கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அஸ்கிரிய முதல் லாகூர் வரை

Page 1


Page 2

அஸ்கிரிய முதல் லாசுடர் வரை
ஒரு தமிழ் நேர்முக வர்ணனையாளரின் உலகக் கிண்ணக் கிரிக்கெட் அனுபவங்கள்
நூராணியா ஹளலன்
வெளியீடு: நூராணியா வெளியீட்டகம் உயன்வத்த, தெவனகல, மாவனல்லை.

Page 3
Title of the book : Asgiriyo mudhol Loahore warai
(From Asgiriya To Lahore World Cup cricket experience)
AufhOur Nooraniya Hassan
Copyright Author
Publishers Nooroniyo Publishers
UyoanWotto, Devonogolo.
PrinterS M. J. M. Printers 119, Moin Street
MOWOnello.
Cover Design : A. Azeez NiZCrOdeen
First Edition : Septermber 1997
Price : Rs.. 40/=
ISBN 995-96296-0-3

அணிந்துரை
உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்து சாதனை நிகழ்த்திய இலங்கை அணியைப் போன்று இலங்கையின் வரலாற்றிலேயே முதற்றடவையாக உலகக்கிண்ணத் தொடரில் தமிழில் நேர்முக வர்ணனை செய்தவர் என்ற பெருமையைத் தட்டிக்கொண்டவர் இந்த நூலாசிரியர் நூராணியா ஹஸன். எனது நீண்டகால நண்பர். பத்திரிகைத் தொழிலின் பக்குவத்தை நன்கு புரிந்துகொண்டவர்.
உலகக் கிண்ணத் தொடர் குறித்து முதன் முதலாக விமர்சன ரீதியாக வெளிவந்த தமிழ் நூலும் இதுவாகும். "அஸ்கிரியவில் இருந்து லாகூர் வரை " அவரது நேர்முக வர்ணனையைப் போன்று கனகச்சிதமான ஆட்ட நுணுக்கங்களை எடுத்து விளக்குகின்றது. அவரது இலாவகமான சொற்பிரயோகம் எம்மை ஆடுகளத்துக்கு அழைத்துச் செல்கிறது.
கிரிக்கெட், இலங்கையின் தேசிய விளையாட்டு இல்லையென்ற போதிலும் மிக அதிகப்படியான இளம் சந்ததியினரை ஆக்கிரமித்த ஒரே விளையாட்டு அதுதான். உலகக் கிண்ண ஆட்டம் என்றதும் தொலைக்காட்சிக்கு முன்னால் குவிந்திருக்கும் மக்கள் தொகை, இந்த ஆக்கிரமிப்புக்கு ஓர் உதாரணம். கடந்த 1996 மார்ச் 17ம் திகதி உலகக் கிண்ண இறுதி ஆட்டம் பாகிஸ்தானின் லாகூரில் நடந்த தினத்தன்று கொழும்பு நகர வீதிகள் வெறிச்சோடியமை இதற்கு ஓர் எடுத்துக்காட்டு.
"அஸ்கிரிய முதல் லாகூர் வரை” என்ற இந்தக் கட்டுரைத் தொடர் தினகரன் வாரமஞ்சரியில் தொடர்ச்சியாக எட்டு வாரங்கள் வெளிவந்தது. கிரிக்கெட்டில் பெருமளவு ஆர்வம் இல்லாதவனென்ற போதிலும் தினகரன் பிரதம ஆசிரியர் என்ற வகையில் கட்டுரையை மேலோட்டமாக முதலில் வாசிக்க ஆரம்பித்த நான், நண்பரின் எழுத்தோட்டத்தினால் ஆகள்ஷிக்கப்பட்டு, அடுத்தடுத்த வாரங்களில் என்ன எழுதப்போகிறாரென ஆவலுடன் எதிர்பார்த்திருந்தேன். இந்தக்கட்டுரைத் தொடரில் உலகக்

Page 4
IV
கிண்ணத் தொடர் வர்ணனைக்கு அப்பால் தனது அனுபவங்கள்,
ஒப்புநோக்குகள் ஆகியவற்றை ஒரு சிருஷ்டித்துவ எழுத்தாளனின் திறனோடு அவர் வெளிக்கொணர்கின்றார்.
1980 களின் ஆரம்பத்தில் தினகரனில் எனது தயாரிப்பில் வெளிவந்த இதய கோலங்கள் பகுதியில் இவரது கதை, கவிதைகளை அவ்வப்போது நான் பார்த்து ரசித்திருக்கின்றேன். கலை, லிலக்கியத்துறையில் தனது திறமையை வெளிக்காட்ட ஆரம்பித்தவர், தனது பரிணாம வளர்ச்சியை விளையாட்டுத்துறைக்குள் முடக்கிக் கொண்டு விட்டார் என்ற ஆதங்கம் எனக்கு இப்போதும் உண்டு. இருந்தாலும் அவரது எழுத்து வீச்சில் ஒரு வளர்ச்சிப் பரிமாணம் காணப்படுகிறது.
விளையாட்டுத்துறையுடனான பல விடயதானங்கள் இலங்கைத்தமிழ பத்திரிகைகளில் தொடர்ச்சியாகவும் அவ்வப்போதும் வெளிவருவதுண்டு. பெரும்பாலான கட்டுரைகள் விமர்சன நோக்கின்றி வெறும் விளம்பல் வடிவத்திலோ அல்லது பிறமொழித் தழுவலிலே. வெளியிடப்படுகின்றன. நன்பர் ஹஸனின் விளையாட்டுத்துறை எழுத்துக்களில் ஒரு விமர்சனப்பாங்கு தென்படுகின்றது. இதனை ஒரு முன்மாதிரியான அம்சமாக நாம் கொள்ள முடியும். இலங்கையில் முன்னணித் தமிழ் கிரிக்கெட் விமர்சகர் ஹஸன் என்றால் அது மிகையாது.
அஸ்கிரியாவுக்கு அண்மையிலுள்ள மாவனல்லையில் பிறந்த நூலாசிரியர், தனது முதலாவது நூலை அஸ்கிரியவில் இருந்து ஆரம்பித்து, லாகூரில் முடித்துள்ளார். மாவனல்லை மண்ணின் மைந்தரான இவரின் சிறப்பும், எழுத்து ஆளுமையும் அஸ்கிரியவிலிருந்து லாகூர் வரையின்றி அதற்கு அப்பாலும் சுடர்விட்டுப் பிரகாசிக்கும் என்று நான் நம்புகின்றேன். நீண்ட காலமாக என்னோடு ஒன்றாகப் பணிபுரிந்து, பழகிவாழ்ந்த நண்பர் ஹஸனின் தனிப்பட குணாம்சங்களும் என்னைக் கவர்கின்றது. அவர் நீடு வாழ்ந்து இலக்கியத் துறையில் பணிபுரிய எனது ஆசிகள்!
எளல். அருளானந்தம் பிரதம ஆசிரியர் தினகரன்.

வாழ்த்துரை
இலங்கையின் தேசிய விளையாட்டாக இல்லா விட்டாலும் மக்களின் மனங்களிலெல்லாம் நிறைந்த ஒரு விளையாட்டாக கிரிக்கெட் உள்ளது. இலங்கை உலக சம்பியனான பின்பு கிரிக்கெட்டின் ஆதிக்கம் இன்னும் அதிகரித்திருப்பதைக் காண முடிகின்றது.
கிரிக்கெட் விளையாட்டைப் பொறுத்த வரையில் முன்பெல்லாம் இங்கிலாந்து, அவுஸ்திரேலிய, மேற்கிந்திய தீவு அணிகளின் ஆதிக்கமே உலக அரங்கில் காணப்பட்டது. இலங்கை போன்ற சின்னஞ் சிறிய
நாடுகளைப் பற்றி எவரும் கவலைப்பட்டது கிடையாது.
எனினும் இன்று அந்நிலை மாறிவிட்டது. இலங்கையைப்பற்றித் தெரியாதவர்கள் எல்லாம் உலக சம்பியன் ஆனபின்பு எமது நாட்டைப் பற்றித் தேடித் தெறிந்து கொள்ள முயற்சிக்கின்றார்கள். இது கிரிக்கெட் எமக்குத்தந்த புகழாகும்.
ஒரு நாள் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளில் புதிய திருப்பு முனையை ஏற்படுத்தியவர்கள் எமது நாட்டு வீரர்கள். இதனால் எமது நாட்டு தொலைத் தொடர்புச் சாதனங்கள் கிரிக்கெட் ஆட்டத்துக்கு முக்கியத் அளித்து வருவதைக் காண்கின்றோம்.
என்றாலும் கூட, இலங்கையில் கிரிக்கெட் தொடர்பான விடய தானங்களைத் தழிழ் பேசும் மக்களுக்கு பெற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்புகள் குறைவாக உள்ளது. சிங்கள ஆங்கில வாசகர்களுக்கு உள்ள வசதிகள் தழிழ் வாசகர்களுக்குக் கிடையாது.
தழிழ் மொழியில் கிரிக்கட தொடர்பான பத்திரிகைகளோ அல்லது புத்தகங்களோ வெளிவருவது மிகக் குறைவாக உள்ளது. நேர்முக வர்ணனைகள் கூட தமிழில் முழுமையாக இடம் பெறுவதில்லை.

Page 5
VI
இந்நிலையில் கிரிக்கெட் பய்ணக்கட்டுரையொன்றை விமர்சன ரீதியில் வித்தியாசமாக நுாரானியா ஹஸன் தந்திருப்பது வரவேற்கத்தக்கது. அவரது மொழி நடை கிரிக்கெட்டில் ஆர்வமில்லாதோருக்கும் படிக்கத் தூண்டுகிறது.
எதிர்காலத்திலும் மென்மேலும் இத்தகைய புத்தகங்களோடு மாத்திரம் நின்றுவிடாது, ஏனைய துறை சார்ந்த நூல்களையும் வெளிக் கொணர முன்வர வேண்டுமென வாழ்த்துகின்றேன்.
அல்ஹாஜ் அஸ்ஸெய்யித் அலவி மெளலானா கெளரவ மாகாண சபைகள், உள்ளுராட்சி அமைச்சர்

VII
கிரிக்கெட் ஆட்டம் என் எண்ண ஒட்டம்
உலகத்தில் மிகச் சிறந்த ஆட்டம் எது?
கிரிக்கெட்
கிரிக்கெட் ஆட்டத்தில் மிகச் சிறந்த ஆட்டக்காரர் யார்? ஸர் கார்பீல்ட் சோபர்ஸ்.
தலை சிறந்த ஆங்கில ஏடொன்று கேட்டிருந்த கேள்வியும் கிடைத்த பதிலும் மேலே படித்தீர்கள்.
இன்று அனைத்துலக ரசிக மக்களின் மனங்களை ஆழமாகக் கவர்ந்திழுத்துள்ள அதிசிறப்பான விளையாட்டு கிரிக்கெட் என்பதில் எதிர் வாதம் கிடையாது. கிரிக்கெட் கண்கவர் விளையாட்டு-கவர்ச்சிகரமான விளையாட்டு. ஆங்கிலத்தில் இதனை "கிங் ஒவ் கேம்ஸ்” (King of Games) என்று வர்ணிப்பர்.
ஆனால் ஆங்கிலேய மாமேதை பர்னாட் ஷோ ஒரு முறை கிரிக்கெட்டைப் பார்த்துவிட்டு இப்படியும் சொன்னார்: பதினொரு முட்டாள்கள் விளையாடுவதை பதினோராயிரம் முட்டாள்கள் பார்த்து ரசிக்கின்றனர்; சீ ”
பதினொரு ஆயிரமல்ல, நிச்சியமாக 11 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் (முன்னணி கிரிக்கெட் நாடான இந்தியாவில் மாத்திரம் இன்று 120 கோடி மக்கள் தொகை) இன்று இந்த ராஜ விளையாட்டைப் (King of Games) பார்த்து ரசித்து பரவசமுறுகின்றனர், தொலைக்காட்சி மூலம். பர்னாட் ஷோ பொய்த்து விட்டார், பாவம்.
ஆகாய வெளியில் 80 அடி, 100 அடியென உயர்ந்து செல்லும் கிரிக்கெட் பந்து பூமித்தாயைத் தொட்டுவிடுமுன்பு, அதை லாவகமாகப் பிடித்துக் கொள்ள வேண்டும். பந்தைப் பார்த்து, அதன் மேல் குறி வைத்து, கவ்விப் பிடித்துக்கொள்ள வெளிச்சம் வேண்டும். அதனால் ஒரு நூற்றாண்டு காலமாக கிரிக்கெட் பகலில்தான் விளையாடப்பட்டு வந்தது.

Page 6
VIII
ஆனால் இன்று 1000 விளக்குகளில் இருந்து கிளம்பும் மின் குமிழ் இரவை ஒளிமயமாக்க சூரிய வெளிச்சத்தில் தெரிவதைவிட, நட்ட நடு இரவில் பளபளக்கும் பந்தைப்பிடித்து, துடுப்படிக்காரரை ஆட்டமிழக்கச் செய்யக் கூடிய அபார திறமையை நவீன விஞ்ஞானம் சிருஷ்டித்து தந்துள்ளமை பிரமிக்கத்தக்கது.
இத்தகு அதிசயமும் அபூர்வமும் நிறைந்த கிரிக்கெட் ஆட்டத்தைப் பற்றி உலகத்தில் எழுதாத ஏடுகள் இல்லை; ஒளிபரப்பாத தொடர்பு சாதனங்கள் இல்லை. வர்ணிக்காத மொழிகள் இல்லை.
இன்பதத்தமிழில் கலையம்சம்மிக்க கிரிக்கெட் விமர்சனனத்துக்காக தமிழ் நாட்டில் ஏராளமான பத்திரிகைகள், வெளியீடுகள்.
இந்நிலை இலங்கையில் இல்லை. இலங்கை இன்று ஒரு நாள் கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகளில் உலக அரங்கில் ஜாம்பவான்கள் - “வர்ல்ட் சம்பியன்". சென்ற வருடம் பாகிஸ்தானின் லாகூர்நகரில் வைத்து உலகக் கிண்ணத்தைத் தட்டிக்கொண்டு வி து நம்அணி. இலங்கை விளையாட்டுத் துறையில் ஈட்டிக்கொண்ட வண்ணக் கிரீடம் இது.
எனினும், எம் நாட்டில் தமிழ் பேசும் மக்கள் இந்த அபூர்வ ஆட்டத்தைப் பற்றி வாசித்தறியத்தக்க நூல்கள் இன்னும் வெளிவராதிருப்பது ஒரு பெரும் குறையே. அதுவும் மலைநாடு ஈன்ற அற்புத சுழல்பந்து வீச்சாளர் முத்தயை முரளிதரன் உலக அரங்கில் அதிசயிக்கத் தக்க பல அரிய சாதனைகளைப் புரிந்து வரும் இவ் வேளையில் அவரைப் பெற்ற தாயும் தந்தையும் அவர் மொழியைப் பேசும் தமிழர்களும் முஸ்லிம்களும் இக்குறைபாட்டினால் தவிக்கலாமா? இப்பெரும் குறையைப் போக்க நூாரணியா ஹஸன் பேனா பிடித்துள்ளார்; முயற்சி பாராட்டுக்குரியது.
உயன்வத்தை கலை, இலக்கியத்துக்கு பேர் போன ஊர். அவ்வூர் மைந்தன் ஹஸன் கலை ஆர்வத்தோடு கூடிய கிரிககெட் வர்ணனையை இழையோடச் செய்துள்ளார். பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி மூலமாக சென்ற பல்லாண்டு காலமாக அவர் கிரிக்கெட் வர்ணனையாளராக பணியாற்றி நல்ல பெயர் பெற்றுள்ளார்.அதிலும் கிரிக்கெட்டை அறியாத கிராமத்தில் பிறந்து, முதல்தர கிரிக்கெட்

ΙΧ
விளையாட்டில் ஈடுபடாத நுாராணியா ஹஸன் அனுபவபூர்வ அறிவாற்றலுடன் கிரிக்கெட் விளையாட்டில் பற்பல தன்மைகளையும், அம்சங்களையும் ஒரு கலையம்சமிக்கதாக தமிழில் வர்ணனை செய்துள்ளமை மிகவும் பாராட்டுக்குரிய விடயமே.
அவர் பணி மேலும் சிறப்புற வேண்டும்; ரசிகர் மனம் கவர்ந்து உயர்வடைய வேண்டும் என நான் மனமார வாழ்த்துகின்றேன்.
அல்ஹாஜ் ஏ. எச். எம். அஸ்வர் பாராளுமன்ற உறுப்பினர் சோனக விளையாட்டுக்கழக உப தலைவர்

Page 7
முன்னுரை
கிரிக்கெட் எமது நாட்டின் தேசிய விளையாட்டாக இல்லாவிட்டாலும் நாட்டின் மூலைமுடுக்குகளில் இலங்கை மக்களின் மனதில் ஆலவிருட்சம் போல் வியாபித்துள்ளது. எமது நாட்டின் தேசிய விளையாட்டு எதுவென்று தெரியாத ஒரு பையன் கூட உலகக் கிரிக்கெட் வீரர்களின் பெயர்ப் பட்டியலை ஒப்பிட்டுச் சொல்வான்.
தொலைக்காட்சி வானொலி , பத்திரிகைகளின் வேகமான தாக்கமே இவ்வளவு விரிவாக மக்களின் மனதிற்குள் கிரிக்கெட்டை நிலைத்து நிற்கச் செய்தது எனலாம். அதேபோன்று சர்வதேச மட்டத்திலும் இலங்கை புகழ்பூக்கச்செய்துள்ளதும் கிரிக்கெட்தான்.
அன்று - சர்வதேச கிரிக்கெட் அரங்கில் விமர்சகர்கள் பார்வையில் இலங்கை அணி புட்டிப்பால் பருகும் பாலகர்களின் நிலையிலிருந்தது. அதனால்தான் 80 கள் ஆகும்வரை இலங்கைக்கு டெஸ்ட் அந்தஸ்த்துக் கொடுப்பது பற்றியே சிந்திக்கவில்லை.
இன்று - இலங்கை அணி உலக சம்பியன்.
உலகக்கிண்ணப் போட்டியில் அனேகமான போட்டிகளில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நேர்முக வர்ணனையாளராகக் கடமையாற்றியதுடன் லாஹாரில் நடைபெற்ற இறுதிப்போட்டியிலும் தமிழ் நேர்முக வர்ணனையாளராக என்னையே தெரிவு செய்தார்கள்.
லாஹ"ரில் இருந்து நான் இலங்கை திரும்பி ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்குச் சென்றபோது எனக்குக் கிடைத்த கடிதங்களில் உலக்கிண்ணக் கிரிக்கெட் அனுபவங்களை தினகரன் வா, மஞ்சரியில் பகிர்ந்து கொள்ளுமாறு பல வாசகர்கள் கேட்டிருந்தார்கள்.
அதனை ஒரு தொடராக எழுதுவதா இல்லையா என்ற நிலையில் தினகரன் காரியாலயம் சென்றபோது தினகரன் பிரதம ஆசிரியர் திரு.

XI
எஸ். அருளானந்தம் அவர்களும் இதே வேண்டுகோளை விடுத்ததன் விளைவாக தினகரனில் தொடர்ந்து எட்டு வாரங்கள் இந்தக் கட்டுரையை எழுதினேன்.
கட்டுரை முடியும்போது பல வாசகர்கள் இதனை புத்தகமாக வெளியிடும்படி தனிப்பட்ட முறையில் வேண்டுகோள் விடுத்திருந்தார்கள். அதன் விளைவாகவே இன்று இந்தச் சிறிய புத்தகம் உங்கள் கைகளில் தவழ்கிறது.
நான் விளையாட்டு விமர்சகனாக எழுத்துலகில் பிரவேசிக்கவில்லை. புதுக்கவிதை, சிறுகதை என்பவற்றுடன்தான் எழுத ஆரம்பித்தேன். 1984 ஆம் ஆண்டு இலங்கை டெஸ்ட் அணி லோட்ஸ்ட் விளையாட்டரங்கில் இங்கிலாந்துக்கு எதிராக அபார திறமை காட்டியது.
அதனைத் தொடர்ந்து நான் ஒரு விமர்சனக் கட்டுரை எழுதினேன். அதனைப் படித்துவிட்டு அப்போதைய தினகரன் ஆசிரியர் திரு. சிவகுருநாதன் அவர்கள் தொடர்ந்து எழுதுமாறு ஊக்கப்படுத்தினார். அன்று முதல் இன்றுவரை தினகரன் பத்திரிகைகளில் விளையாட்டு விமர்சனங்களை எழுதி வருகின்றேன்.
வானொலியைப் பொறுத்தவரையில் 1991 இல் இலங்கையில் நடந்த "சாப் விளையாட்டுக்களில் நான் நேர்முக வர்ணனையாளனாகத் தெரிவு செய்யப்பட்டதில் இருந்தே நேர்முக வர்ணனையாளனாகக் கடமை புரிய ஆரம்பித்தேன்.
அந்த வகையில் வானொயில் என்னை அறிமுகப்படுத்தி, ஊக்கப்படுத்திய பெருமை விளையாட்டுச் சேவைப் பொறுப்பாளர் திருமதி சோமா ரொட்ரிகோவையே சாரும். அவர்தான் பல தடங்கல்களுக்கு மத்தியில் களம் தந்தவர்.
இந்தச் சிறிய நூல் சிறப்பாக உருப்பெறுவதற்கு பலரும் பல வகையில் எனக்கு உதவியுள்ளார்கள். மாகாண சபைகள், உள்ளுராட்சி அமைச்சர் அல்ஹாஜ் அஸ்ஸெய்யித் அலவி மெளலானா, முன்னாள் முஸ்லிம் கலாசார ராஜாங்க அமைச்சரும் இந்நாள் பாராளுமன்ற உறுப்பினருமான அல்ஹாஜ் ஏ. எச். எம். அஸ்வர் ஆகியோர் ஆசியுரை தந்துள்ளார்கள்.

Page 8
ΧIΙ
அத்தோடு தினகரன் பிரதம ஆசிரியர் திரு. எஸ். அருளானந்தம் அணிந்துரையை வழங்கியுள்ளார். எனது ஆக்கங்களுக்கு எப்போதும் ஊக்கம் தருபவர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவை முன்னாள் பணிப்பாளர் அல்ஹாஜ் இஸட். எல். எம். முஹம்மத்.
இந்தப் புத்தகத்தை முழுமையாக டைப் செட்டிங் செய்து புத்தக உருவில் தந்தவர் மாவனல்லை M. J. M. அச்சக உரிமையாளர் அல்ஹாஜ் M. J. M. முஸம்மில். அதேபோன்று புத்தகத்தை ஒப்புநோக்கி உதவி செய்தவர்கள் எனது நண்பர்களான திரு. வி. ஜெகதீஸன், ஜனாப் எம். ஐ. எம். முஸாதிக் ஆகியோர். எனது எதிர்பார்ப்புக்கு ஏற்றவிதத்தில் அட்டைப்படத்தை வரைந்து தந்தவர் ஏ. அஸிஸ் நிஸாருத்தீன்
இவர்களுடன் எனது வானொலி நேர்முக வர்ணனை, பத்திரிகையாக்கம் என்பவற்றுக்கு அவ்வப்போது கருத்துக்களைத் தந்து ஊக்கப்படுத்தும் வாசகர், நேயர், நெஞ்சங்களுக்கும் எனது நன்றிகள் என்றுமே உதிர்ந்து கொண்டிருக்கிறன.
நான் எழுத்துலகில் பிரகாசிப்பதன் ஆரம்ப காரண கர்த்தாக்களாக இருந்த திருமதி லீலா ராமையா (தினகரன் முன்னாள் உதவி ஆசிரியர்) அல்ஹாஜ் என்.எம்.அமீன் (தினகரன் இணைச் செய்தி ஆசிரியர்) முன்னாள் தினகரன் பிரதம ஆசிரியர் திரு. சிவகுருநாதன், டெய்லிநியூஸ் பிரதி ஆசிரியர் திரு. பாலசிங்கம் ஆகியோரும் எப்போதும் என் நினைவில் இருப்பவர்கள்.
இந்தச் சிறிய வெளியீட்டை வாசகர்களாகிய உங்கள் கரங்களில் தவழ விட்டு, அடுத்த கிரிக்கெட் வெளியீட்டுக்காகத் தயாராகும் நான் உங்களது ஆக்கபூர்வமான விமர்சனங்களுக்காக எப்போதும்
காத்திருக்கின்றேன்.
அன்புடன் நூராணியா ஹஸன் 157, Uyanwatta, Dewanagala.

அப் சிரிய முதல் லாசுடர் வரை 1
இலங்கை கிரிக்கெட் வரலாற்றினை எடுத்துக் கொண்டால் நாம் இன்று உச்சத்தில் இருக்கின்றோம் என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில், லாகூரில் நாம் பெற்ற வெற்றி மகத்தானது. கடும் உழைப்புக்குக் கிடைத்த பிரதிபலன்.
கிரிக்கெட் விளையாட்டு தமக்கே உரியதென சொந்தம் கொண்டாடும் இங்கிலாந்து, அவுஸ்திரேலிய அணிகள் இலங்கைக்கு முகம் கொடுப்பதில் சிரமப்பட்டது இப்போட்டியில்தான்.
டெஸ்ட் அந்தஸ்து கிடைத்து 15 வருடங்களுக்குள் இத்தகைய இமாலயச் சாதனையை இலங்கை படைக்குமென மேற்குலகு எதிர்பார்க்கவில்லை.
அண்மைக் காலத்தில் இலங்கை அணி ஐயம் திரிபுற தன் பராக்கிரமத்தை நிலைநாட்டி வந்தபோதும்கூட, அதைத் திறந்த மனதுடன் அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
இதன் காரணமாகத்தான் கடந்த "பென்ஸன் அன்ட் ஹெட்ஜஸ்” போட்டிகளில் இலங்கை அணியை உளவியல் ரீதியாகத் தாக்கி வீழ்ச்சியடையச் செய்ய அவுஸ்திரேலிய அணி பகிரதப் பிரயத்தனம் செய்தது.
இலங்கை அணிக்கு 1975ம் ஆண்டு நடைபெற்ற முதலாவது உலகக் கிண்ணப் போட்டி தொடக்கம் இதுவரை அனைத்துப் போட்டிகளிலும் ஆடும் வாய்ப்புக் கிடைத்தது.
எனினும், கடந்த வருட நியூஸிலாந்து சுற்றுலாவுடனேயே இலங்கை அணி சர்வதேச மட்டத்தில் பிரகாசிக்க ஆரம்பித்தது.

Page 9
2 அஸ்சிரிய முதல் லாகூர் வரை
"பென்ஸன் அன்ட் ஹெட்ஜஸ்” போட்டிகளின் முடிவுடன் உலக அரங்கில் உள்ள ஒரு நாள் கிரிக்கெட் அணிகளுள் இலங்கை அணி முக்கியமானதொரு அணியாக நிலைபெற்றது.
1975 முதல் 92 வரை நடந்த ஐந்து உலகக்கிண்ணப் போட்டிகளிலும் இலங்கை 20 போட்டிகளில் ஆடி நான்கு போட்டிகளில் மாத்திரமே வெற்றி பெற்றிருந்தது.
எனினும், இவ்வருட ஆறாவது உலக்கிண்ணப் போட்டியில் கலந்து கொண்ட ஐந்து போட்டிகளிலும் இலங்கையால் வெற்றிபெற முடிந்தது. ஏனைய அனைத்து அணிகளும் இரண்டுக்கு மேற்பட்ட தோல்விகளைச் சந்தித்துள்ளன.
இதற்கு முன்பு 1975, 1979 களில் கிலைவ் லொய்ட்டின தலைமையிலான மேற்கிந்தியத் தீவு அணியே தோல்வியுறாது, இத்தகைய சாதனையைப் படைத்திருந்தது.
உலகக் கிண்ணப் போட்டி ஆரம்பிப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு இவ்வருடம் உலகக்கிண்ணத்தை சுமக்கக்கூடிய வாய்ப்பு இலங்கைக்கு உண்டு என்று ஹொங்கொங்கில் வைத்து முன்னாள் நியூஸிலாந்து வீரர் ரிச்சர்ட் ஹட்லி கூறியிருந்தார்.
எனினும், கிரிகெட் அரங்கில் இந்த ஆரூடம் பெரிதுபடுத்தப்படவில்லை. தென்னாபிரிக்க, இந்திய, பாகிஸ்தானிய, அவுஸ்திரேலிய அணிகளுக்கே முதன்மை இடம் கொடுக்கப்பட்டிருந்தது. அதற்கு அடுத்ததாகவே இலங்கை இடம்பெற்றிருந்தது.
ஆனால் அரை இறுதி ஆட்டத்துக்கு தெரிவாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தானிய, தென்னாபிரிக்க அணிகள் கால் இறுதியிலேயே தோல்வியுற்றன.
மேற்கிந்தியத் தீவு அணி எதிர்பாராத விதமாக அரை இறுதிப் போட்டிகளில் ஆடும் வாய்ப்பைப் பெற்றது. நான் எதிர்பார்த்தது போலவே இந்த ஆட்டத்தில் அவுஸ்திரேலியா வெற்றி பெற்றது.

அஸ்சிரிய முதல் லாகூர் வரை
பாகிஸ்தான், ஷார்ஜா மற்றும் "பென்ஸன் அன்ட் ஹெட்ஜஸ்” போட்டிகளில் வானொலியில் தமிழ் நேர்முக வர்ணனையாளராக இரு தபோது இலங்கை வீரர்களின் ஆளுமையையும் ஆற்றலையும் முழுமையாக அவதானிக்கக்கூடிய வாய்ப்பு எனக்குக் கிட்டியது.
இதன் காரணமாக “வில்ஸ் கிண்ண” கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி வெற்றியீட்டும் என்ற நம்பிக்கை என்னுள் ஆழமாக வேர்விட்டிருந்தது. தினகரனில் என் எதிர்பார்ப்பை அப்படியே எழுதியது வாசகர்களுக்கு ஞாபகம் இருக்கும்.
இலங்கை அணி வெளிநாடுகளில் அடைந்த வெற்றிகளை தொலைக்காட்சியில் அவதானித்து, வர்ணனை செய்த எனக்கு வில்ஸ் உலகக் கிண்ண இறுதிப் போட்டி நடைபெற்ற லாகூருக்கு நேரடியாகவே சென்று நேர்முக வர்ணனை செய்யும் பாக்கியம் கிடைத்தது.
முதன் முதலாக உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தை வானொலியில் தமிழில் வர்ணனை செய்தவன் என்ற பேறு பெற்றேன்.
அத்தோடு தமிழில் முதல் தடவையாக நேர்முக வர்ணனை செய்த இந்த ஆட்டத்தின் முடிவில், நான் வெற்றிபெற வேண்டுமென்று பெரிதும் எதிர்பார்த்த இலங்கை அணியே பெரும் வெற்றியீட்டியது பழம் நழுவி பாலில் விழுந்த அனுபவமாக எனக்கு அமைந்தது.
இலங்கை அணி வெற்றியை நெருங்கிக் கொண்டிருந்த அந்தச் சந்தர்ப்பத்தில் பதற்றத்துடன் கூடிய ஒர் எதிர்பார்ப்பில் நாம் முழுமையாக ஆழ்ந்திருந்தோம், இல்லையா?
47வது ஒவரில் "த்தேட் மேன்” பகுதிக்கு இலங்கை அணித் தலைவர் அர்ஜுன ரணதுங்க அடித்த பெளண்டரி மூலம் எமக்கு வெற்றி கிடைத்த
போது உலகம் முழுவதையுமே எமது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்த ஓர் உணர்வு எம்மை ஆட்கொண்டது.
அப்போது அங்கிருந்த பாகிஸ்தான் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த நேர்முக வர்ணனையாளர்கள் எனக்கு மகிழ்ச்சியுடன் கைலாகு கொடுத்து

Page 10
அவளி லுதிப் வாண்டர் கரை
வாழ்த்தியபோது, உலகின் உச்சானிக் கொப்பில் இருந்த மாதிரி உணர்ந்தோம், அந்த உணர்வினை எழுத்தில் வடிப்பது கடினம். முழுமையாக வரவும் ரேய்யாது.
லாகூர் கடாபி விளையாட்டரங்கே எமது ஆதிக்கத்தினுள் வந்த மாதிரி
உணர்ந்தோம். எமது நாடி நரம்புகளிலேல்லாம் விபரிக்க முடியாத மகிழ்ச்சி கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்தது.
戰 *
'கூரில் உவக்கிண்ண நேர்முக வர்ணனையாளர்கள்
எமது சக சிங்கள நேர்முக வர்ணனையாளரான பிரேமசர ஏபாசிங்க இலங்கை அணி உலகக் கிண்ணத்தை வெற்றி கொண்டது, என்று அறிவித்த போது சக சிங்கள வர்ணனையாளரான பந்துல சமன் வத்துரேகமவும் நானும் எம்மை அறியாமலேயே ஒருவரை ஒருவர் ஆரத்தழுவிக் கொண்டோம்,
வில்ஸ் உலகக் கிண்ணப் போட்டி ஆரம்பமான பெப்ரவரி 14ம் திகதி முதல் நாம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன கலையகத்தில் இருந்து செய்மதியினூடாக நேர்முக வர்ணனையை ஆரம்பித்தோம்.
 
 

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தனது வரலாற்றில் முதன் முறையாக உலகக் கிண்ணப் போட்டியின் நேர்முக வர்ணனையை மும்மொழிகளிலும் ஒலிபரப்புச் செய்தது.
இந்தப் போட்டியின் நேர்முக வர்ணனைகள் மிக வெற்றிகரமாக அமைவதற்கு பின்னணியில் இருந்து செயற்பட்டவர் ஒரு பெண்மணியாவார். அவர் விளையாட்டுப் பகுதி பொறுப்பாசிரியரான திருமதி சோமா ரொட்ரிகோ,
இறுதி ஆட்டத்தின் நேர்முக வர்ணனை தமிழிலும் இடம்பெற வேண்டும் என்பதில் அவர் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். அதே போன்று இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் திரு. ஜனதாளப் பிரிகம் தமிழில் நேர்முக வர்ணனை இடம்பெற வேண்டும் என்பதில் கவனமாக இருந்தார்.
வெகுஜனத் தொடர்புத்துறை பிரதி அமைச்சர் அளப்ஸெய்யத் அலவி மெளலானா எப்போதுமே அனைத்து மொழிகளுக்கும் சம அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவர். அதனை உலகக் கிண்ணப் போட்டியில் சிறப்பாக நிறைவேற்றினார்.
நாம் எமது கலையகத்திலிருந்து கிரிக்கெட் வர்ணனை செய்யும் போதெல்லாம் உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு நேரடியாகச் சென்று வர்ணனை செய்ய வேண்டும் என்று பந்துல சமன் கூறுவார்.
அந்தச் சந்தர்ப்பங்களில் இலங்கை அணி இறுதி ஆட்டத்திற்குத் தெரிவாகுமா என்று பலர் கேள்வி எழுப்புவதுண்டு. நாம் இலங்கை அணி இறுதிப் போட்டிக்குத் தெரிவாகும் என்பதை உறுதியாக நம்பியது மட்டுமன்றி வானொலியிலும் இதைப் பலமுறை தெரிவித்தோம்.
இறுதிப் போட்டியின் போது பல முன்னணி கிரிக்கெட் நேர்முக வர்ணனையாளர்களைச் சந்தித்து, அவர்களுடன் உரைபாடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
குறிப்பாக இம்ரான்கான், சுனில் கவாஸ்கர், ரிட்சி பேனாட், ரவிசாஸ்திரி, ட்டோனி கிரேக் போன்றோரைச் சந்தித்து உரையாடிய போது அவர்களில்

Page 11
6 அஎப் கிரிய முதல் லாகூர் வரை
பலர் இறுதி வெற்றி வாய்ப்பு அவுஸ்திரேலியாவின் பக்கமே இருக்கிறது என்ற அபிப்பிராயத்தைக் கொண்டிருப்பதை உணர்ந்துகொள்ள முடிந்தது.
எனினும், இலங்கை அணியை ஒருநாள் ஆட்டத்தில் தோற்கடிப்பது இலகுவானதல்ல என்பதை அனைவரும் ஏற்றுக் கொண்டனர். அவுஸ்திரேலியா தொழில் ரீதியாக கிரிக்கெட்டில் உயர்ந்திருப்பதனால் அதனோடு போட்டியிடுவது கடினம் என்று தெரிவித்தனர்.
இம்ரான்கானிடம் வினவிய போது இறுதிப் போட்டிக்காகத் தயார் செய்யப்பட்டிருந்த ஆடுகளத்தில் 240 அல்லது 250 ஓட்டங்களையே பெறக்கூடியதாக இருக்கும் என்று கூறினார். மேலும் இந்த ஆடுகளம் ஷேன்வோனுக்கு சிறப்பான சுழற்சியை (ட்டேன்) கொடுக்கும் என்றும் தெரிவித்தார்.
பூவா தலையா போட்டுப் பார்த்து தீர்மானிக்கும் வாய்ப்பைப் பெற்ற அர்ஜுனா ரணதுங்க முதலில் துடுப்பெடுத்தாட அவுஸ்திரேலியாவை அழைத்தபோது ரிட்சி பேர்னாட் போன்றோர் ரணதுங்கவின் தீர்மானத்தைக் கண்டு அதிசயித்தனர்.
1975 முதல் 1992 வரை உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அணி வெற்றியீட்டியதே இதற்குக் காரணம். அதனை இலங்கை மாற்றியமைக்கும்' என்று நாம் தெரிவித்தோம்.
இந்த ஆடுகளம் முதலில் துடுப்பெடுத்தாடும் அணிக்கு சாதக விளைவைத் தரக்கூடியதாக இருந்தது. அதைவிட பகல் இரவுப் போட்டிகளில் இரண்டாவது துடுப்பெடுத்தாடும் அணி வெற்றியீட்டுவதற்கான வாய்ப்புகளும் குறைவு.
லாகூர் போன்ற பகுதிகளில் பனி பெய்வதும் பாதகமானது. இதைவிட அன்று வானிலை திருப்திகரமானதாகவும் இருக்கவில்லை. எந்த வேளையில் மழைபெய்யுமோ என்ற அச்சம் எங்கும் நிலவியது.
எவ்வளவுதான் எமது அணி மீது நம்பிக்கை வைத்திருந்த போதிலும் இத்தகைய ஒரு சூழ்நிலையில் ரணதுங்கவின் முடிவினில் நான் சற்று மனந்தளர்ந்த நிலையில்தான் இருந்தேன். எனினும், அதனை வெளியே காட்டவில்லை.

அளப் கிரிய முதல் வாசு ர் வரை
எப்போதுமே எதையும் சாதகமாகவே அணுகும் (பொஸிடிவ் அப்ரோச்) எமது சிங்கள நேர்முக வர்ணனையாளர் பிரேமசர ஏபாசிங்க ; அர்ஜுனா ரணதுங்கவின் முடிவு சரியானதென்பதற்கான காரணங்களைத் தெரிவித்துக் கொண்டிருந்தார்.
இந்தச் சந்தர்ப்பத்தில் கண்டி அஸ்கிரிய விளையாட்டரங்கில் இலங்கைக்கும் கென்யாவுக்கும் இடையே நடைபெற்ற ஆரம்பச் சுற்றுப்போட்டி எனக்கு ஞாபகத்துக்கு வந்தது.
அங்கு பூவா தலையா போட்டுப் பார்த்ததில் வெற்றியீட்டிய கென்ய அணித் தலைவர் ஒடம்பே இலங்கை அணிக்கு ஆரம்பத்தில் துடுப்பெடுத்தாட அழைப்பு விடுத்திருந்தார்.
அதற்குக் காரணம் இலங்கை அணிக்கு இரண்டாவது துடுப்பெடுத்தாட வாய்ப்பு வழங்கினால் அவர்கள் இலக்கை அடைய இறுதிவரை முயற்சிப்பவர்கள் என்பதாகும்.
நேர்முக வர்ணனையாளன் என்ற வகையில் நான் நேரடியாக மைதானத்தில் இருந்து கண்டுகளித்த சிறந்ததொரு ஆட்டம் இலங்கைகென்யா அணிகளுக்கிடையிலான ஆட்டம் என்று கூறலாம்.
வழமையாக அஸ்கிரிய மைதானம் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமானது. உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிக்கான ஆடுகளம் துடுப்பாட்ட வீரர்களுக்கு மிகவும் ஏற்றதாக இருந்தது.
இலங்கையின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான சனத் ஜயசூரிய, ரொமேஷ் களுவிதாரன ஆகியோரின் அபார ஆரம்ப ஆட்டத்தை மீண்டும் ஒருமுறை கண்டுகளிக்க வேண்டுமென்ற ஓர் ஆசை.
இருபது பந்துகளில் 50 ஓட்டம் ஒருநாள் ஆட்ட வரலாற்றில் இவ்வளவு வேகமாக இதற்கு முன்பு ஓட்டங்களைப் பெற்றது கிடையாது. 100 ஓட்டங்களைப் பெற 10 ஓவர்கள் தேவைப்படவில்லை
சனத் ஜயசூரிய, సేది. குருசிங்க, அரவிந்த டி சில்வா, அர்ஜ"ன ரணதுங்க அனைவரு இலங்கை அணி ஓர் உலக சாதனையைய்ே பன்டத்திவிட்ட்து."

Page 12
அல் மிரிய முதல் லாசுடர் வரை
அஸ்கிரிய மைதானத்தில் இலங்கை அணி படைத்த சாதனை எதிர்காலத்தில் உலக அணியொன்றினால் முறியடிப்பது இலகுவானதொன்றல்ல.
ஏனென்றால் 50 ஓவர்களைக் கொண்ட போட்டியொன்றில் இச்சாதனையை முறியடிப்பதற்கு ஓர் ஒவருக்கு எட்டு ஓட்டங்களைப் பெறவேண்டியுள்ளது.
கென்ய அணி டெஸ்ட் அந்தஸ்து பெறாவிட்டாலும் அதனைக் குறைவாக மதிப்பிட முடியாது. ஏனெனில், ஆரம்பப் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை 93 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்கச் செய்தது.
வேறுவிதமாகச் சொல்வதாயின் மேற்கு இந்தியத் தீவுகள் தனது உலகக் கிண்ணப் போட்டி வரலாற்றில் கென்யாவுக்கு எதிராக மிகக் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.
அர்ஜுன ரணதுங்க 38 பந்துகளுக்கு மாத்திரம் முகம் கொடுத்து (1x6, 13x4) 75 ஓட்டங்களைப் பெற்றார். அரவிந்த டி சில்வா 108 பந்துகளுக்கு முகம் கொடுத்து (5x6, 14x4) 145 ஓட்டங்கள் பெற்றார்.
இந்தப் போட்டியில் அரவிந்த டி சில்வா இரண்டு சாதனைகள் படைத்தார். ஒன்று உலகக் கிண்ணப் போட்டியில் முதலாவது சதம் பெற்ற இலங்கை வீரர் என்ற பெருமை. அடுத்தது ஒருநாள் போட்டிகளில் 5000 ஓட்டங்களைப் பூர்த்தி செய்த முதலாவது இலங்கையர் என்ற பெருமை.
ஸிம்பாபேயுடனான போட்டியில் சதம் பெறக்கூடிய வாய்ப்பு இருந்தபோதும் 92 ஓட்டங்கள் பெற்ற நிலையில் அந்த வாய்ப்பை அவர் நழுவ விட்டார். : ... .
 

அளப் கிரிய முதல் வாசுடர் வரை 9
அஸ்கிரிய போட்டியில் மறக்க முடியாத மற்றொரு அனுபவம் கென்ய வீரர் ஸ்டீவன் டிக்காலோ 96 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்ததாகும்.
துரதிர்ஷ்டவசமாக அவர் ஆட்டமிழக்காதிருந்திருந்தால் உலகக் கிண்ணப் போட்டியில் சதம் பெற்ற முதல் கென்ய வீரர் என்ற பெருமையைப் பெற்றிருப்பார்.
அனுபவத்தில் கூடிய வீரர்களைப் போன்றே அவர் மிக வேகமாக ஓட்டங்களைக் குவித்தார். இலங்கைப் பந்து வீச்சாளர்களுக்கு எதுவித சிரமமுமின்றி முகம் கொடுத்தார்.
அடுத்த உலகக் கிண்ணம் வரும்வரை பார்த்திராது இந்த அணிகளுக்கு டெஸ்ட் அந்தஸ்துள்ள நாடுகளுடன் ஆடுவதற்கான வாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுக்க வேண்டும்.
நெதர்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கென்யா போன்ற நாட்டு அணிகளுள் திறமைமிகு வீரர்கள் உள்ளார்கள். அதனை வெளிக்கொணர்வதற்கான வழிவகைகளை ஐ.ஸி.ஸி மேற்கொள்ள வேண்டும்.
கென்ய அணியின் ஆட்டத்தை அவதானித்த போது அடுத்த நூற்றாண்டு ஆரம்பமாகும் போது கென்யாவுக்கு டெஸ்ட் அந்தஸ்து பெறும் தகுதி உருவாகும் என்று நான் எண்ணினேன்.
பொதுவாக நாடுகளுக்கு டெஸ்ட் அந்தஸ்து கொடுப்பதில் சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை இறுக்கமான பிடியையே வைத்துள்ளது; இதனைத் தளர்த்த வேண்டும்.
டெஸ்ட் அந்தஸ்தைப் பெறுவதில் இலங்கை அணி நீண்ட நாட்கள் காக்க வேண்டியிருந்தது. அதனால், பல திறமை மிகு வீரர்களுக்கு இலங்கை டெஸ்ட் அணியில் இடம்பெற வாய்ப்புக் கிடைக்கவில்லை.
தற்போது டெஸ்ட் அந்தஸ்துப் பெறாதுள்ள திறமை மிகு அணிகளுக்கு டெஸ்ட் அந்தஸ்துள்ள நாடுகளுடன் உத்தியோகப் பற்றற்ற போட்டிகளை ஒழுங்கு செய்ய வேண்டும்.

Page 13
Egjárt gő gi furg, i. Olg
O
அதே போன்று இலங்கை எபிம்பாபே போன்ற நாடுகளுக்குக் கூடுதலான டெஸ்டுகளைப் பெற்றுக் கொடுக்க ஐ.ஸி.ஸி. முன்வரல் வேண்டும்.
லாகூரில் இறுதிப் போட்டிக்கான பயணமே மிகுந்த சுவாரசியமான அனுபவங்களைக் கொண்டதாக எனக்கு அமைந்து விட்டது.
உலகக் கினன்ன கிரிக்கெட் தொடரில் முதன்முறையாக எனது எதிர்பார்ப்பு தவிடுபொடியாகிப் போகும் ஒரு நிலையை உணர்ந்த போது அதனை ஜீரணிப்பது மிகக் கடினமாக இருந்தது.
இந்தியாவுடனான அரையிறுதிப் போட்டி கல்கத்தாவில் நடைபெற்ற தினத்தில்தான் பாகிஸ்தானுக்கான எனது பயணமும் ஆரம்பமானது. நான் அமர்ந்திருந்த இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வாகனம் கட்டுநாயகா விதியில் சென்று கொண்டிருந்தது.
வாகனத்தில் பொருத்தியிருந்த வானொலிப் பெட்டி ஒலியை எழுப்பியதே தவிர நேர்முக வர்ணனையை எமக்குத் தரவில்லை. ஆட்டத்தின் நிலையை அறிய எனது மனம் தவித்துக் கொண்டிருந்தது.
விமான நிலையம் நெருங்கும் போது தேனீர் அருந்துவதற்காக வண்டியை நிறுத்தச் சொன்னேன். (விமான நிலையத்தினுள் ஒரு கப் தேனிருக்கு ஓர் அமெரிக்க டொலர் கொடுக்க வேண்டுமே)
அந்த சிறிய ஹோட்டலினுள் நுழையும் போது "ஓர் ஓட்டத்துக்கு இரண்டு விக்கெட்டுக்கள் பிரேமசர ஏப்பாசிங்கவின் குரல் ஒலித்துக் கொண்டிருந்தது. என்னுள் இருந்த உற்சாக எதிர்பார்ப்பு படிப்படியாகக் குறைய ஆரம்பித்தது.
யார் எமது அணியை உச்ச நிலைக்கு எடுத்துச் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டதோ அவர்கள் இருவருமே ஆடுகளத்தை விட்டு வெளியேறியிருந்தனர்.
மீண்டும் வண்டியில் ஏறி விமான நிலையத்துள் நுழையும் போது அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. 35 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்டுகள்.
 

*ப்ரீ ஆதல் வாசுடர் விர்ை
எனினும், நான் முழுமையாக நம்பிக்கையை இழக்கவில்லை. அரவிந்த டி சில்வா அப்போது மிக வேகமாக அடித்துக் கொண்டிருந்தார். சராசரி ஒட்ட வேகம் ஆறைத் தாண்டியிருந்தது.
ஹஷான் திலகரத்ன, அர்ஜுன ரணதுங்க ஆகியோர் அரங்கில் காத்திருந்தார்கள். அவர்களுக்குப் பின்னால் குமார் தர்மசேன, ஷமிந்த வாஸ் ஆகியோர் தொடர இருந்தார்கள்.
முன்னைய போட்டிகளில் எல்லாம் இலங்கையின் வெற்றிகளுக்குக் காலாக இருந்தவர்கள் ஆரம்பத் துடுப்பாட்ட ஜோடியே.
ܬܬܐܬܹܠܬܠܬܐ * 、電、
கட்டுரை அசிரியர் சலீம் மலிக்குடன் முன்பெல்லாம் ஒருநாள் போட்டிகளில் இறுதிப் பத்து ஓவர்களிலே வேகமாக ஓட்டங்களைப் பெற முயல்வது மரபாக இருந்தது. இதனை கடந்த "பென்ஸன் அன்ட் ஹெட்ஜஸ் போட்டியில் இலங்கை மாற்றியது.
இதனால் இப்போது அநேக நாடுகளில் ஒருநாள் ஆட்டங்களுக்கு விசேடமான, வேகமாக ஓட்டங்களைக் குவிக்கக்கூடிய ஆரம்பத் துடுப்பாட்ட சோடியை அறிமுகப்படுத்துகின்றனர்.

Page 14
அல் கிரிய முதல் வாக வரை
ஆரம்ப 15 ஓவர்களில் மிக வேகமாக ஓட்டங்களைப் பெறும் முறையை இலங்கை அறிமுகப்படுத்தியது. பல நாடுகள் இப்போது இதனைப் பின்பற்றத் தலைப்பட்டுள்ளதைக் காணமுடியும்.
பொதுவாக உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகளின் அனைத்துப் போட்டிகளிலுமே இலங்கை முதல் 15 ஓவர்களில் 100 ஓட்டங்களுக்கு மேல் பெற்றுள்ளதைக் காணமுடியும்.
ஆரம்ப துடுப்பாட்ட ஜோடி ஓர் ஓட்டத்துக்கு ஆட்டமிழந்த பின்பும் கூட இலங்கை அணி 250 ஓட்டங்களைப் பெறக்கூடிய தகுதியில் உள்ளது என்பதை கல்கத்தா போட்டி உறுதி செய்தது.
இலங்கையின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான சனத் ஜயசூரிய, ரொமேஷ் களுவிதாரன ஆகியோரின் பலவீனங்களை இந்திய அணி தனது பந்து வீச்சாளர்களுக்கு உணர்த்தியிருந்ததை பின்பு நாம் அறிந்தோம்.
விமான நிலையத்தில் பாதுகாப்பு, சுங்க மற்றும் பரிசோதனைகளை முடித்துக் கொண்டு சுங்கத் தீர்வையற்ற கடைத் தொகுதிக்குப் பக்கத்தில் சென்று மீண்டும் வானொலியைக் கேட்டேன்.
இலங்கை அணி மேலதிக விக்கெட் இழப்பு இன்றி 100 ஓட்டங்களைப் பெற்றிருந்தது மனதுக்கு ஒரு தெம்பாக இருந்தது. விமானம் வரும்வரை தரித்திருக்கும் இடத்துக்குச் சென்ற போது இலங்கை நான்கு விக்கெட்டுகளை இழந்திருந்தது.
அரவிந்த டி சில்வா 66 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். எனினும், ரொஷான் மஹாநாமவும் அர்ஜுனா ரணதுங்கவும் ஆட்டமிழக்காது ஆடிக் கொண்டிருந்தனர்.
இலங்கை அணியில் நீண்ட காலமாக டெஸ்ட் போட்டிகளிலும் ஒருநாள் ஆட்பங்களிலும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக இருந்து வருபவர் ரொஷான் மஹாநாம. "பென்ஸன் அன்ட் ஹெட்ஜஸ் போட்டிகளில் நிலை மாறியது.

:) சிரிய முசுல் லாகூர் வரை
ரொஷான் மஹாநாம மத்திய வரிசைத் துடுப்பாட்ட வீரராக மாறினார். இலங்கை கிரிக்கெட் முகாமைத்துவத்தினதும் அர்ஜுனா ரணதுங்கவினதும் இந்த முடிவு மிகச் சரியானதாகும்.
ஒருநாள் ஆட்டங்களில் ரொஷான் மஹாநாம மத்திய வரிசைத் துடுப்பாட்ட வீரராக ஆடுகளத்தில் நுழைவதன் மூலமே இலங்கை அணிக்கு நல்ல பயனைப் பெறமுடியும்.
இலங்கை அணி 150 ஓட்டங்களைத் தாண்டிய போது மிகவும்
திருப்திகரமாக இருந்தது. எனினும், இறுதி நேரத்தில் அர்ஜுன ரணதுங்க ஆட்டமிழந்த போது எனது நம்பிக்கை ஆட்டம் காண ஆரம்பித்தது.
அர்ஜூனாவுக்கு வழங்கிய எல்.பி.டபில்யூ தீர்ப்பு பற்றி தொடர்ந்து சிந்தித்துக் கொண்டே இருந்தேன். நடுவர்களின் தீர்ப்பை நாம் விமர்சிக்கக் கூடாதல்லவா? பயணிகள் விமானத்தில் ஏற வேண்டியதற்கான இறுதி அழைப்பு விடுக்கப்பட்டது.
அப்போது அங்கே என்னோடு இன்னும் இருவர் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களுள் ஒருவர் அக்குறணையைச் சேர்ந்தவர், அடுத்தவர் பாகிஸ்தானியர்.
ரொஷான் மஹாநாம தொடர்ந்தும் ஆடமுடியாது மைதானத்திலிருந்து வெளியேறிய போது இறுதி ஆட்டத்தில் எமது அணி ஆடும் என்ற உறுதியான நம்பிக்தையில் மீண்டும் தளர்வு ஏற்பட்டது.
எயார் லங்கா விமானத்தினுள் சென்று என்னை அறிமுகப்படுத்திக் கொண்டபோது அவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் ஒத்துழைத்தார்கள்.
விமான ஊழியர்களின் ஒத்துழைப்போடு இலங்கை 251 ஓட்டங்களைப் பெற்றிருப்பதை அறிந்து கொண்டேன். எனது வேண்டுகோளுக்கு ஏற்ப அதனை பயணிகளுக்கும் ஒலிபரப்பி ஊடாக அறிவித்தார்கள்.
இந்திய அணியின் ஆட்டம் ஆரம்பமான போது இடைக்கிடை பயணிகளுக்காக ஓட்ட விபரம் அறிவிக்கப்பட்டது. அது அவர்களுக்குப் புது உற்சாகத்தைக் கொடுத்தது.

Page 15
அஸ்கரிய முதல் லாகூர் வரை
எனது நண்பர் ஒருவரிடம் இருந்த சக்தி வாய்ந்த வானொலிப் பெட்டியின் உதவியோடு ஒட்ட விபரங்களை நான் கொடுத்துதவினேன். அதனைப் பயணிகளுக்கு அறிவித்தார்கள்.
இதனால் எனக்கு மாத்திரமன்றி விமானப் பயணிகளுக்கும் ஊழியர்களுக்கும் மிகுந்த உற்சாகமான பயணமாக அது காணப்பட்டது.
இரவு பம்பாயில் விமானம் வந்திறங்கிய போதுதான் இலங்கை அணி வெற்றிக் கம்பத்தை நெருங்கிக் கொண்டிருந்ததை நாம் அறியத் தொடங்கினோம்.
விமானம் மீண்டும் கராச்சி நோக்கிக் கிளம்புவதற்கு முன்பு இந்தப் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன். ஏனையோரின் ஆசையும் அதுவாகத்தான் இருந்தது.
ஏனென்றால், விமானம் பறக்கும் போது நேர்முக வர்ணனையைப் பெற்றுக் கொள்வது மிகக் கடினம். பம்பாய் விமான நிலையத்திலிருந்து வெளியே இறங்கி வந்து, வானொலியைக் கேட்பதற்கு எனக்கு அனுமதித்தார்கள்.
நான் கொடுத்த தகவல்களை உடனுக்குடன் பயணிகளுக்காக அறிவித்தார்கள். விமானத்திலும் ஒருவித நேர்முக வர்ணனை போன்றே நடந்தது எனலாம்.
இந்திய அணி எட்டாவது விக்கெட்டை இழந்தபோது போத்தல்களும் கற்களும் மைதானத்தைப் பதம் பார்க்க ஆரம்பித்தன. இலங்கை வீரர்கள் பொலிஸ் பாதுகாப்புடன் அரங்கினுள் அழைக்கப்பட்டார்கள்.
அந்தச் சந்தர்ப்பத்தில் கல்கத்தா மைதானத்தின் பழைய வரலாறு என் ஞாபகத்துக்கு வந்தது. இதற்கு முன்பும் இரண்டு தடவைகள் இம்மக்கள் இவ்வாறு நடந்து கொண்டார்கள்.
முதலில் 1967ல் இறுதியாக 1983ல். இதன் காரணமாக இந்திய அணியின் முன்னாள் தலைவர் ‘கல்கத்தா விளையாட்டரங்கில் ஆடமாட்டேன்’ என்று தீர்மானித்தார்.
 

அள) கிரிய முதல் லாகூர் வரை
லாகூர் காடாபி விளையாட்டரங்கில் நேரடியாகச் சந்தித்து உரையாடியபோதுதான் அவரது அனுபவங்களை அறியக்கூடியதாக இருந்தது. இந்தியாவில் வேறு எந்த கிரிக்கெட் வீரரும் படைக்காத சாதனைகளைப் படைத்தவர் கவஸ்கர். அவர் படைத்த பல சாதனைகள் இன்னும் முறியடிக்கப்படவில்லை.
இந்திய அணியின் வெற்றிகளுக்கு சுனில் கவஸ்கர் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது. அத்தகைய கவஸ்கருக்கு எதிராக இந்த கல்கத்தா மக்கள் மிகுந்த முறைகேடாக நடந்து, அவரது மனதைப் புண்படுத்தினார்கள்.
எனவே, வெளிநாட்டு அணி ஒன்றுக்கெதிராக இவ்வாறு நடந்து கொண்டது வியப்பைத் தரவில்லை. லாகூரில் நான் சந்தித்த இந்திய பத்திரிகையாளர், நேர்முக வர்ணனையாளரிடம் இதுபற்றி வினவிய போது கல்கத்தா மக்கள் எப்போதும் இந்தியா கோல்வியுறுவதை விரும்புவதில்லை என்று குறிப்பிட்டனர்.
லாகூரில் இறுதிப் போட்டியன்று ஓய்வு நேரங்களில் சுனில் கவஸ்க்ருடன் கதைக்க வாய்ப்புக் கிட்டியது எனக்கு மறக்க முடியாத ஓர் அனுபவமாகும்.
இந்தச் சந்தரப்பத்தில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நீண்ட காலமாக உள்ளக் கணக்காய்வாளராகவும் ஒலிபரப்பாளராகவும் கடமையாற்றும் என்.எஸ். சிவராசா அவர்களின் ஞாபகமும் வந்தது.
நான் ஒவ்வொரு தடவையும் நேர்முக வர்ணனைகளை முடிக்கும்போது என்னைச் சந்தித்து தனது அபிப்பிராயத்தை வெளிப்படையாகவே சொல்லி ஊக்கம் தருவார். சிறந்த நேர்முக வர்ணனையாளர்களைச் சந்திக்க வாய்ப்புக் கிடைத்தால் அவர்களுடன் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்று அடிக்கடி சொல்வார்.
அந்த வகையில் பாகிஸ்தானில் பல உலக நேர்முக வர்ணனையாளர்களைச் சந்தித்து அவர்களுடன் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள முடிந்தது.

Page 16
-16 அல்மீரிய முதல் வாகடர் வரை
பம்பாய் விமான நிலையத்திலிருந்து விமானம் கராச்சி நோக்கி பயணமாகுவதற்கு சற்று நேரத்துக்கு முன்பு அந்த இன்பமான செய்தி எமது செவிகளுக்கு எட்டியது.
விமானத்துக்கு வெளியே இருந்து வானொலியைக் கேட்டுக்கொண்டிருந்த போது அரை இறுதி ஆட்டம் நிறுத்தப்பட்டு, இலங்கைக்கு வெற்றி கிடைத்தது என்ற செய்தி கிட்டியது.
உடனடியாக விமானத் தலைமை ஊழியரிடம் விடயத்தைக் கூற, அவர் ஒலிபெருக்கி மூலம் பயணிகளுக்கு அறிவிக்க, எங்கும் ஒரே குதுாகலம்.
அந்த விமானத்தில் குறைந்த தொகையினரே இலங்கையர்
காணப்பட்டனர்; பெருந்தொகையாகக் காணப்பட்ட பாகிஸ்தானியர்கள் துள்ளிக் குதித்து, ஆடிப்பாடி மகிழ்ந்தார்கள்.
GscD
 

கல்கத்தாவில் ரசிகர்கள் நடந்து கொண்ட விதம் உலக அரங்கில் இந்தியாவுக்குப் பெரும் களங்கத்தை ஏற்படுத்தியது. ஏற்பாட்டாளர்கள் தலைகுனிய வேண்டியேற்பட்டது.
உலகக் கிண்ண வரலாற்றில் இத்தகைய ஓர் அனுபவம் இதற்கு முன் ஏற்பட்டது கிடையாது. இத்தகைய சர்வதேசப் போட்டியொன்றை ஏற்பாடு செய்யும் தகுதி இந்தியாவுக்கு இல்லையா என்று விமர்சகர்கள் எழுதினர்.
இதனால் எதிர்காலத்தில் இத்தகைய போட்டிகளை இந்தியாவில் நடத்த சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை தயங்கலாம். பொலிசாரினால் ஓர் இலட்சத்துக்கும் அதிகமான சனக்கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
இந்திய அணித் தலைவர் முஹம்மத் அஸாருத்தீனின் மிகவும் விருப்பத்துக்குரிய மைதானம்தான் கல்கத்தா ‘ஏடன் காடின் மைதானம் அவர் கூட இந்த மைதானத்தில் தனக்கு இத்தகைய ஒரு நிலை ஏற்படும் என்று எதிர்பார்க்கவில்லை.
பொதுவாக இந்திய அணி இந்த விளையாட்டரங்கில் கடந்த காலங்களில் கூடிய வெற்றிகளையே பெற்றுள்ளது. இப்பிரதேச மக்கள் இந்திய அணி வெளிநாட்டு அணியொன்றுடன் தோல்வியுறுவதை எப்போதும் தாங்கிக்கொள்வதில்லை.
எது எவ்வாறு இருப்பினும் போட்டி இடை நிறுத்தப்பட்டதன் காரணமாக
இதற்கு எதிரான ஒரு குழுவினரும் இருந்தனர்

Page 17
- '' ನ್ತಿ Th_" !
ஆட்டம் இடைநிறுத்தப்படும் சந்தர்ப்பத்திலே ஒரு ரசிகர் "இந்த நிலை ஏற்பட்டதற்காக மன்னிப்புக் கோருகிறோம். இலங்கைக்கு வாழ்த்துக்கள்" என்று ஒரு பதாகையை சுமந்து கொண்டிருந்தார்.
அந்த ரசிகரின் பெருந்தன்மைக்காகப் பின்பு இலங்கைப் பெருந்தகை ஒருவர் அரசினூடாக 10,000/= சன்மானத்தை அவருக்கு அனுப்பி வைத்தார்.
பம்பாயில் இருந்து இரவு 10.30 மணி அளவில் விமானம் கராச்சி நோக்கிக் கிளம்பியது. விமானத்தில் இருந்த பாகிஸ்தானியர்கள் இலங்கையின் திறமையைப் புகழ்ந்து கொண்டிருந்தனர்.
கால் இறுதிப் போட்டியில் இந்தியாவிடம் பாகிஸ்தான் அணி தோல்வியுற்றதால் பாகிஸ்தான் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கள் நிர்முலமாக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் இந்தியாவை இலங்கை தோற்கடித்ததில் அவர்களுக்கொரு திருப்தி.
பம்பாயிலிருந்து காராச்சி செல்வதற்கு சுமார் ஒன்றரை மணித்தியாலம் செல்கின்ற, அந்தச் சந்தர்ப்பத்தில் என்னுள் புதியதொரு உத்வேகம் பிறந்திருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது.
அரை இறுதி ஆட்டத்தில் இந்தியாவை தோற்கடித்ததன் மூலம் நிச்சயமாக இறுதி ஆட்டத்தில் அவுஸ்திரேலியாவை தோற்கடிக்க முடியும் என்ற நம்பிக்கை என்னுள்ளத்தில் ஆழமாக வியாபித்திருந்தது.
கொழும்பிலிருந்து பம்பாய் செல்லும் போதிருந்த நிலை மாறி இப்போது புதியதொரு உற்சாகத்துடன் கூடிய மனிதனாக மாறிவிட்ட நிலையில் நானிருந்தேன்,
நான் மட்டுமல்ல அந்த விமானத்திலிருந்த ஒவ்வொரு இலங்கையரதும் நிலை அவ்வாறாகத்தான் இருந்தது என்பதை அவர்களது நடத்தைகளால் உணர்ந்து கொண்டேன்.
நாம் வேறொரு நாட்டுக்குச் செல்லும் போது அல்லது எமது எல்லையைக் கடந்த பின்பு எமக்குள் எள்வித அறிமுகமுமேயின்றி ஓர் அந்நியோன்யம் ஏற்படுவதை யதார்த்த பூர்வமாக அனுபவித்தோம்,
 

ஃப்ரி லுதி பிரிடர் ப்
விமான ஊழியர்கள் அந்தச் சிறிய நேரத்தினுள்ளேயே என்னோடு மிகவம் சிநேகமாகி விட்டார்கள். ஏனையவர்களோடு ஆங்கிலத்தில் கதைத்த போதும் என்னோடு மட்டும் சிங்களத்தில் கதைத்த்சர்கள்.
விமானம் கராச்சி விமான நிலையத்தில் தரையிறங்குவதற்குச் சற்று முன்பு என்னருகே வந்த தலைமைப் பணியாளர் (சீள்ப் ஸ்ட்டுவர்ட் திரு ஏ ன் எனக்கு அன்பளிப்புப் பொட்டலத்தைத் தந்தார்
கட்டுரை ஆசிரியர் பாணித பேரேராவுடன்
லாகூரில் நீங்கள் இலங்கையின் வெற்றியைத்தான் அறிவிக்க வேண்டும் என்று சிரித்த முகத்துடன் கூறினார், வானொலி நேர்முக வர்ணனையையே தொடர்ந்து கேட்கும் அவர்களுக்கு எனது மொழி தெரியாவிட்டாலும் பெயர் பரீட்சயமாக இருந்தது.
இலக்ரொனிக் வெகுசனத் தொடர்பின் சிறப்பினை அப்போது நன்கு உணர்ந்து கொண்டேன்.

Page 18
அளப் கிரிய முதல் வாசுடர் வரை
கராச்சி விமான நிலைய ஒடுபாதையை எயார் லங்கா விமானம் தொடும் போது எனது கைக்கடிகாரம் நள்ளிரவு 12.30 மணியைக் காட்டியது. எனினும் அப்போது உள்ளுர் நேரம் நள்ளிரவு 12.00 மணியென அறிவிக்கப்பட்டது.
இயந்திரமயமாக்கப்பட்ட வாழ்க்கையில் மனிதனுக்கு நேரம் காலம் கிடையாது. மனிதன் சில சந்தர்ப்பங்களில் எதிர்பாராத முடிவுகளையும் இதனால்தான் மேற்கொள்கின்றான் என எண்ணிக் கொண்டேன்.
அப்போது பெப்ரவரி 13ம் திகதி கெத்தாராம ஆர். பிரேமதாஸ் விளையாட்டரங்கில் நடைபெற்ற கண்காட்சி கிரிக்கெட் ஆட்டம் எனது மனத்திரையினுள்ளிருந்து வெளிவந்தது.
பெப்ரவரி 11ந் திகதி இந்தியாவில் நடந்த உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் ஆரம்ப வைபவங்களின் போது எடுக்கப்பட்ட திடீர் தீர்மானமும் எதிர்பாராத ஒரு முடிவுதான்.
அவுஸ்திரேலிய, மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் இலங்கையில் நடைபெறும் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொள்வதற்கு மறுத்தன. பாதுகாப்புக் காரணங்களை அவர்கள் கூறினர்
உண்மையில் அவுஸ்திரேலியா வரமறுத்தமைக்குப் பாதுகாப்பு ஒரு காரணமல்ல. “பென்ஸன் அன்ட் ஹெட்ஜஸ்” தொடரில் அவர்கள் இலங்கைக்கு எதிராக நடந்து கொண்ட விதம் அவர்களது மனதை உறுத்தியதுதான் காரணம்.
வருகை தந்தால் இலங்கையிடம் தோல்வியுற வேண்டியேற்படும் என்பதும் அவர்களுக்குத் தெரியும். அவுஸ்திரேலியாவின் சிலவகையான செல்வாக்குக்கு மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை உட்பட்டது.
அதன் விளைவு மேற்கிந்திய தீவுகள் அணியும் வரமறுத்தது. செல்வந்த நாடுகளுக்கு எதிலும் எப்போதும் செல்வாக்குச் செலுத்தும் வல்லமை இருப்பதும் ஒரு காரணம்தான்.
 

இத்தகைய, அனைவரும் கைவிட்ட ஒர் இக்கட்டான நிலையில் இலங்கை இருந்தது. இந்தச் சந்தர்ப்பத்தில்தான் இந்திய - பாகிஸ்தான் அணிகள் எமக்குக் கைகொடுக்க முன்வந்தன.
எமக்குள் உள்ள அந்நியோன்யம், சார்க் அமைப்பு வளர்த்துள்ள புரிந்துணர்வு, பரஸ்பர உறவு என்பனவற்றையும் வெளிக்காட்டின. உண்மையான நட்பை உலகுக்கு உணர்த்தினார்கள்.
இலங்கை அணியுடன் நல்லுறவு கொண்ட கண்காட்சிப் போட்டியொன்றில் கலந்து கொள்வதற்கு பாகிஸ்தான் இந்திய கூட்டணி தயாராகிய போது அதனை உடனடியாக நம்பமுடியவில்லை. எதிர்பாராத முடிவு.
1989ம் ஆண்டுக்குப் பின் டெஸ்ட் தொடரொன்றில் இந்தியாவோ பாகிஸ்தானோ தத்தமது நாடுகளில் சந்தித்தது கிடையாது. மிகவும் பகைமை உணர்வுள்ள நாடுகள் 1947ம் ஆண்டு சுதந்திரத்துக்குப் பின்பு மூன்று யுத்தங்களுக்கு முகம் கொடுத்தன.
அத்தகைய இரு நாடுகளும் இணைந்து கூட்டணியா? அதிலும் அணித் தலைவர் முஹம்மது அஸ்ஸாருத்தீன், முகாமையாளர் இன்டிகாய் அலாம் ஐந்து நிமிடங்களுக்குள் வாதப்பிரதிவாதங்களின்றி எடுத்த தீர்மானம்.
நட்பு, புரிந்துணர்வுக்கு விளையாட்டை விட வேறு எந்த விதத்தில் பங்களிப்புச் செய்ய முடியும். வேறு எந்த மாநாடுகளால் இத்தகைய ஒரு தீர்மானத்தை எடுக்க முடியும்.
இரண்டு அணிகளும் இரவோடிரவாக இலங்கை வந்தன. ஒரே விமானத்தில், ஒரே குழுவில், ஒரே நோக்கை அடைய, அந்த இலக்கை உலகுக்கு உணர்த்துவதற்கு, அவர்கள் இங்கே வந்தார்கள்.
பாகிஸ்தான் வீரர்களுக்கு விளையாடுவதற்குரிய ஆடை அணிகலன்கள் இருக்கவில்லை. இந்திய - இலங்கை வீரர்கள் தாராள மனதுடன் அவர்களுக்குக் கொடுத்துதவி நட்பை மேலும் வலுப்படுத்தினார்கள்.
இந்திய உபகண்ட கூட்டணிக்கு இலங்கையில் செங்கம்பள வரவேற்புக் கிடைத்தது. பாரம்பரிய அணிவகுப்பு மரியாதையுடன் பூமாலையிட்டு வரவேற்கப்பட்டார்கள்.

Page 19
அளப் சிரிய முதல் வாசுடர் வரை
ஆர். பிரேமதாஸ் விளையாட்டரங்கு வரை இந்திய, பாகிஸ்தானிய, இலங்கைக் கொடிகள் பறக்க விடப்பட்டிருந்தன. பாதுகாப்புடன் செல்லும் இந்திய, பாகிஸ்தான் வீரர்களுக்கு பாதையின் இருமருங்கிலும் இருந்த மக்கள் தமது அன்பையும் மரியாதையையும் செலுத்தினர்.
போட்டியின் முடிவில் ஜனாதிபதி திருமதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்கள் இந்திய - பாகிஸ்தான் வீரர்களுக்கு விருந்தளித்து, பரிசளித்து கெளரவித்து அனுப்பினார்.
பெப்ரவரி 13 ஆந் திகதி கெத்தாராம ஆர். பிரேமதாஸ, சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்ற அந்தக் கண்காட்சி கிரிக்கெட் போட்டியில் தமிழில் நேர்முக வர்ணனை செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
சிங்களத்தில் வர்ணனை செய்வதற்காக பாலித்த பெரேராவும்
ஆங்கிலத்தில் வர்ணனை செய்வதற்கு லூஸன் விஜேசிங்க, ரோஹன் டி.எஸ். விஜேரத்ன ஆகியோரும் தயார் நிலையில் இருந்தனர்.

அஸ்மிரிய முதல் லாகூர் வரை
கராச்சி விமான நிலைய குடிவரவுப் பகுதியில் எனது கடவுச் சீட்டைக் கொடுத்த போது அவர்கள் நான் பூர்த்தி செய்திருந்த பத்திரத்தைப் பார்த்துவிட்டு, என்னை இனம் கண்டார்கள்.
எதுவித தயக்கமும் இன்றி அந்த அதிகாரி எனக்குக் கைலாகு செய்து உங்கள் அணி வெற்றியோடு திரும்ப வேண்டும் என்று வாழ்த்தினார்.
எனது கையிலிருந்த "பிரிவ்ப் கேஸை” த் தவிர வேறு பயணப் பொதிகள் இல்லாததால் சுங்கப் பரிசோதனை எதுவுமின்றி வெளியேறினேன்.
விமான நிலையத்துக்கு வெளியே இந்திய விமான நிலையங்களில் கிடைத்த அனுபவம்தான் எனக்குக் கராச்சி விமான நிலையத்திலும் கிடைத்தது.
அங்கு வெளியேறும் பிரயாணிகளைச் சூழ்ந்து கொண்டு டாக்ஸி வேண்டுமா? ஹோட்டல் வேண்டுமா? என்று தொந்தரவு பண்ணும் ஒரு கூட்டம் வெளியே காத்திருந்தது.
நான் பேசும் ஆங்கிலம் அவர்களுக்கோ அவர்கள் பேசும் உருது எனக்கோ புரியவில்லை. எனினும், சில பயணிகள் கூறும் பதிலைக் கேட்டு, அவர்கள் ஒதுங்கிப் போவதை அவதானித்தேன்.
நானும் அந்தப் பதிலைப் பட்டும் படாமலும் கூறினேன். அந்த வார்த்தை “காடிஹே” என்பதாகும். அப்போது அதன் பொருளை நான் அறிந்திருக்கவில்லை.
பின்னர் எனது நண்பர் பாதிலிடம் விசாரித்த போது, அந்தச் சொல்லின் பொருள் “வண்டி வருகிறது என்பதைப் புரிந்து கொண்டேன். அதனை நினைக்கும் போது எனக்குள்ளே சிரித்துக் கொண்டேன்.

Page 20
கராச்சியில் தொழில் புரியும் கற்பிட்டி நண்பர் பாதிலின் தொலைபேசி இலக்கத்தை மாவனல்லை நண்பர் அக்ரம் தந்திருந்தார். பக்கத்திலிருந்த தனியார் தொலைபேசி நிலையத்துக்குச் சென்று அவரை அழைத்தேன்.
அதிகாலை ஒரு மணியளவில் அவரது கார் விமான நிலையத்தை வந்தடைந்தது. காரின் முன் ஆசனத்தில் அவரது மனைவியும் குழந்தையும் உட்கார்ந்திருந்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
"ஏன் இவர்களை இந்த நடுநிசியில் அழைத்து வந்தீர்கள்?’ என்றபோது, அவர் விபரத்தைத் தெளிவாக எடுத்துச் சொன்னார்.
கராச்சியில் இரவு வேளைகளில் பொலிசாரின் கெடுபிடிகள் அதிகம். பரிசோதனைச் சாவடியில் ஆண்கள் மாத்திரம் தனியாகச் செல்லும் போது கடுமையாகச் சோதிப்பார்கள்.
இதற்குக் காரணம் கராச்சியில் குழப்பங்கள், பிரச்சினைகள் அதிகம். அடிக்கடி துப்பாக்கிப் பிரயோகங்கள் இடம்பெறும். பெண்கள், குழந்தைகள் செல்லும் வாகனங்களில் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் செல்லமாட்டார்கள் என்பது பொலிசாரின் கணிப்பு.
நான் 13 ஆந் திகதி இரவு கராச்சி சென்றேன். 14 ஆந் திகதி அதிகாலையில் இருந்தே அங்கு ஹர்த்தால். அன்றைய தினம் வியாழக்கிழமை கராச்சி நகரே வெறிச்சோடிக் கிடந்தது.
அதனால், நண்பர் பாதிலின் வீட்டிலேயே அடைபட்டுக் கிடந்தேன். அன்று மேற்கிந்திய தீவுகள், அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான போட்டி பஞ்சாபில் நடைபெற்றது. அதனை முழுமையாக தொலைக்காட்சியில் பார்த்தேன்.
அப்போது இலங்கை - பாகிஸ்தான் மக்களுக்கிடையே ஏற்பட்டிருந்த
நேச உணர்வை நன்குணர்ந்தேன்.
ஆர். பிரேமதாஸ் விளையாட்டரங்கில் நடைபெற்ற கண்காட்சிப் போட்டி மீண்டும் என் ஞாபகத்துக்கு வருகின்றது.
அந்த கண்காட்சிப் போட்டியில் இந்திய - பாகிஸ்தான் கூட்டணி
புதியதொரு சிந்தனையை இந்தப் பிரதேச மக்கள் மத்தியில் தூண்டியது
எனலாம்.
 

அளப் கிரிய முதல் வாசுடர் // 25
அதாவது மேற்குலகு, ஆசியா என்ற தியில் மக்கள் சிந்திக்கத் தலைப்பட்டனர். நாம் ஆசியர்கள், எமக்கோர் அமைப்புத் தேவை. எம்முள் எந்தவொரு அணியாவது உலகக் கிண்ணத்தைப் பெற வேண்டுமென்பதே எதிர்பார்ப்பாக இருந்தது.
இதற்குக் காரணம் மேற்குலக வெகுசனத் தொடர்பு சாதனங்களும் கிரிக்கெட் வீரர்கள், ஏன் சில நடுவர்கள் கூட ஆசிய நாடுகளுக்கு எதிராகச் செயற்பட்டதாகும்.
இந்தச் சந்தர்ப்பத்தில் பாகிஸ்தானின் முன்னாள் வீரர் ஸஹிர் அப்பாஸ் பத்திரிகையில் ஐ.ஸி.ஸி. யில் இருந்து ஆசிய நாடுகள் பிரியக்கூடிய நிலை உருவாகுமா என்று கேள்வி எழுப்பியிருந்ததை நான் நினைத்துப் பார்த்தேன்.
உண்மையில் விளையாட்டின் மூலம் பிரதேசவாதம் எழக்கூடாது. ஆனால், மேற்கத்திய அணுகு முறையினால் அது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டதை உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் காணக்கூடியதாக இருந்தது.
எது எவ்வாறு இருப்பினும் கெத்தாராம போட்டியின் மூலம் கிரிக்கெட் விளையாடும் ஆசிய நாடுகளிடையே புதிய புரிந்துணர்வும் ஒற்றுமையும் ஏற்பட்டதை மறுக்க முடியாது.
கெத்தாராம போட்டியின் போது இலங்கை ரசிகர்கள் கூட்டணியை உற்சாகப் படுத்தியது பெரிதும் பாராட்டத்தக்க ஒன்றென நான் கருதுகிறேன்.
மேற்கிந்திய அணிக்கு அவுஸ்திரேலியாவை அரை இறுதிப் போட்டியில் இலகுவாகத் தோற்கடிக்கக்கூடிய வாய்ப்பிருந்தும் கூட மார்க் டேலரின் சிறப்பான தலைமைத்துவத்தினால் வெற்றி அ கிரேலியாவைச் சென்றடைந்தது.
அரை இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா தோல்வியின் விளிம்பில் இருந்து மீண்டு, வெற்றியை அணைத்துக் கொண்டதையே ஒரு காரணமாகக் காட்டி இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா வெற்ற பெறும் என்று மேற்கத்தியப் பத்திரிகைகள் எழுதின.

Page 21
அளப் கிரிய முதல் வாசுடர் வரை
எனினும், அநேகமாக பாகிஸ்தானியப் பத்திரிகைகள் இலங்கை வெற்றி பெறும் என்றுதான் செய்தி வெளியிட்டன. இரு அணிகளினதும் வீரர்களின் தனிபபட்ட ஆளுமையின் அடிப்படையில் அவுஸ்திரேலியாவே வெற்றி பெறுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக இருந்தன. அவுஸ்திரேலிய அணிக்கு ஐந்து புள்ளிகள் அதிகமாக வழங்கப்பட்டிருந்தன.
நான் 15 ஆந் திகதி கராச்சியில் இருந்து லாகூர் செல்ல வேண்டியிருந்தது. கராச்சியில் இருந்து லாகூருக்குச் சுமார் 1000 கிலோமீட்டர் தூரம். கடுகதி புகையிரதத்தில் செல்வதாயின் 24 மணி த்தியாளங்கள் தேவைப்படும்.
இலங்கையில் இருந்து செல்லும் போது லாகூர் செல்வதற்கான எனது விமான டிக்கட் உறுதி செய்யப்பட்டிருக்கவில்லை. புகையிரதத்திலோ பஸ் வண்டியிலோ லாகூர் செல்வது இலகுவான காரியமல்ல.
காலையில் எனது கராச்சி நண்பர் விமான நிலையத்துக்கு என்னை அழைத்து வந்தார். அவர் நன்றாக உருது கதைப்பார். அவரது உதவியுடன் பாகிஸ்தான் விமான சேவை, விமான நிலைய முகாமையாளரிடம் எனது நிலையை விளக்கினேன்.
அவர் எதுவித தயக்கமுமின்றி ஏற்கனவே ஒதுக்கப்பட்டிருந்த ஓர் ஆசனத்தை எனக்கு மாற்றித் தந்தார். உண்மையில் அந்த மக்கள் எம்மோடு எவ்வளவு இணக்கமாக உள்ளார்கள் என்பதை அப்போது புரிந்து கொண்டேன்.
கராச்சி விமான நிலையம் ஒரு சர்வதேச விமான நிலையமாக இருந்தபோதும் பாதுகாப்புக்கள் மிகக் குறைவு. பொதுமக்கள் எவரும் அங்கு எதுவித கட்டுப்பாடுமின்றி வரமுடியும்.
அத்தோடு வழியனுப்ப வருவோர் நுழைவுக் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமும் இல்லை. அதன் காரணமாகவோ என்னவோ விமான நிலையத்துக்கு அருகாமையில் சன நெரிசல் அதிகமாகவே இருந்தது.
எனது உலகக் கிண்ண அறிமுக அட்டை அந்த விமான நிலையத்தினுள் எனது காரியங்களை இலகுவாக முடித்துக் கொள்ள எனக்கும் பெரிதும் உதவியது.

கராச்சி, லாகூர் விமான நிலையங்களில் சாதாரண விலையில் பொருட்களை விற்கும் சிறிய சிற்றுண்டிச்சாலைகள் இருப்பதும் பிரயாணிகளுக்குப் பேருதவியாக அமைந்துள்ளது.
உண்மையில் இலங்கை விமான நிலையத்தில் அத்தகைய வசதி இல்லாதிருப்பது பெருங் குறையாக இருப்பதை நான் என்னுள் எண்ணிக் கொன்டேன்.
நண்பகல் 12.00 மணிக்குக் கிளம்பிய விமானம் லாகூர் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது பிற்பகல் 1.30 ஆக இருந்தது.
கராச்சியில் இருந்த காலநிலை அங்கு இல்லை. கராச்சியில் கொழும்பை ஒத்த காலநிலை எனினும், லாகூரில் குளிர் சற்று அதிகம். மழை மேகங்களும் சூழ்ந்திருந்ததால் குளிர் அதிகமாகவே இருந்தது.
லாகூர் விமான நிலையத்திலிருந்து வெளியேறும் போதும் கராச்சி விமான நிலையத்தில் ஏற்பட்ட அதே அனுபவம். டாக்ஸி டிரைவர்களுக்கு ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த “காடிஹே” பதிலாக அமைந்தது.
நான் தங்குவதற்கு ஏற்பாடாகியிருந்த இடத்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு டாக்ஸி கட்டணம் உட்பட ஏனைய விபரங்களையும் அறிந்து கொண்டேன். லாகூரில் புதிய அனுபவம் காத்திருந்தது.
GSD
w

Page 22
அப் மிரிய முதல் லாகூர் வரை
ஆறாவது உலகக் கிண்ணக் கிரிக் கெட் போட்டிக்காக விளையாட்டரங்குகள் புதிதாகப் புதுப்பிக்கப்பட்டிருந்தன. இந்தியா, பாகிஸ்தானில் விளையாட்டரங்குகள் பாரியளவு அபிவிருத்தி செய்யப்பட்டிருந்தன.
இலங்கையைப் பொறுத்தவரையில் பாதியளவு அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய அவசியம் இருக்க வில்லை இந்திய, பாகிஸ்தானைப் போன்று ரசிகர்கள் திரண்டு வருவதும் குறைவு.
இலங்கையில் கூடியளவு மக்கள் தொலைக்காட்சியில் பார்ப்பதிலும் வானொலியில் கேட்பதிலுமே ஆர்வங் காட்டுகின்றனர். குறிப்பாக பெரும்பாலானோர் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டு வானொலியைக் கேட்பது வழக்கம்.
அதற்குக் காரணம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் கிரிக்கெட் நேர்முக வர்ணனை மக்கள் மத்தியில் மிகவும் நெருக்கமான இணைப்பைப் பெற்றிருப்பதாகும்.
இந்தியா, பாகிஸ்தானில் கூடியளவு மக்கள் மைதானத்தில் சென்று ஆட்டங்களை இரசிப்பதற்கு விரும்புகின்றனர். இதனால் முக்கிய போட்டியில் ஏலவே டிக்கட்டுகள் தீர்ந்து விடும்.
இலங்கையில் உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகளிலேயே கூடியளவு ரசிகர்களைக் காணக்கூடியதாக இருந்தது.
இதற்கு முன்பு இலங்கையில் நான் நேர்முக வர்ணனை செய்த ‘ஒருநாள் சர்வதேச ஆட்டங்கள் அல்லது டெஸ்டுகளில் ஆசனங்கள் வெறிச்சோடிக் கிடப்பதைக் காண்பதே அனுபவமாக இருந்தது.

அப்பரிய முதல் வாசடர் வரை 29
பாகிஸ்தானில் உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்ற நகரங்களில் பந்தல கள் இட்டு, சோடனைகள் செய்து அலங்கரிக்கப்பட்டிருந்தன.
இலங்கையில் திருவிழாக் காலங்களில் வீதி அலங்கரிக்கப்படுவது போன்று விளையாட்டரங்கை நோக்கிய வீதிகள் நீண்ட தூரத்துக்கு அலங்கரிக்கப்பட்டிருந்தன.
பாகிஸ்தானின் தேசிய வீரர்களாகப் போற்றப்படும் ஜாவிட் மியன்டாட், வாஷிம் அக்ரம், வக்கார் யூனுஸ், ஸலிம் மலிக் போன்றோரின் பெரிய படங்கள் எங்கும் காணப்பட்டன.
கொழும்பிலுள்ள ஆட்டோக்காரர்களைப் போன்றே கராச்சி, லாகூரிலும் டாக்ஸி சாரதிகள் புதியவர்களிடம் கூடியளவு பணம் கறப்பது வழக்கம் என்பதை அங்கு நேரடி அனுபவமாகக் கண்டேன். லாகூரிலிருந்து நான் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்துக்குச் செல்வதற்கு டாக்ஸியை அழைத்த போது 200 ரூபா கொடுக்க வேண்டியேற்பட்டது. உண்மைக்கட்டணம் அதில் சரிபாதி என்பது வேறுவிஷயம்.
இந்த அனுபவத்தால் நான் லாகூரில் இருந்த நாட்களில் வாடகைக் காரில் பயணம் செய்வதற்கு வாடகை பேசும் போது சாரதி சொல்லும் கட்டணத்தில் அரைவாசியாகக் குறைத்து பேரம் பேசி முடிப்பேன்.
சில சாரதிகள் நியாயமான வாடகை ட்கும் சந்தர்ப்பங்களில் நான் வழமை போல பேரம் பேசி அவர்களின் கோபத்துக்கு ஆளான சந்தர்ப்பங்களும் உண்டு. அவர்கள் என்ன சொல்லித் திட்டுகிறார்கள் என்பது புரியாததால் சும்மா இருந்து விடுவேன்.
விமான நிலையத்திலிருந்து டாக்ஸியில் செல்லும் வழியில் எனக்கு களைப்பாகவும், பசியாகவும் இருந்தது. நான் செல்லும் வழியில் தொடர்ந்து பழ வர்க்கங்கள் விற்பனை செய்யும் சிறிய கடைகளைக் கண்டு, வண்டியை நிறுத்தச் சொன்னேன்.

Page 23
ஆப்பிள் பழம் இரண்டு கேட்ட போது நல்ல பெரிய பழங்களை அந்தக் கடையில் இருந்த இளைஞன் வெட்டிக் கொடுத்தான். விலை இருபது ரூபா என்றான்.
விலையைக் கொடுத்துவிட்டு அந்த ஆப்பிளை சுவைத்த வண்ணம் செல்ல வேண்டிய இடத்தை அடைந்தேன். அங்கு போக்குவரத்து நெரிசள் குறைவு. அத்தோடு லாகூரில் பாதைகள் ஒற்றைவழிப் பாதைகளாக இருப்பதனால் மிக விரைவாக செல்லக் கூடியதாக இருந்தது.
கட்டுரை ஆசிரியர் பாகிம்தான் முகானாபாளர் இன்திசாப் அலாமுடன்
நகர் அழகாக இருந்தாலும் கொழும்பைப் போன்று அங்கும் நகரை அண்டிய பகுதிகளில் அழுக்குகளுக்குக் குறைவில்லை. அது மூன்றாம் உலக நாடுகளின் ஒரு பொதுப் பண்பாகும்.
எனக்கு ஒதுக்கப்பட்ட அறையில் இருக்கும் சந்தர்ப்பத்தில் அங்கு அறிமுகமான நண்பரிடம் ஆப்பிள் மலிவாக வாங்கினேன் என்றபோது
 
 

தி ரிசர்டர் விர
இங்கு இரண்டு பழமல்ல ஒரு கிலோதான் 20ருபா என்றார். நான மீண்டும் ஏமாறியதாகத் தீர்மானித்துக் கொண்டேன்.
நான் லாகூருக்குச்சென்ற மாலை அங்கு மழைபெய்ய ஆரம்பித்தது. எனக்கு அது கவலையை அளித்தது. இதற்கு முன்னரும் பல தடவைகள் மழை பெய்து, இலங்கையின் வெற்றி வாய்ப்புக்கு இடைஞ்சலாக இருந்ததே காரணம்.
நீண்ட நாட்களுக்குப் பின்பு இலங்கை - கென்யா ஆட்டம் அஸ்கிரிய மைதானத்தில் நடைபெற்ற போதுதான் அளஸ்கிரிய மைதானத்தில் மழையின் இடையூறின்றி போட்டி நிறைவு பெற்றமை என் ஞாபகம்.
கடந்த வருடம் பாகிஸ்தான் அணி இலங்கை வந்திருந்த போது அளப்கிரியவில் நடந்த போட்டிக்கு நேர்முக வர்ணனையாளராகச் சென்றிருந்தேன். அப்போது இடைநடுவே மழை,
அந்தச் சந்தர்ப்பத்தில் கண்டியில் பலர் எரிச்சலுடன் "கண்டிக்கு மழை தேவையென்றால் அஸ்கிரிய மைதானத்தில் கிரிக்கெட் போட்டியொன்றை நடாத்த வேண்டும்" என்று முணுமுணுத்துக் கொண்டனர்.
லாகூரில் அந்நிலை வரக்கூடாது என்று பிரார்த்தித்துக் கொண்டேன். அன்று இரவு கடும் குளிர் காரணமாக நன்றாகத் தூங்கி விட்டேன்.
காலையில் எழுந்ததும் இறுதிப் போட்டிக்கான எனது அறிமுக அட்டையைப் பெற வேண்டியிருந்தது, அன்று சனிக்கிழமை என்பதால் வெகுசனத் தொடர்பு அமைச்சு அதிகாரிகளுடனோ, பாகிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை அதிகாரிகளுடனோ தொடர்பு கொள்ள முடியவில்லை.
அறிமுக அட்டை கிடைக்காவிட்டால் நிச்சயமாக அரங்கத்தின் உள்ளே செல்ல அனுமதிக்கமாட்டார்கள். மைதானத்தின் அருகேயே வந்து, நேர்முக வர்ணனை செய்யாது செல்வதா?
அன்றைய தினம் எனது சக நேர்முக வர்ணனையாளர்களுடனோ இலங்கை அணியினருடனோ தொடர்பு கொள்ள முடியாதிருந்தது.

Page 24
52 அஸ்மிரிய முதல் லாகூர் வரை
எனவே, நேரே இறுதிப் போட்டி நடைபெறும் கடாபி சர்வதேச விளையாட்டரங்கிற்குச் சென்றேன். இலங்கையில் வழங்கியிருந்த உலகக் கிண்ண அறிமுக அட்டையைக் காண்பித்த போது உள்ளே செல்ல அனுமதித்தார்கள்.
குறித்த காரியாலத்தில் அறிமுக அட்டை வழங்குவதற்குப் பொறுப்பாக இருந்த யுவதியிடம் புகைப்படத்துடன் தேவையான ஆவணங்களை வழங்கிய போது நான்கு மணித்தியாலம் தாமதித்து வருமாறு கேட்டார்.
அப்போது காலை 11.30. அவ்வாறாயின் 3.30 வரை அங்கு நிற்க வேண்டுமா? “இவ்வளவு தூரத்திலிருந்து வந்த என்னை ஏன் இப்படித் தாமதித்து வரச்சொல்கின்றீர்கள்” என்று கொஞ்சம் கார ாகவே கேட்டேன்.
அப்போதுதான் நான் இலங்கையைச் சேர்ந்தவன் என்பதை அந்த யுவதி புரிந்து கொண்டாள். "நீங்கள் இலங்கையராயின் உங்களுக்கு முதலிடம் தருவோம்” என்று கூறிவிட்டு பைலின் கீழிருந்த எனது ஆவணங்களை உடனே எடுத்துக் கொண்டார். பத்து நிமிடங்களுக்குள்ளேயே எனது அறிமுக அட்டையைத் தயார் செய்து தந்து விட்டார்கள். அப்போது கடாபி மைதானத்தின் இரண்டு கோடியிலும் இலங்கை, அவுஸ்திரேலிய வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள்.
ஆட்டம் நடைபெறுவதற்கு முதல் தினமாயினும் கூட ஆயிரத்துக்கும் அதிகமான பொலிஸ்காரர்கள் அங்கே பாதுகாப்புக் கடமையில்
ஈடுபட்டிருந்தார்கள்.
அரங்கின் ஒவ்வொரு ஆசனத்தையும் பரிசோதித்தார்கள். பொதுமக்கள் உள்ளே நுழைவதைக் கடுமையாகத் தடுத்தார்கள். நான் இலங்கையன் என்று சொன்னதும் என்னை எதுவிதப் பரிசோதனையும் இன்றி உள் செல்ல அனுமதித்தார்கள்.
மைதானத்தில் இலங்கையர் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்த இடத்தை நெருங்கிய போது அர்ஜுனா ரணதுங்க நிருபர்களுக்குப் பேட்டியளித்துக் கொண்டிருந்தார்.
 

அவரது குரல் எதுவித சலனமுமின்றி தெளிவாக உறுதியாக ஒலித்துக் கொண்டிருந்தது. சிறந்ததொரு அணித்தலைவர் மட்டுமல்ல, ராஜதந்திரமாகவும் பதிலளிக்கக்கூடியவராகவும் இருந்தார்.
அவுஸ்திரேலியாவை நாம் வெற்றி கொள்வோம் என்பதை அவர் சொல்லாமல் சொல்லிக் கொண்டிருந்தார். அணி முகாமையாளர் துலிப் மெண்டிஸ்டன் நான் சிங்கள மொழியிலேயே கதைத்தேன்.
அப்போது சற்றுத் தொலைவில் முத்தையா முரளிதரன் பந்து வீச சமிந்த வாஸ் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்தார். முரளியுடன் தமிழில் சில வார்த்தைகள் கதைத்துவிட்டு அங்கிருந்து வெளியேறினேன்.
கடாபி விளையாட்டரங்கு பாகிஸ்தானிலுள்ள மிகவும் அழகான ஒரு விளையாட்டரங்கு. முகலாய கலைநுட்பங்கள் அப்படியே பளிச்சிட்டன. உலகக் கிண்ணத்துக்காக புதிதாக புனர் நிர்மாணம் செய்யப்பட்டிருந்தது.
மைதானங்களின் வரலாற்றைத் தெரிந்து கொண்டு, அதன் கலை நுட்பங்களையும் அழகிய தோற்றங்களையும் பிரேமசர ஏபாசிங்க அழகாக வர்ணனை செய்வார்.
இலங்கையில் உள்ள அநேக விளையாட்டரங்குகளில் அவருடன் சென்று வர்ணனை செய்ததன் காரணமாக நிறைய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளேன்.
உண்மையில் நேர்முக வர்ணனையாளர் என்ற வகையில் அவர் எமக்கு நல்ல அறிவுரைகளையும் தருவார். ஓரளவு தமிழ் கதைக்கும், வாசிக்கும் ஆற்றலையும் அவர் கொண்டுள்ளார்.
உலகக் கிண்ண இறுதிப் போட்டி ஆரம்பமாவதற்கு இன்னும் 18 மணித்தியாலங்கள் இருந்த நிலையில் நான் லாகூர் கடாபி விளையாட்டரங்கில் இருந்து வெளியேறினேன்.
இந்தச் சந்தர்ப்பத்தில் சனத் ஜயசூரியவின் அபாரத் துடுப்பாட்டம் என்
நினைவை இடைமறித்தது. மேற்கிந்தியத் தீவு மாஜி வீரர் விவியன் ரிட்சாட்ஸை மிஞ்சும் அளவுக்கு அவர் எதிர்காலத்தில் பிரகாசிப்பார்.

Page 25
இங்கிலாந்து அணியுடன் பைஸலாபாத்தில் கால் இறுதிப் போட்டியின் நேர்முக வர்ணனையின் போது நிச்சியம் எதிர்காலத்தில் ஒருநாள் ஆட்டங்களில் சாதனைகள் பலவற்றை முறியடிக்கக்கூடியவர் ஜயசூரியதான் என்று நான் குறிப்பிட்டேன்.
உண்மையில் சனத் ஜயசூரியவுக்கு பிரகாசமான கிரிக்கெட் எதிர்காலமுண்டு. இங்கிலாந்து கவுண்டி ஆட்டங்களில் ஆடக்கூடிய வாய்ப்பு அவரைத் தேடி வருவது திண்ணம்.
இப்போது கெண்ட் அணிக்காக அரவிந்த டி சில்வா சிறந்த பங்களிப்புச் செய்கின்றார். இங்கிலாந்து கவுண்டிப் போட்டிகளில் ஜயசூரியவுக்கு சாதனை புரிய வாய்ப்புக் கிடைத்தால் தென்மாகாண மக்கள் நிச்சியம் பெருமிதமடைவார்கள்.
சமிந்த வாஸ் மற்றொரு சிறந்த வீரர். உலகக் கிண்ணப் போட்டியின் அதிரடி ஆட்டக்காரர் சச்சின் டென்டுல்காருக்கு ஒட்டமற்ற ஓவர் (மேடின் ஒவர்) பந்து வீசிய ஒரே பந்து வீச்சாளர்.
Cශ්‍රව්
 

S
17ஆந் திகதி காலை.
நான் தங்கியிருந்த அதிதிகள் விடுதிக்கு 50 மீட்டர் தொலைவில், பாகிஸ்தானுக்கே உரிய அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய ஒரு
மஸ்ஜித் அமைந்திருந்தது.
அந்த மஸ்ஜிதிலிருந்து ஒலித்த சுபஹ் தொழுகைக்கான அதான் எனது தூக்கத்தைக் கலைக்க, எழுந்து கீழே இறங்கி மஸ்ஜிதை நோக்கிச் சென்ற நான் அங்கு நிறைந்திருந்த தண்ணிரைக் கண்டு திடுக்குற்றேன்.
இரவு பெய்த மழையினால் முற்றவெளியில் நீர் நிரம்பியிருந்தது. மழை நின்ற போதும் இன்னும் தூவானம் நின்றபாடில்லை. அப்படியாயின் இன்று இறுதி ஆட்டம் நடைபெறாதா?
என்னுள் பல எண்ண அலைகள் மோதின, இந்த குளிர் நீரில் செல்வதென்பது இலகுவான காரியமல்ல. அந்த நாட்களில் பகல் வேளையிலே தண்ணிர் கடுமையான குளிராக இருக்கும்.
நான் லாகூரில் இருந்த நாட்களில் வெறும் தண்ணிரைப்
பயன்படுத்தியதே கிடையாது. காலை வேளைகளில் அந்த குளிருக்குத் தாக்குப் பிடிக்க ஆவி பறக்கும் கொதி நீரையே பயன்படுத்த
வேண்டியிருந்தது.
திரும்பி வந்த நான் தங்கியிருந்த அறையிலேயே தொழுகையை முடித்துவிட்டு, 16ஆந் தேதி வாங்கியிருந்த ஆங்கிலப் பத்திரிகைகள் சிலவற்றை வாசிக்க ஆரம்பித்தேன்.

Page 26
அதிகாலையிலேயே தேநீர் அருந்திப் பழகியிருந்த எனக்கு அங்கு சற்றுச் சிரமமாகத்தான் இருந்தது. காலை எட்டு மணிக்குப் பின்புதான் அறை உதவியாளர் காலை உண்வுடன் தேநீரையும் எடுத்து வருவார்,
மழை காரணமாக 17 ஆந் திகதி போட்டி நடைபெறாவிட்டாலும் 18 ஆம் திகதி போட்டி நடைபெறுவதற்கு ஏற்கனவே ஏற்பாடாகியிருந்ததனால் என் உள்ளத்தில் ஆறுதல் ஏற்பட்டது. அறை உதவியாளர் வரும்வரை அந்த குளிர்ந்த காலைப் பொழுதில் மீண்டும் பத்திரிகையைப் படிக்க ஆரம்பித்த போது:
இலங்கை அணிக்கு எதிராக கல்கத்தா மக்கள் நடந்து கொண்ட விதம், தோல்வியைத் தழுவிய பாகிஸ்தான் அணிமீது பாகிஸ்தான் மக்கள் கொண்ட ஆத்திரம் எல்லாமே பின்விப் பிணைந்து நின்றன.
அந்த மக்களின் மனோ நிலைக்கு முக்கிய காரணம் அம்மக்களின் தேசாபிமானமும் தாயக அணி வெற்றிபெறும் போது இயல்பாகவே எழும் பெருமையும்தான்.
இலங்கை வெற்றிபெற வேண்டும் என நான் தனிப்பட்ட முறையில் விரும்புவதைப் போலவேதான் ஒவ்வொரு நாட்டுப் பிரஜையின் எதிர்பார்ப்பும் இருக்கும்? அதில் என்ன தவறு இருக்க முடியும்?
இந்தச் சந்தர்ப்பத்தில் இலங்கையில் ஏற்பட்ட சில பழைய நினைவுகள் என் உள்ளத்தில் நிழலாடின. கையில் இருந்த பாகிஸ்தான் டைம்ஸை மடித்து வைத்து விட்டு சிந்தனையில் ஆழ்ந்தேன்.
இலங்கையில் எனது சில முஸ்லிம் நண்பர்கள் பாகிஸ்தான் அணிக்கும் சில தமிழ் நண்பர்கள் இந்திய அணிக்கும் ஆதரவாகவும் நடந்து கொண்டதை நான் கவனித்திருக்கிறேன்.
இலங்கை மைந்தர்கள் என்ற அடிப்படையில் மற்றுமொரு நாட்டு அணிக்கு ஆதரவளிப்பது எந்த விதத்திலும் பொருத்தமானதாக நான் கருதவில்லை.
பாகிஸ்தான் அணி வெற்றியிட்டினால் இலங்கையிலுள்ள முஸ்லிம்களுக்கோ அல்லது இந்தியா வெற்றியிட்டினால்
 

இலங்கையிலுள்ள தமிழர்களுக்கோ பெருமை ஏதும் வந்து சேரப் போவதில்லை.
இலங்கை அணிக்குக் கீர்த்தி கிடைக்கும் போதுதான் வெற்றிக் கிரீடத்தை
இலங்கையர் என்ற வகையில் நாம் அனைவரும் சூடி மகிழ முடியும். வெளிநாட்டிலும் மார்புதட்டிக் கொள்ளலாம்.
*二エ
ட்ரோனி கிரெக்குடன் கட்டுரை ஆசிரியர்
உண்மையில் இலங்கையில் சிறந்த முஸ்லிம் கிரிக்கெட் வீரர்கள் உருவாகும் தறுவாயில் அவர்களுக்கு அணியில் சந்தர்ப்பம் கொடுக்கப்பட வேண்டியது அவசியம்.
ஏனைய ஆட்டங்களில் குறிப்பாக உதைபந்தாட்டத்தில் முஸ்லிம்களுக்கு
உரிய இடம் கிடைத்துள்ளதை நாம் மறக்கக்கூடாது.
அதே போன்று, இன்று இலங்கை அணியின் ஸ்திரமான, வெற்றிகளின் முக்கிய ஒரு பங்காளியாகத் திகழ்பவர் ஒரு தமிழ் வீரர். அவர்தான் முத்தையா முரளிதரன். அவரது திறமைக்கே இடம் வழங்கப்பட்டது.

Page 27
இதே சமயம் முன்னரும் கூட திறமையான தமிழ் வீரர்களுக்கு உரிய இடம் வழங்கப்பட்டு வந்துள்ளதை மறந்துவிட முடியாது. இந்திய கிரிக்கெட் அணியில் ஒரு தமிழரேனும் இடம் பெறாதிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த வகையில் நோக்கும் போது பொதுவாக இலங்கை மக்கள் வேறுபாடுகளை மறந்து எமது அணிக்காகத் தமது மானசீக ஆதரவை வழங்கிய போதிலும் ஒரு சிலர் வேறுவிதமாக நடந்து கொள்வதைத்தான் நான் இங்கு ஞாபகப்படுத்தியுள்ளேன்.
அத்தகையோரிடம் நான் தொடுக்கும் ஒரு வினா இதுதான். குறைந்த பட்சம் உங்களது ஆதரவை அந்த குறித்த நாட்டு வீரர்களாவது உணர்ந்திருப்பார்களா?
ருப்பினும் விளையாட்டு என்று வரும்போது திறமையுள்ள வரை
நல்ல ஒரு ரசிகனின் பண்பு. ஒரே பக்கமாக சிந்திட் ரசிகனின் ஆரோக்கிய சிந்தனையல்ல.
நடுநிலையாகச் சிந்திக்கும் எந்தவொரு வாசகரும் என் கருத்தோடு முரண்படமாட்டார்கள் என நினைக்கின்றேன்.
அறை உதவியாளர்கள் அழைப்பு மணியை அழுத்த என் சிந்தனை
கலைகின்றது.
அப்போது நேரம் காலை 8.15 மணி, யன்னலைத் திறந்து வெளியே எடடிப்பார்க்கின்றேன் மழை முழுமையாக ஓய்ந்திருந்தது. எனினும், கார் முகில்கள் சூரியனின் பிரசவத்தைத் தடுத்துக் கொண்டிருந்தன.
காலைக் கடன்களை முடித்துக்கொண்டு அறையை விட்டு வெளியேறிய போது சுங் கிமுள் தான் நகர் சந்தைக் கு அருகிலுள்ள மணிக்கூட்டுக்கோபுரம் 11.00 மணியைக் காட்டிக் கொண்டிருந்தது.
அப்போது வெய்யில் அப்பகுதியை படிப்படியாக ஆக்கிரமிக்க ஆரம்பித்திருந்த போதும் குளிர் குறைந்தபாடில்லை. மழை நீர் தேங்கியதால் அநேக பகுதிகள் இன்னும் ஈரலிப்பாகவே இருந்தன.
 

பாகிஸ்தான் நேரப்படி பிற்பகல் 2.00 மணிக்கு ஆட்டம் ஆரம்பமாக இருந்தது. ஆட்டத்தின் இடைநடுவே சக நேர்முக வர்ணனையாளர்களுடன் சுவைக்க இரண்டு கிலோ ஆப்பிள் பழத்தை சுமந்து கொண்டு மைதானத்திற்கு விரைந்தேன்.
நான் சென்ற டாக்ஸி கடாபி விளையாட்டரங்கை நெருங்குவதற்கு வெகு தூரத்திலேயே நிறுத்தப்பட்டது. பாதுகாப்புக் காரணங்களினால் அதற்கு மேல் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
நான் எனது அறிமுக அட்டையைக் காட்டிய போதும் அந்தப் பொலீஸ்காரர் அனுமதி மறுத்தார். பக்கத்திலிருந்த பொலீஸ் அதிகாரியிடம் நான் இலங்கை நேர்முக வர்ணனையாளன் என்ற போது மைதான நுழை வாசல் வரை கார் செல்ல அனுமதிக்கப்பட்டது.
ட்பங்கிள்ை வ்வொரு பிலிலும் நீண் கியூவில் மக்கள் காத்துக் கொண்டிருந்தனர். நேர்முக வர்ணனையாளர்களுக்குத் தனி வாயில் இருந்ததால் நான் உள்ளே செல்ல முடிந்தது.
மக்கள் வந்தபோதும் அனைவருக்கும் டிக்கட் கிடைக்க வில்லை.
ப்புச் சந்தையிலே அே S SSSSLSL SS SLSSS SS வாங்கியள்ளர்கள். இலங்கை ரசிகர்கள் பலர் டிக்கட் கிடைக்காத காரணத்தினால்
ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றதைக் கண்டபோது வருத்தமாக இருந்தது.
அழகிய பாரம்பரிய வேலைப்பாடுகளுடன் கூடிய கடாபி விளையாட்டரங்குக்கு அணித்தாக சர்வதேச உள்ளக ஹொக்கி விளையாட்டரங்கும் சர்வதேச நாடக அரங்கும் காணப்படுகின்றன.
நேர்முக வர்ணனையாளர்களுக்கான அறை வசதி வாய்ப்புக்களுடன் அமைக்கப்பட்டிருந்தது. அந்தக் குளிலும் குளிரூட்டப்பட்ட அறையில் இருக்கவேணி டிய நிர்ப் பந்தம் . பொதுவாக இலங்கை விளையாட்டரங்குகளில் இத்தகைய வசதிகள் குறைவு.

Page 28
இலங்கையில் தொலைபேசி, பெக்ஸ் என்பன இலவசமாகக் கிடைக்கும். பாகிஸ்தானில் நாம் பணம் கொடுக்க வேண்டியிருந்தமை ஒரு குறைபாடாகும்.
பிற்பகல் இரண்டு மணியாகும் போது கிரிக்கட் ஆடுவதற்கு மிகவும் உசிதமான ஒரு வானிலை லாகூர் கடாபி விளையாட்டரங்கில் காணப்பட்டது.
மைதான ஊழியர்களின் பகிரதப் பிரயத்தனத்தின் காரணமாக ஆடுகளமும் சுற்றுப் புறமும் ஈரலிப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டிருந்தது.
அப்போது இலங்கை அணித் தலைவர் அர்ஜுன ரணத்துங்கவும்
அவுஸ்திரேலிய அணித்தலைவர் மார்க் டேலரும் நாணய சுழற்சிக்கு தயாராகிக் கொண்டிருந்தனர்.
 

அள) 67ய முதல் லாசுடர் வரை r
நாணய சுழற்சியில் வெற்றி பெறுபவர் யாரோ அவரே முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பைத் தமதாக்கிக் கொள்வர் என்றே நாம் எதிர்பார்த்தோம். ஆகவே, நாணய சுழற்சியில் அர்ஜுன ரணத்துங்க வெற்றி பெற வேண்டும் என மனதுக்குள் பிரார்த்தித்துக் கொண்டேன்.
ஒரு நேர்முக வர்ணனையாளன் என்ற வகையில் நாம் நடுநிலையாகவே எப்போதும் செயல்படுவோம். எனினும், ஓர் இலங்கைப் பிரஜை என்ற வகையில் இலங்கையின் வெற்றிக்காகவே எனது உள்ளம் ஏங்கிக் கொண்டிருந்தது.
பொதுவாக எந்தவொரு நேர்முக வர்ணனையாளனோ அல்லது பத்திரிகையாளனோ தொழில் ரீதியில் பக்கசார்பற்று நேர்மையாகவே செயல்படுவது அவசியம். அதனைத்தான் வாசகர்களும் நேயர்களும் எதிர்பார்க்கின்றனர். எனினும் கூட தனது சொந்த நாடு வெற்றி பெறும் சந்தர்ப்பத்தில் விமர்சனத்துக்கு அப்பால் ஒரு விமர்சகர் பெருமைப்படுவது இயல்பு.
1991ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த சாப் விளையாட்டுப் போட்டிகளில் நான் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன நேர்முக வர்ணனையாளனாகக் கடமையாற்றினேன்.
அப்போது எமக்குப் பயிற்சியளிப்பதற்காக வந்திருந்த இந்திய தொலைக்காட்சி நிறுவன பிரதிப் பணிப்பாளர் நாயகமாக இருந்த ஜயதேவ்சிங் கூறியது ஞாபகத்துக்கு வந்தது.
அவர் ஒலிம்பிக் போட்டியில் நேர்முக வர்ணனையாளராக இருந்த போது இந்தியாவுக்கு முக்கியமானதொரு வெற்றி கிடைத்த சந்தர்ப்பத்தில்

Page 29
நேர்முக வர்ணனையை முடித்து விட்டு. "நான் ஓர் இந்தியன் என்ற வகையில் எமது நாட்டின் வெற்றியை பெருமிதத்துடன் இப்போது அறிவிக்கிறேன்" என்றாராம்.
இந்த வகையில் அன்று லாகூரில் கடாபி விளையாட்டரங்கில் இருந்த இலங்கை - அவுஸ்திரேலிய வர்ணனையாளர்களும் தமது நாட்டின் வெற்றிக்காகவே ஏங்கிக் கொண்டிருந்தனர்.
பொதுவாக உலகக்கினன்ன ஆரம்பப் போட்டிகளில் ரணதுங்க நாணய சுழற்சிகளில் தோல்வி கண்டு, ஆனால் ஆட்டங்களில் வெற்றியீட்டியுள்ளார்.
எனினும், இறுதியாட்டத்தில் அது வேறுவிதமாக அமைந்தது. நாணய சுழற்சியில் அர்ஜுன ரணதுங்கவுக்கு வெற்றி கிடைத்தது. போட்டியில் கிடைத்த வெற்றியாக அதைக் கருதினேன்.
கட்டுரை ஆரியர் ரவி சாளப்திரியுடன்
அர்ஜுனா முதலில் துடுப்பெடுத்தாட விருப்பம் தெரிவிப்பார் என்றே நாம் எல்லோரும் எதிர்பார்த்திருந்தோம், எனினும், அவரது முடிவைக் கண்டு நாம் அனைவருமே திகைத்து விட்டோம்.
 
 

அர்ஜுனா அவுஸ்திரேலிய அணிக்கு முதலில் துடுப்பெடுத்தாட அழைப்பு விடுத்தார். அது மார்க் டேலருக்குப் பால் வார்த்தது போன்றிருந்தது. முதலில் துடுப்பெடுத்தாடவே அவுஸ்திரேலியா விரும்பியது.
நாணய சுழற்சிக்கு சற்று முன்பு நாம் சில விமர்சகர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தோம். அப்போது இந்தியாவின் பம்பாயைச் சேர்ந்த பிரபல கிரிக்கெட் விமர்சகர் ஆனந்த் ஷர்மா கூறியது ஞாபகத்தில் வந்தது.
"அர்ஜுனா தெரியாத்தனமாக அவுஸ்திரேலியாவுக்கு முதலில் துடுப்பெடுத்தாடக் கொடுத்தார். தோல்வி நிச்சியம். உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இரண்டாவது துடுப்பெடுத்தாடும் அணி வெற்றியீட்டியதே கிடையாது."
ஐந்து உலகக்கிண்ணப் போட்டிகளிலும் முதலில் துடுப்பெடுத்தாடும் அணி வெற்றி பெற்றதால் ஆறாவது உலகக் கிண்ணப் போட்டியிலும் வெற்றி பெறும் என்பதில் எனக்கு உடன்பாடில்லை.
எனினும், இம்ரான்கான், கவாஸ்கர், ரவி சாஸ்திரி போன்றோர் அப்போது கூறிய கருத்துடன் நான் முழுமையாக உடன்பட வேண்டியவனாக இருந்தேன்.
அவர்களது கருத்துப்படி இறுதிப் போட்டிக்குத் தயார் செய்யப்பட்டிருந்த ஆடுகளத்தில் முதலில் துடுப்பெடுத்தாடும் அணிக்கே சாதகமான விளைவைப் பெறக்கூடியதாக இருக்கும்.
குறிப்பாக சுழல் பந்து வீச்சுக்கும் குறைவேகப் பந்து வீச்சுக்கும் இந்த விக்கெட்டுகள் சாதக விளைவைத் தரக்கூடியதாக மாறும் என்று அவர்கள் கருத்துத் தெரிவித்தனர்.
ஷமிந்த வாஸ் நாம் நேர்முக வர்ணனை செய்த பகுதியிலிருந்து பந்து வீசுவதற்காக அழைக்கப்பட்டிருந்தார். அவர் வஷிம் அக்ரத்துக்கே உரிய பாணியிலேயே பந்து வீசுபவர்.
முதல் ஒவரில் முதல் பந்தை மிகச் சிறப்பாக வீசினார். ஓட்டமேதும் பெறமுடியவில்லை. அந்த ஓவரில் ஓர் ஓட்டத்தை மாத்திரமே (உதிரியாக) அவுஸ்திரேலியா பெற்றது.

Page 30
அஸ் கிரிய முதல் "சுடர் வரை
அந்தச் சந்தர்ப்பமாகும் போது கடாபி விளையாட்டரங்கு அதன் கொள் அளவை மிஞ்சும் அளவுக்குப் பார்வையாளர்களால் நிரம்பி வழிந்தது. அரங்கத்துக்கு வெளியே உள்ளே நுழைய முடியும் என்ற நம்பிக்கையில் நீண்ட வரிசையில் மக்கள் அப்போதும் காத்திருந்தனர்.
இரண்டாவது ஓவரில் கல்லூரி முனையிலிருந்து வீசுவதற்காக பிரமோதய விக்ரமசிங்ஹ அழைக்கப்பட்டார். அவரது பந்து வீச்சு வாஸைப் போல் நேர்த்தியாக அமையவில்லை.
மாக் டேலரும், மாக் வோவும் அந்த ஒவரில் துடுப்பின் மூலம் ஓட்டங்களைப் பெற ஆரம்பித்தனர். தொடர்ந்து வந்த ஓவர்களில் சராசரி ஒட்ட எண்ணிக்கை நான்கைத் தாண்டியிருந்தது.
ஆரம்பத் துடுப்பாட்ட ஜோடி சிறப்பாக ஆடிக் கொண்டிருந்தது. மாக் வோ அதுவரை உலகக் கிண்ணப் போட்டியில் மூன்று சதங்கள் பெற்றிருந்தார். மத்திய வரிசை துடுப்பாட்ட வீரரான அவர் "பென்ஸன்அன்ட் ஹெட்ஜஸ்” போட்டியைத் தொடர்ந்து ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக உயர்த்தப்பட்டிருந்தார்.
முதலாவது விக்கெட் மொத்த ஓட்ட எண்ணிக்கை 36 ஆக இருக்கும் போது வீழ்த்தப்பட்டு மாக்வோ 12 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது இலங்கைக்கு பெரிய ஆறுதலாக இருந்தது.
அதுவரை மாக்வோ 6 போட்டிகளில் 472 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். தொடர்ந்து மாக் டேலருடன் இணைந்து கொண்ட ரிக்கி பொன்டிங் மிகத் திறமையாக ஆடினார்.
இருவரினதும் இணைப்பாட்டம் மிகச் சிறப்பாக இருந்ததுடன் ஒவருக்கு சராசரி ஒட்ட வேகம் ஐந்தைத் தாண்டியிருந்தது. இந்நிலையில் அவுஸ்திரேலிய அணி நிச்சியம் 300 ஐத் தாண்டும் என்பது எம் எதிர்பார்ப்பு.
300 ஓட்டங்களைத் தாண்டினால் பகல் இரவுப் போட்டியொன்றில் அது இலங்கைக்கு இலகுவான இலக்கல்ல. டேலரினதும் பொண்டிங்கினதும் துடுப்பாட்டம் மிகச் சிறப்பாக இருந்தது.
 

ഴi, '') , ', '1', ' ') f
S
எனினும் பார்வையாளர்களில் பெரும்பாலானோர் இலங்கைக்கு சார்பானவர்களாக இருந்ததனால் கரகோஷித்து ஆர்ப்பரிக்கவில்லை. அரங்கம் ஓரளவு களையிழந்திருந்தது.
இருவரும் இரண்டாவது விக்கெட்டுக்காக 100 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்ற போது வெற்றி அவுஸ்திரேலியாவுக்குத்தான் என்று நினைத்தோம். ரணதுங்கவின் தீர்மானத்தில் அதிருப்தியுற்றோம்.
எனினும், நாணய சுழற்சி முடிவில் அவர் கூறிய வார்த்த்ை மீண்டும் நினைவுக்கு வந்தது. " நாம் (பழைய உலகக் கிண்ண) சரித்திரத்தைப் பற்றிக் கவலைப் படுவதில்லை. எமது திறமையையே நம்புகிறோம்" என்றார் அவர்.
மொத்த ஓட்ட எண்ணிக்கை 137 ஆக இருக்கும் போது மாக் டேலர் ஆட்டமிழந்தார். அரவிந்த டி சில்வாவின் பந்து வீச்சில் மிகச் சிறப்பான ஒரு "பிடி" மூலம் ஜயசூரிய ஆட்டமிழக்கச் செய்தார்.
மொத்த ஓட்ட எண்ணிக்கை 152, 156 ஆக இருக்கும் போது ரிக்கி பொன்டிங், வோன் ஆகியோர் ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து அரங்கம் புத்துயிர் பெற்றது.
அவுஸ்திரேலியாவின் ஒட்ட வேகம் குறைந்தது. வேகமாக ஒட்டம் பெறுவதற்காக ஷேன் வோன் நான்காவது விக்கெட்டுக்காக ஆடுவதற்கு ஆடுகளத்துள் நுழைந்தார்.
எனினும், பல பந்து வீச்சுக்களைச் சந்தித்து இரண்டு ஓட்டங்களையே அவரால் பெற முடிந்தது. முத்தையா முரளிதரனின் நுணுக்கமான பந்து வீச்சில் சிக்கிக் கொண்டார்.
உலகில் மிகச் சிறந்த சுழல் பந்து வீச்சாளராகக் கருதப்படும் ஷேன் வோனினால் முரளியின் பந்தை புரிந்துகொள்ள முடியவில்லை.
170 ஆக மொத்த ஓட்ட எண்ணிக்கை இருக்கும் போது வேகமாகத் துடுப்பெடுத்தாடும் ஸ்டீவ் வோ 13 ஓட்டங்கள் மாத்திரமே பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார்.

Page 31
( %' ')' , ' '് 'f
அப்போது வெற்றி இலங்கையின் பக்கம் என்று ஓரளவு உறுதியாகிவிட்டது. எனினும், கிரிக்கெட்டில் முடிவு எதுவாகவும் இருக்க முடியும். எதிர்பார்ப்பது நடவாதிருக்கவும் முடியும்.
இத்தகைய பகல் இரவுப் போட்டிகளில் எதனையும் உறுதியாக எதிர்பார்க்க முடியாது. கல்கத்தாவில் இந்தியா 120 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளை அரை இறுதிப் போட்டியில் இழந்தது என் ஞாபகத்துக்கு வந்தது.
மொத்த ஓட்ட எண்ணிக்கை 205 ஆக இருக்கும் போது 7 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டதுடன் ஓட்டங்களும் மந்த வேகத்திலேயே பெறப்பட்டன. இந்நிலையில் 215 அல்லது 220 ஓட்டங்களுக்கு அவுஸ்திரேலியா சகல விக்கெட்டுகளையும் இழந்து விடும் என்றே எதிர்பார்த்தனர். இலங்கைப் பந்து வீச்சாளர்களை பார்வையாளர்கள் வெகுவாக உற்சாகப்படுத்தினர்.
“சிறிலங்கா சிந்தாபாத், ஜாயேங்கே ஜாயேங்கே சிறிலங்கா ஜாயேங்கே, ஜிதாங்கே ஜிதாங்கே” போன்ற வார்த்தைகள் வானைப் பிளந்தன. இலங்கைக் கொடிகள் எங்கும் பறந்தன.
இலங்கை அணித் தலைவர் அர்ஜுன ரணதுங்க சுழல் பந்து வீச்சாளர்களை மிகவும் சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டார். 50 ஓவர்களில் 13 ஓவர்களையே வேகப் பந்து வீச்சாளர்களான ஷமிந்த வாஸ"ம் பிரமோதய விக்கிரமசிங்ஹவும் வீசினர்.
ஏனைய 37 ஓவர்களையும் சுழல் பந்து வீச்சாளர்களே வீசினர். அதுவே அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர்களுக்கு பெரும் தலையிடியாக அமைந்தது.
எட்டாவது விக்கெட்டுக்காக ஆடிய மைக்கல் பேவனும் போல் ரைபனும் மிக நிதானமாக ஆடி 50 ஓவர் முடிவில் மொத்த ஓட்ட எண்ணிக்கையை 241 ஆக உயர்த்தினர்.
மைக்கல் பேவன் கடந்த "பென்ஸன் அன்ட் ஹெட்ஜஸ்” போட்டியில் மிகச் சிறப்பாக ஆடியவர். 10 போட்டிகளில் இரண்டு தடவை மாத்திரமே
 

அ. "ப முதல் வாசுடர் வரை
ஆட்டமிழந்தவர். எனினும், அவரது வழமையான வேக ஆட்டத்தைக் காணமுடியவில்லை.
இலங்கையின் சுழல் பந்து வீச்சாளர்களும் கூடியளவு “வைட்” பந்துகளைக் கொடுத்தது அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. 11 "வைட்” பந்துகள் வீசினர். ஆனால், ஒரேயொரு "நோ போல்” பந்தை மாத்திரமே வீசியதில் திருப்தி.
போட்டியின் ஆரம்பத்தில், முதலில் துடுப்பெடுத்தாடும் அணி 240
அல்லது 250 ஓட்டங்களையே பெறும் என்று இம்ரான்கான் கூறியிருந்தார். உண்மையில் அனுபவம் என்பது அனுபவம்தான்.
Qపం

Page 32
எளிய முதல் வாக்டர் விரை
போசன இடைவேளையின் போது ரவி சானஸ்திரியுடன் கதைத்துக் கொண்டிருந்தோம். அவர் ரணதுங்கவின் முடிவை விமர்சித்தார்.
இலங்கை அணி இந்த ஆடுகளத்தில் வெற்றியீட்டுவது கடினம் என்பதை அவர் தர்க்க ரீதியாக எடுத்துக் காட்டினார். 137 க்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து, 205 ஆகும் போது 7 விக்கெட்டுகளை
அவுஸ்திரேலியா இழந்திருந்தது.
பகல் இரவுப் போட்டி என்பதனால் நிலைமை இன்னும் பாதகமாகவே அமையும் என்றார், கவளம்கரின் கருத்தும் அதுவாகவே இருந்தது.
அப்போது மைதானத்தை இருள் நன்றாகக் கெளவிக் கொள்ள எங்கும் மின்னொளி ஆக்கிரமித்திருந்தது. எங்கும் பறந்து கொண்டிருந்த சிங்கக் கொடி நாம் இலங்கையிலா இருக்கின்றோம் என்ற வினாவை கிளப்பியது. வபோசன இடைவேளையின் பின்பு மீண்டும் ஆட்டம் ஆரம்பித்தது. அப்போது மைதானத்துக்கு வந்த அவுஸ்திரேலிய வீரர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கானப்பட்டனர்.
இலங்கை அணியை மிக இலகுவாக ஜெயித்து விடலாம் என்பது அவர்களது கணிப்பு, வெற்றிக் களிப்பு அவர்களது முகங்களில் அப்பியிருந்தது.
இலங்கையின் அதிரடி ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான சனத் ஜயசூரியவும் ரொமேஷ் களுவிதாரனவும் ஆடுகளத்தில் நுழையும் போது கரகோஷத்தால் அரங்கே அதிர்ந்தது.
 
 

*
எண்ணிக்கை 12 ஆக இருக்கும் போது ? ஓட்டங்கள் விதாரன பிளமினின் பந்து வீச்சில் பேவனிடம்
அரங்கம் அமைதியானது.
மொத்த ஓட்ட ெ பெற்றிருந்த இந்
|ll ஆட்டமிழந்த போது,
ल्ला म जा
GAMAWAP. 臀
配*醬
உலகக்கிண்ண இறுதிப் போட்டியைக் கண்டு களிக்க வந்திருந்த ரசிகர்கள் கூட்டம்

Page 33
அஸ்மிரிய முதல் வாசுடர் வரை
மொத்த ஓட்ட எண்ணிக்கை 23 ஆக இருக்கும் போது ஜயசூரிய பெறமுடியாத மூன்றாவது ஓட்டத்துக்காக ஓடி "ரன் அவுட" முறையில் ஆட்டமிழந்த போது, அவுஸ்திரேலியாவின் எதிர்பார்ப்பு உயர்ந்தது.
அவுஸ்திரேலியா மிகவும் எதிர்பார்த்த விக்கெட்டைக் கைப்பற்றிய
சந்தோஷத்தில் துள்ளிக் குதித்து ஆர்ப்பரித்தது. ஆனால், பாகிஸ்தான் ரசிகர்களின் முகங்களில் ஏமாற்றம் தெரிந்தது. அரங்கமே நிசப்தமாகியது.
அஸங்க குருசிங்கவின் ஆட்டம் வழமை போன்று மெதுவாகவே ஆரம்பித்தது. எனினும், அரவிந்த டி சில்வா இரண்டு விக்கெட்டுகள் இழந்ததையே மறந்து தனது வழமையான வேகத்தைக் காட்டிக்கொண்டிருந்தார்.
வெற்றி இலங்கைக்கு என்பது இறைவனின் நாட்டமாக இருக்கும் போது அவுஸ்திரேலியா என்ன செய்ய? அதனால்தான் குருசிங்க, அரவிந்த டி சில்வா கொடுத்த " பிடி” களைக் கோட்டை விட்டனர்.
இலங்கை அணி ஐந்து ஓவர்களிலேயே 23 ஓட்டங்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்த போது, குளிரூட்டப்பட்ட அறைக்குள் இருந்த எனக்கு வியர்த்தது.
எமது எதிர்பார்ப்புகள் எம்மை விட்டு படிப்படியாக நகர்வது போன்றோர் உணர்வு எம்முள் எங்கும் வியாபித்திருந்தது. எனினும், நாம் எமது நம்பிக்கையை இழந்து விடவில்லை.
இலங்கை அணியில் தொடர்ந்து விளையாடுவதற்கு இன்னும் ஸ்திரமான துடுப்பாட்ட வீரர்கள் ஐவர் காத்திருந்தனர். பந்து வீச்சாளர்களான ஷமிந்த வாஸினதும் குமார் தர்மசேனவினதும் துடுப்பாட்டத்தையும் குறைவாக மதிப்பிட முடியுமா?
அரவிந்த டி சில்வாவும் அஸங்க குருசிங்கவும் பந்தின் தன்மைகளை நன்கறிந்து வேகமாக மட்டுமல்ல விவேகமாகவும் ஆடிக்கொண்டிருந்தது தெம்பாக இருந்தது.

அஸ் கிரிய முதல் வாசுடா வ0ர S
அப்போது பழைய நினைவுகள் என் நெஞ்சத்தில் நிழலாடின. எஸ்.எஸ்.ஸி, அஸ்கிரிய போட்டிகளில் இருவரும் நிலைநாட்டிய சாதனைக்குரிய இணைப்பாட்டம் இங்கும் தொடருமாயின் அவுஸ்திரேலியாவால் என்ன செய்ய முடியும்?
எம்மோடு இருந்த பாகிஸ்தான் நண்பர் "15 ஓவர்களுக்குள் வேகமாக ஒட்டங்களைக் குவிக்கும் இருவருமே ஆட்டமிழந்து விட்டதனால் உங்கள் அணியினால் அவுஸ்திரேலியாவிடம் முகம் கொடுப்பது சிரமமாக இருக்குமே” என்றார்.
“இல்லை பொறுத்திருந்து பாருங்கள் அரவிந்த டி சில்வாவும் அஸங்க குருசிங்கவும் 100 ஓட்டங்களை இணைப்பாட்டங்களாகப் பெற்றால் போதும் நாம் வெற்றி பெறுவோம்” என்றேன். பிரேமசர ஏப்பாசிங்கவும் என் கருத்தோடு உடன்பட்டார்.
அரவிந்த டி சில்வாவும் அஸங்க குருசிங்கவும் படிப்படியாக ஒட்ட எண்ணிக்கையை உயர்த்திக் கொண்டிருந்த வேளையில் அரங்கமும் உற்சாகத்தால் அலை மோதி அதிர்ந்து கொண்டிருந்தது.
மொத்த ஓட்ட எண்ணிக்கை 148ல் இலங்கை அணியின் மூன்றாவது விக்கெட் வீழ்த்தப்பட்டபோது, வெற்றியீட்டுவதற்கான இலக்கு 100ஐ விடக் குறைவாகவே இருந்தது.
ஏற்கனவே, இருமுறை குருசிங்க கொடுத்த பிடியை நழுவ விட்ட போல் ரைபல் தனது பந்து வீச்சில் குருசிங்கவை ‘போல்ட்' செய்து ஆட்டமிழக்கச் செய்தார்.
நான்காவது விக்கெட்டுக்காக ஆடுவதற்கு அர்ஜுனா ரணதுங்க வெற்றிக்குரிய நடையாக ஆடுகளத்துக்கு வந்தார். அவர் வெற்றி ஓட்டத்தோடுதான் வெளியேறுவார் என்று நாம் அங்கிருந்த பாகிஸ்தானியரிடம் சொன்னோம்.
ரணதுங்க அண்மைக் காலங்களில் ஓட்டங்களை ஆரம்பிப்பது பெளண்டரியுடன்தான். அதேபோன்று உலகக் கிண்ண இறுதிப் போட்டியிலும் பெளண்டரியுடன்தான் ஒட்ட எண்ணிக்கையை ஆரம்பித்தார்.

Page 34
தி ரீடர் :
ஆடிக்கொண்டிருந்தபோது ஓவருக்கு ஐந்து ஓட்டங்களைப் பெறவேண்டியிருந்தது. அங்கு எமது நேர்முக வர்ணனை கூடத்தில் எயார் லங்காவின் பாகிஸ்தானின் முகாமையாளரும் (அவரது பெயரை மறந்துவிட்டேன்) வந்திருந்தார்.
என்னோடு கதைத்துக் கொண்டிருந்தபோது "ஹசன் மெஹம கியானங் டிகக் அமாருவெய் நேத" (இப்படிச் சென்றால் சற்று கடினமாக இருக்குமே) என்றார். "பயப்படாதீர்கள் 200 ஓட்டங்களைத் தாண்டினால் வேகம் தானாக வரும்" என்றேன்.
எமது அனுபவத்தில் நாம் எதிர்பார்த்தது மிகவும் சரியாக அமைந்து விட்டது. ஏனென்றால் 200 ஓட்டங்களைத் தாண்டிய பின்பு உளவியல் ரீதியாக இலக்கு இலகுவாகிவிடும்.
அதனால்தான் ரணதுங்கவும் 200 ஓட்டம்வரை மிகவும் நிதானமாக ஆடினார். ஷேன் வோனின் பந்து வீச்சில் சிக்சரும் பெளண்டரியுமாக ரனதுங்க அடித்தபோது வோனின் முகத்தில் #யாடவில்லை.
அரவிந்தவும் அர்ஜ"னாவும் வேகமாக ஆடியபோதும் தமது இலட்சியத்தை மறந்து விடவோ, நிதானத்தை இழந்து விடவோ இல்லை. ஒவ்வொரு அடிக்கும் அரங்கிலிருந்து ஏகப்பட்ட ஆரவாரம்,
இந்தச் சந்தர்ப்பத்தில் நான் என்னை அறியாமலே கையிலிருந்த சிங்கக் கொடியுடன் வர்ணனை கூடத்துக்கு வெளியே வந்தேன். மின்னொளியில் எங்கும் சிங்கக் கொடிகள்,
அன்றைய போட்டியின் முதல் பகுதியை கண்டுகளிப்பதற்காக பாகிஸ்தான் ஜனாதிபதி வருகை தந்திருந்தார்.
இலங்கையிலிருந்தும் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், ராஜ தந்திரிகள் என ஏராளமானோர் விருந்தினர் அரங்கில் (வி.ஐ.பீ) அமர்ந்து இலங்கையின் வெற்றிக்காக ஏங்கிக்கொண்டிருந்தனர்.
அன்று கடாபி விளையாட்டரங்கின் உட்பகுதியில் மாத்திரம் 5000 விசேட கலகம் அடக்கும் பொலிசார் கடமையில் ஈடுபட்டிருந்தனர். அதாவது இருபது ரசிகர்களுக்கு ஒரு பொலிசார். பாதுகாப்பு மிகத் தீவிரப்படுத்தப்பட்டிருந்தது. பல வீதித்தடைகள்
 

போடப்பட்டிருந்தன. அரங்கின் ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்குச் செல்வதாயின் கூட வெளியே வந்துதான் செல்லவேண்டும்.
கட்டுரை ஆசிரியர் இம்ரான் காப்டன் அரங்கினுள் எதுவிதப் பொருட்களும் எடுத்துச் செல்ல முடியாது. கல்கத்தாவின் போத்தல் வீச்சுகள் பாகிஸ்தானிலும் இடம்பெறக் கூடாதென்று முன்னெச்சரிக்கையாக இருக்கலாம்.
45வது ஓவர் ஆகும் போது இலங்கை அணியின் வெற்றி நூறு விதம் நிச்சியமாகி இருந்தது. 47வது ஓவரில் பந்து விசுவதற்கு மக்ராத் அழைக்கப்பட்டிருந்தார். அவரே அதுவரை சிக்கனமாகப் (இக்கோனமிகிலி) பந்து வீசியவர்.
மக்ராத் தனது ஒன்பதாவது ஒவரில் இரண்டாவது பந்தை விசத் தயாராகும் போது இலங்கை அணி அவுஸ்திரேலிய ஒட்ட எண்ணிக்கையைச் சமப்படுத்தியிருந்தது. ரணதுங்க மக்ராத்தின் அந்தப் பந்துக்கு "த்தேட் மேன்" பகுதிக்கு அடித்த பெளண்டரியுடன் இலங்கை உலகச் சம்பியனாகியது.

Page 35
S
அஸ் கிரிய முதல் வாகூர் வரை
அவுஸ்திரேலியா பென்ஸன் என்ட் ஹெட்ஜஸ் போட்டிகளோடு இலங்கையுடன் நடந்து கொண்ட மனப்பாங்குக்கு இலங்கை நல்லதொரு பதிலை உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் கொடுத்தது.
இறுதிப் போட்டிக்கு முதல் நாள் பத்திரிகையாளர்களிடம் உரையாற்றிய ரணதுங்க "நாங்கள் எத்தகைய கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் என்பதை உலகுக்கு உணர்த்துவோம்” என்று கூறினார்.
அவரது கூற்றை அப்படியே செய்தும் காட்டினார். இலங்கை வெற்றி இலக்கை அடையும் போதே அத்தனை பாதுகாப்புத் தடைகளையும் தாண்டி ரசிகர்கள் மைதானத்தில் குவிந்து விட்டனர்.
அது இலங்கை வீரர்களுக்குப் பெரும் சங்கடமான நிலையை உருவாச்சி விட்டது. அவர்களது அந்த வெற்றியை அனுபவிக்க முடியாது செய்து விட்டது.
1992ல் பாகிஸ்தான் அணி உலகக் கிண்ணத்தை வெற்றி கண்ட போது இம்ரான்கான் தலைமையில் பாகிஸ்தான் அணி வீரர்கள் மைதானத்தைச் சுற்றி வெற்றிக் கிண்ணத்துடன் வலம் வந்தார்கள்.
அந்த பாக்கியத்தை அனுபவிக்க பாகிஸ்தான் இரசிகர்கள் விடவில்லை. (உண்மையில் ஆதரவும் அளவுக்கு மிஞ்சினால் சிரமம்தானே) ஒரு நிலையில் கிண்ணமே கைதவறி கீழே விழக்கூடிய நிலை ஏற்பட்டது.
இலங்கை அணியினர் அந்தக் கூட்டத்தின் மத்தியில் பரிசுப் பணமாகக் கிடைத்த காசோலையையும் தவற விட்டனர். உண்மையில் அத்தகைய ஒரு நிலை உருவாகியது ஏற்பாட்டாளர்களின் ஒரு பலவீனம் என்றே
நஇருதுகிறேன்.
%ܗܐ *
ളുട്ട്ല சர்வதேசப் போட்டியொன்று நடைபெறும் தறுவாயில் பாதுகாப்பு விடயத்தில் கூடிய கவனம் செலுத்த வேண்டும். பார்வையாளர்கள் மைதானத்தில் நுழைய அனுமதிக்கக்கூடாது.
ாேட்டி நிறைவி பெறும் போதே பரிசளிப்பு ஏற்பாடாகியிருந்தது. பர்திஸ்கான் பிரதம்ர் பெனாஸிர் பூட்டோ அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பரிசளிப்பதற்காக வந்திருந்தார்.

அள) கிரிய முதல் லாசுடர் வரை SS
அப்போது தமிழில் வர்ணனை செய்து கொண்டிருந்த நான் எமது நாடு அடைந்த வெற்றியின் பூரிப்பில் நா தளதளக்க திருமதி பெனாஸிர் பூட்டோ என்பதற்குப் பதிலாக திருமதி சுல்பிகார் அலி பூட்டோ என்று சொல்லி விட்டேன்.
உண்மையில் ஒரு சராசரி மனிதனைப் பொறுத்த வரையில் இன்பமோ, துன்பமோ ஒரு எல்லையைக் கடக்கும் போது, அவன் தன் நிலையை மறந்து விடுவது இயல்பு என்பதை நான் நன்றாக அனுபவித்தேன்.
அந்த இராப்பொழுது என்றுமில்லாத இன்பப் பொழுதாக இருந்தது. வெற்றிக் களிப்பில் அனைவருக்கும் மேலாக நாம் மிதந்து சிங்கக் கொடியை உயர்த்திக் கொண்டிருப்பது போன்ற பிரமை.
ஆட்டம் முடிந்த ஐந்தே நிமிடத்தில் அந்த அதிசயம் நடந்தது. அதுவரை வெளுத்திருந்த வானத்தில் கார்முகில் சூழ்ந்து கொள்ள மெதுவாக மழை கொட்ட ஆரம்பித்தது.
அதுவரை பெய்யாத மழை பரிசளிப்பு முடியும் போதே பொழிய ஆரம்பித்ததென்றால் அது இலங்கை வெற்றியின் எதிரொலியா? அல்லது சோகமே முகத்தில் அப்பிய நிலையில் மேடைக்கு அருகில் நின்று கொண்டிருந்த அவுஸ்திரேலிய அணியின் தோல்வியின் எதிரொலியா என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.
எது எவ்வாறிருப்பினும் போட்டிக்கும் பரிசளிப்புக்கும் இடையே மழையின் தலையீடு இல்லாதிருந்தது அனைவருக்கும் ஆறுதலாகத்தான் இருந்தது.
பரிசளிப்பின் பின் பத்திரிகையாளர் மாநாட்டில் உரையாற்றிய ரணதுங்க, "நாங்கள் வித்தியாசமான கலாசாரத்தில் வந்தவர்கள் பழி வாங்குவதில் எமக்கு நம்பிக்கையில்லை” என்று சொன்னார்.
அர்ஜுனா ரணதுங்க நிருபர்களின் கேள்விகளுக்கு மிகவும் நிதானமாகப் பதிலளித்தார். இது முயற்சிக்குக் கிடைத்த பிரதிபலன் எனத் தெளிவாகச் சொன்னார்.
அத்தோடு அணியின் அனைத்து உறுப்பினர்களும் வெற்றியின் பங்காளிகள் என்று குறிப்பிட்டார். அங்கு பத்திரிகை மாநாட்டுக்கான ஒழுங்கமைப்பில் பல குறைபாடுகள் காணப்பட்டன.

Page 36
பல நாடுகளைச் சேர்ந்த பத்திரிகை நிருபர்களும் ரணதுங்கவைச் சூழ்ந்து கொள்ள அவர் நின்று கொண்டிருந்த நிலையிலேயே பதிலளித்துக் கொண்டிருந்தார்.
பத்திரிகை மாநாடு முடிந்து வெளியே வரும்போது, மழை கடுமையாகப் பெய்து கொண்டிருந்தது. எனது சக நேர்முக வர்ணனையாளர்கள் மறுநாள் அதிகாலை நாடு திரும்ப வேண்டியிருந்ததால் ஆட்ட முடிவோடு அவர்கள் அங்கிருந்து வெளியேறியிருந்தனர்.
கட்டுரை ஆசிரியர் பிரேமசர ஏபசிங்கவுடன்
எனது கையில் குடையில்லை வாடகை டாக்ளபியைப் பிடிப்பதற்கு சுமார் 300 யார் தூரம் நடந்து செல்ல வேண்டும். என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
நள்ளிரவு 12 மணியாகும் போதுதான் மழை தணிய ஆரம்பித்தது. சன நெரிசலால் சேறாக்கப்பட்டிருந்த அந்தப் பாதையூடாக மெதுவாகப் பிரதான பாதையை வந்தடைந்தேன்.
 
 

டாக்ஸியை நிறுத்திய போது நான் தங்கும் இடத்துக்கு 150 ரூபா கேட்டார். பொதுவாக 50 ரூபா எடுப்பதுதான் வழக்கம். நள்ளிரவில் பேரம் பேசிக் கொண்டிருக்க முடியாததனால் வண்டியில் ஏறினேன்.
லாகூர் நகரில் இராக் காலங்களில் இரண்டு மடங்கு அதிகமாக கட்டனம் அறவிடுவதை நான் பின் தெரிந்து கொண்டேன்.
ነ፡ அதிகாலை ஒரு மணிக்கே அன்று நித்திரைக்குச் சென்றேன். அப்போதுதான் இரவு ஒன்றும் சாப்பிடாதது ஞாபகத்துக்கு வந்தது. மகிழ்ச்சியில் சாப்பாட்டையும் மறந்திருந்தேன். சாப்பிட வேண்டுமாயின் மீண்டும் சுங்கி முல்தான் நகர் செல்ல வேண்டும்.
அந்த குளிர்ந்த இரவில் எப்படி மீண்டும் வெளியே செல்வது? முதல் நாள் வாங்கியிருந்த ஆப்பிள், தோடம்பழங்களின் ஞாபகம் வந்தது. அங்கு நல்ல புதிய தோடம்பழம் ஒன்றில் விலை இரண்டு ருபா, மிகப் பெரியதாயின் இரண்டு ரூபா ஐம்பது சதம்.
அதனால் அங்கிருந்த நாட்களில் உணவுப் பதார்த்தங்களைவிட பழவகைகளை கூடியளவு சாப்பிடுவதை வழக்கமாக்கியிருந்தேன்.
(పరి

Page 37
S
8
அள, 7. முதல் வாகூர் வரை
18 ஆம் திகதி விடிந்த போது நான் இலங்கை திரும்புவதற்கு இன்னும் இரண்டு தினங்கள் எஞ்சியிருந்தன. 20 ஆந் திகதி மாலை 7.15 க்குத்தான் லாகூரிலிருந்து காராச்சி வரும் விமானம் புறப்படும்.
அன்றைய தினத்தை எப்படிக் கழிக்கலாம் என்று சிந்தித்துக் கொண்டிருந்த
இன்பமான செய்தி ஒன்று கிடைத்தது.
ஏற்கனவே அறிமுகமாயிருந்த பாகிஸ்தான் நண்பர் ஒருவர் தனது வாகனத்தை சாரதியுடன் அனுப்புவதாகவும் அன்றைய தினம் முழுவதும் லாகூரை சுற்றிப்பார்க்கும்படியும் கூறினார்.
உண்மையில் முகாலயப் பேரரசுகளின் ஐகங்கீர் மன்னரின் அரண்மனை உட்பட பல சரித்திரப்புகழ்மிக்க இடங்களைப் பார்வையிடுவதற்கு அது
எனக்கு வாய்ப்பாக அமைந்தது.
சென்ற இடமெல்லாம் இலங்கை நேர்முக வர்ணனையாளன் என்று சொன்னவுடன் நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்த மூன்று தினங்களிலும் லாகூரின் நாலா புறமும் சென்று பார்வையிட்டேன். பொதுவாக லாகூரில் பாதைகளில் பாதசாரிகள் கடவைகளினூடாக கடப்பது குறைவு.
பாதையில் அங்கும் இங்கும் பாய்ந்தோடிச் செல்வார்கள். என்னோடு சென்ற வழிகாட்டி அவ்வாறு நடந்து கொண்டதனால் பாதை நடுவில் நான் பல முறை செய்வதறியாது திண்டாடிப் போனேன்.
இலங்கையில் முஸ்லிம்கள் இருப்பது பலருக்குத் தெரியவில்ல.ை நாம் பாகிஸ்தானிக் சுதந்திர பிரகடன ஸ்தூபிக்கு (மினாரே பாகிஸ்தான்) சென்ற சமயம் நான் இலங்கையன் என்பதை அறிந்து கொண்டு சிலர் என்னுடன் கதைத்தனர்.
 

S9 رلاتقت تک، من، سختی آ} بمعہ . تختہ تیوزیم، مشتملق نcr ہوتے
பாகிஸ்தானில் வாழும் சாதாரண பொது மக்கள் இலங்கை மக்களை விட பொது அறிவில் மிகக் குறைந்தவர்களாக இருந்தார்கள். நான் இலங்கை முஸ்லிம் என்ற போது பலர் நம்ப மறுத்தனர்.
அவர்களுள் ஒருவர் பங்களாதேஷ"க்குப் பக்கத்திலேதானே இலங்கை இருக்கின்றது என்ற போது இல்லை, இல்லை மாலைதீவுக்குப் பக்கத்தில்தான் இருக்கிறது என்றாரே பார்க்கலாம் அவரது நண்பர்.
லாகூர் நகருக்கு அண்மியதாக பல சரித்திரப் பிரசித்தமான இடங்கள் காணப்படுகின்றன. மாலை 5.00 மணியுடன் அவற்றின் எல்லையினுள் பிரவேசிக்க முடியாதவாறு கதவுகள் மூடப்படுகின்றன.
எனினும் சாதாரணமாக மக்கள் மதிலினுடாகக் குதித்துச் செல்கின்றனர். இரவு நேரத்தில் அங்கு சென்றதால் எனது வழிகாட்டி நண்பர்களுடன் நானும் மதிலின் மேல் ஏறியே உள்ளே குதித்தேன்.
இலங்கையில் இத்தகைய இடங்களில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருப்பதனால் உள்ளே செல்வது கடினம். அத்துமீறினால் அநேகமாக பொலிஸ் வரை செல்ல வேண்டியேற்படலாம்.
இந்தச் சந்தர்ப்பத்தில் கண்டி அஸ்கிரிய மைதானத்தில் இலங்கை - *ய அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டி மீண்டும் நினைவுக்கு வருகின்றது.
போட்டி நடைபெற்ற தினம் காலையிலேயே ரசிகர்கள் நீண்ட கியூவில் காத்திருந்த போதும் அநேக ரசிகர்களுக்கு போட்டி ஆரம்பமாகும் குறித்த நேரத்தில் உள்ளே செல்ல முடியவில்லை.
இதனால் பெருந்தொகையான ரசிகர்கள் உயர்ந்த மதிலின் மேலேறி மைதானத்தில் குதிக்கத் தொடங்கிய போது, குண்டாந்தடிப் பிரயோகம் செய்த பொலிஸாரினாலும் அவர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
பொலிஸார் தமது இயலாமையைக் காட்ட முடியாது அந்த ரசிகர்களை மைதானத்தில் அமரச் செய்வதில் ஈடுபட்டனர்.
லாகூர் நகரில் நான் சென்ற பல கடைகளில் பொருட்களின் விலையைக் குறைக்க முடியாது என்று சொன்ன பின்னரும் இலங்கையன் என்றபோது

Page 38
60 அள) கிரிய முதல் லாகூர் வரை
அதிக விலைக் குறைப்புச் செய்ததில் உண்மையிலே நான் பூரித்துப் போனேன்.
எமது நாடு உலகக் கிண்ணத்தை வெற்றி கொண்ட ஒரே காரணத்தினால்தான் சென்ற இடங்களிலெல்லாம் அத்தகைய ஒரு மதிப்புக் கிடைத்தது.
20 ஆந் திகதி மாலை லாகூர் விமான நிலையத்துக்கு அருகில் வந்து எனது உலகக் கிண்ண அறிமுக அட்டையைக் காட்டியபோது நான் சற்றும் எதிர்பாராத விதமாக விஷேட அதிதிகள் (வி.ஐ.பி) வழியுடாக அனுப்பினார்கள்.
அன்று காலநிலை சீரின்மையால் சற்று தாமதித்தே விமானம் கராச்சி நோக்கிக் கிளம்பியது. கராச்சியை விமானம் சென்றடையும் போது இரவு ஒன்பது மணியைத் தாண்டியிருந்தது.
எனது இலங்கை நண்பர் பாதில் குடும்பத்தார் வெளியே காத்திருந்தார்கள். அவர்களுடன் நீண்ட நேரம் பேச முடியவில்லை. எயார் லங்கா விமானத்தைப் பிடிக்க வேண்டியிருந்தது.
எதுவிதப் பிரச்சினையுமேயின்றி சுங்கப் பரிசோதனையை முடித்துக் கொண்டு உரிய நேரத்தில் விமானத்தினுள் நுழைந்தபோது ஏற்கனவே பரீட்சயமாயிருந்த விமானச் சிப்பந்திகள் என்னைப் பார்த்து புன்னகைத்தார்கள். எனக்கும் மகிழ்ச்சியாக இருந்தது.
(மீண்டும் பரிசுப் பொருட்கள் தருவார்கள் என்ற நம்பிக்கையுந்தான்) நாம் வெற்றியுடன் திரும்புவோம் என்று அப்போது நான் கூறியதை மீண்டும் அவர்களிடம் கூறி நினைவுபடுத்தினேன். என் ஆருடம் பலித்ததை பெருமைபடக் கூறினேன்.
பாகிஸ்தான் செல்லும் போது கல்கத்தாவில் இலங்கை அணியின் ஆரம்ப விக்கெட் இழப்பினால் தெம்பு இழந்த மனதுடனேயே விமானத்தில் ஏறினேன். நாடு திரும்பும் போது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.
நாம் உலகச் சம்பியன் என்றால் சும்மாவா என்ன?


Page 39
இவர் நூரானியா விற6
தனகரனில் ஏழு : நெருக்கமானவர் அதிகமாக அலசல்களின் முதலி வாசக பெருமை எனக்கு கவிதை, ! விமர்சனம் என ஆரம்பித் கலைப்பட்டதாரி (தற்போது இறுதியாண்டு மாணவர்)நிை விவகாரங்கள் போன்ற பட்டட் விட்டது.
ஆம் எழுத்து அன்னமி வயதில் போட்டீப்பரீட்சையி வானொலி முஸ்லிம் சேவை சேவையில் உரையரங்கம் ச “ஒப தன்னவாத " (உங்களு நிகழ்ச்சிகள் மிக ஜனரஞ்சக வளர்ந்து உழைப்பால் முன் அதிகமான கட்டுரைகள் தந் இந்நூல்
1991இல் "சாப் 'விளைய இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத தெரிவானார் பல்வேறு விறு முன்கணிப்பிட்டாளர் முன்னன் பாடசாலையின் பெயரை தன் 6 இத்தனைக்கும் மேலாக ஹ6
ISBN 955-96.296-O-3
Cover Design by A. Azeez Nizardeen

... 1 a
ஆண்டுகள் என்னோடு இருந்து ன விளையாட்டுக்கட்டுரை, விமர்சன 5ன் நான் தான் என்பதில் இன்னும் கட்டுரை உருவகக்கதை, சிறுகதை, த இவரது எழுத்து - இவரை பேராதனை பல்கலைக்கழக எம்.ஏ ரவேற்றுமுகாமைத்துவம் சர்வதேச பின்படிப்புகளில் சித்திபெற வைத்து
நம் என்பதை மெய்பித்தவர் மிக இளம் லி சித்தியடைந்து தான் இலங்கை /க்கட்டுப்பாட்டாளரானார் முஸ்லிம் சிங்கள விளையாட்டுச் சேவையில் 5க்கு தெரியுமா) போன்ற இவரின் 5மானவை ஆர்ப்பாட்டமில்லாமல் னேறியவர் ஹஸன் எண்ணுறுக்கும் த அவரின் ஒரு உதாரண பருக்கே
ாட்டுப்போட்டிக்கு முதன்முறையாக ந்தாபன நேர்முக வர்ணனையாளராக விறுப்பான போட்டிகளில் சரியான ன?கிரிக்கெட் விமர்சகர் தான் கற்ற பெயருக்கு முன்பொறித்தநன்றியாளர் ஸ்ன் ஒரு மனிதநேயன்
வி. ஜெகதீசனர்.
தினகரன்