கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இலங்கைத் திரையுலக முன்னோடிகள்
Page 1
Page 2
Page 3
இலங்கைத் திரையுலக முன்னோடிகள்
PIONEERS
OF
SRI LANKAN CINEMA
Page 4
ஆசிரியரின் பிற நூல்கள்
நூல்
பொன்விழாக் கண்ட சிங்களச் ઈીઠofીuoII
இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதை
நெஞ்சில் ஓர் இரகசியம்
மூன்று பாத்திரங்கள்
தேர்ந்த சிறுகதைகளும் நாகம்மாள் நாவலும் ஒரு நோக்கு
5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை மாதிரி வினாவிடைகள்
ஆண்டு
2OOO
1994
1975
1977
1998
1999
துறை
ჭ6ხflupm
deafluor
நாவல்
(மொழி பெயர்ப்பு)
நாவல்
(மொழி பெயர்ப்பு)
விமர்சனம் (க.பொ.த.உத)
ஆரம்பக் கல்வி
வெளியீடு
வித்தியாதீபம் (கொழும்பு)
காந்தளகம் (சென்னை)
வீரகேசரி (கொழும்பு)
என்.சி.பி.எச் (சென்னை)
வித்தியாதீபம் (கொழும்பு)
வித்தியாதீபம் (கொழும்பு)
இலங்கைத்திரையுலக முன்னோடிகள்
(பாகம்.19
தம்பிஐயா தேவதாஸ்
(B.A. (Cey.), B.Ed. (Cey.), Diploma in Journalism.
68 (834), அண்ணா சாலை, 41, அஞ்சலக வீதி, சென்னை 600 002. சாவகச்சேரி தொலைபேசி: 853 4505
issatsofessio: Sachiagiasmd01.VSnlinet.in ÉsitcoTibus) is : www.tamilnool.com
Page 5
முதற் பதிப்பு: தி.பி. 2032 (கி.பி. 2001) கார்த்திகை
உரிமை: தம்பிஐயா தேவதாஸ்,
90/5 புதுச்செட்டித்தெரு, கொழும்பு 13
இலங்கை.
வெளியீடு: காந்தளகம், யாழ்ப்பாணம் - சென்னை.
விலை
இந்திய ரூபாய்: 95/-
இலங்கை ரூபாய் 300/-
இலங்கைத் திரையுலக முன்னோடிகள்
PIONEERS OF SRLANKAN CINEMA
by
Mr. Thambyayah. Thevathas 90/5, NEW CHETTY STREET,
COLOMBO-13, SRI LANKA.
FIRST EDITION 2001 ALL RIGHTS RESERVEL)
PRICE INDIAN RUPEES : 95/- SRILANKAN RUPEES : 300/-
அச்சிடல் தயாரிப்பு: காந்தளகம், 68 (834) அண்ணாசாலை
சென்னை - 600 002.
சமர்ப்பணம்
அமரர் நாகேசு தருமலிங்கம்
தோற்றம் : 14.04.1950 - புங்குடுதீவு - 11 மறைவு: 29.01.1996 - கொழும்பு - 13
அன்பனாய் நண்பனாய்
ஆசிரியனாய் ஆலோசகனாய்
அனைத்துத் துறைகளிலும் வழிகாட்டிவிட்டு மறைந்து சென்றாயே எனது இந்நால்
உனக்கே சமர்ப்பணம்.
Page 6
எச்சரிக்கை
இந்நூலில் இடம்பெற்றுள்ள வாக்கியங்களையோ புகைப்படங்களையோ தனியாகவோ கூட்டாகவோ
உள்நாட்டிலோ வெளிநாட்டிலோ மீள்பிரசுரம் செய்யக்கூடாது.
மீள்பிரசுரம் செய்ய வேண்டிய தேவை ஏற்படின்
ஆசிரியரின் அனுமதி பெற்றேயாக வேண்டும்.
மீறுவோர் மீது புலமைச் சொத்துச் சட்டத்தின் கீழே வழக்குத் தொடரப்படும்.
அணிந்துரை
பூரீலங்கா ஒரு தனி நாடாக இருப்பினும், அது மொழியாலும், மதத்தாலும், இவை சார்ந்த கலாச்சாரத்தாலும் வேறுபட்ட - சிங்களர், தமிழர் என்ற இரு வெவ்வேறு இனத்தவரைக் கொண்ட நாடு.
இந்தக் கோணத்திலிருந்து பார்க்கையில், பூரீலங்கன் சினிமா என்பது ஒன்றல்ல, இரண்டு என்பதை உணரலாம். பூரீலங்கன் சிங்கள சினிமா. பூரீலங்கன் தமிழ் சினிமா.
பூரீலங்கன் சிங்கள சினிமாவை ஆரம்பித்தது மட்டுமல்ல, அதில் கொடிகட்டிப் பறந்த முன்னோடிகளில் முக்கியமான மூன்று நான்கு பெரிய மனிதர்கள்தமிழர்களாக இருந்தும், பூரீலங்கன்தமிழ் சினிமா என்ற ஒன்றை அவர்கள் ஆரம்பிக்கவுமில்லை, அதைப் பற்றி அவர்கள் அக்கறை கொள்ளவுமில்லை.
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட தமிழ்ப் படங்கள் தான் இதற்கு முக்கியமான காரணம் என்று படுகிறது. இந்தப் படங்களை இறக்குமதி செய்து வியாபாரம் பண்ணும் முதலாளிகளாகவும் மேற் குறிப்பிட்ட அந்த மூன்று நான்கு தமிழர்களே செயல்பட்டனர்.
தொழில் நுட்பம், பொருள் முதலீடு, செய்நேர்தி ஆகியவற்றுடன் கிடைத்த இந்தியத் தமிழ்ப் படங்களுக்குப் போட்டியாக, அவர்கள் இலங்கைத் தமிழ்ப் படம் என்ற ஒன்றை உருவாக்க விரும்பவில்லை. காரணம் அவர்கள் வியாபாரிகள்.
தங்கள் மக்களையும், அவர்தம் வாழ்க்கையையும் பிரதிபலிக்கும் தமிழ்ப் படங்களைத் தயாரிக்காமல், இந்தியத் தமிழர்களையும், அவர்களது . வாழ்க்கை மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றைப் பிரதிபலிப்பதாகப் பாவனை பண்ணிய - தங்களுக்கும் தங்கள் வாழ்க்கை முறைக்கும் சம்பந்தமில்லாத - இந்தியத் தமிழ்ப் படங்களை அமோகமாக ஆதரித்த இலங்கைத் தமிழர்கள் இதற்கு இன்னுமொரு காரணம்.
கூட்டிக் கழித்துப் பார்க்கையில், நமக்கென்ற - நம்முடைய ஒரு சினிமாவை, இலங்கைத் தமிழர்களாகிய நாம் உருவாக்கத் தவறி விட்டோம் என்ற உண்மை புலப்படும். தொழில் நுட்பம், கலாநேர்த்தி, உருவ உள்ளடக்க உன்னதங்களோடான - சர்வ தேச சினிமாவோடு ஒப்பிடத்தக்க - ஒரு தமிழ்ப் படம்கூட இன்று வரை இலங்கையில் உருவாக்கப்படவில்லை என்பது துரதிஷ்டம்.
Page 7
இந்த நிலைக்கு, ஏதோ ஒரு வகையில் நானும் ஒரு காரண கர்த்தா என்பதைக் குற்ற உணர்வோடு ஒத்துக் கொள்கிறேன.
சர்வதேச அங்கீகாரம் பெற்ற புனே திரைப்படக் கல்லூரியில் சினிமா பயின்று வெளிவந்த முதல் இலங்கையரான நான், இலங்கையிலேயே தங்கிப் பட முயற்சிகளில் ஈடுபடாமல், படிப்பு முடிந்ததும் இந்தியாவிலேயே இருந்துவிடத் தீர்மானித்ததைக் குறிப்பிடுகிறேன்.
எனது 'கோகிலா', 'அழியாத கோலங்கள்', 'வீடு', 'சந்தியாராகம்’ போன்ற - இந்தியாவில் எடுக்கப்பட்ட படங்கள், ஈழத்து மண்வாசனை யுடன், இலங்கையில் எடுக்கப்பட்டிருக்க வேண்டிய படங்கள் தான்.
"இலங்கைத் திரையுலக முன்னோடிகள்' என்ற இந்த நூல், இலங்கையில் தமிழ்ச்சினிமாவிலும் சிங்களச் சினிமாவிலும் பங்காற்றிய படைப்பாளிகளைப் பற்றியது என்று இதன் ஆசிரியர் திரு. தம்பிஐயா தேவதாஸ் கூறுகிறார்.
இதில் எடுத்துச் சொல்லப்பட்டிருக்கும் 40 கலைஞர்களில், ஹென்றி சந்திரவன்ச என்ற ஒருவரைத் தவிர மற்ற39 பேர்களும் தமிழர்களே.
இந்த நூலைப் படித்துப் பார்க்கையில், இலங்கையில் எடுக்கப்பட்ட பல சிங்கள சினிமாக்களைப் பற்றியும், தமிழ் சினிமாக்களைப் பற்றியும், இதுவரை எனக்குத் தெரிந்திராத பல சுவாரஸ்யமான விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது.
இந்த நூலை, இலங்கைத் திரைப்பட வளர்ச்சி / வளர்ச்சியின்மை பற்றிய முக்கியமான ஒரு சரித்திர ஆவணமாகக் கொள்ளலாம். நிறையத் தகவல்கள். நிறையப் புகைப்படங்கள் ஆகியவற்றுடன் மிகுந்த நேசத்தோடு எழுதப்பட்டுள்ளது. நண்பர் தம்பிஐயா தேவதாஸ் சினிமாவை ஆத்மார்த்தமாகக் காதலிப்பவராக இருக்க வேண்டும் - என்னைப் போல. அவருக்கு என் நன்றி கலந்த வாழ்த்துக்கள்.
ဇံဖုံ n محele(مnل
ーエ
என்னுரை
சினிமா என்பது கலையாகவும் தொழிலாகவும் உலகம் எங்கும் பரவிவிட்டது. இலங்கையிலும் இத் தொழில் உயர்ந்து வளர்ந்தது. 'இலங்கைச் சினிமா' என்று கூறும் பொழுது அதில் தமிழ்த் திரைப்படங்களும் சிங்களத் திரைப்படங்களும் அடங்கும். ஆனால் தமிழ்த் திரைப்படங்களை விட சிங்களச் சினிமாவே அதிகமாக வளர்ந்தது. இலங்கையில் தமிழ்ச் சினிமா வளராமைக்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. ஆனாலும் சிங்களச் சினிமாவின் வளர்ச்சிக்கு பல தமிழ் முஸ்லிம் கலைஞர்கள் பாடுபட்டிருக்கின்றனர். இலங்கைச் சினிமா வளர்ச்சியில் முன்னின்ற அந்தத் தமிழ் முஸ்லிம் கலைஞர்கள் பற்றிய அறிமுகமே இந்தச் சிறிய நூல்.
இலங்கைத் திரையுலக முன்னோடிகள்' என்னும் இந்நூல், சினிமா சம்பந்தமாக நான் எழுதிய மூன்றாவது நூலாகும். இலங்கையின் தமிழ்ச்சினிமா வரலாற்றை 'இலங்கைத் தமிழ் சினிமாவின் கதை' என்ற நூலில் எழுதினேன். அதன் முதலாவது பதிப்பு 1994ஆம் ஆண்டும் இரண்டாம் பதிப்பு 2000ஆம் ஆண்டும் வெளிவந்தன. சிங்களச் சினிமாவின் வரலாற்றை 'பொன் விழாக் கண்ட சிங்களச் சினிமா' என்ற நூலில் எழுதினேன். இலங்கையில் தமிழ்ச்சினிமாவிலும் சிங்களச் சினிமாவிலும் பங்காற்றிய கலைஞர்களைப் பற்றி இலங்கைத் திரையுலக முன்னோடிகள்' என்ற இந்நூலில் எழுதியிருக்கிறேன்.
இலங்கைத் திரையுலக முன்னோடிகள் என்று, ஆயிரத்துக்கும் மேற்பட்டோரைக் குறிப்பிடலாம். அவர்களில் முக்கியமான நாற்பது கலைஞர்களை மட்டும் இந்நூலில் அறிமுகப்படுத்துகிறேன். மிகுதியானவர்களை அடுத்த பாகத்தில் அறிமுகப்படுத்துவேன்.
இக்கட்டுரைகளில் பெரும்பாலனவை 'வீரகேசரி’ வார வெளியீட்டில் வெளிவந்தவை. அப்படி எழுதும் வாய்ப்பை
Page 8
1 Ο
அதன் ஆசிரியர் திரு. வ. தேவராஜ் எனக்குத் தந்தார். இக் கட்டுரைகளை பின்பு நூலாக வெளியிடலாம்' என்று அவர் அப்பொழுதே சொன்னார். இப்பொழுது அது நிஜமாகிப் போய்விட்டது. ஆம் கட்டுரைகள் நூலுருவில் வந்து விட்டன. அதற்காக வீரகேசரியின் ஆசிரியர் திரு. வ. தேவராஜூக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிக்கிறேன்.
இந்நூலில் இடம்பெற்ற சில கட்டுரைகள் 'தினகரன்' வார மஞ்சரியில் வெளிவந்தன. என் கட்டுரை எதுவென்றாலும் பிரசுரிக்க அனுமதி தரும் 'தினகரன்' வார மஞ்சரியின் ஆசிரியர் திரு. அருள்சத்தியநாதனுக்கும் என் நன்றி உரித்தாகட்டும்.
இந்நூலை வெளியிடும் சென்னை காந்தளகம் அதிபர் மறவன்புலவு க. சச்சிதானந்தன் அவர்களுக்கும் என் நன்றிகள். அவர் அலைகடலுக்கு அப்பால் இருந்து கொண்டு நான் நினைத்தது போலவே அழகாகப் புத்தகத்தை அமைத்திருக்கிறார். என் நூல்களுக்கெல்லாம் அட்டைப்படம் வரைபவர் ஓவியர் எஸ்.டி. சாமி. இந்நூலுக்கும் அவரே அட்டைப் படத்தை அமைத்திருக்கிறார். அவருக்கும் என் நன்றிகள். நூல் தயாரிப்பில் ஈடுபட்ட அனைவருக்கும் என் நன்றிகள்.
எனது மற்றய நூல்களுக்கு வாசகர்கள் ஆதரவு தந்தது போல் இந்நூலுக்கும் ஆதரவு தரவேண்டும் என்று வேண்டு கிறேன்.
இது "இலங்கைத் திரையுலக முன்னோடிகள்' என்ற தொடர் நூலின் முதலாம் பாகமாகும். இதன் இரண்டாம் பாகம் மூன்றாம் பாகம் வெளி வரவேண்டுமா இல்லையா என்பதை வாசகர்கள்
தீர்மானிக்கட்டும்.
90/5 புதுச்செட்டித் தெரு அன்புடன் கொழும்பு - 13 தம்பிஐயா தேவதாஸ் தொலைபேசி: 448743
பொருளடக்கம்
அத்தியாயம்
எஸ். எம். நாயகம் ஹென்றி சந்திரவன்ஸ் சேர் சிற்றம்பலம் ஏ. கார்டினர் பி.எஸ். கிருஷ்ணகுமார் டபிள்யூ. எம்.எஸ். தம்பு ரீ சோமசேகரன் கே. குணரெத்தினம் எம். வேதநாயகம்
ஜாபீர் ஏ. காதர்
. லெனின் மொறாயஸ் . ஜோ தேவானந் . ஏ.வீ.எம். வாசகம் . ஹெலன் குமாரி . ஏ.ஜே. வின்சன்
எம். மஸ்த்தான்
. ருக்மணி தேவி
வீ.பி. கணேசன் கே. தவமணி தேவி
மொஹிதீன் பேக் ஏ.எஸ். ராஜா
பக்கம்
13
19
25
31,
37
43
49
55
6.
65.
71.
77
83
89
95
99
1O3
1O9
115
121
Page 9
21.
22.
23.
24.
25.
26.
27.
28.
29.
3O.
31.
32.
33.
34.
35.
36.
37.
38.
39.
40.
எஸ்.என். தனரெத்தினம் வீ.எஸ். முத்துவேலு ரஞ்சனிதம்பதிகள் ஆர். முத்துசாமி அன்ரன் கிரகரி எம்.கே. றொக்சாமி றொபின் தம்பு எஸ். ராமநாதன் கே. எஸ். பாலச்சந்திரன் எம்.எஸ். ஆனந்தன் ஈழத்து ரெத்தினம் கே.பி.கே. பாலசிங்கம் வி.எஸ்.துரைராஜா கே. வெங்கட் எஸ்.ஏ. அழகேசன் ஏ. ரகுநாதன் எம்.வி. பாலன் வீ. வாமதேவன் எம்.ஏ. கபூர் டென்மார்க் சண்
எஸ்.வி. சந்திரன்
127
133
139
145
151
155
63
169
175 181
187
191
199
2O5
211
217
223
229
235
241.
1. எஸ்.எம். நாயகம்
முதலாவது சிங்களம் பேசும் படமான ‘கடவுனு பொறொந்துவ திரைப் படத்தைத் தயாரித்த தமிழரான எஸ்.எம். நாயகம்,
இலங்கையில் சிங்களத் திரைப்பட உலகம் பொன்விழாக் கண்டு விட்டது. அதாவது 50 வருடங்களைத் தாண்டி விட்டது. இந்தச் சிங்களச் சினிமா உலகுக்கு வளமூட்டிய பெருமை தமிழர்களையும், முஸ்லிம்களையும் சாரும்.
சிங்களச் சினிமாவுக்கு அடி எடுத்துக் கொடுத்த பெருமை சுந்தரம் மதுரநாயகம் என்ற தமிழரையே சாரும். இவர் தனது பெயரை எஸ்.எம். நாயகம் என்று சுருக்கிக் கொண்டார். சிங்களச் சினிமா வரலாற்றில் முதலாவது சிங்களம் பேசும் படமான 'கடவுனு பொறொந்துவ' என்ற படத்தை எஸ்.எம். நாயகம் தயாரித்தார்.
1947ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21ஆம் திகதி சிங்கள ரசிகர்கள் எவராலும் மறந்துவிட முடியாத பொன்னாளாகும். அன்றுதான் 'கடவுனு பொறொந்துவ (சிதைந்த வாக்குறுதி) இலங்கையில் திரையிடப்பட்ட நாளாகும்.
அன்றைய தினம் இத்திரைப்படம் கொழும்பு, கண்டி, காலி, திருகோணமலை உட்பட எட்டு நகரங்களில் திரையிடப்பட்டது. ரசிகர்கள் புதுமையுடன் இப்படத்தைப் பார்த்தார்கள். ஏற்கனவே
Page 10
14 இலங்கைத்திரையுலக முன்னோடிகள்
இத்திரைப்படம் மேடை நாடகமாக 800 முறை மேடை யேற்றப்பட்டது. இந்நாடகம் சினிமாவுக்கு ஏற்ற முறையில் மாற்றி அமைத்துத் திரைப்படமாக உருவாக்கப்பட்டது.
இதைத் திரைப்படமாக உருவாக்குவதில் எஸ்.எம். நாயகம் பெரும்பாடு பட்டுவிட்டார். இந்தியாவில் பிறந்த எஸ்.எம்.நாயகம் இலங்கையில் வர்த்தகம் செய்தவர். சினிமாவில் ஆர்வம் மிக்கவர். மதுரையில் "சித்திர கலா மூவிடோன்" என்ற நிறுவனத்தின் மூலம் 'குமரகுரு" என்ற தமிழ்ப்படத்தை தயாரித்தவர். இப்படத்தில் அவர் கதிர்காமக்காட்சிகளையும் சேர்த்தார். இலங்கைக்கு வந்த எஸ்.எம்.நாயகம் 1945ஆம் ஆண்டளவில் 'சித்ரகலா மூவிடோன்' என்ற பெயரிலேயே சினிமா நிறுவனமொன்றை உருவாக்கினார். இலங்கை மன்னன் பூரீவிக்கிரம ராஜ சிங்கனின் கதையைத் திரைப்படமாக்க வேண்டும் என்பது அவரது எண்ணம். சாந்திகுமார் என்பவர் இப்படத்துக்கான கதை வசனத்தை எழுதியிருந்தார். ஆனால் இவர்களால் இப்படத்தைத் தயாரிக்க முடியவில்லை.
அப்பொழுது நாடகக்குழுவொன்று புகழ் பெற்று விளங் கியது. மினேர்வா நாடகக்குழு என்பது அதன் பெயர். இந் நாடகக்குழுவின் 'கடவுனு பொறொந்துவ" என்ற மேடை நாடகமும் எஸ்.எம்.நாயகத்தைக் கவர்ந்து விட்டது.
அவர் அந்நாடகத் தலைவர் பீ.ஏ.டபிள்யூ ஜெயமான்னவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு 1946ஆம் ஆண்டு ஜூன் மாதம் நாடகக் கலைஞர்களை இந்தியாவுக்கு அழைத்துச் சென்று படப்பிடிப்பைத் தொடங்கிவிட்டார்,
வங்காள இயக்குநர் ஜே.சிங் இப்படத்தை இயக்கினார். எஸ். செளந்தரராஜன் என்ற தமிழர் உதவி இயக்குநராக நியமிக் கப்பட்டார். அண்மையில் காலமான ஹியுகோ பெர்னாண்டோ
தம்பிஐயா தேவதாஸ் 15
Page 11
இலங்கைத்திரையுலக முன்னோடிகள்
GAJKJFøTLío Lu TLGi] Fein GTT எழுதினார். |b|Ty ITL Golf ELLuff பாடல்களுக்கு இசை அமைத்தார். ஹிந்திப்பாடல்களின் மெட்டுக்களைத் தழுவி, பாடல்களுக்கு இசை அமைத்தார். ஆர்.முத்துசாமி இப்படத்திற் கான உதவி இசை அமைப்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பாகர்சாலி என்ற இந்திய முஸ்லிம், படத்தொகுப்பினைச் செய்தார். பி.ஏ.டபிள்யூ.ஜெயமானவும் ருக்மணி தேவியும் பிரதான பாத்திரங்களில் நடித்தனர்.
எடி ஜெயமான்ன, ஜெமினி காந்தா, டலின் மல்லவராச்சி, பீட்டர் பீரிஸ் போன்றோரும் நடித்தனர். "கடவுனு பொறொந்துவ" கொழும்பில் கிங்ஸ்லி தியேட்டரில் திரையிடப்பட்டது. ஆரம்ப விழாவுக்கு அமைச்சர் டி.எஸ். சேனநாயக உட்பட அரசியல் வாதிகள், கலைஞர்கள், பத்திரிகை ஆசிரியர்கள் எனப்பலரும் வந்திருந்தனர்.
திரைப்படம் ஆரம்பமாகியது. முதலில் எஸ்.எம்.நாயகம் திரையில் தோன்றினார். 'முதலாவது சிங்களப்படமான கடவுணு பொறொந்துவ என்னும் இத்திரையோவியத்தை உங்கள் முன் வைக்கிறேன்" என்று சிங்களத்தில் பேசினார். ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
இந்தியாவில் உருவாக்கப்பட்ட இந்தச் சிங்களப் படத்தை எஸ்.எம், நாயகம் தயாரித்தார். அரசியல் காரணங்களால் சிங்களப் படங்கள் 1956ஆம் ஆண்டுகளுக்கு பின் இலங்கையிலேயே தயாரிக்க வேண்டும் என்ற நிலை உருவாகியது.
அப்படி இலங்கையில் உருவான முதலாவது படத்தின் பெயர் "பண்டா நகரயட்ட பமினிம" (பண்டா நகரத்துக்கு வருதல்), இப்படத்தை உருவாக்கியவரும் எஸ்.எம். நாயகம் தான். இலங்கையில் "கடல் கடந்த தமிழர்" என்ற தமிழ்ப் படத்தை உருவாக்க முனைந்தாராயினும் அது வெற்றிபெறவில்லை.
தம்பிஐயா தேவதாஸ்
M;
WW
.”KANSSAAWE يو '
- 1. 高、
W წწ. * W 嵩 W
iT
Page 12
B இலங்கைத்திரையுலக முன்னோடிகள்
ஆனாலும் இதற்குப்பின்னரும் பல சிங்களப் படங்களை நாயகம் தயாரித்தார்.
எஸ்.எம். நாயகம் இந்தியாவில் முதலில் சிங்களப்படத்தை தயாரித்தார். அதேபோல் இலங்கையில் முதலாவது சினிமா ஸ்டுடியோவையும் அவரே அமைத்தார். அது மட்டுமல்ல சினிமா சம்பந்தமான சிங்கள சஞ்சிகைகளையும் அவர் நடத்தினார். பிரபலமான பல சிங்களப் படங்களை தயாரித்தார்.
எனவே எஸ்.எம். நாயகம் சிங்களச் சினிமாவை ஆரம்பித்து வைத்த முன்னோடி மட்டுமல்லர், தொடர்ந்து வளர வழிசெய்தவரு மாவார்.
2. ஹென்றி சந்திரவன்ச
(முதலாவது 18 மி. மீட்டர் தமிழ்த் திரைப் படமான "சமுதாயத்தை தயாரித்து இயக்கிய ஹென்றி சந்திரவன்ச.)
இலங்கையில் சினிமாவை ஆரம்பித்தவர்கள் பலர். திரைப்படத் தொழிலின் அபிமானம் காரணமாகத் தம்மையே இத்தொழிலுக்கு அர்ப்பணித்துக் கொண்டவர்கள். அவர்களில் ਈ .
அந்தச் சிலரில் ஹென்றி சந்திரவன்சவும் முக்கியமானவர்.
Page 13
2O இலங்கைத் திரையுலக முன்னோடிகள்
இலங்கையில் தமிழ்த் திரைப்படங்களைத் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் 1950க்கு முன்பே உதித்து விட்டது இந்த எண்ணம் முதலில் மலையகத்திலேயே ஆரம்பமானது. 1951ஆம் ஆண்டளவில் இலங்கைக் கலைஞர்கள் சிலர் மலையகத்தில் கொஸ்லந்தை என்ற ஊரில் ஒன்று கூடி இலங்கையில் தமிழ்த் திரைப்படம் ஒன்றை உருவாக்க வேண்டுமென்று தீர்மானம் எடுத்துக் கொண்டார்கள். அவர்கள் தாம் எம்.வீ. ராமன், ஏ.அருணன், வீ. தங்கவேலு. ஹென்றி சந்திரவன்ச ஆகியோராவர். இவர்கள் ஒன்று சேர்ந்து "சினிமாக் கலா நிலையம்' என்ற மன்றத்தை உருவாக்கினார்கள். இந்த மன்றத்தின் ஆதரவில் தமிழ்த் திரைப்படமொன்றைத் தயாரிக்கும் முயற்சி ஆரம்பமாகியது. இப் படத்திற்குச் சமுதாயம்' என்று பெயர் சூட்டினார்கள். வீதங்கவேலு கதாநாயகன், தர்மதேவி கதாநாயகி "சமுதாயம்" 35 மில்லி மீற்றரில் சில ஆயிரம் அடிகள் வளர்ந்து விட்டது. அங்கத்தவர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அத்திரைப்படம் அப்படியேநின்று விட்டது.
படம் இப்படியே நின்றுவிட ஹென்றி சந்திரவன்சவுககு ரோசம் வந்து விட்டது. சில அங்கத்தவர்களை ஒன்று கூட்டினார். நடிகர்களை மாற்றினார். "சமுதாயம்' என்ற பெயரிலேயே புதிய படத்தைத் தயாரிக்க முனைந்தார். இப்படத்தை 16 மி.மீற்றரில் தயாரித்து அதை மீண்டும் 35மி.மீற்றருக்கு மாற்றலாம் என்று எண்ணியிருந்தார். கொஸ்லந்தவில் பிறந்து வளர்ந்து வந்த எஸ்.என் தனரத்தினத்தைத் தனது படத்தின் கதாநாயகன் ஆக்கினார் சந்திரவன்ச. இவருக்கு ஜோடியாக ஜெயகெளரி என்ற நடிகை தெரிவு செய்யப்பட்டார். ஏ.எஸ். ராஜா வில்லன், ஆர்.காசிநாதன், ஆர்.ரி.ராசையா, இரத்தினகுமாரி ஆகியோருடன் எம்.ஆர்.ராதாவின் இலங்கை மனைவி கீதாவும் இப்படத்தில் சில காட்சிகளில் நடித்தார்.
தம்பிஐயா தேவதாஸ் 21
影
Page 14
22 இலங்கைத்திரையுலக முன்னோடிகள்
இப்படத்திற்கான கதை வசனம் பாடல்களை ஜீவா
நாவுக்கரசன் எழுதினார். "வேலைக்காரி' என்ற படத்தின் தழுவலே
இக்கதையாகும். ஹென்றி சந்திரவன்ச படத்தை மிகவும் சிக்கன
மாகவே உருவாக்கினார். காட்சி எதுவும் ஸ்ரூடியோவுக்குள்
பிடிக்கப்படவில்லை. கொழும்பைச் சுற்றியுள்ள தனியார்
வீடுகளிலேயே படப்பிடிப்புகள் நடைபெற்றன. வெளிப்புறக்
காட்சிகளை மட்டும் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கண்டி,
அனுராதபுரம், அம்பாறை போன்ற இடங்களில் வைத்துக் கொண்டார். கொத்தட்டுவ என்ற ஊரில் உள்ள ஒரு தனியார்
வீட்டிலேயே ஒலிப்பதிவுகள் செய்யப்பட்டன.
இசை அமைப்பை திலக்கருணாரத்ன கவனித்துக் கொண்டார். விநோதினி, இந்திராணி, செல்வராணி, அம்பிகா தமோதரன், முஹமட் ரியாஸ் ஆகியோர் பின்னணி பாடினர். அப்போது புகழ் பெற்ற வானொலிப் பாடகிய்ாகிய விநோதினி இப்படத்தில் பாடிய இதுவா நீதி நேர்மை" என்ற பாடல் சிறப்பாக விளங்கியதாகப் பலர் கூறக் கேட்டிருக்கிறேன். அப்பாடலின் இசைத்தட்டு இப்பொழுதும் இலங்கை வானொலியில் மட்டும் இருக்கிறது.
‘சமுதாயம் திரைப்படம் 16மி.மீற்றரில் ரெக்னிக் கலரில் எடுக்கப்பட்டது. அது ஒன்றுக்கு மேற்பட்ட பிரதிகள் எடுக்க முடியாத அமைப்பு முறை கொண்டது. இந்த ஓர் பிரதியைத் திரையிடுவதற்கும் தியேட்டர் கிடைக்காமல் பெரும் பாடுபட்டார் ஹென்றி சந்திரவன்ச.இறுதியில் மண்டபம் ஒன்றிலேயே படத்தைக் காட்ட வேண்டி ஏற்பட்டதாம். 1962ஆம் ஆண்டு பொரளை வை.எம்.பி.ஏ மண்டபத்தில் விசேட ஏற்பாட்டின் பேரில் சமுதாயம் திரையிடப்பட்டது. அப்போது வீரகேசரி ஆசிரியராக இருந்த எஸ்.டி.சிவநாயகம் விழாவை ஆரம்பித்து வைத்தார். இங்கு ஒரு வாரம் இத்திரைப்படம் காட்டப்பட்டது.
தம்பிஐயா தேவதாஸ் 23
ஹென்றி சந்திரவன்ச‘சமுதாயம்' திரைப்படச் சுருளை தூக்கிக் கொண்டு ஊர் ஊராகச் சென்றார். பல்வேறு ஊர்களுக்கும் சென்று பாடசாலைகளில் காட்டினார். அந்தக் காலத்தில் இந்தியப் படங்களின் தாக்கத்தினால் தலைநகரில் அதிக வரவேற்புக் கிடைக்கவில்லை. ஏதோ சுகாதாரப்படம் காட்டுகிறார்கள் என்று உணர்ந்து விட்டார்கள் போலும். ஆனாலும் மலையகத்திலும் வடக்குக் கிழக்கிலும் இப்படத்துக்கு அதிக ஆதரவு கிடைத்ததாம். வடபகுதியில் கல்லூரிகள் பலவற்றில் இப்படம் காட்டப்பட்டதாக பலர் கூறுகிறார்கள். சந்திரவன்சவின் தளராத முயற்சியினாலும் கடும் உழைப்பினாலும் இலங்கையின் முதலாவது (16மி.மீட்டர்) தமிழ்ப்படமான சமுதாயம் திரைக்கு வந்தது. சந்திரவன்ச 'சமுதாயம்’ தமிழ்ப்படத்தை உருவாக்கிய அதே சமயத்தில் "சமாஜய' என்ற சிங்களப்படத்தையும் தயாரித்தார். ‘சமுதாயம்' படத்தின் சிங்களப்பதிப்பே அதுவாகும். அதைத்தொடர்ந்து இவர் பல சிங்களப் படங்களை உருவாக்கினார். 1976ஆம் ஆண்டு வெளிவந்த 'சுமதி எங்கே" இவர் உருவாக்கிய இரண்டாவது தமிழ்ப்படமாகும்.
1978ஆம் ஆண்டளவில் சந்திரவன்சவின் அலுவலகம் கொழும்பு ஐந்து லாம்புச் சந்தியில் ஆதமலி பில்டிங்கில் மூன்றாவது மாடியில் அமைந்திருந்தது. அவரது அலுவலகத்தில் எந்நேரமும் சினிமாக் கலைஞர்கள் கூடியிருப்பார்கள். சினிமா அனுபவங்களை எல்லாம் சந்திரவன்ச கூறிக் கொண்டிருப்பார். ஆரம்பத்தில் கடற்படை வீரனாகக் கடமையாற்றிய இவர் சினிமா ஆசை காரணமாக அந்த வேலையைத் தூக்கி எறிந்துவிட்டு சினிமாத் தொழிலுக்கு ஓடிவந்தார்.
அது 1978ஆம் ஆண்டுக் காலப்பகுதி. கீதாஞ்சலி' என்ற பெயரில் தனது மூன்றாவது தமிழ்ப்படத்தை உருவாக்கிக் கொண்டிருந்த காலம் அது.
Page 15
24 இலங்கைத்திரையுலக முன்னோடிகள்
இப்படத்துக்கான கதை வசனம் பாடல்களைத் திருமதி இராஜம் புஷ்பவனம் எழுதியிருந்தார். 'கீதாஞ்சலி'யின் கதையை மனதைத் தொடும் கண்ணீர்க் காவியமாக உருவாக்க வேண்டு மென்பது சந்திரவன்சவின் கனவு. ஆனால் சந்திரவன் சவே கண்ணீர்க் காவியமாகி விட்டார். ஆம் 15.12.1979இல் அவர் மாரடைப்பால் மரணமானார். கீதாஞ்சலி படத்தில் பங்கு பற்ற வந்த கலைஞர்கள் பலர் அவரது பூதவுடலுக்குக் கண்ணீர் அஞ்சலி செலுத்த வேண்டி ஏற்பட்டது. ஹென்றி சந்திரவன்ச பல சிங்களப் படங்களையும், 2 தமிழ்ப் படங்களையும் உருவாக்கி இருக்கிறார். முதலாவது (16மி.மீட்டர்) தமிழ்ப்படத்தைத் தயாரித்தவர் என்ற மகுடம் அவருக்குச் சூட்டப்படுகிறது. எவர் என்ன சொன்னாலும் எடுத்த காரியத்தை முடித்து வைக்கும் திறமை அவரிடம் இருந்தது. தமிழ் மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட எவருக்கும் இல்லாத சிறப்பு இந்த ஹென்றி சந்திரவன்சவுக்குக் கிடைத் திருக்கிறது. மேடை நாடகங்களைக் கூடத்தயாரிக்கக் கஷ்டப்பட்ட அக்காலத்தில் (16 மி.மீட்டர்) முதலாவது தமிழ்ப் படத்தை தயாரித்தவரே இவர் ஹென்றி சந்திரவன்ஸ் தமிழ், சிங்களப் படங்களை மட்டும் தயாரிக்கவில்லை. சினிமா சம்பந்தமான சஞ்சிகைகளை தமிழிலும் சிங்களத்திலும் வெளியிட்டிருக்கிறார். தான் தயாரித்த படங்களை தனிமனிதனாக இயக்கியிருக்கிறார். எனவே இலங்கைத் திரையுலக முன்னோடிகளில் ஹென்றி சந்திரவன்ச மிக முக்கியமான இடத்தைப் பெறுகிறார்.
3. சேர் சிற்றம்பலம் ஏ. கார்டினர் (1899 - 1960)
"இலங்கைத் திரையுலக மன்னன்' என்று புகழ் பெற்ற சேர் சிற்றம்பலம் கார்டினர் அவர்கள்.
Page 16
2S இலங்கைத் திரையுலக முன்னோடிகள்
பல கலைகளையும் தன்னுள் அடக்கி விரிந்துள்ள கலை சினிமாக் கலையாகும். இந்த சினிமா பிறந்து நூறு வருடங்கள் கடந்து விட்டன. சிங்கள சினிமாவுக்கும் ஐம்பது வயது தாண்டி விட்டது. எல்லாவற்றுக்கும் விழாக் கொண்டாடினார்கள்.
ஆனால் இலங்கையில் சினிமாத் தொழிலை ஆரம்பித்து வைத்த ஒரு முன்னோடிக்கு இந்த வருடம் (1999) நூறு வயதா கிறது. அவர் தான் அமரர் சேர் சிற்றம்பலம் ஏ.கார்டினர். அவர் சினிமாத் தொழிலில் செய்த சேவைகளுக்காக இவருக்கு சேர் பட்டம் மட்டுமல்ல, 'இலங்கைச் சினிமாத் தொழிலின் மன்னன்' என்ற பட்டமும் கிடைத்தது.
1928இல் 'சிலோன் தியேட்டர்ஸ் லிமிட்டெட்' என்ற நிறுவனத்தை ஆரம்பித்து, பல படங்கைள இறக்குமதி செய்தும் தயாரித்தும் சுமார் 20 தியேட்டர்களுக்கு உரிமையாளராக உயர்ந்தும் புகழுடன் விளங்கினார் கார்டினர்.
1899 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 6 ஆம் திகதி யாழ்ப் பாணம் அச்சு வேலியில் பிறந்த சிற்றம்பலம் ஆபிரகாம் கார்டினர் இன்று உயிருடன் இருந்தால் நூறாவது பிறந்த தினத்தைக் கொண்டாடியிருப்பார். 1960ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ஆம் திகதி தனது 81வது வயதில் காலமான கார்டினர் தனது 29ஆவது வயதில் சிலோன் தியேட்டேர்ஸ் நிறுவனத்தை ஆரம்பித்து இலங்கையின் சினிமாத் தொழிலுக்குப் பாரிய பங்களிப்பை நல்கினார்.
கார்டினர் இளம் வயதிலேயே சுறுசுறுப்பாக கானப்படு வாராம். படிக்கும் பொழுது படிப்பைப் போலவே விளை யாட்டிலும் ஆர்வம் காட்டுவாராம். ஆரம்பக் கல்வியை பாழ்ப்பாணத்தில் பெற்றார்.
தம்பிஐயா தேவதாஸ்
-
27
甲
r
兽 誤等 器将 唱
16 S a 2 ஜூ 霍警
ག 葛羲
Page 17
28 இலங்கைத்திரையுலக முன்னோடிகள்
பின்பு கொழும்பு சென் ஜோசப் கல்லூரியில் கல்வி கற்ற கார்டினர், அதே கல்லூரியில் சில காலம் லத்தீன் மொழி கற்பிக்கும் ஆசிரியராகக் கடமையாற்றினார். லத்தீன் மொழியில் பாண்டித்தியம் பெற்ற கார்டினர், கலை, இலக்கியங்களில் ஈடுபாடு கொண்டவராக விளங்கினார். சினிமாக்கலை அவரை மிகவும் கவர்ந்தது.
அப்பொழுது வெளிநாட்டுப் படங்களை இலங்கையில் இறக்குமதி செய்து வெளியிடும் தொழிலை 'மாடர்ன் தியேட்டர்ஸ்’ நிறுவனம் செய்து கொண்டு வந்தது. அந்நிறுவனத்துடன் பங்கு சேர்ந்து திரைப்படங்களை இறக்குமதி செய்து வெளியிடும் தொழிலை கார்டினர் ஆரம்பித்தார்.
1928 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 29ஆம் திகதி 'சிலோன் தியேட்டர்ஸ் லிமிட்டெட்' என்ற நிறுவனத்தை ஆரம்பித்து அதன் முதலாவது தலைவராகவும் நிர்வாகப் பணிப்பாளராகவும் விளங்கினார். அக்காலத்தில் இலங்கையர் சிலரே சினிமாத் தொழிலில் ஈடுபட்டனர். ஆனாலும் பல்வேறு சவால்களுக்கும் முகம் கொடுத்து கார்டினர் இத்தொழிலில் வெற்றிபெற்றார்.
இலங்கையின் முதலாவது சினிமாத் தியேட்டர் 'எம்பயர் தியேட்டர்' என்ற பெயரில் கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டது. இப்பொழுது கொழும்பில் நீகல் தியேட்டர்' என்ற பெயரில் இருக்கும் தியேட்டரே அந்த எம்பயர் தியேட்டராகும். இந்தத் தியேட்டரை ஆரம்பித்த பெருமை கார்டினரையே சாரும். அதனால்தான் அந்த தியேட்டர் அமைந்திருக்கும் வீதிக்கு சேர் சிற்றம்பலம் கார்டினர், மாவத்தை' என்று பெயர் மாற்றப்பட்டது. இலங்கையில் திரையிடப்பட்ட முதலாவது சிங்களம் பேசும்படம் 'கடவுனுபொரொந்துவ" 1947ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21ஆம் திகதி திரையிடப்பட்டது. இதற்கு அடுத்து "அசோக மாலா' என்ற
தம்பிஐயா தேவதாஸ் 29
சிங்களப் பேசும்படம் 9.4.1947இல் இலங்கையில் திரையிடப் பட்டது. இவை இரண்டும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டன. ஆனால் முதன் முதலில் தயாரிக்க ஆரம்பிக்கப்பட்ட சிங்களப்படம் "அசோகமாலா' ஆகும்.
இலங்கை மன்னன் துட்ட கைமுனு சிங்கள மக்கள் மத்தியில் புகழ்பெற்றவன், அவனுக்கு ‘சாலிய' என்றொரு மகன் இருந்தான். அவ்வூரிலே "அசோகமாலா' என்ற தாழ்ந்த சாதிப் பெண் வாழ்ந்து வந்தாள். சாலிய இளவரசனுக்கும் அசோகமாலாவுக்கும் காதல் மலர்கிறது. தந்தை துட்டகைமுனு எதிர்க்கிறான். பின்பு மனந்திருந்தி மகனை "அசோகமாலா'வுக்குத் திருமணஞ் செய்து வைக்கிறான். இதுதான் அசோகமாலா திரைப்படத்தின் கதைச் சுருக்கமாகும்.
இலங்கையின் முதலாவது சரித்திரச் சிங்களப் படமான "அசோகமாலா' வைத் தயாரித்த பெருமை கார்டினரைச் சார்கிறது. மூன்றாவது சிங்களப்படம் 1948இல் வெளிவந்தது. ‘கப்பட்டி ஆறக்ஷாவ' என்ற அப்படத்தையும் தயாரித்தவர் கார்டினர்தான்.
'கப்பட்டி ஆறக்ஷாவ' திரைப்படத்தில் முதன் முதலாக இலங்கைக் காட்சிகள் சேர்க்கப்பட்டன. இலங்கைக் காட்சிகளைக் கனவுக்காட்சிகள் போல் படத்தில் சேர்த்திருந்தார்கள். பின்பு பலபடங்களை சிலோன் தியேட்டர்ஸ் நிறுவனம் தயாரித்தது. இவற்றில் பல படங்கள் பொருளாதார ரீதியில் வெற்றி பெற்றன. கலைfதியில் பல பரிசில்களையும் பெற்றன. 'கொலுஹவத்த" 'அக்கபரஹா" லசந்தா' என்பன அவற்றில் சிலவாகும்.
கார்டினரின் சிலோன் தியேட்டர்ஸ் நிறுவனம் பல சிங்களப் படங்களை மட்டும் தயாரிக்கவில்லை. திரைப்படங்களை இங்கேயே உருவாக்க 'சிலோன் ஸ்ரூடியோ' வையும் உருவாக்
கியது. இலங்கையில் உருவான தமிழ்ப் படங்களில் பல இந்த
Page 18
30 இலங்கைத் திரையுலக முன்னோடிகள்
ஸ்ரூடியோவுக்குள்ளேயே உருவாகின என்பது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட 100 தியேட்டர்களுக்கு இந் நிறுவனம் திரைப் படங்களை விநியோகித்தது. பின்னாளில் சிலோன் தியேட்டர்ஸ் நிறுவனம் சினிமாத் தொழிலில் மட்டும் ஈடுபடவில்லை.
காகில்ஸ், மில்லர்ஸ் நிறுவனங்கள் போன்றவற்றுடன் இணைந்து பல தொழில்களை ஆரம்பித்து நாகரிகத்தின் எடுத்துக்காட்டாக விளங்கும் பம்பலப்பிட்டி மெஜஸ்டிக் சிற்றியின் தாய் நிறுவனம் சிலோன் தியேட்டர்ஸ் நிறுவனமே இலங்கை சினிமாத்துறையில் கார்டினர் செய்த சேவைக்காக அவரை எல்லோரும் "இலங்கைச் சினிமாத் தொழிலின் மன்னன்" என்றே குறிப்பிடுகின்றனர். இலங்கைத் திரையுலக முன்னோடிகளில் ஒருவரான சேர் சிற்றம்பலம் ஏ.கார்டினரின் நூற்றாண்டு விழாவை இந்த ஆண்டு (1999) ஜனவரி மாதம் கொண்டாடியிருக்க வேண்டும். இவ்வாண்டின் கடைசிப் பகுதியிலாவது 'வீரசேகரி மூலம் கார்டினரை நினைவுகூர்வதில் நான் மகிழ்ச்சியும் பெருமையும் அடைந்தேன்,
।
॥
4. பி.எஸ். கிருஷ்ணகுமார்
a
- -
இலங்கையின் முதலாவது தமிழ்ப்படமான (35மிமீட்டர்) தோட்டக்காரியை இயக்கி அதில் கதாநாயனாக நடித்த பி.எஸ்.கிருஷ்ணகுமார்,
Page 19
32 இலங்கைத் திரையுலக முன்னோடிகள்
திரைப்படம் தயாரிப்பது என்பது பெரும் பணத்துடன் சம்பந்தப்பட்ட விஷயம். பெரும் பணச்செலவில் தயாரிக்கப்பட்ட தென்னிந்தியத் தமிழ்ப்படங்கள் கூட தோல்வியடைந்திருக் கின்றன. ஆனானப்பட்ட கே.பாக்கியராஜ் கூட, படம் தயாரித்த செலவுக்காகத் தன் சொந்த வீட்டையே விற்றுவிட்டாராம். கதை அப்படிப்போகிறது
ஆள் அணி, பணம், உலகச்சந்தை அத்தனை வாய்ப்புகளும் உள்ள அந்தத் தமிழ்ப்படங்கள் கூடத் தோல்வி அடைந் திருக்கின்றன என்றால் இலங்கையில் யார் தமிழ்ப்படம் தயாரிக்க முன்வருவார்கள்?
ஆனால் முன் வந்தார் ஓர் இளைஞர்! அதுவும் இன்றல்ல 1960ஆம் ஆண்டளவில். அவர்தான் பி.எஸ்.கிருஷ்ணகுமார் அவர் தயாரித்த படத்தின் பெயர் "தோட்டக்காரி.
இலங்கையின் முதலாவது 35மி.மீ. தமிழ்ப்படத்தைத் தயாரித்தவர் என்ற பெயரை மட்டும் அவர் பெறவில்லை. கதை வசனம் பாடல்கள் கதாநாயகன் ஆகிய பல துறைகளிலும் சமர்த்தர் என்ற பெயரையும் அவர் பெற்றுக் கொண்டார்.
அவர் "தோட்டக்காரி'யை மட்டும் தயாரிக்கவில்லை.
நீண்டநாட்களின் பின் (1975இல்) 'மீனவப் பெண்" என்ற படத்தையும் உருவாக்கினார். இப் படத்தின் கதை, வசனம் பாடல்களையும் அவரே எழுதினார்.
சினிமா வசதிகள் அற்ற ஆரம்பகாலத்திலேயே இலங்கையில் இரண்டு தமிழ்ப்படங்களை உருவாக்கிய பெருமை பி.எஸ், கிருஷ்ணகுமாரைச் சார்கிறது.
சிங்களத் திரையுலகிலேயே முன்னோடியாகத் திகழ்ந்தவர் 'சிறிசேன விமலவிர" என்பவராவார். இவர் கிரிபத்கொடையில்
தம்பிஐயா தேவதாஸ்
33
: E
ம
i.탑
Page 20
34 இலங்கைத்திரையுலக முன்னோடிகள்
நவஜீவன் ஸ்ரூடியோ என்ற நிறுவனத்தை உருவாக்கினார். இக் கலா நிலையத்தில் சினிமாத் தொழில்நுட்பங்களைப் பயின்றவர் கிருஷ்ணகுமார். அங்கு தயாரான ‘வெதி பிம', 'பட்டாச்சாரி ' கெதர புதுன் போன்ற சிங்களப்படங்களின் தயாரிப்பில் கிருஷ்ணகுமாரும் பணியாற்றினார். அதனால் 'சிறிசேன விமலவிர அவர்களே தனது சினிமா குரு என்று கூறுகிறார் பி.எஸ்.கிருஷ்ணகுமார்.
அங்கு பெற்ற சினிமா அனுபவம் பின்னாளில் அவர் தமிழ்ப்படம் உருவாக்கப் பாடமாக அமைந்தது.
மலையாளப் பரம்பரையில் வந்த பலர் இலங்கையில் பல்வேறு கலை முயற்சிகளில் முன் நின்றிருக்கிறார்கள். அவர்களைப்போல் கிருஷ்ணகுமாரும் மலையாளப் பாரம் பரியத்தில் வந்தவர். கொழும்பு கொட்டாஞ்சேனை மத்திய கல்லூரியில் ஆரம்பக் கல்வியைக் கற்ற கிருஷ்ணகுமார், இளவயதிலேயே பேச்சுப் போட்டிகளிலும் நாடகப் போட்டி களிலும் பங்கு பற்றி வெற்றி கண்டிருக்கிறார். 1950களில் கொழும்பில் இலங்கை தி.மு.க அன்பர்களின் சொற்போர்’ பட்டறையில் பயிற்சி பெற்று சிறந்த பேச்சாளராக விளங்கினார்.
கலைஞர் பி.எஸ்.கிருஷ்ணகுமார் தன் இளமைக் காலத்தைப் பற்றி இப்படிக் கூறுகிறார்.
'கொழும்பிலுள்ள பல கலைஞர்களுக்குக் குருவாக விளங்கியவர் மாஸ்டர் கே.பி.ஏ. ராஜேந்திரம் ஆவார். அவரே எனது மேடை நாடகக் குரு ஆவார். தி.மு.க.வைச் சேர்ந்த இரா.சு. தங்கப்பழம் எழுதிய "புரட்சிப் பெண்' என்ற நாடகத்தில் நான் கதாநாயகனாக நடித்தேன். தொடர்ந்து கொழும்பு மனோரஞ்சித கானசபா மன்றத்தின் பல நாடகங்களை நான் இயக்கினேன். எனது சினிமா முயற்சிகளினால் யாழ்ப்பாணம் ரஞ்சனி, கனகாம்பாள் ஆகியோரையும் கொழும்பு ராஜலட்சுமி, என். தாலிப் ஆகிய
தம்பிஐயா தேவதாஸ் 35
கலைஞர்களையும் கண்டுபிடித்துக் கலை உலகத்துக்கு அறிமுகப் படுத்தினேன்' என்று பெருமைப்படுகிறார் கிருஷ்ணகுமார். அவர், "தோட்டக்காரி' படத்தைப் பல்வேறு பிரச்சினைகளின் மத்தியில் உருவாக்கினார். அப்பொழுது இலங்கையில் "மலைவாசல்' 'கடல் கடந்த தமிழர்' 'புரட்சி’, ‘சமுதாயம்' போன்ற படங்கள் தயாரிப்பில் இருந்தன. அக்காலத்தில் இலங்கை தி.மு.க. வைச் சேர்ந்த மணவைத்தம்பி திரைக்கலை" என்ற பத்திரிகையைக் கொழும்பில் வெளியிட்டு வந்தார். அப்பத்திரிகையில் வந்த கட்டுரை கிருஷ்ணகுமாரை உசுப்பி விட்டது. இலங்கையில் தமிழ்ப்படம் தயாரிக்க முடியாது என்பதுதான் அக்கட்டுரையின் தலைப்பு.
இக்கட்டுரையே கிருஷ்ணகுமாரை இலங்கையில் தமிழ்ப் படம் உருவாக்க வேண்டும் என்ற வெறியை வளர்த்தது. அதனால் பல கலைஞர்களின் உதவியுடன் அப்படத்தை உருவாக்கினார். வீதங்கவேலு, வீ.எஸ். முத்துவேலு, திருமதி ரஞ்சனிமுத்துவேலு ஆகியோரின் துணையுடன் இலங்கையின் முதலாவது தமிழ்ப் பட்த்தை (35 மி.மீ.) உருவாக்கி முடித்தார். 1960ஆம் ஆண்டு படத்தயாரிப்பு ஆரம்பமாகியது. 1963ஆம் ஆண்டு படம் திரையிடப்பட்டது. அக்காலத் தமிழ்ப்படத் தயாரிப்புப் பற்றி அவர் இப்படிக் கூறுகிறார்.
'அக்காலத்தில் திரைப்படத்துறைச் சாதனங்கள் வசதிகள் என்பன மிகவும் குறைந்து காணப்பட்டன. அது மட்டுமல்ல மக்கள் தென்னிந்தியப்படங்களின் அடிமையாக இருந்தனர். அப் படங்களுடன் எமது படங்களை ஒப்பு நோக்கினர். பட முதலாளிகளும் தமிழகப்படங்களைத் திரையிட்டு எங்கள் படங்களுக்கு இடையூறு செய்தனர். கலையுலக எட்டப்பர்களுடன் நாங்கள் போராட வேண்டியிருந்தது. பணத்தை நோக்கமாக கொண்டு நாம் படம் தயாரிக்கவில்லை. ஆத்ம திருப்திக்காகவே படம் தயாரித்தோம். கலையுலக முன்னேற்றத்துக்காகவே பாடுபட்டோம்.
Page 21
3E இலங்கைத் திரையுலக முன்னோடிகள்
"இலங்கையில் இரண்டு தமிழ்ப்படங்களைத் தயாரித்து விட்டோம் என்று பெருமைப்பட்டோம். இவ்விரண்டு படங்களை யும் தயாரிக்கச் செலவிட்ட பணத்தைக் கொண்டு இரண்டு சிங்களப் படங்களைத் தயாரித்திருந்தால் நாம் பணம் சம்பாதித்திருக்கலாம். அப்படிச் செய்யாமல் தமிழ்ப்படம் தயாரித்தது கலைக்காகவே" என மார்தட்டிக் கூறுகிறார் பி.எஸ். கிருஷ்ணகுமார், கொழும்பு 10இல் மில் வீதியில் நீண்டகாலம் வாழ்ந்துவந்த பி.எஸ். கிருஷ்ணகுமார் இப்பொழுது நீர்கொழும்பில் வாழ்ந்து வருகிறார். தோட்டக்காரி படரீல்களை அழகாக அடுக்கி வைத்திருந்தார். ஒன்றோ இரண்டோ ரீல்கள் தொலைந்துவிட்டனவாம் அடுத்த படமான 'மீனவப்பெண்' படத்தின் ரீல்கள் திரைப்படக் கூட்டுத் தாபனத்தில் இருந்தனவாம். ஆனால் கூட்டுத்தாபனத்தினர் அவற்றை எரிந்து விட்டதாகக் கூறுகிறார்.
உண்மைதான் 83 ஜூலைக் கலவரம் பல தமிழ்ப் படங்களை அழித்து விட்டது. எஞ்சியிருந்த தமிழ்ப் படங்களை யாரிடமும் கேட்காமல் திரைப்படக் கூட்டுத்தாபனம் எரித்து விட்டது. இவற்றை யாரிடம் போய்ச் சொல்லி அழுவது?
"தோட்டக்காரி' படத்தை யூமெற்றிக் (தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு ஏதுவாக) ரேப்பில் பதியவைக்க, பட ரீல்களை அவரிடம் கேட்டேன். பல ரீல்கள் பழுதடைந்து விட்டன, தப்பிவிட்ட ஒரு ரீலை மட்டும் தந்தார். இலங்கையின் முதலாவது (35 மி.மீ) தமிழ் திரைப்படமான தோட்டக்காரியின் ஒரே ஒரு ரீல் மட்டுமே இப்பொழுது உண்டு. அதுவும் என்னிடம் மட்டுமே உண்டு.
எது எப்படியோ ஆரம்ப காலத்தில் இலங்கையில் இரண்டு தமிழ்ப்படங்களை உருவாக்கிய பி.எஸ். கிருஷ்ண குமார் இலங்கைத் திரையுலக முன்னோடிகளில் குறிப்பிடத் தக்கவர் என்பது உண்மை.
5. டபிள்யூ.எம்.எஸ். தம்பு (1908 - 1992)
பல சிங்களப் படங்களையும் "வெண் சங்கு என்ற இலங்கைத் தமிழ்ப் படத்தையும் தயாரித்து நெறியாண்ட டபிள்யூ.எம்.எஸ். தம்பு,
சேர் சிற்றம்பலம் கார்டினர். கே.குணரத்தினம், ஜாபீர் ஏகாதர் போன்றோர் சினிமாக்கம்பனிகளை உருவாக்கி வெளிநாட்டுப் படங்களை இறக்குமதி செய்தனர். சிங்களப்படங்களைத் தயாரித்தனர். இவர்கள் இலங்கையில் தமிழ்ப் படங்களைத் தயாரிக்கவில்லை. ஆனால் இவர்களைப் போல் புகழ் பெற்ற ஒரு தமிழர் சிங்களப்படங்களுடன் இலங்கையில் தமிழ்பட மொன்றையும் தயாரித்தார். அது மட்டுமல்ல இந்தியாவிலும் பல
Page 22
38 இலங்கைத்திரையுலக முன்னோடிகள்
தமிழ்படங்களைத் தயாரித்தார். அவர்தான் டபிள்யூ. எம். எஸ். தம்பு அண்மையில் காலமான பிரபல சிங்களத் திரைப்பட இயக்குநர் றொபின் தம்புவின் தந்தை.
வில்லியம் மகோன் செல்வசாமி தம்பு என்ற முழுப் பெயரைக் கொண்ட டபிள்யூ.எம்.எஸ்.தம்பு யாழ்ப்பாணத்தில் 17-04-1908இல் பிறந்தவர். யாழ்ப்பாணம் மத்தியகல்லூரியில் படித்தவர். சட்டத்தரணியாகச் சிலகாலம் கடமையாற்றினார். அப்பொழுதே வெளிநாட்டுத் திரைப்படங்களை இறக்குமதி செய்யும் முயற்சியில் ஈடுபட்டார். 1950 அளவில் சிலோன் தியேட்டர்ஸ் நிறுவனத்தில் நிர்வாகப் பணிப்பாளராகச் சேர்ந்து கொண்டார். அதன் பின்பு இந்தியா சென்ற தம்பு, அங்கும் திரைப்படங்களைத் தயாரிக்கத் தொடங்கினார்.
சினிமா அபிமானி ஒருவருடன் சேர்ந்து "பிரபாவதி" என்ற படத்தைத் தயாரித்தார். அவர் தனித்துத் தயாரித்த படத்தின் பெயர் "தெய்வநீதி ஆகும். கலாவதி (1951) நம்ம குழந்தை (1955) வைரமாலை (1956) போன்ற படங்களையும் டபிள்யூ.எம்.எஸ். தம்பு தயாரித்தார்.
இவர் அக்கால தென்னிந்திய சினிமாக் கலைஞர்கள் பலருடன் நட்பு வைத்திருந்தார். அவர்களில் ஒருவர் சிவாஜி கணேசன், சென்னை போக்றோட் 22ஆம் இலக்க இல்லத்தில் சிவாஜி வாழ்ந்தார். தம்பு அதே வீதியில் 24 ஆம் இலக்க வீட்டை வாங்கி வாழ்ந்தார்.
கொழும்பு புதுச்செட்டித் தெரு அலுவலகமே தம்புவின் திரைப்பட விநியோக நிலையமாக முதன் முதல் விளங்கியது. இந்நிறுவனத்தில் கே. குணரத்தினமும் கடமையாற்றினார்.
1960ஆம் ஆண்டளவில் டபிள்யூ.எம்.எஸ்.தம்பு பிரபல மான பல தமிழ்ப்படங்களை இலங்கைக்கு இறக்குமதி செய்தார்.
தம்பிஐயா தேவதாஸ் 39
r.
Eig: "A W 1,
L
ல்
الموحد
BiH. կա
Page 23
4Ο இலங்கைத்திரையுலக முன்னோடிகள்
தொடர்ந்து யாழ்ப்பாண நகரில் பல தியேட்டர்களை உருவாக் கினார். ரீகல் தியேட்டர், வின்ஸர் தியேட்டர் என்பன அவற்றில் சிலவாகும்.
தற்போதைய சபாநாயகர் வாசஸ்தலமான 'மும்தாஜ்மஹால்' மாளிகை அக்காலத்தில் சில ஆண்டுகள் தம்புவுக்கே உரியதாக விளங்கியது.
1930ஆம் ஆண்டளவில் யாழ்ப்பாணத்தில் உள்ள பிரித்தானிய கவர்னர் மாளிகையான 'எஸ்பிளன்டே வில்லா" மாளிகையை டபிள்யூ.எம்.எஸ். தம்பு வாங்கினார். இப்படி இவர் சினிமாத் தொழிலின் மூலம் பெரிய செல்வந்தராக விளங்கினார்.
டபிள்யூ.எம்.எஸ்.தம்பு நீண்ட நாட்களின் பின் இலங்கை திரும்பினார். சிங்களத் திரையுலகம் அவரை வரவேற்றது. பல சிங்களப்படங்களைத் தயாரித்து நெறியாளத் தொடங்கினார்.
டபிள்யூ.எம்.எஸ்.தம்பு 'செமியா பிறிந்தகே தேவியாய' (கணவனே மனைவியின் தெய்வம்) (1964), "லதக மஹிம (இதயத்தின் பெறுமதி) (1965), "லயடலய' (இதயத்திற்கு இதயம்) (1966), றுகுனு குமாரி (1968), போன்ற சிங்களப் படங்களை வருடத்துக்கு ஒன்றாகத் தயாரித்து நெறியாண்டார். இதே வேளை இவரது புதல்வர் றொபின் தம்புவும் தனித்துச் சிங்களப்படங்களை தயாரித்து நெறியாண்டார்.
சேபாலி' என்ற படத்தைத் தந்தை டபிள்யூ. எம்.எஸ்.தம்பு தயாரிக்க மகன் றொபின் தம்பு முதன் முதலில் நெறியாண்டார். தந்தை தன் மகனுக்கும் சினிமாத் தொழிலைப் பயிற்று வித்தார்.
டபிள்யூ.எம்.எஸ். தம்புவின் மனத்தில் இலங்கையிலும் தமிழ்ப்படமொன்றை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் உதித்ததில் ஆச்சரியமில்லை. கலையை வியாபாரமாகக் கருதாத
தம்பிஐயா தேவதாஸ் 4.
டபிள்யூ.எம்.எஸ். தம்புவின் மனத்தில் தன்தாய்மொழியின் அபிமானம் காரணமாக அந்த உணர்வு ஏற்பட்டது. அவர் படத்தை தயாரிக்கத் தொடங்கிவிட்டார். அந்தப்படத்தின் பெயர்தான் வெண்சங்கு' தம்புவே மூலக்கதையை எழுதினார். இவரது கதைக்கு வானொலி எழுத்தாளர் சிறில் கே. பெர்னாண்டோ திரைக்கதை வசனம் எழுதினார். வசனம் எழுதுவதில் சந்திரா கணேசானந்தனும் பரமானந்தனும் உதவி புரிந்தனர்.
அக்காலத்தில் வானொலியிலும் மேடை நாடகங்களிலும் புகழ்பெற்ற பலரைத் தம்பு நடிகர்களாக தெரிவு செய்தார். லடீஸ் வீரமணி, அராலி புவனேந்திரன், ஏ.எஸ். ராஜா, ரொசாறியோ பீரிஸ், எம்.ஏ.ஜபார், நமசிவாயம், ஜி.பீட்டர்தேவன். ஒ.நாகூர், ரி.எஸ். பிச்சையப்பா போன்றோரே அந்த நடிகர்கள்.
குமாரி ராஜம், இந்திராதேவிபிள்ளை, சுப்புலட்சுமி, நூர்ஜகான், ருத்ராணி, வனஜா, சந்திரா, மஞ்சுளா போன்றோரை நடிகைகளாகத் தெரிவு செய்தார்.
திரைப்படங்களின் கதை ஓட்டத்துக்கிடையே தனியான நகைச்சுவைக் காட்சிகளைப் புகுத்துவது சில திரைப்பட நெறியாளர்களின் பாணியாகும். அப்படியான முயற்சியை "வெண்சங்கு' திரைப்படத்திலும் கையாண்டார் தம்பு. 1970இல் யாழ்ப்பாண மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கிய மேடை நாடகமான 'அடங்காப்பிடாரி'யின் காட்சிகளையும் தன்படத்தில் சேர்த்துக் கொண்டார்.
அதுவரை வெளிவந்த இலங்கைத் தமிழ்த் திரைப்படங்களின் பாடல்கள் சிறப்பானதாக அமைந்திருக்க வில்லை. அதனால் தன்படத்தில் இடம் பெறும் பாடல்களில் அதிக கவனம் செலுத்தினார். இசையமைப்பாளர் முத்துசாமியை அழைத்துக் கொண்டு இந்தியா சென்றார். ரீ.ஆர். பாப்பாவின் உதவியுடன் சில பாடல்களை இசை அமைத்தார். இந்தியாவைச் சேர்ந்த ராஜூவும்
Page 24
42 இலங்கைத் திரையுலக முன்னோடிகள்
கௌசல்யாவும் "வெண்சங்கு' படத்தில் பின்னணி பாடினர். அந்தக் காலத்தில் இந்தியக் கலைஞர்கள் இலங்கைப் படங்களில் பங்குபற்றக் கூடாது என்பதால் இம்முயற்சி இரகசியமாகச் செய்து கொள்ளப்பட்டது.
எஸ்.தெய்வேந்திரா படத்தின் ஒளிப்பதிவை மேற்கொண்டார். மீனா மூவிஸ் தயாரிப்பான 'வெண்சங்கு 31-07-1970இல் திரையிடப்பட்டது. 'மீனா" என்பது டபிள்யூ.எம்.எஸ்.தம்புவின் மனைவியின் பெயராகும்,
சுதந்திரன் பத்திரிகை டபிள்யூ.எம்.எஸ். தம்புவைப் பாராட்டி விமர்சனம் எழுதியது. தயாரிப்பாளர் நெறியாளர் டபிள்யூ. எம்.எஸ். தம்பு சினிமாத்துறையில் நல்ல அனுபவம் மிக்கவர். இலங்கையில் தமிழ்ப் படம் தயாரிக்க முடியுமா என்ற நிலை இருந்தது. இதற்கான பதிலைத் தம்பு "வெண்சங்கு மூலம் தந்திருக்கிறார். என்று சுதந்திரன் எழுதியது. "வீரகேசரி"யில் அருள்ராஜ் விமர்சனம் எழுதினார். தம்பு நீண்ட காலம் தமிழகத் திரையுலகுடன் தொடர்புகொண்டிருந்தவர். 'வெண்சங்கு இவரின் கன்னி முயற்சி இனிய பாடல்கள், சிறந்த நடிப்பு, சிறந்த டைரக்ஷன் கொண்டது வெண்சங்கு என்று எழுதினார்.
இலங்கையில் சிங்கள சினிமாத் தொழிலில் பணம் பண்ணும் முயற்சியில் பல தமிழர்கள் ஈடுபட்டனர். அவர்கள் தமிழ்ப்படம் தயாரிக்க முன் வரவில்லை. இலங்கையில் சிங்களப் படங்களுடன் தமிழ்ப் படத்தையும் தாயரித்தவர் டபிள்யூ எம்.எஸ். தம்பு
திரைப்படத் தொழில் முன்னோடியாக விளங்கிய டபிள்யூ.எம்.எஸ். தம்பு 1992இல் காலமானார். தந்தை விட்டுச் சென்ற பணியை மகன் றொபின் தம்பு தொடர்ந்தார். றொபின் தம்பு 23-3-2000ல் காலமானார். இவர்களது பணியை இப்பொழுது பேரன் சஞ்சீல் தம்பு தொடர்ந்து செய்கிறார்.
6. ரீ. சோமசேகரன்
சிங்களத்திரைப்படங்கள் பலவற்றைத் தயாரித்து நெறியாண்ட முதலாவது இலங்கைத் தமிழர் ரீ சோமசேகரன்,
ஆரம்பகாலச் சிங்களப் படங்களைப் பெரும்பாலும் தமிழர்களே தயாரித்தனர். நடிகர்கள் சிங்களவர்கள், நெறியாள்கை உட்பட பல்வேறு தொழில்நுட்பங்களை இந்தியர்கள் கவனித்தனர். தென்னிந்தியத் தமிழர்களே பெரும்பாலும் ஆரம்ப காலச் சிங்களப்படங்களை இயக்கினர். 1956ஆம் ஆண்டின் பின் சிங்களப் படங்களை இலங்கையில் தயாரிக்க வேண்டும் என்ற நிலை வந்தது. அதனால் இந்திய இயக்குநர்கள் இலங்கைக்கு வந்து
Page 25
44 இலங்கைத் திரையுலக முன்னோடிகள்
சிங்களப் படங்களை இயக்கத் தொடங்கினர். பின்பு இவர்களின் உதவியுடன் சிங்கள இயக்குநர்களும் படங்களை இயக்கத் தொடங்கினர். சிறிசேன விமல வீர. பி.ஏ.டபிள்யூ ஜெயமான்ன, சிறில் அபேரத்தின என்போர் அவர்களில் முக்கியமானவர்கள்.
1956 ஆம் ஆண்டளவில் இவர்களைவிட இலங்கைத் தமிழர் ஒருவர் முதன்முதலாகச் சிங்களப்படங்களை இயக்க முன்வந்தார். தொடர்ந்து பல சிங்களப்படங்களை தயாரித்து இயக்கினார். சிங்களத் திரையுலகில் பல புது முயற்சிகளையும் செய்தார்.
அவர்தான் ரீ. சோமசேகரன். சினிமா ஆர்வம் மிக்க இவர் ஆரம்பத்தில் "சினிமாஸ் லிமிடெட்டில் சேவை செய்தார். இந்நிறுவனத்தின் பிரசார அதிகாரியாகச் சிலகாலம் கடமை யாற்றினார். சினிமாஸ் குணரெத்தினம் தயாரித்து ரீ.ஆர். சுந்தரம் இயக்கிய பிரபல சிங்களத் திரைப்படமான 'சுஜாதா'வுக்குத் தயாரிப்பு நிர்வாகியாகத் தொழிற்பட்டார் 'சுஜாதா' படத்துக்கு இவர் செய்த வித்தியாசமான நோட்டீஸ், துண்டுப்பட (றெயிலர்) விளம்பரங்கள் மூலம் அப்படம் பெரு வெற்றி பெற்றது இவரது விளம்பரங்களைப் பார்த்துதான் என்பார்கள்.
அப்படத்தை பார்க்கச் சென்றதாக கூறும் சிங்கள ரசிகர்கள் இன்னும் இருக்கிறார்கள். படவெற்றிக்கு முக்கிய காரணமாக அமைவது விளம்பரம் என்று நிரூபித்துக் காட்டியவர் இவர்தான்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இந்தக் கலைஞரது முழுப்பெயர் தம்பிராஜா சோமசேகரன் என்பதாகும். முதலில் சினிமாஸ் லிமிட்டெட்டில் போய்ச் சேர்ந்து கொண்டார்.
சிங்களத் திரையுலகின் மிகச் சிறந்த விளம்பரக் கலைஞ ராகவே முதலில் தோற்றமளித்தார். 'சுஜாதா' என்ற படத்துக்கு விளம்பர நிர்வாகியாகக் கடமையாற்றியதன் மூலம் இவரது சினிமாத் தொடர்பு ஆரம்பமாகியது.
தம்பிஐயா தேவதாஸ்
45
Page 26
46 இலங்கைத்திரையுலக முன்னோடிகள்
படங்களுக்கு விளம்பரம் செய்த அனுபவம், படங்களை தயாரித்தால் என்ன, இயக்கினால் என்ன என்ற உணர்வை
ஏற்படுத்தியது.
அந்த உந்தல்கள் காரணமாகப் பிலிம் சிலோன்' என்ற நிறுவனத்தை உருவாக்கிப் பல சிங்களப்படங்களை தயாரித்து இயக்கினார். இவரது முதலாவது படமான 'சடசுலங்கில் பல புதுமைகளைச் செய்தார். அதில் ஒன்றை இதுவரை யாரும் செய்யவில்லை எனலாம். பிரபல இந்தியப்பாடகி லதா மங்கேஷ்கரைக் கொண்டு தனது படத்தில் சிங்களப் பாடலை பாடச் செய்ததுதான் அந்த முயற்சி. லதா மகேஷ்கர் பாடிய ஒரேயொரு சிங்களப்பாடல் அது மட்டுமே,
1957இல் ரீ. சோமசேகரன் தயாரித்து நெறியாண்ட இரண்டாவது படத்தின் பெயர் 'சரதம்' என்பதாகும்.
இப்படத்தின் மூலம் ஜோ அபயவிக்கிரம என்ற நடிகரை முதன் முதலில் அறிமுகப்படுத்தினார்.
1959இல் சிலோன் தியேட்டேர்ஸ் நிறுவனத்துக்காக அவிஸ்வாசய (அவநம்பிக்கை) என்ற படத்தை இயக்கிக் கொடுத்தார்.
இதற்கு அடுத்த ஆண்டு 'பிறிமியெக் நிசா" ("ஆணினால்') என்ற படத்தின் மூலம் காமினி பொன்சேகாவை முதன் முதலில் கதாநாயகனாக்கினார்.
'சிவாபிலிம்ஸ்" என்ற நிறுவனத்தின் மூலம். சிவசுப்பிர மணியம் பல சிறந்த சிங்களப்படங்களைத் தயாரித்திருக்கிறார். "சுபசரண சப சித்தே' என்பது அவற்றில் ஒன்று. இப்படத்தையும் ரீ.சோமசேகரனே இயக்கினார். இப்படம் தான் வயது
தம்பிஐயா தேவதாஸ் 47
வ்ந்தவர்களுக்கு மட்டும்' என்ற அறிவித்தலுடன் வந்த முதலாவது
சிங்களப்படமாகும்.
இப்படத்தின் கதையில் வரும் கதாநாயகன் பாலியல் விடயங்களில் அதிக ஆவல் உள்ளவன். ஆனால் முதலிரவில் அவன் தோல்வி அடைவதே படத்தின் கதை. இதற்காக, வயது வந்தவர்களுக்கு மட்டும்' என்ற அறிவித்தலுடன் வெளிவந்தது.
ரீ.சோமசேகரன் மொத்தம் எட்டுச்சிங்களப்படங்களை இயக்கியிருக்கிறார். இப்படங்கள் மூலம் பல சிறந்த நடிகர் நடிகைகளை சிங்களச் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார் பிரேம் ஜயந், புளோரிடா ஜயலத், டொமிஜயவர்தன, பியதாச குணசேகர, சாந்திலேகா, ஜோ அபயவிக்கிரம என்போர் அவர்களிற் சிலர். இப்படி அதிகமான நடிகர், நடிகைகளை அந்தக் காலத்தில் வேறு எவரும் அறிமுகப்படுத்தவில்லை என்று விமர்சகர்கள் கூறியிருக்கிறார்கள்.
சிங்களத் திரையுலகின் முதலாவது இலங்கைத் தமிழ் இயக்குநரான ரீ.சோமசேகரன் 1968 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12 ஆம் திகதி காலமானார்.
இலங்கைத் திரையுலக முன்னோடிகளில் ரீ.சோமசேகரனும் ஒருவர் என்ற செய்தியை யாரும் அழிக்க முடியாது.
Page 27
7. கே.குணரெத்தினம் (1913 - 1989)
பல சிங்களப் படங்களை தயாரித்த
"சினிமாஸ் லிமிட்டெட் அதிபர் கே. குணரெத்தினம்.
இலங்கைத் திரைப்பட உலகில் தமிழ் பேசும் தொழில் அதிபர்கள் பலர் புகழுடன் விளங்கினர். அவர்களில் முக்கியமான ஒருவர் கே.குணரெத்தினம் அவர்களாவார். இந்தியத் திரைப்பட உலகத்துக்கும் இலங்கைத் திரைப்பட உலகத்துக்கும் இணைப்புப்பாலமாக விளங்கியவர். 'கே.ஜி' என்று அன்புடன் அழைக்கப்பட்ட இவரின் முழுப் பெயர் கனகசபை குணரெத்தினம் என்பதாகும்.
ஆரம்பத்தில் எல்பின்ஸ்டன் தியேட்டரில் முகாமை யாளராகத் தனது தொழிலை ஆரம்பித்தார். அந்த அனுபவம் காரணமாகப் பல திரைப்படங்களைத் தயாரித்தார். "சினிமாஸ் லிமிடெட்" ஐ உருவாக்கினார். 'விஜயா ஸ்டூடியோவை' நிர்மாணித்தார். சினிமாத் தொழிலில் மட்டுமன்றி வேறு தொழில்களையும் ஆரம்பித்து வெற்றி பெற்றவர் திரு.கே. குணரெத்தினம்.
1917ஆம் ஆண்டு ஜூலை 30ஆம் திகதி யாழ்ப்பாணம்
அத்தியடியில் பிறந்த இவர், யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் கல்வி பயின்றவர். 30 வயதில் தனது சினிமாத் தொழிலை
Page 28
5D இலங்கைத்திரையுலக முன்னோடிகள்
ஆரம்பித்து விட்டார். ரூரிங் தியேட்டர் மூலம் சினிமா காட்டும் தொழிலை ஆரம்பித்தார். பின்னாளில் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இவரது நிரந்தர தியேட்டர்கள் உருவாகின. கொழும்பில் கிங்ஸ்லி, கெபிட்டல், லிடோ, மைலன், பிளாசா, யாழ்ப்பாணம் - வெலிங்டன், கண்டி - வெம்ளி, மட்டக்களப்பு - விஜயா என்று 12தியேட்டர்களை நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உருவாக்கினார்.
150 தியேட்டர்களுக்குத் தனது "சினிமாஸ் லிமிடெட்" மூலம் படங்களை வழங்கினார். இந்த நிறுவனத்தை இவர் தனது 35ஆவது வயதில் உருவாக்கினார்.
இந்தியாவிலிருந்து தமிழ்ப் படங்களை இறக்குமதி செய்து வெளியிட்டார். 'கல்யாணப்பரிசு' என்ற படம் பலவாரங்கள் ஓடி இவருக்குப் பெரு வெற்றியைத் தேடி தந்தது. சென்னை ஸ்ரூடியோக்களில் பல சிங்களப்படங்களை தயாரித்தார். 'சுஜாதா, சூரசேன, வீரவிஜய, தொஸ்தர" என்பன அவற்றில் சில,
1962இல் ஹெந்தளையில் விஜயா ஸ்ரூடியோவை' உருவாக்கினார். இவரது முதலாவது புதல்வியின் பெயர் விஜயவாணி என்பதாகும். நீரோடையொன்றின் அருகில் ஐந்து ஏக்கர் நிலத்தில் இந்த ஸ்ரூடியோ எழுந்துநின்றது. படமாக்கப்பட காட்சிகளைக் கழுவிப்பிரதி எடுத்துப் பார்க்க வசதியான குளிர்சாதனம் பொருத்தப்பட்ட எடிட் பண்ணக்கூடிய வசதிகள் கொண்ட தியேட்டரும் இங்கு காணப்பட்டது. சுமார் நானூறு பேருக்கு மேற்பட்ட கலைஞர்கள் இங்கு கடமையாற்றினர்.
பல கலைஞர்களையும் தொழில் வல்லுநர்களையும் உருவாக்கிய கலா நிலையம் 'விஜயா ஸ்ரூடியோ'வாகும். பிரபலமான இயக்குநர்களைக் கொண்டே கே.குணரெத்தினம் தனது படங்களை இயக்குவார். இவர் தயாரித்த முதலாவது
தம்பிஐயா தேவதாஸ் 5.
Page 29
52 இலங்கைத்திரையுலக முன்னோடிகள்
சிங்களப்படம் 'சுஜாதா' ஆகும். சினிமா ஜாம்பவானான மொடேன் தியேட்டர் ஆர்.சுந்தரம் இப்படத்தை இயக்கினார். 'வறத காகெத' ‘லதறு பிரிலுவ' ஆகிய படங்களைக் கே. சங்கரைக் கொண்டு இயக்குவித்தார்.
சுரசெளரயா', 'அட்டவெனி புதுமய', 'ஆத்ம பூஜா ஆகிய படங்களை எம்.மஸ்த்தானைக் கொண்டு இயக்கினார்.
இந்திய இயக்குநர்களைப் போலவே இலங்கை இயக்கு நர்களுக்கு கே. குணரெத்தினம் சந்தர்ப்பம் வழங்கினார். ‘ஒப துட்டுதா’ என்ற படத்தைச் சிவானந்தன் இயக்கினார். "ஹொந்தாய் நரக்காய்' 'ஒன்ன மாமே கெல்ல பெனப்பி போன்ற படத்தை லெனின் மொறாயஸ் இயக்கினார். சந்தேஷய' என்ற படத்தை லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் இயக்கினார். இவை அனைத்தும் கே. குணரெத்தினம் அவர்களால் தயாரிக்கப்பட்டவை.
இந்தியத் தமிழ்ப் படங்களில் 'வனமோகினி' குறிப்பிடத் தக்கது. யாழ்ப்பாண நடிகை கே. தவமணி நடித்த படம் அது. அப்படத்தை அதே பெயரில் குணரெத்தினம் சிங்களப் படமாகத் தயாரித்தார். பல ஹிந்திப்படங்களை அப்படியே சிங்களத்தில் டப் பண்ணியும் வெளியிட்டார். சிம்போ' என்ற ஹிந்திப்படத்தை அதே பெயரில் சிங்களப்படமாக டப்பண்ணி வெளியிட்டு வெற்றி பெற்றார்.
திரு.கே. குணரெத்தினம் சினிமாத்தொழிலில் மட்டும் ஈடுபடவில்லை. பல்வேறு தொழில் முயற்சிகளிலும் ஈடுபட்டார், பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி, குமிழ்முனைப்பேனா உற்பத்தி, படச்சுருள்களை வாங்கி விநியோகித்தல் போன்ற தொழில்களிலும் ஈடுபட்டார். கொழும்பு - யாழ்ப்பாண பாதை வழியே சொகுசு பஸ்களை வாடகைக்கு விட்டார். 1983ஆம் ஆண்டின் ஜூலை இனக் கலவரம் ஹெந்தளை - விஜயா ஸ்ரூடியோவையும் சினிமாஸ் லிமிடெட்டின் பல சினிமா மாளிகைகளை மட்டும்
தம்பிஐயா தேவதாஸ் 53
அழிக்கவில்லை. சிங்களச்சினிமாவின் அடிச்சுடுவகளையே அழித்து விட்டது. அப்பொழுது விஜயா ஸ்ரூடியோவில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த பழைய புதிய சிங்களப் படங்கள் பலவற்றையும் தீ அரக்கன் அழித்து விட்டான். அதனால் தான் ‘கடவுனு பொறந்துவ போன்ற முதலாவது சிங்களப்படத்தின் ஒரு பிரதி கூட இப்போது இல்லை. சிங்களப்படங்களின் வரலாற்றைக் கூறும் பல ஆரம்பகாலச் சிங்களப் படங்கள் இவ்வாறே அழித்து விட்டன. அதனால் தான் அப்படங்களின் துண்டுகள் தானும் கிடைக்காதா என்று சிங்களச் சினிமாவின் வரலாற்றை எழுதுபவர்கள் ஒடித் திரிகிறார்கள்.
திரு. கே. குணரெத்தினம் சுமார் 15க்கு மேற்பட்ட சிங்களப் படங்களை இந்தியாவில் தயாரித்தார். 25க்கு மேற்பட்ட சிங்களப்படங்களை இலங்கையில் விஜயா ஸ்ரூடியோவுக்குள் தயாரித்தார்.
அவர் சினிமாத் தொழிலில் ஆர்வமுடன் ஈடுபட்டதுபோல் தனது குடும்பத்துடன் அன்புடன் வாழ்ந்தார்.
தனது மனைவி திருமதி கமலா குணரெத்தினத்தின் மீது அதிகப் பிரியம் வைத்திருந்தார். மூத்த மகன் ஜி. பத்மராஜா இப்பொழுது தந்தையின் தொழில்களைப் பார்த்து வருகிறார். இளைய மகன் பெயர் ஜி. தியாகராஜா என்பதாகும். விஜயவாணி, பிரியதர்சினி, சரோஜினி, சியாமினி ஆகிய புதல்விகளும் இருக்கிறார்கள்.
1989ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 9ஆம் திகதி திரு குணரெத்தினம் தமது 72வது வயதில் காலமானார்.
அவர் சினிமாத் தொழிலின் முன்னோடியாக மட்டும் வாழவில்லை. பல்வேறு தொழில்களை ஆரம்பித்து வைத்த முன்னோடியாகவும் திகழ்ந்தார்.
Page 30
54 இலங்கைத்திரையுலக முன்னோடிகள்
காமினி பொன்சேகா, வீணா ஜெயகொடி போன்ற பிரபல மான நடிகர் நடிகையை திரு.குணரெத்தினம் சினிமா உலகிற்கு அறிமுகப்படுத்தினார். அதனால்தான் காமினி பொன்சேகா இன்றுவரை அவர்மீது அன்பு வைத்திருக்கிறார்.
தொழில்கள் பலவற்றிலும் முன்னேறிய திரு.குணரெத்தினம் தான்சார்ந்த சமயத்துக்கும் மொழிக்கும் தொண்டு செய்திருக்கிறார். அத்தியடி பிள்ளையார் கோவிலின் தர்மகர்த்தா இவரே. பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியின் மாடி கட்டிடம் ஒன்று இவரது பெயரை ஞாகப்படுத்தியபடி எழுந்து நிற்கின்றது. இப்படியே பல பணிகளை அவர் ஆற்றினார்.
இப்பொழுது தொலைக்காட்சியின் வருகையால் சினிமாத் தொழில் தள்ளாடுகிறது. சிங்களச் சினிமாவுக்கும் அதே நிலைதான் வரப் போகிறது போல் தோன்றுகிறது. 1983 ஜூலைக் கலவரத்தின் பின் விஜயா ஸ்ரூடியோவில் படங்கள் தயாரிக்கப்படுவதில்லை. சினிமாஸின் சில தியேட்டர்கள் அழிந்து விட்டன.
இப்பொழுது இலங்கையின் சினிமாத் தொழில் பின்னோக்கிப் போகிறது. ஆனாலும் திரு.குணரெத்தினம் ஆரம்பித்து வைத்த மற்ற தொழில்கள் முன்னோக்கிச் செல்லுகின்றன. தந்தையின் வழியில் மகன் ஜி. பத்மராஜா அவர்களும் முன்னேறுகிறார். தந்தையைப் போல் மீண்டும் தமிழ்ப்படங்களை இறக்குமதி செய்து சினிமாத் தொழிலில் ஆர்வத்துடன் ஈடுபடுகிறார்.
இலங்கையில் சினிமாத் தொழிலுக்கு முன்னோடியாக நின்ற முக்கியமானவர்களில் ஒருவர் கே. குணரெத்தினம் என்பதை எவரும் மறுக்கவும் மாட்டார்கள், மறக்கவும் மாட்டார்கள்.
8. எம். வேதநாயகம்
‘கடமையின் எல்லை’ திரைப்பட இயக்குநர்எம், வேதநாயகம்.
l
ஆங்கில நாடக மேதை மகாகவி சேக்ஷ்பியரின் துன்பியல் நாடகங்களில் 'ஹம்லற்’ என்ற நாடகமும் ஒன்றாகும். யாழ்ப்பாணம் ஆசிரியக் கலாசாலை ஒன்றில் விரிவுரையாளராகக் கடமையாற்றிய ஒரு கலைஞருக்கு இந்த நாடகத்தின் மீது தனிப்பிரியம். அவருக்கு சினிமா மீதும் தணியாத தாகம். இந்த 'ஹம்லற்’ நாடகத்தை ஒரு தமிழ்ப் படமாக எடுத்தால் என்ன என்று எண்ணினார். எண்ணத்துடன் மட்டும் நின்று விடவில்லை செயலில் இறங்கிவிட்டார். படத்தைத் தயாரித்தும் விட்டார். அவர் யார் தெரியுமா?
அவர்தான் யாழ்ப்பாணம் பலாலி ஆசிரியக் கலாசாலையில் ஆங்கில விரிவுரையாளராகக் கடமையாற்றிய அமரர் எம். வேதநாயகம். அவர் தயாரித்த அந்தப்படத்தின் பெயர் ‘கடமையின் எல்லை". பி.ஏ. பட்டதாரியான எம். வேதநாயகம் அவர்களின் கடைசி மகனின் பெயர் 'பவனன்' 1965இல் 'கலாபவன பிலிம்ஸ்' என்ற நிறுவனத்தை வேதநாயகம் உருவாக்கினார். பிரபல வர்த்தகர்களான ராஜா ஜோஷஸ்வா, கே. கதிர்காமத்தம்பி, ஏ. சார்ள்ஸ், ஏ.எம். ஜோசப் போன்றோர் கலாபவன பிலிம்ஸின் தயாரிப்பாளர்களானார்கள்.
Page 31
56 இலங்கைத் திரையுலக முன்னோடிகள்
படத்துக்கான திரைக்கதை வசனங்களையும் பாடல்களையும் வித்வான் ஆனந்தராயர், எஸ். பஸ்தியாம்பிள்ளை, எம். விக்டர் ஆகியோரைக் கொண்டு எழுதுவித்தார். பாடல்களுக்கான இசை அமைப்பையும் இவரே ஏற்றுக் கொண்டார். முக்கியமான பொறுப்பான 'டைரக்ஷனைத் தானே ஏற்றுக் கொண்டார்.
உரையாடல்கள் பெரும்பாலும் யாழ்ப்பாணப் பேச்சு வழக்கில் அமைந்திருந்தன. யாழ்ப்பாணப் பேச்சு பின்வந்த படங்களில் இடம்பெற்றாலும் "கடமையின் எல்லை' படத்திலேயே முதன்முதலில் சேர்த்துக் கொள்ளப்பட்டது.
பின்நாளில் பல நடிகர்கள் திரைப்படங்களில் முன்னணியில் திகழ்ந்தார்கள். இவர்களில் சிலர் வேதநாயகம் உருவாக்கிய "கடமையின் எல்லை' படத்திலேயே முதலில் தோன்றினார்கள்.
அமரர் தேவன் அழகக்கோன், ஏ. ரகுநாதன், எம். உதயகுமார், பொனி றொபட்ஸ் (ரவீந்திரன்) ஆர்.காசிநாதன் போன்றோரே அவர்கள்.
இந்த நடிகர்கள் அனைவரும் அந்தக் காலத்தில் மேடை நாடகங்களில் அனுபவப்பட்டுச் சிறந்த கலைஞர்களாக விளங்கினர். இவர்கள் அனைவரையும் வேதநாயகம் ஒன்று சேர்த்தார். சினிமா அனுபவமற்ற இந்தக் கலைஞர்களைத் தனது படத்தில் துணிந்து நடிக்க வைத்தார். ஏ. ஐராங்கனி ஜி, நிர்மலா போன்ற நடிகைகளையும் சேர்த்துக் கொண்டார். நடிகைப் பஞ்சம் ஏற்பட்ட போது நடிகர் ஒருவரைப் பெண் வேடத்தில் தோன்ற வைத்தார்.
படத்தை ஒளிப்பதிவுசெய்யும் பொறுப்பை இரண்டு கலைஞர் களுக்கு வழங்கினார். எம்.ஏ. கபூர், ஏ.ரி. அரசு ஆகியோரே அவர்கள். படம் திரையிடப்பட்ட பொழுது பலபிரமுகர்களும் பல பத்திரிகை ஆசிரியர்களும் இயக்குநரைப் பாராட்டி எழுதினர்.
தம்பிஐயா தேவதாஸ் 57
இ
Y.
학
匡
Page 32
58 இலங்கைத்திரையுலக முன்னோடிகள்
கொழும்பு சிலோன் ஸ்டூடியோவுக்குள் மட்டும் படம் வளர வில்லை.
கலைஞர்கள், தொழில்நுட்பவியலாளர்கள் என்று பலரையும் முதன் முதலில் யாழ்ப்பாணத்துக்கு அழைத்து வந்து படப்பிடிப்பை நடத்தினார் வேதநாயகம், கோட்டைப்பகுதியில் (இப்பொழுது அழிந்துவிட்டது) குதிரை ஓட்டம் போன்றவற்றை ஒளிப்பதிவு செய்தார். தெரு ஓரங்களில் அமைந்திருந்த லைட் கம்பங்கள் தெரியாதவாறு படப்பிடிப்பை நடத்தினார். பேராதனைப்பூங்கா போன்ற இடங்களுக்குச் சென்று பல காட்சிகளை ஒளிப்பதிவு செய்தார். இப்படிப் பல கஷ்டங்கள் மத்தியில் படத்தை எடுத்து முடித்து விட்டார்.
அக்காலத்தில் நாடகத் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் அறிமுகமாகியிருந்த இலங்கை நெயினார் பின்வருமாறு எழுதினார்.
“எத்தனையோ செல்வந்தர்கள் இருந்த போதும் துணிந்து படம் தயாரிக்க வந்த வேதநாயகம் அவர்களைக் கலைஞர்களாகிய நாம் பாராட்டாமல் இருக்க முடியாது' என்று எழுதினார்.
"சேக்ஷ்பியரின் கதையைத் தமிழ்ப்படமாகச் செய்திருப்பது இயக்குநரின் ஆற்றலையும் நம்பிக்கையையும் காட்டுகிறது. தமிழ் மரபுடன் கதையை நடத்திச் செல்வதற்கு ஒரு பாராட்டு அருவக் காட்சிகள், போர்க்காட்சிகள், சமாதிக் காட்சிகள் போன்றன டைரக்டரின் திறமையைக் காட்டுகின்றன என்று எழுதினார் ‘சுதந்திரன்' ஆசிரியர் கோவை மகேசன்.
டைரக்டர் வேதநாயகத்தைப் பாராட்டி வீரகேசரியும் (04.10.66) விமர்சனம் எழுதியது.
தம்பிஐயா தேவதாஸ் 59
"சேக்ஷ்பியரின் கதைகள் எதுவும் தமிழில் முழுப்படமாக வெளிவரவில்லை. அம்முயற்சியில் துணிந்து மேற்கொண்டு சரித்திரப்படமாகத் தயாரித்திருப்பதை நாம் பாராட்டாமல் இருக்க (փlգամՈՑl. .
"டைரக்ஷன் பொறுப்பை ஏற்றுள்ள வேதநாயகத்துக்கு இது முதற்படமாக இருந்த போதும் அனுபவப்பட்ட பலரோடு ஒப்பிடக்கூடிய முறையில் தனது கடமையைத் திறமையாகச் செய்துள்ளார். இலங்கைத் தமிழ்த்திரைப்படங்களை முன்னேற்றும் ஒரு பணிக்கு வேதநாயகம் தயார்படுத்தும் அம்சமாக இப்படம் எடுக்கப்பட்டதையிட்டு நாம் பாராட்டுவோம்." இப்படி டைரக்டர் வேதநாயகத்தை வீரகேசரி பாராட்டி எழுதியது.
‘கடமையின் எல்லை" திரைப்படம் 1966ஆம் ஆண்டு சிலோன் தியேட்டர்ஸின் திரையரங்குகளில் திரையிடப்பட்டது. வேதனை என்னவென்றால் படம் திரையிடப்படுவதற்கு முன்பே இயக்குநர் வேதநாயகம் இறந்துவிட்டார்.
எது எப்படியோ அரசகதையொன்றைப் பிரமாண்டமான படமாக்கி இலங்கையின் முதன்முதலில் திரையிட்டதன் மூலம் அவர் சாதனையாளர்களில் ஒருவராகவே கருதப்படுகிறார். இலங்கைத் திரையுலக முன்னோடிகளில் ஒருவராகக் கணிக்கப்படுகிறார்.
Page 33
9. ஜாபீர் ஏ. காதர்
பிரபலமான பல படங்களைத் தயாரித்த ஜாபீர் ஏகாதர்.
தமிழ் நாட்டில் 'பா' வரிசையில் பல தமிழ்ப் படங்களை உருவாக்கியவர் ஏ. பீம்சிங், பாசமலர், பாலும் பழமும், பாகப்பிரிவினை என்று அப்படவரிசை நீண்டு கொண்டே போகும். இதே பாணியை இலங்கையிலும் ஒருவர் கையாண்டார். 'சு வரிசையில் அச்சிங்களப்படங்களின் பெயர்கள் நீண்டு கொண்டே போகும். "சுரதலி, 'சுனிதா, 'சுஜாகே ரஹஸ்' என்பன அப் படங்களின் பெயர்கள். அப்பாணியைத் தெர்டர்ந்தவர்தான். பிரபல அரசியல்வாதியும் பிரபல ஹோட்டல்களின் உரிமை யாளருமான ஜாபீர் ஏ.காதர்,
Page 34
62 இலங்கைத்திரையுலக முன்னோடிகள்
'சிலோன் என்டர்ரெயின்மன்ட் நிறுவனம், "லிபேர்ட்டி சினிமா லிமிடெட் ஆகியவற்றின் தலைவரான ஜாபீர் ஏ.காதர் இலங்கையின் ஆரம்பகாலத் திரைப்பட இறக்குமதியாளர்களில் ஒருவராவார். 1936இல் மருதானையில் நியூ ஒலிம்பியா" தியேட்டரை ஆரம்பித்து வைத்தவர் என்.எச்.எம்.அப்துல் காதர். இவர்தான் ஜாபீர் ஏ காதர், மொஹிதீன் ஆகியோரின் தந்தை
unt6jTf.
1938இல் தந்தையின் மரணத்தை அடுத்து மேற்படி நிறுவனங்களின் உரிமை புத்திரர்களுக்கு வந்தது.
'சிலோன் என்ரர் ட்ெய்ன்மன்ட் நிறுவனத்தின் மூலம் 1946 இல் மருதானையில் சென்ரல் தியேட்டரை ஜாபீர் ஏ. காதர் ஆரம்பித்தார்.
இவர் தயாரித்த முதல் படமே சாதனைகளை ஏற்படுத்தியது. சுரதலி' என்ற அப்படத்தை இப்பொழுதும் சிங்கள ரசிகர்கள் நினைவில் வைத்திருக்கிறார்கள். அவர் தயாரித்த இரண்டாவது படமான 'சுனிதா' என்ற படமும் சாதனைகள் பலவற்றை உருவாக்கியது.
ஜாபீர் ஏகாதர் பல ஹோட்டல்களின் உரிமையாளர். பிரபல அரசியல் வாதி. பலசினிமாத் தியேட்டர்களுக்கு உரிமையாளர். 'சிலோன் என்ரரெயின்மன்ஸ்' என்ற நிறுவனம் மூலம் பல வெளிநாட்டுத் திரைப்படங்களை இறக்குமதி செய்து விநியோகித்தவர். 'சிலோன் தியேட்டர்ஸ்' "சினிமாஸ் லிமிடெட் போன்று இலங்கையில் சிறந்து விளங்கிய இன்னுமெரு சினிமா நிறுவனம்தான் 'சிலோன் என்ரரெயின்மன்ஸ்' ஆகும். இந்த நிறுவனத்தின் தலைவர்தான் ஜாபீர் ஏ காதர். தான் தயாரித்த படங்கள் ரசிகர்களின் மனதைக்கவர வேண்டும் என்பதற்காகப்
பிரபல தென்னிந்திய இயக்குநர்களான பி.வேம்பு, பி.நீலகண்டன்
தம்பிஐயா தேவதாஸ் 63
ஆகியோரைக் கொண்டு தன் படங்களை இயக்குவித்தார். அந்த அளவுக்குச் சினிமா தொழிலில் அவருக்கு அத்தனை ஆர்வமும் தொடர்பும் இருந்தன.
பி. நீலகண்டன் பல தமிழ்ப்படங்களை இயக்கியிருக்கிறார். ஆனால் இரண்டே இரண்டு சிங்களப்படங்களை மட்டுமே இயக்கி யிருக்கிறார். அந்த இரண்டு சிங்களப்படங்களையும் தயாரித்தவர் ஜாபீர் ஏகாதர்.
‘வாழ்விலே ஒருநாள்' என்பது சிறந்த தென்னிந்தியத் தமிழ்ப் படங்களில் ஒன்று. இப்படத்தை தழுவியே 'சுனிதா' என்ற சிங்களப்படம் உருவாக்கப்பட்டது. 'தாசி' என்ற தமிழ்ப்படம் அந்தக் காலத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. இப்படத்தை தழுவியே 'சுஜாகே ரஹஸ’ என்ற படம் உருவாக்கப்பட்டது.
இவை தமிழ்ப்படங்களைத் தழுவி எடுக்கப்பட்டாலும் அவை சிங்கள ரசிகர்களின் மனத்தைக் கவர்ந்தன என்று விமர்சகர்கள் சொல்லுவர். ஜாபீர் ஏகாதர் படங்களை இயக்க வில்லையே தவிர ரசிகர்களுக்கு எப்படியான படங்களைத் தரவேண்டும் என்று தீர்மானிப்பதில் சமர்த்தர்.
பொதுவாக ரசிகர்கள் விரும்பும் ஜனரஞ்சக அம்சங்களைத் தனது படத்தில் சேர்த்துக் கொள்வார்.
ஜாபீர் ஏ காதர் தயாரித்த முதலாவது படத்தின் பெயர் ‘சுரத்தலி' என்பதாகும். 1956ஆம் ஆண்டு வெளிவந்த இப் படத்தைப் பழம்பெரும் தென்னிந்திய இயக்குநரான கே. வேம்பு நெறியாண்டார். ஜாபீர் ஏ காதர் தயாரித்த இரண்டாவது படம் பொருளாதார ரீதியில் பெருவெற்றி பெற்றது. 'சுனித்தா' என்ற அப்படத்தைப் பிரபல தமிழ் இயக்குநர் பி. நீலகண்டன் நெறி யாண்டார். ஜாபீர் ஏ காதர் தயாரித்த படங்களில் 'சுந்தர பிரிந்த'
Page 35
54 இலங்கைத் திரையுலக முன்னோடிகள்
(அழகிய மனைவி) 'சுஜாகே ரஹச (சுஜாவின் ரகசியம்) போன்ற படங்களும் பொருளாதார ரீதியில் வெற்றிப் படங்களாகும்.
இலங்கைத் திரை உலகில் தயாரிப்பிலும், விநியோகத்திலும் பெயர்பெற்ற ஜாபீர் ஏ காதர் ஹோட்டல் துறையிலும் புகழ் பெற்றார். திரைப்படத்துறை மூலம் புகழ்பெற்ற போது மக்களுக்கு அறிமுகமான இவர், பின்னாளில் பிரபல அரசியல் வாதியாகவும் விளங்கினார். நீண்டகாலம் கொழும்பு மத்திய தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராகக் கடமையாற்றினார்.
10. லெனின் மொறாயஸ்
"யார் அவள் என்ற தமிழ்த் திரைப்படத்தையும் பல சிங்களப் படங்களையும் இயக்கிய லெனின் மொறாயஸ்,
Page 36
S6 இலங்கைத்திரையுலக முன்னோடிகள்
மேடைநாடக உலகிலிருந்து சினிமா உலகத்திற்குள் புகுந்த பலர், பின்னாளில் பிரபலமான சினிமா நெறியாளர்களாக விளங்கியிருக்கிறார்கள். கே. பாலசந்தரை இதற்கு நல்ல உதாரண மாகக் காட்டலாம். இவரைப் போல் இலங்கையில் மேடை நாடகத்தில் சிறந்து விளங்கிய தமிழர் ஒருவர் பின் நாளில் சிங்களத்திரையுலகில் பிரபலமான இயக்குநராக விளங்கினார். அவர் சினிமா உலகில் ஒப்பனையாளராகப் புகுந்து ஒளிப்பதி வாளராக வளர்ந்து இயக்குநராக உயர்ந்தவர். அவர் தான் லெனின் மொறாயஸ்.
இவர் சிங்களச் சினிமா உலகின் ஜனரஞ்சகமான இயக்குநர் என்றே சொல்லி விடலாம். அந்த அளவுக்குச் சிங்கள சினிமா ரசிகர்களின் மனத்தில் நிறைந்து நின்றவர். சில காலம் சிங்களச் சினிமா உலகை ஆட்சி செய்தவர்.
சினிமா மோகம் காரணமாக 1955இல் இலங்கையிலிருந்து இந்தியாவுக்குச் சென்றவர் லெனின் மொறாயஸ், அங்கு சென்னை வாஹினி ஸ்ரூடியோவில் ஒப்பனைக் கலைஞராகப் பயிற்சி பெற்றார். இரண்டு வருடங்களின் பின் விசாப் பிரச்சினை காரணமாக மீண்டும் இலங்கை திரும்பிய லெனின், பிரேம்நாத் மொறாயஸின் உதவியுடன் சிலோன் ஸ்டூடியோவில் சேர்ந்து கொண்டார். அங்கு உதவி ஒளிப்பதிவாளர் பதவி கிடைத்தது. அவ்வாறு 10 படங்களுக்கு உதவி ஒளிப்பதிவாளராக கடமை யாற்றினார். இந்த அனுபவம் அவரைப் பிரதான ஒளிப்பதிவாளர் பதவிக்கு உயர்த்தியது. "சித்தக மஹிம' (உள்ளத்தின் பெறுமதி) என்ற படத்தில் மூலம் பிரதான ஒளிப்பதிவாளராக உயர்ந்தார். 1986ஆம் ஆண்டு அவர் நெறியாளராகவும் உயர்ந்து விட்டார். 'கற்பகம்' என்ற படத்தைத் தழுவி எடுக்கப்பட்ட "சுதுதுவ' என்ற படத்துக்கு ராஜா ஜோகவாவுடன் சேர்ந்து இணை இயக்குநராகக் கடமையாற்றினார்.
S.
தம்பிஐயா தேவதாஸ்
(g 1.5L) ’ușoļuđússĩışılsēs) oặtīrīITổ qihollo ožysourilo)||19|59||G. qis@sonusgyn aero spoluo Q& !oğ-ırıristnosť úlois ,llonsko sum, mữomẽ củsmuấunto logosolo
Page 37
68 இலங்கைத்திரையுலக முன்னோடிகள்
1969ஆம் ஆண்டு 'சுரயன்கேத் சூரயா' என்ற படத்தை லெனின் மொறாயஸ் முதன் முதலாகத் தனித்துநின்று இயக்கினார். 'இருவல்லவர்கள்' என்ற தமிழ்ப் படத்தைத் தழுவி எடுக் கப்பட்டது. அடுத்தது 'அபிராஹச' என்ற படம்.
அது 1971இல் திரைக்கு வந்தது. தொடர்ந்து பலவெற்றிப் படங்களை இயக்கினார். லெனின் மொறாயஸ் ஆண்டுக்கு ஒன்றாக 13 சிங்களப் படங்களை இயக்கினார். 1978க்கும் 80க்கும் இடையில் இவரது படங்கள் பெரு வெற்றி பெற்றன.
"அது வேறு யாருமல்ல லெனின் மொறாயஸ் தான்' என்று விளம்பரங்களில் கூறுமளவுக்குப் புகழ் பெற்று விளங்கினார்.
லெனின் இயக்கும் படங்கள் வித்தியாசமான கருக்களைக் கொண்டு விளங்கின. காதல், வீரம், நகைச்சுவை என்று சுவை களுக்கு ஒன்றாக ஒவ்வொரு படங்களை வழங்கி வந்தார். அவரது பல படங்கள் தமிழ்ப்படங்களைத் தழுவி எடுக்கப்பட்டவை என்பது உண்மையே. ஆனாலும் அவை அனைத்தையும் தமிழ்ப் படங்களின் கார்பன் கொப்பி என்று சொல்லி விட முடியாது.
லெனின் இயக்கிய இறுதிப்படமான 'யுகயென் யுகயட்ட 1987இல் திரைக்கு வந்தது.
இவ்வாறான படங்களில் அதிகமானவை பொருளாதார ரீதியில் வெற்றி பெற்றன. லெனின் தனது படங்களில் ஜனரஞ்சகத் தன்மைகளை அதிகமாக சேர்ப்பதே அந்த வெற்றிக்கு காரண மாகும்.
லெனின் மொறாயஸ் தமிழர் என்பதால் தமிழ்ப் படத் தயாரிப்பு முயற்சியிலும் அவர் ஈடுபட்டார். 'யார் அவள்” என்ற படம் லெனின் இயக்கிய தமிழ்ப்படமாகும். 'அபிரஹச' என்ற சிங்களப் படத்தை டப் பண்ணியே அப்படி உருவாக்கினார்.
தம்பிஐயா தேவதாஸ் 69,
ஆனாலும் ஏ.ஈ.மனோகரனும் மாலினி பொன்சேகாவும் தோன்றும் ஒரு காட்சியை இப்படத்தில் செருகிவிட்டார்.
இது ஒரு டப் படம் என்பதால் லெனின் மொறாயஸ் அப்படத்துடன் திருப்திப்படவில்லை. அதனால்தான் 'நெஞ்சுக்குத் தெரியும்' என்ற முழுநீளத்தமிழ் படத்தை நெறியாண்டார். நல்லூர் மனோகரன் என்ற புதுமுகமும் ஹெலன்குமாரியும் இப்படத்தில் சோடியாக நடித்திருந்தார்கள். பல கலைஞர்கள் இப்படத்தைப் பார்த்திருக்கிறார்கள். ஹெந்தளை 'விஜயா ஸ்ரூடியோ’வில் வைக்கப்பட்டிருந்த இப்படம் 1983ஜூலைக் கலவரத்தின்போது தீக்கிரையாக்கப்பட்டது.
அத்திரைப்படம் திரைக்கு வந்திருந்தால் லெனின் மொறாயஸின் புகழ் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பெரிதாக வளர்ந்திருக்கும். இப்படிச் சிறந்து விளங்கிய லெனின் மொறாயஸ0க்குக் கடைசி காலத்தில் படங்கள் கிடைக்கவில்லை. 'ஹிதமிதுறா என்ற படம் 1978இல் வெளிவந்தது. இவர் இயக்கிய கடைசிப்படம் 1987இல் திரைக்கு வந்தது.
1969 முதல் வருடத்துக்கு ஒரு சிங்களப் படத்தை வழங்கி வந்த லெனின், தொடர்ந்து 9 வருடங்கள் எந்தப்படத்திலும் தொடர்பு இன்றி இருந்தார். இதைத்தான் திரை உலகத்தினர் துரதிஷ்டம் என்கிறார்கள் போலும்
பொதுவாக லெனின் மொறாயஸ் தனது படங்களுக்கான திரைக்கதை வசனத்தை ஆங்கிலத்தில் தான் எழுதி வைப்பாராம். எஸ்.ஏ.அழகேசன், ஒகஸ்டின் விநாயகரத்னம், தர்மசிறி கமகே போன்ற எழுத்தாளர்கள் அவற்றை சிங்களத்தில் மொழிபெயர்ப் பார்களாம். அதனால் தான் லெனின் மொறாயஸின் அனைத்துப் படங்களிலும் எஸ்.ஏ.அழகேசன் உதவி நெறியாளராகக் கடமையாற்றியிருக்கிறார்.
Page 38
ΤΟ இலங்கைத்திரையுலக முன்னோடிகள்
இவை எல்லாவற்றையும் விட லெனின் ஒரு சிறந்த ஒளிப்பதிவாளருமாவார். நீல் ரூபசிங்க இயக்கிய 'தெங்மத்தகத' (இப்பொழுது நினைவிருக்கிறதா? ) "ஹதறதெனாம சூரயோ' (நால்வரும் வீரர்கள்) போன்ற படங்களின் வெற்றிக்கு லெனினின் ஒளிப்பதிவும் முக்கிய காரணம் என்று விமர்சகர்கள் குறிப்பிடுவர்.
சிங்களத் திரையுலகின் நடிகர் காமினி பொன்சேகாவை பிரபல நடிகராக்கியவர் லெனின் மொறாயஸ் என்றே சொல்லிவிடலாம். ஏனெனில் லெனின் இயக்கிய பெரும்பாலான படங்களில் காமினி பொன்சேகா கதாநாயகனாக நடித்தார். காமினி பொன்சேகா மட்டுமல்லர். பல கலைஞர்கள் சினிமா உலகில் நிலைத்து நிற்க வழிகாட்டியவர் லெனின் மொறாயஸ்.
கீதா குமாரசிங்காவைத் திரை உலகிற்கு அறிமுகப் படுத்தினார் விஜயகுமாரதுங்காவை கதாநாயகனாக்கினார். தமிழ் நடிகையான ஹெலன்குமாரிக்குச் சிங்களப்படங்களில் அதிக சந்தர்ப்பங்களை வழங்கினார்.
1995-5-28 அன்று லெனின் மொறாயஸ் காலமானார். ஒரு 18 வருடகால இடைவெளியில் சிங்களத்திரையுலகில் நெறியாள்கைத் துறையில் கொடிகட்டிப் பறந்தவர் இந்த லெனின் மொறாயஸ் என் தமிழர்
11. ஜோ தேவானந்
பல தமிழ் சிங்களத்திரைப்படங்களை இயக்கிய ஜோதேவானந்,
யாழ்ப்பாணப் பாடசாலை ஒன்றிலே ஆசிரியராகக் கடமையாற்றிய ஓர் இளைஞருக்கு சினிமா மீது அதிக ஆர்வம். படம் பார்ப்பதில் அல்ல, படங்களை உருவாக்க வேண்டும் என்பதே அவரின் ஆர்வம். பின்னாளில் அப்பாடசாலைக் குள்ளேயே ஒரு தமிழ்ப்படத்தைத் தயாரித்துவிட்டார். அது மட்டுமல்ல ஆசிரியத் தொழிலை ராஜினாமா செய்து விட்டுக் கொழும்புக்கு வந்து பல சிங்களப் படங்களை இயக்கினார். தென்னிந்தியக் கலைஞர்கள் பலரை இலங்கைக்கு அழைத்து வந்து இலங்கையிலேயே தமிழ்ப் படமொன்றையும் தயாரித்துவிட்டார். தொடர்ந்து இரண்டாவது கூட்டுத்தயாரிப்பை ஆரம்பித்த போது, 1983 ஆம் ஆண்டு ஜூலைக் கலவரம் வந்தது இயக்குநர்
Page 39
72 இலங்கைத் திரையுலக முன்னோடிகள்
யாழ்ப்பாணம் சென்று மீண்டும் ஆசிரியத் தொழிலை ஆரம்பித்தார். அங்கும் அவருக்கு நிம்மதி கிடைக்கவில்லை. குடும்பத்தாருடன் வெளிநாட்டுக்கு இடம் பெயர்ந்தார். இப் பொழுது அவர் அமெரிக்காவில் வாழுகிறார்.
யார் அவர்? அந்த இயக்குநரின் பெயர்தான் ஜோதேவானந், அவர் யாழ்ப்பாணப் பாடசாலைக்குள் தயாரித்த படத்தின் பெயர்தான் "பாசநிலா" தென்னிந்தியக் கலைஞர்களை இலங்கைக்கு அழைத்து வந்து உருவாக்கிய படத்தின் பெயர்தான் "இரத்தத்தின் இரத்தமே."
ஜோதேவானந் சாவகச்சேரியில் இருந்ததேவேந்திரா" என்ற சினிமாத் தியேட்டர் உரிமையாளரின் மகன். வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் விஞ்ஞான ஆசிரியராகக் கடமை யாற்றினார். அது 1965 ஆம் ஆண்டு. இந்தக் காலத்தில் தான் யாழ்ப்பாணத்திலேயே தமிழ்த்திரைப் படம் தயாரிக்க வேண்டும் என்ற ஆசை ஜோதேவானந்துக்கு வந்தது. சக ஆசிரியரான தேவகுலதுங்கத்தைக் கொண்டு ஒரு திரைக்கதை எழுதிவிட்டார்.
அப்பொழுது ஏ. ஈ. மனோகரன் பாடசாலை மானவன். அவரும் யாழ்ப்பாணக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார், ஏ.ஈ.மனோகரன், ஜயேந்திரா போன்றோருடன் யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரி மாணவர் சிலர், செல்வி ஐடா துரைசிங்கம் போன்றோர் நடிகர்களாகத் தேர்வு செய்யப்பட்டார்கள், பலாலி ஆசிரியக் கலாசாலையில் மாணவனாக இருந்த எம்.எச்.ஹக் இப்படத்துக்கான இசையமைப்பைக் கவனித்தார்
யாழ்ப்பாணப் பாடசாலைகள், பேராதனைப் பூங்கா, தெஹிவளை மிருகக்காட்சிச்சாலை, புங்குடுதீவையும் வேலணை யையும் இணைக்கும் கடற்பாதை போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடத்தினார்கள். 18 மில்லி மீட்டரில் ரெக்னிக் கலரில் உருவான
தம்பிஐயா தேவதாஸ்
;
Page 40
74 இலங்கைத் திரையுலக முன்னோடிகள்
இப்படம் மாணவர்கள் அனைவரும் பார்க்கத் தக்க வகையில் கதையை அமைத்திருந்தார் தேவானந்.
1966ஆம் ஆண்டில் 'பாசநிலா" படத்தை திரைக்குக் கொண்டு வந்தார் தேவானந், ஒரேயொரு பிரதி என்பதால் தியேட்டர்களில் திரையிடமுடியவில்லை. யாழ்ப்பாண நகரமண்டபம், கொழும்பு சரஸ்வதி மண்டபம், யாழ்ப்பாணப் பாடசாலைகள் போன்ற இடங்களிலேயே இத்திரைப்படம் காண்பிக்கப்பட்டது.
லண்டனில் வெஸ்ற்மினிஸ்ரர் சென்றல் ஹோலில் திரையிடப் பட்ட முதலாவது இலங்கைத் தமிழ்ப்படம் பாசநிலா தான். 'பாசநிலா திரைப்படம் தயாரித்ததன் மூலம் நீண்ட திரையுலக அனுபவத்தை ஜோதேவானந்பெற்றுக்கொண்டார். தனது ஆசிரிய வேலையை ராஜினாமா செய்தார். கொழும்பு நோக்கிப் புறப்பட்டார்.
சிங்களப் படமொன்றைத் தயாரிக்கும் முயற்சியில் ஈடு பட்டார். கீதா' என்ற படத்தை முதலில் உருவாக்கினார். றோய்த சில்வாவையும் சுமணா அமரசிங்காவையும் தன் படத்தில் அறிமுகப்படுத்தினார். படம் பெருவெற்றிபெற்றது. தொடர்ந்து பல
சிங்களப் படங்களை நெறியாண்டார்.
ஜோ தேவானந் இன்னும் ஒரு படி மேலே ஏற முயன்றார். பைலட் பிரேம்நாத்" என்ற படத்துக்கான படப்பிடிப்பை இலங்கையில் வைத்து கொண்டார்கள். அப்படத்தின் இணை இயக்குநராக இருந்து அத்திரைப்பட வளர்ச்சியில் உதவினார் தேவானந்.
அது 1980ஆம் ஆண்டு. தேவானந் இன்னுமொரு படி மேலேறினார். தென்னிந்தியக் கலைஞர்களை இலங்கைக்கு அழைத்து வந்து ஒரு படத்தைத் தயாரித்தார் பிறைட்டன் அரிய ரெத்தினம். இப்படத்தை இயக்கும் பொறுப்பு ஜோ தேவானந்துக்கு
தம்பிஐயா தேவதாஸ் 75
வழங்கப்பட்டது. அப்படத்தை விறுவிறுப்பாக இயக்கினார் ஜோ.தேவானந், படத்துக்கு 'இரத்தத்தின் இரத்தமே' என்று பெயர் சூட்டப்பட்டது. ஜெய்சங்கர், ஜெயச்சந்திரன், ராதிகா, அசோகன், நாகேஷ் ஆகியோருக்கு முக்கிய பாத்திரங்கள் வழங்கப்பட்டன. கவர்ச்சிப் பாத்திரங்கள் சிங்கள நடிகைகளுக்கு வழங்கப்பட்டன. கீதா குமாரசிங்காவும் அனோஜா வீரசிங்காவும் கவர்ச்சியை மிக அதிகமாகவே காட்டினர்.
படம் இலங்கையில் 100 நாட்களைத் தாண்டி ஓடியது. இந்தியாவில் திரையிடப்பட்ட ஒரேயொரு இலங்கைப்படமும் இதுவே. 1983 ஜூலை கலவரம் வந்தது. இலங்கையில் சினிமாக் கலை வீழ்ந்தது. சினிமாவில் ஈடுபட்ட பல தமிழ்க்கலைஞர்கள் இடம்பெயர்ந்தார்கள். ஜோதேவானந் யாழ்ப்பாணம் சென்று சென் ஜோன்ஸ் கல்லூரியில் ஆசிரியராகச் சேர்ந்து கொண்டார்.
யாழ்ப்பாணம் சுண்டிக்குளியில் இருந்த அவர்களது வீட்டுக்கு நான் அடிக்கடி செல்வேன். தன் சினிமா அனுபவங்களை எல்லாம் அழகாகச் சொல்வார். அப்பொழுது பாசநிலா" திரைப்படத்தின் படச்சுருளை அழகாக அடுக்கி வைத்திருந்தார். அவர் சொன்னார். ‘நான் பல சிங்கள - தமிழ்ப் படங்களை இயக்கி விட்டேன். ஆனால் இந்தப் பாசநிலா" படத்தில் கிடைத்தது போன்ற ஆத்ம திருப்தி வேறு எதிலும் கிடைக்கவில்லை. எனது மூத்த பிள்ளை இந்தப் 'பாசநிலா பட ரீல்கள் தான்' என்று மகிழ்ந்தார்.
அந்த பட ரீல்களை கொழும்புக்கு கொண்டு வரச் சொன்னேன். கொண்டு வருவதாகச் சொன்னார்.
ஜோதேவானந் இப்பொழுது அமெரிக்காவில் வாழ்கிறார். நிச்சயமாகப் பாசநிலா பட நீலைக் கொழும்புக்கு கொண்டு வர வசதி ஏற்பட்டிருக்காது. இப்பொழுது பாசநிலா பட ஹீல்கள்
Page 41
76 இலங்கைத்திரையுலக முன்னோடிகள்
எங்கிருக்கின்றன என்று ஜோதேவானந்துக்குந் தெரியாமல் இருக்கலாம்.
ஜோதேவானந் 2001 ஜூலை மாதம் மீண்டும் இலங்கைக்கு வந்து சென்றார். 'பாசநிலா பட ரீல் பற்றி விசாரித்தேன். அவற்றை யாழ்ப்பாணத்தில் பக்கத்து வீட்டுக்காரரிடம் கொடுத்து விட்டு வந்தாராம். ஆனால் பக்கத்து வீட்டுக்காரர்கள் இப்பொழுது சடை போய்விட்டார்களாம். படம் எங்கே எனத் தெரியாதாம்.
12. ஏ.வீ.எம். வாசகம்
பிரபல ஒளிப்பதிவாளர் ஏ.வீ.எம். வாசகம்
ஒலியும் ஒளியும் சேர்த்து உருவாவது சினிமாக்கலை, கமரா என்ற தூரிகையினால் எழுதப்படும் ஓவியந்தான் சினிமா என்பார்கள். எனவே ஒளிப்பதிவு என்பது சினிமாவில் பிரதான அம்சமாகும். இலங்கைச் சினிமாவில் ஆரம்ப காலத்தில் சில தமிழர்கள் இந்த ஒளிப்பதிவுத் துறையில் சிறந்து விளங்கினார்கள் அவர்களில் ஒருவர் தான் ஏ.வீம்,எம். வாசகம்.
Page 42
S. இலங்கைத்திரையுலக முன்னோடிகள்
யாழ் புங்குடுதீவைச் சேர்ந்த ஏ.வீ.எம். வாசகம் இந்தியா, சிங்கப்பூர், ஐரோப்பா ஆகிய இடங்களில் ஒளிப்புதிவுத்துறை சம்பந்தமாகப் பயிற்சி பெற்றவர். இலங்கையின் முதலாவது வர்ணப்படத்தை எடுத்தவரும் ஏ.வீ.எம். வாசகம் தான்.
பிற்காலத்தில் சிங்களத்திரையுலகில் இலங்கைத் தமிழ்பேசும் கலைஞர்கள் பலர் இந்த ஒளிப்பதிவுத் துறையில் ஈடுபட்டாலும் அவர்களுக்கெல்லாம் வழிகாட்டியாக திகழ்ந்தவர் இந்த ஏ.வீ.எம். வாசகம், 1959ஆம் ஆண்டு வெளி வந்த ஒரு சிங்களப் படத்தின் பெயர் 'பூநீ 29'ே என்பதாகும். இத் திரைப்படத்தை பிரேம்நாத் மொறாயஸ் என்ற தமிழர் இயக்கினார். இவரது படத்துக்கே ஏ.வீ.எம். வாசகம் முதன் முதலில் ஒளிப்பதிவு செய்தார்.
இதற்கு முன்பு வெளிவந்த சிங்களப்படங்கள் அனைத்திலும் இந்தியத் தமிழர்களே பெரும்பாலும் ஒளிப்பதிவாளர்களாகக்
கடமையாற்றினார்கள்.
அதற்குப் பின் பல இலங்கைத் தமிழர்கள் ஒளிப்பதிவுத் துறையில் ஈடுபட்டாலும் ஏ.வீ.எம். வாசகமே முதன்மை யானவரும் முக்கியமானவருமாவார்.
"சினிமாஸ்" நிறுவன உரிமையாளர் கே. குணரத்தினம், அதிகமான சிங்களப் படங்களைத் தயாரித்தவர். தனது படங் களுக்கான இயக்குனர்களையும் ஒளிப்பதிவாளர்களையும் மாற்றிக் கொண்டே இருப்பார். 1965ஆம் ஆண்டு. அவர் தயாரித்த 'சண்டியா" என்ற படத்தை ஒளிப்பதிவு செய்யும் பொறுப்பை ஏ.வீ.எம். வாசகத்திடம் வழங்கினார்.
சிங்களத் திரையுலகில் பெருவெற்றி பெற்ற படங்களில் ஒன்று 'அல்லப்பு ஹெதர (அடுத்த வீடு) என்ற படமாகும். இப்படத்தை இயக்கியவர் எம். மஸ்தான். ஒளிப்பதிவு செய்தவர் ஏ.வீ.எம். வாசகம். அந்த ஒளிப்பதிவு இந்திய ஒளிப்பதிவாளர்களது
தம்பிஐயா தேவதாஸ் פ"ז
器
f
Page 43
8O இலங்கைத்திரையுலக முன்னோடிகள்
ஒளிப்பதிவுக்கு சமமானதாக அமைந்திருந்தது. சிகிரி காசியப்ப" என்பது பிரமாண்டமான சரித்திரப் படமாகும். இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவையும் விலியம் ஒலம்ஸ் என்பவருடன் ஏ.வீ.எம். வாசகமே சேர்ந்து செய்தார்.
வாசகத்தின் ஒளிப்பதிவில் பயிற்சி பெற்றவர் வீ. வாம தேவன், வாசகமும் வாமதேவனும் 'ஆத்மபூஜா' என்ற படத்தில் ஒளிப்பதிவு செய்தார்கள். இத்திரைப்படத்தை எம். மஸ்தான் நெறியாழ்கை செய்ய, கே. குணரெத்தினம் தயாரித்தார்.
"தேவத்த' என்ற படமும் சிங்கள ரசிகர்கள் மத்தியில் பிரபல்யம் பெற்றது. அத்திரைப்படத்தின் ஒளிப்பதிவும் அதன் பிரபலத்துக்கு ஒரு காரணமாகும். அத்திரைப்படத்தின் பிரதான ஒளிப்பதிவாளர் ஏ.வீ.எம். வாசகமே.
பின்னாளில் சிறந்த ஒளிப்பதிவாளராக விளங்கியவர் வீ. வாமதேவன். வாமதேவனும் பல சிங்களப்படங்களுக்கு ஒளிப் பதிவு செய்திருக்கிறார்.
இந்த வாமதேவன் ஏ.வீ.எம். வாசகத்திடம் பயிற்சி பெற்றவர் என்று கூறுவதில் மகிழ்ச்சியடைகிறார்.
சிங்கள சினிமாவின் ஆரம்பகால ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான ஏ.வீ.எம். வாசகம், பல சிங்களத்திரைப் படங்களுக்கு ஒளிப்பதிவுசெய்துவிட்டார். ஆனால் ஒரேயொரு தமிழ்படத்துக்கு மட்டுமே ஒளிப்பதிவுசெய்துள்ளார். இலங்கையின் தனித்துவத்தை எடுத்துக் கூறும் படங்களாக சில தமிழ்ப்படங்களே இலங்கையின் உருவாகியிருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் 'வாடைக்காற்று' வடபகுதி. மீனவர்களின் வாழ்க்கையைப் பற்றி "செங்கை ஆழியான் எழுதிய நாவல்தான் 'வாடைக்காற்று" ஆகும். அத்திரைப் படத்துக்காக கடற்கரையிலும் நடுக்கடலிலும் படப்பிடிப்புகள் நடைபெற வேண்டியிருந்தது.
தம்பிஐயா தேவதாஸ் 8.
அதற்கு பெருத்தமான ஒளிப்பதிவாளரைத் தேடிய போதே ஏ.வி. எம். வாசசத்தை தெரிவு செய்தார்கள். பல மாதங்கள் மன்னார் பேசாலையில் தங்கியிருந்து ஒளிப்பதிவு செய்தார்கள். ஒருநாள் ஒளிப்பதிவு செய்த படச்சுருள்களை அன்று மாலை கொழும்புக்கு அனுப்பி டெவலப் செய்வார்கள். அடுத்த நாட் காலை, டெவலப் செய்த படச்சுருளை மன்னார் அயின் தியேட்டரில் போட்டுப் பார்ப்பார்கள். படம் எல்லாமே சரியாக இருக்கும். எனவே அடுத்த காட்சிகளை ஏ.வீ.எம். வாசகம் ஒளிப்பதிவு செய்யத் தொடங்குவார். இப்படி வளர்ந்தது தான் 'வாடைக்காற்று'. அத்திரைப்படத்தின் சிறப்பம்சங்களில் ஒன்றாக படப்பிடிப்பும் அமைந்திருந்தது என்று பல விமர்சகர்களும் குறிப்பிட்டிருந்தனர்.
இலங்கையின் சீரற்ற நிலமை காரணமாக சினிமாக் கலையில் ஆர்வத்துடன் ஈடுபட்ட இலங்கைத் தமிழ்க் கலைஞர்கள் பலரும், பல நாடுகளுக்கும் புலம் பெயர்ந்தனர். ஆனாலும் அந்த நாடுகளிலும் அவர்கள் தங்களுக்கு அறிமுகமான கலைகளில் ஈடுபடத் தவறவில்லை. ஏ.வீ.எம். வாசகமும் அப்படித்தான் வாழுகிறார்.
அவர் இப்பொழுது கனடாவில் வாழுகிறார். அங்கும் தனக்கு அறிமுகமாக ஒளிப்பதிவுத் துறையில் ஈடுபடுகிறார்.
2000ஆம் ஆண்டளவில் கனடாவில் வாழும் தமிழர் ஒருவர் ஆங்கிலம் படமொன்றைத் தயாரித்தார். அத்திரைப்படத்துக்கு இந்த வாசகமே ஒளிப்பதிவு செய்திருந்தார். அத்திரைப்படம் உலகம் எங்கும் திரையிடப்பட்டது. அதன் நேர்த்தியான ஒளிப்பதிவையிட்டு ரசிகர்கள் பலர் பாராட்டுத் தெரிவித்தனர். அப்பொழுது இலங்கைக்குள் மட்டும் மட்டுப்பட்டிருந்த ஏ.வி.எம். வாசகத்தின் திறமை இப்பொழுது உலகம் எங்கும் பரவியிருக்கிறது.
Page 44
82 இலங்கைத்திரையுலக முன்னோடிகள்
ஏ.வீ.எம். வாசகம் இப்பொழுது கனடாவில் வாழ்வதால் அதிகமான படங்களுக்கு ஒளிப்பதிவு செய்ய வாய்ப்பில்லை.
ஆனாலும் ஒரு காலத்தில் இலங்கைத் திரையுலகில் ஒளிப்பதிவுத் துறையில் பெயர் பெற்று விளங்கிய ஏ.வீ.எம். வாசகம், பல ஒளிப்பதிவாளர்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்தவர். பலராலும் விதந்து பேசப்பட்டவர்.
அந்த வகையில் ஏ.வீ.எம். வாசகமும் இலங்கைத் திரையுலக முன்னோடிகளில் ஒருவரே.
13. ஹெலன்குமாரி
பிரபல தமிழ் நடிகை ஹெலன் குமாரி
சினிமா என்ற கலை, உலகம் எங்கும் பரவிவிட்டது. அதற்கு நூறு வயதாகிவிட்டது. இந்த நூறு வருடங்களுக்குள்ளும் எத்தனை சவால்கள், எத்தனை பிரச்சனைகள்? ஆரம்பகாலத்தில் திரைப் படங்களில் பெண்கள் நடிக்க முன் வரவில்லையாம். இலங்கை யிலும் அவ்வாறான நிலைதான் இருந்தது.
சிங்கள நடிகைகள் சிங்களப்படங்களில் நடிக்கப் பயந் தார்கள். தமிழ் நடிகைகள் தமிழ்ப்படங்களில் நடிக்கப் பயந்தார்கள். அதனால்தான் முதலாவது சிங்களப்படத்தில் 'ருக்மணிதேவி என்ற தமிழ் நடிகையை ஒப்பந்தம் செய்தார்கள். முதலாவது தமிழ்ப்படமான 'தோட்டக்காரி'யில் சேபாலிகா ரூத் என்ற சிங்கள நடிகையை கதாநாயகியாகச் சேர்த்துக் கொண்டார்கள். பிற்காலத் திலேயே நடிகைகள் படங்களில் நடிக்கப் பயமின்றி முன் வந்தார்கள். ஆரம்பத்தில் இலங்கையின் உருவான தமிழ்ப் படங்களில் நடிக்க முன் வந்த நடிகைகளில் இருவர் முக்கியமான வர்கள். ஒருவர் சந்திரகலா, மற்றவர் ஹெலன்குமாரி.
ஹெலன் எசுத்தர்' என்ற இயற் பெயர் கொண்ட ஹெலன் குமாரி கொழும்பு - 13இல் ராஜேந்திரம் மாஸ்டரிடம்
Page 45
84 இலங்கைத் திரையுலக முன்னோடிகள்
'மனோரஞ்சித கானசபா' என்ற நாடக மன்றத்தில் கலை பயின்றவர். நடனம், நாடகம் போன்றவற்றில் பயிற்சி பெற்றவர். முதன் முதலில் நடன நடிகையாகவே சிங்களத் திரைப்படங்களில் அறிமுகமானார். எம்.வீ. பாலனின் சிபார்சில் ஒக்கொம ஹறி" என்ற படத்தில் நடனமாடியதன் மூலம் சினிமா உலகத்துக்குள் நுழைந்தவர்.
தொடர்ந்து பல படங்களில் நடனமாடியவர். ஹிந்திப் படங்களில் ஹெலன் என்ற நடிகை நடனமாடிப் பிரபலம் பெற்றது போல், இந்த தமிழ்க் ஹெலன் சிங்களத் திரைப்படங்களில் நடனமாடிப் புகழ் பெற்றார். பின்பு துனைப் பாத்திரங்களில் தோன்றி நடித்தார். அதேவேளை தமிழ்நாடகங்களிலும் நடித்தார். ஹெலன்குமாரியின் ஆற்றல் காரணமாகப் பல தமிழ்ப்படங்களில் கதாநாயகியாகவே வாய்ப்புக் கிடைத்தது. 'மஞ்சள் குங்குமம்' 'ஏமாளிகள்'தென்றலும் புயலும்'நெஞ்சுக்குத் தெரியும்' போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தார்.
இலங்கையின் ஐந்தாவது தமிழ்ப்படம் 'மஞ்சள் குங்குமம்" மிகவும் சிரமப்பட்டு உருவாக்கப்பட்டது. ஆரம்ப காலத் தமிழ்ப்படங்களில் இதுவும் ஒன்று. இரண்டு இளைஞர்கள் காதலிக்கும் ஒரு பெண்ணாக ஹெலன்குமாரி நடித்தார். ஹெலன்குமாரிக்கு அது முதற் தமிழ்ப்படமென்றாலும் சிறப்பாக நடித்தார். ஹெலன்குமாரிக்கு காதலர்களாக நடித்தஇருவரும் புகழ் பெற்ற நாடகநடிகர்கள். அவர்கள்தான்பூரீசங்கரும், உதயகுமாரும். இவர்களுக்கு இணையாக ஹெலன்குமாரியும் திறம்பட நடித்தார்.
ஹெலன்குமாரி கதாநாயகியாக நடித்த இன்னுமொரு படம் ஏமாளிகள் என்பதாகும். எஸ். ராமதாஸ் உருவாக்கிய இப் படத்தின் கதாநாயகன் என் சிவராம் ஆவார். அப்பொழுது சிவராம் சிறந்த நடிகர் என்று புகழப்பட்டவர். அவருக்கு ஈடுகொடுத்து ஹெலன்குமாரி நடித்தார்.
85
தம்பிஐயா தேவதாஸ்
(BALGI),
七星高官트官部主日長安u的性)國寺극1년 홍 역d"Dunst學역hmun的)長安&C폐8&i홍劇1nrnriuuag城
点的乐团与日日
Page 46
86 இலங்கைத்திரையுலக முன்னோடிகள்
டொக்டர் வேதநாயகம் தயாரித்த படத்தின் பெயர் ‘தென்றலும் புயலும் ஆகும். இப்படத்தில் இரண்டு கதாநாயகிகள். ஒரு ஜோடியாக ஹெலன்குமாரியும் சிவபாதவிருதையர் என்ற புது நடிகரும் தோன்றினர். ஹெலன்குமாரியின் நடிப்புக்கு முன்பு சிவபாதவிருதையரின் நடிப்பு எடுபடவில்லை என்று பத்திரிகைகள் எழுதின.
சிங்களத்திரையுலகின் புகழ்பெற்ற தமிழ் இயக்குநர் லெனின் மொறாயஸ் ஆவார். அவர் இயக்கிய முழு நீளத் தமிழ்ப்படம் 'நெஞ்சுக்குத் தெரியும்' என்பதாகும். இப்படத்திலும் கதாநாயகி ஹெலன் குமாரியே. படம் நன்றாக வளர்ந்து திரைக்கு வரத் தயாராக இருந்தபோது 1985ஆம் ஆண்டு ஜூலை கலவரம் வெடித்தது. ஹெந்தள விஜயா ஸ்ரூடியோவுக்குள் இருந்த பல சிங்கள - தமிழ்ப்படங்கள் எரிந்தன. 'நெஞ்சுக்குத் தெரியும் படமும் எரிந்து சாம்பலாகியது. அந்தத் திரைப்படம் தீ அரக்கர்களுக்கு இரை ஆகாமல் திரைக்கு வந்திருக்குமாயின் லெனின் மொறாயசின் நெறியாள்கையின் தரம் மட்டுமல்ல ஹெலன்குமாரியின் நடிப்புத் திறமையும் மேலும் பல படி உயர்ந்திருக்கும்.
இலங்கையில் சினிமாத் தயாரிப்புக்கள் குறைந்தன. தொலைக்காட்சி நாடகங்கள் பலவற்றில் ஹெலன்குமாரி நடிக்கத் தொடங்கினார். இலங்கையின் தனியார் தயாரித்த முதலாவது தொலைக்காட்சிப் படமான "ஆகாயப்பந்தலில் ஹெலன் குமாரியே கதாநாயகி. தமிழ் மேடை நாடங்கள் பலவற்றை ரூபவாகினி ரி.வி. நாடகமாகத் தயாரித்தது. ஹெலன்குமாரி தயாரித்த பல மேடை நாடகங்களும் தொலைக்காட்சி நாடக மாகின. அவற்றிலே ஹெலன்குமாரியே பிரதான பாத்திரமேற்றார்.
பிரபல தென்னிந்திய இயக்குனர் பூரீதர் தனது 'மோகனப் புன்னகை என்ற படத்தில் சிவாஜிகணேசனுடன் ஜோடியாக நடிக்க
தம்பிஐயா தேவதாஸ் 87
இலங்கை நடிகையொருவரைத் தேடி வந்தார். அந்த வாய்ப்பு ஹெலன்குமாரிக்கு கிடைக்கவிருந்தது. ஆனால் ஏதோ காரணத் தினால் அது தவறிவிட்டது. அந்த வாய்ப்பு, பின்பு சிங்களக் கவர்ச்சி நடிகை கீதா குமாரசிங்காவுக்கு கிடைத்தது. ஹெலன் குமாரிக்கு சிவாஜிகணேசனுடன் நடிக்கும் வாய்ப்புக் கிடைத் திருந்தால் அவரது புகழ் தமிழ் நாட்டிலும் பரவி இருக்கும்.
கொழும்பு-13, விவேகானந்த வீதி 10ஆம் இல்லத்தில் கணவர் நடிகர் ராஜசேகரனுடனும் இரண்டு பிள்ளைகளுடனும் அமைதியாக வாழ்ந்து வரும் ஹெலன்குமாரி, இப்பொழுது மேடை நாடகங்களில் அதிக கவனம் செலுத்துகிறார். கணவருடன் சேர்ந்து பல மேடை நாடகங்களைத் தயாரித்து நெறியாண்டு நடிக்கிறார்.
Page 47
14. ஜே.ஏ.வின்சென்ற்
பல தமிழ் சிங்களப் படங்களுக்கு ஆர்ட் டிறெக்டராகக் கடமையாற்றிய ஏ.ஜெ. வின்சென்ற்.
திரைப்படங்களில் கலை நிர்மாணம் (ART DIRECTION) என்பதும் முக்கியமான பணியாகும். ஒரு திரைப்படம் சிறந்து விளங்க வேண்டுமானால் அப்படத்தில் இடம்பெறும் காட்சிகள், அக்காட்சிகளில் உள்ளடக்கப்படும் அரங்கப் பொருட்கள், ஒவியங்கள், சிலைகள் என்பன எல்லாம் சிறந்த முறையில் அமையவேண்டும். ஸ்ரூடியோவுக்குள்ளேயே படம் பிடிக்கும் அந்தக்காலத்தில் இந்தக்கலை நிர்மாணம் என்பது முக்கியமான இடத்தைப் பெற்றது. அதனால் ஆர்ட் டைரக்டர்களுக்கும் அதிக மதிப்பு இருந்தது.
இலங்கை சினிமாவின் ஆரம்ப காலம் முதல் 100 படங்களுக்குமேல் ஆர்ட் டைரக்டராகவும் 500 படங்களுக்குமேல் சினிமா போஸ்டர் வரைந்த கலைஞராகவும் விளங்கிய ஒரு தமிழ்க் கலைஞர் இன்றும் தமிழ் நாட்டில் கலைப்பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அவர்தான் ஜோசப் அன்ரனி வின்ஸென்ற் என்னும் முழுப்பெயரையுடைய ஆர்ட் டைரக்டர் ஜே.ஏ.வின்சன்ற்.
1926 ஆம் ஆண்டு தூத்துக்குடியில் பிறந்த வின்சென்ற் 1950 ஆம் ஆண்டளவில் இலங்கையில் குடியேறியவுர். சிங்களப்
Page 48
9 O இலங்கைத்திரையுலக முன்னோடிகள்
படங்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட காலத்திலேயே ஆர்ட் டைரக்டராகப் பணியாற்றத் தொடங்கியவர்.
1945ஆம் ஆண்டு காலப்பகுதியில் கொடிகட்டிப்பறந்த ஜூபிட்டர் சினிமா நிறுவனத்தின் அதிபர் எம்.சோமசுந்தரத்திடம் - இளைஞனான வின்சென்ற் வேலை கேட்ட போது அவர் தன் உதவியாளரிடம் 'இந்தப் பையனுக்கு டிக்கட் எடுத்துக் கொடுத்து ஊருக்கு ரயில் ஏற்றிவிடு' என்றாராம்.
பையன் விடாப்பிடியாக நின்றான். மனம் இரங்கிய சோமசுந்தரம் தனது பட நிறுவனத்தின் கலை நிர்மாண இயக்குநர் சாந்தாராமிடம் போய்ச் சேருமாறு கூறிவிட்டார்.
அங்குதான் தன் கலைப்பணியின் ஆரம்பப் பயிற்சியைப் பெற்றுக் கொண்டார் வின்சென்ற். கலைப்பணி செய்ய இலங்கை வந்த வின்சென்ற் பல சிங்களப்படங்களுக்கும் டாக்ஷி டிரைவர், மஞ்சள் குங்குமம், கடமையின் எல்லை போன்ற இலங்கைத் தமிழ் படங்களுக்கும் கலை நிர்மாண இயக்குநராகப் பணியாற்றினார்.
ஜூபிட்டர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு முக்கிய தூண்களாக விளங்கிய ஏ.எஸ்.ஏ.சாமி, சுந்தர்லால், நட்கர்னி, ராம்நாத், சேகர், ஏ.ஜே.டொமினிக், சாந்தாராம், எம். மஸ்தான் போன்றோருடன் இந்த இளைஞர் ஏ.ஜே.வின்சென்டும் கைகோர்த்து நின்றார்.
1949ஆம் ஆண்டு இவர் தனது பெற்றோர்களைப் பார்க்க
இலங்கைக்கு வந்த பின்பு இந்தியாவுக்குத் திரும்பவில்லை. இலங்கையிலேயே சிங்களத் திரைப்படக் கலைஞர்களுடன் ஒருவராக ஐக்கியமாகிவிட்டார்.
இதற்கு முன்பும் இந்தியாவில் (1947இல்) சிங்களப் படங்களில் பணியாற்றிய அனுபவம் வின்சென்ருக்கு உண்டு.
தம்பிஐயா தேவதாஸ் 91
கோவை சென்றல் ஸ்ரூடியோவில் 'அசோகமாலா' சிங்களப் படத்தில் இவரது பணி ஆரம்பமாகியது.
1956ஆம் ஆண்டுக்குப்பின் இலங்கையில் முதன் முதலில் இரண்டு ஸ்ரூடியோக்கள் ஆரம்பிக்கப்பட்டன. சிங்களப்படங்கள் அனைத்தும் இந்த ஸ்ரூடியோவுக்குள்ளேயே தயாரிக்கப்பட்டன. இலங்கையில் இருந்து இந்தியாவுக்குச் சென்று படங்கள் தயாரிப்பதும் போஸ்டர்கள் அச்சிடுவதும் நின்றுபோயின.
இப்படிப்பட்ட ஒரு காலகட்டத்தில் சிங்களத் திரைப்பட வளர்ச்சியில் எம். மஸ்தான் விஜயா ஸ்ரூடியோவிலும் ஜே.ஏ.வின்சென்ற் சிலோன்ஸ்ரூடியோவிலும் பணியாற்றினார்கள்.
இலங்கையில் உருவான பல ஆங்கிலப் படங்களில் ஜே.ஏ.வின்சென்ற் ஆர்ட் டைரக்டராகப் பணியாற்றியிருக்கிறார்.
1981இல் எம்.ஜி.எம். நிறுவனத்தின் 'அன்ட்த ஏப் மேன்' என்ற படத்தை ஜோன்டிரேக் இயக்கியபோது அவருடைய உதவியாளர்களில் இவரும் ஒருவராக பிரதான இடத்தை வகித்தார். அதனால் இவருக்கு அப்படத்தில் "டைட்டில் கிரடிட்' கூட வழங்கப்பட்டது.
இலங்கையில் இப்பொழுது பல தொலைக்காட்சிச் சேவைகள் நடைபெறுகின்றன. 1982இல் தான் இலங்கையில் முதன் முதலில் தொலைக்காட்சி அறிமுகப்படுத்தப்பட்டது. ரூபவாஹினி என்ற தேசியத் தொலைக்காட்சியை அறிமுகம் செய்யும்பொழுது சினிமாவிலும் நாடகத்திலும் வானொலியிலும் புகழ்பெற்ற சிலரைத் தேர்ந்தெடுத்து ஜப்பான் டி.வி. தொழில் நுட்பவிய லாளர்கள் பயிற்சி வழங்கினார்கள். அப்படித் தேர்ந்தெடுக் கப்பட்டவர்களில் வின்சென்ரும் ஒருவர்.
ஜே.ஏ.வின்சென்ற் பல சிங்களப் படங்களின் விளம்பரப் போஸ்டர்களையும் வரைந்திருக்கிறார். நடிப்பவர்களின் முகத்தை
Page 49
92 இலங்கைத்திரையுலக முன்னோடிகள்
மட்டுமல்லாது அந்தப்படத்தின் உட்கருத்துக்களையும் பிரதி பலிக்கும் வண்ணம் வரைவதில் இவர் சமர்த்தர். இதனால் இவர் வரையும் போஸ்டர்களுக்கு கிராக்கி இருந்து வந்தது.
கனடா, போலந்து, ஜெர்மனி போன்ற நாடுகளில் நடைபெற்ற 'பிலிம் எக்ஸ்போ’ போஸ்டர் போட்டிகளில் இவர் அனுப்பிய போஸ்டர்களுக்குக் கிடைத்த வெற்றிகள் இலங்கை மண்ணுக்கு மதிப்பைக் கொடுத்தன.
இலங்கையின் புகழ்பெற்ற சினிமா இயக்குநர் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் நெறியாண்ட படங்களில் 'நிதானய (புதையல்) என்ற படமும் ஒன்றாகும். இப்படத்திற்கான சிறந்த விளம்பரப் போஸ்டர்களை வின்சென்ற் அவர்களே வரைந்தார்.
"போஸ்டர் கலை' என்ற ஒன்றை இலங்கை ரசிகர்கள் அறிந்திராத ஒரு காலகட்டத்தில் எம்.எஸ். ஆனந்தன் உருவாக்கிய 'சித்தக மஹிம' (உள்ளத்தின் பெறுமதி) என்ற படத்துக்கு நவீன முறையில் போஸ்டர்களை வரைந்து வெற்றி பெற்றார்.
இலங்கையில் பல வருடங்களாகத் தனியார் நிறுவனங்களும் அரசாங்கமும் நடத்திய சித்திர, போஸ்டர், முத்திரைப் போட்டிகளிலும் இவர் கலந்து கொண்டிருக்கிறார். அவற்றில் பல முறை இவருக்குப் பரிசில்கள் கிடைத்திருக்கின்றன.
தனது திரையுலக வாழ்க்கையில் கடந்த 50 வருடங்களாகச் சேகரித்து வைத்த போஸ்டர்களையெல்லாம் கொண்டு தன் வீட்டையே சிறிய பொருட்காட்சிக் கூடமாக மாற்றியிருந்தார். அந்த வீடு வத்தளையில் இருந்தது. ஆனால் அது இப்பொழுது இல்லை. 1983 ஜூலைக்கலவரத்தில் அந்த வீடும் பொருட் காட்சிக்கூடமும் எரிந்து விட்டன.
தம்பிஐயா தேவதாஸ் 93
சென்னையில் வாழும் வின்சென்ற் எஞ்சிய போஸ்டர் களையும் படங்களையும் கொண்டு ஒரு ஆங்கிலப் புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார்.
1996ஆம் ஆண்டு வெளியிட்டிருக்கும் அந்தப் புத்தகத்தின் பெயர் ‘சிங்களச் சினிமாவும் ஜே.ஏ.வின்சென்ரும்' என்பதாகும். இப்புத்தகத்தை வெளியிடுவதில் இலங்கைக்கான மொறிசியஸ் நாட்டுத் தூதுவர் தெ. ஈஸ்வரன் பெரிதும் உதவியிருக்கிறார் என்று நன்றியுடன் கூறுகிறார்.
எனவே ஜே. ஏ.வின்சென்ரும் இலங்கைத் திரையுலகின் முன்னோடிகளுள் ஒருவர் என்பதைத் துணிந்து கூறலாம்.
Page 50
15. எம்.மஸ்த்தான்
இலங்கைத் திரை உலகை வளர்த்து விட்ட எம். மஸ்த்தான்.
அந்தக் கலைஞரின் பூர்வீகம் இந்தியாவில் திருநெல்வேலிக்கு அருகில் உள்ள மேலைப்பாளையம். ஆனால் அவர் பிறந்ததுநாகர் கோவிலில். அவர் பிறந்த ஆண்டு 1915 ஆகும். இவரது குடும்பத்தினர் வியாபாரிகள். இலங்கையிலும் வியாபாரம் செய்தனர். சிறு வயதிலேயே இலங்கைக்கு வந்தார். இருபது வயதில் மீண்டும் இந்தியா திரும்பினார். சென்னை வந்த இவருக்கு மாமனார் நாகூர் மெரினா ஸ்ரூடியோ' என்ற புகைப்பட நிலையத்தை அமைத்துக் கொடுத்தார். இங்குதான் அந்த சினிமா ஒளிப்பதிவாளர் உருவானார். அந்த ஒளிப்பதிவாளர் தான் இலங்கையிலும் இந்தியாவிலும் பல சிங்கள, தமிழ் படங்களை ஒளிப்பதிவு செய்து நெறியாண்ட எம்.மஸ்த்தான்.
அவர், தான் சினிமாவுடன் தொடர்பு கொண்டதையும் இலங்கையில் பல சிங்களப் படங்களை ஒளிப்பதிவு செய்து இயக்கியதையும் பற்றி இப்படிக் கூறுகிறார்:
1938ஆம் ஆண்டு நியூடோன் ஸ்ரூடியோ ஆரம்பிக் கப்பட்டது. அதில் நான் கமரா உதவியாளனாகச் சேர்ந்தேன். கூடவே புகைப்படங்களையும் எடுத்தேன். எனது குரு சித்தரன்
Page 51
9. இலங்கைத் திரையுலக முன்னோடிகள்
பானர்ஜி ஆவார். அவரிடம் அதிக நாட்கள் உதவியாளனாக இருந்தேன். இவரும் நியூடோன் ஸ்ரூடியோவின் பங்காளராவார். 1940ஆம் ஆண்டு எடுத்த "ராதா ரமணா' என்ற படத்தில் முதன் முதலாக ஒளிப்பதிவாளரானேன்.
1944இல் ஜூபிட்டர் பிக்சர்ஸ் ஆரம்பமான போது இங்கு நானே பிரதான ஒளிப்பதிவாளராக நியமிக்கப்பட்டேன். அங்கு 12 வருடங்கள் தொடர்ந்து கடமையாற்றினேன். பூரீ முருகன், மர்மயோகி, வேலைக்காரி, மோகினி போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தேன். 1951ஆம் ஆண்டு சேலம் மொடேர்ன் தியேட்டர்ஸாரின் சர்வாதிகாரி' என்ற படத்தில் கடமையாற்றினேன். "வளையாபதி படத்தை முதன் முதலாக இயக்கினேன். அதன் பின்பு சுயமாகப் படங்களை இயக்கத் தொடங்கினேன் அவ்வாறு சுயமாக நான் முதலில் இயக்கிய படம் 'ஹரிச்சந்திரா" என்பதாகும்' என்று மஸ்த்தான் கூறினார்.
இதன் பின்பே மஸ்த்தான் இலங்கைக்கு வந்தார். 1962இல் இலங்கை வந்த மஸ்த்தான் கே. குனரெத்தினத்தின் விஜயா ஸ்ரூடியோவில் பணியாற்றத் தொடங்கினார். பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தார். பல சிங்களப் படங்கள் இவரால் இயக்கப்பட்டன. கிட்டத்தட்ட எட்டுப் படங்கள் இவரால் இயக்கப்பட்டன. இவரைக் குருவாகக் கொண்டு பல கலைஞர்கள் உருவானார்கள். அவர்களில் வீ. வாமதேவனும் அன்ரன் கிரகறியும் முக்கியமானவர்கள் தொடர்ந்து ஆறு வருடங்கள் இலங்கையில் இருந்த மஸ்த்தான், 1968இல் இந்தியா திரும்பினார்.
அங்குகே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் கற்பகம் ஸ்ரூடியோவில் சில படங்களிற்கு ஒளிப்பதிவாளராகச் செயற்பட்டார். சுபதினம், குலவிளக்கு என்பன அவற்றில் சில படங்கள். பாலாஜி எடுத்த படங்கள் பலவற்றிலும் ஒளிப்பதிவு செய்தார். எங்கிருந்தோ வந்தாள். நீதி, திருடன், ராஜா என்பவை அப்படங்களில் சிலவாகும்.
தம்பிஐயா தேவதாஸ் 97
Page 52
98 இலங்கைத்திரையுலக முன்னோடிகள்
மஸ்த்தான் கடைசியாக 'ராமபக்த ஹனுமான்' என்ற மலையாளப்படத்தை இயக்கினார். இவர் ஒளிப்பதிவு செய்த பல வண்ணப்படங்களுக்குப் பரிசும் கிடைத்துள்ளன. 'சுவாமி ஐயப்பன்' 'நீதி' போன்ற படங்கள் இவருக்குப் பரிசுகளை வாங்கிக் கொடுத்தன.
மூன்று மகன்மாருக்கும் நான்கு மகள்மாருக்கும் தந்தையான மஸ்த்தான், இறப்பதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பே திரை உலகை விட்டு ஒதுங்கியிருந்தார்.
ஒளிப்பதிவில் புகழ்பெற்று விளங்கிய மஸ்த்தான் இலங்கையில் பல சிங்களப்படங்களுக்கு ஒளிப்பதிவுசெய்ததுடன் பல வெற்றிப் படங்களையும் இயக்கினார்.
இலங்கைத் திரையுலக முன்னோடிகளில் மஸ்த்தானும் ஒருவர் எனப் போற்றத்தக்கவர்.
16. ருக்மணிதேவி (1928 - 1978)
முதலாவது சிங்களப் படத்தில்
கதாநாயகியாக நடித்த தமிழ்ப் பெண் ருக்மணிதேவி.
முதலாவது சிங்களப் படத்தைத் தயாரித்தவர் எஸ்.எம். நாயகம் என்ற தமிழர். இப்படத்தின் கதாநாயகிருக்மணிதேவி ஒரு தமிழ் பெண்மணி என்பது பலருக்குத் தெரியாமலிருக்கலாம்.
எந்த மொழியில் சினிமா தோன்றினாலும் அதில் முதலில் பெண்கள் நடிப்பதற்குப் பின் வாங்கினார்கள். பிறமொழி நடிகைகளே முதலில் நடிப்பார்கள். அப்படியான நிலையே சிங்களப் படத்திலும் ஏற்பட்டது. அதனால்தான் முதலாவது சிங்களப் படத்தில் தமிழ் நடிகையான ருக்மணிதேவி நடித்தார்.
'கடவுனு பொறொந்துவ' நாடகமாக மேடையேற்றப்பட்ட போது அந்நாடகத்தின் கதாநாயகியாக ருக்மணிதேவி நடித்தார். அந்நாடகம் அப்பொழுது இலங்கையின் அனைத்து இடங்களிலும் 800 தடவைக்கு மேல் மேடையேற்றப்பட்டுவிட்டது. இந் நாடகத்தின் புகழைக்கண்ட எஸ்.எம்.நாயகம் அதைத் திரைப்பட மாக்க எண்ணினார். அனுமதி பெற்றுக் கலைஞர்களை இந்தியாவுக்கு அழைத்துச் சென்றார்.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 'கடவுனு பொறொந்துவ' 21.10.1947இல் இலங்கையில் திரையிடப்பட்டது. முதலில் அப்படத்தின் கலைஞர்களின் பெயர்ப் பட்டியல் காட்டப்பட்டது.
Page 53
1ΟΟ இலங்கைத்திரையுலக முன்னோடிகள்
அடுத்து பெண் ஒருத்தியின் முகம் 'குளோஸ் - அப்' இல் காட்டப்பட்டது. அப்பெண் அழுது கொண்டிருக்கிறாள். அவளுக்கு முன்னே அவளது தந்தை கட்டிலில் இறந்து கிடக்கிறார்.
அழுது கொண்டிருக்கும் அப்பெண்தான் நடிகை ருக்மணி தேவி. அவர்தான் சிங்களச் சினிமாவின் முதலாவது கதாநாயகி.
டெய்ஸி டேனியல் என்ற இயற்பெயர் கொண்ட இவர், தன் பெயரைச் சிங்களச் சினிமாவுக்காக ‘ருக்மணிதேவி' என்று மாற்றிக் கொண்டார். தான் தோன்றும் படங்களில் சொந்தக் குரலில் பாடவும் செய்தார்.
'கடவுனு பொறொந்துவ' என்ற படத்தைத் தொடர்ந்து ருக்மணிதேவி பல சிங்களப் படங்களில் நடிக்கத் தொடங்கினார். சிங்களப் படங்களில் மட்டுமல்ல, பல தமிழ்ப்படங்களிலும் நடித்திருக்கிறார். அப்படங்களில் சொந்தக் குரலில் தமிழில் பாடியுள்ளார். அவற்றுள் 'குசுமலதா' என்ற தமிழ்ப்படம் முக்கியமானது. 1956இல் இலங்கையில் திரையிடப்பட்ட 'குசுமலதா' தமிழ்த் திரைப்படத்தில் ருக்மணி தேவி பாடி நடித்துள்ளார். கெளஸ் மாஸ்டர் இப்பாடல்களுக்கு இசையமைத் துள்ளார். இப்பாடல்கள் அடங்கிய இசைத்தட்டு இப்பொழுதும் இலங்கை வானொலி நிலைய இசைத்தட்டுக் களஞ்சியத்தில் இருக்கின்றது.
ஆரம்பகாலத்தில் கதாநாயகியாக நடித்த ருக்மணி தேவி, பின்னாளில் தாயாகவும் நடித்தார். 'காத்திருப்பேன் உனக்காக' என்ற படத்தில் எம்.சிவராமுக்குத் தாயாக நடித்தார். "நான் உங்கள் தோழன்' படத்தில் வி.பி.கணேசனுக்குத் தாயாக நடித்தார்.
ருக்மணிதேவி தான் நடித்த பாத்திரங்களைச் சிறப்பாகச் செய்தார். சிங்களப் படங்களில் அவர் ஏற்ற பாத்திரப் பெயர்கள் இப்பொழுதும் ரசிகர்கள் மத்தியில் ஞாபகத்தில் இருக்கின்றன. 'கடவுனு பொறந்துவ' படத்தில் ரஞ்சனி, 'கபடி ஆறக்ஷா"
தம்பிஐயா தேவதாஸ் 1Ο 1
படத்தில் மல்லிகா, 'சங்கவுனு பிலிதுற' வில் குசுமலதா, 'கலே ஹந்தா"வில் மாலினி என்று பல்வேறு பெயர்கள் மூலம் அவர் ரசிகர்களைக் கவர்ந்தார். சிங்கள சினிமாவின் நடிகையர் திலகம் என்றே இவரைக் கூறிவிடலாம்.
1947 காலப்பகுதியில் எடி ஜயமானவும் ருக்மணி தேவியும் சென்னையில் அடையாறில் குடியிருந்தனர். அக்காலத்தில் ருக்மணிதேவி ஒரு படத்துக்கு 50,000 ரூபா வரை ஊதியம் பெற்றிருக்கிறார். ஆனால், பிற்காலத்தில் இவர்கள் தங்கள் இலங்கை வீட்டை விற்க வேண்டிய நிலைக்கும் விழுந்தார்கள்.
தன் இளமைக்காலத்தைப்பற்றி ருக்மணிதேவி பின்வருமாறு கூறினார்.
'நான் நுவரெலியாவில் பிறந்தேன். அப்பா றம்பொட தோட்டத்தில் வேலை செய்தார். அங்கு குளிர் அதிகம் ஆதலால் எனக்குஅடிக்கடிசுகவீனம் ஏற்பட்டது. அதனால் வெள்ளவத்தையில் வீடு ஒன்றை எடுத்து வாழ்ந்தோம். எனதுதாயாருக்கு வெள்ளவத்தை சென் கிளையர்ஸ் வித்தியாலயத்தில் ஆசிரியப்பதவி கிடைத்தது. நான் கொள்ளுப்பிட்டி மெதடிஸ் பெண்கள் கல்லூரியில் படித்தேன்.
பின் நாளில் மேடை நாடகங்களில் நடித்தேன். சிங்கள வசனங்களை ஆங்கிலத்தில் எழுதிவைத்தே பேசினேன். பின்பு பல சிங்களப் படங்களில் நடிக்கத் தொடங்கினேன். இந்தியாவில் இருக்கும்பொழுது தெலுங்குப் படங்களில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. ஆனால், நான் போகவில்லை. சிங்களப் படங்களில் மட்டுமே நடித்தேன்.'
இப்படிக் கூறினார் ருக்மணிதேவி.
1978ஆம் ஆண்டு தனது 55ஆவது வயதில் கார் விபத்தில் காலமான ருக்மணிதேவி சிங்கள சினிமாவுக்கு நிறையவே பங்களிப்புச் செய்திருக்கிறார். இவர் மொரட்டுவ, லுணாவ,
Page 54
1 Ο2 இலங்கைத் திரையுலக முன்னோடிகள்
தெமட்டகொடஎன்று பல்வேறு இடங்களில் குடியிருந்திருக்கிறார். 1940களில் சிறந்த மேடை நடிகையாக விளங்கிய ருக்மணி 1960களில் சிறந்த திரைப்பட நடிகையாக ஜொலித்தார். அவர் சிறந்த நடிகை மட்டுமல்ல சிறந்த பாடகியாகவும் விளங்கினார். 1939இல் ‘ஹிஸ் மாஸ்ரர் வொய்ஸ்' கிரமபோன் இசைத்தட்டுக்களுக்காகப் பாடியிருக்கிறார்.
ருக்மணி தேவியின் இயற்பெயர் டெய்ஸி டேனியல் என்பதாகும். 1923 ஆம் ஆண்டு றம்பொட என்ற இடத்தில் பிறந்தவர். 12ஆவது வயதிலேயே மேடையேறிப் பாடத் தொடங்கிவிட்டார். 1940ஆம் ஆண்டு தொடக்கம் மினர்வா நாடகமன்றத்தில் சேர்ந்து நாடகங்கள் நடிக்கத் தொடங்கினார்.
'இராமாயணம்' தான் இவர் நடித்த முதல் நாடகம். அதன்பின்பே பல நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். நாடகங்களில் ஜோடி சேர்ந்து நடித்த எடி ஜயமானவை 1943இல் திருமணம் செய்தார்.
ருக்மணிதேவி முதன் முதலில் பாடகியாகவே கலையுலகிற்கு அறிமுகமானார். முதலாவது சிங்களப் படத்தில் கதாநாயகியாக நடித்தார். இவரது கணவர் எடி ஜயமான அப்படத்தில் நகைச்சுவைப் பாத்திரத்தில் நடித்தார். பின்பு பல படங்களில் ருக்மணிதேவியும் கணவர் எடி ஜயமானவும் ஜோடியாக நடித்தனர். 27.10.1978இல் நடந்த கார் விபத்தில் ருக்மணி தேவி இறந்தார். அதே ஆண்டிலேயே (இவர் இறந்த அடுத்தநாள்) இவர் நடித்த இறுதித் திரைப்படம் திரையிடப்பட்டது. அப்படம்தான் காமினி பொன்சேகா இயக்கிய "சக வித்தி சுவய' என்ற படமாகும். இப்படத்தின் இறுதிக்காட்சியில் ருக்மணிதேவி இறப்பதாகவே காட்சி வருகிறது.
இப்படி திறமைமிக்க கலைஞர் ஒரு தமிழ்ப்பெண் என்பதை யிட்டு நாம் பெருமைப்படலாம். இலங்கை திரையுலக முன்னோடி களில் இவரையும் ஒருவராக நிச்சயம் நாம் ஏற்றுக் கொள்ளலாம்.
17. வீ.பி. கணேசன்
மூன்று தமிழ்ப் படங்களையும் இரண்டு சிங்களப் படங்களையும் தயாரித்த வீ.பி. கணேசன்.
ஆரம்பகால இலங்கைத் தமிழ் திரைப்படங்களில் ஏதோ குறைகள் இருந்து கொண்டே வந்தன. 1979ஆம் ஆண்டு வரை 10 தமிழ்த் திரைப்படங்கள் திரைக்கு வந்துவிட்டன. ஆனாலும் இவை இலங்கை ரசிகர்களின் மனதை கவர்வதாக இல்லை.
ஆனால் இந்த நிலையை மாற்றி இலங்கையிலும் சிறந்த தமிழ்ப்படங்களை உருவாக்கலாம் என்ற கோஷத்தை எழுப்பிக் கொண்டு முன் வந்தார் ஒரு மலையக இளைஞர். அவர் இளைஞர் மட்டுமல்ல. மலையகத்தின் தொழிற்சங்கம் ஒன்றின் தலைவரும் கூட. அவர்தான் வீ.பி. கணேசன்.
இந்தக் கலைஞர் தான் நினைத்து வந்ததைச் சாதித்தே விட்டார். வேறு எவராலும் செய்ய முடியாத சாதனையாகத் தொடர்ந்து மூன்று தமிழ்ப்படங்களைத் தயாரித்ததன் மூலம் செய்து
காட்டினார்.
ஒன்று இரண்டல்ல தொடர்ந்து மூன்று தமிழ்ப்படங்களையும் இரண்டு சிங்களப்படங்களையும் தயாரித்துச் சாதனை படைத்தார். அது வரை மெளனமாக மறைந்து கிடந்த கலைஞர்களை மக்கள் முன் கொண்டு வந்தார். சிங்களச் சினிமா உலகில் சிக்கிக் கிடந்த பல தமிழ்க் கலைஞர்களை தமிழ்ச் சினிமா உலகிற்கு கொண்டு வர வழி
Page 55
104 இலங்கைத் திரையுலக முன்னோடிகள்
சமைத்தார். எழுத்தாளர்கள், இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர்கள். இசையமைப்பாளர்கள், பாடகர்கள் என்று எத்தனையோ பேரைக் தமிழ் ரசிகர்களின் முன் நிறுத்தினார் இவை எல்லாம் தமிழ்ச் சினிமா உலகில் வீ.பி. கணேசன் ஏற்படுத்திய சாதனைகளாகும்.
இவர் படம் தயாரிக்க முன் வந்த பின்பே மற்றவர்களும் தமிழ்ப் படங்கள் தயாரிக்க முன் வந்தனர். அதுவரை மறைந்து கிடந்த தமிழ்க்கலைஞர்கள் மக்கள் முன்கொண்டு வரப்பட்டார்கள்.
1973ஆம் ஆண்டு இலங்கைத் தமிழ்த்திரை உலகில் புதிய காற்று வீசத் தொடங்கியது. அதுவரை காலமும் ஒரு தொழிற்சங்கத்தின் பிரதான தலைவராக விளங்கிய வீ.பி. கணேசனின் பெயர் மலையகத்தில் மட்டுமே அதிகமாய்ப் பேசப்பட்டது. ஆனால் 'புதிய காற்று' படத்தை அவர் தயாரிக்கத் தொடங்கியதும் அவரது பெயர் இலங்கை எங்கும் பேசப்பட்டது.
மலையகத் தமிழ் மக்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த வேண்டுமென்று துடித்துக் கொண்டிருந்த வீ. பி. கணேசன், திரைப்படத்தை அதற்கு பயன்படுத்த முனைந்தார். செயலில் இறங்கி விட்டார். "புதிய காற்று" என்ற படத்தை தயாரிக்கத் தொடங்கினார். தானே கதாநாயகனாக நடித்தார் பெரியதாக விளம்பரம் செய்தார். கொழும்பில் பஸ் ஸ்ராண்டுக்களைக் கூலிக்கு எடுத்துப் பட விளம்பரத்துக்குப் பயன்படுத்தினார். இதுவரை தயாரிக்கப்பட்ட தமிழ்ப்படங்களை விட வித்தியாசமான முறையில் தனது படம் அமைய வேண்டும் என்று பாடுபட்டார். பணத்தைப் பணம் என்று பாராது அதிக செலவில் பல முயற்சிகளைச் செய்தார். அதற்கு இணங்க அவர் உருவாக்கிய படங்களும் வித்தியாசமாக அமைந்திருந்தன.
மலையகத்தின் பல பிரச்சனைகளைப் "புதிய காற்று படத்துக்குள் புகுத்திக் காட்டினார். வீடில்லாப் பிரச்சனை, மதுப்
1 05
தம்பிஐயா தேவதாஸ்
(g/st) :Lung)高等學部, wucn和之七宮司n"反軍事官民詩)西 fręs quasgoueyessä 1,919'aglo 'assusquis opis off-ırısı!!:s aequo mỡH, Igolyucusquo[s] solusoye
Page 56
O6 இலங்கைத் திரையுலக முன்னோடிகள்
பழக்கம், குடும்பக் கட்டுப்பாட்டின்மை போன்ற பற்பல பிரச்சனை களைத் தன் படத்தின் மூலம் எடுத்துக் காட்டினார்.
தன் படத்தின் பாடல்கள் தரமாக அமைய வேண்டும் என்பதற்காகக் கவிஞர் கண்ணதாசனைக் கொண்டே பாட்டு எழுதினார். மேதினம் மேதினம்' என்று தொடங்கும் அப்பாடல் சிறந்து விளங்கியதுடன் பிரச்சனை சிலவற்றையும் ஏற்படுத்தியது. ". . . . . . . . . . எங்கள் நாயகமே என்ற ஒரு சொற் தொடர் பாடலில் வருகிறது. நாயகமே என்ற சொல் தமிழரசுத் தலைவர் எஸ். ஜே. வி. செல்வநாயகத்தை குறிக்கும் என்பதால் தணிக்கை சபையினர் அப்பாடலை நீக்கச் சொன்னார்கள். ஆனால் ‘நாயகமே என்ற சொல்லை 'தாயகமே என்று மாற்றிப் பாடலை ஒலிப்பதிவு செய்தார்கள். l
"ஒ என்னாசை ராதா" என்ற பாடலைப் பூவை செங்குட்டுவன் எழுதினார். இசை அமைப்பில் ரீ.எப். லதீப்புக்கு இசையமைப் பாளர் சங்கர் - கணேஷ் உதவினார்கள். தனிப்பட்ட முறையில் ‘புதிய காற்று' படத்துக்கான இசைத் தட்டையும் உருவாக்கினார்.
03.10.1975இல் திரையிடப்பட்ட ‘புதிய காற்று அதுவரை திரையிடப்பட்ட இலங்கைத் தமிழ்த்திரைப்படங்களை விட அதிக நாள்கள் ஓடியது. இடை வெளியில் மெளனமாகிப் போய்விட்ட தமிழ்ப் படத்துறையைக் கலகலக்க வைத்த பெருமை வீ.பி. கணேசனையே சாரும் என்பது போலப் பல பத்திரிகைகள் விமர்சனம் எழுதின. 'புதிய காற்று' திரையிடப்பட்டு மூன்று வருடங்களின் பின் 'நான் உங்கள் தோழன்' என்ற படத்தைக் கணேசன் உருவாக்கினார். வழமையைப் போல் தானே கதாநாயகனாக நடித்தார். கலைச் செல்வன் கதை வசனம் எழுதினார். வீ. வாமதேவன் ஒளிப்பதிவைச் செய்தார். இளம் இயக்குனர் எஸ்.வீ. சந்திரனை அழைத்து வந்து படத்தை இயக்கச் செய்தார்.
தம்பிஐயா தேவதாஸ் 1O7
ஏராளமான நடிகர்களுக்கு நடிக்கச் சந்தர்ப்பம் வழங்கினார். புதிய காற்றி'ல் இல்லாத பல விடயங்களை இத்திரைப்படத்தில் சேர்த்துக் கொண்டார்.
வீ.பி. கணேசன் மூன்றாவதாகத் தயாரித்த தமிழ்ப்படம் நாடு போற்ற வாழ்க’ என்பதாகும். தன்னுடைய படங்கள் மூன்றுக்கும் வெவ்வேறு கலைஞர்களையே சேர்த்துக் கொண்டார். மூன்று படங்களிலும் வெவ்வேறு கதாநாயகிகளை அறிமுகப்படுத்தினார்.
'புதிய காற்று' திரைப்படத்தை எஸ். ராமநாதனும் 'நான் உங்கள் தோழன்' படத்தை எஸ்.வீ. சந்திரனும் நாடு போற்ற வாழ்க" திரைப்படத்தை யசபாலிக நாணயக்காரவும் இயக்கினர். இசை அமைப்பிலும் புதிய புதிய கலைஞர்களை அறிமுகப் படுத்தினார்.
ரீ. எவ், லதீப், எம்.கே. ரொக்சாமி, சரத்த சனாயக்க என்று இசையமைப்பாளர்களை மாற்றி வேலை வாங்கினார். ஆனால் பாடகர்களை மட்டும் மாற்றவில்லை. கணேசனின் மூன்று படத்திலும் வீ. முத்தழகுவும் கலாவதி சின்னசாமியும் பிரதான பாடகர்களாக விளங்கினர். தனது படங்கள் வித்தியாசமாக அமைய வேண்டும் என்பதற்காக மூன்று படங்களிலும் வெவ்வேறு கலைஞர்களை ஈடுபடுத்தினார்.
தன் மூன்றாவது படத்தில் பிரபல சிங்கள நடிகைகள் இருவரைக் கதாநாயகிகளாக நடிக்க வைத்தார். வி.பி. கணேசன் தயாரித்த இரண்டு சிங்களப் படங்களும் சிறந்து விளங்கின. தமிழ்ப்படம் போலன்றி அவை அதிக வசூலை ஏற்படுத்தின. இலங்கைத் தமிழ்த்திரையுலகில் தொடர்ந்து மூன்று படங்களைத் தயாரித்த ஒருவர் வீ.பி. கணேசன்தான்.
வீ.பி. கணேசன் 1999இல் காலமானார். அவர் இரண்டு வாரிசுகளை எமக்குத் தந்து விட்டு மறைந்திருக்கிறார். ஒருவர்
Page 57
O8 இலங்கைத் திரையுலக முன்னோடிகள்
அரசியல்வானில் பிரகாசிக்கும் மனோ கணேசன் மற்றவர் தொலைக்காட்சி நாடகத்துறையில் பிரபலம் பெற்றுவரும் பிரபா கணேசன், புதல்வர்கள் இருவரும் தந்தை வீ.பி. கணேசன் விட்டுச் சென்ற பணியைத் தொட்டுச் செய்யத் தொடங்கி விட்டனர்.
இலங்கைத்திரை உலகில் சிங்ளகளச் சினிமாவிலும் தமிழ்ச் சினிமாவிலும் பெரும்பங்காற்றியப் பெருமை வீ.பி. கணேசனைச் சாருகிறது.
இரண்டு சிங்களப்படங்களையும் மூன்று தமிழ்ப் படங்களையும் அவர் தயாரித்திருக்கிறார். அவர் தயாரித்த மூன்று தமிழ்ப்படங்களிலும் அவரே கதாநாயகன். இந்தப் பெருமை வேறு யாருக்கும் இல்லை.
18. தவமணிதேவி
இலங்கையிலிருந்து முதன் முதலாக இந்தியா சென்று நடித்த தமிழ் நடிகை கே, தவமணிதேவி.
இலங்கைத் தமிழ் படங்களை மூன்று விதமாகப் பிரிக்கலாம். சிங்கள மொழியிலிருந்து டப் செய்யப்பட்ட படங்கள் , முழுநீளப் படங்கள், கூட்டுத் தயாரிப்புப் படங்கள் என்பனவே அவை.
கூட்டுத் தயாரிப்புகள் உருவாகும் போது இலங்கையின் சார்பில் சிங்கள நடிகர்களும் நடிகைகளும் தெரிவு செய்யப் பட்டனர். பைலட் பிரேம்நாத் - மாலினி பொன்சேகா' 'மோகனப் புன்னகை - கீதா குமாரசிங்க' 'நீலக்கடலின் ஒரத்திலே - காமினிபொன்சேகா நங்கூரம், - விஜயகுமாரதுங்க" என்று பல உதாரணங்களைக் கூறலாம்.
இந்த நடிகைகளும் நடிகர்களும் இந்தியா சென்று நடித்துக் காட்டி விட்டு வந்தனர்.
ஆனால் இற்றைக்கு 50 ஆண்டுகளுக்கு முன்பே இலங்கைத் தமிழ் நடிகை ஒருவர் தென்னிந்தியத் தமிழ்ப்படத்தில் நடித்துக் கொடிகட்டிப் பறந்திருக்கிறார்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இந்த நடிகை தமிழ் நாடு சென்று நடித்துவிட்டு வந்தார். அதுவும் நீச்சல் உடையில் நடித்துவிட்டு
Page 58
11) இலங்கைத் திரையுலக முன்னோடிகள்
வந்தார். 'விஜயா என்ற படத்தைக் கூடத் தயாரித்திருக்கிறார். யார் அவர்? கே.தவமணிதேவி என்பது அவரது பெயர்
'எழிலான தோற்றம் எடுப்பான சரீரம் இயற்கையிலேயே தவமணிக்கு. இப்படி அப்போதைய ரசிகர்கள் புகழ்ந்து விமர்சித்தார்களாம்,
தமிழ்நாடு சென்ற உடனேயே தவமணிதேவி பத்திரிகை களுக்குப் பேட்டி கொடுத்தார். பேட்டியின் போது இலங்கையில் எடுக்கப்பட்ட தனது போட்டோக்களையும் பிரசுரத்திற்குக் கொடுத் தார். அந்தப் போட்டோக்களில் தவமணிதேவி நீச்சலுடையில் நின்று புன்னகை புரிந்தார். என்னவோ தெரியவில்லை இந்த இலங்கை நடிகை தன் பெயரை மட்டும் மாற்றவில்லை.
தவமணி தேவியின் நீச்சலுடைக் கவர்ச்சிப் படங்களைப் பிரசுரித்து அவற்றின் கீழே "பதிவிரதை அகல்யாவாக நடிக்க இலங்கையிலிருந்து வந்திருக்கும் தவமணிதேவி, குடும்பப் பெண்கள் தாராளமாக சினிமாவில் நடிக்க வேண்டும் என்று கூறுகிறார் இவ்வாறு பத்திரிகை ஒன்று குறிப்பு எழுதி வெளி யிட்டது. இது நடந்தது 1936ஆம் ஆண்டிலாகும், முதலாவது தமிழ்ப் பேசும் படமான 'காளிதாஸ்' வெளிவந்து 5 ஆண்டுகளின் பின்பே இந்தச் சம்பவம் இடம் பெற்றது. இலங்கைத் தமிழ் நடிகை ஒருவர் இந்தியா சென்று திரைப்படத்தில் நடித்தது அதுவும் நீச்சலுடையில் தோன்றியது சிலருக்குப் பெருமையாக இருக் கலாம். பலருக்கு வியப்பாக இருக்கலாம். அதனால் அவரைப் பாராட்ட வேண்டும் இன்று பெண்ணியம் பேசுபவர்கள் எல்லாம் அவருக்குப் பின்புதான்.
நடிகை தவமணிதேவி அக்கால யாழ்ப்பாண அரசியல்வாதி ஒருவரின் உறவினர். அதனால் தான் அவர் துணிந்து திரைப் படத்தில் நடிக்கும் அளவுக்கு முன்வந்தார்.
தம்பிஐயா தேவதாஸ் 11
፳፻፵፫፻፵፱፻፷፱፻፷፱፻፳፻፵፱፻ 蓝蔷
حد - Twi 35 வயதில் இலங்கைக் குயில் கே. தவமணிதேவி. -
Page 59
112 இலங்கைத் திரையுலக முன்னோடிகள்
1936 இல் ‘சதி அகல்யா' என்ற படத்தை உருவாக்கியவர் மொடர்ண் தியேட்டேர்ஸ் உரிமையாளர் டி.ஆர். சுந்தரம், 'புராணத்திலிருந்து அவர் அகல்யாவை மாத்திரம் அழைத்து வரவில்லை. அகல்யாவாக நடிப்பதற்கு இலங்கையிலிருந்து ஒரு புது நடிகையையும் அழைத்து வந்துள்ளார்' என்று அப்பொழுது ஒரு பத்திரிகை செய்தி வெளியிட்டது.
நடிகை கே.தவமணிதேவியின் சொந்தஊர் யாழ்ப்பாணத்தில் உள்ள இணுவில் ஆகும். பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்தவர். தந்தை கதிரேசு சுப்பிரமணியம் கொழும்பில் நீதிபதியாகக் கடமையாற்றியவர். மாமனார் பாலசிங்கதுரை பிரபலமான அரசியல்வாதி. ஐந்து ஆண் பிள்ளைகளின் பின் பிறந்த ஒரேயொரு பெண் பிள்ளை, அதனால் செல்லப்பிள்ளை நீண்டகாலம் கொழும்பில் வாழ்ந்தவர். சிறந்த பாடகியாக விளங்கிய கே. தவமணிதேவி இலங்கை வானொலியில் பலமுறை பாடியிருக் கிறார். இதனால் 'இலங்கைக்குயில்' என்று பெயரும் வாங்கியவர்.
தவமணிதேவிக்குப் பதின்மூன்று வயதிருக்கும் போது தமிழ் நாட்டுக்குச் சென்றார். பி.எஸ்.சுந்தரத்தின் வேண்டுகோளை ஏற்றே சென்றார். 'சதி அகல்யா' என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார். 'வியாம் சுந்தர் "சீதா ஜனனம்' என்று பல படங்களில் வாய்ப்புக்கள் கிடைத்தன.
கே. தவமணிதேவி நடித்து 1946 இல் வெளியான 'வன மோகினி படவுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கவர்ச்சியாக உடையணிந்து காட்டுராணியாக நடித்ததுதான் காரணம். 1947 வரை தமிழ் சினிமாவின் கவர்ச்சி நடிகையாக கொடிகட்டிப் பறந்தார். பட ஒப்பந்தங்கள் அதிகரித்தன.
விஜயா என்ற படத்தைத் தயாரிக்கத் தொடங்கினார். அன்று முதல் பணம் மட்டுமல்ல பெயரும் சரியத் தொடங்கியது. எதிர்ப்புகளும் அதிகரித்தன.
தம்பிஐயா தேவதாஸ் 113
பிரபல நடிகை ஒருவரும் வசனகர்த்தாக்கள் இருவரும் சேர்ந்து சதிவேலை செய்யத் தொடங்கினர். நடிகை படத்தில் நடிப்பதுடன் டைரக்டர்களுடனும் எல்லா விஷயங்களிலும் ஒத்துப்போனால்தான் அவர்களை வாழ விடுவார்கள் வளர விடுவார்கள். தவமணிதேவியால் அப்படி ஒத்துப்போக முடியாத காரணத்தினால் தான் எதிர்ப்பு அணி எழுந்ததாம்.
"பெற்றோர் இறந்து விட்டனர். இலங்கை போக முடியாமல், இருந்த பொருட்களை விற்றுச் சீவித்தேன். கடைசியில் சென்னையில் வாடகை வீட்டில் குடியிருந்தேன். அங்கும் இருக்கமுடியாமல் இராமேஸ்வரம் வந்து குடியேறினேன். கோயிலில் இருந்தகோடிலிங்க சாஸ்திரியை1962இல் மணந்தேன். நான்சினிமாவை மறந்து கணவனுடன் ஆத்மிகத்துடன் கூடிய புதிய வாழ்க்கையை ஏற்றேன்' என்று கூறுகிறார் தவமணிதேவி. 2001 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி தவமணிதேவி இராமேஸ்வரத்தில் காலமானார்.
தனது இறுதிக்காலம் வரை இராமேஸ்வரத்திலேயே வாழ்ந்து வந்தார். இலங்கைக்குத் திரும்பி வரவேயில்லை. தவமணிதேவி இலங்கைப் படங்களில் நடிக்கவில்லை யென்றாலும் இலங்கையி லிருந்து சென்ற நடிகை என்பதால், அவரும் இலங்கைத் திரையுலக முன்னோடிகளில் ஒருவர் தானே?
Page 60
19. மொஹிதீன் பேக்
தமிழ்ச் சிங்களத் திரைப்படப் பாடல் களைப்
பாடிய பாடகர் மொஹிதீன் பேக்,
ஒரு இனத்தைச் சேர்ந்த கலைஞன் ஒருவன் இன்னொரு இனத்தில் புகழுடன் விளங்குவது அரிது. ஆனால் இஸ்லாமியக் கலைஞர் ஒருவர் சிங்கள சினிமாத்துறையில் சிறந்து விளங்கினார். அது மட்டுமல்ல சிங்கள சினிமாவின் தேசியத் சொத்து என்று கூட புகழப்பட்டார். அவர்தான் பிரபல பாடகர் மொஹிதீன் பேக் அவரின் பாடல்கள் இல்லாத சிங்களப் படம் இல்லை என்னும் அளவுக்கு அவர் சில காலம் கொடிகட்டிப் பறந்தார்.
Page 61
116 இலங்கைத் திரையுலக முன்னோடிகள்
இலங்கையின் முதலாவது சிங்களச் சரித்திரப் படமான 'அசோகமாலா' 1947இல் திரைக்கு வந்தது. இசையைப் பொறுத்தவரையில் இப்படம் தனித்துவம் பெற்று விளங்கியது. இப்படத்தில் மொஹிதீன் பேக் நான்கு பாடல்களைப் பாடினார். அன்று முதல் இறக்கும் வரை மொஹிதீன் பேக் சிங்கள தமிழ்ச் சினிமாப்பாடல்களை மட்டுமன்றி இஸ்லாமிய, பெளத்த பக்திப்பாடல்களையும் பாடினார். 'அங்குலிமாலா' திரைப்படத்தில் இடம்பெற்ற 'புத்தம் சரணம் கச்சாமி என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் புகழ் பெற்றது.
கரீம் பேக் இந்தியாவில் சேலம் நகரில் போலீஸ் நிலையத்தில் கடமையாற்றினார். அவரது மனைவியாரின் பெயர் பீஜான்பீவி. இந்தத் தம்பதிகளுக்குப் பதினான்கு பிள்ளைகள். இவர்களில் மூன்றாவது பிள்ளையாகப் பிறந்தவர் மொஹிதீன் பேக், ஆம் அந்த மாபெரும் இசைக்கலைஞன் சேலம் நகரில் 05.12.1918 இல் பிறந்தார். ஆரம்பக் கல்வியைச் சேலத்திலேயே பெற்றார்.
மொஹிதீன் பேக்கின் தந்தையின் தந்தை ஹலால்தீன் கொழும்பு கிராண்ட்பாஸ் போலீஸில் கடமையாற்றியவர். ஹலால்தீனின் சகோதரர் அஸிஸ் கொழும்பு ஹார்பர் பொலிஸில் கடமையாற்றினார். அஸிஸின் அகால மரணச் சடங்கில் கலந்து கொள்வதற்காக 1931ஆம் ஆண்டில் மொஹிதீன் பேக்கும் இலங்கை வந்தார். 1934இல் இலங்கைப் பொலிஸ் சேவையில் சேர்ந்து இலங்கையில் தங்கிவிட்டார்.
இக்காலத்தில் இலங்கையில் இசைத்துறையில் இரண்டு முஸ்லிம்கள் புகழ்பெற்று விளங்கினர். ஈ.ஆர்.எம்.இப்ராஹீம், மொஹமட் கவுஸ் ஆகியோரே அவர்கள்.
இக்காலத்தில் கொலம்பியா ஸ்ரூடியோவின் இசை அமைப்பாளராக மொஹமட் கவுஸ் விளங்கினார். இவருடன்
தம்பிஐயா தேவதாஸ் 117
கே.கே. ராஜலக்ஷமி, எஸ். வசந்தா என்போர் பாடகர்களாக இருந்தனர். பின்பு இவர்களுடன் மொஹிதீன் பேக்கும் சேர்ந்து கொண்டார். அதனால் 1936ஆம் ஆண்டளவில் கொலம்பியா இசைத்தட்டில் பேக்கின் முதலாவது பாடல் இடம் பெற்றது. இப்பாடலை மொஹிதீன் பேக், கே.கே.ராஜலக்ஷமியுடன் சேர்ந்து பாடினார்.
18 வயதில் மொஹிதீன் பேக் பாடிய அப்பாடல் அடங்கிய இசைத்தட்டுகள் மிக அதிகம் விற்பனையாகின என்று செய்திகள் கூறுகின்றன.
இக்காலப்பகுதியில் சிலோன் தியேட்டர்ஸ் நிறுவன அதிபர் சேர். சிற்றம்பலம் ஏ. கார்டினர் அவர்கள் தமது முதலாவது சிங்களப்படமான "அசோகமாலா'வைத் தயாரித்துக் கொண் டிருந்தார் இப்படத்தின் இசை அமைப்பாளர் கவுஸ் மாஸ்டர், மொஹிதீன் பேக்குக்கு நான்கு பாடல்களைப் பாடும் வாய்ப்புக் களைக் கொடுத்தார். அவர் பாடல்களை மட்டும் பாடவில்லை. ஒரு காட்சியில் பாடியவாறு நடிக்கும் வாய்ப்பும் மொஹிதீன் பேக்குக்கு கிடைத்தது. பாக்கியவதி என்னும் தமிழ்ப் பாடகியும் இப்படத்தில் மொஹிதீன் பேக்குடன் சேர்ந்து பாடினார்.
"அசோகமாலா' திரைப்படம் 1947ஆம் ஆண்டு திரை யிடப்பட்டது. இவ்வாண்டிலேயே பேக்குக்குத் திருமணமும் நடைபெற்றது. தனது மாமன் மகளான சகீனாபீ, என்பவரைத் திருமணம் செய்தார். இவர்களுக்கு எட்டுப் பிள்ளைகள் பிறந்தார்கள். உஸ்மான், ஹைதர், முபாரக், இஷாக், இலியாஸ் என்ற ஐவரும் ஆண் பிள்ளைகள் ராபியா, சலீமா, மொயினா ஆகிய மூவரும் பெண்பிள்ளைகள்.
மருதானை - தெமட்டகொட வீதியில் 50ஆம் இலக்க இல்லத்தில் பேக் தனது குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார்.
Page 62
118 இலங்கைத் திரையுலக முன்னோடிகள்
1950ஆம் ஆண்டின் பின் அதிக திரைப்பட வாய்ப்புகள் வந்தன, 'உதும் விஸ்வாசய' என்ற படத்தில் 4 பாடல்களைப் பாட வாய்ப்பு கிடைத்தது. 'கெலேஹந்த, தைவோ கய' ஆகிய படங்களில் ருக்மணிதேவியுடன் பாடினார்.
1953 இல் சினிமாஸ் குணரத்தினம் 'சுஜாதா' திரைப்படத்தைத் தயாரித்தார். இப்படத்திலும் இவருக்கு நான்கு பாடல்கள் ஒதுக்கப்பட்டன. இப்படத்தில் சில பாடல்களை ஜமுனா ராணியுடன் சேர்ந்து பாடினார். இப்படத்திலும் வயதுபோன பிச்சைக்காரனாக வேடம் தாங்கி திரையில் தோன்றிப் பாடினார்.
அக்காலத்தில் எஸ்.எம்.நாயகம். சிற்றம்பலம் ஏ கார்டினர், கே. குணரத்தினம், ரீ, சோமசேகரன் போன்ற தமிழர்கள் பல சிங்களப் படங்களைத் தயாரித்தனர். இவர்களது படங்கள் அனைத்திலும் மொஹிதீன் பேக்குக்கு வாய்ப்புகள் கிடைத்தன. இவர்களது படங்களின் வெற்றிக்கு பேக்கின் பாடல்கள் தேவைப்பட்டன.
1955 இல் ரீ. சோமசேகரன் 'சட சுலங் (புயல் காற்று) என்ற படத்தைத் தயாரித்தார். இப்படத்தில் ஒரு சாதனை இடம்பெற்றது. பிரபல இந்திப் பாடகி லதா மங்கேஷ்கரை வரவழைத்துச் சிங்களப் பாடல் ஒன்றைப் பாட வைத்ததுதான் அந்த சாதனை. லதா மங்கேஷ்கருடன் சேர்ந்துபாடும் வாய்ப்பு மொஹிதீன் பேக்குக்குக் கிடைத்தது.
'சடசுலங்' என்ற படத்திற்கு இசை அமைத்தவர் பிரபல தென்னிந்திய இசை அமைப்பாளரான ரீ. தகூழிணாமூர்த்தி.
மொஹிதீன் பேக்கின் இனிமையான கணிர் குரல் இப்படியான பல வாய்ப்புகளை அவருக்கு வழங்கியது. காதல்பாடல், பக்திப்பாடல், எழுச்சிப்பாடல்கள் என்று எந்த ரகப்பாடலாக
இருந்தாலும் அவை அவரது குரலுக்கு நன்கு பொருந்தின.
தம்பிஐயா தேவதாஸ் 119
1956இல் இலங்கையின் மிகப் பிரபலமான பாடகராக பேக் விளங்கினார். ஆனால் இந்தியப் பிரஜையாகவே வாழ்ந்து வந்தார். இப்பாடகரின் திறமையை மெச்சிய, அப்போதைய பிரதமராக இருந்த எஸ்.டபிள்யூ.ஆர். டி. பண்டாரநாயக்க இவருக்கு "இலங்கைப் பிரஜை' என்ற அந்தஸ்தை வழங்கினார்.
மொஹிதீன் பேக்சிங்களம், தமிழ், உருது ஆகிய மொழிகளில் பாடியிருக்கிறார். ஒரேயொரு இலங்கைத் தமிழ்ப்படத்தில் மட்டும் பாடியிருந்தார். 'கோமாளிகள்' என்ற படத்தில் மட்டும் பாடி யிருக்கிறார். 'கோமாளிகள்' என்ற படத்தில் 'ஆசை நிறைந்த மனிதன்' என்று தொடங்கும் பாடல்தான் அது, எம்.கெளஸ், ரீ. தகூழிணாமூர்த்தி, ஆர். முத்துசாமி, மொஹமட் சாலி, எம்.கே. ரொக்சாமி ஆகியோரின் இசை அமைப்பிலேயே பேக் அதிகமான பாடல்களைப் பாடியிருக்கிறார்
அப்பொழுது பாகிஸ்தானின் பிரதமராக ஜியாவுல் ஹக் இருந்தார். இவரின் அழைப்பை ஏற்று பேக் தனது மனைவி யாருடன் பாகிஸ்தானுக்குச் சுற்றுலா சென்று வந்தார். அப் பொழுதே மக்காவுக்கும் புனிதப்பயணம் சென்று விட்டு வந்தார். அல்ஹாஜ் மொஹிதீன் பேக் சினிமாப் பாடல்களுக்காகப் பல பரிசுகளைப் பெற்றிருக்கிறார். 1982இல் கிடைத்த ஜனாதிபதி கலாசூரி' பரிசில் அவற்றில் ஒன்றாகும். இத்தனை புகழும் பரிசும் பெற்ற பேக் நீண்ட காலம் மருதானை தெமட்டகொட வீதியில் இருந்த சிறிய வீட்டிலேயே வாழ்ந்து வந்தார். பல சிங்களக் கலைஞர்களுக்கு மாளிகாவத்தையிலும் எவிற்றிகல பிளட்ஸிலும் வீடுகள் கிடைத்தன. ஆனால் இந்த மாபெரும் இசைக்கலைஞருக்கு ஒரு சிறு வீடு கூட கிடைக்கவில்லை.
1991இல் பேக்கின் கண்களில் ஒன்றில் 'கற்றாக்' (Cataract) என்னும் நோய் தோன்றியது. அதற்குச் சிகிச்சை பெறச் சென்றவருக்கு ஆஸ்பத்திரியிலேயே தங்க வேண்டி வந்துவிட்டது.
Page 63
12Ο இலங்கைத் திரையுலக முன்னோடிகள்
இரத்தத்தில் ஏற்பட்ட நோய் காரணமாக மயங்கிய நிலையிலேயே அவரது உயிர் 4.11.91இல் பிரிந்தது. அவர் உயிருடன் இருந்த போது கேட்டுக் கொண்டது போலவே பூதவுடல் தெமட்டகொட வீதி வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு குப்பியாவத்தை மையவாடியில் நல்லடக்கம் ச்ெய்யப்பட்டது. அவரது மரண ஊர்வலத்தில் கலந்து கொண்ட பெருந்திரளான மக்கள் கூட்டம் அவரது புகழை எடுத்துக்காட்டியது.
மொஹிதீன் பேக் மறைந்து விட்டார். ஆனால் அவரது குரல் பாடல்கள் மூலம் இன்றும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.
மொஹிதீன் பேக் உயிருடன் இருந்த பொழுது அவர் பிள்ளைகள் பெரும் பாடல்கள் பாடியதில்லை. ஆனால் பேக் இறந்த பின்பு அவரின் ஒரு மகளும் ஒரு மகனும் சிறந்த பாடகர்களாக விளங்குகிறார்கள். மேடைகளில் தந்தையின் பிரபல பாடல்களை மகன் இஷாக் பேக் பாடிவருகிறார்.
20. ஏ.எஸ். ராஜா
இலங்கையிலே பல சிங்கள, தமிழ்ப் படங்களில் நடித்த ஏ.எஸ். ராஜா.
இலங்கையில் தமிழ்சினிமாவை வளர்க்க வேண்டும் என்று ஆரம்பத்தில் கனவு கண்டவர்கள் பலர்.
அதை நனவாக்கியவர்கள் சிலர். ஹென்றி சந்திரவன்ச, பி.எஸ். கிருஷ்ணகுமார், ஏ.அருணன், வீதங்கவேலு, வீ.எஸ். முத்து வேலு, எஸ்.என். தனரெத்தினம், ஏ.எஸ். ராஜா என்று பட்டியலை நீட்டிக் கொண்டே போகலாம்.
இவர்களில் ஏ.எஸ்.ராஜாவும், எஸ்.என். தனரெத்தினமும் பல தமிழ், சிங்களப் படங்களில் நடித்தவர்கள். பல தமிழ்ப்படத் தயாரிப்புகளுடன் தொடர்புடையவர்கள்.
இலங்கையின் முதலாவது (16 மி.மீ.) தமிழ்ப் படமான சமுதாயத்தில் கதாநாயகனாக நடித்தவர் எஸ்.என். தனரெத்தினம். இதே படத்தில் வில்லனாகத் தோன்றியவர் ஏ.எஸ்.ராஜா.
1940 ஆம் ஆண்டளவில் தென்னிந்தியக் கலைஞர்கள் பலர், சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகங்கள் பலவற்றை இலங்கையில் மேடையேற்றினர். அவற்றில் 'மச்ச ஹரிச்சந்திரா" என்ற நாடகமும் ஒன்றாகும். இந்நாடகத்தில் நடித்த நடிகை ஒருவர் இலங்கைக்குவர
Page 64
22 இலங்கைத் திரையுலக முன்னோடிகள்
முடியாமல் போய்விட்டது. அந்தப்பாத்திரத்துக்கு ஏற்ற ஒருவரை இலங்கையில் தேடினார்கள். நடிகை கிடைக்கவில்லை. நடிகர் தான் கிடைத்தார். அந்த நடிகருக்குப் பெண் வேடம் போட்டுநாடகத்தை மேடையேற்றி முடித்தனர். அப்படிப் பெண் வேடமேற்ற நடிகர் தான் ஏ.எஸ். ராஜா,
அந்த நாடகக் குழுவுடனேயே சிலகாலம் ஏ.எஸ். ராஜாவும் ஊர்சுற்றினாராம். அவர்கள் இந்தியா சென்ற போது இவரை இலங்கையிலேயே விட்டுவிட்டுச் சென்றார்கள்.
அன்று முதல் இவருக்கு நடிப்பின் மீது ஒரு ஆர்வம் பிறந்துவிட்டது. முதன் முதலாக இவரைச் சிங்களச் சினிமாவே வரவேற்றது. சிறு சிறு பாத்திரங்களில் தோன்றினார். காமினி பொன்சேகா, ருக்மணி தேவி போன்றோர் இவரைத் தங்கள் படங்களில் நடிக்க வைத்தனர்.
ஏ.எஸ். ராஜா மேடையிலும் சிங்களச் சினிமாவிலும் பிரகாசிக்கத் தொடங்கினார். விஜயா ஸ்ரேஜ்' என்ற பெயரில் நாடகக்கம்பனி ஒன்றை ஆரம்பித்தார். 'நீதிபதியின் மகள்', 'சுமதி எங்கே" என்பவை இவர் மேடையேற்றிய நாடகங்களில் புகழ் பெற்றவை. அக்காலத்தில் புகழ்பெற்ற நாடகங்களை மேடை யேற்றிய லடீஸ்வீரமணி, டீன் குமார் போன்றோரின் நாடகங் களிலும் நடித்தார். அதைத் தொடர்ந்து இருபத்தைந்து சிங்களப் படங்களுக்குமேல் நடித்துவிட்டார்.
காமினி பொன்சேகா பல சிங்கள வெற்றிப்படங்களில் நடித்தவர். "சண்டியா (சண்டியன்), ஹித்த ஹொந்தமினிஹா (நல்லிதயம் படைத்தவன்) 'சத்த பனஹாய் (ஐம்பது சதம்). 'யட்டகியதவச" (கடந்த நாட்கள்), 'சுரசெளரயா (வீராதிவீரன்) என்பன அவற்றில் சிலவாகும். இத்தனைப் படங்களிலும் ஏ. எஸ்.ராஜாவும் நடித்தார். காமினி பொன்சேகாவே மனம்
தம்பிஐயா தேவதாஸ் 23
կի
嵩 品
岛 ந்ஜீ 草
ந்
:
Page 65
124 இலங்கைத் திரையுலக முன்னோடிகள்
விரும்பிப் பாத்திரம் வழங்கும் அளவுக்கு ஏ.எஸ். ராஜா சிறந்த நடிகராக விளங்கினார். இவற்றில் இவர் சிறு பாத்திரங்களில் தோன்றினாலும் மனதில் நிற்கும்படி நடித்தார்.
இலங்கையின் முதலாவது 16 மி.மீ. தமிழ்ப் படத்தைத் தயாரித்த ஹென்றி சந்திரவன்ச பல சிங்களப் படங்களையும் தயாரித்தார் அவற்றில் "சமாஜய' (சமூகம்), 'வனகத்த கெல்ல' (காட்டுப்பெண்), செவன்னல பசுபசு (நிழலின் பின்னே) என்பனவும் அடங்கும். இப்படங்களிலெல்லாம் ஏ.எஸ். ராஜாவே வில்லனாக நடித்தார். அண்மையில் தொலைக் காட்சியிலே காண்பிக்கப்படும் பழைய சிங்களத் திரைப்படங்களில் ஏ.எஸ். ராஜாவையும் அடிக்கடி காணமுடிகிறது.
இத்தனை சிங்களப் படங்கள் நடித்த பின்பே இவருக்கு தமிழ்ப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஹென்றி சந்திரவன்சவின் தயாரிப்பில் உருவான "சமுதாயம்' படத்தில் நடித்தார். சந்திரவன்ச அடுத்துத் தயாரித்த 'சுமதி எங்கே’ படத்திலும் ஏ.எஸ். ராஜா நடித்தார்.
சிங்களப் படங்களைத் தயாரித்த தமிழ்ப் படமுதலாளிகள் பலர் இலங்கையில் தமிழ்ப்படங்களை தயாரிக்கவில்லை. ஆனால் ஒரு முதலாளி மட்டுமே ஒரேயொரு தமிழ்ப் படத்தைத் தயாரித்தார். டபிள்யூ எம்.எஸ். தம்பு தயாரித்த வெண்சங்கு படம்தான் அது. இப்படத்தில் ஒரு வயதான தந்தை வேடத்தில் தோன்றினார் ஏ.எஸ். ராஜா.
கிங்ஸ்லி செல்லையாவின் 'மஞ்சள் குங்குமம்' படத்திலும் நடித்தார்.
சிங்களப்படங்களில் பொலிஸ் அதிகாரியாக, குணசித்திர நடிகனாக, கொமடியனாக பல வேடங்களில் தோன்றினார்.
தம்பிஐயா தேவதாஸ் 125
ஆனால் தமிழ்ப் படங்களில் தந்தை பாத்திரமே அதிகமாக வழங்கப்பட்டது.
இப்பொழுது கலைஞர்களுக்குப் பட்டங்கள் வழங்கவென்றே பல சங்கங்கள் இருக்கின்றன. ஆனால் அந்தக் காலத்தில் அப்படி அதிகமாக இல்லை.
கொழும்பில் 1976ஆம் ஆண்டளவில் 'இலங்கைத் தமிழ் நடிகர் சங்கம்' என்ற ஒரு அமைப்பு, உண்மைக் கலைஞர்களுக்குப் பரிசுகளும் பாராட்டுகளும் வழங்கி வந்தது. இவ்வமைப்பு ஏ.எஸ். ராஜாவுக்கும் பட்டம் வழங்கிக் கெளரவித்தது. 'திரைக்கலைக் குரிசில்' என்பது தான் அப்பட்டத்தின் பெயர்.
அப்பொழுது இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபன சபைத் தலைவராக இருந்த எச்.எம்.பி.மொஹிதீன் அவர்களே இப் பட்டத்தை இவருக்கு வழங்கினார்.
இலங்கைக் கலை உலகில் திரைக்கலை" என்ற சஞ்சிகைக்குச் சிறப்பான இடம் உண்டு. மணவைத்தம்பி என்ற கலைஞர் இச்சஞ்சிகையை நீண்ட காலம் நடத்தி வந்தார். அச்சஞ்சிகையின் சார்பிலேயே ஏ.எஸ். ராஜாவுக்கு திரைக்கலைக் குரிசில்' என்ற பட்டம் வழங்கப்பட்டது.
இலங்கையில், தமிழ்க்கலைஞர்களின் வளர்ச்சிக்காக ஏ.எஸ். ராஜா பெரிதும் பாடுபட்டார். கலைஞர்களையும் அவர்களது படைப்புகளையும் பாராட்டிக் கெளரவித்தார்.
தான் உழைத்தவற்றில் பெரும்பகுதியை இவற்றுக்காகவே செலவு செய்தார். எவரையும் கேலி செய்ததில்லை. மனம் நோகும்படி நடந்து கொண்டதில்லை. இலங்கைத் தமிழ் சினிமாவின் உயர்வுக்கும் கலைஞர்களின் வளர்ச்சிக்கும் அவர் பெரும் பங்காற்றினார்.
Page 66
126 இலங்கைத் திரையுலக முன்னோடிகள்
கலைஞர் ஏ.எஸ். ராஜா 1981ஆம் ஆண்டு பெப்ரவரி 21ஆம் திகதி கொழும்பில் காலமானார். ஏ. எஸ்.ராஜா தன் வாழ்நாள் முழுவதும் நாடகக்கலையையும் திரைப்படக் கலையையும் நேசித்துப் பூசித்தவர்.
இலங்கையின் நாடகக் கலையை, சினிமாக் கலையை அவர்
அதிகமாக நேசித்தார்.
அதில் பங்காற்றிய கலைஞர்களையும் நேசித்தார். அப்படிப் பட்ட கலைஞனின் இழப்பு இலங்கைக் கலை உலகிற்குப் பேரிழப்பாகும்.
இலங்கைத் திரையுலக முன்னோடிகளில் ஒருவரான ஏ.எஸ். ராஜா விட்டுச் சென்ற கலைப் பணியை தொட்டுச் செல்ல அவரது மகன் ஒருவர் மேடையிலும் வானொலியிலும் தொலைக் காட்சி யிலும் பிரகாசிக்கிறார். அவர்தான் கலைஞர் ராஜா கணேசன்,
21. என்.எஸ். தனரெத்தினம்
இலங்கைத் தமிழ்ச் சினிமாவுடன்
ஆத்மார்த்த தொடர்புடைய எஸ். என்.
தனரெத்தினம்
இலங்கையில் சிங்களப்படங்களைத் தயாரித்தவர்கள் பண ஆதாயத்தை எதிர்நோக்கித் தயாரித்தார்கள். தமிழ்ப் படங்களைத் தயாரித்தவர்கள் அப்படியான ஆதாயத்தை எதிர்பார்க்கவில்லை. ஆத்ம திருப்தி பெறுவதே அவர்களது நோக்கமாக இருந்தது. எச்.சி.சந்திரவன்ச, பி.எஸ். கிருஷ்ணகுமார், அருணன்மாஸ்டர் வீ. தங்கவேலு, ஏ.எஸ்.ராஜா, எஸ்.என்.தனரெத்தினம் என்போர் இவ்வாறு ஆத்ம திருப்திக்காகப் படங்களை உருவாக்கியவர்களில் ઠીcoir.
எஸ்.என். தனரெத்தினம் இவர்களுள் முக்கியமான ஒருவர். இலங்கையின் தமிழ்ச்சினிமா உலகில் ஆரம்பம்முதல் இறுதிவரை இவருக்குத் தொடர்பு இருக்கிறது. இலங்கையின் முதல் திரைப் படமான சமுதாயத்தில் இவர் தான் கதாநாயகன், 1993இல் வெளி வந்த ‘சர்மிளாவின் இதய ராகத்தில் தந்தையாக நடித்தார். அந்த அளவுக்கு இலங்கைத் தமிழ்ச்சினிமாவில் நெருங்கிய தொடர் புடையவர் எஸ். என். தனரெத்தினம்.
இவர் சினிமாவில் நடிப்புத்துறையில் மட்டும் ஈடுபடவில்லை. பலபடங்களின் தயாரிப்புகளுக்குப் பின்னணியில் நின்றும்
Page 67
12B இலங்கைத் திரையுலக முன்னோடிகள்
உழைத்திருக்கிறார். பலபடங்களுக்குக் கதை வசனமும் எழுதி யிருக்கிறார். பல டப்பிங் படங்கள். இவரது முயற்சியிலேயே உருவாகியிருக்கின்றன.
மலையகத்தில் கொஸ்லந்தையில் நாராயணசாமி அமிர்தாம்பாள் தம்பதிகளுக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தவர் தனரெத்தினம், தன்வாழ்நாளில் பெரும்பகுதியைத் தலைநகரில் கழித்துக் கலையுலகில் நண்பர்கள் பலரைத் தேடிக்கொண்டார்.
தனரெத்தினம் பத்திரிகையாளராகவே தன் தொழிலை ஆரம்பித்தவர். 1970இல் வீரகேசரியில் உதவி ஆசிரியராகக் கடமையாற்றியவர். காலஞ்சென்ற ஆபிரகாம் கோவூருடன் சேர்ந்து பல ஆராய்ச்சிகளைச் செய்தவர். அவற்றைப் புத்தகமாக வெளியிட்டவர்.
மும்மொழிகளிலும் நல்ல தேர்ச்சி பெற்ற தனரெத்தினம், பல உள்ளூர்ப்படங்களுக்கு ஆதரவு வழங்கிக் கட்டுரைகள் எழுதினார்.
1975ஆம் ஆண்டளவில் வீ.பி.கணேசன் "புதிய காற்று' திரைப்படத்தின் மூலம் பரபரப்பை ஏற்படுத்தினார். இவரின் வெற்றிக்கு எஸ்.என். தனரெத்தினமும் உதவியாக நின்றார். வீ.பி.கணேசன் தயாரித்த மூன்று தமிழ்ப் படங்களிலும் இவருக்கு முக்கிய பாத்திரங்கள் மட்டும் வழங்கப்படவில்லை; முக்கிய பொறுப்புகளும் வழங்கப்பட்டன.
"புதிய காற்றில் கதாநாயகனின் தந்தையாக நடித்த தனரெத்தினம், "நான் உங்கள் தோழனில்' கிறிஸ்தவப் பாதிரியா ராகத் தோன்றினார். "நாடு போற்ற வாழ்க" திரைப்படத்தின் உதவி இயக்குநரும் இவரேதான்.
"சமுதாயம்" படத்தைத் தவிர மற்றப்படங்களிலெல் லாம் தனரெத்தினத்துக்கு வயது முதிர்ந்த பாத்திரங்களே
தம்பிஐயா தேவதாஸ் 129
Page 68
13O இலங்கைத் திரையுலக முன்னோடிகள்
வழங்கப் பட்டன. பிரபல சிங்களத் திரைப்பட இயக்குநர் யசபாலித்த நாணயக்காரவுடன் இவருக்கு நெருங்கிய தொடர் பிருந்தது.
அதனால் யசபாலித நாணயக்கார இயக்கிய இரண்டு தமிழ்ப் படங்களிலும் தனரெத்தினமே உதவி இயக்குநர். அப்படியான படங்களில் ஒன்றுதான் 'அநுராகம்'. இப்படம் ஒரேநேரத்தில் தமிழிலும் சிங்ளத்திலும் தயாரிக்கப்பட்டது. இரண்டு மொழிப் படங்களை ஒரே நேரத்தில் தயாரித்தால் தயாரிப்புச் செலவு குறையும் என்ற கருத்தை முதலில் வெளியிட்டவர் தனரெத்தினம் தான.
'அநுராகம்' திரைப்படத்துடன் ஒரே நேரத்தில் தயாரிக்கப் பட்ட சிங்களப்படத்தின் பெயர் “கீதிகா' என்பதாகும். இவ்விரு படங்களிலும் தனரெத்தினமே உதவி இயக்குநராகக் கடமை யாற்றினார். 'அநுராகம்' படத்தில் முக்கிய பாத்திரமொன்றிலும் தனரெத்தினம் தோன்றி நடித்தார். 'அநுராகம்' படத்தைத் தொடர்ந்து தனரெத்தினம் பலபடங்களில் பல்வேறு தொழிலின் பல்வேறு துறைகளில் கடமையாற்றினார். திரைப்பட தொழில் நுட்பப் பிரிவுகளிலும் அனுபவம் பெற்றவர்.
1978ஆம் ஆண்டளவில் திருகோணமலையைச் சேர்ந்த
டொக்டர் எஸ்.ஆர்.வேதநாயகம் 'தென்றலும் புயலும் என்ற படத்தைத் தயாரித்து வந்தார். அப்படத்திலும் தனரெத்தினத்துக்கு வழமையைப் போல் தந்தைபாத்திரம் வழங்கப்பட்டது. இப் படத்தில் நடித்தது மட்டுமன்றி அப்படத்தின் வளர்ச்சியிலும் பெரும்பங்காற்றினார். தமிழ்ச்சினிமா இலங்கையில் எங்கு தயாரிக்கப்படுகிறதோ அங்கெல்லாம் தனரெத்தினத்தின் பங்களிப்பும் தொடர்ந்து கொண்டே இருந்தது.
ஹட்டன் லிபேர்டி தியேட்டர் உரிமையாளர் வி.கே.ரி பொன்னுசாமிப் பிள்ளை தயாரித்த படத்தின் பெயர் "தெய்வம்
தம்பிஐயா தேவதாஸ் 131
தந்த வீடு'. இப்படத்தில் இவருக்கு இளைஞன் பாத்திரம் வழங்கப்பட்டது. அப்படத்தில் பிரதான பாத்திரமொன்றிலும்
சிறப்பாக நடித்தார்.
தலையிலே தலைப்பாகை, நெற்றியிலே திருநீற்றுப் பூச்சுடன் ஒரு அன்பான இளைஞனாக இவர் தோன்றினார். கோயில் முதலாளிகளாக இவரும் கே. ஏ. ஜவாகரும் சேர்ந்து தோன்றி னார்கள். இப்படத்தில் தனரெத்தினம் வெகுசிறப்பாக நடித்திருந் தார்' என்று ஒரு பத்திரிகை விமர்சனம் எழுதியது.
இலங்கைக் கலைஞர்களுடன் இந்தியக் கலைஞர்கள் பங்குபற்றிய திரைப்படங்களில் 'பாதை மாறிய பருவங்கள்' என்ற படமும் ஒன்றாகும். இப்படமும் வளருவதில் தனரெத்தினம் பலவழிகளிலும் உதவியிருக்கிறார். படப்பிடிப்பின் போது தனரெத்தினம் கெமறாவை வேனில் வைத்துத் தள்ளிக்கொண்டு போனதை நானும் கண்டிருக்கிறேன். அந்த வகையில் இலங்கை சினிமாவின் வளர்ச்சிக்குப் பல்வேறு வகைகளில் உதவியிருக் கிறார்.
ஏ.ஏ.ஜூனைதீன் தயாரித்த 'சர்மிளாவின் இதயராகம்' படமே தனரெத்தினம் நடித்த இறுதிப்படமாகும். சிவாஜி கணேசன் - மாலினி போன்றோர் நடித்த 'பைலட் பிரேம்நாத்" என்ற படம் இந்தியாவிலும் இலங்கையிலும் அதிக நாட்கள் ஓடியது. இப்படத்தின் இலங்கைத் தயாரிப்பாளர் டி.எம். சந்திரசேன ஆவார். இவர் இப்படத்தை சிங்கள மொழியிலும் மொழிமாற்றம் செய்தார். இப்படி இப்படம் சிங்கள மொழிக்கு மொழிமாற்றம் செய்யப்படும்பொழுது தனரெத்தினமும் முன்னின்று உழைத்தார். இலங்கை சினிமாத் தொழிலுக்காக தான் கடமையாற்றிய நிரந்தரத் தொழில்களையெல்லாம் தட்டிக்கழித்தார். அவர் 1993ஆம் ஆண்டு காலமானார். ஏறக் குறைய 40 ஆண்டுகள் இலங்கைச் சினிமாவின் உயர்வுக்குப் பெரும்பங்காற்றினார். இலங்கைத் தமிழ்
Page 69
32 இலங்கைத் திரையுலக முன்னோடிகள்
படங்களில் அதிகம் தொடர்பு கொண்டிருந்த ஒருவராக இவரைக் கொள்ளலாம்.
அவர் காலமாகும் வரை இலங்கையின் தமிழ்ச்சினிமாவின் வளர்ச்சிக்குப் பாடுபட்டார். நடிகராக, கதை வசனகர்த்தாவாக, உதவி இயக்குநராக பல்வேறு துறைகளிலே அவர் ஈடுபட்டுத்தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு வழிகாட்டினார். இலங்கையில் தமிழ்ச்சினிமா எங்கு தயாரிக்கப்படுகிறதோ அங்கெல்லாம் சென்று தன் உதவியை வழங்குவார். அந்தளவுக்கு இலங்கையின் கலைகள் மீது அதிக ஆர்வம் உள்ளவர். அவரது இழப்பு அவரது குடும்பத்துக்கு மட்டுமல்ல் முழு இலங்கை கலை உலகத்துக்கே பேரிழப்பாகும். எப்படிப் பார்த்தாலும் எஸ்.என்.தனரெத்தினம் இலங்கைத் திரையுலக முன்னோடிகளில் ஒருவர் என்பதை எவரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.
22. வீ.எஸ். முத்துவேலு - திருமதி ரஞ்சனிமுத்துவேலு
"தோட்டக்காரி திரைப்படத்தயாரிப்பில் உதவியதிரு.வீ.எஸ். முத்துவேலுவும் திருமதி ரஞ்சனிமுத்து வேலுவும்.
கணவனும் மனைவியும் கலைத்தொழில்களில் ஈடுபடுவது மிகவும் குறைவு. தம் கணவர் கலைத் தொழிலில் ஈடுபட்டு வீணாகப் பணத்தையும் நேரத்தையும் செலவழிக்கிறாரே என்பதுதான் பெரும்பாலான மனைவியரின் குறைபாடாகும், ஆனாலும் விதிவிலக்காகச் சில தம்பதிகள் அமைந்து விடுவதையும் நாம் காணலாம். அப்படியான ஒரு தம்பதிதான் திரு.வீ.எஸ். முத்துவேலும் அவரது மனைவியார் திருமதி ரஞ்சனி முத்துவேலும் ஆவார்கள்.
Page 70
134 இலங்கைத் திரையுலக முன்னோடிகள்
நல்லை நகர் நாவலரை அறியாத தமிழர்கள் இல்லை எனலாம். அந்த ஆறுமுக நாவலரின் தம்பியின் பெயர் வெற்றிவேலு. இந்த வெற்றி வேலுவின் பூட்டப்பிள்ளையின் பெயர் வீ. எஸ். முத்துவேலு, ஆறுமுக நாவலர் சமயப் பணியுடன் தமிழ்ப்பணியும் செய்தார். இந்த முத்துவேலு தமிழ்ப்பணியுடன் கலைப்பணியும் செய்தார்.
இலங்கையில் தமிழ்ப்படம் தயாரிக்கவேண்டும் என்று ஆரம்பகாலத்தில் முனைந்துநின்றவர்களுள் இந்த முத்துவேலுவும் ஒருவர். இவரது மனைவி திருமதி ரஞ்சனி முத்துவேலும் அதற்கு அனுசரணை வழங்கினார்.
1951ஆம் ஆண்டளவில் கொழும்பில் திம்பிரிக்கசாய என்ற இடத்தில் ஒரு வீட்டில் இந்தத் தம்பதியினர் குடியிருந்தனர். இவர்களது பக்கத்து வீட்டிலிருந்த இளைஞனொருவன் 'வனகத்த கெல்ல" என்ற சிங்களப் படத்தைத் தயாரித்தான். படத்தை முடிப்பதற்குப் பணமின்றிக் கஷ்டப்பட்டான். அவனுக்குச் சிறிது பணம் கொடுத்துப் படத்தைத் தயாரித்து முடிக்க உதவி செய்தார் வி.எஸ். முத்துவேலு.
இதுதான் வி.எஸ். முத்துவேலுவின் சினிமாப் பிரவேசம்: கலைப்பயணத்தின் ஆரம்பம்.
திரு.வீ.எஸ். முத்துவேலு 1945ஆம் ஆண்டளவில் இலங்கை வங்கியில் கடமையாற்றினார். சில ஆண்டுகளில் பின் இலங்கை வங்கியின் லண்டன் கிளைக்கு மாற்றப்பட்டார். இலண்டனிலும் பல திரைப்படங்களைப் பார்த்தார். அங்கு சிலகாலம் கடமையாற்றி
விட்டு இலங்கை திரும்பினார்.
இலங்கை திரும்பியதும் மீண்டும் இவர் உள்ளத்தில் கலை உணர்வுகள் சுடர்விட்டன எழுத வேண்டும் என்ற ஆவல் பிறந்தது. 'பிரேம வீலா' என்ற நாவலை எழுதி முடித்தார். சஞ்சிகை
35
தம்பிஐயா தேவதாஸ்
(oggi) qismụuono Ihoogs qhoumsocos!, TERIIGIHIỆormuoju ***q司屯mu自u恩中因norn呂劑 ogs-ırırıdaoğ, yugę--use), oặụurnoq-fissoriogaes) ysgoàu sặc sỡqhos@reosoof?"suolo 5°*為
Page 71
136 இலங்கைத் திரையுலக முன்னோடிகள்
நடத்த வேண்டும் என்று ஆசை எழுந்தது. 1954 ஆம் ஆண்டளவில் 'கலை ஈழம்' என்ற சஞ்சிகையை வெளியிட்டார். அச்சஞ்சிகையின் மூலம் இலங்கையின் கலாச்சார விழாச் செய்திகள், சினிமாச் செய்திகள், நாடகச் செய்திகள் விமர்சனங்கள் போன்றவற்றை யெல்லாம் வெளியிட்டார்.
சினிமா மீது ஆர்வமும் ஆசையும் கொண்ட இளைஞர்கள் பலர் இவருடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டனர். இக்காலத்திலேயே இவருக்கு சந்திரவன்ச, தங்கவேலு, அருணன், கிருஷ்ணகுமார் ஆகியோருடன் நட்பு ஏற்பட்டது. இவர்களுடன் ஒன்று சேர்ந்து 'சினிமாக் கலா நிலையம்' என்ற ஒரு மன்றத்தை உருவாக்கினார். நாள்கள் செல்லச் செல்ல இந்தக் கலைஞர்கள் மூன்று பெரிய குழுக்களாகப் பிரிந்தனர். இவர்களுக்கிடையில் இருந்த ஒற்றுமையும் பலமிழந்தது.
சந்திரவன்ச குழுவினர் ‘சமுதாயம்' என்ற படத்தைத் தயாரிக்க முயன்றனர். அருணனின் குழு "புரட்சி' என்ற படத்தைத் தயாரிக்கத் தொடங்கியது. தங்கவேலுவும் கிருஷ்ணகுமாரும் "தோட்டக்காரி' என்ற படத்தை உருவாக்கத் தொடங்கினார்கள். இந்தக் குழுவினருடனேயே வீ. எஸ். முத்துவேலுவும் இணைந்து
கொண்டார்.
திருமதி ரஞ்சனி முத்துவேலு கணவனின் கலை ஆர்வத்துக்கு
ஒத்தாசை வழங்கினார்.
இவர்களது ஒத்துழைப்பினால் தோட்டக்காரியை கிருஷ்ண
குமார் விரைவில் திரைக்குக் கொண்டு வந்தார்.
பின்னாளில் முத்துவேலுவுடன் சேர்ந்து தமிழ்ப் படம் தயாரிப்போமா என்ற எண்ணம் வி.எஸ். துரைராஜாவுக்கும் எழுந்தது.
தம்பிஐயா தேவதாஸ் 137
இக்காலத்தில் வீ.எஸ்.முத்துவேலு இலங்கையில் உள்ள இந்தியன் வங்கியொன்றில் வேலை செய்து கொண்டிருந்தார். அவ்வங்கியின் முகாமையாளராக இந்தியாவைச் சேர்ந்த வரதாச்சாரியார் என்பவர் கடமையாற்றினார். இலங்கையில் படம் தயாரித்தால் நடு வீதியில் நிற்க வேண்டிவரும் என்று இவர் எச்சரித்தாராம். அதனால் வி.எஸ். துரைராஜாவுடன் சேர்ந்து படம் தயாரிக்க முடியாமல் போய்விட்டதாம்.
இலங்கையின் முதலாவது 35 மி.மீ தமிழ்ப் படமான தோட்டக்காரிக்கு உதவித் தயாரிப்பாளர்களாக விளங்கியதுடன் இத்தம்பதிகளது சினிமாத் தொடர்பு சற்று விலகியது. ஆனாலும் திரு. முத்துவேலுவும் திருமதி ரஞ்சனிமுத்துவேலுவும் இலங்கையில் தயாரான அனைத்துத் தமிழ்ப் படங்களையும் பார்த்து அவற்றுக்கு ஆதரவு வழங்கி வந்தனர்
1997ஆம் ஆண்டு இவர்கள் அவுஸ்திரேலியா சென்று குடியேறும்வரை கொழும்பு கறுவாக்காட்டில் பாண்ஸ் பிளேஸில் உள்ள தங்கள் சொந்த வீட்டில் வாழ்ந்து வந்தார்கள்.
இப்பொழுது திரு.வீ.எஸ். முத்துவேலுவும் திருமதி. ரஞ்சனிமுத்துவேலுவும் அவுஸ்திரேலியாவில் வாழ்கிறார்கள். முத்துவேலு தம்பதிகளுக்கு இரண்டு புதல்வர்களும் ஒரு புதல்வியும் இருக்கிறார்கள். அனைவரும் அவுஸ்திரேலியா விலேயே வாழ்கிறார்கள். மூத்த மகன் பிரகாஷ் முத்துவேலு குழந்தை நட்சத்திரமாகத் தோட்டக்காரி'யில் தோன்றி நடித்தவர்.
இப்பொழுது அவுஸ்திரேலியாவில் வசிக்கும் முத்துவேலு ரஞ்சனி தம்பதிகளின் வீட்டின் பெயர் ‘பூரீகிருஷ்ணா என்பதாகும். கடல் கடந்த நாட்டில் வாழ்ந்தாலும் தமது கலாச்சாரத்தை மறக்க வில்லை என்பது அவரின் வீட்டின் பெயர் எங்களுக்கு உணர்த்து கிறது. இவர்கள் தயாரித்தது ஒரேயொரு தமிழ்ப் படமாயினும்
Page 72
138 இலங்கைத் திரையுலக முன்னோடிகள்
இலங்கையின் திரைப்பட வளர்ச்சிக்கு முன்னோடியாக நின்றவர் களின் பட்டியலில் திரு.வீ.எஸ். முத்துவேலு, திருமதி ரஞ்சனி முத்துவேலு ஆகிய கலைத்தம்பதிகளின் பெயர்களும் இடம் பெறவே செய்யும்.
இவர்கள் இருவரும் இப்பொழுது,
"SRI KRISHNA
15, KARYMBA PLACE
RIVER HILLS
QLD - 4074
BIRSBANE AUSTRALIA, என்ற முகவரியில் வாழ்கிறார்கள்.
23. ஆர். முத்துசாமி (1928 - 1988)
35 ஆண்டுகள்இலங்கைத்திரைஉலகின் இசையமைப்பாளர் ஆர்.முத்துசாமி.
திரைப்பட வெற்றிக்கு அவற்றில் இடம்பெறும் பாடல்களும் ஒரு காரணமாகும். அப்படித் திரையுலகில் இசைத்துறை என்பது மிக முக்கியமான அம்சமாகும். சிங்களத்திரையுலகில் இசைத்துறை என்பது ஆரம்பத்தில் தமிழர்களாலும், முஸ்லிம்களாலும் கட்டி வளர்க்கப்பட்டது. ஆரம்பகாலப் படங்களில் இந்திய இசையமைப் பாளர்களும் பின்னணிப் பாடகர்களும் பெரும் பங்காற்றியிருக் கின்றனர். நாராயண ஐயர், கெளஸ் மாஸ்டர், டி.ஆர். பாப்பா, தட்சணாமூர்த்தி, முத்துசாமி, றொக்சாமி, முஹமட் சாலி, ரி.எப். லதீப் போன்றோர் பல சிங்களப் படங்களுக்கு இசையமைத்திருக் கின்றனர்.
இவர்களில் ஆர். முத்துசாமி முக்கியமானவர். முதலாவது சிங்களப்படமான 'கடவுனு பொறந்துவ' வுக்கு இவர்தான் உதவி இசையமைப்பாளர். தொடர்ந்து ஐம்பதுக்கு மேற்பட்ட சிங்களப் படங்களுக்கும், தமிழ்ப் படங்களுக்கும் இசையமைப்பதற்கு வாய்ப்புக் கிடைத்ததே அவர் ஒரு சிறந்த இசையமைப்பாளர் என்பதற்கு அடையாளம் எனலாம். கிட்டத்தட்ட 35 ஆண்டுகள் சிங்களத் திரைப்பட இசை உலகில் கொடிகட்டிப் பறந்தார்.
Page 73
14 Ο இலங்கைத் திரையுலக முன்னோடிகள்
ஆர். முத்துசாமி 1928ஆம் ஆண்டு ஜனவரி 5ஆம் திகதி இந்தியாவில் நாகர்கோவிலில் பிறந்தவர். தந்தையாரின் பெயர் இராமையா பாகவதர். தாயின் பெயர் தங்கம்மா, ஆரம்பத்தில் ஆர்.முத்துசாமி தன் தந்தையாரிடம் இசை கற்றவர். 10 வயதிலேயே முத்துசாமி வயலின் கற்று விட்டார்.
இசை ஆர்வத்தை அடக்கி வைத்திருக்க முடியவில்லை. பெற்றோரிடம் சொல்லிக் கொள்ளாமலேயே சென்னைக்குப் பாய்ந்தோடி விட்டார்.
பிரபல இசையமைப்பாளர் சீ. ராமச்சந்திரனிடம் சென்றடைந்து விட்டார். இவரது இசைக் கலைஞர்களுக்கு தேநீர் தயாரிப்பதும், வழங்குவதும் சிறுவன் முத்துசாமியின் ஆரம்பத் தொழிலாகும். கலைஞர்கள் இல்லாதபோது அவர்களின் வயலினை இசைத்துப் பார்ப்பார். இதை அவதானித்த ராமச்சந்திரன் இவருக்கு வயலினை மேலும் கற்பித்தார். முத்துசாமி நன்றாகவே வயலின் வாசிக்கக் கற்றுவிட்டார். ஆர்மோனியமும் கைவந்த கலையாகி விட்டது.
இக் காலத்திலே இந்தியாவில் மதுரையில் எஸ்.எம். நாயகம் 'குமரகுரு' என்ற தமிழ்ப்படத்தைத் தயாரித்தார். இப்படத்தின் பாடல்களுக்கு வயலின் இசைவழங்கும் வாய்ப்பு நாயகத்தினால் முத்துசாமிக்கு வழங்கப்பட்டது. அதனால் எஸ்.எம். நாயகம் தயாரித்த முதலாவது சிங்களப் படமான 'கடவுனு பொறந்துவ வுக்கு ஆர். முத்துசாமி உதவி இசையமைப்பாளரானார்.
முதலாவது சிங்களப்படத்தைத் தயாரித்த எஸ்.எம். நாயகமே 1950இல் இலங்கையில் முதலாவது ஸ்ரூடியோவையும் அமைத்தார். அதுவே கந்தானையில் உருவாக்கப்பட்ட 'சுந்தர சவுண்ட் ஸ்ரூடியோ ஆகும். ஸ்ரூடியோவின் இசைப்பகுதியை முத்துசாமியிடம் பொறுப்புக் கொடுத்தார் நாயகம். இந்த
தம்பிஐயா தேவதாஸ் 141
ஸ்ரூடியோவில் உருவான (பண்டா கம்ஸ் டு டவுன்) 'பண்டா நகரயட பமினிம' படத்திலும் ஆர். முத்துசாமிக்கு உதவி இசையமைப்பாளர் பதவியே வழங்கப்பட்டது.
எஸ்.எம். நாயகம் தயாரித்த இன்னுமொரு படத்தின்பெயர் "பிறேம தறங்கய' (காதற் போட்டி) என்பதாகும். இதுவே முத்துசாமி தனித்து முதலில் இசையமைத்த படமாகும்.
இப்படமே முத்துசாமியின் இசை வாழ்வுக்கு ஒளி விளக்கு ஏற்றியது எனலாம். இப்படத்தின் சிறந்த இசையமைப்புக்காக 'இந்தியப் பத்திரிகையாளர் சங்கம் பாராட்டுப்பத்திரத்தை வழங்கியது. இப்படத்தின் இசையில் லயித்த அப்போதைய பிரதமர் சேர் ஜோன் கொத்தலாவல ஆர். முத்துசாமிக்குக் கெளரவப்பிரஜை அந்தஸ்து வழங்கியமை இன்னுமொரு வெற்றியாகும்.
டாக்ஸி டிரைவர், மஞ்சள் குங்குமம், வெண்சங்கு, குத்துவிளக்கு, காத்திருப்பேன் உனக்காக, எங்களில் ஒருவன் ஆகிய தமிழ்ப் படங்களின் இசையமைப்பாளர் ஆர். முத்துசாமியே ஆவார். ஆர். முத்துசாமி 1960ஆம் ஆண்டு வெளிவந்த நலங்கனா’ என்ற படத்தின்மூலம் சிங்களத்தில் பின்னணி பாடவும் ஆரம்பித்தார். இவர் அக்கால கைராசிக்கார இசையமைப்பாள ராகக் கருதப்பட்டார். 1961ஆம் ஆண்டு 9ஆம் திகதி விஜயா ஸ்ரூடியோவில் ஒலிப்பதிவுப் பகுதியைக் கே. குணரத்தினம் ஆரம்பித்து வைத்தார். அதைத் திறந்து வைக்கும் வாய்ப்பு கே. குணரத்தினத்தால் ஆர். முத்துசாமிக்கு வழங்கப்பட்டது. சினிமா அதிபர்கள் மட்டுமல்ல சினிமா ரசிகர்களும் முத்துசாமியை விரும்பினார்கள் என்பதற்கு 1964இல் சிங்களப் பத்திரிகை ஒன்று எடுத்த கருத்துக்கணிப்பு விளக்குகிறது. அவருக்கு இரண்டாவது இடம் கிடைத்தது.
Page 74
142 இலங்கைத் திரையுலக முன்னோடிகள்
(1) அமரதேவ - 16500, (2) ஆர்.முத்துசாமி - 10248 (3) லயனல் அல்கம-10241, (4) பிறேமசிறிகேமதாச-10168 (5) எம்.கே. றொக்சாமி - 9113, (6) மொஹமட் சாலி - 589
இவ்வாறு அந்த கருத்துக் கணிப்பு வாக்குகள் அமைந்தன. இசை ரசிகர்கள் மட்டும் முத்துசாமியை விரும்பவில்லை. பின்னாளில் பிரபலமான இசையமைப்பாளர்களாக உருவாகிய கலைஞர்கள் கூட அவரை விரும்பி அவரின் குழுவில் இசை பயின்றனர். பிறேமசிறி கேமதாச (புல்லாங்குழல்), சரத் தசநாயக்க (சித்தார்), விக்டர் ரத்னாயக்க (வயலின்), எம்.கே. றொக்சாமி (வயலின்), மொஹமட் சாலி (ஆர்மோனியம்), ரி.எப். லதீப் (கிளாரினட்) போன்றோரே அவர்கள். ஆர். முத்துசாமிக்கு பெரிதாக எதுவும் பரிசுகள் கிடைக்கவில்லை.
1974இல் ‘ரைம்ஸ் நிறுவனம் முத்துசாமிக்கு தீபசிகா" என்ற விருதை வழங்கியது. 1985இல், தேசிய கத்தோலிக்க சினிமாச் சங்க சபை, அவருக்கு விருது வழங்கி கெளரவித்தது.
அதிகமான திரைப்படங்களுக்கு இசையமைத்த ஆர். முத்துசாமி எந்தச் செல்வத்தையும் சேர்த்து வைக்கவில்லை. கொழும்பில் தனது மனைவி பிள்ளைகளோடு வசித்து வந்த வாடகை வீட்டை விலைக்கு வாங்கியமை அவர் பெற்ற ஒரு செல்வம். இசையமைப்பிலும பின்னணி பாடுவதிலும் சிறந்து விளங்கும் எம். மோகன்ராஜ் என்னும் அவரது மகனும் இன்னு மொரு செல்வம்.
இலங்கை வானொலியில் பல மெல்லிசைப் பாடல்களுக்கு இசையமைத்த முத்துசாமி 1979ஆம் ஆண்டு முதல் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ் வாத்தியக் குழுவின் தலைவராக இருந்து 1985இல் ஓய்வு பெற்றார். இவரது காலத்திலிருந்து ஈழத்து மெல்லிசைப்பாடல்கள் தனி மெருகு பெற்றன.
தம்பிஐயா தேவதாஸ் 143
லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் பொதுவாகத் தமிழ், முஸ்லிம் இசையமைப்பாளர்களுக்கு சந்தர்ப்பம் வழங்குவதில்லை. அவர் கூட ‘சந்தேஷய' என்ற படத்துக்கு இசையமைக்க முத்துசாமிக்கு வாய்ப்பு வழங்கினார். 1975ஆம் ஆண்டின்பின் முத்துசாமிக்குத் திரைப்பட வாய்ப்புகள் குறைந்தன. பொருளாதார நெருக்கடி யினால் மனம் பாதிக்கப்பட்டது. நீரிழிவு நோயினால் அவரது உடல்நலம் குறைந்தது. இந்நிலையில் அவருக்கு உதவி செய்ய முன் வந்தார் நடிகர் விஜயகுமாரதுங்க.
"பதின்மூன்று வருடங்களின் பின்பு. ஸ்ரூடியோ ஒன்றுக்குள் மீண்டும் காலடி வைக்க விஜயகுமாரதுங்க உதவினார்' என்று கூறியமுத்துசாமி, விஜயகுமாரதுங்க சுட்டுக்கொல்லப்பட்டபோது கண்ணீர் விட்டு அழுதார். 1988ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27ஆம் திகதி காலமான ஆர். முத்துசாமி இலங்கை இசைத்துறைக்கு அதிகமாகவே சேவைசெய்திருக்கிறார். அவர் விட்ட இடத்தைத் தொட்டுத் தொடர்வதற்கு அவரது புதல்வர் எம். மோகன்ராஜ் இன்று இசை உலகில் உயர்ந்து வருகிறார்.
Page 75
24. அன்ரன் கிரகரி
பல தமிழ்ப் படங்களுக்கு உதவி நெறியாளராக விளங்கிய அன்ரன் கிரகரி,
பலர் சேர்ந்து ஒரு கப்பலைக் கட்டலாம். ஆனால் அக் கப்பலைச் செலுத்தும் மாலுமியே பிரதானமானவன். அதேபோல் பலர் சேர்ந்து ஒரு திரைப்படத்தை உருவாக்கலாம். ஆனால் இயக்குநர் ஒருவரின் பணியே அதில் பிரதானமானது. ஒரு படத்தில் ஓர் இயக்குநருக்குத் துணையாகப் பல உதவி நெறி யாளர்கள் இருப்பார்கள். இந்த உதவி நெறியாளர்களின் பணி களும் மிக முக்கியமானவையாகும். சிறந்த நெறியாளர்கள் பலர், படங்களில் உதவி நெறியாளராகக் கடமை ஆற்றிய பின்பே திரை உலகிற்கு வருவார்கள்.
சில தமிழ்ப்படங்கள், பல சிங்களப் படங்கள் என்று 42 படங்களுக்கு உதவி நெறியாளராகக் கடமையாற்றிவிட்டுத்தனியே படங்களை இயக்க முன்வந்தார் ஒரு தமிழர். அப்படி தனியே 5 சிங்களப் படங்களையும் இயக்கி விட்டார். பிரபலமான இலங்கை இந்தியக் கூட்டுத் தயாரிப்பில் தமிழ்ப்படமொன்றுக்கும் நெறியாள ராக நியமிக்கப்பட்டார். அப்படி உயர்ந்த அந்தக் கலைஞர் யார் தெரியுமா?
Page 76
146 இலங்கைத் திரையுலக முன்னோடிகள்
அவர்தான் நீர்கொழும்புத் தமிழர் அன்ரன் கிரகரி, பிரபல இயக்குநர் எம். மஸ்த்தான் சிங்களப்படமொன்றின் படப்பிடிப்பை நீர்கொழும்பில் வைத்துக் கொண்டார். இந்தப் படப்பிடிப்பை இளைஞன் ஒருவன் பார்த்துக் கொண்டிருந்தான். சனங்களைப் படம் பிடித்த போது இவனும் காட்சிக்குள் அகப்பட்டுவிட்டான். அத்திரைப்படம் திரைக்கு வரும் வரை அவனுக்கு நித்திரை வரவில்லை. அந்தக் காட்சியை திரைப்படத்தில் பார்த்தபின்புதான் நிம்மதியாக நித்திரை செய்தான்.
அவனுக்கு சினிமா ஆசை அதிகரித்து விட்டது. அப்படி சினிமா ஆசையில் விழுந்த அந்த இளைஞன் தான் இந்த அன்ரன் கிரகரி.
அன்ரன் கிரகரி 'தட்டுங்கள் திறக்கப்படும்" என்ற கொள்கை உடையவர். நேரே டைரக்டர் எம். மஸ்த்தானிடம் சென்றார். தனக்கு சினிமாமீது இருக்கும் ஆசையைத் தெரிவித்தார். இவரிடம் இருந்த ஆர்வத்தை மஸ்த்தான் புரிந்து கொண்டார். "ஆங்கில, தமிழ் மொழி பெயர்ப்புச் செய்ய முடியுமா?' என்று கேட்டார். அன்ரன் கிரகரி "ஆம்" என்று பதிலளித்தார். தனது உதவியாளர் மூலம் கிரகரியின் விலாசத்தை மஸ்த்தான் எழுதிக் கொண்டார். இரண்டு மாதத்தின் பின் கிரகரிக்கு அழைப்பு வந்தது.
"ஹெந்தளை விஜயா ஸ்டூடியோவில் என்னை வந்து சந்திக்கவும் - மஸ்த்தான் இந்த அழைப்புக் கடிதத்தை ஹியூ கோ மாஸ்டர் கொண்டு வந்து கொடுத்தார்.
கிரகரி, மஸ்த்தானைச் சென்று சந்தித்தார். கே. குணரத்தினமும் எம். மஸ்த்தானும் சேர்ந்து உரையாடி கிரகரிக்கு ஒரு வேலை போட்டுக் கொடுத்தார்கள். கனிஷ்ட மொழி பெயர்ப்பாளர் (JuniorTranslator) என்பதுதான் அந்தப் பதவி. 1964ஆம் ஆண்டு ஜூன்மாதம் 4 ஆம் திகதி இவருக்கு இந்தப் பதவி கிடைத்தது.
தம்பிஐயா தேவதாஸ் 47
இப்படித்தான் மஸ்த்தானின் வழிகாட்டலில் தொழில் பயின்றார் அன்ரன் கிரகரி. தன் குருவான எம். மஸ்த்தான் பற்றி அன்ரன் கிரகரி பின்வருமாறு சொன்னார்.
'என் சினிமா வாழ்க்கையின் முன்னேற்றத்துக்கு காரணமே என் குரு எம். மஸ்த்தானின் ஆசிர்வாதம்தான். அவரிடம் சினிமா நுணுக்கங்களைப் பயின்றவர்கள் பலர். அவர்களில் நானும் ஒருவன். என் குரு எம். மஸ்த்தானின் அழகிய புகைப் படம் ஒன்று என்வீட்டில் இருக்கிறது. ஆண்டவனுக்கு அடுத்த இடத்தில் நான் மஸ்த்தானின் படத்தையே பூசிக்கிறேன்.
"என் படப்பிடிப்புகள் ஆரம்பமாகும் பொழுது மஸ்த்தானின் படத்தை வணங்கி விட்டே வேலைகளை ஆம்பிப்பேன்' என நன்றிப் பெருக்குடன் கூறுகிறார் கிரகரி.
தன் குரு எம். மஸ்த்தான் மீது மட்டுமன்றிப் பிரபல நடிகர் காமினி பொன்சேகா மீதும் பெருமதிப்பு வைத்திருக்கிறார் அன்ரன் கிரகரி.
அன்ரன் கிரகரி அந்தக்கால நினைவுகளை இப்படிக் கூறு கிறார்:
"ஸ்ரூடியோவில் ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, உதவி நெறியாள்கை போன்ற பயிற்சிகளில் ஈடுபடுவதற்கு எனக்கு மஸ்த்தான் சந்தர்ப்பங்களை அளித்தார். 42க்கு மேற்பட்ட படங்களுக்கு உதவி நெறியாளராகப் பணியாற்றினேன். தனியாக 5 படங்களை இயக்கி விட்டேன். 1998ம் ஆண்டு -6ஆவது படமாக ஒரு தமிழ்ப்படத்தை இயக்கினேன். பிறைட்டன் அரியரத்தினத்தின் இரண்டாவது தயாரிப்பு அது. "உயர்ந்த உறவுகள்' என்ற அந்தப் படத்தில் நடிப்பதற்குத் தமிழகத்திலிருந்து நாகேஷ், ராதிகா போன்ற நடிகர் நடிகைகள் இங்கு வந்திருந்தார்கள். தமிழக நடிகர்கள் அனைவரும் வெள்ளவத்தை பிறைட்டன் ஹோட்டலில்
Page 77
148 இலங்கைத் திரையுலக முன்னோடிகள்
தங்கியிருந்தார்கள். 1983 - கலவரம் ஆரம்பமாகிவிட்டது. தமிழக நடிகர்களுக்கு ஆபத்து நேருமோ என்று நான் பயந்தேன். காமினி பொன்சேகாவுக்கு டெலிபோன் பண்ணினேன். அவர் விஜயா ஸ்டூடியோவைப் பாதுகாக்கச் சென்றிருந்தார். விஜயகுமார துங்கவுக்கு டெலிபோன் செய்தேன் அவரும் விஜயா ஸ்ரூடியோ வுக்குச் சென்று விட்டார். ரவீந்திர ரந்தெனிய, மாலினி பொன்சேகா போன்றோருக்கும் டெலிபோன் செய்தேன். அவர்களும் விஜயா ஸ்டூடியோவில் இருந்த தங்கள் படங்களைக் காப்பாற்றச் சென்று விட்டார்கள்.
நான் மட்டும் தனியே புறப்பட்டு கட்டுநாயக்க விமான நிலையம் சென்று தமிழக நடிகர்களைக் காப்பாற்றி அனுப்பினேன். திரும்பிவரும் போது விஜயா ஸ்ரூடியோ தீப் பிடித்து எரிவதைக் கண்டேன். தமிழக நடிகர்களை என்னால் காப்பாற்ற முடிந்தது. ஆனால் எனது தாய்நாட்டின் கலைக் கோயிலான விஜயா ஸ்ரூடியோவை என்னால் காப்பாற்ற முடியவில்லை என்று வேதனைப்பட்டேன்.
அண்மையில் விஜயா ஸ்டூடியோ இருந்த இடத்துக்குச் செல்ல வேண்டி வந்தது. எனது நெஞ்சு எரியத் தொடங்கி விட்டது. அன்று விஜயா ஸ்டூடியோ இருந்த இடத்தில் இன்று வேறு கட்டிடங்கள் இருக்கின்றன. பல கலைஞர்களை ஏற்றி விட்ட அந்த ஸ்டூடியோ இப்பொழுது சுடுகாடாகக் கிடப்பதை கண்டு நான் கண்ணீர் GSGL67,
இப்படி கூறிக் கவலைப்பட்டார் அன்ரன் கிரகரி.
சிங்களச் சினிமாவில் கடமையாற்றிய மற்றைய தமிழ்க் கலைஞர்களைப் போலவே அன்ரன் கிரகரியின் மனத்திலும் தான்
கெளரவிக்கப்படவில்லை என்ற மனக்கவலை இருக்கவே
செய்கிறது.
தம்பிஐயா தேவதாஸ் 149
ஆனாலும் இவர் சில விருதுகளைப் பெற்றிருக்கிறார் ஒ.சி.ஐ.சி. நிறுவனத்தின் பரிசு, நீர்கொழும்பு லொயலா கல்லூரி விருது, 'இரத்தத்தின் இரத்தமே படத்துக்கான சிறந்த உதவி நெறியாளருக்கான விருது போன்ற சில பரிசுகளைப் பெற்றிருக் கிறாரே தவிர, அரசாங்க விருதுகளையோ அரசாங்கம் சார்பான பத்திரிகைகளின் பரிசுகளையோ இவர் பெறவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
பரிசுகள், பாராட்டுகள் அதிகமாகக் கிடைக்க வில்லை யாயினும் இரவது கலை வாழ்க்கையில் மிக அதிகமாகவே சாதித்திருக்கிறார். உதவி இயக்குநராக 42 படங்கள், இணை இயக்குனராக 3 படங்கள், தொழில்நுட்ப டைரக்டராக 2 படங்கள், படத்தொகுப்பு 2, படத் திரைக்கதை 2 படங்கள் டைரக்ஷன் 5 படங்கள் என்று சினிமா உலகில் பணியாற்றி இருக்கும் இவர் தனது மனைவி பிள்ளைகளுடன் நீர்கொழும்பில் வாழ்ந்து வருகிறார்.
Page 78
25. எம்.கே.ரொக்சாமி (1932 - 1988)
பல சிங்கள தமிழ்ப் படங்களுக்கு இசையமைத்த எம்.கே.ரொக்சாமி.
சிங்கள மொழியில் உருவான 12ஆவது சிங்களப்படத்தின் பெயர் 'பண்டா நகரயட பமினீம" (பண்டா கம்ஸ் டூ டவுன்) என்பதாகும். இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்துக்கும் வயலின் வாசித்தவர் ஒரு தமிழ் இசையமைப்பாளர். அவர் தனது 56ஆவது வயதில் 1988ஆம் ஆண்டு இறந்து போனார். அவர் இறக்கும் பொழுது 650 சிங்களப் படங்கள் வெளிவந்துவிட்டன. இவற்றில் ஏறக்குறைய 500 படங்களுக்கு இந்த இசையமைப் பாளரே வயலின் வாசித்தார். இவர் வயலின் வாசிப்பதில் மட்டும் சிறந்து விளங்கவில்லை. சக்ஸபோன் என்ற இசைக்கருவியை இலங்கை வானொலியில் அறிமுகப்படுத்தியவரும் இவர்தான். இவை மட்டுமா? 55 சிங்களப் படங்களுக்கு இசை அமைத் திருக்கிறார். 'பொன்மணி'மாமியார் வீடு' நான் உங்கள் தோழன்' 'இரத்தத்தின் இரத்தமே போன்ற இலங்கைத் தமிழ்ப்படங் களுக்கும் இசையமைத்தார். மலையாளப் படத்துக்கும் இச்ை அமைத்துவிட்டார் இவர். இத்தனை சாதனைகளையும் புரிந்த அந்த இசை அமைப்பாளர் யார் தெரியுமா?
அவர்தான் அமரர் எம்.கே. ரொக்சாமி.
இந்தியாவில் பாண்டிச்சேரியிலிருந்து இலங்கைக்கு வந்து குடியேறிய மரிய குழந்தைசாமி - அனாமேரி தம்பதிகளின்
Page 79
152 இலங்கைத் திரையுலக முன்னோடிகள்
ஆறாவது பிள்ளைதான் எம்.கே. ரொக்சாமி. தென் இலங்கையில் எல்பிட்டி என்ற இடத்தில் 13-09-1932 இல் இவர் பிறந்தார். பின்பு கொழும்புக்கு வந்து கொம்பனித் தெருவில் வேக்கந்தை வீதியில் வாழ்ந்தவர். அங்குள்ள அன்டர்சன் பாடசாலையில் ஆங்கில மொழி மூலம் கல்வி கற்றார்.
ரொக்சாமியின் தந்தையும் தாயும் இசையில் ஆர்வம் உள்ளவர்கள். தந்தை வயலின் வாசிப்பதில் வல்லவர். தாயார் ஆர்மோனியம் வாசிப்பார். இதனால் இவர்களின் புதல்வரான ரொக்சாமிக்கும் இசை மீது ஆர்வம் ஏற்பட்டமை அதிசயமன்று. ரொக்சாமியின் இசை ஆற்றலை புரிந்து கொண்ட அந்தணி என்னும் ஆசிரியர் அவரைச் சங்கரலிங்கம் என்ற இசை ஆசிரியரிடம் அழைத்துச் சென்று கர்நாடக இசைப்பயிற்சி வழங்கினார்.
முதன் முதலாக வானொலி நிகழ்ச்சியொன்றுக்குக் கிட்டார் வாசித்தார். பின்பு மேடை நிகழ்ச்சிகள் பலவற்றுக்கு இசை வழங்கினார். இவைதான் அவரது ஆரம்ப இசை அனுபவங்கள். அந்த அனுபவங்கள் மூலம் தனது இசைப்புலமையை வளர்த்துக் கொண்டார்.
முதலாவது சிங்களப்படத்தைத் தயாரித்த எஸ்.எம். நாயகமே 1950இல் இலங்கையில் முதலாவது படப்பிடிப்புநிலையத்தையும் ஆரம்பித்தார். அதுதான் ‘கந்தானை சுந்தர சவுண்ட் ஸ்டூடியோ" ஆகும். இந்நிலையத்தில் இசைக்குப் பொறுப்பாக இருந்தவர் ஆர். முத்துசாமி. இவரின் அழைப்பை ஏற்று ரொக்சாமி இந்த ஸ்டூடியோவில் வாத்தியக் கலைஞராகச் சேர்ந்து கொண்டார். இங்கு உருவான முதற்படமான 'பண்டயாநகரயடபமினிம' என்ற படத்தில் இடம் பெற்ற பாடல்களுக்கு ரொக்சாமி வாத்தியம் வழங்கினார்.
கர்நாடக சங்கீதம் மட்டும் தெரிந்திருந்த ரொக்சாமிக்கு எம். ஆரியதாச என்ற கலைஞர் வட இந்திய இசையைப் பயிற்று வித்தார். மேல்நாட்டு இசையைச் சுயமாக கற்றுக்கொண்ட
தம்பிஐயா தேவதாஸ் 153
ரொக்சாமி அதில் ஏற்படும் பிரச்சினைகளை இசையமைப்பாளர் ரீ.எப்.லதீப் அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வாராம்.
1954ஆம் ஆண்டில் இலங்கை வானொலியின் வாத்தியக் குழுவில் அங்கத்தவராக இருந்தார். இக்காலத்தில் 'எச்.எம்.வி இசைத்தட்டுகள் சிலவற்றுக்கு இசையமைத்தார். வெளியில் இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவேண்டும் என்பதால் இலங்கை வானொலி உத்தியோகத்தை ராஜினாமா செய்ய வேண்டி வந்தது.
சிங்களத் திரைப்படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பு ரொக்சாமிக்கு 1962ஆம் ஆண்டே கிடைத்தது. அப்பொழுது 'சங்சாறே" என்ற படத்துக்கு பி.எஸ். பெரேரா இசை அமைத்துக் கொண்டிருந்தார். இவரின் திடீர் மறைவால் இப்படத்துக்கான சில பாடல்களுக்கு இசை அமைக்கும் வாய்ப்பு ரொக்சாமிக்குக்
கிடைத்தது.
ஆனால் ரொக்சாமிக்குத் தனியே படத்துக்கு இசை அமைக்கும் வாய்ப்பு 1963இல் 'சுஹத சொயுரோ" என்ற படத்தின மூலமே கிடைத்தது. தொடர்ந்து 55 சிங்களப்படங்களுக்கும் 4 தமிழ்ப் படங்களுக்கும் இசை அமைத்துவிட்டார்.
இவை மட்டுமன்றி சில படங்களுக்கு வேறு இசையமைப் பாளருடன் இணைந்தும் இசையமைத்திருக்கிறார். 'சுஜாகே றஹச என்ற படத்துக்கு தென்னிந்திய இசையமைப்பாளர் ரீ.ஆர். பாப்பாவுடன் இணைந்து இசையமைத்தார்.
1965ஆம் ஆண்டு காலப்பகுதியில் ரொக்சாமி தஞ்சா வூரிலுள்ள வேளாங்கண்ணி ஆலயத்தைத் தரிசிக்க தமிழ் நாடு வந்தார். தமிழ் நாட்டில் வாழ்ந்து வந்த இலங்கையைச் சேர்ந்த இயக்குநர் ரீ-அர்ஜூனாவின் சிபாரிசில் ரொக்சாமிக்கு மலையாளப் படம் ஒன்றுக்கு இசை அமைக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் மலையாள ரசிகர்களின் பாராட்டும் இவருக்குக் கிடைத்தது.
Page 80
154 இலங்கைத் திரையுலக முன்னோடிகள்
எம்.கே.ரொக்சாமி 1965இல் "சக்சயய' என்ற படத்துக்கு ளஇசையமைத்துக் கொண்டிருந்தார். அப்படத்தில் பாடவந்த பெண்தான் இந்திராணி கண்டி புஸல்லாவையில் பிறந்த இந்திராணிக்கும் ரொக்சாமிக்கும் காதல் அரும்பியது. அது 1974இல் கல்யாணத்தில் முடிந்தது.
ஒரு மகனும் இரண்டு மகளும் பிறந்தார்கள், மகன்மாரில் ஒருவரான அனா ராதிகா, பிரபல மிருதங்க வித்துவான் கே. அச்சுதன் அவர்களின் மகன் ரவீந்திரனை மணமுடித்திருக்கிறார்.
எம்.கே. ரொக்சாமியின் வயலின் வித்துவத்தன்மைக்கு இன்னும் பல உதாரணங்களைக் காட்டலாம். இந்தியாவிலிருந்து வந்த பலகலைஞர்களின் இசை நிகழ்ச்சிகளுக்கு இவரே வயலின் வாசித்திருக்கிறார்.
1957இல் இலங்கை வந்த முஹமட் ராபிக்கும் 1980இல் இலங்கையில் கச்சேரி செய்த வாணி ஜெயராமுக்கும் இவரே வயலின் வாசித்தார். இப்படிப் பிரபலமான சிங்களப் பாடகர்களின் இசை நிகழ்ச்சிகளுக்கெல்லாம் வயலின் வாசிப்பது இவரே. 1983ஆம் ஆண்டு ஜூலைக் கலவரம் மற்ற கலைஞர்களைப் போல ரொக்சாமியையும் பாதித்தது. அவர் நீண்டகாலமாக வாழ்ந்த ஹெந்தளையில் உள்ள வீடு தீவைத்து எரிக்கப்பட்டது. இரவது குடும்பம் சில நாட்கள் அகதிமுகாமில் வாழ்ந்தது. பல சிங்களக் கலைஞர்களின் உதவியுடன் ரொக்சாமி மீண்டும் அதே வீட்டில் குடியேறினார். ஆனால் அந்த துன்பவடு அவர் இறக்கும்வரை அவரது மனத்திலிருந்து மறையவில்லை.
எம்.கே.ரொக்சாமி 1988ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30ஆம் திகதி ஜெயவர்தனபுர வைத்திய சாலையில் காலமானார்.
ரொக்சாமி இறக்கும்பொழுது அவரது மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் அவர்கள் வாழ்ந்த வீடு மட்டுமே உரிமையாக இருந்தது.
26. றொபின் தம்பு (1930-2000)
燃
Անին:
燃 W ់
წწწწწწწ.
S SLLSLLLLLKSLLLLLLSLLLSS KSLLSLLSK LLLLLLLL LSLLLLL LLLLLLLaaLLLLLLLKKS LS SS SSSS
Ար:
ili.
- -
நொபின் தம்பு
இலங்கைத் திரையுலகை வளர்த்துவிட்ட இன்னுமொரு முன்னோடி
Page 81
5 இலங்கைத் திரையுலக முன்னோடிகள்
சிங்களச் சினிமா உலகிலே புகழ்பெற்ற படங்கள் பலவற்றைத் தமிழர்களும் முஸ்லிம்களும் பணம் போட்டுத் தயாரித்தார்கள். சிலோன் தியேட்டர் நிறுவனம், சினிமாஸ் லிமிட்டட், சிலோன் என்ரரெயின்மென்ஸ் என்பனவற்றின் அதிபர்கள்தாம் அவர்கள். இவர்கள் தங்கள் படங்கள்ைத் தயாரித்தார்களே தவிர இயக்கவில்லை. தங்கள் படங்களை வேறு இயக்குநர்களைக் கொண்டு தான் இயக்குவித்தனர். ஆனால் இவர்களைப் போலல்லாது படங்களைப் பணம் போட்டு தயாரித்ததுடன் தானே தனித்து நின்று இயக்கினார் ஒரு தமிழர். அவர்தான் பிரபல தயாரிப்பாளரும் இயக்குநருமான ரொபின் தம்பு.
றொபின் தம்பு 23-3-2000 இல் தனது 70ஆவது வயதில் காலமானார், திரு.றொபின் தம்பு 1930 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். யாழ், மத்திய கல்லூரியில் கல்வி பயின்றவர். உயர் கல்வியை இந்தியாவில் தொடர்ந்தவர். தந்தை புடன் சினிமாத் தொழில் பயின்றவர்.
'சிலோன் தியேட்டர்ஸ்" நிறுவனத்தை ஆரம்பித்தவர், சிற்றம்பலம் ஏ கார்டினர் ஆவார். இவர் றொபின் தம்புவின் தாயாரின் சகோதரர் ஆவார். மாமன் கார்டினரைப் போலவே மருமகன் றொபின் தம்புவும் இலங்கை சினிமா முன்னோடிகளில் ஒருவர் எனலாம்.
றொபின் தம்புவின் தந்தையாரான டபிள்யு. எம்.எஸ். தம்புவும் இலங்கைத் திரை உலகில் புகழ் பெற்றவர். அவர் சிங்களப்படங்களை மட்டுமன்றி தமிழ்ப்படங்களையும் இந்தியா விலும் இலங்கையிலும் தயாரித்தவர்.
இப்படியான கலைக்குடும்பத்தில் பிறந்தவர்தாம் றொபின்
தம்பு. இவர் 1959 ஆம் ஆண்டு "சிறிமலி" என்ற படத்தை முதன்முதலில் தயாரித்து நெறியாண்டார். தனது தாயாரின்
ܐ ܢ ¬ 7
றொபின் தம்பு இயக்கிய" திரைப்படத்தில் ஒரு காட்சி. (1965)
சுதோசுது
தம்பிஐயா தேவதாஸ்
- --
Page 82
1.58 இலங்கைத் திரையுலக முன்னோடிகள்
நகைகள் பலவற்றை விற்ற பணத்திலேயே இப்படத்தைத் தயாரித்த தாக றொபின் தம்பு என்னிடம் ஒரு முறை கூறியிருக்கிறார்.
றொபின் தம்பு தனது வாழ் நாட்களில் 15 சிங்களப் படங்களைத் தயாரித்திருக்கிறார். அவற்றில் பல "சு" என்ற எழுத்திலேயே ஆரம்பிக்கின்றன. 'சுவினித லாலனி', 'சுஹத் திவிபிதும', 'சுதோசுது', 'சுரேகா என்பன அவற்றில் புகழ் பெற்ற படங்களாகும். குடும்ப அங்கத்தவர்கள் அனைவரும் கூச்சமின்றி அமர்ந்திருந்து பார்க்கக்கூடிய படங்களை அவர் தயாரித்தார்.
றொபின் தம்பு படங்களை மட்டும் தயாரிக்கவில்லை. 1962இல் வெல்லம்பிட்டியில். 'ஆர். ரிஸ்ரூடியோ’ என்ற கலைக் கூடத்தையும் உருவாக்கினார். கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் பல தியேட்டர்களை உருவாக்கினார். 1978இல் யாழ்ப்பாணத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட இலங்கைத் திரைப்பட விழா இவரது சொந்தத் தியேட்டரான ‘சாந்தி'யிலேயே நடைபெற்றது.
26 வருடங்களில் மிக அதிகமான படங்களைத் தயாரித்தவர் என்ற வகையில் 'தீபவிகா' விருது இவருக்கு 1974இல் வழங்கப் பட்டது. மற்றைய தமிழ் பேசும் கலைஞர்களைப் போலவே இவருக்கும் அதிகமான விருதுகள் வழங்கப்படவில்லை. அதை அவர் விரும்பவுமில்லை. வெற்றி பெற்ற தமிழ்ப் படங்களைத் தழுவிச் சிங்களப் படமாக உருவாக்குவதில் நமது தமிழ் இயக்குநர்கள் கெட்டிக்காரர்கள். சிலர் காபன் கொப்பி போல உருவாக்குவார்கள். இன்னும் சிலர் சிங்களப் பண்பாடுகளையும் சேர்த்துப் புதிய வடிவில் உருவாக்குவர். றொபின் தம்பு இந்த இரண்டாம் ரகத்தைச் சேர்ந்தவர். அதனால்தான் 'சம்சாரம்' என்ற தமிழ்ப்படத்தைத் தழுவி "சுவினித லாலனி' என்ற படத்தை உருவாக்கினாலும் இப்படம் சிங்களப் பண்பாடுகள் கொண்ட புதிய படமாக விளங்கியது என்று விமர்சகர்கள் கூறியிருக்கின்றனர்.
தம்பிஐயா தேவதாஸ் 159
றொபின் தம்பு எந்தப்படத்தையும் தழுவாமலும் பல சிங்கள படங்களை இயக்கியிருக்கிறார். அவற்றில் ஒன்றே 1963இல் வெளிவந்த 'சுது சந்தே கலு வெலா (வெண்ணிலவு கரு நிலவானது) என்ற திரைப்படமாகும்.
ஒரு காலத்தில் ஜனரஞ்சகப் படங்களை உருவாக்கிய றொபின் தம்பு இன்னொரு கட்டத்தில் கலைத்துவமான படங்களை உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டார். அப்படி அவர் உரு வாக்கிய படம்தான் 'சுதோ சுது (வெள்ளையோ வெள்ளை) (1965) என்பதாகும். இந்தப்படத்துக்கான கதைக்கருவை பிரபல மான சிங்களக் கவிதைக் கதையிலிருந்து எடுத்துள்ளார். இது கவிதைக் கதையிலிருந்து உருவான முதலாவது சிங்களப்படம் மட்டுமல்ல, ஒரேயொரு சிங்களப் படமுமாகும். இப்படம் இவரை புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றது.
1966ஆம் ஆண்டு றொபின் தம்புவுக்கு அதிஷ்டமான ஆண்டாகும். ஏனெனில் அந்த ஆண்டில்தான் அவர் இயக்கிய மூன்று படங்கள் தொடர்ந்து திரைக்கு வந்தன. அவை அனைத்துமே பொருளாதார ரீதியில் வெற்றிபெற்றன. அவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தன.
ஒரு இயக்குநரின் மூன்று படங்கள் ஒரே வருடத்தில் திரைக்கு வருவது அரிய சாதனையாகும். இப்படி 15 படங்களை அவர் தயாரித்து இயக்கிவிட்டார்.
இலங்கை தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம் தமிழ்ப் பேசும் கலைஞர்களுக்கு பல வேளைகளில் ஒரவஞ்சனை காட்டியிருக் கிறது.
இலங்கைச் சினிமாவின் 50 ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டுப் பல திரைப்பட முன்னோடிகளுக்கு திரைப்பட
Page 83
16O இலங்கைத் திரையுலக முன்னோடிகள்
கூட்டுத்தாபனம் பாராட்டு விழா வைத்துக் கெளரவித்தது. அவர்கள் றொபின் தம்புவையும் அழைத்து கெளரவிக்க மறந்தது பெருந்துரோகமாகும்.
இது மட்டுமா? இலங்கையில் பரபரப்புடன் தயாரிக்கப்பட்ட இளையநிலா திரைப்படத்தை றொபின் தம்பு பெரும் பணம் கொடுத்து வாங்கியிருந்தார். அப்படத்தை இலங்கையில் திரையிட திரைப்படக் கூட்டுத்தாபனம் றொபின் தம்புவுக்கு அனுமதி மறுத்தது.
இலங்கை திரைப்படத் தொழிலின் வீழ்ச்சிக்கு காரணம் திரைப்படக் கூட்டுத்தாபனமும், அதற்குக் கடன் வழங்கும் வங்கிகளுமே, என்று துணிந்து கூறியவர் றொபின் தம்பு. அதனால்தான் திரைப்படக்கூட்டுத்தாபனம் இவருக்கு கெளரவம் வழங்கவில்லையோ தெரியவில்லை!
இவ்வாறான நிகழ்ச்சிகளால் திரைப்படத் தொழிலின்மீது
தம்புவுக்கு வெறுப்பு வந்திருக்க வேண்டும். இவர் தயாரித்த கடைசிப்படம் 1974இல் வெளிவந்தது.
அன்று முதல் அவர் இறக்கும் வரையுள்ள 26 வருடங்களில் அவர் எந்தவிதப் படங்களையும் தயாரிக்கவுமில்லை நெறியாளவு மில்லை. இப்படிப் பழம் பெரும் தயாரிப்பாளர்கள் மனம் நொந்து போனதாலேயே இலங்கைத் திரைப்படத் தொழில் சரிந்து போகின்றதெனலாம். இவ்வாறான நடைமுறைகளால் றொபின் தம்பு போன்றோருக்கு நட்டமில்லை. ஆனால் இலங்கைத் திரைப் படத் தொழிலுக்குத்தான் பெரு நட்டம்.
றொபின் தம்புவை நானாவது தனிப்பட்ட முறையில் கெளரவிக்கலாம், என்று விரும்பினேன். 'பொன் விழாக்கண்ட சிங்களச் சினிமா என்ற எனது நூல் வெளியீட்டு விழாவில் விசேட அதிதியாகக் கலந்து கொள்ளும்படி அழைப்பு விடுத்தேன்.
தம்பிஐயா தேவதாஸ் 161
தான் இந்தியாவுக்கு அன்னை வேளாங்கண்ணியை வழிபடச் செல்வதாகவும் திரும்பி உயிருடன் வந்தால் கலந்து கொள்வதாகவும் கூறினார்.
அவர் நாடு திரும்பியபோது நோய்வாய்ப்ட்டிருந்தார். அதனால் விழாவுக்கு வர முடியவில்லை என்று தொலைபேசியில் வருத்தத்துடன் கூறினார். சில தினங்களின் பின் அதாவது 23.3.2000 அன்று காலமானார்.
றொபின் தம்பு கடைசிக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனது தியேட்டர்களான ரீகலையும் சாந்தியையும் புதுப்பிக்க முனைந்தார். அது கூட முடியாமல் போய்விட்டது.
எது எவ்வாறாயினும் தம்பு குடும்பத்தின் மூன்று பரம்பரையினர் சினிமாத் தொழிலில் ஈடுபட்டனர். தந்தை - டபிள்யு. எம்.எஸ். தம்பு, மகன் - ரொபின் தம்பு, பேரன் - சஞ்ஜீவ் தம்பு மூன்றாவது பரம்பரையைச் சேர்ந்த சஞ்ஜீவ் தம்பு இப்பொழுது சினிமாத் தொழிலில் ஆர்வத்துடன் நுழைந்திருக் கிறார். சினிமாக்கலை பற்றி மலேசியாவில் உள்ள பன்கா டெரிமா என்ற கலாநிலையத்தில் பயிற்சி பெற்றவர்.
சினிமாத் தொழிலில் தம்பு பரம்பரையின் பெயரை இனிமேல் சஞ்ஜீவ் தம்புதான் காப்பாற்ற வேண்டும்.
Page 84
27. எஸ். ராமநாதன் (1928 - 2000)
இரு மொழிகளிலும் புகழ் பெற்ற திரைப்படஇயக்குநர் எஸ். ராமநாதன்.
இலங்கையிலே சிங்களத் திரைஉலகில் பல தமிழ் இயக்குநர்கள் புகழ் பெற்று விளங்கினர். அவ்வாறே தமிழ்த் திரையுலகிலும் சில இயக்குநர்கள் புகழ் பெற்று விளங்கினர். ஆனால் இரண்டு மொழியிலும் ஒரே நேரத்தில் அதிகமான இயக்குநர்கள் சிறந்து விளங்கவில்லை. அவர்களில் ஒரு சிலர் விதி விலக்கு அதில் ஒருவர்தான் எஸ். இராமநாதன். இவர் சிங்களத் திரையுலகில் பங்களிப்புச் செய்ததை விடத் தமிழ்த் திரையுலகில் அதிகமாகப் பங்களிப்பு செய்திருக்கிறார்.
1960ஆம் ஆண்டளவில் திரை உலகிற்கு வந்த இவர் ஆரம்பத்தில் உதவி இயக்குநராகவே பல சிங்களப் படங்களில் கடமையாற்றினார். தனித்து ஒரு படத்தை இயக்க நான்கு ஆண்டுகளுக்குப் பின்பே சந்தர்ப்பம் கிடைத்தது. 1964ஆம் ஆண்டிலேயே இவர் இயக்கிய முதலாவது சிங்களப் படமான ‘சசறக ஹட்டி' திரைக்கு வந்தது.
அதுவே இராமநாதனின் திறமையை ரசிகர்களுக்கு எடுத்துக் காட்டியது. படமும் அதிக நாட்கள் ஓடியது.
Page 85
164 இலங்கைத் திரையுலக முன்னோடிகள்
அது, அக்காலத்தில் பலரசிகர்களின் மனங்களைக் கவர்ந்த பூநீதரின் 'எதிர்பாராதது" என்ற தமிழ்ப் படத்தைத் தழுவி எடுக்கப்பட்டது. இப்படம் சிங்கள ரசிகர்களையும் பெரிதும் கவர்ந்தது.
நாளாவட்டத்தில் எஸ். ராமநாதனின் புகழ் ஓங்கியது. ஆரம்பகாலத்தில் எஸ். இராமநாதன் உருவாக்கிய படங்கள் வருடத்துக்கு ஒன்றாகவே வெளிவந்தன. இவர் உருவாக்கி வெளிவந்த இரண்டாவது படம் "லாதலு" (கொழுந்து) என்பதாகும். "துல்கா புல்" என்ற ஹிந்திப் படத்தைத் தழுவி இது எடுக்கப்பட்டது. இவர் இயக்கிய இன்னுமொரு படம் "சம்பத்த" (செல்வம்) 1960 இல் திரைக்கு வந்தது."சுஜீவா பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்தில் ருக்மணிதேவி பிரதான பாத்திரத்தில் நடித்தார்.
தமிழ் இந்திப் படங்களைத் தழுவி எடுத்தாலும் தனக்கே உரித்தான பாணியையும் அப்படங்களில் இவர் செலுத்தத் தவறியதில்லை.
எஸ்.இராமநாதன் இயக்கிய இன்னுமொரு பிரபலமான படம் 'இபதுனே அய்' (ஏன் பிறந்தாய்?) என்பதாகும். இதுவும் 'சுஜாதா' என்ற இந்திப் படத்தை தழுவி எடுக்கப்பட்டது.
இவர் தனது ஒவ்வொரு படத்திலும் ஏதாவது ஒரு புதுமையைச் செய்து வந்தார். 1972ஆம் ஆண்டு வெளிவந்த 'ஹிதக பிபுணுமலக்' (இதயத்தில் மலர்ந்த மலர்) படத்தின் மூலமும் ஒரு புதுமையைச் செய்தார். அதுவரை காலமும் சிங்களப் படங்களில் இடம்பெற்ற பாடல்கள் இந்துஸ்தானி ஆங்கில மெட்டுகளைத் தழுவியே உருவாக்கப்பட்டன. ஆனால் இந்தப் படத்திலேயே கர்நாடக மெட்டில் அமைந்த பாடல் ஒன்று முதன் முதலாகச் சேர்க்கப்பட்டது.
தம்பிஐயா தேவதாஸ் 165
எஸ். ராமநாதன் இயக்கிய "ஏமாளிகள்" திரைப்படத்தில் எம்.சிவராமும் ஹெலன் குமாரியும். (1978)
Page 86
166 இலங்கைத் திரையுலக முன்னோடிகள்
அதன் பின்பே கர்நாடக மெட்டில் அமைந்த பாடல்களை
சிங்களச் சினிமாவில் சேர்த்தனர்.
நீண்டகாலம் சிங்களச் சினிமாத்துறையில் சிறந்த நெறியாள ராக விளங்கிய எஸ்.இராமநாதனுக்கு இரு விருதுகள் கிடைத்ததை தவிர அரச விருதுகள் எதுவும் கிடைக்கவில்லை. கலைஞர்களுக் கான ஓய்வூதியத்தைக் கூட மிகவும் கஷ்டப்பட்டே பெற்றார்.
எஸ். இராமநாதனின் நெறியாளும் திறமை கண்டு அவரைத் தமிழ்சினிமாவுக்கும் இழுத்தார்கள். முதலில் அவர் அமைத்த சிங்களப் படங்களுக்குப் படத்தொகுப்புத் திறமையைக் கண்டு வி.எஸ். துரைராஜா தனது படமான 'குத்துவிளக்கு' படத்துக்குப் படத்தொகுப்பு செய்யும்படி அழைத்தார். குத்து விளக்கின் படத் தொகுப்பு சிறந்து விளங்கியதைப் பலர் குறிப்பிட்டனர். இலங்கையின் மண்மணம் வீசும் ஒரு படமாக அது கருதப்பட்டது.
"இத்தனைச் சிங்களப் படங்கள் இயக்கிய எனக்கு ஒரு தமிழ் படத்தையேனும் இயக்க வேண்டும் என்ற ஆசை நீண்ட நாட்களாகவே இருந்தது' என்று எஸ். இராமநாதன் அடிக்கடி கூறுவார். ". .
சிங்களப் படங்கள் அவருக்குக் குறைந்ததும் தமிழ் சினிமாவின் பக்கம் எட்டிப் பார்த்தார்.
அவர் ஆசை வீண்போகவில்லை. பின் நாளில் எஸ். இராமநாதன் தனித்து நின்று பலதமிழ்ப் படங்களை இயக்கினார்.
அமரர் வீ.பி.கணேசன் "புதிய காற்று' என்ற படத்தைப் பிரமாண்டமான முறையில் தயாரித்தார்.
அதற்கான பாடல்களைக் கவிஞர் கண்ணதாசன் ஏ.எம்.ராஜா போன்றோரின் உதவியுடன் உருவாக்கினார். தெளிவத்தை ஜோசப்
தம்பிஐயா தேவதாஸ் 167
கதைவசனம் எழுதினார். இப்படித் தயாரிக்கப்பட்ட படத்தை இயக்கும் இயக்குநரும் தரமானவராக வரவேண்டும் என்பது வி.பி.கணேசனின் விருப்பமாகும். இப்படித் தனது படத்துக்கு சிறந்த இயக்குநரைத் தேடிய கணேசனுக்குப் பலர் ஒரு பழம்பெரும் இயக்குநரைச் சிபார்சு செய்தார்கள். அவர்தான் எஸ். இராமநாதன். அவரும் புதிய காற்றின் பணியைச் சீராகவே செய்தார். "புதிய காற்றின் வெற்றிக்கு இராமநாதனின் நெறியாள்கையும் ஒரு
காரணமாகும்.
இலங்கையில் தமிழ்த் திரைப்படங்களை அதிக அளவில் உருவாக்க வேண்டும் என்று கனவு கண்டவர்களில் கலைஞர் எஸ். ராமதாசும் ஒருவர்.
அவர் முன்னின்றுதயாரித்த படங்களில் ஒன்று "கோமாளிகள் ஆகும். இந்தக் "கோமாளிகள்' படத்தை நெறியாண்டவரும் எஸ். இராமநாதனே. இவரின் இரண்டாவது படத்தின் பெயர் 'ஏமாளிகள் இப்படத்தையும் எஸ்.இராமநாதனே நெறியாண்டார்.
இம்மூன்று படங்களும் இலங்கையில் ஓரளவு அதிக நாட்கள் ஓடின. இராமநாதனின் நெறியாள்கை ரசிகர்களின் மனத்தைக் கவர்ந்தது என்று சொல்லலாம்.
ஆக ஏக காலத்தில் தமிழ் சினிமாவிலும் சிங்கள சினிமாவிலும் சிறந்து விளங்கிய ஒரு இயக்குநர் எஸ்.இராமநாதன் ஆவார்.
சேர்வாரர் இராமநாதன் என்ற முழுப் பெயரையுடைய இந்த இயக்குநர் மாத்தளையில் 1928இல் பிறந்தவர். வத்தளையில் நீண்டகாலம் வாழ்ந்தவர். சுகவீனமுற்ற இவர் (6/4/2000) இல் காலமானார். மனைவியார் அமராவதி, பிள்ளைகள் இராஜேந்திரன், ஹரிச்சந்திரா, புஸ்பமாலா ஆகியோரைப் பிரிந்து சென்றிருக்கிறார்.
Page 87
168 இலங்கைத் திரையுலக முன்னோடிகள்
இலங்கையிலே சிங்களத் திரையுலகிலும் தமிழ்த் திரையுலகிலும் ஒரே நேரத்தில் பிரகாசித்த சில இயக்குனர்களில்
என். இராமநாதன் முக்கியமானவர்.
28. கே.எஸ்.பாலச்சந்திரன்
நாடகத்துறையிலிருந்து சினிமாத்துறைக்கு வந்த கே.எஸ்.பாலச்சந்திரன்.
இப்பொழுது இலங்கையில் எத்தனையோ தனியார் வானொலி நிலையங்கள் உருவாகி விட்டன. ஆனாலும் இந்த நிலையங்களுக்கு மூல வேராகத் திகழ்வது இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்தான். மிகச் சிறந்த நாடகங்களை ஒலிபரப்பிய பெருமை அதற்கு உண்டு. அவற்றில் ஒன்று சில்லையூர் செல்வராஜனால் எழுதப்பட்டு ஒலிபரப்பான 'தணியாத தாகம்" என்னும் வானொலி நாடகம். அந்த நாடகத்தில் இடம் பெற்ற
Page 88
17 Ο இலங்கைத் திரையுலக முன்னோடிகள்
"சோமு’ என்ற பாத்திரமும் அப்பொழுது பலராலும் சிலாகித்துப் பேசப்பட்டது. அந்த பாத்திரத்தை ஏற்று நடித்த கே. எஸ். பாலச்சந்திரனைப் பற்றியும் சிலாகித்துப் பேசப்பட்டது. தொடர்ந்து அவர் பல வானொலி மேடை நாடகங்களில் நடித்து விட்டார்.
'அண்னை நயிற் பாலச்சந்திரன்' என்ற பெயரிலும் புகழ பெற்றவர், 'அண்னை றயிற்' என்ற தலையங்கத்தில் தனி நபர் நாடகத்தை இலங்கையின் பல பாகங்களிலும் நடித்துக் காட்டியவர் அவற்றைத் தொகுத்து ஒலிநாடாவாகவும் வெளியிட்டவர். தொடர்ந்து பல ஒலிநாடாக்களை வெளியிட்டார். இப்படி பல்வேறு வகையிலும் தன் நடிப்பை வெளிக்காட்டியவர் கே.எஸ் பாலச்சந்திரன்,
அவர் பல நாடங்களை எழுதினார். நடித்தார், மேடை யேற்றினார். பல வானொலி நாடகங்களில் கதாநாயகனாக நடித்தார். கலை சம்பந்தப்பட்ட பல கட்டுரைகளை எழுதினார். "கலைக்கோலம்' என்ற இலக்கிய நிகழ்ச்சியை வானொலியில் சிலகாலம் நடத்தி வந்தார். இவ்வாறு ஒரு பல்துறைக்கலைஞனாக அவர் வளர்ந்து வந்தார். இப்படி நடிப்பின்மீதும் நாடகத்தின் மீதும் ஆர்வமுள்ள கே.எஸ். பாலச்சந்திரனை இலங்கைத் திரை உலகம் காலம் தாழ்த்தியே அழைத்தது. 'வாடைக்காற்று' என்ற திரைப் படத்தின் மூலம் அவரது திரையுலக பிரவேசம் ஆரம்பமாகிறது.
செங்கை ஆழியான், தான் எழுதிய 'வாடைக்காற்று' நாவலில் விருத்தாசலம்" என்ற நாட்டுப்புற இளைஞனின் பாத்திரத்தை நன்றாகவே படைத்துள்ளார். அது மட்டுமல்ல கே.எஸ். பாலச்சந்திரனுக்கு என்றே படைக்கப்பட்டது போல் அந்தப் பாத்திரத்தை நன்றாகவே செய்திருந்தார். 'வாடைக்காற்று' திரைப்படத்தில் நடித்ததுடன் அப்படத்தில் உதவி நெறியாள ராகவும் கடமையாற்றினார் பாலச்சந்திரன், படத்தின் பிரதான இயக்குனருக்கு தமிழ் மீனவர்களின் பண்பாடு தெரியாது
தம்பிஐயா தேவதாஸ் 1了1
Page 89
172 இலங்கைத் திரையுலக முன்னோடிகள்
என்பதால் அப்படியான இடங்களில் கே.எஸ். பாலச்சந்திரன் பிரதான இயக்குனராகவே செயற்பட்டார்.
'வாடைக்காற்று' திரைப்படம் வெளியானபோது பல பத்திரிகைகளும் பாராட்டி எழுதின. ஒரு பத்திரிகை 'ஆனந்த விகடன்" பாணியில் நடிகர்களுக்கு புள்ளி வழங்கி விமர்சனம் எழுதியது. இப்படத்தில் நடித்த நடிகர்களில் யேசுரத்தினத்துக்கு 65 புள்ளிகள் வழங்கியது. கே.எஸ். பாலச்சந்திரனுக்கு 60 புள்ளிகள் வழங்கப்பட்டது. மற்றவர்கள் அனைவருக்கும். இவர்களிலும் குறைந்த புள்ளிகளே வழங்கப்பட்டன.
தொடர்ந்து சிந்தாமணி பத்திரிகை விமர்சனம் எழுதியது. 'பாலச்சந்திரனின் நடிப்பு மனத்தில் நிற்கிறது. அவர் தோன்றும் காட்சிகள் எல்லாம் இயற்கையாகவே இருக்கின்றன’ என்று
எழுதியது.
அப்பொழுது இலங்கை வந்திருந்த நடிகர் மேஜர் சுந்தரராஜன், இப்படத்தை பார்த்துவிட்டு தன் அபிப்பிராயத்தை வெளியிட்டார். 'வாடைக்காற்று' திரைப்படத்தைப் பார்க்கும் பொழுது சிறந்த யதார்த்த பூர்வமான படத்தைப் பார்த்த மனத் திருப்தி ஏற்பட்டது. கே.எஸ். பாலச்சந்திரன், கே. ஏ. ஜவாஹர், இந்திரகுமார், யேசுரத்தினம் ஆகியோர் ஏற்ற பாத்திரங்கள் என்னைக் கவர்ந்தன" என்று கூறினார்.
அப்பொழுது யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்த 'மல்லிகை"யில் அதன் ஆசிரியர் டொமினிக் ஜீவாவும் விமர்சனம் எழுதினார். . சினிமாவுக்காக நாவலில் சில இடங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டிருந்த போதிலும் அடிப்படை சிதறாமல் படமாக்கியுள்ளமை பாராட்டுக்குரியது. பாலச்சந்திரனும் யேசுரெத்தினமும் திறமையாக நடித்துள்ளனர்' என்று அவர் எழுதினார்.
தம்பிஐயா தேவதாஸ் 173
கே.எஸ். பாலச்சந்திரன் நடித்த இரண்டாவது படம் 1981இல் வெளிவந்தது. அது வீ.பி. கணேசன் தயாரித்த நாடு போற்ற வாழ்க’ என்ற திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் கே.எஸ். பாலச்சந்திரனுக்கு வில்லன் பாத்திரம் வழங்கப்பட்டது. கதா நாயகியின் முறை மாப்பிளையாகத் தோன்றி, கதாநாயகனுக்குப் பல இடஞ்சல்களை வழங்குகிறார். எஸ்ரேற் சுப்பிறிண்டென்ரன் விஸ்வநாத்தாக அவர் தோன்றுகிறார். சுவர்ணா மல்லவராய்ச் சியை மணக்கும் கணவனாக நடிக்கிறார்.
வீ.பி. கணேசன் தயாரித்த யசபாலித்த நாணயக்கார இயக்கிய இத் திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் ஓரளவு சிறப்பித்துப் பேசப்பட்டது. அதைப் போலவே வில்லனாக நடித்த கே.எஸ். பாலச்சந்திரனின் நடிப்பும் சிறப்பாகப் பேசப்பட்டது.
நடிகர்கள் எல்லோருமே ஏற்கனவே சினிமா அனுபவம் உள்ளவர்கள். வில்லனாகத் தோன்றும் கே.எஸ். பாலச்சந்திரனும் திறம்பட நடிக்கிறார்' என்று தினகரன் பத்திரிகை விமர்சனம் எழுதியது. கே.எஸ். பாலச்சந்திரன் நடித்து வெளிவந்த மற்றுமொரு திரைப்படம் 'அவள் ஒரு ஜீவநதி ஆகும். அது 1980இல் திரைக்கு வந்தது. அத்திரைப்படத்தில் நடித்த பாலச்சந்திரனைப் பற்றி தினகரன் பத்திரிகை பின்வருமாறு எழுதியது.
'கே.எஸ். பாலச்சந்திரன் 'வாடைக் காற்று' படத்தில் அறிமுகமானார். இப்பொழுது "அவள் ஒரு ஜீவநதி' படத்தில் நடித்திருக்கிறார். அவரது ஆற்றல் நாடகத்தைவிட சினிமாவி லேயே நன்றாக வெளிப்படுகிறது. அவர் 'அவள் ஒரு ஜீவநதி' படத்தில் தனித்துவமான பாணியில் நடித்திருக்கிறார்' என்று அது எழுதியது.
கே.எஸ். பாலச்சந்திரன் இலங்கையில் நடித்த கடைசிப் படம் ‘சர்மிளாவின் இதய ராகம்' ஆகும். அத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்த கையோடு அவர் கனடா போய்விட்டார்.
Page 90
174 இலங்கைத் திரையுலக முன்னோடிகள்
படம் திரையிடப்பட்டபோது அவர் சில காட்சிகளில் தோன்றினார். ஆனால் அவரது இனிமையான குரலைக் கேட்க முடியவில்லை. அவருக்குப் பதிலாக வேறு யாரோ குரல் கொடுத்திருந்தார்கள். முன் பகுதியில் ஒருவரும் பின் பகுதியில் இன்னொருவருமாக இருவர் குரல் கொடுத்திருந்தனர். குரலினால் பிரபலம் பெற்ற ஒரு கலைஞருக்கு வேறொருவர் குரல் கொடுத்தது ஏதோ போலிருந்தது.
கே.எஸ். பாலச்சந்திரன் இப்பொழுது கனடாவில் வாழ்கிறார். அங்கும் கலை முயற்சிகளில் ஈடுபடுகிறார். இலங்கையில் தயாரான நான்கு படங்களில் நடித்து விட்ட அவர், தான் நடித்த படங்களில் பல்வேறு வகையில் உதவியும் செய்திருக்கிறார்.
இலங்கையில் பல தமிழ் படங்கள் உருவாக வேண்டும் என்று ஆசைப்பட்டவர்களில் அவரும் ஒருவர். அவர் இப்பொழுது கனடாவில் வாழ்ந்தாலும் அவர் எண்ணமெல்லாம் கலை உலகைப் பற்றியதாகவே இருக்கும் என்பது உண்மையே.
29.எம்.எஸ். ஆனந்தன்
பல சிங்களப்படங்களை ஒளிப்பதிவு செய்த எம்.எஸ். ஆனந்தன்.
கடந்த ஐம்பது வருடங்களில் தயாரிக்கப் பட்ட திரைப்படங்களில் 'நிதானய' என்ற சிங்களப்படமும் ஒன்றாக விமர்சகர்களால் கணிக்கப்படுகிறது. அப்படத்தை இயக்கியவர் லெஸ்டர் ஜேம்ஸ்பீரிஸ் ஒளிப்பதிவு செய்தவர் ஒரு தமிழர். இயக்குநரைப் பாராட்டுகிறார்கள் பரிசளிக்கிறார்கள். ஆனால் ஒளிப்பதிவாளரை பாராட்டுவதுமில்லை; அவருக்கு பரிசளிப்பது மில்லை. இப்படியான கவலை அப்படத்தை ஒளிப்பதிவு செய்த எம்.எஸ். ஆனந்தனுக்கு மட்டுமல்ல மற்றைய தமிழ் பேசும் கலைஞர்களுக்கும் உண்டு. எப்படித்தான் கஷ்டப்பட்டுக் கலைக்கு தமது வாழ்வை அர்ப்பணித்தாலும் அங்கிருந்து ஒரு பாராட்டுரை கூட சிலவேளைகளில் இவ் கலைஞர்களுக்கு கிடைப்பதில்லை. அதற்கு ஒரேகாரணம் அந்தக் கலைஞர் தமிழர் அல்லது முஸ்லிமாக பிறந்துவிட்டதுதான்.
யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள கொடிகாமத்தில் பிறந்த மார்க்கண்டு செல்வானந்தன் சாவகச்சேரி றிபேக் கல்லூரியில் ஆரம்பக்கல்வியைக் கற்றவர்.
ஆரம்பத்தில் எஸ்.எம். நாயகத்தின் ஸ்டூடியோவிலும் ஒளிப்பதிவுப் பகுதிக்குப் பொறுப்பாக இருந்தார். சிலோன்
Page 91
1.76 இலங்கைத் திரையுலக முன்னோடிகள்
ஸ்டூடியோவின் ஆரம்ப கர்த்தாக்களான சிற்றம்பலம் ஏ.கார்டினர். செல்லமுத்து போன்றோரின் வேண்டுகோளின் படி சென்னை நெப்டியூன் ஸ்டூடியோவில் ஒளிப்பதிவுத் துறையில் மூன்று வருடங்கள் பயிற்சி பெற்றார்.
இலங்கை திரும்பியதும் பல சிங்களப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தார். இவர் ஒளிப்பதிவு செய்தது தரமான இயக்குநர்களின் படங்களுக்கு மட்டுமே. அதனால் அட்வான்ஸ் வாங்காமலே தொழில் செய்வாராம்.
சிங்களச் சினிமாவில் ஒளிப்பதிவுத் துறையில் கடமை யாற்றிய இவரது பெயரை சுருக்கி எம்.எஸ். ஆனந்தன் என்று பெயர் வைத்தார் காமினி பொன்சேகா,
ஒளிப்பதிவுத்துறையில் பிரகாசிதை எம்.எஸ். ஆனந்தன் தனியாகப் படங்களை இயக்கவும் செய்தார். ஆர்.ஆர்.பிலிம்ஸ் அதிபர் ராஜா பாலிதயாரித்த 'சித்க மஹிம' (உள்ளத்தின் பெறுமதி) என்ற படத்தையே முதன்முதலில் இயக்கினார். இவர் இயக்கிய இன்னொரு படமான 'ஹந்தபான (நிலவொளி) அதிக நாட்கள் ஓடியது. பொதுவாக இவர் இயக்கிய அல்லது ஒளிப்பதிவு செய்த எந்த படத்துக்குமே பரிசு கிடைத்ததில்லை. ஆனால் 'சண்டி சியாமா' என்ற படத்துக்கு மட்டும் ஜனாதிபதி பரிசு கிடைத்தது. அதுவும் அதிக வசூல்பெற்ற படம் என்பதற்காகவே அப்பரிசும் கிடைத்ததாம். ஆனால் ஆனந்தன் அந்தப் பரிசைப் புறக் கணித்து விட்டார்
ராஜகிரியவில் 1956ஆம் ஆண்டு காலப் பகுதியில் 'ஆனந்தா சினிமா' என்ற பெயரில் தியேட்டர் ஒன்று கட்டினாராம். அடுத்த ஆண்டுகளில் நடைபெற்ற கலவரத்தில் அத்தியேட்டர் எரிக்கப் பட்டு விட்டது என்கிறார்.
தம்பிஐயா தேவதாஸ் 177
Page 92
178 இலங்கைத் திரையுலக முன்னோடிகள்
இந்த கலவரங்கள் ஆனந்தனை மட்டுமா வாட்டின? அனைத்துக் கலைஞர்களையுமே வாட்டி வருகிறன. லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் இயக்கிய பலபடங்களுக்கு எம்.எஸ். ஆனந்தனே ஒளிப்பதிவு செய்தார். ஆனந்தன் ஒளிப்பதிவு செய்த 'கொலு ஹதவத' (ஊமை உள்ளம்), 'அக்கரப்பஹா' (ஐந்து பரப்பு), 'நிதானய" (புதையல்), மடுல்தூவ (மாடல் தீவு) போன்ற படங்கள் தொழில்நுட்ப ரீதியில் வெற்றி பெற்றன.
பின்னாளில் தனியாகவும் பலபடங்களைத் தயாரித்து நெறியாண்டு ஒளிப்பதிவு செய்தார். இவர் தயாரித்த முதலாவது படம் 'பிரவேசம் வென்ன’ (அவதானமாக இருங்கள்) என்ப தாகும். மூத்தமகளான 'சியாமா' வின் பெயரையே படத்துக்குத் தலைப்பாக வைத்தது மட்டுமல்ல அவளையே கதாநாயகியாக நடிக்கவைத்தும் பல படங்களை உருவாக்கினார். மகேநங்கி சியாமா, 'சண்டி சியாமா', "ஹலோ சியாமா' என்பன அவற்றின் பெயர்கள். பேத்தியாரான (சியாமாவின் மகள்) மந்தாராவை வைத்து 'மம'பயநே" (எனக்குப்பயமில்லை) என்ற படத்தை உருவாக்கினார். இப்பொழுது சியாமா, மந்தாரா எல்லோருமே கனடாவில் வாழ்கிறார்கள்.
பேத்தியார் மந்தாராவைக் கதாநாயகியாக வைத்து மீண்டும் ஒரு படத்தை உருவாக்க இருக்கிறார் ஆனந்தன். அப்படத்தின் அரைவாசிப் பகுதி இலங்கையிலும் மிகுதிப்பகுதி கனடாவிலும் ஒளிப்பதிவு செய்யப்படுமாம்.
வயலட் என்ற சிங்களப்பெண்ணை மணந்த ஆனந்தனுக்கு 'சியாமா' என்ற மகள் இருக்கிறார். சாரியப் பெரேராவை மணந்த சியாமாவுக்கு மந்தாரா என்ற மகள் இருக்கிறார். பிள்ளைகள் கனடாவில், எம்.எஸ். ஆனந்தனும் திருமதி வயலட் ஆனந்தனும் மட்டுமே கொழும்பில் கொள்ளுப்பிடியில் அமைதியாக வாழ்ந்து வருகிறார்கள். ஆனந்தனது கலை ஆர்வம் இப்பொழுது
தம்பிஐயா தேவதாஸ் 179
தொலைக்காட்சிப் பக்கமும் திரும்பியிருக்கிறது. தொலைக்காட்சி நாடகங்களைத் தயாரிக்க அவர் முயல்கிறார்.
சினிமாத்துறையில் இத்தனை புகழ்மிக்க ஆனந்தன் தமிழ்ப்படம் எதையும் உருவாக்காதது கவலைக்குரியதே. ஆனாலும் எம்.எஸ். ஆனந்தன் சிங்களத் திரையுலகில் இன்று வரை நிலைத்து நிற்கும் ஒரு கலைஞராக விளங்குகிறார்.
Page 93
30. ஈழத்து இரத்தினம்
இலங்கைத் தமிழ்த் திரைப் படங்களில் பல பாடல்களை எழுதிய கவிஞர் ஈழத்து இரத்தினம்.
1960 ஆம் ஆண்டு முதல் திரைஇசைப் பாடல்களால் தமிழகத்தை ஆட்சி செய்தவர் கவிஞர் கண்ணதாசன். இவருக்கு முன்பு இந்த ஆட்சியில் இருந்தவர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம். இவர் பட்டுக்கோட்டை அல்ல பாட்டுக் கோட்டை என்று சொல்லி, தன்குருவாகக் கொண்டு பாடல்கள் எழுதத் தொடங் கினார், ஓர் இலங்கைக் கவிஞர். 1957இல் 'எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்' என்ற படத்தில் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பலபாடல்களை இயற்றினார். இவர் தன் சிஷ்யரான இலங்கைக் கவிஞருக்கும் ஒரேயொரு பாடலை எழுத வாய்ப்பு வழங்கினார். விடுவாரா இலங்கைக் கவிஞர்? ஓர் எழுச்சிப்பாடலை எழுதினார். புகழும் பெற்றார். இலங்கை கவிஞர் அப்படத்தில் எழுதிய பாடல் தான் இது:-
石
“எல்லோரும் இந்த நாட்டு மன்னரடா
இங்கு இளைத்தவன் வலுத்தவன் இல்லையடா. இது நல்லோர்கள் சொல்லி வைத்த உண்மையடா. நாமும் அதன் வழியே செல்வோமடா. ஒன்று பட்ட சக்தியால் உரிமைகாக்க வேண்டும் உறுதிகொண்டு அடிமைவாழ்வை உதறித்தள்ள வேண்டும்.
Page 94
182 . இலங்கைத் திரையுலக முன்னோடிகள்
கருவி கொண்ட கைகளோடு ஒன்று கூடுவோம். கைவிலங்கு ஒடிகவென்று முரசு கொட்டுவோம். தரமுயர்ந்த வாழ்வு தன்னை நாடி ஓடுவோம். நம்மைத் தாழ்த்த எண்ணும் தீயவர்க்கு முடிவு கட்டுவோம்." இலங்கைக் கவிஞர் ஒருவர் எழுதி, இந்தியப்பட மொன்றில் இடம்பெற்ற முதலாவது பாடல் இது தான்.
இவை மட்டுமா? இலங்கை திரும்பிய இக்கவிஞர் இலங்கையில் தயாரிக்கப்பட்ட பல தமிழ்ப்படங்களுக்குப் பாடல்கள் எழுதினார். சில படங்களுக்கு வசனம் எழுதினார். இவர் இயற்றிய மெல்லிசைப் பாடல்களையே இலங்கை வானொலி அதிகமாக ஒலிபரப்பியது. இன்னும் சொல்வானேன்? சிங்களத் திரைப்படமொன்றையும் இயக்கிப் புகழ்பெற்றார்.
இத்தனை சிறப்புமிக்க இந்தக் கலைஞர் யார் தெரியுமா? அவர்தான் அமரர் கவிஞர் ஈழத்து இரத்தினம்.
ஈழத்து இரத்தினம் மட்டக்களப்பில் பிறந்தவர். சினிமா ஆர்வம் காரணமாக இந்தியா சென்றவர். சென்னை ஜூபிட்டர் ஸ்டூடியோவில் உதவி இயக்குநராகக் கடமையாற்றியவர். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தைக் குருவாகக் கொண்டு பல பாடல்களை இயற்றியவர்.
1970ஆம் ஆண்டளவில் இலங்கை திரும்பிய இரத்தினம் இலங்கை வானொலியில் மெல்லிசைப் பாடல்கள் பலவற்றை எழுதியவர்.
இக்காலத்திலேயே சிங்களப் படம் ஒன்றை நெறியாண்டார். 'சக்சய' (சந்தேகம்} என்ற ஒரேயோரு சிங்களப்படத்தை இவர் நெறியாண்டாலும் அப்படம் சிங்கள விமர்சகர்களிடயே சிலாகித்துப் பேசப்பட்டது. ரசிகர்கள் மனத்தில் வைத்திருக்கும்
தம்பிஐயா தேவதாஸ் 183
ஈழத்து ரெத்தினம் கதைவசனப் பாடல்கள் எழுதிய படம் "குத்துவிளக்கு திரைப்படத்தில் அவர் எழுதிய ஒரு பாடல் காட்சியில் லீலா நாராயணன் இப்படித் தோன்றுகிறார். (1972)
Page 95
184 இலங்கைத் திரையுலக முன்னோடிகள்
படங்களில் அதுவும் ஒன்றாகும். அதை தயாரித்தவரும் ஒரு தமிழர். அவர் பெயர் எஸ்.எம். முத்தையா.
பின்பு இரத்தினம் இலங்கைத்தமிழ் திரை உலகிற்குள் பிரவேசித்தார். இந்த வாய்ப்பை இவருக்கு வி.எஸ். துரைராஜா தயாரித்த 'குத்து விளக்கு திரைப்படம் வழங்கியது. இப்படத் துக்கே இவர் முதன் முதலாகத் திரைக்கதை வசனம் எழுதினார். முத்தான மூன்று பாடல்களையும் எழுதினார். அவற்றில் ஒன்றுதான் 'ஈழத்திரு நாடே என்னருமைத் தாயகமே என்ற பாடல் ஆகும். முழுப்பாடலையும் பார்க்கும்பொழுது ஈழத்து இரத்தினத்தின் கவித்துவத்தை எம்மால் புரிந்து கொள்ளமுடியும்.
ஈழத்திருநாடே! என்னருமைத் தாயகமே இருகரம் கூப்புகிறோம் வணக்கம் அம்மா வாழும் இனங்கள் இங்கு பேசும் மொழியிரண்டு வழங்கிய உனக்குநாங்கள் பிள்ளைகள் அம்மா
கங்கை மகாவலியும் களனியும் எங்களுக்கு மங்கை நீஊட்டி வரும் அமுதமம்மா சிங்களமும் செந்தமிழும் செல்வியுன் இருவிழியாம் சேர்ந்திங்கு வாழ்வது உன்றன் கருணையம்மா
ஈழத்துக் கலைகள் தன்னை உலகுக்கு எடுத்தளித்த கலாயோகிஆனந்தகுமாரசாமிதவழ்ந்தது உன்மடியம்மாயாழுக்கு நூல்வடித்து பாருக்குக் காட்டியது விபுலானந்த அடிகளம்மா
பாட்டிற்குப்பொருள்சொன்னநாவலர்பிறந்ததுயாழ்ப்பாண நாட்டிற்குப் புகழல்லவா உன்றன் வீட்டில் பிறந்தவர்கள் நாட்டுக்காக வாழ்ந்தவர்கள் வீரர்கள் என்பது - பெருமையல்லவா
தம்பிஐயா தேவதாஸ் 185
புத்தமும் சைவமும் புனித இஸ்லாமும் கிறிஸ்தவமும் இந்நாட்டின் உயிரம்மா இத்தனையும் என்றென்றும் இங்கிருக்க - வேண்டும் என்று இதயத்தால் வேண்டுகிறேன் உன்னையம்மா
பாடல் வரிகளிடையே பெரியவர்கள், கோயில்கள், நதிகள் போன்ற பெயர்கள் வந்தன.
அதைப் போலவே படத்தில் அவற்றின் காட்சிகள் வந்தன. மண்ணின் மணத்தைச் சொல்லி தேசிய ஒற்றுமையை வலியுறுத்தும் இப்பாடலில் முதன் வரியில் 'ஈழம்' என்ற சொல்வருவதால் இலங்கை வானொலி இப்பாடலை ஒலிபரப்பப் பயப்படுகிறது. இசைத்தட்டு வானொலி நிலையத்தின் இசைத்தட்டுக் களஞ் சியத்தில் பூஞ்சணம் பிடித்துக் கிடக்கிறது.
ஆனால் இவர் இயற்றிய மெல்லிசைப்பாடல்களை அதிக மாகவே ஒலிபரப்புகிறார்கள். ஈழத்து இரத்தினம் திரைக்கதை வசனம் பாடல் எழுதிய இன்னுமொரு தமிழ்ப்படம் கலியுக காலமாகும். இத்திரைப்படம் சிங்கள மொழியிலிருந்து தமிழுக்கு டப் செய்யப்பட்டது என்பதால் வாய் அசைப்புக்கு ஏற்ப வசனம்
எழுத வேண்டியிருந்தது.
இசை அமைப்புக்கும் வாய் அசைப்புக்கும் ஏற்பப் பாடல் எழுதவேண்டி இருந்தது. அந்தவகையில் இவ்விரண்டையும் நல்ல முறையில் எழுதி முடித்தார் ஈழத்து இரத்தினம். டென்மார்க்சண் இனிமையாக இசை அமைத்த அதற்குப் பாடல் எழுதினார் ஈழத்து இரத்தினம்.
இதன் பின்பு:இலங்கைத் திரைப்படங்கள் பலவற்றுக்கு ஈழத்து இரத்தினம் பாடல்கள் இயற்றினார். 'வாடைக்காற்று, அநுராகம், இரத்தத்தின் இரத்தமே' என்பன அவற்றில் சிலவாகும்.
Page 96
86 இலங்கைத் திரையுலக முன்னோடிகள்
1983ஆம் ஆண்டு ஜூலைக்கலவரம் இந்தக் கவிஞரையும் தாக்கியது. குடும்பத்துடன் இந்தியாவுக்குப் புலம் பெயர்ந்தார்.
அங்கும் பல பாடல்களை இயற்றினார்.
ஆனால் சினிமா உலகிற்குள் நுழைய முடியவில்லை. ஈழத்து இரத்தினம் நோய்வாய்ப்பட்டு இந்தியாவில் இறந்தார். ஆனால் அவர் இயற்றிய பாடல்கள் இன்றும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.
வானொலி மெல்லிசைப் பாடல்கள் திரைப்பட இசைப் பாடல்கள், திரைப்படக் கதை வசனம் எழுதுதல் போன்றவற்றில் திறமை காட்டிய ஈழத்து இரத்தினம் இளவயதிலேயே இறந்து விட்டது இலங்கையின் கலைத்துறைக்குப் பேரிழப்பாகும்.
31. கே.பி.கே.பாலசிங்கம்
பல சிங்கள தமிழ்ப் படங்களுக்கு ஒலிப்பதிவு செய்த கே.பி.கே. பாலசிங்கம்.
இலங்கை சினிமா உலகில் தொழில்நுட்பத் துறையில் பல தமிழ் பேசும் கலைஞர்கள் கடமையாற்றியிருக்கிறார்கள். ஒலிப்பதிவு, ஒளிப்பதிவுத் துறைகளில் மிக அதிகமாகவே இவர்கள் பங்கு பற்றியிருக்கிறார்கள். 300க்கு மேற்பட்ட சிங்களப் படங் களுக்கும் 10க்கு மேற்பட்ட இலங்கைத் தமிழ்ப் படங்களுக்கும் ஒலிப்பதிவு செய்த ஒரு தமிழ்க்கலைஞர் இன்றும் அத்துறையில் ஈடுபடுகிறார் அவர்தான் கே.பி.கே. பாலசிங்கம்.
கனகசபை பொன்னையா கதிரேசன் பாலசிங்கம் என்ற முழுப்பெயரைக் கொண்ட இக்கலைஞர், மலேசியாவில் பிறந்தவர். ஆரம்பக்கல்வியை மலேசியாவிலும் உயர்கல்வியை உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரியிலும் பயின்றவர். இறுதிப் படிப்பைச் சென்னைப் பல்கலைக்கழகத்திலும் பயின்றவர்.
சென்னையில் கல்விபயின்ற காலத்தில் சினிமாக் கலைஞர் களுடன் ஏற்பட்ட தொடர்பு, இவரையும் சினிமாத் தொழிலுக்குள் தள்ளி விட்டது.
இலங்கையில் ஹெந்தளையில் 'விஜயா ஸ்ரூடியோ’ ஆரம்
பிக்கப்பட்டபோது அங்கு பம்பாயைச் சேர்ந்த பி.எஸ். மிஸ்ரா
Page 97
188 இலங்கைத் திரையுலக முன்னோடிகள்
பிரதம ஒலிப்பதிவாளராக விளங்கினார். அப்பொழுது கே.பி.கே. பாலசிங்கம் அங்கு உதவி ஒலிப்பதிவாளராகச் சேர்ந்து கொண்டார்.
எம். மஸ்த்தான் இயக்கிய தீவரயோ. என்ற படத்துக்கு முதன் முதலில் உதவி ஒலிப்பதிவாளராகச் சேர்ந்து கொண்டார் பாலசிங்கம்.
பி.எஸ். மிஸ்ரா இந்தியா சென்ற பின்னர் சென்னை - விஜயா வாஹினி ஸ்ரூடியோவில் கடமையாற்றிய ஏ. கிருஷ்ணையர் விஜயா ஸ்ரூடியோவில் ஒலிப்பதிவாளராக நியமிக்கப்பட்டார். இவருடன் ஆறு வருடங்கள் சேர்ந்து கடமையாற்றினார் பாலசிங்கம்.
1971ஆம் ஆண்டிலேயே கே.பி.கே. பால்சிங்கத்தின் வாழ்வில் திருப்பம் ஏற்பட்டது. ஏனெனில் அந்த ஆண்டு முதலே விஜயா ஸ்ரூடியோவில் பிரதம ஒலிப்பதிவாளராகக் கடமை யாற்றத் தொடங்கினார். தொடர்ந்து 28 வருடங்களாக இத்தொழிலில் ஈடுபட்டு300க்கு மேற்பட்ட சிங்களப் படங்களுக்கு ஒலிப்பதிவு செய்து விட்டார். 10க்கும் அதிகமான தமிழ்ப் படங்களுக்கும் ஒலிப்பதிவு செய்தவரும் பாலசிங்கம் தான்.
சிங்களத் திரைப்படங்களுக்கு ஒலிப்பதிவு செய்தது போல் இலங்கைத் தமிழ்ப்படங்களுக்கும் ஒலிப்பதிவு செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டார் பாலசிங்கம். 'புதியகாற்று' என்ற படத்தின் மூலமே அவ்வாய்ப்புக் கிட்டியது.
அதைத் தொடர்ந்து எஸ்.வீ. சந்திரனின் ‘எங்களில் ஒருவன்.' அரியரெத்தினத்தின்- 'இரத்தத்தின் இரத்தமே.'பைலட்பிரேம்நாத்.' போன்ற தமிழ்ப் படங்களுக்கும் ஒலிப்பதிவு செய்தார்.
"டென்மார்க் சண்' தயாரித்த 'இளையநிலா" என்ற இலங்கைத் தமிழ் படத்துக்கும் இவர் சிறந்த முறையில் ஒலிப்பதிவு செய்தார்.
தம்பிஐயா தேவதாஸ்" 189
பாலசிங்கத்தின் ஒலிப்பதிவுச் சாதனைகளிலொன்றாக சிங்களப்படமொன்றை தமிழ்ப்படமாக மாற்றிய முயற்சியைக் குறிப்பிடலாம். உண்மையாக நடைபெற்ற கொள்ளைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்துத் தயாரிக்கப் பட்ட சிங்களப்படம் ‘ஹாரலக்ஷய' என்பதாகும். இப்படத்துக்குத் தமிழ் வசனங்கள் எழுதிப் பொருத்தி "நான்கு லட்சம்' என்ற பெயரில் தமிழ்ப் படமாக்கி முதன் முதலில் வெளியிட்டமை பாலசிங்கத்தின் புதுமுயற்சியாகும். இப்படத்துக்கு பின்னணிக்குரல் வழங்கிய வானொலிக் கலைஞர்கள்தான் பின்னாளில் இலங்கைத் திரைப் படங்களில் பல்வேறு துறைகளில் ஜொலிக்க ஆரம்பித்தார்கள்.
கே.பி.கே. பாலசிங்கம் சிங்கள, தமிழ்ப்படங்களுக்கு மட்டும் ஒலிப்பதிவுசெய்யவில்லை. நான்கு ஆங்கிலப் படங்களுக்கும் ஒரு ஹிந்திப் படத்துக்கும் ஒலிப்பதிவாளராகக் கடமையாற்றியுள்ளார்.
இப்பொழுது 'மான் ப்றம் பாங்கொக்' என்ற ஆங்கிலப் படத்தில் ஒலிப்பதிவாளராகக் கடமையாற்றுகிறார். இது தமிழிலும் சிங்கள மொழியிலும் டப் பண்ணப்பட இருக்கிறது. இப்படத்தின் இயக்குநரும் கதாநாயகனுமான பில்லி வோங் பிரபல பாங்கொக் சினிமாத் தயாரிப்பாளராவார். வி.வ்ாமதேவனும் எம். சிவசுப்பிர மணியமும் இப்படத்துக்கு ஒளிப்பதிவாளர்களாகக் கடமையாற்றி யிருக்கிறார்கள்.
முந்நூறு படங்களுக்கு மேல் ஒலிப்பதிவாளராகக் கடமை யாற்றிய கே.பி.கே. பாலசிங்கத்துக்கு இரண்டுமுறை ஜனாதிபதி விருதும் மூன்றுமுறை சரசவி விருதும் கிடைத்திருக்கின்றன.
நீண்டகாலம் சினிமாத்துறையில் ஒலிப்பதிவாளராகக் கடமை யாற்றிய பாலசிங்கத்துக்குப் படம்தயாரிக்க வேண்டும் என்று ஆசை எழுந்ததில் வியப்பில்லை.
அதனால் 1976 ஆம் ஆண்டு எஸ்.பி.சாமியுடன் ஒன்று சேர்ந்து ‘ஆதரேமங் ஆதரே" என்ற படத்தை தயாரித்தார். லெனின்
Page 98
19C) இலங்கைத் திரையுலக முன்னோடிகள்
மொறாயஸ் இயக்கிய இப்படம் பொருளாதார ரீதியில் வெற்றி பெற்றது. விஜயகுமாரதுங்க, மாலினி பொன்சேகா, டோனி ரணசிங்ஹ, எடிஜயமான்ன, ருக்மணிதேவி போன்ற பிரபலமான
நடிகர்கள் இப்படத்தில் நடித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
"சினிமாத்துறையில் தனது வெற்றிக்கு வழிகாட்டிய சினிமாஸ் கே. குணரெத்தினத்தை மறக்க முடியாது' என்று கூறும் பாலசிங்கம். 'அவர், தென்கிழக்காசியாவிலேயே மிகச் சிறந்த கலைத்துறை சம்பந்தமான சகலதுறைகளையும் உள்ளடக்கிய விஜயா ஸ்ரூடியோவை உருவாக்கிப் பெருமை சேர்த்தார். சிங்களப் படத்துறைக்கு உயிரூட்டி வளர்த்தவர் சிங்களக் கலைத்துறைக்குச் களம் அமைத்துக் கொடுத்தவர் குணரெத்தினம்" என்று புகழ்கிறார்.
1983இல் 'விஜயா ஸ்ரூடியோ' அழிக்கப்பட்டமையும் காலத்தால் அழிக்க முடியாத பழம் பெரும் சிங்களத் தமிழ் படங்கள் எரிக்கப்பட்டமையும் நெஞ்சில் வேதனையைத் தருகிறது. அக்கலைக் கோட்டத்தில் இருபத்தெட்டு வருடங்கள் கடமை யாற்றிய அக்காலத்தை என்றும் வாழ்வில் மறக்க முடியாது' என்று கூறி வேதனைப்படுகிறார் கே.பி.கே. பாலசிங்கம்.
32. வி.எஸ். துரைராஜா
I
կլինի, իի,
კ; " |ჭწწ. წ
"குத்து விளக்கு துரைராஜா.
திரைப்படத்தை தயாரித்த கட்டிடக் கலைஞர் வீ.எஸ்.
Page 99
192 இலங்கைத் திரையுலக முன்னோடிகள்
தமிழ்க் கலாசாரச் சின்னங்களாக யாழ்ப்பாணத்தில் பல கட்டிடங்கள் உயர்ந்து நின்றன. ஆறு மாடிகள் கொண்ட வீரசிங்க மண்டபம், நவீன சந்தைக் கட்டடம், விளையாட்டரங்கம் தந்தை செல்வா நினைவு தூபி என்பனவே அவை. இவற்றை அழகுற அமைத்தவர் ஒரு கட்டிடக் கலைஞர்.
யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல. கொழும்பிலும் அவர் நிர்மாணித்த பல கட்டிடங்கள் உயர்ந்து நின்றன. அவற்றுக்கு ஒரு நல்ல உதாரணம் பம்பலப்பிட்டி பிள்ளையார் கோவில் ஆகும். இலங்கையில் மட்டுமல்ல அவுஸ்திரேலியாவிலும் அவர் நிர்மாணித்த பல கோயில்கள் அழகுடன் உயர்ந்து நிற்கின்றன. இந்த கட்டிடங்களை அழகுற நிர்மாணித்த அந்தக் கட்டிடக் கலைஞர்தான் வி. எஸ். துரைராஜா. கட்டடக்கலை, பல்கலைகளுக்கும் தாய்க்கலை என்பார்கள். சித்திரம், சிற்பம் போன்ற பல பழைய கலைகளுடன் சினிமா என்ற நவீன கலையும் அதனுள் அடங்கும். எனவே திரைப்படக் கலையிலும் திரு. வி. எஸ். துரைராஜா ஈடுபாடு கொண்டவராக விளங்கியதில் ஆச்சரியமில்லை.
அது 1971ஆம் ஆண்டு காலப்பகுதி. அதுவரை இலங்கையில் எட்டு தமிழ்த்திரைப் படங்கள் வெளிவந்து விட்டன. ஆனால் அவை ரசிகர்கள் மனதில் அதிகம் இடம் பிடிக்கவில்லை. இவற்றைப் போலல்லாது தனித்துவமான முறையில் தமிழ்ப் படமொன்றை தயாரிக்க எண்ணினார் இந்த கட்டடக்கலைஞர் வீ.எஸ். துரைராஜா.
யாழ்ப்பாணத் தமிழர்களின் பேச்சு வழக்கு, பழக்க வழக் கங்கள், வாழ்க்கை முறைகள் போன்றவை தனித்துவமானவை. இந்த இலங்கை தமிழ்க் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் இலங்கைக் கலைஞர்களைக் கொண்டே இங்கு ஒரு தமிழ்ப்படம் உருவாக்கப்பட வேண்டும் என்று துணிந்து விட்டார் அவர்.
தம்பிஐயா தேவதாஸ் 193 ی
இலங்கையில் உள்ள கலைஞர்கள், எழுத்தாளர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள் போன்றோரை ஒன்றிணைத்து ஓர் உன்னதமான தமிழ்ப்படத்தை உருவாக்க வேண்டும் என்ற திரு.துரைராசாவின் கனவு நனவாகியது. ஆம் அவர் 'குத்துவிளக்கு' திரைப்படத்தை தயாரிக்கத் தொடங்கி விட்டார்.
யாழ்ப்பாண மண்ணுக்கே உரிய மூலக்கதையை வி.எஸ். துரைராஜா எழுதி வைத்துக் கொண்டார். அதற்கான திரைக்கதை வசனம் பாடல்களை எழுதுவதற்குப் பலரைத் தேடிப் பார்த்தார். இறுதியில் ஈழத்து இரத்தினத்தை தேர்ந்தெடுத்துக் கொண்டார். அப்பொழுது திரைப்படத் துறையில் புகழ் பெற்று விளங்கிய டபிள்யு. எஸ். மகேந்திரன் ஒளிப்பதிவாளராகவும் இயக்குந ராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
புகழ் பெற்ற பல நடிகர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சோமு என்ற பாத்திரம் ஜெயகாந்துக்கு வழங்கப்பட்டது. மல்லிகா என்ற பாத்திரம் நடனத் தாரகை லீலா நாராயணனுக்கு வழங்கப்பட்டது.
இவர்களுடன் ஆர். ஆனந்தன், எம்.எஸ். இரத்தினம், பேரம்பலம், திருநாவுக்கரசு, நாகேந்திரன், நடராஜன், பரமானந்தன், பூரீசங்கர், எம். ராம்தாஸ் போன்றோரை நடிகர் களாகத் தேர்ந்தெடுத்தார். இந்திராதேவி பிள்ளை, சாந்திலேகா, யோகா தில்லைநாதன், தேவிகா, பேபி பத்மா போன்றோரை நடிகைகளாகத் தேர்ந்தெடுத்தார்.
'குத்துவிளக்கு ஆரம்ப விழாவைத் திரு. துரைராஜா பிரபல தென்னிந்திய நடிகை செளகார் ஜானகியைக் கொண்டு ஆரம்பித்து வைத்தார்.
யாழ்ப்பாணக் குடாநாட்டின் கோயில் குளங்களிலும், வயல் வெளிகளிலும் கொழும்பு, கண்டி, மாங்குளம் போன்ற பல
Page 100
1인 4 இலங்கைத் திரையுலக முன்னோடிகள்
இடங்களிலும் படப்பிடிப்பை வைத்துக் கொண்டார். நல்லூர்க் கந்தசாமி கோயில், செல்வச் சந்நிதி முருகன் கோயில் ஆகிய வற்றின் திருவிழாக்காட்சிகளை உண்மையாகவே ஒளிப்பதிவு செய்து படத்துடன் சேர்த்துவிட்டார்.
படத்தின் ஆரம்பத்தில் இடம்பெற வேண்டும் என்பதற்கான பாடல் ஒன்றின் பொருளை வீ. எஸ். துரைராஜா ஏற்கனவே தீர்மானித்துக் கொண்டார். அதற்கான அழகான பாடலை ஈழத்து ரெத்தினம் எழுதினார். அதுதான் 'ஈழத்திருநாடே என்னருமைத் தாயகமே" என்று தொடங்கும் பாடல்.
பாடல் வரிகளிடையே பெரியார்கள், கோயில்கள். நதிகள் போன்ற பெயர்கள் வந்தன. அதைப் போலவே படத்தில் அவற்றின் உருவங்கள் தோன்றும் வகையில் படத்தை அமைத்துக் கொண்டார் துரைராஜா. 'குத்து விளக்குத் திரைப்படம் 1972ஆம் ஆண்டு இலங்கையில் ஆறு நகரங்களில் திரையிடப்பட்டது. யாழ்ப்பாணத்தில் புதிய வின்சர் தியேட்டரில் இத்திரைப்படத்தின் வெளியீட்டு விழா விமர்சையாக நடைபெற்றது. முதல்நாள் படம் பார்க்க வந்திருந்த "ஏகாம்பரம்" என்ற விவசாயியைக் கொண்டு குத்து விளக்கேற்றி முதல் படக்காட்சியை ஆரம்பித்து வைத்தார் துரைராஜா.
'குத்து விளக்கு' திரையிடப்பட்டபோது கலையரசு சொர்ணலிங்கம் உயிரோடிருந்தார் அவர் பல பாடசாலைகளுக்கு சென்று குத்துவிளக்கு' படத்தைப் பற்றி பிரசாரம் செய்தார். யாழ்ப்பாணக் குடாநாட்டு மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் ஆகியோரின் வேண்டுகோளின்படி இப்படம் பகல் வேளைகளில் மாணவர்களுக்காக காட்டப்பட்டது.
கொழும்புத் தியேட்டர் உரிமையாளர்கள் இத்திரைப்படத்தை 14 நாட்கள் மட்டுமே ஓடவிட்டனர். ஆனால் யாழ்நகரில்
19E
தம்பிஐயா தேவதாஸ்
(z 15 t) - ulaşağıgospotis qholoog)soğuo qifstoriqıling) 'quo quÚtformoso hoşnrıysé; ượngsosyon assis ofîrșUTā sākos-inridoos,Qaeus gos???), oặyurmă uầumnusso -opioso
Page 101
196 இலங்கைத் திரையுலக முன்னோடிகள்
தொடர்ந்து 40 நாட்கள் ஓடியது. 50வது தினத்தைச் சங்கானை யிலும் 100வது தினத்தை சுன்னாகத்திலும் கொண்டாடியது. யாழ்ப்பாண மாவட்டத்தில் 100ஆவது தினத்தை கொண்டாடிய முதலாவது இலங்கைத் தமிழ்த்திரைப்படம் 'குத்துவிளக்குத்தான்.
வேலுப்பிள்ளை, லட்சுமி, மல்லிகா, ஜானகி, சோமு - இவர்கள் அனைவரும் ஒரு விவசாய குடும்பம். சிங்கப்பூர் பணக்காரர் குமாரசாமி. அவர் மனைவி நாகம்மா, மகன் செல்வராஜா, மகள் ஜெயா இவர்கள் இன்னொரு குடும்பம். இரண்டு குடும்பங்களுடனும் இணைந்துவாழும் தொழிலாளி இராமசாமி. தரகர் மணியத்தார் இவர்களைச் சுற்றியே கதை ஓடுகிறது.
வி. எஸ். துரைராஜா தயாரித்த 'குத்துவிளக்கு திரைப் படத்தின் கதை எவ்வாறு அமைகிறது தெரியுமா?
மல்லிகாவுக்கும் செல்வராஜனுக்கும் காதல் மலருகிறது. பல்கலைக்கழகம் போகிறான் சோமு. ஏழை என்ற காரணத்தினால் மல்லிகாவை செல்வராஜனுக்கு கட்டிக் கொடுக்க மறுக்கிறார் நாகம்மா. பணக்காரப் பெண்ணொருத்திக்கு செல்வராஜனை திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் நடைபெறுகிறது. இதனால் நஞ்சருந்தித் தற்கொலை செய்கிறாள் மல்லிகா, குத்துவிளக்கு ஒளி இழக்கிறது.
இதுதான் 'குத்துவிளக்கின் கதைச் சுருக்கம்.
யாழ்ப்பாண விவசாயக் கிராமமொன்றின் கதையை முதன் முதலாக திரைக்குக் கொண்டு வந்தார், துரைராஜா. உரையாடல்கள் முற்று முழுதாக யாழ்ப்பாணப் பேச்சு வழக்கில் அமைந்திருந்தன. 'குத்துவிளக்கு திரைப்படத்தைப் பற்றி பலர் விமர்சனம் எழுதி னார்கள்.
தம்பிஐயா தேவதாஸ் 197
அப்பொழுது வீரகேசரியில் உதவி ஆசிரியராக கடமை யாற்றிய எஸ்.என். தனரெத்தினம் விமர்சனம் எழுதினார். 'குத்துவிளக்கு' திரைப்படத்தில் இடம்பெற்ற 'ஈழத்திருநாடே' என்ற பாடல் இலங்கையர் அனைவரையும் மெய் சிலிர்க்க வைக்கிறது. ஒரே இடத்தில் இலங்கையின் இயற்கைக்காட்சிகளை காணும் பாக்கியம் எமக்கு கிடைக்கிறது. தனியொரு மனிதர் முதலீடு செய்து ஒரு தமிழ்படத்தை எடுத்திருக்கிறார் என்றால் அது வி. எஸ். துரைராஜா அவர்களாகத்தான் இருக்கும். தேசிய விழிப்புணர்ச்சியை தூண்டியுள்ள முதல் ஈழத்துத் தமிழ்ப் படைப்பு 'குத்து விளக்கு' என்பதில் ஐயமில்லை. இத்திரைப்படம் இலங்கையில் வெற்றித் தமிழ்ப்படங்களைத் தயாரிக்க முடியும் என்பதை நிரூபித்து விட்டது, என்று எழுதினார்.
ஆ. சிவப்பிரியன் என்பவரும் வீரகேசரியில் விமர்சனம் எழுதினார். ‘. எமது கலாசாரம், பண்பாடு, பேச்சுமொழி என்பவற்றுக்கு இசைவாகப் படைப்புகள் வெளிவரும் பொழுது, மக்கள் அவற்றுக்கு ஆதரவு வழங்குவார்கள். இதற்கு சிறந்த உதாரணம் எம் நாட்டில் வி.எஸ். துரைராஜா தயாரித்த 'குத்துவிளக்கு' திரைப்படமாகும்’ என்று அவர் எழுதினார். 1976ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் தமிழ் ஆராய்ச்சி மகாநாடு நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளையும் திரு. துரைராஜா விவரணத் திரைப்படமாக தயாரித்தார். அதற்கான ஒளிப்பதிவை ஜோ. தேவானந் மேற்கொண்டார்.
1976ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அவ்விவரணத் திரைப் படப் பிரதிகள் இலங்கையின் பல பாகங்களிலும் செய்திப் படங்களாகக் காண்பிக்கப்பட்டன.
இவ்வாறு பல வழிகளில் வி.எஸ். துரைராஜா சினிமாவுடன் தொடர்புடையவராக இருந்தார்.
Page 102
198 இலங்கைத் திரையுலக முன்னோடிகள்
இலங்கையில் முறையான தமிழ்ப்படம் தயாரித்தால் வெளிநாடுகளிலேயே ஒட்டி வெற்றி பெறலாம் என்கிறார்கள். அப்படியான முயற்சிகளில் வி.எஸ்.துரைராஜா ஈடுபடவேண்டும்.
33. கே.வெங்கட்
‘மாமியார் வீடு' தமிழ்த் திரைப் படத்தையும் பல சிங்களத் திரைப் படங்களையும் இயக்கிய கே. வெங்கட்
இலங்கையின் மலையகப் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவனுக்கு சினிமா மீது தணியாத தாகம். அதனால் 1955இல் இந்தியாவுக்கு ஓடினான். தான் எழுதி வைத்திருந்த கதை, வசனத்தைக் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனிடம் காட்டினான். கலைவாணரோ தன் வீட்டு அலுமாரியில் நிறைத்து வைக்கப் பட்டிருந்த கதைப் பிரதிகளைக் காட்டி 'இவைகளை வைத் திருக்கவே இடம் போதவில்லை. இவற்றுக்கிடையில் உமது கதையை எங்கே வைப்பேன்?' என்று திருப்பிக் கேட்டார். ஆனாலும் இளைஞனின் புத்தி பூர்வமான உரையாடலில் மயங்கிய கலைவாணர் அதை மேடைநாடகமாகப் போட்டுவிட்டார். அந்தக் கதையின் பெயர் தான் 'மாமியார் வீடு' அந்த இளைஞன் தான் 'வெங்கடாசலம்’ என்ற கே. வெங்கட்
சிங்களப்படங்கள் இந்தியாவில் தயாரிக்கப் பட்ட போது
சிறந்த பல சிங்களப்படங்களை இயக்கியவர் ஏ.எஸ். நாகராஜன்.
இந்த நாகராஜனிடம் உதவியாளராகப் பல வருடம் கடமை
யாற்றியவர் தான் இந்த கே.வெங்கட் தமது
நாகராஜனின் சிபாரிசுக் 1င့ီ இதிங்க் திரும்பிய
ତୈt
கே.வெங்கட், எஸ்.எம். நாயக மாஸ்ரூடியோவில்உதவி
Page 103
Ք00 இலங்கைத் திரையுலக முன்னோடிகள்
இயக்குநராகச் சேர்ந்து கொண்டார். பல சிங்களப்படங்களுக்கு உதவி இயக்குநராகக் கடமையாற்றினார். திரைப்பட நுணுக்கங் களைப் பயின்று கொண்டார். தனியே படமொன்றை இயக்கும் வாய்ப்பு 1968இல் தான் கிடைத்தது
'மஹாறே ஹமுவூ ஸ்திரிய" (நள்ளிரவில் சந்தித்த பெண்) என்ற சிங்களப்படத்தை இயக்கியதன் மூலம் அந்தச் சந்தர்ப்பம் கிடைத்தது. வீ. மரியதாசன் தயாரித்த இப்படத்தில் பிரபல நடிகை சந்தியாகுமாரி பிரதான பாத்திரத்தில் நடித்தார்.
கே. வெங்கட் தொடர்ந்து பல சிங்களப் படங்களை இயக்கினார். இவர் இயக்கிய இரண்டாவது சிங்களப்படமான உதும் ஸ்திரிய' (உத்தம பெண்) 1969இல் திரைக்கு வந்தது. இவர் நெறியாண்ட 'கொபொலு ஹண்ட' என்ற படம். 1973இல் வெளிவந்தது. நீலுகா" என்ற படம் 1977இல் திரையிடப்பட்டது. அடுத்த ஆண்டு 'சிறிபத்துல' என்ற படம் திரைக்கு வந்தது. மகே அம்மா (என் அம்மா) என்ற படம் 1980ஆம் ஆண்டு திரைக்கு வந்தது. துஷ்யந்தி" என்ற படம் 1988இல் திரையிடப்பட்டது. வெங்கட் இயக்கிய பல படங்களை பி. முத்தையாவே தயாரித்தார்.
கே. வெங்கட் கிட்டத்தட்ட ஏழு சிங்களப்படங்களை இயக்கினார். அவற்றில் பல வெற்றிப்படங்களாகும். இப்படி பல சிங்களப்படங்களை இயக்கிய வெங்கட்டுக்கு இலங்கையில் தமிழ்ப்படங்களையும் உருவாக்க வேண்டும் என்ற ஆசையும் நீண்டநாட்களாக நெஞ்சில் இருந்தது.
பல வெற்றிச் சிங்களப்படங்களை இயக்கி விட்ட கே.வெங்கட்டுக்கு தமிழ்ப்பட மொன்றையும் இயக்கவேண்டும் என்று ஆசை வந்ததில் வியப்பில்லை. அந்த ஆசையை நிவர்த்தி செய்ய வழியமைத்துக் கொடுத்தார்கள் இரண்டு முஸ்லிம் சகோதரர்கள். அவர்கள் தான் எம்.பி.எம்.ரமீஸ், எம்.பி.எம்.ஸ்மீர் ஆகியோராவர்.
தம்பிஐயா தேவதாஸ் 20
器i
Page 104
2O2 இலங்கைத் திரையுலக முன்னோடிகள்
‘மாமியார் வீடு' என்ற பெயரில் ஏற்கனவே என்.எஸ். கிருஷ்ணனிடம் கொடுத்த கதையைத் திரைக்கு ஏற்றவாறு வசனம் எழுதி வைத்திருந்தார் வெங்கட்.
அது மட்டுமன்றி இந்திய நடிகர்களையும் இலங்கை நடிகர்களையும் சேர்த்து இப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யலாம் என்று தீர்மானித்துக்கொண்டார். டைரக்ஷன், திரைக்கதை வசனத்துடன் படத்தின் பிரதான பாடல் ஒன்றையும் வெங்கட் எழுதினார். W
பிரபல தென்னிந்திய நடிகர் எஸ்.வி. சுப்பையா, இலங்கையில் பிறந்து தென்னிந்தியாவில் புகழ் பெற்று விளங்கும் டைரக்டர் வி.சி. குகநாதனின் மனைவி நடிகை ஜெயா, புது முகம் மீரா ஆகிய தென்னிந்திய நடிகர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்
டார்கள்.
இவர்களுடன் சிங்கள நடிகை சாந்திலேகா, இலங்கை நடிகர்கள் சிவகுமாரன், உதயகுமார், எஸ். ராமதாஸ், எஸ்.என். நடராசா, எஸ்.செல்வசேகரன், இரா. பத்மநாதன் போன்ற நடிகர்களையும் வெங்கட் தெரிவு செய்தார்.
வெங்கட் நெறிப்படுத்திய ‘மாமியார் வீடு ஷோலே எண்ரரெயின்மென்ஸ் தயாரிப்பாக 25-08-1979 இல் திரையிடப் பட்டது. குடிப்பழக்கத்தினால் குட்டிச்சுவராகும் ஒரு குடும்பத் தலைவனின் கதையையே வெங்கட் திரைப்படமாக்கியிருந்தார். படத்துக்குப் பிரமாண்டமான முறையில் விளம்பரம் செய் யப்பட்டது.
மித்திரன் வாரமலரில் (16-09-1979) "லச்சுமி' இப்படத்தைப் பற்றி விமர்சனம் எழுதினார். இது வரை இலங்கையில் தயாரிக்கப்பட்ட தமிழ்ப் படங்களில் இது சற்று மாறுபட்டதாக இருக்கிறது. தமிழகத்துப் படங்களைப் பார்த்து ரசித்துப்பழகிப்
தம்பிஐயா தேவதாஸ் 2O3
போன நம் நாட்டு ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப டைரக்டர் கே. வெங்கட் 'மாமியார் வீட்டை உருவாக்கியிருக்கிறார் என்று அவர் டைரக்டர் வெங்கட்டைப் பாராட்டி எழுதினார்.
தினகரனும் விமர்சனம் எழுதியது:
'வெங்கட் இயற்றிய 'இந்த ஊருக்கு ஒரு நாள் திரும்பி வருவேன்' என்ற பாடலை எம். றொக்சாமியின் இசை அமைப்பில் ஜோசப் ராஜேந்திரன் இன்பமாகவும் துன்பமாகவும் பாடியிருக்கிறார். நம் நாட்டு சினிமா வளர்வதற்கு நமது ரசிகப் பெருமக்களை மடக்கிப்பிடிக்க வேண்டியிருக்கிறது. அதற்காக ஒரு சில தென்னிந்திய நடிகர்களை இறக்குமதி செய்து நடிக்க வைப்பது நல்ல வழிதான். இந்த வளமான வழியை முதலில் காட்டித்தந்திருப்பவர் கே. வெங்கட் தான்' என்று எழுதியது.
பின்நாளில் தென்னிந்திய நடிகர்கள் பலர் இலங்கைக்கு வந்துபல படங்களில் நடித்துச் சென்றார்கள். ஆனால் முதன் முதலில் தென்னிந்திய நடிகர்களை இலங்கைக்கு வரவழைத்து இங்குதயாரித்த தமிழ்ப்படமொன்றில் நடிக்க வைத்த பெருமை கே. வெங்கட்டையே சாரும்.
கே. வெங்கட் சிங்களப்படங்களைப் போல் மேலும் பலதமிழ்ப்படங்களை இங்கு உருவாக்கும் எண்ணத்தில் இருந்தார். அந்த எண்ணங்கள் ஈடேற முடியாமல் இளவயதிலேயே காலமானார். ஆம் 1983 ஜூலை இனக்கலவரம் அழித்து விட்ட கலைஞர்களில் அவரும் ஒருவர்.
Page 105
34. எஸ்.ஏ. அழகேசன்
சிங்கள மொழியில் பாண்டித்தியம் பெற்ற எஸ்.ஏ. அழகேசன்.
சிங்களத் திரையுலகின் பல்வேறு துறைகளில் தமிழ் பேசும் கலைஞர்கள் பலர் கடமையாற்றியிருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலோர் தொழில்நுட்ப அம்சங்களில் கடமையாற்றி யிருக்கின்றனர். அதனால் அவர்கள் சிங்கள மொழியில் பாண்டித் தியம் பெற்றிருக்க வேண்டும் என்ற அவசியம் ஏற்படவில்லை. கலைஞர்களுடன் சிறிது சிங்களம் பேசத் தெரிந்தால் போதும் உதவியாளர்களை வைத்துக் கொண்டே சமாளித்து விடலாம்.
ஆனால் ஒரு தமிழ்க்கலைஞர் சிங்களமொழியில் பாண்டித் தியம் பெற்று 25 சிங்களப் படங்களுக்கு மேல் கதை வசனம் எழுதியிருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். அது மட்டுமல்ல பிரபல சிங்கள நடிகர்கள் பேசும் பொழுது விடுகின்ற தவறுகளையும் இவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். 22க்கு மேற்பட்ட படங்களுக்கு உதவி இயக்குநராகவும் விளங்கியிருக்கிறார்.
‘டென்மார்க் சண்' தயாரித்த 'இளைய நிலா தமிழ்ப் படத்துக்கும் இவரே கதை வசனம் எழுதி உதவி இயக்குநராக கடமையாற்றினார். இப்படியான சாதனைகள் பல செய்த அந்த தமிழ்க் கலைஞர்தான் எஸ்.ஏ. அழகேசன்.திரை உலகில் சிறந்து
Page 106
ՉUE இலங்கைத் திரையுலக முன்னோடிகள்
விளங்கும் கலைஞர்களில் பலர் மேடையில் இருந்தே வந்தனர். மேடை அனுபவங்கள் பல அவர்களைத் திரையுலகில் நிலைத்து நிற்க வழி செய்தன.
தமிழ் நாட்டில் கே. பாலச்சந்தர் சிவாஜிகணேசன், சோ. மனோகர் போன்றோரை உதாரனமாக காட்டலாம். இலங்கை யிலும் இப்படியான உதாரணங்களை காட்டலாம். லெனின் மொறாயஸ் அதற்கு ஒரு நல்ல உதாரணமாகும். லெனின் மொறாயஸ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய ஒரு கலைஞர்தான் இந்த சின்னத்தம்பி ஆறுமுகம் அழகேசன், ஒரு காலத்தில் இலங்கையில் நாடக மேடையில் சிறந்து விளங்கியவர்கள் ஸ்டீஸ் வீரமணி, சுஹைர் ஹமீட் ஆகியோராவர். இவர்களுக்கு அக் காலத்தில் நாடகமேடையில் உதவி இயக்குநராக விளங்கியவர் எஸ்.ஏ. அழகேசன்
மேடையில் உதவி இயக்குநராக விளங்கிய அழகேசன் பின்பு சினிமா உலகிற்கு வந்தார். லெனின் மொறாயஸ், எம்.எஸ். ஆனந்தன், எம்.வி. பாலன், காமினி பொன்சேகா போன்றோரின் திரைப்படங்களுக்கு உதவி இயக்குநராகக் கடமையாற்றினார் அழகேசன்.
லெனின் மொறாயஸ் இயக்கிய முதற் சிங்களப்படம் "சுதுதுவ' என்பதாகும். இப்படத்திலேயே அழகேசனும் முதலாவதாக உதவி நெறியாளராகக் கடமையாற்றினார்.
இதற்கு முன்பே அழகேசனும் பல சிங்களப் படங்களுக்குக் கதைவசனம் எழுதினார். ஆனால் படம் திரையிடப்படும் பொழுது இவரது பெயர் இருக்க வேண்டிய இடத்தில் வேறு பெயர்கள் இருக்குமாம், கதை வசனம் எழுதினாலும் சில படங்களிலேயே இவர் வசனம் எழுதியதாகத் திரையில் பெயர் வந்திருக்கிறதாம். பலபோராட்டங்களின் பின்பே அவ்வாறு திரையில் இவரது பெயர்
தம்பிஐயா தேவதாஸ்
2O7
Page 107
2O8 இலங்கைத் திரையுலக முன்னோடிகள்
காட்டப்பட்டதாம். சிங்களப் படங்களுக்கு வசனம் எழுதும்
ஒரேயொரு தமிழர் என்று அழகேசனைக் குறிப்பிடலாம்.
1964 ‘சித்தக மஹிம (உள்ளத்தின் பெறுமதி) என்ற படத்துக்கே அழகேசன் முதலில் கதை வசனம் எழுதினார்.
‘சூரயன் கேத் சூரயா' என்ற படமே வசனம் எழுதுவதில் இவருக்குப் பெயர் வாங்கிக் கொடுத்தது. லெனின் மொறாயஸ் இயக்கிய அனைத்துப் படங்களுக்கும் அழகேசனே வசனம் எழுதியிருக்கிறார். தமிழ்த் திரைப்படங்கள் ரீ.வி.யில் காட்டப்படும் பொழுது அவற்றுக்கான பல சிங்கள உப தலைப்புகளை இவரே எழுதினார்.
ஒரு காலத்தில் அழகேசன் மேடை நடிகராகவும் விளங்கி னார். 1960ஆம் ஆண்டுமுதலே தமிழ் நாடகத்துறையில் ஈடுபடத் தொடங்கிய இவர், "இளவரசன், துர்கேஸ் நந்தினி, தியாகச் சின்னம், யாருக்காக அழுதான், வாடகைக்கு அறை' ஆகிய நாடகங்களில் நடித்திருக்கிறார். 'வண்டிக்காரன் மகன், பாவிகள் ஆகிய நாடகங்களுக்குக் கதை வசனம் எழுதியிருக்கிறார். கலைச் செல்வன், கம்பளைதாசன், ஈ.எல்.சகலாதர் போன்றோருடன் தான்
மேடையில் நடித்ததை அழகேசன் ஞாபகப்படுத்துகிறார்.
சிங்களத் திரை உலகில் பிரபலம் பெற்று விளங்கிய இன்னுமொரு இயக்குநர் எம்.வி. பாலன் ஆவார். எம்.வி. பாலன் இயக்கிய 'ஹித்த ஹொந்த கேனி (நல்லிதயம் படைத்த பெண்) "தெவ்யனே சத்ய சுரக்கின்ன (தெய்வமே உண்மையைக் காப்பாற்று) 'ஹித்த ஹொந்த மினிஹெக்' போன்ற படங்களுக்கு இவர் திரைக்கதை வசனம் எழுதியிருக்கின்றார். மேடை நாடகத்தில் ஈடுபடும் காலத்தில் பிரபல மேடைக்கலைஞர்களான ரொசாரியோ பீரிஸ், கே.எம். வாசகர் ஆகியோருடன் நெருங்கிப் பழகியதைப் பெருமையாய்ச் சொல்கிறார்.
தம்பிஐயா தேவதாஸ் 2O9
தமிழகத்தில் பிரபலமாக விளங்கும் நடிகர் எஸ்.எஸ். சந்திரனுடன் இளவரசன்' என்ற நாடகத்தில் நடித்ததை மகிழ்ச்சி யுடன் தெரிவிக்கும் அழகேசன், இன்று தமிழ்த் திரைப்படங்களில் பேசும் வசனங்களை தொலைக்காட்சிக்காக சிங்களத்தில் அவர் மொழிபெயர்க்கும் பொழுது, பெருமையாக இருக்கிறது என்று தெரிவிக்கிறார்.
'எனது முதல் மேடை நாடகத்தில் இன்னுமொரு நடிகருடன் நடித்துக் கொண்டிருந்தேன். எங்களுக்கு முதல் அனுபவம் என்பதால் நாங்கள் இருவரும் என்ன பேசுவது என்று தெரியாமல் மேடையில் விழித்துக் கொண்டு நின்றோம். அப்போது ஒரு துணை நடிகர் ஓடி வந்து சமயோசிதமாகப் பேசி எங்கள் உரையாடலைத் தொடக்கி வைத்தார். அந்தத் துணை நடிகர் யார் தெரியுமா? அவர்தான் இப்பொழுது சினிமாவில் புகழ் பெற்று விளங்கும் எஸ்.எஸ். சந்திரன்' என்று கூறுகிறார் அழகேசன்.
நாடக உலகம் தனக்கு அதிக கலை உலக அனுபவங்களைத் தந்ததாக கூறும் அழகேசன், தனது நாடக வாழ்க்கை பற்றி மேலும் மகிழ்ச்சியுடன் நினைவுபடுத்தினார்.
நான் எழுதிய 'பாவிகள்' என்னும் நாடகம் யாழ்ப்பாணத்தில் மேடையேறியது. மூன்றாம் நாள் விழாவுக்குக் கலையரசு சொர்ணலிங்கம் தலைமை தாங்கினார். கலைஞர் ஏ. ரகுநாதன் என்னைக் கலையரசுக்கு அறிமுகப்படுத்தினார். கலையரசு சொர்ணலிங்கத்தின் பாராட்டை இன்றும் என்னால் மறக்க முடியவில்லை. இந்நாடகத்தைத் தென்னிந்திய நடிகர் வி. எஸ். ராகவனும் பாராட்டினார். நான் நடித்த 'வாடகைக்கு அறை 'தினகரன்' நாடக விழாவில் சிறந்த நாடகம் எனத் தேர்ந்தெடுக்கப் பட்டது. எனக்கும் நடிகை செளகார்ஜானகி பத்திரம் வழங்கினார், என்று பெருமைப்படுகிறார்.
Page 108
21C இலங்கைத் திரையுலக முன்னோடிகள்
ஈ.ஏ.பி. எதிரிசிங்க தயாரித்த பல சிங்களப் படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதி உதவி நெறியாளராகக் கடமை யாற்றியவர் அழகேசன், அவர்கள் 'சுவர்ணவாஹினி' என்னும் தொலைக்காட்சிச் சேவையை ஆரம்பிக்கவே அந் நிறுவனத்தின் தமிழ்ப்பிரிவுக்கு பொறுப்பாளராக அழகேசன் நியமிக்கப்பட்டார்.
இப்பொழுது சுவர்ணவாஹினியில் இருந்து கொண்டு அமைதியாக கலைப்பணியாற்றுகிறார் எஸ்.ஏ. அழகேசன்.
35. ஏ. ரகுநாதன்
இலங்கையில் பல தமிழ்த் திரைப் படங்கள் உருவாகக் காரணமாக இருந்த திரையுலக முன்னோடி ஏ.ரகுநாதன்,
இலங்கையில் தமிழ்த் திரையுலகம் வளர வித்திட்டவர்கள் பலர் அவர்களில் சிலர் மறைந்து விட்டார்கள். சிலர் மெளனமாகவே இலங்கையில் வாழ்கிறார்கள். இன்னும் சிலர் புலம்பெயர்ந்து விட்டார்கள். இவர்கள் புலம் பெயர்ந்து சென்று விட்டார்களே தவிர அவர்களை விட்டு கலை உணர்வு இடம் பெயர்ந்து விடவில்லை. அப்படிப் புலம் பெயர்ந்தாலும் உள்ளத்திலே கலை உணர்வு இடம்பெயாாது வாழ்பவர்களில் ஒருவர் தான் ஏ. ரகுநாதன்,
Page 109
212 இலங்கைத் திரையுலக முன்னோடிகள்
இலங்கையின் தமிழ்த் திரைப்பட வரலாற்றுடன் நெருங்கிய தொடர்புடையவர் ஏ. ரகுநாதன், அவர் இலங்கையில் உருவான பலதமிழ்ப் படங்களில் பல்வேறு பங்களிப்பினை வழங்கி யிருக்கிறார்.
ஏ. ரகுநாதனுக்கு வயது 65ஐத் தாண்டி விட்டது. பிரான்ஸின் தலைநகர் பாரிசில் வாழ்ந்து வருகிறார். அங்கும் தமிழ்த் தொலைக்காட்சி நாடகங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கிறார். கலை உலகை மறக்காத ஒரு கலைஞராக அவர் வாழ்ந்து வருகிறார். கலைஞர் ஏ. ரகுநாதன் மலேசியாவில் கிமாஸ் (Kimass) என்னும் ஊரில் 1935ஆம் ஆண்டு பிறந்தவர். இலங்கை நவாலியில் வளர்ந்தவர். மானிப்பாய் இந்துக் கல்லூரியில் கல்வியுடன் கலையும் கற்றவர். 13 வயதிலேயே நாடகங்களில் நடிக்கத் தொடங்கியவர். இலங்கையின் நாடகத்தந்தை கலையரசு சொர்ணலிங்கம் அவர்களின் நாடகப்பட்டறையில் பயின்று மெருகேறியவர்.
கொழும்புக்கு வந்த பொழுது இராணுவத் தலைமை அலுவலகத்தில் எழுதுவினைஞராகப் பதவி கிடைத்தது. அப்பொழுது பல நாடகங்களை எழுதி, கொழும்பிலும் வேறு நகரங்களிலும் மேடையேற்றினார். "தேரோட்டி மகன்' 'நெஞ்சில் ஓர் ஆலயம்" போன்ற நாடகங்களில் இவர்தான் கதாநாயகன்.
கொழும்பில் அவர் வாழ்ந்த காலங்களில் அவரது வாழ்க்கை, மேடை நாடகங்களிலும் சினிமாவிலுமே கழிந்தது. இலங்கையில் தமிழ்த் திரைப்படங்கள் உருவாக வேண்டும் என்று கனவு கண்டவர்களில் மிக முக்கியமானவர் ஏ. ரகுநாதன்.
இலங்கையில் உருவான பல தமிழ்ப்படங்களுடன் மிக நெருங்கிய தொடர்புடையவர் அவர் வேதநாயகம் உருவாக்கிய "கடமையின் எல்லை" திரைப்படத்தில் முதன்முதலாக ரகுநாதன்
தம்பிஐயா தேவதாஸ்
213
r, DI) ԼD
Page 110
214 இலங்கைத் திரையுலக முன்னோடிகள்
சினிமா நடிகரானார். 1994ஆம் ஆண்டு ரூபவாஹினியில் 'காதம்பரி' என்ற நிகழ்ச்சியில் ‘கடமையின் எல்லை’ திரைப்படத்தின் பலகாட்சிகளைக் காட்டினார்கள். அதில் ரகுநாதன் தோன்றிய பல காட்சிகள் இடம்பெற்றன. அருள்நேசன் என்ற பாத்திரத்தில் தோன்றி அபாரமாக நடித்தார். அவர் நடித்த ‘கடமையின் எல்லை" திரைப்படத்தின் வீடியோக் காட்சிகள்
இப்பொழுதும் என்னிடம் இருக்கின்றன
சினிமா ஆர்வம் அப்பொழுது ரகுநாதனுக்கு மிக அதிகமாக இருந்தது எனலாம். ஏனெனில், 'கடமையின் எல்லை' திரைப் படத்தில் அவர் ஏற்ற பாத்திரத்தின் பெயர் அருள்நேசன் என்ப தாகும். இந்த அருள்நேசன் என்ற பெயரையே தன் மூத்த மகனுக்கு வைத்து மகிழ்ந்தார்.
‘நிர்மலா' என்ற படத்தை வேறு சிலருடன் சேர்ந்து தயாரித்தார். அப்படத்தில் இவர் இரண்டாவது கதாநாயகனாக நடித்தார். தனது மூத்த மகளுக்கு 'நிர்மலா' என்ற பெயரை வைத்துக் கொண்டார்.
உலகின் முதலாவது கருப்பு வெள்ளை சினிமாஸ்கோப் தமிழ்ப்படம் இலங்கையில் தான் உருவாகியது. அப்படத்தின் பெயர் "தெய்வம் தந்த வீடு. இப்படம் உருவாகக் காரணமாக இருந்தவர் ஏ. ரகுநாதன். ஹட்டன் வீ.கே.ரி. பொன்னுசாமிப் பிள்ளையின் தயாரிப்பில் உருவான இப்படத்தில் இலங்கையில் உள்ள பல பிரபலமான இந்துக்கோவில்கள் காட்டப்பட்டன. நாதஸ்வர வித்வான் ஒருவருக்கும் நாட்டிய நர்த்தகி ஒருவருக்கும் இடையில் ஏற்படும் காதல் கதைதான் இப்படம். நாதஸ்வ்ர வித்துவான் வேணுகோபாலனாக ஏ. ரகுநாதன் தோன்றினார்.
அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படத்தின் வெற்றிக்காக ஏ. ரகுநாதன் மிக அதிகமாகவே கஷ்டப்பட்டார்.
தம்பிஐயா தேவதாஸ் 215
தான் நடித்த பாத்திரங்களின் பெயர்களைத் தனது பிள்ளைகளுக்கு வைக்கும் வழக்கம் கொண்டரகுநாதன் தன் இரண்டாவது மகனுக்கு "வேணுகோபாலன்' என்ற பெயரை வைத்தார்.
அமரர் வீ.பி.கணேசனின் வெற்றிப் படைப்பின் பெயர் "புதியகாற்று'. இப்படத்தில் ஏ.ரகுநாதனும் கெளரவவேடத்தில் தோன்றினார். சுண்டிக்குளி சோமசேகரன் மாலினிதேவிதம்பதிகள் தயாரித்த படத்தின் பெயர் 'நெஞ்சுக்கு நீதி' இப்படத்தில் தந்தை வேடத்தில் தோன்றினார். இப்படி பல படங்களுடன் தொடர் புடையவர் இவர் காலத்துக்கு ஏற்பப் பாத்திரங்களை ஏற்றுக் கொண்டார்.
இலங்கையின் மண்மணம் வீசிய திரைப்படங்களில் ஒன்று 'வாடைக்காற்று' ஆகும். அப்படத்தின் தயாரிப்பு முயற்சிகளை ஆரம்பித்து வைத்தவர் ரகுநாதன். பின்பு அப்படத்துடன் தொடர்பை முறித்துக்கொண்டாலும் அப்படவளர்ச்சிக்கு வெளியே நின்று உதவினார்
திரைப்பட ஆர்வம் காரணமாகத் தன் அரசாங்க உத்தி யோகத்தையே உதறித்தள்ளியவர் ஏ. ரகுநாதன்.
1983ஆம் ஆண்டு இலங்கையில் உருவான ஜூலைக் கலவரம் பலகலைஞர்களைப் புலம் பெயர வைத்தது. அது ஏ. ரகுநாதனையும் இடம் பெயரவைத்தது. முதலில் இந்தியா சென்றார். பல நாடுகளில் பயணம் செய்தார். இறுதியாகப் பிரான்ஸ் சென்றார். இப்பொழுது அந்நாட்டின் தலைநகரான பாரிஸில் இருந்து கொண்டு பல கலைநிகழ்ச்சிகளைச் செய்கிறார். பல தொலைக்காட்சி நாடகங்களைத் தயாரித்தார்.
முகத்தார்வீடு (1994), இன்னும் ஒரு பெண் (1996) போன்ற தொலைக்காட்சி நாடகங்களை நெறிப்படுத்தி நடித்தார்.
Page 111
Ք1 3 இலங்கைத் திரையுலக முன்னோடிகள்
நினைவு முகம் (1996) தயவுடன் வாழ விடுங்கள் (1996) மெளனம் (1997) என்பன ஏ. ரகுநாதன் நெறிப்படுத்திய நாடகங்கள். ஏ. ரகுநாதன், தான் நாடகத்தைக் கலையரசு சொர்ணலிங்கத்தின் நாடகப்பண்ணையில் பயின்றவர் என்று சொல்வதில் மகிழ்ச்சி கொள்பவர். இலங்கையின் பழம்பெரும் நடிகர்களுடன் சேர்ந்து நடித்தவர் என்பதையிட்டுப் பெருமை கொள்கிறார்.
1999ஆம் ஆண்டு தனது கலை வாழ்வின் 50ஆவது வருட விழாவைக் கொண்டாடிய ரகுநாதனுக்குப் பாரிஸில் விழா எடுத்தார்கள் மலர் வெளியிட்டார்கள், கலைக்காகப் பாடுபடும் அந்தக் கலைஞனை நாமும் வாழ்த்துகிறோம்.
ീ
一 - "மஞ்சள் குங்குமம்" என்ற இலங்கைத் தமிழ்ப் படத்தையும் பல சிங்களப் படங்களையும் இயக்கிய எம்.வி. பாலன்.
Page 112
FF=
218 இலங்கைத் திரையுலக முன்னோடிகள்
ஒரு காலத்தில் சிங்களத் திரைப்பட்ங்களைப் பெரும்பாலும் தமிழ்க்கலைஞர்களே நெறியாண்டார்கள். நாளாவட்டத்தில் அது குறைந்து கொண்டே வந்தது. விரல்விட்டு எண்ணக் கூடிய அளவு தமிழ் இயக்குநர்களே இப்பொழுது சிங்கள சினிமா உலகில் கடமையாற்றுகின்றனர். அவர்களில் முக்கியமானவர் எம்.வி. பாலன். சிங்களப்படங்களில் சிறுசிறு பாத்திரங்களில் நடித்து வந்த பாலன், முதன் முதலில் "மஞ்சள் குங்குமம்' என்ற படத்தை இயக்கினார். பின்பு பல சிங்களப் படங்களில் நகைச்சுவைப் பாத்திரங்களில் நடித்தார். அதன் பின்பு பல சிங்களப்படங்களை இயக்கினார். சிறந்த சிங்களப்பட நெறியாளர்களில் ஒருவராகக் கருதப்பட்டார்.
மகாதேவன் வேலுப்பிள்ளை பாலன் என்ற முழுப்பெயரைக் கொண்ட எம்.வி பாலன் எட்டியாந்தோட்டையில் கணேபள்ள என்ற இடத்தில் பிறந்தவர். பாடசாலைக் காலத்திலேயே சினிமா ஆர்வம் கொண்டிருந்தார். பாடசாலை மேசைகளை மேளங் களாக்கித் தட்டிக்கொண்டே பாடுவார். நடிப்பார்.
பாலன் தன் இளமைக்காலத்தின் பலகதைகளைச் சொல்வதில் மகிழ்கிறார். 1955இல், எங்கள் ஊருக்குப் பக்கத்தில் 'கித்துல்கல' என்ற இடத்தில் பட சூட்டிங் ஒன்று நடப்பதாகக் கேள்விப்பட்டேன். உடனே விரைந்து சென்றேன். பாடசாலையை விட்டு வரும் பொழுதெல்லாம் இப் படப்பிடிப்பைப் பார்த்து வந்தேன் அப்பொழுது பசிக்காது. இரவின் பின்பே வீடு திரும்புவேன். "பிறிஜ் ஒன்தறிவர் குவய்" என்ற ஆங்கிலப்பட சூட்டிங்கைத்தான் அப்படி ஆசையுடனும் வியப்புடனும் பார்த்தேன்' என்று கூறுகிறார்
LJ Tl:T.
இளமைக்காலத்தில் பாலனுக்கு, வீரசிங்கம் என்று ஒரு நண்பன் இருந்தார். வீரசிங்கத்தின் மாமனார் கதிரேசன், கொழும்பு ஆமர்வீதியில் சைவக்கடை ஒன்றில் மானேஜராக இருந்தார்.
ബി.
1 தம்பிஐயா தேவதாஸ்
வி.பாலன் இயக்கிய'மஞ்சள்குங்குமம்'திரைப்படத்தில்
டித் தோன்றுகிறார்கள். (1970)
ஹெலன்குமாரிய |ம்பூரீசங்கரும்
Page 113
220 இலங்கைத் திரையுலக முன்னோடிகள்
திரைப்பட ஆர்வம் காரணமாகக் கொழும்பு வரத்துடித்துக்
கொண்டிருந்த பாலனுக்குக் கதிரேசன் மாமா உதவி செய்தார்.
பாலன் அந்த ஹோட்டலில் வேலை செய்து கொண்டே பட வாய்ப்பைத் தேடிப்போய்வர வசதி செய்யப்பட்டது.
1958இல் இடம்பெற்ற இனக்கலவரத்தில் அந்த ஹோட்டல் வேலையும் போய்விட்டது. மீண்டும் பம்பலப்பிட்டி கிரீன்லண்ட் ஹோட்டலில் வேலை கிடைத்தது.
அந்த ஹோட்டலுக்குப் பல சினிமாக் கலைஞர்களும் தயாரிப் பாளர்களும் வருவார்கள். ரீ. சோமசேகரன், கே. குணரத்தினம், ஏ.எஸ். நாகராஜன், சாந்திகுமார் போன்றோர் அவர்களில் முக்கியமானவர்கள், இவர்களின் மூலம் பாலனுக்குச் சினிமா உலகில் நுழையும் வாய்ப்பு ஏற்பட்டதாம். அவர்களது அறிமுகம் பாலனைச் சினிமா உலகத்துக்கு அறிமுகமாக்கியது.
அக்காலத்தில் 'சிஹினய' (கனவு) என்ற படத்தை ரீ.ஜானகிராமன் உருவாக்கினார். இப்படத் தயாரிப்பில் பாலனுக்கு "புரடக்ஷன் போய்' என்ற வேலை கிடைத்ததாம். இப்படத்தில் இடம்பெற்ற ஒரு குழுப்பாடலிலும் தோன்றினார். இவைதான் பாலனின் ஆரம்பகாலச் சினிமாப் பிரவேசம்.
பாலனுக்குப் படத்தில் நடிக்க முழுமையான பாத்திரம் வழங்கியவர் ஏ.எஸ். நாகராஜன் ஆவார். அவரது 'புருஷ ரத்னய' என்ற படத்தில் இரண்டு காட்சிகளில் நடிக்க வாய்ப்பு வழங்கினா ராம். பாடல் காட்சி ஒன்றிலும் குழுக்காட்சி ஒன்றிலும் நடித்தாராம். படம் திரையிடப்பட்டபோது பாடல் காட்சி நீக்கப்பட்டிருந்ததாம். அதன் பின்பு நடிப்புத் தொழிலையே விட்டுவிடுவோமா என்று எண்ணினாராம் பாலன். 'அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை. பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை. பொறுமை இல்லார்க்குப் படவுலகம் இல்லை' என்பார்கள். பொறுமையுடன்
தம்பிஐயா தேவதாஸ் 22.
தோல்விகள் எல்லாவற்றையும் சமாளித்துக்கொண்ட பாலன் பின் நாளில் சிங்களத்திரை உலகில் சிறந்த நகைச்சுவை நடிகராக உயர்ந்தார். பல தமிழ்க்கலைஞர்கள் தமது பெயரைச் சிங்களத்திரை உலகிற்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்வார்கள். ஆனால் பாலனோ தன் பெயரை 'எம்.வி.பால' என்றோ 'எம்.பி.பால்' என்றோ மாற்றிக் கொள்ளவில்லை. 'எம்.வி.பாலன்' என்றே அன்று முதல் இன்று வரை வைத்துக் கொண்டிருக்கிறார்.
சிங்களத்திரைஉலகில் நீண்டகாலம் நின்று நிலைத்தவர்களில் எஸ்.வி.சந்திரனும் ஒருவர். எஸ்.வி. சந்திரனின் உதவியுடன் ஆரம்பத்தில் பாலனுக்குச் சிலோன் ஸ்டூடியோவில் ஒளிப்பதிவாள ராகும் வாய்ப்புக் கிடைத்தது. ஆனாலும் அங்கு கமரா ஒளிப்பதிவு, படத்தொகுப்பு என்று பல்வேறு நுணுக்கங்களைக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பும் ஏற்பட்டதாம்
தொடர்ந்து இருபது படங்களுக்கு உதவி நெறியாளராகவும் தயாரிப்பு நிர்வாகியாகவும் கடமையாற்றியிருக்கிறார் பாலன்.
இந்த அனுபவத்தின் காரணமாகப் படத்தை நெறியாளும் நிலைக்கு உயர்ந்தார். முதலாவது படத்தை இயக்கும் வாய்ப்பைக் காமினி பொன்சேகா வழங்கினார். 'ஒப நெதிநம்" (நீ இல்லா விட்டால்) என்ற படமே பாலன் இயக்கிய முதற் சிங்களப் படமாகும். காமினி பொன்சேகா நடித்த பலபடங்களைப் பாலன் இயக்கினார்.
தொடர்ந்து பல சிங்கள வெற்றிப்படங்களை இயக்கினார். பல தமிழ் நடிகர்கள் சிங்களப் படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு வழங்கினார். அப்படி வாய்ப்புக் கிடைத்தவர்களில் ஒருவர் ஹெலன்குமாரி ஆவார்.
ரீ.சோமசேகரன், சுண்டிக்குளி சோமசேகரன், எல்.எஸ். ராமச்சந்திரன், றொபின் தம்பு, எம். மஸ்த்தான் எஸ்.சிவானந்தன்,
Page 114
இலங்கைத் திரையுலக முன்னோடிகள்
எம்.எஸ். ஆனந்தன், டபிள்யூ.எம்.எஸ்.தம்பு, எஸ்.ராமநாதன் போன்றோர் அக்காலத்தில் பல சிங்கள வெற்றிப்படங்களை இயக்கினார்கள். இவர்களது பல்வேறு படங்களிலும் எம்.வி. பாலன் நடித்திருக்கிறார். காமினி பொன்சேகாவின் "நொமியன மினிசுன்' 'இறவாத மனிதர்கள்' என்ற படத்தில் எம்.வி.பாலனும் முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கிறார். "சுப்பிரமணியம்' என்ற அந்தப் பாத்திரத்தை மறக்க முடியாது என்று பாலன் குறிப்பிடுகிறார்.
பலர் மேடையில் இருந்தே திரைப்படத்துக்கு வருவர். ஆனால் பாலன்சினிமாவிலிருந்து மேடைக்கு வந்தார். பல மேடை நாடகங்களை இயக்கினார்.
இந்த அனுபவங்களின் பின்புதமிழ்ப்படமொன்றை இயக்கும் வாய்ப்புக் கிடைத்தது. 'மஞ்சள் குங்குமம்" என்ற இலங்கைத் தமிழ்ப் படத்தையும் எம்.வி.பாலன் இயக்கினார். அதுமட்டுமன்றி இப்படத்தில் நகைச்சுவை வேடத்திலும் நடித்தார். இப்படத்தில் அமரர் ஆர்.முத்துசாமி இசையமைத்துப் பாடிய "தித்திப்பு செம்மாதுளம்பூ" என்ற பாடலுக்கு எம்.வி.பாலன் வாயசைத்துப் பாடி நடித்தார்.
ஆரம்பகால இலங்கைத் தமிழ்த் திரைப்படங்கள் பலவற்றில் எம்.வி.பாலன் நடித்திருக்கிறார். சுண்டிக்குளி சோமசேரனின் 'டாக்ஸி டிரைவர்" ஏ. ரகுநாதனின் 'நிர்மலா" ஆகிய படங்களிலும் நடித்தார். பின்னாளில் பல தமிழ்த்திரைப்படங்களை உருவாக்க எம்.வி. பாலன் முயற்சி செய்தபோதிலும் நாட்டு நிலைமை அதற்கு இடம் கொடுக்கவில்லை. ஆனாலும் எம்.வி. பாலன் தொடர்ந்து கொண்டே இருக்கிறார்.
37. வீ. வாமதேவன்
|
- படத்தயாரிப்பாளரான ஒளிப்பதிவாளர் வீ. வாமதேவன்
Page 115
224 இலங்கைத் திரையுலக முன்னோடிகள்
சிங்களச் சினிமாவில் பல தமிழ் முஸ்லிம் கலைஞர்கள் ஈடுபடுகின்றனர். அவர்களில் பலர் தாம் உரிய முறையில் கெளரவிக்கப்படவில்லை என்று மனவருத்தத்துடனேயே வாழ்கின் றனர். ஆனாலும் இன்றுவரை ஒரேயொரு தமிழ் ஒளிப்பதி வாளருக்கு மட்டுமே ஜனாதிபதிப் பரிசு வழங்கப்பட்டுள்ளது. அதுவும் இலங்கையில் தயாரான ஆங்கிலப்படமொன்றுக்கு ஒளிப்பதிவு செய்ததன் மூலம் கிடைத்திருக்கிறது. 1978இல் ஜனாதிபதிப் பரிசு என்று ஒன்று ஆரம்பிக்கப்பட்டு முதன் முதலில் மேடைக்கு அழைக்கப்பட்டு ஜனாதிபதிப் பரிசைப் பெற்றவர் என்ற புகழும் இவருக்குத்தான் கிடைக்கிறது. அவர்தான் பிரபல ஒளிப்பதிவாளர் வீ.வாமதேவன். இவர் படங்களுக்கு ஒளிப்பதிவு மட்டும் செய்யவில்லை. பல சிங்களப்படங்களைத் தயாரிக்கவும் செய்தார். அவற்றில் ஒன்று "றே மணமாளி" (இரவு மணமகள்) என்னும் பிரபல சிங்களத் திரைப்படமாகும்.
இலங்கைச் சினிமாத் தொழிலின் மன்னன் என்று பெயர் பெற்றவர் சேர். சிற்றம்பலம் ஆபிரகாம் கார்டினர். இவர் பிறந்த ஊர் யாழ்ப்பாணத்திலுள்ள அச்சுவேலி ஆகும். அந்தச் சினிமா மன்னன் பிறந்த அச்சுவேலியில் பிறந்தவர்தான் வைரமுத்து வாமதேவன். அச்சுவேலி கிறிஸ்தவக் கல்லூரியில் ஆரம்பக்கல்வி கற்ற வாமதேவனுக்குச் சிறுவயதிலேயே சினிமா மீது ஆர்வம் அதிகமாம், அதனால் "குண்டூசி' போன்ற தென்னிந்தியச் சினிமாச் சஞ்சிகைகளை ஆசையுடன் வாங்கிப் படித்துச் சேர்த்து வைப்பாராம்.
1955ஆம் ஆண்டு சினிமா ஆர்வம் காரணமாக யாழ்ப் பாணத்திலிருந்து கொழும்புக்கு வந்து விட்டார். 1957இல் உதவி ஒளிப்பதிவாளராக சிலோன் ஸ்டூடியோவில் சேர்ந்து கொண்டார். 'வனலிய', 'தங்கம' முதலான சிங்களப்படங்களுக்கு உதவி ஒளிப்பதிவாளராகக் கடமையாற்றும் வாய்ப்பும் கிடைத்தது.
டாதம்பிஐயா தேவதாஸ் 225
형 통
t
N
TA
ប្ល់ s 3.
鹽 Aw" -
麗 *
##"." *冒
---- Ulissisi =
G
Գ5լ
德
體
Page 116
226 இலங்கைத் திரையுலக முன்னோடிகள்
1963இல் பிரபல சினிமாத் தயாரிப்பாளர் கே. குணரெத்தினம் ஹெந்தலையில் விஜயா ஸ்டூடியோ'வை ஆரம்பித்தார். அன்று முதலே 'விஜயா ஸ்டூடியா' வில் கடமையாற்றும் வாய்ப்பும் வந்தது. எம். மஸ்த்தானின் இயக்கத்தில் உருவான 'சுற செளறயா' என்ற படமே வாமதேவனுக்குப் புதுவழியைக்காட்டியது. ஆம் அந்தப்படம் தான் வாமதேவன் முதன்முதலில் தனித்து நின்று ஒளிப்பதிவு செய்த படமாகும்.
'சினிமாஸ் லிமிடெட்' தயாரித்த பல படங்களுக்கு வாமதேவனே ஒளிப்பதிவாளர் 'அட்டவனி புதுமய' (எட்டாவது அதிசயம்) அல்லப்பு கெதற' (அடுத்த வீடு) "அதட்ட வெடிய ஹெட்ட ஹொந்தாய்' (இன்றைய தினத்தை விட நாளைய தினம் நல்லது) போன்ற படங்கள் அவற்றில் முக்கியமானவையாகும்.
1957இல் பிரபல தமிழ் நாடக இயக்குனர் கஹைர்ஹமீட் 'அவளைக் கொன்றவன் நீ" என்ற நாடகத்தை மேடையேற்றினார். இந்நாடகத்துக்கு வாமதேவனே ஒளியமைப்புச் செய்தார். பல ஆண்டுகளின் பின் இதே நாடகத்தை 'றே மணமாலி' (இரவு மணமகள்) என்ற பெயரில் சிங்களப் படமாகத் தயாரித்தார் வாமதேவன். இப்படத்தில் நடித்தமைக்காக இரண்டு கலைஞர் களுக்கு அவ்வாண்டின் ஜனாதிபதி விருதுகள் கிடைத்தன. ரொனி ரணசிங்கவும் வீணா ஜெயக்கொடியுமே அவ்விரு கலைஞர்கள்.
இலங்கையின் ஆரம்பகால சினிமா ஒளிப்பதிவாளர்களான ரீ.சோமசேகரன். ஏ.வீ.எம். வாசகம் போன்றோருக்கு உதவி ஒளிப்பதிவாளராகக் கடமையாற்றியதை மகிழ்ச்சியுடன் கூறும் வாமதேவன். எம். மஸ்த்தானைத் தன் திரைஉலகக் குருவாகக் கருதுகிறார். அண்மையில் இலங்கைத் தொலைக்காட்சியில் காட்டப்பட்ட 'அன்னை திரேசா' பற்றிய ஆங்கில விவரண தொலைக்காட்சிப் படத்தின் மூலமும் வாமதேவனின் ஒளிப்பதிவின் திறமையை அறிய முடிந்தது.
தம்பிஐயா தேவதாஸ் 227
பிரபல தமிழ் இயக்குநர்கள் உருவாக்கிய பல சிங்களப் படங்களுக்கு வாமதேவன் ஒளிப்பதிவாளராகக் கடமையாற்றி யிருக்கிறார். லெனின் மொறாயஸ், கே. வெங்கட், ஜே. செல்வ ரெத்தினம், எஸ்.வீ. சந்திரன், எம்.வி. பாலன், எஸ்.சிவானந்தன், சந்திரன் ரத்தினம், அன்ரன் கிரகறி போன்றோரே அவர்கள். காமினி பொன்சேகா தயாரித்த அனைத்துப் படங்களுக்கும் வாமதேவனே ஒளிப்பதிவாளர். அந்த அளவுக்கு வாமதேவனின் திறமைமீது காமினி பொன்சேகா நம்பிக்கை வைத்திருக்கிறார். 'ரம்பேஜ்' என்ற ஆங்கிலப் படத்துக்கு மட்டுமன்றி 'கொட்டி வலிகய' (புலி வால்) "நொமியன மினிசுன் (இறவாத மனிதர்கள்) போன்ற படங்களுக்கும் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான பரிசு கிடைத்திருக்கிறது.
'றம்பேஜ்' என்ற ஆங்கிலப்படம் சென்னை ஜெமினியில் கழுவப்பட்டபோது அப்படம் இந்திய ஒளிப்பதிவாளர்களுக்குப் பயிற்சிக்காகப் போட்டுக் காட்டப்பட்டதாம். பியூஜி படச்சுருள் இலங்கைக்கு அறிமுகமான காலத்தில் அதை யாரும் திரைப் படங்களுக்குப் பயன்படுத்த முன்வரவில்லை. ஆனால் வாமதேவன் பரீட்சார்த்தமாக இப்பிலிமைப் பாவித்து 'உத்தும ஸ்திரிய' என்ற படத்தை ஒளிப்பதிவு செய்தார். அதன் பின்பே பியூஜி பிலிமுக்கு இலங்கையில் மவுசு ஏற்பட்டதாம்.
இத்தனை புகழ் மிக்க வாமதேவன் இலங்கையில் உருவான ஒரேயொரு தமிழ்ப்படத்துக்கு மட்டுமே ஒளிப்பதிவாளராகக் கடமையாற்றியிருக்கிறார். வீ.பி. கணேசன் தயாரித்த 'நான் உங்கள் தோழன்' என்ற படமே அதுவாகும். வீ.பி.கணேசனின் சிறந்த அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒளிப்பதிவு செய்யப்பட்டதால் அப்படத்தின் சிறந்த கதாநாயகனாக வீ.பி.கணேசன் எடுத்துக்காட்டப்பட்டார். அவர் தயாரித்த மற்றப் படங்களை விட 'நான் உங்கள் தோழன்' திரைப் படத்தில் ஒளிப்பதிவு சிறந்து விளங்கியது எனலாம்.
Page 117
228 இலங்கைத் திரையுலக முன்னோடிகள்
இலங்கையில் ஒரு தமிழ்ப்படத்தில் மட்டும் ஒளிப்பதிவாள ராகக் கடமையாற்றினாலும் இந்தியாவில் பயிற்சி பெற்ற பொழுது பல தென்னிந்திய தமிழ்ப் படங்களுக்கு உதவி ஒளிப்பதிவாளராகக் கடமையாற்றிருக்கிறார். சிவாஜி கணேசன் நடித்த "எங்கிருந்தோ வந்தாள்' என்ற படம் அவற்றில் ஒன்றாகும்.
1957ஆம் ஆண்டு சினிமாத்துறையினுள் புகுந்த வீ. வாமதேவன் தொடர்ந்து மூன்று வருடங்களுக்குள் 8 படங்களுக்கு உதவி ஒளிப்பதிவாளராகக் கடமையாற்றியிருக்கிறார். பெரும் பாலும் ரீ. சோமசேகரனின் படங்களுக்கே அப்படி கடமையாற்றி யிருக்கிறார்.
50 படங்களுக்குக் கமரா இயக்குநராகப் பணியாற்றி யிருக்கிறார். பெரும்பாலும் ஏ.வீ.எம். வாசகத்தின் படங்களுக்கே அப்படிப் பணி செய்திருக்கிறார். ஆறு படங்களுக்கு விசேட ஒளிப்பதிவாளராகக் கடமையாற்றியிருக்கிறார்.
30 படங்களுக்குப் பிரதான ஒளிப்பதிவாளராகப் பணியாற்றி யிருக்கிறார்.
இரண்டு பிரித்தானியப் படங்களுக்கு முதலாவது உதவி ஒளிப்பதிவாளராகவும் ஐந்து ஆங்கிலப் படங்களுக்கு "பி.கமரா ஒபறேற்றர்' ஆகவும் இரண்டு சர்வதேசப்படங்களுக்கு இரண்டாவது யுனிற் பிரதான ஒளிப்பதிவாளராகவும் இரண்டு சர்வதேசப் படங்களுக்கு பிரதான ஒளிப்பதிவாளராகவும் கடமையாற்றியிருக்கிறார்.
இத்தனைச் சாதனைகள் செய்த வீ. வாமதேவன் ஆத்மதிருப்தி அடையும் வகையில் இலங்கையில் அதிக தமிழ்ப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்யவில்லையே என்று ஆதங்கப்படுகிறார். இப்பொழுது சிறந்த தமிழ்ப்படமொன்றை உருவாக்கத் துடித்துக் கொண்டிருக்கும் வாமதேவன் அதற்கான பொருத்தமான தயாரிப்பாளர்களைத் தேடிக் கொண்டிருக்கிறார்.
38. எம்.ஏ.கபூர்
ஒளிப்பதிவாளர் எம்.ஏ. கபூர்
ஒளிப்பதிவாளராகச் சினிமா உலகில் புகுந்த ஒரு முஸ்லிம் கலைஞர் பல சிங்களத் தமிழ்ப்படங்களை நெறியாண்டார். பல சிங்களப் படங்களைத் தயாரித்து வெற்றிகண்டார். அப்படி வெற்றிகள் பல கண்ட அந்தக் கலைஞர் யார்? அவர்தான் தாலு முகையதீன் அப்துல் கபூர். பிரபல திரைப்பட ஒளிப்பதிவாளர் தயாரிப்பாளர் எம்.ஏ. கபூரின் முழுப்பெயர் தான் அது.
மன்னாரைப் பிறப்பிடமாகக் கொண்ட எம்.ஏ.கபூர், சினிமா ஆர்வம் காரணமாகச் சிலோன் ஸ்டூடியோவில் சேர்ந்து கொண்டார். அவரது திறமை காரணமாக அங்கு நிரந்தர ஒளிப் பதிவாளர் பதவி கிடைத்தது. அதன்பின்பு தனியார் படங்களுக்கும் ஒளிப்பதிவுசெய்தார்.
Page 118
23 O. இலங்கைத் திரையுலக முன்னோடிகள்
இலங்கையில் இதுவரை 33 தமிழ்ப் படங்கள் தயாரிக்கப் பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலானவற்றுக்கு இவரே ஒளிப்பதி வாளர். ‘கடமையின் எல்லை' 'மஞ்சள் குங்குமம்', ‘நிர்மலா", 'டாக்ஸி டிரைவர்' 'தெய்வம் தந்த வீடு', 'நெஞ்சுக்கு நீதி', 'தென்றலும் புயலும் 'இரத்தத்தின் இரத்தமே போன்ற எட்டுப் படங்களுக்கும் இவர் ஒளிப்பதிவாளராக விளங்கினார்.
தென்னிந்தியாவில் சினிமாஸ்கோப்பில் கலரில் பல தமிழ்ப்படங்களைத் தயாரித்திருக்கிறார்கள்.
ஆனால் முதலாவது சினிமாஸ்கோப் கறுப்பு வெள்ளைப் படம் இலங்கையில்தான் தயாரிக்கப்பட்டது. முதலாவது கறுப்பு வெள்ளை (தமிழ்) சினிமாப் படமான "தெய்வம் தந்த வீடு' படத்துக்கும் கபூரே ஒளிப்பதிவு செய்தார். "தென்றலும் புயலும்" என்ற படத்தின் இயக்குநரும் இவரே.
மிக அதிகமாகவே சிங்களத்திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார், அவை 250 படங்களுக்கு மேல் இருக்கும். பல சிங்களப்படங்களை இவர் தயாரித்திருக்கிறார். 'சாகரயதிலினய என்ற படம் பெரு வெற்றி பெற்றது. இப்படத்தை இயக்கியதுடன் ஒளிப்பதிவையும் இவரே கவனித்தார். சரசவிய' என்னும் பத்திரிகை வருடா வருடம் சிறந்த கலைஞர்களுக்குப் பரிசுகளை வழங்கி வருகிறது. இந்தப் பரிசை இவர் மூன்று முறை பெற்றிருக் கிறார்.
எம்.ஏ. கபூர் மன்னாரில் கலைக்குடும்பமொன்றில் பிறந்தவர். இவரது அண்ணன் வித்துவான் எம்.ஏ. ரஹ்மான் ஓர் எழுத்தாளர், கவிஞர். அதேபோல் தம்பியார் கவிஞர் கலைவாதிகலீல் நாடறிந்த சிறந்த கவிஞர்.
கபூர் தயாரித்து இயக்கிய அத்தனைப் படத்துக்கும் தானே ஒளிப்பதிவு செய்தார். இலங்கையின் சினிமாத்துறை இப்பொழுது
தம்பிஐயா தேவதாஸ் 모31
m F. 7 S. 目
ཀ་། ,置
භූ 딕표
卧 器g 2. 目 轄 州 医9豹 " | 5 की
魯靈
摄影
잃 s ऍई 2 ၊ `န္ဒီဇုံ
坂 器歌 G
སྤྱི་
Page 119
232 இலங்கைத் திரையுலக முன்னோடிகள்
நலிவடைந்துவிட்டது. அதனால் கலைஞர்கள் பலரும் நலி வடைந்து விட்டனர். எம்.ஏ. கபூரும் பட வாய்ப்பு இன்றி நலிவடைந்து தான் இருக்கிறார்.
ஆனாலும் தொலைக்காட்சித்துறைக்கு அவர் ஓடி விடவில்லை. தொலைக்காட்சிச் சேவைதான் அவரை நாடி ஓடி வந்தது. ‘வெலிக் அத்தர அலுத்இறக்" (வெட்டவெளியில் ஒரு புதுக்கோடு) என்ற தொலைக்காட்சி நாடகத்துக்கு ஒளிப்பதிவு செய்தார்.
ரூபவாஹினியில் தொடராக ஒளிபரப்பப் பட்ட இந்த நாடகத்தைப் பலரும் பாராட்டினர்.
சிங்களவரும் தமிழரும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்த ஒரு அமைதியான மீனவக் கிராமத்தில் இனப்பிரச்சினைதோன்றுகிறது. தமிழ் இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தில் இறங்குகின்றனர். அதனால் ஏற்படும் விளைவுகளை கூறுகிறது கதை, சிங்கள - தமிழ் ஒற்றுமைபற்றி பேசும் திரைப்படங்களும் ரி.வி. நாடகங்களும் அதிகமாகத் தயாரிக்கப்படும் இக்காலத்தில் இந்நாடகமும் குறிப்பிட்டுக் கூறக் கூடியதொன்றாகும்.
ஒளிப்பதிவாளர் எம்.ஏ. கபூருக்குச் சினிமாவில் கடமை யாற்றியமைக்காகப் பல விருதுகள் கிடைத்துள்ளன. முஸ்லிம் சமய கலாசார அமைச்சினால் வழங்கப்பட்ட 'முஸ்ல் விர் மும்தாஜ்' என்ற பட்டமும் ஒன்றாகும். இலங்கை - இந்திய நடிகர்கள் நடித்து இலங்கையில் தயாரிக்கப்பட்ட இரத்தத்தின் இரத்தமே' என்ற படம் மட்டும் தமிழ் நாட்டில் திரையிடப்பட்டது. அதுவும் ஒருவாரம் மட்டுமே ஓடியது. சென்னையிலிருந்து வெளிவரும் "THE HINDU" பத்திரிகை அப்படத்தைப் பற்றி விமர்சனம் எழுதியது. அது அப்படத்தின் ஒளிப்பதிவாளர் எம்.ஏ. கபூரைப்பற்றிப் பாராட்டி எழுதியது. இவ் விமர்சனத்தை வாசித்த டைரக்டர் பூரீதர்,
தம்பிஐயா தேவதாஸ் 233
எம்.ஏ. கபூரைத் தன்படமொன்றுக்கு ஒளிப்பதிவு செய்யும் படி அழைத்தாராம். ஆனால் பயணப் பிரச்சினையால் அவ்வேண்டு கோளை அவரால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.
ஆனாலும் இலங்கையில் தமிழ்த்திரைப்படங்கள் தயாரிக்க ஆரம்பிக்கப்பட்டபோது அவற்றுக்குக் கபூர் பக்கபலமாக நின்றார். அதன் காரணமாக ஆரம்ப காலத் தமிழ்த்திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராகக் கடமையாற்றும் வாய்ப்பு இவருக்கே கிடைத்தது. பல தமிழ்ப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த எம்.ஏ.கபூர், நெறியாண்ட ஒரே தமிழ்ப்படம் 'தென்றலும் புயலும்' என்பதாகும். திரை உலகில் நீண்ட அனுபவம் உடைய இவர் தன் திறமையை இப்படத்தில் காட்டினார்.
இவரது திறமையை அப்பொழுது பல பத்திரிகைகள் பாராட்டி எழுதின. முக்கியமாகக் கபூரின் ஒளிப்பதிவையும் நெறியாள் கையையும் பாராட்டி எழுதின.
வீரகேசரியில் இப்படத்தைப்பற்றி ‘டி.ஆர்.டி. விமர்சனம் எழுதியிருந்தார். '. ராஜேஸ்வரி பிலிம்ஸ் வேதாவின் 'தென்றலும் புயலும்' படத்தில் கதாநாயகிகள் இருவரும் போட்டி போட்டு நடிக்கிறார்கள். தென்னகப் படங்களுக்கு நிகராக மலையகத்து எழிற்காட்சிகளைப் படமாக்கி இயக்கி எம்.ஏ. கபூர் எமது மனத்தைக் குளிர வைக்கிறார்' என்று விமர்சனம் எழுதினார். இப்படிப்பல பத்திரிகைகளும் எம்.ஏ.கபூரைப் பாராட்டி எழுதின.
1978ஆம் ஆண்டு காலப்பகுதியில் பறாளையூர் பிரேம காந்தன் 'மின்விழி' என்ற சஞ்சிகையை வெளியிட்டு வந்தார். ஒரு மாத இதழ் 'தென்றலும் புயலும் சிறப்புமலராக வெளிவந்தது. அந்தச் சிறப்பு மலரில் எம்.ஏ. கபூரின் சாதனைகள் பற்றிப் பிரேமகாந்தன் மிக அதிகமாகவே எழுதினார்.
Page 120
234 இலங்கைத் திரையுலக முன்னோடிகள்
எம்.ஏ. கபூர் இப்பொழுது பல சிங்களத் தொலைக் காட்சி நாடகங்களுக்கு ஒளிப்பதிவு செய்யத் தொடங்கியிருக்கிறார். அவற்றில் சில தமிழ், சிங்கள இன ஒற்றுமையை மேம்படுத்துவன வாக அமைந்துள்ளன.
இவ்வாறான நாடகங்களைச் சிங்கள இயக்குநர்கள் உருவாக்கும் பொழுது தமது இனத்தின் பார்வை ஊடாகவே படைப்புகளையும் உருவாக்குகின்றனர். தமிழ்க் கதாபாத்திரங்கள் யதார்த்தத்துக்குப் புறம்பானவையாக உருவாக்கப்படுகின்றன.
எம்.ஏ. கபூர் போன்றோர் தொலைக்காட்சி நாடகம் தயாரிக்கும் பொழுது சிறுபான்மையினரின் கண்ணோட்டத்தி லேயே படைப்புக்களை உருவாக்கிக் காட்ட முயலவேண்டும். யதார்த்தமான தமிழ்ப்பாத்திரங்களை உருவாக்கிக் காட்ட வேண்டும்.
39. டென்மார்க் சண்
'கலியுக காலம்" "நெஞ்சுக்கு நீதி "இளைய நிலா" ஆகிய தமிழ்ப் படங்களுக்கும் பல சிங்கள படங்களுக்கும் இசையமைத்த"டென்மார்க் ag GT".
1982ஆம் ஆண்டு இலங்கையில் தமிழ்த்திரைப்படம் ஒன்று வண்ணத்தில் தயாரித்து முடிக்கப்பட்டிருந்தது. பெரிய விளம்பரத்துடன் தயாரிக்கப்பட்ட அப்படத்தில் பல சாதனைகள் இடம்பெற்றன.
Page 121
23S இலங்கைத் திரையுலக முன்னோடிகள்
தென்னிந்திய நடிகர்கள் பலர் நடித்திருந்தனர். இலங்கைக் கவிஞர்கள் இயற்றிய பாடல்களை எஸ்.பி. பாலசுப்பிரமணியம், எஸ்.பி. சைலஜா போன்றோர் இலங்கை வந்து பாடினர். இப்படத்துக்கான பாடல்களை இசையமைத்துப் படத்தை இயக்கிய தயாரிப்பாளர்களில் முக்கியமானவராக விளங்கினார் ஒருபாடகர். அவர்தான் 'சண்" என்ற சுப்பிரமணியம் சண்முகம். அவர் உருவாக்கிய அப்படத்தின் பெயர் 'இளையநிலா"
1983ஆம் ஆண்டு இலங்கையில் கலவரம் வெடித்தது. பல கலைஞர்கள் புலம் பெயர்ந்தார்கள். சண்ணும் டென்மார்க்கிற்கு இடம்பெயர்ந்தார். 'இளையநிலா'வும் திரைக்கு வரமுடியவில்லை. "சண்' அவர்களும் டென்மார்க்கில் குடியேறிவிட்டார். அவருக்கு "டென்மார்க் சண்" என்ற பெயரும் ஒட்டிக்கொண்டது. அவர் டென்மார்க்கிலிருந்து சி.டி.இசைத்தட்டுக்களில் தமிழ்ப் பாடல் களை இசையமைத்து வெளியிட்டார். இந்தியா வந்து பல தொலைக்காட்சி நாடகங்களைத் தயாரித்து வருகிறார்.
1983ஆம் ஆண்டுக்கு முன் சண் இலங்கையில் இருந்தபோது கொழும்பு மெயின் வீதியில் ஒலிப்பதிவுக் கூடம் ஒன்றை நடத்தி வந்தார்.
இசை ஆர்வம் காரணமாக சிங்களப்படம் ஒன்றுக்கு முதலில் இசை அமைத்தார். 'கலியுக காலம்' என்பது அப்படத்தின் பெயர். அப்படம் அப்பொழுது தமிழ் மொழியிலும் டப் செய்யப்பட்டது. டப் செய்யப்பட்ட அப்படத்திற்குக் 'கலியுக காலம்' என்று பெயர்வைத்தார்கள். இப்படத்துக்கு இசையமைக்கும் பொறுப்பும் இவருக்கே வழங்கப்பட்டது.
ஆக, தமிழ் சிங்களப் படங்களுக்கு ஆரம்பத்திலேயே இசையமைக்கும் வாய்ப்பு சண்ணுக்கே கிடைத்தது.
23了
தம்பிஐயா தேவதாஸ்
(OGGI) ’ușo||LIÚtosūląous?) oặtırıņổ quhouầus surtos sobĩ mựcogyrn 归ho与日雷明ust画与周迪写味汁u唱自é9领崛丁nqugu海鸥吟唱占9图B取眼numg@@.员自嘲占a恒了g,
Page 122
238 இலங்கைத் திரையுலக முன்னோடிகள்
சுண்டிக்குளி சோமசேகரன் இலங்கையில் 'நெஞ்சுக்கு நீதி' என்ற படத்தைத் தயாரித்து வந்தார். இப்படத்தில் தென்னிந்திய நடிகர் பூரீகாந்த் பிரதான பாத்திரத்தில் நடித்தார். இப்படத்துக்கு
இசையமைக்கும் பொறுப்பும் சண் அவர்களுக்கே வழங்கப்பட்டது.
இதற்கு முன்பே சண்' சினிமாத் தயாரிப்பாளராகி விட்டார். 'சிராணி" என்ற சிங்களப்படத்தைத் தயாரித்ததன் மூலமே படத் தயாரிப்பாளரானார். இப்படத்துக்கும் இசையமைத்தவர் இவரே. அப்பொழுதே சண் பொப் பாடல்களைப் பாடுவதிலும் பாடல் களுக்கு இசையமைப்பதிலும் வல்லவராக விளங்கினார்.
சண் இலங்கையில் இருந்தபோது 1971ஆம் ஆண்டில் 'சண் ஒலிப்பதிவுக் கூடம்' என்ற நிறுவனத்தை ஆரம்பித்தார். அந்த நிறுவனத்தின் மூலம் பல சிங்கள தமிழ் இசைத்தட்டுக்களைத் தயாரித்தார். எச்.ஆர்.ஜோதிபால, எம்.எஸ்.பெர்னாண்டோ, நிஹால் நெல்சன், ஏ.ஈ. மனோகரன் போன்றோர் சண் இசை யமைத்து வெளியிட்ட இசைத் தட்டுகளில் பாடியிருக்கிறார்கள். இலங்கையில் பொப்பிசைப் பாடல்கள் ரசிகர்களால் விரும்பப் பட்ட காலத்தில் இப்பாடல்களும் பெரிதும் விரும்பிக் கேட்கப் பட்டன. 1983ஆம் ஆண்டுக்கு பின் டென்மார்க்குக்கு இடம் பெயர்ந்த பொழுதும் அங்கும் இந்த இசை முயற்சிகளில் ஈடுபாடு
காட்டினார்.
டென்மார்க் அரசாங்கத்தின் உதவி பெற்று ஐரோப்பிய நடிகர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆகியோரை வைத்துத் தயாரித்து, இயக்கி, இசையமைத்து, படத்தொகுப்புச் செய்த "தொடரும் துயரங்கள்' என்ற ரி.வி. நாடகம் பலரின் பாராட்டைப் பெற்றது. இந்த ரி.வி. நாடகத்தை 1989இல் பெர்லின் திரைப்பட விழாவுக்கு அனுப்பியபோது அது பலரின் கவனத்தையும் கவர்ந்தது.
தம்பிஐயா தேவதாஸ் -V 239
இலங்கைத் திரையுலக முன்னோடிகளில் ஒருவரான சண் வெளிநாட்டிலும் இசைத்தட்டுத் தயாரிப்பதில் முன்னோடியாகத் திகழ்ந்தார். 'சூரிய அமுதம்' என்ற தலைப்பிலே பல சி.டி. இசைத்தட்டுக்களைத் தயாரித்தார். முதலாவது இசைத்தட்டில் இலங்கைப் பாடகர்களின் பாடல்களை இசையமைத்துத் தொகுத்தார். இரண்டாவது தொகுதியிலே பிரபல தென்னிந்தியப் பாடகர்களின் பாடல்களை இசை அமைத்துத் தொகுத்தார். இந்த இசைத்தட்டிலே எஸ்.பி.பாலசுப்பிரமணியம், பி.ஜெயச்சந்திரன், மலேசிய வாசுதேவன் போன்றோர் பாடியிருக்கின்றனர்.
இந்த இசைத்தட்டுகள், உலகம் எங்கும் ஒலிபரப்பாகின்றன. இலங்கைக் கலைஞன் ஒருவன் இசையமைத்த பாடல்கள் உலகம் எங்கும் ஒலிபரப்பாவதையிட்டு நாம் மகிழ்ச்சி பெறலாம்.
தமிழ்த்திரைப்படத் தயாரிப்பில் ஆர்வங்கொண்டிருந்த சண், இப்பொழுது சென்னைக்கு வந்து பல தொலைக்காட்சி நாடகங்களைத் தயாரித்து டென்மார்க் தொலைக்காட்சியில் ஒளிபரப்புகிறார். அவர் தயாரித்த பல தொலைக்காட்சி நாடகங்கள் அண்மையில் சென்னை 'ஏ.வி.எம்." ஸ்டூடியோவில் ஒளிப்பதிவு செய்யப்பட்டன.
சண் அண்மையில் இந்தியாவுக்கு வந்து 'கல்யாணக் கனவுகள்" என்ற தொலைக்காட்சி நாடகத்தைத் தயாரித்தார். பல புதுமுகங்கள் அந்நாடகத்தில் நடித்தனர்.
வீ.எஸ். ராகவன், குமரிமுத்து போன்ற பழம் பெரும் நடிகர்களும் இந்நாடகத்தில் நடித்தனர்.
"சண்' இந்தியாவில் மேலும் பல தொலைக்காட்சி நாடகங்களைத் தயாரித்து விட்டார். அவற்றில் ஒன்று கூட இலங்கையில் ஒளிபரப்பப்படவில்லை. இலங்கைத் திரையுலக முன்னோடிகளில் ஒருவரான சண் உருவாக்கிய தொலைக்காட்சி
Page 123
240 இலங்கைத் திரையுலக முன்னோடிகள்
நாடகங்கள் இலங்கையிலும் ஒளிபரப்பாக வேண்டும் என்பது இலங்கை நேயர்கள் பலரின் ஆவலாகும். அதை அவர்நிறைவேற்ற வேண்டும்.
2001 ஆம் ஆண்டு ஜூலை மாதம் சண்மீண்டும் இலங்கைக்கு வந்திருந்தார். அவரை நான் இலங்கை வானொலிக்காகப்பேட்டி கண்டேன். தன் தொலைக்காட்சி நாடகங்களை இலங்கையில் ஒளிபரப்ப ஆவன செய்வதாகக் கூறினார்.
40. எஸ்.வி. சந்திரன்
மூன்று தமிழ்ப் படங்களையும் பல சிங்களப் படங்களையும் இயக்கிய எஸ்.வி.சந்திரன்,
எல்பிட்டிய என்ற ஊரில் பிறந்த அந்தச் சிறுவன் அவ்வூரில் உள்ள சென் மேரிஸ் கல்லூரியில் படித்தான். அக்காலத்திலேயே அச்சிறுவனுக்கு நாடகம், சினிமா போன்றவற்றில் அதிக ஆர்வம். இளைஞனாகக் கொழும்பு வந்த போது 'மணி" என்ற சினிமா எடிற்றருடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் மூலம் ஏ.எஸ்.
Page 124
242 இலங்கைத் திரையுலக முன்னோடிகள்
ராமச்சந்திரனுடன் தொடர்பு ஏற்பட்டது. இளைஞனது ஆர்வத் தையும் ஆற்றலையும் புரிந்து கொண்ட ராமச்சந்திரன், தான் இயக்கிய சிங்களப்படம் ஒன்றுக்கு உதவி இயக்குநராக்கினார். அந்தப் படம்தான் 1963 இல் வெளியான 'சுஹத சொயுறு' என்ற படமாகும். அதன் பின்பே அந்த இளைஞன் சினிமா உலகில் தலை நிமிர்ந்து நிற்கத் தொடங்கினான்.
அப்படித் தலை நிமிர்ந்த அந்த இளங்கலைஞன் யார் தெரியுமா? அவர்தான் எஸ்.வி. சந்திரன். பல சிங்களப் படங்களையும் தமிழ்ப்படங்களையும் இயக்கியவர்.
1974 ஆம் ஆண்டு பிரபல சிங்கள நடிகர் பெப்டிஸ் பெர்னாண்டோ. "துப்பத்தாகே ஹித்தவத்தா (ஏழைகளின் நண்பன்) என்ற படத்தை உருவாக்கினார். இந்தப்படத்தை முதன் முதலாக நெறியாளும் வாய்ப்பு எஸ்.வி. சந்திரனுக்குக் கிடைத்தது. அது வசூலில் வெற்றிபெற்றது.
எஸ்.வி சந்திரனுக்கு மேலும் பல சிங்களப் படங்களை இயக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அப்பொழுது இலங்கையில் தமிழ்ப்படங்களும் அதிகமாக உருவாயின. அவற்றில் இரண்டு தமிழ்ப் படங்களை இயக்கும் வாய்ப்பும் இவருக்குக் கிடைத்தது.
எஸ். ஜெயராமச்சந்திரனும் சகோதரர்களும் "காத்திருப்பேன் உனக்காக" என்ற படத்தைத் தயாரித்தார்கள். வி.பி.கணேசன் நான் உங்கள் தோழன்' என்ற படத்தைத் தயாரித்தார். இவை இரண்டையும் ஒரே நேரத்தில் இயக்கும் வாய்ப்பு எஸ்.வி. சந்திரனுக்குக் கிடைத்தது.
எஸ்.வி. சந்திரன் இலங்கைச் சினிமா உலகில் ஆரம்ப காலத்திலேயே பல்வேறு அனுபவங்களைப் பெற்றவர். பல படங் களுக்குச் சிறப்பாக எடிட்டிங் செய்வார். அக்காலத்தில் உருவான "குத்து விளக்கு" என்ற படத்துக்கு பிரதான படத் தொகுப்பாளர்
தம்பிஐயா தேவதாஸ் 243
W
颅
Page 125
244 இலங்கைத் திரையுலக முன்னோடிகள்
எஸ்.வி. சந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது திறமையைக் கண்டே வி. எஸ். துரைராஜா தனது 'குத்து விளக்கு திரைப் படத்துக்குப் படத் தொகுப்பாளராகச் சேர்த்துக் கொண்டார்.
'குத்து விளக்குத் திரைப்படத்துக்குத் திறமாக படத் தொகுப்பு செய்தது போலவே மேலும் பல சிங்களப்படங்களுக்கும் திறமையாகப் படத் தொகுப்பு செய்தார். பின்பு பல திரைப்படங் களுக்கு உதவி இயக்குநராகக் கடமையாற்றினார். அதன் பின்பே முழுமையாகச் சிங்களத் தமிழ்த் திரைப் படங்களை இயக்க முன்வந்தார்.
எஸ்.வி. சந்திரன் கடும் உழைப்புடன் எடிட்டிங், உதவி இயக்கம். இயக்கம் என்று பலபடிகளைத் தாண்டி வந்தார். எஸ்.வி. சந்திரன் திரைப்படத்துறையில் பல்வேறு அனுபவங்களைப் பெற்ற பின் தானும் படங்களைத் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணங் கொண்டார். அது தமிழ்ப்படமாக இருக்க வேண்டும் என்றும் விரும்பினார். எம்.ஆப்டீன் என்ற கலை அபிமானியுடன் கூட்டுச் சேர்ந்து தமிழ்த் திரைப்படமொன்றை 1979ஆம் ஆண்டு தயாரிக்க ஆரம்பித்தார். அத்திரைப்படத்தின் பெயர்தான் 'எங்களில் ஒருவன்'.
முழுக்க முழுக்க நகைச்சுவையாக அமையவேண்டும் என்று விரும்பிய சந்திரன் அத்திரைப்படத்துக்கான திரைக்கதை வசனம் என்பவற்றைத் தானே எழுதி முடித்தார்.
அக்காலத்தில் மேடை நாடங்களிலும் திரைப்படங்களிலும், நகைச்சுவை வேடங்களில் சிறந்து விளங்கிய பல நடிகர்களைத் தெரிவு செய்தார். பிரபல நகைச்சுவைநடிகர் ரோசாரியோ பீரிஸின் தம்பியின் பெயர் டொன் பொஸ்கோ, இந்த டொன் பொஸ்கோவே திரைப்படத்தின் கதாநாயகன். இவருக்கு ஜோடியாக காஞ்சனா என்ற புதுமுக நடிகை தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தம்பிஐயா தேவதாஸ் 245
இவர்களுடன் எஸ். செல்வசேகரன், இலங்கை ஏ.நெயினார், எம்.ஏகாம்பரம், கே. ஏ. ஜவாஹர், ரீ, லதீப், ஆர்.ரீ.ராஜா, விஜயராஜா, ராகவன், மகாராஜா, யாழ். அறிவிப்பாளர் கலைஞர் எஸ்.கே.ராஜன் போன்றோரையும் நடிகர்களாகத் தெரிவு செய்தார்.
ஜெனிடா, ஜெயதேவி, மணிமேகலை, பூரீதேவி, ரத்னகலா, சர்மிளா என்று பல நடிகைகளையும் தெரிவு செய்தார்.
பல படங்களுக்கு உதவி ஒளிப்பதிவாளராகத் கடமை யாற்றிய என்.செல்லத்துரையை பிரதான ஒளிப்பதிவாளராக் கினார். அன்ரன் கிங்ஸ்லியை உதவி நெறியாளராக்கினார். கிட்டத் தட்ட 20க்கு மேற்பட்ட நடிக, நடிகையர் படத்தில் தோன்றினர்.
திரைக்கதை, வசனம், நெறியாள்கையை மட்டுமன்றி படத் தொகுப்பையும் எஸ்.வி. சந்திரனே ஏற்றுக்கொண்டார். படம் திரையிட்ட பொழுது கொழும்பில் ஒரு மாதத்துக்கு மேல் ஓடியது. எஸ்.வி. சந்திரனைப் பத்திரிகைகள் பாராட்டி எழுதின.
சண்டைகள், கிளப் நடனங்கள் இல்லாமல், குடும்பத்தின் சகல அங்கத்தினரும் பார்த்து மகிழக் கூடியதாக எஸ்.வி. சந்திரன் படத்தை இயக்கியிருந்தார். இந்தப் படத்தைத் தொடர்ந்து பல படங்களை இயக்கும் வாய்ப்பு சந்திரனுக்கு வந்தது. 1983ஆம் ஆண்டு பிறந்தது. அவ்வாண்டின் ஆடிக் கலவரம் மற்றக் கலைஞர்களைப் போல் எஸ்.வி. சந்திரனையும் தாக்கியது. சில காலம் சினிமா வாய்ப்பின்றி இலங்கையிலேயே இருந்தார். கலைஞர்களால் சும்மா இருக்க முடியாதல்லவா? வெளிநாடு செல்லலாமா என்று மனம் தடுமாறியது. வெளிநாடு சென்று விட்டார். இப்பொழுது அமெரிக்காவில் வாழ்கிறார்.
★
Page 126
Page 127
Page 128
Page 129
நூலாசிரியர் பற்றி
இந்நூலாசிரியர் திரு. தம் தேவதாஸ் யாழ்ப்பாணம், புங்( தம்பிஐயா ஐஸ்வரி தம்பதிகளின் புதல்வராவார்.
யாழ், புங்குடுதீவு, பூரீ கணேச மகா யாலயம், கொழும்பு விவேகான கல்லூரி, கொழும்பு அலெக்சா கல்லூரி ஆகியவற்றின் பழைய ப ராவார்.
பேராதனைப் பல்கலைக் கழகத் கலாச்சாரம் ஆகிய பாடங்களைப்
கொழும்பு பல்கலைக் கழகத்தில் L Journalism வட்டம் பெற்றவர்.
மஹரகம தேசிய கல்வி நிறுவகத்தி
கொ/கொள்ளுப்பிட்டி மெதடி தற்பொழுது ஆசிரியராகக் கடமை
இலங்கை வானொலியில் அறிவ களுக்குத் தயாரிப்பாளராகவும் கட கல்வி நிகழ்ச்சிகளையும் சுயாதீ நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங் இவர் எழுதிய இலங்கைத் தமிழ் ஏற்கனவே வெளி வந்தது. பிரபல தமிழாக்கியவர். பல்வேறு பாட
பொன்விழாக் கண்ட சிங்களச் சில நூலாகும். 'இலங்கைத் திரையுல இவரது ஏழாவது நூலாகும்.
பிஐயா குடுதீவு மூத்த
வித்தி னந்தாக்
ண்ட்றா
DT66
தில் அரசறிவியல், தமிழ், இந்து பயின்று B.A. பட்டம் பெற்றவர்.
பத்திரிகையியல் பயின்று "Dip.in
ல் "B.Ed. பட்டம் பெற்றவர்.
ஸ்த தமிழ் வித்தியாலயத்தில் யாற்றுகிறார்.
பிப்பாளராகவும் கல்வி நிகழ்ச்சி மையாற்றுகிறார். ரூபவாஹினியில் ன தொலைக்காட்சியில் சினிமா பகுகிறார்.
pச் சினிமாவின் கதை 1994இல் மான சிங்கள நாவல்கள் மூன்றைத் நூல்களையும் எழுதியிருக்கிறார். ரிமா' என்ற நூல் இவரது ஆறாவது க முன்னோடிகள் என்ற இந்நூல்