கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கிரிக்கெட் உலகில் பிரகாசித்தவர்கள்

Page 1


Page 2

கிரிக்கெட் உலகில் பிரகாசித்தவர்கள்

Page 3
ஆசிரியரின் பிற நூல்கள் அஸ்கிரிய முதல் லாகூர் வரை
எனது பார்வை கிரிக்கெட் உலக சாதனையாளர்கள் இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் வரலாறு (அச்சில்) உருவகக் கதைகள் (அச்சில்)

கிரிக்கெட் உலகில் பிரகாசித்தவர்கள்
நூராணியா ஹஸன்
நூராணியா பதிப்பகம் 157, உயன்வத்தை தெவனகல மாவனல்லை

Page 4
இந்நூலானது தேசி நூலக, ஆவணவாக்கல் சேவைகள் சபையின் உதவியுடன் வெளியிடப்பட்டுள்ள போதிலும், இந்நூலின் உள்ளடக்கமானது தேசிய நூலக, ஆவணவாக்கல் சேவைகள் சபையின் கருத்துக்களை பிரதிபலிக்கவில்லை.
முதற் பதிப்பு : 2000 டிஸம்பர்
வெளியீட்டு உரிமை : ஆசிரியருக்கு
இலங்கை தேசிய நூலகம் - வெளியீடுகளில் உள்ள பட்டியல் தரவு
நூரானியா ஹஸன் கிரிக்கெட் உலகில் பிரகாசித்தவர்கள் - நூராணியா ஹஸன் தெவனகல : நூராணியா பதிப்பகம், 2000
ப.64 ச. மி.21
ISBN 955-8402-01-X விலை : ரூ : 75,00 1, 796-358092 டிடிசி 21 2 தலைப்பு
2. வாழ்க்கை வரலாறு
ISBN: 955-8402-01-X
அட்டைப்பட வடிவமைப்பு : ஏ. அஸிஸ் நிஸார்தீன்
அச்சிட்டாளர் : M.J.M. ஒப்செட் அச்சகம்
119 பிரதான வீதி, மாவனல்லை.
Title of the BOOK : Cricket Utahil PrahasiththaVarhal
Author : Nooraniya Hassan Pages : 52+12 at 64 First Edition : December 2000 Price : 75.00

சமர்ப்பணம் என்னை ஆளாக்கிய அன்புப் பெற்றோருக்கு

Page 5

வானொலி தொலைக்காட்சி இரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான "நூராணியா ஹசன்" கிரிக்கெட் நேர்முக வர்ணனையாளராகத் திகழ்வதோடு பத்திரிகைகளிலும் பல கட்டுரைகளை எழுதியுள்ளார். அவற்றுள் சில நூலுருவம் பெற்றுள்ளதால் வாசிக்கவும் தகவல்களை அறிந்து கொள்வதற்கும் பயனுள்ளவையாக இருக்கின்றன. அந்த வரிசையில் வரும் இந்நூலுக்கு அணிந்துரை வழங்குவதில் மகிழ்ச்சியடைகின்றேன்.
இன்று அநேகமான நாடுகளில் பலரின் ஆர்வத்தையும் தூண்டும் விளையாட்டாக “கிரிக்கெட்" விளங்குகின்றது. அதனால் மக்கள் மத்தியில் அறிவாளிகளுக்கும் திரைப்பட நடிகர்களுக்கும் செல்வாக்கும் வரவேற்பும் இருப்பது போல சாதனைகள் நிலைநாட்டிய கிரிக்கெட் விளையாட்டு வீரர்களுக்கும் பிரதானமான வரவேற்பளிக்கப்படுகின்றது.
டெஸ்ட் ஆட்டம், ஒருநாள் ஆட்டம் போன்றவற்றில் பலர் ஈடுபட்டாலும் ஒரு சிலரால்தான் சாதனைகள் புரிந்து பிரகாசிக்கக் கூடியதாக இருக்கின்றது. சிலர் குறிப்பிட்ட சில காலத்தில் ஏற்படுத்திய சாதனைகள் பல கிரிக்கெட் இரசிகர்கள் மனதில் தொடர்ந்தும் இடம் பிடித்துள்ளன. ஜனரஞ்சக விளையாட்டாக கிரிக்கெட் மாறியுள்ளதால் முன்னணியில் திகழும் வீரர்களின் பின்னணித் தகவல்களையும், அவ்வப்போது அவர்கள் களத்தில் நிகழ்த்திய சாதனைகளையும் அறிவதில் விளையாட்டு இரசிகர்கள் மத்தியில் மாத்திரமன்றி சராசரி சாதாரண மக்கள் மனதிலும் ஆர்வம் அதிகரித்து வருகிறது. ஆர்வமானவர்கள் பெறக்கூடிய தகவல்கள் தமிழ் மொழியில் அபூர்வமாக இருப்பதை உணர்ந்த நூராணியா ஹசன் எழுதியுள்ள நூல் சிறியதாக இருப்பினும்
vi

Page 6
பல்வேறு நாட்டில் பல்வேறு சமூகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் களின் தகவல் களைச் சுவையாகத் தருகிறது. அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த துடுப்பாட்ட வீரர் "மாக் டேலர்" பற்றி எழுதுகையில்,
அவர் எந்த விடயத்திலும் நேரக் கணிப்பீட்டில் சிறந்து விளங்குவார். வேகமாக வரும் பந்தை நன்கு கணிப்பிட்டு ஆடுவார். அதே போன்றுதான் சரியான நேரத்தில் கிரிக்கெட் உலகிலிருந்து ஓய்வு பெற்றார். என எழுதி "நான் சரியான தீர்மானத்தை எடுத்துள்ளேன் என்பதை நான் அறிவேன்.எனது இதயம் கிரிக்கெட்டோடு சங்கமமானது போதுமானது என்ற திரிமானத்தோடு பின்னர் ஆடுவது சிறந்ததல்ல. இளையவர்களுக்கு வழிவிடுவோம்” என்ற மாக்டேலரின் கூற்றையும் இணைத்துத் தந்துள்ளார்.
வீரனைப்பற்றி இன்னொருவீரன் சொன்னது சித்தரிக்கப்படுகிறது இப்படி
"இந்திய அணி முன்னாள் தலைவர் சுனில் கவாஸ்கர் இப்படிச் சொல்கிறார் "தோல்வியுறும் போட்டியை வெற்றியாக மாற்றக் கூடிய இரு வீரர்களே உலகில் உள்ளனர். ஒருவர் பாக்கிஸ்தான் அணி வீரர் ஜாவிட் மியன்டாட், மற்றவர் இலங்கை வீரர் அர்ஜுனா ரணதுங்க”
இப்படி இரசிக்கப் பல அம்சங்கள், தகவல்கள் இந்நூலில் உண்டு.
தொடர்ந்தும் நூராணியா ஹசன் புதுப்புது விடயங்களை நூலாகப் படைக்க நல்வாத்துக்கள்.
உருவை எஸ். தில்லைநடராசா மேலதிக செயலாளர் கல்வி உயர்கல்வி அமைச்சு "இசுருபாய" பத்தரமுல்ல.

dp366260)
நேசமிக்க வாசக நெஞ்சங்களே! இன்னொரு புத்தகத்தினூடாக உங்களோடு உறவாடக் கிடைத்த வாய்ப்பையிட்டு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். அந்த வாய்ப்பைத் தந்த இறைவனுக்கே அனைத்துப் புகழும் உரித்தாகும்.
எனது முன்னைய புத்தகங்களுக்கு வாசகர்களாகிய உங்களது சிறந்த பின்னூட்டலே மிக விரைவிலேயே இன்னொரு புத்தகத்தை வெளியிடும் ஆவலை என்னுள்ளத்தில் விதைத்து, விரைவிலேயே அது வியாபித்தது.
தமிழ் மொழியில் விளையாட்டுத்துறை தொடர்பான நூல்கள் வெளிவருவது மிக அரிதாகவே உள்ளது தமிழ் மொழியை மாத்திரம் தெரிந்த வாசகர்களுக்கு இது பெரும் குறைபாடாகும்.
இலங்கையில் கிரிக்கெட் மிகவும் ஜனரஞ்சகமான ஒரு விளையாட்டாக தற்போது மாறியுள்ளது. வீடுகளில் உள்ள சின்னஞ் சிறுவர்களெல்லாம் சர்வதேச கிரிக்கெட் வீரர்களின் பெயர்ப்பட்டியலை இலகுவாக ஒப்புவிப்பார்கள்.
இந்நிலையில் வாசகர்கள் நேசிக்கும் சில கிரிக்கெட் வீரர்களின் விபரங்களை இந்நூலில் தந்துள்ளேன். இந்நூலில் இடம்பெற்றுள்ள வீரர்களின் வாழ்க்கை வரலாற்றை முடிந்தளவு சுருக்கமாகவே தருவதற்கு முயன்றுள்ளேன்.
தொடர்ந்து புத்தகங்கள் எழுதுமாறு என்னை ஊக்கப்படுத்தும் எனது அன்புக்குரிய வாசக நேயர் நெஞ்சங்களுக்கும் எனது
தொலைக்காட்சி, வானொலி வர்ணனைகள் பற்றி நல்ல
іх

Page 7
கருத்துக்களைத் தந்து வரும் நண்பர்களுக்கும் என் நன்றிகள் என்றும் உரித்தாகும்.
இச்சிறிய நூல் சிறப்பாக வெளிவருவதற்கு பலரும் பல விதத்திலும் உதவிக்கரம் நீட்டியுள்ளனர். தனது வேலைப்பளுவுக்கு மத்தியில் அணிந்துரை தந்துள்ளார் கல்வி, உயர்கல்வி அமைச்சின் மேலதிகச் செயலாளர் உடுவை எஸ். தில்லைநடராசா அவர்கள்.
இப்புத்தகத்தை அழகான முறையில் அச்சிட்டுத் தந்தவர் மாவனல்லை எம்.ஜே.எம் அச்சக உரிமையாளர் அல்ஹாஜ் எம்.ஜே.எம். முஸம்மில். டைப் செட்டிங் முஹம்மத் ஹில்மி. எனது எதிர்பார்ப்புக்கு ஏற்ற விதத்தில் அழகிய அட்டைப் படத்தை உருவாக்கியவர் கவிஞர் ஏ. அஸிஸ் நிஸார்தீன்.
எப்போதும் போன்று புத்தகத்தை ஒப்பு நோக்கி உதவியவர் கவிஞர் வி.ஜெகதீஸன். தினகரன் ஆசிரியர் பீடத்தைச் சேர்ந்த சிராஜ் எம். ஷாஜஹான் பல விதத்திலும் உதவியவர். அனைவருக்கும் என் நன்றிகள்.
எழுத்துக்களாக இருந்த என் கருத்துக்களை புத்தகமாக உருக் கொடுக்க உதவி செய்த தேசிய நூலக, ஆவணவாக்கள் சேவைகள் சபைக்கு என் நெஞ்சத்தில் இருந்து வரும் நன்றிகள் உரித்தாகட்டும்.
கிரிக்கெட் வீரர்களின் சாதனைகளின் சுருக்கத்தை இந்தப் புத்தகத்தில் தந்துள்ளேன். இது தொடர்பான உங்களது ஆக் கபூர்வமான விமர்சனங்களை எதிர் பார்த் து விடைபெறுகின்றேன்.
அன்புடன் நூரானியா ஹஸன் 157, Uyanwatta, Devanagala, Mawanella.

பொருளடக்கம்
ஜாவிட் மியன்டாட்
Javed Miandad
சுனில் கவாஸ்கர் Sunil Gavaskar
டெஸ்மன் ஹேய்ன்ஸ் Desmond Haynes
மாக் டேலர்
Mark Taylar
அர்ஜ"ன ரணதுங்க Arjuna Ranathunga
ரவி சாஸ்திரி Ravi Shastri
மாட்டின் குரோ Martin Crow
xi
பக்கம்
O1
O9
17
23
30
42
47

Page 8

ஜாவிட் மியன்டாட் JaVed Miandad
பாகிஸ்தான் கிரிக்கெட் உலகுக்கு அளித்த மிகச் சிறந்ததொரு துடுப்பாட்ட வீரர்தான் ஐாவிட் மியன்டாட். டெஸ்ட் கிரிக்கெட் உலகில் தோன்றிய சிறந்த வீரர்களின் பட்டியலில் அவருக்கும் முக்கிய இடம் உண்டு. வலது கை மத்திய வரிசைத் துடுப்பாட்ட வீரராக களத்துள் நுழைந்து, பாகிஸ்தானின் பல வெற்றிகளுக்குப் பின்னால் நின்றவர். பகுதி நேர பாத சுழல் பந்து வீச்சாளர், பகுதி நேர விக்கெட் காப்பாளர்.
ஜாவிட் மியன்டாட் விருப்பமின்றியே கிரிக்கெட் உலகில் இருந்து ஒய்வு பெற்றார். இறுதிக் காலகட்டத்தில் அணியில் அவர் இடம் பெறாததன் காரணத்தினாலேயே ஓய்வு பெறத் தீர்மானித்தார். அவரது இறுதி டெஸ்ட், இறுதி ஒருநாள் ஆட்டங்களும் அவருக்கு மகிழ்ச்சியாக அமையவில்லை. குறைந்த ஒட்டங்களுக்கே அவர் ஆட்டமிழந்தார். தொடர்ந்தும் இரண்டு வருடங்களுக்கு அவருக்கு ஆடக்கூடிய வாய்ப்புக் கிடைத்திருந்தால் நிச்சயமாக அவர் டெஸ்ட் போட்டிகளிலும் ஒரு நாள் ஆட்டங்களிலும் 10,000 ஒட்டங்களுக்கு மேல் பெற்றிருப்பார்.
இந்திய அணியின் மாஜித் துடுப்பாட்ட வீரரான நூர் முஹம்மது மியன்டாடின் ஏழு புத்திரர்களுள் ஒருவரான ஜாவிட் மியன்டாட் 1957 ஜூன் 12 இல் கராச்சியில் பிறந்தார்.
盆

Page 9
தந்தையின் வழிமுறையைப் பின்பற்றி வலது புறத்தால் துடுப்பெடுத்தாடும் மியன் டாட் இன்று உலகில் உள்ள கண்ணியத்துக்குரிய ஒரு கிரிக்கெட் வீரராக திகழ்கின்றார். அவர் கல்லூரிக் காலங்களில் கிரிக்கெட் ஆட்டத்தில் காட்டிய திறமை விரைவிலேயே அவருக்கு முதல்த்தரப் போட்டிகளில் கலந்து கொள்ள வாய்ப்பளித்ததோடு டெஸ்ட் அணியில் சேரவும் கதவுகள் திறக்கப்பட்டன. மியன்டாடின் உயரம் 5 அடியும் 9 அங்குலம் ஆகும்.
ஜாவிட் மியன்டாட்
1973ஆம் ஆண்டு முதல்த்தரப் போட்டிகளில் கலந்து கொண்ட மியன்டாட் இரண்டு வருடங்களின் பின்பு மிகுந்த எதிர்பார்ப்புடன் டெஸ்ட் உலகில் நுழைந்தார்.
1975 ஆம் ஆண்டு இலங்கைக்குச் சுற்றுலா மேற்கொண்ட 19 வயதின் கீழ் பாகிஸ்தான் அணிக்கு அவர் தலைமை வகித்தார். அதற்குப் 10 வருடங்களுக்குப் பின்பு 1985 இல் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானுக்கு தலைமை தாங்கினார்.
_________ انقلابق آق قیقت
 

பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் அங்கத்துவம் பெற்றதிலிருந்து அவர் காட்டிய திறமையினால் ஆரம்பத்தில் இருந்தே அணியில் நிலையான ஓர் இடத்தைப் பெற்றுக்கொண்டார்.
இளம் வயதிலேயே டெஸ்ட் போட்டி ஒன்றில் இரட்டைச் சதம் பெறுவது இலகுவான கரியமல்ல. எனினும் இத்திறமை ஜாவிட் மியன்டாடுக்கு இருந்தது. 1976 ஆம் ஆண்டு நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட்டில் காராச்சி நகரில் இத்திறமையை அவர் வெளிக் கொணர்ந்தார்.
அப்போது அவருடைய வயது 19 வருடங்களும் 141 நாட்களுமாகும். மிக இளம் வயதில் இரட்டைச் சதம் பெற்ற உலக வீரராக இவர் திகழ்கிறார். அதற்கு முன்பு மேற்கிந்திய தீவு வீரர் ஜி.ஏ. ஹெட்லி தனது 20 வருடமும் 315 நாட்களில் இச்சாதனையைப் படைத்திருந்தார்.
பாகிஸ்தான் அணிக்குத் தலைமை வகித்த, உலக மூன்றாவது இளம் தலைவராகவும் ஜாவிட் மியன்டாட் விளங்குகிறார். 1976 முதல் 1979 வரை முன்று வருடங்கள் இங்கிலாந்தில் சசெக்ஸ் மாநில அணிக்காக தொழில் ரீதியில் ஆடினார். க்லமோர்கன் அணியிலும் முக்கிய துடுப்பாட்ட வீரராக இருந்தார்.
1973-1974 களில் தனது 16 ஆவது வயதில் முதல்த்தரப் போட்டிகளில் கலந்து கொள்ள ஆரம்பித்த மியன்டாட் 25000 இற்கும் அதிகமான ஓட்டங்களை முதல்த்தரப் போட்டிகளில் பெற்றுள்ளார். முதல்த்தரப் போட்டிகளில் அவர் பெற்றுள்ள கூடிய ஓட்டம் 311 ஆகும். இது நெஷனல் வங்கிக்கு எதிராக 1974-75களில் கராச்சியில் நடந்த போட்டியொன்றில் பெற்றதாகும்.
பல சந்தர்ப்பங்களில் பாகிஸ்தான் அணிக்குத் தனது சிறப்பான துடுப்பாட்டத்தால் வெற்றியைத் தேடிக் கொடுத்துள்ள மியன்டாட் பாகிஸ்தான் அணியைத் தோல்விகளில் இருந்து மீட்கவும் பாடுபட்டுள்ளார்.
1976ல் நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் முதன் முதலாக
ஆடுவதற்கு வாய்ப்புப் பெற்ற மியன்டாட் அப்போட்டியில் 172 ஓட்டங்கள் பெற்று சாதனை புரிந்தார்.

Page 10
மியன்டாட் தனது சிறந்த துடுப்பாட்டத்தினால் 451 ஓட்டங்கள் பெற்று உலக சாதனை புரிந்த டொனால் பிரட்மன், பில் போன்ஸ் போர்ட் ஆகியோரின் இணைப்பாட்ட சாதனையை முதஸஸர் நஸாருடன் இணைந்து சமப்படுத்தினார்.
டெஸ்ட் போட்டியொன்றில் சகல விக்கெட்டுக்குமான மிகக்கூடிய இணைப்பாட்டம் 451 ஆகும். 1938ல் இங்கிலாந்துக்கு எதிராகவே டொனால் பிரட்மன் பில் பொனிஸ் போர்ட் ஆகியோரினால் இச்சாதனை ஏற்படுத்தப்பட்டது.
1983 ல் ஹைதராபாதில் (பாகிஸ்தான்) நடைபெற்ற இந்தியாவுடனான நான்காவது டெஸ்ட்டில் இந்தச் சாதனை மியன்டாடினாலும் முதஸ்ஸர் நஸாரினாலும் சமப்படுத்தப்பட்டது.
இந்த டெஸ்ட்டில் மூன்றாவது விக்கெட்டுக்கான இச்சாதனை மனிந்தர் சிங், திலிப் தோஷி ஆகியோரின் சுழல் பந்து வீச்சுக்கும் கபில் தேவ், சந்து ஆகியோரின் வேகப் பந்துகளுக்கும் ஈடுகொடுத்தே ஏற்படுத்தப்பட்டது.
முதலாவது நாள் ஒட்ட எண்ணிக்கையை இருவரும் 224வரை உயர்த்தினர். இரண்டாவது தினத்தில் இன்னும் 290 ஓட்டங்கள் பெறப்பட்டன. தேநீர் இடைவேளைக்கு முன்பு ஓட்ட எண்ணிக்கை 432 ஆக இருந்தது.
அப்போது மூன்றாவது விக்கெட்டுக்காக 1947 - 48 களில் பில் எட்ரிக் டெனிஸ் கொம்டன் ஆகியோரால் தென்னாபிரிக்காவுக்கு எதிராக 370 ஓட்டங்கள் பெறப்பட்டு ஏற்படுத்தப்பட்ட உலக சாதனை முதஸ் ஸர் நஸார் - ஜாவிட் மியன் டாடினால் முறியடிக்கப்பட்டது. இரண்டாவது தினத்தில் உலக சாதனையான 451 ஓட்டங்கள் இவர்களினால் பெறப்பட்டன. அப்போது பாகிஸ்தான் 511 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டை இழந்திருந்தது. எனினும், முதஸ்ஸர் நஸார் திலிப் தோஷியின் பந்துக்கு மனிந்தர் சிங்கிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்ததினால் இச்சாதனையை முறியடிக்க முடியவில்லை. இலங்கை வீரர்களான சனத் ஜயசூரிய, ரொஷான் மஹாநாம ஆகியோர் இந்தியாவுக்கு எதிராக சகல விக்கெட்டுக்குமான சிறப்பான இணைப்பாட்டத்தை ஏற்படுத்தியுள்ளனர். இது 1997ல்
கரக்கெட் உதனித் ட

ஆர்.பிரேமதாஸ் அரங்கில் 576 ஓட்டங்கள் பெற்று நிலை நாட்டப்பட்டது.
ஜாவிட் மியன்டாட் இப்போட்டியில் ஆட்டமிழக்காது 280 ஓட்டங்கள் பெற்றார். மூன்றாவது தினத்தில் அவர் தனது முச்சதத்தை (300 ஓட்டங்களைப்) பூர்த்தி செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்கு முன்பு 300 ஓட்டங்கள் பெற்ற ஒரே பாகிஸ்தான் வீரர் ஹனிப் முஹம்மத் ஆவார். (337 ஓட்டங்கள் மேற்கிந்தியத் தீவுக்கு எதிராக 1958ல்)
ஹனிப் முஹம்மதின் ஒட்ட எண்ணிக்கையைத் தாண்டிய பின்பு கூடிய ஒட்டமான காபில்ட் சோபசின் 365 ஓட்டங்களை எட்டிப்பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் இப்போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற வேண்டிய அவசியம் இருக்கவில்லை. இதற்கு முன்னைய இரு போட்டிகளிலும் பாகிஸ்தானே வெற்றி பெற்றிருந்தது.
எனினும் யாரும் எதிர்பாராத விதத்தில் பாகிஸ்தான் 581 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்திருந்த நிலையில் மியன்டாட் ஆட்டமிழக்காது 280 ஓட்டங்கள் பெற்றிருந்தபோது, தலைவர் இம்ரான் கான் ஆட்டத்தை நிறுத்தி, இந்திய அணியை ஆடப் பணித்தார்.
இம்ரானின் நோக்கம் மூன்றாவது டெஸ்ட்டிலும் வெற்றி பெறுவதாகவே இருந்தது. எனவே தனிநபர் சாதைையைவிட அணியின் வெற்றியைக் கருத்திற்கொண்டார். அவரின் சிறப்பான பந்துவீச்சினால் (35 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்) இந்திய அணியை அன்றைய தினமே 189 ஓட்டத்ங்களுக்கு ஆட்டமிழக்கச் செய்தார்.
அடுத்த தினமும் சிறப்பாகப் பந்து வீசி இந்திய அணியை 273 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்கச் செய்து, பாகிஸ்தான் இனிங்ஸாலும் 119 ஓட்டங்களாலும் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு வழிவகுத்தவர் மியன்டாட்தான்.
அவர் இன்னும் 85 ஓட்டங்கள் பெற்று, சோபசின் சாதனையை முறியடிக்காவிட்டாலும் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் வீரர் ஒருவர் பெற்ற கூடிய ஒட்டம் என்ற சாதனையை ஏற்படுத்தினார். (அதற்கு முன்பு ஸஹிர் அப்பாஸ் 274 ஓட்டங்கள்)

Page 11
டெஸ்ட் போட்டிகளைப் போன்றே ஒருநாள் ஆட்டங்களிலும் மியன்டாட் மிகுந்த திறமை காட்டி பாகிஸ்தானின் வெற்றிக்கு பின்னால் இருந்துள்ளார். “தோல்வியடையப்போகும் ஓர் ஆட்டத்தை வெற்றியாக மாற்றிக்கொள்ளக் கூடிய வீரர்கள் இருவர் உளர். ஒருவார் ஜாவிட் மியன்டாட், மற்றவர் அர்ஜுனா ரணத்துங்கா’ என்று ஒரு தடவை சுனில் கவஸ்கார் தெரிவித்தார். 1992ல் நடந்த ஐந்தாவது உலகக் கிண்ண இறுதிப்போட்டியில் பாகிஸ்தானின் வெற்றிக்கான அடித்தளத்தை இட்டுக் கொடுத்தவர் ஜாவிட் மியன்டாட்தான்.
இந்த வகையில் 1986ல் ஷார்ஜாவில் நடந்த அவுஸ்திரேலேஷியக் கிண்ணப் போட்டியில் சிக்சர் ஒன்றினால் இந்தியாவைத் தோற்கடித்ததை ரசிகர்கள் இலகுவில் மறக்க மாட்டார்கள். இப்போட்டியில் மியன்டாட் ஆட்டமிழக்காது 116 ஓட்டங்கள் பெற்றதோடு, இறுதிப் பந்துக்கு சிக்சர் அடித்தார். அந்த சிக்சருக்கு அவருக்கு 80 இலட்சம் பாகிஸ்தானிய ரூபா சன்மானமாகக் கிடைத்தது. இது தவிர 1987ல் பர்த்தில் நடந்த இங்கிலாந்து பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இறுதிப் போட்டியில் சிறப்பாக ஆடி ஆட்டமிழக்காது 77 ஓட்டங்கள் பெற்றார்.
அப்போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெறாவிட்டாலும் மியன்டாடின் சிறப்பான துடுப்பாட்டத்தினால் படுதோல்வியில் இருந்து மீண்டது. போட்டியின் சிறப்பாட்டக்காரராகத் தெரிவான மியன்டாடுக்கு 10,500 டொலர் (சுமார் ஒரு இலட்சம் ரூபாய்) வழங்கப்பட்டது. மியன்டாட் தொடர்ச்சியாக எட்டு ஒரு நாள் ஆட்டங்களில் அரைச் சதம் பெற்றுச் சாதனை படைத்தார். பொதுவாக மியன்டாடை ஆட்டமிழக்கச் செய்யாவிட்டால் வெற்றி பெற முடியாது என்பது எதிரணிகளின் கருத்தாகும்.
ஜாவிட் மியன்டாட் முதல்த்தரப் போட்டிகளில் உள்ளூரில் கராச்சி, சிந்த், ஹபிப் வங்கி அணிகளுக்காகவும், இங்கிலாந்து கவுண்டி போட்டிகளில் சசெக்ஸ், கிலாமோகன் அணிக்காகவும் ஆடினார்.
கரிக்கெட் உசைன் سیسیین نشیبس~<"کسی-- Liarajaaniai S1

அவரது முதலாவது கிரிக்கெட் சுற்றுலா இங்கிலாந்துக் கானதாகும். (1975 முதலாவது உலகக் கிண்ணப் போட்டி) தொடர்ந்து அனைத்து டெஸ்ட் விளையாடும் நாடுகளுக்கும் ஷார்ஜாவுக்கும் சுற்றுலா மேற்கொண்டுள்ளார்.
அனைத்து டெஸ்ட் அந்தஸ்த்துப் பெற்றுள்ள நாடுகளுக்கு எதிராகவும் ஒருநாள் ஆட்டங்களில் ஆடியுள்ள போதிலும் தென்னாபிரிக்காவுக்கு எதிராக மாத்திரம் டெஸ்ட் போட்டிகளில் ஆடும் வாய்ப்புக் கிடைக்கவில்லை.
அவரது இறுதியான வெளிநாட்டுக்கான சுற்றுலா ஆறாவது உலகக் கிண்ணப் போட்டிகளின்போது 1996ஆம் ஆண்டு இந்தியாவுக்கு மேற்கொண்டதாகும்.
ஜாவிட் மியன் டாடின் டெஸ்ட் பிரவேசம் 1976/77களில் இடம்பெற்றது. நியூஸிலாந்துக்கு எதிராக லாகூரில் ஆடிய தனது முதல் போட்டியில் முதலாவது இனிங்ஸ்ஸில் 163 ஓட்டங்களும் இரண்டாவது இனிங்ஸ்ஸில் ஆட்டமிழக்காது 25 ஓட்டங்களும் பெற்றார்.
அதனைத் தொடர்ந்து 1993-94 களில் ஸிம்பாப்பே அணிக்கெதிராக லாகூரில் தனது 124 ஆவது டெஸ்ட்டில் ஆடும்வரை மிகச் சிறப்பான பங்களிப்பை பாகிஸ்தான் அணிக்கு வழங்கினார்.
அவர் 124 டெஸ்ட்டுகளின் 189 இனிங்ஸ"களில் 21 தடவைகள் ஆட்டமிழக்காது ஆடி 8832 ஓட்டங்கள் பெற்றுள்ளார். கூடிய ஓட்டம் ஆட்டமிழக்காது 280. சராசரி 52.57 சதங்கள் 23. அரைச்சதங்கள். 43 கட்சுகள். 93 ஸ்டம்ப் 1. கூடிய ஓட்டமான 280* ஐ இந்திய அணிக்கு எதிராக 1982/83 களில் ஹைதராபாதில் (பாகிஸ்தான்) பெற்றார்.
பந்து வீச்சில் 1470 பந்துகள் வீசி 682 ஓட்டங்களைக் கொடுத்து, 17 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியுள்ளார். சராசரி 40.17. சிறப்பான பந்து வீச்சு 3-74 1976-77களில் நியூஸிலாந்துக்கு எதிராக ஹைதராபாத்தில் வீசியதாகும்.

Page 12
34 டெஸ்ட்டுகளுக்கு பாகிஸ்தான் அணிக்கு தலைமைதாங்கி 14ல் வெற்றியும் 6ல் தோல்வியும் கண்டுள்ளார். 14 போட்டிகள் வெற்றி தோல்வி இன்றி முடிவடைந்துள்ளன.
ஒருநாள் ஆட்டங்களில் முதலாவது உலகக்கிண்ணப் போட்டியில் 1975ல் மேற்கிந்தியத்தீவு அணிக்கெதிராக பிர்மான்ஹம்மில் ஆட ஆரம்பித்து, 1996ல் ஆறாவது உலகக் கிண்ணப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக பெங்களுரில் நடந்த போட்டியோடு நிறைவுபெற்றது.
ஒருநாள் ஆட்டங்களில் 233 போட்டிகளின் 218 இனிங்சுகளில் 41 தடவைகள் ஆட்டமிழக்காது ஆடி, 7381 ஓட்டங்கள் பெற்றுள்ளார். சராசரி 41.70 சதங்கள் 8. அரைச்சதங்கள் 50. கட்சுகள் 71. ஸ்டம்ப் 2. மிகக் கூடுதலான ஓட்டமாக 119* இந்தியாவுக்கு எதிராக லாகூரில் 1982-83களில் பெறப்பட்டது.
பந்து வீச்சில் 436 பந்துகள் வீசி 297 ஓட்டங்களைக் கொடுத்து, 7 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியுள்ளார். சராசரி 42.42 சிறப்பானது. 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட். (சிறப்பான பந்து வீச்சு 1975ல் முதலாவது உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கைக்கு எதிராக நோட்டின்ஹம்மில் பெறப்பட்டதாகும்.)
அவரது தலைமையில் 62 ஒருநாள் ஆட்டங்களில் பாகிஸ்தான் ஆடி, 26ல் வெற்றியும் 33 தோல்வியும் கண்டுள்ளது. சரிசமமாக ஒரு போட்டி நிறைவுபெற, இரண்டு ஆட்டங்கள் பெறுபேறுகளின்றி முடிவுற்றன.
ஒருநாள் ஆட்டங்களிலும் டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தான் அணிக்காக மிகக் கூடுதலான ஓட்டங்களைப் பெற்றுள்ள வீரர் என்ற பெருமையை இன்னும் ஜாவிட் மியன்டாட் பெற்றுள்ளார்.
ஜாவிட் மியன்டாட் கிரிக்கெட் உலகுக்கு விடை கொடுத்தாலும் இன்றும் கிரிக்கெட் ரசிகர்களின் உள்ளங்களில் வாழ்ந்து கொண்டே இருக்கின்றார்.
கரிக்கெட் உகைத் பரகாசத்தவர்கள்
 

சுனில் கவஸ்கார் Sunil Gavaskar
கிரிக்கெட் உலகு கண்ட மிகச் சிறந்த ஒரு துடுப்பாட்ட வீரர்தான் இந்திய அணியின் மாஜி வீரர் சுனில் கவஸ்கார். அவர் படைத்த சாதனைகள் பல. சுனில் கவஸ்கார் படைத்த பல சாதனைகள் இன்னும் எவராலும் முறியடிக்கப்படாது உள்ளன. இத்தகைய வீரர்கள் தோன்றுவதும் அபூர்வம்தான். சுனில் மனோகார் கவஸ்கார் 1949 ஜூலை மாதம் 10ஆந் திகதி இநீ தியா வினி u d U Tui நகரின் சாதாரண வைத்தியசாலையொன்றில் பிறந்த போது அவரது சாதனைகள் பற்றி எவரும் கனாக் காணவில்லை.
சுனில் கவஸ்கார் பிறந்தவுடன் அவரைப் பார்ப்பதற்கு முதலில் வைத்தியசாலைக்கு வந்தவர் அவரது குடும்ப உறவினர் நாராயண் மசூர்கார். குழந்தையைப் பார்த்ததும் அதனது காதோரத்தில் இருக்கும் மச்சத்தைக் கண்டு, ஏதோ அதிர்ஷ்டம் என நினைத்தார்.
மறு தினம் வைத்தியசாலைக்குச் சென்ற நாராயன் குழந்தையைத் தூக்கியெடுத்து, அரவணைத்த போது, அந்த மச்சத்தைக் காணாது அதிசயித்தார். இத்தகைய வைத்தியசாலைகளில் குழந்தைகளுக்கு ஏற்படும் நிலையைத் தெரிந்து உடனடியாகச் செயற்பட்டார்.
வைத்தியசாலையின் நாலாபுறமும் தேடிய போது ஒரு மீனவப் பெண்ணின் அரவணைப்பில் குழந்தை உறங்கிக் கொண்டிருந்தது. மீனவ வாழ்க்கை வாழவிருந்த விதி மாற்றப்பட்டது. உலகம் போற்றும் கிரிக்கெட் வீரராக மாறினார்.
鱼

Page 13
கவஸ்காரின் கிரிக்கெட் உலகப் பிரவேசம் ஆரம்பமானது பம்பாய் சென் சேர்வியர் கல்லூரியிலாகும். பாடசாலைக்குச் செல்ல முன்பு அவரது எதிர்த்தரப்புப் பந்து வீச்சாளராகத் திகழ்ந்தவர் அவரது தாய்,
னமும் தனது தாயுடன் கிக்கெட் ஆட்டத்தில் ஈடுபடும் கவஸ்கார் ப்பாட்டத்தைத் தவிர பந்து வீசுவதிலோ பந்து தடுப்பதிலோ
---- காட்டவில்லை.
|- H A
சுனில் கவாஸ்கர்
வீட்டுக்கருகிலுள்ள ஒழுங்கையின் புல் தரையில் தினமும்
கிரிக்கெட் ஆடினார். அவரது ஆற்றலை வளர்க்க அவரது தாய் மிகுந்த கரிசணை எடுத்தார்."
சிறுவயதிலிருந்தே தனது விக்கெட்டை பறிகொடுக்க விரும் புவதில்லை. அது அயலகச் சிறுவர்களுக்குப்
"
 
 
 

பெருந்தலையிடியாக இருந்தது. பந்தும் மட்டையும் சொந்தமாக இருந்த ஒரே சிறுவனாக அவர் இருந்தார்.
கவஸ்காரின் வளர்ச்சியில் ஆரம்பம் முதலே அக்கறை காட்டியவர்கள் அவரது தந்தையும் மாமாவும் ஆவர். தந்தை முதல்த்தரப் போட்டிகளில் ஆடியவர். மாமா மதவி மன்திரி இந்திய டெஸ்ட் அணியில் ஆடியவர்.
பாடசாலை மட்ட பருவகால ஆட்டங்களில் அவர் திறமை காட்டியதன் காரணமாக பம்பாய் கிரிக்கெட் அணியில் சேர்ந்து முதல்த்தரப் போட்டிகளில் ஆடும் வாய்ப்பைப் பெற்றார்.
கவஸ்கார் தனது வீட்டுக்கு அருகில் உள்ள ஓர் ஒழுங்கையில் விளையாடும் போது இரு மருங்கிலும் உள்ள கட்டிடங்களில் பந்து பட்டால் ஆட்டமிழந்தார் என்ற விதியைக் கொண்டிருந்தார்.
இதன் காரணமாக பிற்காலத்தில் அவர் டெஸ்ட் உலகில் புகழ்பெற்ற நாயகனாகத் திகழும் போது மிகச் சிறப்பான "ஸ்ரேட் ரைவ்" முறையில் பந்தை நேராக நல்ல முறையில் அடித்தார்.
கவஸ்கார் இலங்கைக்கு முதன்முதல் சுற்றுலா மேற்கொண்டது 1970ம் ஆண்டிலாகும். இந்தியப் பல்கலைக்கழக அணியில் அங்கத்தவராக இங்கு வருகை தந்து, இலங்கை ரசிகர்களைக் கவர்ந்தார்.
அந்த போட்டியில் முதலாவது இனிங்ஸில் வினோ லம்பாவுடன் இனைந்து, முதலாவது விக்கெட்டுக்காக 60 ஓட்டங்களை இணைப்பாட்டமாகக் கொண்டிருந்தார். இரண்டாவது போட்டியில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக 203 (ஆ.இ.) ஒட்டங்கள் பெற்றுத் திறமை காட்டினார்.
இதனைத் தொடர்ந்து 1971ம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுக்கு சுற்றுலா மேற்கொண்ட இந்திய டெஸ்ட் அணியில் கவஸ்காரும் இடம் பெற்றார். தனது கன்னி டெஸ்ட் போட்டியிலே ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகச் சென்றார்.
மேற்கிந்தியத் தீவுக்கு மேற்கொண்ட முதல் தொடரிலே பிரபல மேற்கிந்திய வேகப்பந்து வீச்சாளர்களுக்கெல்லாம் முகம் கொடுத்து, 774 ஓட்டங்களைப் பெற்றார். வேறு எந்த வீரராலும்
டு -C- நராணிப ஹஸன்

Page 14
இந்தச் சாதணையை இதுவரை முறியடிக்க முடியவில்லை. அத்தோடு போட் ஒப் ஸ்பெயினில் நடந்த டெஸ்ட்டில் இரண்டு இனிங்ஸ்ஸிலும் சதம் பெற்றுச் (124, 220) சாதனை படைத்தார். அதனைத் தொடர்ந்து கிரிக்கெட் உலகில் அவரது பெயர் அடிபட ஆரம்பித்தது.
மேற்கிந்தியத் தீவுக்கு 1971ஆம் ஆண்டு மேற்கொண்ட சுற்றுலாவைத் தொடர்ந்து, 1974-75கள் வரை இடைக்கிடை இந்திய அணியில் இடம்பெறும் வாய்ப்பு அவருக்குக் கிடைக்கவில்லை.
1977-75ஆம் ஆண்டு பம்பாயில் மேற்கிந்திய தீவுக்கு எதிராக ஆடிய போட்டியைத் தொடர்ந்து, 1987ஆம் ஆண்டு ஓய்வு பெறும் வரை தொடர்ந்தேர்ச்சியாக 106 டெஸ்ட்டுகளில் ஆடியுள்ளார்.
கவஸ்கார் இரண்டாவது தடவையாக 1974ஆம் ஆண்டு இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டு வந்து, உத்தியோகப் பற்றற்ற டெஸ்ட் போட்டிகளில் பங்கு கொண்டார். கவஸ்கார் எழுதியுள்ள ‘ஸனிடேஸ்’ என்ற புத்தகத்தில் இலங்கைக்காக 13வது அங்கத்தை ஒதுக்கியுள்ளார். இலங்கை நடுவர்கள் படுமோசமான விதத்தில் நடந்து கொண்டு தமது வெற்றியத்ை தாமதப்படுத்தியதாகக் குறிப்பிடுகின்றார்.
துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த அஜித் சில்வாவின் கையில்பட்ட பந்து விக்கெட் காப்பாளரின் கையுறைக்குள் சிக்கியது. நடுவர் அமைதியாக இருந்தார். பந்து கையில் பட்டதால் அஜித் வேதனையால் துடித்துக்கொண்டிருந்தார். ஓவர் முடிவில் நாமும் சென்று பார்த்தோம்’
இப்படி தனது புத்தகத்தில் எழுதும் கவஸ்கார் இனிமேல் இலங்கைக்கு வரமாட்டேன் என்று திடசங்கட்பத்துடன் நாடு திரும்பினார். எனினும் 1985ல் கபில்தேவின் தலைமையிலான டெஸ்ட் அணியில் இலங்கை வந்தார்.
சுனில் கவஸ் கார் ஏனைய வீார்கள் படைக்காத பல சாதனைகளைப் படைத்துள்ளார். 16வருட காலத்துக்குள் தனது துடுப்பாட்டத்தால் கிரிக்கெட் உலகை வர்ணம் தீட்டியதை எவரும் இலகுவில் மறக்க முடியாது.
* அலன் போடரின் சாதனை இடம்பெறும்வரை மிகக்கூடிய
டெஸ்ட் ஓட்டங்கள் (10,122) பெற்றிருந்தார்.
கரிக்கெட் உEAரின் Liரகாசித்தவர்கள்
 

事 மிகக் கூடுதலான டெஸ்ட் சதங்கள் (34 சதங்கள்)
率 79 தடவைகள் 50க்கு மேற்பட்ட ஓட்டங்கள் பெற்றுள்ளார்.
(34 சதங்கள், 45 அரைச் சதங்கள்)
125 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய முதல் டெஸ்ட் வீரர் தொடர்ச்சியாக 106 டெஸ்ட்டுகளில் ஆடியவர்.
மூன்று தடவைகள் இரண்டு இனிங்ஸ்ஸிலும் சதம் பெற்றுள்ளார். (124, 220 மேற்கிந்தியத் தீவுக்கெதிராக போட் ஒப்ஸ்பெய்ன் 1970/71) (111,137 பாகிஸ்தானுக்கு எதிராக கராச்சியின் 1978-79) (107, ஆட்டமிழக்காது 182 மேற்கிந்திய தீவுக்கு எதிராக கல்கத்தாவில் 1978/79)
அதேபோன்று ஐந்து தடவைகள் இரண்டு இனிங்ஸிலும், அணியில் மிகக் கூடுதலான ஓட்டத்தைப் பெற்றுள்ளார். இது மிக அபூர்வமாக நடக்கக்கூடியது.
率 ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக வந்து அனைவரும்
ஆட்டமிழந்தபோதும் ஆட்டமிழக்காது 127 ஓட்டங்கள் பெற்றார். (1982/83களில் பாகிஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத்தில்)
100 கட்சுகளுக்கு மேல் பிடித்த வீரர்களுள் கவஸ்கரும் அடங்குகிறார். அவர் 108 கட்சுகள் பிடித்துள்ளார்.
来源 கவஸ்கார் 58 தடவைகள் டெஸ்ட் போட்டிகளில் சதத்துக்குரிய இணைப்பாட்டத்தைக் கொண்டுள்ளார். அவருடன் சதத்துக்குரிய மிகக் கூடுதலான இணைப்பாட்டத்தைக் கொண்டவர் ஹேட்டன் ஷெனஷான் (11 தடவைகள்)
இவ்வாறு இந்திய அணிக்காக பல சாதனைகள் புரிந்த கவஸ்கார் 38 டெஸ்ட்டுகளுக்கு இந்திய அணிக்குத் தலைமைதாங்கி 7 வெற்றிகளும் 9 தோல்விகளும் அடைந்துள்ளார். 22 வெற்றி தோல்வியில்லை.
ஒரு காலத்தில் தலைமைப் பதவி என்பது கவஸ்காருக்கும் கபில் தேவுக்கும் இடையிலான சங்கீதக் கதிரையைப் போன்றிருந்தது. இருவரும் மாறி மாறி அமர்த்தப்பட்டனர்.
ک
| டு --C- நராணியா ஹஸன்

Page 15
கவஸ்காரின் 198 ஆட்டமிழப்பில் 142 தடவைகள் பிடி கொடுத்தும் $$ தடவைகள் போல்ட் செய்யப்பட்டும் 17 தடவைகள் LBW முறையிலும் 4 தடவைகள் ரன்அவுட் முறையிலும் இரண்டு தடவைகள் எப்டம்ப் செய்யப்பட்டும் ஆட்டமிழந்துள்ளார். இங்கிலாந்து வீரர் டெரக் அண்டவுட், மேற்கிந்திய வீரர் மைக்கல் ஹோல்டிங் ஆகியோரது பந்து வீச்சுக்கே கூடுதலான தடவைகள் (11 தடவைகள்) கவஸ்கார் பலியாகியிருக்கிறார்
தனது டெனப்ட் வாழ்க்கையில் பெற்றுள்ள மிகக் கூடுதலான ஓட்டங்கள் மேற்கிந்தியத் தீவுக்கு எதிராக 1983ல் சென்னையில் ஆட்டமிழக்காது பெற்ற 238 ஓட்டங்களாகும்.
கவஸ்கருடன் நூலாசிரியர்
இந்த ஓட்ட எண்ணிக்கையைப் பெற்ற போட்டியில் நான்காவது துடுப்பாட்ட வீரராக கவஸ்கார் களத்துள் இறங்கும் போது இந்திய அணி ஓட்டமேதும் பெறாது இரண்டு விக்கெட்டுகளை இழந்திருந்தது.
இந்தவகையில் பார்க்கும்போது இந்திய டெஸ்ட் அணிக்கு சுனில் கவஸ்கார் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது. வேறு எவராலும் சாதிக்க முடியாதவை.
| ரீகர்த்துவிர் "" : "سمتیہ
 

அவர் 125 டெஸ்ட்டுகளில் 214 இனிங்சுகளில் 16 தடவைகள் ஆட்டமிழக்காது ஆடி 10122 ஓட்டங்கள் பெற்றுள்ளார். கூடிய ஓட்டம் 236 (ஆ.இ.) சராசரி 51.12, சதம் 34,அரைச்சதம் 45, கட்சுகள் 108 பூச்சியத்தில் ஆட்டமிழந்தது 12 தடவைகள்.
கவஸ்கார் உள்நாட்டில் போன்றே வெளிநாட்டிலும் சமமாக திறமை காட்டியுள்ளார். உள்நாட்டில் 108 இனிங்சுகளில் 5067 ஓட்டங்கள் வெளிநாட்டில் 106 இனிங்சுகளில் 5055 ஓட்டங்கள்.
உள்நாட்டில் சதங்கள் 16 வெளிநாட்டில் 18, அரைச் சதங்கள். உள்நாட்டில் 23, வெளிநாட்டில் 22, கூடிய ஓட்டம் உள்நாட்டில் 236 வெளிநாட்டில் 221
ஒரு நாள் ஆட்டங்களைப் பொறுத்த வரையில் அவருக்குக் கூடுதலான போட்டிகளில் ஆடும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. 103 போட்டிகளில் மாத்திரமே ஆடியுள்ளார்.
1975ஆம் ஆண்டு உலகக்கிண்ணப் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக களத்துள் நுழைந்து 60 ஓவர்கள் துடுப்பெடுத்தாடி ஆட்டமிழக்காது 36 ஓட்டங்கள் மாத்திரமே பெற்றார் என்ற கடுமையான விமர்சனம் அவருக்குண்டு.
இதனை நீக்கும் விதமாக 1987ஆம் ஆண்டு நான்காவது உலகக்கிண்ண ஆரம்பப் போட்டியில் நாக்பூரில் நியூஸிலாந்துக்கு எதிராக 85 பந்துகளில் ஆட்டமிழக்காது 103 ஓட்டங்கள் பெற்றார்.
அவர் இந்த போட்டியோடு ஓய்வு பெறும்போது ஒருநாள் ஆட்டங்களில் 107 போட்டிகளின் 102 இனிங்ககளில் ஆடி, (14 தடவைகள் ஆட்டமிழக்காது) 3087 ஓட்டங்கள் பெற்றுள்ளார். கூடிய ஓட்டம் 103 (ஆ.இ.) சதம் அரைச்சதம் 27 சராசரி 35.87 கட்சுகள் 22 ஓட்டம் பெறாது ஆட்டமிழந்தது 8 தடவைகள்.
டெஸ்ட் போட்டிகளில் சிம்பாபேயிற்கும் தென்னாபிரிக்காவுக்கும் எதிராக ஆடும் வாய்ப்பு அவருக்குக் கிடைக்கவில்லை. ஏனைய அனைத்து நாடுகளுக்கும் எதிராக ஆடி சதம் பெற்றுள்ளார்.
சுனில் கவஸ்கார் தனது ஓய்வின் பின்பு தற்போது பிரபல நேர்முக வர்ணனையாளராகக் கடமையாற்றுகின்றார். அவரது மகன் இந்தியாவின் முதல் தரப் போட்டிகளில் ஆடி வருகிறார்.
Ge. - =3 = நராணிாஹஸன்

Page 16
இந்தியா, ஆசியாவுக்கு மாத்திரமல்ல முழு உலகுக்குமே கிடைத்த ஒரு தன்னிகரற்ற கிரிக்கெட் வீரர் தான் சுனில் கவஸ்கார். அவர் கிரிககெட் உலகுக்கு பிரியாவிடை கொடுத்தாலும் அவரது சாதனைகள் இன்னும் வாழ்ந்து கொண்டே இருக்கின்றன.
 

டெஸ்மன்ட் ஹேன்ஸ் Desmond Haynes
மேற்கிந்திய தீவு உலகுக்குத் தந்த மிகச் சிறந்ததொரு ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்தான் டெஸ்மண்ட் ஹேன்ஸ், அவரது மிகச் சிறப்பான ஆட்டத்தை இலகுவில் மறந்து விட முடியாது.
ஒரு காலத்தில் மேற்கிந்திய தீவு அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களில் டெஸ்மன் ஹேன்ஸ், கோர்டன் கிறீநிட்ச் ஆகிய இருவரும் ஏனைய அணிகளின் பந்து வீச்சாளர்களுக்கு பெரும் தலையிடியாக இருந்தனர்.
டெஸ்ட் போட்டிகளில் எத்தகைய திறமை காட்டுகின்றார்களோ அதே போன்றுதான் ஒரு நாள் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளிலும் இந்த ஆரம்பத் துடுப்பாட்ட ஜோடி மிகுந்த திறமை காட்டியது.
டெஸ்மன்ட் லியோ ஹேன்ஸ் 1956 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி பாபடோர்ஸில் சென். ஜேம்ஸ் ஹோல்டர்ஸ் ஹில்லில் பிறந்தார்.
அவர் சிறு வயதிலிருந்தே கிரிக்கெட்டில் ஆர்வம் காட்டினார். வீதியோரங்களிலும் கடற்கரையிலும் டெனிஸ் பந்தினாலும் இறப்பர் பந்தினாலும் சிறுவர்களுடன் இணைந்து கிரிக்கெட் ஆடினார். அவர் வலதுகை ஆரம்ப துடுப்பாட்ட வீரர், பகுதி நேர பாத சுழல் பந்து வீச்சாளர்,மத்திய வேகப் பந்து வீச்சாளர்.
பாடசாலைப் பருவத்தில் படிப்படியாகத் தனது துடுப்பாடடத் திறமையை வளர்த்துக் கொண்டார். 1979-1977 களில் முதல்தரப்

Page 17
போட்டிகளில் ஆடும் வாய்ப்பு அவரைத் தேடி வந்தது. 1976 ல் பாபடோஎப் அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். தொடர்ந்து 20 வருடங்களாக அவ்வணிக்காக ஆடினார்.
1977-1978 களில் அவுஸ்திரேலிய அணி மேற்கிந்தியத் தீவுக்குச் சுற்றுலா மேற்கொண்ட போது போர்ட் ஒப் ஸ்பெய்னில் நடந்த டெஸ்ட்டில் ஆட அவருக்கு வாய்ப்புக் கிடைத்தது. தனது கன்னி டெஸ்ட்டில் 61 ஓட்டங்கள் பெற்றார்.
தொடர்ந்து மேற்கிந்திய கிரிக்கெட் அணியில் இணைந்து ஆடி பல வெற்றிகளின் பின்னணியில் திகழ்ந்தார். 1993-1994 களில் இங்கிலாந்து அணிக்கு எதிராக பிரிட்ஜ் டவுனில் நடந்த தனது இறுதி டெஸ்ட் வரை மேற்கிந்தியத் தீவு அணியில் எப்திர அங்கத்தவராக இருந்தார்.
டெஸ்மன்ட் ஹேன்ஸ்
ஹேன்ஸ் தென்னாபிரிக்கா தவிர அனைத்து நாடுகளுக்கு எதிராகவும் டெஸ்ட் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். தென்னாபிரிக்கா உட்பட அனைத்து நாடுகளுக்கும் சென்று ஒரு நாள் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்.
1979 முதல் 1992 வரை நான்கு உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளதோடு, ஷார்ஜாவில் நடந்த
கரிக்கெட்தி வில் –^>=="-याणी
ரீத்தும் * --
 
 

5 போட்டிகளில் மேற்கிந்தியத் தீவை பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.
ஒருநாள் மட்டுப்படுத்தப்பட்ட போட்டியைப் பொருத்த வரையில் அவரது கன்னிப் போட்டி 1977 -1978 களில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக சென் ஜோன்ஸில் இடம் பெற்றதாகும். அப்போட்டியில் 148 ஓட்டங்கள் பெற்றார்.
அவர் இறுதியாகக் கலந்து கொண்ட ஒரு நாள் ஆட்டம் 19931994 களில் இங்கிலாந்துக்கு எதிராக பிரிட்ஜ் டவுனில் இடம் பெற்ற போட்டியாகும். இப்போட்டியில் 115 ஓட்டங்கள் பெற்றார்.
1978ல் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தனது முதல் மூன்று டெஸ்ட்டுகளிலும் 3 அரைச் சதங்கள் பெற்றதன் முலம் அனைவரினதும் கவனத்தை ஹேன்ஸ் ஈர்த்தார். பிரிட்ஜ் டவுனில் நடந்த டெஸ்ட்டில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக முதலாவது விக்கெட்டுக்காக ஹேன்ஸ் - கோடன் கிறீனிட்ச் உடன் இணைந்து 131 ஓட்டங்களை இனைப்பாட்டமாகக் கொண்டிருந்தார். அன்றுதான் இவர்களது ஆரம்பச் சோடிக்கான அடித்தளம் இடப்பட்டது.
கிறீனிட்ச் எப்பொழுதும் பந்து வீச்சாளர்களை ஆக்கிரமிப்புச் செய்வதிலேயே கவனம் செலுத்தினார். எனினும் ஹேன்ஸ் மிகவும் அவதானமாக ஆடி சந்தர்ப்பம் வரும் வரை காத்திருப்பார். ஹேன்ஸ் எப்பொழுதும் தனது துடுப்பாட்டத்தில் நுட்பத்தையும் கிரிக்கெட் ஆட்டத்திற்குரிய நளினத்தன்மைகளையும் கையாண்டார். இதுதான் பந்து வீச்சாளர்களுக்குப் பெரும் தலையிடியாக அமைந்தது.
1979 முதல் டெஸ்மன் ஹேன்ஸ்"ம் கோர்டன் கிறிணிட்சும் மேற்கிந்தியத் தீவு அணியின் சிறந்த ஆரம்பத் துடுப்பாட்ட சோடியாக மாறினர்.
1980 ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக லோட்ஸ் விளையாட்டு அரங்கில் பெற்ற 184 ஓட்டங்கள் அவரது வாழ்வில் மறக்க
a -C=-நராணியாஹஸன்

Page 18
முடியாததாகும். இதனைப் பெற அவர் 790 நிமிடங்கள் விக்கெட்டில் தரித்திருந்தார்.
இந்த ஆரம்பத் துடுப்பாட்ட சோடியைப் பற்றி உலகமே புகழ்ந்தது. குறிப்பாக ஜெப் போய்கட், சுனில் கவஸ்கார் போன்றோர் வெகுவாய்ப் புகழ்ந்தனர். இதுவரை மிகவும் அதிகமான டெஸ்ட் போட்டிகளில் ஆரம்ப துடுப்பாட்ட ஜோடியாக ஆடியுள்ளவர்கள் இவர்கள் தான்.
இதற்கு முன்பு அவுஸ்த்திரேலிய வீரர்களான பொப் சிம்ஸனும் பில்லோரியும் 34 டெஸ்ட்டுக்களின் 62 இனிங்ஸில் ஆரம்பத் துடுப்பாட்ட சோடியாக ஆடியுள்ளனர்.
1988 ம் ஆண்டு சென்னையில் நடந்த போட்டியில் கிறீனிட்ச் ஹேன்ஸ் சோடி 63 டெஸ்ட்டுகளின் 100 இனிங்ஸைப் பூர்த்தி செய்து, சாதனையைப் படைத்தது. இதனை எவரும் இன்னும் முறியடிக்கவில்லை.
1982-84 களில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக ஒருநாள் ஆட்டங்களில் தொடர்ந்து மூன்று சதங்கள் பெற்றதோடு, டெஸ்ட்டில் மொத்தம் 468 ஓட்டங்கள் பெற்றார். இரண்டு பருவ கால ஆட்டத்தின் பின்பு இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் 469 ஓட்டங்கள் பெற்றார்.
அன்டிகுவாவில் நடந்த டெஸ்ட்டில் மேற்கிந்திய தீவு அணி விக்கெட்டுகளை இழந்து மிகவும் இக்கட்டாக இருந்த போது, மிகச் சிறப்பாக ஆடி, 131 ஓட்டங்கள் பெற்றார். இங்கிலாந்துக்கு எதிராக கிறீனிட்சியுடன் இணைந்து 298 ஓட்டத்துக்கான இணைப்பாட்டத்தைக் கொண்டிருந்தார்.
'கோடன் கிறீனிட்ச் ஒய்வு பெறும் போது ஹேன்ஸ"டன் இணைந்து 89 டெஸ்ட் போட்டிகளில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக ஆடியுள்ளார். அத்தோடு அவர்களது இணைப்பாட்டம் சராசரி 47 ஆகும். ஓட்டத் தைப் பெற்றது போன்று நல்ல தேகாரோக்கியத்தோடும் திகழ்ந்தார்.
கரிக்கெட் உண்கள்
Liரகாசத்தவர்கள்:
 

ஒரு நாள் ஆட்டத்தில் 1999 ஆரம்பமாகும் வரை மிகக் கூடுதலான ஓட்டங்கள் பெற்றிருந்தார். 238 போட்டிகளில் 8648 ஓட்டங்கள் (தற்போது அஸார்தீன், டெண்டுல்கர் 9000 ஐ தாண்டியுள்ளனர்)
ஹேன்ஸ் 46 தடவைகள் ஒரு நாள் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளில் சதத்துக்கான இணைப்பாட்டத்தைக் கொண்டுள்ளார். முதலாவது விக்கெட்டுக்காக 26 தடவைகள் இரண்டாவது விக்கெட் 11 தடவைகள் மூன்றாவது விக்கெட் 6 தடவைகள் நான்காவது, ஐந்தாவது, ஏழாவது விக்கெட்டுக்காக ஒரு தடவை.
டெஸ்ட் போட்டிகளில் 18 சதங்கள் உட்பட 7487 ஓட்டங்கள் பெற்றுள்ளதுடன் முதல் தர போட்டிகளில் 59 சதங்கள் அடங்களாக 24,219 ஓட்டங்கள் பெற்றுள்ளார். சராசரி 45.95.
விவியன் ரிட்சட்ஸின் ஓய்வைத் தொடர்ந்து தன்னை அணித் தலைவராக தேர்ந்தெடுக்காதது ஹேன்ஸை பெரிதும் பாதித்தது. இது மேற்கிந்தியத் தீவு கிரிக்கெட் சபையுடன் முறுகல் நிலையை உருவாக்கியது.
ஏற்கெனவே அவர் இங்கிலாந்துக்கு எதிராக ஒரு டெஸ்ட்டிலும் பாகிஸ்தானுக்கு எதிராக மூன்று டெஸ்ட்டிலும் தனது நாட்டு அணிக்கு தலைமை தாங்கி ஒரு வெற்றியையும் ஒரு தோல்வியையும் கண்டுள்ளார்.
இந்நிலையில் 1995 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தெரிவுக் குழு அவரை முழுமையாகப் புறக்கணித்தது மேலும் ஆத்திரத்தை உண்டாக்கியது.
தெனி னாபிரிக் காவில் முதல் தீ தரப் போட்டிகளில் ஆடிக்கொண்டிருந்தவர் நாடு திரும்பாமலே தனது ஓய்வை அறிவித்தார். ஓய்வு பெறும் போது தனது 40 வயதிலும் மிகவும் சிறந்த உடல் ஆரோக்கியத்துடன் ஆடினார்.
டெஸ்மன் ஹேன்ஸ் ஒய்வு பெறும் போது 116 டெஸ்ட்டுகளின் 202 இனிங்ஸ்ஸில் 25 தடவைகள் ஆட்டமிழக்காது ஆடி 7487
ஓட்டங்கள் பெற்றுள்ளார். கூடிய ஒட்டம் 184 சராசரி 42.29 சதங்கள் 18 அரைச்சதங்கள் 39 கட்சுகள் 64.
పః

Page 19
பந்து வீச்சில் 18 பந்துகள் வீசி 8 ஓட்டங்களை கொடுத்து ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றியுள்ளார். சிறப்பானது இரண்டு ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட். பாகிஸ்தானுக்கு எதிராக லாகூரில்
1980-81.
மேற்கிந்திய தீவு அணிக்கு 4 டெஸ்ட்டுகளில் தலைமை தாங்கி ஒன்றில் வெற்றியும் ஒன்றில் தோல்வியும் கண்டுள்ளார். இரண்டு வெற்றி தோல்வியின்றி முடிவுற்றுள்ளது.
ஒருநாள் போட்டிகளில் 238 போட்டிகளின் 237 இனிங்சுகளில் 28 தடவைகள் ஆட்டமிழக்காது ஆடி, 8648 ஓட்டங்கள். கூடிய ஓட்டம் ஆட்டமிழக்காது 152. சராசரி 41.37 சதங்கள். 17 அரைச்சதங்கள் 57. கட்சுகள் 59.
மிகக் கூடுதலான ஓட்டமான 152 ஐ 1988 - 1989 களில் இந்தியாவுக்கு எதிராக ஜோர்ஜ்டவுனில் நடந்த போட்டியில் பெற்றுக் கொண்டார். பந்து வீச்சில் 30 பந்துகள் வீசி 24 ஓட்டங்களை கொடுத்துள்ளார்.
7 ஒருநாள் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளுக்குத் தலைமை தாங்கி மூன்றில் வெற்றியும் நான்கில் தோல்வியும் கண்டுள்ளார். வெற்றி வீதம் 42.85.
டெஸ்மன் ஹேய்ன்ஸ் மிகச் சிறந்ததொரு கிரிக்கெட் வீரர்.எந்தவொரு பந்து வீச்சாளருக்கும் அச்சுறுத்தலாக துடுப்பெடுத்தாடக்கடியவர். அவை எல்லாவற்றுக்கும் மேலாக எதுவித ஆர்ப்பாட்டமும் இல்லாது அமைதியாக நடந்து கொள்ளக் கூடியவர்.
கரிக்கெட் உண்கள் füqar Tağırğaarifabagli
 

LnTTö (8L6)T
Mark Taylar
அவுஸ்திரேலிய அணி கிரிக்கெட் உலகுக்குத் தந்த மிகச்சிறந்ததொரு துடுப்பாட்ட வீரார்தான் மார்க் டேலர். அவர் கிரிக்கெட் உலகுக்கு பிரவேசித்ததிலிருந்து ஓய்வு பெறும்வரை சிறந்த பங்களிப்பை தனது தாயகத்திற்கு வழங்கியுள்ளார்.
மாக் அந்தனி டேலர் 1964ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 24ம் திகதி நிவ்சவ்த் வேல்ஸ் லீ(ட்)டனில் பிறந்தார். சிறுவயதில் இருந்தே அவரது பெற்றோர் அவருக்கு கிரிக்கெட்டில் ஆர்வத்தை ஊட்டினர். இதன் காரணமாக பாடசாலை அணியில் இலகுவாக இடத்தைப் பிடித்துக்கொண்டார்.
பாடசாலைப் பருவத்தில் திறமை காட்டியபோதும் தனது 21வது வயது ஆகும்வரை முதல்த்தரப் போட்டிகளில் ஆடும் வாய்ப்பு அவருக்குக் கிடைக்கவில்லை. 1985ம் ஆண்டு பருவகால ஆட்டத்தில் முதல்த்தரப் போட்டிகளில் ஆட ஆரம்பித்தார்.
எனினும், டெஸ்ட் போட்டிகளிலும் வாய்ப்பைப் பெற்றுக் கொள்வதற்கு இன்னும் 4 வருடங்கள் அதாவது தனது 25வது வயது வரை காத்திருக்கவேண்டி இருந்தது. 1989ம் ஆண்டு சிட்னியில் மேற்கிந்தியத் தீவுக்கெதிரான டெஸ்ட்டில் முதல் இனிங்ஸில் 25, இரண்டாவது இனிங்ஸில் 3 என்ற முறையில் ஓட்டங்களைப் பெற்றார்.
※

Page 20
டேலர் நிவ்சவுத் வேல்ஸ் அணிக்காக முதல்த்தரப் போட்டிகளில் ஆடும்போதுதான் தனது துடுப்பாட்டத் திறமையை வளர்த்துக் கொண்டார். இடது கை ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான அவரின் பங்களிப்பு அந்த அணிக்கு நல்ல முறையில் கிடைத்தது.
மேற்கிந்தியத் தீவு அணியுடனான தொடர் அவருக்கு மகிழ்ச்சியகரமானதாக இல்லாதிருந்தபோதும் அதே வருடம் இங்கிலாந்துக்கு மேற்கொண்ட சுற்றுலா டெஸ்ட் வாழ்வில் புதியதொரு அத்தியாயத்தை ஏற்படுத்தியது. இங்கிலாந்துக்கெதிராக லீட்ஸில் நடந்த டெஸ்ட்டில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக மிகச்சிறப்பாக ஆடி தனது கன்னி டெஸ்ட் சதத்தைப் பெற்றார். அங்கு அவர் பெற்ற ஒட்ட எண்ணிக்கை 136 ஆகும்.
அதனைத் தொடர்ந்து வந்த டெஸ்ட் தொடர்களில் மிகச் சிறப்பாக மாக் டேலர் பிரகாசித்தார். இதன் காரணமாக அவுஸ்திரேலிய
மாக் டேலர்
அணிக்கு அலன் போடரின் உதவித் தலைவராக 1992ல் நியமிக்கப்பட்டார். டெஸ்ட் பிரவேசத்தின் முன்றே வருடத்தில் டேலருக்கு இந்த கெளரவம் கிடைத்தது.
பிரிங்கர திங் 2( ___✉"سمیہ۔)
பராசித்தவர்கள் ** 12
 

அவுஸ்திரேலிய அணியை அலன் போடரின் பின்னர் வழி நடாத்தக்கூடிய ஒரு சிறந்த வீரர் மார்க் டேலர் என்ற நம்பிக்கை தெரிவுக் குழுவுக்குத் எழுந்ததன் காரணமாகவே டேலருக்கு உபதலைவர் பதவி வழங்கப்பட்டது. மாக் டேலர் அவுஸ்திரேலிய அணியின் உப தலைவராக நியமிக்கப்படும் சந்தர்ப்பத்தில் மாக் வோ, ஸ்டீவ் வோ போன்ற பல சிரேஷ்ட வீரர்கள் அணியில் இடம்பெற்றனர். எனினும், தெரிவுக் குழுவினர் மாக் டேலரிலேயே நம்பிக்கை வைத்தனர்.
டேலர் ஒரு சிறந்த துடுப்பட்ட வீரர் எந்த ஆடுகளத்திலும் எந்தப் பந்துவச் சாளரையும் நன்கு புரிந்து, துடுப்பெடுத்தாடக்கூடியவர். உணர்ச்சிவசப்பட்டு தனது விக்கெட்டை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அர்ப்பணிக்காதவர். இதன் காரணமாகத்தான் அவர் கிரிக்கெட் உலகுக்குப் பிரியாவிடை கொடுக்கத் தீர்மானித்து, அதனை அறிவித்தபோது, அவுஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்கள் அதனை ஆட்சேபித்து, தொடர்ந்தும் ஆடுமாறு அழைப்பு விடுத்தனர்.
டேலர் கிரிக்கெட் உலகிலிருந்து ஓய்வுபெறும்போது, மிகவும் பிரகாசித்த நிலையிலேயே இருந்தார். எதிரணிப் பந்து வீச்சாளர்களுக்கு மிகவும் தலையிடியாகத் துடுப்பெடுத்தாடினார். நல்ல முறையில் தனது அணியை வழி நடாத்தினார்.
அவர் எந்த விடயத்திலும் நேரக்கணிப்பீட்டில் சிறந்து விளங்குவார். வேகமாக வரும் பந்தை நன்கு கணிப்பிட்டு ஆடுவார். அதேபோன்றுதான் சரியான நேரத்தில் கிரிக்கெட் உலகிலிருந்து ஓய்வு பெற்றார். பல கிரிக்கெட் வீரர்களுக்கு அணியிலிருந்து நீக்கியபின்பு ஒய்வு பெறும் கசப்பான அனுபவம் உண்டு.
"நான் சரியான தீர்மானத்தை எடுத்துள்ளேன் என்பதை நான் அறிவேன். எனது இதயம் கிரிக்கெட்டோடு சங்கமமானது, போதுமானது என்று தீர்மானத்து விட்டது. இனி ஆடுவது சிறந்தது அல்ல. இளையவர்களுக்கும் வழி விடுவோம்" என்று சிட்னியில் நடந்த பத்திரிகையாளர் மாநாட்டில் கூறினார்.
அலன் போடர் 1994ம் ஆண்டு கிரிக்கெட் உலகிலிருந்து ஒய்வுபெறப்போவதாக அறிவித்தார். அந்தச் சந்தர்ப்பத்தில்
இ -C-நாணய ஹஸனி

Page 21
அவுஸ்திரேலிய கிரிக்கெட் தெரிவுக் குழுவினர் எதுவித வாதப்பிரதிவாதங்களுமின்றி மார்க் டேலரை அணித் தலைவராக நியமித்தனர்.
அவுஸ்திரேலிய அணி உள்ளூரில் நியுஸிலாந்துடனான டெஸ்ட் தொடரில்,982களில் தோல்வியுற்ற பின்பு நலிவுற்ற நிலையில் இருந்தது. அலன் போடர் அதனை கட்டியெழுப்பும் பொறுப்பைக் கையேற்று வழிநடாத்தினார்.
அலன் போடரின் வழிகாட்டலினால் 1987ம் ஆண்டு இந்தியா, பாகிஸ்தானில் நடந்த நான்காவது உலகக் கிண்ணப் போட்டியில் அவுஸ்திரேலியாவால் வெற்றிபெற முடிந்தது. அவர் ஓய்வு பெறும் போது அவுஸ்திரேலியா உலகின் முதன்மை நிலையில் இருந்தது.
அத்தகைய ஓர் உயர் நிலையில் இருந்த அவுஸ்திரேலிய அணியை அதன் நிலையில் இருந்து தளர்ச்சியுறாது வழி நடாத்திச் செல்லும் பொறுப்பு மார்க் டேலரின் தோள்களுக்கு வழங்கப்பட்டது.
தலைமைப் பதவி கிடைத்ததிலிருந்து அவர் மிகச் சிறப்பான விதத்தில் அவுஸ்திரேலிய அணியை வழிநடாத்திச் சென்று பல டெஸ்ட், ஒருநாள் ஆட்ட வெற்றிகளுக்கு வழிகோலினார்.
அவர் வெற்றி தோல்வி இன்றி ஆட்டம் முடிவுறுவதைவிட முடிவொன்றையே டேலர் எதிர்பார்த்தார். வெற்றியை இலக்ககாக் கொண்டே செயற்பட்டார்.
தலைமைப் பதவியை ஏற்றதிலிருந்து 1996 வரை துடுப்பாட்டத்தில் பிரகாசித்த போதும் அதனைத் தொடர்ந்து வந்த காலத்தில் அவரது தனிப்பட்ட துடுப்பாட்டத்தில் ஒரு பின்னடைவைக் காணக் கூடியதாக இருந்தது. பலரது விமர்சனத்துக்கும் ஆளாக நேரிட்டது.
1996-97க்கு இடைப்பட்ட காலத்தில் 16 மாதங்களில் அவர் கலந்துகொண்ட 21 டெஸ்ட் இனிங்ஸ"களில் ஓர் அரைச் சதத்தையாவது அவரால் பெற முடியவில்லை. அவுஸ்திரேலிய அணித் தலைவர் ஒருவரின் மிக மோசமான தரவு இதுவாக வர்ணிக்கப்பட்டது.
பல விமர்சனங்களுக்கும் மத்தியில் 1997ல் அவுஸ்திரேலிய அணித் தலைமைப் பொறுப்பை ஏற்று இங்கிலாந்துக்குச் சென்றார்.
கீரக்கெட் உறகித் > இ பரகாசித்தவர்கள் )(
NEXC)

லண்டன் டேலி மிரர் பத்திரிகை நகைப்புக்காக அவருக்கு 3 மீற்றர் விசாலமான மட்டையை வழங்கியது.
டேலர் எதனையும் பொருட்படுத்தவில்லை. சிதைந்து போயுள்ள தனது துடுப்பாட்டத்தைக் கட்டியெழுப்புவதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தார். ஆஷஸ் தொடரில் பிர்மின்ஹம்மில் நடந்த முதலாவது டெஸ்ட்டின் இரண்டாவது இனிங்ஸில் 129 ஓட்டங்களைப் பெற்று, விமர்சனங்களைத் துகளாக்கினார்.
அதனைத் தொடர்ந்து அவுஸ்திரேலியா மேற்கொண்ட நான்கு சுற்றுலாக்களிலும் (நியூஸிலாந்து, தென்னாபிரிக்கா, பாகிஸ்தான், இந்தியா) அவர் சதங்கள் பெற்றுத் தனது துடுப்பாட்டத் திறமையை மீண்டும் கிரிக்கெட் உலகுக்கு நிரூபணம் செய்தார்.
பாகிஸ்தானியச் சுற்றுலாவில் 1998 ஒக்டோபர் பெஷாவாரில் நடந்த டெஸ்ட்டில் ஆட்டமிழக்காது அவர் பெற்ற 334 ஓட்டங்கள் மூலம் சேர் டொன் பிரட் மனின் ஒட்ட எணினிக் கையைச் சமப்படுத்தியதோடு, தனது துடுப்பாட்டத்திற்கு மேலும் வலுவூட்டினார்.
பிரபலமான பாகிஸ்தானிய பந்துவீச்சாளர்களுக்கு முகம்கொடுத்தே அவர் இந்த 334 ஓட்டங்களைப் பெற்றார். இந்த டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வி இன்றி முடிவுற்றது. எனினும், 39 வருடங்களுக்குப் பின்பு பாகிஸ்தானில் தொடரொன்றில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியத் தலைவர் என்ற பெருமையைப் பெறுகின்றார்.
டேலர் அவுஸ்திரேலிய அணிக்காக ஆடிய 39வது தலைவராகத் திகழ்கிறார். அத்தோடு இங்கிலாந்து, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையே நடந்த 100வது டெஸ்ட் போட்டிக்கும் தலைமை தாங்கியவர் அவர்தான். இங்கிலாந்துக்கு எதிரான 6வது டெஸ்ட் தொடர் வெற்றியும் அவரது தலைமையிலேயே கிடைத்தது.
அவுஸ்திரேலிய அணியிலுள்ள மிகச்சிறந்த பந்து தடுப்பாளர் (பீல்டர்) மார்க் டேலர்தான். அவர் எப்போதும் சிலிப் பகுதியில் பந்து தடுப்பார். புகழுக்குரிய பல பிடிகளைப் பிடித்துள்ளார். அவர் தவறவிட்ட ஒரே பிடி 1997ல் இங்கிலாந்து வீரர் மாக் புட்சருடையது.
م؟

Page 22
பொதுவாக சில யார் தூரம் பாய்ந்து கட்சுகளைப் பிடிக்கும் ஆற்றல் அவருக்கு உண்டு. டேலர் ஒய்வுபெற முன்பே உலகின் மிகக் கூடுதலான கட்சுகளைப் பிடித்த பந்து தடுப்பாளர் என்ற சாதனையைப் படைத்தார்.
இதற்கு முன்பு இச்சாதனை அவுஸ்திரேலிய முன்னாள் தலைவர் அலன் போடரின் பெயரில் இருந்தது. 1999ம் ஆண்டு இதனை டேலர் முறியடித்தார். ஒய்வுபெறும்போது அவர் 157 கட்சுகளைப் பிடித்திருந்தார். 1996ம் ஆண்டு 6வது உலகக் கிண்ணப் போட்டியின்போது அவுஸ்திரேலியா இலகுவான வெற்றியைப் பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதும் அதனை டேலரினால் அடைந்து கொள்ள முடியவில்லை.
ஆரம்பப் போட்டிகளிலும் சிறப்பாக ஆடி, அரை இறுதிப் போட்டியிலும் எவருமே எதிர்பாராத விதமாக மேற்கிந்திய தீவுகள் அணியை தோல்வியுறச் செய்வதில் டேலரின் தலைமை சிறப்பாகச் செயல்பட்டது.
இறுதிப்போட்டியில் இலங்கையுடன் ஆடியபோது, மாக் வோவுடன் இணைந்து முதலாவது விக்கெட்டுக்காக 136 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றுக் கொடுத்தார். எனினும், தொடர்ந்து வந்த துடுப்பாட்ட வீரர்கள் பிரகாசிக்காததன் காரணமாக அவரது கனவு கனவாகவே முடிந்தது.
அவுஸ்திரேலிய அணியை மிகவும் வெற்றிகரமாக வழி நடாத்திச் சென்ற தலைவர்களுள் ஒருவராக மாக் டேலர் திகழ்கின்றார். அவர் 50 போட்டிகளுக்குத் தலைமை தாங்கி 26 வெற்றிகளைக் கண்டுள்ளார். 13 தோல்விகள். 11 வெற்றி தோல்வி இல்லை. வெற்றி வீதம் 52% ஆகும்.
எந்தவொரு நாட்டிலும் ஒரு கிரிக்கெட் அணித் தலைவருக்கு தொடர்ந்து 50 டெஸ்ட்டுகளுக்குத் தலைமை தாங்க வாய்ப்புக் கிடைப்பது என்பதே அபூர்வம். டேலரின் சிறந்த தலைமையிலேயே அந்த வாய்ப்பைப் பெற்றுக் கொண்டார். மாக் டேலர் ஒருநாள் ஆட்டங்களிலும் சிறப்பான பெறுபேற்றினைப் பெற்றுள்ளார். 67 ஒருநாள் ஆட்டங்களுக்குத் தலைமை தாங்கி 36ல் வெற்றி கண்டுள்ளார். 30ல் தோல்வி அடைந்துள்ளார். 1 சரி சமமாக முடிந்துள்ளது.
தரிக்கெட் ”一حساس۔............. Lரகாசித்தவர்கள் இ>"ெ (23)

டேலர் டெஸ்ட் ஆட்டங்களில் அனைத்து நாடுகளுக்கு எதிராகவும் தலைவராக இருந்து ஆடியுள்ளார். எனினும், சிம்பாபேயிற்கு எதிராக எந்தவொரு போட்டியிலும் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஒய்வு பெறும்வரை கிட்டவில்லை.
ஒருநாள் ஆட்டங்களைப் பொருத்த வரையில் அனைத்து டெஸ்ட் அந்தஸ்துப் பெற்றுள்ள நாடுகள் உட்பட பங்களாதேஷ், கென்யா போன்ற டெஸ்ட் அந்தஸ்துப் பெறாத நாடுகளுக்கு எதிராகவும் ஆடியுள்ளார்.
அவர் இறுதியாக ஆடிய டெஸ்ட் 1999 சிட்னியில் இங்கிலாந்துக்கு எதிரானதாகும். இங்குதான் அவரது டெஸ்ட் பிரவேசமும் இடம்பெற்றது. ஒரே மைதானத்தில் ஆரம்பித்து அங்கே நிறைவு செய்த ஐம்பதாவது டெஸ்ட அணித் தலைவரானார். இறுதியாக ஆடிய ஒருநாள் ஆட்டம் ஒவலில் 24.05.97ல் நடைபெற்ற போட்டியாகும். ஆரம்பப் போட்டி இலங்கைக்கு எதிராக மெல்போனில் 26.12.1989ல் இடம்பெற்றது.
1999 பெப்ரவரி 02ல் தனது ஓய்வை சிட்னி விளையாட்டரங்கில் அறிவித்தபோது 104 டெஸ்ட்டுகளின் 186 இனிங்ஸ்"களில் 13 தடவைகள் ஆட்டமிழக்காது ஆடி, 7525 ஓட்டங்கள் பெற்றிருந்தார். கூடிய ஒட்டம் ஆட்டமிழக்காது 334. சராசரி 43.50, ஒரு முச்சதம், ஓர் இரட்டைச்சதம் அடங்கலாக 19 சதங்களும் 40 அரைச் சதங்களும் பெற்றுள் ளார். 5 தடவைகள் 0இல ஆட்டமிழந்துள்ளார். கட்சுகள் 157. ஒருநாள் ஆட்டங்களில் 113 போட்டிகளில் 110 இனிங்ஸ"களில் ஒரு தடவை ஆட்டமிழக்காது ஆடி, 3514 ஓட்டங்கள் பெற்றுள்ளார். சராசரி 32.24, சதங்கள் 1, அரைச்சதங்கள் 28, 4 தடவைகள் 0 இல் ஆட்டமிழந்துள்ளார். கட்சுகள் 56. மாக் டேலர் கிரிக்கெட் உலகிலிருந்து ஒய்வு பெற்ற போதும் அவரது பங்களிப்பை கிரிக் கெட் உலகம் இன்னும் மறந்துவிடவில்லை.

Page 23
அர்ஜுனா ரணதுங்க Arjuna Ranathunga
இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் அர்ஜுனா ரணதுங்கவுக்குத் தனியான இடமுண்டு, அவர் தான் இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தி மிகக் கூடுதலான டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார்.
1963ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதலாம் திகதி கொழும்பில் பிறந்தார். ஆனந்தாக் கல்லூரியில் கல்வி கற்றார். அவர் மாணவராக இருக்கும் போதே முதல்த்தரப் போட்டியிலும், டெஸ்ட போட்டியிலும் ஆடும் வாய்ப்பைப் பெற்றார்.
இலங்கை அணி இங்கிலாந்துக்கு எதிராக ஆடிய கன்னி டெஸ்ட் போட்டியிலும் அதே தொடரில் ஆடிய ஒருநாள் ஆட்டத்திலும் பாடசாலை மாணவராக இருந்தே இலங்கை யைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.
இலங்கை அணிக்காக முதலாவது டெஸ்ட் அரைச்சதத்தைப் பெற்ற வீரரும் அர்ஜுனா ரனதுங்கதான்.
1982ல் இங்கிலாந்துக்கு எதிராக பந்துல வர்ணபுர தலமையிலான அணியில் ஆடி, எஸ்.எஸ்.ஸி. மைதானத்தில் இந்த அரைச்சதத்தைப் பெற்றார். அவரின் தலைமையில்தான் நியுஸிலாந்துடனான டெஸ்ட் தொடர், இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடர் என்பன வெற்றி கொள்ளப்பட்டன.
ಹೈಗೆಹೆಣ್ತ Élie سيبسسسسحصصبيح - مسسيس

அர்ஜ"ன பாடசாலை மாணவராக இருக்கும்போதே தனது முதலாவது ஒரு நாள் ஆட்டத்தில் இங்கிலாந்துக்கெதிராக 42 ஓட்டங்களைப் பெற்றார்.
அன்றிலிருந்து பாகிளப்தான், இந்தியா, அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து, மேற்கிந்தியத் தீவு, தென் ஆபிரிக்கா, Rம்பாபே ஆகிய அனைத்து டெஸ்ட் அந்தஸ்த்துள்ள நாடுகளுக் கெதிராகவும் ஆடியுள்ளார்.
இலங்கையைப் போன்றே இந்தியா, பாகிஸ்தான், ஷார்ஜா உட்பட அனைத்து இடங்களிலும் ஆடியுள்ளார் இந்த இடதுகை துடுப்பாட்ட விரர்,
நூரானியா ஹஸனின் "எனது பார்வை” நூல் வெளியீட்டில் உரையாற்றும் அர்ஜுனா
1983, 1987, 1992, 1996, 1999 ஆகிய உலகக்கிண்ணப் போட்டிகளிலும் 1984, 1986, 1988, 1990, 1994, 1996 களில் நடைபெற்ற ஆசியக் கிண்ணப் போட்டிகளிலும் 1984/85, 1987 88, 89/90 களில் நடந்த பென்ஸன் அன்ட் 3 فيديوuظلک போட்டிகளிலும் ஆடியுள்ளார்.
இ ->- நரணியாற்

Page 24
இதுதவிர ஷார்ஜா கிண்ணப் போட்டி, அவுஸ்திரேலேஷியா போட்டி, 1985ல் நடந்த நேரு கிண்ணப் போட்டி என்பவற்றிலும் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.
உத்தியோகபூர்வ ஒருநாள் ஆட்டங்களில் முதன் முதல் 1000 ஓட்டங்களைப் பெற்ற வீரர் ரோப் டயஸ், எனினும் 3000 ஓட்டத்தைப் பெற்ற முதல் வீரர் அர்ஜுன ரணதுங்கதான். அர்ஜுனா அனைத்து நாடுகளுக்கெதிராகவும் ஒரு நாள் ஆட்டங்களில் அரைச்சதம் பெற்றுள்ளார்.
1993 மார்ச்சில் ஷார்ஜாவில் நடந்த முக்கோன கிரிக்கெட் போட்டியில் தனது 3000 ஒருநாள் ஓட்டத்தைப் பூர்த்தி செய்தார். 1996 பெப்ரவரியில் 5000 ஓட்டங்களைப் பூர்த்தி செய்தார். 1987ல் உலகக்கிண்ணப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுக்கு எதிராக ஆட்டமிழக்காது 88 ஓட்டங்களைப் பெற்றது மிகச் சிறந்த அரைச் சதமாகும்.
1990ல் சார்ஜாவில் இந்தியாவுக்கு எதிராக ஆட்டமிழக்காது 82 ஓட்டங்களைப் பெற்றார். 92ல் உலகக்கிண்ணப்போட்டியில் சிம்பாபேக்கு எதிராக ஆட்டமிழக்காது 88 ஓட்டங்களைப் பெற்றார்.
அர்ஜ"னா இங்கிலாந்து பொப் வில்ஸ், இயன் பொதம், நியுஸிலாந்து ரிச்சாட் ஹட்லி, அவுஸ்திரேலிய டெனிஸ் லிலி மேற்கிந்தியத் தீவு மைக்கல் ஹோல்டின், மார்ஷல், பாகிஸ்தான் இம்ரான்கான், வரீைம் அக்ரம், வக்கார் யூனுஸ், இந்திய கபில் தேவ், தென் ஆபிரிக்க அலன் டொனால்ட் உட்படப் பல முன்னணிப் பந்து வீச்சாளர்களுக்கு மிகச் சிறப்பாக முகம்கொடுத்துள்ளார்.
இலங்கை அணி கண்டுள்ள பல முக்கிய வெற்றிகளுக்குக் காரணமாக அர்ஜ"னவின் துடுப்பாட்டமே அமைந்துள்ளது.
1983ல் கிரெக் ஷபலின் அவுஸ்திரேலிய அணியுடன் கொழும்பு சரவணமுத்து விளையாட்டு அரங்கில் நடந்த போட்டியில் இலங்கைக்கு வெற்றியைப் பெற்றுத் தந்தவர் அர்ஜுனாதான்.
அப்போட்டியில் டெனிஸ் லிலி, புறுாஸ் பாட்லி போன்றோரின் பந்து வீச்சுக்குச் சிறப்பாக முகம் கொடுத்து, வேகமான

அதேபோன்று 1993ல் அவுஸ்திரேலிய அணியுடனான போட்டியில் அதே மைதானத்தில் அர்ஜ"ன ரணதுங்க காட்டிய அபார துடுப்பாட்டத்தை இதற்கு முன்பு ரசிகர்கள் கண்டிருக்கவே LITTLITTEEGT.
1990ல் ஷார்ஜாவில் இந்தியாவுக்கு எதிராக வேகமான 82 ஓட்டங்கள் பெற்றதன் மூலம் இந்தியா அடையவிருந்த வெற்றியைப் பறித்தெடுத்தார். இது தவிர 92ம் ஆண்டு உலகக்கிண்ணப் போட்டியில் ஸிம்பாபே, தென்னாபிரிக்க அணிகளுடனான போட்டியிகளில் இலங்கையின் வெற்றிக்குக் காரணகர்த்தா அர்ஜுனாதான். அர்ஜ"னா மிகுந்த திறமை காட்டிய சந்தர்ப்பங்கள் என்ற வகையில் 1985 ஆசியக் கிண்ணப் போட்டி, 1987, 1992, 1996 உலகக் கிண்ணப் போட்டிகளைக் குறிப்பிடலாம். அவர் துடுப்பாட்டத்தில் திறமை காட்டாத சந்தர்ப்பம் என்றவகையில் 1983ல் நடந்த மூன்றாவது உலகக் கிண்ணப் போட்டி 1985ல் நடந்த நேருக் கிண்ணப் போட்டி என்பவற்றைக் குறிப்பிடலாம்.
அர்ஜுனாவை புரவலர் ஹாஷிம் ஒமர் வரவேற்கின்றார்.
அதேபோன்று 1988ல் நடந்த ஷார்ஜா போட்டிகளில் முன்று போட்டிகளில் 16 ஓட்டங்களையே அவரால் பெற முடிந்தது. அர்ஜுன துடுப்பாட்ட வீரராக மாத்திரமன்றி மத்திமவேகப்பந்து வீச்சாளராகவும் தனது பங்களிப்பைச் செய்துள்ளார்.
| இ --C-நராணிா ஹஸன்

Page 25
1987ல் நடந்த உலகக்கிண்ணப் போட்டியில் அவர் மூன்று அரைச் சதங்களைப் பெற்றார். வேகப்பந்து வீச்சாளரான அவுஸ்திரேலியா கிரென் மக்டமெட்டின் ஓர் ஒவரில் அர்ஜுனா 20 ஓட்டங்களைப் பெற்றார்.
மேற்கிந்தியத் தீவு முன்னாள் தலைவர் சாபில்ட் ஸோபர்ஸ் பாகிஸ்தான் முன்னாள் தலைவர் இம்ரான்கான் ஆகியோர் அர்ஜூனாவின் துடுப்பாட்டத்தை வெகுவாகப் புகழ்ந்துள்ளனர்.
இந்திய அணி முன்னாள் தலைவர் சுனில் கவஸ்கர் இப்படிச் சொல்கிறார்: "தோல்வியுறும் போட்டியை வெற்றியாக மாற்றக்கூடிய இரு வீரர்களே உலகில் உள்ளனர். ஒருவர் பாகிஸ்தான் அணி வீரர் ஜாவிட் மியன்டாட், மற்றவர் இலங்கை வீரர் அர்ஜுனா ரனதுங்க"
தென்னாபிரிக்க வேகப்பந்து வீச்சாளர் அலன் டொனால்டின் கருத்துப்படி அர்ஜுனா ரணதுங்க துடுப்பாட்டத்தின் அதி உச்ச நிலையை அடைந்தால் அவருக்கு பந்து வீசுவது மிகவும் சிரமமானதாகும்.
இம்ரான்கானின் கருத்துப்படி அர்ஜுனா ரணதுங்க உலகிலுள்ள முதல்த்தரத் துடுப்பாட்ட வீரர். இந்த வகையில் அனைத்து விரார்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட சிறந்ததொரு துடுப்பாட்ட வீரர் அர்ஜுனா ரணதுங்க.
அர்ஜுனா ரணதுங்க இலங்கை அணியின் தலைவராக நியமிக்கப்பட்டதன் பின்பு அவரது பங்களிப்பு சிறப்பாக அமைந்தது. இலங்கைக்கு மிகக் கூடுதலான ஒரு நாள் ஆட்டம் மற்றும் டெஸ்ட் வெற்றிகளும் அவரின் தலைமையிலேயே கிடைத்துள்ளன.
இலங்கை தனது கன்னி டெஸ்ட் வெற்றியை 1985ல் இந்தியாவுக்கு எதிராகவும், இரண்டாவது வெற்றியை 1986ல் பாகிஸ்த்தானுக்கு எதிராகவும் துலிப் மென்டிஸின் தலைமையில் பெற்றது. 1986 ஆசியக் கிண்ணமும் துலிப் மெனடிஎபின் தலைமையில் பெற்றதாகும்.
1999ல் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் வெற்றிகளும் ஸிம்பாபேயிக்கு எதிரான டெஸ்ட் வெற்றிகளும் அகாய்க் கிண்ண வெற்றியும் சனத் ஜெயசூரியவின் தலைமையில் பெறப்பட்டது.
<>

இது தவிர இலங்கை பெற்றுள்ள அனைத்து டெஸ்ட் வெற்றிகளும் ஒரு நாள் கிண்ணங்களும் அர்ஜுனா ரணத்துங்கவின் தலைமையில் பெறப்பட்டதாகும். வெளிநாடொன்றில் முதல் டெஸ்ட் வெற்றியும் அவரது தலைமையிலே இடம் பெற்றது.
1995ல் நியூசிலாந்தை அந்த நாட்டிலேயே 24 ஓட்டங்களால் தோற்கடித்து, தொடரில் 1-0 என்ற நிலையில் வெற்றியினைப் பெற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்குச் சென்று, டெஸ்ட் தொடரிலும் ஒரு நாள் ஆட்டத் தொடரிலும் 2-1 என்ற நிலையில் வெற்றி கண்டார்.
தொடர்ந்து ஷார்ஜாவில் நடந்த முக்கோனப் போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் மேற்கிந்தியத் தீவைத் தோற்கடித்து, இலங்கை கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டது அர்ஜுனா ரணத்துங்கவின் தலைமையாலாகும்,
இவற்றை விட இலங்கை அணியின் பல வெற்றிகளின் பின்னணியில் அர்ஜுனா ரனத்துங்க இருந்துள்ளார். 1986ல் தொழும்பில் பாகிஸ்தானுடனான மூன்றாவது டெளப்ட்டில் இலங்கையைத் தோல்வியில் இருந்து மீட்டது அர்ஜூனாதான். அப்போட்டியில் அவர் ஆட்டமிழக்காது 135 ஓட்டங்கள் பெற்றார். அதுவே அவரது மிகக் கூடிய டெஸ்ட் ஓட்டமாகும்.
பல ஒருநாள் ஆட்டங்களில் அவரின் சிறப்பான துடுப்பாட்டத்தின் காரணமாக இலங்கை எதிர்பாராத வெற்றியைப் பெற்றுள்ளது.

Page 26
1992ல் ஐந்தாவது உலகக் கிண்ணப் போட்டியில் ஸிம்பாப்பே இலங்கைக்கு எதிராக 50 ஓவர்களில் 312 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. வெற்றிபெற 6 ஓட்டங்களுக்கு மேல் தேவைப்பட்டது.
165 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுகளை இழந்திருந்த நிலையில் அர்ஜ"ணா ஆடுகளத்துள் நுழைந்தார். இறுதி 10 ஓவரில் 91 ஓட்டங்கள் பெற வேண்டியிருந்தது. அர்ஜ"ணா எது வித தயக்கமுமின்றி பந்தை நாளா புறமும் விளாசினார். 64 பந்து வீச்சுக்கு முகம் கொடுத்து ஆட்டமிழக்காது 88 ஓட்டங்கள் பெற்றார். இலங்கைக்கு எதிர்பாராத வெற்றியைப் பெற்றுக் கொடுத்தார்.
அதே ஐந்தாவது உலகக் கிண்ணத் தொடரில் மிகச் சிறந்த அணியாகக் கருதப்பட்ட தென்னாபிரிக்காவுடனான போட்டியிலும் அர்ஜூனாவின் சிறப்பான துடுப்பாட்டத்தினால் இலங்கை வெற்றி பெற்றது.
அப்போட்டியில் அலன் டொனால்ட் போன்ற பிரபல பந்து வீச்சாளர்களுக்கு முகம் கொடுத்து 73 பந்துகளை எதிர்கொண்டு 64 ஓட்டங்கள் பெற்றார். போட்டியின் சிறப்பாட்டக் காரராகவும் தெரிவானார்.
ஐந்தாவது உலகக் கிண்ணப் போட்டிக்குச் செல்லுவதற்கு ஒட்டம் 0,0,0,6 இதன் காரணமாக ஒருநாள் ஆட்டங்களில் ஆட வாய்ப்புக் கிடைக்கவில்லை. எனினும் உலகக் கிண்ணப் போட்டிகளில் மீண்டும் தனது உண்மையான திறமையை வெளிக் கொணர்ந்தார்.
1990 ஆம் ஆண்டு ஷார்ஜாவில் நடந்த அவுஸ்திரேலேஷியாக் கிண்ணப் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றிபெற, இறுதி ஐந்து ஓவர்களில் ஒவருக்கு 11 ஓட்டங்கள் பெறவேண்டியிருந்தது. அவரின் சிறப்பான துடுப்பாட்டத்தில் 82 ஓட்டங்கள் பெற்று வெற்றியைத் தமதாக்கினார்.
அர்ஜுனா ரணதுங்கவின் கிரிக்கெட் வாழ்க்கையில் 95, 96, 97 ஆம் ஆண்டுகள் பொற்காலமாகத் திகழ்ந்தன எனலாம். இக்காலத்திலேயே இலங்கை பல ஒரு நாள் ஆட்டங்கள் மற்றும் டெஸ்ட் வெற்றிகளைப் பெற்றுக் கொண்டது.
:ே ー== علی این حاکی இ6)

அர்ஜூனாவின் தலைமையில் இலங்கை பெற்ற மிகச் சிறந்த வெற்றி 1996ல ஆறாவது உலகக் கிணி ணத் தை வென்றெடுத்ததாகும். ஆறாவது உலகக் கிண்ணப் போட்டியில் எந்தவொரு போட்டியிலும் தோல்வியுறாது இறுதிப்போட்டியில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இலகுவான ஏழு விக்கெட் வெற்றியைப் பெற்றுக் கொடுத்தார்.
ஆறாவது உலகக்கிண்ணப் போட்டியில் மக்ராத்தின் பந்து வீச்சில் ‘த்தேட்மேன்’ பகுதிற்கு பவுண்டரி ஒன்று அடித்ததன் மூலம் அர்ஜுனா வெற்றியை உறுதிப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து வந்த காலப்பகுதியில் இந்திய சுதந்திரக் கிண்ணம் உட்பட பல போட்டிகளில் இலங்கை வெற்றிகண்டது.
கிரிக்கெட் அணித்தலைவர்களிடையே இம்ரான் கான் மிகச்சிறந்ததொரு அணித்தலைவரென்று கருதுவதுண்டு. எனினும் அர்ஜுன எந்தவொரு உலக அணிதலைவருக்கும் இரண்டாம் தரமானவரல்லர் என்று நவ்ஜோத் சிங் சிது குறிப்பிடுகின்றார்.
அர்ஜ"னவை ஆட்டமிழக்கச் செய்யாது விட்டால் இலங்கை அணியை தோல்வியுரச் செய்வது இலகுவானதல்ல. இதனை அவர் பலமுறை நிரூபித்துள்ளார். அர்ஜ"னாவினதும் அரவிந்தவினதும் இெைவளியை இலகுவில் நிரப்ப முடியாது என்றும் சிது கூறுகின்றார்.
இலங்கை அணியில் அவர் தன்னாதிக்கம் செலுத்திய போதும் அணி வீரர்கள் அவரில் மிகந்த அன்பு வைத்திருந்தனர். அவரை ஐயா ஐயா (அண்ணா) என்றே அழைத்தனர். தனது சக நண்பர்கள் விடயத்தில் எப்போதும் அக்கறையுடன் செயற்பட்டார்.
முத்தையா முரளிதரன் விடயத்தில் அவர் நடந்து கொண்ட விதம் இதற்கு நல்ல உதாரணம். தனக்கு வெற்றியீட்டித்தரும் பந்து வீச்சாளருக்கு அநீதி இழைக்கப்பட்ட போது, அவர் அமைதியாக இருக்கவில்லை. அதற்கு ஒரு முடிவு வரு மட்டும் மைதானத்திலிருந்து வெளியேரினார்.
இதற்கு எதிராக தனக்கு ஒழுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைக் கூட நன்கு தெரிந்திருந்தும் அவ்வாறு செயற்பட்டது அவருள் தேங்கிக் கிடக்கும் மனிதாபிமானத்தைக் காட்டுகின்றது.
XX&SXXX.:აბ.:::2.2XX-XXXXXXXXXXXX

Page 27
அர்ஜுனா போன்றோர் அணித்தலைவர் இல்லாதிருந்தால் முரளிதரன் என்ன மிகச்சிறந்த சுழல் பந்து வீச்சாளரை இலங்கை இழந்திருக்கக்கூடும்.
அர்ஜுனா ஆடுகளத்தில் இருந்தால் இலங்கை தோல்வியுறாது என்பதற்கு நல்ல உதாரணம் தான் பாகிஸ் தானுடன் ராவல்பிண்டியில் மார்ச் 2000ல் நடந்த டெஸ்ட்டில் மிக மோசமாக காயமுற்ற கரங்களுடன் ஆடி, இரண்டு விக்கெட் வெற்றியைப் பெற்றுக்கொடுத்தார்.
இலங்கைக்கு வெளியே இடம் பெற்ற டெஸ்ட் போட்டியொன்றில் மாத்திரமல்ல, ஒரு நாள் ஆட்ட சம்பியன்ஷிப் போட்டியொன்றிலும் அர்ஜுன ரணதுங்க தலைமையிலே இலங்கை அணி முதல் வெற்றி கண்டது.
1994-95 களில் நியூசிலாந்தை 1-0 என்ற நிலையில் தோற்கடித்த கையோடு 95 செப்டம்பரில் பாக்கிஸ்தானை 2-1 என்ற நிலையில் தோற்கடித்தார். 1995 ஒக்டோபரில் ஷார்ஜா முக்கோணப் போட்டியின் இறுதிப் போட்டியில் மேற்கிந்தியத் தீவை தோற்கடித்தார்.
அதனைத் தொடர்ந்து 96 லாகூரில் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியாவைத் தோற்கடித்தார். 96 செப்டம்பரில் கொழும்பில் அவுஸ்திரேலியாவை தோற்கடித்து, சிங்கர் கிண்ணத்தை வெற்றி கொண்டார்.
1997 ஏப்ரலில் ஷார்ஸாவில் பாகிஸ்தானை தோற்கடித்து சிங்கர் அகாய் கிண்ணத்தை வெற்றிகொண்டார். 97 மேயில் இந்தியாவில் பாகிஸ்தானைத் தோற்கடித்து இந்திய சுதந்திரக் கிண்ணத்தை வெற்றி கொண்டார்.
1997 ஜூலையில் இந்திய அணியைத் தோற்கடித்து, ஆசியக் கிண்ணத்தைக் கைப்பற்றினார். 1997ல் பாகிஸ்தானிய சுதந்திரக் கிண்ண, 1998 ஜூலை இலங்கை சுதந்திரக் கிண்ணப் போட்டிகளில் இறுதி ஆட்டத்தில் தோல்வியுற்றார்.
எனினும், 1998ல் இங்கிலாந்து மண்ணிலேயே இங்கிலாந்து
அணியைத் தோற்கடித்து, எமிரேட்ஸ் கிண்ணத்தை வெற்றி கொண்டார்.
கரிக்கெட் உசிைன் )~_ - இ)
ufinalitarigaluriasiati i 38.8:.8--:2:*>:828388:, •.8:288:3838Ꭹ:;

1997 செப்டெம்பரில் இந்திய அணிக்கெதிரான டெஸ்ட்டில் இலங்கை அணி 952 ஓட்டங்களைப் பெற்று, உலக சாதனை படைத்தது.
அர்ஜுன ரணதுங்க மாத்திரமே டெஸ்ட் போட்டிகளில் தனது நாட்டை முதலாவது டெஸ்ட்டிலும் நூறாவது டெஸ்ட்டிலும் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.
நிர்வாகிகளுடன் ஏற்பட்ட இழுபறியினால் அவரால் 12 போட்டிகளில் ஆட முடியவில்லை. இன்றேல் தொடர்ச்சியாக 100 போட்டிகளில் ஆடி சாதனை படைத்திருப்பார்.
1998ம் ஆண்டின் அரை இறுதிப் பகுதியில் இருந்து இலங்கை அணியின் வெற்றிகளில் ஒரு தளர்வைக் காண முடிந்தது. அர்ஜூனாவுக்கு எதிராகப் பல விமர்சனங்கள் எழுந்தன. அவர் நினைத்தவாறு தீர்மானங்கள் எடுப்பதாகக் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. மஹாநாம அணியில் சேர்க்கப்படாததற்கும் அவர்தான் காரணமென்று கூறப்பட்டது.
அத்தோடு சில வெகுஜனத் தொடர்பு சாதனங்களும் அவரை விமர்சித்தன. இந்நிலையில் 1999ம் ஆண்டு ஏழாவது உலகக் கிண்ணப் போட்டியில் மிகுந்த எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் இலங்கை அணி அர்ஜூனாவின் தலைமையில் இங்கிலாந்துக்குச் சென்றது. எனினும் உலகச் சம்பியனான இலங்கைக்கு கால் இறுதிப் போட்டிக்காவது தகைமை பெற முடியவில்லை.
இதனால் இலங்கை அணி நாடு திரும்பியதும் அர்ஜூனாவிற்கு எதிரான எதிர்ப்பு அலை மேலும் அதிகரித்தது. இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையிலும் மாற்றங்கள் ஏற்பட்டன. புதிய தெரிவுக்குழு நியமனமாகியது.
உலகக்கிண்ணப் போட்டியைத் தொடர்ந்து இலங்கையில் நடந்த அகாய் கிண்ணப் போட்டியின் போது ஒருநாள் ஆட்ட அணியில் அர்ஜுனா ரணதுங்க, அரவிந்த டி சில்வா, ரொஷான் மஹாநாம, ஹஷான் திலகரத்ன போன்றோர் இடம்பெறவில்லை. அர்ஜூனாவின் கிரிக்கெட் வாழ்வில் அவருக்கு விழுந்த பயங்கரமான அடியாக இது அமைந்தது.

Page 28
ஒருநாள் ஆட்டத்தொடரைத் தொடர்ந்து அவுஸ்திரேலியா வு னான டெஸ் ட் தொடரில் அர்ஜ"னா சேர்த்துக் கொள்ளப்பட்டபோதும் அவரால் பிரகாசிக்க முடியவில்லை.
இதன் விளைவாக 99 இறுதியில் இடம்பெற்ற ஸிம்பாபேயிற்கான ஒருநாள் ஆட்ட மற்றும் டெஸ்ட் தொடர்களில் அர்ஜ"னா ரணதுங்கா இடம்பெறவில்லை. எனினும், இறுதித் தொடரில் அவர் தொலைக்காட்சி நேர்முக வர்ணனையாளராக அறிமுகமானார்.
ஓய்வு பெறும் போது அர்ஜுனா ரணதுங்கா 93 டெஸ்ட்டுகளில் 155 இனிங்ஸ”களில் 12 தடவைகள் ஆட்டமிழக்காது ஆடி, 5105 ஓட்டங்கள் பெற்றுள்ளார். கூடிய ஒட்டம் ஆட்டமிழக்காது 135 சராசரி 35.70 சதங்கள் 4 அரைச்சதங்கள் 38 கட்சுகள் 47.
பந்து வீச்சில் 2373 பந்துகள் வீசி 1040 ஓட்டங்களைக் கொடுத்து, 16 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியுள்ளார். சராசரி 65.00 சிறப்பான பந்து வீச்சு 17 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்கள்.
ஒருநாள் ஆட்டங்களில் 269 போட்டிகளில் 255 இனிங்ஸ்"களில் 47 தடவைகள் ஆட்டமிழக்காது ஆடி, 7456 ஓட்டங்கள் பெற்றுள்ளார். கூடிய ஓட்டம் ஆட்டமிழக்காது 131. சராசரி 35.85. சதங்கள் 4, அரைச்சதங்கள் 49, கட்சுகள் 63.
4710 பந்து வீச்சுகள் வீசி, 3757 ஓட்டங்களைக் கொடுத்து, 79 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியுள்ளார். சராசரி 47.56. சிறப்பானது 14 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்கள்.
அர்ஜூனாவின் பங்களிப்பு இறுதிக் காலகட்டத்தில் மறக்கப்பட்டாலும் கிரிக்கெட் உலகம் இலகுவில் அவரை மறக்க மாட்டாது.
அர்ஜுன் ரணதுங்கவின் தலைமையில் 1989-1990 முதல் 19981999 வரையிலான ஒரு தசாப்தத்தில் 56 டெஸ்ட்டுகளில் ஆடி 12 வெற்றியும் 19 இல் தோல்வியும் கண்டுள்ளதோடு, 25 வெற்றி தோல்வியின்றி முடிவுற்றுள்ளன. வெற்றி வீதம் 43.75%
அர்ஜூனா தலைமையில் முதலாவது ஒரு நாள் ஆட்டம் 29-101988 இல் இடம் பெற்றது. அவர் தலைமை தாங்கிய இறுதி ஒரு நாள் ஆட்டம் 30-05-1999 இல் இடம் பெற்றது.
 

அர்ஜ"ன ரணதுங்கவே மிகக் கூடுதலான ஒரு நாள் போட்டிகளுக்குத் தலைமை தாங்கிய த்லைவராகக் காணப்படுகின்றார்.
அவரது தலைமையில் 193 ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் ஆடி, 89 வெற்றிகளும் 95 தோல்விகளும் கிடைத்துள்ளன. ஒரு போட்டி சரிசமமாக முடிந்துள்ளதோடு, 8 போட்டிகளில் பெறுபேறில்லை. வெற்றி வீதம் 47.62
முதல்த்தரப் போட்டிகளில் உள்ளுரில் எஸ்.எஸ்.ஸி. அணியைப் பிரதிநிதித்துவப் படுத்தி ஆடினார். அந்த அணியின் பல வெற்றிகளில் முக்கிய பங்காற்றினார். முதல்த்தரப் போட்டிகளில் 191 போட்டிகளில் 276 இனிங்ஸ்"களில் 29 தடவைகள் ஆட்டமிழக்காது ஆடி, 10,543 ஓட்டங்கள் பெற்றுள்ளார். சராசரி 42.68 கூடிய ஒட்டம் 238 (ஆ.இ) (செபஸ்ரியன் அணிக்கெதிராக 1992-93 களில்) சதங்கள் 22, அரைச் சதங்கள் 58, கட்சுகள் 107.
பந்து வீச்சில் 7012 பந்துகள் வீசி, 3058 ஓட்டங்களைக் கொடுத்து 92 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியுள்ளார். சராசரி 33.23 சிறப்பானது 45 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்கள் (சிங்ஹ விளையாட்டுக் கழகத்துக்கு எதிராக 1992-93 களில்) இரண்டு தடவைகள் இனிங்ஸில் 5 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.

Page 29
ரவி சாஸ்திரி Ravi Shastri
இந்தியா கிரிக்கெட் உலகுக்குத் தந்த மிகச் சிறந்ததொரு வீரராக ரவி சாஸ்த்திரி ஆரம்பத்தில் பிரகாசித்தாலும் அவரால் மிக நீண்ட காலம் கிரிக்கெட் உலகில் நின்று பிடிக்க முடியவில்லை.
துடுப்பாட்டத்தில் மாத்திரமன்றி பந்து வீச்சிலும் இந்திய அணிக்கு அவர் சிறந்த பங்களிப்புச் செய்துள்ளார். ஒரு நாள் ஆட்டங்களைப் பொருத்த வரையில் இந்திய அணிக்கு அவரது பங்களிப்பு இன்றியமையாததாக ஒரு காலத்தில் காணப்பட்டது.
ரவிசாஸ்திரி 1962ம் ஆண்டு மே மாதம் 22ம் திகதி பம்பாயில் பிறந்தார். அவரது முழுப்பெயர் ரவிசங்கர் ஜாய்டித் சாஸ்திரி.
ரவி சாஸ்திரி இளம் பருவத்திலும் பாடசாலைப் பருவத்திலும் கிரிக்கெட்டில் பெரும் ஆர்வம் உடையவராகக் காணப்பட்டார்.
பாடசாலைப் பருவத்தில் நடந்த போட்டிகளில் சுழல் பந்து வீச்சிலும் துடுப்பாட்டத்திலும் பெரிதும் திறமை காட்டினார்.
அவர் 1979, 80களில் பம்பாய் கிரிக்கெட் அணியில் அங்கத்துவம் பெற்று, முதல்தரக் கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொண்டார். வலக்கைத் துடுப்பாட்டத்திலும், இடப்புறச் சுழல்பந்து வீச்சிலும் முதல்தரப் போட்டிகளில் அவர் காட்டிய திறமையினால் 1980களில் இலங்கைக்கு வருகை தந்த 20 வயதுக்குக் கீழான அணிக்குத் தலைவராகத் தெரிவானார்.
கிரிக்கெட் உணிை ..................سس<~.................................. இ2) பரகாசத்துவர்கள் ) >7 'Y':/ಟ್ಲಿ

1981ல் 19 வயதின் கீழ் இந்திய அணிக்கு தலைமை தாங்கி இங்கிலாந்து சென்று மிகத் திறமையான முறையில் ஆடினார்.
1980, 81 களில் நியூஸிலாந்துக்கான சுற்றுலாவில் எதிர்கால இந்திய அணியில் இடம்பெறவேண்டிய ஒரு சகலதுறை ஆட்டக்காரருக்கான வெற்றிடத்தை நிரப்புவதற்கு அவர் தெரிவானார்.
அத்தோடு இச்சுற்றுலாவில் இந்திய சுழல்பந்து வீச்சாளர் டிலிப்தொஸ் சுகயினம் காரணமாகக் கலந்து கொள்ளாததனால் அவ்விடத்தை நிரப்புவதற்கு புதிய சுழல் பந்து வீச்சாளர் ரவி சாஸ்திரி சேர்த்துக் கொள்ளப்பட்டார். V
வெலிங்டன் நகரில் நடந்த தனது முதலாவது டெஸ்ட்டில் நியூஸிலாந்து அணித் தலைவர் ஜெராமl கோணியை ஆட்டமிழக்கச் செய்து தனது கன்னி விக்கெட்டைக் கைப்பற்றினார்.
இந்த டெஸ்ட்டில் ஓர் ஒவரில் நான்கு பந்துகளை மாத்திரம் வீசி மூன்று விக்கெட்டுக்களைக் கைப்பற்றி தான் சிறந்ததொரு சுழல் பந்து வீச்சாளர் என்பதை நிரூபித்தார்.
1984-85களில் பரோடா மாநில அணிக்கெதிராக ஆட்டமிழக்காது பெற்றுக்கொண்ட 200 ஓட்டங்களே முதல்தரப் போட்டிகளில் சாஸ்திரி பெற்றுக்கொண்ட மிகக் கூடிய ஓட்டங்களாகும்.
முதல்தரப் போட்டிகளில் இதற்கு முன்பு வேகமான இரட்டைச் சதத்தைப் பெற்றுக்கொண்டவர்கள் எச்.எல். ஜோஸெப், சி.எச்.எம். லொயப்ட் ஆகியோர். அவர்களுக்கு 120 நிமிடங்கள் தேவைப்பட்டன.
எனினும் ரவிசாஸ்திரி 113 நிமிடங்களில் முதல் தரப் போட்டியொன்றில் மிக வேகமான இரட்டை சதமொன்றைப் பெற்று புதிய உலகச் சாதனையை ஏற்படுத்தினார்.
இதில் முதலாவது 100 ஓட்டத்தை 71 பந்துகளை எதிர்கொண்டும் இரண்டாவது 100 ஓட்டத்தை 42 பந்துகளை எதிர்கொண்டும் பெற்றார்.
இப்போட்டியில் பரோடா மாநில சுழல் பந்து வீச்சாளர் திலக் ராஜின் ஓர் ஓவரில் ஆறு 'சிக்ஸர்ஸ்’ அடித்து, சர் ஹாபில்ட்
wwn tinymoil it ஹஸன் تحل کتاب تندیس =

Page 30
சோபர்ஸ் ஏற்படுத்தியிருந்த சாதனையைச் சமப்படுத்தினார். இப்போட்டியில் சாஸ்திரி 13 சிக்சர்கள் அடித்தார்.
1981-82களில் இராணி கிண்ணப் போட்டியில் “ரெஸ்ட் ஒப் இந்தியா அணிக்கெதிராக சிறப்பாகப் பந்து வீசி ஓர் இனிங்ஸில் 101 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.
இதுவே முதல்தரப் போட்டியொன்றில் ரவிசாஸ்திரியின் சிறப்பான பந்து விச்சாகும், 1982ம் ஆண்டு இங்கிலாந்துக்கான சுற்றுலாவில் சாஸ்த்திரி இடம்பெற்றாலும் அவருக்குப் பந்து வீச்சாலோ துடுப்பாட்டத்தாலோ திறமை காட்டமுடியவில்லை. 1982-83களில் பாகிஸ்தானுக்கான சுற்றுலாவில் முதலாவது டெஸ்ட்டில் அவர் திறமை காட்டாததினால் இரண்டாவது, மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது டெஸ்ட்டுகளில் அவர் இடம்பெறவில்லை.
எனினும், கராச்சியில் நடைபெற்ற ஆறாவதும் இறுதியுமான டெஸ்ட்டில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக வந்து 128 ஓட்டங்கள் பெற்றார். இது அவரது 14வது டெஸ்ட்டில் கிடைத்த கன்னிச் சதமாகும்.
தனது இரண்டாவது டெஸ்ட் சதத்தை 1983ல் மேற்கிந்தியத் தீவுக்கு எதிராக மேற்கிந்தியத் தீவில் நடைபெற்ற ஐந்தாவது டெஸ்ட்டில் பெற்றார். அங்கு இப்போட்டியில் மேற்கிந்தியத் தீவு வேகப்பந்து வீச்சாளருக்கு எதிராகச் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடி 102 ஓட்டங்கள் பெற்றார்.
1983-84 களில் மேற்கிந்தியத் தீவின் இந்தியாவுக்கான சுற்றுலாவில் சென்னையில் நடைபெற்ற ஆறாவது டெஸ்ட்டில் 72 ஓட்டங்கள் பெற்றதன் மூலம் 1000 டெஸ்ட் ஓட்டத்தினைப் பூர்த்தி செய்தார். அது அவரது 27வது டெஸ்ட்டின் 41வது இனிங்ஸ். 1984-85களில் நாக்பூரில் நடைபெற்ற பாகிளப்தானுடனான மூன்றாவது டெஸ்ட்டில் 75 ஓட்டங்களுக்கு 5 வீரர்களை ஆட்டமிழக்கச் செய்தது அவரது சிறந்த பந்துவீச்சாகும. 1984-85களில் இங்கிலாந்து அணியின் இந்தியாவுக்கான சுற்றுலாவின் போது பம்பாயில் நடந்த முதலாவது டெஸ்ட்டில்
ந்கீ --C- இ |

|42 ஓட்டங்கள் பெற்றார். இது அவரது இங்கிலாந்துக்கெதிரான முதலாவது சதமாகும்.
இதே தொடரில் கல்கத்தாவில் நடந்த மூன்றாவது டெஸ்ட்டில் 111 ஓட்டங்கள் பெற்றதுடன் இத்தொடரில் இரண்டு சதங்கள் உட்பட 5 போட்டியின் 9 இனிங்ஸ"களில் 383 ஓட்டங்கள் பெற்றார்.
1981-82 களில் பெங்களுரில் நடந்த போட்டியொன்றில் இங்கிலாந்துக்கெதிராகச் சிறப்பாகப் பந்து விசி, 33 ஓட்டங்களுக்கு நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
1985-80களில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக மெல்போனில் நடந்த டெஸ்ட்டில் இரண்டு இனிங்ஸ"களில் 175 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 1986ல் சென்னையில் நடந்த முதலாவது டெஸ்ட்டில் 62 ஓட்டங்கள் பெற்றார். இது அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது அரைச்சதமாகும்.
ஆறாவது உலகக் கிண்ணப் போட்டியின் போது ரவிசாஸ்திரியுடன் நூலாசிரியர்
1987 மார்ச்சில் பாகிஸ்தானுக்கு எதிராக 125 ஓட்டங்கள் பெற்றதன் மூலம் தனது ஏழாவது சதத்தையும் பெற்றுக் கொண்டார்.
இது பாகிஸ்தானுக்கு எதிரான மிக வேகம் குறைந்த சதமாகும். இச்சதத்தில் மூன்று பெளண்டரிகள் மாத்திரமே உட்படுகின்றன.
அதே தொடரில் அவர் சிறப்பாகப் பந்து வீசி 65 ஓட்டங்களைக் கொடுத்து 4 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.
| 35 இ கரணி"

Page 31
ரவி சாஸ்திரி ஆரம்ப காலந்தொட்டே இளம் பெண்களுடன் பழகுவதென்றால் அலாதியான விருப்பம்.
இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் போட்டிகளில் ஆடச்சென்றால் இளம் பெண்கள் வலை விரிக்கத் தவறுவதில்லை.
ஒரு காலத்தில் இந்தி நடிகை அம்ரிதா சிங் ரவி சாஸ்திரி காதல் பற்றி பம்பாய் வட்டாரத்தில் பெரிதாக அடிபட்டது.
தொடச்சியாக வந்த பல டெஸ்ட் ஒரு நாள் ஆட்டங்களில் ரவி சாஸ்த்திரி உரிய முறையில் பிரகாசிக்காத காரணத்தினால் அவரால் தொடர்ந்தும் நின்று பிடிக்க முடியவில்லை.
அத்தோடு இந்திய அணியில் புதிதாக அறிமுகமான வீரர்களுடன் அவரால் போட்டியிட முடியவில்லை. தொடர்ந்து சில போட்டிகளுக்கு கலந்து கொள்ளும் வாய்ப்பு அவருக்குக் கிடைக்கவில்லை. அதனால் அவர் தாமாகவே கிரிக்கெட் உலகுக்குப் பிரியாவிடை கொடுத்தார்.
அவர் ஓய்வு பெறும் போது 86 டெஸ்ட்டுகளின் 121 இனிங்ஸில் 14 தடவைகள் ஆட்டமிழக்காது ஆடி 4830 ஓட்டங்கள் பெற்றார். கூடிய ஒட்டம் 206. சராசரி 35.79 சதம் 11 அரைச்சதம் 12, பந்து வீச்சில் 15751 பந்தகள் வீசி 6185 ஓட்டங்களைக் கொடுத்து 151 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியுள்ளார். சராசரி 40.96 சிறப்பானது 75 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்கள். கட்சுகள் 36.
ஒரு நாள் ஆட்டத்தில் 150 போட்டிகளில் 128 இனிங்ஸ”களில் 21 தடவைகள் ஆட்டமிழக்காது ஆடி 3108 ஓட்டங்கள் பெற்றுள்ளார். கூடிய ஒட்டம் 109. சராசரி 29.04. சதம் 4. அரைச்சதம் 18. கட்சுகள் 40. பந்து வீச்சில் 6613 பந்துகள் வீசி 4650 ஓட்டங்களைக் கொடுத்து 129 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியுள்ளார். சராசரி 36.04. சிறப்பானது 15 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்கள். ரவிசாஸ்திரி கிரிக்கெட் உலகிலிருந்து ஓய்வு பெற்ற போதும் இன்று சர்வதேச போட்டிகளில் மிகச் சிறந்ததொரு நேர்முக வர்ணனையாளராக தனது பங்களிப்பைச் செய்கின்றார்.
 
 

மாடின் குரோ Martin Crow
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் தன்னிகரற்ற ஒரு துடுப்பாட்ட வீரராகத் திகழ்ந்து அந்த அணியின் பல வெற்றிகளுக்குப் பின்னால் நின்றவர் மாட்டின் குறோ. அவர் ஒரு கிரிக்கெட் குடும்பச் சூழலில் பிறந்து வளர்ந்தவர். அவரது சகோதரர் ஜெப் குரோவும் சமகாலத்திலேயே நியூசிலாந்து அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். மாட்டின் குரோ 1962 ஆம் ஆண்டில் ஓக்லண்டில் பிறந்தார். சிறு வயதிலேயே கிரிக்கெட் ஆட்டத்தில் திறமை காட்டியதன் காரணமாக விரைவிலேயே டெஸ்ட் கதவுகள் திறக்கப்பட்டன. 1981/82 களில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளிலும் ஒரு நாள் ஆட்டங்களிலும் ஆட ஆரம்பித்தார். மாட்டின் குரோவின் துடுப்பாட்டத்தை உலகிலுள்ள பல பிரபலமான வீரர்கள் பாராட்டியுள்ளனர். அவரை ஆட்டமிழக்கச் செய்வது என்பது இலகுவானதல்ல.
வேகப்பந்து வீச்சாளரான வக்கார் யூனுஸிடம் வினவியபோது “பந்து வீசுவதற்குக் கடினமான ஒரு வீரர் மாட்டின் குரோ’ என்றார். மாட்டின் குரோ பந்துகளுக்கு முகம்கொடுத்து ஆடும் விதத்தையும் விக்கெட்டில் சிறப்பாகத் தரித்தாடுவதையும் விளையாட்டு விமர்சகர்கள் சிறப்பாக வர்ணிக்கின்றனர். மாட்டின் குரோ 1982ம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு எதிராக முதன் முதலில் டெஸ்ட்டில் ஆடினார். ஆரம்பத்தில் அவர் அவ்வளவாகப் பிரகாசிக்கவில்லை.

Page 32
எனினும் பின்பு தனது துடுப்பாட்டத்தைச் சிறப்பாக வளர்த்துக்கொண்டு ஓய்வு பெறும் நிலையிலிலும் நியூஸிலாந்து அணிக்கு அத்தியவசியமான ஒரு துடுப்பாட்ட வீரராகக் காணப்பட்டார்.
மாடின் குரோ
அண்மைக்காலத்தில் உலகிலுள்ள முன்னணி துடுப்பாட்ட வீரர்கள் வரிசையில் கிரிக்கெட் நுட்ப ரீதியில் பலரும் மெச்சக்கூடியவராகக் காணப்படுகிறார்.
தற்போது நியுஸிலாந்து வீரர்களிடையே 5000க்கு அதிகமான, ஓட்டங்களைப் பெற்ற இரண்டாவது வீரராகக் காணப்படுகிறார். முன்பு ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ஜோன் ரைட் மாத்திரம் 5000க்கு அதிகமான ஓட்ட்ங்களைப் பெற்றார். மாட்டின் குரோ 1989ஆம் ஆண்டு தனது 44வது டெஸ்ட்டின் 74வது இனிங்சில் 3000 டெஸ்ட் ஓட்டங்களைப் பூர்த்தி செய்தார். 1980ல் 56வது டெஸ்ட்டின் 93வது இனிங்ஸில் 4000 ஓட்டங்களைப் பூர்த்தி செய்தார். அவரது பாதத்தில் காயமொன்று ஏற்பட்டிருந்தபோதிலும் 68வது டெஸ்ட்டின் 18வது இனிங்ஸில் 5000 டெஸ்ட் ஓட்டங்களைப் பூர்த்தி செய்தார்.
੦>ਏ।
 

மார்ட்டின் குரோ ஆடியுள்ள சிறப்பான சில டெஸ்ட் தொடர்கள் ճllԱԵԼDITIII1985 அவுஸ்திரேலியாவுடன் 3 டெஸ்ட்டுகளின் 5 இனிங்ஸ்"களில் 309 ஓட்டங்கள். 1985ல் பாகிஸ்தானுடன் 3 டெஸ்ட்டுகளின் 5 இனிங்ஸ"களில் 295 ஓட்டங்கள். - 1987 மேற்கிந்திய தீவுகள் அணியுடன் 3 டெஸ்ட்டுகளின் 6 இனிங்ஸ்"களில் 328 ஓட்டங்கள்.
1987/88களில் அவுஸ்திரேலியாவுடன் 3 டெஸ்ட்டுகளின் 6 இனிங்ஸ்"களில் 399 ஓட்டங்கள்.
1998/89களில் பாகிஸ்தானுடன் 2 டெஸ்ட்டுகளின் 4 இனிங்ஸ"களில் 261 ஓட்டங்கள்.
1990 பாகிஸ்தானுடன் 3 டெஸ்ட்டுகளின் 6 இனிங்ஸ்"களில் 244 ஓட்டங்கள்.
1991 இலங்கையுடன் 2 டெஸ்ட்டுகளின் 3 இனிங்ஸுகளில் 355 ஓட்டங்கள்.
1992 சிம்பாபேயுடன் 2 டெஸ்ட்டுகளின் 4 இனிங்ஸுகளில் 249 ஓட்டங்கள்.
1994 இங்கிலாந்துடன் 3 டெஸ்ட்டுக்களின் 6 இனிங்ஸ்"களில் 38 ஓட்டங்கள்.
மாட்டின் குரோ டெஸ்ட் போட்டிகளில் பெற்றுள்ள மிகக் கூடிய ஓட்டம் 299 ஆகும். இது 1991ல் இலங்கைக்கு எதிராகப் பெறப்பட்டதாகும்.
அந்தப்போட்டியில் அன்று ஜோன்ஸ்"டன் இணைந்து மூன்றாவது விக்கெட்டுக்காக 467 ஓட்டங்களை இணைப்பாட்டமாகக் கொண்டிருந்தார்.
அவர் இதுவரை 17 டெஸ்ட் சதங்கள் பெற்றுள்ளார். அவற்றின் விபரம் வருமாறு:

Page 33
இங்கிலாந்துடன் (5) 1988 இல் 143 1994 இல் 142 1994 இல் 115 1986 இல் 106 1984 இல் 100
அவுஸ்திரேலியாவுடன் (3) 1985 இல் 188 1987-88 களில் 137
1986 இல் 137
மேற்கிந்தியத் தீவுகளுடன் (3) 1985 இல் 188 1987 இல் 119 1987 இல் 104
இலங்கையுடன் (2) 1991 இல் 299 1992 இல் 102
பாகிஸ்தானுடன் (2) 1988-89 களில் 174
1990 இல் 108
சிம்பாபேயுடன் (1) 1992 இல் 140
இவ்வாறு பல நாடுகளுக்கு எதிராகவும் திறமை காட்டியுள்ள மாட்டின் குரோ டெஸ்ட்டுகளில் 17 சதங்களும் 17 அரை சதங்களும் பெற்றுள்ளார். அவர் டெஸ்ட் அந்தஸ்துப் பெற்றுள்ள நாடுகளில் தென் ஆபிரிக்காவைத் தவிர அனைத்து நாடுகளுக்கெதிராகவும் சதம் பெற்றுச் சாதனை புரிந்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிராக கூடிய சதங்களைப் பெற்றுள்ளார். இங்கிலாந்துக்கு எதிராக அவர் மொத்தம் ஐந்து சதங்கள்
垒
கிரிக்கெட் உலகள் =سسسسسستقليصبح كيديسي * * * * இ) Lhazialfalf. ਆ/ .

பெற்றுள்ளார். அவரது இடத்தை நிரப்பக் கூடியளவு திறமையான இன்னொரு இளம் வீரர் அண்மைக்காலமாக நியூசிலாந்து அணியில இடம் பெறவில்லை. மாட்டின் குரோ இதுவரை 25 தடவைகள் சதத்துக்கான இணைப்பாட்டத்தைக் கொண்டுள்ளார். அவற்றின் முக்கியமானவை வருமாறு: 467 - அன்று ஜோன்ஸஉடன் இணைந்து 3வது விக்கெட்டுக்காக 1991 இல் இலங்கைக்கு எதிராக. 241 - ஜோன் ரைட்டுடன் 3வது விக்கெட்டுக்காக 1987ல் மேற்கிந்தியத்தீவுகள் அணியுடன். 224 - ஜோன் ரீட்டுடன் 3வது விக்கெட்டுக்காக 1985களில் அவுஸ்திரேலியாவுடன். 213 - அன்று ஜோன்சுடன் 3வது விக்கெட்டுக்காக 1987/88களில் அவுஸ்திரேலியாவுடன். 180 - ஷேன் தொம்சனுடன் 5வது விக்கெட்டுக்காக 1994ல் இங்கிலாந்துடன்.
179 - அன்று ஜோன்சுடன் 3வது விக்கெட்டுக்காக 1990ல் இந்தியாவுடன். 168 - கென் ரதபேர்ட்டுடன் 4வது விக்கெட்டுக்காக 1992ல் சிப்பாபேயுடன்.
161 - புறுாஸ் எட்காவுடன் 3வது விக்கெட்டுக்காக 1986ல் இங்கிலாந்துடன்.
159 - ஜோன் ரைட்டுடன் 3வது விக்கெட்டுக்காக 1992ல் இலங்கையுடன்.
157 - ஜெரமி கோனியுடன் 5வது விக்கெட்டுக்காக 1985ல் பாகிஸ்தானுடன்.
மாட்டின் குரோ ஒய்வுபெறும் போது துடுப்பாட்டத்தில் மிகவும் உச்ச நிலையில் இருந்தார். அவரது பாதத்தில் ஏற்பட்ட ஒரு காயத்தின் காரணமாக அவரால் தனது கிரிக்கெட் Liu J600T56055 தொடர முடியவில்லை.

Page 34
சில தொடர்கள் ஆடாது இருந்துவிட்டு, இறுதியாக தாமாகவே ஓய்வுபெறத் தீர்மானித்து அறிவித்தபோது, நியூசிலாந்து ரசிகர்கள் மாத்திரமல்ல உலக கிரிக்கெட் ரசிகர்களும் பெரும் கவலைப்பட்டனர். அவர் டெஸ்ட் போட்டிகளில் போன்றே ஒரு நாள் ஆட்டங்களிலும் நியூசிலாந்து அணியின் பல வெற்றிகளின் பின்னணியில் இருந்து செயற்பட்டுள்ளார். அவர் ஓய்வுபெறும் போது ஒருநாள் ஆட்டங்களில் 143 போட்டிகளின் 140 இன்னிங்ஸில் 18 தடவைகள் ஆட்டமிழக்காது ஆடி4704 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். கூடிய ஒட்டம் 107 (ஆ. இ). சராசரி 38.55, சதம் - 4, அரைச்சதம் 34, கட்சுகள் - 66, பந்து வீச்சில் 1290 பந்துகள் வீசி 659 ஓட்டங்களைக் கொடுத்து 29 விக்கெட்டுகளைக் கைப்பற்றியள்ளார். சராசரி 32,89. சிறப்பானது 9 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகள்.
 
 


Page 35
விளையாட்டுத்துரை இவற்றிக்கெல்லாம் அப்பாற்பட்ட சங்கமிக்க வைக்கும் ஒரு பொதுவ மக்கள் விளையாட்டுத்துறையில் ஆனால் விளையாட்டுத்துறை தொ நூல்கள் மிகக் குறைவு துணிச்சே முன்னின்று உழைப்பவர் எம்முடன் அவர்கள் இவர் எழுத்தாளராக இ கிரிக்கெட்டில் மிகவும் ஆர்வம் ெ இவரால் தமிழில் வெளியிடமுடிந் வாசகர்களுக்கு வாசிக்கும் ஆவன இலங்கை வானொலியில் இவர் இ
క్టమ్లీ மறைந்திருந்த திறமைகளை நான் இலங்கை வானொலியில் கிரிக்கெட் திறமைகளை அடையாளம் து சந்தேகத்தையும் ஒரு நெடிப்பொ கொண்டவர் கிரிக்கெட் தொடர்பா நூல் முழுவதிலும் பளிச்சிடுகின்றன. பற்றிய பல நுட்பமான விடயங்கை இவரின் நூல்கள் இலங்கையில் மட் தமிழ்பேசும் மக்கள் அனைவரினது கெட்ஆலகில் பிரகாசித்தவர் அவர்களும் பிரகாசிக்கத் தொடங்கி தமிழ்பேசும் நல்லுலகம் இவரின் ே இவரின் நூல்கள் விளையாட்டுத்து என்பதில் ஐயமில்லை. இவரின் நூல் என்பது எனது அவாவாகும்
Cover Design by:AAAලකේ.
by Poongo
 

SS
ண்டிருப்பதாலும் சில நூல்கை து இவர் எழுதிய நூல்கள் லத் தூண்டும் என்பதில் ஐயமில்ை ணைந்தபோது இவரிடம் அறிந்
ஒ
மதில் நீக்கிவைக்கும் வல்லமை
நூலாசிரியரின் ஆர்வமும் அறிவம் இவரின் நூல்கள் கிரிக்கெட் மிகவும் தெளிவாகத் தத்தவறுவதில்
தேச ரீதியில்
வழப்போவது நிச்சயம் ளை எழுதப்போய் நுராணிய ஹஸன் ட்டர் என்றால் மிகையாகாது சவையை பாராட்டாமல் இருக்கமுடியாது றையில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் கள் மென்மேலும் வெளிவரவேண்டும்
ZCrCeen
GOphics, Color