கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பஞ்சவர்ண நரியார் - சிறுவர் அரங்கிற்கான நாடகம்

Page 1
செயல் திறன் O Active Thea
 
 

அரங்க இயக்கம் atre Movement

Page 2


Page 3

LGUD õju
-சிறுவர் அரங்கிற்கான நாடகம்
குழந்தை ம. சண்முகலிங்கம்
வெளியீடு
செயல்திறன் அரங்க இயக்கம் Active Theatre Movement

Page 4


Page 5
வெளியிட்டுரை
வளரும் பயிருக்கு முளையில் உதவுவதாக சிறார்களின் வீடுகளும் பாடசா லைகளும் அமைய வேண்டுமென்று கூறுவார்கள். இதற்காக, சிறுவர்களுடன் பக்குவமாகப் பெரியார்கள் நடந்து கொள்ள வேண்டும். பாடசாலைகள் சிறார்கள் மகிழ்ந்து கற்கும் களமாக மாற வேண்டுமென்று புதிய கல்விச் சீர்தி ருத்தம் வலியுறுத்துகிறது. பாடசாலைகளை சிறார்கள் மகிழ்ந்து கற்பதற்குரிய களமாக மாற்றுவதற்குச் சிறுவர் அரங்கச் செயற்பாடுகள் பெரிதும் உதவும்.
*சிறுவர் அரங்கு” சிறுவர் பார்வையாளர்களுக்காக வரண்முறையாகத் தயாரிக் கப்பட்டு, அளிக்கை செய்யப்படும் நாடக ஆற்றுகையை குறிக்கும்.
ஈழத்தமிழ் அரங்க வரலாற்றில் 1978 ஆண்டு நாடக அரங்கக் கல்லூரியினால் மேடையேற்றப்பட்ட ‘கூடிவிளையாடு பாப்பா" என்ற சிறுவர் நாடகம் குறிப்பிடக் கூடிய ஒன்றாகும். இந்நாடகத்தை குழந்தை ம. சண்முகலிங்கம் எழுதியிருந் தார். அ.தாஸிஸியஸ் நெறியாள்கை செய்திருந்தார். இதனைச் சிறுவர் அரங்க எண்ணக் கருவுடன் மேற்கொள்ளப்பட்ட முதல்முயற்சி எனலாம். “கூடிவிளை யாடு பாப்பா”நாடகத்தில் பெரியவர்கள் சிறுவர்களுக்காக நடித்திருந்தார்கள்.
இதன்பின் சிறார்களுக்காக சிறார்கள் நடிக்கின்ற பல நாடகங்களை ஆரம்பப் பாடசாலைகளுக்காக குழந்தை ம. சன்முகலிங்கம் எழுதியுள்ளார். இவரது ஊக்குவிப்பால் நகர்புற பாடசாலைகள் சில வருடாந்தம் சிறுவர் நாடகங் களைப் பாடசாலை விழாக்களிலும், போட்டிகளிலும் மேடையேற்றுவதற்காகத் தயாரிக்கத் தொடங்கின.
என்பதுகளின் பிற்பகுதி, தொண்ணுைாறுகளில் ஆசிரியர்களுக்கான நாடகக் களப்பயிற்சிகள் பல நடத்தப்பட்டன. இதில் சிறுவர் நாடகத் தயாரிப்பு முக்கி யமாகக் கருத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை, பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகளில் வருடாந்தம் நடாத் தப்பட்ட பல நாடகக் களப்பயிற்சிகள் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவை. களப் பயிற்சிகளில் பங்குபற்றி பயிற்சி பெற்ற ஆசிரியர்களால் நாட்டின் பல பாகங்க ளிலும் உள்ள பாடசாலைகளில் சிறுவர் நாடகங்கள் தயாரித்து மேடையேற் றப்படுகின்றன.
சிறுவர் அரங்கப் பயிற்சிகளைப் பெற்றிருக்காத பல ஆசிரியர்கள் தமது பாட சாலைகளில் குழந்தை ம. சண்முகலிங்கத்தின் நாடக எழுத்துருக்களைத் தயாரிக்கின்றார்கள். இது முயன்று தவறிக் கற்றுக்கொள்ளும் முறையினைக் கொண்டிருக்கிறது. ஈழத் தமிழ் அரங்க வரலாற்றில் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் அறிமுகமாகிய நாடக எழுத்துருக்களாக குழந்தை ம. சண்முக லிங்கத்தின் நாடக எழுத்துருக்களையே குறிப்பிடலாம். குறிப்பாக சிறுவர்

நாடக எழுத்துருக்கள் நாட்டின் பல பகுதிகளிலும் தயாரிக்கப்பட்டுள்ளன.
*கூடிவிளையாடு பாப்பா’ நாடகப் பாடல்கள் பல பாடசாலை ரீதியாக மிகப்
பரவலாக சிறுவர்களால் பாடப்படுகின்றன.
சின்ன சின்னப் பிள்ளைகள் நாம். காட்டில காத்து கடுமையாய் அடிக்குது.......... (5a5T6OL LD60)up 6assTL960TT) b. . . . . . . . . . . . .
போன்ற பாடல்களை உதாரணமாகக் குறிப்பிடலாம். சிறிய இலகுவான பாடல்கள் இசையமைப்பாளர் கண்ணனின் எளிமையான இசை என்பன இதன் பரவலுக்கான காரணங்களாக அமைகின்றன.
சிறுவர் அரங்க முயற்சிகளைப் பாடசாலை மட்டத்தில் ஊக்குவிக்கும் செயற் திட்டத்தை மாகாணக் கல்வியமைச்சு ஆரம்பித்ததில் இருந்து சிறுவர் அரங் கச் செயற்பாடுகள் பாடசாலை மட்டத்தில் முனைப்புப் பெறத் தொடங்கின. பாடசாலை மட்டத்தில் நடத்தப்பட்ட சிறுவர் நாடகப் போட்டிகள் சிறுவர் நாடகங்கள் உருவாவதற்கு ஊக்கமளித்திருந்தன.
2001ம் ஆண்டிலிருந்து 'சிறுவர் நாடகப் போட்டிகள்', 'சிறுவர் நாடக விழாக் களாக மாகாணக் கல்வித் திணைக்களத்தினால் வலய மட்டத்தில் நடத் தப்படுகிறது. சிறுவர் நாடக விழாக்களில் பங்கு பற்றும் அனைத்து சிறுவர் நாடகங்களுக்கும் பரிசில்கள் வழங்கப்படுகின்றன. பங்கு பற்றிய அனைத்து மாணவர்களும் சான்றிதழ் வழங்கிக் கெளரவிக்கப்படுகின்றார்கள். இவ்வாறான, சிறுவர் உளநலம் கருதிய செயற்பாடுகள் பாராட்டப்பட வேண்டி யவை. இச்செயற்பாடுகள் முலம் சிறார்கள் நிறையப் பயன்களைப் பெறுகின் றார்கள். சிறுவர் அரங்கச் செயற்பாடுகளும் முனைப்புப் பெறுகின்றன. மாகாணக் கல்வித்திணைக்களம் இவ்வகைச் செயற்பாடுகளை மாணவர் களை மையப்படுத்தி மேலும் சிறப்பாக முன்னெடுக்க வேண்டும்.
இருப்பினும், தகுதியான மதிப்பீட்டாளர்கள் இல்லாமை, சீரான சிறுவர் நாடகப் பயிற்சி பெற்ற ஆசிரியர் பற்றாக்குறை, சிறுவர் அரங்கத்திற்காகக் கல் வித் திணைக்களத்தில் ஆசிரிய ஆலோசகர், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள் இல்லாமை போன்ற காரணங்களும் போட்டியில் வெற்றி பெறும் நாடகம் அல்லது விழாவுக்குத் தெரிவாகும் நாடகம் சரியானதாகவும், தெரிவு செய்யப்படாத நாடகம் அல்லது தோல்வி அடைந்த நாடகம் பிழையான தாகவும் கருதப்படும் நிலைகளும் சிறுவர் அரங்கை அனைத்து ஆரம்பப் பாடசாலைகளிலும் முன்னெடுக்கத் தடையாக உள்ளன.
1978 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சிறுவர் அரங்கச் செயற்பாடுகள் நிறுவனமயப் பட்டுத் தொடர்ச்சியாக, சீராக முன்னெடுக்கப்படாமையால் அதிகமான ஆரம்பப்

Page 6
பாடசாலை ஆசிரியர்கள், அதிபர்கள், மாணவர்கள் சிறுவர் அரங்கு பற்றி அறி யாதவர்களாகவும் அதன் பயனை அனுபவிக்காதவர்களாகவும் உள்ளார்கள்.
*நம் மத்தியில் சிறுவர் அரங்கிற்காக மட்டும் இயங்குகின்ற தனி நபர்கள், நிறுவனங்கள் இல்லாமை பெரும் குறையாக உள்ளது”.
என்ற குழந்தை ம. சண்முகலிங்கத்தின் கூற்று இங்கு மனங்கொள்ளத் தக்கது.
அரங்கத் துறையில் அறிமுகமாகும் பல இளைஞர்கள் முதலில் சிறுவர் அரங் கில் தம்மை ஈடுபடுத்திப் பின் அதனைக் கைவிட்டு வளர்ந்தோர் அரங்கத்திற்குச் சென்று விடுவதைக் கடந்த கால அனுபவங்களில் இருந்து அவதானிக்க முடி கின்றது. சிறுவர் அரங்கு பயிற்சிக்கான சிறந்த படிக்கல்லாக இருக்கின்றது. இந்த நிலைமைகளால் ஈழத்தில் சிறுவர் அரங்கு பல்பரிமாணத் தன்மை கொன்ட வளர்ச்சியை எட்டவில்லை. இன்று சிறுவர் அரங்கில் ஈடுபடுவோரிடம் காணப்படும் பின்வரும் கேள்வி இதனை நன்கு உணர்த்துகிறது.
சிறுவர் நாடகங்களென்றால் மிருகங்கள் பாத்திரங்களாக வருவது மட்டும்
9 5TeoTIT?
சிறுவர் அரங்கை மேலும் வளர்த்தெடுப்பதற்குப் பலச் செயற்திட்டங்களை சமாந் தரமாக, தொடர்ச்சியாக, நிறுவன ரீதியாக முன்னெடுக்க வேண்டிய அவசியம் நன்கு உணரப்படுகின்றது. ஆரம்பப் பாடசாலை ஆசிரியர்களுக்கு பயிற்சிய ளித்தல் உடனடித் தேவையாக உள்ளது. இதனை நிறைவேற்றுவதற்கு வாளாளர்கள் பற்றாக்குறையாக உள்ளார்கள்.
இவ்வாறான மட்டுப்பாடுகளை நீக்கிச் சிறுவர் அரங்கை வளப்படுத்துவதற் கான பல அரங்கச் செயற்திட்டங்களை 2003ம் ஆண்டில் இருந்து “செயல் Epsir eigsfies 6Luisasi' (Active Theatre Movement) up60)6OTLJITs முன்னெடுத்து வருகின்றது.
சிறுவர் அரங்கக் கருத்தரங்குகள் நடத்துதல், களப்பயிற்சிகள் நடத்துதல், சிறுவர் நாடகங்களைத் தயாரித்துப் பாடசாலைகளில் மேடையேற்றுதல், சிறுவர் நாடக எழுத்துருக்களைப் புத்தகங்களாக வெளியிடுதல் போன்ற செயற்திட் டங்கள் செயல் திறன் அரங்க இயக்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்றன.
இத்தோடு யாழ் மாவட்டத்தில் சிறுவர் அரங்கச் செயற்திட்டங்களை வடிவ மைப்பதற்கும் வழிப்படுத்துவதற்குமாக சிறுவர் அரங்கிற்கான வாளாளர் குழு ஒன்று கலாநிதி குழந்தை ம. சண்முகலிங்கம் தலைமையில் அமைக்கப்பட் டுள்ளது. இக்குழுவின் இயங்கு நிலைக்குச் செயல் திறன் அரங்க இயக்கம் அனுசரணையாகச் செயற்படுகிறது.

பஞ்சவர்ண நரியார்’ நாடகம் தென்மராட்சி, வலிகாமம், யாழ்ப்பாணம் கல்வி வலயங்களில் நடத்தப்பட்ட நாடகக் களப்பயிற்சிகளில் இருந்து பிறந்ததாகும். இக்களப்பயிற்சிகள் “சிறுவர் அரங்கிற்கான எழுத்துருப் படைப்பாக்கம்” என்ற தலைப்பில் நடைபெற்றனவாகும்.
*கூடிவிளையாடு பாப்பா" என்ற சிறுவர் நாடகத்தை எழுதியதன் முலம் குழந்தை” என்ற அடைமொழியைப் பெற்றுக் கொண்ட குழந்தை ம. சண்முக லிங்கம் அவர்களால் எழுதி, நெறியாள்கை செய்த இரண்டாவது சிறுவர் நாடகம் பஞ்சவர்ண நரியார்?
ஏற்கனவே 1998-ம் ஆண்டு நாடக அரங்கக் கல்லூரியினால் தயாரிக்கப்பட்ட 'இடுக்கண் வருங்கால்.” நாடகம் குந்தை ம. சண்முகலிங்கம் அவர்கள் எழுதி, நெறியாள்கை செய்த முதலாவது சிறுவர் நாடகமாகும். இத்தோடு முயலார் முயல்கின்றார், நட்பு, காட்டு ராஜசிங்கம், குளத்து மீன்கள், பூனையின் விலை என்ன, பாலுக்குப் பாலகன், ஆச்சி சுட்ட வடை, பண்பும் பயனும், கூடி வாழ்வோம், வேட்டைக்காரன், குழந்தைகள் பாவனை செய்யும் போன்ற சிறுவர் நாடகங்களையும் எழுதியுள்ளார். இந்த நாடகங்கள் குழந்தை ம. சண்முக லிங்கம் அவர்களால் நெறியாள்கை செய்யப்படவில்லை. அவரது மாணவா
”களாலும், நண்பர்களாலுமே நெறியாள்கை செய்யப்பட்டுள்ளன.
"பஞ்சவர்ண நரியார்’ நாடகம் யாழ் மாவட்டத்திலுள்ள ஐம்பது ஆரம்பப் பாட சாலைகளில் மேடையேற்றப்பட்டுள்ளது. இருபத்திமுவாயிரம் மாணவர்கள் பார்த்து மகிழ்ந்திருக்கிறார்கள். மேலும் பல ஆரம்பப் பாடசாலைகளில் மேடை யேற்றத் திட்டமிடப்பட்டுள்ளது. பதினைந்து இளம் பெண்களும் ஆண்களும் இச்செயற்திட்டத்தில் ஈடுபடுகின்றார்கள். ஆரம்பப் பாடசாலை ஆசிரியர் களினதும் அதிபர்களினதும் வேண்டுகோளுக்கமைய பஞ்சவர்ண நரியார்” நாடக எழுத்துருவைப் புத்தகமாக வெளியிடுகின்றோம்.
சிறுவர் அரங்கச் செயற்திட்டத்தில் தனது எழுபது கடந்த வயதிலும் மீண்டும் தொடங்கும் மிடுக்காக தொடர்ந்து துடிப்பாக இயங்கி வரும் குழந்தை ம. சண்முகலிங்கம் அவர்களுக்கு ஈழத்தமிழ் அரங்கு நிறையவே கடமைப்பட் டிருக்கிறது. அவருடன் இணைந்து செயற்படும் வாய்ப்பை எண்ணி மகிழ் கிறோம்.
செயல் திறன் அரங்க இயக்கம் சிறுவர் அரங்கத் துறையில் செயற்படப் பலர் ஆக்கமும் ஊக்கமும் தருகிறார்கள். அவர்கள் அனைவருக்கும் எமது நன்றிகள் என்றும் உரித்தாகுக.
‘வளமான அரங்கப் பண்பாட்டு வளர்ச்சிக்காக உழைப்போம்" தே. தேவானந்த் இயக்குனர் செயல் திறன் அரங்க இயக்கம்
V

Page 7
உங்கள் அனுமதியுடன் . உங்களுடன் சிலவார்த்தைகள்
யுத்தத்தை அடுத்து நடந்துகொண்டிருக்கும் இக்காலப்பகுதியில், சிறுவர்கள் மீது நாம் கூடுதலான கவனம் செலுத்த வேண்டியுள்ளது என்பதைப் பலரும் உணர்ந்துள்ளனர். சிறுவரை இலக்காகக் கொண்ட பல நடவடிக்கைகள் பலராலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவையாவும் தொடர் நடவடிக் கைகளாக மேற்கொள்ளப்படவேண்டும் என்பதையும் பலரும் உணர்ந்துள் ளனர். அவ்வாறு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளில் சிறுவர் அரங்கும் பயனுள்ளதொரு நடவடிக்கையாக அமையும் என்பதையும் எல்லோரும் ஏற் கின்றனர்.
அரங்கச் செயற்பாடுகள் பல்வேறு வழிமுறைகளிலும் வடிவ அமைப்புக்களிலும் மேற்கொள்ளப்படுவதை நாம் அறிவோம். அந்தவாறே, சிறுவர் அரங்கச் செயற் பாடுகளும் பல்வேறு முறைகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இங்கு நாம் நியம முறையில் அமைந்த சிறுவர் அரங்க ஆற்றுகைக்கான முயற் சியில் ஈடுபட முற்பட்டுள்ளோம். நியமமுறை என்பதன் முலம் நாம் எமக்குச் சில வரையறைகளை விதித்துக் கொண்டுள்ளோம். அதாவது, தனித்தோ பலர் கூடியோ, சிறுவர் அரங்கிற்கான எழுத்துருவொன்றினை ஆக்கிக்கொள் வதும், அதனைச் சிறுவர்களுக்கு அல்லது வளர்ந்தவர்களுக்கு, நியமமான முறையில் ஆற்றுகை செய்வதற்குப் பயிற்சி அளித்து, சிறுவர்களை பார்வையா ளராகக் கொண்ட சபை முன் நிகழ்த்திக் காட்டுதல்.
பஞ்சவர்ண நரியார்” என்ற நாடகம் வளர்ந்தவர்கள் நடிப்பதற்குரியது என்ற நோக்கிலேயே எழுதப்பட்டுள்ளது. சிறுவர்கள் நடிப்பதற்காக எழுதப் படுவதாயின் இந்த நாடகம் மேலும் இலகுபடுத்தப்படும். எளிமைப்படுத்தப் படும், ஆற்றுகை நேரம் குறைக்கப்பட்டு எழுதப்படவேண்டும்.
இந்த நாடகத்தை நாம், 'சிறுவர் அரங்கிற்கானதொரு காட்டுரு' என்ற மனோ பாவத்துடன் எழுதவில்லை. சிறுவர் அரங்குக்கான பல நல்ல நாடகங்கள் இங்கு பலராலும் எழுதப்பட்டு வந்துள்ளன. அந்த வரிசையில், இது ஒரு சாதாரண சிறுவர் நாடகம் என்ற நினைப்போடுதான் எழுதப்பட்டுள்ளது. சிறுவர் அரங்கிற்கானதொரு காட்டுரு என இதனை எவரும் கருதிக்கொள்ள வேண்டியதில்லை.
நாடக எழுத்துருக்களின் அவசியத்தை முற்றுமுழுதாக நிராகரிக்கும் ஒரு போக்கு இங்கு எம்மத்தியில் காணப்படுகின்றது. நாடக ஆற்றுகையொன் றினை எவ்வகையிலும் நாம் தயாரித்துக் கொள்ளலாம். தயாரிக்கப்படும் நாடகங்கள் அனைத்துமே எழுத்துரு வடிவிலும் அமைத்துக் கொள்ளப்படு வ்து அவசியம் என்பதை நாம் வலியுறுத்த முற்படுகிறோம்.
V

அத்தோடு, ஆசிரியத் தொழில் புரிகின்ற அனைவரும் நாடகத்தோடு சம்மந்தப் பட்டவர்களாகக் குறுகியகால அனுபவத்தையேனும் பெற்றவர்ளாக இருப்பது அவசியம் என்பதை நாம் எமது அனுபவவாயிலாகக் கூறமுடியும். குறிப்பாக, ஆரம்ப வகுப்புக்களில் கற்பிக்கும் ஆசிரியர்கள் 'சிறுவர் நாடகம் ஆக்க நாட கம் ,சிறுவர் அரங்கம்' என்பவற்றில் கூடியளவு அனுபவமும் தேர்ச்சியும் பெற் றிருப்பது அவசியம் என உணரப்பட்டுள்ளது.
என்னைப் பொறுத்தவரையில் நீண்ட காலத்தின் பின் சிறுவர் அரங்க முயற்சி களில் ஈடுபடும் வாய்ப்பு எனக்கு இப்போ சில நாட்களாகக் கிட்டியுள்ளது. எனது நண்பர்கள் சிலரோடு கூடி இம்முயற்சியில் பங்கு கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இது எவ்வளவு காலம் தொடரும் என்பது பற்றி நாம் எதையும் கூறமுடியாது. அது எமது நேர்மையிலும் நம்பிக்கையுறுதியிலும் தான் தங்கியுள்ளது.
அண்மையில் சிறுவர் அரங்கு பற்றி கருத்தரங்குகள் சிலவற்றையும், களப் பயிற்சிகள் ஐந்தாறையும் நடத்தும் சந்தர்ப்பம் 'செயல்திறன் அரங்க இயக்கத்திற்குக் கிட்டியது. அந்த நடவடிக்கையில் நானும் சேர்ந்து கொள் ளக் கூடியதாக இருந்தது. இந்தக் களப்பயற்சியில் ஆசிரியர்கள், குறிப்பாக ஆரம்ப வகுப்புக்களில் கற்பிக்கும் ஆசிரியர்கள் பங்கு கொண்டனர். இவற்றில் பெரும்பாலான களப்பயிற்சிகள் சிறுவர் நாடகமொன்றினை எழுதி, அதனைத் தயாரித்து மேடையேற்றுவதை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்டன.
இக்களப்பயிற்சிகளில் பங்கு கொண்ட ஆசிரியர்களும், கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை ஆரம்பக்கல்வி ஆசிரிய மாணவர்களும் காட்டிய ஆர்வ மும் அக்கறையும் எமக்கு மிகுந்த உற்சாகத்தையும் நம்பிக்கையையும் தந் தது. ஆரம்பப் பாடசாலை ஆசிரியர்கள் சிறுவர் அரங்கச் செயற்பாடுகளில் அக் கறை கொள்வதென்பது மிக முக்கியமானதொரு விஷயமாகும். சிறுபிள்ளை கள் அவர்களிடம் தான் வளர்கிறார்கள்.
நாடகம் சார்ந்த செயற்பாடுகள் அனைத்தும் சிறுவருக்கும் ஆசிரியருக்குமி டையிலான உறவை மிக நெருக்கமானதாக்கிவிடும். அது வீட்டில் காணப் படும் இரத்த உறவின் உறவு நெருக்கத்தை வகுப்பறையிலும் நிலவச்செய் யும். வகுப்பறை, அன்னை மடியின் இதத்தை கொண்டிருக்கும். அங்கு கற்றல் - கற்பித்தலென்பது இருவழிப்பாதையாக அமையாது கூடிக்கற்றுக் கொள்ளும் ஒருவழிப்பாதையாகவே அமையும். “நான் கலந்து” பாடி ஆடி, விளையாடி கற்கும், உணர்வு கலந்ததொரு அனுபவமாகவே அந்தக் கற்றல் அமையும்.
முன்று நான்கு மாதங்களுக்குள் ஏறக்குறைய இருநூறு வரையிலான
ஆசிரியர்களை, இக்களப்பயிற்சிகளில் சந்திக்கும் வாய்ப்பு எமக்குக் கிடைத் தது. இதனூடே நாம் அதிகம் கற்றுக் கொள்ளக்கூடியதாக இருந்தர்.
V

Page 8
முக்கியமாக, பெரும்பாலான ஆசிரியர்கள் சிறுவர் நாடக எழுத்துருவொன் றினைத் தாமாக எழுதினர்.
குழுக்களாகக் கூடி ஒவ்வொருவரும் கலந்துரையாடலில் பங்கு பற்றித் தமது குழுவுக்காக ஒரு நாடகத்தை எழுதிக் கொண்டனர். ஒவ்வொருவரும் தமது கைப்பட நாடகத்தை எழுதினர். மேலும், கற்றல் - கற்பித்தல் நடவடிக்கை யாகவும், அரங்க நடவடிக்கையாகவும் தாம் தமது பாடசாலையில் நாட கத்தைப் பயன்படுத்துவோம், எனப்பல ஆசிரியர்கள் ஆர்வத்துடன் கூறி னர். தம்மால் நாடகம் எழுதமுடியாது என்றும், நாடகம் நடிக்க முடியாது என்றும், நாடகத்தைத் தயாரிக்க முடியாது என்றும் நினைத்துக் கொண்டி ருந்த பலர், தம்மால் முடியும் என்ற தன்னம்பிக்கையைப் பெற்றனர். தமது ஆற்றல்களைத் தாம் கண்டு கொண்டனர். அவர்கள் தொடர்ந்து இம்முயற்சி யில் ஈடுபட்டுவந்தால், சிறுவர் நாடகம், தான் வாழ வேண்டிய, வளரவேண் டிய இடத்தில் வளர்கிறது எனத் திருப்தி கொள்ள முடியும்.
இந்தவாறு நடத்தப்பட்ட தொடர் களப்பயிற்சிகளின் பேறாகப் பல நாடக எழுத்துருக்கள் படைக்கப்பட்டன. அவ்வாறு, கலந்துரையாடப்பட்டு வகுத் துக்கொள்ளப்பட்ட நாடகங்களில் ஒன்று தான் இந்த பஞ்சவர்ண நரியார்? என்பதையும் நாம் கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.
இது நிறம் மாறிய நரி என்ற கதையின் நாடக வடிவம் தான். இது அந்தக் கதையின் ஒரு வடிவம் எனவே கொள்ளப்பட வேண்டும். இக்கதையை எத்தனையோ வகைகளில் எழுதிக் கொள்ளலாம். இந்தக் கதையை மட்டு மல்ல, எந்தக் கதையையும் எத்தனை விதமாகவும் எழுதிக் கொள்ளலாம். இந்தவாறு சிறுவருக்கான கதைகள் காலத்துக்குக் காலம் பலப்பல மாற்றங்களைப் பெற்றுக் கதையாகக் கூறப்படுவதையும் நாம் கண்டு வந்துள்ளோம்.
கதைகளில் மாற்றங்கள் செய்யப்படவேண்டும் என்பதற்காக மாற்றங்களை நாம் செய்யக்கூடாது. பிள்ளைகளது பல்வேறுபட்ட தேவைகளை நிறைவு செய்வதற்காகவே நாம் மாற்றங்களைச் செய்ய வேண்டும். உ*ம் வன்முறை கள் மலிந்து போய்க்கிடக்கும் ஒரு சமுகத்துள் பிறந்து வாழும் பிள்ளை களைப் பொறுத்தவரையில், வன்முறை என்பது வாழ்வில் ஒரு பகுதியாகி விடும். வன்முறை மனோபாவம் பிள்ளையில் இயல்பாகக் குடிகொண்டு விடும். எனவே, அத்தகைய தன்மைகளைக் கொண்ட கதைகளில் மாற்றங் களை செய்வது விரும்பத்தக்கது.
எங்களது பிள்ளைகள் இன்று பெருமளவுக்கு சுகாதாரம் அற்ற சூழலிலேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இங்கு நான் பெளதீகச் சூழலை மட்டும் குறிப்பிடவில்லை. புறச் சூழலைவிட அகச்சூழல், மனச் சூழல் மிகவும்
V

மாசுபடக் கூடிய நிலையில் உள்ளது. வளர்ந்தவர்கள், எல்லாத்துறையிலும், வகுத்துக்கொண்டிருக்கும் மனோபாவச் சூழல், குழந்தைகள் ஆரோக்கிய மான மனோபாவங்களோடு வளர்வதற்கான சூழலாக இல்லை.
இலக்கினை அடைவதற்கு எதையும் செய்யலாம் என்றதொரு பாடத்தை நாம் எமது செயல்களின் முலம், எமது சிறார்களுக்குப் பாடமாகப் புகட்டிக் கொண்டு இருக்கிறோம். நாம் நெஞ்சறிந்த பொய்களைச் சொல்வதற்கும் செய்வதற்கும் இன்று அஞ்சுவதாகவே இல்லை. இலக்கு மிக உயர்ந்தது, உன்னதமானது, அது எப்படியேனும் அடையப்பட வேண்டியது என்றே நாம் சிந்திக்கின்றோம். எத்தகைய உன்னதமான இலக்காக இருப்பினும், அதனை அடையும் மார்க்கம் பொய்கள் அற்றதாக, உண்மை நிரம்பியதாக இருக்கவேண்டும் என்பதே சரியான மனோபாவமாகும். எனவே இத்தகைய மாசுபட்ட மனோபாவச் சூழலில் வாழும் குழந்தைகளை நாம் எவ்வாறு மீட்கப் போகிறோம். குடத்தை மினுக்கிய பின்னரும் குப்பையில்தான் வைக்கவேண்டி உள்ளது. அதற்காக மினுக்காமல் விடமுடியுமா?
எதிர்காலச் சந்ததியேனும் நல்ல மனோபாவங்களோடு வாழ வேண்டுமானால் நாம் இன்றைய குழந்தைகளில் கவனம் செலுத்தித்தான் ஆகவேண்டும். எனவே, எமது சிறுவர் நாடகங்கள் யாவும் மீளாய்வுக்குட்படுத்தப்பட வேண் டிய நிலையில்தான் இருக்கின்றன. இந்தப் பஞ்சவர்ண நரியார்’ நாடகமும் இதற்கு விதிவிலக்கான ஒன்றல்ல. அதாவது, இந்த நாடகம் கூட மறு பரிசீல னைக்கு உட்படுத்தப்பட வேண்டிய ஒன்றாகவே உள்ளது.
மார்ச் மாதத்தில் (2004) நன்பர் தார்ஸிஸியசுடன் உரையாட வாய்ப்புக் கிடைத்த போது சிறுவர் நாடகம் பற்றிய கதை வந்தது. சிறுவருக்கான எமது கதைகள் பலவும் குள்ளத்தனம், ஏமாற்றுதல், தந்திரம் புரிதல் என்பதையே சிறந்த பண்புகளாகக் காட்டி வந்துள்ளது என்று அவர் கூறினார். இன்றைய சூழலில், அவரது கூற்றில் பொதிந்துள்ள உண்மையை நாம் சிந்தித்துப் பார்ப்பது அவசியமாகிறது எனக் கருதுகிறேன்.
இந்த நில்ையில் சிறுவர் மீது அக்கறை கொண்ட கல்வியியலாளர்களும், உளவி யலாளர்களும், படைப்பாளிகளும், கலைஞர்களும், ஆசிரியர்களும் பெற்றோர் களும், பெரியவர்களும் அடிக்கடி ஒன்றுகூடி சிறுவருக்கான நலத்திட்டங் களையும் நடவடிக்கைகளையும் ஒருமுகப்படுத்திச் செயற்படுத்துவது அவசி யமாகின்றது. இந்த முயற்சிகள் யாவும் திட்டமிடப்பட்டு நடைமுறைப்படுத் தப்பட வேண்டியவையாக உள்ளன.
இன்றைய சிறுவர்களைப் பொறுத்தவரையில் 'ஓய்வுநேரம்’ என்பதே அவர்க ளுக்குக் கிடைக்கப் பெறாத ஒன்றாக உள்ளது. நாம் சிறுவர்களாக இருந்த காலத்தில் எமக்குக் கிடைத்த அந்த ஆனந்தமான ஓய்வு நேரத்தை நாம்
V

Page 9
இன்று எமது பிள்ளைகளுக்கும், பேரர்களுக்கும் பெற்றுக் கொடுக்க முயற் சிக்க வேண்டும். ஓய்வு வேளை என்பதும் மனித உரிமைகளுள் ஒன்று என லாம். பிரகடனப்படுத்தப்பட்ட மனித உரிமையில் மட்டுமல்லாது, சிறுவர் உரிமையிலும் இது சேர்த்துக் கொள்ளப்படவேண்டும்.
இந்த ஓய்வு நேரம் கிடைக்கப் பெற்றால் மட்டுமே, அந்த ஓய்வு வேளையைப் பிள்ளைகள் எவ்வாறு பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பது பற்றிச் சிந்திப் பதில் பயனேதும் இருக்கும். அவ்வாறு இல்லையேல் எமது முன்மொழிவுகள் யாவும் கருங்கற் குவியல்களுக்காற்றிய பேருரையாகவே அமைந்துவிடும். பிள்ளை சுயமாகத் தன் சுயத்தைக் கண்டறிய உதவும் ஒன்றாகவே ஒய்வு வேளைச் செயற்பாடுகள் அமையும்.
இந்த வேளையில் பிள்ளை தன் அன்னன் தம்பி, அக்கை தங்கை, அம்மை அப்பன், பேத்தியோடும், அயல் சுற்றத்தோடும் நன்பர்களோடும் தன் பொழுதை ஆனந்தமாகக் களிக்கும். ஆடுதல், பாடுதல், கூடிவிளையாடுதல், கதை கேட்டல், காரியம் செய்தல் எனப்பலதையும் செய்து பிள்ளை தன் னைத் தான் கண்டுகொள்ளும். இந்தவாறு, மாலை வேளைகளை ஓய்வு வேளைகளாகக் கழிக்கும் பிள்ளைக்குப் பாடசாலைக் கற்றல் என்பது விருப் பமான ஒன்றாக அமைந்துவிடும். எனவே பிள்ளை கல்வியை விரும்புவதற் காக, நாம் பிள்ளையை ஆடிப்பாடி விளையாட விடுவோம். இந்த ஆடல், பாடல், விளையாட்டு கதை சொல்லல் என்பவற்றுக்குள்ளே தான் சிறுவர் நாடகமும், சிறுவர் அரங்கும் மறைந்துள்ளது.
குழந்தை ம.சண்முகலிங்கம்
IX
 

Luhu சிறுவர் அரங்கிற்கான நாடகம்
எழுத்துரு நெறியாள்கை
குழந்தை ம.சண்முகலிங்கம்
இசையமைப்பு
தவநாதன் றொபேட்
தயாரிப்பு
செயல் திறன் அரங்க இயக்கம்
நெறியாள்கை உதவி என். சுபாங்கி எஸ். சியாமா
ஆற்றுகை செய்தோர்
க.சத்தியசீலன் பக்சவர்ண T ž நரி நரிய பயசோதரன் 3ம் நரி ச.சிவதர்மினி குரங்கு செ.ஜெனிஸ் ஒட்டகச்சிவிங்கி த.அஐதீா 45TE செகிண்பன் LGT சி.சிவதர்சினி மயில் அ.அயராசுதன் சிங்கம் த.நித்திகா முயல் மாழரீஉசாந்தினி штөії
பாடகள்கள் இசை வாத்தியம்
துயாழினி அ.கேதீஸ் - ஒகன்
த. சுரேந்திரன் - தபேலா
கூடிநின்று உதவியோர்
ச. பாஸ்கரன்" கரீகணேசன் க.இ.கமலநாதன் சோ.தேவராசா த.சிவகுமார் க.தணிகாசலம்
தே.தேவானந்த் நா.சிவசிதம்பரம்
தயாரிப்பு மற்றும் மேடையேற்ற ஒழுங்குகள்
யோ.மயூரன் து.யாழினி த.பிரதீபன் நீசுபாங்கி எஸ்.சுதாகரன் எஸ்.சியாமா
புறஜனி ந.கஜித்தா

Page 10
பஞ்சவர்ண நரியார் நாடக ஆற்றுகையில் கலந்து மகிழும் சிறார்கள்
 

LGuhu சிறுவர் அரங்கிற்கான நாடகம்
இந்த நாடகம் சிறுவர்களுக்கான ஒன்று. வளர்ந்தவர்கள் நடிப்பதற்காக எழு தப்படுகிறது. இதனைப் படச் சட்டமேடை, முற்றம், மண்டபம், மரநிழல் என எந்தவொரு வெளியிலும் ஆற்றுகை செய்யலாம். நிகழ்களத்திற்கேற்ப ஆற்றுகை முறைமை மாறுபடும்.
இனி, நாடக ஆற்றுகைக்குச் செல்வோம். வேட உடுப்புப் புனைதல், ஒப்பனை, காட்சி அமைப்பு என்ற நடவடிக்கையை பார்வையாளர் முன்னிலையில் மேற் கொள்ளலாம். சில உதவிகளுக்குப் பார்வையாளர் சிலரைப் பயன்படுத்திக் கொள்ளலாம். பங்குகொள்வோர் அரங்கின் நதி மூலம் சிறுவர் அரங்கம்" எனக்கொள்ளலாம்.
மேற்கண்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் வேளையில், பார்வையாளரை ஒருமுகப்படுத்துவதற்காகவும், பங்குகொள்ளலில் ஆர்வம் கொள்ளத் துரண்டுவதற்காகவும், அவர்களோடு சேர்ந்து பாடுதல், விளையாடுதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம், பாடல், விளையாட்டு என்பவற்றை, ஆற்றுகை நிகழ்த்தப்படும் இடத்திற்கமையத் தீர்மானித்துக் கொள்ளலாம். இந்த நடவடிக்கையை அடுத்து ஆற்றுகை செய்யப்படவிருக்கும் கதையை பரவலாக அக்கதை அறியப்பட்டுவரும் முறைமையில் - சுருக்கமாக ஒருவர் சுறுவர் ஆத்தோடு இந்த ஆற்றுகையில், இக்கதையில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களையும் கூறுவர்.
பின்வரும் பாடலோடு நாடகம் ஆரம்பமாகும். பாடலை ஆரம்பிப்பதற்கு முன்னர் பார்வையாளரைச் சேர்ந்து பாடுமாறு கேட்டுக் கொள்ளலாம், பாடலை ஒருவர் சொல்லிக் கொடுக்க, ஏனைய ஆற்றுவோரும், பார்வையாளர்களும் பாடலாம்.
LTL): தானனன்னா தானனான தானனானனா தாண்ணன்னா தானனான தானனானனா
வீட்டுப் பூனை நாணயப்பார்த்து அலுத்துப் போச்சுது! காட்டுக் கோழி கரடி பார்க்க ஆசை வந்தது காட்டுக்குள்ளே போவதற்குப் பயமாய் இருக்குது கூட்டிப்போக யாரும் வந்தால் மகிழ்ச்சி பிறக்குது காட்டை விட்டு இங்கே வாங்கோ காட்டு நண்பரே! பாட்டுப்பாடி ஆட வாங்கோ காட்டு நன்பரே!
" க. சந்தியசீலன் -
ت - تبديليږيني عالمعاويا

Page 11
மேற்கண்ட பாடல் நடைபெறுகின்ற போது, ஏற்கனவே ஆடுகளத்தில் வைக்கப்பட்டிருக்கும் வீட்டிற்கு வர்ணம் பூசியபடி நிற்பார். தாம் ஏற்க இருக்கும் பாத்திரத்திற்கான ஒப்பனை, வேட உடுப்பு என்பவற்றை முழுமையாக மேற்கொள்ளாத நிலையில் உள்ள இருவர் வர்ணம் பூசும் பணியில் ஈடுபடுவர். அல்லது, மேற்கண்ட பாடல் பாடப்பட்டு அத னைப்பாடி ஆடியோர் வெளியேற வீட்டினை இருவர் கொணர்ந்து ஆடுகளத்தில் உரிய இடத்தில் நிறுத்தி வர்ணம் பூசத் தொடங்குவர். சிறிது நேரம் வர்ணம் பூசிய பின்னர், அவர்கள் தம்முள் உரையாடுவர்.
ஒருவர் : வீடு கட்டினால், வடிவா வைச்சிருக்க வேணனும்!
மற்றவர் : ஓமோம் வீடெண்டால் என்னென்டு நினைச்சீர்?
ஒருவர் வீடு..... எண்டால்......... வீடுதான் வேறையென்ன?
மற்றவர் : வீடு எண்டது, நாங்கள் வாழுற கோயில்
ஒருவர் : அதுசரி, வீட்டை....... கோயிலைப் போல வைச்சிருக்க வேனுைம்
மற்றவர் : 'வெள்ளையடிச்சு நிறமெல்லாம் பூசி முடிக்க வேறுைம் இண்டைக்கு”
என்டு சொன்னவர் வீட்டுக்காரர்.
ஒருவர் : கிட்டத்தட்ட வேலை முடியுது, இன்னும் கொஞ்சம் தான் பூச
இருக்குது.
மற்றவா? அதற்கிடையில மழை கொட்டும் போல இருக்குது
ஒருவர் : ஒமப்பா மேகம் கறுக்குது
மற்றவர் : மந்தாரம் போடுது
ஒருவர் : காத்தும் அடிக்குது
மற்றவர் : கூதல் விறைக்குது!!
ஒருவர் இடியும் இடிக்குது!!
மற்றவர் : மின்னல் தெறிக்குது
ஒருவர் : இனி நின்ைடால் மழைக்க அம்பிட்டுப் போவம் ஓடி வாரும்!
[]] മെ(ബ്

மற்றவர் : ஓடிவாரும்..................... நிறப்பூச்சுப் பேணி எல்லாத்
தையும் வீட்டுக்க வைச்சிட்டு ஓடுவம் எங்கட வீடுகளுக்கு
ஒருவர் : இந்தாவாறன்!! நின்டால் பிசகு!!!
இருவரும் வர்ணப் பூச்சுகளுள்ள தகரக் கிண்ணங்களையும் ஏனைய பொருட்களையும் அவசர அவசரமாக எடுத்துக் கொண்டு வீட்டுக்குள் விரைந்து அங்கு அவற்றை வைத்துவிட்டு வெளியேற முற்படும் வேளையில், இவர்களது காலில் தடக்குண்டு தகரப்பேணிகள் உருண் டோடுகின்றன.
மற்றவர் : என்னப்பா சத்தம்? வெண்கலக் கடேக்க யானை புகுந்தது போல?
ஒருவர் : பூச்சுக் கிண்ணமெல்லாம் காலில் தடக்குண்டு தரையில பிரதட்ட பண்ணுைது வீடெல்லாம் உருளுது அஞ்சுநிறம் விறாந்தையில பெருகுது
மற்றவர் : ஆ. ... என்ன வேலை செய்தனி?....... 11 அடடடடட இடியும் இடிக்குது!!
ஒருவர் : ஐயையையைய!! மின்னல் தெறிக்குது!! வா வா வா வா வா விண்கூவிப் பறப்பம்!
இருவரும் விரைந்தோடுகின்றனர். நால்வர் பாடகர்களாக வருகின்றனர். பாத்திரங்களாக வேடமிட்டுள்ளவர்களில் நன்கு பாடக்கூடியவரும் இப் பணியினை மேற்கொள்ளலாம். அவர்கள் பின்வரும் பாடலைப் பாடுவர்.
LTL6) : மேகம் கறுக்குது
மந்தாரம் போடுது காற்றும் அடிக்குது கூதல் விறைக்குது
இடியும் இடிக்குது மின்னல் தெறிக்குது மழையும் வருகுது மாரியும் கொட்டுது
பாடல் முடிவடையும் வேளையில் பஞ்சவர்ண நரியார், மழையில் ಜ್ಷಣ தோய்ந்து வருகிறார். மழைக்கு ஒதுங்குவதற்கு இடம் தேடு
றாா.
பஞ்சவர்ண நரி : குவாக் - குவாக் - குவாக் - குவாக் - கூ - ஊ - ஊ - ஊ -
ognu, MayaSkwad -ro

Page 12
"ஊ........ (என உரத்து ஊளையிட்டு விட்டு) காட்டு நரி நான், நாட்டைப் பார்க்க ஆசைப்பட்டன்! அதால காட்டில இருந்து நாட்டுக்கு
வந்தன் . . . . . . . . காட்டில தான் மழை பெய்யுமென்டால் நாட்டிலயும் பெய் யுது. . . . . நான் என்ன, நாடு பார்க்க வந்தனானோ, மழையில நனைய வந் தனானோ? . . . . . காட்டில எண்டால், மழை வெய்யிலுக்கு ஒதுங்கி நிற்க,
நிறைய மரங்களிருக்கு. இங்க ஒரு மரத்தையும் கானேல்ல! (பார்வை யாளரைப் பார்த்து) மெய்யே பிள்ளையஸ் ! நல்லா நனைஞ்சு போனன், குளிருது ஒதுங்கி நிற்க ஒரு இடம் காட்டுறிங்களே? ஓம் . அச்சாப் பிள்ளையஸ் . . . . . இதுதான் வீடோ. மணிசர் இருக்கிற வீடோ? ... அப்படியே நான் போய் வீட்டுக்குள்ள நிற்பம்!
பஞ்சவர்ண நரியார் பயந்து பயந்து, தயங்கித்தயங்கி, அங்குமிங்கும் பார்த்து, நடந்து வீட்டை நோக்கிச் சென்று இறுதியில் வீட்டுக்குள் செல்லும் வரை பின்வரும் பாடல் பாடப்படுகிறது.
JML6):- காட்டை விட்டு நாடு வந்த நரியானாரும்
நல்ல மழை வந்திடவே நனைந்து வாறார்! காட்டுக்குள்ளே வீட்டை அவர் கண்டதில்லை நாட்டுக்குள்ளே வீட்டைக் கண்டார் பதுங்கிப் போறார்!
தந்தனத்தோம் ததிங்கினத்தோம் தந்தனானா தெந்தனத்தீம் தெனதெனதிம் திந்தனானா
பஞ்சவர்ண நரி : இதென்ன மழையப்பா இது வந்தால் போகத் தெரியாமல் நிக்குது கன தூரம் நடந்து வந்தது களைப்பா(ய்) இருக்குது. கண்ணனும் முடுது. . . . . . நித்திரையும் வருகுது. . . . . .
பஞ்சவர்ண நரியார் உரத்துக் கொட்டாவி விடுகிறார். இருந்த இரையில் தூங்கி வழிந்து சிறிது பொழுதால், தன்னையறியாது தரையில் சரிந்து படுத்து உறங்கி விடுகிறார். நரியார் உறங்க ஆரம்பிக்கும் வேளையில் பின்வரும் தாலாட்டு பாடப்படுகிறது - பார்வை யாளரையும் சேர்ந்து பாடுமாறு கேட்கலாம்.
UTL6) : ஆராரோ ஆரிவரோ ஆரிவரோ ஆராரோ!
காட்டை விட்டு நாடு பார்க்க ஓடிவந்த நன்நரியே! கால்நடையாய் வந்தீரோ: ஓடோடி வந்தீரோ! வந்தகளை தீரவேனுைம் கண்மணியே நித்திரைகொள்! நித்திரையில் நீர்தரையில் பிரண்டுருண்டு கொள்வீரோ!
நித்திரைவிட்டெழுகையிலே உன்மேனி பஞ்சவர்ணம் அஞ்சு நிறம் பஞ்சவர்ணம் பஞ்சவர்ணம் அஞ்சுநிறம்
4. - മത്രഭെ

அஞ்சாது நித்திரை கொள் அஞ்சுவர்ணக் கோலத்திலே
ஆராரோ ஆரிவரோ ஆரிவரோ ஆராரோ
நீராரென்று அறியாது காடெல்லாம் கலங்கிவிடும்
ஆராரோ ஆரிவரோ ஆரிவரோ ஆராரோ
ஆராரோ ஆரிவரோ ஆரிவரோ ஆராரோ
விடியலுக்கான ஓசை ஒலிகள் கேட்கின்றன. சேவல் கூவும், மணியோசை ஒலிக்கும் - இந்தவாறு விடியலுக்கான ஓசை ஒலி எல்லாம் கேட்கலாம். இவ்வேளை பாடகர்கள் வந்து பார்வையாளர்களுடன் உரையாடுதல்.
பாடகர் 1 : எங்க நரியாரைக் கானேல்ல?
பாடகள் 2 : அவர் எழும்பிப் போட்டாரோ?
பார்வையாளர் e o so e o os e o so e o so e o os e o so or e o see e
பாடகர் 3 : ஒ, வீட்டுக்குள்ளதான் இன்னமும் நித்திரையோ?
பார்வையாளர் LL LLLLSS LL LLLLL S LLLLL LL LLL LLLL LL LLL LLLL LL LLL LLLL Y LLLLLL LL LLL LLLL YLLLL LLL LLL LLLL LL LLLLL S LLLLL LL LLLLS LL LLLLLS LLL LLLS LLL LL LLLLL S LLLLL LL
பாடகர் 4 : நல்லா விடிஞ்சிட்டுது வெய்யிலும் வந்திட்டுது நரியார் இன்னமும்
நித்திரையோ?
UTT606 UT6ll . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
பாடகர் 1 : நரியார் எழும்பி வரேக்க அவருக்கு என்ன நடந்திருக்கும்?
UTs606JuJIT6list : . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
பாடகள் 2 : ஓம், நிறம்மாறி வருவார் எத்தினை நிறத்தில வருவார்?
UTs606JuT6lift : . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
பாடகர் 3 : ஒம், அஞ்சு நிறத்தில வருவார். பஞ்சவர்ண நரியாரா வருவார் 1
பாடகர் 4 : பஞ்சவர்னம் என்றால் என்ன?
UTfGO)6]uistolfi : . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
பாடகள் 1 : ஓம்........ அஞ்சுநிறம், இனி என்ன நடக்கும் எண்டதை
நாங்கள் அமைதியாய் இருந்து பாப்பம்.
ωνγης κάψιδικό τε - -- Φ 5

Page 13
பா கர் ! நீங்களும் அமைதியாய் இருந்து பாருங்கோ.
Usis boehlustells : ...................................................
பாடகர் வெளியேறுவர் அல்லது ஒரு புறத்தே மறைந்திருந்து பார்ப்பர். நரி கொட்டாவி விடத்தொடங்க அது ஊளையாக மாறி முடிவடைய விட்டிற்குள்ளிருந்து சோம்பல் முறித்தபடி வெளியே வருகிறது.
பஞ்சவர்ண நரி : விறாந்தையில படுத்தனான், முழிச்சுப்பார்க்க வீட்டுக்குள்ள கிடக்கிறன்! அது எப்படி நடக்கும்? ஓ....! அப்படித்தான் இருக்கும்........ நித்திரயில..... நான் உருண்டுருண்டு வீட்டுக்குள்ள சேர்ந்திருப்பன்........ நல்லா விடிஞ்சிட்டுது. . . . . . . . . . பசிக்குது. . . . . . . . . நல்லாப் பசிக்குது ......... பசி குடலை விறாண்டுது...... நாடு பார்த்ததும் போதும் நல்ல மழையில நனைஞ்சதும் போதும். கெதியாய் காட்டுக்குப் போவம்.
நரி வெளியேறுகிறது. வீடு அப்புறப்படுத்தப்படுகிறது. காட்டுக்குரிய காட்சியமைப்பு. மேற்கொள்ளப்படுகிறது. காட்சி மாற்றம் மேற்கொள் ளப்படும் வேளையில் பின்வரும் பாடல் பாடப்படலாம்.
பாடல்:- தனம் தனாதன தனனா " தன . தானின னானின தானின னானா தனம் தனாதன தனனா
காடு வா வா எனவே "நல்ல காடும் வருகுது கவனித்து பாரும் காடு வா வா எனவே
வீடு போ போ என்றால் - இந்த வீடும் வெளிக்கிட்டு போகுது பாரும் வீடு போ போ என்றால்
மனம் மகிழ்ந்துமே நரியார் - மிக வேகமாய் நாட்டுக்கு நேற்றுத்தான் போனார் மனம் மகிழ்ந்துமே நரியார்.
&FL &FL- GT6OT LD6oogpujib - L55 வேகமாய்க் கொட்டவே வீட்டுக்குள் போனார்
சட சட என மழையும்
நடநட எனநடந்த " களை
s - മല്പുര്

தீரவே நரியனார் தரையினில் படுத்தார் நடநட என நடந்த
அடடா இது என்ன மாயம் - அவர் மேனியிலே பல நிறங்கள் பாரும் SiLLIT SHJ Grsör60T LDTub
பாவம் நரியனார் ஐயோ! - மிகப் பசித்திடவே அவர் காட்டுக்கு வாறார் பாவம் நரியனார் ஐயோ!
காட்சி மாற்றங்கள் செய்யப்பட்டதும் அனைவரும் அவ்இடத்தைவிட்டு அப் பால் சென்று விடுகின்றனர். அதனை அடுத்து பஞ்சவர்ண நரியார் வருகின்றார்.
பஞ்சவர்ண நரி : அப்பாடா!........ . . . . . நடநட எண்டு நடந்து காட்டு எல்லைக்கு வந்து சேர்ந்திட்டன்....... ....... என்ன விஷேசம் இன்டைக்குக் காடு வெறிச்சோடிக் கிடக்கு ஒருமிருகங்களையும் காணேல்ல
அவ்வேளை முயல் ஒன்று வேகமாக ஓடி வருகிறது. திடீரென அதிசயப் பிராணி ஒன்றைக் கண்ட அதிர்ச்சியில் அது
முயல் : என்ர ஐயோ! என்னைக் காப்பாற்றுங்கோ! கடவுளே!
(என்று உரத்துக் கத்தியவாறு துள்ளிக் குதித்து வந்த வழியே ஒடித் தப்புகிறது. இதைக் கண்டு பஞ்சவர்ணத்தார் ஒரு கணம் வியப்பில் ஸ்தம்பித்து நின்று விட்டு வியப்போடு அங்கும் இங்கும் பார்த்து விட்டு)
பஞ்சவர்ண நரி : முயலார் ஏன் இந்தப் பாடுபட்டு, குளறிக் கொண்டு இந்த ஓட்டம் ஒடுறார்? என்னைத் தவிர வேற ஒருத்தரையும் இங்க காணேல்ல
நரியார் ஆச்சரியத்தில் மூழ்கி இருக்கின்ற வேளையில், வயிராறப் பச் சைப் புல், இலை, குழை உண்ட மகிழ்வில் மானார் பாடிக் கொண்டு துள்ளித் துள்ளி வருகிறார்.
DT6:- தனத்த தன தன தனத்த தன தன
தனத்த தன தனதா
வனத்தில் நிறையவே செழித்த குழையுண்டு எனக்கு உணவது தான்!
நறுக்கு நறுக்கென வளர்ந்த புல்லையும்
eginho, alyaSallað VED ン

Page 14
சுறுக்கு உண்டு விட்டேன்
ஆனந்தமாகப் பாடிக் கொண்டு துள்ளித் துள்ளி வந்த மானார் பஞ் சவர்ண நரியாரைக் கண்டு ஏங்கி, நடுங்கி, துள்ளி கீழே பொத்" என்று விழுந்து, சாஷடாங்கமாக வணங்கி விட்டுவேகமாக எழுந்து ஓடுகிறார்.
இதனையடுத்து யானையார் வருகிறார். அவர்
usT60601 : 3). . . . . . . b. . . . . . . . 3. . . . . . . . b. . . . . . . o ogo o e o o . . . ib. . . . . . . . . .
என்றவாறு தன்னை மறந்த தியானத்தில் வந்தவர். பஞ்சவர்ண நரி யாரைக் கண்டதும், ஸ்தம்பித்து நின்று உற்றுப் பார்த்து விட்டுத் திரும்ப அவகாசம் இல்லாதவராக, வந்தவாறே பின்னோக்கிச் செல்கிறார். - இத னையடுத்து, யானையார் பின்னோக்கிச் செல்வதைக் கண்டு விட்டு குரங் கனார் வருகிறார்.
குரங்கு : இன்டைக்கு யானையாருக்கு என்ன நடந்தது? சரியான வேகமா (ய்)ப் பின்புறமா ஓடுகிறார். கேக்க கேக்க ஒன்டும்பேசாமல் ஒடுறார் உடம்பு குறையட்டும் எண்டு முன்னும் பின்னும் ஓட்டப்பயிற்சி செய்யிறாராக்கும். செய் யட்டும் செய்யட்டும்.
குரங்கார் திரும்பிப் பார்த்தபோது பஞ்சவர்ண நரியர்ரைக் கண்டு ஒரு கணம் செய்வதறியாது நின்று, பின்னர் திடீரென விறைப்பாய் நின்று 'சல்யூட்" அடிக்க, அதைக்கண்ட பஞ்ச வாணத்தாரும் பயத்தில் 'சல்யூட்" அடிக்க குரங்கார் பயந்து கிறீச்சிட்டுக் கொண்டு ஓடுகிறார்.
பஞ்சவர்ண நரி : காட்டு மிருகங்களுக்கு இண்டைக்கு என்ன நடந்தது? வழக்கமாக என்னைக் கன்டா சந்தோசமா(ய்) கதைக்கிறவை இண்டைக் கேன் இப்படித் தலைதெறிக்க ஓடுகினம்? விழுந்து கும்பிடுகினம்? திரும்ப நேரம் இல்லாமல் பின்புறமா ஓடுகினம்? சல்யூட் அடிக்கினம்? ... நான் இல்லாத 635.Jädäa) • ••••• ஒரு புது விளையாட்டைக் கண்டு பிடிச்சிட்டினமோ? ..... ébe • • • • • • நான் ஏன் தான் இந்தக் காட்டை விட்டு நாடு பார்க்கப் போனன்?
நரியார் மிகுந்த கவலையோடு தலையைத் தாழப் போடுகிறார். அப்போது அவர் தன் உடம்பின் நிறம் மாறியிருப்பதைக் காண் கிறார். மிகுந்த சோகத்தோடு உரத்து ஊளையிடுகிறார்.
பஞ்சவர்ண நரி : எனக்கு என்ன நடந்தது எப்பிடி என்ர நிறம் மாறினது?
நரி மீண்டும் ஊளையிடுகிறது.
- ലെബ്നു

பஞ்சவர்ண நரி : ஓகோ என்ர நிறத்தைக் கண்டு பயந்து தான் எல்லாரும்
குடல் தெறிக்க ஓடினவையோ?..... .. எல்லாரும் எனக்குப் பயப்பிட்டு ஒடுறாங்கள். நிறம் மாறினது எனக்கு வசதியா(ய்)ப் போச்சுது. இனி இந்தக் காட்டுக்கு ராசா நான்தான்....... நானே தான் ராசா!!!. . . . . . . . . . .
நரியார் ஆனந்த மிகுதியால் ஊளையிடுகிறார். இந்தச் சத்தத்தைக் கேட்ட மற்றுமொரு நரி ஊளையிட்டவாறு வேகமாக வருகிறது. பஞ்சவர்ண நரி யைக் கண்டு திடுக்குற்று
நரி2 : இதென்ன இது ஒரு நாளும் காணாத புது உருவம்... 1.
8uToo o o t Jämälebest uTfr? guurt
பஞ்சவர்ண நரி : நான் யார் என்று கேட்க நீ யார்?????
bj2 : BTsi guJIT........ BifuJTft
பஞ்சவர்ண நரி : நீதான் நரியா?
நரி2 : ஒமய்யா!
பஞ்சவர்ணநரி : எதற்காக வந்தாய்?
நரி2: ஊளைச்சத்தம் ஒன்று கேட்டுதையா....... elblaster . . . . . . . .
...... என்னென்டு பார்க்க வந்தனான்
பஞ்சவர்ண நரி : ஓ.. அதுவா? (சிரித்து) உங்கட நரியரில ஒருத்தர் வந்தார் சேட்டை விட்டார்! விட்டன் ஒரு உதை! (2 ஆம் நரிக்கு உதையொன்று விட அது உரத்து ஊளையிடுகிறது) அந்த நரியும் இப்படித்தான் குளறிக்கொண்டு ஓடுது
உதை வாங்கிய 2ஆம் நரி நிலத்தில் விழுந்து கிடக்க பஞ்சவர்ண நரி அதன் மீது ஒரு காலை வைத்தபடி நிற்கிறது. அவ்வேளை ஒட்டகச்சி விங்கி அவ்வழியே வருகிறது. விநோதப்பிராணி ஒன்று நரியொன்றை மிதித்தபடி நிற்பதைக் கண்டு ஒதுங்கி ஓடுகிறது. ஆடி ஆடி வந்த மயில், பயத்தில் தனது தோகையைச் சுருக்கிக் கொண்டு ஒடுகிறது. இந்த வாறே கரடி என்பனவும் பயந்து ஓடுகின்றன. இவை அனைத்தையும் கண்ட மகிழ்ச்சியில் பஞ்சவர்ண நரியார் உரத்து ஊழையிட முற்பட்டு குவாக்" என ஆரம்பித்துப் பின்னர் தன் தவறை உணர்ந்து வாயைப் பொத்திக் கொண்டு ஊளையை அடக்கிக் கொள்கிறது. காலடியில் கிடந்த 2 ஆம் நரியார் இதனை அவதானிக்கிறார். அவரது சந்தேகம் வலுவடைகிறது. 2ஆம் நரியாரை மிதித்திருந்த தனது காலை எடுத்தபடி
Goyahu, blentyn. Sefab Ted

Page 15
பஞ்சவர்ண நரி : அடே அற்பப் பதரே! எழுந்துநில்! நான் சொன்னபடி செய் !
நரி2 : செய்கிறேன் மகாராசா
பஞ்சவர்ண நரி : (மனதிற்குள்) ஆகா! ... மகாராசா!......(பின்னர்
உரத்து) காடெல்லாம் ஓடு
நரி2 : ஓடுகிறேன் ராசா (நின்ற இடத்தில் ஓடத் தொடங்குகிறது)
பஞ்சவர்ண நரி நில்! இந்தக்காட்டுக்கு அரசன் நான்? கேட்டுதா?
நரி 2 : கேட்டுது மகாராசா
பஞ்சவர்ண நரி : முரசறைந்து எல்லோருக்கும் சொல், “புதிய மகாராசா எல்
லோரையும் அழைக்கிறார்” என்று.
நரி2 : அப்படியே மகாப்பிரபு
பஞ்சவர்ண நரி : (தனக்குள்) ஆகா! மகாப்பிரபு (உரத்து) ஓடு உடனே
அழைத்து வா அனைவரையும்
நரி2 : அப்படியே மகாப்பிரபு
2 ஆம் நரி வெளியேறுகிறது.
பஞ்சவர்ண நரி : ஆகா! இனி நான்தான் இந்தக் காட்டுக்கு மகாராசா ... பழைய சிங்கத்தாரும் வருவார். அவரைக் கண்டு பயப்பிடக்கூடாது!!
நரியார் உரத்துச் சிரிக்கிறார். பாடகர்கள் வந்து பின்வரும் பாடலைப் பாடுகின்றனர். அல்லது நரியார் பாட, பாடகர் பிற்பாட்டுப் பாடலாம். நரி யார் ஆனந்தமாக ஆடுவார். -
(JITL6) : சிவப்பு வெள்ளை கறுப்பு மஞ்சள்
பச்சை நீலம் கத்தரிப்பூநிறம்! வேஷம் போட வசதி வந்தது! வாழ்த்திக் கும்பிட ஆளுமிருக்குது தத்தித் தகனக சொம் தரிகிடதக தகதித் தகனக சொம் தரி கிடதக
- பாடல் முடிந்ததும் நரியனாரும் பாடகர்களும் வெளியேறி விடுவர்2ஆம் நரி முரசறைந்தவாறு வருகிறது. ஏனைய மிருகங்கள் ஒவ்வொன் றாக வந்து நரியை
回 - മത്ലീങ്ങൂര്

வியப்போடு பார்த்து நிற்கின்றது. அனைத்து மிருகங்களும் வந்துசேர்ந்த
5676mir
நரி2 : இத்தால் சகலரும் அறிய வேண்டியது......
சிங்கம் : என்னடா சகலரும் அறிய வேண்டியது?
நரி2 : புத்தம் புதிய மகாராசாவின் பென்னம் பெரிய அறிவித்தல்
ஒட்டகச்சிவிங்கி : சிங்கராசா இருக்க யாரவர் புதிய மகாராசா?
சிங்கம் : என்னைவிட எவனடா ராசா?
நரி2: (பாடலாக)
வானவில் ஏறி வந்த அவர்
பஞ்சவர்ண ராசா - எங்கள்
புதிய வண்ண ராசா
யானை : அட அட அவரே! நாங்கள் எல்லாம் போகத்தான் வேனுைம்
சிங்கம் : நான் வரமாட்டேன்!
முயல் : போகத்தான் வேனுைமய்யா!
சிங்கம் : இல்ல முடியாது
மான் : அப்படிச் சொல்லாதோங்கோ வாங்கோ
சிங்கம் : கடைசி வரை வரமாட்டன்!
குரங்கு : ஐயோ! அவரை நீங்கள் பார்க்க வேனுைம்
சிங்கம் : நான் பார்க்கமாட்டன்
மயில் : அவரை நீங்கள் பார்க்கவேண்டாம் ஒருக்கா வாங்கோ
நரி3 : ஓ கன்னை முடிக்கொண்டு வந்து நில்லுங்கோ
சிங்கம் : கண்ணை முடவும் மாட்டன்! வரவும் மாட்டன்!
கரடி : ஒருக்கா வந்துதான் பாருங்கோவன்!
öyleye dayaSA ve n

Page 16
சிங்கம் : ஏன் நான் பார்க்க வேணும்? நான் வரமாட்டன்
யானை : சிங்கத்தார் எனக்காக ஒருக்கா வாங்கோ
சிங்கம் : சரி, யானையாருக்காக, உங்கள் எல்லாருக்காகவும் நான் வாறன்!
எல்லோரும் : அச்சா சிங்கத்தார்!!!
யானை : சரி வெளிக்கிடுங்கோ
2 ஆம் நரி முன்புறம் சென்று அணிநடைப்பாணியில்
நரி2 : “லெவ்ற் றைற் லெவ்ற் றைற்”
கரடி : பொறும் பொறும் இங்கிலீஸ்சை விடும் தமிழ்ழ சொல்லும்
நரி2 : “சொறி சொறி”............. இடம் வலம், இடம் வலம்
சிங்கம் : நிப்பாட்டு எனக்கொண்டும் விளங்கேல்ல!
ஒட்டகச்சிவிங்கி : இவ்வளவு நாளும் நீங்கள் ராசா
மான் : ஆதால உங்களுக்கு, இந்த நடையள் தேவைப்படேல்ல
குரங்கு : நாங்கள் அடிமைகள்! எங்களுக்கு இந்த நடை பழகிப் போச்சுது!
மயில் : போடுற தாளத்திற்கு நடப்பம் நாங்கள்
முயல் : ராசா எந்தத் தாளம் போடுறாரோ?!!!
நரி3 : அந்தத் தாளத்திற்கு நடப்பம் நாங்கள்
கரடி சரி சரி ஓடிப்போய் ஓலையும் சீலையும் எடுத்து வாங்கோ
யானை : சிங்கத்தாருக்கும் ஒரு சோடி கொண்டு வாங்கோ
அனைவரும் அங்குமிங்கும் ஓடிச்சென்று ஒலையும் சீலையும் கொண்டு வருகின்றனர். தத் தம் இடது காலில் ஓலையும் வலது காலில் சீலையும் கட்டிக் கொள்கின்றனர்.
ஒட்டகச்சிவிங்கி : யானையாருக்கு ஆரும் கட்டி விடுங்கோ
12 V. - മല്പുര്

யானை : ஒம் என்னால குனிய ஏலா(து)
குரங்கு : நான் வாறன் கட்டிவிட
நரி2 : நானும் வாறன் கட்டிவிட
சிங்கம் : எனக்கும் ஆரும் கட்டிவிடுங்கோ தயவு செய்து
நரி3 : பாவம் பழம் ராசா அவரைத் தேடுவாரில்ல!
3ஆம் நரி சிங்கத்துக்கு கட்டி விடுகிறது.
மான் : நான் வாறன் சிங்கத்தாருக்குச் சீலைக்காலைக் கட்ட
மயில் : சிங்கத்தாருக்கும் இப்படி ஒரு காலம் வந்துதே
முயல் : ஆனைக்கொரு காலம் பூனைக்கொரு காலம்
யானை : எனக்கெப்ப நல்ல காலம் வந்தது?
கரடி : அவருக்கெப்பவும் ஒலைக்காலும் சீலைக்காலும் தான்!
நரி2 : எல்லாரும் கதையை விடுங்கோ
குரங்கு : ஓமோம் அணிநடையைத் தொடங்குவம்
சிங்கம் : பொறுங்கோ பொறுங்கோ! எனக்கொருக்கா உந்த நடையைப்
பழக்குங்கோ!
ஒட்டகச்சிவிங்கி : சிங்கத்தார்! நீங்கள் விலத்தி நிண்டு பாருங்கோ
யானை : ஓம்! நாங்கள் அணிநடை நடந்து காட்டுறம்!
சிங்கத்தார் விலத்தி நின்று பார்க்க ஏனைய மிருகங்கள் அணிநடைக்கு
ஆயத்தமாக நிற்க
நரி2 : ஒலைக்காலை முன்னே வை! சீலைக்காலை பின்னே வை ஓலைக் கால் சீலைக்கால் ஒலைக்கால் சீலைக்கால் ஓலை சீலை ஓலை சீலை
சிங்கம் : போதும் போதும் இனி நான் நடப்பன்!
n, MySa

Page 17
கரடி : மெத்தச் சரி மேள நரியார் தொடங்கும் அணிநடையை
நரி2 : இந்தா... தொடங்கிறேன்...... ஒலைக்கால் சீலைக்கால்
ஒலை சீலை ஓலை சீலை ஓலை சீலை......
என அணிநடை ஆரம்பித்து வட்டமாக நடக்க ஆரம்பிக்கும் போது பின்வரும் பாடல் பாடப்பட அணிநடை தொடரும் .
UTL6) : எங்கள் புதிய ராசா -
பஞ்சவர்ண ராசா வானவில்லை விட்டிறங்கி வந்து சேர்ந்த ராசா திங்கள் போல ஒளிபடைத்த எங்கள் புதிய ராசா கானகத்தை ஆளவந்த புத்தம் புதிய ராசா
பாடல் முடிவடையும் வேளையில் அணி நடையினர் வெளியேறிவிடுவர். வேண்டுமானால் காட்சி மாற்றங்கள் செய்யலாம். இல்லையெனில் அணி நடையார் ஒரு புறத்தால் சென்று மறைய மறுபுறத்தால் பஞ்சவர்ண நரி யார் வருவார்.
பஞ்சவர்ண நரி : எல்லோரையும் கூட்டிவரப் போனவரை இன்னும் காணேல்ல. நானும் நரி வர்ணத்தான் தான் எண்டதை கண்டு பிடிச்சிட்டாரோ?.......
அவ்வேளையில் அணிநடையினரின் ஒலை சீலை. ஒலியும் அணிநடைப் பாத ஒலியும் கேட்கிறது.
பஞ்சவர்ண நரி : எல்லோரும் வருகினம் நான் பயப்பிடக்கூடாது
பஞ்சவர்ணத்தார் பயத்தையும் நடுக்கத்தையும் கஷ்ரப்பட்டு அடக்கிக் கொண்டு நிற்க அணிநடையினர் அங்கு வந்து சேர்கின்றனர். பஞ்சவர் ணத்தார் என்ன செய்வதென அறி யாதவராகத் தனது வாலை எடுத்து அரையில் சுற்றியவாறு விறைப்பாக நின்று 'சல்யூட்" அடிக்க, அணிந டையினரும் 'சல்யூட்" அடித்து நடந்து பின்னர்.
நரி2 : அணி கலைந்து நில்!
அணிநடையினர் கலைந்து ஆங்காங்கே நிற்பர்.
நரி2 : எல்லாரும் வந்திட்டினம்
பஞ்சவர்ண நரி : சரி எல்லோரும் கேளுங்கோ


Page 18
சிங்கம் : இப்ப. ..... இவர் யானை இனம், நான் சிங்க இனம், அவர்.....
கரடி : நான் கரடி இனம்
மயில் : நான் மயில் இனம்.
நரி3 : நான் நரி இனம்!!!
பஞ்சவர்ண நரி : நான் அந்த இனம் இல்லை!
ஒட்டகச்சிவிங்கி : நான் ஒட்டகச்சிவிங்கி இனம்,
குரங்கு : நான் குரங்கினம்
நரி2 : நானும் நரி இனம்!!!
பஞ்சவர்ண நரி : நான் அப்படி இல்ல!
மான் : நான் மான் இனம்.
முயல் : நான் முயல் இனம்.
சிங்கம் : இந்த மாதிரி. நீர் எந்த இனம் எண்டுதான் நாங்கள் கேட்கிறம்.
பஞ்சவர்ண நரி : நாங்கள் ஆக்காஷத்தில இனம் பார்க்கிறதில்ல எல்லோ
ரும் ஒரே இனம்.
யானை சரி, அந்த ஒரே இனத்தின்ர பேரென்ன?
LIGb3F6JÜGOOT [bif : e-. . . . . . . . Guir. . . . . . . . (Buft. . . . . . . GAJöðl. . . . . . . . . IB6 . . . . . . . [56ố • • • • • • • 56ő • • • • • • • • • • B • • • • • • Bif. • • • • • • • • நர்க்கோஷியா இனம்
நரி3 : நர்க்கோஷியாவா? நரிக்கோஷியாவா?
பஞ்சவர்ண நரி : சீச்சீச்சீச்சீபுநர்க்கோஷியா
நரி2 : எண்டாலும் கிட்டதட்ட எங்கட பேருக்கு கிட்ட வந்துட்டுது
பஞ்சவர்ண நரி : தேவையில்லாத கதையள விடுங்கோ! நான் தான் உங்க
ளுக்கு ராசா!! விளங்கிச்சுதோ!!!
- ലെബ്നു

u6dň : Quid. . . . . . . ஓம். நீங்கள் தான் புதுராசா
பஞ்சவர்ண நரி : என்ன யானையாரும் சிங்கத்தாரும் பேசாமல் இருக்கிறீங்கள்?
யானை : கனபேர் ஏற்றாப்பிறகு நான் என்ன செய்யிறது! நானும் ஏற்கிறன்!
சிங்கம் : அப்ப பின்ன நானும் ஏற்கிறன்! தனிச்சு நிண்டு என்னசெய்யிறது சிங்கத்திற்கொரு காலம் என்டால். . . . . . . மிச்சம் தின்னுற நரிக்கும் ஒரு காலம் வரத்தானே செய்யும்
பஞ்சவர்ண நரி : என்னது? நரி கிரி என்று கதைத்துக் கொண்டு?
சிங்கம் : அப்பிடியொண்டுமில்ல!
பஞ்சவர்ண நரி : சரி, உங்கள் புதிய மன்னரை நீங்கள் மனம் திறந்து
வாழ்த்தக் கூடாதா?
நரி3 : வாழ்த்தலாம் வாழ்த்தலாம்!
ஒட்டகச் சிவிங்கி : ராஜாதி ராஜ ராஜ மார்த்தாண்ட ராஜ கம்பீர ராஜ குலதிலகர் ராஜாதி ராஜாதி ராஜாதி ராஜ ஆக்காவுரிய வர்ணாஷியா மாமன்னர் வாழ்க!!!!!
எல்லோரும்- (தமது வால்களை உயர்த்திப் பிடித்து) வாழ்க!! வாழ்க!! வாழ்க!
பஞ்சவர்ண நரி : மெத்த மகிழ்ச்சி. இனி அரச கருமங்களை ஆரம்பிப்
Cumb
நரி2 : ஆரம்பிப்போம் மன்னா!
பஞ்சவர்ண நரி : (3 ஆம் நரியைப் பார்த்து) பதிவுப் புத்தகத்தை எடுத் துவா (3ஆம் நரி ஒடிச் சென்று பெரிய புத்தகம் ஒன்றையும், பெரிய பேனா ஒன்றையும் எடுத்து வருகிறது.) நான் அரசனாக பதவி ஏற்றதை புத்தகத்தில் பதிய வேண்டும்!
மயில் : அதுதான் நல்லது
பஞ்சவர்ண நரி : (3 ஆம் நரியிடம்) நான் சொல்வதை எழுது
நரி3 : அப்படியே செய்கிறேன். மன்னவா!
Goshoo, biy:Soho • 17

Page 19
பஞ்சவர்ண நரி : இரண்டு சைவர் சைவர்.
யானை : இரண்டு சைவரா?
சிங்கம் : இல்லையே!
கரடி : இங்க ஐந்து சைவர்கள் இருக்கிறார்கள்!
பஞ்சவர்ண நரி : இரண்டாயிரத்து நான்கில் இரண்டு சைவர் தானே வரும்?
குரங்கு : ராசா நீங்கள் ஆண்டில வாற சைவரைச் சொல்ல. .......
மான் : ஒ, இவை மச்சம் சாப்பிடாத சைவற்ர கணக்கைச் சொல்லுகினம்
முயல் : ஒம், ராசா எங்கள்ள அஞ்சு பேர் மச்சம் சாப்பிடுறதில்ல.
பஞ்சவர்ண நரி : யாரவை?
கரடி முயலார், மானார், குரங்கார், யானையார், ஒட்டகச்சிவிங்கியார்.
நரி2 மற்றாக்கள் நாங்கள் நல்லா வெளுத்துக் கட்டுவம் மச்சம்
சிங்கம் : உங்கட பாடு எப்படி? மச்சம் சாப்பிடுவியளோ?
பஞ்சவர்ண நரி 1 (மறந்து போய்) நீங்கள் சாப்பிட்டு விட்ட மிச்சத்தை நான் சாப்பிடுவன்.(தன்னை சுதாகரித்துக் கொண்டு) ஆ. ஆ சாப்பிடுவன் என்டு நினைச்சியளோ?
2ம் நரியும் 3ம் நரியும் ஒரு பக்கமாகச் சென்று
நரி3 : இவர் எங்கட ஆள்த்தான் அதில சந்தேகமே இல்லை!
நரி2 : எனக்கும் இவரில சந்தேகமா இருக்குது
பஞ்சவர்ண நரி : அங்க என்னடா குசு குசு கதை?
நரி3 : எங்கட நரி நண்பர் ஒருத்தர் நேற்று நாடு பார்க்க எண்டு போனவர்.
பஞ்சவர்ண நரி : என்ன என்ன என்ன என்ன என்ன நன் நன் நன் நாடு
பாக்கப் போனவரோ???
s - മന്ത്രണ്ടുല്ക്കു

மயில் : ஒம் நாங்கள் எல்லாரும் தடுக்கத் தடுக்கப் போனவர்
2ம் நரியும் 3ம் நரியும் ஒப்பாரிப் பாடல் பாடுகின்றன.
LITL6) : போகாதே போகாதே நரி மகனே!
பொல்லாத நாடத நானும் சொன்னேன்! சொல்லவும் போனானே பேய்ப் பெடியன்! சொந்தத்தை விட்டானே நரிப்பெடியன்
பஞ்சவர்ண நரி : என்ன? நரிப் பெடியனோ?
யானை : தங்கட சொல்லைக் கேளாமல் அவர் போன சோகத்தில அப்பிடிச்
சொல்லிப் போட்டினம்
ஒட்டகச்சிவிங்கி : அன்பில தான் அப்பிடிச் சொன்னவ
பஞ்சவர்ண நரி : நாட்டைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?
மான் : எங்களுக்கு என்ன தெரியும்
பஞ்சவர்ண நரி : அங்க, வீடுகளுக்கு எத்தின எத்தின நிறங்கள் இருக்கு
முயல் : நீங்களும் நாட்டில இருந்துதான் வாநீங்களோ?
பஞ்சவர்ண நரி ஆரடா அவன்?... நான் வானவில்லில இருந்து வாறன்!!!
குரங்கு : எங்கட ஆக்கள் கொஞ்சப் பேர், முந்தி நாட்டில போய் இருந்
E5606) le • • • • • •
யானை ; பிறகு அங்க சன்டை துவங்கி விட்டுது!.
சிங்கம் : வெடிச்சத்தம் தாங்கேலாமல் இங்க திரும்பி வந்திட்டினம்
ஒட்டகச்சிவிங்கி : எங்கட ராசா, நீங்களும் வெடிச்சத்தம் தாங்கேலாமத்
தான் இங்க வந்தனிங்களோ?
பஞ்சவர்ண நரி : பேந்தும் பார் மேகத்தில எங்கால வெடிச்சத்தம்?
கரடி : அங்க இடிச்சத்தம்...... இடி முழக்கத்தைச் சொன்னனான்!
மயில் : நாட்டில சண்டை முடிஞ்சிட்டுது என்டு அறியிறம்?
Qaymaq o, xariya:Sosial isə 19

Page 20
குரங்கு : சண்டை நேரம் இடம் பெயர்ந்து வந்த எங்கட ஆக்கள் சண்டை
முடிஞ்சிட்டுது என்டு அறிஞ்சு திரும்பக் குடியேறப் போனவை அங்க.
மான் போனவை ஒரு நாள்ல திரும்பி ஓடி வந்திட்டினம்
பஞ்சவர்ண நரி : ஏன்??
நரி3 : அவை நிறம் கிறம் மாறி வரேல்ல. ..... 1.
பஞ்சவர்ண நரி : (கடுங் கோபத்தோடு) கேட்ட கேள்விக்கு மறுமொழி
சொல்லாம, என்னடா அலட்டுறா(ய்)??
முயல் : அங்க இப்ப, லவுட்ஸ்பீக்கர் சத்தம், தாங்கேலாம வந்திட்டினம்
பஞ்சவர்ண நரி : கண்டறியாத நாடும் நிறமும் சண்டையும் சத்தமும் நாடு
பற்றி இனிக் கதைக்கிறவைக்கு கடுந்தண்டனை
எல்லோரும் : ஐயையையோ இனிக் கதைக்க மாட்டம்
பஞ்சவர்ண நரி சரி, இப்ப எல்லோரும் போகலாம் எனக்கு ஓய்வு வேணனும்
நாளைக்குக் காலம வரவேணனும் எல்லோரும்.
நரி2 : ஒமய்யா! இப்ப போறம்
குரங்கு : நாளைக்கு வாறம்
பஞ்சவர்ண நரி : நாளைக்கு எல்லோருக்கும் வேலையள் ஒதுக்குவன்
எல்லோரும் : ஒம் ராசா
பஞ்சவர்ண நரி : இண்டைக்கு லீவு எல்லோரும் போங்கோ!!!
நரி2: ஐயா...!
பஞ்சவர்ண நரி : ஐயாவோ?.........!!!
நரி2 : இல்லா இல்ல!! ஐயா மகாராசா
பஞ்சவர்ண நரி : என்ன வேனுைம்?
நரி2 : உங்களுக்கு நாங்கள் முடிசூட்டு விழா வைக்க வேணனும்
2d - മത്രണ്ടുല്ക്കു

பஞ்சவர்ண நரி : முடி சூட்டு விழா ராஜாதி ராஜனாக முடிசூட்டு விழா !
நரி2 : ஓம் மகாராசா
பஞ்சவர்ண நரி சரி வைக்கலாமே! வெகு சிறப்பாய் வைக்க வேணம்!!
நரி2 : சிறப்பாய் வைப்பம் வெகு சிறப்பாய் வைப்பம்
நரி3 : அதோட............ உங்கள பல்லக்கில சுமந்து உங்கட காட்டு
ராச்சியமெல்லாம் ஊர்வலம் போக வேணனும்
பஞ்சவர்ண நரி : மாமன்னனின் திக்கு விஜயம் மிகவும் நல்லது!!
நரி2 : நாளைக்கே ஏற்பாடு செய்யிறம் ராசா
பஞ்சவர்ண நரி : மெத்தச் சரி ஏற்பாடுகளைச் செய்யுங்கோ நாளைக்கே
முடிசூட்டு விழாவும், திக்கு விஜயமும்
எல்லோரும் : ஒம் ராசா
பஞ்சவர்ண நரி : இப்ப எல்லோரும் போங்கோ
பஞ்சவர்ண நரி தவிர ஏனைய மிருகங்கள் வெளியேறுகின்றன.
பஞ்சவர்ண நரி : எல்லாரும் நல்லா ஏமாந்து போனாங்கள் எனக்கு ...... வாற புளுகத்துக்கு ஒருக்கா கத்த வேனுைம்போல இருக்கு ... சீச்சீ கத்தக் கூடாது கத்தினால் என்னை யாரென்டு கண்டு பிடிச்சிடுவாங்கள்....... எனக்கு சரியான புளுகமாக் கிடக்கு,ஒரு பாட்டுப் பாடுவம்.
பஞ்சவர்ண நரி பாட, பாடகர் பிற்பாட்டுப்பாடுவர், நரி ஆடுவார்.
UTL6) : சின்ன முயலும் சீறும் சிங்கமும் என்னைக் கண்டு நடுங்குவார்! பென்னம் பெரிய சிவிங்கியார் ஒதுங்கி வழி விடுகிறார்! ராஜ ராஜ ராஜன் எண்டு எனக்குப் பெருமை வருகுதே! மஞ்சள் நீலம் சிவப்பு வெள்ளை பச்சை வீரனாக்குதே!
égomajo, bainovaSch8 -oso 2.

Page 21
தந்த தகிர்த தகிர்த தாம்! திந்த திகிர்த திகிர்த தெய்
- க. இ. கமலநாதன்"
நரி ஆடி ஆடி வெளியேறப் பாடகரும் வெளியேறுவர். ஏனைய மிருகங் கள் வருகின்றன.
ஒட்டகச்சிவிங்கி : (இரண்டு நரிகளையும் பார்த்து) இஞ்ச வாருங்கோ ரெண்டு பேரும் (2ம் 3ம் நரிகள் இரண்டும் ஒட்டகச்சிவிங் கியாரிடம் செல்கின்றன) நீங்கள் ஏன் தேவையில்லாமல், அந்தப் பஞ்சவர்ண புதிய ராசாவுக்கு, முடிசூட்டு விழாவும், ஊர்வலமும் வைக்கவேனும் எண்டனீங்கள்?
மயில் : அது தானே தேவையில்லாத வேலை
சிங்கம் : இல்ல, அதில ஒரு தேவையிருக்கு
யானை நானும் அப்படித்தான் நினைச்சனான்!
கரடி : என்ன சொல்லுறீங்கள் நீங்கள்?
குரங்கு : புதுராசா வானவில்லில இருந்து வந்தவரில்ல!
மான் : அப்ப, அவர் ஆர்?
முயல் : ராசா பொய் சொல்லுறாரோ?
நரி2 : பொய்தான் சொல்லுறார்
நரி3 : அவர், நேற்று நாடு பார்க்கப் போன, எங்கட ஆள் எண்டுதான் நினைக்
கிறன்
ஒட்டகச்சிவிங்கி : அட! அப்படியுமிருக்குமோ?!
பாடகள்1 : அப்படித்தான்!
பாடகள்2 : அவர் நாடு பார்க்கப் போன நரியார் தான்!
பாடகர்3 : நீங்கள் ஏமாந்து போனீங்கள்......... !
பாடகர்4 : அதைக்கண்டு உங்களை அவர் ஏமாத்தினார்
மயில் : அப்படியெண்டா, அவருக்கு ஒரு பாடம் படிப்பிக்க வேனுைம்
团 - മത്ലീബ്നു്

நரி2 : அதுக்காகத் தான் முடிசூட்டு விழா, அவருக்கு
நரி3 : அதுக்காகத் தான் ஊர்வலம்.........
சிங்கம் : திக்கு விஜயம்
எல்லோரும் : ஓம். திக்குவிஜயம்!!
யானை : ஊர்வலம் முடியேக்க அவரைத் தண்ணிக்க போடுவம்
சிங்கம் : அப்ப அவற்ர சாயம் வெளுக்கும்!
எல்லோரும் : அச்சா அச்சாt!
நரி2 : ஊர்வலத்தில நாங்கள் சங்கூதுவம்..........!
நரி3 : அதாவது, நாங்கள் ஊளையிடுவம்
கரடி : அடக்க ஏலாமல், அவரும் ஊளையிடுவார்!
குரங்கு : அப்ப, தொபுக்கடீர் என்டு அவரைத் தண்ணிக்க போடுவம்
மான் : அவற்ர சாயம் கரையும்!
அனைவரும் சிரிக்கின்றனர்.
ஒட்டகச்சிவிங்கி : அப்ப நாங்கள் பஞ்சவர்ணத்தாரிட்டப் போவம்
முயல் : போய் முடிசூட்டு விழாவை நடத்துவம்
மயில் : ஊர்வலத்தில நான் நடனமாடுவன்!
குரங்கு : நான் காவடி ஆடுவன்!
மான் : நானும் நடனமாடுவன்!
முயல் : நானும் ஆடுவன் சேமக்கலம் அடிச்சடிச்சு
கரடி : நான் மேளமடிப்பன்!
ஒட்டகச்சிவிங்கி : நான் சாமரை வீசுவன்!
bylayu, MalayaSawad -VD

Page 22
யானை : நான் கொம்பு வாத்தியம் 2ளதுவன்!
சிங்கம் : நான் சாமரை வீசிப் பாடுவன்
பாடகர் : நாங்களும் வாறம்!
நரி2 : சரி, நீங்களும் வாருங்கோ
நரி3 : (பாடகர்களிடம்) நீங்கள் பல்லக்குத் தூக்குங்கோ
நரி2 : அத்தோட பாட்டும் பாடுங்கோ
மான் : நரியனார் ரென்டுபேரும், என்ன செய்வீங்கள்?
மயில் : அவை சங்கூதுவினம்
முயல் : ஓம், ஊளைச் சங்கு
சிங்கம் : சரி வெளிக்கிடுங்கோ
அனைவரும் வெளியேறுவர். காட்சி மாற்றங்கள் செய்யப்படும் நீலநிறச் சேலையொன்றை வட்டமாக வைத்து நீர் நிலையை அமைக்கலாம். இது செய்யப்படும் வேளையில் பின்வரும் தரு திரும்பத் திரும்பப் பாடப்படும்.
தரு : தானான தானா தனானான தானா
தனானான தானா தனனான தானா
பஞ்சவர்ண நரி வருகிறது. அவருக்கு மிருகங்கள் பாடும் தரு கேட்கிறது.
பஞ்சவர்ண நரி : காட்டு மிருகங்கள் பாட்டோட வருகினம் வரட்டும்!
மிருகங்கள் வந்துசேருகின்றன. ஒரு பல்லக்கோடு அவர்கள் வருகின்றனர்.
எல்லோரும் : மகாராசா வணக்கம்!!!!!
பஞ்சவர்ண நரி : ஆ, ஆ , வணக்கம்.
சிங்கம் : ராசா இருங்கோ, முடியை நான் தலையில வைக்கிறன்.
பஞ்சவர்ண நரி : முடி பாரமா இருக்குமோ?
冈 - മല്പുരീ

ஒட்டகச்சிவிங்கி : கொஞ்சநேரத்துக்குத் தானே ராசா
மயில் : அதொண்டும் செய்யாது!
முடி வைக்கப்படுகிறது.
சிங்கம் : ராஜாதி ராஜ ராஜ மார்த்தாண்ட ராஜ கம்பீர ராஜ குலதிலக ராஜ
ராஜ ராஜ ஆக்காவுரியா வர்ணாஷியா மன்னர் வாழ்க!!!!!!!
எல்லோரும் : வாழ்க!! வாழ்க!! வாழ்க!!!!!
பாடகர் பல்லக்கோடு வந்து அதனைக் கீழே வைக்க.
பஞ்சவர்ண நரி : இவர்கள் யார்???
குரங்கு : இவர்கள் நாட்டில இருந்து வருகினம்
பஞ்சவர்ண நரி : (திடுக்குற்று) நாட்டில இருந்தோ???
மான் ஆம், மகாராசா பல்லக்குத் தூக்குறதில கெட்டிக்காரர்
முயல் ஆட்டம் ஆடிப் பாட்டுப் பாடுவினம்
பஞ்சவர்ண நரி : சரி, சரி, விழா சிறப்பாக வெகு சிறப்பாக நடந்தால், மெத்
தச் சரி
எல்லோரும் : ஆகா! மெத்தச் சரியாம்!
மயில் : மன்னவா பல்லக்கில் ஏறி அமருங்கோ
பஞ்சவர்ண நரி பல்லக்கில் ஏறி அமர்கிறது. பாடகர் பல்லக்கைத் தூக்குகின்றனர். ஆடல் பாடல்களோடு ஊர்வலம் ஆரம்பமாகும்.
UTL6): வாறாரே வாறார் வன ராசா வாறார்
வள நாடு கண்ட வன ராசா வாறார்! வானத்தில் பிறந்து வையகம் காண வானவில் விட்டறங்கி வந்தவர் வாறார்! வின்னானம் இல்லையிது வின்ைனானம் இல்லை உண்ணான ராசா ஒளர்வலம் வாறார்! கண்ணாரக் காண எல்லோரும் வாரும்!
esse, syassad "e 因

Page 23
கண்கொள்ளாக் காட்சி கண்டிட வாரும்! ஆக்காஷயா மன்னர் பல்லக்கில் வாறார்! வர்ணாஷியா மன்னர் வடிவாக வாறார் வாறாரே வாறார் வன ராசா வாறார்!
பாடல் முடிவடைய, ஆடல் மற்றும் ஒலிகள் உச்ச நிலை அடைய 2ம், 3ம் நரிகள் உரத்து ஊளையிட பஞ்சவர்ண நரியார் பொறுக்க மாட்டாது தன்னை மறந்து உரத்து ஊளையிட்டு சன்னதத்தில் துள்ள பல்லக்குச் சரிந்து, அவர் நீர்த்தேக்கத்தினுள் விழுகிறார். சிறிது பொழுது அவர் நீரினுள் மறைந்து வெளிவரும் போது அவரது உடலிலிருந்த நிறம் அனைத்தும் கரைந்து அவாது சுயநிறத்தில் தென்படுகிறார். பயந்து நடுங்கியவாறு அவர்.
பஞ்சவர்ண நரி : எல்லாரும் என்னை மன்னிச்சுக் கொள்ளுங்கோ
சிங்கம் : உன்னை மன்னிக்க முடியாது!!!
பஞ்சவர்ண நரி : ஐயோ! மகாராசா!! என்னை மன்னியுங்கோ!!!
ஒட்டகச்சிவிங்கி : கன காலத்துக்குப் பிறகு எங்களுக்கு நல்ல ஒரு
விளையாட்டையும், விழாவையும் கொண்டாட வைச்ச உமக்கு.....
மயில் : நாங்கள் ஒரு பாராட்டு விழா வைக்க வேனுைம்
பஞ்சவர்ண நரி : ஐயையோ இன்னுமொருக்கா நான் தண்ணியில குதிச்சு
நனையவோ????
யானை ; பஞ்சவர்ணத்தார்! நீர் ஏன் எங்கள ஏமாத்த யோசிச்சனிர்?
பஞ்சவர்ண நரி : என்னில நிறம் பிரண்டிருந்ததை நான் கண்டது,
உங்களுக்குப் பிறகுதான்!
கரடி : அதுக்கு முதல் நீர் காணேல்லையோ?
குரங்கு : ஓகோ இப்பத்தான் எனக்கு விளங்குது
மான் : எனக்கும் விளங்குது!!
முயல் : அதை ஒருக்கா திரும்பச் செய்து பார்த்தமென்டால் எல்லாருக்கும்
வடிவா விளங்கும்!
எல்லோரும் : ஓமோம் திரும்பச் செய்வம் முசுப்பாத்தியா இருக்கும்
- മത്രeൈബ്

நரி3 : பஞ்சவர்ணத்தார்! போய் நடுவில நில்லும்!
நரி2 : பஞ்சவர்ணத்தாரை முதல் முறை கண்ட ஒழுங்கில, ஒவ்வொருத்தராய்
வந்து பாருங்கோ
முன்பு நடந்தவாறே திரும்ப நடத்திப் பார்க்கிறார்கள் ஒவ்வொருவரும் செய்துகாட்ட ஏனையோர் சிரித்து மகிழ்கின்றனர். இவ் விளையாட்டு முடி வடைந்ததும்.
பஞ்சவர்ண நரி : இப்படி நீங்கள் பயந்து நடுங்க எனக்கு ராசாவாகிப்
பார்த்தால் என்ன” என்ட யோசினை வந்தது!
யானை ; அது சரி நாங்கள் பயந்து நடுங்கினால் நரியாரும் ராசாவா(ய்)
விடுவார். 1
மான் : இனிப்பயப்பிடக் கூடாது!
ஒட்டகச்சிவிங்கி : ஆர் மானாரோ சொல்லுறார்?
குரங்கு : சருகு விழுகிற சத்தத்திற்கு “செத்தேன்’ எண்டு ஓடுறவர், சொல்
லுறார்!
மயில் : எனக்கு நல்ல சந்தோசமா(ய்) இருக்கு
சிங்கம் : எனக்கும் தான்!
எல்லோரும் : எங்களுக்கும் தான்!
யானை : அப்ப எல்லாரும் ஒருக்கா பாடி ஆடிட்டுப் போவம்
எல்லோரும் : ஓமோம்!
அனைத்து மிருகங்களும் பாடி ஆடுகின்றனர். பார்வையாளரைக் கைதட் டும்படி கேட்கலாம். வசதியான சூழல் வாய்க்குமிடத்து அவர்களையும் சேர்ந்து ஆடுமாறு கேட்கலாம். மேடையில் ஆற்றுகை நிகழ்ந்திருப்பின் மேடையிலேயே ஆற்றுவோர் ஆடலாம். அல்லது மேடைக்கு வரவிரும் பும் பிள்ளைகளை வரவழைத்து அவர்களுடன் சேர்ந்து ஆடலாம். அல் லது மேடையை விட்டு இறங்கி சென்று பார்வையாளருடன் சேர்ந்து ஆடலாம். சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்றவாறு பார்வையாளராகவுள்ள சிறு பிள்ளைகளது விரும்பத்தக்க மகிழ்வுக்கமைய கட்டுப்பாடு ஒழுங்கு என்ற விதிமுறைக்குள் நின்று செய்யும் எதையும் செய்யலாம்.
egro, vaScal s 27

Page 24
LJTLs) :
தானின் தானின் தானே தானின் தானின் தானே
நாட்டுக்குச் சென்றார் நரியார் காட்டுக்கு நிறம் மாறி வந்தார்
காட்டினில் மிருகங்கள் கண்டு கதறிக் கொண்டோனின பயந்து
மிருகங்கள் அஞ்சிடக் கண்ட நரியனார் மன்னராய் ஆனார்
சிந்தித்த மிருகங்கள் கூடி சேர்ந்தொரு திட்டம் போட்டார்
குளத்திலே நரியனார் குதித்தார் எழுந்திட நிறம் மாறி வந்தார்
நரியனார் புத்தியை மெச்சி பிழையினை மன்னித்து விட்டார்
அனைவரும் ஒன்றாய்க் கூடும் தந்தினத்தோம் என ஆடும்
நம்பி தங்கச்சி வாரும்
எழுந்து நின்று ஆடும்!
තං" ඒෂණීන්ද්‍රෘෂ්ඨික්‍ෂණීය’(''
 

கூடிப்பறைந்து கற்கும் அரங்கு சிறுவம் அரங்கிற்கான நாடகப்படைப்பாக்கப் படிமுறை பற்றிய மனப்பதிவு
தே. தேவானந்த்
சிறுவர் அரங்கிற்கான நாடக எழுத்துருப் படைப்பாக்கப் படிமுறையைப் புரிந்து கொள்வதற்கு, எம்மத்தியில் காணப்படுகின்ற பல்வேறு வகையான நாடக எழுத்துருப்படைப்பாக்கப் படிமுறைகளை அறிதல் அவசியம், ஈழத்தமிழ் அரங்கில் பின்வரும் முறைகளில் எழுத்துருக்கள் படைக்கப் படுகின்றன.
ஒரு நாடகாசிரியர் தன் வாழ்வனுபவத்தில் தொட்டு உணர்ந்து கொண்ட வற்றையும் தான் அறிந்தும் புரிந்தும் கொண்டவற்றையும் தன் மனதில் போட்டு அடைகாத்து தக்க காலத்தில் ஒரு படைப்பாகத் தருதல், இதில் நாடகாசிரி யர் பிறருடன் உரையாடுவது கிடையாது. மோனத்துள் கிடந்து பிரசவிப்பார்.
பலர் சேர்ந்து எழுதுவது. நெறியாளர், நாடகாசிரியர், ஆற்றுகைக் குழுவினர் இணைந்து கலந்துரையாடுதல் - கலந்துரையாடும் போது கிடைக்கின்ற சம்பவங்கள், வார்த்தைகள் உரையாடல்கள், உணர்வுகள் என்பன நாடகாசிரியரால் உள்வாங்கப்பட்டுப் படைக்கப்படுகின்ற நாடகம். இதில் நாடகம் எழுத முன்பும் நாடகம் எழுதிக் கொண்டிருக்கும் போதும் கலந்துரையாடல்கள் நடைபெறும்.
நெறியாளர் ஒருவர் நாடகம் ஒன்றைப் படைப்பதற்காகத் தன் கற்பனைக ரூக்கேற்பக் காட்சிகளை வடிவமைத்துச் சட்டகமிட்டு, அசைவுகள், படிமங் களை நடிகர்களுடன் இணைந்து செய்து பார்த்தல். இதில் கிடைக்கின்ற அனுபவத்தை நெறியாளர் நாடகாசிரியர் ஒருவருடன் பகிர்தல். பின் நாடகா சிரியர் எழுதுதல், இங்கு நெறியாளருக்கும் நாடகாசிரியருக்கும் இடையில் புரி தலுடனான ஊடாட்டம் நடைபெறும். இதன் பின் நாடகாசிரியர் நாடக எழுத்துருவைப் படைப்பார்.
நெறியாளரும், நடிகர்களும் இணைந்து நாடகமொன்றை வடிவமைத்து,
உரையாடல்களையும் போட்டுக்கொண்டபின் நாடகாசிரியரை அழைத்துக் காட் டுதல். இதனைப் பார்த்து நாடகாசிரியர் நாடகத்தை முழுமையாக எழுது வார். இங்கு நெறியாளரும் நடிகர்களும் சிருஷ்டித்த வடிவத்துக்குள் இலக் கியச் செழுமைமிக்க வார்த்தைகளை இடுதல் மட்டுமே நாடகாசிரியரின் பணி பாக இருக்கும்.
பலர் இணைந்து ஒரு விடயத்தை கதையைக் கலந்துரையாடிச் சட்டகங் கள் சிலவற்றை இட்டுக் கொண்டு ஒவ்வொருவரும் எழுதுதல். இதில் பங்கு கொள்வோரின் ஆளுமைக்கேற்பப் பல எழுத்துருக்கள் பருவறையாக உருவாகும்.
冈 تة- فقطتستشقياضطه العين

Page 25
அவை உரத்து வாசித்துக் காட்டப்படும். பின் கலந்துரையாடப்பட்டு, தவிர்க்க வேண்டியவைகள், இணைக்க வேண்டியவைகள் இனங்காணப்படும். இதன் பின் நாடகாசிரியர் ஒருவர் 'தனக்குள் மீண்டும் சட்டகமிட்டு எழுத்துருவைத் தன்பாட்டில் பூர்த்தியாக்குவார்.
VI. தேர்ச்சி பெற்ற, தொடர்ச்சியாக இயங்குகின்ற நாடகக் குழுவினர் ஒரு விடயம் பற்றிக் கலந்துரையாடி எழுத்துரு, ஒத்திகைகள் எதுவுமின்றி நாட கத்தை ஆற்றுகை செய்தல். ஆற்றுகை நிகழும் கனத்தில் உருவாகி மறைவ தால் எழுத்துரு இல்லையென்று குறிப்பிடுகிறார்கள். உன்மையில் எந்த வொரு ஆற்றுகைக்கும் எழுத்துருவொன்று இருக்கும். அது ஆற்றுகையாளரின் மனதில் எழுதப்பட்டதாகவோ கடதாசியில் எழுதப்பட்டதாகவோ இருக்கலாம்.
மேற்குறிப்பிட்ட நாடக எழுத்துருப் படைப்பாக்கப் படிமுறைகள் ஊடாக நல்ல நாடக எழுத்துருக்களைப் படைக்க முடியும். ஒவ்வொரு முறைமையும் தனக் கான சிறப்புப் பண்புகளைக் கொண்டுள்ளது.
சிறுவர் நாடக எழுத்துருவொன்றைப் படைப்பதற்கு, மேற்கூறிய எந்த முறை மையையும் பயன்படுத்தலாம். அனைத்து முறைமைகளிலும் காணப்படும் சிறப்பு அம்சங்களை உள்வாங்கியும் நாடக எழுத்துருவொன்றைப் படைக்க முடியும். இங்கு பலர் இணைந்து கதையொன்றை நாடகமாக எழுதி அது பற்றிக் கலந்துரையாடுதல், தேவைப்படும் மாற்றங்களைச் செய்தல், சேர்க்க வேண்டியவைகளை இனங்கண்டு, எல்லோருமாகச் சட்டகமிட்டு உரத்துச் சிந் தித்து நாடகமொன்றை நாடகாசிரியர் தன்பாட்டில் படைக்கும் படிமுறை சிறு வர் அரங்கிற்கான நாடக எழுத்துருப் படைப்பாக்கத்திற்கான சிறந்த படிமுறை யாக கொள்ளப்படலாம். இங்கு கூடி வேலைசெய்யும் அனைவரும் கற்றுக் கொண்டு செயற்பட வாய்ப்புக்கிடைக்கின்றது. இவ்வாறான எழுத்துருப் படைப் பாக்கம் பற்றி விபரிக்க முனைகிறேன்.
சிறுவர் அரங்கிற்கான நாடக எழுத்துருப்படைப்பாக்கப்படிமுறை
சிறுவர் அரங்கிற்கான நாடக எழுத்துருவொன்றைப் படைக்கும் நோக்கத் தோடு இருபது தொடக்கம் முப்பது பேர் கொண்ட நாடக ஆர்வலர்கள் ஐந்து நாட்கள் தொடர்ச்சியாகச் சந்திப்பதோடு இந்தப் படைப்பாக்க முயற்சி ஆரம்ப மாகிறது.
ஒன்று கூடும் பயிற்றுவிப்பாளர்களும் பங்குபற்றுனர்களும் தமக்குள் அறிமுக மாகிக் கொள்வதற்கான செயற்பாடுகள் முதலில் நடைபெறும். அறிமுகமாவ தற்கு முன் ஒவ்வொரு பங்குபற்றுனரும் தளர்வான இளகிய மனத்துடன் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கப்படும். அவ்வாறு இருந்தாலே அறிமுகம் மகிழ்வுடன் நடக்கும். அறிமுகத்தில் இருந்து உறவு துளிர்க்க ஆரம்பிக்கும்
国 - മത്രeെീര്

இதற்காக ஆடுவீடு, நண்டுரால்மீன், பஞ்சாமிர்தம், கோழிகோட்டான் போன்ற விளையாட்டுக்கள் விளையாடப்படும். இந்த விளையாட்டுக்களை விளையாடுவதால் பங்குபற்றுனர்கள் குழந்தைப் பிள்ளை மனதிற்கு வந்து விடுவார்கள். குழந்தை மனம் என்பது ‘அப்பழுக் கற்ற மனம்’ அதில் புதிதாக ஆரோக்கியமான விதைகளை விதைக்கலாம். அவை இலகுவாக உள் வாங்கப்பட்டு நல்ல பயனை வழங்கக்கூடியவை. இந்த ஆரம்பச் செயற்பாடு களின் போது மனம் மட்டுமன்றி உடலும் தளர்வடைந்து தயார் நிலையில் இருக்கும்.
இதன் பின் சிறுவர் அரங்கு பற்றிய அறிமுகம் ஒன்று வழங்கப்படுகிறது. முக் கியமாகச் “சிறுவர் பார்வையாளர்களுக்காக அளிக்கை செய்யப்படுகின்ற வரண் முறையாகத் தயாரிக்கப்படுகின்ற நாடகம்” சிறுவர் அரங்கில் முக்கியமானது என்ற எண்ணக்கருத்து அழுத்தமாக முன்வைக்கப்படுகின்றது. வரண் முறையான நாடகத் தயாரிப்பிற்கு நாடக எழுத்துரு" அவசியமானது என்ற கருத்தும் நாடக எழுத்துருவைத் தனியாளாகவும் கூட்டாகவும் எழுதமுடியும் என்ற கருத்தும் முன்வைக்கப்படும். இதன் அடிப்படையில் சிறுவர் நாடகமொன்றை எழுதுவதற்கான விடயம் அல்லது கதை தெரிவு செய்யப் படுதல் முக்கியமாகும். இதில் ஏலவே உள்ள கதையொன்றை அடிப்படை யாகக் கொண்டே நாடகத்தை எழுதும்முறை பயில்நிலையில் உள்ளவர் களுக்கு ஏதுவானதாக அமையும் என்று கருதப்படுகின்றது.
சிறுவர்களுடைய பிரச்சினை ஒன்றைத் தெரிவு செய்து அதனை மிகத்தெளி வாக விவாதித்து அதனை ஒரு நாடகமாக எழுதுவதற்கு முன் ஒருவர் கதை யொன்றை நாடகமாக எழுதும் அனுபவத்தைப் பெற்றிருப்பது அவசியமென்று உணரப்படுகின்றது. முதலில் நாடகவாக்கற் திறனைப் புரிந்துகொள்ளுதல், அதில் தேர்ச்சி பெறுதல் முக்கியமாகிறது. இதற்கு ஏலவே உள்ள கதையை அடிப்படையாகக் கொண்டு எழுதுவது பொருத்தமானது. தெரிவு செய்யப்படும் கதைகள் செவிவழி வந்த கதைகளாக இருக்கும். பாத்திரங்களின் அடிப் படையில் கதைகள் பின்வருமாறு அமையும்.
மிருகங்கள், மரங்கள் பாத்திரங்களாக ஊடாடுகின்ற கதைகள் மனிதப் பாத்திரங்கள் மட்டும் ஊடாடுகின்ற கதைகள் மனிதப் பாத்திரங்களும், அதிமானுடப் பாத்திரங்களும் ஊடாடுகின்ற கதைகள். மனிதப் பாத்திரங்கள், அதிமானுடப் பாத்திரங்கள், மிருகப் பாத்திரங் கள் ஒஊடாடும் கதைகள்.
மேற்குறிப்பிட்டதன்படி ஏதோவொரு வகையான கதையைத் தெரிவு செய்வதற்
eginho, MalayaSiswa - D LLLLLLAAAAASSAAAASA SAAAAAAAAqAASTSTLSSSLSLSLLLL LLLLLL

Page 26
காகப் பங்கு பற்றுனர்கள் குழுக்களாகப் பிரிக்கப்படுவார்கள். ஒவ்வொரு குழு வும் தனியாகச் சந்தித்துக் கொள்ளும். குழுக்களில் உள்ள ஒவ்வொருவரும் தமக்குத் தெரிந்த நாடகமாக்கக்கூடிய ஒரு கதையைச் சொல்லுவார்கள். பின் குழுவில் உள்ள அனைவராலும் ஒரு கதை தெரியப்படும். இவ்வாறு எல்லோ ராலும் தெரியப்படும் கதை தனியொருவர் சொன்ன கதையாக மட்டும் இருக் காது. இதில் சொல்லப்பட்ட கதைகளை வைத்துப் புதிதாக ஒரு கதை உரு வாகும் வாய்ப்பும் உள்ளது. இதனை விட ஒரு கதையைத் தேர்ந்தெடுத்து அதில் சில மாற்றங்களைச் செய்து கொள்வதும் உன்டு. சிலவேளைகளில் இரண்டு கதைகளை இணைத்து ஒரு கதை உருவாவதும் இரண்டு. கதை களின் பகுதிகள் இணைந்து கதைகள் உருவாவதும் நடைபெறும். செவி வழியாக அறிந்த கதையை மாற்றக்கூடாது என்ற எண்ணம் எம்மில் பலரிடம் உள்ளது. அதாவது உண்மையில் நடந்த ஒன்று, அதனை மாற்றுவது பிழையென்று கருதுகிறோம். இந்தச் சிந்தனை கற்பனையை மட்டுப்படுத்து வதாக, பல்வேறு வகையான சாத்தியப்பாடுகளை நிராகரிப்பதாக அமைந்து விடுகின்றது. இதனால் மாற்றத்திற்காக ஊக்குவித்தல் அவசியமாகின்றது. இந்த வகையாகத் தட்டிக் கொடுக்கின்ற போது பல புதிய கதைகள் உருவா கின்ற அதிசயத்தைக் காணமுடிகின்றது. இன்றைய கல்விச் சீர்திருத்தக் கொள்கைகளை மனங்கொண்டு சிறுவர் அரங்கை நகர்த்த வேண்டியுள்ளது. இதனால் எமது பண்பாட்டில் காணப்படும் நல்லது, கெட்டதற்கிடையிலான முரண்பாடு, கெட்டது அழிக்கப்படுதல் அல்லது தண்டிக்கப்படுதல் என்ற என்னப்பாங்குகளையும், மாற்றத்திற்கு உட்படுத்தவேண்டியுள்ளது. நேர்ச் சிந்தனைகளை நோக்கிச் சிறார்களை நகர்த்தவேண்டிய சூழலில் நாம் இன்று இருக்கின்றோம். சிறுவர் நாடகங்களும் இவற்றை வலியுறுத்துவதாகவே அமையவேண்டும். எனவே, கதைகளில் மாற்றத்தைச் செய்கின்ற போது நேர்ச்சிந்தனைகளை மனங்கொள்ளுதல் சிறந்தது.
குழுக்களில் தெரிவு செய்யப்படும் கதைகள் ஒவ்வொன்றும் எல்லோருக்குமாகப் பொதுவில் சொல்லப்படும். இக்கதை சொல்லல் நாடகப் பாங்கானதாக அமையவேண்டும். இதற்கான அறிவுறுத்தல் கதை சொல்வதற்கு முன் வழங் கப்படும். அபிநயங்கள், ஓசைகள், அசைவுகள், நடிப்பு என்பவற்றை உள் ளடக்கியதாகக் கதை சொல்லல் அமைந்தால் அதுவே ஒரு நாடக அளிக்கையாக அமைந்துவிடும். ஆரம்பப் பாடசாலை ஆசிரியர்களிடம் இவ் வகையான திறன் இருத்தல் அவசியம் என்று கூறப்படுகின்றது.
கதையொன்றை நாடகப் பாங்காக ஒருவர் சொல்லுகின்ற போது அதனைக் கேட்டுக் கொண்டிருப்பவர்களின் மனதில் காட்சிப் படிமங்கள் பல பதிந்து கொள்ளும்.
இவ்வாறு பயிற்சியில் பங்கு பற்றியவர்களின் மனதில் காட்சிப் படிமங்களாக உள்ளவற்றை எழுத்திலும் மேடையிலும் கொண்டு வரும் பணி அடுத்ததாக முக்
敬一 മത്ലാര്

கியம் பெறுகின்றது. கதை தெரிவான பின் நாடகமாக்குவதற்காகக் கதை காட்சித் துண்டங்கள் ஆக்கப்படும் ஒவ்வொரு காட்சித் துண்டங்களும் மீண் டும் சரிபார்க்கப்பட்டு எல்லோர் மனதிலும் நிறுத்தப்படும். குழந்தை ம. சன் முகலிங்கத்தின் பஞ்சவர்ண நரியார் நாடகம் நிறம் மாறிய நரிஎன்ற கதையை அடிப்படையாகக் கொண்டது. இக்கதை நாடகமாக்குவதற்காக ஆரம்பத்தில் பதினைந்து காட்சித் துண்டங்களாகப் பிரிக்கப்பட்டது.
பிரிக்கப்பட்ட காட்சித் துண்டங்கள் ஒவ்வான்றிற்குள்ளும் உள்ளடங்குகின்ற சம்பவங்கள், பாத்திரங்கள், உணர்வு, உரையாடல், களம், ஊடாட்டம் போன்றன எப்படி அமைய வேண்டும் என்பது பற்றி விரிவாகக் கலந்துரையாடித் தீர்மானிக்கப்படும். பின் பங்குபற்றும் ஒவ்வொருவரும் இதனை எழுது வார்கள். எழுதும்போது ஏற்படுகின்ற சந்தேகங்களைத் தெளிவாக்கிக் கொள் வார்கள். இதில் ஒவ்வொருவரும் தமது சிந்தனைக்கு ஏற்றதாகச் சட்டகங்க ளுக்குள் மாற்றம் செய்யவும் அனுமதிக்கப்படுவார்கள். இவ்வாறு ஒவ்வொரு சட்டகமும் தெளிவாக்கப்பட்டுப் பொதுவில் எல்லோரும் அறியக்கூடியதாக வாசிக்கப்படும். அபிப்பிராயங்கள் தெரிவிக்கப்படும். திருத்தங்கள், மேலதி கமான இணைப்புக்கள், புதிய சிந்தனைகள் இக்கட்டத்தில் உள்வாங்கப் படும். இந்த வகையான எழுத்துருவாக்கல் படிமுறை மிகச் சலிப்பூட்டுவதாக அமைவதையும் இனங்காண முடியும்.
இதனைத் தொடர்ந்து களப்பயிற்சியை வழி நடத்துபவர்கள் பருவறையான நாடக வடிவம் ஒன்றைக் கொடுப்பார்கள். அதற்கேற்பப் பங்குகொள்வோர் தமது கதையை எழுத வேண்டும் என்று கேட்கப்படுவார்கள். பொதுவாக அறிமுகப் பாடல் ஒன்றுடன் நாடகம் ஆரம்பமாகும். பின் பாத்திரங்கள் அறி முகப்படுத்தப்படும். பாத்திர அறிமுகங்கள் அநேகமாகப் பாடல் ஆடலுடன் அமையும். இறுதியில் நாடகத்தின் கதையை விளக்குவதற்கான பாடலைப் பாடி ஆடுவதுடன் நாடகம் முடிவடையும். மரங்கள் எடுத்துரைஞர்களின் பணிகளை மேற்கொள்ளும். சில வேளைகளில் பாடகர்களும் எடுத்துரைஞர்களின் பணிகளை மேற்கொள்வர். இப்படியான வடிவத்தில் தான் சிறுவர் நாடகம் எழுதப்படவேண்டுமென்பதல்ல. அது எந்த வடிவத்திலும் அமையலாம். சிறுவர்களுக்குப் புரியக்கூடியதான இலகுவான, எளிமையான வடிவத்தைக் கொண்டிருத்தல் விரும்பத்தக்கது. நாடகத்தில் பாடல்களை ஆடல்களை அதிகமாகப் பயன்படுத்துவது சிறந்தது. இதற்காக, பாடல்களைப் பங்கு பற்றும் அனைவரும் எழுத ஊக்குவிக்கப்படுவார்கள். ஆரம்பத்தில் தங்களால் முடியாது என்று தயங்கிய பலர் பயிற்சி முடிவில் தம்மால் எழுத முடியும் என்ற தற்துணிவைப் பெற்றுக் கொள்கிறார்கள். எழுதப்பட்ட பாடல்கள் இலகுவான மெட்டுக்களில் பாடிப்பார்க்கப்படுகின்றன. பாடப்படுகின்ற பாடல்களுக்கு ஏற்ப அசைவுகள் சில செய்து பார்க்கப்படுகின்றன. பாடல்களுக்கு ஏற்றதான காட்சிகள் புதிதளித்தல் முறை முலம் கண்டு கொள்ளப்படுகின்றன. அவை நாடகத்தில் இணைக்கப்படுவதும் உண்டு.
ده فولادشواشوه .ه ماوه

Page 27
எழுத்துரு ஒவ்வொரு காட்சியாக எழுதி முடிக்கப்பட்டு எல்லோருக்காகவும் உரத்து வாசித்துக் காட்டப்படும். தேவையான ஆலோசனைகள் வழங்கப் பட்டுச் செழுமைப்படுத்தப்படும். இவ்வாறு எழுத்துருக்களை எழுதுகின்றபோது மிருகங்களின் செயல்கள், உரையாடல்கள், நடைகள் என்பவற்றைப் புரிந்தி ருப்பது உதவியாக இருக்கும். இதற்காக எழுதுகின்ற வேலை நடந்து கொண்டிருக்கின்ற போது இடையிடையே மிருகங்களின் நடைகள், சத்தங் கள், செய்கைகள் என்பன செய்து பார்க்கப்படும். கதையில் வருகின்ற சில சம்பவங்களும் பல்வேறு சூழ்நிலைகளும் செய்து பார்க்கப்படும். இந்தச் செயற்பாடுகள் பங்குபற்றுபவர்களை உற்சாகமுட்டுவதாகவும் அவர்களின் கற்பனை விரிவதற்கு உதவுவதாகவும் அமையும். இவ்வாறு ஒவ்வொரு காட் சியாகப் பூர்த்தியாக்கிச் செல்லும் போது காட்சிகளின் எண்ணிக்கை முதலில் திட்டமிட்டபடி அமையாது சட்டகங்களின் காட்சிகளின் எண்ணிக்கை கூடு வதாக அல்லது குறைவதாக இருக்கும். சில சட்டகங்கள் மாற்றத்திற்கும் உட்படும். இந்த வகை நியமங்கள் படைப்பாக்கப்படிமுறைகளில் ஏற்புடைய தொன்றாகும்.
காட்சித் துண்டங்கள் அனைத்தையும் விலாவாரியாக எழுதி முடிக்காமல் அரைவாசிச் சட்டகங்களைப் பூர்த்தி செய்து அதனை நடித்துப்பார்த்துத் தவிர்க்க வேண்டியவைகள், சேர்க்க வேண்டியவைகள் பற்றிக் கலந்துரையாடி மேலும் தொடர்ந்து எழுவதுண்டு. பலர் இதனை இணைந்து "உரத்து சிந்தித்து நாடகம் எழுதும் போது செறிவான பல்பரிமாண வீச்சுக் கொண்ட நாடகத்தை எழுதமுடிகின்றது. ஆனால், இந்தவகை நாடகப் படைப்பாக்கப் படிமுறையில் ஆளுமையுள்ள வழிநடத்துனர்களின் இடையீடு மிக மிக அவசிய மாகின்றது. இந்தப் பணியைச் சிறந்த முறையில் குழந்தை ம. சண்முகலிங்கம் அவர்கள் மேற்கொள்வார். எழுத்துரு ஒரு தடவை எழுதப்பட்டதோடு மன நிறைவான படைப்பாகிவிடாது. ஒரு நல்ல படைப்பை பிரசவிக்க மீள, மீள எழுத்துருவை எழுதி இறுதி வடிவத்தைப் பெறவேண்டும்.
எழுத்துரு கையில் கிடைத்ததும் குழுக்கள் ஒவ்வொன்றும் தாம் எழுதிய நாடகத்தை நடித்துப் பார்த்தல் அவசியமான ஒரு பயிற்சியாகும். எழுத்துரு ஒன்றை மேடைக்காகக் கொண்டு வரும் போது பல பிரச்சினைகளை எதிர் நோக்க வேண்டிவரும். இவற்றை எவ்வாறு வெல்வது என்பதைப் பங்குபற்று னர்கள் உணர்ந்து கொள்வது அவசியம். களப்பயிற்சியின் முடிவில் அழைக் கப்பட்ட பார்வையாளர்களுக்காகத் தயாரிக்கப்பட்ட நாடகங்கள் மேடையேற் றப்படும். இந்த மேடையேற்றம் பலரது ஆளுமையில் அதிக மாற்றத்தை ஏற்படுத்தியதை அவதானிக்க முடிந்திருக்கிறது.
நாடக எழுத்துருப்படைப்பாக்கக் களப்பயிற்சியில் பங்கு பற்றியவர்கள் நாடகத் தைப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். சிறுவர் அரங்கைப் புரிந்திருக்கிறார்கள். நாடகம் எழுதும் துணிவையும் நாடகங்கள் தயாரிக்கும் துணிவையும் பெற்றி
34 - മന്ത്രമല്ക്കുര്

ருக்கிறார்கள். தன்னம்பிக்கையும் தன்னெடுப்பு ஊக்கத்தையும் பெற்ற உற்சா கமானவர்களாக ஆகியிருக்கிறார்கள். பலருக்கு நாடகத்துறையில் மிகுதி யான ஆர்வம் ஏற்பட்டிருப்பதை இனங்கான முடிகிறது. களப்பயிற்சி முடிந்த வுடன் பாடசாலை சென்று நாடகம் தயாரிக்க ஆரம்பித்த பல ஆசிரியர்களைக் கான முடிந்தது.
ஒரு களப்பயிற்சி முலம் நாடகாசிரியர்களை, நாடகக்காரர்களை உருவாக்கி விடலாம் என்று கூற முடியாவிட்டாலும் நாடகாசிரியர்களும், நாடகக்காரர் களும் உருவாவதற்கான விதையை எழுத்துருப் படைப்பாக்கக் களப்பயிற்சி இட்டுவிடுகின்றது. மேற்குறிப்பிட்ட எழுத்துருப்படைப்பாக்கப் படிமுறையில் “பஞ்சவர்ண நரியாா” நாடகம் தயாரிக்கப்பட்டது. இந்நாடகம் சாவகச் சேரியில் ஆசிரியர்களுக்காக நடைபெற்ற எழுத்துருப்படைப்பாக்கக் களப்பயிற் சியில் முளைவிட்ட ஒன்று. இக்களப்பயிற்சி இரண்டு நாட்கள் நடைபெற்றதால் எழுத்துருவைப் பூர்த்தியாக்க முடியவில்லை.
இதன் பின் செயல்திறன் அரங்க இயக்கத்தால் சிறுவர் அரங்கப் பயிற்சி ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. முன்று மாதகாலத்திற்குரியதான இப்பயிற்சியில் முதல் மாதம் முழுவதும் நிறம் மாறிய நரி கதையை நாடகமாக எழுதுவதற்குச் செல விடப்பட்டது. முதலில் சாவகச்சேரிக் களப்பயிற்சியில் பெறப்பட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டு குழந்தை ம. சண்முகலிங்கம் அவர்கள், பயிற்சி மாணவர்கள் எழுதுவதற்காகத் தான் வகுத்துக் கொண்ட நாடகவடிவத்தை/ நாடக ஓட்டத்தை அடிப்படையாக வைத்துக்கொண்டு கதையைப் பயிற்சி யாளர்கள் எழுதுவதற்காக உரத்துச் சொன்னார். பின் மாணவர்களின் அபிப் பிராயங்கள் கேட்கப்பட்டுக் கலந்துரையாடப்பட்டு மீண்டும் பலரதும் கற்பனை களும் உள்வாங்கப்பட்டு மாணவர்களால் எழுதப்பட்டது. எழுதப்பட்ட எழுத் துருக்கள் எல்லோருக்காகவும் வாசிக்கப்பட்டது. தேவையான திருத்தங்கள் மேற் கொள்ளப்பட்டன. இத்தனை செயற்பாடுகளும் நடந்த பின் குழந்தை ம. சண்முகலிங்கம் அவர்கள் அனைத்தையும் உள்வாங்கித் தன்பாட்டில் எழுத் துருவை எழுத ஆரம்பிக்கிறார். இப்போது ஒரு பூரணமான எழுத்துரு உரு வாகிவிட்டது. அதற்குப் பஞ்சவர்ண நரியார்’ என்று பெயர் சூட்டப்படுகிறது.
எழுத்துரு இறுதிவடிவை எடுத்துக்கொண்ட பின் பாத்திரத் தெரிவு நடை பெற்று ஒத்திகைகள் ஆரம்பமாகின. எம்மிடம் காணப்படுகின்ற பற்றாக் குறை களோடு எழுத்தில் உள்ள ஒரு நாடகத்தை மேடைக் காண்பியமாக உரு மாற்றும் போது நடைமுறைச் சிக்கல்கள் ஏற்படுவது வழமை. இவ்வாறு நடை முறைச் சிக்கல்கள் பல ஏற்பட்ட போது நாடக எழுத்துருமாற்றத்திற்கு உட் பட்டது. மேடையேற்றங்களின் போது பார்வையாளர்களால் தெரிவிக்கப் படுகின்ற கருத்துக்கள் ஆராயப்பட்டுத் தேவையான மாற்றங்கள் செய்யப்பட் டன. புதியது படைக்கும் விருப்பு, நெகிழ்வுத் தன்மை நல்லவற்றை உள் வாங்கித் தனதாக்கிப் படைக்கும் திறன், சிந்திக்கவும் கலந்துரையாடவும் விமர்
因 دهه هلمهواشد و به بماوه

Page 28
சனங்களை ஏற்றுக் கொள்ளவும் தயாரான மனம், இவற்றோடு உன்மை மனதோடு படைப்புக்களைத் தரும் குழந்தை ம. சன்முகலிங்கம் அவர்கள் கடந்த காலங்களில் இவ்வாறான முறையில் நாடகங்கள் எழுதியதில்லை. இப்போ, இவ்வாறான "கூட்டினைவு எழுத்துருப் படைப்பாக்க முறையில்" நாட கம் எழுதுவது சிறப்பாக உள்ளதாகவும் கூடிப்பறைந்து உரத்துச் சிந்திப்பதால் விரைவாகவும் செறிவாகவும் ஒரு நாடக எழுத்துருவை படைக்க முடியும் என்று உணர்கிறார்.
கூடிப்பறைந்து கற்கும் அரங்கில் ஈடுபடும் போது பேரானந்தத்தைத் தரிசிக் கலாம். தொடர்ச்சியாகச் செயற்படுவதன் ஊடாகவே தேர்ச்சியைப் பெற முடி யும், சாதனைகளைப் புரியமுடியும், ஆனந்தத்தை தரிசிக்க முடியும், இதற் காகச் சிறுவர் அரங்கத் துறையில் ஈடுபடும் அனைவரும் ஒன்றினைந்து தொடர்ச்சியாகச் செயற்படுவது அவசியம்,
3) - = శా భgశాస్గ్యూగిగీ
 

விமர்சனம்
பள்ளி எழுந்து வரும் . எங்கள் பஞ்சவர்ண நரியார் . சிறுவர் நாடகம்.
рI5ішп ДБ நா.சிவசிதம்பரம் வளரும் பயிருக்கு முளையில் உதவும் செயல் திறன் அரங்க இயக்கக் குழுவினர் தயாரிப்பான பஞ்சவர்ண நரியார் சிறுவர் நாடகம் யாழ். மாவட்டப் பாடசாலைகளில் மேடையேற்றப்படுகிறது.
தமிழ்த்தினம், ஆங்கில தினம் போல எமது பாடசாலைகளில் "சிறுவர் அரங் கமும்" ஒரு தினமாக இன்று கொண்டாடப்படுகிறது. இது ஒரு முக்கியமான விடயம். ஏனெனில் இங்குதான் எமது "சிறுவர் அரங்கம்" தொடர்பான சிந்த னைகளுக்கு ஒரு சிறந்த இடம் கிடைக்கிறது. இந்நிலையில் "பஞ்சவர்ண நரியார்’ எமது பாடசாலைக்கும் வருகை தருவது மேலும் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் ஓர் ஒருக்கமாக அமையும். ஏனெனில் தமிழ்த்தினம், ஆங்கில தினம் போல் சிறுவர் அரங்கம் வளமுடையதாக எமது பாடசாலை களில் இன்னமும் இல்லை. வேண்டத்தக்க அறிவாக அது இன்னமும் எம்மால் விளங்கப்படவில்லை. ஏன்? விரும்பப் படவில்லை என்றும் கூறலாம்.
"இசையும் அசைவும் அழகியல்' என்று எத்தனையோ வருடமாகக் கூறினும் இன்னமும் அது மானவர் எழுந்து நின்று பாடும் வாய்ப்பாடாகவே எமது வகுப்பறையில் நிகழ்கிறது. இன்றும் எமது பாடசாலைகளில் சிறுவர் அரங்கு, கற்றல், கற்பித்தல்களுக்கு வேறானதாகவே உள்ளது. படிக்கின்ற பிள்ளை களைப் பழுதாக்கக் கூடாது' எமது ஊரில் சில பெற்றோரின் அறியாமை மட்டு மல்ல அது பிரசித்த - புலமைப்பரிசில் - அதிபர்கள் - ஆசிரியர்களிடம் உண்டு.
இந்நிலையில் இன்று மகிழ்ச்சிகரமான கற்றல், கற்பித்தலில் சிறுவர் அரங்கம் எவ்வாறு முக்கிய இடம் பெறுகின்றது என்பதனை நாம் மனங்கொள்ள வேன் டும். அரங்கின் வளர்ச்சியில் பங்குகொள்வோர் அரங்கு என்ற ஒன்று இன்று பேசப்படுகிறது. இந்தப் பங்கு கொள்வோர் அரங்கின் நதி முலம் சிறுவர் அரங் காகக் கொள்ளலாம் என எமது நாடக ஆசிரியர் குழந்தை ம. சண்முகவிங்கம் இங்கு குறிப்பிடுகிறார். இங்கு மாணவரோ அல்லது ஆசிரியரோ தாம் பங்குபற்றும் விடயத்தில் போதிய விளக்கம் உடையவராக இருப்பது முக்கியமாகின்றது. இவ்வாறு இணைந்த பங்குபற்றல் ஊடாகப் பெறும் அறிவு " அனுபவம் என்பதும் நமது கல்வியே அன்றி வேறு வேறல்ல. இங்கு கல்வி என்பது மேல் இருந்து திணிக்கப்படாத ஒன்று என்பதையும் நாம் மனங்கொள்ளுதல் நன்று.
குழந்தை கருவிலேயே கற்கத் தொடங்குகிறது என்பர். எனில், ஒனர், அயல், உறவு கோயில், குளம், தோட்டம், தொழில், விளையாட்டு என்ற ஓர் நெருக்
ĝiy-Worth a. Karlyl5ovizaĝo ka 37

Page 29
கடி அற்ற ஊர்மனை வாழ்வில் ஓர் குழந்தை தானாகக் கற்பதும் உண் மையான கல்வியே ஆயின் அது ஆரோக்கியமாக அமையும் சந்தர்ப்ப சூழ் நிலைகள் இன்று இல்லை.
முன்பு எமது ஊர் தன்னழகு கெடாமல் இருந்தது. முன்பு ஊரில் எல்லோரும் நமக்கு அறிந்தவர், தெரிந்தவராக இருந்தனர். இன்று இந்த நிலைகள் இல்லை. அச்சம் அதிகம், அசைதல் குறைவு. எல்லாம் TV முன். எனில், எமது தேர் விளையாட்டும் ஊர் விளையாட்டும் தெரியாமல் போகின்றது. இந்நிலையிலும் பஞ்சவர்ண நரியார்” முக்கியம் பெறுகின்றார். பஞ்சதந்திரக் கதைகளில் ஒன்றே இந்நாடகத்தின் கதையாயினும், அக்கதையை நகர்த் துகின்ற பொறுப்பு எம்மன்னுக்கே உரித்தானது. பண்புகள் இவ்வாற்று கையில் சேர்வது ஏன்? எவ்வாறு? என்பதையும் நாம் தெரிந்திருத்தல் அவசி யமாகின்றது.
*கூடிவிளையாடு பாப்பா’ வில் தொடங்கி இற்றை வரையில் சிறுவர் அரங்கப் பாடல்களாக குழந்தை ம. சண்முகலிங்கத்தின் பாடல்களே எமது வாயிலும், மனதிலும் உள்ளன. செயல் திறன் அரங்க இயக்கக்குழுவினரது முன்னைய சிறுவர் அரங்கச் செற்பாடுகளிலும் இதனை அவதானிக்கலாம். இன்றும் அது ஒரு பங்கு கொள்வோர் அரங்காக நமது பாடசாலைக்கு வருகின்றது.
முன்னமும் ‘கூடிவிளையாடு பாப்பா? வில் எம் மாணவர் பங்கு கொண்டு இன் புற்றதை நாம் இவ்வேளையில் நினைவில் கொள்ளலாம். இத்தகு ஈடுபாட்டி னோடு எம்மண்ணின், மரபின் அம்சங்களான நாட்டார் பாடல்கள், கதைகள், இனிய சந்த ஓசைகள் ஆடல் முறைகளை எம்மாணவர் எளிதில் பயில இய லும். இத்தகு அறிவு - அனுபவங்கள் இன்று எம் எல்லோருக்கும் அவசிய மாகின்றது. உண்மையில் இவை எம் கல்வியாய் இங்கு இணைகின்றது. மேலும், இன்று எமது ஆரம்பக் கல்வியில் விளையாட்டின் முலம் கற்றல் என்னும் ஓர் பண்பு கூறப்படுகிறது. இது எம்மண்ணில் முன்பு ஆதிக்கம் நிகழ்ந்துள்ளது. (ஆலையில சோலையிலே நாட்டார் பாடல்) இங்கு வரும் கிட்டிப்புள்ளும், பம்பரமும் இன்று நாம் அறியாத பொருள் ஆயின. ஆயின் அளத்தல் என்ற என்னக்கரு அன்றே மறைமுகக் கல்வியாய் எம்மண்ணில் இருந்துள்ளது. இந்நிலையில் எவை? எவை எமதென்பதை அறிந்து கொள்வதற்கும். “அரங்கம்” எமக்கு உதவும்.
இங்கு பஞ்சவர்ண நரியாரில் வரும் ஆடல் பாடல் விளையாட்டு எல்லாமே எமக்கே உரியன. இதில் எமக்காக எங்கிருந்தோ அறிமுகம் செய்யப்படுபவை எவையும் இல்லை. உதாரணம், வர்ண நரியாரைக் காணச் செல்லும் ஏனைய மிருகங்களின் அணிவகுப்பில்
லெவ்ற் றைற். . . . . . . . .
இடம் வலம். . . . . . . .
car agazza267

ஒலைக்காலை முன்னே வை. சீலைக்காலை பின்னே வை.
என வரும் சந்தர்ப்பங்கள் ஒருவகையில் விளையாட்டாக அமைந்தாலும் இன் னோர் வகையில் எமது மன்னின் கல்வித் தொழில் முறைகள் எவ்வாறு மாற் றம் அடைந்து வந்துள்ளன என்பதை அறியவும் இது ஏற்ற ஓர் உதாரணமாக வும் அமைகிறது. இன்னமும் இங்கு சிறுவர்களாக வளர்ந்தோர்கள் பங்கு கொள்வதும் கவனத்திற்குரியது. இன்னம் சிறுவரை உளங்கொள்ளாது சிறி யோரையும் பெரியோராகச் சித்தரிக்கும் எமது சூழலில் வளர்ந்தோர்கள் சிறு வர்களாக மகிழ்ந்து பாடியாடும் காட்சிகள் எம்மவர் நிச்சயம் அறிய வேண்டும். தம்மைப் பெரிதாகக் கருதாத தன்மையும் தானும் மகிழ்ந்து மற்றவரையும் மகிழவைக்கும் சிந்தையும் சிறுவர் அரங்கில் நாம் கற்கும் பாடங்கள்.
இன்று ஆசிரியர் வெற்றிடத்தில் ஆரம்பக் கல்வியே அதிகமாக உள்ளது. இவ் வெற்றிடத்தில் ஏனைய பாட ஆசிரியர்களே நிரப்புகின்ற போது - அங்கு சிறுவர் உள நலத்தோடு ஒன்றித்துக் கற்பித்தல் இல்லாமற் போகின்றது. இடையில், வழங்கும் பயிற்சிகள்கூட இவ்வாறே அமைகின்றது. இந்நிலையில், சிறுவர் அரங்கு என்பது தனியே ஓர் சிறுவர்நாடகம் தயாரிப்பது மட்டுமல்ல, அது ஒரு சமுக உறவுச் சாதனம் என்பதையும் உளங்கொள்ள இவ்வாற்றுகை நமக்கு உதவும்.
இங்கு இவ்வாற்றுகையில் தனித்த போதனைகள் (ஏமாற்றக் கூடாது) எது வுமில்லை, அதற்கான தேவையுமில்லை. மேலும், அது சிறுவருக்கான விடயம் அல்ல, ஆயின் இதைக்கூட விளங்காது, இன்னமும் புத்திமதி சொல்லும் வெற்றுக் கதைக் கோவைகளையே சிறுவர் நாடகமாகச் சொல்லும் - செய்யும் - சிந்தனை - இன்னமும் எம்மை விட்டு நீங்கவில்லை. ‘முடிவு என்ன சொல் கிறது ? என்றே இன்னமும் எம் நடுவர்கள் கேட்கின்றார்கள். அரங்கு சொல் வது அதுவல்ல, செய்வது என்பதனை விளங்கவும் இத்தகு நாடகங்கள் எமக்கு உதவும். இங்கு சிறுவர்களின் மனமகிழ்ச்சி அவர்களின் பங்கு கொள் ளுதலும் என்பதே முக்கியமாகும்.
இதனோடு இவர்கள் தமக்குத் தேவையானதைக் கற்றுக் கொள்கின்றார்கள். இது ஒரு நேர சூசிக்குள் அவதிப்பட்டுத் திணிக்கும் விடயமல்ல. சீர்திருத்தம் என்ற சிந்தனை சூழலுக்கு அமைய மாறுபடும். கல்வியும் இதற்கு விதிவிலக் கல்ல. இன்று எம்மாணவர் மனநிலை பல்வேறு நிலையில் பாதிக்கப்பட்டுள் ளது. இங்கு இதற்கு " இதுதான் விடை - என்றில்லாது, இன்னும் நாம் கண் டறியும் தேவையுள்ளது. இதற்கும் “சிறுவர் அரங்கம்” துணைசெய்யும். முக்கி யமாக - இன்று நாம் எல்லோரும் எதிர்பார்க்கும் கல்வியில் எம் அரங்கின் செயற்பாடாகவே அமையும். “வளரும் பயிருக்கு முளையில் உதவுதல்" என் பது, அதனை வேரோடு வைத்திருந்து விளைவு கானுைம் முழற்கியாகவே
ayin, a, bayasha o s

Page 30
அமையும். இன்னும் "வளரும் முன் காப்பதும் இவ்வரங்கின் முயற்சியாகும்.
இனி, எம் பாடசாலையில் மேடையேற்றப்பட்ட 'பஞ்சவர்ண நரியார்' பற்றி இன்னொரு செய்தியும் முக்கியமாகும். அதாவது, இந்நாடக எழுத்துருவில் நாடகம் நிகழ்த்தும் இடம், பாடசாலையின் வளநிலை (இடம், பொருள்) க்கு ைேமய முற்றம், மரநிழல் என எந்தவொரு வெளியிலும் ஆற்றுகை செய்யலாம், என்ற ஒரு கருத்துக் கூறப்படுகின்றது. ஆயினும் இங்கு இவ்வாற்றுகை படச் சட்ட மேடையிலேயே நிகழ்த்தப்படுகின்றது. ஆயின், நாடகம் நல்லாயிருக்கு எண்டாலும் எங்களால் உப்பீடிச் செய்ய ஏலுமே" என்றவாறும் பாடசாலை நிலமைகள் உண்டு என்பதையும் நாம் மறுத்தல் இயலாது. மேலும், இவ் வாற்றுகையின் ஆரம்பத்தில் விட்டிற்கு வர்ணம் பூசுகின்ற வேளை 'மழை வரும் கோலம் மனக் காட்சியாகப் பதியவில்லை. மழைக்கு ஒதுங்க இடம் தேடும் நரியின் வருகையே மாணவருக்கு ஆரம்பமாகத் தெரிகின்றது.
மேலும், மிருகங்களின் அணிநடைக்காட்சியில் "சரி சரி ஓடிப்போய் ஒலையும் சிலையும் எடுக்கது வாங்கோ', 'யானையாருக்கு ஆரும் கட்டிவிடுங்கோ" என வரும் உரையாடலுக்கேற்ப அக்காட்சி * உன்மைப் பொருள்கள் இன்றி ஊமத்தில் நிகழ்வதும் சிறுவருக்கு பொருத்தமா என்று சிந்திக்க வேன் டியுள்ளது.
மேலும், நரியார் புளூகத்தில் ஆடிப்பாடும் விதங்கள் இரண்டிலும் (தத்தித் தகனக சொம் தரிகிட தக) – 2 தந்த தகிர்த தகிர்த தாம். . . . ) பாடல் ஒத்த கருத்தைக் கொண்டிருப்பினும் "தந்த தகிர்த. " நடையின் காட்சி மாணவர்களுக்கு மனப்பதிவாகவுள்ளது. மேலும், நீரில் வீழ்ந்து "சாயம் கழண்ட பின்னும் நரியின் வால் பஞ்சவர்ணமாகவே இருந்ததையும் (இது பெருந்தவறு அல்ல) சிலர் அது ஏன்? அப்படி..? எனக் கேட்கின்றனர். ஆயினும் இவ்வாற்றுகை மனம் கொள்ளும் சிறுவர்களைப் பொறுத்தவரை இதுவே அவர்கள் காட்சியாகக் கற்கும் ஒரு சந்தர்ப்பம் என்பதனை எவரும் மறுத்தல் இயலாது. இவ்வேளை இவ்வாற்றுகையின் முன்னரும் அதன் பின்னரும் ஆன நேரங்களை அரங்கின் பொழுதாகவே (தேடல்) எமது பாடசாலைகள் ஆயத்தம் செய்யுமாயின் அது எம் மாணவர்களுக்கு மிக்க பயனுடையதாக அமையும்,
முற்றும்.
:::::::::::::::::::::::::::::::::::
so = (F− උද්‍යුද්ඤඤාණ්”

.
பதிவுகள்
மூன்று தலைமுறைத் தயாரிப்பில் கூடிவிளையாரு பாய்பா சிறுவர் நாடகம்
முதலாவது தலைமுறை
தயாரித்த நிறுவனம் - நாடக அரங்கக் கல்லூரி நாடகாசிரியர் குழந்தை ம. சன்முகலிங்கம் நெறியாள்கை செய்தவர் - அ. தாஸிஸியஸ்
)4 - ت- قتلهكة بالمستقنعون

Page 31
இரண்டாவது தலைமுறை
SSSSSSSSLLS S L LLLLLLLLSSLSALJSSJSLLLLLLLS LLLLLLTAAAASSSLSLSSSSLLL LL LLLLLLLLAAAA SSSSS S SSLS LSSL LS SLSLSL LSL LSL LSLLSLSSSSSSSSS S S LSL LSL LSLSLSL LSL LSL SLLLSLS S S SSS
தப்ார்க்கப்பட்ட்ஆன்டு - 1. தயாரித்த நிறுவனம் - நாடக அரங்கக் கல்லூரி நெறியாள்கை செய்தவர் " க, சிதம்பரநாதன்
(இவர் 1979 தயாரிப்பில் சேவல்: பாக்கிரமேற்று நடிக்கிருந்தார்) :
SSSSSSLLSLSSLLSLSLLSSSSS S SSSSLSL LL LL LLL LLLL LL LLL LSLSLSS SS SSLSLSSLSLSS S SL LSL LSLLLLL LL LSLLLLLLSLLLSLSL LL LSSSSSLS SSSSSLSLLSLLSL LLLLLLLL LSL LSL ــــــــــــــــــا
மூன்றாவது தலைமுறை
"தயாரிக்கப்பட்ட்"ஆன்டு- ---------- g-------------- :
தயாரித்த நிறுவனம் அரங்கச் செயற்பாட்டுக் குழு
நெறியாள்கை செய்தவர் தே தேவானந்த்
(இவர் 1994ம் ஆண்டுக் தயாரிப்பில் : நாய்பாக்கிரமேற்று நடிக்கிருந்தார்);
SLLSLLLLLSLSSSLSLSLSLS S SLSSLLSSLSLSSLSL LSL LSLLSLSLSLL LSLLLLSSLSSLSSSLSSSLS LSSLSLSSLSLSSLSLLLLSLLSLLSL LLS
과 qణా చgశాg్యశీడాద్లోణాల్లో
 
 


Page 32


Page 33
PRINT BY, NOBLE PRIN
 

TERS 103, PALALY ROAD, JAFFNA.