கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: திருமுறைப் பண்ணிசைத் திறனாய்வு

Page 1
4.
ତଣ୍ଡେଙ୍କେତ
இ
。
.
罗
குணித்த புருவமுங் கொவ்வை பனித்தசடையும் பவளம்போ இனித்தமுடைய எடுத்தபொ, மனித்தப் பிறவியும் வேண்டு
ஆசி திருமுறை சைவப்புலவ
Ο
ച
9 - இ. Gill 9 ー ୬୬୭g୬g୬୭୬୭୬୭୬୭୬୭୬୬
 
 
 

1 1 ଶ୍ରେତିଠିଁ
*
ச் செவ்வாயிற் குமிண்சிரிப்பும் மேனியிற்பால்வெண்னிறுத் ற் பாதமுங் காணப் இற்றால் இவதேயிந்த மானிலத்தே
粤
fijff - 字 ேெல்வர் *
( " ඕඹෂිඹිඹිඹිඹිඹුඹGGG,

Page 2

6. சிவ சிவ
திருமுறைப் பண்ணிசைத் திறனாய்வு
圈
墨
圈
溪
爵
溪
溪
溪
醫 نے تنسخ கடி YI YAYVY 藻溪溪溪溪溪溪溪溪溪溪溪溪溪溪溪溪溪溪溪溪溪溪溪溪溪
சைவசமய குரவர் துதி
திருச்சிற்றம்பலம் பூழியர் கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல்போற்றி ஆழிமிசைக் கன்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி வாழிதிரு நாவலூர் வன்றொண்டர் பதம்போற்றி ஊழிமலி திருவாத வூரர்திருத் தாள் போற்றி.
திருச்சிற்றம்பலம்
ஆசிரியர் திருமுறைச் செல்வர் சைப்புலவர் பண்டிதர்
. வடிவேல்
'பாக்கியபதி’ 15 , வித்தியாலயம் ஒழுங்கை, திருக்கோணமலை,

Page 3

l -
2 -
3 -
د 4
5 -
6 -
7
8 .
9 a.
10 -
11 -
ܗ 2 7
13 -
14 -
15 -
i
6 -
(L ஓம் சிவசிவ
திருமுறைப் பண்ணிசைத் திறனாய்வு பொருளடக்கம்
முகவுரை ஆசியுரைகள்
அணிந்துரைகள் திருமுறைப் பண்களின் தொன்மை
திருமுறை என்றாலென்ன?
வேதமும் தமிழ்வேதமும்
திருமுறைகள் எவை?
திருமுறைப் பண்வகை திருமுறையில் இசைத்தமிழ்
திருமுறையில் சுவை (இரதம்) நயம் ஆலயங்களில் தோத்திரமும் சாஸ்திரமும்
திருமுறையில் பண்கள் இசைக்கருவிகள் பற்றிய குறிப்புகள்
திருமுறையில் இயற்றமிழ்
திருமுறைப் பாவமைப்பும் பயனும்
திருமுறை வாரிதியில் ஒருசில துளிகள்
திருக்கோணமலைப் பதிகம் நமச்சிவா யப் பதிகம்
திருநீற்றுப் பதிகம் கோளறு பதிகம் சூலை நீக்கிய பதிகம்
நிறைவுரை
பக்கம்
12
15
23
30
48
52
56
63
63.
59 7s 77
8.3
89

Page 4

6.
சிவ சிவ
முகவுரை E68
“அகத்தின் அழகு முகத்தில் தெரியும்" என்பது ஆன்றோர் வாக்கு. எனவே நூலிலுள்ளதை நூல் முகத்திற் காட்டுவது மரபு. அடுத்தது காட்டும் பளிங்கு போல் நூலில் கொடுப்பது காட்டுவது முகவுரையாதலால் முகவுரைக்கு உங்களை அன்போடும் பணிவோடும் அழைக்கிறேன்.
"பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையிஞனே'
என்று நன்னூற்காண்டிகை ஆசிரியர் பவணந்திமுனிவர் நூலை நிறைவு செய்யும் கடைசிச் சூத்திரமாக இதனைத்தருகிருர். இதே சூத்திரத்தை இந்நூலின் நுழைவாயிலாக அமைத்து எழுதியிருக்கின் றேன். “கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு" ஆதலால் அடியேன் கற்ற, கேட்ட விடயங்களை ஆய்வு செய்து “திருமுறைப் பண்ணிசைத் திறனுய்வு" என்ற நூலை எழுதியது திருவருட்செயலே பாகும். கற்றறிந்த பேரறிஞர்கள் முன்னிலையில் நாயேன் நாணி நடுங்கிக்கொண்டே இந்நூலைப் பணிவுடன் சமர்ப்பிக்கிறேன்.
ஆதியந்தமில்லாத இறைவனைப்பற்றியும். இறைவனோடியைந்த இசையைப்பற்றியும், அவ்விசையமைந்த பண்களைப்பற்றியும், அப் பண்களையமைத்துப் பாடப்பட்ட நாயன்மார்களுடைய பாடல்கள் பற்றியும், அப்பாடல்களைத் தந்த அருளாளர்களின உள்ளப்பாங்கு கள் அருட்செயல்களைப்பற்றியும், பண்ணிசை பயின்றுவந்த பண்டை மரபுகள் பற்றியும், பண்களை இன்று கையாளும் நெறிமுறைகள் பற்றி யும், திருமுறைகளில் காணப்படும் இசை சுவை லயம் முதலிய சிறப்பு கள் பற்றியும் எடுத்துக்கூற எனக்கு அருகதையுண்டா? என்றவினாவை, என்னையாட்கொண்ட கோணேசப் பெருமனுடைய திருவடிகளில் பக்திபூர்வமாகச் சமர்ப்பித்துவிட்டு * நன்றேசெய்வாய் பிழைசெய்வாய் நானே இதற்கு நாயகமே' என்ற சிறு துணிச்சலோடு எழுதத் தொடங்கினேன். வேண்டத்தக்கது அறிபவன் அவன் வேண்ட முழு தும் தருபவன் அவன் என்ற திருப்தியில் மலர்கின்றது இந்நூல்.

Page 5
பழையனவெல்லாம் பழையனவவ்ல. புதியனவெல்லாம் புதியனவு மல்ல என்பது அடியேனுடைய தாழ்மையான கருத்து. இயல், இசை, நாடகமென்னும் முத்தமிழ்களைப் பற்றிக் கூறும் பழைய நூல்களிலும் புதியநூல்களிலும் ஒரு ஆழமான கண்ணுேட்டம் செலுத்திப் பார்த்தா ல், நூலாசிரியர்கள் காட்டும் கலைகளின் அடித்தளம் தெளிவுபடுத்தப் பட்ட அடிப்படைத் தத்துவத்தையே ஆதாரமாகக்கொண்டு காணப் படுகிறது. பண்டைக்காலத்தில் இசைநூல்களில் கூறப்பட்ட குரல், துத் தம், கைக்கிளை,உளை, இளி, விளரி, தாரம், என்னும் சுரஸ்தானங்கள் புதியணபுகுதல் என்னும் உத்தியால் இக்காலத்தில் சட்சம், ரிஷபம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என்னும் பெயர்கள் பெற்று ச, ரி, க, ம, ப, த, நி, என்ற குறியீடுகளால் குறிக்கப்படுகின்றன. பண்டைக்காலத்தில் பயின்றுவந்த ஆதியிசை யாகிய பதினோராயிரத்துத் தொளாயிரத்துத் தொண்ணுாற்றொரு (1991) இராகங்களில் அநேகமானவை சாதனையில்லாமையாலும் சாதிப்பாரில்லாமையாலும் மறைந்துவிட்டன. அவற்றை விளக்கும் இசைநுணுக்கம், முதுநாரை, முதுகுருகு, பஞ்சபாரதீயம், தாளநுணுக் கம் முதலிய நூல்களும் மறைய இராகங்களைக் கையாளும் திறனும் மறைந்துவிட்டது. முத்தமிழ்க் காப்பியமாகிய சிலப்பதிகாரத்தில் கா ணப்படும் இசைத்தரவுகளை ஆய்வுசெய்து மறைந்த இராகங்களிற் சிலவற்றையும், மறைந்த யாழ்களையும் மீண்டும் தோற்றுவிக்க யாழ் நூலை எழுதினர் சுவாமி விபுலானந்த அடிகளார். திருமுறைப் பண் னிசைகளை ஆராய்ந்து தேவாரவியல் என்ற ஒரு இயல ையாழ்நூலில் எழுதியுள்ளார்,
தேவார முதலிகளாகிய மூவரும் பாடியருளிய திருமுறைகளிற் காணப்படும் பண்களே பண்டைத் தமிழிசை நூல்களில் கூறப்பட்ட பண்களாகும். தேவார ஆசிரியர்கள் பண்டைத் தமிழிசை மரபுவழி நின்று பண்ணமைதியோ டு திருமுறைகளைப் பாடியருளினார்கள். கால மாகிய சக்கரத்தின் சுழற்சியில் பண்ணிசை பின்தள் ளப்பட்டு பதி னாறாம் நூற்றாண்டுக்குப்பின் தஞ்சையையாண்ட மகாராஷ்டிர மன் னர்களின் ஆட்சிக்காலத்திலும், மதுரையையாண்ட நாயக்க மன்னர் களின் ஆட்சிக்காலத்திலும் கர்நாடக இசை முன்னுக்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றது. புதியன புகுதல் வழுவல்ல. இப்புதியனவும்
காலமாற்றத்தால் பின்னொருகாலத்தில் பழையனவாகலாமல்லவா?

எனவேதான் பழையனவெல்லாம் பழையனவல்ல என முன்னர் குறிப்பிட்டேன். பண்டைக்கால இசைநூல்களில் கூறப்பட்ட பண்கள் பேணப்படவேண்டும். பண்களைப் பேணுவதற்காகத் திருமுறைகளை ஆதரித்து அனுசரிக்கவேண்டுமென்பதினால் இந்நூலில் பன்னிரண்டு தலையங்கங்களின் கீழ் விஷயதானம் வழங்கப்பட்டிருக்கின்றது, திரு முறைகள் பன்னிரண்டாக வகுக்கப்பட்டதுபோல பன்னிரண்டு இலக் குகளைக் குறிக்கோளாகக்கொண்டு இந்நூல் எழுதப்பட்டுள்ளது. மக்களுடைய ஆத்மீக ஞானத்திற்கும், சீரிய ஒழுக்க வாழ்வுக்கும் வழிகாட்டும் ஆலயங்களில் வேதம் , ஆகமம், சைவசாஸ்திரங்கள், தோ த்திரங்கள், நிருத்த, கீத, வாத்தியங்கள் என்பன பேணப்பட்டு வந்த வரலாறுகளுடன், மக்கள் மண்ணில் நல்ல வண்ணம் வாழ்வதற்கு வழித்துணையாயுள்ள திருமுறைகளில் ஐந்து பதிகங்களைத் தெரிந்தெ டுத்து, அவற்றிற்குப் பொழிப்புரையும் எழுதிவழங்கப்பட்டிருக்கின்றது.
பன்னிருதிருமுறைகளைப் பயின்றுவரும் ஆர்வத்தின் உந்துதலினா லும், பரம கருணாநிதியாகிய பரமேஸ்வரனின் பாதாம்பு ஜப் பக்தி மேலீட்டினாலும், இச்சிறு நூலை எழுதும் சக்திபிறந்ததும் திருவருட் செயலென்றே நினைக்கிறேன். ‘பிழுக்கை வீழினும் பால்கொள்வர்” என்று சுந்தரமூர்த்தி சுவாமிகள் கூறிய மன்னிப்பு விண்ணப்பத்தை உங்கள் முன் பணிவுடன் வைத்து நல்லன கொண்டு அல்லன தவிர்க் கும்படி வேண்டி அமைகிறேன்.
சைவப்புலவர், பண்டிதர் இ. வடிவேல்.

Page 6

அணிந்துரை
திருமுறைகள் தெய்வத் தன்மை வாய்ந்தவை. பக்திச் சுவை பொருந்திய இத்திருமுறைகளை என்றும் தாம் போற்றிப் பேண வேண்டியது எமது தலையாய கடமையாகும்.
மக்கள் மக்களாக வாழ்வதற்கும் அவர்களின் ஆன்மீக ஈடேற்றத்திற்கும் திருமுறைகள் வழிகாட்டியுள்ளன என்றால் அது மிகையாகாது. இத்தகைய திருமுறைகளைப் பற்றி எமது வருங் காலச் செல்வங்களுக்கும் எம் போன்ற இளைஞர்களுக்கும், ஏன் எம்மவர்கள் அனைவருக்கும் ஒரு அருட்பிரசாதமாகப் படைக்கப் பட்ட பெருவிருந்துதான். 'திருமுறைப் பண்ணிசைத் திறனாய்வு' என்ற இவ்வரிய நூலாகும். தேவாரம் பாடப்பெற்ற தெய்வத் திருநகராம் திருகோணமலையிலிருந்து மலர்கின்ற இவ்வரிய நறு மலரைச் சைவ உலகிலுள்ளோர் நன்கு பயன்படுத்த வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும் ஏனெனில் திருமுறைகள் என்றால் என்ன? அவற்றின் முக்கியத்துவம் என்ன? திருமுறைகளை எவ்வாறு ஓத வேண்டும்? என்பன போன்ற பல முக்கிய விடயங்களைச் சிறப்பாகவும், விளக்கமாகவும் எளிய உரைநடையில் இந்நூலாசிரியர் விளக்கியிருக்கின்ற தன்மை அவற்றிக்கே உரிய ஒரு தனிச் சிறப்பாக அமைந்துவிட்டது எனலாம்.
கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்ற நிலையில் இன்று ஆலயங்களில் சிலர் ஞானப்பனுவல்களான திருமுறைகளைப் பாட முற்படுகின்றனர். இவர்களுக்கெல்லாம் இந்நூல் ஒரு வழி காட்டியாக இருக்கும் என்பதற்கு ஐயமில்லை. மேலும் மாணவர் களுக்கும், ஆசிரியர்களுக்கும், குறிப்பாக இந்துசமயத்துறையில் ஆராய்ச் சியை மேற்கொள்ள விரும்பும் பட்டதாரிகளுக்கும். அறிஞர்களுக்கும் பயன்படக் கூடிய அரிய பல பொக்கிசங்களைப் பண்டிதர் அவர்கள் பல தலைப்புக்களின் கீழ் விபரித்து உள்ளமையை நாம் நன்கு கவனத்திற்கெடுத்துக் கொள்ள வேண்டியது மிக மிக அவசியமான தாகும்.
பண்களும் இவற்றின் ராகங்களும் என்ற தலைப்பின் கீழ் அட்டவணையிட்டு பல்வேறு உதாரணங்களுடன் பண்களைப் பற்றி யும் அவற்றிற்குரிய இராகங்களைப் பற்றியும் சுவாமி விபுலானந்த அடிகளாருடைய யாழ் நூலிலிருந்து பெறப்பட்டவற்றையும் வகைப் படுத்திக் காட்டியுள்ளார். அத்துடன் ஓதுவார்கள், தேசிகர்களின் நிலைப்பாட்டைக் குறிப்பிடும்போது “காரணமின்றிப் பண்டையோர் வழக்கினை” இக்காலத்தோர் மாற்றுவது மரபுக்கு இழுக்காகு மல்லவா? என ஒரு வினாவை எழுப்பியுள்ளார். உண்மையிலேயே

Page 7
இவ் வினாவை இன்று நாம் எல்லோரும் பலதுறை சார்ந்த விடயங்களிலும் உற்றுநோக்க வேண்டியவர்களாக உள்ளோம் என்பதை அவருடைய கூற்று எமக்கு அப்பட்டமாக எடுத்துக் காட்டு கின்றது எனலாம்.
திருக்கோணேசப் பெருமானின் திருவருளால் 'திருக்கோண மலை மாவட்டத் திருத்தலங்கள்’ திருக்கோணேசர் கோவில் வரலாறு 'சண்முகா சரணம்' ஆகிய அரிய நூல்களை எம்மவர் கட்கு அளித்த சைவசிகாமணி அவர்கள் 'திருமுறைப் பண்ணிசைத் திறனாய்வு’ என்ற இவ்வரிய நூலைப் படைத்துள்ளமை. இந்து இளைஞர்களாகிய எமக்கு நிறைந்த மனநிறைவைத் தருகின்றது.
அன்னார் ஆண்டுகள் பல வாழ்ந்து சீரும் சிறப்பும் பெற்று மிளிர்ந்த திருக்கோணமலைத் தலத்தின் தற்போதய இருள் சூழ்ந்த நிலையை நீக்குவதற்குத் தன்னாலன பங்களிப்பைச் செய்துதவ வேண்டும் என இந்து இளைஞர்கள் சார்பில் வேண்டி எமது பேரவை யின் காப்பாளர்களில் ஒருவராக விளங்கும் பண்டிதர் சைவப்புலவர் இ. வடிவேல் அவர்களின் அயராத அரும்பணிகளுக்கு நாம் என்றும் உறுதுணையாக இருப்போம் என்பதையும் கூறி எம்மையெல்லாம் வழி நடத்தும் தாயினும் நல்ல தலைவனாகிய திருக்கோணமலையின் காவலனாம் கோனைநாயகப் பெருமான் எம் எல்லோருக்கும் திருவருள் புரியவேண்டுமெனப் பிரார்த்திக்கின்றோம்.
"திருமுறைகள் இல்லையேல் எமக்கு உய்வில்லை"
திரு. செல்லப்பா சிவபாதசுந்தரம்
மதிப்பார்த்த பொதுச்செயலாளர், 393, திருஞானசம்பந்தர் வீதி, திருக்கோணமலை மாவட்ட திருக்கோணமலை, இந்து இளைஞர் பேரவை.
 

ஓம் சிவம்
'ஒன்றே குலம் ஒருவனே தேவன்"
ஆசியுரை.
சுவாமி கெங்காதரானந்தா. சிவயோக சமாஜம்
பிரதான வீதி,
திருக்கோணமலை,
நித்திய பிரமசாரி சைவப்புலவர்-பண்டிதர். இ. வடி வேலு அவர்கள் ஏற்கனவே 'திருக்கோணமலை மாவட் டத் திருத்தலங்கள்’ திருக்கோணமலை கோணேசர் கோ வில் வரலாறு’ சண்முகா சரணம் என்ற மூன்று சற்புத் திரர்களளச் சைவசமய மக்களுக்கு ஈன்று அளித்திருக்கிறார். இப்பொழுது ‘திருமுறைப் பண்ணிசதை திறனாய்வு’ என்ற நான்காவதொரு அருமைச்சந்தானத்தையும் தந்திருக்கிறார்.
திருமுறைப் பண்ணிசை என்றாலென்ன? அது எவ் வகையில் பயன்படுகிறது? எவ்வாறு பயன்படுத்த வேண்டும்? அதைப் பயன்படுத்துவதால் வரும் நன்மைகள் எவை? என்பதற்கெல்லாம் இந்நூல் தெளிவான விளக்கந் தருகின் றது. அதிநுட்பமாய் ஆராய்ந்து எழுதிய இந்நூலைப் படிக் கும்பொழுது திருமுறைகள்தானா ஆதி வேதம் என்று தோன்றும் அளவுக்கு ஆராய்ந்து எழுதப்பட்டிருக்கிறது.
சைவ சமயத்தின் இருதயத் துடிப்புப்போலிருக்கும் இந்த அரிதான பொக்கிஷத்தைச் சைவ மக்கள் அனைவரும் பயன்படுத்திப் பிறவிப்பயனை அடையவேண்டும். ஹிந்தும தத்தின் இரத்த விருத்திக்குப் பயன்படும் இதுபோன்ற இன் னும் பல நூல்கள் உத்தம பண்டிதர் திரு வடிவேல் அவர் களிடமிருந்து வெளிவரவேண்டும். அதற்குரிய ஆற்றலும், ஆரோக்கியமும் நீடித்த ஆயுளும் சிவக் கிருபையால் அவ ருக்கிருப்பதாக,

Page 8
யூனிராமக் கிருஷ்ண சங்கம்
(பூனரீலங்கா கிளை)
ராமக்கிருஷ்ணபுரம், மட்டக்களப்பு.
ஆசியுரை
தெய்வம் சுட்டிய திருப்பாடல்களாகிய திருமுறைகளைப் பன்னி ரண்டாக வகுத்து அவற்றிற்குரிய பண்களையும் தொகுத்துத் தந்தவர் நம்பியாண்டார் நம்பியவர்கள். திருமுறைகளைப் பன்னிரண்டாக வகு த்ததுபோல் “திருமுறைப்பண்ணிசைத் திறனாய்வு” என்ற நூலை சை வப் புலவர் பண்டிதர் திரு. இ. வடிவேல் அவர்கள் பன்னிரு தலைப் புகளின்கீழ் ஆய்வுசெய்து தமிழ்கூறும் நல்லுலகிற்கு அளித்துள்ளனர்"
**திருக்கோணமலை மாவட்டத் திருத்கலங்கள்' ' திருக்கோ ணமலை கோணேசர் கோவில் வரலாறு, ‘ச்ன் மகா சரணம்' என்ற நூல்களைப் படைத்தளித்த பண்டிதர் அவர்கள் நான்காவது படைப் பாக 'திருமுறைப் பண்ணிசைத் திறனாய்வு” எனற நூலை ஆக்கி யுள்ளனர். திருமுறைகளின் தொன்மையையும், பண்களின வண்மை யையும் அவற்றின் சுவைநயம், பொருள்நயம் , கவிநயம் என்பனவற்றை யும், அவை ஆலயங்களில் தமிழ் வேதமாக ஒதப்படவேண்டியதன் அவசியத்தையும் சைவ மக்களுக்கு நல்விருந்தாக அ த்ெதுள்ளார்.
சுவாமி விபுலானந்த அடிகளாரின் யாழ்நூலிலிருந்தும் சிலப் பதிகாரம், பரிபாடல் முதலிய சங்க இலக்கியங்களிலிருந்தும் சைவ இலக்கியங்களிலிருந்தும் ஆதாரங்களை எடுத்துக்காட்டி பண்ணிசை யை ஆய்வு செய்திருக்கும் பெருமுயற்சி பராட்டத்தக்கது.
ஆழ்ந்த அறிவுடைய பேரறிஞர்களை அடியொற்றிநின்று இந்த அரிய நூலை ஆக்கித்தந்த பண்டிதர் திரு. இ. வடிவேல் அவர்கள் மேலும் பல நூல்களைப் படைத்து மக்களுக்கு வழங்க பகவான் பூரீராமக்கிருஷ்ண பரமஹம்ஸ் தேவரின் நல்லாசிகளும் அருட்கடா கூடிமும் நிறையப் பெற்றுப் பல்லாண்டு வாழ்க,
பூரீராமகிருஷ்ண மிஷன், சுவாமி ஜீவனானந்த, 05. LDITfi digi l990

திரிகோணமலை வில்லூன்றிக் கந்தசுவாமி தேவஸ்தானத்தைச் சேர்ந்த பிரதம சிவாச்சாரியரும் மட்/ சிவானந்த வித்தியாலய சமஸ்கிருத - இந்துநாகரிக முன்னாள் ஆசிரியருமான
வியாகரண சிரோமணி. (அண்ணாமலை சர்வகலாசாலை) சிவபூனி பூரண தியாகராஜக் குருக்கள் B. A. Hons (cey) அவர்கள் வழங்கிய அணிந்துரை
"வடமொழியும் தென்தமிழும் ஆயினான்காண்’ என்பனபோன்ற அருள் வாக்குகளிலிருந்து இறைவனுக்கு இரு கண்களாக விளங் கும் இவ்விரு மொழிகளிலும் அமைந்துள்ள வேதங்களும் திராவிட வேதம் என வழங்கப்படும் தேவாராதிகளும் ச்ைவ சமயிகளுக்கு இரு கண்களிலும் மேலாக அமைந்த இரு பொக்கிஷங்கள். அனாதியான வேதமானது எழுத்து மாற்றமோ, ஸ்வரமாற்றமோ இன்றிப் பண்டு தொட்டுச் செவிவழியாகக் கேட்டு ஒதப்பட்டுப் பேணப்படுவதுடன் பதபாடம், கிரமபாடம், ஜடை என்னும் பல்வேறு வகைகளினாலும் பாதுகாக்கப்பட்டு வருவன போன்றே தேவாரா திகளும் எழுத்து, சொல், பண் (இசை) ஆகியன மாற்றமின்றி உரியமுறையில் ஒதிப் பேனிப் பாதுகாக்கப்படவேண்டிய அரிய பொக்கிஷங்களாகும்.
மிகவேகமாக வளருவதும், தற்காலிகமாகத் தோன்றியழியும் இன்ப ஊற்றுக்களாய்க் கானல் நீரென்க் கவர்ச்சி வாய்ந்த விடயங் சளில் மயங்குவதுமான நிலை மலிந்த இக்காலச் சூழலிலே திருமுறை அமுதக்கடலுள் மூ! கி அனுபவித்துச் சுவைத்துத் தான் சுவைத்த தோடமையாது 'யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என் னும் பரந்த நோக்கில், அதன் தேறலான "திருமுறைப் பண்ணிசைத் திறனாயவு’ எனும் அமுதத்தைத் திரு தறைகள் பன்னிரண்டாயின :ைமபோலப் பன்னிரண்டு அத்தியாயங்களில் பாரினுக்கு வழங்கியுள் ளார், நித்தியப் பிரமசாரியும், சைவத்திலும், தமிழிலும், இசையி லும் ஆழ்ந்த அறிவும் ஈடுபாடும் பற்றும் மிக்க அன்பரும் நண்பரு மான சைவப்புலவர் - பண்டிதர் - இ. வடிவேல் அவர்கள். இவரின் இம்முயற்சி மேலெழுந்த வாரியாக அமைந்ததல்ல. அக்குவேறானிவே றாக ஆய்ந்து ஒப்புநோக்கி, நிகழ்ந்தன, நிகழ்வன, நிசழவேண்டுமென ஆசிரியர் விரும்புவன ஆகியவற்றை நூலில் சுட்டிக்காட்டியிருக் கும் பாங்கு, திருமுறைக் குழந்தைமீது அவருக்குள்ள அசைக்கமுடி யாக ஆழ்ந்த பற்றினையே விளக்குகின்றது. இவரின் அசகாய சூரத் தனமான இம்முயற்சிகண்டு வியக்கும் நேரத்திலே, துணிச்சலுடன்

Page 9
இவர் மேற்கொண்ட இவ்வாய்வுநூல் வருங்காலச் சந்ததியினருக்கும், ஆய்வாளருக்கும் முன்னோடியாக இவர் விதைத்துள்ள விதையானது வளர்ந்து செழித்துப் பூத்துப் பழுக்கும் போதுதான் நாம் அதன் முழுப்பயனையும் அனுபவிக்கமூடியும். தமிழ், திருமுறைப் பண்ணிசை ஆகியவற்றில் பற்றும், பணி;ம், துணிச்சலும் மிக்க அறிஞர்கள் சிலருள் பண்டிதரும் ஒருவர். அவரின் முயற்சி பிற்கால ஆய்வாள ருக்கு வழிகாட்டியாயமையுமென்பதில் ஐயமில்லை.
திறனாய்வு, விருப்பு வெறுப்பு, காழ்ப்புணர்ச்சியின்றி ‘அசிதாரா வ்ரதம்” வாள் நுனியின் மீது நடத்தல்போல் மிக அவதானமாக ஒருமுகப்பட்ட மனத்துடன் செய்யவேண்டிய புனிதப் பணியாகும். பண்டிதரவர்கள் இதனையே கைக்கொண்டு இம்முயற்சியில் ஈட்டிய வெற்றி போற்றப்படவேண்டியதே. உருவில் சிறியதாயினும் இந் நூல் திருமுறைகள் என்னும் பாற்கடலைக் கடைந்தெடுத்த அமுதத் துளிகள் என்று கூறுதல் தகும். ஏனெனில், அமுதத்துளி உருவில் சிறிதாயினும் அதனை உண்பேர் அமரநிலை பெறுதல்போல திரு முறைய முதத்தைச் சுவைப்போரும் பனைம் செய்வோரும் அந்நிலை பெறுவர் என்பது என அபிப்பிராயம்.
ஆகமங்கள் இருபத்தெட்டு. அவை பலதிறப்பட்டோருக்காகக் கிரியை முறைகளை விளக்குவன. எனவே பத்ததிபேதங்களால் நடை முறைகள் சிற்சில மாறுபடுவதும், பாரம்பரியமாகக் கடைப்பிடிக் கப்பட்டு வருவதும் இயற்கையே. எனினும் எல்லாம் ஒரேபாங்கில் அமையவேண்டுமென்ற குறிக்கோளின் பலனைக் காலமே பதில் சொல்ல வேண்டும்.
பண்டிதர் அவர்கள், சுவாமி விபுல்ானந்த அடிகளார் குறிப் பிட்ட பெயர்கள், இக்காலத்திலுள்ள இராகங்கள், என்பனவற்றை யும் ஆராய்ந்து, திருமுறைப் பண்வகை, திருமுறையில் இசைத் தமிழ், என்பவற்றை விளக்குவது அவரின் புலமையினையும், ஆராய்
வுத் திறனையும் விளக்குவன,
வேதங்கள் ஒரு சிறு மாற்றமுமின்றி மனனஞ்செய்து பேணிப்பாது காக்கப்பட்டு வருவதுபோல திருமுறைகளையும் பேணிப் பாதுகாத் தல் சைவ மக்களின் பெருங்கடமையாகும். வேதங்கள், திருமுறைகள், இசையாகியவற்றுக்குப் பிறப்பிடமான தாய்நாட்டிலேயே, தற்கால விஞ்ஞான யுக மயக்கங்காரணமாக வேத, திருமுறைப் பாடசாலைகள் அருகிவரும் இக்காலகட்டத்தில் அவற்றைப் பேணிப்பாதுகாக்க வேண்டுமென்ற நன்னோக்கமும், தீவிரப் பற்றும் மிக்க பண்டிதர் அவர் களின் நன்னோக்கத்தினை அன்பர்கள் புரிந்து மனங்கொண்டு பண்ண மைதி வழுவாது உரியமுறையில் இசைக்கும் நாள் விரைவில் வரவேண் டுமென்ற இம்முயற்சியினை யாம் முழுமையாகப் பாராட்டுகின்றோம்.

திருமுறைகளனைத்தையும் மனனம் செய்யக் காலம், நேரம், சூழ்நிலை இல்லாவிடினும் ** திருமுறைத் துளிகள்’ என்னும் தலையங்கத்தில் பண்டிதரவர்கள் தந்துள்ள பாக்களை உரிய பண்ணமைதியோடு நம் சிறார்களுக்குப் பயிற்றுவித்தல் பெற்றோர்களினது கடமை. அதே போலக் கல்லூரிகளில் கற்பிக்கும் சைவசமய ஆசிரியர்களும் முழுமனத் துடன் உரியவாறு மாணவர்களுக்குக் கற்பிக்கவேண்டுமென்பது என் அவா. இது பூரணமாக நிறைவேறும்போதுதான் பண்டிதர் அவர்களின் முயற்சி பலன்தர ஆரம்பித்துவிட்டது என்பதனை உணரலாம்.
*திருக்கோணமலை மாவட்டத் திருத்தலங்கள்’ ‘திருக்கோண மலை கோணேச கோவில் வரலாறு?’ ‘சண்முகா சரணம்’ என்னும் மூன்று அரிய நூல்களைச் சைவ உலகுக்கு அளித்த சைவப்புலவர், பண்டிதர், இ. வடிவேல் அவர்களின் படைப்புக்களான இந்நூல்களை யும் அன்பர்கள் அனைரும் வாங்குவதோடமையாது இதனை ஆழ்ந்து படித்து அதன்படி ஒழுகுவதுடன் தம் சிறார்களையும் அவ்வழி நடத்தி நடைமுறைப்படுத்தவேண்டுமென்பதே நம் பெருவிருப்பம்.
ஆன்மீக வாழ்க்கைக்கே தனனை முழுமையாக அர்ப்பணித்துச் சமயப்பணியினை முழுமூச்சாகக் கொண்டிருக்கும் திருமுறைச்செல்வர் அவர்கள் பேரானந்தப் பெருவாழ்வு பெற வழிகாட்டிகளாக அமையும் இதுபோன்ற பல புயனுள்ள நூல்களை எழுதிச் சைவப் பணிபுரிய அறிவு, ஆக்கம் ஊக்கம், நீண்ட ஆயுள் ஆதியாம் சகல நலன்களையும் பெற்று நீடுவாழவேண்டுமென அன்னாரின் இஷ்டதெய்வமான ஹம் சக மனாம்பிகா எனும் மாதுமையம்பாள் சமேதகோணேசப்பெருமான் அருள்புரிவாராக, என்று கோணேசப்பெருமானின் பாதகமலங்களை உள்ளத்தால் நினைந்து வாயார வாழ்த்திக் கரங்கூப்பிவணங்கி எம் மனம் நிறைந்த நல்லா சிகளை வழங்குகின்றோம். * へ
"சர்வே ஐநா சுகினோ பவந்து" மக்களெல்லாம் இன்புற்று வாழ்க.

Page 10
அணிந்துரை.
சிவாகமக் கிரியா சிரோண்மணி சிவழனி. பி. பா. தியாகராஜக் குருக்கள் சுழிபுரம்.
திருமுறைகளைப் பற்றியோ, அதன் பண்களைப்பற்றியோ திற னாய்வு செய்வது எழிதிற் கைகூடக்கூடிய விஷயமன்று. திருமுறை களைப் பண்ணுடன் பொருளுணர்ந்து இசைநுணுக்கமறிந்து டாட வல்லவர்களுக்கே அது கைகூடும்.
இந்தூலாசிரியர் சைவப்புலவர், பண்டிதர். இ. வடிவேலு
அவர்களின் குடும்பத்தை நன்கு அறிந்தவன் என்ற முறையில் இந்
நூலை எழுதக்கூடிய தகைமை அவருக்குண்டு. பண்ணிசையுடன் ஒன் றிப் பிணைந்தது இவருடைய குடும்பம்.
திருமுறைகள் பன்னிரண்டாக வகுக்கப்பட்டிருப்பதுபோன்று, நூலாசிரியர் இந்நூலையும் பன்னிரண்டு கோணங்களில் நின்று ஆராய் ந்து அத்தியாயங்களாகத் தந்திருக்கிருர், இறைவனுக்கு வடமொழி யும் தென்தமிழும் இருகண்கள் போன்றது என்பது, "வடமொழி யும் தென்தமிழும் ஆயினான்கான்’ என்னும் வாக்கிலிருந்து விளங் கும் நூலாசிரியரின் ஆழ்ந்த அறிவை அவர் எடுத்தாண்ட * சுலோ கங்களால்’’ தன்னுடைய நிலைப்பாட்டை உறுதிசெய்திருப்பதிலிருந்து தெரிகின்றது. A
வேதம் ஸ்வரத்தோடு ஒதப்படல்வேண்டும். (ஸ்வரம் என்பது உயர்த்துதல், பதித்தல், சமப்படுத்தல், நீட்டுதல் என இசைப்பதைக் குறிப்பிடும் அதேபோன்று திருமுறையும் பண்ணுேடு ஒதப்படல் வேண்டும். ஆசிரியரும் இதைத் குறிப்பிட்டுள்ளார். பண்வகைகளை ஆழ்கடலில் முத்தெடுப்பதுபோல் ஆராய்ந்து, பண்கள் அவற்றுக்குத் தற்காலத்திலுள்ள இராகங்கள், விபுலானந்த அடிகள் குறித்த பெயர் கள் ஆகியவற்றை, ஆழ்ந்த ஆராய்ச்சியின்பின் "திருமுறைப்பண் வகை’ ‘திருமுறையில் இசைத்தமிழ்’ என்னும் தலைப்பில் எடுத்து விளக்கியிருக்கின்றார். இது அவரின் ஆழ்ந்த அறிவைப் பளிச்சிடவைக் கின்றது.

ஆலயங்களில் தோத்திரமும் சாத்திரமும் என்னும் அத்தியாயத் தில் சில ஆலயங்களில் திருமுறைகளுக்கு ஏற்படுகின்ற புறக்கணிப்பை உள்ளம் நொந்து குறிப்பிடுகிறார். இது வேதனைக்குறிய விஷயத் தான். இப்பொழுது சைவாலயங்களில் புதிய வழிமுறைகளைக் கடைப் பிடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இது சிவாக மக் கிரியைகளுக்கே பெரும் இடைஞ்சலாக இருக்கின்றது. நவசந்திகளில் பத்ததிக்குப் பத் ததிசில மாறுபாடுகள் காணப்படுகின்றது. ஒரே பண் இரண்டு இடங் களில் வருகின்றது. இவைபோன்றவற்றைச் சீர்செய்யவேண்டியுள்ளன
இந்நூலின் பன்னிரெண்டு அத்தியாயங்களும் நிறைந்த கருத் துச்செறிவுடையன, ஒவ்வொரு சைவ சமயத்தவரும் படித்துப் பயன் பெறவேண்டிய நூலாகும். பன்னிரெண்டாவதும் இறுதியுமாகிய அத் தியாயத்தில் நூலாசிரியர் வேதாகமங்களைப் பிழிந்து வடித்தெடுத்த ரசமாகிய திருமுறைகளை ஆழ்ந்து கற்று அநில் வடித்தெடுத்த ஐந்து அமிர்தத்துளிகளாக எமது பிறவி என்னும் நோய்க்கு மருந்தாக எமக்கு வழங்கி பிருக்கிறார். அதில் முதல் துளியாக கோணேஸ்வரப் பெருமான் பேரில் அருளிச்செய்யப்பட்ட திருமுறைகளையும், மற்றும் நமச்சிவா யப்பதிகம், திருநீற்றுப்பதிகம், கோளறுபதிகம், குலைநீக்கி யப்பதிகம், ஆகிய ஐந்தும் எமது உடல்நோய்களை நீக்கி இன்பம் பெற அரிய அமிர்தத் துளிகள்.
"மேன்மைகொள் சைவநிதி விளங்குக உலகமெல்லாம்"

Page 11
ரிைந்து ை.
, , - , , | '''' TT :) ! - T : " T " "; । . . . . . . . . . . . . .
༈ །
If - г75ѣ 5 5 ) ! 5 ћ ; F5 * 5 '-3 1 Jir , r + ''
3 ' : ங் மற்! கிய தர து நிருவ
ғыл, 3, 3, in LI : 1 т тілігі бір S SA SAS TT AA S T S A S SS uu S SSL தழங் ' க் நேரியாத " பாட்டது. மக்கள் ^ằ 7 (7 Joh (5 io, Gớ{3, 7,
YZT T SLL LCC CS T LS SS ST uHt L t SSLSS S S AS I ti i ir r ii iir-xiri.
இட்ப பாால் நி: ਈ . ।।।। 'த்து அவற்றின் பண்ணி' த் தொப்பு ப்ே "' 'பிர் துணிந்துள்ா
' .. ।।।। போது ,33, Petri r.
ந்ேதார்: பூக் போனாகிய ஒரு
பிரச்ள்ேவர், ஐ 'ர்ெ, ஊக்குச் சவ 1:கம் ந நிகூறு
:ே ண் Th,
'கக் கிடக்கும் புராதனச் சின்னர் **ன் அழித்தேடுத் து உtதுக்குக் காட்டும் பு:பொருளாராய்ச்சி பார்: விட 3 'ப்'ர்ெ அவர் 1ள் தாகம் ' தாபிப்படை: அடியில் பல நூற்றாண்டுகளாக மறைந்து § ' .. ந்த நீருமுறை | ii | !! - ப்பு ப்து ர். | 53 53" | Te, i г. Ј. Ј. 5 и III. st. i 3 . . . . . . . . . . வர் அவர் :ோ ந், பி; 禺” சிக்கி பே இன் பற்றினால் இரவு, டால் எது பா,
茜茜 עי: ייד : .Կ : טוינP, "ב, י Iittor T: " " են ii | ( ), լյար :) -- :) ப்ெ பற்றி பண் ஓரி : விக் நிற:ாய் : r i:
'ச் செப்பிறார்கள் ஆr ல் ,வ
1 - 2 எதிர்பார்க்கா,
நம்பிய எண்டர் தம் நிர் on ವಾ''?: ಸF, (Apr குத்த பின்னர் i ' ' ' . பேயர் உண்டாடு பாக 15 "f Lysagar ம்ெ நின த்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் இந்நூாவின் முத எம் அதிகாரத்தின்படி ருேமுறை எற சொல் நம்பியாண் நம்பிக்குப் பல நூற்றாண் = ர்ே : மு வாழ்ந்த திருமூலர் திருமத் திரத்தின் கானட்டடு ஆதாரக் *றியுள்ளார். ஆ ேெவ திருமு பிற என்ற சொல் மிகவும் ழமை வாய்ந்தது : as is usicia, if guita, gi நூலில் விளக்கியுள்ளார்.
ا"
 
 
 
 
 
 
 
 
 
 

பதினோராம் அத்தியாயத்தில் ஆலயங்களில் தோத்திரமும் சாத்திரமும் என்ற பகுதியில் நவசந்திகளிற் பாடப்படும் திருமுறைப் பண் பற்றி வெகு ஆழமாகவும், தெளிவாகவும் கூறியுள்ளார். இது வரைகாலமும் தவறாக ஒதப்பட்ட பண்களை இனியாவது திருத் திக் கொள்வதற்கு பண்டிதர் எமக்கு ஒரு வாய்ப்பளித்துள்ளார். திருமுறைபற்றிய விளக்கம், அவற்றின் பண்வகை பற்றிய ஆய்வு, திரு முறைகளுக்கான உரை என்பவைகளையெல்லாம் ஆராய்ச்சி செய்து ஈற்றில் திருக்கோணமலைப் பதிகம், நமச்சிவா யப் பதிகம் , திருநீற்றுப் பதிகம், கோளறு பதிகம், சூலைநீக்கிய பதிகம் ஆகியவற்றுடன் பன்னி ரண்டு அத்தியாயங்களைக்கொண்ட நூலாக இது நிறைவு பெறுகிறது.
உயர்வகுப்புகளிலும், பல்கலைக் கழகங்களிலும் இந்துக்கலா ச்சாரம், இந்து நாகரீசும் போன்ற பாடங்களைப் படிக்கும் மான வர்களுக்கு உறுதுணையாக அமையும் ஒரு அரிய நூல் இது கூடிய விரைவில் இலங்கையிலும், தமிழ்நாட்டிலும், உள்ள அரசாங்கங்கள் இதற்குப் பாடநூல் அந்தஸ்து அளித்து இந்து சமயத்திற் பொதிந்து கிடக்கும் தத்துவங்கஆக்குப் புத்துயிரளிக்க வேண்டும் என்பதே என் அவா.
திருமுறைச்செல்வர். சைவப்புலவர், பண்டிதர். இ. வடிவேல் அவர்களின் பணி தொடரட்டும். இதற்கான ஆதரவை வசதிபடைத்த இந்துக்கள் அனைவரும் அவர்கள் எங்கு வாழ்ந்தாலும் வாரி வழங்க வேண்டும். என அன்புடன் வேண்டுகின்றேன்.
'செல்வர் வாழ் தில்லைச் சிற்றம்பலமேய செல்வன் கழலேத்தும் செல்வம் செல்வமே'
திருமதி. பாலேஸ்வரி - நல்லரெட்னசிங்கம்.
தலைவி 157, டைக்ஸ் வீதி, திருக்கோணமலை இந்து மகளிர் மன்றம்
திருக்கோணமலை, தெட்சன கான சபா.

Page 12
திருச்சிற்றம்பலம் ஞாலம் நின்புகழே மிகவேண்டும் தென் ஆலவாயில் உறையும் எம் ஆதியே.
அணிந்துரை
செந்தமிழ்ச் சிவநெறியின் வேதமாக விளங்குவது திருமுறை களே. 'திருநெறிய தமிழ்' என்று தெய்வ சாந்நித்திய நிலையில் செந்தமிழ்ச் சிவநெறியுலகம் உச்சிமேற் கொண்டு வாழ்த்தி வணங்கி வாழ்விற் கைக்கொண்டு பேணிவருகின்ற சீர்சால் சிறப்பும் பெருமை யும் ஒருங்கேயமைந்தது, சிவபக்த சிகாமணிகளாகிய சிவனடியார் கள் அருளிச்செய்த திருமுறைகள்.
திருமுறைகள், எல்லாம்வல்ல ஆடவல்லா னாகிய திருச்சிற்றம் பலத்து இறைவனையே முன்வைத்துப் பாடியருளப்பெற்றாலும், திருமுறைகள் பக்திக்குரியவைகளாக விளங்கினாலும், திருமுறைகள் மனித வாழ்வுக்கு நற்றுணையாக விளங்குவன. திருமுறைகளின் உதவி கொண்டு இறைவனையே ஏற்றிப் போற்றியும், வணங்கி வழி பட்டு நாம் நமது வாழ்வைத் திருமுறைகாட்டும் தர்மநீதியின் அடி சுவட்டில் வழிநடத்தி இன்ப சுகவாழ்வு வாழeாம்.
தெய்வ நலங்களும், பண்ணிசைச் சிறப்புக்களும், இயற்றமிழ் மேன்மையும், மேன்மைகொள் சைவரீதியும் ஒருங்கேயமைந்துள்ள திருமுறைகளைச் செந்தமிழ்ச் சிவநெறியுலகம் நன்கு அறிந்து விளங்கவேண்டுமென்ற உயர்வான எண்ணங்கொண்டவர் எங்கள் அன்புக்கும் , மதிப்புக்குமுரிய சைவப்புலவர் - பண்டிதர். இ. வடிவேலு ஐயா அவர்கள். அவர்களின் சிவப்பணிகளுள் ஒன்றாகத் 'திருமு றைப் பண்ணிசைத் திறனாய்வு' என்ற நற்பணியும் மலர்ந்துள்ளது. அது தெய்வ சாந்நித்தியம் மிக்கதான இறைவனின் திருவடிமலர். அதன் தெய்வீக மணம் ஆன்மாக்களின் நெஞ்சங்களில் நிறைந்து புனிதமான நறுமணத் தை வழங்கவேண்டுமென்பது எமது விருப்பம் ஐயா அவர்கள் பன்னிரு திருமுறைகளையும் ஆய்வு செய்வதற்குப் பன்னிரண்டு படிமுறைகளை அமைத்துள்ளார்கள். இப்பன்னிரண்டு படித் துறைகளையும் ஏறிக்கடந்தால் திருமுறைகூறும் மேன்மை களையும், அவ்வுண்மைப் பொருளாயிருக்கும் சிவப்பரம்பொருளின் திருவருளையும் பெற்று இகபர சுகத்தையும்பெற வழிபிறக்கும் என்பதில் ஐயமில்லை.

நமது சைவப்புலவர் ஐயா அவர்கள் நித்திய பாராயணத்துக் குரியவையாகத் தெரிவு செய்துள்ள ஐந்து பதிகங்களில் கோளறு பதிகமும்’ ஒன்றாக அமைகின்றது. இப்பதிகம், பொழிப்புரையோ டுகூடிய சுருக்கமான விளக்கத்துடன் சிறப்பாக அமைந்துள்ளது. திருமுறைப் பாடல்பெற்ற புண்ணியத் தலமாகிய கோணமாமலையில் திருமுறைகளுக்குப் பணியாற்றும் நற்பேற்றினைப் பெற்று விளங்கு கின்ற எங்கள் சைவப்புலவர் ஐயா அவர்களின் சிவப்பணியும், தமிழ் ப்பணியும் என்றென்றும் வளர்க, வாழ்கவெனத் திருச்சிற்றம்பலத்து இறைவன் திருவடிகளைப் பிரார்த்திக்கின்றோம்.
“ og grou““
'வளர்க திருமுறை வாழ்வு நெறி'
‘வாழ்க உலகெலாம்"
திருவடி அடியேன்
இளைஞர் அருள்நெறி மன்றம் இ. சண்முகராசா திருக்கோணமலை (இலங்கை) மன்றச் செயலாளர் 12-04-1988

Page 13

சிவ சிவ
திருமுறைப் பண்ணிசைத் திறனுய்வு
தெய்வஞ் சுட்டிய வாரப்பாடலின் ஐயம் நீக்கி அறிவித் தெனக்கு உய்யும் வகையா னுதவு மைங்கர ஐயன் நன்மல ரிணையடி துணையே,
திருமுறைப் பண்ணிசையின் தொன்மை.
இது திருமுறைத் திறனய்வு, பண்ணிசைத் திறனய்வு, என் றிருபாங்கில் ஆய்வு செய்யப்படுகின்றது. தமிழிசைப் பண்களின் தோற்றமும் வளர்ச்சியும் கிறிஸ்துவுக்கு முற்பட்ட பல்லாண்டுகளுக்கு முன்பாகவே ஏற்பட்டிருந்தன என்பதைத் தமிழரின் மொகஞ்சதா ரோ, சங்குதாரோ, ஹரப்பா நாகரீக வரலாறுகளின் மூலமும், சங்க இலக்சியங்கள் மூலமும், குறிப்பாகப் பரிபாடல், சிலப்பதிகாரம், திருக்குறள், தொல்காப்பியம் ஆகிய நூல்களிலும் காணப்படும் செய்தி கள் மூலம் அறிகிருேம்.
“பண்ணென்னும் பாடற்கியைபின்றேல் கண்ணென்னும் கண்ணுேட்ட் மில்லாத கண்”
என்று திருக்குறள் கூறுகின்றது. பாடலுக்கு இயைந்த வகையில் இசை அமையும்போது அது பண்ணுேடியைந்த பாடலாகின்றது. இயைபு என்ற பதம் பாடலின் இசை, சுவை, லயம் பொருட்செறிவு என்பன வற்றை உணர்த்துகின்றது. பண் (இசை) எனப்படுவது பலதிறப்பட்ட ஸ்வரக்கூட்டங்களால் உருவாக்கப்படும் இராகங்கள். இது இந்திய இசையின் அற்புதமான கருவூலமாக விளங்குகின்றது.
பிழையாமரபு என்றும், அசையாமரபு என்றும் சிலப்பதிகாரத் தில் இளங்கோவடிகளால் போற்றப்பட்ட “தொன்முறை இயற்கை’’ என்ற இசையிலக்கணம் இன்றுவரை பண்கள் எ ன் ற அழி யாத ஒவியங்களாகத் திகழ்ந்து வருகின்றன. குரல், துத்தம்,கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் எனப் பழந்தமிழர் பயின்று வந்த ஏழு இசைச் சுருதிப் பகுப்பு நிரல்கள் முறையே, சட்ஷம், ரிஷபம், காந் தாரம், மத்திமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என இக்காலத்தில் வழங்கும் ஏழு இசைச் சுருதிநிரலைக் குறிக்கும் பெயர்கள் என்னும் உண்மையைச் சிலப்பதிகாரத்தை ஆதாரமாகக் காட்டி சுவாமி விபு லானந்த அடிகளார் யாழ் நூலில் விரிவாக விளக்கியுள்ளார். இந் தச் சுருதி நிரல்களைச் சுருதிபேதம் செய்து பண்களை மாற்றிப் பாடும் இசைவழக்கைப்பற்றியும், சிலப்பதிகாரத்தில் பேசப்படுகின்றது. அன்றியும் பண்ணின் இரதம் (சுவை)பற்றிச் சிலப்பதிகாரத்தில் காணப் படும் இலக்கணத்தை சுவாமி விபுலாந்த அடிகளார் விளக்குவதைப் பிறிதோரிடத்தில் தருகின்ருேம்.

Page 14
2
பரிபாடலென்பது இடைச்சங்கமிருந்து தமிழாராய்ந்த நல்லிசைப் புலவர்களால் அருளிச்செய்யப்பட்டது. எட்டுத்தொகை நூல்களுள் ஐந்தாவது நூல். ஓங்கு பரிபாடலெனச் சிறப்பித்துக் கூறப்படும் நூல். மதுர்ை, திருமருதந்துறை, திருப்பரங்குன்றம், திருமாலிருஞ்சோலை என்பனவற்றின் பண்டைக்கால நிலைமைகளையும், அக்கால நாகரீக முறைகளையும் வைதிக ஒழுக்கங்களையும், திருமால், முருகன் முதலிய தெய்வ வழிபாட்டு முறைகளையும் இந்நூல் கூறுகின்றது.
*திருமாற்கிரு நான்கு செவ்வேட்கு முப்பத் தொருபாட்டுக் காடுகாட் கொன்று - மருவினிய வையையிருபத்தாறு மாமதுரை நான் கென்ப செய்ய பரிபாடற் றிறம்'
என்னும் வெண்பாவால் பரிபாடல் எழுபது பாடல்களையுடையதென அறியக்கிடக்கின்றது. இவற்றுள் திருமாலுக்குரியவை ஆறு. முரு கனுக்குரியவை எட்டு. வையைக்குரியவை எட்டு. ஆக இருபத்தி ரண்டு பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன.
பரிபாடலென்பது இசைப்பா வென்றும் பரிந்து வருவதென்றும் கூறப்படுகின்றது. நிறைநரம்புடையவை பண்ணென்றும், குறைநரம் புடையவை திறம் என்றும் கூறும் குறிப்பொன்றும் அந்நூலிற் காணப் படுகின்றது. பிற்காலத்தில் தோன்றிய கர்நாடக இசையில் கர்த்தா ராகமென்றும், ஜன்ய ராக மென்றும் கூறுவதையே அவை குறிப் பிடுவதாகக் கொள்ளலாம். பரிபாடலிலுள்ள பாடல்கள் பாலையாழ், காந்தாரம், நோதிறம், என்னும் பண்ணமைதியுடையதென்பதும், ஒவ்வொரு பாடலுக்கும் இசையமைத்தவர் பெயரும் பாடலாசிரியர் பெயரும் இந்நூலிற் காணப்படுகின்றது. இந்நூற் பாடல்கள் தே வாரங்கள் போலவே பண்டைக்காலத்தில் பண்முறையாகத் தொகுக் கப்பெற்று உரிய பண்ணமைதியுடன் பாடப்பெற்று வந்துள்ளதென்று தெரியவருகின்றது. கடைச்சங்க காலத்திற்கும் தேவாரகாலத்திற் கும் இடைப்பட்ட காலத்தில் பண்ணுேடு பாடும் வழக்கம் சிறிது சிறிதாக மறைந்துபோனமையினல் இப்பாடல்களைப் பாடும் முறை யை இப்போது சிறிதேனும் தெரிந்து கொள்ள இயலவில்லை. ஆனல் தேவாரகாலத்திற்குப் பல்லாண்டுகளுக்கு முன்பிருந்தே பண்ணமை தியும், இசைமரபும் இருந்து வந்துள்ளதென்பதற்கு பரிபாடல் சான்ரு யமைகிறது.
பரிபாடலில் "கொளை' என்பது இயலிசைப் பாடலைக் குறிப்ப தாகும். முழவு, யாழ், குழல், தூம்பு (வங்கியம்) முரசு, கிணை, மத் தரி, தடாரி, தண்ணுமை, ஒத்து, குடி, பறை, முதலிய இசைக் கருவிகளைப் பரிபாடல் குறிப்பிடுகின்றது. ஏழு துளை, ஐந்து துளை வங்கியங்கள் இருந்ததாகவும் பரிபாடல் கூறுகின்றது. தாளம்,

ஒத்து, என்பன பாண்டில் என்ற பெயராலும், நரம்பு கூரம் என்பன யாழ் என்ற பெயராலும், இந்நூலில் குறிப்பிடப்படு கின்றது. பாலைப்பண், மருதப்பண், நைவளம், இளிவாய்ப்பாலை, குரல்வாய்ப்பாலை, முதலிய பண்களும் பரிபாடலில் பேசப்படுகின்றது.
சங்க இலக்கியங்களுக்குப்பின் தோன்றிய சைவ இலக்கியங்களில் மிகப் பழமையானவை காரைக்காலம்மையார் பாடிய பாடல்களும், திருமூலர்பாடிய திருமந்திரமும், சமயகுரவர்கள் பாடிய பாடல்களு மாகும். இவற்றையெல்லாம் திருமுறை என்ற சொல்லால் சைவப் பெருமக்கள் பகுத்து முறைப்படுத்தி வழங்கிவந்துள்ளனர், திரு முறை என்ற சொல் திருமுறைகளை வகுத்த நம்பியாண்டர்ர் நம்பிக் கும் பல நூற்றண்டுகளுக்கு முன்புவாழ்ந்த திருமூலர் திருமந் திரத்தில் வந்துள்ளது.
‘ஏடங்கை நங்கை இறையெங்கள் முக்கண்ணி வேடம் படிகம் விரும்பும் வெண்டாமரை பாடும் திருமுறை பார்பதி பாதங்கள் சூடுமின் சென்னிவாய்த் தோத்திரம் சொல்லுமே”
(திருமந்திரம். 1067) "
மேற்கூறிய பாடல் திருமந்திரத்தில் நான்காம் தந்திரத்தில் “சக்தி பேதம் திரிபுரைச் சக்கரம்’ என்ற தலைப்பில் வந்துள்ளது. திரி புரை என்ற சக்தியானவள் முக்கண்களையுடையவளாய், வெண்ணி றமுடையவளாய், கையில் ஏடு தாங்கியவளாய், வெண்டாமரை யிலமர்ந்து பார்வதி என்னும் பெயருடையவளாய் திருமுறையைப் பாடிக்கொண்டிருக்கின்ருள். அத்தகைய திரிபுரையின் திருவடியைச் சென்னியிலே சூடுங்கள். அவளைத் தோத்திரம் செய்யுங்கள் என்று திருமூலர் உலகமக்களைத் திரிபுரையிடம் ஆற்றுப்படுத்துகின்ருர், எனவே, திருமுறை என்பது உயர்ந்த அறிவு நூல்களைக் குறிப்ப தாகும் என அறியக்கிடக்கின்றது.
திருமுறை என்றல் என்ன?
இந்துசமயத்தவர்களுக்கு வேதம், சிவாகமம் என்னுமிரண்டும் உயர்ந்த அறிவுநூல்களாகும். இவையிரண்டும் பரமபதியாகிய சிவ பெருமான் ஆன்மாக்கள் உய்யும் பொருட்டு அருளிய முதல் நூல் களாகும். அவற்றுள் வேதம், ஆரியமொழியினையும், தருக்கம், வியா கரணம் முதலிய கருவிநூல்களையும், புராண, இதிகாசங்களையும் நன்கு உணர்ந்தவர்களுக்கன்றி ஏனையோரால் விளங்க முடியாத தாயிருக்கின்றது. அது விஷயங்களைப் பொதுவாகவும் குறிப்பாகவும்,

Page 15
4
உணர்த்துகின்றது. சிவாகமம், அவ்வேதத்திற்குப் பாஷியம்போல் விளங்குகின்றது. அது விதிப்படி சிவதீட்சை செய்யப்பெற்ற பெரி யோர்களுக்குப் பயன்பட்டு உட்பொருளைச் சிறப்பாகவுக் தெளிவா கவும் உணர்த்துவது. எனவே வேதம், சிவாகமம் இரண்டும் குறித்த சிலருக்கன்றி பலருக்கும் பயன்படுவதில்லையாகும்.
வேதம், சிவாகமம் என்னும் இரண்டின் உண்மைப்பொருளையெல் லாம் பசுபோதம் நீங்கிச் சிவபோதம் பெற்ற நாயன்மார்கள் சைவ மும், தமிழும் உய்யும் பொருட்டு இறைவன் அருள்வழி நின்று பசுவின் பாலைக் கடைந்தெடுத்த வெண்ணெய்போலத் திரட்டித் திருமுறை களாக அருளிச்செய்தனர். அவை தேவாரம் முதல் பெரியபுராணம் ஈரு கவுள்ள பன்னிரண்டு திருமுறைகளாகும். எத்தகைய வள்னெஞ் சையும், கன்னெஞ்சையும் கரைக்கும் இசைமயமாகவும் சிவபெரு மானுக்குரிய அதியுத்தம தோத்திரமாகவும், மெய்யன்போடு ஒதுப வர்களுக்கு இம்மை, மறுமைப் பயன்களை அளிக்கவில்லனவாயும் இரு க்கின்றன. சிவபூசை, சிவாலய வழிபாடுகளிலும், சுவாமி வீதியுலா வரும்போது பண்டைக்காலந் தொடக்கம் ஒதப்படும் வழக்கமுடை யதாய் தமிழ்வேதம், என்றும் திராவிடவேதம் என்றும் போற்றப் படுகின்றது.
'திருத்தொண்டத்தொகை” என்ற நூலைப்பற்றிச் சைவஉலகம் நன்கு அறியும். அந்நூலுக்குப் பொல்லாப்பிள்ளையார் சபொருள் அருளிச்செய்தார், தேவாரத் திருப்பதிகங்களை உபமன்னிய முனிவர் அரபத்தர் முதலிய மகரிஷிகளுக்கு உபதேசித்தருளினர். திருவாசகத் தையும், திருக்கோவை யாரையும் சிற்றம்பலத்தரசனுகிய நடராஜப் பெருமான் தமது திருக்கரத்தால் எழுதியருளினர் சுந்தரர் தேவார மும், பெரிய புராணமும் இறைவனல் அடியெடுத்துக் கொடுத்துப் பாடப்பட்டன. அகத்தியமாமுனிவர் அகத்தியர் தேவாரத் திரட்டைத் திரட்டினர். நம்பியாண்டார்நம்பி, உமாபதிசிவாச்சாரியார் முதலிய பெரியார்கள் திருமுறைகளைத் தொகுத்துச் சந்திசெய்தனர். தில்லை மூவாயிரவராலும் திருமுறைகள் அனுசரிக்கப்பட்டன. அபயகுலசேக ரன், அனபாயசோழன் முதலிய மாமன்னர்களால் திருமுறைகள் போற்றப்பட்டன. இத்தகைய பெருமைவாய்ந்தது தமிழ்வேதமாகிய திருமுறைகள்,
திருமுறைகள் என்று கூறும்போது நம்பியாண்டார்நம்பிகள் தொகுத்த பன்னிரு திருமுறைகளையே அது சுட்டும். திரு சிான்ற சொல்லிற்கு செல்வம் என்று பொருள்கொள்ளின் திருமுறையென்பது செல்வத்தை உணர்த்தும் நூல் என்று பொருள் கொள்ளலாம். அது நிலையற்ற பொருட்செல்வத்தையன்றி நிலையான அகுட்செல்வத்தை யே குறிப்பதாகும்.

பண் - குறிஞ்சி செல்வ நெடுமாடம் சென்று சேணுேக்கிச் செல்வ மதிதோயச் செல்வ முயர்கின்ற செல்வர் வாழ் தில்லைச் சிற்றம்பலமேய செல்வன் கழலேத்துஞ் செல்வம் செல்வமே:
(ஞானசம்பந்தர்)
என்று திருஞானசம்பந்தரால் அருளிச்செய்யப்பட்ட இத்தேவாரத்தில் கூறப்படும் செல்வம் மேற்கூறிய அருட்செல்வமேயாகும்.
*அருட்செல்வம் செல்வத்துட் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணு முள’
என்று கூறுகின்ருர் தமிழ்மறை தந்த திருவள்ளுவர். சான்ருேர்களா யிருக்கப்பட்ட அனைவருக்கும் உடன்பாடான நிலையான செல்வம் ஆத்மீகச் செல்வமாகிய அருட்செல்வமே. ஏனைய செல்வங்கள் நிலை யற்றன என்பதாகும். அழிவற்ற ஆத்மா அனுபவிக்கும் ஆத்மபோதத் தெளிவாகிய ஞானப் பிணைப்பினுல் இறைவனேடு இயையும்பொழுது அருட்செல்வம் சுரக்கின்றது.
பொருட்செல்வத்தைத் திரட்டுவதற்குப் பொறிகள், புலன்கள், கரணங்களோடு கூடிய இந்தத் தேகத்தை இறைவன் நமக்கு அருளி யுள்ளான். அறநெறிநின்று பொருட்செல்வத்தைத் தேடுங்கள். போ கங்களை அனுபவியுங்கள், வேண்டாமென்று சொல்லவில்லை. அதே பொறிகள், புலன்கள், கரணங்களோடு கூடிய தேகத்துள் ஜீவித் திருக்கும் ஆன்மா அருள்நெறியிற் சென்று இறைவனேடு யோகித்து அருட்செல்வத்தை அனுபவிக்க ஆசைப்படுகின்றது. பகுத்தறிவுபடை த்த எல்லா மனிதர்களுடைய அடியுள்ளத்திலும் இந்த உணர்வு துளிர்விட டு நிற்கின்றது. இந்த உணர்வுக்கு ஊட்டமளித்து வளர்க்க நமது இந்துமதத்தில் பல மார்க்கங்களை அருளாளர்கள் காட்டி யுள்ளார்கள். கர்மம், பக்தி, ஞானம், யோகம், என்பன அந்த மார்க்கங்கள். ஆலய வழிபாட்டின்மூலம் இந்த நான்கு மார்க்கங்கள் வாயிலாக அருட்செல்வத்தை அனுபவித்தவர்கள் அருளாளர்கள். நாயன்மார்களும். ஆழ்வார்களும் இத்தகைய அருளாளர்களே. அவர் கள் அருளிச்செய்த தேவாரம், திருவாசகம் முதலிய பன்னிரு திருமுறைகளும், திவ்யப் பிரபந்தங்களும் முறையே திருமுறைகள் திருவாய்மொழிகள் எனப்படுகின்றன. இவைகள் அருட்செல்வத்தை அனுபவிக்கும் காரணிகளாக அமைந்துள்ளன.

Page 16
6
சைவசமய சாஸ்த்திரங்கள் பதி, பசு, பாசம் என்ற முப்பொரு ளைப்பற்றிக் கூறுகின்றன. அம்முப்பொருளில், சிவமாகிய பொருள் சிறந்ததாகலின் சிவமாகிய திருவை உணர்த்தும் நூலினைத் திருமுறை என்று சைவப் பெருமக்கள் வழங்கலாயினர். மாணிக்கவாசக சுவாமி கள் ‘சிவமே பெருந்திரு எய்திற்றிலேன்' என்று கூறுதலைக் காண்க. தொண்டர்கள் பெற்றுள்ள சிவமாகிய செல்வத்தைக் ‘கேடும் ஆக் கமும் கெட்ட திரு” என்று சேக்கிழார் கூறுவார். முடிவும், முதலும் இல்லாதவன் இறைவன் ஆதலின் அதனைக் கேடும் ஆக்கமும் கெட்ட திரு என்று கூறுதல் சாலப் பொருத்தமுடையதே. எனவே சிவமாகிய செம்பொருளைப்பற்றிப் பேசும் இலக்கியம் திருமுறையாயிற்று.
முறை என்பது நூல், கோசம், புத்தகம் என்ற பொருளில் வந்துள்ளது. திரு என்னும் சொல் செல்வம், சிறப்பு, மங்களம், மகிமை என்ற பொருள்படுவதாக குடா மணி நிகண்டு கூறுவதால் செல்வத்தைத் தரும் முறை, சிறந்த தன்மையுடைய முறை, மங்களம் நிறைந்த முறை, மகிமைக்குரிய முறை என்ற பொருள்களைக் கொண்டதாய்த் திருமுறை என்னும் சொல் அமைவதாகக் கொள்ள வேண்டும். எனவே திருமுறையென்பது சிறந்த நூல், சிறந்த கோசம், சிறந்த புத்தகம் எள்று பொருள் கொள்ளல் தகும். திருமுறை, திரு வாசகம் , திருக்கோவையார், திருக்குறள், திருவுந்தியார், திருக்களிற் றுப்படியார், என்பன போன்ற நூல்களெல்லாம் திரு என்ற மேன் மைச் சிறப்புக்குரியனவே. பன்னிரு திருமுறைகளைப் பாடியருளிய அருளாளர்களின் திருப்பாடல்களை 'இறையான் மகிழிசை’’ என்ற சிறப்புப் பெயரிட்டுக் குறிப்பிடுகிறார் சேக்கிழார் சுவாமிகள்,
சர்வஜிவதயாபரனும், பரமகருணாநிதியும், பரமபதியுமாகிய சிவபெருமானுடைய திருவருளைப் பெற்ற திருஞானசம்பந்தர் முத லிய நாயன்மார்களால் திருவாய்மலர்ந்தருளப் பெற்றனவும் வேதாந் தத் தெளவாம் சைவசித்தாந்தத் திறனைத் தெரிவிப்பனவுமாகிய தேவாரங்கள் முதலாகப் பெரியபுராணமீறாகவுள்ள திருப்பாடல்களே பன்னிரு திருமுறைகள் எனப்படுகின்றன. இறைவனும் அவன் எழுந் தருளியுள்ள திருமுறைப் பாடல்களும் பரமேஸ்வரனும், பராசக்தி யும்போல அத்வைதமாய் விளங்குவன. இத்திருமுறைகளை ஒது வோருக்கு நோய் நீக்சும், செல்வப் பெருக்கம், நல்வாழ்வு, தெய்வபக்தி, ஞானம் முதலியவற்றை அளிப்பன. மேலும் சைவத்தின் உயர்வையும், விபூதி, உருத்திராக்கம், பூgபஞ்சாட்சரங்களின் மகிமைன்யயும் தெளி வுற விளக்குவன.
இறை வழிபாட்டின் மூலம் மண்ணில் நல்ல வண்ணம் குறை யொன்றுமின்றி வாழலாமென்று கூறுகின்ற திருஞானசம்பந்தர் முத லிய அருளாளர்களின் அமுத வாசங்களாகிய திருமுறைகளைப் பொரு ளுணர்ந்து ஒதும்போது உள்ளுணர்வில் தெய்வீகக் கசிவு ஏற்படுகின்றது

7
மன ஒருமைப்பாட்டுடன் ஒதுபவர்களுடைய உள்ளம் கணிகின்றது. சிவாலயங்கள் தோறும் சென்று நெக்கு நெக்கு நினைபவர் நெஞ்சுளே புக்கு நிற்கும் பொன்னார்சடைப் புண்ணியனை நினைந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து நாயன்மார்கள் பாடினார்கள். ஆலயங்களில் மலர்ந்த திருமுறைகளைச் சிவாகமங்களும் ஏற்றுப் போற்றி வருகின்றள.
திருமுறைப் பண்ணிசை, ஏனைய இசைகளிலிருந்து பிரித்து, உணர்ந்து அனுபவிக்க வேண்டிய தனித்துவமானது. ஏனைய இசை களில் சாகித்தியமும், இராகமும் (இசை) வேறு வேறாகப் பிரிகின் றது. அதாவது பாடலை எழுதியபின் இசை சேர்க்கப்படுகின்றது, பண்ணிசையானது தேவாரப் பாடலுடன் இசையும் சேர்ந்து பிறக் கின்றது. இரண்டுக்கும் ஒருவரே படைப்பாளராயிருக்கின்றார். வேறு இசைகளுக்குப் பாடலை இயற்றுபவர் ஒருவரும் இசையமைப்பாளர் மற்றொருவருமாயிருப்பதையும் அறிகிறோம். ஆதலால் திருமுறைப் பண்ணிசையின் தனித்துவத்துக்கு நான்கு சிறப்பம்சங்களைக் கூறலாம்.
முதலாவது, மலர்களிற் பல்வேறு வண்ணங்களும் அவைகளில் நறுமணமும் ஒன்றாயமைந்திருப்பதுபோல இசையுங் கவிதையும் பிரிப் பின்றி ஒன்றாகவே பிறந்தது. உடம்பும், அதன் அங்கங்களும் போலப் பிறந்தது. பல்வேறு உறுப்புக்கள் பொருத்தப்பட்ட வண்டி கள் போலத் தோற்றுவிக்கப்பட்டதல்ல. தேவார இசை மொழி யிலிருந்து வேறுபட்டுப் பிரிவதில்லை.
இரண்டாவது, தேவார ஆசிரியர்கள் சாதார மண் கவிஞர்களல்ல மகா ஞானிகள். இறையருள் பெற்ற மகான்கள். இவர்களின் மறைவுக் குப்பின், ஞாபகார்த்தமாக நினைவாலயம் கட்டப்படவில்லை. இவர் களைத் தெய்வ நிலைக்கு உயர்த்தி, இறைவனுடைய ஆலயத்தில் இவர்களுக்கும் இடமளிக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டு வருகின் றது. ஏனைய இசையாசிரியர்களுக்கு நினைவாலயங்கள் கட்டப்படு கின்றன. தேவார ஆசிரியர்கள் பாடல்களை இயற்றவில்லை. திரு முறைகளை அருளிச்செய்தார்கள். அவைகள் தெய்வப் பாடல்கள். வெறுங் கவிதைகளல்ல.
மூன்றாவது, திருமுறைப் பண்ணிசை தொன்மையானது. வர லாற்றுக்கு அப்பாற்பட்ட கால வரலாற்றையுடையது. இன்ன பண் ணுக்கு இன்ன இசையென வரையறுக்கப்பட்ட சிறப்பினையுடையது திருமுறைப் பண்ணிசை,
நான்காவது, இறைவழிபாட்டி f"G#SFAG, Éíjjgöójáblözi பண்ணிசை. இறைவனை பூசிக்கப் பூவும், நீரும், தூபமும், தீபமும், நைவேத்தியமும் நிவேதிக்கப்படுவதுபோல திருமுறைப் பண்ணிசை யும் நவேதிக்கப்படுகின்றது.

Page 17
8
சிவபூசை பற்றித் திருமூலர் திருமந்திரத்திற் கூறும் ஒரு மந் திரத்தை இங்கே தருகின்றேன்.
வேட்டவி யுண்ணும் விரிசடை நந்திக்குக் காட்டவும் நாடமிலங் சாலையும் மாலையும் ஊட்டவி யாவன உள்ளங் குளிர்விக்கும் பாட்டவி காட்டுதும் பாலவி யாமே
(திருமந்திரம், 1793)
மூவாயிரம் மந்திரங்களைத் தந்த திருமூலர் வாக்கு மந்திர வாக்கு. ஆழ்ந்தகன்ற நுண்ணியனாகிய சிவபெருமானை வழிபடுவதற்கு ஆன்றவிந்தடங்கிய மகா முனிவராகிய திருமூலர் ஒரு சுருக்கமான வழியைக் கூறுகின்றார். சிவபெருமானை முழுமுதலாகக்கொண்டு செய்யும் வேள்வியே திருமுறை வேள்வியாகும். அவ்வேள்வி புரிபவ ராகிய அந்தணரின் பேரன்பினையே சிவபெருமான் ஏற்றுக்கொள் கின்றான். அவனே விரிசடை நந்தியாகும். எல்லாப் பொருளும் அவன் உடைமை. எல்லா உயிரும் அவன் அடிமை. அவ்வாறிருப்பதால் நமக் கென உரிமையுடையது ஒரு சிறிதுமின்று. ஆதலால் தூபம், தீபம் காட்டுதல்கூட நம்முரிமையல்ல. ஆயினும் முழுமுதற் சிவத்தின் உள் ளம் குளிரும்படியாக ஊட்டும் அவி செந்தமிழ்த் திருப்பாட்டுக்களா கும். எனவே அதனையே நிவேதிப்போமாக அவ்வவி சிறப்பாகிய பாலவியாகும். சிவத்தின் உள்ளம் குளிர்விப்பதென்பது ஆருயிர்களின் உள்ளம் குளிர்விப்பதாகும். இவ்வுண்மை, “நல்லிசை ஞானசம்பந்த னும் நாவுக்கரையரும் பாடிய நற்றமிழ்மாலை சொல்லியவே சொல்லி ஏத்துகப்பானை' என நம்பியாரூரர் ஒதியருளிய செந்தமிழ் சிறப்புத் திருமுறையால் உணரலாம்.
வேடடு அவி அந்தணர்கள் செய்யும் நெய்வேள்வியின் அவிசு. இதனையே திருஞானசம்பந்தர் ‘பறப்பைப் படுத்து எங்கும் பசுவேட்டு எரியோம்பும்' என்று கூறினார்.
பசு என்பது ஈண்டு நெய்க்கு ஆகுபெயராகும். பறப்பை - சிரு க்கு, சிருவம். நெய்யைப் பறப்பையில் விட்டு வேள்வி செய்து காட்ட நம்மால் முடியாது போனாலும், பாட்டவி - தோத்திரப் பாடலான அவியைப் பால் அவியாக நிவேதிக்கலாமே என்பது திருமூலர் கருத்து.
வேதமும் தமிழ் வேதமும்
திருக்கோவில்களில் இறைவனைப் பூஜிக்கும் பொழுது மந்திர இசை, வீணை இசை, வேத அத்தியயனம், சாஸ்திர, தோத்திரப் பாடல் முதலியன செய்வித்தல் வேண்டுமென்றும், தீபாராதனையின் பின் தமிழ்மொழிக்கு உறுப்பாகிய இசையை நடனத்தோடு செய்

வித்தல் வேண்டுமென்றும் அதன்பின் சமஸ்கிருத மொழியில் பாடப் படும் இசையைப் பிடி ழயில்லாமல் பாடவேண்டுமெ றும் காமிகாகமம் அர்ச்சனா விதிப்படலம் கூறுகின்றது. ஆகம சாஸ்த்திர முறைப்படி ஆலயங்களில் பூஜைகள், அர்ச்சனைகள் என்பன வடமொழி மந் திரங்களாலும் சுலோகங்களாலும் நடைபெற்று வருவதை அறிவீர் கள். தேவாரம் வேதசாரம் எனப்படுவதால் அது தமிழ் வேதம் எனப் போற்றப்படுகின்றது. இதனால் ஆலயங்களில் வேதமோது வதுடன் தேவாரம் ஒதுவதும் ஆசமச் சிறப்பம்சம7யமைந் கருக்கின் றது. சைவாலய பூஜைகளின் பொது அம்சங்களாவன அபிஷேகம், அலங்சாரம் , நைவேத்தியம், தீபாராதனை, அர்ச்சனை, தோத்திரம் , தெளர் யந்திரிகம் (நிருத்த, கீத, வாத்தியம்) என்பன பூஜையின் முழு மயைப் பேணுவதில் இந்த ஏழு அம்சங்களும் ஒரே மாதிரியான முக்கியத்துவமுடை யன. இவற்றில் தோத்திரம் என்ற அம்சத்தில் பதி வ க்கு எ 'ற மகின மக்குரிய தோத்திரங்கள் யாவும் இடம்பெற வேண்டிய வ. இவ்வகையில் வேதம், ஆகமம், சைவத் திருமுறை கள் எனற மூன்றும் பிரதானமானவை.
"பக்த ஸ்தோத்திரம் படேத் பச்சாத் ஆசிஷம் சம்யக் ஆசரேத்"
(உத்தர காரணாகமம் - மகாபிஷேகப்படலம்) சுலோகம் = 85
வேதம் ஒதியபின் திருமுறைகளைப் படிக்க, பின்னர் ஆசீர்வாதத்தை நன்முறையில் செய்க என்று கூறப்பட்டுள்ளது.
"நியோஜ்ய யதாயோக்யம் வேதாத்யயணஞ் சரேத் வேதாங்கஞ்ச புராணஞ்ச ஸ்தலமகாத்மயந் ததா படந்தி விசேஷேண த்திராவிடைர் வேதகானகை ஸ்தோத்திரஞ்சாபிகானம் நிருத்தம் சமாசரேத் நீராஜனம்புன: கிருத்வாபி ஆசீர்வாதம் சமாசரேத்"
(காமிகாமம், சிவானுக்ஞர் படலம்)
சுலோகம் 329 - 331
உரிய முறைப்படி நியோஜித்துவிட்டு வேதாத்யயனம் செய்க. வேதங்
களையும் , சிவபுராணம், தலமான்மியம் என்பனவற்றிலுள்ள தோத் திரங்களையும் செய்க, விசேடமாகப் பண்ணிசையுடன் தமிழ்வேதத் துதியைச் செய்க, அதன்பின் கீதம், நிருத்தம் என்பன செய்து ஆசீர்வாதம் செய்க என்று கூறப்பட்டுள்ளது.

Page 18
0
"வேதாத்யயண த்ராவிடவேத பாராயண நிருத்த கீத வாத்ய ப்ரதகதின நமஸ்கார ஆசீர்வாத பஸ்ம ப்ரதான ஜப நைவேத்ய உபசாராந்தம் உபசார பரம்பரா சித்திர் பூயாத் இதி பவந்தோ மகாந்தோ Sனுக்ருஹ்ணத்து"
(அகோர சிவாச்சாரியார் பத்ததி) 25 ஆவது ஆசீர்வாதவிதி
வேதமோதல், தமிழ்வேத பாராயணம் நிருத்த, தே, வாத்தியம், வலம்வருதல், நமஸ்கரித்தல், ஆசீர்வாதம் செய்கல், விபூதி கொடுத் தல், ஜபநிவேதன பண்ணல், என்ற உபசாரமிறுதியாகவுள்ள உப சாரபரம்பரையின் சித்தியானது ஆகட்டுமென்று மகான்களாயுள்ள வர்கள் அனுக்கிரகிப்பார்களாக எனக் கூறப்பட்டுள்ளது.
பக்தஸ் தோத்திரம் - திராவிடஸ் தோத்திரம் - தமிழ்வேதம் என்பன திருமுறைகளைக் குறிக்கும் ஆகம வசனங்களாகும். எனவே ஆகமங்களை அனுசரித்து ஆலயங்களில் நித்திய நைமித்திய கருமங் களை நடத்தி வருவது சைவசமய மலர்ச்சிக்கும் எழுச்சிக்கும். வைதீக நன்னெறிக்கும், மக்கள் வாழ்வில் சீரும், திருவும் நிறை வதற்கும் பெரிதும் பயன்பாடுடையதாக அமையும்.
ஆலயங்கள்தான் மதக்கோட்பாடுகளைப் பேணிப் பாதுகாத்து வந்திருக்கின்றன. ஆலய வழிபாட்டின் மூலம்தான் மதக்ாேட் பாடுகளை மக்கள் அறிந்து அனுபவித்துவந்திருக்கின்றார்கள். மக்க ளுடைய ஆத்மீக ஞானத்திற்கும், சீரிய ஒழுக்க வாழ்வுக்கும், ஆலயங் களில்தான் அத்திவாரமிடப்படுகின்றது. கோடானு கோடியில் ஒருவர் அவதார புருஷராக அவதரித்திருக்கலாம். இலட்சத்திலொருவர் இலட் சிய ஞானியாக ஜெனித்திருக்கலாம். ஆயிரத்திலொருவர் குரு சிஷ்ய வழியில் யோகியாக உயர்ந்திருக்கலாம். நூற்றுக்கொருவர் தபோ பலத்தால் உத்தம முனிவராகவோ, சன்னியாசியாகவோ திகழ்ந்திருக் கலாம். இத்தகைய மகான்கள் "கோயிலாவதேதடா? குளங்களாவ தேதடா? கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே' என்று மொழிந்து மோனத்தின் ஞானத்தால் ஆனந்தானுபவத்தை அனுப வித்துக்கொண்டிருப்பார்கள். ஆனால் சாதாரண மனிதப்பிறவிகளின் ஆத்மீக வாழ்வுக்கு ஆதார சுருதி கூட்டப்படுமிடம் எது? அது ஆலய மாகத்தானிருக்கும். அங்குதான் சாஸ்த்திரங்களும், தோத்திரங்களும் ஒலிக்கின்றன. அந்த நாதத்தில்தான் நாதசொரூபியான இறைவனை பிம்பத்திலும், கும்பத்திலும், ஸ்தம்பத்திலும் சண்டு சாதாரண மக் கள் வழிபட்டு ஆத்மத்திருப்தியடைகின்றார்கள்.
மக்களுக்காக ஆலயமும், ஆலயத்துக்காக மக்களுமென்றிருந்த பண்டைக்கால நிலை இன்று இருக்கின்றதா? அன்றைய நிலையில் மக்களுடைய வாழ்க்கையோடு சமயம் பினணிப்பிணைந்து வளர்ந்து

வந்தது. அதாவது சமயக்கோட்பாடுகளுக்கமைவாக வாழ்க்கை அமை யப்பெற்று வளர்ந்தது. இன்றைய காலகட்டத்தில் சமயம் வளர்க் கப்படவேண்டியதொன்றாக மாறிவிட்டது. இந்த அவலநிலை ஏற் பட்டது ஏன்? சற்றே சிந்தித்துப் பார்ப்போம்.
வேதம், ஆகமங்களாதியன ஒருசாராருக்குத்தான் விளங்கிக் கொள்ள முடிகின்றது என்று முன்னரே குறிப்பிட்டிருந்தேன். தமிழ் வேதமாகிய திருமுறைகள் பாமர மக்களாலும் அறிந்து அனுபவிக்கக் கூடியவை. தேவாரம் வேதசாரம் என்று போற்றப்படுவதால் வேதா கமங்களும், திருமுறைகளும் ஆலயவழிபாட்டாளர்களின் இரு கண்கள் என்பதை உணர்த்த வேண்டும், உணரச்செய்ய வேண்டும்.
வேதாகம சாஸ்த்திரங்களில் மந்திரங்கள் பதினொன்று என்று கூறப்படுகின்றது. இதற்குமேல் மந்திரமேயில்லை. ஓம் ஈசானாயநம, ஒம் தத்புருஷாய நம, ஓம் அகோராய நம, ஓம் வாமதேவாய நம, ஓம் சத்யோஜாதாய நம, இவையைந்தும் பஞ்சப்பிரம்ம மந்திரம். ஓம் ஹிருதயாய நம, ஒம் சிரசே நம, ஒம் சிகாயை நம, ஒம் ஹவ சாயை நம, ஒம் நேத்ரோப்யோ நம, ஓம் அஸ்த்ராயை நம, இவையா றும் ஷடங்க மந்திரம். இந்த ஐந்தும் ஆறும் சேர்ந்து பதினொன்றும் சம்மிதா மந்திரம் எனப்படும். சம்மிதா மந்திரங்களைப்போல திரு முறைகளும் பதினொன்றாக அமைந்திருக்கின்றன. சேக்கிழார் சுவாமி கள் பெரியபுராணக்தைப் பாடுவதற்கு முன்னர் திருமுறைகள் பதி னொன்றாகவே வகுக்கப்பட்டிருந்தன.
மந்திரங்கள் எழு கோடி என்பது நூறு லட்சம் சேர்ந்த கோடி என்று பொருள்கொள்ளற்க. கோடி என்பதற்கு அந்தம், நுனி, என்று பொருள். நம, ஸ்வகா, ஸ்வாஹா, வவுட், வெளஷட், பட், ஹாம்பட் என்ற இந்த ஏழும் சோடி என்பதை உணர்த்துவன. தேவாரமுதலி கள் மூவரும் பாடிய ஏழு திருமுறைகளும் ஏழு கோடி மந்திரங்கள் போல் தெய்வீகமாயமைந்துவிட்டன. ஏழு கோடி மந்திரங்களுடன் கூடிய பதினொரு சம்மிதா மந்திரங்கள் போல பதினொரு திருமுறை கள் அமைந்ததும் தெய்வீகமே. உமாபதி சிவாச்சாரியார் அருளிச் செய்த நம்பியாண்டார் நம்பி புராணத்தில் இதற்கு அகச்சான்று காணப்படுகின்றது.
"மந்திரங்கள் எழுகோடி ஆதலினால் மன்னுமவர் இந்த வகை திருமுறைகள் ஏழாக எடுத்தமைத்துப் பந்தமுறு மந்திரங்கள் பதினொன்றும் ஆதலினால் அந்தமுறை நான்கினொடு முறைபதினொன்றாக்கினார்."
தி. க. புராணம் 28)

Page 19
夏2
சேக்சிழார் சுவாமிகள் பன்னிரண்டாம் தூற்றாண்டில் பெரிய புராணத்தைப் பாடிய பின்னரே அது பன்னிரண்டாம் திருமுறை யாகச் சேர்க்கப்பட்டது.
திருமுறைகள் எவை?
திருமுறைச் செல்வர்கள் அருளிச்செய்த பன்னிருதிருமுறை களும் எவை என்பதனை இங்கே தருகின்றேன்.
திருஞானசம்பந்தர் தேவாரம் 1, 2, 3ஆம் திருமுறை7ள்
திருநாவுக்கரசர் தேவ ரம் 4, 5, 6ஆம் திருமுறைகள் சுந்தரமூர்த்திநாயனார் தேவாரம் 7ஆம் திருமுறை
திருவாசகம், திருக்கோவையார் (மாணிக்கவாசகர்) 8ஆம் திருமுறை திருவிசைப்பா, திருப்பல்லாண்டு −
(சேந்தனார் முதலியோர்) 9ஆம் திருமுறை திருமந்திரம் (திருமூலர்) 10ஆம் திருமுறை திருவாலவாயுடையார் திருமுகப் பாசுரம் காரைக்காலம்மையார் பாடல்கள், ஐயடிகள் காடவர்கோன் நாயனார் சேரமான் பெருமாள் நாயனார் நக்கீரதேவ நாயனார், கல்லாடதேவ நாயனார் பட்டினத்துப் பிள்ளையார் நம்பியாண்டார்நம்பி முதலியோர் பாடியருளிய பிரபந்தங்கள் ... v. சேக்கிழார் அருளிய திருத்தொண்டர் புராணம் 12ஆம் திருமுறை
11ஆம் திருமுறை
*சொற்கோவும் தோணிபுரத் தோன்றலுமென் சுந்தரனும் சிற்கோல வாதவூர்த் தேசிகனும் முற்கோலி வந்திலரேல் நீறெங்கே மாமறை நூல்தா னெங்கே எந்தைபிரா னைந்தெழுத் தெங்கே"
(நாவலர் பிரபந்தத்திரட்டு - 73ஆம் பக்கம்)
என்று திருமுறைகளின் பெருமைபற்றி பூரிலயூரீ ஆறுமுகநாவல ரவர்கள் குறிப்பிடுவதைச் சைவப் பெஈமக்கள் தமது ஆழ்ந்த கவனத் திற்கு எடுத்துக்கொள்வார்களாக. இத்துணைச் சிறப்புக்கும், மேன் மைக்குமுரிய திருமுறைகளில் தேவாரமுதலிகள் மூவரும் பாடிய எழுநூற்றுத்தொண்ணுாற்றாறு திருப்பதிகங்களுடன், திருவாசகம், திருக்கோவையார் முதலாகப் பெரியபுர ணமீறாகப் பதினெண்ணா யிரத்து முன்னுாற்றைம்பத்தெடடுத் திருப்பாடல்கள் திருமுறைச்

I :
செல்வமாக நமக்குக் கிடைத்திருக்கின்றன. இவ்வரும் பெரும் தமிழ் வேதமாகிய திருமுறைகள் நமக்கு கிடைத்த திருவருட்செயலைப்பற்றி அறிவதற்குத் திருமுறை கண்ட புராண வரலாற்றை அறிய வேண் டியது இன்றியமையாததாகின்றது,
திருமுறை கண்ட புராணம் எனப்படும் நம்பியாண்டார்நம்பி புராணம் உமாபதி சிவாச்சாரியாரால் அருளிச்செய்யப்பட்டது. இப் புராணத்தில் நம்பியாண்டார்நம்பி பொல்லாப்பிள்ளையாருடைய அருள் பெற்றதும், அபயகுலசேகர மன்னன் திருமுறைகளின் சிறப்பை யறிந்து அவற்றை முழுமையாகப் பெறவிரும்பியதும், பொல்லாப் பிள்ளையார் அசரீரி வாக்கினால் அருளியபடி மூவர் பாடிய திரு முறைகள் சிதம்பரத்திலிருப்பதையறிந்து அரசனும் நம்பியும் திரு முறைகளைப் பெற்றதும், சிதம்பர நடராஜப் பெருமானுடைய அசரீரி வாக்கின்படி திருநீலகண்ட யாழ்ப்பாணர் வழிவந்த ஒரு அம்மையா ரைச் சிற்சபைக்கு அழைத்துவந்து அவ்வம் மையார் மூலம் திருமுறைகளுக்குப் பண்ணமைதி வகுத் ததும், பண்களின் வகையும்,
கட்டளை பேதங்களும் கூறப்பட்டுள்ளன.
திருமுறைகண்ட புராணத்தைப் பாடியவர் உமாபதிசிவம் என் னும் புலவர் ஒருவர் என்றும், அவர் கி. பி. 940 -1012இல் வாழ்ந்த வரென்றும் , ஆராய்ச்சியாளர் கூறுவர். அபயகுலசேகர மன்னனை ஆதித்த கரிகாலன் (இரண்டாம் ஆதித்தன்) என்பர் ஆராய்ச்சியாளர், ஆதித்த கரிகாலன் கி. பி. 966 - 970 வரை அரசாட்சி செய்தான். நம்பியாண்டார்நம்பி இம்மன்னன் காலத்தவரென்று 'சைவசிகா மணிகள் இருவர்’ என்ற நூல் கூறுகின்றது. சில ஆராய்ச்சியாளர் கள் ஆதித்த கரிகாலன் கி. பி. 950 - 1012 வரை ஆண்டதாகவும் கூறு வர். இம்மன்னன் காலத்தில் வாழ்ந்தவர் உமாபதிசிவாச்சாரியர் என்று கூறப்படுகின்றது. உமாபதிசிவாச்சாரியர் கி. பி. 1313இல் வாழ்ந்ததாகவும் ஒரு குறிப்பு காணப்படுகின்றது.
திருமுறைகளைப் பதினொன்றாக வகுத்தவர் நம்பியாண்டார் நம்பி, அவர் வாழ்ந்த காலம் அபயகுலசேகர மன்னன் வாழ்ந்த

Page 20
14
காலம் என்பது திருமுறைகண்ட புராண அகச்சான்றுகளால் பெறப் படுவதாலும், அநபாயசோழன் என்னும் இரண்டாம் குலோத்துங்கன் காலம் புன்னிரண்டாம் நூற்றாண்டு. அம்மன்னன் காலத்தில் வாழ்ந்து பெரிய புராணத்தைப் பாடி அரங்கேற்றியவர் சேக்கிழார் சுவாமிகள் என்பதாலும், திருமுறைகளைத் தொகுக்கும்போது பெரிய புராணம் பாடப்பட்டிராதபடியால் திருமுறைகளைப் பதினொன்றாக நம்பியாண்டார்நம்பி வகுத்தாரெனத் திருமுறைகண்ட புராணம் கூறுகின்றது.
ஏழாம் நூற்றாண்டுக்கும் ஒன்பதாம் நூற்றாண்டுக்குமிடை யில் மூவர் தமிழும் பிறந்தது. திருஞானசம்பந்தர் பாடியருளிய முதல் மூன்று திருமுறைகளிலும் 384 பதிகங்களுக்கு 16000 திருக் கடைகாப்புப் பாடினார். திருநாவுக்கரசர் பாடியருளிய நாலாம், ஐந்தாம், ஆறாம் திருமுறைகளில் 307 பதிகங்களுக்கு 49000 தேவாரப் பாடல்களைப் பாடினார். சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடியருளிய ஏழாந் திருமுறையில் 100 பதிகங்களுக்கு 38000 திருப்பாட்டுக்களைப் பாடினார். அபயகுலசேகர மன்னனுடைய ஆர்வத்தினாலும் நம்பி யாண்டார் நம்பியுடைய தெய்வீக முயற்சியாலும், இறைவனுடைய திருவருளினாலும், மூவர் பாடிய 103000 பாடல்களில் செல்லரித் தவை போக 8239 பாடல்கள் மாத்திரமே கிடைத்தன. பதினாறாம் நூற்றாண்டுக்குப்பின் இப்பாடல்கள் தேவாரம் என்ற பொதுப் பெயரால் வழங்கிவருகின்றது.
“சைவநெறித் தலைவரெனும் மூவர் பாடல் வேய்ந்தனபோல் மண்மூடச்தெய்தே ஈண்டு வேண்டுவன வைத்தோம்’ (P-க-பர். 22) என்னும் சிற்சபேசருடைய வாக்கின்படி கிடைத்த 8239 பாடல் களுக்கும் பண்ணமைதி அமைக்கப்பட்டது. இப்பண்களைப் பண்டைப் பண்முறைப்படி பாடுவதெங்ங்னமென ஐயுற்ற அபயகுலசேகர மன் னனுக்கு 'நல்லிசை யாழ்ப்பாணர் தன்மரபின் வழிவந்த "வல்லி ஒருத்திக் கிசைகள் வாய்ப்ப அளித்தோம்’ என்று சிற்சபேசர் அசரீ ரியாய்க் கூறியபடி அவ்வம்மையார் மூலம் பண்களைப் பாடும்வகை அறியப்பட்டது. Y

15
திருமுறைப் பண்வகை
திருஞானசம்பந்தர் திருப் பிரமபுரத்திற்குப் பாடியருளிய ‘கஞ்சத்தேனுண்டிட்டே" என்ற தேவாரத்தில் "ஏழே ஏழே நாலே மூன்றியலிசை இயல்பாம்' என்று பண்ணின் தொகை இருபத் தொன்றெனக் கூறுகின்றார். அவர் பாடிய பதிகங்களில் பழம்பஞ் சுரம் என்ற பண்ணுக்குப் பாடல்கள் கிடைக்கவில்லை. நாவுக்கரசர் பாடிய பதிகங்களில் நட்டபாடை, கெளசிகம், தக்கராகம், தக்கேசி, வியாழக்குறிஞ்சி, புறநீர்மை, நட்டராகம், மேகராகக்குறிஞ்சி, அந் தாளிக்குறிஞ்சி, செவ்வழி, பஞ்சமம் என்னும் பண்களுக்குப் பாடல் கள் கிடைக்கவில்லை. சுந்தரர் பாடிய பதிகங்களில் பியத்தைக்காந் தாரம், வியாழக்குறிஞ்சி, பழந்தக்கராகம், சாதாரி, மேகராகக் குறிஞ்சி, அந்தாளிக்குறிஞ்சி, செவ்வழி, என்னும் பண்களுக்குப் பாடல் கள் கிடைக்கவில்லை. கிடைத்த பாடல்களுக்குக்கட்டளைகள் வகுக்கப் பட்டிருப்பதைத் திருமுறைகண்ட புராண அகச் 'சான்றுகவால் அறி யக்கூடியதாயிருக்கின்றது. யாழ்முறி, கொல்லிக்கெளவாணம், திருத் தாண்டகம், திருவிருத்தம்,திருக்குறுந்தொகை, திருநேரிசை, எனப் பல பண்கள் திருமுறைகளிற் காணப்படுகின்றன. திருமுறைகண்ட புராணத்தில் இவைகளுக்கும் ஒவ்வோர் கட்டளைகள் வகுக்கப்பட் டிருக்கின்றது. இப்பண்களையும் சேர்த்துக் கணக்கிடும்போது சம்பந் தர் கூறிய இருபத்தொரு பண்களிலும், மேற்படுவதைக் காணலாம் திருஞானசம்பந்தருடைய கூற்றின்படி பண்களின் எண்ணிக்கை இரு பத்தொன்று. இவைகளைவிட அவருடைய தேவாரப் பாடல்களிலே நாலடி, ஈரடி, திருமுக்கால் திருவிராகம், திருவிருக்குக்குறள், யாழ் முறி, திருத்தாளச்சதி, திருவியமகம், முதலியனவாகச் சொல்லப்படு பவைகளெல்லாம் பண்னால் வந்த பெயர்களல்ல. திருவிராகம் என் பது இந்தளம், சாதாரி, நட்டபாடை முதலிய பண்ணமைந்த திருப் பதிகங்களிலே சில முடுக்கிசையாயுள்ளனவற்றிற்குப் பெயராகி வந் தனவாகும். இவைகளெல்லாம் பண்ணல்லாத பண்களாயமைகின்றன யாழ்முறி அடானா இராகத்தில் பண்ணமைதியோடு பாடப்பட்டு வருகின்றது.
கி. பி. மூன்றாம் நூற்றாண்டு முதல் பன்னிரண்டாம் நூற் றாண்டுவரை தேவார ஆசிரியர்களும், திருவாய்மொழி எனப்படும்

Page 21
6
திவ்யப்பிரபந்தப் பாசுரங்களை அருளிச்செய்த ஆழ்வாராதிகளும், தோன்றித் தமிழ்ப் பண்களைப் பாடித் திருநெறிய தெய்வத் தமி ழிசையை நாடு தோறும், ஊர்கள் தோறும். திருக்கோயில்கள் தோறும் பரவச் செய்தனர். தேவார காலம் தமிழுக்கும், தமிழிசைக் கும் ஓர் ஒப்பற்ற பொற்காலமென்று கூறலாம். பண்கள் பூரணப் பொலிவோடு செழுமையடைந்து, மக்களிடையே பக்தியை வளர்த்து, உறுதியாகத் திகழ்ந்து, மேன்மைபெற்று விளங்கிய காலம். மூவேந் தர்களும், பல்லவ அரசர்களும், மற்றையோரும், தேவாரப் பாடல்
களைப் போற்றி வழிபட்ட காலம்.
தெய்வஞ்சுட்டிய வாரப்பாடலாகிய இசைப்பாடல் தேவாரம் என இசைத் தமிழில் வழங்கப்படுகின்றது. இயல், இசைத் தமிழ்ப் பாடலாகிய இத்தேவாரத் திருப்பதிகங்கள் பக்தியிலும் , சித்தாந்த தத்துவத்திலும், இயலிலும், இசையிலும் சிறந்து விளங்குகின்றன. பதிகங்கள் தோறும் தேவார ஆசிரியர்களாகிய நாயன்மார்கள் ஊர்ப் பெயர். திருக்கோவிலின் பெயர், கோவில் அமைந்துள்ள சூழலின் இயற்கை வளங்கள், புராண வரலாறுகள், சிவபெருமானின் திரு வருட்செயல்கள் முதலானவற்றை உள்ளடக்கி எவரும் இவ்வுண்மை களை மறுக்கமுடியாத வண்ணம் அருள்வா க்காகப் பாடியுள்ளனர். திருஞானசம்பந்தர் யாழும், குழலும், முளவும், தாளமும், பின்னணி இசையாயிசைக்க ‘நாளுமின்னிசையாற் தமிழ் பரப்பும் ஞானசம்பந் தன்' என்று சுந்தரமூர்த்தி சுவாமிகள் போற்றிப் பாடும் வண்ணம் இய லையும், இசையையும் பரவச் செய்தார். இத் தெய்வீகப் பாடல்களை வெறும் பாடல்களென்று சிலர் கருதுகின்றனர் அது தவறு. ஏனெனில் இசையிலக்கணங்களை முற்றும் அறிந்து இசைநயத்தோடு தானக் கூறுகளையமைத்து எல்லையற்ற கற்பனை வளத்தோடும் Lur Las கூடிய பாடல்களிவை. 1500 ஆண்டுகளுக்குமுன் பாடப்பெற்ற இப் பாடல்கள் நூற்றுக்கணக்கான பண்களில் பாடப்பெற்றிருந்து இப் போது இருபத்தைந்து பண்களில் பாடப்பெற்று வருகின்றன. திரு முறைகண்ட புராணத்தை ஆதாரமாகக் கொண்டு யாழ் நூலாசிரியர் சுவாமி விபுலானந்த அடிகளார் கூறும் தேவாரப் பண்ணமைதிகளை ாண்டு தருகின்றோம்.

7
பண்களும் அவற்றின் இராகங்களும்
சுவாமி விபுலானந்த அடிகளாருடைய
யாழ் நூலிலிருந்து பெறப்பட்டது
பொன்னோதுவார் காலத்தினவும் திரு இக்காலத்து விபுலானந்த பண்கள் வாவடுதுறையா ஒதுவார்கள் சிலர் அடிகளாரின்
தீனமுறையிலமை கையாளும் ஆய்வில் கண்ட சில
ந்தனவுமான இராகங்கள் இராகங்கள்
இராகங்கள்
பகற்பண்
1. புறநீர்மை பூரீகண்டி பூபாளம்.பெளளி 3. காந்தாரம் இச்சிச்சி நவரோஜ் சாடவம்
பிபந்தைக்
காந்தாரம் 8. கெளசிகம் பைரவி பைரவி சுத்தசாவேரி 4. இந்தளம் நெளிதபஞ்சமி மாய மாளவகெளள சுத்ததன்யாசி
திருக்குறுந்
தொகை நாதநாமக்கிரியா 5. தக்கேசி காம்போதி காம்போதி டக்னாஜுெளசிகம் 3. நட்ட ராகம் பந்துவராளி பந்துவராளி இந்தோளம்
சாதாரி தேவமனோகரி 7. நட்டபாடை நாட்டை குறிஞ்சி நாட்டை நாட்டை குறிஞ்சி
(நைவளம்) கெம்பீரநாட்டை 8. பழம்பஞ்சுரம் சங்கராபரணம் சங்கராபரணம் 9. காந்தாரபஞ்சமம் கேதாரகெளள கேதாரகெளள மோகனம் 10. பஞ்சமம் ஆகிi ஆகிரி பஞ்சமம்
i pr fru’yu_year 11. தீக்கராகம் கன்னடகாம்போதி காம்போதி டக்கா 13. பழந்திக்கராகம் சுத்தசாவேரி சுத்திசாவேரி 8 désa:
५४ - ஆரபி i 3. 6 år m og ub நாதநாமக கிரியா மாய மாளவகெளள a S. நாதநாமக்கிரியா 4. கொல்வி சிந்து கன்னட நவரோஜ் a
கொல்லிக்
Gos 676. Tarth 15. வியாழக்குறிஞ்சி செளராஷ்ட்ரம் செளராஷ்ட்ரம் 16. மே சராகக்குறிஞ்சி நீலாம்பரி நீலாம்பரி S. மேகரஞ்சனி 17. குறிஞ்சி மலகரி அரிகாம்போதி குரஞ்சி
எதுகுலகாம்போதி 18. அந்தாளிக்குறிஞ்சி ஸ்ைலதிாட்சி gF ff ED fT பொதுப்பண் 19. செவ்வழி எதுகுலகாம்போதி எதுகுலகாம்போதி கரகரப்பிரியா 30. செந்துருத்தி மத்தியமாவதி மத்தியமாவதி மத்தியமாவதி 81. திருத்தாண்டகம் பியாகடை ஹரிகாம்போதி 33. யாழ்முறி அடானா E60 As a

Page 22
| 8
மேற்கூறிய பண்களும் அவற்றுக்குரிய இராகங்களும் யாழ் நூலிலிருந்து பெறப்பட்டன. திருவாவடுதுறையாதீன ஏட்டுப் பிரதி களிலே காணப்படும் பண்களிலே வேங்கடமகியின் சதுர்த்தண்டிப் பிரகாசிகையில் காணப்படுவனவும், பிற்காலத்தில் வழக்கொழிந்தனவு மாகிய சில இராகங்கள் காணப்படுகின்றன. வேங்கடமகியின் தந்தை யாரான கோவிந்ததீட்சிதர் தஞ்சையிலிருந்து அரசுபுரிந்த அச்சுதப்ப நாயக்கருக்கு (கி.பி. 1572 - 1614) அமைச்சராயிருந்தவர். இவருடைய காலத்திற்கு முன்னுாறு ஆண்டுகளுக்கு முன்னதாகப் பண்டைக்காலப் பண்களும், இராகங்களும் நடைமுறையில் இருந்துவந்தன.
வித்துவான் வேலூர் ரி. ஏ. சம்பந்தமூர்த்தி ஆச்சாரியாரவர்கள் தேவாரப் பண்களைப் பற்றிக் குறிப்பிடும்போது கூறுகின்றார் "பண்டைக்காலத்திலிருந்த தமிழிசை நூல்களான முதுநாரை முது குருகு, இசை நுணுக்கம், பஞ்சபாரதீயம், தாள நுணுக்கம், கூத்து நூல் முதலியன பல காரணங்களால் அழிந்துபோயின. சிலப்பதி காரம் போன்ற பழைய நூல்கள் பழந்தமிழரின் இசைத்திறமையை விளக்குகின்றன. இசையிலக்கியங்களான தேவாரமும், தாள இளக்கி யமான திருப்புகழ் போன்ற நூல்கள் இக்காலத்தில் இருந்துவருகின் றன. தேவாரத் திருப்பதிகங்களை அக்காலத்துத் தமிழர்கள் மிகத் திறமையோடு பாடிவந்ததை வடமொழி நூலாகிய சங்கீத ரத்தினா கரமென்ற இசை நூலாலும், திருமுறைகண்ட புராணத்தாலும் அறி தல் கூடும். திருமுறைகண்ட புராணங் கூறும் பண்களின் வகைகளுக் கும், பிங்கலமுனிவர் இயற்றிய பிங்கலந்தையிற் கூறும் நூற்றுமூன்று பண்களுக்கும் இக்காலத்தில் வழங்கிவரும் இருபத்தைந்து பண்களுக் கும் மிகவும் வேறுபாடு காணப்படுகின்றது. திருமுறைகண்ட புராணம, பிங்கலந்தை முதலிய நூல்களில் கூறப்படும் அதிகமான பண்களின் நுட்பங்களை உணரமுடியாமையால் பழமையாகத் தமிழ்நாட்டில் வழங்கிவந்த தேவாரப் பண்களைப் பிற்காலத்தவர் தத்தம் விருப்பம் போல் வெவ்வேறு பெயர் கொடுத்துப் பாடி வருகின்றனர்." என் பது அவருடைய கருத்து.
இக்காலத்து ஒதுவார்களும், தேசிகர்களும் பழைய இராகங் களை நீக்கிப் புதிய இராகங்கள் சிலவற்றைப் புகுத்தியிருக்கிறார் கள். இருபத்தொரு பண்களில் பன்னிரண்டு பண்களின் இராகங்கள்

9.
தற்போதும் பண்டைய மரபிலேயே இருந்து வருகின்றன. இக் காலத்து ஒதுவார் சிலர் கையாண்டுவரும் பகற்பண்களுக்கு வந்த இராகங்கள் சில மீண்டும் இராப்பண்களுக்கு வந்து மயங்கி நிற்கக் காண்கின்றோம். காரணமின்றிப் பண்டையோர் வழக்கினை இக் காலத்தோர் மாற்றுவது மரபுக்கிழுக்காகுமல்லவா?.
தீந்தமிழ்ப் பண்ணிசைப் பாக்களைக் கேட்கும்வண்ணம் இறை வன் அருளாளர்களைத் தேடித்தேடிப் பின்சென்றான். பாடும்வண் ணம் அடியார்களுக்கு அடியெடுத்துக் கொடுத்துப் பாடச்செய்தான் எனக்கூறும் தேவாரப் பாடல்கள் இனிமை மிகுந்த இறையான் மகி ழிசையாகும். இசையெனப்படுவது நரம்பு அடைவால் உரைக்கப்பட்ட பதினோராயிரத்துத் தொளாயிரத்துத் தொண்ணுாற்றொன்றாகிய (11991) ஆதியிசை என்றும் பல இயற்பாக்களுடனே நிறைந்து இசைத் தலால் இசையென்றும், பெயராயிற்று. (சிலப்-அரங்கேற்றுக்காதை 45ஆவது, உரை) என்று கூறுவர் அடியார்க்குநல்லார். இத்தகைய சிறப் பும், பழமையுமாகிய ஆதித் தமிழிசைத் திருமுறைகள் பன்னிரண் டாம் நூற்றாண்டுவரையும் ஆதியிலேற்பட்ட பண்களின் சுத்த உருவத்திலேயே பாடப்பட்டுவந்தது. பதினாறாம் நூற்றாண்டுவரை சில பண்களின் இலக்கணங்கள் அழிவெய்தாதிருந்தன. தஞ்சையில் 1675 - 1855 வரை ஆண்ட மகாராஷ்டிர மன்னர்களின்ஆட்சிக்காலத் திலும், 1529 - 1736 வரை மதுரையையாண்ட நாயக்க மன்னர்களின் ஆட்சிக்காலத்திலும், தோன்றிய கர்நாடக சங்கீதமும், தெலுங்குக் கீர்த்தனைகளும், நாட்டில் பரவுதலும் பழைய பண்ணுருவங்கள் சில மறைந்துவிட்டன. மன்னர்களைத் திருப்திப்படுத்துவதற்காகத் தமி ழிசையாளர்கள் தெலுங்குக் கீர்த்தனைகளை எழுதிக் கர்நாடக இசையை வளர்த்துத் தமிழிசையைத் துக்கடாவாக்கிவிட்டார்கள். அரசாட்சியாளரின் ஆணையும், இசையாட்சியாளரின் ஏழ்மையும் பண்டைத் தமிழிசையைக் குன்றச்செய்துவிட்டன. முன்னே முளைத்த செவியை மறந்து பின்னே முளைத்த கொம்புக்குப் பூணிட்டு அழகு பார்த்த கதையாக முடிந்துவிட்டது.
தற்காலத்தில் பண்ணிசையின் பயில்வுநெறி ஒரு புதிய திருப் பத்தை நோக்கிச் செல்வதை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது. ஆலயங்களில் பண்களை ஒதிவந்த ஒதுவாமூர்த்திகள் நாளடைவில் மேடைகளிலும் பண்ணிசைக் கச்சேரிகளைச் செய்யத் தொடங்கினார்

Page 23
身0
கள். ஒரு குறிப்பிட்ட இராகங்களை மாத்திரம் கையாண்டு பண்ணிசை மரபின் வரம்பு மீறாமல் பாடும்போது அது ரசிகர்களைக் கவரக் கூடியதாக இருக்கவில்லை, எனக்கண்டு ஜனரஞ்சகமான இராகங் களைக் கையாளத் தொடங்கியுள்ளார்கள். கர்நாடக சங்கீதமும், சினிமா இசையமைப்புக்களும், பண்ணிசையின் வளர்ச்சிக்குத் தடை யாயிருந்து வருகின்றன. கர்நாடக சங்கீதத்தையும், பண்ணிசையை யும் முறையாகப் பயின்று லாகவமாகப் பாடக்கூடிய ஒதுவார்கள் ராக, தாள, பாவங்களோடு பண்களைப் பாடிக் கர்நாடக இசைக் கச்சேரி செய்வதுபோலப் பண்ணிசைக் கச்சேரிகளை நடத்தி வரு கிறார்கள். திருத்தாண்டகத்தைப் பாடும்போதுகூட இந்த நெறியைப் பின்பற்றுகிறார்கள். தங்களுடைய இசையறிவையும், அனுபவங்களை யும், சங்கீத யுக்திகளையும் கையாண்டு பண்ணிசைக் கச்சேரி செய் கிறார்கள். பண்களின் பண்டை மரபுக்குப் பங்கமேற்படாமல் பாது காக்கவேண்டியது ஒதுவாமூர்த்திகளின் தலையாய கடமையல்லவா?
பண்ணிசைதான் தொன்மையான இசை. கர்நாடக இசை பின் னர்த் தோன்றியதென்பது ஆய்வாளர்களின் ஒத்த முடிவாகும். திரு முறைகளைப் பண்ணாங்கமாகவும், சுத்தாங்கமாகவும் பாடி வருகி றார்கள். தருமபுரம் ஆதீனம் தேவாரப் பண்களைப் மகற்பண் பதின்மூன்றாகவும், இராப்பண் ஒன்பதாகவும். பொதுப்பண் மூன்றா கவும் வகுத்து இருபத் ைதந்து பண்களில் பாடுவதற்குத் திருமுறை களைப் பதிப்பித்திருக்கின்றது. யாழ் நூலாசிரியர் சுவாமி விபுலா னந்த அடிகளார் பகற்பண் பத்து, இராப்பண், எட்டு, பொதுப்பண் கள் நான்கு என வகுத்து இருபத்திரண்டு பண்களை யாழ் நூலில் அறிமுகப்படுத்துகின்றார் இந்தப் பண்களை இருபத்தைந்து இராகங் களில் பாடுவதற்கு வகை செய்யப்பட்டிருக்கின்றது. எந்தப் பண்ணை என்ன இராகத்தில் பாடவேண்டும் என்பதையும், ஒவ்வொரு தேவா ரப் பண்ணுக்கும் அமைந்த கட்டளை வகையையும், திருமுறைகளின் யாப்பமைதியையும், தாள அமைப்பையும் தக்கார்வாய்க் கேட் டறிந்துகொள்க.
தேவாரங்களும், ஆழ்வாராதிகள் அருளிச்செய்த திவ்வியப் பிரபந்தங்களும் பண்டைக்காலத்தில் பண்ணோடு பாடப்பெற்று வந்துள்ளபோதிலும் இக்காலத்தில் ஒதிவாங்கின்ற முறை கீழ்வேளூர் சொக்கலிங்கதேசிகர் கற்பித்துவந்த வழியைப் பின்பற்றியதாகும். திருமுறைகளையும், திருவாய்மொழியாகிய திவ்யப் "பிரபந்தங்களை யும் பாடுவோர் பொருளுணர்ந்து பதச் சிதைவின்றி அட்சரசுத்தி யோடும், பண்ணமைதியோடும் பாடுவார்களாக.

21
ஆழ்வாராதிகள் பாடியருளிய
திருவாய்மொழியிலுள்ள பண்களும் இராகங்களும்
பண்கள்
இராகங்கள்
2
:
10.
l.
12.
13.
14.
5.
6.
| 7.
18.
19.
பாலை யாழ் தக்கராம்
புறநீர்மை பஞ்சமம் காந்தாரம் நட்டபாடை
செருந்தி பழம்பஞ்சுரம் பழந்தக்கராகம்
முதிர்ந்த குறிஞ்சி
முதிர்ந்த இந்தளம் குறிஞ்சி நட் டராகம் தக்கேசி
கொல்லி
இந்தளம்
கெளசிகம் (கைசிகம்) சீகாமரம்
வியந்தம்
நாட்டம்
தோடி - முகாரி - பந்துவராளி யமுனாகல்யாணி - செளராஷ்ட்ரம் பைரவி - சுருட்டி - கல்யாணி - நீலாம்பரி எதுகுலகாம்போதி - கண்டா பிலகரி - முகாரி - சங்கராபரணம் தன்யாசி - மோகனம் - சாவேரி தன்யாசி - பியாகடை - கண்டா-பூgராகம் ஆனந்தபைரவி
கல்யாணி
நாதநாமக்கிரியை - சாரங்கா ஆனந்தபைரவி - செளராஷ்ட்ரம்-கண்டா காம்போதி - பந்துவராளி நாதநாமக்கிரியை - செஞ்சுருட்டி ஆனந்தபைரவி
சகானா - காபி - கமஸ் தோடி - முகாரி - த்வஜாவந்தி
அசாவேரி
ஆரபி
மோகனம் தேசியராகம் - குண்டக்கிரியை, ஆனந்த பைரவி - செளராஷ்ட்ரம்
செஞ்சுருட்டி பைரவி - முகாரி-நாதநாமக்கிரியை -சோக வராளி - சாவேரி - கல்யாணி - எதுகுல காம்போதி
மத்தியமாவதி முகாரி - யமுனாகல்யாணி - உசேனி சுருட்டி - அடானா - கேதாரகெளளம் - சாரங்கா

Page 24
22
மேலே காட்டிய அட்டவணையை நோக்குமிடத்து பதின் மூன்று பண்கள் தேவாரத்திற்கும், திருவாய்மொழிக்கும் பொதுவாக வுள்ளனவென்பதும், தேவாரத்திற் காணப்படாத ஆறு பண்கள் திருவாய்மொழியிலுள்ளனவென்பதும். திருவாய்மொழியிற் காணப் படாத எட்டுப் பண்கள் தேவாரத்திலுள்ளனவென்பதும் பெறப்பட் டன. பண்ணுக்கு நேராகக் குறிக்கப்பட்ட இராகப் பெயர்கள் பெரி தும் முரணித் தோன்றுவதை நோக்குமிடத்து அவை பிற்காலத்தா ரால் வரையறையின்றிக்குறிக்கப்பட்டனவென்பதும் பெறப்படுகின்றது. இவ்வாறே சிலப்பதிகாரம் முதலிய பழந்தமிழ் நூல்களில் கூறப்பட் டுள்ள படுமலைப் பாலைப்பண் - கரகரப்பிரியாவிலும், அரும்பாலைப் பண் - கல்யாணியிலும், கோடிப் பாலைப்பண் - ஹரிகாம்போதியிலும் விளரிப்பாலைப்பண் - பைரவியிலும், செவ்வழிப்பாலைப்பண் - தோடி இராகத்திலும் பாடலாமென இசையாசிரியர்கள் கூறிகின்றனர்.
திருமாளிகைத் தேவர்முதல் சேதிராயர் ஈறாக ஒன்பதின்மர் அருளிச்செய்த திருவிசைப்பாவும், திருப்பல்லாண்டும், பண்ணமைதி யோடு பாடப்பட்டிருக்கின்றன. அவைகள் சிவத்தமிழ் மணக்கும் சைவத்திருமுறைகள் பன்னிரண்டினுள் ஒன்பதாவதாக வைத்தெண் ணப்படுவனவாம். இப்பாடல்கள் தேவார, திருவாசகங்களைப் போலக் கல்நெஞ்சையும் கனிவிக்கும் ரொற்றிவர்ய்ந்தவை. எடுத்துக் காட்டாகக் கருவூர்த்தேவர் அருளிய திருவிசைப்பாவினைக் காண்க.
பண் - பஞ்சமம் என்னையுன்பாத பங்கயம் பணி வித்து
என் என்பெலாமுருக நீ எளிவந்து உன்னையென்பால் வைத்து எங்கு மெஞ்ஞான்றும்
ஒளிவற நிறைந்த ஒண்சுடரே முன்னையென் பாச முழுவது மகல
முகத்தலை யகத்தமர்ந் தெனக்கே கன்னலும் பாலும் தேனு மாரமுதும் கனியுமாய் இனிமையாயினையே.
திருவிசைப்பா என்பது அழகிய இசை (பெருமை) பொருந்திய பாக்கள் எனப் பொருள்படும். திருப்பல்லாண்டு என்ற ஒரு தனிநூல் கிடையாது. சேந்தனார் அருளிச்செய்த நான்காவது திருவிசைப்பாப் பதிகமே பரமேஸ்வரனைப் பல்லாண்டு வாழ்கவென மனநிறைந்த அன்பினால் பாடப்பட்டதாகலின் பிற்காலத்தில் திருப்பல்லாண் டெனத் தனிப் பிரபந்தமாக பிரித்துப் போற்றப்பட்டதென்று அறி ஞர் கூறுகின்றனர்: திருவிசைப்பாப் பதிகங்கள் இருபத்தெட்டும், திருப்பல்லாண்டும் சேர்ந்து இருபத்தொ ைபது பதிகங்களில் அடங் கிய பாடல்கள் முள்னுாற்றறுபத்தைந்தாகும், ஆனால் இப்போது

23
கிடைக்கப்பெறுவன திருவிசைப்பாக்கள் இருநூற்றறுபத்துநான்காகும், திருப்பல்லாண்டு பதின்மூன்றுமாக இருநூற்று எழுபத்தேழு திருப் பாடல்கள் மாத்திரமே. ஏனையவை மறைந்தொழிந்தன, இப்பாடல் கள் யாவும் தேவாரங்களைப்போலப் பண்ணமைதியுடையன.
ஐந்துட னால்வரு முரைத்த திருக்கடை காப்பிற் பண்
அறையின் மாளிசுைத்தேவர் நான்கிலொன்று காந்தாரம் முந்து கருவூரர் பத்தினிரண்டு புறநீர்மை
மொழிந்திடு காந்தாரமொன்று காடவர்கோ னிரண்டில் நந்தலில் சாளரபாணி யொன்று வேணாட்டடிகள்
நவின்ற தொன்று புறநீர்மை திருவாலியமுதர் பந்தமறச் சொன்னான்கினொன்று நட்டராகம்
பகர்ந்திடி னொன்றிந்தள மற்றெவையும் பஞ்சமமே.
மேற்கூறிய பாடலின்படி திருவிசைப்பா, திருப்பல்லாண்டு என் பன திருஞானசம்பந்தருடைய பாடல்களைத் திருக்கடைகாப்பு என்று கூறுவதுபோல இவைகளையும் திருக்கடைகாப்பென வழங்கிவந்தமை அறியக்கிடக்கின்றது. அன்றியும், இப்பாடல்கள் காந்தாரம், புற நீர்மை சாளரபாணி, நட்டராகம், இந்தளம், பஞ்சமம் என்னும் பண்ணமைதியுடையன என்பதும் அறியக்கிடக்கின்றது. மூவர் தேவா ரத்திலும் காணப்படாத சாளரபாணி என்ற பண் திருவிசைப்பாவில் மாத்திரமே காணப்படுகின்றது.
திருமுறையில் இசைத்தமிழ்
தேவாரப் பதிகங்கள் பண்ணோடு பாடப்பட்டு வந்ததுபற்றிப் பெரிய புராணத்தில் முதலில் கூறநேர்ந்த இடம் தடுத்தாட்கொண்ட புராணமாகும்.
"முறையால்வரு மதுரத்துடன் மொழியிந்தள முதலிற் குறையாநிலை மும்மைப்படி கூடுங் கிழமையினால் நிறைபாணியி லிசைகொள் புணர் நீடும் புகழ் வாக்கால் இறையான்மகி பூழிசைப7 டின னெல்லா நிகரில்லான்'
(த. கொ. பு, 75)
இறையான்மகிழிசையெனப் போற்றப்படும் தேவாரத்துக்கு திருவெண்ணெய் நல்லூரில் எழுந்தருளியுள்ள தடுத்தாட்கொண்ட நாயகர் ‘பித்தா” என்று அடியெடுத்துக் கொடுக்க சுந்தரமூர்த்தி நாயனார் "பித்தாப் பிறைசூடி” என்று தொடங்கும் திருப்பதிகத்தை நிறைபாணியிலிசை புணர இந்தளப் பண்ணில் பாடியருளினார்.

Page 25
34
மண் - இந்தளம்
பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா எத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை வைத்தாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய்
நல்லூரருட்டுறையுள் அத்தா உனக்காளாயினி அல்லே ைெனலாமே (சுந்தரர்)
என்பது அத்திருப்பாட்டு. பண்ணின் சிறப்பையும், அதன் இலக்கணத்தையும் பற்றி சேக்கிழார் பெருமான் குறிப்பிடும் மற்றோ ரிடம் ஆனாயநாயனார் புராணம். ஆனாயநாயனார் வங்கியத்தில் (குழல்) வாசித்த இசையமைதிபற்றி, அவர் பெரியபுராணத்தில் கூறும் பாடல்களைக் காண்க.
'ஏழுவிரல் இடையிட்ட இன்னிசை வங்கியம் எடுத்து தாழும் மலர் வரிவண்டு தாது பிடிப்பன போல சூழும் முரன்று எழநின்று தூயபெருந் தனித் துளையில் வாழியநம் தோன்றலார் மணியதரம் வைத்தூத.
முத்திரையே முதலனைத்தும் முறைத்தானம் சோதித்து வைத்ததுளை ஆராய்ச்சி வக்கானை வழிபோக்கி ஒத்த நிலை உணர்ந்ததன்பின் ஒன்றுமுதல் படிமுறையாய் அத்தகைமை ஆரோசை அமரோசையின் அமைத்தார்.
மாறுமுதல் பண்ணின் பின் வளர் முல்லைப் பண்ணாக்கி ஏறிய தாரமும் உழையும் கிழமைகொள இடும்தாளம் ஆறுலவும் சடைமுடியான் அஞ்செழுத்தின் இசைபெருக கூறிய பட்டடைக்குரல் கொடிப்பாலையினில் நிறுத்தி.
ஆயஇசைப் புகல் நான்கின் அமைந்தபுகல் வகையெடுத்து
மேயதுளை பற்றுவன விடுப்பனவாம் விரல் நிரையின் சேய ஒலிஇடையலையத் திருவாளன் எழுத்தஞ்சும்
தூய இசைக் கிளைகொள்ளும் துறை அஞ்சின் முறைவிளைத்தார்.
மந்தரத்தும் மத்திமத்தும் தாரத்தும் வரன் முறையால் தந்திரிகள் மெலிவித்தும் சமம் கொண்டும் வலிவித்தும் அந்தரத்து விரல் தொழில்கள் அளவுபெற அசைத்தியக்கி சுந்தரச் செங்கனிவா யும் துளைவாயும் தொடக்குண்ண.

25
எண்ணியநூல் பெருவண்ணம் இடைவண்ணம் வனப்புவண்ணம் வண்ணஇசை வகை யெல்லாம் மாதுரிய நாதத்தில் நண்ணிய பாணியும் இயலும் தூக்குநடை முதற்கதியில் பண்ணமைய எழும் ஒசை எம்மருங்கும் பரப்பினார்."
(பெ. பு. ஆனாயநாயனார் 23 - 28)
இப்பாடல்களில் வங்கியத்தின் (குழல்) அமைப்பு, குரல்முதல் தாரமீறாயுள்ள சுரஸ்தானங்களும், அவற்றை வல்லோசை மெல் லோசைகளாக ஒலிக்கச்செய்து பன்களைப் பாடலின் பொருளும், இயலும், பாணியும் (சுவை) பொருந்த வாசிக்கும் தெய்வீக நாத இசைச் சிறப்புக்கள் விரிவாக எடுத்துக் கூறப்பட்டிருக்கின்றன. ஆனாயநாயனாருடைய இசைஞானம் மாத்திரமல்ல சேக்கிழார் சுவாமிகளின் இசைஞானமும் இப்பாடல்களால் அறியக்கிடக்கின்றது. மாணிக்கவாசகர் பாடியருளியநீத்தல் விண்ணப்பத்தில் இசைக் குறிப்பொன்று காணப்படுகின்றது.
"பொதும்புறு தீப்போற் புகைந்தெரியப் புலன் தீக்கேது வெதும்புறுவேனை விடுதிகண்டாய் விரையார் நறவந் ததும்பு மந்தாரத்தில் தாரம் பயின்று மந்தம் முரல்வண்டு அதும்புங் கொழுந்தேன் அவிர்சடைவானத்தடலரைசே’
(திருவாசகம் நீ - வி. 36)
வாசனைபொருத்திய தேன் நிறைந்த மந்தார மலரின் முகையை ஏழிசையில் தாரமாகிய வல்லிசையைப் பழகி மலரை நெகிழச் செய்து பின் மெல்லோசை ஒலியுடன் தேனைப் பருகும் வண்டு என்ற இசைக் குறிப்பை இத்திருவாசகத்தில் எடுத்துக்காட்டி இறையனுபவத் தத்து வத்தை விளக்குகின்றார்.
பண்களை இசையுடன் பாடும் பாணர் மரபு தேவார காலத் தில் மிகச்சிறந்து விளங்கியமையும் தெரியவருகின்றது. திருநீலகண்ட யாழ்ப்பாணரும், அவரது மனைவி மதங்கசூளாமணியாரும் ஆளுடைய பிள்ளையாராகிய திருஞானசம்பந்தருடன் திருக்கோயில்கள் தோறும் உடன் சென்று யாழ் வாசித்துப் பாடிச் சிறந்து விளங்கியதாகத் தெரியவருகின்றது. இதனைச் சேக்கிழார் பெருமான் பின்வரும் பாடலில் விளக்கிக் கூறுகின்றார்,
** இன்னிசை பாடின எல்லாம் யாழ்பெரும் பாணர்தாமும் மனனும் இசைவடிவான மதங்க சூளாமணியாரும் பண்ணிய ஏழிசைபற்றிப் பாடப் பதிகங்கள் பாடிப் பொன்னின் திருத்தாளம் பெற்றார் புகவியில் போற்றியிருந்தார்' " (பெ. புராணம்)

Page 26
96
திருஞானசம்பந்தர் சிவபெருமானிடமிருந்து பொற்றாளம் பெற்று உமையம்மையால் (ஓசைகொடுத்த நாயகி) அதற்கு ஒசை யருளப்பெற்று தமிழ் நாடெங்கும் வேதநெறி தழைத்தோங்கவும் சைவத்துறை சிறப்புற்று விளங்கவும் இன்னிசையால் தமிழ்பரப்பிச் சைவசமயத்தை ஓங்கச்செய்த அருட்செயலைக் கூறுகின்றார்சேக்கிழார்
"ஞானத்தின் திருவுருவை நான்மறையின் தனித்துணையை வானத்தின் மிசையன்றி மண்ணில் வளர் மதிக்கொழுந்தை
தேனக்க மலர்க்கொன்றைச் செஞ்சடையார் சீர்தொடுக்கும் கானத்தின் எழுபிறப்பைக் கண்களிப்பக் கண்டார்கள்.”*
(பெரிய புராணம்)
கானத்தின் எழு பிறப்பு எனப்போற்றப்பட்ட திருஞானசம் பந்தர் ஏழிசையாய் இசைப்பயனாயுள்ள இறைவனைப் பாடுகின்றார்.
பண் - நட்டபாடை
பண்ணும் பதமேழும் பலவோசைத் தமிழவையும் உண்ணின்றதோர் சுவையும் உறுதாளத் தொலிபலவும் மண்ணும் புனலுயிரும் வருகாற்றும் சுடர் மூன்றும் விண்ணும் முழுதானானிடம் வீழிம் மிழலையே,
எழுபிறப்பு என்பது குரல், துத்தம், கைக்கிளை, உளை, இளி' விளரி, தாரம் எனப்படும் ஏழு சுரங்கள். இவற்றின் ஆரோசை அமரோசை விகற்பங்களில் பிறப்பது கானம். கானம் என்பது பண் கள் அனைத்தையும் உள்ளடக்கிய இசை, இசைஞானத் திருவுருவாய்த் தோன்றியவர் திருஞானசம்பந்தர். இப்பதிகத்தில் அவர் பண், இரதம், தாளம் என்னும் மூன்றினையுங் குறிப்பிடுகின்றார், இம்மூன்று உறுப் படங்கிய கலையே பரதம் எனப்பட்டது. “நாடகத் தமிழ் நூலாகிய பரதம், அகத்தியம் முதலாகவுள்ள தொன்நூல்களும் இறந்தன’’ என அடியார்க்கு நல்லார் கூறுதலினால் தமிழ்ப் பரதம் ஒன்று இருந்து இறந்தமை தெளிவாகின்றதென்று யாழ்நூலில் விபுலானந்த அடிகளார் கூறுகின்றார். பண் என்பது இராகத்தையும், பதம் ஏழும் என்பது சப்த ஸ்வரங்களையும், அவை பலவோசைத் , தமிழாகப் பண்வடிவங்களாகத் தோன்றியதையும், மேற்கூறிய தேவாரம் விளக்குகின்றது.
தேவார திருப்புகழ் வித்துவான், புதுவை. ஆ. விநாயகமுதலி யாரவர்கள் தாம் எழுதிய “தேவாரத் திருப்பதிகங்கள்' என்ற நூலில் பின்வருமாறு கூறுகின்றார்.

27
திருஞானசம்பந்தர், “பண்ணும் பதமேழும்” என்ற "தேவாரத் தில் இறைவன் இசைவடிவினனாயிருத்தலை உணர்த்துவதையும், சுந்தரமூர்த்திநாயனார் ‘ஏழிசையாயிசைப்பயனாய் இன்னமுதாய்' என்று அருளிச் செய்வதையும் நோக்குமிடத்து, ஏழிசை என்றதும் பதமேழும் என்றதும், சரிகமபதநீ என்னும் எழுத்துக்களைக் குறி யீடுகளாயுடைய ஏமு சுர்ங்களையே. இவை முறையே குரல், துத்தம், கைக்கிளை, உளை, இளி,விளரி, தாரம் , என்னும் பெயர்களால் தமிழிசை நூல்களில் வழங்கப்படுகின்றன.
“சரிகமபதறி யென்றே ழெழுத்தாற் றானம் வரிபரந்த கண்ணினாய் வைத்து தெரிவரிய ஏழிசையுந் தோன்றும் இவற்றுள்ளே பண்பிறக்கும் சூழ் முதலாஞ் சுத்தத் துணை .'
என்பதனால், சுரங்களை அடிப்படையாகக் கொண்டு பண்கள் அல்லது இரகங்கள் இசைக்கப்படுகின்றன. என்பது புலப்படும். சுரங்கள் எனப்படும் ஏழிசைகளையும் (சரிகமபதநீ) மாற்றுந் திறத் தினாலே பல்வேறு வகைப்பட்ட பண்கள் (இராகங்கள்) தோன்று கின்றன என்பது அவருடைய கூற்று.
உண்ணின்றதோர் சுவை என்பது பாடலின் பொருளுக்கேற்ற சுவை, அதாவது, உணர்ச்சியும், பாவமும், பொருந்தப் பண்ணின் வண்ணமும் உயிரோட்டமாக இணைந்து நெகிழப் பாடுந்திறனை உணர்த்துவது. ‘உறுதாளத்தொலி பலவும்’ என்ற தொடர் தானங் களின் வேறு வேறு அமைப்பைப் பாடலுக்கு உகந்தவண்ணம் அமைத் துப் பாடும் திறனைக் கூறுகின்றது.
திருமுறைகண்ட புராணத்தில் பண்களுக்குத் தாளங்கள் அமைக் கும் முறை விரிவாகக் கூறப்பட்டிருக்கின்றது. இதனை மேலும் விரி வாக விளக்கி சுவாமி விபுலானந்த அடிகளார் யாழ்நூலில் கூறியுள் ளார். கட்டளை பேதங்களையறிந்து பண்களைப் பாடவேண்டும். 108 கட்டளை பேதங்கள் பண்களில் உண்டு. கட்டளை பேதம் என் பது பண்களின் நடைவித்தியாசத்தைக் குறிப்பதாகும். பண்கள் ஒன்று முதல் ஒன்பது வரையும் கட்டளை பேதங்களாக வகுக்கப்பட்டிருக் கின்றன. கட்டளை சந்தம் என்னும் இரண்டும் ஒரு பொருளையே குறிப்பன. சந்தம் என்பது திருப்புகழிலும், கட்டளை என்பது தேவா ரத்திலும் பயிலப்பட்டுவரும் சொற்கள் பாடல்களின் யாப்பமைதியைக் கவனித்துக் கட்டளைகள் வகுக்க வேண்டும். ஏழாயிரத்துக்கதிகமான தேவாரப் பாடல்களில் அமைந்து கிடக்கும் கட்டளை விகற்பங்களை ஆராய்த்து திருமுறைகண்ட புராணத்தில் கூறப்பட்ட கட்டளை பேதங்களை யாழ் நூலாசிரியர் கூறுவதை வகைப்படுத்தி இவ்வட்ட வணையில் தரப்படுகின்றது.

Page 27
28
பண்களின் கட்டளை பேதங்கள்
பண்கள் சம்பந்தர் சுந்தரர் அப்பர்
I. p5L li in 60 L 8 கட்டளை 2 கட்டளை 2. கெளசிகம் 2 99. 2 99 w 3. கொல்லி 4 99. 3. 99 1 கட்டளை 4. பியந்தைக்காந்தாரம் 3 , 5. காந்தாரம் 3 99 2 99 I y9 6. தக்கராகம் 7 s, 2 , , 7. தக்கேசி 2 και 3 6 99 v 8. இந்தளம் 4 99 2 99. p 9. சீகாமரம் 2 y yo l s Σ) 9 10. குறிஞ்சி 5 , 2 , I , , 11. வியாழக்குறிஞ்சி 6 3 9 a 12. புறநீர்மை 2 99 mu 13. பழம்பஞ்சுரம் -- 2 99 I 99 14. பழந்தக்கராகம் 3 9p 99 99 15. காந்தாரபஞ்சமம் 3 99 99 99. 16. சாதாரி 9 99) Sy
17. நட்டராகம் 2 J9 2 99 m 18. மேகராகக்குறிஞ்சி 2 sy usuna 19. செந்துருத்தி - I 9 ל I 9 20. அந்தாளிக்குறிஞ்சி ss pas , 21. செவ்வழி I , 22 பஞ்சமம் 1 : , , 99 Mam 23. திருநேரிசை w10 W− 2 %岁 24. திருக்குறுந்தொகை an - 99 25. திருவிருத்தம் 99 26. திருத்தாண்டகம் un n I 9 is 27. யாழ்முறி I 28. கொல்லிக்
கெளவாணம் 99 2 9 y

29
உண்ணின்றதோர் சுவை" இரதம் எனப்படும். நவரசங்களையே தேவாரப் பாடலில் ஞானசம்பந்தர் சுவெயென்றும், இரதமென்றும் குறிப்பிடுகின்றார்போலும் பின்னரும் திருக்கழுமலத் திருப்பதிகத்திலே "பண்ணிடை ஒன்பதும்’ என்று கூறுவதையும் காண்கிறோம்.
பண் - குறிஞ்சி
எண்ணிடை யொன்றினர் இரண்டினர் உருவம்
எரியிடை மூன்றினர் நான்மறை யாளர் மண்ணிடை ஐந்தினர் ஆறினர் அங்கம்
வகுத்தனர் ஏழிசை எட்டிருங் கலைசேர் பண்ணிடை ஒன்பது உணர்ந்தவர் பக்தர்
பாடிநின் றடிதொழ மதளனை வெகுண்ட கண்ணிடைக் கனலினர் கருதிய கோவில்
கழுமலம் நினைய நம்வினை கரிசறுமே.
(சம்பந்தர்)
பண்ணிடை ஒன்பதும் என்பது நவரசத்தைக் குறிக்கின்றதெனக் கொள்ளலாம். விபுலானந்த அடிகளார்' ஏழிசை எட்டிருங் கலைசேர் பண்” என்பதனை விளக்கும்பொழுது, இணை, கிளை, பகை, நட்பு, என்று இந்த நான்கினையும் ஆராய்ந்து இசைபுணரும் குறிநிலை யினை நோக்கி ஏழிசையினையும் பாவையாக நிறுத்தியபின் எடுத் தல், படுத்தல், நலிதல், கம்பிதம், குடிலம், ஒலி, உருட்டு, தாக்கு என்னும் எண்வகைத் தொழிலினாலும் பண்ணிப்படுத்த பண்ணானது மேலும் ஒன்பது சுவைப்பாகுபாட்டினால் செம்மையுறப் பாடப் பெறுகின்றதென்றும் 'பண்ணிடையொன்பது” எனவருதல் முதலும் முறையும் , முடிவும், நிறையும், குறையும், கிழமையும், வலிவும், மெலிவும், சமனும் என்னும் இசைக்குரிய ஒன்பது பாகுபாடுகள் என்றும் கூறுகின்றார். திருப்பிரமபுரப் பதிகத்தில் வரும் மற்றொரு பாடலில் திருஞானசம்பந்தர்'ஏழே ஏழே நாலே மூன்றியலிசை இசை யின் பம்’ என்று கூறுவதை ‘ஈரிருபண்ணும் எழுமூன்று திறனும்” என்று பிங்கலந்தை நிகண்டுச் சூத்திரத்தில் கூறியுள்ள 'எழுமூன்று திறனும்’ என்பதைக் குறிக்கின்றதென்றும் யாழ் நூலாசிரியர் கூறு கின்றார். அத்திருப்பிரமபுரப் பாடல் வருமாறு:-

Page 28
50
பண் - வியாழக்குறிஞ்சி
கஞ்சத்தே னுண்டிட்டே களித்து வண்டு சண்பகக்
கானே தேனே போராருங் கழுமலநகரிறையைத் தஞ்சைச்சார் சண்பைக்கோன் சமைத்த நற்கலைத்துறை
தாமேபோல்வார் தேனேரார் தமிழ்விரகன மொழிகள் எஞ்சத்தேய் வின்றிக்கே யிமைத்திசைத்த மைத்துக்கொண் டேழே யேழே நாலே மூன்றியலிசையிசையியல்பா வஞ்சத்தேய் வின்றிக்கே மனங்கொளப் பயிற்றுவோர்
மார்பே சேர்வான் வானோர்சீர் மதிநுதன்மடவரலே
ஏழிசையால் தோற்றுவிக்கப்பட்ட பண்கள் அழகிய, இனிய ஒலிவடிவங்களைப் பெற்று கேட்போருக்கு அளவற்ற இன்பத்தை நல்குகின்றன. "ஓசை ஒலியெலாமானாய் நீயே" என்ற திருநாவுக் கரசரின் திருத்தாண்டகம் உலகமே நாத இன்பவடிவமாய் விளங்கு கின்றதென்பதைக் காட்டுகின்றது. பண்ணின் இசையின்பத்தைச் *செல்வத்துட் செல்வம் செவிச் செல்வம்’ என்று திருவள்ளுவர் கூறுவதுபோல பண்ணின்பத்தைப் பற்றித் தேவாரத்தில் பல இடங் களில் தேவார ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள்.
திருமுறையில் சுவை (இரதம்) நயம்
பண்ணுக்கு இன்பமளிப்பது 'உண்ணின்றதோர் சுவை’ எனப்படும் இரதமாகும். இரதம் என்பது நவரசங்கள் என முன்னர் குறிப்பிட்டிருந் தோம். கிலப்பதிகாரம் அரங்கேற்றுக் காதையில் இசையாசிரியனமைதி கூறியவிடத்து 'இசைந்த பாடல் இசையுடன் படுத்து’ என்னும் 28ஆம் அடிக்கு "சேரச்செய்த உருக்களை இசைகொள்ளும்படியும், இரதம் பொருந்தும்படியும் புணர்க்கவல்லனாசி” என அடியார்க்கு நல்லார் உரை கூறுகின்றார். ஆதலின் இரதம் என்ற சொல் சுவை என்பதை உணர்த்துவதாகும். எனவே, உண்ணின்றதோர் சுவை யினைத் தேவாரப் பதிகங்களில் பொருள் நோக்கி அறிவோம்.
எண்வகை மெய்ப்பாடுகளும், சமநிலையுமென (நடுநிலை) தொல் காப்பியர் வகுத்துக்கூறிய ஒன்பது சுவையினுள்ளே எள்ளல், இளமை, பேதமை, மடமை என்னும் நான்கின் நிலைக்களமாகப் பிறந்த நகைச் சுவையும் உறுப்பறை, குடிகோள், அலை, கொலை, என்னும் நான்கின்

3.
நிலைக்களமாக வெறுப்பவந்த வெகுளிச் வையும் இத்தெய்வப் பாடல் களிலே பயின்று வருதல் மரபன்றாதலின் அவையொழிந்த, அவலம் (அழுகை) இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், உவகை, சமநிலை, என்னும் ஏமுமே திருமுறைகளிற் காணப்படுகின்றன. சமநிலையென்பது *செஞ்சாந்து பூசிளும் செத்தினும் போழினும் நெஞ்சம் சோர்ந் தோடா நிலையாகும்' என்று மாறனலங்காரங் கூறுகின்றது. சுவை கள் என்னும் இரதம் பற்றித் தொல்காப்பியத்துட் கூறப்பட்டுள்ள வரைவிலக்கணங்களை அவ்வச் சுவைகளுக்கு நேரே சுருக்கமாகக்கூறி அச்சுவைதரும் தேவாரப் பாடல்கள் இவ்விரண்டை மாத்திரம் உதாரணமாகத் வருகின்றோம்.
அவலம் (அழுகை) - - பிறராலிகழப்படுதலும், இன்பம் பயக்கும் நுகர்ச்சி முதலானவற்றை இழத்தலும், போகந்துய்க்கப்பெறாத பற் றுக்கள் காரணமான வறுமையும், பண்டைப் பெருநிலைகெட்டு வருந்துதலும், அழுகை எனப்படும் அவலச்சுவையாகும்.
திருநேரிசை பண் - கொல்லி
பத்தனாய்ப் பாடமாட்டேன் பரமனே பரமயோகி எத்தினாற் பக்கி செய்கேன் என்னை நீ இகழவேண்டாம் முத்தனே முதல்வா தில்லை அம்பலத் தாடுகின்றி அத்தாவுன் ஆடல் காண்பான் அடியனேன் வந்தவாற்ே:
(நாவுக்கரசர் 4ஆம் திருமுல்ற)
பண் - பழந்தக்கராகம்
தாயும் நீயே தந்தை நீயே சங்கரனே அடியேன் ஆயும் நின்பால் அன்பு செய்வான் ஆதரிக்கின்றதுள்ளம் ஆய மாய காயத் தன்னுள் ஐவர்நின்றொண்டலொட்டார் மாயமே என்று அஞ்சுகின்றேன் வல்வலமேயவனே.
(சம்பந்தர் 1ஆம் திருமுறை) இளிவரல் - மூப்பும், பிணியும், வருத்தமும், வலியின்மையும், காரணமாகத்தோன்றும் எளிமை இளிவரல் எனப்படும்.
பண் - செந்துருத்தி மீளா அடிமை உமக்கேயாளாய்ப் பிறரை வேண்டாதே மூளாத் தீப்போல் உள்ளே கனன்று முகத்தால் மிகவாடி ஆளாய் இருக்கும் அடியார் தங்கள் அல்லல் சொன்னக்கால் வாளாங்கிருப்பீர் திருவாரூரீர் வாழ்ந்து போ தீரே.
(சுந்தரர் 7ஆம் திருமுறை)

Page 29
32
தனித்திருநேரிசை நாயினுங் கடைப்பட்டேனை நன்னெறி காட்டியாண்டாய் ஆயிரம் அரவமார்த்த அழகனே அமுதமொத்து நீயுமென் நெஞ்சினுள்ளே நிலா வினாய் நிலாவி நிற்க நோயவை சாருமாகில் நோக்கிநீ அருள்செய்வாயே.
(நாவுக்கரசர் 4ஆம் திருமுறை)
மருட்கை - புதிதாகக் கண்டனவும் , மிகப் பெரியனவும், மிகச் சிறியனவும், ஒன்று ஒன்றாகத் திரிந்தனவும், என நான்கும் பற்றி வியப்பு எனப்படும் மருட்கை தோன்றும்.
பண் - மேகராகக்குறிஞ்சி
அலங்கல் மலி வானவரும் தானவரும்
அலைகடலைக் கடையப் பூதம் கலங்களழு கடுவிடமுண்டு இருண்ட
மணிகண்டத்தோன் கருதுங் கோயில் விலங்கலமர் புயன்மறந்து மீன் சனிபுக்
கூன் சலிக்குங் காலந்தோறும் கலங்கலிலா மணப்பெரு வண்கை
யுடை மெய்யர் வாழ் கழுமலமே.
(சம்பந்தர் 1ஆம் திருமுறை)
பண் - காந்தாரம் பண்ணார்ந்த வீணைபயின்ற விரலவனே என்கின்றாளால் எண்ணார் புரமெரித்த எந்தை பெருமானே என்கின்றாளால் பண்ணார் முழவதிரப் பாடலொடாடலனே என்கின்றாளால் கண்ணார் பூஞ்சோலைக் கழிப்பாலைச் சேர்வானைக் கண்டாள்
கொல்லோ
(நாவுக்கரசர் 4ம் திருமுறை)
அச்சம் - தெய்வமும், விலங்கும் கள்வரும், தமக்கு இறை வனாயினாராலும் அச்சம் பிறக்கும் w
பண் - இந்தளம் மணமென மகிழ்வர் முன்னே மக்கள் தாய் தந்கை சுற்றம் பிணம் எனச் சுடுவர் பேர்த்தே பிறவியை வேண்டேன் நாயேன் பனையிடைச் சோலைதோறும் பைம் பொழில் விளாகத்தெங்கள் அணைவினைக் கொடுக்குமாரூர் அப்பனே அஞ்சினேனே.
(சுந்தரர் 7ஆம் திருமுறை)

3.
குறைந்த திருநேரிசை
வளைத்து நின்று ஐவர்கள் வந்தெனை நடுக்கஞ் செய்ய தளைத்து வைத் துலையையேற்றித் தழலெரிமடுத்த நீரில் திளைத்துதின் றாடுகின்ற ஆமைபோல் தெளிவிலாதேன். இளைத்து நின்றாடுகின்றேன் என்செய்வான் தோன்றினேனே
(நாவுக்கரசர் 4ஆம் திருமுறை)
பெருமிதம் - கல்வியும், அஞ்சாமையும், புகழும் , கொடையும், என் ஓம் நான்கின் சார்பர்ல் வீரம் எனப்படும் பெருமிதச் சுவை பிறக்கும்,
பண் - நட்டபாடை
அச்சமிலர் பாவம்மிலர் கேடும்மிலரடியார் நிச்சம் முறு நோயும்மிலர் தாமும் நின்றியூரில் நச்சம் மிடறுடையார் நறுங்கொன்றை நயந்தாளும் பச்சம்முடை யடிகள் திருப்பாதம் பணிவாரே.
(சம்பந்தர் 1ஆம் திருமுறை)
பண் - தக்கராகம்
வைத்தனன் தனக்கே தலையும் என்னாவும்
நெஞ்சமும் வஞ்ச மொன்றின்றி உய்த்தனன் தனக்கே திருவடிக் கடிமை
உரைத்தக்கால் உவமனே ஒக்கும் பைத்த பாம்பார்த்தோர் கோவணத்தோடு
பாச்சிலாச் சிராமத்தெம் பரமர் பித்தரே ஒத்தோர் நச்சிலராகில்
இவரலா தில்லையோ பிரானர்.
(சுந்தரர் 7ஆம் திருமுறை)
25 ge செல்வம், கல்விப்பயனாகிய அறிவுடமை, காமப் புணர்ச்சி, யாறும், குளணும் காவுமாடும் விளையாட்டால் வரும் மகிழ்ச்கி என்பன உவகையெனப்படும்.
பண் -பஞ்சமம்
மந்திரம் ஒன்றறியேன் மனைவாழ்க்கை மகிழ்ந்தடியேன் சுந்தர வேடங்களால் துரிசேசெயும் தொண்டன் எனை அந்தரமால் விசும்பில் அழகானை அருள்புரிந்த துந்தரமோ நெஞ்சமே நொடித்தான்மலை உத்தமனே.
(சுந்தரர் 5ஆம் திருமுறை)

Page 30
34
பண் - நட்டராகம்
என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே இருங்கடல் வையத்து முன்னம் நீபுரி நல்வினைப் பயனிடை முழுமணித் தரளங்கள் மன்னுகாவிரி சூழ் திருவலஞ்சுழி வாணனை வாயாரப் பன்னியாதரித் தேத்தியும் பாடியும் வழிபடும் அதனாலே
(சம்பந்தர் 2ஆம் திருமுறை)
சமநிலை - செஞ்சாந்து பூசினும் செத்தினும், போழினும் நெஞ்சம் சோர்ந்து ஒடர்நிலை. இது காமம், வெகுளி, மயக்கம், நீங்கினாரிடத்து நிகழும் நடுவு நிலை.
ust - அந்தாளிக்குறிஞ்சி
அன்புறு சிந்தையராகி அடியவர் நன்புறு நல்லூர்ப் பெருமணம் மேவிநின்று இன்புறும் எந்தை இணையடி ஏத்துவார் துன்புறுவாரல்லர் தொண்டு செய்வாரே.
(சம்பந்தர் 3ஆம் திருமுறை)
திருவிருத்தம்
வைத்தபொருள் நமக்கா மென்று மனத்தடைத்துச் சித்தமொருக்கிச் சிவாயநம என்றிருக்கினல்லால் மொய்த்த கதிர்மதி போல்வாரவர் பாதிரிப்புலியூர் அத்தன் அருள் பெறலாமோ அறிவிலாப் பேதை நெஞ்சே.
(நாவுக்கரசர் 4 ஆம் திருமுறை)
திருஞானசம்பந்தர் அருளிச்செய்த 'பண்ணும் பதமே மும்’ என்ற கேவாரத்தில் கூறப்பட்ட தாளத்தொலி (லயம்) பற்றியும் 'உண்ணின்றதோர் சுவை’ (இரதம்) பற்றியும் இதுவரை கூறப்பட் டது. பண்ணும் என்று குறிப்பிட்ட அவர் மற்றோரிடத்திற் கூறிய “எழே யேழ நாலே மூன்று” இசையெனப் பண்வகைகளை இருபத் கொன்றெனக் கூறுவதை, தருமபுரம் ஆதீனமும், கிதம்பரம் முதலி யார் தேவாரப் பாடசாலையும் இருபத்தைந்து பண்களென வகைப் படுத்திக் காட்டுகின்றன. எந்தெந்த இராகங்களில் பண்களைப் பாட வேண்டுமெனத் தீர்மானித்துப் பின்வரும் அமைப்பு முறையைப் பின் பற்றி வருகின்றார்கள். அந்த அமைப்புமுறையை இங்கே தருகின்றோம்.

55
பண்களும் இராகங்களும்
தருமபுரம் ஆதீனம், சிதம்பர முதலியார்
தேவாரப்பாடசாலை
பண்கள் இராகங்கள்
பகற்பண்கள்
1. புறநீர்மை பெளளி, பூபாளம் 2. காந்தாரம் நவரோஜ் 3. பியந்தைக்காந்தாரம் நவரோஜ் 4. கெளசிகம் பைரவி 5. இந்தளம் நாதநாமக்கிரியா 6. தக்கேசி காம்போதி 7. சாதாரி பந்துவராளி 8. நட்டபாடை நாட்டை, கெம்பீரநாட்டை 9. நட்டராகம் பந்துவராளி 10. பழந்தக்கராகம் சுத்தசாவேரி, ஆரபி 11. சாந்தாரபஞ்சமம் கேதாரகெளளை 12. பஞ்சமம் ஆகிரி 13. யாழ்முரி gl-IT 60 ffr
இராப்பண்கள்
4. தக்கராகம் காம்போதி 15. பழம்பஞ்சுரம் சங்கராபரணம்
16.. 9.5 mLngth 17. கொல்வி 18. கொல்லிக்
கெளவாணம்
19. வியாழக்குறிஞ்சி 20. மேகராகக்குறிஞ்சி 21 அந்தாளிக்குறிஞ்சி 22. குறிஞ்சி
பொதுப்பண்கள் 22. செவ்வழி
23. செந்துருத்தி 26. திருத்தாண்டகம்
நாதநாமக்கிரியா, மாயமாளவகெளளை நவரோஜ்
நவரோஜ் செளராஷ்ட்ரம் நீலாம்பரி
EFT" DIT
ஹரிகாம்போதி, எதுகுலகாம்போதி
எதுகுலகாம்போதி
மத்தியமாவதி ஹரிகாம்போதி

Page 31
36
திருவாசகம் பெரும்பாலும் மோகன ராகத்திலும், திருப்பள்ளி யெழுச்சி பெளளி இராகத்திலும், பாடப்பட்டு வருகின்றது. மூத்த திருப்பதிகம் நட்டபாடை, இந்தளம், ஆகிய பண்களில் பாடப்படு கின்றது. நான்காம் திருமுறையிலுள்ள திருநேரிசை, திருவிருத்தம் என்பன கொல்லிப்பண்ணின் சார்புடையனவாதலால் நவரோஜில் தான் பாடப்பட்டு வருகின்றது. திருக்குறுந்தொகை இந்தளம் வழி வந்ததாதலால் நாத நாமக்கிரியையில் பாடப்பட்டு வருகின்றது.
தருமபுரம் ஆதீனம் குறிப்பிடும் பண்களைவிட, வயிரவம், சிகண்டி, கெளடி, அரும்பாலை (தாரப்பண் திறம்) அந்தாளிப்பாடை என்னும் பண்களும் திருமுறைகளிலிருந்து மறைந்திருக்கின்றன. இப் பண்களும், புறநீர்மை, கெளசிகம், தக்கேசி, செந்துருத்தி, சாதாரி சீகாமரம், நாட்டை, தக்கராகம், காந்தாரம், மேகராகக்குறிஞ்சி, பஞ்சமம், ஆகிய பண்களும் சேர்த்துப் பதினாறு பண்களும் மங்கலப் பண்கள் எனப்படும்.
தேவாரத் திருப்பதிகங்கள் இசைப்பாக்களாதலால் அவற்றைப் பண்முறையாக அமைத்திருக்கிறார்கள் இப்பண்களை ஒதுவாமூர்த்தி கள் கர்நாடக இராகங்களில் மரபோடு பாடிவருகின்றார்கள். தேவாரப் பண்களையும், அதற்குத் தக்கதெனக் கருதும் கர்நாடக இராகங் களையும் தருமபுர ஆதீனத்தின் கணிப்பின்படி மேலேயுள்ள அட்ட வணையிற் தரப்பட்டிருக்கின்றது. மேலும் விரிவாக ஆராய விரும்பு Göanuntri :-
1. திரு. பொன்னோதுவார் அவர்கள் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரை (சித்தாந்தம் 195 அக்டோபர், மலர் 25 - இதழ் 10) 2. "தேவாரப் பண்முறைக் கட்டளை’ 1951இல் காரைக்குடி
அ. நடேசதேசிகர் அவர்கள் வெளியிட்டது. 3. புதுவை விநாயக முதலியாரவர்கள் வெளியிட்ட தேவா
ரப்பண் சுரஅமைப்பு” என்ற நூல் 4. சென்னைத் தமிழிசைச் சங்கம் வெளியிட்ட“பண்ணாராய்ச்சி”
அறிக்கைகள் 5. சுவாமி விபுலானந்தர் எழுதிய யாழ் நூல். 6. “மஞ்சமரபு’ 7. இசையரசு எம். எம். தண்டபாணிதேசிகர் வெளி யி ட் ட “தமிழிசைக் கட்டுரைகள்’ என்பனவற்றைப் பார்க்கவும்.
பண்களைப் பாடும் போது பொழுதுக்கேற்ற பண்களைப் பாடு வது சிறப்புடைத்தென முன்னரே கூறப்பட்டுள்ளது. தேவார காலத் திற்குப் பின்னர்தான் இந்த வழக்கம் பின்பற்றப்பட்டு வந்ததாகக்

37
கூறுவதற்கில்லை. சங்ககாலத்திலும் இந்த வழக்கம் இருந்து வந்தது. அதனைத் தொடர்ந்து மரபு வழியாகவே தேவார காலத்திலும் விண்களைப் பொழுதிற்கு ஏற்றவாறு பாடும் வழக்கம் தொடர்ந்து பின்பற்றப்பட்டு வந்திருக்கின்றது.
பாலை யாழொடு செவ்வழிப் பண்கொள் மாலை வானவர் வந்து வழிபடும் ஆலையா ரழல் அந்தண ராகுதி வேலையார் தொழும் வீழி மிழலையே
(திருவீழிமிழலை) என்ற திருநாவுக்கரசர் தேவாரம் செவ்வழிப்பண் மாலைக் காலத்திற்கேற்றது என்பதை உணர்த்துகின்றது.
‘திவவுமெய் நிறுத்து செவ்வழி பண்ணிக் குரல்புணர் நல்யாழ் முழவோ டொன்றி னுண்ணி ராகுளி யிரட்டப் பலவுட ளொண்சுடர் விளக்கமுந்துறு
முந்தையாமஞ் சென்ற பின்னை”* என்று மதுரைக் காஞ்சியிலும்
*அருளாயாதலோ கொடிதே யிருள்வரச் சீறியாழ் செவ்வழி பண்ணி யாழநின் காரெதிர் கானம் பாடினேமாக' என்று புறநானூற்றிலும் செவ்வழிப்பண் மாலைக் காலத்திற் குரியதெனக் கூறப்பட்டுள்ளது.
"சீரினிது கொண்டு நரம்பினி தியக்கி யாழோர் மருதம் பண்ணப் புலர்ந்தது விரிவிடியல்’ என்று மதுரைக்காஞ்சி மருதப்பண் காலை க்கு ஏற்றது எனவும்
*யாமயாழ் பெயர்க் குறிஞ்சியாழ்’ என்று சேந்தன திவாகரமும் குறிஞ்சிப்பண் யாமத்திற்கு உரிய தெனக் கூறுகின்றது. எனவே தேவாரப் பண்களையும் பொழுதுக் கேற்றவாறு பாடுவது சிறப்புடையதாகும்.
திருமுறைகளைப் பக்திபூர்வமாகப் பாடுமிடத்தில் இறைவன் எழுந்தருளியிருந்து அருள்புரிவாரென ஞானசம்பந்தர் கூறுகின்றார். பண் - தக்கேசி தமிழின் நீர்மை பேசித் தாளம் வீணை பண்ணி நல்ல முழவ மொந்தை மல்கு பாடல் செய்கையிட மோவார் குமிழின் மேனி தந்த கோல நீர்மையது கொண்டார். கமழுஞ் சோலைக் கானூர் மேய பவள வண்ணரே.
என்பது அக்கருத்தையுர்ணத்தும் அருட்பாடலாகும் அன்றியும்,

Page 32
38
“கீதத்தை மிகப்பாடும் அடியார்கள் குடியாக”. "பண்ணொன்ற இசைபாடும் அடியார்கள் குடியாக”. என்று திருஞானசம்பந்தரும்,
*பண்ணின் இசையாகி நின்றாய் போற்றி”.
"பத்திமையால் பணிந்தடியேன் பன்னாள்
பாமாலை பாடப் பயில் வித்தானை”. **பண்ணுண்ட பாடலோ டாடும் பரம” . "பண்ணிற் பாடல்கள் பக்தி செய்வித்தகர்க் கண்ணித்தாகு
மமுது’ என்று நாவுக்கரசரும்,
99
"பாடுவார் பசி தீர்ப்பாய் பரவுவார் பிணி களைவாய்” என்று சுந்தரரும் “அர்ச்சனை பாட்டேயாகும் மண்மேல் சொற்றமிழ் பாடுக” என்று இறைவன் கூற சுந்தரர் "பித்தா பிறைகுடி’ என்று பாடி யருளியதும், "நான் மகிழ்ந்துபா டி அறவாநி ஆடும்போது உன்னடிக் கீழ் இருக்க வேண்டும்’ என்று காரைக்காலம்மையாரும், பாடித் துதித்தபோது இறைவன் அங்கு எழுந்தருளியிருந்து அவர்களுக்கு அருள் புரிந்தான். இவர்கள் பாடிப் பாடிச் செய்த அற்புதங்களை அறிந்திருப்பீர்கள். குலைதோய் நீங்கவும், இழந்த சண்களை மீண் டும் பெறவும் , முதலையுண்ட பாலனை வரவழைக்கவும், விஷம் நீங்கவும், பூம்பாவை உயிர் பெற்றெழவும், கல் தெப்பமாக மிதக்கவும் கோள்களின் கொடுமை, நீங்கவும், இவ்வாறே அனேக அற்புதங்களை நாயன்மார்சள் இறைவனைப் பாடி நிகழ்த்தினார்கள்.
பாடும்பணி ஏனைய திருப்பணிகளிலெல்லாம் மேலான பணி யாகும். திருக்கோவில்களில் செய்யப்படும் திருவலகிடுதல், மெழுகு தல், மலர் தொடுத்தல், திருவிளக்கிடுதல், என்னும் தொண்டுகள் , ஒன்றுக்கொன்று உயர்வு என்றும், எல்லாவற்றிலும் உயர்ந்தது இறைவனைக் குறித்துப் பாடுதலாகும் என்றும் அப்பர் சுவாமிகள் கூறுகிறார். VA
தனித்திருநேரிசை வினக்கினார் பெற்ற இன்பம் கெழுக்கினாற் பதிற்றியாகும்" துவக்கினன் மலர் தொடுத்தாற் தூய விண்ணேறலாகும்" விளக்கிட்டார் பேறுசொல்லின் மெய்ந்நெறி ஞானமாகும் அளப்பில் கீதம் சொன்னார்க்கு அடிகள்தாம் அருளுமாறே
என்பது அப்பாடல் பதினோராந் திருமுறையில் கபிலதேவநாயனார் பாடிய “சிவ பெருமான் திருவந்தாதியில்” நூறு ஆவின்பாலை இறைவன் திரு முடிக்கு அபிஷேகம் செய்து நூறு மலரைக் கொண்டு இறைவனின் திருப்பெயர்களைக் கூறி, அர்ச்சனை செய்தலைக்காட்டிலும் அச் சிவன் மேல் ஒரு பாடல் பாடி வளங்குவது சிறப்புடையதாகு மென்கிறார்.

39
நூறான் பயனாட்டி நூறு மலர் சொரிந்து நூறு நொடிவதனின் மிக்கதே நூறா உடையான பரித்தவெரி உத்தமனை வெள்ளேறு உடையானைப் பாடலால் ஒன்று. என்பது அப் பாடலாகும்
பெரு மந்திரங்மளாகிய தேவாரத் திருப்பதிகங்களை இசை தூற்பயிற்சியோடும், பக்தியோடும், ஏழிசையின் முறைவழுவாது பண்களின் திறமறிந்து அவ்வத்திருப்பதிகத்திற்கேற்ற பண்ணோடு அகங் குழைந்து ஒதுவதால் ஒதுவோர்க்கும், கேட்போர்க்கும் சிவ பிரானிடத்தில் அன்பை வளர்ச் செய்யலாம்.
'அளப்பில் கீதம் சொன்னார்க்கு அடிகள்தாம் அருளுமாறே” எனவும் "உறவாகி இன்னிசைகேட்டு இரங்கி மீண்டே உற்றபிணி தவிர்த்தருள வல்லான்தன்னை” எனவும் எழுந்த திருவாக்குகள் இறைவன் தன்னை இன்னிசையோடு பாடும் அன்பருக்கு எல்லை இல்லாத திருவருளைச் சுரத்தலை விளக்குகின்றன. என்று தருமை யாதீனத் தமிழ்ப்புலவர் திரு. க. வச்சிரவேலு முதலியார் அவர்கள் கூறுகின்றார்கள். * : : திருமுறைகளின் அருமை பெருமைகளை நன்குணர்ந்த பூரீலபூரீ ஆறுமுகநாவலரவர்கள் திருமுறைகளையெல்லாம் ஒதமுடியாதவர்கள் பின்வரும் தொடக்கத்தையுடைய பதிகங்கள் ஐந்தையும் நாள் தோறும் ஓதிவந்தால் இகபர சுகத்தைப் பெறலாம், இவைகள் சகல் சௌபாக்கியங்களையும் நல்கும் என்று கூறுகின்றார்.
1. “வேயுறு தோளி பங்கன்’ - கோளறு பதிகம் சம்பந்தர் 2. "இடரினும் தளரினும்’ சம்பந்தர் 3. “அவ்வினைக் கிவ்வினை” சம்பந்தர் 4. ‘மறையுடையாய் தோலுடையாய்? சம்பந்தர் 5. *ஓருருவாயினை’ - திருவெமுகூற்றிருக்கை சம்பந்தர்
என்பன அப்பதிகங்கள்
ஆலயங்களில் தோத்திரமும் சாஸ்திரமும் சைவசமயத்திற்குத் தோத்திரமும், சாஸ்திரமும்ாகிய இரண் டும் இரு கண்களாக உள்ளன. இறைவனைப் புகழ்ந்து பாடும் தோத் திரங்களை ஒதுவதினால் இறைவனிடம் அன்பும், ஈடுபாடும் உண் டாகின்றது. இறைவனின் இலக்கணங்களாகிய சாஸ்திரங்களைப் பயில்வதினால் இறைவனைப் பற்றிய அறிவிற் தெளிவும், உறுதியும் ஏற்படுகின்றது. தோத்திரமும், சாஸ்திரமும் இறைவனையே பொரு ளாகக் கொண்டவை.
"தோத்திரமும் ச: ஸ்திரமும் ஆனார்தாமே” என்றும் "தொழுதெழுந்து ஆடிப்பாடித் தோத்திரம் பலவுஞ் சொல்லி அழுமவசிக்கு அன்பர் போலும் ஆவடுதுறையனாரே' என்றும் திருநாவுக்கரசர் தேவாரத்தில் கூறியுள்ளார்.

Page 33
40
இறைவழிபாட்டில் தேவாரம், திருவாசகம் முதலிய தோத் திரப் பாடல்களைச் சொல்லித்துதித்து வழிபட்டால் மனம் பண்பட்டு இறையருளைப் பெற வழியுண்டாகின்றது. "நிறைமொழிாந்தர். ஆணையிற் கிளந்த மறைமொழிதானே மந்திரமாகும்” என்பது தொல்காப்பியர் கூற்று. நால்வர் பெருமக்களும், இறையருள் பெற்ற ஏனையோரும் திருவாய்மலர்ந்தவைகள் மந்திரங்களாகும். ஆசுவே அவர்கள் கூறிய பாடல்கள் மந்திரங்கள் போல் அருட்சக்தி வாய்த் தவை. அத்தகைய அருட்சக்தி வாய்ந்த அருட்பாடல்கள் ஆலயங் களில், பல்வேறு சந்தர்ப்பங்களில், பாடப்படுவதை அறிகிறோம். நித்தியபூசைகளிலும், விசேட பூசைகளிலும், மகோற்சவ வைபவங் களிலும் திருமுறைகள் ஓதப்படுகின்றன. எல்லாப் பூசைகளிலும் பஞ்ச புராணம் ஒதப்படுவதுதான் மரபு. ஆனால்ஒதும் தகைமையும், திற மையுமுடையோர் எங்கும் எப்போதும் கிடைப்பது அரிதாதலாலும், அர்ச்சகர்கள் சிலரின் பாராமுகத்தினாலும், தேவாரம், புராணம் ஆகிய இரண்டு மாத்திரம் ஓதப்படுகின்றது. அதுவுமில்லாத ஆலய பூசைகளும் சிலவிடங்களில் நடைபெறுகின்றன. திருமுறைகளின் தெப் விக அருமையை உணர்ந்தால், வேதம் ஓதுவதுபோலத் தமிழ் வேதத் தையும் ஒதலாமல்லவா? சைவசமய வளர்ச்சிக்கு மூலஸ்தானம் ஆல பம். மூலகர்த்தாக்கள் சிவாச்சாரியப் பெருமக்களும், தர்மகர்த்தாக்" களுமென்பதை மறந்துவிடலாகாது. இதனைக் கருத்திற்கொள்ளா மல் புறச்சமய வளர்ச்சி யும், எழுச்சியுங்கண்டு புழுங்கிப் புண்படுவ தாற் பயனென்ன?
பஞ்சபுராணத்தில் தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, திருப்புராணம் ஆகிய ஐந்துமடங்கும்.பஞ்ச என் றால் ஐந்து புராணம் என்பது புராதனம் அதாவது பழமையானது. திருமுறைகள் பன்னிரண்டும் பழமையானவை எனக் கருதியே பஞ்ச புராணமான இவை சளை ஆலயங்களில் படுவது மரபாயிருந்து வருகின்றது.திருப்புகழைப் பஞ்சபுராணம் பாடியபின் சேர்த்துப் பாடு வது பிற்கால வழக்கமாகும்.
ஆலயங்களில் மகோற்சவபூசை நடைபெறும்போது பஞ்சபுரா னங்களை ஒதுவது மாத்திரமன்றி கொடியேற்றம், கொடியிறக்கம் ஆகிய நிகழ்ச்சியின்போதும், சுற்றுப்ப்லிப் பூசையின்போதும் ஆகமங் களிற் கூறப்பட்டுள்ள வைதீகக்கிரியைகளில் விசேடமாகத் திருமுறை சுள் ஒதப்பட்டுவருகின்றன. சுற்றுப்பலிப்பூசையில் நவசந்திகளிலும் திருமுறைகள் ஒதப்படுவதும், கீதம் (ராகம்), தாளம், நிருத்தம், போத்தியம் என்பன பயிலப்படுவதும் பண்டை வழக்கமாயிருந்து வருகின்றது தமிழ்நாட்டில் பின்பற்றப்பட்டுவரும் தவசந்தி நிகழ்வு களை இங்கே அட்டவணைப்படுத்தித் தருகின்றோம்.

41
நவசந்தி
சந்தி பண்stersb | Trois (o zib)நிருத்தம்வாத்தியம் 1. flos-Li (loĝiĝ)கொல்லிவிருஷபoutra ofoËŝut sogaeth | guburb 2. soribu (Quả) LIĞbolo ibபிமஹமவகுளஸமபாதம்சச்சபுடம் 3. இந்திர (கிழக்கு)arĥo Norioef ŁoபைரவிLggs5orr & L, L_1b 4. அக்னி (தெ. கிழக்கு)கொல்லி-ogħġbor susrewu) is sufrirørf)மண்டலம்உத்** 5. Luo(5%%%) Qasiroaibபிருங்கிணிun soos± sin l-uff & lb | Lola flaeuol Llq ush 5. sijo (Qae. Bio.)BL-l-urrowl- spája.-மலஹரி,Hæ, årtsvih svůųo ib 7. svỡswr (GudŤosnu, ib ,༼ཏ༠༧----Go?«. (o.si agf) || @@@sib ஸிம்ஹநாதம் 8. autų (sul). Ġu. ) | &#Gae?Ljøs)|-G論中T@fHagijo svo figubæ:bl1-të 9. &GLJIT (ou L)&Ffrømsg'ų irrossofsGastų,さく@# ဓား၊r၈f)ose šogioLIGjoaenro Téb 0.**rst (all-oự ảo)*n 6 TITLJITGwyfதக்கரி goverið-***wuɔ o ǹகும்பவாத்திய *
காமிகாகமத்திற் கூறப்பட்டுள்ள பிரகாரம் ஆலயங்களி
学烟已唱73775arh G有尽gசுற்றுப்பலிப்பூசை
நடைபெறும்போதுதுவஜாரோகணத்திற்குப்பின்Qortiq-ovo służ5ų uogiதக்கராகம்,*TË 370 lb (?, ?) u Li sihi களுக்குத் திருமுறைகள் ஒதப்படடுநவசந்திகளிலும்-பின்வரும் அட்டவணையி· Erlą. L’air 5.6i 117 | -1, , , ; ? , ngor,

Page 34
42
நவசந்தி
சந்திகள் u abr பாடப்படும் இராகம்
1. பிரம்மசந்தி மேகராகக்குறிஞ்சி நீலாம்பரி 2. இந்திரசந்தி காந்தாரி கேதார கெளளம் 3. அக்கினிசந்தி கொல்லி நவரோஜ் 4. யமசந்தி கெளசிகம் பைரவி 5. நிருத்திசந்தி 15t-turfast. நாட்டை 6. வருணசந்தி சீகாமரம் நாதநாமக்கிரியா 7. வாயுசந்தி தக்கேசி காம்போதி 8. குபேரசந்தி தர்க்க பூபாளம் 9. ஈசானசந்தி சாதாரி பந்துவராளி
குறிப்பு:- இவ்வட்டவணையிற் கூறப்பட்டுள்ள பண்களுக்கு நேரே
அவை என ன இராகத்தில் ' என்பது காட்டப்பட்டுள்ளது.
படப்பட்டு வருகின்றன
பிரம்மபூரீ க. வை. ஆத்மநாத சர்மா அவர்கள் எழுதிய "விநா யக மகோற்சவம்" என்னும் நூலில் நவசந்திக்குப் பாடப்படும் பண் களையும், இராகங்களையும் பின்வருமாறு அட்டவணைப்படுத்திக்
காட்டியுள்ளார்.
நவசந்தி
சந்திகள் பண் இரா கம் (கீதம்)
பிரம்மசந்தி மேகராகம் மத்தியமாவதி 2. இந்திரசந்தி காந்தாரம் வேளாவல்லி 3. அக்னிெசந்தி கொல்லி aprrraf 4. யமசந்தி கெளசிகம் குஞ்சரி 5. நிருதிசந்தி நட்டபாடை பைரவி 6. வருணசந்தி ĝiFarruop tib தேசிகம் 7. வாயுசந்தி தக்கேசி மகுடராமகிரி 8. குபேரசந்தி தக்கராகம் ionrarraí) 9. ஈசானசந்தி சாளரபாணி தடாட்சரி

4●
குறிப்பு, - இவ்வட்டவணையிற் கூறப்பட்டுள்ள பண்களுக்கு நேரே தரப்பட்டுள்ள இராகங்கள் அப்பண்களுக்குரிய இராகங் களல்ல. அவை கீதம் எனப்படும் வேறு அங்கராகங்கள் மேகராகம் என்ற பண், திருமுறைகளிற் காணப்படவில்லை. அது மேகராகக் குறிஞ்சியாயிருக்கலாம். அல்லது மறைந்த தேவாரங்களில் இருந்திருக்கலாம். காரணாகமத்திற் கூறப்பட்டுள்ள சிவபூசை விதிகளில் சுற்றுப் பலிப்பூசை நடைபெறும்போது பின்வரும் பண்களும், இராகங்களும் (கீதம்) இசைக்கப்பட வேண்டுமென்று கூறப்பட்டுள்ளது.
சந்திகள்
சந்திகள் பண் இராகம் (கீதம்)
. பிரமசந்தி பஞ்சமம் வகுளம் 2. இந்திரசந்தி காமேசம் பைரவி 3. அக்கினிசந்தி கொல்லி வராளி 4、 யமசந்தி கெளசிகம் இராமகிரி 5. நிருத்திசந்தி நட்டபாடை ent i roid 6. வருணசந்தி சீகா மரம் தேசிகம் 7. வாயுசந்தி தக்கேசி மகுடராமகிரி குபேர சந்தி Fromruruuf uorr Grafi 9. ஈசானசந்தி தக்கராகம் தசாட்சி
குறிப்பு:- இவ்வட்டவணையிற் கூறப்பட்டுள்ள பண்களில் காமேசம்,
Fir GMT pr. T GØsi, வில்லை.
என்ற பண்கள் தேவாரங்களிற் காணப்பட சாளாரபாணி என்ற பண் திருவிசைப்பாவில்
காணப்படுகின்றது
பக்திச்சுவை சொட்டும் தேவாரப் பாடல்களெல்லாம் இறை வனோடு நம்மைப் பிணைத்துக்கொள்ள உதவும் அருட்க விகளாகும். *பாடவேண்டும் நான் போற்றி நின்னையே பாடிப்பாடி நைந்து நைந்து நெக்குருகி ஆடவேண்டும் நான்' என்று மாணிக்கவாசக சுவாமிகள் இறைவனை வேண்டுகின்றார். தேவாரமுதலிகள் மூவரும் அவ்வாறே பரமேஸ்வரனை நினைந்து பண்ணாரின் தமிழைப் பாடிப் பரவினார்கள் அவர்களில் திருஞானசம்பந்தர் திருக்கோவில்களில் தமிழ்ப்பாடல்களும் வேறு வேறு திசைமொழிப் பாடல்களும் பாடப் படுவதைத் தாம் பாடிய தேவாரமொன்றில் கூறுகின்றார்.

Page 35
-44
பண்- பியந்தைக்காந்தாரம்
தென்ச்ொல் விஞ்சநல் வடசொல் திசைமொழி தரம்பெடுத்து துஞ்சு நெஞ்சிருள் நீங்கத் தொழுதெழு தொல்புகலூரில் அஞ்சனம் பிதிர்த்தனைய அலைகடல் கடைய அன்றெழுந்த வஞ்ச நஞ்சணி கண்டர் வர்த்தமானீச்சரத்தாரே
(திருப்புகலூர் வர்த்தமானீஸ்வரம்)
ஏழிசையாய் இசைப்பயனாய் நிற்கும் இறைவனோடு லயப் படுவதற்கு இசை பெரிதும் பயன்படுவதை நம்முன்னோர்கள் அணு பவித்து அறிந்திருந்தார்கள். காலமும், இடமும், இசையும் மனித ாட்கள்ளத்தில் என்னென்ன உணர்ச்சிகளை ஏற்படுத்தும்? அதனைப் பயன்படுத்தி நாம் பண்பட்டவர்களாக எப்படி வாழமுடியும்? என் பதை த மு: கனோர்கள் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அனுபவித் தறிந்து ஸ்ந்த காலத்திற்கு எந்த இசை எந்தக் இராகம் என்று வரை யறைப்படுத்தினார்களோ அதைத்தா நமது கோயில்கள் போற்றி வந்தன. இந்த அனுபவத்தைத்தான் நமது ஆகமங்களில் எழுதினவத் தனர் பெரும்பாலான கோயில்களில் இந்த முறைப்படி இசையும், வாத்தியங்களும் வசிக்கப்பட்டுவந்தன. இவை இப்பொழுது படிப் படியாக மறைந்து வருகின்றன. இருந்தாலும் ஓரிரண்டு கோயில் களிலாவது பண்டைய மரபு இன்றும் இருக்கின்றது. (**,rfirဓါဓါး၊
இந்த மரபு பேணப்பட்டுவருகின்றது.
திருவரங்கத்துப் பெருமான் சந்நிதியில் காலையில் இன்றும் வினை வாசிக்கிறார்கள். முற்காலத்தில், பாரதநாட்டில் பெருங் கோயில்களிளெல்லாம் வீணை வாசிப்பவர்கள் இருந்தார்கள் தஞ் ಘl#1 பெருங்ே காயிலைக் கட்டிய இராஜராஜன் அக்கோயினில் வீனை வ்ாசிக்க இரண்டு பேரை அமர்த்தியிருந்தான். அவர்களுக்கு" சிறப்பு விருதுகள் வழங்கிக் கெளரவப்படுத்தியுள்ளான். வீணை வாசிப்பவர் களுக்கு *"ಹೌicâr ஆதித்த ன்ே" என்று பட்டங்கொடுத்துச் சிறப்பித் திருந்தானே. 'அதனைத் தனது கல்வெட்டில் "வீணை வாசிப்பார் இரு வருக்கு "ச்ப்ரமண்ய சுத்தண்ான வீணை, ஆதித்தனுக்குப் பங்கு மூன்றனர்? என்று, கூறுகிறான். அவர்ளுக்கு இல்றையக் கனக்கி: படி 2ா தீம் ஒருவருக்கு 3000/- ரூபா சம்பளம், இதுபோல் தஞ்சைக் கோயிலில் ஏனைய இசைக்கருவிகளை வாசிடபதற்கு அறுபத்து, நான்கு பேர் இருந்தனர். : *。
ܨܡ
■、
இதேபோல் ஆலயப்பூசை வழிபாட்டின்போது தேவாரத்திருப் பதிகங்களைப் பாடுவதற்கென்று ஐம்பது பேரை இராஜராஜன் நிய மித்திருந்தான். இவர்களுக்குத் "திருப்பதிகம் விண்ணப்பிப்பார்'

星岛
என்று பெயர். திருமுறைத் திருப்பதிகங்களைத்தவிர, பிற தமிழ்ப் பாட்டுக்கள் பாடவும், சமஸ்கிருதப் பாடல்கள் பாடவும் தனித்தனி பாக இசைவல்லுனர்களை நியமித்தான். வெவ்வேறு சந்திப்பூசைகளில் வெவ்வேறு நாட்டியம் ஆட நானூறு பெண்களை நியமித்திருந்தான். அவனுடைய ஆட்சியில் எத்தனையோ கோயில்கள் இருந்தன. அவை சளில் இத்தனைபேர் இல்லாவிட்டாலும் ஒவ்வொரு கோவிலிலும் பாடுவோரும், ஆடுவோரும் இருந்தனர். இதனால் ஒவ்வொரு ஊரிலும் இசை மலர்ந்தது. பண்பாடு வளர்ந்தது, பக்தி பெருகியது.
தமிழ்நாட்டிலுள்ள எல்லாக் கோயில்களிலும் நாள்தோறும் காலையிலும், நடுப்பகலிலும், மாலையிலும்,இரவிலும் இசை ஒலித் துக்கொண்டேயிருந்தது. அந்தந்தக் காலத்திற்கேற்ற இராகங்கள், வாத்தியங்கள் இசைக்கப்பட்டன. கோவில்களில் தெய்வீக இசை மலர்ந்தால் அங்கு வாழும் மக்கள் அனைவருமே அந்தத் தெய்வீகப் பண்பில் திளைப்பார்கள்.
அருணோதயத்தின்போது "பஞ்சமகாசப்தங்கள்" (பஞ்சவாந் தியங்கள்) வாசிக்க வேண்டுமென்று சிவாகமங்கள் கூறுகின்றன. கோயில்களில் ஆறுகால பூசை நடந்தால் ஒவ்வொரு காலத்திலும் சர்வவாத்யங்களும் வாசிக்கவேண்டுமென்று ஒராகமம் கூறுகிறது. பஞ்சகெளவியம் அபிஷேகமாகும்போது வீனை வாசிக்கவேண்டும். பிறகு தூபம் காட்டும் வரையில் தமிழ்ப்பாடல்கள் பாடவேண்டு மென்றும், சமஸ்கிருதபாடல்களும் பாடப்படவேண்டுமென்றும் ஆகமம் கூறுகின்றது. சர்வவாத்தியம் இசைக்கும்போது தாளலயத் துடன் இணைந்து வாசிக்கவேண்டும்.
இந்தமரபு தமிழ்தாட்டில் மறைந்தேபோய்விட்டது. ஆனால் கேரளாவில் மட்டும் இந்த மரபு இருக்கின்றது. அறுபத்துநான்குவகை இசைக்கருவிகளை அறுபத்து நான்குபேர் இணைந்து ஒன்றுபோலவே வாசிக்கும் மரபு தமிழ்நாட்டிலும் இருந்தது. இவற்றையெல்லாம் நாம் விட்டுவிட்டோம். வெள்ளைக்காரன் கொண்டுவந்த "பாண்ட்" வாத்தியத்தையும், மேலைநாட்டுக் கும்பல் சங்கீதமும் தான் இசை யென்று படத்திலும் தொலைக்காட்சியிலும் வானொலியிலும் திரும் பத் திரும்பக் காண்கிறோம் கேட்கிறோம். நமது பண்பாடு திமது பண்பாடென்று பறைசாற்றுவதையும் நாம் கைவிடவில்லை.
ஆலயபூசையின்போது எல்லாத் தேவுக்களுக்கும் ஒரே இடத்தில் வழிபாடு செய்யும் மரபொன்றுண்டு. இதைத்தான் பலி என்று சொல்வது. பலிகொடுத்தல் என்றால் ஆட்டையோ, கோழியையோ பலிகொடுத்தலென்று எண்ணவேண்டாம். எல்லாக் கோவில்களிலும் பலிபீடம் உண்டு. சுற்றுப்பலி கொடுக்கும்போதும் ஒரு பலிபீடம்

Page 36
46
பயன்படுத்தப்படுகின்றது. அதில் *ான்னால் பெயர்கூவி அழைக்கப் பட்ட தெய்வங்களே! மற்றும் தெரிந்தோ தெரியாமலோ இருக்கும் தெய்வங்களே! நீங்கள் அத்தனைபேரும் இங்கு எழுந்தருளி நாங்கள் கொடுத்த இந்த வழிபாட்டை ஏற்றுக்கொள்ளுங்கள்’ என்று வேண் டிக்கொள்வதைத்தான் பலி என்று அழைக்கிறார்கள். இதற்குப் புஷ்பம், தீர்த்தம், அன்னம் ஆகிய மூன்றையும் சமர்ப்பிப்பார்கள். இதனைச் சிலப்பதிகாரம் 'பூப்பலிசெய்தல்" என்று கூறுகின்றது. இதனைக் கேரளாவில் பூgபலி என்பர். இந்த வழிபாட்டின்போது வாசிப்பதற்கு தோல்கருவி, துளைக்கருவி, தாளம் என்பனவற்றைப் பயன்படுத்துவர். அந்தந்த இடத்திற்கேற்ற இராகமும், பண்களும், நாட்டியமும் உண்டு, சுற்றுப்பலிப்பூசையில் இதை அவதானிக்கலாம்.
மேகராகத்துடன் பிரும்மதாளம் வாசிக்கவேண்டும். காத்தாரப் பண்ணுடன் சமதாளம் வாசிக்கவேண்டும். கொல்லிப்பண்ணுடன் அத்தாவரணம் என்னும் தாளமும் ,கெளசிகப்பண்ணுடன் பிருங்கிணி என்னும் தாளமும், நட்டராகத்துடன் மல்லதாளமும், சிகாமரம் என்ற பண்ணுடன் தவதாளமும், தக்கேசி என்ற பண்ணுடன் பலிதாளமும், தக்கராகத்துடன் கெளடிகமும், சாலாபாணியுடன் டக்கரிதாளமும் வாசிக்கவேண்டும். இதேபோன்று நவசந்திகளுக்கும் சோல்லப்பட்ட இராகங்களும், நாட்டியமும் நடைபெறவேண்டும், என்று காமிகாகமம் கூறுகின்றது. இன்றும் சுவாமி புறப்படும்போது மல்லாரி வாசிக்கிறார்கள். சுவாமி பல்லக்கில் வரும்போது ஆனந்த பைரவி வாசிக்கும் மரபுண்டு. இதேபோல் உற்சவங்களுக்கேற்ற இராகங்களும், தாளங்களுமுள்ளன.
காலத்திற்கேற்ற இராகங்களையும் ஆகமங்கள் கூறுகின்றன. பூர்வசந்தியில் காந்தாரத்தையும், பின்னர் ஷாடவம் என்ற பண் னையும், மத்தியானத்தில் தட்டராகத்தையும், பின்னர் கெளசி கத்தையும், சாயங்காலத்தில் இந்தளம் என்ற பண்ணையும், அர்த்தஜாமத்தில் பஞ்சமம் என்ற பண்ணையும் பாடவேண்டுமென்று சுப்பிரபேதாகமம் கூறுகின்றது. இந்தமரபு தெரிந்தவர்கள் நாதஸ் வர வித்துவான்களும், ஒதுவார்களுந்தான் இவர்களிடமிருந்து இளையதலைமுறைகள் இவற்றைத் தெரிந்துகொண்டால் நலமா யிருக்கும். ஆலயங்களை டப்பாசங்கீதம் ஆக்கிரமித்துக்கொள்ளும் ஆபத்திலிருந்து காப்வாற்ற சிவாச்சாரியர்களும், தர்மகர்த்தாக்களும் முன்வரவேண்டும். மரபுவழிவந்த பண்பாட்டை மக்களுக்கு உணர்த் துவது அவர்களுடைய தலையாய கடமையாகும்.
ஆலயங்களில் பண்டைக்காலந்தொடக்கம் நிகழ்ந்துவந்த தெய்வீகக்கலையாகிய நாட்டியம் உயிரோட்டமுள்ள சிற்பங்காாக இன்றும் ஆலயங்களிற் காணப்படுகின்றன.

47
கோயில்கள், இயல், இசை, நாட்டியம், சிற்பம், வழிபாடுகள் மூலமாக மனித உள்ளத்தைப் பண்படுத்தி உயர்நிலைக்கு எடுத்துச் செல்ல உதவும்வகையில் அமைக்கப்பட்டன. சமுதாயச் சீர்திருத்தம் என்ற பெயரால் ஆலயங்களிலிருந்து நாட்டியம் அகற்றப்பட்டு விட்டது. பண்டைய தமிழகத்தில் ஆலயத்தில் ஆடும் பெண்டிர் வேறு, பரத்தையர் வேறு என்று சிலப்பதிகாரம் கூறுகின்றது.
"நலம்பெறு கண்ணுளரி காவற் கணிகையர் ஆடற்கூத்தியர் ஏவற் சிலதியர்’
என்று வலரை இளங்கோவடிகன் குறிக்கின்றார். கண்ணுளர் என்றால் சாந்திக்கூத்தர் என்றும், காவற்கணிகையர் என்றால் இராக்கடைபெண்டிரென்றும், ஆடற்கூத்தியர் என்றால் அகக்கூத் தாடும் கூத்திகள் என்றும், பூவிலைமடந்தையர் என்றால் அற்றைம் பரிசம் கொள்பவர் என்றும் சிலப்பதிகார உரைகளிலிருந்து அறிகி றோம். ஆடுபவர்களில் பல பிரிவினர் இருந்தனர். உயர்ந்தோருமுண்டு தாழ்த்தோருமுண்டு. ஆரலில் எல்லோரையும் பரத்தையர் என்று காணுதல் தவறு.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமேலாக நாட்டி பக்கலை கோயிலையொட்டிச் சிறந்து வளர்ந்துவந்தது. நாட்டியக்கலையை நமக்கு அருளியவர் ஆடல்வல்லானாகிய நடராஜப்பெருமானல்லவா? அப்பர்பெருமான் தில்லைப்பதிக்கு வருகிறார். அம்பலத்தரசன் ஆடுகின்ற பாங்கைக்கண்டு பரவசமடைந்து "அத்தாவுன் ஆடல் காண்பான் அடியனேன் வந்தவாறே' என்று மெய் மறந்து பாடுகின்றார்.
"தண்டுடுக்கை தானம் தக்கை சார தடம்மியில்வா4" "புயங்கராக மாநடத்தர்' என்று திருஞானசம்பந்தரும், "குடமுழவம் வீணை தாளம் குறுநடைய சிறுபூதம் முழக்க மாக்கூத்தாடுமே” or sit p அப்பரி சுவாமிகளும் , 'தக்கை தண்ணுமை தாளம் வீணை தகுளிச் சங்கிளை சல்லரி கொக்கரை குடமுழவினொடு இசைகூடிப் பாடி நின்றாடுவர்' என்று சுந்தரரும் போற்றிய பரமனல்லவா நாட்டியக் கலையை நமக்குக் கொடுத்தவர். அன்றியும் சிவபெருமான் வேதத் தைப் பாடல சக இசைத்து அதற்கு ஆடுகின்றார். “மறைகலந்த ஒலி பாடலோடு ஆடலர்' என்று சம்பந்தரும், "நான்மறை பாடி ஆடும் அடிகள்' 'பாடினார் சாமவேதம் பாடிய பாணியாலே ஆடினார்’ என்று அப்பர்சுவாமிகளும் பாடியிருக்கின்றார்கள்.
O இகாழும்பூதமிழ்ச்சங் நாட்டியமென்பது புனிதமான கல்ல். யர்ந்த பண்பட்ட கலை அதனால்தான் அதனை இறைவனுக்கு அர்ப்பணிக்கக் கோயில்

Page 37
48
வழிபாட்டின் அங்கமாக அமைத்தனர். தங்களை அப்பணிக்கே அர்ப்பணித்துக்கொண்ட பெண்களும் ஆலயங்களில் இருந்தனர்.
'வலம்வந்த மடவார்கள் நடமாட முழவதிர'
"முழவதிர மடமாதர் ஆடும்பதி’’
"அரங்கேறிச் சேயிழையார் நடமாடும் திருவையாறே** என்று சம்பந்தரும் . 'மண்ணார் முழவும் குழலும் இயம்ப மடவார் நடமாடும்’ ’ என்று சுந்தரரும் பாடியுள்ளனர்.
கோயில்களில் ஆடும் பண்டைய மரபுவழிவந்த நாட்டியம் இப்பொழுது மறுமலர்ச்சி அடையத்தொடங்கிவிட்டது. தில்லை நடராஜப்பெருமானுடைய ஆலயத்திலும், சென்னை வரசித்திவிநா பகர் ஆலயத்திலும் நாட்டியோற்சவம் நடைபெற்றுவருகின்றது பொதுமேடைகளிலே ஆடுகின்ற நாட்டியத்திற்கும் கோயில்களில் ஆடும் நாட்டியத்திற்கும் உணர்ச்சியில், பாவத்தில், பக்தியில், கலையில் எவ்வளவோ வேறுபாடுகள் உள்ளன என்று டாக்டர். இரா. நாகசாமி அவர்கள் கூறுகிறார்.
திருமுறையில் பண்கள், இசைக்கருவிகள் பற்றிய குறிப்புகள்
பண்ணின் இசையாகிநிற்கும் இறைவனைப் பாடும்போது
உண்டாகும் இன்பத்தைப்பற்றியும், பாடித்துதிப்பதால் வரும் டியன்
கள் பற்றியும்,பண்கள் பற்றிய குறிப்புக்களையும் திருஞானசம்பந்தர் காடிய பாடல்கள்சிலவற்றில் காண்போம்.
பண் - சீகாமரம் கண்காட்டு நுதலானும் கனல்காட்டுங் கையானும் பெண்காட்டும் உருவானும் பிறைகாட்டுஞ் சடையானும் பண்காட்டும் இசையானும் பயிர்காட்டும் புனலானும் வெண்காட்டி லுறைவானும் விடைகாட்டுங் கொடியானே. (திருவெண்காட்டுப்பதிகம்)
பண் - குறிஞ்சி விண்ணியல் விமானம் விரும்பிய பெருமான்
வெங்குரு மேவியுள் வீற்றிருந்தாரை நண்ணிய நூலன் ஞானசம்பந்தன்
நவின்ற இவ்வாய்மொழி நலமிகுபத்தும் பண்ணியல் பாகப் பத்திமையாலே
பாடியு மாடியும் பயிலவல்லோர்கள் விண்ணவர் விமானம் கொடுவரவேறி
வியனுலகாண்டு வீற்றிருப்பவர் தாமே.
(திருப்பிரமபுரப்பதிகம்)

49
mafur - as augas "Tî
கண்ணின்மிசை நண்ணியிழிவிப்ப முக
மேந்துகமழ் செஞ்சடையினான் பண்ணின்மிசை நின்றுபல பாணிபட
ஆடவ ைபான்மதியினான் மண்ணின்மிசை நேரின் மழபாடிமவி
பட்டிசரமே மருவுவார் விண்ணின்மிசை வாழுமிமையோரொடு
உடனாகனது மேவலெளிதே.
(திருப்பட்டீச்சரம்)
திருநாவுக்கரசுநாயனார் பாடிய தேவாரங்கள் சிலவற்றில் பண்கள்பற்றிய குறிப்புகளையும், பாடுதலாள்வரும் பயன்களையும் இன்பத்தையும் பின்வரும் தேவாரங்களிற் காண்க.
திருநேரிசை,
கண்டவா திரிந்து நாளும் கருத்தினா நின்றன் வாதம் கொண்டிருந் தாடிப் பாடிக் கூடுவன் குறிப்பினாலே வண்டுபண் பாடுஞ்சோலை மல்கு சிற்றம்பலத்தே எண்டிசையோடு மேத்து இறைவ நீ யாடுமாறே.
(as staféladasuis)
திருக்குறுந்தொகை பண்ணினின்மொழி கேட்கும் பரமனை வண்ணதன் மலரான் பல தேவரும் கண்ணனும் மறியான் கடம்பந்துறை தண்ண நம்வினை யாயின நாசமே.
(திருக்கடம்பந்துறை
வண் - கொல்லி
சலம்பூவொடு தூப மறந்தறியேன்
தமிழோ டிசை பாடல் மறந்தறியேன் நலந்தீங்கினு முன்னை மறந்தறியேன்
உன்நாமம் என்நாவில் மறந்தறியேன் உலந்தார் தலையிற் பலிகொண் டுழல்வாய் உடலுள்ளுறு சூலை தவிர்த் தருள்வாப் அலந்தே னடியே எதிகைக் கெடில
வீரக்டானத் துறையம்மானே.
(திருவதிகை)

Page 38
50
மண் - பழந்தக்கராகம்
சொன்மாலை பயில் இன்ற குயிலினங்காள் சொல்லீரே பன்மாலை வரிவண்டு பண்மிழற்றும் பழனத்தான் முன்மாலை நகுதிங்கள் முகிழ் விளங்கு முடிச்சென்னி பொன்மாலை மார்பனென் புதுநலமுண் டிகழ்வானோ.
(திருப்பழனம்)
என்று வண்டுகள் கானகத்தில் ரீங்காரஞ் செய்யும் இனிய ஓசையைப் பண்களுக்கு ஒப்பிடுவதைக் காண்கிறோம். இவ்வாறே சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடிய பாடல்களில் பண்கள் பற்றிய குறிப்புக்கள் வருகின்றன.
‘ஏழிசையின் தமிழால் இசைத்தேத்திய பத்திவையும்'" என்றும், "சந்தம் வலவும் பாடும் அடியார் தங்கண் காணாதே’ என்றும் *நாதகிதம் வண்டோது வார்பொழில்
நாவலூரன் வன்றொண்டன் நற்றமிழ் பாதமோத வல்லார் பரனொடு கூடுவரே " என்றும் ஏழிசையை பும் நாதகிதத்தையும் போற்றுகின்றார்.
தேவாரத்தில் பண்கள்பற்றிய குறிப்புகள் காணப்படுவதுபோல பற்பல இசைக்கருவிகளைப் பற்றிய குறிப்புகளும் காணப்படுகின்றன.
“வேயுதுதோளி பங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி . சம்பந்தர் (கோளறுபதிகம்) "தண்டுந் தாளமும் குழலும் தண்ணுமைக்
கருவியும் புறவில்’ . சம்வித்தர் (திருவாள்கொளி புத்தூர்) "கீதமு ன்னிசைதரக் கிளரும் வீணையர்" . சம்பந்தர் (திருவிசயமங்கை)
"கொடுகொட்டி குடமுழாக் கூடிய முழவப் பண் திகழ்வாகப் பாடியோர் வேதம் பயில்வர்' . . சம்பந்தர் (திருப்பிரமபுரம்) "மந்தமுழவ மியம்ப மலைமகள் கானநின்றாடி'. சம்பந்தர் (திருவேங்களம்) குழல் யாழ் மொந்தை கொட்டவே' &றையுங் குழலும் கழலு மார்ப்ப . சம்பந்தர் (திருவீய்ங்கோய்மலை)
“மொந்தை குழாக் குழல் தாளம் ஓர் வீணை
முதிரவோர் வாய்மூரி பாடி . சம்பந்தர் (திருப்பாச்சிலாச்சிராமம்)

5 Ι
"வேதங்க ளோதியோர் வீணையேந்தி
விடையொன்று தாமேறி வேதகீதர் ...நாவுக்கரசர் *ஒதுவதும் வேதமே வீணையுண்டே ...நாவுக்கரசர்
* கொக்கரை தாளம் வீணை பாணிசெய் குழகர்’ "தாளங்கள் கொண்டும் குழல்கொண்டும் யாழ்கொண்டும்
............praias profi "நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும்
ஞானசம்பந்தனுக்கு உலகவர்முன் தாளம் ஈந்து அவன் பாடலுக்கிரங்கும்
SGör Gðuðusrað6ðr •••••••••••• சுந்தரர்
"செந்தமிழ்த் திறம் வல்லிரோ' என்று திருப்பைஞ்ஞீலி ஈசனைக் குறித்து வினவும் சுந்தரமூர்த்தி சுவாமிகள்
"தக்கை தண்ணுமை தாளம் வீணை
தகுளிச் சங்கினை சல்லரி கொக்கரை குடமுழவினோடிசை
கூடிப் பாடி நின்றாடுவீர்' என்று மாடுகின்றார் "இன்னிசை வீணை இசைத்தோன் காண்க' (திருவண்டப்பகுதி) “இன்னிசை வீணையர் யாழினரி ஒருபால்' (திருப்பள்ளியெழுச்சி)
...மாணிக்கவாசகர்,
இவ்வாறு பல இசைக் கருவிகளைப்பற்றிய குறிப்புகளை திருமுறைப் பாடல்களில் குறிப்பிடுகின்றனர்.
சிவபெருமான் உமையம்மையின் இனிய கீதத்தைக் கேட்டு மகிழ்வுற்று திருவையாறெனும் சிவஸ்தலத்தில் எழுந்தருளியுள்ளா ரென்று ஞானசம்பந்தர் தேவாரத்தில் கூறுகிறார்.
பண் - இந்தளம் பண்ணி நல்ல மொழியார் பவளத் துவர் வாயினர் எண்ணி நல்ல குணத்தார் இணை வேல் வென்ற கண்ணினார் வண்ணம் பாடி வலிபாடித் தம் வாய்மொழி பாடவே அண்ணல் கேட்டுகத்தானும் ஐயாறுடைய ஐயனே.
ஞானசம்பந்தர் மேலும் திருவையாற்றுப் பதிகத்திலே பண்ணி லும், பண்பிலும் நடனத்திலும் கலைகள் மலிந்த தமிழ்நாட்டின் பெருமைகளைக் கூறியுள்ளார்.

Page 39
52
திருமுறையில் - இயற்றமிழ்
திருமுறையாசிரியர்கள் அருளிச்செய்த அருட் பாடல்க ள் நிறைந்த பன்னிரு திருமுறைகளும் சிறந்த பக்தி இலக்கியங்களாகும். வாழ்வின் உயர்ந்த இலட்சியங்களுக்கு இட்டுச் செல்வது இலக்கியம். சங்ககால இலக்கியங்கள் வீரத்தையும், காதலையும் மூலக்கருவாகக் கொண்டு ஆக்கப்பட்டுவந்தன. காலக்கிரமத்தில் மாற்றங்களேற்பட்டு, கடவுளையும், பக்தி நறியையும் கருவாகக்கொண்ட இலக்கியங்கள் தோன்றின. சங்ககால இலக்கியங்களில், எட்டுத்தொகைநூல்களில் ஒன்றான பரிபாடலில் கடவுளைப்பற்றியும் பாடியுள்ளார்கள். ஆனால் திருமுறையாசிரியர்கள், முற்றமுடிவாகப் பக்திஇலக்கியங்களையே தோற்றுவித்தார்கள். பதியின் இயல்பைக் கூறி மக்களைப் பக்தி நெறியில் இட்டுச்சென்ற திருமுறையாசிரியர்கள் இறைவன் எழுந் தருளியுள்ள தலங்சளின் சிறப்பைக் கூறும்போது இயற்கை இயல் புகளையுங் கூறியுள்ளார்கள்.
திருவிடைவாய் என்ற தலத்தில் அபிராமியம்மை சமேதராக எழுந்தருளியுள்ள புண்ணியகோடிநாதர் என்ற இறைவனைப் பாடு கின்ற திருஞானசம்பந்தர் பின்வரும் பாடலை முதலாகவுடைய திருப்பதிகத்தைப் பாடியுள்ளார்.
மறியார் கரத்தெந்தை மாதுமை யோடு பிறியாத பெம்மான் உறையும் இடமென்பார் பொறிவாய் வரிவண்டு தன் பூம்பெடை புல்கி வெறியார் மலரில் துயிலும் விடைவாயே.
(திருவிடைவாய்)
இறைவன் எழுந்தருளியுள்ள திருவிடைவாய்த் தலத்தின் கண்ணே இருக்கும் தடாகத்தில் மலர்ந்துள்ள தாமரைமலரில் தேனை உண்ணவந்த அழகிய வண்ண வண்டானது தனது பெடையுடன் கூடிமகிழ்ந்து தேனையுண்டு மயங்கி அம்மலரிலேயே இணைந்து துயில்கொள்ளுகின்றது. என்னும் இயற்கை இயல்பினை இலக்கிய நயத்தோடு கூறுகின்றார் சம்பந்தர். வண்டும் , பெடையும் ஒன்றை விட்டொன்று பிரியாது இணைந்து கிடப்பதைப்போல இறைவன் அம்மையோடு பிரியாத பெம்மானாயிருக்கிறான் என்னும் அர்த்த நாரீஸ்வர தத்துவத்தை இந்த இயற்கை ஏதுவின்மூலம் எடுத்துக் காட்டி விளங்கவைக்கிறார் ஞானசம்பந்தர்.

5
நம்பியாண்டார் நம்பியவர்கள் திருமுறைகளைத் தொகுக் கின்றகாலத்தில் இத்திருப்பதிகம் கிடைக்கவில்லை திருவிடைவாய்த் தலத்தில் பழம்பெரும் ஆலயமொன்றிருந்ததாக அறிந்து தேடி ஆராய்ந்தபோது காடும், பற்றையும் வளர்ந்து மூடிக்கிடந்த சிதைந்த கற்கோவிலொன்றைப் பத்தொன்பதாம் நூற்றாண்டில் கண்டுபிடித் தார்கள். அக்கோவிவின் மகா மண்டப உட்சுவரில் இத்திருப்பதிகத்தின் பதினொரு பாடல்களும் கல்லில் பொறிக்கப்பட்டிருந்ததையும்,ஞான சம்பந்தர் பாடினாரென்ற செய்தியையும் அறிந்து இதனைப் பின்னர் திருமுறைகளோடு சேர்த்துக்கொண்டார்கள். இப்பதிகம் என்ன பண்ணில் பாடப்பட்டதென்ற செய்தி கிடைக்கவில்லை.
திருவீழிமிழலையில் எழுந்தருளியுள்ள வீழியழகரைப் பாடு கின்ற சம்பந்தர்
பண் - மேகராகக்குறிஞ்சி
ஆறாடு சடைமுடியன் அனலாடு
மலர்க்கையன் இமயப்பாவை கூறாடு திருவுருவன் கூத்தாடுங்
குணமுடையோன் குளிருங் கோவில் சேறாடு செங்கழுநீர்த் தாதாடி
மதுவுண்டு சிவந்த வண்டு வேறாய உருவாகிச் செவ்வழிநற்
பண்பாடும் மிழலையாமே. (திருவீழிமிழலை)
என்ற தேவாரத்தில் உமாதேவியாரை வாமபாகத்தேகொண்ட இறைவனாகிய வீழி ழகர் எழுந்தருளியுள்ள திருவிழிமிழலையிலே ஒரு அற்புத இயற்கைக் காட்சியை ஞானசம்பந்தர் காட்டுகின்றார். கருமைநிறமுடைய வண்டொன்று பறந்துவந்து தடாகத்திலே மலர்ந் திருந்த செங்கழுநீர் மலரிலே தங்கி அம்மலரிலுள்ள தேனையுண்டது. மேலும் மேலும் உண்ட மயக்கத்தினால் மயங்கிப் புரண்டு புரண்டு ஒய்ந்து உறங்கிவிட்டது. அது அம்மலரிலுள்ள செந்தாதுகளில் புரண்ட சாரணத்தினால் கருமைநிறம் மறைந்து சென்னிற வண்டாக மாறிற்று. மது மயக்கம் தெளிந்து மலரைவிட்டு எழுந்து பறக்கும் போது சிவந்த நிறமுள்ள வண்டாகக் காணப்பட்டது. மலரைநோக்கிப் பறந்து வரும்போது கருவண்டாகவந்து, மலரை விட்டுப் போகும் போது செவ்வண்டாகப் பறந்து சென்றது. இந்த இயற்கைக் காட்சி யின் மூலம், மாயாமலங்களையுடைய ஆன்மாவானது இறைவனைச் சார்ந்து பூரணசரணாகதியடையும் பட்சத்தில் கருமைக்கு ஒப்பான மாயா மலங்கள் மறைந்து செம்மேனியெம்மானுடைய சிவத்துவத் தையடையுமென்பதை உணர்த்துகின்றார் சம்பந்தர்.

Page 40
5基
திருநாவுக்கரசு நாயனார் அருளிச்செய்த குறைந்ததிருநேரிசைப் பதிகமொன்றில் வரும்பாடல் இங்கே தரப்படுகின்றது.
குறைந்ததிருநேரிசை
வளைத்துநின்றைவர்கள் வந்தெனை நடுக்கஞ் செய்யத் தளைத்துவைத் துலையையேற்றித் தழலெசி மடுத்தநீரில் திளைத்து நின்றாடுகின்ற ஆமைபோல் தெளிவிலாதேன் இளைத்துநின் றாடுகின்றேன் என் செய்வான் தோன்றினேனே.
இத்தேவாரத்தில் ஒரு வேடிக்கையான உதாரணத்தைக் கூறு கின்றார் நாவுக்கரசர். நிலத்திலும், நீரிலும் சீவிக்கக்கூடிய பிராணி ஆமை. ஒரு பெரிய அண்டாவில் நீரைநிரப்பி ஒரு ஆமையை அதனுள்ளேவிட்டு அடுப்பிலேற்றி, கீழே தீமூட்டப்படுகின்றது. நீர் தண்ணிராக இருக்கும் போது ஆமைக்குச் சுகமாயிருந்ததால் மகிழ்ந்து சுற்றிச் சுழன்று ஒடித்திரிந்தது. சிறிது சிறிதாகச் சூடேறி வெந் நீராகக் கொதிகொள்ளும்போது துயரத்தையும், துன்பத்தையும், அனுபவித்துத் துடிதுடித்து மடிந்தது. இறைவனோடியைந்த இயற் கைவாழ்வு இன்பத்தையும், பஞ்சபுலன்களின் வயப்பட்ட செயற்கை வாழ்வு துன்பத்தையும் தரும் என்பதனை இவ்வெடுத்துக்காட்டின் மூலம் உணர்த்துகின்றார் நாவுக்கரசர்.
திருவையாற்றிலே எழுந்தருளியிருக்கின்ற செம்பொற்சோதி யாகிய இறைவனுக்கு விழாவெடுக்கப்படுகின்றது. சோடசோப சாரங்களோடு மங்கல வாத்தியங்கள் முழங்க இறைவன் திருவீதியுலா வந்துகொண்டிருக்கின்றார். அந்தத் திருவுலாவைத் தரிசித்தது போன்ற பாவனையிற் பாடுகின்றார் சம்பந்தர்.
பண் - மேகராகக்குறிஞ்சி
புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி
அறிவழிந்திட் டைம்மேலுந்தி அலமந்த போதாக அஞ்சேலென்றருள்
செய்வான் அமருங்கோ பில் வலம்வந்த மடவார்கள் நடமாட முழவதிர மழையென் றஞ்சி சிலமந்தி அலமந்து மரமேறி
முகில் பார்க்கும் திருவையாறே. (திருவையாறு)
இறைவன் முன்னிலையிலே மடமாதர்கள் நடமாடுகிறார்கள்.
அவர்களுடைய ஆட்டத்துக்கு அனுசரணையாக முழவுகள் அதிரு கின்றன. அவ்வோசையைக் கேட்ட மந்திகள் மழைமுழக்கமென

55
நினைத்து மழைவரப்போகின்றதோ என்றெண்ணி மரங்களின் உச்சியிலேறி முகிற்கூட்டங்களை அவதானிக்கின்றனவாம். இவ்விதம் ஓர் அற்புத இயற்கை நிகழ்வை இலக்கிய நயத்தோடு கூறுகிறார். கீழைத்திருக்காட்டுப்பள்ளியைப் பற்றித் திருஞானசம்பந்தர் பாடும் பதிகத்தில் வயலருகே புனல்பாய்கின்றது. அப்புனலிலிருந்து செங்கயல்கள் துள்ளிப் பாய்கின்றன. கயல்பாய்ந்த வயலினிடத்தே கைகளைப்போல விரிந்த மலர்கள் தேனைச்சொரிந்து மலர்கின்றன. அம்மலர்க் கைகளிலே வாழைகள் கனிகளை உதிர்க்கின்றன. அம்மல? மணமும், கனிகளின் நறுமணமும் கமழ்கின்ற காட்டுப்பள்ளியென இயற்கையைப் புனைந்து கூறுகின்றார். அப்பாடல் இங்கே தரப்படுகின்றது.
பண் - நட்டயாடை செய்யருகே புனல்பாய வோங்கிச்
செங்க யல் பாய்ச் சில மலர்த்தேன் கையருகே கனிவாழை யீன்று
கானலெல்லாங் கமழ் காட்டுப்பள்ளி பையருகே யழல்வாய வைவாய்ப்
பாம்பணையான் பணைத்தோளிபாகம் மெய்யருகே யுடையானை யுள்கி விண்டவரேறுவர் மேலுலகே.
(கீழைத்திருக்காட்டுப்பள்ளி)
ஞானசம்பந்தர் முதலாந் திருமுறையில் திருநள்ள7ற்றையும், திருவாலவாயையும் சேர்த்துப் பாடும் பதிகத்தில் நள்ளாற்றுப் பெருமானைப் பக்தர்கள் பூசிக்கின்றார்கள். அவர்கள் பூசைசெய்யும் பூவின் நறுமணம் கமழ்கின்றது. அபிஷேகம் செய்யும் தீர்த்தத்தின் தூய்மைப் பொலிவு துலங்குகின்றது. இறைவனுடைய திருமேனியிற் சாத்தும் சந்தனம் புது விரைச் சாந்தாய்க் கமழ்கின்றது. பூசிப் பவர்களின் நாவில் இனிய பாடல்கள் எழுகின்றன. என்று நள்ளாற்றுப் பெருமானுடைய பூசைக் காட்சியை இலக்கிய நயத்தோடு கூறும் பாடலிது.
U65öT - 5ü"LU TARALபூவினில் வாசம் புனலிற் பொற்பும்
புதுவிரைச் சாந்தினி னாற்றத்தோடு நாவினிற் பாட நள்ளாறுடைய
தம் பெருமானிது வென்கொல் சொல்வாய் தேவர்கள் தானவர் சித்தர் விச்சாதரர்
கணத்தோடுஞ் சிறந்து பொங்கி ஆவினி லைந்துகந் தாட்டுங் கூடல்
ஆலவாயின் கன மர்ந்தவாறே. (திருநள்ளாறு)

Page 41
56
இவைபோன்ற இலக்கிய நயமான எடுத்துக்காட்டுகளைத் திருமுறைகளிற் பரக்கக் காணலாம்.
திருமுறைப் பாவமைப்பும், பயனும்.
பன்னிரு திருமுறைப் பாடல்கள் மூன்றாம் நூற்றாண்டிலிருந்து சேக்கிழார் காலம் வரையில் வாழ்ந்த சான்றோர்களாற் பாடப் பெற்றுள்ளன. அவர்களுடைய தன்மை, இடத்தாலும், காலத்தாலும் வேறுபடுவதால் பாடல்களும் வேறுபட்டுக் காணப்படுகின்றன. திரு ஞானசம்பந்தருடைய பாடல்கள் பெரும்பாலும் விருத்தப்பாக்களால மைந்தவை. எனினும் மொழிமாற்று, மாலைமாற்று, மடக்கு, இயமகம், ஏக பாதம், இருக்குக்குறள், எழுகூற்றிருக்கை, ஈரடி, ஈரடி மேல்வைப்பு, நாலடிமேல் வைப்பு, திருவிராகம், சக் சரமாற்று, கோமூத்திரி, என்ற சித்திரக்கவிகளையும் பாடியுள்ளார். பதினோராந் திருமுறையில் திருவெழுகூற்றிருக்கை வந்துள்ளது. நக்கீரதேவ நாயனார் அதனைப் பாடியுள்ளார். அப்பர் சுவாமிகள் தாண்டகத்தை மிகுதியாகப் பாடித் தாண்டகவேந்து என்ற பெயரையும் பெற் றுள்ளார். திருவாசகத்தின் தொடக்கத்தில் கலிவெண்பா காணப் படுகிறது. ஆசிரியப்பா, ஆசிரிய விருத்தம், கலித்தாளிசை, கலித் துறை, கலிவிருத்தம், கட்டளைக்கலித்துறை, கொச்சகக் கலி, நேரிசை வெண்பா முதலியன இடம்பெற்றுள்ளன. திருச்சாழல், திருவுந்தி முதலிய நாடகப்பாடல் 3 ரூம், திருவூஞ்சல் முதலிய இசைப்பாடல் களும் திருவாசகத்தில் கா ணப்படுகின்றன
திருஞானசம்பந்தர் பாடல்களில் வேதம், ஆறங்கம், வேத வேள்வி, முதலானவற்றின் சிறப்பைக் காணக்கூடியதாயிருக்கின்றது. திருமந்திரத்தில் ஆகமக் பருத்துக்களாகிய சரியை கிரியை, யோகம் ஞானம் என்னும் பகுதிகளும், பலவகை மந்திரங்களும் இடம் பெற்றுள்ளன.
வாழ்க்கை நன்னெறிக் காதாரமான அறங்களும் கூறப் பட்டுள்ளன. தாசமார்க்கத்தில் வாழ்ந்து இறைவனிடம் சரணா கதியடைந்த நாவுக்கரசர் பாடல்களில் வைதிகநெறியிற் பயனில்லை யென்று கூறும் பாடல்களும் விரவிவருவதைக் காணலாம்.
திருக்குறுந்தொகை. கோலும் புல்லு மொருகையிற் கூர்ச்சமும் தோலும் பூண்டு துயரமுற் றென்பயன் நீலமா மயிலாடு துறையனே நூலும் வேண்டுமோ நுண்ணுணர்ந்தோர்கட்கே.
(திருமயிலாடுதுறை)

57
திருக்குறுந் தொகை
சாத்திரங்கள் பேசும் சளக்கர் காள் கோத்திரமும் குலமும் கொண்டென் செய்வீர் பாத்திரம் சிவமென்று பணிதிரேல் மாத்திரைக்கு னருளும் மாற்பேறரே. (திருமாற்பேறு)
திருவாசகத்தில் பக்திச்சுவையொன்றே சிறப்பாகப் பேசப்படு கின்றது. தோழமை நெறிநின்ற சுந்தரர் பாடலில் பக்தியும், உரிமைக் குரலும் தொனிக்கின்றது. திருமுறைகள் சைவப்பெருமக்களின் அறிவுக்கருவூலமாய் விளங்குகினறன. அக்கருவூலத்திலடங்கியவை விலைமதிப்பற்ற, அழிவற்ற உண்மைப்பொருளாகும். அவை நமக்கு நல்லறிவினையும், பேரின்பத்தையும் தருகின்றன.
திருமுறையாசிரியர்களெல்லாம் சிவபெருமான் ஒருவரையே பாடியுள்ளார்கள். தேவாரம், திருவாசகம் என்னும் திருமுறைகளில் சிவபெருமானைத் தவிர்த்து வேறு எந்தத்தெய்வத்தையும் பாடிய பாடல்களைப் பார்க்க முடியாது. முருகன், விநாயகர், நாராயணன், அம்பாள் என்பவர்களை இனங்காட்டி, இயைபுகாட்டிச் சிவபெருமா னொருவரையே பாடப்பட்டிருப்பதைக் காணலாம். சிவம் என்னும் செம்பொருளைப் பாடுவதே திருமுறை ஆசிரியர்களின் குறிக்கோ ளாகும். திருமுறை இலக்கியத்தின் இலக்கு சிவமென்னும் செம் பொருளைக் கூறுதலும், வழிபாட்டுநெறியைக் கூறுதலுமாகும். எனவே நாம் திருமுறையின் பதியாகிய சிவத்தைப்பற்றியும், அச் சிவத்தையடையும் நெறிகளைப்பற்றியும் அந்நெறிநின்ற அடியவர்தம் சிறப்புப் பற்றியும் உணர்ந்து கொள்ளத் திருமுறைகள் உதவுகின்றன மேற்கூறப்பட்ட மூன்று பகுப்பின் அடிப்படையில் திருமுறைகளை ஆராய்வோமானால் அதற்கு அகச்சான்றுகள் ஏராளமாகக் கிடைக் கும். அவற்றுள் எடுத்துக்காட்டாகச் சிலவற்றைப் பார்ப்போம்.
சிவத்தின் இயல்பை எடுத்துக்கொண்டால், இறைவன் ஒருவனே. அவன் அருவவடிவினனான ஞானசொரூபி. உயிர்கள் உய்யும் பொருட்டு அவற்றிக்கு அருள் செய்ய, அவன் பலவடிவங்களை எடுத் துக்கொள்கிறான் என்பது சைவசமயக் கருத்து இக்கருத்தினையுடைய பாடல்களை ஞானசம்பந்தர் வஈக்காகக் 'சாண்போம்.
பண் - தக்கேசி
ஞானத் திரளாய் நின்ற பெருமான் நல்ல அடியார்மேல் ஊனத் திரளை நீக்கு மதுவும் உண்மைப் பொருள் போலும் ஏனத் திரளோடு இனமான் கரடி இழியும் இரவின்கண் ஆனைத் திரள்வந் தணையுஞ் சாரல் அண்ணாமலையாரே.
(திருவண்ணாமலை)

Page 42
8
Levor - 5 Lotoval
ஈறாய் முதல் ஒன்றாய் இரு பெண் ஆண் குணம் மூன்றாய் மாறா மறை நான்காய் வருபூதம் அவை ஐந்தாய் ஆறார்சுவை ஏழோசையோ டெட்டுத் திசை தானாய் வேறாயுட னானானிடம் விழிம் மிழலையே (திருவிழிமிழலை)
இத்தேவாரத்தில் உலகத்துக்கு அழிவும் தோற்றமும் செய்யும் ஒருவனாய், ஆண் வெண் என்னும் இருவடிவினனாய், சாத்வீகம், இராஜதம், தாமதம் முதலிய மூன்று குணத்தனாய், நான்கு வேதங் களாய், ஐம்பூதங்களாய், ஆறு சுவையாய், ஏழு ஒசையாய், எட்டுத் திசையாய், இவற்றின் வேறாகியும், உடனாகியும் நிற்பவன் இறைவன் ஒருவனேயென்று அவனுடைய வியாபக நிலையினைக் கூறுகின்றார்.
திருக்குறுந்தொகை
"மூலமாகிய மூவர்க்கு மூர்த்தியை காலனாகிய காலற்குங் காலனை கோலமாம் பொழில் சூழ்திருக்கோளிலிச் சூலபாணிதன் வாதந் தொழுமினே" (திருக்கோளிலி)
Prasir pyth *மல்லை ஞாலத்து வாழும் உயிர்க் கெலாம்
எல்லையான பிரானார் இருப்பிடம் கொல்லை முல்லை கொழுந்தகை மல்லிகை நல்ல சேர் கடம்பூர்க் கரக் கோயிலே' (திருக்கடம்பூர்) என்றும்
நின்ற திருத்தாண்டகம்
மண்ணாகி விண்ணாகி மலையுமாகி
வயிரமுமாய் மாணிக்கந் தானே யாகிக் கண்ணாகிக் கண்ணுக்கோர் மணியுமாகிக்
கலையாகிக் கலைஞானந் தானேயாகிப் பெண்ணாகிப் பெண்ணுக்கோர் ஆணுமாகிப்
பிரளயத்துக் கப்பாலோர் அண்டமாகி எண்ணாகி எண்ணுக்கோர் எழுத்துமா இ
எழுஞ்சுடராய் எம்மடிகள் நின்றவாறே.
என்றும்,திருநாவுக்கரசர் பதியின் இயல்பைப்பற்றிக் கூறுகின்றார். மாணிக்கவாசகரும் "பெண்ணாகியானாய் அலியாய்ப் பிறங்கொளி சேர் விண்ணாகி, மண்ணாகி இத்தனையும் வேறாகிக் கண்ணார முதமுமாய் நின்றான்" என்று திருவெம்பாவை பதினெட்டாம் பாடலிலும்,

59
வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊணாகி உயிராகி உண்மையுமாப் இன்மையுமாய்க்
கோனாகி யான் எனதென்று அவரவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே. என்று திருச்சதகம் பதினைந்தாம் பாடலிலும் வதியியல்பைப் பற்றிக் கூறுகின்றார்.
சிவத்தையடையும் நெறியைப்பற்றித் திருமுறைகளில் பேசப் படும் இடங்களை இனிக் காண்போம். பதியாகிய சிவத்தை அடை வதற்கு நான்கு நெறிகள் சைவசாஸ்த்திரங்களில் கூறப்பட்டுள்ளன. அவை சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பனவாகும். இந்த நான்கு நெறியில் நின்று சிவத்தையடைவதற்குத் திருநாவுக்கரசர் கூறும் தேவாரங்களை முறையே காண்க.
திருக்குறுந்தொகை தொண்டராகித் தொழுது பணிமினோ பண்டை வல்வினை பற்றற வேண்டுவீர் விண்டவர் புரம் மூன்றொரு மாத்திரைக் கொண்டவன்னுறையுங் குடமூக்கினே (திருக்குடமூக்கு)
திருக்குறுந்தொகை
தொண்டு பாடியும் தூமலர் தூவியும் இண்டை கட்டி இணையடி ஏத்தியும் பண்டரங்கர் பராய்த்துறைப் பாங்கரைக் கண்டுகொண்டடியே னுய்ந்து போவனே.
(திருப்பராய்த்துறை)
திருக்குறுந்தொகை
அல்லலாக ஐம்பூதங்க ளாட்டியும் வல்லவாறு சிவாயநம வென்று நல்லம் மேவிய நாதன டிதொழ வெல்ல வந்த வினைப்பகை வீடுமே. (திருநல்லம்)
திருக்குறுந்தொகை
பொறிப் புலன்கனைப் போக்கறுத் துள்ளத்தை நெறிப்படுத்து நினைந்தவர் சிந்தையுள் அறிப்புறும் அடுதானவன் ஏகம்பம்
குறிப்பினாற் சென்று கூடித் தொழுதுமே,
(திருக்கச்சியேகம்பம்)

Page 43
60
சரியைழுதலாம் நால்வகை நெறிநின்று எல்லாப் பற்றுக்களை யும் அறுத்தவர்களுக்கு உற்ற துணையாவான் இறைவனென்று கூறுகின்றார் அப்பரடிகள். திருமுறையாசிரியர்களுக்கு இறைவன் தோன்றுந் துணையாய் நின்றானென வரலாறுகள் கூறுகின்றன. மெய்யடியார்களுக்குத் தோன்றாத் துணையாய் நின்று அருள்புரி கின்றான் என்பது சான்றோர்கள் துணிபு.
மேற்கூறிய நால்வகை தெறிநின்ற அடியார்களின் சிறப்பை இனிக் காண்போம். அடியவர்களின் சிறப்பு திருமுறைகளில் பல்கிப் பெருகிக் காணப்படுகின்றன.
தனித்திருத்தாண்டகம்
சங்கநிதி பதுமநிதி இரண்டுந் தந்து
தரணியொடு வானாளத் தகுவரேனும் மங்குவார் அவர் செல்வம் மதிப்பேமல்லேம்
மாதேவற் கேகாந்த ரல்லராகி அங்கமெலாங் குறைந்தழுகு தொழுநோயராய்
ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும்
கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்பரா கில்
அவர்கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே.
இறைவனுக்கன்பரல்லாதஈர் பெருஞ் செல்வத்தையும், அரச பதவியையும், தந்தாலும் சிவனடியார்கள் மதிக்கமாட்டார்கள். தொழுநோய் பிடித்தவனாய், பசுவதைசெய்து உண்ணும் புலையனா யிருந்தாலும், அவன் இறைவனுக்கு அன்பனாயிருந்தால் கடவுளுக்கு நிகராக மதிக்கத்தக்கவனென்று அடியவர்களைக் கடவுள் நிலைக்கு உயர்த்திக் காட்டுகின்றார் அப்பரடிகள்.
பெருமையால் தம்மை யொப்பார் பேணலால் எம்மைப் பெற்றார் ஒருமையால் உலகை வெல்வார் ஊனமேல் ஒன்றுமில்லார் அருமையாம் நிலையில் நின்று அன்பினால் இன்பம் ஆழ்வார் இருமையுங் கடந்து நின்றார் இவரை நீ அடைவாயென்று.
(பெரியபுராணம், த. பு - 196) என்றும்
கேடும் ஆக்கமும் செட்ட திருவினார் • ஒடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்குவார் கூடும் அன்பினில் கும் பிடலே யன்றி வீடும் வேண்டா விறலின் விளங்கினார்
(பெ பு . - திருக்கூட்டச்சிறப்பு - 8)

6.
ான்றும் சேக்கிழார் சுவாமிகள் சிவனடியாரின் சிறப்புக்களைச் சீர்தூக்குவதைக் காண்க.
உடையாளுந்தன் நடுவிருக்கும் உடையான் நடுவுள் நீயிருத்தி அடியேன் நடுவுள் இருவீரும் இருப்பதானால் அடியேன் உன் அடியார் நடுவுள்ளிருக்கும் அருளைப்புரிவாய் பொன்னம் பலத்தெம் முடியா முதலே என்கருத்து முடியும் வண்ணம் முன்னின்றே. (திருவாசகம்) என்று மாணிக்கவாசகர் திருவாசகத்தில் அடியார் பெருமை பற்றிக் கூறுகின்றார்.
இதுவரை சிவத்தினியல்பு, சிவத்தையடையும் நெறி, சிவனடி பார் பெருமை என்பனவற்றைத் திருமுறைகளிலுள்ள அகச்சான்றுகள் மூலம் அறிந்தோம் . இறைவழிபாடு மக்களின் பக்குவநிலைக்கேற்ப சரியை, கிரியை யோகம் ஞானமென நான்கு வகைப்படுமென் பதையும், நாவுக்கரசருடைய தேவாரத்திலிருந்து எடுத்துக் காட்டி னோம். சரியை பூவரும்பு போன்றதும், கிரியை அரும்பு விரிந்த மலர்போன்றதும், யோகம் காய் போன்றதும், ஞானம் கணி போன்றதுமாகும். என்று தாயுமானசுவாமிகள் கூறுகின்றார்.
*" விரும்பும் சரியை முதல் மெய்ஞானம் நான்கும் அரும்பு மலர் காய் கனிபோலன்றோ பராபரமே?
(பராபரக்கண்ணி)
உருவவழிபாடு, சிவாலயத் தொண்டுகள், அடியார் தொண்டு கள் என்பன சரியை நெறியுளடங்கும். இறைவனின் திருவருளைப் பெற உருவ வழிபாடு ஒன்றே மிக எளிதான வழிபாடாகும்.
தனித்திருக்குறுந்தொகை பூக்கைக் கொண்டரன் பொன்னடி போற்றிலார் நாக்கைக் கொண்டரன் நாமம் நவில்கிலார் ஆக்கைக்கே இரைதேடி அலமந்து காக்கைக்கே இரையாகிக் கழிவரே. (நாவுக்கரசர்) பூக்களாலர்ச்சித்து, நாவினால் இறைவனின் திருதாமங்களை யும் தோத்திரங்களையும் சொல்லி வழிபடும் சரியைவழிபாட்டைப் பற்றித் திருநாவுக்கரசர் தேவாரத்தில் இவ்வாறு கூறியுள்ளார்.
ஆத்மார்த்த சிவலிங்க பூஜையினையும், மூர்த்திகளின் பூஜை களையும், அகத்தும்,புறத்தும் ஆத்மார்த்தமாகச் செய்தல் கிரியைவழி பாடாகும். இறைவனின் அருவ நிலையினைச் சிந்தித்து மனத்தைப் புறத் தே பொறிவழிப்போக்காது தியானநிலையில் நிற்றல் யோகவழிபாடு.

Page 44
62
“ஐந்துபேரறிவும் கண்களே கொள்ள அளப்பருங் கரணங்கள் நான்கும் சிந்தையேயாகக் குணமொரு மூன்றும் திரிந்து சாத் வீகமேயாக இந்துவாழ் சடையான் ஆடும் ஆனந்த எல்லையில் தனிப்
பெருங்கூத்தில் வந்த பேரின்ப வெள்ளத்துட் திளைத்து மாறிலா மகிழ்ச்சியில்
மலர்ந்தார்’ (பெரியபுராணம்)
சுந்தரமூர்த்தி சுவாமிகள் தில்லை நடராஜனின் திருநடனத் தைக் கண்டுகளித்த தியான நிலையை யோகவழிபாட்டுக்கு எடுத்துக் காட்டாகச் சேக்கிழார் பெரியபுராணத்தில் கூறுகிறார்.
அருவ வடிவமான சிவத்தைத் தியானித்து நிட்டை கூடுதல் ஞானவழிபாடு. மக்கள் எந்த வழிபாட்டில் நின்றாலும் அதனை ஏற்று இறைவன் வழிபாட்டிற்குத் தக்கவாறு அருள் புரிகிறான். ஆலயவழிபாடும், தேவார, திருவாசகம் முதலிய அருட்பாக்களால் இறைவனை வழிபடும் சரியை வழிபாடும் அனைவராலும் பின்பற்றக் கூடிய இலகுவான நெறியாகும்.
நாடும் நகரமும் நற்திருக் கோயிலும்
தேடித் திரித்து சிவபெருமான் என்று
பாடுமின் பாடிப் பணிமின் பணிந்தபின்
கூடிய நெஞ்சத்துள் கோயிலாக் கொள்வனே. (திருமந்திரம்) என்று கூறுகின்றார் திருமூலர்.
சற்புத்திர மார்க்கத்தில் நின்று வாத்சல்ய பாவனையோடு திருஞானசம்பந்தர் திருமுறைகளைப் பாடியருளினார். தாச மார்க் கத்தில் நின்று ஆண்டான் அடிமை என்றநிலையில் நாவுக்கரசர் இறைவனைப் பாடியுள்ளார். சகமார்க்கமென்னும் தோழமை நெறி நின்று சுந்தரர் பாடியுள்ளார். சன்மார்க்கநெறிநின்று பூரண சரணா கதியோடு மாணிக்கவாசகர் திருவாசகத்தை அருளிச்செய்தார். ஏனைய அளுளாளர்களும் அருள்நிலையில் நின்று பாடியுள்ளார்கள். இந்தத் திருமுறைகளை அவரவர் மனப்பக்குவத்திற்கேற்ப பாடியும், பாராயணஞ்செய்தும் பக்திமார்க்கத்தில் தம்மை நெறிப்படுத்தி ஆத்மஞானத்தைப் பெற்று இறைவனோடு ஐக்கியப்படுவதாகிய யோகானுபவத்தை அடையலாமல்லவா? திருமுறைகளின் பயன தெய்வீக இன்பமே என்பதை உளங்கொள்வோமாக.
பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி
ஆழிமிசைக் கன்மிதப்பில் அணைந்தபிரா னடிபோற்றி
வாழி திருநாவலூரர் வன்தொண்ட ரடிபோற்றி
ஊழி லி திருவாதவூரர் திருத்தாள் போற்றி.
திருச்சிற்றம்பலம்.

63
திருமுறை வாரிதியில் ஒருசில துளிகள்
பன்னிரு திருமுறைகள் சைவசித்தாந்த சாஸ்திர, தோத் திரங்களையடக்கிய திருப்பாற்கடல், அக்கடவில் எந்த இடத்தில் அள்ளினாலும், மண்ணில் நல்லவண்ணம் வாழ்வதற்கேற்ற ஞானப் பால் கிடைக் கும். “துன்பே கவலை பிணி என்றி வற்றை நணு கா மற் துர ந்து கரந்து மிடீர் ' என்று நாவுக்கரசர் இறைவனை வேண்டுதல் செய்திருக்கிறார். "பொதும்புறு தீப்போல் புகைந்தெரியப் புலன் தீக்கதுவ, வெதும்புறுவேனை விடுதிகண்டாய்" என்று மாணிக்கவாசக சுவாமிகள் இறைவனை வேண்டியிருக்கிறார். "படமுடியாதினித் துயரம் படமுடியாதரசே பட்டதெல்லாம் போதும்’ என்று இராமலிங்கசுவாமிகள் இறைவனை வேண்டுதல் செய்திருக்கிறார், அருளாளர்களின் செய்தி இதுவானால், உலகத் துன்பங்களில் உழலும் பாமரமக்களின் கெதி அவகெதிதான். அத் துன்பங்களிலிருந்து விலக்கி மக்களை ஈடேற்றவல்ல மந்திரங்களாகத் திருமுறைகள் பயன்பட்டு வந்திருக்கின்றன. இறையருள் பெற்ற ந யன்மார்கள் அவ்வப்போது அற்புதங்களை நிகழ்த்தி அருளிச் செய்த திருப்பதிகங்கள் திருமுறைகளில் அனேகமுண்டு. அவற்றுள் ஐந்து பதிகங்களையெடுத்துப் பொழிப்புரையுடன் தரப்படுகின்றது. இந்நூல் திருக்கோணேஸ்வரப் பெருமானின் திருவருளால் வெளி யிடப்படுவதால் திருக்கோணமலைப் பதிகமும், உயிருக்கு உறுதி பயக்கும் நமச்சிவாயப் பதிகமும், உடலுக்குவரும் நோய்களை நீக்கும் சிவசின்னமாகிய திருநீற்றுப் பதிகமும், சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்பதை அறிந்திருந்தும் கிரகதோஷங்களைக் கண்டு அஞ்சிப் பஞ்சாங்கமும்கையுமாயலையும் பாமரமக்களின் அச்சந் தவிர்க்கக் கோளறுபதிகமும், வயிற்றோடு சம்பந்தப்பட்ட எல்லா நோய்களையும் நீக்கவல்ல சூலைநீக்கிய திருப்பதிகமும் ஆகிய ஐந்து துளிகள் இங்கே தரப்படுகின்றன. இவற்றைப் பக்கியோடு பாராயணம் செய்து பரமேஸ்வரனின் திருவருளுக்காளாகிப் பல்லாண்டு வாழ் வீர்களாக,
திருக்கோணமலைப் பதிகம்
ஈழநாட்டில் பாடல் பெற்ற தலங்கள் மூன்று. அவற்றுளொன்று அருணகிரிநாதர் பாடிய ருளிய மு நகஸ் தலமாகிய கதிர்காமம். மற்றவையிரண்டும் சிவஸ்தலங்கள். திருக்கோணேஸ்வரம், திருக் கேதீஸ்வரம் என்பன அவை. திருக்கோணேஸ்வரத்தைத் திருஞான சம்பந்தரும், அருணகிரிநாதரும் பாடியருளினார்கள். ஞானசம்பந்தர் பாண்டிதாட்டுச் சிவஸ்தலங்கள்தோறும் சென்று திருப்பதிகங்கள் பாடி இராமேஸ்வரத்தை வந்தடைந்து அங்கிருந்து கொண்டே ஈழநாட்டிலுள்ள திருக்கோணேஸ்வரம், திருக்கேதீஸ்வரம் என்னும்

Page 45
64
இரண்டையும் பாடினார். ஞானசம்பந்தர் பாடியருளிய சிவஸ் தலங்கள் இருநூற்றுப் பத்தொன்பது, அவற்றுள் திருக்கோணேஸ் வரப் பதிகத்தில் மாத்திரம் ஒவ்வொரு பாடலின் ஈற்றடிகள் தோறும் கோணமாமலையமர்ந்தாரே என்று "அமர்ந்தார்’ என்ற சொல்லை வைத்துப் பாடியிருக்கிறார். உத்தரகயிலாயத்தில் கோயில்கொண் டருளிய சிவபெருமான் தெட்சணகயிலாயமாகிய திருக்கோணேஸ் வரத்தில் அமர்ந்திருந்து அருள்பாலிக்கின்றாரென்ற அருள்வாக்காக அது அமைகின்றது.
'நினைத்தகாரியம் அணுக்கூலமேதரும் பெருமாளே* என்று அருணகிரிநாதர் கோணேசப் பெருமானைப் பாடியுள்ளார். பாடல் பெற்ற தலங்களில் வாழும் பாக்கியம் பெற்ற அன்பர்கள் அத்தலத் துக்குரிய பதிகத்தைப் பாராயணம் செய்து திருவருளுக்குப் பாத்திர Kerr6untrfé95errit5 . ሶ
நினைத்தகாரியம் அனுகூலமாகும் திருக்கோணமலைப் பதிகம் - திருஞானசம்பந்தர் பண் - புறநீரிமை திருச்சிற்றம்பலம் நிரைகழல் அரவம் சிலம் பொலி யலம்பும்
நிமலர் நீறணி திருமேனி வரை கெழு மகளோர் பாகமாப் புணர்ந்த
வடிவினர் கொடியணி விடையர் கரைகெழு சந்துங் காரகிற் பிளவும்
அளப்பருங் கனமணி வரன்றிக் குரைகடல் ஒதம் நித்திலங் கொழிக்குங்
கோணமாமலை அமர்ந்தாரே.
பொழிப்புரை. முறையாகப் பொருந்திய வீரக்கழலின் ஒலியும், அழகிய சிலம்பின் ஒலியும் முறையே வலப்பாதத்திலும், இடப்பாதத்திலும் ஒலிக்கின்ற திருவடிகளையுடையவரும், மும்மலங் கள் இல்லாதவரும், திருநீறணிந்த திருமேனியையுடையவரும், மலையரசன் மகளாகிய மாதுமையம்பாளை இடப்பாகத்திற் பொருந்திய வடிவத்தையுடையவரும், இடபக்கொடியையுடையவரு மாகிய கோணேஸ்வரப் பெருமான் சந்தனம், அகிற்கட்டைகளையும், அளவற்ற இரத்தின மணிகளையும், முத்துக்களையும், அலைகளால் கடற்கரையிற் குவிக்கின்ற சப்திக்கின்ற சமுத்திரநீராற் சூழ்ந்த கோணமாமலையில் எழுந்தருளியிருக்கின்றார்.
சுழல் - ஆண்களனிவது. சிலம்பு - பெண்களனிவது. மும்மலம்ஆணவம், கன்மம், மாயை, சந்து - சந்தனம், ஒதம் - நீர்.

65
கடி தென வந்த கரிதனை யுரித்து
அவ்வுரி 0மனிமேற் போர்ப்பாரி பிடியன நடையாள் பெய்வளை மடந்தை பிறைநுத லவளொடும் உடனாய்க் கொடிதெனக் கதறுங் குரைகடல் சூழ்ந்து
கொள்ளமும் நித்திலஞ் சுமந்து குடிதனை நெருக்கிப் பெருக்கமாய்த் தோன்றும்
கோணமாமலை அமர்ந்தாரே.
பொ - ரை. தேவர்கள், முனிவர்களைக் கொல்ல விரைவாக வந்த காயாசுரனாகிய யானையின் தோலை உரித்து அதனைத் தனது திருமேனியில் அணிந்தவரும், பெண்யானையின் நடையை யொத்த அழகிய நடையையுட்ையவளும், வளையல்களையணிந்த வளும், பிறை போன்ற நெற்றியையுடையவளுமாகிய மாதுமையோடு சேர்ந்து கோணேஸ்வரப்பெருமான் பயங்கரமாக ஒலிக்கின்ற கடலாற் சூழப்பட்டுச் சேற்றினையும், முத்துக்களையும் தாங்கிவந்து கரைகளிற்சேர்த்துக் குடிமக்களை நெருக்குகின்ற அலைப்பெருக் கத்தையுடைய கோணமாமலையில் எழுந்தருளியிருக்கின்றார்,
கொள்ளம் - சேறு, பிடி - பெண்யானை, கரி - ஆண்யானை.
பனித்திளந் திங்கட் பைந்தலை நாகம்
படர்சடை முடியிடை வைத்தார் கணித்திளந் துவர்வாய்க் காரிகை பாகமாக
முன்கலந்தவர் மதில்மேல் தனித்த பேருருவ விழித்தழல் நாகந்
தாங்கிய மேரு வெஞ்சிலையாக் குணித்ததோர் வில்லார் குரைகடல் சூழ்த்த கோணமாமலை அமர்ந்தாரே.
பொக ரை. குளிர்ச்சிபொருந்திய இளம்பிறைச் சந்திரனை பும், அழகிய தலையை உடைய நாகபாம்பினையும், பரந்த சடைமுடி யிற் தரித்தவரும், கொவ்வைக்கனி போன்ற சிவந்த வாயினையுடைய மாதுமையை இடப்பாகத்திலே கொண்டவரும், மூன்று புரங்களாய் வந்து அழிவுசெய்த தாரகாக்கன், கமலாக்கன், வித்துன்மாலி என்னும் அசுரர்களின்மீது ஒப்பற்ற பெருவடிவங்கொண்டு மேருமலையை வில்லாக வளைத்து, வாசுகியென்னும் பாம்பை நாணாகப்பொருத்தித் தாங்கி நெற்றிக்கண்ணால் விழித்து அவ்வசுரர்களை அழித்து அருள் புரிந்த கோணேஸ்வரர் ஒலிக்கின்ற கடல்சூழ்ந்த கோணமாமைையில் எழுந்தருளியிருக்கிறார். குணித்தல் - வளைத்தல்

Page 46
66
பழித்திளங் கங்கை சடையிடை வைத்துப்
பாங்குடை மதனனைப் பொடியா விழித்தவன்தேவி வேண்ட முன்கொடுத்த விமலனார் கமலமார் பாதர் தெழித்துமுன் அரற்றுஞ் செழுங்கடல் தரளஞ் செம்பொ னும் இப்பியும் சுமந்து கொழித்துவன் திரைகள் கரையிடைச் சேர்க்குங்
கோணமாமலை அமர்ந்தாரே.
பொ - ரை. புதிதாகப் பெருகிவந்த கங்காநதியைத் திருச் சடையிற் தரித்தவரும், அழகிய மன்மதனைப் பழித்ததுபோல நெற்றிக்கண்ணால் விழித்துச் சாம்பராக்கிப் பின்னர் மன்மதனுடைய மனைவி இரதியானவள் பணித்து வேண்டியபிரகாரம் மன்மதனை முன்போல் உயிர்பெற்றெழச் செய்தவரும் , மலமற்றவரும், செந் தாமரைபோன்ற பாதங்களையுடையவருமாகிய G3srTC)surgi, ஒலிக்கின்ற கடலானது முத்துக்களையும், செம்பொன்னையும், சிப்பிகளையுஞ் சுமந்துவந்து வலியஅலைகளால் கரைகளிலே சேர்க் கின்ற கோணமாமலையில் எழுந்தருளியிருக்கின்றார்,
தரளம் - முத்து, திரை - அலை.
தாயினும் நல்ல தலைவரென் றடியார்
தம்மடி போற்றிசைப் பார்கள் வாயினும் மனத்தும் மருவிநின் றகலா
மாண்பினர் காண் பல வேடர் நோயிலும் பிணியும் தொழிலர்பால் நீக்கி
நுழைதரு நூலினர் ஞாலம் கோயிலுஞ் சுனையுங் கடலுடன் சூழ்ந்த
கோணமாமலை அமர்ந்தாரே.
பொ - ரை . பெற்றதாயினும் மேலான அன்புள்ள தாயாகிய தலைவனென்று மெய்யடியார்கள் கோணேசப்பெருமானுடைய திரு வடிகளில் வணங்கி வாயினால் வாழ்த்தியும் மனத்தினால் நினைந்தும் துதிப்பார்கள். என்றும் நீங்காது நிற்கின்ற மகாஞானிகள் காணும் படியாகப் பலபல வேடங்களையுடையவராகியும், நோயினாலும் , தீராப்பிணியினாலும் வருந்துகின்ற அன்பர் 4 வின் துன்பத்தை நீக்கு பவரும், இடப்பாகத்தை விலக்கிப் பூநூலை அணிந்தவருமான கோணேசர் கோயில்களாலும், சுனைகளாலும், கடலாலும் சூழப் பட்டு பூமியின்கண் சிறந்து விளங்கும் திருக்கோணமயிைல் எழுந்தருளி யிருக்கின்றார், "பிணி - மும்மலப்பிணியும 1ம்

67
பரிந்துநன் மனத்தால் வழிபடு மாணி
தன்னுயிர் மேல் வருங் கூற்றைத்
திரிந்திடா வண்ணம் உதைத்தவர்க்சுருளுஞ் செம்மையார் நம்மையாளுடையார்
விரிந்துயர் மெளவல் மாதவி புன்னை
வேங்கை வண்செருந்தி செண்பகத்தின்
குருத்தொடு முல்லை கொடிவிடும் பொழில்சூழ்
கோணமாமலை அமர்ந்தாரே.
பொ - ரை. பக்தியோடும், பரிவோடும், தூயஉள்ளத் தோடும் வழிபட்ட அடியவனாகிய மார்க்கண்டேயனுடைய உயிரை எடுக்கவந்த கூற்றுவனை அழிந்துபோகும்படி உதைத்து மார்க்கன் டேயருக்கு அருள்புரிந்த மேலான அருளாளரும், கருணையினால் நம்மையெல்லாம் ஆட்கொண்டருளுகின்றவருமாகிய கோணேசப் பெருமான் பரந்து உயர்ந்து வளர்ந்த வனமல்லிகையும், குருக்கத்தி யும், புன்னையும், வேங்கையும், வண்மையான செருந்தியும், செண் பகமும், குருந்தும், இவைகளில் முல்லைக்கொடிகளும் படர்ந்து விளங்கும் சோலைகள் சூழ்ந்த கோணமாமலையில் எழுந்தருளி யிருக்கின்றார்.
மாணி - பிரமச்சாரி, (மார்க்கண்டேயர்) கூற்று - இயமன். மெளவல் - முல்லை. மாதவி - குருக்கத்தி, வேங்கை- வேங்கைமரம். செருந்தி - செருந்திமரம். குருந்து - காட்டுநாரத்தை,
7 பாடல் கிடைக்கவில்லை.
8 எடுத்தவன் தருக்கை இழித்தவர் விரலால்
ஏத்திட ஆத்தமாம் பேறு தொடுத்தவர் செல்வம் தோன்றிய பிறப்பும்
இறப்பறியாதவர் வேள்வி தடுத்தவர் வனப்பால் வைத்ததோர் கருணை தன்னருட் பெருமையும் வாழ்வும் கொடுத்தவர் விரும்பும் பெரும் புகழாளர் கோணமாமலை அமர்ந்தாரே. பொ - ரை. கயிலாயமலையை எடுத்த இராவணனுடைய அகங்காரத்தைத் தனது காற்பெருவிரலால் மிதித்து அழித்தவரும், இராவணன் வருந்தி இறைவனாகிய கோணேசரைத் துதிக்க அவனுக் கிரங்கி இஷ்டமான அதிகாரச் செல்வத்தைக் கொடுத்தவரும், பிறப்பு இறப்பு இல்லாதவரும், தம்மைப் புறக்கணித்த தக்கனுடைய வேள்வியை அழித்துப் பின்னர் அவன்மீது கொண்ட கருணையினால் அருள்புரிந்து வாழ்வளித்தவரும் எல்லோராலும் விரும்பப்படும் பெரிய கீர்த்தியையுடையவருமாகிய கோணேசப்பெருமான் திருக்கோண மலையில் எழுந்தருளியுள்ளார்.
ஆத்தம் - இஷ்டம், வேள்வி - யாகம்.

Page 47
6.
9 அருவரா தொருகை வெண்டலை ஏந்தி
அகத்தொறும் பலியுடன் புக்க
பெருவராயுறையும் நீர் மையர் சீர்மைப்
பெருங்கடல் வண்ணனும் பிரமன்
இருவரும் அறியா வண்ணம் ஒள் எரியாய்
உயர்ந்தவர் பெயர்ந்த நன் மாற்கும்
குருவராய் நின்றார் குரைகழல் வணங்கக்
கோணமாமலை அமர்ந்தாரே.
பொ - ரை. அருவருப்படையாமல் ஒருகையில் மண்டை கோட்டை (பிரம்மகபாலம்) ஏந்தி வீடுகள்தோறும் பிட்சையேற்ற பெருமைக்குரிய குணத்தையுடையவரும், சிறந்த கரிய கடல்போன்ற நிறத்தையுடைய மகாவிஷ்னுவும், பிரம்மாவும் ஆகிய இருவரும் முறையே அடியையும், முடியையும் தேடி அறியமுடியாதபடி ஒளிப் பிளம்பாய் உயர்ந்து விளங்கியவரும் , திருவடியைக் காணமுடியாது மீண்டுவந்த திருமாலுக்குக் குருவாய் நின்றவருமாகிய இறைவன் திருக்கோணமலையில் எழுந்தருளியிருக்கின்றார்.
வெண்டலை - பிரமகபாலம், சீர்மை - சிறப்பு.
10 நின்றுணுஞ் சமணும் இருந்துணுந் தேரும்
நெறியல்லாதன புறங் கூற
வென்று நஞ்சுண்ணும் பரிசினர் ஒருபால்
மெல்லியளொடும் உடனாகித்
துன்றுமொண் பெளவ மெளவலுஞ் சூழ்ந்து
தாழ்ந்துறு திரைபல மோதிக்
குன்றுமொண் கானல் வாசம் வந்துலவும்
கோணமாமலை அமர்ந்தாரே.
போ - ரை. நின்றநிலையில் உண்ணுகின்ற சமணரும், இருந்து உண்ணுகின்ற தேரரும் (புத்தர்) குதர்க்கமாக வாதஞ் செய்து சைவநெறியைப் புறங்கூறி, நன்னெறியல்லாத சமயநெறி களைக்கூற அவர்களின் சமயக்கொள்கைகளை மறுத்து வென்றவர் களும் அவர்கள் ஊட்டிங் நஞ்சையுண்டவர்களாகிய அடியார்கள் இருபக்கமும் சூழ்ந்துநிற்க, இடப்பாகத்தை மாதுமைக்குப் பகிர்ந் தளித்த அர்த்தநாரீச்வர வடிவினராகிய கோணேசர் நெருங்கி அலைமோதுகின்ற சமுத்திரக்கரைகளில் வளர்ந்த மல்லிகையின் மணமும், கடல்அலைகளால் மோதப்படும் குன்றுகளிலுள்ள சோலை மலர்களின் நறுமணமும் வந்து வீசுகின்ற திருக்கோணமாமலையில் எழுந்தருளியிருக்கின்றார். பெளவம் - சமுத்திரம்.

69
குற்றமில்லாதார் குரைகடல் சூழ்ந்த
கோணமாமலை யமர்ந்தாரைக்
கற்றுணர் கேள்விக் காழியர் பெருமான் கருத்துடை ஞானசம்பந்தன்
உற்றசெந் தமிழார் மாலையீரைந்தும்
உரைப்பவர் கேட்பவர் உயர்ந்தோர்
சுற்றமுமாகித் தொல்வினை படையார்
தோன்றுவர் வானிடைப் பொலிந்தே,
பொ - ரை. இறத்தல், பிறத்தலாகிய குற்றமற்றவராயும், ஒலிக்கின்ற கடலால் குழப்பட்ட கோணமாமலையில் எழுத்தருளி யிருப்பவருமாகிய கோணேசப்பெருமானை கற்றுங் கேட்டும் நல் லுணர்வுபெற்றுச் சீர்காழியில் அவதரித்த ஞானக்குழந்தையும், உயர்ந்த ஞானக் கருத்துக்களைக் கூறுகின்றவருமாகிய திருஞான சம்பந்தர் அருளிய செந்தமிழ் மாலையாகிய பத்துப் பாடல்களை பும் படிப்போரும், அதனைக் கேட்போரும் சான்றோர்களுக்கு உறவாகி முன்னைவினை வந்து சூழாமல் மேலான உலகங்களில் சிறப்போடு வாழ்வார்கள். V
திருச்சிற்றம்பலம்
உயிருக்கு உறுதியளிக்கும் நமச்சிவாயத் திருப்பதிகம் - ஞானசம்பந்தர்
திருநல்லூர்ப்பெருமணம் என்ற சிவஸ்தலத்தைத் தற்காலத்தில் ஆச்சாபுரம் என அழைக்கிறார்கள். இத்தலத்தில்தான் திருஞான சம்பந்தருக்குத் திருமணம் நடைபெற ஏற்பாடாகியிருந்தது. பெற் றோருடைய விருப்பத்தை நிறைவேற்றுவதற்காகத் திருமணத்துக்கு உடன்பட்டிருந்தார். திருமணத்தைக் கண்டுகளிக்கப் பெற்றாரும், உறவினர்களும் , திருநீலநக்கந யனார், முருகநாயனார், திருநீல கண்டப்பெரும்பாணர், நம்பாண்டார்நம்பி முதலிய திருத்தொண் டர்களும் வந்திருந்தனர். இவர்களையும், தனக்கு மனைவியாகவர விருந்த மங்கையையும் அழைத்துக்கொண்டு திருக்கோயிலுட் சென்று "இந்த இல்லொழுக்கம் வந்து சூழ்ந்ததே" என்று மனங்கலங்கிக் கடவுளைநோக்கி இல்லறத்தினின்றும் நீக்கித் தம்மை உமது திருவடி யிற் சேர்க்கவேண்டுமென நு பிரார்த்தித்தார். ஞானசம்பந்தருக்கு அருள்புரியத் திருவுளங்கொண்ட இறைவன் ஜோதிலிங்கமாய் ஆலய மெங்கும் பரகாசித்தார். அந்த ஜோதியைக் கண்ட ஞானசம்பந்தர் அதனை அடையும்நெறியை அருளிச்செய்யத் திருவுளங்கொண்டு யாவருக்கும் மெய்நெறி ந மச்சிவாய என்கின்ற மந்திரம் என்னும் கருத்துடைய 'க 'தலாகிக் கசிந்து’ என்னும் நமச்சிவாயத் திருப்

Page 48
70
பதிகத்தைப் பாடி அங்கிருந்த அனைவரையும் ஜோதியுட் கலக்கச் செய்து தாமும் கலந்து இறைவனுடைய திருவடியை அடைந்தார். உயிருக்கு உறுதிபயக்கும் இத்திருப்பதிகத்தை ஒதினால் உய்தி பெறலாம்.
பண் - கெளசிகம்
திருச்சிற்றம்பலம் காதலாகிக் கசிந்து கண்ணிர் மல்கி ஒதுவார் தமை நன்நெறிக் குய்ப்பது வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது நாதன் நாமம் நமச்சி வாயவே.
பொழிப்புரை. உள்ளன்போடு மனங்கனிந்து கண்ணிர் பெருகச் சிவபெருமானை நினைந்து ஒதுகின்றவர்களை நல்ல வழியிலே (சிவகதி) சேர்ப்பதும், இருக்கு, யசுர், சாமம், அதர்வனம், என்னும் நான்கு வேதங்களினதும் உண்மைப்பொருளாயிருப்பதும், தலைவனாகிய சிவபெருமானின் திருப்பெயராயுமுள்ளது நமச்சிவாய என்னும் பஞ்சாட்சர மந்திரமாகும்.
2 நம்புவாரவர் நாவி னவிற்றினால்
வம்பு நாண்மலர் வார்மது வொப்பது செம்பொனார் திலகம் முலகுக்கெலாம் நம்பன் நாமம் நமச்சிவாயவே.
பொ - ரை. திருவைந்தெழுத்தை மன உறுதியோடு நமது நாவினால் உச்சரித்தால் அது புதிதாக அன்று மலர்ந்த மலரிலிருந்து சொரியும் இனிய தேன்போலத் தித்திக்கும். செம்பொன்மயமான சிவபெருமானுடைய நெற்றியில் விளங்கும் திலகம்போன்றதும், உலகத்துக்கெல்லாம் அருள்புரியும் நமது தலைவனாகிய சிவபெரு மானுடைய திருப்பெயராயுள்ளதும் நமசிவாய என்னும் பஞ்சாட் சர மந்திரமே. திலகம் - பொட்டு மது - தேன்
3 நெக்கு ளார்வம் மிகப்பெருகிந் நினைந்து
அக்கு மாலைகொண்டு அங்கையி லெண்ணுவார் தக்க வானவராத் தகுவிப்பது நக்கன் நாமம் நமச்சிவாயவே.
பொ - ரை. மனம் நெகிழ்ந்து உள்ளத்தில் ஆர்வம் பெருகிச் சிவனை நினைந்து உருத்திராக்க மாலையைக் கையில் ஏந்திப் பஞ்சாட்சர மந்திரத்தை முறைப்படி செபஞ் செய்கின்றவர் களை மேலான தேவப் பதவியில் உயர்த்திவைப்பது சிவபெரு மானுடைய திருநாமமாகிய நமசிவாய என்னும் பஞ்சாட்சர மந்திரமே. அக்குமாலை உருத்திராட்சமாலை. நக்கன் - சிவன்,

7
4 இயமன் தூதரும் அஞ்சுவர் இன்சொலால்
நயம் வந்தோத வல்லார்தமை நண்ணினால் நியமந் தான் நினைவார்க் கினியான் நெற்றி நயனன் நாமம் நமச்சிவாயவே.
பொ - ரை. இனிய சொற்களால் பயபக்தியோடு பஞ் சாட்சர மந்திரத்தை செபிக்கின்றவர்களை இயமனுடைய தூதுவர் கள் நெருங்கி (பஞ்சாட்சரமந்திர ஒலியைக் கேட்டு) அவர்களுடைய உயிரை எடுக்கப் பயப்படுவார்கள். நாள்தோறும் திருவைந்தெழுத் தை நினைக்கின்றவர்களுக்கு இனியவனாயிருக்கின்ற, நெற்றிக் கண் களையுடைய சிவபெருமானின் திருப்பெயராயுள்ளது நமச்சிவாய என்னும் பஞ்சாட்சர மந்திரமே. நெற்றிநயனன் - சிவன்
5 கொல்வா ரேனும் குணம்பல தன்மைகள்
இல்லா ரேனும் இயம்புவ ராயிடின் எல்லாத் தீங்கையும் நீக்குவ ரென்பரால் நல்லார் நாமம் நமச்சி வாயவே.
பொ - ரை. கொடிய பாவமாகிய கொலைகளைச் செய் பவர்களானாலும் நற்குண நற்செய்கைகள் இல்லாதவர்களானாலும், பஞ்சாட்சர மந்திரத்தை ஒதுவார்களானால் அவர்களுக்கு வருகின்ற எல்லாத் தீமைகளையும் சிவபெருமான் நீக்கி அருள் செய்யவல்லவர். அவருடைய திருநாமமாயிருப்பது நமச்சிவாய என்னும் பஞ்சாட்சர மந்திரமே.
6 மந்தரம் மன பாவங்கள் மேவிய
பந்தனையவர் தாமும் பகர்வரேல் சிந்தும் வல்வினை செல்வமும் மல்குமால் நந்தி தாமம் தமச்சிவாயவே.
Gunr - GOMT...... அறியாமையினால் மனத்தினாலும், வாக் சாலும் பாவங்களைச் செய்பவர்களும், பிறவிப் பந்த பாசமுடை பவர்களும், பஞ்சாட்சர மந்திரத்தை ஒதுவார்களானால் அவர்சளு டைய கொடிய வினைகள் அழிந்துவிடும். பொருட்செல்வமும், அருட்செல்வமும் பெருகுமாதலால் சிவபெருமானுடைய திருநாம மாயிருக்கின்ற பஞ்சாட்சர மந்திரத்தை ஒதுவோமாக,
பந்தனையவர் - பிறவிப்பந்தமுடையவர். நந்தி - சிவன்.
7 நரக மேற்புக நாடின ராயினும்
உரை செய் வாயினர் ஆயின் உருத்திரர் விரவியே புகுவித்திடு மென்பரால் வரதன் நாமம் நமச்சிவா யவே.

Page 49
72
பொ - ரை. எழுவகையான கொடிய நரகங்களுக்குப் போகவேண்டிய பாவங்களைச் செய்தவர்களாயினும், பஞ்சாட்சர மந்திரத்தை ஒதுவார்களானால் சிவபெருமான் அவர்களோடு கலந்து நின்று கருணையினால் மோட்சத்தையருளுவார் என்பதால் ஆன்மாக் களுக்கு வரமருளும் இறைவனின் திருநாமமாயிருப்பது நமச்சிவாய என்னும் பஞ்சாட்சர மந்திரமே.
8 இலங்கை மன்னன் எடுத்த அடுக்கல்மேல்
தலங்கொள் கால்விரல் சங்கரன் ஊன்றலும் மலங்கி வாய்மொழி செய்தவன் உய்வகை நலங்கொள் நாமம் நமச்சிவாயவே.
பொ - ரை. இலங்கையை ஆண்டவனாகிய இராவணன் பெயர்த்து எடுத்த கயிலாயமலையைச் சிவபெருமான் தனது கால் பெருவிரலால் மிதித்தபோது துன்பப்பட்டு வருந்தித் துதித்த இரா வணன் தான் மீட்சியடையும் வண்ணம் ஒதிய மகிமைக்குரிய திரு நாமம் நமச்சிவாய என்னும் பஞ்சாட்சர மந்திரமாகும். அடுக்கல் - மலை,
9 போதன் போதன கண்ணனும் அண் ணல் தன் பாதம் தான் முடி நேடிய பண்பராய் யாதுங் காண்பரிதாகி அலந்தவர் ஒதும் நாமம் நமச்சிவாயவே.
பொ - ரை. பிரமனும், செந் தாமரை மலர் போன்ற கண் களையுடைய மாகவிஷ்ணுவும் எல்லாருக்கும் முதல்வராகிய சிவபெரு மானுடைய அடியையும், முடியையும் தேடி எதனையுங் காணமுடி காமல் வருந்திய இருவரும் துதித்த திருநாமம் நமச்சிவா ய என்னும் பஞ்சாட்சர மந்திரமாகும். s
போதன் - பிரமன். போதனகண்ணன் - விஷ்ணு.
O கஞ்சி மண்டையர் கையிலுண் கையர்கள் வெஞ்சொல் மிண்டர் விரவில ரென்பரால் விஞ்சை யண்டர்கள் வேண்ட அமுதுசெய் நஞ்சுண் கண்டன் நமச்சிவாயவே.
பொ - ரை. மண்கலத்தில் உணவையேற்று உண்பவர் களாகிய புத்தர்களும், கையில் உணவை வைத்து உண்பவர்களாகிய சமணர்களும் கொடியவார்த்தைகளால் சிவனை நிந்தனை செய்யும் மூடர்களாதலால் ஐந்தெழுத்தின் மகத்துவமறியாதவர்களாவர் தேவலோகத்திலுள்ள தேவர்கள் சிவனை வழிபட்டு வேண்டுதல் செய்ய அவர்களைக் காப்பதற்காக ஆலகால விஷத்தையுண்ட கண்டத்தையுடைய சிவபெருமானாயிருப்பது நமச் சிவாய என்னும் பஞ்சாட்சர மந்திரமாகும். மண்டை - மண்கலம்

79
Η நந்தி நாமம் நமச்சிவாய எனும்
சந்தையால் தமிழ்ஞான சம்பந்தன் சொல் சிந்தையால் மகிழ்ந் தேத்த வல்லாரெலாம் பந்த பாசம் அறுக்க வல்லார்களே.
பொ - ரை. சிவபெருமானுடைய திருநாமமாயிருப்பது நமச்சிவாய என்னும் பஞ்சாட்சரமந்திரமாதலால் செந்தமிழ்ச் செல் வராகிய திருஞான்சம்பந்தர் திருவாய் மலர்ந்தருளிய நமச்சிவா யப் பதிகத்தை மனமார மகிழ்ந்து துதிக்க வல்லவர்களெல்லாம் பற்றுக் களையும், பாசத்தையும் அறுத்து முத்தியடைய வல்லவர்களாவர்.
நந்தி - சிவபெருமான்.
திருச்சிற்றம்பலம் உடலுக்கு வரும் வெப்ப நோய்களை நீக்கும் திருநீற்றுப் பதிகம் - ஞானசம்பந்தர் பாண்டிநாட்டில் சைவசமயத்துக்கு ஏற்பட்டிருக்கும் சமணத் தாக்கத்தை அறிந்த ஞானசம்பந்தர் மதுரையம்ப்திக்கு எழுந்தருளி வந்து திருமடத்தில் தங்கியிருந்தார். ஞானசம்பந்தர் மீது பொறாமை கொண்ட சமணர்கள் இரவோடிரவாக மடத்துக்குத் தீவைத்தனர். அரசனுடைய அனுமதியோடு சமணர்கள் தீவைத்ததை ஞானத் தாலறிந்த சம்பந்தர் ‘பையவேசென்று பாண்டியர்க் காகவே' என்று அத்தீயின் வெப்பத்தைத் திருப்பிவிட்டார். அது அரசனுக்கு வெப்பு நோயாக் உடலெங்கும் பரவியது.
சமணர்களின் மந்திர, தந்திர, மருந்துகளால் மாறாத வெப்புநோயைத் தாங்கமுடியாமல் வருந்திய மன்னன், மனைவி மங்கையர்க்கரசியாரினதும், மந்திரி குலச்சிறையாரினதும் வேண்டு கோளின் படி ஞானசம்பந்தரின் த யவை நாடினார். ஞானசம்பந்தர் திருவாலவாய்ப் பெருமானை வணங்கி அரண்மனைக்குச் சென்றார். அரசனுடைய நிலைகண்டு இரங்கி "மந்திரமாவது நீறு" என்ற திருப்பதிகத்தைப் பாடித் திருநீற்றை அரசனுடைய உடம்பிலே தடவி வெப்புநோயை நீக்கியருளினார். பஞ்சாட்சர மந்திரத்தை உச்சரித்துத் திருநீற்றைப் பூசி உடலுக்கு ஏற்படும் எல்லா வகையான வெப்பநோய்களையும் நீக்கலாமென்று அனுபவப்பட்டவர்கள் கூறுகின்றார்கள்.
பண் - காந்தாரம். திருச்சிற்றம்பலம். மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு செந்துவர் வாயுமை பங்கன் திருவாலவ யான் திருநீறே.

Page 50
74.
பொ - ரை. நினைப்பவரைக் காப்பதாகிய வேதமந்திர மாயிருப்பது திருநீறு. தேவர்களுடைய மேனியில் அணியப்படுவது திருநீறு, அழகுக்கெல்லாம் அழகா யிருப்பது திருநீறு, எல்லாராலும் போற்றப்படுவது திருநீறு சிவாகமமாயிருப்பது திருநீறு, சைவ சமயப் புனித சின்ன் மாய் அணியப்படுவது திருநீறு, கொவ்வைக்கனி போன்ற சிவந்த வாயினையுடைய மீனாட்சியம்மையைப் பாகமாகக் கொண்டு திருவாலவாயில் எழுந்தருளியிருக்கின்ற சொக்கலிங்கப் பெருமானுடைய அருளைத் தரவல்ல இந்தத் திருநீறே சிறந்தது.
மந்திரம் - வேதம் தந்திரம் - சிவாகமம் .
2 வேதத்தி லுள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு
போதந் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு ஓதத் தகுவது நீறு உண்மையி லுள்ளது நீறு சீதப் புனல் வயல்சூழ்ந்த திருவாலவா யான் திருநீறே பொ - ரை. வேதங்களால் போற்றப்படுவது திருநீறு, கொடிய துன்பங்களை நீக்கவல்லது திருநீறு, சிவஞானத்தைத் தரு வது திருநீறு, ஈனகுணங்களை அகற்றவல்லது திருநீறு, விதந்து பாராட்டிப் பேசத்தக்கதாயிருப்பது திருநீறு, உண்மைவழியில் ஒழுகச்செய்வது திருநீறு, ஆதலால் குளிர்ச்சிபொருந்திய நீர்நிறைந்த வயல்களாற் சூழப்பட்ட திருவாலவாயில் எழுந்தருளியுள்ள சொக் கலிங்கப்பெருமான் அருளிய திருநீறே சிறப்புடையது.
போதம் - சிவஞானம். புன்மை - ஆணவமலம்,
3 முத்தி தருவது நீறு முனிவ ரணிவது நீறு
சத்திய மாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு சித்தி தருவது நீறு திரு ஆலவாயான் திருநீறே.
பொ - ரை. சிவமுத்தியைத் தரவல்லது திருநீறு, மகா முனிவர்களும் தரிக்கத்தக்கது திருநீறு, உண்மைப்பொருளாயிருப்பது திருநீறு, சான்றோர்களால் புகழ்ந்து பேசப்படுவது திருநீறு, தெய்வ பக்தியைத் தரத்தக்கது திருநீறு, துதிப்பதற்கு இதமான தாயிருப்பது திருநீறு, சகலபேறுகளையுந் தரவல்லது திருநீறு, ஆதலால் திருவால வாய்த்தலத்தில் எழுந்தருளியுள்ள சொக்கலிங்கேசர் அருளிய திருநீறே மேலானதாகும்.
பரவுதல் - வழிபடுதல்
4 காண இனியது நீறு கவினைத் தருவது நீறு
பேணி அணிபவர்க் கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு மானந் தகைவது நீறு மதியைத் தருவதுநீறு சேனந் தருவது நீறு திரு ஆலவாயான் திருநீறே.

75
பொ - ரை. காணுந்தோறும் இன்பத்தைத் தருவது நீறு,
அணியும்போது அழகைக்கொடுப்பது திருநீறு, விரும்பித் தரிக்கின்ற
வர்களுக்கெல்லாம் மகிமையைக் கொடுப்பது திருநீறு, மேலான
குணங்களை நீங்காமற் காப்பது திருநீறு, நல்ல ஞானத்தைத்தர
வல்லது திருநீறு, விண்ணுலக இன்பத்தைத் தரத்தக்கது திருநீறு,
ஆதலால் திருவாலவாயில் எழுந்தருளியுள்ள சொக்கலிங்கப் பெரு மான் அருள்பாலிக்கும் திருநீறே மேலானது.
கவின் - அழகு. மாணம் - மாண்பு. சேணம் - விண்ணுலகு.
தகை - மேம்பாடு.
5 பூச இனியது நீறு புண்ணியமாவது நீறு
பேச இனியது நீறு பெருந் தவத்தோர்களுக்கெல்லாம் ஆசை கெடுப்பது நீறு அந்தம தாவது நீறு தேசம் புகழ்வது நீறு திரு ஆலவாயான் திருநீறே.
பொ - ரை. பூசப் பூச இன்பந் தருவது திருநீறு, புண்ணியப் பேறுகளைத் தரத்தக்கது திருநீறு, சிவசின்னத்தின் பெருமைகளைப் பேசப்பேச மகிழ்ச்சி தருவது திருநீறு, மாபெரும் தவத்தைச் செய் கின்ற தபோதனர்களின் ஆசைகளை அறுக்கவல்லது திருநீறு, முடிவான முத்தியின்பமாயிருப்பது திருநீறு, தேசமக்களால் புகழ்ந்து பேசப்படுவத மாயிருப்பது திருநீறு, இசனால் திரு ஆலவாயில் எழுந்தருளியுள்ள சொக்கேசர் அருளிய திருநீறே மேலானது.
அந்தம் - முடிவு
6 அருத்தம தாவது நீறு அவலம் அறுப்பது நீறு
வருத்தந் தணிப்பது நீது வானம் அளிப்பது நீறு பொருத்தம தாவது நீறு புண்ணியர் பூசும் வெண்ணிறு திருக்தகு மாளிகை சூழ்ந்த திரு ஆலவாயான் திருநீறே.
பொ -ரை . . சகல செல்வங்களாயுமிருப்பது திருநீறு, சஞ் சலத்தை ஒழிப்பது திருநீறு, நோய் பிணிகளைத் தீர்க்கத்தக்கது திருநீறு, மோட்சத்தைத் தரவல்லது திருநீறு, சைவசமயத்தவர் களுக்கு ஏற்ற சிவசின்னமாயிருப்பது திருநீறு, புண்ணியம் செய்த மேலோர்கள் பூசத்தக்கது திருநீறு, ஆதலால் அழகிய மாளிகை களாற் சூழப்பட்ட திருவாலவாயில் எழுந்தருளியுள்ள சொக்கலிங் கப் பெகுமானுடைய திருநீறே மேலானது.
அருத்தம் - செல்வம், அவலம் - சோகம்"
7 எயிலது அட்டது நீறு இருமைக்கும் உள்ளது நீறு
பயிலப் படுவது நீறு பாக்கியமாவது நீறு துயிலைத் தடுப்பது நீறு சுத்தமதாவது நீறு அயிலைப் பொலிதரு சூலத் தாலவாயான் திருநீறே.

Page 51
ሃ6
பொ - ரை. தாரகாக்கன் கமலாக்கன் வித்துன்மாலி என்ற மூன்று அசுரர்களுடைய கோட்டை போன்ற முப்புரங்களை அழியச் செய்தது திருநீறு, இம்மை மறுமை இரண்டையும் தரத்தக்கது திரு நீறு, நித்திய சாதனைக்கு உகந்ததாயிருப்பது திருநீறு, சகல செள பாக்கியங்களையுந் தருவது திருநீறு உடற்சோர்வு, உள்ளச்சோர்வு களை நீக்க வல்லது திருநீறு அகத் தூய்மை புறத்தூய்ம்ைகளைத் தருவது திருநீறு, ஆதலால் கூர் ை யான மூன்று த லை களையுடைய சூலாயுதத்தைத் தாங்கித் திருவாலவாயில் எழுந்தருளியுள்ள சொக்க
லிங்கேசருடைய திருநீறே சிறந்தது.
எயில் - மதில் (முப்புரங்கள்) துயில் - சோர்வு அயில் - கூரியகுலம்
8 இராவணன் மேலது நீறு எண்ணத் தகுவது நீறு
பர வண மாவது நீறு பாவம் அறுப்பது நீறு தராவண மாவது நீறு தத்துவமாவது நீறு அரா வணங்குந் திருமேனி ஆலவாயான் திருநீறே. பொ - ரை . இலங்கை மன்னன் இராவணன் விரும்பி அணிந்துகொண்டது திருநீறு, சிந்திக்கத்தக்க சிவ சின்ன மாயிருப்பது திருநீறு, பராசக்தியின் இயல்பாயிருப்பது திரு நீறு, பாவங்களை அறுக்கவல்லது திருநீறு, பூமாதேவியின் இயல்பு போன்றிருப்பது திருநீறு, சிவதத்துவங்களின் விளக்க மாயிருப்பது திருநீறு, அதனால், பாம்புகளை அணிகல மாகக் கொண்டு திருவாலவாயில் எழுந்தருளியுள்ள சொக்க நாதப் பெருமானுடைய திருநீறே சிறந்தது.
பராவணம் - பராசக்தியின் இயல்பு. தராவணம் - பூமாதேவியின் இயல்பு.
9 மாலொ டயனறியாத வண்ணமு முள்ளது நீறு
மேலுறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண்
பொடிநீறு ஏல உடம்பிடர் தீர்க்கும் இன்பந் தருவது நீறு ஆலம துண்ட மிடற்றெம் ஆலவாயான் திருநீறே.
பொ - ரை. திருமாலும் பிரமனாலும் அறிய முடி யாத ஆதியந்தமில்லாத சிவபெருமானின் சின்னமாயிருப் பது திருநீறு, தேவலோகத்திலுள்ள தேவர்களின் தேகத்தில் விளங்குவது திருநீறு, எல்லா உடல்களுக்கும் வரும் துன் பங்களைத் தீர்த்து இன்பந்தரவல்லதுமாயிருப்பது திருநீறு,

77
இதனால், நஞ்சை அமுதாகவுண்ட கண்டத்தையுடைய திருவால வாய்ச் சொக்கலிங்கப் பெருமானுடைய திருநீறே சிறந்தது.
ஆலம் - விஷம்
10 குண்டிகைக் கையர்களோடு சாக்கியர் கூட்டமுங் கூடக்
கண்டிகைப் பிப்பது நீறு கருத இனியது நீறு எண்டிசைப் பட்ட பொருளார் ஏத்துந் தகையது நீறு அண்டத்தவர் பணிந்தேத்தும் ஆலவாயான் திருநீறே.
பொ - ரை. கமண்டலத்தைக் கையிலேந்திய சமணக் குரு மாரினதும், புத்தர்களினதும், கண்களைத் திகைக்கச் செய்வது திரு நீறு, நினைக்க நினைக்க இன்பந்தருவது திருநீறு, எட்டுததிக்கிலு முன்ள அறிவாளர்களால் போற்றப்படுவதுமாயிருப்பது திருநீறு, ஆத லால் அண்டங்களில் வாழ்பவர்கள் பணிந்து வணங்கும் திருவாலவாயில் எழுந்தருளியுள்ள சொக்கலிங்கேசருடைய திருநீறே சிறந்ததாகும். குண்டிகைக்கையர் - சமணர். கண் + திகைப்பிப்பது - கண்டி கைப்பிப்பது
11 ஆற்றல் அடல் விடையேறும் ஆலவாயான் திருநீற்றைப்
போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம்பந்தன் தேற்றித் தென்ன னுடலுற்ற தீப்பிணி யாயின தீரச் சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே,
பெஈ - ரை. வலிமைபொருந்திய இடப வாகனத்தில் எழுந் தருளி வருகின்ற திருவாலவாயா னாகிய சொக்கலிங்கப் பெருமானு டைய சிவசின்னமாகிய திருநீற்றைப் புகழ்ந்து போற்றியவரும் , சீர்காழியில் அவதரித்தவரும், பூமியில் அந்தணகுலத்தில் உதித்த வரும. கிய திருஞானசம்பந்தர் கூன்பாண்டிய மன்னனின் உடலில் ஏற்பட்ட தீப்பிணியானது தீரும் வண்ணம் கூறிய பாடல்கள் பத்தை பும் ஒதவல்லவர்கள் உத்தமராய் வாழ்வார்கள்.
தீப்பிணி - தீய பிணி. தீயினால் விளைந்தபிணி. சமணர்கள் இட்ட தீயும், ஆணவமாகிய பிணியுமென்றலுமாம்.
திருச்சிற்றம்பலம்
கிரக தோஷங்களை நீக்கும் கோளறு பதிகம் . - ஞானசம்பந்தர் திருஞானசம்பந்தர் திருமறைக்காட்டில் எழுந்தருளியிருக்கும் போது திருநாவுக்கரசரும் உடனிருந்தார் அக்காலத்தில் ந ட்டை ஆட்சிசெய்துகொண்டிருந்த கூண்பாண்டிய மன்னன் சமணர்களு டைய துர்ப்போதனையால் சத்தியமார்க்கமாகிய சைவத்தை விட்டுச்

Page 52
78
சமணசமயத்தைத் தழுவினான். "அரசனெவ்வழி குடிகளுமவ்வழி' என்பதினால் மக்களும் சமணசமயத்திற் சேர்ந்தனர். மன்னனின் மனைவியாகிய மங்கையர்க்கரசியாரும், முதல் அமைச்சராகிய குலச்சிறையாரும் மிக்க கவலையடைந்தார்கள். வைதிகமார்க்கம், சைவமார்க்கமாகிய இரண்டும் குன்றிச் சமணசமயம் விருத்தியடை வதைச் சகிக்கமுடியாத அவ்விருவரும் வேதாரணியத்தில் எழுந் தருளியிருக்கும் திருஞானசம்பந்தருக்கு சமணசமயப்பரவலை அறிவித் தார்கள். இதையறிந்த ஞானசம்பந்தர் தாவுக்கரசருடன் சென்று வேதாரணிய ஈஸ்வரனைத் தரிசனம்செய்து கோபுரவாசலில் வந் திருந்து தான் பாண்டிநாட்டுக்குப் போகவிருக்கும் விஷயத்தை அப்பரடிகளுக்குக் கூறினார். சமணர்களின் கொடுமைகளை முன்னரே அனுபவித்த நாவுக்கரசர், தேவரீர் சிறுபிள்ளை, சமணர்களுடைய வஞ்சனைக்கோ எல்லையில்லை, அன்றியும் தற்போது தங்களுக்கு கிரகங்களும் சாதகமாயில்லை, ஆதலால் அவ்விடத்திற்கு எழுந்தருள வேண்டாமென்று வினயமாக வேண்டினார். சிவபெருமான் நம் முடைய சிந்தையிலே அமர்ந்திருப்பதினால் நாளுங் கோளும் தீங்கு செய்யாது என்று கூறிய ஞானசம்பந்தர் "வேயுறுதோளி பங்கன்’ என்று தொடங்கும் கோனறுபதிகத்தைப் பாடி யருளினார்.
கோள் என்பது குற்றமுமாம்
இப்பதிகத்தைப் பக்தியோடு பாராயணம் செய்கின்றவர் களுக்கு கிரகங்களால் வரும் தோஷங்களும், குற்றங்சளும் கேடு செய்யாது என்பது அனுபவ உண்மையாகும்.
பண் - பியந்தைக்காந்தாரம் திருச்சிற்றம்பலம்
வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேலணிந்தென்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கட் செவ்வாய் புதன் வியாளன் வெள்ளி
சனி பாம்பிரண்டு முடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே.
பொ - ரை. மூங்கில்போன்ற தோள்களையுடைய உமா தேவியாரை இடப்பாகத்திலே ஏற்றுக்கொண்டவரும், ஆலகால விஷத்தைக் கண்டத்திலே தாங்கியவரும், அழகிய வீணையை வாசித்து குற்றமில்லாத பிறைச்சந்திரனையும் கங்கையையும் சடா முடியிலே தரித்த சிவபெருமான் என்னுடைய உள்ளத்திலே நிறைந்து

79
இருப்பதினால் சூரியன், சந்திரன் செவ்வாய், புதன், வியாளன்,
வெள்ளி, சனி, ராகு, கேது என்னும் ஒன்பது கிரகங்களும் சிவனடி
யார்களுக்கு கேடுகள் செய்யா. அவைகள் மிகவும் நல்லவைகள்.
பாம்பிரண்டு - ராகு, கேது.
2 என்பொடு கொம்பொடாமை இவைமார்பிலங்க
எருதேறி ஏழையுடனே
பொன்பொதி மத்தமாலை புனல்குடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
ஒன்பதொ டொன்றொ டேழு பதினெட்டொ டாறும்
உடனாய நாள்கள் அவைதாம்
அன்பொடு நல்ல நல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
பொ - ரை. எலும்புகளும், கொம்புகளும், ஆமையோடு களும் கோர்த்த மாலையானது மார்பிலே விளங்க இடபவாகனத் திலேறி உமாதேவியாருடனே பொன்மயமான தாதுகள் நிறைந்த பூமத்த மாலையையும், கங்கையையும் சடைமுடியிலே அணித்த சிவபெருமான் என்னுடைய உள்ளத்திலே எழுந்தருளியிருப்பதினால் ஒன்பதாவது நட்சத்திரமாகிய ஆயிலியம், ஒன்பதோடு ஒன்று சேர்ந்த பத்தாவது நட்சத்திரமாகிய மகம், ஒன்பதோடு ஏழு சேர்ந்த பதினாறாம் நாளாகிய விசா கம், பதினெட்டாம் நட்சத்திரம் கேட்டை, ஆறாவது நாளாய திருவாதிரை, உடனாய நாள்களான பரணி, கார்த்திகை, பூரம், சித்திரை, சுவாதி, பூராடம், பூரட்டாதி ஆகிய வழிநடைக்கு ஆகாத நட்சத்திரங்கள் என்று கூறப்படும் இவைகள் சிவனடியார்களுக்குக் சேடுகள் செய்யா. அவைகள் மிகவும் தல்லவைகள்.
உகுவளரி பவள மேனி ஒளிநீறணிந்து
உமையோடும் வெள்ளை விடைமேல்
முருகலர் கொன்றை திங்கள் முடிமேலணிந்தென்
உளமே புகுந்த அதனால்
திருமகள் கலையதுார்தி செயமாது பூமி
திசை தெய்வமான பலவும்
அருநெதி நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
பொ - ரை. பவளம்போன்ற நிறமுடைய திருவுருவத்திலே ஒளிபொருந்திய திருநீற்றைத் தரித்து வெள்ளைநிறமான இடப வாகனத்தில் உமாதேவியோடு எழுந்தருளி வாசனைவீசுகின்ற கொன்றை மாலையையும், பிறைச்சந்திரனையும் திருமுடியிலே குடி

Page 53
80
வந்த சிவபெருமான் என்னுடைய உள்ளத்திலே புகுந்து இருப்ப தினால், லெட்சுமிதேவியும், சரஸ்வதிதேவியும், வெற்றியைத் தரு கின்ற துர்க்காதேவியும், பூமாதேவியும், எட்டுத் திக்கிலுமுள்ள தெய்வங்களும் அவரவர் நியதிப்படி சிவனடியார்களுக்கு நன்மை களையே செய்வார்கள்.
4. மதிநுதல் நங்கையோடு வடபாலிருந்து
மறையோதும் எங்கள் பரமன் நதியொடு கொன்றை மாலை முடிமேலணிந்தென்
உளமே புகுந்த அதனால் கொதியுறு காலன் அங்கி நமனோடு தூதர்
கொ டுநோய்களான பலவும் அதிகுணம் நல்ல நல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே. பொ - ரை. பிறைபோன்ற நெற்றியினையுடைய உமா தேவியாரோடு வடவால் எனப்படும் கல்லாலமரத்தின் கீழிருந்து நான்கு வேதங்களையும் சனகர், சனந்தனர், சனாதனர், சனற் குமாரர் ஆகிய முனிவர்களுக்கு உபதேசஞ் செய்த பரம கருணா நிதியாகிய எங்கள் சிவபெருமான் கங்காநதியையும் கொன்றை மாலையையும் முடியிலே தரித்து என்னுடைய உள்ளத்திலே புகுந் திருப்பதினால் கோபங்கொண்ட காலனும், அக்கினியும், இயமனும், அவனுடைய தூதுவர்சளும், கொடிய நோய்களான பலவும் தீயகுண முடையவாயினும் சிவனடியார்களுக்குக் கேடுசெய்ய மல் நன்மை களையே செய்வார்கள்.
5 நஞ் னி கண்டன் எந்தை மடவாள்தனோடும்
விடையேறு நங்கள் பரமன் துஞ்சிருள் வன்னி கொன்றை முடிமேலணிந்தென்
உளமே புகுந்த வதனால் வெஞ்சின அவுணரோடும் உருமிடியும் மின்னும்
மிகையான பூத மவையும் அஞ்சிடும் நல்ல நல்ல அவைநல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே.
பொ - ரை.ஆலகால விஷத்தைக் கண்டத்திலே அடக்கிக் கொண்ட எமது தந்தையும், உமாதேவியா ரோடு இடப வாகனத் திலேறி வரும் நமது பரம்பொருளுமாகிய சிவபெருமான் நெருங்கிய இதழ்களையுடைய வன்னி, கொன்றை மலர்களை முடியிலே அணித்து எனது உள்ளத்தினுள்ளே புகுந்து இருப்பதினால், மிகுந்த கோப முடைய அசுரர்களோடு இடிமுழக்கம், மின்னலும், பஞ்சபூதங்களின் அதிவேகமும், அச்சத்தைத் தருவனவாயிருந்தாலும் அவைகள் சிவனடியார்களுக்குக் கேட்டை விளைவிக்காது நம்மையே செய்யும்.
அவுனர் - அசுரர்கள்.

8
A. வாள்வரி அத்ளதாடை வரி கோவனத்தர்
Da sir தினோடு முடனாய்
நாண்மலர் வன்னி கொன்றை நதிசூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
கோளரி உழுவையோடு கொலையானை கேழல்
கொடு நாகமோடு கரடி
ஆளரி நல்ல நல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே,
பொ - ரை. கூரிய வாள்போன்ற வரிகளையுடைய புலிக் தோலை உடையாக உடுத்து வரிந்து கட்டப்பட்ட கோவன ஆடையையும் உடையவரும், இளமைபொருந்திய உமாதேவியா ரோடு அன்றலர்ந்த வன்னி, கொன்றை, மலர்களையும், கங்கை நதியையும், முடியிலே சூடிக்கொண்டவருமான சிவபெருமான் எனது உள்ளத்தினுள்ளே வந்து புகுந்து இருப்பதினால் கொடிய சிங்கம், புலிகளும், கொலைசெய்யவல்ல யானை பன்றிகளும், கொடிய தாகம் என்பவைகளும் ஆண்சிங்கங்களும் கொடிய விலங்குகளா யிருந்தும் சிவனடியார்சளுக்குத் தீமைசெய்யாது. அவைகளும்
நல்லவைகளே. கோளரி - சிங்கம், உழுவை - புலி கேழல் - பன்றி. ஆளரி - ஆண்சிங்கம்,
7 செப்பிள முலைநன் மங்கை யொருபாகமாக விடையேறு செல்வனடைவார் ஒப்பிள மதியும் அப்பும் முடிமேலணிந் தென்
உளமே புகுந்த அதனால் வெப்பொடு குளிரும் வாதம் மிகையான பித்தும்
வினையான வந்து நலியா அப்படி நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே
பொ - ரை .செம்புபோன்ற திரண்ட முலைகளையுடைய உமாதேவியாரை இடப்பாகத்திலே கொண்டு இடப வாகனத்திலே ஏறிவரும் செல்வரும் , தன்னிடம் சரணடைந்த ஒப்பற்ற இளம் பிறைச் சந்திரனையும், கங்காநதியையும், முடியிலே அணிந்தவரு. மான சிவபெருமான் எனது உள்ளத்திலே புகுந்து இருப்பதினால் வெப்பமான சுரமும், குளிர்சுரமும், வாதநோயும், மிகுதியான பித்த நோயும் தருகின்ற வேதனைகள் எம்மை வருத்தாது. சிவனடியார் களுக்கு இந்த நோய்கள் தீங்கு செய்யாது. அவைகளும் நல்லவைகளே.

Page 54
82
வேள்பட விளிசெய் தன்று விடைமேலிருந்து
மடவாள் தனோடு முடனாய்
வாண்மதி வன்னி கொன்றை மலர்சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால் ' '
ஏழ்கடல் சூழிலங்கை அரையன் றனோடும்.
இடரான வந்து நலியா - - -
ஆழ்கடல் நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே
பொ - ரை. மன்மதன் அழிந்துபோகும்படியாக நெற்றிக் கண்ணா லெரித்தவரும் உமாதேவிய ரோடு இடபவாசனத்தில் ஏறி வருபவரும், பிறைச்சந்திரன் வன்னி கொன்றை மலர்களை முடியிற் குடியவருமான சிவபெருமான் எனது உள்ளத்திலே புகுந்து இருப் பதினால் ஏழு சமுத்திரங்களாற் சூழப்பட்ட இலங்கை அரசனால் வரும் துன்பங்கள் எம்மை வருத் காது.
இலங்கை அரசன் - இரவணன்.
9 பல பல வேடமாகும் பரனாரி பாகன்
பசுவேறும் எங்கள் பரமன்
சலமகளோ டெருக்கு முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அானால்
Wமலர் மிசையே 1 னு மாலும் மறையோடு தேவர்
வரு காலமான பலவும்
அலைகட ல் மேரு நல்ல அவை நல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே
பொ - ரை . பல பல வேடங்களையுடைய பரம் பொருளும், உமாதேவியாரை இடப்பாகத்தே கொண்ட அர்த் தநாரீஸ்வரரும் , இடப வாகனக்திறிே வரும் எமது பரமேஸ்வரனு 1ாகிய சிவபெரு மான் சங்க சேவியையும், எருக்கமலர்களையும் முடியிலே தரித்து எனது உள்ளத்திலே புகுந்து இருப்பதினால் தாமரை மலரின் மீது இருப்பவராகிய பிரமாவும், விஷ்ணுவும், வேதங்களும், தேவர்களும், காலங்களுமாகிய பலவும் அலைக்கின்ற கடலும் மேருமலையும் சிவனடியார்களுக்குத் தீமை செய்யாது. நன்மையே செய்யும்.
10 கொத்தலர் குழலியோடு விசையற்கு நல்கு
குணமாய வேட விகிர்தன் மத்தமும் மதியும் நாகம் (முடி மே லணிந்தென்
உளமே புகுந்த அதனால் புத்தரொ டமணை வா தில் அழிவிக்கும் அண்ணல்
திருநீறு செம்மை திடமே அத்தகு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.

83
பொ - ரை. கொத்துக்களாக நிறைந்த மலர்களைச் சூடிய கூந்தலையுடைய உமாதேவியோடு. விற்போரில் வல்ல விசயனுக்கு அருள்புரிந்த கருணை வடிவான வேடசூபங் சொண்ட சிவபெருமான் எருக்கு மலர்களையும். பிறைச் சந்திரனையும், நாகபாம்பையும் சடாமுடியிலே அணிந்து எனது உள்ளத்திலே புகுந்து இருக்கி றார். பெளத் தர்களோடு சமணர்களையும் சம பவா தில் அழியச் செய் விக்த தலைவனாகிய இறைவனுடைய திருநீறு மேன்மையானதும், வெற்றி யைத் தரக்கூடியதுமாகும். சிவனடியார்களுக்கு வரும் துன்பங்களை அத்திருநீறு கேடுகளை விலக்கி நன்மையே செய்யும்.
தேனமர் பொழில் கொளாலை விளைசெந்நெல் துன்னி
வளர் செம்பொன் எங்கும் நிகழ
நான்முகன் ஆதியாய பிரமா புரத்து மறைஞான ஞானமுனிவன்
தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து
நலிடாத வண்ண முரைசெய்
ஆனசொல் மாலையோதும் அடியார்கள் வானில்
அரசாள்வர் ஆணை நமதே.
பொ - ரை. வண்டுகள் மொய்க்கின்ற மலர்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்ததும் செந்நெல் விளையும் வயல்கள் நிறைந்ததும் பெருகிவருகின்ற செல்வச் சிறப்புடையதும், பிரமன் முதலானவர் களால் வழிபாடு செய்யப்பட்டதுமாகிய சீர்காழியில் அவதரித்த ஞானமுனிவன: கிய திருஞானசம்பந்தர் தனக்கு வருகின்ற நாளும், கோளும் சிவனடியார்களை வந்து அணுகாதபடி கூறிய இக்கோளறு பதிகத்தை ஒதுகின்ற அடியவர்கள் தேவலோகச் சிறப்போடு வாழ் வார்கள் என்று ஆணையிட்டுக் கூறுகின்றார்.
திருச்சிற்றம்பலம்.
கொடிய உடல்நோய்களை நீக்கும்
சூலைநீக்கிய பதிகம் - நாவுக்கரசர்.
சைவசமயத்திற் பிறந்து மருள்நீக்கியார் என்ற பெயருடன் வாழ்ந்து பின்னர் சமணசமயத்திற் புகுந்து தருமசேனர் என்ற பெயருடன் சமணசமயப் போத காசிரியராக லாழ்ந்தவர் திருநாவுக் கரசு நாயனார். ஏ ன் மதம்ம றினார்? உடன்பிறந்த சகோதரியார் திலகவதியாருக்குத் திருமணம்பேசிபிருந்த கலிப்பதை யார் என்ற சேனாதிபதி போர்க் களத்திலே வீரசுவர்கம் அடைந்து விட்டார், தந்தையாகிய புகழனாரும், தாயாகிய மாதினியாரும் அதேகாலத் தில் இயற்கைமரணமடைந்து விடுகிறார்கள் இழப்புக்கள் மருணிக்கி

Page 55
84
பாருடைய உள்ளத்தைக் குழப்பி அமைதியைக் குலைத்துக்கொன் டிருந்ததால் உலக நிலையாமையைப்பற்றி ஊன்றிச் சிந்தித்த அவர் சமணக் கொள்கைகள் அவருக்கு மனச்சாந்தியைத் தருவதாகக் க்ருதி மதம்மாறினார். திலகவதியாரின் வேண்டுகோளுக்கு இரங்கிய நிருவதிகை வீரட்டானேஸ்வரர் மருள்நீக்கியாருக்குச் சூலைநோயைக் கொடுத்து மதமயக்கத்தை நீக்கி தெளிந்த ஞானத்தை அருளினார். திலகவதியாரளித்த விபூதியைத் தரித்து, அவர் உபதேசித்த பஞ் சாட்சர மந்திரத்தைச் செபித்து வழிபட்டு இப்பதிகத்தைப் பாட சூலைநோய் நீங்கியது. பக்தியோடும், நம்பிக்கையோடும் இப்பதி கத்தைப் பாராயணம் செய்துவந்தால் எல்லாவகையான வயிற்று நோய்களும் நீங்கிவிடும்.
பண் - கொல்லி
திருச்சிற்றம்பலம் 1 கூற்றாயினவாறு விலக்ககிவீர் கொடுமைபல செய்தன
நானறியேன் ஏற்றாயடிக்கே இரவும் பகலும் பிரியாது வணங்குவன்
எப்பொழுதும் தோற்றாதென் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி
முடக்கியிட ஆற்றேன் அடியேன் அதிகைக்கெடில வீரட்டானத்துறை
அம்மானே.
பொ - ரை . திருவதிகை வீரட்டானத்தில் உறைகின்ற
எந்தையே! மரண வேதனையைத் தருகின்ற கொடிய சூலை நோயை நீக்கியருளுகின்றீரில்லை. கொடுமைகள் பலவற்றைச் செய்தேனோ என்பதை நான் அறியாது தவிக்கின்றேன். இடபவாகனத்தை புடையவரே! உம்மைப் பிரியாது இரவு பகல் எப்பொழுதும் உமது திருவடியை வணங்குகின்றேன் கண்ணுக்குப் புலப்படாமல் என் வயிற்றினுள்ளே குடல்களை முறுக்கி மடக்கி வருத்துகின்ற சூலை நோயை அடியவனாகிய யான் தாங்கமுடியாமல் வருந்துகின்றேன் நோயை நீக்கியருள்வீராக.
2 நெஞ்சம் உமக்கே இடமாக வைத்தேன் நினையாதொருபோதும்
இருந்தறியேன் வஞ்சமிதுவொப்பது கண்டறியேன் வயிற்றோடு துடக்கி
முடக்கியிட நஞ்சாகி வந்தெனை நலிவதனை நணுகாமல் துரந்து
கரந்துமிடீர்
அஞ்சேலு மென் னிர் அதிகைக் செடில வீரட்டானத்துறை
அம்மா.ே

85
பொ - ரை.திருவதிகை வீரட்டானத்தில் எழுந்தருளியிருக் கின்ற எம்பெருமானே! எனது நெஞ்சத்தை நீ உறையும் இடமாக வைத்திருக்கிறேன். ஒருகணப்பொழுதேனும் உன்னை நினைக்காமல் இருந்ததில்லை. அப்படியிருந்தும் வயிற்றை முறுக்கி மடக்கி வருத்தும் சூலைநோயைப்போன்ற வஞ்சந்தீர்க்கும் நோயை நான் கண்டதில்லை. விஷம்போல வந்து என் உடலை வாட்டிவதைக்கும் இந்த நோயா னது என்னை வருத்தாமல் விலக்கி நீக்குகின்றீரில்லை அஞ்ச வேண்டாமென்று அபயம் தருகின்றீர்களுமில்லையே இறைவா.
3 பணிந்தாரன பாவங்கள் பாற்றவல்லீர் படுவெண்தலையிற்
பலிகொண்டுழல்வீர் துணிந்தேயுமக் காட்செய்து வாழலுற்றால் சுடுகின்றது சூலை தவிர்த்தகுள்வீர் பிணிந்தார் பொடிகொண்டு மெய்பூசவல்லீர் பெற்றமேற்று
கத்தீர்சுற்றும்வெண்டலைகொண்டு) அணிந்தீர் அடிகேள் அதிகைக்கெடில வீரட்டானத்துறை
அம்மானே.
பொ - ரை.திருவதிகை வீரட்டானத்தில் அமர்ந்துறையும் பரம்பொருளே! தமது தவறுகளையுணர்ந்து வழிபட்டவர்களுடைய பாவவினைகளைப் போக்கவல்லவரே! பிரம்ம கபாலத்தில் (மண்டை யோடு) பிட்சையேற்கும் பெருமைக்குரியவரே! இறந்தவர்களின் உடலையெரித்த சுடலைச்சாம்பூசலைத் தரித்தவரே! இடபவாகனத்தை விரும்பி , ஏற்று மகிழ்பவரே! மண்டையோடுகளை மாலையாக அணிபவரே! இத்தகைய அரிய செயல்களைச் செய்யும் உமது ஒப்பற்ற பெருங்குணத்தையுணர்ந்து துணிவுடன் உங்களுக்கு அடிமைத்தொண்டு செய்து வாழ்ந்தபோதும் சூலைநோய் என்னை வாட்டுகின்றது. அதனை நீக்கியருள்வீராக.
4 முன்னம் மடியேன் அறியாமையினால் முனிந்தென்னை நலிந்து
முடக்கியிடப் பின்னையடியேனுமக் காளும்பட்டேன் சுடுகின்றது
சூலை தவிர்த்தருள்வீர் தன்னையடைந்தார் வினைதீர்ப்பதன்றோ தலையாயவர்தங்
கடனாவதுதான் அன்னனடையார் அதிகைக்கெடில வீரட்டாணத்துறை
அம்மானே.
பொ உரை. திருவதிகை வீரட்டானத்தில் அமர்ந்தருளும் என்னையனே! தன்னைச் சரண் என்று அடைந்தவர்களின் கொடிய வினைகளை நீக்கியருளுவதல்லவா ஒப்பற்ற தலைவர்களுடைய கடமை? அத்தகைய பெருமைக்குரிய குணக்குன்றே! அடியேன்

Page 56
86
அறியாமையினால் முற்பிறவியிலும், இப்பிறவியில் இதற்குமுன்னும், செய்த பிழைகளையுணர்த்தச் சூலைநோய் தந்தாய். அது என்னை வருத்தி முடக்கியபோதிலும் பின்னரும் அடியேன் உமக்கு அடிமைப் பட்டேன்" ஆனாலும் சூலைநோய் என்னைத் தகிக்கின்றது. அதனை நீக்கியருளுவீராக.
5 காத்தாள்பவர் காவல் இகழ்ந்தமையாற் கரைநின்றவர்
கண்டுகொளென்று சொல்லி நீத்தாயகம்புக நூக்கியிட நிலைகொள்ளும் வழித்துறை
யொன்றறியேன் வார்த்தை யிதுவொப்பது கேட்டறியேன் வயிற்றோடு துடக்கி முடக்கியிட ஆர்த்தார் புனலார் அதிகைக்கெடில வீரட்டானத்துற
அம்மானே.
பொ - ரை. ஆரவாரிக்கின்ற நீர்நிறைந்த கெடிலநதிபாயும் திருவதிகை வீரட்டானத்தில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானே! ஆன்மாக்களைக் காத்து ஆட்கொள்கின்ற உமது கருணைக்காவலை இகழ்ந்ததினால் நான் சேர்ந்துநின்ற சமணர்கள் காணும்படியாகச் சூலைநோய்தந்து என்னை நீங்கிநின்றாய். வயிற்றை முறுக்கிக் குடலை மடக்கி வருத்தும் இந்த நோய்க்கு ஒப்பான வேறு நோய் இருப்பதாக நான் இதுவரை கேள்விப்படவில்லை. இந்நோய் நீங்கு வதற்கான உன்கருணைக்குரியவனாய் உனது திருவுள்ளத்திற் புகுந்து நிலைத்து நிற்கும் வழிவகையொன்றும் அறியாதவனாகிக் கலங்குகின்றேன். காத்தருளுக. நூாக்குதல் - புகுதல், புனல் - நீர், இங்கே கெடிலநதி,
6 சலம்பூவொடு தூபம் மறந்தறியேன் தமிழோடிசைபாடல்
மறந்தறியேன் நலந்தீங்கிலும் உன்னை மறந்தறியேன் உன்னாமம் என்நாவில் மறந்தறியேன் உலந்தார் தலையிற் பலிகொண்டுழல்வாய் உடலுள்ளுறு சூலை தவிர்த்தருளாய் அலந்தேனடியேன் அதிகைக்கெடில வீரட்டானத்துறை
அம்மானே.
பொ - ரை. திருவதிகை வீரட்டானத்திலிருக்கின்ற
எந்தையே! தீர்த்தமும், பூக்களும், தூபமும் இட்டு உன் திருப் மாதங்களை வணங்க மறந்தேனல்லேன். இசையோடு தமிழ்ப் பாக்களைப் பாடித் துதிக்க மறந்தேனல்லேன். நன்மைகளும் ,

87
தீமைகளும் எனக்கு வந்தபோது உன்னைமறந்தேனல்லேன் உமது திருநாமங்களை எனது நாவினாற் கூறி வாழ்த்தி வழிபட மறந் தேனல்லேன். இறந்தவர்களுடைய மண்டையோட்டில் பிட்சை யேற்க அலைகின்ற ஒப்பற்ற தலைவரே! அடியவனாகிய யான் துன்பப்படுகின்றேன். உடலினுள்ளே குடலில் ஏற்பட்டிருக்கின்ற சூலைநோயை நீக்கியருளுவீராக. அலத்தல் - துன்பப்படுதல். உடல் - இங்கே குடல்.
7 உயர்ந்தேன் மனைவாழ்க்கையும் ஒண்பொருளும் ஒருவர்
தலைக்காவலிலாமையினால் வயந்தேயுமக்காட்செய்து வாழலுற்றால் வலிக்கின்றது சூலை தவிர்த்தருளிர் பயந்தேயென் வயிற்றினகம்படியே பறித்துப்புரட்டி யறுத்
தீர்த்திட நான் அயர்ந்தே னடியேன் அதிகைக்கெடில வீரட்டானத்துறை
அம்மானே.
பொ - ரை. திருவதிகை வீரட்டானத்தில் எழுந்தருளியிருக் கும் என்ஐயனே! மேலிருந்து காக்கும் ஒருவர் இல்லாமையினால் (தந்தை தாயில்லாததினால்) ஏன்னையே தலைவனாகக்கொண்டு தான் மனைவாழ்க்கையிலும், பொருள்தேடுவதிலும் அகங்காரத் தினால் உயர்ந்தவன்போல் வாழ்ந்தேன். தலைவனாக நீ இருக்கின் ற "யென உணர்ந்தபின்னர் பயந்து உனக்கடிமையாகி உன்னருளை வேண்டி வாழ்ந்தபோதும் என் வயிற்றினுள்ளே சூலைநோயானது குடலைப் புரட்டி, முறுக்கி, முடக்கியிழுத்திட அடியேன் சோர்ந்து போனேன். ஆதலால் என்னை வருத்துகின்ற சூலைநோயை நீக்கியருளுவீராக
தலைக்காவல் - மேலிருந்து காக்கும் ஒருவர்.
8 வலித்தேன் மனைவாழ்க்கை மகிழ்ந்தடியேன் வஞ்சம்மன
மொன்றுமிலாமையினால் சலித்தாலொருவர் துணையாருமில்லைச் சங்கவெண்குழைக்
காதுடையெம்பெருமான் கலித் தேயென் வயிற்றினகம்படியே கலக்கிமலக்கிட்டுக் கவர்ந்து தின்ன
அலுத்தேன் அடியேன் அதிகைக்கெடில வீரட்டானத்துறை
அம்மானே.
பொ - ரை. திருவதிகை வீரட்டானத்திலுறையும் வீரட் டேஸ் வரரே! வெண்மையான சங்கினாலான குண்டலத்தைக் காதிலணிந்திருக்கும் எம்பெருமானே! வஞ்சக நினைவொன்று மில்லாமல் உலகவாழ்க்கையில் மகிழ்ந்து பூரிப்படைந்தேன். அவ் வாழ்க்கையில் சலிப்பு ஏற்பட்டால் துணைக்கு உதவவருபவர் யாரு

Page 57
88
மில்லை. ஆர்ப்பரிப்போடு என்வயிற்றினுள்ளே குடலைக் கலக்கி எனது சக்தியெல்லாவற்றையும் சூலைநோயானது பிடுங்கிவிழுங்க அடியேன் அயர்ந்துபோனேன். நோயை நீக்கியருளுவீராக.
கலித்தல் - ஆர்ப்பரித்தல் வலித்தல் - பூரித்தல். 9 பொன்போலமிளிர்வதோர் மேனியினீர் புரிபுன்சடையீர்
மெலியும் பிறையீர் துன்பே கவலை பிணி என்றிவற்றை தணுகாமற் துரந்து
கரந்துமிடீர் என்போலிகளும்மை இனித்தெளியார் அடியார்படுவ
திதுவேயாகில் அன்பேயமையும் அதிகைக் கெடில வீரட்டானத்துறை
அம்மானே.
GLIrr - 60er...... திருவதிகை வீரட்டானத்தில் அமர்ந்தருளிய என்பிதாவே! பொன்மயமான ஒளிபொருந்திய திருமேனியையுடைய வரே முறுகித்திரண்ட சடாமுடியையுடையவரே! பிறைச்சந்திரனைச் சடாபாரத்தில் தரித்தவரே! துன்பங்கள், கவலைகள், நோய்கள் என்பன என்னைவந்து நெருங்காமல் அகற்றி அழித்துவிடுவீராக. என்போன்ற அறிவிலிகள் உன்னை யறியும் ஞானமில்லாதவர்கள். அடியவர்களின் துயரமழிய உனது அன்பேபோதும். ஆகவே அன்பி னால் என்னை ஆண்டருள்வீராக.
10 போர்த்தாயங்கொ ரானையின் ஈருரிதோல் புறங்காடரங்கா
நடமாடவல்லாய்
ஆர்தானரக்கன்றனை மால்வரைக்கீழ் அடர்த்திட்டருள்செய்த
வதுகருதா ய்
வேர்த்தும் புரண்டும் விழுந்தும் எழுந்தாலென் வேதனையான
விலக்கியிடாய் ஆர்த்தார் புனல்சூழ் அதிகைக்கெடில வீரட்டானத்துறை
அம்மானே.
பொ - ரை.ஆரவாரிக்கின்ற கெடிலநதியினாற் சூழப்பட்ட திருவதிகை வீரட்டானத்திலே உறைகின்ற எந்தையே! யானையுரு வில் வந்த காயாசுரன் என்னும் அசுரனின் அகந்தை அழிய அந்த யானையின் தோலை உரித்துப் போர்த்தாய் பேய்கள் கூத்த டும் புறங்காடாகிய சுடலையை அரங்காக விரும்பி நடன நாடவல்லவரே! கைலாயமலையையெடுத்து ஆர்ப்பரித்த அரக்கனாகிய இராவணனு டைய அகங்காரமழிய அவனைக் காலால் அழுத்தி வலிகெடச் செய்து பின் அவனுக்கு அருள்புரிந்தவரே! சூலைநோயினால் வேர்த்தும், உருண்டு புரண்டும் விழுந்தும் எழுகின்ற எனது துயரத்தை நீக்கிக் காத்தருள்வீராக.
திருச்சிற்றம்பலம்.

நிறைவுரை
பன்னிரு திருமுறைகளை மையக் கருவாகக் கொண்டு Lu Göly GofradwG இலக்கு களை நோக்கி அறிவுச்சுடரைச் செலுத் தும் ஆர்வத்தினால் இந்நூலை எழுதும் முயற்சி ஆரம்பிக்கப் பட்டது. எந்த அளவுக்கு அறிவுச் சுடரின் கதிர்வீச்சுச் சென்றிருக் கின்றதென்பதைக் கண்டறியும் உரிமையை வாசகர்களின் சுதந் திரத்துக்குப் பணிவுடன் விட்டு விடுகிறேன். அறிஞர்கள், பேரறி ஞர்கள், பேராசிரியர்கள்,
ஞானியர்கள் போன்ற சான் றோர்களின் தொலைநோக்கில், இந் நூலில் தரப்பட்ட பன்னிரண்டு இலக்குகளையும் அடைய, சிற்றறி வுடையவனாகிய யான் தொட்டுச் சென்ற கருத்துக்கள் மிகச் சுருங்கியனவாயிருந்தாலும், சிறியேன் படைத்த சித்திரத்துக்குப் பெரியோர்கள் பொன்முலாம் பூசிக்குறைவை நிறைவாக்க இந்நூல் வகைசெய்யுமென நம்புகின்றேன்.
தேவாரப் பாடல்பெற்ற திருக்கோணேஸ்வரப் பெருமானு டைய அந்தரங்க பக்திக் கசிவினாலும், அப்பெருமானுடைய கருணாகடாட்சத்தினாலும், அவனுடைய அடியார்களின் ஆதர வினாலும், இந்நூலை எழுதத் துணிவு பிறந்தது.
தெய்வத் தமிழாகிய திருமுறைகளை அடியேனுக்கு அன்புட யூறும், பண்புடனும் ஆர்வத்துடனும் கற்பித்த என்குருமணி, இசை மணி, தேவார இசைலய அரசு திருப்பனந்தாள் பூரீ. எஸ் முத்துக்கந்தசாமி தேசிகர் அவர்களின் ஆசீர்வாதத்தால் இந்நூலை எழுதும் ஆற்றல் பிறந்தது.
இந்நூலைப் பதிப்பிப்பதற்கு நிதியுதவியும், ஊக்கமும் அளித் தவர்கள் கரவெட்டி, துன்னாலை தெற்கு, கோவிற்கடையில் வசிக் கும் தயாளசீலர் 'வேழ முக அடியான்' திரு. தாமோதரம்பிள்ளைதவசிங்கம் அவர்களுக், திருக்கோணமலை, உவர்மலை ஆச்சிரமத்து ஹிந்து தர்ம வெளியீட்டு அமைப்பாளர கிய சுவாமி தந்திரதேவா

Page 58
அவர்களும், திருக்கோணமலை மாவட்ட இந்து இளைஞர் பேரவை யினருமாவர். இவர்களுடைய வித்தியா தர்மப் பணியும், ஆத்மீகப் பணியும், இச்சிறுநூலைப் பதிப்பிக்கும் கைங்கரியத்தினால் இந்து தர்மமாக விளங்க வேண்டுமென்பது திருவருட் செயல் போலும். இவர்களுடைய தாராள சிந்தையினால் என் கருத்தோவியம் நூல் வடிவம் பெற்றுப் பிறக்கிறது. இவர்களுக்கு எனது ஆழ்ந்த அன்பை யும், நன்றியையும் பணிவுடன் சமர்ப்பிக்கின்றேன்.
இந்நூலுக்கு அன்புடனும், ஆர்வத்துடனும் ஆசியுரை வழங்கிய தவசிரேஷ்டர்களின் அடியிணைகளை ஸ்மரித்து, அணிந்து ரைகள் வழங்கிய சான்றோர்களுக்கும் சிரந் தாழ்த்தி வணங்கி நன்றி கூறுகின்றேன். இந்நூலை அழகுறப் பதிப்பித்த பூரீ கணேச அச்சகத் தாருக்கும் நன்றி கூறி, இச்சிறு நூலை மாதுமையம்பாள் சமேத கோணேசப் பெருமானுடைய திருவடிகளுக்குச் சமர்ப்பணம் செய்து அமைகிறேன்.
வணக்கம்
“பாக்கிய பதி” பண்டிதர். இ. வடிவேல்
15, வித்தியாலயம் ஒழுங்கை
திருக்கோணமலை,
 


Page 59
কুঙ্কল্প ********** 靈 அச்சுப் பதிப்பகம்
隸 யூனி கணே
5, வித்தியாலயம் வீ
ခွံ့ဖြုံ။
踝
S qqS J r S SJS S S S S S S S S

testerester
தி, திருக்கோணமலை.
ခံ့ခြီး ဘွဲ(& F ° 字母 压 D · 隸 ဘွဲ(8 နှဲ{8 နှံ8 未
枋来崇崇崇崇崇崇崇崇崇崇崇