கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பொன்விழாக் கண்ட சிங்களச் சினிமா

Page 1
*
|
 

பான் விழாக்
56UUT_
O
ஐயா தேவதாஸ்

Page 2


Page 3

பொன்விழாக் கண்ட
சிங்களச் சினிமா
SINHALA CINEMA
IN FIFTY YEARS

Page 4
ஆசிரியரின் பிற நூல்கள்
நூல்
இலங்கைத் தமிழ்ச்
சினிமாவின் கதை
நெஞ்சில் ஓர்
இரகசியம்
இறைவன் வகுத்த வழி
மூன்று பாத்திரங்கள்
தேர்ந்த சிறுகதைகளும்
நாகம்மாள் நாவலும்
ஒரு நோக்கு
5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை
மாதிரி வினா விடைகள்
ஆண்டு
1994
1975
1976
977
1998
1999
துறை
சினிமா
நாவல்
(மொழி
பெயர்ப்பு)
நாவல்
(மொழி
பெயர்ப்பு)
நாவல்
(மொழி
பெயர்ப்பு)
விமர்சனம்
(க.பொ.த.உ.த)
ஆரம்பக்
கல்வி
வெளியீடு
காந்தளகம்
(சென்னை)
வீரகேசரி
(கொழும்பு)
வீரகேசரி
(கொழும்பு)
என்.சி.பி.எச்
(சென்னை)
வித்தியா தீபம்
(கொழும்பு)
வித்தியா தீபம்
(கொழும்பு) m

பொன்விழாக் கண்ட சிங்களச் சினிமா
தம்பிஜயா தேவதாஸ்
(B.A (Cey), B.Ed (Cey),
Dip. in Journalism)
1857 வெளியீடு வித்தியாதீபம் பதிப்பகம் 90/9, புதுச் செட்டித்தெரு கொழும்பு-13. T.P - 448743

Page 5
TITLE : PON VILA KANDA SINHALA CINEMA
(Sinhala Cinema in Fifty Years)
FIRST EDITION: 2000 January
AUTHOR : Mr.THAMBAYAH THEVATHAS
(B.A (Cey), B.Ed (Cey), Dip. in. Journalism)
இலங்கைத் தேசிய நூலகம் - வெளியீடுகளில் உள்ள பட்டியற் தரவு
தேவதாஸ், தம்பிஐயா பொன்விழாக் கண்ட சிங்களச் சினிமா / தம்பிஐயா தேவதாஸ்.
கொழும்பு ஆசிரியர், 1999 ്റ്റ് ப. செ.மீ.18
ISBN 955-96785-O-7 விலை: ரூ. 200/- 1791.43 டி.டி.சி 21 ། ། 11. தலைப்பு
1.சலனப்படங்கள், சிங்களம்
. S. B. N. N.O. : 955-96785-0-7
ARTIST : S. D. SAMY
PRINTED : SHARP GRAPHICS (PVT) LTD.
D. G 2, Central Road, Colombo - 12.
PUBLICATION : WIDYATHEEPAM PUBLICATION
90/9, New Chetty Street,
Colombo - 13. : T. P: 448743.
PAGES : XII + 163 = 176
PRICE : 200/=

சமர்ப்பணம்
அமரர் கந்தையா தம்பிஐயா
என்னைச் சபைகளில் முந்தியிருக்கச் செய்த எங்கள் அன்புத் தந்தை அமரர் புங்குடுதீவு கந்தையா தம்பிஐயா அவர்களுக்கு இந்நூல் சமர்ப்பணம்.

Page 6
இந்நூல் இலங்கை தேசிய நூலக சேவைகள் சபையின் சலுகையுடன் அச்சிடப்பட்டுள்ளது. இதில் உள்ளடங்கியுள்ள பொருள் சபையின் கருத்துக்களை பிரதிபலிக்க மாட்டாது என்பதை கவனத்தில் கொள்ளவும்.
எச்சரிக்கை
இந்நூலில் இடம்பெற்றுள்ள வாக்கியங்களையோ புகைப்படங்களையோ தனியாகவோ கூட்டாகவோ உள்நாட்டிலோ வெளிநாட்டிலோ மீள்பிரசுரம் செய்யக்
θα Π 351.
மீள்பிரசுரம் செய்ய வேண்டிய தேவை ஏற்படின் ஆசிரியரின் அனுமதி பெற்றேயாகவேண்டும்.
மீறுவோர் மீது புலமைச் சொத்துச் சட்டத்தின்கீழ் வழக்குத் தொடரப்படும்.
vi

அணிந்துரை
1950களின் மத்தியிலே தமிழ்த் திரைப்படங்களை விட, அவற்றில் நடித் தவர் களை விட , அவற்றை நெறிப்படுத்தியவர்களைவிட அப்படங்களில் இடம் பெற்ற பாடல்கள், இசை, பாடகர், பாடகியர், இசையமைப்பாளர்கள் போன்ற அம்சங்கள் பற்றி அதிக அக்கறை காட்டி வந்தேன்.
அக்காலத்தில் சென்னையிலிருந்து ஏ.கரீம் என்பவரை ஆசிரியராகக் கொண்டு மாதமிருமுறை எட்டுப் பக்கங்களில், ஒரு வித்தியாசமான பத்திரிகை வந்து கொண்டிருந்தது, 'தமிழ்ச் சினிமா அதன் பெயர். அந்தப் பத்திரிகையில், தென்னிந்தியப் பின்னணிப் பாடகர்கள் பற்றிய விபரங்கள், அவர்களுடைய புகைப்படங்களுடன் வெளியாகின. நான் நன்கு பயன் பெற்றேன். அவர்களுடைய முகவரிகளும் இடம் பெற்றதால், அப்பாடக பாடகியருடன் தொடர்பு கொண்டு பல விபரங்களைப்
பெற்றேன்.
தமிழ்ப்படங்களில் மேனாட்டு இசையின் செல்வாக்கு, இலத்தீன் அமெரிக்க இசை, குரல்
பொருத்தம் போன்ற பல கட்டுரைகளையும் மேலை
நாட்டு நாடகங்கள் பற்றியும், 'தமிழ்ச் சினிமா' வுக்கு
vii

Page 7
  

Page 8
இலங்கைச் சினிமா பற்றி தமிழில் நூல்களே இல்லாதிருக்கும் நிலைமையில், தம்பிஐயா தேவதாஸ் அவர்கள் எழுதியுள்ள இந்த நூல் ஓர் ஆவணமாகத் திகழ்கிறது எனலாம்.
சிங்களத் திரையுலகம் பற்றிய செய்திகளை இந்நூலில் நாம் படிக்கும் பொழுது, நமது மொழிபேசும் கலைஞர்கள் எத்தகைய பங்களிப்புகளைச் சிங்களச் சினிமாவுக்குச் செய்துள்ளார்கள் என்ற வியப்பே ஏற்படுகிறது.
நூலாசிரியர் எந்தவிதமான பூச்சுகளுமின்றி, நேரிடையாகவே தகவல்களைத் தொடர்ச்சியாகத் தருகிறார். சிலவேளைகளில், கூறியது கூறல் என்ற குறைபாடு இருந்த போதிலும், சில விபரங்களை மனதிலிருத்த இது உதவுகிறது என நாம் அமைதி காணலாம்.
இந்த நூலிலே தமிழ் நாட்டுத் திரைப்படக் கலைஞர்கள் சிலர் பற்றியும் அறிந்து கொள்கிறோம்.
தம்பிஐயா தேவதாஸ் அவர்கள் முயற்சி உற்சாகப்படுத்தப்பட வேண்டியதொன்று. தனியாளாக நின்று அவர், இவ்விதமான தகவற்சேகரிப்பை மேற்கொண்டு நூல் வடிவில் தருவது பாராட்டத்தக்கது.
தமிழ், சிங்கள சினிமா மாத்திரமல்ல சினிமா பற்றியே எந்தவிதமான பயன்தரும் நூல்கள் தமிழில் இல்லாத நிலையில், இத்தகைய நூல்கள், திரைப்படத் திறனாய்வில் ஈடுபடுபவர்களுக்கும் வாசகர்களுக்கும் ரசிகர்களுக்கும் பெரிதும் உதவக்கூடிய கைநூலாகும்.
மேலும் பல நூல்களை தம்பிஐயா தேவதாஸ் அவர்கள் திறனாய்வு நோக்கில் எழுதுவாரென நாம் வாழ்த்துவோம்.
- கே.எஸ்.சிவகுமாரன்21, முருகன் பிளேஸ் கொழும்பு-06 இலங்கை 24O9.999

முனனுரை
1947ஆம் ஆண்டு முதலாவது சிங்களப் பேசும்படம் இலங்கையில் திரையிடப்பட்டது. 1997ஆம் ஆண்டுவரை 850 க்கும் அதிக மான சரிங் களப் படங் கள் திரையிடப்பட்டுவிட்டன. அதாவது சிங்களத்திரையுலகம் பொன்விழாவைக் கண்டுவிட்டது.
முதலாவது சிங்களப்படத்தைத் தயாரித்தவர் என்ற பெருமை எஸ்.எம்.நாயகம் என்னும் தமிழ் மகனைச்சாருகிறது. சிங்களத் திரையுலகை வளர்த்த பெருமை தமிழ் முஸ்லிம் கலைஞர்  ைகளயும் சாருகிறது. அந்த அளவுக்கு அத்திரையுலகில் அவர்கள் பல்வேறு சாதனைகளைச் செய்திருக்கிறார்கள்.
ஆரம்பத்தில் சிங்களத் திரைப்படங்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டன. அப்படங்களில் பெரும்பாலும் தொழில்நுட்ப அம்சங்களை இந்தியக் கலைஞர்களே கையாண்டனர். இப்படங்கள் இலங்கையில் தயாரிக்கப்படத் தொடங்கியதும் அந்தத் துறையை இலங்கைக் கலைஞர்கள் தொடர்ந்தனர். இவர்களில் பெருமளவு தமிழ் முஸ்லிம் கலைஞர்கள் அடங்குவர். இவர்களிற் பலர் இந்தக் கலை உலகில் பல்வேறு சாதனைகளைச் செய்திருக்கிறார்கள்.
படத் தயாரிப்பு, நெறியாள் கை, கதைவசனம் ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, இசையமைப்பு, ஒப்பனை, நடன அமைப்பு என்று பல்வேறு துறைகளில் தமிழ் முஸ்லிம் கலைஞர்கள் ஈடுபட்டனர். சாதனைகள் புரிந்தனர்.
அவர்களின் சாதனைகளை மட்டுமல்ல பல வெற்றிப் படங்களின் சாதனைகளைக்கூட தமிழ்பேசும் மக்கள் அறியாமலிருக்கிறார்கள். அந்தத் தகவல்களை விபரிப்பதே இச்சிறிய நூல்.
சரிங் களச் சனரி மா வரினர் சரி ல முக் கரிய வரலாற்றுக்கட்டங்களை இங்கு சுருக்கமாக எழுதியுள்ளேன். சில முக்கிய கலைஞர்களையும் அவர்கள் சிங்களச் சினிமாவுக்கு ஆற்றிய பணிகளையும் சுருக்கமாக எழுதியுள்ளேன்.
xi

Page 9
ஏற்கெனவே நான் ‘இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதை' என்ற நூலை எழுதியிருக்கிறேன். அதில் தமிழ்ப்படங்களில் பங்குபற்றிய கலைஞர்களைப் பற்றி மட்டும் குறிப்பிட்டிருக்கிறேன். இலங்கைத் தமிழ் சினிமாவைவிட சிங்களச் சினிமாத்துறை விசாலமானது. இந்த விசாலம்ான சிங்களத் திரை உலகில் கடமையாற்றிய தமிழ் முஸ்லிம் கலைஞர்களின் சாதைனைகளை வெளிப்படுத்தும் நோக்கிலும் இச் சிறிய நூலை எழுதியிருக்கிறேன்.
அப்படிச் சாதனைகள் பல புரிந்த நம் தமிழ் முஸ்லிம் கலைஞர்களின் பெயர்களை யார் மறந்தாலும் நாம் மறக்கக் கூடாது என்பதற்காகவே இந்த நூலை உங்கள் முன் வைக்கிறேன்.
எனது அறியாமை காரணமாக இத்துறையில் கடமையாற்றிய கலைஞர்கள் சிலரின் பெயரை நான் மறந்திருக்கலாம். சம்பந்தப்பட்ட்வர்கள் சுட்டிக்காட்டினால் அவர்களின் பெயர்களை அடுத்த பதிப்பில் சேர்த்துக் கொள்வேன்.
இந்நூலுக்கு அழகிய அட்டைப்படம் வரைந்துள்ள ஒவியர் எஸ்.டி.சாமிக்கும், இந்நூலை அழகிய முறையில் அச்சிட்டுத் தந்துள்ள சார்ப் கிறயிக் அச்சக உரிமையாளர் கே.கருணானந்தன் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். 'இலங்கைத் தமிழ் சினிமாவின் கதை' என்ற எனது முதலாவது நூலுக்கு ஆதரவு வழங்கியதுபோல் இந்நூலுக்கும் வாசகர்கள் ஆதரவு தர வேண்டும் என்று அன்புடன் வேண்டுகிறேன்.
அன்புடன் தம்பிஐயா தேவதாஸ்.
90/9, புதுச் செட்டித்தெரு கொழும்பு-13. தொலை பேசி 448743
xii

அத்தியாயங்கள் பக்கங்கள்
1. சிங்களப்படங்களின் ஆரம்பம்
2. நவஜீவன ஸ்ரூடியோ 19
3. மூன்று முதலமைச்சர்களின்
படங்களில் பங்குபற்றிய இலங்கையர் 3.
எம்.மஸ்த்தானின் சினிமாப்பிரவேசம் 43
5. குடும்பத்தாருடன் சினிமாவில்
ஈடுபட்ட எம்.எஸ்.ஆனந்தன் 6
6. சினிமாத் தொழிலில்
அண்ணனும் தம்பியும் 79
7. ஒளிப்பதிவாளர் அமரர் ஜே.ஜே யோகராஜா 93
8. இசை அமைப்பாளர்கள் O9
9. ஒரு படம் இரண்டு மொழிகள் 125
10. பரிசு பெற்ற சிங்களப் படங்கள் 14
xiii

Page 10

1. சிங்களப் படங்களின் ஆரம்பம்
முதலாவது சரிங் களப் − பேசும் படம் திரையிடப்பட்டு 50 வருடங்கள் கடந்துவிட்டன.
1947ஆம் ஆண்டு ஜனவரி 21ஆம் திகதி இலங் கையின் முதலாவது சரிங் களப் படம் திரையிடப்பட்டது. ஆனால் இதற்கு முன்பே சிங்களத் திரைப்படத் தயாரிப்பு முயற்சிகள் ஆரம்பமாகிவிட்டன. அம் முயற்சி 1935 ஆம் ஆண் டுக்கு முன் பே தொடங்கிவிட்டது எனலாம்.
அந்தக் காலத்தில் இலங்கையர் அனைவரும் இந்தியத் திரைப்படங்கைளப் பார்த்தே திருப்தி பெற்றனர். 1920ஆம் ஆண்டு அளவில் இந்தியக் கதையொன்றைத் தழுவி "ராஜகீய விக்ரம' என்ற பெயரில் நாடகமாக மேடையேற்றி வந்தார்கள் சில
கலைஞர்கள்.

Page 11
தம்பிஐயா தேவதாஸ்
வெள்ள வத் தையில் பிளாசா தியேட்டரின் உரிமையாளராக இருந்து பல வெளிநாட்டுப் படங்களை
இறக்குமதி செய்து காண்பித்து வந்தவர் தான்,
ஜீ.ஏ.ஜி.நார்பாய். இவருக்கு இந்நாடகத்தை சிங்களத் திரைப்படமாக உருவாக்கலாம் என்ற எண்ணம் தோன்றியது. அக் காலத்தில் சினிமா மீது ஆர்வம்கொண்ட இளைஞர் ஒருவர் கொழும்பு ஆனந்தாக் கல்லூரியில் பயின்று கொண்டிருந்தார். இவருக்கு இந்தப்படத்தில் கதாநாயகன் பாத்திரம் வழங்கப்பட்டது, அந்த இளைஞர்தான் பின்நாளில்
LST Li அரசியல்வாதியாக விளங்கிய என்.எம்.பெரேரா, ‘ராஜகிய விக்ரம' என்ற அந்தப் படத்தில் டவர்
ஹோல் நடிகர்களான அல்பர்ட் பெரேரா, ரெஜினோல் பெரேரா , பேர் சி பெரேரா போன்றோரும்
நடித்தார்கள், மெளனத்திரைப்படமாக உருவான இப்படம் இந்தியாவிலும் சிங்கப்பூரிலும் மட்டுமே
திரையிடப்பட்டது. இதன் பிரதியொன்றை
இலங் கைக் குக் கொண் டு வரும் வழியில்
தீக்கிரையாகிவிட்டதாம்,

பொன்விழாக் கண்ட சிங்களச் சினிமா
இந்தத் துரதிஷ்டமான சம்பவத்தால் முதலாவது சிங் களப்படத்தை இலங்கையர்களால் பார்க்க
முடியாமல் போய்விட்டது.
முதலாவது சிங்களப் பேசும் படமான
‘கடவுனு பொறொந்துவ" என்ற திரைப்படத்தைத் தயாரித்த தமிழரான சுந்தரம் மதுரநாயகம் (எஸ்.எம்.நாயகம்)
1936ஆம் ஆண்டளவில் மெளனத்துண்டுப் படமொன்றை அக்கால இசை அமைப்பாளரான டொன் எட்வின் என்பவர் தயாரித்தார். என்.ஆர்.டயஸ் நடித்த இப்படத்தின் பெயர் 'பலிகனிம' என்பதாகும். அக்காலத்தில் இலங்கையில் காண்பிக்கப்பட்ட ஆங்கிலப்படங்களுக்கிடையில் இத்துண்டுப் படமும்
காண்பிக்கப்பட்டதாம்,

Page 12
தம்பிஐயா தேவதாஸ்
1939ஆம் ஆண்டளவில் லுயி சிடில் நிறுவனத்தினர் சிங்களப் படமொன்றை உருவாக்க முனைந்தனர் . உலகப் போர் காரணமாக அம்முயற்சியம் கைவிடப்பட்டது.
அதே ஆண்டில் சிலோன் தியேட்டேர்ஸ் தாபனத்தாரின் சார்பில் எம்.சவரிமுத்து என்பவர் கண்டியின் கடைசி மன்னன் பூரீ விக்கிரமராஜசிங்கனின் கதையைத் தழுவி சிங்களப் படமொன்றை உருவாக்க எண்ணினார். அம்முயற்சியும் இடையில் நின்றுவிட்டது. 1940ஆம் ஆண்டளவில் வில்பிறெட் பெரேரா, ரெஜி பெரேரா, டி.ஜி.வில்லியம் ஆகிய முன்று கலைஞர்களும் ஒன்று சேர்நது "லோக தெக' இரு உலகம்) என்ற பெயரில் சிங்களப் படமொன்றை உருவாக்க முனைந்தனர், அதுவும் தோல்வியில் முடிந்தது.
1945இல் எம்.எஸ்.எம்.சக்கி என்னும் முஸ்லிம் ஒருவரும் "பிறேமாவதி என்னும் பெயரில் படமொன்றை தயாரிக்க எடுத்த முயற்சியும் வெற்றிபெறவில்லை.
தொழில் அதிபரான எஸ்.எம்.நாயகம் 1945இல் 'சித்திர கலா மூவிடோர்ன்' என்னும் சினிமா நிறுவனத்தை ஆரம்பித்தார். பூனி விக்கிரமராஜசிங்கன் கதையைப் படமாக்க வேண்டும் என்பது அவர் எண்ணம். கே.டி.ஏ பெரேரா, டபிள்யு.டி.சாந்திகுமார் போன்றோர் நாயகத்துடன் இணைந்து கொண்டனர். சாந்திகுமாரே இப்படத்தை இயக்க இருந்தாராயினும் அதிக பணம் செலவாகும் என்ற காரணத்தினால் தயாரிப்பு கைவிடப்பட்டது.

பொன்விழாக் கண்ட சிங்களச் சினிமா
ஆனால் எஸ்.எம்.நாயகம், சாந்திகுமார் ஆகியோரின் இதயங்களில் திரைப்படமொன்றைத் தயாரிக்க வேண்டும் என்ற எண் ணம் மென் மேலும் வலுப்பெற்றது.
முதலாவது சிங்களப் படமான 'கடவுனு பொறொந்துவவில் ஒரு காட்சி. ருக்மணி தேவியும், பி.ஏ.டபிள்யு.ஜெயமான்னவும் இப்படி தோன்றுகின்றனர். (1947)
1946ஆம் ஆண்டு எம்.துரைசிங்கம் என்னும் தமிழர் 'திவ்யப்பிறேமய’ (தெய்வீகக்காதல்) என்னும் பெயரில் சிங் களப் படமொன்றைத் தயாரிக்க எண்ணினார். ஈ சீ.பி. விஜயசிங்ஹ, ஒசன் றொட்றிகோ, சிய மன்த சில்வா, விமலா காண்தா போன்றோர் துரை சிங் கத்துடன் சேர்ந்து இந்தியாவுக்குப் பயணமானார்கள். சினிமா தயாரிக்கும் எண்ணத்துடன் இலங்கையிலிருந்து இந்தியாவுக்குச் சென்ற முதலாவது குழு இதுவே. இவர்களால் இப்படத்துக்கான இசைத் தட்டொன்றை மாத்திரம் தயாரிக்க முடிந்ததே தவிர

Page 13
தம்பிஐயா தேவதாஸ்
படம் தயாரிக்க முடியவில்லை.
எம்.சவரிமுத் துவும் எஸ் .எ ம் நாயகமும் தமிழர்கள். இவர்கள் இருவரும் எப்படியாவது ஒரு சிங்களப் படம் தயாரித்தே ஆக வேண்டுமென்று விடாப்பிடியாக நின்றனர்.
ரி.வி.செனவிரத்ன, சாந்திகுமார் போன்றோர் இவர்களுக்கு ஊக்கம் அளித்தனர். "அசோகமாலா" என்னும் பெயரில் திரைக்கதையொன்றை ஏற்கனவே சாந் திகுமார் எழுதியிருந்தார் . இக் கதையை திரைப்படமாக்கும் எண்ணம் நாயகத்துக்கு தோன்றியது. இவர்களுக்கிடையே ஏற்பட்ட மனஸ்த்தாபத்தால் அம்முயற்சியும் கைவிடப்பட்டது.
சாந் தி குமார் , "அசோகமாலா" வின் திரைக்கதையை சிலோன் தியேட்டேர்ஸ் நிறுவனத் தலைவர் சேர். சிற்றம்பலம்.ஏ.கார்டினரிடம் காட்டி, அவர் மூலம் படத் தயாரிப்புக் கான முயற்சியை ஆரம்பித்தார். இலங்கை மன்னன் துட்டகைமுனுவின் மகன் சாலிய, ஒரு தாழ்ந்த சாதிப் பெண்ணைக் காதலிப்பது "அசோகமாலா'த)  ைர ப பட த த) ன மூலக்கதை. இப்படத்தின் கதை கார்டினருக்குப் பிடித்திருந்தது.
அந்தக் காலத்தில் மேடை நாடகமொன்று இலங்கையின் பல பாகங்களிலும் 800 தடவைக்கு மேல் மேடையேற்றப்பட்டு பிரபலம் பெற்று விளங்கியது. மினேர்வா நாடகக் குழு என்ற பி.ஏ.டபிள்யு.ஜெயமான குழுவினரின் "கடவுனு பொறொந்துவ (சிதைந்த வாக்குறுதி) என்னும் நாடகமே அது. இந்நாடகத்தைத்
6

பொன்விழாக் கண்ட சிங்களச் சினிமா
திரைப் படமாக் குவோமே என் ற எண் ணம் எஸ்.எம் நாயகத்தின் மனதில் உதித்தது. உடனே செயலில் இறங்கிவிட்டார்.
அவர் ஜயமானவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு 1946ஆம் ஆண்டு ஜுன்மாதம் நாடகக் கலைஞர்களை இந்தியாவுக்கு அழைத்துச் சென்று படப்பிடிப்பைத் தொடங்கிவிட்டார்.
இலங்கைச் சினிமாத் தொழிலின் மன்னன் என்று புகழ் பெற்ற சேர் சிற்றம்பலம் ஏ.கார்டினர் அவர்கள்.
வங்காள இயக்குநரான ஜேசிங் என்பவரை நெறியாளராகத் தேர்ந்தெடுத்தார். எஸ். செளந் தர ராஜன் உதவி நெறியாளராக நியமிக்கப்பட்டார். ஹியூகோ பெர்னாண்டோ, வசனம் பாடல்களை எழுதினார். நாராயண
ஐயர் இசையமைத்தார்.

Page 14
தம்பிஐயா தேவதாஸ்
ஆர்.முத்துசாமி உதவி இசையமைப்பாளர். பா கர் சா லி படத் தொகுப் பு. ஜெயமான வும் ருக்மணிதேவியும் பிரதான பாத்திரங்களில் நடித்தனர். எடி.ஜெயமான, ஜெமினி காந்தா, டலின் மல்லவராச்சி, பீட்டர் பீரிஸ் போன்றோரும் நடித்தனர்.
1947ஆம் ஆண்டு ஜனவரிமாதம் 21ஆம் திகதி, செவ்வாய்க்கிழமை, இலங்கை ரசிகர்கள் எவராலும் இலகுவில் மறந்துவிட முடியாத பொன்னாளாகும்.
அன்றுதான் முதலாவது சிங்களப்பேசும்படம் இலங்கையின் திரைக்கு வந்தது.
‘கடவுனு பொறொந்துவ" என்ற அந்தப்படம் கொழும்பு, கண்டி, காலி, திருகோணமலை உட்பட எட்டு நகரங்களில் திரையிடப்பட்டது. இப்படத்தின் முதலாவது காட்சியை அப்பொழுது காணி அமைச்சராக இருந்த டி.எஸ்.சேனநாயக்கா ஆரம்பித்து வைத்தார். அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள், கலைஞர்கள் என்று பலரும் படமாளிகையில் நிரம்பியிருந்தனர்.
முதலாவது சிங்களப் படமான 'கடவுனு பொறந்துவ" என்னும் இத் திரை ஓவியத்தை, உங்கள் முன் வைக்கிறேன’ என்று திரைப்படத்தில் தோன்றிக் கூறினார் ஒருவர். அவர் ஒரு தமிழர். அவர் தான் அப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்.எம்.நாயகம். சிங்களச் சினிமாவை ஆரம்பித்து வைத்த பெருமை இத் தமிழ்
மகனையே சாருகிறது.

பொன்விழாக் கண்ட சிங்களச் சினிமா
‘கடவுனு பொறந்து வ படத் தில் எஸ்.எம் நாயகத்தின் உரையைத் தொடர்ந்து கலைஞர்களின் பெயர்ப்பட்டியல் காட்டப்படுகிறது. அடுத்து பெண் ஒருத்தியின் முகம் 'குளோஸ் அப்" பரில் காட் டப் படுகிறது . அவள் <罗(P臣川 கொண்டிருக்கிறாள்.
அவளுக்கு முன்னே அவளது தந்தை கட்டிலில் இறந்து கிடக்கிறார்.
முதலாவது சிங்களச் சரித்திரப்படமான "அசோகமாலா' திரைப்படத்தில் ஒரு காட்சி (1947)
அந்தப் பெண்தான் நடிகை ருக்மணிதேவி. அவர்தான் சிங்களச் சினிமாவின் முதலாவது கதாநாயகி. இவர் தமிழ்ப்பெண் என்பதையிட்டு நாம் பெருமைப்படலாம்.
9

Page 15
தம்பிஐயா தேவதாஸ்
டெசி டேனியல் என்ற தமிழ்ப் பெண்ணே தன் பெயரை ருக்மணிதேவி என்று மாற்றிக் கொண்டார். தான் தோன்றும் படங்களில் எல்லாம் சொந்தக் குரலில் பாடவும் செய்தார். மூன்று மாதங்களுக்குள் ‘கடவுனு பொறந்துவ தயாராகி விட்டதாம். நாடகப் பாணியை நீக்கி திரைப்படம் போலவே இயக்குநர் உருவாக்கினார்.
படம் திரையிடப்பட்டபோது பலர் கூட்டம் கூட்டமாக வந்து பார்த் தனர் . இந்தியத் தயாரிப்புக்களான ஹிந்தி, தமிழ்ப்படங்களைப் பார்த்துப் பழகிப்போயிருந்த சிங்கள ரசிகர்களுக்கு இப்படம் புதுமையாகவே காட்சியளித்தது.
இவ்வாறு ஆரம்ப சிங்கள திரைப்படத்திலேயே தமிழர், முஸ்லிம்களின் பங்களிப்பு ஆரம்பமாகிவிட்டது. தயாரிப்பாளர், கதாநாயகி, இசையமைப்பாளர் எல்லோரும் தமிழர்கள், இவர் களைவிட உதவிக் கலைஞர்களில் அதிகமானவர்கள் தமிழ் பேசும் கலைஞர்கள். 50 ஆண்டுகால சிங்களத் திரை உலகில் பங்காற்றிய தமிழ் பேசும் கலைஞர்களின் பங்களிப்பை மிக விரிவாகவே ஆராய வேண்டும்.
இலங்கையின் சிங்களச் சினிமாவை ஆரம்பித்து வைத்த பெருமை தமிழரைச் சார்வது போல் இலங்கையின் முதலாவது தமிழ்ப்படத்தை ஆரம்பித்து வைத்த பெருமை ஒரு சிங்களவரைச்சாரும். அவர் பெயர் ஹென்றி சந்திரவன்ச ஆகும். அவர் தயாரித்த அத் தமிழ்ப்படத்தின் பெயர் சமுதாயம் என்பதாகும்.
10

பொன்விழாக் கண்ட சிங்களச் சினிமா
கடவுனு பொறந்துவ என்னும் இலங்கையின் முதலாவது சிங்களப்படம் இந்தியாவில் உருவானது போல பல சிங்களப் படங்கள் அங்கு உருவாகத் தொடங்கின. அவற்றில் "அசோகமாலா', 'திவ்யப் பிரேமய’ எனும் படங்கள் முக்கியமானவை. சாந்திகுமார், இவோஸ்ட், மைக்கல் சன்னஸ் போன்ற கலைஞர்களுடன் சிற்றம் பலம் ஏ கார்டினர் "அசோகமாலா" திரைப்படத்தை தயாரிப்பதில் ஈடுபட்டார்.
திரைப்படங்களில் ஜோடி சேர்ந்த எடி ஜெயமானவும்
ருக்மணி தேவியும் பின்னாளில் வாழ்க்கையிலும் இணைந்து கொண்டார்கள்.
இப்படத்தின் இயக்குநராக சாந்திகுமாரே செயற்பட்டார். துட்டகைமுனு மன்னனின் மகனான சாலிய இளவரசனாகவும் சாந்திகுமா ரே நடித் தார் . அசோகமாலா வேடத்தில் நடிப்பதற்காக செல்வி இவோ ன் சூட் எ ன் னும் இளம் பெண் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
11

Page 16
தம்பிஐயா தேவதாஸ்
அக்காலத்தில் ஒரு நடிகையின் வாய் அசைவுக்கு இன்னொருவர் குரல் கொடுக்க முடியாது. அதனால் "அசோகமாலா' பாத்திரத்துக்கு இன்னுமொரு நடிகை இலங்கையிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டார். அவர் தான் எமலின் திம்புலான என்னும் நடிகை.
இரண்டாவது சிங் களத் திரைப்படமான "அசோகமாலா' 1947ஆம் ஆண்டு ஏப்ரல் 9 ம் திகதி கொழும்பு றிகல் தியேட்டரில் திரையிடப்பட்டது. இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து இப்படம் தயாரிக்கப்பட்டது. இப்படப்பாடல்கள் வேற்றுமொழி மெட்டுக்களை பிரதிபண்ணாமல் சுயமான பாடல்களாக விளங்கியமை முக்கியமான அம்சமாகும். அப்படியான பாடல்களை இப்படத்துக்காக இசையமைத்தவர் முஹம்மட் கெளஸ் என்னும் முஸ்லிம் கலைஞராவார். பின்னாளில் உருவான பல்வேறு சிங்களப் படங்களுக்கு இவரே இசையமைப்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். முதலாவது சிங்களப் படமான "கடவுனு பொறொந்துவ வில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களையும் இந்திப் பாடல் களின் மெட் டைப் பிரதி பண் ணியே உருவாக்கியிருந்தார்கள். ஆனால் "அசோகமாலா'வில் அப்படி அல்லாமல் தனித்துவமான பாடல்களாக இசையமைக்கப்பட்டிருந்தன.
பின்னாளில் பிரபலமாக விளங்கிய இரண்டு பாடகர்களுக்கு இப்படத்தில் பாடச் சந்தர்ப்பம் வழங்கியிருந்தார் மொஹமட் கெளஸ். அவர்கள் மொஹிதீன் பெக்கும் டபிள்யு.டி. அமரதேவாவும்
ஆவார்கள்.
12

பொன்விழாக் கண்ட சிங்களச் சினிமா
பஹிரவதி என்னும் தமிழ்ப் பாடகியுடன் மொஹிதீன் பெக் இனிமையான பாடல் ஒன்றைப் பாடியிருந்தார்.
அமர தேவா , சன் னியா சி வேடத்தில் தோன்றியவாறு ஒரு பாடலைப் பாடியிருந்தார். பல பத்திரிகைகள் அசோகமாலா பற்றி விமர்சனம் எழுதின. இந்தியக் கலாசாரப் பின்னணியில் இலங்கையின் சரித்திரக்கதையை எப்படி உருவாக்கலாம் என்று
சிங்களப் படங்களுக்கு தனித்துவமான இசையை வழங்கத் தொடங்கிய இசையமைப்பாளர் மொஹமட் கெளஸ்.
‘கடவுனு பொறொந்துவ திரைப்படத்தில் நடித்தவர்கள் ஏற்கெனவே சிங்கள ரசிகர்களுக்கு அறிமுகமான மேடை நடிகர் கள் . ஆனால் "அசோகமாலா' நடிகர்களை ரசிகர்கள் அதிகமாக அறிந்திருக்கவில்லை. பிரபல நாடக நடிகராக விளங்கிய சாந்திகுமார் கதாநாயகன். எமிலின் திம்புலான என்ற புதுமுகம்
13

Page 17
தம்பிஐயா தேவதாஸ்
கதாநாயகி, மற்றவர்களும் புதியவர்களே. கமராவின் புதிய நுட்பங்கள், ஒரே பாடலை இரண்டுமுறை ஒலிக்க விடுதல் போன்ற புதிய உத்திகள் எல்லாம் இப்படத்திலேயே முதன் முதலில் ஆரம்பித்தன.
இப்படத்தை சாந்திக்குமார் இயக்கினாராயினும், ரீ.ஆர்.கோபு என்ற இந்தியத் தமிழரே உதவி இயக்குநராக நின்று வழிகாட்டினார். ... -
ஆக இலங்கை யரின் இர ண் டா வது சிங்களப்படமான "அசோகமாலா'விலும் தமிழ் முஸ்லிம் கலைஞர் களின் பங்களிபபு இருந் திருக்கிறது. இப்படத்துக்கு இசை அமைத்த முஹம்மட் கெளஸ் பற்றி பலர் புகழ்ந்து எழுதினர். இசையமைப்பாளர் கெளஸ் இசைக் குடும்பமொன்றில் பிறந்தவர். இவரது மனைவி பல்கலைக்கழகத்தில் உருது மொழி விரிவுரையாளராக கடமையாற்றியவர். கெளஸ் மூலம் பின்னணிபாடும் வாய்ப்பைப் பெற்றவர் மொஹிதீன் பெக். இவர் இந்தியப் பிரஜையாவார். இவரது சகோதரர் ஒருவர் இலங்கை இராணுவத்தில் கடமையாற்றினார். தனது சகோதரனைப் பார்க்க இலங்கைக்கு வந்திருந்த மொஹிதின் பெக், இங்கேயே தங்கவேண்டிய நிலை ஏற்பட்டது. அச்சமயத்தில்தான் சினிமாவில் சிங்களப் பாட்டுப்பாடும் சந்தர்ப்பம் அவருக்குக் கிடைத்தது. இவர் பாடிய பல சிங்களப் பாடல்கள் பிரபல்யம் பெற்றன. . . . ‘புத் தஞ் சரணம் கச்சாமி’ என்ற பாடலை
14

பொன்விழாக் கண்ட சிங்களச் சினிமா
முணுமுணுக்காத சிங்கள ரசிகர்களே இல்லை எனலாம். இலங்கையின் முதலாவது சிங்களப் பேசும் படத்தில் நடித்த ஜெயமான்ன குழுவினர், இலங்கையில் புகழ் பெற்றனர். அவர்கள் ஏற்கனவே 15க்கும் மேற்பட்ட மேடை நாடகங்களை மேடையேற்றியிருந்தனர்.
தங்கள் மேடை நாடகங்களையெல்லாம் திரைப்படமாக்குவோமா என்ற எண்ணம் அவர்கள் மனதில் தோன்றியதில் வியப் பில்லை. அந்த நாடகங்களில் ஒன்றுதான் 'கபட்டி ஆறக்ஷாவ' என்பதாகும். இந்நாடகத்தை திரைப்படத்துக்கு ஏற்றவாறு ஓரளவு மாற்றி அமைத்தனர்.
ஆரம்பகாலச் சிங்களப்படங்கள் சிலவற்றை
இயக்கிய ஏ.பி.ராஜ்
15

Page 18
தம்பிஐயா தேவதாஸ்
சிலோன் தியேட்டேர்ஸ் நிறுவனத்தினர் இப்படத்தை தயாரிக்க முன் வந்தனர். இலங்கைக் காட்சிகளையும் இதில் இணைக்க வேண்டுமென்பது தயாரிப்பாளர் களின் ஆசை. இந்தியாவில் ஸ்ரூடியோவுக்குள் பிடிக்கப்படும் இப்படத்தில் எப்படி இலங்கைக்காட்சிகளைச் சேர்க்க முடியும்? கனவுக் காட்சிகள் போல் இலங்கைக் காட்சிகளையும் இப்படத்தில், இணைத்துவிட்டார்கள். இலங்கைக் காட்சிகள் மட்டுமல்ல. கனவுக் காட்சிகளும் இப்படத்திலேயே முதன் முதலாக சேர்க்கப்பட்டன, 'கபட்டி ஆறக்ஷாவ" 1948ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 23 ஆம் திகதி இலங்கையில் திரையிடப்பட்டது. இப்படத்தை ஜே.சிங் என்ற வங்காள இயக்குநரும் கே.சுப்ரமணியம் என்ற தமிழரும் சேர்ந்து இயக்கினார்கள்.
லைலா மஜுனு கதையை படமாக்காத இந்திய மொழிகளே இல்லை. அந்த அளவுக்கு இந்திய மொழிகள் அனைத்திலும் இக்கதை முழுக்கதையாகவோ பாடல் காட்சியாகவோ படங்களில் வந்திருக்கின்றன. இந்தக் கதையை அடிப்படையாகக் கொண்டு சிங்களத்தில் திரைக் கதையை உருவாக்கியவர் ஒரு தமிழர். அவர் தான் 'சண்முகம் பிலிம்ஸ்’ நிறுவனத்தின் உரிமையாளர் எஸ்.துரைசிங்கம். அந்தப் படத்தின் பெயர் 'திவ்யப்பிறேமய’ (தெய்வீகக்காதல்) என்பதாகும். படத்தை இயக் கியவர் டி.எஸ் பாபு என்னும் தென்னிந்தியர். லுமன் ராஜபக்ஷ, கருணாதேவி, பீட்டர் சிறிவர்த்தன என்போர் பிரதான பாத்திரங்களில் நடித்தனர்.
16

பொன்விழாக் கண்ட சிங்களச் சினிமா
படம் 1948ஆம் ஆண்டு ஜுன் மாதம் 4ஆம் திகதி திரையிடப் பட்டது. இலங் கையில் மேடையேற்றப்பட்ட நாடகக் கதைகளும் இப்படி சிங்களத் திரைப்படங்களாக வந்து கொண்டிருந்தன. இந்தியக் கதையொன்றைத் தழுவி எடுக்கப்பட்ட முதற்படம் ‘திவ்யப் பிறேமய' திரைப்படமாகும்.
"தொஸ்த்தர" என்ற சிங்களப்படத்தை தயாரித்த ஏ.வீ.எம். நிறுவனத்தின் தலைவர், ஏ.வீ.மெய்யப்பச் செட்டியார்.
இவ்வாறு ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு முன்னேற்றம் ஏற்பட்டுக்கொண்டிருந்தது. இவற்றுக்கு முன்பே அதாவது 1947ஆம் ஆண்டு மேமாதம் "மனப்பியத்தன” என்ற பெயரில் சிங்களப் படம் திரையிடப்பட்டமைக்கான தகவல்கள் பழைய
சினிமாப்புத்தகங்களில் காணப்படுகின்றன.
17

Page 19
தம்பிஐயா தேவதாஸ்
பானுமதி குழுவினர் நடித்த தெலுங்குப் படமொன்றை சிங்கள மொழிக்கு மொழிமாற்றம் செய்து வெளியிட்டார்கள். அது தெலுங்கு மொழியிலிருந்து மொழிமாற்றம் செய்யப்பட்ட படம் என்பதால், பிற் காலத்து சினிமா க்காரர்களும் பத் திரிகையாளர் களும் அப்படத்தை சிங்களப் பட எண்ணிக்கையில் சேர்த்துக் கொள்ளவில்லைப் போலும்.
‘கடவுனு பொறந்துவ", "அசோகமாலா', 'கபடி ஆறக்ஷா', 'திவ்ய பிறேமய' என்று அடுத்தடுத்து வந்த அனைத் துப் படங்களிலும் தமிழ் , முஸ்லிம் கலைஞர்களின் பங்களிப்பு நிறையவே இருந்திருக்கிறது.
எனவே ஆரம்பகாலச் சிங்களப் படங்களில் தமிழ் முஸ்லிம் கலைஞர்களின் பங்களிப்பு மிக அதிகமாகவே இருந்திருக்கிறது என்பதை நாம் அவதானிக்கலாம்.
18

பொன்விழாக் கண்ட சிங்களச் சினிமா
2 நவ ஜீவன ஸ்ரூடியோ.
புதிய இயக்குநர் ஒருவர் 1949ஆம் ஆண்டு சிங்களச் சினிமாவில் பிரவேசித்தார். அதுகாலவரை சரிங் களச் சனரி மா  ைவ இயக் கிய வர் கள் வெளிநாட்டவர்களும் வேற்று இனத்தவர்களுமே. ஆனால் முதன் முதலில் ஒரு சிங் களவர் திரைப்படத்தை இயக்க முன்வந்தார். அவர் தான் அதுகாலவரை மேடை நாடகங்களை எழுதி இயக்கிவந்த சிறிசேன விமலவிர,
இவர் இயக்கிய முதற் படம் ‘அம்மா” என்பதாகும். நவஜீவன சினிமா நிறுவனத்தின் முலம் இவரே இப்படத்தைத் தயாரித்து இயக்கினார்.
19

Page 20
தம்பிஐயா தேவதாஸ்
இந்நிறுவனத்தைச் சேர்ந்த நடிகர்களுக்கும் இப்படத்தில் முக்கிய பாத்திரங்கள் வழங்கப்பட்டன. எ டியூனியர், பேர்ள் வாசுதேவி. டி.ஆர். நாணயக்கார ஆகியோர் இவர்களில் முக்கியமானவர்கள்.
'அம்மா’ திரைப்படம் 1949ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி திரையிடப்பட்டது. அதன் பின்பு இவர் சீதேவி என்னும் படத்தையும் தயாரித்து இயக்கினார். இது 1951ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9ஆம் திகதி திரைக்கு வந்தது.
சிறிசேன விமலவிர சிங்களத் திரைப்படத் துறையில் மிக அதிகமாகவே பேசப்படுபவர் 'திரைப்படம் சிங்களம் பேசினால் மட்டும் அவை சிங்களத் திரைப்படங்கள் ஆகா. அவை சிங்களப் பேசும் படங்கள் மட்டுமே! எனவே அவற்றை சிங்களப் படங்களாக மாற்ற வேண்டும்" என்று கூறி முயற்சி செய்தவர் அவர் தான் என்பார்கள்.
இவருக்கு இன்னுமொரு புகழுமுண்டு. இலங்கையிலும் தமிழ்ச் சினிமா பிறக்க வேண்டும். உயர்ந்து வளர வேண்டும் என்று கனவு கண்டவர்களில் இவரும் ஒருவர். தான் உருவாகிய நவஜீவன ஸ்ரூடியோவுக்குள்ளேயே முதலாவது இலங்கைத் தமிழ்ப்படம் உருவாக வேண்டும் என்று விரும்பிய இவர், இலங்கையின் முதல் (35மிமீ) தமிழ்த் திரைப்படமான "தோட்டக்காரியை உருவாக்கப் பல வழிகளிலும் உதவி செய்தார்.
இலங்கையின் முதலாவது 35 மி.மீ தமிழ்த்திரைப்படத்தை தயாரித்தவர்கள் தங்கவேலு,
20

பொன்விழாக் கண்ட சிங்களச் சினிமா
முத்துவேலு, ரஞ்சனி ஆகியோராவர். அப்படத்தை இயக்கியவர் பி.எஸ்.கிருஷ்ணகுமார் ஆவார். இவர்களுக்கு இப்படத்தை உருவாக்குவதில் சிறிசேன விமலவீர பல வழிகளிலும் உதவியிருக்கிறார்.
திரு வீஎஸ்.முத்துவேலு இலங்கை வங்கியில்
உயர் உத்தியோகம் பார்த்தவர்.
இலங்கையின் முதலாவது (35 மில்லி மீட்டர்) தமிழ்ப்படமான "தோட்டக்காரி யைத் தயாரிப்பதில் உதவிய திரு வீ.எஸ். முத்துவேலுவும் திருமதி ரஞ்சனி முத்துவேலுவும்
1951ஆம் ஆண்டளவில் திம்பிரிகஸ்யாயவில் திரு வீஎஸ்.முத்துவேலுவும் அவரது மனைவி ரஞ்சனி முத்துவேலுவும் வாழ்ந்து வந்தார்கள். அவர்களது வீட்டுக்குப் பக்கத்தில் பெர்னாண்டோ என்ற இளைஞரும் வசித்து வந்தார். அந்த இளைஞர் 'வனகத்தகெல்ல' என்ற சிங்களப்படத்தை தயாரித்து
வந்தார்.
21

Page 21
தம்பிஐயா தேவதாஸ்
திரு.முத்துவேலு பல்வேறு கலைகளில் ஈடுபாடு உடையவர். சினிமாவிலும் மோகம் அதிகம். அந்த இளைஞர் படத்தை முடிக் க பண மின் றித் திண்டாடியதை அவர் அவதானித்தார். இளைஞருக்கு சிறிது பணம் கொடுத்து அந்தச் சிங்களப் படத்தை முடிக்க வழி ஏற்படுத்தினார்.
இப்படி சிங்களப் படமொன்றை தயாரிக்க உதவி செய்ததே திரு.முத்துவேலுவின் திரைப்படப் பிரவேசம் ஆகும்.
1954ஆம் ஆண்டளவில் இவர் "பிறேமலிலா என்ற நாவலை எழுதினார். அதே ஆண்டுமுதல் 'கலை ஈழம்" என்ற சஞ்சிகையை வெளியிட்டார். இச்சஞ்சிகை மூலம் இலங்கையின் கலை, கலாசார விழாச் செய்திகள், நாட்டிய நிகழ்ச்சிகள், சிங்கள, தமிழ் சினிமாச் செய்திகளையெல்லாம் வெளியிட்டார். சினிமா ஆர்வம் மிக்க சில இளைஞர்கள் இவருடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார்கள். அக் காலத் தில் தங்க வேலுவும் பி.எஸ்.கிருஷ்ணகுமாரும் ‘தோட்டக்காரி' என்ற படத்தை உருவாக்கினார் கள் . இவர் களுடன் வீ.எஸ் . முத்து வேலுவும் இணைந்து கொண் டார் . திரு.முத்துவேலுவுக்கு உதவியாக அவரது மனைவி திருமதி ரஞ்சினி முத்துவேலுவும் சேர்ந்து கொண்டார். முத்துவேலு ரஞ்சனி தம்பதிகளின் உதவியுடன்
22

பொன்விழாக் கண்ட சிங்களச் சினிமா
பி.எஸ்.கிருஷ்ணகுமார் "தோட்டக்காரி திரைப்படத்தை விரைவாக உருவாக்கினார்.
தோட்டக்காரி ஒரு தரமான இலங்கைத் தமிழ்த் திரைப்படமாக உருவாக வேண்டுமென்பதற்காக திரு கிருஷ்ணகுமார் , தங்கவேலு, முத்து வேலு போன்றோருக்கு சிறிசேன விம ல வீர மிக அதிகமாகவே உதவி செய்தார்.
சிறிசேன விமலவீர வைத் தொடர்ந்து இன்னுமொரு உள்நாட்டுக்காரருக்கும் திரைப்படத்தை இயக்க வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது. அவர் தான் பி.ஏ.டபிள்யு ஜெயமான்ன ஆவார். அவர் இயக்கிய படத்தின் பெயர் "ஹதிசி வினிச்சய’
என்பதாகும்.
இப்படத்தில் மினேர்வா நாடகக் குழுவினரில் முக்கியமானவர்களான எடி ஜெயமான, ருக்மணிதேவி போன்றோர் நடித்தனர்.
இக்குழுவினர் தயாரித்து இயக்கிய இன்னுமொரு சிங்களத் திரைப்படத்தின் பெயர் ‘சங்கவுனு பிலித்துறு' (மறைந்த விடை) என்பதாகும். 1951ஆம் ஆண்டு திரையிடப் பட்ட இப் படம் அக் காலத் தில் தமிழ்ப்படமாகவும் டப் செய்யப்பட்டது. "மாற்றாந்தாய் என்ற ஒரு பெயரும் இப்படத்துக்கு சூட்டப்பட்டதாக சில பத்திரிகைகளில் எழுதப்பட்டுள்ளது. "
23

Page 22
தம்பிஐயா தேவதாஸ்
ஆனால் இசைத் தட்டில் 'குசுமலதா என்றே எழுதப்பட்டிருக்கிறது.
ருக்மணிதேவியுடன் பாபு, லுவிஸ் ஆகியோரும் பாடியுள்ளனர். இப்படத்துக்காக இந்தியாவில் உருவான இசைத்தட்டுகள் இன்றும் இலங்கை வானொலியின் இசைத்தட்டுக் களஞ்சியத்தில் இருக்கின்றன.
இப்படம் 1951ஆம் ஆண்டு டிசம்பர் 22ஆந் திகதி இலங்கையில் திரையிடப்பட்டது. பெரும்பாலும் இந்தியாவிலேயே சிங்களப் படங்கள் தயாரிக்கப்பட்டன. இவற்றை இலங்கையிலேயே உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் இக்கலைஞர்களின் மனங்களில் உதித்தது. அப்படி முதன் முதலில் இலங்கையில் தயாரிக்கப்பட்டதுதான், “பண்டா நகரயட்ட பமினிம என்னும் சிங்களப் படமாகும்.
ரஞ்சனி ஆரியவன்ச, சிசிறகுமார என்போர் பிரதான பாத்திரங்களில் நடித்தார்கள். முதலாவது சிங்களப் பேசும் படத்தை உருவாக்கிய தமிழர் எவரோ, அவரே இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதலாவது சிங்களப்படத்தையும் உருவாக்கினார். அவர் தான் எஸ்.எம்.நாயகம். இந்தப் படத்தை இருவர் இயக்கினர். ஒருவர் ராஜாவஹாப் என்ற முஸ்லிம், மற்றவர் பாஸ்கட்ராஜ் என்ற வட இந்தியர்.
இக்காலத்தில் சிங்களப்படங்கள் இரு வகையாக விளங்கின. பி.ஏ.டபிள்யு.ஜெயமான் ன குழுவினர் மேல் நாட்டுக் கதைகளைத் தழுவி படங்களை
உருவாக்கினர்.
24

பொன்விழாக் கண்ட சிங்களச் சினிமா
சிறிசேன விமலவிர குழுவினர் உள்நாட்டுக் கதைகளை திரைப்படங்களாக உருவாக்கினர். இவ்விரு குழுக்களும் போட்டிக் குழுக்களாக அக்காலத்தில் விளங்கின.
1953ஆம் ஆண்டை சிங்களத் திரையுலகின் விஷேட ஆண்டு என்று கூறலாம். பிரபலமான மூன்று சிங்களத் திரைப்படங்கள் இந்த ஆண்டில்தான் வெளிவந்தன. அந்த மூன்று படங்களுக்கும் தமிழ் கலைஞர்களுக்கும் நெருங்கிய தொடர்பிருக்கிறது.
ua) சிங்களப் படங்களுக்கும் தமிழ்ப்படங்களுக்கும் இசையமைத்த அமரர் ஆர்.முத்துசாமி சிங்களத் திரை உலகத்தில் புகழ் பெற்று விளங்கிய தமிழ் முஸ்லிம் கலைஞர்கள் அநேகர். அவர்களில் சிலர் புகழின் உச்சிக்கே சென்றிருக்கிறார்கள்.
25

Page 23
தம்பிஐயா தேவதாஸ்
அவர்களில் ஒருவர் இசை அமைப்பாளர் ஆர்.முத்துசாமி ஆவார்.
முதலாவது சிங் களப்படமான "கடவுனு பொறொந்துவவில் உதவி இசை அமைப்பாளராக அறிமுகமானார். தொடர்ந்து பல சிங்கள தமிழ்ப் படங்களுக்கு இசை அமைத்தார். கிட்டத்தட்ட 250 படங்களுக்கு மேல் இசை அமைத்த அவருக்கு 1953ஆம் ஆண்டு வெளிவந்த "பிரேம தறங்கய’ (காதற்போட்டி) என்ற படத்துக்கு இசை அமைத்ததன் முலம் இலங்கையின் சிறந்த இசை அமைப்பாளர் என்ற பெயர் கிட்டியது. இந்தியாவில் நாகர் கோவிலில் பிறந்த இவர் இளவயதிலேயே இசைத்துறைக்குள் நுழைந்தவர். பல வாத்தியங்களையும் வாசிக்கும் தகுதி பெற்றவர். இவருக்கு இசைத்துறையில் சமமானவர்கள் இல்லை என்றே கூறலாம். சில சிங்களப்படங்களில் இவர் பாடிய பாடல்கள் புகழ் பெற்றன.
இலங்கை வானொலியில் நீண்ட காலம் தமிழ் இசைக்குழுவின் தலைவராக இருந்து பல மெல்லிசைப் பாடல்களுக்கு இசை அமைத்தவர். இலங்கையில் உருவான தமிழ்ப் படங்களின் பாடல்களில் அதிகமானவை இவரது கை வண்ணத்தில்
உருவானவையே.
26

பொன்விழாக் கண்ட சிங்களச் சினிமா
குத்துவிளக்கு, மஞ்சள் குங்குமம் போன்ற தமிழ்ப் படங்களுக்கு இசை அமைத்த்ததுமட்டுமன்றி பாடவும் செய்திருக்கிறார்.
சிங்களத் திரைப்படங்களில் பல பிரபல பாடகர்களுடன் பின்னணியும் பாடியிருக்கிறார். சிங்களத்திரையுலகில் இசைத்துறையில் இவர் ஆற்றிய பங்களிப்பு அளவிடற்கரியதாகும். 1994ஆம் ஆண்டு இறக் கும் வரை வானொலி நிலையத் தில் கடமையாற்றிக்கொண்டே சிங்களச் சினிமாவின் இசைத்துறையிலும் புகழ் பெற்று விளங்கினார்.
முதல் சிங் களப் படத்தை தயாரித்த எஸ்.எம்.நாயகம்தான் இலங்கையில் முதலாவது ஸ்ரூடியோவ்ையும் அமைத்தவர் என்ற புகழுக்கு உரியவராகிறார் . இலங்கையின் முதலாவது ஸ்ரூடியோவான கந் தானை "சுந்தர சவுண்ட் ஸ்ரூடியோ'வை எஸ்.எம்.நாயகமே அமைத்தார்.
இந்த எஸ்.எம்.நாயகத்தின் பூர்வீகம் தமிழ்நாடு ஆகும். வர்த் தகரான இவர் இலங்கை க்கும் இந்தியாவுக்கும் கலைப் பாலமாக விளங்கினார். தமிழகத்தின் சிறந்த இயக்குநர்களில் ஒருவர் ஆர்.வீ.உதயகுமார். இவரின் மனைவியின் பெயர் சுஜாதா. சுஜாதா எஸ்.எம்.நாயகம் அவர்களின் பேத்தி
என்பது குறிப்பிடத்தக்கது.
27

Page 24
go LU L-1&gu i i \gg೪ugು! I aIL
எஸ்.எம்.நாயகத்தின் ஸ்ரூடியோவில் முதன் முதலில் உருவான படம் ‘பண்டா நகரயட்ட பமினிம என்பதாகும். இது 1952ஆம் ஆண்டு திரையிடப்பட்டது.
கே.சுப்பிரமணியம் என்ற சினிமா இயக்குநரும் ஆரம்பகால தமிழக திரை உலகில் புகழ் பெற்றவர். அவர் தனது திறமைகளை சிங்களப்படங்களிலும் காட்டினார் என்பதை சிங்கள விமர்சகர்களும் ஏற்றுக் கொள்கிறார்கள். இவர் இயக்கிய முதலாவது திரைப்படம் 'கபடி ஆரக்ஷாவ' என்பதாகும்.
இவரது முழுப் பெயர் கிருஷ்ணசாமி சுப்பிரமணியம். 1904ஆம் ஆண்டு தமிழ் நாட்டில் பாபநாசம் என்ற ஊரில் பிறந்த இவர், முதன் முதலில் ஒரு மெளனப்படத்துக்கு கதை வசனம் எழுதினாராம். ‘பேயும் பெண்ணும்" என்ற பெயரையுடைய அம் மெளனப்படத்தின் இயக்குநர் தமிழ்த்திரையுலகில் பிரபலம் பெற்ற ராஜா சாண்டோ ஆவார். மீனாட்சி சினிடோன் என்ற நிறுவனத்தை உருவாக்கி 1934ஆம் ஆண்டு பவளக்கொடி’ என்ற படத்தை இயக்கினார். மிகச் சிறந்த படங்களில் ஒன்றாகப் 'பாலயோகினி பேசப்பட்டது. "தியாகபூமி" இன்னொரு பிரபலமான படமாகும். இவரது படங்களில் சாதிப் பரிர ச் சரினை போன்ற வரிட யங் களே கருப்பொருட்களாக அமைந்திருக்கும். இவரது பாதையையே சினிமாவில் தி.மு.க.வினர் பின்பற்றினர்
எனலாம்.
28

பொன்விழாக் கண்ட சிங்களச் சினிமா
இவர் உருவாக்கிய சிங்களத் திரைப்படமே 'கபடி ஆரக் ஷா வ’ இப் படத் துக் காகவே கே.சுப்பிரமணியம் இலங்கைக்கு வந்து சில காட்சிகளைப் படம் பிடித்து இப்படத்தில் இணைத்துக் கொண்டார்.
ஆரம்பகால ஒளிப்பதிவாளர் ஏ.வி.எம்.வாசகம்
இதுவே இவர் முதன் முதலில் சிங்களப்படத்தில செய்த முதற் புரட்சியாகும் . முன் றாவது சிங் களப்படத்திலேயே இவர் இப் புரட்சியைச் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும். இவரே பின்னாளில் "யுனஸ்கோ திரைப்பட தொலைக்காட்சி கமிட்டி'யின் இந்திய அரசாங்கத்
தலைவராக விளங்கியவர்.
29

Page 25
தம்பிஐயா தேவதாஸ்
தென்னிந்திய சினிமா வளர்ச்சிக்கு இவர் எத்தனை பங்களிப்பு வழங்கினாரோ, அதே போன்ற முன் முயற்சிகளை இவர் சிங்களத்திரையுலகிற்கும் வழங்கியிருக்கிறார்.
இவ்வாறு தென்னிந்தியாவில் தமிழ்ப் படங்களில் பல்வேறு புரட்சி செய்தவர்கள், சிங்களப் படங்களிலும் புரட்சி செய்ய வரவழைக்கப்பட்டார்கள். அவ்வாறான புரட்சியையும் புதுமைகளையும் புகுத்தியமைக்காகப் பாராட்டப்பட்டார்கள்.
அவர்களின் பெயர்கள் சிங்களச் சினிமா வரலாற்றில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. அவர்கள் செய்த புதுமைகளும் சாதனைகளும் மிக அதிகமாகவே இருக்கின்றன.
தமிழ் நாட்டின் எல்லா இயக்குநர்களும் சிங்களப் படத்தை இயக்கவில்லை. சினிமாத் துறையில் புகழ்பெற்ற திறமைசாலிகளே சிங்களப்படங்களை இயக்கவும் தயாரிக்கவும் செய்தார்கள்.
30

பொன்விழாக் கண்ட சிங்களச் சினிமா
3. மூன்று முதலமைச்சர்களின் படங்களில் பங்குபற்றிய இலங்கையர்
அக் காலத்தில் டபிள்யு.ஏ சில் வா என்ற நாவலாசிரியர் பல சிங்கள நாவல்களை எழுதி வந்தார். அவர் எழுதிய நாவல்களில் ஒன்றின் பெயரே 'கலே ஹந்த" (காட்டு நிலா) என்பதாகும்.
தமிழ் நாட்டில் வெற்றிப்படங்களை உருவாக்கிய மொடர்ன் தியேட்டேர்ஸ் உரிமையாளர் ரீஆர் சுந்தரம் பல சிங்களப்
படங்களையும் உருவாக்கியிருக்கிறார்.
31

Page 26
தம்பிஐயா தேவதாஸ்
இந் நாவலைத் திரைப் படமாக் கினார் பி.ஏ.டபிள்யு.ஜயமான்ன.
"பிரேம தறங்கய’ என்ற படத்தை ஏ.பி.ராஜ் நெறியாண்டார். அதே காலப்பகுதியில் சுஜாதா படத்தை நெறியாண்டவர் ரீ.ஆர்.சுந்தரமாவார். பல்வேறு பொழுது போக்கு அம்சங்களையும் சேர்த்து உருவான முதலாவது சிங் களப்படம் சுஜாதா எனலாம். கே.குணரத்தினம் உருவாக்கிய சினிமாஸ் லிமிடெட்டின் தியேட்டர்களில் ஓடிய முதற் படமும் இதுவாகும். 'சுஜாதா', 'பட்பஹேன்’ என்ற இந்திப்படத்தின் தழுவலாகும்.
சுஜாதா திரைப் படத் தை இயக் கிய ரீ.ஆர்.சுந்தரத்தை தமிழ் ரசிகள்களைப் போலவே சிங்கள ரசிகர்களும் நன்கு அறிந்திருந்தனர். இவரது முழுப் பெயர், திருவன்கோடு இராமலிங்கம் சுந்தரம் என்பதாகும். 1937இல் சேலத்தில் "மொடேர்ன் தியேட்டர்ஸ்' என்ற நிறுவனத்தை உருவாக்கு முன்னரே பட்டதாரியாக சினிமா உலகுக்குள் நுழைந்தவர்.
சினிமா உலகில் பல்வேறு சாதனைகள் நிகழ்த்திய பெருமை சுந்தரத்துக்கு உண்டு. முதலாவது மலையாளப் பேசும் படமான 'பாலன்' திரைப்படத்தை இவரே தயாரித்தார். தமிழில் முதல் வர்ணப்படமான 'அலிபாவாவும் 40 திருடர்களும்' என்ற படத்தைத் தயாரித்தவரும் இவரே.
முதலாவது மலையாள வர்ணப்படமான சுந்தரம் பாலாகோட்" என்ற படத்தைத் தயாரித்தார். இவை மட்டும் இவரது சாதனைகளல்ல.
32

பொன்விழாக் கண்ட சிங்களச் சினிமா
பல ஜாம்பவான்கள் சினிமா உலகில் தோன்ற இவரே காரணகர்த்தாவாக விளங்கினார். டங்கன், சீவி.ராமன், சேதுமாதவன், கே.ராம்நாத் போன்ற பிரபல சினிமா இயக்குநர்களும் மொடேர்ன் தியேட்டர்ஸில் இருந்து வெளியே வந்தவர்களே. மக்கள் திலகம் நடித்து மு.கருணாநிதி வசனம் எழுதிய ‘மந்திரிகுமாரி பும் சுந்தரம் உருவாக்கிய திரைப்படமே!
சிங்களப் படங்களை நெறியாண்ட முதலாவது
இலங்கைத் தமிழ் இயக்குநர் ரீசோமசேகரன்.
துப்பதாகே துக்க', 'சூறயா', 'வீர விஜய' போன்ற பிரபலமான சிங் களப் படங்களையும் டி.ஆர்.சுந்தரமே உருவாக்கினார். இவை முறையே 'ஏழை படும்பாடு', 'திருட்டுராமன்', "வீர விஜயன்' ஆகிய படங்களின் தழுவல்களே.
33

Page 27
தம்பிஐயா தேவதாஸ்
இப்பொழுது தமிழ் சினிமாவில் இரட்டை வேடம் முதல் ஒன்பது வேடம் வரை பல்வேறு வேடங்கள் வந்துவிட்டன. சிங்களப் படத்திலும் இரட்டை வேட உத்தி ஒரு படத்தில் முதன் முதலாக அறிமுகம் செய்யப்பட்டது. அதுதான் 1952இல் வெளியான 'உதும் விஷ்வாசய’ என்ற படமாகும். ருக்மணிதேவி முதன் முதலாக இரட்டை வேடத்தில் தாயாகவும் மகளாகவும் தோன்றினார்.
வட இந்தியப் பாடகர்களை தமிழ்ப் படங்களில் பாட அழைப்பது இப்பொழுது பெஷனாகிவிட்டது. ஆனால் 1955ஆம் ஆண்டிலேயே பிரபலமான இந்திப்பாடகி லதா மங்கேஷ்காரைக் கொண்டு சிங்களப்பாடல் ஒன்றைப் பாடவைத்து ஒரு படத்தைத் தயாரித்தார்கள்.
அதுதான் 'சடசுலங்" (புயற்காற்று) லதா மங்கேஷ்கார் பாடிய ஒரேயொரு சிங்களப் படம் இதுவாகும். இப்படத்துக்கு இன்னொரு விசேடமும் உண்டு. -
அதுவரை காலமும் இந்தியத் தமிழர்களே சிங் களப்படங்களை இயக்கினார்கள். ஆனால் இந்தப்படத்தை முதன் முதலாக ஒரு இலங்கைத் தமிழர் இயக்கினார். அவர்தான் ரீசோமசேகரன்.
பின்னாளில் 'சரதம்', 'அவிஷ்வாசய', 'பிறிமியெக் நிசா’, ‘சுப சரண சபசித்தே' போன்ற பிரபலமான சிங்களத் திரைப்படங்களை இலங்கையைச் சேர்ந்த
இந்த சோமசேகரனே இயக்கினார்.
34

பொன்விழாக் கண்ட சிங்களச் சினிமா
இந்தியாவில் பல்வேறு மொழிகளில் ஏ வரி .எ ம் நிறுவனம் திரைப் படங் களைத் தயாரித்திருக்கிறது. இந் நிறுவனமும் ஒரேயொரு சிங்களப்படத்தை தயாரித்திருக்கிறது. "டொக்டர்' என்ற பெயரில் பல்வேறு மொழிகளில் அந்நிறுவனம் பல படங்களைத் தயாரித்தது. அப்படிச் சிங்களத்தில் தயாரித்த படத்தின் பெயரே "தொஸ்த்தர' என்பதாகும். இப்படத்தில் பி.சுசிலாவும் ஒரு சிங்களப் பாடலைப் பாடியிருக்கிறார். சே.சங்கர் இயக்கிய இப்படம் 1956ஆம் ஆண்டு திரையிடப்பட்டது.
இயக்குநர் கே.சங்கர்
"வனசுந்தரி என்ற படத்தை சீவீராஜ் என்ற இயக்குநர் இயக்கினார்.
35

Page 28
தம்பிஐயா தேவதாஸ்
இவர்களை விட இன்னும் சில தமிழ் இயக்குநர்கள் தலா ஒவ்வொரு படங்களை இயக்கியுள்ளனர்.
டி.ஆர் கோபு, "அசோகமாலா' திரைப்படத்தை இயக்கினார். டி.எஸ்.பாபு இயக்கிய படத்தின் பெயர் 'திவ்விய பிரேமய" கே.வெம்பு, "சுரங்கனி' என்ற படத்தை இயக்கினார் . மித்திர தாஸ் என்பவர் "துப்பதாகே துக்க' என்ற படத்தை இயக்கினார். என்.எஸ்.ராஜன் 'சிரியலதா என்ற படத்தை இயக்கினார். ரீ.ஜானகிராம் இயக்கிய படத்தின் பெயர் 'சிஹினய என்பதாகும்.
ரீயோகநாதனும் கே.எஸ்.சேதுமாதவனும் தலா ஒவ்வொரு படத்தையே இயக்கியிருக்கிறார்கள். அவற்றின் பெயர்கள் முறையே "சுந்தர பிரிந்த' 'வீர விஜய' என்பனவாகும். இந்த இரண்டு இயக்குநர்களை பற்றி மட்டும் விமர்சகர்கள் வித்தியாசமாகக் குறிப்பிடுவார்கள்.
இந் தியா வரில் தயா ரா ன கடை சரிச் சிங்களப்படமான "வீர விஜய'வை நெறியாண்டவர் கே.எஸ் சேது மாதவ னா வார் . சென்  ைன பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான பட்டம் பெற்ற இவர், பரி ர பல திரைப் பட த் த யாாரிப் பாளரான ஏ.எஸ்.பிரசாத்திடம் சினிமா நுணுக்கங்களைப் பயின்றவர்.
எழுபது காலப்பகுதியில் இந்தியாவின் புதிய அலை இயக்குநர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர். இவர் ஒரு மலையாளி. ஆனாலும் தொடர்ந்து
36

பொன்விழாக் கண்ட சிங்களச் சினிமா
தமிழ்நாட்டில் வாழ்ந்தவர். பல மலையாளப் படங்களுக்காகப் பரிசுகள் வாங்கியவர். "நிஜங்கள்’ என்ற தமிழ் படத்தின் நெறியாளர்.
திடீர் வேலை நிறுத்தங்களின்போது மக்கள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றனர் என்பதை எடுத்துக் காட்டுவதே படத்தின் கதை.
சிந்தனைக்கு இப்படம் ஓர் உதாரணம் என்று சொல்லலாம். சேதுமாதவன் இயக்கிய ஒரேயொரு சிங்களப்படம் ‘வீரவிஜய' என்பதாகும். இது "வீரவிஜயன் என்ற தமிழ்ப் படத்தின் தழுவலாகும். இந்தச் சிங்களப்படமும் சிங்கள ரசிகர்கள் மத்தியில் பெரும் பாராட்டைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
கே.சங்கர் என்ற தென்னிந்திய சினிமா இயக்குநரை தமிழ் ரசிகர்கள் நன்கு அறிவார்கள். அவர் பிரபலமான பல தமிழ்ப் படங்களை இயக்கியிருக்கிறார்.
கே.சங்கரும் ஒரேயொரு சிங்களப் படத்தையே இயக்கியிருக்கிறார். “தொஸ்த்தர' என்ற அந்தப்படம் என் மனைவி என்ற தமிழ்ப்படத்தைத் தழுவியது. சிங்களபடங்களைத் தயாரித்த தமிழர்கள் மற்றும் முஸ்லிம் களில் சிற்றம் பலம் ஏ கார் டினர் , கே.குணரத்தினம், ஐபீர் ஏ.காதர், எம்.எஸ் தம்போ போன்றோர் முக்கியமானவர்கள்.
இந்திய இலங்கை திரைப்பட உலகத்துக்குப் பாலமாக விளங்கியவர் கே குணரத் தினம். பல சிங்களப்படங்களை சென்னை ஸ்ரூடியோக்களில் உருவாக்கியவர். அந்த அனுபவங்களின் விளைவாக இலங்கையிலும் பிரமாண்டமான ஸ்ரூடியோவை நிர்மாணித்தார்.
37

Page 29
தம்பிஐயா தேவதாஸ்
அதுதான் 1962இல் ஹெந்தளையில் உருவான "விஜயா ஸ்ரூடியோ'வாகும்.
நீரோடை ஒன்றின் அருகில் ஐந்து ஏக்கர் நிலப்பிரப்பில் இந்த ஸ்ரூடியோ அமைந்திருந்தது. படமாக்கப்பட்ட காட்சிகளை கழுவி பிரதி எடுத்துப் பார்க்க வசதியாக குளிர்சாதனம் பொருத்தப்பட்ட 6τ 19- பண் ணும் தியேட் டரும் இங்கு அமைக்கப்பட்டிருந்தது.
உலகப் பிரசித்தி பெற்ற ஆர்.சி.ஏ.வெஸ்ட் றெக் ஆகிய இரண்டு முறைகளும் கொண்ட ஒலிப்பதிவு இயந்திரங்கள் விஜயாவில் அமைந்திருந்தன. சுமார் நூறு பேருக்கு மேற்பட்ட கலைஞர்கள் இந்த ஸ்ரூடியோவில் கடமையாற்றினார்கள்.
"சினிமாஸ் லிமிட்டெட்' என்ற நிறுவனத்தை உருவாக்கிய கே.குணரத்தினம் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பல திரை அரங்குகளை உருவாக்கினார். திருகே குணரத்தினம் சினிமாத் தொழிலில் மட்டுமன்றி பல்வேறு தொழில்களிலும் ஈடுபட்டு வெற்றி பெற்றார். 1983ஆம் ஆண்டு உருவான இனக் கலவரம். விஜயா ஸ்ரூடியோவையும் சினிமாஸ் லிமிட்டெட்டின் பல தியேட்டர்களையும் மட்டும் அழிக்கவில்லை. சிங்கள சினிமா உலகின் பாரம்பரிய பெருமையையே அழித்துவிட்டது எனலாம். அப்பொழுது விஜயா ஸ்ரூடியோவில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த பல பழைய, புதிய அரிய சிங்களத் திரைப்படங்களும், தீ அரக்கனுக்கு இரையாகின. அதனால் தான் ‘கடவுனு பொறந்துவ போன்ற ஆரம்ப கால திரைப்படத்தின்
38

பொன்விழாக் கண்ட சிங்களச் சினிமா
ஒரு பிரதிகூட இப்பொழுது இல்லை. சினிமாத் தொழிலில் உள்ள ஆர்வம் காரணமாக ஆரம்பத்தில் இவர் ரூரிங் தியேட்டரை ஆரம்பித்தாராம். ரூரிங் தியேட்டர் என்பது தற்காலிக கூடாரம் அடித்துப் படம் காட்டுவதாகும். சினிமாக் கூடாரத்தை எடுத்துக் கொண்டு நகரங்கள் தோறும் சென்று காட்டினாராம். பின்பு அந்நகரங்கள் எங்கும் இவரது நிரந்தரத் தியேட்டர்கள் உருவாகின.
பலசிங்களப் படங்களைத் தயாரித்ததுடன் ஹெந்தளை "விஜயா ஸ்ரூடியோ’ "சினிமாஸ் லிமிட்டெட் ஆகிய நிறுவனங்கள்ை உருவாக்கிய அமரர் கே.குணரெத்தினம்.
திரைப்படத் தொழிலின் முன்னோடியாகத் திகழ்ந்த அமரர் கே.குணரத்தினம். பிளாஸ்டிக் பொருட்கள், குமிழ்முனைப் பேனா, புகைப்படச் சுருள். போன்ற
39

Page 30
தம்பிஐயா தேவதாஸ்
பல பொருட்களை இலங்கையில் உற்பத்தி செய்த ஆரம்பகர்த்தாவாக விளங்கினார். கே.குணரத்தினம் பல சிங்கள வெற்றிப்படங்களைத் தயாரித்தவர்.
முதன் முதலில் டி. ஆர் . சுந் தரத் தின் டைரக்ஷனில் 'சுஜாதா' என்ற படத்தைத் தயாரித்தார். அடுத்து வரத காகேத", "லதறு பிலிருவ', கே.சங்கரின் நெறியாள்கையில் ‘தொஸ்த்தர', 'துப்பதாகே துக்க', சிவானந்தன் இயக்கிய, 'ஒப துட்டுதா’ எம்.மஸ்த்தான் இயக்கிய ‘சூர செளரயா', 'அட்டவெனி புதுமய' "ஆத்மபூஜா லெனின் மொறாயஸ் இயக்கிய 'ஹொந்தாய் நறக்காய்' போன்ற பல வெற்றிப் படங்களைத் தயாரித்தார்.
இவரது மகன் ஜி.தியாகராஜாவும் சில சிங்களப் படங்களைத் தயாரித்திருக்கிறார். கே.குணரத்தினம் மறைந்துவிட்டார். ஆனால் அவர் ஆரம்பித்துவைத்த சினிமா நிறுவனம் வளர்ந்து வருகிறது.
பிரபலமான தென்னிந்தியத் தமிழ் திரைப்பட இயக்குநர் ஒருவர் இலங்கையில் பிறந்தவர்.
அவரது முழுப் பெயர் அருள் சூசை அந்தோனிசாமி என்பதாகும். ஏ.எஸ்.ஏ.சாமி என்ற அந்த இயக்குநரின் முழுப்பெயர்தான் அது.
அந்தக் காலத்தில் ஒரு நாள் திருச்சி வானொலி நிலையத்திலிருந்து பில்ஹணன் என்ற நாடகம் ஒலிபரப்பாகியது. இந்நாடகத்தின் சிறப்புக் காரணமாக டி.கே.எஸ்.குழுவினர் அதை மேடை நாடகமாக்கி நடிக்கத் தொடங்கினர். இந்நாடகத்தை எழுதியவர்தான் ஏ.எஸ்.ஏ.சாமி.
40

பொன்விழாக் கண்ட சிங்களச் சினிமா
இதுதான் இவரது ஆரம்பக் கலை முயற்சி. இவர் ஜுப்பிட்டர் பிக்ஷர்ஸ் கதைப்பிரிவிலும் பின்னர் டைரக்ஷன் துறையிலும் ஈடுபட்டார். ஜுப்பிட்டர் பிக்ஷர்ஸ்சின் லைலாமஜ னு, ராஜகுமாரி ஆகிய படங்களை ஏ.எஸ்.ஏ.சாமி இயக்கினார். அவை பெருவெற்றி பெற்றன.
தொடர்ந்து ஜூபிடரின் மர்மயோகி, துளிவிஷம், தங்கப்பதுமை, அரசிளங்குமரி, கற்புக்கரசி போன்ற வெற்றிப்படங்களை இயக்கினார்.
தமிழ் நாட்டின் மூன்று முதலமைச்சர்களின் படங்களில் கடமையாற்றிய இலங்கையர் ஏ.எஸ்.ஏ.சாமி.
அவர் இயக்கிய பல படங்களுக்கு அவரே வசனம் எழுதினார். மர்மயோகி, துளிவிஷம் படங்களில் அவரது வசனங்கள் தனிச்சிறப்புப் பெற்று விளங்கின.
ரசிகர்களால் பாராட்டிப் பேசப்பட்டன.
4.

Page 31
தம்பிஐயா தேவதாஸ்
இப்படிப் புகழ் பெற்ற சாமிக்கு, தான் பிறந்த இலங்கை நாட்டின் சினிமாத்துறையிலும் ஈடுபட ஆர்வம் இருக்காதா?
‘டிங்கிறி மெனிக்கே" என்ற சிங்களப்படத்தை நெறியாண்டவர் ஏ.எஸ்.ஏ.சாமி ஆவார். இவர் கொழும்பில் பிறந்தவர். கொட்டாஞ்சேனை சென் பெனடிக்ற் கல்லூரியில் பயின்றவர். கொழும்புப் பல்கலைக்கழகத்தில் படித்துப் பி.ஏ பட்டம் பெற்றவர். பின்பு சென்னைப் பல் கலைக் கழகத்திலும் விரிவுரையாளராக கடமையாற்றியவர்.
வானொலி நாடக எழுத்தாளராகவே இவர் முதலில் கலை உலகில் அறிமுகமானார். பின்புதான் திரைக்கதை வசனம் எழுதினார். அதன் பின்பு டைரக்ஷன் துறையில் பிரவேசித்தார். இவர் இயக்கிய முதலாவது தமிழ்ப்படத்துக்கு சாதனைகள் பலவற்றை ஏற்படுத்திய சிறப்புண்டு. இவர் இயக்கிய ராஜகுமாரி 1947இல் திரைக்கு வந்தது. தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.கருணாநிதி கதைவசனம் எழுத காலஞ்சென்ற எம்.ஜி.ராமச்சந்திரன் கதாநாயகனாக நடித்த முதற்படம் இது.
அறிஞர் அண் ணா த் துரை எழுதிய புரட்சிகரமான திரைப் படமொன் றின் பெயர் வேலைக்காரி. ஏ.எஸ்.ஏ.சாமி இயக்கிய இரண்டாவது படம் வேலைக்காரி ஆகும்.
தமிழ்நாட்டின் மூன்று முதலமைச்சர்களின் படங்களை இயக்கியவர் இந்த ஏ.எஸ்.ஏ.சாமி.
42

பொன்விழாக் கண்ட சிங்களச் சினிமா
4.எம்.மஸ்த்தானின் சினிமாப்பிரவேசம்
சிங் களப்படங்களை உருவாக்கியவர்களில் இன்னுமொரு முஸ்லிம் கலைஞர் முக்கிய இடத்தைப் பெறுகிறார்.
பல சிங்களப் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்ததுடன் சில படங்களை நெறியாண்ட மொஹமட் மஸ்த்தான். இந்தியரான இவர் சிங்களச் சினிமாவுக்கு செய்த சேவை காரணமாக கெளரவப்பிரஜை அந்தஸ்து வழங்கப்பட்டு இலங்கையிலே வாழ்ந்தவர். அவர் தான் சின்ரிமா ஜாம்பவான் மொஹம்மட் மஸ்த்தான்.
இவர் ஆரம்பத்தில் தென்னிந்தியப் படங்கள் பலவற்றுக்கு ஒளிப்பதிவாளராக விளங்கியவர்.
43

Page 32
தம்பிஐயா தேவதாஸ்
பின்பு பல சிங்களப் படங்களுக்கு ஒளிப்பதிவாளராக கடமையாற்றி பின்னாளில் இலங்கையில் உருவான பல ஒளிப்பதிவாளர்களுக்கு குருவாகவும் விளங்கினார். இந்தியாவில் பிறந்த மஸ்த்தான் இலங்கையில் நாவலப்பிட்டியில் வாழ்ந்தவர். "அசோகமாலா" சிங்களப்படத்துடன் இவரது சிங்களப்படத் தொடர்பு ஆரம்பமா கியது. இப் படத் திற்கு இவரே ஒளிப்பதிவாளராக விளங்கினார். ரீ.ஆர் சுந்தரம் இயக்கிய 'சுஜாதா' படத்துக்கும் இவரே ஒளிப்பதிவாளர். அப்பொழுது இவரது படப்பிடிப்புகள் பலராலும் பாராட்டப்பட்டன.
மொஹமட் மஸ்த்தான் முதலாவது இயக்கிய சிங்களப்படத்தின் பெயர் “சுகுமலி' என்பதாகும். இது 1957ஆம் ஆண்டு திரைக்கு வந்தது. இலங்கைத் தமிழரான றொபின் தம்புவே இதன் தயாரிப்பாளர். 'அதட்ட வெடிய ஹெட்ட ஹொந்தாய்', "உடரட்ட மெனிக்கே’, ’அல்லப்பு கெதர' "ஆத்மபூஜா', ‘தீவர யோ' என்பன மஸ்த்தானால் தயாரிக்கப்பட்ட எட்டுச் சிங்களப்படங்களாகும்.
அக் காலத்தில் ஸ்ரூடியோ வுக்குள்ளேயே படப்பிடிப்புகள் நடத்தப்படும். ஆனால் 'தீவர யோ" படத்தை உருவாக்க மஸ்த்தான் நடுக்கடலுக்கே சென்று படப் பிடிப்பை நடத்தினார் . துணிச்சல் மிக்க காட்சிகளைப் படத்தில் சேர்த்தார்.
இன்றுவரை இலங்கை சினிமா உலகத்தில் கடமையாற்றும் கலைஞர்களில் பலர் மஸ்த்தானை குருவாகக் கொண்டு உருவாகியவர்களே.
44

பொன்விழாக் கண்ட சிங்களச் சினிமா
மஸ்த்தான் உருவாக்கிய பாணியே தொடர்ந்து வருகிறது என்பதை விமர்சகர் கள் ஏற்றுக் கொள் வார் கள் சரிங் களச் சரி னரி மா வரில் ஒளிப்பதிவுத் துறையில் மஸ்த் தான் மன்னனாக விளங்கினார். சினிமாஸ் குணரத்தினம் தயாரித்த பெரும்பாலான படங்களுக்கு எம்.மஸ்த் தானே
இயக்குநர்.
சிங்கள மொழியில் கிராமியப் படங்களை ஆரம்பித்து வைத்த எல்.எஸ். ராமச்சந்திரன்.
1957ஆம் ஆண்டளவில் எஸ்.எம்.எஸ்.நாயுடு என்ற இயக்குநர் இந்தியாவில் சினிமாத்துறையில் ஒரு புரட்சி செய்தார். ‘மலைக்கள்ளன்' என்ற படத்தை
தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம்
45

Page 33
தம்பிஐயா தேவதாஸ்
ஆகிய ஐந்து மொழிகளில் உருவாக்கினார். அப்படத்தை ஆறாவது மொழியாகிய, சிங்களத்திலும் உருவாக்கி ‘சூரசேன' என்று அப்படத்திற்கு பெயர் சூட்டினார். இச் சிங் களப் படம் , 1957 டிசம் பாரில் திரையிடப் பட் டது . ‘மலைக் கள் ளன்" திரைப்படத்தைப்போலவே புகழ் பெற்றது. இந்தியர் ஒருவர் தயாரித்த முதலாவது சிங்களப் படமும் இதுவாகும்.
ஆரம்பகாலச் சிங்களச் சினிமா உலகத்தைப் பொறுத்தவரை ஏ.எஸ்.ஏ.சாமி, எம்.மஸ்த்தான், எஸ்.எம்.எஸ் நாயுடு ஆகிய முன்று கலைஞர்களும் புகழ்பெற்று விளங்கினர். இவர்களினால் சிங்களத் திரை உலகம் புதிய பாணிகளைக் கண்டறிய முடிந்தது. இவர்களை வழிகாட்டிகளாகக் கொண்டு புதிய புதிய சிங்களப் படங்களைத் தகுதியான முறையில் தயாரிக்க முடிந்தது.
இவ்வாறு சிங்களப் படங்களை உருவாக்கிய பல தமிழ், முஸ்லிம் கலைஞர்கள் இருந்தார்கள். அவர்களில் சிலரின் பெயர்கள் சிறப்பித்துக் கூறப் படுகின்றன . சிறப் பித்துக் கூறப்படும் இயக்குநர்களில் எல்.எஸ்.இராமச்சந்திரன் என்ற
பெயரும் ஒன்று. சிங்களத் திரைப்பட இயக்குநர்களில்
46

பொன்விழாக் கண்ட சிங்களச் சினிமா
எல்.எஸ்.இராமச்சந்திரன் ஓரளவாவது அதிஷ்டமுள்ள இயக்குநர் என்று பேசப்படுகிறார். அதிகமாகவே
செய்தார் என்றும் கூறப்படுகிறது.
இயக்குநர் ஜே.செல்வரெத்தினம் சிங்களப் படமொன்றின் ஆரம்ப விழாவில் கமராவை முடுக்கி ஆரம்பித்து வைக்கிறார். ஒளிப்பதிவாளர் வி.வாமதேவன் ஒளிப்பதிவு
செய்ய தயாராக இருக்கிறார்.
47

Page 34
தம்பிஐயா தேவதாஸ்
சிலோன் தியேட்டர்ஸ் நிறுவனம் இலங்கை சினிமாத்தொழிலில் புகழ் பெற்றபல தியேட்டர்களை உருவாக்கியது. திரைப்படங்களை இறக்குமதி செய்தது. பல சிறந்த சிங்களப் படங்களைத் தயாரித்தது. சுருக்கமாக சொல்வதானால் சினிமாத்தொழிலில் கொடி கட்டிப் பறந்தது எனலாம். இவ்வாறு இந்நிறுவனம் திரை உலகத்தில் சிறந்து விளங்க சேர்.சிற்றம்பலம்.ஏ.கார்டினரின் தளரா முயற்சியம் திட்டமிட்டுச் செயலாற்றும் பாங்குமே காரணம். அதனால் தான் சேர்.சிற்றம்பலம் ஏ.கார்டினரை அனைவரும் இலங்கைச் சினிமாத்தொழிலின் மன்னன் என்று அழைக்கிறார்கள்.
எல்.எஸ்.ராமச்சந்திரன் மற்றவர்களைவிட அதிகமான சிங்களப்படங்களை இயக்கியிருக்கிறார். இவர் இயக் கிய படங்களின் எண் ணிக்கை பதினொன்றாகும்.
இவர் இயக்கிய படங்களில் 'குருலுபெத்த" "சிகுறு தருவ’ போன்ற இரண்டு படங்களும் முக்கிய இடத்தை வகிக்கின்றன. வானொலி நாடகமொன்று முதன் முதலாக இலங்கைத் திரைப்படமாக உருவாகியது ‘குருலு பெத் த’ திரைப்படத்தின் மூலமாகும் . இவ் விரு படங்களும் பலத் த விமர்சனங்களுக்கு உள்ளாகின.
மற்றய இயக்குநர்களின் பாணிக்கும் இவரது பாணிக்கும் இடையில் பல வித்தியாசங்கள் காணப்பட்டன. இவரது படங்களில் நாடகப்பாணி அதிகம். ஆனால் கதையை நகர்த்திச் செல்லும் பாணி
48

பொன்விழாக் கண்ட சிங்களச் சினிமா
சிறப்பாக இருந்தது. இதனால் இவர் விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றார். இதனாலேயே இவரால் மற்றவர்களை விட அதிக சிங்களப் படங்களை இயக்க முடிந்தது. இவர் தெரிவு செய்யும் கதைகள் கிராம வாழ்க்கை பற்றியதாக இருந்தன.
இந்தியத் தமிழரான எல்.எஸ்.ராமச்சந்திரன் அதிக தமிழ்ப்படங்களை இயக்கவில்லை. ஆரம்ப கால திரைப்படமான “போஜன் உலகம்' என்ற தமிழ்ப்படத்தை மட்டுமே இயக்கியிருக்கிறார். நீண்ட நாட்களாக இலங்கையில் பல ஸ்ரூடியோக்களில் எடிட்டராகப் பணியாற்றியிருக்கிறார். இந்த நீண்டகால அனுபவத்தைக் கொண்டு பல சிங்களப் படங்களை இயக்கினார் எனலாம்.
இவர் இயக்கிய "தெவியன்கே றட்ட' என்ற படம் முதன் முதலாக சிறுகதையொன்றை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது. எஸ்.எம்.நாயகம் தயாரித்த 'நலங்கனா’ என்ற படத்தையும் இவரே இயக்கினார்.
எல்.எஸ்.ராமச்சந்திரனுக்கும் ஏனைய தமிழ் இயக்குநர்களுக்கும் இடையே ஒரு விடயத்தில் பெரும் வேறுபாடு காணப்பட்டது. ஏற்கனவே தமிழ்ப் படமாக அல்லது இந் திப் படமாக வந்த கதையை
சிங் களப்படமாக்குவதே பெரும்பாலான தமிழ்
49

Page 35
தம்பிஐயா தேவதாஸ்
இயக்குநர்களின் வேலையாக இருந்தது. ஆனால் எல்.எஸ்.ராமச்சந்திரன் அவ்வாறான தமிழ்ப்படங்களை
சிங்களப் படமாக்கவில்லை.
பொதுவாக தனித் துவ மான சிங்களப்படங்களையே உருவாக்கினார். இதனாலேயே இவரது புகழ் சினிமா விமர்சகர்கள் மத்தியில் சிலாகித்துப் பேசப்பட்டது. அதுவரை வந்த நகர வாழ்க்கை சார்ந்த திரைப்படங்களை விடுத்து கிராமிய வாழ்க்கை சம்பந்தப்பட்ட திரைப்படங்களை இவர் உருவாக்கினார். சிங்கள ரசிகர்கள் மத்தியில் இந்த கிராமக் கதைகள் நல்ல வரவேற்பைப் பெற்றன.
சிங்களத் திரையுலகில் புகழ்பெற்று விளங்கிய இன்னுமொரு இயக்குநர் ஏ.எஸ்.நாகராஜன் ஆவார். “மாத்தலன்', 'புதும லேலி', 'புருஷரத்னய போன்ற படங்களை இவர் இயக்கினார். 'மாத்தலன்'மங்கம்மா சபதம்' என்ற தமிழ்ப் படத்தைத் தழுவி எடுக்கப்பட்டது. "புரு ஷரத்னய முதன்முதலாக ஒரு பெண்ணால் தயாரிக்கப்பட்டது. அப்பெண்ணின் பெயர் டி.ஆர்.எஸ். அபேயநாயக்க என்பதாகும்.
ஏ.எஸ் நாகராஜன் இலங்கைப் படங்களை இயக்குமுன் பல தென்னிந்தியத் தமிழ்ப்படங்களுக்கு கதை வசனம் எழுதினார். சிலவற்றை இயக்கினார். ‘பாசவலை, "கங்கா கெளரி போன்ற தமிழ்ப்படங்களை இவர் இயக்கினார்.
சிங்களப் படங்களை இயக்கிய இன்னுமொருவர்
பி.நீலகண்டனாவார். இவர் பத்திரிகையாசிரியராக
50

பொன்விழாக் கண்ட சிங்களச் சினிமா
தன் வாழ்க்கையை ஆரம்பித்தவர். திரைப்படம் சம்பந்தமாக பல்வேறு புத்தகங்களை எழுதியவர். ஆரம்பத்தில் ஏ.வி.எம் நிறுவனத்தில் உதவி நெறியாளராக நீண்டகாலம் பணியாற்றியவர். சிறந்த கதை வசன கர்த்தாவும் ஆவார். ‘ஓர் இரவு' என்ற
இந்தியாவில் தயாரான சிங்களப் படங்களில் இலங்கைக் கட்சிகளை புகுத்திய பிரபல இயக்குநர் கே.சுப்பிரமணியம். படத்தை முதன் முதலில் இயக்கினார். எம்.ஜி.ஆரின் புகழ்பெற்ற படங்களை இயக்கியவர். 'திருடாதே", நல்லவன் வாழ்வான்', "எதையும் தாங்கும் இதயம்", ‘கொடுத்து வைத்தவள்’ போன்ற படங்கள் இவர் இயக்கிய படங்களாகும். கன்னட மொழியில் இவர் இயக்கிய ‘முதல் கேடி" என்ற படம் பிரபலமான்து. இவர் இரண்டே இரண்டு சிங்களப் படங்களை
51

Page 36
தம்பிஐயா. தேவதாஸ்
மட்டும் இயக்கியிருக்கிறார். ஆனால் அந்த இரண்டு படங்களும் இன்றுவரை சிங்கள ரசிகர்களின் மனதில் நிலைத்து நிற்கின்றன.
தென்னிந்தியாவில் 'ப' வரிசைப்படங்களை உருவாக்கியவர் ஏ.பீம்சிங். அதேபோல இங்கு "சு" வரிசையில் சிங்களப் படங்களை உருவாக்கி வந்தவர் ஜாபீர் ஏ காதர். "சுனிதா', 'சுஜாகே ரஹச போன்ற
a- . சு" வரிசைப்படங்களை காதர், பீநீலகண்டனைக்
கொண்டே இயக்கினார்.
"சுனிதா', 'வாழ்விலே ஒரு நாள்' என்ற தமிழ்த் திரைப் படத்தை தழுவியது. 'சுஜாகே ரஹச", 'தாசி என்ற தமிழ்த்திரைப்படத்தைத் தழுவியது. இவை இரண்டும் தமிழ் படங்களைத் தழுவி எடுத்தாலும் அவை சிங்கள ரசிகர்களின் மனதைக் கவர்ந்தன என்பதில் வியப்பில்லை.
ஏ.வி.ராஜ் என்ற தமிழ் இயக்குநரும் அதிகமான சிங்களத் திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். அவற்றில் முதலாவது படம் ‘பண்டா நகரயட பமினிம' என்ற படமாகும். இப்படம் இலங்கையிலுள்ள ஸ்ரூடியோவில் உருவான முதற்படமாகும். இவர் இயக்கிய இன்னுமொரு படம் "பெறக்கதோறு பேனா' என்பதாகும். இப்படத்திலேயே முதன் முதலாக இந்தியாவில் உள்ள பெளத்த புனித தலங்களைக் கொண்ட காட்சிகள் சேர்க்கப்பட்டன.
இவர் இயக்கிய 'அகங்கார ஸ்திரிய' என்ற
... 6 6 9 a- a படம் "பராசக்தி", "வேலைக்காரன்’ போன்ற படங்களின்
52

பொன்விழாக் கண்ட சிங்களச் சினிமா
தழுவலாகும். இதை எஸ்.எம்.நாயகம் தயாரித்தார்.
“தேவதாஸ்' என்ற படம் அக்காலத்தில் பல
மொழிகளில் தயாரிக்கப்பட்டது. இப்படத்தையும்
சிங்களத்தில் உருவாக்கினார், ஏ.பி.ராஜ்.
"சு" வரியில் ஜனரஞ்சகமான பல சிங்களப் படங்களைத் தயாரித்த ஜபீர்.ஏ.காதர்.
இப்படத்தின் பெயர் 'ரம்யலதா என்பதாகும். இப்படத்தையும் எஸ்.எம் நாயகமே தயாரித்தார். ரி.ஜானகிராம் 'சிஹினய (கனவு) என்ற படத்தை இயக்கினார். இது "வென்றேட்டா' என்ற ஆங்கிலப் படத்தைத் தழுவியது. ரீயோகநாதன் இயக்கிய படத்தின் பெயர் "சுந்தர பிரிந்த' (அழகிய மனைவி) என்பதாகும்
53

Page 37
தம்பிஐயா தேவதாஸ்
இவ்வாறு பார்க்கும்போது இந்த இயக்குநர்களில் ஒருவரைத் தவிர மற்றவர்கள் அனைவருமே முன்னணி இயக்குநர்கள். இவர்களில் எல்.எஸ்.ராமச்சந்திரனையும் எம்.மஸ்த்தானையும் தவிர மற்றவர்கள் சிங்களம் பேசிய தமிழ்ப்படங்களையே தயாரித்தார்கள் என்று விமர்சகர்கள் சொல்லுவர். அதனால்தான் "இதுவரை 14 மொழிகளில் பேசிய இந்திய கலாசாரம் இனிமேல் 15வது மொழியாக சிங் களத்திலும் பேசத் தொடங் கிவிட்டது என் று மு த லா வது சிங்களப்படத்தைப் பார்த்து செனவிரத்ன என்ற விமர்சகர் குறிப்பிட்டாராம்.
இங்கு இன்னுமொரு விசேடமும் உண்டு. அது காலவரை சிங்களப்படம் தயாரித்தவர்களில் இரு வரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் இலங்கையர்களே.
‘சூரசேன' என்ற படத்தை தயாரித்த ஏ.எஸ்.எம்.நாயுடு, ‘தொஸ்த்தர" என்ற படத்தை தயாரித்த ஏ.வி.மெய்யப்பச் செட்டியார் ஆகிய இரு வரையும் தவிர மற்றவர்கள் அனைவரும் இலங்கையர்களே.
இந்தத் தயாரிப்பாளர்களுக்குப் பணம் பண்ணும் ஆர்வம் இருந்ததே தவிர இலங்கைக் கலாச்சாரம், பண்பாடு என்ற ஒன்றின் மீதும் ஆர்வமும் அக்கறையும் இருக்கவில்லை. அதனால்தான் நெடுங்காலமாகச் சிங்களப் படங்கள் தென்னிந்தியச் சாயலில் வந்து
கொண்டிருந்தன எனலாம்.
54

பொன்விழாக் கண்ட சிங்களச் சினிமா
இந்நிலையில் இருந்து மாற்றம் பெற முயற்சிகள் எடுக்கப்பட்டன. அக்காலத்தில் ஏற்பட்ட அரசியல் விழிப்புணர்ச்சி இதற்குப் பின்புலமாக இருந்தது.
பல வெற்றிச் சிங்களப் படங்களை தயாரித்து நெறியாண்ட றொபின் தம்பு
1956 ஆம் ஆண் டு திரு.எஸ் . டபிள் யு. ஆர்.டி.பண்டாரநாயக்க ஆட்சியில் இருந்தபோது கலை காலாச்சாரத் துறைகளில் ஒரு புரட்சி ஏற்பட்டது. சிங்களப்படங்கள் இலங்கையிலேயே தயாரிக்கப்பட வேண் டும் . வெளிநாட்டுப் படச் சா ய லில் சிங்களப்படங்கள் உருவாக்கக் கூடாது என்ற சட்டம் அமுலுக்கு வந்தது.
55

Page 38
தம்பிஐயா தேவதாஸ்
அதனால் தென்னிந்திய இயக்குநர்களின் இடங்களுக்கு அவர்களுடன் சேர்ந்து பணியாற்றிய இலங்கையர் வரத் தொடங்கினர்.
ரீசோ ம சேகர ன் , றொபரின் தம் பு, எம்.எஸ்.ஆனந்தன், கே.வெண்கட், ஜே.செல்வரத்தினம், எஸ்.வி.சந்திரன், எஸ்.ராமநாதன் லெனின், யாசீன், ஈ.ரத்தினம், சுண்டிக்குளி சோமசேகரன், சுபையிர் மகீன் , டபிள்யு.எம்.எஸ் தம்பு, ரி. அர்ஜுனா, அன்டன் கிரகரி, டி மரியதாசன், எம்.ஏ. கபூர் , ஜே.ஜே.யோகராஜா எம்.வீ.பாலன், எஸ்.தேவேந்திரன், சந்திரன் ரத்தினம், எஸ்.சிவானந்தன், வீ.சிவதாசன், வீ.வாமதேவன் என்று பல இலங்கையர்கள், பட இயக்கத்துக்கும் தயாரிபபு முயற்சிகளுக்கும வர தீ தொடங் கினர் . அதன் பரின் ப தொழில் நுட் பப் பகுதியிலும் கடமை யாற் றத் தொடங்கினர்.
இவர்களில் ரீசோமசேகரன் விசேடமாக குறிப்பிடத்தக்கவர். தென்னிந்திய இயக்குநர்களின் ஆக்கிரமிப்பு இருந்தபோதே தனியாக படங்களை இயக்கத் தொடங்கியவர் ஆரம்பத்தில் பல்வேறு இயக்குநர்களின் கீழ் கடமையாற்றினார். அதன் பின்பே தனியாகப் படங்களை இயக்கத் தொடங்கினார். ரீசோமசேகரன் முதன் முதலில் நெறியாண்ட படத்தின் பெயர் 'சடசுலங்’ (புயற் காற்று) என்பதாகும். இப்படத்தைத் தயாரித்தவரும் இவரே. "பிலிம் சிலோன்' என்ற திரைப்பட நிறுவனத்தை உருவாக்கித் தயாரித்தார்.
56

பொன்விழாக் கண்ட சிங்களச் சினிமா
இவர் இயக்கிய இன்னுமொரு படத்தின் பெயர் 'சரதம்' என்பதாகும். இப்படத்தையும் "பிலிம் சிலோன்' நிறுவனத்தின் சார்பில் அவரே தயாரித்தார்; 'அவிஸ்வாசய” “பிறிமியெக் நிசா’, ‘சுபசரண செப சித்தே' போன்ற படங்களை இயக்கிய முதலாவது இலங்கைத் தமிழர் இவர். 1956ஆம் ஆண்டு வெளிவந்த படமே வயது வந்தவர்களுக்கு மட்டும் என்ற அறிவித்தலுடன் வந்த முதலாவது சிங்களப் படமாகும். சாரதா என்ற தமிழ்ப்படத்தின் தழுவல் அது. இந்தப்படத்தையும் இவரே தயாரித்தார்.
தனது முதல் படத்தில் நடித்தவர்களையே தான் தயாரித்த ஏனைய படங்களிலும் நடிக்கச் செய்யும் குணத்தை இவர் கொண்டிருந்தார். பிறேம் ஜயந்த் புளோரிடா ஜோடியே இவரின் பல படங்களில் பிரதான பாத்திரங்களில் தோன்றியது.
ஏழு சிங் களப் படங்களைத் தயாரித்து நெறியாண்ட ரீசோமசேகரன் 1968ஆம் ஆண்டில் d5 IGOLDITGOTIT.
இவரைப் போன்றே அதிக சிங் களப் படங்களைத் தயாரித்து நெறியாண்டவர் றொபின் தம்பு ஆவார்.
இவர் படங்களைத் தயாரித்து நெறியாண்டது மட்டுமல்லாது தனக்கென்று ஒரு ஸ்ரூடியோவையே அமைத் துக் கொண் டார் . அது தான் வெல்லம்பிட்டியிலிருந்த ஆர்.ரீ.ஸ்ரூடியோ'வாகும்.
இவர் தயாரித்து நெறியாண்ட முதல் படத்தின் பெயர் "சேபாலி' என்பதாகும். இப்படம் 1958ஆம்
57

Page 39
தம்பிஐயா தேவதாஸ்
ஆண்டு திரையிடப்பட்டது.
"சிறிமலி’, ‘சுவினிதலாலணி', 'கலலித சோபனி", "சனசிலிசுவய','பிக்பொக்கட்', 'அதமெஹமய்', 'சுறேகா", 'சுறதுரியோ’ என்று பல்வேறு சிங்களப் படங்களைத் தயாரித்து நெறியாண்டவர். «).
இவரது தந்தையார் டபிள்யு.எம்.எஸ் தம்பு சிங்களப்படங்களை மட்டுமின்றி தென்னிந்தியாவிலேயே பல தமிழ்படங்களைத் தயாரித்தவர்.
‘பிரபாவதி’, ‘தெய்வநீதி’, ‘கலாவதி’, ‘நம்ம குழந்தை', 'வைர மாலை" என்பவை இவர் தயாரித்த தமிழ்ப்படங்களில் சிலவாகும்.
“செமியா பிரிந்தகே தெவியாய' என்பது இவர் தயாரித்த முதலாவது சிங்களப் படம். 'நெஞ்சில் ஓர் ஆலயம் தமிழ்ப்படத்தின் தழுவல் இது. 1964ஆம் ஆண்டு திரையிடப்பட்டது.
'சத்துடு கந்துலு" "லந்தக மஹிம", 'லயடலய' தெவியன்கே தீந்துவ' போன்ற சிங்களப் படங்கள் இவர் தயாாரித்து நெறியாண் டவை களில் பிரபலமானவை.
சிங்களச் சினிமாவுலகில் மிக அதிகமாகவே பங்களிப்புச் செய்த, இன்னுமொரு இலங்கைத் தமிழ் இயக்குநர் எஸ்.ராமநாதன் ஆவார்.
1960ஆம் ஆண்டளவில் திரை உலகுக்கு வந்த இவர் ஆரம்பத்தில் உதவி இயக்குநராகவே பல சிங்களப் படங்களில் கடமையாற்றினார். தனியே இயக்குநராக பரிணமிப்பதற்கு நான்கு ஆண்டுகள் சென்றன. 1964ஆம் ஆண்டிலேயே இவர் இயக்கிய முதலாவது சிங்களப்படமான "சசறக ஹட்டி’ திரைக்கு
58

பொன்விழாக் கண்ட சிங்களச் சினிமா
வந்தது. அக்காலத்தில் பலர் மனங்களைக் கவர்ந்த "எதிர் பாராதது" என்ற தமிழ் படத்தைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படம், சிங்கள ரசிகர்களையும் பெரிதும் கவர்ந்தது. பட்றிக் றொட்றிக்கோ என்பவர் தயாரித்த இப்படத்தில் அருணா சாந்தி, ஜீவராணி ஆகியோர் நடித்தனர்.
இக்காலகட்டத்தில் எஸ்.ராமநாதன் உருவாக்கிய படங்கள் வருடத்துக்கு ஒன்றாகவே வெளிவந்து கொண்டிருந்தன. இவர் உருவாக்கி வெளிவந்த இரண்டாவது படம் "லாதலு’ (கொழுந்து) என்பதாகும். 'துலகாபுல்" என்ற ஹிந்திப்படத்தைத் தழுவி இது எடுக்கப்பட்டது. 1960ஆம் ஆண்டு இவர் உருவாக்கிய இன்னுமொரு படம் ‘சம்பத" (செல்வம்) என்பதாகும். சுஜீவா பிலிம் நிறுவனம் தயாரித்த இப்படத்தில் ருக்மணிதேவி பிரதான பாத்திரத்தில் நடித்தார்.
எஸ்.இராமநாதன் இயக்கிய இன்னுமொரு பிரபலமான படம் "இபதுனே ஏய் (ஏன் பிறந்தாய்) என்பதாகும். இதுவும் சுஜாதா என்ற ஹிந்திப்படத்தைத் தழுவி எடுக்கப்பட்டது.
1972ஆம் ஆண்டு வெளிவந்த 'ஹிதக பிபுணு மலக்' (இதயத்தில் மலர்ந்த மலர்) படத்தின் மூலம் அவர் ஒரு புதுமையைச் செய்தார். அதுவரை காலமும் சிங்களப் படங்களில் இடம்பெற்ற பாடல்கள் ஹிந்தி, ஆங்கில மெட்டுக்களைப் பின்பற்றி வந்தன. ஆனால் இந்தப் படத்திலேயே கர்நாடக மெட்டில் அமைந்த பாடல் ஒன்று முதன் முதலாக சேர்க்கப்பட்டது.
59

Page 40
தம்பிஐயா தேவதாஸ்
எஸ்.இராமநாதன் ஆரம்ப கால இலங்கைத் தமிழ்ப்படங்களுக்கு படத்தொகுப்புச் செய்தவர். அவற்றில் ஒன்று குத்துவிளக்கு. பின்னாளில் பல தமிழ்ப்படங்களைத் தனித்து நின்று இயக்கினார்.
பிரபலமாகப் பேசப்பட்ட புதிய காற்று திரைப்படத்தை இயக்கினார்.
கோ மாளிகள் , ஏ மாளிகள் ஆகிய நகைச்சுவைப்படங்களையும் இவரே இயக்கினார்.
60

பொன்விழாக் கண்ட சிங்களச் சினிமா
5. குடும்பத்தாருடன் சினிமாவில் ஈடுபட்ட எம்.எஸ். ஆனந்தன்
எம்.எஸ்.ஆனந்தன் யாழ்-கொடிகாமத்தில் பிறந்தவர். சாவகச்சேரி றிப்பேட்றிக் கல்லூரியில் ஆரம்பக் கல்வியைக் கற்றவர். மார் க் கண்டு செல்வானந்தன் என்ற இயற்பெயரைக் கொண்டவர். காமினி பொன்சேகாவின் வேண்டுகோளின் படி எம்.எஸ்.ஆனந்தன் என்று பெயரைச் சுருக்கி வைத்துக் கொண்டார். ஆரம்பத்தில் எஸ்.எம் நாயகத்தின் ஸ்ரூடியோவிலும் பின்பு சிலோன் ஸ்ரூடியோவிலும் ஒளிப்பதிவுப் பகுதிக்கு பொறுப்பாக இருந்தார். சேர் சிற்றம்பலம் ஏ.கார்டினர், செல்லமுத்து ஆகியோரின் வேண்டுகோளின் படி சென்னை நெப்டியூன்
61

Page 41
தம்பிஐயா தேவதாஸ்
ஸ்ரூடியோவில் மூன்று வருடங்கள் பயிற்சி பெற்றார். இலங்கை திரும்பியதும் பல சிங்களப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தார்.
ஆர்.ஆர்.பிலிம்ஸ் அதிபர் ராஜா பாலி தயாரித்த 'சித்தக மஹிம' என்ற படத்தையே முதன் முதலில் இயக்கினார். இவர் இயக்கிய ‘ஹந்த பான' என்ற படமும் அதிக நாட்கள் ஓடியது.
தரமான இயக் குநர் கள் இயக் கிவரும் படங்களுக்கே அதிகமாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார். அட்வான்ஸ் வாங்காமலே தொழில் செய்வார். லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் இயக்கிய பல படங்களுக்கு இவரே ஒளிப்பதிவாளர். இவர் ஒளிப்பதிவு செய்து லெஸ்டர் இயக்கிய படங்களான கொலு ஹ தவத்த (ஊமை உள்ளம்) அக்கர பஹா (ஐந்து ஏக்கர்) நிதானய (புதையல்) மடல்துரவ (மாடல் தீவு) போன்ற படங்கள் தொழில்நுட்ப ரீதியில் வெற்றி பெற்றன.
பின்னாளில் தனியாகவும் படங்களை தயாரித்து இயக்கினார். இவர் இயக்கிய முதலாவது படம் 'பிரவேசம் வென்ன" என்பதாகும். மூத்த மகளான 'சியாமா' வின் பெயரை வைத்து மட்டுமல்ல அவரையே கதாநாயகியாக வைத்து பல திரைப்படங்களை உருவாக்கினார். ‘மகே நங்கி சியாமா", "சண்டி சியாமா", "ஹலோ சியாமா' என்பன அவற்றின் பெயர்கள். தனது பேத்தியாரான மந்தாராவை (சியாமாவின் மகள்) கதாநாயகியாக வைத்து 'மம பய நே' என்ற படத்தை உருவாக்கினார். சாலிய பெரேராவை மணந்த சியாமாவும் மகள் மந்தாராவும்
62

பொன்விழாக் கண்ட சிங்களச் சினிமா
கனடாவில் வாழ்கிறார்கள். மந்தாராவை வைத்து மீண்டும் ஒரு படத்தை உருவாக்க இருக்கிறார் ஆனந்தன். அவற்றின் அரை வாசிப்படம் கனடாவில் ஒளிப்பதிவு செய்யப்படும் என்கிறார்.
கடந்த 50 வருட படங்களில் சிறந்த ஒரு படமாக 'நிதான ய' என்ற படம் கருதப் படுகிறது. அந் த ப் படத் துக் கு ஒளிப் பதிவு செய் தவர் எம்.எஸ்.ஆனந்தன். இவ்வாறு பல வெற்றிப்படங்களுக்கு இவர் ஒளிப்பதிவு செய்தாலும் எந்தப்படத்துக்கும் பரிசு பெற்றதில் லை என்பதையிட்டு மனம் வருந்துகிறார். ஆனாலும் "சண்டி சியாமா' என்ற படத்துக்கு ஜனாதிபதி பரிசு கிடைத்ததாம். அது ஒளிப்பதிவுக்காக அல்ல. அதிக நாட்கள் ஓடிய படம் என்பதற்காகவே அப்பரிசு கிடைத்ததாம். அதனால் அவர் அப்பரிசை சென்று வாங்கவில்லை.
1956இல் ராஜகிரியவில் ஆனந்த சினிமா என்ற தியேட்டரைக் கட்டினார். ஆனால் அடுத்த ஆண்டில் நடைபெற்ற கலவரத் தில் அத் தியேட் டர் எரிக்கப்பட்டதாம்.
ஆனாலும் சிங்களத்திரையுலகில் இன்று வரை நிலைத்து நிற்கும் ஒரு கலைஞராக எம்.எஸ்.ஆனந்தன் விளங்குகிறார். சிங்களத் திரை உலகில் ரீ.எம்.தாஸ் என்ற தமிழ்
இயக்குநரும் சிறப்பான சில சிங்களப் புடங்களை
63

Page 42
தம்பிஐயா தேவதாஸ்
இயக்கியிருக்கிறார்.
1967இல் வெளிவந்த 'அமதக் கவனாத (மறந்துவிட்டாயா) என்ற படம் இவரது முதலாவது இயக்கமாகும்.
1969இல் வெளியான இவரது இரண்டாவது படத்தின் பெயர் 'ஹரிமக' (நல்வழி) என்பதாகும்.
மூன்றாவது படத்தின் பெயர் 'றன்வன்றேகா' என்பதாகும். இந்த இயக்குநருக்கு ஒரு சிறப்பு உண்டு. தான் இயக்கிய மூன்று படங்களைவும் தானே தனித்து நின்று தயாரித்தார் என்பது ஒரு சிறப்பு அம்சமாகும். மற்றவர்களின் படங்களை இயக்க இவர் செல்லவில்லை. 1965ஆம் ஆண்டளவில் டபிள்யு.எஸ்.மகேந்திரன் என்ற இயக்குநர் "யட்ட கிய தவச' (கடந்த நாட்கள்) என்ற படத்தை இயக்கினார். இதற்கு முன் இவர் வெளிநாடுகளிலும் w தொலைக்காட்சி திரைப்படம் போன்றவற்றை இயக்கி அனுபவம் பெற்றிருந்தார்.
பரி ர பல மான கட் டி டக் கலைஞர் வீ.எஸ்.துரைராஜாவின் "குத்துவிளக்கு படத்தையும் டபிள்யு.எஸ்.மகேந்திரனே இயக் கினார் ஆக இலங்கையில் உருவான ஒரு தமிழ்ப்படத்தை உருவாக்கிய பெருமையும் இவருக்குக் கிடைத்தது எனலாம்.
124வது சிங்களப் படத்தின் பெயர் "செக்கய (சந்தேகம்) என்பதாகும். இந்தச் சிங்களப் படத்தை இயக்கியவர் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான ஒரு கவிஞராவார். இந்த இயக்குநர் இயற்றிய்
64

பொன்விழாக் கண்ட சிங்களச் சினிமா
பாடல்கள்தான் அதிகமான இலங்கைத் தமிழ்ப் படங்களில் இடம்பெற்றிருக்கின்றன. அந்தக் கவிஞர்தான் ஈழத்து ரத்தினம்.
கடந்த ஐம்பது வருடங்களில் உருவான படங்களில் சிறந்தது என வர்ணிக்கப்படும் 'நிதானய' என்ற படத்தை ஒளிப்பதிவு செய்த எம்.எஸ்.ஆனந்தன்
இவர் 1962ஆம் ஆண்டளவில் பல சிங்களப் * படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். ஈழத்து இரத்தினம் மட்டக்களப்பில் பிறந்தவர். தனது 14வது வயதிலேயே கவிதைகள் எழுதத் தொடங்கியவர். சினிமா ஆர்வம் காரணமாக 1957இல் இந்தியா சென்று ஜுபிட்டர் பிக்சர் நிறுவனத்தில் கடமையாற்றினார். "அமுதவல்லி', 'முரடன் முத்து' 'அரசிளங்குமரி', 'தங்கப்பதுமை’ என்பன இவர் உதவி இயக்குநராகப் பணி புரிந்த படங்களில் சிலவாகும்.
65

Page 43
தம்பிஐயா தேவதாஸ்
"எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்’ என்ற படத்தில் 'எல்லோரும் இந்நாட்டு மன்னரடா இங்கு இளைத்தவரும் சளைத்தவரும் இல்லையடா’ என்று ஒரு பாடல் இடம் பெறுகிறது. இவர் இயற்றிய இப் பாடல் , இவரது முயற் சிக் கு நல் ல எடுத்துக்காட்டாகும்.
மீண்டும் இலங்கை வந்து பல சிங்களப் படங்களுக்கு உதவி இயக்குநராக கடமையாற்றினார். இலங்கைத் தமிழ்ப்படங்கள் சிலவற்றுக்கு கதை வசனமும் பாடல்களும் எழுதியுள்ளார். "குத்துவுளக்கு என்ற படத்தில் இவர் எழுதிய வசனங்களும் பாடல்களும் சிறப்பிடம் பெற்றன.
இவர் இயக்கிய "செக்கய' என்ற படம் 1965ஆம் ஆண்டு திரைக்கு வந்தது. ஈழத்து இரத்தினம் தனித்து நின்று இயக்கியது, ஒரேயொரு சிங்களப் படமாயினும் அதன் சிறப்புக் காரணமாக ரசிகர்கள் பலரின் மனங் களைக் கவர் ந் தது . 1983 ஜூலை க் கலவரங்களையடுத்து இந்தியா சென்ற இரத்தினம், 21.06.94இல் அங்கேயே அமரரானார்.
சிங்களத் திரை உலகில் பெயர் சொல்லக் கூடிய இன்னுமொரு இயக்குநர் கே.வெங்கடாசலம் ஆவார். 1960ஆம் ஆண்டளவில் சென்னையில் டைரக்டர் ஏ.எஸ் நாகராஜனிடம் உதவி இயக் குனராக கடமையாற்றியவர். அவரின் சிபார்சு கடிதத்துடன் இலங்கைக்கு வந்த வெங்கடாசலம், எஸ்.எம்.நாயகத்தின் ஸ்ரூடியோவில் உதவி இயக்குநராக கடமையாற்றினார். நீண்ட காலம் சிங்களத் திரை உலகில் உதவி
66

பொன்விழாக் கண்ட சிங்களச் சினிமா
இயக்குநராக பணியாற்றிய இவர். 1966இல் 'மஹா றே ஹமுவ ஸ்திரிய" (நள்ளிரவில் சந்தித்த பெண்) என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். பின்னாளில் சிங்களப்பட இயக்குநராக மாறிய ரீ.மரியதாசனின் படமொன்றை இயக்கியதன் மூலமே இவர் இயக்குநரானார்.
"சக்கய' என்ற சிங்களப் படத்தை இயக்கியவரும் பிரபல தமிழ்க் கவிஞருமான ஈழத்து ரெத்தினம்.
கே.வெங்கடாசலம் பின்னாளில் தனது பெயரை 'கே.வெங்கட்' என்று மாற்றிக் கொண்டார்.
இலங் கையில் தமிழ் ப் படங் களை உருவாக்குவதில் முன்னின்றவர்களில் இவரும் ஒருவர் எனலாம். முதன் முதலில் இந்திய நடிகர்கள் சிலரை இலங்கைக்கு வரவழைத்து ஒரு தமிழ்ப்படத்தையும் உருவாக்கினார்.
67

Page 44
தம்பிஐயா தேவதாஸ்
அந்தப் படத்தின் பெயர்தான் ‘மாமியார்வீடு' இப்படத்தில் தென்னிந்திய நடிகர் சுப்பையாவும் சிங்கள நடிகை சாந்திலேகாவும் முக்கிய பாத்திரங்களில் நடித்தனர். இவர் இயக்கிய சில பிரமாண்டமான படங்களின் பெயர் கொபொலு ஹண்ட', 'உதும் ஸ்திரிய, என்பனவாகும். எஸ்.பி.எம்.முத்தையா இப்படங்களை தயாரித்தார். எம்.எவ்.பவுஸ் தயாரித்த 'தமயந்தி' என்ற படத்தையும் வெங்கட்டே இயக்கினார்.
"நிலுகா', 'பூgபத்துல”, “மகே அம்மா” (என் அம்மா) போன்ற சிங்களப்படங்களும் வெங்கட்டுக்கு ரசிகர்கள் மத்தியில் பெயர் பெற்றுக் கொடுத்தன.
1983இல் ஜ" லைக் கலவரத் தில் கொல்லப்பட்டவர் களில் இந்தக் கலைஞரும் ஒருவராவார்.
பிரபலமான பல படங்களை இறக்குமதி செய்ததோடு பிரமாண்டமான பல சிங் களப் படங்களைத் தயாரித்து வெளியிட்டவரே ஜபீர் ஏ காதர், 'சிலோன் என்டர் டெய்மன்ட் நிறுவனம் லிபேர்ட்டி தியேட்டர் போன்ற சினிமா நிறுவனங்களின் உரிமையாளரும் இவரே.
ஆரம்பத்தில் ஐபீர் ஏ காதரும் அவரது சகோதரர் மொஹிதீனும் சினிமாத் தொழிலில் ஈடுபட்டனர். 1936ஆம் ஆண்டு மருதானையில் நியூ ஒலிம் பரியா தியேட்டரை நிறுவரி அங்கு திரைப்படங்களைக் காட்டத் தொடங்கினர். இவர்களின்
68

பொன்விழாக் கண்ட சிங்களச் சினிமா
தந்தையாரின் பெயர் என்.எச்.எம்.அப்துல் காதர் ஆகும்.
1946இல் மருதானை சென்ற்றல் தியேட்டரை நிறு வரிய ஜபர் ஏ கா தர் இலங் கைத் திரைப்படத்தொழிலில் நீண்ட கால அனுபவம் பெற்றவர். -
இந்தியாவில் தயாரான கடைசிச் சிங்களப்படமான
'வீரவிஜய' படத்தை இயக்கிய கே.எஸ்.சேதுமாதவன்.
தென்னிந்தியாவில் பீம்சிங் 'ப' வரிசைப் படங்களைத் தயாரித்தது போல, இங்கு இவர் "சு" வரிசைப் படங்  ைகளத் தயாரித்தார் . அதற்காக தமிழ் நாட்டிலிருந்து பிரபல்யமான இயக்குநர்களை இங்கு வரவழைத்து அவற்றை இயக்கச் செய்தார்.
69

Page 45
தம்பிஐயா தேவதாஸ்
இவர் தயாரித்த முதலாவது படத்தின் பெயர் ‘சுரத்தலி ஆகும். 1956ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தை கே.வேம்பு நெறியாண்டார். இவர் தயாரித்த இரண்டாவது படத்தின் பெயர் 'சுனித்தா' ஆகும். இப்படத்தைப் பிரபல தமிழ் இயக்குநர் பீ.நீலகண்டன் நெறியாண்டார். "சுந்தர பிரிந்த 'சுஜாகே ரஹஸ" போன்ற படங்களையும் ஜபீர் ஏகாதர், பீநீலகண்டனைக் கொண்டே இயக்குவித்தார்.
இப்படங்கள் அனைத்தும் சிங்கள ரசிகர்கள் மத்தியில் பெரும் புகழ் பெற்றன. வசூலிலும் வெற்றி பெற்றன.
திரைப்பட உலகத்தை வளர்த்த இவர் ஹோட் டல் துறையிலும் புகழ் பெற்றார் . திரைப்படங்களைத் தயாரித்ததன் மூலம் பொது மக்களுக்கு அறிமுகமான இவர் , பின்னாளில் பிரபலமான அரசியல்வாதியாகவும் விளங்கினார். சிங்களத் திரையுலகில் சிறந்த திரைப்படங்களைத் தயாரித் த சிறுபான் மை இனத் தவர் களில் ஐபீர் ஏ.காதரின் பெயர் அழியா இடத்தைப் பெற்றுள்ளது. சிங்களத் திரையுலகின் பிரபல தயாரிப்பாளர் கே.குணரத்தினம் ஆவார். ஹெந்தளையில் உள்ள அவரது ஸ்ரூடியோவில் கடமையாற்றியவர்களில் ஒருவரே இளைஞர் எஸ்.சிவானந்தன். இவரும் நான் கிற்கும் மேற்பட்ட சிங் களப் படங்களை
70,

பொன்விழாக் கண்ட சிங்களச் சினிமா
இயக்கியிருக்கிறார். 1966ஆம் ஆண்டு திரையிடப்பட்ட 'ஒபதுட்டுதா' (உன்னைக் கண்ட தினம்) என்ற படமே இவர் இயக்கிய முதலாவது படமாகும். இப்படத்தில் காமினி பொன்சேகாவும் ஜீவராணியும் பிரதான பாத்திரத்தில் நடித்தார்கள்.
வட இந்தியாவில் தயாரான ஒரேயொரு சிங்களப்படமான
'தைவயோகய என்ற படத்தில் ஒரு காட்சி. (1959)
கே குணரத் தினம் பல் வேறு பிரபல இயக்குநர்களை வைத்து படங்களை இயக்கியிருக்கிறார். ஆர்.சுந்தரம் முதல் எம்.மஸ்த்தான் வரை லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் முதல் தொடவத்தை வரை, என்று பல்வேறு இயக்குநர்கள் இவரது படங்களை இயக்கி இருக்கிறார்கள். இந்த வரிசையில் அவர் தெரிவு செய்த புதிய இயக்குநர்தான் எஸ்.சிவதாசன்.
71

Page 46
தம்பிஐயா தேவதாஸ்
இவர் இயக்கிய இரண்டாவது திரைப்படமான 'ஒக்கொம ரஜவரு’ (எல்லோருமே அரசர்கள்) 1989இல் திரைக்கு வந்தது. ‘எதத் சண்டியா அதத் சண்டியா' என்ற படம் 1995இல் வந்தது. இவர் இயக்கிய "ஹொந்தின் நெத்னம் நறக்கின்' (நல்லவழியில் அல்லாவிட்டால் கெட்டவழியில்) ‘ஒபமட்ட விஷ்வாசய்" (நான் உன்னை நம்புகிறேன்) போன்ற படங்களும் இவரது நல்ல பெயருக்கு உதாரணங்களாகும்.
சிங் களத் திரைப்படமொன்றை இயக்கிய முதலாவது இலங்கைத் தமிழர் என்ற பெயர் பெற்றவர் ரீசோமசேகரனாவார். இலங்கை சினிமா உலகில் இன்னுமொரு சோமசேகரனும் புகழ் பெற்று விளங்கினார். அவர்தான் ஒலிப்பதிவுத்துறையில் சிறந்து விளங்கிய சுண்டிக்குளி சோமசேகரன் ஆவார்.
இவரும் சரிங் களப் பட மொனி றை இயக்கியிருக்கிறார். அப்படத்தின் பெயர் "லண்டன் ஹா மு' என்பதாகும் இது புகழ் பெற்ற சிங் களப்படங்களில் ஒன்றாகும். சுண்டுக் குளி, சோமசேகரன் 1955ஆம் ஆண்டளவில் சென்னை சென்று அங்குள்ள வாஹினி ஸ்ரூடியோவில் துணை ஒலிப்பதிவாளராக நீண்ட நாட்கள் கடமையாற்றியவர். 1960ஆம் ஆண்டு கொழும்பு சிலோன் ஸ்ரூடியோவில் சேர்ந்து 50க்கு மேற்பட்ட படங்களுக்கு ஒலிப்பதிவு செய்தார். அதன் பின்பே லண்டன் ஹாமு’ என்ற
படத்தை உருவாக்கினார். அப்போது இப்படம் சிங்கள
72

பொன்விழாக் கண்ட சிங்களச் சினிமா
ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாய் பேசப்பட்டது.
பின்னாளில் இவர் தன் மனைவி மாலினிதேவி சோம சேகர னுடன் சேர்ந்து , இரண் டு தமிழ்ப்படங்களையும் தயாரித்தார். "டைக்ஷி டிறைவர்" 'நெஞ்சுக்கு நீதி' என்பனவே அத்தமிழ்ப் படங்களாகும்.
'சுஜாகே ரஹச படத்தில் ஒரு காட்சி (1964)
'நெஞ்சுக்கு நீதி’ படத்தில் இந்திய நடிகர் பூனிகாந்த் மலேசிய நடிகர் சிவாஜிராஜா சிங்கள நடிகர்கள் றோய் த சில்வா, சுமணா அமரசிங்க மற்றும் நம்நாட்டு நடிகர்கள் பலர் நடித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
73

Page 47
தம்பிஐயா தேவதாஸ்
சுண் டுக் குளி சோம சேகரன் 1985 இல் காலமானார். திருமதி. மாலினி சோமசேகரன் பின்பு இந்தியா சென்று திருச்சியில் வாழ்ந்தார். இப்பொழுது லண்டனில் வசிப்பதாக தெரிகிறது.
சிங்களத்திரையுலகில் கொடிகட்டிப் பறந்த இன்னுமொரு தமிழ் இயக்குநர் தான் எம்.வி.பாலன். எட்டியாந்தோட்டையில் இங்கிரியவத்தையில் பிறந்து கலையார்வத்தின் காரணமாக கொழும்புக்கு வந்தவர் இவர்.
பிற்காலத்தில் சினிமாஸ் குணரத் தினம், எஸ்.ராமநாதன், ரீசோமசேகரன் ஆகியோரின் அறிமுகம் இவருக்குக் கிடைத்தது. ஏ.எஸ் நாகராஜனின் படமொன்றில் கோஷ்டி நடனம் ஆடினார். லெனின் மொறாய சும் , நடிகர் எஸ் .எஸ் சந்திரனும் நாடகத்துறையை அறிமுகப்படுத்தினர். பல சிங்களப் படங்களில் நடனமாடினார்; நடித்தார்.
நடிகர் காமினி பொன்சேகாவின் படமொன்றை எம்.வி.பாலனே இயக்கினார். எம்.வி.பாலன் இயக்கிய அந்த முதற் படத்தின் பெயர் ‘ஒப நெத்திநம்' (நீ இல்லாவிட்டால்) என்பதாகும்.
கிங்ஸ்லரி எஸ்.செல்லையாவின் பிரமாண்டமான 'மஞ்சள் குங்குமம்' என்ற இலங்கைத் தமிழ்ப்படத்தையும் இவரே இயக்கினார்.
பின்னாளிலும் பல தமிழ்ப்படங்களை இயக்க முற்பட்டார் . ஆனால் நான் கிற்கு மேற்பட்ட சிங்களப்படங்களை உருவாக்கிவிட்டார்.
74.

பொன்விழாக் கண்ட சிங்களச் சினிமா
'ஹித்த ஹொந்த மினிஹெக்' (நல்லிதயம் படைத்த மனிதன்) 'மகே றத்தரன் புத்தா' (என் தங்கமகன்) றஹசக் நெதி றஹசக்' (இரகசியம் அற்ற இரகசியம்) என்பன அவற்றில் சிலவாகும்.
"அது வேறு யாருமில்லை லெனின் மொறாயஸ்தான்' என்று விளம்பரம் செய்யும் அளவுக்கு புகழ் பெற்று விளங்கிய இயக்குநர் லெனின் மொறாயஸ். எம்.வி.பாலன் சினிமா இயக்குனர் மட்டுமன்றி
நடிகராகவும் சிங்கள ரசிகர்கள் மத்தியில் பெயர் பெற்றவர். தமிழ்ப் படங்கள் சிலவற்றிலும் நடித் திருக்கிறார் . காமினி பொன் சேகா வின் செல்லப்பிள்ளை. அண்மையில் வெளிவந்த காமினியின் ‘நொமியன மினிசுன்’ படத்தில் இவர் தான் உதவி இயக்குநர்.
75

Page 48
தம்பிஐயா தேவதாஸ்
ஜோ தேவானந்த் என்ற சினிமா இயக்குனரை தமிழ் ரசிகர்கள் நன்கு அறிவார்கள். இலங்கை இந்திய கூட்டுத்தயாரிப்பான 'பைலட்பிறேம்நாத்' படத்தின் உதவி இயக்குநர் இவர்.
ஜெய் சங்கர் , ராதிகா போன் றோரை இலங்கைக்கு வரவழைத்து பிறைட்டன் அரியரத்தினம் தயாரித்த 'ரத்தத்தின் ரத்தமே" என்ற படத்தையும் இயக்கியவர் ஜோ தேவானந்த்.
1965இல் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் விஞ்ஞான ஆசிரியராக கடமையாற்றிக் கொண் டி ரு ந் த போது இவர் Li ff L d9F fT 6Ö) (6) மாணவர்களுக்கென்று "பாசநிலா" என்ற தமிழ் படத்தைத் தயாரித்தார்.
பின்பு கொழும்பு வந்து 1970ஆம் ஆண்டு "கீதா என்ற சிங்களப்படத்தைத் தயாரித்து நெறிப்படுத்தி
வெளியிட்டார். ரோய் டி.சில்வாவும் சுமனா
அமரசிங்கவுமே இவரது படங்களில் அதிகமாக நடித்தவர்களாவர்.
'சுஜீவா', 'சுனேத்திரா", "சூகிரி கெல்ல', 'ஒபய் மமய்" (நீயும் நானும்) "மினிசுன் அத்தர மினிசுன்" (மனிதர்களுக்கிடையில் மனிதன்) போன்றவை இவர்
உருவாக்கிய ஜனரஞ்சமான படங்களில் சிலவாகும்.
76

பொன்விழாக் கண்ட சிங்களச் சினிமா
தென்னிந்திய நடிகர்களைக் கொண்டு 'ரத்தத்தின் ரத்தமே படத்தை சிங்கள மொழிக்கு மொழி மாற்றம் செய்தவர் மைக்கல் விக்டோரியா. இப்படம் "யுக்தியட்ட சண்டியா' என்ற பெயரிலும் ‘பைலட்பிரேம்நாத்", அதே பெயரிலும் சிங்கள மொழிக்கு டப் செய்யப்பட்டன. இவை இரண்டையும் இயக்கியவர் ஜோ தேவானந்த்.
25க்கு மேற்பட்ட சிங்களப்படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதியவரும் 50க்கு மேற்பட்ட சிங்களப்படங்களுக்கு உதவி நெறியாளராக திகழ்ந்தவருமான எஸ்.ஏ.அழகேசன்.
77

Page 49
தம்பிஐயா தேவதாஸ்
1983இல் இடம்பெற்ற கலவரத்தையடுத்து யாழ்ப்பாணம் சென்று வாழ்ந்தார். யாழ்ப்பாணம் சென் யோன்ஸ் கல்லூரியில் சில காலம் ஆசிரியராக கடமையாற்றினார். பின்பு கொழும்புக்கு வந்து ரூபவாஹினியில் சில மாதங்கள் தயாரிப்பாளராக கடமையாற்றினார்.
இப்பொழுது இவர் தன் குடும்பத்துடன் கனடாவில் வசித்து வருகிறார்.
கலைஞன் எங்குபோனாலும் சும்மா இருக்க மாட்டான். இவர் கனடாவிலும் கலை முயற்சிகளில்
ஈடுபடுகிறார்.
78

பொன்விழாக் கண்ட சிங்களச் சினிமா
6. சினிமாத் தொழிலில் அண்ணனும் தம்பியும் 1970ஆம் ஆண்டு இன்னுமொரு பிரபலமான தமிழ் இயக்குனரின் முதல் படைப்பான "ஒஹொம ஹொந்தத’ (அதுசரியா) திரைக்கு வந்தது. அவர் பெயர் ஜே.செல்வரெத்தினம்.
மீண்டும் இரண்டு வருடங்களின் பின்பே இவரது இரண்டாவது படம் திரைக்கு வந்தது. 'சஹன'ய' என்பது இப்படத்தின் பெயராகும். "செவன் ஆட்ஸ் பிலிம்" தயாரித்த இப்படத்தில் காமினி பொன் சேகா வும் மாலினி பொன சேகா வும்
நடித்திருந்தார்கள்.
79

Page 50
தம்பிஐயா தேவதாஸ்
இவர் உருவாக்கிய இன்னுமொரு படம் ‘கவுத ரஜா (யார் அரசன்) என்பதாகும். இப்படத்தை ஜே.செல்வரத்தினம் தனது தம்பி ஜே.ராசரத்தினத்துடன் சேர்ந்து இயக்கினார்.
ஜே.செல்வரத்தினத்துக்கு பெயர் வாங்கித் தந்த இன்னுமொரு படம் ‘சிங்சிங் நோனா' என்பதாகும். 1978ஆம் ஆண்டு வெளிவந்த 'அப்சரா’ என்ற படமும் 1980இல் வெளிவந்த சபீதா' என்ற படமும் இவருக்கு பெயர் வாங்கிக் கொடுத்தன. இவர் இறந்த பின்பு இவரது தம்பி.ஜே.ராசரத்தினம் சில படங்களை நெறியாண்டார். ஜே.செல்வரத்தினம் விட்டுச் சென்ற பணியை சகோதரர் ஜே.ராசரத்தினம் தொடர்ந்தார். சிங்களத்திரையுலகில் லெனின் மொறாயஸ் என்ற தமிழ் இயக்குநருக்கு கிடைத்த புகழ் வேறு யாருக்குமே கிடைக்கவில்லை எனலாம். அந்த வகையில் புதுவிதமான தயாரிப்புக்களை அவர் உருவாக்கினார். ஒரு காலகட்டத்தில் “வேறு யாருமல்ல அது லெனின் மொறாயஸ்' என்று விளம்பரம் செய்யுமளவுக்கு பெயர் பெற்றிருந்தவர்.
ஆரம்பத்தில் தமிழ் நாடகங்களை உருவாக்கிய இவர் ஒப்பனையாளராக திரையுலகில் நுழைந்து ஒளிப்பதிவாளராக வந்து திரைக் கதை வசன கர்த்தாவாக வளர்ந்து நெறியாளராக உயர்ந்தவர்.
1955ஆம் ஆண்டளவில் சென்னை ரேவதி ஸ்ரூடியோவில்
80

பொன்விழாக் கண்ட சிங்களச் சினிமா
ஒப்பனைக் கலையிலும் ஒளிப்பதிவுத்துறையிலும் பயிற்சி பெற்றார். 1957ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்த இவர்,
சிலோன் ஸ்ரூடியோவில் சேர்ந்து கொண்டார்.
'வாடைக்காற்று' திரைப்படத்தையும் பல சிங்களப்படங்களையும் இயக்கிய பிறேம்நாத் மொறாயஸ்
லெனின் மொறாயஸ் 1964இல் வெளிவந்த எம்.எஸ்.ஆனந்தனின் ‘சித்தகமஹிம' என்ற படத்தில் முதன் முதலில் ஒளிப்பதிவாளராக கடமையாற்றினார். 1969இல் வெளிவந்த ‘சூறயன் கேத் சூறயா (வல்லவர்களில் வல்லவன்) என்ற படத்தில் முதன்
81

Page 51
தம்பிஐயா தேவதாஸ்
முதலாக இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து இருபது படங்களுக்கு மேல் இயக்கியதோடு பத்து படங்களுக்கு மேல் திரைக்கதை எழுதினார். பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராகவும் விளங்கினார். லெனின் மொறாயஸ் உருவாக்கிய ஆரம்ப காலச் சிங்களப் படங்கள் பொருளாதார ரீதியில் பெரு வெற்றிகளைப் பெற்றன. அதனால் அக்கால ரசிகர்களின் அபிமான இயக்குநராக லெனின் விளங்கினார். இவரது படங்கள் தமிழ் படங்களின் சாயலை ஒத்திருந்தாலும் அவை அனைத்தும் தமிழ் படங்களின் காபன் கொப்பி அல்ல என்று விமர்சகர்கள் கூறியிருக்கிறார்கள். லெனின் உருவாக்கிய சிங்களப் படங்களில் "அபிரஹாச' என்ற படம் பெருவெற்றி பெற்றது. இதை "யார் அவள்?’ என்ற பெயரில் தமிழ்ப் படமாகவும் அவர் உருவாக்கினார். ‘நெஞ்சுக்குத் தெரியும்' என்ற பெயரிலும் தமிழ் படமொன்றை உருவாக்கினர். ஹெலன் குமாரி நல்லூர் மனோகரன் இப்படத்தில் நடித்திருந்தார்கள். 1983ஆம் ஆண்டுக் கலவரத்தில் இப்படம் எரிந்துவிட்டது. இத்தமிழ்ப் படம் திரைக்கு வந்திருந்தால் லெனின் மொறாயஸ் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் புகழ் பெற்றிருப்பார் எனலாம். இலங்கைத் தமிழ்ச்சினிமாவின் துரதிர்ஷ்டம் அப்படம் எரிந்துவிட்டது.
லெனின் மொறாயஸ் சிங்களத்திரைக்கதை வசனம் எழுதுவதிலும் சிறந்து விளங்கினார். தன்னைப் போலவே இன்னொரு தமிழரையும் சிங் களத்
82

பொன்விழாக் கண்ட சிங்களச் சினிமா
திரைக்கதை வசனம் எழுதுவதில் சிறந்து விளங்கச் செய்தார். அவர் பெயர்தான் எஸ்.ஏ.அழகேசன் என்பதாகும். திரைக்கதை வசனம் மட்டுமல்ல பல படங்களுக்கு இவர் உதவி இயக்குநராகவும் கடமையாற்றியிருக்கிறார்.
பல சிங்கள தமிழ்ப்படங்களை இயக்கிப் புகழ் பெற்ற எஸ்.இராமநாதன்.
தமிழ் நாடகத்துறையிலிருந்து வந்த அழகேசன், லெனின் மொறாயஸின் பெரும் பாலான சிங்களப்படங்களுக்கும் கதை வசனம் எழுதியிருக்கிறார். ராஜ ஜோசுவா பல சிங்களப்படங்களுக்கு தயாரிப்பு நிர்வாகியாக கடமையாற்றியவர். பல படங்களுக்கு உதவி இயக்குனராகவும் பணி செய்தவர். இவரின் நண்பர்கள் தான் லெனின் மொறாயஸும்
83

Page 52
தம்பிஐயா தேவதாஸ்
எஸ்.ஏ.அழகேசனும். லெனின் மொறாயஸ் இயக்கிய அனைத்துப் படங்களுக்கும் இவரே உதவி நெறியாளர். லெனின் முதன் முதலில் இயக்கிய படம் சுது துவ ஆகும். இப்படத்திலேயே அழகேசனும் முதலாவதாக உதவி நெறியாளராக கடமையாற்றினார். அழகேசனும் பல படங்களுக்கு கதை வசனம் எழுதினார். ஆனால் படம் திரையிடும் பொழுது இவரது இடத்தில் வேறு பெயர்கள் இருக்குமாம். 25 படங்களுக்கு மேல் இவர் கதை வசனம் எழுதினாலும் சில படங்களிலேயே இவர் வசனம் எழுதியதாக திரையில் பெயர் வந்திருக்கிறது. ‘சித்தக மஹிம' என்ற படத்துக்கே அழகேசன் முதலில் வசனம் எழுதினார் . ‘சூரயன்கேத்சூரயா இவருக்கு பெயர் வாங்கிக் கொடுத்தது. இப்பொழுது சுவர்ணவாகினியின் தமிழ்ப்பிரிவு பணிப்பாளராக இருக்கிறார்.
டென்மார்க் சன் குழுவினர் தயாரித்த "இளையநிலா" படத்தின் கதை வசனம் இவருடையதே. அதன் உதவி இயக்குநரும் இவரே. எம்.எஸ்.ஆனந்தன், எம்.வீ.பாலன் ஆகியோருடனும் பணியாற்றி இருக்கும் இவர், தனியாகத் தமிழ் படமொன்றை இனியாவது தரவேண்டும் என்று தமிழ் ரசிகர்கள் விரும்புகிறார்கள். அக் காலத்தில் எல்.எஸ்.ராமச் சந்திரன் இலங்கைக்கு வந்து சிங்களப்படங்களை இயக்கி வந்தார். இவருக்கு உதவியாக பத்துக்கும் அதிகமான படங்களில் பணியாற்றியவரே எஸ்.வீ.சந்திரன். 1947இல் வெளிவந்த துப்பத்தாகே ஹித்தவத்தா' (ஏழையின் நண்பன்) என்ற படத்தை முதன் முதலாக தனியே இயக்கினார்.
84

பொன்விழாக் கண்ட சிங்களச் சினிமா
இதனைத் தொடர்ந்து பல சிங்களப் படங்களை தனியே இயக்கும் வாய்ப்புக் கிடைத்தது. 'ஹித்தக்க சுவந்த இதயத்தின் சுகந்தம்) "சுபாணி', 'சுது ஐயா" (வெள்ளை அண்ணன்) போன்ற படங்கள் இவர்
இயக்கியவற்றில் சிறந்த படங்களாகும்.
சிங்களப்படங்கள், தமிழப்படங்கள், கூட்டுத்தயாரிப்புகள்
என்று பல்வேறு படங்களை இயக்கிய ஜோதேவானந்,
சிங்களப் படங்களைப் போலவே சில தமிழ்ப் படங்களையும் இவர் இயக்கினார். ஜெயராமச்சந்திரன் தயாரித்த 'காத்திருப்பேன் உனக்காக வி.பி.கணேசன் தயாரித்த "நான் உங்கள் தோழன்’ போன்ற
படங்களையும் இவரே இயக்கினார் என்பது
85

Page 53
தம்பிஐயா தேவதாஸ்
குறிப்பிடத்தக்கது. “எங்களில் ஒருவன்’ படத்தைத் தயாரித்து நெறியாண்டவர். இப்பொழுது வெளிநாட்டில் வாழ்கிறார்.
ரீஅர்ஜுனா என்ற தமிழ் இயக்குநரும் சிங்களத் திரையுலகில் புகழ் பெற்றவர். 1975ஆம் அண்டு இவர் 'கலியுக காலே" என்ற படத்தை தயாரித்தார். இவரே சிங்களப் படங்களை டப் செய்து தமிழ்ப்படமாக மாற்றும் முறையை முதல் முதலில் ஆரம்பித்து வைத்தார். 'கலியுக காலே சிங்களப் படத்தை 'கலியுககாலம்' என்ற பெயரில் தமிழ்ப்படமாக உருவாக்கினார்.
இவரின் ’வசந்தயே தவசக்' என்ற படம் விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றது. இப்படத்தையே இவர் இந்தியாவில் 'வசந்தத்தில் ஒரு வானவில்' என்ற பெயரில் உருவாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. 'சாரா" என்ற படமும் ரீஅர்ஜுனா தயாரித்த சிங்களப்படங்களில் ஒன்றாகும்.
'கலியுக காலே' (சிங்களம்), 'கலியுக காலம் (தமிழ்) ஆகிய இரண்டு படங்களையும் பொறுத்தவரை ஒரு சிறப்பு உண்டு. இவை இரண்டுக்கும் இசை அமைத்தவர் ஒரு தமிழ்ப் பாடகராவார். அவர் தான் தற்பொழுது டென்மார்க்கில் வாழ்ந்துவரும் சண் என்ற சண்முகமாவார். டென்மார்க்கில் வாழ்வதால் ‘டென்மார்க் சண்’ என்று அழைக்கப்படுகிறார். இவரே 'நெஞ்சுக்கு நீதி' 'இளைய நிலா" போன்ற படங்களுக்கும் இசையமைத்தவர். இப்பொழுது வேறு கலை முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறார் .
86

பொன்விழாக் கண்ட சிங்களச் சினிமா
தென்னிந்தியப் பாடகர்களான எஸ்.பி.பாலசுப்பிர மணியம், மலேசியா வாசுதேவன், பி.ஜெயசந்திரன், சுவர்ணலதா, சுபா ஆகியோர் பாடிய பாடல்களை ‘சூரிய அமுதம்' என்ற பெயரில் சீ.டி.இசைத்தட்டில் தொகுத்து வெளியிட்டிருக்கின்றார். சென்னை வந்து தொலைக் காட்சித் தொடர்களையும் தயாரித்து வெளிநாடுகளில் காட்டுகிறார். இன்னும் இலங்கையில் திரையிடப்படாத 'இளைய நிலா" திரைப்படத்தின் இணைத்தயாரிப்பாளர்களில் சண்ணே முக்கியமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
1947இல் ‘ஹதவத்த நெத்தோ' (இதயம் இல்லாதவர்கள்) என்ற படம் திரைக்கு வந்தது. இலங்கை முஸ்லிம் ஒருவர் இயக்கிய முதலாவது சிங்களப்படம் இதுவாகும். அவர்தான் சுபைர் மக்கீன் ஆவார். இவருக்குப் பின்பே பல முஸ்லிம் கலைஞர்கள் சிங்களத் திரைப்படங்களை இயக்க முன் வந்தார்கள். ஆரம்பகாலத்தில் சில படங்களைத் தயாரித்த ரீ.மரியதாசன், பின்னாளில் இயக்குனராக மாறிவிட்டார். "ஹொந்த கீத" (நல்ல பாடல்) "ரங்கா’ என்பவை இவர் தயாரித்து இயக்கிய படங்களாகும். மற்றவர்களின் படங்களை இயக்க இவர் செல்லவில்லை.
அன்ரன் கிறகரி என்பவரும் பின்னாளில் பல சிங் களப் படங்களை இயக் கிய தமிழரா வார் . இப்பொழுதும் சிங்களப் படங்களை இயக்கும் ஒருவர் என்று இவரைக் குறிப்பிடலாம். சினிமா ஜாம்பவான் எம்மஸ்த்தானின் பாசறையில் வளர்ந்தவர்களில் இவரும்
ஒரு வா.
87

Page 54
தம்பிஐயா தேவதாஸ்
50 படங்களுக்கு மேல் உதவி இயக்குநராகக் கடமையாற்றிய இவர் 'ரத்தத்தின் ரத்தமே', 'பைலட் பிறேம்நாத்" போன்ற படங்களிலும் உதவி இயக்குநராக கடமையாற்றியிருக்கிறார். 1980ஆம் ஆண்டில் வெளிவந்த 'சங்கபாலிய இவர் இயக்கிய முதற் படமாகும்.
‘யலித்பிபுனுமல்", "சிறிசுவந்த" "மிஸ் மல்லிகா', ‘சூரசரதியல்' போன்றவை இவர் இயக்கிய படங்களில் சிறந்தவையாகும். இவர் இயக் கியவைகளில் அதிகமானவை வர்ணப்படங்களாகும். இவரது கைவண் ணத்தில் தமிழ்ப் படமொன்றை எதிர் பார்க்கலாமா?
சந் திர ன் ர த் தினமும் இர ண் டு சிங்களப்படங்களை இயக்கினார். இவை இரண்டுமே அவருக்குப் பெயர்வாங்கிக் கொடுத்தன. இவர் இயக்கிய 'ஆதர கத்தாவ’ (காதல் கதை) என்ற படம் தமிழ் இளைஞன் ஒருவன், சிங்களப் பெண்ணைக் காதலிக்கும் கதை. இதில் அமரர்சில்லையூர் செல்வராஜனின் மகன் திலீப் செல்வராஜன் கதாநாயகனாக நடித்தார். ஆங்கிலப் படமொன்றைத் தழுவி எடுக்கப்பட்ட 'ஜனேலய’ (யன்னல்) என்ற படமும் விமர்சகர்களால் சிறப்பித்துக் கூறப்பட்டது.
ஈழத்து ரத்தினம், சந்திரன் ரத்தினம் என்ற ரத்தினங்களை விட இன்னுமொரு ரத்தினமும் இருந்தார். அவர்தான் 'றன்சலு என்ற சிங்களப்படத்தை இயக்கிய பி.ரத்தினம் என்பவராவார்.
ஜோ சுகந்த என்பவர் "சீலா', 'நீலா’ ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார். எஸ்.தேவேந்திரன்
88

பொன்விழாக் கண்ட சிங்களச் சினிமா
துஷ்யந்தி' என்ற படத்தை இயக்கியிருக்கிறார். ‘பாதைமாறிய பருவங்கள்’ என்ற தமிழ்ப்படத்தையும் இந்த தேவேந்திரனே இயக்கினார். "சுதுமாமா' (வெள்ளைமாமா) என்ற படத்தை மன்சூர் அத்மானி
இயக்கினார்.
சிங்களம், தமிழ், ஆங்கிலம் என்று பல்வேறு படங்களுக்கு சிறந்த முறையில் ஒளிப்பதிவு செய்த வீ.வாமதேவன்
சிங்களத் திரையுலகிலும் தமிழ்த்திரையுலகிலும் ஒரே நேரத்தில் கொடி கட்டிப்பறந்த பல கலைஞர்கள் இருந்தார்கள். அவர்களில் மூன்று ஒளிப்பதிவாளர்களும் அடங்குவார்கள். அவர்களில் இருவர் ஒளிப்பதிவு செய்து கொண் டே திர்ை ப் படங் களையும் இயக்கியிருக்கிறார்கள்.
89

Page 55
தம்பிஐயா தேவதாஸ்
இவர்களில் இருவர் தமிழர். ஒருவர் முஸ்லிம். அவர்கள் யார்? அவர்கள் தான் எம்.ஏ கபூர் , வீ.வாமதேவன், ஜே.ஜே.யோகராஜா ஆகியோர்.
ஒளிப்பதிவுத்துறையில் ஆரம்ப காலத்தில் எம்.மஸ்த்தானை அடுத்து ஏ.வீ.எம்.வாசகம், ஏ.ரி.அரசு போன்றோர் சிறந்து விளங்கினர். பெரும்பாலான இயக்குநர்கள் ஆரம்பத்தில் ஒளிப்பதிவாளர்களாக இருந்தே நெறியாள்கைத் துறைக்கு வந்தார்கள்.
உதாரணமாக லெனின் மொறாயஸ் , எம்.எஸ்.ஆனந்தன், ஜோ தேவானந்த் போன்றோரைக் குறிப்பிடலாம். எம்.ஏ.கபூர் மன்னாரில் பிறந்தவர். ஏதாவது தொழில் செய்யலாம் என்று சினிமாத் துறைக்குள் நுழைந்தவர். ஒளிப்பதிவுத்துறை, கை கொடுத்தது. அதையே தனக்குப் பொருத்தமான தொழில் என்று தீர்மானித்தார்.
தொடர்ந்து பல சிங்களம் மற்றும் தமிழ்ப் படங்களுக்கு ஒளிப்பதிவாளராக கடமையற்றினார். ‘கடமையின் எல்லை‘ படத்தில் ஏ.ரி.அரசுடன் சேர்ந்து ஒளிப்பதிவாளராகக் கடமையாற்றினார். நீண்டகால அனுபவத்தின் பின் நெறியாளராகவும் உயர்ந்தார். 1984இல் வெளிவந்த 'சிறானி என்ற படமே இவர் முதன் முதலில் இயக்கியது.
‘சாகர திலின' என்பது இவர் இயக்கிய அடுத்த படம். எம்.ஏ.கபூர் இப்பொழுதும் பல சிங்களப் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
1957ஆம் ஆண்டு சிலோன் ஸ்ரூடியோவில் உதவி ஒளிப்பதிவாளராகச் சேர்ந்தவர் வீ.வாமதேவன்.
90

பொன்விழாக் கண்ட சிங்களச் சினிமா
1963இல் விஜயா ஸ்ரூடியோ ஆரம்பித்தபோது இவர் இங்கு வந்து சேர்ந்து கொண்டார். பிரேம்நாத் மொறாயஸ், ரீசோமசேகரன் போன்றோரின் படங்களில் ஒளிப்பதிவாளராக கடமையாற்றினார்.
சிங்களம், தமிழ் என்று பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த பிரபல ஒளிப்பதிவாளர் எம்.ஏ.கபூர்
அப் பொழுது விஜயா ஸ் ரூடியோ வில் எம்.மஸ்த்தான் பிரதான சினிமா நெறியாளராக விளங்கினார். இவர் இயக்கிய பெரும்பாலான படங்களுக்கு வீ.வாமதேவனே ஒளிப்பதிவாளராகக் கடமையாற்றினார். காமினி பொன்சேகாவின் சிபார்சில் சினிமாஸ் குணரத்தினம் இவரை ‘சூற செளறயா' எ ன் ற படத் தின் மூலம் பரி ர தா ன ஒளிப்பதிவாளராக்கினார். ‘அட்டவெனி புதுமய
91

Page 56
தம்பிஐயா தேவதாஸ்
(எட்டாவது புதுமை) சூரயன் கேத் சூரயா' (வல்லவனுக்கு வல்லவன்) "ஹொந்தட்ட ஹொந்தாய்' போன்ற படங்கள் இவர் ஒளிப்பதிவு செய்தவற்றில் சிலவாகும். சிங்களப்படங்கள் மட்டுமன்றி தமிழ் ஆங்கிலப் படங்கள் கூட இவரது ஒளிப்பதிவில் உயிர்பெற்றிருக்கின்றன. அவற்றுள்
‘நான் உங்கள் தோழன்’ என் ற தமிழ்ப்படத்தையும் “றம்பேஜ்' என்ற ஆங்கிலப் படத்தையும் விசேடமாக குறிப்பிடலாம்.
காமினி பொன்சேகா தயாரித்த பல படங்களுக்கு வீ.வாமதேவனே ஒளிப் பதிவாளர் காமினி பொன்சேகாவின் ‘நொமியன மினிசுன்’ என்ற படம் ஈட்டிய வெற்றிக்கு வாமதேவனின் படப்பிடிப்பும் ஒரு காரணமாகும்.
பிரமாண்டமான பல வெற்றிப்படங்களுக்கு இவர் ஒளிப்பதிவு செய்தாலும் ‘நான் உரிய முறையில் கெளரவிக்கப்படவில்லை' என்பது அவரது உணர்வாகும். அவரது உணர் வில் உண்மை இருக்கத்தான் செய்கிறது. சிறந்த ஒளிப்பதிவாளராக இதுவரை ஒரு படத்துக்காக மட்டுமே பரிசு வழங்கியிருக்கிறார்கள். அதுவும் 'றம்பேஜ்' என்ற ஆங்கிலப்படத்துக்காகவே கிடைத்தது.
92

பொன்விழாக் கண்ட சிங்களச் சினிமா
7ஒளிப்பதிவாளர் அமரர் ஜே.ஜே.யோகராஜா
ஜே.ஜே. யோகராஜா ஊர் காவற்றுறையில் பிறந்தவர். கலை ஆர்வம் காரணமாக சினிமா உலகிற்குள் புகுந்தவர்.
இவர் முதலாவதாக ஒளிப்பதிவு செய்த படம் 'தமயந்தி’ என்பதாகும். தொடர்ந்து பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தார். இவரது திறமையைக் கண்ட தமிழ்த் திரைப்பட உலகமும் இவரை வரவேற்றது.
'கோமாளிகள்' படத்துக்கு முதலில் ஒளிப்பதிவு செய்தார். தொடர்ந்து ‘ஏமாளிகள்', 'அனுராகம்" ‘மாமியார் வீடு' என்று பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தார். இவருக்கு சில சிங்களத் திரைப்படங்களை இயக்கும் வாய்பபும் கிடைத்தது. விஜயகுமாரதுங்காவின்
93

Page 57
தம்பிஐயா தேவதாஸ்
ஒன்றுவிட்ட தம்பிதான் ஜீவன் குமாரதுங்க. இவருக்கு பெயர் வாங்கித் தந்த படங்களில் "ஜீவன் மல்லி’ என்ற படமும் ஒன்றாகும். 1993 ஆம் ஆண்டு வெளிவந்த அந்தப் படத்தை தயாரித்து இயக் கியவர் ஜே.ஜே.யோகராஜா ஆவார். பின்னாளில் ஒளிப்பதிவுடன் படம் தயாரிப்பதிலும் ஈடுபட்டிருக்கிறார். அவர் கனடாவுக்கு சென்ற போது அங்கு காலமானார்.
இந்த ஒளிப்பதிவாளர்களுக்கு முன்பு ஏ.வீ.எம்.வாசகம், ஏ.ரீ.அரசு போன்ற ஒளிப்பதிவாளர்கள் சிங்களத் திரை உலகில் சிறந்து விளங்கினார்கள். ஏ.வி.எம், வாசகம் பெங்களூரில் உள்ள ஸ்ரூடியோவில் பயிற்சி பெற்றவர். பல சிங்களப் படங்களுக்கும் 'வாடைக்காற்று' தமிழ்ப்படத்துக்கும் ஒளிப்பதிவு செய்தார். இவர்களைப் போல் இன்னும் பல ஒளிப்பதிவாளர்களும் சிங்களத் திரை உலகில் சிறந்து விளங்கினர். வீ.சிவசுப்பிரமணியம் ஆரம்பத்தில் ஸ்ரில் போட்டோ கிராபராக வந்து ஒளிப்பதிவாளராக உயர்ந்தார். லெனிடி கொஸ்தா, எம்.செல்லத்துரை ஷெரீப்டீன் போன்றோரும் சிங்களத் திரை உலகின் குறிப்பிடத்தக்க ஒளிப்பதிவாளர்களாவர். ஒளிப் பதிவு மட்டு மின் றி ஒலிப் பதிவு இசையமைப்பு படத்தொகுப்பு, உதவி டைரக்ஷன், ஒப்பனை என்று பல்வேறு துறைகளிலும் தமிழ், முஸ்லிம் கலைஞர்கள் ஒளிவீசி வந்திருக்கிறார்கள்.
அனைத்து கலைத்துறையினருக்கும் தமது திறமைகளைக் காட்டுவதற்கு களம் அமைத்துக் கொடுத்தவர்கள் தயாரிப்பாளர்களே. திரைப்படத்
94

பொன்விழாக் கண்ட சிங்களச் சினிமா
தயாரிப்பாளர்களை ஒரு கோணத்தில் பார்த்தால் வர்த்தகர்களாகத் தோன்று வார்கள். ஆனால் அவர்களின் உள்ளங்களிலும் ஓரளவு கலை உணர்வு இருந்திருக்கிறது என்பதையும் நாம் ஏற்றேயாக வேண்டும்.
எனவே சிங்களத் திரைப்படங்களைத் தயாரித்த தமிழ் முஸ்லிம் தயாரிப்பாளர்களையும் நாம் நன்றியுடன் எண்ணிப் பார்க்க வேண்டும்.
பல சிங்களப் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து விட்டு
தயாரிப்பாளராக உயர்ந்த அமரர் ஜே.ஜே.யோகராஜா நிறுவன ரீதியாக அல்லாமல் தனிப்பட்ட முறையிலும் படம் தயாரித்தவர்களை முக்கியமாகக் குறிப்பிட்டாக வேண்டும்.
முதலாவது சிங் களப் பேசும் படத்தை
தயாரித்தவர், சுந்தரம் மதுரை நாயகம் என்பவராவர். இவரது பெயர் சுருக்கமாக எஸ்.எம்.நாயகம் என்று
95

Page 58
தம்பிஐயா தேவதாஸ்
வழங்கப்படுகிறது. இவரே முதன் முதலில் கந்தானையில் "சுந்தர சவுண்ட் ஸ்ரூடியோ’ என்ற பெயரில் ஒளிப்பதிவு கூடத்தையும் உருவாக்கியவர். இதே நாயகம்தான் மதுரை நகரிலும் "சித்திரகலா ஸ்ரூடியோ’ என்ற நிறுவனத்தையும் உருவாக்கினார். 1946ஆம் ஆண்டளவில் அங்கு “குமரகுரு" என்ற பெயரில் தமிழ்ப்படமொன்றையும் தயாரித்தார். அப்படத்தில் இலங்கை-கதிர்காமத்தில் எடுக்கப்பட்ட காட்சிகள் சிலவும் சேர்க்கப்பட்டனவாம்.
1952இல் வெளிவந்த "சிறிசங்கபோ' என்ற படத்தை லக்சுமிபாய் தயாரித்தார். ராஜப் அலி ஐந்து படங்களுக்கு மேல் தயாரித்தார். "தறுவா காகெத' (யார் குழந்தை) "சித்தக மஹிம (இதயத்தின் பெறுமதி) ‘சத்தபனஹா' (ஐம்பதுசதம்) "சுவீப்டிக்கெட்", "சுதுதுவ (வெள்ளைமகள்) போன்ற படங்கள் பிரபலமானவை. 1965ஆம் ஆண்டு வெளிவந்த ‘சக்கய' (சந்தேகம்) என்ற படத்தை எஸ்.பி.முத்தையா முதலில் தயாரித்தார். 'றன்சலு’, ‘அமத்திகம', 'உதும் ஸ்திரீ" 'பெஞ்சா', 'கொபொலு ஹண்ட' என்பனவும் இவர் தயாரித்த படங்களே.
1967இல் வெளியான 'சங்கவுனு மெனிக்கா' என்ற படத்தை ராமசாமி தயாரித்தார். 1969இல் வெளியான 'சூரயன்கேத் சூரயா' என்ற படத்தை
96

பொன்விழாக் கண்ட சிங்களச் சினிமா
சீமொஹமட் தயாரித்தார். எம்.ராமேஸ்வரம் என்ற தமிழர் இரண்டு படங்களைத் தயாரித்தார். அவர்
தயாரித்தத கெவத்த' என்றபடம் 1970இல் வெளிவந்தது. ‘அபராத தண்டுவம" அவர் தயாரித்த அடுத்த படமாகும். "ஒஹொம ஹொந்தத' என்ற படத்தை ரீபுஹாரி தயாரித்தார்.
பிரபல ஒளிப்பதிவாளர் வீ சிவசுப்பிரமணியம் சிங்களத் திரைப்படெமான்றை ஒளிப்பதிவு செய்கிறார்.
1974இல் வெளியான "சாந்தி’ படத்தின் தயாரிப்பாளர் ஹ "சைன் முஹம்மட். அது அவர் தயாரித்த இரண்டாவது படமாகும்.
1974ஆம் ஆண்டு வெளிவந்த "சுசி என்ற படத்தை எஸ்.பி.சாமி முதன் முதலாகத் தயாரித்தார்.
97

Page 59
தம்பிஐயா தேவதாஸ்
பனர் செய்வதற்கு துணி இல்லாத காலம் , யாழ்ப்பாணத்திலிருந்து பனையோலைப் பாய்களை வரவழைத்து பனர் செய்து விளம்பரம் செய்தவர் எஸ்.பி.சாமி. இவர் தயாரித்த இரண்டாவது படத்தின் பெயர் 'ஆதரே மங்ஆதரே' என்பதாகும். மூன்றாவது படம் ‘சாலி ஆகும். எஸ்.பி.சாமி தயாரித்த மூன்று சிங்களப்படங்களும் அப்பொழுது யாழ்ப்பாணத்திலும் அதிகநாள் ஓடின.
'ஒஹம ஹறித' என்ற படத்தை ஆப்தீன் பவுசி தயாரித்து இயக்கினார்.
1975இல் எம்.எல்.பெளஸ் தயாரித்த படத்தின் பெயர் 'தமயந்தி’ என்பதாகும். அதே ஆண்டு எம்.ஜெவுபர் தயாரித்த படத்தின் பெயர் "ஹதவத்தக்க வசந்தய' என்பதாகும்.
1976ஆம் ஆண்டு காலப்பகுதியில் ‘சுபசரண சபசித்தே' என்ற படம் புகழ்பெற்று விளங்கியது. இதைப்போல பல்வேறு வெற்றிடங்களைத் தயாரித்த நிறுவனம் 'சிவா பிலிம்ஸ்" ஆகும். இந்நிறுவனத்தின் அதிபர் எஸ்.சிவசுப்பிரமணியம் பல சிங் களப் படங்களைத் தயாரித்திருக்கிறார். கரீம் ஹஸன், 'பிரதீபே மாவேவா என்ற படத்தை தயாரித்தார்.
துஷாரா'வை எம்.எச் ஒமர் தயாரித்தார், 'உதும் ஸ்திரி' என்ற படத்தை எச்.எச்.ஈசாத் தயாரித்தார். 'சனசன்னமா' என்ற படத்தை செயின் சுஹைர் தயாரித்தார்.
ஜீவன் குமாரதுங்க பிரதான பாத்திரத்தில் முதன் முதலில் நடித்த படம் 'ஹித்த ஹொந்த
98

பொன்விழாக் கண்ட சிங்களச் சினிமா
கெல்ல" (நல்லிதயம் படைத்த பெண்) என்பதாகும். இப்படத்தை றோய் டி சில்வாவுடன் சேர்ந்து தயாரித்தவர் ஒரு தமிழ் இளைஞராவார். அவர் தான் புகைப்படத்துறையில் புகழ்பெற்று விளங்கும் மைக்கல் விக்டோரியா.
மூன்று சிங்களப் படங்களைத் தயாரித்த பிரபல தொழில் அதிபர் எஸ்.பி.சாமி.
"மிஸிஸ் வேர்ல்ட்" ஆகத் தெரிவு செய்யப்பட்ட ரோசி சேனநாயக்காவை கதாநாயகியாக வைத்து தனது இரண்டாவது படமான "தாத்தி மங் ஆதரே' என்ற படத்தையும் தயாரித்தார். "இரத்தத்தின் இரத்தமே தமிழ்ப்படத்தை யுக்தியட்ட சண்டியா என்ற பெயரில் சிங்கள மொழிக்கு டப் செய்து
வெளியிட்டவரும் மைக்கல் விக்டோரியாவே.
99

Page 60
தம்பிஐயா தேவதாஸ்
19 9 4 g ബ് மேலும் இளம் முஸ் லிம் தயாரிப்பாளர்கள் சினிமாத்துறைக்கு வந்தார்கள். 'நொஹன்டன குமரியோ’ (அழாத பெண்கள்) என்ற படத்தை எம்.ஹில்மி செயினுதீன் தயாரித்தார். இதே ஆண்டு ‘அறகலய' என்ற படத்தை எம்.எம்.பைசால் தயாரித்தார். ஜே.ஆப்தீன் பல வெற்றிப் படங்களைத் தயாரித்திருக்கிறார்.
1997 ஆம் ஆண் டி ன் ஆரம் பத் தில் திரையிடப்பட்ட யசோமா' என்ற படத்தை மொஹமட் நியாஸ் தயாரித்தார். இவர் படிக்கும் காலத்திலேயே படம் தயாரிக்க ஆரம்பித்தவர். யசோமா படம் வித்தியாசமான முறையில் அமைந்துள்ளது என்று விமர்சகர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
‘சமுதாயம்' படத்தில் வில்லனாக நடித்தவர் ஏ.எஸ்.ராஜா. இவர் ஆரம்ப காலங்களில் பல சிங்களப் படங்களில் நடித்தார். "சண்டியா', 'யட்டகிய தவச", 'சத்தபனஹா', 'ஹித்த ஹொந்த மினிஹா' ஆகியவை அவற்றில் சிலவாகும். இவர் பல தமிழ்ப்படங்களிலும் நடித்திருக்கிறார்.
எம்.வி.பாலன் இயக்குநராவதற்கு முன்பு பல சிங்களப் படங்களில் நடித்திருக்கிறார். "லண்டன் ஹாமுவில் நகைச்சுவை நடிகராகத் தோன்றினார். குழுநடனம் ஆடுபவராகவே முதன் முதலில் திரை உலகில் நுழைந்தார்.
“பாராவளலு’ என்ற படத்தில் ஜெயகாந்த் என்ற நடிகர் நடித்தார். டீன்குமார் ‘சுது ஐயா’வில்
100

பொன்விழாக் கண்ட சிங்களச் சினிமா
பிரதான பாத் திர மேற் றார் . "டிக் கிரா", வடாத்ஹொந்தாய்' போன்ற படங்களிலும் நடித்தார். எஸ்.ராமதாஸ், மோகன் குமார், சந்திரசேகரன், கலைச்செல்வன், ஜபீர்குமார், செல்வசேகரன் போன்ற நடிகர்களும் சில சிங்களப்படங்களில் நடித்திருக்கிறார் எம்.லதீப், "உதும்ஸ்திரியில் நடித்தார்.
பிரபல தொழில் அதிபர் எஸ்.பி.சாமி தயாரித்த "சுசி என்ற திரைப்படத்தில் விஜயகுமாரதுங்கவும் மாலினி
பொன்சேகாவும் இப்படித் தோன்றுகிறார்கள். (1974)
உதயகுமார் ‘ஒபநெத்தினம்", "ஹொந்தட ஹொந்தய்', "சுபானி' போன்ற படங்களில் நடித்தார். காமினி
பொன்சேகாவின் ‘நொமியன மினிசுன்’ படத்தில் பல
101

Page 61
தம்பிஐயா தேவதாஸ்
தமிழ் நடிகர்கள் தோன்றினர் எம்.வீ.பாலன், எஸ்.ராம்தாஸ், பூரீதர் பிச்சையப்பா, நிலா மதி பிச்சையப்பா, எஸ் திவ்வியநாதன் என்று பலர் தோன்றினர். பல்வேறு சிங்களப் படங்களில் நடித்த அலெக்சாண்டர் பெர்னாண்டோ ஒரு தமிழர் சசி விஜயசுரேந்திர என்ற நடிகர் சிங்களத்திரை உலகில் பிரபலமான நடிகர். இவர் ஒரு முஸ்லிம். ஹனிபா என்பது அவரது பெயர்.
தமிழ் முஸ்லிம் நடிகர்களைவிட தமிழ் முஸ்லிம் நடிகைகளுக்குத்தான் சிங்களத்திரை உலகில் அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள் எனலாம். ஏனெனில் நடிகைகளின் தொகைதான் அதிகமாகும். சிங்களச் சினிமாவின் முதல் கதாநாயகி ருக்மணி தேவி "டெய்சி டானியல்' என்ற இயற்பெயர் கொண்ட தமிழ்ப் பெண்ணாவார். 1923இல் நுரெலியாவில் ரம்பொட என்ற ஊரில் பிறந்தவர். 12 வயதில் பாடத் தொடங்கியவர். 1940இல் மினர்வா நாடகக் குழுவில் சேர்ந்தார். குசுமலதா என்ற படத்தில் தமிழில் பாடியுள்ளார். அந்நாளில் அதிக சிங்களப் படங்களில் ஜெமினி காந்தா என்ற பெயரில் நடித்த நடிகையின் இயற்பெயர் நோனா சுபைதா என்பதாகும். சிங்களத் திரை உலகிலும் தமிழ்த் திரை உலகிலும் பெயர் பெற்ற நடிகை சந்திரகலா ஆவார். மலே முஸ்லிம் இனத்தைச் சேர்ந்த இவரின் இயற்பெயர் சித்தி பரிதா என்பதாகும்.
1968ஆம் ஆண்டு வெளிவந்த 'மாத்துரு பூமி (தாய்நாடு) என்ற படத்தில் சந்திரகலா அசோகா
102

பொன்விழாக் கண்ட சிங்களச் சினிமா
பொன்னம்பெருமாவுக்கு ஜோடியாக கதாநாயகியாக நடித்தார் இந்திப்பாடல்களை சிங்களப் படங்களில் சேர்ப்பது புதுமையில்லை.
‘வஹல்தூபத' என்ற படத்தில் சந்திரகலாவும் செனவிரத்னவும் இப்படித் தோன்றுகிறார்கள். (1968)
ஆனால் மாத்துருபூமி படத்தில் ஒரு தமிழ்ப்பாடல் இடம் பெற்றது. புதுமையாகும் ‘வ ஹல் துTபத' (அடிமைத் தீவு) என்ற படத்திலும் சந்திர கலா கதாநாயகியாக நடித்தார். இப்படத்தில் இவருக்கு ஜோடி சாந்தா அபயசேகர ஆவார். 1971ஆம் ஆண்டு 'பிந்துனு ஹதவத்த' (உடைந்த இதயம்) என்ற திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் றொபின் பெர்னாண்டோவும் சந்திர கலாவும் கதாநாயகர்களாக நடித்தார்கள்.
103

Page 62
தம்பிஐயா தேவதாஸ்
10 சிங்களப் படங்களுக்கு நடன இயக்குநராகப் பணியாற்றி இருக்கிறார் . சந்திர கலா பல தமிழ்ப்படங்களிலும் நடித்திருக்கிறார். ‘டைக்சி டிரைவர்' என்ற தமிழ்ப்டத்தின் மூலமே திரை உலகத்துக்கு அறிமுகமானார். நிர்மலாவில் கதாநாயகியாக நடித்தார்: இவர் பெரும்பாலான படங்களில் கதாநாயகியாகவே தோன்றினார். ‘தென்றலும் புயலும்', 'அனுராகம்", 'வாடைக்காற்று', 'தெய்வம் தந்தவீடு' என்பன அவற்றில் சிலவாகும்.
சந்திரகலா இப்பொழுது கொழும்பிலுள்ள தனியார் வங்கியொன்றில் வேலை பார்க்கிறார்.
சந்திரகலாவைப் போல் தமிழ் திரையுலகில் புகழ்பெற்ற தமிழ் நடிகை ஹெலன்குமாரி ஆவார். இந்த இரண்டு நடிகைகளும் சில வருடங்கள் தமிழ் திரையுலகில் ஆட்சி செய்தார்கள் என்று கூடச் சொல்லலாம். ஹெலன் குமாரி எம்.வி.பாலனின் "ஒக்கொமஹரி என்ற படத்தின் மூலம் நடன நடிகையாக அறிமுகமானார்.லெனின் மொறாயஸ் உருவாக்கிய பல சிங் களப் படங்களில் நடித் தார் . பல சிங் களப் படங்களில் நடனமாடினார் . நடன இயக்குநராகவும் விளங்கினார். 1973இல் ஜோதேவனந்த் உருவாக்கிய 'சுனேத் திரா" என்ற படத்தில் எச்.ஆர்.ஜோதிபாலாவுக்கு ஜோடியாக நடித்தார். 'தன் மத்தக்கத','பேனவாநேத', 'கஸ்தூரி சுவந்த போன்றவை இவர் நடித்த படங்களில் சில, 'மஞ்சள் குங்குமம்' இவர் கதாநாயகியாக நடித்த முதலாவது தமிழ்ப்படமாகும்.
104.

பொன்விழாக் கண்ட சிங்களச் சினிமா
‘பைலட் பிரேம்நாத்' படத்துக்கான நடன இயக்குநர்கள்
ஹேலன்குமாரியும் சந்திர கலாவும் ஆவார்கள்.
ஜோ தேவானந் இயக்கிய 'சுனேத்ரா' என்ற படத்தில் ஹெலன்
குமாரியும் எச்.ஆர் ஜோதிபாலவும் தோன்றும் காட்சி. (1973)
'நெஞ்சுக்குநீதி’, ‘ஏமாளிகள்' 'தென்றலும் புயலும் போன்ற படங்களிலும் கதாநாயகியாக நடித்தார். தொலைக்காட்சி புகழ்பெறத் தொடங்கியதும் பல தொலைக்காட்சி நாடகங்களில் கதாநாயகியாக நடித்தார். லெனின் மொறாயஸ் உருவாக்கிய "நெஞ்சுக்கு தெரியும்' என்ற படத்திலும் ஹெலன் குமாரியே கதாநாயகி. படம் திரைக்கு வருமுன்பு 83 ஜூலை தீக்கு இரையாகிவிட்டது துரதிஷ்டமே.
105

Page 63
தம்பிஐயா தேவதாஸ்
இவர் இயக்கி நடிக்கும் மேடை நாடகங்கள் அடிக்கடி கொழும்பில் மேடை ஏறுகின்றன.
பிரபல மேடை நாடக, தொலைக்காட்சி நடிகர் ஆர்.ராஜசேகரனை திருமணம் செய்த பின்பு அவருடன் சேர்ந்து பல மேடை நாடகங்களில் ஜோடியாக நடித்துவருகிறார். இருவரும் சேர்ந்து பல மேடை நாடகங்களை தயாரித்தும் வருகிறார்கள்.
சந்திரகலா, ஹெலன்குமாரிபோல் இன்னுமொரு நடிகையும் தமிழ்த் திரையுலகிலும் சிங் களத் திரையுலகிலும் புகழ்பெற்று விளங்கினார். அவரது பெயர்தான் பரீனாலை என்பதாகும்.
இவர் தமிழ்ப்படங்களில் நடிக்கு முன்பே சிங்களப்படங்களில் நடிக்கத் தொடங்கிவிட்டார். இவரும் முதலில் நடன நடிகையாகவே திரையுலகிற்கு அறிமுகமானார். 1974ஆம் ஆண்டு வெளிவந்த 'சனக்கெலிய" (பொருட்காட்சி) என்ற படத்தில் காமினி பொன்சேகாவுடன் நடித்தார். 1980ஆம் ஆண்டு வெளிவந்த "உதுமானனி' (மதிப்புக்குரியவரே) என்ற படத்திலும் சிறப்பான பாத்திரத்தில் தோன்றினார். 1983இல் வெளிவந்த 'றத்துமகறா' என்ற படத்தில் றொபின் பெர்னாண்டோவுக்கு ஜோடியாக நடித்தார். ‘சருங்கொலே" (பட்டம்) படத்தில் தமிழ்ப்பெண்ணாக
நடித்தார். அலிபாபா ஹா ஹொரு 40" (அலிபாபாவும்
106

பொன்விழாக் கண்ட சிங்களச் சினிமா
40 திருடர்களும்) மாலகிறவு (மாலை அணிந்த கிளி) என்பனவும் பரீனாலை நடித்த படங்களில் சிறந்தனவாகும். 1973இல் வெளிவந்த 'தாஹகின்
எகெக்" என்ற படத்தின் நடன இயக்குநர் பரீனாலையே.
பல சிங்களப் படங்களுக்கு உதவி இயக்குநராகக் கடமையாற்றி
பினபுநெறியாளராக உயர்ந்துவிட்ட அன்ரன் கிரகரி.
"மஞ்சள் குங்குமம்' என்ற படத்தில் நடனக் காட்சியில் தோன் றிய பரீனா "புதிய காற்று' படத்தில் வீ.பி.கணேசனுடன் கதாநாயகியாக நடித்தார். "அவள் ஒரு ஜீவநதி' படத்தில் டீன்குமாருடன் ஜோடியாக நடித்தவர். சிங்களத் திரை உலகில் மட்டுமன்றி தமிழ் திரையுலகிலும் பங்களிப்புச் செய்த நடிகை பரீனாலை ஆவார். இப்பொழுது திரையுலகைவிட்டு சற்று ஒதுங்கியிருக்கிறார்.
107

Page 64
தம்பிஐயா தேவதாஸ்
"புருஷ ரத்னய’ என்ற படத்தில் ராணிதேவி சோமசுந்தரம் சிறுபாத்திரத்தில் நடித்தார். 1982ஆம் ஆண்டில் “றே மணமாளி (இரவுராணி) என்ற படம் வெளிவந்தது. அதில் அகுஷ்லா செல்லையா என்ற தமிழ் நடிகை பிரதான பாத்திரத்தில் நடித்திருந்தார். சியாமா ஆனந்தனும் சில படங்களில் கதாநாயகியாக நடித்தார். 1985ஆம் ஆண்டு ‘ஆதர கத்தாவ' (காதல்கதை) என்ற படத்தை சந்திரன் ரத்தினம் இயக்கினார். இப்படத்தில் அமரர் சில்லையூர் செல்வராஜன், அவரது மூத்த மகன் திலீப் செல்வராஜன், இளையமகன் பாத்திபன் செல்வராஜன், பரீனாலை ஆகியோரும் நடித்தனர்.
சிங்களச் சினிமா உலகில் மற்றத் துறைகளைவிட நடிப்புத் துறையில் ஈடுபட்ட தமிழ் முஸ்லிம் கலைஞர்கள் குறைவு என்றே கூறலாம். இலங்கையில் உருவான முதலாவது தமிழ்ப்படமான "தோட்டக்காரியில் (35மிமீ) கதாநாயகியாக நடித்தவர் சேபா லிகா குரூஸ் என்ற சிங்கள நடிகையாவார். "குத்துவிளக்கு' படத்தில் சாந்திலேகா முக்கிய பாத்திரத்தில் தோன்றினார். "புதியகாற்று’ ‘சர்மிளாவின் இதயராகம்' போன்ற படங்களில் வீணா ஜெயக்கொடி நடித்தார். கூட்டுத் தயாரிப்புகளான 'பைலட் பிரேம்நாத்தில் மாலினி
பொன்சேகாவும் 'மோகன புன்னகை'யில் கீதா
108

பொன்விழாக் கண்ட சிங்களச் சினிமா
குமார சிங்கவும் தோன்றினார்கள்.
"நான் உங்கள் தோழன்', 'காத்திருப்பேன் உனக்காக” போன்ற படங்களில் லீனாடி சில்வா நடித்தார். ஒரு தமிழ்ப் படத்தில் குறைந்தது ஒரு சிங்கள நடிகையாவது பங்குபற்றியிருப்பார். சுமணா, ஜெனிடா, அனோஜா
என்று பல பிரபல சிங்கள நடிகைகள் தமிழ்ப்படங்களில் தோன்றியிருக்கிறார்கள்.
சந்திரன் ரத்தினம் இயக்கிய ‘ஆதர கதாவ' என்ற திரைப்படத்தில் ஒரு காட்சி. திலீபன் செல்வராஜன், பரினாலை, மணிக் குருகுலசூரிய ஆகியோர் இப்படித் தோன்றுகிறார்கள். (1985)
109

Page 65
தம்பிஐயா தேவதாஸ்
குத்துவிளக்கில், சாந்தி, சாந்திலேகா ஆகியோர் நடித்தனர். ருக்மணிதேவி, காத்திருப்பேன் உனக்காக விலும் நான் உங்கள் தோழனிலும் நடித்தார். நாடுபோற்ற வாழ்க படத்தில் கீதாவும், சுவர்ணாவும் கதாநாயகிகள்.
ரெத் தத் தின் ரெத் தமே படத்தில் நடித்தமைக்காக கீதாவுக்கு ஜனாதிபதி பரிசு கிடைத்தது.
110

பொன்விழாக் கண்ட சிங்களச் சினிமா
8. இசை அமைப்பாளர்கள்
1947இல் இந்தியாவில் உருவான "கடவுனு பொறொந்துவ திரைப்படத்துக்கு பிரபல இந்திய இசையமைப்பாளரான நாராயண ஐயர் இசை அமைத் தார் . இப் படத் துக் கு உத வரி இசையமைப்பாளராக இருந்தவர் ஆர்.முத்துசாமி. இசைக்குழுவினர் அனைவருமே இந்தியர்கள். இது ஒரு சமுகப்படம்.
இரண்டாவது சிங்களப்படம் "அசோகமாலா" ஆகும். இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் தனித்துவமானவை. புகழ்பெற்றவை. இப்படத்துக்கான இசை அமைப்பைச் செய்தவர் எம்.கெளஸ் மஸ்ர்டர் ஆவார். இசைக்குழுவினர் அனைவரும் இந்தியர்கள். இது ஒரு சரித்திரப்படம்.
111

Page 66
தம்பிஐயா தேவதாஸ்
தொடர்ந்து பல சிங்களப்படங்களுக்கு இந்திய இசை அமைப்பாளர்கள் இசை அமைத்தனர். வேதா, ரீ.ஆர் பாப்பா, ஏ.எம்.ராஜா, பாண்டு ரங் கன் போன்றோர் இசை அமைத்திருக்கிறார்கள்.
கே.ராணி, எஸ்.ஜானகி, பி.சுசீலா, ஏ.எம்.ராஜா, ஜூ க் கரி, யமுனா ராணரி போ ன் றோ ரும் பாடியிருக்கிறார்கள்.
சிங் களப்படங்கள் தயாரிக்கப்பட்டு பல வருடங்கள் கடந்த பின்னரே சிங்களப் படங்களுக்கான இசை அமைப்பு இலங்கையில் நடைபெற்றது. அதற்கும் இசை அமைப்பாளர்கள் இந்தியாவிலிருந்தே இங்கு வந்திருந்தனர். பின்பு அதுவும் நின்று இலங்கையர்களே இசையமைத்தனர். “பண்டா நகரயட்ட பமினிம படத்துக்கு இலங்கையிலேயே இசையமைக்கப்பட்டது. அதற்கும் நாராணய ஐயரையே இலங்கைக்கு வரவழைத் திருந்தார்கள்.
அக் காலத்தில் ஆர்.முத்துசாமி வயலின் வாசிப்பதில் சிறந்து விளங்கினார். ரீலத்தீப் கிளாரினட் வாசிப்பதில் சிறந்து விளங்கினார். இவர்களுடன் இன்னும் சில வாத்தியக் கலைஞர்கள் இணைந்தே "பண்டா நகரயட்ட பமினிம' படப்பாடல்கள் ஒளிப்பதிவு செய்யப்பட்டன. இப்படத்தில் ரீ.எப்.லத்தீப் ஒரு பாடல் பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ரீ.எப்.லத்தீப் இதுவரை ஐம்பதுக்கு மேற்பட்ட சிங்களப்படங்களுக்கு இசை அமைத்து விட்டார். ஆனால் கிட்டத்தட்ட 15 படங்களுக்குத்தான் இவர் இசை அமைத்ததாக படங்களில் டைடில்
112

பொன்விழாக் கண்ட சிங்களச் சினிமா
காட்டப்பட்டுள்ளன.
1970இல் வெளியான 'பொடி புத்தா' என்ற
படமே இவர் இசையமைத்ததாக பெயர் குறிப்பிட்டு
வெளியான முதல் பேசும்படமாகும்.
பல சிங்கள தமிழ்ப்படங்களுக்கு இசையமைத்த ரீ.எப்.லதீப்.
"சிகிரி காசியப்பா' படத்தில் இவர் இசை அமைத்த பாடல்கள் அனைத்தும் பிரபல்யமாயின. ஜோ தேவ ன ந் த யாாரித் த அனைத் து சிங்களப்படங்களுக்கும் இவரே இசை அமைப்பாளர்.
பின்னாளில் இவருடன் சேர்ந்து எம்.எச்.ஹக் இசையமைத்தார்.
ஆர்.முத்துசாமி சிங்களத்திரைப்பட உலகில் தனிப்பெரும் இசை அமைப்பாளராக விளங்கியவர்.
13."

Page 67
தம்பிஐயா தேவதாஸ்
சிங்களப் படங்களுக்கு முத்துசாமி பின்னணி கூடபாடியிருக்கிறார். கிட்டத்தட்ட 80 படங்களுக்கு மேல் இசை அமைத்திருப்பவர். நன்றாக ஆர்மோனியம் வாசிப்பாராகையால் சிங்கள நாட்டுக் கூத்துக்களில் ஹார் மோ னரியம் வாச) க் க சரிங் களக் குக்கிராமங்களுக்குகூட சென்றிருக்கிறார். ‘முத்துசாமி மாஸ்டர்’ என்று அன்பாக அழைக்கப்பட்டவர். இவர் கர்னாடக இசையிலும் தன் பங்கைச் செலுத்தத் தவறவில்லை. கர்னாடக இசை விழாக்கள் பலவற்றில் பலருக்கு பக்கவாத்தியம் வாசித்துள்ளார்.
ஆர்.முத்துசாமி இசை அமைத்த முதல் தமிழ்ப்படம் "மஞ்சள் குங்குமம்' ஆகும். "குத்துவிளக்கு" 'காத்திருப்பேன் உனக்காக', 'வெண்சங்கு போன்ற ஆரம்ப கால தமிழ்த் திரைப் படங்களுக்கும் இசையமைத்திருக்கிறார். 1988ஆம் ஆண்டு ஜூன் 28ஆம் திகதி கொழும்பில் இவர் காலமானார். இவர் இசையமைத்த பாடல்கள் இறவா வரம் பெற்றவை.
ஆர்.முத்துசாமி விட்டுச் சென்ற இசைப்பணியை இப்பொழுது அவர் மகன் எம்.மோகன்ராஜ் தொடர்ந்து செய்கிறார். ‘பாதை மாறிய பருவங்கள்’ என்ற இலங்கை தமிழ்ப் படத்துக்கு எம்.மோகன்ராஜ் இசை அமைத்தார். 1994இல் வெளிவந்த ரஜவன்சென் எகக்" என்ற சிங்களப் படம் மோகன்ராஜ் இசை அமைத்த படங்களில் ஒன்றாகும். அவர் மெல்லிசைத் துறையிலும் சினிமாத்துறையிலும் சிறந்து விளங்குகிறார். இசைத் துறையில் புகழ் பெற்று விளங்கிய இன்னுமொருவர் எம்.கே.றொக்சாமி ஆவார்.
114

பொன்விழாக் கண்ட சிங்களச் சினிமா
1932ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13ஆம் திகதி இசைக்குடும்பமொன்றில் பிறந்த றொக்சாமி தமிழிசைக்குச் செய்த பங்களிப்பைவிட சிங்களத்திரை இசைக்குச் செய்த பங்களிப்பே அதிகம். சிங்கள இசை உலகில் ‘றொக்ஐயா" என்று அன்புடன் அழைக்கப்பட்ட இவர், செக்ஸபோன் இசைக்கருவி இசைப்பதில் வல்லவர். இவரது அண்ணன் அந்தோனிசாமி ஆர்மோனியம் வாசிப்பதில் சிறந்தவர். செக்ஸ்போனை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்துக்கு அறிமுகப்படுத்தியவர் இவர் தான்.
பிரபல இசையமைப்பாளர் அமரர் எம்.கே.றொக்சாமி
கொழும்பு கொம்பனித்தெரு அன் டசன் கல்லூரியின் பழைய மாணவரான இவர், 1950களின் ஆரம்பத்தில் இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபன சிங்கள பாடல்களுக்கு இசையமைத்தார். செக்ஸபோன்
115

Page 68
தம்பிஐயா தேவதாஸ்
இசைக்கலைஞரான இவர் பின்னர் வயலின் வாசிக்க ஆரம்பித்து இலங்கையின் சிறந்த வயலின் இசைக்கலைஞராகவும் திகழ்ந்தார். நூற்றுக்கும் மேற்பட்ட சிங்களப்படங்களுக்கு இசையமைத்த றொக்சாமி, "ரத்தத்தின் ரத்தமே', 'நான் உங்கள் தோழன்’, ‘மாமியார் வீடு' ஆகிய தமிழ்ப்படங்களுக்கும்
இசையமைத்தார்.
இவர் சிலகாலம் இந்தியாவில் தங்கியிருந்தார். அங் கு தங் கியரிரு ந் த போது இந் திய
இசையமைப்பாளர் களின் இசைக் குழுக்களுடன் இணைந்து பணியாற்றியிருக்கிறார். எஸ்.எம்.சாலியும் பல சிங்களப்படங்களுக்கு இசை அமைத்திருக்கிறார். 'ஹதவத்த நெத்தோ’, ‘மெஹெமஹரித' போன்ற படங்கள் அவருக்கு புகழை அள்ளித் தந்தன.
நேசம் தியாகராஜா சில சிங்களப்படங்களுக்கு இசை அமைத்திருக்கிறார். இவர் கண்ணனுடன் சேர்ந்து 'கோமாளிகள்’, ‘ஏமாளிகள்’ ஆகிய படங்களுக்கு இசை அமைத்தார்.
கே.எம்.சவாஹிர் 'ஆதரய மஹிமய' என்ற சிங் களப்படத்துக்கு இசை அமைத் திருக்கிறார். "தோட்டக்காரி', 'மீனவப் பெண்’ என்பன இவர் இசை அமைத்த தமிழ்ப்படங்களாகும். இவரைப் போலவே இவர் மகன் பயாசும் இசை அமைப்பில் சிறந்து விளங்குகிறார்.
எம்.எஸ்.செல்வராஜா பல சிங்களப் படங்களுக்கு உதவி இசை அமைப்பாளராக கடமையாற்றியிருக்கிறார். சிங்களத் திரைப்படங்களில் பல தமிழ் முஸ்லிம்
116

பொன்விழாக் கண்ட சிங்களச் சினிமா
கலைஞர்கள் பின்னணி பாடியிருக்கிறார்கள் மொஹிதீன்பெக், ஆர்.முத்துசாமி, ஹருள்லந்திரா, ரீ.எப்.லதீப், ருக்மணிதேவி, நூர்பாய், ஏ.ஜே.கரீம், ரொனி ஹசன், முத்தழகு, கலாவதி என்று பட்டியல் நீண்டு கொண்டே போகும்.
அழியா வரம்பெற்ற பல சிங்களப் பாடல்களைப் பாடிய அமரர் மொஹிதீன் பெக்,
இரண்டாவது சரிங் களப் படமான "அசோகமாலா"வில் பாடத்தொடங்கிய மொஹிதீன்பெக்
நாற் றுக் கணக் கான சரிங் களப் படங் களில் பாடியிருக்கிறார். ‘புத்தம் சரணம் கச்சாமி" என்ற பாடல் பெரும் புகழ் பெற்றது.
117

Page 69
தம்பிஐயா தேவதாஸ்
ஹருள் லந்திரா பல சிங் களப்படங்களில் பாடியிருக்கிறார். "தோட்டக்காரி அவர் பாடிய தமிழ்ப்படமாகும்.
ருக்மணிதேவி பல சிங்களப்படங்களில் பாடி நடித்திருக்கிறார். குசுமலதா என்ற தமிழ் டப்பிங் படத்திலும் பாடியிருக்கிறார்.
டோனி ஹசன் பல சிங்களப்படங்களில் பாடி நடித்திருக்கிறார். 1966இல் வெளிவந்த ‘ஒபநெத்திநம்' என்ற படத்திலேயே இவர் பாடிய முதற்பாடல் இடம்பெற்றது. தொடர்ந்து 10 படங்களுக்கு மேல் பாடினார். "யார் அவள்’ என்ற தமிழ் படத்திலும் பாடியிருக்கிறார்.
பின்னாளில் முத்தழகுவும் கலாவதியும் பாடினார்கள். முத்தழகு முதன் முதலில் சிங்களப் பாடல்களைப் பாடியே தமிழுக்கு வந்தார். புதிய காற்றில் பாடிய பின் சிங்களப்படங்களில் தன் பணியைத் தொடர்ந்தார். 'சானா', 'அலிபபா சஹ ஹொறு 40 போன்ற சிங்களப் படங்களில் அவர் பாடினார். இதே படங்களில் கலாவதியும் பாடினார். அவர் இப்பொழுது சிங்களத் திரையுலகில் பலருக்கும் தெரிந்த பாடகியாவார். மெல்லிசைப்பாடகியாக அறிமுகமாகிய இவரை "புதிய காற்று படமே சினிமாப் பாடகியாக அறிமுகமாக்கியது.
118

பொன்விழாக் கண்ட சிங்களச் சினிமா
கால ஞ் சென் ற ஏ.ஜே. க ரீம் i Gol) சிங்களப்படங்களில் பின்னணி பாடியிருக்கிறார். முதலில் கிளாா) நெட் வாசிப் பவ ராகவே இசைத்துறையில் பிரவேசித்தார். இவர் பாடிய பல சிங்களப் பாடல்கள் பிரபலமானவை.
.
சினிமாக் கலைஞர் ஏ.ஏ.ஜுனைதீன் 'சர்மிளாவின் இதயராகம்' என்ற படத்தை தயாரித்தார். அப்படத்தின் கலைஞர்கள் (இடமிருந்து வலமாக) ஒவியர் எஸ்.டி.சாமி, தயாரிப்பாளர் ஏ.ஏ.ஜுனைதீன், டைரக்டர் சுனில் சோமபீரிஸ், கதாநாயகி வீணா மற்றும் அபுநானா கே.ஏ.ஜவாஹர், லீனாடிசில்வா, அமரர் எஸ்.என்.தனெரத்தினம் ஆகியோர்.
சினிமாத்துறையில் இசை அமைப்பு பின்னணி போன்றவை போல் மற் றைய துறைகளும் முக்கியமானவை. உதவி டைரக்ஷன், தயாரிப்பு. நிர்வாகம், ஒலிப்பதிவு படத்தொகுப்பு மேக்அப்
119

Page 70
தம்பிஐயா தேவதாஸ்
டெவலப்பிங், ஸ்ரில் போன்ற துறைகளும் கலை சார்ந்த தொழில்களே. V
இவற்றிலும் பல தமிழ் முஸ்லிம் கலைஞர்கள் கலைப்பணி புரிந்திருக்கிறார்கள். திரைப்படத்துறையில் பல்வேறு பிரிவுகள் உண்டு. உதவி நெறியாள்கை, கலை நிர்மாணம், நடன அமைப்பு ஒலிப்பதிவு, படத்தொகுப்பு, படம் கழுவுதல், ஒப்பனை, ஸ்டன்ட் என்று பல்வேறு துறைகள் உண்டு. பெரும்பாலான சினிமா நெறியாளர்கள் உதவி நெறியாளர்களாக இருந்தே பிரபல நெறியாளர்களாக மாறுவர். இந்த நிலை சிங்களப்படங்களிலும் இருந்தது. அதிகமான தமிழ் இயக்குநர்கள் உதவி இயக்குநர்களாக இருந்து பின்பு பிரபல இயக்குநர்களாக உருவாகியவர்களே.
எஸ்.ராமநாதன், லெனின் மொறையஸ் , எ.ஏ.ஜுனைதீன், எஸ்.ரஞ்சன், எம்.வீ.பாலன், அன்ரன் கிரகரி எஸ்.சத்தியன் போன்றோர் ஆரம்பத்தில் உதவி இயக்குநர்களாக இருந்தவர்களே.
எஸ்.என்.தனரெத் தினம், எஸ்.ஏ.அழகேசன், ஏ.ஏ.ஜுனைதீன், எஸ்.ரஞ்சன், பி.எஸ் நாகலிங்கம், அன் ர ன் கரிங் ஸ் லரி போ ன் றோர் G6) சிங்களப்படங்களுக்கும் தமிழ் படங்களுக்கும் உதவி நெறியாளர்களாக விளங்கினார்கள். 1996இல் வெளிவந்த “நொமியன மினிஸ்சு' என்ற படத்தில் எம்.வீ.பாலன், எஸ்.ஏ.அழகேசன், அரன்ரன் கிரகரி ஆகிய மூவரும் உதவி நெறியாளராக விளங்கினார்கள்.
கலை நிர்மாணத்துறையில் கே.வின்சன்ட் என்பவர் நீண்டகாலம் பணியாற்றினார். அவர்
12O

பொன்விழாக் கண்ட சிங்களச் சினிமா
இப்பொழுது தமிழ் நாட்டில் தனது கலைப்பணியைத் தொடர்ந்து வருகிறார். தான் சிங்களப்படத்தில் பணியாற்றிய அனுபவங்களை ஒரு புத்தகமாகவே எழுதி வெளியிட்டிருக்கிறார்.
'சுஜாதா' திரைப்படத்தில் ஒரு காட்சி. கிளாறி டி சில்வாவும் டொமி ஜயவர்தனவும் (1953)
1973 ஆம் ஆண்டு ஜேசெல்வரத்தினம் தயாரித்து இயக்கிய "ஹொந்தட்ட ஹொந்தய்' (நல்லதுக்கு நல்லது) என்ற படம் வெளிவந்தது. இந்தப் படத்தின் படத் தொகுப் பை ஜே. ராஜரெத் தினம் செய்தார் . ராஜரெத்தினம் செல்வரெத்தினத்தின் தம்பியாவார். ஜே.செல்வரெத்தினம் இயக்கிய பல படங்களுக்கு ஜே.ராஜரெத் தினமே உதவி நெறியாளராக இருந்திருக்கிறார்.
121

Page 71
தம்பிஐயா தேவதாஸ்
பெரும் பாலான சிங் களப் படங்களுக்கு எஸ்.ராமநாதன், எஸ்.வீ.சந்திரன், எஸ்.தேவேந்திரன் போன்றோர் படத்தொகுப்புச் செய்திருக்கிறார்கள்.
நூற்றுக்கு மேற்பட்ட சிங்களப்படங்களுக்கு படத்தொகுப்புச் செய்த ஒருவர் இன்னும் இத்தொழில் ஈடுபட்டு புகழ்பெற்று விளங்குகிறார். அவர்தான் எம்.எஸ் அலிமான்.
‘ஹதவத்த நெத்தோ' என்ற படத்துக்கான திரைக்கதை வசனம் எழுதி இயக்கியவர் சுபைர் மக்கீன் ஆவார். இப்படத்துக்கான ஒளிப்பதிவை சரிபுதீன் மேற்கொண்டார்.
ஒளிப்பதிவுத்துறையில் வீ.சிவசுப்ரமணியமும் சிறந்து விளங்கினார். இவர் ஆரம்பத்தில் ஸ்ரில் படப்பிடிப்பாளராகவே சினிமாத்துறைக்குள் வந்தார். தொடர்ந்து 20 படங்களில் ஸ்ரில் படப்பிடிப்பாளராக கடமையாற்றினார். அல்லப்பு கெதர (அடுத்தவீடு) என்ற படத்துடனேயே அவரது பணி ஆரம்பமாகியது. 1974இல் திரைப்படக் கூட்டுத்தாபனத்தால் நடத்தப்பட்ட குறுந்திரைப்பட ஒளிப்பதிவுப் பயிற்சியில் பங்கு கொண்டார் . அதன் பின்னரே திரைப்பட ஒளிப்பதிவுத்துறைக்கு அவர் வந்தர். அப்படி அவர் முதலில் ஒளிப்பதிவு செய்த படம் ‘சிதாறா' என்பதாகும். எம்.ஜே.ஆப்தீன் தயாரித்த “சித்ரா' என்ற படத்துடன் ‘ஒபமட்டவிஸ்வாசய' (உன்மீது எனக்கு நம்பிக்கை) "கதரகம ரூமதி (கதிர்காம அழகி) "சுட்டே போன்ற படங்களுக்கு வீ.சிவசுப்பிரமணியமே ஒளிப்பதிவு
122

பொன்விழாக் கண்ட சிங்களச் சினிமா
செய்தார். ‘மாலகிறவி (மாலை அணிந்த கிளி) 'ஹித்தவதி (காதலி) "புத்துணி மட சமாவென்ன’ (பிள்ளைகளே என்னை மன்னியுங்கள்) "எதத்சண்டியா அதத் சண்டியா’ (அன்றும் சண்டியன் இன்றும் சண்டியன்) போன்ற பல படங்களுக்கும் ஒளிப்பதிவு
செய்தார்.
బిళ్ల
சிங்களப் பாடல் ஒன்று ஒலிப்பதிவின்போது இடமிருந்து வலமாக) சுவர்ணலதா, தர்மதாச வல்பொல, கே.ராணி, மொஹிதீன்பேக், ஜமுனா ராணி ஆகியோர்.
இப் பொழுது சினிமாத் துறையிலிருந்து விலகியிருந்தாலும் ஸ்ரில் படப்பிடிப்பில் கொடர்ந்து ஈடுபடுகிறார்.
123

Page 72
தம்பிஐயா தேவதாஸ்
இவரைப் போலவே எஸ் தெய்வேந்திரன், என்.செல்லத்துரை, எம்.எம்.அமின் போன்றோரும் Ꭵ Ꭵ Ꮆu) சிங் களப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள்.
சினிமாத்துறையில் நடன அமைப்பு என்பது பிரதான அம்சமாகும். அக்கால பிரபல நடிகைகளான சந்திரகலா, ஹெலன்குமாரி, பரினாலை என்போர் பல சிங்களப்படங்களுக்கு நடன இயக்குனர்களாகவும் இருந்திருக்கிறார்கள். சில சிங்களப்படங்களில் பரத நாட்டியங்கள் கூட இடம்பெற்றிருக்கின்றன. “வலம்புரி
என்ற சிங்களப்படத்ததில் பல பரதநாட்டியக்காட்சிகள் இடம்பெற்றன. இதற்கான நடன அமைப்பை இயக் கரிய வர் பரிர பல நர் த் த கி வாசு கி சண்முகம்பிள்ளையாவார்.
மோகன் குமார் என்ற தமிழ் நடிகர் ‘சர்மிளாவின் இதயராகம்' படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்தவர். இவர் புகழ்பெற்ற ஒரு நடன இயக்குநராவார். பல சிங் களப் படங்களுக்கு நடன இயக் குனராக கடமையாற்றியிருக்கிறார். இவரும் மல்லிகா கீர்த்தியும் சேர்ந்து நாற்பதுக்கும் மேற்பட்ட சிங்களப்படங்களுக்கு நடன இயக்குநர்களாக விளங்கியிருக்கிறார்கள். "ஹொந்தின் நெத்தம் நரகின்', 'சக் விதிர ஜா', ‘ரஜகெல்லோ" ‘ர ஜசெல்லம", "சண்டி ரஜனி", "உதுரதகுன", "லவ் இன் பேங்கொக் போன்ற படங்களில் இடம்பெற்ற இவர்களின் நடன அமைப்புக்கள் பலராலும்
124

பொன்விழாக் கண்ட சிங்களச் சினிமா
பாராட்டப் பட்ட  ைவ - நந் த குமார் என் ற நடனக் கலைஞரின் நடனங்களும் பல சிங்களப் படங்களில் இடம்பெற்றன.
ஒப்பனைக் கலையில் பல தமிழர்கள் சிறந்து விளங்கினார்கள். லெனின் மொறாயஸ் முதலில் ஒப்பனைக் காலைஞராகவே சினிமா உலகில் பிரவேசித்தார்.
மோகன் குமார் நடிகர் மட்டுமல்ல 42க்கு மேற்பட்ட சிங்களப்
படங்களில் நடன இயக்குநராகவும் விளங்கினார். இங்கு மோகன்குமாரும் மல்லிகாவும் ஜீவன், ரோஹிகா, பிரடி சில்வா ஆகியோருக்கு நடனம் சொல்லிக்கொடுக்கிறார்கள்.
சுப்பையா என்ற ‘சுப்பு பல சிங்களப்படங்களுக்கு ஒப்பனை செய்தார். எஸ்.செல்வராஜாவும் பல
படங்களுக்கு ஒப்பனை செய்தார். லால் என்ற
125

Page 73
தம்பிஐயா தேவதாஸ்
இளைஞரும் இத்துறையில் சிறந்து விளங்கினார். எம்.எச்.ஏ.கபூர் பழம்பெரும் ஒப்பனையாளராவார்.
சினிமாத்துறையில் படங்களை டெவலப் செய்வதை இரசாயனம் என்று இலங்கையில் அழைக்கிறார்கள். இத்துறையில் ஜொஹர் என்பவர் சிறந்து விளங்கினார். எஸ்.திருநாவுக்கரசும் இத்துறையில் பெயர் போனவர். இராஜரெத்தினமும் இத்துறையில் நீண்டகாலம் சேவை செய்தார்.
சிங்களச் சினிமா உலகின் ஒலிப்பதிவுத்துறையில் சுண்டிக்குளி சோமேசகரன் புகழ்பெற்ற ஒருவராக விளங்கினார்.
தற்போது கனடாவில் வாழும் சாரங்கராஜா மற்றும் கே.பாலசிங்கம், கே.பாலசுப்பிரமணியம் ஹரிஹரன் போன்றோரும் புகழ்பெற்ற ஒலிப்பதிவாளர்களாவர். கே.பாலசிங்கம் ஒலிப்பதிவு செய்த முதலாவது படத்தின் பெயர் "சண்டியா"
என்பதாகும்.
126

பொன்விழாக் கண்ட சிங்களச் சினிமா
9. ஒரு படம் - இரண்டு மொழிகள்
சில சிங்களப்படங்கள் இரு மொழிப்படங்களாக வெளிவந் திருக்கின்றன. சிங் களமும் தமிழும் அப்படங்களில் இடம்பெற்றன. தென்னிந்தியத் தமிழ்ப்படங்கள் சிலவற்றில் சிங்கள நடிகர் நடிகையர்கள் நடித்திருக்கிறார்கள்.
இந்தியாவில் முதல் தமிழ்ப்டமான காளிதாஸ் 1931இல் திரையிடப்பட்டது. இப்படத்தில் ஓர் அதிசயம்.
கதாநாயகி தமிழில் பேசுவாள், பாடுவாள் ஆனால் அவளது கேள்விகளுக்கு கதாநாயகன் தெலுங்கில்தான் பதில் சொல்லுவான். அவ்வப்போது துணை நடிகர்கள் இந்தியிலும் பேசியிருக்கிறார்கள். இதனால் இந்தியாவின் முதல் தெலுங்குப் படமும் காளிதாஸ்தான்.
127

Page 74
தம்பிஐயா தேவதாஸ்
இப்படியான லட்சணத்தில் தான் தமிழ் தெலுங்குப்படங்கள் வளர்ந்தன. சினிமா பற்றிய அறிவின்மையும் பூரணமான திரைப்படக் கருவிகள் இல் லா த துமே இவ் வாறான நிலை க் குக் காரணமாயிருந்தன.
இலங்கையில் இரண்டு மொழி பேசும் மூவின மக்கள் வாழ்கிறார்கள். எனவே சிங்களத்திலும் தமிழிலும் ஒரு படம் தயாரித்தால் என்ன என்று சில புத்திஜீவிகள் யோசித்தனர்.
அப்படி யோசித்ததன் பலனாகப் பிறந்த படமே சருங்கலே இப்படம் சிங்களத்துடன் தமிழும் பேசியது. தமிழர் ஒருவர் பற்றிய கதையே சிங்களத்தில் திரைப்படமாக்கப்பட்டது.
சிங்களத் திரைப்பட உலகம் 50 வருட கால வரலாற்றைத் தாண்டுகிறது. இந்தக் கால இடைவெளிக்குள் அவர்கள் பல்வேறு முயற்சிகளைச் செய்திருக்கிறார்கள். தென்னிந்தியத் தமிழ்படங்களை அப்படியே பிரதி பண்ணி ஆரம்பமான அவர்களது சினிமா வரலாறு இப்பொழுது சர்வதேச தரத்துக்கு ஏற்ற வகையில் வளர்ந்திருக்கிறது. தேசிய பிரச்சிைைனய அலசும் பல சிங் களத் திரைப் படங்கள் உருவாகியுள்ளன. அவற்றினுள் ‘சருங்கலே' என்ற திரைப் படத் தைப் பற்றி மிகவும் விசேடமாக குறிபிட்டாகவேண்டும்.
128

பொன்விழாக் கண்ட சிங்களச் சினிமா
‘சருங்கலே' என்னும் சிங்களச் சொல்லின் அர்த்தம் பட்டம். இது பெயரளவில் சிங்களப்படமாக விளங்கினாலும் பெரும்பாலும் தமிழ்ப் பாத்திரங்களின் கதையாகவே விளங்கியது.
சருங்கலே திரைப்படத்தின் கதை இதுதான்.
நடராஜா என்பவர் யாழ்ப்பாணத்து உயர் சாதிக்காரர்.
'சருங்கொலே' படத்தை நெறியாண்ட இயக்குநர் சுனில் ஆரியரத்ன. அவருக்கு தங்கமணி என்றொரு தங்கை. அவள் தாழ் குல வாலிபனைக் காதலிக்கிறாள். இந்தக் காதலுக்கு சாதிப்பிரச்சினை குறிக்கிடவே அவள் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்கிறாள். இந்த நிகழ்ச்சி
129

Page 75
தம்பிஐயா தேவதாஸ்
காரணமாக நடராஜா யாழ்ப் பணத்திலிருந்து வெளியேறி கொழும் பரில் நிரந் த ரமா கக் குடியேறிவிடுகிறார்.
நடராஜாவின் வீட்டுக்கு அருகில் சைமன் என்னும் வியாபாரியும் வசிக்கின்றான். சைமன் குடிபோதையில் வரும்போதெல்லாம் நடராஜாவை தகாத வார்த்தைகளால் ஏசுவான். ஆனால் அவர்மீது அவனுக்கு அனபும் இருந்தது.
இவ்வேளையில் இனக்கலவரம் ஆரம்பமாகிறது. நடராஜாவுடன் ஒரே காரியாலயத்தில் வேலை செய்யும் குணே என்ற கனவான் நடராஜாவுடன் நின்றால் தனக்கும் ஆபத்து என்று எண்ணி அவனைத் தனியே விட்டு விலகி விடுகிறான். ஆனால் படிப்பறிவு இல்லாத கசிப்பு வியாபாரியான சைமன் நடராஜாவைக் காப்பாற்ற ஊரையே எதிர்த்து நிற்கிறான். ஆனாலும் இன வெறியர்கள் நடராஜாவைக் கொன்று விடுகிறார்கள். சைமனின் மடியில் நடராஜாவின் உயிர் பிரிகிறது.
இதுதான் ‘சருங்கலே" என்ற திரைப்படத்தின் கதைச் சுருக்கம் இதன் மூலக் கதையை பிரபல சிங்கள நடிகரான காமினி பொன்சேகா எழுதியிருந்தார். தமிழ் உரையாடல்களை திருமதி யோகா பாலச்சந்திரன் எழுத சுனில் ஆரியரத்ன என்ற சிங்கள இளைஞர் படத்தை இயக்கினார்.
இவர் யாழ்ப்பாணப் பலக்கழகத்தில் சில காலம் விரிவுரையாளராகக் கடமையாற்றியவர். அந்த
130

பொன்விழாக் கண்ட சிங்களச் சினிமா
அனுபவம் காரணமாகத்தான் தமிழ்ப் பாத்திரங்களை அவரால் நிஜமாகவே உருவாக்க முடிந்தது போலும். தமிழ்மக்கள் மத்தியில் நிலவும் சாதிப்பிரச்சினை, பழக்க வழக்கங்கள் எல்லாம் இப்படத்தின் மூலம் தென்பகுதிக்கு அறிமுகமாகின எனலாம். யாழ்ப்பாணக் கிராமப் பகுதிகளுக்கே உரித்தான விறாந்தையுடன் கூடிய கல்வீடு, பனை, வேலி, துலாவுடன் கூடிய கிணறு, ஆட்டுக்கொட்டில் போன்ற காட்சிகள் மட்டுமல்ல தமிழ்த்திருமண விழாவில் மணமக்கள் பால் பழம் பரிமாறும் காட்சி போன்றவை எல்லாம் இப்படத்தில் இடம்பெற்றன.
‘சருங்கொலே' படத்தில் நடராஜாவாக தோன்றும் காமினி பொன்சேகாவுடன் ஒரு சிறுமி (1979) இன்னும் தெளிவாகச் சொல்வதானால் "பொ ன் மணி’, ‘வா டைக் காற்று' போன் ற தமிழ்ப்படங்களில் வீசுகின்ற யாழப்பாண மண்வாசனை
131

Page 76
தம்பிஐயா தேவதாஸ்
இப்படத்தில் மிக அதிகமாக வீசியது எனலாம். தமிழ் உரையாடல்கள் யாழ்ப்பாணப் பேச்சு வழக்கிலேயே அமைந்திருந்தன.
"கதிர்காமக் கந்தன் தமிழ் மக்களின் கடவுள், மகாவிஷ்ணுவும் தமிழர்களின் கடவுளே. அந்தக் கடவுள்களை சிங்கள மக்களும் வணங்குகிறார்கள். இப்படி இருக்கும்போது சிங்கள மக்கள் தமிழ் மக்களை ஏன் விரோதிக்கிறார்கள்" என்ற சிங்கள உரையாடலும். நான் ஒரு ஹரிஜன இந்து. ஆனால் நான் உயர்குல இந்துக்களின் கொடுமைகளால் தான் வேதக்காரனாக மாறினேன்' என்று இடம்பெறும் தமிழ் உரையாடல்களும் ரசிகர்களின் உள்ளத்தை சிந்திக்கத் தூண்டின.
பிரபல சிங்கள நடிகரான காமினி பொன்சேகா நடராஜா என்ற பாத்திரத்தில் தோன்றி தமிழ் பேசி அபாரமாக நடித்தார். வேட்டியும் சால்வையும் அணிந்து நெற்றியில் சந்தனப் பொட்டு வைத்துக் கொண்டு அசல் யாழ்ப்பாணத்தவர் போல தோன்றினார். அவரது தங்கை தங்கமணியாக பரீனாலை நடித்தார். இப்படத்தில் இடம்பெற்ற தமிழ்ப்பாடலை கலாவதி சின்னசாமி பாடினார். பாடல்களுக்கு விக்டர் ரத்நாயக்க இசை அமைத்தார். சிங்களப்பாடலொன்றில் நாதஸ்வரமும் தவிலும் சேர்ந்து ஒலித்தன.
பல வருடங்கள் திரையிடப்படாமல் தடை செய்யப்பட்டிருந்த இப்படம், இறுதியாக 1979ஆம் ஆண்டு திரையிடப்பட்டிருந்தது. அக்காலத்தில் இப்படம்
132

பொன்விழாக் கண்ட சிங்களச் சினிமா
பலவாறு விமர்சிக்கப்பட்டது. இது ஒரு சிங்களப்படமாக இருந்தபோதிலும் முற்று முழுதாக தமிழ்ப் பாத்திரங்களின் கதையாகவே இருந்தது.
மகாராஜா நிறுவனத்தினர் தயாரித்த "தீ" என்ற படத்தில் ரஜனிகாந்தும் இலங்கை அழகி தாமரா சுப்பிரமணியமும (1981)
ஆனாலும் இதை இரு மொழிப்படம் என்றே கூற வேண்டும். தேசிய ரீதியில் அக்காலத்தில் இது ஒரு புது முயற்சியாக விளங்கியது. இரு மொழி ரசிகர்களையும் இன ஒற்றுமை பற்றி சிந்திக்கவும் வைத்த படம் ‘சருங்கலே' என்றே கூற வேண்டும். இப்பொழுது இரு மொழி பேசும் தொலைக்காட்சி நாடகங்கள் ஒளிபரப்பப்படுகின்றன. அதற்கு அடி எடுத்துக் கொடுத்தது "சருங்கலே திரைப்படமே
எனலாம்.
133

Page 77
தம்பிஐயா தேவதாஸ்
‘சருங் கலே திரையிடப் பட்டு பல வருடங்களுக்குப் பின் அதே போல் இன்னுமொரு படம் திரைக்கு வந்தது. அப்படம் சிங்களம் தமிழுடன் ஆங்கிலமும் பேசியது. அப்படத்தின் பெயர் "ஆதர கதாவ’ (காதல்கதை) என்பதாகும்.
பிரபல கல்வியாளர் ஜேம்ஸ் இரத்தினத்தின் புதல்வரான சந்திரன் இரத்தினம், சினிமா ஆர்வம் காரணமாக ஹொலிவூட் சென்று படத்துறையில் பயிற்சி பெற்றார். பின்னர் இலங்கை வந்து ஒரு சிங் களப்படத்தையும் இன்னுமொரு ஆங்கிலப் படத்தையும் தயாரித்தார். சிங்களப்படத்தின் பெயர் "ஜனேலய' (யன்னல்) ஆங்கிலப்படத்தின் பெயர் 'த வின்டோ’ என்பதாகும். இவை இரண்டும் சந்திரன் இரத்தினத்திற்கு நற் பெயர் கொடுத்தன.
இப்படத்துக்கான கதைவசனம் எழுதி, இயக்கி தயாரித்தவர் சந்திரன் இரத்தினம். இப்படத்தில் இடம்பெற்ற தமிழ் உரையாடல்களை அமரர் சில்லையூர் செல்வராஜன் எழுதினார்.
தமிழ் இளைஞனும் சிங்கள யுவதியும் காதல் கொள்கிறார்கள். பெரிய எதிர்ப்புக்கள் வருகின்றன. இறுதியில் காதலர்கள் இருவரும் நெருப்பில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டு இணைகின்றனர். இதுதான் படத்தின் கதைச் சுருக்கம்.
சில்லையூர் செல்வராஜனின் மகளாக பரீனாலை தமிழில் பேசி நடித்தார். சில்லையூர் செல்வராஜனோடு அவரது மகன்மாரான திலீப், பாஸ்கரன் ஆகியோரும் பட்த்தில் நடித்தனர்.
134

பொன்விழாக் கண்ட சிங்களச் சினிமா
இப் படத் தில் இடம் பெற்ற சரிங் கள உரையாடல்களை சந்திரன் இரத்தினமே எழுதினார். இப்படம் 1985ஆம் ஆண்டு திரைக்கு வந்தது. 1983ஆம் ஆண்டு கலவரத்தை அடுத்து இத்திரைப்படம் வந்ததால் பலராலும் சிலாகித்துக் கூறப்பட்டது.
இப்படத்துக்கான கதை வசனம் எழுதி இயக்கி தயாரித்தவர் என்ற வகையில் சந்திரன் இரத்தினம் அப்பொழுது பெரிதும் பாராட்டப்பட்டார்.
இப்படிப்பட்ட ஆற்றல் மிகு இந்த இளைஞர்கூட இலங்கையில் ஒரு தமிழ் ப் படத் தையாவது உருவாக்காதது துரதிர்ஷ்டமானதே!
வெற்றிப்படங்களை வேற்று மொழியில் டப் செய்வது சினிமாத்துறையினரின் வழக்கமாகும். இதுவரை சில சிங்களப்படங்களே தமிழ் மொழியில் டப் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் சில மோசனமான படங்கள். என்ன தரத்தைக் கண்டு தமிழாக்கினார்களோ தெரியவில்லை. இலங்கைத் தமிழ்ப்படங்கள் மீது ரசிகர்கள் வெறுப்புக் கொண்டமைக்கு இதுவும் ஒரு காரணமாகும். - சில தமிழ்ப்படங்கள் சிங்களப்படங்களாக டப் செய்யப்ட்டன. இவை பிரமாண்டமான தயாரிபபுகள் என்பதே அதற்குக் காரணம். "இரத்தத்தின் இரத்தமே என்ற படத்தை யுத்தியட்ட சண்டியா' என்ற பெயரில் மைக்கல் விக்டோரியா தயாரித்தார். பைலட்பிரேம்நாத் திரைப்படத்தை அதே பெயரில் சிங்களத்திலும் டப் செய்தார்கள். அவை கூட்டுத் தயாரிப்புகளாகும். மகாராஜா நிறுவனத்தினர் தயாரித்த "தீ" என்ற
135

Page 78
தம்பிஐயா தேவதாஸ்
படத்தையும் சிங்களத்தில் டப்செய்திருக்கலாம். தவற விட்டுவிட்டார்கள். இலங்கையில் தயாரான கலப்படமற்ற ஒரு தேசிய கலர்ப்படமும் சிங்களத்தில் டப் செய்யப்பட்டு திரைக்கு வர இருக்கிறது. ஏ.ஏ.ஜுனைதீன் சிங்களத் தமிழ்த்திரையுலகில் நீண்ட காலம் கடமையாற்றிய கலைஞர். பல சிங்கள தமிழ் ஆங்கிலப் படங்களுக்கு உதவி இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். கடுமையான உழைப்புடன் அவர் தயாரித்த படம் தான் ‘சர்மிளாவின் இதயராகம்" பிரபலமான சிங்கள, தமிழ், முஸ்லிம் கலைஞர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். இப்படத்தையே ஜுனைதின் ‘ஒபமட்ட வாசனா (நீயே எனக்கு அதிர்ஷ்டம்) என்ற பெயரில் சிங்களப்படமாக்கியிருக்கிறார். அது விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. இரு மொழி பேசிய ஒரு படத்தைப் பற்றிக் குறிப்பிட்டேன்.
ஒரு மொழிப்படம் வேற்றுமொழிப்படமாக மாறிய விதங்களைப் பற்றி எழுதினேன். ஒரு மொழி பேசிய இரண்டு நாடுகளின் படத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
சிங்கள சினிமா உலகின் ஐம்பது வருட வரலாற்றில் இதுவரை சுமார் 860 சிங்களப்படங்கள் வெளிவந்துள்ளன. இவற்றில் ஆரம்பத்தில் உருவான 43 படங்களும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டன.
பின்னாளில் சிங்களப்படங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படவேயில்லை. ஆனால் பிரபல சிங்கள நடிகர்களும் நடிகைகளும் இந்தியா சென்று அங்கு தயாரான தமிழ்ப்படங்களில் நடித்திருக்கிறார்கள்.
136

பொன்விழாக் கண்ட சிங்களச் சினிமா
இம்முயற்சி இப்பொழுது மட்டும் ஆரம்பிக்கவில்லை. அந்தக் காலத்திலேயே ஆரம்பமாகிவிட்டது. அதாவது 1936இல் ஆரம்பமாகிவிட்டது.
பல சிங்கள தமிழ்ப்படங்களை இயக்கிய எம்.வீ. பாலன்
தவமணிதேவி யாழ்ப்பாணத்தில் இணுவில் என்ற கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். அக்கால அரசியலவாதியொருவரின் உறவினர். 1936இல் இவர் இந்தியாவுக்குச் சென்று இந்தியத் தமிழ்ப்படமொன்றில் நடித்தார். அதுவும் நீச்சல் உடையில். அவர் அப்போது அளித்த பேட்டிகள் பத்திரிகைகளில் பரபரப்பாக வெளிவந்தன.
'எழிலான தோற்றம் எடுப்பான சரீரம் இயற்கையிலே தவமணிக்கு' எனப் பத்திரிகைகள் எழுதின தவமணி பத் திரிகை க்கு பேட் டி
137

Page 79
தம்பிஐயா தேவதாஸ்
கொடுத்தபோது இலங்கையிலே எடுக்கப்பட்ட தனது போட்டோக்களையும் பிரசுரிக்கக் கொடுத்தார். அந்த போட்டோக்களில் தவமணிதேவி நீச்சலுடையில் நின்று புன்னகை புரிந்த வண்ணம் காட்சி அளித்தார். அந்தப் படங்களின் கீழ் "பதிவிரதை அகல்யாவாக நடிக்க இலங்கையிலிருந்து வந்திருக்கும் தவமணிதேவி குடும்பப் பெண்கள் தாராளமாக சினிமாவில் நடிக்க வேண்டும்" என்று கூறுகிறார் என்று குறிப்புக்களும் எழுதப்பட்டிருந்தன.
இது நடந்தது 1936ஆம் ஆண்டிலாகும். தவமணிதேவியைப்போல் இந்தக் காலத்திலும் சில இலங்கை நடிகைகள் இந்தியா சென்று சினிமாவில் நடித்திருக்கிறார்கள். கூட்டுத்தயாரிப்பு என்ற பெயரில் தென்னிந்திய நடிகர்கள் இங்கு வந்து நடித்தார்கள். சிவாஜிகணேசன், ரஜனிகாந்த், முத்துராமன், சுந்தரராஜன், பூரீதேவி, மனோரமா என்று அவர்களின் பட்டியல் நீள்கிறது. இங்கிருந்து போனவர்கள் காமினி பொன்சேகா, விஜயகுமாரதுங்க, மாலினி பொன்சேகா, கீதாகுமாரசிங்க, சபீதா பெரேரா என்று பட்டியல் தொடர்கிறது.
‘பைலட் பிரேம் நாத் படத்துக் காக தென்னிந்தியாவின் கலைஞர் பட்டாளமே இலங்கைக்கு வந்தது. அது இந்திய இலங்கைத் தயாரிப்பாளர்களின் கூட்டுத்தயாரிப்பு கதாநாயகன் சிவாஜிகணேசன்,
138

பொன்விழாக் கண்ட சிங்களச் சினிமா
கதாநாயகியை இலங்கையில் தேர்ந்தெடுத்தார்கள். தொழில்நுட்பக் கலைஞர்கள் எல்லேருமே இந்தியர்கள்.
'பைலட் பிறேம்நாத் படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் சிங்கள நடிகை மாலினி பொன்சேகாவும் தோன்றும் திருமணக் காட்சி. (1979)
அப்பொழுது சிங்களத் திரையுலகின் முன்னணிக் கதாநாயகியாக விளங்கியவர், மாலினி பொன்சேகா பின்னாளில் சிங் களப்படங்களை இயக்கியதுடன்
தயாரிக்கவும் செய்தார்.
139

Page 80
தம்பிஐயா தேவதாஸ்
சிவாஜிகணேசனும் மாலினி பொன்சேகாவும் நடித்த 'பைலட் பிரேம்நாத் பிரமாண்டமான முறையில் உருவாகியது. பெரிய பாத்திரங்களில் தென்னிந்திய நடிகர்கள் நடித்தார்கள். சிறுசிறு பாத்திரங்களில் இலங்கை நடிகர்கள் தோன்றினார்கள்.
பிரமாண்டமான இத்தயாரிப்பு பிரமாதமாகவே இலங்கையிலும் இந்தியாவிலும் ஓடியது. பின்னாளில் இப்படம் இதே பெயரில் சிங்களப்படமாக டப் செய்து இலங்கையின் பல பாகங்களிலும் ஓடியது.
சிவாஜிகணேசன் சிங்களம் பேசியதைக் கண்டு தமிழ் ரசிகர் கள் ஆச்சாரியப் பட் டார் கள் . சிவாஜிகணேசனை சிங்களம் பேச வைப்பதில் உதவி இயக்குநர் அமரர் எஸ்.என்.தனரத்தினம் பெரும்
பணிபுரிந்திருக்கிறார். *ィ
இத்திரைப்படத்தின் மூலமே முதன் முதலில் அதிகமான இலங்கைகக் காட்சிகள் தமிழ் திரைப்படத்தில் இடம்பிடித்தன.
புதுப் புதுப் பெண் களைத் திரையுலகிற்கு கூட்டிவருவதில் தென்னிந்திய இயக்குநர் பூரீதர் கெட்டிக்காரர். ஜெயலலிதா, வெண்ணிற ஆடை நிர்மலா,
சச்சு, பூரீகாந் என்பவர்களெல்லாம் அவரால்
140

பொன்விழாக் கண்ட சிங்களச் சினிமா
அறிமுகப்படுத்தப்பட்டவர்களே. இந்த பூரீதர் தான் "மோகனப் புன்னகை' திரைப்படத்துக்கு Jgil நடிகையைத் தேடி இலங்கை வந்தார். இவரது பார்வையில் பலர் அகப்பட்டனர். கீதா குமாரசிங்கவைத் தெரிவு செய்தார். மோகனப் புன்னகையில்
சிவாஜிகணேசனுக்கு ஜோடியாக கீதா குமாரசிங்கா
நடித்தார்.
தமிழ்ப்படங்களை சிங்கள மொழிக்கு டப் செய்த பிரபல புகைப்படப் பிடிப்பாளர் மைக்கல் விக்டோரியா,
தென்னிந்தியக் கலைஞர்களைக் கொண்டு இலங்கையில் உருவாக்கிய இன்னுமொரு தமிழ்ப்படம் 'ரத்தத்தின் ரத்தமே ஆகும். இப்படத்தில் கீதா
141

Page 81
தம்பிஐயா தேவதாஸ்
குமாரசிங்கா படுகவர்ச்சியாக நடித்ததன் காரணமாக படம் இலங்கையிலே நூறு நாட்கள் ஓடியது. இந்தியாவிலும் வெளியிட்டார்கள் ஒரு சில நாட்களே
gèl 9-lLigh.
கீதா குமாரசிங்கா, அனோஜா வீரசிங்க ஆகியோர் கவர்ச்சியாக நடித்த 'ரத்தத்தின் ரத்தமே பின்னாளில் "யுக்தியட்ட சண்டியா' என்ற பெயரில் சிங்களப்படமாக டப் செய்யப்பட்டது.
எம்.ரி.வீ. தொலைக்காட்சி நிறுவனம் மகாராஜா நிறுவனத்தின் ஓர் அங்கமாகும். இந்த மகாராஜா நிறுவனம் அப்பொழுது கூட்டுத்தயாரிப்பு மூலம் ஒரு தமிழ்ப்படத்தை உருவாக்கியது. அப்படத்தின் பெயர் "தீ" என்பதாகும். இப்படத்தின் கதாநாயகன் ரஜனிகாந்த் ஆவார். ரஜனிக்கு ஜோடியாக நடிக்க இலங்கைப் பெண் ஒரு வைரத் தேடினார்கள். இலங்கை அழகுராணி ஒருவர் கிடைத்தார். அவரது பெயர் தாமரா சுப்பிரமணியம் ஆகும். தாமராவின் தாய் சிங் களவர் தந்தை தமிழர் ரஜனிகாந்தும் , தாமராசுப்பிரமணியமும் ஜோடியாக நடிக்க "தீ" படம் பரபரப்பாக ஓடியது. வர்த்தக ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றது.
142

பொன்விழாக் கண்ட சிங்களச் சினிமா
10. பரிசு பெற்ற சிங்களத் திரைப்படங்கள் சிங்களத்திரையுலகின் பிரபல நடிகர் காமினி பொன்சேகா தென்னிந்தியா சென்று நீலக்கடலின் ஒரத்திலே’ என்ற படத்தில் நடித்தார். தென்னிந்திய சினிமாப் பாணியில் தலையில் விக் வைத்து நடித்தபொழுது இளம் நடிகராகவே தோன்றினார். டென்மார்க்ஷண், தயாரித்த 'இளையநிலா" படத்திலும் நடித்தார்.
சிங் களத் திரைப்பட இயக்குநர் திமித்தி வீரரத்தின தென்னிந்தியக் கலைஞர்களுடன் சேர்ந்து உருவாக்கிய படம் நங்கூரம்' ஆகும். இப்படத்தில் முத்துராமனும் லஷ்மியும் ஜோடியாக நடித்தார்கள். இப் படத்தில் இரண்டாவது கதாநாயகனாக விஜயகுமாரதுங்க நடித்தார். இந்தியாவில் வாழும் 'சிலோன் முருகேசு" என்பவர் நங்கூரம்' படத்தின்
இன்னுமொரு தயாரிப்பாளராவார்.
143

Page 82
தம்பிஐயா தேவதாஸ்
இந்தியாவில், குறிப்பாகத் தென்னிந்தியாவிலேயே அதிக படங்கள் தயாரிக் கப்படுகின்றன. அவற்றில் பெரும்பாலான படங்கள் தமிழ்ப்டங்களாகும். ஆனால் அவை சர்வதேசப் பரிசுகள் எதுவும் பெறவில்லை. ஆனால் கடந்த 50 ஆண்டுகளில் 860 சிங்களப்படங்களே திரையிடப்பட்டுள்ளனவாயினும் பல சர்வதேச பரிசுகளை அவை பெற்றுள்ளன. நடிகர்களுக்கும் பரிசுகள் கிடைத்துள்ளன.
சிங்கள மொழியில் பிரபல எழுத்தாளராக விளங்கியவர் அமரர் மார்டின் விக்கிரமசிங்க. இவர் பல்வேறு சிறந்த நாவல்களை எழுதியுள்ளார். அவற்றில் ஒரு நாவலின் பெயரே "கம்பெர லிய' என்பதாகும். "கிராமப் பிறழ்வு' என்பது அதன் பொருள்.
இந்நாவலை இதே பெயரில் திரைப்படமாக உருவாக்கினார். லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ். இப்படமே சர்வதேச ரீதியிலான விரு தொன்றைப் பெற்ற முதலாவது சிங்களப்படமாகும். 1965ஆம் ஆண்டு இந் தியா வரில் நடை பெற்ற மு ன் றாவது உலகத்திரைப்படவிழாவில் "கம் பெரலிய படத்துக்கு தங்கமயில் விருது கிடைத்தது. அன்று முதல் சிங்களத்திரையுலகின் பெயர் சர்வதேச ரீதியில் பிரபலமானது.
இலங்கையின் சத்யஜித்ரே என்று கணிக்கப்படும் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ், ரே காவ (ரேகை) என்ற படத்தின் மூலம் 1956இல் சிங்களத்திரை உலகில் நுழைந்தவர்.
144

பொன்விழாக் கண்ட சிங்களச் சினிமா
1947முதல் சிங்களப்பேசும் படங்கள் வந்தன. அனால் 1956இன் பின்பே (லெஸ்டரின் வருகையின் பின்பு) சிங்களப்படங்கள் வளரத்தொடங்கின என்று கூறுவர். முன்பு வந்தவை சிங்களம் பேசும் படங்களே தவிர, சிங்களப் படங்களல்ல. பின்பு வந்தவையே சிங் களப்படங்கள்’ என்று சில விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள்.
நங்கூரம் கூட்டுத்தயாரிப்பில் இந்திய நடிகை லக்சுமியும் இலங்கை நடிகர் விஜய குமாரதுங்கவும். (1980)
1965 ஆம் ஆண் டு இனி னு மொரு சிங்களத்திரைப்படத்துக்கும் சர்வதேச தரத்திலான விருது கிடைத்தது. டி.பி.நிஹாலசிங்ஹ உருவாக்கிய 'பக்தி' என்ற விவரணத் திரைப்படத்துக்கு காடிவ்
145

Page 83
தம்பிஐயா தேவதாஸ்
விருது கிடைத்தது. சிங்கள விவரணப் படமொன்றுக்குப் பரிசு கிடைத்த முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
1969ஆம் ஆண்டு காலப்பகுதியில் சிங்களத் திரை உலகில் 'கபுட்டா சஹா மினிஹா' (காகமும்
மனிதனும்) என்ற குறுந்திரைப்படம் சிறப்பாகப் பேசப்பட்டது. அதே ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற நான்காவது உலகத்திரைப்படவிழாவில் இரண்டாவது சிறந்த குறுந்திரைப்படமாக வெள்ளிமயில் விருது இப்படத்துக்குக் கிடைத்தது. வெற்றிவிருது கிடைத்த பின் இப்படத்தை கொழும்பில் செய்திப் படங்களுடன்
சேர்த்துக்காட்டினார்கள். மஹகமகேகர என்ற கலைஞர் ஒரேயொரு திரைப்படத்தையே உருவாக்கியிருந்தார். அந்தப்படத்தின் பெயர் 'துங்மங் ஹந்திய (முச்சந்தி)
என்பதாகும். இத்திரைப்படம் 1972இல் டாஷ்கண்ட்
திரைப்பட விழாவில் டிப்ளோமா சான்றிதழ் பெற்றது. லெஸ் டர் ஜேம்ஸ் பீரிஸ் உருவாக்கிய இன்னுமொரு படம் 'நிதானய" (புதையல்) என்பதாகும். இப்படத்துக்கு வெனிஸ் உலகத்திரைப்பட விழாவில்
வெள்ளிச் சிங்கம் விருது கிடைத்தது. புதையல்
பெறுவதற்காக தன் மனைவியைக் கொன்ற ஒருவனின்
கதை இது.
146

பொன்விழாக் கண்ட சிங்களச் சினிமா
ஆரம்ப முதல் பல சிங் களப் படங்களை உருவாக்கியவர் கே.ஏ.டபிள்யு.பெரேரா ஆவார். இவர் தயாரித்த படமொன்றின் பெயர் லசந்தா' (பிறை) என்பதாகும். 1974இல் இத்தாலியில் நடைபெற்ற இருபதாவது சர் வ தேச கத் தோலிக் கத் திரைப்படவிழாவில் ஒட்டோ வெற்றிப்பதக்கத்தை பெற்றது.
அநேகமான சிங்களப் படங்களுக்கு தொகுப்பு (எடிடிங்) செய்த எம்.எஸ்.அலிமான்.
இவ்வாறு சிங் களத் திரை உலகின் திரைப்படங்கள் மட்டும் சர்வதேசப் பரிசுகள் பெறவில்லை. நடிகர், நடிகையர் கூட சர்வதேச
147

Page 84
தம்பிஐயா தேவதாஸ்
பரிசுகளைப் பெற்றிருக்கிறார்கள். இலங்கையில் உருவான தமிழ்ப் படமான 'பொன்மணி"யை இயக்கியவர் தர்மசேன பத்திராஜ. அவர் இயக்கிய சிங்களப்படமொன்றின் பெயர் 'எயாதென் லொக்கு லமயா' (அவள் இப்பொழுது பெரிய பிள்ளை) என்பதாகும். இப்படத்தில் கதாநாயகியாக நடித்த மாலினி பொன்சேகாவுக்கு ஒன்பதாவது மொஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான டிப்ளோமா சான்றிதழ் கிடைத்தது. இலங்கை நடிகை ஒருவருக்குக் கிடைத்த முதலாவது சர்வதேச விருது இதுவாகும்.
லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் உருவாக்கிய இன்னுமொரு படத்தின் பெயர் "அகசின் பொலவட்ட (ஆகாயத்திலிருந்து பூமிக்கு) என்பதாகும். 1978இல் கெய்ரோவில் நடைபெற்ற சர்வதேசத் திரைப்பட விழாவில் அக்தேட்டன் விருது இப்படத்துக்குக் கிடைத் தது. மு ன் றாம் உலகின் சசிறந்த திரைப்படங்களுக்கு எகிப்து நாட்டின் சினிமாச் சங்கம் வழங்கும் விருது இதுவாகும்.
சிங்களத் திரை உலகில் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிசுக்கு அடுத்த இடத்தில் வைத்து மதிப்பிடத்தக்கவர். டைரஸ் தொடவத்த ஆவார். ‘ஹாறலக்ச' என்ற சிங்களப்படத்தை "நான்கு லட்சம்' என்ற பெயரில்
தமிழ்ப்படமாகத் தந்தவர். சிறுவர்களுக்காக இவர்
148

பொன்விழாக் கண்ட சிங்களச் சினிமா
உருவாக்கிய படம் ‘ஹந்தயா (நிலா") என்பதாகும். இப்படம் 1980இல் இத்தாலியில் நடைபெற்ற செலார்னோ சர்வதேச சிறுவர் திரைப்படவிழாவில் சிறந்த படமாகத் தெரிவு செய்யப்பட்டது.
சிங்களத்திலும் தமிழிலும் ஒரேநேரத்தில் தயாரான படக்காட்சி இது. தமிழ்ப்பதிப்பான 'அனுராகம்’ திரைப்படத்தில் எம்.சிவராமும் சந்திரகலாவும். (1978)
அனோஜா வீரசிங்க 'இரத்தின் இரத்தமே படத்தில் கவர்ச்சியாக நடித்தவர். "மல்தெனியே சிமியோன்' என்ற படத்தில் இவரே கதாநாயகி. 1987 இல் நடைபெற்ற 11ஆவது இந்தியத் திரைப்பட விழாவில் இவருக்கு இப்படத்தில்
149

Page 85
தம்பிஐயா தேவதாஸ்
நடித்தமைக்காக சிறந்த நடிகைக்கான விருது கிடைத்தது.
உள்நாட்டுத் திரைப்படவிழாக்களில் பல நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் சிறந்த கலைஞர்களுக்கான பரிசுகள் கிடைத்திருக்கின்றன. ஆண்டு தோறும் நடைபெறும் ஜனாதிபதி பரிசு இவற்றில் ஒன்றாகும். 1981இல் கீதா குமாரசிங்காவுக்கு சிறந்த நடிகைக்கான பரிசு கிடைத்தது. அவர் சிறந்த நடிகையாக நடித்த படத்தின் பெயர் 'ரத்தத்தின் ரத்தமே என்பதாகும்.
சிங்களப் படங்களுக்கு உள்நாட்டிலும் பல பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஜனாதிபதி பரிசு, சரசவிய பரிசு, கத்தோலிக்க சினிமாச் சங்கப் பரிசு என்று பல பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இவை வருடத்திற்கு ஒரு முறை வழங்கப்படுகின்றன. இப்படிச் சிங்களப்படங்கள் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பரிசுகள் பெற்று வருகின்றன. அவ்வெற்றிக்கெல்லாம் தமிழ் முஸ்லிம் கலைஞர்களும் பின் னனியில் உழைத் துள்ளனர் . ஆனாலும் அவர்களுக்கு குறிப்பிடத்தக்க அளவுக்கு பரிசுகள் கிடைக்கவில்லை.
பாரிசுகள் கிடைக் கவரில் லை என் பது உண்மையானாலும் பொருளாதார ரீதியில் தமிழ் பேசுவோ rர் L I @) வெற் றரிப் படங் களை உருவாக்கியிருக்கிறார்கள் என்பதும் உண்மைய்ே.
ஒரு மொழியில் தயாரிக்கப்பட்ட படத்துக்கு வசனங்கைளயும் பாடல்கைளயும் வேறு மொழியில்
150

பொன்விழாக் கண்ட சிங்களச் சினிமா
எழுதி திரைப்படத்துடன் பொருத்திவிடுவது டப் படங்கள் உருவாவதற்கு வழி செய்தன. ஒரே கதையை இரண்டு மொழியில் தனித்தனியாகத் தயாரிப்பதை திருப்பித் தயாரித்தல் என்று கூறுவர். ‘மின்சாரக்கனவு, 'அவ்வை சண்முகி போன்ற படங்கள் தமிழிலும் இந்தியிலும் தனித் தனியாகத் தயாரிக் கப்பட்ட
படங்களாகும்.
தமிழிலும் சிங்களத்திலும் ஒரே நேரத்தில் தயாரான படக்காட்சி. சிங்களப் பதிப்பான “கீதிகா' என்ற படத்தில் விஜயகுமாரதுங்கவும் மாலினி பொன்சேகாவும்
இம்முறை இலங்கையிலும் 1978ஆம் ஆண்டு கையாளப்பட்டது. ஒரே கதை இரண்டு மொழி, ஒரே டைரக்டர், தயாரிப்பாளர். இரண்டு கதாநாயகர்
151

Page 86
தம்பிஐயா தேவதாஸ்
கதாநாயகிகள், ஒரே இசையமைபபுஆனால் இரண்டு மொழிப்படங்கள். தமிழ்ப்படத்தின் பெயர் 'அநுராகம்', சிங்களப்படத்தின் பெயர் “கீதிகா' தமிழ்ப்படத்தின் ஜோடி சிவராமும், சந்திர கலாவும் . சிங் களப் படத்தின் ஜோடி விஜயகுமாரதுங்கவும் மாலினி பொன்சேகாவும்.
இவ்விரு படங்களினதும் தயாரிப்பாளரும் ஒருவராக இருப்பதால் தயாரிபபுச் செலவுகள் சிறிது குறைந்தன எனலாம்.
பின்னாளில் வி.பி.கணேசனும் இவ்வாறான முயற்சியொன்றை மேற்கொண்டார். அவர் ஒரே நேரத்தில் ‘ஆஞ்சனா” என்ற சிங்களப் படத்தையும் நாடுபோற்ற வாழ்க’ என்ற தமிழ்ப்படத்தையும் தயாரித்தார்.
கிறமபோன் காலத்திலேயே (1922-1975) பல தமிழ் முஸ்லிம் பாடகர்கள் சிங்கள இசை உலகில் பிரபலம் பெற்று விளங்கினர். இவர்களில் ஏ.எம்.யராஜ், எஸ்.ஏ அஹமட், மொஹிதீன், ஏ.ஆர்.எம்.இப்ராஹிம், மொஹிதீன் பெக், ருக்மணிதேவி, லச்சுமிபாய் போன்றோர் முக்கியமானவர்கள்.
அக்காலத்தில் கொழும்பில் கலையார்வம்மிக்க மூன்று பிரபல வியாபாரிகள் இருந்தனர். நயினா மரிக் கார் , மாஸ்டர் வேலர் , எ பொறோ லரி, பெர்னாண்டோ ஆகியோரே அவர்கள். இவர்கள் இந்தியாவிலிருந்து இசைக்கலைஞர்களை இலங்கைக்கு வரவழைத்து பாடல்களை கிறமபோன் இசைத்தட்டில் ஒலிப்பதிவு செய்து வியாபாரம் செய்தனர்.
152

பொன்விழாக் கண்ட சிங்களச் சினிமா
அவ்வாறு இலங்கை வந்தவர்களில் ஒருவர்தான் பிரமாதமாக ஆர்மோனியம் வாசிக்கும் மொஹமட் கெளஸ்மாஸ்டர். இவரை இலங்கையில் தங்கி இலங்கை இசை உலகிற்கு ஆதரவு தரும்படி இந்த மூன்று வியாபாரிகளும் வேண் டினர் . அவர் களின் வேண் டு கோளை ஏ ற் ற கெளஸ் மாஸ் டர் இலங்கையிலேயே தங்கினார்.
இலங்கையின் ‘சத்தியஜித்ரே எனப் போற்றப்படும் பிரபல திரைப்பட இயக்குநர் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ்.
அதுவரை வட இந்திய இசையையும் தமிழ் மெட்டுக்களையும் தழுவிவந்த சிங்கள இசையை தேசிய இசைக்கு மாற்றினார்.
முதலாவது திரையிடப்பட்ட சிங்களப்படம் ‘கடவுனு பொறந்துவ' ஆகும். ஆனால் முதலில் தயாரிக்கத் தொடங்கிய படம் "அசோகமாலா' ஆகும்.
153

Page 87
தம்பிஐயா தேவதாஸ்
இதில் இடம்பெற்ற அத்தனை பாடல்களையும் கெளஸ்மாஸ்டரே இசையமைத்தார். பிறபடங்களை தழுவாமல் தனித்துவமான முறையில் இசையமைத்தார். 1952இல் உருவான குசுமலதா என்ற டப் தமிழ்ப்படத்துக்கும் இசை அமைத்தவர் இந்தக்
கெளஸ்மாஸ்டரே. . . .
சிங்கள நாடகங்களுக்கும் சினிமாவுக்கும் ஒரு பாதகமான அம்சமாக இந்துஸ்தானி இசை விளங்கியது. கிராம போன் காலத் துப் பாடல்கள் கூட இந் திப் பாடல் களின் மெட் டை த் தழுவி
உருவாகியிருக்கின்றன. - .
சிங்கள மொழியில் லக்சுமிபாய் பாடல்களை பாடியிருக்கிறார். அவற்றுள் பிரபலமான பாடல் ஒன்று ‘சிந்தாமணி’ என்ற படத்தின் பாடல் மெட்டைத் தழுவியிருந்தது.
மொஹிதீன் பெக் பாடிய ‘புத்தம் சரணம் கச்சாமி என்ற பாடல் கூட ஹிந்திப் பாடல் ஒன்றின்
தழுவலாகும்.
1947இல் வெளிவந்த முதலாவது சிங்களப் பேசும்படமான ‘கடவுனு பொறந்துவ' படத்துக்கு நாராயண ஐயர் இசை அமைத்தார். இப்படத்தில்
இடம்பெற்ற சில பாடல்கள் "ரத்தன்' என்ற
154

பொன்விழாக் கண்ட சிங்களச் சினிமா
ஹிந்திப்படத்தில் இடம்பெற்ற பாடல்களின் மெட்டைத் தழுவியிருந்தன.
சிங்களத் திரையுலகத்துக்கு தங்கமயில் பரிசை வாங்கித் தந்த "கம்பெரலிய திரைப்படக் காட்சி. காமினி பொன்சேகாவும் ஹின் தெணியவும். (1963)
சிங்களத்திரைப்படங்களிலும் வானொலி சிங்கள மெல்லிசைப்பாடல்களிலும் வட இந்திய இசை அமைப்பாளர் நெள சாத் அலியின் பாதிப்பு இடம்பெற்றது. இவர் இசை அமைத்த பாடல்களின் பல மெட்டுக்கள் சிங் களத் திரைப்பாடல்களில்
அதிகமாக கையாளப்பட்டுள்ளன.
155

Page 88
தம்பிஐயா தேவதாஸ்
இவ்வாறான ஹிந்தி அல்லது தமிழ்ப்பாடல்களின் பொருள்களையே அப்படியே கொப்பி அடித்து சில பாடல்கள் வெளியாகியிருக்கின்றன. 'நெஞ்சில் ஓர் ஆலயம்' என்ற படத்தில் இடம்பெற்ற ‘எங்கிருந்தாலும் வாழ்க’ என்ற பாடலை அதே பொருளில் சிங்களப்படமொன்றில் கொப்பி அடித்திருந்தார்கள். "சீதேவி என்றொரு சிங்களப்படம் வெளிவந்தது. அதன் விளம்பரத்தைப் பாருங்கள்.
'நீங்கள் எல்லோரும் பாடப் போகின்ற பிரபலமான ஹிந்திப்பாடல்களின் மெட்டுக்களை இந்தப் படத்தில் கேட்கலாம். லைவ் மற்றும் அனோகி போன்ற பட்ங்களில் இடம்பெற்ற மெட்டுக்கைளத் தழுவி உருவாக்கப்பட்ட சிங்களப்பாடல்கள் இவ்வாறு அந்த விளம்பரம் கூறியது.
யாரும் எதையும் கொப்பியடிக்கலாம் என்பதால் ஒரே மெட்டைத் தழுவிய பலபாடல்களும் பல படங்களிலும் இடம்பெற்றன.
சுவீப் டிக்கட், அதுல்வீமதஹனம், துஷாரா, அபிரகச, சுரேகா போன்ற சிங்களப்படங்கள் வெற்றி பெற்றமைக்குக் காரணம் இவ்வாறான ஹிந்திப்பாடல் மெட்டுக்களைத் தழுவி பாடல்களை உருவாக்கியதே
6 T6ŐI LI fI fI 9561 .
ஆரம்பகாலத்தில் சிங் களப்படங்களுக்கு தென்னிந்திய இசை அமைப்பாளர்களே இசை
156.

பொன்விழாக் கண்ட சிங்களச் சினிமா
அமைத்தனர். முதலாவது சிங்களப் படமான 'கடவுனு பொறொந்துவ'வுக்கும் இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதலாவது படமான பண்டா நகரயட்ட பெமினிம வுக்கும் இசை அமைத்தவர் நாராயண ஐயராவார்.
லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் இயக்கிய இன்னுமொரு படமான
'நிதானய வில் ஒரு காட்சி. காமினி பொன்சேகாவும் மாலினி பொன்சேகாவும் தோன்றுகிறார்கள். (1972)
'சுஜாதா', 'சடசுலங்’, ‘சூறயா' ஆகிய படங்களுக்கு வீதக்ஷிணாமூர்த்தி இசை அமைத்தார். இவர் சம்சாரம், மதுரை வீரன் போன்ற பிரபல தமிழ்ப் படங்களுக்கும் இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
157

Page 89
தம்பிஐயா தேவதாஸ்
பராசக்தி போன்ற பிரபல தமிழ்ப்படங்களுக்கு இசை அமைத்தவர் ஆர்.சுதர்சனம் ஆவார். 'தொஸ்த்தர என்ற சிங்களப்படத்துக்கும் இவரே இசையமைத்தார். நாடோடி மன்னன், ஏழைபடும்பாடு போன்ற பிரபல தமிழ்ப்படங்களுக்கு இசையமைத்தவர் எஸ்.எம்.சுப்பையா நாயுடு ஆவார். குரசேன' என்ற சிங்களப்படத்துக்கும் இவரே இசையமைப்பாளர்.
"உதும் விஸ்வாசாய', 'கலே ஹந்த’ ஆகிய படங்களுக்கு எஸ்.எஸ் வேதா இசையமைத்தார். ரீ.ஆர்.பாப்பா, சுரத்தலி, சுனிதா, சுபத்ரா ஆகிய படங்களுக்கு இசையமைத்தார். சி.என்.பாண்டுரங்கன் இசையமைத்த படத்தின் பெயர் ‘தேவசுந்தரி என்பதாகும்.
வட இந்தியாவிலுள்ள பிரபாத், ஸ்ரூடியோவில் உருவான ஒரே சிங்களப்படமான தைவயோக’ என்ற படத்துக்கு இசையமைத்தவர் துஜாத் ஹ"சைன் ஆவார். ஏ.எம்.ராஜா, ஜிக்கி, ஜமுனா ராணி, கே.ராணி, பி.சுசீலா, ஜானகி போன்றோர் பல சிங்களப் படங்களில் பாடல்கள் பாடினார் கள் . சிங் களப் படங்கள் இலங்கையில் தயாரிக்கப்பட வேண்டும் என்ற சட்டம் வந்ததும் இலங்கைக் கலைஞர்கள் இசையமைக்கத் தொடங்கினர். அப்படி சிங்களவர் ஒருவர் முதலில் இசையமைத்த படம் அதட்ட வெடிய ஹெட்ட ஹொந்தாய்' (இன்றைய தினத்தை விட நாளை நன்று) சினிமாஸ் குணரத்தினம் தயாரித்து எம்.மாஸ்த்தான் நெறியாண்ட இப்படத்தின் இசையமைப்பாளர்
டபிள்யு.டி.அமரதேவா ஆவார்.
158

பொன்விழாக் கண்ட சிங்களச் சினிமா
1976ஆம் ஆண்டில் கொப்பி பண்ணப்பட்டு உருவாக்கப்பட்ட பாடல்களை உள்ளடக்கிய திரைப்படங்களை தடைசெய்ய வேண்டும் என்று பல சிங்கள இசையமைப்பாளர்கள் விண்ணப்பம் கொண்டு வந்தனர்.
ஆனால் இன்று வரை கொப்பியடித்த பாடல் களை மட்டு மல் ல கொப் பியடித் து உருவாக்கப்பட்ட படங்களைக்கூட கட்டுப்படுத்த முடியவில்லை.
லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் இயக்கிய ‘றேகாவ' திரைப்படத்தில் ஒரு காட்சி. (1956) எவர் எவர் எந்தப் பாடலை எந்தப்படத்திலிருந்து கொப்பியடித்தார்கள் என்பதை ஒரு சாதனம் ரசிகர்களுக்கு இப்பொழுது வெளிச்சம் போட்டுக்
159

Page 90
தம்பிஐயா தேவதாஸ்
காட்டிவருகிறது. அதுதான் நம் நாட்டில் பெருகிவிட்ட தொலைக்காட்சி என்ற சாதனமாகும்.
1977ஆம் ஆண்டு இலங்கையில் திறந்த பொருளாதாரக் கொள்கை அறிமுகமானது. அதனால் தேசிய திரைப்படக் கூட்டுத் தாபனத்தின் பல இறுக்கங்கள் தளர்ந்தன. முன்பு இயக்குநர்கள் என்று பதிவு செய்தவர்களே படங்களை இயக்க முடியும். ஆனால் 1979இல் இந்த நிலை மாறியது. யாரும் இலங்கைப் படங்களை இயக்கலாம். எவரும் இந்தியப்படங்களை இறக்குமதி செய்யலாம் என்ற நிலை ஏற்பட்டது. பணம் உள்ளவர்கள் எல்லோரும் படங்களை இறக்குமதி செய்தார்கள். இதனால் திரைப் படக் கூட்டுத் தாபனம் சசிறிது நெருக்கடிக்குள்ளானது.
1979இல் இலங்கையில் தொலைக்காட்சி சேவை அறிமுகமாகியது. தியேட்டருக்குச் செல்வோர் குறைந்தனர். தொலைக்காட்சி மூலம் பழைய தமிழ்ப்படங்கள் காட்டப்பட்டன. இது வைர தாம் பார்த்த சிங்களப்படங்களின் மூல வேர் தமிழ்ப்படங்கள் அல்லது ஹிந்திப்படங்கள் என்று உணர்ந்தனர். தாம்
கேட்கும் பாடல்களின் மெட்டுக்கள் கூட அந்நிய மொழியின் தழுவல் என்பதை அறிந்து கொண்டனர்.
சிங் களப்படங்களை இயக்கிய நெறியாளர்கள்,
சிங்களப்பாடல்களுக்கு இசை வழங்கிய இசை
160

பொன்விழாக் கண்ட சிங்களச் சினிமா
அமைப்பாளர்கள் அனைவரினதும் திறமைகளை
சிங்கள மக்கள் புரிந்து கொண்டனர்.
உண்மையான சிங்கள சினிமாவின் உதயம் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் ரே காவ ரேகை) என்ற படத்துடன் ஆரம்பமாகிறது என்பர். அப்படம் 1956இல்
திரையிடப்பட்டது. ஐம்பத்தாறாம் ஆண்டில் அரசியல்
சமூக மாற்றம் மட்டும் ஏற்படவில்லை. கலை கலாசார ரீதியிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டன.
‘ரேகாவ" என்ற படம் இந்தியச் சினிமாவின் சாயலிலிருந்து நீங்கியிருந்தது. சினிமா என்பது ஒலியும் ஒளியும் மட்டுமல்ல கலை அம்சமும் சேர்ந்திருக்க வேண்டும் என்பதை “ரே காவ" எடுத்துக்காட்டியது.
லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் அவர்கள் இங்கிலாந்தில் குறுந்திரைப்படங்கள் தயாரிப்பதில் அனுபவப்பட்டவர். இலங்கை அரச திரைப்படப்பிரிவிலும் சில காலம்
கடமையாற்றியவர். கிராமத்துக் கதையைப் பின்னணியாகக் கொண்டது "ரேகாவ' என்னும் படமாகும். எங்கள் திரைப்படங்கள் உண்மையாகவே தேசியத்
திரைப்படங்களாக விளங்க வேண்டுமானால் அவை கிராமத்தையும் கிராம வாழ்க்கையையும்
161

Page 91
தம்பிஐயா தேவதாஸ்
பின்னணியாகக் கொண்டவையாக அமைய வேண்டும். இது லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் அவர்களின் கூற்றாகும். “ரே காவ' திரைப்படம் கலை அம்சத்தில் சிறந்து விளங்கினாலும் பொருளாதார ரீதியில் தோல்வி அடைந்தது. இந்தத் திரைப்படத்தைப் பார்த்த சில இரசிகர்கள் அப்பொழுது சில கருத்துக்களை வெளியிட் டார் கள் . அந்த கரு த் துக் கள் வே டிக் கையான  ைவ மட் டு மல் ல வியப்பூட்டுபவையாகவும் இருந்தன.
"இந்தப் படத்தைப் பார்ப்பதற்கு செலவழித்த காசை காகத்துக்கு அப்பம் வாங்கிப் போட்டிருக்கலாம் என்பதுதான் அவர்கள் வெளியிட்ட கருத்து.
“ரே காவ பொருளாதார ரீதியில் பெரும் தோல்வி அடைந்தாலும் அது சிங்களத்திரைப்படத்தின் எதிர் காலத்துக்கு நல் வழிகாட்டியது. கிராமக் கதைகளைத் திரைப்படமாக உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் இதன் பின்பே ஆரம்பமாகியது. இதன் வெளிப்பாடாகவே "குருலுபத்த’, ‘சிகுரு தருவ” போன்ற படங்கள் உருவாகின.
விமர்சகர்கள் சிறந்த சிங்களப்படங்களாக இரண்டைக் குறிப்பிடுவர். அவை இரண்டையும் உருவாக்கியவர் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் ஆவார். அவை தான் கம்பெரலிய (கிராமப் பிறழ்வு).
'நிதானய’ (புதையல்) ஆகிய இரண்டுமாகும். திரைப்படமாக உருவாகிய கலையம்சம் மிக்க முதலாவது நாவலும் “கம் பெர லிய ஆகும். இப்படத்குக்கே சர்வதேச பரிசு கிடைத்தது.
162

பொன்விழாக் கண்ட சிங்களச் சினிமா
1960ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இளம் சினிமாக்கலைஞர்கள் சிங்களச் சினிமா உலகில் நுழைந்தனர். இவர்களில் முக்கியமானவர் 'சாமா" என்ற படத்தை நெறியாண்ட ஜி.டி.எஸ்.பெரேரா ஆவார். பரிசு பெற்ற 'காகமும் மனிதனும்' என்ற படத்தை இயக்கிய சுகதபால செனரத் ‘சாமா' மூலமே திரையுலகில் நுழைந்தவர். இவரைப் போன்ற கலைஞர்கள் இதுவரை நல்ல படங்களைத் தந்துகொண்டு இருக்கின்றனர். ஆனால் பொருளாதார ரீதியில் படங்கள் வெற்றி பெறத் தவறுகின்றன. பழம் பெரும் தயாரிப்பாளர்கள் இப்பொழுது சிங்களப் படங்கள் தயாரிப்பதில்லை.
நான் 1951ஆம் ஆண்டு பிறந்தேன். அப்பொழுது சிங்களச் சினிமாவுக்கு வயது நான்கு ஆகும். அதாவது நான் பிறப்பதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பே சிங்களச் சினிமா பிறந்து விட்டது. 1947ஆம் ஆண்டு முதல் 1997ஆம் ஆண்டு வரையான ஐம்பது ஆண்டுகளில் திரையிடப்பட்ட சிங்களப் படங்களின் வரலாற்றை சுருக்கமாக எழுதினேன். இத்திரைப்பட உலகில் கடமையாற்றிய தமிழ், முஸ்லிம் கலைஞர்களை வெளிச்சம் போட்டுக் காட்டுவதே எனது நோக்கமாகும். எனது நோக்கத்தை பெரும்பாலும் அடைந்துவிட்டேன் என்றே எண்ணுகின்றேன்; பெருமையடைகிறேன்.
163

Page 92


Page 93


Page 94


Page 95
நூலாசிரியர் பற்றி
இந்நூலாசிரியர் திரு. தம்பிஐயா தே யாழ்ப்பாணம், புங்குடுதீவு தம்பிஐயா தம்பதிகளின் மூத்த புதல்வராவார்.
யாழ் . புங் குடுதீவு, றி கணேச வித்தியாலயம், கொழும்பு விவேகான கல்லூரி, கொழும்பு அலெக்சான கல்லூரிஆகியவற்றின் பழைய மாணவர
பேராதனைப் பல்கலைக் கழகத்தின் அரசரி தமிழ், இந்த கலாச்சாரம் ஆகிய பாடங் பயின்று B.A பட்டம் பெற்றவர்.
கொழும்பு பல்கலைக் கழகத்தில் பத்திரி பட்டம் பெற்றவர்.
மஹரகம தேசிய கல்வி நிறுவகத்தில் '
மட்டக்களப்பு ஆசிரிய கலாசாலையில் பயிற்சி பெற்றவர்.
கொ/ காள்ளுப்பிட்டி மெதடிஸ் த
மயாற்றுகிறார்.
இலங்கை வானொலியில் அறிவிப் நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்குகிறார். ர சுயாதீன தொலைக்காட்சியில் சினிமாநிக
 
 
 
 
 
 

வதாளில் ஐஸ்வரி
LD 635 T ந்தாக் if DT T6)JTJ.
வியல், சி' திரு தம்பிஐயா தேவதாஸ்
Dé54), 6) (JL1560. DJ Dip, in Journalism'
B. Ed. Lb6l pD6)j.
பயின்று பயிற்றப்பட்ட ஆசிரியராக
மிழ் வித்தியாலயத்தில் தற்பொழுது
Tđojih கடமையாற்றுகிறார். 4. பவாஹினியில் கல்வி நிகழ்ச்சிகளையும் ழ்ச்சிளையும் தொகுத்து வழங்குகிறார்.
மாவின் கதை 1994 இல் ஏற்கனவே கள் மூன்றை தமிழாக்கியவர். பல்வேறு பான்விழாக் கண்ட சிங்களச் சினிமா
கும்
5 - 96735 - O 7 |
Price Rs. 200/-