கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: திருத்தல வரலாறு

Page 1
யாழ்ப்பாணம் வண்ணுர்பண்னே யூனி அம்பலவாண விக்கிதேஸ்
திருத்தல
கலாநிதி ப. கே. முதல் முன் நிகழ்ந்த கொடியேற் தேர்த் திருவிழாவன்று
 
 

ன வடமேற்கு காட்டுத்தறை வர பிள்ளையார் கோவில்
QUGDTO
பாலகிருஷ்ணன்
2010Աղr&
2 மகோற்சவத்தில்
தேவஸ்தானத்தால் பட்டது,
BS

Page 2

சிவயேம் யாழ்ப்பாணம் வண்ணுர்பண்ணை வடமேற்கு
காட்டுத்தறை
யூனிஅம்பலவாண விக்நேஸ்வர பிள்ளையார் கோவில்
திருத்தல வரலாறு
கலாநிதி ப கோபாலகிருஷ்ணன்
தலைவர் இந்து நாகரிகத் துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
வெளியீடு காட்டுத்தறை பிள்ளையார் கோவில் தேவஸ்தானம் வண்ணுர்பண்ணை 1988

Page 3
முதற் பதிப்பு படிகள் 500
விபவ வருடம் ஆனி மாதம் 27 ந் திகதி (11-07-1988)
பதிப்புரிமை அறங்காவலர்கள்
காட்டுத்தறை பிள்ளையார் கோயில் வண்ணுர்பண்ணை
O
SM* é o Luís I’. Li si LGyrraf eyðisasib tuu Tybům Tauru b

பொருளடக்கம்
ஆசியுரை வியாகரண df)(8p AruDoof
பிரம்மபூரீ தி. கி. சீதாராம சாஸ்திரிகள்
ஆசியுரை பிரம்மபூரீ கி. சந்தான கோபால சர்மா
(-9j di arasi)
ஆசியுரை பிரம் மயூரீ தி. நடனசபாபதி சர்மா
வாழ்த்துரை பிரம்மரீ இ. குமாரசாமி சர்மா
(ef de a-si)
முன்னுரை: கலாநிதி ப. கோபாலகிருஷ்ணன்
வெளியீட்டுரை: திரு. சோ. சடாட்சரம்
10.
li li ..
12 13,
திரு. சக பூரீநிவாசன் (கோவில் அறங்காவலர்கள்)
கடவுள் வணக்கம்
விநாயகர் மகத்துவம் இந்தியாவில் விநாயகர் வழிபாடு வண்ணை நகர்ச் சிறப்பு
தலவரலாறு கோவில் அறங்காவலர்களும் திருப்பணியும் கும்பாபிஷேகம் கொடியேற்றமும் தேர்த்திருவிழாவும் திருக்கோயிலின் அமைப்பும் மூர்த்திகளும் கோயிற் கிரியைகளும் வழிபாட்டு மரபும் சிவாச்சாரியர் பரம்பரை
அடிக் குறிப்புகள் திருவூஞ்சல் -செந் தமிழ்ச் சிரோமணி, பண்டித வித்கு வான் க, கி. நடராஜன் இயற்றியது;

Page 4

Se சிவமயம்
ஆசியுரை aumasow $Ggruom பிரம்மனி தி. கி. சிதாராம சாஸ்திரிகள்
விநாயகப் பெருமானே சைவ மக்களின் ஆதியான பரம் பொருள். மற்றெல்லாத் தெய்வங்களும் அவருக்குப் பின்பான வர்களே. இதனுல் தான் வேதங்கள் அவரை ஜ்யேஷ்டராஜம்" என வாழ்த்துகின்றன
ஆன்மாக்களில் முத்தியடைந்த ஆன்மாக்களும் முத்தியடை யாத ஆன்மாக்களும் என இரண்டு வகை முத்தியடைந்த ஆன் மாக்கள் கணங்கள் எனப்படுவர். முத்தியடையாத மும்மலங்க ளினல் வியாபிக்கப்பட்ட ஆன்மாக்கள் பசுக்கள் எனப்படுவர்.
முத்தியடைந்த ஆன்மாக்களாகின்ற கணங்களுக்கு விநாயகப் பெருமானே தலைவர், ஆகவேதான் அவர் கணபதி என அழைக் கப்படுகின்ருர், வேதத்திலே ‘கஞநாம் த்வா கணபதிகும் ஹவா மஹே" என வருகிறது மேலும் ருத்திரத்தில் 'கணேப்யச்சவோ சுணபதிப்யச்சவோ நம: என கணபதி போற்றப்படுகிருர்,
விநாயகப் பெருமானின் பிரபாவங்கள் அநந்தகோடி அப் பெருமானை வணங்குபவர்களுக்கு கல்வி, செல்வம், ஞானம், சகல கலைகள் ஆகிய எல்லாமே கிட்டும்.
நற்குஞ் சரக்கன்று நண்ணிற் கலைஞானம் கற்குஞ் சரக்கன்று காண்.
என்று உமாபதி சிவாசாரியார் கூறுவதிலிருந்து இது புல ஞகின்றதல்லவா? கொடியேற்றம் முதலான நைமித்தியங்கள் நடந்த பல ஆலயங்க ல் அவை சிறிதுசிறிதாகக் கைவிடப்பட்டுக் கொண்டிருக்கின்ற ந்தநேரத்தில், காட்டுத்தறை அம்பலவாணப் பெருமானுக்குப் பதிதாக திருப்பணி செய்து துவஜாரோகண மஹோத்ஸவாதிக நடைபெற ஏற்பாடு செய்யப்படுவது எமது நெஞ்சை நெகிழ வைக்கிறது. இது எதிர்காலச் சந்ததியினருக்கு நாம் செய்யும் பெரிய கைங்கரியம். சைவத்திற்கு இத்தலைமுறை பினர் ஆற்றும் பெரியதொரு பங்களிப்பு

Page 5
இந்தச் சந்தர்ப்பத்தில் இந்த கூேடித்திரத்தின் தல வரலாறு ஒன்றும் முறையாக ஆராயப்பட்டு வெளிவருவது எதிர்காலத்து சைவத்தலைமுறையினருக்கு நாம் விட்டுச் செல்லக்கூடிய விலை மதிப்பற்ற பொக்கிஷமாயமையும் என்பதிற் சிறிதும் ஐயமில்ல.
இக்கைங்கரியத்தில் ஈடுபட்டுள்ள கோவில் யஜமானர்களுக் கும் ஆராய்ச்சி செய்து நூல்வடிவில் எழுதிய கலாநிதி ப. கோபால கிருஷ்ணன் அவர்களுக்கும் சைவ உலகம் கடமைப்பட்டுள்ளது.
எம்பெருமானின் திருவருளை முன்வைத்து இவர்களுக்கு நல்லாசி வழங்குவதிற் பெருமகிழ்வடைகின்றேன்.
காட்டுத்துறை அம்பலவான விக்கினேஸ்வரப் பெருமானது இவ்வாலயத்தில் நித்திய நைமித்தியாதிகள் மேன்மேலும் சிறப் புற்று, விக்நேஸ்வரப் பெருமானது பிரசாத வெள்ளம் சைவ உலகெங்கணும் பெருகி சைவ மக்கள் சிறப்புடன் வாழ எம் பெரு மானைப் பிரார்த்திப்போமாக!
பி. ஏ. தம்பி ஒழுங்கை
வண்ணுர்பண்ணை 3-6-1988

ஆசியுரை
வண்ணுர்பண்ணை வடமேற்கு காட்டுத்துறை என்னும் தலத்தில் கோயில் கொண்டெழுந்தருளி அருள் பாலிக்கும் அருள் மிகு அம்பலவாண விக்கினேஸ்வரப் பெருமானின் கும்பாபிஷே கத்தையொட்டி ஒரு மலர் வெளியிட வேண்டுமெனக் கோயில் அறங்காவலர்கள் எண்ணிய எண்ணம் இவ்வருடம் விநாயகப் பெருமானின் கொடியேற்ற உற்சவம் நடைபெற்று தேரில் எம் பெருமான் எழுந்தருளி அருட்காட்சி தரும் தினத்தில் நிறைவேறு வது எமக்குப் பெரும் மகிழ்ச்சியைத் தருகின்றது. அந்த எண் ணத்தின் பலன்தான் உங்கள் கரங்களில் தவழும் இம்மலர்' இத்தலத்தைப் பற்றிய இத்தகைய நூல் ஒன்று மிகக் குறுகிய காலத்தில் உருவாக எம் பெருமானின் திருவருளே துணை நின் றது. இந்நூல் வெளிவருவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திய இவ் வாலய அறங்காவலர்களாகிய திரு. சோ. சடாட்சரம் அவர்க ளுக்கும் திரு. ச. பூரீநிவாசன் அவர்களுக்கும் எமது நல்லாசிசள் உரித்தாகுக.
அறங்காவலர்களின் வேண்டுகோளை ஏற்று இந்நூலை மிகக் குறுகிய காலத்தில் சிறப்பாக உருவாக்கியவர் எமது அன்புக் குப் பாத்திரமானவராகிய கலாநிதி ப. கோபாலகிருஷ்ணன் அவர்கள். அவருக்கு எமது மனமார்ந்த நல்லாசிகள் உரித்தாகுக.
வண்ணுர்பண்ணையில் கருணைப் பிழம்பாய் நடுநாயகமாக திகழ்ந்து அருள் பாலிக்கும் விநாயகப் பெருமானின் மகிமைக ளையும் ஆலய வரலாற்றுப் பெருமைகளையும் எடுத்துக் காட்டும் கண்ணுடியாக இம்மலர் மிளிர்வதை அன்பர்கள் உணர்ந்து கொள்வார்கள், '
எம் பெருமானின் திருவருளால் எல்லோரும் இன் புற்றிருக்க எமது நல்லாசிகள்.
வண்ணுர்பண்ணை இ. சந்தானகோபாலசர்மா
if «f aF «ssisi 9 •1988--6 س-3

Page 6
ஆசியுரை பிரம்மறி தி. நடனசபாபதி சர்மா
ஓம் -என்னும் பிரணவாக்ஷரத்தில் இருந்தே நான்கு வேதங்களும் தோன்றின. விநாயகப்பெருமான் பிரணவஸ்வரூப மாக உள்ளவர். நான்கு வேதங்கட்கும் ஆதிநாயகன் விக் னேஸ் வரப் பெருமான் சைவ சமயத்திற்கு முதன்மையானதும் ஊற் றுக்காலாக இருப்பதும் வேதமே. இதனல்தான் விநாயகப்பெரு மாண் சைவசமயத்தின் முழுமுதற் கடவுளாக சைவசமயிகள் ஆராதித்து வருகிருர்கள் சிவபெருமானின் மூத்த குமாரன் என் 1.தாலும் முதல் என்னும் அடைமொழி பெறப்படுகிறது.
சிக்கலான காரியங்களை எளிதாக முடித்துக் கொடுத்து அருளுபவர் விநாயகர். வள்ளியை மணம் விளைக்க முனைந்த முரு கன் இக்கட்டால் சந்தர்ப்பத்தில் விநாயகப் பெருமான நினைக்க அவர் வள்ளி திருமணத்தை இனிதே முடித்துக் கொடுத்தார். இதனுல் தான் எந்தக் காரியம் தொடங்கும் முன்பும்,
'அவிக்கினம் குரு மே தேவ ஸ்ர்வ கார்யேஷ-0 ஸர்வதா? என்று பிரார்த்திப்பது மரபாகும்.
விநாயகர் ஹாஸ்ய உணர்ச்சி (நகைச்சுவை மிக்க தெய் வம். விகடக்கூத்தாடி நகைப்பை ஏற்படுத்தியவர். கூத்தாடியமை யால் அவர் "லாஸ்யப்" பிரியருமாகிருர், மஹாபாரதத்தை மருப்பொன்முெடித்தொரு சுரத்திற் பிடித்து எழுதி முடித்த தால் வேதமுதல்வரானவர். காவிய சாத்திரங்கட்ரம் முதல் வராகிருர்,
சைவசமயிகளின் முழுமுதற் கடவுளென ஏற்றப்படுதற்கும் போற்றப்படுதற்கும் உரிய தெய்வம் விநாயகப் பெருமானே ஆதலால் அப்பெருமானுக்கு முன்னேர் காட்டுத்துறையில் கோவில் அமைத்து நமக்கு வழிகாட்டி உதவி செய்துள்ளனர். அத்தகைய சைவச் சான் முராகிய முன்னேரின் வழிவந்த சைவப் பெரியார் திருவாளர். மு சடாட்சரம் அவர்களும், சாலஞ் சென்ற திரு. சி. சரவணமுத்து அவர்களும் இந்தக் கோவிலுக்குரிய திருப்பணி களை காலத்துக்குக் காலம் வேண்டியவாறு இயற்றி, சிறு கொட் டிலாக இருந்த ஆலயத்தை இன்றைய நிக்)க்கு கொண்டுவந்தது

மல்லாமல் இவ்வாலயத்தில் துவஜார்ோகனம் முதலான-இகற வனது ஐந்தொழிலைச் சுட்டி நிற்கும் மஹோத்ஸவங்களும் நிக
ழக் கூடியதாக, புதிதாக கொடித் தம்பம். ஸ்தாபித்து கால்
கோள் செய்துள்ளனர்.
சிறப்பாக திரு. சடாட்சரமவர்கள் சென்ற்-வருடம் குத் பாபிஷேகம் நிறைவுற்ற நாட்தொட்டு, துவஜாரோகணுதி மஹோ த்ஸவங்கள் நிகழ்த்துவதற்குரிய திருப்பணிகளை தமது தள்ளாத வயதிலும் அயராது ஆற்றியிருப்பது வண்ணுர்பண்ணைவாழ் சைவ சமுதாயத்திற்கு அன்னர் செய்த பெரிய சேவையாகும். புதிதாக பைரவக் கடவுளுக்கும் சிவபூஜாபலண் பக்தச்கட்கு.நல்கும் சண்டி கேஸ்வரருக்கும் சந்நிதிகள் கட்டப்பட்டுள்ளன. இதுவஜாரோகஹ ணுதி மகோத்ஸவங்கட்கு பூர்வாங்கமாக யாகசாலை.ஒன்றும் நிர் மானிக்கப்பட்டுள்ளது.
இவ்விதமான சிற்ப்பான சந்தர்ப்பத்தில் இந்தக் காட்டுத் துறையில் எழுந்தருளியுள்ள அருள்மிகு அம்பலவாண விநாயகப் பெருமானது தல வரலாற்றை அறித்து கொள்ள பக்தர்கள். விரும்புவது இயல்பானதே. அவ் ஆவலைப் பூர்த்தி செய்யும், நோக்குடன் இப்பெருமானது. தல வரலாறு? புத்தக ரூபமாக மலர்ந்திருப்பது பா ராட் டு தாலுக் கு ரிய செயலாகும், இந்த லத்திஜனப் பற்றித் தெரிந்தவர்கள். இத்தலைமுறையினரில் யாரு மில்லை ஆகவே இதன் வரலாற்றைத் தெரிந்தெடுப்பது மிகச் சிரமமான காரியமாகும் ஃரலாற்று.ஆராய்ச்சிக்கு சில விதிகள் வரையறைகள்" மரபுக்ள் உள்ளன: அவ்விதமான சிறந்த முறை யில் இப்பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. தல வரலாற்றுக்குரிய ஆதாரங்கள்,சான்றுகள்மிகுந்த சிரமத்தின்ப்ேரில் தேடிஆராய்ந்து எடுக்கப்பட்டுள்ளன:
பூரீ விக்னேஸ்வரப்பெருமானின் பாதாரவிந்தங்களில் சர்ப் பிக்கப்படும் இந்நூலை சைவப் பெருமக்கள்” சிவப்பிரசாதமாக ஏற்று மென்மேலும் நற்பேறுகள் பெற்று வாழவும், சைவம் சிறந் தோங்கவும் இந்நூல் சிறப்புறவும் எம்பெருமானைளை, வணங்கி நிற்போமாக!
29. ஸ்வஸ்தி? ஒட்டும்டம் வீதி, வண்ணுர்பண்ணை.
27-0) - 1988 |

Page 7
வாழ்த்துரை
யாழ்ப்பாணம் வண்ணுர்பண்ணையில் நடுநாயக மாக விளங்கும் காட்டுத்துறை அருள்மிகு அம்பல வாண விநாயகர் கோவில் புனர் நிர்மாணம் செய்விக் கப்பட்டு எ மீபெருமானுக்கு புனராவர்த்தன அஷ்ட பந்தன மகாகும்பாபிஷேகம் சென்ற வருடம் ஆவணி: மாதம் (24-08-1986) திருவருட் துணை கொண்டு: இனிதே நிறைவேறியது. அதனையடுத்து இவ்வருடம் பைரவர், சண்டேசுவரர் ஆகிய பரிவார மூர்த்திகளைத் தாபித்து கோயில் கொடியேற்றம் முதன் முதலாக, நிகழத் திருவருள் பாலித்துள்ளது. கும்பாபிஷேகம் மற்றுமீ கொடியேற்றம் தேர்த்திருவிழா ஆகிய நை, மித்தியங்களை நினைவு கூருமுகமாக தல வரலாறென்று: வெளிவர வேண்டுமென்ற இவ்வாலய அறங்காவலரின்: விருப்பத்தின் பேரில் இந்நூல் வெளிவருகின்றது.
இந்நூலின்ை விநாயகரின் மகத்துவமி, கோவில் வரலாறு, விநாயகரின் ஊஞ்சற் பதிகங்கள் ஆகியவை: அணி செய்கின்றன. கோவில் அறங்காவலர்களின: தும் அர்ச்சகர்களினதும் அன்பான வேண்டுகோளை ஏற்று மிகவும் குறுகிய கால அவகாசத்தில் இந்நூலை உருவாக்கித் தந்தவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக. இநீஆது நாகரிகத் துறைத் தலைவர் கலாநிதி ப. கோபா லகிருஷ்ணன் அவர்களாவர். கிடைக்கக் கூடிய தகவல் களைச் சேகரித்து மிகவும் குறுகிய காலத்தில் இசி சிறு நூலினை உருவாக்கித் தந்தமைக்கு அவருக்கு. எமது வாழ்த்துக்கள் உரித்தாகுக
இந்நூலின் உருவாக்கத்திற்குத் துணைபுரிந்த ஏனையோருக்கும் எம் பெருமானின் திருவருளை முன்: வைத்து எமது வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெரு. மகிழ்ச்சியடைகின்றேன். இக்கோவில் பற்றி அறிய விரும்புபவர்களுக்கு. இந்நூல் ஒரு வழிகாட்டி சைவ உலகம் இந்நூலை வரவேற்கும் என எதிர்பார்க்கின்
எல்லோரும் பெருவாழ்வு பெற்றிட எம்பெருமானின் திருவருள். கிட்டுவதாக.
வண்ணுர் பண்ணை பிரம்மபூரீ இ. குமாரசுவாமி சர்மg:
)கோவில் அர்ச்சகர் (பி. ஏ ;19887 س-6--29

முன்னுரை
யாழ்ப்பாணத்தின் வண்ணுர்பண்ணையின் வடி மேற்குப் பகுதியில் அமைந்துள்ள காட்டுத்தறை பூரீ அம்பலவாண விக்நேஸ்வர பிள்ளையார் கோவிலானது ஏறக்குறைய ஒரு நூற்ருண்டு காலத்துக்கு மேல் பழமை வாய்ந்தது. இக்கோயிலில் அண்மைக் கால மாக ஏற்பட்டுவரும் திருப்பணிக் கைங்கரியங்களி ஞல் கும்பாபிஷேகம் நிகழ்ந்து கோயில் புதுப்பொ லிவு பெற்றுத் திகழ்கின்றது. கிங்கு முதன் முதலா கக் கொடியேற்றம் இவ்வருடம் நடைபெற்று, எம் பெருமான் திருத்தேரில் ஆரோகணித்து திருவீதியில் பவனிவருமீ தெய்வீகக் காட்சியைக் காணும்பேறு. எம க்குக் கிட்டியுள்ளது. இத்தகைய சூழ்நிலையில் இத்தல வரலாறு வெளிவருவதும் பொருத்தமான தொன்சருகும்.
இக்கோயிற் சூழலில் வாழ எனக்குக் கிட்டிய பேறும் இவ்வாலயத்தோடும் அதனேடு தொடர்பு.ை யவர்களோடும் எனக்கு ஏற்பட்ட உறவும் இந்நூ&ல. உருவாக்கும் வண்ணம் இவ்வாலய அறங்காவலர்க. ளால் விடுக்கப்பட்ட வேண்டுகோளே. நிறைவேற்று. ஏதுவாக அமைந்தன.
தலவரலாறு ஆலயத்தைப் பற்றியுமி அங்கு வழிபடப்படும் தெய்வத்தின் ஐதீகங்களையும் உள்ளி, டிக்கியதாக அமையும் புராணங்கள் கூறும் மரபை அடியொட்டி தமிழகத்தில் எண்ணற்ற தல வரலாறு கள் எழுந்தன. அதே போன்று இலங்கையிலுள்ள பிர தான ஆலயங்களுக்கும் புராணங்களும் தல வரலாறு களும் எழுந்துள்ளன. பூரீ தவிண கைலாச புராணம் நகுலேசுவர புராணம், ஈழத்துச் சிதம்பர புராணம், திருக்கோணுசலபுராணம், கதிர்காமபுராணம் திருக்கே தீஸ்வர புராணம் போன்றவை இவ்வகையிற் குறிப்பிட தக்கன இம்மரபை அடியொட்டி அவ்வப் பிரதேச ஆல.
7.

Page 8
யங்களின் தல வரலாறுகளுமிகும்பாபிஷேகமி ப்ோன்ற சிறப்பு வைபவங்களை ஒட்டித்தகைமை வாய்ந்தவர்க எால் உருவாக்கம் பெறுகின்றன. தாமீவாழும் பிரதே. கூத்தில் உள்ளதலங்களிேப் பற்றியுமி*அவற்றின் பாரம்: பரியம், மரபுவழிபடப்படும் தெய்வமீபற்றியும்வழிப டுவோர் அறிய முயல்வதும் மிக்வும் இன்றியமையா தது. சிறப்பாக சமயம்,பண்பாடு பற்றிப்பேயிலுமீ இளந் தலை முறையினருக்கு இத்தகைய நூல்கள் சிறந்த வரப்பிரிசாதம்ாகும். எம் முன்ஞேரின் சம யத்தொண்டுகணிேயும் பணிகளையும்அேறியெேவரிதும்
இதுதவுவன,
அண்மைக் கால திதில் மாவட் ரீதியாகவும் கோயில் பற்றிய வரலாறும் உருவாகியுள்ளன.இவ்வரி சையில் திருகோணமலை மாவட்டிமீ. மட்டிக்களப்பு மாவட்டம் போன்றவற்றைச்சு குறிப்பிடிலாம் இலங் கைத் திருநாட்டின் இந்துக்க கோயில்கள் பற்றிஅண்: மையில் ஒரு தொகுப்பு நூல் வெளிவ்ந்துள்ளது. இவ் வடிச்சுவட்டில் இத்தலத்திற்கும். ஒரு வரலாறு விநா பகப் பெருமானின் திருவருளசால் வெளிவருவதுகுறிப்பு பிடத்தக்கது. இத்தலத்திற்கு இற்றைவரை எது வித் வரலாறும் இல்லாக குறையை இந்நூல். நிழைவு செய்ய முயல்கின்றது எனலாம்.
எம்பெருமானின் தலப்ப்ெருமை ப்ேசுவது சிவ் புண்ணியத்தின் பஈற்படுவதாகும். இத்தலத்தினைப் பற்றிய வரலாற்றின் எழுஅதுவதற்கு ஏற்ப பிடி வாய்ப்பு விநாயகப்பெருமானின் திரூவருளேயன்றி வேறில்லை. இத்தகையதொரு:அரிய சந்தர்ப்பத்தை எனக்கு அளித்த கோயில். அறங்காவலர்களுக்கும் அர்ச்சகர்களுக்கும். முதற்கண் என்மனமுவந்த நன், றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இக்கோயில் பற்றிய தகவல்களைப் பெறுவதற்கு அரிய் முயற்சிகள் மேற்கொண்டவிடத்தும் குறுகிய கால அவகாசத்தில் நூல் வெளிவர வேண்டிய தேவை

காரணமாக கிடைக்கப்பெற்ற தகவல்களைக் கொண்டே இத்தலவரலாறு உருவாகியுள்ளது. இக்கோயில் பற்றிய தகவல்கள் மேலும் கிடைக்கப்பெறின் இந்நூலின் அடுத்த பதிப்பிற் சேர்த்து க் கொள்ளக் கூடிய வாய்ப் பிருக்குமென எண்ணுகின்றேன். இத்தலவரலாற்றுக்கு முன்னுேடியாக விநாயகரின் மகத்துவம் அமைகின் றது. அதனையடுத்துத் தலவரலாறும் வி நா ய கப் பெருமான் மீது பாடப்பெற்ற ஊஞ்சற் பதிகங்களும் இடம் பெறுகின்றன.
W இந்நூல் உருவாவதற்கு உதவியோர் பலர் கோயில் பற்றிய ஆரம்பத் தகவல்களைத் தந்துதவி யவர்களுள் கோயில் அறங்காவலர்களாகிய திரு. சோ. சடாட்சரம் அவர்களும் திரு. ச. பூரீநிவாசன் அவர் களும் மற்றும் கோயில் அர்ச்சகர்களாகிய பிரம்மபூரி இ. சந்தான கோபாலசர் மாவும் பிரம் மயூரீ இ. குமார சாமி சர்மாவும் குறிப்பிடத்தக் கவர்களாவர் இக்கோ யில் பற்றிய கச்சேரிப் பதிவினைப் பெறுவதற்கும் மற்றும் இக்கோயில் பற்றி இந்து சாதனம் பத் திரிகையில் பல காலங்களுக்கு முன்பு வெளிவந்த செய்திக் குறிப்புக்களை என அது வேண்டுகோளின் பேரில் சேகரித்துத் தருவதற்கும் இக் கோயில் பற்றிய புகைப்படங்களை எடுப்பதற்கும் ம b று ம் ஏனைய விடயங்களுக்கும் பக்கபலமாக விளங்கியவர் எனது மாணவனும் யாழ். பல்கலைக் கழகத்தில் நான் காம் வருடத்தில் பயிலும் சிறப்புக்கலை மாணவனு மாகிய திரு. ப. கணேசலிங்கம் ஆவார். இக்கோயில் தொடர்பான சில வரலாற்றுச் செய்திகள் பற்றி எனக்கு அவ்வப்போகு ஏற்பட்ட ஐயங்களைத் தெளிவு படுத்திக் கொள்ள உதவியவர் பிரம் மயூரீ தி. நடன சபாபதிசர்மா அவர்கள். இவர்கள் அனைவருக்கும் என் மனமுவந்த நன்றிகள் உரித்தாகுக.
எம்மத்தியில் குருமணியாகத் திகழ்ந்து தமது
ஆத்மீகபலத்தினுல் எம்மை வழிநடத்திக் கொண்டி
ருக்கும் மதிப்பிற்குரிய வியாகரண சிரோமணி பிரம்
9

Page 9
மயூரீ தி. கி. சீதாராம சாஸ்திரி அவர்கள் தமது தள் ளாத காலத்திலும் என் மீது கொண்ட அன்பு கார ணமாக ஆசிகூறி வாழ்த்தியுள்ளார்கள். அவர்களது திருவடிகளுக்கு என் நமஸ்காரங்கள் இ க் கோ யில் வளர்ச்சியில் முக்கிய பங்கேற்றவர் அமரர் பிரம்மபூரீ குமாரசாமிக் குருக்கள் ஆவார். அவரது பணியை அவருக்குப்பின் திறம்பட நடத்திச் சென்றவர் அவ ரது மருகர் அமரர் பிரம் மயூரீ தி. இரத்தினசபாபதிக் குருக்கள் (1909-1983) ஆவார் இப்பெரியார்களை இற் றைக்கண் நினைவு கூர்தல் சாலப் பொருத்தமாகும் இவர்களது வாரிசாக இன்று எம்மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கும் நீலாம்பிகை அம்மா இரத்தினசபா பதிக் குருக்கள் அவர்களின் ஆசியும் எமக்குக் கிடைத் தது. அவருக்கும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன். மற்றும் ஆசியுரை பதிப்புரை வழங்கி நூலைச் சிற ப்பித்த ஏனைய பெரியார்களுக்கும் என் மனமார்ந்த நன்றி உரித்தாகுக. இந்நூலைச் செம்மையுற குறு கிய காலத்தில் அச்சேற்றித் தந்த யாழ்ப்பாணம் சுடரொளி அச்சகத்தாருக்கும் எமது நன்றிகள்
இந்நூலில் இடம்பெறுகின்ற நிழற்படங்களை தனது செலவிலே கொழும்பு ஸ்ரூடியோவில் புளக் செய்து தந்துதவிய யூனிவேர்சல் கல்வி நிலைய அதிபர் திரு பொ. ஐங்கரநேசன் அவர்களுக்கும், இதற்கு முன்னின்று உதவிய திரு ப. கணேசலிங்கம் அவர்க ளுக்கும் எமது அன்பு கலந்த நன்றிகள்,
இந்நூல் உருவாக பல்வேறு வழி களி லும் எனக்குப் பக்கபலமாக நின்று உதவிய எனது துணை வியார் பூரீமதி உஷா வுக்கும் மற்றும் ஏனையோருக் கும் என் மனமார் நீக நன்றிகள் உரித்தாகுக.
அனவரும் நற்பேறு பெற்று நலமுடன் வாழ எம்பெருமானின் திருவருள் துணைநிற்பதாகுக!
ub கலாநிதி ப. கோபாலகிருஷ்ணன் வண்ணர் பண்?ண விபவ வடு ஆனி ് 15 ഖ. பெளர்ணமி. 29-06-1988

வெளியீட்டுரை
யாழ்ப்பாணம் வண்ணுர் பண்ணை வடமேற்குப் பகுதியில் காட்டுத்துறை என வழங்கும் இடத்தில் கோயில் கொண்டெழுந்தருளி அருள் பாலிக்கும் பூரீ அம்பலவாண விக்நேஸ்வர பிள்ளையாருக்கு ஏறக் குறைய ஒன்றரை நூற்றண்டு காலத்துக்கும் மேலாக எமது முன்னுேர்கள் கோயில் அமைத்து குலதெய் வமாக வழிபாடு செய்து வந்தனர். சிறு கொட்டிலில் தொடங்கிய விநாயகரது திருக்கோயில் படிப்படியாக விரிவடைந்து இன்று கொடியேற்றம் நிகழ்ந்து மகோ சவம் நிகழும் அளவுக்கு வளர்ச்சி பெற எம்பெருமா னின் திரு உருளே துணை நின்றது.
எம்பெருமானின் பெருமைகளையும் இத்தலத் தின் வரலாற்றையும் எமது முன்னுேர்களின் கைங் கரியங்களையும் நாமறிய விரும்புவது இவ்வாலய எதிர் கால வளர்ச் சிக்கு உந்து சக்தியாக அமையும் என்ற நோக்கில் ஒரு தல வரலாறு எழுதப்பட வேண்டும் என்ற எண்ணம் எமக்கு எழுந்தது. எம்பெருமானின் கோயிலில் திருப்பணி வேலைகள் நிறைவு பெற்று சென்ற வருடம் கும்பாபிஷேகம் நிகழும் போது இத் தகையதொரு நூலை வெளியிட நாம் எண்ணிய போ தும் அவ் வெண்ணம் எம்பெருமான் திருத்தேரில் ஆரோகணித்து அருள்சுரக்கும் புண்ணிய தினமாகிய இன்றே கை கூடுகின்றது. இது எமக்குப் பெரும் மகிழ்ச்சிமயத் தருகின்றது. மிகக் குறுகிய கால அவ காசத்தில் இந்நூல் வெளிவர திருவருளே துணை நின் றது இந்நூல் விநாயகர் மகத்துவம் கோயில் வர லாறு திருவூஞ்சல் ஆகிய சிறப்பம்சங்களை உள்ள டக்கியுள்ளது.
எமது அன்பான வேண்டுகோளை ஏ நீறு மிகக்
குறுகிய கால அவகாசத் ரிள்ை இத் தல வரலாறு பற் றிய நாலினை உருவாக்கிய வர் யாழ்ப்பான பல்கலைக் கழக இந்து நாகரிகத் துறைத் தலைவர் கலாநிதி ப கோபாலகிருஷ்ணன் அவர்களாவர், எமது ஆலயத்

Page 10
தோடும் ஆலய அர்ச்சகர்களோடும் இவர் பலகாலம் நெருங்கிய தொடர்புடையவர். இந்நூலைக் குறுகியகா லத்தில் எழுதித் தந்த மைக்கு அவருக்கு எங்கள் மன மார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்ருேம்:
இந்நூலுக்குரிய ஆசியுரை,வாழ்த்துரை வழங்கி பெருமைப்படுத்திய பெரியோர்களுக்கும் எமது நன் றிகள் உரித்தாகுக.
கும்பாபிஷேகத்திற்கு மு ன் ன ர் இடம்பெற்ற திருப்பணிகள் கும்பாபிஷேகம் மற்றும் அதனைத் தொடர்ந்து கொடியேற்றத்திற்கான பூர் வாங்க ஒழுங் குகள் ஆகிய பணிகள் நிறைவு பெறவும் கோயில் கர்மங்கள் இனிதே நிறைவு பெறவும் உதவிய அர்ச்ச கர்களாகிய பிரம்மபூரீ இ. சந்தான கோபாலசர்மா பிரம்மபூரீ இ. குமாரசாமி ச ர் மா ஆகியோருக்கும் நாம் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம். கும்பா பிஷேகம் கொடியேற்றத்துடன் கூடிய மகோற்சவம் ஆகியவற்றை நடாத்தி சிறப்பித்த சிவாசாரியராகிய பிரம்மபூரீ நீ. சச்சிதானந்தே ஸ்வரக் குருக்கள் அவர் களுக்கும் எமது நன்றிகள் உரித்தாகுக.
இக்கோயிலோ டு தொடர்புடைய ப ல் வேறு பணிகளில் உதவிபுரிந்த எமது உறவினருக்கும் இப் பிரதேச சைவப் பெருமக்களுக்கும் நாம் நன்றி கூறக் கடமைப்பப்டுள்ளோம்.
இந் நூ ல் உருவாவதற்குப் பல வழிகளிலும் உதவிபுரிந்த ஏனையோருக்கும் நன்றி சிறப்பாக இந் நூலில் இடம்பெறுகின்ற நிழற்படங்களைத் தனது செலவிலே கொழுப்பு ஸ்ரூடியோவில் புளச் செய்து தந்து தவிய யூனிவேர்சல் கல்வி நிறுவன அதிபர் திரு பொ. ஐங்கரநேசன் அவர்களுக்கும் இதற்கு முன்னி ன்று உதவிய திரு ப. கணேசலிங்கம் அவர்களுக்கும் எமது நன்றிகள் உரித்தாகுக.
இந்நூலினை மிகவும் குறுகிய கால அவகாசத் தால் அழகுற அச்சிட்டு தவிய யாழ்ப்பாணம் சுட ரொளி அச்சகத்தாருக்கும் நாம் நன்றி கூறக் கட மைப் பட்டிருக்கிருேம். காட்டுத்தறை பிள்ளையர்ர் திரு. சோ. சடாட்சரம் தேவஸ்தானம் திரு ச. பூரீநிவாசன் வண்ணுர்பண்ணை கோவில் அறக்காவலர்கள்

As கடவுள் வணக்கம்
திருச்சிற்றம்பலம்
பிடியதன் உருவுமை கொள மிகு கரியது வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர் கடி கண பதிவர அருளினன் மிகுகொடை வடிவினர் பயில்வலி வலம் உறை இறையே
திருஞானசம்பந்தர் தேவாரம்
ஐந்து கரத்தனே யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலு மெயிற்றனை நந்தி மகன் றன்ை ஞானக் கொழுந்தினைப் புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.
(திருமந்திரம்)
விநாயகனே வெவ்வினையை வேரமுக்க வல்லான் விநாயகனே வேட்கை தணிவிப்பான் - விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனு மாந் தன்மையி சூல்ை கண் ணிற் பணி மின் கலந்து
(கபிலதேவநாயஞர் 11-ந் திருமுறை
உலகெ லா மீ உணர்ந் தோதற் கரியவன் நிலவு லாவிய நீர் மலி வே அணியன் அலகில் சோதியன் அமீ பலத் தாடுவான் மலர் சிலம் படி வாழ்த் கி வணங்குவம்,
பெரியபுராணம் சேக்கிழார் சுவாமிகள்)
3

Page 11
இதுத்தலம் நிறை கனி அப்பமென் வல்டோ ரி
கப்பிய கரிமுகன் அடிடே ரிைக்
ஆற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ
சுற்பகமீ என வினே கடிதேகும்
மத்தமும் மதியமும் வைத்திடும் அரன் மகன்
மற்பொரு திரள் புய மதயானே
மத்தள வயிறனை உத்தமி புதல்வன
மட்டவிழ் மலர் கொடு பணிவோனே
முத்தமிழ் அடைவினை முப்படு கிரிதனில்
முற்பட எழுதிய முதல்வோனே
மூப்புரம் எரிசெய்த அச் சிவன் உறைர தமி
அச் சது பொ டி செய்த அதிதீரா
அத்துய ரது கொடு சுப்பிர மணி படும்
அப்புன மீ அதனிடை இபமாகி
அக்குற நகளுடன் அச்சிறு முருகனை
அக்கீனம் மனமருள் பெருமாள்ே
-திருப்புகழ்
திருச்சிற்றம்பலம்
i ki:

மூலவரின் தோற்றம்

Page 12

விநாயகர் மகத்துவம்
உலகில் வாழும் உயிர்கள் உய்வு பெற துணை நிற்பது இறைவன் நிருவருள் இறைவன் அருளே திருமேனியாக உடை யவன். அத்தகைய திருவருள் கைகூட துணை நிற்பது விநாயகர் வழிபாடு. இந்துக்களின் வழிபாட்டு மரபுகளில் விநாயகர் வழிபாடு முதன்மையானது எக்கருமத்தையாயினும் தொடங்குமுன்பு விநா யகரை வழிபடுவதும் எதனையும் எழுதத் தொடங்குமுன்பு பிள்ளை யார் சுழியையும் அதன் கீழே சிவமயம் என்ற சொல்லையும் எழுது வது மரபு. மரபு என்பது தொன்று தொட்டுப் பேணப்பட்டு வரும் வழக்கத்தைக் குறிக்கும்.
பிள்ளையார் சுழி கீறுஞ் சுழியுமாய் அமைந்திருக்கின்றது. சுழி. வட்டம்; கீறு - கோடு; கீறு நாதமெ8 ப்படும் சிவதத்துவத்தின் வரிவடிவு. சுழி விந்து எனப்படும் சக்திதத்துவத்தின் வரிவடிவு. நாதமும் விந்துவும் அருவப் பொருள்கள். அவற்றுக்கு வடிவம் இல்லையாயினும் மெய்யுணர்வு பெற்ற தெய்வச் சான்றேர் தமது அருட்காட்சியிற் கண்ட உருநிலையைச் சுழியும் கீறுமாக வரிவடி விற் குறித்துக் காட்டினர். 1 கீறும் சுழியுமான இவையிரண்டும் ஓங்காரத்தின் கூறுகள். அவ்வோங்காரம் பிள்ளையாருடைய வடிவம்.
“பிரணவப் பொருளாம் பெருந்த கை ஐங்கரன் சரஈ அற் புத மலர் தலைக்கணி வோமே?
என்பது வெற்றிவேட்கை காப்பு. பிள்ளையார் சிவத்தின் வேரூ காத அருட்சக்தியாதலினல் கீறும் சுழியுமான அவ்வடிவத்தைப் பிள்ளையார் சுழி எனப் போற்றுகின்ருேம். யானையின் முகமும் இவ்வடிவத்தைப் புலப்படுத்தும். யானையின் தலை வட்டவடிவ மாகவும் தும்பிக்கை கீற்றுவடிவமாகவும் விளங்குதல் நோக்கத் தக்கது. பிள்ளையார் யானை முகங்கொண்டு வினங்குதலுக்குரிய காரணமும் இதுவே
பிரணவம் வேதத்தின் உட்பொருள்; வேதத்தின் சாரம்; வேதத்திலுள்ள  ாயததிரி மந்திாத்தின் 2 உட்பொருளாகவுள்ளது பிரணவம், நகாயத்தி யோஹ (ர மந்திரம்" என்பது காயத் திரியலும் பாாக்கச் சிறந்த மந்திரம் இல்லை என்பதாகும். உமைபிடிவடிவு கொண்டும் உலகம் உய்ய மருவி விநாயகர் அவ தரிக்க அருள் செய்தார் என்றும் அதனுல் ஆனைமுகம் விநாயக ருக்கு உரியதாயிற்று என்பது புராண மரபு கூறும் கருத்தாகும்.
5

Page 13
விநாயகரும் சிவமும் சக்தியும் பிரணவ சொரூபியாவர். சிவனும் சக்தியும் சிவகுமாரரும் பூவும், பூவினது நிறமும் பூவினது மணமும் போன்றவர்என்பது சைவ நூற்றுணிபு.
சைவ சமயத்தவர்க்குச் சிவம் பரம்பொருளாகும். பதிக்கு சொரூபலக்கணம், தடத்தலக்கணம், என இரு பிரிவாக இலக் கணம் கூறப்பட்டுள்ளது. உருவம், பெயர், குணம் அற்றது. சொகுபநிலை. ஆன்மாக்களின் ஈடேற்றத்திற்காக ஈசானம் முத லாக 3 ஐந்து முகங்கள் பொருந்தி நின்று ஐந்தொழிலைப் புரிகின் முன் என பதி நிலையில் இறைவன் போற்றப்படுகின்றன். பதிலக் கனத்துடன் கூடிய சிவன் தேவரது வேண்டுகோளுக்கிரங்கி முப்புரங்களை எரிக்கப் புறப்படும் பொழுது அவரது தேரின் அச் சுப் பொடியானது என்பது புராண வரலாறு. பதிலக்கணம் தாங்கிய சிவம் அருவமான சிவத்தை வணங்க இயலாது. மளித வடிவுமல்லாத பிராணி வடிவுமல்லாத அருவக் காட்சி தருகின்ற விநாயகரை வணங்கி சிவன் முப்புரத்தை எரித்து அருளியமை தெய்வீக வரலாருகும். இதனை
முப்புரம் எரிசெய்த அச் சிவன் உறைரதம்
அச்சது பொடி செய்த அதிதீரா
என அருணகிரிநாதர் புகழ்கின்றர். ஆன்மாக்கள் யாவும் எக்காரியத்தையும் தொடங்கும் போது இறைவனை முதலில் வணங்கிச் செய்தல் வேண்டும் என்ற உண்மையைத் தானே செய்து காட்டினர். பதிலக்கிணம் தாங்கிய சிவத்திற்குச் சொரூப லக்கணம் தாங் ய ஆதிசிவம் உருவ அருவமாக நின்று தானே ஒரு நாயகராக விளங்கினர். எனவே தனக்கொரு தலைவன் இல் லாதவன் - தலைவரல்லாதவர் என்ற பொருளில் விநாயகர் என்ற பெயர், இவருக்கு அமைந்தது. இப்பெயர் இறைவனின் சிறந்த பெருமையை எடுத்துக் காட்டுவதாக உள்ளது.
இருக்கு வேதத்தில் விநாயகரைக் குறிக்கும் "கணு நாம் த்வா 4 என்ற மந்திரத்தில் "ஜ்யேஷ்டராஜம்" என்ற சொல் உள்ளது. "ஜ்யேஷ்ட" - "முகலாவதான" என்றும் "ராஜ" ஒளி என்றும் பொருள்படும். "மிகப் பெரிய ஒளி பொருந்தியவர்" என்பது கருத்து இப்பேரொளியின் முன் சூரியனே சந்திரனுே” நட்சத்* ரமோ அக்கினியோ பிரகாசிப்பதில்லை இவை யாவும் இப்பேர: Oயிடமிருந்து தம் சுய ஒளியைப் பெற்றுப் பிரகாசிப் பன. வேதங்கள் பரம்பொருளை ஒளிவடிவாகவே போறறுகின்றது. "ஆதியும் அந்தமுமில்ல. அரும் பெரும் சோதி" எனப் போற்று கின்றர் மணிவாசகர். கச்சியப்பர்
16,

அருவமும் உருவு மாகி அநாதியாய்ப் பலவாய்
w 626ზr(mვtiuსტ: பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனியாக.
என கந்தபுராணத்தில் போற்றுகின்றர். நினைத்த காரியம் முட்டின்றி நிறைவு பெறுதல் வேண்டும் என்ற மனேநிலையில் நிகழும் விநாயகருக்குரிய சங்கற்பத்தில் அவரது திருவதனத்தின் எழிற்தோற்றம் குறிப்பிடப்படுகின்றது.
"சுக்லாம்பர தரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம் ப்ர ஸந்ந வத நம் தீயாயேத் ஸர்வ விக்நோப
சாந் தயே
இங்கு 'ப்ரஸந்ந வதநம்" விநாயகர் "ஒளி பொருந்திய வதனத்தையுடையவர் " என்ற பொருளைத் தருவதாகும். இச் சங்கல்ப மந்திரங்களின் மூலம் விநாயகரின் தோற்றம் தூய வெண்மையானது என்பது உணர்த்தப்படுகின்றது. வெண்மை தூய்மைக்கும் தெய்வீகத்திற்கும் உரியது. சாத்வீக குணத்திற் குரியது. செய்யும் கருமம் இனிதே நிறைவேற ஒருவனுக்கு பரி பக்குவமான உள்ளம் அவசியமாகும். விநாயகரின் தோற்றம் காரியசித்திக்கேற்ற பரிபக்குவ மனநிலையைத் தரவல்லது. வெள்ளை வஸ்திரத்தைத் தரித்தவர் கக்லாம்பரதரம்" என்ற தொடரா லும் "முழுமதி வர்ணம் உடையவர்' என்பது "சசிவர்ணம்' என்ற தொடராலும் உணர்த்தப்படுகின்றன.
விநாயகர் அம்பிகைக்கு அருள் புரிந்த தெய்வீக வரலாறும் குறிப்பிடத்தக்கது. பூரீ லலிதா பரமேஸ்வரி பண்டாசுரனை அழிக் கச் சென்றவேளை அவ்வசுரன் விக்நயந்திரத்தை உபயோகிக்க அவளது படைகள் செயலிழந்தபோது, பூரீ லலிதா பரமேஸ்வரி சொரூப லக்கண நிலையில் சிவரூபமாகிய விநாயகரை வணங்கி அவனருளால் விக்நயந்திராஸ்திரம் பிளக்கப்பட்டு புதுத்தெம் புடன் கூடிய படைகளுடன் அசுரனை அழித்தருளினுள். இதனை பூரீ லலிதா சகஸ்ரநாமம்’ ‘மகாகணேச நிர்பின்ன விக்நயந்திர பிரஹர்ஷிதாயை" 5 எனச் சிறப்பித்துக் கூறும்,
விநாயகருக்கு வழங்கப்படும் பல பெயர்கள் அடியவர்களின் இடர்போக்கும் நிலையைக் குறிப்பதாகவே அமைகின்றன. தம்மை மெய்யன்போடு வழிபடுவோக்ருகு வரும் இடையூறுகளைப் போக்கு வதற்கும் அவ்வாறு வழிபடாவருக்கு இடையூறுகளை ஆக்குவதற் கும் வல்லவராதலின் "விக்கின ராஜர்; விக்கிநேசுவரர்" என்றும்
17

Page 14
சணங்களுக்குத் தலவராதலின் 'கணேசன்", கணபதி", "கணுத்தி யட்சன்', 'கனநாயகன்" என்றும் நெற்றியில் பிறை சூடியதை யினுல் பாலச்சந்திரன்' என்றும் ஓங்கார வடிவினனஞனமையால் கஜானனன்' என்றும் மாயாமலத்தையடக்கி ஆள்பவராதலின் மாயையின் வடிவமான மூஷிகத்தை ஊர்தியாக உருவகித்து "மூஷிகவாகனன்' 'ஆகுவாகனன் என்றும் போற்றப்படுகின்றர். விநாயகப் பெருமானிடம் எவருக்குச் சிறந்த பக்தி அமைகின் றதோ அவர் தானே ஒரு களமாக அமைகின்றர். முக்தி பெற்ற சீவனுகின்றர் என்பது கருத்தாகும். "விபக்தி" இங்கு சிறந்த பக்தி யைக் குறிக்கும். எனவே விநாயகரை வழிபட்டால் சிறந்த பக்தி யாகிய "விபத்தி சித்திக்கும் என்பதைப் பின்வரும் சம்ஸ்கிருத அடி கூறுகின்றது. ே விபக்தி பத்திர ஆஸ்தே ஸ்வயமரி நிஷ்டதி லதா கண" இதனுல் விக்னேசுவரரை பக்தியுடன் வழிபடுவதால் ஒட்டும் பயன் கூறப்படுகின்றது.
பரம்பொருளேப் பூசை செய்து வழிபாடு நிகழ்த்தி பயன் பெறுவதில் சிறப்பான சில நடைமுறைகளும் கட்டுப்பாடு களும் ஒழுங்குகளும் உண்டு. இந்த ஒழுங்கு சிறிது தவறினும் சிவநிந்தனேயின் பாற்படவேண்டி நேரிடும். ஆரூல் விநாயகர் வழிபாடு மிகவும் எளிமையானது என்பதுமெய்யன்பு ஒன்றே அவ்வழிபாட்டுக்குப் போதுமானது என்றும் ஒளவையார் வாக்கி லிருந்து தெளிவாகும்.
வாக்குண்டாமி நல்ல மனமுண்டாம் மா மலராள் நோக்குண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாத ந் தப் பாமந் தாரி வார் தமக்கு
பூக்கொண்டு தப்பாமல் தும்பிக்கையான் பாதத்தைச் சாரு தல் வேண்டும். விநாயகர் வழிபாடு எங்கும் பரவியதற்கு இதுவே காரணமாகும். தளபதியை முழுமுதற் கடவுளாக வழிபடும் சமயநெறிக்கு காணபத்தியம் என்று பெயர். இந்நெறி இன்று தனி நெறியாக வளர்ச்சி பெருது விடினும் சைவத்திள் ஒன்றி ஃணந்து முக்கியத்துவம் பெற்று விட்டமை குறிப்பிடத்தக்கது. சைவத்தில் மாத்திரமன்றி வைணவசமயத்தினரும் தங்களது திருக்கோயில்களில் விநாயகரை எழுந்தருளிச் செய்து வழிபட்டு வருகின்றனர், வைணவர்கள் விநாயகரை "தும்பிக்கை ஆழ்வான், எனப் பெயரிட்டு வழிபடுபவர்


Page 15

விநாயகர் புராணம் இவரது தெய்வீகப் பெருமைகளைக் கூறும். கந்தபுராணம் கயமுகனுற்பத்திப் படலத்தாலும் விதா யகர் பெருமை உணரற்பாலது. கயமுக சங்காரத்தினுல் விநாய கருக்கு கயமுகாசுர சங்காரமூர்த்தி என்ற பெயரும் ஏற்படலா யிற்று.
விநாயகரது திருத்தோற்றத்தில் உள்ள தத்துவம் உணரற் பாலது. கயமுக சங்காரத்தின் பொருட்டு முறிக்கப்பட்டதாகிய ஒரு கொம்பை ஏந்தியது. ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்ம லங்களையும் நீக்குபவர் தாம் என்னும் தத்துவத்தை உணர்த்துவதற் கேயாகும். ஆன்மாக்களை அநாதியே பந்தித்த ஆணவமலமாகிய பாஜணயைப் பாசத்தாற் கட்டி, அங்குசத்தாலடக்கி மறைத்தல் என்னும் கிருத்தியத்தைச் செய்பவர் தாம் என்பதை உணர்த்து வதாக அமைவது அவர் பாசம் அங்குசம் ஆகியவற்றை ஏந்திய நிலை. வலது பின் கரம் அங்குசத்தையும் இடது பின் கரம் பாசத்தையும் தாங்கி நிற்பன. ஆணவ ரூபமாகிய கயமுகனை யும் அவனது சேனைகளையும் பாசத்தாலடக்கி, அவன் மலவலி ட்ெடுப் பெருச்சாளி வடிவாக வர நீங்காத ஞானத்தைக் கொடுத்துப் புனிதனக்கி வாகனபாம் பேற்றை அளித்து அருளி யதனல் ஆணவமாகிய யானையை அடக்கி ஆன்மாவிற்கு அருள்பாலி ப்பவர் என்பது இதனல் விளங்கும் 7 அவரது திருவருளினல் தெய் வப்புலமை கைவரப்பெற்றசிறந்தவிநாயக உபாஸகியாகிய ஒளவை பிராட்டியார் விநாயகர்அகவலில் “கோடாயுதத்தாற் கொடுவினை க%ளந்து" எனக் குறிப்பிடுவது இச் செயலையே குறிக்கும் ஒளவை மூதாட்டியின் விநாயகர் அகவல் விநாயகர் பற்றிய உயர்ந்த தத்துவக் கருத்துக் ளை உள்ளடக்கியது. வழிபடும் அடியவர் இடர் களைந்து கைதுக்கி விடுபவர் விநாயகர் என்பதற்கு ஒளவை யாரின் கதைகள் சிறந்த உதாரணங்கள். பிரணவஸ்வரூபியான விநாயகரை புருவ மத்தியில் தியானித்துக் கொண்டு ஒளவை யார் யோகசாஸ்திரம் முழுவதையும் அடக்கியதாகப் பாடிய விநா யகர் அகவல் சிறப்பு வாய்ந்தது அதனைப் பாராயணம் செய் தால் உயர்ந்த ஆத்ம அனுபவம் கிட்டும்.
சேரமான் பெருமான் நாயனரும் சுந்தரமூர்த்தி சுவாமி களும் கைலாசம் புறப்பட்டபோது ஒளவையாரையும் உடன் அழைத்துப் போக எண்ணி, அவரை அவசரத்துடன் அழைத்த போது ‘விநாயகர் பூசையே எனக்கு சுைலாசம்" என்று கூறி அவர்களைப் போகும்படி கூறி சாங்கோபாங்கமாகப் பூசைசெய்து முடித்தார். பூசை முடிவில் பிள்ளையார் பிரசன்னமாகி அவளை அப்படியே தமது தும்பிக்கையாற் தூக்கி கைலாசத்திற் சேர்க்க
19

Page 16
மந்தரரும் சேரமான் பெருமாளும் அவளுக்குப் பின்னரே கைலா சம் அடைந்தனர். அங்கே இருவரும் ஆச்சரியமுற்று ஒளவையை வணங்கியதோடு அந்நிலையருளிய விநாயகப் பெருமானது திறத் தையும் வியந்து போற்றி வணங்கினர்.
திருவெண்ணெய் நல்லூர்ச் சிவாலயத்திற் சுயம்பு மூர்த்தி யாய் எழுந்தருளியிருக்கும் பொல்லாப்பிள்ளையாருடைய 8 திருச் சந்நிதியிலே வேத சிவாகமப் பொருளையுணர்த்தும் சிவஞான போதத்தைத் தெளிந்து நிட்டை கூடியும் வருங்காலத்து அப் பொல்லாப்பிள்ளையார் மெய்கண்ட தேவருக்குச் சூர்ணிகையைச் 9 செவியறிவுறுத்தருளிய அற்புதம் ஈண்டு குறிப்பிடப்பாலது. இது பிள்ளையாரின் பரமாச்சாரிய மூர்த்தி நிலையைச் சுட்டும், 10
நம்பியாண்டார் நம்பிக்குத் திருமுறையிருக்குமிடம் தெரிந் தருளினமையின் திருநாரையூர்ப் பொல்லாப்பிள்ளையார் திருமுறை கண்ட பிள்ளையார் என்னுந் திருநாமம் வழங்கப் பெறலாயிற்று. 11 விஷ்ணுவினது பாஞ்சசன்னிய சங்கைப் பெற்றுக் கொடுத்த வர லாறு காஞ்சிபுராணம் வலம்புரி விநாயகப் படலத்தில் உள்ளது. விநாயகர் மகாபாரதம் எழுதி அருளியது. விகடசக்கர விநாயகர் அகத்தியருக்கு அனுக்கிரகித்த விநாயகர் போன்ற வரலாறுகள் அவரது பரத்துவத்துக்குச் சிறந்த உதாரணங்கள்.
இந்தியாவில் விநாயகர் வழிபாடு
இந்தியாவில் விநாயகர் வழிபாடு பரந்து காணப்படுகிறது. இவ்வழிபாடு சிறப்படையும் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு பெயருடன் தல மகத்துவத்துடன் திகழ்கின்றர். தமிழகத்தில் பிள்ளையாருக்கு எழுந்த மிகப் பழைமையான கோயில்களுள் பிள் ளையார்பட்டி என்னு ந் த லம் குறிப்பிடத்தக்கது: இங்கு கற்பக விநாயகராக விளங்குகின்றர். விநாயகரது துதிக்கை பெரும்பாலும் இடப்புறமாக வளைந்திருப்பது மரபு. ஆனல் தஞ்சை மாவட்டத்தில் உள்ள சுவாமிமலை என்னுந் தலத்திற்கு அருகில் திருவலஞ்சுழி என்ற இடத்தில் வலப்பக்கமாகத் துதிக்கை வளைந்த நிலையிற் காட்சி தருகின்றர். சாதாரண கடலை அளவு உள்ள பிள்ளையார் ஹம்பி என்ற இடத்திற் காணப்படுகிருர், சிவனது வடிவங்களில் இசை, நடனம் ஆகிய கலையம்சங்களைப் பிரதிபலிக்கும் வடிவங்கள் காணப்படுவது போல விநாயகரும் இச்சிறப்பம்சங்களுடன் விளங்குகின்றர். பவானி என்ற இடத் தில் கலைமகளைப் போன்று கையில் வீஃண கொண்டும் பாடல் பெற்ற தலமாகிய ஆந்திரமாநிலத்தில் உள்ளதிருப்பருப்பதம் என்ற இடத்தில் குழலூதும் நிலையில் விளங்குகின்றர். அம்பிகைக்குரிய
20

வாகனமாகிய சிங்கத்தின் மீதும் அமர்ந்த நிலையில் பஞ்சமுகங்க ளுடன் கூடியவராக திருவெற்றியூர் என்ற இடத்திலுள்ள கோயி லில் காணப்படுகின்றர் மகாராஷ்விரத்தில் மார்க்கோவன் என்ற இடத்தில் அஷ்ட விநாயகராகத் தோற்றம் தருகிருர், அம்மை அப்பரை வலம் வந்து மாம்பழம் பெற்ற ஜதீகத்தைக் குறிக்கும் நிலையில் வடஆர்க்காடு திருவலம் என்ற இடத்தில் வலம் வந்த விநாயகராக உள்ளார். திருச்சிராப்பள்ளியில் மலைமீது அமர்ந்த உச்சிப் பிள்ளையாராகக் காட்சி தருகின்ருர், முத்தித் தலமாகிய காளஹஸ்தியில் பஞ்சசக்தி விநாயகராக ஆராதிக்கப்படுகின்றர். காசியம்பதியில் தூண்டி விநாயகராகவும் விளங்குகின்ருர். திருச் செங்காட்டாங் குடியில் உள்ள கணபதீச்சுரத்தில் சிவனை வழி படும் கிறப்பில் போற்றப்படுகின்ருர். இத்தகைய தெய்வீகப் பொலிவு பெற்ற விநாயகருக்கு எண்ணற்ற சிறப்புப் பெயர்கள் உண்டு. 13 விநாயகருக்குள்ள பதினறு வடிவங்களில் சோடஷ கணபதியாகச் சிறப்புப் பெறுகின்றர்.
தமிழ் நாட்டில் விநாயகர் பிரம்மச்சாரியாக விளங்க வட நாட்டில் தேவியரோடு வழிபடப்படுகின்ருர் . நோபாளத்தில் பெண்கள் சணவரையடையும் நேக்கில் செவ்வாய்க்கிழமைகளில் கணேச விரதம் அனுட்டிப்பர். நேபாளத்தில் சூர்ய விநாயகர் சந்திர விநாயகர், அசோக விநாயகர், சித்தி விநாயகர் போன்ற பெயர்கள் குறிப்பிடத்தக்கன, நேபாளத்தில் விநாயகர் வணக் கத்தைக் குறிக்கும் வரிகளில் “நமோ பகவதே ஆர்ய கணபதி ஹ்ருதயாய' என்பது குறிப்பிடத்தக்கது. விநாயகர் வழிபாடு தென் கிழக்காசிய நாடுகளிலும் பரந்து விரிந்தது.
இத்தகைய சிறந்த தெய்விக மகிமை பொருந்திய விநாய கர் வழிபாடு இலங்கையிலும் நன்கு பரவி விளங்குகின்றது. இலங் கையில் ஊருக்கு ஒரு விநாயகர் கோவில் இல்லாமலில்லை. யாழ்ப் பாணத்தில் விநாயகர் ஆலயங்கள் மிகுந்து காணப்படுகின்றன. ஆவணிச் சதுர்த்தி, பிள்ளையார் கதைபடிக்கும் நாட்கள் விநாய கரது வழிபாட்டுக்கு உகந்த நாட்களாக விளங்குகின்றன. இக் காலங்களில் சைவப் பெருமக்கள் விநாயகரை பக்தி பூர்வமாக வழிபாடு செய்து மனநிறைவு பெறுவர். மாதந்தோறும் வரும் சதுர்த்தி தினத்தில் விநாயகர் ஆலயங்களில் விசேட அபிஷேகம் உற்சவம் நடைபெறுவதுண்டு. சித்திரைப் புதுவருடப்பிறப்பில் ஒருசில விநாயகர் ஆலயங்களில் தேர்த்திருவிழா நடைபெறு கின்றன.
2

Page 17
வண்ணே நகர்ச் சிறப்பு:
வண்ணே வாழ் சைவப் பெருமக்கம் விநாயர் வழிபாட்டில் ஆழ்ந்த நம்பிக்கையுள்ளவர்கள் என்பதை இப்பிரதேசத்தில் உள்ள எண்ணற்றவிநாயகர் ஆலயங்களின்மூலம் நாம் உணரமுடி கின்றது. வண்ணுர்பண்ணே ஒரு தெய்வீக நகரம் எனப் போற்றத்தக்க வகையில் பிள்:ளயார் கோவில்கள் எங்ங்ணும் சூழ விளங்குகின் றன வண்ணே நகர் 'பிள்ளையார் நகர்" எனப் போற்றத்தக்க சிறப்புடன் மிளிர்கின்றது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் விநாயகர் நாமங்களுடன் விளங்குவது போன்று வண்ணுர்பண் னேயிலும் பல்வேறு நாமங்களுடன் விநாயகர் கோயில்கள் சிறந்து விளங்குகின்றன.
ஐயனுர் கோவிலடியிலுள்ள பூரீ விசுவேசப் பிள்ளே பார் கோவில், கடைத்தெருப் பிள்ளையார் கோவில், பன்றிக்கோட்டுப் பிள்ஜாயார் கோயில் எனச் சிறப்பிக்கப்படும் வண்ணே பூரீ விசுவ ஜிங்க பகா கணபதி கோயில், அரசடி விநாயகர் கோவில், சாந் தையர்மடம் பூரீ கற்பக விநாயகர் ஆலயம், இதற்கு அண்மையி உள்ள கீரிப்பிள்ளே யார் கோவில் என அழைக்கப்படும் அங்குசப் பாச விநாயகர் ஆலயம், கலட்டி கற்பக விநாயகர் கோயில், கொண்டலடிப் பிள்ளையார் கோவில் போன்ற விநாயகர் ஆலயங்களுக்கு மத்தியில் சிறந்து விளங்குவதே காட்டுத்துறை பூரீ அம்பலவாண விநாயகர் கோயிலாகும். வண்ணுர்பண்ணேயில் நாவலர் காலத்தில் பிரசித்தி பெற்ற வைத்தீசுவரன் கோவிலும் மற்றும் வண்ணே வேங்கடேசச் பெருமாள் கோவில், பூரீ ஹரிஹர புத்திர ஐயனூர் கோவில், அருள்மிகு சர்வ சக்தி பூஜி மங்களமகா ாளியம்பாள் கோவில் போன்ற ஏனேய கோயில்களும் இந்தக ருக்குத் தெய்வீக பொலிவைத் தந்து கொண்டிருக்கின்றன. காட் டுத்தறை விநாயகர் ஆலயச் சூழலில் நாம் காணும் பிறிதோர் சிறப்பம்சம் யாதெனில் இவ்வாலயத்தின் முன்பாக பூர் கருணுகர வைரவர் சுவாமி கோவிலும் பகவதி மாரியம்மன் கோவிலும் அமைந்து இவ்விடம் ஒரு புனித இடமாக திகழச் செய்கின்றன. பகவதி மாரியம்மன் ஆலயத்தில் உள்ள நடராசப் பெருமானுக்கு ஆனி உத்தரத்தில் விசேட அபிஷேக ஆராதனைகள் நிகழ்வதுண்டு.
சென்ற நூற்ருண்டில் வண்ணுர்பண்ணே நகரம் சைவ பண்பாட்டு வளர்ச்சிக்குக் கேந்திர நிலையமாக விளங்கியது. இங்கு தான் நாவலரின் சமயப்பணி, கல்விப்பணி, பிரசங்கம், மற்றும் அச்சுப்பணி போன்றவை சிறப்படைந்தன. நாவலர் பாடசாலே மற்றும் அவரது சிந்தனையில் உருவாகிய யாழ்ப்பாணம் இந்துக்
2.

.
器
曬獸

Page 18

கல்லூரி போன்றவையும் இங்கு அமைந்துள்ளன. நாவலரின் சம யச் சிந்தனைகளுக்குச் செயல் வடிவம் கொடுக்கவும் சைவப் பாரம் பரியத்தினைப் பேணிப் பாதுகாக்கவும் உருவாகிய சைவ பரிபா லணசபை மற்றும் இந்துசாதனம் பத்திரிகை, சமய நூல்கள் ஆகிய வற்றை அச்சிட்டு வெளியிடும் சைவப்பிரகாச அச்சியந்திரசாலை போன்றவை இவ்வாலயம் அமைந்துள்ள இடத்திற்கு அருகில் அமைந்து சைவப் பாரம்பரியத்தைப் பேணிப் பாதுகாத்து வருகின் றன, இங்குதான் சிவதொண்டன் நிலையம் போன்ற சமய நிறு வனங்களும் உள்ளன. இத்தகையதொரு சிறந்த சமயச் சூழலில் இவ்வாலயம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது சிறப்பாக இந்து சாதனம் என்ற பத்திரிகை இக்கோயில் வளர்ச்சி பற்றி அறியக் கூடிய பல செய்திகளை காலத்துக்குக் காலம் வெளியிட்டு வந்தள் ளமை இங்கு குறிப்பிடுதல் பொருத்தமாகும்.
கோயில் சூழல்
பூரீ அம்பலவாண விக்கிநேஸ்வர பிள்ளையார் கோயில் கொண்டெழுந்தருளியுள்ள இடம் காட்டுத்தறை என வழங்கப் பட்டது. நிலத்தின் இயற்கை வளத்தைக் குறிப்பதற்கு இத்த கைய பெயர்கள் வழக்கில் இருந்துள்ளன. என ஊகிக்க முடி கின்றது. இப் பிரதேசத்தையடுத்து, சிப்பித்தறை, மணற்தறை போன்ற பெயர்களையுடைய இடங்களும் குறிப்பிடத்தக்கன. காட்டுத்தறை என்ற பெயர் சில சமயங்களில் காட்டுத்துறை என்று மருவியது. ஆதியில் காடுகள் சூழவுள்ள இடத்தில்தான் இவ்வாலயம் தோன்றியிருக்க வேண்டும். கெய்வங்களின் உறை விடங்கள் பற்றி பழைமை வாய்ந்த நூல்களில் ஒன்ருய பிருகத் சம்ஹிதை கூறும் கருத்தும் சிந்தனைக்குரியது. சோலைகள், ஆறு கள், மலைகள், பூங்காக்கள் முதலிய இடங்களில் தேவர்கள் உறை கிருர்கள்" என அந்நூல் கூறும். தெய்வீகம் உறையுமிடம் சிறந்த காகவும், அமைதியாகவும் இருப்பது அவசியமாகையால் இத்த கைய இயற்கைச் சிறப்பு வாய்ந்த இடங்கள் முக்கியத்துவம் பெற்றன. அதற்கேற்ப இக்கோயிலும் காடுசூழ் பிரதேசத்தில் தோன்றியிருக்கலாம் எனக் கொள்வதிற் தவறில்லை.
தலவரலாறு
விநாயகப் பெருமான் மீது ஆழ்ந்த பக்தி கொண்ட முன் வர்களால் குல தெய்வமாக வைத்து வழிபடும் நோக்கில் எழுந் ததே இவ்வாலயம். வண்ணை வடமேற்கில் ஓடை ஒழுங்கையில்
அமைந்துள்ள இவ்வவாலயம் பொன்னிறப் பணிக்கனேடைப்
2

Page 19
Girčantu jitř கோவில் என்னும் பூரீ அம்பலவாண விக்கினேஸ்வர பிள்ளையார் கோவில் என்றும் காட்டுத்துறை ஆனந்த விநாயகர் கோவில் என்றும் பல பெயர்களைப் பெற்றுச் சிறப்படைந்தது. விநாயகர் மீது பாடப்பெற்ற திருஉஊஞ்சல் 'ஆனந்த விநாயகர்" என்று குறிப்பிடுவதால் இப்பெயர் சிறப்படைய ஊஞ்சற்பதிகங் கள் காரணமாக இருக்கலாம். குலதெய்வ வழிபாடாகத் தொடங் கியபடியால் சிறு குடிசை போன்ற கொட்டகையே இவ்வாலயத் தின் ஆரம்பநிலை.
கி. பி. 1892ம் ஆண்டில் யாழ்ப்பாண அரசாங்க அதிப ரால் கோயில்கள் பற்றிய பதிவு இடாப்பு தயாரிக்கப்பட்டபோது பன்னிரண்டாம் பக்கத்தில் இக்கோயில் பற்றிய குறிப்பு இடம் பெற்றுள்ளது. இங்கு காட்டுத்துறை பிள்ளையார் கோவில் என்ற தலைப்பில் இக்கோயில் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கோயில் அமைந்த காணியின் பெயர் பொன்னிறப் பணிக்கனேடை என் பதாகும். எனவே இதனைக் கொண்டே இவ்வாலயத்தின் பெயர் களில் ஒன்று அமைந்தமை குறிப்பிடத்தக்கது. இக்கோவிலின் தொடக்கம் கி. பி. 1856ம் வருடமெனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மூத்ததம்பி சோமநாதர் என்பவரால் கற்களாலும் ஒலைகளின லும் இக் கோயில் அமைக்கப்பட்டதாக அறிய முடிகின்றது. இதன் முகாமையாளராக சங்கரப்பிள்ளை சரவணமுத்து என்பவ ருடைய பெயர் தரப்பட்டுள்ளது இங்கு விழாக்கள் எதுவும் ஆரம்பத்தில் இல்லை. இருநேரப் பூசைகள் மாத்திரமே நடை பெற்று வந்தன. 14 இக்குறிப்பை அடிப்படையாகக் கொண்டு பார்க்குமிடத்து இவ்வாலயம் நாவலர் காலத்திலேயே தோற்றம் பெற்று விட்டதெனக் கூறலாம்;
கோவில் அறங்காவலர்களும் திருப்பணியும்
திரு. மூத்தம்பி சோமநாதர் என்பவரும் திரு. சங்கரப் பிள்ளை சரவணமுத்து என்பவர்களுமே இக்கோயில் ஆரம்ப கர்த் தாக்கள் ஆவர்.
திரு. மூத்தம்பி சோமநாதர் என்பவர் விநாயகப் பெருமான் மீது கொண்ட அளவற்ற பக்தியினலும் இக் கோயிலின் வளர்ச் சியில் கொண்டிருந்த ஈடுபாட்டின் காரமாகவும் 1880ம் ஆண்டு பெருந்தொகையான அசைவுள்ள அசைவற்ற ஆதனங்களைக் கோவிலுக்கு வழங்கியதோடு பூரீ அம்பலவாண விக்கிநேஸ்வர பிள்ளையாருக்குரிய இக் கோயிலை பெரிதாகக் கட்டி முடித்தார். என்பதை 1067 இலக்க உறுதியின்படி அறிய முடிகின்றது
24

இக்காலத்தில் கோயில் முகாமையாளராக இருந்தவரும் வேரே யாவர் இக் கோயிலின் வளர்ச்சிக்கென இதன் சுற்ருடலில் சுமார் 24 பரப்புக் காணியினைத் தர்மசாதனஞ் செய்துள்ளார் எனவும் உறுதி கூறுகின்றது இதனை விட இக் கோயிலுச்குரிய ஆதனங் களாக காங்கேசன்துறை வீதியில் 460ம் இலக்கத்திலுள்ள 3 பரப்பு காணி கட்டிடங்களும், ஐயனர் கோவில் வீதியில் சுமார் 15 பரப்புக் காணியும் உள்ளன. ஆரம்ப நாட்களில் இக் கோயிலின் சுற்றுப்பிரகாரத்தில் கேணி ஒன்று இருந்ததாகவும் அறிய முடி கின்றது,
அறங்காவலர்களாகப் பின்னர் இக் கோயிலைப் பரிபாலித் தவர்கள் நாவக்குழியூர் திரு. சோமலிங்கம் என்பரும் கொக்கு வில் திரு. சின்னையா என்பவர்களுமாவர். தமது மூதாதையர் களைப் போலவே இவர்களும் விநாயகர் மீது கொண்ட பக்தி காரணமாக இக் கோவில் வளர்ச்சியில் ஆர்வம் காட்டின. எனவே இவர்கள் தத்தம் காலங்களில் கோயில் புனருதாரணப் பணிகளைச் சிறப்பாகச் செய்து வந்தனர்.
ஆலயத் திருப்பணி சிறந்த சிவ புண்ணியச் செயலாகும்: இவபுண்ணிறத் தெளிவு என்ற நூல் இதனைச் சிறப்பித்துக் கூறும். இவ்விடயம் பற்றி நாவலரது சிந்தனைகளையும் இங்கு குறிப்பிடத் தகும். நாவலர் திருக்கோயில் உரியபடி பேணப்படுவதும் பரிபா விக்கப்படுவதும் அவசியம் என்பதை நன்குணர்ந்ததன் Uu (G) uit இதனைத் தமது பிரசங்கங்களில் வற்புறுத்தி வந்தார். தமிழகத்தில் உள்ள சிவத்தலங்கள் கிலமாயிருத்தலால் அவற்றை புனர்நிர்மா ணம் செய்தல் வேண்டும் என்ற நோக்கில் நிறுவப்பட்ட பதி புண்ணிய பரிபாலன சபையில் தலைவராக வீற்றிருந்து நிகழ்த்திய பிரசங்கங்கள் இங்கு நினைவு கூரற்பாலன. 15 சிவத்தலங்களின் மகிமைகளையும் சிறப்புக்களையும் எடுத்துக் கூறிய இப் பிரசங்கத்தில்
'சைவசமயிகளாகிய நாமெல்லாம் அந்தச் சிவஸ்தலங்களை விதிப்படி சிரத்தையோடு வழிபடுதலும் அவைகளுள்ளே கிலமா யினவைகளை ஜீர்ணுேத்தாரணஞ் செய்தலும் நித்திய பூசை இல் த ஸ்தலங்களிலே நித்தியபூசை முதலியன நடத்துவித்தலுமே உத்தமோத்தம சிவபுண்ணியங்கள். திருக்கோயின் முதலியவை அழிந்தால் அவைகளை முன்போலச் செய்தவர் பெறும்பயன் அவை 2ள முன் செய்தவர் பெற்ற பயனிலும் ஆயிரமடங்கதிகமாகும். இருக்கோயில் முதலியவைகளிலே ஒருறுப்புக்கிலமாயின் அதனை முன்போலச் செய்தவர் பெறும் பயன் முன் செய்தவர் பெற்ற பயனிலும் நூறுமடங்கதிகமாகும்"
25

Page 20
என்பதனப் பிரமானங்கள் கொண்டு எடுத்துக் காட்டி யுள்ளார். சிவாலயங்களிலே நித்தியபூசை முதலியவை காலந் தோறும் தவருமல் சிரத்தையோடு விதிப்படி செய்யப்படுதல் பற்றி எடுத்துக் கூறி, அதனுல் விளேயும் நன்மைகள் பற்றியும் அவ்வாறு நடைபெறுதுவிடின் ஏற்படும் தீமைகள் பற்றியும் தெளிவுபட எடுத்துக் கூறியுள்ளிTர்.
திருக்கோயில்பற்றி நாவலர் எடுத்துரைத்த இத்த கைய சிறப்பான கருத்துக்கள் எம்மவரின் சிந்தனேகளேத் தூண்டி யிருக்குமென்பதில் ஐயமில்ல. இத்தீனிசிய சிறந்ததொரு சைவப் பாரம்பரியத்தை நெகிழ விடாது கட்டிக்காக்கும் பெரும் பணி பில் தம்மை ஈடுபடுத்திக் இரண்டவர்கள் நாவற்குழியூர் திரு. சோமசுந்தரம் சடாட்சரம் அவர்ாளும் திரு. சின் இரபா அவர்க குருமாவர். இவர்களது திருப்பனிக் கைங்க்ரியத்தினுல் ஆலயம் பெருப்பிக்கப்பட்டு ஸ்தூபி என்பன புதிதாக நிர்மாணிக்கப்பட் டன. வெளி மண்டபம் திரு சின்னேய" அவர்களால் பெரிதா சுக்கட்டப்பட்டது. இத்தகைய புதுப்பொலிவு பெற்ற இக்கோயில் கும்பாபிஷேகம் 1953ம் ஆண்டு_சிறப்பாக நடைபெற்றது. இது 1ற்றி இந்துசாதனம் 10.753 திகதியிட்ட இதழில் பின்வரும் செய்தியை வெளியிட்டது.
"வண்ணுர்பண்ணை மேற்கில் உள்ள காட்டுத்துறைப் பிள்ளை பார் கோயில் எனந்படும் புராதன ஆலயம் சில காலமாகக் கிலமுற்றிருந்தது. இக்கோயிலின் ஆதீன கர்த்தருளொரு வரும், கொழும்பு பிரதான கடின் நிஃபத்திற் கடம்ையாற் றுபவருமாகி திரு. சோமலிங்கம் சடTட்சரம் என்பவர் பல் ரக்கணக்கான ரூபா செலவிட்டு இப் பழைய கோயிலேப் புதுக்குவித்து, கண்டாமரிைக் கோபுரமும் அதன்கண் புதிதாக மணியும் அமைப்பித்து நவமாக உற்சவமூர்த்தியும் அமைத்த பின் சென்ற புதன்கிழமை (8-7-1953) பகல் நிகழ்ந்த சுப முசுர்த்தத்தில் மேற்படி ா உபயமாகச் சம்புரோட்சன கும்பாபிஷேகம் விதிப்படி சிறப்புற நடைபெறலாயிற்று.
இவ்வாலய வரலாற்றில் இக்குறிப்பு முக்கியத்துவமுடை யது. இக்கும்பாபிஷேகம் நிகழ்வதற்கு முன் இவ்வாலயத்தின் இப்போக்கில் ஆங்காங்கு தளர்ச்சி ஏற்பட்டமையும் குறிப் பிடற்பாலது. 1922 - 23 ம் வருடங்களில் வண்ணப் பிரதேசத் தில் உள்ள பல விநாயகர் ஆயங்கள் நித்திய பூசைகள் கிரய மின்றி ஆலயங்கள் அழிவுறும் நிலையில் இருப்பதைப்பற்றி இந்து சாதனம் வெளியிட்ட குறிப்புகளிலிருந்து அறிபு முடிகின்றது. 16
 

(シ』も「J』『噂』ugCシ) posne so gif-fo-ill-i-o "ulog) ‘s go ffgめ『d』『ョ隔』』ョgg g『』ad』『きgs

Page 21

இந்துசாதனம் இக்கோயிலின் நிலைபற்றி மீண்டும் 1951ல் ஆசிரி யர் தலையங்கத்தில் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக் கது. 17 இதனைத் தொடர்ந்து திருப்ப aரிகள் நிறைவேறி திரு ாேமலிங்கம் சடாட்சரத்தின் மு பற்சியினுல் கோயில் புதுக்குவிக் அப்படு 1953ல் கும்பாபிஷேகம் நடந்தமை இக்கோயில் வளர்ச் சியில் ஒரு மைல்கல்லாக அமைகின்றது.
நாவற்குழியைச் சேர்ந்த திரு. சோ. சடாட்சரம் அவர் களும் சுதுமலையைச் சேர்ந்த திரு சி. சரவணமுத்து அவர்களும் தொடர்ந்து இக்கோயில் வளர்ச்சியில் காட்டிய ஈட்டுபாட்டின் பயனுக மேலும் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டன. இக்கோயி லில் வசந்த மண்டபம் ஒன்றில்லாத குறை வெகு நாட்களாக இருந்தது. அத்துடன் மேலும் பல திருப்பணிகள் செய்யப்பட வேண்டியிருந்தமையினல் 1986ம் வருடம் பங்குனி மாதம் பாலஸ் தாபனம் செய்யப்பட்டு திருப்பணி வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன. வசந்தமண்டபம் புதிதாக அமைக்கப்பட்டது, கர்ப்பக்கிருகம் புன ரமைச்கப்பட்டு விமானம் வர்ணம் தீட்டப்பட்டது. அத்துடன் மண்டபங்கள் புனரமைக்கப்பட்டன. கோயிலுக்குரிய பாகசாலை யும் புதுப்பிக்கப்பட்டது.
கோயில் பாலஸ்தாபனம் ஆகி திருப்பணிகள் நடைபெற் றுக் சொண்டிருந்தபோது அறங்காவலர்களில் ஒருவராகிய திரு. ஓ, சரவணமுத்து காலமானர், கோயிலின் வளர்ச்சியில் கண் ணுங் கருத்துமாக இருந்த திரு. சரவணத்து அவர்கள் உயிருடன் இருக்கும் பொழுதே தமக்குப்பின் இவ்வாலயக் கைங்கரியங்களை ஊக்கத்துடன் மேற்கொள்ள வேண்டுமென்ற நோக்கில் தமது மூத்த புதல்வாாகிய திரு. பூரீநிவாசனிடம் பொறுப்பை ஒப்ப டைத்தார். கோயிலில் திருப்பணிகள் நடைபெறும் வேளை தமக்கு வந்த இப்புதிய பொறுப்புக்களை நன்குணர்ந்தவராக திரு. பூரீநி வாசன் செயற்பட்டார். தமது தந்தை விட்டுச் சென்ற பணியை மாக்கத்துடன் செயற்படுத்தினர். இவரது சகோதரர்களும் இவ ரது இம்முயற்சிகளுக்கு பக்கபலமாக விளங்கினர். திரு. சடாட் அரத்தின் மேற்பார்வையில் வசந்தமண்டப வேலைகள் நடை பெற் மன. திரு. பூரீநிவாசன் அவர்களது பொறுப்பில் ஏனைய புனருத் தாரண வேலைகளும் கும்பாபிஷேக ஒழுங்குகளும் நடைபெற்றன.
கும்பாபிஷேகம் இவ்விரு அறங்காவலர்களினதும் அயராத முயற்சியினல் இவ் வாலயத்தின் புனராவர்த்தன அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் உரிய காலத்தில் நிறைவேற திருவருள் கைக்கூடியது. volo du
27

Page 22
வருடம் ஆவணி மாதம் 4 ம் திகதி 20.08.1986) புதன்கிழமை கர்மாரம்பமாகி ஆவணி மாதம் 8 ம் திகதி (24-08-1986) ஞாயிற்றுக்கிழமை எம் பெருமானுக்கு அடியவர்களின் " அரோ ஹரா கோஷத்துடன் மகாகும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக நிகழ்ந்தது. கோப்பாய் வெள்ளெருவைப் பிள்ளையார் தேவள் தானத்தின் பிரதம குரு பிரம்மபுரீ நீ. சச்சிதானந்தேஸ்வரக் குருக்கள் தலைமையில் ஏனேய குருமார்களின் துனேயுடன் கும்பா பிஷேக வைபவங்கள் இனிதே நடந்தேறின. இக்கும்பிஷேகத்தை தடாத்தி வைத்த பிரதம குருக்களின் தந்தையாராகிய பிரம்மரு நீலகண்டக் குருக்கள் தலேமையில் 193 ம் வருடக் கும்பாபிஷே ஆம் நிகழ்ந்தமை ஈண்டு நினேவுகூரற் பொருத்தமாகும்.
பெருஞ்சாந்தி எனப் போற்றப்படும் இக்கும்பாபிஷேகத் தைத் தொடர்ந்து இக் கோயில் மேலும் பல வழிகளில் முன் னேற்றுவதற்கு அறங்காவலர்கள் ஆர்வங் கொண்டனர். திரு. _சரம் அவர்கள் தமது தள்ளாத முதுமைப் பிராயத்திலும் இக் கோயில் சர்ச்சியில் காட்டும் ஊக்கம் ஏனய அறங்கிTவ லர்களுக்கும் ஒரு முன்மாதிரியாக அமைகின்றது எனக் கூறின் இகையில்லே. இவ்வாலயத்தில் கொடியேற்றி தேரில் விநாயகிப் பெருமான் பவனிவர வேண்டும் என்ற பெரு விருப்பம் திரு. டாட்சரம் அவர்களுக்கு ஏற்பட்டது எம் பெருமானின் திருவ ருளே முன் வைத்து மிக சொற்பமான நிதியைக் கொண்டு அதற் குரிய பூர்வTங்க வேஐகளே ஆரம்பித்தார். தேரொன்றினே அமைக்கும் வேலே இவரது மேற்பார்வையில் நடை பெற்றது. இது கட்டுத் தேராசு உருவாயிற்று.
கோயிலிலும் யாகசாலே, சண்டேசுவரர் சந்நிதானம், பைர வர் சந்நிதானம், கொடிமரம் ஆகிய ஆயத்தங்கள் மேற் கொள் ாப்பட்டன. யாகசாலே, சண்டேசுரர் கோயில், பைரவர் கோயில் ஆகியவை நிர்மாணிப்பதில் திரு. பூரீநிவாசன் அவர்கள் மேற் பார்வை செய்து வந்தார். திரு. சடாட்சரத்தின் பெரு விருப் பம் நிறைவேற எல்லா வழிகளிலும் அவருக்கு ஒத்தாசை புரிந்து பக்கபலமாக விளங்கினர். வாகன சாவேயை இவர் தமது நேரடிக் கண்காணிப்பில் உருவாக்கினர். திரு. சடாட்சரத்தின் புதல்வர் திரு. ச. சோமலிங்கம் குமார் என்பவரும் தந்தையின் திருக் கோயிற் பணிகளுக்குப் பக்கபலமாக விளங்கினூர், தந்தையின் சார்பில் கோயில் திருப்பணிகளைக் கவனித்தும் வந்தார். இதன் பலனுட் சண்டேசுரர் பைரவர் ஆகிய பரிவார மூர்த்திகளுக்குரிய பிரதிஷ்டை விபவ வருடம் ஆனி மாதம் 17 ம் திகதி 01-07-1988) வெள்ளிக்கிழரை பிரம்மறி : ரச்சிதானந்தேஸ்வரக் குருக்கள் அவர்கள் தலமையில் விரிப்ட்' நிகழ்ந்தது.

அறங்காவலர்களில் ஒருவராகிய
சுதுமலே திரு. சி. சரவணமுத்து அவர்கள்

Page 23

முதன் முறையாகக் கொடியேற்றமும் தேர்த்திருவிழாவும்
இக்கோயிலின் முதற் கும்பாபிஷேகம் ஆனி மாத ரோகிண் நட்சத்திரத்தில் நிகழ்ந்தது. அதனை அந்தமாகக் கொண்டு இக் கோயிலின் கொடியேற்றம், தேர் தீர்த்தம் என்பன நடைபெற வேண்டுமென்பது அறங்காவலரின் விருப்பமாக அமைந்தது.
மகோற்சவத்தின் போது நிகழும் கொடியேற்றம் உயர்ந்த தத்துவப் பொருளை உள்ளடக்கியது. கோயிலில் இறைவனது சந்நிதானத்திற்கு முன் நிறுவப்படும் கொடித்தம்பமே பதி என் றும், கொடிச் சீலையில் நடுநாயகமாக விளங்கும் மூஷகமே இறை வன் திருவருளைப் பெற்ற சீவான்மா என்றும் அதிற்கட்டியிருக் கும் கயிறே திருவருட் சக்தியென்றும் தருப்பைக் கயிறே பாசம் என்றும் கருத்திற் கொள்ளல் வேண்டும். சீவான்மாவைப் பர மான்வாகிய இறைவனிடம் சென்றடைய விடாது தடுத்திருக்கும் பாசமே இறைவன் திருவருள் துணையாகச் சீவான்மா இறைவனை அடைய முயலும்போது விலகிநின்று அதற்குத் துணை செய்கின் றது. ஆன் மா இறைவனை அடைந்தபின் பாசம் மறைந்து விடு கின்றது. ஆனல் ஒரு போதும் அது அழிவதில்லை. இந்த தத்து வத்தை உணர்த்துவதே கொடியேற்றமாகும். ஆ ல யங் களி ல் பெருவிழா செய்தலின் முக்கிய நோக்கமாவது இறைவன் ஆன் மாக்கள் பொருட்டு இடைவிடாது செய்தருளும் ஐம் பெ ரும் தொழிலை மக்களுக்கு நினைவுபடுத்தி அவர்களை இறைவன் திரு வருளுக்கு ஆளாக்குவித்தலாகும். ஐம்பெரும் தொழில்களாவன: படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் மகோற்சவ காலத்தில் இறைவன் தம்பம், பிம்பம், கும்பம் ஆகிய மூன்று நிலைகளிலும் எழுந்தருளி அருள்புரிவான்.
பிரமோற்சவமாகிய தேர்த்திருவிழாவும் உயர்ந்த தத்துவப் பொருளைக் கொண்டது. தேரில் இறைவன் பவனி வருதலைத் தரிசிப்பதற்குப் சிவபுண்ணியப்பேறு வேண்டும். திரிபுர சங்காரத்து உண்மைக் காட்சியை உணர்த்தி ஆணவம், கன்மம், மாயை என் னும் மும்மலங்களை அடக்கி,நம்மை ஈடேற்ற இறைவன் தேரில் ஆரோகணித்து அருள்புரிய திருவுலா வருகின்றன்,
இவ்வாலயத்தின் துவஜரோஹணம் எனப்படும் கொடியேற் றம் முதன் முதலாக விபவ வருடம் ஆனி மாதம் 19ம் நாள் (03-07-1988) ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்தது. இவ்வாலயத்தின் மகா கும்பாபிஷேகத்தை நடாத்தி வைத்த பிரம்மபூரீ நீ. சச்சி
-29

Page 24
தானந்தேஸ்வரக் குருக்கள் அவர்களே கொடியேற்றத்தை நடாத் தும் பிரதம சிவாசாரியாராகக் கடமையாற்றிஞர். கும்பாபி ஷேகம், கொடியேற்றம் ஆகிய இவ் விரு நைமித்தியங்களையும் நடாத்தி வைக்கும் அரிய வாய்ப்பு இருவருக்குக் கிட் டி. ய மை விநாயகப் பெருமானின் திருவருளேயன்றி வேறில்லே.
பத்துத் தினங்சள் உற்சவங்கள் நடைபெற ஏற்பாடாகியது எம்பெருமான் திருவருள் கைகூட, அறங்காவலர்களின் அயராத முயற்சியினுல் எம்பெருமான் தேரில் ஆரோகணித்து திருவீதி யிங் திருவுலாவரும் தெ ப் விசுக் காட்சி ன யக் காணும் பேறு பெற்றுள்ளோம். தேர் க் திரு விழா ஆவணி மாத ம் 27ம திகதி (11-07-1988) திங்க ட் கிழ  ைம நிகழ திருவருள் பாலித்துள்ளது. சாதாரண நிலேயில் இரு நீ தி இக்கோயில் பல்வேறு நிலகளிலும் புதுப்பொலிவு பெற்று கொடி யேற்றம் நிகழ்ந்து தேரில் எம்பெருமான் பவனி வரும் வரை வளர்ச்சிபெற்றுள்ளதை நாம் சிந்திக்கும் பொழுது விநா கப் பெருமானின் திருவருளுக்கு நாம் பாத்திரராகியுள்ளோம் எனக் கூறின் மிகையில்ஃப்.
கோவில் முகாமையாளராகவும் சொந்தக்காரராகவும் அறங் காவலராகவும் தமக்குரிய கடமைகளே உணர்ந்து இவ் வால் ய வளர்ச்சியில் முக்கிய பங்கேற்ற திரு. சோ. சடாட்சரம் அவர் களினதும் திரு. ச. பூரீனிவாசன் அவர்களினதும் தொண்டுகள் இவ்வாலய வரலாற்றில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெறுகின் றன. மேலும் நடைபெறவிருக்கும் இவ்வாலயத் திருப்பணிகள் இவர்களது முயற்சியினுல் நிறைவுபெற விநாயகப் பெருமானின் திருவருள் கிட்டுவதாக,
திருக்கோயிலின் அமைப்பும் மூர்த்திகளும்
இக்கோயில் கிழக்கு நோக்கியதாக அமைந்துள்ளது. கர்ப்பக்சிடு கம் ஆறு அடி நீள அகலங்களேக் கொண்டு அமைந்துள்ளார். ஏறக்குறைய 9 அடி உயரமுள்ள விமானத்தையும் கொண்டுள் ளது. கருங்கற்களேக் கொண்டு கர்ட்பக்கிருகம் நிர்மாணிக்கப்பட் டுள்ளது. அர்த்த மண்டபம், மகா மண்டபம், தம்ப மண்டபம் வசந்த மண்டபம் ஆகியவை இக்கோயிலுக்கு நிறைவைத் தருகின் றன. வசந்த மண்டபம் ஏறக்குறைய நில மட்டத்திலிருந்து 13 அடி உயரமுள்ள விமானத்துடன் விளங்குகின்றது. விமானக்கித் மூன்று துரபிகள் அலங்கரிக்கின்றன. கண் டா மணிக்கோபுரம்
-30

(oooooo sosios) que uns - poogonogae

Page 25
ق
 

:
1. . . Η
33-3
繼 ၊ မှိ
-
3. ங் ...: 攤鷲畿蠶篷,下 |エリ
புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வசந்த மண்டபமீ
(பின்புறத் தோற்றம்)

Page 26

ஏறக்குறைய 20 அடி உயரத்தில் அமைந்துள்ளது. புதிதாக அமைக்கப்பட்ட வசந்த மண்டபம் 11 அடி நீளமும் 9 அடி 6 அங்குல அகலமும் கொண்டதாகும். கோயில் முழுமையான 113 அடி 9 அங்குல நீளமும் 54 அடி 6 அங்குல அகல மும் கொண்டதாகும். வசந்த மண்டபம் மற்றும் வர்ணந்தீட்டுதல் மண்டபங்கள் திருத்தவேலைகள் ஆகியவை அராலியைச் சேர்ந்த சிற்பாசாரியார் திரு. வே சபாநாதன் பொறுப்பில் நடைபெற் றன. யாகசாலை, பைரவர்கோயில், சண்டேசுவரர் கோ யி ல், ஸ்தம்ப பீடம் போன்ற வேலைகள் அராலியை சேர்ந்த திரு. கனகரத்தினம் பொறுப்பில் நடைபெற்றன,
இங்கு எழுந்தருளியுள்ள மூலமூர்த்தியை விநாயகரின் சிலா விக்கிரகம இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்டதாகும். மிகவும் சிறந்த கலையம்சத்துடனும் சிற்ப அமைதியுடனும் இவ்விக்கிரகம் அமைந்துள்ளது. விக்கிரகத்தின் உ ய ர ம் 2 அடியாகும். பீடம் 1 அடி 3 அங்குல உயரமாகும். விநாயகரின் திரு வுரு வத்தின் கீழே மூஷிகத்தின் வடிவம் காணப்படுகின்றது. உற்சவமூர்த்தி 1 அடி 3 அங்குல உயரமாகும். பீடம் ஏறக்குறைய 5 அங்குலங் களாகும். இவ்விக்கிரகம் ஸ்தான நிலையில் உள்ளது. சண்டேசு வரருக்குரிய சிலா விக்கிரகம் இவ்வருடம் புதிதாக உருவாக்கப் பட்டதாகும். பைரவருக்குரிய சந்நிதானம் ம ணிக் கூ ட் டு க் கோபுரத்திற்கருகே யாகசாலைக்கிடையே மூல ஸ் தா ன த் தினை நோக்கியவாறு அமைந்துள்ளது. சந்தான கோபாலரின் திருவுரு வங்களும் மகாமண்டபத்தில் உள்ளன. கொடிமரம் வெள்ளி த் தகடு கொண்டு உருவாக்கப்பட்டு கம்பீரமான தோற்றத்துடன் காட்சியளிக்கின்றது.
கோயிற் கிரியைகளும் வழிபாட்டு மரபும்
இவ்வாலயத்தில் காலையும் மாலையும் இரு நேரப் பூசைகள் நடைபெறுகின்றன. நித்தியக் கிரியைகளின்போது ஏற்படும் குறை களை நிறைவு செய்யும் வகையில் நிகழ்த்தப்படுவனவே நைமித் திக்க கிரியைகளாகும்.
வருடந்தோறும் ஆனி மாதத்தில் வரும் ரோகிணி நட்சத் திரத்தை அந்தமாக வைத்து இவ்வாவயத்தில் அலங்கார உற் சவம் பத்துத் தினங்கள் நடைபெறும். இவ்வாலயத்தின் ஆதி கும்பாபிஷேக தினத்தை இது குறிப்பதாகும். மணவாளக் கோலத் தினைக் குறிக்கும் இத்தினத்தில் அஷ்டோத்தர சத சங் காபி ஷேகம் பகலில் விமரிசையாக நிகழும். மாலையில் விசேட அலங்

Page 27
காரத்துடன் கூடிய விநாயகருக்கு திருவூஞ்சல் நடைபெற்று எம் பெருமான் திருவீதியில் உலாவருதல் கண்கொள்ளாக்காட்சி யாகும். அண்மையில் நடந்த கும்பாபிஷேகத்தையடுத்து மாதந் தோறும் வரும் சதுர்த்தியில் விசேட அபிடேக ஆராதனைகளுடன் விநாயகர் உள்வீதி வலம் வருதலும் நடைபெறுகின்றது. புது வருடப் பிறப்பு. தைப்பொங்கல், தீபாவளி ஆகிய விசேட நாட் களில் விசேடபூசைகள் நடைபெறுவதும் கறிப்பிடத்தக்கது. விநா யக ஷஷ்டியில் பிள்ளையார் கதை படித்தல் சிறப்பம்சமாகும். கந்த புராண படிப்பும் இவ்வாலயத்தில் கிரமமாக நிகழ்ந்து வந்தது.
விநாயகர் மீது இவ்வாலயச் சூழலில் வாழும் மக்கள் பெரும் நம்பிக்கை கொண்டு வழிபாடு நிகழ்த்துவர். வெள்ளிக்கிழமை, செவ்வாய்க்கிழமை ஆகிய தினங்களில் அடியவர்கள் ஆலயத்தில் குழுமுவர் , தாம் செய்யப்போகும் எக்காரியத்திற்கு மு ன் பும் இவ்வாலயம் வந்து விநாயகரை வழிபடுவது மரபு. தமக்கு ஏதா வது குறைகள் ஏற்படின் அல்லது பொருள்கள் தவறும் பட்சத் தில் விநாயகருக்கு நேர்த்தி வைத்தவுடன் அக்குறை நீங்குவதும் தொலைந்த பொருள் உடன் கிடைப்பதும் அடியவர்களின் அனு பவங்களாகும். விநாயகர் அற்புத விநாயகராக அருள் பா லித் துக் கொண்டிருக்கின்றர்.

A. சிவாசாரியர் பரம்பரை
ஆரம்ப காலத்தில் பிள்ளையாருக்குரிய நித்திய பூசைகள் சைவக்குருக்கள் ஒருவரினுலேயே மேற் கொள்ளப்பட்டு வந்ததாக அறியமுடிகின்றது. சிறிது காலத்தின் பின்னர் சீதாபதி ஐயர் ராமசாமி ஐயர் என்பார் இக் கோயிற்பூசைகளை கவனிப்பதற்கு நியமிக் கப்பட்டமை அறங்காவலர் மூலம் தெரியவருகிறது.
ஆலய வளர்ச்சிக்கு கோயிலில் கடமையாற்றும் குருமாரினது பங்களிப்பும் ஈடுபாடும் ஒத்தாசையும் இன்றியமையாததாகும். எனவே சிறிது காலத்தின் பின்னர் பிரம்மபூரீ குமாரசுவாமிக்குருக்கள்(1881-1940) இக்கோயில் நித் தி ய பூசைகளை கவனிப்பதற்குப் பொறுப்பேற்றர். இவ்வாலயத்தோடு தொடர்புடைய ஒரு சிவாசாரிய பரம்பரை உருவாவதற்கு இவர் முன்னுேடியாக விளங்கினர். விநாயகப் பெருமானைக் குருக்களவர்கள் மிகவும் பத்தி சிரத்தையுடன் உபா சனை செய்ததன் பலஞய் இவரது குடும்பம் சீரும் சிறப்பும் பெற்று வளர்ந்தது. இவரது ஏகபுத்திரியா கிய நீலாம்பிகை அம்மாவை எல்லா நலன்களும் வாய்க்கப் பெற்றவராகிய பிரம் மயூரீ இரத்தினசபா பதிக்குருக்களுக்கு மனம் முடித்து வைத்தார். இது நடைபெற்ற அது 1932ம் வருடத்தில் ஆகும். பிரம் மயூரீ குமாரசாமிக்குருக்கள் 1940 ல் காலமானதன் பின் பிரம்ம பூரீ இரத்தினசபாபதிக் குருக்கள் (1909-1983) இவ்வாலயத்தின் சிவாசாரியராகப் பொறுப் பேற்ருர்,
குருக்கள் அவர்கள் 2. டுவிலைப் பிறப்பிடமாக கொண்டவர். தமது இளவயதினிலேயே தமது தந்தை யாகிய பிரம் மயூரீ தியாகராஜக் குருக்களிடம் சமஸ் கிருதம், தமிழ் ஆகிய மொழிகளில் தேர்ச்சி பெற்ற வர். புராணங்களை நன்கு கற்றறிந்தவர். சிறப்பாக பெரியபுராணம், கந்தபுராணம் போன்றவற்றை ஆல யத்தில் படிப்பதில் குருக்கள் கூடிய ஈடுபாடு காட்

Page 28
டிஞர். இப் புராணங்களுக்குப் ப யன் சொல்வதில் சிறந்த தேர்ச்சி பெற்று விளங்கியவர். வித்துவான் கணேசையரிடம் தொல்காப்பியம் போன்ற இலக்கண நூல்களேயும் பழந்தமிழ் இலக்கியங்களையும் கற்றுத் தமிழில் புலமை மிக்கவராகத் திகழ்ந்தார். ஆரிய திராவிட பாஷாபிவிருத்தி சங்கத்தினர் நடாத்தும் பண்டித பரீட்சையில் முதன்மையாகத் தேறிஞர். சிவாகம அனுட்டானங்களை முறையாக மேற்கொண் டவர் குருக்கள் அவர்கள்,18
காட்டுத்தறை பிள்ளே யார் கோவிலோ டு இவர் கொண்ட ஆழ்ந்த ஈடுபாட்டின் காரணமாக "காட்டுத் துறை தம்பிராசாக் குருக்கள்" என்று அண்வராலும் நன்கு அறியப்பட்டவராக விளங்கினர். சைவாக மக் கிரியைக3ளயும் வைதிகக் கிரியைகளேயும் ஆற்றுவதில் வல்லவராக விளங்கிஞர். ஐம்பது வருடங்களாக காட் டுத்தறை பிள்ளே யாருக்கு பணியாற்றுவதில் தம் வாழ் வை இஜனத்துக்கொண்டவர் குரு க் கள் அவர்கள் இக்கோயில் அறங் காவலர்களும் காட்டுத்தறை வட் டாரத்தைச் சேர்ந்த சைவப்பெருமக்களும் குருக்கள் அவர்களின் பூசையில் சிறந்த ஒழுங்கு முறைகள் இருந்ததை அனுபவ பூர்வமாக உணர்ந்தவர்கள். அவர் மீது சிறந்த மதிப்பு கொண்டனர். காலேயும் மாலேயும் நேரத்தவருது பூசைகளே இயற்றுவதில் குருக்கள் அவர்களுக்கு நிகர் யாருமேயில்லே அதிகாலை 5 மணி க்கு ஒவ்வொரு நாளும் பிள்ளே பார் கோவில் மலரி ஓம் ஓம்? என ஒலிக்கும். கோயிற் சூழலே தீ தெய் விகப் பொழிவு பெறச் செய்யும். மாலேயூசை தவருமல் ஐந்து மணிக்கு நடக்கும். நித்திய நைமித்தியங்களே நேரந்தவருமல் திருத்தமாகவும் பக்குவமாகவும் மற் றவர்கள் திருப்தியடைந்து மனநிறைவு பெறும் வகை யிலும் நிறைவேற்றுவதில் வல்லவராக விளங்கினர். இன்றைய இளந்தலேமுறையைச் சார்ந்த சிவாசாரி யர்களுக்கு இவைபோன்றவை சிறந்த முன்மாதிரி யாக அமையக் கூடியன:
 
 

*、猫
醬毒蠱
விளங்கிய அமரர் பிரம்மரீ தி. இரத்தினசபாபதிக் குருக்கள்
量、 羲

Page 29

காட்டுத்தறை பிள்ளையார்கோவிலிலுமீ அற்தகு முன்புறமாக விளங்கும் கருணுகர பைரவர் கோவிலி லும் குருக்கள் கிரமமாக கந்தபுராண படனம் செய்து வந்தார். இவரது கந்தபுராண படனம் பற்றிய செய்தி களை இந்து சாதனம் பத்திரிகை வெளியிட்டு வந்தது இந்து சா த ன மீ பத்திரிகை ஆசிரியராக இருந்த திரு ம. வே. திருஞானசம்பந்தபிள்ளை, கொக்குவில் குமாரசாமிப்புலவர், பிரம்மபூரீ க. வை. ஆத்மநாத சர்மா போன்ற பலர் இவருக்கும் புராணபடனத் தில் உறுதுணையாக விளங்கினர். இவரது சம்பந்தி யாருள் ஒருவராகிய பிரம் மயூரீ க. தியாகராஜக் குருக் கள் அவர்களும் கந்தபுராணம் படிப்பில் குருக்களு க்குச் சிறந்த சகாவாக அமைந்தார். கந்தபுராணத் தின் பெரும் பகுதி குருக்களுக்கு மனப்பாடமாகி இருந்தன. குருக்கள் ஆலயத்தின் நைமித்திகக் கிரி யைகளை நிறைவேற்ற அவரது மருகர் பிரம்மபூரீ தி. நடனசபாபதி சர்மாவும் அவ்வப்போது உதவி வந்தார். குறிப்பாக பத்த திவாசித்தல், திருவூஞ்சலை ராகத்துடன் பாடுதல் போன்ற விடயங்களில் இவர் உதவினர். குருக்களின் சம்பந்தியருள் ஒருவரே வியா கரண சிரோமணி பிரம்மபூரீ தி. கி. சீதாராம சாஸ் திரி அவர்கள். குருக்கள் தமக்கு அவ்வப்போது வைதி கக் கிரியைகள் தொடர்பான ஐ ய ங் கள் ஏற்பட்ட வேளை இவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வதுண்டு. ஏனைய சம்பந்தியராகிய கோப்பாய் பிரம்மபூரீ நீ. சச் சிதானந்தேஸ்வரக் குருக்களும் ந வா லி பிரம்மபூரீ சோ. சண்முகரத்தினக் குருக்களும் இவ்வாலய நைமி த்திகங்களில் குருக்களுக்கு உதவி வந்தனர். இவ் வாறு காட்டுத்தறைப் பிள்ளையார் கோயிலை மத்திய நாடியாகக் கொண்டு குருக்களின் ஒழுக்கமும் ஆசார மும் மிக்க ஆளுமையின் கீழ் ஒரு சிறந்த சிவாசா ரிய வட்டம் இயங்கி வந்தமை குறிப்பிடத்தக்கது. குருக்களின் துணைவியார் நீலாம்பிகை அம்மாவும் கோயிற் காரியங்களுக்கு அவருக்கு உறுதுணையாக விளங்கி வந்தமை குறிப்பிடத்தக்கது,

Page 30
Lily duous sysßsors Lr Lßé GG dischr Sau கள் 1983ல் சிறிது காலம் சுகவீனமுற்று காலமான தையடுத்து அவரது புதல்வர்கள் இக்கோயிற் கைங் கரியங்களை கவனித்து வருகின்றனர் இவரது மூத்த புதல்வர் பிரம்மபூரீ இ. சந்தானகோபாலசர்மா உத் தியோக நிமித்தம் வேறு இடத்தில் இருந்த காலத் தில் பிரம்மபூரீ இ. குமாரசாமி சர்மாவும் அவரது சகோ தரர் பிரம் மயூரீ இ. பகவதீஸ்வர சர்மாவும் சிலகாலம் இக்கோயில் வேலைகளைக் கவனித்து வந்தனர்.
தற்சமயம் பிரம்மபூரீ இ. சந்தான கோபால சர்மாவும் பி ர ம் ம பூரீ குமாரசாமி ச ர் மா வும் இக்கோயிலின் அர்ச்சகர்களாகக் கடமையாற்றி வரு கின்றனர். இவ்வாலயம் புணருத்தாரணம் செய்யப் பட்டு கும்பாபிஷேகம் நடைபெறுதல் வேண்டுமென்ற அவர்களது தந்தையார் கொண்டிருந்த விருப்பத்தை நிறைவேற்றுவதில் இவ்விருவரும் அறங்காவலர்களு க்கு ஒத்தாசைபுரிந்து ஊக்கத்துடன் செயற்பட்ட வர்களாவர் இவ்விருவரும் இக்கோயில் முன்னேற்றத் தில் அதிக ஈடுபாடு உடையவர்கள். இக்கோயில் புனர் நிர்மாணம், கும் பாபிஷேகம் மற்றும் பரிவார மூர்த்தி களின் பிரதிஷ்டை கொடிமரம் நிலைநிறுத்துதல் கொடி யேற்றத்துடன் கூடிய மகோற்சவம், தேர்த்திருவிழா போன்ற காரியங்கள் உரிய காலத்தில் நிறைவேற முன் னின்று செயற்பட்டவர்கள் இவர்கள் இருவருமாவர். விநாயகர் கோவிலுக்கு முன் புறமாக அமைந் துள்ள பகவதியூரீ மாரியம்மன் கோயிலும் பூரீகருணு கர பைரவர் கோயிலும் இவ்வருடம் பாலஸ்தாபனம் செய்யப்பட்டுள்ளன. இவ்விரு கோயில்களும் கூடிய விரைவில் புதுப்பொலிவு பெற்று விளங்கவுள்ளன என் பதும் ஈண்டு குறிப்பிடற்பாலது. இதனைத்தொடர்ந்து காட்டுத்தறை தெய்வீகப் பொலிவுடன் விளங்குமென நாம் நிச்சயமாக நம்பலாம்.
ஆனந்த விநாயகர் திருவூஞ்சல் இவ்வாலய விநாயகர் மீது திருவூஞ்சல் பாடப் பட்டு வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனை இயற்றிவவர் செந்தமிமிச் சிரோமணி கவிஞர்

பண்டித வித்துவான் க. கி. நடராஜன் அவர்களாவர் ஆனந்த விநாயகர் திருவூஞ்சல்" என்ற பெயரில் வெளிவந்துள்ள இப்பாடல்கள் கவிநயமிக்கவை, தெய் வமணங் கமழும் மலர்களாக மிளிர்கின்றன. இதனை வெளியிட்டவர் பிரம்மபூரி தி. இரத்தினசபாபதிக் குகு க்கள் ஆவர். வித்துவான் நடராஜன் சிறந்த கல்வி மான் சமயத்துறையில் ஆழ்ந்த அனுபவமிக்கவர். சமயப்பணிகளில் முற்றுமுழுதாகத் தம்மை ஈடுபடு த்திக் கொண்டவராவர். சிவயோக சுவாமிகள் திருச் சரிதம் பாடியவர். சிவதொண்டன் இதழுக்கும் ஆசி ரியராக விளங்கியவர். சைவத்தையும் தமிழையும் இரு கண்களெனப் போற்றிப் பேணிய வித்துவான் நட ராஜன் இக்கோயிலில் எழுந்தருளி அருள் பாலிக்கும் விநாயகர் மீது பாடிய திருவூஞ்சல் இத்தலவரலாற் றில் இடம்பெற வேண்டியதொன் ருகும்.
இவ்வாறு காட்டுத்தறை பூரீ அம்பலவாண விக் நேஸ்வர பிள்ளையார் ஆலயம் கடந்த ஒன்றரை நூற் ருண்டுகாலமாக இப் டகுதி வாழ் மக்களின் சமய வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்த தொன் ருக வளர் ச் சி பெற்று வந்துள்ளது. அத்தகைய வளர்ச்சியின் உச்சக் கட்டமாக அமைவது எம்பெருமான் இன்று திருத்தேரில் எழுந்தருளி திருவுலா வரும் தெய்விகக் காட்சியாகும். திருத்தேரில் பவனிவரும் எம்பெரு மானை சைவ பாரம்பரியம் சிறக்கவும் இக் கிராம வாழ் மக்களின் வாழ்வு சீரும் சிறப்பும் பெற்று விள ங்கவும் சைவ உலகம் எல்லா நிலைகளிலும் நன்மை பெறவும் திருவருள் பாலிக்கும் வண்ணம் வழிபடு (36u Tuors!
பூரீ அம்பலவாண விக்தேஸ்வரனின் மலர்ப்பாதங்களுக்குச்
Blofru6ðrúb
எம்பெருமானின் திருவருள் எங்கும் பொலிந்து விளங்குவதாகுக.

Page 31
4.
5.
9.
10.
அடிக் குறிப்புகள்
6T cyclis(s) if, 35 in பீபிள்ளையார்சுழியும் சிவமயமும், நவாலியூர் சிந்தாமணிப் பிள்ளையார் கும்பாபிஷேக மலர், 1971, பக், 48
விபரங்களுக்கு பார்க்க: காயத்திரி மந்திரம்
தெளிவான விளக்கமும் உபாசணைவிதியும் கொண் டது) குவி அச்சகம் யாழ்ப்பாணம். 1988
ஈசானம், தற்புருடம், அகோரம், வாமதேவமிக் சத்தியோஜாதம் என்பன ஐந்து முகங்கள். சிவ: னது சதாசிவமூர்த்தத்தில் இவை அடங்குவன.
இருக்கு வேதம் 21 23 1
ரீ லலிதா சஹஸ்ரநாமம்; 78ம் நாமாவளி
சீதாராம சாஸ்திரிகள், தி. கி. "வேதநாயகன் விநாயகன்” நவாலி சிந்தாமணிப்பிள்ளையார் கும் பாபிஷேக மலர். 1971 பக். 28
குமாரசுவாமிக் குருக்கள், விநாயக ப்ரத்துவம் சிவகுமாரன் அச்சகம், அச்சுவேலி, 1934 பக் 19
*பொள்ளார் - பொல்லார்? என மரீஇற்று,உளி முத லியவற்றற் போழ்ந்து செய்யப்படாதவர் என்பது: கருத்து. எனவே சுயம்புமூர்த்தி என்பது பொருள்
*சூர்ணிகை என்பது 色茂Ar முதலியவற்றின் பொருளை இலகுவாகச் சுருங்கிய வசனசமூடிமாயு ரைப்பது எனப் பொருள்படும்
குமாாசுவாமிக் குருக்கள், விநாயக மகத்துவம் Lidi 30 - 31.

11 மேற்படி பக் 32 - 35
1 , அஷ்டவிநாயகர் மயூரேச விநாயகர், சிந்தாமணி
*3.
4.
15.
16.
玮7。
28.
விநாயகர், விக்கினேசுவரர், விநாயகர் வல்லபனே சுவரர், கணபதி, கிரிஜித்மகர் சித்திவிநாயகர்,
பார்க்க நடராஜசிவம், சகல சித்திவிநாயகர், நர் மதாபதிப்பகம் சென்னை 1981, பக். 23 - 25
Jafna Division List ef Templos á P. 12, 1892 Kadduthurai Pillaiyar Kovil Standing on the land called Ponnirapasaikkar odai. In 1856 by Muthathamby Some nathar with stones and thatched. Managers Sangarapillai Saravanamuthu. No festival, Poo sai twice a day.
கனகரத்தின உபாத்தியாயர், ஆறுமுகநாவலர் சரித்திரம் நாவலர் நூற்றண்டு விழாச்சபை வெளி
SGB, uu T’u u Praewr lb. 1968 Ludi. 74 - 93
இந்து சாதனம் - 1922 - 23 "சை வாலயங்களின் நிலைமை” என்ற தலைப்பில் வெளியிட்ட கட்டுரை பார்க்க.
இந்து சாதன மீ - 8-6-1951 - ஆசிரியத் தலையங் கம் .
சோ. சடாட்சரம், "குருக்கள் வாழ்க்கை வரலாறு” பிரம்மபூரீ தி. இரத்தினசபாபதிக் குருக்கள் அவர்க ளின் நினைவு மலர், யாழ்ப்பாணம் 1983 பக் 7-11

Page 32
...N.,
η σύστ வடமேற்கு பொன்னிறப்பணிக்கணுேடை (காட்டுத்தறை) என்னுந் தலத்தில் எழுந்தருளிய
ஆனந்த விநாயகர் திரு ஊஞ்சல் திருச்சிற்றம்பலம் காப்பு வெண்பா
எண்ணிசை சேர் வண்ணை யெழினகர்க்காட் டுத்தறை விண்ணுரா னந்த விநாயகரே!-பண்ணுர்ந்த (வாழ் ஊஞ்சற் பதிகமொன் றுன் மீது பாடுதற்கு வாஞ்சித்தேன் முன்னிற்பாய் வந்து.
திரு ஊஞ்சல் திருவாழத் திருவளரைந் தெழுத்து வாழத்
திருநீறுங் கண்டிகையுஞ் சிறந்து வாழ அருள் சேரும் பெருமக்கள் அன்று தந்த
அரிய திரு முறைகளொடு மறையும் வாழப் பொருள் சேரும் புவிவாழ அடியார் வாழப்
பொருந்து மலர்த் தண்டலைசூழ் வண்ணை தன்னில் அரியதிரு வருட்காட்டுத் தறையில் வாழும்
ஆனந்த விநாயகரே ஆடீ ரூஞ்சல் (5)
ஐந்து திருக் கரங்கள் திருக் கண்கள் மூன்றும்
அழகொழுகத் திகழ்திங்க்ள் அணியா நின்ற சுந்தரச் செவ் வானம் போல் துலங்கும் வேணி
சொல்லும தம் மூன்று பொழி தூய தோற்றம்
 

மைந்து நிறை வேழத்தின் வதனங் கொண்டே
வளமாருஞ் சிவஞரெண் குணமும் வாய்ந்து
அந்தணர்கள் மகிழ்காட்டுத் தறையில் வாழும்
ஆனந்த விநாயகரே ஆடீ ரூஞ்சல் (s-)
மறைநான்கும் வாய்ந்த திருத் தூண்க ளாக வளர் சைவ ஆகமங்கள் விட்ட மகா குறைதவிரெண் ணெண்கலைகள் கயிற தாகக்
கூறுமா றங்கமவை பலகை யாக நிறைசேருமி பிரணவமே பீட மாக
நிகரில்லா அழகொழுகும் ஊஞ்சல் மீதே அறை தருநல் வளக்காட்டுத் தறையில் வாழும்
ஆனந்த விநாயகரே! ஆடீ ரூஞ்சல், (3)
சடைகாட்டுந் தண்ணளிசேர் திங்க ளாட
தாட்டுணையிற் கழலாடச் சதங்கை யாட மடை காட்டுங் கருணைபொழி வதனம் ஆட
மலர்க்கண்க ளவைமூன்றும் மலர்ந்தே யாட படைகாட்டும் அங்குசபா சங்க ளாடப்
பைங்கிளிகள் பூவைதமிழ்ப் பாட்டுப் பாட அடைவுறுசீர் அணிகாட்டுத் தறையில் வாழும்
ஆனந்த விநாயகரே! ஆடீ ரூஞ்சல். (4)
அன்பென்னும் இன்பொருளே தகளி யாக
ஆர்வமதே நெய்யாக அதனுள் தேக்கி இன் புருகு சிந்தையிடு திரியா ஞான
எழிலாரும் விளக்கேற்றிப் பெரியோர் போற்ற என் கண்ணே மணியே ஏ ரம்பா! எந்தாய்!
என் பொன்னே! கணபதியே என்றென் றேத்தும் அன்பர்களுக் கருள்காட்டுத் தறையில் வாழும்
ஆனந்த விநாயகரே! ஆடீ ரூஞ்சல், (5)
மலைமகளும் ஈசனுமோர் வடந்தொட் டாட்ட
வள்ளியுடன் கந்தனுமோர் வடந்தொட் டாட்ட
கலைமகளும் பிரமனுமோர் வடந்தொட் டாட்டக்
காசினியோர் கண்களிப்பக் கவிஞர் ஊஞ்சல்

Page 33
மலர் மகளும் மாலுமொரு வடந்தொட் டாட்ட
மருதமரக் கிளிகளுடன் குயில்கள் பாட
அலைவளஞ்சேர் தருங்காட்டுத் தறையில் வாழும்
ஆனந்த விநாயகரே ஆடீ ஊஞ்சல், (6)
சிவனுர்தேரி அச்சதனை முறிய வைத்தாய்
திருமுறைகள் பெறுவதற்கு வழியுஞ் செய்தாய் சிவஞர் தம் மாங்கனியைச் சிறப்பிற் பெற்ருய்
சிந்தாத மணியது வாய்த் திகழ்ந்து நின்ருய் எவரேனு மேத்துவார்க் கருள நின்ருய்
இன்னருளைப் பாலித்துக் காக்க நின்றய அவரவருக் காகுவன அறிந்தே நல்கும்
ஆனந்த விநாயகரே ஆடீ ரூஞ்சல், (7)
வள்ளியினை யடைவதற்கு மனமே கொண்ட
o Top(useiðir காட்டினிலே வேண்ட வந்நாள் உள்ளியவள் முன்னேயோர் வேழ மாக
உரணுேடுஞ் சென்றவனைக் காதித அண்ணுல் தெள்ளிய நற் றிருமாலன் றிழந்த சங்கைத்
திருவருள்செய் தடையச்செய் திருவார் மைந்த அள்ளுதிருப் பணிக்காட்டுத் தறையில் வாழும்
ஆனந்த விநாயகரே ஆடீ ரூஞ்சல். (8)
இந்திரனுக் கருள்புரிந்த இறைவா! முக்கண்
ஏந்தலே! வின்டு விண்சக் கரத்தை யீந்தாய் சந்திர சிட் சாரட்ச கப்பேர் தாங்கிக்
சந்தனநற் பொதிகைமுனிக் கருளினேயே மைந்துடைய ராவணன்றன் கர்வம் போக்கி
மாமேரு வெற்பதணில் நூல்வ ரைந்தோய்! அந்தமிலா வருட்காட்டுத் தறையில் வாழும்
ஆனந்த விநாயகரே ஆடீ ரூஞ்சல் (9.
காசிபநன் முனிவர அது மனைவி விந்தை
கருத்தரித்த முட்டையினைக் கையாற் கீறி
வீசொளிசேர் மயிலாக்கி விரைந்தே யேறி
வெகுள் நாகர் சிறையிட்ட அன்னுள் மைந்தர்

மாசகல வவர் தம்மைச் சிறையி னிக்கி
மயூரேசர் எனும்பெயருந் தரித்துக் கொண்டோய்
ஆசில்பொன் னிறப்பணிக்க ஞேடை வாழும்
ஆனந்த விநாயகரே ஆடீ ரூஞ்சல் (10)
வாழி விருத்தம்
சித்திபுத்தி யெனுஞ்சத்தி யிருவ ருஞ்சேர்
சித்திதரும் விநாயகராந் தேவன் வாழி பத்தியொடு பணிபவர்க்கே யருளும் வைத்துப் பத்தியிலார் தமக்குமறக் கருணை வைத்தே எத்தினமும் பாலிக்கும் இறைவன் வாழி
இணையில்பதி யோர் வாழி மறையோர் வாழி அத்திபலா சூழ்காட்டுத் தறையும் வாழி
அடியார்கள் ஆனினங்கள் வாழி வாழி.
திருச்சிற்றம்பலம்
இயற்றியது செந்தமிழ்ச் சிரோமணி, பண்டித வித்துவான் as S. p5LyngsiT, B, O. L. Dip-in-Ed

Page 34


Page 35
.
 
 

|ச்சிட்டோர்
சுடரொளி அச்சகம் 1214 மானிப்பாய் வீதி,
யாழ்ப்பாணம்