கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கிரிக்கெட் உலக சாதனையாளர்கள்

Page 1


Page 2

கிரிக்கெட் உலக
சாதனையாளர்கள்

Page 3
ஆசிரியரின் பிற நூல்கள் அளப்கிரிய முதும் ஹாகர் வரை
5 Taĝiĝo LUTT 60)6bh கிரிக்கெட் உலகில் பிரகாசித்தவர்கள் அச்சில்
ii

கிரிக்கெட் உலக
சாதனையாளர்கள்
நூரானியா ஹஸன்
நூராணியா பதிப்பகம் 157, உயன்வத்தை, தெவனகல.
iii

Page 4
இந்நூலானது தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையின் உதவியுடன் வெளியிடப்பட்டுள்ள போதும், இந்நூலின் உள்ளடக்கமானது தேசிய நூலக, ஆவணவாக்கல் சேவைகள் சபையின் கருத்துக்களை பிரதிபலிக்கவில்லை.
முதற்பதிப்பு : 2000 ஏப்ரல் வெளியீட்டு உரிமை : ஆசிரியருக்கு
இலங்கை தேசிய நாலகம் ~ வெளியீடுகளில் உள்ள பட்டியல் தரவு
ஹஸன், எம். எஸ். பெளசுல் கிரிக்கெட் உலக சாதனையாளர்கள் எம்.எஸ். பெளசுல் ஹஸன் - தெவனகல : நூராணியா பதிப்பகம், 2000 Lu. 72 F. Lổ. 21
ISBN 955-8402-00- விலை: ரூ. 75.00
i. 796,358092 டி.டி.சி. 21 i. தலைப்பு
1. கிரிக்கெட் வீரர்கள் - வாழ்க்கை வரலாறு | 2. வாழ்க்கை வரலாறு
ISBN 955-8402-00அட்டைப்பட வடிவமைப்பு : ஏ. அஸிஸ் நிஸார்தீன் அச்சீட்டாளர் : M.J.M ஒப்செட் அச்சகம்,
119, பிரதான வீதி, மாவனல்லை.
iv

சமர்ப்பணம்
என் வளர்ச்சியில் பங்காளியாகிய அத்தனை பேருக்கும்!

Page 5
அணிந்துரை
இன்று தொலைத்தொடர்புச் சாதனங்கள் வளர்ச்சியடைந்துள்ள அளவுக்கு விளையாட்டுத்துறையுடனான நெருக்கமும் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சாதாரண ஒரு தொழிலாளி கூட கிடைக்கும் ஒய்வு நேரத்தில் விளையாட்டுத்துறையுடன் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதைக் காணலாம் . இலங்கையைப் பொறுத்தமட்டில் கிரிக்கெட் ஆட்டத்திற்கு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள ஜனரஞ்சகத்தன்மை ஏனைய விளையாட்டுகளுக்கு ஏற்படவில்லை என்றே கூறவேண்டும். இதற்குக் காரணம் கிரிக்கெட் மூலமே உலகளாவிய ரீதியில் எமது நாட்டுக்குப் புகழ் பெற முடிந்தது. அதன் காரணமாகவே மக்களும் ஆர்வம் செலுத்த ஆரம்பித்தனர்.
இலங்கை மக்கள் மத்தியில் கிரிக்கெட் பிரபல்யம் அடைந்துள்ள அளவுக்கு விபரங்கள் தமிழ் வாசகர்களுக்குக் கிடைப்பதில்லை. ஆங்கில, சிங்கள மொழிகளில் போன்று தமிழ் பத்திரிகைகளில் விளையாட்டுத்துறைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. ஆங்காங்கே சின்னஞ்சிறு செய்திகளுடன் தம்மை வரையறுத்துக் கொள்கின்றன. விமர்சன ரீதியான கட்டுரைகளையோ வேறும் தகவல்களையோ பெற்றுக்கொள்வதற்கு தமிழில் பிற மொழிகளைப் போன்று சஞ்சிகைகள் வெளிவருவதில்லை. இந்நிலையில்தான் நூராணியா ஹஸன் விளையாட்டுத்துறை சார்ந்த நூல்களை எழுத ஆரம்பித்துள்ளார்.
நூராணியா ஹஸன் தமிழ் வாசகர்களுக்கோ, வானொலி, தொலைக்காட்சி நேயர்களுக்கோ புதியவர் அல்லர். தினகரன் பத்திரிகையில் மிக நீண்ட காலமாக கிரிக்கெட் விமர்சனக் கட்டுரைகள் எழுதி வாசகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளார். நான் தினகரன் பத்திரிகையின் ஆசிரியராக இருந்தபோதே அவா எழுத ஆரம்பித்தார். இவரது எழுத்தாற்றலை அப்போதே இனங்கண்டு
vi

கொண்ட நான் தொடர்ந்தும் எழுத வாய்ப்பளித்தேன். விளையாட்டுப் பகுதியை பொறுப்பாக செய்யுமாறும் கூறினேன்.
அந்தவகையில் தினகரன் பண்ணையில் வளர்ந்த மற்றொரு எழுத்தாளராக இன்று அவர் திகழ்கின்றார். கிரிக்கெட் உலக சாதனையாளர்கள் என்ற இந்நூலில் ஒன்பது கிரிக்கெட் வீரர்களின் வாழ்க் கை வரலாற்றுச் சுருக் கத்தினைத் தந்துள்ளார். வாசகர்களுக்குத் தெரியாத பல விடயங்களை இந்நூலில் இவர் சுவைபட விளக்கியுள்ளார். கிரிக்கெட் உலகில் அவர்கள் பதித்துச் சென்ற சாதனைகளையும் தெளிவாகத் தந்துள்ளார். குறிப்பாக இலங்கை வீரர் முத்தையா முரளிதரன் சாதனைகளை விபரமாகத் தரமுயன்றுள்ளார். இது நிச்சயமாக தமிழ் வாசகர்களைக் கவரக் கூடியது என்பதில் சந்தேகமில்லை.
மொழியைச் சிறப்பான விதத்தில் கையாள்வதில் பல எழுத்தாளர்கள் தவறு விடுகின்றனர். வாசகர்களைக் கவரும் வண்ணம் அவர்களது மொழி அமைவதில்லை. எனினும், இக்குறைபாட்டை நூராணியா ஹஸனின் எழுத்தில் காணமுடிவதில்லை. எத்தகையதொரு சாதாரண வாசகரையும் கவரக்கூடிய வகையில் இவரது எழுத்தோட்டம் அமைந்துள்ளது. தான் கற்ற தமிழ் மொழியை இந்நூலில் நல்ல விதத்தில் கையாண்டுள்ளார். இந்நூலைப் படிக்கும் வாசகர்கள் இதனை ஏற்றுக்கொள்வார்கள்.
நூராணியா ஹஸன் ஒரு பத்திரிகையாளராகவும் இருப்பதனால் வாசகர்களின் எதிர்பார்ப்பைப் புரிந்துகொண்டு இந்நூலை அமைத்துள்ளார். இதைப் போன்று விளையாட்டுத்துறை சார்ந்த இன்னும் பல நூல்களை எழுத வேண்டும் என்பதே எமது அவா. அதுவே சிறந்த தமிழ்ப் பணியாகவும் அமையும். இவரின் தமிழ்ப் பணி தொடர எமது வாழ்த்துக்கள்.
ஆர். சிவகுருநாதன், தினகரன் முன்னாள் ஆசரியர்
சட்டத்தரணி, தலைவர் - கலைக்கழக தமிழ் இலக்கியக் குழு

Page 6
முகவுரை
கிரிக்கெட் என்பது இன்று மிகவும் பிரபல்யம் வாய்ந்த ஒரு விளையாட்டாக இருக்கின்றது. சர்வதேச மட்டத்தில் பல நாடுகளை அது தன்பக்கம் ஈர்த்து வருகின்றது. குறிப்பாக சார்க் நாடுகளின் நான்கில் முக்கியத்துவம் பெற்றுள்ளதைக் காணலாம்.
இலங்கையின் தேசிய விளையாட்டாக இல்லாவிட்டாலும் நாட்டின் மூலை முடுக்குகளில் உள்ள மக்களின் மனதில் ஆல விருட்சம்போல் வியாபித்துள்ளது. எமது நாட்டின் தேசிய விளையாட்டு எதுவென்று தெரியாத ஒரு பையன்கூட உலக கிரிக்கெட் வீரர்களின் பெயர்ப் பட்டியலை ஒப்புவித்துச் சொல்லுவான்.
இதற்குக் காரணம் இலங்கை தேசிய அணிகளுக்கிடையே கிரிக்கெட் அணியினால் மாத்திரமே சர்வதேச மட்டத்தில் போட்டி ஒன்றில் வெற்றியீட்டி சாதனை புரியக் கூடியதாயுள்ளது.
மிக நீண்ட காலமாக இலங்கை மக்கள் மத்தியில் குறிப்பாக கிராமப் புரங்களில் கூட உதைபந்தாட்டம், கரப்பந்தாட்டம் என்பன ஜனரஞ்சக விளையாட்டுக்களாகப் பிரகாசித்தன. எனினும் இன்று அந்த இடத்தைக் கிரிக்கெட் பிடித்துள்ளதை நாம் காண முடியும்.
நகரப் புரங்களில் மைதான வசதிகள் பெறாத பகுதிகளில் கூட சிறுவர்கள் பாதைகளில் மென்பந்து கிரிக்கெட் ஆடுவதையும் அறுவடைக் காலங்களில் கிராமப்புற வயல்வெளிகள் கிரிக்கெட் ஆடுகளங்களாக மாறுவதையும் நாம் காண்கின்றோம்.
இத்தகையை ஒரு சூழ்நிலையில் தமிழ் பேசும் மக்களுக்குப் போதியளவு விளையாட்டுத்துறை சம்பந்தமான விடயதானங்கள் கிடைக்காதிருப்பது ஒரு பெரும் குறைபாடாக உள்ளது. வானொலியிலோ, தொலைக்காட்சியிலோ நேர்முக வர்ணனைகள் தமிழில் முறையாக இடம்பெறுவதில்லை.
viii

சிங்கள, ஆங்கில மெரழிகளில் போன்று தினசரி பத்திரிகைகளில் விளையாட்டுச் செய்திகள் வெளிவருவது குறைவு. அத்தோடு விளையாட்டுத்துறை சார்ந்த சஞ்சிகைகளோ புத்தகங்களோ தமிழில் வெளிவருவதில்லை. இது கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு பெரும் குறையாக உள்ளது.
இந்நிலையில் விளையாட்டுத்துறை சார்ந்த எனது மூன்றாவது புத்தகத்தை வெளியிடுவதன் மூலம் இக்குறைபாட்டை ஒரளவேனும் நிவர்த்தி செய்யலாம் என நினைக்கிறேன். எனது முன்னைய இரு நூல்களுக்கும் கிடைத்த வரவேற்பு நிச்சயம் இதற்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன்.
எழுத்துக் கோர்வையாக இருந்த எனது ஆக்கத்தினை அச்சுக் கோர்த்து நூலுருவில் உங்கள் கரங்களில் வந்து சேர உதவிய தேசிய நூலக, ஆவணவாக்கல் சேவைகள் சபைக்கு என் நன்றிகள் என்றும் உரித்தாகும்.
தங்களது வேலைப் பளுவுக்கு மத்தியில் அணிந்துரை உவந்தளித்த தினகரன் முன்னாள் ஆசிரியர் திரு. ஆர். சிவகுருநாதன் அவர்களுக்கும் அறிமுக உரை உவந்தளித்த கலாநிதி துரை. மனோகரன் அவர்களுக்கும் எப்போதும் என் நன்றிகள் உரித்தாகும்.
இந்தப் புத்தகத்தை முழுமையாக டைப் செட்டிங் செய்து பக்கங்களை வடிவமைத்தவர் M.S.M. அஸ்லம், அழகான புத்தக உருவில் வெளிக் கொணர உதவியவர் M.I.M. அச்சக உரிமையாளர் அல்ஹாஜ் M.J.M. முஸம்மில், புத்தகத்தை ஒப்பு நோக்கி உதவியவர்கள் கவிஞர் வி. ஜெகதீஸன், அறிவிப்பாளர் அஹமத் நஸிர் ஆகியோர். எனது எண்ணத்துக்கு ஏற்ப அட்டைப் படத்துக்கு உருக் கொடுத்தவர் கலைஞர் ஏ. அஸிஸ் நிஸாருத்தீன். -
ஒன்பது கிரிக்கெட் வீரர்களின் சாதனைகளின் சுருக்கத்தை இந்தப் புத்தகத்தில் தந்துள்ளேன். இது தொடர்பான உங்களது ஆக்கபூர்வமான விமர்சனங்களை எதிர்பார்த்து விடைபெறுகின்றேன்.
அன்புடன் நூராணியா ஹஸன்
157, Uyanwatta, Devanagala, MaWianella.
ix

Page 7
பொருளடக்கம்
முத்தையா முரளிதரன் இம்ரான்கான் அலன்போடர் கபில்தேவ் விவியன் ரிட்சாட்ஸ் கிரஹம் கூச் மைக்கல் ஹோல்டின் சேர் ரிச்சட் ஹட்லி
துலிப் மெண்டிஸ்
பக்கம்

ULIE866f
முத்தையா முரளிதரன்
இம்ரான்கான்
S9606ðIG3 UTLs
கபில்தேவ்
விவியன் ரிட்சாட்ஸ்
கிரஹம் கூச்
மைக்கல் ஹோல்டின்
சேர் ரிச்சட் ஹட்லி
துலிப் மெண்டிஸ்
X
பக்கம்

Page 8

முத்தையா முரளிதரன்
இது இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் என்றுமே மறக்க முடியாத, மரிக்கப்படக்கூடாத பெயர். இன்று தேசிய மட்டத்தில் மாத்திரமன்றி சவதேச மட்டத்திலும் அடிக்கடி உச்சரிக்கும் ஒரு பெயர். முரளிதரன் இலங்கை கிரிக்கெட் வளர்ச்சிக்கு அளித்துள்ள பங்களிப்பு அாப்பரியது. பல வெற்றிகளின் பின்னணியில் அவர் இருந்துள்ளார்.
ம6)லயகம் கலையுலகுக்குத் தந்த போஷகர், இந்து மத பக்தர் தொழிலதிபர் திரு. எஸ். முத்தையா, அவர்களின் சிரேஷ்ட புதல்வராக முரளிதரன் 1971ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17ம் திகதி கண்டியில் பிறந்தார்.
அவர் தனது சிறுபராயம் முதல் கிரிக்கெட்டில் மிகுந்த ஆர்வம் காட்டினார். அவரது ஆர்வத்துக்கு பெற்றோர் உறுதுணையாக இருந்து வந்தனர். பாடசாலைப் பருவத்தில் அவரது கிரிக்கெட் ஆர்வம் சரியாக வெளிக் கொணரப்பட்டது. அங்குதான் சாதனைகளுக்கு ஆரம்பப்படி இடப்பட்டது.
கடுகளில்தோட்டை சாந்த அந்தோனியார் கல்லூரியில் சேர்ந்து தனது ஆரம்பக் கல்வியைத் தொடர்ந்ததனால் இரண்டாம் வகுப்பிலிருந்தே கிரிக்கெட்டில் ஆர்வம் காட்டினார். பாடசாலை வேளையில் குறிப்பிட்ட நேரம்தான் விளையாடும் வாய்ப்புக் கிடைத்தது.
அவர் மாலை வேளைகளில் இரண்டு அல்லது மூன்று மணித்தியாலங்கள் மென் பந்து கிரிக்கெட் ஆடுவார். அவர் எட்டு வயதாக இருக்கும்போதுதான் கடினப் பந்து (லெதர் போல்) மூலம் ஆடும் வாய்ப்பைப் பெற்றார். ஆறாம் வகுப்பில் இருந்து விடுதியில் சேர்ந்தது அவருக்கு உதவியாயிற்று.
அவரது ஆரம்பப் பயிற்றுநரான சுனில் பெர்னான்டோ ஆரம்பத்தில் வேகப்பந்து விசவே பயிற்றுவித்தார். முரளி 13 வயதை
நாரரரிையர ஹலனர்

Page 9
அடையும்போது அவர் சுழல் பந்து வீச்சில் திறமை காட்டுவதை இனங்கண்ட பயிற்றுநர் புற சுழல் பந்து வீச ஊக்கப்படுத்தினார்.
வெகு விரைவிலேயே குறுகிய தூரம் ஓடி, புற சுழல் பந்து (ஒவ்ப் ஸ்பின் வீசக் கற்றுக் கொண்டார். அத்தோடு பாத சுழல் (லெக் எப்பின்) வீசுவதிலும் திறமை காட்டினார். ஆரம்ப வருடத்தில் ஒரு சகல துறை ஆட்டக்காரராகவே அணியில் (5வது வீரர்) இடம் பெற்றார்.
அப்போது பாடசாலையில் ருவன் கல்பகே, பியால் விஜேதுங்க போன்றோர் இடம் பெற்றதால் முரளிக்கு பந்து விசுவதற்கான வாய்ப்பு அரிதாகவே கிடைத்தது. இவர்கள் இருவரும் பிற்காலத்தில் தேசிய அணியில் இடம்பெற்ற போதும் தொடர்ந்து பிரகாசிக்கவில்லை.
எனினும் அடுத்த வருடம் ருவன் கல்பகே பாடசாலையில் இருந்து வெளியேறியதைத் தொடர்ந்து பிரதான புற சுழல் பந்து வீச்சாளராக முரளியே பிரகாசிக்க ஆரம்பித்தார். பியால் விஜேதுங்காவும், பாடசாலையில் இருந்து வெளியேற முழுப் பொறுப்பும் முரளிதரனையே அடைந்தது.
பாடசாலை பருவ ஆட்டத்தில் 1990ல் 109 விக்கெட்டுக்களையும் 1991ல் 127 விக்கட்டுக்களையும் கைப்பற்றினார். இதன் மூலமே தேசிய மட்டத்தில் முரளிதரனின் பெயர் அடிபட ஆரம்பித்தது.
அப்போது அவரது அணித் தலைவராக இருந்த டெமியன் நடராஜா முரளியை தமிழ் யூனியன் விளையாட்டுக் கழகத்தில் இணையுமாறு ஊக்கப்படுத்தினார். அந்தக் காலத்தில் அவுஸ்திரேலிய அகடமி அணிக்கெதிராக ஆடும் வாய்ப்பை அவர் பெற்றார்.
சரவணமுத்து விளையாட்டரங்கில் நடந்த அப்போட்டியில் அவர் எட்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அதே வருடம் இங்கிலாந்து "ஏ" அணிக்கெதிராக கட்டுநாயக்க விமானப்படை மைதானத்தில் நடந்த போட்டியில் 68 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி திறமை காட்டினார்.
இங்கிலாந்துக்கான சுற்றுலாவில அவரால் திறமை காட்ட முடியவில்லை. என்றாலும் நல்ல அனுபவத்தைப் பெற்றுக்
சீக்கிகட் உலக சாதனையாரர்கள் ধ্ৰুষ্ট

கொண்டார். தொடர்ந்து 1992ல் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்டில் (ஆர். பிரேமதாள அரங்கு ஆடினார்.
அப்போட்டியில் கிரெக் மக்டமெட்டை ஆட்டமிழக்கச் செய்ததன் மூலம் தனது முதலாவது டெஸ்ட் விக்கெட்டை முரளி பெற்றுக் கொண்டார். இரண்டு டெஸ்ட்டுகளைக் கொண்ட அத்தொடரில் 4 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார். பந்து வீச்சு 73.1 ஓவர்கள் 12 ஒட்டமற்ற ஓவர்கள் 225 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்கள்.
அதனைத் தொடர்ந்து நியுஸிலாந்துக்கு எதிரான ஒரு டெஸ்ட்டில் 173 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.
முரளியின் வெளிநாட்டுக்கான முதலாவது சுற்றுலா 1993 - 94 களில் இந்தியாவுக்கு எதிரானதாகும். இந்தியாவுக்கு எதிராக மூன்று டெஎப்ட்டுகளில் 420 ஓட்டங்களுக்கு 12 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.
அவர் மிகுந்த திறமை காட்டிய முதலாவது வெளிநாட்டுச் சுற்றுலா 1995 - 96 களில் பாகிஸ்தானுக்கு எதிரானதாகும். மூன்று
தாராணரியா திறன்ை

Page 10
டெஸ்ட்டுகளைக் கொண்ட இச்சுற்றுலாவில் 410 ஓட்டங்களுக்கு 15 நபிக்கெட்டுகளைக் கைப்பற்றினார்,
உள்ளூரில் அவர் மிகுந்த திறமை காட்டியது 1997 - 98 களில் விம்பாப்பேக்கு எதிராக ஆடிய போட்டிகளிலாகும். இரண்டு டெஸ்ட்டுகளைக் கொண்ட தொடரில் 262 ஓட்டங்களுக்கு 17 விக்கேட்டுக்களைக் கைப்பற்றினார்.
வேளிநாடுகளில் சிறப்பாக மிளிர்ந்தது 1997 - 98 களில் இங்கிலாந்துக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியிலாகும். ஒரு போட்டியைக் கொண்ட தொடரில் 220 ஓட்டங்களுக்கு 16 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இதுவே அவரது சாதனைக்குரிய பந்து வீச்சாகும்.
இன்று உலகிலுள்ள சிறந்த புற சுழல் பந்து வீச்சாளர்கள் இருவர். ஒருவர் முத்தையா முரளிதரன் மற்றையவர் பாகிஸ்தானிய வீரர் சக்லின் முஸ்தாக்.
சக்லின் திறமை காட்டிய ஒரு வீரராக மிளிர்ந்தபோதும் இன்று பலராலும் எப்போதும் ஜெபிக்கப்படும் ஒரு பெயர்தான் முரளிதரன். அதற்குக் காரணம் அவரது சிறப்பான பந்து வீச்சாதும்.
"முரளிதரன் பளிங்குத் தரையில்கூட மிகச் சிறப்பான சுழற்சியைப் பெறும் ஆற்றல் உடையவர். வேறு எந்த சுழல் பந்து வீச்சாளராலும் இதனைச் செய்ய முடியாது" என்று இந்தியாவின் பிரபல மாஜி கிரிக்கெட் பீரர் கிருஷ்ணமாச்சாரி பூரீகாந்த் குறிப்பிட்டார்.
உலகிலுள்ள எந்த பிரபல துடுப்பாட்ட வீரருக்கும் எதிராக மிகவும் அச்சுறுத்தலாக அல்லது சவாலாகப் பந்து வீசக்கூடிய ஒருவர்தான் முரளிதரன் என்று முன்னணி கிரிக்கெட் விமர்சகரும் நேர்முக வர்ணனையாளருமான ட்டோனி கிரெக் குறிப்பிட்டார்.
முரளிதரன் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் பல மேடு பள்ளங்களைக் கண்டுள்ளார். முரளி திறமை காட்டும் சந்தர்ப்பங்களிலெல்லாம் அவர் மீது வினன் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுவதை கானக்கூடியதாக உள்ளது.
கிரிக்கெட் உலக சாதனையாரர்கர் <0-

1995-96 களில் அவுஸ்தரேலியாவிற்கான சுற்றுலாவிண்போது முரளியின் பந்து வீச்சில் நடுவர் டரல் ஹெயார் குறை கண்டார். முரளி பந்தை வீசி (சக்கிங்) எறிவதாக குற்றஞ்சாட்டினார். 14 தடவைகள் "நோ போல்” பந்துக்கான சமிக்ஞையைக் காட்டினார். (பாத சுழஸ் பந்து வீசிய சந்தர்ப்பத்திலும்கூட "நோ போஸ்" பிடித்தார்)
இந்த சந்தர்ப்பத்தில் அர்ஜுனா மறுமுனையில் பந்து வீசுவதற்கு முரளியை அழைத்த போது அந்தப் பகுதியிலிருந்த நடுவர் "நோ போல்" எனக் கூறவில்லை. இது உலகக் கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சீ.சி. கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டு அங்கு முரளியின் திறமை நிருபனமானது.
நியுஸிலாந்துச் சுற்றுலாவிலும் இத்தகையதோர் குற்றச்சாட்டு எழுந்து, சிதைந்துபோனது. இறுதியாக ஒவலில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியிலும் இங்கிலாந்து அணி பயிற்றுநர் லொயிட்ஸ் முரளியின் பந்து வீச்சில் குறைபிடிக்க முனைந்து தன்மீதே சேற்றைப் பூசிக் கொண்டார்.
அப்போட்டியில் முரளி 882 பந்துகள் வீசிய போதிலும் அனுபவமிக்க
நடுவர் டேவிட் ஷெபர்ட், எட் நிகலஸ் ஆகியோர் பந்து வீச்சில் எதுவிதக் குறையையும் பிடிக்கவில்லை.
தாராரிையா நறனர்

Page 11
இத்தகைய விமர்சனங்கள், அவரைப் பற்றிய சர்ச்சைகள் எழுந்தபோதெல்லாம் முரளிதரன் எதுவித சலனமுமின்றி மிகுந்த மனோ வலிமையுடன் காணப்பட்டார். அதனை ஒரு பொருட்டாகவே அவர் கொள்ளவில்லை. மிகுந்த மன உறுதியுடன் எதனையும் எதிர்கொள்பவர்.
முரளிரதன் மிகக் குறைவாகவே கதைப்பார். வீணாக வம்பளந்து கொண்டிருக்கமாட்டார். அது ஒரு செயல் வீரருக்குரிய பண்புதான். எனினும் மைதானத்தில் எப்போதும் சிரித்த முகத்துடனே அவரைக் காண முடியும். அவரது தீட்சண்ணியமான பார்வை மட்டும் எதிரணியின் விக்கெட்டுக்களை வீழ்த்துவதாகவே இருக்கும்.
முரளி தனது டெஸ்ட் வாழ்க்கையில் பல தடவைகள் சாதனைகள் பல படைத்தபோதும் ஒவல் மைதானத்தில் ஒரு சரித்திரத்தையே படைத்துவிட்டார். இங்கிலாந்து அணி தன்னைப் பற்றி கொண்டிருந்த கணிப்பீட்டையே மாற்றி விட்டார். உலக அரங்கில் இலங்கை அணியின் முகத்துக்கு புதிய முத்திரை குத்திவிட்டார்.
ஒரு டெஸ்ட்டில் 16 விக்கெட்டுகளை வீழ்த்திய ஐந்து பந்து வீச்சாளர்களுள் ஒருவராகத் தன் பெயரையும் சேர்த்துக் கொண்டார். 220 ஓட்டங்களைக் கொடுத்து 16 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். ஓர் இனிங்ஸில் 9 விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய 7வது வீரர் என்ற முத்திரையையும் பதித்தார். 65 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுக்கள்.
இலங்கையின் டெஸ்ட் வரலாற்றைப் பார்க்கும்போது முரளிதரனின் பங்களிப்பின்றி இரண்டு டெஸ்ட்டுகளில் மாத்திரம்தான் வெற்றி பெற்றுள்ளதைக் காணலாம். எனினும் ஏனைய அனைத்து டெஸ்ட் வெற்றிகளிலும் பல ஒரு நாள் ஆட்டங்களின் வெற்றிகளிலும் முக்கிய பலமாக இருந்துள்ளவர் முரளிதரன்.
முரளிதரனின் டெஸ்ட் வாழ்க்கையின் ஆரம்ப காலத்துடன் தற்போதைய நிலையை ஒப்பிட்டுப் பார்க்கும்போது அவர் நீண்ட பாய்ச்சலை அடைந்துள்ளதைக் காணலாம்.
முரளிதரனின் முதல் 50 விக்கெட்டுகளும் 13 டெஸ்ட்டுகளிலும்
இரண்டாவது 50 டெஸ்ட் விக்கெட்டுகளும் 14 டெஸ்ட்டுகளிலும் மூன்றாவது 50 விக்கெட்டுகளும் 9 டெஸ்ட்டுகளிலும் நான்காவது
கிரிக்கெட் உலக சாதனையானர்கள்

50 விக்கெட்டுகளும் 6 டெஸ்ட்டுகளிலும் கைப்பற்றப்பட்டிருப்பது அவரது முன்னேற்றப் பாதையைக் காட்டுகிறது.
ஐந்தாவது 50 விக்கெட்டுகளைக் கைப்பற்றுவதற்கு 11 டெஸ்ட்டுகள் தேவைப்பட்டதற்குக் காரணம் பல டெஸ்டுகள் மழை காரணமாக முழுமையாக நடைபெறாமையாகும்.
1998ம் ஆண்டு முரளிதரனின் டெஸ்ட் வாழ்க்கையில் மறக்க முடியாத ஓர் ஆண்டாகும். இவ்வருடம் அவர் 8 டெஸ்ட்டுகளில் ஆடி 68 விக்கெட்டுக்களை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். ஓவல் டெஸ்ட் முடிவடையும்போது தென் ஆபிரிக்க வீரர் அலன் டொனால்ட் 10 போட்டிகளில் 58 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி இரண்டாம் இடத்தில் இருந்தார்.
முரளிதரன் தற்போது 51 டெஸ்ட்டுகளில் 253 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியுள்ளார். தற்போதுதான் 29 வயதை எட்டிப் பிடித்துள்ள முரளிக்கு சாதனைகள் பல புரிய இன்னும் காலம் உண்டு.
எனினும், துரதிர்ஷ்டவசமாக இலங்கை அணிக்கு வருடத்தில் கிடைக்கும் டெஸ்ட்டுகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. இன்றேல், அவரது டெஸ்ட் வாழ்வில் மற்றொரு மைல்கல்லைக் கண்டிருப்பார்.
முரளிக்கு அதிக டெஸ்ட்டுகளில் ஆடும் வாய்ப்புக் கிடைத்திருந்தால் மிகக் கூடுதலான டெஸ்ட் விக்கெட்டுக்களைப் கைப்பற்றிய சுழல் பந்து வீச்சாளர் என்ற சாதனையைப் படைத்திருப்பார். தற்போது அவுஸ்திரேலிய பாத சுழல் பந்து வீச்சாளர் ஷேன் வோன் 350 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி முன்னணியில் இருக்கின்றார். முரளி 9வது இடத்தில் இருக்கின்றார்.
புற சுழல் பந்து வீச்சை (ஒவ்ப் ஸ்பின்) பொறுத்த வரையில் முன்னணியில் இருப்பவர் மேற்கிந்தியத் தீவு மாஜி வீரர் லான்ஸ் கிப்ஸ் அவர் 79 டெஸ்ட்டுகளில் 309 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியுள்ளார்.
இரண்டாம் இடத்தில் இருப்பவர் முரளிதான். 2000ம் ஆண்டுக்குப் பின்பாவது இலங்கைக்கு கூடிய டெஸ்ட்டுகளில் ஆடும் வாய்ப்புக் கிடைத்தால் அது முரளிக்குப் புதிய உந்து சக்தியாக மாறும்.
நாராணரியா ஹவர்ை

Page 12
லோட்சில் பந்து வீசி 16 விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய ஆடுகளம் ஒன்றும் பந்து வீச்சாளருக்கு சாதகமானதல்ல. அவ்வாறாயின் முதலாவது இனிங்ஸில் 20 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 1036 ஓட்டங்களைப் பெற முடியுமா? நான்கு சதங்களைப் பெற முடியுமா?
கிரஹம் ஹிக் 107, ஜோன் கிரொவ்லி 156, சனத் ஜயசூரிய 213, அரவிந்த டி. சில்வா 152 ஓட்டங்களைப் பெற்றனர். இதுவே முரளியின் திறமைக்கு ஓர் எடுத்துக்காட்டு.
முரளி பாகிஸ்தான் டெஸ்ட் தொடர் முடிவுறும் போது 51 டெஸ்ட்டுகளின் 68 இனிங்ஸ"களில் 27 தடவைகள் ஆட்டமிழக்காது ஆடி 531 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். (சராசரி 12.98) கூடிய ஒட்டம் 39 (இந்தியாவுக்கு எதிராக எஸ்.எஸ்.ஸி. யில் 1997-98) 26 கட்சுகளைப் பிடித்துள்ளார்.
பந்து வீச்சில் 51 டெஸ்ட்டுகளில் 16161 ஓவர்கள் பந்து வீசி (674 ஒட்டமற்ற ஓவர்கள்) 6660 ஓட்டங்களைக் கொடுத்து 253 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியுள்ளார். சிறப்பானது 65 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுக்கள் (இங்கிலாந்துக்கு எதிராக ஒவலில்) சராசரி 26.23 இனிங்ஸில் 5 விக்கெட்டுக்கள் 18 தடவைகள் போட்டியில் 10 விக்கெட்டுக்கள் 3 தடவைகள்.
ஒருநாள் சர்வதேச ஆட்டங்களில் 132 போட்டிகளில் 63 இனிங்ஸில் 28 தடவைகள் ஆட்டமிழக்காது ஆடி 185 ஓட்டங்கள் கூடிய ஓட்டம் 18 சராசரி 6.13 கட்சுகள் 61.
பந்து வீச்சில் 7093 ஓவர்கள் பந்து வீசி (57 ஓட்டமற்ற ஓவர்கள்) 4961 ஓட்டங்களுக்கு 183 விக்கெட்டுக்கள் (சராசரி 27.11) சிறப்பானது 23 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்கள். 5 விக்கெட்டுக்கள் கைப்பற்றியது இரண்டு தடவை. 4 விக்கெட்டுக்கள் கைப்பற்றியது மூன்று தடவை.
རི་
கிரிக்கெட் உலக சாதனையானர்கர்ை 

இம்ரான்கான்
கிரிக்கெட் உலகிலுள்ள சகல துறை ஆட்டக்காரர்களிடையே இம்ரான்கானுக்கு தனியிடமுண்டு. குறிப்பிட்ட காலத்துக்குள் பல சாதனைகள் படைத்து ரசிகர்களின் மனதில் இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பவர்.
1952 ம் ஆண்டு நவம்பர் மாதம் 30 ஆம் திகதி லாகூரில் பிறந்த இம்ரான்கான் தனது ஆரம்பக் கல்வியை லாகூரிலுள்ள ஐரோப்பிய பாடசாலையொன்றில் தொடர்ந்தார். அவர் சிறு பராயத்திலேயே கல்வியில் மிகுந்த ஆர்வமுள்ளவராகவும், திறமை காட்டக் கூடியவராகவும் இருந்தார். v
இம்ரான்கானின் தந்தை பாகிஸ்தானில் மதிக்கப்படும் ஓர் உயர்ந்த வம்சத்தைச் சேர்ந்த நிலச் சுவாந்தரர். தனது மகன் எதிர்காலத்தில் பாகிஸ்தானின் நிருவாக அதிகாரி ஒருவராகவோ அல்லது வர்த்தகர் ஒருவராகவோ வரவேண்டுமென்றே அவர் எதிர்பார்த்தார். கிரிக்கெட் வீரராக இவ்வாறு புகழ் சேர்ப் பார் என்று கனவிலும் எதிர்பார்க்கவில்லை.
எனினும் இம்ரான்கானின் குடும்பத்தைச் சேர்ந்த ஜாவிட் பர்க்கி, மஜீத்கான் போன்றோர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு மிகுந்த பங்களிப்பு செய்துள்ளனர். பாகிஸ்தானின் கான் பரம்பரையினர் பிரபு வர்க்கத்தினைச் சேர்ந்தவர்கள் பாகிஸ்தான் உருவாவதற்கு முன்னர் மஜீத் கானின் தந்தையான ஜொனாத் ஜிரிகான் இந்தியாவுக்காக டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார்.
இம்ரான்கான் கிரிக்கெட் உலகில் நுழைவதற்கு காரணமாக
அமைந்ததே தற்செயலாக நடந்த ஒரு சம்பவம் தான். ஒருநாள் பாடசாலையில் விளையாட்டுப் பயிற்சியிலிடுபட்டிருந்த இம்ரானுக்கு
Az6/7a/76zozofzur s2avo67Uozoi

Page 13
இரண்டொரு பந்துகளை வீச வேண்டுமென்ற ஆசை எழுந்தது. பந்துகளை வீசினார்.
இம்ரான் பந்து வீசுவதை தூரத்திலிருந்து அவதானித்துக் கொண்டிருந்த பாடசாலை கிரிக்கெட் பயிற்றுநர் இம்ரான்காணுள் மறைந்திருக்கும் திறமையை இனங்கண்டு கொண்டார். பாடசாலை அணிக்கு வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் அவசியமாய் இருந்ததால் இம்ரானுக்கு பயிற்சி பெறுமாறு ஆலோசனை வழங்கினார்.
பாடசாலை அணியில் சேர்ந்து தனது கன்னிப் போட்டியின் ஆரம்ப ஓவரில் அவர் வீசிய முதல் மூன்று பந்துகளுமே துடுப்பாட்ட வீரர்களை ஆட்டமிழக்கச் செய்தன. பாடசாலையிலிருந்து விலகிய பின்பு அவர் லாகூர் ஜிம்கானா கிரிக்கெட் கழகத்தில் சேர்ந்து கொண்டார்.
1969-70களில் லாகூர் "ஏ" அணியில் அங்கத்துவம் பெற்றார். அதன் பின்பு தொழில் ரீதியான கிரிக்கெட் ஆட்டங்களில் ஈடுபடுவதற்கு இங்கிலாந்து சென்றார். 1971இல் ஓஷடர்ஷயர் மாநில அணியில் இணைந்து முதல்தரப் போட்டிகளில் ஆடினார்.
1971 இல் இங்கிலாந்து மாநில போட்டிகளில் கலந்து கொண்டு அவர் காட்டிய திறமையைக் கண்டு, அந்நாட்டு நடுவர் ஒருவர் மாநில அணித் துடுப்பாட்ட வீரர்களைப் பார்த்து இப்படிச் சொன்னார்.
"உங்களுக்கு விரைவிலேயே பாகிஸ்தானிய பந்து வீச்சாளர் ஒருவருக்கு முகம் கொடுக்க வேண்டியேற்படலாம். அவருக்கு இன்னும் 18 வயதாகவில்லை. அவரது முதல் சுற்றுலாவும் இதுதான். அவர் உங்களுக்கு மிகுந்த அச்சுறுத்தலாகப் பந்து வீசுவார் என்று நம்புகிறேன்".
இந்தச் செய்தி அந்நாட்டு கிரிக்கெட் அரங்குகளில் பரவுவதற்கு மிகச் சொற்ப நேரமே எடுத்தது. இச்செய்தி காற்றோடு கலந்த வேளை பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வீரர் ஒருவர் இம்ரானின் பந்து வீச்சினால் பாரதூரமான காயத்துக்குள்ளானார்.
பாகிஸ்தானில் வேகப் பந்து வீச்சாளர்கள் காயமுற்றிருந்தமையினால் 1982-83களில் இந்தியாவுடனான ஆறு போட்டிகளைக் கொண்ட
கிரிக்கிகட் உலக சாதனையானர்கர்

தொடரில் சிறப்பாக பந்து வீசி 40 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். டெஸ்ட் தொடரொன்றில் இந்தியாவை இந்தியாவிலும் இங்கிலாந்தை இங்கிலாந்திலும் தோற்கடித்த முதல் பாகிஸ்தான் அணித் தலைவர் இம்ரான்கான்தான்.
1987இல் இந்தியாவுடன் இந்தியாவில் வெற்றி பெற்ற டெஸ்ட்டில் முதலாவது இனிங் எரில் 116 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து, பாகிஸ்தானிய ஆரம்பத் துடுப்பாட்ட
வீரர்கள் அதைரியமாக இருந்த போது, இரண்டாம் இனிங் ஸ் ஜாவிட் மியனன்டாடை ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக ஆடுகளத்திள் அனுப்பினார்.
இந்த டெஸ்ட்டில் பிரபல பாத (லெக்) சுழல் பந்து வீச்சாளர் அப்துல் காதிரை நீக்கிவிட்டு புற (ஒவ்ப்) சுழல் பந்து வீச்சாளர்களான தப்எஃப் அஹமதையும் இக்பால் காஸிமை அணியில் சேர்த்திருந்தமை அவரது சிறந்த தலைமைத்தவத்துக்கு எடுத்துக் காட்டாகும் என்று இந்தியாவின் முன்னணி விளையாட்டு சஞ்சிகையான "எப்போர்ட் எப்டார்" அப்போது எழுதியிருந்தது.
தாராணிபர தரபைனர்

Page 14
இம்ரான்கான் பிற்காலத்தில் சிறந்ததொரு துடுப்பாட்ட வீரராகவும் இருந்து அணியின் வெற்றிகளில் பங்கு கொண்டார். அதே போன்று பல சந்தர்ப்பங்களில் அணியை தோல்வியிலிருந்து மீட்கவும் அவரது துடுப்பாட்டம் பேருதவி செய்துள்ளது.
வெற்றி பெற்ற இந்திய தொடரில் மிகக் கூடுதலான ஓட்டமான 135ஐ இம்ரான்கானே பெற்றார். அத்தொடரில் இம்ரானும் மியண்டாடும் மாத்திரமே 50துக்கு அதிகமான சராசரியைப் பெற்றிருந்தனர்.
அதே போன்று 1987 இல் மேற்கிந்தியத் தீவுகள் அணியுடன் இடம்பெற்ற டெஸ்ட் தொடரை தனது சிறப்பான துடுப்பாட்டத்தின் காரணமாக வெற்றி தோல்வியின்றி முடித்துக் கொண்டார்.
பைஸலாபாத்தில் நடந்த முதலாவது டெஸ்ட்டில் பாகிஸ்தானும் லாகூரில் நடந்த இரண்டாவது டெஸ்ட்டில் மேற்கிந்தியத் தீவுகளும் வெற்றி பெற்ற நிலையில் கராச்சியில் இடம் பெற்ற இறுதி டெஸ்ட்டே தொடரின் வெற்றி யாருக்கு என்பதை தீர்மானிக்க இருந்தது.
கராச்சி டெஸ்ட்டில் பாகிஸ்தான் 7 விக்கெட்டுகளை இழந்து ஓர் இக்கட்டான நிலையில் இருந்த பொழுது ஒரு நாள் முழுதும் விக்கெட்டை பாதுகாத்து ஆடி பாகிஸ்தான் அணியை தோல்வியில் இருந்து மீட்டுக் கொண்டார்.
இதன் மூலம் கராச்சியில் பாகிஸ்தான் என்றுமே தோல்வியுறாத சாதனையை பாதுகாக்க முடிந்தது. 1956ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகள் இடம்பெற ஆரம்பித்த கராச்சி மைதானத்தில் இதுவரை பாகிஸ்தான் தோல்வியுறாதது சிறப்பம்சமாகும்.
1987ம் ஆண்டு இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் இடம்பெற்ற நான்காவது உலகக் கிண்ணப் போட்டியில் இம்ரான்கானின் பாகிஸ்தான் அணி வெற்றியீட்டும் என்றே பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. எனினும் எவருமே எதிர்பாராத விதத்தில் அரை இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியாவுடன் தோல்வியுற்றது.
இதனைத் தொடர்ந்து அவர் கிரிக்கெட் உலகிற்கு பிரியாவிடை
கொடுக்கத் தீர்மானித்தார். எனினும் அப்போதைய பாகிஸ்தானிய ஜனாதிபதி ஸியாஉல் ஹக்கின் தனிப்பட்ட வேண்டுகோளுக்கு
கிரிக்கெட் உலக சாதனையானர்கர்ை <12)

இணங்க தொடர்ந்தும் ஐந்தாவது உலகக் கிண்ணம் வரை பாகிஸ்தான் அணிக்குத் தலைமை தாங்க இணங்கினார். இம்ரானின் சிறந்த தலைமைத்துவத்தினால் ஐந்தாவது உலகக் கிண்ணத்தை பாகிஸ்தான் வெற்றி கொண்டது.
வேறு எந்த உலக அணித் தலைவருக்கும் இல்லாத அதிகாரம் இம்ரானுக்கு இருந்தது. இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை எடுக்கும் தீர்மானங்களை பல சந்தர்ப்பங்களில் அவர் மாற்றியுள்ளார்.
இது பல புதிய வீரர்களின் திறமைகளை வெளிக் கொணர்வதற்கு நல்ல வாய்ப்பாக அமைந்தது. இன்று பாகிஸ்தான் அணியிலுள்ள பல வீரர்கள் இம்ரான்கானின் தேர்வே.
பிரபல வேகப்பந்து வீச்சாளர்களான வளிம் அக்ரம், வக்கார் யூனுஸ், மாஜி சுழல் பந்து வீச்சாளர் அப்துல் காதிர், இன்ஸமாமுல் ஹக், ஸஹிட் அன்வர், இஜாஸ் அஹமட் உட்பட சிறந்த பல வீரர்களை இம்ரான் அறிமுகப்படுத்தியுள்ளார்.
இம்ரானின் தலைமைத்துவத்தைத் தொடர்ந்தே பாகிஸ்தானில் வேகப் பந்து வீச்சாளர்களுக்குச் சாதகமான ஆடுகளங்கள் அதிகரித்தன. அதற்கு முன்பு சுழல் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான ஆடுகளங்களே பாகிஸ்தானில் அதிகமாகக் காணப்பட்டன.
இம்ரான்கான் தனது 42வது வயதில் திருமணம் செய்தார். அவர் கைபிடித்த யூத யுவதிக்கு வயது 21. பாகிஸ்தானில் அவரது திருமணத்திற்கு பல விமர்சன அலைகள் எழுந்த போதும் அதனால் அவர் அள்ளுண்டு போகவில்லை.
அவரது மனைவியின் தகப்பனார் மிகப்பெரும் கோடீஸ்வரர்களுள் ஒருவர். இம்ரான் தனது அரசியல் எதிர்காலத்துக்காகவே இத்திருமணத்தை செய்தார் எனப் பலரும் அப்போது எழுதினர்.
அரசியல் பிரவேசத்திற்காக தனது வாழ்க்கை முறையையே முழுமையாக அவர் மாற்றிக் கொண்டார். இங்கிலாந்தில் உயர் கல்வி கற்று, ஓர் ஆங்கிலேயனை ஒத்ததாக இருந்த அவரது உடை, நடை, பாவனைகளை மாற்றி சல்வார் கமிஸ் அணிந்ததோடு ஏனையோருக்கும் அவ்வாறு அணியுமாறு வேண்டுகோள் விடுத்தார்.
Esmurofur Avenusai *լ

Page 15
ஆங்கிலத்திற்குப் பதிலாக உருது மொழியைக் கற்குமாறு பாகிஸ்தானியரை அழைத்தார். அரசியல் ஊழல்களுக்கெதிராக குரல் கொடுத்தார். எனினும் தேர்தலில் அவரது கட்சியால் ஓர் ஆசனத்தைக் கூட பெற முடியவில்லை.
அவர் சுற்றுலாச் செல்லும் இடங்களில் இளம் பெண்களுடன் நெருங்கிப் பழகினார். இங்கிலாந்தில் அவர் கலந்து கொள்ளும் போட்டிகளைக் கண்டு கழிக்கவே பெரும் திரளான பெண் ரசிகைகள் வருவது வழக்கம். அவர் திருமணமாகும் வரை எந்த ஒரு பெண்ணும் தன்னோடு சம்பந்தப்படுத்திக் கதைக்கவில்லை.
திருமணத்திற்குப் பின்புதான் பலர் அவர்தமது மாஜிக்காதலன் என்றனர். அமெரிக்கப் பெண்ணொருவர் தனது குழந்தையின் தகப்பன் இம்ரான்தான் என வழக்குத் தொடுத்தார். எது எவ்வாறிருப்பினும் அவர் தனது தாயின் மீது மிகுந்த அன்பு வைத்திருந்தார்.
இதன் காரணமாகத் தான் உயிருக்குயிராய் நேசித்த ஹிந்தி நடிகை ஸினத் அமனுடனான நேசத்தை முறித்துக் கொண்டார். தனது தாய் புற்றுநோயால் இறந்ததைத் தொடர்ந்து அவரது ஞாபகார்த்தமாக லாஹ"ரில் பாரிய செலவில் புற்றுநோய் வைத்தியசாலை ஒன்றை நிர்மாணித்துள்ளார்.
இம்ரான்கான் 88 டெஸ்டுகளின் 126 இனிங்ஸ்களில் 25 தடவைகள் ஆட்டமிழக்காது 3807 ஓட்டங்கள் பெற்றுள்ளார். (சராசரி 37.69) கூடிய ஓட்டம் 136, சதம் 6, அரைச்சதம் 18, கெட்சுகள் 28.
பந்து வீச்சில் 19,458 பந்துகள் வீசி, 8258 ஓட்டங்களைக் கொடுத்து 362 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார். (சராசரி 22.81) சிறப்பான பந்து வீச்சு 58 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுக்கள் 23 தடவைகள் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளுக்கு மேல் கைப்பற்றியுள்ளார். 6 தடவைகள் போட்டியில் பத்து விக்கெட்டுகளுக்கும் மேல் கைப்பற்றியுள்ளார்.
கிரிக்கெட் உலக சாதனையானரர்கர்ை
 

அலன் போடர்
உலக கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வு பெற்ற சாதனைக்குரிய ஒரு வீரர்தான் அலன்போடர். இடது கைத் துடுப்பாட்ட வீரரான அலன் போடர் ஒரு துடுப்பாட்ட வீரராகவும் பந்து வீச்சாளராகவும் மாத்திரமன்றி சிறந்த தலைவராகவும் பங்காற்றியுள்ளார். உலகின் ஆகக் கூடிய டெஸ்ட் ஓட்டங்கள் பெற்றவர் என்ற சாதனைக்குரியவர் அலன் போடர்தான்.
1955 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 27ம் திகதி நிவ் சவுத் வேல்ஸ் கிரமோனில் பிறந்த அலன் ரொபட் போடர். சிறு வயது முதலே கிரிக்கெட்டில் மிகுந்த ஆர்வம் காட்டினார்.
பாடசாலைக்குச் செல்லும் சிறு பராயத்திலே பழைய கிரிக்கெட் வீரர்களினாலும் பெரிதும் கவரப்பட்டிருந்தார். மாலை நேரங்களிலும் விடுமுறை தினங்களிலும் அப்பகுதியில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளைக் கண்டுகளிக்கத் தவறுவதில்லை.
1976இல் முதல்தரப் போட்டிகளில் ஆட ஆரம்பித்த அலன் போடர் 1978இல் தனது கன்னி முதல் தரச் சதத்தைப் பெற்றார். அதனைத் தொடர்ந்து, ஒரு மாத காலத்தின் பின்பு டெஸ்ட் கதவுகள் திறக்கப்பட்டன.
1979 மார்ச் மாதம் பாகிஸ்தானுக்கு எதிராக மெல்போர்னில் நடந்த டெஸ்ட்டில் 105 ஓட்டங்கள் பெற்றதன் மூலம் தனது கன்னி டெஸ்ட் சதத்தைப் பெற்றுக் கொண்டார். அதற்கு சரியாக ஒரு வருடத்திற்கு பின்பு 1980 மார்ச்சில் இரண்டு இனிங்சிலும் 150 ஓட்டங்களுக்கு மேல் பெற்ற முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.
அலன் போடர் காயம் ஏற்பட்ட சந்தர்ப்பங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து சந்தர்ப்பங்களிலும் அவுஸ்திரேலிய அணிக்காக தொடர்ந்து
காராணிமா ஹவன்

Page 16
பங்களிப்பு செய்துள்ளார். அவரது அபாரத் திறமை காரணமாக அவரது ஸ்தானம் எய்திரமாகவுள்ளது. அவுஸ்திரேலிய அணியின் பல வெற்றிகளின் முக்கிய பங்காளியாக போடரே இருந்து சேவையாற்றியுள்ளார். பல சந்தர்ப்பங்களில் அவரது பந்து வீச்சு எதிரணிக்கு பெரும் சவாலாக இருந்துள்ளது.
அலன் போடரின் அபாரத் திறமை காரணமாக 1984ஆம் ஆண்டு அணித் தலைமைக் கிரிடம் அவருக்குச் சூட்டப்பட்டது. அப்போது அவுஸ்திரேலிய அணி மிகவும் நலிவுற்றிருந்தது. அந்த அணியைக் கட்டியெழுப்புவதில் கடுமையாக உழைத்தார்.
1987 ஆம் ஆண்டு நான்காவது உலகக் கிண்ணப் போட்டியில் கலந்து கொள்ளச் சென்ற அவுஸ்திரேலிய அணி இலங்கை, ஸிம்பாபே அணிகளை விட மாத்திரமே முன்னணியில் (ஆறாவது இடம்) இருந்தது. எனினும் போடரின் சிறந்த வழிகாட்டலினால் நான்காவது உலகக் கின்ைனத்தை அவுஸ்திரேலியா சுமந்து சென்றது.
அதனைத் தொடர்ந்து அவுஸ்திரேலிய அணி உலக அரங்கில் சிறப்பாக பிரகாசிக்க ஆரம்பித்தது. டெஸ்ட் போட்டிகளிலும் ஒருநாள் ஆட்டங்களிலும் உலகில் உள்ள எந்தவொரு அணிக்கும் சளைக்காத அணியாக தன்னை வளர்த்துக் கொண்டது. அதற்கு முன்னின்று வழிகாட்டிச் சென்றவர், அணித் தலைவர் அலன் போடர்தான்.
1987 டிசம்பரில் டெஸ்ட் வாழ்க்கையில் மிகக் கூடுதலான ஓட்டமான 205ஐ நியூசிலாந்துக்கு எதிராக பெற்றார். போடரின் தலைமையில் முதன் முதலாக இத்தொடரிலேயே அவுஸ்திரேலியாவுக்கு வெற்றி கிடைத்தது. 1988 ஆம் ஆண்டில் மெல்போர்னில் தனது 100வது போட்டியில் கலந்து கொண்டார்.
1989 ஜனவரியில் மேற்கிந்திய தீவுக்கு எதிராக சிட்னியில் நடந்த போட்டியில் முதலாவது இனிங் எபிஸ் 46 ஓட்டங்களுக்கு ? விக்கெட்டுக்களையும் இரண்டாவது இனிங்ஸில் 50 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும் கைப்பற்றி பந்து வீச்சில் திறமை காட்டினார். இப்போட்டியில் அவரது சிறப்பான பந்து வீச்சினால் அவுஸ்திரேலியா வெற்றி பெற்றது.
1989 ஆகஸ்ட் மாதம் ஆஷ்ஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணியைத் தோற்கடித்தார். 1993இல 10,000 டெஸ்ட் ஓட்டங்களைப்
கிரிக்கிகட் உலக சாதனையாளர்கள் <16)

பூர்த்தி செய்தார். 1993 ஆகஸ்ட்டில் மீண்டும் இங்கிலாந்துடனான ஆஷ்ஷஸ் தொடரில் அவுஸ்திரேலியாவுக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுத்தார். 1994 ஜனவரியில் அவுஸ்திரேலியாவில் தனது இறுதிப் போட்டியில் (சிட்னி விளையாட்டரங்கில்) கலந்து கொண்டார் 1994 மே மாதம் ஓய்வு பெற்றார்.
அவர் கிரிக்கெட் உலகிற்கு பிரியாவிடை கொடுத்தது, தனது சொந்த விருப்பத்தின் பேரிலாகும். மேலும் சில வருடங்கள் ஆடி திறமை காட்டக் கூடிய வாய்ப்பு அவருக்கு இருந்த போதிலும் இளம்
வீரர்களுக்கு வாய்ப்பளிப்பதற்காகவே ஓய்வு பெற்றார். அவர் ஓய்வு பெறும் பொழுது ஏனைய எந்த கிரிக்கெட் வீரரும் படைக்காத பல சாதனைகளைப் படைத்தார்.
அவர் தொடர்ச்சியாக 156 போட்டிகளில் ஆடினார். வேறு எந்த ஒரு வீரரும் இதுவரை தொடர்ந்து 15ம் போட்டிகளில் கலந்து கொண்டது கிடையாது. இதன் பின்பும் அதற்கான வாய்ப்பில்லை. அதேபோன்று அவர் 93 போட்டிகளில் தொடர்ந்தேர்ச்சியாக அவுஸ்திரேலிய அணிக்கு தலைமை தாங்கினார்.
தாராரிையா ஆறுவனர் <&

Page 17
தொடர்ந்து இடைவிடாது கூடுதலான போட்டிகளுக்கு தலைமை தாங்கியவர். மேற்கிந்திய தீவுகள் வீரர் ஹாபில் சோபஸ் ஆவர். எனினும் அவர் 39 போட்டிகளுக்கே தலைமை தாங்கினார்.
டெஸ்ட் போட்டிகளில் மிகக் கூடுதலான ஓட்டங்களைப் பெற்று சாதனை படைத்தவர் அலன் போடர்தான். அவர் 11,174 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். இந்த சாதனையை எதிர்காலத்தில் முறியடிப்பது என்பது இலகுவானதல்ல.
டெஸ்ட் போட்டிகளில் மிகக் கூடுதலான கெட்சுகள் போடரே பெற்றுள்ளார். 154 கெட்சுக்களை அவர் பிடித்துள்ளார். அதற்கடுத்ததாக கிரேக் சபெல் 122, விவியன் ரிச்சாட்ஸ் 122, இயன் பொத்தம் 120, வொலி ஹமன்ட் 110 கெட்சுக்களைப் பிடித்துள்ளனர்.
போடரே மிகக் கூடுதலான டெஸ்ட் இன்னிங்ஸ"களில் ஆடியுள்ளார். அவர் 265 இனிங்ஸ"களில் ஆடியுள்ளார். சுனில் கவாஸ்கர் 214.
அலென் போடர் தனது ஆரம்ப காலத்தோடு ஒப்பிடும் போது, இறுதியாகக் கலந்து கொண்ட போட்டிகளில் சிறப்பாகத் திறமை காட்டாவிட்டாலும் கூட அதனை குறையாகக் கூற முடியாது. 17 போட்டிகளில் 25 இன்னிங்ஸ"களில் 972 ஓட்டங்களைப் பெற்றார். (சராசரி 40.50) இவற்றுள் 2 சதங்களும் 5 அரைச் சதங்களும் அடங்கும்.
இந்த ஓட்டங்களை மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கெதிராக 2 போட்டிகளிலும் இங்கிலாந்துக்கெதிராக 3 போட்டிகளிலும் பெற்றார். 1993இல் இங்கிலாந்துக்கெதிராக மிகச் சிறப்பாக ஆடி 6 போட்டிகளில் 9 இனிங்ஸ்களில் 433 ஓட்டங்களைப் பெற்றார். இவற்றுள் ஓர் இரட்டைச் சதம் (200) ஓர் அரைச்சதமும் (77) உட்படுகின்றன.
1993-94 களில் தான் இறுதியாகக் கலந்து கொண்ட தென்னாபிரிக்காவுக் கெதிரான தொடரில் 3 போட்டிகளின் 5 இனிங்ஸ்களில் 149 ஓட்டங்களைப் பெற்றார். இதில் ஓர் அரைச் சதமும் (84) உட்படுகின்றது.
அலன் போடர் இரண்டு தடவை 2 இனிங்ஸ"களிலும் சதம் பெற்றுள்ளார். 1979-80களில் பாகிஸ்தானுக்கு எதிராக லாகூரில்
கிரிக்கெட் உலக சாதனையாளர்கள்
 

150, 153 ஓட்டங்கள், 1985-86 களில் நியூசிலாந்துக்கெதிராக கிரிஸ் சர்ச்சில் 140, 114 ஓட்டங்கள். இது தவிர ஒரு வருடத்தில் 1000 ஓட்டங்கள் பெற்று, 3 தடவைகள் சாதனை படைத்துள்ளார்.
1979, 14 டெஸ்டுகளின் 27 இனிங்ஸில் 1073 ஓட்டங்கள். 1985 இல் 11 போட்டிகளின் 20 இனிங்ஸ்"களில் 1099 ஓட்டங்கள். 1986 இல் 11 டெஸ்டுகளில் 19 இனிங்ஸ"களில் 1000 ஓட்டங்கள்.
சுனில் கவாஸ்கர் மாத்திரமே இச்சாதனையை 4 தடவைகள் படைத்துள்ளார். போடர் 4 தடவைகள் டெஸ்ட் தொடரொன்றில் 500 இற்குமதிகமான ஓட்டங்களைப் பெற்று, சாதனை படைத்துள்ளார்.
டோடர் தனது 11,000 டெஸ்ட் ஓட்டங்களை இப்படித்தான் பூரணப்படுத்தினார்.
1000 - ஓட்டங்கள 13வது டெஸ்ட்டின் 26வது இனிங்ஸில் 1979 இல்
இங்கிலாந்துக்கெதிராக. 2000 - ஓட்டங்கள 27-வது டெஸ்ட்டின் 48 வது இனிங்ஸில் 198 இல் இந்தியாவிற்கெதிராக. t, 3000 - ஓட்டங்கள 39 வது டெஸ்ட்டின் 72வது இன்னிங்ஸில் 198
இல் மேற்கிந்திய தீவுக்கெதிராக. 4000 - ஓட்டங்கள 57-வது டெஸ்ட்டின் 99 வது இனிங்ஸில் 1984
இல் மேற்கிந்திய தீவுக்கெதிராக. 5000 - ஓட்டங்கள 68-வது டெஸ்ட்டின் 120-வது இனிங்ஸில் 1985இல்
இங்கிலாந்திற்கெதிராக. 6000 - ஓட்டங்கள 80-வது டெஸ்ட்டின் 140-வது இனிங்ஸில் 1986இல்
நியூசிலாந்திற்கெதிராக. 7000 - ஓட்டங்கள் 91-வது டெஸ்டிட்ன் 159-வது இனிங்ஸில் 1987
இல் நியூசிலாந்திற்கெதிராக. 8000 - ஓட்டங்கள் 105-வது டெஸ்ட்டின் 184-வது இனிங்ஸில் 1989இல்
இங்கிலாந்திற்கெதிராக. 9000 - ஓட்டங்கள் 121-வது டெஸ்ட்டின் 207-வது இனிங்ஸில் 1991
இல் மேற்கிந்தியத் தீவிற்கு எதிராக. 10,000 - ஓட்டங்கள் 136-வது டெஸ்ட்டின் 235-வது இனிங்ஸில்
1993இல் மேற்கிந்தியத் தீவிற்கெதிராக. 11,000 - ஓட்டங்கள 153-வது டெஸ்ட்டின் 259-வது இனிங்ஸில்
1993இல் மேற்கிந்தியத் தீவிற்கெதிராக.
நாராணியா ஹவர்ை

Page 18
அலன் போடர் ஒரு நாள் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளில் 273 போட்டிகளின் 252 இனிங்ஸ்"களில் 39 தடவைகள் ஆட்டமிழக்காது ஆடி 6524 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். கூடிய ஓட்டம் 127 (ஆட்டமிழக்காது) இவற்றுள் 3 சதங்களும் 27 அரைச்சதங்களும் உட்படுகின்றன.
பந்து வீச்சில் 445.3 ஓவர்கள் பந்து வீசி 2071 ஓட்டங்களைக் கொடுத்து 74 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியுள்ளார். சிற்பபானது 27 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்கள் கெட்சுக்கள் 127.
டெஸ்ட் போட்டிகளில் ஸிம்பாப்வே தவிர ஏனைய அனைத்து நாடுகளுக்கெதிராகவும் ஆடியுள்ளார். 156 டெஸ்ட்டுகளின், 265 இனிங்ஸ்"களில் 44 தடவைகள் ஆட்டமிழக்காது ஆடி 11174 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். (சராசரி 50.56) இவற்றுள் 27 சதங்களும் 53 அரைச் சதங்களும் பெற்றுள்ளதோடு, 11 தடவைகள் ஓட்டமெதுவும் பெறாது ஆட்டமிழந்துள்ளார். கூடிய ஓட்டம் 205, கெட்சுகள் 154.
முதல்தர போட்டிகளில் 363 போட்டிகளின் 589 இனிங்ஸ"களில் 91 தடவைகள் ஆட்டமிழக்காது ஆடி, 25,551 ஓட்டங்கள் பெற்றுள்ளார். சதங்கள் 68, கெட்சுகள் 345, விக்கெட்டுகள் 102, சிறப்பானது, 46 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகள். அலன் போடர் தொடர்ச்சியாக 93 போட்டிகளுக்குத் தலைமை தாங்கி 32 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். 22 போட்டிகளில் தோல்வியைக் கண்டுள்ளார். 39 போட்டிகள் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்துள்ளன.
அலன் போடர் அடுத்த நூற்றாண்டிலும் பல தசாப்தங்கள் சென்றாலும் கிரிக்கெட் உலகில் எல்லோர் நினைவிலும் நிறைந்திருக்கக் கூடிய ஒருவர். அவர் படைத்துள்ள சாதனைகளை முறியடிப்பது என்பது இலகுவானதொன்றல்ல.
~പ്പെ
ངོ་།
கிரிக்கெட் உலக சாதனையானர்கள்

கபில்தேவ்
உலகிலுள்ள மிகச் சிறந்த சகலதுறை ஆட்டக்காரர்களுள் இந்தியக் கிரிக்கெட் அணியின் மாஜித் தலைவர் கபில்தேவுக்கும் முக்கிய இடமுண்டு. இந்திய அணியின் பல வெற்றிகளின் பின்னின்று உழைத்தவர் அவர்.
1959 ஆண்டு ஜனவரி மாதம் 06 ஆம் திகதி சந்திஹாரில் பிறந்த கபில்தேவ் சிறு வயதில் இருந்தே கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வமுடையவராக ருந்தார். பாடசாலைப் பருவத்திலும் போட்டிகளில் கலந்து மிகுந்த திறமை காட்டியுள்ளார்.
வலது கைத் துடுப்பாட்ட வீரரான கபில்தேவ் பந்தை எதிர்கொண்டு மிக வேகமாகத் துடுப்பெடுத்தாடக் கூடியவர். அத்தோடு விக்கெட்டின் உள்நோக்கியும் வெளிப்புறமும் பந்தை மிகச் சிறப்பாக நகர்த்தக் கூடிய மத்திம வேகப் பந்து வீச்சாளர்.
கபில் தேவ் இளம் வயதில் அன்று 1971இல் கிரிக்கெட் ஆட ஆரம்பித்த பொழுது இந்திய பாகிஸ்தான் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. டெனிஸ் பந்தை எடுத்துக் கொண்டு மைதானத்திற்கு செல்வதுதான் அவரது வேலை.
அவருடன் விளையாடுபவர்களுடன் ஒப்பிடும் போது அவர் திறமை மிக்கவர் என்பதை விளங்கிக் கொள்ள அதிக நாட்கள் செல்லவில்லை. தான் யாரிடமாவது சென்று கிரிக்கெட் பயிற்சி பெற வேண்டும் என்று தீர்மானித்தார்.
அக்காலத்தில் சந்திகாரில் ஒரே ஒரு மைதானம் மாத்திரமே இருந்தது.
அது சந்திகார் கிரிக்கெட் விளையாட்டுக் கழகத்துக்கு சொந்தமான மைதானம். அங்குள்ள பயிற்சி வலையில் வீரர்கள் பயிற்சி செய்வதை
நாராணியா ஹவன்

Page 19
பார்த்துக் கொண்டே இருப்பார். இறுதியில் பயிற்றுநர் திரு. அசாதிடம் செல்லத் தீர்மானித்தார்.
அங்கு சென்று தனது ஆசையைக் கூறிய போது "நீ கிரிக்கெட்டுக்கு பொருத்தமானவன் அல்லன்” என்று கபிலின் தோற்றத்தைப் பார்த்து விட்டுக் கூறினார். பின்பு அவரது அப்பாவினூடாகக் கதைத்து பயிற்சிக்கு அனுமதியைப் பெற்றுக் கொண்டார்.
திரு. அசாத் மிகவும் கண்டிப்பானவர். இதனால் கபில்தேவ் பாடசாலை விட்டதும் வீட்டுக்கு வந்து சாப்பிட்டு விட்டு மிகவும் வேகமாக சைக்கிளை மிதித்துக் கொண்டு பயிற்சிக்கு செல்வார். அவர் இளம் வயதில் குளிரையோ, வெப்பத்தையோ பொருட்படுத்தியது கிடையாது.
கபிலின் திறமையைக் கண்ட பயிற்றுநர், பந்து வீச்சில் பயிற்சி வழங்கினார். வேகப்பந்து வீச்சாளராக மிளிர வேண்டும் என்ற அவரது உள்ளத்தில் இருந்த ஆசை அதிகரிக்கக் காரணம் பயிற்சி முகாம் மாத்திரமன்று.
இளமைக் காலத்திலிருந்தே வானொலியில் ஒலிபரப்பாகும் நேர்முக வர்ணனைகளை அவர் கேட்டுக் கொண்டிருப்பார். அந்த நாட்களில் நேர்முக வர்ணனையாளர்கள் இந்திய அணியில் வேகப் பந்து வீச்சாளர்களுக்கான தட்டுப்பாடு நிலவுவதாக நிதமும் கூறுவதுண்டு.
1974 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியின் முன் இந்திய அணி தலை குனியும் நிலை ஏற்பட்டதற்குக் காரணம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கான தட்டுப்பாடு நிலவியதே என்பது கபில் தேவின் உள்ளத்தில் நிதமும் எதிரொலித்தது.
எதிரணியினால் வீசப்படும் பெளன்சர்களுக்குச் சிறந்த பதில் கொடுக்கலாம் என்று அவர் அப்போதே சிந்திப்பதுண்டு. சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களுக்கு இயற்கையான திறமை மாத்திரம் இருந்து போதாது. பயிற்சியும் சரீர சுகமும் இருத்தல் வேண்டும் என்று பயிற்றுநர் அசாத் கபிலின் தந்தையிடம் கூறினார்.
அதற்காக அவரது அப்பா ஒரு பசுமாட்டையே விலைக்கு வாங்கியது
இன்றும் அவரது ஞாபகத்தில் இருக்கின்றது. கபில் தேவின் அப்பா மாத்திரமன்றி அண்ணன்மார் இருவரும் நிதமும் அவரை
கிரிக்கிகட் உலக சாதனையாளர்கதிர் <22)

உற்சாகப்படுத்தினர். "நீ வேண்டியளவு காலம் கிரிக்கெட் ஆடு குடும்ப வியாபார விடயங்களை நாம் கவனித்துக் கொள்கிறோம்" என்று உற்சாகமூட்டினர்.
இதன் காரணமாக அவருக்கு மிகுந்த ஆர்வத்துடன் கிரிக்கெட் ஆடக்கூடிய வாய்ப்புக் கிடைத்தது.
சன்டிகாரில் இருந்து தேசிய அணியில் சேர்ந்து கொள்வது அவருக்கு அவ்வளவு சிரமமாக இருக்கவில்லை. 1975, 76ம் ஆண்டுகளில் அவுஸ்திரேலியா சுற்றுலாவுக்கான பயிற்சி முகாமுக்கு கபிலும் தெரிவானார். எனினும் அச்சுற்றுலாவுக்கு தேர்ந்தெடுக்கப்படவில்லை.
முதல்தரக் கிரிக்கெட் போட்டிகளில் ஆடும் வாய்ப்பு 1977இன் பின்பே கிடைத்தது. 1975-76ஆம் ஆண்டுகளில் ஹரியானா மாநில அணிக்காக ஆடிய கபில் தேவ் முதல்தரப் போட்டியொன்றில் பஞ்சாப் அணிக்கெதிராக பந்து வீசி 39 ஓட்டங்களைக் கொடுத்து 6 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
காரணியா ஹஸனி <මු>

Page 20
அப்போது அவரது வயது 16 வருடமும் 10 மாதமுமாகும். 1978 ஆம் ஆண்டு கிழக்காபிரிக்காவுக்கான சுற்றுலாவில் கலந்து கொள்ள வாய்ப்புக் கிடைத்தது. அதுவே கபில் தேவின் முதலாவது வெளிநாட்டுச் சுற்றுலா.
1979-80களில் ரஞ்சி கிண்ணப் போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராக முதல் தரப் போட்டியில் மிகக் கூடுதலான ஒட்டமான 193ஐப் பெற்றார். இது டெஸ்ட் போட்டிக்கான நுழைவாயிலை தட்டுவதற்கான வாய்ப்பை அவருக்கு வழங்கியது.
1978-79களில் பாகிஸ்தானில் நடைபெற்ற 3 டெஸ்ட்டுகளைக் கொண்ட தொடரில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கபில்தேவுக்குக் கிடைத்தது. பைஸலாபாத்தில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட்டின் இரண்டாவது இனிங்ஸில் பாகிஸ்தான் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ஸாதிக் முஹம்மதை ஆட்டமிழக்கச் செய்து தனது கன்னி டெஸ்ட் விக்கெட்டைக் கைப்பற்றிக் கொண்டார்.
1979-80 களில் பாகிஸ்தானுடன் சென்னையில் நடந்த 5-வது டெஸ்ட் போட்டியில் 146 ஓட்டங்களுக்கு 11 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார். இது ஒரு போட்டியில் அவரது சிறப்பான பந்து வீச்சாகும். கபில்தேவ் விரைவிலேயே தனது திறமையை வளர்த்துக் கொண்டார்.
1979-80 களில் அவுஸ்திரேலியாவுக்கெதிரான போட்டியில் புரூஸ் யாட்லியை ஆட்டமிழக்கச் செய்து தனது 50வது டெஸ்ட் விக்கெட்டை கைப்பற்றிக் கொண்டார். கபில்தேவ் ஆரம்பத்தில் இருந்தே பந்து வீச்சைப் போன்றே துடுப்பாட்டத்திலும் தனது திறமையை வளர்த்துக் கொண்டார்.
இந்தியாவின் பல வெற்றிகளுக்கு அவரது துடுப்பாட்டம் காலாக அமைந்தது. 24 போட்டிகளிலேயே 1000 டெஸ்ட் ஓட்டங்களைப் பூர்த்தி செய்தார். அவர் 21 வயதாகும் போது டெஸ்ட் போட்டிகளில் 100 விக்கெட்டுக்களையும் 1000 ஓட்டங்களையும் பெற்றிருந்தார். அதன் பின்பு கபில் தேவின் பங்களிப்பு இந்திய அணிக்கு இன்றியமையாததாகிவிட்டது.
1983-84 களில் அகமதாபாத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியொன்றில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கெதிராக மிகச் சிறப்பாகப் பந்து விகி
கிரிக்கெட் உலக சாதனையானர்கள்

89 ஓட்டங்களைக் கொடுத்து 9 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார். இதுவே அவரது டெஸ்ட் வாழ்க்கையில் மிகச் சிறப்பான பந்துவீச்சாகும்.
அவரது சிறப்பான பந்து வீச்சின் காரணமாக மேற்கிந்தியத் தீவுகள் அணி 201 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. அவரது பந்துவீச்சு, 30, 3-6-89-09 ஆகும்.
ஒரு வருடத்தில் 75 விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய கபில்தேவ் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிகக் கூடிய விக்கெட்டுக்களைக் கைப்பற்றியவர் என்ற சாதனையை 1983இல் ஏற்படுத்தினார்.
1986-87 களில் இலங்கை அணிக்கெதிராக கான்பூரில் பெற்ற 163 ஓட்டங்களே அவரது டெஸ்ட் வாழ்க்கையில் மிகக் கூடிய ஓட்டங்களாகும்.
பாகிஸ்தானில் நடந்த ஆரம்பப் போட்டியுடன் தொடராக 66 போட்டிகளில் கலந்து கொண்ட கபில் தேவுக்கு 1984-85களில் கட்டாக்கில் நடந்த இங்கிலாந்துடான போட்டியில் ஆட வாய்ப்புக் கிடைக்கவில்லை.
இது தனக்கு திட்டமிட்டு இழைக்கப்பட்ட அநீதி என்று அவர் பிற்காலத்திலும் கூறினார். இன்றேல் தொடர்ந்து 131 போட்டிகளில் ஆடிய வீரர் என்ற சாதனையையும் படைத்திருப்பார்.
1983ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற மூன்றாவது உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டி கபில்தேவின் வாழ்க்கையில் மாத்திரமன்றி இந்திய கிரிக்கெட் வரலாற்றிலும் மறக்க முடியாத ஒன்றாகும்.
ஸிம்பாப்வே அணியுடனான போட்டியில் கபில்தேவ் துடுப்பாட ஆடுகளத்திற்குச் செல்லும் போது இந்தியா 15 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்திருந்தது.
சிறிது நேரத்தில் சர்மாவும் ஆட்டமிழக்க 17 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்தது. கபில்தேவ் அண்ணார்ந்து பார்த்தார். கதிரவன் உச்சிவானை தொட்டுக் கொண்டிருந்த போதும், இந்திய அணி அஸ்தமனத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது.
நரரானியா ஹவனர்

Page 21
இந்திய துடுப்பிரிட்ட வீரர்களுக்கு "அச்சுறுத்தலாக பந்து வீசிய ஸிம்பாப்வே பந்து வீச்சாளருக்கு எதுவித கருணையையும் காட்டாத கபில்தேவ், சிக்சர்களையும் பெளண்டரிகளையையும் விளாசித் தள்ளினார். திடீரென பார்வையாளர்கள் கைதட்டி கோஷிக்க ஆரம்பித்தனர்.
அதற்கான காரணத்தை நடுவர் பரிமெயர் கபிலிடம் கூறினார். அவர் ஒருநாள் ஆட்டத்தில் கூடிய ஓட்டங்கள் பெற்று சாதனை படைத்திருப்பதை அறிந்த போது அவருக்கு மகிழ்ச்சி ஏற்படவில்லை. அணியின் வெற்றியை இலக்காகக் கொண்டு தொடர்ந்து ஆடினார்.
அப்போட்டியில் கபில் தேவ் ஆட்டமிழக்காது 175 ஓட்டங்கள் பெற்றார். இந்திய 8 விக்கெட் இழப்புக்கு 266 ஓட்டங்கள் பெற்று வெற்றி பெற்றது. கபில் தேவின் இந்த சாதனையை நான்காவது உலகக் கிண்ண போட்டிவரை எவராலும் முறியடிக்க முடியவில்லை.
மூன்றாவது உலகக் கிண்ண இறுதிப் போட்டி லோட் ஸ் வின்)ளயாட்டரங்கில இந்திய, மேற்கிநீ திய தவுகள் அணிகளுக்கிடையே நடைபெற்றது. கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடி 183 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்த போது இந்தியா வெற்றி பெறும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.
எனினும் மேற்கிந்திய தீவுகள் அணி 52 ஓவர்களில் யாரும் எதிர்பாராத விதமாக 140 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. அதனைத் தொடர்ந்து இதுவரை ஒரே ஒரு தடவை தான் உலகக் கிண்ண அரை இறுதிப் போட்டிக்குக் கூட இந்தியா தெரிவாகியது.
1982-83 களில் பாகிஸ்தானுக்குச் சுற்றுலா மேற்கொண்ட சுனில் கவாஸ்கரின் தலைமையிலான இந்திய அணி டெஸ்ட் தொடரில் 3-0 என்ற நிலையில் தோல்வியுற்றது. இதனைத் தொடர்ந்து மேற்கிந்திய தீவுகளுக்கான சுற்றுலாவில் தலைமைக் கிரீடம் கபில்தேவுக்கு அணிவிக்கப்பட்டது.
இச்சுற்றுலாவில் முதலாவது டெஸ்ட்டில் இந்தியா தோல்வியுற்றாலும் மேற்கிந்திய தீவுகள் அணி சிரமப்பட்டே வெற்றியீட்டியது. இதனைத்
கிரிக்கெட் உலக சாதனையானரர்கவர்

தொடர் நீது கபில தேவி சுனில் கவாஸ் கர் ஆகிய இருவருக்குமிடையேயும் தலைமைத்துவம் சங்கீதக் கதிரைபோல் சென்றதைக் காணமுடியும்.
இரண்டாவது தடவையாக தலைமைப் பதவியை அலங்கரித்த பின்பு இலங்கைக்கு மேற்கொண்ட சுற்றுலாவில் 1-0 என்ற நிலையில் தோல்வியுற்றார். எனினும் இங்கிலாந்துக்கான சுற்றுலாவில் வெற்றி கண்டார். கபிலின் தலைமைத்துவம் எவ்வாறு அமைந்தாலும் அவரது தனிப்பட்ட திறமையைக் குறைவாக மதிப்பிட முடியாது.
1985ம் ஆண்டு இந்திய அணி இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்ட போது கபில் தேவ் இலங்கை நடுவர்களை கடுமையாக விமர்சித்தார். ரீகாந்த்திற்கு எதிராக விரலை உயர்த்தும் சந்தர்ப்பத்தை நடுவர்கள் எதிர்பார்த்திருந்தனர். கண்டி அஸ்கிரிய மைதானத்தில் நடைபெற்ற போட்டி கிரிக்கெட் அல்ல, உதைபந்தாட்டம் போலிருந்தது என்று கபில்தேவ் விமர்சித்தார்.
கபில்தேவ் கிரிக்கெட்டை சோம்பேறித்தனமான விளையாட்டாகக் கருதவில்லை. தோல்வியில் இருந்து மீள்வதை விட அதனை சவாலாக ஏற்று வெற்றியை அல்லது தோல்வியை சந்திப்பதை விரும்புபவர்.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகக் கூடுதலான விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய வீரராக கபில் தேவ் திகழுகின்றார். அவர் 131 போட்டிகளுக்கு முகம் கொடுத்து 434 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியுள்ளார். கபில்தேவ் இந்த இலக்கை இப்படித்தான் அடைந்தார்.
1 வது விக்கெட் - சாதிக் மொஹமத் (பாகிஸ்தான், பைஸலாபாத்தில்
1978 இல்) 50 வது விக்கெட் - புரூஸ் யாட்லி (அவுஸ்திரேலியா, கான்பூரில்
1979இல்) 100 வது விக்கெட் - தஸ்லிம் ஆரிப் (பாகிஸ்தான், கான்பூரில்
1979 இல்) 150 வது விக்கெட - கிரிஸ் டேவ் (இங்கிலாந்து, கல்கத்தாவில்
1979 இல்) 200 வது விக்கெட - அன்டி ரொபட்ஸ் (மேற்கிந்தியா தீவு,
ட்ரினிடாட்டில் 1983 இல்)
நாராணியர ஹஸன்

Page 22
250 வது விக்கெட - ஜாவிட் மியன்டாட் (பாகிஸ்தான், கட்டாக்கில்
1989 இல்)
300 வது விக்கெட - ருமேஷ் ரத்நாயக்க (இலங்கை, கட்டாக்கில்
1986 இல்)
350 வது விக்கெட் - ஜாவிட் மியன்டாட் (பாகிஸ்தான், கராச்சியில்
1989 இல்) −
400 வது விக்கெட் - மார்க் டேலர் (அவுஸ்திரேலியா, பேர்த்தில்
1992 இல்)
1994 ம் ஆண்டு ஜனவரி மாதம் 30ம் திகதி இலங்கை அணியுடன் பெங்களூரில் நடந்த டெஸ்ட் போட்டியில் டொன் அருணசிரியை ஆட்டமிழக்கச் செய்ததன் மூலம் 431 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி நியூசிலாந்து வீரர் ரிச்சாட் ஹட்லியின் சாதனையை சமப்படுத்தினார். எனினும் ஹட்லியை விட கபிலுக்கு 43 டெஸ்டுகள் மேலதிகமாகத் தேவைப்பட்டது.
கபில் தேவ் 131 டெஸ்ட் போட்டிகளின் 184 இனிங்ஸ்களில் 15 தடவைகள் ஆட்டமிழக்காது ஆடி 5248 ஓட்டங்கள் பெற்றுள்ளார். (சராசரி 31.05) கூடிய ஒட்டம் 163, சதங்கள் 8, அரைச் சதங்கள் 27, கட்சுகள் 64.
பந்து வீச்சில் 27,740 பந்துகள் வீசி 12,867 ஓட்டங்களைக் கொடுத்து 434 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியுள்ளார். (சராசரி 29.68) சிறப்பானது. 83 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுக்கள். 23 தடவைகள் இனிங்ஸில் 5 விக்கெட்டுக்கு மேல் கைப்பற்றியுள்ளார். இரண்டு தடவைகள் போட்டியில் 10 விக்கெட்டுகளுக்கு மேல் கைப்பற்றியுள்ளார்.
எது எவ்வாறிருப்பினும் கிரிக்கெட் உலகில் கபில் தேவ் போன்ற சகலதுறை ஆட்டக்காரர் தோன்றுவதற்கு இன்னும் நெடுநாள் செல்லலாம். எனினும் 400 விக்கெட்டுகளுக்கு மேல் கைப்பற்றி 5000 ஓட்டங்களுக்கு மேல் பெறுவதென்பது இலகுவான ஒரு காரியமல்ல.
கிரிக்கெட் உலக சாதனையானர்கள்
 
 

விவியன் ரிட்சாட்ஸ்
மேற்கிந்தியத் தீவுகள் அணி உலகிற்கு பல பிரபல கிரிக்கெட் வீரர்களைத் தந்துள்ளது. 1970களில் இருந்து 90கள் வரை கிரிக்கெட் உலகில் தன்னிகரற்ற ஒரு அணியாக சக்தி பெற்று விளங்கியது. முதலாவது, இரண்டாவது உலகக் கிண்ணங்களையும் இலகுவாக வெற்றி கொண்டது.
மேற்கிந்தியத் தீவு உலகிற்குத் தந்த கிரிக்கெட் வீரர்களுள் பிரபலமான ஒருவர் விவியன் ரிட்சாட் கிலொயிட்டின் பின்பு மேற்கிநீ தியத் தீவு அணிக்கு மரிகச் சிறப்பான ஒரு தலைமைத்துவத்தை அளித்தவர் விவியன் ரிட்சட்தான். அவரது ஓய்வின் பின்பு அவ்வணி தளர்வுற்றதைக் காணமுடிந்தது.
மேற்கிந்தியத் தீவுகளின் அண்டிகுவாதீவிலேயே விவியன் அலெக்ஸான்டர் ரிச்சட் பிறந்தார். அவரது தகப்பன் அங்குள்ள சிறைச்சாலையில் ஊழியராக இருந்தார். சிறுவயது முதலேயே கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்ட விவியன் ரிச்சட்டின் ஒரே இலட்சியமாக இருந்தது என்றோ ஒரு நாள் உலகின் பிரபல கிரிக்கெட் வீரரொருவராக வரவேண்டும் என்பதுதான்.
அவர் சிறுவனாக இருக்கும் பொழுது மாலை வேளைகளில் அயல் வீடுகளில் வசிக்கும் சிறுவர்களை அழைத்துக் கொண்டு, டென்னிஸ் பந்துகள் மூலம் கிரிக்கெட் ஆடுவார். அச்சந்தர்ப்பங்களில் ஏனைய சிறுவர்கள் அவருக்கு பந்து வீசத் தயங்குவதுண்டு. அதற்குக் காரணம் எந்தப் பந்து வீச்சுக்கும் மிக வேகமாக விளாசுவதாகும்.
பாடசாலைப் பருவத்தில் அவரது திறமையைக் கண்ட ஆசிரியர்
சிறப்பாக பயிற்சி பெறுமாறு ஆலோசனை வழங்கினார். சிறுவயதிலேயே அவருக்கு இருக்கும் திறமை நிச்சயம் எதிர்காலத்தில்
நாரரணியா ஹவனர்

Page 23
ஒரு சிறந்த வீரராக வருவதற்கு வாய்ப்புண்டு என்று கூறினார். அவரது கிரிக்கெட் ஆர்வத்தைக் கண்டு அவரது தந்தை தேவையான உதவிகளை செய்து ஊக்கப்படுத்தினார்.
விவியன் ரிச்சட் இரவு, பகல், மழை வெயில், குளிர், உஷ்ணம் என்று பாராது கடுமையான பயிற்சி எடுத்தார். அதற்குரிய பிரதிபலனை விரைவிலேயே அவர் அடைந்து கொண்டார்.
மிக இளவயதிலேயே அன்டிகோவா அணியில் அங்கத்துவம் அவருக்குக் கிடைத்தது. அணிக்காக ஆடி உள்ளூர் போட்டிகளில் காட்டிய திறமையினால் தேசிய அணியின் கதவுகள் விரைவிலேயே திறந்து கொண்டன.
பொதுவாக மேற்கிந்திய தீவுகளில் பிறந்து திறமைகாட்டி அந்நாட்டு தேசிய அணியில் அங்கத்துவம் பெறுவதென்பது இலகுவான காரியமல்ல, பல வீரர்கள் தேசிய அணியில் அங்கத்துவம் கிடைக்காமலேயே தமது கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துக் கொள்வதுண்டு.
அதற்குக் காரணம் தேசிய அணியில் இடம் பெறும் பதினொரு வீரர்களும் பலத்த போட்டியின் மத்தியில் திறமையான வீரர்களின் மத்தியில் இருந்து தெரிவு செய்யப்படுவதாகும். 1974ம் ஆண்டு கிலப்ஸ் லொயிட்டின் தலைமையில் இந்தியாவுக்கு சுற்றுலா மேற்கொண்ட அணியில் விவியன் ரிச்சட்டும் இடம்பெற்றார்.
அவர் தனக்குக் கிடைத்த வாய்ப்பை சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டார். 5 டெஸ்ட்டுகளைக் கொண்ட தொடரின் 9 இனிங்ஸ்"களில் 353 ஓட்டங்களைப் பெற்றார். (சராசரி 50,42) 192 ஓட்டங்களைப் பெற்று தனது கன்னி டெஸ்ட் சதத்தையும் இத்தொடரிலேயே பெற்றுக் கொண்டார். அப்போது அவரது வயது 21.
அதனைத் தொடர்ந்து இலங்கைக்கு மேற்கொண்ட உத்தியோகப் பற்றற்ற சுற்றுலாவில் கொழும்பு எபி.ஸி.ஸி விளையாட்டு மைதானத்தில் மிக வேகமாக ஆடி 151 ஓட்டங்களைப் பெற்றார். இவற்றுள் 3 சிக்ஸர்களும் 17 பெளண்டரிகளும் உட்படுகின்றன.
1975-76 களில் அவுஸ்திரேலியாவுடனான தொடரில் 6 டெஸ்ட்டுகளின 11 இனிங்ஸ்"களில் 426 ஓட்டங்களைப் பெற்றார். இந்தியாவுடனான
கிரிக்கிகட் உலக சாதனைாசைக்கன்

தொடரில் 4 டெஸ்ட்டுகளின் 6 இனிங்ஸ்"களில் 556 ஓட்டங்களையும் (சராசரி 92.86) இங்கிலாந்துடனான தொடரில் 4 டெஸ்ட்டுகளின் 7 இனிங்ஸுகளில் 329 ஓட்டங்களையும் பெற்றார். (சராசரி 118.42)
இங்கிலாந்துடனான போட்டியில் ஓர் இனிங்ஸில் பெற்ற 29 ஓட்டங்கள் டெஸ்ட் வாழ்க்கையிலி அவர் பெற்ற மிகக் கூடுதலான ஓட்டங்களாகும்.
இன்றும் கூட இங்கிலாந்து ரசிகர்களின் மனதில் நிலைத்துநிற்கும் ஓர் இனிங்ஸாக உள்ளது. இங்கிலாந்திற்கெதிராக 4 போட்டிகளில் பெற்ற 829 ஓட்டங்களை இதுவரை எந்த ஒரு வீரரும் முறியடிக்கவில்லை.
விவியன் ரிச்சட் 21 டெஸ்ட் போட்டிகளைப் பூர்த்தி செய்யும் போது 36 இனிங்ஸ்"களுக்கு முகம் கொடுத்து 2131 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். (சராசரி 64.14) இரட்டைச் சதம் ஒன்று, சதம் 7, அரைச்சதம் .ே
நாரரரிைச நரண்பர்ை

Page 24
இதன் காரணமாக 1976 ம் ஆண்டு விஸ்டன் சஞ்சிகை வருடத்தில் சிறப்பான 5 கிரிக்கெட் வீரர்களுள் ஒருவராக விவியன் ரிச்சாட்ஸைத் தெரிவு செய்தது.
விவியன் ரிச்சாட்ஸின் திறமைகளைக் கண்டு இங்கிலாந்து மாநில அணிகள் அழைப்பு விடுத்தன. 1975ம் ஆண்டு சமர்சட் அணிக்காக ஆடினார்.
க்லோஸ்டஷயர் அணிக்கெதிராக 86 நிமிடங்களில் 6 Rக்ஸர்கள், 12 பெளண்டரிகள் அடங்கலாக 126 ஓட்டங்களைப் பெற்றார். 1977இல் இன்னொரு போட்டியில் 85 பந்துகளுக்கு முகங்கொடுத்து, 101 ஓட்டங்களைப் பெற்றார்.
ஒரு தடவை சமர்சட் அணி 88 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து இக்கட்டான நிலையில் இருந்த போது மிக வேகமாக துடுப்பெடுத்தாடி தமதணியைப் பாதுகாத்துக் கொண்டார்.
1985இல் சமர்சட் அணிக்காக ஆடிப்பெற்ற 322 ஓட்டங்களே அவரது சிறப்பான முதல்தர இனிங்ஸ் ஆகும். சமர்சட் அணியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பின்பு க்ளமோகன் அணிக்காக ஆடினார்.
க்ளமோகன் அணிக்காக ஆடிய முதல் போட்டியில் 119 ஓட்டங்கள் பெற்று அந்த அணிக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுத்தார். “ஹம்ப்ஷயர்” அணிக்கெதிரான போட்டியொன்றில் 364 ஓட்ட இலக்கை எதிர் கொண்டு 139 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை க்ளமோகன் இழந்த நிலையில் ஆடுகளத்திற்குச் சென்ற ரிச்சட் வெற்றியைத் தமதாக்கிக் கொண்டார்.
இறுதி இரண்டு ஓவர்களில் 27 ஓட்டங்களைப் பெற வேண்டியிருந்தது. இறுதி ஒவரில் பிரபல வேகப்பந்து வீச்சாளர் மல்கம் மாஷலின் முதல் மூன்று பந்துகளுக்கும் பெளண்டரி அடித்து வெற்றியைத் தனதாக்கிக் கொண்டார். அப்போட்டியில் அவர் 164 ஒட்டங்களைப் பெற்றார்.
இவ்வாறு மாநில அணிகளுக்கிடையிலான போட்டிகளில் அனேக சாதனைகள் படைத்துள்ளார். 1985 இல் 24 போட்டிகளில் 1836 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். (சராசரி 76.50)
கிரிக்கெட் உலக சாதனையாளர்கர்ை
 

முதல்தரப் போட்டியில் 100 சதங்கள் பெற்ற ஒரே மேற்கிந்தியத் தீவுகள் வீரர் விவியன் ரிச்சாட்ஸ்தான். 1988 இல் “நியுஸவுத்வேல்ஸ்" அணிக்கெதிரான போட்டியில் 101 ஓட்டங்கள் பெற்று இச்சாதனையை நிலைநாட்டினார்.
அவர் முதல்தரப் போட்டிகளில் போன்றே டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றியை மாத்திரம் இலக்காகக் கொண்டு ஆடும் வீரர். 1985-86 களில் இங்கிலாந்து அணியுடனான முதல் 4 டெஸ்டுகளிலும் வெற்றி பெற்ற நிலையில் 5-வது டெஸ்டிலும் ரிச்சாட்ஸின் அதிரடி ஆட்டத்தால் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றது.
அவர் அந்த டெஸ்ட்டில் 58 பந்துகளுக்கு முகம் கொடுத்து 110 ஓட்டங்களைப் பெற்றார். இதில் 7 ஸிக்ஸர்களும் 7 பெளண்டரிகளும் அடங்கும். 100 ஓட்டங்களைப் பெறுவதற்கு அவருக்குத் தேவைப்பட்டது 56 பந்துகள் மாத்திரம்தான்.
டெஸ்ட் வரலாற்றில் மிக வேகமாக பெறப்பட்டுள்ள சதம் இதுவாகும். இன்று வரை எவராலும் இதனை முறியடிக்க முடியவில்லை.
அவுஸ்திரேலியாவுக்கு எதிராக மிகக் கூடுதலான ஓட்டங்களான 2266 ஓட்டங்களை விவியன் ரிச்சாட்ஸே பெற்றுள்ளார். அதே போன்று வருடத்தில் மிகக் கூடுதலான ஓட்டங்களைப் பெற்ற பெருமையும் விவியன் ரிச்சாட்ஸையே சாரும்.
அவர் 1976 இல் 11 போட்டிகளின் 19 இனிங்ஸ"களில் 1710 ஓட்டங்களைப் பெற்றார். (சராசரி 90.00) இவற்றுள் 7 சதங்களும் 5 அரைச்சதங்களும் அடங்குகின்றன.
விவியன் ரிச்சாட்ஸ் ஆரம்ப வருடங்களைவிட பிற்பட்ட காலப்பகுதியில் குறைந்த சராசரியையே கொண்டிருந்தார். முதல் 5 வருட காலத்தில், 58.90 சராசரியையும் இரண்டாவது 5 வருடகாலத்தில் 47.60 ஐயும் கொண்டிருந்தார்.
பாகிஸ்தானிய சுற்றுலாவிலும் 5 இனிங்ஸ்களில் அவரது ஓட்டங்கள்
இவ்வாறு அமைந்தது. 47-7-54-33-00-17-44-0000-00. எனினும் ஒய்வு பெறும் போது அவரது சராசரி 50ஐ தாண்டி இருந்தது.
நாராணியா ஹவனர்

Page 25
விவியன் ரிச்சட் டெஸ்ட் போட்டிகளில் போன்று ஒருநாள் ஆட்டங்களிலும் மிகுந்த திறமை காட்டியுள்ளார். ஒருநாள் ஆட்டங்களில் 5000 ஓட்டங்களைப் பெற்ற முதல் வீரர் அவர்தான். உலகக் கிண்ணப் போட்டிகளில் 1000 ஓட்டங்களைப் பெற்ற முதல் வீரரும் அவர்தான்.
இங்கிலாந்து அணிக்கெதிராக ஒல்ட்ரபர்ட் மைதானத்தில் பெற்ற 189 ஓட்டங்களுக்கான சாதனையை மிக அண்மையில் தான் சஹீத் அன்வர் முறியடித்தார். நான்காவது உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கைக்கெதிராகப் பெற்ற 187 ஓட்டங்களை எவரும் மறக்க (ԼՔlգեւIT5l.
அவர் 121 டெஸ்ட்டுகளின் 182 இனிங்ஸ"களில் 12 தடவைகள் ஆட்டமிழக்காது ஆடி 8540 ஓட்டங்கள் பெற்றுள்ளார். (சராசரி 50.24) சதங்கள் 24, அரைச்சதங்கள் 45, கெட்சுகள் 122.
விவியன் ரிச்சாட்ஸ் 1993ம் ஆண்டு கிரிக்கெட் உலகிற்கு விடைகொடுத்த போதும் இன்றும் அவர் ரசிகர்களின் உள்ளங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இன்னும் பல தசாப்தங்களுக்கு கிரிக்கெட் உலகில் அவரது பெயர் அழியாதிருக்கும்.
கிரிக்கெட் உலக சாதனையானர்கள்
 

கிரஹம் கூச்
கிரிக்கெட் உலகில் தோன்றியுள்ள வீரர்களுள் ஒவ்வொருவரும் ஏதோ ஒருவகையில் ஏனைய வீரர்களைவிட வித்தியாசமான சாதனைகள் புரிபவர்களாக உள்ளனர். w
இதனை வேறுவிதமாகச் சொல்வதாயின் அநேகமாக கிரிக்கெட் வீரர்கள் தாம் ஓய்வு பெறும் போது ஏதோவொரு சாதனையுடன்தான் ஓய்வு பெறுகின்றனர்.
இந்த வகையில் முதல்தரப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற கிரஹம் கூச் இங்கிலாந்தில் மிகக் கூடுதலான டெஸ்ட் ஓட்டங்கள் பெற்ற வீரர் என்ற பெருமையைப் பெறுகின்றார்.
கிரஹம் கூச் 1953 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23ம் திகதி இங்கிலாந்தில் பிறந்தார். பள்ளிப் பருவ காலம் முதல் கிரிக்கெட்டில் ஆர்வம் காட்டினார்.
முதல் தரப் போட்டியில் 1973ல் எஸெக்ஸ் அணிக்காக ஆட ஆரம்பித்தார். டெஸ்ட் அணியின் கதவுகள் 1975ல் திறக்கப்பட்ட போது ஜூலை 10 இல் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக ஆடினார்.
அவரது துடுப்பாட்ட திறமையைக் கண்ட பள்ளிக்கூட ஆசிரியர் அவருக்கு மேலதிகப் பயிற்சிகளை பெற்றுக் கொள்ளுமாறு வேண்டினார்.
அவரது பெற்றோரும் உற்சாகமளித்தனர். விரைவிலேயே உள்ளுர்
கழகங்களில் இணைந்து முதல் தரப் போட்டிகளில் ஆடும் வாய்ப்பைப் பெற்றார்.
நாராணரியா ஹஸன்

Page 26
இங்கிலாந்தின் இரண்டு வீரர்கள் இதற்கு முன்பு 8000 ஓட்டங்களைப் பெற்றுள்ளனர். ஒருவர் ஜெப்ரி போய்கொட் 3114 ஓட்டங்கள், மற்றவர் டேவிட் கவர் 3231 ஓட்டங்கள், மூன்றாவது நபர் கிரஹம் கூச்.
அவர் இங்கிலாந்து அணியில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகப் பிரகாசித்த போதிலும் மத்திய வரிசை துடுப்பாட்ட வீரராகவும் திறமை காட்டியுள்ளார்.
டேவிட்கவர், மைக் கட்டிங் ஆகியோரை அணித் தலைமையிலிருந்து நீக்கியதைத் தொடர்ந்து அந்தக் கிரீடத்தையும் அவர் சிறிது காலம் சூடியிருந்தார்.
தற்போது கிரிக்கெட் உலகில் கூடுதலாக டெஸ்ட் ஓட்டங்கள் பெற்றுள்ளோர் வரிசையில் நான்காவது இடத்தைப் பெறுகிறார். அவரைவிடக் கூடுதலான ஓட்டங்கள் பெற்றுள்ள ஏனைய வீரர்கள் அலன் போடர் (11174 ஓட்டங்கள), சுனில் கவஸ்கர் (10122), ஐாவிட் மியன்டாட் (8832) ஆகியோர் ஆவர்.
1975ம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் ஆட ஆரம்பித்த கிரஹம் கூச் கூடுதலான தடவைகள் 1000 ஒட்டவரிசையை அவுஸ்திரேலியாவுக்கு எதிராகவே எட்டிப் பிடித்தார்.
அவுஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கிடையே வருடாந்தம் நடைபெறும் ஆஷ்ஷஸ் கிரிக்கெட் தொடர் தனக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததென ஒருமுறை பத்திரிகையாளரிடம் கூச் தெரிவித்தார்.
இதுவரை கூடுதலான தொடரில் ஆடி கூடுதலான ஓட்டங்களை அவுஸ்திரேலியாவுக்கு எதிராகவே அவர் பெற்றுள்ளார். கூச் இதுவரை 20 டெஸ்ட் சதங்கள் பெற்றுள்ளார். அவற்றுள் 14 சதங்கள் இங்கிலாந்திலே பெற்றுள்ளார். தாயகத்திலே கூடிய திறமை காட்டியுள்ளார்.
1990ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு எதிராக லோட் எம்
விளையாட்டரங்கில் அவர் பெற்ற 333 ஓட்டங்களே டெஸ்ட் வாழ்வில் பெற்ற மிகக் கூடுதலான ஓட்டங்களாகும்.
கிரிக்கெட் உலக சாதனையாரர்கதிர்

இந்த முச்சதத்தைப் பெறுவதற்கு 627 நிமிடங்களில் 485 பந்துகளுக்கு முகம்கொடுத்தார். இதில் 3 சிக்சர்களும் 43 பெளனண்டரிகளும் உட்படுகின்றன.
இது லோட்ஸ் விளையாட்டரங்கில் வீரர் ஒருவர் முதல் தரப் போட்டியொன்றில் பெற்ற மிகக் கூடுதலான ஓட்டமாகும். அதற்கு முன்பு 1926ல் ஐக்ஹொப்ஸ் 316 ஓட்டங்கள் பெற்றிருந்தார்.
".
*
8
அணித் தலைவர் ஒருவர் பெற்றுள்ள மிகக் கூடிய டெஸ்ட் ஒட்டமாகவும் கூச் சாதனை படைத்தார். அதற்கு முன்பு 1964 இல் அவுஸ்திரேவிய அணித் தலைவர் பொப் சிம் சனி இங்கிலாந்துக்கெதிராக 311 ஓட்டங்கள் பெற்றிருந்தார்.
தாராணா ரைஸ்னர்

Page 27
இந்திய அணிக்கு எதிராக கூச் பெற்ற இந்த 333 ஓட்டங்கள் இதற்கு முன்பு இங்கிலாந்து அணித் தலைவர் பீட்டர் மே 1957ல் மேற்கிந்தியத் தீவு அணிக்கெதிராகப் பெற்ற 285 ஓட்டங்களை முறியடித்துவிட்டது.
இதற்கு முன்பு முதல்தரப் போட்டியில் கூச் பெற்றிருந்த கூடிய ஒட்டம் 1988ல் எசெக்ஸ் மாநில அணிக்காக ஆடி கென்ட் அணிக்கெதிராகப் பெற்ற 275 ஓட்டங்களாகும்.
1991ல் ஹெடின்லி விளையாட்டரங்கில் மேற்கிந்தியத் தீவு அணிக்கு எதிராகப் பெற்ற 154 ஓட்டங்கள் தமது டெஸ்ட் வாழ்வில் மிகப் பெறுமதி வாய்ந்த ஓட்டங்கள் என அவர் கருதுகின்றார்.
மேற்கிந்திய தீவின் பிரபல வேகப்பந்து வீச்சாளர்களுக்கு முகம் கொடுக்க முடியாத நிலையில் இங்கிலாந்து இருந்த போது இங்கிலாந்து அணி இந்த டெஸ்ட்டில் பெற்ற 252 ஓட்டங்களுள் 61.11 வீதமான ஓட்டங்களை (154) அவர் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக ஆடுகளத்துள் நுழைந்து ஆட்டமிழக்காது பெற்றார்.
கூச் 1982ம் ஆண்டு தென்னாபிரிக்காவுக்குச் சுற்றுலா மேற்கொண்ட இங்கிலாந்து அணியில் இடம் பெற்றதால் இங்கிலாந்து அணிக்கு ஆடும் வாய்ப்பை இழந்தார்.
அப்போது அவர் 42 டெஸ்ட்டுகளில் 75 இனிங்ஸ்"களில் ஆடி 2540 ஓட்டங்கள் பெற்றிருந்தார். இதில் 4 சதங்களும் 15 அரைச் சதங்களும் உட்படுகின்றன.
1982 முதல் 1985 வரை அவருக்கு டெஸ்ட் போட்டிகளில் ஆடுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. 1985ல் இங்கிலாந்து அணியில் மீண்டும் ஆடும் வாய்ப்பைப் பெற்றார்.
கிரஹம் கூச்சின் ஓட்டத்தினை நோக்கும்போது அண்மைக் காலத்தில் ஓட்டத்துடன் இருந்த சிறந்ததொரு துடுப்பாட்ட வீரராக அவர் இருப்பதைக் காண முடியும். 1990-93 களில் மிகவும் வேகமாக அவர் ஓட்டங்களை சேகரித்துள்ளார்.
கிரிக்கெட் உலக சாதனையானர்கர்ை
 

5000 ஓட்டங்களிலிருந்து 8000 ஓட்டங்களை எட்டிப் பிடிக்க அவருக்கு 26 டெஸ்ட்டுகள் மாத்திரமே தேவைப்பட்டன. அண்மைக் காலத்தில் எந்தவொரு டெஸ்ட் வீரரும் இந்தளவு வேகமாக ஓட்டங்களைச் சேகரித்ததை நாம் காண முடியவில்லை.
அவ்வருடம் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் 6 டெஸ்ட்டுகளின் 9 இனிங்ஸ்"களில் ஆடி 497 ஓட்டங்கள் பெற்று. மீண்டும் அணியில் ஸ்திரமானார்.
அவருக்கு மூன்று 6\! (U5 ւ- 55 T 6) GQ L 6mö தடை விதிக் கப்பட்டிருக்காவிட்டால் அலண் போடரின் 11000 ஒட்டச்சாதனையை கூச் முறியடித்திருக்கக்கூடும்.
கிரஹம் கூச் முதன் முதல் 1975ல் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக எஜ்பஸ்டன் விளையாட்டரங்கில் ஆடியபோது அவர் இந்தளவு மிளிர்வார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.
அப்போட்டியில் இரண்டு இனிங்ஸ்"களிலும் ஓட்டமேதும் பெறாத நிலையில் அவர் ஆட்டமிழந்தார். எனினும் அவருக்கு இங்கிலாந்து அணியின் கதவுகள் மூடப்படவில்லை.
அணியின் மத்திய வரிசை துடுப்பாட்ட வீரருள் ஒருவராக தொடர்ந்து ஆடும் வாய்ப்பைத் பெற்றார். அவர் தனது முதலாவது டெஸ்ட் அரைச்சதத்தை (54 ஓட்டங்கள்) 1978 இல் பாகிஸ்தானுக்கு எதிராகப் பெற்றார்.
டெஸ்ட் உலகில் நுழைந்து ஐந்து வருடங்களுக்குப் பின்பு அதாவது 1980 ஆம் ஆண்டு தனது கன்னி டெஸ்ட் சதத்தை மேற்கிந்தியத்தீவு அணிக்கு எதிராகப் பெற்றார். (124 ஓட்டங்கள்) 30 ஆவது டெஸ்ட்டில்.
கிரஹம் கூச் முதன் முதல் 1980 இல் தனது 1000 டெஸ்ட் ஒட்டங்களை கிரென்ட் பிரிஜ் விளையாட்டரங்கில் பூர்த்தி செய்தார். இதே மைதானத்தில் தான் 8000 ஓட்டங்களையும் பூர்த்தி செய்தார்.
அவர் 8000 ஓட்டங்களை ஆயிரம் ஆயிரம் ஒட்டங்களாகப் பூர்த்தி
செய்த விபரம் வருமாறு :-
1000 ஓட்டங்கள் மேற்கிந்திய தீவு அணியுடன் 1980 இல் பிரென்பிரிஜில், 21வது டெஸ்ட் 35 இனிங்ஸ்
நாராணியர ஹவர்ை

Page 28
* 2000 ஓட்டங்கள அவுஸ்திரேலியாவுடன் 1981 இல் ஒல்ட் ரபர்ட்டில்
35வது டெஸ்ட் 63வது இனிங்ஸ்
* 3000 ஒட்டங்கள அவுஸ்திரேலியாவுடன் 1985இல் ஒவலில் 48வது
டெஸ்ட் 84வது இனிங்ஸ்
* 4000 ஓட்டங்கள் மேற்கிந்திய அணியுடன் 1988இல் ட்ரென்பிரிஜில்
63 டெஸ்ட் 112வது இனிங்ஸ்
* 5000 ஓட்டங்கள் நியூஸிலாந்துடன் 1990இல் எஜ்பஸ்டனில் 78வது
டெஸ்ட் 140வது இனிங்ஸ்.
* 6000 ஓட்டங்கள் அவுஸ்திரேலியாவுடன் 1991 சிட்னியில் 83வது
டெஸ்ட் 150வது இனிங்ஸ்.
* 7000 ஓட்டங்கள் இலங்கையுடன் லோட்சில் 91வது டெஸ்ட்
166வது இனிங்ஸ்.
* 8000 ஓட்டங்கள் அவுஸ்திரேலியாவுடன் 1993ல் ட்ரென்பிரிஜில்
104வது டெஸ்ட் 189வது இனிங்ஸ்.
இதுவரை கிரஹம் கூச் நாடுகளுக்கு எதிராக 20 டெஸ்ட் சதங்கள் பெற்றுள்ளார். அவற்றின் விபரம் வருமாறு:-
மேற்கிந்தியத் தீவுகள்
米 154 ஓட்டங்கள் 1991 இல் ஹேடின்லீயில்
153 ஓட்டங்கள் 1981 இல் கிங்ஸ்டனில் 146 ஓட்டங்கள் 1988 இல் ட்ரென்பிரிஜில் 123 ஓட்டங்கள் 1980 இல் லோட்ஸில் 116 ஓட்டங்கள் 1980-81 களில் பிரிஜ்டவுனில்
இந்தியா 来 333 ஓட்டங்கள் 1990 இல் லோட்ஸில்
127 ஓட்டங்கள்1981-82 களில் சென்னையில் 123 ஓட்டங்கள் 1990 இல் லோட்ஸில் 116 ஓட்டங்கள் 1990 இல் ஒல்ட்ட்ரபர்டில் 114 ஓட்டங்கள் 1986 இல் லோட்சில்
கிரிக்கெட் உலக சாதனையானர்கள்
 

அவுஸ்திரேலியா
冰 196 ஓட்டங்கள் 1985 இல் ஒவலில்
133 ஓட்டங்கள் 1993 இல் ஒல்ட்ட்ரபர்ட்
率 120 ஓட்டங்கள் 1993 இல் ட்ரென்பிரிஜில்
率 117 ஓட்டங்கள் 1990 - 91 களில் அடிலேட்டில்
நியூஸிலாந்து
冰 183 ஓட்டங்கள் 1986 இல் லோட்சில்
米 154 ஓட்டங்கள் 1990 இல் எஜ்பஸ்டன்
来 114 ஓட்டங்கள் 1991 - 92 களில் ஒக்லான்ட்
பாகிஸ்தான்
冰 135 ஓட்டங்கள் 1992 இல் ஹேடின்லீயில்
இலங்கை
冰 174 ஓட்டங்கள் 1991 இல் லோட்சில்
முதலாவது இனிங்ஸில் முச்சதமும் (333 ஓட்டங்கள்) இரண்டாவது இனிங்ஸில் சதமும் (123 ஓட்டங்கள்) பெற்ற ஒரே வீரர் கிரஹம் கூச் ஆவார். 1990ல் லோட்ஸ் விளையாட்டரங்கில் இந்தியாவுக்கு எதிராக இதனைச் சாதித்தார்.
1985 முதல் காயமடைந்த சந்தர்ப்பத்தைத் தவிர வேறு எந்தச் சந்தர்ப்பத்திலும் அவர் இங்கிலாந்து டெஸ்ட் அணியில் ஆடும் வாய்ப்பை இழக்காது இருந்தது அவரது திறமைக்கு நல்ல எடுத்துக்காட்டாகும்.
கிரஹம் கூச் ஓய்வு பெறும்போது 34 டெஸ்ட்டுக்களுக்கு தலைமை தாங்கியதுடன் 118 டெஸ்ட்டுக்களில் (215 இனிங்ஸ்) 6 தடவைகள் ஆட்டமிழக்காது ஆடி 8900 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். சராசரி 42.58 கூடிய ஒட்டம் 333 சதம் 20 அரைச்சதம் 46 கட்சுகள் 103, பூச்சியத்தில் (0) இல் ஆட்டமிழந்தது 13 தடவைகள்.
அவருக்கு தென்னாபிரிக்காவுக்கு எதிராக மாத்திரம் தலைமை தாங்க
வாய்ப்புக் கிடைக்கவில்லை. அதேபோன்று ஸிம்பாப்பேயிக்கு எதிராக ஆடவும் வாய்ப்புக் கிடைக்கவில்லை.
நாராணரியா ஹவனர்

Page 29
கிரஹம் கூச் பந்து வீச்சில் 2643 பந்துகள் வீசி (121 ஓட்டமற்ற ஒவர்) 1053 ஓட்டங்களைக் கொடுத்து 23 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியுள்ளார். சராசரி 46.21 சிறப்பானது 3-39.
அவர் தலைமை தாங்கியுள்ள 34 டெஸ்ட்டுக்களில் 10 வெற்றிகளையும் 12 தோல்விகளையும் சந்தித்துள்ளார். 12 போட்டிகள் வெற்றி தோல்வியின்றி முடிந்துள்ளன. வெற்றி வீதம் 47.05.
ஒருநாள் ஆட்டங்கள் 125 போட்டிகளில் 122 இனிங்ஸ்"களில் 6 தடவைகள் ஆட்டமிழக்காது ஆடி 4290 ஓட்டங்கள் பெற்றுள்ளார். கூடிய ஒட்டம் 192 சதம் 8 அரைச்சதம் 23 சராசரி 36.98 கட்சுகள் 45, பூச்சியத்தில் (0) இல் ஆட்டமிழந்தது 4.
முதல்தர போட்டிகள் 524 போட்டிகளின் 888 இனிங்ஸில் 40174
ஓட்டங்கள் (சராசரி 49.23) சதம் 112 கூடிய ஒட்டம் 333 விக்கெட்டுக்கள் 236 (சராசரி 34.77) சிறப்பானது 14 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்கள்.
கிரிக்கெட் உலக சாதனையானர்கனர் (42)

மைக்கல் ஹோல்டின்
உலகிலுள்ள கிரிக்கெட் வீரர்களில் பலர் தம்மிடமுள்ள ஏதாவதொரு சிறப்புத் திறமையால் உலகத்தின் கண் கவரப்படுகின்றனர்.
இந்த வகையில் சிறந்ததொரு வேகப்பந்து வீச்சாளராக மேற்கிந்திய தீவுஅணியில் இருந்தவர் மைக்கல் ஹோல்டின். அவர் 1987களின் பின்பு கிரிக்கெட் உலகிலிருந்து ஓய்வு பெற்றார்.
சில காலங்களுக்கு முன்பு இந்திய அணியில் ஆரம்பத்துடுபாட்ட வீரர்களுள் ஒருவராக இருந்தவர் ஹேப் வாட், இவர் தான் பாகிஸ்தானுக்கு எதிராக மிகக் கூடுதலான ஓட்டங்களைப் பெற்றுள்ள இந்திய வீரர்.
1975-76 களில் மேற்கிந்திய தீவில் நடந்த டெஸ்ட்டின் போது முகத்தில் பந்தொன்று பட்டதனால் அவரது பார்வை குறைந்தது. அன்று அந்த பந்தை வீசியவர் மைக்கல் ஹோல்டின்.
மேற்கிந்திய தீவு அணியின் வேகப்பந்து வீச்சாளரான மைக்கல் ஹோல்டின் 1954 ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதி ஜமேக்காவின் கிங்ஸ்டன் நகரில் பிறந்தார்.
இவருக்கு தனது 21ஆவது வயதில் டெஸ்ட் போட்டிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. முதல் 5 போட்டிகளிலும் அவரால் 10 விக்கெட்டுக்களை மாத்திரமே கைப்பற்ற முடிந்தது.
எனினும் அவர் பந்து வீச்சில் காட்டிய திறமையினால் தொடர்ந்தும் டெஸ்ட் போட்டிகளில் ஆடும் வாய்ப்புக் கிடைத்தது. தொடர்ந்து ஆடிய 26 போட்டிகளில் 129 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி திறமை காட்டினார்.
நாராணியா ஹவர்ை <43d

Page 30
ஆயினும் அவரது அடுத்த 35 போட்டிகளில் 110 விக்கெட்டுக்களை மாத்திரமே கைப்பற்ற முடிந்தது. இதில் அவரது பின்னடைவு நன்றாக விளங்குகிறது.
இதற்குக் காரணம் 1980-81களில் பாதத்தினை பதித்து பந்து வீசும் போது பாதங்களில் ஏற்படும் வேதனையால் தன்னால் வேகப்பந்து வீச முடியாமல் போயிற்று என்று அவர் ஒருமுறை குறிப்பிட்டார்.
எனினும் இச் சத்திர சிகிச்சையின் பின்பு அவுஸ்திரேலியாவுடன் நடந்த 3 டெஸ்ட் போட்டிகளில் அவரது சிறப்பான பந்து விச்சினால் அந்த டெஸ்ட் தொடரின் சிறப்பாட்டக்காரராக அவர் தெரிவு செய்யப்பட்டார்.
கவாஸ்கரை முதல் பந்திலேயே ஆட்டமிழக்கச் செய்து திறமையை வெளிக்காட்டினார். போட்டியொன்றில் வீசப்படும் முதலாவது பந்தை எதிர் கொண்ட போது கவாஸ்கர் மூன்று முறை மாத்திரமே ஆட்டமிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்,
1983இல் உலகக் கிண்ணப் போட்டியில் ஹோல்டின் பந்து வீச்சின் வேகம் குறைந்தது. இதனால் மேற்கிந்திய தீவு வேகப்பந்து வீச்சாளராக மல்கம் மார்ஷல் முன்னணியில் திகழ்ந்தார்.
பந்து வீச்சின் வேகம் குறைந்தாலும் துடுப்பாட்ட வீரருக்கு அச்சுறுத்தலாக வீசினார். அதன் பின்பு இந்திய அணியின் சுற்றுலாவின் போது அவர் ஆரம்ப பந்து வீச்சாளராக இருந்த போதும் கூட அவரால் 5 டெஸ்ட் போட்டிகளில் 12 விக்கெட்டுக்களை மாத்திரமே கைப்பற்ற முடிந்தது.
இந்தப் போட்டித் தொடரின் முதலாவது போட்டியின் இரண்டாவது இனிங்ஸில் இந்திய ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் சுனில் கவாஸ்கருக்கு அச்சுறுத்தலாகப் பந்து வீசினார். பந்து வீச்சின் வேகத்தைக் குறைத்த ஹோல்டின் மிகச் சிறந்த மத்திம வேகப் பந்து வீச்சாளராகக் ST5TULULLITsi.
அவரது சிறப்பான பந்து வீச்சின் மூலம் சகல பந்து வீச்சாளர்களுக்கும் பெரும் சவாலாக இருந்தார்.
கிரிக்கெட் உரிசு சாதனைாரரர்கதிர்

அதே வேளை அவரிடம் விசேடமாகக் காணப்பட்ட "பவுன்சர்" "யோக்கர்" பந்துகளுடன் வேகப் பந்து வீசிய ஹோல்டினுக்கும் மத்திம வேகப்பந்து வீசிய ஹோல்டினது பந்து வீச்சுக்கும் எதுவித வித்தியாசமும் காணப்படவில்லை.
1983-84 ஆம் ஆண்டு காஸ் சுற்றுலா விஷ் இருந்து 19露临·露了 நிபபு,சிலாந்துக் கான சுற்றுலா வரை அவர் மத்திம வேகப் பந்து விச்சாளராகவே பந்து வீசினார்.
எனினும் இதற்கிடையில் சில ஓவர்கள் அதி வேகமாகப் பந்து வீசியதன் மூலம் இன்னும் அவர் வேகப் பந்து வீச்சாளர் என்பதை எவரும் மறுக்க அவர் இடம் கொடுக்கவில்லை.
மேற்கிந்திய தீவு அணியிலுள்ள ஏனைய வேகப் பந்து வீச்சாளர்களுக்கில்லாத சிறப்பம்சம் (கானர் தவிர்த்து) இவர் அணியில் இடம் பெறும்போது இருந்தது.
அதாவது அவர் தனது கன்னி டெஸ்ட் போட்டியில் கலந்து கொள்ளும் போது அவர் ஐந்து முதல்தரப் போட்டிகளில் மாத்திரமே கலந்து கொண்டிருந்தார்.
தரரசரிைமா ஹலனச்

Page 31
எனினும் தற்போதுள்ள வோல்ஷ, ரொபர்ட், பெஞ்சமின், சிறே, அம்ரோஸ் போன்றோர் டெஸ்ட் அணியில் இடம்பெறுவதற்கு முன்பு இங்கிலாந்து மாநில அணிகளுக்குப் பந்து வீச்சாளராக ஆடி உள்ளனர்.
1975-76 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கான சுற்றுலாவில் இருந்து 1979-80 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கான சுற்றுலாவரை அவர் டெஸ்ட்டுகளில் ஆடவில்லை. இதனால் 100 விக்கெட்டுக்களைக் கைப்பற்றும் வாய்ப்பை இழந்தார்.
1980 ஆம் ஆண்டு தென்னாபிரிக்க கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையினால் 1,86,000 அமெரிக்க டொலர் ஒப்பந்தத்தில் தென்னாபிரிக்காவுக்கு சுற்றுலா மேற்கொள்ளும்படி அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
எனினும், அவர் பணத்துக்கு ஆசைப்படவில்லை. நிற, இன ஒதுக்கல் கொள்கையைக் கடைபிடிக்கும் தென்னாபிரிக்காவின் வேண்டுகோளை நிராகரித்தார்.
ஹோல்டின் தனது கிரிக்கெட் வாழ்வில் ஐந்து அணிகளுக்காக ஆடினார். அவை மேற்கிந்திய தீவு, ஜமேக்கா தீவு, லங்கா செயர் (1983 வரை) டஷபியர் (1983ல் இருந்து) டஸ்மேனிய ஷெட்பீல்ட் கிண்ண அணி.
1987இல் மாநில செம்பியன்ஷிப் போட்டியில் 82 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார். இது டஷபியர் அணிக்காக அவரது சிறப்பான பந்து வீச்சாகும்.
இந்தப் போட்டியில் முதல் ஐந்து ஓவர்களில் 6 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார். இது டர்பிஷயர் அணிக்காக அவரது சிறப்பான பந்து வீச்சாகும்.
இந்தப் போட்டியில் முதல் ஐந்து ஓவர்களில் 6 ஓட்டங்களைக் கொடுத்து 4 துடுப்பாட்ட வீரர்களை ஆட்டமிழக்கச் செய்தார். இது 87 ஆம் ஆண்டு மாநிலப் போட்டியில் வீசப்பட்ட மிக வேகமான பந்து வீச்சாகும்.
கிரிக்கெட் உலக சாதனையசனர்கள்

1983 ஆம் ஆண்டு பென்சன் அன்ட் ஹேஜஸ் முக்கோணப் போட்டியின் இறுதிப் போட்டியில் மேற்கிந்திய தீவு அணிக்குத் தலைமை தாங்கினார்.
அப்போட்டியில் தனது அணிக்கு 6 விக்கெட்டுக்களால் இலகுவான வெற்றியைப் பெற்றுக் கொடுத்தார். அவரது கிரிக்கெட் வாழ்வில் இன்னொரு முக்கிய அம்சம் அவர் பாகிஸ்தானுக்கோ இலங்கைக்கோ எதிரான போட்டிகளில் கலந்து கொள்ளவில்லை.
1985ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த போட்டிகளின் பின்பு அவர் கிரேக்ஷப்பலின் தலைமையிலான உலக அணிக்காக மூன்று ஒருநாள் போட்டிகளில் கலந்து கொண்டார்.
அப்போட்டியில் அவரது பந்து வீச்சு 2011-31-11 ஆகும். இத்தகு சிறப்பான பந்து வீச்சினால் இக்கண்காட்சிப் போட்டியில் அவர் சிறப்பாட்டக்காரராகத் தெரிவானார். இன்றும் அவரது சிறப்பான பந்து வீச்சு பலரது மனதிலும் பதிந்துள்ளது.
நாராணியர ஹவர்ை <6)

Page 32
சேர் ரிச்சாட் ஹட்லி
உலகில் தோன்றும் வீரர்களில் ஒரு சிலரே என்றும் ரசிகர்களின் உள்ளங்களில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்.
இந்த வகையில் கிரிக்கெட் உலகிலிருந்து ஓய்வு பெற்ற பின்பும் பலராலும் புகழப்படும் ஒருவர். நியூஸிலாந்து வீரர் சேர் ரிச்சாட் ஹட்லி.
இந்த தசாப்த ஆரம்பத்தில் உலகில் இருந்த மிகச்சிறந்ததொரு சகலதுறை ஆட்டக்காரர் ஹட்லியே. அவர் இப்பொழுது கிரிக்கெட் உலகில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
உலகில் உள்ள எந்தவொரு துடுப்பாட்ட வீரருக்கும் மிகவும் அச்சுறுத்தலாக பந்து வீசும் சேர் ரிட்சாட் ஹட்லி எந்தவொரு நாட்டிலுள்ள ஆடுகளத்திலும் வெற்றிகரமாகப் பந்து வீசக்கூடியவர்.
ஹட்லி பந்து வீச்சில் மாத்திரமன்றி துடுப்பாட்டத்திலும் மிகுந்த திறமை காட்டக்கூடியவர். சிறந்த பந்து வீச்சாளர்களையும் எதிர்கொள்ளக்கூடியவர்.
பலதடவை நியூஸிலாந்து அணியைத் தனது திறமையான துடுப்பாட்டத்தினால் தோல்வியிலிருந்து மீட்டுள்ளார்.
1987ம் ஆண்டு இலங்கைக்கு வருகை தந்த நியூஸிலாந்து அணி கொழும்பில் நடந்த டெஸ்ட்டில் 94 ஓட்டங்களுக்கு நான்கு விக்கெட்டுக்களை இழந்திருந்தது.
கிரிக்கெட் உலக சாதனையானர்கள்
 

இந்த இக்கட்டான நிலையில் மைதானத்திற்குள் நுழைந்து தனது சிறப்பான துடுப்பாட்டத்தினால் நியூஸிலாந்து அணியை தோல்வியில் இருந்து மீட்டவர்.
இந்தப் போட்டியில் அவர் ஆட்டமிழக்காது 151 ஓட்டங்கள் பெற்றார். இதுவே அவரது டெஸ்ட் வாழ்க்கையில் பெற்ற மிகக் கூடுதலான ஓட்டமாகும்.
சேர் ரிச்சர்ட் ஹட்லி உலகில் உள்ள வேறு எந்தப் பந்து வீச்சாளரும் ஏற்படுத்தாத சாதனைகள் பலவற்றை ஏற்படுத்தியுள்ளார்.
அவரது பந்து வீச்சு ஏனைய வேகப் பந்து வீச்சாளர்களில் இருந்து வித்தியாசமானது. துடுப்பாட்ட வீரர்களை மடக்குவதற்கு தந்திரமான முறையில் பந்து விசுவார்.
ரிச்சர்ட் ஹட்லி 1951ம் ஆண்டு ஜூலை 3ந் திகதி பிறந்தார். அவரது தந்தையான வோல்ட் 40களில் நியூஸிலாந்து அணிக்குத் தலைமை தாங்கினார்.
சிறந்த வேகப் பந்து வீச்சாளரான அவரது சகோதரர் டேலே 20 வருடங்களுக்கு முன்பு நியூஸிலாந்து அணியில் பிரதிநிதித்துவம் பெற்றிருந்தார்.
ஹட்லி 1973ம் ஆண்டில் நியூஸிலாந்து அணியில் இடம் பெற்றவர். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியே அவரது ஆரம்பப் போட்டி அப்போது வயது 21 இப்போது 49.
அவர் தனது இளமைக் காலத்தை ஞாபகப்படுத்தும் போது தான் இவ்வாறான ஒரு பிரசித்தமான நிலைக்கு வருவேன் என்று கனவில் கூட எதிர்பார்க்கவில்லை என்கிறார்.
அப்போதெல்லாம் ஒரு போட்டியில் கலந்து கொண்டபின் அடுத்த ஆட்டத்தில் வாய்ப்புக் கிடைக்குமா என்றுதான் ஏங்கிக்
கொண்டிருந்தேன் என்கிறார்.
நாராணியர ஹவனர்

Page 33
ஹட்லி டெஸ்ட் உலகில் நுழைந்த போது மிகச் சிறந்த வீரர்கள் அணியில் இடம் பெற்றிருந்தனர். அப்போது மேற்கிந்திய தீவுக்கு மாத்திரமே இரண்டாவதாக நியூஸிலாந்து அணி இருந்தது.
1977 இல் நிபளமிலாந்து அணி டெஸ்ட் தொடரொன்றில் அவுஸ்திரேலியாவைத் தோற்கடித்த போதே அவரது புகழ் பரவ ஆரம்பித்தது.
அதற்கு நான்கு வருடங்களுக்கு பின்பு இங்கிலாந்தை முதன் முறையாக தோற்கடிப்பதற்கு அவர் 10 விக்கெட்டுக்களைக் கைப்பற்றிக் காரணமாக இருந்தார்.
1978ல் இங்கிலாந்தின் நோட்டின்ஹம்லடியர் அணியில் சேர்ந்து முதல் ஆறு வருடங்களையும் விட புகழ் பெற்று சிறந்த வீரராக மாறினார். அத்தோடு பந்து வீசுவதற்கு ஓடும் தூரத்தையும் 20 மீற்றரிலிருந்து 15 மீற்றராகக் குறைத்தார்.
1980 ஆம் ஆண்டு அவருக்கு மாத்திரமன்றி நியூஸிலாந்துக்கும் வெற்றிகரமான ஒரு வருடமாக மிளிர்ந்தது. நியூஸிலாந்து கிரிக்கெட்
கிரிக்கிகட் உவக சாதனைாரர்கள்
 

உலகுக்கு தந்த தன்னிகரற்ற சகலதுறை ஆட்டக்காரர் சேர் ரிச்சட் ஹட்லி ஒப்வின் பின்பும் இலட்சக்கணக்கான ரசிகர்களின் உள்ளங்களில் வாழ்கின்றார்.
1983ஆம் ஆண்டு ஹட்லி காட்டிய திறமை காரணமாக முதன் முறையாக இங்கிலாந்தை இங்கிலாந்து மண்ணிலேயே தோற்கடித்த பெருமையை நியூஸிலாந்து பெறக் கூடியதாக இருந்தது.
1984ஆம் ஆண்டு இங்கிலாந்து மாநில போட்டிகளில் அவர் இன்னும் திறமை காட்டினார். 1967 ஆம் ஆண்டுக்குப் பின்பு முதன் முறையாக 1000 ஓட்டங்களும் 100 விக்கெட்டுக்களும் பெற்ற வீரர் என்ற சாதனையை ஏற்படுத்தினார்.
அவுஸ்திரேலியாவுடனான மூன்று டெஸ்டுகளில் 33 விக்கெட்டுக்கள் (சராசரி 12,15) கைப்பற்றிய ஹட்லி பிரிஸ்போனில் நடந்த டெஸ்டில் 15 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.
1982 வரை டெஸ்ட் தொடரொன்றில் மிகக் கூடுதலான விக்கெட்டுக்களைக் கைப்பற்றியவர் என்ற சாதனையையும் ஏற்படுத்தியிருந்தார்.
1988இல் இங்கிலாந்து-மேற்கிந்திய தீவு அணிகளுக்கிடையிலான தொடரில் வேகப்பந்து வீச்சாளர் மஸீ கம் மார்ஷல் 35 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி இதனை முறியடித்தார்.
1985ல் அவுஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரில் நியூஸிலாந்து 2-1 என்ற நிலையில் பெற்றதற்கு காரணமாக இருந்தவரும் ரிட்சர்ட் ஹட்லிதான்.
1989ல் இந்தியாவுடன் நடந்த டெஸ்ட் தொடரில் நியூஸிலாந்து தோல்வியுற்றிருந்தாலும் இரண்டாவது டெஸ்டில் வெற்றிக்கு காரணமாக இருந்தவர் ஹட்லியே,
அவர் அந்த டெஸ்டில் 10 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார். முதலாவது இனிங்ஸில் 49 ஓட்டங்களுக்கு 6 விக்கெட், இரண்டாவது இனிங்ஸில் 39 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்
தரரானியா திறன்ை

Page 34
1985ல் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டமொன்றில் ஆஸி வீரர் ரோஸ்சனை பிரங்ணின் பந்து வீச்சில் பிடி எடுத்து ஆட்டமிழக்கச் செய்ததன் மூலம் ஓர் இனிங்ஸில் 10 விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய வீரர் என்ற சாதனையை நழுவ விட்டார்.
இப்போட்டியில் ஹட்லி 52 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருந்தார். இரண்டு இனிங்ஸிலும் 123 ஓட்டங்களுக்கு 15 விக்கெட்டுக்கள்.
1978 ம் ஆண்டு இங்கிலாந்துடனான போட்டியின் போது ஹட்லிக்கு அச்சுறுத்தல் கடிதம் ஒன்று வந்தது. அதில் அவரது உயிருக்கு உலை வைக்கப் போவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
அக்கடிதத்தில் நீ ஜெப்போய் கொட்டின் விக்கெட்டைக் கைப்பற்றினால் உன்னைக் கொலை செய்வோம்" என்றிருந்தது. அக்கடிதம் பொலிசாருக்கு சமர்ப்பிக்கப்பட்டது.
பொலிஸ் விசாரனைகளில் இருந்து அக்கடிதம் ஜெப் போய்கொட் ஆடும் “யோக்ஷர்” மாநில அவரது விசிறி ஒருவரால் எழுதப்பட்டது என்பது தெரியவந்தது. இது தனது வாழ்வில் மறக்க முடியாத சம்பவம் என்கிறார்.
நியூஸிலாந்து சிறுவர்களுக்கு ஹட்லி வழிகாட்டுகின்றார். தேசிய வானொலியில் வாரந்தோறும் விஷேட விளையாட்டு நிகழ்ச்சியொன்றை தொகுத்தளிக்கின்றார்.
ஓய்வு நேரங்களில் உடல் ஆரோக்கியத்துக்காக உதைப்பந்தாட்டம் ஆடுகின்றார். சில காலங்களில் அவர் நியூஸிலாந்து தென் உதைப்பந்தாட்ட லீக்கைச் சேர்ந்த "ரேஞ்சர்ஸ்” “ஷல்ஸ்டன்” அணிகளுக்காக ஆடினார்.
(ஆகஸ்ட்) ஹட்லியும் அவரது பாரியாரும் தமது தாம்பத்ய வாழ்வின் 27 வருட பூர்த்தியைக் கொண்டாடினர். அவர்களுக்கு இரண்டு
பிள்ளைகள் உள்ளனர்.
கிரிக்கெட் உலக சாதனையானர்கவர்

1978-80 களில் வெஸ்ட் இண்டிஸ"க்கு எதிராக நடந்த போட்டியொன்றில் புதிய சாதனையொன்றை நிலைநாட்டினார்.
அங்கு ஏழு வெஸ்ட் இன்டீஸ் துடுப்பாட்ட வீரர்களை "எல்.பி.டபிள்யூ" முறைப்படி ஆட்டமிழக்கச் செய்தார். அவரது நுணுக்கமான பந்து வீச்சுக்கு இது சிறந்த எடுத்துக்காட்டாகும்.
ஓர் இனிங்ஸில் மிகக் கூடிய தடவைகள் 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய உலக வீரராக ஹட்லி திகழ்கிறார். 36 தடவைகள் இத்திறமையைக் காட்டியுள்ளார்.
ஒன்பது தடவைகள் ஒரு போட்டியில் இரண்டு இனிங்ஸிலும் 10 விக்கெட்டுகளுக்கு மேல் கைப்பற்றியுள்ளார்.
அவர் 86 டெஸ்ட்டுகளில் 134 இனிங்ஸில் 19 தடவைகள் ஆட்டமிழக்காது ஆடி 3124 பெற்றுள்ளார். சராசரி 27.16.
அவரது கூடிய ஒட்டம் 151 (ஆ.இ) 2 சதம் 16 அரைச்சதங்கள், 39 கட்சுகள் பிடித்துள்ளார்.
பந்து வீச்சில் 9361 ஓட்டங்களுக்கு 431 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியுள்ளார். (சராசரி 22.29)
சிறப்பான பந்து வீச்சு 52 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுகள். இனிங்ஸில் 5 விக்கெட்டுக்கு மேல் 36 தடவைகள் போட்டிகளில் 10 விக்கெட்டுகளுக்கு மேல் 9 தடவைகள்.
115 ஒருநாள் சர்வதேச ஆட்டங்களின் 98 இனிங்ஸ்"களில் 17 தடவைகள் ஆட்டமிழக்காது ஆடி 1751 ஓட்டங்கள் பெற்றுள்ளார். (சராசரி 21.65) கூடிய ஒட்டம் 79 அரைச்சதம் 4, கட்சுகள் 27.
பந்து வீச்சில் 3407 ஓட்டங்களுக்கு 118 விக்கெட்டுகள் (சராசரி 27.56) சிறப்பானது 25 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகள், 6 தடவைகள் நான்கு விக்கெட்டுகளுக்கு மேல் கைப்பற்றியுள்ளார்.
zaraoor ஹஸன் <3D

Page 35
முதல்தரப் போட்டிகளில் 10 சதம் உட்பட 11 ஆயிரம் ஓட்டங்கள் பெற்றுள்ளார். கூடிய ஒட்டம் 210 (ஆ.இ) 1350 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியுள்ளார்.
85 தடவைகள் இனிங்ஸில் 5 விக்கெட்டுக்களுக்கு மேல்
கைப்பற்றியுள்ளார். 12 தடவை 10 விக்கெட்டுக்களுக்கு மேல் கைப்பற்றி 177 கட்சுகளையும் பிடித்துள்ளார்.
ரிக்கெட் உலக சாதனையாளர்கவர்

துலிப் மெண்டிஸ்
இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் மறக்கப்படாத மறக்க முடியாத ஒரு வீரர் இருக்கின்றார்.
se6ys us?
அவர்தான்
துலிப் மெண்டிஸ்
இலங்கை தனது கன்னி டெஸ்ட் வெற்றியை இவர் தலைமையில் தான் பெற்றுக் கொண்டது.
1985 இல் இந்தியாவுக்கு எதிராக கொழும்பில் இந்த வெற்றி பெற்றப்பட்டது. w
இரண்டாவது வெற்றியான பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றியும் இவர் தலைமையில்தான் பெற்றுக் கொள்ளப்பட்டது.
துலிப் மெண்டிஸ் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து மூன்று தலைவர்கள் மாறிமாறி அணித் தலைமையை ஏற்றனர்.
எனினும் சுமார் ஐந்து வருடகாலமாக அவர்களால் டெஸ்ட் வெற்றியொன்றையோ ஒருநாள் மட்டுப்படுத்தப்பட்ட சம்பியன் ஷிப் ஒன்றையோ தமதாக்கிக் கொள்ள முடிவில்லை.
பாகிஸ்தானுடனான வெற்றியைத் தொடர்ந்து இலங்கைக்கு கிடைத்த வெற்றி நியுஸிலாந்து வெற்றியையும் அதனைத் தொடர்ந்து இங்கிலாந்துடனானதுமாகும்.
இந்தவகையில் துலிப் மெண்டிஸ் தலைமைத்துவம் இலங்கை அணியை நன்கு வழிநடாத்தியுள்ளதைக் காணலாம்.
நாராரிையா ஹவன்

Page 36
அவர் எந்த சந்தர்ப்பத்திலும் ஈடுகொடுத்து ஆடக் கூடிய சிறந்ததொரு துடுப்பாட்ட வீரர்.
அவரது முழுப் பெயர் லுவிஸ் ரொஹான் துலிப் மெண்டிஸ். பாடசாலை கிரிக்கெட் வீரர் ஒருவராக ஆடுகளத்துள் நுழையும் போது, தான் இந்த நாட்டின் டெஸ்ட் வீரராகவோ அணித் தலைவராகவோ வருவேன் என்று அவர் கனவிலும் நினைத்திருக்கவில்லை.
அவரது கிரிக்கெட் வாழ்க்கை மொரட்டுவை சென். செபஸ்தியன் மைதானத்தில் ஆரம்பமாகி, பின் கல்கிஎல்ஸை சென், தோமஸ் வித்தியாலய மைதானத்தில் வலுவூட்டப்பட்டது.
துலிப் மென்டிஸ் 1952 ஆகஸ்ட் 25ஆந் திகதி மொரட்டுவையில் பிறந்தார்.
தனது ஆரம்பக்கல்வியை மொரட்டுவை சென். செபஸ்தியன் மகாவித்தியாலயம், கல்கிஸ்ஸை சென், தோமஸ் மகா வித்தியாலயம் என்பனவற்றில் பெற்றுக் கொண்டார்.
பாடசாலைக் காலத்திலே தொடர்ந்து சதங்களைக் குவித்து, பின்பு டெஸ்ட் அந்தஸ்து கிடைத்ததும் இலங்கை அணியில் இடம் பெற்றார்.
தனது 20வது வயதில் அதாவது 1972ல் பிரபல மேற்கிந்திய தீவு அணிக்கெதிராக அவர் பெற்ற 72 ஓட்டங்களை அவரால் என்றுமே மறக்க முடியாது.
தொடர்ந்து 15 வருடங்களாக இலங்கையின் கிரிக்கெட் வளர்ச்சிக்காக உழைத்த துலிப் மெண்டிஸ் 1987இல் கிரிக்கெட் உலகுக்குப் பிரியாவிடை கொடுத்தார்.
வெற்றியையும் தோல்வியையும் ஒரே மனதுடன் சந்தோஷமாக ஏற்றுக் கொண்டார்.
தொடர்ந்து தோல்வி வந்தபோதெல்லாம் மனம் தளர்ந்து விடவில்லை. வெற்றி நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை ஒளி அவருள் படர்ந்திருந்தது.
கிரிக்கிகட் உலக சாதனையாகசக்கர்

துலிப் மேண்டிஸ் இரண்டு இனிங்ளிலும் சதம் பெற்ற ஒரே இலங்கை வீரராக நீண்ட காலம் இருந்தார். 1982இல் இந்திய வெடிபொக் விளையாட்டரங்கில் இச்சாதனையைப் படைத்தார்.
1997இல் இந்தியாவுடனான போட்டியில் அரவிந்த டி சில்வாவும் இந்த சாதனைப் பட்டியலில் இணைந்து கொண்டுள்ளார்.
x ೪
ృద్ధి ჯ. ჯ. ჯ. ჯ. ଽ
ॐ 3:38 *११
துலிப் மென்டிஸ் 1972ஆம் ஆண்டு கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை தலைவரின் அணி சார்பாக "கோபாலன்" கின்னப் போட்டிக்காக சென்னை சென்ற அணியில் இடம்பெற்றார்.
தாரரரிையா தரபைனர் 

Page 37
இதுதான் அவர் கலந்து கொண்ட முதலாவது முதல் தரப் போட்டி. அங்கு அவர் முதலாவது இனிங்ஸில் 52 ஓட்டங்களும் இரண்டாவது இனிங்ஸில் 34 ஓட்டங்களும் பெற்றார்.
1974இல் சென்னையில் நடைபெற்ற கோபாலன் கிண்ணப் போட்டியில் 194 ஓட்டங்கள் பெற்றார். இதுதான் முதல் தரப் போட்டிகளில் அவர் பெற்றுள்ள கூடிய ஓட்டங்களாகும்.
1971-72 களில் முதல் முறையாக அவர் சரவணமுத்து (தற்பொழுது லக்ஸ்பிறே) கிண்ணப் போட்டிகளில் கலந்து கொண்டார். முதல் போட்டியிலே நோமன்ட் அணிக்கெதிராக சதம் பெற்றார்.
இலங்கை க்கு டெஸ்ட் அந்தஸ்து கிடைத்து குறுகிய காலத்துக்குள்ளேயே அதாவது 1982 ஆம் ஆண்டு அவர் இலங்கை அணியின் தலைவராக நியமனம் செய்யப்பட்டார்.
1984ஆம் ஆண்டு இங்கிலாந்தின் லோட்ஸ் விளையாட்டரங்கில் நடைபெற்ற டெஸ்ட்டில் அவரின் சிறப்பான துடுப்பாட்டத்தினால் மிகுந்த கெளரவத்துடன் இலங்கை அணி நாடு திரும்பக் கூடியதாக இருந்தது. அப்போட்டியிலும் அவர் சதம் பெற்றார்.
டெஸ்ட் போட்டிகளாயினும் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளாயினும் அவரது துடுப்பாட்டம் அபாரமானது. எந்த பந்து வீச்சாளரையும் தயக்கமின்றி எதிர்கொள்வார்.
போட்டிகளில் அவர் அடிக்கும் சிக்ஸர்கள் பிரபலமானவை. இதனை ரசிகர்கள் “வன்மோ. வன்மோ” என்று உற்சாகப்படுத்திக் கொண்டே இருப்பார்கள்.
1985ம் ஆண்டு இந்தியாவுக்கெதிராக கண்டி அஸ்கிரிய மைதானத்தில் நடந்த டெஸ்ட்டில் அவர் மிக அபாரமாக ஆடி இலங்கை அணியை தோல்வியிலிருந்து மீட்டார்.
இந்த டெஸ்ட்டில் அவர் 124 ஓட்டங்கள் பெற்றார். அவரது டெஸ்ட் வாழ்க்கையில் பெற்ற மிகக் கூடுதலான ஓட்டமும் இதுதான்.
அப்போட்டியில் தனது உப தலைவர் றோய் டயஸ"டன் இணைந்து இரட்டைச் சதத்துக்கான இணைப்பாட்டத்தைக் கொண்டிருந்தார்.
affi625A 2-6 as at assoso/u/ussia,6i

துலிப் மெண்டிஸ் கிரிக்கெட் உலகுக்கு பிரியாவிடை கொடுக்கும் போது 98 முதல்தரப் போட்டிகளில் ஆடி 5245 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.
அவர் முதல் தரப் போட்டிகளில் 10 சதங்களும் 33 அரைச்சதங்களும் பெற்றிருந்தார்.
1982இல் முதல் டெஸ்ட் போட்டிகளிலிருந்து மெண்டிஸ் ஒய்வு பெறும் போது 23 டெஸ்ட்டுகளில் ஆடி 1252 ஓட்டங்கள் பெற்றிருந்தார்.
அவரது டெஸ்ட் சராசரி 31.30 ஆகும். டெஸ்ட் போட்டிகளில் 4 சதங்களும் 7 அரைச் சதங்களும் பெற்றிருந்தார். இனிங்ஸில் கூடிய ஓட்டம் 124 ஆகும்.
ஒய்வு பெறும் போது அவர் 71 ஒருநாள் மட்டுப்படுத்தப்பட்ட சர்வதேசப் போட்டிகளில் ஆடி 1365 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.
ஒருநாள் போட்டிகளில் பெற்ற கூடிய ஓட்டம் 80 ஆகும். இது 1980இல் சிட்னியில் அவுஸ்திரேலியாவுக்கெதிராகப் பெறப்பட்டது.
துலிப் மெண்டிஸ் ஒரு துடுப்பாட்ட வீரர் என்ற வகையிலும் அணித் தலைவர் என்ற வகையிலும் இலங்கைக்கு பாரிய சேவையாற்றியுள்ளார்.
அவரது வழி நடத்துதலினாலேயே பிரபல இந்திய, பாகிஸ்தான் அணிகளைத் தோற்கடித்து டெஸ்ட் வெற்றியை பெறக் கூடியதாக இருந்தது.
இலங்கை பெற்ற முதலாவது சர்வதேச "சம்பியன்ஷிப்” போட்டி வெற்றி அவரது தலைமையில் பெறப்பட்டது. (1986ல் ஆசியக் கிண்ணம்)
இலங்கை அணி வெளிநாடொன்றில் பெற்ற முதல் கிரிக்கெட்
வெற்றியின் போதும் (நியுஸிலாந்துக்கு எதிராக) அணியின் முகாமையாளராக கடமையாற்றினார்.
நாரரரிையா ஹவர்ை く .... čskíA.S.

Page 38
அதே போன்று உலகக் கிண்ணம் உட்பட இலங்கை வெறற கணட ஏனைய சம்பியன்ஷிப்களின் போதும் முகாமையாளராக கடமையாற்றினார்.
அவரது டெஸ்ட் வாழ்வில் கூடிய காலம் அணித் தலைவராகவே இருந்து சேவையாற்றினார். ஓய்வு பெறும் போது அணித் தலைவராக இருந்தே ஓய்வு பெற்றார்.
உலக கிரிக்கெட் அரங்கில் மிகச் சிலரே அணித் தலைவராக இருந்து ஓய்வு பெற்றுள்ளனர். அந்த வகையில் இவர் சிறப்புக்குரியவர். துலிப் மெண்டிஸ் தனது சொந்த விருப்பத்திற்கு ஓய்வு பெற்றார் என்பதை விட பிறர் விருப்பத்துக்காக ஓய்வு பெற்றார் எனலாம்.
இளைய தலைமுறையினருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதற்காகவும் அனைத்தையும் போன்று இங்கும் மாற்றம் நிகழ வேண்டும் என்பதற்காகவுமே அவர் ஓய்வு பெற்றார்.
அவர் கிரிக்கெட் அணியில் இருந்து ஒய்வு பெற்றாலும் இன்னும் கிரிக்கெட் உலகுக்கு தனது பங்களிப்பை வழங்கிக் கொண்டே இருக்கின்றார்.
கிரிக்கெட் உலக சாதனையானர்கள் ・
 


Page 39
இலங்கையில் விளையாட்டுத் துறை ( தமிழில் வெளிவரும் நூல்கள் மிகக் உள்ளன. இக்குறையை ஓரளவாயினு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன பணிப்பாளர் நூராணியா ஹஸன் அவர் பாராட்டுக்குரியது கிரிக்கெட் பற்றி ஏர் நூல்களை எழுதியுள்ள அவர் தமது மூ நூலையும் கிரிக்கெட் தொடர்பாகவே கிரிக்கெட் உலக சாதனையாளர்கள் : முத்தையா முரளீதரன், இம்ரான் கான் கபில் தேவ், விவியன் ரிச்சர்ட் கிரஹம் ஹோல்டின், ரிச்சர்ட் ஹட்லி, துலிப் ெ
பற்றிய பல்வேறு தகவல்களை தந்துள்ளார். இவை கிரிக்கெட் ரசிகர் பொது வாசகர்களுக்கும் பயன்படத்தக்கவையாக விளங்குகின்
நூராணியா ஹஸன் இயல்பாகவே ஓர் விளங்குவதால்அவரது நூல்கள் படிப் சுவையுணர்வையும் ஏற்படுத்துகின்றன. ஆர்வத்தோடு படிப்பதற்கேற்ற முறையி இந்நூலை ஆக்கியுள்ளார். ஒரே பார்ை சாதனையாளர்கள் சிலரைப் பற்றி அ உதவுகின்றது.
இலங்கை வானொலியின் தமிழ்க் கிரி விளங்கும் நூராணியா ஹஸன் கிரிக்கெ தொடர்பான தமது அநுபவங்களை இந் புலப்படுத்துகின்றார். பொதுவாகப் பலரு பல இந்நூலில் இடம் பெற்றுள்ளன.
தமிழ் மூலமாகக் கிரிக்கெட் விளையா அறிய வேண்டுமாயின் நூராணியா ஹஸ் வேண்டிய தேவை விரைவில் விை பொது வாசகர்களுக்கும் ஏற்படப் போகி தமது நூல்கள் வாயிலாக நூலாசிரியர் : குரியது அவரது நூல்கள் மென்மேலும் GT6015 S6)IT.
கலாநிதி துரை. மனோகரன் தமிழ்த் துறை பேராதனைப் பல்கலைக் கழகம், பேராதனை,
இலங்கை
 

தொடர்பாகத் றைவாகவே
நீக்கும் முறையில் D6ÖGSLD (SGODGOJI கள் முயன்று வருவது கனவே இரண்டு
அலன்போடர் கூச். மைக்கல் ன்டிஸ் ஆகியோர்
ளுக்கும்
60.
ழுத்தாளராகவும் 95[D(ტტ;
ல் நூலாசிரியர்
JUNGÖ ESQUEL" po ao
ந்து கொள்ள இந்நூல்
கெட் வர்ணனையாளராகவும்
விளையாட்டுத் துறை லின் மூலம் மேலும்
க்கும் தெரியாத விடயங்கள்
டுத் துறை தொடர்பாக னின் நூல்களைப் பார்வையிட யாட்டுத் துறை ரசிகர்களுக்கும் ன்றது. அதற்கான தகுதியைத் ற்படுத்தி வருவது மகிழ்ச்சிக்
வெளிவர வேண்டும் என்பதே
SBN 955 - 84O2 OO - விலை ரூ 7500
COver Design by AAzeez Nizordeen