை நடித்து வருகிறார்.
கர்நாடக சங்கீதத்தைப் பொறுத்த வரையில் இவர் தவில் வித்து வான். மாவிட்டபுரம் நடராஜா என்பவரிடமும், 1953-ம் ஆண்டி லும், அதற்குப்பின் சில ஆண்டுகள் இந்தியாவில் மதுரை சோம சுந்தரத்திடமும் சங்கீதத்தைக் கற்றுத் தேர்ச்சி பெற்றார். தற்போது இவருக்கு வயது 83. எந்த ஒரு இராகத்தையும் பாடக்கூடிய வல் லமை படைத்தவர். பூg வல்லிபுரம் ஆழ்வார் ஆலயத்தில் இசைக் கச்சேரியை மேற்கொண்டவர். இலங்கை ஒலிபரப்புக் கூட்டு தாப னத்தில் 1946-ம் ஆண்டு 45 நிமிடங்கள் இசை நிகழ்ச்சியில் பாடி புள்ளார். இவர் கற்ற சங்கீதம் நாடகக் கலையில் சிறப்பாக நிகழ்ச் சிகளை மேற்கொள்ள ஓர் உந்து சக்தியாக அமைந்தது என்று கூற இTம்.
இவர் தந்தை பார் திரு. சி. சந்திரசேகரம் ஒரு நாடகக் கலை ஞர். சகோதரன் திரு. ச. செல்லத்துரை நீண்டகாலம் அண்ணாவி யராக பணிபுரிந்தவர். இவரை அண்ணாவியார் என்றே எல்லோரும் அழைப்பர். சகோதரன் செல்லத்துரையைப் பின்பற்றி இவரும் நாடகங்களில் ஈடுபடத் தொடங்கினார். 1982-ம் ஆண்டு "மாதனை கலா மன்றம்' அமைத்தவர்களில் முக்கிய காரணகார்த்தாவாக
இருந்தவர்.

Page 66
78
மூத்த கலைஞர்கள் வரலாறு
நடித்த நாடகங்களும் கதாபாத்திரங்களும் வருமாறு:
1. குலேபகாவலி ஜெயினன் முற்பாருஷா 2. சம்பூரண அரிச்சந்திரா அரிச்சந்திரன் *3. சத்தியவான் சாவித்திரி சத்தியவான், நாரதர்
4. ஜெயசந்திரா பவளகாந்தன் 5. ஒளவையார் ஒளவையார் 6. பூரீவள்ளி நாரதர் 7. பவளக்கொடி கிருஸ்ணர் 8. காத்தவராயன் சிவன் 9. பட்டினத்தார் பட்டினத்தார் 10. பக்த நந்தனார் நந்தனார் 11, அல்லி அர்ச்சுனா சகாதேவன் 12 பாஞ்சாலி சபதம் துச்சாதனன் 13. தர்மபுத்திரன் தர்மன் 14. கோவலன் கண்ணகி கோவலன் 15. திருநீலகண்டநாயனார் திருநீலகண்டர் 16. நல்லதங்காள் - பின்னணிப் பாடல் பாடியவர்
நாட்டின் பல பாகங்களிலும் இவரது நாடகங்கள் மேடையேற் றப்பட்டது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக மாதனை, தும்பளை, அல்வாய், நீர்வேலி, அனலைதீவு, புங்குடுதீவு, வண்ணார்பண்ணை, தாவடி, சுன்னாகம், யாழ்ப்பாணம், வவுனியா, கொழும்பு போன்ற இடங்களில் இவரது நாடகங்கள் மேடையேற்றப்பட்டது. பிறந்த இடமாகிய மாதனையில் போட்டி அடிப்படையில் மற்ற நாடக மன்றத்துடன் போட்டியிட்டு பெருந்தொகையான நாடகங்களை மேடையேற்றியது குறிப்பிடத்தக்க ஒர் அம்சம் எனலாம்.
இவர் முதன்முதலாக 'குலேபகாவலி' என்னும் நாடகத்தில் தனது 17வது வயதில் சகோதரனுடன் இணைந்து வவுனியா முருகன் ஆலயத்தில் நிகழ்ச்சியை மேற்கொண்டார்.
"மயானகாண்டம்" எனும் நாடகம் இவருக்கு மிகவும் புகழைத் தேடித்தந்தது. இந்நாடகம் ஏறக்குறைய 250 தடவைகள் மேடை யேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு அடுத்ததாக "சம்பூரண அரிச்சந்திரா" நாடகம் நூற்றுக்கு மேற்பட்டதடவை மேடையேற்றப்பட்டது. 1932 - 1986-ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதிகளில் நாடகங்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார். பின் னர் நாட்டில் நிலவிய அசம்பாவிதங்கள் காரணமாக நிகழ்ச்சிகளை மேற்கொள்ளவில்லை.

செல்லையா மெற்றாஸ்மயில் 79
இவரது நாடகங்கள் மூலம் சமூகத்திற்கு பல சேவைகளைச் செய்துள்ளார். குறிப்பாக மயிலிட்டி காசநோய் வைத்தியசாலை நிதிக்காக நாடகம் மேடையேற்றினார். மற்றும் நீர்வேலி காமாட்சி யம்பாள் சனசமூக நிலையம் கட்டுவதற்கு அரிச்சந்திரா நாடகம் மூலம் கட்டிடம் உருவாவதற்கு காரணகர்த்தவாக இருந்தவர் இவரது நடிப்புத்திறனைப் பாராட்டி பொன்னாடை போர்த்தி பொற்கிழி வழங்கி கெளரவிக்கப்பட்டார்.
யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையில் நடிப்பைப் பாராட்டி பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டார். இதனைவிட தாவடி யில் "மயானகாண்டம்’ எனும் நாடகத்தை ஒரே மேடையில் ஒன்றின் பின் ஒன்றாக 3 குழுவினரை ஒரு போட்டி நிகழ்வை நிகழ்த்திய போது சிறப்பாக நடித்து பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப் பட்டார். இவரது நாடகக்குழு இதில் முதலிடத்தைப் பெற்றது" மேலும் சுன்னாகம் கலைக்கழகத்தின் ஆதரவில் நடைபெற்ற நாட கத்தைப் பாராட்டி கலையரசு சொர்ணலிங்கம் "நாடகத்திற்குரிய் இந்தியாவின் தொணியை இங்குதான் கேட்கின்றேன்" எனக் குறிப் பிட்டுள்ளார்.
பட்டினத்தார் நாடகத்தில் தாயை பிரிகின்ற கட்டம், வாழ்க், கையில் மறக்க முடியாத சம்பவம் எனக் குறிப்பிடுகின்றார். இவ ரைப் பின்பற்றி பல நாடகக் கலைஞர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் காலஞ்சென்றவர்களான து. மகாலிங்கம், நா. நவரத் தினம், சிவபாதசுந்தரம் போன்றவர்களும் ந. சிவசுப்பிரமணியம், நா. கணபதிப்பிள்ளை (சின்னமணி) போன்ற நாடக கலைஞர்களும் உருவாவதற்கு வழிகாட்டியாகத் திகழ்ந்தவர் எனலாம்.
இன்றும் தேகாரோக்கியத்துடன் வாழ்ந்து வரும் இவர் இன்னும் நடிப்பதற்கு தயாராக இருக்கிறார். பல நாடகங்களை பழக்க வேண்டும் என்ற முனைப்புடன் இருக்கிறார். அவர் பணி மேலும் தொடர வேண்டுமென வாழ்த்துகின்றேன்.
§፻፭m$

Page 67
பெயர்
திரு. வே. க. பாலசிங்கம்
முகவரி:
செந்தில்பதி, பொலிகண்டி,
வல்வெட்டித்துரை.
பிறந்த திகதி 05 -08 - 1931
இசை நாடகக் கலைஞர்
யாழ்ப்பாணம், கலைமகள் வீதி, அரியாவையை பிறப்பிடமாகக் கொண்டு திருமணம் செய்தபின் பொலிகண்டி, வல்வெட்டித் துறையை சொந்த இடமாகக் கொண்ட திரு. வே. பாலசிங்கம் ஒரு ஆசிரியராக இருந்தும் இசைநாடக வளர்ச்சிக்கு தன் திறமையை பயன்படுத்திய ஒருவராவார். இவர் ஆசிரியராகவும், இவருடைய மனைவி திருமதி பவனம் பாலசிங்கமும் ஆசிரியராகவும் இருந்து அரசாங்க சேவையில் கடமை புரிந்த பொழுதும் இவர் ஒரு கலைப் பரம்பரையில் பிறந்த ஒருவராகையால் இவரை இசைநாடகத் துறையில் ஈடுபடுத்தியது எனலாம்.
இவர் ஒரு வயதுச் சிறுவனாய் இருக்கும் போது பேரனாரில் ஒருவராகிய புதியார் நீலர் அவர்கள் இவரது குரல்வளத்தைக் கண்டு, நாடக அண்ணாவியார் அமரர் நீ. செல்வக் கண்டு அவர் களை நாடி இவரைப்பற்றிக் கூறி ' பபூன்' பாத்திரத்தை பெற்றுக் கொடுத்தார். அதன்பின்னர் அண்ணாவியார் அமரர் நீ. கனபதிப் பிள்ளை அவர்களின் நெறியாள்கையில் "காத்தான் கூத்து' என்ற சிந்துக்கூத்தில் 'பாலகாத்தன்' பாத்திரத்தை ஏற்று நடித்தார். அதன்பின் பின்னாக இவரின் குரல்வளத்தையும். நடிப்புத்திறனை யும் கவனித்த அமரர் நீ செல்லக்கண்டு ஒவ்வொரு நாடகத்திலும், ஒவ்வொரு பாத்திரம் இவருக்கு வழங்கப்பட்டது.
இவ்வாறு நாடகத்துறையில் ஈடுபட்டு வளர்ச்சியடைந்த இவர், ஆசிரியராக சுடமையேற்ற பின்பும் தொடர்ந்தும் நாடகத்துறைக்கு பணியாற்றி வந்தது சிறப்பான அம்சமாகும்.
இவரது குருதாதராக அரியாவை ரீகலைமகள் நாடகமன்) ஆரம்பகர்த்தாவாகிய அமரர் நீ செல்வக் கண்டு அவர்களையும் ,
 

செல்லையா மெற்றாஸ்மயில் S.
அரியாலையூர் கவிஞர் வே ஐயாத்துரை அவர்களையும், அரியாவை பூர் 'சோக சோபித சொர்ணக் கவிக்குயில் சந்திரமதி வே. சு: இரத்தினம்" அவர்களையும் கொண்டுள்ளார்.
இவர் தனது கலைப்பரம்பரையை கூறும் போது "எனது மூதா தையார் அண்ணாவிமார்களாக இருந்தனர். அந்த மரபுவழி என் னையும் நாடகக்கலையில் பற்றுக் கொள்ள செய்தது; அன்றியும் எனது தந்தையார், சிறியதந்தையார்கள் நாடகம் நடிப்பதில் சிறப் புற்று விளங்கினர். எனது தாயாரின் தந்தையார் முதலி என்பவரும் கூத்துக்கள் நெறியாள்கை செய்வதில் சிறந்த திறமை உடையவ ரென எனது நாடகக்கலை வளர்ச்சிக்கு ஒளக்கமளித்து உதவிய எனது தாயார் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன்" எனத் தெரி வித்தார்.
இவர் இசையை முறையாகக் கற்றுக் கொண்டவரல்ல; ஆனால் கேள்விஞானம் மூலம் கற்றுக் கொண்டவர். இவருடைய கேள்வி ஞானம் சங்கீதம் கற்றுக் கொண்ட ஒருவரின் ஞானம் போல் இருந் தது இதனால் இவர் ஆசிரியராக இருந்த பொழுது இவரை "சங்கீத ஆசிரியர்" என்று ஆசிரியர், மாணவர்கள் அழைப்பது எனது செவிக்கு கிட்டியதும் உண்டு.
இவர் நடித்த இசை நாடகங்களும் பாத்திரங்களும்
1. பூஜரீ வள்ளி - வேடன், விருந்தன், வேலன்
3. பூதத்தம்பி - அந்திராசி (வில்லன்)
3. வாலிவதை - வாலி
சி. கன்னிக்கோட்டை - மணிமாறன் (சுதானாயகன்
அரசன்
சரித்திர நாடகங்களான "சகோதர விரோதி" என்ற கற்பனைச் சரித்திர நாடகத்தில் வில்லன் பாத்திரத்திலும், "பதவிமோகம்" என்ற கற்பனைச் சரித்திர நாடகத்தில் வில்லன் பாத்திரத்திலும் சிறப்பாக நடித்துள்ளார். இத்துடன் பல நாடகங்களை எழுதி நெறியாள்கையும் செய்துள்ளார்.
இவர் ஆசிரியப் பணியை முல்லைத்தீவு மாவட்டத்தில் குமுள முனை கிராமத்தில் மேற்கொண்ட பொழுது, அங்கிருந்து கொண்டு அளப்பரிய கலைப்பணி செய்துள்ளார். அப்பாடசாலையிலும் அயல் பாடசாலைகளிலும் இசை நாடகங்களைப் பழக்கி மாணவர் கள் மத்தியில் இசை நாடகத்துறையை ஊக்குவித்தார்,

Page 68
8. மூத்த கலைஞர்கள் வரலாறு
இவர் யாழ்ப்பாணத்திலும், முல்லைத்தீவிலும் செய்த கலைச் சேவையைப் பாராட்டி கிடைத்த விமர்சனங்கள் சில:-
1. "அவர் பாட்டு பக்கவாத்தியங்கள் பாடுவதுபோல் இருக்கிறது" வதிரியூர், சைவப்புலவர் அமரர் - திரு. சி. வல்லிபுரம்:
2. "குரல் வளத்தையும், இசைத் திறனையும் முத்திரை பதிக்கும் நடிப்புத்திறமையும் பூதத்தம்பி நாடகம் மூலம் கண்டவன் நான்' - டாக்டர் எம். கே. முருகானந்தன்
3, ! உங்கள் ஒப்பனை மூலம் உங்களை இனம்கண்டு கொள்ள முடிய
வில்லை. ஆனால் அரிவரிமுதல் கேட்ட உங்கள் அன்புக்குரல் மூலம் பளார் என்று அறிந்து கொண்டேன்'
மானவன். செ. பே. மயூரன்
இவர் 18 வயதிற்குட்பட்ட காலங்களில் பெண்வேடம் தாங்கி நடித்து வந்தவராவார். உடல் வளர்ச்சியில் ஏற்பட்ட மாற்றத்தினால் பெண்வேடம் தாங்குவதை நிறுத்திக் கொண்டார். பின்பு பெரும் பாலும் கதாநாயகனாகவும், வில்லன் பாத்திரங்களையுமே ஏற்று நடித்துள்ளோர்.
இவருடைய கலை வளர்ச்சியை கண்ட கிராம மக்கள் பொன் னாடை போர்த்தி பட்டங்கள் சூட்டி கெளரவித்தனர். முல்லை மாவட்ட குமுளமுனை மக்கள் "பண்ணிசைச் செல்வர்' என்ற பட்டத்தினையும் , கொக்குத்தொடுவாய் கிராம மக்கள் 'முத்தமிழ் வித்தன்" என்ற பட்டத்தினையும். வடமராட்சி அல்வாப் மனோ கரகான சபாவினால் "சுவை மகிழ்வன்" என்ற பட்டத்தினையும் சூட்டிக் கெளரவித்தனர்.
இறுதியாக அவர் தெரிவிக்கும் போது "நான் இன்று 68 வயதாகியும் நாடகங்கள் நடிப்பதை நிறுத்தவில்லை. இசை நா. கங்களை நெறிப்படுத்துவதையும் விட்டுவிடவில்லை. இசை நாடகக் கலை வளர என்னாலான பணி ஆற்றி வருகிறேன்' என்றார். அவர் பணி தொடர வாழ்த்துகின்றேன்.
::

பெயர் :
திரு, நல்லதம்பி
சிவசுப்பிரமணியம் முகவரி
காளிகோவிலடி ,
மாதனை, பருத்தித்துறை
பிறந்த திகதி : 25 - 07 - 1939
இசை நாடகக் கலைஞர்
:
நாடகம் என்றால் வடமராட்சிப் பகுதியில் பிரல்பமான ஓர் இடம் என்றால் அது மாதனை என்ற கிராமம். இப்பகுதியில் 1939-ம் ஆண்டு ஆடிமாதம் 25-ம் திகதி நவ்வத்தம்பி, பாக்கியம் என்ற இரு வருக்கும் புத்திரனாகப் பிறந்தார். சிவசுப்பிரமணியம். இவர் தனது ஆரம்பக் கல்வியை மாதனை மெ. மி. த க. பாடசாலையிலும், சிரேஷ்ட கல்வியை பா.வேலாயுதம் மகாவித்தியாலயத்திலும், உயர் கல்வியை சாவகச்சேரி றிபோர்க் கல்லுரரியிலும், கற்றார்: இவருக்கு நடனம், நாட்டுக்கூத்து, நாடகம், மரபுவழிப்பாடல்கள், வில்லிசை போன்றவற்றில் நாட்டமுடையவர்:
கவைத்துறைப் பிரவேசத்தைப் பொறுத்தவரையில் இவர் தனது 10வது வயதில் கல்விகற்ற மாதனை மெ. மி. த. கி. பாடசாலையில் 1949-ம் ஆண்டில் நடைபெற்ற "பெற்றோர் ஆசிரியர் தின விழா' வில் கோபி கிருஷ்ணா என்ற நாட்டிய நாடகத்தில் கிருஷ்ணனாக நடனமாடி தனது கலையுணர்வை வெளிப்படுத்தியுள்ளார்:
நாட்டுக்கூத்து, இசை நாடகத்துறையை நோக்கின் இவரது தாய்வழி உறவினர்களின் நாடகத்துறையில் காணப்பட்ட ஆர்வம் நாடகத்துறையில் பிரவேசிப்பதற்கு வழிவகுந்தது என்று குறிப்பிடு கின்றார். நாடகத்துறையில் இவரது குருவாக திரு. ச செல்வத் துரை அண்ணாவியார் குறிப்பிடத்தக்கவர். நாடகக் கலையைக் சுற்ற இவர் "மாதனை கலைவாணி வினோத கான் சபா' வின் ஒர் முக்கியமான நடிகராகத் திகழ்த்தார். ஆண், பெண் ஆகிய பாத்திரங்களில் நடித்து பலரது பாராட்டையும் பெற்றவர். 1970-ம் ஆண்டு முதன்முதலாக "காத்தவராயன்' எனும் சிந்து நடைக் கூத்தில் சிவன் பாத்திரம் ஏற்று நடித்தார்:

Page 69
84 மூத்த கலைஞர்கள் வரலாறு
1970 வரை கரகம், காவடி ஆடல் பாடல்கள் பாடுவதிலும், உடுக்கு வாசிப்பதிலும் தனிப்புகழ் பெற்று விளங்கியவர்:
dá. நடித்த நாட்டுக்கூத்து, இசை நாடகங்களும்
− ஏற்ற பாத்திரங்களும்
க்ாத்தவராயன் - சிவன், நடுக்காத்தான், பின் முத்துமாரி பூரீவள்ளி - குறத்தி, வேடன், முருகன் சத்தியவான் சாவித்திரி - சத்தியவான் அரிச்சந்திரா - அரிச்சந்திரன், சந்திரமதி, நாரதர் நல்லதங்காள் - நல்லதங்காள், குலகேசரி பட்டினத்தார் - முன் பட்டினத்தார் பாஞ்சாலி சபதம் - பாஞ்சாலி சிலம்புச் செல்வி - மாதவி, சேரலாதன் இலங்கேஸ்வரன் - இராமர்
இந் நாடகங்களோடு ஒரங்க நாடகங்களான தேரோட்டி மகன், சூழ்ச்சி, ஏகலைவன் போன்ற பல நாடகங்களில் நடித்துள்ளார்.
அம்மன் சித்தி விநாயகர் கலாமன்றம், துன்னாலை இந்து இளை ஞர் மன்றம், வல்லிபுரக்குறிச்சி குருக்கட்டு சித்திவிநாயகர் கலா மன்றம், கற்கோவளம் வேணுகான சபா, மாதனை மகாகாளி மக ளிர் நடன கலாலயம், பருத்தித்துறை சிவசாயி கலாமன்றம், புற் றளை சித்திவிநாயகர் கலா மன்றம், தும்பளை சக்திதேவி கலாமன் றம், முதலிய மன்றங்களின் மூலம் பல நாடகங்களை நெறிப்படுத்தி மேடையேற்றியுள்ளார்.
பழக்கி மேடையேற்றிய ஆட்ட நாட்டுக்கூத்துக்கள்
1. மனுநீதிகண்ட சோழன் 2. மகிடாசுரன் வதம் 3. ஆடல் செளந்தரி
பாடசாலைகளில் பழக்கி மேடையேற்றிய இசை நாடகங்கள் வள்ளி திருமணம் - யாதும்பளை சிவப்பிரகாச மகா வித்தி சத்திய வேள்வி - யா/புற்றளை மகா வித்தியாலயம் சத்திய வேள்வி - யா/ ஹாட்லிக் கல்லூரி சத்திய வேள்வி - யா/புலோலி மேற்கு சிவசாயி கலாமன்றம்
:
இவரின் நெறியாள்கை வழிப்படுத்தலின் கீழ் வடமராட்சியில் உள்ள பாடசரலைகளான யா/மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாட

செல்லையா - மெற்றாஸ்மயில் 85
சாலை, யா / புனித தோமையா றோ. க. பெண்கள் பாடசாலை, யா/சிவப்பிரகாசம் வித்தியாலயம், யாவேலாயுதம் மகா வித்தியா லயம் ஆகிய பாடசாலைகளின் பல்கலை நிகழ்வுகள் அரங்கப்படுத் தப்பட்டுள்ளன. ܖ
இவரது நாடகங்கள் மாதனை, தும்பளை, கற்கோவளம், வவு வியா, மன்னார், அளவெட்டி, முள்ளியவனை போன்ற இடங் களிலும் அதிக தடவைகள் மேடையேற்றப்பட்டது.
1975டம் ஆண்டு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தில் அ. தாஸிஸியசினால் நெறிப்படுத்தப்பட்ட நாடகமேடைப் பாடல் பிசியில் "காத்தவராயன் எண்ணும் நாடகத்தினை ஒலிப்பதிவு செய் வதில் இவருடன் அண்ணாவியர்களான எஸ். கணபதிப்பிள்ளை, து. மகாலிங்கம் ஆகியோருடன் இணைத்து பாடி ஒலிப்பதிவு செய்து வானெலியில் ஒவ்வொரு சனிக்கிழமையும் ஒலிபரப்பப்பட்டு வந் தீமை குறிப்பிடத்தக்கது.
இதனைவிட யாழ். பல்கலைக் கழகத்தில் கலாநிதி இ. பாலசுந் தரம்பிள்ளை அவர்களின் நெறியாக்கத்தின் கீழ் நடிகமணி வி. வி. வைரமுத்து, மெளனகுரு ஆகியோருடன் இன்னும் பல பிரமுகர்கள் சமூகமளித்திருந்த அவ்வேளையில் 'காத்தவராயன்' நாடகத்தில் ""முத்துமாரி" எனும் பாத்திரமேற்று தடித்து சபையோரது ஏகோ பித்த பாராட்டுக்களைப் பெற்றார்.
இவர் நடித்த நாடகங்களுள் மிகவும் அதிகமாக மேடையேற்றப் பட்ட நாடகம் "பூரீவள்ளி"யாகும். இந் நாடகமே 1991-ல் இவர் இறுதியாக நடித்த நாடகம். இந் நாடகத்தில் திரு. வி. செல்வரத் தினம் என்பவருடனும் ஏனைய மாதனைக் கலைஞர்களுடனும் நடித்த நாடகமாகும். இதற்குப் பின் இவரது அதுைகால் துண்டிச் கப்பட்டு ஊண்முற்ற நிலையில் இருந்தபோதும் சிவசாயி கலாமன் றம், பாடசாலைகள் போன்றவற்றிற்கு தனது சொத்த முயற்சியி னால் நாடகங்களைத் தயாரித்துப் பழக்கி மேடையேற்றுகின்றார்ெ நாடகத்துறையில் இவருடன் இணைந்து நடித்தவர்களில் மாதனை யூர் து. மகாலிங்கம், வ. கிருஸ்ணபிள்ளை, ச. வேணுகோபால், நா. கணபதிப்பிள்ளை (சின்னமணி) , இ. குலசேகரம், இ பாலசுப் பிரமணியம் என்பவர்களுடன், துன்னாலை இந்து இளைஞர் மன்ற ப. பரராஜசேகரம், ப. கண்ணதாசசர்மா, கற்கோவளம் வேணு கானசபா வே. சரவணபவான் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். இன்றும் சுகவீனமுற்ற நிலையிலும், குரல் வளத்துடன் பாடுவ தைக் கேட்கக் கூடியதாக இருக்கிறது. ஒரு கால் இழந்த நிலையி லும் இசை நாடகம், தாட்டுக்கூத்தைப் பரண்குவதில் ஆர்வத்துடன் செயற்படும் கலைஞரை வாழ்த்துகின்றேன்.

Page 70
பெயர் :
திரு. வே. நந்தகோபாலன்
முகவரி
கற்கோவளம், பருத்தித்துறை,
பிறந்த திகதி. 02 - 2 - 1960
காத்தவராயன் கூடத்துக் கலைஞர்
இவர் 1980-ம் ஆண்டு முதல் பல நாடகங்களில் சிறிய பாத்திரங்கள் ஏற்று நடித்தார். ஒரு சாதாரண நடிகனாக இருந்து அதன்பின்பு காத்தவராயன் நாடகத்திலே நடுக்காத்தான் பாத்திரம் ஏற்று நடித்தார். அன்று முதல் நல்ல நடிகன் எனப் பெயர் பெற் நார் .
1999-ம் ஆண்டு கற்கோவளம் வேணுகான சபா மன்றம் ஆண் ணாவிமாராகப் பதவியேற்ற பின்பு, ஊர் பெரியோர்களை அழைத்து காத்தவராயன் நாடகத்தைப் பழக்கி கும்பி அம்பாள் ஆசியத்தில் சித்திரா பெளர்ணமி அன்று அரங்கேற்றினார். அன்று முதல் இவ குடைய காத்தவராயன் நாடகம் வரமராட்சியிலே தனி இடத்தைப் பெற்று வந்துள்ளது. இவருடைய காத்தவராயன் நாடகம் 38-வது தடவை மேடையேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
1992-ம் ஆண்டு 18 வயதுப் பெண் பிள்ளைகளுக்குக் காத்த வராயன் நாடகத்தைப் பழக்கியுள்ளார். இந்த நாடகத்தைத் தும் பளை, நெல்லண்டை பத்திரகாளியம்மன் ஆலயத்தில் அரங்கேற் நிய பின் ஏழு தடவை மேடையேறியுள்ளது.
1993-ம் ஆண்டு சத்தியவான் சாவித்திரி நாடகமும், அரிச்சந்திர மயான காண்டம் ஆகிய இரு நாடகங்களையும் பழக்கி கும்பி அம் பாள் ஆலயத்தில் அரங்கேற்றியுள்ளார். இந்த நாடகங்களில் தாரத ராகவும், அரிச்சந்திரனாகவும் நடித்துள்ளார். இந்த நாடகம் சிறப்பாக அமைந்ததினால் இவர் பொன்னாடை போர்த்துக் கெளர விக்கப்பட்டார். 1997-ம் ஆண்டு சிறுவர்களை கீழைத்து அவர் களுக்கு ஊக்கம் கொடுத்து காத்தவராயன் நாடகத்தைப் பழக்கி னார். பாரம்பரிய கலைகள் மேம்பாட்டுக் கழகம் நடாத்திய காத்தவராயன் நாட்டுக் கூத்துப் போட்டியில் பெரிய கலைஞர்களு டன் போட்டி போட்டு 3-வது இடத்தைப் பெற்றுக்கொண்டது"
திரு. நந்தகோபாலன் அவர்களின் கலைப்பணி மேலும் தொடர வேண்டும் என வாழ்த்துகின்றோம்.
 
 

பெயர். திரு. வயிரமுத்து
- சுப்பிரமணியம்
முகவரி:
உடுத்துறை, மருதங்கேணி
பிறந்த திகதி 18-04 - 1920
நாட்டுக்கூத்து
கிராமியக்கலை கலைஞர்
வடமராட்சி கிழக்கின் முதல் அண்ணாவியரான வைரமுத்து சின்னையா (அப்புக்குட்டி அண்ணாவியார் வின் சொந்த தம்பி யான திரு. வைரமுத்து சுப்பிரமணியம் மூத்த அண்ணாவியாவார். இருபத்தைந்துக்கு மேற்பட்ட நாடகங்களில் நடித்துள்ளார். இந் நாடகங்கள் 50க்கு மேற்பட்ட மேடைகளில் மேடையேற்றப்பட்டது இந்நாடகங்களில் சிலவற்றில் கதாநாயகனாகவும் கதாநாயகியாக பெண்வேடம் ஏற்றும் தடித்துள்ளார்.
நடித்த கூத்துக்களில் பிரதானமானவை
1. கோவலன் கண்ணகி - கண்னகி
2. நல்வதங்காள் - நல்லதம்பி
3. இராமாயணம் - அனுமான்
4. காத்தவராயன் - சின்னான்
பழக்கிய நாடகங்கள்
கண்ணகி , பிரகலாதன், சம்பூர் இைராமாயணம், துச் சிவன்
நல்லதங்காள் பூதத்தம்பி
நாடகங்கள் உடுத்துறை, ஆழியவளை, வெற்றிலைக்கேணி, தட்டுவன்கொட்டி, வத்திராயன் ஆகிய இடங்களில் மேடையேற்றி பாராட்டுப்பெற்றன. இந்நாடகங்கள் பெரும்பாலும் 1940 - 1935-ம் ஆண்டுக்காலங்களில் இடம்பெற்றுள்ளது.
இவர் பாட்டுக்காவடி பழக்கும் அண்ணாவியாருமாவர். 10 பேர் கொண்ட குழுவாக பாட்டுக்காவடி பழக்கி வருடத்தில் இருமுறை

Page 71
மூத்த கலைருfகள் வரவிாறு
திரியாய் அம்மன், உடுத்துறை ஐந்தாம் மன்ை பிள்ளையார் ஆகிய ஆலயங்களில் 25 வருடகாலமாக தொடர்ந்து மேடையேற்றி
புள்ளார்.
கோவாட்டம் சுரகம் என்பன அம்மன் ஆலயங்களில் பழக்கி பொங்கல் தினங்களில் நிகழ்சிகளை நடத்துவார். இவர் பாட்டுகள் இயற்றும் கவிஞருமாகும்.
இவரின் கூத்துமூலம் அறிமுகமாண்வரிகளாக பின்வருவோரை
நின்ன்வுகூறுகிர்ார்
இது மருதங்கேணிப் பகுதியில் பல சமூக தாடகங்களையும் 1958-ம்
ஆண்டிலிருந்து இன்றுவரை மேடை ஏற்றிவரும் திரு. சி. துரைசாமி அன்னாளியார்.
ஒ பிரகலாதன் சுத்துமூலம் அறிமுகமான முத்துவேலு அண்ணா
#?urf
இது இராமாயணம் கூத்துமூலம் அறிமுகமான சிரிப்பு நடிக்ராக 100
மேடைகளுக்குமேல் நடித்த திரு. த. குலசேகரம் "கலைஞர்.
இவரின் கலைச்சேவையை பாராட்டுவதுடன் பல காலம் மேலும் கலைச் சேவை செய்ய வாழ்த்துகின்றேன்.
 

Guu
திரு சடிையன் சிவஞானம் முகவரி:
கைதடி, தெற்கு,
கைதடி,
பிறந்த திகதி: 03-0 - 1953
காத்தவராயன் கூத்துக் கலைஞர்
சிறு வயது முதல் நாடகத்துறையில் மிகவும் ஈடுபாடு கொண்ட வரான இவர் கலைத்துறை வாழ்க்கையில் கடந்த 30 வருடங்க ளாக சுடர்விட்டுப் பிரகாசித்துக் கொண்டே இருக்கிறார். இவரு விடய கலைவாழ்வுக்கு அத்திவாரமிட்டவர் அவரது மனைவியின் தகப்பனராகிய அமரர் சிவலை வேலன் அவர்களே ஆவர்.
சமூக, சரித்திர புராண சம்பந்தமான நாடகங்கள் பலவற்றில் தோன்றி நடித்ததோடு பல நாடகங்களை இயக்கியும் உள்ளார். அந்த வகையில் அவரது கலைவாழ்க்கை 1968-ம் ஆண்டு ஆரம்ப மானது. அந்த ஆண்டில் 'சதானந்த சந்திரவதனி" எனும் சரித்திர நாடகத்தில் முதல் முறையாக நடித்தார். அவருக்கு முதல் நாடக மாக இருந்தாலும் தனது நடிப்புத்துறைக்கும், இயக்குனர் துறைக் கும். அந்நாடகம் ஊன்றுகோலாக இருந்ததை தன்னால் மறக்க முடியாது என்று நினைவு கூறுகிறார். அதன் பின் 1987-இல் வீர சொர்க்கம் எனும் சரித்திர நாடகத்திலும் நடித்தார். 1975-இல் "முதலியார்' என்னும் சமூக நாடகத்திலும், 1980-இல் 'மதனா" எனும் சரித்திர நாடகத்திலும், 1981-இல் "சூடு" என்னும் சமூக
நாடகத்திலும் நடித்தார்.
இந்த வேளையில் பாரம்பரிய கலைகளை பரம்பகார பரம்பரை யாக வளர்த்து வந்த அவரது மாமனார் அண்ணாவியார் அமரர் சிவலை வேலனைக் குருவாகக் கொண்டு அவரது "காத்தவராயன்' நாட்டுக்கூத்தில் 1981-ல் நடித்தார். இந்நாடகம் அவரது எதிர் கால வாழ்வில் அழியாப் புகழைத் தரும் என்று அப்போது எண்ண வில்லை. அந்நாடகமானது பல மேடைகளில் ஏறியதோடு அவரை ஒரு தயாரிப்பாளராகவும் , இயக்குனராகவும் மாற்றிவிட்டது. மாம னார் அமரராகிய பின்னர் 1989-ல் முதல் முறையாக நாவற் குளி

Page 72
4) [] மூத்த கலைஞர்கள் வரலாறு
சந்தியில் இருந்த சில கலைஞர்களை ஒன்றினைத்து காத்தவராயன் நாடகத்தை பழக்கி மேடையேற்றினார். அந்நாடகத்தின் சிறப்பை நேரடியாகப் பார்த்த மக்கள் பலர் தாங்களும் அதுபோல நடிக்க ஆசேப்பட்டனர். அத்தவகையில் 1990-ல் கைதடி தெற்கு மின் னொளி நாடகமன்றமும், 1993-ல் நீர்வேலி கலையகமும், 1994-இல் பூம்புகாரி நாடகமன்ற ஆண், பெண் கலைஞர்களும், 1995-இல் கைதடி கிழக்கு நாடகமன்றமும் அவருடன் தொடர்பு கொண்டு அந்தந்த ஆண்டுகளில் நடித்துப் பெருமையடைந்தனர். 1998-இல் வன்னி மண்ணுக்கு இடம்பெயர்ந்து சென்றிருந்த வேளையில் அங்கும் இந்த நாடகத்தை மேடையேற்றி அழியாப் புகழ் பெற்றார். பின் 1997-இல் கைதடிக்கு திரும்பிவந்த பின் வளர்மதி நாடகமன்றக் சிலை உள்ளங்களுக்கு இந்நாடகத்தைப் பயிற்றுவித்தார். அந்நாட சுமே பாரம்பரிய கலைகள் மேம்பாட்டுக் கழகத்தினரால் யாழ் மாவட்ட ரீதியில் நடாத்தப்பட்ட காத்தவராயன் சிந்து நாட்டுக் கூத்திலே முதலிடத்தைப் பெற்றது. அவர் ஓரிடத்தில் உணர்ச்சியாக "எனது கலை வாழ்க்கை பெருமைபெற உதவிய பாரம்பரிய கலைகள் மேம்பாட்டுக்கழகமும் என்னால் மறக்கமுடியாத கழகம் ஆகிவிட்டது. எனது வாழ்வின் இறுதி இலட்சியமாவது நான் சாகும்போது கலைஞன் என்ற பெயரோடு சாவதையே சந்தோசமாக விரும்புகி றேன் என்றார்.
இளைய கலைஞராகிய இவர் மேலும் பல கலைப்பணி செய்ய
வாழ்த்துகின்றோம்.
ફ્રેં;
-i. 1 أن أي =

G)оли у ї :
திரு. வீரகத்தியார்
. காசிநாதர் முகவரி
விடத்தற்பளை, மிருசுவில்.
பிறந்த திகதி 04 - 09 - 1949
இசை நாடகக் கலைஞர்
தென்மராட்சியில் உள்ள வரணி கிராமத்தில் பிறந்த வீரகத் தியார் காசிநாதர் தனது பாடசாலைப் படிப்பை வரணி வடக்கு சைவப்பிரகாச வித்தியாலய பாடசாலையில் கல்வியைக் சுற்றுக் கொண்டார். பாடசாலைப் பருவத்தில் கவைத்துறையில் நாட்டங் கொண்ட இவர் தனது சகோதரன் வீ. வேதாரணியம் அவர்களுடன் பல கலை நிகழ்வுகளைப் பார்த்து ரசித்ததனால் தானும் ஒரு கலை ஞனாக வேண்டும் என்ற பெருவிருப்புடன் சுலைத்துறையில் ஈடுபட்
Trif".
முதன்முதல் நாகர்கோவில் நல்லையா அண்ணாவியரதும் விடத் தீற்பளை இசைமணி கணேசு அவர்களினதும் வழிநடத்தலில் "சகுந்தவை' நாடகத்தில் பெண் பாத்திரமேற்று நடித்தார். முதல் நாடகமே நல்ல வரவேற்பைக் கொடுத்ததினால் தொடர்ந்து நடிக்கத் தொடங்கினார். இவர் விடத்தற்பளையில் திருமணம் செய்து அங்கு வாழ்ந்ததால் இவருடைய கலை முயற்சிகள் விடத்தற்பளைக் கிரா மத்தேயும் அளித அண்டிய பகுதிகளிலும் கலை வளர்ச்சிக்கு தன் வினால் ஆன கலைப்பணியை ஆற்றிவந்துள்ளார். வருகிறார்.
இவர் நடித்த இசை நாடகங்களும் பாத்திரங்களும்:
1. சம்பூரண்ே அரிச்சந்திரன் - அரிச்சந்திரன், சந்திரமதி 2. சத்தியவான் சாவித்திரி - சத்தியவான், இயமன் பி. ஏழு பிள்ளை நல்லதங்காள் - காசிராசன், நல்லதம்பி 4. கோவலன் கண்ணகி - கோவலன் 5. பட்டனத்தார் H- LILLGAFTr 8. காத்தவராயன் - காத்தவராயன்
r

Page 73
: முத்த கலைஞர்கள் வரலாறு
7. வள்ளி திருமணம் - முருகன் வேடன் 8. சத்தியபாமா - கிருஷ்ணர் 9. L-Ifħir sfrażi Għiħ mitluq. H
மேற்படி நாடகங்களில் வரணி, கொடிகாமம், சாவகச்சேரி, மந்திகை, வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, நவக்கிரி ஈச்ச மேட்டை, மண்டைதீவு, கிளாவி, வேலனை, விடத்தற்பளை, FSF மட்டுவாள், பளை, இயக்கச்சி, கிளிநொச்சி, முரசுமோட்டை கண்டாவளை, வண்ணாங்குளம், நிச்சியவேட்டை, விசுவமடு, முல்லைத்தீவு, வவுனியா, மாங்குளம், ஒட்டுசுட்டான், திருகோண மலை, பன்குளம், கோட்டைக்கட்டியகுளம், அக்கராயன்குளம் , மயிலிட்டி, ஆகிய இடங்களில் நடித்துள்ளார்.
இவர் பழக்கிய இசை நாடகங்கள் :
அரிச்சந்திர மயான காண்டம் சத்தியவான் சாவித்திரி பவளக்கொடி
தென்மராட்சியில் இசைநாடக கன Rஞர்கள் இலைமறையாக இருக்ன்கீயில் இன்னும் செயற்பட்டுக் கொண்டு நாடகங்கனைப் பழக்கி மேடையேற்றிக் கொண்டு இருக்கிறார்.
இவர் ஒரு வில்லிசைக்குழுவை தனது தலைமையில் நடத்திக் கொண்டிருக்கிறார். இவர் குறிப்பிடுகையில் "கலை கலாச்சா ரத்தை உலகிலே உருவாக்கியது இறைவன். நாட்டு மக்கள் இவை களை ஊகித்து சத்தியத்தைக் கற்பை, இலட்சியத்தை, இரத்த பாசத்தை இறைவனுடைய நிருவருட் சுடாட்சத்தை இலகுவில் மக்கள் மனதில் பதிய வைத்து மானிட வர்க்கம் மண்ணில் நல் வாழ்வு வாழ இறைவன் நியதி என்று புராணங்கள் கூறுகின்றன. ஆகவே நாங்கள் பாரம்பரிய கலைகளை முன்னோடியாக நின்று வளர்த்து வாழவேண்டும்" என்றார்.
அவர் கலைப்பணி மேலும் தொடர வாழ்த்துகின்றேன்.
స్తో

பெயர் :
திரு. நா. வை. விசுவலிங்கம்
முகவரி:
ம்ே வட்டாரம், நயினாதீவு.
பிறந்த திகதி. 01 - 0 - 1930
இசை நாடகக் கலைஞர்
நயினாதீவை பிறப்பிடமாகக் கொண்ட திரு. நா. வை: விசுவலிங்கம் அவர்கள் தமது ஆரம்பகல்வியை நயினாதீவு பூரி நாக பூஷணி வித்தியாசாலையிலும், ஆங்கிலக்கல்வியை அரசினர் ஆங்கி வப் பாடசாலையிலும் கற்றவர், 1944-ம் ஆண்டு சிரேஷ்டதிராதரப் பரிட்சையும் 1956-ம் ஆண்டு உயர்தரப்பரிட்சையிலும் சித்கி மனடந்தவர்.
1848-ம் ஆண்டு மூளாய் திரு. ஆறுமுகம் அவர்களிடம் தவில் பழகினார். 1950-ம் ஆண்டு பாழ் முதலாம் குறுக்குத்தெருவிலுள்ள நடகக் கல்லூரியில் நாடகமும் 1958 களில் சங்கீதபூசணம் திரு ஏ எஸ். இராமநாதன் அவர்களிடம் மிருதங்கமும் சுற்றுக் கொண்டவர் இவர் 1.1 - 47 முதல் தபால் இலாகாவில் நிரந்தர ஊழியராகி 13 வருடசேவை செய்தபின் 1958-ம் ஆண்டிலிருந்து பொ. எ. வி. சேவையில் சேர்ந்து மட்டக்களப்பு, கொழும்பு, மன்னார், குருனாகல், திருகோணமலை ஆகிய இடங்களிலும் யாழ்ப்பாணத் தி லும் கடமையாற்றினார் .
இவர் இக்காலங்களில் நாடகம், வில்லுப்பாட்டு, கதி பிரசங்கம் , மிருதங்கம் நிகழ்ச்சிகளை நடத்தியவர். இலங்கை வானொலியிலும் நிழ்ச்சிகள் நடத்தியவர்.
1984 தொடக்கம் 1970 வரை திருகோணமலை ஆலயத்தில் மிருதங்கம் வாசித்து 'மிருதங்க மாமணி" "மிருதங்க சாகரச்சுடர்' "மிருதங்கவிற்பன்னர்' என்ற பட்டங்களையும், லயஞான வித்தகர் என்ற பெயரையும் பெற்றார்.

Page 74
9.
ஒனர் .
மூத்த கலைஞர்கள் வரலாறு
நடித்த நாடங்களும் பா த்திரங்களும்
சத்தியவான் சாவித்திரி பவின யமதர்மபார் சகுந்தலா வாழ்க்கைப்படகு வேலைக்காரி சுப்பிரமணியபாரதி வீரபாண்டியகட்டபொம்மன் அடங்காப்பிடாரி வாடகை வீடு பாதுகாபட்டா பிஷேகம் காத்தவராயன்
சத்தியவான் பன் - துஷ்யந்தன் - தகப்பன்
-- வில்லன் - பாரதி - கட்டப்பொம்மன் - பிடாரி ஊ தகப்பன் - தசரதர்
- பூமாதேவி,கழுக்காத்தான்
பழக்கப்பட்ட நாடகங்கள்
1. வாலிவதம் 3. தொண்டிநாடகம் 3. காத்தவராயன்
இவருடன் நடித்த கலைஞர்கள் புத்திஜீவிகளாக இன்று உள்ள
பட்டம்
பெற்று
காணப்படுகின்றார்கள்.
அவர்களில் சிலர்
திரு. நா. கணபதிப்பிள்ளை
சபா , ஆனந்தர்
பதவியில்
உயர் பதவி வகிப்பவர்களா
வித்துவான், திரு. சி. குமாரசாமி
திரு. ப. சு. பரமலிங்கம் திரு. க. சு. சந்திரன் திரு. சி. நடேசபிள்ளை ଦ୍ଯୁଷ୍ମା • ପୁସ୍ତି , ଓଁ କଁ କଁ କଁfଛ୩ I । உரண்டிதர் திரு. நா. திரு. சண்முகராசா வித்துவான் திரு. ப. க. புலவர் நிரு . அரியநாயகம் திரு. நா. சு.
கந்தசாமி
காமாட்சி சுந்தரன்
சண்முகநாதபிள்ளை
இன்னும் கலை ஆர்வத்துடன் வாழ்ந்து கொண்டு இருக்கும் திரு விசுவவிங்கம் அவர்கள் பல கலைச் சேவை செய்ய வாழ்த்துகின் றேன்.

Gltлил ї : திரு. ஜேமிஸ் - அடிைக்கலம்
முகவரி:
11ம் வட்டாரம், கிழக்கு நெடுந்தீவு.
பிறந்த திகதி 18 - 04 - 1932
நாட்டுக்கூத்து கலைஞர்
தெடுத்தீன ஃப் பிறப்பிடமாகக்கொண்ட ஜேமிஸ் - அடைக்கம் அண்ணா வியார் அவர்கள் தெடுத்தீவு மாவனித்துறை றோ, க. த. சு. பாடசாலையில் 8-ம் தரம் வரை தமது கல்வியைக் கற்றவராவார்.
நெடுத்தீவு 11-ம் வட்டாரத்தை வசிப்பிடமாகக் கொண்ட அந் தோனி - கெளரியல் குருவாக விளங்கினார். இவரது உறவினரான கெளரியல் ஜேம்ஸ், பேதுணு மடுத்தீன், ஆகியோரும் றோமன் கத் தோவிக்க குருமாரும், ஊர் மக்களும் இவரை ஊக்குவித்தனர். தளர வர்கள்  ைஉதவியும், சரீர உதளியம், பொருளுதவியும் செப் ததினால் இவர் பல நாட்டுக்கூத்துக்களை நடிக்கக்கூடியதாகவும், பல நாட்டுக் கூத்துக்களைப் பழக்கக்கூடியதாகவும் இருத்தது.
இன்று நெடுந்தீவில் நாட்டுக்கூத்துக்களைப் பழக்கும் கலைஞர் களில் மிகவும் மூத்த கலைஞராக இருக்கிறார்"
இவர் நடித்த நாடகங்களும், பாத்திரங்களும் மரியசீலன் - கதாநாயகன், உபாத்தியாயர் அன்னை மரியாள் - ஜெயசீவி ( பெண் பாத்திரம் ) சபீனகன்னி - சேடி மத்தேயூ மாகிறேற்றம்மாள் - கதாநாயகன் பொன்னின் செபமாலை - மந்திரவாதி திருஞானதீபன் - கதாநாயகன்
fi
இவர் கத்தோலிக்க சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்ததினால் கிறிஸ்தவ நாடகங்களிலேயே ஈடுபட்டிருந்தார். பொதுவாக கரை யோரப் பிரதேச கிறீஸ்தவ நாட்டுக்கூத்துக்களில் ஆட்டங்கள் இல்

Page 75
96 மூத்த கலைஞர்கள் வரலாறு
லாமல் பாட்டுக்களுக்கே முதலிடம் கொடுக்கப்பட்டிருந்தது. இத னால் 'நாடகம்' என்றே அழைப்பதைக் காணக்கூடியதாக இருந் தது. இவருடைய நாடகங்கள் நெடுந்தீவு, பளை, சுண்டிக்குளம் ஆகிய இடங்களில் மேடையேற்றப்பட்டுள்ளது.
இவர் பழக்கிய நாடகங்கள் (கூத்து) மரியசீலன் மங்கம்மா சபதம் கோவலன் கண்ணகி பூதத்தம்பி யுவானியார் மாணிக்கவாசகர் வரலாறு மனம்போல் மாங்கல்யம் 8. ஞானசவுந்தரி 9. கண்டியரசன் 10. JFG36urfu urriř
.
இவர் பழக்கிய மாணவர்களில் இன்று நெடுந்தீவில் சிறந்து விளங்குபவர்கள் சிலரைக் குறிப்பிடலாம்.
தி பாலசிங்கம்
ஆ. சுரன் வே. விஜயகுமாரன் ம. இராசநாயகம் சை. யேசுதாசன் த. பிரபாரத்தினம் யோ. தேவகுஞ்சரி பா. அன்பரசி இன்னும் பலர்.
o
o
" நாடகங்கள் பழக்கப்படும்பொழுது பிரச்சனைகளும் 6) sa). களும் ஏற்படுவதுண்டு. நாடகத்தின் சுவை காணப்படுமிடத்து சிக் கல்கள் நீங்குவதுண்டு. செலவினங்களின் காரணமாகவே சிறுசிறு துன்பங்கள் ஏற்படுவதுண்டு மேடையேற்றப்படும் பொழுது சகலர தும் ஒத்துழைப்பும், சந்தோஷங்களும், ஊக்குவிக்கும் தன்மையும் மகிழ்ச்சியும் இயல்பாகவே பொருந்துகிறது" எனக் கண் தெரியாத நிலையிலும் பல்லில்லாத பொக்கு வாயால், அழகிய கிழவராக இருக்கும் அண்ணாவியார் நெடுந்தீவில் என்னிடம் தனது ஆழ்ந்த அனுபவத்தைத் தெரிவித்தார்.
இவர் கண்ணின் பார்வையை இழந்தாலும், குரல் - சாரீர வளத்தையும் தனது உடல் வலிமையையும் இழவாது கம்பீரமான

செல்லையா - மெற்றாஸ்மயில் 97
குரலில் பூதத்தம்பி நாடகத்தின் பாடல்களைப் பாடிக் காட்டிய போது எனக்கு மிகவும் அதிசயமாக இருந்தது.
உடல் வலிமை மட்டுமல்லாது உள வலிமையும் கொண்ட இவ் அண்ணாவியார் தொடர்ந்து நெடுந்தீவுக் கலைஞர்களுக்கு நாட்டுக் கூத்தைப் பழக்கப் போவதாகவும் எனக்குக் கூறினார். அவரால் முடியும் என்பதை உறுதிசெய்கின்றேன்.
இவர் திரு. தி. பாலசிங்கம், திரு. ஆ. கரன், திரு. சோ. விஜய குமாரன். திரு. ம. இராசநாயகம், திரு. சை. யேசுதாசன், திரு' த. பிரபாரத்தினம் ஆகிய தற்பொழுது நெடுந்தீவில் வாழும் கலை ஞர்களை உருவாக்கிய குருவாவார். இவர் இவர்களுக்குப் பழக்கிய நாட்டுக்கூத்துக்களான பூதத்தம்பி, யுவானியார், மங்கம்மா சபதம், மாணிக்கவாசகர் என்பன முக்கியமானதாகும்.
இவர் 1972-ம் ஆண்டு நெடுந்தீவு உதவி அரசாங்க அதிபராக இருந்த திரு. செபநாயகம் அவர்களாலும், அதிபர் இரா. சின்னத் தம்பி அவர்களால் கெளரவிக்கப்பட்டார்.
நெடுந்தீவில் 1993-ம் ஆண்டு பொது மக்காள லும், மதகுரு மாராலும் கெளரவிக்கப்பட்டு பொற்கிளி வழங்கப்பட்டது.
அண்ணாவியார் அடைக்கலம் அவர்களின் சேவையை பாராட் டுவதுடன் அவருடன் நெடுந்தீவில் வாழ்ந்து கொண்டிருக்கும் அண் ணாவியார்களும், கலைஞர்களுமான திரு. வலத்தீஸ், திரு. எஸ். திருச்செல்வம், திரு. க. பொன்னுத்துரை, திரு. சைமன் யேசுதாசன். திரு. வே. மாணிக்கம், திரு. வ, மதியாபரணம், திரு. அ. அமிர்த நாதர் போன்ற ஏனையோருடைய சேவையையும், பாராட்டுவது டன் அவர்கள் சேவை தொடர்ந்து, நிறைவான கலைப்பணியாற்ற வேண்டுமென கேட்டுக் கொள்கின்றேன்.

Page 76
Curi
திரு. ஆனாசி அருளப்பு
முகவரி :
நாரந்த எ  ைபி. டமேற்கு,
ஊர்காவற்றுறை,
பிறந்த திகதி 03 - 04 - 1953
நாட்டுக் கூதது க ச ஈபிெதா
நாாந்தனை வடமேற்கு ஊர்காவற்றுறையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆனாசி அருளப்பு ஊர்காவற்றுறை விதி அந்தோனியார் கல்லூரியில் கல்வி கற்று 8-ம் வகுப்புடன் தனது பாடசாலைப் படிப்பை நீடித்துக் கொண்டார்.
கத்தொழிலையே தனது தொழிலாகக் கொண்டு வாழ்ந்து வந்தவர். அக்காலத்தில் நாரந்தனையில் தென்மோடி நாட்டுக்கூத்துக் கவின் மிகவும் பிரபல் பாம்பெற்று விளங்கியது. காலஞ்சென்ற அண்ணா விமார்களான செல்லையா, பூந்தான் போசேப்பு ஆகியோர் எப் பொழுதும் நாட்டுக்கூத்து மூலம் நாடகங்களை மேடையேற்றிக் கொண்டு இருந்த காலமாகும். இக்காலத்தில் அனைவரின் வாய் களி லும் நாட்டுக்கத்துப் பாடல்களே ஒலித்துக் கொண்டிருந்தது. இதற்கு இவரும் விதிவிலக்கல்வி இக்கலையால் ஈர்க்கப்பட்ட இவர் எங்கெங்கு நாடக ஒத்திகைகளோ, அன்றேல் அரங்கேற் நமோ, அங்கேல்லாம் சென்று தனது கலைப்பசியைத் தீர்த்துக்
கொண்டவர். வாலிப பருவத்தை அடைந்தபின் எப்படியும் தானும் நாட்டுக்கூத்து நடிக்க வேண்டும் என்ற ஆவல் கொண்டு தனது மாமனாரான காலஞ்சென்ற பூந்தான் யோசேப்புடன்
இணைந்து நடிக்கத் தொடங்கினார்.
இவர் நடித்த நாட்டுக்கூத்துக ளாவன
1. சங்கிலியன் (முதன்முதலில் சங்கிலியன் மகனாக நடித்தது)
ஆண்டு 2. சம்பேதுணு சம்பாவிலு If 3. சுருங்குயில் குன்றத்துக் கொலை 直盟星岛
4. எஸ்தாக்கியார் 卫毋岳位
 

செல்லையா - மெற்றாஸ்மயில் 9.
5. ஞானசவுந்திரி
திருஞானதீபம் J岛岳正 7. தருமப்பிரகாசன் 8 செனகப்பு 芷岛岛曼 9. செபஸ்தியார் I 1.ெ இம்மானுவில் 卫盟岳品
இவைகளில் பல நாடகங்கள் 5 தடவைக்கு மேல் தடிக்கப்பட்டன.
இவர் நடித்த நாடகங்கள் முழுவதும் தென்மோடி நாட்டுக் கூத்துக்களே. இவருடைய குரு காலஞ்சென்ற அண்ணாவியார் பூந்தான் யோசேப்பு அவர்களாகும்.
இவருடன் நடித்த ஏனைய தடிகர்கள் விபரம் பின்வருமாறு :
1. சின்னத்தம்பி அந்தோனி - பாஷையூர் 2. யோசப் திரே சம்மா - கொழும்புத்துறை 3. குருக முத்து திருச்செல்வம் - மானிப்பாப் 4. சுவாம்பிள்ளை தம்பித்துரை - ஆனைக்கோட்டை 5. நீக்கிலாஸ் வின் சென்டிபோல் - (நாவாந்துறை) 8. ஆசீர் வாதம் மரியதாஸ் - (குரு நகர் கிழக்கு) 7. பேக்மன் ஜெயராஜா = விளன் புரம் 8. அத்தோ ஒளி பாதைாஸ் - பாஷையூர் 9. வன்பதியாம்பின்னன அல்பிறட் - பாஷையூர் 10. சேவியர் செல்வத்துரை - சுநீற்றல் வீதி
இவர்கள் அ13 வரும் தற்பொழுது இருக்கிறார்கள்
இதன்பின்னர் தனது குருவின் ஆசியுடன் தென்மோடி நாட்டுக் சுத்து நாடகங்களை பழக்கி அரங்கேற்றத் தொடங்கினார். பழக்கி அரங்கேற்றிய நாடகங்கEளின் விபரம் வருமாறு.
1972-ம் ஆண்டு முதல் 1990 வரை
1. சம்பேதுருவார் - நாரத்தனை புனித சம்பேதுறுவார் -- FAL’s கலைஞர்கள் 3. தர்மப்பிரகாசன் - நாரத்தனை மேற்கு கலைஞர்கள்
3. கருங்குயில் குன்றத்தின்
கொEE - நாரந்தனை வடக்கு, கலைஞர்கள் 4. சாஸ்தாக்கியார் - புனித அந்தோனியார் கல்லூரி
மானவர்கள்
5. ஏழை படும்பாடு - நாரத்தனை மேற்கு கலைஞர்கள்

Page 77
00 மூத்த கலைஞர்கள் வரலாறு
6 இராஜராஜ சோழன் - தம்பாட்டி கலைஞர்கள் 7. பண்டாரவன்னியன் - தம்பாட்டி கலைஞர்கள் 8. சங்கிலி அரசன் - நாரந்தனை மேற்கு கலைஞர்கள் 9. ஞான செளந்தரி - புனித அந்தோனியார் கல்லூரி பழைய மாணவர்களினால் கொழும் பிலும், ஊர்காவற்றுறையிலும் 10. அன்னை வேளாங்கன்னி - வேளாங்கன்னி ஆலய பங்கு மக்கள்
11.
(கரம்பன்) ஊர்காவற்றுறை செபஸ்ரியார் - கரம்பன் புனித செபஸ்ரியர் ஆலய
மக்கள் -
1990-ம் ஆண்டு இடம்பெயர்ந்து 170, நெடுங்குளம் வீதி, யாழ்ப்
பாணத்தில் வசித்துக் கொண்டு அரியாலையில் (சரஸ்வதி நூல் நிலை பம்) 1992 - 1994 வரை பழக்கி அரங்கேற்றிய நாடகங்கள்,
1. பன்டாரவன்னியன் - தீவகமக்களால் 2. ஞான செளவுந்தரி - தீவக மக்கள் 3. கருங்குயில் குன்றத்தின் கொலை - தீவகமக்கள் 4; எஸ்தாக்கியார் - தீவக மக்கள் 5. திருஞானதீபம் ifio 6. தர்மப்பிரகாசன் ap 7. சங்கிலியன்
மேற்படி நாடகங்களில் பாடசாலைகளில் நாடகங்கள் வறுமாறு:
So
"ஞான செளவுந்தரி' கரம்பன் சிறிய புஸ்ப மகளிர் வித்தியாலய மாணவிகளால் பாடசாலை கட்டிட நிதிக்காக 1978-ம் ஆண்டு அரங்கேற்றப்பட்
-து
""கருங்குயில் குன்றத்தின் கொலை”* ஊர்காவற்றுறை சென்மேரிஸ் பெண்கள் பாடசாலை மாணவிக
ளால் 1978-ம் ஆண்டு அரங்கேற்றப்பட்டது.
"எஸ்தாக்கியார்' ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரி மாணவர்க
ளால் 1980-ம் ஆண்டு அரங்கேற்றப்பட்டது.
ஞான செளந்தரி, பன்டாரவன்னியன் நாடகங்கள் ஐந்து தட
வைகளுக்கு மேல் பல இடங்களில் அரங்கேற்றம் செய்யப்பட்டது?

செல்லையா - மெற்றாஸ்மயில் - 10
சுமாராக 35 மேடைகளில் நாட்கங்கள் அரங்கேற்றம் செய்யப்பட்
6.
இவருக்கு வழங்கப்பட்ட பட்டங்கள்
கலாநிதி பூந்தான் யோசேப்பு. அவர்களால் "கலைக் காவலன்' என்னும் பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்டார்.
1977-ம் ஆண்டு கொழும்பு மாநகரில் புனித அந்தோனியார் கல்லூரி பழைய மாணவர்களால் பொன்னாடை போர்த்தி பொற் கிளி வழங்கி "அமிர்தகான அண்ணாவி’ என்னும் பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்டார். 1978-இல் ஊர்காவற்றுறையில் நடைபெற்ற அன்னை வேளாங்கன்னி நாட்டுக்கூத்தில் பொன்னாடை போர்த்தி பொற்கிளி வழங்கி 'நாடக ரத்தினம்’’ என்னும் பட்டம் வழங்கிக் கெளரவிக்கப்பட்டார். 1985-ல் " "செபஸ்தியார்’ நாட்டுக்கூத்தின் போது மேன்மைதங்கிய ஆயர் தியோகுப்பிள்ளை அவர்களினால் பொன்னாடை போர்த்தி " "நாடகக் காவலர்' என்னும் பட்டம் சூட்டப்பட்டது. திருமறைக் கலாமன்றமும் 1993-ம் ஆண்டு "கலை ஞர் கெளரவிப்பு சான்றிதழ்" வழங்கியுள்ளது.
காலஞ்சென்ற ஞா. ம. செல்வராசா அவர்களால் புதிதாகப் பாடப்பெற்ற நாடகங்களுக்கு இவரினால் இராகம் கொடுக்கப்பட் டது. அவை வருமாறு :
பண்டாரவன்னியன், ஞானசவுந்தரி, ஏழைபடும்பாடு, தர்மப் பிரகாசன், இராஜ ராஜ சோழன், பனை அரசன், அன்னை வேளாங்கன்னி, செனகப்பு" சந்தியோகுமையூர்:
இவருக்குக் தற்போதய வயது 72. இவரது காலகட்டத்தில் தென்மோடி நாட்டுக்கூத்தே மிகவும் பிரபல்யம் பெற்று விளங்கி யது. தென்மோடி நாட்டுக்கூத்துக்களில் 90% மானவைகள் கிறிஸ் தவ நாட்டுக்கூத்துக்களே. இந் நாட்டுக் கூத்துக்கள் சமய வளர்ச் சிக்காகவே எழுதப்பட்டு நடிக்கப்பட்டன. இவைகளில் ஆட்டம் கையாளப்படுவதில்லை. ஒருசில நாடகங்களில் மட்டும் எட்டு வட் டம், 'ப' வட்டம் , "தர வட்டம், மாறுவட்டம், மறிப்பு வட்டம் என்பன ஆடி நடிக்கப்படும். இவரைப் பொறுத்த வரையில் தென் மோடி நாட்டுக்கூத்துக்களில் ஆட்டம் ஆடி நடிப்பதில்லை. தென் மோடி நாடகங்களுக்குப் பயன்பட்ட மேடை "'ப' மேடையாகும் எனத் தனது அனுபவங்களைத் தெரிவித்தார்.
இவரது பணி மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்:
※<

Page 78
G?Lu Lv rï :
திரு. மனுவல் -
a fels/d, a пол - М முகவரி:
மெலிஞ்சிமுனை, ஊர்காவற்றுறை
பிறந்த திகதி. 02 - 0 - 1929
நாட்டுக் கூத்துக் கலைஞர்
ஊர்காவற்றுறை கரம்பனில் பிறந்தார். இவர் குடும்பத்தில் ஒரு பிள்ளையாகையால் "ராசு" என்று செல்லப் பெயரால் அழைத்து வந்தனர். இவர் தமது தொழிலாக கடல்சார்ந்த பல்வேறு தொழில் கனைச் செய்து வருகிறார்:
இவர் தென்மோடி நாடகத்தில் கலை ஆர்வமுள்ளவர். ஊர்காவற் துறையில் தெள்மோடி நாட்டுக்கூத்துக்களை சிறப்பாகச் செய்யும் கலைஞர்களைக் கொண்ட கிராமமாக மெலிஞ்சிமுேைன நிகழ்கிறது. அலெக்சாண்டர் அவர்கள் 19 வயதிலேயே ஆனந்தசிஸின் என்னும் நாட்டுக் கூத்தில் அருள்நேசவாசன் பாத்திரத்தில் நடித்து எல்லோரின் பாராட்டுதலையும் பெற்றார். இப்பாராட்டு அவரைக் கூத்திலீடு படச் செய்தது.
இதனைத்தொடர்ந்து இவர் பல்வேறுபட்ட கதாபாத்திரங்களைக் கொண்ட நாடகங்களில் நடித்து ஊர்காவற்றுறை, நாரந்தவின. கரம்பன், யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் மேடையேற்றி மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். இவர் நடித்த நாடகங்களில் சில வற்றைக் குறிப்பிடலாம்.
1. ஆனந்தசீலன் - அரசன்மகன் 3. அரசு - அரசகுமாரன் 8. ஞானகானந்தன் - செட்டி 4. நாசோன்பலத்த - வர்த்தகன் 5. புஸ்பா நாடகம் - பூபதி ,ே கண்னொளிகொடுத்த காரிகை - ஜெயசீவன் 7. பூதத்தம்பி
அந்திராசி
 

செல்லையா - மெற் றாஸ்மயில்
இவர் பழக்கி மேடையேற்றிய நாடகங்கள்
அந்தோனியார் நாடகம் (1978-ம் ஆண்டு கரம்பன் செபஸ்திபார் ஆலயத்தில் மேடை யேற்றப்பட்டது.)
தொன் நீக்களார் நாடகம் (கிரம்பன் அன்னை வேளாங்கன்னி ஆல்ப விழாவை ஒட்டி மேடையேற்றப்பட்டது. )
கண்னொளி கொடுத்த காரிகை நாடகம் (அனலைதீவு, சாவகச்சேரி, நாரந்தனை போன்ற இடங்களில் மேடையேற்றப்பட்டது. )
மரியதாசன் நாடகம் (பாழ்ப்பாணம் சென்றோக் குருநகர் மேடையில் ஏற்றப்பட்டது)
பூதத்தம்பி (ஊர்காவற்றுறையில் மேடை ஏற்றப்பட்டது. )
இவருடன் திரு. புத்திநாதர் பாக்கியம், திரு. அ. டுேத்தீஸ்
திரு. அமிர்தன் வைத்தி, திரு. பா. இம்மானுவல் திரு. அதிரியம் சீமாம்பிள்ளை, திரு. இ. பவளம் ஆகியோர் நடித்துள்ளார்கள்.
இவர் உருவாக்கிய இளம் கலைஞர்கள்
1. திரு. ச. செபஸ்தியாம்பிள் பன 2. திரு. கி. இலக்மன் 3. திரு. லு, சேவியர் 4. திரு. செ. சைமன் 5. திரு. செ. aோறன்ஸ் எட்வேட் 8. திரு. அ. ஜோண்சன் 7. திரு. பாக்கியம் மைக்கல்தாஸ் 8. திரு. பாக்கியம் செல்வரத்தினம் 9. திரு. யேசுதாசன் 10. திரு. பா. தவம்
இவர்கள் இன்றும் கூத்துக்கலையைத் திறம்படச் செய்ய ஆர்வ
முள்ளார்கள். அண்ணாவியார் செய்த கலைச் சேவையை போற்றி வாழ்த்துகின்றேன். இவர்களுக்குப் பக்கபலமாக இருந்து மிருதங்கம் வாசிக்கும் திரு. கிருத்தோ - சவரிமுத்துவையும் பாராட்டுகின்றேன்:

Page 79
βλιμαν ή
திரு. நாகலிங்கம்
தாமோதரம்பிள்ளை
முகவரி:
தம்பாட்டி, ஊர்காவற்றுறை.
பிறந்த திகதி 08-03 - 1927
நாட்டுக்கூத்துக் கலைஞர்
திரு. நாகலிங்கம் திருமதி தங்கம்மா தம்பதிகளுக்கு மகனாக திரு. தாமோதரம்பிள்ளை உணர்காவற்றுறை கரம்பன் கிழக்கு கிரா மத்தில் பிறந்தவர். இவர் 7-ம் வகுப்புவரை தம்பாட்டி அ. க. சி பாடசாலையில் படித்தவர். "திரு. தாமோதரம்பிள்ளை அவர்கள் பல்கலைக்கழகம் வரைச் சென்று படிக்காதவரானாலும், பல்கலை பும் பார்த்த கேட்ட, கேள்வி ஞானத்தினால் சுற்றறிந்தவர்' என அவருடைய சீடனான நாட்டுக்கூத்து கலைஞரான திரு. கே. தவ பாலங் கூறுகிறார். இவர் 1945-ம் ஆண்டு "அதியரசன்" என்னும் புராண வரலாற்று வடமோடி நாடகத்தில் சுட்டியனாக தனது காலடியை வைத்து தம்பாட்டி காத்திஜி நாடகமன்றத்தின் மூலம் அரிய பல பங்கு ஆற்றியுள்ளார்.
இவருடைய "குரு" வட்டுக்கோட்டையைச் சேர்ந்த அண்ணா வியார் முருகன் என்பவராவர். பின் அண்ணாவியார் ஆனாசி அருளப்புவிடம் நாட்டுக்கூத்து ஆட்டத்தை விரிவாக சுற்றுக் கொண் டார். அதன்பின் தம்பாட்டியில் பாரம்பரிய கலைகளின் வளர்ச்சிக் காக தன்னை அர்ப்பணித்து கிராமத்தின் கலை வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டார். இவர் அதியரசன் நாடகத்தில் கதாப்பாத்திர மேற்று பல்லாயிரக்கணக்கான பாராட்டுதளைப் பெற்றுக் கொண் டார். இவருடைய கலை ஆர்வத்தின் மூலம், தம்பாட்டியில், அதிய ரசன், பன்டாரவன்னியன், ராஜராஜ சோழன், சாம்ராட் அசோ கண், மண் தாகம், காத்தவராயன் ஆகிய நாடகங்கள் மேடையேற் றப்பட்டன. இந்நாடகங்களின் பாடல்களை சிறப்பாக எழுதிய காவலூர் கவிஞர் ஞா. ம. செல்வராசா பண்டிதரை நினைவு கூறுகிறார்.
போர் அனர்த்தம் காரணமாக தம்பாட்டியை விட்டு கட்டங் கட்டமாக வெளியேறிய இக் கிராம மக்கள் வன்னி மாவட்டம்
 

செல்லையா - மெற்றாஸ்மயில் - -
சென்றிருந்தார்கள். இடம்பெயர்ந்த போதும் கலை உணர்வுமிக் தம்பாட்டி கிராம மக்கள் அண்ணாவியார் தாமோதரம்பிள்ளையின் அரிய முயற்சியினால், இடம்பெயர்ந்த வன்னிமாவட்டத்தில், "காத்தவராயன்' 'பண்டாரவன்னியன்" "மண் தாகம்' போன்ற நாடகங்களை மேடையேற்றி பாரம்பரிய விலையைப் பாதுகாத்து சிறப்புப் பண்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.
"எமது காந்திஜீ நாடக மன்றத்தின் முதுபெரும் கலைஞர்க் |ளுக்குப் புத்துக்கம் அளிப்பதும், இளங்களைஞர்களை வெளிக் கொணர்ந்து அவ்வப் பாத்திரங்களுக்கேற்ப அவர்தம் திறமையைக் காட்ட பயிற்றுவிக்கும் பணியதனில் அதிவல்லுனராகவும் ஆற்றும் சேவை எம்மை எல்லாம் வியக்க வைக்கும்' என அக் கிராமக் கலை ஞர் என்னிடம் கூறினார்.
இவர் "அதியரசன்" நாட்டுக் கூத்தை இப்பொழுது இளைஞர்க இருக்கு பழக்குகின்றார். காவடி, கரகம் போன்றவற்றிலும் தாள லயத்துடன் ஆடுவதிலும் திறமைசாலியாவார்.
நாடகம், கலைகள் சம்பந்தமாக அவர் புன்முறுவலுடன் முன் வைக்கும் எந்தவொரு கருத்தையும் அக்கிராம இளைஞர்கள் முதல் பெரியவர் வரை கருத்திற்கெடுத்து கலைப்பணி செய்கின்றனர். இவருடைய நாட்டுக்கூத்து சிறந்த சீடர்களாக , திரு. தா. பா: சிங்கம், திரு. பொ. துரைசிங்கம், திரு. இ. மகாவிங்கம், திரு. வி. தேவராஜா, திரு. வி. இராசகுமார், திரு. வி. தவராசா , திரு.கே. தவபாலன் ஆகியவர்கள் விளங்குகின்றார்கள்.
இக்கிராம கலைப்பணி செய்வோரின் போசகராவும், ஆசானா கவும் விளங்கும் அண்ணாவியார் தாமோதரம்பிள்ளை நீடுழி வாழ்ந்து மேலும் கலைப்பணி செய்ய எனது வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றேன்.

Page 80
பெயர் :
திரு. செ. இரத்தினகுமார்
முகவரி :
பூg" வேணுகா ன சபா வண்னான்கேணி, பள்ை.
பிறந்த திகதி 0 - 12 - 1954
இசை நாடகக் கலைஞர்
செல்லையா - இராசமணி தம்பதிகளின் மகனாகப் பிறந்த இவர் ஆரம்ப படிப்பைப் பனை மத்திய கல்லுரரியில் ஆரம்பித்தார். தொடர்ந்து கல்வி கற்கும் காலத்தில் சங்கீத ஆசிரியராகக் கடமை யாற்றிய சங்கீதபூஷணம், அ. கி. ஏரம்பமூர்த்தி அவர்களிடம் வாய்ப்பாட்டைக் கற்றுக் கொண்டார். பாடசாலை நாடகங்களி லும் பங்கு கொண்டார். இவரது தந்தையார் ஓர் ஆர்மோனியக் கலைஞரும் நாடகம் கற்பிக்கும் அண்ணாவியாராகவும் இருந்தார்: இதன் காரணமாக சிறு வயதில் இருந்தே நாடகக் கலையில் ஈடு பட்டு சிறந்த ஒரு கலைஞராக உருவாக வாய்ப்பு இருந்தது.
10 வயதில் நடிகமணி வி. வி. வைரமுத்து அவர்களின் அரிச் சந்திரா நாடகத்தில் லோகிதாசனாக 11 மேடைகளில் நடித்தார். பின் அவருடைய நல்லதங்காள் நாடகத்தில் நல்லதங்காளின் முத்த மகனாகத் தோன்றி நடித்தார். அதன் பின் சற்று வளர்ந்து விட்ட தால் சிறுவர் பாத்திரம் ஏற்று நடிக்க முடியவில்லை. அத்துடன் தனது பாடசாவையின் ஜீ. சீ. ஈ. பரீட்சைக்குத் தோற்றவேண்டி இருந்தது. சிறிது காலம் கழித்து திரும்பவும் நடிக்க ஆரம்பித்தார். வி, என். செல்வராசா அவர்களுடன் சந்திரமதியாக, சாவித்திரி யாக நடித்துள்ளார். நடிகத்திலகம் கே. வி. நற்குணம் நடிக கவா மணி வி. செல்வரத்தினம், கலைவேந்தன் எம். தைரியதாதன் வி. ரி: செல்வராசர, கே. கனகரத்தினம், சிவலிங்கம், வில்லிசைக் கவிஞர் சின்னமணி, நாடகச் சக்கரவர்த்தி கே. பரராசசிங்கம், சுண்ண தாசன் சர்மா, மாஸ்ரர் சரவணமுத்து, தேவி முருகானந்தம் முதலிய முன்னணிக் கலைஞர்களுடன் முக்கிய பாத்திரம் ஏற்று நடித் துன் ஒளார்.
 

*சத்தியவான் சாவித்திரி" இசைநாடகத்தில் சத்திய வானாக "இசை வேந்தன்' செ.இரத்தினகுமார்.

Page 81

செல்லையா - மெற்றாஸ்மயில் 107
நடித்த நாடகங்களும் பாத்திரங்களும்:
1. அரிச்சந்திரா - அரிச்சந்திரன், சந்திரமதி, லோகிதாசன் 2. சத்தியவான் சாவித்திரி - சத்தியவான், சாவித்திரி, மல்லிகா 3. ஞானசெளந்தரி - புலேந்திரன்
4. நல்லதங்காள் - நல்லண்ணன், மூத்த மகன் 5. பூதத்தம்பி - பூதத்தம்பி
6. கோவலன் - கோவலன்
இவற்றுடன் பல சமூக நாடகங்களும்.
பழக்கிய நாடகங்கள்
1. அரிச்சந்திரா 2. சத்தியவான் சாவித்திரி 3. ஞானசெளந்தரி 4. நந்தனார் 5. நல்லதங்காள்
வி. வி. வைரமுத்து உருவாக்கிய சிறந்த கலைஞர்களில் மிகவும் வயதில் குறைந்த கலைஞராவார். பாரம்பரிய கலைகள் மேம்பாட் டுக் கழகம் நடாத்திய இசைநாடகப் போட்டியில் முதல் இடத்தைப் பெற்றுக் கொண்டார். இவருடைய கலைவாழ்க்கை சிறுவயதில் இருந்து இற்ரைவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இவருடைய கலைச் சேவை இன்றைய இளைய தலைமுறைக்கு அத்தியாவசிய மாக இருக்கிறது. அதற்கு தான் எப்பொழுதும் தயாராக இருப்ப தாக உறுதி கூறியுள்ளார். அவர் நீண்டகாலம் வாழ்ந்து இசை நாடகத் துறையில் விடிவெள்ளியாக இருந்து பிரகாசிக்க வேண்டும் என அவரை வாழ்த்துகின்றோம்.

Page 82

ԱլIT ரியாவும்,
■
4*= * **
ܕ■ ፡hl
宇
– |- = ------ –F 魔* 시 ---- 正字
없 5 町 = E ཚ 出 피 再 s= ā 谢 川 [明
T
Lil: T
| தோன்றிய கா
եl.յկ՝
i.
சல்ஃப
ட ,
ûና
iᏐll :l H
த்தினம் (
புர் ரத்
பியபோச
| No—) ;) .=( - ) 喇 No
t இ
Imius
ܡܕܡ 』
*ք եւնենIII
站
If } T } ITILI
ே
i.
ாவி
%
saesae sae*:: - !*
于
11 வான்
//
3
1
! |×
·
}----//%%//
313:பா ெ
கலாமணி :
தி
V.1ጂ', 1ዛ Eዞ$8
蚤 செல்
距I中
% |-|-|-sae|-
|-| : , , T-------- | 「T니그────────. |- ( : ( ) .|-||\, WW s.%//
~ ~ ~ ~¿ | .|- |-,

Page 83
岛
:: யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் நூல் ஆசிரியர் காணப்படுகின்றார். 9.6.1998.
:::
s
::::
::
S.
SS
−
r
 
 
 

க்கு முன்பாகவுள்ள முற்ற வெளி செல்லையா மெற்றாஸ் மயில்
ֆֆ: ֆի
88:
ֆ: ::: 赣 :
岛 :: :ՏՏՀՏՀ8:Հ8:3 § :: : કંડું 岛 ഋ 岛 :: R 强
: