கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆனந்தமே ஜீவனின் மகரந்தம்

Page 1


Page 2

“ஆனந்தமே
ஜீவனின் மகரந்தம்”
அமரர் - கலைச்சங்க கே. பாலச்சந்திரன்
அவர்களின்
ஆத்மாஞ்சலி இதழ்
7.2-2002

Page 3
Title
First Edition
Edited by
Published by
Printed by
Cover Design
"Anandame jeevanin Magarantham"
ஆனந்தமே ஜீவனின் மகரந்தம்
17 December 2002
Anthony Jeeva 16, Mulgampola Road, Kandy.
Kalaichelvan E/G/2, N.H.S. Steuart Street, Colombo 02.
Sri Lanka.
Jegan Mohan Balachandran 178 Dollers Dec Ormenax
CRuebec, H9B, 2G8
Canada.
Vickram Printers 19, Wolfendhal Lane, Colombo 13.
Te: O74-6 1049O
Kalai - Vignesh
(Free Distribution)

அமரர் கே. பாலச்சந்திரன் ஆத்மாஞ்சலி இதழ் உள்ளடக்கம் - தமிழ் - ஆங்கிலம் இருமொழிகளும்
Articles appeared in the Press - 8 items
Avtide by Yoga Balachandra on her late husband
(என்சோடிப்புறா)
Articles by Mr. Sritharan and Radha Manoharan Vallipuram
Photos - K. Balachandran
Think about the world which belongs to our Children
(தமிழ் கட்டுரை)
கல்வித்திட்டத்தின் அவசியமான நோக்கம் Alvamyrded
35L6G6TITG BL - Neale Donald Welch
கடவுளை உணரும் அனுபவம் - Deepak Chopra
உங்கள் சந்தோஷத்திற்காக - James Van Prag
LD6Tib (SUT6) 6JTgp6 - As a man Thinkelth by James Allen
ஆரோக்கியமான உணவுப் பழக்கம் - Chopra
9,60ii 6 (3y GasTGö&prisi - Neale Donald Welch (Friendship with God)
புன்னகை
ஒரு மகா கலைஞன் எப்படி இருப்பான்?
கலைச்சங்க “பாலா’ அனைவரும் அறிந்த பெயர் - அந்தனி ஜூவா
பாலா ஒரு சமதர்மவாதி - ராதா மனோகரன் வல்லிபுரம்
பாராட்டுக்கோர் பாலச்சந்திரன் - திருமதி. ஹெலன் குமாரி ராஜசேகரன்
திருமந்திரம் - தேவாரம்
வரலாற்றுச் சாதனைகளின் நாயகன் - கலைஞர் கலைச்செல்வன்
3

Page 4

உழைப்பினாலும் மொழியாற்றலினாலும் எதையும் சாதிக்க முடியுமென என நிரூபித்த அமரர் “பாலா”
-செல்வத்தம்பி மாணிக்கவாசகர்
பட்டம், பதவி தம்பட்டங்களிடையே ஓர் துாய தியாகியாகவும், சிறந்த சிந்தனைச் சிற்பியாகவும், பிறர் துன்பத்திற்கு இரங்கும் கனிவும், தனதுயிரைத் தியாகம் செய்து பிறர் துயர் துடைக்கும் செயலாண்மையும் மிக்கவராக நம்மத்தியில் வாழ்ந்தவர்தான் கொழும்பு கலைச் சங்கத்தின் பொதுச் செயலாளர் அமரர் கே. பாலச்சந்திரன்.
என்றும் நிலைத்து நிற்கக் கூடிய தமிழையும், கலையையும் தன் உயிர்போல நேசித்து, வளர்த்த ஒரு பெருமகன் பிறப்பறுத்தப் போய்விட்டார். உண்மையில் அவர் மரணமடைவதற்கு ஒரு கிழமைக்கு முன்பு தான் வைத்திய கலாநிதி எம். இராமஜெயத்திடம் “சர்வதேச மகளிர்” கொண்டாட்ட விஷயமாக திட்டமிடுவதற்கு அவரும் நானும் சென்றிருந்தோம். அதன்பின்பும் இருதடவைகள் தொலைபேசி மூலம் இது விஷயமாக கடிதங்களை தான் கெளரவிக்கப்படுபவர்களுக்கு அனுப்பியுள்ளதாகவும், இம்முறை நாங்கள் இவ்விழாவைச் சிறப்பாகச் செய்யவேண்டும் என்றும் கூறினார். நான் எப்படியாவது அவரை நேரில் சந்திக்க வேண்டும் என்று இருந்த நேரத்தில்தான் “பாலச்சந்திரன்’ இறந்துவிட்டார் என்ற செய்தி கிட்டியது.
உண்மையிலேயே ஒரு தனிமனிதன் சலியாத
உழைப்பினாலும், மொழியாற்றலினாலும் எவ்வளவு பெரிய
சாதனையைச் செய்து விடமுடியும் என்பதற்கு பாலச்சந்திரனின் 5

Page 5
வாழ்வே ஒரு சான்று. எளிய முறையில் எந்தக் கருத்தையும், வெளியிடக்கூடிய ஆற்றலும், தமிழ் மொழியின் சாயல்களை அற்புதமான முறையிலே வர்ணந் தீட்டக்கூடிய கலைப்பண்பும் பாலச்சந்திரனிடம் தனிச்சிறப்பாக ஒளிவீசின. இவரின் திறமையும், தைரியமும், தெளிவும் இவரின் கலை ஆற்றலின் மூலம் இலங்கை வாழ் மக்கள் அனைவருக்கும் தெரிந்ததொன்றாகும்
தமிழக மக்களின் நாவில் "காவேரி ஆற்றின் நாமம் நிலைத்து நிற்பது போன்று கொழும்பு வாழ் "கலை ரசிகர்களின்" மனதில் “பாலச்சந்திரன்’ நாமமும் நிலைத்து நிற்கும்.
உலகில் தமக்கென வாழாது பிறர்க்கென வாழ்வோர் ஒரு சிலரே. இத்தகையோராலேயே உலகம் நிலைபெற்றுள்ளது. "வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் நான் வாடினேன்” என்ற வாக்குக்கு அமைய வாழ்ந்து காட்டியவர் பாலச்சந்திரன்.
காலஞ் சென்ற கேற் முதலியார் ஏ.சி.ஜி.எஸ். அமரசேகர, பாலச்சந்திரனின் ஆற்றலை வியந்து பல தடவைகள் பாராட்டியுள்ளார். இத்துடன் நாடகத்துறையில் இவர் ஆற்றிய பணியைப் பாராட்டி இந்து சமய கலாசார திணைக்களமும், கலாசார அமைச்சும் நடத்திய அரச தமிழ் நாடக விழாவில் இவருக்கு "அரங்க முது கலைஞர்” என்ற பட்டத்தை வழங்கி கெளரவித்தது. இவர் “லண்டன் கந்தையா”, “அழாதே கண்னே”, “பதியூர் ராணி" போன்ற நாடகங்களையும், மற்றும் “பதிவுத் திருமணம்”, “புறோக்கர் கந்தையா”, “குண்டலகேசி" "நெவ மைண்ட் சில் வா’, ‘ஹரி கம்னப் புரம் ஜப்னா", "கெலனிபாலம", "புறோக்கன் புறமிஸ்" போன்றவற்றையும் மேடையேற்றி எல்லோரின் பாராட்டையும் பெற்றார்.
u Tavë efë Elij si “Times of Ceylon” si gjitus.Të gj65
கடமையாற்றி மேல் அதிகாரிகளின் அன்புக்கும், பெருமதிப்புக்கும்
பாத்திரமாக விளங்கிளார். இவரைத் தெரியாத கலை உலக
மக்கள் எதுவுமே தெரியாதவர்கள் என்றே கூறவேண்டும்,
இதுமட்டுமன்றி காலம் சென்ற ஜனாதிபதி ஜெயவர்தனா இவரின்
f

கலை ஆர்வத்தையும், திறமையையும் பாராட்டி பல கடிதங்களை எழுதியுள்ளார். இத்துடன் இவர் இலங்கை வாழ் பெரும் மக்களுடன் தொடர்பு கொண்டிருந்தார். பாராளுமன்ற அங்கத்தவர்கள், அமைச்சர்கள், உயர் அதிகாரிகள், கலைஞாகள், எழுத்தாளர்கள் யாபேரின் பாராட்டையும், பெருமதிப்பினையும் பெற்று வாழ்ந்த ஒரு பெருமகன் தான் அமரர் பாலச்சந்திரன்.
"வள்ளுவன் தன்னை உலகினுக்கு ஈந்து வான் புகழ் கொண்ட தமிழ் நாடு’ என்று கூறினான் பாரதி. அதே போன்று அமரர் பாலச்சந்திரன் அவர்கள் தம்மை நாடிவந்தோர்க்கெல்லாம் தம்மால் இயன்ற சகல உதவிகளையும் செய்து கலை உலக மக்களின் மனதில் ஓர் உதய சூரியனாக விளங்கினார். நம்மத்தியில் வாழ்ந்த பெருமகனின் ஆன்மாவின் சாந்திக்காக கரம் கூப்பிச் சிரம் தாழ்த்திப் பிரார்த்திப்பதோடு பாலச்சந்தின் உருவாக்கிய இலட்சியங்கள் எல்லாம் மேலும் மேலும் வளரவேண்டும், வளம் பெற வேண்டும்.
நன்றி - தினக்குரல்
-O-O.
கலாசாகர் விருது பெற்ற மரைக்கார் எஸ். ராமதாசை கலைச்சங்க சார்பில் கெளரவமளித்து மகிழ்கிறார் அமரர் கே. பாலச்சந்திரன்
T

Page 6
Bala Spawns National Unity Through Cultural Diversity
-Chelvathamby Maniccavasagar
The State Tamil Drama Festival and Awards Presentation ceremony was conducted recently by the Tamil Drama Panel of the Arts Council of Sri Lanka in collaboration with the Department of Cultural Affairs and Hindu Religious and Cultural Affairs under the patronage of Mr. Lakshman Jayakody, Minister of Buddha Sasana and Religious and Cultural Affairs and Prof. A.V. Suraweera, Deputy Minister of Cultural and Religious Affairs.
Mr. V.A.Thirugnanasuntharam, Chairman of Tamil Drama Panel of the Arts Council of Sri Lanka presented the welcome speech. Mr. K. Jayathilake, President of the Arts Council of Sri Lanka, Mr. R.A.A. Ranaweera, Secretary Ministry of Cultural and Religious Af fairs, Mrs. Rajalaxmi Kailasanathan, former Additional Secretary Ministry of Cultural and Religious Affairs, Mr. W.D.W.Abeywardhana, Director, Department of Cultural Affairs and Mr. V. Wickramarajah, Secretary of the Tamil Drama Panel addressed the audience on this occasion.
Two senior theatre namely, Mr. K. Balachandran, General Secretary of the Colombo Art Circle and Mr. George Chandrasekeran, a veteran radio artiste, and scriptwriter were honoured by the Tamil Drama Panel of the Arts Council by conferring them with the title "Aranka Muthukalaignar' for their tremendous contributions towards the development and promotion of Tamil drama in Sri Lanka since
1960.
8

It was Gate Mudaliyar A.C.G.S. Amerasekera who paid a glowing tribute to Mr. Balachandran when he wrote "only those who have been at the organising end of cultural events know the heartburn and the frustration of being meticulously proper' in every detail. Personally I think Balachandran's contribution-asilent one, but nevertheless a significant one - must be recognised by the State in Some way.”
Indeed, the lovers of art and culture should be grateful to the members of the Tamil Drama Panel of the Arts Council of Sri Lanka headed by V.A. Thirugnanasuntharam for having appreciated and recognised the services rendered by Mr. K. Balachandran, who has contributed for the promotion and development of Tamil drama in Sri Lanka. Undoubtedly, this is a timely and well-deserved gesture on the part of Department of Culture and Department of Hindu and Religious Affairs for having honoured Mr. Balachandran in a befitting
ac.
It was Mr. Martin Wickremasinghe who once said, “The success of political independence depends on the evolution of cultural independence which alonean unite the whole multi-racial and multi-religious population of Sri Lanka to work together for the progress of Sri Lanka.
Balachandran is a multifaceted personality who has promoted cultural values through his dramas for a human and humane way of life in a multi-ethnic and multi-religious society. The Colombo Art Circle headed by him is a great cultural centre with a rich and rewarding tradition and a glorious heritage has produced a dazzling array of artistes, brilliant playwrights, enterprising producers and imaginative directors. All these worthy sons and daughters of this soil together with the indulgent and intelligent audiences have tremendously contributed to the succes and popularity of these dramas
staged by the Colombo Art Circle. Besides, CAC has a discerning and 9

Page 7
discriminating audience with a versatile and variegated tradition of its own which marks its tremendous popularity and stimulating response even among the present day educated people.
Mr. Balachandran's dynamic organising ability and his pragmatic approach towards artistes in the Colombo Art Circle have won him the admiration of everyyone particularly the President, Prime Minister, Ministers, and Members of Parliament and even in the legal and judicial circles. In fact, the techniques which he adopts in producing these dramas have influenced, inspired and transformed everyone who participates in them. He exhorts all the actors to feel proud and become worthy of their performances and deep cultural heritage not only of theirs, but the culture of other communities. Balachandran is not only a dedicated artiste and enterprising producer of dramas, but also has felicitated several artistes, literary wizards and social workers, Furthermore, he is of the firm opinion that artistes should be given due respect and honour while they are living. In fact, Balachandran created a record by way of staging a Two-day Tamil Drama festival, single-handed, as far back as in 1960. He did this with a Bank of Ceylon loan, which he settled with his meagre income as a clerk at Times of Ceylon Limited.
“London Kandiah,” “Alaathe Kanne,” and “Pathiyoor Rani” were some of the dramas which were staged at the festival. Subsequently, under the Colombo Art Circle, he produced and staged several plays such as 'Pathivu Thirumanam, “Broker Kandiah, “Kundalakesi and the English plays “Bye Bye Raju and “Never mind Silva'. The Colombo Art Circle had English plays like “He comes from Jaffna, “Kelani Paalama' and “Broken Promise'.
He showed that Ralahamy plays were good for charity shows and presented a festival of comedy starring E.C.B. Wijesinghe and his team. Besides, Bala brought “national unity through cultural di
versity”. Fr. Marcelline Jayakody, the composer, lyricist Karunaratne 10

Abeysekera, film star Malini Fonseka, writer - poet Kalai Arasu Chornalingam, the painter Gate Mudaliyar A.C.G.S. Amarasekera, the singer M.S. Fernando are some of the Golden Lotus recipients down the years.
Mr. Balachandran was well-known both in Sinhala and English Cultural Circles. When pioneer Sinhala stage and screen stars Eddie Jayamanne and Rukmani Devi, were going through a bad time, it is Bala who helped them in numerous ways.
Once the "caricature” of a friend gave him an idea to coaxa well-known cartoonist to have an exhibition of caricatures - the first ever in the country. The subjects ranged from the Prime Minister down to the man in the street. It is very often said that a woman is behind a man's progress and success in Life.
His wife Yoga' was always a tower of strength in all his endeavours. She gave the production and direction of dramas. Never Mind Silva'. "Bye Bye Raju" and “Broken Promise' were all written by “Yoga' and produced by "Bala' and Eddie Jayamanne played the key roles in all of them.
An important event in Bala's life was when former President J.R. Jayawardene sent him a cheque for Rs. 100 in his own handwriting. Immediately after the General Election of 1977, when Bala went to Ward Place to congratulate him, J.R. asked him what he could do for him. For this, Balachandran with profound humility made a humble request to J.R., that he should preside at a drama E.C.B. Wijesinghe had produced. As requested by him, J.R. went and presided where former Transport Minister M.H. Mohamed and Minister Thondaman were the guests of honour.
The Sunday Observer 07-03-1999

Page 8
கலை இலக்கியவாதிகளின் அன்பு நண்பர் கே. பாலச்சந்திரன்
-அன்னலட்சுமி இராஜதுரை
கலை, இலக்கிய, பத்திரிகையாளர்களின் நெருங்கிய நண்பராக விளங்கியவர் கே. பாலச்சந்திரன். “பாலா’ என்று நண்பர்ளால் அன்போடு அழைக்கப்படும் இவர் மறைந்து இன்றுடன் (30-04-2002) 10 நாட்கள் ஆகின்றன.
டைம்ஸ் பத்திரிகையில் பணிபுரிந்த இவர் தான் ஓர் எழுத்தாளராகவோ, கலைஞராகவோ பரிமளிக்காதபோதும், கலைத்துறையில் பெரும் ஆர்வம் கொண்டவராக விளங்கினார் என்றால் மிகையில்லை. இந்த ஆர்வத்தின் காரணமாக 1960களில் ஒரு தனி மனிதராக நின்று கொழும்பில் 3 நாட்கள் நாடகவிழா ஒன்றை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
கேட் முதலியார் அமரசேகரவைத் தலைவராகக்கொண்டு இவர் உருவாக்கிய கொழும்பு கலைச்சங்கம், கொழும்பிலும் நாட்டின் வேறு பகுதிகளிலும் நாடகங்களை மேடையேற்றவும் மற்றும் கலை நிகழ்ச்சிகளை நடத்தவும் முன்னின்றதை அதற்குள் மறக்கமுடியாது.
“லண்டன் கந்தையா”, “நெவர் மைன்ட் சில்வா”, “ஹி கம்ஸ் புறம் ஜப்னா”, குண்டலகேசி”, “பைபை ராஜூ” ஆகியவை இவர் மேடையேற்றிய நாடகங்களில் சிலவாகும்.
காலஞ் சென்ற கலைஞர் லடீஸ் வீரமணியின்
கண்மணியாள் காதை” வில்லுப்பாட்டு நிகழ்ச்சி, மற்றும்
பொப் பிசை நிகழ்ச்சிகளையும் இவர் வெற்றிகரமாக
மேடையேற்றியிருக்கிறார். இன்று முன்னணியில் திகழும் சில 2

நாடக கலைஞர்கள் இவர் மூலம் அறிமுகமானவர்களே.
நுால் வெளியீட்டு விழாக்களும் “பாலா’ வின் உழைப்பினால் நடைபெற்றதையும் குறிப்பிட வேண்டும். கனக செந்திநாதனின் ‘ஈழத்து இலக்கிய வளர்ச்சி”, யாழ். நங்கையின் “விழிச்சுடர்', அந்தனி ஜீவாவின் ‘அன்னை இந்திரா’ உட்பட சில நுால்களின் வெளியீட்டு விழாக்களைக் கண்டுள்ளன. இவையாவற்றையும் கொழும்பு தப்ரபேன் ஹோட்டலில் வைத்து நடத்தினார். இதுவுமினி றி இலங்கையின் ஓவியக் கலைஞர்களையும் ஊக் குவிக்கும் வகையில் ஓவியக் கண்காட்சியையும் “பாலா’ நடத்தி இருக்கிறார். இவரது கலைத்துறை நடவடிக்கைகள் அனைத்திற்கும் இவரது மனைவி யோகா பக்கபலமாக நின்று உதவினார்.
பலதரப்பட்ட கலைஞர்களையும் ஊக்குவிக்கும் ஒருவராக விளங்கிய இவர் தமிழ், சிங்களம், முஸ்லிம் ஆகிய மூவின கலைஞர்களோடும் நெருங்கிய நட்புறவோடு பழகும் ஒருவர். இவரது நிகழ்ச்சிகளுக்கு ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்தன, ஆர். பிரேமதாஸ் மற்றும் முன்னணிக் கலைஞர் காமினி பொன்சேகா போன்ற பிரமுகர்கள் சமூகமளித்துச் சிறப்பித்தமை குறிப்பிடக்கூடியது.
சமீபத்தைய சில வருடங்களாக சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மூவினத்திலும் பல்வேறு துறைகளிலும் சிறப்புப் பெண்கள் சிலரைத் தெரிவுசெய்து கொழும்பு கலைச்சங்கத்தின் மூலமாக விருது வழங்கி சிறப்பித்தமை சிறப்பானதோர் அம்சமாகும். இத்தகைய பரந்தமனம் படைத்த இவர் இந்த வருடத்திலும்கூட மகளிர் தினத்தைக் கொண்டாடும் பொருட்டு சில துறைகளில் முன்னணி வகித்த பெண்களையும் தெரிவுசெய்து விழா ஏற்பாடுகளையும் கவனித்துக் கொண்டிருந்தார் எனினும் விதி குறுக்கிட்டுவிட்டது.
நன்றி - விரகேசரி வாரமலர்
30-04-2002
... li.

Page 9
899
“மறைந்தும் மறையாத மலர்
- எஸ். இராமச்சந்திரன்
(பொப்பிசைப் பாடகர்)
“கொழும்பு கலைச்சங்கம்” சில ஆண்டுகளுக்கு முன்னர் அடிக்கடி நாம் கேள்விப்பட்டுக் கொண்டிருந்த பெயர் இப்போ இல்லை. திரு. கே. பாலச்சந்திரனோடு அதுவும் மறைந்துவிட்டது.
கலைஞர்களால் உருவாக்கப்படும் பல சங்கங்கள், அமைப்புக்கள் எல்லாம் தலைவர், செயலாளர், பொருளாலர், நிர்வாக சபை உறுப்பினர்கள் என்று பலரை தெரிவு செய்து செயற்படுகின்றன.சில தெரிவு செய்து செய்யப்படுகின்றன. சில தெரிவு செய்யப்பட்டவர்களிடையே முரண்பாடுகளை தோற்றுவித்து இறுதியில் இருந்த இடம் தெரியாமல் போய்விடுகின்றன. ஆனால் ”கொழும்பு கலைச்சங்கம்’ கே. பாலச்சந்திரன் என்ற தனி மனிதனாலேயே பல சாதனைகளை நிகழத்தியது. ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல. தமிழ், சிங் கள, ஆங்கில கலைஞர்களின் பல இயல், இசை, நாடக, ஒவிய, சிற்ப நிகழ்வுகளை பல பெரியார்கள் முன்னிலையில் ஏற்பாடு செய்த பெருமை பாலச்சந்திரனுக்கு மட்டுமே உண்டு.
இலங்கையில் பிறந்த நல்ல நிகழ்ச்சி அமைப்பாளர் என்ற பெருமை அவரையே சாரும். தனது இளம் வயது முதல் அவர் இவ்வகையான கலை முயற்சிகளில் ஈடுபட்டார். தமிழ், ஆங்கிலம், சிங்களம் என மும் மொழிகளிலும் பாண்டித்தியம் பெற்ற பாலச்சந்திரன் எவ்வகையிலும் யாருடனும் எந்தப் பேதமும் பாராட்டமாட்டார். எந்த கலைஞனுக்கும் எந்த உதவியும் செய்ய பின்னிற்க மாட்டார். பத்திரிகைத்துறையில் அவர் வேலை பார்த்தாலும் எண்ணம் Graပ်လTဖူ கலை மேல் தான் இருந்தது.

இலங்கையில் தமிழ் நாடகவிழாவை முதன்முதலாக தனிமனிதனாக ஏற்பாடு செய்து வெற்றி கண்டவர் பாலச்சந்திரன் ஆங்கில நாடக விழாவை ஏற்பாடு செய்து வெற்றி கண்டவரும் பாலச்சந்திரனே ஜனாதிபதியாகட்டும்,பிரதமமந்திரி ஆகட்டும், வேறு எந்த பெரிய பதவியை வகிப்பவராகட்டும் கலைச்சங்கம் பாலச்சந்திரனின் அழைப்பிதழ் கிடைத்தால் குறிப்பிட்ட நிகழ்ச்சிக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு வந்து நிற்பார்கள். ஒரு தமிழ் மகன் இப்படி ஒரு வல்லமை கொண்டிருந்தார் என்றால் அவரின் ஆளுமை எப்படிப்பட்டது என்பதை எழுதித் தெரிவிக்க வேண்டியதில்லை.அவரின் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் கலைஞர்கள் நிகழ்ச்சி முடிந்ததன் பின் அவர் தரும் உபசரிப்பில் மெய்மறந்தே போவார்கள். பாலா, பாலா என்று எல்லா இன கலைஞர்களும் அவரை தன் சகோதரன் போன்று அழைத்து மகிழ்வதை எப்போதும் காணலாம்.
நிர்வாக சபை கூட்டம் கூட்டாமல், பத்திரிகையாளர் மாநாடு வைக்காமல் இவர் நடாத்தி முடித்த கலைநிகழ்வுகள் இன்றைய தலைமுறை இளம் கலைஞர்கள் பலருக்கு தெரியாமல் இருக்கும். எனவே அவரின் துணைவியார் பெரிய எழுத்தாளர் நாடறிந்த நல்ல ஊடகவியலாளர். அவர் பாலச்சந்திரன் பற்றிய மனப்பதிவுகளை அவரிடமிருந்து அரிய பொக்கிஷமான நிழற்படங்களோடு அச்சிட்டு வெளியிட்டால் எதிர்கால சமூகம் பாலச்சந்திரனின் ஆற்றலை தெரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும்.
கலைக்காக தன் வாழ்நாளை செலவிட்ட திரு. கே. பாலச்சந்திரன் மறைந்து இருவருடம் முடிந்தாலும் அவரின் எண்ண அலைகள் என்றுமே எம்மைவிட்டு விலகாது.

Page 10
நாடகக் கலைஞர்களை ஊக்குவித்து வாய்ப்புக்களை கொடுத்த “பாலா’
rup858$68rחLDfr6br
அறுபதுகளில் கொழும்பு நகரில் நாடகத்துறை வளர்ச்சி கணிசமானது. ஆனால் நாடக விழாக்கள் அரிது. துணிந்து 3 நாட்கள் லயனல்வென்ட் தியேட்டரில் தனது கலைச்சங்கம் சார்பில் நாடகங்கள் அரங்கேற்றி சாதனை படைத்தவர் இம்மாதத்தில் நம்மைவிட்டுப் பிரிந்த அமரர் கே. பாலச்சந்திரன்
அவரது சாதனைகளுக்குக் கைகொடுத்தவர் அப்பொழுது வானொலி நாடகங்களில் தனிமுத்திரை பதித்து வந்த இலங்கை வானொலி சானா எஸ். சண்முகநாதன் அவர்கள். அத்தோடு லயனல் வென்ட் தியேட்டரில் மிகவும் பிரபலமடைந்திருந்த ஆங்கில மேடைநாடகத் துறையினருடன் அவருக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது. குறிப்பாக மெக்சின்டைர் போன்றவர்களுடன் நெருக்கமாகப் பழகித் தமிழ் நாடகத்துறையை வளர்த்தார்.
இன்று, லண்டன் ‘தமிழோசை யில் கடமையாற்றும் திருமதி. ஆனந்தி அன்று செல்வி ஆனந்தி சூர்யபிரகாசன் அவரைத் தமிழ் நாடக மேடையில் அரங்கேற்றிய பெருமை சகோதரர் பாலச்சந்திரனையே சாரும்.
இதுபோல, வானொலிக் கலைஞர்களாக மட்டுமே
கருதப்பட்டுவந்த ரொசாரியோ பீரிஸ், ரீ. ராஜேஸ்வரன், விசாலாட்சி
குகதாசன் (இவர் பின்னர் திருமதி. எம்.ஏ. ஹமீது) ரேடியோ
மாமா எஸ். சரவணமுத்து, சீ.பி.எம். காசிம் போன்ற பலரை
மேடையில் ஜொலிக்க வைத்தார். அப்துல் ஜபார் என்ற
கலைஞரை (இப்பொழுது கேரளாவில்) தொடர்ந்து மேடையில் 6

சாதனை புரியச் செய்தவவர் சகோதரன் பாலச்சந்திரன் அவர்களே!
மேலும் - கலையரசு சொர்ணலிங்கம் அவர்களது சீடர்களுள் ஒருவரான ‘சானா’ எஸ். சண்முகநாதன் அவர்களது ஆற்றல்கள் குடத்திலிட்ட விளக்காக இருப்பதை உணர்ந்து ஆதங்கப்பட்டு அவரை நாடக மேடையில் நல்ல முறையில் அடையாளம் காணச்செய்தவரும் அவரே.
எழுத்து வித்தகர் ‘இலங்கையர்கோன்’ அவர்களது வானொலி நாடகமான “லண்டன் கந்தையா’, மேடைகளில் உயிர் பெற்று கலாபிமானிகள் ஒவ்வொருவரினதும் உள்ளங்களிலேயும் உலா வந்தது சகோதரர் பாலா அவர்களது சலியாத உழைப்பாலும் பொருளாதார பலத்திலுமாகும்.
இவ்வாறு, நாடகமேடை சேவை ஒருபுறம் நடக்க, அந்த மேடைகளில் புகழ்பெற்ற சிங்களக் கலைஞர்களைக் கொண்டு வந்து கெளரவித்ததும் ஓர் அற்புதமே. இப்பொழுது கண்ணுக்குள் நிழலாடுகிறது றோயல் கல்லுாரி மண்டபம்! அங்கே தமிழ் நாடகம். அதன் இடைநடுவில் பிரபல சிங்களத் திரைப்பட நட்சத்திரங்கள். எடிஜயமானே-ருக்மணிதேவி தம்பதியரை அழைத்து வந்து கெளரவிப்பு.
ஒருவரை கெளரவிப்பது என்கிற சங்கதி, சகோதரர் பாலச்சந்திரன் அவர்களைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு நாளும் தேநீரையும் காப்பியையும் ருசித்துக் குடிப்பது போல, எத்தனையெத்தனை பேர்! அடேயப்பா! பட்டியல் போட்டிட பக்கம் போதாது.
“வாழும் பொழுதே வாழ்த்திட வேண்டும்” என்ற மனோபாவம் இப்பொழுது நம்மில் பலருக்குண்டு. ஆனால் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் அப்படிச் சிந்தித்த ஒரேயொரு மனிதன் சகோதரர் கே. பாலச்சந்திரன் அவர்களே.
17

Page 11
அதிலும் பெரும் பாணி மை ச் # : ; I j it b, ബ് மத்தியிலிருந்தவர்களைப் பொறுக்கியெடுத்து அலுப்புச் சலிப்பில்லாமல் பாராட்டிக் கொண்டிருந்த ஒரேயொரு தமிழ்ச் சகோதரன் நமது பாலச்சந்திரன் அவர்கள் தான்.
ஒரு சமயம், அப்பொழுது ஓகோ என்றிருந்த 'பைலா சக்கரவர்த்தி காலஞ்சென்ற எம்.எஸ். பெர்னான்டோ அவர்களது தனி மனித இசை நிகழ்ச்சியை என்னிடம் அமைக்கக் கொடுத்து விட்டு, நிகழ்ச்சியின் இடைநடுவில் அவருக்குத் "தங்கப்பதக்கம் அணிவித்து அவரையும் உயர்த்தி இவரும் உயர்ந்தார்.
இப்படியே, 'கலைச்சங்க கே. பாலச்சந்திரன் அவர்களது தனிமனித சேவையைச் சொல்லிக் கொண்டேயிருக்கலாம். ஆனால், எந்த அமைப்பினாலும் அவர் நல்ல படியாகக் கெளரவிக்கப்பட்டாரா என்ற கேள்வியை நேயர்கள் கேட்டால் நான் மெளனம் தான் சாதிப்பேன்.
நன்றி - தினக்குரல் (ஞாயிறு)
Ս7-05-2000
முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனா அவர்கள் ஆங்கில நாடகமொன்றில் ஆரம்ப விழாவிற்கு கதிரேசன் மண்டபத்திற்கு வந்தபோது அவருடன் நகைச்சுவையாக உரையாடி மகிழ்கிறார் கே. பாலச்சந்திரன்
8
 

கே. பாலசந்திரனின் இழப்பு கலைத்துறையில் ஒரு வெற்றிடம்
-ஜே.பீ. ரொபட்
கவினர் கலை மன்றம்
"கலைக்கும் கலைஞனுக்கும் விளம்பரம் தேவை. அது தான் வளர்ச்சிக்கு முக்கியம். அதற்கு உறுதுணையாக இருப்பது பத்திரிகை, வான்ொலி, தொலைக்காட்சி போன்ற வெகுஜனத் தொடர்பு சாதனங்களாகும்” என்று மொழிந்தவர் பிரபல கலைஞரும், தயாரிப்பாளரும், கொழும்பு கலைச் சங்கத்தின் ஆரம்பகர்த்தாவுமான கே. பாலச்சந்திரன் ஆவார். டைம்ஸ் ஒவ் சிலோவில் கடமையாற்றியதன் காரணமாக இவரை “டைம்ஸ் பாலா’ என்று அன்புடன் அழைப்பார்கள்.
கொழும்பைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் 41 ஆண்டுகளாகச் செய்த கலைச்சேவையின் “லண்டன் கந்தையா” என்ற இவர் தயாரித்த நாடகத்திற்கு சிங்கள சினிமாத்துறையின் முதல் தமிழ்த் தயாரிப்பாளர் எனப்.எம். நாயகம் தலைமை தாங்கி சிறப்பித்திருந்தார். இந்நாடகம் பொரளை வை.எம்.பி.எ. மண்டபத்தில் மேடையேறியது.
1960 இல் லயனல் வென்ட் அரங்கில் ஐந்து நாட்கள் நாடக விழா ஒன்றையும் சிறப்பா நடத்தினார். அந்நாடக விழாவிற்கு முன்னாள் சபாநாயகரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எச். முஹம்மத் தலைமை தாங்கினார்.
காலம் சென்ற முன்னாள் ஜனாதிபதி ஜே. ஆர்.
ஜெயவர்தனவின் தலைமையில் ஆங்கில நகைச்சுவை நடிகரான
ஈ.எபி.பி. விஜயசிங்கவின் “ஹறி கம்ஸ் புரம் ஜப்னா” (Hப ப0mes

Page 12
from Jaffna) என்ற நாடகத்தைத் தயாரித்தளித்தார். மற்றும் “குண்டலகேசி”, “லண்டன் வாழ்வு”, “புரோக்கர் கந்தையா” ஆகிய நாடகங்களுடன் ஆங்கிய நாடகங்களான பெஸ்டிவல் கமிங், டவுரி ஹன்டர், பை பை ராஜூ, நெவர்மைன்ட் சில்வா ஆகிய நாடகங்களையும் தயாரித்தளித்தார். பை பை ராஜு. நெவர்மைன்ட் சில்வா ஆகிய நாடகங்களில் எ.டி. ஜெயமான, சில்லையுர் செல்வராசன், கமலினி செல்வராசன், முத்தையா இரத்தினம், திருமதி. யோகா பாலச்சந்திரன் ஆகியோரும் நடித்திருந்தார்கள்.
30 ஆண்டுகளுக்கு முன் பொரளை வை.எம்.பி.ஏ. மண்டபத்தில் “பதிவுத் திருமணம்” என்ற ஒரு தரமான நாடகத்தை மேடையேற்றினார். அந்த நாடகத்தில் காலம் சென்ற ரொஸாரியோ பீரிஸ் என்ற கலைஞர் மரிக்கார் என்ற பாத்திரத்தில் நடித்து ஏகோபித்த பாராட்டுக்களைப் பெற்றார். இந்த “பதிவுத் திருமணம்” நாடகத்தால் பாலச்சந்திரனுக்கு விலையுயர்ந்த பரிசு ஒன்று கிடைத்தது. அந்தப் பரிசுதான் யோகா வல்லிபுரம் இப்போது தமிழ் மணி யோகா பாலச்சந்திரன்.
வாழும்போதே கலைஞர்கள் கெளவிக்கப்படவேண்டும் என்ற கொள்கையுடைய பாலச்சந்திரனின் இழப்பு எல்லோரையும் துக்கத்தில் ஆழ்த்தியிருந்தது.
நன்றி - தினக்குரல்
05-05-2002
20

Appreciation
Mr. K. Balachandran's demise was an irreparable loss to the Colombo Art Circle, but it was also an enviable gain to the immortals. Death has itselfsuffered a death blow through his artistic creations which led one into a realm beyond words, opening one to lofty speritual experience.
I had the privilege of associating closely with him when I was a sub-editor in the Daily News and Times of Ceylon in the early part of seventies and I was very much impressed by the charming simplicity and the uncommon openness of this man of culture and a cultured man. Since then I had become a sincere and genuine friend of his and was able to gauge his dynamic organising ability and his pragmatic approach towards artistes in ths Colombo Art Circle.
The Colombo Art Circle headed by Mr. Balachandran produced a dazzling array of Artistes, brilliant playwrights, enterprising producers and imaginative Directors.
It was Gate Mudaliyar A.C.G.S. Amarasekera who paid a glowing tribute to Mr. Balachandran when he wrote only those who have been at the organising end of cultural events know the heartburn and frustration of being meticulously Proper in every detail. Personally I think Balachandran's contribution - a silent one, but nevertheless a significant one - must be recognised by the state in some way.”
2

Page 13
A couple of years ago the State Tamil Drama Panel of the Arts Council of Sri Lanka headed by Mr. V.A. * Thirugnanasuntheram felicitated him by conferring him with the title "Aranka Muthukalaignar for his tremendous contributions towards the development and promotion of Tamil Drama in Sri Lanka Since 1960.
In fact, Mr. Balachandran created a record by way of staging a four day Tamil Drama festival, single handed, as far back as in 1960. He did this with a Bank of Ceylon loan, which he settled with his meagre income as a Clerk at Times of Ceylon Limited.
Mr. Balachandran was well known both in Sinhala and English cultural circles. When pioneer Sinhala stage and screen stars Eddie Jayamanne and Rukmani Devi were going through a bad time, it is Balachandran who helped them in numerous ways.
Indeed, it was his wife Yoga, Deputy Director of Family Planning and a veteran journalist, who was a tower of strength in all his endeavours. Bala was deeply attached to his family. He was a devoted husband, an affectioonate father and a loyal and dependable friend.
Though his mortal frame has been consumed by flames he will ever remain immortal.
May I say “Good Night Sweet Prince and may flights of Angles sing thee to thy rest.”
Chelathamby Maniccavasagar
Ceylon Daily News
15-05-2002
22

என் சோடிப்புறா
-யோகா பாலச்சந்திரன்
1929ம் ஆண்டு டிசம்பர் மாதம் 17ந் திகதி திருவாதிரை நட்சத்திரத்தன்று கொழும்பு புறக்கோட்டையில் ஆண் சிசு ஒன்று பிறந்தது. தந்தை பெயர் பாலப்பா கிருஷ்ணசாமி, தாயார் பெயர் முத்தாச்சி. அந்தக் குழந்தை பிறந்தது போலவே வளர்ந்தது. படித்தது ஆளானது என்று சொல்லலாம். அந்தக்காலத்தில் வெள்ளைக்காரன் ஆட்சி செய்த “டைம்ஸ் ஒப் சிலோன்”நிறுவனம் அப்போது இலங்கையிலேயே ஆக உயர்ந்த கட்டிடமாகக் கருதப்பட்டது. இங்கு இந்தப்பிள்ளை தனது பதினேழாவது வயதில் தொழிலுக்கு சேர்ந்தது. தொடர்ந்து அப்பிள்ளை தனது வாழ்வில் திரும்பிப் பார்க்கவேயில்லை. இறுதியில் ஆளணி, தபால் பிரிவின் நிர்வாகியாக கடமையாற்றி 1980-களின் நடுக்கூற்றில் ஒய்வு பெற்றது. எளிமையான குடும்பத்தில் பிறந்து, தனது வசீகரத்தினாலும் ஆற்றவினாலும் உயர்ந்து நாளடைவில் இலங்கையின் எந்தப்பகுதியிலும் பெயர் சொன்னால் தெரியும் அளவிற்கு பிரபல்யம் பெற்ற கே.பாலச்சந்திரன் தான் அந்தப்பிள்ளை என்பது இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும்.
கண்டோரை உடனே கவர்ந்திழுக்கும் தோற்றமும்,
எவரையும் நொடியில் ஈர்க்கும் பேச்சுத்திறனும் சதா புன்சிரிப்புத்
தவழும் முகமும், இன, மத, சாதி பேதங்களே அறியா
அருங்குணமும், இவை போதுமே ஒருவர் வாழ்க்கைப் படியில்
23

Page 14
கிடுகிடுவென ஏறுவதற்கு! அவர் தானி கொழும் பு கலைச் சங்கத்தின் ஸ்தாபகராகவும் நிரந்தர பொதுச் செயலாளராகவும் நாடாளாவிய ரீதியில் சுமார் நாற்பத்தியைந்து ஆண்டுகளாக கலையுலகில் கொடிகட்டிப் பறந்த கே. பாலச்சந்திரனாகும்.
அவர் எனக்கு அறிமுகமாகியது ஓர் இனிய காதல் கதை. 1962ல் என் ஞானத்தந்தையும் பத்திரிகையுலகக் குருவுமான அமரர். திரு. எஸ். டி. சிவநாயகம் அவர்களின் பொற்ககரங்களினால் பொறுக்கி எடுக்கப்பட்ட வீரகேசரியில் உதவி ஆசிரியராக கடமையாற்றிக் கொண்டிருந்தேன். அச்சமயத்தில் தான், 1962 -ன் பிற்காலத்தில் கே. பாலச்சந்திரன் “பதிவுத் திருமணம்” எனும் முழுநீள ஹாஸ்ய நாடகத்தின் தயாரிப்பாளராக எனக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். கொழும்பு - பொரளை வை.எம்.பி.ஏ மண்டபத்தில் நடைபெற்ற அந்நாடகத்திற்கு, நான் அப்போது தங்கியிருந்த டாக்டர். நாகரத்தினம் விடுதி நண்பர், நண்பிகளோடு போனேன். அன்று நான் அந்நாடகத்தைப் பார்த்து மனம் விட்டுச் சிரித்த சிரிப்பு என் வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று யார் நினைத்தார்கள்? நாடகத்தை வீரகேசரியில் விமர்சனம் செய்தேன். தொடர்ந்து கொழும்பு கால்பேஸ் ஹோட்டலில் இடம்பெற்ற நாடகக்கலைஞர்களின் பாராட்டு விழாவில், அப்போது வீரகேசரி பத்திரிகையின் பிரதான உதவி ஆசிரியராகவும், தற்போது “தினக்குரல்’ பத்திரிகையின் பிரதான ஆலோசகராகவும் உள்ள திரு. டேவிட் ராஜூ அவர்களுடன் போனேன். அன்று எனக்கு அறிமுகமானவர்கள் தான் மகத்தான கலைஞர்களான கலையரசு சொர்ணலிங்கம், சில்லையூர் செல்வராசன், லடீஸ் வீரமணி, ரொசாரியோ பீரீஸ் ஆகியோர். தொடர்ந்து தொலைபேசி அழைப்புக்கள், பத்திரிகைகளுக்கான விசேட சினிமாக்காட்சிகள் என எங்கள் அறிமுகம் வளர்ந்தது. ஒரு நாள் திடீரென உணர்ந்தேன், அது தான் “காதல்’ என்று அவர் என்னிடம் காட்டிய ஒரு சிறு பத்திரிகைத்துண்டில் கிறுக்கப்பட்டிருந்த அக்கவிதை வரிகள் எங்கள் காதல் உறவை உறுதி செய்தன.
24

அச்சமயம் ஞாயிறு வீரகேசரி இதழில் “மஞ்சளும் குங்குமமும்” என்ற தலைப்பில் மாதர் சஞ்சிகையை நான் மிக பிரபல்யமாக நடத்திக் கொண்டிருந்த காலம். அந்த நேரத்தில் தான் அக்கவிதை வருகிறது. “பார்வையருக்கு மஞ்சளும் குங்குமமும் என்றொரு நற்பாதை படைக்கின்ற பாவைக்கு, ஒதக்கேள்! தங்குபுகழ் பாலச்சந்திரனுக்கு உன் நுதலில் குங்குமத்தை திட்டக் கொடு”. இது தான் அக்கவிதையின் ஒரு பகுதி.
முதல் நாளிரவில் நீண்ட நேரம் கே.பாலச்சந்திரனும் சில்லையூர் செல்வராஜனும் எங்கள் அரும்புக்காதல் உட்பட பலதும் பத்தும் பேசிய பொழுது எழுதிய கவிதை அது. எங்கள் உடன்பிறவா சகோரதரனாகவும் நல்ல குடும்ப நண்பனாகவும் பின்னர் திகழ்ந்த சில்லையூர் செல்வராஜனும் என் இனிய தோழனும் அன்புக் கணவருமான கே.பாலச்சந்திரனும் இருவருமேயில்லை என்ற துயரை என் நெஞ்சு மிகவும் கஸ்டத்தோடு தான் இன்று ஒளித்து வைத்துள்ளது.
1966 ஆகஸ்டு 29ந் திகதி கே.பாலச்சந்திரனுக்கு நான் மனைவியானேன். அதைவிட அவரின் அந்தரங்க தோழியானேன் என று சொல வதே பொருத்தமாக இருக்கும் . பத்துப்பிள்ளைகளுக்கு மூத்த பிள்ளையாக என்னை பெற்றெடுத்து அருமை பெருமையாக வளர்த்து,இலங்கை பூராவும் சென்றாலும் மிகச் சிறந்த பள்ளிக் கூடங்களில் என்னை படிப்பித்து, என்னை ஆளாக்கிய பெற்றோரான பொலீஸ் இன்ஸ்பெக்டர் என் தந்தை முருகேசு வல்லிபுரம், என்தாய் சொந்த அறிவுமிக்க செல்லம்மா இருவரும் முதலில் எங்கள் திருமணத்தை ஆதரிக்கவில்லை. ஆயினும் என் மனம் நோகக்கூடாதே என்பதற்காக யாழ்-நீர்வேலி கந்தசுவாமி ஆலயத்தில் எங்கள் திருமணத்தை சைவாசார முறைப்படி செய்து வைத்தனர். நாளடைவில் பாலச்சந்திரனை அவர்களுக்கு மிகவும் பிடித்தது என்றுநான் மிகவும் சொல்லத் தேவையில்லை. முப்பத்திநான்கு வருட தாம்பத்தியம், தினமும் விடியும் காலைப்பொழுதுகள் எங்களுக்கு
25

Page 15
மிகமிக சந்தோஷமாக இருக்கும்.அவர் “அம்மா’ என்று என்னை அழைப்பதும், நான் “அப்பா’ என்று அவரைக் கூப்பிடுவதும் உண்மைப்பாசத்தையும் அன்பையுமே பிரதிபலிப்பன என்பதற்கு,கடவுள் சாட்சி என் அருமைப்பிள்ளைகள் ஜெகன்சுதனுக்கும் இந்த பேரதிசயம் புரியும். இது தான்குடும்பம். இது தான் வாழ்க்கை. நிறைவுகளை மட்டுமே கண்டு இன்புறும் இனிய தாம்பத்தியம் - முப்பத்தியைந்து வருடங்களாய் பறந்த எங்கள் தாம்பத்தியத்தின் அற்புதமான விளைச்சல் தான் எங்கள் அருமைச் செல்வங்களான ஜெகன் - மோகனும், மோகன சுதனும். இன்று வெகு அமைதியாக தமது தந்தையின் பெயரைச் சொல்லும் என்னிரு மகன்மாரோடு என் அருமைப்பேத்தி அஞ்சனாவும் இப்போது மற்றோர் பாலச்சந்திரனாய் சேர்ந்து கொண்ட அழகைக் காண என் கணவர் உயிரோடு இல்லையே? இது காலஞ் சென்ற எனது கணவரது ஆத்மாவிற்கு பெரும் நிம்மதியையும் சந்தோஷத்தையும் தரும் என்று நான் நம்புகிறேன். பொலீஸ் இன்ஸ்பெக்டரான எனது தந்தையினதும் தாயினதும் கனவு, நான் ஒரு சட்டத்தரணியாக வேண்டும் என்பது பின் நான் அடைந்த பேர் புகழைக் கண்டு, அதற்கு காரணமாகவிருந்த என் கணவரது ஒத்துழைப்பையும் பாசத்தையும் பார்த்து, அவர்கள் மனம் பூரித்தனர்.
கலியாணம் கட்டினவுடன் எங்களை மனமார வரவேற்று, இல்லிடம் கொடுத்து இன்னமுதுாட்டி பெற்றோர் போல அன்பும், ஆதரவும் காட்டிய என் ஒரே மைத்துணி காலஞ் சென்ற திருமதி. புவனேஸ்வரியையும், அவரது கணவரும் எனது கணவரின் அன்பு மைத்துனருமான எழுத்தாளர், கவிஞர் அமரர். வி.என். பெரியசாமியையும், அவரது பெற்றோரான அமரர்கள் நாகன், காமாட்சி அம்மாயி ஆகியோரை என் நெஞ்சம் என்றும் மறக்காது. அந்த ஆத்மாக்கள் எனக்கு செய்த உதவிகள் இன்றும் என் இதயத்தில் பசுமையாக உள்ளன.
1950 களின் பிற்கூற்றில் என்று நினைக்கிறேன். கொழும்பு கலைச்சங்கத்தை ஆரம்பித்து இறுதிவரை (கி.பி 2000) 26

எண்ணிலாதளவு கலை நிகழ்ச்சிகளை நாடாளாவிய ரீதியில் கே. பாலச்சந்திரன் தயாரித்தளித்திருக்கிறார். இன, மத, மொழி கடந்து தொடர்ச்சியாக புதுமையான பல நிகழ்ச்சிகளை தேசிய மட்டத்தில் செய்த ஒருவா இலங்கையில் இருந்தாரென்றால், அது கொழும்பு கலைச்சங்க செயலாளர் திரு. கே. பாலச்சந்திரன் மட்டும் தான், என்பது மனச்சாட்சி உள்ள அனைவருக்கும் தெரியும் மாபெரும் உண்மை. புத்தக வெளியீட்டு விழாக்களா, பரதநாட்டிய அரகேற்றங்களா, நாடகம் தமிழ், சிங்களம், ஆங்கிலம் மும்மொழிகளிலும், மேடையேற்றங்களா, சேவை முப்பு பாராட்டு விழாக்களா, சிற்ப, ஒவியக் கண்காட்சிகளா, பொப் இசை நிகழ்ச்சிகளா எதையும் கே. பாலச்சந்திரன் விட்டு வைக்கவில்லை. அவர் ஆற்றிய சமூகப்பணிகள் பற்றி அமரர்களான நடிகவேள் லடீஸ் வீரமணி, பாடகர் உடையப்பன் ராஜ், ஈழத்தின் முன்னோடி சினிமாத் தாரகையான ருக்மணிதேவி, ஈ.ஸி.பி. விஜேசிங்க, கேட் முதலியார் அமரசேகர, ஒப்சேவர் பத்திரிகையின் ஆசிரியராகவிருந்த செளஜா, அவருடைய உடன் பிறவா சகோதரனாக இன்றும் போகுமிடமெல்லாம் அவர் புகழ் பாடும் அந்தனி ஜூவா, மத்தியவங்கி கலைஞர் எஸ். கருணாரட்ன என நூற்றுக்கணக்கானோர் மணிக்கணக்கில் சொல்வார்கள். இன்று இலங்கைத்தமிழ் - சினிமாவிலும் சரி கலியான மேடைகளிலும், சுட்ர்விட்டொளியும் பலரை அறிமுகம் செய்து வைத்த பெருமை டைம்ஸ் பாலாவையே சாரும் . ஆங்கிலப்பத்திரிகைகளில் விளம்பரம் செய்வதன் மூலம், தமிழ் நாடகங்களுக்கு சமூகத்தின் மேல்தட்டினரையும் ஈர்த்தெடுக்கலாம் என்ற உத்தியை செய்து வைத்தவரே இந்த பாலச்சந்திரன் தான் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் தமிழ் நிகழ்ச்சிகளை முதலில் நடத்தியவரும், ஐனாதிபதி மாளிகை வரை தமிழ் நிகழ்ச்சியாளர்களை கொண்டு சென்றவரும் இவரே.
டைம்ஸ் “பாலா’ கலைக்காகவே வாழ்ந்தார். தனக்கு
பிடித்தமானவற்றை கலையின் ஊடாகவே செய்தார். இறுதிவரை
அதே சிரித்த முகத்தோடு 72 வயது வரை மனநிறைவோடு
சந்தோஷமாகவே வாழ்ந்தார். இதில் ரிஷி மூலம் பார்க்க 27

Page 16
வேண்டிய அவசியமே எனக்கேற்பட்டதேயில்லை. வாழ்க்கையை கண்ணியமாக நடத்த எனக்கும் தொழில் இருந்தது. கெளரவமாக மதிப்போடும் திருப்தியோடும் வாழும் மனநிலையும் எம் இருவருக்கும் இருந்தது. சாதாரண மானுட வாழ்வுக்குள்ள பிரச்சனைகள் எங்களுக்கும் இருந்திருப்பினும், எனக்கும் பாலச்சந்திரனுக்குமிடையே இருந்த அப்பழுக்கற்ற காதலும், பரஸ்பர மரியாதையும் நாளும் பொழுதும் அதிகரித்ததே தவிர ஒரு போதும் குறைந்து நாமறியோம். என் இரு பிள்ளைக்களான ஜெகனும் சுதனும் எங்களை நன்கு உணர்ந்த குணசீலர்களாக, உத்தமமான மனிதர்களாக வாழ்வில் உயர்ந்தது கடவுள் எமக்களித்த பெரும் கொடை இந்த நிலையில் ஜன்ம ஜன்மங்களாக இணைந்து வாழ்கிறோம் என்று நினைத்தோமே தவிர, மரணம் கூட நம்மை பிரிக்கக்கூடும். என்ற எண்ணம் எனக்கேற்படவேயில்லை. இதனால் தான் அவர் மறைந்து சுமார் இரண்டரை ஆண்டுகள் வரை ஒரு எழுத்தாளியான நான் அவரைப்பற்றி எழுத என் பேனாவை தொடவேயில்லை. இது மட்டுமன்றி, அவர் சம்மந்தப்பட்ட தடயங்கள், போட்டோக்கள், பத்திரிகை, எழுத்துப்பிரதிகள் அனைத்தையும் மறைத்தே வைத்தேன். அந்த அளவிற்கு அவை என்னை பாதித்தன.
நான் இந்தளவுக்கு இலங்கை முழுவதும் அறியப்பட்டவளாக இருக்கிறேன் என்றால் , எழுத்து, மேடைப் பேச்சு,வானொலி, தொலைக் காட்சி, பத்திரிகை எனப்பல்வேறு வெகுசனத் தகவல் தொடர்பு சாதனங்களில் பிரபல்யமாகியது மட்டுமல்ல, இலங்கை பூராவும் சென்று மக்களோடு மக்களாய் பிணைந்து பணியாற்றி சாதாரண மக்களின் நேசத்தை பெற்றேன் என்றால், அது டைம்ஸ் “பாலா’ என்று அன்போடு அனைவராலும் அழைக்கப்பட்ட கே.பாலச்சந்திரன் என் கணவராய் வாய்த்தமையால் என்பது, மறுக்கவொண்ணா சத்தியமாகும். குறிப்பாக அவர் நடத்திய சர்வதேச தின பெண்கள் கெளரவ நிகழ்ச்சிகளை எடுத்துக் கொண்டால் பாலியல் சமத்துவம், பெண்கள் முன்னேற்றம் ஆகியவற்றில் அவருக்கிருந்த அனுகூல சிந்தனை புலனாகும். விசேடமாக, பெண்ணியல் வாதம்
28

குறித்தது நான் எழுதிய கடும் தீவிரமான கதைகளை நூல் வடிவில் கூட வெளியிட்டதோடு சென்னை (தமிழ்நாடு) உட்பட ஊர்பூராவும் வெளியிட்டு விழாக்களும் செய்தார். ஒரு சாதாரண சந்தேகப்பிராணியாக, ஒரு சாமானிய ஆணாதிக்க மனிதனாக அவர் இருந்திருந்தால், இக்கதைகள் வெளிவந்தே இராது. அல்லது எமது குடும்பம் உடைந்து போயிருக்கும் இதனை பல எழுத்தாள நண்பர்கள், குறிப்பாக அமரர். இளங்கீரன், நெல்லை க. பேரன் போன்றோர் அடிக்கடி குறிப்பிடுவர். கண்ணியமான என் கணவர் மகத்தான மானுட நேயம் கொண்டவர். தான் பிறந்த எளிமையை இறுதிவரை ஜனாதிபதி மாளிகைக்கு அடிக்கடி போகும் அந்தஸ்தை தேடிய பின்னும் மறந்தாரில்லை. சாதாரண மக்களோடு கடைசிவரை உறவு வைத்திருந்தவர். ஒரு சில அமைப்புக்கள் இதுவரை அவரை கெளரவித்த பாராட்டியுள்ளன. அரச தரப்பில் தமிழ்கலாச்சார அமைச்சினால்” அரங்கக்கலை மூதறிஞர்” என்ற பட்டமும் பொற்கிழியும் கிடைத்தது. இதற்கு காரணமாக இருந்தவர் திரு. எஸ். திருஞானசுந்தரம், திருஞானசுந்தரம் அவர்கள் தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளராகவும், பல பாரிய பொறுப்புக்களை வகித்தவர் என்பதோடு எனது குடும்ப நண்பருங்கூட, தென்னிந்திய நட்சத்திரங்களை வைத்து சுகததாச ஸ்டேடியத்தில் நிகழ்ச்சிகளையும் ஐ.நா சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு நாடாளாவிய ரீதியில் அமைச்சர். ஹ?ருள்ளேயை பிரதம அதிதியாகக் கொண்டு நடத்திய பாலச்சந்திரன் சந்தோஷமாகவே கடைசிவரை வாழ்ந்தார். நந்தி அண்ணா (பேராசிரியர். எஸ். சிவஞானசுந்தரம்) சொன்ன மாதிரி எப்போதும் ஆனந்தமான மனிதராக பாலா திகழ்ந்தார். அந்த ஆத்மா நித்திய பெருஞ்சோதியில் சத்தியமான பேரின்ப சுகம் காணும் என்பதில் எனக்கு ஐயமில்லை. இதுவே எனது பிரார்த்தனையுமாகும்.
11-09-2002
29

Page 17
எண் அத்தான் மரணிக்கவில்லை
- வி முரீதரனி
தலைநகரிலே மூவினவர்த்தவர்களும் ஏற்றுக் கொண்ட ஒரு கலைஞனாக தலை சிறந்தொரு நிர்வாகியாக வெற்றிகரமானதொரு நாடக தயாரிப்பாளராக வெற்றிக்கொடி நாட்டிய கொழும்பு கலைச்சங்க நிறுவுனர் கிருஸ்ணசாமி பாலச்சந்திரன் என்கின்ற பாலா மறைந்து பதினாறு மாதங்கள் கழிந்து விட்டன. ஆனால் அந்த வெற்றி வீரனை நினைவு கூராத கலைஞர்கள் கொழும்பில் யாரும் இருக்க முடியாது. அத்தனை தனித்துவம் மிக்கதொரு மனிதனுடன் முப்பதிற்கு மேற்பட்ட வருடங்கள் நெருங்கி வாழ்ந்தவன் என்ற முறையில் அடைந்த நன்மைகள் உண்மையில் எனக்குக் கிடைத்த பெரும்பேறு என்றே இன்று நான் திட்டமாக நம்புகின்றேன். இது வெறும் வார்த்தை அலங்காரம் அல்ல. சத்தியமான வார்த்தைகள்.
எனது அத்தானை முதன்முதலில் காணும் போது எனக்கு பதினாறு வயதிருக்கும்.வாழ்க்கையின் எதிர்காலத்தை மிகுந்த ஆவலுடன் எதிாநோக்கிய காலமது. அன்று தொட்டு இறுதிக் காலம் வரை அவருடன் எனக் கிருந்த உறவு அலாதியானது. சில சமயங்களில் எனது தந்தை என்ற ஸ்தானத்தில் நண்பனாக நெருங்கியிருப்பார். இவ்வாறு இவர் பல கோணங்களில் நெருங்கியிருந்ததன் காரணமாக நான் இன்றும் அவரது பல வெற்றிகரமான குணாதிசயங்களை வாழ்க்கையில் கடைப் பிடிக்க கூடியவனாக வாழ்ந்து கொண்டிருக்கின்றேன் என்பது ஒரு சுயமதிப்பீடு ஆகும்.
அரசியலில் மிகவுயர்ந்த மனிதர்களுடனும் அவர்
இலகுவில் சென்று அவர்களை நாடகக்கலை விழாக்களுக்கு 30

மிக இலகுவாக அழைத்து வந்து சேர்க்கக்கூடிய ஆற்றல் அவருக்கு கை வந்த கலையாக இருந்தது. அதே வேளை அவர் அரசியலில் எந்தச் சாயமும் தன்னுடன் ஒட்டாதவாறு சாமர்த்தியமாக விலகியிருந்தமையும் அதிசயமாக நோக்கக்கூடிய அம்சமாகும். அவருக்கு கிடைத்த அம்சங்கள் வேறு எவருக்காவது கிடைத்திருந்தால் அரசாங்கத்தில் பெருத்ததொரு இலாபத்தை ஈட்டியிருப்பார்கள். ஆனால் ’அத்தான் தனது தனித்தவத்தை இழந்து மண்டியிட ஒருபோதும் தயாராக இருந்திருக்கவில்லை. ஆனால் அவருக்கு எதிரிகளும் இருக்கவில்லை.அவர் நினைந்திருப்பின் கொழும்பில் ஒரு கோடிஸ்வரனாக வாழ்ந்திருக்கலாம். ஆனால் மனிதனாகவே வாழ்ந்தார்.
அத்தானுக்கு சிங்கள நண்பர்களா, தமிழ் நண்பர்களா அல்லது இஸ்லாமிய நண்பர்களா அதிகம் என்று என்னால் உறுதியாக கூற முடியாது. அவ்வாறு அவர் எவ்வித போதமுமின்றி எல்லோருடனும் பாசமுடன் பழகி வந்தார். இதன் காரணமாக தலைநகரில் எந்தவொரு காலத்திலும் தனித்துவம் இழக்காது வாழ அவரால் முடிந்தது.
சமூகத்தில் அதியுயர்ந்த தரத்தினருடன் நெருக்கமாக பழகக்கூடிய அத்தான் வாழ்க்கைப்பாதையில் அடிமட்டத்தில் வாழ்ந்தவர்களுடனும் கூட நெருங்க முடிந்ததை நான் பெரிதுதம் வியப்புடன் அவதானித்துள்ளேன்.
தலைநகரில் அனேகமாக எல்லா இடங்களிலும் அவரது சாதனை நிகழ்வுகள் நடைபெற்றிருக்கின்றன. ஆங்கில நாடகங்களா, தமிழ் நாடகங்களா அல்லது பொப்பிசை நிகழ்ச்சிகளா அல்லது புத்தக வெளியீடுகளா எல்லாவற்றையும் அவருக்கென்றிருந்த ஒரு நுட்பத்தின் வாயிலாக வெற்றிகரமாக நடாத்திக் கொண்டிருந்த காலங்களில் அவருடன் மிகவும் நம்பிக்கையுள்ளவனாக நெருங்கி இவ் அனுபவங்களை ஒரளவேனும் நானும் பகிர்ந்து கொள்ள நேர்ந்தமை ஒரு
31

Page 18
வரப்பிரசாதமே.
மனிதர்களின் பலனி களையும் நன்றாக எடை போடக்கூடியவராக அவர் இருந்திருக்கின்றார். இதனாலேயே அவர் இருந்திருக்கின்றார். இதனாலேயே அவர் பெரும் சாதனையாளனாக வரமுடிந்தது எனலாம். பல சந்தர்ப்பங்களில் அவர் சிறந்த வள்ளலாக எனக்கு தோன்றினார்.
ஒரு காலகட்டத்தில் குறிப்பாக எனது பாடசாலை வாழ்க்கையில் எனது உயர் கல்விக்காக காட்டிய ஆதரவை ஒரு போதுமே மறக்க முடியாதவை. அவரது ஆற்றல்களை வார்த்தைகளால் தெளிவுபடுத்தக்கூடிய திறமை இல்லையே என்ற ஏக்கம் என்னுள் இன்று எழுகின்றது. இன்னொருவரை உதாரணமாக குறிப்பிட்டு தெளிவுபடுத்தலாமென்றால் எண் கண்முன்னே அப்படியான ஒரு வெற்றியாளன் தென்படுவது மில்லை. அத்தான் என்ற உறவுடன் என் வாழ்வில் எனக்கு வழிகாட்டிய அந்த மகோன்னத மனிதன் இன்று இல்லை என்பது இந்த உலகிற்கே ஒரு இழப்பாகும்.ஆனால் இறைவனுக்கு நன்றி சொல்லவும் கடமைப்பாடுடையவர்களாகின்றோம்.
அத்தான் தலைநகருக்கு எப்போது செல்லும் போதும், எந்தவொரு இடத்திற்கு செல்லும் போதும் அவருடன் அங்கெல்லாம் சென்று மகிழ்ந்த நினைவுகள் என் உள்ள மெல்லாம் நிறைகிறது. நான் காணும் மனிதர்களில் பலர் உங்களை வாஞ்சையுடன் நினைவு கூரும் போதெல்லாம் என் உள்ளம் பெருமையால் பூரிக்கின்றது.
அத்தான்! நீங்கள் இறந்து விட்டீர்கள் என்பதே தவறு. தலைநகரில் இன்னும் நீங்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றீர்கள், எப்போது சென்றாலும் நான் உங்களை காண்கிறேன், உங்கள் நினைவுகளை மறவாத அந்த நல்ல உள்ளங்களில்

புகழ்பெற்ற ஆங்கில நாடக விற்பன்னரான ஈ.ஸி.பி. விஜேசிங்காவின் “ஹி கம்ஸ் புரம் ஜப்னா’ (He Comes froா Jaffna) நாடகங்கள் உட்பட பல ஆங்கில நாடகங்களை கே. பாலச்சந்திரன் மேடையேற்றினார். 60 களில் புகழ்பெற்ற இந்நாடகங்களை, மீளவும் 70-80 களில் மேடையேற்றி புத்துயிர் அளித்த பெருமை பாலச்சந்திரனைச்சாரும். மேற்கானும் படத்தில் பேர்சி கொலம்பகே, பாலச்சந்திரன், ஏ.ஸி.பி. விஜேசிங்க, சுனில் சில்வா ஆகியோரைக் காணலாம்.

Page 19
1980 களில் கொழும்பு கலைச்சங்கம் தயாரித்து பல இடங்களில் மேடையேற்றிய ஆங்கில நாடகங்கள் "நெவர் மைண்ட் சில்வா” - “பை பை ராஜ" இவற்றை எழுதியவர்கள் ஆங்கிலப் பத்திரிகையாசிரியரான அமரர் எஷான் செளஜா, யோகா பாலச்சந்திரன் ஆகியோர். இந்தப்படத்தில் "நெவர் மைண்ட் சில்வா" காட்சி ஒன்றின் போது பிரதம அதிதியை அறிமுகம் செய்கிறார். கே. பாலச்சந்திரன் படத்தில் நடிகர்களான போல் (Paul) அமரர் சில்லையூர் செல்வராஜன் ஆகியோரையும் EFSTGOTTGOTLÊ.
காணப் படுகிறார். அவருகி கு அடுத் தபடியாக தற்சமயம்
பாளராக இருக்கும் திரு. ராகுலன் மற்றும் அமரர் கே. கணேசபிள்ளை, சந்திரபிரபா மாதவன், ரோகினி, டீன்குமார் ஆகியோர் காணப்படுகின்றா.
 
 

1999ல் ஐ.நா.வின் சாவதேச மகளிர்தின விழாவை கொழும்பு கலைச்சங்கம் கொழும்பு டப்ரபேன் ஹோட்டலில், பல்வேறு துறைகளில் பணியாற்றி புகழ்பெற்ற பெண்களை கெளரவித்து கொண்டாடியது. படத்தில் டாக்டர். ரீயானி பஸ்நாயகா, கண் டாக்டர் ஆயிஷா, சிலிங்கோ பணிப்பாளர் திருமதி. கொத்தலாவலை. பிரபல தமிழ் எழுத்தாளர் பத்திரிகையாசிரியர் தமிழ்மனி அன்னலட்சுமி இராதுரை ஆகியோருடன் விழா ஏற்பாட்டாளர்களான பாலச்சந்திரன் தம்பதிகள்
தூர ஆறு
1970களின் நடுக்கூற்றில் ஐ.நா.வின் சர்வதேச சிறுவர் தினவிழாவையொட்டி கொழும்பு கலைச் சங்கம் பள்ளி மாணவர்களிடையே ஓவியப் போட்டி ஒன்றை நடத்தியது. அப்போட்டியில் இடம்பெற்ற படங்களை கால்பேஸ் ஹோட்டலில் வைத்து தெரிவு செய்யும் போது எடுக்கப்பட்ட படம். படத்தில் (இடமிருந்து வலமாக) திருமதி. அன்னலஷ்மி இராஜதுரை, பிரபல ஆங்கில கார்ட்டுனிஸ்ட் திரு. ரியன்ஸி விஜேரட்ண (Riance Wijeratne) திருமதி. ஜமா சோமசேகரம், (Haima Somascgaram) ஒலிபரப்பு கூட்டுத்தாபன பணிப்பாளராக அத் தருணம் கடமையாற்றிய திருமதி. பொன்மணி குலசிங்கம் ஆகியோஞ்கள் ஓவியப்போட்டி அமைப்பாளர்களான ¬v፬ቐዛ፱9ነk} தம்பதிகள் காணப்படுகின்றனர்,
35

Page 20
கொழும் பு கலைச் சங்க செயலாளர் திரு. கே. பாலச்சந்திரன், தமிழ் கலாச்சார அமைச்சினால் - ”அரங்க கலா மூதறிஞர் என்ற பட்டமளித்து மருதானை டவர் அரங்கில் கெளரவிக்கப்பட்ட போது எடுக் கப் பட்ட படம் , அருகில * துணைவியார் யோகா பாலச்சந்திரன்,
பால்ய கால பள்ளிக்கூட நண்பரும் இறுதிவரை தன்னோடு மாறாத தோழமை போடு s உணர்மையான நேசத் தோடும் K)KK வாழ்ந்த நணி பர் திருS)S?இ
போது எடுத்தபடம் இதுதான். டைம் ஸப் கே. பாலச்சந்திரன் இறுதியாக எடுத்துக் கொண்ட LLLs. தனது நன L ff.
திரு. நாராயணசாமி கொழும்பு இரத்மலானையில் உள்ள 'மனித நேயம்” அமைப்புக்கு ரூபா, பத்தாயிரம் அன்பளிப்பு செய்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
 
 
 
 
 
 

உம் குழந்தைகளுக்கு சொந்தமான
இந்த உலகைப்பற்றி.
தொகுப்பு ராதா மனோகரன் வல்லிபுரம்
வாசகர்களின் சிந்தனையை தட்டியெழுப்பி நல்ல கருத்துக்களை உருவாக்கவும் வளர்க்கவும் வேண்டும் எனும் நோக்கத்திற்காக பல தகவல்களை தொகுத்து தந்துள்ளேன்.
கண்ணை முடிக்கொண்டு எனது கருத்துக்களை நீங்கள் ஏற்கவேண்டியதில்லை. உங்கள் சுயசிந்தனையை மனச்சாட்சியை கூராக்கி உண்மையை ஆராய்ந்து உணர இக்கட்டுரை சிறிய அளவிலாவது பயன்பட வேண்டும் என்பது என்பதே என் விருப்பமாகும். நன்றி.
Refcrece
"Conversation with god" by Neal Donald Walch
"Quantam Healing" by Dr. Deepak Chopra
"The last hours of Ancient Sunlight' by Thorl Hartmann
Speeches by J. Krishnamoorthy
Speeches by Rajaneesh (Osho)
Speeches by Saibaba of Shirdi
Thirukkural
37

Page 21
அன்பும் மதங்களும்
இயற்கையானது சுயநலமாக இல்லாத காரணத்தால்தான் மனிதன் எவ்வளவு தவறாக நடந்த போதும் அது தன் செல்வத்தை வாரி வழங்கிக்கொண்டிருக்கிறது.
தனிமனித சுயநலமானது ஏனைய மனிதர்களையோ இயற்கையையோ இதர உயிரினங்களையே பாதிக்கும் பாதையில் செல்லும் பொழுது நிச்சயமாக அழிவையே சந்திக்க நேரிடும். இப்படிப்பட்ட சுயநல எண்ணமானது அடிமனதில் பய உணர்ச்சிகளை உருவாக்கிவிடும் . பய உணர்வானது மகிழ்ச்சியை கெடுத்துவிடும். அன்பினை அழித்துவிடும். சுலநலம் பயம், வெறுப்பு, கோபம், விரக்தி போன்ற பிரதிகூலமான உணர்வுகள் இன்றைய மனித நாகரீகத்தின் அடித்தளமாகிவிட்டது.
போட்டியும் பொறாமையும் மனித முன்னேற்றத்திற்கான மிகமிக சிறந்த தத்துவங்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டதுதான் பெரும் கொடுமையாகும். அன்பு என்ற அதிமுக்கியமான, இழக்கவேசுவடாத உன்னத உணர்வை மனிதகுலம் ஏறக்குறைய தொலைத்தே விட்டது. அன்பின் இடத்தை போட்டியும் வியாபாரமும் கைப்பற்றிக் கொண்டு விட்டன.
சகல துறைகளிலும் சகல மட்டங்களிலும் மீண்டும் அன்பை வளர்க்க வேண்டும். அன்புக்கு கேடு விளைவிக்கும் எந்த சட்டங்களும் மனித குலத்திற்கு வேண்டியதில்லை. உலகின் சகல அரசுகளும் அமைப்புக்களும் நிறுவனங்கும், மதங்களும் தனிமனிதர்களும் மீண்டும் இந்த உலகிற்கு, அன்பின் நிறத்தை பூச வேண்டும்.
அன்பு தழைத்தால்தான் உலகம் வாழும். நாம் வாழும் இந்த வேகமான உலகம் தனிமனித சுயநலத்தின் அடிப்படையிலேயே முனனேறிக்கொண்டு இருக்கிறது. இங்கு
முன்னேற்றம் என்பது எது என்ற கேள்வி எழுகிறது. எதிலும் 38

பொதுவான “மனிதகுல முன்னேற்றம்” என்பது பின் தள்ளப்படுவதாக தெரிகிறது. உலகம் தனது மனித முகத்தை இழந்து வருவது போல் தெரிகிறது.
மதம், அரசியல், விஞ்ஞானம், வர்த்தகம், கலை, விளையாட்டு என்று எதை எடுத்துக் கொண்டாலும் அங்கு போட்டியும் சுயநலமும் பொறாமையும் தான் நிலவுகிறது. சுயநலத்தின் அடிப்படையிலான போட்டி மனப்பான்மை மிகச்சரியான மனிதப்பண்பாக பாராட்டப்படுகிறது. சுயநலமும் போட்டியும் இருக்கும் இடத்தில் அன்பு எப்படி உருவாகும்? அன்பு இல்லாத மனிதர்களால் எப்படி இன்பமாக இருக்க முடியும்?
அன்பும் இன்பமும் இல்லாத உலகத்தை மனிதர்களின் உலகம் என்று எப்படி அழைக்க முடியும்? காலத்திற்கு காலம் பல நல்ல மனிதர்கள் உலகத்திற்கு வழங்கிய நல்ல பல கருத்தக்கள் பலவும் சுயநலமிகளால் இன்று குறுகிய வட்டத்திற்குள் அடைக்கப்பட்டுவிட்டன.
மதங்களை எடுத்துப் பாருங்கள், ஏறக்குறைய எல்லா மதங்களுமே நல்ல நோக்கங்களுக்காக நல்ல கருத்துக்களுடன் உருவானவையே. ஆனால் இன்று நடப்பது என்ன?
மனிதகுலத்தை பிரிக்கும் கைங் கரியத்தை மதங்கள் தானே மேற்கொள்கின்றன.? அதிகாரத்தையும் செல் வாக்கையும் பணத்தையும் பெறுவதற்கு குறுக்கு வழிப்பாதைகளாக மதங்கள் மாறிவருவதை மறுக்க முடியுமா? விஞ்ஞானத்தை நோக்கினால், ஆராயப் க்சிகள் புதிய கண்டுபிடிப்புகள் என்பன மனிதகுலத்திற்கும் பிரபஞ்சத்திற்கும் நன்மை விளைவிப்பனவாக இருத்தல் வேண்டும்.
விஞ்ஞான உண்மைகளை நல்வாழ்வு தத்துவங்களை
அக்காலத்தில் கண்டுபிடித்த மகான்கள் அவற்றை ஆர்வத்துடனும்
மகிழ்ச்சியுடனும் உலகிற்கு வழங்கினார்கள். ஆனால் இன்றோ 39

Page 22
ஒன்றை கண்டுபிடிப்பவர் அநேகமாக ஒரு நிறுவனத்தில் ஊழியராகவே உள்ளார். அந்நிறுவனமோ அக்கண்டுபிடிப்பை தனது சொந்த சொத்தாக கருதி கொள்ளை இலாபம் ஈட்டுவதிலேயே குறியாக உள்ளனர்.
மனிதனின் உள்ளுணர்வின் அடிப்படையிலேயே பல உன்னதமான கண்டுபிடிப்புக்கள் உருவாகியுள்ளன. உருவாகவும் வேண்டும். ஆனால் இங்கே நடப்பதென்னவென்றால் உள்ளுணர்வு முளையிலேயே கிள்ளி எறியப்படுகிறது.
இலாப நோக்கம் கொண்ட வர்த்தக கம்பனிகளால்தான் என்ன கண்டுபிடிக்கப்படவேண்டும் என்று தீர்மானிக்கப்படுகிறது. ஆராய்ச்சியாளனின் உள்ளுணர்வுக்கோ மனசாட்சிக்கோ இங்கு வேலை இல்லை. வர்த்தகனின் கருவியாகி விட்டான். ஆராய்ச்சியாளன். போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டிய ஆராய்ச்சியாளன், வர்த்தகனின் கைப்பொம்மை ஆகிவிட்டதுதான் இன்றைய நிலை. கண்டுபிடிப்புக்களை காப்புரிமை செய்து தங்கள் சுயலாபத்தை மட்டுமே நோக்குவோர்க்கு ஒரு கேள்வி, உலகம் தோன்றிய நாள் தொட்டு, நேற்று வரை கண்டுபிடிக்கப்பட்ட அறிவியலின் பயன்பாட்டை, முழுவதும் இலவசமாகப் பெற்றுக்கொண்டு, அதன் அடிப்படையில் இன்று கண்டுபிடித்ததை சொந்தம் கொண்டாடுவது எந்த வகையில் நியாயம்? முதலாளிகள் இலாபம் பெறுவதை உறுதிசெய்யும் பொறுப்பு அரசாங்கத்திற்கு வேண்டியதில்லை. கலப்படத்தை மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களின் உற்பத்திகளை கட்டுப்படுத்தும் பொறுப்பு ஓரளவு அரசாங்கத்திற்கு உண்டு.
விளையாட்டும் போட்டியும்
விளையாட்டுத்துறைக்கு வருவோம். மனிதர்கள் அன்புடன் மகிழ்வுக்காக கூடிக்குலாவுவதற்கு உருவானதே விளையாட்டு.
இன்று இதன் அடிப்படையே துாள் துாளாகிவிட்டது.
40

ஒரு விளையாட்டில் பங்குபற்றுபவரும் பார்வையாளரும் எவ்வளவு துாரம் பரஸ்பரம் மகிழ்ச்சி அடைகிறார்களோ, அவ்வளவு துாரம் அந்த விளையாட்டு வெற்றி பெற்றதாக கருதப்பட வேண்டும். எதிராளியை உயிர்போகும் வரையில் அடித்து நொறுக்கும் கராட்டி குத்துச்சண்டை போன்றவை கூட இன்று மாபெரும் விளையாட்டுக்களாக அங்கீகாரம் பெற்றுவிட்டன.
கிரிக்கெட், டெனிஸ், உதைப்பந்தாட்டம், மோட்டார் வாகனப் போட்டிகள் எல்லாமே அசுரத்தனமாக வெற்றி ஒன்றையே பிரதானமாக கொண்டு நடாத்தப்படுகிறது. விளையாட்டுக்களின் நோக்கம் மகிழ்ச்சி என்பதாக இருக்கவேண்டுமே அல்லது வெற்றிக்காக என்பதாக இருக்கக்கூடாது. நீங்கள் வெற்றி அடைந்தாலி உங்களுடன் விளையாடும் நண்பர் தோற்றிருக்கவேண்டும். ஒருவரின் தோல்வியில் இருவர் எப்படி இன்பமாக இருக்க முடியும்? அன்பையும் இன்பத்தையும் தொலைக்கும் போட்டிகள் மனிதகுலத்திற்கு தேவைதானா?
பள்ளி சிறார்களுக்கு கூட போட்டியையும் பொறாமையையும் வெறுப்பையும் வளர்க்கும் விளையாட்டுக்களை ஆசிரியர்களே கற்றுக்கொடுக்கிறார்கள். பிஞ்சுமனதிலேயே அன்பை பிடுங்கி எறிகிறார்கள்.
விஸ்க்கி, பியர், சிகரெட், கோலா, சப்பாத்து கார், வங்கி, தொழில் சார் ஸ்தாபனங்களே இவற்றை தற்போது பெரிதும் ஊக் குவிக் கினி றன. இவ் வர்த்தக ஸ்தாபனங்களே விளையாட்டுக்களை நடாத்துவதிலும் விளம்பரம் செய்வதிலும் இலாபம் பெறுகின்றன.வன்முறையின் ஆதாரவித்து போட்டி மனப்பான்மையே. விளையாடடும் போட்டியும் இருவேறு எதிர்மறையான விடயங்கள் இன்று.
போட்டி என்பது இப்போது விளையாட்டு அல்ல. விளையாட்டு என்பது போட்டி அல்ல. விளையாட்டை
விளையாட்டுக்காகவே விளையாடவேண்டும். போட்டியில் 4.

Page 23
வெற்றிபெறுவதென்பது சூதில் வெற்றி பெறுவது போலவோ வன்முறையில் வெற்றிபெறுவது போலவோகொள்ள முடியுமே தவிர, அதை ஒரு விளையாட்டாக கொள்ள முடியாது. போட்டி இருக்கலாம் பொறாமை இருக்கக்கூடாது என்பது அர்த்தமே இல்லாத வெறும் வசனமாகும். பொறுக்காமை தான் போட்டிக்கே ஆணிவேர்.
விளையாட்டுத்துறையை மீண்டும் மானிடகுலத்தின் அன்பின், மகிழ்ச்சியின் வெளிப்பாடாக மாற்றவேண்டிய கடமை ஒவ்வொரு விளையாட்டு ஆர்வலர்க்கும் உண்டு.
நிலமும் நீரும்
இதுவரை குறிப்பிட்டவற்றைவிட முக்கியமான விடயம் இயற்கையைப் பற்றியதாகும்.
இயற்கையில் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் ஒன்றில் ஒன்று பின்னிப்பிணைந்து ஒன்றில் ஒன்று தங்கியே இருக்கின்றன. சகல உயிரினங்களும் சுவாசிப்பது தாவரங்களில் இருந்து பெறப்படும் ஒட்சிசன் பிராணவாயுவையேயாகும். சகல தாவரங்களும் சுவாசிப்பது உயிரினங்களில் இருந்து பெறப்படும் காபனீர் ஒட்சிசனி எனப்படும் வாயுவையேயாகும் . சுருங்கச்சொல்லின் மரம் இல்லையேல் மனிதன் இல்லை. மனிதன் போன்ற உயிரினங்கள் இல்லையேல் மரம் போன்ற தாவரங்களும் இல்லை.
காற்று, நீர், நிலம், தாவரம் மற்றும் உயிரினங்களை மனிதன் போட்டி போட்டுக்கொண்ட அழிக்கிறான். 92% வீதமான ஒட்சிசன் தாவரங்களில் இருந்தே உருவாகுகின்றது. இவற்றில் தென்அமேரிக்கக் காடுகளில் இருந்து மட்டும் 58% வீதமானவை காணப்படுகின்றது.
42

உலகின் சுவாசப்பை என்று தென்அமெரிக்க அமேசன் பிரதேசக் காடுகள் அழைக்கப்படுகின்றன. தற்போது இக்காடுகளுக்கு பல வழிகளிலும் சோதனை வந்து விட்டது. முக்கியமான ஆபத்து எதனால் எனின், சற்று திகைத்து விடுவீர்கள்.
வட அமெரிக்காவில் பெருகியுள்ள இறைச்சி உண்ணும் கலாச்சாரம் தான் பெரும் காரணியாகும். கோஸ்ட்டரீக்கா, எல்சல்வடோர், கெளதமாலா, நிகரகுவா, ஹொண்டுராஸ், பனாமா, போன்ற நாடுகளில் இருந்து வடஅமெரிக்காவுக்கு மிகப்பெரிய அளவில் இறைச்சி ஏற்றுமதி செய்யப்படுகிறது.
தென்னமெரிக்க நாடுகளில் உள்ள வறிய மக்கள், காடுகளை அழித்து கால நடை வளர்ப்புக் களை மேற்கொள்கிறார்கள். இக்காடுகள் அழிவதால் பிராணவாயு உற்பத்திற பாதிப்படைகிறது. அதுமட்டும் அல்ல, முக்கியமாக மழை வீழ்ச்சி குறைகிறது. நிலக்கீழ் நீரானது தாவரங்களுடாக நீராவியாகி வானையடையும் போது ஏற்படும் ஈரலிப்பினால் மீண்டும் மழையாகப்பெய்கிறது. இந்த சுழற்சி வட்டம் குன்றும் பொழுது பலவிதமாக உயிரினங்களும் அந்த நிலப்பிரதேசத்தில் வாழமுடியாது போய்விடும்.
கிழக்காபிரிக்க நாடுகளில் நடந்தது இதுதான். மழை இல்லை, விவசாயம் படுத்து விட்டது. மண்வரண்டுவிட்டு பாலைவனமாகிவிட்டது. பட்டினிச்சாவு சர்வசாதாரணமாகி விட்டது. இநீதியாவில் கூட பல மாநிலங்களில் இந் நிலை பெருகிக்கொண்டே போகிறது. மழை நீர் கடலில் வீழ்ந்தால் ஒரு பிரயோசனமும் இல்லை. உலகில் ஒவ்வொரு மணிக்கூறும் 1500 ஏக்கர் காடுகள் அழிக்கப்படுகிறது. மரத்தொழிலில் ஈடுபடுவோர் ஒவ்வொரு மரத்தையும் தறிக்கும் பொழுதுதான், போதியளவு மரவிதைகளை நடுவதாக கூறிக்கொள்கின்றனர். இவர்கள் நடும் சிறுமரங்கள் வளர்ந்துவர சில சமயம் நுாறு வருடங்கள் கூட ஆகலாம். வெட்டப்பட்ட மரங்களின் இழப்பை ஈடுசெய்ய சிலவேளை முந்நுாறு வருடங்கள் கூட ஆகலாமாம்.
43

Page 24
காற்று மண்டலம் மிக வேகமாக பாதிப்படைந்து வருகிறது. பெரும் தொழிற்சாலைகள் ஏராளமான நச்சு வாயுக்களை தினமும் ஆகாயத்திற்குள் மிதக்க விடுகின்றன.
பல இடங்களிலும் சிலநேரம் பெய்யும் மழைகூட ஓரளவு அசிட் மழையாகத்தான் பெய்கிறது. மேலும் பூமியைச் சுற்றியுள்ள ஓசோன் எனப்படும் வாயுக்கவசம் பாதிப்படைந்துள்ளது. இதன் காரணமாக பூமியின் உஷ்ணம் அதிகரிக்கிறது. பல கோடி வருடங்களாக உறைந்து பனிப் பாறைகள் உருகத தொடங்கியுள்ளன இதனால் கடல் நீர்மட்டம் உயர்கிறது. வெள்ளப்பெருக்குகள் ஏற்படுகிறது. உங்கள் பிள்ளைகளின் காலத்தில், மாலைதீவு, சீஷெல்ஸ் போன்ற தீவுகள் முற்றுமுழுதாக கடலுக்குள் மூழ்கிடவும் கூடும்.
நிலத்திற்கு கீழ் இருக்கும் வளங்களை அளவுக்கு அதிகமாக எடுப்பதைப்பற்றிய பயங்கர உண்மைகளை தற்போது பார்ப்போம். ஒரு முக்கியமாக பொருள் நிலத்திற்கடியில் பல கோடி வருடங்களாக சேமிக்கப்பட்டு வந்துள்ளது. அதுதான் சக்தி எரிபொருள் பெற்றோலியம். காலங்காலமாக வளர்ந்த தாவரங்கள் இயற்கை சுழற்சிமுறைகளால், நிலத்திற்கடியில் புதைக்கப்பட்டு பின் பெற்றோலியமாக பரிணாமம் கண்டுள்ளன.
சுமார் 300 மில்லியன் வருடங்களுக்கு முன்பாக பூமியில் ஒரு பெரும் வெடிப்பு ஏற்பட்டு இருக்கலாம் அது ஒரு வால்வெள்ளி போன்றவற்றால் நிகழந்திருக்கலாம். அப்பொழுது 70 மில்லியன் வருடங்களாக உலகில் அடர்ந்து வளர்ந்திருந்த காடுகள் நிலத்திற்கடியில் அமுக்கத்துடன் புதைக்கப்பட்டிருக்க வேண்டும். அவைதான் இன்றைய பெற்றோலியமும், நிலக்கரியுமாகும். 18ம் நுாற்றாண்டின் இறுதியில் கண்டுபிடிக்கப்பட்ட பெற்றோலியம் தற்போது சுமார் பாதியளவு எடுத்தாகிவிட்டது.
மிஞ்சி இருப்பது இன்னும் 40 வருடங்களுக்கு
போதுமானவை. அதுவும் மிகத்தன்னம்பிக்கையான ஆய்வின்படி,
சில ஆய்வாளர்களோ அவ்வளவு காலம் தாக்குப்பிடிக்காது 44

என்கிறார்கள். அதன் பின் என்ன செய்யப்போகிறார்கள்? பெற்றோலிய உற்பத்தி என்று மிக அழகான சொல்லால் குறிப்பிடுகிறார்கள். ஏதோ உணவு உற்பத்தி துணி உற்பத்தி போன்று இதுவும் ஒரு உற்பத்தி பொருள் போன்ற மாயத்தோற்றத்தை நுாற்றாண்டுகளாக காட்டிக்கொண்டு வருகிறார்கள். உண்மையில் நிலத்திற்கடியில் உள்ளதை பம்பு செட்டு வைத்து எடுக்கிறார்கள். தண்ணிர் கூடத்தான் இப்படி எடுக்கிறார்கள் இதற்காக யாராவது தண்ணிர் உற்பத்தி என்று சொல்வார்களா? பெற்றோலியத்திற்கு ஓரளவு மாற்றுவழிகள் இருந்தும் கம்பனிகள் அவற்றில் நாட்டம் செலுத்துவதில்லை. ஏனெனில் அவற்றில் எல்லாம் கொளுத்தலாபம் கிடையாது.
பூமாதேவியின் செல்வம்தான் கொள்ளையடிக்க வசதியாக இருக்கிறதே? தயவுசெய்து பெற்றோலியத்தின் தேவையை குறையுங்கள். பொதுமக்களே! உங்கள் சந்ததிகளின் எதிர்காலம் கொள்ளையடிக்கப்படுகிறது.
பெற்றோலியம் மட்டுமல்ல மேலும் ஏராளமான கனிமப்பொருட்கள் இப்படித்தான் சூறையாடப்படுகிறது.
உணவும் உண்பொருளும்
உணவு சம்பந்தமான அதிமுக்கியமான உண்மைகளை இனி கவனிப்போம்.
மனிதர்களின் இன்றைய உணவுதேவைகள் பெரும்பாலும் பெருவர்த்தகர்களாலேயே தீர்மானிக்கப்படுகிறது. ஒரு பக்கம் உணவுப்பற்றாக்குறை, மறு பக்கம் தேவைக்கு அதிகமாகவே உண்டு. அதனால் ஏற்படும் நோய்கள். வடஅமெரிக்காவில் தொடங்கி தற்சமயம் உலகம் முழுவதும் பரவிக்கொண்டு ஒரு புதிய உணவுக் கலாச்சாரம் வளர்கிறது. அதுதான் இறைச்சிக்கலாச்சாரம்.
45

Page 25
இது பற்றி 1989 இல் எடுக்கப்பட்ட சில புள்ளி
விபரங்களை பார்ப்போம்.
10.
அமெரிக்கப்ப பண்ணைகளில் பன்றி, மாடு, கோழி, போன்ற கால்நடைகள் உண்ணும் தானியங்களால், அமெரிக்காவைப் போல் ஐந்து மடங்கு மக்களுக்கு உணவளிக்கலாம்.
அமெரிக்காவில் உற்பத்தியாகும் சோழனில் 80 வீதம் ஒட்ஸ்தானியம் 95 வீதமானவை கால்நடைகளால் உண்ணப் படுகிறது.
கால்நடைகளால் கழிக்கப்படும் புரதம் 90 வீதம்
மாப்பொருள் 99 வீதம்
நார்ப்பொருள் 100 வீதம்
உலகில் 2 விநாடிக்கு ஒரு குழந்தை பசியால் இறக்கிறது.
ஒரு ஏக்கரில் 20 ஆயிரம் இறாத்தல் கிழங்கு உற்பத்தி யாகிறது. ஒரு ஏக்கரில் 165 இறாத்தல் இறைச்சி உற்பத்தி செய்யலாம்.
56 வீதமான விளைநிலங்கள் சல இறைச்சி உருவாக்கப் படுகிறது.
16 இறாத்தல் சோயா செலவு செய்து, ஒரு இறாத்தல் இறைச்சி உருவாக்கப்படுகிறது.
5 இறாத்தல் புரதத்தானியம் கொடுக்கப்பட்டு, ஒரு இறாத்தல் கோழி இறைச்சி பெறப்படுகிறது.
. 40000 குழந்தைகள் ஆண்டு தோறும் பசியால் மடிகின்றன.
ஒருவருக்குறிய இறைச்சி உற்பத்தியாகும் நிலத்தின் அளவில் 20 பேருககுரிய தாவர உணவு உற்பத்தி செய்ய முடியும்.
உலகில் பட்டினிச்சாவை தடுத்த நிறுத்த, அமெரிக்காவில்
மாமிச உணவை 10 வீதம் குறைத்தாலே போதும்.
46

11.
12.
13.
14.
15.
16.
7.
18.
19.
20.
21.
22.
23.
அமெரிக்காவில் மண்வளம் சேதமடைவதில் கால் நடைகளின் பங்கு 85 வீதமாகும்.
ஒவ்வொரு வருடமும் 4000000 ஏக்கர் (கனெக்டிக்கெட்மாநில அளவு) நிலம் பாசனத்திற்கு உதவாமல் போகிறது.
1989 வரை 2600,000,00 ஏக்கர் காடுகள் கால் நடைகளுக்காக அமெரிக்காவில் மட்டும் அழிக்கப்பட்டுள்ளது.
8 செக்கனிற்கு ஒரு மரம் வெட்டப்படுகிறது.
ஒரு மாமிச உணவு உண்பவர் அதை கைவிட்டு தாவர உணவு உண்ணத்தொடங்கும் பொழுது, ஒவ்வருடமும் ஒரு ஏக்கர் காடு காப்பாற்றப்படுகிறது.
உலகில் உள்ள முழுமக்களும் மாமிச உணவு உண்டால் பெற்றோலிய இருப்பு 13 வருடங்களே தாக்குப்பிடிக்கும்.
முழு மக்களும் தாவர உணவு உண்டால், பெற்றோலிய இருப்பு 260 வருடங்கள் தாக்குப்பிடிக்கும்.
அமெரிக்காவின் மொத்த மூலவளங்களில், 33 வீதமானவை இறைச்சி உற்பத்திக்கே செலவழிக்கப்படுகிறது.
ஆனால் தாவர உற்பத்திக்கு 2 வீதமே செலவாகிறது.
50 வீதமான மொத்த குடி நீர், கால்நடை வளர்ப்புக்கே பயன்படுகிறது.
ஒரு இறாத்தல் கோதுமை உற்பத்தி செய்ய 25 கலன் நீர் தேவைப்படுகிறது.
ஒரு இறாத்தல் இறைச்சி உற்பத்தி செய்ய 2500 கலன் நீா தேவைப்படுகிறது.
அமெரிக்க அரசினால் கால்நடை வளர்ப்புக்கு நிதிச்சலுகை அளிக்கப்படுகிறது. இது வழங்கப்படாவிட்டால் ஒரு இறாத்தல்
47

Page 26
24.
25.
26.
27.
28.
29.
30.
31.
32.
33.
34.
35.
ஹம்பேர்களின் விலை 35 டொலராக இருக்கும்.
கோதுமை இருந்து பெறப்படும் ஒரு இறாத்தல் புரதத்தின் விலை 1.50 சதங்களே.
இறைச்சியில் இருந்து பெறப்படும் ஒரு இறாத்தல் புரதத்தின் விலை 15.30 சதங்களாகும்.
அரசு சலுகை நிறுத்தப்பட்டால் ஒரு இறாத்தல் புரதத்தின் விலை 89 டொலராகிவிடும். பெருங்கம்பனிகளுக்கே இச் சலுகை வழங்கப்படுகிறது.
ஒரு செக்கனிற்கு 12000 இறாத்தல் மனிதக் கழிவுகள் வெளியேறுகின்றன.
ஒரு செக்கனிற்கு 2500.00 இறாத்தல் கால்நடைக் கழிவுகள் வெளியேறுகின்றது.
மனிதக்கழிவுகள் உரியமுறையில் சுத்திகரிக்கப்படுகிறது.
கால் நடைக்கழிவுகள் உரியமுறையில் அப்புறப்படுத்தப் படுவதில்லை. அநேகமாக நிலக்கடி நீரிலும் ஆறுகளிலும் சங்கமம் ஆகின்றன.
ஒவ்வொரு 25 செக்கனிற்கும் உலகில் ஒருவருக்கு மாரடைப்பு நோய் ஏற்படுகிறது.
ஒவ்வொரு 45 செக்கனிற்றும் ஒருவர் மாரடைப்பால் இறக்கிறார்.
50 வீதமாக அமெரிக்கர்கள், மாரடைப்பினாலேயே இறக்கிறார்கள்.
தாவர உணவு உண்பவர்களில் 15 வீதமானவர்களுக்கே மாரடைப்பு ஏற்படுகிறது.
சுத்தமாக தாவர உணவு உண்பவர்களில் 4 வீதம் பேருக்கே
மாரடைப்பு ஏற்படுகிறது.
48

36.
37.
38.
39.
40.
41.
42.
43.
44.
45.
46.
இறைச்சி, முட்டை, மீன், பால் போன்றவற்றை தவிர்த்தால், 90 வீதமான மாரடைப்பை தவிர்க்கலாம்.
தினசரி மாமிசம் உண்ணும் பெண்ணை, புற்றுநோய் நாலு, மடங்கு அதிகமாக தாக்குகிறது.
தினசரி மாமிசம் உண்ணும் ஆணை 3.6 மடங்கு அதிகமாக தாக்குகிறது.
உலகில் பல நாட்டு மக்களையும் ஆராய்ந்ததில், சுத்தமாக தாவர உணவு உண்பவர்களின் உடல் ஆரோக்கியம் மிக உன்னதமாக நிலையில் இருப்பதை காணலாம்.
பூச்சி கொல்லிகள், கனைகொல்லிகள், கிருமிநாசினிகள் போன்ற ரசாயனப் பொருட்கள் 55 வீதமானவை மாமிச உணவில் உள்ளன.
மேற்படி ரசாயனங்கள் 23 வீதம் பாலில் உள்ளன. மேற்படி ரசாயனங்கள் 6 வீதம் மரக்கறிகளில் உள்ளன. மேற்படி ரசாயனங்கள் 1 வீதம் தானியங்களில் உள்ளன. மேற்படி ரசாயனங்கள் 4 வீதம் பழங்களில் உள்ளன.
மாமிசம் உண்ணும் அமெரிக்க தாய்மார்களில் 99 வீதம் பேர்களின் தாய்ப்பாலில் டிடிரி செறிந்துள்ளது.
தாவர உணவு உண்ணும் தாய்மார்களில் 8 வீதமானவர்களே, டிடிரி யால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வகையான ரசாயனப் பொருட்கள் மலட்டுத்தன்மையை உண்டாக்குகின்றது.
1950 இல் அமெரிக்க மாணவர்களில் 0.5 வீதமானவர்கள் மலட்டுத்தன்மை அடைந்தனர்.
1967 இல் 25 வீதமானோர் இவ்விதம் மலடாகிவிட்டனர்.
49

Page 27
குழந்தைகளும், சிறுவர்களுமே தற்போது இவர்களின் இலக்கு. குழந்தைகள் விரும்பும் வண்ணம் அலங்காரங்கள், பொம்மைகள், கேளிக்கை விளையாட்டுக்கள், வினோதங்கள் போன்றவற்றை வழங்கி, முதலில் அவர்களை வாடிக்கையாளர்கள் ஆக்குகின்றனர். பெற்றோர்களும் வேறு வழியின்றி பிள்ளைகளை பின்தொடர்கின்றனர்.
குழந்தைப் பருவத்திலேயே இவர்கள் சில உணவு முறைகளுக்கு பழக்கப்படுத்திவிட்டால், பின்பு இலகுவில் மாறமாட்டார்கள். தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை. மேலைத்தேசங்களில் அநேகமாக பலருக்கும் அளவுக்கு அதிகமாக எடை கூடுவது பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. சிலருக்கு இது உயிர் ஆபத்து ஏற்படும் அளவுக்கு உள்ளது. இறைச்சிக்கான கால்நடைகள் பல தவறான முறைகளில் கொழுக்க வைக்கப்படுகின்றன. குறைந்த செலவில் குறுகிய காலத்தில் பெரிய சதைப்பிடிப்புடன் கால்நடைகள் வளர பலவிதமான ரசாயனப் பொருட்கள் ஹோர்மோன்கள் கொடுக் கப்படுகினி றன. 6) குறுக் கு வழிகள் கையாளப்படுகின்றன. இத்தகைய இறைச்சியை உண்பவருக்கும் இத்தனைய பாதிப்புக்கள் வருவது இயற்கையே. தற்போது தாவர உணவுகளுக்கும் பெருவர்த்தகளால் பெரும் பாதிப்பு ஏற்படத்தொடங்கி உள்ளது.
மரபணு மாற்றங்கள்
மரபணு மாற்றத்தை கையாளும் பெருவர்த்தகர்களும் அவர்களின் ஆராய்ச்சியாளர்களும் இதைப்பற்றி பெரிதும் சிலாகித்து பேசுகிறார்கள். அவர்கள் பெரிதும் முன்வைக்கும் வாதங்களும் அவற்றிற்குறிய பதில்களையும் நோக்குவோம்.
1. உலகின் சனத்தொகைக்கு ஏற்ற அளவு உணவு உற்பத்தி செய்வதற்கு மரபணுமாற்றம் தேவையாகிறது. மக்களின் 50

பற்றாக்குறைக்கு காரணமாக அமைவது வறுமையே ஒழிய, உணவுப்பற்றாக்குறை அல்ல.
2. மரபணு விஞ்ஞானமானது வளர்ந்து வரும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு பெருமுதவி செய்யும். இதைவிட பெரும் மோசடி எதுவும் இருக்க முடியாது. கம்பனிகள் மரபணு விதைகளை காப்புரிமை செய்துகொள்கிறார்கள். மேலும் இக் கம்பனிகள் விவசாயிகளை விதைகள் சேமிக்கவோ மறுவிற்பனை செய்யவோ பண்டமாற்று செய்யவோ முடியாதபடி சட்ட ஒப்பந்தங்கள் மூலம் தடுத்த விடுகின்றன.
வறிய நாடுகளின் விவசாயிகள் பெரும்பாலும் தங்கள் சேமிப்பில் உள்ள விதைகளிலேயே தங்கியுள்ளனர். விவசாயிகள் பாரம்பரியமாக நம்பியிருக்கும் விதைகளை விட்டு ஓரிரு தடவைகள் தானும் மரபணு விதைகளை நாடினால் பின் நிரந்தரமாகவே மரபணு விதைகளையே நம்பியிருக்க வேண்டியதுதான். அதிலும் முக்கியமான ஒரு விடயம் என்னவென்றால் தற்போது, வல்லரசுகளின் அனுசரணையுடன் டேமினேட்டர் தொழில்நுட்ப முறைகளை கையாளுகிறார்கள்.
இம்முறையில் உருவாக்கப்படும் விதைகள் மூலம் உருவாகும் பயிர்கள் மிக நன்றாக வளரும். ஆனால் இப்பயிர்களில் இருந்து உருவாகும் விதைகள் முளைக்காது. இவ்விதைகளை உபயோகிக்கும் விவசாயி தனது விதைகள் சேமிப்பை நிரந்தரமாக இழந்து விடுவார்.
விவசாயிகள் நிரந்தரமாக வெளிநாட்டுக் கம்பனிகளிலேயே தங்கி இருக்கவேண்டி வந்துவிடும். இவற்றை பயன்படுத்தும் வறிய நாடுகள் ஒரு சில வருடங்களுக்குள் தாங்கள் பாரம்பரியமாக பயன்படுத்தும் விதைநெல் போன்றவற்றை இழந்து விடுவார்கள். பின்பு அந்நாடுகள் விரும்பினால் கூட இத்தகைய கம்பனிகளில் கோரப்பிடியில் இருந்து மீள முடியாது.
5

Page 28
காலங்காலமாக மூன்றாவது உலக நாடுகளில் பயன்படுத்தப்பட்டுவரும் பயிரினங்கள் மூலிகைகள் போன்றவற்றை இக் கம்பனிகள் உரிமைப்பதிவு செய்துள்ளன. பாஸ்மதி, அரிசி, வேம்புபொருட்கள், மஞ்சள், கீழாநெல்லி, ஆடாதோடை, பாவட்டை போன்ற சுமார் முப்பதுக்கு மேற்பட்ட பயிரினங்களை இக்கம்பனிகள் பதிவுரிமம் செய்து வைத்துள்ளன. மண்ணை நேசிக்கும் மண்ணின் மைந்தர்களே ! விவசாயத்தை பெருங் கம்பனிகளின் கோரப்பிடியில் இருந்து மீட்டு எடுங்கள்.
3. அதிக களைகொல்லிகள் உபயோகிக்க வேண்டிய தேவையில்லை. மரபணு தாவரங்கள் குறிப்பிட்ட சில வகையான களைகள் வளர்வதை தடுக்கும் நுட்பத்தை கொண்டே உருவாக்கப் படுகின்றது. வேறு வகையில் சொல்வதானால், இதர பயிர்கள் வளர்வதை தடுக்கும்.
இதன் மூலம் நிலமானது எவ்வளவு துாரம் பாதிப்படையும் என்று நீங்களே ஊகித்து கொள்ளுங்கள். மேலும் இக்கம்பனிகள் குறிப்பிட்ட ஒரு களைகொல்லியை குறிப்பிட்ட ஒரு விதைக்கு விற்கின்றன. இக்களைகொல்லிகள் குறிப்பிட்ட தாவரம் தவிர்ந்த இதர தாவரங்கள் முழுவதையும் அடியோடு அழித்துவிடும்.
4. அதிக பூச்சி கொல்லிகள் பாவிக்க வேண்டியிருக்காது. இவ்வகை விதைகளானது பெரும்பாலும் பூச்சி கொல்லிகளை (மரபணு நுட்ப முறைகளை) தனி னகத்தே கொணி டு உருவாக்கப்படுகின்றன. இவற்றை உண்ணும் நம் உடலானது எவ்வளவு பாதிப்படையும் என்பது, இன்னும் சரியாகக் கண்ட பிடிக்கப்படவில்லை.
5. மரபணு தாவரங்கள் மிகச் சாதாரணமாக இயற்கை
உணவாகும். இல்லவே இல்லை. மிக இயற்கையான உணவு
என்றால் காப்புரிமை பதிவு ஏன்? யாரை ஏமாற்றுகிறார்கள்?
ஹிட்லரின் நாஸி டாக்டர்கள் யுத்தக்கைதிகளின் உடலில்
இயற்கைக்கு மாறான விதங்களில் குரூரமான முறையில் சத்திர 52

சிகிச்சைகள் செய்து விளையாடியது போன்று அல்லவா இயற்கையாக உருவாகும் தாவர அமைப்பில் கைவைக்கிறார்கள்.
6. ஒட்டு மாங்கன்றுகள் போல ஒரு தாவரத்தில் இருந்து இன்னொரு தாவரத்தை ஒட்டி வைத்தல் போன்றதே இது. நிச்சயமாக இல்லை. ஒட்டுத்தாவரங்களில் ஒரு தாவரத்தின் மரபணுவை இன்னொரு தாவரத்தில் செலுத்தி அதன் அடிப்படையை மாற்றுவதில்லை. ஒட்டப்படும் தாவரமானது தனக்கு தேவையானதை மட்டும் எடுத்துக்கொண்டு தானே வளர்கிறது.
7. மரபணு விஞ்ஞானம் பாதுகாப்பானதா? அனுபவ அடிப்படையில் தான் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும்
மரபணு மாற்றத்தை பொறுத்தவரை இன்னும் போதிய அளவு காலம் பரீட்சித்துப் பார்க்கப்படவில்லை. இது விடயமாக பொதுமக்களிடையே பெருமளவு கருத்தப் பரிமாற்றங்களும் அனுபவங்களும் இன்னும் ஏற்படவில்லை. மக்களின் உணவுப் பழக்கத்தைப் பொறுத்தவரை, ஒட்டு மொத்தமாக கம்பனிகள் மீது பழி போடுவது சரியல்ல.
மக்கள் உணவைப்பற்றிய விழிப்புணர்ச்சி போதியளவு இல்லாமல் இருப்பதையும் சற்று அவதானிக்கவேண்டியுள்ளது. பழக்கத்திற்கு அடிமைப்பட்டு உண்பது, அல்லது பிறரின் வற்புறுத்தலுக்காக உண்பது. உணவுப் பொருட்களின் தோற்றத் திற்காக அல்லது அழகிற்காக உணர் பது. கவர்ச்சிகரமான விளம்பரங்களையும் தவறாக தகவல்களையும் நம்பி உண்பது. இதுபோல இன்னும் அநேகமான மேலெழுந்த வாரியான பல காரணங்களின் அடிப்படையில் உண்கிறார்கள்.
ஒவ்வொரு உணவும் உண்ண முதல், மிக அவதானமாக அமைதியாக உடலின் உள்ளுணர்வை உற்று நோக்கவேண்டும். உடல், மனம், உள்ளுணர்வு ஆகியன என்ன சொல்கின்றன என்பதை உற்று கேட்க வேண்டும்.
53

Page 29
இது பலருக்கும் புதிய அல்லது பொருள் விளங்காத ஒரு விடயமாக தோன்றக்கூடும். ஏனெனில் நாம் இதுவரை எமது உடலின் தேவையை கெட்டு பழகவே இல்லை. பழக்க வழக்கத்தின் அடிப்படையிலேயே உண்கிறோம். அதிலும் தேவைக்கு அதிகமாகவே உண்கிறோம்.
உடலானது தனது தேவையை உள்ளுணர்வுகளால் வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறது. நாம்தான் அதன் உணர்வகளை கிரகிக்க முடியாமல் நோய்வாய்ப்படுகிறோம். மேசையில் ஏராளமான விதம்விதமான உணவு இருக்கின்றது என்பதற்காக அவசரப்பட்டு அள்ளி விழுங்கி விடாதீர்கள். மிஞ்சிப்போய் குப்பைக்கூடைக்குள் போடவேண்டி வருமே என்று வயிற்றைக் குப்பை கூடையாக்காதீர்கள். இன்று படித்தவர் பாமரர் எல்லோரும் இதைத்தான் செய்கிறார்கள்.
உங்கள் உடல் மிகமிக அற்புதமான கருவி. பல நுாறு ஆணி டுகள் வாழக் கூடிய விதத்தில இறைவனால வடிவமைக்கப்பட்டுள்ள அற்புதமான பொருள். பிராணிகளை எடுத்துக்கொள்ளுங்கள், அவற்றிற்கு நோய் வருவது குறைவு. அப்படி வந்தாலும் அநேகமாக அவை சுய வைத்தியம் பார்த்துக்கொள்கின்றன. சிங்கம், புலி போன்றவை அதிக இறைச்சியை உண்டு விட்டால், செரிமானத்திற்காக புல் மேய்வதை அறிந்திருப்பீர்கள்.
ஆடு, மாடு, நாய், பூனை போன்றவை சிலவேளைகளில் நோய் வாய்ப்படுவது ஏனெனில், அவற்றின் தேவைகளை பெரும்பாலும மனிதர்கள் கவனிப்பதால்தான். உடலானது தனக்கு ஏற்படும் நோயையும் அதற்குரிய மருந்தையும் கூட உள்ளுணர்வாக வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறது. நாம் தான் அந்த உணர்வுகளை கிரகிக்கும் ஆற்றலை, இழந்து கொண்டிருக்கிறோம். எமக்கு மனம் என்ற ஒன்று இருப்பது போலவே எமது உடலுக்கும் ஒரு மனம் உள்ளது. இதை உடல் மனம் என்று அழைக்கிறார்கள்.
54

உடலின் ஒவ்வொரு செல்லுக்குள்ளும் (Cell) அறிவு உள்ளது. மூளையில் மட்டும் தான் அல்லது இதயத்தில் மட்டுமே அறிவு இருக்கிறது எனறென்ன வேண்டாம். ஒவ்வொரு செல்லுக்குள்ளும் இயங்கும் அறிவு சதா செய்திகளை பரிமாறிய வண்ணம் உள்ளது. இவ்வுணர்வுகளை செய்திகளை நாம் கிரகித்தக் கொள்ள பழகவேண்டும். உள்ளே இருப்பதை உற்று அவதானிக்காமல், புறத்தே அல்லவா பொழுது போக்குகிறோம்!
நோய் முதலாளிகள்
நோய்களும் மருந்துகளும் போட்டி போட்டுக்கொண்டு பெருகுகின்றன. இன்றைய உலகில் இவையிரண்டும் ஒன்றில் ஒன்று தங்கி வளர்ந்து வருகின்றன.
நோயாளர்களுக்கும், வைத்தியர்களுக்கும் இடையில் புகுந்த முதலாளிகளுக்கு வைத்தியத்துறையானது பெரும் இலாபத்தை அளிக்கும் கைத்தொழிலாகிவிட்டது. மருந்து உற்பத்தியாளர்களே இன்றைய வைத்திய உலகில் பெரும் பங்கு வகிக்கின்றனர்.
வர்த்தக ரீதியான ஆராய்ச்சிக்கூடங்கள் வர்த்தக ரீதியான ஆஸ்பத்திரிகள் வர்த்தக ரீதியான வைத்திய காப்புறுதிகள்
என்பன இன்றைய வைத்திய முறையில் அங்கீகரிக்கப்பட்ட அமைப்புக்களாக உள்ளன. ஒரு மனிதனின் நோயைத் தீர்ப்பதில் முதலாளிகள் இலாபம் பெறுவது சரியா?
குரூரமாக அல்லது காட்டுமிராணி டித்தனமாக தெரியவில்லையா? வர்த்தகர்களுக்கு சற்று வசதியான சட்டத்தின் கட்டமைப்புக்குள் வைத்தியனும் நோயாளியும் மடக்கி வைக்கப்பட்டுள்ளதாகவே தெரிகிறது.
55

Page 30
வர்த்தகர்களால் ஊக்கிவிக்கப்படும் ஆராய்ச்சிகளை பற்றி பெரும்பாலும் மிக உயர்ந்ததாகத்தான் சொல்லப்படுகிறது. சில வேளைகளில் இது சரியாகக்கூட இருக்கல்ாம். ஆனால் அவற்றின் அடிப்படை நோக்கம் என்னவோ பணமாகத்தான் இருக்கிறது. பண லாபத்தை கருதி செய்யப்படும் சேவையின் அந்தரங்க சுத்தியை சிறிது சந்தேகப்படுவது இயல்பேயாகும். இங்கே பெரும் லாபம் அடைவர் வைத்தியன் அல்ல. வைத்தியன் ஊதியத்தையும் சலுகைகளையுமே பெறுகிறான். வைத்தியத்துறை வர்த்தகர்கள், மனிதனின் நோயையும் மருந்தையும் வைத்தியத்தையும் வைத்தியக் காப்புறுதியையும் வைத்து இலாபம் சம்பாதிப்பது எப்படி தர்மமாகும்?
எமது உடலானது அநேகமாக தனக்கு ஏற்படும் நோய்களை தானே சுயமாக குணப்படுத்தும் ஆற்றலை கொண்டுள்ளது. வெளியில் இருந்து செலுத்தப்படும் அநேகமாக மருந் துகள் காலப் போக் கிலி உடலிலி உள் ள சுயமாகக் குணப்படுத்தும் ஆற்றலை பாதித்துவிடுகிறது. ஏற்பட்டுவிட்ட நோய்க்கு அதிரடியாக ரசாயன பெளதிக தாக்குதல்களை நடாத்தி குணமாக்கும் முறையை மேற்குலக வைத்தியமானது கைக்கொள்கிறது. இது எப்படி இருக்கிறது என்றால், இரு நண்பர்களில் ஒருவர் மற்றவருக்கு அடித்து விட்டார். நல்ல நடுநிலையாளர் என்ன செய்யவேண்டும்?
அடிபட்டவனையும் அடித்தவனையும் சமரசம் செய்து நல்வழிப்படுத்தி அவர்களின் நட்பை உறுதிசெய்யவேண்டும். இருவரும் நண்பர்கள். நட்பாக இருக்க வேண்டியவர்கள். விவேகமற்ற நடுநிலையாளரோ அடித்தவனுக்கு அடிப்பார் அல்லது ஏசுவார். அடிபட்டவனும் தற்காலிகமாக திருப்தி அடைவார். ஆனால் இதனால் நட்பு கெட்டுவிடுகிறது. நண்பர்கள் பிரிந்து விடுகிறார்கள். கசப்பும் சண்டையும் மேலும் வளர்கிறது. இங்கேதான் மிகப் பெரிய தவறு நடந்துவிடுகிறது. நோய்க்கு மட்டுமே கவனம் செலுத்தப்படுகிறது. மூடனுக்கு வழி கிட்ட என்பது போல் நோய்க்குறிய காரணத்தை அறிவதிலும் அதை
56

சரி செய்வதிலும் அதிக கவனம் செலுத்தப்படுவதில்லை. யோகிகள், ஞானிகளைப் பாருங்கள் பெரும்பாலும் ஒருவரின் நோய்க்கு அவரின் மனோநிலை உணவு சூழல் வாழ்க்கை முறை போன்றவையே முக்கிய காரணங்களாகின்றன.
நோய் தீர்க்கும் மருந்தும் இவற்றிலேயே கிடைக்கின்றன. இரவில் வீட்டில் தொலைத்த மோதிரத்தை பகலில் வீதியில் கண்டெடுக்கமுடியாது. உலகின் மிகப் பழமையான சித்த ஆயுள்வேத வைத்திய முறைகளை அவதானித்தல் நலம்.
நாம் உடல், மனம், ஆத்மா எனப்படும் மூன்றையும் கொண்டிருப்பவர்கள். உடல் கண்ணுக்கு தெரிவது. மனம் கணி னுக்கு தெரியாது. ஆனால் அதன் இருப்பு ஏற்றுக்கொள்ளக்கூடியதாக உள்ளது. ஆத்மா என்பதை மிகமிக அபூர்வமாகவே சிலர் அனுபவபூர்வமாக உணர்ந்துள்ளனர்.
ஒருவர் இன்னொருவருக்கு இதுதான் ஆத்மா என்று விளக்கப்படுத்த முடியாது. எந்தப் பெரிய விஞ்ஞான ஆராய்ச்சின் படியம் கண்டு பிடிக்க முடியாது. ஒவ்வொருவரும் தாமாகவே முயன்று அறிய வேண்டியதாகும். ஆத்மாவை அறியும் முயற்சியில் நாம் ஈடுபடும் போது எமது உடலும் மனமும் சுகம் கிடைக்கிறது. நோய்கள் விலகுகிறது. உள்ளுணர்வுகள் துல்லியமாக தெரியத் தொடங்குகிறது.
யோகிகளைப் பாருங்கள், ஞானிகளைப் பாருங்கள் ஆரோக்கியமாக இருந்தார்கள் தேவைக்கு ஏற்ற அளவே உண்டார்கள். அதுவும் கூடிய விரைவில் இயற்கை உணவையே உண்டார்கள். ஆனந்தமாக வாழ்ந்தார்கள் வாழ்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் உடல் மனத்தின் மொழியை புரிந்து கொண்டார்கள். இது உங்கள் அனைவராலும் நிச்சயமாக முடியும். முயற்சி செய்யுங்கள். உண்ணும் உணவின் அளவைக் குறையுங்கள். அதுவும் தேவைக்கேற்பவே உண்ணுங்கள். அதிலும், சமைக்காத இயற்கை உணவை சிறிய அளவாவது
57

Page 31
மெல்ல மெல்ல உண்ணப்பழக்க படுத்திக் கொண்டால், மிகவும் சிறப்பு.
மனிதன் அடிப்படையில் ஒரு தாவர பட்சணிதான். மனிதனின் பற்களைப் பாருங்கள். ஆடு மாடுகளினதைப் போன்ற அமைப்பில் அமைந்துள்ளன. சிங்கம், புலி, கரடி, நாய், நரிகளைப் போன்று குத்திக் கிழிக்கும் கோரைப்பற்கள் மனிதனுக்கு இல்லை. சாத்வீக உணவையே உண்ணுங்கள்.
இன்று எந்த துறையை எடுத்துக்கொண்டாலும் குறுகிய சுயநலவாதம்தான் அடித்தளமாக காணப்படுகிறது. இதில் என்ன தவறு இருக்கிறது என்று கூட கேட்கப்படுகிறது. ஒரு மனிதனின் துன்பத்தில் இன்னொரு மனிதன் இன்பம் பெரும் காணும் சுயநலத்தை எப்படி ஆதரிக்க முடியும்? ஊரை அடித்து உலையில் போடும் சுயநலத்திற்கு வசதியான சட்ட அமைப்புக்கள் எப்படி உருவாகின? அரசியலில் தர்மம் என்பது அடியோடு போய்விடும் அதிகார ஆசைக்கு எதுவும் செய்யலாம், எதுவும் சொல்லலாம் என்றாகிவிட்டது. இன்று அரசியல் ஒரு தொழிலாகவும் வர்த்தகமாகவும் ஏன் ஒரு பகற்கொள்ளையாகவும் கூட மாறி விட்டதை பல நாடுகளிலும் பார்க்கக்கூடியதாக உள்ளது. பொதுச் சேவையாக இருக்க வேண்டிய அரசியல், பணத்தை மேலும் பெருக்கும் பாதையாக மாறிவிட்டது.
ஒரு அரசியல் வாதி சகல தந்திரங்களையும் உபயோகித்து வெற்றி பெறுவது பாராட்டப்படுகிறது. ஒரு கட்சி நாட்டு நலனை புறக்கணித்தாவது வெற்றி பெற்று விட்டால்கூட பாராட்டப்படுகிறது. ஒரு நாடு பொருளாதார ரீதியிலோ அரசியல் ரீதியிலோ ராணுவ ரீதியிலோ வெற்றி பெற்று விட்டால், அதுவும் பாராட்டப்படுகிறது. இந்த மனோ நிலை மனித குலத்திற்கு உருவானதையிட்டு மனிதர்களாகிய நாம் வெட்கப்படவேண்டும். ஆனால் நடப்பதென்ன? எந்த வழியிலாவது வெற்றி பெற்றவன் நீதிபதி தோற்றவன் குற்றவாளி. இந்தச் சிந்தனை “வலிமையுள்ளது எஞ்சும்’ என்ற அடிமுட்டாள் தனமான சிந்தனையில் இருந்து
58

உருவானதுதான். போட்டியையும் வெற்றியையும் மட்டுமே குறிக்கோளாக, அரசியல் கலாச்சாரமே இன்றைய கட்சிகளை ஆள்கிறது. குறுகிய சுயநலத்திற்கு சேவை செய்யும் சட்டங்கள் பலவும், இப்படிப்பட்ட கட்சிகளால் உருவானதாகக் கூறப்படுகிறது. அனால் பல சமயங்களிலும் கட்சி எல்லைகளை கடந்த சகாக்களால் அதாவது “லாபிகள்’ என அழைக்கப்படுபவர்களால் தீர்மானிக்கப்படுகிறது.
வெகுஜன ஊடகங்களினி பாரிய பொறுப்புகள்
வர்த்தகர்களும் சரி அரசியல்வாதிகளும் சரி மக்களை அடைவதற்கு பயன்படும் சாதனங்கள் தொலைக்காட்சி, பத்திரிகை, திரைப்படம், வானொலி, இன்டர்நெட், போன்ற ஊடகங்களாகும். இந்த ஊடகங்களில் பெரும் முதலாளிகளின் ஆதிக்கம் மிகவும் அழுத்தமாக வேரூன்றி விட்டது. இப்பெரு முதலாளிகளின் ஆதிக்கத்திற்கு எதிராக இன்டர்நெட் சிறு பத்திரிகைகள் வானொலி, திரைப்படங்கள் போன்றவற்றில் சில முயற்சிகள் அப்போது மேற்கொள்ளப்பட்டும் வருகின்றன.
இப்பெரு முதலாளிகளின் ஊடகங்களின் தவறான ஊக்குவிப்புகளால் உலகில் வன்முறைக் கலாச்சாரம் பெருகி விட்டது. சில நாடுகளில் உள்ள குக்கிராமங்களில் சரியாகக் குடிக்க தண்ணிர் கூடக்கிடைக்காது. ஆனால் போத்தல் பானம் கிடைக்கக் கூடடியதாக உள்ளது. இந்த ஊடகங்கள் மக்களிடையே தேவையில்லாத பொருட்களை வாங்கும் பழக்கங்களை உருவாக்கி விட்டன. மக்களின் சுயசிந்தனையை மழுங்கடிப்பதில் பெருமதலாளிகளின் ஊடகங்களுக்கு பெரும் பங்கு உண்டு.
உலகில் ஒரு அபிப்பிராயத்தை உருவாக்கவும், அதை இல்லாமல் செய்யவும் இந்த ஊடகங்களால் முடியும். ஹிட்லர்
போன்ற சர்வாதிகரிகள் பலமும் உருவானது இப்படிபட்ட 59

Page 32
ஊடகங்களின் உதவியால்தான். தற்போது இம்முதலாளிகள் தங்கள் இலாபத்தை பெருக்கிக்கொள்ள கம்பனிகளை இணைக்கிறார்கள்.
ருவாண்டாவில் இனக்கொலையே நடைபெற்றது. லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்படுகிறார்கள். மேற்குலக நாடுகளின் பெரும் ஊடகங்களுக்கு இது பெரும் ஜனரஞ்சகமான விடயமாக தெரியவில்லை போலும்.
இளவரசி டயனாவின் மரணத்தை சாதாரண மக்களின் குடும்ப அங்கத்தவர் ஒருவரின் மரணமாகவே மாற்றிவிட்டனர். இந்த ஊடகக்காரர்கள்.
இவ்வகை ஊடகங்கள் தங்கள் சுயரூபம் மக்களுக்கு தெரிந்துவிடக் கூடாதே என்று சிலவேளைகளில் இயற்கை சூழல் மாசுபடுதல் மூன்றாவது உலக நாடுகளில் உள்ள தொத்துவியாதிகள், பட்டினி போன்றவற்றையும் பேசுவதுண்டு.
ஆனால் பெரும்பகுதியான நேரங்களில் மக்கள் உள்ளுணர்வு பெற்று விடாதபடி ஜனரஞ்சகமான மனதை அலைக்கழிக்கும் காட்சிகளையும் செய்திகளையும் வழங்கிக் கொண்டிருக்கின்றன.
சிறுவர்களின் மனதில் வன்முறையை வளர்க்கின்றன. பாடசாலை சிறுவர்களின் துப்பாக்கி சூடு, கத்திக்குத்து மாதிரியான சம்பவங்கள் சில நாடுகளில் சகஜமாகிவிட்டன. எதிர்காலத்தில் பாடசாலைகளில் வன்முறையை கட்டுப்படுத்த ராணுவப் பாதுகாப்பு கோரப்பட்டாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.
சாதாரண பொதுமக்கள் இவற்றைப் பற்றி சிந்தித்து செயல்படத் தொடங்கினால், உலகம் புத்துயிர் பெறலாம்.

கல்வியின் நோக்கம்
அல்வா மேர்டல் -சுவீடிஷ் சமூகவியலாளர் (Aiva myrdel-Swidish Sociolist)
கல்வித்திட்டத்தின் அவசியமான நோக்கம்:-
இளைஞர்களுக்கு கல்வி அளிப்பதனால் அவர்கள் பின்வரும் வல்லமைகளை தகமைகளை எதிர்பார்க்கப்படுகிறது. 1) காத்திரமான தனிப்பட்ட (சொந்த) காதல் உறவுகளை ஊட்படுத்திக் கொள்வார்கள்.
2) இரட்டை வேடதாரிகள் ஆக மாட்டார்கள். (நேர்மையானவர் களாய் வாழ்வார்கள்)
3) விபச்சாரத்தை கணிசமாகக் குறைக்க உதவுவார்கள். (விபச்சாரத்தை தவிர்ப்பதன் மூலம் )
4) பாலியல் நோய்களை குறைக்க உதவுவார்கள் (Venereal diseases)
5) பொறுப்பில்லா பெற்றோரின் தொகையை குறைப்பார்கள் (irresponsible parent hood)
6) நல்ல சமாதானமான குடும்பங்களை அமைப்பதன்மூலம், விவாகரத்துக்கான காரணிகளை குறைப்பார்கள்.
“காதல் என்பது, என்னை மன்னியுங்கள் (நான் தப்பு செய்துவிட்டேன் என்பதல்ல)
6Tsä GBBFæ56ð- (Eric segal) “சந்தோஷமான ஒளியை நான் விசில் பண்ணுகிறேன். ஒவ்வொரு தடவையும் எனது சந்தோஷ விசில் ஒலி எழும்போது, எனக்கு எதிலும் பணம் கிடையாது என்ற நம்பிக்கை வலுக்கிறது.”

Page 33
-அனா-”த கிங் அன்ட் ஐ" யிலிருந்து (ஜெரால்ட்
ஜி. ஐம்பெஸ்கி. எம்.டி.யின் அன்பு, காதல் என்பது பயத்தை தோற்க்கடிப்பது எனும் நூலிருந்து)
( Anna in the king and I' Gerald G.Jampdsky -M.D.S book or “love is noyhing go of fear)
கடவுளோடு நட்பு
எந்த ஒரு வாழ்க்கை முறைக்கும் நாணயம், நேர்மை (intersity) அவசியம் தேவை.
பூரணமானவற்றையே கடவுள் உற்பத்தி செய்தார். ஒவ்வொரு ஆத்மாவும், சம்பூர்ணமானது, துாய்மையானது, அழகானது உலகில் வாழும் சமயங்களில் ஏற்படக்கூடிய மனிதக்குணமான மறதிகளினால், தெய்வ அவதாரங்களும், சம்பூரணமற்ற செயல்களை செய்யக்கூடும்.
வாழ்க்கையில் ஏற்படும் ஒவ்வொரு சம்பவமும் ஏதேனும் தகுந்த ஒரு காரணத்திற்காகவே ஏற்படுகின்றது. கடவுளின் (ஆண்டவனின்) உலகில் தப்புத்தவறுகளுக்கு இடமேயில்லை.
கடவுளின் உலகில் சந்தர்ப்பவசத்தால் ஒன்றுமே ஏற்படாது. ஆழ்ந்த வாழ்க்கையின் உண்மையினைத் தேடுவோர், அதனை பெற்றே திருவர். மிக நெருக்கமான, அத்திய நீ துவமானதுமான நட்புறவை கடவுளோடு கொண்டாடிப்பாருங்கள். (அதற்காக, கோயிலுக்கு, சேர்ச்சுக்கு, மசூதிக்கு நீங்கள் போகவேண்டும் என்றில்லை. உங்கள் வீட்டில், வேலைத்தளதத்திலேயே கடவுளோடு நீங்கள் பேசிச் சிரித்து மகிழலாம்.)
உங்கள் மனம், வாக்கு, காயம் (அதாவது இருதய பூர்வமான அன்பும் தைரியமும்) துாய்மை உண்டாகும் வகையில், கடவுளை நண்பனாக்கிக் கொள்ளுங்கள்
62

கடவுளோடு நெருக்கமான நட்பு பூண (T) வழிகள்
1) கடவுள் என்பது என்ன என்று சரியாக அறிந்து
கொள்ளுங்கள் (அடையாளங்கள், சின்னங்கள் அல்ல) 2) கடவுளை உண்மையாக நம்புங்கள் 3) கடவுளை அன்போடு நேசியுங்கள் 4) கடவுளை மனதார தழுவிக் கொள்ளுங்கள் 5) கடவுளை முறையாகப் பயன்படுத்துங்கள் 6) கடவுளுணக்க எப்போதும் உதவியாக இருங்கள் 7) கடவுளுக்கு என்றும் நன்றி சொல்லுங்கள்
இவை அனைத்திலும் “உண்மையாக” இருங்கள் பொய்மை, போலித்தனம்,நடிப்பு இவற்றை கடவுள் நிச்சயம் அறிவார்)
கடவுள் சொல்கிறார்.”நான் ஒரு ஆள் அல்ல” ஆனால் என்னை ஒரு நண்பனாக , நம்பிக்கையுள்ள அன்புள்ளவனாகக் கொள்ளுங்கள். இதற்கு உங்களுக்கு வேண்டியது கடவுளோடு நட்பு பூண வேண்டும் என்ற உண்மையான ஆசை மட்டுமே! மனதார நேசித்தால் , கடவுளை எங்கும், எதிலும் காணலாம். உனக்குள்ளும் காணலாம். அநேகர் என்னை காண்கின்றனர். ஆனால் என்னை அடையாளம் கண்டுகொள்வதில்லை. இது ஒரு விஸ்வ விளையாட்டு, என்னை நேரே கண்டும்,கபலர் என்னைக் காணாது இருக்கின்றனர். என்னிடம் தேடி வந்தால், முயற்சித்தால் , என்னைக் கண்ட கொள்ளலலாம். அதற்கும் வழி சொல்கிறேன்.
முதலில் - “கடவுள்’ என்று ஒன்று உளது என நம்ப வேண்டும். இரண்டாவது- எந்தப் பெயரில் என்னை அழைப்பது என்பதையிட்டு சண்டைபிடித்து சிண்டு முடிவதை, தயவு செய்து நிறுத்திக் கொள்ளுங்கள்(பெயர்களைப்பற்றி அக்கறையில்லை)
உங்கள் நம்பிக்கையே பிரதானம் மூன்றாவதாக எவ்விதமான நிபந்தனைகளுமின்றி, கடவுளை கடவுளாக மட்டும் கட்டிப்பிடித்துக் கொள்ள தயாராகுங்கள். கேள்விகள் வேண்டாம், 63

Page 34
தண்டனைகள் வேண்டாம், வடிவங்கள் வேண்டாம். கடவுள் என்ற உணர்வு நம்பிக்கை மட்டுமே போதும் "
"கடவுள் உன்னோடு
சேர்ந்து கொண்டாரா
என்று அறிய வேண்டுமானால்.
உன் ஞாபகத்தில் நிற்பதை அறிய வேண்டுமானால், உன் மனதைப் பார். கடவுளை எப்படி உணர்கிறாய் என்பதை அறிய, உனது உடலைப்பார். உனக்கு கடவுளைப்பற்றி என்ன தெரியும் என்பதை அறிய வேண்டுமானால், உனது ஆத்மாவை பார் கேள்!
கடவுளை உணர வேண்டுமானால், உனது ஆத்மாவை உணர்வாயாக
உன்னை நேசிப்பதை போல, பிறரையும் நேசிப்பாயாக அப்போது கடவுள் உனது நண்கனாகி விட்டார். "நில் டொனால்ட் வெலச்ட” சின்
(கடவுளோடு நட்புறவு எனும் நூலிலிருந்து) From:- Neale Donald welch book on Friendship with god.
oli A: தனது இனிய நண்பர் காலஞ்சென்ற விபி. கணேசன் அவர்களின் புதல்வன் மனோ கணேசன் மேல் மாகாண சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டபோது கலைச்சங்க சார்பில் வாழ்த்துக்களை தெரிவிக்கிறார் அமரர் பாலச்சந்திரன்
ճ4
 

கடவுளை உணரும் அனுபவம்
-கலாநிதி. திபக் கோப்ரா
ஆபத்துக்காலத்தில் திடீரென ஏதோ ஒன்று நம்மை அரவணைத்து பாதுகாப்பது போல உணர்கிறீர்களா? அதுவே கடவுள் எனும் இறைசக்தி
சொந்த வாழ்வில் சில சமயங்களில் ஒரு பெரும் சிக்கல் வருமென்ற அச்சம் ஏற்படுவதுண்டு. அது நேர்ந்த போது சடுதியாய் ஏற்படும் மன அமைதி இதற்குப்பெயர் கடவுள் என்று ஏன் கொள்ளக்கூடாது. சில சமயங்களில் அறிமுகமற்ற ஒருவரைக் கண்டதும் ஏற்படும் அளப்பரும் அன்பு இதில் இறை (கடவுள்) தென்பட வில்லையா?
ஒரு சின்னஞ்சிறு சிசு, ஒரு குழந்தை உங்கள் கண்களுக்குள்ளாக ஊடுருவி பார்க்கும் போது, ஒரு பழைய தெரிந்த ஆத்மா-உங்களை பார்ப்பதாக ஒரு கணம் நீங்கள் உணர்வீர்கள். அப்போது நீங்கள் தெய்வீக சக்தியை உணர முடியாதா?
ஒரு மரணம் ஏற்படும்போது சிறகுகள் பெற்று நீங்கள் பறப்பது போன்ற உணர்வு ஏற்படும். ஆகாயத்தை அன்ைனாந்து பார்க் கையில் , எல்லையில் லா அண் டத்தை உணர்தல் மெய்சிலிர்க்க வைக்கும் அழகினை தரிசிக்க நேரும் ஒரு நொடியில், உங்களை நீங்களே மறக்க நேரிடும். அந்தக் கனம் .? இப்படியான அனுபவங்களேதும் ஏற்படும் போது,உங்கள் மூளை (அறிவு) வழமைக்குப்புறம்பான உண்மையினை உணர்கிறது (கடவுளை காண்கிறது )
பரம் பொருளின் (கடவுளின் ) மிக அருமையான உண்மைகள், மானுட மண்டை ஓட்டிற்குள் தான் மறைந்து á5

Page 35
கிடக்கின்றன என்ற விடயத்தை நாம் அறிந்துமுடிந்தால்.
ஆனநி த பரவசம் (Ecstacy கனிபேரு வகை), đìJ(65 đ6vil& 5.Tg56ỏ (External Love), 919)lẽ 56ìJ5ưô (Grace அருள்நயம்), மறைமெய்மை (Mystery மறைபுதிர்), வற்றை மண்டையை பிளந்துகொண்டு தேடிக்கண்டு பிடித்த விட முடியயாது. எனினும் உலகில் இதுவரை நடந்து முடிந்த அற்புதங்கள் அனைத்தும் மானுட மூளையினுாடாகப்பாயும் அருட்கனலினுாடாக) திவ்யமானமறைநதியினுாடாக மர்மமான காற்றினுாடாகத் தானி நிகழ நீ தன. களங் கமில லாத உணர்வுகள்,ஆழ்நிலை அறிவு, சக்தி,உயிர்ப்பு, ஆகியவற்றால் மேற் படி இறை சமிக்ஞைகள் (Divine Signals) கட்டுப்படுத்தப்படுகின்றன. எமக்கு “கடவுள் ” என்பது ஒரு தெரிவு (Choice) அல்ல.ஒரு கட்டாயம்.
சுமார் ஒரு நுாற்றாண்டுக்கு முன் வாழ்ந்த பிரபல உளவியலாளரும் தத்துவாசிரியருமான “வில்லியம் ஜேம்ஸ் ” தன்னிலும் பார்க்க உயர்வான சக்தியை நாம் நம்பியே ஆகேவேண்டும் என்ற உணர்வும் தேவையும் மனிதனின் இயல்பு என்று கூறினார். ஆகவே , நாம் கடவுளை தேடியே ஆகவேண்டும்.
கடவுள் ஒரு நபரல்ல. “கடவுள்” என்பது ஒரு வழி (Process) மனித மூளை கடவுளை கண்டுபிடிக்க பணிக்கப்பட்டுள்ளது. அதனை கண்டு பிடிக்கும் வரை, நீ யாரென நீயே உணரமாட்டாய். நமக்கு இந்த உண்மை இலகுவில் பிடிபடாது. ஆனால் இதுதான் பிடி.
“கடவுள் ” என்பது எலி லையற்ற ஆழி நிலை நுண் ணுணர்வுக்கு மற் றோர் பெயர், வாழ் வில் எதைப் பெறுவதானாலும், நமக்க அதிகம் புலனாகாத, எண்ணிலி (unfinite) நுண்ணறிவில், ஒரு துளியேனும் நமக்கு உதவியே ஆகவேண்டும். இதையே வேறுவிதமாகச் சொல்வதானால் ,கடவுள் நமக்கு உதவியே ஆக வேண்டும்.
66

இதையே வேறு விதமாகச் சொல்வதானால், கடவுள் நமக்கு உதவ எப்போதும் தயாராக இருக்கிறார்/இருக்கிறாள்/ இருக்கிறது. (ஆம்! கடவுளுக்கு பாலியல்-gender கிடையாது) அவனன்றி அணுவும் அசையாது)
பிரார்த்தனை பலன் அளிக்குமா?
விஞ்ஞான ரீதியில் நடத்தப்பட்ட வைத் திய ஆய்வுகளின்படி பிரார்த்தனைகளுக்கு பலன் ஆய்வுகளின்படி பிரார்த்தனைகளுக்கு பலன் நிச்சயம் உண்டு என்று நிரூபிக்கப்பட்டுள்ளன. 1998ல் டியுக் யூனிவெர்சிட்டியைச் சேர்ந்த குழு ஒன்று (Duke University), 150(நுாற்றி ஐம்பது) இருதய நோயாளிகள் பிரார்த்தனையால் குணமடைந்ததாக கண்டு பிடித்தனர். பல மதங்களைச் சேர்ந்த ஒரு (7) குழுக்கள் உலகடங் கிலுள்ள முகமறியா நோயாளிகளுக்காக பிரார்த்தித்தனராம். குழுவில் நேப்பானைச் சேர்ந்த பெளத்தர்கள், பால்டிமோரில் வாழ்ந்த கர்னாடாக கிறிஸ்துவ கன்னியாஸ்திரிகள், ஜெருசலேம் ஆகிய பல இடங்களைச் சார்ந்தோர் ஈமெயில் மூலம் திசைரி பிரார்த்தனைகள் அனுப்பிக் கொண்டிருந்தனராம்.
இப் பிரார்த்தனைகளின் மூலம் சத் திர சிகிச்சைக்குட்பட்டிருந்த நோயாளிகள்,கடவுளை மறக்காத மற்றவர்களைவிட 50 லிருந்து 100 வீதம் தேறினார்கள் எனக் கண்டுபிடிக்கப்பட்டதாம். இந்த ஆய்வில் ,பிரார்த்தனையை நம்பாத, பிரார்த்தனைகளுக்கு உட்படுத்தப்படாத குழுவும் அடங்கியிருந்ததாம். பிரார்த்தனை மிக மர்மமான ,அற்புதமான பலனை நல்கியது என்கிறார் டாக்டர் தீபக் சோப்ரா ஒரு (Dr. Deepak Chopra) (கலாநிதி தீபக் சோப்ரா ஒரு மேற்கத்திய வைத்திய நிபுணர் இ.அமெரிக்கா-பொஸ்டனில் சொந்தமாக கிளினிக் நடத்தி வரும் இவர் தியானம், யோகாசனம், மரக்கறி உணவு மனிதகுலத்தை சுகமாக வாழ வைக்கும் என்கிறார்)
67

Page 36
தியானம்:-
தியானம் என்பது மெய்யறிவினுாடான ஒரிரு பயணம் அல்லது யாத்திரை தான்
தியானம் என்பது, மூளையில் நடைபெறும் ஒரு பூரணமான மனநலம், உடல்நலம் தரும் செயற்பாடு ஐன்ஸ்ரைன் போன்ற விஞ்ஞானிகள் அணுவுக்குள் துளைத்தால் அண்டப்பிரமான ஒளி பிரகாசிக்கும் என்று நம்பினர். அந்த இலெளகீக ஒளிக்கப்பால் அடரும் மெய்ஞான ஒளியைத் தேடுதலே, ஆத்மீகத் தேடல் என்பதாகும். இந்தத் தேடல் என்பது, உலகின் சகல மதங்களையும் தாண்டிச் செல்லும் யாத்திரை எனலாம். எல்லா மதங்களிலும் (Religions) கூறப்படும். மானுட அனுபவங்கள் ஏழு வகையின.
1) ஆபத்து, சவால் பீதி, பிழைத்தல் 2) பாடுபடல், போட்டி, அதிகாரம் 3) சமாதானம், அமைதி, மறுபரீசீலனை 4) உள்நோக்கு (insight), புரிந்துணர்வு 5) அபிலாசை, ஆக்கம் (Crativity) 6) பக்தி,கருணை, அன்பு 7) g65g) gasduiUL6) (unbounded unity)
“ஓம் தத் சத்” (“அதுவே நான்- நானே அது”)
அனுபவம்
அறிந்தது, விளங்கிக் கொண்டது,ஞாபகத்திலுள்ளது அணைத்தும் அனுபவமே ஒவ்வோர் நிகழ்வுக்கும் ஒரு காரணம் உண்டு. உன் வாழ்வுக்கு ஒரு நோக்கம், குறிக்கோள் நிச்சயம் உண்டு. கடவுளை நீ உணர வேண்டுமானால் , உன்னை நீ கடவுளுக்கு சமமாக்கி கொள்”
- 3வது நுாற்றாண்டு கிறிஸ்டியன் ஹெரிக் (கலாநிதி தீபக் சோப்ராவின் கடவுளை நம்புவது எப்படி?
எனும் நூலிருந்து)
68

உங்கள் சந்தோஷத்திற்காக
துணிவு
(உன்னை நீ நம்பினால், துணிவு இயல்பாய் வரும் ’துணிவு’ -என்பது (நிச்சயமாய்) அகங்காரம் அல்ல. உனது ஆற்றலில் சொந்த அறிவில் உள்ள நம்பிக்கை உலக இயற்கையை -படைப்பு சக்தியை இறைவல்லமையை முழுமையாக உணர்ந்து கொண்டால், துணிவு பிறக்கும்.அயரா நம்பிக்கையோடு முயன்றோமேயானால் எமக்குள் உணரும் உள்ளுரு சக்தியின் குரலைக்கேட்டு, அதன் வழி நடக்க நம்மால் நிச்சயம் முடியும். துணிவு உள்ள ஒருவனால் இதயம் திறந்து பேசவும் வாழ்வின் எதிர்பாராத திருப்பங்களை தைரியமாய் சந்திக்கவும் முடியும் . துணிவு இருந்தால் , எப்போதும் எல்லாவற்றிற்கும் எண்ணற்ற மாற்றுவழிகள் ,புதிய சந்தர்ப்பங்கள் உள்ளன என்ற தெளிவோடு பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க நம்மால் சாத்தியமாகும். அனைத்து சிக்கல்களுக்கும் காலம் கண்டிப்பாய் பதில் சொல்லும் . இது இறைவிதி இயற்கையின் நியதி நம்புங்கள் தைரியமாய்!
Keys to the Higher life
“Lives of great men all remind us. we can make our lives sub
lime and, departing-leave behind us Footprints on the sands of time.
-Hery Wadsworth Langtellow
புகழ்பூத்த பெரியோர் தம் வாழ்வினுாடாக பெரிதாய்
சொன்ன சத்தியம் உண்டெனில் உலகைவிட்டு பிரியும் டிேயாது
(நமது) காலடிகளை உரக்க புதித்து விட்டு போகுமளவிற்கு 6

Page 37
உண்மையாய் வாழ்க்கையை சிறப்புற (நம்மால்) வாழலாம் என்பதே.
-ஹென்றி வேர்ட்ஸ் வேர்த் லோங் பெfலோ FDafualD (Balance)
இந்த இண்டநெட்-ஜெட் யுகத்தில் நம்மில் பலரிடம் இல்லாத ஒரு தகுதி/குணம் வாழ்வியல் நடிப்பில் எமது சிந்தனையில் சமச்சீர் இல்லாமை. மனிதனுக்குள் இருக்கும் கீழ்த்தரமான உணர்வுகளை வெளிக்கிளம்பி ஆட அனுமதிப்பதும் அவற்றிக்கு முக்கியத்துவம் அளிப்பதும் இலகுவானதாக இப்போது தோன்றுகிறது. பொருள் முதலான இலெளகசி (உலகியல்) அம்சங்களோடு ஆத்மீகத்தையும் இணைத்து நம் வாழ்வில் நியாயமான சமரசம் செய்வதால், நமக்கு சமச்சீர் ஏற்படும் எமது பார்வை, சிந்தனை, போக்கு எல்லாமே சமபலமடைய, எதிலுமே ஒருவரையறை கட்டுப்பாடு வேண்டும். உணர்வு மனோலயம், ஆன்மீகம், உடலியல் எதிலுமே தீவிரம் என்பது நம்மை பலவீனப்படுத்தும். நாம் சக்தியை பெறுவது நமது சமபல அறிவில் பார்வையிலும் போக்கிலும் தங்கியுள்ளது. எமக்கு சமபல சித்தம் (Balanced mind) இருக்குமேயானால் நம்மைபயம் ஒருபோதும் ஆட்கொள்ளாது. அன்பில் நாம் தோய்ந்தாராவோம்!
அன்பிலே கண்டிப்பாய் இன்பம் உண்டு//
99ỉioựớsu (Discernment)
(நுண்மான் துளை புலன்)
பிரபஞ்ச வாழ்வைப்பற்றி அறியவும், தெரியவும் தெளியவும் முயல்பவருக்கு ஆய்வறிவு எனப்படும் பகுப்பாயும் தன்மை எளிதில் கைகூடும். பகுத்தறிவும் இ.தே ! அண்டத்தின் கோடானுகோடி உண்மைகளை அறிய முற்படுகையில், பாம்பு எது? பழுது(கயிறு) எது? காடு எது? மரம் எது? என்ற மயக்கம் ஏற்படுதல் சகஜமே. சகல தரவுகளையும் , உணி மைகளையும் சேகரித் து உய்த்துணராமல், அவசரப்பட்டு, சுடுகிறதுமடியைப்பிடி என்ற கொதி நிலையில் தீர்ப்பு சொல்லும் போது, நாம் கற்பது கடுகிலும்
70

பார்க்க சிறிதாகி விடுகிறது. ஒரு நபரை அல்லது விடயத்தை ஆராயமுண் பின்னணியிலுள்ள ஆதிமீக சத்தியத்தை, உண்மையை ஆராயவும் தேடவும் நாம் முயல்வதே, நாம் அறிவார்த்தமாய் வாழவும், கற்கவுமான பாதையாகும். பொறுமை யோடு இப்பாதையில் பயணித்தால், பலம் பெருமிதம் தான்.
ssibl'îö6Da5 (Fait)
நம்பிக்கை இழக்காதீர்கள். நம்பிக்கையோடு இருங்கள் -என்றால் ஐம்புலன்களுக்கு அப்பாற்பட்ட மூலாதார இறைசக்தி. உங்களுக்கு தேவையான விடயங்களை சரியான நேரத்தில், முறையான அளவில் தரும் என்ற உணர்வு. நம்பிக்கையும் மற்றும் இரட்டை சகோதரங்கள் போல ஒன்று இருந்தால் தான் மற்றதும் இருக்கும். உன் மீதும், கடவுள் மீதும் உனக்கு பற்று இருப்பின், உனது பாதுகாப்பு, அன்பு பற்றிய ஐயம் ஒரு போதும் எழாது. கையறுநிலை (தனித்த விடப்பட்ட) உனக்கு தோன்றாது. ஆன்மீக உணர்வோடு செயல்படும் போது, அனுகூலமான சிந்தனைகளை சிருஷ்டிக்க உன்னால் இயலுமானதாக இருக்கும். ஆத்மாவின் ஒளியை (சத்தியத்தின்) நம்பி வாழ்வதே நிம்மதி. நிம்மதி தான் சந்தோஷம். சந்தோஷம் சுகம். சுகமே பெரும் செல்வம். மனதால் இந்த உண்மையை உணர்ந்து கொள்வீராக.
Li6OL Lig5p6OT (Creativity)
சிந்தனைகள், உணர்வுகள் மற்றும் “பாவ’ங்களே உருவாக்கி உலகியல் போக்கில் மாறுதல்களை, ஏற்படுத்து வல்லமையே படைப்பாற்றல்-சிருஷ்டித்திறன் என்பது கலைஞர்கள், விற்பன்னர்கள், எழுத்தாளர்களுக்குள் மட்டும் இவ்வாற்றல் கட்டுப்பட்டதல்ல. பிரபஞ்ச சக்தியின் உள்ளார்ந்த, இயல்பான தன்மையே சிருஷ்டித்தத்துவம் தான் பிரபஞ்ச மூலப் பேரொளியின் துகள்களான எல்லோரிலும் படைப்புத்திறன் இயற்கையானதே என்பதை நாம் உணர வேண்டும். இதனை சரிவரப் பயன்படுத்துவதால் வாழ்வை சுலபமாக்க, சுமையற்றதாக்க முடியும். உறவுகளில், தொழிலில், வருவாயில், இப்படி நமது
7

Page 38
வாழ்வின் எந்த துறையிலேனும் சிக்கல் ஏற்படும் போது எமது உள்ளுனர் வின் துணையோடு பிரச்சனையிலிருந்து விடுபடுவதற்கான வழியை நாம் சிருஷ்டித்துக் கொள்ளலலாம். அண்டசராசரங்களை படைத்த ஆண்டவனிடமிருந்து கிடைத்தது பரிகாரமா? ஒரு கதவு அடைபட்டால் மற்றொன்றை கடவுள் கண்டிப்பாய் திறப்பான். சிருஷ்டி ஆற்றல் உயிரூட்டும். சமபலம் தரும் மானுடம் மேம்பட நாம் செயற்படும் போது, ஆக்கத்திறன் உச்சமடைவதை அனுபவத்தில் உணரலாம்.
(James Wan Praagh- Gigtformið GuTGI LîJITË. GOTI Reaching to Heaven - சொர்க்கத்தை அழைத்தல் எனும் நுாலில் தந்தவை. தென் கலிபோர்னியாவில் வாழும் இவர், மரணத்துக்குப் பின், ஆத்மாவின் பயணம் குறித்து நீண்ட ஆய்வுகள் நடத்தியுள்ளார். தியானம், ஆவிகளோடு பேசுதல் போன்ற ஆத்மீக தேட்டங்களில் பெரிதும் நாட்டமுள்ளவர். மானுட மேம்பாடு இவரது இலட்சியம். சொர்க்கத்தோடு பேசுதல்(Talking to heaven) ல் எனும் இவரது முதல் புத்தகம் அமெரிக்கா நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையின் அதியுயர்ந்த விற்பனவு தேர்வில் முதலாவது இடத்தை பிடித்த நுால் என்பது குறிப்பிடத்தக்கது)
" வெள்ளி நிலா கலாலயத்தின் "கஞ்சனி கந்தசாமி நாடக மேடையேற்றத்தின் பின் ராஜசேகரன், ஹெலனிகுமாரி தம்பதிகளுடன் பாலச்சந்திரணி தம்பதிகள்.
 

மனம் போல வாழ்வு
மனிதர்க்கு நல்ல அனுகூலமான முறையில பயன்படுத்தினால், மனிதமானது அதியுயர்ந்த கலைகளையும், வேதாந்த உண்மைகளையும், விஞ்ஞான வளர்ச்சிகளைம் நல்குவதன் மூலம், மண்ணில் வாழும் மாந்தரின் வாழ்க்கைத்தரத்தை மென்மேலும் செம்மைப்படுத்தும், இதே மனம் தான் தவறாக பயன்படுத்தும் போது மாபெரும் அழிவுகளையும் சிதைவுகளையும் நிர்முலங்களையும் உண்டாக்கும். ஆகவே எமது சொந்த நன்மைக்காக நாம் நமது மனதை எப்போதும் மிகவுயர்ந்த சிந்தனைகளால் சிருப்பிக் கொண்டே இருப்பது அவசியமாகிறது. இத்தோடு
வருங்கால மக்களுக்காக நல்ல உயர்ந்த சிந்தனைகள் மூலம், மனிதப்பிறவியின் மேன்மையையும், அற்புதங்களையும் கொணர்தல், காட்டுதல் எமது கடமையாகும். மனிதன் உணர்வதும், அழிவதும் அவனது சொந்த செயல்களாலும் தான் தன்னைத்தானே அளிக்கும் கொடிய ஆயுதங்களும் அவனிடமுண்டு. அதே சமயம், தெய்வீக வாழ்வினால் சந்தோஷமும், தைரியமும், பலமும், சமாதானமும் கட்டியெழுப்பக்கூடிய உபகரணங்களை தயாரிக்கும் வல்லமையும் மனிதனிடம் உண்டு. தன் வாழ்வின் குறிக்கோளை சரியாக உணர்ந்து சரியான மார்க்கத்தை (வழியை) தேர்ந்தெடுப்பதன் மூலம் மனிதன் தெய்வீகப் பூரணத்துவம் அடைகிறான். இந்தப்பாணியிலே தவறும் போது, பிழையான வழியை தேர்ந்தெடுத்து, மிருக நிலைக்கு இறங்கி தன்னைத்தானே, மனிதன் அழித்தக் கொள்கிறான்.
இந்த இரண்டு எல்லை முனைகளுக்குமிடையில் தான் மனிதரின் நடத்தை தராதரங்கள் அமைகின்றன. இந்த உண்மையை புரிந்து கொண்டால், மனிதன் தன்னைத்தானே ஆக்கியும் கொள்ளலலாம் என்பது புலனாகும். மனிதன் தனக்குத்தானே, ஆசானுமாகிறான், எதிரியுமாகிறான்.
- ஜேம்ஸ் அலன்மனிதன் தன் மனம்போல எனும் நூலிலிருந்து (James Allen ofasaman) 73

Page 39
ஆரோக்கியமான உணவுப்பழக்கம்
கூடியவரை அமைதியான சூழலில் சாப்பிடு தயவு செய்து மனக்குழப்ப நிலையில் சாப்பிட வேண்டாம். ஓரிடத்தில் அமர்ந்து ஆறுதலாக சாப்பிடு பசிக்கும் போது மட்டுமே சாப்பிடு மிகவும் குளிர்ந்த உணவோ, பாணமோ சாப்பிட வேண்டாம். உணவை மெல்லும் போது பேச வேண்டாம். மத்திமமான நேரத்தில் சாப்பிடுவது தான் உத்தமமான பழக்கம் ஒரு தடவை உண்ட உணவை உண்ண வேண்டும். சாப்பிடும் போது, சூடான வெந்நீர் அருந்துக. தேன் கலந்து சமைக்க வேண்டாம். பாலை தனியாக, பிரதான உணவுக்குப்பின் அருந்துவதுதான் முறை சாப்பிட்ட பின்னர், கால்வாசி வயிற்றை காலியாக(உணவால் அடைக்காமல் விடுக) சாப்பிட்ட பின், சிறிது நேரம் அமைதியாக ஓரிடத்தில் அமர்க.
ஒரே நேரத்தில் தினமும் சாப்பிடுதல் நல்லது தனியாக அல்லது உங்களுக்கு பிடித்தவர்களோடு (குடும்பம்-நல்ல நணி பர்கள்) சாப்பிடலாம் . தேவையில லா ,திய சிந்தனைகள்,சாப்பிடும் போது தயவு செய்து வேண்டாமே! உணவு கிடைத்தமைக்காக இயற்கைக்க நன்றி சொல்லி, உணவை மதித்து சாப்பிடவும். வாழ்க்கையில் அனைத்தையும் சமமாக கருதவும், ஏற்றுக்கொள்ளவும் பழகுக. (Balance)
உடலையும் உள்ளத்தையும் நல்ல ஆரோக்கியமான, சந்தோசமான நிலையில் வைத்திருக்க, காலையில்/மாலையில் முடிந்தளவு சிறு நடை, காலையில் சூரிய நமஸ்காரம், யோகாசனம், பிராணயாமம் (5 நிமிடம்) சைவ உணவு ஆகியன உதவும்.
74

ஆண்டவரே சொல்கிறார்
* யான் உங்களுக்கு (மனிதர்களுக்கு அளித்துள்ள உபகரணங்களையும் பரிசுகளையும் பயன்படுத்துங்கள். இந்த வரப்பிரசாதங்கள் தான், உங்கள் அனைவரிடமும் உள்ள ஆக்கத்திறனாலும் சிருஷ்டி வல்லமை, உங்கள் எண்ணங்கள், சொற்கள், செயல்களால் நீங்கள் ஏற்படுத்தக் கூடிய உண்மை வடிவங்களும், அவற்றினால் கூடிய உண்மை வடிவங்களும், அவற்றினால் உண்டாகும் அனுபவங்களுமாகும்.
* நாளடைவில், தோற்றத்தை வைத்து (ஒருவரை/ஒன்றை) எடை போடக்கூடாது என்று உங்களுக்கு உணர்த்தும் பேருண்மையை விளக்கும் மென்மையான அறிவும், நான் (கடவுள்) மனிதனுக்கு தந்துள்ள ஒரு கொடைதான்.
* நீ யார் என்பதை உனக்கு உணர்த்தவும், அடுத்து நீ யாராக, எப்படி எப்படி உயர்வாக உருவாக வேண்டும் எனவும் உனக்கு உணர்த்தும் வகையில் உனக்கு நீ சகல காரியங்களிலும் பூரண சுதந்திரம் அளித்தது போலவே, பிறருக்கும் அவரது செயல்களுக்கு முழுமையான தெய்வீக ஒத்தழைப்பும் நல்குலமே உண்மையான மானுடநேயமிக்க செயல் என்பதை, உணர்தலும், உனக்கு (கடவுள்) நான் அளித்துள்ள மற்றோர் பரிசாகும்.
பூ மண்டலத்தில் (விஷ்வ கோணத்தில்) பின்வரும் (தெய்வீக) “தில்லை சக்தி” உள்ளது.
1) சிருஷ்டி சக்தி
2) மென்மையான நுண்ணறிவு
3) துாய அன்பு

Page 40
-கடவுளை முறையாகப்பயன்படுத்து என்று சொன்னால், இந்த மூன்று சக்திகளையும் பயன்படுத்துக, என்பது தான் அர்த்தம்”
-நீல் டொனாட் வெல்ச். கடவுளோடு கூட்டுறவு எனும் நூலிலிருந்து
மனம் விழிக்க வேண்டும்
“நாம் எமது சிந்தனைகளால் உருவாக்கப்பட்டவர்களே! உள்ளாடையாக நடத்தை குறைநலன்களையும், வெளி ஆடையாக சந்தர்ப்பங்களையும், மனம் எனும் பிரதான நெசவாளி நுாற்கிறது. இதுவரை அறியாமையையும் துன்பத்தையும் வாழ்வில் தோற்றவர்கள், இனி ஞான ஒளியோடும் மகிழ்வோடும் நெய்வார்கள்’
-ஜேம்ஸ் அலன் James Allen in his body “As a man thinketh”
புன்னகை
* உண்மையான புன்னகை உங்கள் ஆத்மாவின் சாளரம் (யன்னல்)
* மனம் திறந்து சிரிப்பு உங்கள் ஆத்மாவின் கபாடம் (கதவு)
* உங்கள் குறைகளை உணர்ந்த, அவற்றை நன்கு புரிந்து கொண்டு நீங்கள் அவற்றிற்காக சிரிக்கத் தொடங்கும் போது தான், நீங்கள் உண்மையில் மனமுதிர்ச்சி பெற்றவராவீர்கள். (Learn to Laugh of yourself)
76

* ஆத்மார்த்தமான (உண்மையான) சந்தோஷம் உங்கள் உள்ளத்தையும் உடலையும் துாய்மைபடுத்தும் வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும்
ஒரு மகா கலைஞனி இப்படி இருப்பானி
ஒரு கலைஞன் என்பவன் அடிப்படையில் ஒரு மானுடன் அதி உயர்ந்த மனிதன் . மானுடத்தின் உணர்வுகள் அனைத்தையும் அவனால் புரிந்து கொள்ள முடியாவிட்டால், தன்னை மறந்து பிறருக்காக செயல்படுமளவிற்கு மனிதநேயனாக கலைஞனால் இயங்க முடியாவிட்டாலி , அவன் ஒரு மகாகலைஞன் அல்ல.
ஒரு உன்னதமான கலைஞன், தன் சகமனிதர்களை நேசிப்பான். மனிதருக்கும் பூமிக்குமிடையில் இதயபூர்வமான அமைதியை (சார்ந்ததை) உருவாக்குவதன் மூலம், சகல மனிதரும் சுகபலமாய் வாழ, ஒரு உயர்ந்த கலைஞன் தனது கற்பனை வளமிக்க சிருஷ்டிகளினுாடாக, எப்போதும் உழைத்துக்கொண்டே இருப்பான்.
-டியாகோ ரிவேரா(Diago Rivera-Successful and influntial) Muralist - சிற்பி) இதனை கலா சிகிச்சை ArtTheary என்று ஏன் சொல்லக்கூடாது?
77

Page 41
a56ro6ošarnilas 'unoom"
அனைவரும் அறிந்த பெயர்
-அந்தனி ஜூவா
கொழும்பு கலைச்சங்கச் செயலாளர் கே. பாலச்சந்திரன், “பாலா’ என்பது அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட அந்த ‘மானுடநேயம்’ மறைந்து விட்டார் என்ற செய்தி தொலைபேசி மூலம் காதுகளை எட்டியது.
ஒரு வாரத்திற்கு முன்னர் தொலைபேசியில் பேசிய அந்தக்குரலா ஒய்ந்துவிட்டது. நம்ப முடியாத செய்தி, ஒரு தொடர்கதையின் இறுதி அத்தியாயம் எழுதப்பட்டுவிட்டதா..? என்கின்ற வியப்பு.
கடந்த 15ம் திகதி மரணமடைந்து திங்கள் 17ம் திகதி மாலை கனத்தை மயானத்தில் அவர் தீயுடன் சங்கமமானார். எழுத்தாளர்கள், கலைஞர்கள், கவிஞர்கள், அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள், சினிமா உலகப் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் என காலை முதல் அன்னாருக்கு இறுதி அஞ்சலி செலுத்தியவர்களைப் பார்க்கும்போது “பாலா’ மனிதர்களை நேசித்துள்ளார் என்பது தெரிகிறது.
கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக அவரோடு எனக்கு நெருக்கமான தொடர்பு இருந்தது. அந்தத் தொடர்பு மிக மிக ஆத்மீகமானது. அவர் என்னைப் நண்பனாக அல்ல, அவரது மகனைப் போல நேசித்தார். அவரது குடும்பத்தினரும் அவ்வாறே உபசரித்தனர். கலைச்சங்கத்தின் எந்த நிகழ்ச்சி என்றாலும் நான் அவருடன் உடனிருப்பேன். அவரது உறவினர்கள், நண்பர்கள் அனைவரையும் எனக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். அவர் யாழ்ப்பாணமா, கதிர்காமமா, எங்கு சென்றாலும் அவரோடு நான்
78

செல்வது வழக்கமாகும். அவரைப் பற்றிய பல விடயங்கள் எனக்குத் தெரியும். அதனால்தான் அவரை மானுடத்தை நேசித்த மனிதராக என்னால் இனங் காணமுடிகின்றது.
கலைச்சங்கச் செயலாளர் பாலச்சந்திரன் திட்டமிட்டு செயல்படுபவர். கலை நிகழ்ச்சியா, நாடகமா, பாராட்டு விழாவா எத்தகைய செயற்பாடுகள் என்றாலும் தொலைபேசி மூலமே செயல்படுத்திவிடுவார்.
கலைஞர்களையும், எழுத்தாளர்களையும, பத்திரிகை யாளர்களையும் அவர் நேசித்த அளவு வேறு யாரும் நேசித்திருக்க முடியாது. பல்கலைக்கழகம் தந்த நாடக மேதை பேராசிரியர் சு. வித்தியானந்தன் முதல் நடிகவேள் லடீஸ் வீரமணி வரை அவரது மதிப்புக்கும் அன்பிற்கும் பாத்திரமானவர்கள். கலையரசு சொர்ணலிங்கத்துக்கு எத்தகைய முறையில் விழா எடுத்தாரோ அதைப் போல நடிகவேள் வீரமணிக்கும் விழா எடுத்தார் இவர்.
“வாழும்பொழுதே கலைஞர்களை கெளரவிக்கவேண்டும்” என்ற கொள்கையில் பிடிவாதமாக இன, மத மொழி பேதமின்றி கலைஞர்களை சிறப்பாகக் கெளரவித்துள்ளார்.
இவர்களில் பாடலாசிரியரான வண. மெர்வின் ஜயக்கொடி, ஒவியமேதை கேட் முதலியார் அமரசேகர, நடிகை மாலினி பொன்சேகா, கலையரசு சொர்ணலிங்கம், பொப் இசைக்கலைஞர் எம். எஸ். பெர்னாண்டோ, எழுத்தாளர் எஸ். எம். ஹனிபா, நடிகவேள் லடீஸ் வீரமணி, மேக்கப் கலைஞர் சுப்பு. இப்படி பெயர் வரிசைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.
உலகப் புகழ்பெற்ற ஒவியரான கேட் முதலியார் அமரசேகராவை ஆண்டுதோறும் அவரின் பிறந்த தினத்தின் போது, அவர் வீட்டிற்கு சென்று அவரின் பிறந்த நாளைக் கொண்டாடுவார்.
கலைச்சங்கத்தின் மூலம் தமிழ், சிங்கள, ஆங்கில
79

Page 42
நாடகங்களை மேடையேற்றி வெற்றி கண்டவர். இவர் மேடையேற்றும் நாடகங்களுக்கு டிக்கட் கிடைக்காமல் திரும்பியவர் பலர். அது மாத்திரமல்ல, தமிழ் நாடகவிழா ஒன்றை சிறப்பாக நடத்தியுள்ளார். கடந்த ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தை சிறப்பாக கொண்டாடினார். கலை, இலக்கியம், பத்திரிகை என சாதனை புரிந்த பலரை விருது வழங்கி கெளரவித்துள்ளார்.
எழுபது வயதிலும் கூட இருபது வயது இளைஞரைப் போல சுறுசுறுப்பாக இயங்கிய கே. பாலச்சந்திரனின் மறைவு கலாபிமானிகளுக்குப் பேரிழப்பாகும்.
கலை, இலக்கிய உலகின் நட்சத்திரமாக உலா வந்த பாலாவை கலாசார அமைச்சின் கீழ் இயங்கும் கலைக்கழக தமிழ் நாடகக் குழு இரண்டாடுகளுக்கு முன் நடத்திய தமிழ் நாடக விழாவின்போது விருது வழங்கிக் கெளரவித்தது.
கலைச்சங்க பாலச்சந்திரன் மறைந்தாலும் மானுடத்தை நேசித்த இவரின் பெயர் கலை இலக்கிய உலகில் என்றும் நிலைத்திருக்கும்.
தினகரன் வாரமஞ்சரி
3-O-OOO
முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஏ.சீ.எஸ். ஹமீட் அவர்களுடன்
முக்கிய சம்பாசஷனையில்
கே. பாலச்சந்திரன்
8
 

பாலா ஒரு சமதர்மவாதி
எனது அன்புக்குரிய அத்தான் மறைந்து இரணர் டு வருடங்களாகி விட்டாலும் நான் பல வருடங்கள் நேரில் காணாமையால், இன்னமும் இலங்கையில் இருப்பது போலவே என் மனம் நினைக்கிறது. எப்பொழுதும் சிரித்த முகத்தோடு துடிப்பாக இருப்பார். அவரது இனிமையான முகத்தை ஒரு தடவை பார்த்தவர்கள் கூட பின்னர் மறக்கவேமாட்டார்கள்.
எனது இளமைக்காலத்திலேயே அவரோடு பழகும் வாய்ப்பு கிடைத்தது. அவரின் பல கருத்துக்கள் எனக்கு அக்காலத்தில் ஏற்புடையதாக இருக்கவில்லை. நான் வேறு பாதையில் செல்ல, அவர் கலைத்துறையிலேயே முழுக்க முழுக்க ஈடுபட்டார். அவர் அரங்கேற்றிய தமிழ் நாடகங்கள், ஆங்கில நாடகங்கள், ஓவிய, பொப் இசை நிகழ்ச்சிகள், இலக்கிய, ஆத்மீக விழாக்கள், பாராட்டு, இரங்கல் கூட்டங்கள் என பலப்பல. சாதாரணமாக ஒரு புத்தகத்துடன் அடக்கிவிட முடியாதளவு சரித்திரங்களுக்கு அவர் சொந்தக்காரர். (ஈழத்து கலை வானில் மின்னிய, இன்னும் மின்னிக் கொண்டிருக்கும் எத்தனையோ நட்சத்திரங்களை பட்டைதீட்டி ஜொலிக்கச்செய்த அவர்,
அவரின் நேருங்கிய நண்பர்களின் பெயர்ப்பட்டியலை பார்த்தாலே அவர் எப்பேர்ப்பட்ட சமதர்மவாதி என்பது தெரிய வரும், ஜனாதிபதிகள், பிரதமர்கள், அமைச்சர்கள், எம்.பீக்கள், டாக்டர்கள், வழக்கறிஞர்கள், அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள் போன்ற மேலதட்டினரோடு, சமுகத்தின் அடிமட்ட மக்களான தொழிலாளர்கள், ஆட்டோ ஒட்டுநர்கள், பெட்டிக்கடைக்காரர்கள், சந்தை, நடைபாதை வியாபரிகள் என எந்நேரமும் அவரைச்சுற்றி இருந்த அனைவருக்கும் அவர் "பாலா" "பாலா" தான் பணத்தின் அளவைப்பார்த்து ஒருவரோடு அவர் சிரித்ததில்லை. அந்தஸ்து பார்த்து அவர் மதிப்பதும் இல்லை. அவருக்குள் ஒரு ஆக்கசக்தி சதா அவரை நல்ல காரியங்களுக்காக துாண்டிக்கொனடே இருந்திருக்கிறது. சமூகம் மறந்து கைவிட்ட கலைஞர்களின் விட்டுக்குள் மீண்டும் ஒளிபாய்ச்சிய கலங்கரை விளக்கம் அவர். அவரால் பெரும்பனனடைந்தவர்கள் பலரில், சிலர் அவரை அன்பு கருவர். அவர் கே. பாலச்சந்திரன் இறந்து விட்டதாக நான் எண்ணவில்லை, சமூக மனித உணர்வுகளோடு ஒன்றிப்போன அவரால் ஒதுங்கிப் போக முடியாது. விட்டுப்போன பணிகளை மீண்டும்,மற்றோர் ரூபத்தில் அவர் தொடர்வார் நிச்சயம் தொடர்வார். அதில் வெற்றியும் காண்பார்.
GLDTīfī - SILT 01-0-2002 ராதா மனோகரன் வல்லிபுரம் 8

Page 43
um grmri (bäsGasmri umr6'oð-a-sögögrstir
மறைந்த மாபெரும் கலைஞர் கலைச்சங்கத்தின் செயலாளர் பாலச்சந்திரனின் அஞ்சலி மலருக்கு அஞ்சலி உரை எழுதும்போது துக்கம் நெஞ்சை அடைத்தாலும் கலையை கலையாக மதித்த ஒரு மாபெரும் கலைஞனுக்கு அஞ்சலி உரை எழுதுகிறேன் என்பதில் பெருமிதமும் மகிழ்ச்சியும் என்னுள் உருவாகின்றது.
கலைஞர் பாலச்சந்திரன் ஒரு சாதாரண கலைஞன் அல்ல, மற்றவர்களின் கலைத்திறமையை பாராட்டி கெளரவிப்பதில் முதன்மையானவர். எனக்கு இவரிடத்தில் வெகுவாக பிடித்த அம்சம் இதுவேயாகும். கலைக்கு மொழியில்லை என்பார்கள் இதைத் தன் கொள்கையாகக்கொண்டவர். எத்தனையோ தமிழ் கலைஞர்களுக்கு மட்டுமல்லாது மாற்றுமொழி கலைஞர்களையும் இவரது கலைச்சங்கத்தின் மூலம் பாராட்டி கெளரவித்த பல பாராட்டு விழாக்களுக்கு நான் சென்றுள்ளேன். அப்போதெல்லாம் இவருக்கு கலைமேல் உள்ள பக்தியையும் கலைஞர்கள்மேல் உள்ள பாசத்தையும் கண்டு வியந்துள்ளேன். கலைஞர்களை பாராட்டும்போது இவர்மட்டுமல்ல இவரது துணைவியார் யோகா அக்காவும் சேர்ந்து நெஞ்சார முகம்மலர வாழ்த்தும் பல சம்பவங்கள் இப்போதும் என் கண்முன்னே காட்சி தருகிறது. திறமைகளை பாராட்டுவதற்கு நல்ல உள்ளம் வேண்டும். இந்த நல்ல உள்ளம் இப்போது எங்களிடையே இல்லையே என நினைக்கும்போது நெஞ்சம் வேதனை அடைகிறது.
ஆரம்ப காலத்தில் நான் மேடைகளில் நடித்து நடனமாடுவது மட்டுமல்லாது வாள் சண்டையும் செய்து வந்துள்ளேன். ஒரு முறை வெள்ளவத்தை இராமகிருஷ்ண மண்டபத்தில் என்னுடைய வாள் சண்டை நிகழ்ச்சியை பார்த்துவிட்டு எனது சண்டைப் பயிற்சி பற்றி வெகுவாக பாராட்டினார். நீ ஒரு காலத்தில் இந்த நாட்டின் சிறந்த ஒரு கலைஞராக உருவாவாய் என வாழ்த்து கூறினார். அதன்
பின்பு பல நிகழ்வுகளில் அவரை சந்தித்தேன். ஒரு முறை எனது 82

மேடைக்கதை வசனத்தில் உருவான "கஞ்சன் கந்தசாமி” என்ற நாடகத்தை பாராட்டி முன்னாள் கொழும்பு மாவட்ட அபிவிருத்தி சங்க உறுப்பினர் திரு. நோபல் வேதநாயகம் வீட்டில் எங்கள் வெள்ளிநிலா கலாலய கலைஞர்களுக்கும் அவரின் நண்பர்கள் சிலருக்கும் இராப்போசன விருந்து நடந்தது. அந்த நிகழ்வுக்கு பாலச்சந்திரன் தம்பதிகள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். அந்த சமயத்தில் பழைய சம்பவத்தை கூறி நான் அப்போது உன்னை பாராட்டி வாழ்த்திய வாழ்த்துக்கள் இப்போது நிறைவேறிவிட்டது தானே அம்மா என மிகவும் அன்பாக எனது முன்னேற்றத்தை கண்டு நெஞ்சம் நிறைய வாழ்த்தினார். அந்த சம்பவத்திற்கு பின்பு எங்கள் குடும்ப நண்பர்களாக பாலச்சந்திரன் தம்பதிகள் மாறிவிட்டனர்.
எங்கள் குடும்ப வாழ்க்கை எப்படி அமையவேண்டும் என்பதற்கு யோகா அக்கா பலமுறை பலவகையான ஆலோசனைகள் கூறிவந்துள்ளார். எனத வெள்ளிநிலா கலாலயத்தின் 25வருட நிறைவையொட்டி வெளியிட்ட மலரில் என்னை பாராட்டி எழுத தகுதியானவர்கள் பாலச்சந்திரன் தம்பதிகள் மட்டுமே என பிடிவாதமாக இருந்தேன். என் எண்ணப்படியே நீண்டதொரு பாராட்டு செய்தியை இருவர் சார்பில் யோகா அக்கா எழுதித்தந்தார். அதனை என்னால் என்றும் மறக்கமுடியாது.
பிறப்பு என ஒன்று இருந்தால் இறப்பு என ஒன்று இருக்கத்தான் செய்யும் என்றாலும் இந்த நல்ல கலைஞனின் பிரிவு ஈடுசெய்ய முடியாததொன்றாகும். இந்த நல்ல மனிதனின் பிரிவு எங்களுக்கு பெரும் வேதனையை தருகின்றதென்றால் யோகா அக்காவுக்கு எப்படி இருக்கும்?. நல்ல மனிதர்கள் நம்மைவிட்டு சென்றாலும் அவர்களது நினைவுகள் நம்மிடையே எப்போதும் வாழ்ந்துகொண்டே இருக்கும். அந்த உண்மையான கலா நேயனின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன். அவரது நினைவுகள் என்றும் வாழவேண்டும்.
E 1 1/3. அரசாங்க தொடர்மாடி, இங்ங்ணம் மாளிகாவத்தை கொழும்பு - 10. திருமதி ஹெலன்குமாரிராஜசேகரன் தொ.பே. 448210 தலைவி- வெள்ளிநிலா கலாலயம்
83

Page 44
8up8
எனி இதயத் தில் எலி லா உருவங்களுக்கும் இடமிருக்கிறது. அதில் மானுக்குப் புல்வெளியும், கிறிஸ்தவ சந்நியாசிகளுக்கு மடமும், சிலைகளுக்கு கோயிலும், ஹஜ்ஜாஜிக்கு க.பாவும், தெளராத்தின் கொள்கைகளுக்கும், திருக்குரானுக்கும், அடங்க இடமிருக்கின்றது. நான் “அன்பு” எனும் வேதத்தையே கடைப்பிடிக்கிறேன். எத்திசையில் சவாரி செய்தாலும் கருணை எனும் வேதமே என் வேதமாகும். அதுவே என் நம்பிக்கையுமாகும்.
-இப்னு அறவி.
தேசமானிய டாக்டர் ஏ.எம். முஹம்மத் சகாப்தீன் ‘இறைவனும் பிரபஞ்சமும்” - எனும் நுாலில் பக்: 144
The Eye must be something like the sun otherwise no sunlight could be seen, Gods own power must be inside us, How else could Godly things delight us?
-Johann Wolfgang Von Goethe
கண்கள் ஆரியனைப் போலிருக்க வேண்டும் இல்லேயேல் சூரிய ஒளி தெரியாது, எங்களுக்குள் கடவுளிக் சக்தி இருக்கவேண்டும், இல்லையேல் இறை அனுபவங்கள் நமக்கெப்படி மகிழ்வூட்டும் !
-ஜே. டபிள்யூ. வொன் கொதே (ஜெம்ஸ் வான் பிராக் - நுாலிலிருந்து)
84

உன்னையே நீ அறிவாய்
திருமந்திரம்
“உள்ளம் பெருங்கோயில் 261g2.jLubust 6)ulb வள்ளல் பிராணர்க்கு வாய் கோபுர வாசல்
தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம் கள்ளப்புலனைந்துங் காளாமணி விளக்கே
ולל
“ஒன்றே குலம் ஒருவனே தேவனும் நன்றே நினைமின் நமனில்லை நானாமே சென்றே புதுங்கதியில்லை றுஞ்சித்தது நின்றே நிலைபெற நீர் நினைத்துய்மினெ”
திருநாவுக்கரசு தேவாரம்
“abTu(3D (3aSITulsoras
கடிமணம் அடிமையாக வாய்மையே துாய்மையாக மனமணி இலங்கமாய் நேயமே நெய்யும் பாலயப் நிறை நீர் அமைய ஆட்டி பூசனை ஈசனுக்கு போற்றிலிங்காட்டினோமே”!
(அப்பர்)
85

Page 45
வரலாற்று சாதனைகளின் நாயகன்
- கலாபூஷணம் கலைஞர் கலைச்செல்வன்
Lum6om «Gələsi 65565ır ?
அவரை எப்போதும் நான் இப்படித்தான் அழைப்பேன். உன்னதங்களை உயரத்தில் உட்கார வைத்த அந்த மனிதப் பெருந்தகையை - மக்களாட்சியில் “மன்னன்’ என்ற சொல்லுக்கு மவுசு இல்லாத காரணத்தால், இரத்த உறவின் அடையாளமான ‘அண்ணன்’ என்ற பதத்தால் அணிவகுப்பு மரியாதை நடத்தலானேன்.
மாற்றுக் கருத்தினரை மதிக்கும் பண்பும் - கனிவுடன் பழகும் பாங்கும் அண்ணனுக்கு மட்டுமே சொந்தமான அணிகலன்களாகும். “விருந்து இதய நெருக்கத்திற்கு மருந்து’ என உபசரிப்பிற்கு வரைவிலக்கணமாக வாழ்ந்து காட்டியவர்.
ஒரு காலகட்டத்தில் எனக்கும் அவருக்கும் இடையில் மாற்றுக் கருத்துக்கள். அந்த மாற்றுக் கருத்துக்களே, அவர் மாற்றுக் குறையாத தங்கம் என மகுடம் சூட்டியது. மாற்றுக் கருத்துக்கள் இருந்தாலும் நாம் முரண்பட்டுக்கொள்ளவில்லை. மாறாக உடன்பட்டு உறவாடினோம். அதற்குக் காரணம் மாற்றுக்கருத்துக்களில் 60-70களில் நான் மாணவனாகவும் அவர் ஆசிரியராகவும் இருந்ததுதான். அதனால் தான், சிலருக்கு இதயத்தில் நாற்காலி போட்ட நான், பாலா அண்ணனுக்காக இதயத்தையே சிம்மாசனமாக்கினேன்.
அரச நிறுவனங்களோ - கலை அமைக்புக்களோ செய்யாத
- செய்ய முடியாத நேரத்தில் ஒரு தனி மனிதனாக நின்று முதல் “நாடகவிழா’வை முகிழச் செய்தது - ஒரு சாதனை.
தமிழ் - சிங்களம். ஆங்கிலம் என்ற மொழி பேதங்களுக்கு அப்பால் நின்று எல்லா மொழி நாடகங்களையும் தயாரித்து மொழிகளுக்கும் விழி முளைக்க வைத்தது - ஒரு சாதனை.
தகைமைசால் அறிஞர்கள் கலைஞர்கள் அரசியல்வாதிகள் மட்டுமின்றி - பல்துறை விற்பன்னர்களையும் பாராட்டி கெளவித்தது - ஒரு சாதனை.
தமிழ் பேசும் கலைஞர்களின் ஆற்றலுக்கும் ஆளுமைக்கும் அங்கீகாரம் வேண்டுமெனில் அவர்தம் திறமைகள் ஆங்கில சிங்களப் பத்திரிகைகளில் அடையாளப்படுத்தப்பட வேண்டுமென அறைகூவல் விடுத்தது, அதற்கான வழி வகுத்தது - ஒரு சாதனை.
86

வெறுமனே நாடகங்களுக்கு மட்டுமே பங்களிப்புச் செய்யாது ஓவியக்கலை முதல் வில்லிசை வரை விளம்பர வெளிச்சத்தால் அவைகளின் விலாசம் தெரிய வைத்தது - ஒரு சாதணை.
“பெண்ணியம்” கண்ணியம் பெற ஆணினத்தின் அங்கீகாரமே
அவசியம் என்பதை உணர்த்த ஆண் மகனாய் - ஆண்மைமிக்க மகனாய் “மகளிர் தினத்தை” கொண்டாடியது - ஒரு சாதனை.
இதுபோன்று இன்றும் எத்தனை எத்ததையோ சாதனைகள் !
அத்தனை சாதனைகளிலும், “நடைபாதை திறமைசாலிகளை நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்த்திய - நட்சத்திர ஓட்டல்களில் அவர்களின் பாதங்களுக்கு பட்டுக்கம்பளம் விரித்த”. சாதனைகளே அவரை வரலாற்று நாயகனாக்கிய பெரும் சாதனை என்றால், அதனை ஆமோதிக்க உயரும் கைகளால் இமயம் கூட சுண்டு விரல் அளவுக்கு சுருங்கிவிடும்.
பாலா அணி னா 1 அதனால் தானி சந்திரனான உங்களைச் சுற்றி இன்றும் - இவ்வுலகம் உள்ளனவும் நட்சத்திரக் கூட்டங்கள்.
இருந்தாலும் என்னுள் இன்றும் ஒரு ரணம், கலைஞர்கள் வாழ்வில் வசந்தம் வரவேண்டும் என்பதற்காக, “வாழ்வின் வசந்தம்” வில்லுப் பாட்டையே அமெரிக்கா வல்லரசின் அரியாசனத்தில் அமர்ந்துவதற்கு நீங்கள் எடுத்த முயற்சிக்கு மூத்த கலைஞரே முட்டுக் கட்டையானபோது “லத்தீப் - கலைச்செல்வன் நீங்கள் இவருவரும் வில்லைக் கையில் எடுங்கள் விலை மதிப்பற்ற மாணிக்கங்களாய் உலகில் உங்களை உயர்த்துகிறேன்” என்றீர்கள். குரு பக்தி எங்களுக்கு வேலியானது. குருமூர்த்தியான தங்களின் லட்சியம் மூலியாகியது.
முடிந்த கதைக்கு முன்னுரை எதற்கு? முடிவுக்கு வருகிறேன்.
நாடகம் பற்றி பேச மட்டுமே தெரிந்த கலாநிதிகளாலும் - பிள்ளைக் காலத்துப் பிடிவாதங்களோடு கலைப்பதவிகள் அமர்ந்திருக்கும் பிரகிருகளாலும், இன்று கலை உலகம் இருபத்து நான்கு மணிநேரமும் இருட்டாகி விட்டது.
எனவே எம்மை வெளிச்சத்திற்கு கொண்டுவர - விடியலுக்கு பூபாளம் பாட, உரிமையோடு கேட்கிறேன் “நீ உறங்கியது போதும் அண்ணா! எழுந்து வா அண்ணா! எம் இருள் போக்கிடண்ணா!”
இதை ஏன் சொல்லுகிறேன் என்பது உன் ஆத்மாவுக்கு புரியும் உன் ஆத்மாவுக்கு புரியும் என்பது என் இதயத்திற்கும் தெரியும்.
87

Page 46
நெஞ்சம் நிறைந்த
நன்றிகள். இவர்களுக்கு
* அமரர் பாலாவின் மறைவையொட்டி பத்திரிகைகைகளில்
தங்கள் அனுதாபங்களை எழுத்துருவில் வெளிக்காட்டிய தென்புலோளியூர் செல்வத்தம்பி மாணிக்கவாசகர், தமிழ்மனி மானாமக்கீன், எழுத்தாளர் அந்தனி ஜீவா, பத்திரிகையாளர் திருமதி. அன்னலட்சுமி இராஜதுரை, பொப்பாடகர் எஸ். இராமச்சந்திரன், கலாபூஷணம் ஜே.பி. ரொபட்.
* ஆத்மாஞ்சலி இதழுக்கு தங்கள் எண்ணங்களை எழுத்தில்
வார்த்த திருமதி. யோகா பாலச்சந்திரன், வி. பூரீதரன், கலாபூஷணம் கலைஞர் கலைச்செல்வன், திருமதி. ஹெலன் குமாரி ராஜசேகரன், திரு. ராஜா மனோகரன் வல்லிபுரம்.
* தொகுத்தளித்த அந்தனி ஜீவா - கலைச்செல்வன்
* அழகிய முறையில் அச்சிட்டு உதவிய விக்ரம் அச்சக நிர்வாகி கலைஞர் ஆர். ராஜசேகரன் மற்றும் உத்தியோகஸ்தர்கள் ஆகியோருக்கு.
நன்றி ஜெகன் மோகன் பாலச்சந்திரன்
178 Dollers Dec Ormenax Ouebec, H9B, 2G8
Canada.
88


Page 47
assorãamrg rsi u