கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மயில் - இரு நாடகங்கள்

Page 1
o
al o 濠/、
Π Ο Ω, β. D) O IMIQ)
St Ipp - /d
息
ع عقے کے تحت جیسی مرحمت خلقڑھ82%22 یع
 

: , , T-----~~----- |-|
து தி
的했義 丹比2) !)
s)- |-|Ŵ, -그-∞ 炒-s●●●sj4)穆/ジ 沁灣%s,%s,%
·o ,ダ31||龄%
പ്രഗ്ര&ഭ
♥'``: ለW ∞, 戀髮變姆 ...|- ----·
|-
! W
|-·
A.
ለህ
ഋ2 ()
s
PC_AAك9گه کيسه

Page 2

மயில்
- இரு நாடகங்கள்
- கலைப்பேரரசு ஏ.ரி. பொன்னுத்துரை
வெளியீடு: சன்மார்க்கசபை - குரும்பசிட்டி 1991

Page 3
முதற்பதிப்பு: 15-05-1991 பதிப்புரிமை : திருமதி நவசக்தி பாலகுமார் அச்சுப்பதிப்பு: திருமகள் அழுத்தகம், சுன்னகம்,
45/-
MAYC)
- Two Dramas First Edition: 15 - 5 - 1991 Auther : * Kalaiperarasu ” A. T. Ponmuthurai, B. A. Publishers : Sanmarga Sabha, Kurumbasiddy, Tellipalai Printers: Thirumakal Press, Chunnakam
Price: 45/

சமர்ப்பணம்
சபையின் பதிப்பியற் பணிகளில் பெரும் பங்கு எடுத்த எமது முன்னுள் தலைவர் அமரர் முத்தையா சபாரத்தினத்துக்கு
சன்மார்க்கசபையினர்

Page 4
பதிப்புரை நாடகம் வல்லோன், அவைக்காற்றுக் கலைஞன், எமது சபையின் முன்னன் தலைவர் கலைப்பேரரசு ஏ. ரி. பொன்னுத்துரையின் பத்தாவது நூலை எமது அறுபத்தைந்தாவது வெளியீடாகப் பிரசுரிப்பதில் குரும்பசிட்டி சன்மார்க்கசபை பெருமையடை கின்றது.
விடுதலை உணர்வை வலியுறுத்தி நிற்கின்ற * மயில் ' என்ற சிறுவர் நாடகத்தினையும், ஈழத் தமிழர்களின் தேசீயக்கலை வடிவங்களில் ஒன்ருன தானக்காவடி எம்மவர் மத்தியில் மறைகின்றவேளை யில் அதன் முக்கியத்துவத்தினை எடுத்தியம்பும் * தானக்காவடி' என்ற நாடகத்தையும் உள் ளடக்கமாகக்கொண்ட இந்நூல் கலை ஆர்வலர் களுக்கும், வாசகர்களுக்கும் நற்பயன் நல்கும் என நம்புகின்ருேம். கலை இலக்கியக்குழு சன்மார்க்கசபையினர்
குரும்பசிட்டி, தெல்லிப்பழை.
 

என்னுரை
செய்திகள் கூற, மகிழ்வூட்ட, நல்லறிவினைப் பாய்ச்ச நாடகம் கனதியான ஊடகமாய் அமைகிறது. கலைகள் பலவற்றின் சங்கமமாகவும் இது திகழ்கிறது. இத்தகைய சிறப்பு மிகு கலை இளமையிலேயே என்னைக் கவர்ந்தது. நாடக நயப்பில் எழுத்தில், நடிப்பில், நடிப்பித்த லில் பேரார்வம் கொண்டேன். அறுபது ஆண்டு வாழ்வு தாண் டியும் இந்த உணர்வின் வேகம் குறைந்த பாடில்லை. அதன் விளைவு இந்த நூல் உங்கள் கரங்களில்.
* மயில் " என்ற சிறுவர் மோடி நாடகத்தையும் " தாளக் காவடி" என்ற யதார்த்த நவீன நாடகத்தையும் உள் ளடக்கமாய் உள்ள இவ்வாக்கத்தை அழகான முறையில் முன்வைக்கின்றேன்.
* மயில் ' என்ற சிறுவர் நாடகம் ' சுதந்திர வாழ்வே வாழ்வு" என்ற செய்தியை சிறுவர்களுக்கு ஞாபகமூட்டி அதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. ஆடல் பாடல் விரவிய, உத்திப் பின்னல்கள் அளவாகப் புகுத்தப்பட்ட மோடி நாடகம் இது. கட்டுவன், வறுத்தலைவிளான், வீமன் காமம் பகுதிகளில் ஆடப்பட்ட வசந்தன் ஒயிலாட்ட பாடல் மெட்டுகளில் நாடகத்தை நகர்த்தியுள்ளேன். கிராமிய நடன, நடை ஆட்டத்தில் இடம் பெறுகிறது. இலகு நாடக உத்திகள் கோலங்கள் இழையோடும் இந் நாடகத்தை ஆசிரியர்கள் வல்லுநர் துணை கொண்டு சிறப் பாக மேடையிடலாம்.
மேற்படி நாடகத்தை காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரி மாணவர்களுக்குப் பயிற்றி இரு தடவைகள் மேடை யிட முயன்றேன். நாட்டின் சூழ்நிலை தடையாக அமைந்து விட்டது. மாணவர்களுடன் தயாரிப்பு முயற்சியில் ஈடுபட்ட வேளை பல அநுபவங்களைப் பெற முடிந்தது. உள் வாங்கிய

Page 5
ν ί
அநுபவங்கள் பிரதியைச் செப்பனிடும் பணிக்குப் பெரிதும் உதவின. நடேஸ்வராவில் நல்ல வாய்ப்பளித்து என்னை ஊக்கி உந்திய மேற்படி நிறுவன அதிபர் க. இராசதுரை எம். ஏ. அவர்களை விஸ்வாசத்துடனும் பெருமதிப்புடனும் நினைவு கூருகிறேன்.
" தாளக் காவடி " நாடகம் நேரடி நாடகமாக அமைந் துள்ளது. எமது கிராமியக் கலைகளாம் காவடி, கரகம், வசந்தன் போன்றவை பேணப்பட வேண்டியவை என வலியுறுத்தும் இந் நாடகத்தில் கலைஞனின் தன்மான உணர்வு வலியுறுத்தப்படுகிறது. முதலாளியின் அடக்கு முறையை விஞ்சி நிற்கும் காவடி அண்ணுவிப் பாத்திரத்தை சுற்றியே நாடகம் அமைகிறது.
1972இல் இலங்கை வானெலி நடாத்திய நாடக எழுத்துப் போட்டியில் முதலாவதாக தெரிவு செய்யப்பட்டு இருதடவை ஒலிபரப்பப்பட்டது. இதனை நயந்த சில கலை ஆர்வலர்கள் முழுநீள மேடை நாடகமாக்கும்படி வேண்டி னர். மாவை ஆதீன கர்த் தர் பிரம்ம பூரீ சு. து. ஷண்முகநாதக் குருக்களின் ஒத்தாசையுடன் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் தெற்கு வீதியில் காத்திரமான சுவை ஞர் குழுமுன் பெரிய அளவில் மேடையிடப்பட்டது. தொடர்ந்து நடேஸ்வராக் கல்லூரி, வயாவிளான் மத்திய மகாவித்தியாலயம், குரும்பசிட்டி சன்மார்க்க சபை, இராமநாதன் மகளிர் கல்லூரி மேடைகளிலே நல்ல வர வேற்பைப் பெற்றது. அதிபர் பொ. சோமசுந்தரம், கவிஞர் வி. கந்திவனம், எழுத்தாளர் இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன், அதிபர் த. இராசரத்தினம் போன்ற கலாரசிகர்கள் இம்மேடையேற்றங்களில் அதீத ஈடுபாடு காட்டினர். மேடைக்கு எடுப்பாய் அமைந்த இந் நாடகத்தை ஒரு மணித்தியாலம் நடிக்க க் கூடியதாக அமைத்து இணைத்துள்ளேன்.

νii
எனது இரு நாடகங்களையும் நூல் வடிவில் வெளியிட முன்வந்த குரும்பசிட்டி சன்மார்க்க சபைக்கு என் நன்றிகள். துரித முயற்சியாக இக்கருமம் மேற்கொள்ளப்பட்ட வேளை 'புறுாவ் " பார்த்தல் பணியை மனம்கோணது சிறப்பாகச் செய்து தந்த நண்பர், எழுத்தாளர் அநு. வை. நாகராஜ னுக்கும், முகப்புப் படம் வரைந்த ஓவியர் தயாவுக்கும் முகப்பமைப்பில் ஆலோசனைகளும், உதவி களும் வழங்கிய எழுத்தாள நண்பர் செங்கையாழியனுக்கும், கம்பன்கழக அமைப்பாளர் இ. ஜெயராஜ்க்கும், அச்சிடும் பணியைத் திறம்படப் புரிந்துள்ள திருமகள் அழுத்தகத்துக்கும், விசேட மாக அதன் முகாமையாளர் ச. இராசரத்தினத்துக்கும், என் இதயம் கலந்த நன்றிகள்.
கம்பன் கோட்டம், ஏ. ரி. பொன்னுத்துரை நல்லூர், 15 a 5-91

Page 6
ஆசிரியரின் பிற நூல்கள் :
1 இறுதிப் பரிசு
(நாடகம்) 2. நாடகம்
(ஓரங்க நாட கம்) 3. கூப்பிய கரங்கள்
(ஒரங்க நாடகம்) 4. பக்திவெள்ளம்
(ஒரங்க நாடகம்) 5. பாடசாலை நாடகம்
(கட்டுரை) 6. கலையுலகில் கால்நூற்றண்டு (கட்டுரை) 7. அரங்கு கண்ட துணை வேந்தர்
(வரலாறு) 8. நிஜங்களின் தரிசனம்
(வரலாறு) 9. தாளக் காவடி
(கட்டுரை)

மயில்
(சிறுவர் நாடகம்)
மேடையில்.
(1) எடுத்துரைஞர்கள் (2) மயில்கள் (3) அழகுமயில் (4) சிற்றரசன் (5) வேடுவர்கள்

Page 7

(வசந்தன் பாட்டு மெட்டு, பின்னணியில் இசைக்கப்படுகிறது. மெல்லெனத் திரை விலகுகிறது. எடுத்துரைஞர்கள் மூவர் கீழ் மேடை வலப்புறத்தில் இருந்து (D. R) கீழ் நடுமேடை (D. C)க்கு வந்து நிற்கின்றனர். " நாடகம் வல்ல ஒர் ஊடகம் ஐயா " என்ற பாடலைப் பாடுகின்றனர். பின்ன ணியும் இணைகிறது.)
எடுத்துரைஞர்கள் :
நாடகம் வல்ல ஒர் ஊடகம் ஐயா ! நல்லது கெட்டது நவின்றிட ஐயா !
ஆடலும் பாடலும் இணைந்தது ஐயா ! அறிவூட்டும் ஒரு விளையாட்டையா !
கதையுண்டு கருத்துண்டு களிப்புண்டு ஐயா ! பலவிதக் கலைகளின் கூட்டுறவையா !
நடிப்பவர் சுவைப்பவர் நாமெல்லாம் கூடி நாட்டின் எதிர்கால நன்மையைத் கேடி
* மயில் " என்ற நாடகம் மகிழ்வுடன் ஆட மனதில் விடுதலை உணர்வினை ஊட்ட
மேடையில் சிறியவர் பெரியவர் கூட ஆடைகள் பலவிதம் அணிந்துமே வாழுர், உரைஞராய் உங்கள் முன் ஒலிப்போம் வார்த்தை நடிகராய்க் கூட நயப்பீர், எம்மை
(நாடகம் வல்ல ஒர். )
(எடுத்துரைஞர்கள் கீழ் மேடையில் (D. L) அமர்கிறர்கள். மயில்கள் ஐந்து அழகு நடையில் மேல் மேடையில் இருந்து நடுமேடைக்கு வந்து நிற்கின்றன. சுதந்திரமாக இஷ்டப்படி நடந்து ஆடிப் பாடி மகிழ்கின்றன. )

Page 8
- 4 -
மயில்கள் " அ " " ஆ* இ* ஈ உ
சுதந்திரம் சுதந்திரம் எங்கள் நல் மந்திரம் சந்ததம் சதுர்மயம் சிந்துவம் சுகம் தினம் கானகம் உறைவிடம் கண்டோம் எழில்மயம் கூடுவம் ஆடுவம் கோலங்கள் போடுவம் , மேற்படி பாடல் வாத்திய இசைக்கு காவடி நடையில் ஆடுகின்றன. மேல் மேடைக்குச் செல்ல, எடுத்துரைஞர்கள் கீழ் மேடை மத்தியை (D. C) அண்மித்து நிற்கிருர்கள்.)
எடுத்துரைஞர் I :
மழைவாற கோலம் : அந்தா தெரியுது சரியான கறுப்பு. இருளைப்பாரப்பா !
எடுத்துரைஞர் I :
மின்னல், இடி, முழக்கம் ஆ ! கடுமையாய்ப் பெய்யப் போகுது மழை ! எடுத்துரைஞர் III:
சாடையாத் துமிக்குது மழைத்துளிகள் !! எடுத்துரைஞர் :
துமிக்குதோ ? வடக்கை பாரப்பா பெரிய இரைச்சலோடை இந்தா வந்திட்டுது ! எடுத்துரைஞர்கள் 1 I I :
வருகுது மழை. கொட்டுது மழை
மழை ! மழை மழை மழை !
மேடை முழுவதும் இந்த ஒலி மழை போல் ஒலிக்கிறது.
மயில்கள் ஆனந்தத்தில் ஆடுகின்றன.) மயில்கள் " அ " "ஆ" "இ" "ஈ" "உ" :
வாவா மழையே! மழையே!
வீறுடன் ஆடுவம் குஷியே!

- 5 -
தகணக சொம் சொம் தித்தா தரிகு சொம் சொம் தித்தா பூத்திடும் உணர்வுகள் புதிது போற்றுவம் ! மழையே 1 மழையே! தகணக சொம் சொம் தித்தா தரிக்கு சொம் சொம் தித்தா குளிர்ச்சியிலே தனி இன்பம் குதிநடை போட இன்பம் !
இசைக்குத் தக ஆடுகின்றன) தோகை விரித்தாட இன்பம் ! தொங்கிச் சுழன்ருட இன்பம் ! மழையில் அசைந்தாட இன்பம் ! மடை திறந்த ஓர் இன்பம் ! இன்பம் இன்பம் இன்பம் ! இன்பம் இன்பம் இன்பம்! வாவா மழையே 1 மழையே! வீறுடன் ஆடுவம் மழையே! (ஆட்டம் ஒய்ந்த நிலையில் பரவலாக அரைவட்ட வடிவில் மயில்கள் நிற்கின்றன)
ag * لtrul6i
ஆடி மகிழ்வது மட்டுமா வாழ்க்கை? கூடி வாழ வேணும். கூட்டுறவு வேணும். ஒருவருக் கொருவர் ஒத்தாசையா இருக்கவேணும் !
மயில் ‘ ஆ, !
குதூகலமும் குஷியும் மட்டும் போதாது. எங்கள் குலம் எங்கள் இனம் வாழப் பாடுபட வேணும். முன்னணிக்கு வர முயற்சிக்க வேணும். தனி வாழ்க்கையிலை என்ன கிடக்கு?
மயில் இ? :
முட்டுக்கட்டைகளை முளையிலே கிள்ளவேணும்.

Page 9
- 6 -
o
நம்மை வழி நடத்த தலைவன் பண்பாளன் வேணும் !
நல்லவன் வல்லவன், சொல்வதைச் செய்பவன், சோர் வின்றி உழைப்பவன் ஒருவன் கிடைத்தால் அதிஷ்டம் தான்.
LDu96ö ʻ ge, ʼ :
ஆளுமை உள்ளவன் ; ஆற்றல் உள்ளவன் ஆரப்பா எங்களுக்கை ? (மேடையில் தேடுவது போல் நடக்கின்றன. அழகு மயில்(அ) கீழ் இடப்பக்கத்தில் (D. L) நிற்கிறது. அதனைக் காட்டியபடி) மயில் இ? :-
அதோ அந்த அழகு மயில் ! (அழகு மயில் கீழ் வலத்தை (D. R) நோக்கி நடக்கிறது) மயில்கள் ஆ* இ’ ஈ "உ" :
கண்டோம் ! கண்டோம் ! கருத்தில் கொண்டோம் ! (அழகு மயில் மத்திய மேடை மத்திக்குச் (C. C) செல்ல மற்றைய மயில்கள் இருபுறமும் நிற்கின்றன) மயில் 'ஆ' : (வசன கவிதை மாதிரி)
சுந்தரத் தோற்றமென்ன?
மயில் 9. *
சூதற்ற தன்மை என்ன ? மயில் 'ஈ' :
பசுந்தளிர் பச்சையம்மா ! மயில்கள் ஆ. 9), FF, 2- :
பார்த்து நாம் சொக்குகின் ருேம்.

- 7 -
Louisi “ e ” :
தோகையின் வாகு என்ன ?
மயில் ஆ* :
தொங்கியே சுழன்று ஆட
மயில் இ? :
பொங்கியே நிற்கும் இன்பம்
மயில்கள் ஆ”, “ இ’, ‘ ஈ " , " உ , :
தரணியில் வேறு உண்டோ ?
மயில்கள் ஆ + இ :
உயர்ந்த நல் தோற்றமுண்டு
மயில்கள் ஈ + உ :
உறுதியாம் நடைதானுண்டு
மயில்கள் ஆ + இ :
ஈர்த்தெமை ஆளவல்ல இயல்புகள் பலவுமுண்டு
மயில்கள் ஆ + இ + ஈ + உ :
ஆதலால், எங்கள் தலைவா
அடைந்தனம் உம்மை இன்று.
ஆணை தான் இடுங்கள் இப்போ ;
அடங்கியே புரிவோம் தொண்டு.
(நடுவே நிற்கும் அழகு மயில் முன் மண்டியிட்டு ஏனைய மயில்கள் நிற்கின்றன. அழகு மயில், சூழ நிற்கும் இது மயில்களை நோக்கி) .י:
அழகு மயில் :
அவசரப் புத்தியென்பேன் - அன்பர் காள் ! ஆழ்ந்துமே யோசி யென்பேன். தலைமை எதற்காக நாமெல்லாம், தரணியில் மன்னரன்ருே ?

Page 10
- 8 -
ஏனைய மயில்கள் (ஆ, இ, ஈ, உ) :
புறத்தினில் அழகுண்டு - உங்களுக்கு அகத்திலும் அதுவே உண்டு. நடையினில் மிடுக்குண்டு - ஆனதால் நம்மை நீர் ஆண்டிட லாம்.
அழகு மயில் :
ஆட்சியில் மாட்சி காணின் - அன்பர்காள் தாழ்ச்சி உயர்ச்சி வேண்டாம். சமரச தத்துவமே சுத்த சுதந்திர மார்க்கமுமாம்.
ஏனைய மயில்கள் : (ஆ, இ, ஈ, உ)
தங்களின் தத்துவத்தை - ஐயநாம் தரணியில் நிலைநாட்ட, என்றுமே துணைபுரிவோம் - ஐயநீர் இட்டிடும் கட்ட்ளையை.
அழகு மயில் :
அன்புக்கு என் வணக்கம் - உம்மைநான் ஆதரித் தாளுகிறேன். தட்ட முடியவில்லை - தங்களின் தயவான வேண்டுதலை.
ஏனைய மயில்கள் (ஆ, இ, ஈ, உ) :
அதிஷ்டம் அதிஷ்டமடா - துள்ளி நாம் ஆடுவம் ஆட்டமடா! முடிசூட்டு விழா வெடுப்போம் - முழங்கி முரசும் அறைவமடா !”
(மங்கல நாதஸ்வர இசை கேட்கிறது)
(மேளமடித்தல், சாமரை இரட்டல், குடை பிடித்தல். முடி சூட்டுதல் முதலியன ஊம உத்தியில் நிகழ்கின்றன. மயில்களுடன் எடுத்துரைஞர்களும் பங்குகொள்கின்றனர். 1

- 9 -
எடுத்துரைஞர்கள் மறைகிறர்கள். அழகு மயில் மெல் லென நடக்கிறது. மற்றைய மயில்கள் இரசிக்கின்றன.)
மயில்கள் ஆ இ* ஈ உ :
அந்த மயில் ராஜாவின் நடை
ஒய்யாரம், ஒழுங்கு, கவர்ச்சி ! ஆகா ! ஆகா ! ! ஒரு தனித்துவம் ,
(தனிமையாக நிற்கும் அழகு மயில் பக்கத்து ஒடையைப் பார்த்து தனது அழகை இரசிக்கிறது; தனக்குள் தானே பேசுகிறது. 1
அழகு மயில் :
அழகு தெரியுது இந்த ஓடையில். அற்புதம் 1 ஆகா குதூகலிக்கின்றேன். ஆளுல் இனித்தான் ஆபத்து நெருங்கலாம். எந்தன் அழகு மாந்தரை மருட்டலாம். என்னைப் பிடித்திட எண்ணம் கொள்ளலாம். என்னை அடிமையாய் எதுவும் செய்வர். மனிதன் சுடா வத்தை மாற்றமுடியாது. அழகும், ஆற்றலும் இணைந்திருப்பதால் இருக்கிறது ஆடத்து என்ன செய்வது? மலைக்கு கை ஒன்றில் மறைந்து வாழ்வம். மணிசர் கண்படா இடமாய்த் தேடுவம், அதுகள் கண்டால் ஐயையோ ஆபத்து. ஆபத்து வரும்போது நாங்களும் தப் செய்யத்தக்க தைச் செய்யத்தானே வேணும் . அந்தக் குகைக்கு விரைந்து சென்று ஆரும் அறியாது அடங்கி வாழ்வம். மறைந்து வாழ்வம் ஓரிரு தினங்கள்.
(மயில் மெல்ல மெல்ல குகை வாயிலடி சென்று, நின்று, இரு பக்கங்களையும் நோட்டம் விடுகிறது. திடீரென வேடுவர் கள் மயிலைக் காண்கிறர்கள். மயில் உள்ளே செல்கிறது.
வேடுவர்கள் (1 11 11 IV) :
(காவடி, வசந்தன் ஆட்டப் பாணியில்)
2

Page 11
-- 1U0 -سسسس
வேட்டை யாடுவமே - வீறுகொண்டு வேட்டை யாடுவமே
வேடுவர்கள் 1 + I :
காடு மேடெல்லாம் கலங்காது கால்வைத்து, கண்ட மிருகத்தை வில்லம்பு கொண்டு, கொன்று குவிப்பம். உண்டு மகிழ்வம். கொல்லடா கொல்கொல். அந்தா மான்மரை
(வேட்டை,
Genußsaurssir II -- IV :
பாட்டத்தில் விழுந்தினம் பத்தையடியில். கூட்டாகத் தூக்குவம் துரிதநடையில் வேட்டை யாடுவமே - வீறுகொண்டு வேட்டை யாடுவமே. (சிற்றரசன் பிரதானிகள் சகிதம் உலா வருகிறன், வேடர் களைச் சந்திக்கிறன். வேடர்கள் வாய் புதைத்து நிற்கிறர்கள்]
சிற்றரசன் :
யாரது ? வந்தகாரியம் என்னதான் சொல்வீர் 1 விந்தை சேர் நிகழ்வு ஏதும் நிகழ்ந்ததா? கூட்டம் பெரிது.
வேடுவர்கள் :
பச்சை மயிலது ! II : L u Gay GMT 1 Duflagi ! ITI : புள்ளி மயிலத !
(366saurassir I II II IV :
கண்டோம் அதனை ஒடோடி வந்தோம் தங்கள் சமுகத்துக்கு,
சிற்றரசன் : (வியப்பாக) பச்சை மயில் ! பவள மயில் !

- 11 -
அழகு மயில் ! என்னைத் தவிர, யாருக்கு உரித்து அந்த அழகு மயில் அநுபவிக்கப் பிறந்தவர் நாம். வேறு யார் இருக்கிருர்கள் ? வேடுவர்கள் :
ஆமாம், ஆமாம்.
வேடுவர்கள் 1, 1 (பாட்டு)
பச்சை மயில் பவள மயில் பார்ப்பவரை ஈர்த்திழுக்கும் தோகை மயில் அந்த மயிலே ! தரி தோம் தக ஆடும் மயில் அழகு மயிலே ! தரி தோம் தக ஆடும் மயில் அழகு மயிலே ! சிற்றரசன் :
எப்படி ? எப்படி ? வேடுவர்கள் II, IV (பாட்டு)
சுந்தர நல் மங்கையர் போல் சுழன்ருடும் போதினிலே சொக்க வைக்கும் சொர்ணமயிலே ! * சொம் " " சொம் " என்று தளாங்குதா நல்ல மயிலே !
சிற்றரசன் :
என்ன ? சுழன்ருடும் சொர்ண மயிலா ? பச்சை மயில் பவள மயில் 1 தோகை மயில் ஆடும் மயில் ! அப்பப்பா! அப்படியானல் அதனைப் பிடியுங்கள், அதற்கு உரியவன் என்னைத்தவிர வேறு யார்? எனக்கு அது அடிமை போலத் தானே ? யுக்தி, சாதுரியம் இணை யிலா ஆயுதம். அணைத்து அணைத்து மருட்டிப் பிடி யுங்கள். என் முன்னே சேருங்கள்.

Page 12
- 12 -
(au (65musissir I II III IV :
ஒப்படைப்போம் தங்களிடம் ஒளிவீசும் அம்மயிலை.
சிற்றரசன் :
பார்ப்போம் செயல் திறத்தை பரிசு பல உண்டு. பட்டு : பீதாம்பரம், பல்வேறு பொக்கிஷங்கள் தாராளம் ; ஏராளம்.
G6 (6nuiras, sir I II III IV :
உடனடியாய் செல்கிருேம். உயிருடனே பிடிக்கிருேம். உங்கள் சொத்து அது எங்கள் கடமை இது.
சிற்றரசன் :
வேகத் துடிப்புடன் விஷயம் நடக்கட்டும்.
[ சிற்றரசன் எடுபிடிகள் சகிதம் கீழ் இடப்புற (D. L.) Gudal வழியாகச் செல்கிறன். வேடுவர்கள் யோசிக்கிறர்கள். இடைக்கிடை தலைகாட்டும் மயிலைக் காண்கிருர்கள். மேடை முழுவதும் பரந்து நடந்து பல்வேறு நிலைப்பாட்டில் நின்று சிந்திக்கிறர்கள். இருவர் (1, 1) வலப்புற மேடையிலும் மற்றையோர் (111, 1V) இடப்புற மேடையிலும் நிற்கிருர்கள்.1
வேடுவர்கள் 1 I :
வீரா 1 வீரா ! வேலா ! வேலா ! - வீமா வாவா வழியொன்று சிந்தை செய்வோம். அந்த மயில் அகப்படவே - வீரா
ஆன நல் மார்க்கம் தேடிடுவோம்.
(rחijr}6)
| மேற்படி பாட்டு, வாத்திய இசையாக இசைக்கப்படுகிறது. சிந்திக்கிறர்கள்.)
வேடுவர்கள் III IV :
வலை விரிப்போம் வீழ்த்திடுவோம் அண்ணே ! வசமாக்குவோம் மயிலை அரை நொடியில் 1

- 13 -
வேடுவர்கள் 1 11 : v
குகையை விட்டு வெளியே ஈர்க்க அண்ணே ! வழியேதும் தான் கூறிடுவாய் (இசைக்குத் தக ஊமம் முறையில் கூடிச் சிந்திக்கிறர்கள்
வேடுவர்கள் 111 IV :
தாமரைப் பூக்களடா தடாகத்தில் தனியழகாய் தோணுதடா தாவிநாம் சென்றிடுவோம் கொய்துமே வந்திடுவோம். பரவி அதனை வைப்பம் பக்குவமாய் எடுக்க வரும்
மயிலாரை மடக்கிடுவோம்.
(இசைக்குத் தக ஊமம் உத்தியில் செயற்படுகின்றனர்) வேடுவர்கள் 1 I I IV :
அண்ணே ! அண்ணே ! அதுவே வழி ஆனந்தம் ! ஆனந்தம் ! ஆனந்தமே !
(கொய்த தாமரை மலர்களை குகை வாசலுக்கு முன்னே பரவி வைக்கிறர்கள். வைத்த பின் இருவர் குகை வாயி லின் வலப்புறத்திலும் ஏனையோர் குகையின் இடப்புறத்தி லும் ஒதுங்கிப் பதுங்கி அசையாது ஆடாது நிற்கிறர்கள். மயிலைப் பிடிக்கும் ஆவல் பளிச்சிட பக்குவமாக மறைந்து இருக்கிறர்கள். இசைக்குத் தக, மயில் குகைவாயில் வழியாக முன்னுேக்கி வருகிறது ; நிற்கிறது. பூக்களைப் பார்த்து மகிழ்வுடன் அடிவைத்து அசைந்து சற்று முன்னே வருகிறது. வேடுவர்கள் அமைதி பேணி பதுங்கிய நிலையில் பார்வையைப் பாய்ச்சியபடி நிலத்தோடு நிலமாக இருக் கிறர்கள்]
அழகுமயில் :
(பூக்களை நயந்த நிலையில்)

Page 13
- 14 -
செந்தாமரைகளின் சிவந்த தோற்றம் சொக்கவைக்கும் அற்புதத் தோற்றம் !
ஆகா !
பூவிலே பிறந்து, தென்றலில் கலந்து, மெல்லென மணத்திடும் அந்த நறுமணம் ! விந்தை விந்தை !!
விரைவாய்ச் செல்வேன் !
விதந்து எடுப்பேன் ! ஒன்ருய்ச் சேர்த்து மணந்து மகிழ்வேன். (மயிலின் சிந்தனை சாதகமாய் அமைவதைக் கண்ட வேடர் கள் ஒருவரை ஒருவர் பார்த்துப் புளதிக்கிறர்கள், !
அழகு மயில் : (சற்று யோசனைக்குப்பின்)
வேண்டாம் - வேண்டாம். விழிப்புடன் செயற்படு' இப்படி ஒரு குரல் ஒலிக்கிறது உள்ளே. சூதும் வாதும் நிறைந்த உலகம் சூழ்ச்சியில் உயிர்களை மாட்டிடும்
உலகம். இதிலே கூடக் கபடம் கபடம். ஆதலால் அந்தப் பூக்களை எடுக்க அசையவும் மாட்டேன். நகரவும் மாட் டேன். இதிலே சூது - கபடம், கபடம். (அழகு மயில் திரும்பிச் செல்கிறது. வேடுவர்களின் முகத் தில் எதிர்பாராத மாற்றம் - விரக்தி பளிச்சிடுகிறது. வேடுவர்கள் மேடை முழுவதும் பரந்து நடந்து நடந்து சிந்திக்கிறர்கள் ; சிலர் உட்காருகிருர்கள்.)
வேடுவர்கள் 1 I :
சூனியமாம் சூனியமாம் - அண்ணே ! சூழ்ச்சி வலை விரிப்பு சூனியமrம்.
வேடுவர்கள் 111 IV :
யுக்தியுண்டு நல்ல புத்தியுண்டு - தோழா ! சித்தியுண்டு நாம் சூழச் செய்வோம்.
வேடுவர்கள் 1 I :
என்ன செய்வோம்? ஏது செய்வோம் ? எந்தன் தோழா செப்பிடடா !

- 15 -
வேடுவர்கள் II IV: (பாட்டு)
மயில் உருவம் பொறித்த நல்ல கம்பளம்தான் முன் கொணர்ந்து விரித்திடுவோம் மறைந்திருப்போம் மயிலார் ஒடி முன்வருவார் மகிழ்ந்தே நாமும் பிடித்திடுவோம்.
(இசைக்குத்தக வேடர்கள் ஊமம் முறையில் தொழிற்படு கிருர்கள். நடு வலது மேடை (C. R) புறத்தில் இருந்து, விரிக்கப்பட்ட கமபளத்தைத் தலைக்குமேலே பிடித்தபடி நடு மத்திய (C. C) மேடைக்கு கொண்டுவருகிறர்கள். பதிந்து இருந்து கம்பளத்தை விரிக்கிறர்கள். மகிழ்ச்சியுடன் குகை வாயிலின் இரு பக்கங்களுக்கும் சென்று தமது திட்டம் தற்செய்யும் என்ற நம்பிக்கையுடன் பதுங்கி இருக்கிருர்கள். குகை வாயிலை நோக்கி வந்த அழகு மயில் அழகான கம்ப ளத்தைப் பார்க்கிறது. முன்னுேக்கி வருகிறது.)
அழகுமயில் :
என்னைப்போன்ற அழகு உருவம் அங்கே. பார்க்கப் பார்க்கப் பரவசம் அடைகிறேன். அதனைத் தொட்டு அணைத்து மகிழும் ஆசை . எனக்கு . . .
(வேடுவர்கள் மகிழ்கிறர்கள்)
வேண்டாம்; வேண்டாம் இதில் ஏமாற்றம் இருக்கலாம். அற்பப் பொருளது. அணுக மாட்டேன். அதற்குக் கிட்டச் செல்லவே மாட்டேன்.
(வேடுவர்களின் விரக்தி மேலோங்குகிறது. தொங்கிய தலை களுடன் பல திக்கும் பார்த்தபடி சிந்திக்கிறர்கள்)
வேடுவர்கள் 1 11:
சூனியமாம் சூனியமாம் - எமது சூழ்ச்சி வலைவிரிப்பு சூனியமாம்

Page 14
- 16 -
வேடுவர்கள் III IV :
யுக்தியுண்டு வெற்றியுண்டு - தோழா ! வெற்றியுண்டு நாம் சூழ்ச்சி செய்வோம்
வேடுவர்கள் 1 I :
என்ன செய்வோம் ஏது செய்வோம் எந்தன் தோழா! செப்பிடடா?
(வேடர்கள் 1, 11, மேடையின் இடப்புறக் கோடியில் நிற்க, I, IV இருவரும் வலது கோடியில் இருந்து இடது கோடிக்குச் செல்கிறர்கள். திட்டம் ஒன்றை இரகசியமாகக் கூறும் பாவனையில் வேடர்கள் 11ம், IVம் நிற்க, ம், 1ம் இரகசியத்தைக் கூர்ந்து கேட்கும் பாவனையில் உறை நிலையில் நிற்கிறர்கள். எடுத்துரைஞர்கள் இருபுறத்தாலும் தோன்றி கீழ் மேடையின் வலப்புறத்திலும் (D. R) கீழ் மேடையின் இடப்புறத்திலும் (D. L) நிற்கிறர்கள்)
எடுத்துரைஞர் 1:
ஆட்களைப் பாருங்கோ! யமகிங்கரற்றை அண்ண்ன் தம்பி மாதிரி ! நெட்டை குட்டை எல்லாம், பொல்லாங்கு செய்யுருங்கள் ; பொல்லாதவங்கள்.
எடுத்துரைஞர் I :
பொன் மயிலுக்கே இந்தப் பாடெண்டால் புதையல் கிதையலைக் கண்டா ஆசைப் பூதமாய் ஆவெண்டு நிப்பங்கள். இவங்களுக்கு குணமல்ல முக்கியம்.
எடுத்துரைஞர் I :
குறுக்கு வழி முக்கியம். காசுக்காறன் ஆக வேணும். கழுத்தறுத்தால் என்ன? களவெடுத்தால் என்ன?

- 17 -
எடுத்துரைஞர் 11 :
மரத்தை நம்பலாம் ; மனுஷனை நம்பேலா, அப்பாவி மயிலொண்டை அமுக்கிப் பிடிக்கவெண்டு, ஐயையோ அவங்கள், செய்யுற சூழ்ச்சியள். திருகு தாளங்கள்.
எடுத்துரைஞர் 1:
மருட்டியல்லே மயிலை மண்ணுக்கப் பாக்கிருங்கள். தாமரைப் பூ - கம்பளம் என்னென்ன மாயா ஜாலம் !
எடுத்துரைஞர் I :
சுவை காட்டி, சுவை காட்டி, குட்டிச் சுவராக்குவாங்கள்.
எடுத்துரைஞர் 1:
காதுக்கை ஏதோ ஒதுகிருங்கள். கள்ளக் கண்ணுகள் படுகிற பாடு !
எடுத்துரைஞ I :
அந்தப் பக்கமா போருங்கள் பாவியஸ் ,
எடுத்துரைஞர் 1:
ஆற்றை வாயுக்கை மண்ணே தெரியாது, அந்தா ! பாரப்பா இன்னெரு மயிலை அல்லோ கொண்டாருங்கள் இஞ்சை.
எடுத்துரைஞர் II:
ஒமோம் ! ஒரு மயில் : உயிர் மயில் !
3

Page 15
- 18 -
(வேடுவர்கள் நிற்க, மயில் ஒன்று அழகு நடையுடன் நடு மேடையின் இடப்புறத்தால் (C. L) வருகிறது. வலையை நிலத்தில் விரிக்கிருர்கள்; மறைந்திருக்கிறர்கள். அழகு மயில் வந்த மயிலை பார்த்தபடி முன்புறம் வந்து தோகை விரித்து ஆடுகிறது. அழகுமயில் ஆட்டமும் மெல்ல மெல்ல உச்சக் கட்டத்தை அடைகின்றது. மயில் ஆடிய ஆட்டத்தில் வலையில் சிக்குகிறது இசைக்குத்தக ஊமம் முறையில் தவிப்பு, வீழ்தல் நிகழ்கின்றன.)
அழகுமயில் :
(தவித்தட்டி) ஆ : .. ஆ. (சுழன்று வீழ்கிறது)
(வேடர்கள் ஆனந்தத்தில் துள்ளிக் குதித்து சுற்றிச் சுற்றி ஆடிப் பாடுகிறர்கள்.)
GnuG66nuffassir I II lII IV :
அகப்பட்டுக் கொண்டாரே - மயிலார்
ஆடி அடங்கினரே ! வலையிலை வீழ்ந்தாரே ! -- மயிலார் வீறும் இழந்தாரே ! வெற்றி வெற்றியடா - வீரா விஷயம் முடிந்ததடா. அகப்பட்டுக் கொண்டாரே-மயிலார்
ஆடி அடங்கினரே.
(ஆனந்த ஆட்டம் முடிகிறது.
வேடன் 1:
(மற்றவர்களைப் பார்த்து) பிடிப்போம் அதனை கொடுப்போம் அரசனிடம்.
வேடன் : 11
"பணம் பண்டம்" பெறுவம்; பரிசுகள் பெறுவம். உண்டு உடுத்து, சுகவாழ்வு வாழ்வம்.

- 19 -
அழகுமயில் :
(மெல்லத் தலையை நிமிர்த்துகிறது. ) நான் அவலப்படுகிறேன் ; தவிக்கிறேன். சிக்கலுக்குள் மாட்டுப்பட்டு வேத னை ப் படுகிறேன். உங்களுக்கு உல்லாசம் சுகவாழ்வு பெரிசாகப்படுகிறது. சுதந்திரமும் விடுதலையும் பறிபோனபின், வாழ்ந்தெனன் ? இருந் தென்ன? எனது இழப்பு எனக்குத்தான் தெரியும். கொஞ்சம் யோசியுங்கோ. (பூரண அமைதி நிலவுகிறது இசையும் நிற்கிறது. சற்று நேரத்தின்பின்)
வேடன் I :
என்ன? வீரா வேலா! ஒரு மாதிரி நிற்கிறியள் முந்தி ஒரு விதம், இப்ப.
வேடுவர்கள் 11 + I :
இல்லை ! அந்த மயிலைப் பார்க்கப் பார்க்க, அதன் பேச்சைக் கேட்கக் கேட்க ஏத்ோ ஒரு கசிவு-இரக்கம் அன்பு ஏற்படத்தான் செய்யுது.
வேடுவர்கள் IV + Y :
எங்களுக்கும் அப்பிடித்தான் இருக்குது. ஆன எப்பிடி சொல்வது எண்டு தெரியாமல் பின்வாங்கினம். அரசனிட்டை இந்த மயிலைக் குடுத்து அடிமையாக்கா மல், சுதந்திரமா இஷ்டப்படி உலாவவிட்டால் அது எவ்வளவு சந்தோஷப்படும்.
வேடுவர்கள் 11 + I :
ஒமோம் கொடுக்கவே படாது, பாவம் அது.
வேடன் 1: -
இப்படி வாருங்கோ !

Page 16
- 20 -
நடு நடுமேடைக்குச் (C. C)க்கு சென்று வட்டமாகக் குந்தி யிருந்து பேசாது சைகைகள் மூலம் முடிவெடுக்கிறர்கள். விடுதலை விடுதலை விடுதலை என்ற இசை பின்னணியில் ஒலிக்கிறது.)
வேடன் 1;
சொர்ன மயிலாரே ! உமக்கு ஒரு நல்ல செய்தி.
அழகு மயில் :
என்ன ?
வேடன் I :
உம்மை விடுதலை செய்யப் போறம்.
வேடுவர்கள் 11 + 11:
உம்மை இஷ்டப்படி வாழவிட்டால் நீர் சுதந்திரமாக ஒடுவீர்; ஆடுவீர்! குதூகலமாக வாழுவீர். வேடுவர்கள் IV :
சுதந்திரப் பறவையாய்ச் சுழண்டு வாரும் எங்கும் , விடுதலை விடுதலை எண்டு. இயன்றமட்டும் ஆடும்.
அழகு மயில் :
(சற்று தலையை நிமிர்த்துகிறது)
திடீரென்று ஏன் இந்த மனமாற்றம் ? விசித்திரப் பிறவிகளாய்த் தெரியுது எனக்கு.
வேடன் I :
உங்கடை தோற்றம் - அழகு, வடிவு, உங்கள் உயர்வு பற்றி ஏதேதோ பேசுது. அதனுலை சுதந்திரமாய் உலாவ விடுறதுதான் ஞாளும் எண்டு படுகுது.

- 21 -
அழகுமயில் :
என்னுடைய வடிவை வைத்துத்தான் இந்த முடிவுக்கு வந்தியளா ? அப்போ அவலட்சண மெண்டால் வேறை முடிவு எடுத்திருப்பியளா ? மனிதன்ரை பெரிய குறை பாடு இதுதானே.
வேடன் 1:
ல்லை, உங்களிட் டை இருக்கிற இன உணர்வு
总 总 இருக்கே ; அது எங்களை நல்லாய்க் கவருகுது.
வேடன் I :
தாமரைப்பூக்களைப் பரவித் தந்திரம் செய்து பார்த்தம்.
வேடன் I :
மயில் படம் இருக்கிற கம்பளம் விரிச்சுப் பாத்தம். எதிலுமே எடுபடயில்லை.
வேடன் IV :
உங்கடை இனத்துப் பறவை ஒண்டைக் காட்டினது தான் தாமதம், உங்களையே மறந்திட்டியள். இன ஒற்றுமைத் தன்மையைக் காட்டி விட்டியள். அவலத்தை கூடச் சிந்தியாத அளவுக்கு, உங்கடை ' இன உணர்வு" மேலை நிக்குது.
வேடன் :
சொந்த இனம் எண்ட நிலையிலை, அதோடை கூடி
ஒற்றுமையாய் வாழ, நிண்ட நிலை இருக்கே அதுக்கு நாங்கள் மண்டியிடுகிறம். அந்த உணர்ச்சியைக் கெடுத்து உம்மை பிரிக்கிறது நல்லதல்ல. சுதந் திரத்தைக் கெடுத்து நாசம் செய்யுறது மகா துரோகம் எண்டு உணருறம். வீரா 1 வலைச்சிக்கலை எடுப்பம்.
(சிக்கலை நீக்குகிறர்கள்)

Page 17
- 22 -
வேடன் 1:
ராசாவிட்டைக் குடுத்தா, உங்கடை வாழ்க்கை ஆனந்தமா ஓடும். அச்சாச் சாப்பாடு அடிக்கடி கிடைக் கும். ஆன, நினைச்ச நினைச்சபடி வாழுற இன்பம் இருக்கே அது கிடையாது.
வேடன் 11:
அடிமையா அழுந்தி அழுந்தி வேதனைப்பட வேண்டியது
தான்.
வேடுவர்கள் 1 I III :
இப்ப, கட்டுப்பாடில்லாத சுதந்திரப் பறவை, சுதந் திரப் பறவை !
அழகு மயில் :
நீங்கள் சாமானியர்கள் எண்டு நினைத்தேன். இப்ப தான் தெரியுது உங்களுக்கை எத்தனையோ இதயமுள்ள வர்கள் இலட்சிய மனிதர்கள் இருக்கிருர்கள் என்று. விடுதலையை, சுதந்திரத்தை மதிக்கிறீர்கள். மெத்த மகிழ்ச்சி. இந்த விடுதலை உணர்வு ஊரிலை, தேசத்திலை, உலகத்திலை வேரோடி வளருமென்ருல் இந்த உலகமே சொர்க்க பூமியப்பா.
வேடுவர்கள் 1, 11, II, IV :
இது தெரியாமல் இல்லை. இருந்தாலும் இடைக்கிடை நல்லதுகளை மறக்கிற பரம்பரைதானே நாங்கள். உங்களைப் பார்த்த பிறகுதான்.
அழகு மயில் :
சில பேர் விடுதலை விடுதலை என்று சங்கநாதம் போடு வார்கள். ஆனல், சாதனையிலை காட்டவே மாட்டார்கள். வலையை வெட்டி எனக்கு விடுதலை தந்த செய்கை மூலம் நீங்கள் சாதனை வீரர் என்று காட்டி விட்டீர்கள்.

- 23 -
சாதனை வீரர்கள்தான் இன்றைய தேவை. சுதந்திர உணர்வைத் திக்கெட்டும் பரப்ப உங்களைப் போன்ற நல்லவர்களால்தான் முடியும்.
வேடுவர்கள் 1, 11, 111, IV :
அப்படியானுல்
அழகு மயில்
விடுதலை உணர்வை, அடக்குதல் கூடாது. குவலயம் எங்கும் போதிக்க வேண்டும். எட்டுத் திக்கும் அணி நடை போடுவோம். சுதந்திரம் சுதந்திரம் என்று கோஷ மிடுவோம். அடக்கு முறையே! போ போ போ என்று தூஷிப்போம். விடுதலை உணர்வே வா வா வா என்று இரு கை நீட்டி வரவேற்போம். தொடரட்டும் எங்கள் இலட்சியப் பயணம். தொடருங்கள் என்ன. கொட்டுங் கள் முரசு விடுதலை வேண்டி!
(அணி வகுத்து பா இசைத்து, நாற்புறமும் நடக்கின்றனர்.) விடுதலை விடுதலை வீறுகொண் டெழுப்புவோம் ! திடமுடன் சங்கநாதம் திசையெட்டு முழங்குவோம் ! சுதந்திரம் சமத்துவம்
சகோதரத்துவம் ஜெகமதில் நிலைத்திட
நிதமாடிப் பாடுவோம்
விடுதலை விடுதலை வீறுகொண் டெழும்புவோம் ! திடமுடன் சங்கநாதம் திசையெட்டு முழங்குவோம் !
(விடுதலை என்ற பதம் விஞ்சி ஒலிக்கிறது.

Page 18

தாளக் காவடி
(5 T L s tid)
மேடையில்.
(1) அண்ணுவி கந்தப்பர் (2) தங்கம்மா (3) ஆர்மோனியம் ஐயாக்குட்டி (4) மிருதங்கம் முத்தையா (5) காட்டாண்மை நாகமணி (6) சைக்கிள்கடை துரை (7) முதலாளி கங்தையர்
(8) (9)
கங்தையரின் கையாட்கள் காவடி ஆடுபவர்கள்

Page 19
தாளக்காவடி
வானுெலியில்
l. 13 - 10 - 73 2. 27-10-73 (மறு ஒலிபரப்பு)
மேடையேற்றம்
1 மாவை கந்தன் sould
2. நடேஸ்வராக் கல்லூரி - காங்கேசன்துறை
3. சன்மார்க்கசபை . குரும்பசிட்டி
4. வசாவிளான் ம. ம. வித்தியாலயம்
5. இராமநாதன் கல்லூரி - மருதனுர்மடம் தனி நடிப்பு
6. கலை இலக்கியக்களம் . தெல்லிப்பழை 7. முரசொலிப் பரிசளிப்பு 8. ஐயனர் ஆலயம். சண்டிலிப்பாய்

தாளக் காவடிக்குரிய தாளக் கோர்வை சல்லாரி மிருதங்க ஒலியாகக் கேட்கிறது. திரை மெல்லென விலகுகிறது. மேடையின் மத்தியில் வலப்புறமாக அண்ணுவி வீட்டு முற் றம், அதனை அடுத்துத் திண்ணை தெரிகிறது. வீட்டுக்குப்பின் பக்கமாக ஒற்றையடிப் பாதை சென்று மடிந்து மேல்மேடை இடப்புற (U. L) மூலையில் தொடங்கி கீழ் - இட மேடைவரை (D. L.) நீழ்கிறது. அண்ணுவி கந்தப்பர் காவடி பழக வருபவர்களைக் காணுேமே என்ற உணர்வு முகத்தில்தெரிய வாங்கொன்றில் இருக்கிறர்.
கந்தப்பர் : (தாளம் தட்டுகிறர். பாடுகிறர்.1
தத்தி தகணக சொம்தரி கிடதக தாகு சிணுத சிணு தாகு சிணுத சிணு தாதா கிறுதக சொம்
இடது பக்கம் பார்வையைப் பாய்ச்சுகிறர் புறுபுறுக்கிருர், நேரவளிக்கு வந்தாதானே ? ஐயாக்குட்டியும் வர யில்லை இன்னம். பழகிற பெடியள் படு படு மோசம். பத்திக்கொண்டு வருகுது. (தாளத்தைப் பெரிய ஒலியில் ஆத்திரத்தைத் தீர்ப்பவர் போல போடுகிறர்.)
தத்தி தகணக சொம்தரி கிடதக தாகு சிணுத சிணு இன்னும் இவங்கடை சிலமனைக் காணம், வரட்டும் வரட்டும்; வடிவா கேட்கிறன். (வாங்கில் இருந்தபடி ஏதோ சிந்தனையில் ஆழ்கிறர். மிரு தங்க ஒலி உச்சஸ்தாயியில் விறுவிறுப்பாகக் கேட்கிறது. கந்தப்பர் விகாரமுற்று நடந்து கீழ் இடது (D. L.) மேடைக்கு வந்து நிற்கிறர்.

Page 20
- 28 -
கந்தப்பர் :
அண்ணுவி ஆறுமுகம் எந்தன் குரு அந்நாளில் பண்ணுேடு தாளமது தானெடுத்தால் கருத்தினிலே விண்கூவும் ஆட்டங்கள் வியத்தகு தீர்மானங்கள் கண்காண வைக்குமடா களிபேரு வகையாட
(பின்னணியில் பாடகர்குழு இசைக்கிறது.1
ஏலையெலோ தத்தையா ஏலையெலோ தா - என்று கப்பலாட் டமதை கச்சிதமாய் ஆட்டிநின்ருல் தெப்பம்போல் ஆடிடுவார் நீண்ட ரசிகர் குழு.
(குழு பாட்டொலி கேட்கிறது. கந்தப்பர் காவடியை எடுத்து வளைந்த பகுதியைச் செப்பமிடுகிறர். மனைவி தங்கம்மா தண்ணிச் செம்பை வைக்கிருள். உடுக்கு சத்தம் கேட்கிறது. உச்சஸ்தாயிக்கு எழுப்பப்பட கந்தப்பர் சிலிர்த்து விகாரமுறு கிறர். கீழ் நடு மேடைக்கு (D. C.) வருகிறர்.)
ஒரானைக் கண்ணே என்று உடுக்கடித்து பாடி ஆடி ஒய்யாரக் கரக மது தலையினிலே தான் ஏந்தி வாள் எடுத்து வடிவாக வளைந் தாடும் வேளையிலே எந்தன் குரு ஆறுமுகம் அசல் அம்மன்போல் வருவான்.
கூத்தும் காவடியும் வசந்தன் கோலாட்டமும்

سس- 29 --
மத்தளமும் தாளமும் கரகம் உடுக்கதுவும் மக்கள் "கலையாட மறவாதே ” என்பாரடா
Drrarontiù o autp' 6Taituiti * மதி"இதனை தான் என்பார்.
(காவடி பழகுபவர்கள் வரும் சத்தம் கேட்கிறது. குறும்பு களும் தெரிகிறது.)
கந்தப்பர் :
இவ்வளவு நேரமும் எங்காலை வாறியள் ? சேட்டை கீட்டை இஞ்சை வேண்டாம். மாட்டுவால் மாதிரி கீழை போறியள். என்ன பாக்கிறியள். புளியந்தடி யாலை, சுளரச் சுளர அடிவேண்டி காவடி பளதினஞங் கள் நாங்கள். இளிச்சது காணும். தடியளை எடுங்கோ, கழுத்திலே வையுங்கோ முன்னுக்கு வாருங்கோவன். ம். வடிவா நில்லுங்கோ. (பிள்ளையன் தடியளை எடுக்கக் குனிகிறர்கள். மனைவி தங்கம்மா பார்க்கிருள்.
தங்கம்மா :
தம்பியவை. உவர் உப்பிடித்தான் முறுகுவர்; கொதிப் பர், துள்ளுவர், பயப்பிடாதையுங்கோ. தளண்ட வயதிலையும் தத்தி, தகதி எண்டு துள்ளின, ஆருக் குத்தான் சிரிப்பு வராது.
கந்தப்பர் : (மனைவியைப் பார்த்து)
நீ உன்ரை பாட்டைப்பாரப்பா, தேத்தண்ணி கிடந்தா பெடியளுக்கும் குடும்.
தங்கம்மா
விடிஞ்சா பொழுதுபட்டா எத்தனை தரம் தேத்தண்ணி

Page 21
- 30 -
கந்தப்பர் :
பிள்ளையஸ் நேரமெண்டா நேரம். கண்டிப்பா சொல் லுறன் . நேரவளிக்கு பழக வந்திடுங்கோ. (ஆர்மோனியம் ஐயாக்குட்டி வருகிருர்.)
ஐயாக்குட்டி :
அண்ணை பிந்திப் போனேன் போலை கிடக்கு, என்ன நான் செய்ய, குடிலுக்கை பொயிலை தூக்கிப்போட்டு, பொச்செல்லாம் அடுக்கி மூட்டிப்போட்டு ஒட்டமா வந்தனன்.
கந்தப்பர் :
கதைய்ப்பா கதைய்ப்பா நல்லா கதைய்ப்பா, கதையை விட்டிட்டு வா சி யும் பெட்டியை. ஆர்மோனிய பெட்டியை எடும்.
தாள ஒலியும் ஆர்மோனிய ஒலியும் இணைகிறது. கந்தப்பர் பையன்களுக்கு ஆட்டம் பழக்குகிறர்.)
தெய்யத் தா ஆ ஆ ஆ, ஆ ஆ. தாகுட சுந்தரிதெய் செல்வ சந்நிதியிலே யமரும் பன்னிருகை வேலவனே தா - தக தாகுட சும்தரி தெய் தத்தா ஆ அகனி தா நீ தில்லில்லான சுந்தரி தெய் சுந்தரி தா
சுந்தரி தெய்
நீ தில்லில்லான
சுந்தரி தெய் செல்வ சன்னிதியிலே யமரும் பன்னிருகை வேலவனே தா.
(ஆட்டத்தில் பிழை நிகழ்கிறது)

- 31 -
என்ன செய்யுறியள், காவடி ஆட்டமோ இல்லை.
கழுதை, ஆட்டமோ ? ஆடுறதெண்டா ஆடுமா
போலை ஆடுங்கோ. சொல்லித்தரயுக்கை கவனிக்
கிறதில்லை. பிறகு உங்கடைபாடு. இப்பிடியல்லே
ஆடச்சொன்னனன். (ஆடிக் காட்டுகிறர் கந்தப்பர்.)
சரி இந்தத் தீர்மானத்தை ஒருக்கா ஆடிப்பாருங்கோ.
** தித்தாம் கிறுதக
தித்தாம் கிறுதக
தித்தாம் கிறுதக
தீந்தத் தோம்
தித்தாம் சிறுதக தோம்
தித்தாம் சிறுதக தோம்
தகுத தீந்தக
ததீம் தத்த தா.
(பிள்ளைகள் ஆடுகிறர்கள்]
இப்ப சரிவருகுது. புண்ணியம் கிடைக்கும் வீட்டுக்
கோடிக்கு பிறத்தாலை எண்டாலும் ஆடிப்பாருங்கோ
ஐயாக்குட்டி அண்ணை!
அந்தக் கப்பலாட்டப் பாட்டிலை கொஞ்சம்.
ஐயாக்குட்டி :
கிடங்குக்கை எப்பன் தட்டையன் பொயிலை போட
வேணும். வெள்ளண எப்பன் போக விட்டிடுங்கோ.
கந்தப்பர் :
இப்ப முடிஞ்சிடும் காணும், முடிச்சிட்டுப் போமென். எப்பவும் சுடுகுது மடியைப் பிடி . எண்டுகொண்டு .
ஐயாக்குட்டி சரி சரி
(கப்பலாட்ட பாட்டு ஒத்திகை நடக்கிறது.)
கந்தப்பர்:
ஏலையெலோ தத்தையா
ஏலையெலோ ஏலம் சிலாபமும் மன்னரும் கண்டு

Page 22
- 32 -
எழில் மேவு பாம்பன் வாய்க்காலும் தாண்டி சீரான புத்தளம் கற்பிட்டி முனையும் சிறப்போடு தாண்டி போகுதடா கப்பல் நீர்கொழும்பு தெரியுதடா - தென்றல் நேராக வீசுதடா - ஏலோ
ஏலையெலோ தத்தையா ஏலையம்மா ஏலையெலோ தத்தையா ஏலையம்மா.
தங்கம்மா : (தேநீர் தட்டுடன் வருகிறள்)
இந்தாருங்கோ தேத் தண்ணி. ஆசறுதியா குடியுங்கோ. தொண்டையும் கறக்கு புறக்கு " எண்ணுது. நான் எப்பன் மயிலியா கலட்டித் தோட்டத்துக்கு போட்டு வாறன், கெட்டெடுக்க வேணும். அழுக்கணவன் பிடிச்ச பொயிலைக் கண்டுகளையும் வெட்டி போட வேணும் தோடத்துக்கை கிடக்கிற வேலை வெட்டி : திடம் புரளு றேன் நான். நீங்க, “ தகணக தகணக " " தத்தி தகண "
போடுறியள்.
கந்தப்பர் :
தம்பியவை வடிவா குடியுங்கோ. ஐயாக்குட்டி ! பறுவத்தில் அண்டுதான் காவடி, மிருதங்கம் முத்தை யனைக் கண்டா சலங்கை கட்டி ஆடுற ஆட்ட நாள்
கிட்டடியிலை வருகுதெண்டு சொல்லும்.
ஐயாக்குட்டி :
அடிக்கடி சந்திப்பன் தானே சொல்லுறன் : அண்ணை.
ஐயாக்குட்டி செல்கிருர், ஏதோ ஊர்வல ஒலங்கள் கேட் கின்றன. ஒழுங்கையில் மேல்மேடை வலப்புறத்தில் (U R) இருந்து இடப்புறப்பக்கமாய் 26IIfr6x16ծլք வருகிறது. நாகமணி
முன்னலே வாரும்
நாகமணி (பாட்டாக கோஷமிடுகிறர்)
வெற்றி வெற்றி முதலாளிக்கு மண் கவ்வினன் வடுவாப்பயல்

- 33 -
அசைக் கேலா எங்க பக்கம் ஆருக்கடா காட்டுறியள் ?
(நாலுபேர் மெல்லிய ஆட்டத்துடன் மீட்கிறர்கள்.)
நால்வர் " அ " " ஆ* இ 'ஈ' :
எட்டாம் வாட்டில் போட்டியிட்டார் எண்பதாலை தோற்கடிச்சார் மண் கவ்வினுன் மடையனவன் * மயிர் " உனக்கு மான முண்டா ?
நால்வர் அ, ஆ, இ, ஈ :
(ஆட்டத்துடன் கோஷமிடுகிறர்கள் முற்றத்தில் நிற்கும் கந்தப்பர் கோபத்துடன் தாளத்தை பலமாகத் தட்டுகிறர்.
நாகமணி : (எள்ளி நாகையாடுகிறர் பாடுகிறர்]
அறுகம் புல்லு மீசை ஒண்டு புடலங்காய் கைகள் ரண்டு தட்டி விட்டால் கறணம் போடும் தேவாங்குனக்கு தேர்தல் ஆசை.
நால்வர்: "அ" "ஆ" "இ’ 'ஈ' :
(மீட்டுப்பாடி நையாண்டி ஆட்டம் போடுறர்கள். வெற்றி வெற்றி முதலாளிக்கு மண் கவ்வினுன் வடுவாப்பயல் அசைக்கேலா எங்கள் பக்கம் ஆருக்கடா காட்டுறியள். (கோபம் கூட கூட தாளக்கட்டை உச்சஸ்தாயியில் உச்சாட னம் செய்கிறர் கந்தப்பர். பலம் கூட்டித் தாளம் தட்டுகிறர்.
கந்தப்பர் :
தித்தாம் கிறுதக கித்தாம் கிறுதக தித்தாம் கிறுதக தீந்த தீம்
5

Page 23
- 34 -
தித்தாம் கிறுதக தீம் தித்தாம் கிறுதக தீம்
நால்வர் * அ, ஆ, இ, ஈ :
முதலாளி மிடுக்கென்ன ? முன்னே வைக்கும் நடை என்ன ? போடு மாலை பொலிவாக பாடு அவர் " பவர் பற்றி
(முதலாளிக்கு மாலை போட்டு, மேல்மேடை இடபக்க மூல யால் திரும்பி, கீழ்மேடை இடப்பக்கத்துக்கு வருகிருர்கள்.) பொடிப்பயலாம் பொன்னுக்கோனை போட்டி போட விட்டினியோ அடிபோட்டம் "அசல் அடிதான் அண்ணுவி ஆவெண் ணுருர் வெற்றி வெற்றி முதலாளிக்கு வெருளிப் பயல் அண்ணுவி
காலம் இப்ப சரியெல்லை
கவனமாக நடவுங்கோ!
நாகமணி :
கோலங்கள் பிசகுது கொழுப் பெடுப்பம் நிட்சயமாய் போட்டி போட விட்டனியோ பொன்னுக்கோனை எமக்கெதிராய் பத்திரமாய் நடவுங்கோ பல்லெல்லாம் பறக்கும் தம்பி பணம் உண்டு பவருண்டு பக்கபலம் மிக உண்டு.
ஆடியபடி ஊர்வவம் மறைகிறது .1
ஐயாக்குட்டி :
வெறி ஏறின எல்லாம் வரும் எதுகும் வரும்.

- 35 -
கந்தப்பர் :
மண்டையுக்கை ஏதும் கிடந்தாதானே. ஏவல் பேயஸ் ,
ஐயாகுக்டி :
பணம் கொஞ்சம் இழக்கியிருப்பர்.
கந்தப்பர் :
அதுக்கு நக்கித்திண்டே வாழவேணும்.
ஐயாக்குட்டி :
பொழுதும் படுகுதுபோலை. நான் வாறன் அண்ணை.
கந்தப்பர் :
பிள்ளையன் நீங்களும் பின்னை வாருங்கோணை. வீட்டிலை யும் ஆடிப்பாருங்கோ.
ஐயாக்குட்டியும் பிள்ளையஞம் செல்கிறர்கள் ஊர்வலத் தில் நடக்கமுடியாத போதைநிலையில் வந்த துரை தள் ளாடியபடி மேல் இடப்புறத்தில் இருந்து கீழ் இடப்புற மூலைக்கு வருகிறர். தலையில் வாழையிலைக் கட்டுடன் தங்கம்மா மிடுக்கு நடையுடன் வருகிறள் கீழ்வல மேடை யில் (D. R.) தொம், தொம் என்ற ஒலிக்கு போட்டுவிட்டு திரும்பவும் மிடுக்கு நடையுடன் (C. C) நடு மேடைக்கு வருகிருள்.
தங்கம்மா :
பெரிய நாட்டாண்மை காட்டிச்சினமாம். ஆடிச்சின மாம், பாடிச்சின மாம்; "அட்டட்டாரே " போட்டின மாம், நொட்டை நொடியல் விட்டினம்ாம். பேய்க் கிணத்தடி வயிரவ கோயிலிலை கனபேர் கதைச்சினம். நல்லா குடுத்தியளோ ? இல்லை.
கந்தப்பர் :
நாயஸ் குலைக்குதெண்டு, மணிசரும் குலைக்கிறதே.

Page 24
- 36 -
தங்கம்மா :
கண்டறியாத கந்தையர் ந க் கித் தின் னி நாகமணி அவைக்கு தான் வோட்டு போட வேணுமெண்டு, எழுத் திலை இருக்கோ ? பொன்னுக்கோன் பொடியன்ரை கால்தூசிக்கு சமமே இவங்கள். இந்த வளவுக்கையும் கால்கீல் வைச்சவங்களோ?
கந்தப்பர் :
ஒழுங்கையாலைதான் ஏதோ உலுப்பினுங்கள்.
தங்கம்மா :
அதாரது? ஆடுகுது ஒரு கறுமம். சயிக்கிள் கடை துரை போலை . துரை கீழ் இட (D. L ) மேடைக்கு வந்து நிற்கிறர்.)
துரையன் :
அண்ணுவி! நான் குடிகாரன்தான். குடிச்சாலும் நிதான மாத்தான் பேசுவன். அண்ணுவி! நீ கடவுளுக்கு சமன். என்ரை பெடியனுக்கு புலுமிலிச் சிலந்தி கடிச்சு அவன் பட்ட வேதனை. குறண்டிக்கொண்டு வந்துது அந்த நேரத்திலை நீ பாத்த விஷகடி பார்வை சரியாத் தொழில் செய்திருக்கு. அவனுக்கு உயிர் வரப்பண்ணி னது நீதான். உன்னைக் கேட்டுத்தான் விஷகடி பார் aboud (5 You are a wonderful man.
தங்கம்மா :
இங்கிலீசும் த டல்புடலா வருகுது. பத்துமணிக்கு மேலை எல்லாம் வரும்.
துரை :
தங்கம்மா! உன்ரை மனுஷனை நீ பூ போட்டு கும்பிட வேணும். தங்கப்பவுண் மனுஷன் என்ரை மேனுக்கு உயிர் குடுத்த . குடுத்த . uLu LDGör.

- 37 -
தங்கம்மா :
(கொடுப்புக்கை சிரிக்கிருள்) உமக்கு பிரமன் யமனத் தெரியுது. யமன் பிரமனுத் தெரியுது. உம்மிலை பிழையில்லை. அது கந்தையர் தந்த கறுப்பு செய்த வேலை.
துரை :
அண்ணுவி I dont forget you, இந்தா இந்த இருபது ரூபாவை பிடி அண்ணுவியார்.
5šaka út Lor :
(சிரிப்பை அடக்கியபடி) அவர் இஞ்சாலை நிற்கிருர் நீர் அங்காலை நீட்டுறிர்.
துரை :
இதைப் பிடியப்பா.
கந்தப்பர் :
பார்வை பார்த்ததுக்கு புது நோட்டா இருபது ரூபா தந்திட்டியள்தானே. வேண்டாம் தம்பி.
துரை :
என்ரை பெடியன் சோதினை எடுத்ததே உன்னலை. நேர வளிக்குப் பார்வைபாத்து விஷத்தை இறக்கினது நீ. Liugului Lurr.
கந்தப்பர் :
உதை நீர் வைச்சிரும் ; வீட்டிலே குடுமன்.
துரை :
சரி, அப்பிடி யெண்டா ஒண்டு செய்வம் ஒரு கிழமை யுக்கை என்னுேடை ஒரு Special அடிக்க வேணும் yes or no.

Page 25
கந்தப்பர் :
அதெல்லாம். . . பிறகு. . . . . In tiltib.
துரை :
அப்ப வாறன்.
25 is soor
எப்பன் விழுந்து கொட் டுண்ணு  ைத யுங்கே .B_fr ங்கோ) חמוז68%זrr_ו$)
துரை :
air spoir. I am going. going I am. g. ஒரு விஷயம். எங்கடை பெரியவ; முதலாளிக்கு உம்மிலே கொஞ்சம் கறள்.
கந்தப்பர் :
இவ்வளவும் பின்ன கம்மாவே ' *LD/rað)Grég 6ð6), இவடத்தை .
துரை :
எனக்கும் சடையா உன்ரை போக்கு பிடிக்கையில்லை. கிராமச் சங்க எலெக்ஷனிலை எங்கஆ எதிர்த்திருக் கிரு. உங்கடை பகுதியாலே ஒரு வோட்டும் (p5 லாளிக்கு விளயில்லை.
5i &stibuont :
எங்கடை மனச்சாட் சிப்படி துண்டை போடுறதோ, உங்கடை தாளத்துக்கு மிதிக்கிறதோ ?
துரை :
முந்த நாள் பிறந்த பொடிப்பயல் பொன்னுக் கோனுக்கு வோட்டு போட்டிட்டு ஞாயம் பேசுறியள்' உந்தப் போக்கு நல்லதுக்கல்ல. மற்றபடி நீ அச்ச மனுஷன், அண்ணுவியை எப்பன் யோசனையோடை நடக்கப் பண்ணு தங்கம்மா.

- 39 -
தங்கம்மா :
யோசிச்சு நடக்கத் துவங்கி இப்ப பத்து பதினைஞ்சு வருஷமாச்சு. இப்ப உங்கடை ஆக்களின் ரை சூத்திரங் கள் விளங்கும். பாட்டன் பூட்டன் காலமே இப்ப.
துரை :
பெரும் கையளோடை கண்டு சாஞ்சு நடவுங்கோ. நான் வாறன் ஆளு), அண்ணுவியார் 1, முதலாளிக்கு உன்ரை கூத்து, காவடி ஆட்டங்களிலை நல்ல பிடிப்பு. புழுகு புழுகெண்டு புழுகிறவர். எலெக்ஷன் விஷயம் தான் அந்தாளுக்கு அப்பவாறன்.
(அண்ணுவியார் வீட்டுத் திண்ணையில் சாக்கு பாய், தலையணை, பெட்டி முதலிய பல பொருட்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருக்கின்றன. தவறிய ஒரு பொருளைத் தேடுதோடன்று தேடுகிறர் அண்ணுவியார் ; அந்தர பவனி யில் நிற்கிறர். தேடியபடி புறுபுறுக்கிறர் : முறுமுறுக்கி (mgr. )
கந்தப்பர் :
சை இந்த ஐம்பது ரூபா நோட்டும் பின்னை எங்கை போய் துலைஞ்சுது. ஆர் மோனியம் வாசிக்கிற ஐயாக்குட்டியிட்டை, அல்லாட்டி மிருதங்கம் முத் தையாவிட்டைக் குடுக்கேனே. இருக்கும் ; இருக்கும். முந்த நாள் ஆர்மோனியம் ஐயாக்குட்டியிட்டை பத்து ரூபா நோட்டு ரண்டு குடுத்தஞன். முத்தையா விட்டை இருபது ரூபா குடுத்தஞன். பத்து ரூபா நோட்டெண்டு நினைச்சு ஐம்பது ரூபா நோட்டை இவங்களிலை ஒருத்தனிட்டைக் குடுத்திட்டன் போலே கிடக்கு. இந்த நாளையிலை ஐம்பது ரூபா நோட்டும் சரியா பத்து ரூபா நோட்டு மாதிரித்தானே. வேண்டின வன் இதுதான் தாயமெண்டிட்டு அமுக்கிப் போட்

Page 26
- 40 -
டான். இந்தக் கூத்துக்காறங்கள் பக்க வாத் திய காறங்கள் பாட்டுக்காறர் எல்லாம் ஒரு சதத்துக்கு நம்பேலா சாதியள். காசெண்டால் காணும் எதுகும் செய்வங்கள். ஐயாக்குட்டியன் வரட்டும் வரட்டும். கேட்கிறன் கேள்வி. (ஆர்மோனியம் ஐயாக்குட்டி வருகிறர்}
கந்தப்பர் :
என்ன நேரகாலத் தோடை
ஐயாக்குட்டி :
கடைசி ஒத்திகை ஆறுமணிக்கெண்டு சொன்னியள். அண்ணை அதுதான் நேர காலத்தோடை வந்தன். மறந்து கிறந்து போனியளோ ?
கந்தப்பர் :
பொழுது பங்கை பனைவட்டுக்கைதானே நிக்குது. இன்னும் ஒரு மணித்தியலாம் கிடக்கு. முத்தையாவும் வரத்தானே வேணும். ஐயாக்குட்டி ! சின்ன ஒரு விஷயம். கேட்கிறன் எண்டு குறை நினையாதை.
ஐயாக்குட்டி :
கேழுங்கோ அண்ணை. அப்பிடி என்ன ?
கந்தப்பர் :
" அல்லி அருச்சுணு ' நாடகம் முடிஞ்சதும் கணக்கு வழக்கு தீர்க்க வெண்டு அண்டு ஐந்நூறு ரூபாய் தந்த வங்கள். அதிலே உன்னட்டை இருபது ரூபா தந்தனன் அல்லோ?
ஐயாக்குட்டி :
ஒமண்ணை ஓம். பத்து ரூபா தாள் ரண்டு தந்தனிங்கள் புது நோட்டா.

- 41 -
கந்தப்பர் :
அதிலை தானப்பா பிச கொண்டு நடந்துபோச்சு.
ஐயாக்குட்டி :
அப்பிடி என்ன நடந்திட்டு தண்ணை குற்றம் குறை இருந்தா பேசித்தீர்ப்பம்.
கந்தப்பர் :
ஐம்பது ரூபா குறையுது மேனை. அநியாயமா இது எங்கை போச்சு. கூத்து முடிஞ்சதும் பத்துப் பத்து தாளுகளாக இருபது ரூபா தந்தனன். பத்து ரூபா தாள் எண்டு நினைச்சு ஐம்பது ரூபா நோட்டை தந்திட்டன்.
ஐயாக்குட்டி :
அண்ணையாணை என்னட்டை அப்பிடி கூடுதலா காசு வந்ததில்லை. என்னைப் பெத்த ஆச்சியாணை சத்தியம் பண்ணுறன் இது உண்மை. கைபிழைபாடா வந்த தெண்டா, திருப்பித்தராமல் விட்டுடுவேனே. அப்பிடி நான் ஒரு போக்கிலிப்பயலே!
கந்தப்பர் :
என்னவோ, ஏதோ, ஆரோ ஒரு ஆளிட்டைத்தான் இந்த ஐம்பது ரூபா தாள் போட்டுது. எடுத்தாள் அமசடக்கியாய் இருக்கிறது தான் பெரிய அதிசயமாக் கிடக்கு. A
ஐயாக்குட்டி :
அது கிடக்க அண்ணை, ஆறு மணிக்குத்தானே ஆட்டம் தொடங்கப் போறியள்.
கந்தப்பர் :
ஓமோம். ஏன் ? அலுவல் எண்டு கழட்டுற நோக்கமோ?

Page 27
- 42 -
ஐயாக்குட்டி :
இல்லை அண்ணை உதிலை ஒருக்கா சங்கக்கடை மனேச் சரிட்டை அவசர அலுவல்.
கந்தப்பர் :
செய்யுறதை செய்யப்பா. சுணங்காமல் எப்பன் வந்திடு. போற வளியிலை, முத்தையா வீட்டு படலையை திறந்து பார். நிண்டா கிண்டா, மிருதங்கத்தையும் கொண்டு நேரத்தோடை வரச் சொல்லு.
ஐயாக்குட்டி :
கதையுக்கை கதை காலுக்கு கட்டுற சலங்கை ஒரு சோடிதான் அண்ணை கிடைச்சுது. மற்ற ரண்டு பேருக்கு என்ன செய்யப் போறியள்.
கந்தப்பர் :
வேறை சோடி சலங்கை கிடக்கு. அதுகளைப் பற்றி உனக்கேன் கவலை. நீ எப்பன் கெதியா வந்தாக் காணும்.
ஐயாக்குட்டி :
இப்ப வாறன் போறதும் வாறதுமா.
[ஐயாக்குட்டி செல்கிருர், துலைந்த பணம் பற்றிய எண்ணம் அண்ணுவியைக் குடைகிறது.)
கந்தப்பர் :
ஐம்பது ரூபாத் தாள். அநியாயம் எங்கை போச்சுது. ஐயாக்குட்டி தாயைக் கொண்டு சத்தியம் செய்து போட்டான். எடுத்திருக்க மாட்டான். அவன் ரை முகம் பேச்சு எல்லாத்திலும் கள்ளத்தை காணம், அப்ப, மிருதங்கம் முத்தையாவிட்டைத்தான் போய் முடங்கிக் கிடக்கு. இவர்தான் மச்சான் எனக்கு கயிறு விடுகிருன், முத்தையன்ரை கண்ணே பூனைக்கண். சொத்து பத்து சேர்க்க வேணும், சீட்டுக் கீட்டு பிடிக்க

- 43 -
வேணும் எண்ட ஆசையும் இவனிட்டைத்தான் கிடக்கு. கள்ளப்பயல் வரட்டும். குடுக்கிற குடையிலை தாருனே இல்லையோ பாப்பம்.
தங்கம்மா :
ஐம்பது ரூபா தலையிடி பின்ன இன்னம் தீரயில்லையூே"
கந்தப்பர் :
அதையேன் பேசுவான். நாளைக்கு மறுவன் புலவுக்கு போய், கணபதிப்பிள்ளையைக் கண்டு பிடிச்சு, ஐம்பது ரூபா அச்சவாரம் குடுத்து, செண்டு வைச்ச மூண்டு காவடி திறமா கொண்டுவா எண்டு சொல்ல இருந்த ஞன். ஆஞ, இப்பிடிக் கைபிழை பாடா காரியம் நடக்கு மெண்டு கனவிலும் நினைக்கையில்லை. முத்தையன்தான் இப்ப வம்பு பண்ணிப் போட்டான்.
தங்கம்மா :
மயிலியாகலட்டி ஆயிரம் கண்டு தோட்டத்தை வடிவா செய்து கொண்டு இடைக்கிடை விஷகடி பார்வை யளையும் பார்த்தா, வாற வரும்படிகாணும் திறுத்தியா சீவியம் விட எண்டால் கேட்டத்தானே. காவடி, கரகம், கூத்து கீத்து எண்டு நாண்டு கொண்டு நிண்டு மண்டையைப் போட்டு உடைக்கிறியள்.
கந்தப்பர் :
நீ சொல்லுற மாதிரித்தான் இனிமேல் செய்யப் போறன். இப்ப நாளையிண்டைக்கு காவடியளுக்காக அச்சவாரம் கொடுக்க வேணுமே அதுக்கெண்டு வைச்ச ஐம்பது ரூபாதான் அநியாயமா. . . சை. இந்த அநியாயத்தை ஆருக்கு சொல்ல.
தங்கம்மா :
LD . . . ... என்ன செய்யுறது. மனசு கேட்குதில்லை. இந்தாருங்கோ இதிலை நாற்பது ரூபா கிடக்கு. அச்ச

Page 28
- 44
வாரத்துக்கு குடுங்கோ. பிறகு காசு கீசு வரயுக்கை தாருங்கோ. அண்டைக்கு இஞ்சை வந்து பார்வை பாப்பிச்ச பரமாந்தற்றை மனுஷியிட்டை கடன வாங்கினனன் துணிவாங்க. (கோவில்மணி ** டாண் டாண் ' என்று கேட்கிறது.1
தங்கம்மா :
பங்கை மணி கேட்குது. பூசை நடக்கப் போகுது கும்பிட்டிட்டு ஒட்டத்திலை வாறன். (தங்கம்மா வெளியே செல்கிறள்.)
கந்தப்பர் :
அவலப்படயுக்கை உதவுறத்துக்கு மனுஷயைக் கேட்டுத் தான். தூக்கித் தந்திட்டுதே நாப்பது ரூபாவை. ஐம்பது ரூபாவை கவனமில்லாமல் துலைச்சிட்டேன். நானுமொரு. அட 1 அட ! ஞாபகம் வருகுது. ஆ ஆ . அந்த தலையணி உறயுக்கையல்லே வச்சணுன். மனுசிக்கு தெரியாமல் காசு வைச்செடுக்கிற தலையணை உறை
யுக்கை வைச்சிட்டு நான்பட்டபாடு.
(தலையணை உறையுக்குள்ளாலே ஐம்பது ரூபாய்த் தாளை எடுக்கிறர். வாய்விட்டு சிரிக்கிருர், துள்ளுகிறர், தாளக்கட்டு சொல்லிச் சொல்லி மெல்ல துள்ளி ஆடுகிறர்.)
தத்தி தகணக சொம்தரி கிடதக
தக்தித் தகணக 象岛 Ο Φ. தத்தி தகதி தத்தி தகதி ஆ ! கோயிலுக்கு போட்டா. ஆர்மோனியம் ஐய்யாக்குட்டி எடுத்தான் முத்தையன் எடுத்தான் எண்டெல்லாம் அவங்களை ஏசி பேசி திட்டிப் போட்டன் என்ரை பேய்த்தனம்.
இப்ப ஐம்பது ரூபாவை அச்சவாரமா குடுப்பம். நாப்பது ரூபா மனுஷி தந்தது. மரியாதையா அதை மனுஷியிட்டைக் குடுப்பம். அதுதான் ஞாயம்.

- 45 -
[யோசிக்கிறர்] சை மனுவிக்கு சொல்லப்படா நடந்த விஷயத்தை. நாப்பதுக்கும் வெள்ளை போத்தல் சாராயம். அடிச்சா ஆ ! ஆ ! மற்ருக்கள் வரமுந்தி மணியம் கடைப்பக்கம் போய், ஒரு கிளாஸ் அடிச்சிட்டு உஷாரா வருவம்.
தங்கம்மா : தங்கம்மா வருகிருள்)
வடிவா கும்பிட்டன். ஆட்டம் முடிய எல்லாருக்கும் தேத்தண்ணி குடுக்கத்தானே வேணும்.
கந்தப்பர் :
ஆயுத்தப்படுத்து. நான் போய் ஆடுற பெடி யளைக் கெதிப்பண்ணிக் கூட்டி வாறன். முத்தையாவிட்டை யும் போட்டு வாறன், குடிகாறப் பயல் அவன் வராமல் நிண்டும் விடுவன். மண் ணெண்ணை விளக்கையும் கொழுத்திவை. நிலவும் இருக்குத்தான்.
(அண்ணுவி கந்தப்பர் வீட்டு முற்றம். மூன்று சிறுவர்கள் கழுத்திலே காவடிகளைத் தாங்கியபடி நடுநடு மேடையில் (C. C.) நிற்கிறர்கள், மேல்மேடை, வலப்புற இடப்புற பகுதிகளில் பார்வையாளர்கள் பலர் கூடி நிற்கிறர்கள் . கீழ்மேடை வலத்தில் (D. R.) அண்ணுவி கந்தப்பர் தாளத் துடன் நிற்கிருர். ஆர்மோனியம் ஐயாக்குட்டி, மிருதங்கம் முத்தையா பக்கவாத்திய சகிதம் இருக்கிறர்கள். அண்ணுவி மனைவி தங்கம்மா கொட்டில் வாசலடியில் நிற்கிருள் சலங்கை கட்டி ஆடும் இறுதி ஒத்திகைக்குரிய ஆயத்தங் கள் தெரிகின்றன.)
கந்தப்பர்;
தம்பியவை காட்டித் தந்தமாதிரி வடிவாக ஆட வேணும். பிழை ஒண்டும் திருத்தமாட்டன். தாளத்தை

Page 29
- 46 -
வடிவா கவனிச்சுக் கொள்ளுங்கோ. ஐயா க் குட்டி அண்ணை முத்தையா! தொடங்கலாம்தானே. பிராக்கு பாக்காமல் சுத்தமா ஆடுங்கோ. (மிருதங்கம் ஒலிக்கிறது. அண்ணுவியார் தாளம்தட்டுகிறர்) தெய்யத் தா ஆ ஆ . முரளி சரணம் என்றடிய வர்க்கே
தெய்யத் தா ஆ ஆ . முரளி சரணம் என்றடிய வர்க்கே.
தங்கம்மா :
அங்கை நாட்டாண்மை நாகமணியும் சைக்கிள் கடை துரையரும் வருகினம்.
கந்தப்பர் :
(சிரித்தபடி) வாருங்கோ தம்பி வாருங்கோ.
நாகமணியும் துரையும் கிட்ட வருகிறர்கள்.) என்ன ஏதன் முக்கிய அலுவலோ ?
நாகமணி :
அப்படி யொண்டுமில்லை. இண்டைக்குத்தான், சலங்கை கட்டி, தாளக் காவடி ஆட்டம் ஆடுறியள் எண்டு கேள் விப்பட்டம். பின்னைப் பாப்பம் எண்டிட்டு, துரையரை யும் கூட்டிக்கொண்டு வந்தனன். குழப்பிப்போட்டன் போலே,
கந்தப்பர் :
நீங்கவந்தது எங்களுக்கு பெருமையல்லோ, குறை நினையாதையங்கோ. கிழிஞ்ச பாய்தான் கிடக்கு. மண்கிண் பிடிக்கப்பாக்கும். வேட்டியளும் .
நாகமணி :
மற்றவைமாதிரி நிண்டு பாக்கிறம். அப்பத்தான், நல்லா தெரியும்.

- 47 -
கந்தப்பர் :
சரிசரி வடிவா பாருங்கோ. தொடங்குறன்.
(தாளம் தட்டியபடி.)
EIG செல்வ சந்நிதியிலே அமரும் பன்னிருகை வேலவனே - தா - தக தாகுட சுந்தரி தெய். செல்வ சந்நிதியிலே அமரும் பன்னிருகை வேலவனே தா - தக தாகுட சுந்தரி தெய்.
தாளக் கட்டு தத்தி தகணக சொம்தரி கிடதகண தாகு சிணுத சிணு தாகுசிணுத சிணு தா தா கிறுதக சொம். தகதி தகணக சொம்தரி கிடதக தாகு சிணுத சிணு தாகு சிணுத சிணு தாதா கிறுதக சொம். தத்தி தகணக சொம்தரி கிடதக, தகதி தகணக சொம்தரி கிடதக, தத்தி, தகதி, தத்தா கிறுதக சொம். தத்தா கிறுதக சொம். தகுத தீம்தக, ததீம் தத்த தா. தெய் தெய் தெய் தெய், தெய் தெய் தெய் தெய். தரிதொம், தரிதோம், தரிதொம், தரிதொம். தித்தாம் கிறுதக, தித்தாம் கிறுதக, தித்தாம் கிறுதக, தீந்த தீம். தித்தாம் கிறுதக தீம். தித்தாம் கிறுதக தீம். தகுத தீந்தக தத்தீம் தத்த தா.

Page 30
ー48 ー
1umLG பச்சைமயில் மீது ஏறி வருவாயே பாஸ்கரன் பணிபறன்மை தருவா தத்திதா தகதித் திெய் தத்திதா தகதித் தெய் செல்வச் சந்நிதியிலே அமரும் பன்னிருகை வேலவனே தா - தக தாகுட சொம்தரி தெய்.
நாகமணி :
அட அட என்ன அருமையான ஆட்டம்!
துரை :
ஆட்டமெண்டால் ஆட்டம்தான். சரிஞ்சு சரிஞ்சு, நிமிர்ந்து நிமிர்ந்து ஆடயுக்கை, என்ன சோக்கா இருக்கு. அண்ணுவியாரே !
நாகமணி :
அந்த தாளக் கட்டுக்கு பெடியள் குதிக்கிற குதி,
மிதிக்கிற மிதி, ஆ ! ஆட்டம் அசல் ஆட்டம்தான். அண்ணுவியாரே! உமக்கு பெரிய எழுப்பம் எழும்பப் போகுது.
கந்தப்பர் :
என்னிலை என்ன கிடக்குத் தம்பியவை. என்ரை அண்ணுவியார் சொல்லித் தந்ததை அப்பிடியே பழக்கி யிருக்கிறன்.
நாகமணி :
பிள்ளையன் நல்ல சூரன்களாத்தான் வரப்போருங்கள். நாளையிண்டைக்கு வலு கலாதியா ஆட வேணும்.
கந்தப்பர் :
இஞ்சாரும் தேத்தண்ணி கொண்டாவன்.

- 49 -
Gi36 tot onr :
தேநீர்த்தட்டை கீழே வைத்துக்கொண்டு) எல்லாம் போட்டு வைச்சிருக்கு. குடியுங்கோவன்.
கந்தப்பர் :
இந்தாருங்கோ குடியுங்கோ.
நாகமணியும் துரையும் குடிக்கிறர்கள்
பிள்ளையஸ் ! நாளைக்கு நல்ல ஆறுதல் எடுங்கோ. நாளையிண்டைக்கு முதலியார் வைரவ கோயிலிலை இருந்து காவடி ஆட்டம் தொடங்க வேணும். நேரத் தோடை எல்லாம் அடுக்கு பண்ண வேணும் தேத் தண்ணியை வாங்கிக் குடிச்சிட்டுப் போங்கோ.
நாகமணி :
இவ்வளவு உபசாரம் நடக்குமெண்டு நான் கொஞ்சமும் நினைக்கையில்லை அதிருக்க, ஒரு சின்ன விஷயம்.
கந்தப்பர் :
அப்பிடி என்ன ?
நாகமணி :
இல்லை. எங்கடை ஊருக்கே பெரிய பேரெடுத்து தாற உம்மை கெளரவிச்சு நல்லா நடத்த வேணுமெண்டு எங்களுக்கு பெரிய ஆசை.
துரை :
இந்த காவடி கரகம் அது இது எல்லாத்தையும் நாங்கள் அழிய விடுறது பெரும் பேய்தனம். தமிழன்ரை கலையைக் காட்டடா எண்டு வேறை நாட்டான் கேட்டா, இது களைத்தானே எடுத்து விடலாம். இது களை வளக்க இதுகளை நடத்துகிற உன் தணிசுக்கு Support (5Gd, 5 Golgopith.
7

Page 31
- 50 -
நாகமணி :
அதுதான் உங்க தணிசுக்கு தங்க மெடலுகள் தந்து புளுக வேணும். எங்கடை கலைஞர்மாரை நாங்கள் உயத்தாட்டா வேறை ஆர் உயத்துறது. இதிலை ஏதோ பணம் திரட்டுறதே.
கந்தப்பர் :
அது சொன்னியளோ, சரிதான்.
நாகமணி :
அண்ணுவியார் 1 முதலியார் வைரவ கோயிலா?ல காவடி புறப்பட்டதும் ருேட்டுச் சந்தியளிலைதானே காவடி ஆட்டுவியள். அந்த வாசிகசாலைச் சந்தியிலே யும் எல்லா ஆட்டமும் நடக்க வேணும் சிமாரெழுப்பி ஆட வேணும்.
கந்தப்பர் :
நீங்கள்தான் சனம் விலத்தி நடத்திக்க வேணும் , அதிலை நீர்தான் விண்ணன்.
நாகமணி :
எல்லாம் வெண்டு தரலாம். உம்மை உயத்துறது எங்கடை வேலை. ஆணு, அண்ணுவியாரே, ஒருக்கா மட்டும், எங்கடை முதலாளியார் மெத்தைவீட்டு கந்தையர்வீட்டிலை அந்த பிலாமரத்துக்கு கீழை காவடி ஆட்ட வேணும். ஒரு ஆட்டம் எண்டாலும் ஆடின போதும்.
கந்தப்பர் :
இது கொஞ்சம். . .
நாகமணி :
என்ன காணும்! நாங்கள் களாஞ்சியிலை, வெத்திலே பாக்கு வைச்சு, 501 ரூபா காசு வைச்சு ஆட்டம்

- 51 -
முடிஞ்சதும் தரப்போறம். அதுகும் இந்த ஊர் பெரிய மனுஷன் - ஒரு முதலாளியின்ரை கையிலை இருந்து வாங்குறதுக்கு குடுத்து வைக்க வேணும் அண்ணுவியார்
கந்தப்பர் :
இல்லைப் பாரும் தம்பி.
துரை :
அவருக்கு உன்ரை கூத்துக்கள் காவடியள் எண்டா வலு மதிப்பு. அதாலை உன்னிலை வலு பிடிப்பு. இப்ப கிராமச் சங்க Vice - president ரும் அல்லே. அவற்றை வீட்டிலை ஆடறத்துக்கு.
கந்தப்பர் :
உந்த இடத்திலைதான் யோசிக்க வேண்டிக் கிடக்கு.
துரை :
என்ன காணும் கண்டறியாத யோசனை. காசு 50 ரூபா வருகுது.
நாகமணி :
பத்து ரூபாயிலை 50 தாள் காணும்.
துரையர் :
மாலையும் போடுறதா உத்தேசம்.
கந்தப்பர் :
தம்பியவை உந்த தங்கமெடல் காசு, மாலை உது களுக்காக என்ரை கலையை அடைவு வைக்கிற ஆள் அல்ல நான். மக்களின்ரை கலையை, கோயில் குளத்திலை ஆடிவந்த கலையை, பிறத்தியார் வீடுவளியை ஆட்டுறதே.
துரை :
அண்ணுவியாரும் ஒரு முழம் எழும்பி நிண்டுதான் பேசுரு?ர்.

Page 32
நாகமணி :
பொறடா அப்பா அந்தாளும் பேசட்டன். நீங்க சொல்லுங்கோ அண்ணுவியார்.
கந்தப்பர் :
நாகமணி :
தம்பி நான் பிழையா ஒண்டும் பேசயில்லை. " தாளக் காவடி" மக்கள் கலை. கோயில் குளத்தோடை தொடர் புடைய புனிதக்கலை, கோயிலடியிலை அல்லாட்டா பொது இடங்களிலை ஆட்டலாம். இப்பிடியான கலையை நூறு, ஐந்நூறுக்கு ஆசைப்பட்டு விக்கமாட்டன் தம்பி நான் போக்கிரி தனமா நடவாதவன் அல்ல. குடிப் பழக்கத்தாலை, சில வேளை பெண்சாதியைக்கூட ஏமாத்தி காசு எடுத்திருக்கிறன். என்ரை வீட்டோடை எத் தினையோ திருகுதாளங்கள் செய்திருக்கிறன், ஆன, இந்த தாளக்காவடி கலையைப் பொறுத்தமட்டிலை மானம் இருக்கு. ஐந்நூறு ரூபாவுக்கு ஆசைப்பட்டு இந்தக் கலையை விக்கமாட்டான்.
சாதாரண ஒரு ஆள் வீட்டிலையே ஆடச் சொலுறம். ஒரு பெரிய புள்ளி - முதலாளி வீட்டிலை - அதுகும் கிராமச் சங்க உபதலைவற்ரை வீட்டிலைதானே ஆடச் சொல்லுறம்.
துரை :
எழுந்த மானத்திலை, நாங்கள் வந்து கேக்கையில்லை.
நாகமணி :
முதலாளியார் அனுப்பித்தான் வந்தனங்கள்.
கந்தப்பர் :
எவர் வந்தால் என்ன? எவர் அனுப்பினுல் என்ன ? நாங்களும் மனுஷர்தான். சொந்த நலத்துக்காக கலையை அடைவு வைக்கிறதே.

- 53 -
நாகமணி :
கந்தையா முதலாளியார் கார்காத்த வேளாள பரம்பரை ! நீங்க குறைவுதானே. அந்தாள் நினைச்சால் உன்னை இந்த ஊரிலையே இராமல் கிளப்பிப் போடும். நிலாவரையிலை நடந்த வண்டில் சவாரியிலை பண்ணித் தானே பாத்தவை.
கந்தப்பர்
அந்தாள் முதலாளியாய் இருக்கலாம். பெரிய சண்டிய ஞய் இருக்கலாம். அதுக்காக எங்கடை மானத்தை கொள்கையை விடுறதே.
துரை :
அந்தாளின்ரை சுருட்டுக் கொட்டிலிலை வேலை செய்யுற வங்களை எடுபிடியளைத் தூண்டி விட்டா காணும். உங் கடை வீடுகளையே சாம்பலாக்கிப் போடுவங்கள் அவர் கையைச்சால் போதும் கால்வேறை தலைவேறையா கிளிச்சுப் போடுவங்கள். அதுதான் சொல்லுறன் அண்ணுவியாரே மரியாதையாய் முதலாளி வீட்டிலை காவடியை ஆட்டிப்போட்டு சந்தோஷமா ஐஞ்லுாற்று ஒரு ரூபாவையும் வாங்கிக்கொண்டு போங்கோ. சும்மா மல்லுக் கட்டாதையுங்கோ.
கந்தப்பர் :
நாங்கள் எங்கே மல்லுக்கட்டுறம்.
நாகமணி :
ஏட்டிக்கு போட்டியா வாய் காட்டுறியள்.
கந்தப்பர் :
நியாயத்தைதானே சொன்னன்.
துரை 3
என்ன நியாயத்தைத் பேசிக் கிளிச்சிட்டீர்

Page 33
- 54 -
நாகமணி :
ஒரு ஆட்டமெண்டாலும் முதலாளியார் வீட்டிலே ஆடுங்கோ. ஐஞ்ஞாறு ரூபா தரப்பண்ணுலாம் எண்டா எதிர்க்கிறியள்.
துரை:
அவ்வளவு பெரிய கொம்புகள் கப்படாக்களோ நீங்கள் தங்கம்மா :
(சற்று முன்னுக்கு வருகிறள்.
என்ன காணும் கொம்பு கிம்பு என்றீர். அவர் எவ்வளவு அடக்கமா நியாயத்தோடை பேசுகிருர். நீங்கள் என் னடா எண்டாச் சீறிப் பாயுறியள். பெரிய உலுப்பு உலுப்புறியள். பெரிய அட்டகாசம் பண்ணுறியள்.
நாகமணி:
உன்னைப்பற்றி எனக்கு வடிவாத் தெரியும். ஆம்பிளையஸ் பேசுற இடத்திலை ஏன் வாய்காட்டுருய் !
கந்தப்பர் :
நீ எப்பன் உங்கை போ அப்பா.
தங்கம்மா :
முதலாளியார் வீட்டு வளவுக்கை காவடி ஆட்டுவிக்க ஏலாதெண்டால் அவ்வளவிலை வாயை மூடிக்கொண்டு போறத்துக்கு. ஏன்காணும் ஞாயம் பிளக்கிறியள். கந்தப்பர் :
உள்ளை போ எண்டா போ.
(தங்கம்மா பின்வாங்குகிருள்.,

- 55 -
நாகமணி :
கடைசிமுறையா கேட்கிறேன். எத்தனையோ முறை உமக்கு எத்தனையோ உதவியளைச் செய்தவன் நான். முதலாளியார் வீட்டிலை தாளக்காவடி ஆட்டம் ஒண் டெண்டாலும் ஆடுகிறீரா? இல்லையா ?
கந்தப்பர் :
சொன்ன சொல்லுத்தான். ஏலாதெண்டால் ஏலாது
நாகமணி :
அவர் வீட்டிலை ஆட்டுவிக்காட்டா நீங்களும் நாஃா யிண்டைக்குத் தாளக்காவடி யெடுக்கேலாது.
கந்தப்பர் :
எடுக்கேலும். முடியுமெண்டா முடியும்.
துரை :
முதலியார் வைரவகோவிலடியிலை மூண்டு நாலு பிணங் கள்தான் கிடக்கும்.
கந்தப்பர் :
எங்கடை கை புளியங்காய் ஆயாது.
நாகமணி :
நீங்கள் எதிர்க்கதக்க ஆளாவிட்டியள். காத்திகேசா. ம். ம்.
கந்தப்பர் :
ஏன் நாங்கள் மறுவுர் இல்லாமல் ஆடுமாடே
நாகமணி :
பொத்தடா வாயை.

Page 34
- 56 -
கந்தப்பர் :
உந்த நடப்பு இருத்தைந்து வருஷத்துக்கு முந்தி . துரை :
இப்ப காட்டினு என்ன செய்துபோடுவியள். கந்தப்பர் :
காட்டுங்கோவன் பாப்பம்,
நாகமணி :
டேய் துரை; எடடா கத்தியை வெட்டுரு அவன.
ஐயாக்குட்டி: (தலையிடுகிறர்.1
எப்பன் பொறுதம்பி இதென்ன தம்பி சை. சை. கந்தப்பர் :
ஐயாக்குட்டி நீ தடுக்காதை அவங்களை. வெட்டுருங் களோ பாப்பம். எடடி அந்த உலக்கையை. நாகமணி :
துரை வெட்டடா ஒரே வெட்டா (சண்டை நடக்கிறது ஒரே ஒலங்கள் மத்தியில் துரை கத் தியை ஓங்கி வெட்டுகிறன்.) தங்கம்மா :
ஐயோ வெட்டுகிறனே! குறுக்காலை போவான் வெட்டு முன். (வெட்டு விழுந்தபின்) கந்தப்பர்:
ஆ ஆ. அ.ப்.பா ஜ. யோ. வெட்டிப்போட்டான். தங்கம்மா :
ஆண்டவா இரத்தம்! இரத்தம்!

- 57 ܚ
ஐயாக்குட்டி :
சீறிப்பாயுதே.
தங்கம்மா
வலக்கை விரல் மூண்டு நாலு வெட்டுப்பட்டுப்போச்சு .
நாகமணி :
வாய் காட்டினியேடி. இப்ப துலைஞ்சான் அவன் வாடா துரை.
துரை :
இன்னும் இரண்டு நாளையிலை உங்களை இந்த நிலத் தாலை எழுப்பாட்டா நான் துரையன் இல்லை.
வெற்றி பெருமிதத்துடன் போகிருர்கள்.)
கந்தப்பர் :
துண்டாப் போச்சு இரண்டு விரல். <鹦...,<鹦......
(சற்று நீண்ட மிருதங்க இசைக்குப்பின்.)
தங்கம்மா :
இவ்வளவுக்கும் பின்னைக் காருக்குப் போனஐயாக்குட் டியை காணயில்லை. காருக்கேதேன் பெற்ருேல் கிற்ருேல் இல்லையோ ? இல்லை படத்துக்கு கிடத்துக்கு கார்
போட்டுதோ ?
கந்தப்பர் :
இப்ப வந்திடும் பயப்பிடாதை எனக்கொண்டும்
செய்யாது, பெரிய வெட்டுக்காய மெண்டபடிய7ல் நோ கூட இல்லை. (விக்கியபடி) ஆன இந்த வலக் கையிலை விரலுகள் வெட்டுப்பட்டுப் போச்சுதெண்டு தான்.

Page 35
- 58 -
தங்கம்மா :
கையை முன்னுக்கு நீட்டிவிட்டியளே ! அநியாயம்.
கந்தப்பர் :
அல்லாட்டி முகத்திலை அல்லோ வெட்டு விழுந்திருக்கும். தங்கம்மா :
(கீழ் வல்மேடையைப் பார்க்கிறள்]
ஆரது இருட்டுக்கை மூண்டுபேர் வருகினம். ஒராளைத் தூக்கி கொண்டு வருகினம்.
(கந்தயரை தூக்கியபடி நாகமணியும் துரையும் வருகிறர்கள்
துரை :
அண்ணு வியா ரே... . எங்களை . . . மன்னிச் சிடுங்கோ...
நாகமணி :
மாட்டன் எண்டு மறுக்காமல் முதலாளியாரைக் காப் பாத்துங்கே.
தங்கம்மா :
என்ன ? . . . என்ன நடந்திட்டுது?
நாகமணி :
அவருக்கு பாம்பு கடிச்சிட்டுது. வைக்கல் பட்டடைக்கு போகையுக்கை கடிச்சிட்டுது. பார்வை பார்த்தாத் தான் சரிவரும். எப்பன் மனசு வைச்சு பார்வை
பாத்திடுங்கோ.
கந்தப்பர் :
பார்வை. . பாக்க . . வேணுமோ ? தங்கம்மா :
இந்த நிலையிலே அவர் எப்பிடி . untuuri.

- 59 -
கந்தப்பர் :
இல்லை. பாம்பு கடிச்ச ஆளுக்கு பார்வை பாத்து உதவி செய்ய வேண்டியது எங்கடை கடமை தங்கம்மா.
தங்கம்மா :
என்ன ? இவங்களுக்கோ ?
கந்தப்பர் :
எவரா இருந்தாலும் விஷகடி எண்டு வந்தால், இந்தக்
கலட்டிப் பகுதியிலை எங்களாலைதானே உதவ முடியும். உப்பிடிப் படுத்துங்கோ நாமணியாரே !
நாகமணி :
so fit 560t- நல்ல Osgods மறக்க மாட்டம் அண்ணுவியரே !
துரை :
நான் கெட்டதைச் செய்தன். நீங்கள் நன்மை செய்ய வந்திட்டியளே.
கந்தப்பர் :
தங்கம்மா ! அந்த விபூதித் தட்டை எடுத்துவா பாப்பம்:
அட அட விபூதியைக் கையிலை போட்டு கட்டை விர
லாலும் மற்ற விரலாலும் யந்திரம் போட்டு மந்திர
உச்சாடனம் செய்ய வேணுமே. மறதிக் குணம் செய்யுற வேலை.
தங்கம்மா :
வலக்கை கட்டைவிரலும் மற்ற விரலுகளும் இல்லா மல் என்ன செய்யப் போறியள் ?
நாகமணி :
நாங்கதானே வெட்டினம். நல்ல மனசோடை முதலா ளிக்கு உதவ நீங்க முன் வந்தும் எங்கடை எழிய வேலை எங்களுக்கே நாசமாய் போச்சு. தன்ரை

Page 36
வீட்டிலை காவடி ஆட மறுத்தா, தாளம் பிடிச்சு தாளம் போடும் விரலுகளை வெட்டிப் போடுங்கோ எண்டுதான் முதலாளி அனுப்பினர். இப்ப . அந்த விரலுகள் இருந்திருந்தால். . . . .
கந்தப்பர் :
பார்வை பார்க்கேலாத நிலையாப் போச்சு. மிச்சம் மன வருத்தம்.
(முதலாளி கந்தையர் கண்ணைப் பிரட்டுகிறர், தவிக்கிருர்.
துரை :
முதலாளியின் ரை உடம்பெல்லாம் நீலநிறமாய் மாறி வருகுது.
தங்கம்ஜாஜ்
ஆளுக்கு கடுண்ம்’கேஃ. அந்தா கார் வருகுது. இவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு போறம். இதிலை உவரையும் கொண்டுபோய் காட்டுகில் காட்டலாம்.
துரை :
சரி பின்னை அப்பிடி யெண்டாலும் செய்வம்.
நாகமணி :
என்னவோ ஆள் தப்புகிறது ஐமிச்சம்தான். சரி காரிலை
எல்லாருமா போவம்.


Page 37
6. fl. 9). இது அவர் பெயர்ச் சுருக்கம். ஏ. ரி. பொன்னுத்துரை. இது அவரின் முழுப் பெயர் நாடக வெறியர். இது அவருக்கு திருக்கவேண்டிய பெயர். பிறப்புடனேயே வந்து, இள ை வெளிப்பட்ட நாடகப்பித்து, கிறிஸ்தவக் கல்லூரியிற் பட்டம் ஆசிரியராய், அதிபராய்ப் பதவி ஓயவில்லை. 25 நாடகங்கள் தயாரிப்பு 5 மேற்பட்ட நாடக மேடையேற்றம். 100 மாணவர்வரை உருவாக்கம் 9 நூல்கள். வானெலி நாடகம், நாடக ஆய்வுக் கள், நாடகக் கருத்தரங்கப் பே என, நாடகக்கலைத் துறைக்கு இவர் பங்களிப்பின் முகிழ்வாக; 1974 இல் * கலையரசு சொர்ண அவர்களால், 'கலேப்பேரரசு’ப் இப்படி இன்றுவரை, சக கலைஞர்க நாடகத்தோடு ஒன்றிப்போன " பேரரசு ' தனது 64ஆவது நாடகத் தமிழ் அன்னைக்கு ம என்னும் இந்நூலைக் காணிக்கை ஆக் இ. ே
அகில இலங்கைக் கம்பன்
திருமகள் அழுத்தகம், சுன்னுகம்,
 

s
历 循)
இ
5
மயிலே