கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வாழ்ந்து பார்க்கலாம் - வானொலி நாடகம்

Page 1


Page 2

வாழ்ந்து பார்க்கலாம்
(வானொலி நாடகம்)
P.விக்னேஸ்வரன்

Page 3
VAALNTHU PAARKALAM
TYPE
LANGUAGE -
AUTHOR
1STEDITION
PÉGLISHER
TYPING
RADIO DRAMA
TAMIL
PWKNESWARAN
1998
SIVASAKTHY
WKNESWARAN
SIVASAKTHY
WKNESWARAN
COVERILLUSTRATION - KARUNA
COVER DESIGN
BOOK LAYOUT
& PRINTING
COPYRIGHT
-digiGRAPHICS
-PMJ PRINTING & GRAPHICS
SCARBOROUGH. ONT.
CANADA.
- °|998 BY
SIVASAKTHY
WKNESWARAN
ALL RIGHTS RESERVED

வாழததுரை
விக்னேஸ்வரன் வெளியிடும் நாடக நூலுக்கு வாழ்த்துரை வழங்குவது மகிழ்ச்சியூட்டும், கெளரவமான பணி என்றே நான் கருது கிறேன். விக்னேஸ்வரனுக்கு, அவர் எத்துறையில் ஈடுபடி னும், என் இதயபூர்வமான வாழ்த்து என்றும் உரித்தாகும். அவருடைய நாடகப் பணிக்குக் குறிப்பாக வாழ்த்துரை கூறுமுன், சற்றே பின்னோக்கிச் சென்று, விக்னேஸ்வரனின் வானொலி, தொலைக் காட்சி ஈடுபாட்டின் வரலாற்றைப் பற்றிய சில சிந்த னைகளை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள விருப்புகிறேன்.
அசாங்கத் திணைக்களமாக விளங்கிய இலங்கை வானொலி, 1968 ஒக்டோபர் மாதம் முதல் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனமாக மாறியது. அப்போது, நிகழ்ச்சி நிர்வாக முறையில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. முன்பெல்லாம் எந்திரவியல் அனுபவம் உள்ள உத்தியோகத்தரே மைக்கிரபோன் பொருத்தி, நிகழ்ச்சியின் ஒலியமைப்பைச் சீர்படுத்தும் பணியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளருக்கு உதவினர். ஆயின், கூட்டுத்தாபனம் நிறுவப்பட்டபொழுது, எந்திர வியலில் தேர்ச்சி பெற்றோரை முழுமையாக இயந்திரங்களை இயக்குவது, பழுதுபார்ப்பது ஆகிய துறைகளில் ஈடுபடுத்திவிட்டு, கலையகத்தில் வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பில் உதவுதற்கு, ஓரளவு எந்திரநுட்ப அறிவும் பெருமளவு கலைசார்ந்த ஆர்வமும் அனுபவமும் ரசனையும் உள்ளவர்களை அதிகாரிகள் நியமித்தனர். இம்மாற்றம், நிகழ்ச்சித் தயாரிப்பாளருக்குக் குறிப்பாக தமிழ் நிகழ்ச்சித் தயாரிப்பாளருக்கு பெரும் வரப்பிரசாதமாக அமைந்தது. ஏனெனில், பாரிய நாடக, இசைச்சித்திர நிகழ்ச்சிகளின் தயாரிப் பின்போது நிகழ்ச்சியின் போக்கினைப் புரிந்து, தயாரிப்பாளருடன் இணைந்து செயல்படக்கூடிய, தமிழ் பேசும் உதவியாளர் கிடைத் தது தயாரிப்பாளரின் பணியைப் பெரிதும் இலகுவாக்கியது.
ஒப்பறேஷனல் அசிஸ்டன்ற் என அழைக்கப்பட்ட இந்நிகழ்ச் சித் தயாரிப்பு உதவியாளர் பதவிக்கு 68ஆம் 69ஆம் ஆண்டுகளில் பல தமிழ் இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் பெரும் பாலும் நாடகம், நாட்டுக்கூத்து, இசை ஆகிய பல்வேறு கலை களில் அனுபவமோ பரிச்சயமோ உள்ளவர்களாகவும் எந்திர நுட்பங்களைக் கையாளும் திறமை உள்ளவர்களாகவும் விளங்கினர். இவர்களுள் ஒருவராகவே பிவிக்னேஸ்வரன் வானொலியில் சேர்ந் தாா.
விக்னேஸ்வரனை நான் முதன்முதல் அறிந்தபோது, கலை
யார்வமும் நேர்மையும் உள்ள ஓர் இளைஞன் என்ற எண்ணம் தோன்றியது. தனக்கென ஒரு கொள்கை கொண்டவர். அதை
.3 வாழ்ந்து பார்க்கலாம்

Page 4
எச்சந்தர்ப்பத்திலும் சுயநலத்திற்காகவேனும் விட்டுக் கொடுக்கமாட் டார். இப்பண்புகளே அவர் முன்னேற்றத்திற்கு முக்கியகாரணங் களாக இருந்தன. தகுதியும் திறமையும் அற்றோர் பலர் எப்படியோ வானொலி நிகழ்ச்சிப் பிரிவில் புகுந்து குறுக்கு வழியில் பதவி உயர்விற்காக சூழ்ச்சி செய்யும் சூழ்நிலையில், தகுதியும் திறமையும் உடையோர் சதா எதிர்நீச்சல் போடவேண்டிய நிலையே அன்று பெரும்பாலும் நிலவியது. இத்தகைய சூது நிறைந்த சூழ்நிலை யிலும் விக்னேஸ்வரன் தன் கலைத் திறமையாலும் நேர்மையாலும் கட்சிசாராத் தன்மையாலும் யாவருடைய மதிப்பையும் பெற்று, 1979இல் அவர் விரும்பிய நாடகத் தயாரிப்பாளர் பதவியைப் பெற்றார். அவர் மிகுந்த ஆர்வத்துடன் பல நாடகங்களைத் தயா ரித்து ஒலிபரப்பினார். பல எழுத்தாளரை நாடகப் பிரதி எழுதத் தூண்டினார். அவர் தயாரித்த வானொலி நாடகங்களுள் மகாகவி ஷேக்ஸ்பியரின் ஒதெல்லோ நாடகம் பலரின் பாராட்டையும் பெற்றது.
விக்னேஸ்வரனின் நாடக ஆர்வம் வானொலியுடன் மட்டும் நிற்கவில்லை. திரைப்படம், தொலைக்காட்சி ஆகியவற்றினூடாக நாடகம் தயாரிப்பதில் அவர் மனம் லயித்தது. மேனாட்டு நவீன நாடக உத்திகள் பற்றி அறியும் ஆவல் கொண்டார். இத்து றையில் தன் அறிவை விருத்திசெய்வதிலும் ஆர்வம் காட் டினார். அக்காலத்தில் நாடக எழுத்தாளராக விளங்கிய காலஞ் சென்ற என் கணவர் இ.இரத்தினம் அவர்களுடன் அடிக்கடி உரையாட வருவார். இவ்விளைஞன் நாடகத்துறையில் சிறந்து விளங்குவார். தான் ஈடுபடும் கலையில் உயர்நிலை அடைய வேண்டும் என்றதோர் தீவிரம் அவரிடம் உண்டு. அதுவே அவர் வெற்றிக்கு முதல் படி என்று என் கணவர் கூறுவார். அவர் கூறியது போலவே, விக்னேஸ்வரன் மிக விரைவில் முன்னேறினார். திரைப்படம், தொலைக்காட்சி ஆகிய ஊடகங்களின் நுணுக்கங் களைத் தாமே கற்றுக்கொண்டார்.
1980-81ம் ஆண்டுகளில் இலங்கையில் தொலைக்காட்சி ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டன. ரூப வாஹினிக் கூட்டுத்தாபனத்துக்குத் தயாரிப்பாளர் தெரிவுசெய்து, பயிற்சி அளிக்கும் திட்டத்தை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாப னம் மேற்கொண்டது. இதற்கென ஒஸ்திரேலிய ஒளிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பயிற்சியாளராகக் கடமையாற்றிக்கொண்டிருந்த பற் அலெக்ஸாந்தர் (Pat Alexander) என்பவர் தலைமையில் நடந்த தேர்வில் விக்னேஸ்வரன் தெரிவு செய்யப்பட்டார். திரைப்படம், தொலைக்காட்சி ஆகிய ஊடகங்களின் நுணுக்கங்களை, அவற்றில் செயல்முறையில் ஈடுபடுமுன்னரே இவ்விளைஞர் நன்கு அறிந் துள் ளார் எனத் திருஅலெக்ஸாந்தர் விக்னேஸ்வரனை வியந்து பாராட்டினார். இப்பாராட்டு நியாயமானதே என்பதை நிரூபிக்கும்
4 வாழ்ந்து பார்க்கலாம்

வகையில் 1981இல் இலங்கைத் திரைப்படக் கூட்டுத்தாபனம் நடத் திய சிறந்த திரைப்படப்பிரதிக்கான போட்டியில் 'கிராமத்தின் இதயம்' என்ற தலைப்பில் விக்னேஸ்வரன் எழுதிய பிரதிக்கே முதற் பரிசு கிடைத்தது.
198ஒக்டோபர் கோலாலம்பூரில் உள்ள ஆசிய ஒலி9sfuglu Gutiéis. To figuous riflis (Asian Institute for Broadcast bevelopment) தொலைக்காட்சியில் பயிற்சி பெறுவதற்கு அனுப் பப்பட்ட குழுவில் விக்னேஸ்வரனுடன் நானும் சென்றிருந்தேன். அங்கு, கனடா ஒளிபரப்பு நிறுவனத்தைச் சேர்ந்த டொன் எல்டர் (Don Elder) நடத்திய தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்புப் பயிற்சியின்போது, விக்னேஸ்வரனின் ஒளிபரப்புக் கலைத்திறன் முகிழ்த்துவருவதைக் கண்டேன். ரூபவாஹினித் தமிழ்ப் பிரிவி னுக்கு நல்ல ஒரு தயாரிப்பாளர் கிடைத்துள்ளார். புதிதாக ஆரம் பிக்கும் ஒளிபரப்பு நிலையத்தில், தமிழ்ப் பிரிவிற்கு நல்லதோர் அத்திவாரம் இடப்பட்டுள்ளது என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது. அதனால் மனதில் ஒரு நிம்மதியும் பிறந்தது. ஏனெ னில், ரூபவாஹினி நிகழ்ச்சிப் பிரிவிற்குப் பொதுவாகவும், குறிப்பாகத் தமிழ் நிகழ்ச்சிகட்கும் பணிப்பாளராக நான் நியமனம் பெற்றிருந்தேன்.
1982 ஜனவரியில் ரூபவாஹினி ஒளிபரப்பு ஆரம்பமாகியது. வீடுகள்தோறும் தொலைக்காட்சிக் கருவிகள். மக்களின் எதிர் பார்ப்போ அளப்பரியது. ரூபவாஹினியில் கலையகங்கள் இரண்டே. ஒளிப்பதிவு, எடிட்டிங், கமரா வசதி முதலியவற்றிற்குச் சிங்களப் பகுதியுடன் போட்டியிடவேண்டிய நிலை. தொலைக்காட்சியில் வகை வகையான நாடகங்களைப் பார்த்து மகிழத் தமிழ் மக்களுக்குப் பேரவா. ஆயின், தொலைக் காட்சியில் பிரதானமாகக் கதாநாயகியாக நடிக்க முன்வரும் தமிழ்ப் பெண்கள் மிக அரிது. வெகு சிலருக்கே இவ்வாறு நடிப்பதற்குக் குடும்பத்தினரின் அனுமதி கிடைக்கும். அனுமதி பெற்றோர் திறனுடையோரெனும் உறுதியும் இல்லை. இத்தகைய வசதியீனங்கள் பல இருந்த போதிலும், ரூபவாஹினியில் முதன்முதல் இடம்பெற்ற நாடகம் தமிழில் ஒளிபரப்பான 'கண்ணாடி வார்ப்புகள் ஆகும். டெனஸி வில்லியம்ஸ் (Tennessey Williams) எனும் ஆங்கில நாடக ஆசிரியர் எழுதிய Glass Menageries எனும் நாடகத்தைத் தமிழில் மேடை நாடகமாக திரு கேயாலேந்திரா தயாரித்து அளித்திருந்தார். இந்நாடகத்தையே ஒளிபரப்புக்கு அமைத்து விக்னேஸ்வரன் தயாரித் தார். தொலைக்காட்சி ஆரம்பித்து இரு வாரங்களுக்கிடையில் இத்தகைய பாரிய நிகழ்ச்சியைத் தயாரித்தளிக்க முன்வந்த விக்னேஸ்வரனைப் பலரும் வியந்து பாராட்டினர். மலேஷியாவில் பயிற்சியளித்த டொன் எல்டரும் அப்போது இலங்கையில்
5 வாழ்ந்து பார்க்கலாம்

Page 5
ரூபவாஹினித் தயாரிப்பாளருக்கு ஆலோசனை வழங்கச் சிறிது காலம் தங்க நேர்ந்தது. அவரும் விக்னேஸ்வரனின் முயற்சியைப்
பெரிதும் பாராட்டினார். சிங்கள நாடக, திரைப்பட நெறியாளர் பல ரும், ஒளிபரப்புத் துறையில் தோன்றியுள்ள திறமையுள்ள தயாரிப்பாளர் என விக்னேஸ்வரனை அறிய முற்பட்டனர். இதன் பயனாக, ரூபவாஹினியிலே தமிழ் நிகழ்ச்சிப் பகுதிக்கு ஒரு தனி மதிப்பு ஏற்பட்டது.
ரூபவாஹினியின் நிகழ்ச்சி நிரலில் தமிழ் நிகழ்ச்சி களுக்கென ஒதுக்கப்பட்ட நேரம் சிறிதளவே. தேர்ச்சிபெற்ற தயா ரிப்பாளர் குறைவாக இருந்தமையால், ஆரம்பத்தில் நமக்குக் கிடைத்த சொற்ப நேரத்தை நன்முறையில் பயன்படுத்துவதே புத்தி யென எண்ணிச் செயற்பட்டோம். 'கலையரங்கம்’ என்ற தலைப் பில் இடம்பெற்ற அரைமணிநேர ஒளிபரப்பில் நாடகம், நாட்டியம், இசைக் கச்சேரி, நாட்டுக்கூத்து, வில்லுப்பாட்டு எனப் பலதரப்பட்ட நிகழ்ச்சிகளையும் விக்னேஸ்வரன் ஆர்வத்துடன் தயாரித்து ஒளிபரப் பினார். நான் பணிப்பாளராகக் கடமையாற்றிய காலத்திலே விக்னேஸ் வரன் தயாரித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தொலைக்காட்சி நாடகங்கள் மூன்று பற்றிய சில குறிப்புகளை இங்கு தருகிறேன்.
கற்பனைகள் கலையவில்லை - இதுவே முதன்முதலாக வெளிக்களத்தில் பதிவுசெய்து ஒளிபரப்பப்பட்ட ஒளிநாடகம். மனைவியில் உண்மை அன்புகொண்ட கணவன் மனதில், அவள் நோய்ப்பட்ட வேளை சற்றே சலனம் ஏற்படுகிறது. பிறமாதரை உள்ளத்தாலும் நினைக்காதவர் எனத் தன்மேல் கடைசிவரை மனைவி அசையாத நம்பிக்கை கொண்டிருந்தாள் என உணர்ந்த கணவன், அவன் மனம் நாடிய பெண்ணையே மறுமணம் செய்யுமாறு மரணப் படுக்கையில் மனைவி கேட்டபோதும், அவள் வேண்டுகோளை நிறைவேற்றாது விடுகிறான். தன்னைப்பற்றி மனைவி கொண்டிருந்த கற்பனைகள் கலையவில்லை என்பதை நிலைநாட்டுகிறான் கணவன். இதுவே நாடகத்தின் கதை. கதையின் சுருக்கத்தைக் கேட்ட ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தில் அப்போது தலைவராக இருந்த திரு எம்.ஜே.பெரேரா அவர்கள், ”தமிழர் இலட்சியவாதிகள். கற்புநெறி போற்றுபவர். உண்மை வாழ்க்கை இப்படி இருக்குமா?’ என்று என்னிடம் கூறினார். இது ஒரு இலட்சியவாதியின் கனவு என்று நான் பதில் சொன்னேன்.
நிஜங்களின் தரிசனம் - சீதனம் பெறுவதைத் தீவிரமாக எதிர்க்கும் இளைஞன். தான் காதலித்த ஏழைப் பெண்ணை மணக்கிறான். ஆயின், வாழ்க்கை இலகுவாக அமையவில்லை. பொருள் இல்லாக் குறையினால் தம்பதிகள் அல்லல் படுகின்றனர். வறுமையை ஏற்று வாழ இளைஞனின் வரட்டு கெளரவம் இடம்
6 வாழ்ந்து பார்க்கலாம்

கொடுக்கவில்லை. போதாக்குறைக்குச் சீதனம் பெற்றுச் செல்வ நிலையில் சுகவாழ்வு வாழும் நண்பனின் நிலையைப் பார்த்து அவன் உள்ளம் குமுறுகிறது. அதேவேளையில் தங்கையின் திருமணத்திற்குப் பொருளுதவி நாடி வந்திருக்கிறார் தந்தை. இவ்வளவும் சூழ்ந்ததும் இளைஞனின் இலட்சியம் ஈடாடுகின்றது. வாழ்க்கையின் உண்மைநிலை தெரிகிறது. நிஜங்களின் தரிச னத்தை நாம் ஒளிநாடகத்தில் சித்தரித்ததைச் சீர்திருத்தவாதிகள் சிலர் ரஸிக்கவில்லை. சீதன ஒழிப்பிற்காக நாம் பாடுபட்டு, ஓரளவு வெற்றியும் பெற்றுவரும் வேளையில் இப்படி ஒரு நாடகத்தை ஒளிபரப்பி சீதனம் பெறுவதே புத்தியான செயல் என்று ரூபவாஹினி நிரூபித்துவிட்டதே என்று எம்முடன் போர் தொடுத்தனர். சீதன ஒழிப்பில் எங்கே எப்போது யார் வெற்றி பெற்றார்கள் என்பது இன்றும் புரியவில்லை. மேலும் நாடகத்தின் இறுதியில் இடம் பெற்ற வாசகங்கள் காட்டிய உண்மையை இவர்கள் கவனிக்க வில்லைப் போலும், கலைஞன் வாழ்வின் பிரச்சினைகளைச் சித்த ரித்துக் காட்டுவான். மக்கள் சிந்தனையைத் தூண்டுவான். பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவோ, எந்தவொரு கருத்துக்கும் பிரசாரம் செய்யவோ அவன் முற்படுவதில்லை என்பதை உணராத விமர்சகருக்கு நாம் என்ன சொல்ல முடியும் விக்னேஸ்வரன் எழுதி நெறிப்படுத்திய இந்நாடகம் சிறந்த குறுநாடகத்துக்கான விஜய ரூபவாஹினி விருதை இவருக்குப் பெற்றுக்கொடுத்தது.
உதயத்தில் அஸ்தமனம் - முதன்முதலாக யாழ்ப் பாணத்தில் வெளிக்களத்தில் பதிவுசெய்யப்பட்ட ஒளிநாடகமாகும். 1983 ஜூலை மாதத்தையடுத்து வந்த பல மாதங்களில் தமிழ்க் கலைஞர் கொழும்பு வருவதில் ஏற்பட்ட கஷ்டங்களினால் தமிழ் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதில் பல தடைகள் நேர்ந்தன. அப்போது ரூபவாஹினி அதிகாரிகள் தொலைக்காட்சிக் குழுவொன்றை யாழ் நகருக்கு அனுப்பிப் பல நிகழ்ச்சிகளை அங்கு பதிவுசெய்து வருவதற்கு ஏற்பாடு செய்தனர். 1984 ஜனவரி மாதத்தில் யாழ்நகர் சென்ற தொலைக்காட்சிக் குழுவில் விக்னேஸ்வரனுடன் நானும் சென்றேன். இந்நாடகத் தயாரிப்பில் நேரில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்பட்டது. இவ்வொளி நாடகம் உட்படப் பல நிகழ்ச்சிகளைப் பதிவுசெய்து வெற்றிகரமாகத் திரும்பினோம். இவ்வாறு மீண்டும் யாழ்நகர் சென்று நிகழ்ச்சிகளைப் பதிவுசெய்து வரவேண்டும் என்ற ஆவல் எம் எல்லோர் மனதிலும் எழுந்தது. ஆயின் எம் ஆவல், நாடகத்தின் தலைப்பைப்போல் உதயத்திலேயே அஸ்தமனமாகிவிடும் என்று அப்போது நாம் அறியவில்லை. நாடகத்தில் கதாநாயகியின் காதல் வாழ்வும் உதயத்திலேயே அஸ்தமனமாகிவிட்டது.
ரூபவாஹினியில் விக்னேஸ்வரன் தயாரித்து ஒளிபரப்பிய
பல்வகை நிகழ்ச்சிகளையும் பாரபட்சமற்ற, கலை நுணுக்கம் அறிந்தோர் பாராட்டினர். வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பிற்கும்
7 வாழ்ந்து பார்க்கலாம்

Page 6
தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பிற்கும் இடையேயுள்ள வேறுபாட்டை அறிந்தோர், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை இலகு வில் தயாரிப்பது சிரமம் என்பதை நன்கறிவர். ஆயின் தகுதி திறமை ஆகியன இல்லாவிடினும் இப்புதிய சாதனம் மூலம் விரைவில் புகழ்பெறலாம் என ஆசைப்பட்ட புல்லறிவாளர் சிலர் அவ்வப்போது தமிழ் நிகழ்ச்சிகளுக்கெதிராக விஷமப் பிரச்சாரம் செய்யத் தவறவில்லை. எனினும் இத்தகைய எதிர்ப்பை எல்லாம் விக்னேஸ்வரனால் வெற்றிகொள்ள முடிந்தது. எஸ்.பொ. அவர்கள் குறிப்பிட்ட அவரின் மூர்க்கமான கலையார்வம், செய்யும் தொழிலில் உள்ள திறமையால் ஏற்பட்ட திடமான தன்னம்பிக்கை, நேர்மை, அஞ்சாமை - இவை யாவும் அவர் வெற்றிக்கு உறுதுணை நின்றன.
ரூபவாஹினி ஆரம்பித்து சுமார் 18 மாதங்கள்வரை தடை யின்றி நிகழ்ச்சிகள் தயாரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அரிதான இப் புதிய சாதனமாகிய ஒளிபரப்புமூலம் நம் பழைய கலைப் பொக்கிஷங்களைப் பேணிக் காத்துப் பதிவில் வைக்கவும், புதிதான நாடக, நாட்டிய நிகழ்ச்சிகளைத் தயாரித்துக் கலையுலகில் புதிய தோர் சகாப்தத்தை விக்னேஸ்வரனின் உதவியுடன் உருவாக்கவும், நான் கண்ட கனவைக் கைவிட்டு 1884இல் பரதேசியாக நான் புறப்பட்டபோது, விக்னேஸ்வரன் அப்பணியைத் தொடர்வார் என்ற நப்பாசை உள்ளத்தில் இருந்தது. நப்பாசை என்று ஏன் சொல் கிறேன் என்றால், அப்போதே வானத்தில் கருமேகங்கள் சூழ்வதை உணர்ந்தேன். கனவு பலிக்காது என்று உள்மனம் கூறியது.
அதன்பின்னர் விக்னேஸ்வரனுக்குப் பல முன்னேற்றங்கள், பல சோதனைகள் ஏற்பட்டன. இறுதியில் அவர் சாமர்த்தியமாகப் பரதேசம் புகுந்தார் எனக் கேள்விப்பட்டதும், விக்னேஸ்வரனுக்காக, அவர் குடும்பத்திற்காக என் மனம் மகிழ்ச்சியடைந்தது. ஏனெ னில், கட்டுண்ட நிலையில் யாரும் கலை வளர்க்க முடியாது அல்லவா?
கலையைத் தொழிலாகக் கொள்ளாவிடினும், சாதனங்கள் கைவசம் இல்லை எனினும் கலைஞனின் உள்ளம் ஒய்வதில்லை. ஆகவேதான் மீண்டும் நாடகப் பணியில் விக்னேஸ்வரன் இறங்கியுள்ளார். நூல் வடிவில் அவர் நாடகங்கள் இறவாத புகழ் பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ஞானம் இரத்தினம் சிட்னி, அவுஸ்ரேலியா 15.05J998
8 வாழ்ந்து பார்க்கலாம்

முன்னீடு
சோம்பலை நான் அடைகாத்த ஒரு காலைப்பொழுது. தொலைபேசியின் கிணுகினுப்பு அலுப்புத் தருகிறது. பஞ்சியை உதற மணமின்றி எடுக்கின்றேன். மறுமுனையில் கவிஞர் அம்பி. இத்தகைய வேளையில் அழைத்தல் அம்பியின் சுபாவத்திற்கு
முரணானது. இன்று பதினொரு மணிக்கு இருவரும் Strathfeld ரயில் நிலையத்தில் சந்திக்கிறோம். அங்கிருந்து மிஸிஸ் ஞானம் வீட்டுக்கு மதிய விருந்துக்குச் செல்கிறோம் என் சோம்பல் எங்கே?
திருவாட்டி ஞானம் இரத்தினம் அவர்கள் என் மதிப்புக் குரிய இனியவர். அவருடைய துணைவர் இரத்தினம் அவர்கள் இறுதிவரை பரமார்த்த தமிழ்ப் பக்தராய் வாழ்ந்தவர். தமிழின் ஆழ-அகலங்களை அறிவதைத் தமது வாழ்க்கையாக்கி மகிழ்ந் தவர். புதிய தமிழ்ச் சொற்கள் பலவற்றை உருவாக்கித் தற்காலத் தமிழை வளம்படுத்திய உபகாரி. எதிர்ப்புக்கள் மத்தியிலே எழுத்து ஊழியம் பயின்ற எண்ணைப் பாராட்டி ஊக்குவித்த நேர்மையர். கணவரின் புகழிலே நிழலாக வாழாதவர் ஞானம் ஒலிபரப்பு-ஒளி பரப்புத் துறைகளிலே, சொந்தத் திறமைகளினால் முன்னோடியாகவும் சாதனையாளராகவும் நிமிர்ந்தவர். ரூபவாஹினியின் முதலாவது நிகழ்ச்சிப் பணிப்பாளராய் நியமனம்பெற்றுத் தமது திறமைகளை நாட்டினார். அவருடைய சாதனைகள் பெண்குலத்தின் கெளரவத் தினை நிமிர்த்தவும் உதவின. அவுஸ்திரேலியாவிலே தமிழ்ச் சிறார்களுக்கான பாட நூல்களை வடிவமைப்பதில் உருபுவாய்ந்த ஆலோசனைகள் நல்கி வாழ்பவர். அவர் வீட்டிலே விருந்து
விருந்து என்றால் புதிதும். அவர் வீட்டிலே, ஓரிரண்டு தசாப்தங்களை ஊடறுத்துச் சென்ற காலத்திற்குள் நுழைந்து விட்டதுபோன்ற பிரமிப்பு. காலம் மட்டுமா, இடமும் கொழும்புரொறிங்டன் சதுக்கத்திலுள்ள ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்-ரூபவா ஹினிக் கட்டடங்களிலே கண்ட எத்தனை முகங்கள். பாலசிங்கம் பிரபாகரன், சத்தியநாதன், நவீனன் இராஜதுரை, சற்குணராஜா, துரைரத்தினம், பூரீஸ்கந்தராஜா, சரோஜா.
இவர்கள் மத்தியில் விக்னேஸ்வரன்! எப்படி? ஏன்?
9 orbia) பார்க்கலாம்

Page 7
கனடாவிலிருந்து ஒரு குறுகிய கால வருகைதரவு தந்த அவர், சிட்னியிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் வாழும் பழைய சகாக்களை ஒரேயிடத்தில் சந்திக்க வசதி செய்வதற்காகவே திரு வாட்டி ஞானம் இந்த விருந்தினை ஏற்பாடு செய்திருக்கின்றார் என் கிற உண்மையின் முடிச்சு அவிழ்கின்றது. விக்னேஸ்வரனை நான் சந்தித்து ஒரு மாமாங்கமாகின்றதா?
பரதேசிகளுடைய வாழ்க்கையிலும் மாமாங்கம் என்பது நீண்டகால இடைவெளிதான்!
நைஜீரியாவில் அப்பொழுது பணியாற்றிக் கொண் டிருந்தேன். விடுமுறையில் ஊர் வந்த நேரம் கொழும்பில் என் நீண்டகால நண்பரான பல்கலைவேந்தன் சில்லையூர் செல்வராஜ னைச் சந்தித்தேன். என் ஆபிரிக்க அனுபவங்களை மையமாக வைத்து விக்னேஸ்வரன் ஒரு நிகழ்ச்சி தயாரிக்க விரும்புவதாகத் தெரிவித்தார். உடனடியாகத் தொடர்புகள்கொண்டு, அடுத்த தினமே மேற்படி நிகழ்ச்சியை ஒளிப்பதிவு செய்ய ஏற்பாடுகளும் செய்தார். நானும் சில்லையூரும் உரையாடுவதுதான் அந்த நிகழ்ச்சியின் பிரதான அம்சம். அப்பொழுது விக்னேஸ்வரனை ரூபவாஹினியின் தயாரிப்பாளராகச் சந்தித்தது.இன்று? பரதேசிகளுடைய வாழ்க்கை யிலும் காலம் எவ்வளவு விரைவாக உருண்டோடுகின்றது!
விக்னேஸ்வரன் சுபாவத்தில் அமைதியானவர். உரையாடு வது தென்றல் வீசுவதுபோல, வெகுஜன தொடர்பு சாதனங்களின் ஊடாக, கலைத்துறையில் அவர் வயதில் சாதித்தவை ஏராளம். இள வயதிலிருந்தே கலைமீது மூர்க்கத்தனமான பக்தி. நாடகம் என்கிற ஒரே கலைவடிவம் தயாரிப்பு சாதனங்களுக்கு ஏற்ப எத்தகைய மாறுதல்கள் அடைகின்றன என்பது பற்றிய தேடலிலே அவர் அதிகம் சிரத்தை ஊன்றினார். கலைஞன் ஒருவன் இத்தகைய தேடல்களில் ஈடுபடுதல் ஆக்கினை நிறைந்தது. இவற்றை விளங்கிக் கொள்ளவோ, சகித்துக்கொள்ளவோ ஏலாத சகாக்கள் மத்தியிலே பணி! அவர்கள் அபக்குவர் மட்டுமல்லர், அஞ்ஞானிகளும். மேய்ப்போனின் சிரசிலே முள்முடி ஏற்றுவதற்கு முப்பது வெள்ளிக் காசு ஊக்கத் தொகைகூடத் தேவையில்லை. அவ்வளவு அவசரக்காரர்களும். வரலாறு எதுவோ, விக்னேஸ் வரன் கனடாவில் இன்று பரதேசியாக வாழ்கின்றார்.
நான் என்னும் பரதேசியும் அவரும். பல விஷயங்கள் துணுக்குத் துணுக்கான உரையாடலிலே நகருகின்றன. ஒரு மேடைநாடகம்- ஒரு தொலைக்காட்சி நாடகம்- ஒரு வானொலி நாடகம், நாடகம் என்கிற ஒரே கலை வடிவம் தயாரிப்பு
10 வாழ்ந்து பார்க்கலாம்

சாதனங்களின் கேள்விகளுக்கு ஏற்ப எவ்வாறு மாறுதல்கள் அடை கின்றது? இவற்றைத் தரிசிக்கக் கூடியதாக ஒரு நூலை வெளி மிட விரும்புகிறேன். அதற்கு நீங்கள்தான் ஒரு முன்னிடு தருதல் வேண்டும். என உரையாடல் மத்தியிலே ஓர் அன்புக் கோரிக்கை. இஃது அவருக்கு மட்டுமல்ல, எனக்கும் கெளரவமானதே. ஒப்புக் கொண்டேன். ஆனாலும், அதனை உடனடியாக எழுதும் தோது எனக்கு வாய்க்கவில்லை. அவுஸ்திரேலியாவிலே தாத்தாவாகவும் வாழ்வதிலே சுகங்கள் இருக்கின்றபோதிலும், எழுத்து ஓர்மங்கள் சடைத்துநிற்கும் வேளைகளை உரிய முறையிலே பயன்படுத்தும் வாய்ப்புகள் அறுந்து வீழ்கின்றன. குழலிலும் யாழிலும் பார்க்கப் பேரப்பிள்ளைகளின் மழலைகள் இனிமையானவை என்பதினால், இந்த நேர மறுப்புகளைப்பற்றிப் பெரிதாகப் பிரலாபித்தல் முறையு மல்ல. இந்த முன்னீடு எழுதும் வேளை குதிர்ந்தபொழுது, சில பல வசதிகளையோ, வசதியீனங்களையோ கருத்திலே கொண்டு, ஒவ்வொன்றையும் தனித்தனி நூலாக வெளியிட விக்னேஸ்வரன் தீர்மானித்துள்ளதாக அறிகின்றேன். எனவே, "வாழ்ந்துபார்க்கலாம் என்கிற அவருடைய வானொலி நாடகத்திற்கான முன்னிடாக இது சுருக்கம் பெறுகின்றது.
கலை-இலக்கிய வெளிப்பாடுகளுக்கு ஏற்ற சக்தி மிக்க ஊடகமாக வானொலி ஒரு காலத்தில் திகழ்ந்தது. வானொலி நாடகங்கள் ஜனரஞ்சகமாயின. நான் குஞ்சனாக இருந்த காலத்தில் திருச்சியிலிருந்து ஒலிபரப்பான நாடகங்களிலே சுவையூன்றித் திளைத்ததுண்டு. பின்னர், 'சானா இலங்கை வானொலி நாடகங் களுக்கு 'கியாதி சேர்ப்பதில் வலு வெற்றி பெற்றார். ஒவியர் எழுத் தாளர்-நடைச்சித்திரர்-நடிகர்-நாடகத் தயாரிப்பாளர் எனப் பல கோலங்களைப் புனைந்து தமது படைப்பாற்றலை வெளிப்படுத்திய 'சானா’ வானொலி நாடக வடிவத்துக்குப் புதிய வனப்பும் பரிமா ணமும் பொருத்தி மகிழ்ந்தார். அவருடைய அடிச்சுவடுகளிலே நடந்து, ஆனாலும் சுய பாணிகளை வகுத்து, எம்.எச்-குத்தூஸம் கே.எம்.வாசகரும் இலங்கை வானொலி நாடகங்களுக்குப் புதிய சங்கதியும் சுருதியுஞ் சேர்த்தார்கள். தமிழ்மொழி பேசும் நாடகக் கலைஞர்களை உருவாக்குவதிலும், நாடளாவிய வகையில் அவர்களைப் பிரசித்தம் செய்வதிலும் இலங்கை வானொலியின் பங்களிப்பு மகத்தானதாகும். இலங்கையின் கலை-இலக்கிய வர லாற்றை எழுதத் தத்துவம் பெற்றதாய்த் திமிர்ந்தவர்கள், இவற்றை ஆவணப்படுத்துவதில் பஞ்சி பாராட்டுதல் அறிவு நாகரீகம் சார்ந்ததல்ல.
தமது முன்னோடிகளைப் பார்க்கிலும், நாடகக் கலை ஞர்களைக் கெளரவிப்பதிலே விக்னேஸ்வரன் முந்தி நின்றார்.
வாழ்ந்து பார்க்கலாம்

Page 8
பேரினவாத வன்முறைகளுக்கு அஞ்சி, கொழும்பு வாசங்களைத் துறந்து, பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும் உபாயங்கள் கலைஞர்கள் மத்தியிலே உருவான காலத்திலேதான் விக்னேஸ்வரன் நாடகத் தயாரிப்பாளர் என்கிற பதவியை ஏற்றார். அவ்வாறு சித றுண்டு வாழ நேர்ந்த கலைஞர்களும் தொடர்ந்து நாடகங்களிலே நடிக்கும் வாய்ப்பினை ஏற்படுத்தினார். நடிகர்கள் கொழும்பு வந்து செல்வதற்கான இலவச புகையிரதப் பயண வசதிகளை அவர் பெற்றுக்கொடுத்தார். இதன்மூலம் ஒரு தலைமுறையைச் சேர்ந்த நடிகர்கள் தலைநிமிர்ந்து வாழும் கெளரவம் கிட்டுவதாயிற்று. இத்தகைய உண்மைகள் ஆவணப்படுத்தப்படுதலும் சங்கை
யானதே.
வயோதிபத்திற்கு வளைந்துகொடுக்கும் ஞாபக மறதி என்னையும் தீண்டுகின்றதா? நான் எப்பொழுது விக்னேஸ்வரனை முதன்முதலாகச் சந்தித்தேன் என்பது என் நினைவில் இல்லை. ஆனால், 1981ஆம் ஆண்டில் அவரைச் சந்தித்தமையும், அவருடைய எழுத்தாற்றலை நாடறிய அங்கீகரித்தமையும் இன்றும் என் நெஞ்சில் பசுமையாக இருக்கின்றன. அரச திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் பிரதிமதிப்பீட்டுக் குழுவின் தலைவராய் நான் பணிபுரிந்த காலம் அது. ஈழத் தமிழர் மத்தியிலே, திரைப்படத் திற்கான பிரதிகள் எழுதும் ஆற்றலை இனங்காணுவதற்கும், ஊக்குவிப்பதற்குமான போட்டி ஒன்றினை கூட்டுத்தாபனம் என் ஆலோசனையின் பேரிலே நடாத்தியது. முதல் மூன்று பரிசுகளைப் பெறும் பிரதிகளை அடிப்படையாக வைத்துத் தயாரிக்கப்படும் சினிமாவுக்குக் கூட்டுத்தாபனம் முழுச் செலவையும் கடனாக வழங்கவும் சம்மதித்திருந்தது. எழுத்தாளர்கள் இப்போட்டியிலே உற்சாகத்துடன் கலந்துகொண்டார்கள். போட்டிக்கு எத்தனை பிரதி கள் கிடைக்கப்பெற்றன என்பது ஞாபகம் இல்லை. நிச்சயம் ஐம்பது பிரதிகளுக்கு மேல் இருக்கும். அனைத்துப் பிரதிகளை வாசித்து மதிப்பீடு செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. முதலில் பரிசுக்குத் தகைமையுடைய ஐந்து பிரதிகள் shortisted ஆயின. இந்த ஐந்தையும் குழு உறுப்பினர்கள் அனைவரும் வாசித்தனர். பின்னர் குழு இரண்டு தடவைகளிலே சந்தித்து விவாதித்து விக்னேஸ்வரன் சமர்ப்பித்த பிரதிக்கே முதல் பரிசு வழங்குதல் வேண்டுமெனத் தீர்மானித்தது. இது அவருடைய எழுத்தாற்றலுக்குக் கிடைத்த தகுதியான அங்கீகாரமாகும். கலை வெளிப்பாட்டிற்கு சினிமாவும் ஏற்ற ஓர் ஊடகம் என்பதை அவர் உரிய முறையிலே பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்னரே தரிசித்தார் என்பதை ஆவணப்படுத்துவதற்காகத்தான் இதனைப் பிரஸ்தா பித்தேன். பின்னர், பிரபல சிங்களத் திரைப்பட நடிகரான காமினி பொன்சேகாவுடன் இணைந்து நெறிப்படுத்தத் திட்டமிட்டிருந்த வாய்ப்பினை அவர் துறந்து, பரதேசியாக நேர்ந்தது. எத்தனையோ
12 வாழ்ந்து பார்க்கலாம்

தமிழர்களுடைய முன்னேற்றங்கள் கோடரிக்காம்புகளினால் தறித்தெறி யப்பட்டனவோ?
ஓர்மமும் ஆவேசமுமுள்ள கலைஞர்களுக்குச் சத்திய சோதனைகள் உண்டு. அவன் பாவிகளுக்காகச் சிலுவை சுமந்து உத்தரிக்கவும் நேரிடும். கடந்த காலங்களைக் கிளறி, சோகங்களை இரைமீட்டிப் பார்ப்பதிலே என்ன ஆனந்தம்? கடந்த ஏழு ஆண்டு காலம் அவரும் முகம் தேடும் அகதிகள் கூட்டத்திலே சேர்ந் துள்ளார். ‘புலம்பெயர்ந்த தமிழர் என்று பட்டுக் குஞ்சம் கட்டிக் கொண்டால் என்ன? மண்ணின் தியானங்களையும் விமுக்தி யையும் நெஞ்சிலே சுமப்பவர்கள், முகமிழந்த அவலத்துடனும் அவதியுடனும், ஒரு தமிழ் முகத்தினை அன்றேல் அடையா ளத்தினைத் தேடி ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். இந்தத் தேட லைத் துல்லியமாக உள்வாங்கிக்கொண்டு, ‘வாழ்ந்து பார்க்கலாம்’ என்கிற மகுடந்தாங்கும் இந்த இலக்கியத்தைப் படைத்துள்ளார்.
வாழ்ந்து பார்க்கலாம் என்கிற நாடகத்தினை ஊடக வசதிக்காக, விக்னேஸ்வரன் ஒலி நாடகமாக அமைத்திருந்தால் அது தற் செயலே முகமிழந்த மனிதர்கள் வெறும் குரல்களாக ஒலித்தல் ஏற்றதொரு குறியீடாகவே எனக்குத் தோன்றுகின்றது. குரல்தாரி களாக நடமாடும் மாந்தருக்கு முகங்கள் ஒட்டிப் பார்க்கும் சுயாதீனத்தையும் கதர்மத்தையும் சுவைஞரிடம் விட்டுவிடுதல் ஏற்றதோர் உத்தி. இது சித்திரிக்கும் வாழ்க்கைக் கோலங்களுக்கு, ஈழ மண்ணிலே நடமாடிய தமிழ் முகங்களை ஒட்டிப் பார்த்தல் கிஞ்சித்தும் பொருந்தாது. மாற்றமடைந்த அன்றேல் விகாரப்பட்ட முகங்கள் அவர்களுடைய புதிய அவலங்கள், ஆதங்கங்கள், அவதிகள் ஆகியவற்றை அவர் அங்கங்கள் தோறும் படர விட்டுள்ள பாங்கம் கலைத்துவமானது. பிரசாரமற்ற அணுகு முறை. ஆசிரியர் பாத்திரங்களிலிருந்து அந்நியமாக நிற்கும் நேர்மை. கொலஸ்ரோல் புராணம், பிள்ளைகளை sponsor செய்து எடுக்கும் ஏக்கம், மாப்பிள்ளையை sponser செய்வதன் அணுகு முறை, SpOnSC க்கு அப்பால் நம் தமிழர் கூட்டத்தைப் புகலிடம் அடையச் செய்வதிலுள்ள நுட்பங்கள், ஏஜன்ஸிக்காரருடைய அசகாயசூரத்தனங்கள், மதகடிச் சண்டியரின் புதிய கோலங்கள். வடலியில் வளர்ந்ததுகள் கனடாவில் நிமிர்ந்து வாழ்வதைக் கண்டு 'எரிச்சல் படுவதை மறைக்க, புகுந்த மண்ணிலேயே சாதி ஆசாரம் பேசும் மங்களாம்பிகை, புகலிடத்திலே கிடைக்கும் பிங்படி'யை நம்பாது உழைத்து வாழும் ஓர்மம்கொண்ட மகாலிங்கம், கலப்புத் திருமணம் செய்யத் துணிந்து நிற்கும் சதா, புகலிடத்தின்
丑3 வாழ்ந்து பார்க்கலாம்

Page 9
அலங்காரம் புனைந்தாலும் தமிழ் நெஞ்சங்களின் புதிய மாற்றத்தை வரவேற்கும் மலர், நாளைய தமிழச்சியாய் நிமிர்ந்து நிற்கும் வேணி, உழைப்பால் உயர்ந்து சீதணம் அது இதெண்டு ஒண்டும் எதிர் பார்க்கேலாது” என்று இலட்சிய ராங்கி பேசும் ரவீந்திரன்.பாலா வின் மகன் என்று ஒரு பாத்திரம். நிகழ்வுகளிலே பங்குபற்றாத ஒரு பாத்திரம். ஆனாலும் அவனுடைய செயல்கள் பற்றிய விமர் சனம் கேட்குதரின் மனசுகளிலே ஏற்படுத்தும் தாக்கம் பாரியது. நிகழ்வுகளுக்கு-நாடக நிகழ்வுகளுக்கு அப்பாலான வாழ்க்கைக் கோலங்கள் சாமர்த்தியமாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப் பட்டுள்ளன. ஆரம்பத்திலே புகலிட நாட்டிலே கால்பதித்துக்கொள் வதில் ஏற்படும் சிக்கல்களும் அவலங்களும் நுட்பமாகச் சித்தி ரிக்கப்படுகின்றன. பிரசாரம் என்கிற உணர்வை ஏற்படுத்தாத நுட்பம், காட்சிகள் நகரும்பொழுது, புதிய சூழல்களுக்கு ஏற்பச் சீரழிவதும், அவற்றை எதிர்கொண்டு உயர்ந்து நிற்பதும் சம அளவிலேயே வருகின்றன. இத்தகைய சமநிலை பேணுதல் நாடக நிகழ்வுகளுக்கு அதிக நம்புதிறனை ஊட்டுகின்றது. தனித்தனி அங் கங்களாக விசாரணை செய்தலைப் புத்திபூர்வமாகவே தவிர்க்
கின்றேன். காரணம், சுவைஞனுடைய சுவை உணர்வையும் சுயாதீனத்தையும் மதிப்பவன் நான். ஆனாலும், இன்னொரு விஷ யத்தினைச் சுட்டிக்காட்டுதல் என் அறம் சார்ந்தது. இலக்
கியத்திலே மொழிநடையை அதிகம் வற்புறுத்தலும் பாராட்டுதலும் என் சுபாவம். மண்ணை விட்டுத் தூரந் தூரமாக அகலும் பொழுது, மண்ணின் பேச்சுவழக்கிலே தொங்கிக்கொண்டிருத்தல் இயல்பு. இருப்பினும், புகலிடத்திலே சந்திக்கும் புதிய சூழல்க ளுக்கு ஏற்ற தமிழ்ச் சொற்களை உருவாக்கும் நேரமும் பொறுமையும் இருப்பதில்லை. அத்துடன் அவசியமுமில்லை. அங்கு பயிலப்படும் சொற்கள், அவை எந்த மொழி சார்ந்தனவாக இருந்தாலும், கையாளப்படுகின்றன. இந்த நுட்பங்களை நன்றாக அவதானித்து, நாடகத்தின் உரையாடல்களை எழுதியுள்ள விக்னேஸ்வரனின் கலாநேர்த்தி பாராட்டுதலுக்குரியது.
புகலிடம் நாடி வாழும் தமிழர்கள் இரு உலகங்களிலே வாழ்கிறார்கள். இறந்தகாலங்களிலே நனவிடை தோய்ந்து வாழ்தல் ஒரு முகம். இளந் தலைமுறையினருடைய எதிர்காலம் பற்றிய நெடுங்கனவுகளிலே சஞ்சரித்தல் மறுமுகம். ஏலாமைகளும், எதிர் பார்ப்புகளும் வாழ்ந்துபார்க்கலாம் இரண்டு முகங்களுக்கிடையில் சமரசம் நாடும் முயற்சிபோலவும், தோல்வியின் சுருதியை ஈற்றிலே நிராகரிக்கின்றது. இடர்களின் மத்தியிலே அவற்றை வெற்றிகண்டு, புதியதொரு சமுதாயம் எழுப்பும் சாத்தியமே இறுதியாகத் தொனிக்கின்றது. நாடகம் அடுத்த நூற்றாண்டின் நிகழ்வுகள் கொண்டதாக முடிவடைகின்றது. இருபத்தோராம் நூற்றாண்டிலே
14 வாழ்ந்து பார்க்கலாம்

பிறக்கப்போகும் ஒரு நாளிலே. முகம்தேடி அலையும் பரதேசிகள் தமது சொந்த மண்ணிலேயே, தமது முகங்களை மீட்டெடுப்பதாக நாடகம் முடிவடைகின்றது. இஃது அதீத கற்பனையா? இந்த முடிவு நிகழக்கூடியதா? எத்தனை விழுக்காடு சாத்தியம்? இத்தகைய வினாக்கள் எழுப்பி மறுகுவதற்கு நமக்கு அதிகாரம் இல்லை. ஏனென்றால், விக்னேஸ்வரனுடைய கற்பனைப் புரவி பூட்டப்பட்ட இக்கலைத் தேரிலே எதிர்காலத்திற்குள் பயணித்துப் பார்த்த பிறகுதான். வாழ்க்கையின் அவலங்களின் மத்தியிலே வாழ்ந்து பார்ப்பதிலே, முடிவிலே ஓர் ஒளிமயமான எதிர் காலத் தினைத் தரிசிக்கும் Optimistic உலகத்தை விக்னேஸ்வரன் படைக்கின்றார்.
முகந்தேடும் மனிதர்களுக்கு இதனைப்பார்க்கிலும் கவிசேஷம் வேண்டுமா?
"எஸ்.பொ."
சிட்னி, அவுஸ்ரேலியா 25.04.1998
5 வாழ்ந்து பார்க்கலாம்

Page 10
வானொலி நாடகங்களும் நானும்
எனது அதிஷ்டம் வானொலி, தொலைக்காட்சி என்ற இரண்டு ஊடகங்களிலும் நாடகப் பணியாற்ற எனக்கு வாய்ப்புக் கிட்டியது. அதிஷ்டம் என்று கூறினேன். காரணம் இலங்கைத் தமிழரின் அதிலும் யாழ்ப்பாணத் தமிழரின் சமூகப் பெறுமானங்கள் தனித்துவமானவை. பெரும்பான்மை நடுத்தர வர்க்கத்தினரிடையே நாடகத்தில் ஈடுபாடு காட்டுவது என்பது வாழ்க்கைக்கு உதவாத, குணக்கேடான, எள்ளி நகையாடப்பட வேண்டிய ஒரு செயலாகக் கருதப்பட்டது. அதிகபட்சம் ஆண்டுவிழா, பரிசளிப்பு விழா, கலைவிழா, சுகாதாரவிழா போன்ற கல்லூரி நிகழ்ச்சிகள் மட்டத்தில் மட்டுமே நாடக ஈடுபாடு மட்டுப்படுத்தப்பட்டது. பெற்றோர் தம் பிள்ளைகளுக்கு சங்கீதம் பயிற்றுவிப்பார்கள் ஏனெனில் சங்கீத ஆசிரியராகத் தொழில் புரியலாம். நாட்டியம் பயிற்றுவிப்பார்கள் ஏனெனில் நடன ஆசிரியராகப் பணியாற்றலாம். ஆனால் நாடகத்தில் ஈடுபட்டுத் தொழில்பெற முடியாது. ஏமது சமூகம் நாடகத்தின்பால் காட்டும் உதாசீனத்துக்கு இதுதான் மூலகாரணம். ஆனால் பல லட்சக் கணக்கில் தமிழர்கள் வாழ்கின்ற இலங்கைத் தீவில் ஒரு சமயத்தில் ஒரேயொருவருக்கு மட்டும் நாடகத்தில் ஈடுபடுவதற்காக கெளரவமான பதவி, மாதச் சம்பளம், வெளிநாட்டுப் பயிற்சி, சமூக அந்தஸ்து முதலியன ஒருங்கே கிடைக்கின்றன. அவர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்து தேசிய சேவையின் (சேவை 1) நாடகத் தயாரிப்பாளர். அந்த கெளரவம் மிக்க கலைத்தொழில், இலங்கைத் தமிழ் வானொலிச் சரித்திரத்தில் 'சானா' என்று பிரபல மான சண்முகநாதன், கே.எம்.வாசகர் ஆகியவர்களைத் தொடர்ந்து மூன்றாவதாக எனக்குக் கிடைத்தது. பல லட்சங்களில் ஒருவருக் குக் கிடைக்கும் வாய்ப்பு. அதனால்தான் அதிஷ்டம் என்று கூறினேன். பின்பு இலங்கைத் தேசிய தொலைக்காட்சியில் நாடகத் தயாரிப்பாளரானமை. தொடர்ந்து தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சி களுக்குப் பொறுப்பான பணிப்பாளரானமை, இவை யாவும் இலங் கையில் மிகமிக அரிதாகக் கிடைக்கும் வாய்ப்புகள்.
இதற்கெல்லாம் மூலகாரணம் நான் சிறுவயதில் இருந்தே நாடகத்தில் காட்டிய ஈடுபாடு. நான் படித்த காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரியில் ஆசிரியராகப் பணிபுரிந்த கலைப்பேரரசு ஏரி.பொன்னுத்துரை அவர்களின் ஒரு சுகாதாரவிழா நாடகத்தில் நடிக்க ஆரம்பித்த நான், பின்னர் கல்லூரிக்கு வெளியேயும் நாட கங்கள் நடிக்க ஆரம்பித்து, எனது தாயாரைத் தவிர என்மீது அக்கறை கொண்ட அனைவரின் மனதிலும் நான் அநியாயமாகப் போய்விடுவேனோ என்ற அச்சத்தை ஏற்படுத்திய வேளையில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றும் வாய்ப்புக்
16 வாழ்ந்து பார்க்கலாம்

கிடைத்தது. அதுவரை நான் வானொலி நாடகங்களில் அவ்வளவு அக்கறை காட்டியவன் அல்ல. எனது ஆர்வம் எல்லாம் சினிமாவில்தான் இருந்தது. எனது இளமைப்பருவத்தில் அவ்வளவாக வானொலி நாடகங்கள் கேட்டதும் கிடையாது. சந்தர்ப்பங்கள் கிடைத்தபோது கேட்டதெல்லாம் திருச்சி, சென்னை, பாண்டிச்சேரி வானொலி நிலையங்களில் இருந்து ஒலிபரப்பான நாடகங்கள்தான். அநேகமாக இலக்கிய நாடகங்கள். மண்டைதீவு ஒலிபரப்பி அறுபதுகளின் பிற்பகுதியில் இயங்கத் தொடங்குமுன் எம் பகுதிகளில் இந்திய வானொலி அதிலும் திருச்சி நிலையம் மிகத் தெளிவாகக் கேட்கும் என்பதால் அதைக் கேட்பதுதான் வழக்கமாக இருந்தது. மற்றும் விடுமுறைக்கு நான் பெற்றோரிடம் மலையகம் சென்றவேளைகளில் மிகச் சிறுவனாக இலங்கை வானொலி நாடகங்கள் சிலவற்றைக் கேட்டிருக்கிறேன். அவையும் பெரும்பாலும் இலக்கிய நாடகங்களே. சிலசமயங்களில் மாலையில் வர்த்தக சேவையில் ஒலிபரப்பான சானாவின் "லண்டன் கந்தையா நாடகத்தைக் கேட்டதுண்டு. இதுவும் மலையகத்தில் நான் விடு முறைக்குச் சென்றிருந்தபோதுதான். இது யாழ்ப்பாணப் பேச்சு வழக்கில் அமைந்த நாடகம். எனவே வானொலி நாடகம் என்றால் இலக்கியச் சொல் நடையில் அல்லது தூய தமிழில் இருக்கும்இருக்கவேண்டும், சாதாரண பேச்சு வழக்கில் அமைந்திருந்தால் அது நகைச்சுவை நாடகம் என்ற ஒரு மேலோட்டமான எண் ணம்தான் வானொலி நாடகங்களைப் பற்றி எனக்கு இருந்தது. அறுபதுகளின் நடுப்பகுதிவரை தயாரிக்கப்பட்ட சினிமாப் படங்களில் இந்த நிலை இருந்ததை அறிவீர்கள். கதாநாயகன், நாயகி அது சமூகப் படமாக இருந்தால்கூட தூய தமிழில்தான் பேசுவார்கள். நகைச்சுவை நடிகர்கள் சாதாரண பேச்சுவழக்கில் பேசுவார்கள்.
வானொலி நாடகங்கள் பற்றி இத்தகையதொரு கண் ணோட்டத்துடன் நான் 1970ஆம் ஆண்டு நிகழ்ச்சித் தயாரிப்பு உதவியாளனாக இலங்கை வானொலியில் சேர்ந்துகொண்டேன். எனது பணி நிகழ்ச்சிகளை ஒலிப்பதிவு செய்வது. பல்வேறு மொழி களில், பல்வேறு நிகழ்ச்சிகளை ஒலிப்பதிவு செய்யும் சந்தர்ப்பம். ஒலிபரப்பின் நுணுக்கங்கள் முதல் கலை இலக்கியத்துறைவரை மிக நுணுக்கமாக-விரிவாக அவதானிக்கக்கூடிய சந்தர்ப்பம். அப் போது தமிழ் நாடகத்துறைக்குப் பொறுப்பாக சானா அவர்கள் இருந்தார்கள். அவரது சகல ஒலிப்பதிவுகளையும் பெரும்பாலும் கே.எம்.வாசகர் செய்வது வழக்கமாக இருந்தது. கொழும்பு தமிழ் மேடை நாடகத்துறையில் பிரபலமாக இருந்த கே.எம்.வாசகர் அவர்கள், நான் பணியில் சேர்வதற்கு ஒருசில மாதங்கள் முன்பு நிகழ்ச்சித் தயாரிப்பு உதவியாளராகச் சேர்ந்திருந்தார். அப்போது தான் இந்த புதிய பதவி முதன்முதலாக ஆரம்பிக்கப்பட்டிருந்தது. அதற்குமுன்னர் தொழில்நுட்ப வியலாளர்களே ஒலிப்பதிவை மேற் கொண்டனர்.
17 வாழ்ந்து பார்க்கலாம்

Page 11
மேடை நாடகத்தில் பிரபலமான கே.எம்.வாசகர் வானொலியில் சேர்ந்ததும், தயாரிப்பு உதவியாளர் என்ற அந்தப் புதிய பதவியை ஏற்படுத்திய நோக்கத்துக்கமைய அவரே சானா அவர்களின் நாடகங்களை ஒலிப்பதிவு செய்யும் பொறுப்பில் ஈடுப டுத்தப்பட்டார். அவர் பணி செய்யாத சில சமயங்களில் எனக்கும் மற்றும் என்னுடன் பணியில் சேர்ந்த மற்றும் தமிழ் நிகழ்ச்சித் தயாரிப்பு உதவியாளர்களுக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.
அப்போது சானா அவர்கள், கிரமமாக ஒவ்வொரு கிழமையும் ஒலிபரப்பாகும் நாடக நிகழ்ச்சிகளைத் தயாரித்துக் கொண்டிருந்தார். ஒன்று பிரதி சனிக்கிழமை தோறும் இரவு 930க்கு ஒலிபரப்பாகும் அரை மணிநேர பிரதான நாடகம். (மாதக்கடைசிச் சனிக்கிழமைகளில் ஒரு மணித்தியாலம்) அடுத்து பிரதி ஞாயிறுதோறும் காலை 10.00 மணிக்கு ஒலிபரப்பாகும் ஒரு மணிநேரம் 'கதம்பம்’ என்னும் நகைச்சுவைத் துணுக்கு நிகழ்ச்சி. மற்றும் பிரதி புதன்கிழமைதோறும் இரவு 715க்கு ஒலிபரப்பாகும் 15 நிமிட நாடகம். இது நேரடியாக ஒலிபரப்பப்பட்டது (LIVE). அப்போது மெல்ல மெல்ல யாழ்ப்பாணப் பேச்சுவழக்கில் அமைந்த நாடகங்கள் தயாரிக்கப்படத் தொடங்கிய காலம். அதற்கு முந்திய காலகட்டங்களில் அநேகமாக இலக்கிய நடையில் அல்லது தூய தமிழில் அல்லது இந்திய பேச்சுவழக்கில் அமைந்த நாடகங்களே தயாரிக்கப்பட்டன. அந்தக் கால கட்டத்தில் பிரபலமாக இருந்த நடிகர்கள் அநேகமாக கொழும்பைச் சேர்ந்த ரி.வியிச்சையப்பா, ரோசாரியோ பீரிஸ், ஜபார், ராஜேஸ்வரி பிச்சாண்டி (பின்பு சண்முகம்), பிலோமினா சொலமன், விசாலாட்சி குகதாசன் போன்ற இந்திய வம்சாவளி நடிகர்களே. நான் சேர்ந்த காலகட்டங்களில் யாழ்ப்பாணப் பேச்சுவழக்கில் அமைந்த பிரதான நாடகங்கள் தயாரிக் கப்படத் தொடங்கியதால் சுப்புலஷமி காசிநாதன், கேமார்க்கண்டன், எஸ்.கே.தர்மலிங்கம், எஸ்.எஸ்.கணேசபிள்ளை, ரிராஜேஸ்வரன் போன்ற நடிகர்கள் பிரபலமாகத் தொடங்கியிருந்தார்கள். உணர்ச்சி கரமான நாடகங்கள் இந்தியச் சாயலுடன் கூடிய தூய தமிழில் இருந்தால்தான் (அக்கால சமூகப் படங்களின் பாணி) இரசிக்க முடியும் என்ற எண்ணத்தில் இருந்த எனக்கு இந்த வானொலி நாடகங்கள் ஒரு வித்தியாசமான உணர்வை ஏற்படுத்தின. ஆனால் கதம்பம் நிகழ்ச்சியில் இடம்பெற்ற யாழ்ப்பாணப் பேச்சுப் பாணியில் அமைந்த நகைச்சுவைத் துணுக்கு நாடகங்கள் மிகைப்படுத்தப்பட்ட பேச்சுப்பாணியாக இருந்தபோதிலும் இயல்பாக இருந்தன. கே.எம்.வாசகர் யாழ்ப்பாணப் பேச்சுவழக்கு, உணர்ச்சி கர சமூக நாடகங்களுக்குப் பொருந்தவே பொருந்தாது என்ற திட்டவட்டமான அபிப்பிராயத்தைக் கொண்டிருந்தார். அவரது பிரபலமான 'சுமதி போன்ற மேடை நாடகங்கள் இந்திய பாணி யிலேயே உரையாடலைக் கொண்டிருந்தன.
18 வாழ்ந்து பார்க்கலாம்

இந்தக் காலகட்டம் இலங்கைத் தமிழ் இலக்கிய உலகு, மண்வாசனை, யதார்த்தம் என்னும் கோட்பாடுகளைக் கொண்டு தீவிரத்துடன் தனித்துவமாக வளரத் தலைப்பட்ட காலம். எனவே எமது எழுத்தாளர்கள் புனையும் வானொலி நாடகங்களும் எமது மண்ணுக்குரிய தனித்துவத்துடன் மிளிரத் தொடங்கியமை தவிர்க்க முடியாததொன்று மட்டுமல்ல, ஏற்றுக்கொள்ளப்படவேண்டியதும் ஆகும் என்று எனது சிந்தனை மாற்றமடையத் தொடங்கியது. ஆனால் எமது பேச்சுவழக்கில் யதார்த்தமாக உணர்வுகளை வெளிக்காட்டுவதற்கு நடிகர்களுக்கு சற்று சுதந்திரம் வேண்டும் என்று நான் உணர்ந்தேன். சானா ஈழத்துத் தமிழ் வானொலி நாட கத் துறையின் முதல்வர். தயாரிப்பு நுணுக்கங்களை நன்கு பயின்றவர். ஒலிபரப்புக் கலையின் புனித ஸ்தலம் என்று போற் றப்படுகின்ற பியிசியில் தயாரிப்புப் பயிற்சி பெற்றவர். வானொலி நாடகங்கள் தயாரிக்கும் இலக்கணத்தை, சூத்திரத்தை இம்மி யளவும் பிசகாமல் கடைப்பிடித்தவர். வானொலி நடிகர்கள் ஒப்பந் தக் கடிதத்திற்கு உரிய வேளையில் பதில் அளித்து, ஒத்திகைகள், ஒலிப்பதிவு முதலியவற்றுக்கு குறித்த நேரத்திற்கு இன்றுவரை வருகிறார்கள் என்றால், அதற்கு சானா அவர்கள் அன்று மிகுந்த கண்டிப்புடன் கடைப்பிடித்த ஒழுக்கம்தான் காரணம். அவரது suri igalsou (PRODUCTION SCRIPT) uTiisTsis SILasi தயாரிப்பு இலக்கணங்கள் சம்பிரதாயங்கள் அப்படியே கடைப் பிடிக் கப்பட்டிருப்பதைக் காணலாம். ஒவ்வொரு வசனமும் இலக்க மிடப்பட்டிருக்கும். பல்வேறு நிற மைகளினால் தயாரிப்புக் குறிப்பு கள் இடப்பட்டிருக்கும். ஒவ்வொரு பக்கமும் எவ்வளவு நேரம் எடுக்குமென்று நிறுத்தல் கடிகாரம் (STOP WATCH) கொண்டு கணிக்கப்பட்டு அடியில் குறிப்பிடப்பட்டிருக்கும். முதல்நாள் ஒத் திகை, அடுத்தநாள் மீண்டும் ஒத்திகை, ஒலிபரப்பு அல்லது ஒலிப்பதிவு நடைபெறும். அந்தக் காலத்தில் எல்லாமே நேரடி ஒலி பரப்பாக இருந்தமையால், நாடகம் போன்ற பெரிய தயாரிப்புகளில் மிகுந்தளவு கண்டிப்பான தயாரிப்பு முறை கடைப்பிடிக்கப்பட்டது. பின்பு படிப்படியாக நிகழச்சிகளை ஒலிப்பதிவு செய்யத் தொடங்கிய பின்பும் அதே கண்டிப்பு கடைப்பிடிக்கப் பட்டது. காரணம், ஆரம்பத்தில் ஒலிப்பதிவு இயந்திரங்கள் நிகழ்ச்சிகள் நடைபெறும் கலையகங்களுக்குள் இருக்கவில்லை. சற்றுத் தொலைவில் அமைந்துள்ள கட்டுப்பாட்டு அறைக்குள்தான் இருந்தன. எனவே, கலையகத்தில் தயாரிக்கப்படும் நிகழ்ச்சிகள் நேரடியாக ஒலிபரப் பப்படுவதுபோன்றே சீராக நடைபெறவேண்டும். இல்லையெனில் மிகுந்த சிரமப்பட நேரிடும். ஒலிபரப்பில் நேரம் என்பது முதன் மையானதும் மிக முக்கியமானதுமான ஒரு விடயம் ஒத்திகை பார்த்து நேரம் கணிக்கப்பட்ட பின்பு நடைபெறும் இறுதி ஒத்திகையில் நடிகர் சற்று உணர்ச்சிவசப்பட்டு ஒரு சொல்லை திரும்பச் சொல்லிவிட்டால்கூட (உதாரணத்திற்கு முடியாது என்று
19 வாழ்ந்து பார்க்கலாம்

Page 12
சொல்லவேண்டியதை முடியாது, முடியாது என்று அழுத்தம் கொடுத்து சொல்லிவிட்டால்) சானா அவர்கள் ഉ__ങ്ങ് ஒத்திகையை இடைமறித்து, அப்படிப் பிரதியில் இருக்கிறதா? என்று கடுமையாக விசாரிப்பார். பிரதியில் இருப்பதைவிட ஒரு பெருமூச்சுக்கூட அதிகமாக விட முடியாது. ஏனெனில், ஒவ்வொரு நடிகரும் இப்படியே செய்தால் அவர் கணித்த நேரம் பிசகிவிடும். இத்தகைய தயாரிப்பு முறையினால்தான் அவர் குறித்த நேரத்தில் அச்சொட்டாக நிகழ்ச்சிகளை முடிக்கும் ஆற்றல்கொண்ட தயாரிப் பாளர் எனப் போற்றப்பட்டார். ஒலிபரப்பில் இது ஒரு முக்கிய திறமை. ஆனால் இது நடிகர்களை ஒரு இயந்திரம்போல் இயங்க வைப்பதாக நான் உணர்ந்தேன். இலக்கிய நாடகங்களில் அவ்வ ளவு பிரச்சனை இல்லாவிட்டாலும் சாதாரண பேச்சுவழக்கில் அமை யும் யதார்த்தமான நாடகங்களை நடிப்பதற்கு நடிகர்களுக்கு சுதந்திரம் வேண்டும்.
1973ஆம் ஆண்டு சானா அவர்கள் ஓய்வுபெற, காலஞ்சென்ற கே.எம்.வாசகர் அவர்கள் பிரதான நாடகத் தயாரிப் பாளர் ஆனார். சூழ்நிலையில் பெரும் மாற்றம். அதிகளவு ஈழத்து எழுத்தாளர்கள் நாடகம் எழுதத் தொடங்கினார்கள். பேச்சுவழக்கு பற்றிய வாசகரின் கருத்திலும் மாற்றம் ஏற்பட்டிருந்தது. அத்தோடு கலையகத்தினுள்ளேயே ஒலிப்பதிவுக் கருவிகளும் இடம்பெறத் தொடங்கிவிட்டன. நினைத்தபடி நிறுத்தி நிறுத்தி ஒலிப்பதிவைத் தொடரலாம். இதனால் வாசகருக்கு தயாரிப்புக் கெடுபிடிகளைத் தளர்த்தி, நடிகர்களுக்கு இயல்பாக நடிக்கக்கூடிய சுதந்திரத்தைக் கொடுக்கக்கூடியதாக இருந்தது. இதனால் தமிழ் வானொலி நாட கங்கள் மிகுந்த வரவேற்பைப் பெறத் தொடங்கின. யாழ்ப்பாணத் தமிழ் பேசும் நடிகர்கள் பிரபலமாகத் தொடங்கினார்கள். கப்புலஷமி காசிநாதன், விஜயாள் பீற்றர், ஆனந்தராணி, செல்வநாயகி, கமலினி, மார்க்கண்டன், தர்மலிங்கம், கே.எஸ்.பாலச்சந்திரன், யேசுரட்ணம், அமிர்தவாசகம் போன்ற மேலும் பல நடிகர்கள் அதிகளவில் மக்களுக்கு அறிமுகமானார்கள்.
காலஞ்சென்ற சில்லையூர் செல்வராஜன் அவர்களின் திரைப்படப் பிரதியின் கதையை மூலமாகக்கொண்டு கே.எம்.வாசகர் அவர்கள் எழுதித் தயாரித்து, மக்கள் வங்கியின் அனுசரணையுடன் வர்த்தக சேவையில் ஒலிபரப்பாகிய தணியாத தாகம் என்ற வானொலி நாடகம், இலங்கை வானொலி நாடக வரலாற்றின் உச்சக் கட்டம் என்று கூறலாம். யாழ்ப்பாணப் பேச்சுவழக்கில் அமைந்த சமூக வானொலி நாடகம் ஒன்று பிராந்திய வேறுபாடு களைக் கடந்து, அத்தகைய அபரிமிதமான வரவேற்பைப் பெற்றது ஒரு வரலாற்று நிகழ்ச்சி. அதற்கு முதல் சானாவின் "லண்டன் கந்தையா, ராமதாஸின் 'கோமாளிகள் போன்ற நாடகங்கள் வர்த்தக சேவையில் ஒலிபரப்பப்பட்டு மிகுந்த வரவேற்பைப் பெற்ற நாடகங்
20 வாழ்ந்து பார்க்கலாம்

கள்தான். ஆனால் நகைச்சுவை நாடகங்கள் என்றவகையில் அவை பெற்ற வரவேற்பு ஆச்சரியமானதொன்றல்ல.
கே.எம்.வாசகர் அவர்கள் உணர்ச்சிவசப்படுபவர். அதை வெளிப்படையாகவே காட்டிக்கொள்பவர். நாடக ஒத்திகை, ஒலிப் பதிவுகளின்போது அவர் தன்னை மறந்த நிலையில் நின்று நடிகர்களுக்கு நடித்துக் காண்பிப்பார். நடிகர்களுக்கு வசனங் களை வரிக்கு வரி சொல்லிக்கொடுப்பார். நடிகர்கள் உணர்ச்சி கரமாக நடிக்கும்போது அவர்களின் உணர்ச்சிகளுக்கேற்ப இவரின் முகபாவங்கள் மாறிக்கொண்டே இருக்கும். ஆரம்பத்தில் இத்தகைய நெறியாள்கையினால் நான் கவரப்பட்டாலும் காலப் போக்கில் இதில் குறைபாடு இருப்பதை உணர்ந்தேன். காரணம், காலம் செல்லச் செல்ல அவரின் நாடகங்களில் அனைவரும் ஒரே பாணியில் நடிக்கத் தொடங்கிவிட்டார்கள். குறிப்பாக, நடிகைகளும் புதிய நடிகர்களும் வாசகரைப்போலவே வசனங்களை ஏற்ற இறக்கங்கள், நிறுத்தங்களுடன் பேசத் தொடங்கிவிட்டார்கள். நடிகர்களின் சொந்தப் பங்களிப்பு மிகக் குறைவாக இருந்தது. நடிப்பும் யதார்த்தத்திலிருந்தும் சற்று மிகைப்படுத்தப்பட்டதாக இருந்தது.
இதேநேரம் தமிழ்ச்சேவை ஒன்றில் இரவு எட்டு மணி தொடக்கம் ஒன்பது மணிவரை ஒலிபரப்பான இஸ்லாமிய சேவையிலும் தமிழ்நாடகங்கள் ஒலிபரப்பப்பட்டன. இந்த ஒலிபரப்பு நேரம் அனைவரும் நிகழ்ச்சிகளைக் கேட்பதற்கு வாய்ப்பான நேரமாகையால் (PEAK HOUR) நாடகங்களில் ஆர்வம்கொண்ட தமிழர்களும் இந்நாடகங்களைத் தவறாது கேட்டு வந்தார்கள். இந்த நாடகங்களில் நடிகர்களின் பேச்சும் நடிப்பும் இந்திய திரைப்படப் பாணியில் அமைந்திருந்தன. மேலும் இந்த நாடகங் களைத் தயாரித்த திருகுத்தூஸ் அவர்கள் மிகுந்த இசை ஞானம் கொண்டவர். வடநாட்டு சாஸ்திரிய சங்கீதத்தை முறைப்படி கற்ற வர். இவர் நாடகங்களுக்கு உபயோகிக்கும் இடைஇசை மற்றும் பின்னணி இசை போன்றவற்றால் முஸ்லிம்சேவை நாடகங்கள் இந்தியத் திரைப்படங்களின் ஒலிச்சித்திரங்களைக் கேட்பது போன்ற பிரமையை ஏற்படுத்தின. இஸ்லாமிய நாடகங்களை எழுதுவதற் கென ஒரு குறிப்பிட்ட திறமைமிக்க எழுத்தாளர்கள் இருந்தார்கள். நடிப்பதற்கென ஒரு குறிப்பிட்ட நடிகர் குழாம் இருந்தது. குத்தூஸ் அவர்களின் முழுக் கவனமும் நாடகத்தை இசையினால் மெருகேற்றுவதாகவே இருக்கும். இதில் திருகுத்தூஸ் மிகுந்த அக்கறை எடுத்துக்கொண்டார். நிலையத்தில் எந்தக் கலையகத் தினுள் அவர் போகும்போதும் ஒரு நல்ல இசை காதில் கேட்டால் உடனே அந்த இசைத் தட்டை எடுத்து, அதன் இசைத் தட்டுக் காப்பகப் பதிவெண்ணைக் குறித்துக்கொள்வார். பின் தகுந்த சந்தர்ப்பங்களில் அந்த இசைத் தட்டைக் காப்பகத்திலிருந்து
21 வாழ்ந்து பார்க்கலாம்

Page 13
எடுத்து நாடகங்களில் பாவிப்பார். இந்த முறையை நானும் பின் பற்ற ஆரம்பித்தேன். இந்த வகையில் ஆங்கில சேவை ஒன்றில் இரவு நேரங்களில் கடமையாற்றும்போதெல்லாம் MUSIC FOR MELLOW MOOD என்ற நிகழ்ச்சியில் ஒலிபரப்பாகும் மனதை உருக் கும் இசைகளைக் கொண்ட இசைத்தட்டுகளின் சுட்டிலக்கங்களை நான் ஒரு பதிவுக் கொப்பியில் பதிவுசெய்து வைத்திருந்தேன். இந்த இசைகளை பின் நான் கண்ணாடி வார்ப்புகள், ஒதெல்லோ, இன்ஸ்பெக்டர் துரை போன்ற மொழிபெயர்ப்பு நாடகங்களை வானொலிக்கெனத் தயாரித்தபோது பாவித்தேன். அவை அமோக வரவேற்பைப் பெற்றன. இதேபோல் இந்தி, தெலுங்கு, மலையாளம், மலாய், அரபி என்று எந்த மொழி நிகழ்ச்சித் தயாரிப்பிலும் நான் கடமையாற்றும்போது, நல்ல இசைத்தட்டுகளின் எண்களைக் குறித்துக்கொண்டு அவற்றைப் பின்னாளில் எனது நாடகங்களில் பிரயோகித்தேன்.
இப்படியாக பல தயாரிப்பாளர்களின் தயாரிப்புகளை கூர்ந்து அவதானித்ததனாலும் மேலும் பல பயிற்சிப் பட்டறைகள், கருத்தரங் குகளில் கலந்துகொண்டதனாலும் எனது சொந்தத் தேடலினாலும் வானொலி, மேடை, திரை நாடகங்களைப் பற்றிய எனது அறிவை வளர்த்துக்கொண்டேன். மேலைத்தேய நாடகங்கள் பற்றி நான் அறிந்துகொள்வதற்கு எனக்கு உதவியவர்களுள் காலஞ்சென்ற தமிழ் அறிஞர் இ.இரத்தினம் அவர்கள் மிக முக்கியமானவர். அவருடனான மணிக்கணக்கான உரையாடலிலிருந்தும் அவர் எனக்களித்த பல நூல்களிலிருந்தும் நான் அறிந்துகொண்டவை அநேகம். இந்த நேரத்தில் 1979ஆம் ஆண்டு திருவாசகர் அவர் கள் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பயிற்சிக் கூடத்தில் ஒழுங்கமைப்பாளராக (ORGANIZER) uscipluffs பெற்றுப் போகும்போது, ஏற்கனவே வாசகரின் நாடகப் பிரிவின்கீழ் நான் தயாரித்த இரசமஞ்சரி என்ற சஞ்சிகை நிகழ்ச்சியில் ஒலிபரப்பான ஒலிவடிவங்கள் மூலமும் மற்றும் பரீட்சார்த்த நாடகங்கள் என்று நான் தயாரித்த நாடகங்கள் மூலமும் இனங்காணப்பட்டிருந்த நான் எந்தவித சிரமமுமின்றி பிரதான நாடகத் தயாரிப்பாளரானேன். நான் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத் தமிழ்ச் சேவையின் பிரதான நாடகத் தயாரிப்பாளனாகப் பதவியேற்றபோது, வானொலி நாடகங் களைப்பற்றி எனக்கென்று உறுதியான அபிப்பிராயத்தைக் கொண்டி ருந்தேன். அந்த அபிப்பிராயப்படி நாடகங்களைத் தயாரிப் பதற்கு தயாரிப்பு நிர்வாக முறையிலும் தயாரிப்பு முறையிலும் மாற்றம் வேண்டுமென்று கருதினேன்.
நிர்வாக ரீதியில் நான் எடுத்த நடவடிக்கைகள்:
வானொலி நடிகர் பட்டியலில் எத்தனையோபேர் இருந்தும்
ஒரு குறிப்பிட்ட சிலரே நடித்துக்கொண்டிருந்தார்கள். நடிகர்கள்
இடம்பெயர்ந்து தொடர்பற்றுப் போனமை, நடிகர் தேர்வில்
22 வாழ்ந்து பார்க்கலாம்

தெரிவுசெய்யப்பட்டபோதிலும் போதிய நடிப்பாற்றல் இல்லாதிருந் தமை, ஒப்பந்தங்களை சரிவர அனுசரிக்காமை காரணமாக நடிப்பதற்கு அழைக்கப்படாது விடுபட்டமை, வர்த்தக சேவையில் ஒலிபரப்பாகும் நாடகங்களில் நடிப்பவர்கள் தேசிய சேவையில் நடிக்கக்கூடாது என வாசகர் ஏற்படுத்தியிருந்த கட்டுப்பாடு காரண மாக ஆற்றல், அனுபவம் பெற்ற பல நடிகர்கள் வர்த்தகசேவை நாடகங்களில் மட்டுமே நடித்துக்கொண்டிருந்தமை இவைபோன்ற பல காரணங்களினால் வானொலி நடிகர் பட்டியல் குழப்பநிலையில் இருந்தது. இதனை சீராக்குவதற்கு நடிகர் பட்டியலில் இருக்கும் நடிகர்களுக்கு ஒரு மீள் தேர்வை ஒழுங்கு செய்தேன். அத்துடன் மேலும் புதிய நடிகர்களைத் தெரிவு செய்வதற்கு ஒரு புதிய நடிகர் தேர்வையும் ஒழுங்கு செய்தேன். அதுவரை காலமும் நிலையத் திலருந்து ஐந்து மைல் சுற்றாடலில் வசிப்பவர்கள் மட்டுமே இத்தகைய நடிகர் தேர்வில் பங்குபற்றலாமென்ற விதி இருந்தது. (பகுதிநேர அறிவிப்பாளர் தேர்விற்கும் இந்த விதி கடைப்பிடிக்கப் படுகிறது) இதனால் கொழும்பைப் பிறப்பிடமாகக் கொண்டவர்க ளும் உத்தியோக நிமித்தம் கொழும்பில் வசிப்பவர்களும் மட்டுமே இத்தகைய தெரிவுகளில் பங்குபற் றினார்கள். நாட்டின் ஏனைய பகுதிகளில் வசிக்கும் பல திறமைவாய்ந்த கலைஞர்கள் புறக்கணிக் கப்பட்டார்கள். எனவே மாதம் ஆகக் குறைந்தது பத்துச் சோடி இலவச புகையிரதப் போக்குவரத்துச் சீட்டுகளை நாடக நடிகர் களுக்கு வழங்க வேண்டும் என்ற எனது விண்ணப்பம், அப்பொழுது தமிழ்ச் சேவைக்குப் பொறுப்பாகவிருந்த திருமதி ஞானம் இரத்தினம் அவர்களால் பரிந்துரை செய்யப்பட்டு, மேலிடத்தால் அனுமதிக்கப்பட்டது. இதன் காரணமாக நான் நடத் திய புதிய நடிகர்களுக்கான தேர்வு நாடு தழுவியதாக அமைந்தது. அத்தோடு எழுபத்தேழாம் ஆண்டுக் கலவரத்தைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் சென்று வசிக்கத் தொடங்கிவிட்ட திறமைவாய்ந்த கலைஞர்களை அழைத்து நடிக்க வைக்கவும் ஏதுவாக இருந் தது. புகையிரத பிரயாணச்சீட்டு மாதத்துக்குப் பத்து மட்டும் என்று அனுமதிக்கப்பட்டிருந்ததால், நாடகத் தயாரிப்பினை போதிய கால அவகாசத்தோடு நுணுக்கமான முறையில் திட்டமிட வேண்டியிருந்தது. ஒரு வார இறுதியில் அழைக்கப்படும் நடிகர் கள் பல நாடகங்களில் நடிக்கக்கூடியதாக இருத்தல் வேண்டும். அந்த நாடகங்கள் அடுத்தடுத்து ஒலிபரப்பப்படாமல் தவிர்க்கும் வகையில் அவற்றை ஒலிபரப்புவதற்கென அட்டவணைப்படுத்த வேண்டும். இவற்றை செவ்வனே நடைமுறைப்படுத்த போதிய பிரதிகள் வேண்டியிருந்தன. நாடகம் தயாரிப்பதற்கு மிக முக்கிய மானது பிரதி. அதை போதியளவு பெறுவதற்கும் தரத்தை விருத்தி செய்வதற்கும் நான் மிகுந்தளவில் உழைக்க வேண்டி யிருந்தது. யாழ்ப்பாணத்துக்குச் சென்று எழுத்தாளர்களைத் தனிப்பட்ட முறையில் சந்தித்து எழுதத் தூண்டியதோடு, எழுதி அனுப்பப்படும் பிரதிகளை எழுத்தாளர்களுடன் நேரடியாகவோ
23 வாழ்ந்து பார்க்கலாம்

Page 14
அல்லது கடிதமூலமோ விவாதித்து திருத்தி வடிவமைத்தேன். இங்கு நான் குறிப்பிடவேண்டிய முக்கியமான ஒரு தகவல், ஒரு காலத்தில் இந் திய பேச்சுப்பாணி நாடகங்களே பெருமளவில் இடம்பெற்றபொழுதும் நான் தயாரிப்பாளராக இருந்தகாலத்தில் இந்திய பேச்சுப்பாணியில் அமைந்த பிரதிகளைப் பெற முடிய வில்லை. கொழும்பில் இருந்த ஒரு சில எழுத்தாளர்கள் குறிப்பாக அஷ்ரஃப்கான் போன்றவர்கள் அவ்வப்போது இந்திய பேச் சுப்பாணியில் எழுதினாலும் மலையகத்திலிருந்து ஒருவருமே நாடகம் எழுதவில்லையென்று கூறலாம். கிழக்கு மகாகாணத் திலிருந்து ஒருசில எழுத்தாளர்களே அவ்வப்போது எழுதினார்கள். அடுத்து, பிரதான தயாரிப்பாளரே நாடகப் பிரிவின் முழு நிகழ்ச்சிகளையும் தயாரிக்காமல் வேறு தயாரிப்பாளர்களையும் ஈடுபடுத்தும் நோக்குடன், அப்போது வர்த்தகசேவையில் எனது இடத்தை நிரப்புவதற்காக தயாரிப்பாளராகத் தெரிவுசெய்யப்பட்டிருந்த காலஞ்சென்ற திரு.வாசுதேவன் கதம்ப நிகழ்ச்சியையும், புதன் கிழமைதோறும் ஒலிபரப்பாகும் பதினைந்து நிமிட நேர நாடகத்தை திரு.ஜோர்ஜ் சந்திரசேகரனும், சனிக்கிழமைகளில் ஒலிபரப்பாகும் அரைமணித்தியால மற்றும் மாதத்தின் கடைசிச் சனிக்கிழமைகளில் ஒலிபரப்பாகும் ஒரு மணித்தியால நாடகங்கள், கவியரங்கம், சிறு கதை முதலியவற்றை நானும் தயாரிப்பதென முடிவாகியது. இதனால் நான் எனது நாடகத் தயாரிப்பில் அதிக கவனம் செலுத்த முடிந்தது.
தயாரிப்பு முறையில் நான் மேற்கொண்ட மாற்றங்கள்:
ஒரு நடிகனுக்கு எப்படி வசனத்தைப் பேசுவது என்று சொல்லிக்கொடுத்துப் பேசுவிப்பது நடிப்பல்ல என நான் கருதி யதால், நடிகர்களுக்கு பாத்திரத்தின் தன்மையை விளங்கப்படுத்தி, குறிப்பிட்ட வசனங்கள் என்ன அர்த்தத்தில் எழுதப்பட்டுள்ளன, அதில் வெளிக்காட்டப்பட வேண்டிய உணர்ச்சிகள் எவை என்று நான் எதிர்பார்க்கிறேன் என்பவற்றை விளக்குவதன்மூலம், நடிகர்கள் அதை நன்கு உணர்ந்துகொண்டு தம் சொந்தத் திறமையினால் அவற்றை வெளிக்கொணரும்போது, அவை தத்ரூபமாகவும் வேறுபாடுகள் நிரம்பியனவாகவும் இருக்கும் என்பதால் அத்தகைய நெறியாள்கையைக் கடைப்பிடித்தேன். இதனால் நடிகர்களுக்கு நாடகத்தில் ஈடுபாடு அதிகமாகியது. ஒத்திகைகளைக் குறைத் தேன். சானா காலத்தில் இரண்டு நாட்களாக இருந்த ஒத்திகை வாசகர் காலத்தில் ஒருநாளாகக் குறைக்கப் பட்டது. நடிகர்கள் திருப்பித் திருப்பிப் பல தடவைகள் ஒத்திகை பார்க்கும்போது அவர்களை அறியாமலேயே ஒரு இயந்திரத் தன்மை ஏற்பட்டு விடுகிறது, புதுமை கெட்டுவிடுகிறது என்பதால் நான் முதலாவது வாசிப்பிலேயே (FIRST READING) வசனங்களைத் திருத்துதல் முதற்கொண்டு அவற்றைப் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் வேண்டிய விளக்கங்களை அளித்தபின் ஒரு ஒத்திகை மட்டும்
24 வாழ்ந்து பார்க்கலாம்

பார்த்துவிட்டு நேரடியாக ஒலிப்பதிவிற்குப் போவதை விரும்பினேன். இதனால் ஒலிப்பதிவின்போது சகலரும் புதுமை குன்றாத ஈடுபாட்டோடு செயற்பட முடிந்தது. மொழிபெயர்ப்பு நாட கங்கள், இலக்கிய நாடகங்கள் போன்றவற்றுக்கு மட்டுமே பல ஒத்திகைகள் செய்தேன்.
நடிகர்களின் வசனங்களும் அதன்மூலம் வெளிக்காட்டும் உணர்வுகளும் மிகவும் இயல்பாக இருக்கவேண்டும் என்பதால் அவர்கள் நாடகப் பிரதியில் எழுத்தாளர் எழுதியிருக்கும் முறையில் மட்டுமே வசனத்தைப் பேசவேண்டுமென்று வற்புறுத்தாது, கருத்தை மாற்றாது நடிகர்கள் தாம் இயல்பாகப் பேசக்கூடிய வகையில் வசனத்தை-சொற்களை மாற்றிக்கொள்ள வேண்டினேன்.
நடிகர்களின் திறமையை அதிகம் வேண்டிநிற்கும் நாடகங்களைத் தயாரிக்கும்பொழுது நடிகர்களின் மிக உச்ச GusfluTGs, 6061T (BEST PERFORMANCE) Glugplbour(Ill.'(S -96. If கள் பிழைவிட்டால் அதைப்பற்றிக் கவலைப்படாது எனது அறிவு றுத்தலை எதிர்பாராது அவர்களாகவே தவறு ஏற்பட்ட இடத்திலிருந்து சற்றுப் பின்னோக்கிச் சென்று அதிலிருந்து நடிக் கும்படி வேண்டினேன். வழமையாக நாடகத் தயாரிப்பில் நடிகர்கள் நடிக்கும்போதே ஒலிக்குறிகள், இடையிசை, பின்னணியிசை போன்ற வற்றைச் சேர்ப்பது வழக்கம். இப்படிச் செய்வது நடிகர்களினதும் தயாரிப்பாளரினதும் கவனச் செறிவைக் குறைக்குமென்பதால் கலை யகத்தில் நடிகர்களின் நடிப்பை மாத்திரம் திருப்தியேற்படும் வகையில் பதிவுசெய்துகொண்டு பின்பு திரைப்படத் தயாரிப்பில் செய்வதுபோல் எடிட்டிங் அறையில் வைத்து எனக்கு வேண்டிய படி தொகுத்து தேவையான ஒலிக்குறிகள், இசை முதலியவற்றைக் கலந்து முழுமையான நாடகமாக்குவேன். இத்தகைய தயாரிப்பு முறை எமது நேரத்தையும் உழைப்பையும் கலையக வசதிக ளையும் அதிகம் வேண்டிநிற்கும் என்றாலும்கூட, இதனது இறுதி வடிவம் மிகத் தரம்வாய்ந்ததாக அமைந்துவிடுகிறது. எனது சிறந்த நாடகங்கள் என்று கணிக்கப்பட்ட ஒதெல்லோ போன்ற நாடகங்களை இந்த வகையில்தான் தயாரித்தேன்.
ஒரு நாடகத்தை தத்ரூபமாக நேயர்களின் மனக் கண்முன் கொண்டுவருவதற்குத் தேவையான ஒரு சின்ன ஒலிக்குறியைத் தெரிவுசெய்வதிலோ, முடிவடையும் காட்சி மனதில் ஏற்படுத்துகின்ற உணர்வுகளை சிதைக்காமல் முடியுமானால் உணர்வுகளை மேலும் கூட்டும்வண்ணம் (ENHANCE) இடை இசை, காட்சிமாற்ற இசை முதலியவற்றைத் தெரிவுசெய்வதிலோ, நாடகத்தின் தன்மைக்கேற்றவாறு பாவிக்கப்படும் பின்னணி இசையைத் தெரிவுசெய்வதிலோ நான் சிறிதேனும் சலிப்படைவது
25 ning i Arvid A.Fuh

Page 15
கிடையாது. மணிக்கணக்கில் சகல மொழி இசைத்தட்டுக் காப்ப கங்களிலும் தேடுதல் நடத்துவேன்.
வானொலி நாடகத் தயாரிப்பில் இந்த ஒலிக்குறிகளைப் பாவிப்பது. தேவையான இசையைத் தேவையான இடத்தில் பிரயோகித்தல் போன்றவை மிக நுட்பமான செயற் LITLT(5th. வானொலி நாடகத் தயாரிப்பு என்பது நேயர்களின் மனக்கண்ணில் காட்சிகளை உருவாக்குதல். திரைப்படம் இரசிகர் களின் புறக்கண்களில் காட்டப்படும் காட்சிகள். நெறியாளன் காட்டு பவற்றை மக்கள் நேரடியாகப் பார்க்கிறார்கள். அக்காட்சிகள் என்ன உணர்வுகளை மக்கள் மனதில் ஏற்படுத்தவேண்டுமென்று நெறியாளர் கருதுகிறாரோ அந்த உணர்வுகளை ஏற்படுத்தி விடுமேயானால் அது ஒரு வெற்றிப்படைப்பாகிறது. வானொலி நாடகங்கள் நடிகர்களின் குரல்கள், ஒலிக்குறிகள், இசை முதலிய வற்றைக்கொண்டு மக்களின் மனதில் தீட்டப்படும் காட்சி. இதில் மக்களின் அல்லது நேயர்களின் கற்பனை வளம் பெரும் பங்கு வகிக்கிறது. இதை சரியாகப் புரிந்துகொள்ளும் ஒரு தயாரிப் பாளருக்கு சிறந்த வானொலி நாடகங்களைத் தயாரிப்பது என்பது ன்றும் சிரமமான காரியமல்ல. சரியான கோடிட்டுக் காட்ட வண்டியதுதான். மிகுதியை நேயர்கள் பார்த்துக்கொள்வார்கள். என்னைப் பொறுத்தவரை எழுத்துக்கலைக்கு (WRITING) அடுத்த படியாக சிக்கல்களோ கட்டுப்பாடுகளோ அற்ற ஒரு கலை வடிவம் வானொலி நாடகங்கள் என்பேன். ஒரு எழுத்தாளன் தான் நினைப் பவற்றை எல்லாம் எழுதிவிடலாம். அதுபோல் வானொலி நாடகப் படைப்பாளியும் தான் நினைப்பவற்றை சிறிதளவு பிரயாசையுடன் படைத்துவிட்டால் சந்திர மண்டலத்தில் கதை நடக்கிறதா, போர்க்களத்தின் மத்தியிலே கதையா, கொந்தளிக்கும் சமுத்திரத்தின் மத்தியிலா? பிரச்சினையே கிடையாது. தேவையான ஒலிக்குறி களின் உதவியுடன் அந்தக் காட்சிகளை நேயர்களின் மனதில் தீட்டிவிடலாம். ஆனால் ஒரேயொரு குறைபாடு. கதை எழுதும் எழுத்தாளனால் எத்தகைய சிக்கலான உணர்வுகளையும் விபரித்து விட முடியும். ஆனால் வானொலி நாடகப் படைப்பாளியினால் அது முடியாது. அதற்கு மிகுந்த சிரமப்படவேண்டியிருக்கும். உதாரணத்திற்கு,
ரவி அப்படிக் கூறியதை கடத்திராவால் நம்ப முடியவில்லை. ஆயிரம் சம்மட்டிகள் கொண்டு இதயத்தைத் தாக்கியதுபோல் உணர்ந் தாள். அதிர்ச்சிதாண், ஆனால் அதை அந்த இடத்தில் வெளிப்படையாகக் காட்டுவது அநா கரிகமென்று நினைத்தாள். பக்கத்தில் கல்யாணி வேறு நிற்கிறாள். தனிமையில் இருந்திருந்தால்,
26 வாழ்ந்து பார்க்கலாம்

தனது மனது அடங்கும்வரை ஓவென்று கதறியி ருப்பாள். அப்படியும் அவளது மனது சமாதா னம் அடைந்திருக்குமோ தெரியாது. ஆனால் இப்போது வலிந்து வரவழைத்த புண்ணகையு டண், அப்படியா எனக்கு மிகவும் சந்தோ ஷம் ரவி என்றாள்.'
சிறுகதை அல்லது நாவல்களில் மிகவும் சுலபமாக விபரித்துவிட்டதை வானொலி நாடக எழுத்தாளராலோ நடிகராலோ சுலபமாக வெளிக்கொண்டுவந்துவிட முடியாது. இப்படிப்பட்ட சம்ப வங்களை நான் தயாரித்த பரீட்சார்த்த நாடகங்களில் கையாண்டி ருக்கிறேன். ஆனால் சாதாரண ஒலிபரப்பில் இடம்பெறும் நாடகங் களில் இவற்றைச் செய்வது கடினம்.
சானா அவர்களின் "லண்டன் கந்தையா அல்லது வாசக ரின் ‘தணியாத தாகம்’ போன்ற பரபரப்பாக மக்களின் வரவேற்பைப் பெற்ற தொடர்நாடகங்கள் எதனையும் நான் தயாரிக்கவில்லைத்தான். அவை அத்தகைய பரபரப்பை ஏற்படுத்தியமைக்கு அவை வர்த்த கசேவையில் ஒலிபரப்பப்பட்டமையும் ஒரு காரணம் எனலாம். ஆனால் நான் தயாரித்த சனிக்கிழமை இரவு நாடகங்கள் நாடுபூ ராகவும் பாமர மக்களிலிருந்து படித்தவர்கள்வரை சகல தரப்பின ரிடையேயும் பெரும் வரவேற்பைப் பெற்றன. சனிக்கிழமைகளில் நாடகங்கள் ஒலிபரப்பானால் தொடர்ந்து வரும் செவ்வாய்க்கிழமை முதல் வரத்தொடங்கும் நேயர்களின் கடிதக் குவியல்களே அதற்கு சான்றாக அமைந்திருந்தன. இலங்கை வானொலி நாடகங்கள் மக்களிடையே பெற்ற வரவேற்பைப்போன்று வேறு எந்தக் கலைப் படைப்புகளும் பெறவில்லையென்றே கூறலாம். இலங்கைத் தமிழர் கள் வானொலி நாடகங்களை இரசித்ததுபோல் இந்தியத் தமிழர்கள் தமது நிலையங்களில் ஒலிபரப்பாகிய நாடகங்களை இரசித்திருப் பார்களா என்பது கேள்விக்குறியே.
என்னைப்பொறுத்தளவில் வானொலி நாடகத் தயாரிப்பாள னாக நான் ஒரு வெற்றிகரமான கலைத்தொழில் புரிந்தேன் என்ற திருப்தி எனக்குண்டு. பாரம்பரியமாக பல லட்சக் கணக்கான மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்ற ஒரு நாட்டிலே, நம் முன்னோர் களால் வளர்க்கப்பட்டு, பல்லாயிரம் இரசிகர்களைக் கொண்டுள்ள ஒரு துறையிலே புகுந்து, அங்கீகாரம் பெற்று, மேல்நிலைகளை அடைவது என்பது சுலபமான காரியமல்ல. எமது உயர்வு நாம் ஈடுபடும் துறைகளிலுள்ள ஆற்றல், அனுபவம் வாய்ந்த நிர்வாகிகளின் அங்கீகாரத்தில்தான் தங்கியுள்ளது. அந்த வகையிலே என்னை இனங்கண்டு ஊக்குவித்த பலருக்கு நன்றிசொல்லக் கடமைப்பட்டுள்ளேன். அதிலும் நான் தற்கால வாழ்விலக்கணப்படி,
27 வாழ்ந்து பார்க்கலாம்

Page 16
பிழைக்கத் தெரியாதவன்' என்ற பிரிவில் அடங்குபவன். காரணம், முகஸ்துதி செய்யாதவன், குறைபாடுகளை குறிப்பாகக் கலைப் படைப்புகளில் காணப்படும் குறைபாடுகளை எந்தவிதத் தயக்கமு மின்றி வெளிப்படையாக விமர்சிப்பவன், கயமைக்குணம் கொண் டோரைத் திரும்பியும் பாராமல் புறக்கணிப்பவன், எப்போதுமே பலம் குன்றியவர்களின் பக்கம் நிற்பவன், சலசலப்புக் காட்டக் கூச்சப்பட்டு
ஒதுங்கியிருப்பவன்.
இத்தகைய ஒருவன், சாதாரண நிகழ்ச்சி ஒலிப்பதிவு உதவியாளனாகப் புகுந்து, ஒரு தேசிய தொலைக்காட்சியின் தமிழ் மொழி நிகழ்ச்சிகளுக்குப் பொறுப்பானவன் என்ற பதவியை அடைந் தது என்பது எனது சாதனை என்பதைவிட, என்னை இனங் கண்டு அங்கீகரித்த என் துறை சார்ந்த பெரியவர்களின் நேர்மை யான செயற்பாடுகள்தான் காரணம் என்பேன். எதிலுமே கறைபடிந் துள்ள தற்காலத்தில் இதை நம்புவது கடினமாக இருக் கலாம். ஆனால் என் மனதில் என் துறைசார்ந்த நிர்வாகிகள் அவர்களைப் பற்றி ஏற்படுத்தியிருக்கும் அபிப்பிராயம் ஒப்பற்றது, மிக உயர் வானது. அந்த வகையில் பலநூறு இளைஞர்கள் மத்தியில் பத்தொன்பது வயது இளைஞனான என்னை இனங்கண்டு, நிகழ்ச் சித் தயாரிப்பு உதவியாளனாகத் தெரிவுசெய்து, பின்னாளில் தொலைக்காட்சித் துறையை நிர்வகிப்பதற்கு எனக்குப் பல வழிகளில் ஆலோசனை தந்து வழிநடத்திய காலஞ்சென்ற க.செநடராஜா அவர்கள், வானொலிப் பயிற்சி நிலையத்தில் ஒலி பரப்பாளர்களைப் பயிற்றுவிக்கும்போது என் படைப்பாற்றல்களை இனங்கண்டு பின் என்னைத் தயாரிப்பாளனாக்கிய சி.வி.இராஜகந்தரம் அவர்கள், எனக்கு அதிகாரியாக இருந்தபோதும் அந்த எண்ணம் சிறிதும் ஏற்படாதவண்ணம் ஒரு தாயைப்போல ஆதரவு தந்த திருமதி.ஞானம் இரத்தினம், எனது சுபாவம் காரணமாக எனது அதிகாரியாக இருந்தபோதும் அவருடன் நான் பல விடயங்களில் முரண்பட்டிருந்தும் அதற்காக வன்மம் சாதித்து என் முன்னேற் றத்திற்கு எந்த வகையிலும் முட்டுக்கட்டை போடாத திருமதி பொன்மணி குலசிங்கம், இவர்களுடன் தான் ஒரு நாடகத் தயாரிப் பாளனாக இருந்தும்கூட, என்னிலுள்ள தயாரிப்புத் திறமை யைப் புரிந்துகொண்டு, அதை வெளிப்படையாகவே பலரிடம் பாராட்டிப் பேசி என்னை ஊக்கப்படுத்திய கே.எம்.வாசகர் அவர்கள், எனது பரீட்சார்த்த நாடக முயற்சிகளில் பங்குகொண்டு எனக்குப் பக்கபல மாக இருந்த ஜோர்ஜ் சந்திரசேகரன், நடராஜசிவம், விடுமுறையில் ஊர் செல்லும்போதெல்லாம் நாடகப் பிரதிகள் வேண்டி எழுத் தாளர்களிடம் நான் செல்லும் வேளைகளில், தனது அலுவல்களை ஒதுக்கி வைத்துவிட்டு என்னுடனேயே அலைந்த கே.எஸ்.பாலச் சந்திரன் போன்றவர்கள் என் நன்றிக்குரியவர்கள். மேலும் என் தொழில் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்குக் காரணமான மிக முக்கியமான ஒருவர் இருக்கிறார். அவர் நான் எழுதியபின் என்
28 வாழ்ந்து பார்க்கலாம்

னால்கூடப் படிக்கமுடியாத கிறுக்கல்களை அழகாகத் தட்டச்சில் பதித்து அவற்றிற்கு பிரதிகள் என்ற தகுதியைப் பெறவைத்து, இப்போதும் அப்பணியை சழைக்காது செய்துவரும் எனது வாழ்க்கைத் துணைவி சிவசக்தி. அவர் 1975ஆம் ஆண்டு வானொலி நிலையத்தில் தட்டச்சாளராகச் சேர்ந்தபின்னர்தான் நான் நாடக எழுத்தாளனாக முடிந்தது. இல்லையெனில், மற்றவர் களுக்கு விளங்கக்கூடியதாக எழுதும் சிரமத்தினால் நான் எழு
தாமலேயே இருந்திருப்பேன். இவர்களுடன் நான் நாடகம் தயாரித்த காலகட்டத்தில் வானொலி நாடகங்களை எழுதிய எழுத் தாளர்கள், நடிகர்கள் என் நன்றிக்குரியவர்கள். அவர்களின்
பெயர்கள் இங்கே ஆங்கில அகர வரிசையில் இடம்பெறுகிறது. நடிகைகளின் பெயர்கள் அவர்கள் நடித்தபோதிருந்த பெயர்களிலேயே இடம்பெறுகின்றன.
எழுத்தாளர்கள்
அகத்தியர், அன்ரனி ராஃபேல், அராலியூர் நா.சுந்தரம் பிள்ளை, தி.வ.அரியரத்தினம், அஷ்ரஃப்கான், ஞானசக்தி கந்தையா, இந்து மகேஷ், இணுவையூர் சிதம்பரதிருச்செந்திநாதன், இ.இரத் தினம், ஜே.ஜெயமோகன், எஸ்.ஜேசுரட்ணம், க.செ.குணரத்தினம், எஸ்.எஸ்.கணேசபிள்ளை, நாகேசு தர்மலிங்கம், நெல்லை க.பேரன், பாசத்தியசீலன், செங்கை ஆழியான், எஸ்.சண்முகம், சாரதா சண்முகநாதன், கேரி,சிவகுருநாதன், சுபைர் இளங்கீரன், வேத நாயகம், விஜயராணி செல்லத்துரை
நடிகர்கள்
பி.என்.ஆர்.அமிர்தவாசகம், எஸ்.எஸ்.அச்சுதன்பிள்ளை, அற்புதராஜ், அருணா செல்லத்துரை, ஆறுமுகம், எஸ்.எழில் வேந்தன், கே.எஸ்.பாலச்சந்திரன், ஃபிறாங் புஷ்பநாயகம், ஜவாஹர் பர்னாண்டோ, ஜோர்க்கிம் பர்னாண்டோ, ஜோர்ஜ் சந்திரசேகரன், ஜோபு நளிர், எஸ்.ஜேசுரட்ணம், எஸ்.எஸ்.கணேசபிள்ளை, கே.கந்த சாமி, கலைச்செல்வன், எஸ்.காசிநாதன், குமாரவேல், கோபால் சங்கர், லடீஸ் வீரமணி, எஸ்.லிங்கவேலாயுதம், ரிமயில்வாகனம், கேமார்க் கண்டன், நடமாடி இராஜரட்ணமி, சிநடராஜசிவம், இராயத்மநாதன், பரராஜசிங்கம், ரி வி. பிச்சையப்பா, பி. பிரபாகரன், போல் அன்ரனி, பூதரன் பர்னாண்டோ, குயின்டஸ் ஜீவன், ஆர்.ரகுநாதன், ரிராஜேஸ் வரன், எம்.ராகுலன், ரிராஜகோபால், ராஜா கணேஷன், எஸ்.ராமதாஸ், கேசந்திரசேகரன், எஸ்.செல்வசேகரன், மாஸ்டர் சிவலிங்கம், சிவ சுந்தரம், சிவபாலன் ஆர்.எஸ்.சோதிநாதன், சுந்தரராஜன், பூgதர் பிச்சையப்பா, எஸ்.கே.தர்மலிங்கம், தாசன் பர்னாண்டோ, எஸ்.திரு நாவுக்கரசு, உதயகுமார், எஸ்.வாசுதேவன், வேதநாயகம், விக்டர்.
29 வாழ்ந்து பார்க்கலாம்

Page 17
நடிகைகள்
ஆனந்தராணி ராஜரட்ணம், ஜெயந்தி அப்புக்குட்டி, ஜெயதேவி கந்தையா, ஏ.எம்.சி.ஜெயசோதி, கமலினி செல்வராஜன், லலிதா பர்னாண்டோ, மணிமேகலை இராமநாதன், மாதுரிதேவி கணேசதுரை, மொரீன் கனகராயர், நித்தியகல்யாணி காராளபிள்ளை, நீலாம்பிகை சுப்ரமணியம், பாக்கியம் கந்தசாமி, புஷ்பம் கோமஸ், பூங்கொடி ராஜரட்ணம், ராஜேஸ்வரி சண்முகம், சந்திரப்பிரபா மாதவன், சசி பரம்,சாமினி ஜெயசிங்கம், சாரதா விவேகானந்தன், சாந்தி சச்சிதானந்தம், சிறிதேவி கந்தையா, செல்வநாயகி தியாகராஜா, செல்வம் பர்னாண்டோ, சுபத்திரா கதிர்காமத்தம்பி, சுப்புலஷமி காசிநாதன், திலகா தில்லைநாதன், வனஜா யூரீநிவாசன், விஜயாள் மீற்றர், விஜயகுமாரி நடேசபிள்ளை, விசாலாட்சி ஹமீட், வேர்ஜினி பர்னாண்டோ, யோகா தில்லைநாதன்
நான் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நாடகத் தயாரிப்பாளர் பதவியிலிருந்து விலகி, பதினேழு ஆண்டுகளின் பின், கால வெள்ளத்தால் அடிபட்டு, பல ஆயிரம் மைல்களுக்கப்பால் ஒதுங்கியிருந்து, முழுக்க முழுக்க எனது ஞாபக சக்தியை நம்பித்தான் இதை எழுதுகிறேன். இதில் யாருடைய பெயர்க எாவது விடுபட்டிருந்தால், தயவுசெய்து பிழைபொறுத்து என்னுடன் இதில் காணும் முகவரியில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். சொந்த மண்ணைவிட்டு, திக்குத் திக்காக நாம் சிதறிவிட்ட இந்நிலையில், சந்தர்ப்பம் ஏற்படும்பொழுது சில தகவல்களைப் பதிவது வரலாற்று அவசியம் என நான் கருதுகிறேன்.
இனி வாழ்ந்துபார்க்கலாம் என்ற இந்நாடகத்தைப் பற்றி எனது சில கருத்துக்கள். இந்த நாடகத்தை எழுதுவதற்கு முழுக்க முழுக்கக் காரணமாக இருந்தவர் ஒருசில ஆண்டு களுக்கு முன் ரொரன்ரோவில் தமிழோசை" என்ற வானொலிச் சேவையை நடத்திக்கொண்டிருந்த திருபூரீஸ்கந்தா அவர்கள். கனடாவில் இத்துறையில் ஈடுபடாது ஒதுங்கியிருக்க நாட்டம் கொண்டிருந்த என்னை மிகவும் வற்புறுத்தி இதை எழுத வைத்ததோடல்லாமல், இதைத் தயாரிப்பதற்கு மிசஸாகா முதல் பல்வேறு இடங்களுக்கும் சென்று நடிகர்களைக் குறித்த நேரத்தில் கொண்டுவந்து தயாராக வைத்திருப்பது முதல், ஒலிப்பதிவுக்கான சகல உதவிகளையும் செய்து உதவினார். இந்நாடகம் 1995ஆம் ஆண்டு தை மாதம்முதல் ஏப்ரல் மாதம்வரை வாரந்தோறும் தமிழோசை வானொலியில் ஜெயசாயி நகை மாளிகையினரின் ஆதரவில் ஒலிபரப்பாகியது. தொடர்ந்து டியிஎஸ்.ஜெயராஜ் அவர் களால் 'மஞ்சரி’ பத்திரிகையில் தொடர்ச்சியாகப் பிரசுரிக்கப்பட்டது. பின்னர் திரு.இளையபாரதி அவர்களின் 24 மணித்தியால கனேடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திலும் ஒலிபரப்பாகியது. இந்
30 வாழ்ந்து பார்க்கலாம்

நாடகத்தை மக்கள் முன்னிலையில் எடுத்துச்சென்ற அனை வர்க்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இது வெறும் கற்பனைக் கதையல்ல. நாம் அன்றாடம் கேள்விப்படும் பரவலான சம்பவங்களின் ஒழுங்குபடுத்திய தொகுப்பு மட்டுமே. நாடகத் தன்மை ஏற்படும் விதத்தில் தொகுக்கப் பட்டுள்ளது, அவ்வளவே. பேசப்படும் வசனங்கள் நாம் தினம்தினம் கேட்கும் உரையாடல்கள்தான். இதில் இறுதிக் காட்சி மட்டுமே கற்பனை. இது அரசியல் ஆரூடமல்ல. அதைச் சொல்லும் அரு கதையும் எனக்கில்லை. இது இன்றைய எம்மவர் பலரின் எதிர்பார்ப்பு. அந்த வகையில் யதார்த்தமானதே. எத்தனை இழப்பு கள், அழிவுகள், இளைஞர்களின் உயிர்த் தியாகங்கள் எல்லா வற்றிற்கும் ஒரு நல்ல முடிவு வருமென்று எம்மில் பலர் கருதுகிறார்கள். அந்த எண்ணங்களின் வெளிப்பாடே அந்தக் காட்சி. தன்னாட்சி ஒன்று ஏற்படும் பட்சத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி மேம்பட்டு நிற்கும் இந்தக் கிாலகட்டத்தில், அத்த கையதொரு துரித வளர்ச்சி சாத்தியமாகாது என்றில்லை. இஸ்ரேலியர்களின் ஐம்பது வருட சரித்திரம் இதற்குச் சான்று. இந்த முடிவை மனோதத்துவ ரீதியில் அணுகினால் இது இன்று எம்மவர்களின் விரக்தி, இயலாமை, ஏக்கம், எதிர்பார்ப்பு, நம்பிக்கை போன்ற சகல உணர்வுகளின் வெளிப்பாடு என்பதைப் புரிந்து கொள்வீர்கள். இது நிறைவேறாது போய்விட்டால் பகற்கனவு. நிறைவேறிவிட்டால் தீர்க்கதரிசனம். காலம்தான் பதில்சொல்லமுடியும்.
இதனை நூலாக வெளியிடுவதன்மூலம் நான் அடையும் மகிழ்ச்சிக்கும் பெருமைக்குமான காரணங்கள் பல. அவற்றில் முதன்மையானவை, இலங்கைத் தமிழ் இலக்கிய வரலாற்றிலேயே ஒரு தலைசிறந்த புத்திஜீவியென நான் மதிக்கும் எஸ்.பொ. அவர்கள் இதற்கு முன்னீடு எழுதியிருப்பது, ஒலிபரப்புத் துறையில் எனது படிப்படியான வளர்ச்சிகளை மிக அருகிருந்து அவதானித்த அதிகாரியும், பின் இலங்கையில் ஒளிபரப்புத்துறை ஆரம்பிக்கப்பட்ட காலத்தில், ஒரு புதிய துறையை ஆரம்பிக்கும்போது முகம் கொடுக்கும் சகல கஷ்டங்களிலும் எனக்கு அதிகாரியாக இருந்து நெறிப் பத்தியவருமான என் மதிப்புக்குரிய திருமதி.ஞானம் இரத் தினம் அவர்கள் ஆசியுரை வழங்கியிருப்பது, வெகுஜனத் துறைகள் பற்றிய பயிற்சி அளிப்பதில் சர்வதேச அங்கீகாரம்பெற்ற ஒரேயொரு ஈழத்தமிழராகிய சி.வி.இராஜசுந்தரம் அவர்கள் இதற்கு பின் அட்டைக் குறிப்பு எழுதியிருப்பது. இவர்களின் ஆசியினால் இந்த நூலுக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கிறது என நான் நம்புகிறேன்.
இறுதியாக, இந்தப் புத்தகம் வெளிவருவதற்கு எனக்கு சகல வழிகளிலும் உதவிபுரிந்தவர்கள் பலர். அவர்களில் நவீனன்
3. வாழ்ந்து பார்க்கலாம்

Page 18
இராஜதுரை, இந்தப் புத்தகத்தை வடிவமைத்து அச்சிட்ட் PMJ பிறின்ரிங் அன்ட் கிற.பிக்ஸ் நிறுவனத்தினர், முகப்புப் படத்தை வரைந்த கருணா, அட்டையை வடிவமைத்த டிஜி கிற. பிக்ஸ் நிறுவனத்தினர் ஆகியோருக்கும் நன்றிசொல்லக் கடமைப்
பட்டவன்.
P. விக்னேஸ்வரன்
100 MORNELLE COURT APT#1080 SCARBOROUGH, ONTARIO. M1E 4X2
Tel:(416)724-1954
Sept 5' 1998
32 வாழ்ந்து பார்க்கலாம்

வாழ்ந்து பார்க்கலாம்
பிறந்து, உயிர்தரித்து இருந்து, இனம்பெருக்கி, அழிந்துபோவது என்னும் உயிரியற்கோட்பாட்டை நடத்திக்கொண்டிருந்த மனிதன், காலப்போக்கில் நாகரீகமடைய, உயிர்தரித்திருப்பதென்பது மேலும்பல அர்த்தங்கள், நோக்கங்கள், சாதனைகள் நிறைந்த வாழ்க்கை என்னும் செயற்பாடாகியது.
இந்த வாழ்க்கை மனிதனுக்கு மனிதன், இனங்களுக்கு இனம், ஊருக்கு ஊர், நாட்டுக்கு நாடு வேறுபட்டாலும், சகல மனிதரது நோக்கமும் சுதந்திரமான, கெளரவமான, சந்தோஷ வாழ்க்கை யொன்றை வாழ்வதே. ஆனால் நம் சக்திக்கு அப்பாற்பட்ட விதத்தில் வாழ்க்கை என்பது எல்லோருக்குமே சுதந்திரமான தாகவோ சந்தோஷமானதாகவோ அமைதியானதாகவோ அமைந்து விடுவதில்லை. ஈழத்தமிழ் மக்களைப் பொறுத்தளவில் அவர்களது வாழ்க்கை போராட்டமாகி, போராட்டமே வாழ்க்கையாகிவிட்ட நிலையில், எப்படியாவது வாழ்ந்துவிடவேண்டும் என்ற துடிப்போடு கனடா வந்த ஒரு குடும்பத்தினதும் அக்குடும்பத்தோடு சம்பந்தப் பட்டவர்களினதும் வாழ்க்கையை மிக யதார்த்தமாக வெளிப்படுத் தும் இந்நாடகம், இந்தத் துன்பமெல்லாம் ஒரு நன்மையான முடிவுக்கே என்ற எதிர்பார்ப்போடு முடிவடைகிறது. நாளைய பொழுது நல்லபொழுது என்ற நம்பிக்கைதானே எம் வாழ்க்கையை இன்று அர்த்தமுள்ளதாக்குகிறது.
33 enJPJ JP7M48AAPTuh

Page 19
பாத்திரங்கள்
மகாலிங்கம் --- வயது 55 மங்களாம்பினை --- வயது 53 ஏஜன்ஸி பாலா --- வயது 50 வேனி --- 6 rug. 20 சிவா --- வயது 25 சதா --- வயது 25 மலர் --- 6 Jug. 20 பூரணம் --- வயது 55 ரவீந்திரன் --- வயது 28 முகுந்தன் --- வயது 18 மற்றும்
சங்கர் --- வயது 23 ஆசிரியர்
குரல்-1
குரல்-2
34 வாழ்ந்து பார்க்கலாம்

தமிழோசை வானொலியில்
மகாலிங்கம் மங்களாம்பிகை ஏஜன்ஸி பாலா வேணி
சிவா
சதா
மலர்
ரவீந்திரன் பூரணம் முகுந்தன் ஆசிரியர்
சுங்கர்
குரல்-1 குரல்-2
ஒலிபரப்பப்பட்டபோது நடித்தவர்கள்
கவிஞர் விகந்தவனம் திலகா தில்லைநாதன் காலஞ்சென்ற ஆர்.எஸ்.சோதிநாதன் அருட்செல்வி அமிர்தானந்தர் எம்.கலாதரன் சிவஞானச்செல்வம் சரவணபவசர்மா சங்கீதா நவநீதசிங்கம் சிவா சங்கரப்பிள்ளை திருமதி.பேரம்பலம் மயூரன் மோகன்
பரமயோகன்
35 enfrey ( MYM44AAAYub

Page 20
வாழ்ந்து பார்க்கலாம் (வானொலி நாடகம்)
காட்சி-1
(ரி.வி. யில் செய்தியறிக்கை ஒளிபரப்பாகிக்கொண்டு இருக்கின்றது)
மங்க: என்னப்பா பத்துமணியாகுது, பிள்ளையஞம் படுத்திட்டுது, சதாவை இன்னும் காணேல்லை. ஏஜன்ஸிக்காறனைப் பிடிக்கமுடி யேல்லையோ.
மகா: பொறுமப்பா. இப்பதானே பத்துமணி. கனடாவில இது ஒரு பெரிய நேரமே. சதா வேலையால வந்துதானே ஏஜன்ஸிக் காறனக் கூட்டியாறன் எண்டவன். அவன் வந்து உந்த ஃபக்ட ரித் தூசெல்லாம் கழுவிக் குளிச்சு வெளிக்கிட நேரம் வேண்டாமே.
மங்க: இல்லை, பியரைக் கியரை எடுத்துக்கொண்டு ரி.வி. க்கு முன்னால குந்திச்சுதெண்டால் சதாவுக்கு உலகமழிஞ்சாலும் தெரியாது. பிறகு லேட்டாப்போனால் ஏஜன்ஸிக்காறன் வருவானோ தெரியாது.
மகா: நல்ல கதை கதைக்கிறீர். ஏஜன்ஸிக்காறனுக்கு ஆயிரக் கணக்கில வாற டொலர் பெரிசோ நேரம் பெரிசோ? எந்தச் சாம மெண்டாலும் வந்து நிப்பான். நீர் சும்மா பதறாமல் இதிலை இருந்து இந்த ரி.வி. நியூசைப் பாரும். அடிக்கடி உதுகளைப் பாத்து இந்த இங்கிலீசைப் பிடிச்சாத்தான் ஏதும் வேலைவெட்டி தேடச் சுகமாயிருக்கும்.
36 வாழ்ந்து பார்க்கலாம்

மங்க: நீங்கள்தான் இருந்து பிடியுங்கோ. இங்கிலீசைப்ஷ பிடிச்ச உடன உங்களுக்கு இந்தா பிடி எண்டுதானே தரப்போறான்வேலை. என்ர பிள்ளை எப்ப வந்துசேரும் எண்டு என்ர மனம் படுகிற பாடில்லை, உங்களுக்குப் பகிடி,
மகா: ஏனப்பா, எனக்கும் அவள் மகள்தானே. ஆதுதானே <96J6D6T எப்பிடியாவது கூப்பிடவேணுமெண்டு ஆயிரத்துக்கு மாதம் நாப்பது டொலர் வட்டியிலையெல்லே கடன் எடுத்திருக் கிறன். மாதம் வட்டி மட்டும் நானூறு டொலர் கட்டவேணும். இதுகளை நான் தனிய உழைச்சுக் கட்டேலுமே. நீரும் இங்கிலீ சைப் படிச்சு ஏதும் வேலைவெட்டியெண்டு போனால்த்தானே சமாளிக்கலாம்.
மங்க: ஆ. பெரிய இங்கிலீஸ்தான். உங்கை எல்லாம் இங்கி லீஸ் பேசத் தெரிஞ்சவைதானே வேலைக்குப் போகினம். யேஸ் நோவைத் தவிர ஒண்டும் தெரியாததுகளெல்லாம் பாங்கிலையும் அங்கையும் இங்கையும் எண்டு வேலைக்குப் போகேல்லையே. அண்டைக்கும் பாக்கிறன், அங்க எங்கட வடலிக் காணிக்கை குடிசை போட்டுக்கொண்டிருந்த சிவக்கொழுந்தன்ரை மூத்த பெட்டை மலரோ என்னவோ பேர். அங்க தேப்பன் குடிச்சுக் கொண்டு திரிய இதுகள் ஆன சாப்பாட்டுக்கும் வழியில்லாமல், கிழிஞ்ச சட்டையோட, மூக்குச்சளி வடிச்சுக்கொண்டு திரிஞ்சதுகள். இப்ப பாக்கிறன் இங்க விரிச்சுவிட்ட தலை, முகத்தில அரை இஞ்சிக்குச் சாம்பல் அப்பினமாதிரிப் பவுடர், கன்னங்களில சிவப்பும் அப்பி, கடுஞ்சிவப்பு நிறத்தில லிப்ஸ்டிக், சதுரம்மாதிரி தோள் தூக்கின ஜக்கட், ஜக்கட்டின்ர ஒரு தோளில பட்டு ஸ்காஃப் ஒண்டு சொருகியிருக்கு, மற்றத் தோளில நீங்கள் அங்க ஒஃபிஸுக் குக் கொண்டுபோறமாதிரி ஒரு Bag பட்டிபோட்டுத் தொங்குது. வந்து, அன்ரி என்னத் தெரியுதோ எண்டு கேட்டாள். நான் ஆர். இது, கயானாப் பெட்டை(கயானாவில் குடியேறிய இந்திய வம்சாவளியினர்) மாதிரிக்கிடக்கு, என்னை அன்ரி எண்டு கூப்பிட்டுத் தமிழ் கதைக்குதெண்டு பாத்தால் சிவக்கொழுந்தன்ர பெட்டை என்னதான் பூசி மினுக்கினாலும் அங்க வடலிக்கை திரிஞ்ச முகம் தெரியுது. ஏதோ ஒரு கொம்பனில எக்கவுண்ட்ஸ் டிவிஷனில வேலையாம். பின்னேரத்தில எக்கவுண்டிங் படிக்கப் பள்ளிக்குடத்துக்குப் போறனான் எண்டு சொன்னாள். இதுகளெல் லாம் இங்க வந்து வேலை செய்யுதுகள்தானே.
y: நீர் அங்க பாத்த சிவக்கொழுந்தன்ர மகள் இங்க மாரீட்டாள் எண்டதத் தாங்கேலாமல் கதைக்கிறீர். சிவக்கொழுந் தன்ர மகள் அப்பிடியேதானிருப்பாளே. இங்க வந்து படிச்சிருக் குங்கள், வேலை கிடைச்சிருக்கும். இனி அதுகள் இளம் பிள்ளை
37 வாழ்ந்து பார்க்கலாம்

Page 21
யள். சூழ்நிலைக்குத் தக்கமாதிரி எல்லாத்தையும் டக்கெண்டு பிடிச்சுத் தங்களை மாத்திக்கொள்ளுங்கள். நீரும் நாளைக்குப் பள்ளிக் குடமெண்டு வெளிக்கிடும், எப்பிடி மாறுநீர் எண்டு பாரும்.
மங்க: அதுக்கு நீங்கள் ஆரும் இளம் ஆக்களத்தான் பாக்கவேணும். எனக்கு வருகுது வாயில. சும்மா இருங்கோப்பா. இனி நான் இந்தக் கிழட்டு வயதில பள்ளிக்குடம் போய்ப் படிச்சு வேலை எடுத்துத்தான் நல்லா வரப்போறம். ஏதோ நடக்கிறது நடக்கட்டும்.
(கதவு தட்டப்படும் ஒலி)
Ds உங்க கதவு தட்டுப்படுகுது. வந்திட்டினம்போல. உந்த செற்றியில கிடக்கிற உடுப்புகளைக் கொண்டே உள்ளுக்க போடும். நான் போய்க் கதவைத் திறக்கிறன். (கதவு திறக்கும் ஒலி)
y: வாங்கோ வாங்கோ, எங்க வராமல் விட்டிடுவியளோ எண்டு நினைச்சம். என்ன சதா, சத்தம்போடாமல் வந்திட்டாய். லொபிக் கதவு திறந்திருந்ததோ?
சதா: நாங்கள் வரவும் ஆரோ வெளியால வந்திச்சினம். அப்பிடியே வந்திட்டம். அப்பவே வந்திருப்பம், பாலா கொஞ்சம் கணங்கிப்போனார்.
OS SITE அது சப்பாத்தோட வரலாம். பறவாயில்லை. காப்பட்டில கிடக்கிற ஊத்தை சப்பாத்தில பிடிக்காமல் விட்டால் சரி.
U6) இல்லை, பறவாயில்லை. எனக்குத்தான் திடீரெண்டு ரெண்டுமூண்டு கோல்ஸ் எடுக்கவேண்டியதாய்ப்போச்சு.
மகா: உதிலை இருங்கோ. இவதான் வைஃப். இப்ப ரெண்டு பேரும் எங்க ஆக்களைக் காணேல்லையெண்டு கதைச்சுக் கொண்டிருந்தனாங்கள். என்ன, கோல் எடுக்கவேண்டிய தாய்ப் போச்சோ?
பாலா: தெரியாதே, கொண்டுவாற ஆக்கள் சிங்கப்பூர், தாய்லாந்து, ரஷ்யா, கியூபா எண்டு அங்கங்க நிப்பினம். ஏதும் பிரச்சினை யெண்டால் அங்கஇருந்து கலக்ட்கோல் எடுப்பினம். எல்லாருக்கும் பதில் சொல்லி பதட்டப்படாமல் கொண்டுவந்து சேர்க்கவேணும்.
38 வாழ்ந்து பார்க்கலாம்

மகா: உங்கள்பாடும் பெரும் பிரச்சினைதான்.
LT6: ஐயோ, அதையேன் கேக்கிறியள். பன்ரெண்டாயிரம் டொலர் வாங்கிறதுதான். அங்க இங்க எண்டு ஒவ்வொரிடமாக் கிள்ளித் தெளிச்சுக்கொண்டு வர கையில ஒண்டும் மிஞ்சாது. அதுவும் அனுப்புறதுகள் வந்து பிடிபட்டுப்போனால் எங்கட கையாலதான் செலவழிக்கவேணும்.
அப்ப இதில உங்களுக்கு லாபமில்லையெண்டு சொல்லுறியள்.
6) என்னண்டு பாருங்கோ லாபம் வரும். கொண்டுவாற
ஆக்களுக்கு உதவ ஒவ்வொரு நாட்டிலையும் ஆக்களை வைச்சிருக்கிறன். அவைக்குச் செலவு. இனி வந்து பிடிபட்டு உள்ளுக்க போட்டிட்டால் வெளியால எடுக்கச் செலவு. திருப்பி அனுப்பினால் பிறகும் ட்ரை பண்ணிக் கொண்டுவரவேணும். பேசின பேச்சைவிட ஒருசதம் கூட வாங்கேலாது. பேரைக் காப்பாத்தவேணுமெல்லே.
மங்க: அப்ப வாற ஆக்கள் கனபேர் பிடிபடுகிறவையே?
பாலா: சீ. அப்பிடியெண்டு பயப்பிடத்தேவேல்ல. இப்ப உங்கட மகளப்போல ஆக்கள், அவ அட்வாண்ஸ்லெவல் படிச்சவவாக்கும். அவபோல ஆக்களக் கூட்டிவாறது சுகம். ஒரு பிரச்சினையு மில்லை. இது சிலதுகள் பாருங்கோ கனடா வாறதெண்டுதான் யாழ்ப்பாணத்தைவிட்டு வெளியால வாறது. வாழ்க்கையில அப்ப தான் முதல்முதல் சப்பாத்தே போடுறதெண்டால் பாருங்கோவன். அவைக்குக் கொழும்பைக் கண்டவுடனையே அதிர்ச்சியாய்ப் போயி டும். பெரிய சிற்றியை முதல்முதல் பாத்த மலைப்பு, சிங்களவன் கொண்டுபோடுவான் எண்ட பயம், சப்பாத்துப் போட்ட நடை @@ பிரச்சினை எல்லாம் சேந்து ஆக்களத் திணறடிச்சுப்போடும். இவையளை நாங்கள் சிங்கப்பூர், தாய்லாந்து எண்டு கொணடு வந்து ஒருமாசம் ரெண்டுமாசம் அங்க வைச்சு அந்த மலாரடியப் போகப்பண்ணி, ட்ரெயினிங் குடுத்துத்தான் இங்கால எடுக்கிறது. சிங்கப்பூர், தாய்லாந்தில இதுக்கெண்டு நாங்கள் வீடுகள் வாடைக்கெடுத்து வைச்சிருக்கிறம். ஹோட்டலில வைச்சுக் கட்டுபடியாகாது. அப்பிடியிருந்தும் சிலதுகளுக்கு அந்த முழுசாட் டம் போறேல்லை. எயர்ப்போர்ட்டில எக்கச்சக்கமா மாட்டுப் பட்டிடுங்கள்.
39 வாழ்ந்து பார்க்கலாம்

Page 22
மங்க: உங்கட பாடும் பெரிய கரைச்சல்தான். இருங்கோ, தேத்தண்ணி கொண்டுவாறன். என்ன சதா, தேத்தண்ணி குடிப் ifોuિir?
சதா மாமிக்கு எப்பவும் பகிடிதான்.
LOSS நாங்கள் சுகமா ஏஜன்ஸிக்காறனுக்கு நல்ல உழைப்பு எண்டு சொல்லிப்போட்டிருக்கிறது. அதுவும் பெரிய சிக்கல்தான்.
L6) சிக்கலோ. இது இப்ப நான் மேலோட்டமாச் சொன்னனான். கள்ளப் பாஸ்போர்ட் வாங்கிறது, தலை மாத்திறது, கள்ள விசா குத்துறது எண்டு இருக்கிற சிக்கலுகளைச் சொல்லப்போனால் நீங்கள் இதுவும் ஒரு பிழைப்பா எண்டு சொல்லுவியள். பிறகும் நாங்கள் இதைச் செய்யாட்டால் என்னண்டு இந்தச் சனங்கள் இங்கால வந்து சேருறது எண்டுபோட்டு எவ்வளவு கஷ்டப்பட்டாலும் இதைச் செய்யிறது. அனுப்பின சனங்கள் கனடா வந்து சேந்திட்டுதுகள் எண்டவுடன கிடைக்கிற நிம்மதி இருக்குப் பாருங்கோ, அதுக்காகவெண்டாலும் எத்தினை கஷ்டங்களையும் படலாம்.
s ஒமோம். இதுக்கெண்டு ஒரு சேவை மனப்பான்மை இல்லாட்டால் இதைச் செய்யேலாது.
6 நீங்கள்தான் உண்மையைச் சொன்னிங்கள். எங்கட சனம் நன்றியில்லாததுகள் பாருங்கோ. நாங்கள் ஏதோ காசு கொள் ளையடிக்கிறம் எண்டு சொல்லுங்கள்.
மகா: சனங்கள் விசயம் தெரியாமல் கதைக்கிறதுதானே. இப்ப எங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைச்சதால உங்களோட கதைச்சம். விசயத்தைச் சொல்லுறியள், விளங்குது. இனி நீங்கள் எல்லாரிட் டையும் போய் எல்லாத்தையும் சொல்லிக்கொண்டிருக்கேலாதுதானே. உவன் சதாதான் எங்களுக்கு உங்களைப் பற்றிச் சொன்னவன். சதா என்ர அக்கான்ர மகன்.
பாலா; சதாவக் கூட்டிவந்ததும் நான்தானே. அது எப்ப, எண் பத்தாறாம்மாண்டாக்கும். அப்ப எவ்வளவு சுகம் பாருங்கோ, இப்ப
மாதிரியில்லை.
எனக்குத் தெரியாதே. அப்ப இவ்வளவு காசும் நீங்கள் எடுக்கிறேல்லைத்தானே. இப்ப பாருங்கோ, நான் வட்டிக்கெடுத்
40 வாழ்ந்து பார்க்கலாம்

துத்தான் உங்களுக்கு இந்தக் காசு தாறன். இனி எப்ப உழைச்சு, எப்ப இதைக் கட்டி முடிக்கப் போறனோ தெரியாது.
6): பயப்பிடாதேங்கோ, எல்லாம் மகள் வந்து சேந்த உடன அவ வெல்ஃபெயர் (பொதுநலக்கொடுப்பனவு-வருமானம் அற்றவர் களுக்கு அரசாங்கம் வழங்கும் உதவிப்பணம்) அடிச்சா ரெண்டு வருஷத்தில எல்லாக் காசும் மீட்டுப்போடலாம். நீங்கள் அங்க சீர்யி. யில வேலை செய்ததெண்டு சதா சொன்னார்.
மகா: ஓ, அங்க சீர்பி, ரிக்கட் செக்கிங் ஃபிளையிங் ஸ்குவாட் டில இருந்தனான். கோண்டாவில் டிப்போ.
பாலா: இங்க என்னமாதிரி, வேலை பிடிச்சுக்கொண்டுதோ?
f)&57: பிடிச்சுதோ பிடிக்கேல்லையோ செய்யத்தானே வேணும். ஒரு கொம்பியூட்டர் அசெம்பிளிங் ஃபக்ட்ரீல வேலை செய்யிறன்.
பாலா; பேந்தென்ன, இங்க வந்து கொம்பியூட்டரெல்லாம் படிச்சி ருக்கிறீங்கள்.
மகா: கொம்பியூட்டரப்பற்றி ஆருக்குத் தெரியும். நான் ஷிப்பிங் அன்ட் றிஸ்விங், ஏத்தி இறக்கிற வேலை. நாரி முறிஞ்சுபோம்.
6): என்ன செய்யிறது, வந்திட்டம், செய்து முடிக்கத் தானேவேணும். சரி, நாங்கள் விசயத்துக்கு வருவம். சதா எல் லாம் சொன்னவர்தான், எண்டாலும் உங்களிட்டயிருந்து அறியிறது நல்லதெல்லே. இப்ப உங்களின்ர மகளின்ர பிரச்சினை என்ன மாதிரி.
மகா: ஆ. இந்தா வந்திட்டுது குடியும். நான் எல்லாம் வடி வாச் சொல்லுறன். மங்களம், இப்பிடிக் கொண்டாரும் ய.
மங்க: சீனி எவ்வளவெண்டு தெரியாது.
U6): இனிச்சால் சரி. கனடாவில இது ஒரு பெரிய பிரச்சினை. தேத்தண்ணி தாறதெண்டால் சீனி என்னமாதிரி, ஒண்டோ ரண்டோ எண்டு ஆயிரத்தெட்டு விசாரணை.
இப்ப இங்க மனிசருக்கு டயட்டிஸ், கொலஸ்ட்ரோல் எண்டு எத்தின பிரச்சினை.
4. வாழ்ந்து பார்க்கலாம்

Page 23
6 இங்க வந்துதானே உதெல்லாம் கேள்விப்படுகிறம். அப்ப சொல்லுங்கோ. இப்ப உங்கட மகள் யாழ்ப்பாணத்திலதான்.
y: ஒ.அவ என்ர அக்காவோட அவதான் சதாவின்ர அம்மாவோட நிக்கிறா.
பாலா; நீங்கள் அப்பீல்பண்ணிப் பாத்தனிங்களோ?
எல்லாம் செய்து பாத்தாச்சு. என்ன பாருங்கோ, இவை விசா இன்டர்வியூ எண்டு போகேக்க அவளுக்கு அப்பதான் பதினெட்டு வயசு முடிஞ்சு ஒண்டோ ரெண்டு மாசம். அவங்கள் கொஞ்சமும் முடியாதெண்டுபோட்டாங்கள்.
மங்க: நானும் எவ்வளவு சொல்லிப்பாத்தன். இப்பிடி ஏதும் நடக்குமெண்டு இவர் முதலே எனக்கு எழுதினவர். எப்ப எப்பிடிச் சொல்லவேணுமெண்டும் எழுதினபடியா நானும் விடாமல், எங்கட வழக்கப்படி பொம்பிளைப் பிள்ளையளைக் கலியாணம் கட்டிக் குடுக்குமட்டும் நாங்கள்தான் வைச்சுப் பராமரிக்கவேணும், ஏன் ஆம்பிளைப் பிள்ளையளைக்கூடப் படிப்பிச்சு $9(U) வேலைவெட்டியெண்டு போகுமட்டும் நாங்கள்தான் பாக்கவேணு மெண்டெல்லாம் சொன்னன். அவன் கேட்டால்தானே.
பாலா அவங்கள் விடாங்கள். இப்ப இதுகளில வலு ஸ்ட் றிக்ட்.
மங்க: ஓம் பாருங்கோ. அவன் சொல்லிப்போட்டான், உங்கட வழக்கத்தையெல்லாம் உங்கட நாட்டோட வைச்சுக்கொள்ளுங்கோ. இப்ப நீங்கள் எங்கட நாட்டுக்குப் போகவேணுமெண்டால் எங்கட வழக்கப்படிதான் எங்கட சட்டதிட்டம் இருக்குமெண்டு.
பாலா சீ. அப்பிடிச்சொன்னவங்களோ.
s: பின்னையென்ன. உங்கட வழக்கப்படி நீங்கள் எல்லாம் செய்யவேணுமெண்டால் உங்கட நாட்டிலயே இருக்கிறதுதான் வசதியெண்டு சொன்னானாம். சேட்டைக் கதையெல்லே.
சதா: நான் அப்பவும் மாமாட்டச் சொன்னனான், உடன
இமிக்றேஷன் மினிஸ்டருக்கு ஒரு கடிதம் போடச்சொல்லி. மாமாவைத் தெரியாதே, ஆத்திரத்தில அந்தா இந்தா எண்டு
42 வாழ்ந்து பார்க்கலாம்

துள்ளுறது பிறகு ஓவர்டைம் செய்யிற அலுப்பிலை ஒண்டையும் கவனிக்கிறேல்லை.
மங்க: நான் நினைக்கேல்லை. எத்தினை கடிதம் ஆருக்கெழுதினாலும் பதில் ஒண்டாய்த்தான் இருந்திருக்கும். நான் பிறகு அழுதுகூடப் பாத்தன். அங்க எனக்கு மொழிபெயர்க்க வந்திருந்த பிள்ளைக்குக்கூடக் கண் கலங்கிப்போச்சு. அவன் எல்லா ஃபைலுகளையும் பொத்தெண்டு போட்டிட்டு எழும்பிப் போட்டான். பிறகென்ன, நான் இருந்து அழுதுபோட்டு வந்த துதான்.
பாலா; இப்ப நீங்கள் வந்து எத்தினை வருஷம்? பிறகு அப் பில் பண்ணிப் பாக்கேல்லையே?
மங்க: நாங்களும் வந்து ரெண்டரை வருஷமாகுது. ஒவ்வொருத்தர் சொல்லுறதையும் கேட்டு அப்பீல், எம்பி. யின்ர கடிதம் எண்டு எல்லாம் செய்து பாத்தாச்சு. ஒண்டும் சரிவ ரேல்லை. அதுதான் பாத்துப்போட்டு கடனத்தனியப் பட்டெண்டா லும் பிள்ளையை எடுப்பிச்சுப்போடுவமெண்டு பாக்கிறம். எத்தினை நாளைக்குக் குமர்ப் பிள்ளையைத் தனிய விட்டிட்டு இருக்கிறது. இனி மச்சாளும் சுகமில்லாதவ.
6 அது. இப்ப நீங்கள் எடுத்த முடிவு சரி. முறைப்படி செய்து பாத்தியள், முடியேல்லை. இனி என்ன செய்யிறது. ஒண்டுக் கும் பயப்பிடாதேங்கோ. இப்ப நான் வாற முப்பதுமட்டில கொழும் புக்குப் போறன். மகள அங்க வந்து என்னைக் காணச்சொல் லுங்கோ. எப்பிடியும் ஒரு மாதத்துக்குள்ள கொண்டு வந்துசேத்தி டுவன். அவவின்ர பேரென்ன?
மங்க: கிருஷ்ணவேணி, நாங்கள் வேணியெண்டுதான் கூப்பி டுறது. அப்ப வாற முப்பதெண்டால் பதினைஞ்சு நாள்தானே கிடக்கு. வாற பதினைஞ்சாந் திகதிக்குள்ள மகள் வந்து சேந்திடுவாள். மெய்யேப்பா, இப்ப உடன கொழும்புக்கு கந்தரத் தாருக்கு ஃபோண் பண்ணி வேணிய கொழும்புக்குக் கூப்பிடுங் கோவன்.
பிறகென்ன, செய்யத்தானேவேணும். அப்ப பாலா, இப்ப இரவில ஒரு நல்ல காரியத்துக்குக் காசு தாறது சரியில்ல. நாளைக்கு வெள்ளண நான் சதாவோட வந்து அரைவாசியைத் தாறன். பிறகு பிள்ளை வந்த உடன எல்லாத்தையும் முடிப்பம்
3 வாழ்ந்து urldaMurab

Page 24
பாலா; அது ஒண்டும் பிரச்சினையில்லை. நீங்கள் நாளைக்கு வாங்கோ. இதுதான் நான் கொழும்பிலை நிக்கிற அட்ரஸ். முப்பதாம் திகதிமட்டில வந்து பாக்கச்சொல்லுங்கோ. ஒண்டு ரண்டு நாள் பிந்தும் முந்தும். எப்பிடியும் வந்து சந்திக்கச் சொல்லுங்கோ. அப்ப நான் வாறன் நேரமாகுது. சதா வெளிக் கிடுவமே?
சதா சரி, வெளிக்கிடுவம்.
(காட்சிமாற்ற இசை)
காட்சி-2
சிவா: என்ன வேணி இதிலை நிக்கிறீர்? முந்தநாள் இதிலை ஷெல் விழுந்து வெடிச்சதெண்டு தெரியுந்தானே.
வேணி: உங்களைப் பாத்துக்கொண்டுதான் நிக்கிறன். பாங்க் மூட இண்டைக்கு இவ்வளவு நேரமே?
&6ort: பாங்க் வழக்கம்போல நாலரைக்குத்தான் மூடினது. நான் வரேக்க கொக்குவிலுக்க சைக்கிள் முன் ரயருக்குக் காத்துப்போட்டுது. அதை ஒட்டுவிச்சுக்கொண்டு, வரவரத் தெரி யாதே, ஒவ்வொருத்தரையும் கண்டு கதைச்சுக்கொண்டுவர நேரமாகீட்டுது.
வேணி: நானும் ஐஞ்சு மணிதொடக்கம் இந்தச் சந்தீல நிக்கிறன். போறவாற சனமெல்லாம் ஒரு மாதிரிப் பாத்துக்கொண்டு போகுது.
$on: சரி, ஏறும் சைக்கிளில. போகப்போகக் கதைச்சுக் கொண்டு போகலாம். இருட்டுது, ஒரு சொட்டு வெளிச்சமும்
இல்லை.
வேணி: சிவா, வயலில் பிள்ளையார் கோயிலுக்கு விடுங்கோ சைக்கிளை. எனக்கு மனசே சரியில்ல.
சிவா: ஏன் வேணி என்ன நடந்தது? மாமிக்குத் தெரியுமே நீர் இங்க வந்தது.
44 வாழ்ந்து பார்க்கலாம்

வேணி: கோயிலுக்குப் போறன் எண்டு சொல்லிப்போட்டுத்தான் வந்தனான். (சிறிது மெளனம்)
சிவா. வேணி என்ன விஷயம்?
வேணி: சிவா, இண்டைக்கு கொழும்பு கந்தரம் மாமா கடையிலயிருந்து வெளிநாட்டுக் காசு கொண்டுவாற பரமசிவம் வந்தவர்.
சிவா. கனடாவில இருந்து காசு வந்ததே? நாளைக்கு பாங்க்குக்குப் போகேக்க அப்பிடியே வந்து எடுத்துக் கொண்டுபோய்ப் போட்டுவிடுகிறன்.
வேணி: அதில்லை சிவா. என்னை முப்பதாந்திகதிக்கு முதல் கொழும்பிலை நிக்கட்டாம், கனடாக்குக் கூப்பிட எல்லா ஏற்பாடும்
அப்பா அம்மா செய்திட்டினமாம்.
(சிறிது மெளனம்)
சிவா: என்ன செய்யப்போநீர்?
வேணி நீங்கள் சொல்லுங்கோ. சிவா நான் சொல்லுறபடி செய்விரோ?
வேணி: ப்ளீஸ் சிவா. எனக்குச் சோதினை வைக்காமல் உங்கட அபிப்பிராயத்தைச் சொல்லுங்கோ.
சிவா: நானெண்டால் நீர் இங்க இருக்கிறதைத்தான் விரும்புவன்.
வேணி நீங்கள் அப்பிடித்தான் விரும்புவீங்களெண்டு எனக்குத் தெரியும். பிறக்டிக்கலா அது நடக்க முடியுமே.
சிவா. நீர் நினைச்சால் முடியும். இப்ப உமக்கு இருவத்தொரு வயசாகுது. நான் எட்டு வருஷமா பாங்கில வேலை செய்யிறன். நிரந்தரத் தொழில். பீப்பிள்ஸ் பாங்க் மூடினால்தான் எனக்கு வேலையில்லாமல் போகும். நினைச்சால் கலியாணம் செய்து
45 வாழ்ந்து பார்க்கலாம்

Page 25
கொண்டு வாழ்க்கையைத் தொடங்கிறதில ஒரு சிக்கலுமில்லை. இங்கையே சந்தோஷமா வாழலாம். மற்றும்படி கனடாக்குப் போக வேணுமெண்டு விரும்பினால் அது பிரச்சினைதான்.
வேணி என்ர அப்பா அம்மா சகோதரமெல்லாம் அங்க,
சிவா: நீர் என்னை உண்மையா விரும்பினால் உம்மட எதிர்காலம் என்னோடை
வேணி அதை நான் மறுக்கேல்லை. ஆனால் சிவா, என்ரை நிலைமையையும் யோசிச்சுப் பாருங்கோ. நான் என்ரை அப்பா வைக் கண்டு எத்தினை வருஷம். நான் பிறக்கேக்க அவர் இங்க இல்லை, மிடில்ஈஸ்டில, பிறகு எனக்கு ஐஞ்சு வயசா இருக் கேக்க இங்க வந்து சிரியியில வேலை செய்தார். அதுக்குப் பிறகு தம்பியும் தங்கச்சியும் பிறந்து எனக்குப் பதிமூண்டு வயசா கேக்க கனடாக்குப் போனார். அதிலயிருந்து இண்டுவரை என்ர அப்பாவை நான் காணேல்லை. இப்பிடி எங்களுக்காகவே, எங்கட சந்தோஷத்துக்காகவே வாழுற அப்பா இவ்வளவு செலவழிச்சு என் னைக் கூப்பிட நான் வரமாட்டன் எண்டு என்ர சந்தோஷத்தையே பாத்துக்கொண்டிருக்கிறது ஒரு நன்றிகெட்டதனமில்லையா சிவா.
சிவா. அதுதான் வேணி, நீர் எதுக்கு முக்கியத்துவம் குடுக் கிறீர் எண்டதைப் பொறுத்துத்தான் எது சரி, எது பிழை எண்டு சொல்லமுடியும்.
வேணி சிவா, நான் கனடாக்குப் போறதொண்டும் எதிர்பா ராமல் நடக்கிற விஷயமில்லை. எப்பிடியும் என்னைக் கூப்பிடுவினம் எண்டது எனக்குத் தெரியும், உங்களுக்கும் தெரியும். இருந்தாலும் இப்ப திடீரெண்டு வெளிக்கிடவேணு மெண்டேக்க அதிர்ச்சியாத்தான் இருக்கு. நான் என்ன நினைக்கிறன் எண்டால் சிவா, நான் இப்ப போய் எனக்கொரு வேலை கிடைச்சிட்டுதெண்டால் உங்களை ஸ்பொன்ஸர் பண்ணிக் கூப்பிடலாம்.
சிவா: (மெளனம்)
வேணி என்ன, ஒண்டும் சொல்லாமல் வர்நீங்கள்?
சிவா: அதுதான் சொன்னனே வேணி, உமக்கு எது சரி யெண்டு படுகுதோ அதைச் செய்யும்.
46 வாழ்ந்து பார்க்கலாம்

வேணி ஒண்டுக்கும் யோசிக்காதேங்கோ(கோயில்மணி) பாத்தீங் களே, நான் சொல்ல கோயில் மணி அடிக்குது. இண்டைக்கு ஐயரும் லேட். எங்களுக்காகவே பூசை நடக்கிறபோல என்னமாதிரித் தீபம் காட்டுறார் பாருங்கோ. இன்னொரு ரெண்டு வருஷத்தில நானும் நீங்களும் நிச்சயம் ஒண்டாக சந்தோஷமா வாழுவம் பிள்ளையார் எங்களுக்கு எல்லாம் நல்லதையே செய்வார்.
(காட்சிமாற்ற இசை)
காட்சி-3
6): நான் சொன்னமாதிரி உங்கட மகளக் கூட்டிவந்து
சேத்துப்போட்டன். உங்களுக்குத் திருப்திதானே?
மங்க: நேற்றுப் பிள்ளையை நயகரா போடரோ எங்கயப்பா
م=.9gJ
பாலா: றெயின்போ பிறிட்ஜ்.
மங்க: அங்க கண்டபோது எங்களுக்கு எங்கட கண்ணையே நம்பமுடியேல்ல. சொன்னமாதிரியே ஒரு மாசத்துக்குக்குள்ள கொண்டந்து சேத்துப்போட்டியள்.
பாலா: எத்தின வருஷமா இதைச் செய்யிறம்.
இந்தாரும் பாலா, இதில நாங்கள் தரவேண்டிய மிச்சக் காசிருக்கு, சரியா இருக்கோ எண்டு எண்ணிப்பாரும்.
L6): நீங்கள் எண்ணித்தானே தாறியள். அப்ப சரியா இருக்கும். சொன்னபடி காசைத் தாறியள். பிறகு அதுக்க பிழைவிடுவியள் எண்டு நான் எண்ணிப் பாக்கிறதே.
மங்க: வேணுமெண்டு செய்யிறதே. எண்ணேக்க தப்பித்தவறிப் பிழைவிட்டாலும்.
7 வாழ்ந்து uns4&n78

Page 26
6) அதெல்லாம் சரியாயிருக்கும். என்ன மிஸ்டர் மகாலிங்கம், ஒரு மாதிரி யோசிக்கிறியள்? பிள்ளைதானே வந்திட்
5: என்ன யோசினை. இந்தக் காசை எப்ப குடுத்து முடிப்பமெண்டுதான்.
பாலா; நீங்கள் நேற்று நான் சொல்லக் கேக்கமாட்ட னெண்டிட்டியள். வேணியும் மாட்டன் எண்டுபோட்டா. இமிக்கிறேஷனில இங்க தனக்கு ஒருத்தரும் இல்லையெண்டு சொல்லியிருந்தால் எண்னமாதிரி வெல்ஃபெயர் எடுத்திருக்கலாம்.
மங்க: என்னண்டு. நாங்கள் தாய் தகப்பன் சகோதரங்கள் முன்னாலபோய் நிக்கிறம், எனக்கு ஒருத்தருமில்லையெண்டு பிள்ளை பொய் சொல்லுமே. அவள் ஒரு பயந்தவள். பொய் சொல்லிப்போட்டு அதைக் காப்பாத்தத் தெரியாது. பிடிபட்டால் எவ்வளவு பிரச்சினை.
பாலா: என்ன பிரச்சினை. உங்க என்னென்னவெல்லாம் சொல்லி சனங்கள் என்னென்னெல்லாம் செய்யுதுகள்.
மகா: பாலா, சனங்கள் என்னத்தையெண்டாலும் செய்துபோட்டுப் போகட்டும். எங்களுக்கு உது ஏலாதவேலை. ஏதோ ஏலுமட்டும்
முயற்சி செய்வம். எங்கட பிள்ளையை நாங்கள்தானே வளக்கவேணும்.
T6): அதுசரி மிஸ்டர் மகாலிங்கம். ஆனால் எவ்வளவு
நாளைக்குக் கஷ்டப்படப்போறியள். சரி, உங்களுக்கு வெல்.பெயர் எடுக்கத்தான் விருப்பமில்லை. இப்ப பாருங்கோ, நீங்கள் ஐஞ்சு நாள் நாரி முறிய வேலைசெய்து உழைக்கிற காசை கிழமையில ரெண்டுநாள் செய்துபோட்டே உழைக்கலாம்.
மங்க: அதெப்பிடி.
T6): வெல்ஃபெயர் எண்டில்லாமல் ஃபமிலி சப்போர்ட் அலவன்ஸ் எண்டிருக்கு. உழைக்கிற காசு ஒரு குடும்பத் துக்குக் காணாட்டா அதை ஈடுசெய்ய அரசாங்கம் தாற காசு. இப்ப மிஸ்டர் மகாலிங்கம் உந்த வேலையை விட்டிட்டு சனி, ஞாயிறில ஒரு செக்கியூரிட்டி வேலை எடுத்தால் அந்த ரெண்டுநாளில உழைக்கிற காசு போக உங்கட குடும்பம் நடத்தத்
48 வாழ்ந்து பார்க்கலாம்

தேவையான மிச்சக் காசை கவுண்மெந்த் தரும். இப்ப உங்கட மூத்தவவை விடுங்கோ. அவவுக்குப் பதினெட்டு வயதுக்குமேல. மற்றது நீங்களும் ரெண்டு பிள்ளையஞம். இப்ப மிஸ்டர் மகா லிங்கம் உழைக்கிறதைவிடக் கூடக் காசெடுக்கலாம். இதுக்கு வெல்ஃபெயர்காறரை விரட்டுறமாதிரி வேலை தேடு எண்டெல்லாம் கரைச்சல்குடுக்கமாட்டாங்கள். மற்ற ஐஞ்சுநாளும் எங்கையும் கைக்காசுக்கு ஒரு சின்ன வேலையெண்டாலும்செய்தால் இந்தக் கடன் ஒரு பெரிய தொகையே.
மங்க: கேக்க நல்லாத்தான் கிடக்கு. ஆனா உவரோட ஒண் டும் செய்யேலாது.
மகா: இங்க மங்களம், கொஞ்சம் பேசாமல் இரு. பாலா, என
க்கு உதெல்லாம் தெரியாதெண்டில்லை. யோசிச்சுப் பாரும், நாங்
கள் தமிழர். அங்க எவ்வளவு கடுமையா உழைச்சு மரியாதை
யோட சீவிச்சனாங்கள். தமிழர் எண்டால் கடுமையா வேலைசெய்
வினம், நேர்மையான ஆக்கள் எண்டு ஒவ்வொரு டிப்பார்ட்
மெண்டிலையும் பேரெடுத்து, நம்பிக்கைக்குரிய பொறுப்பான பதவியளில தமிழர் இருந்தவை.
6): அங்க உப்பிடியான விசயங்கள் இருக்கேல்லை. கடு மையா உழைச்சுக்கொண்டிருந்தினம். இங்கதானே சும்மா இருந்து காசெடுக்க கன நெளிவுகளிவுகள் இருக்கே.
1ቦ)&Bዘ[8 பாலா. பாலா. எனக்கு உதுகள் ஏலாது. ஒவ்வொரு சதமும் உழைச்சுக் பெறவேணும் எண்ட கொள்கையோட என்ர பிள்ளையன் வளரவேணும். எங்கட செய்கையால எங்கட பிள் ளையஸ் அவமானப்படக்கூடாது. அப்பிடி என்னால ஒரு தொழிலுமே செய்யேலாமல்போனால் அல்லது நான் மண்டையைப் போட்டிட்டா ஒண்டுமே செய்யேலாத நிலைமையில வெல்.பெயர் எடுத்தால் பறவாயில்லை.
மங்க: அசல். வெள்ளிக்கிழமையும் அதுவுமா நல்ல கதையள்தான் வாயில வருகுது.
6): இல்ல மிஸ்டர் மகாலிங்கம். உங்கட கொள்கைய ளெல்லாம் நல்லதுதான். ஆனால் கஷ்டம். சரி, வரப்போறன். எல்லாம் திருப்திதானே? வேறையும் இப்பிடி ஏதும்
விஷயமெண்டால் சொல்லுங்கோ. அல்லது தேவைப்படுகிறவைக்கு என்னைக் காட்டிவிடுங்கோ. பிரச்சினையில்லாமல் விஷயத்தை முடிச்சுக் குடுப்பன்.
49 வாழ்ந்து பார்க்கலாம்

Page 27
மகா நல்லது பாலா, நிச்சயம் செய்வம்.
மங்க: ரொம்ப நன்றி. போட்டு வாங்கோ. வேணி, இங்க அங்கிள் போகப்போறாராம்.
(காட்சிமாற்ற இசை)
காட்சி-4
மலர்: நீர் வேணிதானே.
வேணி: ஓம்.
மலர்: என்னைத் தெரியுதே?
வேணி நல்லாத் தெரிஞ்ச முகம்மாதிரித்தான் இருக்கு. டக் கெண்டு ஞாபகம் வருகுதில்லை.
மலர்: நான் மலர்விழி, உம்மோடை எட்டாம் வகுப்புவரையும் மல்லாகம் ஹிண்டுவில படிச்சனான்.
வேணி: ஸ்ஸ்.ஓ. எங்கட மலர்விழி, சிவக்கொழுந்துவின்ர மகள்.
மலர்: ஆ. இப்ப நினைவு வந்திட்டுது. எப்பிடி, எப்ப வந்தனீர். அண்டைக்கொருநாள் உம்மட அம்மாவ இந்த பஸ்ஸ்டாண்டில கண்டனான். அவவுக்கு என்னை மட்டுப்பிடிக்க முடியேல்ல.
வேணி: ஒ. சரியான சேஞ்ச் உம்மில. ஒண்டாப் படிச்ச
எனக்கே உம்ம விளங்கேல்லயெண்டால் பாருமன் எப்பிடி
மாறியிருக்கிறீரெண்டு.
மலர்: நீர் அங்காலயிருந்து இங்கால குறொஸ்பண்ணி வரேக் கையே உம்மைக் கண்டுபிடிச்சிட்டன். அண்டைக்கு அம்மா
சொன்னவ, உம்மைக் கூப்பிட ட்ரை பண்ணுறதா. எப்ப வந்தனிர்?
வேணி; நான் வந்து இப்ப மூண்டுமாசமாகுது.
50 வாழ்ந்து பார்க்கலாம்

மலர்: இப்ப என்ன இந்தப் பக்கம்.
(36n 6oof: F.6T6ů.6T6. (ENGLISH AS SECOND LANGUAGE) SITT ஸுக்குப் போறனான்.
மலர்: வேலையொண்டுக்கும் ட்ரை பண்ணேல்லையே?
வேணி: எங்க, எல்லாம் சரியான கஷ்டம்போல கிடக்கு. அப்பாக்கெண்டால் நான் இங்க தொடர்ந்து படிச்சு யூனிவர் சிற்றிக்குப் போறதுதான் விருப்பம். தங்களுக்குத்தான் விரும்பினமா திரிப் படிச்சு முன்னால வரமுடியேல்ல, நாங்களெண்டாலும் கிடைக்கிற வாய்ப்புகளப் பயன்படுத்தவேணுமெண்டு சொல்லுறார்.
மலர்: அவர் சொல்லுறதும் சரிதான். ஆனா அதுக்கு ஞாயமான செலவுவரும். இனி ரைம்.
வேணி அதுதான் எனக்கும் யூனிவர்சிற்றிக்குப் போய்ப் படிக்கிறது வீண் மினைக்கேடு, ஏதாவது வேலையொண்டு கிடைச்சிட்டால் பறவாயில்லைப்போல கிடக்கு.
மலர்: ஓ. அதுக்கு இங்க கனேடியன் எக்ஸ்பீரியன்ஸ் அது இதெண்டால் சொல்லுவாங்கள். முதலில எப்பிடியாவது சின்னனா யெண்டாலும் ஒண்டுக்க நுழைஞ்சிட்டால் பிறகு ட்ரை பண்ணி ஓரளவு நல்ல வேலை எடுக்கலாம். அங்க எங்க படிச்சனீர்? மல் லாகம் ஹிண்டுவில இருந்து யூனியன் கொலிஜ்ஜுக்கெல்லே போனனீர்?
வேணி: ஓ. அட்வான்ஸ்லெவல் செய்து ஃபிஸிக்கல் சயன்ஸ்தான் கிடைச்சது. நான் போகேல்லை. அங்க ஒரு இன்ஸ்ரிரியூட்டில கொம்பியூட்டர் செய்தனான். வேர்ட் பேர்ஃபெக்ட், லோட்டஸ் எண்டு செய்தனான்.
Ln605: பிறகென்ன. கொஞ்சம் இங்கத்தையான் இங்கிலீஷையும் பிடிச்சிட்டீரெண்டால் ஓரளவு வேலை எடுக்கலாம். எக்கவுண்டிங் வண், ரூ எண்டு இப்ப படிச்சால் என்னைப்போல எக்கவுண்ட்ஸ் றிஸிவபிள் பேயபிள் எண்டு ஏதும் வேலை எடுக்கலாம். எங்கபோற னிர் ஈ.எஸ்.எல்லுக்கு? ஸ்காபரோவில இடமெல்லாம் தெரியுமோ?
51 வாழ்ந்து பார்க்கலாம்

Page 28
வேணி சீ. லோறன்ஸ் றோட்டெண்டு தெரியும். இந்தப்பக்கத் தால போற பஸ்ஸில ஏறித் தமிழீழம் சொஸையிட்டிக்குப் போவன். கிளாஸ் முடிய அடுத்த பக்கத்தால வர்ற பஸ்ஸில ஏறி வருவன். அவ்வளவும்தான் தெரியும். உந்த பில்டிங்கிலதான் இருக்கிறம்.
மலர்: நாங்களும் இதே கோல்ஃப்கிளப் றோட்டிலதான் கொஞ்சம் தள்ளி வீடு ஒண்டு வாங்கியிருக்கிறம்.
வேணி நீங்கள் எப்ப இங்கால வந்தனிங்கள்?
மலர்: நாங்கள் வந்து ஐஞ்சு வருஷமாகுது. தெரியுந்தானே, எங்கட ஐயா சாக அண்ணை கப்பலில வெளிக்கிட்டவர். பிறகு அமெரிக்காவில இறங்கி இங்க வந்து றிஃபியூஜி அடிச்சு (அகதி நிலை கோருதல்), பிறகு எங்கள ஸ்பொன்ஸர் பண் ணிக் கூப்பிட்டவர்.
வேணி: உமக்கு தங்கச்சிமார் இருக்கினமெல்லே?
மலர்: ரெண்டுபேர், அம்மா எல்லாரும் இங்கதான்.
சதா: (காரில்வந்து) வேணி, எங்க கிளாஸுக்கோ. ஏறும் கொண்டுபோய் விடுகிறன்.
வேணி: மலர், அப்ப நான் வரட்டே. இது சதா, எங்கட மாமீன்ர மகன். உம்மட ஃபோன் நம்பரத் தாரும், பிறகு கூப்பி டுகிறன்.
சதா: அவ எங்க போறா? எங்க போநீங்கள் நீங்கள்?
மலர்: நான் லோறன்ஸ் சப்வேக்குப் (நிலத்துக்குஅடியில் ஓடும் ரயில்வண்டி) போறன்.
சதா: ஏறுங்கோ பிரச்சினையில்லை, ட்ரொப்பண்ணிவிடுகிறன்.
வேணி வாரும் மலர். (காரில் போய்க்கொண்டு) சதா, இது மலர்விழி. முந்தி அங்க மல்லாகத்தில என்னோட படிச்சவ. நீங்கள் ஆரெண்டு ஏறேக்கையே மலருக்குச் சொல்லீட்டன்.
52 வாழ்ந்து பார்க்கலாம்

சதா: நான் அடிக்கடி இந்த பஸ்ஸ்டாண்டில ஆளைக் காணுறனான்.
மலர்: நானும் இந்தக் காரைக் காணுறனான். கார் கண்மணி தெரியாமல் ஓடும்.
சதா: கண்மண்ணெல்லாம் நல்லாத் தெரியும். கார் எண்டா ஒடவேணும். சும்மா உறுட்டிக்கொண்டு திரிமிறதுக்கு ஏன் கார். மினைக்கெட்டு 170, 180 கிலோமீட்டரெண்டு ஒடுறமாதிரிச் செய்யிறாங்கள். கடைசி ஒரு நூறு கிலோ மீட்டரெண்டாலும் ஓடாட்டில் கார் ஓடிப் பிரயோசனமில்லை.
வேணி: போலீஸ் பிடியாதே.
சதா: மூண்டு வருஷமா ஒடுறன் போலீசைக் கண்ணாலும் கண்டதில்லை.
ഥണ്ഡ്: உங்களுக்கு நல்ல லக் இருக்கு 849 (அதிஷ்டலாபச் சீட்டு) எடுக்கலாம்.
சதா: 649 விழுந்தால் காரே ஒடுவன். ஜெட் பிளேனில்லோ. அதுசரி, நான் உங்களை இவ்வளவுநாளும் கயானாப் பெட்டை யாக்குமெண்டு நினைச்சன்.
மலர்: ஏன்?
சதா: மேக்கப் எண்டா அந்தமாதிரி
Ln605: ஏன், அதிலை என்ன பிழை? தமிழ்ப் பெட்டையள் எண்டால் கட்டாயம் சின்னனா ஒரு திருநீத்துக் கீறும் சிவப்புப் பொட்டும் வைச்சுக்கொண்டு போனால்தான் சரியோ?
சதா: இதென்னப்பா வீண் பிரச்சினை. பிழையெண்டு ஆர் சொன்னது? கயானாப் பெட்டையாக்குமெண்டு நினைச்சன் எண்டுதான் சொன்னன்.
வேணி: சதா, பேசாமல் இருங்கோ. துவங்கீட்டியள்
வழக்கம்போல. உங்களுக்கு ஆரெண்டில்லை. மலரிட்டக் கேக்க மறந்திட்டன். நீர் என்ன செய்யிறீர்?
53 வாழ்ந்து பார்க்கலாம்

Page 29
மலர்: பகலில வேலை, இரவில படிப்பு. சீ.ஜி.ஏ. (CERTIFIED GENERAL ACCOUNTANT) (ostiflipsii.
வேணி எங்க வேலை?
மலர்: டவுண் ரவுணில (நகரின் பிரதான பகுதி) ஒரு கொம்பனில வேலைசெய்யிறன்.
சதா: டவுண் ரவுணிலையோ, எவடம்?
மலர்: குமீன் அன்ட் யங் (கனடாவில் ஒரு இடத்தைக் குறிப்பாகச் சொல்வதற்கு இரண்டு தெருக்கள் ஒன்றையொன்று வெட்டிச்செல்லும் சந்தியைத்தான் பிரதான அடையாளமாகச் சொல்வார்கள். அத்தகைய இரு தெருக்கள்)
சதா: நான் இப்ப டவுண் ரவுணுக்குத்தான் போறன். உங்களுக்குப் பிரச்சினையில்லையெண்டால் கொண்டே இறக்கி விடுகிறன்.
மலர்: உங்களுக்குக் கரைச்சல்.
சதா: இதிலை என்ன கரைச்சல், உங்களை என்ன தலையிலை தூக்கிக்கொண்டே போகப்போறன். சும்மா போற கார்தானே, சுக
மாய்ப் போய் ஒஃபிஸில இறங்கலாம்.
மலர்: இண்டைக்கு ஒருநாள் சுகமாய்ப் போய் இறங்கிறதிலை என்ன கிடக்கு.
சதா: வேணுமெண்டால் ஒவ்வொருநாளும் வந்து இறக்கிவிடு கிறன்.
(காட்சிமாற்ற இசை)
காட்சி-5
வேணி அம்மா, நானொருக்கா வெளியால போட்டு வாறன்.
54 வாழ்ந்து பார்க்கலாம்

மங்க: ஐஞ்சு மணியாகுது, இந்தநேரத்தில எங்க போகப்போறாய்?
வேணி இப்பிடியே வீட்டுக்க கிடந்தால் நான் என்னண்டு வேலை தேடுறது?
மங்க: இண்டைக்கு ஞாயிற்றுக்கிழமை பின்னேரத்தில என்ன வேலை தேடப்போறாய்?
வேணி இல்லை, ஒரு தெரிஞ்ச பிள்ளை இருக்குது, அது இங்க வந்து கனகாலம். வேலை செய்யுது. அதைக் கேட்டால் ஏதும் உதவி செய்யும்.
மங்க: அப்ப தம்பியக் கூட்டிக்கொண்டு போ. உனக்கு இடங்க ளும் வடிவாத் தெரியாது.
வேணி; இந்த றோட்டிலதான் கொஞ்சம் பின்னால தள்ளிப் போனா அதின்ர வீடு வரும்.
மங்க: அதார் அந்தப் பிள்ளை.
வேணி என்னம்மா, விடுத்துவிடுத்துக் கேள்வியள் கேட்டுக் கொண்டு. நான் மலரிட்டப் போறன்.
மங்க: தார் சிவக்கொழுந்தன்ர மகளிட்டையோ. ஒ. அதுதான் நான் கேள்வி கேக்கிறது உனக்குப் பிடிக்கேல்லை என்ன. ஏன், உனக்கு உதவி கேக்கிறதுக்கு வேறை ஆக்கள் கிடைக் கேல்லையே.
வேணி தெரிஞ்சவேட்டைத்தானே கேக்கலாம்.
மங்க: என்ன வேணி, உனக்குக் கொஞ்சமெண்டாலும் சூடு சுறணை இல்லையே. நீ ஆர், ஆரிட்டப்போய் உதவிகேக்கிறது.
வேணி: நீங்கள் உப்பிடிச் சொல்லுவீங்களெண்டுதான் நான் எங்க போறனெண்டு சொல்ல விரும்பேல்ல. அம்மா, இப்ப நாங்கள் இருக்கிறது கனடா. யாழ்ப்பாணத்திலையிருந்து எத்தினையோ ஆயிரம் மைலுகளுக்கிங்கால இருக்கிறம். அங்க வாழ்ந்தமாதிரி இங்க வாழேலாது.
55 6hnybody .M44Affib

Page 30
மங்க: அடி சக்கை, கனடா வந்து மூண்டு மாசமாகேல்லை, அதுக்குள்ள கனடா பிடிபட்டுக்கொண்டுதுபோல. நீ போற போக் கைப் பாத்தா எங்க போய் நிக்கப்போறாயெண்டு எனக்கு விளங்கேல்லை.
வேணி: ஏனம்மா இப்ப வீண் கதை கதைக்கிறியள். எனக்கிப்ப வேலையொண்டு கட்டாயம் வேணும். அதை எடுக்கிற துக்கு உதவக்கூடிய அட்வைஸ் பண்ணக்கூடியவையோட கதைச்சால்தானேயம்மா முடியும்.
மங்க: அந்த உதவியளை ஆரிட்டயிருந்து எடுக்கிறதெண் டதும் ஒரு முக்கியமான விஷயம் வேணி கனடா வந்திட்டம் எண்டதால எங்கட மதிப்பு மரியாதையை இழந்திட்டம் எண்ட தில்லை. எங்களுக்கெண்டு பண்பாடு, பழக்கவழக்கங்கள் எல்லாம் இருக்கு. எங்க போனாலும் அதுகளைப் பேணி, எங்க ளுக்குரிய மதிப்போட மரியாதையோட வாழவேணும். கனடா வந்திட்ட மெண்டு போட்டுநாளைக்கு நீ நினைச்சபடியெல்லாம்செய்ய வெளிக்கிடுவாய்போலகிடக்கு.
வேணி என்னம்மா விசர்க்கதை கதைச்சுக்கொண்டு நிக்கிறீங்கள். எதையெதை எங்கெங்க கதைக்கிறதெண்டு தெரி யாதே. பண்பாடு கலாச்சாரம் பேணுறதுக்கும் நான் மலரிட்டப் போறதுக்கும் என்ன சம்மந்தம்.
(கதவு தட்டும் ஒலி)
மங்க: அப்பா வந்திட்டார்போல,
மகா (வந்துகொண்டே) என்ன ஒரே அமளிதுமளியாக்கிடக்கு. அங்க எலிவேட்டரடியில வரவே இந்த வீட்டுக்கால சத்தம் கேக்குது.
மங்க: நீங்கள்தான் கேளுங்கோ மகளிட்ட, எங்க வெளிக்கிட்டு நிக்கிறா இப்ப எண்டு.
1056/T: இப்ப என்ன ஐஞ்சு மணிதானே. அவள் போற இடத்த போட்டு வரட்டன். இஞ்சாரும், தமிழ்க் கடையில இப்பதான் வந்ததெண்டுசொல்லி இந்த நண்டத் தந்தாங்கள். போனமுறை மாதிரி வெறும் கோதுதானோ தெரியாது, நல்லா உறைக்க ஒரு கறி வையும்.
56 வாழ்ந்து பார்க்கலாம்

மங்க: நண்டுக் கறியப் பிறகு பாப்பம். முதலில மகள் எங்க போறாவெண்டு கேளுங்கோ.
மகா: என்ன வேணி, எங்க போற.
வேணி வேலை தேடுற விஷயமாக் கதைக்க மலர்வீட்ட ஒருக்
காப் போகப்போறனப்பா. இந்த றோட்டில ஒரு ஐநூறு யார் தள்ளித்தான் அவவின்ர வீடிருக்கப்பா.
மகா: அதுக்கிப்ப என்ன பிரச்சினை. ஒடிப்போட்டோடிவா.
மங்க: எனக்குத் தெரியும். நீங்கள் உப்பிடிச் சொல்லுவீங்க ளெண்டு. அது சிவக்கொழுந்தன்ர பெட்டை,
மகா: எனக்கு விளங்குது நீர் என்ன சொல்ல வாரீரெண்டு. இங்க உதெல்லாம் பாக்கேலாது. சும்மா வீண் பிரச்சினைப்படாமல் உங்களுங்கள் அலுவலுகளைப் பாருங்கோ.
மங்க: ஏதோ தேப்பனும் மோளும் பட்டபாடு. பாருங்கோ அவவ, இளிச்சுக்கொண்டு போறா. அங்க போய்த் தண்ணிவென்னி குடிக்கிறேல்ல.
வேணி சரியம்மா போட்டுவாறன், அப்பா போட்டுவாறன்.
மகா மங்களம், சும்மா விசரியள்மாதிரிப் பிள்ளையோட வீண்கதை கதையாதையும். நீர் நினைக்கிறமாதிரி யாழ்ப்பாணத்திலையே இப்ப சீவிக்கேலாது. இங்க வந்து உந்தக் கதையள் கதைச்சால் உம்மை விசரியெண்டெல்லே சொல்லப்போகினம். சரிசரி, போய்க் கறியை வையும். எட்டுமணிக்குமுதல் சாப்பிடவேணும், இல்லாட் டால் நெஞ்செரிச்சுக்கொண்டு நித்திரைகொள்ளேலாது.
மங்க: நல்லா நண்டு, கணவாய், றால் எண்டு சாப்பிடுங்கோ. கொலஸ்ட்ரோல் ஏறட்டும். இதுகளைக் கொண்டுவந்து சமைக்கச் சொல்லுறது, பிறகு தலை நாறுது, சட்டைநாறுதெண்டு (கன டாவில் குளிர் காரணமாக வீடுகள் பெரும்பாலும் மூடிக்கட் டப்பட்டிருப்பதால் காரம், மணம், குணம் நிறைந்த எமது சமை யல் காரணமாக தமிழர்களின் உடல்மீதும் உடைகளிலும் அந்த வாசனை தங்கிவிடுவது ஒரு பெரும் பிரச்சினை) ஏதோ நான்தான் எல்லாத்தையும் நாறடிச்சமாதிரி என்னைப் பேசிறது.
57 வாழ்ந்து பார்க்கலாம்

Page 31
மகா: நான் அறைக்கதவு, குளொசெற் கதவுகளைச் சாத்துறன், நீர் சமையும். எங்க மற்றவை?
மங்க: முகுந்தன் ஃபோர்த் ஃபுளொரில சஞ்சய் வீட்ட போறனெண்டு போனான், தங்கச்சியார் இன்னும் உந்த அறேக்க அந்த (Sega) சேகா விளையாட்டோடதான்.
(காட்சிமாற்ற இசை)
காட்சி-6
மலர்: ஆ. வேணி வாரும். அப்போததொடக்கம் பாத்துக் கொண்டிருக்கிறன்.
வேணி வீட்டில அம்மாவோட கதைச்சுக் கொண்டிருந்ததில கொஞ்சம் மினைக்கெட்டுப்போச்சுது. எங்க வீட்டில ஒருத்தரை யும் காணேல்ல.
மலர்: இருந்தாப்போல அம்மா கோயிலுக்குப் போவமெண்டுசொல்ல எல்லாரும் றிச்மண்ட்ஹில் கோயிலுக்குப் போட்டினம். அம்மாவைக் கோயிலுக்குக் கூட்டிக்கொண்டுபோக அண்ணைக்கு நேரம் வாறேல் லைத்தானே. இப்பிடி இருந்திட்டு ஒருநாளைக்குப் போனால் சரி.
வேணி; நீர் போகேல்லையே?
மலர்: இல்லை, நீர் வாறனெண்டு ஃபோண் பண்ணினிர்தானே. பின்ன நீங்கள் போங்கோ எண்டுபோட்டு நான் நிண்டிட்டன். வுாரும் மேல என்ர அறைக்குப் போவம்.
வேணி; நல்ல பெரிய வீடு. வடிவா வைச்சிருக்கிறீங்கள்.
மலர்: ஒ.அண்ணை எல்லாத்திலையும் சரியான கவனம். அதால நாங்களும் வலு கவனம். அண்ணை வீட்டுக்கை வரேக்கை எங்க ஒரு சின்ன ஊத்தை கிடக்கெண்டு பாத்துக்கொண்டுதான் வாறது. எங்களை அங்க பாத்த உமக்கு இப்ப நம்பேலாமல் இருக்கும் 6T676.
58. வாழ்ந்து பார்க்கலாம்

(წ6)l60dfჩ: சீ. எல்லாருக்கும் வாழ்க்கேல மாற்றங்கள் வாறதுதானே.
மலர்: எண்டாலும் வேணி, எனக்குச் சிலவேளை இதுகளை நம்பமுடியிறேல்லை. உண்மையா இது நாங்கள்தானோ எண்டு கூட சந்தேகம் வந்திடும். நாங்கள் அங்க உங்கட வடஃக்கை இருந்த ஒலைக் குடிசையையும் இந்த வீட்டையும் யோசிக்க தமிழ் சினிமாப்படங்களில வாறமாதிரி. பாவம், எல்லாம் எங்கட அண்ணன்ர விடாமுயற்சியும் உழைப்பும்தான்.
வேணி; அதுதான் மலர், வாழ்க்கேல என்னென்ன எப்பிடியெப்பிடி மாறுமெண்டு ஒருதரும் சொல்லேலாது. அதிலும் இப்ப மாற்றங் கள் படு வேகமா நடக்குது.
மலர்: இப்பிடி இந்தக் கட்டிலில இரும். வேணி, எங்கட அம்மா இப்பவும் சொல்லுவா, உங்கட அம்மான்ர தகப்பன் முத்துத்தம்பி விதானையார் இரக்கப்பட்டுத் தன்ர வடலிக்காணிக்கை இடம் தந்திராட்டால் நாங்கள் றோட்டுறோட்டாய் அலைஞ்சிருக்கவேண்டிய ஆக்கள் எண்டு. அண்ணைக்கும் எனக்கும் எல்லாம் தெரியும் தானே. தங்கச்சிமார் சிலவேளை அதுவேண்டாம் இதுவேண்டாம் எண்டு செல்லம்காட்டினால் அம்மா இதைத்தான் சொல்லுவா.
வேணி பாவம் உங்கட அம்மா. அவ பட்ட கஷ்டத்துக் கெண்டாலும் நீங்கள் எல்லாரும் நல்லாயிருப்பியள். கொம்பியூட்டர் புதுசுபோல.
மலர்: ஓ. என்னிட்ட இருந்ததத் தங்கச்சீட்டக் குடுத்திட்டு நான் போனமாசம்தான் இது வாங்கினனான். ஃபக்ஸ், சிடி, ஸ்பீக் கர் எல்லாம் இருக்கு.
வேணி: மலர், எனக்கெண்டா இங்க வேலை கிடைக்குமெண்ட நம்பிக்கை இல்லை.
மலர்: புதுசா வந்தஉடன எல்லாருக்கும் அப்பிடித்தானிருக்கும். இப்ப நீர் வந்து என்ன மூண்டுமாசந்தானே. உம்மட கேஸ் முடிஞ்சு லாண்டட் கிடைக்கட்டும். அதுவரைக்கும் படியும் இங்க படிக்க நிறைய விஷயமிருக்கு,
வேணி இந்த இங்கிலிஷெல்லே பிரச்சினையாயிருக்கு.
59 வாழ்ந்து பார்க்கலாம்

Page 32
LoGolf: அதப்பற்றி யோசிக்காதையும். இங்க எல்லாரும் ஒரே சொல்லுகளை ஒரேமாதிரி ஒரேபாணியில பேசுவினம். அதிலும் கனேடியன் கேர்ள்ஸப் பாத்தீரெண்டால் கதைக்கிறதொனி, தலை யாட்டம், முகபாவம் எல்லாம் ஒரேமாதிரித்தான். கொஞ்சநாளைக்கு உத்துக் கவனிச்சீரெண்டால் நீரும் பிறகு அவைமாதிரியே பேசுவீர்.
வேணி: உம்மோட கதைக்க எவ்வளவு ஆறதலா இருக்கு. எனக்கு வந்த நாள்தொடக்கம் ஒரே பயம் மலர். இங்க கனடால எனக்கு வேலை செய்யேலாதோ எண்டு ஒரு நம்பிக்கைமீனம் வந்திட்டுது.
மலர்: சீ. ஏனப்பிடியெல்லாம் நினைப்பான். உமக்குத்தான் இங்க அப்பா அம்மா இருக்கினம். ஒரு செக்கியூரிட்டி இருக்கு. ஆறு
தலா வடிவா படிச்சு, பிளான்பண்ணி எல்லாத்தையும் செய்யலாம்.
வேணி: என்னால ஆறுதலா மினைக்கெட ஏலாது மலர். உடனடியா எல்லாம் நடக்கவேணும்.
மலர்: ஏன், என்ன அவசரம்? வேணி பிறகு நேரம் வரேக்க சொல்லுறன்.
(காட்சிமாற்ற இசை)
காட்சி-7
சதா: எப்பிடி. வேலை முடிஞ்சுதோ? மலர்: ஆ. சதா, என்ன இந்தப் பக்கம்?
சதா டவுண்ரவுணுக்கு ஒரு அலுவலா வந்தனான். திடீரெண்டு இப்ப வேலை விடுகிற நேரமெண்டு நினவுை வந்தது, கூட்டிக்கொண்டு போவமெண்டு வந்தன்.
மலர்: நான் சப்வேல போறன். வீட்டில அம்மா பாத்துக்கொண் டிருப்பா. நீங்கள்.
60 வாழ்ந்து பார்க்கலாம்

சதா: அதுதான் வாங்கோ கெதீல கூட்டிக்கொண்டே விடுகிறன் எண்டுறன்.
மலர்: வேண்டாம் சதா, அண்டைக்கு வேணியோட நிண்ட படியா உங்களோட தற்செயலாக் காரில வரவேண்டியிருந்தது. இண்டைக்கு வர்றதுக்கு ஒரு காரணமுமில்லை.
சதா சரி, உங்கட விருப்பம். நான் வாறன்.
மலர் நீங்கள் கோவிக்கிறீங்கள்போல இருக்கு.
சதா: சீ, நானார் உங்களைக் கோவிக்கிறதுக்கு. நான் வந்திருக் கக்கூடாது.
Ln6 f: இல்லை, உங்களுக்கு உண்மையாக் கோவம் வந்திட்டுது. சரி, அப்ப வாங்கோ போவம்.
சதா: வேண்டாம் வேண்டாம். ஏதோ நான் உங்களை பைஃபோ சாக் கூட்டிக்கொண்டு போறமாதிரி இருக்கு.
மலர்: அப்பிடியெல்லாம் ஒண்டுமில்லை. இப்ப இதில கனநேரம் நிக்கேலாது. வாங்கோ போவம்.
(இசை)
மலர்: (காரில்போய்க்கொண்டு) நான் ஏன் மாட்டனெண்டு சொன் னனா னெண்டால் எனக்கு ஒரு சின்னப் பிரச்சினை இருக்கு. அதோட அண்ணைக்குத் தெரிஞ்சால் சரியான கோவம் வரும்.
சதா: அப்பிடி ஸ்ட்ரிக்டா இருக்கிறவர் எப்பிடி உம்மை இப்பிடியெல்லாம் மேக்அப் பண்ண விட்டார்.
LOGOf: உங்களுக்கு நான் மேக்அப் பண்ணுறது ஒரு பிரச்சினையாயிருக்குதுபோல. அண்டைக்கும் சொன்னனிங்கள்.
சதா இல்லை, அண்ணை ஸ்ட்ரிக்ட் எண்டு சொல்லுநீர்.
y உங்களுக்கு எங்கட அண்ணையப்பற்றித் தெரியாது சதா. அவர் சின்னனிலையே உழைக்கவெண்டு வெளிக்கிட்டு
6. வாழ்ந்து பார்க்கலாம்

Page 33
உலகம் அடிபட்டவர். எந்த சப்ஜெக்ட எடுத்தாலும் ஒவ்வொண் டிலையும் அவருக்குத் திட்டவட்டமான கருத்திருக்கும். வசதியி ருந்து படிச்சிருந்தாரெண்டால் இந்தளவுக்கும் ரெண்டு மூண்டு பிஎச்டி செய்திருப்பார்.
சதா: எனக்கு அதெல்லாம் விளங்காத விசயம். அதுசரி, அதுக் கும் உம்மட மேக்அப்புக்கும் என்ன சம்மந்தம்?
மலர்: அண்ணை சொல்லுவார், பண்பாடு கலாச்சாரம் நாகரீகம் எண்டு சொல்லுறதெல்லாம் மனிதகுலத்துக்கே பொதுவானதெண்டு. தெளிந்த சிந்தனை, உண்மை, நேர்மை, அன்பு, மற்றவையளில காட்டுற கரிசனை, மரியாதை இதுகள்தான் ஒரு நாகரீகமான கலாச்சாரத்துக்கான குணங்கள். இது மனித மனத்தைப்பொறுத்த விஷயமேதவிர வெளித்தோற்றத்தைப் பொறுத்ததில்லையெண்டு. கலாச்சாரம் எண்டு சொல்லிக்கொண்டு மற்றவைக்கு வேடிக்கைப் பொருளா நாங்கள் இருக்கக்கூடாதெண்டு சொல்லுவார்.
சதா: எனக்கு விளங்கேல்லை.
மலர்: இப்ப நான் எங்கட கலாச்சாரத்தைக் காப்பாத்துறன் எண்டு போட்டு சாறி உடுத்தி, பொட்டு பூவெல்லாம் வைச்சுக்கொண்டு ஒஃபிஸுக்குப் போனா எப்பிடியிருக்கும். றோட்டிலயிருந்து ஒஃபிஸ்வரையும் நானொரு வேடிக்கைப் பொருளா இருப்பன். இப்ப நான் இங்க உள்ளவைபோல உடுத்தி றதால ஒருதரும் என்னைக் கவனிக்கமாட்டினம்.
சதா ம்.ஊரோட ஒத்துவாழ் எண்டு சொல்லுறீர்.
மலர்: நியாயமான விஷயங்களில.
சதா: அண்ணை என்ன செய்யிறார்?
மலர்: அண்ணை ஒரு கிறீக் றெஸ்டோரண்டில டிஷ்வோஷராச் சேந்தவர். இப்ப அவர்தான் சீஃப்குக். முதல் அண்ணை கப்பல் வளியத் திரிஞ்சதால கொஞ்சம் கிறீக் பேசத் தெரியும். முதலா ளிக்கு அண்ணையெண்டால் உயிர். அந்தமாதிரித்தான் சம்பளம் குடுத்து வைச்சிருக்கிறார். அண்ணையும் அப்பிடித்தான். தன்ர றெஸ்டோரண்ட்மாதிரி ராப்பகலா அங்கதான். (திடீரென) சதா, துலைஞ்கது. இண்டைக்குப் பிரச்சினைதான்.
சதா: என்ன மலர், என்ன திடிரெண்டு.
62 வாழ்ந்து பார்க்கலாம்

Ln6)f: நான் அப்போதே சொன்னன், எனக்கொரு பிரச்சினை யிருக்கெண்டு. அது இதுதான். மெல்லவாக் கவனிக்காத மாதிரி
பக்கத்திலவாற காரைப் பாருங்கோ.
சதா: எது, இந்த பி.எம்.டபிள்யூவோ.
மலர்: இல்லை, பின்னால பிங்க் கலரில வருகுது ஹொண்டா பிறலுயிட் ஒண்டு.
சதா: அது கண்ணாடியெல்லாம் ரின்ற் பண்ணி கறுப்பாக்கள் மாதிரியெல்லோ இருக்கு.
Ln6)f: இல்லை, அது எங்கட ஆக்கள். பக்கத்தில வந்திட் டுது, கவனிக்காதேங்கோ.
சதா: அடிச்சள்ளிக்கொண்டு போகினம். பல்லுகளும் பவுண் சங்கிலியளும்தான் கண்ணாடிக்குள்ளால தெரியுது, வேறொண்டும் தெரியேல்லை. ஆர் ஆக்கள்?
மலர்: கார் ஓடிக்கொண்டுபோறது எங்கட ஊர்தான். அங்க
இயக்கம் எண்டுகொண்டு திரிஞ்சது. இப்ப இங்க வந்து அட்டகாசம்.
சதா: எந்த இயக்கம்.
மலர்: இவன் எங்க இயக்கத்தில இருந்தது. சும்மா இயக்க மெண்டுசொல்லிக் களவெடுத்துக்கொண்டு திரிஞ்சவன். பிறகு அவங்களிட்ட அம்பிட்டு, கடப்போக எப்பிடியோ தப்பி இங்க வந்திட்டுது.
சதா உமக்கென்ன பிரச்சினை அவனால?
மலர்: இப்ப உந்தக் காரில பெரிசாத் தமிழ்ப்பாட்டுக் கசட்டைப் போட்டுக்கொண்டு என்னைச் சுத்தினபடி, பஸ்ஸ்ராண்ட், ஒஃபிஸ்வாசல் எண்டு நிக்கிறது. பிறகு நான் சப்வேயில வந்து இறங்கி பஸ்ஸில வீடுவருமட்டும் பஸ்ஸுக்குப் பின்னாலையே வாறது. இப்பிடி ஒரே கரைச்சல், அதுதான் நான் அப்போத சொன்னன், ஒஃபிஸ் வாசலில நிண்டு மினைக்கெடாமல் உடன போவமெண்டு. 、
63 வாழ்ந்து பார்க்கலாம்

Page 34
சதா: அண்ணையிட்டச் சொன்னனிரே?
மலர்: சொன்னனான். அவர், நீ கவனிக்காதமாதிரி பேசாமல் இக்னோர் பண்ணு எண்டு சொன்னவர்.
சதா அங்க அதில நிக்கினம்போல கிடக்கு.
மலர்: ஓ. அந்தத் தமிழ்க் கடையடியிலதான் அவை நிக்கிறது.
சதா மறிக்கச்சொல்லிக் கை காட்டினம்.
மலர்: நீங்கள் பேசாமல் லேனை மாத்தி எடுத்துக்கொண்டு தெரியாதமாதிரிப் போங்கோ.
சதா இல்லை, பாப்பம் என்ன சொல்லீனமெண்டு.
மலர்: சதா, அவன் சரியான கெட்ட சனியன். என்ன சொன்னாலும் வாயைத் திறக்காதேங்கோ.
சங்கர்: அண்ணை, காரை அப்பிடியே திருப்பி உள்ளுக்க எடுத்து அந்த கொண்டாக்குப் பக்கத்தில நிப்பாட்டுங்கோ. (காருக்குள் இருந்து வரும் தமிழ்ப்பாட்டு பெரிதாகக் கேட்கிறது) என்ன மலர், நான் எத்தினையோநாள் கேட்டும் மாட்டனெண்டு போட்டு இண்டைக்குக் கார்ச் சவாரி நடக்குது.
மலர்: அவர் அண்ணைக்குத் தெரிஞ்சவர். தற்செயலாக் கண்டுபோட்டுக் கூட்டிக்கொண்டு வந்தவர்.
சங்கர்: என்னைக் கொண்ணைக்குத் தெரியாதோ. இந்தச் சேட்டைக் கதையெல்லாம் என்னோட வைக்கவேண்டாம். இவர் ஆரெண்டு முழுச்சரித்திரமுமே எனக்குத் தெரியும். இப்ப நீர் இறங்கும் காரால.
சதா: ஏன், என்ன விஷயம்?
சங்கர்: அண்ண, நீர் கொஞ்சம் பேசாமல் இருக்கிறீரோ. மலர், நீர் இறங்கி நடந்துபோகலாம். வீடு கிட்டத்தான்.
64 வாழ்ந்து பார்க்கலாம்

மலர்: சதா, பேசாமல் இருங்கோ, நான் நடந்துபோறன்.
சங்கர்: உம்மட பேரென்ன?
சதா: சதா.
"சங்கர்: சதா, உமக்குச் சொல்லுறன், இதுதான் கடைசியும் முதலுமா இருக்கட்டும். அது நான் கட்டப்போற பெட்டை. வீண்
பிரச்சினைப்படவேண்டாம். இப்ப போம்.
(காட்சிமாற்றஇசை)
காட்சி-8
மங்க: வேணி, நீ பாத்ரூமுக்குள்ள நிக்கேக்க ஒரு கோல் வந்தது. கொழும்பில இருந்து ஆரோ சிவாவாம் எடுத்து இந்த நம்பரைத் தந்தவர், உன்னை ஒருக்கா கோல் பண்ணட்டாம். ஆர் சிவா?
வேணி: அம்மாக்கு கனடா வந்ததோட எல்லாம் மறந்துபோச்சு. அது சிவநாதனம்மா. பூரணலிங்கம் மாஸ்டரின்ர
மகன்.
மங்க: ஒ. அந்த சிவாவே. அவன் ஏன் கொழும்புக்கு வந்தவன். யாழ்ப்பாணத்திலையெல்லே பாங்கில வேல.
ഖങ്ങി ஏதும் அலுவலா வந்திருப்பார். வரேக்க எனக்கு நல்ல உதவி. அவர்தான் பாஸெல்லாம் எடுத்துத் தந்தவர்.
மங்க: அப்ப ஒருக்கா எடுத்து என்னண்டு கேளன். அங்க மச்சாளுக்குத்தான் ஏதும் சுகமில்லையோ தெரியாது.
வேணி: அப்பிடி ஒண்டுமிருக்காது. எனக்கிப்ப நேரம் போச்சுது, பின்னேரம் வந்து கதைப்பம். போட்டுவாறனம்மா.
(காட்சிமாற்ற இசை)
65 NJngjie uwidawuh

Page 35
காட்சி-9
மலர்: வேணி என்ன இந்த நேரத்தில.
வேணி ஒரு முக்கியமான விஷயம் மலர், எங்க வீட்டாக்களெல் லாரும்.
Logoff: அம்மா குசின்க்க. தங்கச்சிமார் தங்கட அறையஞக் குள்ள படிக்கினம். ஏன், என்ன பிரச்சினை.
வேணி: நானொருக்கா கொழும்புக்கு ஒரு ஃபோண்கோல் எடுக்கவேணும், அதுதான்.
மலர்: வாரும், மேல என்ர றுமுக்கு.
வேணி: ஸ்கூல் முடிஞ்சு வீட்டையும் போகேல்லை. வட்டிலஇருந்து ஃறியாக்கதைக்கேலாது. அதுதான் ஸ்கூல் முடிய லைப்றறிக்குப் போறனெண்டு அம்மாக்கு ஃபோண் பண்ணிச் சொல்லிப் போட்டு லைப்றறிக்குப் போனனான். நீர் எப்ப வருவீரெண்டும் தெரியாது. அதுதான் இவ்வளவும் நிண்டு மினைக் கெட்டுப்போட்டு இப்ப வந்தனான்.
மலர்: இப்ப இங்க எட்டரையாகுது. அங்க இப்ப விடிஞ்சி ருக்கும். இந்தாரும் ஃபோண்.
வேணி: நான் உம்ம டிஸ்ரேர்ப் பண்ணுறனோ தெரியாது. ஃபோன் பில் வந்தஉடன எவ்வளவெண்டு சொன்னிரெண்டா நான் பே பண்ணுறன்.
மலர்: அதப் பிறகு பாப்பம். றிங் பண்ணுதே.
வேணி: ஓமோம், ஹலோ. நான் கனடாவிலயிருந்து பேசிறன். உது எந்த இடம்?
குரல்-1: இது கொட்டாஞ்சேனை பாலன் லொட்ஜ்,
வேணி அங்க சிவா எண்டு ஒருவர் யாழ்ப்பாணத் திலை யிருந்து வந்திருக்கிறார், அவரோட கொஞ்சம் பேசவேணும்.
66 வாழ்ந்து பார்க்கலாம்

குரல்-1: கொஞ்சம் நில்லுங்கோ கூப்பிடுகிறன்.
மலர்: என்ன, ஆள் நிக்குதே.
வேணி இது ஏதோ லொட்ஜாம், கூப்பிடுகிறனெண்டு சொல்லியி ருக்கிறார்.
மலர்: இப்ப நித்திரையாயிருப்பினமோ தெரியாது.
வேணி இல்லை, சரியான சத்தமாயிருக்கு. எல்லாரும் எழும்பி ற்றினம் போல, ஹலோ.
குரல்-2: ஹலோ.
வேணி ஆர், சிவாவே.
குரல்-2: ஒம், சிவாதான் பேசிறன். நீங்கள்.
வேணி: (குரல் வித்தியாசமாக இருப்பதை உணர்ந்து) நீங்கள் மல்லாகத்திலயிருந்து வந்த சிவாதானே.
குரல்-2: இல்லை, நான் சிவபாலன். சுழிபுரம்
வேணி: நான் மல்லாகத்திலயிருந்து வந்த சிவாவோட பேசவேணும்.
குரல்-2: நீங்கள் எங்கயிருந்து பேசிறியள்?
வேணி: கனடாவில.
குரல்-2: கனடாவோ. நீங்கள் கேக்கிறது அந்த பாங்கில வேலைசெய்யிற சிவா என்ன.(உரத்து) டேய், அங்க பதினைஞ்சாம் நம்பர் அறையில இருக்கிற சிவாவை வரச்சொல்லு. s விலயிருந்து கோல். (குரலைத்தணித்து) விடிய மூண்டுமணிக் குத்தான் போலீஸ்ஸ்டேஷனால வந்தனாங்கள். அவர் நித்திரை
யாயிருப்பார். வேணி (பதட்டமாக) என்ன போலீஸ்ஸ்டேஷனாலையோ. என்ன நடந்தது?
67. வாழ்ந்து பார்க்கலாம்

Page 36
குரல்-2: அது ஒண்டுமில்லை. வழக்கமா இங்க நடக்கிறது தானே. முந்தநாள் குண்டுவெடிச்சது தெரியுந்தானே.
வேணி: ஓமோம்.
குரல்-2: அப்பிடி ஏதும் நடந்தா இங்க லொட்ஜ்வழிய போலீஸ் பாயும். இருக்கிறவையை அள்ளிக்கொண்டு போலீஸ் ஸ்டேஷ னுக்குப் போவாங்கள். பிறகு ஒரு ஐஞ்சப் பத்தக் குடுக்க விட்டிடு வாங்கள். மெய்யேக்கா, எப்பிடியக்கா கனடாவெல்லாம். நானும் அங்க வரத்தான் கொழும்புக்கு வந்து வந்துநிக்கிறன். பிரச்சினை இல்லையே. அங்க அச்சப் (ACCEPT-அகதியாக ஏற்றுக்கொள் ளுதல்)பண்ணுவாங்களே?
வேணி அது எனக்குச் சொல்லேலாதுதானே. நீங்கள் வந்து தான் பாக்கவேணும்.
குரல்-2: ஓ. அதுதானே. ஏஜன்ட் சொல்லியிருக்கிறார், அது ஒரு பிரச்சினையுமில்லையெண்டு. எப்பிடி அங்க அகதிக்காசு
எவ்வளவு குடுக்கிறாங்களக்கா.
வேணி; நான் எடுக்கிறேல்லை, அதால எனக்கு எவளவெண்டு தெரியேல்லை.
குரல்-2: அப்ப நீங்கள் பொஞ்சரில (SPONSOR-560,LT656 உள்ள உறவினர்களின் அனுசரணையுடன் குடியேறுதல்) போன வீங்களாக்கும். இப்ப நோர்வேல கனடாவவிடக் கூடக் காசெண்டு கதைக்கிறாங்கள். அதுதான் எனக்கு எங்க போறதெண்டு தெரி யேல்லை. ஆ. இங்க அண்ணை வந்திட்டார். குடுக்கிறன். அ.
சிவா: ஹலோ, வேணியா.
வேணி; சிவா. (விம்மியழுதல்)
மலர்: வேணி, நீர் கதையும், நான் வோஷ்றுாமுக்குப் (குளியல் அறை) போட்டுவாறன்.
சிவா: எப்பிடி இருக்கிறீர்.
68 வாழ்ந்து பார்க்கலாம்

வேணி நீங்கள் எப்பிடி இருக்கிறீங்கள் சிவா. என்ன, போலீஸ் பிடிச்சதெண்டு சொல்லுறார்.
சிவா; அது நேற்றுப் பின்னேரம். உதில பக்கத்தில இருக்கிற ஏஜன்ஸிப் போஸ்ட் ஒஃபிஸில போய் உமக்குக் கோல் எடுத்திட்டு வர இங்க போலீஸ் வந்து இருந்த எல்லாரையும் பஸ்ஸில ஏத்தி போலீஸ் ஸ்டேஷனுக்குக் கொண்டுபோட்டாங்கள். பிறகு நான் பாங்க் ஐடியைக் காட்டி ஒருமாதிரிக் கதைச்சு இரவு 2, 3 மணிபோலதான் விட்டாங்கள்.
வேணி: கவனம் சிவா. ஏன் கொழும்புக்கு வந்தனிங்கள்?
சிவா? ஏன் கொழும்புக்கு வந்ததோ. விசரில.
வேணி: இல்லை சிவா. கொழும்புக்கு வாறது பயம்தானே. நல்லவேளை, கடவுள் காப்பாத்தினார். நானும் இண்டைக்குக் காலமை உங்கட கோல் வந்தஉடனை எடுத்திருந்தால். நினைச்சுப் பாருங்கோ, உங்களைப் பிடிச்சுக்கொண்டு போட்டாங்கள் எண்டால் என்னபாடு பட்டிருப்பன்.
56III: உடன கோல் எடுக்காமல் விட்டிட்டு நல்ல சாட்டு
விடுகிறீர் என்ன?
வேணி நான் உடன எடுக்காமல் விட்டது வீட்டில அம்மாக்கு முன்னால எடுத்தால் உங்களோட ஃப்றீயாக் கதைக்கேலாதெண்டு தான். பிறகு வந்து எடுக்கிறன் எண்டு அம்மாக்குச் சொல்லிப் போட்டுப் பள்ளிக்குடத்துக்கு வந்திட்டன். இண்டு முழுக்க நான் பட்டபாடு உங்களுக்கெங்க தெரியப்போகுது. இங்க இப்ப இரவு எட்டரை மணி. நான் இன்னும் வீட்ட போகேல்லை. வீட்டில லைப்ரரிக்குப் போறனெண்டு சொல்லிப்போட்டு ஒரு ஃபிறெண்ட் வீட்ட வந்துதான் உங்களோட கதைக்கிறன் இப்ப,
சிவா: நான் கோலெடுக்க அம்மாதான் ஃபோண் எடுத்தவ. நான் இங்க ஒருநிமிஷக் கோல்தானே புக்பண்ணி எடுத்தனான். அவவோடை ஒண்டும் கதைக்கேல்லை. ஏதும் கேட்டவவே?
வேணி: அவவுக்கு சிவா ஆரெண்டு உடன விளங்கேல்லை. பிறகு நான் விளங்கப்படுத்தின உடன வீட்டில மாமிக்குத்தான் ஏதும் சுகமில்லையோவெண்டு உடன எடுக்கச் சொன்னா. இப்பவும் நான் வீட்ட போனஉடன எடுக்கச் சொல்லுவா. நான் எடுப்பன். அப்ப சாதாரணமாக் கதைக்கலாம் என்ன.
69 வாழ்ந்து பார்க்கலாம்

Page 37
சிவா: அப்ப நீர் இன்னும் அம்மாக்கு எங்கட விஷயத்தைப்பற்றிச் சொல்லேல்லையே?
வேணி என்னண்டு சிவா இப்ப சொல்லுறது. நேரம் வரட்டுமன்.
சிவா. ம். நான் ஒரு விசரன். நாலுமாசமாக் குரலைக் கேக்கேல்லையெண்டு தவிச்சு இவ்வளவு பிரச்சினைக்குள்ளும் உம்மோட கதைக்கவெண்டு கொழும்பு வாறன். நீர் இப்ப என்ன அவசரமெண்டுபோட்டு சந்தோஷமாத் திரியிறீர்போல.
வேணி நான் சந்தோஷமா இருக்கிறன் எண்டா சிவா சொல்லுநீங்கள்? இவ்வளவுதான் தெரிஞ்சிருக்கு என்னை உங்க ளுக்கு. இரவுபகலா என்ர மனம் படுகிறபாடு உங்களுக்கு விளங்கேல்லை. அப்பா என்னை கிரேட் 13 படி, யூனிவர்சிற்றிக்குப் போ எண்டு சொல்லவும், வேண்டாம் ஒரு வேலை எடுக்கவேணுமெண்டு பிடிவாதமா ட்ரை பண்ணிக்கொண்டு திரியிறன். வேலை கிடைச்சு, இமிக்கிறேஷன் அலுவலெல்லாம் சரிவந்து, நான் உங்களை ஸ்பொன்ஸர் பண்ணிக் கூப்பிட எப்பிடியும் ஒண்டு ஒண்டரை வருஷம் செல்லும்.
சிவா: ஒண்டரை வருஷமோ? நல்ல கதைதான். உம்மட கதையைப் பாத்தா நான் பொல்லுப் பிடிச்சுக்கொண்டு வந்துதான் உம்மைக் கலியாணம் செய்வன்போல.
வேணி: என்னை இப்ப என்ன செய்யச் சொல்லுநீங்கள் சிவா. என்ர கையிலயா எல்லாம் இருக்கு. நாங்கள் அங்க இருந்து நினைக்கிறமாதிரி ஒண்டும் இங்க லேசான காரியமில்லை. வந்து பாத்தாத்தான் தெரியும்.
சிவா: ஒ. நீர் இப்ப கனடாப் பிளானில கதைக்கிறீர்போல. நான் நினைக்கிறன், புதுப் புதுச் சினேகிதங்களக் கண்டவுடன பழசெல்லாம் மறந்திட்டீரெண்டு. இப்பவும் ஃபிறென்டின்ர வீட்டில தானே நிண்டு கதைக்கிறீர் என்ன?
வேணி: சிவா, ஏன் இப்பிடியெல்லாம் கதைக்கிறீங்கள். இதுக்கா யாழ்ப்பாணத்திலையிருந்து மினைக்கெட்டு வந்தனிங்கள்? இது என்ர ஃபிறென்ட் மலர். அங்க சிவக்கொழுந்துவின்ர மகள். உங்களுக்கும் தெரியும். (அழுதல்)
70 வாழ்ந்து பார்க்கலாம்

சிவா: வேணி, அழாதையும். எனக்கிருந்த அந்தரத்தில அப் பிடிக் கதைச்சிட்டன். நீர் போனதிலையிருந்து நான் இங்க ஒரு நடைப்பிணமாத்தான் இருக்கிறன். நான் எவ்வளவுதூரம் உம்மை மிஸ் பண்ணுறன் தெரியுமா வேணி?
வேணி; எனக்கு விளங்குது சிவா உங்கட நிலைமை. நீங்கள் என்னிலை சரியான அன்பு வைச்சிருக்கிறதாலதான் உப்பிடிக் கதைக்கிறீங்கள். நானும் உங்களப்போலதான்.
சிவா: அப்ப எண்ணில கோவமில்லை.
வேணி: நான் எப்பிடி உங்களைக் கோவிப்பன் சிவா?
சிவா: சரி வேணி நேரமாகுது. நான் நாளைக்குக் காலமை திரும்பிப் போறன். பிறகு வசதிப்படுகிற நேரம் வந்து உம்மோடை கதைக்கிறன்.
வேணி: சிவா, ஒண்டுக்கும் யோசிக்கவேண்டாம். கவலைப் படாதேங்கோ. எங்கட நிலைமை இப்பிடியாப்போச்சு. எல்லாரும் ஒண்டா அங்க இருக்கக்கூடியதா இருந்திருந்தா எவ்வளவு சந்தோஷமா இருந்திருக்கும். இப்ப எத்தினையோ ஆயிரம் மைலுகளுக்கங்கால இருந்து இப்பிடி வேதனைப்பட வேண்டிய தாயிருக்கு. சிவா, இப்பிடி நாங்கள் துன்பப்படுகிறதுக்கெல்லாம் சேத்துவைச்சு வருங்காலத்தில சந்தோஷமா வாழத்தான்போறம்.
சிவா; நீர் சொல்லுறமாதிரியெல்லாம் நடந்திட்டால் சந்தோஷம்தான். சரி, வேற என்ன. அடிக்கடி கடிதம் போடும். சரி, என்ன.
வேணி பத்திரமாப் போட்டு வாங்கோ சிவா.
சிவா! சரி, ஃபோணை வையும்.
வேணி நீங்கள் முதலில வையுங்கோ. (ஃபோண் வைக்கும் ஒலி) விம்மியழுதல்.
மலர்: வேணி.
வேணி மலர், இவர்தான் சிவா.
7. வாழ்ந்து பார்க்கலாம்

Page 38
மலர்: எனக்கு எல்லாம் விளங்குது வேணி உமக்குக் கெதீல ஒரு வேலை கிடைச்சு எல்லாம் நல்லபடியா நடந்து கட்டாயம் நீங்கள் சந்தோஷமா இருப்பீங்கள்.
(காட்சிமாற்ற இசை)
காட்சி-10
(வீரபாண்டிய கட்டப்பொம்மன் வசனங்கள் ஒலித்துக்கொண்டு இருக்கின்றது)
மங்களம். வீரபாண்டிய கட்டப்பொம்மன் படமெல்லே போட்டிருக்கிறன். பிள்ளையளைக் கூப்பிடும், அவையும் இந்த மாதிரிப் படங்களைக் கட்டாயம் பாக்கவேணும்.
மங்க: வேணி தான் கட்டாயம் பாக்கவேணுமெண்டு சொல்லிக் கொண்டிருந்தவள். என்னெண்டு தெரியேல்லை, இண்டைக்கு வேளைக்கே படுத்திட்டாள். வைதேகியும் தமக்கைக்குப் பக்கத்தில படுத்து நல்ல நித்திரை. எழுப்பிப் பால் குடிக்கப்பண்ணவேணும். முளிச்சிருந்தால் பாலைக் கிட்டவும் கொண்டுபோக விடாள்.
மகா: அதுகள் வேண்டாமெண்டுதுகளெண்டுபோட்டு விடாதை யும். பஞ்சியைப் பாராமல் எப்பிடியாவது குடுத்துப்போடும். முந்தி எங்கடை சின்னக் காலங்களில நாங்கள் புரதச் சத்துள்ள உணவு முட்டை, பால், மீன், இறைச்சி எண்டு சுகாதார வாத்தியார் சொல்லித்தாறதைக் கேக்கிறது மட்டுந்தான். எப்பவாவது அருமையாத்தான் சாப்பிடக் கிடைக்கும்.
மங்க: எனக்கென்ன பஞ்சி. உங்கட கதையைப் பாத்தால் உங்களுக்குத்தான் பிள்ளையளில அக்கறை, நான் இங்க கம்மா இருக்கிறன் எண்டமாதிரித்தான்.
ዘቦሏ&8ዘ8 நான் மட்டுமே சொல்லுறன். எங்கட ஃபக்ட்றீல என்னோடை வேலை செய்யிறவை எல்லாரும், ஏன் உன்ர வைஃப் வேலைக்குப் போகாமல் இருக்கிறா. யூ மஸ்ற் பி றியலி றிச் எண்டெல்லே கேக்கிறாங்கள்.
72 வாழ்ந்து பார்க்கலாம்

மங்க: 966 தங்கட பெண்சாதிமார்மாதிரி எண்டு நினைச்சினமாக்கும். ரெண்டுபேரும் வேலைக்குப் போறது, உழைக்கிற காசை டேக்கெயருக்கும் (DAYCARE-குழந்தைகளைப் பராமரிக்கும் நிலையம்) றெஸ்டோரண்டுக்குமெண்டு செலவழிக் கிறது. என்னைப்போலயே. காலமை ஆறு மணிக்கு எழும்பி, எல்லாரும் கொண்டுபோறதுக்குச் சாப்பாடுசெய்து, பல்லுவிளக்கு, முகம்கழுவு, குளி, கோப்பிகுடி எண்டு பத்துத்தரம் கத்தி, இனி நீங்கள் இருந்த இடத்தில இருந்துகொண்டு அதைக்கொண்டா இதைக்கொண்டா எண்டு கேப்பியள் அதுகளையும் பாத்துக் கொண்டு, எல்லாரின்ர உடுப்புத் தொடக்கம் படுக்கிற பெட்வீட் கொம்பேட்டர்வரை எல்லாமே நான் கையாலதானேயப்பா தோய்க் கிறன். பிறகு சமைச்சு முடிய நீங்களும் எல்லாரும் வருவியள். பிறகும் உங்களுக்குப் பணிவிடை செய்யிறதிலையே என்ர ஆயுளும் போகுது. இதைவிட வேலையும் செய்யேலுமே?
ԼՐՑ5[T8 அது உம்மட கொழுப்பெல்லோ. உடுப்புகளை ஆர் உம்மைக் கையால தோய்க்கச் சொன்னது. கீழபோனால் வடிவா மெஷினில தோய்க்கலாமே. வசதியிருக்கேக்க ஏன் கம்மா வில்லங் கப்படுவான்.
மங்க: மிஷின் என்ன கம்மா தோய்ச்சுப்போடுமே? அதுக்கும் காசுதானே. இனி எங்கட பாவனைக்கு மிஷின் சரிப்பட்டு வராது. அது ஆரும் ஒருநாள் ரெண்டுநாள் போட்டிட்டு ஊத்தை பிரளாமல் தோய்க்கிறவைக்குத்தான் மிஷின் சரி. எங்கட உடுப்பு களுக்குச் சரிவராது.
58 பாக்கத் தெரியுது. போட்டுத் தேய்தேயெண்டு தேய்ச்சு உடுப்பெல்லாம் நாய் புடுங்கினமாதிரி.
மங்க: நீங்கள் இதில கிடக்கிறதைத் தூக்கி அதிலை போடமாட்டியள். இருந்துகொண்டு கதையுங்கோ. இந்தப் படத் தைப் பாக்கிறதெண்டால் சொல்லுங்கோ, இல்லாட்டில் நிப்பாட்டிப் போட்டுப் போய்ப் படுப்பம். எனக்கு இதிலையிருந்து சும்மா அலம் பிக்கொண்டிருக்கேலாது.
சரி, அவன் முகுந்தனைக் கூப்பிடும், அவன் இந்தப் படம் பாக்கவேணும்.
மங்க: சும்மா இருங்கோப்பா அவனைக் கரைச்சல்படுத்தாமல்,
அவன் நிறைய ஹோம்வேர்க் இருக்கெண்டு இருந்து செய்து கொண்டிருக்கிறான்.
73 வாழ்ந்து பார்க்கலாம்

Page 39
மகா: அது இண்டைக்கு வெள்ளிக்கிழமைதானே. சனி ஞாயி றில செய்யலாம். கூப்பிடும். அவருக்கு இப்ப தமிழ் வாயில வருகுதில்லை. அவர்தான் இதைப் பாக்கவேணும்.
மங்க: கூப்பிடுகிறன். அவனை ஒண்டும் சொல்லாதேங்கோ. இண்டைக்குத் தலைமயிர்வெட்டவெண்டு போய் இப்பத்தையில் பிளானில வெட்டிக்கொண்டு வந்திருக்கிறார். அதுதான் ஆளுக்கு உங்களுக்கு முன்னால வரக்கூச்சமாக் கிடக்கு.
மகா: ஓ. அதோ சங்கதி.அதுதானே பாத்தன், எண்டைக்கு மில்லாத அக்கறை இண்டைக்கு ஹோம்வேர்க்கில வந்ததெண்டு. (கூப்பிடுதல்) முகுந்தன்.முகுந்தன்.
மங்க: (மெதுவாக) கவனமப்பா, ஒண்டும் கடுமையாச் சொல்லிப் போடாதேங்கோ. (உரத்து) முகுந்தன், இங்க வா அப்பா கூப்பிடு கிறார், படம் பாக்கவாம்.
மகா: உதென்ன தலை.
முகுந்: ஐ ஹாட் எ ஹெயர் கட்.
மகா: என்ன, தலைமயிர் வெட்டுறதெண்டா உப்பிடியே தலையை வெட்டுறது. சட்டி கவிட்டமாதிரி. அங்க ஊரில கத்தரித் தோட்டத்
துக்க நட்டுவைக்கிற வெருளிமாதிரியெல்லோ கிடக்கு உன்னைப் பாக்க,
முகுந்: ஐ டோன்ற் கெயர்.
மகா என்ன. ஐ டோன்ற் கெயரோ.
மங்க: சரி விடுங்கோப்பா. வளருற தலைமயிர்தானே. ஏதோ பிள்ளை ஆசைக்கு வெட்டுவிச்சிருக்கு. அவனுக்கும் கண்ணாடி யப் பாத்தாத் தெரியுந்தானே எப்பிடி இருக்கெண்டு. எவ்வளவு வடிவான தலைமயிர் என்ர பிள்ளைக்கு. அவன்ர மாமன்மாருக் கு மாதிரி எல்லாம் நெளிநெளியான மயிர்.
உமக்கு எதுக்கையும் உம்மட ஆக்களை இழுத்துப் புழுகாட்டிச் சரிவராது. சரி முகுந்தன், இனிமேல் இப்பிடி
7. வாழ்ந்து பார்க்கலாம்

வெட்டாத, இந்தா இதில இருந்து உந்தப் படத்தப் பார். சிவாஜி கணேஷன் எப்பிடிச் சுத்தமா தமிழ் பேசிறார்.
முகுந்: ஹா. ஸ்ருப்பிட்.
மகா: எது ஸ்ருப்பிட். ஆர் ஸ்ருப்பிட்.
முகுந்: ச்ச்ச். இற் இஸ் றெடிக்கியூலஸ். டோன்ற் ஃபோஸ் மீ ரு வோச் திஸ் ஸ்ருப்பிட் ஸ்ரஃபஸ்.
LST: டேய். நான் உன்னோட தமிழிலதானே கதைக்கிறன். என்ன நீ இங்கிலீஷில பதில் சொல்லிக்கொண்டிருக்கிறாய்.தமிழ் வராதோ உமக்கு. இந்த வீட்டில நீ இருக்கிறதெண்டா தமிழில கதைக்கவேணும். இல்லாட்டால் வீட்டைவிட்டுத் திரத்திப்போடு வன். போய் உந்த ட்றக் அடிக்கிற கூட்டத்தோடதான் திரிய வேண்டிவரும்.
மங்க: சரி விடுங்கோ. முகுந்தன் நீ போய் உன்ர ஹோம் வேர்க்கச் செய். வில்லங்கத்துக்கு நிக்கிறீங்களப்பா. அவன் என்னோட தமிழிலதானே கதைக்கிறான். ஏலாத என்னைப் பிடிச்சு இங்கிலீஷப் படிபடி எண்டுறியள். அவன் இங்கிலீஷ் பேசிற பிள்ளையைப் பேசாத எண்டுறியள்.
மகா: இங்கிலீஷைப் படிக்கத்தான் சொல்லுறன். தமிழை மறக் கவா சொல்லுறன். உப்புடித்தான் முந்தி எங்கட ஆக்கள் சிலர் கொழும்பில தமிழை மறந்து இங்கிலீஷம் சிங்களமும் பேசிக் கொண்டு திரிஞ்சினம். பிறகு எண்பத்திமூண்டில சிங்களவன் அடிக்க சிங்களவனோடையும் சேரமுடியாமல் தமிழனோடையும் சேரமுடியாமல் அந்தரிச்சினம். அந்த நிலைமைதான் எங்களுக்கும் இங்க வரப்போகுது.
மங்க: அதொண்டும் நீங்கள் பயப்பிடுகிறமாதிரி நடக்காதப்பா. இப்ப நீங்கள் உத நிப்பாட்டிப்போட்டுப் போய்ப் படுங்கோ. வெள்ளிக்கிழமையில கொஞ்சம் ஆறுதலாப் படம் பாப்பமெண்டால் நீங்கள்போய் கட்டப்பொம்மன், பார்த்திபன் கனவு, கொஞ்சும் சலங்கை எண்டு கொண்டுவந்து பிள்ளையளைப் பாக்கச் சொன்னால், எந்தப் பிள்ளையப்பா இப்ப உப்பிடிப்படங்களைப் பாக்குதுகள். நாங்கள் இளங் காலத்தில் பாத்த படங்கள் எண்டபடியா எங்களுக்கு அதுகள இப்ப பாக்க விருப்பமாயிருக்கு. அதை இப்பத்தையில் பிள்ளையஸ் விரும்பாட்டால் அதுக்குத் தமிழில விருப்பமில்லையெண்டு அர்த்தமே? உவள் வைதேகி
75 வாழ்ந்து பார்க்கலாம்

Page 40
வாய் திறந்தால் இங்கிலீஷ்தான் கதைக்கிறாள். ஆனா ரி.வியில உந்த இந்தியன் புறோக்கிராமுகளைத்தான் விரும்பிப் பாக்கிறாள். தாடிவைச்ச சனம் இருந்து பாடிக்கொண்டிருக்கும், இவள் கண்கொட்டாமல் பாத்துக்கொண்டிருப்பாள்.
மகா: அது பொம்பிளைப் பிள்ளையப்பா, லேசில மாறாதுகள். பொடியளிலதான் கவனமாயிருக்கவேணும்.
மங்க: அதெல்லாம் சரிவருமப்பா, ஒண்டுக்கும் யோசியாமல் எழும்புங்கோ, போய்ப் படுங்கோ.
(காட்சிமாற்ற இசை)
காட்சி-11
(டெலிஃபோண் மணி)
மலர்: குட் மோர்ணிங். மலர் ஹியர். கான் ஐ ஹெல்ப் مما
சதா மலர், தெரியுதே ஆரெண்டு.
மலர்: சதா, உங்களுக்கு ஃபோண்பண்ணவேணுமெண்டு அண் டைக்குத் தொடக்கம் நினைச்சுக்கொண்டிருக்கிறன். எனக்கு உங்கட ஃபோண் நம்பர் தெரியாது. வேனிட்டக் கேக்கவும் ஒருமாதிரி இருந்துது.
சதா: ஏன், என்ன விஷயம்?
மலர்: அண்டைக்கு நடந்த விஷயங்களுக்கு உங்களிட்ட சொறி சொல்லத்தான்.
சதா: அவன் செய்ததுக்கு நீர் ஏன் சொறி சொல்லவேணும்.
மலர்: எல்லாம் என்னாலதானே. நீங்கள் கம்மா தேவையில்லா மல் லிஃப்ட் தரப்போய்த்தானே இதெல்லாம்.
76 வாழ்ந்து பார்க்கலாம்

சதா: அதொண்டும் தேவையில்லாமலில்லை தேவையோடதான். அதைப்பற்றித்தான் இண்டைக்கு உம்மோட சீரியஸாக் கதைக்க வேணும். பின்னேரம் மீட் பண்ணுவமே.
மலர்: வேண்டாம் சதா, அவன் ஒரு கெட்ட சனியன். இங்கி னேக்கை சுத்திக்கொண்டு திரிவான். பிறகு வீண் பிரச்சினை.
சதா: ஒண்டுக்கும் பயப்பிடாதையும். வேணுமெண்டால் ஒரு அரைமணித்தியாலம் முந்தி வெளிக்கிடும், அவன் நிக்கமாட்டான். வெளிக்கிட்டு யங் அன்ட் டண்டாஸ் கோர்ணரில இருக்கிற இந்தியன் றெஸ்டோரண்டுக்கு வாரும். நான் பாத்துக் கொண்டி ருப்பன்.
மலர்: சதா, இது கட்டாயம் தேவையா?
சதா கட்டாயம் பாத்துக்கொண்டிருப்பன்.
(இசை)
மலர்: என்ன, முக்கியமான விஷயம் கதைக்கவேணுமெண்டு வரச்சொல்லிப்போட்டுப் பேசாமலிருந்து லட்டுச் சாப்பிட்டுக்கொண்டி ருக்கிறீங்கள்.
சதா: எப்பிடி ஆரம்பிக்கிறதெண்டு யோசிச்சுக்கொண்டிருக்கிறன். என்னத்துக்குக் கூப்பிட்டிருப்பனெண்டு நினைக்கிறீர்?
மலர்: சங்கரைப்பற்றிக் கதைக்கிறதுக்காக இருக்கும்.
சதா: அதார் சங்கர்?
மலர்: அதுதான் எனக்குப் பின்னால சுத்துறவன். அண்டைக்கு உங்கள வெருட்டினான்.
சதா: ம்ஹம். அவற்ற வெருட்டலுக்குச் சரியான பதில் குடுத் திருப்பன் அண்டைக்கே, உம்மட நிலை என்னண்டு மட்டும் எனக்குத் தெரிஞ்சிருந்தால்.
Ln6)f: நீங்கள் என்ன சொல்லுநீங்களெண்டு எனக்கு விளங்
கேல்லை.
ty வாழ்ந்து பார்க்கலாம்

Page 41
சதா: உண்மையா விளங்கேல்லையெண்டு சொல்லுநீரோ?
மலர்: ம்ஹும்.
சதா: சரி, இப்பிடிக் கேக்கிறன். நீர் என்னைப் பற்றி என்ன நினைக்கிறீர்?
மலர்: ம்ம். என்ன நினைக்கிறன்.? ஹும்.எனக்குத் தெரி யேல்லை சதா.
சதா: நான் ஏன் உம்மைக் காரில கூட்டிக்கொண்டு போறன் வாறனெண்டு நினைக்கிறீர்?
Ln6)f: வேணி உங்கட மச்சாள், நான் வேனின்ர ஃபிறென்ட், அதாலயாயிருக்கும்.
சதா: சரி, ஒருநாள் அப்பிடி நடந்தது. பிறகு அண்டைக்கு ஒஃபிஸ் முடிய உம்மைக் கூட்டிக்கொண்டுபோக வந்தது ஏனெண்டு நீர் நினைச்சுப் பாக்கேல்லையே?
மலர்: அதுதானே சொன்னனிங்கள், எங்கையோ அலுவலா வந்த இடத்தில நினைவு வந்தாப்போல வந்தனான் எண்டு.
சதா: ம். நீரும் சரியான ஆள்தான். இங்க கனடாக்கு வந்து நல்லாப் படிச்சிட்டீர் வெள்ளைக்காறனிட்ட, ஒண்டுக்கும் பிடி குடுக்காமல் கதைக்கிறதுக்கு, ஈஸியா எதுக்கும் ஐ டோன்ற் நோ எண்டுபோட்டுப் பேசாமல் இருந்திடலாம். சரி, நான் சொல்லுறன் மலர், நான் உம்மை விரும்புறன். நீர் ஒமெண்டால் உடன மரி பண்ண றெடி. y
மலர்: (மெளனம்)
சதா: என்ன சத்தத்தைக் காணேல்லை.
மலர்: எனக்கு என்ன சொல்லுறதெண்டு தெரியேல்லை.
சதா: விருப்பமில்லையெண்டால் விருப்பமில்லையெண்டு சொல் லும். இது கட்டாயமெண்டில்லை.
78 வாழ்ந்து பார்க்கலாம்

மலர்: விருப்பம் விருப்பமில்லையெண்டதில்லை. என்னைப் பற்றி வடிவா உங்களுக்குத் தெரியுமா சதா?
சதா: மலர், நான் சும்மா பட்டும் படாமலும் திரியிறதுதான். ஆனால் முக்கியமான விஷயங்களில வலு ஷாப்பான ஆள். எனக்கு உம்மைப் பிடிச்சிருக்கு. விரும்புறன். கலியாணம் செய் யப்போறன். அவ்வளவுதான். இதுக்குமேல உம்மைப்பற்றி ஆராய்ச்சி செய்யவேண்டிய அவசியம் எனக்கில்லை.
மலர்: இல்லை சதா, ஊரிலை நாங்கள் எந்தப் பகுதி எண்டு.
சதா: அதெல்லாம் எனக்குத் தெரியும். எனக்கு அதைப் பற்றி யெல்லாம் பிரச்சினையில்லை. இப்ப என்ர பிரச்சினை நீர் என்னை விரும்புநீரோ இல்லையோ எண்டதுதான்.
மலர்: சதா, உங்களை விரும்பாமல் விடுகிறதுக்கு எனக்கு ஒரு காரணமுமில்லை. ஆனால் என்ன முடிவும் அண்ணேன்ர முடிவுப்படிதான். அதால நீங்கள் சீரியஸ் எண்டால் அண்ணை யோட ஒருக்கால் கதையுங்கோ.
சதா: சரி, இந்தக் கிழமைக்குள்ள ஒருநாள் கதைக்கிறன். எப்ப வீட்டில நிப்பாரெண்டு சொல்லும். இப்ப உந்த டீயைக் குடிச்சு முடியும், போவம்.
(காட்சிமாற்ற இசை)
காட்சி-12
மங்க: ம். இப்ப எப்பிடி இருக்கப்பா. உடம்பு இப்பவும் உழையுதே?
இப்ப பன்ரெண்டு மணிக்கு ரைலனோல் எடுத்தாப்போல கொஞ்சம் பறவாயில்லை. தொண்டைநோதான் மாறினபாடில்லை.
மங்க: இப்ப இந்த பில்டிங்கில எல்லாரும்தான் காய்ச்சலெண்டு சொல்லிக்கொண்டிருக்கினம். கேட்டா இந்த சீஸனுக்கெண்டு சொல்லுவினம். வருஷம் முழுக்க இதே சீஸனும் காய்ச்சலுந்தான். ஏன் இந்த அரியண்டத்துக்க வந்தம் எண்டு போச்சுது. உப்புத் தண்ணி கொண்டுவாறன், நல்லாத் தொண்டைக்க விட்டுக் கொப்பு
79 வாழ்ந்து பார்க்கலாம்

Page 42
ளியுங்கோ சுகமாயிருக்கும். டொக்டரிட்டப் போனாலும் என்ன அந்தச் சிவப்பு மஞ்சள் குளிசையைத்தானே தரப்போறார். நாளைக் கும் நிண்டு றெஸ்ட் எடுங்கோ, எல்லாம் சரியாப்போயிடும்.
மகா: விசர்க்கதை கதைக்கிறீர். அங்க ஊர் மாதிரியே. நினைச்ச பாட்டுக்கு வேலைக்குப் போகாமல் நிண்டுபோட்டுத் தமிழ்ப்பரி யார்ட்ட ரெண்டு ரூபாய்க்கு மெடிக்கல் சேட்டுஃபிக்கற் வாங்கிக் கொண்டுபோக.
மங்க: என்னப்பா, வருத்தமெண்டாலும் லீவெடுக்கேலாதே?
5: ஒருநாள் எண்டால் சரி. அதுக்கு மேல எண்டால் ஃபமிலி டொக்டரிட்டப் போய் மருந்து வாங்கி மெடிக்கல் சேட்டுஃபிக்கற் வாங்கவேணும். இதுக்கெண்டு மினைக்கெட்டு டொக்டரிட்டப் போறதே? இனி அடிக்கடி லீவெடுத்தாலும் வேலைக்கு மனிசர் படுகிற பாட்டில பிரச்சினைதான்.
மங்க: ஏனப்பா, சுகமில்லையெண்டு லீவெடுத்தாலும் பிரச்சி னையே? இங்கதானே மணிசர் சுயமரியாதையோட வாழுறதுக்கேத்த சட்டதிட்டமெல்லாம் இருக்கெண்டு சொல்லினம்.
ዚርy&5ዘ[። சட்டதிட்டம் இருக்கிறது சரி. ஆனால் எங்களுக்குப் பிரச்சினையில்லாமல் சீவிக்கவேணுமெண்டால் சட்டதிட்டங்களில இல்லாத விஷயங்களையும் கொஞ்சம் கவனத்தில எடுக்கவேணும். இதென்ன, கவுண்மெண்ட் வேலையாப்பா சட்டதிட்டம் கதைக்க. கொம்பனிக்காறனுக்கு குடுக்கிற சம்பளத்துக்கு வேலை நடக்க வேணும். சட்டதிட்டங்களைப் பராமரிக்க அவன் விரும்பமாட்டான். இதைப்பொறுத்தளவில இலங்கையெண்டாலென்ன கனடாவெண்டா லென்ன எல்லாம் ஒண்டுதான்.
மங்க: இந்த உடம்பு முறிக்கிற வேலையை எவ்வளவு நாளைக்குத்தான் செய்யப்போறியள். பேசாமல் அந்த ஏஜன்ஸி பாலா சொன்னமாதிரி வெல்ஃபெயரை எடுத்தால் நிம்மதியா இருக்கலாம். இங்க கலியாணவீடு, சாமத்தியச்சடங்கு, பேர்த்டே எண்டு கொண் டாடிக்கொண்டு சனங்கள் என்னமாதிரி கவலையில்லாமல் சீவிக்கு துகள். இது நாங்கள் பத்தாப் பணயமா உழைச்சுக்கொண்டு உடம்பை முறிச்சு, இந்த எலும்பைக் குத்துற குளிருக்க கிடந்துகொண்டு, எங்கட வெய்யிலின்ர சூட்டையும் வேம்பு, மா, பலா, தென்னை, வாழையெண்டு மரங்களையும் அதுகளுக்கால வீசுற காத்தையும் கிளி, குயில், மைனா, செண்பகம் எண்டு
80 வாழ்ந்து பார்க்கலாம்

பறவையளின்ர சத்தங்களையும் கோயில் மணியின்ர ஒசையையும் நினைச்சுப் பாக்க ஐயோ எண்டு குளறி அழவேணும்போல கிடக்கு.
s எந்தநேரமும் உயிருக்குப் பயந்துகொண்டு பங்கருக்குள் ளையும், ஊர்விட்டு ஊர் ஒடி நாடோடியளாயும் சீவிச்சது போது மெண்டுதானே இங்க வந்தனாங்கள். இப்ப எல்லாத்தையம் மறந்து வெய்யில் சூட்டையும் காத்தையும் குருவியளையும் நினைச்சு ஏங்கிறம்.
மங்க: இப்பிடியொரு சீவியமெண்டு ஆர் நினைச்சது.ம்ம்.
y எல்லாம் எங்கட மனம்தானப்பா. அது ஆட்டுறபடி யெல்லாம் ஆடுறம், நாங்கள் எப்பிடி நாங்கள் பிறந்து வளந்த எங்களுக்கு பழக்கமாகிப்போன சூழலை நினைச்சு ஏங்கிறமோ அதுமாதிரி, கனடாவில பிறந்து வளந்த சனங்களைக்கொண்டே அங்க விட்டா, இந்தக் குளிரையும் கொட்டுற வெண்பனியையும், பூத்துத் தளிர்க்கிற ஸ்பிரிங்கையும், வர்ணஜாலம் காட்டுற ஃபோலபும் உற்சாகமூட்டுற சமரையும் விட்டுப்போட்டு இங்க வந்து வாழுறமேயெண்டு வருந்துங்கள். நான் இப்ப என்ன, சொல்லவாறனெண்டால் இதெல்லாம் எங்கட உணர்ச்சியளேயொழிய வேற ஒண்டுமில்லை. இப்ப நாங்கள் ஒரு இக்கட்டான கால கட்டத்தில இருக்கிறம். புத்தியப் பாவிச்சு எங்களுக்கு ஏத்ததைச் செய்யவேணுமேயொழிய இப்பிடி மனத்தை அலைபாயவிட்டு ஏங்கிறது எங்களுக்குத்தான் கூடாது.
மங்க: எனக்கும் விளங்குதப்பா. ஏதோ, பிள்ளையள் பிள்ளைய ளெண்டு வந்தம். இனி இதுகள் எப்ப வளந்து, எங்கட பொறுப்பு நீங்கி, நாங்கள் திரும்பிப்போய் கூழோ கஞ்சியோ குடிச்சுக்கொண்டு, கோயில் குளமெண்டு நிம்மதியா வாழப்போறம். ம். மெய்யேப்பா, நான் நெடுகலும் உங்களோட கதைக்கவேணுமெண்டு நினைக்கிறனான். எப்பவும் பிள்ளையன் நிக்கிறதால கதைக்க முடியிறேல்லை. இண்டைக்கு நீங்கள் சுகமில்லாமல் வேலைக்குப் போகாமல் நிக்கிறதும் நல்லாதாப்போச்சு. வேணிக்கு இருபத்தொரு வயசாகுது. அவளைக் கரைசேத்திட்டமெண்டால் ஒரு பெரிய பொறுப்பு முடிஞ்சிடுமெல்லே.
Ds அவள் வந்த கடனே குடுத்து முடியேல்லை. இப்ப கலியாணத்துக்கு எங்க போறது?
மங்க: ஏனப்பா, உவன் சதா நல்ல வேலை செய்யிறான். நெடுகலும் பாக்கிறன், வந்து அறையுக்க வேணியோட ஏதோ
8. வாழ்ந்து பார்க்கலாம்

Page 43
இரகசியம் கதைச்சபடி சொந்த மச்சான்தானே. செய்துவைச்சால் மச்சாளுக்கும் சந்தோஷமாயிருக்கும்.
NGTE நானும் யோசிச்சனான்தான். எண்டாலும் சின்னனில இருந்தே ஒருதரையொருதர் தெரிஞ்சதுகள். இனி அதுகளின்ர மனதிலையும் என்ன இருக்குதோ. எதுக்கும் நீ சாடையா விசாரிச்சுப் பார்.
(காட்சிமாற்ற இசை)
காட்சி-13
(கார் ஓடிக்கொண்டிருக்கும் ஒலி)
Ln6): சதா. கொஞ்சம் நிப்பாட்டுங்கோ. அங்க பாருங்கோ, எங்கட வீட்டடியில நிக்கிறது சங்கரின்ர காரில்லே. சதா, நீங்கள் என்னை இதிலை விட்டிட்டுத் திரும்பிப் போயிடுங்கோ.
சதா: மலர், நீர் ஏன் வீணாப் பயப்பிடுநீர். அது அண்டையில் கதை வேற, இண்டைக்குப் பாரும் நடக்கப்போறதை. (கார் நிப்பாட்டும் ஒலி)
சங்கர்: உமக்கு அண்டைக்கு நான் என்ன சொன்னனான்.
சதா என்ன சொன்னனிர்.
சங்கர்: மலரைக் காரில கூட்டித்திரியிற சேட்டை வேண்டா மெண்டெல்லே சொன்னனான்.
சதா அதைச் சொல்லுறதுக்கு நீர் ஆர்.
Ln6)f: பிள்ஸ் சதா, பேசாமல் இருங்கோ. வீண் பிரச்சினை. அண்ணைக்குத் தெரிஞ்சால் கொண்டுபோடுவார்.
சதா: இல்லை மலர், பொறும் பாப்பம் இவர் என்ன செய்யிறாரெண்டு.
82 வாழ்ந்து பார்க்கலாம்

சங்கர்: டேய். உனக்கென்ன துணிச்சல் அவளைக் கூட்டிக் கொண்டு திரிய.
சதா: டேய். அவளை நான் கட்டப்போறன், அதைக் கேக்க நீ யார்.
சங்கர்: நீ ஆரோட கதைக்கிறாயெண்டு தெரியுமே.
சதா: ஓம். பெட்டையளுக்குப் பின்னால திரியிற ஒரு பொறுக் கியோட.
சங்கர்: ஆரடா பொறுக்கி. உதை உந்தக் காரை விட்டு இறங்கிச் சொல்லு பாப்பம்.
(சதா காரைவிட்டு இறங்கும் சத்தம்)
மலர்: சதா. பிளிஸ்.வேண்டாம், இறங்காதேங்கோ.
சதா: எங்க பாப்பம் உன்ர வீரத்தை.
சங்கர்: இது இடம் பிழை. உன்னைக் கவனிக்கிற இடத்தில கவனிக்க வேண்டிய விதத்தில கவனிச்சுக்கொள்ளுறன். றாஸ்கல்.
(காட்சிமாற்ற இசை)
காட்சி-14
மங்க: வேணி. பள்ளிக்குடத்தால வந்தநேரம் தொடக்கம் பாத் துக்கொண்டிருக்கிறன் வெளியால வருவாயெண்டு. இதென்ன படிக்கிற.
வேணி: இது இங்கிலீஷ் கிளாஸ் அசைன்மென்ட் அம்மா. இந்தக் கதையை வாசிச்சு கீழ இருக்கிற கேள்வியளுக்கு மறுமொழி எழுதவேணும். அதுதான் எழுதிக்கொண்டிருக்கிறன். நாளைக்குக் குடுக்கவேணும்.
83 வாழ்ந்து பார்க்கலாம்

Page 44
மங்க: இந்தா, அப்பாக்கு விருப்பமெண்டுபோட்டு இண்டைக்கு மட்டன்றோல் செய்தனான். எப்பிடி இருக்கெண்டு பார். அவருக்கு கொலஸ்ட்ரோலெண்டு கனநாளாய் ஒண்டும் செய் யேல்லை. ராத்திரியும் எங்க கனநாளாய் உம்மட ஸ்பெஷலைக் காணேல்லையெண்டு கேட்டவர்.
வேணி: நல்லாயிருக்கம்மா. ஆனா அப்பாக்குக் கணக்கக் குடுக்காதேங்கோ. அவர் இதுகளெண்டால் அளவுகணக்கில்லாமல் சாப்பிட்டுப்போட்டுப் பிறகு இரவு முழுக்க நெஞ்செரிக்குதெண்டு சொல்லிக்கொண்டிருப்பார்.
மங்க: பாவம், எல்லாத்துக்கும் நல்ல விருப்பம். இப்ப வயக போகுதெல்லே, அதால ஒண்டும் ஒத்துக்கொள்ளுதில்லை. முந்தி கட்லட் பற்றிஸ் றோல் எண்டு செய்தால் 10.15 எண்டெல்லே சாப்பிடுறவர்.
வேணி: உங்களுக்கும் நல்லாயிருக்கெண்டு சொல்லிட்டால் போதும் விடமாட்டியள். வேண்டாம் வேண்டாமெண்டாலும் தீத்திப்போட்டுத்தான் விடுவியள்.
மங்க: வேணி, அப்பாக்கும் இப்ப அடிக்கடி சுகமில்லாமல் வருகுது. முந்திமாதிரி இல்லை. சின்னனிலை இருந்தே கடுமை யான வேலையள்செய்து பழக்கப்பட்ட உடம்பு, பிறகு சிரியியில வேலை செய்யேக்கைதான் ஓரளவு சுகமான உடம்பு நோகாத வேலை பாத்தவர். நாங்கள் ஊரில இருந்திருந்தமெண்டால் ராசா மாதிரி இருந்திருப்பார். இப்ப இந்த வயதில இங்க வந்து முறியிற வேலை பாக்கவேண்டியதாக் கிடக்கு.
வேணி: அதுக்கென்னம்மா செய்யிறது. அங்க பெரிய நிலை யில இருந்த ஆக்களெல்லாம் இங்க வந்து சின்னச் சின்ன வேலையள்தானே செய்துகொண்டு திரியினம்.
மங்க: அவை செக்கியூரிட்டி, கிளார்க் வேலையெண்டு சுகமான வேலை செய்யினம். இந்த வயதில உடம்பு நோகிற வேலை செய்யேலுமே?
வேணி அப்பா வலு ஸ்ட்ரோங் அம்மா. அங்க அப்பப்பா இன்னும் கல்லுப்போல இருக்கிறார். அப்பிடி அப்பாவும் இருப்பார். அப்பா உந்த வேலை செய்யிறபடியாத்தான் நாங்கள் இப்ப மரியா தையா இருக்கிறம். மணித்தியாலத்துக்குப் பதினொரு டொலர் எங்க கிடைக்கும் எங்கட நிறத்துக்கு இப்ப, இல்லாட்டில் இங்க
84 வாழ்ந்து பார்க்கலாம்

வந்து நல்லாப் படிச்சு ஏதும் புரஃபஷனல் குவாலிஃபிகேஷன் எடுக்கவேணும்.
மங்க: எனக்கும் தெரியும் வேணி ஆனால் அப்பாக்கு இப்ப இருக்கிற கவலையெல்லாம் தன்ர பொறுப்புகளையெல்லாம் எப்ப செய்து முடிக்கப்போறன் எண்டதுதான். இப்ப உன்னைப் பற்றித் தான் நெடுக யோசிச்சபடி.
வேணி: எனக்கென்னம்மா பிரச்சினை. எனக்கு வயது வந்திட்டுது. அப்பாக்கு எந்தக் கன்ரச்சலும் குடுக்காமல் என்ர விஷயங்களை நான் பாத்துக்கொள்ளுவன். தம்பி தங்கச்சிதான்
சின்னனுகள். அதுகளைப்பற்றித்தான் யோசிக்கவேணும்.
மங்க: அதில்லை வேணி அவருக்குக் கடவுளேயெண்டு கிடைக்கிற சம்பளம் பறவாயில்லையெண்டபடியா நீ வந்த கடனையும் கட்டிக்கொண்டு தம்பிக்கும் தங்கச்சிக்கும் மாதம்மாதம் கவுண்மெந்து தாற காசோட கொஞ்சம் போட்டு ஸ்கொலர்ஷிப் ஃபண்ட் கட்டிக்கொண்டு வாறார். அவை சரியாப் படிச்சு யூனிவர்சிற்றிக்குப் போச்சினமெண்டால் அந்தக் காசு காணும். பத்தாட்டிலும் கொஞ்சம் லோனும் எடுத்துப் படிச்சிட்டினமெண்டால் இங்க அதுகள் எப்பிடியோ பிழைச்சுக்கொள்ளுங்கள். இனி அதுகளின்ர காலத்தில எப்பிடியெப்பிடியோ. இப்ப உன்னை ஒரு கரை சேத்திட்டால் தனக்குப் போதுமெண்டுறார்.
வேணி: எனக்கென்னம்மா இப்ப அவசரம். வாறகிழமை கேசுக்கு டேட் தந்திருக்கிறாங்கள். அக்செப்ட் பண்ணின உடன லாண்டட்டுக்கு அப்ளை பண்ணிப்போட்டு எப்பிடியம் ஒரு வேலை எடுத்திடுவன் எண்ட நம்பிக்கை எனக்கிருக்கு. அதுக்குப் பிறகு பாப்பம் எல்லாத்தையும்.
மங்க: இல்லை, உடன எண்டில்லை. எதுக்கும் இப்ப தொடக்கம் ஆயித்தங்கள் செய்யத்தானே வேணும். மெய்யே வேணி, சதாவைப்பற்றி என்ன நினைக்கிறாய்?
வேணி என்ன இருந்தாப்போல சதாவைப்பற்றிக் கேக்கிறியள்?
மங்க: இல்லை, எனக்கொரு விருப்பம். சதாவை உனக்குக் கட்டிவைக்கவேணுமெண்டு. அப்பாக்கும் வலு சந்தோஷமாயிருக்
கும். அக்காவெண்டால் அவருக்கு உயிர்தானே. எனி மச்சாளும் வலு சந்தோஷப்படுவா.
85 வாழ்ந்து பார்க்கலாம்

Page 45
வேணி என்னம்மா உங்களுக்கு. சதாவையோ. எனக்கோ.?
மங்க: ஏன் அதுக்கென்ன? சொந்த மச்சான். நல்லா உழைக் கிறான். ஞாயமாக் காசும் வைச்சிருக்கிறான்போல.
வேணி; சதாக்கு ஒரு குறையுமில்லைத்தான். ஆனால் சகோ தரம்மாதிரிப் பழகிப்போட்டு வேறமாதிரி நினைச்சும் பாக்கேலாதம்மா. அம்மா. நான் நேரம் வரட்டும் சொல்லுவம் எண்டிருந்தனான். இப்ப அதுக்கு நேரம் வந்திட்டுதெண்டு நினைக்கிறன். அம்மா, நான் ஏற்கனவே ஒருதரை நினைச்சு வைச்சிருக்கிறன்.
மங்க: இதென்ன புதுக்கதை. அதார், எக்கணம் அப்பா அறிஞ் சால் கொதிக்கப்போறார்.
வேணி: அப்பா ஒண்டும் கொதிக்கமாட்டார். சொல்லுறமாதிரி பக்குவமாச் சொன்னால் அவருக்கு விளங்கும்.
மங்க: கடவுளே. என்ன இது. இங்க கண்டகண்ட வங்க ளெல்லாம் ஆரெவரெண்டு தெரியாமல் திரியிறாங்கள். நீ என்னத் தைச் செய்துவைச்சிருக்கிறியோ.
வேணி: இது இங்க இல்லையம்மா. அங்க யாழ்ப்பாணத்தில.
மங்க: பாத்தியா. உன்னை அங்க தனிய விட்டிட்டு வந்தது பிழையாப்போச்சுது. அப்பவும் நான் அவருக்குச் சொன்னனான். பிள்ளையஸ் வரட்டும், நான் உன்னோட நிக்கிறன். குமர்ப் பிள்ளை யத் தனிய விட்டுப்போட்டு வரஏலாதெண்டு. அப்பாதான் சொன் னார், அவளை எனக்குத் தெரியும். என்ரை பிள்ளை பிழையா ஒண்டும் செய்யமாட்டாளெண்டு. பாத்தியோ, நம்பியிருந்த எங்க ளுக்கு இப்பிடிச் செய்துபோட்டியே.
வேணி: இப்ப நான் என்ன பிழையாச் செய்துபோட்டன். நீங்கள் இன்னும் எங்கட பாட்டி, அம்மம்மா அவேன்ர காலத்தில நிண்டு கதைக்கிறீங்கள். அது அப்பா வரட்டும் நான் சொல்லுறன்.
மங்க: ஆர் பொடியன்.
வேணி அதுதான் அண்டைக்கு ஃபோண் பண்ணினவர் சிவா.
86 வாழ்ந்து பார்க்கலாம்

மங்க: சிவசிவா. அது பூரணலிங்கம் மாஸ்டரின்ர மகன். உனக்குத் தெரியுந்தானே, அவை எங்களின்ர ஆக்கள்தான் எண்டா லும் அவன்ர சிறியதாய் ஸ்கூலுக்குக் கூட்டிக்கொண்டுபோற கார்க்காறனோட ஓடிப்போய்க் கலியாணம் கட்டினபிறகு நாங்கள் அவேன்ர நன்மைதீமையளுக்குப் போனாலும் கை நனைக்கிறேல் லையெண்டு.
வேணி அம்மா, உங்களுக்கென்ன விசரே. இங்க உதை ஆரும் கேட்டால் உங்களைக் கொண்டுபோய் பைத்தியகாற ஆஸ்பத்திரியில போட்டிடுவாங்கள். இந்தக் காலத்தில அதுவும் கனடாவில கதைக்கிற கதையே இது.
மங்க: கனடாவில்ல, சந்திரமண்டலத்துக்குப் போனாலும் நாங்கள் நாங்கள்தான்.
வேணி: அம்மா, போதும். பண்பாடு, கலாச்சாரம் எண்டு நீங்கள் என்ன சொல்லுவீங்களெண்டு எனக்குத் தெரியும். அப்பா வரட்டும் நான் கதைச்சுக்கொள்ளுறன்.
(காட்சிமாற்ற இசை)
காட்சி-15
ரவி: சதா, தங்கச்சி மலர் எல்லாம் சொன்னவ. நான் கேக்கிற முதல் முக்கியமான கேள்வி, யாழ்ப்பாணத்தில நாங்கள் ஆரெண்டு உமக்கு வடிவாத் தெரியுமோ?
பூரண: ஓம் தம்பி, இது விளையாட்டு விசயமில்லை. இப்பிடி நீங்கள் இங்க வந்திருக்கிறது உங்கட மாமா மாமிக்குத் தெரியுமோ?
ரவி: நீ கொஞ்சம் பேசாமல் இரணை அம்மா. சதா, நான் ஏன் கேக்கிறனெண்டா அம்மா நினைக்கிறமாதிரி இது பாரதூரமான விஷயம், இந்தக் கட்டுப்பாடுகளை மீறுறது சமூகவிரோதம் எண்டு பயந்தில்லை. அநாவசியமா நாங்கள் அவமானப்படுகிறது எனக்கு விருப்பமில்லை. அதுக்காகத்தான்.
சதா எனக்கு முதலே தெரியும். அது மட்டுமில்லை, மலரும் என்னட்டை முதலில சொன்னது இதைத்தான். 51T6ör oavg
87 வாழ்ந்து பார்க்கலாம்

Page 46
விரும்பிறன், அவ்வளவுதான். அதுக்கு எந்தக் காரணமும் குறுக்க நிக்கேலாது.
பூரண: அதுசரி தம்பி, உம்மட அம்மா இப்ப எங்க இருக்கிறா?
சதா: உங்களுக்குத் தெரியுமெண்டு நினைக்கிறன். நாங்கள் கிளிநொச்சியில இருந்துதானே அப்பா சாக கமமெல்லாம் வித்துப் போட்டு யாழ்ப்பாணத்தோட வந்தது. அந்தக் காகதான் நான் கனடா வர்றதுக்கு செலவழிச்சது. மாமாதான் அம்மாவைத் தங்க ளோட வந்திருக்கச்சொல்லி பிறகு அம்மா மாமாவோடதான் இருந் தவ. இப்ப வேணியும் வந்தபிறகு தனியத்தான் அந்த வீட்டில இருக்கிறா.
பூரண அப்ப அவவை நீங்கள் இங்க கூப்பிடலாமே தம்பி
சதா: அப்பு அங்கதானே இருக்கிறார். அம்மாக்கு அவரை விட்டிட்டு வர விருப்பமில்லை.
6. ஒ. உங்கட அவர், பேரன் இருக்கிறார் என்ன. அம்மாவோடதானே இருக்கிறார்.?
சதா: சீ. உங்களுக்குத் தெரியுமோ தெரியாது. அவர் ஒரு மாதிரி. சரியான பிடிவாதம். வயதும் எண்பதுக்கு மேல. தனி யத்தான் புன்னாலைக்கட்டுவனில அந்தத் தோட்டக் காணி வீட்டில இருக்கிறார். அம்மாக்கு அவரோட போய் அங்க இருக்கேலாது. பிறகு மாமாண்ட வீட்ட வெறும் வீடா விட்டா இயக்கம் எடுத்துப்போடும். அதால எல்லாம் பிரச்சினையாயிருக்கு.
பூரண: உங்கட மாமான்ர கலியாண நேரத்தில உங்கட பேரன் அடிக்கடி வாறவர் விதானையார்வீட்ட, கண்டிருக்கிறன். அவ ருக்கு ஒண்டு நடந்திட்டா அம்மா இங்கால வரத்தானேவேணும். வீட்டப் பாத்துக்கொண்டிருந்து என்னசெய்யிறது? போய் இருக்க வாபோறம்.
சதா: மாமி போறதெண்டுகொண்டுதான் இருக்கிறா.
பூரண: எனக்கு உங்கட மாமிய நினைக்கத்தான் பயமாக்
கிடக்கு. அதுகள் இரக்கமுள்ள சனங்கள் எண்டாலும் நடை முறையள விட்டுக்குடுக்கமாட்டினம்.
88 வாழ்ந்து பார்க்கலாம்

ரவி: பேசாமல் இரணை. இங்க என்ன நடைமுறையோ அதுதான் நடக்கும். சதா, இப்ப நீர் எங்க வேலை செய்யிறீர்?
சதா: ஒரு ஃபேணிச்சர் மனுஃபக்ஷரிங் கொம்பனில.
ரவி: கனகாலமா வேலை செய்யிறீரோ?
சதா: மூண்டு நாலு வருஷமா வேலை செய்யிறன்.
ரவி: சதா, மலர் இப்ப சீ.ஜி.ஏ. படிச்சுக்கொண்டிருக்கிறா. அது கொம்ப்ளீட் பண்ணினாவெண்டால் ஒரு நல்ல வேலை கிடைக்கும். அவவின்ர கெட்டித்தனத்தைப் பொறுத்துப் பெரிய ஒரு பொஸிஷனுக்குப் போகலாம். உமக்கு அதால ஏதும் பிரச்சினை இருக்காதோ?
சதா: சீ. எனக்கென்ன பிரச்சினை?
ரவி: இல்லை, இதுகளை வடிவா யோசியும். முதல் லவ் பண்ணேக்க ஒண்டும் தெரியாது. பிறகு கலியாணம் கட்டிக் கொண்டு கொஞ்சக் காலம் போகத்தான் மற்றதுகள் கண்ணில படும்.
சதா: நீங்கள் சொல்லுறது எனக்கு விளங்குது. அப்பிடிப் பிரச்சினையள் வாறது ரெண்டுபேரிலையும் தங்கியிருக்கு என்னை எனக்குத் தெரியும். மலரும் அப்பிடிப் பிரச்சினையள் வர விடமாட்டாவெண்டு நினைக்கிறன்.
ரவி: உமக்கு நம்பிக்கையிருந்தால் சரி. மற்றது, அவ கடைசி மூண்டு லெவலெண்டாலும் முடிச்சபிறகு கலியாணம் செய்யிறதுதான் நல்லதெண்டு நினைக்கிறன். அது இனி உங்கள் ரெண்டுபேரையும் பொறுத்தது. நீங்களும் உழைக்கிறீங்கள். மலரும் உழைக்கிறா. உங்கட கலியாணத்தை நீங்களே ஒழுங்கு பண்ணி சகல செலவுகளையும் ரெண்டுபேருமே பாத்துக் கொள்ள வேணும். சீதனம் அதுஇதெண்டு ஒண்டும் எதிர்பாக்கேலாது. தர ஏலாதெண்டில்லை. எனக்கு அப்பிடித் தர விருப்பமில்லை.
சதா எனக்கும் அப்பிடி வாங்கிறது விருப்பமில்லை.
ரவி, சரி, அப்ப எப்ப கலியாணம் எண்டதை ரெண்டுபேரும் சேந்து முடிவுசெய்யுங்கோ.
89 வாழ்ந்து பார்க்கலாம்

Page 47
(காட்சிமாற்ற இசை)
காட்சி-16
ரவி: வாரும் சதா. மலராக்கள் அங்க வெளிக்கிடுகினம். இப்பிடி இரும். சொறி சதா, உமக்கு வீண் கரைச்சல். அம்மா தங்கச்சியாக்கள் உந்தக் கலைவிழாவுக்குக் கூட்டிக்கொண்டு போகச்சொல்லி நெடுகக் கேக்கிறவைதான். எனக்கு நேரமிருக்கி றேல்லை. மற்றது சதா, எனக்கு இதுகளில அவ்வளவு நாட்டமு மில்லை. உமக்கு இதுகளில நல்ல இன்ட்ரெஸ்ட்போல.
சதா: சீ. எனக்கும் இதுகளில அவ்வளவு நாட்டமில்லை. இது மலர் கேட்டாப்போல ஒமெண்டிட்டன். எனக்குத் தமிழ்ப் படக் கஸட்டுகள்தான். ரி.வி.யைப் போட்டிட்டு பியர்ப் போத்தலை எடுத்தனெண்டால் உலகம் அழிஞ்சாலும் தெரியாது. நல்ல சோகக் கட்டங்கள் இருந்தால் அழுதழுது பாக்கிறதுதான். பிறகு என்ன படம் பாத்ததெண்டே மறந்துபோம். இனி எங்கட படக் கொப்பியளும் கலங்கல், அதோட வெறி, கண்ணிரெல்லாம் சேந்து படமெல்லாம் ஒரே புகாராக் கிடக்கும். என்ன பாத்தமெண்டே தெரியாது.
ரவி: இங்க தங்கச்சிமார் தமிழ்ப் படங்கள் எடுத்துப் பாக். கிறவை. நான் அந்தப் பக்கமே போறேல்லை. தப்பித் தவறிச் சில: வேளை கொஞ்சநேரம் பாக்கிற நேரங்களில எனக்குச் சனங்களுக்கு முன்னால உடுப்பில்லாமல் நிக்கிறமாதிரி ஒரு சங்கடமா கூச்சமா இருக்கும்.
சதா: நீங்கள் எல்லாத்திலும் கடும் போக்குப்போல கிடக்கு.
ரவி: இல்லை சதா, எனக்கு எல்லாத்தையும் பாக்கச் சரியான கோவம் வாறது. இப்ப, இண்டைக்கு நீங்கள் போற கலை விழாவிலையும் சிலவேளை நடக்குமெண்டு நினைக்கிறன். கனடாவில தமிழ் வாழுமா வாழாதா? எண்ட ஒரு விவாதம். கனடாவில இருக்கிற எந்த ஒரு இனமும் சீனாக்காறனோ யப்பான் காறனோ போர்த்துக்கீசனோ கிறீக்காறனோ இத்தாலியனோ இப்பிடிப் பயப்பிடுறேல்லை, அலட்டிக்கொள்ளுறதுமில்லை. அவங்கட மொழியோ இனமோ தங்கட ஐடென்ரிற்றிய இழந்திட்டு தெண்டு மில்லை. ஆனால் நாங்கள் பயப்பிடுகிறம். ஒருசிலர் தமிழினம் தான் உலகத்திலேயே மேம்பட்ட இனம் தமிழ்மொழியைவிடச்
90 வாழ்ந்து பார்க்கலாம்

சிறந்ததொண்டில்லையெண்டு சும்மா வாய்க்கு வந்தபடி புழுக, பெரும்பான்மையான தமிழர் தங்களைத் தமிழர் எண்டு இனங்காட் டக்கூட வெக்கப்படுகினம்.
சதா நானும் பாத்திருக்கிறன். பிறஉலகம் தெரியாமல் இருக்கு மட்டும்தான் நாங்கள் தமிழன் தமிழனெண்டு பெருமையடிக்கிறது. படிச்சவை, பிற சமூகத்தோட பழகக்கூடிய ஆங்கில அறிவுள்ள வையெல்லாரும் தங்களைத் தமிழரெண்டு சொல்லக்கூடக் கூச்சப் படுகிறவைதான்.
ரவி: ஆ. அதுதான் உண்மை.
சதா: இது மாறாதெண்டு நினைக்கிறீங்களா?
ரவி: மாறும் எப்ப தெரியுமா? இலக்கியத்தில விஞ்ஞானத்தில எங்கட ஆக்கள் நோபல்பரிசு எடுக்கவேணும். ஒலிம்பிக்கில ஒவ்வொருமுறையும் குறைஞ்சது பத்துத் தமிழர் பதக்கம் வாங்கவேணும். தமிழர் விஞ்ஞான ஆராய்ச்சி நிறுவனங்களை நிறுவி புதுப்புது மருந்துகள், புதுப்புதுக் கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடிச்சு உலக சமூக மேம்பாட்டுக்கு உதவவேணும். ரோயோட்டா, ஹொண்டா, இசுசு, சுசுக்கி எண்டு ஜப்பானியச் சொல்லுகள் உலகச் பொதுச் சொல்லுகளாப்போனமாதிரி தமிழரும் திறமான வாகனங்களை உற்பத்திசெய்து அதுகளுக்குத் தமிழ்ப் பேருகளை வைச்சு உலக சந்தையில முன்னணியில நிக்கவேணும். தமிழரின்ர திரைப்படங்கள் உலகப் பட விழாக்களில பரிசுபெற வேணும். பிறநாட்டு நடிகர்கள் ஹொலிவூட் படஉலகை ஆக்கிர மிச்சு ஆட்டிப்படைக்கிறமாதிரி தமிழ் நடிகர்கள், இயக்குனர்கள் ஹொலிவூட்டில படம் தயாரிச்சு உலக அபிமானத்தைப் பெறவே ணும். தமிழ்ப்பாடகர்கள் குழு ஆங்கிலத்தில வெளியிடுகிற பாடல் இசைத் தட்டுகள் விற்பனையில சாதனை படைக்கவேணும். சீன, இத்தாலிய, பிரான்ஸ், கிறீக் றெஸ்ட்டோரன்டுகள் உலக மக்களுக் கிடையில பிரபலமானமாதிரி தமிழ் றெஸ்ட்டோரன்டுகளும் உலகளா வின ரீதியில பிரபலம் பெறவேணும். தமிழருக்கெண்டு ஒரு பாங்க் இயங்கி உலக பொருளாதாரத்தில முக்கியமான பங்கு வகிக்க வேணும். இப்பிடி நடந்துதெண்டால் ஒவ்வொரு தமிழனும் உரத்துத் தமிழ் பேசுவான். தான் தமிழன் எண்டு நிறுவ முற்படு
66.
சதா: இது நடக்கக்கூடிய காரியமே.
9. வாழ்ந்து பார்க்கலாம்

Page 48
ரவி: இது நடக்கவேணும். அப்பிடி நடக்காதவரை எங்களுக்க கலைவிழாக்கள் வைச்சு மேடையேறிப் பழந்தோம்பு கிண்டிறதும் ஒவ்வொருத்தரும் தங்களுக்கு முதுகு சொறியிற கூட்டத்தைச் சேத்து ஒருத்தரையொருத்தர் விண்ணனெண்டு புழுகிக்கொண்டும் மிஞ்சிப் போனால் வெள்ளைக்காறனைப் பிரதம அதிதியாக் கூப்பிட்டு பூ வைச்சு, பொட்டுவைச்சு, மாலைபோட்டு, பட்டுடுத்தின பெட்டை யள் ஆராத்தியெடுக்க குத்துவிளக்குக் கொளுத்துவிச்சு புட்டு இடியப்பம் அவிச்சுக் காட்டிக் கலாச்சாரம் வளக்கிறதோட நாங்கள் திருப்திப்பட்டுக்கொள்ளவேண்டியதுதான். ஆனால் ஒண்டு சதா, இது நடக்கமுடியாததொண்டில்லை. இப்ப நாங்கள் சாதிக்க முடியாத கற்பனையள்போல இருக்கு. எங்களுக்கெண்டு ஒரு சக்தவாய்ஞ்ச அரசாங்கம் இருந்துதெண்டால் இதுகள் சாத்திய மாகும். எதையும் திட்டமிட்டுச் சாதிக்கக்கூடிய மூளைசாலியளைக் கொண்டதாயும், எந்தத் துறையையும் திட்டமிட்டு, குறிப்பிட்ட இலக்கை நோக்கி வளர்க்கக்கூடியதாயும் அந்த அரசாங்கம் இருக்கவேணும்.
சதா: ஒரு நல்ல கற்பனைதான்.
ரவி: அப்பிடித்தான் இப்ப இருக்கும். எதுக்கும் சொல்லே லாது. நான் 82ஆம் ஆண்டு கப்பலில வெளிக்கிடேக்க, ஆபி ரிக்காவில இருக்கிற ஒரு சின்ன இனக்குழுவைத் தெரிஞ்சிருந்த அளவுக்குக்கூட தமிழன் எண்டால் ஆரெண்டு வெளியுலகம் தெரிஞ்சுவைச்சிருக்கேல்லை. இப்ப ஈழப் போராட்டத்துக்குப் பிற கெல்லோ இப்பிடி ஒரு இனம் இருக்கெண்டு உலகம் அறிஞ்சது. சங்கம் வைச்சுத் தமிழ் வளத்ததைப் பற்றியோ கனகவிசயன் தலையில கல் சுமத்தினதைப் பற்றியோ நான் வந்த கிறீக் கப்பலில ஒருத்தருக்கும் தெரியாது. அதாலதான் சொல்லுறன், இப்ப நாங்கள் படுகிற இந்த இன்னல்களுக்கு, போராட்டங்களுக்கு ஒரு நல்ல பலன் கட்டாயம் இருக்கத்தான் போகுது. நேரடியா போராடுறவை மட்டுமில்லை, தமிழர் எல்லாரும் அதில நம்பிக்கை வைக்கவேணும், எங்களாலான பங்களிப்பைச் செய்யவேணும்.
மலர்: சதா, நாங்கள் றெடி.
சதா: ரவி, அப்ப நான் வாறன். உங்களோட கதைச்சுக் கொண்டிருக்க இன்ட்ரஸ்டிங்காத்தான் இருக்கு. பிறகு சந்திப்பம்.
ரவி: மலர், வீட்டுத் திறப்பைக் கொண்டுபோங்கோ. எனக்கு இரவுக்கு வேலை இருக்கு.
92 வாழ்ந்து பார்க்கலாம்

(காட்சிமாற்ற இசை)
காட்சி-17
மகா: கொஞ்சம் பொறுமப்பா. இப்ப என்ன உலகமழிஞ்சு போச்சுதே?
மங்க: உலகம் அழிஞ்சால்தான் பிரச்சினையில்லையே. இப்ப நாங்கள் இந்த உலகத்தில இந்த மணிசருக்கு முன்னால வாழ வேண்டிக்கிடக்கே.
மகா: இப்ப என்னப்பா, அதுதான் பிள்ளை கள்ளத்தனமில்லாமல் எல்லாம் விளக்கமாச் சொல்லுதே. இதில என்ன பிழையப்பா?
மங்க: என்ன பிழையோ? நாங்கள் பிள்ளையளைச் சரியான முறையில வளக்கிறம். அதுகள் எங்கட சொல்லை மீறி எதையும் செய்யாதுகள் எண்டு நாங்கள் பெரிசா நினைச்சுக்கொண்டிருக்க, இவள் இப்பிடிச் செய்துபோட்டு வந்திருக்கிறாளே. அதுவும் பூரண லிங்கம் மாஸ்டரின்ர மகனாம். எங்கட சனம் அவங்களைச் சபை சந்திக்கு எடுக்காதுகளே.
1ቦሏ&5ff። அவை எடுக்காட்டில் இங்க ஒண்டும் குடிமுழுகிப் போயிடாது. பேசாமல் இரும். இது பிள்ளயைளின்ர வாழ்க்கைப் பிரச்சினை. தாங்கள் வாழப்போற வாழ்க்கையைத் தாங்களே முடிவுசெய்யிறதில ஒரு பிழையுமில்லை. அதுகள் ஏதும் பிழை யான முடிவுகளை எடுக்குதுகளெண்டு கண்டால் நாங்கள் புத்தி மதி சொல்லலாம். நீர் சொல்லுற விசர்க் காரணங்களுக்காக ஒரு பிள்ளையின்ர முடிவைப் பிழையெண்டு சொல்லேலுமே?
மங்க: ஆம்பிளைப்பிள்ளையெண்டாலும் பறவாயில்லை. இது பொம்பிளைப் பிள்ளை. தான் நினைச்சபாட்டிலை ஒருத்தனை விரும்பிறதெண்டால்.
5 விரும்பிறநில ஆம்பிளை பொம்பிளையெண்டு என்னப்பா வித்தியாசம். எங்கட காலத்திலை மனத்தில விருப்பமிருந்தாலும் பயந்து பேசாமல் அடக்கி வைச்சிருந்தம். ஏன், படிக்கிற காலத் தில நாங்கள் ரெண்டுபேரும் ஒருத்தரையொருத்தர் விரும்பேல்
லையே.
93 வாழ்ந்து பார்க்கலாம்

Page 49
மங்க: அதுக்கு. நாங்கள் இப்பிடித்தான் எங்களுக்க பேசி முடிவு செய்துபோட்டுத் தாய்தேப்பனிட்டச் சொன்னனாங்களே. அப்பிடிச் செய்திருந்தால் ஐயா என்னை உயிரோட விட்டிருப்பாரே.
ஏதோ எங்கட லக் என்ர படிப்பு முடியுமட்டும் நீரும் கலியாணம் கட்டாமல் இருந்து, முறைப்படி கேட்டு வந்து பேசின கலியாணம்மாதிரி நடந்துது. இல்லாட்டால் நினைச்சுப்பாரும், மனத்திலை ஒருத்தரை விரும்பிப்போட்டு அதை வெளிக்குக் காட்டப் பயந்து வேற ஒருத்தரைக் கலியாணம் செய்துகொண்டு வாழுறதைவிட, தங்கட விருப்பங்களை வெளியால சொல்லி, விரும்பினதுபோல வாழுறது நல்லதில்லையே.
வேணி என்ன புதுக்கதையப்பா. நீங்களும் அம்மாவும் லவ் பண்ணியே மரி பண்ணினனிங்கள்.
மங்க: இது அவற்ற விசர்கதை.
எங்கட பேசிச்செய்த கலியாணம் மாதிரித்தான். எண்டாலும் படிக்கிற காலத்தில நான் அம்மாவை விரும்பினனான். அவவும் என்னை விரும்பினவ. ஆனால் ஒருத்தருக்கொருத்தர் நேரடியாச் சொல்லிக்கொள்ளேல்ல.
வேணி: அதென்னமாதிரி லவ் அப்பா.
மங்க: ம். அவ கேக்கிறா விளங்கப்படுத்துங்கோ.
மகா: எங்கட காலத்தில அப்பிடித்தான். காதல் எண்டு சொல்லு றதே கெட்ட வார்த்தைமாதிரி. பள்ளிக்குடத்தில ஆரும் அப்பிடி யெண்டால் அவை உதவாத ஆக்களெண்டு தள்ளிவைச்சிடு வினம். என்னதான் விருப்பமெண்டாலும் அது மனதோடதான். முந்தி உன்ர அம்மா நல்ல வடிவு. ஸ்கூல் யூனிஃபோமும் போட் டுக்கொண்டு ரெட்டைப் பின்னலை மடிச்சு கறுப்பு றிபனும் கட்டிக்கொண்டு, ஸ்கூல் பிள்ளையஸ் வாற காரில வந்து இறங்கி னாவெண்டால் ஒரு கலக்குத்தான். கார் வெள்ளணவில வரமுந் தியே நாங்கள் வந்து பள்ளிக்குடத்துக்கு முன்னால சவுக்கு மரத் தடியில சைக்கிளோட நிப்பம். இந்தக் கார் வந்த உடனதான் பள்ளிக்குடமே களை கட்டும்.
வேணி: அம்மா உங்களை லவ் பண்ணினவ எண்டு எப்பிடி உங்களுக்குத் தெரியும்?
94 வாழ்ந்து பார்க்கலாம்

இதென்ன. ஒவ்வொருத்தரின்ர பார்வையில போக்கில தெரியாதே. எண்டாலும் எனக்கு நிச்சயமாத் தெரிஞ்சது எங்கட ஸ்கூல் பேச்சுப்போட்டி ஒண்டிலதான். அப்ப நான் பேச்சுப் போட் டியில நல்ல கெட்டிக்காறன். அம்மா நல்லாப் பாடுவா, உண்ர குரல்போலதான். ஒரு பேச்சுப்போட்டியண்டு.
(பின்னோக்கிய நினைவுகளைப் பிரதிபலிக்கும் இசை)
வாத்தி: இத்துடன் பேச்சுப்போட்டிகள் முடிவடைகின்றன. நடுவர்கள் தமது தீர்ப்பை வழங்கும்வரை செல்விமங்களாம்பிகை இசை விருந்தளிப்பார்.
மங்க: (பாடல்-காதல்சிறகை காற்றினில் விரித்து)
Tć5 அந்தப் பாட்டு அப்ப எனக்காகவே பாடினமாதிரி இருந்தது. பிறகு பேச்சுப்போட்டி றிஸல்ட் சொன்னவுடன என்னை வந்து கொங்கிறாஜுலேட் பண்ணினா. பிறகென்ன, காத்திருந்து உரிய காலநேரம் வரேக்க முறைப்படி பேசிப் போய்க் கலியாணம். செய்ததுதான்.
மங்க: சீ. அது நான் சும்மா வாயில வந்ததைப் பாடினனான்.
கொப்பர் சும்மா புழுகுவார், நீயும் கேட்டுக்கொண்டிரு. (ரெலிஃபோண் மணி)
மகா: என்ன. சதாவச் சுட்டுப்போட்டாங்களோ. எங்க. கலை
விழாவிலையோ?
மங்க: ஐயோ. என்னப்பா இது.
வேணி; சதா.
(காட்சிமாற்ற இசை)
காட்சி-18
மங்க: ஏதோ. அந்தப் பிள்ளையார்தான் இந்தளத்திலயெண்டாலும் காத்தது. தோளில பிடிச்ச குண்டு கொஞ்சம் தள்ளியிருந்தால் தலைதானே.
95 வாழ்ந்து பார்க்கலாம்

Page 50
5 ஏதோ தலைக்கு வந்தது தலைப்பாகையோட போன மாதிரித் தப்பீட்டாய்.என்ன சதா, டொக்டர் என்னவாம்?
சதா: அது குண்டு கம்மா தோளில சிராய்ச்சுக்கொண்டு போயி ருக்கு, இப்ப ஒண்டுமில்லை. பின்னேரம் வீட்ட போகலாமெண்டு நினைக்கிறன.
மகா: போலீஸ் என்னவாம்?
சதா: இரவு ஒருக்கா காலமை ஒருக்கா வந்து ஸ்டேட்மென்ட் எடுத்துக்கொண்டு போகினம். ஆரெண்டு தெரியுமோவெண்டு கேட்டினம், நான் சங்கர் எண்டு சொன்னனான்.
மங்க: ஆர் சதா இந்தச் சங்கர்? அவனுக்கும் உனக்கும் என்ன பிரச்சினை?
சதா: சும்மா றோட்டுவழிய நிண்டு சேட்டைவிட்டா எல்லாரும் பேசாமல் போவினமே? அண்டைக்கொருநாள் நான் ஆளைக் கொஞ்சம் வெருட்டிப்போட்டன்.
(ஏஜென்சி பாலா வருகிறார்)
மகா: ஆ. பாலா வாங்கோ.
6) இதென்ன அநியாயம். வாழவந்த நாட்டிலயே இப்படி யெண்டால். இது உபத்திரவமாயில்லோ கிடக்கு. எப்பிடிச் சதா, என்ன செய்யுது?
சதா: அதொண்டும் பெரிசா இல்லை. பயத்தில கை நடுங்கி நடுங்கிச் சுட்டிருக்கிறான்போல. அது சும்மா சீலிங், சுவர் எண்டுதான் பட்டது. எனக்குச் சும்மா சின்னச் சிராய்ப்புத்தான்.
பாலா: விடியக்காலமை எனக்கொராள் ஃபோண்பண்ணி உப்பிடி இரவு கலைவிழாவில ஏதோ பெட்டைச் சண்டையில சுடுபட் டாங்களாம் எண்டு சொல்ல நான் சதாவை எங்க நினைச்சன்.
மங்க: அதுதானே. இங்க சனங்கள் பட்டும் அறிவில்லாமல்
வாய்க்கு வந்தபடி கதைச்சுக்கொண்டு திரியுதுகள். தானுண்டு தன்ர வேலையுண்டு எண்டு திரியிற பிள்ளையைப்போய் உப்பிடி
96 வாழ்ந்து பார்க்கலாம்

வாய்க்கு வந்தபடி கதைக்குதுகள். ஃப்றீயா ஃபோண் ஒண்டு கிடக்கு எடுத்து வைச்சுக்கொண்டு வம்பளக்கவேண்டியதுதானே.
6): சனங்களுக்கும் பொழுதுபோகவேணுமே. சுட்டவனைத் தேடிப் போலீஸ் போனதாம். ஏதோ பேரும் சொன்னாங்கள்.
மகா: சங்கராம். எங்க, எப்பவாம் போலீஸ் போனது.
பாலா: இப்ப நான் உதில வரேக்க கார் பிறேக்கில இருந் தாப்போல சத்தம் வருகுதெண்டுபோட்டு உந்தா உதில, அங்க ஸ்டான்லிறோட்டில கராஜ் வைச்சிருந்த ஒரு மெக்கானிக் பொடியன் கராஜ் போட்டிருக்கிறான். அவனிட்டப் போனனான். அங்கதான் கதைச்சாங்கள். அந்தக் கராஜுக்குப் பக்கத்தில ராஜன் எண்டு ஒருத்தன் ஒட்டோ பொடி ஷொப் ஒண்டு வைச்சிருக்கிறான். இவங்கள். இந்தக் கூட்டத்தில கொஞ்சப்பேர் அங்கதான் எப்பவும் நிப்பாங்கள். எங்கையும் பழைய காருகளை வாங்கி அவனைக் கொண்டுதான் இல்லாத பூச்செல்லாம் பூசிச் சோடிப்பிக்கிறது. அங்க போலீஸ் போய்க் கேட்டதாம். ஆனால் ஆக்கள் அங்க போகேல்லையெண்டு கேள்வி.
மகா: இனி பிடிச்சாலும் கோட்டு வழக்கெண்டு பெரிய கரைச்சல்,
U6): கரைச்சல் எண்டுபோட்டு உவங்களச் சும்மா விடக் கூடாது. சொல்லிக்குடுத்து பிடிச்சுத் திருப்பி அனுப்பிப்போட வேணும். உவங்களால இங்கஉள்ள முழுத் தமிழ்ச்சனத்தின்ர மானமும் போகப்போகுது. மெய்யே சதா, என்னத்துக்காண்டிச் சுட்டிருப்பாங்களெண்டு நினைக்கிறாய்?
மங்க: இவரை ஆர் சுடுகிறது. இவற்ற கெடுகாலம் இவர் அதுக்குள்ள போட்டார். வழக்கமா இவன் உந்தக் கலைவிழா அதுஇதெண்டு போறேல்லை. காலம் இழுத்துக்கொண்டு போயி ருக்கு.
L6): அப்ப சதா றெஸ்ட் எடுக்கட்டும். நான் பிறகு ஆறு தலா வந்து சந்திக்கிறனே வீட்டில. அப்ப மிஸ்டர் மகாலிங்கம், எப்பிடி மகள் பாடெல்லாம்.
மகா: இருக்கிறா. நாளையிண்டைக்கு கேஸ்.
6): அதொண்டும் பயப்பிடத் தேவையில்லை, எல்லாம் சரி வரும். அப்ப நான் வரட்டே. அதில மீற்றர் பார்க்கிங்கில ஆரோ
97 வாழ்ந்து பார்க்கலாம்

Page 51
மீற்றரில காசைப்போட்டிட்டு அரைமணித்தியாலத்தில காரை எடுத் துக்கொண்டு போட்டினம். அதில நான் விட்டிட்டு வந்தனான். நேரம் முடியமுதல் போகவேணும், நான் வரட்டே, வாறன் சதா. நானும் இந்த ஏஜன்ஸி வேலையை விட்டிட்டு ஒரு கடை போடலாமெண்டு பாக்கிறன். இனி மகன் செய்யட்டும் ஏஜன்ஸி வேலைய, எனக்கு அலையச் சரிவராது. சரி, பிறகு எல்லாத் துக்கும் ஆறுதலா வந்து கதைக்கிறனே.
மகா: சரி, சந்திப்பம்.
(காட்சிமாற்ற இசை)
காட்சி-19
பூரண: எனக்கெண்டால் பயமாயிருக்குத் தம்பி, உம்மட சொந்த மாமா மாமி இங்க இருக்கத் தக்கதா அவைக்குச் சொல் லாமல் நீர் கலியாணம் செய்யப்போறனெண்டுறது எனக்கெண்டால் அவ்வளவு சரியாப்படேல்லை.
சதா: எனக்கு வேற வழி தெரியேல்ல.
பூரண: அதுக்கு உப்பிடிச் செய்யிறதே. நீர் சுடுபட்டு ஆஸ்பத் திரியில இருக்க உம்மட மாமி பட்ட பாடு எனக்கல்லோ தெரியும். அப்பவும் நான் உம்ம ஆஸ்பத்திரிக்குப் பாக்க வரேக்க எனக்குச் சரியான அந்தரமாக்கிடந்தது. அவ ஏதோ நான் ஊர் அறிமுகத் தில வாறனாக்குமெண்டு நினைச்சு வடிவாக் கதைச்சா. இப்பிடி யொரு விசயம் பின்னால இருக்கெண்டு தெரிஞ்சிருந்தால் என்ன செய்திருப்பாவோ தெரியாது.
மலர்: அம்மா, சதா சொல்லுறதிலையும் ஞாயம் இருக்கு. நாங்கள் ரெண்டுபேரும் கலியாணம் செய்யிறதெண்டு முடிவெடுத் திட்டம். அதுக்கு இப்பிடி ஒரு பிரச்சினை இருக்கேக்க சதான்ர மாமா மாமி ஒமெண்டு ஒப்புக்கொண்டு சந்தோஷமா வந்து கலியாணம் செய்துவைப்பினமெண்டு நாங்கள் எதிர்பாக்கேலாது. சரி, ஒரு கதைக்கு அவைக்குத்தான் விருப்பமெண்டு வைச்சாலும் அவை முன்னுக்கு வந்துநிண்டு செய்துவைப்பினமெண்டில்லை.
பூரண சரி, முன்னுக்கு வந்து நிண்டு செய்துவைக்காட்டிலும் சொல்லுறது மரியாதையெல்லே.
98 வாழ்ந்து பார்க்கலாம்

சதா சொல்லுறது மரியாதைதான். ஆர் சொல்லுறது? இதைப் போய்ச் சொன்னவுடன அவை ஒத்துக்கொள்ளப் போறேல்லை. அதுவும் மாமி தாம்தூமெண்டு குதிப்பா. இனி ஆத்திரத்தில இல்லாத பேச்செல்லாம் வாயில வரும். ஏன் அந்தப் பிரச்சி
6)66).
பூரண: எக்கணம் தம்பி என்ன சொல்லுவானோ.
மலர்: அம்மா, அண்ணையும் இதைத்தான் சொல்லுவார். மரியாதைக்காண்டியோ சம்பிரதாயத்துக்காண்டியோ இதை நாங்கள் அவைக்குச் சொல்லப்போய் வீணா ஏன் அவமானப்படவேணும்.
J6007: அந்தா, தம்பிதான் வாறான்போலகிடக்கு. அவனிட்
டையே சொல்லுங்கோ.
ரவி: அ. சதா எப்பிடி? என்னவாம் போலீஸ்காறர்.
சதா: இண்டைக்குக் காலமை போய் ஆளை அடையாளம் காட்டினனான். எல்லாம் எழுதிக்கொண்டு கூப்பிடுற நாளுக்குக் கோர்ட்டுக்கு வந்து சாட்சிசொல்லவேணுமெண்டினம். மலரையும் ஒரு சாட்சியாப் போட்டிருக்கு. இனி அண்டைக்குப் பள்ளிக் குடத்தில டியூட்டீல நிண்ட செக்கியூரிட்டியும் எங்கட ஆள்தானாம். அங்க சிறீலங்காவில எங்கையோ ஸ்கூல் பிறின்சிப்பலா இருந்த வராம். அவரும் ஆளைக் கையில துவக்கோட கண்டதெண்டு போலீஸில சொல்லியிருக்கிறார். கட்டாயம் ஆளை உள்ளுக்க போடுவாங்கள்.
6: கொஞ்சநாளைக்கு உள்ளுக்க போடுறதில பிரயோசன மில்லை. திரும்பிவந்து இருந்ததிலும்பாக்க மோசமாச் செய்வாங் கள். பிடிச்சுத் திருப்பியனுப்பிப்போடவேணும்.
சதா: அதுக்கு இங்க மனித உரிமை அதுஇதெண்டு கணக்கக் கிடக்கே. அது இப்பிடிப்பட்ட களிசறையளுக்கு வாய்ப்பாப்போச்சு.
ரவி: வழக்கு எப்பமட்டில வருமாம்.
சதா: எப்ப எண்டு தெரியேல்லை. அதுதான் ரவி, இனி வழக்கு நடந்து போய்ச் சாட்சி சொல்லி அப்ப விஷயம் வெளியில
99 வாழ்ந்து பார்க்கலாம்

Page 52
தெரியிறதுக்கிடையில நாங்கள் ரெண்டுபேரும் இப்பவே கலியாணம் செய்யிறது நல்லதெண்டு நினைக்கிறன்.
ரவி: மலர் என்னவாம்?
மலர்: நானும் அப்பிடித்தானண்ணை நினைக்கிறன். நீங்கள் சொன்னமாதிரி சீ.ஜி.ஏ. கோர்ஸ் மூண்டெண்டாலும் பாஸ் பண்ணிப்போட்டுக் கலியாணம் செய்யிறது நல்லதுதான். ஆனால் இப்ப இருக்கிற நிலையில நாங்கள் மரி பண்ணி செட்டிலா கீட்டமெண்டால் கன பிரச்சினையளுக்குக் கெதீல ஒரு முடிவு கட்டிப்போடலாம். பிரச்சினையளை வைச்சுக்கொண்டு நாளை இழுத்துக்கொண்டிருக்கிறதும் நல்லதில்லைத்தானே.
ரவி: ஒ. அது நல்ல பொயின்ட்.
600: ஆனா. கலியாணத்தை சதா தன்ர மாமா மாமிக்குச் சொல்லாமல் செய்யப்போகுதாம்.
ரவி: ஒ. சதா என்ன நினைக்குதெண்டது எனக்கு விளங்குது. அதுவும் சரிதான். அப்ப சதா, கலியாணமெண்டால் எப்ப, என்ன
மாதிரி.?
சதா: பெரிசா ஒண்டுமில்லை. சட்டப்படி றெஜிஸ்ரர் பண்ணப் போறம் அவ்வளவுதான். வாற சனி, ஞாயிறில ஒரு அப்பார்ட் மென்டத் தேடலாமெண்டிருக்கிறன். ,
ரவி: ஒ. அது நல்லது. அப்பார்ட்மென்டை எடுத்துப்போட்டுச் சொல்லுங்கோ. தேவையான சாமான்கள் எல்லாம் வாங்கிப்போடுறது என்ர பொறுப்பு.
சதா: நீங்கள்தானே சீதனம் குடுக்கிறேல்லையெண்டனிங்கள்.
ரவி: இது சீதணமெண்டு ஆர் சொன்னது. நான் உங்கட வெடிங்குக்குத் தாற பிறசென்ட், சீதனம் எண்டு கேட்டிருந்தால் ஒரு சதம் தந்திருக்கமாட்டன். உம்முடைய போக்கு என்ர எதிர்பாப்புகளுக்கேத்தமாதிரி இருக்கெண்டதில எனக்குச் சரியான சந்தோஷம். றைட் திங்கிங் எண்டு சொல்லுறது. எல்லா விஷயங் களையும் சரியாப் பகுத்து உண்மையை அறிஞ்சு நடந்தால் மனிச ருக்கிடையில அபிப்பிராயபேதம், சண்டை, சச்சரவு எண்டு ஒண்டுமே இராது. ஏனெண்டால் ஒரு விஷயத்துக்கு எப்பவும்
100 வாழ்ந்து பார்க்கலாம்

உண்மை ஒண்டேயொண்டுதான். அது தெரியாமல் இருக்கு மட்டும்தான் பிரச்சினை.
(காட்சிமாற்ற இசை)
காட்சி-20
மகா: ஆர் சதாவே. என்ன இங்க வேலைசெய்யிற இடத்துக்கு வந்திருக்கிறாய், என்ன நடந்தது?
சதா: உங்களைத் தனியக் கண்டு கதைக்கவேணும். வேற ஒரு இடமும் வசதிப்படாது. அதுதான் இங்க சந்திப்பமெண் வந்தனான். い
மகா: ஏன் ஏதும் பிரச்சினையே?
சதா: மாமா, நான் சொல்லுறன், நீங்கள் கோவிக்கக்கூடாது.
Dć5 நீ முதலில சொல்லன். கோவிக்கலாமோ கூடாதோ வெண்டு பிறகு பாப்பம்.
சதா: நாளைக்கு எனக்குக் கலியாணம்.
மகா: கலியாணமோ. நாளைக்கோ?
சதா (மெளனம்)
85 என்ன திடீரெண்டு. ஆர் உனக்கு இதெல்லாம் ஒழுங்குபடுத்தினது?
சதா: இது நானே பாத்துக்கொண்டதுதான்.
சரி, நீயே பாத்தால் அதில என்ன பிழை? ஏன் எங்களுக்கு வந்து சொல்லியிருந்தால் வடிவா நிண்டு சிறப்பா
எல்லாத்தையும் செய்துவைச்சிருப்பமே. ஏன் இப்பிடிக் கள்ளத் தனமாச் செய்வான்? ஆர் பிள்ளை?
101 வாழ்ந்து பார்க்கலாம்

Page 53
சதா: அதிலதான் மாமா பிரச்சினை. பொம்பிளை உங்களுக்குத் தெரிஞ்சவதான். சிவக்கொழுந்துவின்ர மகள் மலர்.
மகா: (மெளனம்)
சதா ஏன் மாமா பேசாமல் இருக்கிறீங்கள்?
மகா: நான் என்னத்தைப் பேசிறது. நீ எல்லாம் முடிவெடுத்து இவ்வளவுதூரம் போய் நாளைக்குக் கலியாணம் எண்டு இங்க வந்து என்னட்டை இரகசியமாய்ச் சொல்லுறாய். இப்ப நீ சொல்லுறதின்ர நோக்கமென்ன?
சதா: கோவிக்காதேங்கோ மாமா. நான் உங்களை மதிக்காமல் இப்பிடிச் செய்யேல்லை. நான் விரும்பின கேர்ளை மரியண்ண வேணும். இதை நீங்கள் அதுவும் மாமி கொஞ்சங்கூட ஒத்துக் கொள்ளமாட்டா. பிறகு ஏன் வந்து வீட்டில சொல்லி வீண் பிரச்சினைப்படுவான் எண்டுபோட்டுச் சொல்லாமல் செய்வம் எண்டு நினைச்சனான். பிறகும் மனதுக்கு ஒரு மாதிரியாய் இருந்தது. உங்களிட்ட மட்டும் சொல்லுவம் எண்டுபோட்டு வந்தனான்.
மகா: ஆக நீ வந்து சொல்லுறது எனக்கு அறிவிக்க. என்ர அபிப்பிராயத்தைக் கேக்க இல்லை.
சதா: (மெளனம்)
மகா சரி, அறிவிச்சிட்டாய், சந்தோஷம். நீ நினைச்சதை மன உறுதியோட செய்யிறது நல்லது. இப்ப நாளைக்குக் கலியாணம் எண்டுறாய், என்னமாதிரி?
சதா: கலியாணமெண்டு பெரிசா ஒண்டும் செய்யேல்லை. றெஜிஸ்டர்பண்ணி சாமிபடத்துக்கு முன்னால தாலி கட்டுறது அவ்வளவுதான். நீங்களும் மாமியும் வந்தீங்களெண்டால் அதை விடச் சந்தோஷம் வேற எனக்கு இருக்கமுடியாது.
இந்தா சதா, வீண் எண்ணம் வேண்டாம். உனக்கும் தெரியும், எனக்கும் தெரியும் உன்ர மாமியப்பற்றி. நீ உன்ர சந்தோஷத்துக்குச் செய்யிறனி. நடக்கமுடியாததுகளை எதிர்பாரா மல் நினைச்சதை வடிவாச் சந்தோஷமாச் செய்துமுடி. இது மனிசன்ர வாழ்க்கையில மிக முக்கியமான நாள். எப்பிடி, நாளெல்
102 வாழ்ந்து பார்க்கலாம்

லாம் சரியாப் பாத்ததோ? உங்க எல்லாம் வசதிக்குத் தக்கமாதிரி நாள் வைக்கிறாங்களெண்டு கதைக்கிறாங்கள்.
சதா: இல்லை மாமா. பெரிசாக் கலியாணம் செய்யிறதெண்டால் தான் பிரச்சினை. இது ஐயரிட்டச் சொன்னன், றெஜிஸ்டர் பண் னித் தாலி கட்டுறது மட்டுந்தான், நாள் எப்ப இருந்தாலும் பறவாயில்லையெண்டு. அவர் நாளைக்குப் புதன்கிழமை காலமை பத்தரைக்கும் பன்ரெண்டுக்குமிடையில நல்லநாளெண்டு குறிச்சுத் தந்தவர்.
மகா: அம்மாக்கெல்லாம் அறிவிச்சுப்போட்டாய்தானே.
சதா: ஓம். ஆனால் ஆர் பிள்ளையெண்டு எழுதேல்லை.
அது நல்லது. பாவம் அக்கா வருத்தக்காறி. தனிய இருக்கிறது. சரி, நல்லாயிரு. ம்ம்.ஏதோ கவனமாய்ப் பாத்து எல்லாத்தையும் செய். அ. சரி, நான் இண்டைக்கு இந்த ஏஜன்ஸி பாலா கடைதிறக்கிறதெண்டு அறிவிச்சதுக்கு இன்னும் போகேல்லை. அதுதான் வேலையால போய் மாமியக் கூட்டிக் கொண்டு ஒருக்காப் போவமெண்டு பாக்கிறன்.
சதா: ஏறுங்கோ மாமா காரில, கொண்டே விட்டுவிடுகிறன்.
(காட்சிமாற்ற இசை)
காட்சி-21
(பெரிதாக சினிமாப்பாடல் ஒலித்துக்கொண்டிருக்கிறது)
60s: மாம்பழம் எடுத்தனிங்களோ. இல்லையோ. குமார் ரெண்டு மாம்பழப்பெட்டி எடுத்துக்கொண்டேத் தம்பீன்ர காருக்க வைச்சுவிடு. அசல்ச்சாமான். டசின் ஐஞ்சுரூபாதான். இது எல்லாருக்கும் நாங்கள் குடுக்கிறேல்லை. இப்பிடி உங்களைப்போல அடிக்கடி வாறபோற கஸ்டமேசுக்குத்தான். உள்ளுக்க போங்கோ, தங்கச்சி போங்கோ. நல்ல புது மீன் வந்திருக்கு.
மகா வியாபாரம் மும்மரமாத்தான் நடக்குதுபோல.
103 வாழ்ந்து பார்க்கலாம்

Page 54
L6) அடடட.இங்க பாருங்கோ மிஸ்டர் மகாலிங்கம். கடை திறந்து இவ்வளவு நாளாகுது இண்டைக்குத்தான் வழி தெரிஞ் சிருக்கு.
ዚር)êEff። தெரியாதே, வரவேணும் வரவேணுமெண்டு ஒவ்வொரு நாளும் நினைக்கிறது. பிறகு ஏதாவதொண்டு குறுக்க வந்திடும்.
பாலா; அது எனக்குத் தெரியாதே. இங்க உதுகளைக் குறை சொல்லேலாது. ஒவ்வொருத்தருக்கும் எவ்வளவோ பிரச்சினையள். எல்லாத்தையம் கவனிக்கத்தானேவேணும். என்ன பேசாமல் நிக்கி நீங்கள் மிஸிஸ் மகாலிங்கம். சுத்தி ஒருக்காப் பாருங்கோ, யாழ்ப் பாணத்தில கிடைக்காததெல்லாம் இங்க கிடைக்கும்.
மங்க: சரியாய்ச் சொன்னீங்கள். மிச்சம் பெரிய மோசம் பாருங்கோ அங்க. ஒரு தேங்காய் ஐம்பது ரூபாவெண்டால் பாருங்கோவன்.
பாலா: எடும் தம்பி நல்லம். றாத்தல் 3 ருபா. பாதாம்பருப்பு. பயில்வான்கள் சாப்பிடுகிறதெண்டு சொல்லுவினம்.பின்ன சொல்லுங்கோ. எப்பிடி பிள்ளையஸ் எல்லாம். வேனி
லாண்டட்டுக்கு அப்ளை பண்ணிட்டாவோ.
ԼՐՑ5ITE ஓ. எல்லாம் குடுத்திட்டா. இப்ப வேலைதான் வேணுமெண்டு மும்மரமாத் தேடிக்கொண்டு திரியிறா.
6): அதெல்லாம் ஒரு பிரச்சினையுமில்லை அவவுக்கு. அவ கெட்டிக்காறிதானே. அது எடுத்திடலாம். சதா உங்களைக் கண்டவரோ?
மகா: இல்லை, இன்னும் காணேல்லை.
U6): காணேல்லையோ. காலமை இங்க வந்து கதைச்சவர். நான் சொன்னனான், உங்களைக் கட்டாயம் காணச்சொல்லி,
மங்க: என்ன விசயம்?
858 அது கேஸ் விஷயமா இருக்கும். நீர் போய் நல்ல மீனாய்ப் பாத்து எடும், வாறன்.
04 வாழ்ந்து பார்க்கலாம்

6) ஒமோம். நீங்கள் போய்ப் பாத்தெடுங்கோ. சொறி
மிஸ்டர் மகாலிங்கம். அவவை மறந்திட்டன். பிறகு, கண்டவரே?
ஓ, கண்டவர். நான் என்ன செய்யிறது? பெத்த
பிள்ளையளையே கண்டிக்க ஏலாத காலம். மருமகன் என்ர சொல் லுக் கேப்பானெண்டு எப்பிடி நினைக்கேலும்.
6): சரி விடுங்கோ. எல்லாம் காலம் மாறிக்கொண்டு வரு குது. அதோட நாங்களும் அள்ளுப்பட்டுக்கொண்டு போகவேண் டியதுதான். பத்து வருசங்களுக்கு முதல் நினைச்சனாங்களே, நான் இப்பிடிக் கனடாக்கு வந்து பலசரக்குக் கடை வைச்சுக் கொண்டிருப்பனெண்டும் நீங்கள் வந்து சாமான் வாங்குவீங்க ளெண்டும். ஒண்டும் எங்கட கையில இல்லைப் பாருங்கோ.
மகா: ஓ என்ன செய்யிறது. எப்பிடி மகன்பாடு.
பாலா: ஓ. அவருக்கென்ன. இப்ப ரெண்டு ட்றிப் செய்திட்டார். மருமோளுக்குத்தான் பிடிக்கேல்லை.
மகா: ஏனாம்.
T6: தெரியாதே. ரெண்டு சின்னப் பிள்ளையள். ஒண்டுக்கு ஒருவயது. மற்றதுக்கு ரெண்டு. தனிய விட்டுப்போட்டுப் போகத் தனக்குக் கரைச்சலாயிருக்கெண்டுறா.
மகா கரைச்சலெண்டாலும் கொண்டிழுக்கத்தானேவேணும். சரி,
அங்க அவ கூப்பிடுகிறா. வரட்டே, போய் மீனைப் பாத்துக் கொண்டு வாறன்.
(காட்சிமாற்ற இசை)
காட்சி-22
மங்க: என்ன, இண்டைக்கு ஒஃபிஸால வந்த நேரந்தொடக்கம் பாக்கிறன் ஒருமாதிரி இருக்கிறீங்கள். பாலான்ர கடைக்குப் போட்டு வந்ததுதான் ஒண்டையும் கவனிக்காமல் கடுமையான யோசினை
யில இருக்கிறீங்கள். ஏனப்பா, வேலையில ஏதும் பிரச்சினையே.
105 வாழ்ந்து பார்க்கலாம்

Page 55
வேலையில என்ன பிரச்சினை. அதென்ன, பெரிய சிக்க லான வேலையே நான் செய்யிறன் பிரச்சினைப்படுகிறதுக்கு.
மங்க: அப்ப என்னப்பா?
மகா: இல்லை, இப்பிடி வந்து பிள்ளையஸ் பிள்ளையஸ் எண்டு அடியானடிச்சு. எல்லாம் என்னத்துக்கெண்டமாதிரி இருக்கு.
மங்க: என்னப்பா, இருந்தாப்போல.
மகா: இல்லை, இருந்தாப்போலதான் நினைவுவருகுது எல்லாம். என்ர ஐயா அங்க, என்ர அக்கா அங்க (பெருமூச்சு) என்ர அக்காவை நினைக்கத்தான் எனக்குப் பெரிய மனவேதனை.
மங்க: ஒ. அதுதான் சதா அவவை ஸ்பொன்ஸர்பண்ணிக் கூப்பிடலாமெண்டால் அவவுக்கு மாமாவை விட்டுப்போட்டு வர விருப்பமில்லை. அதுவும் ஏலாதுதானே.
மகா: ம். எனக்குச் சின்னவயதில அம்மா சாக, ஐயா தோட்டம் தோட்டமெண்டு மாடா உழைக்க, என்னைத் தன்ர பிள்ளைமாதிரி வளத்தவ. அந்தச் சின்ன வயதில விடிய வெள்ளண எழும்பி ஐயாக்குத் தேத்தண்ணி கொண்டேய்க் குடுத்திட்டு வந்து, என்னை எழுப்பிக் குளிக்கவாத்து, உடுத்தி, சாப்பாடு தந்து, மத்தியானச் சாப்பாடு கட்டித்தந்து பள்ளிக்குடத்துக்கு அனுப்பிப்போட்டு பிறகு ஐயாக்குச் சமைக்கத் தொடங்கும். அந்தச் சின்ன வயதிலையே பெரிய மனுசியள்மாதிரி. சிலவேளை நான் மத்தியானச் சாப்பாடு கொண்டுபோகாட்டால் அந்த வேகக்கொதிச்ச வெய்யிலில பள்ளிக் குட கேற்றடியில சாப்பாட்டோட நிப்பா. படிக்க நல்ல விருப்பம். ஐயாதான் வீட்டப் பாத்துக்கொள்ளச்சொல்லி ஐஞ்சாம்வகுப்போட நிப்பாட்டிப்போட்டார். பாவம்.
மங்க: இதை எனக்கு எத்தினைதரமப்பா சொல்லிப்போட்டியள். நீங்கள் சொல்லிச்சொல்லித்தானே எனக்கும் அவவில அப்பிடியொரு பட்சம் வந்தது. இப்ப ஏன் அதுகளை நினைக்கிறியள்?
இல்லை மங்களம். எனக்கு இண்டைக்குச் சரியா அந்த நினைவுகள் வருகுது. அவவுக்குக் கலியாணம் நடந்த தும் மாப்பிளைத் தோழனாய் நிண்டதும் லவுட்ஸ்பீக்கர், பந்தல் வெள்ளைகட்டிச் சோடிச்சு, மணவறை கட்டி, பலகாரச்சூடு, நாதஸ்வரம், ஆக்களெண்டு எவ்வளவு சந்தோஷமா இருந்தா.
106 வாழ்ந்து பார்க்கலாம்

கலியாணம் கட்டி அத்தானோடை கிளிநொச்சிக்குப் போறண்டு என்னைக் கட்டிப்பிடிச்சுக்கொண்டு அழுத அழுகை, பிறகு எல் லாம் போய்த் திரும்பி வந்து என்ர வீட்டைப் பாத்துக்கொண்டு தட்டத்தனிய இருக்கிறா.
மங்க: அதுதானே. அவவுக்குச் சதா இருக்கிறான், நல்ல பிள்ளை. அவவை நல்லா வைச்சுப் பாப்பான்.
ஆருக்குத் தெரியும் மங்களம். ஒவ்வொருத்தரும் தங்கட தங்கட வாழ்க்கையெண்டு வரேக்க அதுதான் முக்கிய மாப்படும். மற்றதெல்லாம் பின்னாலதான்.
மங்க: அவன் நல்ல பிள்ளை. தாயைக் கவனமா வைச்சுப் பாப்பான். நீங்கள் வீணா மனத்தைப்போட்டுக் குளப்பாதேங்கோ. இந்த சிற்றிஸன்ஷிப் உங்களுக்குக் கிடைச்சு ஒருக்காப் போய்ப் பாத்துக்கொண்டு வந்திட்டியளெண்டால் இப்பிடி மனம் பேதலிக் காது. இப்ப நீங்கள் பேசாமல் படுத்து நித்திரை கொள்ளுங்கோ, மனப்பாரம் குறையும்.
(காட்சிமாற்ற இசை)
காட்சி-23
(பக்திப்பாடல் ஒலிக்கிறது)
Ds எங்க.கடேக்கை ஒருத்தரையும் காணேல்லை. பக்திப் பாடலும் கேட்டுக்கொண்டு றெஸ்ட் எடுக்கிறீங்கள்போல கிடக்கு.
60 ஆ. வாங்கோ மிஸ்டர் மகாலிங்கம், எப்பிடி மிஸிஸ் மகாலிங்கம். என்ன ரெண்டுபேரும் இந்த நேரத்தில. இப்ப எத் தினை மணி.
மகா: இப்ப ரெண்டரையாகுது.
6) அ. அதுதானே. இந்த நேரத்தில வழக்கமா இப்பிடித் தான். இனிக் கொஞ்சம் கொஞ்சமாய்ப் பள்ளிக்குடத்தால வாறவை, வேலையால வாறவையெண்டு வரத் துவங்குவினம். நீங்கள் என்ன இந்த நேரத்தில. இண்டைக்கு வேலைக்குப் போகேல் லையே.
107 வாழ்ந்து பார்க்கலாம்

Page 56
இல்லை. இண்டைக்கு வேணிக்கு லாண்டட் பேப்பர் எடுக்கக் கூட்டிக்கொண்டுபோகவேண்டியிருந்தாப்போல லீவு போட்டனான்.
L6) வேணி நல்ல லக்குள்ள பிள்ளை. எல்லாம் அந்தந்த நேரத்தில சரியா நடக்குது. உங்க சிலதுகள் வந்து வரியக்கணக்கில கேசே முடியாமல் இழுபடுகுதுகள். கேட்டால் ஃபைலைக் காணேல்லையெண்டு சொல்லுறாங்களாம்.
இந்த ஃபைல் காணாமல்போற கதை இங்க சர்வ சாதாரணம். அங்க பாருங்கோ நாங்கள் பின்தங்கின நாடு, வசதியள் இல்லையெண்டு சொல்லுறதுதான். இப்ப 1918ஆம் ஆண்டு பிறந்தவையின்ர பேர்த்சேட்டுஃபிக்கற் வேணுமெண்டவுடன கிடைக் கும். அதுவும் பியோன்ர கையுக்க ஒரு பத்துரூபாவை வைச் சால் ஒருநாளைக்குள்ள எடுத்துப்போடலாம். இங்க எல்லாம் கொம்பியூட்டர். அப்பிடியிருந்தும் ஃபைல் துலையுது.
T6: எங்கட இந்துசமயத்தில சொல்லுறதுதானே, எல்லாம் அந்தந்த நேரம் வரேக்க அதது நடக்குமெண்டு. அதைக் கனடா இமிக்கிறேஷன்தான் எங்களுக்குச் சரியா உணரவைச்சுக் கொண் டிருக்கு
மங்க: எங்கையோ இருந்து வந்த எங்களுக்கு அவங்கள் உவ்வளவு செய்யிறது காணாதே. பிறகு நாங்கள் ஏன் அதில குறைசொல்லுவான்.
பாலா: மிஸிஸ் மகாலிங்கம் சொல்லுறதும் சரிதான். ஊருக்குப் போகேலாதெண்டதைத் தவிர கேஸ் முடியாட்டா என்ன, லாண்டட் கிடைக்காட்டாலென்ன, சிற்றிஸன் கிடைக்காட்டாத்தான் என்ன. எல்லாம் ஒண்டுதான். எல்லாருக்கும் வெல்.பெயர் காக ஒண்டு தானே. ஆனால் நாங்கள் இப்ப என்ன அரசாங்கத்தையா குறை சொல்லுறம். அங்க மஃபினும் திண்டு கோப்பியும் குடிச்சுக் கொண்டு வேலைசெய்யிறவையையல்லோ சொல்லுறம்.
அதையேன் பேசுவான். இப்ப இவ இங்க சுகமா வந்திருந்துகொண்டு ஒண்டும் விளங்குதில்லை. நான் முந்திக் கொஞ்சநாள் இந்த இமிக்கிறேஷனோட பட்டயாடு. அங்கபோய் ஆணோ பெண்ணோ எங்கட கேள்விக்கு சேர் எண்டு சொல்லிக் கதைக்கத் துவங்கிச்சினமெண்டால் அவைக்கு எங்கட கேள்வியள், எரிச்சல் குடுக்குதெண்டதுதான் அர்த்தம். அதால ஒண்டும் நடவாதெண்டு நாங்கள் விளங்கிக்கொள்ளவேணும்.
108 வாழ்ந்து பார்க்கலாம்

U6) அதுதான் பாருங்கோ, உவங்கள் எங்கள சேர் எண்டு சொல்லேக்குள்ள, இவங்கள் உண்மையாத்தான் சொல்லுறாங்களோ அல்லது நக்கலடிக்கிறாங்களோ எண்டுதானே யோசிக்கவேண்டிக் கிடக்கு.
OSs: அதென்னண்டா, இங்க எல்லாருக்கும் சட்டத்துக்குப் பயம். அதால ஆரும் தங்களத் தாழ்வா நடத்திப்போட்டினமெண்டு வழக்குப் போட்டிட்டாலும் எண்ட பயத்தில கோவமாக் கதைக்கேக் கையும் சேர் எண்டு சொல்லிக்கொள்ளுறது. பின்ன உண்மையான மரியாதையிலமில்லை. அதுசரி, இப்ப எப்பிடி உங்கட பாடுகள். கடைதிறந்தும் இப்ப ஒண்டரை ரண்டு வருசமாகுதெண்டு நினைக்கிறன்.
6): அது பெரிய சீரழிவு பாருங்கோ. மூலைக்கு மூலை பலசரக்குக் கடை. இங்க இருக்கிற எங்கட சனத்துக்குக் கடையள் கூடிப்போச்சு. இனி மாறிமாறிப் போட்டிக்கு மற்ற வையை விழுத்திறதுக்கெண்டு சேல் போடுறது. சேல் போட்டால் சனம் கொஞ்சம் அள்ளுப்பட்டு வந்து வாங்கும். அதைப் பாத்து ஏதோ பிஸியா பிஸ்னஸ் செய்யிறமெண்டு சந்தோசப்பட்டுப்போட்டு இருக்கவேண்டியதுதான். உங்க கனபேர் கேட்டுக்கொண்டு திரியினம். நானும் குடுத்திட்டால் பறவாயில்லையெண்டு பாக்கிறன்.
85: அவ்வளவு மோசமோ? நாங்கள் நினைக்கிறதுதான், உப்பிடி கடையள் புதிசு புதிசா வரவர ஏதோ நல்ல பிஸ்ன ஸாக்கு மெண்டு. பிறகும் அடிக்கடி கடையள் கைமாறேக்கையும் யோசிக் கிறனான் என்ன பிரச்சினையாயிருக்குமெண்டு.
பாலா; அது பிஸ்னஸைவிட சீட்டு அதுஇதெண்டு கன பிரச்சி னையள் பாருங்கோ. இனி நானும் கடைக்காறன் அதுகளைப்பற்றி ஏன் கதைப்பான். அதை விடுவம். இப்ப எங்கை இந்த நேரத்தில வெளிக்கிட்டிருக்கிறியள்.
ዘfሏŠ፧5ዘ[። இல்லை, மிஸஸாகாவில எங்கட ஒரு சொந்தமெண்டும் சொல்லலாம் ஆனால் கூடப் பழக்கமான ஆக்கள். நெடுக வரச் சொல்லிக் கரைச்சல்படுத்தினபடி, அதுதான் போவமெண்டு போட்டு வெளிக்கிட்டனாங்கள். போகேக்க வெறுங்கையோட போறதே, ஏதும் பழத்தைக்கிழத்தை வாங்கிக்கொண்டு போவமெண்டுபோட்டு.
பாலா: ஓ. நல்ல வாழைப்பழம் வந்திருக்கு 39 சதம், எடுங்கோ. எப்பிடிப் போகப்போறியள்.
109 வாழ்ந்து பார்க்கலாம்

Page 57
58 வந்த காலத்துக்கு இப்பதான் கார் பழகி லைசென்ஸ் எடுத்து ஒரு பழசொண்டு எடுத்திருக்கிறன். முந்தி சதாதானே கொண்டு திரியிறது. பிறகு அவன்ர போக்குவரத்து நிண்டதோட பெரிய கரைச்சலாப்போச்சு.
மங்க: ஏன் போக்குவரத்துக்காண்டி மருமோனோட கொண்டா டப்போறியள்போல கிடக்கு.
6): மிஸிஸ் மகாலிங்கத்துக்கு இன்னும் கோவம் போகேல் லைப்போல. சதா கலியாணம்கட்டி முதல் பிள்ளையும் பிறக்கப் போகுது.
மங்க: என்னண்டு பாருங்கோ போகும். என்ர சென்மத்துக்கும் இது போகப்போறேல்லை.
பாலா: ஓ. நீங்களும் வயதுக்கு வந்த பிள்ளையை வைச்சிருக் கிறியள். சொந்த மச்சான். செய்து குடுத்திருக்கலாம். கோவம் வரத்தானே செய்யும்.
மங்க: சீ. வேனிக்கு மாப்பிளை இல்லாமலில்லை. எங்கட
குடும்பத்துக்கு எவ்வளவு பெரிய அவமானத்தைத் தேடித் தந்திட் டான் எண்டதுதான் எனக்கு ஆத்திரம்.
பாலா! சரி விடுங்கோ. ஏதோ சின்னஞ்சிறிசுகள். நல்லா இருக் குதுகள். அவ்வளவோட திருப்திப்பட்டுக்கொள்ள வேண்டியதுதான். மெய்யே, வேனிக்கும் ஏதும் பாக்கத் தொடங்கவேண்டியதுதானே.
மங்க: அது அவவுக்கு நாங்கள் ஊரிலையே பாத்துவைச் சிருக்கிறம். இண்டைக்கு லாண்டட் பேப்பர் எடுத்த கையோட ஸ்பொன்ஸர்பண்ணுற ஃபோமுகளையும் வாங்கிக்கொண்டு வந்தாச்சு.
LT6: அது நல்லது. வேணிக்கு ஒரு வேலை கிடைச் சிட்டுதெண்டால் எல்லாம் சரிவந்திடும்.
நாங்கள் பாலாவுக்குச் சொல்லேல்லை என்ன? அவ வுக்கு இப்ப பாங்கொண்டிலை காஸுவலா வேலையொண்டு கிடைச்சிருக்கு. பின்னேரத்தில மூண்டுமணியிலையிருந்து பதி னொரு மணிவரை வேலை. டவுண்ரவுணில. இப்ப கிழமையில
10 வாழ்ந்து பார்க்கலாம்

ஒண்டுரெண்டு தரம் கூப்பிடுவாங்கள். போகப்போக பேர்மனன்டாக் குவாங்களெண்டு நினைக்கிறன்.
60 மெத்த நல்லதாப்போச்சு. நான் சொன்னன், வேணி அதிர்ஷ்டக்காறி.
மங்க: எப்பிடி உங்கன்ட மகன் குடும்பமெல்லாம்.
LT6)/T: அவருக்கென்ன. இப்ப மார்க்கத்தில ஒரு பெரிய வீடு வாங்கியிருக்கிறார். மூண்டுக்குமேல முடிஞ்சுது. ஆனால் என்ன பாருங்கோ, உங்களுக்குச் சொன்னால் என்ன, வீட்டுக்க ரெண்டு பேருக்கையும் பிரச்சினை. அவன் இப்ப போனா வாறதுக்கு நாள் செல்லுது. முந்திமாதிரி இல்லையாம், றுட்டுகள் மாத்த வேணு மாம். அதால கூடுதலா சிங்கப்பூரிலையே நிண்டுகொள்ளு றான். இவவுக்குச் சந்தேகம்போல கிடக்கு. என்னோடை ஒண்டும் சொல்லுறேல்லை. மாமிக்காறீட்டை அடிக்கடி வந்து சொல்லி ஒரே அழுகை, அதுக்கு நாங்கள் என்ன பாருங்கோ செய்யிறது? நல்லா வைச்சிருக்கிறான். புத்தம்புது ஹொண்டாக் காரொண் டெடுத்து ரதியெண்டு நம்பர்பிளேடும் போட்டுக் குடுத்திருக்கிறான். இனி ரெண்டு பிள்ளையளையும் பெத்த பிறகு காசைப்பணத்தைச் சேத்து நல்லா இருக்கவேணுமெண்டு பாக்கிறதோ சும்மா சந்தேகப்பட்டு வாழ்க்கையைப் பிரச்சினையாக்கிறதோ. சொல்லுங்கோ
LILLILD.
மங்க: என்னதான் காசுபணம் இருந்தாலும் புருசனோட இருக் கிறமாதிரி வராதுதானே.
6): நீங்கள் சொல்லுறது எனக்கு விளங்குது. இந்தக் காலத்திலை அதுவும் கனடாவில காசில்லாட்டா ஒருதரும் மதியா யினம். இது பிள்ளைக்கு விளக்குதில்லை.
வீட்டுக்கு வீடு ஒவ்வொரு விதமான பிரச்சினை. ஆரால என்ன செய்யேலும்.ம். இந்தா இதெவ்வளவெண்டு பாத்து விலையைச் சொல்லுங்கோ, நேரமாகுது. இனி மிஸஸாகா போய்ச் சேர ஒண்டரை மணித்தியாலமெண்டாலும் செல்லும்.
6) உதில கிடக்கிற மிஸஸாகாவுக்குப் போக ஏன் ஒண்டரை மணித்தியாலம்.
இப்பதான் லைசென்ஸ் எடுத்தது. இனி காரும் பழசு. ஹைவே எடுக்கப் பயம். அதால உப்பிடியே விக்டோரியாப்
11 வாழ்ந்து பார்க்கலாம்

Page 58
பாக்கால போய் டண்ஃபோத் எடுத்து நேரா ப்ளோர் போய் அப்பிடியே போனால் போயிடலாம். நாங்கள் போற வீடும் மிஸ்ஸா காவில ப்ளோர் ஸ்ட்றீட்டிலதான் இருக்கு.
அது நீங்கள் பயப்பிடுறமாதிரி இல்லை. ஹைவேதான் வலு சுகம் பாருங்கோ. எக்ஸிட்ட விட்டிட்டா அந்தரப்பட்டு பிறேக் அடிச்சு லேனுகளை மாத்தினாத்தான் பிரச்சினை. அப்பிடி விட்டால் அப்பிடியே போய் அடுத்த எக்ஸிட்டால வெளியால வர வேணும். சரி, இனி பயப்பிடுற உங்களை நான் ஏன் கட்டாயப் படுத்துவான். அப்ப வெளிக்கிடுங்கோ. நூறு சிக்னல் லைட்டு களில நிக்கவேண்டிவரும். இப்பவே வெளிக்கிட்டால்தான் போய்ச் சேரலாம்.
(காட்சிமாற்ற இசை)
காட்சி-24
மங்க: என்ன வேணி, காலமை எழும்பின நேரம் தொடக்கம் உதில இருக்கிறாய். போய் முகத்தைக் கழுவிப்போட்டு வாவன் கோப்பி தாறன்.
வேணி; இண்டைக்கு விசா இன்டர்வியூ என்னமாதிரியெண்டு கோல் எடுக்கிறனெண்டு சிவா சொன்னவர். இப்ப அங்க பின் னேரம் ஆறு மணியாயிருக்கும். மூண்டு மணிக்கு இன்டர் வியூ என்ன நடந்ததோ தெரியேல்லை.
மங்க: எங்கையோ லொட்ஜில இருக்குதெண்டாய். இனி வந்து ஆறி ஃபோண் எடுக்கச் செல்லுந்தானே. அதுமட்டும் கருவாட் டைப் பூனை பாத்தமாதிரி உந்த ஃபோணைப் பாத்துக்கொண்டு உதில இருக்கப்போறியே.
வேணி இல்லை. அவர் எம்பஸியால வெளிக்கிட்டு பிறைவேட் போஸ்ற் ஒஃபிஸில வந்து ஃபோண் எடுக்கிறனெண்டு சொன்னவர். (டெலிஃபோண்மணி அடிக்கும் சத்தம்) டெலிஃபோண் அடிக்குது. அவர்தான். ஹலோ. சிவா. என்ன, என்ன நடந்தது. ஏன் இவ்வளவு நேரம். இப்ப அங்க எத்தினை மணி.
சிவா: பின்னேரம் ஆறரைமணியாகுது.
வேணி: ஆ. ஆறரைமணி. வலு ஆறுதலாய்ச் சொல்லு நீங்கள். இங்க நான் எவ்வளவு அந்தரப்பட்டுக் கொண்டிருக்கிறன்
12 வாழ்ந்து பார்க்கலாம்

தெரியுமே. ராத்திரி பன்ரெண்டு மணிக்கு வேலையால வந்து இன்னும் நித்திரை கொள்ளேல்லை. என்னவாம் எம்பஸில.
சிவா: அதொண்டும் சரிவராது வேணி.
வேணி; ஏன் சிவா?
மங்க: ஏன், என்னவாம்?
வேணி: பொறுங்கோம்மா. ஏன் சிவா, விசா தரேல்லையே.
சிவா: நல்லாத் தந்தாங்கள். அவங்கள் ஸ்பொன்ஸர் பண்ணி னது நான் மரி பண்ணப்போற கேர்ள் எண்டு சொல்ல நம்பு றாங்களில்லை. என்ன புறு.வ் எண்டு கேக்கிறாங்கள். நான்
என்னண்டு புறுாஃவ் பண்ணுறது. நீர் போகமுதல் இங்க றிTஸ் டேஷன் முடிச்சுப்போட்டுப் போயிருக்கவேணும். அவங்கள் சொல்லு றதும் சரிதானே. உப்பிடியெண்டால் எல்லாரும் எல்லாரையும் ஸ்பொன்ஸர்பண்ணிக் கூப்பிடலாம்தானே.
வேணி: இப்ப என்ன சிவா செய்யிறது.
சிவா: நான் தங்கியிருக்கிற லொட்ஜுக்கு கன ஏஜன்ஸிக்காறர் வாறவை. அதில ஒருத்தர் என்னோட நல்ல பழக்கம். அவர் சொன்னார், கள்ளமாப் போறதுதான் புத்தியெண்டு. விருப்ப மென டால் தான் கூட்டிக்கொண்டு வாறாராம். இப்ப முடிஞ்சதைத் தரட் டாம். பிறகு வந்து கொஞ்சம்கொஞ்சமாத் தரவேண்டிய காசைத் தந்து முடிக்கட்டாம். அதுதான் வேணி, இப்ப எம்பஸியால வந்த வுடன அவரோட கதைச்சுப்போட்டுத்தான் உமக்கு ஃபோண் பண்ணுறன்.
வேணி: எப்பிடி சிவா நம்புறது. பிறகு இருக்கிறதையும் சுறுட்டிக்கொண்டு மாநீட்டால்.
சிவா. இவரைப் பாத்தா அப்பிடி கண்ணைப்பொத்தி அடிக்கிற ஏஜன்ஸிக்காறர்மாதிரித் தெரியேல்லை. மற்றது, இன்னும் ஒண்டு சொன்னார், இப்ப நீர் சிங்கப்பூருக்கு வந்து நானும் அங்க வந்தால் அங்க வைச்சு றிTஸ்டர் பண்ணிப்போட்டுப் பிறகு நீர் திரும் பிப்போய் ஸ்பொன்ஸர் பண்ணலாமாம். அதுக்கினி நான் சிங்கப் பூருக்கு வரவேணும். அதுக்கு வேற செலவு. உம்மட அப்பா அம்மா என்ன சொல்லுவினமோ. மற்றது அப்பிடித்தான் வந்து றிTஸ்டர் பண்ணினாலும் திரும்பிப்போய் ஸ்பொன்ஸர் பண்ணிக்
113 வாழ்ந்து பார்க்கலாம்

Page 59
கூப்பிட இன்னும் எவ்வளவு காலம் பிடிக்கும் அதுதான் நான் இப்ப ஊருக்குத் திரும்பிப்போய் எவ்வளவு காசு பிரட்ட முடியுமோ பிரட்டிக்கொண்டு வந்து கள்ளமா வாற வழியைத்தான் பாக்கப் போறன்.
வேணி: சிவா, எனக்கெண்டால் சிங்கப்பூருக்கு நான் வாறது நல்ல ஐடியாபோல கிடக்கு.
சிவா: வந்து.
வேணி நீங்கள் சொன்ன மாதிரி றிTஸ்டர் பண்ணுவம்.
சிவா; அதுக்கு உம்மட அப்பா அம்மா சம்மதிப்பினமே.
வேணி: அதெல்லாம் நான் பாத்துக்கொள்ளுவன். ஓம் சிவா. அதுதான் நல்ல ஐடியா. இப்ப ஏஜன்ஸிக்காறனுக்கு பன்ரெண் டாயிரம் டொலர் குடுக்கிறதிலும்பாக்க இது மிஞ்சிமிஞ்சிப் போனா லும் ஒரு ஐயாயிரம் ஆறாயிரத்தோட எல்லாத்தையும் முடிச்சிடலாம். நீங்களும் கள்ளமா வந்து அலையாமல் ஸ்பொன்ஸரில நிம்மதியா வரலாம்.
சிவா: மோம். ம் நான் வாறதை எவ்வளவுக்கெவ்வளவு
g (5 தள்ளிப்போட ஏலுமோ அந்தளவுக் நல்லதெண்டு நினைக்கிறீர்
g கு போல.
வேணி பாத்தீங்களே சிவா தொடங்கீட்டீங்கள் உங்கட வழக்க மான குத்தல் கதையளுக்கு. நான் சிங்கப்பூருக்கு வாறதெண்டு றதே உங்களை இன்னும் ஒண்டுரெண்டு கிழமேக்குள்ள பாக்கலா மெண்டதுக்காண்டித்தான்.
சிவா: ஏய் விசர். நான் கம்மா பகிடிக்குச் சொன்னஉடன சீரியஸா எடுத்து விளக்கம்தர வெளிக்கிட்டிடுவீர். எனக்குத் தெரி யாதே நீர் எதை விரும்புவீரெண்டு. ஆனால் உம்மட அப்பா அம்மா விடமாட்டினமெண்டெல்லோ நான் கள்ளமா வாறனெண்டு சொன்னனான். அப்ப எப்ப நீர் வெளிக்கிடுநீர்.
வேணி: நான் இதை அப்பா அம்மாவோட கதைக்கவேணும். அப்பா வேலைக்குப் போட்டார். பின்னேரம் எனக்கு வேலை. போனால் இரவு 12 மணியாகும் வர. நாளைக்குச் சனிக்கிழமை தானே. காலமை அப்பாவோட கதைச்சுப்போட்டு கோல் எடுப்பன்.
நீங்கள் ஒரிடமும் போகாதேங்கோ.
14 வாழ்ந்து பார்க்கலாம்

சிவா: அப்ப என்னை இப்ப ஊருக்குப் போகவேண்டாமெண்டு சொல்லுநீர்.
வேணி: ஓம் சிவா. பாங்குக்கு இன்ஃபோம்பண்ணவேணுமே.
சிவா: சீ. அதெல்லாமொண்டுமில்லை. நான் போறநேரம் கண்டு கொள்ளவேண்டியதுதான்.
வேணி அப்ப சிவா, பாஸ்போர்ட் இருக்குத்தானே. சிங்கப் பூருக்கு விசா தேவையில்லை. நாளைக்குச் சொன்னஉடன வெளிக்கிட்டு சிங்கப்பூருக்கு வாங்கோ. நான் எப்பிடியும் அப்பா வையோ அம்மாவையோ கூட்டிக்கொண்டு ஒரு கிழமேக்குள்ள அங்க வந்திடுவன். வாறகிழமை இங்க லோங் வீக்கென்ட். இன் னும் ஒரு மூண்டுநாளைக்கு லீவெடுத்தனெண்டால் வந்து ஒரு ஐஞ்சாறு நாளேக்க எல்லாத்தையும் முடிச்சுக்கொண்டு திரும்பீட
6).
சிவா. உண்மையாத்தான் சொல்லுநீரோ வேணி. இன்னும் ஒரு கிழமேக்கை உம்மைப் பாக்கப்போறனெண்டு நினைக்க நம்ப முடியாமல் கிடக்கு.
வேணி: ஏன், எனக்கு மட்டும் என்னவாம்? இண்டைக்கே வெளிக்கிடவேணும்போல இருக்கு. சிவா, ஒரிடமும் போகா
தேங்கோ. காலமை கட்டாயம் கோல் எடுப்பன்.
(காட்சிமாற்ற இசை)
காட்சி-25
y இனியென்ன.அவங்கள் விசா குடுக்காட்டால் இப்பிடிச் செய்யிறதுதான் நல்லது. எனக்கும் அதுதான் சரிபோல கிடக்கு.
மங்க: என்னப்பா, எனக்கெண்டால் நீங்கள் எல்லாரும் சேந்து என்ன செய்யிறீங்களெண்டே தெரியேல்லை.
மகா: இங்க, உமக்கு ஒண்டும் விளங்காது. பேசாமல் இரும். சும்மா நச்சுப்பல்லிமாதிரி எதுக்கெடுத்தாலும் ஏதும் சொல்லிக்
கொண்டிருப்பீர்.
15 வாழ்ந்து பார்க்கலாம்

Page 60
மங்க: நான் ஏனப்பா என்ர பிள்ளையின்ர நல்ல காரியத்துக்கு நச்சுப்பல்லிமாதிரி நிக்கிறன். என்ர சொல்லை ஆர் கேக்கிறியள். எல்லாம் உங்கட விருப்பப்படிதானே நடக்குது. இது ஒரு பொம்பிளைப்பிள்ளையின்ர வாழ்க்கையில நடக்கிற முக்கியமான விசயம். இப்பிடி எங்கையோ ஒரு சம்மந்தமில்லாத நாட்டில, ஒருத்தருக்கும் தெரியாமல் றெஜிஸ்டர் பண்ணிறதெண்டால் இதென்ன விளையாட்டே.
இது விளையாட்டு விசயமில்லையெண்டபடியாத்தான் நான் இவ்வளவு சீரியஸாக் கதைக்கிறன். என்ரை பிள்ளை சந்தோசமா இருக்கவேணும். அங்க விசா குடுக்கிறாங்களில்லை. களவா வந்துபோட்டு அந்தக் காசைக் கட்டுறதுக்கு உழைச்சுக் கொண்டு எப்பிடி அதுகள் சந்தோசமாச் சீவிக்கிறது. அது சிங்கப்பூரிலைபோய் றெஜிஸ்டர் பண்ணுறதுதான் நல்ல யோசினை. இதென்னப்பா சட்டப்படி ஒரு பேப்பரில கையெழுத்துப் போடு றதுதானே. பிறகு பெடியன் இங்க வந்தபிறகு முறைப்படி எங்கட சமயச் சடங்குகளோட எல்லாருக்கும் சொல்லிக் கலியாணத்தைச் செய்யலாம்.
வேணி: ஓமம்மா. இதைப்பற்றிக் கணக்க யோசிக்காதேங்கோ சிவா வந்தஉடன பெரிசாச் சொல்லிக் கலியாணத்தைச் செய்வம். இப்ப அப்பாவும் நீங்களும் என்னோட வாங்கோ.
மகா: அம்மா உன்னோட இப்ப வரட்டும். எனக்கு நினைச்ச உடன லீவெடுக்க ஏலாது. என்னோட வேலைசெய்யிற ரெண்டு பேர் வக்கேஷனில போட்டாங்கள். எனக்கும் தரமாட்டாங்கள்.
மங்க: நான் போய் என்னப்பா செய்யப்போறன். கண்ணைக் கட்டிக் காட்டுக்க விட்டமாதிரிக் கிடக்கும். நீங்கள் வாறதுதான் நல்லது.
மகா: நான் வந்துபோட்டுப் பிறகு வந்து வெல்ஃபெயர் எடுக்கச் சொல்லுறீரே. நீர் ஒண்டும் செய்யவேண்டாம். பேசாமல் பிள்ளை யோட போம். அவள் தனியப்போய் றெஜிஸ்டர் பண்ணுறமாதிரி யில்லாமல் நீர் இருந்தால் ஆறுதலாயிருக்கும். வேணி, நீ சிவா வுக்குக் கோலெடுத்து உடன சிங்கப்பூருக்குப்போய் தெரிஞ்சவை யைப் பிடிச்சு எவ்வளவு கெதியாச் செய்யேலுமோ அவ்வளவு கெதியா றெஜிஸ்டேஷன் செய்யக்கூடியமாதிரி எல்லா ஒழுங்கு களையும் செய்யச் சொல்லு, றெஜிஸ்டேஷன் செய்யிற துக்கு சட்டப்படி எத்தினைநாள் அந்த நாட்டில நிக்கவேணு மெண்டு
116 வாழ்ந்து பார்க்கலாம்

ஏதும் சட்டமிருக்கோ தெரியாது. நீயும் அம்மாவும் வாற சனிக்கிழமை வெளிக்கிடலாம்.
வேணி சரியப்பா.
ዚቦ)¢ñዘ[። மற்றது வேணி, சிங்கப்பூருக்குப் போய்ச் சேந்தஉடன சிவாவ இங்க கோல் புக் பண்ணச்சொல்லு. தமிழ்க்கடைப் பொடி யளிட்டச் சொல்லி ஒரு ஆயிரம் டொலர் உடன கிடைக்கச் செய் தால்தான் எல்லா அலுவல்களையும் செய்யக்கூடியதாயிருக்கும். கொழும்புக்கெண்டு வந்தவரிட்டக் காசிராதுதானே. அ. டெலி. போண் அடிக்குது, எடும்.
மங்க: ஹலோ.
சதா மாமி, எப்பிடிச் சுகமா இருக்கிறீங்களே.
மங்க: ஆர் கதைக்கிறது.
சதா: நான்தான் மாமி சதா.
மங்க: சதாவோ. என்னத்துக்கு எடுத்தனி.
சதா: மாமா நிக்கிறாரோ.
மங்க: இங்க மாமாவுமில்லை மாமியுமில்லை. பேசாமல் ஃபோணை வை.
சதா: சரி வைக்கிறன். ஏஜன்சி பாலான்ர மருமகள் 25ஆவது மாடீல இருந்து பாய்ஞ்சு தற்கொலை செய்திட்டா. அதுதான் மாமாட்டச் சொல்லிவிடுங்கோ.
மங்க: என்ர முருகா. என்னப்பா இது. என்ர கடவுளே.
மகா: என்ன, என்னப்பா. என்ன நடந்தது? என்னவாம் சதா.
வேணி அம்மா, என்ன நடந்ததம்மா?
மங்க: ஐயோப்பா. இந்த பாலான்ர மருமகள் 25ஆவது மாடில இருந்து குதிச்சுச் செத்துப்போச்சாமப்பா.
117 வாழ்ந்து பார்க்கலாம்

Page 61
58 என்ன அநியாயமப்பா இது. சிவசிவா. பொறு பொறு. அவ வீட்டில எல்லோ இருக்கிறா. 25ஆம் மாடீல இருந்து விழுந்ததெண்டால். உந்த ஃபோணை ஒருக்காத் தாரும்.
(காட்சிமாற்ற இசை)
காட்சி-26
L6): வாங்கோ மிஸ்டர் மகாலிங்கம், மிஸிஸ் மகாலிங்கம் வாங்கோ. பாருங்கோ, இப்பிடி அநியாயம் நடந்துபோச்சே.
ஒருவர்: அப்ப, பாலா நாங்கள் வரப்போறம்.
பாலா; வரப்போறியளோ?
ஒருவர்: ஒ. நேரமாகுது. பத்துமணிக்கு விஃப்ட். கவலைப்படாமல் இருங்கோ. என்ன செய்யிறது. திங்கக்கிழமை ஃபியூனரல் ஹோமில சந்திக்கிறன்.
6): சரி. (டெலிஃபோண் மணி ஒலிக்கிறது) சதா, அந்த ரெலிஃபோணை எடும்.
சதா: ஒமோம். திங்கக்கிழமை பின்னேரம் ஏழுமணிதொடக்கம் ஒன்பதுவரை, ஒக்டன் ஃபியூனரல் ஹோல். ஷெப்பேர்ட் அன்ட் மிட்லன்ட். ஷெப்பேர்ட்டில இருக்கு, சேர்ச்சுக்குப் பக்கத்தில. ஒமோம், வெளிக்கிட்டிட்டார். நாளைக்கு வந்திடுவார். அவர் வந்துதான் கொன்ஃபேர்ம் பண்ணவேணும். S9655 DIT L56ă கிழமை மத்தியானமா இருக்கும். ஒகே.பை.
மகா: எனக்கு ஒரே ஷொக்காப் போச்சு. இப்ப Body எங்க.
6): இப்ப வீக்கென்டெல்லே. ஒண்டும் செய்யமுடியாது. இனித் திங்கக்கிழமைதான் எல்லாம். ஆனால் ஃபியூனரல் ஹோலெல் லாம் புக்பண்ணியாச்சு. சதாதான் நல்ல உதவி போலீஸ்காரடி
வந்து தங்கச்சிக்காறீட்ட ஸ்டேட்மென்ட் எடுத்தவங்களாம்.
மகா: அப்ப தங்கச்சியின்ர அப்பார்ட்மென்ட் பில்டிங்கில போய்த் தான் செத்திருக்கிறா.
18 வாழ்ந்து பார்க்கலாம்

6) ஓம். நேற்று வெள்ளிக்கிழமைதானே. மத்தியானம் தங்கச்சிக்கு அடிச்சுச் சொன்னாவாம், பின்னேரம் கோயிலுக்குப் போவமெண்டு வெளிக்கிட்டு நிக்கச்சொல்லி. பிறகு இங்க வந்து இவவுக்கும் சொல்லிப்போட்டுப் போனா. தானே காரில பிள்ளைய ளோட போய்த் தங்கச்சியைக் கூட்டிக்கொண்டு கோயிலுக்குப்போய் பூசையெல்லாம் முடிய கோயிலடீலவைச்சுத் தங்கச்சிக்காரீட்டச் சொன்னவவாம், தனக்கேதும் நடந்திட்டுதெண்டால் தன்ர பிள்ளை யளை நீதான் பாத்துக்கொள்ளவேணுமெண்டு. அவ, அக்கா கொஞ்சநாளா இப்பிடித்தான் கதைக்குதெண்டுபோட்டு, ஒ நான் பாக்கிறன், நீ விசர்க்கதை கதையாதையெண்டு சொன்னவவாம். இரவு தங்கச்சிவீட்டிலையே சாப்பிட்டிட்டு, தங்கச்சியின்ர புருசன் இரவு செக்கியூரிட்டி வேலைக்குப் போறவர். அவர் போனாப்பிறகு சொன்னாவாம், வீட்ட இனி என்னண்டு போறது. நான் போய் சுப்பிறீன்டனிட்ட நைட் பாக்கிங்குக்கு பாஸ் வாங்கிக்கொண்டு வாறனெண்டு போய் வாங்கிக்கொண்டு வந்திருக்கிறா. சுப்பிரீன்ட னுக்கும் இவ அடிக்கடி அங்க போகவரக் கண்டு பழக்கம். வந்து சாதாரணமாத்தான் எல்லாரும் கதைச்சுப்போட்டுப் படுத்ததாம். இருந்தாப்போல ரெண்டு மணியிருக்குமாம், கதவில தடதட வெண்டு தட்டி ஒரே பரபரப்பாம். கதவத் திறந்து பாத்தா போலீஸ் காறர், சுப்பிறீன்டன் எல்லாரும் நிண்டு, இந்த வீட்டில ஆரும் தங்கியிருக்கினமோவெண்டு கேக்க, அது பெட்டை என்ன ஏதெண்டு தெரியாமல் அக்காக்காறியக் கூப்பிட. பிறகென்ன, எல்லாம் நடந்து முடிஞ்சுது.
சதா: இவதான் கடைசியாய்ப் போய் பாக்கிங் பாஸ் எடுத்திருக் கிறா. அதால சுப்பிறீன்டனுக்கு இவவை வடிவா நினைவிருந் திருக்கு.
மங்க: அநியாயம். அப்ப பிள்ளையள் எங்க?
6): அங்க தங்கச்சி வீட்டிலதான். அதுகள் சின்னனுகள் தானே. இருண்டது விடிஞ்சது தெரியாது. இருந்து விளையா டிக்கொண்டிருக்குதுகளாம். இவ இப்ப அங்கதான் போயிருக்கிறா. சின்னது இருந்திருந்துபோட்டு மம்மி எண்டு சிணுங்குதாம். பிறகு சிறியதாயாரைப் பாத்திட்டுப் பேசாமலிருக்குதாம்.
மங்க: ஆ. பச்சைப் பாலனுகள். இப்பிடி இந்தப் பிள்ளை செய்யிறதெண்டால் அதுக்கு என்ன ஒரு மன ஓர்மம் வேணும்.
9 வாழ்ந்து பார்க்கலாம்

Page 62
60: அதுதானே பாருங்கோ. என்ன பெரிய பிரச்சினை யெண்டாலும் என்னிட்ட வந்து ஒரு சொல்லுச் சொல்லியிருந்தால் இவ்வளவுதூரத்துக்கு வர விட்டிருக்கமாட்டனே.
மகா: இதென்ன, நீங்கள் அண்டைக்கொருநாள் சொன்ன அதே பிரச்சினைதானோ.
U6) ஓம் பாருங்கோ. நானும் இது பிள்ளை சும்மா சந்தேகத்திலை திரியுதெண்டு அவ்வளவு பெரிசா எடுக்கேல்லை. பிறகு அதிலை உண்மை இருந்திருக்கு.
NGT
U6) என்ரை மகன்தான் பாருங்கோ. சீ. இப்பிடிப் பரிசு கெட்ட வேலை செய்துபோட்டான். எங்கட பரம்பரையிலை ფ2(ყხ தரும் செய்யாதவேலை.
மகா: என்னண்டு இவ்வளவு உறுதியாச் சொல்லுறியள்.
பாலர்: இனி என்ன உறுதிவேணும் பாருங்கோ. சம்மந்தப்பட்ட பொடியனொருத்தன் நேரில வந்து பிள்ளையிட்டச் சொல்லிப் போட்டானே. இண்டைக்கு நான் அவனோடை கதைச்சனான். அதுதான் நான் கேட்டன், என்ரை மகன் செய்தது பாரதூரமான பிழைதான். அதுக்கு அதை வந்து என்னிட்டச் சொல்லியிருக்க லாமே. ஏன் அதிட்டப் போய்ச் சொன்னனியெண்டு.
மகா: அதுக்கு என்ன சொன்னான்?
LT6: இவ இப்பிடிச் செய்வாவெண்டு தான் நினைக்கேல்லை யெண்டுறான். இனி அவனையும் குறை சொல்லேலாது பாருங்கோ. தான் கலியாணம் கட்டவெண்டு கூப்பிடுற பெட்டையைக் கூட்டிக் கொண்டுவாவெண்டு காசையும் குடுத்துவிட அவளையே வைப பாட்டியா வைக்கிறதெண்டால் எவனுக்குத்தான் கோவம் வராது.
மகா: சீசீ. இதென்ன பரிசுகெட்ட கதை.
பாலா; பரிசுகேடுதான் பாருங்கோ. இது தொடங்கி இப்ப ஒரு வருசத்துக்குக்கிட்ட இது பாருங்கோ, ஏஜன்சிக்காறன் கொண்
டந்து இறக்கிவிட வெல்ஃபெயரும் எடுத்துக்கொண்டு உந்த ரெஸ்டோரன்ட்வழிய வேலைசெய்யிற பொடியன். ஸ்பொன்ஸர்
120 வாழ்ந்து பார்க்கலாம்

பண்ண ஏலாது. பின்னை தான் ஊரில லவ் பண்ணின பெட் டையைக் கட்டவெண்டு கூட்டியரச் சொல்லியிருக்கிறான். இவன் என்னசெய்தான், கூட்டிக்கொண்டுவர தாய்லாந்தில பிடிச்சு உள்ளுக்க போட்டிட்டாங்கள் எண்டு பொடியனுக்குச் சொல்லிப்போட்டு, மட்ரா ஸில வீடொண்டு வாங்கி குடும்பம் நடத்தியிருக்கினம். இப்ப ஒரு வருசத்துக்குப் பிறகுதான் பொடியனுக்கு உண்மை வெளிச் சிருக்கு.
மங்க: இதென்ன, ஊரில காதலிச்ச பெட்டையெண்டுறியள், பிற கென்னண்டு இப்பிடிப் போச்சுது.
பாலா; அதுபாருங்கோ, ஊரில வெளிஉலகம் தெரியாமல் இருந்ததுகள். உப்பிடித் திடீரெண்டு வெளிக்கிட்டு எல்லாத்தை யும் கண்டஉடன தடுமாறி, என்ன செய்யிறதெண்டு தெரியாமல் கண்டதையும் செய்யுதுகள்.
மகா: நாங்கள் வாழவெண்டு வெளிக்கிட்டுப் படுகிறபாடுகள்.
6): இப்ப இவர் நாளைக்கு வந்து சேருவார். அவர் நினைச்சிருக்கமாட்டார், ரதி இப்பிடிச் செய்வாவெண்டு. காரை, வீட்டை வேண்டிக்குடுத்தாச் சந்தோசமா இருப்பாவெண்டுதான் நினைச்சிருப்பார். நாளைக்கு வரட்டும், என்ர சவத்திலையும் முளிக்கப்பிடாதெண்டு திரத்தப்போறன்.
மகா: சசச. இப்ப நடந்தது நடந்து முடிஞ்சுது. பிள்ளையும் போட்டுது. ம்.இப்ப அவர் வர ஒண்டும் கதையாதையுங்கோ. கருமங்கள் முடியட்டும், எல்லாத்தையும் பேசித் தீர்ப்பம்.
சதா: (டெலிஃபோணில்) ஓமோம். திங்கக்கிழமை. ஒக்டன். பின்னேரம் ஏழமணி.என்ன, தள்ளிவிட்டதோ. சீசீ. அது போலீஸ்
எல்லாம் விசாரிச்சது. அவ தற்கொலைதான் செய்தவ.ஓகே.பை.
LT6OT gJg.
சதா: இது அந்த தமிழ்ச்செய்திகள் பேப்பர் நடத்திறவர். ஆரோ தள்ளிவிட்டதெண்டு கதைக்கிறாங்களெண்டு கேட்டுப்போட்டு எப்ப பாலரில வைக்கிறதெண்டு கேட்டவர். தங்கட பேப்பரின்ர
சார்பில மலர்வளையம் வைக்கிறதுக்காம்.
(காட்சிமாற்ற இசை)
12 வாழ்ந்து பார்க்கலாம்

Page 63
காட்சி-27
மலர்: சதா, இங்க பாருங்கோவன் ஆர் வந்திருக்கிறதெண்டு.
சதா: ஆரது. ஆ.வேணி என்ன இருந்தாப்போல இந்தப் பக்கம். உதென்ன கையில பெரிய பார்சலாக் கிடக்கு.
Ln6): கொஞ்சம் உள்ளுக்க வந்திருந்து கதைக்கவிடுங்கோ வன். ஏன் இப்பிடி வாசலில வைச்சுக் கேள்வி கேட்டுக்கொண்டு
நிக்கிறியள்.
சதா: வாவா. உள்ளுக்க வா. நாங்கள் கலியாணம் கட்டினாப் பிறகு ஒருக்கா இந்தப் பக்கம் வந்தாய். இப்ப பிள்ளயுைம் பிறந்து ஆறு மாசமாகுது. இப்பதான் வாறாய்.
வேணி: என்ன சதா செய்யிது? என்ர வேலை பேர்மனன்ட் ஆகினாப்பிறகு ஒண்டுமே செய்யேலாமல் கிடக்கு. ஒவ்வொரு நாளும் பின்னேரத்தில வேலை. நீங்கள் காலமேலை நிக்கமாட்டி யள். சனிஞாயிறெண்டால் அம்மா நூறு கேள்வி கேட்டுக்கொண் டிருப்பா. மலர், எங்க மகள்.
LoGulf: இவ்வளவு நேரமும் கத்துகத்தெண்டு கத்திப்போட்டு இப்பதான் நித்திரையாப்போனவ. வா, பாப்பம்.
வேணி (போய்க்கொண்டு) என்ன பேர் வைச்சனிங்கள்.
மலர்: சஜி.
வேணி: ஒ. சின்னப்பேரா வைச்சால்தான் இவங்களுக்கு வாயுக்கை நுழையும்.
Ln6)f: இவவின்ர பேரைச் சின்னனா வைச்சு என்ன பிரயோ சனம்? சதான்ர பேரையெல்லோ மாத்தவேணும். இங்க பார், என்ன மாதிரிச் சாதுவாப் படுத்திருக்கிறா. இவ்வளவுநேரமும்
என்னைப் படுத்தினபாடு. சரியாத் தேப்பனைப்போல பிடிவாதம்.
வேணி; ஏன், சதா பிடிவாதமே?
122 வாழ்ந்து பார்க்கலாம்

சதா: அதுதானே வேணி, சொல்லு. நான் ஒரு அப்பிராணி யைப் பிடிச்சுக்கொண்டு.
மலர்: ம். இருந்து பாத்தாலெல்லோ தெரியும். பிடிச்சா அழுங் குப் பிடிதான்.
வேணி: அப்பிடி இருந்தபடியாத்தானே தான் நினைச்சப கலியாணம் செய்தது. என்ன சதா?
சதா: சொல்லு வேணி கேக்கட்டும். தானா விளங்காதவைக்குச் சொல்லித்தான் விளங்கவைக்கவேணும்.
மலர்: ம். மச்சாள் சப்போட்டுக்கு வந்திட்டாவெண்டு ஆகவும் துள்ளாதேங்கோ. மெய்யே வேணி, ஆரப்போல இருக்கிறா.
வேணி: இப்ப சொல்லுறது கஷ்டம்தானே. மூக்கப் பாத்தா மலரின்ர மூக்குப்போலதான் கிடக்கு.
மலர்: சொல்லாத வேணி, ஒராளுக்கு இப்ப ஏறப்போகுது.
சதா: ம். எனக்கேன் ஏறுது. மூக்கிருந்தால் இருந்திட்டுப் போகட்டும். மூளை தாயின்ரமாதிரி இருக்காட்டால் சரி.
மலர்: என்ர மூளைக்கு என்னவாம்?
வேணி: சரிசரி. சண்டைபிடிச்சது போதும். இந்தா, இந்த ரெடிபியரை பிள்ளைக்குப் பக்கத்தில வை சதா.
Ꮷ5IᎢ: பிறகென்ன, பெரிய சாமானாத்தான் கொண்டு வந்திருக் கிறாய்.
வேணி சதா நான் நாளைக்கு சிங்கப்பூருக்குப் போறன்.
சதா: சிங்கப்பூருக்கோ. என்ன திடீரெண்டு.?
வேணி: நானும் அம்மாவும் போறம். சிவாக்கு விசா
குடுக்கமாட்டமெண்டிட்டாங்கள். அதுதான் சிவாவும் சிங்கப் பூருக்கு வந்து நானும் அங்க போய் றெஜிஸ்டர் பண்ணப் போறம்.
123 வாழ்ந்து பார்க்கலாம்

Page 64
மலர்: அங்க றெஜிஸ்டர் பண்ணிப்போட்டு.
வேணி: பிறகு வந்து ஸ்பொன்ஸர் பண்ணப்போறன். ஸ்பெளசக் கூப்பிடுறமாதிரி ஸ்பொன்ஸர் பண்ணலாமாம்.
சதா அதேன் அப்பிடி. நீ ஸ்பொன்ஸர் பண்ணினால் வந்து 90 நாளைக்குள்ள கலியாணம் நடக்கவேணும். இந்தக் கொண்டிஷ னிலதான் விசா குடுக்கிறது.
வேணி: என்னவோ தெரியேல்லை. அவங்களுக்கு ஐமிச்சம் வந்திட்டுது.
சதா வழக்கமா பிரச்சினை இருக்கிறேல்லை. இனி வழக்கமா இங்க இருந்து போய்ஸ்தான் பொம்பிளைைய ஸ்பொன்ஸர் பண்ணுறது. இது மாறி நீ மாப்பிளையை ஸ்பொன்ஸர் பண்ண அவங்களுக்கு ஐமிச்சம் வந்திட்டுதுபோல. இனி வாற இமிக்கி றேஷன் ஒஃபிஸரையும் பொறுத்ததுதான் எல்லாம். இதையே இன் னொரு இமிக்கிறேஷன் ஒஃபிஸரெண்டால் பேசாமல் விசாவை அடிச்சுக் குடுத்திருப்பான். இப்ப சிங்கப்பூருக்குப் போறதும் நல்ல ஐடியாதான்.
மலர்: கடைசீல கடவுள் வேணிக்கும் ஒரு நல்ல வழியைக் காட்டீட்டார். சந்தோஷமாய்ப் போய் எல்லாத்தையும் நல்லபடியா
முடிச்சுக்கொண்டு வா வேணி எங்களுக்கு நல்ல சந்தோசம்.
(காட்சிமாற்ற இசை)
காட்சி-28
வேணி பிரமை பிடித்தவள்போல் கட்டிலில் அமர்ந்திருக்கிறாள். (எதிரொலி)
சிவா: வேணி, ஏணிப்ப அழுகிறீர்? இப்ப என்ன நடந்து போச்கது.
வேணி சிவா, நாங்கள் பெரிய பிழை விட்டிட்டம்.
124 வாழ்ந்து பார்க்கலாம்

சிவா: அழாதையும் வேணி. நாங்கள் இப்ப சட்டப்படி கணவன் மனைவி. எங்களை யாராலையும் பிரிக்கேலாது.
வேணி சிவா, நாங்கள் அங்க ஊரில ஒருவித கட்டுப்பாடு மில்லாமல் இருக்கேக்கையே எவ்வளவு கவனமா இருந்தனாங்கள். இங்க வந்து இந்த ரெண்டுமூண்டு நாளேக்க இப்பிடி நடந்திட்டம். இவ்வளவு காலமும் பொறுமையா இருந்தனாங்கள் இன்னும் ஒரு ஐஞ்சாறு மாசம் பொறுமையா இருந்திருக்கலாம்.
சிவா: சரிவேணி இவ்வளவுகாலமும் பிரிஞ்சிருந்தனாங்கள், ஒருத்தரையொருத்தர் கண்ட சந்தோசம், இனி சட்டப்படி மரி பண்ணிட்டமெண்ட துணிவு. ஏதோ எல்லாம் எங்களை மீறி நடந்திட்டுது. நீர் சும்மா மனதைப்போட்டுக் குழப்பாதையும். நீர் நினைக்கிறமாதிரி ஒண்டும் பாரதூரமா நடக்காது. ஒருமுறை இப்பிடி நடந்திட்டமெண்டதால நீர் பயப்பிடாதையும். ஒண்டும் நடக்காது. இது ஆருக்குத் தெரியப்போகுது. நீரும் நானும் தானே.
வேணி: ஒருதருக்கும் தெரியாதெண்டதால நாங்கள் செய்தது பிழையில்லையெண்டு ஆகீடாது சிவா. மனதுக்குள்ள இந்தக் குற்ற உணர்வை வைச்சுக்கொண்டு எப்பிடி நான் அம்மா அப்பான்ர முகத்தில முழிக்கிறது சிவா.
(ஏதிரொலித் தொனி இடைநிறுத்தப்படுகின்றது)
மங்க: வேணி, என்ன இது பத்துமணியாகுது, இன்னும் கட்டிலைவிட்டு எழும்பாமல் படுத்தபடி இதென்ன, ஏன் அழுகிறாய்.
வேணி: ஒண்டுமில்லையம்மா.
மங்க: இப்ப என்ன. சிங்கப்பூராலை வந்து ஒண்டரைமாதம் தானே ஆகுது. சிவா யாழ்ப்பாணம் போய்க் காயிதம் போட்டால் உடன வரப்போகுதே. மூண்டு நாலு மாதமெண்டாலும் எடுக்கும். அதுக்கிடேல உன்ர ஸ்பொன்ஸரும் சரிவந்திடும்.
வேணி: இல்லையம்மா. சிவா ஒருமாசத்தால கொழும்புக்கு வந்து ஃபோண் பண்ணுறனெண்டு சொன்னவர்.
25 வாழ்ந்து பார்க்கலாம்

Page 65
மங்க: சரி, ஒண்டுரெண்டு கிழமை முந்தும் பிந்தும். நீ மனத்தைப்போட்டுக் குழப்பாதை. இப்ப நானும் கொஞ்சநாளாய்ப் பாத்துக்கொண்டு வாறன், இருந்திருந்துபோட்டு மூளையை விட்டிடுகிறாய். அப்பாவும் கவனிச்சிருக்கிறார். அண்டைக்குக் கேட்டவர். வடிவாய்ச் சாப்பிடுகிறதுமில்லை. முகமெல்லாம் வெளுறி, இதென்ன கோலம்.
வேணி; பெரிதாக அழுதல்.
மங்க: வேணி, என்ன பிள்ளை இது.
வேணி அம்மா, என்னை மன்னிச்சுக்கொள்ளுங்கோம்மா.
மங்க: ஏன், என்ன நடந்தது?
வேனி: பெரிய பிழை விட்டிட்டனம்மா. உங்களுக்கு அப்பாக் கெல்லாம் பெரிய துரோகம் செய்திட்டன்.
மங்க: ஐயோ. என்ன, என்ன பிள்ளை இது. கடவுளே. எனக்குப் பயமாக்கிடக்குதே. என்னண்டு சொல்லன் பிள்ளை.
வேணி அம்மா, நான் நேற்று டொக்டரிட்டப் போனனான், நான் கொன்சீவ் பண்ணிஇருக்கிறனாம்.
மங்க: எண்டால்.
வேணி பிள்ளை உண்டாகியிருக்காம்.
மங்க: ஐயோ. இதென்ன இது. மானம் போச்சே. எக்கணம் இண்டைக்கு வந்து என்னையும் சேத்தல்லோ கொல்லப்போறார்.
என்ன வேணி இது? இதெப்ப நடந்தது? ஐயோ, கேக்கவே
வாய் கூகதே.
வேணி: எங்களுக்கு றெஜிஸ்டேஷன் முடிஞ்ச அடுத்தநாள் உங்கட சிங்கப்பூர் சின்னம்மான்ர மகள் வரச்சொல்லி காலமை வந்து உங்களைக் கூட்டிக்கொண்டு போனபோது.
மங்க: ஐயோ. வேணி, வேணி, வேணி. இப்பிடிச் செய்து போட்டியே. எங்கட வீட்டுக்க இப்பிடி நடந்திட்டுதே. இதை
26 வாழ்ந்து பார்க்கலாம்

எப்பிடி உன்ர அப்பா தாங்கப்போறார். கேட்டதெல்லாத் துக்கும் ஓம் ஒமெண்டு சொன்னாரே. இதுக்கு ஒமெண்டமாட்டாரே.
வேணி: அம்மா. அப்பாக்கு இதைச் சொல்லாதேங்கோ. இன் னும் ஐஞ்சாறு மாசத்தில ஸ்பொன்ஸர் சரிவந்திடும். பிறகு அவர் வந்திட்டாரெண்டால் இது பெரிசா அப்பாவைத் தாக்காது.
மங்க: என்ன வேணி, நான் அவருக்குத் தெரியாமல் மூச்சுக்கூட விடமாட்டனே. இந்தப் பெரிய விஷயத்தை மறைக்கச் சொல்லுறியே. நான் எப்பிடி இதைத் தாங்கப்போறன். கடவுளே, இப்பிடிச் சோதிக்கிறியே.
(காட்சிமாற்ற இசை)
காட்சி-29
y மங்களம், எங்க இதிலை கிடந்த றேடியோ. ஒன்பது மணியாகுது. இந்தத் தமிழ் மீற்றரை ஒருக்காப் பிடியும், யாழ்ப் பாணத்திலை ஏதோ பிரச்சினையெண்டு கதைக்கிறாங்கள், என்னெண்டாலும் சொல்லுறாங்களோ பாப்பம்.
மங்க: தன்ர றேடியோவில ஏதோ பிழையெண்டுபோட்டு முகுந் தன் கழட்டிக்கொண்டுபோய்த் தன்ர றுாமுக்குள்ள போட்டிருக் கிறான்போல.
முகுந்தன். முகுந்தன். உந்த றேடியோவை ஒருக்காக் கொண்டா. ஆமீன்ர கட்டுப்பாட்டிலையுள்ள காங்கேசன்துறைப் பகுதீக்கை பொடியள் எப்பிடியோ உள்ளிட்டு பலாலியில நிண்ட பிளேனையோ ஹெலிகொப்டரையோ சுட்டுப்போட்டாங்களாம்.
மங்க: இனி அவங்கள் சுத்தவரக் குண்டு போடப்போறாங்கள். (கதவு தட்டுதல்) ஆரோ கதவு தட்டினம்போல கிடக்கு.
s பொறும் பொறும் போய்ப் பாப்பம். ஒருதரும் கோல் எடுத்துச் சொல்லவுமில்லை வாறமெண்டு. ஆராயிருக்கும் இந்தநேரத்திலை. (கதவு திறத்தல்) அ. பாலா, சதா.
சதா: ஓம் மாமா.
127 வாழ்ந்து பார்க்கலாம்

Page 66
ST: வாங்கோ, வாங்கோ உள்ளுக்கு. இதென்ன, இருந்தாப் போல ரெண்டுபேரும் இந்தநேரத்தில.
6) மிஸ்டர் மகாலிங்கம், நீங்கள் நல்ல மனத் தைரியமான ஆள். நான் இப்ப சொல்லப்போறதைக் கேட்டுத் தாங்கிக் கொள்ள வேணும். எத்தினையோ மைலுக்கங்கால எங்கட கண் காணாமல் நடக்கிற சம்பவங்கள். சிலவேளை நாங்கள் கேள்விப்படுகிறது பிழையாயுமிருக்கலாம்.
மங்க: என்ன, நீங்கள் கதைக்கிறதைப் பாக்கப் பயமாயிருக்கு. மாமாவுக்கோ மச்சாளுக்கோ ஏதும் நடந்திட்டுதே. கடவுளே, சதா என்ன பேசாமலிருக்கிறாய். சொல்லன் வாயத்திறந்து.
சதா: அப்புவுக்கோ அம்மாக்கோ ஏதும் நடந்தாலும் கவலைதான் எண்டாலும் இயற்கையா நடக்கவேண்டியதுதான் எண்டு நினைச்செண்டாலும் கொஞ்சம் ஆறலாம்.
மகா: அப்ப என்ன விஷயம். பாலா சொல்லுங்கோவன்.
பாலா எங்கட வேணியின்ர சிவராசன்.
மகா: ஆ. சிவராசன். என்ன சிவராசனுக்கு.?
பாலா: ஆள் முடிஞ்சுதாம்.
மங்க: ஐயோ. இதென்ன நாசங்கட்டின செய்தி கொண்டுவந்தி ருக்கிறியள். கடவுளே, இதார் சொன்னது சதா. நீ இவ்வளவு காலமும் இந்த வீட்ட வராமல் இருந்ததுக்கு இப்பிடியொரு செய்தி கொண்டுவந்திருக்கிறியே. ஐயோ, என்ர பிள்ளை என்னண்டு இதைத் தாங்கப்போறாள்.
பாலா: இங்க பாருங்கோ. என்ன செய்யிறது? எங்கட கையில ஒண்டுமில்லை. எல்லாம் அவன் சித்தம். நீங்களே இப்பிடி மனதை விட்டால் பிறகு பிள்ளைக்கு ஆர் ஆறுதல் சொல்லுறது.
5: ஆர் ஆருக்கு ஆறுதல் சொல்லுறது பாலா. நான்
எத்தினையெண்டு இந்த மனதுக்கை போட்டு அமுக்கிறது. என்ர நெஞ்சு வெடிக்கப்போகுதே. ஆர் சொன்னது?
28. வாழ்ந்து பார்க்கலாம்

சதா: இப்ப கொழும்பில சுந்தரம் மாமா கடையில இருந்து ஃபோண்கோல் வந்தது. சுந்தரம்மாமாதான் கதைச்சவர். உங்க ளிட்ட எப்பிடி நேராச் சொல்லுறதெண்டுபோட்டு எனக்குச் சொன்ன வர், உங்களிட்டச் சொல்லச்சொல்லி.
மகா: என்ன, இது கொண்.பேர்ம்பண்ணின நியூசே.
சதா: அப்பிடிப்போலதான் மாமா கிடக்கு. சிவாவின்ர தகப்பன் பூரணலிங்கம் மாஸ்டர்தான் றெட்குறொஸ்மூலம் சுந்தரம் மாமா வுக்கு அறிவிச்சவராம், கனடாக்கு அறிவிக்கச்சொல்லி.
மகா: (பெருமூச்சு) கடவுளே.
பாலா. கஷ்டம்தான் மிஸ்டர் மகாலிங்கம். என்ன செய்யிறது?
மகா: எப்ப, என்னமாதிரி நடந்ததெண்டு ஏதும் தெரியுமோ.
சதா: இது முந்தநாளாம். பொடியள் போய் பலாலீல நிண்ட பிளேனைச் சுட்டஉடனை, அவங்கள் வழக்கம்போல ஷெல் அடிச்சி ருக்கிறாங்கள். சிவா வேலை முடிய சைக்கிளிலை வரேக்கை சுன்னாகத்துக்கும் மல்லாகத்துக்கும் இடையில றோட்டில ஷெல் விழுந்து ஆள் அதிலையே சரியாம்.
1፫)Šbዘ8 நான் இதை எப்பிடித் தாங்கிறது. கடவுளே, என்ர பிள்ளைக்கு என்னண்டு இதைச் சொல்ல.
T6): சதா என்னண்டு உங்களிட்டை இதைச் சொல்லுற தெண்டுபோட்டுத்தான் என்னைக் கூட்டிக்கொண்டு வந்தவர். இப்ப மலரை அனுப்பியிருக்கு காரிலை, டவுண்ரவுணுக்குப்போய் வேணி யக் கூட்டியரச்சொல்லி, வரேக்க சிவாக்குச் சுகமில்லை அப்பிடி மிப்பிடியெண்டு சொல்லி ஒருமாதிரி வேணியைத் தயார்படுத்திக் கொண்டு வந்தால், பிறகு எந்த விதமான அதிர்ச்சியையும் தாங்கிற துக்கு மனம் தயாராகீடும். என்ன செய்ய? வாழ்க்கையில இது களுக்கெல்லாம் முகம்குடுக்கத்தானேவேணும்.
(காட்சிமாற்ற இசை)
29 வாழ்ந்து பார்க்கலாம்

Page 67
காட்சி-30
குரல்: வேணியின் வாழ்வில் அந்த அதிர்ச்சிதரும் சம்பவம் நிகழ்ந்து முப்பது வருடங்கள் உருண்டோடிவிட்டன. இந்த முப்பது வருடங்களில்தான் எத்தனை எத்தனை எத்தனை மாற்றங்கள், வேணி கருவுற்ற நிலையில் சிவா அகாலத்தில் இறந்துவிடவே, அதிர்ச்சியுற்ற மகாலிங்கம் இரண்டு மூன்று மாதங்களில் மாரடைப்பால் இறந்துவிடுகிறார். ஆண்மகவொண்றைப் பெற்றெடுத்த வேணி, அவனுக்கு வேலன் எனப் பெயரிட்டு வளர்க்கிறாள். மூன்று வருடங்கள் கழித்து தாய் மங்களமும் இறந்துவிடவே தன் தம்பி தங்கையை வளர்க்கும் பொறுப்பை ஏற்ற வேணி, அவர்களை செவ்வனே வளர்த்து, தம்பி முகுந்தன் இப்போது ஏரோனோட்டிக்கல் எஞ்சினியர். அமெரிக்க நாசா தளத்தில் பொறுப்பான பணி. தங்கை ஜேர்ணலிஸம், திரைப்படத்தயாரிப்பு முதலிய கலைகளில் பட்டப்படிப்பை முடித்து, இப்போது {0 -6l)ቇ அங்கீகாரம்பெற்ற விவரணப் படத் தயார்ப்பாளராகத் திகழ்கிறாள். வேணியின் மகன் வேலன் நியூகிளியர் ஃபிஸிஸிஸ்டாக கலாநிதிப்பட்டம் பெற்று அத்துறையில் ஒரு நிபுணர். இப்படி வேணியை சுற்றியுள்ளவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை மட்டுமல்ல, (P( இலங்கைத் தமிழர்களின் வாழ்க்கையும் பாரிய மாற்றத்துக்குள்ளாகிவிட்டது. இப்போது இலங்கையில் வடக்கு-கிழக்குப் பகுதிகளில் தமது அபிவருத்தித் திட்டங்களைத் தாமே திட்டமிட்டுச் செயற்படுத்தும் பூரண அதிகாரம்கொண்ட அரசு ஒன்று இயங்குகிறது.
2024ம் ஆண்டு வேனிற்காலத்தில் ஒருநாள்.
மலர்: அ. வேணி, வாரும். நாங்கள் இப்ப அங்கதான் வர இருக்கிறம். அண்ணாவும் ஜஃப்னாவிலயிருந்து வந்திருக்கிறார். அவரையும் கூட்டிக்கொண்டுவந்தால் உமக்கு இன்ஃபர்மேஷன் எடுக்க உதவியாயிருக்குமெண்டுபோட்டு அங்கதான் வெளிக்கிட ஆயித்தப்படுத்திறம்.
வேணி பறவாயில்லை மலர். கடைசிநேரம் கொஞ்சச் சாமான் கள் வாங்கவேண்டியிருந்தது. மகனும் ஒட்டாவாவால இரவுதான் வாறார். வெளிக்கிட்டனான் இதில வந்திட்டுப்போவமெண்டுபோட்டு. எங்க சதா.
மலர்: அங்க வெளிக்கிடுகிறார்போல. சதா.இங்க வேணி வந்தி ருக்கிறா. அங்க அண்ணையும் வாறார்.
30 வாழ்ந்து பார்க்கலாம்

அண்ணா: எப்பிடி வேணி சுகமா இருக்கிறீங்களோ. அங்க வரப்போறதாக் கேள்விப்பட்டன். சந்தோஷம். வாங்கோ வந்து பாத்தால் மலைச்சுப்போவியள்.
வேணி: இப்பதான் மலர் சொன்னா நீங்கள் வந்திருக்கிறீங்க ளெண்டு. நாங்கள் நாளைக்கு வெளிக்கிடுகிறம்
சதா: எப்பிடி வேணி? நாங்கள் இப்ப அங்கதான் வெளிக்கிடு கிறம். வேலன் வந்திட்டாரே?
வேணி இல்லை சதா, இரவுதான் வருவார். நாங்கள் ரெடி. அதுதான் வீட்டுத் திறப்பைத் தந்திட்டுப் போவமெண்டுபோட்டு வந்தனான். என்னிட்ட டுப்ளிக்கேட் இருக்கு. வாடைக்கு வாறவை முதலாந்திகதிதான் வருகினம். சதா எல்லாத்தையும் பாத்துச் செய்துவிடு என்ன.
அண்ணா: என்ன, அங்க கனகாலத்துக்குத் தங்கப்போறியளோ, !
வேணி: தெரியும்தானே அண்ணா, கனேடியன் அரசாங்கம் அங்க எங்களுக்கு டொனேட் பண்ணின நியூகிளியர் றியக்டர் ஸ்ரேஷன்.
அண்ணா: ஒ. மதவாச்சீல இருந்து மன்னார் போற றோட்டில இருக்கு.
வேணி: வேலன் அதுக்கு இன்சாஜ்ஜாப் போறான். ஐஞ்சு வருஷக் கொன்ட்ராக்ட். பிறகும் எப்பிடியோ தெரியாது. அங்க தான் பாத்து ஒரு நல்ல பிள்ளையாக் கலியாணம்செய்து வைப்ப மெண்டு யோசிக்கிறன். அவனுக்கும் முப்பது வயசாகுது. நாங்க ளும் எல்லாம் கிழண்டிப்போனம். இப்ப ஒண்டுக்குமே முடியு தில்லை.
மலர்: களைக்கும்தானே வேணி உமக்கு வந்த துன்பம் ஆருக்கு வந்தது. ஆனால் துணிவோட நிண்டு தம்பி தங்கச்சி யைப் படிப்பிச்சு உம்மட மகனையும் படிப்பிச்சு எல்லாரையும் நல்ல உயர்ந்த நிலைக்குக் கொண்டந்திட்டீர். எல்லாம் நீர் தனிச்சுத் தானே வேணி.
13 வாழ்ந்து பார்க்கலாம்

Page 68
வேணி: நீங்கள் எல்லாரும் எங்களுக்கு எவ்வளவு உதவி, அப்பா தம்பி தங்கச்சீன்ர படிப்புக்கெண்டு புத்தியாக் காசு போட்டு வைச்சதால எல்லாத்தையும் செய்யக்கூடியதாயிருந்துது.
அண்ணா: தம்பி தங்கச்சியெல்லாம் எப்பிடி இருக்கினம் வேணி?
வேணி: தம்பி சுகமா இருக்கிறார் அண்ணா. அவர் நாசா விலதான். ரெண்டு பிள்ளையஸ். காலம ஃபோண் பண்ணினவர். அடுத்த வக்கேஷனுக்கு எல்லாரும் யாழ்ப்பாணம் வருகினமாம். தங்கச்சியை நினைச்சால்தான் மனவருத்தம், நான் என்ன செய்ய? உலகத்துக்கே புத்தி சொல்லுறவைக்கு நான் என்னத்தைச் சொல்ல.
அண்ணா: ஏன், என்ன அவவுக்கு? இந்தப்பெரிய அவோர்ட் டுகளெல்லாம் வாங்கிக்கொண்டு திரியிறா. போன டிசம்பரிலையும் ஏதோ டொக்கியூமென்ட்ரி சூட்டிங் எண்டு வந்து என்ர ஹொட்ட லிலதான் தங்கினவ.
வேணி: ரெண்டுமூண்டு வருஷத்துக்கு முந்தி ஃபிலிம் ஃபெஸ்டிவலில ஒரு ஃபிறெஞ்ச் ஃபிலிம் கிறிட்டிக் ஒருத்தரைச் சந்திச்சு இப்ப அவரோடதான் லிவிங் ருகெதர். கலியாணத்தைப் பற்றின கதையே இல்லை.
சதா: அவவுக்கு வேணி புத்தி சொல்ல ஏலுமே? அவை யவை தங்க தங்கட பாட்டைப் பாத்துக்கொள்ளவேண்டியதுதான்.
வேணி: மெய்யே அண்ணா, உங்கட பாடுகள் எப்பிடி? மகன் என்ன செய்யிறார்?
அண்ணா: எனக்கென்ன குறை? ஹொட்டேல் நல்லா நடக்குது. போன ஒக்டோபரிலதான் ஃபைவ்ஸ்ரார் றேடிங் கிடைச் சது. மகனுக்கும் பிஸ்னஸைப் பழக்கிக்கொண்டு வாறன். அங்க வருவியள்தானே. பழைய கஸர்ணா பீச்சிலதான் எங்கட ஹொட்டேல்.
வேணி: ஊரைவிட்டு வெளிக்கிட்டு முப்பத்திரண்டு வருஷத்
துக்குப் பிறகு வரப்போறன். நினைக்க மனதுக்க என்னவோ செய்யுது.
132 வாழ்ந்து பார்க்கலாம்

அண்ணா: நீங்கள் வெளிக்கிட்ட ஊரில்ல இப்ப அது. கொம்பிளிட்டாப் புது உலகம். கனவில கண்டமாதிரி எல்லாம் நடந்திட்டுது. வந்தால் திகைச்சுப்போவியள். தமிழ்க் கவுண் மெந்தின்ர பிரதேசம் முழுக்க அப்பிடியே கடற்கரையோட றெசிடென்ஷல் ஏரியா எல்லாம் ஹைறைஸ் கொண்டமேனியங்கள். முழுக்க எயர்கொண்டிஷன். ஒரு குறிப்பிட்ட சனத்தொகைக்கு ஒரு பெரிய ஷொப்பிங் சென்டர், ஸ்கூல், ஹொஸ்பிட்டல் எண்டு சகல வசதியளும். உள்பக்கம் பயிர்செய்யக்கூடிய செழிப்பான பிரதே சங்களில ஒரு குடிமனை கிடையாது. அவ்வளவு நிலமும் நூற் றுக்கு நூறுவீதமும் விவசாயத்துக்குத்தான். உள்பிரதேசங்களில இருந்த பழைய கோயிலுகள், பள்ளிவாசலுகள், சேர்ச்சுகள் மட்டுந் தான் இருக்கு. பரந்த பரந்த தோட்ட, வயல்வெளியளுக்க இதுக ளைப் பாக்கப் பரவசமாத்தான் இருக்கு. மற்றது விவசாயம் செய்யேலாத கலட்டிப்பிரதேசம், மணல்பிரதேசமெல்லாம் இண்டஸ்ட் றியல் ஏரியா. எல்லாம் இன்டர்நாஷனல் கொலாபரேஷனோட பெரிய பெரிய ஃபக்ட்றியள். வீட்டுப் பாவனை, விவசாயம், ஃபக்ட்றி எல்லாத்துக்கும் கடல்தண்ணிதான். கடல்தண்ணிய நல்ல தண்ணியாக்கிற பிளாண்டுகள் ஒவ்வொரு பத்துக் கிலோமீற்றருக்கு ஒண்டிருக்கு. இனி கோஸ்டல் ஹைவே. யாழ்ப்பாணத்தில யிருந்து ரெண்டு மணித்தியாலத்தில ட்ரிங்கோ. மூண்டரை நாலு மணித்தியாலத்தில கொழும்பு, மட்டக்களப்பு. ரெண்டு மணித் தியாலத்தில மன்னார். பலாலி இன்டர்நாஷனல் எயர்ப்போர்ட். வந்து பாருங்கோவன் இந்திரலோகத்துக்கு வந்தமாதிரி இருக்கும்.
சதா: எங்கட சஜி அவவின்ர ஆர்ட் எக்ஸிபிஷன் யாழ்ப் பாணத்தில வைச்சபோது மலரையும் வரச்சொன்னனான். அவ வுக்கு வரேலாமல்போச்சு.
வேணி: எனக்கு இன்னும் அந்தப் பழைய நினைவுகள்தான். பொம்மரும் ஷெல் விழுந்து உடைஞ்ச கட்டிடங்களும் சனமில்லாமல் காடுபத்திப் பாழடைஞ்ச வீடுகளும். நூறு வருஷம் பின்னால போட்டமே எண்டுதான் நினைச்சனாங்கள்.
அண்ணா: இப்ப நூறு வருஷங்கள் முன்னால போட்டம். அழிவு வந்ததும் ஒரு புது வளர்ச்சிக்குத்தான். இல்லாட்டால் யோசிச்சுப் பாருங்கோ. முந்தி ஒரு ஆயிரம் ரெண்டாயிரம் சம்பளத்துக்காக டாக்குத்தர், எஞ்சினியர் அல்லது எக்கவுண்டன் எண்டு படிக்கிறவைதான் பெரிய ஆக்கள். ஆனால் ஒருவிதமான அறிவும் இல்லாமல் எடுக்கப்போற சம்பளத்தையும் வாங்கப்போற சீதனத்தையு நினைச்சு படிபடியெண்டு படிச்சுப்போட்டு டாக்குத்தரா வாறவர் சாகுமட்டும் ஒரு மருந்தை எழுதிக் குடுத்துக் கொண்டி ருக்கிறது. எஞ்சினியரா வாறவர் ஏதும் கவுண்மெந்து டிப்பாட்
133 வாழ்ந்து பார்க்கலாம்

Page 69
மெண்டுகளில சேந்து லேபறேஸசக்கு றோஸ்டர் போட்டுக்கொண் டிருக்கிறது. எத்தினை சனத்துக்கு எத்தினை துறையளில திறமை இருந்திருக்கும். அதுகளெல்லாம் இனம் காணுப்படாமலே எத் தினை தலைமுறை வீணாப்போச்சுது. பிறகு தமிழன் அகதியா நாடுநாடா வெளிக்கிட்டான். இப்ப பாருங்கோ, உலகத்தில தமிழன் இல்லாத துறை என்ன இருக்கு? அதுவும் ஒவ்வொரு துறையி லும் தமிழன் முன்னணியில இருக்கிறான். அப்பிடியொரு அழிவு வந்திராட்டால் இது நடந்திருக்குமா?
சதா: நினைவிருக்கே, முந்தி நான் மலரைக் கலியாணம் செய் யப்போற காலத்தில நீங்கள் சொல்லுவியள், தமிழன் பெருமையோட வாழவேணுமெண்டால் என்னென்ன நடக்கவேணுமெண்டு. அதெல் லாம் இப்ப நடந்துகொண்டு வருகுது.
அண்ணா: இப்ப விளங்குதா உண்மை. முந்தி ஒண்டும் செய்யேலாத ஒரு கையாலாகாத கொம்ப்ளெக்ஸில எங்கட சனம் பழங்கதை கதைச்சுக்கொண்டு திரிஞ்சதுகள். இப்ப ஒவ்வொரு துறையிலையும் முன்னேற பழங்கதை கதைக்கிறதுக்கு இப்பத்தை யான் பிள்ளையஞக்கு நேரமில்லை. அதுகளின்ர சிந்தனையெல் லாம் அடுத்ததா என்ன செய்யலாம் எண்டதுதான்.
வேணி: கேக்கச் சந்தோஷமாத்தான் இருக்கு. வந்து பாக்கத்தானேபோறம். சரி, அப்ப வரப்போறன். சதா, வீட்டை வடி வாப் பாத்துக்கொள். சிலவேளை நாங்கள் அங்கையே தங்கீட்ட மெண்டால் பிறகு விக்கிறதைப்பற்றி யோசிப்பம். அப்ப அண்ணா, உங்களை நான் யாழ்ப்பாணத்திலை சந்திக்கிறன்.
மலர்: ஓம் வேணி அண்ணாவோடை நாங்களும் சுவிஸில
போய் சஜியையும் கூட்டிக்கொண்டு யாழ்ப்பாணம் வருவம். இனி
ஆளை அவவின்ர ஆர்ட் ஸ்ரூடியோவுக்கால கிளப்பிறதெண்டால்
பெரிய பாடு.
வேணி; அப்ப எல்லாரும் யாழ்ப்பாணத்திலை சந்திப்பம்.
(விமான ஒலி)
- நிறைவு -
134 வாழ்ந்து பார்க்கலாம்


Page 70


Page 71
ܡܢܬܐ
ikneswaral W Cf
1970. He ( and producer of ra
Wikneswaran WOS Television Corporati with ample creativ dramas on new, r from the National Script was one ofh
In 1984, he assum coped with the ( administration wit Broadcasting. He
Unflappable T. V Ne
When the ethnic CO war, Wikneswaran January 1991.
The Radio Play "L searing existential Tamils who have t fierce ethnic conflic reflect the collecti brought about by compelling vision (
Summer 1998 Toronto
 

n Paramanathan began his broadcasting the Sri Lanka Broadcasting Corporation in listinguished himself as a popular newsreader dio dramas on Socially relevant themes.
Ippointed Executive Producer of the National on in 1982. The visual medium provided him re space for the writing and production of arely explored themes. A prestigious award Film Corporation for an original Tamil Film is major achievements in dramatic writing.
led duties as Head of Tamil TV Programs. He Omplex problems of Tamil T. V. Program a mature Understanding of the politics of was known in broadcasting circles as an awsreader in times of national emergency.
nflict in Sri Lanka escalated into a violent civil resigned his job and emigrated to Canada in
et's Live Through" has for it's leit motif the problems confronting the many Sri Lankan aken residence in other COUntries due to the t. The powerful dramatic sequences in the play fe pain and trauma of the Tamil community the violent conflict. They also communicate a if the future - a beautiful message of Hope.
C.W. RajasUnderam
Co-ordinator, Development Communication Group, Ryerson Polytechnic University