கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மானிடச்சிக்கல்

Page 1
కొకైఙాస్త్రవ్వి"
 
 


Page 2


Page 3

"மாண்டச்சிக்கல்"
அரங்க அளிக்கைகள் ஐந்து
முத்து. இராதாகிருஷ்ணன்.

Page 4
Title
Subject
Author
First Edition
Printed by:
Published
CopyRight
Price
நூலின் பெயர்
விடயம்
ஆசிரியர்
முதற்பதிபபு
அச்சிட்டோர்
ിഖണിuീ
பதிப்புரிமை
"Manidachchika"
Collection of drama scripts.
Muttucumaru Rathakrishnan. SLEAS (III) B.A(Hons) Dip in Education.
DECEMBER - 1998
Navayoga Printers
' # '
Theatre action Group. (TAG) Vavuniya
°系 ,患 is
Mrs.'K. Rathakrishnan 32, karappanKadu Vavuniya.
100/-
மானிடச்சிக்கல்
அரங்க அளிக்கைகள் ஐந்து.
முத்துக்குமாரு இராதாக்கிருஷ்ணன். SLEAS (III) B.A. (Hons) Dip. in. Education.
மார்கழி - 1998
நவயோகா அச்சகம்
அரங்க செயற்பாட்டுக்குழு, வவுனியா, (TAG)
திருமதி. கே. இராதாகிருஷ்ணன். 32, கரப்பன்காடு, வவுனியா,
100/-
 

“வாழ்த்துரை”
பேராசிரியர் கா. சிவத்தம்பி 21.11.1998
முத்து இராதாகிருஷ்ணனின் இந்த நாடகத்தொகுதி, 1984 இல் குழந்தை ம. சண்முகலிங்கம், க. சிதம்பரநாதன் போன்றவர்களால் தொடங்கப்பெற்ற நாடக முறைமையின் தருக்க நிலைப்பட்ட வளர்ச்சியாக அமைகிறது.
மீள் கண்டுபிடிக்கப்பட்ட மரபுவழி அரங்குடன் ஐரோப்பிய, சீன, யப்பானிய மரபுகள் இணைய ஒரு புதிய நாட கவாக்கம் (Dramaturgy) ஏற்படத்தொடங்கிற்று. இதன் தளமாக அமைந்தவர்கள் பாடசாலை மட்டத்து உயர் வகுப்பு மாணவர்கள். அந்தவகையில் இது ஒரு கல்வி அரங்காகவும் (Educational theatre) அமைகிறது. அறிவுப் போதனையும் கல்வி பற்றிய விமர்சனமும் இணைக்கின்றன. இவற்றுட் சிலவற்றில்,
முத்து இராதாகிருஷ்ணனின் படைப்புக்களில் ஒரு "கலை முழுமை" artistic totality. காணப்படுகிறது. அது அவர் ஒவியராகவும் இருப்பதால் வந்துள்ள ஓர் உயிர்ப்பு.
தம் வரலாற்றைத் தாமே வற்புறுத்தும் நாடக ஆக்குநர்கள் பலர் உள்ள இத்துறையில் இராதாகிருஷ்ணன் போன்ற உண்மையான, 85LUFT(660)Lu கலைஞரைத் தேடி வரலாறு செல்லும் நிலை தூரத்தில் இல்லை. அவரது இந்நாடக நூல் வரவேற்க்கத்தக்க ஒரு படைப்பு
って下
الم ( இ.இC i ). C மானிடசிேக்கல் )

Page 5
வாழ்த்துரை
முன்னுரை
என்னுரை
பள்ளியெழுச்சி
மானிடச்சிக்கல்
நீளும்பாலை
முகமற்ற மனிதர்
நேசத்தால் நிறைந்த நெஞ்சள்
விமர்சனக்கண்ணோட்டம்
O1
17
37
55
73
 

முன்னுரை
உலகமெங்கும் இலக்கியப் படைப்புக்கள் நூலுருப் பெறுதல் என்பது இன்று சாதாரண நிகழ்வாகி விட்டது. ஈழத்திலும் அவ்வாறே. ஆனால் கலைப் படைப்புக்கள் முழுமையாகவோ அன்றித் தொகுதிகளாகவோ நூலுருப் பெறுதல் என்பது இங்கு மிகவும் அருகியே காணப் படுகின்றது. இந்த நிலையிலேதான் ராதாவின் நாடகங்கள் அடங்கிய இந்த அருமையான நூல் வெளிவருகின்றது. இவரால் எழுதி அரங்கிடப்பட்ட நாடகங்களின் தொகுதியே இது. அழகியல் உணர்வுள்ள கலைஞன் ஒருவன் அரங்கியல் கலைஞனாகவும் பரிணாமமடைகின்ற ஒரு வரலாற்று நிகழ்வின் வளர்ச்சி இங்கு தெளிவாகத் தெரிகிறது.
இலக்கிய நாடகங்கள் என்றும் வரலாற்று நாடகங்கள் என்றும் ஒரு வாழ்கலையை - வளர்கலையை முடக்கி வைத்துக் கொண்டு இன்றும் பலர், கல்வி உலகத்திலுங்கூடப் பேசுகின்ற நிலையில், தமிழ் மொழி கலைத்திறன் போட்டிகளில் இலக்கிய நாடகங்கள் மட்டுமே அரங்கிடப்பட வேண்டும் என்றும் சில இலக்கியப் பரப்புக்கள் மட்டுமே சுற்று நிருபங்களிலே - குறிப்பிடப்பட்டுச் சட்டமியற்றப்பட்டும் வருகின்ற ஒரு சூழலில், மனிதப் பிரச்சனைகளின் மையங்களிலே கை வைத்த இந்த நாடகங்கள் - அன்றாட வாழ்வியலையும் அதன் இயங்கியலையும் விட்டு விலக முடியாத - விலக விரும்பாத ஒரு கலைஞனின் படைப்புக்களாக வெளி வருகின்றன.
இந்தச் சந்தர்ப்பத்தில் மகாகவி சொல்லிய கவிதை ஒன்று நினைவு வருகின்றது.
"இன்னவை தான் கவி எழுத ஏற்ற பொருள் என்று பிறர் சொன்னவற்றை நீர் திருப்பிச் சொல்லாதிர். மின்னல் முகில் சோலை கடல் தென்றலினை மறவுங்கள் . மீந்திருக்கும் இன்னல் உழைப்பு ஏழ்மை உயர்வு என்பவற்றைப் பாடுங்கள்"

Page 6
கலை இலக்கியப் படைப்பில் ஈடு பட்டிருக்கின்ற சமகால மனிதன் ஒருவனை நோக்கி மகாகவி விட்டிருக்கின்ற அறை கூவல் இது.
1982 தொடக்கம் இன்று வரை 16 வருடங்கள் பழகிய நண்பன். ஆரம்பத்தில் ஓவியக்கலைஞனாக மட்டும் எங்களுக்கு அறிமுகமாகியவன். இந்த ஓவியன் 1985ல் "மண் சுமந்த மேனியர்" நாடகத்தில் காட்சியமைப்புக்களைக் கவனிக்கும் தேவையை நிறைவு செய்யும் ஓர் காண்பிய ஓவியனாக எமது குழுவோடு இணைகின்றான். படிப்படியாக அந்த ஆற்றுகையிலேயே " இஞ்சிக்கு ஏலங் கொண்டாட்டம்.” என்ற பாடலிசைக்கு அசைவு கொடுக்கிறான். தொடர்ந்து ராதாவின் நாடக உலகம் விரிகின்றது.
1986ல் பட்டப்படிப்பு முடிவடைகிறது. நண்பர்கள் வேறாகி விடுகின்றோம். கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரியில் இவரின் நாடகப்பணி பளிச்சிடுகிறது. தொடர்ந்து பல நாடகங்களில் தன் திறமையை வளர்த்துக் கொண்ட ராதா, இன்று வவுனியாவில் அரங்கச் செயற்பாட்டுக் குழுவின் (TAG) "துயரப்பாறை" நாடகம் வரைக்கும் தனது ஆற்றலை பதித்துக் கொள்ளுகின்றார். இந்த இடைக்காலத்தில் இராதாவால் எழுதப்பட்டு அவைக்காற்றப்பட்ட ஐந்து நாடகங்களே இப்போது நூற்றொகுதியாகிறது.
போர்ச் சூழலில் இருக்கின்ற தமிழ் மனிதனை - அவனது ஆன்மாவின் பாடலை ராதாவின் நாடகங்களுள் காணமுடிகிறது. இவரது பள்ளியெழுச்சி” நாடகம் 90களில் கிளிநொச்சி மாவட்டத்திலும் விந்தன் நெறியாழ்கையில் அவைகண்டு மனங் கொள்ளப்பட்டது. மானுடச்சிக்கல் மலிந்து விட்ட போது வெறுமனே பூவையுங் காதலையும் பாட அல்லது கலை படைக்க ராதாவைப் போன்ற ஒரு கலைஞனால் முடியாது என்பதற்கு இந்த நூல் தாங்கி நிற்கும் நாடகங்கள் எடுத்துக்காட்டு.
சங்கீதத்தை ஓரளவுக்குப் படித்ததிறன் - சிறந்த ஒரு ஓவியனாக இருக்கின்ற திறன் நாடகம் என்கிற கலை முழுமைக்குள் ஒன்றாக இணையும் போது ஏற்படக்கூடிய வியத்தகு செழுமையை - அழகை,
一ノ
 

இந்த நாடகங்களுள் நாம் காண முடியும். மென்மையான முறையில் அருமையான கலை படைக்க முடியும் என்பதைத் தன் நாடகங்களில் உணர்த்திய ராதா இப்போது, உள்ளத்தில் இருந்து எழும் உண்மையான உணர்வுகளின் கொந்தளிப்பைக் கொட்டுதல் மூலம் மனித மனங்களைக் குத்திப் புகுந்து இதயங்களைத் தைக்க முடியும் தரிசிக்க முடியும் என்கின்ற எமது இன்றைய நாடக அரங்க வளர்ச்சி வரை தன்னுடைய அனுபவத்தைப் பதித்தவர். கூட்டாக இணைந்து கலை படைப்பதால் உணர்வு சங்கமித்த ஒரு நண்பனின் நுால் ஒன்றுக்கு முன்னுரை எழுதக் கிடைத்தமை மகிழ்வு தருகிறது. அதனால் அதிகம் புகழ் பாடாது உண்மையை கூறுதல் வேண்டுமென்பதே. எனது உந்துதல்.
அரங்கு இன்று பல துறைகளிலும் தன் செல்வாக்கைப் பதித்துக் கொண்டுள்ளது. உலகின் பல நாடுகள் அரங்கின் தேவையை உணர்ந்து அதனைப் பல்பயன் மிகு ஊடகமாக வளர்த்துச் செல்வதைக் காண முடிகிறது. அங்கு நிறைய வசதிகள் உண்டு. ஊக்குவிப்பு உண்டு. ஆனால் கடந்த இரண்டு தசாப்தங்களுக்குள் ஈழத்தில். வாழும் தமிழ் மக்களிடையே கலையாக்கத்தில் ஏற்பட்டிருக்கக் கூடிய பெரு நெருக்கடிகளுக்குள்ளேயும் தமிழ் நாடகம் என்கின்ற அரங்கக்கலை, வீச்சுடன் வளர்ந்து வருவதை யாரும் மறுதலிக்க முடியவில்லை. இந்த உண்மையின் ஊடான ஒரு எடுத்துக் காட்டுத்தான் இந்த நாடகத் தொகுதியும். இது காலத்தின் தேவையை உணர்த்துகின்றது. இலங்கை அரசு கூட, உயர் வகுப்பில் மட்டுமன்றி ஏனைய வகுப்புகளிலும் நாடகக் கல்வியைப் புகுத்த உறுதி கொண்டுள்ளமையும் அரங்கின் தேவையை உணர்த்தும்,
ஈழத்தில் வாழும் தமிழ் மக்களுக்கு என்று ஒரு தேசியக் கலை வடிவம் உண்டா? என்ற வினாவுக்கு விடை பகர வேண்டுமாயின், நாடகம் என்கிற அழியாக் கலையொன்றுண்டு எனப் பகரமுடியும்.
நாடகத்தின் மூலம் எங்களின் உணர்வுகளைப் பேச விட எங்களால் முடிகிறது. இந்த அரங்கின் மூலமே இன்னொருவரின்
ノ ܢܠ

Page 7
w ༄༽
உணர்வுகளுடன் பேசவும் எங்களால் இயலுகிறது. உணர்வுகளுடன் சங்கமிக்கவும் எங்களால் இயலுகிறது. இந்த இயலுமைக்குள் தான் ராதாவின் நாடகப் பணியும் தொடருகின்றது. எங்களின் நாடகம் எங்களின் அரங்கு உண்மையில் எங்களின் உணர்ச்சிகள் பேசுகின்ற மொழியே. அந்த மொழியைத்தான் ராதாவின் இந்த நாடகங்களும் பேசியிருக்க முடியும். அதையேதான் பேசிக்கொண்டிருக்கவும் முடியும். பேசப்போவதும் அந்தச் செழுமொழியையேதான். நாடகத்துள் நுழைகின்ற போது அது வெளிச்சமாகும்.
நிறைவாக மகாகவி சொன்னது போல் "நாமும் நமக்கோர் நலியாக் கலையுடடையோம்" என்கின்ற பெருமையோடு தொடர்ந்து நம்மாலியன்ற பணிகள் இயற்றிடுவோம்" என்ற முனைப் போடு "சும்மாயிரோம்" என்று உறுதி பூண்டு, நாடகமேயாகி - அரங்காடி, எங்கள் வாழ்வியலைத் தரிசிக்கப் புறப்படுகிறோம் - எம் தலைவிதியை மாற்றுதற்கும் இதுவும் ஓர் ஆயுதமாகும் காலமிது என்பதையும் குறிகாட்டி இந்த முன்னுரையை நிறைக்கின்றேன்.
செ. விந்தன். பண்பாட்டலுவல்கள் அலுவலர், கல்வித்திணைக்களம், வவுனியா.
( C மானிடசிேக்கல் )
 

என்னுரை
எந்தவொரு இலக்கியமும் மக்களின் வாழ்வியலோடு தொடர்புடைய அப்பிரச்சினைகளை வெளிப்படுத்தக் கூடியதாக இருக்கும் போதே அது ஒரு பொருத்தமான இலக்கியமாக மிளிரும். இந்தவகையில் ஈழத்து தமிழ் நாடகங்கள் அவ்வவ் காலகட்டங்களில் எந்த எந்த பிரச்சனைகள் முனைப்பாக காணப்பட்டனவோ. அப்பிரச்சினைகளை கருவாக கொண்டு அதனை வெளிப்படுத்த உதவின என்பதில் சந்தேகமில்லை. உதாரணமாக எண்பதுகளில் முனைப்படைந்த தமிழ்தேசிய விடுதலைப் போராட்டம். அதன் தாக்கம் மக்களது அவலங்கள் என்பவை பெருமளவில் அரங்குகளில் வெளிப்படலாயின. இவ்வாறாக குறியீட்டு யதார்த்த மோடி நாடகங்கள் விடுதலைக்கான அரங்காகவும், விவாத அரங்காகவும் பரிணமித்து ஈழத்து தமிழ் நாடகங்களை நாடக உலகில் குறிப்பிடத்தக்க ஒன்றாக்கி உள்ளது. என்பது கண்கூடு.
ஈழத்து நாடக வளர்ச்சியில் பாடசாலை மட்டத்திலான நாடகங்களும் குறிப்பிடத்தக்கவையாக பங்களித்துள்ளன. எழுபதுகளின் இறுதிப்பகுதியிலும் பின்னர், எண்பதுகளின் இறுதிப்பகுதியிலும் பாடசாலை தமிழ்மொழித்திறன் போட்டி நாடகங்களுக்கூடாக பல நாடகங்கள் உருவாகின. பாடசாலை மட்ட நாடகங்களாக இருந்த போதும் இந்நாடகங்கள் மக்களது பிரச்சினைகளை தாக்கமாக வெளிப்படுத்தி நின்றன. அதற்கு ஏற்ப குறியீடுகளுடனான மோடிப்படுத்தப்பட்ட அரங்க முறைமையினை பயன்படுத்தின. இந்த நூலில் தரப்பட்டுள்ள நாடகங்கள் ஐந்தும் இவ்வகைப்பட்டனவே. 1992ம் ஆண்டு முதல் 1998 வரையான காலப் பகுதிகளில் பாடசாலை மட்டத்திலான தமிழ்மொழித்தின நாடகங்களாக இவை அளிக்கை செய்யப்பட்டன. ஒவ்வொருநாடகமும் மாவட்ட ரீதியிலான முதலிடத்தையும் பலரது பாராட்டையும் பெற்றதோடு வடக்கு கீழக் கு மாகாண மட்டத் திலான போட்டியிலும் குறிப்பிடத்தக்கனவாக அமைந்தன. இந்தவகையில் இந்த நாடகங்களை இணைத்து நூல் வடிவில் வெளியிடுவது சிறந்தது எனப்பட்டது. மேலும் தமிழ்நாடகங்களுக்கிருந்த பிரதிகளுக்கான பஞ்சத்தை போக்குவதும் ஒரு காரணமாயிற்று. எல்லாவற்றுக்கும் மேலாக இந்நாடகங்கள்
一 =ܠ r- :::રં:;&&&&ર્ટ્સ; '; C. ix D. − TaufLFfärsG ) )

Page 8
அனைத்தும் முனைப்படைந்துள்ள தமிழர் பிரச்சினை பற்றிய ஏதோவொரு வெளிப்பாட்டினை கொண்ட அளிக்கைகளாகவும் வெற்றிகரமான மேடை அளிக்கைகளாகவும் காணப்பட்டதும். அது வரலாற்றுப் பதிவாக ஆவணப்படுத்தப்பட வேண்டிய யதார்த்தத்தினாலும் ஆகும். இதனை சிறப்பாக மேடை அளிக்கைகளாக ஆற்றுகை செய்ய உதவிய எனது நண்பர்களுக்கு இவ்விடத்தில் எனது நன்றியறிதலை தெரிவிக்க விளைகின்றேன்.
அடிப்படையில் ஒரு ஓவியனாகவும் சித்திர ஆசிரியனாகவும் இருந்த நான் நாடக உலகிற்குள் வந்தது ஒரு விபத்துப் போன்றதே. 1980 களில் யாழ்ப்பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை மெற் கொண்ழருந்த வேளையில் " குழந்தை ம. சண்முகலிங்கம் ஆசிரியர் அவர்களின் "மண்சுமந்த மேனியர்" நாடகத்தை திரு. க. சிதம்பரநாதன் நெறிப்படுத்திக் கொண்டிருந்தார். அந்நாடகத்துக்கு காண்பிய ஒவியனாகவும் மேடையமைப்பு என்பவற்றை தயாரிக்கவும் என்று நான் உள்ளெடுக்கப்பட்டு பின்னர் பாடகள் குழுவில் ஒருவனாகவும், ஈற்றில் மேடையில் நடிக்கின்ற ஒரு பாத்திரமாகவும் நான் மாறிக் கொண்டேன். இதற்கு முன் நாடகத் துறைபற்றி சற்றும் நான் சிந்தித்து பார்த்திருக்கவில்லை. ஆனால் மண்சுமந்த மேனியருடன் இணைந்ததன் பின்னர். சக மனிதர் பற்றியும் சமூகம் பற்றியும் வாழ்வியல் பற்றியும் எனது மன உணர்வுகளை வெளிப்படுத்த அதுவரை நான் கைக் கொண்டிருந்த ஒவியத்துறை போதாது என்பதை முதன் முறையாக உணர்ந்தேன். இதனால் திரு. க. சிதம்பரநாதன் அவர்களுடன் எனது உறவை இறுக் கிக் கொண்டேன். அவர் நடாத் தரிய பல நாடகப்பட்டறைகளில். என்னை ஈடுபடுத்திக் கொண்டேன்.
1990 களில் கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரியில் புவியியல் ஆசிரியராக கடமையாற்றிக் கொண்டு முதன் முறையாக நாடகத் தயாரிப்பில் ஈடுபடலானேன். இதற்கு தமிழ்மொழித்திறன் நாடகப் போட்டிகள் கைகொடுக்கலாயின. அதேவேளை திரு. க. சிதம்பரநாதன் அவர்கள் தயாரித்த" பொய்க்கால், "உயிர்த்த மனிதர் கூத்து," நாமிருக்கும் நாடு நமதே" போன்ற ஈழத்தின் மிகச்சிறந்த நாடகங்களில் காண்பிய ஓவியனாகவும், பாடகனாகவும், மேடை நிர்மானி ஆகவும் ஈடுபட்டது என்னை நாடக உலகில் புடம் போடவைத்தது எனலாம்.
 

r N
இந்நூலில் உள்ள நாடகங்களில் பெரும்பாலானவை இக்காலப்பகுதியில் | உருவாக்கப்பட்டவையே. இதற்கு கல்லூரி அதிபர். திரு. த. முத்துக்குமாரசாமி, நண்பர் திரு. S. சட்டநாதன் என்போர். மிகுந்த ஆதரவை எனக்கு நல்கினர். ஆசிரிய தினவிழாக்கள், பாடசாலை பரிசளிப்பு விழா என்பவையும் முனைப்பாக நாடகத்தயாரிப்பில் தொடர்ச்சியாக ஈடுபட காரணமாயின. 1995ல் யாழ் கல்விவலயம் இரண்டு நடாத்திய கோப்பாய் கோட்டத்திற்கான கலாச்சார விழாவில் "வான்தாரை" என்ற நாடகத்தை தயாரித்து மேடையேற்றியதுடன். யாழ் மண்ணை விட்டு வெளியேறினோம்.
1995இன் பாரிய இடப்பெயர்வானது. சொல்லொணாத துயரத்தையும் அனுபவத்தையும் தந்ததுடன் கூடுகலைந்த குருவிகளாக்கி விட்டது: வன்னிமண்ணின் வவுனியா நகரம் தற்காலிக வசிப்பிடமாக எனக்கு அமைந்தது. வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் கடமையாற்றத் தொடங்கிய போது அதிபர். S. சிவகுமாரன். நண்பர். நா. கு. மகிழ்ச்சிகரன், போன்றோர். தொடர்ந்து நாடகவேலைகளில் ஈடுபட ஆக்கமும் ஊக்கமும் தந்தனர். இது தவிர வவுனியா கலைஇலக்கிய நண்பர்கள் வட்டத்தைச் சேர்ந்த திரு. ந. இரவீந்திரன், திரு. க. பூரிகணேசன், திரு. அகளங்கன் என்போரும் நெருக்கமாயினர்.
1996இல் மீண்டும் நண்பர். திரு. க. சிதம்பரநாதன் அவர்களை சந்தித்தேன். கிளிநொச்சியில் நாடகவேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நண்பர். திரு. செ. விந்தன் (மண்சுமந்த மேனியரில் ஒருவர்"), நண்பர் திரு.S. தர்மானந்தசிவம். என்போரும் வவுனியாவிற்குள் வந்தனர். கைகளை இறுக்கிக் கொண்டோம். "அரங்கச் செயற்பாட்டு குழு" (TG.A) என்ற அமைப்பாக சிதம்பரநாதனுடன் அணிவகுத்துக்கொண்டோம். வவுனியாவில் ஆசிரியர்களுக்காக மேற்கொண்ட நாடகப்பட்டறைகளுக்கூடாக நண்பர்கள் பலர் இணைந்தனர். பாடசாலை நடாகத்தயாரிப்புகளில் புரிந்துணர்வும் இதனால் நாடகப் போட்டிகளில் ஆரோக்கியமும் ஏற்பட்டது. அரங்கச் செயற்பாட்டுக்குழுவின் எனது சக நண்பர்களினது ஊக்குவிப்பும், வளர்ச்சியடைந்த அச்சுயந்திரத்துறையும். காலத்தின் தேவையும் என்னை இந்நூலை தயாரிக்க துாண்டியது எனலாம்.
لر - ܠ
மானிடச்சிக்கல்

Page 9
N நான் மதிப்புடன் நோக்குகின்ற ஈழத்து நாடக உலகின் பிதாமகள் திரு. குழந்தை ம. சண்முகலிங்கம், பேராசிரியர் கா. சிவத்தம்பி பேராசிரியர் சோ. கிருஷ்ணராஜா. என்போர். இதனை தயாரிக்க ஆத்மீக ரீதியில் எனக்கு பலத்தைக் கொடுத்துள்ளனர். நான் பெருமிதத்துடன் நோக்குகின்ற திரு. க. சிதம்பரநாதன். எனது தேடலுக்கு வழிகாட்டியவர். எனது சிந்தனையை விரிவு படுத்தியவர். இவர்கள் யாவருக்கும் இவ்விடத்தில் எனது நன்றியறிதலை தெரிவித்துக் கொள்கிறேன்.
வாழ்த் துரை தந்த பேராசிரியா கா.சிவத்தம்பி அவர்களுக்கும் நூலாசிரியர் அறிமுகத்தைத் தந்த திரு.க.சிதம்பரநாதன் அவர்களுக்கும் இந்நூல் பற்றிய ஒரு கண்ணோட்டத்தை எழுதித்தந்த திரு க. பூரீகணேசன் அவர்களுக்கும் முன்னுரையை எழுதித்தந்த எனது நண்பரும் நாடகவியலாளருமாகிய திரு. செ. விந்தன் அவர்களுக்கும் இந்நூலை அச்சிட உதவிய திரு நவரட்ணராஜா அவர்களுக்கும், கணனிப்பொறி முறையில் பிரதிசெய்த ஆஷா ரைப்செற்றிங் நிறுவனத்திற்கும் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.
இறுதியாக எனது வாழ்வின் சுக துக்கங்களில் இணையாக நின்று மனோ பலத்தை நல்குகின்ற எனது மனைவி கேந்திரேஸ்வரி, அன்புமகள் சாகித்யா என்போருக்கும் இவ்வுலகிற்கு என்னை தந்து கல்வியிலும் கலைகளிலும் ஆளாக்கிய, இன்னும் பக்கபலமாக இருக்கின்ற என் பெற்றோர். திரு. கா.சி.செ.முத்துக்குமாரு, திருமதி.மு. தனேஸ்வரி என்போருக்கும் எனது மாசற்ற அன்பைத் தெரிவித்து இன்னும் என் எண்ணற்ற பெயர் குறிப்பிடாத நண்பர்கள் ஆர்வலர்கள் என்போரது ஆசியையும் ஆதரவையும் வேண்டி என்னுரையை நிறைவு செய்கின்றேன்.
முத்து. இராதாகிருஷ்ணன்.
கலாசாலை அருகில், 32. கரப்பன்காடு, கோப்பாய் தெற்கு, வவுனியா. கோப்பாய் 15-09-1998.
الم. - ܠ
(Ο மாளிடச்சிக்கல் ) w xii & S.: - 3. 3
... -- ...

பள்ளியெழுச்சி
முதல் மேடையேற்றம் 1992
LarrafLörfä5:Göl м

Page 10
: நாடக மாந்தர்
தமிழ்த்தாய் எடுத்துரைஞர் இருவர் முகவர் (வெளிநாட்டு) மாயப்பிசாசு ஏனையோர் / பொதுமக்கள்
மேடையில் பங்கேற்றோர் யா/கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரி மாணவர்கள்:- 68F. DITg56of
மு.ரேனுகா
த. அனுஷ்யா
த.சாமினி
த. காந்திமதி
தி.நிர்மலா
எஸ்.ரஜனி
ம.கொலஸ்ரினா
கு.பாலகுமாரி செ.செல்வகேந்தினி எஸ்.உதயநந்தினி
எஸ். சுஜாதா
இசையமைப்பு :- எம்.கண்ணன்.
நெறியாள்கை மு.இராதாகிருஷ்ணன்
இந்நாடகம் 1992ம் ஆண்டு தமிழ்மொழி கலைத்திறன் போட்டியில் கோப்பாய் கொத்தனி மட்டத்திலும், மருதனார்மட கல்விக் கோட்ட மட்டத்திலும், யாழ் மாவட்ட மட்டத்திலும் முதலாமிடத்தைப் பெற்றது.
 

༄༽
பள்ளியெழுச்சி
(திரை மெல்ல விலகத் தொடங்க மேடையில் பின்புறமாக மத்தியில் ஒரு பொதியைப் போல் என்னவென்று விளங்கிக் கொள்ள முடியாததாக - தமிழ்த்தாய் உணர்விழந்து சோர்ந்து சோகத்துடன் படுத்திருக்க - நாடகமாந்தர் ஒவ்வொரு பக்கம் பார்த்தபடி உறை நிலையில் நிற்க பாடகர்கள் பின்வரும் பாடலைப் பாடுவர்)
UTL6) :- பொழுது புலர்ந்தத. யாம் செய்த தவத்தால்
புண்மையிருட்கணம் போயின யாவும் எழுபசும் பொற்சுடர் எங்கணும் பரவி
எழுந்த விழங்கியது அறிவெனும் இரவி தொழுதுணை வாழ்த்தி வணங்குதற்க் கிங்குன்
தொண்டர் பல்லாயிரர் சூழ்ந்தநிற்கின்றோம் விழிதயில் கின்றனை யின்னுமெண்தாயே
வியப்பது காண். பள்ளியெழுந்தருளாயே எழுந்தருளாயே பள்ளி எழுந்தருள் தாயே!
எடுத்துரைஞர் 1 - நாங்கள் அன்னியன்ரை கலாச்சாரத்தில் ஆசைவெறி கொண்டு எங்களுக் கெண்டிருந்த எல்லாத்தையும் தொலைத்தவர்கள்.
எடுத்துரைஞர்11 :- ஒம். நாங்கள் தொலைத்தது சாதாரண பொருளல்ல. எங்களைப் பெற்று வளர்த்த தமிழ்த்தாயையே
தொலைத்துவிட்டோம்.
உரைஞர் 1 :- எங்கே எம் தாய்?
உரைஞர் II - எங்கே எம் தாய்?
(பின்னணியில் பாடல்) எழுந்தருளாயே பள்ளி எழுந்தருளாயே!

Page 11
Y
(பொதியைப் போல் இருந்த தமிழ்த் தாயை அடையாளம் கண்டு தாயைச் சூழ்ந்து அனைவரும் நிற்க, சிலர் விலகி முன்மேடைக்கு வருவர்)
ஒருவர் :- ஏன்?. வேட்டியும் கட்டி, சால்வையும் போட்டு,
பட்டையும் தீட்டிக்கொண்டு திரியவே?
வேறொருவர் 9..... எட்டு முழச் சீலையும் உடுத்திக்கொண்டு
நிலமெல்லாம் இழுத்துக் கொண்டு திரியவே?
பிறிதொருவர் :- சீ. அநாகரிகம்.
இன்னுமொருவர் :- ஒ. அரைச்சட்டை போட்டு அரை நிர்வாணமாய்.
வேறொருவர் - அது தான் நாகரிகம்.
உரைஞர் 1 - அன்னியன் கலாச்சாரத்தில் மோகங்கொண்ட
மோகினிப் பிசாசுகள்.
உரைஞர் II பெற்ற தாயையே. பெற்ற தாயையே மறுதலித்து
நிற்கும் பேய்கள்.
உரைஞர் 1 இதுகளால தான் எங்கட தாயையே தொலைத்து
விட்டோம்.
உரைஞர் II - எங்கே எம் தாய்?
உரைஞர் 1 எங்கே எம் தாய்?
(எல்லோரும் தாயை தேடுவர். எல்லாப் பக்கமும்கீழும் மேலும்)
உரைஞர் I - எங்கே எம் தாய்?
எல்லோரும் - எங்கே எம் தாய் ! ! ! (உரத்து)
ܢܠ
N
 

எல்லோரும் :-
தாய் :ー
ஒருவர் :ー
எல்லோரும்
தாய்
ஒருவர்
இன்னுமொருவர் :-
பிறிதொருவர்
(மேடையின் நடுவில் ஒரு பொதியைப் போன்ற தோற்றத்துடன் படுத்திருந்த தமிழ்த்தாய் திடுக்குற்று தலைநிமிர்ந்து பார்த்து பின் எழுதல் - எல்லோரும் ஓடிவந்து தாயின் முன் மண்டியிட்டு அம்மா என அழைப்பர் - தாய் எழுந்து அவர்களை அருகே வரவிடாது தடுத்து தான் வெளியேற முற்படல்)
SEÐILD DIT! SÐLDLDT!
வராதீர்கள். வராதீர்கள். (முன்மேடையில் வலது புறம் செல்லல்)
அம்மா. நில்லுங்கள் அம்மா. நில்லுங்கள். எம்மை ஈன்றெடுத்த தாயே. எம்மை விட்டு போகாதீர்கள்.
நில்லுங்கள் அம்மா. நில்லுங்கள்.
வராதீர்கள். கறைபடிந்த மனிதரே என் அருகே வராதீர்கள். அன்னியனைக் கண்டதும் அவன் மீது காதல் கொண்டு பெற்ற தாயையே மறந்த துரோகிகள் என்னை நெருங்காதீர்கள்.
அம்மா. உங்கள் பெருமை உணர்ந்தோம் மகிமை புரிந்தோம். (ஓடி வந்து மண்டியிடல்) ஆம். அன்னை தமிழுக்கு இன்னல் நேர்ந்திடில் சங்காரம் நீசமென்று சங்கே முழங்கு.
"உயிர் தமிழுக்கு உடல் மண்ணிற்கு"
ஓடையிலே என் சாம்பல் ஓடும் போதும் ஒண்தமிழே சலசலத்து ஓட வேண்டும்.
(தாய் பொதுவாக கைகளைத் தட்டியபடி கேலிச் சிரிப்புச் சிரித்தல்)

Page 12
தாய்
ஒருவன்
தாய்
உரைஞர் 1
உரைஞர் II
பாடல்
உரைஞர் 1
UTL6)
ܢܠ
ר
அருமை அருமை. அருமையான வியாபாரம். இப்படிச் சொல்லிச் சொல்லி உங்கள் புகழை உயர்த்தி விட்டீர். உயர்வான பதவிகளை பெற்றுக் கொண்டீர். இன்னும் பெறத் துடிக்கின்றீர். ஆனால் நானோ அழகிழந்து, ஒளி இழந்து, பொலிவிழந்து, வலி இழந்து, தேடுவாரற்று தெருக்கரையில் கிடக்கின்றேன்.
அம்மா?
என் மானத்தைக் காக்கத் துடிக்கிறேன் என் சீரழிவுக்கு காரணம் நீங்கள் தான்! என்னை இந்நிலைக்கு உள்ளாக்கியதும் நீங்கள் தான். நீங்கள் தான் (பார்வையாளரை நோக்கி) நீங்கள் தான். (தாய் மேடையைவிட்டு வெளியேறுதல்)
இப்படித்தான் நாங்கள் எங்கள் தாயை தொலைத்தோம்.
ஓம் இப்படித்தான் தொலைத்தோம்.
எங்கள் கதை சொல்ல வந்தோம் எம்முயிரை இழந்த நின்றோம் கல்தோன்றாக் காலத் தெங்கள் கனத்த கதை சொல்ல வந்தோம்.
கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றி வாழ்ந்த குடி நாங்கள்.
(வயலில் வேலை செய்வது போன்று - இப்பாடலுக்கு ஏற்ப நடிகர்கள் நடிப்பர்)
தன்னானே தன்னானே தானனானானே வெள்ளாப்பில் ஏரெடுத்து வேலை செய்வோமே பொல்லாப்பு ஏதமில்லா பொழுது ஓடும் ஐயா பொன்விழையும் பூமியிலே ~ எம் கால்கள் சேறணையும்
C ( மானிடச்சிக்கல்
 

உரைஞர் 1
உரைஞர் 1
UTL6)
ஒருவர்
மற்றொருவர்
நெல்லெறிந்த நாற்றசைய காற்றிலொரு பாட்டசைய வயற்காட்டில் களையெடுத்த வாழ்ந்திருந்தோம் நாம் தன்னானே தன்னானே தானனானானே.
(அமைதியான இந்நிலை திடீர் என்று குழம்புதல் பின்னணியில் பல சத்தங்கள் வெடிச்சத்தம் அலறல், அவலம் என்பவை புலப்படுத்தப்படும்)
வானம் பொழிந்தது, பூமிபிளந்தது, மின்னல் இடித்தது, சூறை எழுந்தது, சுழன்றது. ஆ. ஐயோ.
(எல்லோரும் மேடையில் சுழன்று சுழன்று. அவதியுறுவர்)
சனங்கள் அஞ்சி நடுங்கினர். புகலிடம் தேடி ஓடினர். பதுங்கினர்.
(சனங்கள் எல்லோரும் மேடையில் இடப்புறம் நாடி நடுங்கியபடி வருவர், சிலர்நிற்க, சிலர் இருக்க - சோகத்துடன் பாடல் பாடப்படும்)
இரத்தத்தில் விடிகின்ற காலை இது சத்தத்தில் உடைகின்ற நாட்கள் இவை அச்சத்தில் உறைகின்ற விழிகளோடும் அவலத்தில் விரைகின்ற கால்களோடும் வையத்தில் வாழ்வெனும் இருப்பிழந்தோம் அடைகின்ற கூடில் ஆந்தைகள் வாழ அகதி என்றொரு இனமாய் எழுந்தோம்.
நாங்கள் இப்ப அகதியள்
ஓம் உடுக்க உடையும், உண்ண உணவும் இன்றி அலையிறம்.
لر ( மானிடச்சிக்கல் )

Page 13
/ N
(எல்லோரும் சோகத்துடன் இருக்க ஒருவர் அக்கம் பக்கம் பார்த்தபடி அக்கூட்டத்தில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ளும் நோக்கில் மெல்ல நழுவுதல்)
ஒருவர் :- நில்லடா. (மிக மெதுவாக)
மற்றவர் - உஷ.
ஒருவர் :- Aö6ù6uoLAT.... 6585.... G3LIFTBT(u I)
மற்றவர் :- P -69.
ஒருவர் :- நில்லடா. எங்க. போறாய்
மற்றவர் :- உஷ.. அகதியா அங்கால போனா அமைக்க
லாம் நல்ல வாழ்க்கை.
(எல்லோரும் பதுங்கி பதுங்கி ஒருவருக்கு பின் ஒருவராக முன்னேறி முதலாமவர் பாய்ந்து ஒட ஏனையோரும் அவரை பின்பற்றி ஓடி பின்வரும் பாடலுக்கேற்ப ஆடலாம்)
UITL6) :- நில்லடா நில்லடா நாங்களும் வாறம் நில்லடா நில்லடா நாங்களும் வாறம் அன்னிய மண்ணில அள்ளித் திரவியம்
கொண்டு வர கொண்டு வர
(பாடலுக்கேற்ப எல்லோரும் ஆடும் போது மேடையில் வலது புறத்தால் கீழ்வரும் பாடலைப் பாடியபடி (வெளிநாட்டு முகவர்) ஒருவர் குதிரையில் வருவது போல்வர அவரை எல்லோரும் கனம் பண்ணி அவர் தயவை நாடுவர்)
ܢܠ ( C மானிடசிேக்கல் ) a
Mulhwngosialisationawr
 

Y
பாடல் (முகவர்)
உரைஞர் 1
ஒருவர்
வேறோருவர்
பிறிதொருவர்
ஒருவர்
- வாருங்கோ வாருங்கோ போகலாம் போகலாம்
வாருங்கோ வாருங்கோ போகலாம் போகலாம் சுவிசுக்கும் போலாம் கனடாவுக்கும் போகலாம் ஒன்றரை ரெண்டரை மூண்டரை நாலரை ஐஞ்சரை லட்சத்தில் அமெரிக்கா போகலாம் அப்புவும் ஆச்சியும் உங்கேயே நிக்கட்டும்.
அக்காவும் அண்ணையும் அங்கால வாருங்கோ
(எல்லோரும் ஆடி உரைஞர்கள் கதைக்கத் தொடங்கும் போது உறைந்த நிலையில் நிற்பர்)
திரைகடல் ஓடி திரவியம் தேடத்தான் வேணும். ஆனால்.
ஆனால் என்ன ஆனால். எங்கட மூதாதையர் திரைகடலோடி திரவியம் தேடு
எண்டு சொல்லித்தானே வச்சிருக்கினம்.
சும்மா நிற்கச் சோறாச்சே.
உந்த உப்புச் சப்பில்லாத கதையளை விட்டுட்டு வாருங்கோ திரவியம் தேடுவம்.
ஓம். ஓம். வறுகிறத நல்லா வறுகுவம்
(எல்லோரும் செல்வம் தேடி மேடை முழுவதும் ஒடி எங்க செல்வம்? எங்க திரவியம்? என்ற சத்தங்களுடன் தூக்க முடியாத சுமைகளாக செல்வத்தை சேர்த்து ஒன்றாக வட்டமாக ஆடி பின்னர் தனித்தனியாக பிரிந்து, தலையில் உள்ளதை இறக்கி செல்வத்தை மற்றவர்கள் தொடாமல் பாதுகாப்பர்.)
O 9 ) ( மானிடச்சிக்கன் )
لر

Page 14
ITL6) :- குளிர்பனி நாடுகள் கொடும் பாலை நிலங்கள்
(எல்லோரும்) எங்கணும் எங்கள் முகம் இழந்தோம்
விரல்ஒயா விழிதஞ்சா உழைப்போராய் நாம் சேர்த்த பணமெல்லோ நாட்கணக்கில்
பாடல் (ஒருவர்)- வேலிகள் மதிலாகி மதிலுக்குள் வீடாகி ஊருக்குள் பணக்காரன்
565).
ஒருவர் எனக்குத்தான் கூட?
மற்றவர் - என்ரயும் கூடத்தான்
உரைஞர் 1 :- இப்படித்தான் திரவியம் தேட எண்டு எங்கட
மண்ணைவிட்டு ஓடினவயள்.
உரைஞர் I :- ஒ. இவையள் திரும்பி இஞ்ச திரவியத்தை மட்டும்
கொண்டு வரேல்ல.
உரைஞர் 1 :- ஒ. திரவியத்தோட கொண்டு வந்தது.
உரைஞர் I :- பெரிய்ய ஒரு மாயப்பிசாசையே
(மேடையின் பின் இடப்பக்கத்தால் அந்நிய கலாசாரம் என்ற மாயப்பிசாசு மேற்கத்தைய பாணி நடனத்துடன் மேடைக்குள் பிரவேசிக்கும். அதன் உடலில் எயிட்ஸ் போதைப்பொருள், மதுபானம், அகங்காரம், பணம், வன்முறை என்பன எழுதப்பட்ட அட்டைகள் தொங்க விடப்பட்டிருக்கும். வேகமாக ஆடியபடி வரும் பிசாசு மேடையின் மத்தியில் நின்று நிதானமாக பின்வரும் பாடலுக்கேற்ப ஆடத் தொடங்கும். (உடுக்கு போன்ற வாத்தியக் கருவிகளுடன் பாடலைப் பாடகர்கள் பாடலாம்)
tamguf_örðfðíðigi
 

usTL6)
ஒருவர்
மற்றவர்
வேறொருவர்
மற்றவர்
ஒரு தாய்
தேடியெல்லோ. உம்மை. நாம் அடைந்தோம் ஒரு தேவையெல்லோ. உம்மை. ۔۔۔۔۔ நாம் அடைந்தோம். அகதிகளாய். அன்றோ. ஓடிவந்தீர்
அழிவுகளை இன்று நாம் தருவோம். நாட்டை நீரும் சென்று
சீரழிக்க நாமுனக்கு என்றும் தனையிருப்போம்.
(பிசாசின் ஆட்டத்துடன் நாடக மாந்தர் அனைவரும் ஆட் பட்டு அசையத் தொடங்குவர். பாடல் வேகமடைய பிசாசு தன்னிடம் உள்ளவைகளை மேடையில் உள்ளோருக்கு ஆடியபடியே வழங்கி பின் மேடையின் நடுவில் முழந்தாளிட்டு அமர்ந்து மெதுவாக ஆடிக்கொண்டிருக்க பின்னணியில் அதே இசை மெல்லியதாக கேட்டுக் கொண்டிருக்க)
எனக்கு இப்ப ஒரு பிரச்சினையும் இல்லை. மூத்தவன் கனடாவில, பெடிச்சி லண்டனில,
ஒ. ஊரில முக்கால் வாசிக்காணியும் உவரிட்டத்தான். எவ்வளவு குடுத்தெண்டாலும் வாங்கிப்போடுவர்.
என்ன காணும் நீர். நான் என்ர பெட்டக்கு வயசுக்கு ஒரு லட்சம் குடுப்பன். ஒ.
ஓ உவரின்ர பெடியள் என்ன? இஞ்ச ஆடுமாடே மேய்க்கிறாங்கள். அவங்களும் வெளியில நிண்டு வறுகியெல்லே அனுப்புறாங்கள்.
பிள்ள கடுதாசியில கொண்ணன் எண்ணன்டு எழுதியிருக்கிறான்.
الم. ) ) D # ( மானிடச்சிக்கல் 11 ܓܰ ܡܐ

Page 15
/ー -N LD86i :- அவயஞக்கு இஞ்ச வரவிருப்பம் தானாம். ஆனால் பிள்ளையஞக்கு இஞ்சத்தயான் சுவாத்தியம் சரி வராதாம். அதுதான். (கடிதத்தை வாசித்தல்) தாய் :- நீ வாசியன் பிள்ள..?
மகள் :- அன்புள்ள அம்மா, தங்கை, மாமா அனைவருக்கும் நாங்கள் இஞ்ச சுகமாய் இருக்கிறம். எந்த நேரமும் உங்கட நினைப்புத்தான். அம்மா உங்கட பேரன் இங்கிலீசில நல்லா பேசுவான். அம்மா, அப்பா எண்டு மட்டும் தமிழ்ழ அவனுக்கு தெரியும். எங்களுக்கு அவன் இங்கிலீஸ் பேசுறத பாத்து ஒரே பெருமை. உங்கட மருமகளும் இப்ப வீட்டில இங்கிலீசில தான் கதக்கிறவ. நாங்கள் உங்க இருந்திருந்தமென்டால் இந்த முன்னேற்றம். எங்களுக்கு வந்திருக்குமோ.
LD856f :- அம்மா. உவர் சதாசிவத்தாற்ர பெடியனுக்கு ஏதோ
வருத்தமாம். சாகக்கிடக்கிறானாம். அங்க.
தாய் :- போன மாசம் தானே அவனுக்கு பொம்பிள
அனுப்பினவயள்.
(தொடர்ந்து மாயப்பிசாசு இருந்தபடி மெதுவாக ஆட ஏனையோர் மதுபானம் குடித்தல், போதைப் பொருள் பாவனை, நடனம் ஆடுதல் போன்ற செயல்களில் ஈடுபடுவர். ஒரு பெண் எழுந்து தள்ளாடியபடி)
பெண் :- மம்மி. நான் பாட்டிக்கு போறன். இரவு டின்னருக்கு
வரமாட்டேன். ஒகே.
தாய் :- ஒகே டியர்.
(ஒருவர் வெறியில் எழுந்து முன்மேடையில் ஆடி
விழுவார். இருவர் சேர்ந்து ஆடுவர். இசையின் வேகம் அதிகரிக்க அதிகரிக்க ஈற்றில் மேடையில்
 
 

உரைஞர்
உரைஞர்
உரைஞர்
உரைஞர்
உரைஞர்
உரைஞர்
உரைஞர்
III
I
II
III
உள்ளவர்கள் அத்தனை பேரும் ஆடுவர். மாயப்பிசாசு பின்புறமாக வெளியேறலாம் திடீர் என்று அனைத்து சத்தங்களும் நிற்க ஆடுபவர் அனைவரும் கீழே விழுவள் அலங்கோலமாக, மிகுந்த அமைதிக்கிடையே மெல்லிய சோக இசைக் கூடாக தமிழ்த்தாய மேடைக்கு வந்து விழுந்து கிடப்பவர்களை சோகத்துடன் அவதானித்து பின் மேடையின் மத்தியில் நாடக ஆரம்பத்தில், தான் இருந்த இடத்தில் தலை குனிந்தபடி முழந்தாளிட்டு இருக்க உரைஞர் இருவரும் வீழ்ந்து கிடப்பவர்களை அவதானித்துக் கொண்டு முன்மேடைக்கு வருவர்)
இந்த அழிவுகள் அவசியமா?
எங்கே நாம் போய்க் கொண்டிருக்கின்றோம்.
இஞ்ச இந்த மண்ணில் இருந்து வெளியில போனவயள் அந்த நாட்டு பழக்க வழக்கங்கள் இஞ்சயும் இருக்க வேணும் எண்டு.
ஓம். எங்கட கலாசாரத்தை துப்பரவா கைவிட்டு அங்க எப்படியாவது காசு சம்பாதிச்சா கானும் என்ற மனப்பாங்கில.
எங்கட மானம் மரியாதைய காத்தில பறக்க விட்டவயள்.
இப்ப இஞ்ச எங்கட சமூகத்துக்கு கேடு விளைவிக்கிற பல விசயங்கள கொண்டு வந்திருக்கினம்.
ஒழுக்கக்கேடு, மதிக்காத தன்மை, போதைவஸ்து பழக்கம் உயிர் கொல்லி நோய். இப்படி எத்தனையோ பயங்கரங்கள் இஞ்ச உலாவத் தொடங்கியிருக்கு.
༄༽

Page 16
/
ஒருவர் :ー
இன்னுமொருவர் :-
உரைஞர் 1
ஒருவர்
மற்றவர்
உரைஞர் 1
உரைஞர் I :-
LIFTL6)
தாய் :-
TL6) 6))f
ܢܠ
எந்த நாட்டில் தான் இதுகள் இல்லை? (ஆத்திரத்துடன்)
அதுதானே..?
கொஞ்சம் பொறுங்கோ. இஞ்ச ஏற்கனவே சனங்கள் யுத்தத்தால செத்துக் கொண்டிருக்குதுகள் என்றதையும் ஒருக்கா நினையுங்கோ.
சும்மா அதஇதச் சொல்லி சனங்களைக் குழப்பாத. 9.
ஒ. கடவுள் காலைப் படைச்சது சும்மா நிக்கவோ? இந்த உலகம் முழுக்க ஓடிஓடி உழைக்க வேணும். தேடவேணும்.
வெளிநாடுகளுக்கு போகவேண் டாம் எண் டு சொல்லேல்ல எங்கட தமிழ் கலாசாரம் சீரழியிற மாதிரி. நடக்காதேங்கோ.
உந்த பழக்க வழக்கங்களை இஞ்ச கொண்டு வந்து எங்கட தமிழ் சமூகத்தை குழப்பாதேங்கோ.
பாமரராய் விலங்குகளாய் உலகனைத்தம் இகழ்ச்சி சொல ~ பான்மை கெட்டு நாமமது தமிழரெனத் கொண்டு இங்கு வாழ்ந்திடுதல் நன்றோ ~ சொல்வீர்.
வாழ்ந்திடுதல் நன்றோ?
(இவ்வேளை பின்னணியில் இசையுடன் பின்வரும் பாடல் வரிகள் ஒலிக்கும்)
எழுந்திடுவீரே. எழுந்திடுவீரே. எழுந்திடுவீரே.
C மானிடச்சிக்கல் )
 
 

உரைஞர் 1
உரைஞர் II
உரைஞர் 1
பாடல்
ஒருவர்
உரைஞர் 1
ஒருவர்
பாடல் வரி
உரைஞர் II
உரைஞர் 1
ஒருவர்
LIT 6) 6).If
- எழுந்திடுவோமே. பள்ளி எழுந்திடுவோமே. பள்ளி
N
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று வீறாப்பு கதைச்சுக் கொண்டு நிக்காமலே உண்மையாகவே.
தமிழ் மொழியை நினைக்க வேணும். தமிழைப் பயன்படுத்த வேணும். தமிழர் கலைகள் பாதுகாக்கப்படல் வேண்டும்.
எழுந்திடுவீரே. எழுந்திடுவீரே. எழுந்திடுவீரே.
எங்களுக்கென்று ஒரு இடம் கிடச்சபிறகு நாங்கள் உதில எங்களுக்கு கவனம் செலுத்தலாம் தானே.
எங்கட மொழியும், கலாசாரமும் அழிஞ்ச பிறகு எங்களுக்கு இடம் கிடச்சு பிரயோசனம் இல்ல.
அதுக்கு நாங்கள் என்ன செய்ய வேணும்.
எழுந்திடுவீரே. பள்ளி எழுந்திடுவீரே.
வியாபாரமாக நினைக்காமல் உண்மையாகவே எங்கட மொழி, பாரம்பரியம், கலாசாரத்தைப் பின்பற்ற வேணும்.
ஓ.ம் அதுக்கெதிரான அடக் குமுறைகளை உடைத்தெறிய வேணும்.
ஒ. அன்னிய மோகம் என்ற மயக்க நிலையில் இருந்து விடுபட்டு எழுந்திட வேணும்.
எழுந்திடுவோமே.
(தமிழ்த் தாய் மேடையில் தாண்டவ நடனம் ஆடத்தொடங்கி பின்னர் படிப்படியாக மகிழ்வுடன் ஆடி அருள்பாலித்தபடி நடுவில் நிற்றல்)
C_15_D C மானிடச்சிக்கல் )

Page 17
N நடனம் :- தக தகிட தக திகிட தக திகிட தத்திகிட தக தகிட தக திகிட தக திகிட தத்திகிட
ஒருவர் - காதலும் வீரமும்,
மற்றவர் - அறமும் கொடையும்.
வேறொருவர் :- அறிவியலும் மருத்துவமும்.
உரைஞர் 1 s நம் தமிழர் பண்பாடு.
எல்லோரும் :- 6s 85 55....... வளர்க தமிழ். வாழிய தமிழ் மண்.
UTL6) :- வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி
வாழிய வாழியவே வான மளந்த தனைத்தம் அளந்திடும் வண்மொழி வாழியவே ஏழ்கடல் வைப்பினுந் தண்மணம் வீசி இசை கொண்டு வாழியவே எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழி என்றென்றும் வாழியவே சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத் தலங்குக வையகமே தொல்லை வினைதகு தொல்லையகனறு சுடர்க தமிழ் நாடே வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ் மொழியே வானம் அளந்ததனைத்தம் அறிந்த வளர்மொழி
வாழியவே.
(பாடல் நிறைவுற அனைவரும் மேடையில் நின்று சபையினருக்கு வணக்கத்தை தெரிவிக்க திரை மூடப்படும்.)
雛 மானிடச்சிக்கல் }
 
 

மானிடச்சிக்கல்
முதல் மேடையேற்றம் 1993
Lmmramffi Lliffith Gül

Page 18
மேடையில் பங்கேற்றோர்
ம.கொலஸ்ரினா செ.செல்வகேந்தினி தி.நிர்மலா கு.பாலகுமாரி ந. செளம்யா
நிக சசிகலா மு.ரேனுகா த. சர்வலோஜினி த.சாமினி
செ. மாலினி த. காந்திமதி
ம. கொன்சன்
நாடக மாந்தர்
அவலமாய் உயிர் துறக்கும் தந்தை: மனநோயாளித் தாய்: பொறுப்பான மகள்: வெளிநாட்டில் வாழும் மகன்: நண்பர்கள் இருவர் (உரைஞர்) அயலவர்கள் / பொதுமக்கள் பலர்:
இசை
முரளி
நெறியாள்கை :- மு.இராதாகிருஷ்ணன்
இந்நாடகம் 1993 தமிழ்மொழி கலைத்திறன் போட்டியில் கோப்பாய் கொத்தனி மட்டத்தில் முதலாமிடத்தையும், மருதனார்மட கல்விக் கோட்ட மட்டத்தில் முதலாமிடத்தையும், யாழ் மாவட்ட மட்டத்தில் முதலாமிடத்தையும் பெற்றது. 1996 இல் தமிழ் மொழித்திறன் போட்டியில் வவுனியா மாவட்டத்தில் முதலாமிடத்தையும், வடகிழக்கு மாகாணத் தமிழ்த்தினப் போட்டியில் இரண்டாமிடத்தைம் பெற்றது.
ܢܠ CC மானிடச்சிக்கல் ) 18 ) ܗܝ D.
 

மானிட்ச்சிக்கல்
திரை விலகும் போது பாடகர்களால் கீழ் வரும் பாடல் பாடப்படும். பாடல் தொடங்கி ஒரு நிமிடத்தின் பின் திரை விலகலாம். திரை விலகும் போது மேடையில் ஒரு சிக்கலான - பிணைந்த அமைப்பில் சிலர் நிற்பர். நாடகத்தின் பிரதான பாகமேற்பவர்களாக அவர்களே இருப்பர். கணவர் அவலமாக உயிர் துறந்ததால் மன நோயாளியான ஒரு நடுத்தரவயது தாய், அவரது வயதுவந்த மகள், வெளிநாட்டு வாசியாக இருக்கும் புலம் பெயர்ந்த மகன் என்பவர்களுடன் இக்குடும்பத்தில் அக்கறையுள்ள இரு நண்பர்களும் இவ்வமைப்பில் இணைந்து காணப்படுவர். இந்நண்பர்களே எடுத்துரைஞர்களாகவும் இடம் பெறுவர். திரை விலக நண்பர்கள் அல்லது பாடகர்கள் பாடலைப்பாட ஏனைய மேடையில் உள்ளவர்கள் தம் பிணைப்பிலிருந்து விடுபட முயற்சித்துக் கொண்டிருப்பர்.
LIFTL6) - சூழ்ந்திடு இருளில் சுகங்களை இழந்து தயருறும் எமக்கு
வழியில்லையோ. ஆழ்ந்திடும் தயரில் தோய்ந்திடு உயிர்கள் வாழ்ந்திடத்தடிக்கும் விடிவில்லையோ.
நண்பர் - (பிணைப்பில் இருந்து மெல்ல விடுபட்டு) சூழ்ந்திடும் இருளில் சுகங்களை இழந்து துயருறும் எமக்கு வழியில்லையோ.
UFTL6) :- இருப்புச் சிதைந்த தனிமை, ஆதரவற்ற விழிகள், மனிதச்
சிக்கலாய் நாங்கள். நாங்கள். நாங்கள். நாங்கள்.
C மானிடச்சிக்கல் ):

Page 19
நண்பர் :- இருப்புச் சிதைந்த தனிமையுடன், ஆதரவற்ற விழிகளைதரிசிக்கும், மனிதச் சிக்கலாய் நாங்கள் இருக்கிறோம்.
மீண்டும் "சூழ்ந்திடும் இருளில்" என்ற பாடல் மென்மையாக பாடகர்களால் பின்னணியில் பாடப்பட நண்பர்கள் இருவரும் முன்பு போல் சிக்கலான பிணைப்பில் இணைந்து உறைந்த நிலையில் நிற்பர்.அவ்வேளை மேடையின் இடது, வலது பக்கங்களால் சிலர் பிரவேசிப்பர். இவர்கள் அயலவர்கள் அல்லது சமூக மக்கள் என்பதாக நாடகத்தில் கொள்ளப்படுகின்றனர். மிக மெதுவாக இரகசியமானது போல் பதுங்கி பதுங்கி வந்து மேடையில் பிணைந்து உறைந்த நிலையில் நிற்பவர்களை சுற்றி வந்து பார்வையிடுவர். பின்னர் தம்மிடையே உரையாடுவர்.
ஒருவர் :- ஏன் இப்பிடி பேயறஞ்சமாதிரி இவயள். இருக்கினம்.
இன்னுமொருவர் :- அக்கம் பக்கத்தில சொன்னா. குறைஞ்சே போகுது.
வேறொருவர் :- ஓம். எதுவெண்டாலும் வெளியில கதச்சா.
ஆறுதலாயிருக்கும்.
மற்றொருவர் :- ஒ. குறையளை தெரிஞ்சாத்தானே சமூகம்
உங்களுக்கு உதவியாயிருக்கும்.
இன்னுமொருவர் :- எனக்குத்தல வெடிக்குமாப்போல கிடக்கு எப்பிடியும்
அறிஞ்சுபோட வேணும்.
பிறிதொருவர் :- உவையள் சொல்ல மாட்டினம். ஆனால்.
எல்லோரும் - ஆனால் . என்ன?
жж-еже- ܢܠ (C மானிடச்சிக்கல் ) C20 D
 

/ N
பிறிதொருவர் :- எனக்குத் தெரியும் (பெருமிதத்துடன் கூறிக்
கொள்வார்)
ஒருவர் - உமக்குத் தெரியுமோ (மிக ஆவலுடன் ஆச்சரிய
LDT85)
(எல்லோரும் என்ன? என்ன? என்றபடி விடுப்புக்கேட்கும் சுவாரசியத்துடன் "எனக்குத்தெரியும்" என்பவரை நோக்கி ஓடுவர். அவரும் எவ்லோருக்கும் விடையத்தைக் கூறுவது போல் - எல்லோரும் காகக்குஞ்சுகள் போல் வாயை திறந்து கேட்டுக் கொண்டிருக்க அவர் காகம் உணவு கொடுப்பது போல் நிகழ்த்திக்காட்டுவார். விடையத்தைக் கேட்ட பின்பு எல்லோரும் சலிப்புடன் திரும்பி “என்னத்தைச் சொல்ல” என்பது போல் நகர்வர்.)
ஒருவர் :- என்னத்தைச் சொல்ல. b.....
(ஆயாசத்துடன் கூறுவார்)
மற்றொருவர் :- ஒ.ம்.என்னத்தைச் சொல்லுறது.
பாடல் என்னத்தைச் சொல்ல நாங்கள். எண்னத்தைச் சொல்ல நாங்கள். எண்னத்தைச் சொல்ல நாங்கள்.
(எல்லோரும் பாடலுக்கு ஏற்ப ஆடியபடி நடுவில் உறைந்த நிலையில் நிற்பவர்களை சுற்றிவருவர்.
முடிவில் ஒருவர் ஆடுவதை விட்டு முன்புறமாக ஓடிவந்து சிக்கலான அமைப்பில் பிணைந்துள்ளோரைச் சுட்டிக்காட்டி பார்வையாளரை நோக்கி)
ஒருவர் :- உவயள் அகதியள்.
மற்றொருவர் :- ஆ. அகதியளோ,
لر ܢܠ

Page 20
ஒருவர்
வேறொருவர்
குரல்
குரல்
குரல்
பாடல்
ஒருவர்
மற்றொருவர் ܢ
- ஓடி வந்தவயளோ (யோசித்து) எப்பிடி?
:- றிவிரஸ.
- பொன்னும் அழிவாச்சே
:- எல்லாத்தையும் விட்டுட்டு ஓடி வந்தனாங்கள்.
:- கையில மடியில ஒண்டும் இல்ல.
N
வீடு, வாசல், வளவு, வாய்க்கால், தோட்டம், துரவு எல்லாத்தையும் விட்டுப்போட்டு ஓடி வந்தவயள்.
(பின்னணியில் கடுமையான வெடிச்சத்தங்கள் ஒலிக்க எல்லோரும் - பிணைந்துள்ளோர் தவிர்ந்த ஏனையோர் பெட்டி படுக்கைகளை தூக்கியபடி ஓடி பின் தள்ளாடி நடக்க இடையிடையே பின்வரும் சொற்கள். குரல்களாக கேட்கும்)
லீப் போவேட்.
சத் ஜெய.
(தள்ளாடி நடப்பவர்கள் நிற்க பாடல் பின்னணியில் ஒலிக் கும் . பாடகர்கள் அல்லது நடுவில் பிணைந்தநிலையில் உறைந்த நிலையில் நிற்போர் UsTL60)6OJUTC6)lif.)
பொன்னுயிரும் தீங்காச்சே காசும் அழிவாச்சே ~ கல்வியும்பாழாச்சே இருப்புகளை இழந்த நாமும் ~ இன்று இடந்தேடி அலைகின்றோமே.
(பாடல் முடிய நடந்து, களைத்து வருபவர்கள் ஆங்காங்கே மெதுவாக இருக்கலாம்.)
 

س
வேறொருவர் - பாழ்பட்டுப்போவார். LD .
பிறிதொருவர் :- வடமாராட்சி தென்மராட்சி பாத்து, வன்னியெண்டு,
கொழும்பெண்டு.
பாடல் - இருப்புக்களை இழந்த நாமும் - இன்று இடந்தேடி
அலைகின்றோமே.
(இன்னும் ஒருவர் எழுந்து, களைத் து இருப்பவர்களை ஒரு முறை பார்த்து விட்டு)
இன்னுமொருவர் - சரி.சரி.எழும்புங்கோ.
ஒருவர் - ஓம்.ஓம்.சும்மா புதினம் கதைக்கிறத விட்டுட்டு ஓடி வந்தவயஞக்கு ஒரு வழியப் பாருங்கோவன்.
வேறொருவர் - வீடு, கீடு இருந்தா எடுத்துக்குடுங்கோவன்.
பிறிதொருவர் :- உவர் பேரம்பலத்தாற்ற வீடு சும்மாதான் கிடக்குது.
மற்றொருவர் அவையள் அவுஸ்ரேலியாவில ஸெட்டில் ஆயிட்டினம்
அவற்றை கசின் தான் இப்ப வீட்டில.
ஒருவர் - ஓ. அனெக்ஸா இருக்கிறதெண்டால் கேட்டுச்
சொல்லலாம்.
வேறொருவர் - உமக்கு என்னப்பா.விசரே. உதுகள இருத்தினா
பிறகு தெரியும் தானே.
இன்னுமொருவர் :- ஒ. ஒ. பிறகு எழுப்பிறது கரைச்சல்.
ஒருவர் பிரச்சனையள் தீர்ந்தபிறகு எழும்புவினம் தானே.
வேறொருவர் :- பிரச்சனை. (சிரித்து) தீருமோ..?

Page 21
Y
ஒருவர் :-
மற்றொருவர்
வேறொருவர்
இன்னுமொருவர் :-
ஒரு சிலர்
ஒப்பாரி
ஒருவர்
மற்றவர்
வேறொருவர்
ஒருவர் :ー
மற்றவர்
ஒருவர் :-
:- ஊருப் பரிகாரி ஓடி விட்டான் ஓர் நாளில்
N
அது சரி உந்தப் பொடிச்சீன்ரை (பிணைந்துள்ளவர். களில் மகளைச் சுட்டி காட்டி) தேப்பன் எங்கே..?
என்ன..? தேப்பனோ?
அந்தாள் மண்டையை போட்டுட்டுதெல்லே.
என்ன? மலைபோல இருந்த மனிசன். ஐயோ!
ஐயோ ஐயையோ!
(இடது பக்கத்தில் சிலர் ஒப்பாரி சொல்லி அழ,
ஏனையோர் துக்கம் விசாரிப்பவர் போல்சுற்றி வந்து, பின் சோகத்துடன் நிற்பர்.)
பொல்லாத போக்கிரியாம் யமன் போக்கிவிட்டான் உன் உயிரை. முத்த பதித்த முகம், முதலிமார் மதித்த முகம். தங்கம் பதித்த முகம், தரணிமார் மதித்த முகம்.
என்னத்த. சொல்லுறது.
அதுகள் அகதியள். அப்பரும் போயிட்டார் ம்.
ஆனா தம்பி வெளிநாட்டில.
ஒ. அப்ப தப்பிவிட்டார் தம்பிப்பிள்ளை.
வெளி நாடெண்டா நல்லா வறுகலாம் என்ன?
பின்ன சும்மா இருக்கிறதெண்டா அங்க ஏன் போயினம்.
 

ஒருவர்
ஒருவர்
ஒருவர்
UTL6)
Y
(ஒருவர் மேடையின் முன்புறத்துக்கு ஓடி வந்து பார்வையாளரைப் பார்த்து)
காலை எழுந்தவுடன் ஒட்டம்.
(எல் லோரும் எழுந்து உழைப்பதற்காக முண்டியடித்து ஓடுவதாக பாவனை செய்வர்)
கை கன்றிப் போகும் வரை உழைப்பு.
(எல்லோரும் ஏதாவது ஒரு தொழிலை வேகமாகச் செயப் வர். அவ் வேளை மேடையரின் வலது பின்புறத்தால் "பணம் என்ற ஒருவன்" வந்து ஆடியபடி நோட்டுக்களை அள்ளி வீச, எல்லோரும் அவனை வணங்கி, துதித்து பண நோட்டுகளை வாரி வாரி எடுத்து பைகளில் நிரப்புவர். அவ்வேளை பணம் வந்தவழியே வெளியேறிவிடுவான்)
மாலை முழுதும் முழுமப்பு
(எல்லோரும் மது போதையில் உள்ளவர்களாக தள்ளாடி தள்ளாடி நடந்து பின் வரும் பாடலைப்பாடியபடி-பிணைப்பில்உள்ளோரை சுற்றி வருவர்)
:- என்னத்தைச் சொல்ல நாங்கள்!
தப்பி விட்டார் தம்பிப்பிள்ளை தப்பி விட்டார் தம்பிப்பிள்ளை
(எல்லோரும் சுற்றி ஆடியபடி வர அதில் ஒருவர் ஏனையவர்களை நோக்கி உஷ். எனச்சத்தம் போடாமல்வரச் சைகை செய்து, பதுங்கிப் பதுங்கி நடுவில் உறைந்த நிலையில் நிற்பவர்களை நோக்கி வந்து, பார்வையிடுவார்)

Page 22
ஒருவர்
ஒருவர்
மற்றவர்
வேறொருவர்
ஒருவர்
இன்னுமொருவர் :
ஒருவர்
UTL6)
நண்பன்
நண்பன்
உஷ. (பதுங்கிச் சென்று கவனித்து)
உவேன்ரை அம்மாவுக்கு விசர்.
நான் அப்பவே நினைச்சனான்.
- உதுகளின்ர போக்கு ஒரு மாதிரியாத்தான் கிடந்தது.
அப்ப உது விசர்க்குடும்பம்.
புருசன் செத்தத நினைச்சு மனம் கலங்கிப் போச்சு போல
உது ஹிஸ்டீரியா தான்.ஒ.
(எல்லோரும் நாயைப் போல நாக்கை தொங்க
விட்டுக் கொண்டு, மேடையை விட்டு வெளியேறிவிட பின்னணியில் மீண்டும் பின்வரும் பாடல் வரிகள் ஒலிக்கும். அவ்வேளை பிணைந்து நிற்போரில் இருந்து விடுபட்டு நண்பர்கள் மேடையின் முன் புறத்துக்கு வருவர்.)
சூழ்ந்திடும் இருளில் சுகங்களை இழந்த தயருறும் எமக்கு வழியில்லையோ!
இது தான் எங்கட சமூகம்.
காலம் காலமாய் நாங்கள் கட்டிக் காக்கிறம் எண்டு சொல்லுற பண்புகள், அத்தனையையும் மிதிக்கற
சமூகம்.
இந்தச் சமூகத்தில் நாங்கள் மெளனமாயிருக்கிறது தான் ஒரே வழி.
C26 O. - :::::::s: :Kభ%.:భళ్ల
 

r ཡོད
ഥങ്കബ് :- எங்கட பிரச்சினை. எல்லோருக்கும் உள்ளது
தான்.
மகள் :- (தாயைச் சுட்டி) இவதான் எங்கடை அம்மா.
D856f :- (தனக்குள்) அம்மா. பாவம்.ம் அப்பா போன
நாளில் இருந்து.
(திடீர் என்று ஒரு சிறிய சத்தத்திற்கு ஆட்பட்டு தாய் (மனநோயாளி) பயங்கரமாக அலறி ஓடுதல், பிதற்றுதல்)
தாய் :- அங்க. அங்க. வாறான். அங்க வாறான். இங்கினேக்க தான் வருகுது. நீங்கள் எங்கணப்பா நிக்கிறியள். ஐயோ இஞ்சால வாங்கோ இஞ்சால வாங்கோப்பா. வாங்கோப்பா (அலறல்)
மகள் :- அம்மா அம்மா! (உசுப்புதல்) அம்மா!
தாய் :- (தன்னிலைக்குத் திரும்பி) பிள்ள கொய்யா எங்க
பிள்ள? இப்ப. இப்ப. என்ன நடந்தது?
மகள் :- ஒண்டும் நடக்கேல்லையம்மா. நீங்கள் உதுல
ஆறுதலா இருங்கோ (சலிப்புடன்)
(தாயை அருகில் இருத்திவிட்டு பார்வையாளரை நோக்கி)
மகள் :- ஒ. அது உண்மையில கொருரமானது தான் (அப்பா
செத்தது)
(மெல்ல மேடையில் இருள் சூழ்ந்து பின்னர் மெல்ல ஒளியேற்றப்பட அங்கு ஒரு வீட்டுச் சூழல் காட்டப்படும். தந்தை சுவாமி அறையில் لر ܢܠ

Page 23
UsTL6)
தாய்
DeB6ft
set JUT
DeB6f
அப்பா
மகள்
sellbi DT
இருப்பதாகவும், அங்கிருந்து பாடல் சத்தம் கேட்பதாகவும் காணப்படும். தாய் மரக்கறிகளை வெட்டுவது போலவும் - மகள் கூட்டிப் பெருக்குவது போலவும் காணப்படும்)
- நின்றுமிருந்தங்கிடந்த நடந்த நினைப்பதன்னை
என்றும் வணங்குவதன் மலர்தாளடி தாமரையின் ஒன்றுமரும் பொருளே யருளே யுமையே யிமையத் தன்றும் பிறந்தவளே யழியா முத்தியானந்தமே,
பிள்ளை அப்பாவுக்கு தேத்தண்ணியை குடு பிள்ளை.
ஓமம்மா. இந்தா கூட்டிப்போட்டு வாறன். (மகள் கொடுத்த தேத்தண்ணியை பருகியபடி தந்தை)
பிள்ளை சட்டையை ஒருக்காத்தா..? உதில சந்தையடி வரைக்கும் போட்டு வாறன்.
(சேட்டைக் கொடுத்தபடி) கெதியெண்டு வாங்கோ. உங்காலப் பக்கம் காலையில தொடக்கம் சத்தமும் கேக்குது.
நான் உதில போறதும் வாறதும் தான்.
(திடீர் என்று விமான இரைச்சல் சத்தம் கேட்க வேலைகளை விட்டு விட் டு தடுக் குற்று
பரபரப்படைதல்)
அம்மா. அம்மா. மேல சத்தம் கேட்குது. வீட்டுக்க நிக்காதேங்கோ. வெளியில வாங்கோ.
ஐயோ. இந்த மனிசன் இந்த நேரமெண்டு வெளியில போட்டுது.
○エ LanförfãSG
N
 

N تسر
மகள் :- அம்மா இஞ்சால வாங்கோ. ஐயோ. இஞ்சால பக்கம்தான் வருது. ஐயோ படுங்கோ. கீழ படுங்கோ.
SilbLDI :- அங்க அப்பா. ஓடி வாறார்.
tᏝ8Ꮟ6ii ᎦᏖ? :- g (3uj T..... எல்லோரும் கீழ படுங்கோ.
போட்டுட்டாங்கள்.
அம்மா ;~ ஐயோ. இஞ்சால வாங்கோ. அங்க வாறான். இஞ்சதான் வருது. இஞ்சால வாங்கோப்பா. வாங்கோப்பா. இஞ்சால வாங்கோப்பா. ..... ஐயோ.
(கொடுரமான மிகப்பெரிய வெடியோசைகள் இரண்டு அதிர்வுடன் கேட்க எங்கும் நிசப்தம் குடிகொள்ளும் எல்லோரும் உறைந்த நிலையில் நிற்பர்)
ᏞᏝᏧᏏ6ir : Q. . . . . எங்கட அருமையான அப்பா. எங்கட
கண்ணுக்கு முன்னாலயே கரைஞ்சு போயிட்டார்.
LD86ir :- எங்கட முற்றத்தில பூப்பரவினதுபோல அப்பாவின்ர உடம்பு மண்ணோட மண்ணா. மண்ணோட மண்ணா. (உரத்து அழுதல்) - (பின்னணியில் UTL6ö UTLÜLI(6lb)
LITL6) :- முத்த பதித்த முகம் முதலிமார் மதித்தமுகம் தங்கம் பதித்த
முகம் தரணிமார் மதித்தமுகம்.
நண்பன் :- ஒ. செல்வாக்கா வாழ்ந்த குடும்பம். இப்ப
சீரழிஞ்சுபோய் இருக்கு.
நண்பன்11 :- ஒ. வயித்துக்கு படுறபாட்டுக்க இப்ப வயித்தியத்
துக்கும் எண்டால் அதுகள் என்ன செய்யிறது. لر ܢܠ

Page 24
மகள்
நண்பன்
நண்பன்I
நண்பன்
ᏞᏝéᏂ6ir
தம்பி
தம்பி
திடீர் திடீர் எண்டுதான் அம்மாவுக்கு இப்பிடி வரும் மற்றப்படி அவ சும்மாதான் இருக்கிறா.
(மகள் தாய்க்கு மருந்து மாத்திரைகளை எடுத்து வந்து குடிக்கச் செய்வாள்)
அது சரி உங்கட தம்பியிட்ட இருந்து ஏதாச்சும் சேதிவந்ததே?
அவன் பாவம், படிக்கிற வயசில வயசுக்கு மீறின சுமையயெல்லே சுமக்கிறான்.
(பார்வையாளரைநோக்கி)
அதுவும் வெளிநாட்டில
தம்பியிட்ட இருந்தும் கடதாசி ஏதும் வரேல்ல (தனக்குள்) தம்பி பாவம். அங்க என்ன கஷ்டமோ
(மேடையில் இதுவரை உறைந்த நிலையில் இருந்த தம்பி விடுபட்டு முன் மேடைக்கு வர, மகள், தாய், நண்பர்கள் உறைந்த நிலையில் நிற்கலாம்)
(யோசித்து தனக்குள்) வீட்டிலஅதுகள் என்ன செய்யுதுகளோ ம். வீட்டுக்கு ஒரு கடிதம் போடுவம்.
(கடிதம் எழுதும் பாவனையில் - தனக்குள்) அன்புள்ள அம்மா சகோதரங்களுக்கு, நான் நலம். உங்கள் நலமறிய ஆவல். எனக்கு உவ்விடம் வரத்தான் விருப்பம் - (யோசித்தல்)
(பார்வையாளரை பார்த்து) உங்க போய் என்ன செய்யிறது.
N
 

தம்பி
தம்பி
தம்பி
தம்பி
நண்பர்
(சலிப்புடன் கடிதத்தைக் கிழித்து சுக்கலாக பார்வையாளரை நோக்கி எறிதல், பின்னர் மேடையின் நடுப்பகுதிக்கு வந்து, மது அருந்தி போதையுடன் தள்ளாடியபடி முன் மேடைக்கு வந்து, பார்வையாளரை நோக்கி)
(விரக்தியாக) நாங்கள் இஞ்ச மகிழ்ச்சியா. சந்தோசமா இருக்கிறம் எண்டு ஒருக்காலும் நினைச்சுப் போடாதேங்கோ.
இஞ்ச வந்து எங்கட கலாச்சாரத்தையும் மறந்து, இந்த நாட்டு கலாச்சாரத்தையும் பின்பற்ற முடியாமல் நாங்கள் படுகிறபாடு.
உதுகள சொல்லி விளங்க வைக்கேலாது.ம்.
ஆனால் ஒண்டு. இப்ப. நாங்கள் நல்லா உணருறம்.
விடிய நடுங்கிற குளிருக்க எழும்பினா. பிறகு. பிறகு நாங்கள் இயந்திரம். ஓ..! இயந்திரம் தான்
(நாடக மாந்தள் எல்லோரும் இணைந்து ஒன்று, இரண்டு, அல்லது பல இயந்திரங்கள் போல் இயங்குவர். ஆரம்பத்தில் மெதுவாகவும் பின்பு வேகம் அதிகரித்தபடியும் இவ்வியந்திரங்கள் இயங்க, அவற்றிடையே தம்பி சென்று வேலை செய்வான். வேகத்தின் உச்சத்தில் தம்பி சுழன்று விழ ஏனையோரும் விழலாம் பின்னணியில் சோகமான ஒரு இசை ஒலிக்க நண்பர்கள் மெதுவாக முன் மேடைக்குவருவர்)
ஒ. கொள்ளாத்துயரம் நாம் பட்டோம். இனி பாடுகள் சுமக்க. வலுவில்லை.
。 Lnasiriöi

Page 25
தம்பி
தம்பி
தம்பி
தாய்
LD856ft
தம்பி
நண்பர்1
நண்பர்1
Լ08567
பாடல்
(மெதுவாக எழுந்து) ஒ. பாடுகள் சுமக்க வலுவில்லை.
நான் இஞ்ச வந்து சேர்ந்தத நினைச்சா. இப்பவும் எனக்கு நிம்மதியா நித்திரை வராது.
ஒவ்வொரு எல்லையா. பொலிசிட்டையும் நாயிட்டயும் தப்பி. ஐஸ் பெட்டியில, பவுசருக்க கிடந்து செத்து - கால்வாயில் நீந்தி. இஞ்ச வந்து எங்கட கனவுகளை. கனவுகளாகவே கலையவிட்டிட்டம்.
ஒ (தலை நிமிர்த்தி) மானிடச் சிக்கலாக நாங்கள் இருக்கிறம்.
இப்பிடி சிக்கலான நிலை எங்களுக்கு ஏன் வந்தது?
அது ஒரு பெரிய்ய கதை. ம்
அன்று நாங்கள் மிக அமைதியாக வாழ்ந்த கூட்டம்.
முல்லை, மருதம், குறிஞ்சி, நெய்தல், பாலை எண்டு பண்போட வாழ்நத கூட்டம்.
அன்பு, பண்பு, செல்வம் , அறிவு எண் டு மகிழ்ச்சியாத்தான் வாழ்ந்தோம்.
(பாடலுக்கு ஏற்ப அனைவரும் கோயில், கரகம், காவடி, பூசை என்பவற்றில் ஈடுபட்டு துதித்தல்.)
செல்வம் நிறைந்த எங்கள் செவ்விதாம் பூமியிலே நல்லதெல்லாம் அருள்வாயே நாயகியே எம் (அ) மன்னையே பால் சொரிந்து பொங்கலிட இன்ப மெங்கும் பொங்கிடுதே அன்புடனே அறமு மெல்லாம் அவனியில் நிறைந்திடுதே
N
 

எண்ணிய எண்ணம் எல்லாம் இனிதே நிறைவேற தாயே பராசக்தி தயவாய் வேண்டுகின்றோம்.
நண்பர்1 :- திடீர் என்று. 9. . . . . திடீர் என்று அமைதி
குலைந்து. (......
நண்பர்1 :- கொல்லையில் நின்ற மத யானைகள் ஊருக்குள்
புகுந்தன. துவம்சம். 9..... துவம்சம்.
(எல்லோரும் அவலப்பட்டு ஓடி ஈற்றில் கீழே விழுவர் - பின்னணியில் சோக இசை ஒலிக்கும்)
நண்பர் - அமைதி அழிந்தது, இருள் சூழ்ந்தது.
தம்பி :- அன்பும் பண்பும் பாசமும் அறவே அழிந்தன. தாய் :- குடும்பங்கள் சிதைந்தன, பிரிந்தன , குற்றுயிராயின.
மகள் :- சுகங்களை இழந்தோம், ஒருபெரும் ஊழியின்
முடிவில் எங்கள் வேர்களை இழந்தோம்.
நண்பர்1 :- சுயநலம், இழுபறி. பொய், களவு, கொலை
அத்தனையும் மலிந்தன.
(இவ்வேளை நடிகர்கள் இழுபறி சண்டைகளில் RF(6UL6)ITLD)
மகள் - பழமையும் பெருமையும் கொண்ட கலைகள்
எம்முடையன.
(ஒருவர் பரத நாட்டிய அடவு ஒன்றை மேடையில் செய்யலாம். தத்திக் தகஜொனு தத்திக் தகஜொனு
தாகிட தா. )
தம்பி - பழமையும் பெருமையும் கொண்ட கலைகள் அனைத்தையும் இழந்தோம். 3. மனிதப்
பண்புகளையும் இழந்தோம்.
ノ
33 ད། ...: C மானிடச்சிக்கல் ) 9

Page 26
/ー
நண்பர் :- இப்படி சிதைந்து போனதுகள் எத்தனையோ..!
எத்தனையோ. ஆனால் நாங்கள்.
ஒருவர் - அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு.
ᎥᏝᏧᏏ6iᎢ ஆனா. இஞ்ச அடம்பன் கொடி திரளேல்ல.
தாய் :- ஆனால் நாங்கள்! விடுப்புப் பார்க்கவும், விவாதம் நடத்தவும், விமரிசனம் செய்யவும். விறுவிறுப்பா ஈடுபடுவம்.
ᏞᏝéᏂ6iI :- ஒ. அடுத்த வீட்டையும், அயலாரையும் பற்றி.
தம்பி - புராதனம், புண்ணியம், புனிதம் எண்டு வாயளவில்
சொல்லிக் கொண்டு.
நண்பர்1 - இந்த சமூகம் தொடர்ந்தும் இருளுக்கயே
இருக்கலாமா? புலப்பெயர்வும் கலாசார சீரழிவும் எங்கள் வேர்கள் அரித்துச் செல்ல அனுமதிக்கலாமா?
நண்பர்1 - சூழ்ந்துள்ள இருளை அகற்ற.
தாய் - புதிய சமூகத்தை உருவாக்க.
LD&E6f :- கொடி திரள வேண்டாமா..?
(இவ்வேளை அயலவர்களாக நடித்தவர்கள் புதினம் பார்ப்பது போல் பார்த்தல்)
ஒருவர் :- இவ என்ன திரளுற கத கதைக்கினம்?
இன்னுமொருவர் :- வெண்ண திரளுது போல.
ஒருவர் நாய்க்கேன் போர்த் தேங்கா(ய்).
N
ܢܠ GEG Larrayfirfiúsíu D ်မွို
s
C 34 D
 

வேறொருவர் ஒ. சும்மா இருந்து நாலு கத(தை) கதைக்கிறது
போல வருமே.
நண்பள் சும்மா. இருக்கிறவையள் இருங்கோ.
ഥങ്കബ് ஒ. சூழ்ந்துள்ள இருளை அகற்ற சுமையை தகர்க்க
வாறவையள் வாருங்கோ.
தம்பி வழி இதன் . இழிநிலை தாங்கோம்.
LD856ft விழிப்புறும் மாந்தர்கள் நாமே.
தாய் விழிகளில் சுடர் எரிய. ஒ.
நண்பர் எழுந்து வாருங்கள். திரண்டு வாருங்கள்.
UTL6) - வழி இதன் நிலை தாங்கோம்
விழிப்புறும் மாந்தர்கள் நாமே விழிகளில் சுடரினை எரிப்போம் எழுந்த வாருங்கள் எழுந்த வாருங்கள்
b60öTLuft துயர் அழியும்.
தாய் சுடர் விரியும்.
DeB6 பழி தொலையும்.
நண்பர் உயிர் நிறையும் வாழ் வெழுத
எல்லோரும் நாம் எழுவோம்.
(தாய், மகள், தம்பி, நண்பர்கள் என்போர் கையை உயர்த்தி பின்வரும் பாடல் வரிகளைக் கூறி (பாடி) முன்செல்ல, ஏனையோரும் பின்னர் அவர்களுடன் இணைந்து செல்வர்)
- ܢܠ
-N
لر

Page 27
பாடல்:-
தக தகிட தக தகிட தக தகிட தத்திகிட
தக தகிட தக தகிட தக தகிட தத்திகிட
துயர் அழியும் பழி தொலையும் பலர் எழுக
துயர் அழியும் பழி தொலையும் பலர் எழுக
உயிர் நிறையும் வாழ்வெழுத நாம் எழுந்தோம் நாம்
எழுந்தோம்
(மேடையில் எல்லோரும் ஒரு விடிவை நோக்கிய ஒரு புறப்பாட்டை புலப்படுத்தும் வடிவில் (Formation) நிற்க மீண்டும் வழி இதன் இழிநிலை தாங்கோம் என்ற பாடல் பாடப்படும். நடிகர்கள் பார்வையாளரை நோக்கி வணங்க திரை மூடப்படும்.)
(நிறைவு)
 

யற்றம் 1994
மேடைே
Å 心

Page 28
நாடக மாந்தர்
வகுப்பறை மாணவிகள் சிலர் மாணவி ஒருவரின் அண்ணன்
மேடையில் பங்கேற்றோர் யா/கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரி மாணவர்கள்:- ம.கொன்சன்
த. சர்மிலன்
ச. கலையரசி
த.போதினி
செ.செல்வகேந்தினி செ. சுகந்தினி
ம.கொலஸ்ரினா
த.காந்திமதி
கு.பாலகுமாரி
இ.தர்சிகா
த. சர்வலோஜினி
த. சுதர்சினி
நி.நிர்மலா
6haf. elusroom
இசை s எஸ்.செல்வச்சந்திரன்.
நெறியாள்கை மு.இராதாகிருஷ்ணன்.
இந்நாடகம் 1994 தமிழ்மொழி கலைத்திறன் போட்டியில் கோப்பாய் கொத்தனி மட்டத்தில் முதலாமிடத்தையும், யாழ் கல்வி வலய II மட்டத்தில் f முதலாமிடத்தையும், யாழ் மாவட்ட ரீதியாக இரண்டாம் இடத்தையும் பெற்றது.
 

நீளும் பாலை
(திரை விலகுவதற்கு முன்பாக மேடையில் மாணவர்கள் நாடகம் ஒன்றை பழகியவாறு இருப்பதான காட்சிக்கு ஏற்ப பல்வேறு நிலைகளில் நிற்பர். அவர்களது உறைநிலை திரை விலக பார்வையானருக்கு புலப்படும் மேடையில் வகுப்பறை ஒன்றிற்கான சில மேசை கதிரைகள் ஆங்காங்கே காணப்படலாம். அதாவது வகுப்பறை தளபாடங்களை ஒதுக்கி வைத்துவிட்டு மாணவர்கள் நாடகம் பழகுவதாக இருக்கும். திரை விலக % நிமிடம் இருக்க மென்மையான இசையுடன் பாடல் ஒன்று பாடகர்களால் பாடப்படும். அப்பாடலின் ஆரம்பத்தைத் தொடர்ந்து திரை விலக மாணவர்களது உறைநிலைக் காட்சி புலப்படும் உறைநிலையில் இருக்கும் பல்வேறுபட்ட மாணவர்களது நிலைகளுக்கூடாக பாடலைப்பாடியபடி ஒரு மாணவர் அல்லது மாணவி மேடையின் முன்பகுதிக்கு வருவார். இவ்வேளை பாடலும் முடிவுற. பாடசாலை விடுவதற்கான மணி கணிள் என ஒலிக்கும். சட்டென எல்லோரும் தமது உறைநிலையில் இருந்து விடுபட்டு சுறுசுறுப்படைவர்.)
பாடல் :- அண்பெண்ணும் உறவாலே ~ இளையோர்
அவலத்தைப் போக்கிடுவோம் - நாமே பண்பு நிறை வாழ்வை ~ பாரில் படைத்திட முன்வருவோம்.
கண்போன்ற கல்வி ~ கூடம் கலகலப்பாக்கிடுவோம் ~ என்றும் பண்பாடும் இடமாய் படைத்திட முன்வருவோம்.
(பாடசாலை விடுவதற்கான அணி அடிக்கும் சத்தம் கேட்க, எல்லோரும் சுறுசுறுப்படைவர்)

Page 29
T6)
அபி
ILDs
அபி
தியா
சுதா
நிரோ
சுதா ? :
பாலா - எனக்கு டியூசன் இருக்கு நான் போகவேணும்.
ஏய். மணியடிச்சுட்டுது. றிகள்சலை நிப்பாட்டுங்கோ.
9IUITLIT
இங்க. தொடர்ந்து றிகள்சலை பார்க்கிறதே.
மிஸ் என்ன சொன்னவ?
எனக்கு தெரியாது.ஒருத்தரும் போகவேண்டாம்.
சீ. எப்ப லீவு விடுமெண்டு கிடக்குது.
ஏனப்பா.
ஒ. முந்தியெண்டாலும் வக்கேஷனுக்கு கொழும்பு கிழும்பெண்டு போகலாம்.
இப்ப எங்க போறது.
ஓமப்பா.இப்ப கொழும்புக்கு போறதெண்டால். அது. எத்தனை நாள் பயணம்.
எவ்வளவு கஸ்டம்.
இஞ்ச பஸ்பிடிச்சு.
அதில கிடங்கு மடங்கு றோட்டில ஒழுங்கா கிளாலி வரை போய் சேர்ந்து.
கியூவில நிண்டு போட்டில ஏறி உயிரப்பணயம் வச்சு கடலைக் கடந்து.
அங்கால ரிறக்டரிலயும், வானிலையுமு போய்.
 

சுதா
பாடல்
,
தாண்டிக்குளம் சென்றியில இறங்கி அதயும் தாண்டிப்போய் அப்பப்பப்பப்பா.
(எல்லோரும் ஒரு மோன நிலைக்குள் சென்றுவிடுவர். பாடல் தொடங்க அதற்கு அனைவரும் பாடி ஆடுவர்)
நாலு ஊரு நாம் பார்க்க நாங்கள் படும் பாடுகளை யாரறிவார். ஐயோ.யாரறிவார். நாடுவிட்டு நாடு செல்ல நாங்கள் படும் தயரத்தினை யாரறிவார். ஐயோ.யாரறிவார்.
ஷெல்லடிக்க, குண்டடிக்க சேற்றினிலே நாம் சறுக்க எம் பயணம் என்னவென்று சொல்லட்டுமா.சொல்லட்டுமா அம்மம்மா. என்னவென்று சொல்லட்டுமா.
எண்ணயில்ல. ஒயிலும் இல்ல ரிறக்டரில நாங்கள் செல்ல நாரி விட்டுப் போச்சுதம்மா. அம்மம்மா. போச்சுதம்மா.
இடுப்பளவு தண்ணியில படகுதனை நாம் பிடிச்சு. இழுத்துபறிச்சு ஏறிவிட. ஏலையெல்லோ ஐலேசா. ஏலையெல்லோ.
இடுப்பளவு தண்ணியில படகுதனை நாம் பிடிச்சு இழுத்தபறிச்சு ஏறிவிட.
ஐஐயோ கிளாலிப் பயணம்.
(மேடையில் இருள் சூழ. கிளாலிக் கடலில் படகில் பயணம் செய்யும் காட்சி நிகழ்த்தப்படும்.மாணவர்கள் பயணிகளாக மாறி நிகழ்த்திக் காட்டுவர். வகுப்பு மேசை
கதிரை போன்றவற்றை கவிட்டு படகாக பயன்படுத்தலாம்)
என்னடாப்பா ஒரே இருட்டு ஒண்டும் விளங்கேல்ல
தம்பி. தம்பி.
N

Page 30
குரல்
குரல்
குரல்
குரல்
குரல்
குரல்
குரல்
குரல்
குரல்
குரல்
குரல்
குரல்
குரல்
ஓம். நான் இஞ்ச.
வடிவாப் பிடிச்சுக் கொண்டிரு அப்பு
ஐயோ. எனக்கு சத்தி வருது.
தலமயிர மண பிள்ள
இதென்னப்பா இப்பிடி ஆட்டுது
எம்பெருமானே
அப்பு என்னண. எழும்பிநிணடு ஆடுறாய்
எல்லாரும் சத்தம் போடாம இருங்கோ - எழும்பாதேங்கோ பலன்ஸ் இல்ல எண்டா பிறகு போட் கவிண்டுடும்
பாழாப்போன வாய் நல்லதா ஒண்டும் வராது
அண்ண அதுல லைட் ஒண்டு தெரியுது. என்னண்ண
வடிவாய்ப் பாருங்கோ கறுப்புச் சட்டக்காரரோ.
அம்மாளாச்சி ஒண்டும் வராமப் பாத்துக்கொள் பயப்பிடாதேங்கோ அது கரை வந்திட்டுது
இடுப்பளவு தண்ணியில இழுத்தப்பறிச்சு ஏறிவிட ஏலேலோ ஐலேசா. ஏலேலோ. ஐலேசா.
அக்கரையை நாமடைந்த அக்கறையாய் பஸ் பிடிச்சு தாண்டிக்குளம். தாண்டவெல்லோ. தாமதமாய் பேய்சேர. தாண்டிக்குளம் வந்திட்டுத. தாண்டிக்குளம் வந்திட்டுத. தாண்டிக்குளம் வந்திட்டுத. தாண்டிக்குளம் வந்திட்டுத.
(UTL6) (plq660)tu) أر
 

சுதா
நிரோ
நிலா
ԱԼՈII
அபி
நிலா
நிரோ
UTL6)
ஹோல்ட் . ஆமியப்பா .
(அங்கு இராணுவ சென்றிப்பகுதியூடாக எல்லோரும் நெருங்கியடித்து செல்வர். ஒவ்வொருவரையும் செக்பண்ணி இராணுவத்தினர் விடுவது போல் அம்மாணவர்களே செய்வர்.)
அப்பாடா.
நாங்களும் ஒரு மாதிரியா. கொழும்புக்கு வந்து சேர்ந்திட்டம்.
(எல்லோரும் ஆச்சரியமாக அக்கம் பக்கம் மேல், கீழ் என பார்த்தல்)
இனி நாலு படம் பார்க்க வேணும்.
கோல்பேசுக்கு போகவேணும்.
அப்ப (ZOO) சூ பாக்கிறேல்லயே.
UTi585TLD......
ஒ. அங்க w as a யானை, புலி, நரி, கரடி.
(LITL6).T85 UTC36)ii)
யானை, புலி நரி கரடி பன்றி சேவல் குரங்கு சிங்கம் யானை, புலி நரி கரடி பன்றி சேவல் குரங்கு சிங்கம்
யாவும் ஒன்றில் கூடி வாழும் காட்சிதனை பார்த்திடுவோம் (எல்லோரும் மிருகங்கள் போல் அபிநயித்த பாடி ஆடுவர்)
(அவ்வேளை வேறொரு மாணவி வந்து சத்தமிடல்)

Page 31
வேணி
நிரோ
நிலா
வேணி
நிரோ
வேணி
அபி
p56)FT
அபி
ԱլDIT
சுதா
நிலா
சுதா
நிரோ
ஏய். நிப்பாட்டுங்கோ. சத்தம் போடாதேங்கோ.
என்னப்பா. நாங்கள் எவ்வளவு பாடுபட்டு.
கொழும்புக்கு போய். ZOO வில நிக்க.
மிருகம் மாதிரி வந்து குதிக்கிறீர்.
ஏய். a as எல்லாரும் கேளுங்கே. மிஸ் சொன்னவ. தான் வரமாட்டாவாம். நிண்டு றிகர்சலை பாத்திட்டு (Sures LTD.
ஏன் வரமாட்டாவாம்.
அவவுக்கு காய்ச்சலாம். நிக்கேலாதாம்.
:- காச்சல் எண்டால் வலு கவனமாய் இருக்க வேணும்.
ஏன் அப்பிடிச் சொல்லுறீர்.
செப்றிஸ்மியா எண்டு புதுசா ஒரு வருத்தம் வந்திருக்காம்.
ஓமப்பா. மூண்டு மாதத்தில நூறு பேருக்கு மேல. செத்துப் போச்சினமாம்.
வருத்தம் வராம என்ன செய்யும்.
ஏன்.
பின்ன என்ன?. எல்லாப்பக்கத்தாலயும் சனங்கள் வெளிக்கிட்டு இஞ்ச நடுவுக்க தானே.
சுத்திச் சுத்தி சுப்பற்றை கொல்லைதான்.
 

பாடல் :-
நிரோ :a
சுதா s
T6 :-
நிரோ :-
56)
நிரோ
56 :-
புங்குடுதீவும் பொன்னாலை ஊரும் வறணியும் வடமர் ஆட்சியும் ஒன்றாய். குண்டு சட்டி குதிரை ஓட்டம் சுத்திச்சுத்தி சுப்பற்ற கொல்ல
அப்பிடிச் சொல்லாதேங்கோ. அதுகள் வீடு, வாசல்
எல்லாத்தையும் கை விட்டுட்டு நெஞ்சு நிறைய துயரத்தைச்
சுமந்து கொண்டு. நடைப்பிணங்களாய் வாழுதுகள்.
அதிலே. சனங்கள் நெருக்கியடிச்சுக் கொண்டு இருக்கிறதாலே நோய்கள் பரவுறது. சுலபம் தான்.
அறிஞ்சவ. படிச்சவ. இதுகளைப்பற்றி யோசிச்சு நோயில இருந்து பாதுகாக்க. வழிமுறைகளை சொல்லிக் குடுக்க வேணும்.
அங்க கலா ஓடிவாறள்.
- இஞ்ச உங்களுக்கு விசயம் தெரியுமே. நான் ஒரு
பாட் நியூஸ் சொல்லப்போறன்.
பீடிகையை விட்டிட்டு என்ன எண்டு சொல்லும்.
- சரி சரி சொல்லும்.
எங்களோட முந்திப்படிச்சா நிர்மலா. அவவின்ர. அவவின்ர. அண்ணா. செத்துப்போனாராம்.!
எல்லோரும் :- என்ன! (எல்லோரும்)
நிரோ
B6)
நிர்மலாவின்ர அண்ணனோ?
ஓமப்பா. எனக்கும் நம்பிக்கை வரேல்ல a ஆனா. பேப்பரில மரண அறிவித்தல் போட்டிருக்குது. அதுதான் லைப்ரரியில பாத்திட்டு எடுத்துக்கொண்டு ஓடி வந்தனான்.
ار

Page 32
சுதா
UT6)
b6)T
அபி
856)
B6)
நிலா
L6)
நிரோ
நிலா
- இதென்னப்பா. (தலையை பிடித்தபடி ஒருவர் இருத்தல்)
ஐயோ.. நிர்மலாவுக் கு அருமையா வாச் ச அண்ணனெல்லோ.
ஐயோ அவள. கையில பிடிச்சுக் கூட்டிக்கொண்டெல்லோ ஸ்கூலுக்கு வருவார்.
- என்னவாம் அப்பா நடந்தது..?
பேப்பரில அகால மரணம் எண்டு தான் போட்டிருக்குது. வாசிக்கிறன் கேளுங்கோ..? (பேப்பரை எடுத்து விரித்து மரண அறிவித்தலை வாசித்தல்)
கொக்குவில் கிழக்கைச் சேர்ந்த சிதம்பரப்பிள்ளை யோகநாதன். கொழும்பில் அகாலமரணமடைந்தார். அன்னார் சிதம்பரப்பிள்ளை சிவநாயகி தம்பதிகளின் ஏகபுத்திரனும் நிர்மலாவின் அன்பு அண்ணனும் LLLLLLLLLLLLLLLSLLLSLLLLLLLSLLLLLLLLLLLL0LC0L0LLC ஆவார். அன்னாரின் மரணச்சடங்குகள் . அன்று கொழும்பில் நடைபெற்றது என்பதை உற்றார் உறவினர் அனைவருக்கும் அறியத்தருகின்றோம். தகவல் உறவினர்கள்.
- ஐயோ. அவர் பாவம் அவர எனக்கு நல்லா தெரியும்.
ஓம். ஓம். ஒரு சண்டை சச்சரவுக்கும் போகமாட்டார்.
மற்ற பொடியள் மாதிரி. றோட்டில பெட்டயஞக்கு பகிடிவிட்டு கொண்டு திரிய மாட்டார்.
உமக்கு ஞாபகமிருக்கேயப்பா. நிர்மலா கொழும்புக்கு போக முதல் கடசியா ஸ்கூலுக்கு வந்தது.
ஓமப்பா. நிர்மலாண்ட அண்ணா எங்கட ஸ்கூல் முன் வராண்டாவில தான நிண்டவர்.
༄༽
 

அபி
ԱԼDIT
நிரோ
அபி
6)
நிரோ
நிலா
56)
U6)
56)
ստII
நிரோ
நிலா
நல்ல வளர்த்தியான ஆம்பிள
கனடாவுக்கு போறதுக்கு ஸ்பொன்ஸர் லெட்டரை பார்த்துக் கொண்டுதானே கொழும்பில நிண்டவயள்.
நிர்மலாவின்ர அப்பாவும் அம்மாவும் இந்தியாவுக்கு ஒருக்கா போட்டுவரப் போயினம் எண்டு தான் அவள் போட்ட கடசி
லெட்டரில இருந்தது.
9. . . . . . அப்ப அண்ணனும் நிர்மலாவும் தனியத்தான் கொழும்பில.
ஐயோ. அங்க என்ன நடந்தது..?
அங்க கொழும்பில என்ன நடக்குது எண்டு தெரியும் தானே
அவங்கள் ரவுண்டப் பண்ணியிருப்பாங்கள்.
ஓம். அங்க விடிஞ்சா பொழுதுபட்டா எல்லா நேரமும் ரவுண்டப் தான்.
:- பொலிசில பதிஞ்சிருப்பினம் தானே.
பொலிசில பதிஞ்சாத்தான் எல்லாத்துக்கும் வசதி. பிடிக்கிறது சுகம். ஈஸியா பிடிச்சுப் போடுவாங்கள்.
ஒ. இங்க அவயள் தனியா இருக்க.
ஒ. வெள்ள வானில நம்பர் பிளேட்டும் இல்லாம பேயளமாதிரி கதவையெல்லாம் உதைச்சுக்கொண்டு உள்ளுக்க வந்து.
எங்கயடா குண்டுவக்கப் போறியள் எண்டு கேட்டுக்கேட்டு அண்ணாவின்ர மூஞ்சேல இடிச்சு. இடிச்சு.
ssssssssssssssssssssy
raff är
ار

Page 33
56) :-
நிரோ :-
நிலா
நிலா :-
எல்லோரும் :
பாடல் :a
N சாரத்தோட சேட்டும் இல்லாம அண்ணாவ பிடிச்சு இழுத்துக் கொண்டு போக.
நிர்மலா அவங்கட காலில விழுந்து கெஞ்சி அழ. ஒருத்தன் தன்ர காலால ஓங்கி உதச்சுவிட. அவள். 965,600TT...... அண்ணா. எண்டு கதறிக்கதறி அழ.
கதவ அறஞ்சு சாத்திப்போட்டு. கொண்டு போயிருப்பாங்கள்.
பிறகு. றோட்டுக்கரையில. ரயில்வே தண்டவாளத்துக்கு கிட்ட.
பிறகு. றோட்டுக்கரையில. ரயில்வே தண்டவாளத்துக்கு
கிட்ட.
அண்ணா. அண்ணா.
(எல்லோரும் கதறி அழுது துயரடைதல் - பாடல் பின்னணியில் பாடப்படும்)
விழி எங்கும் நீரலைகள் மனதினில் தயரலைகள்
இருள்சூழ்ந்த வாழ்வு எங்கும் தயர் சூழ்ந்த நாட்கள். மெளனத்தின் அலறல் கேட்கிறத மனதினில் அன்றோ கேட்கிறத
கொடுமைகள் நிறைந்த எங்கள் மண்ணில் நிகழ்வுகளை நாம். நினைவுகூர. இருட்டினை ஒழிக்க புறப்படுவோம் இழந்த நம் வாழ்வினை மீட்டிடுவோம்
மகிழ்வோடு மண்ணில் வாழ்ந்திடவே மானிடக் கரங்கள் உயர்ந்திடுவோம்.
(பாடல் முடிய மேடையில் மெல்ல மெல்ல இருள்பரவி மீண்டும் மெல்ல ஒளிவர அங்கு மாணவர்கள் இல்லாது
 

அண்ணன்
அண்ணன்:-
அண்ணன்:
அண்ணன்:-
அண்ணன்:-
அண்ணன்:-
அண்ணன்:-
நிர்மலாவின் இறந்து போன அண்ணன் நிற்பான். அவர் மெல்ல முன்மேடைக்கு நடந்து வந்து பார்வையாளரை நோக்கி கதைக்கத் தொடங்குதல்)
என்னை. என்னை தெரிகிறதா..? (மெல்ல சிரித்து)
நான். நான். நிர்மலாவின்ர இறந்துபோன அண்ணன் (விரக்தியுடன் சிரித்தல்)
என்னைப்போல். நிர்மலாக்களின்ர அண்ணனைப்போல. ஒன்றல்ல. நூற்றுக்கணக்கில. இனமத வித்தியாசம் இல்லாம ஆயிரம் ஆயிரமாய்.
அவலமும் துயரமும் அவலமும் துயரமும். ஆ.
(மண்டியிட்டு அமர்ந்து). சுவர்கள். சிறைக்கம்பிகள். வாயிருந்தால். ஆயிரம் ஆயிரம் கண்ணிர் கதைகளை நாளெல்லாம். கூவிக் கூவிச் சொல்லும்) (மெல்ல சுதாகரித்துக்கொண்டு எழுந்து)
அவர்கள் வந்தார்கள். தெரியாத ஓர் இடத்துக்கு. இழுத்துக்கொண்டு போனார்கள். அங்கே. அங்கே. நிழல்களைப் போல் கறுப்பாக வரும் சிலர் அவனை சூழ நிற்பர். அவர்கள் அவனைத்தாக்கலாம். அல்லது அவர்கள் நிற்க அவன் தான் தாக்கப்படுவது போல் பாவனை செயப்யலாம் . அவ் வேளை பரின் வரும் உரையாடல்கள்இடம்பெறும். பின்னணி ஒரு பயங்கர சூழ்நிலையை காட்டுவதாக அமைவதோடு அதனை வெளிப்படுத்தும் வாத்தியங்களும் இசைக்கப்படுதல் பொருத்தமானது)
ஐயோ. ஐயோ. நான் ஒண்டுமே செய்யேல்ல. என்னை. என்னை. அடிக்காதேங்கோ.
N

Page 34
/ N
அண்ணன்:- நான் வெளிநாடு போக. வெளிநாடுபோக. வந்தனான்.
ஐயோ. ஐயோ.
(விழுந்து புரண்டு அடித்து அழுது மெளனமாதல் - பின்னர் திடுக்கிட்டு எழுந்து பார்த்தல் - இவ்வேளை கரிய நிழல்கள் மெல்ல மேடையில் இருந்து விலகுவர்)
அண்ணன்:- ஐயோ. அவங்கள் கதவச் சாத்திப்போட்டு போட்டாங்கள். அவங்கள் கேக்கிறதும் விளங்கேல்ல. எல்லாத்துக்கும். ஓம் ஓம். எண்டு சொல்லுறத விடவேற வழிதெரியேல்ல.
அண்ணன்:- இப்ப என்ன. இந்த நிலையில் என்ர அம்மாவும் தங்கச்சியும் பாத்தா. எப்பிடித் துடிச்சுப் போயிடுவினம்.
(மெல்ல வெளியில் இருந்து சோகமாக தாயின் தாலாட்டுப்பாடல் கேட்கத் தொடங்கும்)
பாடல் :- ஆழுக்கரை புரளும் ஆற்றங்கரை ஓரத்திலே
ஆதரவாய் ஓடிவந்தேன். ஆரழுத சத்தமய்யா. கோழை நீ இல்லையய்யா. குறையிருந்தால் சொல்லுமய்யா ஆராரோ. ஆராரோ.
அண்ணன்:- அம்மா. அம்மா.
நீ என்ன. இப்படிப் பார்த்தா. ஐயோ. (பழையபடி அவர்கள் வருவதற்கான இசை முழக்கம் கேட்கஅவன் துணுக்குற்று நடுங்குதல். கரிய நிழல்கள் முன்போல் சூழ்ந்து நிக்க அதில் ஒருவன் ஒரு தூக்கு கயிற்றை அண்ணனை நோக்கி நீட்டுதல்)
அண்ணன்:- ஐயோ. என்னன. என்னவோ செய்யப்போறாங்கள்.
ஐயோ என்ன விடுங்கோ. என்ர அம்மாவை பார்க்கவேணும். தங்கச்சிய பாக்க வேணும். ஐயோ. ஆ. ஆ.
ܢܠ CC LamraněFfiadu D
 
 

(
UTL6)
56)
நிரோ
நிலா
சுதா
நிரோ
நிலா
༄༽
(நின்ற நிலையில் நாற்புறமும் சுழன்று தொண்டையைப் பிடித்தபடி முறுகி ஈற்றில் நெடுஞ்சாண்கிடையாக விழுதல். பாடல் ஒன்று பின்னணியில் சோகமாக கேட்க. மேடையில் இருள் சூழ்ந்து பின்னர் படிப்படியாக ஒளியேற்பட பழையபடி மாணவர்கள் அங்கு நிற்பர் - வகுப்பறை காட்சியில்)
- வாழும் வயதில் வசந்தம் இழந்தோம்
நீளும் பாலையில் நெடுக நடந்தோம் கழும் இருளில் சுகமதை இழந்து முகவரி தொலைந்த பிணங்களாய் மாறி.
(அண்ணன் வர முதல் வகுப்பறையில் கடைசியாக நின்ற ஓவியப் படிம நிலையில் நிற்க இருள் நீங்கி மெல்ல வெளிச்சம் ஏற்படும் - ஸ்டில் இல் இருந்து விடுபட்டு)
:- காசுக்காக யாரையும் யாரும் காட்டிக் கொடுக்கலாம்.
:- கைதுகள், முகவரி தொலைந்த பிணங்கள்.
இவை தான் இப்ப வாழ்க்கையாய் போச்சுது.
:- ஒ. ஆளையாள் பிடிச்சுத் தின்னிற அற்பப் பிராணிகளாய்
:- உருட்டும் புரட்டும் திருட்டும் மலிந்த உலகமாய்.
:- ஐயோ. இனியும் இந்த நிலை வேண்டாம்.
:- ஒ. இந்தநிலை. இந்தநிலை. ஒரு இருண்ட சூறாவளியா.
எங்களை சூழ்ந்து.
(எல்லோரும் ஒரு சூறாவளியில் மாட்டிக்கொண்டு சுழலுதல் எங்கும் போர் - சத்தங்கள் - உருண்டு - யுத்த நிலையை காட்டலாம்)

Page 35
LITL6)
நிரோ
நிலா
சுதா
நிரோ
நிரோ
LT6)
நிலா
நிரோ
T60s
அபி
காற்றோடு மழையும் இடியிடிக்கும் கடும்போர் நடந்திடும் வெடிவெடிக்கும் எத்திசையில் எம்மொழியில் எவர் வாயிலும் நித்தியமாய் ஓர் வார்த்தை. அகதி
?. அகதி.
ஐயோ இனியும் இந்த நிலை வேண்டவே வேண்டாம்.
இந்த நிலை அறவே நீங்க வேணும் என்டால்.
இந்த நாட்டு யுத்தத்துக்கு ஒரு முடிவு வரவேணும். அதுக்கு. அதுக்கான வழிகளைப் பார்க்கவேணும்.
(மெல்ல பார்வையாளரை நோக்கி)
தயவு செய்து எங்கள ஒருக்கா கவனியுங்கோ. நாங்கள் படிக்கிற பிள்ளையஸ்.
:- சிறுவர் பாதுகாப்பு, சிறுவர் உரிமை என்றெல்லாம்
உலகளாவிய வகையில வாய்கிழியப் பேசிக்கொண். டிருக்கிறீங்கள்.
எங்களுக்காக. எங்களுக்காக. ஒரு கணம். சிந்தீங்கோ. வீடு தீப்பற்றி எரியேக்க நித்திரை கொள்ள ஏலாது.
நாங்கள் நிம்மதியா. படிக்க. நல்ல ஒரு பிரஜையாக மாற. எங்கட சிந்தனை தெளிவுற.
யுத்தத்த நிறுத்துறத்துக்கான வழியைப் பாருங்கோ.
நாங்கள் எல்லோரும் சேர்ந்து. யுத்தமில்லாத அன்பும் பண்பும் மிளிருகிற ஒரு பூந்தோட்டத்த உருவாக்குவம்.
 

பாடல்
பெருமைக்குரிய பிறப்புடையோம் - இன்று அகதிப்படிவம் சுமக்கலாமா. அல்லலுற்று அழியலாமா.
நினைத்தப்பார் நினைத்தப்பார். நெஞ்சம் என்றும் கொதிக்கலயா? சாளரத்தை திறந்த பார்த்த விரைந்த வரும் விடியலை நோக்கு
வெற்றியுடன் விடிவுவர. விரைந்த நாமும் புறப்படுவோம் வெற்றியுடன் அமைதிவர விரைந்த நாமும் குரல் கொடுப்போம்
(பாடல் நிறைவுற எல்லோரும் முன் சென்று சமாதானப் புறா ஒன்றை பிடிக்க முயல்வது போன்ற ஒரு ஓவிய படிம நிலையில் ஸ்டில் ஆக நிற்க நாடகம் நிறைவுறும்)
.1اهال ം ܛܖ
を
づ。 S
Z

Page 36

னிதர்
யற்றம் 1998
மேடைே

Page 37
நாடக மாந்தர்
போதை அரக்கன்
புதியவன் நலிவுற்ற சமுகத்தினர் (5 குடும்பங்கள்) உரைஞர்
பூமித்தாய்
வறுமையால் வாடியவன்
நோயாளி
மேடையில் பங்கேற்றோர் வ/வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மாணவர்கள்:- ந.கபில்நாத்
இ.சந்திரராஜ்
கெ.தர்மசீலன்
செ.சிவதர்சன்
யோ.ஜெயக்குமார்
கு.பகிரதன்
நீ.புஸ்பராஜா
இ.இராகுலன்
ப.பார்த்திபன்
ம. சசிநாத்
ந.பாலமோகன்
360&F m கோ.ரஞ்சன் சம்சன்
ஒப்பனை m நா.கு.மகிழ்ச்சிகரன்
நெறியாள்கை மு.இராதாகிருஷ்ணன்
இந்நாடகம் 1998ம் ஆண்டு போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைப் பிரிவினரால் நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்ட நாடகப் போட்டியில் ‘கொள்ளாத்துயரம்" என்ற பெயரில் முதலிடம் பெற்றது.
 

முகமற்றமனிதர்
(திரை விலகும் போது மேடை இடிபாடுகள் கொண்ட சிதிலமான இடமாக இருக்கும். அதாவது அழிவடைந்த பூமி. அங்கு மேடையின் மத்தியில் அழுது அரற்றுகின்ற ஒரு மனிதன். அவனுக்கு இருபுறத்திலும் சற்றுத் தள்ளி ஏதோ விபரிக்க முடியாத ஒரு ஐந்து போல் அல்லது பொருள் போல் முடங்கிக் குறண்டியபடி எய்ட்ஸ் நோயாளி ஒருவனும், பட்டினியால் வாடியவனும் கிடப்பர். மனிதனுக்கு பின்புறமாக மேடையின் பின் இடது புறத்தில் உருக்குலைந்த நிலையில் சோகமே உருவான ஒரு பெண் - பூமாதேவி - நிற்பாள். இவ்வேளை பாடல் பாடப்படும்.)
பாடல் :- அனலிடைத்தோய் அரும்பாக
அலைகடலில் தரும்பாக இடர்பட்ட இவர்கள் யார்.?
(அணுஆயுத யுத்தம் , பஞ்சம், எய்ட்ஸ், நோய் என்பவற்றால் அழிவுற்ற பூமியில் இடிபாடுகளுக்கு மத்தியில் ஒருவன் இருந்து அரற்றுகிறான்)
மனிதன் :- ஆஹா. வானுயர்ந்த மரங்கள் , வளமான மண், எல்லாம் எங்கே. சிறகடிக்கும் பறவைகள் சலசலக்கும் நீரோடை ஓ. அந்த இன்பமான பூமி எங்கே .? (அழுதல்)
எங்கும் . பிணவாடை சிதைந்த உடலங்கள் என்னைத்தவிர இங்கு எவருமே இல்லையா..?
3ԶԱIT..... அம்மா.யாரங்கே? எவருமே இல்லை. எவருமே മങ്ങ്.(g)

Page 38
(முன்னைய பாடல் மீண்டும் பாடப்படும். இவ்வேளை பூமித்தாய் - மெதுவாக மனிதனுக்கு பின்புறமாக
வருதல்)
பூமித்தாய் - அப்பனே . ஏன் அழுகிறாய் .
மனிதன் :- நீங்கள். நீங்கள் . யார் .நான் யார். எதுவுமே
புரியவில்லை.
பூமித்தாய் :- நான் யாரா? (சிரித்தல்)
என்னை பூமாதேவி என்று அழைத்தீர்கள்.
மனிதன் :- நான் யார். தாயே.
பூமித்தாய் - உயிர்கள் வாழமுடியாத ஓர் பாழ்நிலமாக என்னை
மாற்றிய மனிதர்களின் பிரதிநிதிதான் நீ.
மனிதன் - மனிதர்கள். ஒ. மனிதர்கள்
ஆஹா. நான் .மனிதன்.நான் மனிதன்
பூமித்தாய் :- இல்லை.நீ. முகமற்றவன்
மனிதர்களால் அழிக்கப்பட்ட இப் பூமியில் எஞ்சியுள்ள ஒரு சிலரில் நீயும் ஒருவன்
மனிதன் :- நானும் ஒருவன். அப்போ. மற்றவர்கள் எங்கே?
பூமித்தாய் - நன்றாகக் கண்களைத் திறந்து பார். உன்
அயலிலேயே அவர்கள் உள்ளனர்
(மனிதன் சுற்றிவர தேடுகிறான் - பூமித்தாய் மெதுவாக வெளியே செல்கிறாள்)
(மேடையில் ஒரு பொருள் போல் காணப்பட்ட பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட ஒருவனும் எய்ட்ஸ் நோயாளி ஒருவனும் சற் று அசைந்து கொள்கின்றனர்)
 

மனிதன்
ப. மனிதன்
மனிதன்:
Lu. LD6î56ör
மனிதன்
எய்ட்ஸ் மனிதன் :
மனிதன்
எய்ட்ஸ் மனிதன் :
(மேடையை நோக்கி) ஐயா. என் குரல் கேட்கிறதா நீங்கள் யார்? (பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட மனிதன் மெல்ல விடுபட்டு எழுதல்)
நான். உணவைக் கண்டு பல வருடங்கள். பல நூற்றாண்டு பசியில் நான் இருக்கின்றேன். ஏதாவது உண்ணவேண்டும் .உணவு. உணவு. (கெஞ்சுதல்)
என்னிடம் எதுவும் இல்லை.
நானும் உன்னைப் போல் ஒருவனே.
பசி, பட்டினி, என்று பஞ்சத்தால் வாடி உயிர் துறந்த பல்லாயிரம் ஆபிரிக்க மக்களின் பேரால் கேட்கிறேன் உணவு. உணவு. தாருங்கள்.
(மீண்டும் கீழே சுருண்டு படுத்துக் கொள்கிறான். இவ்வேளை நோயாளி மனிதன் மெல்ல அசைகிறான்)
ஜயா. நீங்கள் யார்? . எழும்புங்கள்
நான் யாரா.(சிரித்து) நோயின் கொடுமையில் வாடுகின்றேன்.(மெல்ல எழுதல்)
ஆ.(பயந்து ஒதுங்குதல்) என்ன நோயென்று நான் அறியலாமா..?
இருபதாம் நூற்றாண்டு மனிதர்கள் தங்களுடைய சந்ததிக்கு கையளித்து விட்டுப்போன கொடிய நோய் (குருரமாகச் சிரித்தல்) எய்ட்ஸ். நோய்தான் (எழ முடியாது விழுந்து குறண்டி முடங்குகிறான்)
N

Page 39
மனிதன் :- அவன் பஞ்சத்தால் வாடியவன்.
இவன் நோயால் வீழ்கிறவன் அப்போ.நான்.நான்.யார்?
நான் யார்.?
இருவரும் :- நீ.முகமற்றவன்.
மனிதன் :- இல்லை .நான் மனிதன்.
இருவரும் :- நீ.முகமற்றவன் போதையால் சீரழிந்தவன்
(எல்லோரும் உறைநிலையில் நிற்க - உரைஞர் மேடைக்கு வருதல்)
உரைஞர் - ஆம்.இவன் முகமற்றவன். போதையின் பிடியில் சிக்கி தனது கலாசாரங்களை இழந்து சீரளிக்கப்பட்டுள்ளவன்.
(அருகில் -மேடைக்கு வந்து)
உரைஞர் - இவனைப் போல் போதை அரக்கனின் பிடியில்
சிக் கி மூழ்கிப் போனவர்கள் மீட்கப்பட முடியாதவர்களல்ல அவர்களுக்காக இவனுக்காக எங்களுக்காக.இந்த நிகழ்வை காண்போம்.
காட்சி - 2
மேடையின் மத்தியில் இருந்த திரை விலக அங்கு நான்கு பக்கங்களில் நான்கு குடும்பங்கள் நித்திரையாக இருத்தல் மெல்ல விடிவதற்கான ஒலிகள் எழ. ஒரு குடும்ப உறுப்பினர் நித்திரை விட்டகன்று மெல்ல எழுந்து முன்மேடைக்கு வருவார்
குடும்பம் 1 உறுப்பினர் 1 :- இன்னும் சரியா விடியேல்ல.ம்
விடிஞ்சுதான் என்னத்தைக் கண்டது
2x ノ ܢܠ
 

N
(மெல்ல பழையபடி இடத்திற்குச் சென்று இருக்க முயல் கையில் திடீர் என்று எங்கோ ஒரு வெடிச்சத்தம் கேட்கும் எல்லோரும் திடுக்கிடுவர்)
உறுப்பினர் 2 :- நாசமாப் போன வங் கள் விடிய முதல்
துவங்கிவிட்டாங்கள்
உறுப்பினர் 3 :- வீடு வாசலில நிம்மதியா கிடக்க விடுறாங்களே
உறுப்பினர் 1 :- ஓ.எங்கட வீடுகள் தோட்டங்கள் எல்லாம் . அங்க
சி ைதஞ்சு சின்னாபின்னமாகப் போய்க் கொண்டிருக்க. நாங்கள் இஞ்ச அலைஞ்சு கொண்டு.
உறுப்பினர் 2 ;~ எப்பதான் எங்களுக்கு நிம்மதியா குந்தியிருக்க
ஏலுமோ தெரியாது.
உறுப்பினர் 3 - பரலோகத்தில தான் எல்லாருக்கும் நிம்மதி
(சட்டென குடும்பம் 2ல் இருந்த ஒருவன் விழித்து உடல் பதற மேடைக்கு வந்து)
குடும்பம் 2
உறுப்பினர் 1 :- நிம்மதி. நிம்மதி. நிம்மதி. கண்டறியாத
நிம்மதி.
உறுப்பினர் 1 - எனக் கெங்க நிம்மதி.நான் சாகவேணும். வீட்டில
கதைக்கப் பேசக்கூட ஆக்கள் இல்ல.
உறுப்பினர் 1 - அப்பாவுக்கு தண்ணி போடாட்டி இருக்கேலாது.
அம்மா வீட்டில நிக்கிறதே இல்ல. நான் ஆரோட கதக்கிறது.

Page 40
/
உறுப்பினர் 1
குடும்பம் 3
உறுப்பினர் 1
உறுப்பினர் 2
உறுப்பினர் 1
உறுப்பினர் 2
உறுப்பினர் 1
உறுப்பினர் 2
- ரெண்டு பேரும் வீட்டில இருந்தா எந்த நேரமும்.
யுத்தகாண்டம் தான். நான் ஆரோட கதைக்கிறது. கதைக்கிறது.
(துயரத்துடன் பழையபடி இருந்து வெறித்து மெளனமாதல் இவ்வேளை குடும்பம் 3 இல். இளைஞர்கள் இருவர் மெல்ல புரண்டுபடுத்து கண்விழித்தல் . ஒருவன் எழுந்து மற்றவரை எழுப்புதல்)
டேய் மச்சான் எழும்பன்ரா.எழும்பு
- சும்மா இரு.எனக்கு 10 மணிவரைக்கும்
கிடந்தாத்தான் அலுப்பு தீரும்
டேய்.இண்டைக்கு TV யில மச். கிரிக்கட்மச் 6T6b8aou JLIT. (சட்டென மற்றவன் எழுந்து .பரபரத்தல்)
- ஒமெடா . மினக்கெடாமல் TV யைப் போடு
அங்க. அங்க. விளாசு விளாசென்டு விளாசிறாங்கள்ஆ.சிக்சர்
மச்சான் உவன் நல்லா அடிப்பான். உங்கபார். ஆ. பவுன்றி. அடிசக்கை.
(திடீரென மின்சாரம் நிக்கிறது. TV பார்த்தோர் விசனப்படுவர் )
:- அட. நல்ல நேரத்தில சனியன் பிடிச்சது போல
கரண் கட்பண்ணி போட்டுது.
 

r. உறுப்பினர் 2
உறுப்பினர் 1
(95(8LĎULĎ4 உறுப்பினர்1
உறுப்பினர் 1
உறுப்பினர் 1
உறுப்பினர் 2
உறுப்பினர் 2
- இதுவும் ஒரு நாடே.
- வெளிநாட்டில எண்டா இப்படி நடக்குமே எல்லாம்.
நாங்கள் இஞ்ச பிறந்த வினை
(குடும்பம் 4 இல் ஒருவன் ஆக்ரோசமாக எழுந்து சபையைப் பார்த்து சினத்துடன் கூறுகிறான்)
எனக்கு இந்த வெளிநாட்டு கதைகளை கதைச்சா விசர் வரும்
- நான் எப்பவோ கனடாவுக்கு போயிருக்க வேண்டிய
னான் எத்தின தரம் வெளிக்கிட்டு திரும்பித் திரும்பி வந்து இப்ப காசும் லச்சம் லச்சமா கரைச்சுப் போட்டு மோட்டு வளையைப் பார்த்துக் கொண்டு திரியிறன்
- இப்ப நான் பாக்கிற உத்தியோகம் ஒரு வேலையே
. நான் படிச்ச படிப்பென்ன. சீ. நான் எப்பவோ வெளியில போயிருக்க வேண்டியனான் இஞ்ச கிடந்து உழல்றன். (விரக்தியுடன் இருத்தல்) (அருகில் இருந்த உறுப்பினர் 2 மெல்ல எழுந்து உறுப்பினர் 1 ஐ சுட்டிக் காட்டிய படி சபையோருக்கு கூறுதல்)
:- இவருக்கு விசயம் தெரியாது. நான் 10 வருசமா
வெளியில இருந்து போட்டு வந்திருக்கிறன். அதுவும் ஒரு வாழ்க்கையே
மனிசன் இயந்திரமா எல்லே அங்க வாழ வேணும். விடிஞ்சு பொழுபட்டால் வேல, வேல, வேல. இஞ்ச இருக்கிற நிம்மதி அங்க வராது.
(மீண்டும் குடும்பம் 3 இன் உறுப்பினர்கள் தமக்குள் கதைப்பர்)
ο Ο63 ) .

Page 41
G56 Lb|Lb 3 உறுப்பினர் 1
உறுப்பினர்2
உறுப்பினர்1
உறுப்பினர் 2
JTL6)
மச்சான் இன்டைக்கு என்ன செய்வம். போரடிக்குது
எனக்கு அக்கா வெளியில இருந்து காசு அனுப்பிப் போட்டா. படம் பாத்து, கொத்துரொட்டி திண்டு அலுத்துப் போச்சு. வேற ஏதாவது புதுசா வேணும்.
மச்சான் நீ. காசு செலவழிக்கிறதில நம்பர் ഖങ്ങ
இதில என்ன பிழை. நாங்கள் சந்தோஷமா வாழவேணும். அனுபவிக்க வேணும் காசப்பற்றி எனக்கு கவலையில்லை.
(எல்லாக் குடும்பங்களும் தமது தமது இடங்களில் இருந்து கொணி டே தமது குறைகளை பிரச்சினைகளை புலம்பிக் கொண்டு இருத்தல். அவ்வேளை பின்வரும் பாடல் பாடப்பட எல்லோரும் முன்பு போல் துயில் கொள்ள ஆரம்பிப்பர்)
அனலிடைத்தோய் அரும்பாக அலைகடலில் தரும்பாக இடர்பட்ட இவர்கள் யார்.
இன்னல்கள் வந்தனவே இருப்பினை அழித்தனவே வல்லமை வேண்டுமென்றோ வாழ்வினை வாழ்ந்திடவே.
(பாடல் முடிய மேடையில் இருள் சூழ்ந்து காணப்பட அதற்கூடாக போதை அரக்கன் மெல்ல பதுங்கிப் பதுங்கி வருதல். ஒவ்வொரு குடும்பமும் துயரில் நிலையில் இருக் க. அவற்றை
 

N
அவதானித்தபடி வரும் போதையரக்கன் ஒரு குடும்பத்துக்கருகில் போய் மெல்ல கதவைத் தட்டுதல் அல்லது கைகளைத் தட்டுதல்.)
(5(6 bulb 1 (சட்டென திடுக்குற்று)
குரல் 1 பசி. வறுமை.
குரல் 2 இந்த யுத்தம் எப்பதான் நிக்கும்
குரல் 3 எங்கள நிம்மதியா இருக்க விடுங்கோ.
போதையரக்கன் - பசி.வறுமை.யுத்தம் .நிம்மதி (சபையைப் பார்த்து
ஹா.ஹா.ஹா)
(போதையரக்கன் மெல்ல குடும்பம் 2இடம் சென்று கதவைத் தட்டுதல்)
(G506 LiòULb 2
குரல் :- நான் ஆரோட கதைக்கிறது.
எனக்கு சாகவேனும் போல கிடக்கு. என்ர தனிமையை நான் எப்படிப் போக்கிறது.
போதையரக்கன் :- தனிமை ஹா.ஹா
(போதையரக்கன் மெல்ல குடும்பம் 3 இடம் சென்று கதைவைத்தட்டுதல்)
குடுமபம் 3 குரல் - எது என்டாலும் அனுபவிச்சுப் போட வேணும்
லைவ்.இஸ்.ஏ சான்ஸ்
போதையரக்கன் : ஹா.ஹா.புதுமை.ஹா
(போதையரக்கன் மெல்ல குடும்பம் 4 இடம் சென்று கதவைத் தட்டுதல்)

Page 42
குடும்பம் 4
குரல் 1
குரல் 2
போதையரக்கன்
போதையரக்கன்
போதையரக்கன்
போதையரக்கன்: :-
- சீ இதுவும் ஒரு வேலையே. நான் எப்பவோ
வெளிநாட்டுக்கு போயிருக்க வேண்டியவன் ம்.
- நான் எவ்வளவு காலத்துக்கு இப்படி மிசின் மாதிரி
வேலை செய்யிறது. எப்பிடி அனுப்பினாலும் அடங்காது
ஹா.ஹா.விரக்தி. (எல்லாக் குடும்பங்களையும் பார்த்து சபையைப்
பார்த்து கூறுதல்)
பசி, வறுமை, யுத்தம், தனிமை, விரக்தி. ஹா. இளைஞர்களே. மாணவர்களே உங்கள் கவலைகளை போக்க என்னிடம் மருந்துள்ளது. ஹா. ஹா. ஹா நானே மருந்து . போதை என் பாதையில் தோழர்கள் ஆவோம்.
- வறுமையை மறப்பம்.
கவலையை மறப்பம். விரக்தியை மறப்பம். யுத்தத்த்ை மறப்பம். பிரச்சினை எதுவுமே இல்லை. புதுமையைக் காண்பம்.ம்.
என்னிடம் வாருங்கள் . எல்லாம் மறந்து போகும். நான்தான் மருந்து. தன்னிலை மறத்தல் அதுவே மருந்து. வாருங்கள் வாருங்கள்
(எல்லா குடுமுபங்களும் மெல்ல மெல்ல அருகில் செல்ல நடுவில் போதையரக்கன் நின்று எல்லோரையும் அரவணைத்தல். மெல்ல கைகளை உயர்த்தி ஒரு சுழற்சிநிலையை மேற் கொள்ள எல்லா குடும்ப உறுப்பினர்களும் அந்த சுழலில் அகப்பட்டு தாமும் அசைய ஆரம்பிப்பள்)
ܢܠ C C nIafriföðu )
N
 

பாடல் :- போதையின் பாதையில் தோழர்கள் நாமே
பாதையில் போகையில் தோற்றவர் நாமே வாழ்க்கைப் பாதையில் போகையில் தோற்றவர் நாமே
நாடியே இன்பத்தை தழுவிக் கொண்டோமே தேடிய போதையில் நினைவிழந்தோமே விரும்பியே திழைத்திட்ட விருந்தினர் நாமே விழைந்திட்ட வேட்கையை அனுபவிப்போமே
(பாடலுக்கேற்ப எல்லோரும் போதையரக்கனுடன் இணைந்து ஆடுவர். பாடல்முடிய போதையரக்கன் வெளியேறிவிடலாம். ஆனால் குடும்பத்தினர் அனைவரும் இசைக் கு ஏற்ப அசைந்து கொண்டிருப்பர். அவ்வேளை இசைக்கு இடையில் பின்வரும் குரல்கள் குடும்பத்தினரிடம் இருந்து
G66ssij6)Tib)
குரல் :- எங்களுக்கொரு கவலையும் இல்ல
குரல் :- இங்க எந்தப் பிரச்சினையும் இல்ல
குரல் :- எனக்கு பசியும் இல்ல
குரல் :- தனிமை இல்ல.
குரல் :- எல்லாம் புதுமையா இருக்கு .ஓ
எல்லாமே புதுமையா. கிடக்கு
(எல்லோரும் மீண்டும் இசைக்கு ஏற்ப ஆடுவர். எல்லோரிடமும் இருந்து சிரிப்பு கிளம்பும். சிரித்து சிரித்து. பின்னர் போதையின் உக்கிரம் தணியத் தணிய மெல்ல அடங்கி பழைய நிலைமைகளை அடைவர். பழையபடி இடங்களில் அமர்ந்து. கொள்வர். மெல்லிய அமைதிக்கிடையில் மெல்ல மெல்ல புலம்பத் தொடங்குவர்)

Page 43
குடும்பம் 1
குடும்பம் 2
குடும்பம் 3
(G506b Lb - 4
ஒருவர்
வேறொருவர்
பிறிதொருவர்
- ஒ. பசி.பசி. வீட்டில ஒரு பொருளுமில்ல. வீடு
வாசல விட்டுட்டு வந்து இப்படி நாய் படாபாடு படவேண்டி இருக் கே. நான் என்னத்தை செய்வேன்.
என்னால இப்படி இருக்கேலாது. நான் ஆரோட கதைக்கிறது. எனக்கு. அது. அது. வேணும்.
எங்களுக்கும். அது. அது. வேணும் நாங்கள். எங்கள மறந்து வானத்தில மிதக்க வேணும்.
ஒ. இதுவும் ஒரு வேலையே. நான் எப்ப வெளிநாடு போறது. எனக்கு என்ர கவலையை மறக்க வேணும். எனக்கு அது வேணும்
(எல்லோரும் பரபரப்பாக மேடை முழுதும் போதையை தேடுவர்)
:- எனக்கு. வேணும் ..எனக்கு. அது வேணும்
- எனக்கு வேணும்.
எனக்கும் அது வேணும். இனினும் ஒருவர் ஓ. என்னால தாங்கேலாது.எனக்கு அது வேணும்.
(எல்லோரும் பரபரப்பாக மேடை முழுதும் போதையை தேடி அங்கலாய்த்து சுற்றிக் கொண்டிருக்க பின்புறமாக போதையரக்கன் சத்தம் செய்யாது வந்து நிற்றல் போதையரக்கனைக் கண்டவுடன் எல்லோரும் ஆசையாக அவனை நோக்கி வேகமாக நகர்ந்து சூழ்ந்து கொள்வர்)
Cmnd D
 

/
போதையரக்கன்
எல்லோரும்
போதையரக்கன்
N
ஹா.ஹா.ஹா போதையின் பாதையில் தோழர்கள் நாமே. வறுமையை, பசியை, விரக்தியை, பிரச்சினையை உலகத்தை மறப்பம். ஹா. ஹா. ஹா
- மறப்பம். மறப்பம். எல்லாத்தையும் மறப்பம்
ஏய் மானிடப் பதர்களே . இனி நீங்கள் என் கையில்தான். உங்களால் என்னை எதுவும் செய்ய முடியாது . ஹா.ஹா. ஹா
போதையரக்கன் :- என் சொற்படிதான் நடப்பீர்கள் நடக்க வேண்டும்.
எல்லோரும்
போதையரக்கன்:
குடும்பம் அறிவு, சூழல், சமூகம், எல்லாத்தையும் தூக்கி வீசுங்கள். என் காலடியே இனி உங்கள் இடம். போதையின் பாதையில்
தோழர்கள் நாமே. தோழர்கள் நாமே
(போதையரக்கன் : கைகளை சுழற்றி ஒரு அசைவை ஏற்படுத்த அதற்கு ஏற்ப எல்லோரும் அசையத் தொடங்குவர்)
(போதையரக் கனின் ஆட் டுவிப் புககு ஏற்ப எல்லோரும் ஆடுவர் அசைவர். அவர்களை உறைநிலைக்கு கொண்டு வந்து தான் விரும்பியபடி அவர்களது நிலைகளை போதையரக் கன் மாற்றுவான் நிமிர்ந்தவரை வளைக்கவும் சரிக்கவும் கைகளை உயர்த்தி வைக்கவும் முயல்வான். அவனது கைச் சொடக்குக் கேற்ப குடும்பத்தினர் எல்லோரும் அசைவர். அவர்களுக்கு அசைவை ஏற்படுத்தி விட்டு அவன் முன்னோக்கி வருவான்)
ஹா.ஹாஹா எனது பிடியில் இருந்து நீங்கள் விடுபட முடியாது. மெல்ல மெல்ல பள்ளிக்கூடம்

Page 44
போதையரக்கன்
புதியவன்
போதை
புதியவன்
போதை
புதியவன்
புதியவன்
போதை
ஆலயம் சமூக நிறுவனங்கள் எல்லாவிடத்திலயும் நான் புகுந்து விடுவேன். நான் ஆட்டுவித்தால் நீங்கள் ஆட வேண்டும்
இனி என்னை யாரும் அசைக்க முடியாது. போதையின் பாதையில் தோழர்கள் நாமே. ஹா.ஹா (சபையினரின் பக்கத்திலிருந்து தீடீரென மேடை நோக்கி ஒருவன் சடுதியாக எழுந்து வருதல்)
நிறுத்து.
யார் நீ.
நான் யாரா. நான் தான் நம்பிக்கை. தன்நம்பிக்கை. LD(360TTu6)b
- என்னை ஒழிக்க வந்தாயா. அது முடியாது.
- இல்லை முடியும். நீ அரக்கன் போதையரக்கன்
நீ. எங்களை மயக்கி பிரச்சினைகளில் இருந்து எங்கள மறக்கப்பண்ணப் பார்க்கிறாய்
ஆனால் எங்கட தேவை அதுவல்ல பிரச்சினைகளுக்கு தீர்வுதான் எங்களுக்கு வேணும். நீயல்ல
- 53T.53T....gist
(புதியவனுக்கும் போதைக்கும் நடுவில் குடும்பத்தினர் அகப்பட்டிருக்க புதியவனும் போதையும் கயிறு இழுத்தல் போல் இவர்களை தத்தமது பக்கங்களுக்கு இழுக்க முயற்சிப்பர். இறுதியில் மக்கள் யாவரும் புதியவன் பக்கம் சாய
புதியவனுக்கும் போதை அரக்கனுக்கும் இடையில் போர் நிகழ்தல் இறுதியில் போதை வீழ்த்தப்பட)
༄༽
 

புதியவன்
குடும்பத்தினர்
புதியவன்
UsTL6)
:- எங்களுடைய பிரச்சினைகளுக்கும் துயரத்துக்கும்
N
தீர்வு போதையல்ல. போதையின் பாதை .
வேண்டவே வேண்டாம். போதையை ஒழிப்போம்.
இளைஞனே பிரச்சனைகளை யிட்டு கலங்காதே. வல்லமை அனைத்தும் உன்னகத்தேஉள்ளது. எழுந்து நில், துணிவு கொள். முழுப்பொறுப்பையும் உன் தோள்களில் ஏற்றுக்கொள். உன் விதியைப் படைப்பவன் நீயே என்பதை உணர்.
வல்லமை அனைத்தம் உன்னத. வாழ்ந்திட வழியை செய்திடு. உண்மையும் நேர்மையும் கொண்டிரு. உயர்லட்சிய வாழ்வென எண்ணிடு.
போதையின் பாதையை ஒழித்திடு. உயர் போதனை பலதை கற்றிடு. விதியதை படைத்திட முயன்றிடு. விழி வீரம் தெறித்திட எழுந்திடு.
(பாடல் முடிவடைய எல்லோரும் இணைந்து ஒற்றுமையைக் காட்டும் படிமமாக பிணைந்து நிற்க திரை மூடும்)
blokz پر بالائچ
素
W

Page 45
  

Page 46
நாடக மாந்தர்
மண்டோதரி இராவனேஸ்வரன் இந்திரஜித் இந்திரன் விபீஷணன் மாலியவான் 6Jrridir இலக்குமணர் காவலாளிகள் பணிப்பெண்
மேடையில் பங்கேற்றோர் வlவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மாணவர்கள்: ந.கபில்நாத்
இ.சந்திரராஜ்
கெ.தர்மசீலன்
செ.சிவதர்சன்
யோ.ஜெயக்குமார்
கு.பகிரதன்
ந.பாலமோகன்
ப.பார்த்திபன்
ம. சசிநாத்
வி.பிரதிபா
பூஞரீதேவி
இசை s கோ.ரஞ்சன் சம்சன்
ஒப்பனை Sa நா.கு.மகிழ்ச்சிகரன்
மேடையமைப்பு -- நிதர்மானந்தசிவம்
நெறியாள்கை :- மு.இராதாகிருஷ்ணன்
இந்நாடகம் 1998ம் ஆண்டு தமிழ்த்தினப் போட்டியில் வவுனியா கோட்ட மட்டத்தில் முதலாமிடத்தையும், வவுனியா மாவட்ட மட்டத்தில் முதலாமிடத்தையும், வடகிழக்கு மாகாண தமிழ்த்தினப் போட்டியில் இரண்டாம் இடத்தையும் பெற்றது. ノ
ܢܠ C ( மானிடச்சிக்கல் =( .تق
 

N நேசத்தால் நிறைந்த நெஞ்சள
(இலக்கிய நாடகம்)
காட்சி ~1
(திரைவிலகும் போது மேடையில் ஒரு யுத்தம் நிகழ்வது காட்சிப்படுத்தப்படும். இராம - இராவண யுத்தம் எங்கும் போர்ச் சத்தங்கள், அழுகுரல்கள், அவலங்கள், கூக்குரலாகவும், கெக்கலிப்பாகவும், யுத்த முழக்கங்களாகவும் பின்னணியில் கேட்க நாடக மாந்தர் அனைவரும் (ஸ்லோமோஷன்) யுத்தத்தில் ஈடுபடுவர். மெல்ல மெல்ல அந்த சத்தங்கள் குறைய நாடக மாந்தர் இருபுறமாகவும் தேடையை விட்டு வெளியேற. தொலைவில் அம்மா! என்ற அலறல் கேட்கும். அது இராவணனின் புதல்வன் இந்திரஜித்தின் மரணத்தறுவாயில் எழுந்த குரலாக இருக்கும். அதைத் தொடர்ந்து ஏற்படும் நிசப்தத்திற்கூடாக மேடையை நோக்கி ஒரு பெண் அலறியபடி வருவாள். அவள் இராவணனின் பட்டத்துராணியும் இந்திரஜித்தின் தாயுமான மண்டோதரி)
மண்டோதரி - மகனே மேகநாதா. மகனே மேகநாதா. ஐயனே
என்ன செய்வேன்.
(பெருங்குரல் எடுத்து அவள் அலறி அழுவாள் அவ்வேளை கீழ் வரும் பாடல் பின்னணியில் பாடப்படும்)
LTL6) :- தலையின் மேல் சுமந்த கையள்
தனலின் மேல் நிற்கின்றாள் போல் நிலையின் மேற் சுமந்த தாளழ் நேசத்தால் நிறைந்த நெஞ்சள்
ཊཏད་ C– manified D,

Page 47
பணிப்பெண் :
பணிப்பெண் :
பணிப்பெண் :
j60of
ᏞᏝ606I
பணி
மண்
கொலைய்ன் மேல் குற்த்த வேடன் கூர்ங்கனை உயிரைக் கொள்ள மலையின் மேல் மயில் வீழ்ந்தாலென்ன மைந்தன் மேல் மறுகி வீழ்ந்தாள்
(பாடல் முடிந்தவுடன் மீண்டும் போர்ச்சத்தங்கள் கேட்க மண்டோதரி காதுகளைப் பொத்திக் கொண்டு அவலப்பமு வாள். எங்கும் அவலக் குரல்கள் , படைக்கலங்கள் மோதும் ஒலி. அழுகுரல் எல்லாம் இணைந்து மிகப் பலமாகக் கேட்கும். தொடர்ந்து அப்பாவிக்குரல்கள். இவற்றிற்கிடையே தீவட்டி ஏந்திய ஆட்கள் அங்கும் இங்கும் திரிவர். நேரம் அதிகாலை வேளை இடம் மண்டோதரியின் அந்தப்புரம் மண்டோதரி அவலப்பட்டுக் கொண்டிருக்க அவளை நாடிவரும் பெண் மெல்ல அழைப்பாள்.)
அம்மா. அம்மா.
அம்மா . அகாராணி.
அம்மா. (உரத்து கூப்பிட்டடு பின் உலுக்குதல்)
(பணிப் பெண் உலுக்கியவுடன் திடுக்கிட்டு மண்டோதரி நிமிர. எல்லாச் சத்தங்களும்ம நிற்கும்.)
அம்மா.
வேண்டாம் . இல்லை இனியும் எந்த செய்தியையும் சொல்லாதே. (அலறி அழுதல்)
அம்மா. நான் சொல்ல வந்தது.
வேண்டாம் நீ. சொன்ன அந்த ஒன்றே போதும் ஆயிரம் ஜென்மங்களுக்கும். என்னை இம்சிக்க
D.
 
 

பணிப்
tᏝ60ürᎶL fᎢ
பணிப்
ᏞᏝ60ᏡI
ᎥᏝ60ᏡI
பணி
LD66
பணி
ᎥᏝ60āiᎶL fᎢ
─────།༽
9ILD DIT....
என்மகன் இறந்தான் என்ற அந்த ஒரு செய்தியே இல்லை. ஐயோ என்மகன் இறக்கவில்லை. ஐயோ.
அம்மா. நான் என்ன சொல்வது (விம்மியபடி) இளவரசருக்கு இன்று அந்திமக் கடன். நீங்கள் ஆயத்தமாகுங்கள்.
இளவரசருக்கா. தலையற்ற உடம்புக்கு என்று சொல். ஐயோ. (சட்டென்று நிறுத்தி - பணிப் பெண்ணை நோக்கி) யார் சொன்னது அவன் இறந்தானென்று. ஐயோ.
என் குழந்தை களத்தில் சிதைந்து கிடக்கிறான் நான் இங்கே... இனி எப்போது என் முன் வந்து சிரிக்கப்போகிறான்.
அம்மா. (ஆறுதல் படுத்த முனைதல்)
என் மகனுக்கு தெரிந்ததா அவ்வளவுதான் தன் நாட்கள் என்று. இந்தப் பட்டாடைகள் எதற்கு, ஆபரணங்கள் எதற்கு. (ஆபரணங்களை எறிதல்). ஓ. என் செல்வத்தைக் கண்ணாரப் பார்க்கவில்லையே.
மகாராணி நீங்களே இப்படிக் கலங்கலாமா?
ஒ. நான் மண்டோதரி. நான் மகாராணி அசுர குல மாவீரனின், சக்கரவர்த்தியின் பத்தினி ராவணேஸ்வரனின் பட்டத்துராணி. ஆனால். ஆனால்.
(பின்னணியில் பல குரல்கள் அசரீரிபோல் கேட்க மண்டோதரி காதுகளை கைகளால் பொத்தியபடி அலறுவாள்)
ار

Page 48
ܢܠ
குரல்1
குரல்2 :-
குரல்3 :ー
குரல்4 :-
குரல்5 :-
குரல்6 : =
குரல்7 :-
மண்டோதரி :
பாடல்:
பசுக்கள் திமிறும் காளைகளையே கருத்தரிக்கின்றன.
குதிரைகள் மண்ணை மிதித்து பாயும் நான்கு குழம்புகளைக் கருத்தரிக்கின்றன.
வீரப் பெண்கள் வீரமரணம் அடையும் மகாபுருஷர்களையே கருத்தரிக்கின்றனர்.
நீ.வீரப் பெண்.
நீ.அசுர குல பட்டத்து ராணி.
நீ. மாவீரன் இந்திரஜித்தினை மகனாகப் பெற்றவள்
வீரத்தின் விளைநிலம்
இல்லை. இல்லை. இல்லை.(குரல்களின் ஓசை அடங்கிவிடும்)நான். நான் ஒரு தாய். கன்றை இழந்த துயர் பசுவுக்குத்தான் தெரியும். நான் ஒரு தாய். நான் ஒரு தாய். (அழுதல்)
(பின்னணிப்பாடல் ஒன்று காணப்படும் - பாடகள்கள் U35L6)Tb)
கலையினால் திங்கள்போல வளர்கின்ற காலத்தே - உன் சிலையினால் அரியை வெல்லக் காண்பதோர் தவமும்
செய்தேன்
தலையில்லா ஆக்கை காண எத்தவம் செய்தோன் ஐயோ நிலையில்லா வாழ்வை இன்னும் நினைவனோ
மண்டோதரி ;-
நிலையில்லாதேன்.
(மண்டோதரி மகனை நினைத்து புலம்புதல்)
அண்ணாந்து பார்க்க வைக்கும் உயரம். அகன்ற மார்பு கண்பட்டு விடுமோ. என கலங்கியதே. என் மனம் இன்று ஐயகோ.
CC EnrGulfirði
 

r. பணிப்
மண்டோதரி :-
பணிப் :ー
மண்டோதரி ;-
நிற்பர்)
9|DLDT.
எப்படிச் சிரிப்பான் சிரிக்கும் போது கண்களை மூடி விடுவான் வலுவான அகன்ற தோள் களைக் குலுக்குவான். எப்போதும் சிரிப்புத்தான். ஆனால்.
அம்மா. (ஆறுதல் படுத்த முனைதல்)
இந்திரனையே வென்றவனடி.தேவர்கள் எல்லாம் நடுநடுங்க வெற்றிவாகை சூடி. இந்திரனையே வென்றவன்.ம். அது ஒரு காலம். கனவு போல். இன்றும் என்மனதில் கனவு போல் இன்றும் என் மனதில்
(மெல்ல நடந்து மேடையின் முன் வலது பக்கம் நோக்கி செல்வான். அவனது கண்களில் காணுகின்ற இந்திரனை இந்திரஜித் வென்ற காட்சி மேடையில் விரியும் - மண்டோதரியும் தோழியும் உறைநிலையில்
காட்சி - 2
(இந்திரனுக்கும் இந்திரஜித்திற்கும் இடையில் யுத்தம் நிகழ்தல்)
(யுத்தத்தை வாற்சண்டையாக மெல் அசைவாக (ஸ்லோமோஷன்) காட்சிப்படுத்தலாம். இறுதியில் இந்திரன் கீழேவிழ மேகநாதன் என்ற இந்திரஜித் காலை இந்திரன் மேல் வைத்து வாளை உயர்த்தி உரத்து
சிரித்தல்)
இந்திரஜித் தேவலோகத்து இந்திரன் இன்று என் காலடியில்
ഖji1 - மேகநாதன் வாழ்க.
ഖji2 - இந்திரனை ஜெயித்த வீரன் இந்திரஜித் வாழ்க.
ഖji3 :- இந்திரஜித் வாழ்க.
ܢܠ
s
மாளிடச்சிக்கன்

Page 49
ഖji4 :ー
L6)
மண்டோதரி ;-
பணிப்பெண் :-
மண்டோதரி :
LDT. g5Tj55M :
மண்டோதரி :
LDT. g5Tj551 :
шD60üї
மா. காக்கா :- தாதத ܢܠ
இந்திரஜித் வாழ்க.
இசுர குலத் திலகம் வாழ்க.
(பலத்த வெற்றிக் கோஷங்களுடன் வீரர்களுடன் மேகநாதன் மேடையை விட்டு நீங்க, கீழே வீழ்ந்திருந்த இந்திரனும் தலை குனிந்தபடி செல்வான். எல்லோரும் மேடையை விட்டு நீங்கியவுடன் உறை நிலையில் நின்ற மண்டோதரி சுய நிலைக்கு வருவாள்.)
இந்திரனை ஜெய்த்த என் மகன். நீரோடைகளைப் பறந்து தாண்டும் என்மகன். ஒ.அந்தப் பெருவீரனை. கொடுரமாய்க் கொன்று விட்டனரே. அவன் தலை இழந்து. ஐயகோ.
அம்மா. மாலியவான் தாத்தா வருகிறார்.
(அவ்வேளை இராவணனை வளர்த்த பேரன் மாலியவான் என்ற முதியவர் மெல்ல அவள் நோக்கி வருதல்)
ஐயோ. தாத்தா. ஐயோ தாத்தா. என் மகனுக்கு நடந்ததைப் பார்த்தீர்களா. ஐயகோ நான் என்ன சேய்வேன்.
குழந்தாய்
அவன் பால் குடித்த என் மார்புகளை அறுத்து எறிந்தாலும் என் துயர் போகுமா. ஐயகோ.
நான் என்ன சொல்ல இருக்கிறது குழந்தாய். அழுது அழுதுதான் உன் மனம் ஆறவேண்டும்.
இதெல்லாம் எதற்காக தாத்தா? யாருடைய லாபத்திற்
855......
அது.தான் நியதியம்மா.
O80 C.
 

шp60ӧї
LDT. g5I595I :
D60ö
மா. தாத்தா :-
D60ór
LDT. g5Tj595T :-
ᏞᏝ60fil
LDT. 555T :-
uᏝ6061
மாதாத்தா
இந்த இலங்கை முழுவதும் புதல் வனையோ கணவனையோ இழக்காத பெண் யாராவது உள்ளனரா தாத்தா. அவர்களின் அவயக் குரல் கேட்கவில்லையா
தாத்தா. காதுகளால் புகுந்து இதயத்தை இம்சை செய்யும் குரல்கள்.
(பெண்களும் முதியவர்களும் அழுது ஒப்பாரி பாடியபடி அங்குமிங்குமாக செல்லுதல்)
பார்த்தேன் கேட்டேன். லங்காபுரியின் கரை முழுதும் முதியவர்களும். பெண்களும்.
இது நியாயமா.தாத்தா.இது எதற்காக.
எதற்காக என்று மட்டும் கேட்காதே. இது விதி ராவணனும் ராமனும். நானும் நீயும் ஏன் மேகநாதனும் இதன் பாத்திரங்கள்.
ஐயோ. மேகநாதா. மகனே.
மனதைத் தேற்றிக் கொள் குழந்தாய். போர் வெற்றி ஒன்றால் மட்டுமே அளக்கப்படுக்றது.
தாத்தா என் செல்வம் எப்படி இறந்தான். எனக்கு சொல்லுங்கள் தாத்தா. மாசு மறுவற்ற வீரன் அவன்.
குழந் தாய். அவன் தனது சிற்றப் பனின் சூழ்ச்சியினால்தான் கொல்லப்பட்டான்.
யார் விபீஷணனா?
ஆம், நடந்ததைக்கூறுகிறேன் கேள். யுத்த களத்தில் உன் மகன் தசரத புத்திரர்களை பெரும் வியப்பில் ஆழ்த்தி வீரத்துடன் போரிட்டு கடைசியில் அவர்களை வென்றும் விட்டான்.
N

Page 50
/ー N
ᏞᏝ608I :- வென்று விட்டானா?
மா.தாத்தா - ஆம் பிரம்மஸ்திரத்தை ஏவி அவர்களை மூச்சடையச் செய்து விட்டு அந்த வேகத்துடன் தன் தந்தைக் காண வந்தான். அங்கே.
(மாலியவான் தாத்தா ,மண்டோதரி, பணிப் பெண் என்போர் உறைநிலையில் மேடையின் வலது பக்கத்தில் நிற்க- மாலியவான் கூறும் விடயம் காட்சியாக மேடையில் நிகழும்)
காட்சி ~ 3 (திரை விலக அரண்மனை மண்டபம் ஒன்றில் இராவணன் அமர்ந்திருந்து வீணையை மீட்டி சாமகானம் வாசித்துக் கொண்டிருப்பான். அவ்வேளை அங்கு அவனது மகனான இந்திரஜித் வந்து குரலைக் கனைத்து சம்பாவழிப்பான்.)
இந்திரஜித் :- தந்தையே. தலை வணங்குகின்றேன். ஆனால்.
தங்கள் நடத்தையால் தலைகுனிந்துள்ளேன்.
இராவணன் :- மகனே மேகநாதா. என்ன சொல்கிறாய். புதிர்
போடாமல் விடயத்தை நேரிடையாகவே சொல்
இந்திரஜித் :- தங்களால் மூண்ட தி. எங்கும் பரவுகிறது. நீங்கள்
இங்கே சாமகானம் வாசிக்கிறீர்கள்
இராவணன் :- இந்த இராவணின் மனதிற்கு மருந்து வீணையே
என்பதை மறந்துவிட்டாயா?
இந்திரஜித் :- இல்லை தந்தையே தங்கள் மனக்குளப்பத்திற்கு நீங்கள்தானே காரணம். நுளலும் தன் வாயால் கெடும் என்ற பழ மொழி நீங்கள் அறியாததல்ல.
இராவணன் :- அதுபோல்:
இந்திரஜித் :- அதுபோல் நீங்கள் சீதையை கவர்ந்ததன் பலனை لر .அனுபவிக்கத்தானே வேண்டும் - ܠ
C83 D
 

இராவணன்
இந்திரஜித்
இராவணன்
இந்திரஜத்
ராவணன்
இந்திரஜித்
இராவணன்
இந்திரஜித்
இராவணன் -ܠ
:- நீ. எனது மகன் என்பதை நிரூபித்து விட்டாய்.
N எனது ஆழ்புலமான தண்ட காருண்ய வனத்திற்குள்
வந்து என் தங்கையைப் பங்கப்படுத்தியது சரியாகுமா? சூர்ப்பனகை முக்கும் முலையும் அறுபட்டது எம் குலத்திற்கே பெரும் இழுக்கல்லவோ?
அப்போ சீதையைக் கவர்ந்தது சரி என்கிறீர்களா?
இந்திரஜித் அந்த இராமனையும் லட்சுமணனையும் கண்டு நீ.கலங்கி விட்டாயா.
இல்லை தந்தையே நான் அவர்களை பிரமாஸ்திரம் ஏவி மூர்ச்சை அடையச் செய்து விட்டேன் ஆனால் சீதையை விடுவித்து விடுவது என்பது மாபெரும் அழிவிலிருந்து எம்மைப் பாதுகாக்கும் .
எனக்கு புத்தி சொல்ல வேண்டாம் இந்தப் போர் ஒரு மானப் போர் . நானே தேடிய பகை. நானே எதிர் கொள்வேன்.
கோப்படாதிகள் தந்தையே. வதியின் வலிமையை யாரும் வெல்ல முடியாது.
(கோபம் தணிந்த நிலையில் இராவணன் மகனுக்கு அருகில் வந்து)
மகனே மேகநாதா. நீ.வீரன். உன் வீரத்தைப் பராட்டுகிறேன்.இன்று களத்தில் நடந்ததை கூறு.
தந்தையே இன்றைய போரில் எமது வீரத்தின் வலிமையினை அவர்களுக்கு புரிய வைத்துள்ளேன் பிரமாஸ்திரத்தின் முன் அவர்கள் நிற்க முடியவில்லை. ராம லக் குமணர்கள் மூச்சையடைந்து விழுந்து விட்டார்கள்.
ار

Page 51
Y N
இந்திரஜித் :- என்கடன் தந்தையே. ஆனால்.
இராவணன் :- ஆனால்:
இந்திரஜித் :- அவர்கள் எவ்வேளையிலும் மீள எழுந்து விடலாம்.
அதற்கு.
இராவணன் :- அதற்கு:
இந்திரஜித் :- நான் நிகும்பலை சென்று ஈஸ்வரனைக் குற்த்து யாகம்
செய்யப்போகிறேன்.
இராவணன் :- ஒ. ருத்திரனை குறித்து ஆயுத யாகமா.
இந்திரஜித் :- இந்த யாகம் மட்டும் நிறைவேறி விட்டால் எம்மை
வெல்ல யாராலும் டுடியாது.
இராவணன் :- சென்றுவா மகனே. நீ. நினைத்ததைச் சாதித்து
சென்று வா.
(அரவணைத்து மகனை வழியனுப்பி வைத்து பின்னர் இராவணனும் அங்கிருந்து அகலுதல்.)
காட்சி - 4
(திரை விலக மேடையில் போர்ப்பாசறைக் கூடாரம் ஒன்று காணப்படும். அதன் பின்னணியில் கடற்கரை (மாலை மங்கிய வேளை) காணப்படும்.
பாறை ஒன்றில் இராமர் அமர்ந்திருக்க அருகில் லட்சுமணன். சம்பாஷனை தொடர்கிறது)
லட்சுமணன் :- அண்ணா.இந்த இந்திரஜித் உயிருடன் இருக்கும் வரை நாங்கள் அண்ணியை சிறை மீட்கவே முடியாது.
இராமர் :- நானும் அதைத்தான் யோசித்துக் கொண்டிந்தேன்.
லட்சுமணன் :- அவன் மாயாஜாலத்தில் கைதேர்ந்தவன்.
 

/ー
இராமர்
லட்சுமணன் :-
இராமர்
லட்சுமணன் :-
இராமர் :-
விபீஷணன் :-
லட்சுமணன் :-
விபீஷணன் :
இராமர் :-
விபீஷணன் :-
லட்சுமணன் :-
விபீஷணன் :-
லட்சுமணன் :-
ܢܠ
:- சிறந்த வீரன். வயதிலும் மிக இளையவன்.
சீதாப்பிராட்டியார் போன்ற பொம்மையை செய்து அதனை கண்டதுண்டமாக வெட்டியெறிந்ததை.நாங்கள் எல்லோரும் நம்பித்தானே விட்டோம்.
- விபீஷணன்தான் எங்களுக்கு உண்மையைக் கூறி
எங்களை மீளாத்துயிலில் இருந்து மீட்டெடுத்தான்.
இராவணனின் தம்பியாகிலும் தர்மத்தின் பால் நிற்கவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் அன்றோ விபீஷணன்.
அதோ. விபீஷணரே வருகிறார்.
பிரபு தங்கள் சந்நிதியில் அடியேனின் வணக்கங்கள்.
வாரும் விபீஷணரே.போன காரியம் என்னவாயிற்று.
நான் சிறிய வண்டின் வடிவத்தில் போய்ப் பார்த்தேன். அங்கே
அங்கே
அங்கே நிகும்பலையில் . இந்திரஜித் யாகம் செய்கின்றான்.
uuITEB DIT?
ஆம். இந்த யாகம் மட்டும் நிறைவேறிவிட்டால் பின்பு அவனையாரும் வெல்ல முடியாது. உடனடியாகச்
சென்று அதனை தடுத்து அவனை அழித்தல் வேண்டும்.
அண்ணா சரி என்ற சொல்லுங்கள். அவன் தலையைக் கொண்டு வருகின்றேன்.

Page 52
இராமர்
6)L &lp600T6 :-
இராமர் :-
விபீஷணன்
6)L &LD600T60T :-
இராமர் :-
6) diLD600T6 :-
இராமர் ;ー
6), giLD600T6ós :-
லட்சுமணன் :-
N இந்த யுத்தத்தில் தர்மம் வெல்ல வேண்டுமானால் இந்திரஜித் கொல்லப்பட வேண்டும்.ஆனால்.
அண்ணா என்ன யோசனை
வில்லாளரில் முதல்வனாகவும்.வீரத்தில் வேளமாகவும் அன்றோ அவன் விளங்குகின்றான்.
ராமபரி ரானே. அவன் வீரத் தைக் கணி டு அச்சப்படுகின்றீர்களா?
தம்பியுடையான் படைக்கஞ்சான் என்பதை மறந்து விட்டீர்களா.
இல்லை.இல்லை வகுக்கப்பட்ட விதிதனை யாரும் மாற்ற முடியாது.
அண்ணா தயக்கம் வேண்டாம். விடை தாருங்கள்.
இந்த வெற்றி விபீஷணன் தந்த வெற்றியாகும். சென்றுவா.தம்பி. வெற்றியுடன் வா.
நான் மீண்டால் இந்திரஜித்தின் தலையுடன்தான் மீள்வேன்.
(இராமரின் பாதம் பணிந்து லட்சுமணன் புறப்படுதல்)
வாருங்கள் விபீஷணரே.
(லட்சுமணனும் விபீஷணரும் இந்திரஜித் யாகம் செய்யும் நிகும்பலை நோக்கிச் செல்லுதல். மேடையில இவர்கள் இருவரும் வனங்களைக் கடந்து முன்மேடை நோக்கிவர இராமரும் போர் பாசறைகளும் இருந்த காட்சியை மெல்ல திரை மூடலாம்)
மானிடச்சிக்கல்
D C 86
 
 

/ Y லட்சுமணன் - விபீஷணரே இன்னுமு நெடுந்தொலைவு செல்ல
வேண்டுமோ..?
விபீஷணர் :- இல்லை லட்சுமணரே. இன்னும் சற்று தூரம்தான்.
(நடந்த கொண்டிருந்த விபீஷணர் சட்டென்று நின்று காதுகளால் கூர்ந்து கேட்கிறார்)
விபீஷணன் :- அதோ...மந்திர உச்சாடனங்கள் கேட்கின்றன. நிகும் பலை அண்மித்து விட்டது. எதற்கும் தயாராகுங்கள் லட்சுமணரே.
லட்சுமணன் :- அப்படியே ஆகட்டும்.
(லட்சுமணன் போருக்கு ஆயத்தமாகவில்லை வளைத்து அம்பு தொடுத்த வண்ணம் செல்ல - மந்திர உச்சாடனங்கள் பலமாகக் கேட்க திரை மெல்ல விலகும்)
காட்சி ~ 5
(திரை விலக மேடையில் நிகும்பலை என்ற வனங்கள் சூழ்ந்த பகுதியில் இந்திரஜித் யாகம் செய்வது காட்சிப்படுத்தப்படும். யாக குண்டத்தில் தீ கொழுந்து விட்டெரிய பாறையால் ஆன பீடம் ஒன்றில் இந்திரஜித் மந்திர உச்சாடனங்கள் செய்தபடி கண்மூடி தியானத்தில் இருத்தல். சடுதியாக லட்சுமணன் அவ்விடத்திற்குள் பாய்ந்து புகுதல்)
லட்சுமணன் - யாகம் செய்து எங்களை அழிக்கலாம் என்றா
பார்க்கின்றாய்.
இந்திரஜித் :- (திடுக்கிட்டு) லட்சுமணனே யுத்தம் யுத்தகளத்தில் தான்.
இது யாசசாலை.
லட்சுமணன் - அதர்மம் என்றால் அதனை எங்கும் அழிக்கலாம்.
Uஇந்திரஜித் :- ஹா.ஹா.

Page 53
N / (இந்திரஜித்ண் கைகளில் வில்லும் அம்புகளும் தோன்றுதல். அதனைத் தொடர்ந்து யாகத்தியைச் சுற்றி லட்சுமணனுக்கும் இந்திரஜித்துக்கும் இடையில் கடும்போர் நிகழுதல்)
தத் தகிட தக தகிட தத்தகிட தக தகிட தத் தகிட தக தகிட தத்தகிட தக தகிட
(இடையில் இந்திரஜித் மாயமாக மறைந்து விடுவான். பின்பு மீளுவான்)
லட்சுமணன் :- அடேய் இந்திரஜித் உன் மாயாஜாலத்தை என்னிடம்
காட்டாதே. வெளியே வா
இந்திரஜித் - ஹா. 2)sBT..-..-..-..-..... 6)BT........... (6T6ð6oTÜ Lu7(pLib
சிரிப்பொலி எழுதல்)
லட்சுமணன் :- அடேய் பேடிப் பயலே வெளியே வா
(திடீர் என லட்சுமணனுக்கு பின்புறமாக இந்திரஜித் தோன்ற மீண்டும் போர் நிகழும். யுத்தத்தின் இறுதியில் லட்சுமணனின் அம்பு மார்பில் தைக்க இந்திரஜித் தடுமாறி பாறையில் வீழ்வான். அவ்வேளை லட்சுமணன் அவனது தலையை வாளால் வெட்டி கொண்டு செல்வான். வாள் இந்திரஜித்தின் கழுத்தில் பட்டதும் - உறைநிலையில் இருந்து மண்டோதரியும், மாலியவான் தாத்தாவும், பணிப்பெண்ணும் மீள்வர். மண்டோதரி அலறி அழுதல்)
மண்டோதரி - ஐயோ மேகநாதா. மேகநாதா.
நெஞ்சு பொறுக்குதில்லையே. மகனே மேகநாதா.
(மண்டோதரி அழுது அரற்றிக் கொண்டிருக்க இராவணன் மேடையின் இடது பக்கமாக வந்து )இந்திரஜித் வீழ்ந்திருந்த பாறையின் பக்கம் சென்று ܢܠ
 

இராவணன்
மாதாத்தா :-
மண்டோதரி ;-
மா.தாத்தா :-
இராமர்
லட்சுமணன் :-
அவனுடலை பார்த்து அழுது புலம்புதல் - இவ்வேளை மண்டோதரி உறைநிலையில் இருக்கலாம்)
மகனே மேகநாதா. உன்னை இழந்து இனி எந்தப்போரில் நான் வ்ெறறி பெறப்போகிறேன். எனக்கு இறுதியில் நீர் கடன் செய்வாய் என நம்பியிருந்தேன். நானே. செய்யும்படியாயிற்றே. மகனே மேகநாதா. உன்னை இழந்து நான் கலங்கி நிற்கின்றேனே.
குழந்தாய் வீரம் என்பது. வாழ்வதற்கு மட்டும் என்பதல்ல. வீழ்வதும் வீரம்தான். உன்மகன் லட்சுமணன் என்ற சிறந்த வீரனால் தான் கொல்லப்பட்டான். * அவன் பெற்ற வரம் தான் அவன் தலையைத் துண்டித்தது. W
ஐயகோ. அவன் தலை எங்கே தாத்தா.
அவன் தலை. அங்கே. ராமபிரானின் சமூகத்தில்.
(மேடையின் இடது பின் பகுதியில் இந்திரஜித்தின் தலையுடன் லட்சுமணனும் விபீஷணனும் வருதல் இராமரும் அங்கு வருகைதர தலையை இராமரின் பாதத்தில் லட்சுமணன் வைத்து பணிதல்)
தம்பி. தம்பி வந்துவிட்டாயா. ஆSBா. தம்பியுடையான் படைக்கஞ்சான் என்பதை நிரூபித்து விட்டாயடா.
அண்ணா.இனி வெற்றி எமதே.
இதோ இந்திரஜித்தின் தலை. தங்கள் பாதம் பணிகின்றேன்.
N

Page 54
இராமர்
மா.தாத்தா
மண்டோதரி :
மண்டோதரி :
இராவணன்
மண்டோதரி :
இராவணன்
அவன் சிறந்த வீரன்.அவன் பெற்ற வரத்தின்படி அதனை சமுத்திரத்தினுள் ஆழ்த்திவிடுங்கள். அவன் வீர சுவர்க்கம் அடையட்டும்.
(இராம.இலக்குமணன் உறை நிலையில் நிற்க)
அவன் வீர சுவர்க்கம் அடைந்துவிட்டான்.
அவன் வீரசுவர்க்கம் அடைந்துவிட்டான். ஆனால் நான் இங்குபடும் வேதனை சொல்லில் வடிக்க முடியுமா தாத்தா.ஐயகோ.
எல்லாவற்றிற்கும் காரணம் as a இதோ...இங்கிருக்கின்றாரே கேளுங்கள் தாத்தா.கேளுங்கள். எல்லாவற்றிற்கும் காரணம் இவர்தான்.
இவரது குயுக்தியும், தந்திரமும், பெண்ணாசையும்தான்.
இல்லை.இல்லை. இல்லை. அது பெண்ணாசையல்ல. மகனை இழந்ததால்
15............. புலம்புகிறாய்.
அது மானப்போர். தன்மானப்போர். ஒருவேளை பெண்ணாசையால் தான் இராவணன் மாய்ந்தான் என வரலாறு கூறக்கூடும். ஆனால் அது உண்மையல்ல.
மைந்தனை இழந்து மறுகி நிற்கின்றேன்.நாளை இதுபோல். ஐயகோ. அந்தக் கொடுமை எனக்கு
வேண்டாம்.
பேதைப் பெண்ணே புத்திரசோகம் உன்னை மட்டும்
வாட்டவில்லை. என்னையும் ஏன் ஆயிரம் அன்னையரையும அன்றோ வாட்டுகின்றது. ஆனால். போரில் வெற்றியே அளவுகோல். அதைமட்டும் மறந்துவிடாதே.
N
لم
 

/ー
மா.தாத்தா
இராவணன்
இரா
(மீளவும் எங்கும் போர்ச்சத்தங்கள் கேட்க, மேடையில் நாடகமாந்தர் அனைவரும் உறைநிலையில் நிற்க திரை மெல்ல மெல்ல மூடப்படும்.
:- மனிதர்களால் போரைத் தொடங்க மட்டுமே முடியும்.
மன்னிப்பு கேட்டு சீதையை அழைத்து செல்லட்டும்.
-།༽
பின்பு எல்லாம். விதியின் தாண்டவம். இதற்கு அவன் மட்டும் விதிவிலக்கா.என்ன.
ஒன்றில் என்னை வெல்லு, கொன்று சீதையை மீட்டுச்செல்லட்டும். இல்லை என்னைப் பணிந்து என் தங்கை சூர்ப்பனகைக்கு செய்த குற்றத்திற்கு
எது வரினும் எதிர் கொள்வேன். என் பகையை நானே எதிர் கொள்வேன்.
மண்டோதரி. கவலைப்படாதே. மனிதர்கள் போரிடாத சத்தியயுகம் ஒன்று வரக்கூடும். அங்கு.ஆரிய மாயைகள் இன்றி அன்பும் பண்பும் சமத்துவமும் வழிநடாத்தும். sele6OU..................... sellSi6O....................
selgol6hl60)....................
hull,
Ꭹ
を一

Page 55

மானிடச்சிக்கல் அரங்க எழுத்துருக்கள் -ஒரு விமர்சனக்கண்ணோட்டம்
asiseogburt ழரீகணேசன் விரிவுரையாளர், யாழ்.பல்கலைக்கழக வவுனியா வளாகம்
ஈழத்துத் தமிழ் நாடக அரங்கு இன்று வடக்கு-கிழக்கு மாகாணமெங்கணும் மட்டுமன்றி மலையகம், கொழும்பு, கண்டி எனப் பல திசைகளிலும் தன் வீச்சான போக்கைக் காட்டி வருகின்ற இவ்வேளையில், காலத்தின் கோலத்தால் தமிழ் மக்கள் முகங்கொடுக்கும் பல்வேறுபட்ட புதிய சிக்கல்களை முத்துக்குமாரு இராதாகிருஷ்ணனின் “மானிடச் சிக்கல் அரங்க எழுத்துருக்கள்" பதிவு செய்கின்றது. கடந்த இருதசாப்பதங்களாக தமிழ்மக்கள் மத்தியில் கட்டவிழத்துவிடப்பட்ட இன ஒடுக்குமுறை, அரச பயங்கரவாதம், அதன் தொடர்ச்சியில் உருவான இன விடுதலைப்போர், அது வழங்கிவரும் கொடூர யுத்தமும், இடப்பெயர்வும், அகதிவாழ்க்கையும், வெளிநாட்டு ஓட்டமும் மக்களின் சமூக வாழ்வையும், அடிப்படை வாழ்வியல் விழுமியங்களையும் கேள்விக்குள்ளாக்கி வருகின்றன. அத்தோடு மக்களின் சுயநலப்போக்கு, பண்பாட்டுச் சீரழிவு, பரஸ்பர நம்பிக்கையீனமும், சந்தேகப்பார்வையும் மனித வாழ்வை சிக்கலுக்குள் ஆழ்த்தியுள்ளன. இத்தகைய இன்றைய யதார்த்தத்தை பதிவு செய்வதில் கலை இலக்கியவாதிகள் தம்மாலியன்ற பணிகளைச் செய்து வருவது நன்று, எமது சமூகத்தின் விடிவுக்கு கட்டியம் கூறும் ஒன்றாகும்.
இந்த அவலம் நிறைந்த சிக்கற்பாடுகளை, மானுட ஒலங்களை கவிதையும் நாடகமும் நன்கு சித்திரித்துவருவதை ஈழத்து இலக்கிய வாசகர்களும், பார்வையாளர்களும் அறிவர். எனினும் சிறுகதை வடிவமும், நாவலும், ஓவியம் சிற்பம் தொலைக்காட்சி போன்ற கலைவடிவங்களும் கணிசமான அளவு பதிவு செய்து வருவதும் குறிக் கப்படவேண்டியதே. நாடகம் ஒரு உயிரோட்டமுள்ள அளிக்கைக்கலை என்பதால் அதன் வெளிப்பாடு அரங்குடன் மட்டும் நின்றுவிடாமல் எழுத்துருக்களாக அச்சு ஏறும் போது தான் அது எதிர்காலத்துக்கு நிகழ்காலத்தை கடத்தும் பொக்கிஷங்கள் ஆகும்.
ル
XX&ჯჯ C سلطة - C un raufLFfasglu D.

Page 56
எமது ஈழத்து நாடக வரலாற்றைப் பொறுத்த வரை சமூகவியல்
அம்சங்களுடன் கூடிய நாடக எழுத்துருக்களின் வருகை பேராசிரியர் கணபதிப்பிள்ளையின் நாடகங்களுடனே தொடங்குகிறது. அதன் தொடர்ச்சியில் மகாகவி, முருகையன், நா.சுந்தரலிங்கம், தாசீசியஸ், மெளனகுரு, குழந்தை ம.சண்முகலிங்கம் போன்றவர்கள் காத்திரமான சமூகப் பிரச்சினைகளைப் பேசுகின்ற மேடையேற்றத்துக்கென எழுதப்பட்ட நாடக எழுத்துருக்களை ஆக்கி அளித்துள்ளனர். இவர்கள் மக்கள் அரசியலைப் பேசுகின்ற தன்மையில் தமது படைப்புகளை ஆக்க முனைத்துள்ளனர் என்பது குறிப்பிட வேண்டிய அம்சம்.
நாற்பதுகளில் பேராசிரியர் கணபதிப்பிள்ளை யதார்த்த இயற்பண்புவாத வடிவில் நாடகங்களைப் படைத்தார். ஆனால் எழுபதுகளில் நாடக வெளிப்பாட்டு முறைகள் மாற்ற மடையத் தொடங்குகின்றன. அரங்குகள் முக்கியத்துவப்படுத்து மொழிக்கும், அரங்க செயற்பாட்டுக்கும் சமத்துவம் அளித்து மோடி மைப்படுத்தப்பட்ட பாணியில் நாடகங்கள் படைக்கப்பட்ட காலம் இக்காலம் ஆகும். பாத்திரங்களின் மேடை அசைவுகள், அவற்றின் ஆட்டக்கோலங்கள், அரங்கினுள் பாத்திரவருகை செல்லுகை என்பன நன்கு திட்டமிட்டு வரையறை செய்யப்பட்டன. மொழிப்பயன்பாடு பிசிறில்லாமல் கச்சிதமாக மேற்கொள்ளப்பட்டது. அறுபதுகளில் பேராசிரியர் வித்தியானந்தன் மேற்கொண்ட கூத்துப் புனரமைப்பு, நவீன நாடக நெறியாளர்களை கூத்தின் அம்சங்களை நோக்கி ஈர்த்தது புதிய அளிக்கை முறைமைகளை நாடிச்சென்ற நெறியாளர்களுக்கு கூத்தின் மூலங்கள் நன்கு கைகொடுத்தன. புதிய பிரச்சினைகளை புதிய வடிவங்களுடாக கொடுக்க விழைந்தனர் நெறியாளர்கள். மேற்கின் நாடக முயற்சிகளும் வடிவங்களும் கூட கடன் வாங்கப்பட்டன. ஆனால் சுதேச மயப்பாட்டுடன் அவை அனுமதிக்கப்பட்டன. உதாரணமாக Narrator எனப்படும் கதை சொல்வோனை கூத்தின் அண்ணாவியார் பிற்பாட்டுக்காரனுடனும், வடமொழி அரங்க கட்டியக் காரனுடனும் அடையாளம் கண்டு எழுத்துரைஞர் பாத்திரம் வடிவமைக்கப்பட்டது. இது மட்டுமல்லாமல் மேற்கின் கோமாளித்தன நடிப்புகளும், அவத்த நடிப்புகளும் சுதேச மயப்பாட்டுடன் அரங்க மோடிகள் ஆகின.
இவற்றுக்கு அப்பால், மேற்கத்தைய நாடக கொள்கைகளையும் தம்முடன் இணைத்துப் பார்க்கத் தவறவில்லை நாடகவியலாளர்கள்.
لر ܢܠ CC The C C C - )

ܢ
5ம் நூற்றாண்டு கிரேக்கத்து கதாசிஸ்எனப்படும்(பாத்திரங்களுடன்) உணர்ச்சி வெளிக்கொணர்கை தத்துவமும், இருபதாம் நூற்றாண்டு ஜேர்மன் நாடகவியலாளர் வேர்ரொல்ட் பிறெக்கின் தூரப்படுத்தல் உத்தியும் எமது நாடக ஓட்டத்துடன் இணைத்துப் பார்க்கப்பட்டது. ஒரு அரசியல் அரங்கிற்கு பாத்திரத்துடன் பார்வையாளரை ஒன்ற வைத்து உணர்ச்சி வெளிக்கொணர்கை ஏற்படுத்தினால் சிந்திக்க வைக்க முடியாமல் போகும் என்பதால் நாட் டார் பாடல் களை ஆடல்களைப் பயன்படுத்தி நாடக ஓட்டத்துடன் பார்வையாளரை ஒன்றவிடாது தூரப்படுத்தி அரசியல் அறிவூட்ட முனைந்தனர் 70, 80 களில் நாடகம் படைத்தோர். இந்த ஓட்டத்தில் முக்கிய மைல்கல்லாக அமைவது குழந்தை ம.சண்முகலிங்கம் எழுதி க.சிதம்பரநாதன் நெறியாள்கை செய்த "மண்சுமந்தமேனியர்.” 1985 இல் இந்த நாடகத் தயாரிப்புடன் தன்னை ஒரு பாடகராக இணைத்துக்கொண்டார் முத்து இராதகிருஷ்ணன் குடும்ப பின்னணியில் பெற்ற இசை அறிவுடன், ஒவியம் தீட்டும் ஆற்றலும், புவியியல் சிறப்புக்கலை அறிவும் அவரை தொடர்ந்து நாடக உலகில் ஒரு காண்பிய ஓவியராக தக்க வைத்தது.
சிதம்பரநாதன் நெறிப்படுத்திய 'உயிர்த்த மனிதர் கூத்து', 'பொய்க்கால்', 'நாமிருக்கும் நாடு' போன்றவற்றிற்கு இவரது ஓவிய ஆற்றலின் உதவி பெறப்பட்டது.(உள்ளுள் சஞ்சிகைகளுடன் தமிழக சஞ்சிகைகளான 'கணையாழி', 'காலச்சுவடு', 'தாமரை' என்பன இவரது ஒவியங்களை பிரசுரித்துள்ளன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது). பல்வேறுபட்ட நாடக மாணவ குழாத்தினருக்கு சிதம்பரநாதனால் நடாத்தப்பட்ட நாடகப்பட்டறையினுTடு பெற்ற அனுபவ அறிவும் இயல்பாகவே வளர்ச்சி பெற்ற இவரது எழுத்தாற்றும் இவரை ஒரு நாடக எழுத்தாளராகவும் பரிணாமம் அடைய வைத்தது. கவிதை புனையும் திறனும், சிறுகதைகள் எழுதும் ஆற்றலும் நாடக எழுத்துரு ஆக்கத்துக்கு சிறப்புச் சேர்த்தன என்றால் மிகையாகாது(சரிநிகள்', தாமரை ஆகியன இவரது சிறுகதைகளை பிரசுரம் செய்துள்ளன).
நாடகம் ஒரு கூட்டுக்கலை என்பதும், பல்வேறு கலை இலக்கிய வடிவங்களின் சங்கமம் என்பதும் யாவரும் அறிந்ததே. இங்கு ராதாகிருஷ்ணனிடம் ஒன்றுக்கு மேற்பட்ட ஆற்றல்கள் நிறைந்து காணப்படுவதாலும் நாடக உலகில் அவர் காலூன்ற விழைந்தார். அவருக்குள்ளே உறைந்து கிடக்கும் சமூக நோக்குகளை சிந்தனைகளை
C மானிடச்சிக்கல் )
<

Page 57
‘ஓவியம்' எனும் கலை வடிவத்தினுாடாக மட்டும் வெளிப்படுத்துவதை விட நாடகம் போன்ற சக்தி மிக்க கலை வடிவத் தினுTடாக வெளிப்படுத்துவதே சாலச் சிறந்தது; பல மக்களை விரைவில் சென்றடையும்; என்ற நம்பிக்கையின் விளைவே இன்று புத்தக வடிவம் பெறும் இவரது நாடகங்களாகும்.
இந்நாடகங்கள் அரங்கத் தயாரிப்புநிலைகளிலே ஆக்கப்பெற்றன என்ற சிறப்பும் பெறுகின்றன. அதாவது இலத்தீன் அமெரிக்க நாடகவியலாளர் எடுத்தியம்பும் Forum Theatre எனும் கருத்தமைவுக்கு ஏற்ப மக்களது பிரச்சினைகளை அவர்களது களத்தில் நின்று தயாரித்தலும் அரங்கேற்றுதலும் என்கின்ற உத்தியின் அடிப்படையில் சமகால மக்கள் பிரச்சினைகளின் பல்வேறு அம்சங்களை எழுத்துருக்கள் ஆக்கியுள்ளார்.
தொண்ணுாறுகளின் ஆரம்பந்தொட்டு இன்று வரை பாடசாலை மாணவர்கள் பங்கு கொள்ளும் போட்டிகளுக்கு தயாரிக்கப்புட்ட பள்ளி எழுச்சி(1992), மானிடச்சிக்கல் (1993), நீளும்பாலை(1994), நேசத்தால் நிறைந்த நெஞ்சள்(1998), முகமற்ற மனிதர்(1998) ஆகியன அரங்கில் வெற்றி பெற்ற படைப்புகளாக மிளிர்கின்றன.
Instant Theatre எனும் கருத்தமைவில் தயாரிக்கப்படும் அவசரப்படைப்புகள் இலக்கியத் தரத்தினை எட்டுவது என்பது மிகு அருமையாக சாத்தியப்படக்கூடியது. ஆனால் இராதாகிருஷ்ணனின் எழுத்துருக்கள் இலக்கியத்தரத்தை பேண முயலும் படைப்புகள் என்பதில் இரண்டாம் கருத்துக்கு இடமில்லை. இங்கு ஒரு விடயத்தை நினைவில் கொள்ளுதல் பொருத்தமானது. இலக்கிய தரம் நோக்கி எழுதப்பட்ட பேராசிரியர் சுந்தரம்பிள்ளையின் நாடகமான 'மனோன் மணியம்' அரங்கில் வெற்றி பெறவில்லை என்பதும், இன்று உடனடித்தயாரிப்புக்களாக மேடையேறும் வெற்றிகரமான அரங்க அளிக்கைகள் இலக்கியத் தரத் தனை எட்டாததும் எந்த ஒரு நாடகவியலாளனும் அறிந்திருக்கக்கூடிய விடயம் ஆகும். இவை இரண்டும் சங்கமித்து வெற்றிபெற முனையும் அரங்கப் படைப்புகளாக முத்து இராதாகிருஷ்ணனின் படைப்புகள் அமைகின்றன என்பது வெறும் புகழ்ச்சியில்லை.
ܢܠ (C மானிடர்க்கல் ) (エ)
 

/ ༄༽
அந்நிய மோகத்தில் தூங்கிக்கிடக்கும் எம் மக்களை துயில்
எழுப்ப பள்ளி எழுச்சிபாடுகிறார் தனது முதல்படைப்பில். சமகால யுத்தமும், அகதி வாழ்வும், அந்நிய மோகமும் இங்கு பதிவு செய்யப்படுகின்றன.
"இரத்தத்தில் விடிகின்ற காலை இது சத்தத்தில் உடைகின்ற நாட்கள் இவை அச்சத்தில் உறைகின்ற விழிகளோடும் அவலத்தில் விரைகின்ற கால்களோடும் வையத்தில் வாழ்வெனும் இருப்பிழந்தோம். அடைகின்ற கூட்டில் ஆந்தை வாழ அகதி என்றொரு இனமாய் எழுந்தோம்"
மானிடச் சிக்கல் இன்னும் ஒருபடி மேலே செல்கிறது யுத்தத்தின் கோரத்தால் தந்தையையும், வீட்டையும், ஊரையும் இழந்து வெளிநாடு செல்லும் இளைஞன், இரவு பகல் மாறி மாறி மாடாய் ஓடிஓடி உழைத்து உருக்குலைந்து தனிமையில் வாடுகின்றான். தன் தாய் சகோதரங்களைப் பார்க்க விரும்புகின்றான். ஆனால் நிலைமை அவனை சிக்கலுக்குள் தள்ளுகிறது. உடல் வேதனையையும், உள நெருக்கடியையும் தணிக்க போதையில் ஆழ்ந்து, சீரழிந்து, பண்பாடுகெட்டுப் போகின்றான். இந்நிலையில் மீண்டும் தன் ஊருக்கு சென்று அதன் பண்பாட்டை சீரழிக்க விரும்பாது உறைந்துபோகும் பாத்திரமாக சித்தரிக்கப்படுகின்றான். இன்றைய இளைஞன. அரங்க அளிக்கயிைன் போது நெறியாளர் இராதாகிருஷ்ணன் தனது ஓவியக் கோலங்களினுடாக பாத்திர அசைவுகளையும், அரங்கப் படிமங்களையும், திட்டமிடுகிறார். மானிட உருவங்களால் ஏற்படுத்தும் கோலமாக நகள்கிறது அளிக்கை.
“நீளும் பாலை” முற்று முழுதான ஒரு பாடசாலை அரங்குக்குரிய தன்மைகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. தமது சகமாணவியின் அண்ணன் தலைநகரில் படையினரால் கைது செய்யப்படுவதனால் ஏற்படும் துயரும், அவர்களது தொலைந்த வசந்தமும் இதன் பாடுபொருள். இன்றைய இளைய தலைமுறையின் அவல வாழ்வை சுட்டி நிற்கின்றன ராதாகிருஷ்ணனின் கவிதை வரிகள்,
لم C - . . . . . . ( e ) C மானிடச்சிக்கல் ) )

Page 58
"வாழும் வயதில் வசந்தம் இழந்தோம் நீளும் பாலையில் நெடுக நடந்தோம் சூழும் இருளில் சுகமதை இழந்து முகவரி தொலைந்த பிணங்களாய் மாறி”
யுத்தத்தைவிடவும் மோசமான சீரழிவுக்கு மக்களை இட்டுச் செல்வது போதைவஸ்துப் பாவனை. இளையதலைமுறையின் ஆன்மாவை அழிக்கும், யதார்த்த நிலைமைகளை மறந்து வானத்தில் மிதக்க வைக்கும், வாழ்வை சீரழக்கும் இந்த போதைவஸ்து பாவனை. முகமற்ற மனிதர் பேசுகின்றபொருள் இதுவாகும். இந்தப் பழகத்துக்கு அடிமையாவதை தடுத்து நிறுத்த அறைகூவல் விடுக்கிறார் நாடக ஆசிரியர்.
“போதையின் பாதையை ஒழித்திடு உயர் போதனை பலதைக் கற்றிடு விதியதை படைத்திடமுயன்றிடு விழிவீரம் தெறித்திட எழுந்திடு"
சமூகப்பிரச்சினைகளை சமூக யதார்த்தப் பாத்திரங்களுடாக சித்திரித்த ஆசிரியர். இதிகாச கதைச் சூழ்வுடன் இதிகாசப் பாத்திரங்களுடாக சமகாலத்து நிகழ்வுகளின் எதிர்வினையைத் தரிசிக்கமுயல்கின்ற படைப்பே" நேசத்தால் நிறைந்த நெஞ்சள். வால்மீகி படைத்தருளிய இராமாயணகாவியத்தின் எதிர்நாயகனான இராவணன் பத்தினி மண்டோதரி தன் புத்திரன் மேகநாதனை இழந்துபடும் வேதனை இன்றைய தாய்மாரின் அவலதினை பார்வையாளர் மனதில் தெறிக்கச் செல்கின்றாள். கம்பனின் கைவண்ணத்தால் மேலும் பாத்திரச் சிறப்புப் பெற்ற மண்டோதரி இராதாகிருஷ்ணனின் சித்திரிப்பால் சமகாலப் பாத்திரமாக உயிர்பெறுகிறாள். யுத்தத்தின் இன்றைய அநியாய இழப்புகளின் தேவையை கேள்விக்குள்ளாக்கும் மண்டோதரி பாத்திரம் மாலியவான் தாத்தாவிடம் தொடுக்கும் கேள்விக்கு தருகின்ற விடை இதோ,
மா.தாத்தா: மனிதர்களால் போரைத் தொடங்க மட்டுமே முடியும். பின்பு எல்லாம். விதியின் தாண்டவம். இதற்கு அவன் மட்டும் விதிவிலக்கா. என்ன
الصر ܢܠ
மானிடர்சிக்கல் }. C f D. ჯ. ჯ. ჯ.· .აჯ
 

7- N
இலக்கிய நாடகவகைக்குள் அடக்கப்பட்டாலும் இந்நாடகம் தரும் சமகால வியாக்கியானம், அதனை சமூகயதார்த்ததளத்துக்கும் இட்டுச் செல்கிறது.
ஆக, ஐந்து அரங்க எழுத்துருக்களும் சமகாலத்தின் அவலங்களில் மையம் கொண்டுள்ளன. அரங்க அளிக்கை முறைமையைப் பொறுத்தமட்டில், எடுத்துரைஞர் பாத்திரப் பாவனை, குழுப்பாடகள் உபயோகம், குறியீட்டு வகை மாதிரி பாத்திர சித்திரிப்பு, என்பன எழுபதுகள் முதல் இன்று வரை ஈழத்து தமிழ் நாடக அரங்கு கண்ட தன்மைகளே. இன்றைய தமிழ் மகனின் அவலங்கள் பல்வேறு தரப்பட்டவை, பன்முகப்பட்டவை. எனவே பொதுமைப்படுத்தப்பட்ட பாத்திரச் சித்திரிப்பிலிருந்து தமிழ் அரங்குவிடுபட்டு தனிமனித அவலங்களைச் சித்திரிக்கும் போக்கை உருவாக்க வேண்டிய காலம் கனிந்துள்ளது என்றே சொல்லத் தோன்றுகிறது. இந்த ஐந்து எழுத்துருக்களிலும் மண்டோதரி பாத்திரம் தருகின்ற விகசிப்பையும் கனதியையும் (நவீன தமிழ்த்தாய் முகங்கொடுக்கும் அவலத்தைச் சித்திரிக்கும் பாத்திரம்) மற்றய நாடகங்களில் காணப்படும், வெளிநாட்டில் சிக்கலுறும் இளைஞன், (மானிடச் சிக்கல்), படையினரால் கைது செய்யப்படும் அண்ணன் (நீளும் பாலை) போதையில் அழியும் இளைஞர் (முகமற்ற மனிதர்) வெளிநாட்டு மோகம் கொள்ளும் எம்மவர்(பள்ளி எழுச்சி) ஆகிய பாத்திரங்கள் தரத்தவறுகின்றன என்பதையும் இங்கு குறிப்பிடுதல் வேண்டும்.
ஒவ்வொரு எழுத்துருவும் தாங்கி வரும் நவீன ஓவியம் அதன் கருவை துலாம் பரமாக எடுத்தியம்பும் சிறப்பு இத்தொகுப்பில் குறிப்பிடத்தக்க அம்சம். இராதகிருஷ்ணனின் விடுதலை விருப்பும், சுதந்திர வேட்கையும் அவரது ஓவியங்களில் காணப்படும் வானத்தாவிப்பிடிக்கும் மனிதர்கள், அலையெறிந்து பாயும் சிந்தனைகள், விசிறி எறியும் நெருப்புச் சுவாலைகள் நாடகங்களின் இலயத்தையும் குறித்து நிற்கின்றன. அந்த இலயம் அவரது அரங்க அளிக்கைகளிலும், கவிதைவரிகளிலும் தொக்கி நிற்பது இராதகிருஷ்ணனின் சிறப்புக்களில் ஒன்று என்று கூறுவது மிகையல்ல.
لر ܢܠ
一 懿 C - ) C மாளிடச்சிக்கல் )

Page 59


Page 60
முத்து இராதாகிருஷ்ணன்
ஈழத்தில் குறிப்பிட்டுச் ஓவியர்களில் ஒருவர். இருந்தபோதிலும், தண் 6 வரித்துக்கொண்டவர். கடந் மேலாக என்னுடன் பரீச்சு நாடகங்களில் காண்பிய
இவர் நாடகத்தறையில் ஆ வெளிப்பாடாக இந்நால் இலக்கியத்திலும் ஈடுபாடு தெளிவான தாக்கமான சி வவுனியா. அரங்கச் செ செயலுரக்கம் கொண்ட 2
இவரது ஓவியங்களும் எ கணையாழி, தாமரை, 8 சஞ்சிகைகளிலும், ஈழத் வெளிவந்தள்ளன.
 

ாலாசிரியர் பற்றி.
சொல் லக் கூடிய நவீன புவியியல் பட்டதாரியாக னை நாடகவியலாளராகவே த பதினைந்து வருடங்களுக்கு Fயமான நண்பர். எனது பல ஓவியராக செயல்ப்பட்டவர்,
ழ்ந்து பெற்ற அனுபவங்களின் அமைகிறது எனலாம். நவீன
கொண்டவர். சமூகம் பற்றி ந்தனையைக் கொண்ட இவர் யற்பாட்டுக் குழுவின் (TAG) உறுப்பினர்.
ழுத்துருக்களும் சுபமங்களா, காலச்சுவடு போன்ற இந்திய தின் பல சஞ்சிகைகளிலும்
க. சிதம்பரநாதன் "சிரேஸ்ட விரிவுரையாளர்" நாடகமும் அரங்கியலும். நுண்கலைத்துறை யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம்.