கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இராவணேசன்

Page 1


Page 2


Page 3

இராவணேசன்
(வடமோடி நாடகம்)
கலாநிதி சி. மெளனகுரு
リ勾 விபுலம் வெளியீடு - 8 Vipulam Publication - 8

Page 4
இராவணேசன் (வடமோடி நாடகம்)
கலாநிதி சி. மெளனகுரு
C All rights reserved
First published June, 1998. Page: 56 Copies: 500 Size : Demy
publishers: விபுலம் வெளியீடு மட்டக்களப்பு இலங்கை
Price: 50/-
oyosoLOůL: V Karunanithy
9&ACLTri: Parkar Computers & Publications
293, Royapettah High Road, Royapettah, Chennai , 600 Ol4. Ph: 8266637.

சமர்ப்பணம்
பேராசிரியர் கா. சிவத்தம்பி
வீ. சுந்தரலிங்கம் (சுந்தா) அண்ணர், பராசக்தி அக்கா

Page 5

வெளியீட்டுரை
விபுலத்தின் 8வது வெளியீடு கலாநிதி சி. மெளன குரு எழுதிய இராவணேசன், 1960களின் நடுப் பகுதியில் மிகப் பிரபல்யம் பெற்ற நாடகம் இது.
ஈழத்துத் தமிழருக்கான நாடகத்தினை மீள் கண்டு பிடிப்புச் செய்த, காலம் சென்ற பேராசிரியர் சு. வித்தியானந்தன் மட்டக்களப்புக் கூத்துக்களையே அதன் முன் மாதிரியாகக் கொண்டார். பல்கலைக் கழக மாணாக்கரைக் கொண்டு அவர் தயாரித்தளித்த கர்ணன் போர், நொண்டி நாடகம், இராவணேசன், வாலி வதை என்பனவற்றிற்கு ஊற்றுக்கண் மட்டக் களப்புக் கூத்துக்களே.
இராவனேசன் இப் பாணியிலமைந்த புதிய கூத்து. 1965இல் அன்று மாணவப் பருவத்திலிருந்த மெளனகுரு அவர்களால் எழுதப்பட்ட இக்கூத்து சிற்சில மாற்றங்களுடன் வெளியிடப்படுகிறது. அவருக்கு எம் நன்றிகள்.
க. ஆறுமுகம் விபுலம் வெளியீட்டுக் குழுவினர் சார்பாக.
513/20, திருமலை வீதி, மட்டக்களப்பு, இலங்கை.

Page 6
இராவேணசனை விளங்கிக் கொள்ள ஒரு முன்னுரை
ஈழத்தின் கிழக்குப் பகுதியிலே உள்ள, தமிழர் வாழ்கின்ற பாரம் பரியப் பிரதேசமான மட்டக்களப்புப் பகுதியிலே இரண்டு பாணிகளில் (மோடிகளில்) அமைந்த கூத்துக்கள் இன்றும் பயில் நிலையிலுள் ளன. இவ்வகையில் இங்குள்ள கூத்துக்கள் வடமோடி, தென்மோடி என்றழைக்கப்படுகின்றன. கதைக்கரு, ஆடப்படும் முறை, பாடப்படும் முறை, ஒப்பனை, உடை அமைப்பு என்பனவற்றில் இரண்டு பாணி
களுக்கும் (மோடிகளுக்கும்) இடையே வேறுபாடுகளுண்டு.
இரண்டுமே கதை கூறும் பாணியில் அமைந்த விவரண அரங் காகும் (Narative Theatre). ஆடலும், பாடலுமே இவற்றின் பிரதான ஊடகங்கள். மக்களுக்குத் தெரிந்த கதைகளே இதில் நிகழ்த்தப் பட்டன. இதனால் நாடகத்தின் பாத்திர வார்ப்பு, புது வியாக்கியானம் என்பன இடம் பெறாது போயிற்று.
வடமோடி நாடகமானது, தென்மோடி நாடகத்திற்குப் பின்னர் மட்டக்களப்புக்கு வந்து சேர்ந்ததும், இங்குள்ள முன்னைய நாடக வடிவங்களுடன் தென்மோடியின் சில அமிசங்களையும் பெற்று வளர்ந்ததுமான ஒரு நாடக வடிவமாகும்.
இக்கூத்திற்கும், தமிழ்நாட்டுத் தெருக்கூத்து, கர்னாடக யக்ஷ கானம், மலையாள கதகளி என்பனவற்றிற்குமிடையே சில ஒற்றுமைகள் உண்டென்பர் ஆராய்வாளர். இந்நாடகத்தைப் பழக்குபவர் அண்ணாவியார் என அழைக்கப்படுவர்.
இந்நாடகம் கிராமப் புறத்தில் விடிய விடிய ஆடப்படுகின்ற நாடகமாகும். இதன் மேடை அமைப்பு வட்ட வடிவமானது. மக்கள் சூழ இருந்து பார்வையிடுவது. இவ்வட்டமேடையினை மட்டக்களப்பில் கூத்துக்களரி என அழைப்பர். சூழ மக்கள் இருந்து பார்வையிட, அலங்கரிக்கப்பட்ட இந்த வட்டக்களரியின் நடுவிலே நின்று அண்ணா வியார், எடுபார்ப்பவர் (கொப்பி பார்ப்பவர்), தாளக்காரர் இருவர் (சல்லாரி

கலாநிதி சி. மெளனகுரு 9
அடிப்பவர்), பிற்பட்டுக்காரர் இருவர் ஆகிய அறுவர் கொண்ட சபையோர் எனப்படுவர் இந்நாடகத்தை நடத்திச் செல்வர். அண்ணாவியார் மத்தளத்தை இடுப்பிலே கட்டியபடி களரியின் மத்தியில் நின்றபடி வாசிப்பார். இதனை மத்தளம் அடித்தல் என்பர்.
சபையோர் என்றழைக்கப்படும் இந்த அறுவரும் வட்டக் களரி யில் நடுவிலே நிற்க பார்வையாளரை நோக்கியபடி இந்த அறுவருக் கும் பின்புறம் காட்டியவாறு வட்டக்களரிக்குள் சுற்றி ஆடிப்பாடிக் கூத்தர் கூத்தை நிகழ்த்துவர்.
திறந்தவெளி - வட்டக்களரி ஆனாமையினால் காட்சிகளின் பின் னணியை விளக்கும் திரைச் சீலைகளோ, மேடைப் பொருட்களோ மேடையில் இராது. அண்ணாவியார் அல்லது ஏடுபார்ப்போர் பாடல் மூலம் காட்சிகளையும், நிகழ்ச்சிகளையும் விளக்குவர். ஒருவகையில் இவர்கள் யக்ஷகானத்தின் பாகவதரை ஒத்திருப்பர்.
புதிதாக ஒரு பாத்திரமோ - அதனோடு ஏனைய பாத்திரங்களோ மேடையில் தோன்றுமிடத்து திரைச்சீலை பிடிக்கப்பட்டு அதன் பின்னணியிலேயே பாத்திரம் நின்று தன்னைத் தானே விருத்தம் மூலம் அறிமுகம் செய்து கொள்ளும். அதன் பின்னர் பிடிக்கப்பட்ட திரை எடுபட்ட பின்னர் பாத்திரத்தின் குணாம்சத்திற்குத் தக்கதான ஒரு தாளக்கட்டு (ஜதிக்கோர்வை) இடம் பெறும். அண்ணாவியாரும் சபை யோரும் இத்தாளக்கட்டைக் கூற அதற்குத்தக வடமோடிக்குரிய பல ஆட்டக் கோலங்களை (விசாணம், எட்டு, பொடியடி, ரத்து, நாலடி) ஆடி முடித்த பின் தன்னைப் பற்றியும், தான் வந்த காரணம் பற்றியும் தருவிலே பாடி மேடையைச் சுற்றி ஆட ஆரம்பிக்கும்; உப பாத்திரங்களுடன் பாடல் மூலம் தொடர்பு கொள்ளும்.
தொடர்பு கொள்வதற்கும், பாத்திரங்கள் தமக்குள் தாமே சம்பா ஷணை புரிவதற்கும் விருத்தம், தரு, அகவல், கந்தார்த்தம் முதலான பா, பாவகைகளும், வசனமும் கையாளப்படுகின்றன.
வடமோடியில் தாளக்கட்டுக்கள் முக்கியமானவை. அரசன், அரசி, இளவரசன், வீரர்கள், குரங்குகள், அஃறிணைப் பொருட்கள், தாழ் நிலைப் பாத்திரங்கள் என்பனவற்றிற்கும் தேர் ஏறுதல், குதிரை யிற் செல்லுதல், படை எடுத்தல் என்னும் நிகழ்ச்சிகட்கும் வித்தியாசம் வித்தியாசமான தாளக்கட்டுகள் உண்டு.
மத்தளமும், தாளமுமே (சல்லாரியும்) இந்நாடகத்தில் கையாளப் படும் இசைக்கருவிகளாகும். பாத்திரங்கள் முழங்காலில் இருந்து

Page 7
10 இராவணேசன் - வடமோடி நாடகம்
புறங்கால் வரை இரண்டு கால்களிலும் நிறையச் சதங்கைகள் அணிந்து வரும். மத்தள ஓசையும், சல்லரி ஓசையும், சதங்கை ஒலி யும், உச்சஸ்தாயியில் பாடப்படும் பாடல்களும், கலந்து இரவு முழு வதும் அதிரும் ஒலி இக்கூத்திற்கு ஒரு தனிச் சுவை தரும்.
மட்டக்களப்பு மக்கள் மத்தியில் முன்பு ஒரு கால் அவர்கள் ஊனோடும் உதிரத்தோடும் இக் கூத்துக்கலை இணைந்தும், பிணைந்தும் கிடந்தது. எனவேதான் மட்டக்களப்பை “ஊர் ஊராய்க் கூத்தாடும் ஊரம்மா’ என ஒரு கவிஞர் வருணித்தார்.
யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார் போன்ற ஏனைய தமிழ்ப் பிரதேசங்களிலும் கூத்துக்களுண்டு. எனினும் ஆட்ட முறைகள், மேடை அமைப்பு, அளிக்கை முறை என்பனவற்றில் பழைய முறை களைப் பேணும் இடம் மட்டக்களப்புப் பிரதேசமே. அதற்கான அரசி யல், புவியியல், பொருளாதாரக் காரணங்களுண்டு. இக்கூத்து இங்கு தொழில் முறையாகவோ, தனித்த ஒரு சாதியினராலோ ஆடப் படுவதன்று. அனைத்துச் சாதியினர் மத்தியிலும் இக்கூத்து இருந் துள்ளது. நகரம் சார்ந்த பகுதிகளில் பெரும்பாலும் வடமோடிக் கூத்தும் கிராமம் சார்ந்த பகுதிகளில் பெரும்பாலும் தென்மோடிக் கூத்தும் நடை பெற்றுள்ளன. சில கிராமங்களில் இது ஒரு சமூக விழாவாக அனைத்து மக்களையும் இணைக்கும் கலையாக உள்ளது. இதனா லேயே 1960களில் இது ஈழத்துத் தமிழர் நாடகமாக முகிழ்க்கும் வாய்ப்பையும் பெற்றது.

என்னுரை
1960களில் ஈழத்துத் தமிழரின் நாடகப் பாரியம்பரியத்தை மீள் கண்டுபிடிப்புச் செய்யும் முயற்சிகள் அன்று பேராசிரியர் க. வித்தியானந் தனை மையமாகக் கொண்டு நடைபெற்றன. பேராதனைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறையில் அன்று சிரேஷ்ட விரிவுரையாளராகக் கடமையாற்றிக் கொண்டிருந்த இவர், இலங்கைக் கலைக்கழகத் தமிழ் நாடகக்குழுவின் தலைவராகவும் பணிபுரிந்தார். ஈழத்தில் தமிழர் வாழ் பிரதேசங்களுக்கெல்லாம் பயணம் செய்து, அருகி வந்த கூத்துக் களை மீண்டும் ஆடும்படி கிராம மக்களுக்கு உற்சாகமளித்ததோடு அரசமட்டத்திலும், கற்றோர் மட்டத்திலும் ஆதரவு பெற்றுத் தந்தார்; பழைய கூத்து ஏடுகளைப் பதிப்பித்தார்; பிரதேச மட்டத்தில் அறியப் பட்ட கூத்தைத் தேசிய மட்டத்தில் அறிமுகம் செய்தார்; தமிழரின் நாடக மூலவேர்களைத் தமிழர்க்கு உணர்த்தினார்.
இக்கூத்துக்கலை வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பணிகளுள் ஒன்று மட்டக்களப்புப் பிரதேசத்தில் வட்ட மேடையில், கிராமப்புற பார்வையாளர்களின் முன்னால் ஓர் இரவு முழுவதும் ஆடப்பட்ட தென் மோடி, வடமோடிக் கூத்துக்களை ஒரு மணி நேரத்திற்குட்பட்டதாகச் சுருக்கி படச்சட்டமேடையில் பல்கலைக்கழக மாணாக்கரைக்கொண்டு நகரப் புறப் பார்வையாளர்களின் முன்னால் மேடையிட்டமையாகும். அன்று இக்கூத்துக்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன. இவற்றை அவர் கூத்துக்கள் என அழைக்காமல் வடமோடி நாடகம், தென்மோடி நாடகம் என்றே அழைத்தார். இதன்படி நாடகத் தின் ஒரு பாணியையே கூத்து என்று அவர் கருதினார் என்று தெரிய வருகிறது.
இவ்வண்ணம் இவர் மேடையிட்ட முதல் நாடகம் கர்ணன் போர் (1962) ஆகும். அடுத்து மேடையிட்ட நாடகம் நொண்டி நாடகம் (1963) ஆகும். இவ்விரு கூத்துக்களும் மட்டக்களப்புப் பிரதேசத் தில் ஓர் இரவு முழுவதும் விடியவிடிய ஆடப்பட்ட கூத்துக்களாகும். கர்ணன் போர் வடமோடிக்கூத்து, நொண்டி நாடகம் தென்மோடிக் கூத்து.

Page 8
12 இராவணேசன் - வடமோடி நாடகம்
மட்டக்களப்பைச் சேர்ந்த வந்தாறுமூலை க. செல்லையா அண்ணாவி யாரிடம் இக்கூத்து ஏடுகள் இரண்டும் இருந்தன. இக்கூத்துக்களை பல்கலைக்கழகத்தில் மாணாக்கருக்குப் பயிற்றிய அண்ணாவியார் இவரே. அன்று பல்கலைக்கழகத்தில் நான் பேராசிரியர் சு. வித்தி யானந்தனின் கீழ்க் கல்வி பயின்று கொண்டிருந்தேன். இவ்விரு நாடகங்களையும் சுருக்கி அமைக்கும் பொறுப்பை பேராசிரியர் என்னிடம் ஒப்படைத்தார்.
பேராசிரியர், அண்ணாவியார் ஆகியோர்களின் உதவியும், ஏற் கனவே நான் பெற்றிருந்த கூத்தனுபவங்களும் இந்நாடகங்களைச் சுருக்கி அமைக்க எனக்குப் பெரிதும் துணைபுரிந்தன. இந்த இரு நாடகங்களிலும் பிரதான பாத்திரம் தாங்கி நடிக்கும் வாய்ப்பும் எனக்குக் கிட்டியது (கர்ணன், செட்டியார்).
1965இல் பேராசிரியர், தான் அறிமுகப்படுத்திய பாணிக்கியைய புதிதாக ஒரு வடமோடி நாடகத்தை மேடையிட எண்ணினார். அப்புது நாடகத்தை எழுதும் பொறுப்பையும் அவர் என்னிடம் ஒப்படைத்தார். குருவி தலையிலே பனங்காய் வைத்தது போல எனக்கு அதுபட்டது. என்னால் அதனைச் சிறப்பாகச் செய்ய முடியுமோ என்று நான் பயந் தேன். ஆனால் பேராசிரியர் தந்த உற்சாகமும், தைரியமும் என்னை அந்நாடகத்தை எழுத வைத்தன.
இராவணேசன் - வடமோடி நாடகம் பிறந்தது. மட்டக்களப்பில் இராம நாடகம் என்ற பெயரில் இராமாயணக் கூத்து ஆடப்படுவது உண்டு. அதனை இராம நாடகம் என அழைப்பர். அது வேறு; இராவணேசன் வேறு.
இராவணேசனின் உருவாக்கத்தில் எனக்குப் பல ஆலோசனைகள் தந்து என்னை நெறிப்படுத்திய மிக முக்கியமான ஒருவர் பேராசிரியர் கா. சிவத்தம்பி ஆவார். இவர் அப்போது கலைக்கழகத்தின் தமிழ் நாடகக் குழுவின் செயலாளராகக் கடமையாற்றிக் கொண்டிருந்தார். கலைக்கழகம், மரபுவழி நாடகங்களில் அதிக ஈடுபாடு கொள்ளக் காரணஸ்தராயிருந்தவர் இவரே.
பேராசிரியர் சு. வித்தியானந்தன் தயாரித்த நாடகங்களுக்கு முக்கியமாக வடமோடி, தென்மோடி நாடகங்களுக்கு உதவித் தயாரிப் பாளராக இவர் இருந்தார்.
அன்று உதவி விரிவுரையாளராக இருந்த பேராசிரியர் க. கைலாசபதி, கர்ணன் போருக்கு இவரோடு உதவித் தயாரிப்பாளராக இருந்தார்.

கலாநிதி சி. மெளனகுரு 18.
பேராசிரியர் நா. பாலகிருஷ்ணன் அன்று இக்கூத்துக்களுக்கு 26). அமைப்பாளராக இருந்தார். மாணவராகவும் பின் உதவி விரிவுரை யாளராகவுமிருந்த பேராசிரியர் அ. சண்முகதாஸ் கர்ணன் போரில் கிருஷ் னர் பாத்திரம் தாங்கி நடித்தார். ஏனைய நாடகங்களில் கோரஸ்ஸில் முக்கிய ஒருவராகப் பங்கு கொண்டார். இன்றைய பேராசிரியர் சி. தில்லை நாதன் அன்று லேக் ஹவுஸ் பத்திரிகையில் பணியாற்றிக் கொண்டிருந் தார். இந்நாடகங்களைப் பிரபலப்படுத்தியதில் அவர் பங்கு மிக முக்கியமானது.
இவர்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து வேலை செய்த காலம் அது. இவர்கள் அனைவர்களதும் உதவி எனக்குக் கிடைத்தது. எல்லோரிலும் பேராசிரியர் கா. சிவத்தம்பியின் உதவி விதந்து குறிப் பிடற்குரியது.
இராவனேசன் கதாபாத்திரம் எவ்வாறு உருவாக வேண்டும் என்பதை என் மாணவ மனதில் சிவத்தம்பி நன்கு பதித்தார். கம்ப ராமாயண யுத்த காண்டத்தை எனக்கு அறிமுகம் செய்து, நாடகத் தன்மையுடன் இராவணனின் குணாதிசய வளர்ச்சியை அதிற் கண்ட றிய வழிகாட்டினார்.
கம்பன் படைத்த இராவணன் எப்படிச் சிந்தித்தான்; பேசினான்; அசைந்தான்; நடந்தான், கோபித்தான், சிரித்தான், பார்த்தான் என்பதை யெல்லாம் நுணுக்கமாக நான் கற்க வழி செய்தார். ஒரு வகையில் யுத்த காண்டத்தை எனக்குக் கற்பித்தார் எனலாம். எனக்குள் இராவணன் பாத்திரம் வியாபித்தது. சில காட்சிகளைக் கூத்தோடு ஒட்டி அமைக் கும் முறையை என்னோடு விவாதித்தார். கூத்தாட்ட முறையை எவ் வாறு நாடகத்திற்குப் பாவிக்கலாம் என்ற நுணுக்கங்கள் எனக்குப் பிடிபடலாயின. இராவணேசனும் உருவாகலாயிற்று.
மட்டக்களப்புக் கூத்தில் பாத்திர உருவாக்கம், பாத்திர குணா திசய வளர்ச்சி என்பன இல்லை. கதை கூறும் பண்பே அதில் மிகுதி. இராவனேசனில் இராவணனைத் துன்பியல் நாயகனாகச் (Tragic Hero) சித்தரிக்க எண்ணினோம். தான் செய்த பிழைகளினால் தன் வீழ்ச்சியைத் தானே சந்திக்கின்ற நல்லவனே துன்பியல் நாயகன். அந்த வகையில் இராவணனை உருவாக்கினோம். ஒரு வகையில் வடமோடிக் கூத்தில் இது ஒரு பரிசோதனை எனலாம். இந்நாடகம் பற்றிய ஒரு விஸ்தாரமான விளக்கம், எப்படி பாரம்பரியக் கூத்து முறையில் குணாதிசயத்தினை அடிப்படையாகக் கொண்ட பாத்திரம் உருவாக்கப் பட்டது என்பதனை அறிய உதவும்,

Page 9
14 இராவணேசன் - வடமோடி நாடகம்
இராவணேசனின் வீரம் என்ற குணாம்சம்தான் இதில் முக்கியம். வீரத்திற்காகவே இலங்கையின் வீழ்ச்சியை ஏற்ற தலைவனாக அவன் இதில் சித்தரிக்கப்படுகிறான். கம்பராமாயண யுத்த காண்டத்தை வைத்துத்தான் இதில் அவன் வீரம் புலப்படுத்தப்படுகிறது.
அங்கதன் தூதுடன் முரண் (Conflict) ஆரம்பமாகின்றது. அங்க தன் தூதை அலட்சியம் பண்ணிய இராவணன் மீது இராமன் போர் தொடுக்கிறான். தான் தோற்றும், தன் தம்பி, மகன், படைவீரர் இறந் தும் இராவணன் சோர்ந்தானில்லை. சீதையை விட்டுவிடும்படி அனை வரும் அவனைக் கேட்கின்றனர். சீதையை விடுவதல்ல அவன் பிரச் சினை. எதிரி முன் பணிவதா என்பதே அவன் பிரச்சினை. தான் தோற் பது உறுதி என்று கண்டும் வீர உணர்வு உந்தலினால் இராமனுடன் போரிட்டு மடிகிறான். இராவணனின் வீரம் என்ற குணாம்சத்தினை மையமாக வைத்து நாடகம் பின்னப்பட்டுள்ளது.
அங்கதன் தூது வந்து துன்றிடும் பெண்ணை விட்டுத் தொழுது வாழ்' என்று கூறிய கூற்று இராவணனின் தன்மான உணர்வினைத் தாக்கி விடுகின்றது. மகனை இழந்து கதறுகையிலும் தம்பியை இழந்து தவிக்கையிலும் மகனின் வெற்றிச் செய்திகள் கேட்டுப் பூரிக் கையிலும் இராவணனின் மனித சுபாவமும், மனித நேயமும் தெரி கின்றன. அப்பாசமும் நேசமும் அவன் கோப, வீர நெருப்பிற்கு ஊற்றப் படும் நெய்யாகவும் காட்டப்படுகின்றது. அவனுக்கு ஏற்பட்ட நெருக் கடிகள் யாவும் மேலும் இவற்றை வளர்க்கின்றன. இறுதியில் தான் இறப்பது உறுதி என்று அறிந்தும் இன்றுளார் நாளை மாள்வார் புகழுக்கும் இறுதியுண்டோ எனக்கூறி சமர்க்களம் சென்று உயிர் விடுகின்றான்.
இந்நாடகத்தில் தனி ஒரு பாத்திரத்தின் குணாம்ச வளர்ச்சிதான் பிரதானமாகக் கொள்ளப்படுகிறது. ஏனைய பாத்திரங்கள் இராவனே சனின் குணாதிசயத்தினை வளர்க்கும் வகையிலேயே செயற்படுகின் றன. மண்டோதரி, இந்திரஜித், கும்பகர்ணன், இராமன் ஆகியோருடன் அவன் நடத்தும் சம்பாஷணைகள் இதற்கு உதாரணங்கள். வீரத்திற் காக இலங்கையின் வீழ்ச்சியினை ஏற்ற துயர நாயகனாக இராவண னைப் படைக்க எடுத்த முயற்சி இது.
மட்டக்களப்புக் கூத்திலிருந்து ஒரிரு பாடல்களும், கம்பராமா யணத்திலிருந்து ஓரிரு விருத்தங்களும், ஒரிரு சொற்றொடர்களும் இதில் அளவறிந்து சேர்க்கப்பட்டுள்ளன. காரணப்பொருளே போற்றி'; இந்த இராவணன் வார்த்தை கேட்டு'; 'அண்ட பகிரண்ட முதல்

கலாநிதி சி. மெளனகுரு 15
எனத் தொடங்கும் விருத்தங்கள் இராம நாடகக்கூத்து விருத்தங் களாகும். ‘வாரணம் பொருத மார்பும்', ‘தலையின் மேற் சுமந்த கையள், வென்றிவண் வருவேன்', 'வென்றிலன் என்றபோதும்' என வரும் விருத் தங்கள் கம்பராமாயண விருத்தங்களாகும் இந்திரஜித்தின் வரவுப் பாடல், இந்திரஜித் - அனுமான் சண்டைப் பாடல் என்பன இராம நாடகக் கூத்துப் பாடல்களாகும். இவ்வகையில் எனக்கு இராம காதையை உயரிலக்கியமாகச் செய்த கம்பனும், அதனைக் கூத் திலக்கியமாக்கிய பெயர் தெரியாத மக்கள் புலவன் ஒருவனும் ஆதர்சங்களாகினர்.
இருவருமே இராம காதையை மக்களிடம் கொண்டு சென்றவர் கள். பயில்தொறும் பயில்தொறும் இருவரிலும் நான் புதுமையைக் கண்டேன். இராவணேசன் என்ற புதிய வடமோடி நாடகத்தை இந்தப் பின்னணியிலே தான் எழுதி முடித்தேன். பேராசிரியர் சு. வித்தியானந் தனுக்கு இந்நாடகம் பெரும் புகழைத் தேடித் தந்தது. ஈழத்தின் பல பாகங்களிலும், பிரதான நகரங்களிலும் இது மேடையேறியது.
இதில் இராவணனாக நடிக்கும் வாய்ப்பும் எனக்குக் கிட்டியது. அந்த நடிப்பு முறைகள் பற்றிய விளக்கங்களையும், பயிற்சியையும் தந்தவர் பேராசிரியர் சிவத்தம்பியவர்கள். கீழைத்தேய நடிப்பு முறை கள் பற்றி அவரது விளக்கங்களை விளங்கியும் விளங்காததுமான அவ்வயதில் எனக்குத் தெரிந்தவரை உள்வாங்கிக் கொண்டேன். ஆட்ட முறைகளையும், பாடல் முறைகளையும் எவ்விதம் நாடக மயமாக் கலாம் என்பதுபற்றி என்னுடன் விவாதித்தார்; விளக்கினார்; வழி காட்டி னார். அவை பற்றிய நுட்பங்கள், நாடகத்தை ஒரு பாடநெறியாகப் பயிற்றுவித்த பின்னாட்களில்தான் எனக்குப் புரிய ஆரம்பித்தன. அது இன்னொரு கதை.
ஈழத்து மரபுவழி தமிழ்நாடக வளர்ச்சியில் பேராசிரியர் சிவத்தம்பி யின் பங்களிப்பு மிக முக்கியமானது. 60களில் இருந்து இற்றை வரை அவருடன் சேர்ந்து இத்துறையிற் பணியாற்ற வாய்ப்புக் கிடைத் தமையினால் நான் அதற்கு ஒரு நேர் சாட்சியானேன். அவை எழுத்திற் பொறிக்கப்படுவது அவசியம். அற்புதமான அந்தக் காலங்களை மீண்டும் நினைத்துப் பார்ப்பது ஒரு மகிழ்ச்சிக்கரமான அனுபவம். 1967இல் பேராசிரியர் சு. வித்தியானந்தன் இதே பாணியில் வாலியை நாயகனாகக் கொண்டு ஒரு நாடகம் எழுதித் தரும்படி என்னைக் கேட்டார். அதன் விளைவே 'வாலி வதை வடமோடி நாடகமாகும். அச் சமயம் நான் பல்கலைக்கழகத்தில் இல்லை. 1968ல் பல்கலைக் கழகத்தில் பயின்று கொண்டிருந்த மாணாக்கரைக் கொண்டு அதனை மேடையிட்டார்.

Page 10
16 இராவணேசன் - வடமோடி நாடகம்
இந்நாடகங்களில் அன்று நடித்தவர்களான பேரின்பராஜா (சல்லி யன், நொண்டி, இந்திரஜித்) அழகரத்தினம் (தருமர், அரசன்) கிருஷ்ண மூர்த்தி (நகுலன், சின்னக்கோன்) தணிகாசலம் (அருச்சுனன்) சண்முக தாஸ் (கிருஷ்ணர்) கனகரத்தினம் (பீமன், பொன்னக்கோன்) ஹம்சவல்லி (பொன்னுருவி) மாலதி (தோழி) ஈஸ்பரநிதி (குந்தி) சுகுணா (செட் டிச்சி, மண்டோதரி) எதிர்மன சிங்கம் (சொக்கப் பையன்) பரசுராமன் (இலக்குமணன்) சரவணபவன் (கும்பகர்ணன்) சீவரத்தினம் (வாலி, அங்கதன்) வினாசித்தம்பி (சகாதேவன், பிராமணன்) செல்வனாயகம் (அங்கதன்) ஜெயச்சந்திரா (இலக்குமணன்) ஆகியோர் இன்று பொறுப்பு வாய்ந்த மிகுந்த உயர் பதவிகளில் அமர்ந்து கடமை புரிகின்றனர்.
பல்கலைக்கழக பேராசிரியர்களாக, பல்கலைக்கழக பீடாதிபதி களாக, பல்கலைக்கழகத் துறைத் தலைவர்களாக, அமைச்சின் பிரதம செயலாளர்களாக, மேலதிக அரசாங்க அதிபர்களாக, மக்கள் வங்கிப் பிரதேச முகாமையாளர்களாக, கல்விக் கல்லூரி பீடாதிபதி களாக, கல்விப் பணிப்பாளர்களாக, ஆசிரிய பயிற்சிக் கல்லூரி துணை முதல்வர்களாக, தொழில் அதிபர்களாக அவர்கள் உள்ளனர். ஐரோப்பிய நாடுகளில் காத்திரமான பதவிகளை ஆற்றுகின்றனர். இந் நாடகங்களுக்கு மேடைப் பொறுப்பாளர்களாக இருந்த சிவனேசச் செல்வன், இலங்கையின் பிரதம தினசரிகளான வீரகேசரின் முன்னாள் பிரதம ஆசிரியர்; இந்நாள் தினக்குரல் தினசரியின் பிரதம ஆசிரியர்.
அமீர் அலி, அவுஸ்திரேலியா பல்கலைக்கழகமொன்றின் பொரு ளியல் பேராசிரியர், தர்மலிங்கம் வடக்கு கிழக்கு கல்வி அமைச்சின் உப செயலாளர். பின்னணி பாடியோர்களும் சிறந்த நிலையிலேயுள்ளனர். இவர்களிற் பலர் இன்றும் கூத்துக்கலை வளர்ச்சிக்குத் தம்மாலான உதவிகளைப் புரிந்த வண்ணமுள்ளனர். ஒருவரை ஒருவர் காணும் போது பழைய அக்காலத்து நினைவுகளைப் பரவசத்தோடு பகிர்ந்து கொள்ளுகின்றனர். இவற்றை நான் இங்கு குறிப்பிடுவதற்கு ஒரு முக்கிய காரணமுண்டு.
1960களில் 'கூத்துத்தான் நமது கலை' என்ற மகா வாக்கியத் துடன் தொடங்கிய ஒரு மாபெரும் இயக்கத்தின் முன்னோடிக் கலை ஞர்கள் இவர்கள். பல்கலைக் கழகத்திலே படித்துக் கொண்டிருந்த காலத்தில் கூத்திலே மினக்கெட்டதால் இவர்களின் எதிர்காலம் பாழடைந்து விடவில்லை. மாறாக அவர்களின் ஆளுமை வளர்ச்சிக்கு அது பேருதவி புரிந்தது.
இன்றைய இளம் தலை முறையினர்க்கு இவர்களின் அன்றைய செயல்கள் ஆதர்சமாக அமையட்டும்!

கலாநிதி சி. மெளனகுரு 17
1989இல் பேராசிரியர் சு. வித்தியானந்தன் காலமானார். அவர் மறைந்தபின் அவரது நினைவாக அவர், தயாரித்த இந்த இராவணே சனைத் தயாரித்து மீண்டும் மேடையிட நானும் ரோசிரியர் அ. சண்முகதாஸஸும் திட்டமிட்டோம். புதிய மே.ை1ேற்றத்திற்காக இதனை மீண்டும் புதுக்கி எழுதினேன். முந்திய பிரதியில் இருந்து சில மாற்றங்களைச் செய்தேன். இராவனேசனை அறிமுகம் செய்யும் சமூக விலாசம், இராணவன் வரவுப் பாடல், தாளக்கட்டுக்கள், மண் டோதரி வரவுப் பாடல் என்பன இதிற் புதிதாகச் சேர்க்கப்பட்டவை யாகும். இவை பழைய பிரதியில் இல்லை.
இதனை இடைக்காலத்தில் நான் கற்றுக்கொண்ட நாடக அரங்க அறிவுக்குத் தக நவீன நெறிமுறைகட்கு இயைய - புதிய பாணியில் தயாரிக்க எண்ணியிருந்தேன். உண்மையில் இதனை மேடையிடுவது கூத்துக்கலைக்கு நாம் செய்யும் தொண்டு மாத்திரமல்ல. பேராசிரியர் வித்தியானந்தனுக்குச் செய்யும் நன்றிக் கடனுமாகும்.
கம்பன் கழக விழா மலருக்கு இராமாயணம் சார்ந்ததும் ஈழத்தில் எழுந்ததுமான ஒரு நாடகம் தேவை என்று நண்பர் ஜெயராஜ் என் னைக் கேட்டபோது நான் இந்த நாடகம் பற்றி அவரிடம் சொன்னேன். ஜெயராஜ் அவர்கள் கம்பன் கழக ஜெயராஜ் என அழைக்கப்படுபவர். அவரது தூண்டுதலின் பேரில் 1991இல் நான் யாழ்ப்பாணப் பல் கலைக்கழகத்தில் இருந்தபோது இதனைத் திருத்தி, திருப்பி எழுதி னேன். ஆனால் வெளியிடும் வாய்ப்புக் கிடைக்கவில்லை.
என்னிடம் இந்தப் பிரதி இருப்பதை எனது மிகுந்த அன்பிற்குரிய நண்பரான கருணாநிதி அறிந்தார். கருணாநிதி மட்டக்களப்பின் கூத்துக் கலையில் ஊறியவர். உயர்பட்டத்திற்காக கூத்துக்கலையில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் உயர்பட்ட நிலையில் ஆய்வு செய் தவர்; செய்பவர். இக்கலைமீது உபசாரமாக அன்றி உள்ளார்ந்த உணர்வும்; ஈடுபாடும் மிக்கவர்.
அண்மையில் நான் தமிழகம் சென்றிருந்தபோது கருணாநிதி யுடன் கூத்துக்கலை பற்றி உரையாடும் வாய்ப்புக் கிடைத்தது. உரை யாடலில் இப்பகுதியின் கதையும் இடம்பெற்றது. இதனைத் தயாரிக் கும் எண்ணம் இருப்பதனையும் நான் கருணாநிதியிடம் சொன்னேன். உற்சாகம்மிக்கவரும், உற்சாகம் தருபவருமான கருணாநிதி இதனை அழகாக வெளியிட வேண்டும் என்று மிகுந்த அவாவுற்றார்.
இதன் அவசியமறிந்து இதனை அவர் விபுலத்தின் சார்பில் வெளியிடுகிறார். இம்முயற்சி பலவழிகளிேற் சிறப்புடையது.

Page 11
18 இராவனேசன் - வடமோடி நாடகம்
ஒன்று, மட்டக்களப்பு பிரதேசப் பாணியிலமைந்த இராமாயணம் சார்ந்த நாடகம் ஒன்று அறிமுகம் செய்யப்படுகிறது.
இரண்டு, எல்லோரும் மெல்ல மெல்ல மறந்து வருகின்ற பேரா சிரியர் சு. வித்தியானந்தன் நினைவு கூரப்படுகிறார்.
மூன்று, இந்நாடகத்தைத் தயாரிக்க எனக்கிருந்த ஆசையும் ஆர்வமும் மேலும் தூண்டி விடப்படுகிறது.
இந்நூல் மூவர்க்குச் சமர்ப்பணம். மூவரும் என் வாழ்க்கைப் பாதையில் முக்கிய தடம் பதித்தோர். ஒருவர் பேராசிரியர் கா. சிவத் தம்பி; கூத்தின் வீரியத்தை எனக்கு உபதேசித்த குருநாதர். மற்றவர்கள் சுந்தரலிங்கம் - பராசக்தி தம்பதியினர். ரேடியோ சிலோன் சுந்தா என வும், பின்னர் B.B.C. சுந்தா எனவும் அழைக்கப்படுபவர் சுந்தரலிங்கம் அண்ணர். அவரின் கணிரென்ற குரலிலே சொக்கிக் கிடந்தோர் பலர். நானும் ஒருவன். உதவியே உருவானவர் தானும் மகிழ்வாக இருப்ப தோடு பிறரையும் மகிழ்வாக்கி, மகிழ்வது அவரது குணாதிசயம். அவரிடமிருந்து நான் கற்றவை அதிகம். அன்பும் பண்பும் ஆழ்ந்த புலமையும் கொண்ட பராசக்தி அக்கா அவரின் உற்றதுணை. என், கூத்தாட்டத்தின் அன்றைய பரமரசிகை. இன்றும் என்னைக் காணும் போதெல்லாம் பழைய காலங்களை மீட்டுரைத்து, மீட்டுரைத்து எனக்குள் கனலும் கூத்துணர்வை விசிறி விசிறி விடுபவர். இம். மூவருக்குமான சமர்ப்பணம் எனக்கு மிகுந்த மன நிறைவு தருகிறது.
இந்நூலுக்குள் உள்ள கூத்து வரைபடங்களை வரைந்து தந்தவர் திறமை மிகுந்தவரும், கூத்துக் கலையில் ஈடுபாடு கொண்டவருமான ஓவியை வாசுகி ஜெயசங்கர். இதனை வெளியிடுபவர்கள் விபுலம் வெளியீட்டினர். இவர்கள் அனைவருக்கும் என் மன மார்ந்த நன்றிகள்.
நுண்கலைத்துறை சி. மெளனகுரு கிழக்குப் பல்கலைக்கழகம்,
வந்தாறுமூலை, செங்கலடி,
இலங்கை.
9-6-1998

கலாநிதி சி. மெளனகுரு 19
(1)
(திரை திறக்கப்படுகிறது. மேடை நடுவின் ஒளிப்பொட்டில் அண்ணா வியார் இடுப்பிலே கட்டிய மேளத்துடன் நிற்கிறார். அண்ணாவியார் சபையை வணங்கிவிட்டு மேளத்தில் ஒரு நீண்ட ஐதியை வாசித்து முடிக்கிறார். பின் காப்பு விருத்தம் பாடுகிறார்.
மேடையின் வலது பக்க மூலையில் ஒளிப்பொட்டு விழுகிறது. அதிலே ஏடு பார்ப்
பவர்கள் நிற்கிறார்கள்)
காப்பு விருத்தம்
ஆரணப் பொருளே போற்றி அகில நாயகனே போற்றி பாரளந் தவனே போற்றி பாண்டவர் துரதா போற்றி வாரணம் அழைத்தபோது வந்து காத்தவனே போற்றி காரண வஸ்துவான எங்கள் கண்ணனே போற்றி போற்றி
(அண்ணாவியார் மேடையின் ஒரமாக இடது பக்கம் வந்து நிற்க, தொடர்ந்து தாளத்திற்கு வரும் 4 பெண்களும், 4 ஆண்களுமான பிற்பாட்டுக்காரர்கள் மேடை யில் இடதுபக்கமாக வந்து அண்ணாவியாருடன் நிற்கிறார்கள். ஏடு பார்ப்போர் இருவரும் நடு மேடைக்கு வந்து ஏட்டை அவிழ்த்து பாடத் தொடங்குகின்றனர்)
ஏடு பார்ப்போர் ஒருவர் - அகவல் இராமனின் சரிதம் மிக நீண்ட சரிதம் இறுதியில் வருவதோ யுத்தம் பெரும் யுத்தம். இலங்கையில் இடம் பெற்ற இவ்யுத்த நிகழ்வினை இங்குநாம் உம்முன்னர் நிகழ்த்தவே வந்துளோம்.
யுத்த பேரிகை ஒலித்த நாள் முதலாய் இராவண அரசுக்குள் நிகழ்ந்த பல் நிகழ்வுகள்

Page 12
20
இராவணேசன் - வடமோடி நாடகம்
உணர்வுகள், மூச்சுகள், ஓசைகள், அதிர்வுகள் உபதேசம், இழப்புகள், கவலைகள், சபதங்கள் அனைத்தையும் கொணரவே ஆசையாய் நிற்கிறோம். அவையோரை வணங்கினோம்; ஆடலைத் தொடங்கினோம்.
மற்றவர் - விருத்தம் இராமனின் காதையின் நாயகன் இராமன் ஆவான் யுத்தக் காதையின் நாயகன் இராவணேசன். இராவணன் இலையெனில் இராமனின் புகழ் இல்லை இராவணன் இலையெனில் இராமாயணம் இல்லை கர்வத்தின் சின்னம், கலைகளின் சின்னம், வித்தையின் சின்னம், வீரத்தின் சின்னம், பக்தியின் சின்னம், பலமதின் சின்னம், பாசத்தின் சின்னம், பாவத்தின் சின்னம். இத்தனை புகழ்பூண் இராவணன் தோன்றும் மெத்தனம் மிகும் அவை மேவுவோம் வருக.
(ஏடு பார்ப்போர் தமது இடங்கட்குச் செல்கின்றனர். இரண்டு காவலர்கள் மேடைக்கு வருகிறார்கள். இராவணனின் வரவு பற்றி அறிவிக்கின்றார்கள்)
சமூக விலாசம் அட்ட திக்கெங்கணும் கொட்டி வைத்துள்ளதோர் மட்டிலாப் புகழ் கொண்டவன் இட்டமுடன் மகன் தம்பி தட்டாது கிட்டநின் றேவல் புரி சட்டநாதன்.
அண்டங்கள் கண்டங்கள் ஆகாசமெங்கணும் அதிகார வலுக் கொண்டவன் தண்டம் கை கொண்டவன் எண்டிசைகள் வென்றவன் மிண்டு புகழ் கொண்டு வாழ்வோன்.
மலையை அசைத்தவன் சிவன் நிலை குலைத்தவன் தலை பத்து முடி தரித்தோன் குலையா உளத்தினன் சலியா மனத்தினன் நிலையான பேர் கொண்டவன்.

கலாநிதி சி. மெளனகுரு 21
இலங்கையின் காவலன் இலங்கேஸ்வரன் எனும் இராவணப் பெரும் பிரானார் இச்சபை வருகிறார். இங்கமைதி நிலவுக இது அவர் ஆணை ஏற்க
(காவலர்கள் மேடையை விட்டு அகல்கிறார்கள். மேளம் சங்கு ஒலிக்க இராவணன் மேடைப்பிரவேசம் செய்கிறான். திரைபிடிக்கப்பட்டு இராவணன் மேடைக்கு அழைத்து வரப்படுகிறான். திரை விலக்கப்படுகிறது. இராவணன் விருத்தம் கூறுகிறான்.)
இராவணன் விருத்தம் மும் மூர்த்திகளையோட்டி இம்மாநிலத்திலேயே முரசறைந்தேயிருந்தோன் மூவுலகையாண்டவன் பாவுலகில் வாழ்பவன் முடிபத்து தலையணிந்தோன் இம்மென்னு முன்னமே தேவர்களைச் சிறையிட்டு இம்சித்து மகிழ்ந்திருந்தோன் இந்திரஜித் எனுமொரு வீரனை இவ்வுலகில் ஈன்றெடுத்தே வளர்த்தோன் திரிபுரமெரித்தவொரு விரிசடைக்கடவுளின் திறமான பக்தனாவான். உரமுள்ள நெஞ்சோடு உலகெங்கும் ஆள்கின்ற வரம் பெற்று வாழ்ந்திருப்போன். தொம்மென்று முரசங்கள் தாளமதிசைத்திட தோகையர் கவரிவீச துடிதுடித்தோடிடத் தேவர்கள் சபை மீது இராவணன் வருகின்றானே.
(தாளக்கட்டினை அண்ணாவியாரும், பாடகரும் கூற அதற்குத்தக இராவணன் ஆட்டக்கோலம் புரிகிறான்)
தாளக்கட்டு
தத் தாங்கிட தருகிட திமிதக தாதாகிட தாகிட தோம்தரி தத்தாங்கிட தருகிட திமிதக தாதாகிட தாகிட தோம்தரி தக தக தக தக திகுதிகுதிகுதிகு தாளாங்கு தித்தக தக ததிங்கனதோம் தக ததிங்கின தோம், தக ததிங்கிண தக

Page 13
22 இராவணேசன் - வடமோடி நாடகம்
தாம் தாம் தக-தோம் தரிகிடதக தாம் தாம் தக தோம் தரிகிடதக தீம் தார தில்லானா தோம்தரி தீம் தார தில்லானா தோம்தரி தச்சோம் தோம்தரிதக ததிங்கினதோம் தச்சோம் தோம்தரிதக ததிங்கினதோம் தெய்யா திமித்தக தொங்க ததிங்கினதோம் தெய்யா திமித்தக தொங்க ததிங்கினதோம் தாளாங்கு தித்தக தக ததிங்கினதோம் தக ததிங்கினதோம், தகததிங்கினதோம் தக ததிங்கிணதக.
இராவணன் தரு இராஜராஜ ராஜர் போற்றும் ராஜ மகாராஜன் வந்தான் ராஜதீரன் கொலுவில் வந்தானே.
தகதிக தா திமிதக தெய்தக தாத தெய்ய தாதாளாங்கு ததிங்கின வீர, வீர வீரர் எல்லாம் வந்தடி பணியும் வீரன் வீரதீரன் கொலுவில் வந்தானே
தகதிக தா திமிதக தெய்தக தாத தெய்யதா தளங்கு ததிங்கின.
(மேடையின் வலது பக்க மூலையில் சென்று நிற்கிறான். ஏடு பார்ப்போர் இருவர் மேடையின் மையப் பகுதிக்கு வருகிறார்கள். பாடி முடிந்ததும் பழையபடி தத்தம் இடங்களுக்குச் செல்கிறார்கள்)
ஏடு பார்ப்போர் அகவல்
இராமனின் சேனை வானரசேனை இலங்கையின் எல்லையில் அணிதிரண்டிருந்தன. அணிதிரண்டிருந்த சேனைத் தொகுதியின் தலைவருள் ஒருவன் அங்கதன் என்பான் வாலியின் மைந்தன் தாரையின் புதல்வன் வானரர் கூட்ட வருங்காலத் தலைவன் வாலியோ என்றால் வலிமை மிகுந்தவன் அவனை வெல்லுதல் அருந்திறல் காரியம், சுக்ரீவன் துணைபெறச் சொன்னதோர் சொல்லினால் மரத்தினில் மறைந்து இராமன், வாலியைக் கொன்றான்

கலாநிதி சி. மெளனகுரு 28
இறந்தவன் மைந்தனை எதிரியாம் இராவணன் எதிரிலே தூதனாய் இராமனும் அனுப்பினான்.
ஏடு பார்ப்போர் விருத்தம் தண்டத்தைக் கையிலேந்தி தாவியே கடலைத்தாண்டி மிண்டிய இராவனேசன் மேவிய சபையிற் சென்று கண்டத்தில் இடியைச் சேர்த்து, கர்ஜித்து முழக்கத்தோடு அங்கதன் இராமன்துரதை அறைந்திட வருகின்றானே
(அங்கதன் மேடையில் தோற்றம் பாய்ந்து பாய்ந்து வந்து இராவணன் முன் நிற் கின்றான்.)
அங்கதன் விருத்தம் எண்டிசை யெங்கணும் உன்கொடி பறக்கவே
ஏறுபோல் ஆளுகின்ற திண்ணிய உரமுள்ள இராவண அரசனே சிறீராமர் தூதன் நானே அண்ணலாம் ராமனின் தையலாம் சீதையை
அனுப்பிவை இல்லையாகில் உன்னுடைய தலைபத்தும் உடல்தன்னில் ஒட்டாது
உண்மையிது உணருவாயே.
இராவணன் தரு அப்பனைக் கொன்றவனோடு எப்படி நீ .
கூடினாயோ தம்பி - அட தம்பி நானவனைக் கொல்லுகிறேன் நீ
எனக்குத் துணைவாடா தம்பி - அட தம்பி மரத்தினோரம் மறைந்து மார்பிற்
பாணம் விட்டானே பாவி - ராமன் பாவி வாலி மகன் நீயோ பழிவாங்கும் மரபும்
உனக்கில்லையோ சொல்வாய் - தம்பி சொல்வாய்
அங்கதன் தரு
இராமனை வென்றிடத் தகுதியுன்னிட மொன்றும்
இல்லையே - பாவம் இல்லையே
தாழ்வினில் எங்களைச் சதிசெய்து வெல்லவோ
எண்ணினாய் - பாவி எண்ணினாய்

Page 14
24
இராவனேசன் - வட-மோடி நாடகம்
பலமற்ற தேவரைப் புறமுது கிட்டது வீரமோ
அது வீரமோ- எங்கள்
உரமுள்ள ராமன்முன் எதிர்நிற்கத் திறமுண்டோ கூறுவாய் - அடா கூறுவாய்
அங்கதன் விருத்தம் சென்றுமே தேவ ரெல்லாம்
சிதறடித் திட்ட மன்னா நன்றுநன்றுனது வீரம்
நகைப்புத்தான் வருகு தப்பா துன்றிடும் பெண்ணை விட்டுத்
தொழுதுவாழ் சுற்றத் தோடும் பொன்றுதியாயின் என்பின்
புறப்பட்டு வருக மன்னா
அங்கதன் வசனம்
கேளடா இராவணா சீதையைச் சிறைவிட்டு எங்கள் இராமனின் கால்
களைத் தொழுது வாழ் மன்னா.
இராவணன் தரு தொழுதுவாழ் என்றும்பின் உயிருடன்
என்முன்நின்றாயே நின்றாயே - இனித் தோகை சீதையைவிட ஞாயமுண்டோ
சொல்லு வாயே - சொல்லுவாயே பழுதற்ற என் வீரம் குறைவுற்றுக் கூறினாய்
பிள்ளாய் - சிறு பிள்ளாய் - அதைப் பாரடா களந்தன்னில் கூறடா உன்ராமன் −
முன்னே- சென்று முன்னே
இராவணன் வசனம்
கேளடா அங்கதா; உன் ராமனைக் களத்தில் "வந்து காண்கின்றேன்
என்று போய்ச் சொல்லடா அங்கதா.
(அங்கதன் பாய்ந்து போகிறான்)

கலாநிதி சி. மெளனகுரு 25
இராவணன் விருத்தம்
உலகத்தை வென்று ஆண்ட ஒரு கொடிக் கிறைவன் என்முன் சில வார்த்தை பேச வந்த சிறு குரங்கொன்று நின்று தொழுது வாழ் என்று சொன்ன சொற்கேட்ட பின்னும் நிற்றல் பழுதிந்த இராவணற்கு பதில் உண்டு, களத்திலேதான்.
ஆரடா பணியாள் அங்கே அரண்மனை மாடம் சென்று கூறுவாய் அரசியார்க்குச் கொற்றவன் எந்தன் செய்தி.
(இராவணன் போகிறான், ஒளி மெல்ல மெல்ல மங்குகிறது)
(2)
(ஒளி மெல்ல மெல்லப் பிரகாசமடைகிறது. ஏடுபார்ப்போர் இருவரும் மேடையின் மையப் பகுதிக்கு வந்து பாடுகிறார்கள்)
ஏடுபார்ப்போர் பாடல்
மன்னவன் இராவணன் பட்ட மகிஷி மண்டோதரி இதோ வருகிறாள் மன்னவன் இராவணன் மனைவி வருகிறாள் மதியுரை மந்திரியாக அறம் சொல்ல வல்லவன் இந்திரஜித்தனை ஈன்றதால் வானமளவு புகழ் பெறு நாயகி
(மண்டோதரி திரை பிடிக்கப்பட்டு மேடைக்கு அழைத்து வரப்படுகிறாள். திரை விலக்கப்பட்டதும் பாடுகிறாள்.)

Page 15
26
இராவணேசன் - வடமோடி நாடகம்
மண்டோதரி விருத்தம் பதியையே தெய்வம் என்று பாரினில் தொழுது போற்றும் சதியிவள் சாந்த ஸ்வரூபி சன்மார்க்க நெறியில் நிற்பாள் அதிபதி இராவணேசன் அழைக்கின்றானென்றறிந்து கெதியினிற் புறப்பட்டேதான் கிளிமொழி வருகின்றாளே.
(தாளக்கட்டினை அண்ணாவியாரும் பாடகரும் கூற அதற்குத்தக மண்டோதரி
ஆட்டக்கோலம் புரிகிறாள்.)
தாளக்கட்டு
நாதர் தில்லானா தோம் தரிதாம் - தெய் நாதர் தில்லானா தோம் தரி தெய் தத்திம் தா தகதிக தாதா தகதிக தாதா திமிதக தெய்தெய்
மண்டோதரி தரு
மண்டோதரியும் வந்தாளே எங்கள்
மன்னவன் இராவணேசனின் மாபெரும் பத்தினியான
மண்டோதரியும் வந்தாளே
தாதெய்ய தா தளாங்கு ததிங்கின
மண்டோதரியும் வந்தாள். மாசில் தோழிமார்கள் சூழ
எண்டிசையும் புகழே கொண்ட
இலங்கேஸ்வரன் முன்னே செல்ல
தகதிக தா திமிதக தெய்ய தக தாதா தெய்யதா தளாங்கு ததிங்கின.
தச்சொணு தத்திமிதா
தத்தித்தாதித்தித் தெய்
தகஜொனு தகதிமிதா
தத்தித்தாதித்தித் தெய்
தச்சொணு தத்திமி தகஜொனு தகதிமி
தச்சொணு தத்திமி தகஜொனு தகதிமி
தாதா தருகிட தெய்
தாதா தருகிட தெய்
தருகிட தெய்
தருகிட தெய்
தெய்
தெய்

கலாநிதி சி. மெளனகுரு 27
மண்டோதரியும் வந்தாளே- சபையை நாடி
மண்டோதரியும் வந்தாளே.
தகதிக தா திமிதக தெய் தாதெய்யதா தளாங்கு ததிங்கின.
(மண்டோதரி மேடையின் நடுப்பகுதியில் நிற்கிறாள். காவலர் வருகிறார்கள்)
காவலர்கள் அகவல்
அன்னையே தெய்வமே அடியனோம் வணங்கினோம் இந்நிலமாளும் ஏந்தலாம் எம் இறை மன்னவன் இராவணன் வரவுமை அழைத்தார் என்ன காரணமோ அறியமாட்டோம் அம்மா.
(மண்டோதரி செல்கிறாள். காவலர்கள் செல்கிறார்கள் அதன் பின் மண்டோதரி செல்கிறாள். ஒளி மெல்ல மெல்ல மங்குகிறது)
(3)
(இராவணன் நிற்கின்றான். மண்டோதரி வருகின்றாள்)
மண்டோதரி விருத்தம் இந்திரர் புகழும் கோவே இனிய என் கணவா கேளாய் உன்தனின் முகத்திற் கோபம் ஒளிருதே காரணம் ஏன்? வந்தனை செய்தேன் உன்தாள் வழுத்திடும் அடியாள் நானே எந்தனின் இறையே நீயும் இதைஎனக் குரைத்தி டாயே.
இராவணன் தரு கண்ணே பூரீ ராமன் படைகளுடன் காத்திருக்கின்றானாம் போர்கள் இசய்யூ பெண்ணே சமர்செய்து வென்று பிணக்கமில்லாமல் விடை கொடடி.

Page 16
28
இராவணேசன் - வடமோடி நாடகம்
மண்டோதரி தரு முன்னே நீரும் செய்த முடிவினால் மோசம் வந்தும்மை அணுகுதய்யா அன்னை சீதை தன்னைச் சிறைவிடில் ஆபத்து வந்துமைச் சேரா தையா.
இராவணன் மறு தரு தூதென்று வந்தெந்தன் வீரத்தைப் பழித்தபின் சீதையைச் சிறைநான் விட்டால் எனது பெண்ணே ராகவன் வில்லுக்கு நானஞ்சினேன் என்று ஊரென்னைச் சிரிக்காதோ உரை கண்ணே.
மண்டோதரி மறறுதரு
உரம்பெற்ற வாலியை ஒரம்பினாற் கொன்ற வரம்பெற்ற மனிதனய்யாபூரீ ராமன் பலமிக்க படைபெற்று உனைவெல்ல வந்தவன் படுகளம் வேண்டாமய்யா,
இராவணன் மறுதரு தம்பி விபீஷணன் போனபின் என்பலம் தாழ்ந்ததென் றெண்ணினையோ பகைவரைப் போல் கும்பிட்டு வாழ்வானோ பகைவரை யுன்னாதன் கோதையே விடைதாராய்.
மண்டோதரி மறறுதரு தருமம் அவன்பக்கம் அதர்மம் உனதுபக்கம் தகாதுபோர் செய்வதயயா எனது நாதா பெருமையுடன் வாழப் பிசகற்ற வழிராம பிரானை இங்கழைப்ப தய்யா.
இராவணன் விருத்தம்
கூனுடைக் குரங்குகள் கூட்டமோ டிருசிறு
மானிடர் வந்துநின்று
ஆணவம் காட்டுறார் அதை அடக் கிடநானும்
அமர்க்களம் செல்வதற்கு

கலாநிதி சி. மெளனகுரு 29
ஏனடி தடுக்கிறாய் இலங்கையை ஆள்பவன்
என்வீரம் அறிந்ததிலையோ
தானையை நடத்துவேன் தலைகொய்து மீளுவேன்
தையலே விடைநீ தராய்.
இராவணன் வசனம் கேளும் பெண்ணே, வெற்றிவீரனாக வந்து உன்னைச் சந்திக்கின்றேன். அதன்பின் வேண்டுமானாற் சீதையை விடுகின்றேன். நீ அரண்மனை போயிருப்பாயாக.
(இராவணன் போகிறான். அவன் போவதைப் பார்த்திருந்தபின் தாமதித்து மண் டோதரி போகிறாள்.)
(4)
(ஏடு பார்ப்போர் மேடையின் மத்திக்கு வந்து பாடுகிறார்கள்)
ஏடு பார்ப்போர்
போர்ப்பறைமுழங்கின புவிப்பறை அதிர்ந்தன பார்விழித்தெழுந்தது. படை அணிதிரண்டது அனுமனொடு அங்கதன் தலைவன் சுக்ரீவன் அக்னி நீலன் அறிவுசால் சாம்பான் தலைமைகள் தாங்கிட திசைதொறும்பரவி சப்தா சமுத்திரப் படைபலம் தொடர்ந்திட இலக்குவணன் தம்பி நிழலாய் உடன் வர இலங்காபுரிக்குள் இராகவன் வருகிறான்.
(இராமன் லெட்சுமனன் அங்கதன் மூவரும் அணிவகுத்து வருகின்றார்கள். திரை பிடித்து அழைத்து வரப்படுகிறார்கள். திரை நீக்கப்பட்டதும் இராமன்பாடுகிறான்.)

Page 17
30
இராவணேசன் - வடமோடி நாடகம்
இராமன் விருத்தம் சீதையை விடவே மாட்டேன் செருக்களம் வருவேனென்று தூதற்கு ராவணேசன் சொல்லிய வார்த்தை கேட்டு தீரனாம் அங்கதன்பின் செயல்வீரன் தம்பி சூழப் போர்க்களம் நாடி ராமன் புறப்பட்டு வருகின்றானே.
(தாளக்கட்டினை அண்ணாவியாரும் பாடகரும் கூற இராமன், இலக்குவன், அங்
கதன் மூவரும் ஆட்டக் கோலம் புரிகிறார்கள்)
தாளக்கட்டு
தாகிடம் தோகிடம் தருகிட ததிந்தத்தாததிந் தத்துமி தாகிடம் தோகிடம் தருகிட ததிந்தத்தாததிந் தத்துமி
இராமன் தரு படைக ளெல்லாம் ஒன்றாய்க் கூட்டுவோம் - அவன் பத்துத் தலைகள் வெட்டி வீழ்த்துவோம் நடைபோட்டு நம்வீரம் காட்டுவோம் - நாளை நமதென்று நமதென்று கூறுவோம் இராகவன் நாண்தரு சத்தமே -இனி இலங்கை எங்கும் ஒலிக்கும் நித்தமே வாதம்பி வீரர்காள்வாருங்கள் கூடுங்கள் வருகின்ற களமதில் வாகை சூடிவர.
(இராமர், அங்கதன், லெட்சுமணன் போகின்றனர்)
 

கலாநிதி சி. மெளனகுரு 31
(5)
(ஏடுபார்ப்போர்வலதுபக்க மேடையில் நின்று பாடுகிறார்கள்)
ஏடு பார்ப்போர் விருத்தம்
அங்கதன் துரதுவந்து போன பின்னர்
அமர்புரிய ராவணனும் தேரிலேறி
சங்கொலிக்க முரசொலிக்கச் சேனைசூழச்
சமர்க்களத்தை நாடியே பாய்ந்து வந்தான்.
(இராவணன் வருகின்றான். நடைக்கு உடுக்கு அடிக்கப்படுகிறது)
மங்களஞ்சேர் லட்சுமணன் துணையாய் நிற்க
வானரர்கள் அநேகம்பேர் தன்னைச் சூழ பொங்குசமர்க் களத்திலிடை ராமன் வந்தான்
(ராமன் வருகின்றான்)
புகழுற்ற ராவணனை எதிரே கண்டான்.
(போருக்குரிய வாத்தியங்கள் ஒலிக்கின்றன.)
(இருவரும் வலதுசாரி இடதுசாரியாக வேக நடை நடந்து, நிற்கின்றனர். இராவணன் பாடுகிறான்.)
இராவணன் கந்தார்த்தம்
விருத்தம் சங்கரன் கொடுத்த வாளும் தண்டும்என் கையில் பாராய் இங்கென்னை வெல்வதற்கு இகத்திலே எவரும் இல்லை பங்குகள் செய்வேனுன்னைப் படுகளம் எனக்குச் சொந்தம் இங்குநான் வீரன், கோழையே.

Page 18
32 இராவணேசன் - வடமோடி நாடகம்
திரு
எதிர்நிற்கா தோடுவாயே - அல்லால் எனக்குப் பதிலுரை கூறுவாயே எண்டிசை வென்றவன் நானே என்முன்னே துரும்புநீதான் மண்டியிடுவாய் அல்லாமல் மாண்டு மடியச் செய்வேன்
இராமன் கந்தார்த்தம்
விருத்தம் வீரவான் நீயோ எங்கள் வீயீடணன் அண்ணன் நீயோ தேவரை அடக்கியாண்ட திறனுளோன் என்பான் நீயோ போரிட வந்தாய் பின்னர் போரிடு பேச்சேனிங்கே r ஆரிடம் வீரமுண்டு.
தரு அதைக் காண்போம் எதிரில் நீ வாடா - அடடா ராவனா ஆர்ப்பரித்துக் கொக்கரிக்காதே நித்திய வீரனோ நீதான் நின்பலம் அடக்க விந்தேன் கத்திக்கொண்டேகிடக் கதையைத் துண்டாடுவேன்.
(கதாயுதம் விழுகிறது)
இராவணன் தரு கதாயுதம் போனாலென்ன அடடா ராமா கையில்வாள் கொண்டு சாடுவேன் சதையைப் பிய்த்தெறிவேன் நான் சாகும்வரை எதிர்ப்பேன் கதையை முடிக்கவே களத்தில் முடிப்பேன் நான்.
இராமன் தரு ஆயுதமெல்லா முடைப்பேன் அடடா உன்னை அமரில் வெறுங் கைய னாக்குவேன் சாயுது வாளொடு தண்டுவில் தேரெல்லாம் பாயுது பாருந்தன் படைகள் முதுகுகாட்டி
(இராவணன் ஆயுதங்கள் இழந்து நிற்கின்றான். சூரியன் அஸ்தமனத்துக்கு அறி குறியான ஒளி)

கலாநிதி சி. மெளனகுரு 83
இராமன் விருத்தம் கையினிற் பலமிழந்து கவலைகள் நெஞ்சிற் கொண்டு வெய்யதோர் மூச்சைக் காட்டும் வீரனே வார்த்தை கேளாய் தையலை விடுக அல்லாற் சமர்செய்க மனக்கிலேசம் எய்தற்க உன்னை விட்டேன் இன்றுபோய் நாளை நீவா.
(இராவணன் போகின்றான். பின்னணியில் இன்று போய் நாளை நீ வா’ என்ற குரல் மும்முறை ஒலித்து ஒய்கின்றது)
ஏடு பார்ப்போர் விருத்தம்
வராணம் பொருத மார்பும் வரையினை எடுத்த தோளும் நாரத முனிவற்கேற்ப நயம்படவுரைத்த நாவும் தாரணிமவுலி பத்தும் சங்கரன் கொடுத்த வாளும் வீரமும் களத்தே போட்டு வெறுங்கையோ டிலங்கை புக்கான்
(பாடலுக்குத் தக அடிவைத்து தளர்ந்த உடலனயாய் இராவணன் போகின்றான். ஒளி மெல்ல மெல்ல மங்குகிறது)
(6)
(ஒளிபிரகாசமடைய மேடை நடுவுக்கு ஏடுபார்ப்போர் வருகிறார்கள். பாடுகிறார்கள்)
ஏடுபார்ப்போர் விருத்தம்
நிலைதனை யிழந்து நெஞ்சம் குழம்பியேராவணேசன்
(இராவணன் வருகிறான். வலது பக்க மேடையின் மூலைக்குச் சென்று தலை கவிழ்ந்தபடி இருக்கிறான்.)

Page 19
34 இராவணேசன் - வடமோடி நாடகம்
தலைகவிழ்ந் திருந்தான் பின்னர் தடுமாற்றம் நீங்கித் தம்பி மலைபோல்வான் கும்பகர்ணன் தனைஅழை என்றான் மன்னன் நிலைகேட்டுக் கும்பகர்ணன் அண்ணனைக் காணவாறான்.
&܀
(ஏடுபார்ப்போர் போகிறார்கள்.)
(கும்பகருணன் மேடையில் தோன்றுகிறான். மேடையில் இருக்கும் இராவணனைக்
கும்பகருணன் சந்திக்கிறான்.)
கும்பகருணன் விருத்தம் தூங்கும் நாள் முடியுமுன்பே சுறுக்குடன் எனையழைத்தீர் ஈங்கென்ன நேர்ந்த தையா ஏன்மிக விசனம் கொண்டு வாங்குகிறீர் பெருமூச் செல்லாம் வானவர் மீண்டும் வந்து ஆணவம் காட்டினாரா கலைக்கவா கொல்லவா சொல்.
இராவணன் தரு தம்பியே கேளாய் இராமன் வந்தான்
சமர்க்களம் நாடி அம்பினால் எனைவென்றான் அவனை வெல்லுவதற்கு நம்பியுனையனுப்ப நாளிங்கு அழைத்தேனே.
கும்பகர்ணன் தரு ஆனதோ சண்டை சானகிதுயர் போனது மிலையோ வானகம் சிரிக்குமே வார்த்தைகேள் எனதண்ணா சீதையை விடுநீயும் பூரீராமன் உறவாவான்.
இராவணன் தரு உபதேசம் செயவோ உனை அழைத்தேன் ஓடிப்போய்த் தூங்கு அபகீர்த்தி ராவணன் தம்பியர் கோழையா அவனை வெல்லுவதற்கு இங்கு யாருமே இல்லையா.

கலாநிதி சி. மெளனகுரு 85
இராவணன் விருத்தம் மானிடர் இருவர் தம்மை வணங்கியே மற்றுமந்தக் கூனுடைக் குறுங்கை யெல்லாம் கும்பிட்டுப் பாடி நிற்றல் ஊனுடை உனது தம்பிக் குனக்குமே ஒக்கும் ஒக்கும் யானது புரிய மாட்டேன் எழுந்துபோய்த் தூங்கடாநீ.
இராவணன் வசனம் கேளடா தம்பி வீரனென்று எண்ணியுன்னை அழைத்தேன். அழைத்தது வீணாகிவிட்டது. சென்று போய்த் தூங்கடா. (ஏடுபார்ப்போர்இடதுபக்க மூலையில் நின்றபடி பாடுகிறார்கள்)
ஏடு பார்ப்போர் அகவல் அண்னனின் முடிவில் தம்பிக்கு மனமிலை உண்மையை உணர்ந்தான் உரைத்திட வகையிலான் நன்றியை நினைந்தான் நன்றியின் பொருட்டாய் பொன்றிட நினைந்தான் புகழ் பெறுதம்பி.
கும்பகர்ணன் தரு சின்ன வயது முதல் அன்னைபோல வளர்த்த அண்ணா! உன்னை விடவும் உயர்ந்த பொருள் எமக்கு உண்டோ? மன்னவனாயுன்னைப் பார்த்து மகிழ்ந்த எம் கண்கள் இன்னொருவனை இங்கு காணவும் கூடுமோ அண்ணா. என்னை வென்றா ரெனில் உன்னையும் வெல்லுதல் உண்மை சின்னவன் வார்த்தைகள் என்று தட்டிவிடாதீர் அண்ணா. இற்றை நாள் முதலாக ஏதும் பிழைகள் நான் செய்தால் அத்தனையும் பொறுத்து ஆசீர்வாதம் தாரும் அண்ணா. கும்பகருணன் விருத்தம் வென்றிவண் வருவேனென்று உரைத்திலேன் விதியும் வந்து
முந்தியே பிடர் பிடித்து
உந்தியே நின்ற தண்ணா பொன்றுவன் களத்தில் நானும் பொன்றினாற் சீதை தன்னை
நன்றென விடுத்து நீயும்
நலமுடன் புவியாள் அண்ணா.
(கும்பகருணன் போகிறான். தொடர்ந்து இராவணனும் போகிறான். ஒளி மெல்ல மெல்ல மங்குகிறது)

Page 20
36 இராவனேசன் - வடமோடி நாடகம்
(7)
(ஒளி மெல்ல மெல்லப் பிரகாசமடைகிறது. போர்க்களத்தில் இராமன் நிற்கிறான். ஏடுபார்ப்போர் விருத்தத்துடன் கும்பகருணன் வருகின்றான்.)
ஏடு பார்ப்பவர் விருத்தம் இந்த இராவணன் வார்த்தை கேட்டு இயல்புதரு கும்பகருணன் படைகளோடு கொந்தலர் மாலைபல அணிந்தான் பேய்கள் பூட்டிய கொடுந்தேர் மேலேறி நெடுஞ்சூலம் கொண்டான்.
(கும்பகருணன் மேடையிற் தோன்றுகின்றான்.)
வந்தவனை அறிந்து வெகு வலுவதாக வானரர்கள் அநேகம்பேர் தன்னைச் சூழ அந்தமுடன் சமர்செய்ய ராமன் நின்றான் அடுத்திட்டான் சண்டைசெய்யத் தொடுத்திட்டானே.
இராமன் விருத்தம் உன்தம்பி விபீடணன்தான் உன்னியல்பு எனக்குரைத்தான் மன்னவனாக்கி இலங்கை மணிமுடியும் தருவே னென்றேன் முன்னவன் நீயோ வந்துன் தம்பிக்கு எதிராய் நின்றாய் என்னைநீ பணிந்து வாழ்ந்தால் இறக்காது வாழ்வாய் சொன்னேன்.
கும்பகருணன் விருத்தம் செம்பிட்டுச் செய்த இஞ்சித் திருநகர்ச் செல்வம் தேறி வம்பிட்ட தெரியல் என் முன் உயிர்கொன்ற பகையை வாழ்த்தி அம்பிட்டுத் துன்னம் கொண்ட புண்ணுடை நெஞ்சோடைய கும்பிட்டு வாழ்கிலேன் நான் கூற்றையும் ஆடல் கண்டேன். கும்பகருணன் தரு
வந்தாயோபாரினில் உன்வலி மடக்கியே சூலம் எடுக்கிறேனடா
 

கலாநிதி சி. மெளனகுரு 37
முந்தாதே மன்னவனே நீ முனைக்கெதிற்கணை கனக்க ஏவுறேன் வரிவில் அது நிமிர அரிய பகழியெல்லாம் வடவை அழலென முன் வருகுதுபாணம்.
இராமன் தரு விட்டேனே பெரியதோர் அஸ்திரம் வெகுண்டு அரக்கர் படைகளுமழியுது தொட்டேனே இன்னுமோர் அஸ்திரம் சுழன்று வருகுதுன் பெருமைகள் போக்கிட துடியாதே நின்று பதையாதே உடல் மெலிவாய் தரையினில் விழுவாய் பாவி.
(இராமன் அம்பு விடுகின்றான். கும்பகர்ணன் துடிதுடித்து விழுகின்றான். இராமன் போகின்றான். ஒளி அணைகிறது.)
(8)
(ஒளி மெல்ல மெல்லப் பிரகாசமடைகிறது. மேடையில் நடுப்பகுதியில் இராவணன் நிற்கிறான். ஏடுபார்ப்போர் நின்ற இடத்தினின்று பாடுகிறார்கள். இராவணன் துடிதுடிக்கிறான். தொடர்ந்து வீரர்களை அனுப்புகிறான். ஆட்ட அபிநயத்தில் இவை நிகழ்கின்றன.)
ஏடு பார்ப்பவர் விருத்தம்
எட்டினோரிரண்டினாய திசைவென்று தந்த தம்பி பட்ட அச் செய்தி கேட்டுப் பதைத்தனன் ராவணேசன்.
(மத்தளம் மெல்லிய அடி) (நடப்பதற்கு)
வீழ்வதோ எனதுவிரம் போவதோ புகழ்என்றெண்ணி ஆள் சூழச் சிங்கனோடு நீலனை அனுப்பி வைத்தான்

Page 21
38 இராவனேசன் - வடமோடி நாடகம
(மத்தளம் ஒலித்துச் சென்று உச்சத்தில் முடிய போருக்கு உரிய உடுக்கும் ஒலித்து ஒய்கின்றது) (சோக இசை)
ஏடு பார்ப்போர் விருத்தம் சிங்கனும் நீலன் மற்றும் செய்யவீரர் மாண்டபின்னர் (மத்தளம் நடப்பதற்கு மெல்லிய அடி).
மகரனொடு குருதிக் கண்ணன் மார்களை அனுப்பி வைத்தான். (முன்புபோல் மத்தளம் படிப்படியாக ஒலித்து சென்று உச்சத்தில் முடிய பேருக் குரிய உடுக்கும் ஒலித்து ஒய்கின்றது) (சோக இசை)
ஏடு பார்ப்போர் விருத்தம் இணையற்ற வீரரெல்லாம் இழந்தவன் செயலிழந்தான் (முன்புபோல் மத்தள அடி)
இருக்கின்ற வீரரெல்லாம் எழுந்தெதிர் பொருக என்றான்
(மத்தளமும் உடுக்கும் முன்பு போல ஒலித்து ஒய்கின்றன)
இராவணன் விருத்தம் அனுப்பினேன் வீரரெல்லாம் அனைவரும் இறந்தா ரையோ எனக்குஇப் பரீட்சைதன்னை ஏன்வைத்தாய் இறைவா நீதான் இனியிங்கு பொறுப்பதில்லை என்மகன் இந்திரஜித்தை அழைத்துவா பிரமாஸ்திரத்தோடு அனுப்பினான் பகையை வெல்ல.
(இராவணன் போகின்றான். ஒளிமங்குகிறது)
 

கலாநிதி சி. மெளனகுரு 89
(9)
(ஒளி மெல்ல மெல்லப் பிரகாசமடைகிறது. ஏடு யார்ப்போர் மேடையின் மத்தியில் வந்து பாடுகின்றனர்)
ஏடு பார்ப்போர் விருத்தம்
தொட்டிலுள் துரங்குகையில் சூரியன் சுட அதனை எட்டிப் பிடித்திழுத்துக் கட்டிலின் காலினொடு கட்டி வைத்திட்டதோர் கெட்டித்தனம் மிக்கவன் சட சடென மடமடென சரங்களை விடுகின்ற திடமான வில் தேர்ந்தவன் மந்திரம் தந்திரம் மாயங்கள் யாவிலும் சிந்தாத திறன் மிக்கவன் இந்தவுலக காள்கின்ற இராவனேசன் மகன் இரத்த பாசம் கொண்டவன் இங்கிதோ தோன்றினன் இளவல் உடன் காணுக இவன் குணம் இனிமேல் அறிக.
(இந்திரஜித் திரைபிடித்து அழைத்து வரப்படுகிறான். திரைவிலகியதும் பாடு கிறான்)
இந்திரஜித் வரவு விருத்தம் அண்டபகிரண்டமுதல் எண்டிசையுமுள்ளவர்கள்
அஞ்செலன்றபயமிடவே ஆனையொடு தேர்குதிரை காலாட்கள் சூழவே
அந்தணர்கள் ஆசிகூற மண்டலம் புகழ்கின்ற இந்திரஜித்தனும்
தந்தையைக் காண்பதற்கு மாயரத மேறியே பேய்களநின்றாடவே
வந்தனனுறு மிச் சபையிலே
(தாளக்கட்டினை அண்ணாவியாரும் பாடகரும் கூற அதற்குத்தக இந்திரஜித் ஆட்டக்கோலம் புரிகிறான்.)

Page 22
40 இராவணேசன் - வடமோடி நாடகம்
தாளக்கட்டு
தந்தத் தகிர்தத் தகிர்தத் தாம் திந்தத் திகிர்தத் திகிர்தத் தெய் தந்தத் தகிர்தத் தகிர்தத் தாம் திந்தத் திகிர்தத் திகிர்தத் தெய் தகதத் தகதத் தகதத் தகதத் தகதத் தகதத் தாம் தாம் தக தகதத் தக தத்தகதத்
5 TLD தாம தக தகதத் திகதத்தகதத் தீம் தா தக தெய்யத்தில்லான தீம் தா தக தெய்தத் தில்லான தீம் தா தக தோதிந்ததா தக தீம் தா தக தோதிந்ததா தக தீம் தந்தத் தோதிந்தத் தோதிந்தத் தோதிந்த தீம் தந்தத் தோதிந்தத் தோதிந்தத் தோதிந்த தகஜொனதா திகஜொனதெய் தகஜொனதா திகஜொணதெய்
இந்திரஜித் தரு
வீராதி வீரசூரன் மிக்கராவணன்தன் பாலன் ஏரா திலங்கும் வீரன் இந்திரஜித்தன் வருகின்றான்.
விண்ணுயர்ந்த கொடி பறக்க வீரர்கோடி கோடிசூழ மண்டலம் புகழும் மகாராசன் மகன் வருகிறான்.
அண்டரும் பூமாரி பெய்ய ஆதிசேடன் தோள் நெளியத் தண்டெடுத்து வில்லெடுத்து இந்திரஜித்தன் வருகின்றான்.
(இந்திரஜித் போகின்றான். ஒளிஅணைகின்றது)

கலாநிதி சி. மெளனகுரு 4.
(ஒளி மெல்ல மெல்லப்பிரகாசமடைகிறது. ஏடுபார்ப்போர்பாடுகிறார்கள்)
ஏடுபார்ப்போர் அகவில்
தோல்வி மேற் தோல்வி பெற்ற துவண்டுபோய் இராவணேசன் நாணிப்போய் கோபம் பொங்கி நகுன்று தன்மானம் பொங்க தூண்நிகர் கை பிசைந்து தொடர்ந்து சிந்தனைகள் செய்தான் ஆண்மகன் தனை அழைத்தான் இந்திரஜித் அங்கு வந்தான்.
(இராவணன் மேடையில் நிற்கிறான். இந்திரஜித் வருகின்றான்.)
இந்திரஜித் விருத்தம் இந்திரர் முதலாயுள்ள இமையவர் முனிவர் யாரும் வந்தடி வணங்கி வாழ்த்தும் மன்னனே சரணமய்யா எந்தையே என்னைப் பெற்ற சுவாமியே என்னையிங்கு வந்திட அழைத்த செய்தி வளமுடன் உரைசெய் வீரே
இராவணன் விருத்தம் சிங்கனுடன் மகரக் கண்ணன் தீரனாம் குருதிக் கண்ணன் நுந்தையாம் கும்பகர்ணன் அனைவரும் களத்தில் மாண்டார். இங்கிது பொறுக்கவில்லை என்செய்வேன் எனது மைந்தா சென்றுவா பிரம்மாஸ் திரத்தைச் செலுத்திவா பகைவர் முன்னால்

Page 23
42 இராவணேசன் - வடமோடி நாடகம்
இந்திரஜித் கந்தார்த்தம்
விருத்தம் என்சிறிய தந்தையைக் கொன்றும்பின் உயிரோடு இருக்கின்ற மனிதர் எவரோ? உன்வீரம் அறியாரோ உன்மகனை அறியாரோ உலுகுக்குப் புதுமை இவரே முன்னமே எனைவிட்டால் அன்னவரை வென்றுங்கள் முடிபணிய வைத்திருப்பேன் இன்னுமேன் தாமதம் நான்களம் சென்றிட
திரு
விடைதாராய் அப்பா - வெற்றிகொண்டு விரைவினில் வாறேன் உடைப்பேன் எதிரிபலம் தொடுப்பேன் எதிர்க்கணைகள்
தடுப்பேன் அவன் எதிர்ப்பு கொடுப்பேன் உனக்கு வெற்றி.
இலங்கை வேந்தனுக் கெதிராய் வந்த ராமனை எல்லோரும் காண அடித்துத் துரத்துவேன் எல்லைக்குள் வந்தோனை இனி மீளவிடுவேனோ எந்தையே ஆணை இராமனை வெல்லுவேன்.
இராவணன் விருத்தம் மதிற்புறத்தில் ஒரத்தில் மாற்றான் வந்து
வலுமைபல பேசுகிறான் என்றறிந்து குதித்தெழுந்த ஏனைப்பார்த்துக்கும்பிடென்றாள்
குறைவுற்றாள் உன்தாயார் கோழை, கோழை எதிர்த்திடுவேன் எனவுரைக்கும் எனதுமைந்தா
ஈன்றிட்ட பொழுதைவிட இன்றுதானே குதிக்குதடா எனது நெஞ்சம் சென்றுவாராய்
குலம்விளங்க வந்தவனே வென்றுவாராய்.
(இந்திரஜித் போகின்றான். தொடர்ந்து இராவணனும் போகின்றான். ஒளி மங்குகிறது)

கலாநிதி சி. மெளனகுரு 43
(11)
(ஒளி மெல்ல மெல்லப் பிரகாசமடைகின்றது. ஏடுபார்ப்போர் மேடையின் நடுப்
பகுதிக்கு வந்து பாடுகிறார்கள்)
ஏடு பார்ப்போர் இந்திரஜித் தேவிய நாகபாஷத்தினால் இலக்குமணன் சேனையோடு நொந்துமே வீழ்ந்தனன்; ராமன் கலங்கினான் துரோகிவிபீடணனும் அங்கே வந்துதவி செய்யவே வானரர் விழித்தனர் மைந்தனது இரகசியங்கள் நின்றங் குரைத்திடக் கொதிக்குமொரு நெஞ்சோடு இந்திரஜித் இலங்கை சென்றான்.
(ஒளி பிரகாசமடைகிறது) (பழையபடி தம் இடங்கட்குச் சென்று அங்கு நின்றபடி பாடுகிறார்கள்)
ஏடு பார்ப்போர் விருத்தம் அடுக்காக மகன்பெற்ற வெற்றிகளைக் கேட்டாங்கு
ராவணன் ஆர்ப்பரித்தான் துடிக்குமொரு நெஞ்சோடு துயரமுடை முகமோடு
இந்திரஜித் தெதிரில் வந்தான்.
(இந்திரஜித் வருகின்றான். இராவணன் மேடையின் வலதுபக்க மூலையில் அமர்ந் திருக்கிறான். இந்திரஜித்தனைப் பார்த்ததும் வியப்புடன் பாடுகிறான்)
இராவணன் விருத்தம் தூதர்கள் வந்துசொன்னார் தொடர்ந்து நீ பெற்ற வெற்றி

Page 24
44
வசனம்
இராவணேசன் - வடமோடி நாடகம்
காதாரக் கேட்டேன் ஆனால் கலங்கிநீ வருகின்றாயே. வாதுசெய் ராமன் உன்னை வந்துவென்றானாஇல்லை ஏதப்பா நடந்த தங்கே ஏன்மனம் வாடினாய்சொல்.
இந்திஜித் தரு
என்ன நான் சொல்லவே னப்பா எதிரிபக்கம் உன்தம்பி நின்றுகொண்டு என்னைவென்றிட வழி அவர்க்கு குரைத்திட வெற்றி இலகுவாய் அடைகின்றார்.
நிகும்பலை யாகம் செய்தேன் அதையழிக்க வழிசொன்னான் உனதுதம்பி நாகாஸ்திரத் தொடு பிரமாஸ்திரமும் விட்டேன் நாசமாய் ஆக்கிவிட்டான்.
சரமாரியாய்த் தொடுத்தேன் தடுத்துவில்லை முறித்தானே இராமன் தம்பி புரமெரித்தவன் முன்னும் புறமுதுகிடா தென்னைப் புறங்காட்டி ஒடச் செய்தான்.
ஆதலால் நானஞ்சினேன் என்று சீற்றம் அடையாதே தந்தையே நீ சீதையை விடினவர் சீற்றந் தீர்வார் உன்மேல் காதலால் இஃதுரைத்தேன்.
கேளும் தந்தையே அவர்களை வெல்ல என்னால் முடியவே யில்லை. சீதையை விடுவதே நல்லது அறிவீராக.
இராவணன் தரு பேதமை நீ இங்குரைத்தாய் பிள்ளாய் - என் பிள்ளாய் பேடி என்று எண்ணினாயோ பிள்ளாய்.

கலாநிதி சி. மெளனகுரு 45
யாக்கையை இனி விடுவதல்லால் சமரில் - இச் சமரில் ஜானகியை விடுவனோடா மகனே.
எட்டுத்திசை புகழ் மணக்க வாழ்ந்தேன் - நான் வாழ்ந்தேன் விட்டேனானால் சீதையை இனி இழிவே,
பட்டனன் நான் போர்க்களத்திலேனும் மகனே - என் மகனே எளிமையிலே படவே மாட்டேன் கண்டாய்.
இராவணன் விருத்தம் போர்த் தொழில் புரிந்து நெஞ்சம் புண்ணாகி வந்த மைந்தா
ஆறுதல் பெற்று வா நீ அன்னையும் பார்த்திருப்பாள்
(கோபத்துடன்)
போரிட்டு இராமன் தன்னைக் கொல்லுவேன் அன்றி மாழ்வேன் தேர் யானை சேனை யெல்லாம் திரளட்டும் எந்தன்பின்னே.
இந்திரஜித் தரு தந்தையே பொறுப்பீர்-தனையன்பிழை தன்னை நீர் பொறுப்பீர் உந்தன் உதிரமய்யா- உனக்கிது உதவாமற் போய்விடுமா?
மாற்றான் மகா பலவான் - எனினுமுன்னை மரணத்துள் விடுவோமா - நான் மாண்டு மடிந்த பின்தான் இலங்கையுட் தோல்வி நுழையுமப்பா.

Page 25
46
இராவனேசன் - வடமோடி நாடகம்
இந்திரஜித் விருத்தம் முந்தியே என்னைப் பெற்று வீரனாய் ஆக்கிவைத்த எந்தையே நானிருக்க இறப்பென்று ஏன் நீ சொன்னாய் சென்று நான் வருவேன் அல்லாற் சேதியைத் தூதர் சொல்வார் இன்று நான் உனக்கு மைந்தன் எனப்பெயர் பெறுவேன் காண்பாய்
(இந்திரஜித் செல்கிறான். மகன் செல்வதைத் துயரத்தோடு பார்த்தபடி இராவ னன்நிற்கிறான்; பின் செல்கிறான்.)
(12)
(ஏடுபார்ப்போர்பாடுகிறார்கள்)
ஏடு பார்ப்போர் விருத்தம் திரைகடல் இலங்கையாளும் தீரனாம் இராவணேசன் உரையது தலைமேற் கொண்டு உவகையோடிந்திரஜித்தன் விரைவுடன் களத்தில் வந்தான் விபீடணன் உதவி செய்ய தரைதனில் இலக்குவன் தான் தடுத்திட்டான் தடுத்திட்டானே
(இலக்குவனும் இந்திரஜித்தும் மேடையில் தோன்றுகிறார்கள்)
இலக்குவன் விருத்தம் வீரனாம் இலங்கை வேந்தன் மைந்தனே இந்திரஜித்தா
 

கலாநிதி சி. மெளனகுரு 47
மாயமாய்ப் போர்கள் செய்து ஆற்றாது ஓடிப் போனாய் போரிலே முதுகுகாட்டல் வீரருக் கழகு மாமோ போரிட வந்தாயில்லை உயிர்விட வந்தாயிங்கே.
இந்திரஜித் விருத்தம் வீரனோ நீயும் சீச்சி விபீடணன் உதவியோடு நேரிலே எனை வெல்லாது சூழ்ச்சியால் வென்றாய் பாவி நாணுண்டு வில்லுமுண்டு நானஞ்சுவேனோ கண்டு போரிலே என்ன பேச்சு புறப்படு சமர்கள் செய்வோம்
இந்திரஜித் தரு
பேசி முறுக்குகின்றாய் பெருமைகளை உந்தன் வாயால் கூசாமல் கூறுகின்றாய் குரங்குகளின் துணைகொண்டு எங்களை வென்றிட இங்கு வந்தனையோ சொல் உங்களை ஒட்டியே உயர் நகர் மீளுவேன்.
இலக்குவன் தரு என்ன சொன்னாய் இந்திரஜித் என்முன் நின்று ஏது சொன்னாய் இந்திரஜித் உன்னை நான் அறியேனோ உன்குலவீரர்கள் தன்னையே கொல்லுவேன் தப்பாது களத்தினில்,
இந்திரஜித் தரு அளிப்பேன் நான் என்கிறாயே ஆங்காரமாக நின்று ஒளிப்பாயோ ஒடவைப்பேன் உன் தமயன் தன்னைத்தேடி வருகுது வருகுது பகளிகள் வருகுது வதைவதை வதை என நரம்புகள் துடிக்குது.

Page 26
48 இராவணேசன் - வடமோடி நாடகம்
இலக்குவன் தரு பாணங்கள் விட்டாயே - தடுத்ததைப் பதறடித்திட்டேனே இறுதிப் பாணமும் இதோ ஏவினேன் உன் மார்பில் இறந்தாய் இறந்தாய் இறந்தாய் இனி நீ
(பாணம் இந்திரஜித் மார்பில் பாய்கிறது. அம்மா என்றலறி இந்திரஜித் வீழ்கிறான். ஒளி அணைகிறது)
(13)
(மெல்ல மேடையில் ஒளி மேடையில் இராவணன் நிற்கின்றான். மண்டோதரி பாடலுக்குத்தக அசைந்து வருகிறாள். ஏடு பார்ப்போர்பாடுகிறார்கள்)
ஏடு பார்ப்போர் விருத்தம் தலையின் மேல் சுமிந்த கையள் தணலின் மேல் மிதிக்கின்றாள்போல் நிலையின்மேல் மிதிக்குந் தாளன் நேசத்தால் நிறைந்த நெஞ்சள் கொலையின்மேல்குறித்தவேடன் கூர்ங்கனையுயிரைக் கொள்ள மலையின்மேல் மயில்வீழ்ந்த தன்ன மன்னமுன் மறுகி வீழ்ந்தாள்.
(இராவணன் காலடியில் மண்டோதரிவிழுகின்றாள்.)
திரு
மாண்டு மடிந்தானே - மகனை மறந்துமண் மீதினில் வாழ்வேனோ நான் அம்மா என்றழைப்பானே-ஐயோ யாரை அழைத்தானோ நானறியேன்.
 

கலாநிதி சி. மெளனகுரு 49
இராவணன் தரு இறந்தாயோ என்மகனே இறந்தாயோ என்மகனே என் ஆவி சோருதடா மகனே இறந்து நீ வீழும்போது இறந்து நீ விழும்போது இராவணன் தனை நினைத்தாயோ.
மண்டோதரி தரு
புத்திகள் பல சொன்னானே - ஏசிப் போருக் கனுப்பினாய் ஐயா நீ சத்துருவால் மாண்டானே- இனிச் சாவதொன்றே நானறிந்த வழி.
இராவணன் விருத்தம் முடிபணி வறிந்திடாது மூவுலகாண்ட என்னை அடிபணிந்த தாளவைக்க அவாவுற்றான் விதியும் போலும் கதியற்றேன் தம்பி மாண்டான் ககனத்தை வென்று வீரப் பதிபெற்றான் எனது மைந்தன் படைவீரர் எல்லாம் மாண்டார் இவையாவும் செய்தாள் அந்த இராகவன் மனையாள் சீதை அவளைநான் கொன்று எந்தன் ஆத்திர மாற்றிவாறேன்.
மண்டோதரி விருத்தம்
நாதனே வார்த்தை கேளிர் நானிலம் வென்று மாற்றார் பூதனாய் வாழ்ந்தீர் இன்று புத்திர சோகத்தாலே சீதையாம் பெண்ணைக் கொன்றால் சிறுமையாய் எண்ணிப் பின்னால் கோதையர் கூட்டமோடு குவலயம் சிரிக்கு மய்யா.
இராவணன் தரு என்குலம் வேரறுத்திட வந்த ராமனை இக்கணம் சென்றழிப்பேன் இல்லாவிடில் என்மகன் சென்ற வழி செல்லு வேன்இது இராவணன் சபதமடி.

Page 27
50
இராவணேசன் - வடமோடி நாடகம்
மண்டோதரி விருத்தம் மைந்தனும் மாண்டான் மற்றும் தம்பிமார் சேனாவீரர் சென்றவர்மாண்டா ரய்யா எஞ்சினாய் நாதா நீயும் அந்தமா படுகளத்திற் சென்றுமே மாண்டு வீழ்ந்தால் இந்தமாநிலத்தில் வாழேன் இறைவனே களஞ்செல் லாதே.
இராவணன் விருத்தம் வென்றிலன் என்றபோதும் வேதமுள்ளளவும் நானும் நிற்றுளன் அன்றோமற்றவ் விராமன்பேர் நிற்கு மாயின் பொன்றுதல் ஒருகாலத்துத் தவிருமோ பொதுமைத் தன்றோ இன்றுளார் நாளைமாழ்வார் புகழுக்கு மிறுதியுண்டோ.
(இராவணன் போகின்றான். தொடர்ந்து மண்டோதரி போகின்றாள். ஒளி மங்கு
கிறது)
(ஒளி மெல்ல மெல்லப் பிரகாசமாகின்றது. இராவணன் ஒருபக்கமும் இராமன் ஒரு பக்கமும் நின்று போருக்கு ஆயத்தம் குதிரைத்தாளம் ஆரம்பத்திற்கு மேள வாத்தியம் ஏடுபார்ப்போர்பாடுகிறார்கள்)
ஏடுபார்ப்போர்
சித்திர முடியது நெற்றியில் ஒளிசெயத் தேவர்கள் கண்டோட
 

கலாநிதி சி. மெளனகுரு 51
வெற்றிக் கவசம் மார்பி லிலங்கிட வீரர்கள் கோஷமிட
மத்தள மதிர வெற்றிச் சங்கின் வாழ்த்தொலி வானதிர பத்துத் தலைநகர்க் கதிபன் இராவணன் தேர்தனில் ஏறுகின்றான்.
(தாளக்கட்டினை அண்ணாவியாரும் பாடகரும் கூற அதற்குத்ததோர் ஆட்டம்
நடைபெறுகிறது)
தாளக்கட்டு
தகஜொனு தகதிமிதாம் தாம் தாம் தெய்ய தக ஜொணு தகதிமி தெய் தாம் தாம் தாம் தெய் நாதருதாணி தோம் தருதாணி தாம் தாம் தெய்ய நாதருதாணி தோம் தருதாணி தகதோம் தகதிமி நாதருதாணி தோம் தருதாணி தாம்தாம் தாம் தெய்ய
(வலது பக்க மேடையில் இராவணன் வந்து நிற்கிறான். ரடுபார்ப்போர் பாடு
கிறார்கள்)
ஏடுபார்ப்போர்
வரிசிலை கையில் வளைத் தெடுத்து வானவர்களிகொள்ள ஒருதனி அனுமன் அங்கதனுடனே உயர்படை பின்செல்ல எரிபடு பாணம் தெரிந்தெடுத்து இராவணன் எதிர்செல்ல தேவர்க்கதிபன் அளித்த தேரில் இராகவன் ஏறுகின்றான்.
(தாளக்கட்டினை அண்ணாவியாரும் பாடகரும் கூற அதற்குத்ததோர் ஆட்டம் நடைபெறுகிறது)
தாளக்கட்டு
தத்தித்தாம் தரிகிட
தித்தித் தெய்யா தெய்ய

Page 28
52 இராவணேசன் - வடமோடி நாடகம்
தத்தித்தாம் தரிகிட தித்தித் தெய்யா தெய்ய
(இடது பக்க மேடையில் இராமன் வந்து நிற்கிறான். ஆட்டம் முடிய மேடை முழு வதும் வெளிச்சம்)
இராமன் வசனம் வீரனே இராவணா! இழந்த ஆயுதங்களையெல்லாம் பெற்று விட்டாயா? பெற்ற காயங்களையெல்லாம் ஆற்றிக்கொண்டாயா? உடற் சோர்வு நீங்கிவிட்டதா? சமரை ஆரம்பிக்கலாமா? அல்லது இன்றும் போய் நாளை வருகிறாயா?
இராவணன் வசனம்
வீரனே இராமா! உன் சொற்களால் என்னைச் சுட்டெரிக்காதே. உன் சொற்கள் நீ செலுத்தும் அஸ்திரங்களை விட என்னை மிகவும் காயப்படுத்துகின்றன. துன்பம் மேல் துன்பத்தால் துவண்டு போயினேன். ஆயினும், மானமும் உறுதியும் எம் குலத்தின் சொத்து. (தனக்குள்) நாசம் வந்துற்றபோது நல்லதோர் பகையைப் பெற்றேன்.
இராமன் வசனம்
மாவீரா இராவணா மடிவது உறுதி என்றறிந்தும் ஏன் வீணாகப் போரிடுகிறாய். சீதையைச் சிறைவிடு. நான் உன்னை உயிரோடு விடுகிறேன்.
இராவணன் தரு
வீரபுயபல ராமனே நில் நில் - உனை முடித்து வீரன்நான் என வெற்றி கொள்ள வந்தேன்- என்தம்பி மாரை சாகடித்தாய் நீயழித்தாய் சாகடிப்பேன் உனையழிப்பேன் சங்கரன் கொடுத்தவரம் இங்கெனக்கு வெற்றி தரும் பங்கப் படுத்திய பரிகாசமா மனதில் இங்கிதோ வருகுது என்சூலம் பதில் சொல்ல.
இராமன் தரு அறிந்தவறிய இராவணனே முன்வா- உன்தலை பத்தும் அறுத்தெறிந்திட அம்புகள் விடுவேன் திறமிக்க படைக்கலம் ஒருமிக்க அழியுது தீரன் ராவணன் என்ற புகழ்மலை சாயுது

கலாநிதி சி. மெளனகுரு 53
அரன்உனக் களித்த வரமது போகுது சீதையை உன்னிய சிந்தையைத் தேடியே பாரிதோ வருகுது பகழிநீ பதில்சொல்,
(பாட்டில்லாமல் ஆட்டம் மூலம் சண்டை நடக்கின்றது. மேளம், உடுக்கு பாவிக்கப் படுகின்றது. கடும் சண்டையின் பின் இராவணன் வீழ்கின்றான். இராமன் போகின்றான்.இராவணனுக்குத்தனியே வெளிச்சம் சோகமான பின்னணி) (ஏடுபார்ப்போர்பாடுகிறார்கள்)
ஏடு பார்ப்போர் விருத்தம்
உலகெல்லாம் வென்றுஆண்ட
ஒருதனிச் செம்மல் நெஞ்சில்
பலமிக்க அம்பு பாய்ந்து பறித்ததே யுயிரை யம்மா
புகழோடு இளைஞரோடு
புன்னகை யோடு வாழ்ந்த
நிகரில்லா வீரன் வீழ்ந்தான்
நிலமகள் தழுவிக் கொண்டாள்.
(ஏடுபார்ப்போர்பாடுகிறார்கள்)
ஏடு பார்ப்போர் விருத்தம் வீரனைக் களத்தில் ராமன் வெங்கணைசாய்த்த தென்று தூதர்கள் சொல்லக் கேட்டு துடிதுடித் தோடி வந்து நாதனைக் கண்டாள்; வீழ்ந்தாள் புரண்டாள், பின் ராவணேசன் சாதனை எல்லாம் சொல்லித் தையலாள் அழுகின்றாளே.
(ஏடு பார்ப்போர் விருத்தத்துடன் மண்டோதரி ஒடிவந்து விழுந்து புலம்புகின்றாள்.)
மண்டோதரி தரு வீரம் வீரமென்று விரும்பி யுரைத்தீரென் ஐயா- இன்று விதியுனைப் படுகளம் வீழ்த்திச் சிரிக்குதே மெய்யாய் மூவுலகை யாண்ட முடிநிலம் படுகுதே ஐயா- ஒரு பாவிபோற் கிடக்கிறீர் பக்க பலமிருந்தும் மெய்யாய் வாளெங்கே கதையெங்கே மார்பெங்கே எனை அணைத்திட்ட வைரத் தோளெங்கே எல்லாம் தொலைந்து கிடக்குதே மெய்யாய்,

Page 29
54 இராவணேசன் - வடமோடி நாடகம்
(மண்டோதரி இறக்கின்றாள். மீண்டும் ஒளி பிரகாசமடைகிறது. ஏடுபார்ப்போர் மேடையின் மத்திக்கு வந்து பாடுகிறார்கள்)
ஏடுபார்ப்போர்
அழிவது உறுதி என்று அறிந்துமே இராவனேசன் இறுதி மூச்சிருக்கு மட்டும் உறுதியை விட்டானில்லை வீரத்திற்காக மன்னன் இலங்கையின் வீழ்ச்சி ஏற்றான் வீரத்திற்காக வீழ்ந்தான் வீரத்தின் சின்னமானான்.
நடிகர்கள் அனைவரும்
மேடையில் பிரசன்னமாகி
வாழி பாடுகிறார்கள்
அன்னை சரஸ்வதி உன்னை வணங்கினோம் அம்மா கல்வி தருபவள் கலைகள் தருபவள் நீயே முன் வந்திருக்கின்ற சபையோர்க்கு வந்தனம் சொன்னோம் முடிக்கிறோம் கதை தன்னை முத்தமிழ் நாடெங்கும் வாழ்க
நாடகம் நடித்திட்ட நடிகர்கள் எல்லோரும் வாழி நாட்டிலே அன்பு செழித்து நடந்திட வாழி. பார்த்தோருடன் பங்கு கொண்டோர் அனைவரும் வாழி பாரிலே மக்கள் சமாதானமாய் வாழ வாழி.
மங்களம்
 


Page 30


Page 31