கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மனிதம்

Page 1


Page 2

மனிதம்_
அமரர் திரு. செல்லையா கந்தசாமி அவர்களது நினைவாக அவரது ஆளுமை வெளிப்பாட்டுத் தொகுப்பு
二
1998

Page 3
ஐயாவின் ஆத்ம கீதம்
ஒருமையுட னினதுதிரு மலரடி நினைக்கின்ற உத்தமர்த முறவு வேண்டும் உள்ளொன்று வைத்துப் புறம்மொன்று பேசுவார்
உறவுகல வாமை வேண்டும் பெருமைபெறு நினதுபகழ் பேசவேண் டும்பொய்மை
பேசா திருக்க வேண்டும் பெருநெறி பிடித்தொழுக வேண்டுமத மானபேய்
பிடியா திருக்க வேண்டும் மருவுபெண் ணாசையை மறக்கவே வேண்டுமுனை
மறவா திருக்க வேண்டும் மதிவேண்டும் நின்கருணை நிதிவேண்டும் நோயற்ற
வாழ்வுநான் வாழ வேண்டும் தருமமிகு சென்னையிற் கந்தகோட் டத்துள்வளர்
தலமோங்கு கந்த வேளே தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே.
க வள்ளலார்


Page 4

நடராசசிலை வடித்தல்

Page 5

மங்காத நினைவலைகள்
தோன்றிற் புகழுடன் தோன்றுக - அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று ’’
இது பொய்யா மொழிப்புலவர் திருவள்ளுவரின் கூற்று. இந்த வாக்கியத்துக்கேற்ற வளமான வாழ்வு வாழ்ந்து அண்மையில் அமரனடி சேர்ந்தவர் அமரர் சிற்பி திரு. செ. கந்தசாமி.
தான் சமூகம், சமூகத்துக்கு ஆற்றவேண்டிய கடமை கள், தன் பொறுப்புகள் யாவற்றிலும் தனக்கென்று ஒரு கொள்கையை வகுத்துக் கொண்டவர். கலைத்தேவி அவருக்களித்த வரப்பிரசாதத்தில் தலைசிறந்த ஒரு சிற் பாச்சாரியாக யாழ்ப்பாணத்தில் மட்டுமன்றி வெளி மாவட்டங்களிலும் தன் கைவண்ணத்தால், மங்காப்புகழ் பெற்றவர்.
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு ஆரம்பகால உறுப்பினரான இவர் தலைசிறந்த சமதர்மவாதியாக தனது அரசியல் ஈடுபாட்டை, வெகு அமைதியான நிலையில் வெளிக்காட்டியதை எவரும் மறக்கமாட்டார்கள். திருநெல்வேலி பத்திரகாளி அம்மனின்மேல் மாறாத பக்தி கொண்ட இவர், கோயிலின் நிர்வாக சபைத் தலைவ ராகவும், இறக்கும்வரை கோயிலின் தேர்த்திருப்பணிச் சபைத் தலைவராகவும் திகழ்ந்த திரு. கந்தசாமி அந்த ஆலயத்துக்கு ஒர் அழகிய சித்திரத்தேரை உருவாக்கிக் கொண்டிருந்த காலை, சடுதியாக மறைந்தது பெரும் விசனத்துக்குரியதே.
கலையுலகம் என்றும் இவரை மறக்காது என நம்பு கிறேன். என்றும் இவரது நினைவலைகள் இவரைத் தெரிந்த சகலரின் இதயங்களிலும் இயங்கிக் கொண்டே இருக்கும். . அன்னாரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போமா க!
க. சண்முகநாதன் அரசாங்க அதிபர், யாழ் மாவட்டம்

Page 6
கலைவாழ்வே துணைபுரியும்!
சிற்பகலா வல்லுனர் அமரர் செல்லையா கந்தசாமி அவர்களின் மறைவு அவரின் குடும்பத்திற்கு மட்டுமல்ல, சிற்பக்கலை உலகிற்கே ஒரு பேரிழப்பாகும்.
** மரத்தை மறைத்தது மாமதயானை;
மரத்துள் மறைந்தது மாமதயானை ""
என்ற ஆன்றோர் வாக்கிற்கிணங்க, மரத்துள் மறைந் திருந்த மாபெருங் காவியங்களைத் தன் மனக் கண்ணில் ஒவியமாக்கி, சிறந்த சிற்பக் கலையிலே அற்புத வடிவங் களைப் பொற்புடன் ஒளிர வைத்து, பற்பல தேர்களை யும், நற்றவக் கோயில்வாகனங்களையும் கற்றவர் மட்டு மின்றிக் கல்லாரும் போற்றவைத்து, நற்கதி சென்ற மாட்சி நானிலம் சொல்லும்,
ஆதலின் அன்னாரின் ஆன்மா ஆனந்தப் பெருவெள் ளத்துடன் இரண்டறக் கலந்து, சாந்தி பெறவும், அவரின் இல்லத்தினர் அமைதி பெறவும் அவரின் கலைவாழ்வே துணை புரியும்.
திருமதி. ப. திலகநாயகம்
பிரதேசச் செயலர், வலி - வடக்கு,

ஆத்மசாந்தி உரை
* கர்மஜம் புத்தி யுக்தாஹி பலம் ரயக்த்வா மனிஷினா ஜன்ம பந்த விநிர் முக்தா பதம் கச்சந் தயனாம்"
(பகவத்கீதை)
"சமத்வ புத் தி யு ள் ள வர் க ள் கர்மாவினால் உண்டாகும் பயனை விட்டொழிந்து ஞானவான்களாகி பிறவித் துன்பத்திலிருந்து விடுபட்டு துன்பமில்லாத நற்கதியை அடைவர்" .
கீதையில் கூறியது போல் பிறந்தவர்கள் ஒருநாள் இறப்பது திண்ணம். அமரர் செல்லையா கந்தசாமி அவர்கள் 1960ம் ஆண்டு உசன் கந்தசுவாமி கோயிலுக்கு சிற்பத்தேர் ஒன்றை உருவாக்கினார். அவருடைய முதல் சிற்பத்தேர் இதுவே. பின் கைலாயவாகனம், அன்னம், எருது போன்ற வாகனங்களையும் உசன் முருகனுக்கு செய்திருக்கின்றார். அன்றிலிருந்து அவருக்கும் எனக்கும் தொடர்பு ஏற்பட்டிருந்தது. அவருடைய பணிகள் பெருகி சிறந்த சிற்பக்கலையிலும், சிற்பக் கூடங்கள் உருவாக்கு வதிலும், சிற்பிகளை உருவாக்குவதிலும் தலை சிறந்து விளங்கினார். யாழ்ப்பாணத்து திருநெல்வேலியில் வாழ் வாங்கு வாழ்ந்து அமரத்துவமடைந்தார். அவருடைய பிரிவால் துயருறும் குடும்பத்தார், உற்றார், உறவினருக் கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்து அன்னாரின் ஆன்மா சா ந் தி யடைய துர்க்காவின் பாதங்களையும் முருகப்பெருமானின் திருவடிகளையும் பணிந்து பிரார்த்திக்கின்றோம்.
*லோகா சுகினோ பவந்து" .
சிவபூஜி இ. சுந்தரேஸ்வரக்குருக்கள்
பிரதம சிவாச்சார்யார் பூரீ துர்க்காதேவி தேவஸ்தானம்,
தெல்லிப்பழை.

Page 7
ஓம் சாந்தி!
அமரர் திரு. செ. கந்தசாமி அவர்கள் அடக்கமும், பணிவும், பண்பும் நிறைந்த ஒருவர் . இந்த நாட்டின் அரசியல், சமூக, பொருளாதாரப் போக்குகளை நன்கு ணர்ந்தவர். அவர் சிறந்ததோர் சிற்பக்கலைஞர். சிற்ப நூல் வல்லுநர். எடுத்த சாரியத்தைச் சிறப்பாக நிறை வேற்றும் வல்லமை கொ ன் ட வ ர், தேர் செய்யும் தெய்வீகக் கலையில் சாதனைகள் பல படைத்தவர். இத்துறையில் பலரைப் பயிற்றுவித்து இக்கலையின் எதிர் கால வளர்ச்சிக்கு ஆக்கபூர்வமான பல பணிகளைச் செய்தவர். குடும்ப வாழ்க்கையில் நல்ல தந்தையாக இருந்து தம் பிள்ளைகளுக்கு நல்லவழி காட்டியவர். தானும் தனது குடும்பமும் என்று இருக்காமல் சமயப் பணியிலும் சமூகப் பணியிலும் ஈடுபட்டு நல்ல தொண்டு கள் ஆற்றியவர். திருநெல்வேலி பூரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் திருப்பணிச் சபையின் தலைவராக இருந்து அக்கோவிலின் வளர்ச்சிக்கு அரும்பணி ஆற்றியுள்ளார்.
ஒரு கலைஞன் என்ற முறையிலும், சமூக சிந்தனை யாளன் என்ற முறையிலும் அன்னாரது இழப்பு எமது சமூகத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பாகும். அவரது குடும்பத் திற்கு ஏற்பட்ட ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அன்னாரது இழப்பால் வாடும் குடும்பத்தவர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரி விப்பதோடு அவரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல பார்வதி பரமேஸ்வரனுடைய தி ரு வ ரு ளை ப் பிரார்த்திக்கின்றேன்
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
ஆ. மகாலிங்கம்
பிரதேசச் செயலாளர்

அறிமுகவுரை
சிற்பக்கலையின் சிற்பி
யாழ்ப்பாணத்தில் சிற்பக்கலைப் படைப்புக்களை ஆக்கித்தந்த கலைஞர்களில் மிகவும் பிரபல்யமானவர் அமரர் கந்தசாமி அவர்களாகும்.
அவரால் வடிவமைத்து உருவாக்கப்பட்ட அனைத் துக் கலைப்படைப்புக்களது அழகும், வனப்பும், தோற் றமும் அவரின் ஆக்கத் திறமையை பறைசாற்றுவன வாக உள்ளன. சிற்பாச்சாரியர்களில் அவர் தனித்துவ மான திறமையுடையவர் என்பதை அவரது கலைவடிவக் கட்டமைப்புடைய தேர்களும், நயினை அம்மன் மஞ்ச மும் எடுத் துக்காட்டுகின்றன. எப்படி ஒரு தேர் இரதம் அளவுப்பிரமாணங்களோடு அழகாக வடிவமைக்கப்படு கிறதோ அதேபோல அவரால் உருவாக்கப்பட்ட மஞ்ச மும் இருப்பதை நாம் அறிவோம். எங்கள் இந்துக் கோவில்களில் வைக்கப்பட்டிருக்கும் வாகனங்கள் மரத் தையும் மீறி உயிர்பெற்று உலவுவது போன்ற தோற் றத்தை தன் கற்பனைத் திறனால் உருவாக்கும் ஆற்றல் உடையவர் என்பதற்கு, இணுவில், நீர்வேலி, நயினை அம்மன் கோயில் வாகனங்கள் எமக்குச் சாட்சியாகின்றன.
வாகனங்களில் பாயும் குதிரை, வீறுகொண்ட சிங்கம் , யாழி, எருது போன்றவற்றை உருவாக்கும்போது அவற் றின் அங்க அளவுகள், அவற்றின் அளவுப் பிரமாணங் களுக்கு ஏற்ப வடிவமைத்த முறையை அவதானிக்கும் போது அவர் எவ்வாறு எந்தப் பல்கலைக் கழகத்தில் இதனைக் கற்றுக்கொண்டார் என்ற வியப்பை ஏற்படுத்து கின்றது. கண்ணால் கண்டதை சிறப்பாக வடிக்கும் திறன் அவருக்கு உண்டு என்பதை பலர் குறிப்பிட்டுள்ளனர்.
அமரர் கந்தசாமி புகழ்பூத்த சிற்பாச்சாரி என்பதை தொடர்ந்துவரும் கட்டுரைகள், கவிதைகள், கடிதங்கள்

Page 8
எடுத்துக் காட்டுகின்றன. அத்துடன் அவர் பெருமையை மெருகூட்டக்கூடிய வகையில் சிற்பத்துடன் தொடர்பான கட்டுரைகளும் பெரியார்களின் குறிப்புக்களும் இந்நூலில் வெளியிடப்படுகின்றன,
ஒரு கலைஞன் ஆக்கித்தந்த படைப்புக்களை மற்ற வர்கள் தங்கள் ஆற்றலுக்கும், அறிவுக்கும், இரசனைக்கு மேற்ப மதிப்பிடுவது இன்றைய வழக்காக இருக்கின்றது. சிற்பாச்சாரி கந்தசாமியின் அர்த்தமுள்ள வாழ்வில் அவர் கொண்ட இலட்சியம், மனிதநேயம், சமூகத்தின் பால் அவர் கொண்ட ஈடுபாடு போன்றவற்றை இந்நூலில் வெளிவரும் கட்டுரைகள் விளக்குகின்றன. இருந்தபோதும் அவரது ஆக்கங்கள் பற்றி சிற்பாச்சாரியர்களே தங்கள் அனுபவங்களோடு ஒப்பிட்டு மேலும் எழுதவேண்டிய அவசியமும் உண்டு. அவரது மாணாக்கர்களும், ஓவிமர் இராசையா போன்ற ஆக்கக் கலைஞர்களும், சிற்ப விதி முறைகளை முறையாகக் கற்றோரும் அவர் படைப்பின் சிறப்புக்களை விபரித்து இன்னும் பல கட்டுரைகள் எழுத வேண்டும். இதில் வெளிவரும் கட்டுரைகளைப் படிக்கும் போது அவரது இனனாக்கா : சமூக சீர்திருத்த நடவடிக் கைகளும், அதற்கான அரசியல் சித்தாந்தப் பின்னணியும். பொதுவுடமைவாதியாகத் தன்னையும் தன்னைச் சூழ வள்ளோரையும் மாற்றிக் கொள்வதற்காக அவர் எடுத்த பிரயத்தனங்களைப் பற்றியெல்லாம் அறிந்து, அவற்றியின் அவரின் வாழ்க்கைக் களமாகக் கொண்டு, அவர் படைப்பை மதிப்பிடுவது அவசியம் என்பதை யாவரும் அறிர்ெ.
அவரது ஆக்கங்கள் பற்றி நுண்கலைத் துறையினர் ஆய்வுகளை மேற்கொள்வது இன்றைய தேவையாக உள்ளது. இன்றைய சிற்பாசிரியர்களுக்கும் இனிவரும் சிற்பாசிரியர்களுக்கும் இவ்வாய்வு தேவையாக அமைவது பயனாகும்.
W. P. சிவநாதன் தலைவர் பொருளியற்று ஈற
யாழ். பல்க இக் கழகம்

முத்துமாரி அம்மன் கோவில் (திருநெல்வேலி)

Page 9
மகரம் (பரராசசேகர்பிள்ளையார் கோவில்)
 

ஆ. இராசையா
மானிடம் மறைந்ததோ?
போட்டி - பொறாமை, வஞ்சகம் - சூழ்ச்சி, போக விட்டுப் புறஞ்சொல்வி மகிழல், அடுத்தவன் பிழைப்பைத் தட்டிப்பறித்தல், வேஷம் போட்டு மோசம் செய்தல், பகட்டுக்காகப் பலதும் செய்தல் -
இப்படியான ஆரவாரமான, அவலமான, ஈனத்தன மான இந்த மண்ணில் - அடக்கமே உருவாக அமைதி யாசு, ஆனால் தான் கொண்ட இலட்சியத்தில் இம்மியள அம் வழுவாமல் மிக உறுதியாக நின்று. எத் துறையிலும் தன்னுடைய ஆளுமையை மிக அழுத்தமாகப் பதித்துச் சென்ற வணக்கத்துக்குரிய செல்லையா - கந்தசாமி " என்ற மானிடன் இன்று எம்மிடையே இல்லை.
* எதற்கும் அஞ்சோம் " என்ற அரிமா நோக்கு. ஆயினும் கண்களில் கருணை பொங்கும். மிதித்த இடத்துப் புல்லும் வாடா மென்நடை, சொல்லிலே கனிவு, கருத்திலே தெளிவு - இவை கந்தசாமி ஐயாவுக்கே உரியவை.
ஐயா அவர்களுடன் பழகிய அந்த நாட்கள் என் வாழ்வில் மறக்கமுடியாதவை. பல அனுபவங்களைக்

Page 10
கற்றுத்தந்த நாட்கள். அந்த நினைவுகளை இப்பொழுது மீட்டும்போது அவருடைய தீர்க்கதரிசனமும், அனுபவத்தில் தெளிந்த சிந்தையும் என்னை ஆச்சரியமடைய வைக்கிறது.
ஐயா அவர்களின் திறன்களை இரு தலைப்புக்களில் வைத்து எண்ணுவது சாலப்பொருந்தும் என எண்ணு கிறேன். ஒன்று - அவருடைய " கலையாற்றல் ' ; இரண் டர்வது அவருடைய வாழ்க்கையில் கைக்கொண்ட * கொள்கை *.
ஐயா அவர்களை அவருடைய மாணாக்கர்களில் ஒருவரான அச்சுவேலி விசுவர் - கணேசு மூலமே அறிந்து கொள்ளும் வாய்ப்புக் கிட்டியது. 1971-ம் ஆண்டிலிருந்து சிலகாலம் 'கலாகேசரி’ அவர்களுடன் பழகும் வாய்ப்பும் எனக்குக் கிட்டியிருந்தது. அவ்வமயம் கலாகேசரி " அவர்களுடைய சிற்பத் திறனை, அவர் செதுக்கும்போது அருகிலிருந்து பர்ர்த்து இரசித்திருக்கிறேன். அவருடைய உருவகிக்கும் ஆற்றலை எண்ணி வியந்திருக்கிறேன். அதன் பின்னர் ஐயா அவர்களுடைய கைவினைத் திறனை அருகிலிருந்து பார்த்து இரசிக்கும் வாய்ப்புக் கிட்டியது பெரும் பேறு.
சிற்பக்கலை பொதுவாக அன்றுதொட்டு இன்றுவரை குரு - சிஷ்ய முறையாகவே தொடர்ந்துகொண்டிருப்பது கண்கூடு. பயின்றதை அப்படியே செதுக்குவதையே பணி யாகக் கருதிச் செயற்படுபவர்களே அதிகம் இந்த இயந்திரமயமான தொழிற்பாடு கலைத்துறைக்கு எந்த விதமான முன்னேற்றத்தையும் . வளர்ச்சியையும் கொடுக் கப்போவதில்லை. இப்படி இவர்கள் செயற்படுவதற்குக் காரணம் இந்தக் கலையைத் தொழிலாகக் கருதிச் செ யற் படு வ தே. கலையைக் க லை யாக க் கருதிச் செயற்படவேண்டும். அப்படிச் செயற்படுபவ னிடமே நாம் முழுமையான ஆரோக்கியமான கலையைக் காணலாம். ' உருவகிக்கும் ஆற்றல் ' (Creative talent ) அவனிடமே உண்டு. இந்த உருவகிக்கும் பண்பை தேர்ச்
2 -

விற்பrசாரிகளில் * கலாகேசரி தம்பித்துரை அவர்களிட மும், ' கலா ஜோதி கந்தசாமி அவர்களிடமுமே காணக் கூடியதாக இருந்தது.
* கலாஜோதி கந்தசாமி ஐயாவிடம் புதுமையை வரவேற்கும் பண்பும், அதைச் செயற்படுத்தும் தன்மையும் பல சந்தர்ப்பங்களில் நான் சந்தித்த நிதர்சனங்கள். பாய்ந்தோடும் குதிரைகளின் வேகத்தைச் சித்தரிப்பதற்கு அவற்றின் பின்கால் குளம்புகளைப் பின்நோக்கி வளைந்த நிலையில் அமைத்திருப்பது, அவருடைய மனோலயத்துக்கு ஓர் எடுத்துக்காட்டு.
இவருடைய சிற்பச் சிறப்பு, சில வெளிநாட்டினருக்கும் சிற்பப் பணி செய்யும் வாய்ப்பை அளித்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கர் ஒருவருக்கு அழகியதொரு நடராஜர் சிற்பம் வடிவமைத்துக் கொடுத்தமையும், ஜேர்மனியில் உள்ள ஒரு தாபனத்தின் முன் கதவுக்குரிய அலங்காரச் சிற்ப வடிவங்களை வடிவமைத்துக் கொடுத்தமையும் அவற்றுள் அடங்கும்
உசன் கந்தசாமி கோயிலிலிருந்து திருநெல்வேலி பத்திரகாளியம்மன் கோயில் வரை இவரால் வடிவமைக்கப் பட்ட தேர்கள், பல கலைநுட்பங்களை உள்ளடக்கியதாக விளங்குவது அவருடைய கலையாற்றலுக்குச் சான்று பகர்கிறது.
இவை ஒவ்வொன்றும் ஒன்றையொன்று விஞ்சும் வண்ணம் அமைந்திருந்தாலும் நயினாதீவு மஞ்சம் - அமைப்பு எளிமையாகக் காட்சிகொடுப்பினும் அதன் அளவுப் பிரமாணமும், அளவான சிற்ப அமைப்பும் அமைந்து பார்ப்பவர் கண்களைத் திருப்பமுடியாதபடி ஒன்றவைத்த தன்மை ஐயா அவர்களுடைய கலைத் திறமைக்கு எடுத்துக்காட்டு. இந்த மஞ்சம் உருவாகும் பொழுது ஐயாவுடன் பாலச்சந்திரன், மேகநாதன், தயா
- 3

Page 11
போன்ற மிக இளம்வயதினர்தான் துணையாக வேலை செய்தனர். இதை அவதானித்த ஆலயக் கணக்குப்பிள்ளை 'இராமலிங்கம்" என்பவர் ' என்ன ஆசாரியார் கையோடு * லக்ரோஜனும் கொண்டுவந்திருக்கிறீர்களோ? " என்று ஏளனம் செய்திருக்கிறார். அவ்வளவு இளம்வயதினரைத் துணைக்கொண்டுதான் அந்த அற்புதமான - அபரிமிதமான மஞ்சத்தைப் படைத்து, எல்லோரையும் வியப்படைய வைத்த விற்பன்னர். மஞ்ச வெள்ளோட்ட விழாவில் *மகேஸ்வரக் குருக்கள் இதைக் குறிப்பிட்டு மிகப் பாராட் டிப் பேசியது அவருடைய திறமைக்குச் சான்று. ( இனக் கலவர நெருப்புக்குள் அகப்பட்டு அழிந்த கலைச் செல்வங் களுள் இந்த மஞ்சமும் ஒன்று என்பது மிக வேதனைக் குரியது.)
19வது வயதிலேயே இரத்தினபுரி சிவன் கோயிலுக்குக் கைலாய வாகனம் சிறப்புறச் செய்தமை அவர் இளம் வயதிலேயே சிற்பத்திலே மிகவும் தேர்ச்சியடைந்திருந்தார் என்பதற்குத் தக்க சான்று.
இந்தியச் சிற்பாசாரிகளால் உருவாக்கப்பட்டு பலரா லும் விதந்து பேசப்பட்ட இணுவில் மஞ்சம் ஓடமுடியாத நிலையை அடைந்தபொழுது, அதைப் புனரமைக்க முடியாதென்று பல சிற்பாசாரிகளாலும் கைவிரிக்கப்பட்ட நிலையில், ( சிலர் அதைப் பிரித்துக் கொடுப்பதற்கே கூலி பேசியிருக்கிறார்கள்) ஐயா அவர்கள் துணிந்து அந்தப் பொறுப்பை ஏற்றுப் புனரமைத்து, இன்றும் அம்மஞ்சம், மிடுக்கோடு வீதியுலா வரச்செய்த புதுமை அவர்களின் மதிநுட்பத்துக்கு எடுத்துக்காட்டு.
இவற்றைவிடப் பல நூற்றுக்கணக்கான வாகனங்கள் இவரால் வடிவமைக்கப்பட்டுள்ளன. இணுவில் பரராச சேகரப் பிள்ளையார் கோயிலுக்கு ஐயா அவர்களால் இரண்டு தேர்களும், பல வாகனங்களும் செய்யப்பட்டுள் ளன. இந்த ஆலயத்திற்கும், நயினாதீவு நாகபூசணி அம்பாள் ஆலயத்திற்குமே இவர் கூடுதலான சிற்ப ஆக்கங் களைச் செய்திருக்கிறார் என எண்ணுகிறேன்.
4 -

கலையாக்கத்துக்குக் காலம் நிர்ணயிக்க முடியாது. இவ்வளவு நாட்களுக்குள் இந்தச் சிற்பத்தை முடித்துக் கொடுக்க வேண்டும் என்ற நிலையில் அந்தப் பணியை ஏற்றுக்கொண்டாலும், கலைஞனுடைய மனநிலையைப் பொறுத்துக் கொடுக்கப்பட்ட கால அவகாசத்திலும் பார்க்கக் கூடுதலான நாட்கள் எடுக்கப்படக்கூடும். சில வேளை கொடுக்கப்பட்ட நாட்களிலும் முன்னதாகவும் முடிவடையக்கூடும். கலைஞனுடைய மனோலயம் - கற்பனாசக்தி - எல்லா வேளைகளிலும் செயற்படுவதில்லை. ஆகையால் கலைஞனுக்குப் போதிய சுதந்திரம் கொடுத்துச் செய்விப்பதன் மூலம் சிறந்த கலையாக்கத்தைப் பெற முடியும். இவ் உண்மையை இணுவில் பரராசசேகரப் பிள்ளையார் கோயில் இளைஞர்கள் மிகத் தெளிவாகப் புரிந்து செயற்பட்டிருப்பதை நான் பல சந்தர்ப்பங்களில் அவதானித்து மகிழ்ந்திருக்கிறேன். உண்மையில் அவர்கள் பாராட்டப்படவேண்டியவர்கள். அவர்களுடைய அணுகு முறையினாலோ என்னவோ அந்த ஆலயச் சிற்பங்கள் அனைத்தும் மிக அற்புதமாக அமைந்திருப்பதைக் காண
Gስ}በዝ`ዚ[) •
அண்மையில் செய்யப்பட்ட வாகனங்களில் இணுவில் பரராசசேகரப்பிள்ளையார் கோவிலுக்குச் செய்யப்பட்ட இரண்டு வாகனங்கள் என் வாழ்வில் மறக்க முடியா தவை. ஒன்று மகர வாகனம் (கஜ சிம்மம்); இரண் டாவது ஆடும் குதிரை.
*கஜ சிம்மம்' வாகனம் இரண்டு பின் கால்களையும் நிலத்தில் ஊன்றி எழும்பிப் பாயும் நிலையில் அமைக்கப் பட்டுள்ளது. இதன் ஆரம்ப அமைப்பில் நான் அவதா னித்த பொழுது அதன் உடம்பு மிகவும் நீண்டதாக அமைந்திருப்பதை அவதானித்து ஐயா. அவர்களிடம் கூறி னேன். ஐயா அவர்கள் * அது பின்னர் சரியாக வரும்" என்று கூறியிருந்தார். ஆனாலும் அந்த வாகனம் பூர்த்தி யாகும் வரை அந்தக் குறைபாடு என் மனத்தை நெருடிக் கொண்டேயிருத்தது. அதன் வர்ண வேலையும் பூர்த்தி
= 5

Page 12
  

Page 13
இடபம் (பரராசசேகர்பிள்ளையார் கோவில்)
 

போனால் முட்ட வருமோ என்று எண்ண வைக்கக் "டிய அளவுக்கு அதன் ஆக்ரோசமும், ஆண்மை வெளிப் "டும் மிக அற்புதமாக வெளிப்பட்டிருக்கும் சிற்பம் அது.
தொடங்கும்பொழுது ஒரு சில திட்டங்களுடன் ஆரம்பிக்கப்படும் சிற்பம் முடிவடையும்போது பல நுட் பங்களை உள்ளடக்கியதாக அமைவதை அவதானித்துள் ளேன். "இவ்வளவுக்கு வேலைகளைக் கூட்டுகிறீர்களே, இதற்குக் கிடைக்கும் ஊதியம் கட்டுப்படியாகுமா?" என்று கேட்டால் "என்ன செய்வது? மனம் கேட்குதில்லை, வேலையைப் பார்த்து அவர்கள் ஏதாவது கூடுதலாகத் தந்தால் திரட்டும், இல்லை யென்றாலும் பரவாயில்லை" என்று கூறுவார்.
"இவன் என்ன, சும்மா அடிச்சுப் போட்டுக் கொடுக் கிறதுக்கு வேலையைக் கூட்டிக் கொண்டிருக்கிறான்" என்று இவருடைய சகோதரர் முறையான "வரதலிங்கப்பா' புறுபுறுப்பதை அடிக்கடி கேட்டிருக்கிறேன். உண்மை மான கலைஞன் தன்னுடைய எந்தப் படைப்புகளிலும் பூரண திருப்தி சாணமாட்டான். அவனுடைய ஒவ்வொரு செயற்பாடும் அதை உறுதிப்படுத்திக் கொண்டேயிருக்கும்.
வாகனங்கள் செதுக்கிய பின்னர் மக்கு வைத்து வர்ணம் தீட்டுவது மரபு. சிலருடைய வாகனம் மரத் திலும் பார்க்க மக்கு கூடுதலான பங்களித்திருக்கும். ஆனால் ஐயா அவர்களின் வாகனங்களுக்கு மக்குக் கரைத்துப் பூசுவது மட்டுந்தாள் செய்யவேண்டியிருக்கும். அவ்வளவுக்கு மரத்தினாலேயே சகல நுணுக்கங்களும் பூர்த்தியாக்கியிருப்பது அவருடைய திறமை.
ஒரு முறை யாழ்ப்பாணத்தில் மிகப் பிரசித்தமான ஆலயத்துக்கு சிற்பவேலை செய்வதற்காக அந்த ஆலய உரிமையாளர் இவரை அழைத்து இவருடைய ஊதியத்தை வினவியுள்ளார். இவரும் தன்னுடைய ஊதியத்தைக் கூறியுள்ளார். கோயில் உரிமையாளர் ஏளனமாக "என்ன
- 7

Page 14
பவுனாலேயே செய்யப் போகிறாய்? என்று கேட்டிருக் கிறார். “மரத்தாலே செய்வதற்குத்தான் என்னைக் கூப் பிட்டிருக்கிறீர்கள், அதற்குத்தான் என்னுடைய ஊதியத் தைக் கூறினேன். என்னுடைய வேலைக்குரிய மரியாதை கொடுக்காத உமக்கு நான் வேலை செய்யத் தயாரில்லை" என்று அந்தச் சிற்பப் பணியை உதறியெறிந்த தன்மானம் மிக்கவர். பந்தம் பிடித்துப் பணிந்து வேலையைப் பெற் றுக்கொண்டது அவருடைய வாழ்நாளில் நடந்ததில்லை. இது உண்மைக் கலைஞனிடம் இருக்கவேண்டிய மிடுக்கு.
* கலாஜோதி; கலாநிதி; சிற்பச் சக்கராதிபதி:
சிற்பக்கலாசாகரம்; சித்திரச் சிற்ப மாமணி ??
இவை அவரை நாடிவந்த பட்டங்களில் சில. பட்டங்கள் பதவிகள் இவரை நாடி வந்ததுதான் வரலாறு. பட்டங் களையும், பதவிகளையும் தேடி ஓடிப் பெற்றுக் கொண்ட தாக அவருடைய சரித்திரத்தில் நாம் கண்டதில்லை. அவ்வளவுக்குத் தன்மானம் மிக்கவராகவும், கொண்ட இலட்சியத்தில் இம்மியளவும் பிறழாதவராகவும் வாழ்ந்து, மறைந்தது ஆச்சரியமான உண்மை .
தேர் சிற்பாசாரிகளில் எந்தச் சிற்பக் கட்டைகளை யும் வடிவமைக்கும் ஆற்றல் மிக்கவராக இவர் திகழ்ந் துள்ளார். இவருடைய தேர் கட்டமைப்பு (Structure) மிக மிக உறுதியாக அமைந்திருக்கும். இது இவருடைய தனித்திறமை, இதே முறையை இவருடைய மாணாக்கர் களும் கடைப்பிடிக்கிறார்கள் என்பதை யான் அறிவேன். சீரணி நாகம்மாள் ஆலயத் தேர்திருப்பணி ஐயா அவர் களின் தேர் வடிவமைப்புச் சிறப்பைக் கருத்திற் கொண்டே அவருடைய மாணாக்கர் ஒருவருக்கு வழங்கப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது. அத்துடன் தேரின் புற அமைப்பு, ஒவ்வோர் இடங்களுக்கும் ஏற்பப் பொருத்தமான அலங் கார வடிவமைப்பு, சிற்ப அமைப்பு, தேரின் உயரத்துக் கேற்ப யாளியின் வடிவமைப்பு போன்ற ஒவ்வொரு கலை யம்சமும் மிகச் சிறப்பாக இவருடைய தேரில் அமைந் திருப்பதும் இவருடைய தனிச்சிறப்பு. ஒரு தேர் அழகுறு
ܡ 8

வதும் அதன் புற அமைப்பு சிறப்பெய்துவதும் அதன் யாளியை அந்தச் சிற்பி எப்படி அமைத்திருக்கிறான் என்பதிலேயே தங்கியுள்ளது. இதை ஐயா அவர்கள் ஐய ந் திரிபற அறிந்து செயற்பட்டுள்ளார்.
இறுதியாக அவர் செய்த தேர்த்திருப்பணி தான் வாழ்ந்த மண்ணுக்குரிய, திருநெல்வேலி பத்திரகாளி யம்மன் கோயில் திருப்பணியே. நோய்வாய்ப்பட்டு வைத் தியசாலைக்குச் செல்வதற்கு முன்பு இத்தேரின் யாளிச் சிற்பங்களை அதற்குரிய இடத்திலே வைத்துத் தேரின் அமைப்பைப் பார்த்துவிட்டே சென்றுள்ளார். அத்துடன் தான் வந்த பின்னரே அவற்றைப் பொருத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். என்னால் நான் மேலே குறிப்பிட்ட கருத்தை எவ்வளவுக்கு அவர் உள்வாங்கிச் செயற்பட் டுள்ளார் என்பது புரியும். தேரில் பொருத்தும், சிற்ப அமைப்புக்கள், சிற்பக் கட்டைகள் யாவும் இவரும் இவ ருடைய மாணாக்கர்களுமே வடிவமைப்பார்கள். வேறு சிற்பிகளிடம் கொடுத்துச் செதுக்குவித்துப் பொருத்திப் பேர் வாங்குபவரல்ல.
கலாவிநோதன் சின்னமணி அவர்கள், ஐயாவின் ஆத்ம சாந்தி இரங்கல் உரையில் குறிப்பிட்டது போன்று, வருடத்துக்கு ஒரு படம் தயாரித்தாலும் வெற்றிப் பட மாகத் தயாரித்தளிக்கும் " ஜெமினி " சினிமாவைப்போல, ஐயா அவர்கள் படைக்கும் ஒவ்வொரு கலையாக்கமும் திறம்பட அமைந்து விளங்குவது குறிப்பிடத்தக்கது. எண்ணிக்கையை வைத்து ஒருவனுடைய ஆற்றலை அள விட்டுச் சொல்ல முடியாது படைக்கப்படுவது கலைப் படைப்பா? என்பதுதான் முக்கியம்.
இவரிடம் பழகிய மாணாக்கரில் அநேகர் திறமை யான படைப்பாளிகளாக இன்றும் விளங்குகிறார்கள். வரதலிங்கம், சின்னராசா (யாளி), செல்வராசா, குக தாசன், பரமசாமி, மா. நவரத்தினம், இரத்தினதுரை, கணபதிப்பிள்ளை (அரசு), மேகநாதன், தயாபரன்,
- 9

Page 15
பாலச்சந்திரன், சக்தியபூரீ, கனகராசா, ராஜ்பதி, கருணா கரன், பாலமுரளி, கலைச்செல்வன், கோகுலன், தர்ம குமார், சாந்தகுமார், தம்பிராசா , தர்மலிங்கம், தயா (மட்டுவில்), பிரபாகரன் (பிரான்), சுரேந்திரன், பாவு, இவர்களுள் செல்வராசா, குகதாசன், கணபதிப்பிள்ளை (அரசு), பரமசாமி, மேகநாதன் போன்றோர் இன்றுள்ள சிற்பிகளுள் குறிப்பிடக்கூடிய திறமை வாய்ந்தவர்கள். ஐயாவிடம் மட்டவேலை நுட்பம் கற்றவர்களுள், சுந்தர லிங்கம் (உடுவில்), வடிவேலு, வேலாயுதம் (நீராவியடி) , சுந்தரலிங்கம் (திருநெல்வேலி), ச, நவரத்தினம், திருநா வுக்கரசு (அச்சுவேலி), சிவலோகநாதன் (அச்சுவேலி) , க. வேலாயுதம், சுப்பிரமணியம் (சில்லாலை), தவபாலன், சொக்கலிங்கம், முருகானந்தன் போன்றோர் குறிப்பிடத் தக்கவர்கள்.
ஐயாவிடம் வேலை பழகி அதை இருட்டடிப்புச் செய்கின்ற மாணவர்களும் இந்த மண்ணில் இருக்கின்ற நிலையில் "கலாகேசரி தம்பித்துரையின் மாணவனான சற்குருநாதன் (குரு) தனது சித்தப்பா முறையான ‘கலா ஜோதி" கந்தசாமி ஐயாவுடைய சிற்பநுட்பங்களைப் பின்பற்றியே தாம் சிற்ப ஆக்கங்கள் வடிப்பதாகக் கூறி ஐயாவைப் பெருமைப்படுத்திய அற்புதமும் இம்மண்ணில் நிகழ்ந்துள்ளது. குருவின் நேர்மைத் திறன் ஏனைய சிற்பிகளின் கண்களைத் திறக்கட்டும். (குரு மிக நுட்ப மான சிற்பத் திறன் படைத்தவர் என்பது இங்கே குறிப் பிடத்தக்கது).
ஐயா அவர்களுடைய இறுதிப் படைப்பான திருநெல் வேலி பத்திரகாளி அம்மன் கோயில் தேர்த்திருப்பணியை ஏற்கும்போது “தேர்வேலையை ஒரளவு முடித்துத் தரு கிறேன், ஆனால் வெள்ளோட்டத்தில் கலந்துகொள்ளும் நிலையில் நான் இல்லை" என்ற கருத்தை முன் வைத் திருக்கிறார். பல சிற்பிகள் வாழும் இக் கிராமத்தில் சகல சிற்பிகளுடைய பங்களிப்பும் கிடைக்காததை அவரால் ஜீரணிக்க முடியாததன் வேதனையே அவருடைய இக்
10 -

கூற்று. அக்கூற்றில் உள்ள புனித தீர்க்க தரிசன சத்திய வர்ர்த்தை இன்று யதார்த்தமாகியுள்ளது. எம்மை ஆறாத் துயரில் ஆழ்த்துகிறது.
ஐயாவின் இறுதிப் படைப்பான இத்தேர் அவரின் படைப்புகளுக்கெல்லாம் மகுடம் வைத்தது போன்று அமைந்துள்ளது. தேர்க் கட்டமைப்பிலிருந்து அதன் ஒவ்வொரு கலையாக்கமும் மிகப் பொருத்தமாக அமைந்து மனதைக் கொள்ளைகொள்கிறது. இத்தேருக்கு வடிவமைக் கப்பட்டுள்ள யாளிச் சிற்பங்களின் கலைத்துவத்தைக் கண்ணுற்ற, ஈழத்தில் தலைசிறந்த சிற்பிகளில் ஒருவரான கணபதிப்பிள்ளை அவர்கள் (அரசு மாஸ்டர்) "கந்தசாமி அம்மானின் இவ் யாளிச் சிற்ப அமைப்பை மற்றவர்கள் கனவிற்கூடக் காணமுடியாது" என்று தனது இரசனையை மனம்விட்டுக் கூறி இரசித்துள்ளார் என்றால் இதனுடைய சிறப்பை என்னென்பது
இதைவிட என்மனதைக் கொள்ளைகொண்ட இன் னொரு கலைப்படைப்பு மகரச் சிற்பம். அந்த மகரச் சிற்பம் ஒன்றே அவருடைய கலையாளுமையையும், மனோ லயத்தையும் எடுத்துக்காட்டப் போதுமானது:
மிக அற்புதமான விதான அமைப்புடைய இக்கலைத் தேர் என்றென்றும் ஐயாவின் பெயர் கூறும் என்பது திண்ணம். (இதனுடைய விதானம் சொக்கட்டான் வடி வமைப்பு - இவ்விதானத்தினுள்ளே எட்டு மூலையிலும் எட்டுக் கெந்துருவம் அமைப்பதே ஐயாவின் எண்ணமாக இருந்தது)
இக்கலைப் படைப்பின் உருவாக்கத்தில் பங்களித்த மாணாக்கச் சிற்பிகள் அரசு மாஸ்டர், குகன், பரமசாமி, மேகநாதன், கருணாகரன், கலைச்செல்வன், தர்மகுமார், வரதலிங்கம், வேலாயுதம், சொக்கலிங்கம், தர்மலிங்கம் போன்றோர் தமது கலைவெளிப்பாட்டைக் கச்சிதமாக வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இம்மாணவச் சிற்பிகளுடன் சுப்பிரமணியம் (அராலி), நாதன் மாஸ்ரர்
- 11

Page 16
( வே ல  ைண ), சபாரத்தினம் ( வட்டுக்கோட்டை ), ஜீவகாந்தன் (திருநெல்வேலி), திருநாவுக்கரவு (சங்கானை), வரதராசா ( அராலி), கணேசலிங்கம் ( அச்சுவேலி ), பொன்னுத்துரை ( சண்டிலிப்பாய் ), சபேசன், பூரீதரன் (உடுவில்), சிவகுமார் (புத்தூர்), பத்மநாதன் (வறுத்தலை விளான்), முருகானந்தம் (மர்விட்டபுரம்) போன்றோரும் திறமைமிக்க பங்களிப்பை நல்கியுள்ளனர்.
ஐயா அவர்களுடைய இன்னுமொரு முக்கியமான தனிப்பண்பு, இவருடைய வேலைத்தலத்தில் வேலை செய்பவர்கள் எல்லோரும் ஒழுக்கநெறி தவறாதவர்களாக இருப்பதையே அவர் விரும்பினார். மது யாரும் அருந்து வதை வெறுப்பார். அத்துடன் அவரிடம் வேலை பழகு வோர்க்குச் சிற்பத்திறனுடன் - மதிநுட்பமாகப் பேசும் ஆற்றலையும் - சமதர்மச் சிந்தனைகளையும் ஊட்டிவிடு வார். அவர்களும் மனிதர்களாக வாழக் கற்றுக்கொண் டார்கள். இப்படியான நெறிப்படுத்தலினால், கலையாற் றல் - சமதர்மச் சிந்தனை - தேசாபிமானப் பற்று - மதி நுட்பத் திறன், இன்ன பிறவான, தனித்துவப் பண்புகள் யாவும் ஒருங்கே அமையப்பெற்ற வாரிசுகள் ஒருசிலரும், ஈழ மண்ணில் ஒளிர்ந்துகொண்டிருப்பது மறைக்கவோ - மறுக்கவோ - மறக்கவோ முடியாத உண்மையாகும்.
ஐயா அவர்கள் நிரம்பிய நகைச்சுவையுணர்வு மிக்க வராகவும் திகழ்ந்துள்ளார். கட்டுரையின் விரிவஞ்சி ஒரு நகைச்சுவையை மட்டும் குறிப்பிட விரும்புகிறேன்.
இவருடைய வேலைத்தலத்தில் இவருடைய பல மாணாக்கர்களும் சிற்பவேலை செய்துகொண்டிருப்பது வழக்கம். ஒருமுறை இப்படி வேலை நடைபெற்றுக்கொண் டிருந்த பொழுது, ஒரு மாணவன் 'இந்த வாலை எப்படி அடிக்கிறது ஐயா? " என்று கேட்டிருக்கிறான். அதற்கு ஐயா அவர்கள் " மற்ற வாலுகள் அடிக்கிற மாதிரி அடி" என்று சிலேடையாகக் கூறியுள்ளார். இங்கே "மற்ற வாலுகள்" என்றது மற்ற யாளிகளிலுள்ள வால்கள் போல்
12 -

அடிப்பதையும் குறிக்கும், மற்றச் சகசிற்பிகள் செதுக்கு வதைப்போல் பார்த்துச் செதுக்குவதையும் குறிக்கும். இப்படியாகச் சிலேடையாக அவர் குறிப்பிட்ட நகைச் சுவைகள் பல இன்னும் எண்ணியெண்ணி மகிழக் கூடிய தாக உளளது.
இத்துடன் இவருடைய மாணாக்கர் ஒருவரின் நகைச் சுவையையும் குறிப்பிடுவது பொருந்துமென் எண்ணுகி றேன். இவருடைய வேலைத் தலத்தில் பல மாணவச் சிற்பிகள் வேலை செய்துகொண்டிருக்கிறார்கள். அப் பொழுது ஐயா கொடுத்த வேலையைச் செய்யாமல் பரர்க்குப் பார்த்த வண்ணம் ஒரு கற்றுக்குட்டியிருப்ப தைக் கண்ட சிரேஷ்ட மாணவச் சிற்பியான 'குகன்' அந்த இளஞ்சிற்பியை நோக்கி "பராக்குப் பாராமல் நீ உதைப் பார், இல்லையென்றால், அவர் வந்து உன்னை உதைப்பார்" என்று சிலேடையாகக் கூறிய நகைச்சுவையும் எண்ணியெண்ணி மகிழத் தக்கதே.
அடுத்ததாக இவருடைய வாழ்க்கையில் கைக்கொண்ட கொள்கையை அவருடைய பிறப்பு வளர்ச்சி விபரங்க ளுடன் தருவது சாலச் சிறந்தது.
இவர் 19-4-1920ல் திருநெல்வேலியில் பெற்றோருக்கு ஒரே பிள்ளையாகப் பிறந்தார். தகப்பனார் செல்லையா இரும்பு வேலை செய்பவர் (சுழிபுரம்), தாயார் சிவக் கொழுந்து - இவரைப் பற்றி ஒரு குறிப்பை இவ்விடத்தில் தருவது பொருத்தம் என எண்ணுகிறேன்.
ஐயா அவர்கள் சுன்ன்ாகம் அரசாங்க மரவேலைக் கூட்டுத்தாபனத்தில் வேலை செய்தபொழுது, அந்த வேலைத்தலத்தில் ஏற்பட்ட சாதிப் போராட்டம் ஒன்றில் சமத்துவத்தை நிலை நா ட் டப் போராடிக் கொண் டிருந்தார். அச்சமயம் அவருடன் வேலை செய்து கொண் டிருந்த இவருடைய இனத்தவர்களுள் சிலர் இவர் அப்படிப் போராடுவது தவறு என்று இவருடைய தாயாரிடம் கூறி யுள்ளார்கள். அப்பொழுது இவருடைய தா யார்
- 13

Page 17
"என்னுடைய மகன் நீதிக்காகப் போராடி வேலையை இழந்தாலும் நான் கவலைப்படமாட்டேன். அப்படி அவன் போராடுவது தவறு என்றால் நீங்கள் யாரும் இங்கே வரவேண்டாம்" என்று அவர்களுக்கு முகத்திலே அடித்த மாதிரிப் பதில் கூறியமை, தாயார் சிவக்கொழுந்துவின் சமதர்ம சிந்தனைக்கு ஒர் எடுத்துக்காட்டு.
அப்படிப்பட்ட தாயாரின் உதிரத்தில் பிறந்த தன்மையே ஐயா அவர்கள் சிறுவயதிலிருந்தே சமதர்ம நோக்கில் வாழத்தலைப்பட்டார் என்று கூறின் அது மிகையாகாது.
தாயாரின் தகப்பனார் அம்பலவாணர். பெயர் பெற்ற வாகனச் சிற்பாசாரியார். இவரிடம் உள்ள அபிமானம் காரணமாகவே, தனது வேலைத்தலத்திற்கு ‘பூgவாணன் சிற்பாலயம்" என்று பெயர் வைத்துப் பெருமைப் படுத்தியுள்ளார்.
அம்பலவாணருக்கு ஆறு பிள்ளைகள். இவற்றில் மூவர் ஆண்கள் (சபாபதி, ஐயம் பிள்ளை, பொன்னையா) மூவர் பெண் க ள் (அன்னப்பிள்ளை, சுந்தரம், சிவக்கொழுந்து) ஆண்கள் மூவரும் சிற்பாசாரிகள், இவர்களுள் சபாபதி வல்லிபுரக்கோவில் தேர் செய்தவர்.
ஐயாவின் சிறியதந்தை (செல்லையாவின் தம்பி) சின்னத்துரை - இரும்பு வேலை செய்தவர். ஐயா பிறந்து ஆறு வயதில் தகப்பனார் செல்லையா காலமானார். அப்பொழுது தாயாரின் வயது இருபத்தொன்று. தந்தை யாரின் மறைவுக்குப் பின்னர் இவர் சிலகாலம் சிறிய தந்தை சின்னத்துரையுடன் சுழிபுரத்தில் வளர்ந்துள்ளார்.
சிறிய தந்தையுடன் ஏற்பட்ட சில கருத்து முரண் பாட்டால் சுழிபுரத்திலிருந்து வந்து திருநெல்வேலியில் இருந்த தாய்மாமன் பொன்னையாவுடன் வளர்ந்தார். இயல்பிலேயே உடல்நிலை நோய்வாய்ப்பட்ட தன்மையாக
14 -

இருந்தாலும் அவருடைய உள்ளம் - தான் கொண்ட இலட்சியத்திலிருந்து வழுவாத வைராக்கியம் கொண்ட வராகவே வளர்ந்தார்.
இவரது சிறிய தந்தையாரான மட்டுவில் சிற்றம்பல ஆச்சாரியாரே, இவரது கலைக் குருவாவார்.
1948-ம் ஆண்டில் சிலகாலம் சுண்ணாகம் அரசாங்க மரவேலைக் கூட்டுத்தாபனத்தில் பணிபுரிந்துள்ளார். அவ்வமயம் அக் கூட்டுத்தாபனத்தில் இயங்கிய தொழிற் சங்கச் சம்மேளனத்தில் காரியதரிசியாகவும் செயற்பட் டுள்ளார். தீண்டாமைப் பேய் தாண்டவமாடிய அக் காலகட்டத்தில் பல சாதி மக்களும் பணிபுரிந்த அத் தாபனத்தில் உயர்ந்தோருக்கும் தாழ்ந்தோர்க்கும் வேறு வேறாக இரு போசன சாலைகள் வேண்டுமென்ற போராட் டம் வலுப்பெற்ற பொழுது, ஐயா அவர்கள் இந்த அதர்மச் செயலுக்கு விட்டுக்கொடுக்காமல் வாதாடி அதை முறியடித்து வெற்றி கண்டார்.
இச்சூழலில் தாழ்த்தப்பட்டோரைத் தவிர இவருடன் வேலை செய்த அனைவரும் காழ்ப்புணர்வுடனேயே பழகி யுள்ளனர். இவர் ஒருமுறை சு கயினம் காரணமாக சில நாட்கள் வேலைக்குச் சமுகமளிக்கமுடியாதிருந்தபொழுது இவரால் அனுப்பப்பட்ட விடுமுறைக் கடிதம் ஒரு சிலரின் சூழ்ச்சியால் தலைமைப் பீடத்துக்குக் கிடைக்கவில்லை என்ற காரணத்தால் வேலை நீக்கம் செய்யப்பட்டார் அப்பொழுது ஐயா அவர்கள் "நான் எதற்காகப் போரா டினேனோ அந்த இலட்சியம் ஈடேறியதற்காக, நான் இந்த வேலையை இழப்பதையிட்டுச் சந்தோசப்படுகிறேன்" என்று வெளியேறிய சம்பவம் அவருடைய இலட்சிய உறுதிப்பாட்டுக்கும் நேர்மைக்கும் எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
இச்சம்பவம் ஐயா அவர்களின் மனதைச் சோர்வடை யச் செய்யவில்லை. மாறாக அவரின் மனஉறுதிப்பாட்டை வலுப்படுத்தித் திருநெல்வேலியில் ஒரு கைத்தொழிற்
- 15

Page 18
சங்கத்தை ஆரம்பித்துப் பலருக்கும் வேலை கொடுத்துச் சிறிது காலம் திறம்பட நடத்திய பெருமை ஐயாவுக் குரியது.
"தாழ்த்தப்பட்டவர்களும் மனிதர்களே' என்ற ஐயா வின் சமதர்மக் கொள்கை காரணமாக சாதி வெறி கொண்ட இவருடைய இனத்தவர்கள் பலரால் இவர் வாழ்ந்த மண்ணிலேயே ஒதுக்கி வைக்கப்பட்ட சம்பவங் கள் ஏராளம்,
காளிகோயில் கிணற்றிலே இவரைத் தண்ணீர் அள்ள விடாது துலாக்கொடியை அறுத்தமை .
கோயில் திருவிழாவை இவர் செய்ய விடாமல் பறித்தமை.
கோயிலுக்கு முன்பாக உள்ள இவருடைய காணியிலே கோயிலுக்கு முன்பாகப் பாதை வைக்காமல் தடுப்பதற்கு, கோயில் நீர்த் தாங்கியை அந்த இடத்தில் கட்டுவதற்கு இரவோடிரவாகக் கல்லுப் பறித்தமை.
இச் சம்பவத்தின் நிமித்தம் ஏற்பட்ட வழக்கில் இவருக்குச் சார்பாக வழக்குத் தீர்ந்தது, அவருடைய நீதிக்குக் கிடைத்த வெற்றி.
இதற்குப் பின்னர் ஏறக்குறைய நாற்பது (40) ஆண்டு களாக இந்தக் கோயிலுக்குப் போகாமல் இந்த மண்ணில் வாழ்ந்து காட்டியது, ஐயா அவர்களின் தீரத்துக்கும் எதற்கும் அசையா உறுதிக்கும் எடுத்துக்காட்டு,
1987-ம் ஆண்டு ஏற்பட்ட காளிகோயில் பிரச்சினை ஒன்றில் அதில் நடந்த கூட்டத்தில், ஊர் அபிமானத்தால், இவரால் உரையாற்றப்பட்ட கருத்துக்கள் இவரையே இக்கோயில் நிர்வாகத் தலைவராக்க வழிசமைத்தது. எல்லோராலும் ஒதுக்கப்பட்டவர் மீண்டும் எல்லோரும் தமது தவறை உணர்ந்து இவரையே தலைவராக்கிய சம்பவம் இவருடைய இலட்சியத்துக்குக் கிடைத்த வெற்றி.
16 a

ஐயா அவர்கள் தாய்மாமன் ஐயம்பிள்ளை அன்னப் பிள்ளை தம்பதி மகள் இராஜலட்சுமியை மனைவியாக வாய்க்கும் பேறுபெற்றவர். இறையருளால் நல்ல வாரிசாக அமையப்பெற்ற ஒரு ஆண், மூன்று பெண்களுமாகச் சத்தான நான்கு மக்கள். மூத்த மகள் மணம்முடித்து இரண்டு கண்மணிகளுக்குத் தாயானவர். இவருக்கு வாய்த்த மருமகன் அதிதீவிர முற்போக்குச் சிந்தனை யாளர். மாமன் அடியொற்றிப் பாதம் பதிப்பவர். மறு இரு பெண்பிள்ளைகளும், தந்தையின் முயற்சியால் தகுந்த வேலைகளைப் பெற்று வாழ்ந்துவருகின்றனர். மகன் சிறந்த தொழில்நுட்பவியலாளன். தந்தையின் பெயர் விளக்கும் கலையாற்றல் கைவரப்பெற்றவர். அவசரமான கலைப்படைப்புக்கள் படைக்கவேண்டின் தந்தைக்கு உறு துணையாக நின்று செயற்படும் வல்லமைமிக்கவர்.
மானுடன் என்றால் என்ன? அவன் எப்படியான இலட்சியத்தைக் கொண்டிருக்க வேண்டும்? எப்படி வாழ வேண்டும்? உலகியல் என்றால் என்ன? இவற்றுக்கெல் லாம், திட்டவட்டமான பதிலைக் கண்டு, அதன்வழி நின்று - மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து மறைந்தது அவருடைய பெருஞ்சாதனை.
* அனைவரையும் சரிசமமாகக் கருதுவீர்களாக, உயர்த் தவன், தாழ்ந்தவன் என்ற வேறுபாட்டுணர்வாகிய பாவத்தை உங்களிடமிருந்து கழுவித் தூய்மைபெறுங்கள். நாம் அனைவரும் சரிநிகர் சமமானவர்கள்.
சமயத்துறையில் சாதி என்பது கிடையாது. சாதி என்பது வெறும் சமூக ஏற்பாடேயாகும். ஆதலால் மதத்தைக் குறைசொல்லிப் பயனில்லை, மக்களைத்தான் குறைசொல்ல வேண்டும்.
சுயநலமே ஒழுக்கக்கேடு; சுயநலமின்மையே நல் லொழுக்கம் . இதுதான் ஒழுக்கத்திற்கு நாம் கொடுக்கக் கூடிய ஒரே இலக்கணமாகும்.
- 17

Page 19
உண்மைக்காக எதையும் துறக்கலாம். ஆனால் எதன் பொருட்டும் உண்மையைத் துறக்கக்கூடாது.
உண்மை, தூய்மை, சுயநலமின்மை ஆகிய இம்மூன்றும் எங்கெல்லாம் காணப்படுகின்றனவோ, அவற்றைப் பெற் றிருப்பவர்களை நசுக்கக்கூடிய ஆற்றல் விண்ணுலகிலோ, மண்ணுலகிலோ எங்கும் கிடையாது. இந்த மூன்றையும் பெற்றுள்ள ஒருவனைப் பிரபஞ்சம் முழுவதுமே எதிர்த்து நின்றாலும் அதை எதிர்த்து நிற்கக்கூடிய ஆற்றல் அவனுக்கு உண்டு, என்ற சுவாமி விவேகானந்தரின் கூற்றை மெய்ப்பித்து வாழ்ந்துகாட்டியவர் ஐயா அவர்கள்.
பூச்சும் - வேஷமும் ஒருவனைப் புனிதனாக்காது. சத்தியமும் - மனத்தூய்மையும் ஒருவனைப் புனிதனர்க்கும். இது ஐயாவின் வாழ்க்கை நெறி; எமக்குக் கற்றுத்தரும்
-1{11-l Ds
அவர் இறுதி மூச்சுவரை கம்யூனிசத் தத்துவவாதி யாகவே வாழ்ந்தார். ஆரம்பத்தில் யாழ், கம்யூனிச மத்திய குழு உறுப்பினராக இருந்திருக்கிறார். அக்குழுவில் அனேகர் கம்யூனிசத் தத்துவத்துக்கு மாறாக நடந்து கொண்டதால் உறுப்பினர் பதவியிலிருந்து விலகிக்கொண் டார். ஒதுங்கிக்கொண்டர்லும் கம்யூனிசக் கோட்பாட் டிலிருந்து அவர் என்றும் விலகாமல் வாழ்ந்து மறைந்தது, கம்யூனிசவாதிகள் எனத் தம்மைச் சொல்லிக்கொள்ளும் அனைவருக்கும் ஒரு பாடமாகும். கம்யூனிசத் தத்துவத் துக்கு மாறாக நடப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர் களை எதிர்த்துச் சாடுவதில் பின்நிற்காதவர். V. பொன் னம்பலம் போன்றோர் இவருடைய கண்டனத்துக்கு ஆட்பட்டவர்கள். கார்த்திகேசன் மாஸ்ரர் ஒருவரே இவருக்குப் பிடித்த கம்யூனிசவாதியாகத் திகழ்ந்துள்ளார். கார்ல்மாக்ஸ், லெனின், ஸ்ராலின் போன்றோர் இவருடைய கம்னியூச ஆதர்ச ஆசான்களாவர். ஆத்மீக எழுச்சிக்கும், ஆண்மைக்கும் இவரால் மதிக்கப்பட்டவர்கள், இராமலிங்க வடிகள் - சுவாமி விவேகானந்தர் . சுபாஸ் சந்திரபோஸ் ஆவர்.
18 -

வறுமையில் செம்மை காண்பதும், பிறருடைய வறுமையைக் கண்டு சிந்தை நோவதும் ஒரு சோஷலிஸ் டுக்குத் தேவைப்படும் பண்புகள். இவை ஐயாவிடம் என்றும் காணும் பண்புகள். வாழ்க்கையில் நொந்து போயுள்ளவர்கள், ஏழைகள் போன்றோருக்குப் பல சந்தர்ப் பங்களில் உதவியுள்ளார். இவை பகட்டுக்காகச் செய்த உதவிகளல்ல. பிறர் அறியா வண்ணம் செய்த இவ்வுதவி கள் தம் மனத்திருப்திக்காகச் செய்த உதவிகள்.
சோஷலிசமென்பது பொருளாதார ஏற்றத்தாழ்வைப் போக்கும் தத்துவம் மட்டுமல்ல, மனித சமுதாயத்தின் பல்வேறு துறைகளிலுமுள்ள குறைபாடுகளையும் போக் கும் தர்மமாகும் என்பதை உணர்ந்து சமுதாயத்திலுள்ள கொடுமைகள், குறைபாடுகளுக்கு எதிரர்கப் போராடி யுள்ளார். இது உண்மையான சோஷலிஸ் தத்துவத்தின் தன்மை. இது இயல்பாகவே இவருடைய இரத்தத்தில் ஊறிய பண்பாகத் திகழ்ந்துள்ளது.
ஒரு சிறந்த கலைஞனாக, ஒரு சிறந்த சமதர்மவாதி யாக, ஒரு சிறந்த பேச்சாளனாக, ஒரு சிறந்த பண்பாள னாக, ஒரு சிறந்த சமூக சீர்திருத்தவாதியாக, எல்லா வற்றுக்கும் மேலாக - ஒரு சிறந்த மானுடனர்க வாழ்ந்து மறைந்த ஐயா அவர்களின் இழப்பு, தனித்து ஒரு குடும் பத்துக்குரிய இழப்பு மட்டுமல்ல, அது கலைஞர்களுக்கு ஒரு பேரிழப்பு, சிறந்த கம்யூனிஸ்டுகளுக்கு தாங்கொணா இழப்பு. சிறந்த சீர்திருத்தவாதிகளுக்கு பெருமிழப்பு. எல்லாவற்றுக்கும் மேலாக உயர்ந்த மானுடத்துக்கு ஒரு பேரிழப்பாகும்.
"இன்று நம்மை வசைபாடுவோகும், நாளை நம்மோடு வரக் கூடியவர்களே என்ற நம் பி க் கை யும், அதைச்
சாத்தியமாக்குவதற்கான நடைமுறையும் கொண்டவர் களே சோஷலிஸ்டுகள்" என்ற சோஷலிஸ்ட் கோட்
- 19

Page 20
பாட்டிற்கிணங்க, ஐயா அவர்கள் வாழ்ந்த காலத்தில் வசை பாடியவர்கள் எல்லோரும் அவர் வழியைப் பின் பற்றி உய்வர் என்ற நம்பிக்கையில், பகைவனுக்கும் நீங்கு எண்ணாத அந்தப்பெருந்தகை வழி நிற்போமாக ,
பிற்குறிப்பு:- இக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ள செய் திகள் LIII n|II, ஐயாவிடமிருந்தும் , இளமை காலம் தொட்டு அவருடன் பழகியவர்களிடமிருந்தும் பெறப்புட்டவை.
20 -

மசிடாசூர வர்த்தணிச் சிற்பம்
(நீர்வேலி கந்தசாமிக்கோயில் தேர்)

Page 21
சமூக ஜோதியொன்று அணைந்ததே !
பூரீ கந்தசாமி அண்ணர், பிறபல பொதுவுடமை அரசியல் வாதிகளாயிருந்த எஸ்.ஏ. விக்ரமசிங்க, பீற்றர் கெனமன் உட்படப் பல பொதுவுடமைப் பிரமுகர்களின் மதிப்பைப் பெற்றிருந்தமையும், கட்சியின் ஆட்சிக் குழுவில் உறுப்பினராய் இருந்தமையும் அவரின் சீரான சிந்தனைக்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.
அரசாங்க எழுதுவிளைஞர் சேவையில் ஓர் இலிகிதராகச் சேர்ந்து பல வருடங்கள் 'ஊறுகாயாக இருந்து சேவை வருடங்களின் எண்ணிக்கையால் உயர்வு பெற்றுக் கூடுதலான ஓய்வூதியம் பெற்றவர்களின் அளவுகோலால் பூரீ கே. அண்ணரின் திறமைகளை அளவிடமுடியாது. ஒருவர் விஷயமறிந்த பொதுவுடமை வாதியென மதிக்கப்பெறின் அவர் ஒரு சிந்தனையாளராகவும் இருக்கக் காணலாம் என்ற எண்ணக்கருத்து பூரீ கே. அண்ணருக்குப் பொருத்தமாயிருந்தது. இவரும் சமசமாஜ வாதியான சில்லாலையூர் சின்னராசா அண்ணரும் அரசியல் கோட்பாடுகளில் உரையாடியபொழுது அவற்றை அவதானித்து யான் மகிழ்ந்த நாட்கள் பலவுண்டு. இவ்விருவரும் எமது சமூக ஜோதிகள் வரிசையில் வைத்து மதிக்கத்தக்கவர்கள்.
சித்திரத் தேரும் பல்வேறு வாகனங்களை வடிவமைத்தலும் தச்சுத் தொழிலன்று - அது கலைத் தொழில். இக்கலைத் தொழில் கைவந்த கலைஞர் அமரர் பூர் கந்தசாமி அவர்கள். தமது சிருஷடிகளில் "இவை பூரீ க. வின் கைவண்ணம்' என்று முத்திரை பதிக்கப்பெற்றவர்.
திருநெல்வேலி பூரீ முத்துமாரியம்மன் வைகாசி விசாகப் பொங்கலின் பூர்வீகம் தெரிந்தமையால் வைத்தியர் வளந்தின் பாயும் பரியத்தைப் பேணிக்காக்க வேண்டும் என என்னிடம் வற்புறுத்தியவர் அமரர் பூரீ கந்தசாமி அவர்கள். அவர் ஆத்மா நிறைவு பெற அம்மனருளாலே அம்மன் தாள் வணங்குகிறேன்.
காசிப்பிள்ளை மாணிக்கவாசகர்
நாயக (வைத்தியர்) வளந்தின் நான்காம் உரிமையாளர்
1 -ஜோரப் லேன். கொழும்பு -

ச. செல்வராசா
இதையும் தாங்கும்
இதயம் எனக்கேது?
ஈழத்துக் கலைவானில் நின்றொளிர்ந்த கலைமதியே! என்நெஞ்சில் இடம்கொண்டு அறம் விதைத்த அருள்நிதியே! என்றுமெனைப் பாசத்தால் கட்டியாண்ட என்குருவே! எனைவிடுத்துப் பிரிந்தனையே; அந்தோ! அந்தோ!!
நான் உன்னிடத்து இன்னமும் அறநெறிகள் பெறவேண்டிய நிலையில் s a o • se se se நீ படைத்த கலைக்கு எவ்வளவோ மெருகூட்ட
இருந்த வேளை .
சிற்பச் சிகரமே!
பொதுவுடமைப் பெட்டகமே!
அன்பின் திருவுருவே!
எம்மையெல்லாம் மீளாத்துயரில் பரிதவிக்க வைத்து; எங்கு நீ சென்றனை? ஏனைய்யா, இவ்வாறு பெரும் பயணம் நீ தொடர்ந்தாய்
- 21

Page 22
எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்பாய்; ஆனால் இதையும் தாங்கும் இதயம் எனக்கேது? என் நெஞ்சம் நடுங்குகிறது - கண்கள் குளமாகிறது உடல்மிகு சோருகிறது, உன் அறத்தில் - அருளில் நான் தளிர்த்தேன். இனி எனக்கு அறம் ஊட்ட - அருள் காட்ட யாருண்டு?
ஐயகோ என் செய்வேன் இனி!
அஞ்சாது அறம்பாய்ச்சும் நாவை ஏன் சுருட்டிக் கொண்டாய்? மிஞ்சு கலைத் திறன் வடிக்கும் கரத்தை ஏன் மடக்கிக் கொண்டாய்? பஞ்சத்தோர்க் கருள்காட்டும் கண்ணை ஏன் மூடிக் கொண்டாய்? பிஞ்சுமணம் கொண்டயான் , துடிக்கவோ நீ மறைந்தாய்? ஐயனே! மெய்யனே! ஆருயிர் தலைவனே! பொய்யை இனிச்சாடப் பூவுலகில் யாருண்டு? வையத்தில் சமதர்மம் பூக்கவழி யுண்டோ? கையைப் பிசைந்தினிக் கண்ணீர்க்கே இரையாவேன். கண்ணிர்க்கே இரையாவேன்.
ஆம்!
யாரறிவார் எம்மை, நீ அறிவாய் என்னை - நான் அறிவேன் உன்னை . நாட்களாக . மாதங்களாக - ஆண்டு களாக இருவர் நாம் ; நேச - பாசத்தோடு, அற - சம நோக்கோடு; அளவளாவிய அவ்வின்பச் சங்கம நாட்களை எண்ணும் போது, என் நெஞ்சம் புண்ணாகிறது - வெடிக் கிறது. அவை மறக்கக் கூடிய நினைவுகளா ? மறக்க முடியாது - மறக்கமாட்டேன். நீ நேசித்த நேசத்தை என் றென்றும் நேசிப்பேன். நீ சென்றனையே! ஐயகோ ! இனி யாரிடம் யாசிப்பேன் நெறி கா ண! உன் நெறியில் நானுளன்று ஏகலைவன் நிலையுறுவேன். வேறுவழி யானறியேன். என்னன்புப் பெருந்தலைவா! கலங்காது நீ உறங்கு.
22 -

கலைத்துறைக்கு ஒளிதந்து மிளிர்ந்த கந்தசாமிச் சிற்பச்சோதி அணைந்ததால், கலையுலகம் மெருகிழந்தது; கலை மேதையை மட்டுமா இழந்தது? சிற்பவுலகில் ஈடு இணையற்ற பல சிற்பிகளை உருவாக்கிய ஒப்பற்ற ஆசானை இழந்தது; சமதர்ம சமுதாயம் பாட்டாளிகளின் தோழனை இழந்தது; எம்மூர் நீதிக்குப்போராடும் ஒரு யதார்த்த புருஷ னை இழந்தது; எதற்கும் அஞ்சாது வாதிடும் கர்மவீரனை இழந்தது; ஆளுமை மிக்க தலை வனை இழந்தது; அனைத்துக்கும் மேலாக ஒரு நல்ல மனிதனை இழந்தது; இத்துணைப் பண்புகளும் ஒருங்கே வாய்ந்தவராக, அண்ணல் கந்தசாமி அவர்கள் வாழ்ந் தாரென்பது, அனைவரும் ஒப்ப முடிந்ததே. இத்தகைய
* ஒராயிர வருடம் ஒய்ந்து கிடந்த பின்னர்
வாராது போல் வந்த
கலைமணியை இழந்தோம் ".
ஆயினும், அவர் மங்காப் புகழுடன் என்றும் போற்றப் படுவார். அவர் கலைக்காக சம த ர் மத் தி ற் கா சு வாழ்ந்தார். கலை - சமதர்மம் - அவராயிற்று.
கலையுலகே! - சமதர்மமே! சாந்தி கொள்வாய்! அனைவருமே ஆறுதல் கொள்வீர்!! என்மனமே மெளனமாவாய்!!!
சுபம்!
- 23

Page 23
கலங்கரை விளக்கு
- செ. பாலச்சந்திரன் 'காளிகா சிற்பாலயம்"
ஒரு குழந்தையைப் பெற்று வளர்க்கின்ற பொறுப்பு தாய் தந்தையினுடையது, கல்வி அறினவப் புகட்டுகின்ற ஆசிரியன், அவர்களைத் தலைநிமிர்ந்து வாழவைப்பது தொழில் நிலைய வழிகாட்டிகள் . இவர்கள்தான் வாழ்க்கை யில் தெய்வமாக அமைவதுண்டு. இது எல்லோருக்கும் அமைவதில்லை. பல இளைஞர்களின் தெய்வமாக அமைந்தவர்தான் அமரத்துவமடைந்த - # anఇuఇuTukగా# வழிகாட்டியான எமது துருநாதர் கந்தசாமி அவர்கள் ஒரு கலங்கரை விளக்கம். அமரரின் பூரீவாணர் சிற்பாலயம் உருவாக்கியது எண்ணுக்கணக்கான தேர், மஞ்சமல்ல, கலைஞர்களைத்தான். அந்தப் புனிதமான குருவின் நடைக்கண் பார்வைக்காக என் தந்தையால் நானும் நிறுத்தப்பட்டேன் எங்களுக்கு இவர்கள் நெருங்கிய உறவினர்கள்
முன்னேஸ்வரம், சுட்டிபுரம், நயினை நீர்வேலி சுத்த சுவாமி கோவில், இணுவில் போன்ற ஆலயங்களில் அமரர் அவர்கனின் தலைமையின் கீழ் பல சுவைஞர்களுடன் நானும் தொழில் பயின்றிருக்கின்றேன். தொழிலைப் பயிற்றுகின்ற தன்மை இவருக்கு நிகர் இவரேதான். கடமை, கண்ணியம், அன்பு, ஆளுமை உறுதிமிக்கி ஒரு சில மனிதர்களுள் இவரும் ஒருவர். மிகுந்த அன்போடு தொழில் கற்பித்து நீங்களும் கலை உலகில் தலைநிமிர்ந்து வாழலாம் எனப் பல இளைஞர்களை வாழ வைத்தவர். கலை உலகில் தனக்கென ஒரு இடத்தைப் பெற்றவர். மிடுக்கன் சரக்கு இருக்க விவைப்படும் ' என்ற முது மொழிக்கேற்ப தொழிசைச் செய்தவர். தொழிலையோ, புகழையோ இவர் நாடிச் சென்றதில்லை. தேரென்றால்
24 -

இணுவில் மஞ்சம் (புணரமைப்பு)

Page 24
குதிரை முகம் (பரரசசேகர்பிள்ளையார் கோவில்
 

அப்படியும் செய்யலாம். இப்படியும் செய்யலாம் என்று இல்லாமல் இப்படித்தான் செய்யவேண்டும் என்று செய்து காட்டியவர்.
தேர் நிர்மாணிப்பில் இவரது பாணி உறுதியோடு கூடிய கட்டமைப்பும் உடையது. தேர்களில் ஒவ்வோரி விதமான தொழில்நுட்பங்களைப் புகுத்தியுள்ளார். சுட்டி புரம், நீர்வேலி, நயினை மஞ்சம் ஆகியவற்றின் பூசாந்திர முறிப்புகள் முகஉத்தர மடக்கைகள் மிகவும் அபரிமிதமான நுணுக்கம் உடையவை. அங்கு வந்த இந்தியச் சிற்பிகளே அதைப் புகழ்த்தது உண்டு. இணுவில் மஞ்சத்தைப் புனர் நிரிமாணம் செய்தபோது என்னையும் பெரும்பங்கிற்கு உள்ளாக்கினார். அந்தத் தொழில்நுட்பம் மிகவும் அபார மானது. அதனால்தான் 40 அடி உயரம் கொண்ட அந்த அசையாத கோபுரம் மற்ற அங்கங்கள் அசையாமல் சில்லுகள் மாத்திரம் உருளுகின்றன.
நானும் எனது சகோதரனுமாகிய சிற்பவல்லுனர் மேகநாதனும் குரு, சிஷ்ய முறையில் தொழில் பழகி அவராலே அறிமுகம் செய்துவைத்த நீர்வேலி கந்தன் ஆலயத்தில் விமானத்துடன் கூடிய கைலாய வாகனத்தை நிர்மாணித்து வெள்ளோட்டம் கண்டபோது இதய சுத்தி யோடு குரு ஆசி வழங்கி ஆசீர்வதித்தார். அதனால் நாங்கள் பல தேர்களை ஈழத்தில் எங்களுக்கு எனப் பல ஆலயங்களில் இடத்தைப் பிடித்துள்ளோம். அத்துடன் பாராட்டுக்களையும் , தங்கப்பதக்கங்களையும் பெற்றுள் ளோம், பெற்றுவருகின்றோம். இது அவர் போட்ட பிச்சை என்றே எண்ணுகின்றோம். எத்தனையோ கலைஞர் கள் குருவின் பெயரைச் சொல்ல மறுக்கின்றபோது இவர் தான் எமது தெய்வமென மனச்சுத்தியோடு கூறுகின்றோம்.
இப்படியான ஒரு கலைமேதை ஏன் " " இலைமறை காயாக " " வாழ்ந்தார் என்றால் தொழிலை சுயநல மாகவோ, வியாபாரமாகவோ செய்யவில்லை . தொழில் கற்ற கலைஞர்களும் போதிய பங்களிப்பு ஆற்றவில்லை.
- 25

Page 25
இது மிகவும் மனவேதனைக்குரியது, இறுதிக்காலகட்ட மாக அமைந்த தேர், வாகனங்கள் மிகவும் கலைச்சிகர மாகவும், உயிரோட்டம் மிக்கதாகவும் காணப்படுகிறது. இதில் பத்திரகாளி அம்மன் தேரும் குறிப்பிடத்தக்கது. எனது வேலையையும் தனது வேலைபோல் எதுவித பேத மின்றி ஆக்கித்தந்தார். இவரது நகைச்சுவையும், கருத் தாழம் மிக்க வார்த்தைகளும் அறிஞர்களையே சிந்திக்க வைக்கும். கோண்டாவில் உப்புமடப் பிள்ளையார் ஆலயப் புதிய சிற்பத்தேர், யாழிகள் அவரது கைவண்ணத்தில் உருப்பெற்றிருக்கும் வேளையில் அவரை அங்கு கெளரவித்து ஆசிபெற நினைத்தோம் . 10.11-1998-ந் திகதி அதிகாலை அவரது சிவபதமெய்திய செய்தி கேட்டு நிலைகுலைந் தோம். அந்தக் கலங்கரை விளக்கு அணைந்தது. அணை கின்ற தீபம் மிகவும் பிரகாசமாக ஒளிரும் என்பார்கள், இவருடைய வாழ்வும் அதேபோலத்தான். இறுதிக்கட்டம் மிகவும் அமைதியானது.
எந்த ஒரு ஸ்தபதியும் இவ்வளவு கலைஞர்களை உருவாக்கவில்லை. ஒரு நல்ல குருவான மனிதநேயத்திற்கு ஆற்றவேண்டிய பணியைப் பங்குகொண்டுள்ளேன். இது மனச்சாந்தியைத் தருகிறது. என் குருவின் புனிதபணி நெஞ்சிருக்கும் வரை நினைவிருக்கும். உலகிருக்கும் வரை அவரது கலைப் பொக்கி சம் நிலைத்திருக்கும். அவரின் ஆத்மா சாந்தியடைய அவர்வழி நின்று யாவரும் பணி li qaf?GB6AJ TLD T 5 .
26 ”ہے

என் நெஞ்சில் இடம்கொண்ட கந்தசாமி அண்ணர்
அ. த. கதிரவேல் பொருளாளர்
தூய வெள்ளை வேட்டி; அதற்கேற்ப தூய வெள்ளை அரைக்கைச்சேட் துப்புரவாகச் சவரம் செய்யப் பெற்ற கவர்ச்சியான முகம் : தீட்சண்யமான பார்வை அஞ்சாத பீடு நடை எப்பொழுதும் சிந்தனை வயப்பட்ட நெற்றி: 60 வயதே என நினைக்கவைக்கும் 79 வயது உருவம், இத்தகைய தோற்றப் பொலிவுடன் காட்சி தருபவர்தான், என் மனதைக் கொள்ளை கொண்ட அமரர் கந்தசாமி அண்ணர் .
இன்று திருநெல்வேலிப் பத்திரகாளி அம்மன் புதிய தேர், அழகொளிரக் கம்பீரமாக வடிவமைக்கப் பெற்று, பார்ப்போர் கண்ணுக்கும் - சிந்தைக்கும் விருந்தளிக்கிறது. இவ்வாறு மிடுக்காகக் காட்சியளிக்கும் அவ்வண்ணத்தேரின் பின்னணியாக, அக் கலைப்படைப்பில் - ஏன் ஒவ்வொரு சின்னஞ் சிறிய சிற்ப வேலைகளுள்ளும், ஒருருவம் மறைந் திருக்கிறது. அவ்வுருவம் வேறு யாருமல்ல, எமது தேர் திருப்பணித்தலைவர் - சிற்ப ஸ்தபதி அண்ணல் கந்தசாமி அவர்களே. இத்தேரில் அமைந்துள்ள ஒவ்வோர் அம்சமும் கலை பேசும் - அவர் புகழ் பாடும், இக் கலைப் படைப் பிற்கு இறுதிவரை கண்ணாடி அணியாது உயிரூட்டிய அவரது சிற்பத்திறன் வியக்கத்தக்கது - மறக்க முடியாதது. அது மட்டுமா? சுகவீனத்தோடு வைத்தியசாலையில் இருந்த வேளையிலும், அவர் சிந்தனை முழுவதும் உருவாகி நிற்கும் இத் தேர்மீதே ஒ ன் றி யி ரு ந் த து. தன்னைப் பார்வையிட்ட வைத்திய கலாநிதியிடத்து, தேரை ஒருமுறை வந்து பார்த்து மிகுதி வேலைக்கான ஆலோசனை வழங்க அனுமதி பெற்றிருந்தார். அதற் கான ஒழுங்கை எதிர்பார்த்திருந்தார். ஆனால் காலச் சக்கரம் சதி செய்து விட்டது. இவற்றை எண்ணும்போது,
- 27

Page 26
அவுர் எவ்வளவு தூரம் எம் தேர் வேலையில் கண்ணும் கருத்துமாக இருந்தார் என்பது நிதர்சனமாகிறது.
இத்தகைய கண்ணியவானின் திடீர் மறைவை எள் வாறு நாம் சகித்திருப்போம்? எப்படி நாம் ஈடு செய் வோம்? இவ்விழப்பு எமக்கெல்லாம் பேரிழப்பே. மாலுமி யைப் பறிகொடுத்த பயணிகள் நிலையானோமே.
12-07-92ல் தேர்த் திருப்பணிச் சபையில் இணைந்து, அதன் தலைவராகப் பதவி ஏற்று, இறுதி மூச்சுவரை அதன் செயற்பாட்டிற்கு அயராது உழைத்த அப் பெருந் தனகயின் ஆற்றலை - பெருந்தன்மையை எண்ணுகிறேன்; இங்கு தருகிறேன். ஊரில் பலவித மோதல்கள் , பிணக்கு கள் ஆரம்பத்தில் இருந்தபோதும், அவற்றையெல்லாம் மதிநுட்பத்தால் - தீர்க்க தரிசனத்தால் வெற்றி கொண்ட பெருந்தீரர் . இரு ஆண்டுகளுக்கு முன்னர் நான் தேர் திருப்பணிச் சபையின் பொருளாளராகப் பொறுப்பேற்ற தால் எனக்கும் அவருக்குமிடையே நெருங்கிய தொடர்பு கிள் ஏற்பட்டன . இவர் மிகவும் கண்டிப்பானவர்தான். ஆனால் அதேயளவு இளகிய மனமுடையவர். எம்மிடையே தேர்த்திருப்பணி தொடர்பாக பலமுறை வாதப் பிரதி வாதங்கள் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதுண்டு. ஆனால் மறுநாள் அவரை நாம் சந்திக்கும்போது, எல்லா வற்றையும் மறந்து ஒரு சிறு குழந்தைபோல் " "தம்பி! எனக்கு இப்போது உடல்நிலை சரியில்லை, ஏதாவது கடுமையாசக் கூறியிருப்பேன், மன்னித்து விடுங்கள்" என இளகிய மனத்தோடு - உரிமையோடு கூறுவார். அவர் எவ்வளவு முதியவர், டெரியவர் அபரிமித சிற்பக் கலைஞர், எம்மிடம் இவ்வாறு பேசுகிறாரே என்று அதிர்த்திடுவோம். வியத்து நிற்போம். இப்படியான சம்பவங்கள் பல எம் மிடையே இடம்பெற்றுள்ளன. இவரன்றோ மாமனிதன்!
இத்தகைய மாமனிதன் - பெருங் கலைஞன் இன்று எம்மிடையே இல்லை. எனினும் அவர் வடித்த வாக இனங்கள் உருவாக்கிய தேர்கள் அவர் புகழை என்றென் ஆறும் நிலைநாட்டும். அன்னாரின் ஆத்மா சாந்தியுறப் பிரார்த்திப்போமாக!
28 -
 

மனித நேயத்தை நேசித்த மனிதம்
ஆயிரத்தி தொளாயிரத்து என்பத்தொன்பது. தொண்ணுறுகளில் நீர்கொழும்பு சிங்கமாகாளியம்மன் கோயிலுக்கு ஒரு சிங்கவாகனம் செய்வதற்காக யாழ்ப்பாணம் ான்று திருனெல்வேலியில் பல சிற்பாசியர்களைச் சந்தித்தேன். அதில் ஒருவர்தான்
ருவாளர் கந்தசாமி அவர்கள்.
முன்பின் தெரியாத திரு. கந்தசாமி அவர்கள் என்னை இன்முகம் காட்டி ரவேற்று தேனீர் பானம் தந்து விடயம் என்னவென்று கேட்டுத் தெரிந்துகொண்டு தற்கான விளக்கமெல்லாம் தந்து சுமார் ஒரு முக்கால் மணி நேரம் கதைத்தநில் ன், அவர் ஒரு அரசியல்வாதி என்றும் பொதுவுடமை கட்சியைச் சார்ந்தவர் ன்பதையும் அறிந்தேன். அவர் கதைகளிலிருந்து. அவர் மக்களை நேசிக்கிற விதாபிமானம் மற்றும் மனித நேயத்தை கடைப்பிடிக்கும் உண்மையான ஒரு பாதுவுடமை வாதியாய் மனித நேயத்தை நேசிக்கின்ற மா மனிதனாகக் கண்டேன் |வரின் இழப்பு அவர் குடும்பத்திற்கு மட்டுமல்ல மனிதநேயத்திற்கும், 'சிற்ப கலை லகிற்கும் ஒரு பேரிழப்பு
ஒரு மனிநம் மறைந்துவிட்டது.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை இநஞ்சுகிறேன்.
நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்ற தலைவர் இறைபணிச் செம்மல்
அ. மயில்வாகனம்

Page 27
நயினாதீவு மஞ்சம்
 

நயினையும் அமரரும்
தீவுப்பகுதி தெற்கு முன்னாள் பிரதேச பெலரும்,
உதவி அரசாங்க அதிபரும் , நயினை ரீ நாகபூஷணி அம்மன் கோவில்
அறங்காவலர் சபைத்தலைவ ருமாகி Il
*ョ
திரு. கா. ஆ. தியாகராசா அவர்களின் செய்தி
பூஜீ வானன் சிற்பாலய அதிபர், சிற்பக் கலாநிதி, சிற்பச் சக்கரவர்த்தி, சிற்பகலா ஜோதி, சிற்ப மாமணி, விஸ்வகுவதிலகம் என்றெல்லாம் புகழ்ந்து காலத்திற்குக் காலம் புகழ் ஏணியில் ஏற்றிவைத்தவர்களை யெல்லாம் இரங்கிவைத்து அமரராகி விட்டார் ஸ்தபதி செல்லையா கந்தசாமி என்ற செய்தி கேட்டு திடுக் குற்றேன். மற்ற பிர்கள் ஒரு காரன காரியங்களைக் கூறலாம். அமரரின் ாறவிற்கு. ஆனால் என்னைப் பொறுத்தமட்டில் մենք :) வாழ்வு 30 - 11 - 98 க்குள் முடியும் என்பதை அவர் திட்டவட்டவாக முன்கூட்டியே தெரி ந் தி ரு ந் தார். 1988 - 08 - 22 அன்று நயினாதீவிற்கு கடைசியாக வந்த போது அவர் கூறிய வார்த்தை ஐப்பசி மாதத்திற்குப் பின்தான் உங்களுக்கு திட்டமான ஒரு முடிவு என்னால் கூறமுடியும் . அப்படி இல்லை நீங்கள் 30 - 05 - 99 க்குள் தரக் கூடிய ஒருவருக்கு வேலையைக் கொடுத்து அந்த திகதிக்குள் உங்களின் எதிர் பார்ப்பின் பேரில் வெள் ளோட்டம் நடந்தால் இறைசித்தப்படி நானும் இருந்தால், முதலில் மகிழ் ச் சி அடைபவன் நாணாக இருப்பேன் என்றார். என்னுடனும், எமது பொருளாளர், செயலாளர் ஆகியோருடனும் கடைசியாக அமரர் உரையாடிய வார்த்தை இது. அன்று அவர் கூறியதன் பொருள், இன்று புரிந்து விட்டது. இது எம் எ ல் லோ ரு க் கும் தெரிந்தி விடயம். தனது இறுதி நாளை அவர் அறிந்
திருந்தார்.
- 29

Page 28
அமரர் அவர்களுடன் நயினை சுமார் இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாகத் தொடர்பு கொண்டுள்ளது. எழுபத்தியொராம், எழுபத்தியிரண்டாம் வருடம் அமரர் அவர்களால் நயினாதீவு செம்மணற் தம்புலம் பூரீ வீரகத்தி விநாயகருக்குச் சித்திரத் திருத்தேர் சிறப்பாகச் செய்யப் பட்டு வெள்ளேர்ட்டம் விடப்பட்டவேளையில் அவருடன் கலந்துரையாடும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது. எனது தந்தையார் அவரின் நீண்டகால நண்பர். அப்பொழுது அவர் அம்பாளின் ஆலயத்தின் பரம்பரைத் தர்மகர்த்தா வாகவும், சபையின் செயலாளராகவும் இருந்ததோடு வீரகத்தி விநாயகர் தேர்த்திருவிழா உபயகாரராகவும் இருந்தார். அந்தவகையில் அமரரைக் கெளரவிக்கும் பாக்கியம் எனது தந்தையாருக்கு அன்று கிடைத்தது.
1975-ம் ஆண்டு நவம்பரில் அமரர் எங்கள் ஆலயத் திற்கு அழகிய சித்திரத் தேர் ஒன்றை முருகப்பெருமா னுக்குச் செய்வதற்கு உடன்பட்டுச் சிறந்ததொரு கலைப் படைப்பாக அதனை அமைத்து 1967 யூனில் வெள்ளோட் டம் கண்டு பெருமைப்பட்டார். தொடர்ந்து கலையுல கமே கண்டு வியக்கும்வண்ணம் பல ஆலயங்களில் இருந்த மஞ்சங்கட்டு நாயகமான ஒரு மஞ்சத்தை அமரரைக் கொண்டு மஞ்ச உபயகாரர் அம்பாளுக்குச் செய்து, 12 - 07 - 1981-ல் வெள்ளோட்டம் கண்டு வீதியுலா வரச் செய்தார்கள். கண்டவர்கள் எல்லோரும் வியந்தார்கள். அன்னையின் கிழக்கு வாசல் கோபுரம்தான் வீதியுலா வருகின்றதா எனப் பிரமித்தார்கள். அப்படியான ஒரு கலைச்செல்வம் அந்த மஞ்சம். மேலும் புதிய முறையில் ஓர் சூரனையும், கலையம்சம் நிறைந்த பத்மாசனத்தை யும் ( தாமரை ) அம்பாளுக்குச் செய்துகொடுத்துப் பெருமை தேடினார்.
03-03-1986-ல் நயினாதீவில் ஏற்பட்ட வன்செயலால் அம்பாளின் பல இலட்சம் பெறுமதியான சொத்துக்கள் தீக்கிரையாக்கப்பட்டன. அவற்றுள் சிற்பக் கலாமணி ஆ. சீவரெத்தினம் அவர்களால் செய்யப்பட்டு 01-07-68-ல்
30 a

வெள்ளோட்டம் விடப்பட்ட பிள்ளையார் தேர், சிற்ப ஜோதி அமரர் கந்தசாமி அவர்களால் செய்யப்பட்ட சுப்பிரமணியர் தேர், மஞ்சம் என்பன எமது இழப்புக்களில் மீளப்பெறமுடியாத கலைப் பொங்கிசங்களாகும்.
அமரர் எப்போதெல்லாம் நயினாதீவிற்கு வருவாரோ அப்போதெல்லாம் தன் கைவண்ணத்தில் உருவாகிய அந்த மஞ்ச நிழல்ப் படத்தினைப் பார்த்துப் பார்த்துக் கண்ணிர் வீடுவார். இப்படியான ஒரு கலைச்செல்வத்தை இனி மேல் நான் செய்வேனா? என்று தன்னையே தான் கேட்பதுண்டு என்று கூறுவார். நீங்கள் செய்வீர்கள் அந்தத் திருப்பணியை உங்களுக்குத்தான், உங்களைக் கொண்டுதான் நாம் செய்ய எண்ணியுள்ளோம், என்று அவருக்கு நாம் அடிக்கடி கூறியுள்ளோம். இந்த அடிப் படையில் தான் அமரர் எமது அழைப்பை ஏற்று 08-08. 1998-ல் வந்து உரையாடியதன் பின் 13-08-98-ல் வந்து மரங்களையெல்லாம் கணக்கெடுத்துத் தேவைக்கு ஏற்றபடி அட்டி போட்டு வைத்து விட்டுச் சென்றவர், மீண்டும் 22 - 08 - 98-ல் வந்து தனது நிலைப்பாட்டினைக் கூறி தன்னால் பொறுப்பேற்றுச் செய்யமுடியாமல் உள்ளதைக் கூறியதோடு அம்பாளின் வீதியில் நல்ல ஒரு மஞ்சம் ஒடவைப்பீர்கள் என்றார்.
உடனே உங்கள் கலைச்செல்வம் ஓடிய வீதியில் அதே போன்ற ஒரு மஞ்சம் கட்டாயம் 30 - 05 - 99-ன் முன் ஒடும், நீங்கள் மனம் தளரவேண்டாம் என்று கூறித் தகுந்த மரியாதையுடன் காளாஞ்சி கொடுத்து வழியனுப்பி வைத்தோம் . அந்த ** மனிதநேயம் பூரணமான மனத் திருப்தியுடன் எம்மிடமிருந்து விடைபெற்றது' .இவருக்குக் கொடுங்கள், அவருக்குக் கொடுங்கள் என்று எவரையும் அவர் சிபார்சு செய்யவில்லை.
அன்னாரின் நினைவாக அவர் பாதுகாத்துத் தந்த
அச்சுக்களில்தான் புதிய மஞ்சம் உருவாகின்றது. அன்னா ரீன் ஆத்ம சாந்திக்காக அவரால் 1997-ல் அவரின்
- 31

Page 29
இறுதிக்காலத்தில் எமக்குச் செய்துதரப்பட்ட அம்பாளின் விக்கிரகம் ஒன்று கண்டிப்பாகப் புதிய மஞ்சத்தில் இடம் பெறும். இதுதான் நாங்கள் அவருக்குச் செய்யும் அதி உன்னதமான கெளரவமாகும். அவரின் இழப்பால் துன்பு றும் குடும்பத்தாருக்கும், அவர்தம் உறவினர்கட்கும். மற்றும் அவரது சிற்பாலய கலைஞர்களுக்கும் எமது ஆழ்ந்த ஆறுதல் வார்த்தைகளைக் கூறி, எல்லாம் வல்ல அன்னை பூரீ நாகபூஷணியின் பர்தார விந்தத்தில் அமரர் அமர்ந்திருப்பார் என்ற நம்பிக்கையுடன் தேறுதல் அடைகின்றேன். 'X
ஓம் சாந்தி சாந்தி!! சாந்தி!!!
ஆ. தியாகராஜா
தலைவர், அறங்காவலர் Fo
பூரீ நாகபூஷணி ஆலயம்
དེ་
32 a

ஈடுசெய்ய முடியாததே!
S. gymnas uurT
மதிப்புக்குரிய ஒரு அன்பான சகோதரனை இழந்து மனம் வெதும் பிநிற்கிறேன். என்றென்றும் அவரது வழி காட்டலை நாடி நிற்கும் வேளையில் அவரது மறைவு ஈடு செய்ய முடியாததே!
அன்னாரால் கடைசியாக உ ரு வா க் க ப் பட் ட பத்திரகாளி அம்பாளின் தேர் பூர்த்தி பெறும் நிலையை எட்டிய வேளையில் அவரின் மறைவு எம் எல்லோருக்கும் மனவேதனையைத் தந்து கொண்டேயிருக்கும். அவரது அயராத திறன்மிக்க சேவைகளைப் பாராட்டிக் கெளர விக்கும் வேதனை தனக்குத் தேவையில்லையெனப் பல முறைகள் சொன்னதற்கு இணங்க, எம்மை ஏமாற்றிவிட்டு, தனது சேவைகளை நிறைவேற்றியாயிற்றே என்பதுபோல மறைந்தே போனாரே "விதியின் விளையாடல்".
பொது உடமை வாதவியலில் தனித்துவத்தை இறுதி வரை பேணியவரும், சரியென்பதை துணிவுடன் எதிர்ப் புகள் எதனையும் பொருட்படுத்தாது கடைப் பிடித்த பெருமைக்குரியவர். நுட்பகலைத்திறன் இயல்பாகவே அவருடன் பிறந்த சொத்து. எந்த உருவங்களை வடித் தெடுத்தாலும், அவற்றில் இயற்கைத் தோற்றம் பிரதி பலித்துப் பார்ப்பவர் யாவரையும் திகைப்புக்குள்ளாக்கி மெச்சவைக்கும் ஆற்றல் அவருக்கு உரித்தானதே. இவை யெல்லாவற்றையும் கலையுலகம் இழந்துள்ளது உண்மையே உண்மை. அவரது குடும்பத்தினர் யாவரும் அவரது நீடித்த வழிகாட்டல், அன்பு, பாசம் எல்லாம் இழந்த நிலையில் இருப்பது எம் எல்லோரதும் உள்ளம் நெகிழ்ந்து தான் இருக்கிறது. அவர்களது உள்ளம் சாந்தியடைய எம் பிரார்த்தனைகள்.
"எல்லாம் வல்ல இறைவன் நல்வழி காட்டி மனச் சாந்தியுடன் வாழ அருள்புரிவாராக".
- 33

Page 30
எங்கள் அன்புத் தெய்வமே! அறிவுச் செல்வமே! எங்கே சென்றீர்கள்?
க. முருகானந்தன்
திருநெல்வேலிப் பதியிலே திருவிளக்காய் ஒளிர்ந்தவர், எங்கள் கந்தசாமி அப்பு எனும் பெரியார் . ஒருவர் திறமை சாலியாக இருந்தால்மட்டும் அவரை உலகம் மதிப்பதில்லை. தனது திறமையை உலகத்திற்குப் பயன்படச் செய்வது தான் முக்கியமானது, அவ்வகையில் தனக்கென வாழாப் பிறர்க்குரியாராய் வாழ்ந்தவர்தான் இந்தப் பெரியார். முதலில் செய்யுந் தொழிலிலே அவரே பெரியவராய் விளங்கினார், அவருக்கு நிகர் வேறு எவருமில்லை. யாழ் குடா நாட்டிலே எந்தப் பகுதியிலுமிருந்து அவரது சேவையைத்தேடி வருபவர்கள் அனேகர், அவரது தேர் வே லை கள், மஞ்சவேலைகள், வாகன வேலைகள் அதற்குச் சான்று பகரும். அவரது வேலைத் திறமைக்குச் சிகரம் வைத்தாற் போல அ  ைம ந் த து தான் திருநெல்வேலிப் பத்திரகாளி அம்பாளின் திருத்தேராகும்.
இப் பெரியார் நான் திருநெல்வேலியிலே குடியமர வந்த நாள் தொட்டு, என்னோடு அன்னிய உன்னியமாகப் பழகி அன்பு எனும் கயிறுகொண்டு என்னைப் பிணித்தார், அன்று முதல் இன்றுவரை இரு வ ரும் குருவும் சீடரும் போல நட்புரிமை பூண்டு வாழ்ந்து வந்தோம். நானும் நல்லாரைக் காண்பதுவும் நன்றே, நல்லார்சொற் கேட்பது வும் நன்றே என்ற முதுமொழிக்கிணங்க, இவரை என் சற்குருவாக மதித்து, இவர் சொற்படி நடந்துவந்தேன். இவ்வாறு பழகிவரும் நாளில் இப்பெரியாரை நான் அப்பு, அப்பு என்று அன்பாக அழைத்துவந்தேன். அவரும் * தம்பி என்னிடம் வேலைசெய்ய வாரும்’ என்று அன்பாக அழைத்து வேலைகள் தந்து உதவினார். மேலும் பத்திர காளி கோயில் வேலைகள் செய்யும்போதும் என்னையும் அழைத்து வேலைசெய்ய வைத்தர்ர். அதன் பின்னரே
34 -

எனக்கும் அவருக்கும் கூடிய தொடர்பு ஏற்பட்டது. அதன் பின்னர் அடிக்கடி என்னிடம் வருவார். " " ஏன் தம்பி இன்றைக்கு வேலை செய்யவில்லையோ' என்று கேட்பார். " இல்லை அப்பு ஒருவரும் வரவில்லை ' என்று விடை அளிப்பேன். " " அப்ப தம்பி! ஒருக்கால் நல்லூரடிக்குப் போகவேணும் வரமுடியுமோ, அல்ல.’’ என்று கேட்பார் . நானும் என்ன வேலை இருந்தாலும் ஒதுக்கித் தள்ளி விட்டு, ' ஒம்; அப்பு வருகிறேன்' என்று கூட்டிச் செல்வேன்.
இதன் பின் இரவுவேளைகளிலே அடிக்கடி வருவார். தான் இளமையில் இருந்த கதைகள், சுழிபுரம் வீரபத் திரப் பெருமானின் பாரம்பரிய வரலாறுகள், பறாளை முருகன் கதைகள் எனப் பல்வேறு இனிமையான கதை களை ஆதியோடந்தமாகக் கூறுவார். இக்கதைகள் கூறும் போது அடிக்கடி "உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்" என்ற இராமலிங்க வள்ளாரின் பாடலையே அடிக்கடி எடுத்துக்காட்டுவார். இவர் யார் நின்றாலும் சரி, யார் கோபித்தாலும் சரி, உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசாது, நேரிலே பேசிவிடுவார். இதனாலேதான் இவர் "ஏதார்த்தவாதி”, * வெகுசன விரோதி" எனப் பலராலும் பகைக்கப்பட்டார். *கோடானு கோடி கொடுப்பினும் தன்னுடைய நாக் கோடாமைகோடி பெறும் ' என்ற முதுமொழிக்கமையத் தான் கூறிய வார்த்தையை ஒருபோதும் மாற்றமாட்டார். இவர் எங்களுக்கு வேலைகளைத் தந்துவிட்டுச் சவரம் செய்வதற்காகக் கடைக்குச் சென்றுவிட்டு வருவார். வரும் போது அவருடைய திருமுகச் செவ்வி நோக்கில், இளமைத் துடிப்புடையதாக இருக்கும்.
* வெள்ளைக் கலையுடையும் வீறுமிகு நடையும் கொள்ளைச் சிரிப்புக் குமிழும்கடை வாயும் மெள்ள அருளலைகள் வீசும்திரு விழியும் கள்ளமிலா நெஞ்சுமினிக் காட்டிடுவார் ஆரேயோ?" என என் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும்.
- 35

Page 31
இது நிற்க, இவர் திடீரென நோய்வாய்ப்பட்டு, யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட் டிருந்தார். சென்று பார்த்தபோதெல்லாம் சுகமேயே இருந்தார். சத்திரசிகிச்சை செய்யப்பட்டபின் சென்று பார்த்தேன், அறிவு வரவில்லை. சரி நாளைக்கு வந்து ஆறுதலாகக் கதைக்கலாம் என எண்ணியிருந்தேன். மறு நாட் காலையே ஊனுடலம் பாரில் விழ, வானுலகம் புகுந்துவிட்டார் கந்தசாமி அப்பு எனும் அவலச்செய்தி, என் காதில் அனற்பிளம்பாய்ப் புகுத்து உளத்தை பொசுக்கி விட்டது அவ்வேளையில்.
அது மட்டுமன்றி அப்பு சுகமாகத் திரும்பி வருவார், மிகுதித்தேர் வேலைகளெல்லாம் செய்து முடித்து விட்டு வெள்ளோட்ட விழாவை நடத்தி வைப்பார் என்றெல்லாம் எண்ணி இருந்து, இலவு காத்த கிளியாகி விட்டேன், “ஒன்றை நினைக்கில் அது வொழிந்திட் டொன்றாகும்; என்னையாளும் ஈசன் செயல்" என்றவாறு மு டி ந் து விட்டது. என்ன செய்வது எமது தேர் வெள்ளோட்டத்திற்கு எம் குருநாதர் இல்லையே என்று எண்ணும்போது எமது துன்பம் ஆற்றொணாக் கொடுநோயாகிறது.
எது என்னவானாலும் ஒருநாட்பழகினும், பெரியோர் கேண்மை இரு நிலம் பிளக்கவேர் வீழ்க்கும்மே என்ற முதுமொழிக் இணங்க இப்பெரியாரிள் கே ன்  ைம மூலவேராகி என் உளத்தில் அழப் பதிந்துவிட்டது. என் செய்வது எல்லாம் விதி வசமாய் முடிந்துவிட்டது. நாம் துன்பப்படுவதனால் ஆவதொன்றுமில்லை. பேர், இளமை, இன்பம், பிணி, மூப்பு, சாக்காடு இவை ஆறும் ஒரு மனிதனின் வாழ்க்கைப் படிகள் என்பதையும் மனத்திற் கொண்டு, எல்லாம்வல்ல வீரபத்திரர் சமேத பத்திரகாளி அம்பாளின் பாதாரவிந்தங்களிலே, இம் மாமனிதராம் பெருந்தகையை அணைத்தருளும் படி யும், அவரின் குடும்பத்தினருக்கும், பேரளுள் நல்கி நல்வாழ்வு அளிக்கும் படியும் வேண்டுதல் செய்து அமைகின்றேன்.
சர்ந்தி சாந்தி! சாந்தி! 36 -

திசைகாட்டி
ச. வேலாயுதம்
கந்தசாமி அண்ணரின் மரணச்செய்தி கேட்டு தாங் கொணாத் துயரம் அடைகின்றேன். எனது வாழ்வில் நான் கண்ட சிறந்த நண்பர் - சகோதரன் அமரர் செ. கந்தசாமி அண்ணர் என்பதில் நான் பெருமை கொண்டவன். எனது குடும்பத்தின் மீது அளவிலா அன்பு, பாசம் கொண்ட நல்ல மனிதரை இழந்தது பெரும் துயரைத் தருகின்றது. தான் பிறந்த ஊராகிய திருநெல் வேலி மக்களுக்கு நல்ல திசையைக் காட்டிப் போராடிய ஒரே ஒரு முற்போக்கு உள்ள நல்லவரை, எமது சமூகம் எவ்வளவு தூரம் வருத்தினார்கள் என்பதையும் நான் அறிவேன். நன்றி கெட்ட சமூகம் ஒரு நல்ல பண்பான உயர்ந்த குணாதிசயங்களைக் கொண்ட ந ல் ல வ  ைர இழந்துள்ளது. என்னைப் பொறுத்த அளவில் நான் ஒரு நல்ல இதயம் படைத்த சகோதரனை இழந்து விட்டேன். நல்ல நண்பரை இழந்து விட்டேன் என்ற வேதனையை என்னால் தாங்க முடியாது தவிக்கிறேன்.
முழுமையாக நின்று கடமை செய்ய வேண்டிய நான் இன்று ஊர் திரும்ப முடியாத நிலையில் கண்ணிர் வடிக்க வேண்டிய நிலையில் வேதனைப் படுகின்றேன். தலை சிறந்த சிற்பக்கலைஞர் நம்மை விட்டுச் சென்று விட்டார் என நினைக்கும் போது நல்ல உள்ளங்கள் கலங்காமல் இருக்க முடியாது. கந்தசாமி அண்ணர் என் நினைவை விட்டு நீங்காத ஒரு நல்லவர். அன்னாரின் ஆத்மா சாந்தி யடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
சாந்தி ! சாந்தி! சாந்தி!

Page 32
சிற்பக் கலை
வி. கணபதி ஸ்தபதி , பி. ஏ.
மாமல்லபுரம்,
தமிழ்ப் பெருமக்கள் பேணிவளர்த்த கலைகளில் நாட்டியம், ஒவியம், சிற்பம் , இசை, கவிதை ஆகிய ஐந்தும் அழகுக் கலைகளாகும். முன்னைய மூன்றும் கண் வழிச் சென்று உள்ளத்தை இன்புறச் செய்வன. பின்னைய இரண்டும் செவிவழிச் சென்று உள்ளத்திற்கு உவகை யூட்டுவன. உள்ளத்தில் பொங்கி வழியும் உணர்ச்சிப் பெருக்கைச் சுவை குன்றாது முறைப்படுத்தி எடுத்துரைப் பதால் கவிதை பிறக்கிறது, வரைவதால் ஒவியம் தோன்று கிறது, வடிப்பதால் சிற்பம் உருவாகிறது.
சிற்பி இயற்கைக் காட்சிகளையும் இயற்கை வடிவங் களையும் பிரதி செய்வதை விடுத்துச் சிறு சிறு மாற் றங்களைக் கற்பித்துத் தனது படைப்புக்களை உணர்ச்சி மயமாக்குகிறான். அவன் மனம் எவ்வெவ்வாறு வளை கிறதோ, சுழிகிறதோ, நெளிகிறதோ, குழைகிறதோ அவ்வாறெல்லாம் அவனது வடிவங்கள் உருவெடுக்கின்றன. இறைவனைக் கருணை வடிவமாகவும், அன்பின் உருவ மாகவும் உணர்கின்றான், இவற்றை வடிவத்திலே தெளி வாகக் காட்டுவதற்கு மனித உடலின் நரம்புகளும், எலும்புகளும் தசைகளின் மேடு பள்ளங்களும் தடையாக நிற்கின்றன. ஆகவே இவற்றைக் கட்டுப்படுத்தி மறைத்து, அளவோடு உருண்டு திரண்ட சதைப்பற்றோடு கூடிய உடலமைப்பில் வைத்துக் காட்டினால்தான் கருத்து விளக்கம் பெறும் என்ற முடிவுக்குச் சிற்பி வருகிறான். அத்தோடு முகத்திலே தவழும் கருணை, அன்பு ஆகிய பண்புகள் தடையின்றி உடலெல்லாம் வழிந்தோடுமாறு காட்ட விழைகிறான். இயற்றிவிடுகிறான்.
38 -

சிற்பக் கலையில் மனித வடிவங்களை விடுத்துப் பல் வேறு விலங்குகளின் வடிவங்களையும் காணுகிறோம். வீரவுணர்ச்சிக்கு உவமையாக நாம் எடுத்துக் காட்டுவது சிங்கம் அல்லது புலியேயாகும். சிற்ப உலகிலே நடமாடும் சிம்ம வடிவம் இயற்கைச் சிம்ம வடிவத்தை ஏதோ ஒரளவு ஒத்திருப்பினும் பெருமளவு மாறுபட்டிருப்பதையே காண் கிறோம். உண்மை யாதெனில் சிம்மம், உடலுறுதி மிக்கது, வல்லமை வாய்ந்தது, வேகமாய்ப் பாய்வது, பார்ப்போர் உள்ளத்தில் பய உணர்ச்சியைக் கிளறுவது, வீரம் மிக்கது. இயற்றிய வடிவம் சிம்மத்தையும் நினைப்பூட்ட வேண்டும். சிம்மத்தின் தன்மைகளையும் பிரதிபலிக்க வேண்டும் . எனவே முறிந்த புருவமும், உருண்டு மிரட்டும் கண்களும், இளித்த வாயும், கோரைப் பற்களும், மடித்த உதடும், சுருக்கிய நுதலும் முகத்திலே முறைபட அமைத்து உடல் உறுதிப்பாட்டினைத் திரண்டு பருத்த சதைப்பற்றினா லும் புடைத்த நரம்புகளினாலும் வீரச்சுவை மிளிர இயற்றுகிறான். இது மட்டுமன்று, இயற்கையில் காணும் , பறவை இனங்களின் சிற்ப வடிவங்கள், சிற்பியின் கரங் களிலே தனித்தன்மை வாய்ந்தனவாக வடிவெடுக்கின்றன. நமது சிற்பிகள் தங்கள் சிற்ப வடிவங்களில் உடல் அழகைக் காட்டிய பாங்கே தணி, உடலுறுப்புக்களுக்கேற்றவாறு பொருத்தமான இடங்களில் கண்கவர் அணிகளைப் பூட்டி அழகு சேர்த்த முறையும் பாராட்டுதற்குரியதாகும்.
இத்தகைய அரும்பெரும் சிறப்பியல்புகள் வாய்ந்த நமது சிற்பக்கலை, மக்கள் கலையாகும். எவ்வாறெனில், சமுதாயத்தின் வாழ்க்கை நெறிகளையும் உயர்ந்த நோக் கங்களையும், பண்பாட்டின் சிறப்பையும், தெய்வீக வடி வங்களையும், இக்கலை பிரதிபலிக்கிறது. தனிப்பட்ட தங்கள் உணர்ச்சிகளை மட்டுமல்லாது, சமுதாயத்தின் உணர்ச்சிகளையும் உள்ளக்கிடக்கைகளையும் சிற்பிகள் சமைப்பதால் பண்டைப் பெருமக்கள் சிற்பக் கலையைத் தங்கள் கலையாகவே கருதி ஆர்வத்தோடு பேணி வளர்த்
தனர்.
*
- 39

Page 33
பாறியதோ ஒர் ஆலமரம்?
கனகரட்னம் தர்மகுமார்
திருநெல்வேலியூர் பிரதம ஸ்தபதியாரும், யூரீவாணன் சிற்பாலய உரிமையாளரும், எங்கள் குருநாதருமாகிய மறைந்த அமரர்
செல்லையா கந்தசாமி அவர்களுக்கு எங்கள் அஞ்சலிகள்
அன்பின் திருவுருவே! அமைதியின் பெட்டக மே! மங்காத மணிவிளக்கே ! உன் ஒளி மறைந்த மாயம் என்ன? ஐயா விதிசெய்த சதியோ ? வீசியதோ ? பெரும் சூறாவளி திருநெல்வேலியிலே பாறியதோ ஒர் ஆலமரம்? காத்திருந்த காலன் உன்னைக் கவர்ந்து சென்றுவிட்டான் அதைப் பார்த்திருந்த நாங்கள் இன்று பரிதவித்து
நிற்கின்றோம் சித்திரத் தேரும் உன் புகழ் பாடும்; சிற்பிகள் மனமும் கதிகலங்கும் காலத்தால் உன் புகழ் என்றும் காவியமே பாடும் கலங்கிடும் எமக்கு ஆறுதல் யாரையா? ... உங்கள் நினைவோடு என்றும் இருப்போம்; இது உண்மை! உன் பாதைதனைப் பின் தொடர்வோம்.
අම්

ஆன்மிகம்
சுவாமி விவேகானந்தர்
தூய்மையாக இருப்பதும் மற்றவர்களுக்கு நன்மை செய்வதும்தான் எல்லா வழிபாடுகளின் சாரமாகும். ஏழைகளிடமும், பலவீனர்களிடமும், நோயாளிகளிடமும் சிவபெருமானைக் காண்பவனே உண்மையில் சிவபெரு மானை வழிபடுகிறான். சிவபெருமானை விக்கிரகத்தில் மட்டும் காண்பவனுடைய வழிபாடு ஆரம்ப நிலையில் தான் இருக்கிறது.
ஒரு மனிதன் உடலாலும், உள்ளத்தாலும் தூய்மை யாக இருந்தால் அன்றி கோயிலுக்கு வருவதும் சிவபெரு மானை வழிபடுவதும் பயனற்றனவாகும். உடலும் உள்ளமும் தூய்மையாக இருப்பவர்களின் பிரார்த்தனை கள் சிவபெருமானால் நிறைவேற்றப்படுகின்றன. யார் தூய்மையற்றவர்களாக இருந்துகொண்டு சமயத்தைப் பற்றி மற்றவர்களுக்குப் போதிக்கிறார்களோ அவர்கள் இறுதியில் தோல்வியடைகிறார்கள்.
அமைதியும் தூய்மையும் கொண்ட ஆன்மிகத்தில் இரவும் பகலும் அமிழ்ந்து வாழ முயலுங்கள். எது பயனற்ற மாயாஜாலமோ அதன் நிழல்கூட உங்கள்மீது படவேண்டாம் . உங்கள் காலின் கட்டைவிரல்கூட அதன் மீது படியவேண்டாம்.
எப்போதுமே இதயத்தைப் பரிபக்குவப்படுத்திக்கொள் ளுங்கள். நமது சமுதாயத்தின் இரத்தம் ஆன்மிக வாழ்க் கையாகும். அது தூய்மையோடிருந்து வலிமையோடு சீராக ஒடினால் மற்ற எல்லாம் சரியாக இருக்கும். அந்த இரத்தம் மட்டும் சுத்தமாக இருந்தால், அரசியல், சமுதா யம், பொருளாதாரம் முதலியவற்றிலுள்ள குறைபாடு கள் எல்லாம் நீங்கி நாட்டின் வறுமைகூட நீங்கிவிடும்.
a 41

Page 34
சன்மார்க்கம்
திரு. வி. கலியாணசுந்தரனார்
சத் - உண்மை, மார்க்கம் - நெறி, உண்மை நெறியைத் தருவது சன்மார்க்கம். அம் மார்க்கம் எமக்கு நலன் விளைப்பது - தூய்மை கொடுப்பது. இம் மார்க்கத்தினால் ஏற்படும் ஒருமைப்பாட்டைச் சி  ைத ப் ப த ந் கு - பூசல் விளைப்பதற்கு ஆங்காங்கே நாளடைவில் மடங்க ள் தோன்றின. மடங்களில் 'குருமார்கள்" கோ யி ல் கொண்டார்கள். அவர்கள் தங்களைக் கடவுள் பிரதி நிதிகள் என்றுஞ் சொல்லிக் கொண்டார்கள். அவர்களா லேயே உலகில் பல கடவுள், பல சமயம் என்ற எண்ணம் உண்டாயிற்று. சமயப்போர்களை ஆங்காங்கே நடாத்தின வர்களும் அவர்களே. அவர்களின் கொடுஞ் செயல்கள் பலப்பல. அவைகளை நினைக்குந்தோறும் நினைக்குந் தோறும் நெஞ்சங் குழைகிறது. கடவுள் பெயராலும், சமயப் பெயராலும் எவ்வளவோ அக்கிரமங்கள் அவர் களால் செய்யப்பட்டு வருகின்றன.
சம்பிரதாயங்கள், கண்மூடி வழக்கவொழுக்கங்கள் முதலிய பேய்கள் மடங்களினின்றும் பிறக்கலாயின. இப் பேய்கள் இப்பொழுது உலகத்தையே பிடித்தாட்டுகின் நீறன. இப்பேய்களைச் சத்தெனுஞ் செம்பொருளாகவும் மக்கள் கொண்டிருக்கிறார்கள். சம்பிரதாயங்களும் கண்மூடி வழக்கவொழுக்கங்களுமல்லவோ கடவுள் நெறியாகக் கொள்ளப்படுகின்றன, என்ன அநியாயம்! சம்பிரதாயங் கட்கும், கண்மூடி வழக்க வொழுக்கங்கட்கும், கடவுள் நெறிக்கும் என்ன தொடர்பு இருக்கிறது? மடத் தலைவர் களின் சூழ்ச்சியை என்னென்று சொல்வது? அச்சூழ்ச்சி மன்பதையை வதைக்கிறது; சிதைக்கிறது.
மடத் தலைவர்களின் அட்டூழியங்கள் கோயில்களிலும் புகுந்து கொண்டன. கோயில் க்ள் மடத் தலைவர்கள்
42

பார் வை யில் வந்த நாள் தொட்டுக் கோயில்களிலும்
துன்மார்க்கப் பேய்கள் நுழைந்து கொண் டன. இயற்கையைக் கோயிலாய்க்கொண்ட ஆண்டவனுக்குச் செயற்கைக் கோயில்கள் வேண்டுவதில்லை. மக்கள்
இயற்கைக் கடவுளை நினைந்து அமைதி பெறுதற்குத் தனி இடங்களை நாடினார்கள். அத் தனி இடங்களில் கோயில் கள் அமைக்கப்பட்டன. அமைதிக்கென ஏற்பட்ட கோயில் கள் இப்பொழுது எந்நிலையிலிருக்கின்றன? ஆண்டும் மடப் பேய்கள் தாண்டவம் புரிகின்றன.
நமது நாட்டுக் கோயில்களில் மற்றப் பேய்களுடன் சாதிப்பேயும் தாண்டவம் புரிகிறது. ஆண்டவன் கோயிலில் தீண்டாமைப் பேயும் நுழைந்து விட்டது. கோயிலில் தீண்டாமைப்பேயை நுழைத்த தேசம், மதம், மடம், நூல் முதலியன சபிக்கப்பட்டே போகும். தீண்டாமைப் பேய் ஒழியும் வரை நமது தேசத்துக்கு விடுதலை இல்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனிபோல் விளங்கிவிட்டது? ஆண்டவனை நினைவூட்டுங் கோயில்களை மடங்கள் பாழ் படுத்திவிட்டன. மடங்களால் விளைந்துள்ள தீமைகள் எண்ணிறந்தன; எண்ணிறந்தன.
இவ் அல்லல்களை எப்படித் தொ  ைலப் பது? மன்பதைக்கு உண்மை விடுதலையை எப்படித் தேடுவது? "உலகம் இப்படித் தான் இரு க் கும்; இவைகளைப் போக்குவது என்பது பைத்தியக்காரப் பேச்சு" என்று சிலர் கருதுகிறார்கள். அது தவறு. சமயத்தின் பெயராலும் அரசியலின் பெயராலும் சூழ்ச்சிகள் பெ ரு கப் பெ ரு க உலகம் என்னாகும்? சூழ்ச்சிகளைத் தொலைக்க முயன்றே தீரல்வேண்டும். பழைய சூழ்ச்சிகளைத் தொலைக்கப் புது சூழ்ச்சிகளில் தலைப்படுதல் கூடாது. தூய நெறியில் தலைப்பட்டுச் சூழ்ச்சிகளைப் போக்குதல் வேண்டும். அதற்கு என் செய்வது?
தொல்லைகள் எங்கே இரு ந் து பிறக்கின்றன? மடத்தார் சூழ்ச்சியாலும், மற்றவர் சூழ்ச்சியாலும் மக்கள்
a 43

Page 35
மதிமயங்கித் தங்களுக்குள் வேற்றுமை இருப்பதாகக் கருதி ஒருவரோடொருவர் பிணங்கு வ தி னின் று மே தொல்லைகள் பிறக்கின்றன. இத் தொல்லைகளை ஒழித்தல் சாதி இயக்கங்கள், மத இயக்கங்கள், அரசியல் இயக்கங்கள் முதலியவற்றால் இயலுமோ? இயலவே இயலாது. சாதி, மதம், அரசியல் முதலியவற்றால் பிரிவும் பிணக்கும் விளைந்துவருதல் கண்கூடு. அங்ங்ணமாக, அவ் வியக்கங்களில் தலைப்படுவதால் என்ன பயன் விளையும்? ஒன்றும் விளையாது.
பிரிவு பிணக்குகளைக் கடந்து நிற்பதாய் - பிரிவு பிணக்குகளை ஒழிக்கவல்லதாய் - ஆன்மநேய ஒருமைப் பாட்டை வளர்க்கவல்லதாய் - உலகத்தார் அனைவர்க்கும் உரிய ஒன்றாயிருப்பதாய் - உள்ள ஒரியக்கமே தேவை! அவ்வியக்கம் எது என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். அது சன்மார்க்க இயக்கம் என்பது நனிவிளங்கும்.
சன்மார்க்கத்திற்குச் சாதியில்லை; மதமில்லை; நாடில்லை; நகர மில்லை; எக்கட்டுமில்லை, எங்கும் நீக்க மற நிறைந்துள்ள ஒன்றன்மீது கருத்துச் சென்றால், வேற்றுமை யாண்டிருந்து தோன்றும்? இப்பயிற்சி மக்க ளிடை ஓங்க ஓங்க உலகில் பல தொல்லைகள் ஒழியும். *சத்தெனுஞ் செம்பொருளே எல்லாம்வல்ல இறை; அதன் கோயில் இயற்கை' என்னும் எண்ணம் எத்தகைச் சமரசத்தை வளர்க்கும் என்பதைச் சொல்லவும் வேண் டுமோ? சமரசத்தை வளர்க்கும் ஆற்றல் சன்மார்க்கத் துக்கே உண்டு.
ஆதியிலே வழிபாட்டுச் சார்ந்த பெருங் கோவில் பல சாதிமதச் சாக்கடை யாய்ச்
சண்டாளர் இருப்பி டமாய் நீதி அறம் அழித்து வரல்
நின்மலனே! நீயறி வாய் கோதுகளை அறுத்தொ ழித்துக்
குணம்பெருகச் செய்வர் யோ?
திரு. வி. க.

உண்மைகள்
- அறிஞர் அண்ணா
மக்களின் ஒழுக்கம்தான் ஓர் அரசின் அச்சாணி போன்றது. ஒழுக்கம் நிறைந்த மக்களைச் சமதர்ம அரசால் மட்டுமே உருவாக்க முடியும்.
திருக்கோயிலை வலம்வராத கால் என்ன காலோ? என்று பஜனைகள் நடக்கின்றன. அதே நேரத்தில் அந்தக் கோவிலின் உள்ளே நுழையாதே! என்று ஆதித்திராவிடனைத் தடுக்கும் காரியமும் நடக்கிறது.
நடக்கலாமா?
காலத்துக்கேற்ற கருத்துக்களே தேவை! கருத்துக் களுக்கேற்ற காலம் அல்ல. காலத்திற்கொவ்வாத கருத்துக்களை ஒதுக்கவேண்டும், போக்கவேண்டும்;
நாடு முழுவதிலும் இன்றுள்ள நலிவுநிலை கண்டறிய, கேடு களைந்திட, நலம் விளைத் திட - உருக்குலைந்து கிடப்போர் ஒருமைப்பட்டு உழைத்திடவேண்டும்.
எவன் பொதுமக்களின் கைதட்டுதலைப் பெறுவதற் காகத் தன் கொள்கைகளை மாற்றிக்கொள்ளாமல் இருக்கிறானோ, அவனே சிறந்த மனிதன். ஒப்புயர் வற்ற இலட்சியவாதி.
கோவிலுக்குள்ளிருக்கும் சாமிக்குச் சக்தி உண்டோ, இல்லையோ, கட்டிடக்கலையின் சித்திரவேலைப்பாடு சிற்பியின் கைத்திறனைப் புகழ்பாடுகிறது.
அடக்குமுறைக்கு எதிராகத் திரண்டெழுந்த சமுதா யத்தின் வரலாறு மட்டுமே உயிர்த்துடிப்பாகவுள்ளது.
S.

Page 36
0.
1.
12.
13.
14,
5.
46 -
காவி உடையைக்கண்டு மயங்காதீர்கள். கள்ளனும் காமுகனும் கூடத்தான் காவியுடையணிந்து சமுதா யத்தை வஞ்சிக்கின்றான். சீலராக இருக்கிறாரா? எனக் கண்டறியச் செயலைக் கவனியுங்கள்.
பசி, பட்டினி, வறுமை, இழிவு, பழி, புறக்கணிப்பு, கொடுமை, மரணம் எதுவும் நிதானியின் மன உறுதியைக் குலைக்காது.
நல்ல தோழமை, நல்ல உரையாடல், இவையிரண் டுமே நல்லொழுக்க வாழ்வின் நாடி நரம்புகள் .
மாற்றான் வீட்டுத் தோட்டத்து மல்லிகையும் மணம் வீசும்.
மதப்புரட்சி என்பது தெய்வ நிந்தனையன்று! சிந்தனையில் தெளிவு! அறிவாற்றலின் பரிபக்குவம் இவைகளின் வெளிப்பாடே மதப்புரட்சியின் அடித் தளம்.
வாடிய மலரை வீசி எறிகின்றோம். உடைந்த கண் ணாடிப் பாத்திரத்தைக் குப்பை மேட்டிலே வீசு கிறோம். ஆனால் அர்த்தமும், அவசியமும் அற்றுப் போன பழங்காலச் சடங்குகளை மட்டும் இன்னும் விட்டுவிட மறுக்கிறோம் . இருக்கலாமா?
அறிவுக்கொவ்வாத மூடக்கொள்கைகள், கண்மூடித் தனமான சித்தாந்த மயக்கங்கள், பகுத்தறிவுக் கொவ்வாத சம்பிரதாயங்கள் இருக்கும்வரை சுரண் டும் வர்க்கமும், சுரண்டப்படுகின்ற வர்க்கமும் இருந்துகொண்டே இருக்கும்.
அறிவுச் சிந்தனை எங்கிருந்தும் பிறக்கலாம்; சிந்தை யில் உருவாகும் தெளிவில்தான் ஏக்கம் நிறையா இன்பவாழ்வு நிலைத்திருக்கும்.

ஆளுமை மிக்கவர்
கா. செ. பத்மநாதன்
(சமாதான நீதவான்)
அமரர் செல்லையா கந்தசாமி அவர்கள் தொழிலில் நிறைகுடமாகத் திகழ்ந்தவர். நாவன்மை மிக்கவர். எவ்வளவு அலட்சியப்படுத்தப்பட்டாலும் - ஏளனத்துக்கு ஆளானாலும், எடுத்த காரியத்தை முடித்தே தீருவது என்ற திடசித்தமும் - விடாமுயற்சியும் இருந்தால், வெற்றி கிடைத்தே தீரும்; தூற்றினோரும் துதிபாடி நிற்பர் ஏளனம் பேசினோரும் போற்றுவர்; என வாழ்ந்து காட்டிய பெருந்தகை .
அன்னாரும் நானும் அரசியலில் வெவ்வேறு கோணங் களில் இருப்பினும், தமிழ் மக்கள் தனிவழி சென்று உறுதியான உரிமை பெற முடியாது என்பதில், மிக அழுத்தமாகத் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்திய, அரசியலாளராகச் செயற்பட்டார்.
இச் சந்தர்ப்பத்தில் அன்னாரின் இறுதி க் கி ரி  ைய அன்று நடந்த, அஞ்சலி உரை நிகழ்த்தியவர்களின் உரையி லிருந்து, அமரரின் ஆளுமை மிகவும் தெட்டத் தெளிவாகப் புலப்பட்டது.
அவரது ஆன்மா சாந்திபெறப் பிரார்த்திப்போமாக.
வணக்கம்
பொறாமையிலிருந்து அற்பத்தனம் தோன்று கிறது. சகிப்புத் தன்மையிலிருந்து பெருந்தன்மை
தோன்றுகிறது.
கி. ஆ. பெ. விசுவநாதம்
- 47

Page 37
கலைக்கு இலக்கணமானவன்
- ஆனந்தன்
"கலை" உள்ளார்ந்தமானது - எழுச்சியுடையது. இக் கலைக்காக தன்னை அர்ப்பணித்த வரலாற்றை அமரர் செ. கந்தசாமி அவர்களின் வாழ்க்கையில் இருந்து நாம் அறிந்து கொள்ளமுடிகிறது. கலைஞன் மறைந்த பின்னரும் அவனது சேவை - புகழ் - வாழ்க்கையின் நிழல் என்பன நிலைத்து நிற்கும் என்பதற்கு அன்னாரின் வாழ்க்கை நல்லதோர் உதாரணமாக அமைந்துள்ளது.
சடப்பொருள்களைக் கொண்டு படைப்புக்களை உரு வாக்கும் ஆற்றல்மிக்கவர்கள் விஸ்வப் பிரம்ம குலத்தவர் கள். முற்றிய நெல் பணிவாக விளைந்து பயனைத் தருவது போலவும், வளைந்த மூங்கில் ஒன்று பல்லக்கு அமைக்க உதவுவது போலவும் தம் பின் தொடரும் மாணவர்கள் கலையில் தனியிடம் பெறவேண்டும் என்ப தற்காக முயல்பவர்கள்.
இத்தகைய பெருமை மிகுந்த குலத்தில் பிறந்த அமரர் செ. கந்தசாமி அவர்களும், தனது சிற்பக்கலை மரபு சந்ததி சந்ததியாகப் பேணப்படவேண்டும் என்பதற் காக மாணவர்கள் பலரைத் தனது சிற்பக்கூடத்தில் இருந்து உருவாக்கியுள்ளார். இவரது கலைக்கூடத்தில் வளர்ந்த வர்கள் சிற்பக்கலையில் விசுவாசம் உடையவராகவும், அதனைப் போற்றுபவர்களாகவும் விளங்குகின்றனர்.
அமரர் செ. கந்தசாமி அவர்கள் எமது சமூகத்தின் ஒரு வித்தியாசமான மனிதர். சமூக பரஸ்பரம் பேசுவதில் கைதேர்ந்தவர். வயது முதிர்ந்த பருவத்திலும் தளராத உறுதியுடன் நின்று இறுதிக்காலம் வரையும் கலைக்காகவே தன்னை அர்ப்பணித்தவர். அத்தகையவரது இழப்பு சிற்பக் கலைப் பாரம்பரியத்துக்கே பெரும் இழப்பாகும்.
** அன்னாரது ஆத்மா சாந்தியடைவதாக "-
48 -

சுந்தரத் தோழனைச்
சுறுக்கே யிழந்தோம்
- நல்லை வாழ் நண்பர்கள்
கலைக்கோயில் மகுடம் காற்றோடு போயிற்று கம்யூனிசக் கீற்று அசையர்து போச்சு நிலைகள் தடுமாறி நிம்மதியே போச்சு அலைகடல் வெள்ளம் அடங்கி யாச்சு!
சிற்பங்கள் சிலவேளை சிந்திக்க வைக்கும் சொற்பதங்கள் பல பேரை நிந்திக்க வைக்கும் சப்பறங்கள் சரிவரப் பொருந்தவில்லை யென்றால் குப்புறக் குனிந்து மண் மீது வீழும்!
கந்தசாமிக் கலைஞனின் கைவினை முத்துக்கள் காற்றோடு போகாது காதோரம் வருபவை. ஆத்திரம் வருமுன் அவரிடம் சென்றால் ஆறுதலொன்று காத்திருக்கும்!
மலரால் குளத்திற்கு பெருமை எவ்வாறோ இவரால் குலத்திற்கு பெருமை அவ்வாறே. தீர்ந்து போகாது சிந்தையில் உதிப்பது தீர்க்க தரிசனச் சீரிய வாக்குகள்!
அன்புக்கு அடையாளம் நீயெனக் கண்டு பண்புக்கு உதாரணம் உனையெனக் கொண்டு அன்போடு பண்பை அள்ளி யெடுத்திட ஆறேழு நண்பர்கள் ஓடோடி வந்தோம்!
கூட்டமாய்க் கூடிக் குலவிடும் போது குழப்பங்கள் வருமென்று கூறாதோ ரில்லை குழப்பங்க ளோடுநாம் உம்மிடன் கூடிட எம்மிடைக் குழப்பங்கள் இல்லா தொழிந்தன.
49 ܥ

Page 38
பெட்ட மரமென்று ஒட்ட நறுக்கியதை சொட்டுப் புடமெடுத்து சிற்ப மாக்கியதை சொற்ப வரிகளில் சொல்ல முடியாத சுந்தரத் தோழனைச் சுறுக்கே யிழந்தோம்!
கவலைகள் கலைத்திடக் கந்தனைத் தாண்டி உவகையால் உன்னிடம் ஒடோடி வந்தோம் படலையைச் சாத்திப் பட்டெனப் பறந்தாய் பாவிகளாய்ப் பாதையில் பரிதவித்துப் போனோம்!
ஊருக்கு மட்டும் உபதேசம் போதாதாம் பாருக்கும் சொல்லப் பறந்தே போனாயாம் வேகமாய் விண் சென்ற வீரத்தின் சிகரமே! பார்ப்பாயா எமையெல்லாம் பாசத்தால் மேலிருந்து!
ஆக்கம் : “ சரா "
மக்கள் காட்டுமிராண்டிகளாய் வாழ்ந்து கொண்டிருந்து குரங்குகளைப் போலக் கூட்டங் கூட்டமாய்க் கூடிச் சென்று வாழும் நிலைமை மாறி, இருந்து வாழும் நிலைமை ஏற்பட்ட வுடன், ஒழுக்கமாக வாழ்வதற்கு ஒரு சட்டம் தேவைப்பட்டது. பிறகு அதுவே காலத்துக்கும் இடத்துக்கும் ஏற்றவாறு பல மதங்களாய் மாறு தல் பெற்றிருக்கலாம். இப்போதுங்கூட மதம் மக்களின் ஒழுக்கத்தை நிலைநிறுத்தி வரப் பயன் படுமானால், அது இருப்பது பற்றித் தவறு ஒன்றுமில்லை. மதத்தை விட்டு விலகி மக்கள் ஒழுக்கமாக வாழக் கற்றுக்கொண்ட பிறகு, மதம் அழிந்து போவது பற்றிக் கவலைப்பட வேண்டுவதும் இல்லை.
கி. ஆ. பெ. விசுவநாகம்
50 a

யதார்த்தத்தை யதார்த்தமாக
ஒப்புநோக்கும் தோழர்!
- இ. வரதராசா (தோழர்)
ஆனைக்கோட்டை.
உண்மையைப் பேசுவதும், உண்மையாக வாழ்வதும் மனிதநேயப் பண்புகளில் அதி உன்னத லட்சியங்கள் . அந்த லட்சியப்பாதையில் வலம்வரும் மனித ஆத்மாக் களோ மிகமிகக் குறைவு. இருந்தும் காலச் சக்கரங்களில் அகப்பட்டுத் தேய்ந்துபோன மனித உருவங்கள், மனித வடுக்கள் ஆங்காங்கே தேய்ந்து போனாலும், அந்த உருவங்களில் சில சாலச் சிறப்பால் மனிதநேய மனிதங் களைத் தம்முள்ளே உள்ளடக்கி வாழ்ந்துகொண்டிருக் கிறது - வாழ்ந்து மடிந்திருக்கிறது. அந்தச் சுற்றோட்டத் தின் சுழற்சியிலே வாழ்ந்தவர்களில் ஒருவர் தோழர் கந்தசாமி அவர்கள் .
தான் வாழ்ந்த காலத்தில் யதார்த்தத்தை யதார்த்த மாக ஒப்புநோக்கி, அந்த லட்சியச் சக்கரத்தில் தன்னை முழுமையாக இணைத்து, அந்தச் சுழற்சிவேகத்தில் சுழன்று, ஒர் கர்ம வீரராக, சோஷலிஸ்ட் சமுதாயக் கட்டுமானியாக எல்லாவற்றிற்கும் மேலாக ஒர் சிறந்த பொதுவுடைமைவாதியாக வாழ்ந்து, பொதுவுடைமையின் சிறந்த கருவூலங்களை எவ்வேளையிலும், எவர் முன்பும் மிகத் துணிச்சலாக வாதிடும் உண்மைத் தோழராகத் தோழர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை உறுதி யாக்கிக் கொண்டவர் . அவரது அரசியல் ஆசானாக இன்றுவரை உளரீதியாகப் போற்றி மதித்த ஆசான் " காத்தாரை அடிக்கடி தமது பேச்சில் குறிப்பிட பறக்க மாட்டார்.
- S1

Page 39
ஒருமுறை கட்சிக் கூட்டத்தில் பேசும்பொழுது குறிப் பிடுகையில் "பங்குதாரரும் பொதுவுடமைவாதி, பாட் டாளியும் பொதுவுடமைவாதி, இருவரும் தமது உரிமைக்கு வாதாடுகிறார்கள் " என்றார். எவ்வளவு நாசுக்காக அச்சமின்றி எடுத்து இயம்பினார் என்றால் அவருடைய ஆழமான பொதுவுடமைத் தத்துவம் அவருள்ளத்தை மிகவேகமாகத் தமதாக்கிக் கொண்டதை எவரும் இலகு வில் மறந்துவிட முடியாது.
அவரது பயணம் சுரண்டலற்ற மனிதநேயம்கொண்ட மாண்புமிகு சோஷலிஸ்ட் சமுதாயத்தை நோக்கி வீறு நடை செய்யும்வேளை, அவரது இழப்பு எம்போன்ற தோழர்களுக்கு ஓர் பேரிழப்பு. அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபத்தைக் கண்ணிருடன் சமர்ப்பிக் கின்றோம்.
உறுதி வேண்டும்
மனதிலுறுதி வேண்டும்
வாக்கினி லேயினிமை வேண்டும், நினைவு நல்லது வேண்டும்
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும், கனவு மெய்ப்பட வேண்டும்,
கைவசமாவது விரைவில் வேண்டும், தனமும் இன்பமும் வேண்டும்,
தரணியிலே பெருமை வேண்டும், கண் திறந்திட வேண்டும்,
காரியத்தி லுறுதி வேண்டும், பெண் விடுதலை வேண்டும்,
பெரிய கடவுள் காக்க வேண்டும் மண் பயனுற வேண்டும்,
வானகமிங்கு தென்பட வேண்டும் உண்மை நின்றிட வேண்டும்.
ஓம் ஓம் ஓம் ஒம்.
- சுப்பிரமணிய பாரதி
52 -

சமூக ஒளியாகத் திகழ்ந்த
ஒரு சிற்பக் கலைஞர்
திருநெல்வேலி இந்து வாலிபர் சங்கம்
மறைந்த சிற்பக்கலைஞர் கந்தசாமி அவர்கள் தனது இளமைக் காலத்திலிருந்தே சமுதாய முன்னேற்றத்தில் அக்கறை உடையவராகவும், மாக்ஸியக் கருத்துக்களை உளப்பூர்வமாக ஏற்று வாழ்வின் இறுதி வரை அதனை முன்னெடுக்கும் ஆவல் நிறைந்தவராகவும் திகழ்ந்தார். சமூக ஒடுக்கு முறைக்கு எதிராக இளைஞர்களை அணி திரட்டுவதில் முன்நின்றார். ஒரு ஆசாரம் நிறைந்த குழலில் இருந்து வந்தபோதும், காலத்துக்கு ஏற்ப புதிய கருத்துக்களை ஏற்பதிலும், அதனை முன்னெடுப்பதிலும் உறுதியாக நின்றார். உயிரோட்டமுள்ள சிற்பங்களை உருவாக்கும் ஆற்றல்மிக்க கலைஞராக இருந்ததுடன், இத்துறை சார்ந்த இளம் கலைஞர்களை உருவாக்கு வதிலும் தனது பங்களிப்பை நல்கினார்.
எமது கிராமத்தில் புகழ்பூத்த ஒரு கலைஞரையும், ஓர் அடிப்படை சமூக மாற்றத்துக்காக அயராது குரல் கொடுத்த ஒரு பொதுமைக் கருத்தாளரையும் நினைவு. கூர்வதில் நாம் நிறைவடைகிறோம்.
உள்ளத்திலே உண்மை, வாக்கிலே தெளிவு, தொழி லிலே திறமை, தொண்டிலே நேர்மை, துன்பத்திலே சகிப்பு - இவை ஐந்தும் அடைவதேச வாழ்க்கையில் வெற்றி அடையும் வழி.
முத்தமிழ் காவலர்
கி. ஆ. பெ. விசுவநாதம்
。$3”

Page 40
கையது வண்ணம் எண்ணில்,
- அந்தோ! அந்தோ!!
செல்வி சபாபதி தங்கப்பொன்
பழகப் பழகப் பாகுபோல் இனிப்போன், மழலை கட்கும் சிற்பத்திறனை விதைப்போன், உழவர் போன்றெம் உளத்தை உழுதே விழுது நிலையில் சமதர்மம் இறுகப் பழுதை அகற்றி நலங்கள் சேர்ப்போன். பழுத்த புலமைக் கலைஞன் இவனும் -
கண்களிலே கருணையொளி மிஞ்ச நோக்கி - எமக்குக் களங்கமிலாக் கருத்துக்களை நெஞ்சில் பாய்ச்சி, கச்சிதமா யூட்டிநின்றாய் புவியே சாட்சி! கண்மணிபோல் எம்குலத்து மெருகு மின்ன - வண்ண ‘பூரீவாணன்" சிற்பகூடம் அமைத்தொ விரிர்ந்தாய் கண்ணியத்தின் காவலனே! கலையுலகக் களஞ்சியமே! - இன்று துயில்கொண்டால் எம்நெஞ்சம் தாங்குமோ சொல்வாய்!
"சிற்பக்கலை யெல்லாம் எமக்கே சொந்தம்’
எனச்செருக் குற்றோர் உன்தன் பொற்கை அசைவெலாம் சிலையாய் மாற
பொருமினர், எனினும் உந்தன் விற்பனத் திறனின் முன்னே நிற்பரோ?
விலகியே வழியை விடுவர். கற்பனை யோட்டத்தோடு கலையை வடிக்குநின்
கையது வண்ணம் எண்ணில்,
அந்தோ! அந்தோ!!

சிற்பம் தீட்டும் சித்திரக்கைகள்,
எங்கே சென்றது?
ம. இராஜநாயகம் அன் கோ.
பணியாளர்கள்.
அன்புடனும் பண்புடனும் பழகும் அன்புமுகம் பாசத்துடன் பரிவுகாட்டும் பாசமுகம், - பிரிந்ததென்று பரிதவிக்கும் எங்கள் முகம்: சிற்பம் தீட்டும் சித்திரக்கைகள், எங்கே சென்றது . ? என்று தேடிடும் எம்விழிகள் புகழ்பட நாம் தேவையில்லை . ஏனெனில் இப்பாரே அறியும். . புரியும். ஒர் குடும்பத்தின் தந்தையல்ல கந்தசாமி ஐயா ! நீங்கள் கலையுலகின் தந்தையே! மாமேதையே! யார் வந்து கதைத்து என்ன . 2 யார் வந்து பழகி என்ன . . . ? யார் வருவார் எம் துயர் தீர்க்க என, நாள்தோறும் அழுகின்ற தங்கள் குடும்பத்திற்கு தங்களது நினைவும், கலையுமே ஆறுதல். நிலையிழந்து நிற்கும் தங்கள் குடும்பத்திற்கு, நித்தம் ஆறுதல் கூறும் தங்களது புனிதமான சிற்பக்கலைகள்.
சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
பிறர் அடைகின்ற ம கி ழ் ச் சி யை ப் பார்த்து மகிழ்ச்சியடையப் பழகு. அதுதான் உண்மையான மகிழ்ச்சியாகும். அது மட்டுமன்று, அத்தகைய மகிழ்ச்சி ஒன்றுதான் உனது வாழ்க்கையை அழகு செய்யும்.
கி. ஆ. பெ. விசுவநாதம்
SS

Page 41
மானுடமும் மனிதநேயமும்
செ. சட்டநாதர்
இன்றைய உலகம் உயர்வு - தாழ்வு, சாதி - மத, இன - குரோத ஆக்கிரமிப்புக்களால் அழிவிற்குள்ளாகி வருகிறது. இவ் அவலத்தை உணர்ந்து, அதன் மறு மலர்ச்சிக்கான தேவைகளைத் தெரிந்து, சமுதாயத்தை, சீரமைக்காவிடில், நாசக்குகையாக மாறி நாற்றம் எடுக் கும். ஆம்! எமது காலத்திய சமுதாயத்தை ஊட்டி வளர்ப்பதுவும், அதில் முளை கொள்ளும் களைகளை நீக்கி, மனிதகுல நன்மைக்கு உரம் சேர்ப்பதும் மானுடத் தின் வெளிப்பாடாகும்.
மானுடம், தான் - குடும்பம், சாத்திரம் - கோத்திரம், மொழி - இனம், நிறம் - நாடு எல்லைகளைக் கடந்து மனிதநேய ஒருமைப்பாட்டில் ஒடுங்க வேண்டும். இவ்வாறு அளாவி நிற்கும் உள்ளம், சமுதாய நலனையே (சுற்றி) வட்டமிடல் வேண்டும். அப்போது தான் அங்கு பீறிட்டு வெளிப்படும் அனைத்துக் கொடுமைகளும் பொசுக்கப்பட்டு, மனிதகுல வாழ்வில் மலர்வு காணமுடியும்.
சமுதாயத்தை அரித்துப் பாழாக்கும் அர்த்தமற்ற சாதிப் படுகுழியை மூடவும், நாசத்தை விளைவிக்கும் பழமை விரும்பிகளைத் தலைகுணிய வைக்கவும், சூத மதியினரை ஒடுக்கவும் மானுடம் தயங்கக் கூடாது. அனர்த்தங்களை விதைக்கும் இக்கொடுமைகளை விரட்டும் போது, சாதி சீறும், மதம் மோதும், வைதீகம் சபிக்கும், பழமை பயமுறுத்தும், சம்பிரதாயம் கொக்கரிக்கும், குருட்டு நம்பிக்கைகள் கூச்சலிடும். இவற்றைக் கண்டு அஞ்சாமல், அசையாமல் அயராமல் பணிபுரியும் நெஞ் சுரம், மானுடத்தின் ஆயுதம். இதனைக் கொண்டே அகிலத்தினை நெறிப்படுத்த வேண்டும். இதுவே மானி டத்தின் தாரக மந்திரம். மானுட, மனிதநேயப் பெருக்க
56 -

ஒடுக்கம், அன்பு - சுயநலப் பில் ணப்பில் தங்கியுள்ளது. அன்பு பெருக அவை உயிர்ப்படையும், சுயநலத்திரை மறைக்க அற்றுவிடும். இவற்றை உள்வாங்கிச் செயலாற் றல் மானுடத்தின் திறனும் பொறுப்புமாகும்.
மாநிலத்தில் மானுடம், மனிதநேயம் விசாலிக்க மறுப்பது சுயநலம். இப்பித்து உலகைப் பிய்த்துச் சிதைக் கிறது. ஆகவே சுயநலத்தின் வீறடக்க - செயலிழக்க மானிடம் புறப்பட வேண்டும். மனித மனத்தே சுயநலம் கவியும்போது அநீதி-அக்கிரமம், அற்பகுணம் - போலித் தன்மை, சூது - வாது, போட்டி - பொறாமை ஆகிய அழுக்குப் பெருகுகின்றன. இங்கு மானுடத்தை - மனித நேயத்தைக் காண முடியுமா? இவர்கள் தாமே வாழப் பிறந்தவர்கள் , ஏனையோர் சாமான்யர் என முடிவெடுக் கின்றனர். இம் முடிவால் - சுயநல வேட்கையால் தாம் இறைவனது பூலோகப் பிரதிபிம்பங்கள் என ஒரு வித கேவல இறுமாப்பிற்குள்ளாகி, பிறப்பின் பயனுக்கு மாசு ஏற்படுத்தி விடுகின்றனர். இந்நிலையிலிருந்து இவர்களை மீட்டு,
'மனத்துக்கண் மாசுஇலன் ஆதல் அனைத்துஅறன்
ஆகுல நீர பிற*
என்ற தூய - நலமிக்க எண்ணம் நெஞ்சகத்தே நிலைகொள்ள, அதன் வழி செயலாற்ற, மானுடம் தன் முயற்சியைப் பாய்ச்சத் தவறக்கூடாது. அவர்களது சுய நலத்தை அறிவுக் கனலால் பொசுக்கி இருள் நெஞ்சை அருட் புனலால் கழுவிப் புனித சமுதாயத்தைப் படைக்க வேண்டும். அப்போது தான் மானுடம் மானுடமாகப் பரிமளிக்கும் .
மானுடத்தின் உயிர்ப்பு, மனிதநேயம் - அவற்றிற் கெல்லாம் மூலவித்து அன்பு, ஆம்!
அன்புதான் இன்ப ஊற்று! அன்புதான் அகிலத்து ஜோதி! அன்புதான் உலகமகா சக்தி!!!
- 57

Page 42
இவ்வன்பு குடிகொள்ளும் உள்ளம், புனிதம் விளை யும் களனி - அருள் சுரக்கும் ஊரணி - அறம் தளிர்க் கும் மலர்த்தோட்டம். இத்தகைய விழுமிய, விசாலமான அன்பை மனதிலிருத்திக் கொண்டால், மானுடம் ஒளிரும், அன்பினால் சுபீகரிக்கப் பெற்ற மானுட நெஞ்சத்தில் தமர் , பிறர் என்ற பேதம் தலைகாட்ட இடமில்லை. சமத்துவம், சகோதரத்துவம் மேலோங்கி மனித நேயம் மணம் வீசும். இச்சுகந்தம் உலகை இன்பபுரிக்கு அழைத் துச் செல்லும். மானுடத்தின் இலட்சியப் பயணமும் இதுவே. ஆகையால் மனிதகுலம் அன்பின் வயப்பட்டு மானுட - மனிதநேய உயர்விற்கு வழி ச  ைம த் த ல் வேண்டும்.
அன்பு மானுடத்தில் புரையோடாவிடத்து, மனித நேயம் வரட்சியுற்று, சுயநலப்புயல் தாண்டவமாடும். இவ் அனர்த்தம் சொந்தம் - பந்தம், சாதி - மதம். சமூகம் - சமுதாயம், ஊர் - தேசம் எனப் பூதாகார விரிவு பெற்றுக் கேட்டிற்குத் தூபமிடும். இதனால் உற வோடு உறவு, இனத்தோடு இனம், மதத்தோடு மதம், நாட்டோடு நாடு மோதி, மனிதவினம் அழிவுற நேரிடும் . எம்மனம் இவற்றிற்கு இடம் கொடுக்கலாமா?
"எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லால்
வேறொன்றறியேன் பாராபரமே "
என்னும் அன்பு நாத ஒலி எம்முளத்தை உறுத்தாதா? நிச்சயம் வருத்தும்; வேதனையைப் பெருக்கும். ஆகவே. மன்பதையில் அழிவைத் தடுக்க, உலகில் அமைதி கால் கொள்ள, மனித நேயம் கைகொடுக்க வேண்டும். இதற் கான அன்பு மானுடத்தில் அழுத்தமாகப் பதிய,
"நீதி உயர்ந்த மதி கல்வி - அன்பு நிறைய உடையவர்கள் மேலோர்" சென்ற வழி நின்று, பிறப்பின் நலனில் தோய்ந்து, வாழ்வின் பயன் முழுமை பெற வேண்டும். இதுவே மானுட - மனிதநேய இலட்சியமாகும்.
மானிடம் மலர்க! மனித நேயம் வளர்க!!
அன்பு சூழ்க!!! O

அண்ணன் ஒரு வரலாற்று நாயகர்
கு. பொன்னுத்துரை
(ஆசிரியர்)
ஒரு கலைக்கோபுரம் சரிந்துவிட்டது. கலைமகள் தன் தவப்புதல்வனை இழந்து விட்டாள். அண்ணன் ஒரு வர லாற்று நாயகர். அவர் மடியலாம், ஆனால் அவரது கலைகள் என்றும் மடியாது. இவர் வடித்த சிற்பங்கள் உயிர் பெற்றெழுந்தால் இவரது திறன் பற்றிப் பல்லா யிரம் கதைகள் சொல்லும், கலை உலகில் தன்னிகரற்ற தலைவனாக விளங்கிய ஒரு சிற்பச் சக்கரவர்த்தியைக் கலை உலகம் இழந்துவிட்டது. எம்முடன் பழகிய விதம், காட்டிய பரிவு இன்றும் பசுமையாகவே உள்ளது. கலை அரசனுடைய ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சி நிற்கின்றோம்.
ஓம் சாந்தி ஒம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
மானுடம் வென்றதம்மா!
பவானி மதியாபரணம்
இனிதே உலகில் வாழ்ந்தவர் பலருள் கனிந்த வாழ்விலெம் மாமா ஒளிர்ந்தீர்! நன்மை தீமை நலிவுறு மேன்மை என்னே! வரினும் எம்முடன் இணைந்தீர்! மன்னும் ஆலயச் சிற்பசிரு ஷ்டியில் நின்னுளக் கருவெலாம் உயிரதாய் மிளிரும் மண்ணக மாந்தர் வியப்புறும் சிற்பம் விண்ணவர் வந்துனை வியந்துமே நிற்பர் உந்தனின் ஆத்மரத மதுஅசைந் திடில், உந்தனின் சிற்பரத மதுஒலித் திடும். சக்தி அருள்பவள் வீதிவலம் வருவாள் சக்தி அருள மானுடம் வென்றதம்மா!

Page 43
உன் கண்ணில் நீர் வடிந்தால்,
என் நெஞ்சில் உதிரம் கொட்டும்!
உன் நினைவில் வாடும்
ரஞ்ஜினி ரட்ணம்
KD நன்றி
6ாம் நெஞ்சில் நிலைத்து நிற்கும், எம் குடும்பத் தலைவரின் இழப்பில், பல வழிகளில் பங்களிப்பு நல்கிய - இந்நூல் ஆக்கத்திற்கு உதவிய அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் எமது இதயபூர்வமான நன்றி!
காளி கோவிலடி, இங்ஙனம் திருநெல்வேலி கிழக்கு, குடும்பத்தினர்.
யாழ்ப்பாணம்.
 


Page 44