கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அபத்த நாடகம்

Page 1
அபத்த
(THE THEATREO
- ஜோர்ஜ் சந்
 

6JT disAD
F THE ABSURD)
ரசேகரன் -
f

Page 2

அபத்த நாடகம்
(THE THEATRE OF THE ABSURD)
- ஜோர்ஜ் சந்திரசேகரன் -

Page 3
ஆசிரியர்
முதலாம் பதிப்பு
பதிப்புரிமை
வெளியீடு
அச்சகம்
Name of the Book
Author
First Edition
CopyRight
Published by
Design & Print
Price .
ii அடத்த நாடகம்
ஜோர்ஜ் சந்திரசேகரன், 54/14, இசை ஒழுங்கை, தாமரைக்கேணி, மட்டக்களப்பு.
நவம்பர் 1999.
செல்வி ராதா சந்திரசேகரன்
ஆசிரியரே.
ஆதவன் அச்சகம், அரசடி, மட்டக்களப்பு.
100/=
Abtha Nadagam. (The Theatre of the Absurd)
George Sandrasegaran.
November 1999
Miss Radha Sandrasegaran.
The Author Himself.
Aathavan Press, Arasady, Batticaloa.
100/-

iii
உலக இலக்கியத்திலும், உலக நாடகங்களிலும் பேரீடுபாடு கொண்ட எனத மருமகன் ஜீவரெத்தினம் கென்னடி அவர்களும், அவரது மனைவியும், எனத மகளுமான திருமதி பாரதி கென்னடி அவர்களும் தமது திருமண நாளை, (19.06.1999) என்றும் நினைவு கூரும் முகமாக இப்புதுமணத்தம்பதிக்கு
இந்நால் சமர்ப்பணம்.

Page 4
iv
நன்றியுரை
தனது வேலைகள் மத்தியில் இந்நூலுக்கு முன்னுரைக் குறிப்பு எழுதித்தந்த பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களுக்கும், இலங்கையில் தமிழ் நூல்கள் வெளிவர வேண்டு மென்ற ஆவல் கொண்டவர்களாகவும் எனது புத்தக வெளியீட்டிற்கு ஆர்வமும் உற்சாகமும் அழித்துவரும் இளம் ஒளிபரப்பாளர்களும், இளங்கவிஞர்களுமான சிதம்பரப்பிள்ளை சிவகுமார் அவர்களுக்கும், இளையதம்பி தயாநந்தா அவர்களுக்கும், இந்நூலின் கையெழுத்துப்பிரதியின் முக்கால் பாகத்தை தட்டச்சில் பொறித்துத் தந்த செல்வி குமுதினி ஜெகநாதன் அவர்களுக்கும், மிகுதியை தட்டச்சில் பொறித்துத்தர உதவிய திருமதி.பிரேமா ஜெயரஞ்சன் அவர்களுக்கும், இந்நூலை மிகவும் அழகாக அச்சிட்டுதவிய ஆதவன் அச்சக உரிமையாளர் V.வீரசிங்கம் அவர்களுக்கும், ஆதவன் அச்சகத்தில் கடமையாற்றும் எல்லா ஊழியர்களுக்கும், அச்சகத்துக்கும் எனக்குமிடையே ஒரு பாலமாக அமைந்த எனது மகன் கஃப்கா சந்திரசேகரனுக்கும், யாழ்/பல்கலைக்கழகத்தில் படித்தாலும் அடிக்கடி தொலைபேசி மூலம் எனது எழுத்து முயற்சிகள் பற்றிக் கேட்டு எனக்கு உற்சாகமளிக்கும் எனது மகள் செல்வி ரதி சந்திரசேகரனுக்கும் நான் நன்றி சொல்லக்கடமைப்பட்டவன்.

ஜோர்ஜ் சந்திரசேகரன் எனும் மெல்லெனப் பாயும் நதி
ஒரு முன்னுரைக் குறிப்பு
பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி
ஜோர்ஜ் சந்திரசேகரனுடைய படைப்பு வெளியீட்டு முயற்சியில் நானும் இணைந்து கொள்வது எனக்கு மனம் நிரம்பும் திருப்தியைத் தருகிறது.
எனக்கும் ஜோர்ஜ்க்கும் உள்ள தொடர்பு 1956 - 1960க் காலத்தது. அடுத்துவரும் காலப்பகுதிகளில் நாம் எப்படி யெப்படி எல்லாம் முகிழ்க்கப் போகின்றோமோ என்பது எங்களுக்கே தெரியாத
B(T6)b.
ஜோர்ஜின் வானொலி வருகையும், எனது வானொலிப் பயில்வின் இரண்டாவது கட்டமும் இணைந்தன. (எனது முதலாவது வானொலிக்கட்டம் 1950- 1955க்குரியது. அப்பொழுது வி.என்.பி/எம் எஸ் இரத்தினத்தின் கிராம சஞ்சிகையிலும், சானாவின் நாடக அரங்கிலும் நாங்கள் சிலர் “கலைஞர்” களாக (Artistes) மட்டும் இருந்தோம். 1956 முதல் தான் வானொலியில் எழுதுவதும் தயாரிப்பதும் தொடங்கிற்று.)
நான் நடத்திய இளைஞர் மன்றத் தின் அற்புதக் கண்டுபிடிப்புக்களில் ஒன்று ஜோர்ஜ், ஜோக்கிம், எச்.எம்.ஷரிப், எம். எச் முகமது போன்றோரின் வானொலிப்பிரவேசம் இளைஞர் மன்றவாயில் வழியாகத்தான் நடைபெற்றது (பொன்மணி குலசிங்கம் தான் நிகழ்ச்சிப் பொறுப்பாளர்.)
நிலையக் கலையத்துக்குள் புகுந்த நேரம் முதலே இந்தப் பையனின் (ஜோர்ஜ் அப்பொழுது சென்ற் பெனடிக்ஸ் மாணவன் என்று நம்புகிறேன்.) காத்திரத்தன்மை, அவரது மெலிந்த உடலுக்கூடாகக் காந்தமாகப் பாய்ந்து கொண்டிருந்தது.

Page 5
Wi
எனது இளைஞர் மன்றத்தின் "ஆஸ்தான ஆற்றுகையாளர்களுள்' ஒருவர் ஜோர்ஜ். எந்தப்பொறுப்பையும் நம்பிக் கொடுக்கலாம்.
இந்த நட்புறவின் பொழுதுதான் ஜோர்ஜ"க்குள் ஒளிந்திருந்த எழுத்தாளனை இனங்கண்டு கொண்டேன். கைலாஸ"க்கு அறிமுகம், தினகரனில் கதை பிரசுரம் என்று அந்தக்கதை நீழும்.
ஜோர்ஜ் பின்னர் வானொலி ஒலிபரப்பையே தமது சீவிய தொழிலாகக் கொண்டார். நாடகத் தயாரிப்பாளர் ஆனார். “கிளவிச் சொல்” (Spoken Word) பிரிவின் அமைப்பாளரானார். தனது பரம்பரை என்று கூறத்தக்க சிலரின் வளர்ச்சியை ஆற்றுப்படுத்தினார்.
இன்று ஜோர்ஜ் ஓய்வு பெற்றுள்ளார். நானும் இப்பொழுது “தகைசார் ஓய்வு நிலை” தான். ஆனால் எங்கள் இருவரினதும் ஒய்வு உழைப்பூதிய தொழிலிருந்து ஒய்வே தவிர சிந்தனையாளர் தொடர்பு, புதிய புலங்கள் பற்றிய தேடல் ஆகியவற்றிலிருந்து பெற்றுக் கொண்ட ஒய்வு அல்ல.
இந்த நூலின் வருகை அதனைச் சின்னப்படுத்தி நிற்கின்றது.
I
இவ்வேளையில் ஜோர்ஜினுடைய அறிவுத் தேடல் பயில்வு பற்றி சிறிது குறிப்பிடல் வேண்டும்.
ஜோர்ஜ் ஒரு காத்திரமான வாசகர் - காத்திரமான விடயங்களை வாசிப்பவர்; அதிலும் பார்க்க முக்கியம் வாசிப்பவை பற்றி காத்திரமான சிந்திப்பில் (பட்டெறிசிந்திப்பில் reflection இல்) ஈடுபடுபவர். அத்துடன் ஆக்கத்திறன் உடையவர். மேலும் தமிழ் மரபை உணர்ந்தவர். இந்த இணைவு அவருடைய சிந்தனைகளுக்குப் புதிய ஆக்கயியற் பரிமாணத்தை வழங்கி வந்துள்ளன. தொடர்ந்து வாசித்தல் என்பது தொடர்ந்து சிந்தித்தலுக்கு செய்யப்படுவதாகும். சிலரிடம் சிந்தனை வளர்ச்சியை ஒதுக்கி விட்டு தொடர்ந்து வாசிக்கும் வழக்கம் உண்டு. அந்த வாசிப்பால் பயனில்லை. வாசிப்புச் சிந்தனையைத் தூண்ட, சிந்தனை வாசிப்பை ஆழ அகலப்படுத்தல் வேண்டும். ஜோர்ஜிடம் இந்தப்பண்பு உண்டு. இதனாலேதான் இவரிடம் ஒரு புலமைத்துவ அசைவியக்கம் (intellectual

vii dynamism) காணப்படுகிறது.
ஆங்கில அறிவு நன்கு கைவரப்பெற்ற ஜோர்ஜ் எப்பொழுதும் புத்தகமும் கையுமாக (சிந்தனையுமாக) இருப்பவர். அவரிடம் இயல்பாக உள்ள கூச்ச சுபாவம் ஒதுங்கி நின்று பார்க்கும் ஒரு தன்மையை வளர்த்துள்ளது. அது வாசிப்பில் மனக்குவிவை ஏற்படுத்தும் ஒரு ஆளுமைப்போக்கை உண்டாக்கி விட்டுள்ளது என்று கூறலாம்.
இந்தச் சுபாவம் ஜோர்ஜை ஒரு "தண்மையாளராக” ஆக்கியுள்ளது. ஆரவாரத்தோடு பாயும் ஆறு போல அல்லாது மெல்லென, ஆனால் நியமம் தவறாது ஆழமாகப்பாயும் ஒரு நதியை ஒத்தது அவர் அறிவு நிலை.
(கம்பன் கோதாவரி நதியைப்பற்றிச் சொன்ன கூற்றே இப்பொழுது நினைவிற்கு வருகின்றது. “சான்றோர் கவி எனக்கிடந்த கோதாவரியினைக் கண்டாரம்மா’ கோதாவரியின் பாய்ச்சலில் ஒரு தெளிவும் ஆழமும் இருக்கும்.)
இத்தகைய ஒரு சித்த நிலையில்தான் இந்த இரு நாடகங்களும் தோன்றியுள்ளன.
ஜோர்ஜின் வாசிப்பின் இரு அம்சங்கள் (ஒரு நாணயத்தின் இரு புறங்கள்) என நான் சற்று முன்னர் கூறியது இதையேதான். அனர்த்த (அபத்த) நாடகங்களை ஆங்கிலத்தில் வாசித்து அவற்றில் ஒன்றை மொழிபெயர்த்துத் தரும் அதே வேளையில் அந்த அருட்டுணர்வு காரணமாகத் தோன்றிய தமிழ் நிலைக்கற்பனையே மற்றைய நாடகம்.
II
மேனாட்டரங்கில் இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் ஏற்பட்ட “வளர்ச்சி”களுள் ஒன்றுதான் இந்த "அப்சேட்’ (Absurd Threatre) அரங்கு. ஜோர்ஜ் இதனை அபத்த அரங்கு என மொழிபெயர்த்துள்ளதை வேறுசிலர்
“அனர்த்த அரங்கு” என்பர்.
இந்த அரங்கின் உண்மையான தாற்பரியம் பின்வருமாறு.

Page 6
W Absurd 6Igotb GET6üg).d5(g) is 35(55gs "Incongruous, inappropriate, unreasonable, ridiculous, silly,” 6760, sayislo) easy Tg5 (Concise Oxford dictionary) கூறும். அதாவது "பொருத்தமற்றது." "சிரிப்பிற்கிடமானது", "புத்திபூர்வமற்றது” என்ற கருத்துடையது.
இந்த அரங்கிலே காட்டப்படுபவை, மேலோட்டமாகப் பார்க்கும் போது Absurd ஆக, (பொருத்தமற்றது, சிரிப்பிற்கிடமானது என்ற வகையில்) அமையும், ஆனால் இந்த Absurd தன்மைக்குள் மனித நிலையின் அவலம் செறிந்து போய்க் கிடப்பதைக் காணலாம்.
இதற்கான சிந்தனை, புலமைச்சூழல் எவ்வாறு இரண்டாம் உலகப் போரின் பின்னர் ஏற்பட்டிருந்தது என்பதையும், சாத்றே, கமூ ஆகியோர் எடுத்துக்கூறிய இருப்பு வாதத்தின் (Existentialism) பிழிவு இதுதான் என்பதையும் ஜோர்ஜ் தனது முகவுரையிலே நன்கு தெளிவுபடுத்தியுள்ளார்.
இந்தச் சிந்தனைப் போக்கே அயனஸ்கோ, பெக்கேற் ஆகியோரின் நாடகங்களுக்குத் தளமாக அமைந்தது. (ஜோர்ஜ் தனது முகவுரையிற் கூறுவது போல, நாடக விமசகர்கள், மேல் நாட்டு நாடக அபிமானிகளால் எள்ளி நகையாடப்பெற்ற நாடகத்தை - நாடகமே அல்ல என்ற நாடகத்தை, சிறைச்சாலைக் கைதிகள் முற்று முழுதான ஈடுபாட்டுடன் பார்த்தார்கள்.)
இந்த Absurd Theatre என்பது உண்மையிற் பின்னோக்கியே பெயர் சூட்டப்பட்டது என்பதை மார்ட்டின் எஸ்லின் (Martin ESSin) நன்கு விளக்கியுள்ளார்.
இரண்டாவது உலக யுத்தத்தின் பின்னர் ஐரோப்பாவில் ஏற்பட்ட சமூக, ஆன்மீகச் சிந்தனைக் கட்டுமானங்களின் சிதைவை இந்த நாடகங்கள் காட்டுகின்றன. இவற்றுக்கூடே ஆழமான ஒரு மனித அவலம் புலனாகின்றது. பிறெயற்றும் இந்தத் தொனியில் நாடகம் எழுதியவரே. பின்னர் தனது நாடகங்களுக்கான ஒரு உடனிலைப் பார்வையை (positive) ஏற்படுத்திக் கொண்டார். ஆகவே பின்னர் "தொலைப்படுத்தல்" (vertiendungen) எனும் உத்திக்கு இடம் கொடுத்தது.
1960 களுக்குப் பின்வரும் ஐரோப்பியச் சிந்தனை மரபில் இருப்பு

iX வாதம் ஒரு வடிகாலாக அமைகிறது. அதன் பின்னர் மனித விளக்கங்களின் (அறிகையின்) இயல்பை மொழிநிலை நின்று பார்க்கும் அமைப்பியல் வாதம் ஏற்படத் தொடங்கிற்று.
"நத்தையும் ஆமையும்’ நாடகம் ஐரோப்பிய நாகரீகச் சிதைவுப் போக்கின் ஒரு குறியீடாகிறது. இங்கு மனித அவலம் இருப்பியல் வாத நோக்குடன் எடுத்துரைக்கப்படுகிறது.
இந்த அவலத்தை எப்படிக் காண்பது என்பது மிக முக்கியமான 6LUJib.
இந்த விடயத்தை அரங்கு (Theatre) எவ்வாறு செய்துள்ளது என்பதை 1960களுக்குப் பின்வரும் அரங்க வரலாற்றிற் காணுகிறோம். அந்த வரலாற்றில் ஐரோப்பியர்கள் அல்லாதவர்கள் (ஷெக்னர், ஒகஸ்ரா போல்) போன்றவர்கள் மிக முக்கியமானவர்கள்.
இந்த அரங்கு இன்னுமொரு அரங்க வரலாற்றுண்மையை எடுத்துக் காட்டுகின்றது.
அபத்த அரங்கு (AbsurdTheatre) உண்மையில் யதார்த்த விரோத (Antirealist) 9JIS(85. 95T6...g5 Su6öl (p60sluigi) (Naturalist) சித்திரிப்பதன் மூலம் (THEATRE) உலக நிஜத்தை எடுத்துக் கூறிவிட முடியாது என்பது இப்போக்கின் பிரதான எடுகோள் ஆகும்.இதற்காகத்தான் பிறெய்ற் காவிய அரங்கைத் (Epic theatre) தோற்றுவித்தார். அதாவது மனித இன்னல் நடைமுறையை பெரிய அளவில் மிகைப்படுத்திக் காண்பிப்பது என்ற பண்பு வருகின்றது.
IV நாடகத்தின் பரிமாணங்கள் மாறுகின்றன. அந்த மாறு நிலையில் ஒரு முக்கிய கட்டத்தின் பிரதான எழுத்துக்களில் ஒன்றை ஜோர்ஜ் சந்திரசேகரன் தமிழில் தந்துள்ளார்.
சந்திரசேகரனை வாழ்த்துவதில் நான் எனது பயணத்தின் திருப்தியையும் காண்கின்றேன்.

Page 7
Χ
சந்திரசேகரனின் வளர்ச்சி வரலாற்றின் ஒரு சிறு கட்டத்தோடு சம்பந்தப்பட்டவன் என்ற உணர்வு இப்பொழுது பெருமை தருகின்றது.
ஆசிரியனுக்கென்று மிஞ்சுகின்ற சுயநியாயப்பாடு இது ஒன்றுதான்.
ஜோர்ஜ் சந்திரசேகரன் சிறக்கட்டும்.
அவர்தம் படைப்புக்கள் புதிய உச்சிகளைத் தொட்ட்டும்.
பல்கலைக்கழக விருந்தினர் விடுதி, பார் வீதி,
மட்டக்களப்பு.
O5.09. 1998.

முகவுரை
இருபதாம் நூற்றாண்டு சிந்தனை ஓட்டத்தை மாற்றிய மகா மனிதர்கள் மூவர். அவர்கள் சாள்ஸ் டார்வின் (CHARLES DARWIN) fä5LD6öT GIBTulu (SIGMUND FREUD) SÐ6io(BUT Fg6ö76müoLo60' (ALBERT EINSTEIN) ge6ft.
இந்த மூன்று மகா மனிதர்களும் தோன்றியிராவிட்டால், இருபதாம் நூற்றாண்டு, முந்திய நூறறாண்டுகளின் இருள் கவிந்து; மூட நம்பிக்கைகளின் மொத்த உருவமாகவே விளங்கியிருக்கும்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் (1859 ஆம் ஆண்டில்) Charles Darwin g66, The Origin of species 616óris 13555lb (O6).j6flobg5 போது, இருள் கவிந்த இவ்வுலகில் புதியதோர் ஒளி பிறந்தது. அதுவரை இருந்த உலகம் வேறாகத் தோன்றத் தொடங்கியது. பரிணாம வளர்ச்சி உலகில் இடம்பெற்றுள்ளதை மனிதன் கண்டு கொண்டான். அவனது சிந்தனையில் மாற்றம் ஏற்படத் தொடங்கியது.
ஆனால் சாள்ஸ் டார்வின் (Charles Darwin) இன் காலத்தில் அவரின் பரிணாமக் கோட்பாடுகள் மக்களால் ஏற்றுக் கொள்ளப் படவில்லை. இன்றும் கூட பலரால் இது ஏற்றுக் கொள்ளப் படுவதில்லை. Charles Darwin இன் பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு, புரிந்து கொள்ள முடியாத ஒரு புதிரல்ல. அனால் இது மனித நம்பிக்கையின் மேல்விழுந்த பாரிய அணு குண்டு போன்றது. மனித இனம், ஏனைய உயிரினங்களைவிட மேலான நிலையில் படைக்கப்பட்டது என்ற நம்பிக்கையில் பல நூற்றாண்டுகளாகக் கட்டுண்டிருந்த மனித மனம், தனது இந்த மேலான நிலைப்பாட்டை விட்டுக்கொடுக்க விரும்பவில்லை. அத்துடன் மனித வாழ்க்கை ஒரு குறிக்கோளற்ற விபத்து என்பதும் பரிணாமக் கொள்கையினால் பெறப்படுகிறது. எனவேதான் சாள்ஸ் டாவின் (Charles Darwin) இன் பரிணாமக் கொள்கை மனித மனத்தில் வேரூன்ற வெகு காலம் பிடித்தது. இந்தக் கோட்பாடு முற்றாக வேரூன்ற இன்னும் பல நூற்றாண்டுகள் தேவைப்படலாம்.

Page 8
Χ11 ஆயிரத்துத் தொள்ளாயிரந்து நாட்பதுகளில்தான், பரிணாமம்’ சில அறிவுசார் சிந்தனையாளர்களின் மனக் கதவுகளைத் தட்டி உட்புகுந்தது. இதற்கு இரண்டாவது உலக யுத்தமும் ஒரு காரணம் என்று கூறலாம். வாழ்வின் அர்த்தமற்ற தன்மையை நிதர்சனமாகப் புரிந்து கொள்வதற்கு இதுவும் உதவியது.
சாத்றே, கமூ போன்ற பிரெஞ்ச் எழுத்தாளர்கள் சிலர் மனித வாழ்க்கையின் அர்த்தமற்ற தன்மையை, அபத்தத்தை விளக்கப் பல நாவல்கள்,சிறுகதைகள், நாடகங்கள் என எழுதத் தொடங்கினார்கள்.
ஆனால் இவர்களுக்குப்பின் எழுத முற்பட்ட சில நாடகாசிரியர்கள், வாழ்க்கை அர்த்தமற்றது, அபத்தமானது என்பதைக் கண்டுகொண்டு, அபத்தத்தை அர்த்தமுள்ள வடிவங்களில் ஏன் வெளிப்படுத்த வேண்டும், அபத்தத்தை அபத்தமாகவே வெளிப்படுத்துவோம் என்று முனைந்தனர். இப்படியாக அபத்தத்தை அபத்தமாகவே வெளியிடத் தொடங்கிய முதலாவது நாடகாசிரியர் சாமுவெல் பெக்கட் (Samual Beckett). மனித வாழ்வின் அர்த்தமற்ற தன்மையை, அபத்தத்தை அபத்தமாகவே மேடைக்கென நாடகமாக இவர் எழுதினார். இவர் இந்த வகையில் 6T(gg5u (p56) BITLElb Waiting for Godot.
இந்த மூன்று மணிநேர நாடகத்தில், கதையோ, நாடக வாயிலாக உணர்த்தப்படும் நீதியோ, நாடகத்துக்கே உரிய உச்சக் கட்டமோ கிடையாது. Vladimir, Estragon என்ற இரண்டு தெருப்பொறுக்கிகள் ஒரு கிராமத் தெருவில், ஒரு மரத்தநகே Godot என்பவர் வரும்வரை காத்திருக்கிறார்கள். Godot வந்து விட்டால் தமது இன்னல்களுக்கெல்லாம் நிவாரணம் கிடைத்துவிடும் என்று கதைத்தபடி காத்திருக்கிறார்கள். முதற்காட்சியின் இறுதியில் ஒரு சிறுவன் வந்து “கோடோ இன்று வரமாட்டார். அவர் கட்டாயம் நாளை வருவார்’ என்று கூறிச் செல் களின் றான். இரணி டாவது காட்சியரிலும் இதுவே நடைபெறுகிறது.காட்சியின் இறுதியில் அதே சிறுவன் வந்து “கோடோ” இன்று வரமாட்டார், நாளை வருவார்’ என்று கூறிச் செல்கிறான். முதற் காட்சியில் PoZZO, Lucky என்ற இருவர் எஜமானும் அடிமையுமாக வந்து போகிறார்கள். இரண்டாவது காட்சியில் Pozzo என்ற எசமான் குருடாகியும் Lucky என்ற அடிமை ஊமையாகியும் வந்து போகிறார்கள். Vladimirரும்

Xiii
Estragon னும் Godot வரும்வரை காத்தரிருக்கிறார்கள். இதுவேநாடகம்.
Waiting for Godot முதலில் மேடையேற்றப்பட்ட போது, நாடகம் பார்க்க வந்த புத்திஜீவி இரசிகர்களும் அறிவுசார் நாடக விமர்சகர்களும், நாடகசாலையில் கதிரைகளை உடைத்து பெரும் ஆர்ப்பாட்டம் செய்துவிட்டுச் சென்றனர். அதன் பின் Waiting for Godot பல வருடங்கள் மேடை யேற்றப்படாதிருந்தது.
1957 ஆம் ஆண்டு, பிரான்சிலுள்ள Quentin சிறைச்சாலையில் இருந்த 1400 கைதிகளுக்கு ஒரு நாடகம்.காண்பிக்கப்பட வேண்டுமென்று நிர்வாக சபையினால் முடிவெடுக்கப்பட்டது. Herbert Blau என்ற நெறியாளரிடம் இந்தப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.
பெண்கள் இல்லாத நாடகம் என்ற ஒரே காரணத்திற்காக Herbert Bleu, Waiting for Godot என்ற இந்த நாடகத்தைக் கைதிகளுக்கு முன்னால் காட்டுவதற்காகத் தேர்ந்தெடுத்தார். ஆனால் 1957ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 19ஆம் திகதி, Quentin சிறைச்சாலையில் 1,400 கைதிகளுக்கு முன்னால் மேடையேறுவத்ற்கு ஆயத்தமான போதுதான், நெறியாளரையும் நடிகர்களையும் பயம் கவ்விக் கொண்டது. முதல் முறை மேற்கு ஐரோப்பாவில் இந்த நாடகம் மேடையேற்றப்பட்ட போது, நாடகம் பற்றி கற்றறிந்த விமர்சகர்களும் புத்திஜீவி இரசிகர்களும் கதிரைகளை உடைத்துக் கலாட்டா செய்த இந்த நாடகத்தைப் பார்த்து, கலை பற்றியோ நாடகம் பற்றியோ அதிகம் தெரியாத கைதிகள் என்ன பாடுபடுத்துவார்களோ என்று நாடகக் குழு அஞ்சியது.
சினிமா நடிகர்கள் மேடைக்கு வந்து நகைச்சுவை வெடிகளைக் கொழுத்துவார்கள், அல்லது நடிகைகள் வந்து நடனமாடித் தம்மை மகிழ்விப்பார்கள் என்று எதிர்பார்த்திருந்த கைதிகள் ஏமாற்றமடைந்தார்கள். சிறிது நேரம் பார்த்துவிட்டுபின் தமது கைவரிசையைக்காட்டுவோம் என்றெண்ணிய கைதிகள் கூட, நேரம் செல்லச் செல்ல நாடகத்துடன் ஒட்டத் தொடங்கிவிட்டார்கள். இறுதிவரை கைதிகள் அமைதியாகவிருந்து நாடகத்தை இரசித்தார்கள்.நாடகம் முடிவடைந்தபோது சில கைதிகள் அழுதே விட்டார்கள்.

Page 9
XV
புத்திஜீவிகளாலும், நாடக விமர்சகர்களாலும் இரசிக்க முடியாமற் போன Waiting for Godot நாடகத்தை, சிறைக்கைதிகள் வெகுவாக இரசித்ததற்குக் காரணமென்ன? ஒரு வேளை மேடையில் காட்டப்பட்டது அவர்களுக்கே உரிய வாழ்கை யதார்த்தமாக இருக்கலாம். அல்லது நாடகமென்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற விமர்சனங்களினால் ஏற்கனவே தீர்மானித்துக் கொள்ளப்பட்ட கோட்பாடுகள் பற்றித் தெரியாதவர்களாக இருக்கலாம்.
'காத்திருத்தல்’ என்ற பதத்தின் அர்த்தத்தை நிதர்சனமாக உணர்ந்தவர்கள் கைதிகள். இவர்களில் வெளியே செல்வதற்கு ஐந்து வருடங்கள் காத்திருகக் வேண்டிய கைதிகள் இருக்கிறார்கள். பத்து வருடங்கள் காத்திருக்க வேண்டியவர்கள் இருக்கிறார்கள். பதினைந்து வருடம், இருபது வருடம் என்று எத்தனையோ கைதிகள் இருக்கிறார்கள். வாழ்க்கை முழுவதுமே காத்திருக்க வேண்டியவர்களும் இருக்கிறார்கள். இவர்களுக்குத்தான் காத்திருப்பதில் உள்ள வேதனை புரியும். எனவேதான் கைதிகளினால் Waiting for Godot நாடகத்தை சரியாகப்புரிந்து கொள்ள முடிந்தது.
உலகத்திலே பிறந்து விட்ட நாம் எல்லோரும் ஏன் எதற்கென்றறியாது எதற்காகவோ காத்திருக்கிறோம். இந்த வாழ்க்கை அபத்தத்தை நாடகத்தின் மூலம் முதலில் விளக்கியவர் சாமுவேல் GILJä5Gabs3 (Samual Beckett).
இவரது Waiting for Godot நாடகம் பின்னர் பல உலக மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு பல நாடுகளில் காண்பிக்கப்பட்டு வெற்றி கண்டது. எமது நாட்டிலும் 1960களில் சிங்களத்தில் மேடையேற்றப்பட்டது. 1969ஆம் ஆண்டில் இலக்கியத்துக்கான நொபேல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது. இதற்குப் பின்னர் பல அபத்த நாடகங்களை இவர் எழுதியபோதிலும் இவருக்கு நொபேல் முக்கிய காரணம் Waiting for Godot என்று துணிந்து கூறலாம். இவருக்கு அடுத்தபடியாக அபத்த நாடகங்களை எழுதி உலகப்புகழ் பெற்றவர் இயூஜின் அயனஸ்கோ. இயூஜீன் அயனஸ்கோ தனது எழுத்துப்பற்றி இப்படிக் கூறுகிறார். ‘நான் எழுதத்தொடங்கிய காலத்தில், நான் புதிதாக ஏதேனும் சாதிக்க வேண்டுமென்று நினைத்தேன். ஆனால், அதுவே எனது

XV அணுகுமுறையல்ல. எல்லாவற்றையும் விட மேலாக நான் சொல்ல வேண்டிய சில விஷயங்கள் இருந்தன. அவற்றை அன்றாட வாய்ப்பாடுகளுக்கு மேலாக அல்லது அவற்றைத் துளைத்துக் கொண்டு அல்லது அவற்றிற்கு எதிராகச் செல்லக்கூடிய ஒரு வழியைக் கண்டுபிடிக்க எத்தனித்தேன். இதனால் நான், நவீன பித்தன் என்றும் நாடக மரபுக்கு எதிராக எழுதுபவன் என்றும் கூறப்பட்டேன். இவையெல்லாம் சாரமற்ற வார்த்தைகளே ஆனால் இவற்றிலிருந்து நான் ஏதோ புதிதாகச் செய்துவிட்டேன் என்று அவர்கள் ஏற்றுக்கொள்வது புலப்படுகின்றது.”
இயூஜீன் அயனஸ்கோ பிரெஞ்சு மொழியில் எழுதிய நாடகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பையே நான் "நத்தையும் ஆமையும்” என்று தமிழில் மொழிபெயர்த்தேன். இது சுமார் 1975ம் ஆண்டில் என்று நினைக்கின்றேன். அப்போது பி.விக்னேஸ்வரன் உதவித் தயாரிப்பாளராக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் கடமையாற்றிக் கொண்டிருந்த சமயம். அப்போது தமிழ் தேசிய சேவையின் மேலதிக பூபணிப்பாளராகவிருந்த சி.வி.இராஜசுந்தரம் அவர்கள். 'பரிட்சார்த்த நாடகம்' என்ற ஒரு புதிய நிகழ்ச்சித் தொடரை ஆரம்பித்து அதை நடத்தும் பொறுப்பை பி.விக்னேஸ்வரனிடம் ஒப்படைத்தார். நானும் இந் நிகழ்ச்சிக்குச் சில பரீட்சார்த்த நாடகங்களை எழுதிக் கொடுத்தேன். அத்துடன் நான் மொழிபெயர்த்திருந்த இயூஜீன் அயனஸ்கோவின் நாடகத்தையும் வானொலிக்கு ஏற்றபடி அரை மணி நேரத்திற்கு சுருக்கிக் கொடுத்தேன். இதில் நடிப்பதற்கு சி. நடராஜசிவமும், ஆனந்தராணி ராஜரெட்ணமும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். ஒலிப்பதிவிற்கான தேதியும் தீர்மானிக்கப்பட்டது. ஒலிப்பதிவன்று ஒத்திகைக்கு வரும்படி பி. விக்னேஸ்வரன் என்னை அழைத்தார். சென்றேன். அபத்த நாடகமொன்று முதன் முதலில் ஒலிப்பதிவு செய்யப்படுவதால் அதில் எப்படி நடிப்பதென்று நடிகர்களுக்குச் சரியாகப் புரியவில்லை. நானும் எவ்வளவோ சொல்லிப்பார்த்தேன். இருவராலும் சரியாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. எனவே. அன்றைய் தினம் ஒலிப்பதிவு நடக்கவில்லை. பின்னர் சுமார் ஒரு வாரம்-கழித்து ஒலிப்பதிவு நடந்தது. அப்போது நடிகர்கள் இருவரும் ஒரு அளவிற்கு அபத்த நாடகம் என்றால் என்ன என்பதைப்பற்றி சற்றுத் தெரிந்திருந்தார்கள். அதனால்
இ.ஒ.கூட்டுத்தாபனம், ஒரு மேடை நாடக விழா நடத்தியது. அதில் இந்த நாடகம் ஒரு மணி நேரம் அதில் நடித்துக் காண்பிக்கப்பட்டது.

Page 10
XVi மொழிபெயர்ப்பில் நான் செய்த ஒரேயொரு மாற்றம்
நாடகத்தின் ஒரு கட்டத்தில் உடைந்த கூரை வழியாக ஒரு சிலை கீழே விழுந்து உடைகின்றது. அது அழகுத் தேவதை வீனஸின் சிலை என்கிறான் அவன், அவளோ அது சுதந்திரச்சிலை என்கிறாள். அது வீனஸ் சிலைதான். ஒரு கை பாதிதான் இருக்கிறது என்கிறான் அவன். அது விழுந்த வேகத்தில் கை உடைந்திருக்கலாம் என்கிறாள் அவள். இப்படியே இருவருக்கிடையே வாக்குவாதம் தொடர்கிறது. இதை நான் தமிழில் மொழி பெயர்த்த பொழுது இந்தச்சிலையை ஒரு யானையின் சிலையாக்கிவிட்டேன். அவன் அதைப் பிள்ளையார் சிலை என்கிறான். அவளோ அது யானையின் சிலை என்கிறாள். பிள்ளையார் சிலைதான் என்று அவன் வாதாடுகிறான். அவளோ அது யானையின் சிலைதான் என்கிறாள். " தந்தத்தின் ஒரு பாதிதான் இருக்கிறது நீ பார்க்கவில்லையா?” என்று அவன் கேட் கிறான். அவளோ அது விழுந்தபோது உடைந்திருக்கலாம் என்று கூறுகிறாள், என்று மாற்றி முடிக்கிறேன்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத் தமிழ்ச் சேவை
1992ம் ஆண்டு நடத்திய மேடை நாடக விழாவில் ஒருமணி நேரத்திற்கு மேடையேற்றப்பட்ட நாடகம் "நத்தையும் ஆமையும்”. இது "இயூஜீன் SEĐuJ60T6müo(8a5IT” (EUGENE IONESCO) SÐ6), İrab6řT îJ GibėF (QLDTyslu î6io 6T(p5u BITLELD. 956060T establisugg56) FRENZY FOR TWO OR MORE என்ற தலைப்பில் மொழி பெயர்த்தவர் டொனால்ட் வெட்சன் (DONALDWATSON). இதனை தமிழிற்கு "நத்தையும் ஆமையும்” என்ற தலைப்பில் மொழிபெயர்த்தவர்: ஜோர்ஜ் சந்திரசேகரன்.
மேடையேற்றிய திகதி: 07-04-1992
மண்டபம்: மருதானை டவர் மண்டபம்.
நடித்தவர்கள்:
அவன்: K.S.LJT6)& Fibgbir
96)6iT: சுஜீவனி ஞானரெத்தினம்.
காட்சியமைப்பிற்குப் பின்னால் நடித்தவர்கள்:
இராஜா கணேசன் உதயகுமார் பி.விமல்ராஜ் அமீர் அலி
காட்சியமைப்பு: கே.கதிர்காமத்தம்பி.
நெறியாள்கை: ஜோர்ஜ் சந்திரசேகரன்

Page 11

அவள் :-
அவன்
g|ഖണ് :-
அவன் :-
g|ഖണ് :
நத்தையும் ஆமையும்
எவ்வளவு இனிமையானதொரு வாழ்க்கையை நீ தருவதாகச் சொன்னாய், இப்போது நான் பாடும் பாட்டைப்பார். காதலனோடு வாழ்வதற்காக என் கணவனை விட்டு ஓடி வந்தேன். என் கணவரே உன்னை விட நூறு மடங்கு மேல். காமுகா. நான் சொல்வதற்கு அவர் எதிர் வார்த்தை சொல்வதே கிடையாது.
உன்னை எதிர்க்க வேண்டும் என்பது என் எண்ணமல்ல.ஆனால், உண்மையில்லாதவற்றை நீ சொல்லும் போது என்னால் எதிர்க்காமல் இருக்க முடியாது. உண்மையின் மேல் எனக்கு அளவற்ற பற்றுதல் உண்டு.
உண்மை. எது உண்மை? அப்படி ஒன்று இல்லை. அதுதான் உண்மை. உண்மை என்று ஒன்று இல்லை. நத்தையோ ஆமையோ இரண்டுமே ஒன்றுதான்.
ஒருக்காலும் இல்லை. இரண்டுமே ஒரே மிருகமல்ல.
நீதான் மிருகம். உனக்குப் புத்தியே இல்லை.
உனக்குத்தான் புத்தியில்லை.
நீ என்னை அவமானப்படுத்துகிறாய். நீ ஒரு சிறிய புழு. காமுகன்.
தயவு செய்து நான் சொல்வதைக் கொஞ்சம் கேள். நான் சொல்வதைக் கேட்கக்கூடவா உன்னால் முடியாது?
எதைக்கேட்பது? 17 வருடங்களாக நீ சொல்வதை நான் கேட்டுக் கொண்டு தானே இருக்கிறேன். என் வீட்டை விட்டு, என் கணவனை விட்டு, நீ என்னைப்பிரித்து வந்து 17வருடங்கள் ஆகின்றன.
அதைப்பற்றி இப்போது யார் கேட்டார்கள்.

Page 12
அவள் :-
g|ഖണ് :-
அவன் :
அவள் :
அவன் :-
g|ഖണ് :
அவன் :
♔|ഖണ്
அவன் :
g|ഖണ് :
அவன் :-
g|ഖണ് :-
அவன் :
அவள் :
எதைப் பற்றி?
நாம் பேசிக்கொண்டிருந்ததற்கும், இப்போது நீ பேசுவதற்கும் என்ன சம்பந்தம்?
அது முடிந்த விஷயம். மீண்டும் அதைப் பற்றிப் பேசுவதில் எந்த விதமான அர்த்தமும் இல்லை. நத்தையோ ஆமையோ, இரண்டுமே ஒன்றுதான்.
இல்லவே இல்லை.
இரண்டுமே ஒன்றுதான்.
இல்லை. நீ எவரிடமும் கேட்டுப்பார்க்கலாம்.
யார் அந்த எவர்? ஆமையின் முதுகிலே ஒடு இல்லையா? கேட்பதற்குப் பதில் சொல்.
இருக்கிறது. அதலாலென்ன?
நத்தையின் முதுகிலும் ஒடு இருக்கிறது தானே?
இருக்கிறது. அதனால் என்ன?
ஆமையோ நத்தையோ, தன் முதுகு ஒட்டுக்குள் சுருங்கிக் கொள்வதில்லையா?
சுருங்கிக் கொள்கிறது. அதனாலென்ன?
ஆமைக்கோ நத்தைக்கோ ஒரு வளவளப்பான, மெல்ல ஊர்ந்து செல்லும் உடல் இல்லையா?
உண்டு. அதனாலென்ன?
அதனால், நத்தையும் ஆமையும் ஒன்று என்பதை நான்
நிரூபித்து விட்டேன். 'ஆமையைப்போல் ஊர்ந்து” என்றும், "நத்தையைப்போல் ஊர்ந்து” என்றும், சாதாரணமாக எவரும்

e|ഖണ് :-
அவன் :-
ജൂഖണ്
அவன் :-
ജൂഖണ് :-
அகன் :-
அவள் :-
அவன் :
அவள்:
പ്പെo அதாவது ஆமை, ஊர்ந்து செல்லும் ஒரு மிருகமில்லையா?
இல்லை.
என்ன இல்லை. ஆமை ஊர்ந்து செல்லும் மிருகமில்லையா?
அது சரி.
பார்த்தாயா? நத்தையைப் போலத்தான் ஆமையும்.
இல்லை.
ஏன் இல்லை? நீ பிடித்த முயலுக்கு மூன்று கால். இல்லை யென்றால் அதற்கான காரணத்தைச் சொல் சோம்பேறி.
ஏனென்றால்.
ஆமை, அதாவது நத்தை, தான்கட்டிய வீட்டை தன் முதுகிலேயே சுமந்து செல்கிறதல்லவா, அதனால்தான் அது மெதுவாகச் செல்கிறது.
நத்தையோடுதான் சோம்பலை ஒப்பிட்டுப் பேசுவார்கள். ஆமைக்கும் சோம்பலுக்கும் சம்பந்தமில்லை. பார்த்தாயா,
நீ சொல்வது பிழையென்பது இப்போது புரிகிறதா?
விலங்கியல் வல்லுனரே, நான் சொல்வது ஏன் பிழையென்று தயவு செய்து சொல்லும்.
ஏனென்றால்.
உன்னால் முடியுமானால், இரண்டிற்கும் இடையே உள்ள வித்தியாசங்களைச் சொல்லு பார்க்கலாம்.
ஏனென்றால். வித்தியாசம் என்னவென்றால். இரண்டிற்கும் சில ஒற்றுமைகள் இருப்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்.

Page 13
அவள்
அவன்
ജൂഖണ്
அவன்
அவள்
அவன்
அவள்
அவன்
4. பிறகேன், வித்தியாசத்தில் கவனம் செலுத்த வேண்டும்?
வித்தியாசம் என்னவென்றால். 5||29کہ|T6)l5..............................
உனக்குச் சொல்லிப் பயனில்லை. வித்தியாசம் உண்டென்று நீ ஒருபோதும் ஏற்றுக் கொள்ளவே மாட்டாய். அது மட்டு மல்ல. எனக்கு மிகவும் களைப்பாக இருக்கிறது. எல்லாவற்றையுமே முன்னர் நான் உனக்கு விளங்கப்படுத்தி இருக்கிறேன். மீண்டும் ஒருமுறை திரும்பவும், அதை ஆரம்பிக்க வேண்டாம். முன்னர் பெற்ற அனுபவமே போதும்
உன் வாதம் பிழை என்றபடியால்தான் நீ விளங்கப்படுத்தத் தயங்குகிறாய். உன்னால் எந்தக் காரணங்களையும் காட்ட முடியாது. ஏனென்றால் உன்னிடம் எந்தக்காரணமும் கிடையாது. நேர்மை யானவனாய் இருந்தால் நீ இதை ஒப்புக்கொள்வாய். ஆனால் உன்னிடம் தான் நேர்மை என்ற வார்த்தைக்கே இடமில்லையே. என்றுமே நீ நேர்மையானவனாக இருந்தது கிடையாதே.
நீ பேசுவதில் அர்த்தமே இல்லை. பார்.சோம்பேறிகள் எந்த இனத்தோடு. அதாவது நான் சொல்ல வருவது என்ன வென்றால். ஆமைகள்.
போதும், வாயை மூடு எல்லாம் போதும். நீ கதைக்காமல் இருந்தால் அதுவே போதும். உன்னுடைய அர்த்தமற்ற பேச்சை இதற்கு மேலும் என்னால் சகித்துக் கொண்டிருக்க (ԼՔԼԳԱ III Ֆl.
உன் அர்த்தமற்ற பேச்சை என்னாலும் இதற்குமேல் சகித்துக் கொண்டிருக்க முடியாது. இதற்கு மேல் ஒரு வார்த்தை கூட உன்வாயிலிருந்து வரக்கூடாது.
(பலமான வெடிச்சத்தம்)
உன் வாயிலிருந்தும் வரக்கூடாது. நாம் ஒருபோதும் உடன் பாட்டுக்கு வரமாட்டோம்.
நாம் எப்படி உடன்பாடு காணமுடியும்? நாம் ஒருபோதும்

g|ഖണ് :-
அவன் :
அவன் :
அவள் :
அவன் :
g|ഖണ് :-
அவன் :
அவள் :
5 ஒத்துப் போக மாட்டோம். (மெளனம்) இதோ பார். ஆமைக்குக் கொம்புகள் உண்டா?
நான் பார்த்ததில்லை.
sÉil,... நத்தைக்கு உண்டு.
எப்போதும் இல்லையே. அது கொம்புகளை நீட்டும் போதுதான் தெரியும். ஆமை கொம்புகளைக் காட்டாத நத்தை. ஆமை என்ன சாப்பிடுகிறது? . அதையேதான் நத்தையும்
சாப்பிடுகிறது. எனவே இரண்டும் ஒரே மிருகம்தான். நீ சாப்பிடும் உணவைச் சொல், நீ யார் என்பதை நான் சொல் கின்றேன். இரண்டின் இறைச்சியுமே உணவாகிறது.
இரண்டையும் ஒரே விதமாகச் சமைப்பதில்லையே.
என்றாலும், அவை ஒன்றையொன்று பிடித்துச் சாப்பிடுவ தில்லையே. நாய்கள் ஒன்றையொன்று பிடித்துச் சாப்பிடுவ தில்லையே. ஏன்? அவை ஒரே இனத்தைச் சேர்ந்தவை. அதாவது அவை ஒரே இனத்தின் பல்வேறு உருவங்கள். ஆனால், அவை ஒரே இனத்தைச் சேர்ந்தவை.
நீ ஒரு விசித்திரமான இனத்தைச் சேர்ந்தவள்.
என்ன சொன்னாய்?
நாம் இருவரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல என்று சொன்னேன்.
அதை நீ முன்னமே உணந்திருக்க வேண்டும்
முதல் நாளே நான் அதைக் கண்டு கொண்டேன். ஆனால், அப்போது அது பிந்திப்போய் விட்டது. உன்னைச் சந்திக்கும் முன்னமே, உன்னைச் சந்திப்பதற்கு ஒரு நாள் முன்னமாவது, அதை நான் உணந்திருக்க வேண்டும். நாம் ஒருவரை யொருவர் புரிந்து கொள்ளவே மாட்டோம் என்று உன்னைச் சந்தித்த முதல் நாளே நான் உணர்ந்து கொண்டேன்.

Page 14
அவள் :
அவன் :
ജൂഖണ് :
அவள் :
அவன் :
g|ഖണ് :
ജൂ|ഖണ് :
6
நீ என்னை என் கணவரோடேயே வாழவிட்டிருக்க வேண்டும். என் குடும்பத்தோடு அந்தப் பாசப் பிணைப்பில் எனனை வாழ விட்டிருக்க வேண்டும். நீ உணர்ந்ததை என்னிடம் சொல்லி விட்டு, என் கடமையைச் செய்ய என்னை விட்டுவிட்டுப் போயிருக்க வேண்டும். கடமையைச் செய்வதில்தான் எத்தனை இன்பம். ஒவ்வொரு நிமிடமும், இரவும்பகலும் கடமையைச் செய்வதில்தான் எத்தனை இன்பம்.
அப்படியானால் என்னோடு ஏன் வந்தாய்?
நீ என்னை வரப்பண்ணி னாய். நீ என்னைக் கூட்டிவந்தாய். காமாந்தகாரா.17 வருடங்களுக்கு முன்னர், நாம் என்ன, என்ன செய்கிறோம் என்று நமக்கே தெரியாத வயதில். நான் என் குழந்தைகளை விட் டுவிட்டு வந்தேன். பிறக் காத குழந்தைகளை, எனக்குக் குழந்தைகள் பிறந்திருக்கும். நான் விரும்பிய அளவு பெற்றிருப்பேன். எனக்கு ஆண் குழந்தைகள் பிறந்திருக்கும். என் மகன்மார் என்னைக் காப்பாற்றத் தெரிந்திருப்பார்கள். பதினேழு வருடங்கள்!
இன்னும் பதினேழு வருடங்கள் வரும். இந்த இயந்திரம் இன்னும் 17 வருடங்கள் இயங்கக் கூடியதுதான்.
எல்லாமே, உன் மூக்கு நுனிக்கப்பால் உன்னால் பார்க்க முடியாமல் இருப்பதால்தான். பயப்படும் போது, நத்தை தன் உடலை ஒட்டுக்குள் சுருக்கிக் கொள்கிறது. ஆமையும் அதையே செய்கிறது. நத்தையும் ஆமையும் ஒன்றுதான் என்பதை இது நிரூபிக்கவில்லையா?
இல்லை.
ஏன் இல்லை?
இதென்ன இளவு. எதுவாகவும் இருக்கட்டும். நான் கவலைப் படப்போவதில்லை. நத்தையையும் ஆமையையும் பற்றியே இத்தனை வருடங்களாக விவாதித்துக்கொண்ருந்து விட்டோம்.
நத்தையையும் ஆமையையும் பற்றியல்ல. நத்தையை அல்லது ஆமையைப் பற்றி.

ജൂഖണ് :-
அவன் :
g|ഖണ് :-
அவன் :
அவள் :
7 நீ எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள். ஆனால், இனிமேல் 6T6) மட்டும் திறக்காதே. (மெளனம்) நான்கூட என். மனைவியைப் பிரிந்துதான் வந்தேன். அப்போது நான் விவாகரத்துச் செய்திருந்தேன் என்பது உண்மைதான். நமக்கு முன் ஆயிரக் கணக்கானவர் களுக்கு இது நடந்திருக்கிறது என்பதை எண்ணிப்பார்க்கும் போது கொஞ்சம் நிம்மதி ஏற்படுகிறதுதான். ஒருவரும் விவாகரத்துச் செய்துகொள்ளக் கூடாது. நான் கல்யாணமே செய்துகொள்ளாமல் இருந்திருந்தால் விவாகரத்தும் செய்திருக்க மாட்டேன். எதையுமே நிச்சயமாகச் சொல்ல முடியாது.
நீ சொல்வது ரொம்பச்சரி. உன்னைப்பற்றி நிச்சயமாக யாராலும் சொல்ல முடியாது. நீ எதையும் செய்யக்கூடியவன். அதேபோல் உன்னால் எதையும் செய்யவும் முடியாது.
எதிர்காலம் இல்லாத வாழ்க்கை, எதிர்காலமில்லாத வாழ்க்கையைத் தவிர வோறொன்றுமாக முடியாது. அப்போதுகூட.
சிலருக்கு எல்லா அதிஷ்டங்களும் உண்டு. அவர்கள்தான் அதிருஷ்டசாலிகள். அதிஷ்டமில்லாதவர்களுக்கு ஒன்றுமே இல்லை.
ஒரே உஷ்ணமாக இருக்கிறது.
எனக்கு ஒரே குளிராக இருக்கிறது. உஷ்ணமாக இருப்பதற்கு இதுவல்ல நேரம்.
பார்த்தாயா? நாம் உடன்படவில்லை. நாம் எதிலும் உடன்படுவதில்லை. நான் ஜன்னலைத் திறக்கப்போகிறேன்.
நான் குளிர்பிடித்துச் சாகவேண்டுமென்று நினைக்கிறாயா? என்னைக் கொல்லப் பார்க்கிறாயா?
நான் உன்னைக் கொல்லப் பார்க்கவில்லை. எனக்குக் கொஞ்சம் காற்று வேண்டும்.

Page 15
elഖ6ി :-
அவன் :
அவன் :-
அவள் :
அவன் :-
அவள் :
அவன் :
அவள் :
அவன் :
8 நீதானே சொன்னாய் கதவுகள் ஜன்னல்கள் எல்லாவற்றையும் அடைத்து விட்டு, காற்றில்லாமல் படுத்து நித்திரை கொள்ள வேண்டுமென்று.
நான் எப்போது சொன்னேன்? நான் அப்படிச் சொல்லவே யில்லை.
நீதான் சொன்னாய், போனவருடம் நீ சொன்னதையே இப்போது நீ மறந்துவிட்டாய். நீ சொன்னதையே இப்போது நீ மறந்து விட்டாய். நீ சொன்னதையே நீ மாற்றுகிறாய்.
நான் எதையும் மாற்றவில்லை. அது காலநிலையைப் பொறுத்தது.
நீ உனக்குக் குளிராய் இருக்கும் போது ஜன்னலைத் திறக்க விடமாட்டாய்.
அதுதான் உன்னில் உள்ள பிரச்சினை. எனக்குக் குளிரும் போது உனக்குச் சூடாகவிருக்கிறது. எனக்குச் சூடாகவிருக்கும் போது உனக்குக் குளிராகவிருக்கிறது. எப்போதும் நம் இருவருக்கும் ஒரே சமயத்தில் சூடாகவோ குளிராகவோ இருந்தது கிடையாது.
நாமிருவரும் ஒரே சமயத்தில் குளிராகவோ சூடாகவோ இருப்பதில்லை.
இல்லை. நம் இருவருக்கும் ஒரே சமயத்தில் சூடாகவோ குளிராகவோ இருப்பதில்லை.
அது ஏனென்றால் நீ மற்ற ஆண்களைப்போல் இல்லை.
என்ன, நானா? நான் மற்ற ஆண்களைப்போல் இல்லை?
இல்லை. நீ மற்ற ஆண்களைப்போல் இல்லை.
இல்லை. நான் மற்ற ஆண்களைப்போல் இல்லை என்று சொல்லிக்கொள்ள நான் பெருமைப்படுகிறேன். (வெடிச்சத்தம்)

g|ഖണ് :
அவன் :
ജൂ|ഖണ് :-
அவன் :
ജൂഖണ് :-
அவள் :-
ൗഖങ്ങI :-
9 நான் அப்படி நினைக்கவில்லை. (வெடிச்சத்தம்)
நான் பெருமைப்படுகிறேன்.(வெடிச்சத்தம்) வெடிச்சத்தம். நான் ஒரு சாதாரண மனிதனல்ல. நான் ஒரு முட்டாள் அல்ல. நீ சந்தித்திருக்கும் முட்டாள்களைப் போன்றவனல்ல நான். (வெடிச்சத்தம்).
வெடிச்சத்தம். உனக்குக் கேட்கவில்லையா?
நான் ஒரு சாதாரண கந்தன், பூதன், மாடனல்ல. இனவரசிகள் என்னைத் தங்கள் மாளிகைகளுக்கு அழைத்திருக்கிறார்கள். ஒரு மகாமேதைக்கு இருக்கும் எ ன’ ன ங் க ஞ ம’ சிந்தனைகளும் அப்போது என்னிடமிருந்தன அந்தச் சிந்தனைகளை எல்லாம் நான் எழுத்திலே வடித்திருந்தால், நான் பிரபலமடைந்திருப்பேன். நான் ஒரு கவிஞனாகி இருக்கலாம்.
மற்றவர்களைவிட நீ மிகவும் புத்திசாலி என்று நினைக்கிறாய். நான் கூட ஒரு காலத்தில் அப்படித்தான் நினைத்தேன். அப்போது எனக்குப் பைத்தியம் பிடித்திருந்தது. இல்லை நான் உன்னை நம்புவதாக முன்னர் நடித்தேன். ஏனென்றால், நீ என்னில் காமத்தைத் தூண்டினாய். ஆனால் உண்மையில் நீ ஒரு பித்துக்குளி.
நீதான் பித்துக்குளி,
பித்துக்குளி, கமுகன்
என்னைக் காமுகன் என்று சொல்லி அவமானப்படுத்தாதே. உனக்கே வெட்கமில்லையா?
நான் உன்னை அவமானப்படுத்தவில்லை. நீ யார் என்பதைப் புரியவைக்கிறேன்.
அதோடு நீ யார் என்பதை நான் காட்டுகிறேன். (கன்னத்தில் அறைகிறான்)

Page 16
ജൂഖണ് -
அவன் :
g|ഖണ് :-
அவன் :
அவள் :-
அவன் :
அவள் :-
அவன் :
அவள் :-
அவன் :
g|ഖണ് :-
10 பன்றி - காமுகன். காமுகன்.
கவனமாக இரு. இல்லை.
மதனகாமராஜன் (கன்னத்தில் அறைகிறாள்) இதுதான் உனக்குச்சரி.
ep(66). T60)ul..... சத்தம். (வெளியில் இருந்து கேட்கும் சத்தங்கள் அதிகரிக்கின்றன. தூரத்திலிருந்து கேட்டுக்கொண்டிருந்த கூக்குரல்களும் துப்பாக்கி வெடிச் சத்தங்களும் நெருங்கி வந்து, இப்போது ஜன்னலுக்கு அருகே கேட்கின்றன. அவள் வார்த்தைகளைக் கேட்டு சண்டைக்குத் தயாரான அவன், நிறுத்திக் கொள்கிறான். அவளும் அப்படியே நிறுத்திக் கொள்கிறாள்.)
என்னதான் செய்ய நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்? ஜன்னலைத் திறந்துதான் பாரேன்.
கொஞ்ச நேரத்துக்கு முன்னால், ஜன ன  ைலத தரிறகி கக கூடாதென்று நீதானே சொன்னாய்?
நான் விட்டுக் கொடுக்கிறேன். பார்த்தாயா நான் எவ்வளவு நல்லவளென்று.
உண்மை , உண்மை. நீ ஒரு பொய்காறி என்பதுதான் உண்மை. எப்படியோ உனக்கு இனிமேல் குளிராது. வெளியில் எல்லாமே சூடேறிக்கொண்டிருக்கின்றன. (போய், ஜன்னலைத் திறந்து வெளியே பார்க்கிறான்).
என்ன நடக்கிறது?
அதிகமாக ஒன்றுமில்லை. மூன்று பேர் செத்துக் கிடக்கிறார்கள்.
செத்துக் கிடப்பவர்கள் யார்? இரண்டு பக்கங்களிலும் இருந்து ஒவ்வொருவர் செத்துக்கிடக் கிறார்கள். மூன்றாவது நபர் ஒரு வழிப்போக்கன். எந்தப் பக்கத்திலும் இல்லாதவன்.

g|ഖണ് :
அவன் :-
♔|ഖണ് :
அவன் :
அவள் :
அவன் :
g|ഖണ് :
அவன் :
ജൂഖണ് :-
அவன் :
அவ்ள்ே
11 ஜன்னலுக்குப் பக்கத்தில் நில்லாதே உன்னையும் சுட்டுவிடுவார்கள.
சரி.ஜன்னலைப் பூட்டுவோம். (ஜன்னலைப் பூட்டுகிறான்) அவர்கள் கலைந்து செல்கிறார்கள்.
அப்படியென்றால், அவர்கள் எல்லோரும் போய் விட்டார்களா?
UITs (3LTD.
ஜன்னலைத் திறக்காதே (அவன் ஜன்னலைத்திறக்கிறான்) அவர்கள் ஏன் கலைந்து செல்கிறார்கள்? சொல்லேன். ஜன்னலை மூடு (அவன் ஜன்னலை மூடுகிறான்)
ஆனால், ஒருவரையொருவர் கவனித்துக்கொண்டு இன்னும் அவர்கள் தெருவில்தான் நிற்கிறார்கள். தெருக்கோடியில் இரு மூலைகளிலும் அவர்களின் தலைகள் தெரிகின்றன. இன்று வெளியே போக முடியாது. பிறகு பார்ப்போம். ஒருவேளை நாளைக்குப் போகக்கூடியதாக இருக்கும்.
எடுத்த முடிவைத் தள்ளிப்போடுவதற்கு நல்லதொரு சந்தர்ப்பம்.
நிலமை அப்படி இருக்கிறது.
இப்படியே அவர்கள் நடத்திக்கொண்ருப்பார்கள். சூறாவளி இல்லாத நேரத்தில் ரெயில்வே ஊழியர் வேலை நிறுத்தம். ஃபுலுக் காச்சல் இல்லாத நேரத்தில் போர். போர் இல்லாத வேளைகளிலும் போர்தான். ஒ! எவ்வளவு இலகுவான காரியம்; காலத்தின் இறுதிவரை இது எப்படி இருக்கும்? காலம் முடியும் போது, இது எப்படி இருக்கும் என்று எமக்குத் தெரிய வரும.
எத்தனை முறை திரும்பச் சீவுகிறாய். இன்னும் நீ தலை. சீவி முடிக்க வில்லையா? உன் அழகு போதும். இருக்கும் அழகைவிட அதிகமாக சேர்த்துக் கொள்ள முடியாது.
என் தலைமயிர் அலங்கோலமாக இருந்தால் உனக்குப் பிடிக்காதே.

Page 17
eഖണ് :-
அவன் :
g|ഖണ് :
அவன் :-
g|ഖണ് :
அவன் :
அவன் :
அவள் :
அவன் :-
12 அழகு படுத்திக்கொள்ள இது நேரமல்ல. எல்லாவற்றுக்குமே நீ பிழையான நேரத்தையே தெரிந்தெடுக்கிறாய்.
நான் காலத்தைக் கடந்து நிற்கிறேன். வரப்போகும் நன்மைதரும் காலத்திற்காக நான் என்னை அழகுபடுத்திக் கொள்கிறேன். (வெளியே இருந்து வரும் ஒரு துப்பாக்கிக் குண்டு ஜன்னல் கண்ணாடியை உடைக்கிறது).
ஓ.பார்த்தாயா?
உனக்கேதும் காயம் ஏற்படவில்லையே?
உனக்கேதும் காயம் ஏற்படவில்லையே?
இதற்குத்தான் ஜன்னல் கதவுகளைப் பூட்டிவிடு என்று சொன்னேன்.
வீட்டுச் சொந்தக்காரரிடம் சொல்ல வேண்டும். இப்படியான விடயங்களுக்கு அவர் எப்படி இடம் கொடுக்கலாம். எங்கே இந்த வீட்டுச் சொந்தக்காரர்? வீதியில்தான் சந்தோஷமாக நிற்பார். ஆ.என்ன மனிதர்கள்.
ஜன்னல் கதவைத்தான் பூட்டேன். (ஜன்னல் கதவுகளைப் பூட்டுகிறான். இருள் கவிகிறது) ம்.லைட்டைப்போடு. இப்படியே இருளில் உட்காந்திருக்க முடியுமா?
ஜன்னல் கதவுகளைப் பூட்டச்சொன்னாய் அல்லவா அதுதான்
இருட்டாக இருக்கிறது. ( இருளிலே சுவிச்சைத் தேடிப்போனவன் ஒரு கதிரையில்முட்டிக் கொள்கிறான்) ஊ. என்னமாய் வலிக்கிறது.
உதவாக்கரை
அதுதான். நன்றாகச் சத்தம் போட்டுச் சொல். நான்
எதைச்செய்து என்ன பிரயோசனம்? இந்த வீட்டில் வழிதேடிக் கண்டுபிடிப்பதே ஒரு பெரிய காரியம், வீட்டுக்காரன்

அவள் :
அவன் :
அவன் :-
அவள் :
அவன் :-
அவள் :
அவன் :
13 சுவிச்சை எங்கே பொருத் தயிருக்கிறான் என்பதைக் கண்டுபிடிப்பதே அதைவிடப்பெரிய காரியம். சுவிச் நடக்கக்கூடிய ஒரு பொருளல்ல. என்றாலும் ஒவ்வொருநாளும் ஒவ்வொரு இடத்துக்கு மாறுகிறது. (இருளில் அவன் எழுந்து சுவிச் இருக்கும் இடத்திற்குச் செல் கிறான். அவள் மேல் முட்டிக்கொள்கிறான்)
போகும் இடத்தைப்பார்த்துப் போக உனக்குத் தெரியாதா? (அவள் லைட்டைப்போடுகிறாள்).
நீ முட்டியதால், என் நெற்றி வீங்கி விட்டது.
நீ என் காலில் மிதித்து விட்டாய்.
நீ வேண்டு மென்றுதான் முட்டினாய்.
நீ தான் வேண்டும் என்று என் காலை மிதித்தாய். (இருவரும் சென்று இரு நாற்காலிகளில் அமர்ந்து கொள்கிறார்கள்)
நான் உன்னைக் கண்டிராவிட்டால், நான் உன்னைச் சந்தித்திருக்கமாட்டேன். அப்படியானால் என்ன நடந்திருக்கும்? ஒரு வேளை நான் ஒரு ஓவியனாக வந்திருக்கலாம். நான் வேறு ஏதாவது ஒரு துறையில் ப ா ண’ டி த' த ய ம’
பெற்றிருக்கலாம். அது எப்படி இருந்திருக்கும். ஒருவேளை நான் ஊர் ஊராக சுற்றி அலைந்து கொண்டிருக்கலாம். ஒருவேளை நான் இதைவிட இளமையாக இருந்திருக்கலாம்.
ஒருவேளை நீ எங்காவது ஒரு ஆஸ்பத்திரியில் இறந்தும் கிடக்கலாம். ஒருவேளை, நம்மைப் போலவே உள்ளவர்களை நாம் சந்தித்திருக்கலாம். ஒருவேளை, ஒருவேளை என்பதே இல்லாமல் இருக்கலாம். நம்மால் அதைப்பற்றி எப்படி அறியமுடியும்
ஒருவேளை, நான் உயிர்வாழ்வதற்கு என்ன அவசியம் என்று என்னையே நான் இப்போது கேட்டுக்கொண்டிருக்க மாட்டேன். அல்லது நான் திருப்தியடையாமல் இருப்பதற்கு வேறு காரணங்கள் இருந்திருக்கலாம்.

Page 18
g|ഖണ് :-
அவன் :-
அவள் :-
அவன் :
அவள் :
அவன் :
g|ഖണ് :
அவன் :
g|ഖണ് :
அவன் :
14 என் குழந்தைகள் வளர்ந்துவருவதை நான் பார்த்ததுக் கொண்டிருந்திருப்பேன். அல்லது நான் ஒரு சினிமா நடிகையாகி இருப்பேன். கிராமத்திலே, சுற்றிவர அழகான மலர் தோட்டங்கள் உள்ள ஒரு வீட்டில் குடியிருந்திருப்பேன். நான் என்னென்ன செய்திருப்பேன்?நான் என்னதான் செய்திருப்பேன்? இப்போது எப்படி, என்னவாக இருந்திருப்பேன்?
நான் வெளியே போகிறேன்.(அவன் வாசலை நோக்கி நடக்கிறான். ஒரு பலமான சத்தம் கேட்கிறது. கதவுக்கு முன்னால் அவன் நிற்கிறான்). கேட்டதா?
நான் என்ன செவிடா? அது என்ன சத்தம்?
கைக்குண்டு. அவர்கள் இப்போது கைக்குண்டு வீசுகிறார்கள்.
நீ வெளியே போக விரும்பினால் கூட இப்போதுநம் மால வெளியே போக முடியாது. இருதலைக்கொள்ளி எறும்புபோல் ஆகிவிட்டோம். இப்படி இரு கட்சிகளுக் கிடைப்பட்ட அனாதரவான ஒரு நாட்டை வாழ்க்கை நடத்துவதற்கு நீ ஏன் தேர்ந்தெடுத்தாய்?
நீதான் இந்த வீட்டில் வாழ விரும்பினாய்.
பொய்யன்.பொய்யன்.
ஒன்று உனக்கு மறதி அதிகமிருக்க வேண்டும். அல்லது நீ வேண்டுமென்றே நடிக்க வேண்டும். இந்த மாடி வீட்டை, சுற்றுப் புறத்திலுள்ள அழகான காட்சிக்காக நீதான் விரம்பினாய். இங்குவந்தால் உனக் கு կ5lա சிந்தனைகள்
உதிக்கலாமென்று நீதான் சொன்னாய்.
நீ வேண்டுமென்றே பொய் சொல்கிறாய். நம் இருவருக்கும் சிந்தனைகளே இருந்த தில்லையே
எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை நம்மால் உணர முடியவில்லை. எந்தக் குறிப்புகளுமே இருக்கவில்லை.
பார்த்தாயா நீயே ஒப்புக்கொள்கிறாய். நீதான் இந்த வீட்டைத்

é|ഖണ് :
அவன் :
அவள் :
அவள் :-
♔ഖണ് :
அவன் :
அவள் :
ജ|ഖണ് :
அவன் :
அவள் :
அவன் :
அவன் :-
15 தேர்ந்தெடுத்தாய்.
சிந்தனையே இல்லாமல் நான் எப்படி தேர்ந்தெடுத்திருக்க முடியும்? (வெளியிலிருந்து பலமான சத்தங்கள். படிக்கட்டுகளில் இருந்து. கோஷங்களும் கலவரமும்)
அவர்கள் மாடிக்கு வருகிறார்கள். கதவு சரியாக பூட்டப்பட்டிருக்கிறதா என்று பார்.
கதவு பூட்டப் பட்டுத் தான் இருக் கறது. சரியாக பூட்டப்பட்டிருக்கிறதா எனக்குத்தெரியாது.
எப்படியோ பூட்டிவிடு. பூட்டியிருந்தால் சரி.
அவர்கள் மேலே வந்து விட்டார்கள். (கதவு தட்டப்படுகிறது)
பயப்படாதே எங்களைத்தேடி அவர்கள் வரவில்லை. அவர்கள் எதிர் வீட்டுக் கதவைத் தட்டுகிறார்கள். (இருவரும் நடப்பவற்றைக் கவனமாகக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்). நம் எதிர் வீட்டுக்காறர்களை அவர்கள் கொண்டு போகிறார்கள்.
அவர்கள் மேல் மாடிக்குப் போகிறார்கள.
அவர்கள் கீழே இறங்கிச் செல்கிறார்கள்.
இல்லை. மேலே போகிறார்கள்.
கீழே போகிறார்கள்.
இல்லை மேலே போகிறார்கள்.
அவர்கள் கீழேதான் போகிறார்கள் என்று நான் சொல்கிறேன்.
எப்போதும் நீ சொல்வதுதான் சரியென்று உனக்கு எண்ணம்.
அவர்கள் மேலே போகிறார்கள் என்று நான் சொல்கிறேன்.
கீழே போகிறார்கள். சத்தங்களைக்கூட உன்னால் சரியாகப் புரிந்து கொள்ள முடியாமல் இருக்கிறதே. எல்லா வற்றுக்கும் நீ பயந்து நடுங்குவதுதான் காரணம்.

Page 19
அவன் :
அவள் :
அவன் :-
அவள் :
அவன் :
g|ഖണ് :-
அவன் :-
ജൂഖണ് :
அவன் :
ജൂഖണ് :-
அவன் :
16
மேலேயோ கீழேயோ இரண்டுக்கும் வித்தியாசமில்லை. அடுத்த முறை அவர்கள் நம்மைத்தேடி வருவார்கள்.
யாரும் உள்ளே வராமல் தடைகளை வைப்போம். அலுமாரி. வாசலுக்கு நேரே அந்த அலுமாரியை நகர்த்திவை, உனக்கும் சமயோசிதமான புத்தி இருக்கிறதென்று சொல்லிக கொள்கிறாய்.
எனக்கு சமயோசிதமான புத்தி உண்டென்று நான் ஒருபோதும் சொல்ல வில்லையே. ஆனால், ஒன்றைப்போலவே
மற்றதும் நல்லது தான்.
போதும் போதும், அலுமாரி அலுமாரியைத் தள்ளி வை. (இடது புறத்திலுள்ள அலுமாரியை இருவருமாகத் தள்ளி, வலது புறத்திலுள்ள வாசலை அடைத்து வைக்கிறார்கள்). இனிக்கொஞ்சம் நிம்மதியாக இருக்கலாம்.
நிம்மதியா? இதைப்போய் நிம்மதி என்று சொல்கிறாயா? நீ என்ன சொல்கிறாய் என்பது உனக்கே புரியவில்லை.
உண்மைதானி. நான் பேசுவது எனக்கே புரியவில்லை. நீ பக்கத்தில் இருக்கும்போது யாரால்தான் நிம்மதியாக இருக்க முடியும்? உன்னோடு யாராலுமே நிம்மதியாக் இருக்க முடியாது.
உன் நிம்மதியைக் குலைப்பதற்கு நான் என்னதான் செய்துவிட்டேன்?
நீ எனக்கு எரிச்சலை ஊட்டுகிறாய். நீ எரிச்சலுட்டாமல் இருந்தாலும் எனக்கு எரிச்சல்தான் ஏற்படுகிறது.
நான் இனி ஒரு வார்த்தையுமே கதைக்க மாட்டேன், எதுவுமே செய்யவும் மாட்டேன். அல்லது, நான் எரிச்சலூட்டுவதாக நீ சொல் வாய், உன் மனத்தில் நீ என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய் என்பது எனக்கு நன்றாகத் தெரியும்.
என் மனத்தில் நான் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறேன்?
உன்மனத்தில் நீ என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாயோ

966 :
அவன் :-
அவள் :-
é|ഖണ് :
அவன் :-
ജൂഖണ് :
17 அதைத்தான் நீ உன்மனத்தில் நினத்துக் கொண்டிருக்கிறாய்.
குத்தல் பேச்சு. கேவலமான குத்தல் பேச்சு.
என் குத்தல் பேச்சில் என்ன கேவலம் இருக்கிறது?
எல்லாக் குத்தல் பேச்சுக்களுமே கேவலமானவைதான்.
உண்மையில் அது குத்தல் பேச்சு அல்ல.
அது குத்தல் பேச்சுத்தான்.
இல்லை. குத்தல் பேச்சல்ல.
சரி, அது குத்தல் பேச்சில்லா விட்டால் வேறு என்ன?
அது குத்தல் பேச்சுதானா இல்லையா என்று அறிவதற்கு, குத்தல் பேச்சு என்றால் என்ன என்று நீ தெரிந்திருக்க வேண்டும். குத்தல் பேச்சு என்றால் என்ன? எனக்கு விளக்கம் தேவை.
பார்த் தாயா. அவர்கள் கீழே போய் விட்டார்கள். எதிர் வீட்டுக்காறர்களையும் கொண்டு போய் விட்டார்கள். அவர்கள் ஓலமிடுவது நின்றுவிட்டதே, அவர்களை என்ன செய்து விட்டார்கள்.
கழுத்தை அறுத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.
என்ன நகைச்சுவையான எண்ணம். இல்லை, இல்லை. அதில் நகைச்சுவையே இல்லை. ஆனால், ஏன் அவர்கள் கழுத்தை அறுத்தார்கள்?
ஏனென்று இப்போது அவர்களிடம் போய் என்னால் கேட்க முடியுமா? அதற்கு இது நேரமல்ல.
ஒருவேளை அவர்கள் கழுத்தை அறுத்திருக்க மாட்டார்கள். அவர்களுக்கு வேறு ஏதாவது செய்திருப்பார்கள். (கூக்குரல்களும் சத்தங்களும் வெளியிலிருந்து கேக்கின்றன. சுவர்கள் குலுங்குகின்றன).

Page 20
அவன் :-
அவள் :-
அவன்
அவள் :
அவன் :
அவள் :
அவன் :
அவள் :
அவன் :-
அவள் :
அவன் :-
g|ഖണ് :-
அவன் :
அவள் :
அவன் :
18 கேட்கிறதா?
பார்த்தாயா?
பார்த்தாயா?
(35LTuu?
அவர்கள் நிலத்திற்கடியில் சுரங்கங்கள் தோண்டுகிறார்கள்.
அடுத்து நிலவறையில்தான் நாங்கள் இருப்போம்.
அல்லது தெருவில் நிற்போம். உனக்கு குளிராக இருக்கும்.
தெருவைவிட நிலவறையேமேல். நிலவறையைச் சூடாக்கலாம்.
நாம் அதற்குள் ஒளிந்திருக்கலாம்.
அங்கு எங்களைத் தேடுவதற்கு அவர்கள் முயலமாட்டார்கள்.
ஏன் மாட்டார்கள்?
ஏனென்றால் நிலவறை நிலத்துக்குக் கீழே இருக்கிறது. எங்களைப் போன்றவர்கள் அல்லது எங்களைப போலல்லாதவர்கள் நிலத்துககு அடியில் மிருகங்களைப் போல் சீவிப்பார்கள் என்று அவர்களுக்கு எண்ணத் தோன்றாது.
அவர்கள் எல்லா இடங்களிலும் தேடுவார்கள்.
சரி, ஏன் இன்னும் பார்த்துக் கொண்டிருக்கிறாய்? வெளியே போவதுதானே. உன்னை நான் தடுக்கவில்லையே இதைப் பயன்படுத்திக் கொண்டு, வேறு ஒரு வாழ்க்கையைத் தேடிக்கொள்ளேன். அப்படி உண்மையாகவே வேறு ஒரு வாழ்க்கை உண்டா என்பதைத் தேடிப் பாரேன்.
சந்தர்ப்பம் பிழையான நேரத்தில் கிடைத்திருக்கிறது. வெளியே
மழை கொட்டிக் கொண்டிருக்கிறது. ஒரே குளிராகவும் இருக்கிறது.

அவன் :-
ജൂഖണ് :
@lഖണ് :-
g|ഖണ് :
அவன் :-
அவள் :
அவன் :
g|ഖണ് :-
அவன் :-
19 எனக்குத்தான் குளிர் ஏற்படுகிறதென்று நீ எப்போதும் சொல்வாயே.
சரி இப்போது எனக்குக் குளிர் ஏற்பட்டிருக்கிறது. என் முள்ளந்தண்டே குளிர்ந்து போய் விட்டது. என் முள்ளந்தண்டை குளிர வைப்பதற்கு எனக்கு உரிமையுண்டு.
உனக்குக் கட்டாயம் உரிமையுண்டு. ஆனால் எனக்கு அந்த உரிமை கிடையாது. சூடாகவிருக்கிறது என்று சொல்வதற்குக் கூட எனக்கு உரிமையில்லை. நீ எனக்குத் தந்திருக்கும் வாழ்க்கையைப்பார். நன்றாகப்பார். அவற்றோடு எவ்வளவு சந்தோஷமானதொரு வாழ்க்கை. (மூடிய ஜன்னலையும் வாசலை அடைக்கும் அலுமாரியையும் காட்டுகிறாள்).
நீ சொல்வது சாரமற்ற பேச்சு. பைத்தியம் பிடித்தாடும் ஓர் உலகத்தில் அதற்கெல்லாம் நான்தான் பொறுப்பு என்று என்னை நீ குற்றம் சாட்ட முடியாது.
இவை எல்லாம் நடக்குமென்று நீ தெரிந்திருக்க வேண்டும். நாம் இல்லாதபோது இவையெல்லாம் நடக்க நீ ஏற்பாடு செய்திருக்க வேண்டும். துரதிருஷ்டத்தின் உருவமே நீதான்.
ரொம்பச்சரி. நான் வருகிறேன். (அவன் போகப் புறப்படும் போது, ஜன்னல் கதவுகளை உடைத்துக்கொண்டு ஒரு கைக்குண்டு மேடையின் நடுவில் வந்து விழுகிறது).
ஒரு ஆமை நத்தையின் ஒடு.
நத்தைகளுக்கு ஓடு கிடையாது.
அப்படியானால் அவற்றுக்கு என்ன உண்டு?
எனக்குத் தெரியாது. கோதாக இருக்கலாம்.
இரண்டுமே ஒன்றுதான்.
அட்க் கடவுளே, கைக்குண்டு.

Page 21
g|ഖണ് :
அவன் :
அவள் :
அவள் :
அவன் :-
ജൂഖണ് :
அவள் :-
அவன் :
20 கைக்குண்டா? வேடிக்கப்போகிறது. திரியை மிதித்து அணைத்துவிடு.
திரி முழுவதும எரிந்து போயிருக்க வேண்டும். பார்த்தாயா. வெடிக்க வில்லையே.
நேரத்தைப் போக்காதே. போய் ஒளிந்துகொள். (அவள் போய் ஒரு மூலையில் ஒளிந்து கொள்கிறாள். அவன் கைக்குண்டை எடுக்கப்போகிறான்).
வீணாகச் சாகப்போகிறாய். மடையா.
வீட்டில் நடுவிலே வைத்து இதை அழகு பார்க்கவா சொல்கிறாய். (கைக்குண்டை எடுத்து ஜன்னலுக்கு வெளியே வீசுகிறான்!! வெளியிலிருந்து பெரியதொரு வெடிச்சத்தம் கேட்கிறது)
பார்த்தாயா. அது வெடித்து விட்டது. ஒருவேளை இருந்த இடத்திலேயே அதைவிட்டிருந்தால் அது வெடிக்காமலும் இருந்திருக்கும். இந்த அறையிலே போதுமான காற்று இல்லை. காற்றுப்பட்டால் தான் அது வெடிக்கும். ஒரு வேளை கைக் குண்டால் வெளியில் யாரும் இறந்திருக்கலாம். கொலைகாரா!
ஒன்று இரண்டு கூடினாலும். ஒன்று இரண்டு குறைந்தாலும் அவர்கள் இப்போது இருக்கும் நிலையில் கவனிக்க மாட்டார்கள். எப்படியோ, இன்னும் கொஞ்ச நேரத்துக்கு நமக்கு ஆபத்தில்லை. (வெளியே பலமான சத்தம்)
பார்த்தாயா ஜன்னல் கதவுகளை மட்டும் மூடுவதால் பயனில்லை. மெத்தையை நிமிர்த்தி தடையாக வைப்போம்.
அதைப்பற்றி நீ முன்னமே யோசித்திருக்க வேண்டும். உன் மூளை சில சமயங்களில் வேலை செய்தாலும், அது நேரம் பிந்தியே வேலை செய்கிறது.
வேலை செய்யாமலே இருப்பதைவிட பிந்தியாவது வேலை செய்வது நல்லது.

g|ഖണ് :-
அவன் :-
g|ഖണ് :-
அவள் :-
அவன் :
அவள் :-
அவன் :
96)6it :
அவன் :-
g|ഖണ് :-
21 தத்துவஞானி, முட்டாள், காமுகன். சீக்கிரம் மெத்தையைப் பிடி. (கட்டிலிலிருந்த மெத்தையை இருவருமாக எடுத்து ஜன்னலோடு நிமிர்த்தி வைக்கிறார்கள்).
இன்று இரவு நித்திரை கொள்வதற்கு நமக்கு மெத்தை இருக்காது.
எல்லாம் உன்னுடைய தவறுதான். இந்த வீட்டில் இரண்டு மெத்தைகள் கூட இல்லை. என் கணவரிடம், நீ என்னை யாரிடமிருந்து பிரித்துக் கொண்டு வந்தாயோ அவரிடம் நிறைய மெத்தைகள் உண்டு. அவர் வீட்டில் மெத்தைகளுக்குப் பஞ்சமே இல்லை.
மெத்தை தைப்பது அவன் தொழில். அவை மற்றவர் வீட்டு மெத்தைகள். அது அவ்வளவு பெரிய காரியமல்ல.
அது எவ்வளவு பெரிய காரியம் என்று இப்படியான நேரத்தில் நீ உணரவில்லையா?
ஆனால் மற்ற நேரங்களில் அது அவ்வளவு பெரிய காரியமாக இருக்காது. வீடு முழுவதும் மெத்தைகளாக உன்வீடு பார்ப்பதற்கு விசித்திரமாக இருந்திருக்கும்.
அவர் ஒரு சாதாரண, மெத்தை தைப்பவர் அல்ல. அவர் ஒரு கலைஞர், மேதை. அந்தத் தொழிலின் மேலுள்ள அளவு கடந்த நேசத்தாலும், என்மேலுள்ள நேசத்தாலும் செய்தார். என்மேலுள்ள நேசத்தால் நீ என்ன செய்கிறாய்?
உன்மேலுள்ள நேசத்தால் நான் விளைந்து கொண்டிருக்கிறேன்.
அதொன்றும் பெரிய காரியமல்ல.
பெரிய காரியம் தான்.
அதனால் உனக்கென்ன களைப்பா ஏற்படுகிறது? சோம்பேறி.!
(அதிக சத்தங்கள். இடதுபுறமுள்ள கதவு உடைந்து விழுகிறது. புகை)

Page 22
அவன் :
அவள் :
அவன் :-
ട്രഖണ് :
அவன் :
அவள் :
அவள் :
அவன் :
அவள் :
அவன் :
அவள் :
22 ஒ.இது பெரிய அநியாயம். ஒரு கதவை அடைத்தால் இன்னொன்று திறந்து கொள்கிறது.
எனக்கு மயக்கமாக இருக்கிறது. எனக்கு இருதய நோய் உண்டு.
அல்லது, தானாகவே விழுந்து விடுகிறது.
மீண்டும் அது உன் பிழை இல்லை என்று சொல்வாய் என்று நினைக்கிuறன்.
நான் பொறுப்பாளியல்ல
என்றுமே நீ பொறுப்பை ஏற்றுக்கொள்வது இல்லையே!
இவையெல்லாம் தன்னிச்சையாக தர்க்க ரீதியாக நடக்கும் நிகழ்ச்சிகள்.
தர்க்க ரீதியாக அவற்றில் என்ன இருக்கிறது.
வெளியே இருந்து மூன்றாம் மனிதனாகப்பார்த்தால் நடக்கும் நிகழச்சிகளுக்கு இடையில் ஒரு தர்க்க ரீதியான தொடர்ச்சி இருப்பது தெரியும்.
அந்தக் கதவை என்ன செய்வது? திரும்பவும் இருந்த இடத்திலே வைத்து விடுவோமா? (கதவு இருந்த இடத்தில் இடைவெளிக்கூடாகப் பார்க்கிறான்).
அடுத்த வீட்டில் யாருமே இல்லை. அவர்கள் ஒய்வெடுத்துக் கொள்ள எங்காவது போய் இருக்க வேண்டும். வெடிமருந்துகளை எல்லாம் வீட்டில் விட்டுவிட்டுப் போயிருக்கிறார்கள்.
எனக் குத் தாகமாக இருக்கிறது. பசியாகவும் இருக்கிறது. அங்கு ஏதாவது இருக்கிறதா என்று போய்ப்
.

அவன் :-
gഖങ് :-
அவன் :-
ജൂഖണ് :
அவள் :
அவன் :
அவள் :
23 ஒருவேளை நாம் வெளியே போகக்கூடியதாகவும் இருக்கும். ஏனென்றால், எதிர்வீட்டுக்காரரின் பின் வாசல் வழியாகத் தெருவில் மறுகரைக்குப் போகலாம். அந்தப்பகுதியில் அதிகம் சண்டை இல்லை.
இங்கிருந்து எப்படி வெளியே போகலாம் என்ப்தைப் பற்றித்தான் நீ எப்போதும் நினைத்துக் கொண்டிருக்கிறாய். நில் நானும் வருகிறேன். (இடதுபுறமாக அவன் வெளியே செல்கிறான்). நீ எங்கே ப்ோகிறாய்?
(மேடைக்கு வெளியே இடதுபுறத்திலிருந்து) வெளியே போக முடியாது. எதிர்வீட்டுக்காரரின் முற்றத்தில் சுவர்கள் உடைந்து விழுந்திருக்கின்றன. கல்லும் மண்ணும் குவிந்து கிடக்கின்றன. (உள்ளே வருகிறான்) அவற்றிற் கூடே போக முடியாது. நமது தெருவிலே எல் லாம் ஒயும் வரை நாம் காத்திருக்கத்தான் வேண்டும். பிறகு அலுமாரியை நகர்த்தி விட்டால் போகலாம்.
எங்கே, நான் ஒரு முறை பார்க்கிறேன். (வெளியே போகிறாள்).
(தனிமையில்) நான் மட்டும் முன்னரே போயிருந்தால். மூன்று வருடங்களுக்கு முன்னர், சென்ற வருடம் அல்லது சென்ற சனிக்கிழமை என் மனைவியோடு மீண்டும் சமாதானமாகி இப்போது நான் வெகு தூரம் போயிருப்பேன். என் மனைவி மறுமணம் செய்து கொண்டு விட்டாள். அப்படியானால் வேறு யாருடனாவது, வெகு தூரம் சென்றிருப்பேன். ஒரு இன்பமற்ற காதல் விவகாரத்தில் நான் தண்டிக்கப் பட்டிருக்கிறேன். என்மேலும் தவறு உண்டு. தண்டனை குற்றத்திற்குப் பொருத்தமானதுதான்.
(தரும் பரி வருகறாள்) என்ன தனியாக நின்று பிதற்றிக் கொண்டிருக்கிறாய்? எதில் குற்றம் கண்டு பிடித்துவிட்டாய்?
நான் வாய் விட்டுச் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்.
அவர்களுடைய சமையல் அறையில் கொஞ்சம் சாப்பாடு

Page 23
அவன் :
அவள் :
அவன் :-
அவன் :-
g|ഖണ് :-
அவன் :
அவள் :-
அவன் :
அவள் :
24 மிச்சமிருந்தது. கொண்டுவந்திருக்கிறேன். எங்கிருந்து சாப்பிடுவது?
எங்கிருந்தும் சாப்பிடலாம். நிலத்திலிருந்து சாப்பிடுவோம். இந்த நாற்காலியை மேசையாகப் பாவிக்கலாம்.
என்ன தலைகீழான உலகம் ! (நாற்காலியின் இரு பக்கங்களிலும் நிலத்தில் இருவரும் உட் கார்ந்து கொள்கிறார்கள். கூக்குரல்களும் வெடிச் சத்தங்களும் கேட்கின்றன.)
அவர்கள் மாடிக்குப் போகிறார்கள். இந்த முறை அவர்கள் மேலே போகிறார்கள்.
அவர்கள் கழே போயிருக் கறார்கள் 6] ଧୈ [b] சொன்னாயே..அவர்கள் திரும்பவும் மேலே போக மாட்டார்கள் என்று நான் சொல்ல வில்லையே.
அதுதான் தெரிந்த விஷயமாயிற்றே.
அதற்காக என்னை என்ன செய்யச்சொல்கிறாய்?
உன்னை நான் எதுவும் செய்யச் சொல்லவில்லையே. (மேலே சீலிங்கில் ஏற்பட்ட ஒட்டையிலிருந்து ஒரு சிலை கீழே விழுந்து சாப்பாட்டுத் தட்டுகள் கிளாஸ் போன்றவற்றை உடைக்கிறது.)
ஐயோ. என்னுடைய சீலை, புதுச்சீலை, என்னுடைய ஒரேபுதுச்சீலை. முன்னர் ஒரு பிரபல சீலைக் கடைக்காறர் என்னைக் கல்யாணம் செய்ய விரும்பினார்.
(சிலையில் உடைந்த பகுதிகளை எடுத்துப் பார்த்துவிட்டு) ஒரு பிள்ளையார் சிலை.
இப்போது எல்லாவற்றையுமே கூட்டித் துப்பரவு செய்ய வேண்டும். சீலையையும் சுத்தம் செய்ய வேண்டும். லோண்டரிக்காறனை இப்போது நான் எங்கே தேடிப்பிடிப்பது? எல்லோருமே யுத்தத்தில் இறங்கி இருக்கிறார்கள். அதுவே அவர்களுக்கு ஓய்வாக இருக்கிறது. (சிலையின் துண்டுகளைப்

TYil6)I6öI :
96)6T :-
அவன் :-
♔|ഖണ് :
அவன் :
ജൂഖണt :
அவன் :-
ജൂഖണ് :
அவன் :
25
பார்த்துவிட்டு) இது பிள்ளையார் சிலையல்ல யானை,
யானைக்கும் பிள்ளையார் முகம்தான். ஒரு தந்தத்தில் பாதி உடைந்திருக்கிறதே. நீ பார்க்கவில்லையா?.
அது விழுந்த போது உடைந்திருக்க வேண்டும்.
இல்லை அது முன்பே உடைந்திருந்தது.
அதனாலென்ன? அதனால் எதையுமே உன்னால் நிருபிக்க
(ԼptՁեւ IfrՖl.
அது பிள்ளையார் சிலையேதான் . நான் சொல்கிறேன்.
இல்லை. இல்லை. இது பிள்ளையார் சிலையே இல்லை.
பிள்ளையார் சிலைதான். திரும்பவும் ஒரு முறை நன்றாகப்பார்.
பிள்ளையார் சிலைகள் அதிகமாக இல்லை. இது யானையின் சிலையேதான்.
இல்லை. பார் எவ்வளவு அழகாக இருக்கிறதென்று. அழகின மேல் எனக் கு அளவற்ற மோகம் . நான் ஒரு சிற்பியாகியிருக்கலாம்.
ரொம்பவும் அழகுதான்.
அழகு என்றால் எப்போதும் அழகாகத்தான் இருக்கும். அதிலும் சில விதிவிலக்குகள் உண்டு.
நான்தான் அந்த விதிவிலக்கு. அப்படித்தானே?
அப்படித்தானோ எனக்குத் தெரியாது.
பார்த்தாயா. நீ என்னை அவமானப்படுத்துகிறாய்.
நான் வேண்டுமானால் உேனக்கு நிரூபிக்கலாம்.

Page 24
அவள் :
அவன் :-
அவள் :
அவள் :
அவன் :
அவள் :
அவன் :
g|ഖണ് :-
அவன் :
அவள் :-
26 (இடையிட்டு) நீ எதையும் நிரூபிக்க வேண்டிய தில்லை. தயவுசெய்து என்னை நிம்மதியாக இருக்க விடு.
அப்படியே நீயும் என்னை நிம்மதியாக இருக்க விடு. நான் நிம்மதியாக வாழ விரும்புகிறேன்.
நானும் நிம்மதியாகத்தான் வாழ விரும்புகிறேன். ஆனால் உன்னோடு (இன்னொரு கைக்குண்டு சுவரைத் துளைத்துக் கொண்டு வந்து விழுகிறது). பார்த்தாயா, உன்னோடு நிம்மதியாக வாழவே முடியாது.
முடியாது. நிம்மதியாக வாழவே முடியாது. ஆனால், அது நமது கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டது. மூன்றாம் மனிதனாக
இருந்து பார்த்தால் புரியும் அது முடியாதென்று.
உன்னுடைய மூன்றாம் மனிதன் விவகாரத்தைக் கேட்டுக்கேட்டு அலுத்துப்போய் விட்டது. முதலில், வந்து, விழுந்து கிடக்கும் போர் ஆயுதத்தைப்பார். முதல் குண்டைப்போல் இதுவும் வெடித்து விடும்.
இல்லை. இது வெடிக்காது. கைக்குண்டல்ல. (அவன் காலால் அதைத்தொடுகிறான்)
கவனம். இந்த அறையே சுக்கல் நூறாகிவிடும். நாமும் இறந்துவிடுவோம்.
இது ஒரு பெரிய குண்டின் ஒரு துண்டு.
th..... அது எப்போது வெடிக்குமோ தெரியாது.
இது ஒரு பெரிய குண்டின் ஒரு துண்டாக இருந்தால். பெரிய குண்டு ஏற்கனவே வெடித்துப் பல துண்டுகளாக இருக்கும். எனவே, அது மீண்டும் வெடிக்காது.
நீ பிதற்றுகிறாய். மரணம் வரும் வரை காத்திராமல் சிலர் மரணத்தைத்தேடி தானாகவே போகிறார்கள். அவர்களுக்கு அவசரமாக இருக்க வேண்டும். அல்லது, அவர்களுக்கு அது விருப்பமாக இருக்க வேண்டும்.

966i :
அவன் :-
♔ഖണ് :-
அவன் :
ഷഖണ് :-
ജൂ|ഖണ് :
அவன் :
அவள் :-
அவன் :
அவள் :
அவள் :
27 அல்லது அது உண்மை அல்ல என்பதை நிருபிப்பதற்காக இருக்கலாம்.
அல்லது, ஒருவேளை அது லேசாக இருக்கலாம். அல்லது
அதில் கூடுதலான சந்தோசம் இருக்கலாம்.
உண்மையான சமூக உணர்வு.
ஒருவரை ஒருவர் கொலை செய்து கொள்வார்கள்.
அவர்கள் தங்களுக்குள்ளே முறை வைத்துக் கொள்கிறார்கள். என்றாலும் அது முடியாமலே இருக்கிறது. (கண்ணுக்குப் புலப்படாத போர்க்கருவிகள் சுவர்களில் பெரிய ஓட்டைகளைத் துளைக்கின்றன. துண்டுகள் எல்லா இடங்களிலும் விழுகின்றன. கட்டிலிலும் விழுகின்றன).
9.....
என்ன நடந்தது? அது உன்மேல் படவே இல்லையே!
உன் மேலும் தான்.
வேறு என்ன நடந்தது?
பட்டிருக்கலாம்.
மீண்டும் தொடங்கி விட்டாய் - சிணுங்குவதற்கு.
நீ தான் எந்த நேரமும் சிணுங்கிக் கொண்டிருப்பவள்.
வாய்ப்பந்தல் போடுவதில் நீ பெரிய வீரன். உனக்கு என்ன நடக்குமென்று நீ எப்போதுமே பயந்து கொண்டிருக்கிறாய். உனக்கு எப்போதுமே பயம். ஏனென்றால், உனக்கு உருப்படியான ஒரு தொழில் இல்லை. அதுதான் ஒரு மனிதனை வாழத் தூண்டுகிறது. எல்லோருக்குமே ஒரு
தொழில் வேண்டும். ஒரு யுத்தம் வரும் போது உன்னைச் சேர்த்துக் கொள்ளாமல் விட்டு விடுகிறார்கள் (மாடிப்படியில்

Page 25
அவன் :
g|ഖണ് :
அவன் :
g|ഖണ് :-
g|ഖണ് :-
அவள் :
அவன் :
g|ഖണ് :
அவன் :-
அவள் :
அவன் :-
g|ഖണ് :
28 பெரிய சத்தம் கேட்கிறது) அவர்கள் வருகிறார்கள். இந்த முறை நம்மைக் கொண்டு போகத்தான் வருகிறார்கள்.
ஒன்றும் இல்லாததற்காக நான் அஞ்சி நடுங்குவதில்லை.
வளக்கமாக நீ அப்படித்தான்.
இந்த முறையல்ல
ஏனென்றால் நீ எப்பே, துமே நீ செய்ததெல்லாம் சரியாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறாய். (போராயுதங்களின் ஒலி நின்று விடுகின்றது).
எல்லாம் நின்று விட்டன.
இது தேனீர் இடைவேளையாக இருக்க வேண்டும்.
(போராயுதங்களால் நிறைந்து கிடக்கும் நிலத்தையும், சுவர்களில் பெரிதாகி வரும் ஒட்டைகளையும் பார்க்கிறார்கள்) ஒருவேளை அதற்கூடாக நாம் வெளியே போகக்கூடியதாக இருக்கும். (சுவரில் உள்ள ஒரு பெரிய ஓட்டையைக் காட்டுகிறான்)
இதனுடே சென்றால் எங்கே போகலாம்?
மாடிப் படிகளுக்குப் போகலாம்.
எந்த மாடிப்படிகளுக்கு?
தோட்டத்துக்குச் செல்லும் மாடிப்படிகளுக்கு.
எந்தத் தோட்டத்துக்குச் செல்லும் மாடிப்படிகளுக்கு?
தெருவுக் குப் போகும் தோட்டத்திற்குச் செல்லும் மாடிப்படிகளுக்கு.
எந்தத் தெருவுக்கு?

966i :-
அவன் :
ജൂഖണ് :
அவன் :
g|ഖണ് :-
eഖണ് :
g|ഖണ് :-
அவன் :
அவள் :
அவன் :-
அவன் :
29 தற்போது போர் நடந்து கொண்டிருக்கும் தெருவுக்கு.
அப்படியானால் அதுவும் அடைபட்ட வழிதான்.
எனவே நாம் இங்கேயே இருப்போம்.
நீ ஒரு வழியைக் கண்டு பிடித்தாலும், எப்போதுமே அது பிழையான வழியாகவே இருக்கிறது. முடியாது என்று தெரிந்து கொண்டு ஏன் வெளியே போவதைப்பற்றி யோசிக்கிறாய்?
வெளியே செல்ல முடிந்தால் போகலாம் என்றுதான் நினைத்தோம்.
அப்படியானால் வெளியே போக நினைப்பதில் எந்தவித அர்த்தமுமே இல்லை.
வெளியே செல்வதற்கு வழியேதும் இருந்தால் போகலாமே. என்றுதான் அதற்கான வழியேதும் தென்படுமா என்று தான் பார்த்தேன்.
நீ எனக்கு தர்க்க சாஸ்திரம் சொல்லித்தரத் தேவையில்லை. உன்னைவிட தர்க்க சாஸ்திரம் எனக்கு அதிகம் தெரியும். நான் என் வாழ்நாள் முழுவதும் இதை நிரூபித்து வந்திருக்கிறேன்.
அப்படியொன்றும் நீ அதிகமாக நிரூபித்து விடவில்லை.
அதிகமாகவே, நிரூபித்திருக்கிறேன்.
இல்லை. அதிகமாக நீ ஒன்றும் நிருபித்துவிட வில்லை.
அதிகமாகவே, மிக அதிகமாகவே நிரூபித் திருக்கிறேன்.
6T60)u epG!
என் வாயை மூட உன்னால்-முடியாது.
வாயை மூடிக்கொண்டு கேள். உனக்குச் சத்தம் ஏதும்

Page 26
அவள் :
அவன் :
g|ഖങi :-
அவன் :
அவள் :
அவன் :-
அவள் :
அவன் :-
அவள் :
அவன் :
அவள் :
அவன் :-
அவள் :
அவன் :
30 கேட்கிறதா என்று! (மாடிப்படிகளில் இருந்தும், தெருவில் இருந்தும்சத்தங்கள் கேட்கின்றன).
அவர்கள் என்ன செய்கிறார்கள்?
அவர்கள் மேலே வந்து கொண்டிருக்கிறார்கள். மாடிப்படிகளின் வழியாக நிறையப்பேர் மேலே வந்துகொண்டு இருக்கிறார்கள்.
அவர்கள் நம்மைச் சிறையிலே தள்ளப்போகிறார்கள். அவர்கள் என்னைக் கொலை செய்யப் போகிறார்கள். நாங்கள் எதுவும் செய்துவிட வில்லையே.
அதுதான் காரணம்.
அவர்களின் விஷயங்களில் நாங்கள் தலையிட வில்லையே.
அதனால் தான். அதுதான் காரணம்.
அவர்களின் விஷயங்களில் நாம் தலையிட்டிருந்தாலும் அவர்கள் நம்மைக் கொலை செய்துதான் இருப்பார்கள்.
நாம் முன்னமே இறந்திருப்போம்.
அது ஒரு ஆறுதல்.
எப்படியோ தாக்குதல்களில் இருந்து நாம் தப்பிவிட்டோம். அவர்கள் எங்களைத் தாக்குவதை நிறுத்திவிட்டார்கள்.
அவர்கள் மேல்மாடிக்கு வருகிறார்கள்.
அவர்கள் மேல்மாடிக்கு வருகிறார்கள்.
அவர்கள் பாடிக்கொண்டே வருகிறார்கள். (சுவரிலே உள்ள ஓட்டைகளின் வழியே படியேறிச் செல்லும்
உருவங்களைப் பார்க்கவும், கேட்கவும் கூடியதாக இருந்தது)
ஒருவரை ஒருவர் தக்குவதை அவர்கள் நிறுத்தி விட்டார்கள்.

அவள் :
அவன் :-
அவள் :-
அவன் :-
அவன் :
ജൂഖണ് :
அவன் :-
g|ഖണ് :
அவன் :
ജൂഖണ് :
அவன் :-
அவள் :-
31
அவர்கள் வெற்றிப்பாடல்களைப் பாடுகிறார்கள்.
அவர்கள் வெற்றியடைந்து விட்டார்கள்.
எதை?
தெரியவில்லை, யுத்தத்தை.
யார் வெற்றியடைந்தார்கள்?
தோற்றுப் போகாதவர்கள்.
அப்படியானால் தோற்றுப் போனவர்கள்?
அவர்கள் வெற்றிபெறவில்லை.
மிகவும் புத்திசாலித்தனமான பதில். நானும் அப்படித்தான் நினைத்தேன்.
உன்னிடம் கொஞ்சம் தற்க ஞானம் இருக்கிறது. அதிகமல்ல கொஞ்சம்தான்.
அவர்கள் என்ன செய்கிறார்கள்? வெற்றியடையாதவர்கள்?
ஒன்று அவர்கள் இறந் தரிருப் பார்கள். அல்லது அழுதுகொண்டிருப்பார்கள்.
அவர்கள் ஏன் அழுகிறார்கள்?
தங்கள் பிழையை நினைத்து வருந்துவதனால் இப்போது அவர்களுக்கும் அது தெரிந்திருக்கும்.
எது பிழை?
வெற்றிபெற முடியாமல்போனது.
அப்படியானால் வெற்றியடைந்தவர்கள்?

Page 27
அவன் :
அவள் :-
அவன் :-
அவள் :-
அவன் :
அவள் :-
அவன் :
g|ഖണ് :
அவன் :-
ജൂഖണ് :
அவன் :-
அவள் :
32 அவர்கள் செய்தது சரி.
இரண்டு பகுதியுமே வெற்றியடையாமலும் தோல்வி யடையாம லும்இருந்தால்?
வெற்றி தோல்வியற்ற நிலை. இரண்டு பகுதியிலும் சிவப்பு ரத்தம்ஆறாய்ப் பெருகி இருக்கும்.
பின் என்ன” நடக்கும்?
இது ஒரு இருண்ட உலகம், எல்லா முகங்களும் கோபத்தால் வெளிறிப் போயிருக்கும்.
எப்படியோ ஆபத்து நீங்கி விட்டது,கொஞ்ச நேரத்திற்கு.
நீ பயப்படுவதை நிறுத்திக் கொள்ளலாம்.
நீ தான் பயப்படுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இவ்வளவு நேரமும் நடுங்கிக் கொண்டிருந்தாயே.
உன் அளவுக்கு நான் பயப்படவில்லை. (மெத்தை புரண்டு விழுகிறது. ஜன்னல் வழியாக கோஷ அட்டைகள் தெரிகின்றன. வெளிச்சங்கள், சீனவெடிச் சத்தங்கள்)
ஐயோ, ஐயோ, ஐயோ. திரும்பவும் ஆரம்பித்து விட்டார்கள். சரியான நேரத்தில் மெத்தையும் விழுந்து விட்டது. கட்டிலுக்கடியில் ஒளித்துக் கொள்வோம்.
இல்லை. அவர்கள் மீண்டும் ஆரம்பித்து விடவில்லை. இது வெற்றிக் கொண்டாட்டம். வீதி வழியே ஊர்வலம் செல்கிறது. அவர்கள் வெற்றியைக் கொண்டாடி சந்தோஷப்படுகிறார்கள். என்று நினைக் கிறேன். ஒன்றையும் நிச்சயமாகச் சொல்லமுடியாது.
அவர்கள் எங்களையும் தங்கள் ஊர்வலத்துக்கு இழு க க மாட்டார்களே! எங்களைப்பேசாமல் இருக்க விட்டால் போதும். சமாதானம் நிலவியதும் அவர்கள் ஒருவரையும் சும்மா இருக்க

அவன் :
அவள் :
அவன் :-
அவள் :-
அவன் :-
அவள் :-
அவன் :
@ഖണ് :
அவன் :
g|ഖണ് :-)
33
6LLDITILITT66it.
என்றாலும் இப்படி இருப்பது கொஞ்சம் நிம்மதியாக இருக்கும். என்ன தான் இருந்தாலும் நாம் கொஞசம் நிம்மதியாக இருக்கலாம்.
என்ன நிம்மதி. நாம் மோசமான நிலையில் இருக்கிறோம்.
மிக மோசமான நிலையைவிட, மோசமான நிலை நல்லதில்லையா?
தத்துவம், தத்துவம், தத்துவம், உன்னை அதிலிருந்து குணப்படுத்தவே முடியாது. அனுபவத்தால் நீ எதையும் கற்றுக்கொள்வதே இல்லை. வெளியே போக வேண்டுமென்று சொன்னாயே விரும்பினால் இப்போது நீ போகலாமே.
இப்படியான நேரத்தில் போகமுடியாது. இப்போது நான் வெளியே சென்றால் , அவர்கள் சிக் கலை உண்டு பண்ணுவார்கள். அவர்கள் வீடு திரும்பும் வரை நான் காத்திருக்க வேண்டும். வீட்டிலுள்ள சிக்கலைத் தாங்கிக் கொள்வது அதைவிட மேல். நீ வெளியே போக வேண்டுமானால் தாராளமாகப் போகலாம்.
நீ இதை எதற்காகச் சொல்கிறாய் என்பது எனக்கு நன்றாகப் புரிகிறது.
எதற்காகச் சொல்கிறேன்?
என்னைத்தெருவிலே விரட்டிவிட வேண்டுமென்று நினைக்கிறாய்.
நிதான் என்னைத்தெருவில் விரட்டிவிட வேண்டுமென்று நினைக்கிறாய்.
(அறையின் சீர் கேட்டையும், சுவர்களிலே உள்ள ஓட்டைகளையும் பார்த்து விட்டு) நீ ஏற்கனவே அதைச் செய்துவிட்டாய். நாம் இப்போது தெருவில் தான் நிற்கிறோம்,
உண்மைதான். இன்னும் முழுமையாக இல்லை.

Page 28
éjഖങi :-
அவன் :
அவள் :
அவன் :
அவள் :
அவன் :
34 அவர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்கள் ஆடிக்கொண்டும், பாடிக்கொண்டும், குடித்துச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பயங்கரமானவர்கள். எதையும் செய்யக் கூடியவர்கள். அவர்கள் உன்னைத் தாக்கலாம். என்னைப் போன்ற ஆதரவற்ற ஒரு பெண்ணையும் தாக்கலாம்.
இப்போது என்ன செய்ய நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அடங்கிவிட்டார்கள். எனக்கு அவர்களைத் தெரியும். அவர்கள் மனத்தில் எதையும் வைத்துக் கொண்டிருந்தால் மிகவும் பயங்கரமாய் இருக்கும்.அப்படி ஒன்றுமில்லையானால் அவர்கள் தேடத் தொடங்கு வார்கள். அவர்கள் எதையும் தோண்டியெடுப்பார்கள். அவர்கள் எதைக் கண்டு பிடிப்பார்கள் என்று கடவுளுக்குத்தான் தெரியும். சண்டைபிடிக்கும் போதாவது, ஆரம்பத்தில் எதற்கென்று தெரியா விட்டாலும், பின்னர் ஒரு காரணத்தைக் கண்டு பிடித்து விடுவார்கள். அதற்கு அப்பால் அவர்கள் சிந்திப்பதில்லை. ஒருவேளை அதற்கு மேலும் அவர்கள் சிந்திப்பதாக இருக் கலாம் . அதுவும் ஒரு குறிக்கோளை நோக்கித்தான். அது, முடிந்ததும், மீண்டும் அவர்கள் ஆரம்பத்திலிருந்து தொடங்க வேண்டியிருக்கும். அவர்கள் என்ன செய்யக் கூடும்? அவர்கள் எதைத் தோண்டியெடுக்கப் 'போகிறார்கள்?
ஏதாவதொரு காரணத்தை அவர்களுக்குக் கண்டு பிடித்துக் கொடேன். உன்னால் முடியாது. உன் மூளைக்கு வேலை கொடுக்க உனக்கு இஷ்டமில்லை. உனக்கு அக்கறையில்லை. உனக்கு ஏன் அக்கறையில்லை. அவர்கள் புதிய காரணங்களைத் தேடுகிறார்கள் என்று சொல்கிறாயே, நீயாக கொஞ்சம் காரணங்களைக் கண்டு பிடித்துக் கொடேன்.
எதற்குமே காரணம் என்று ஒன்று கிடையாது.
அதனால் அவர்கள் சும்மா இருக்கப் போவதில்லையே. அவர்கள் வேறு எதற்குமே உபயோகப்பட மாட்டார்கள்.
பார்த்தாயா, அவர்கள் பாடுவதை நிறுத்திவிட்டார்கள். அப்படியானால் இப்போது அவர்கள் என்ன செய்ய யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்?

g|ഖണ് :
அவன் :
அவள் :
அவன் :
g|ഖണ് :
அவன் :
e|ഖണ് :
அவன் :
g|ഖണ് :-
அவன் :
அவள் :
அவன் :-
35
அதனால் நமக்கென்ன ஆபத்து ஒன்றைத்தவிர? நீ சொல்வதைப் போல் அது எங்களுடைய பிரச்சினையல்ல. நீ வீட்டுக்குள்ளேயே இருக்கலாம். உன் வாழ்க்கை இங்கேதான் இருக்கிறது. (அவள் வீட்டைக் காட்டுகிறாள்) நீ விரம்பினால், ஆனால் அதிலிருந்து எதையும் பெற்றுக் கொள்வதற்கு உன்னால் முடியாமல் இருக்கிறது. உனக்குக் கற்பனையே இல்லை. என் கணவர் ஒரு மேதாவி. இருந்தும் ஒரு காதலனைத் தேடிக் கொள்ளும் ஆசை எனக்குப் பிறந்தது. அதற்கு நல்ல தண்டல்ன.
அவர்களாவது நம்மை நிம்மதியாக இருக்க விடுகிறார்கள்.
உண்மைதான். சமாதானம் நிலை பெற்று விட்டது. அவர்கள் சமாதானத்தைப் பிரகடனப்படுத்தி விட்டார்கள். இப்போது எங்களுக்கு என்ன நடக்கப் போகிறது? எங்களுக்கு
என்னநடக்கப்போகிறது? (தெருவிலிருந்து மெல்லிய ஒலிகள்)
எப்படியோ முன்னர் நன்றாக இருந்தது. எங்களுக்கு அதிக
நேரமிருந்தது.
எதற்கு முன்னர்?
இதெல்லாம் ஆரம்பமாவதற்கு முன்னர். ஆரம்பமாகாமல் இருந்ததற்கு முன்னர்.
யார் எதை ஆரம்பிக்கு முன்னர்?
எதுவுமே இல்லாததற்கு முன்னர். எதுவுமே இருப்பதற்கு முன்னர்.
வீட்டை எப்படி நாம் திருத்தத் தொடங்குவது?
எனக்கும் புரியவில்லை.
ஒரு வழி கண்டுபிடிப்பது உனது வேலை.
ஒரு தொழிலாளியையும் நாம் இப்போது தேடிப்பிடிக்க முடியாது. அவர்கள் எல்லோருமே இப்போது கொண்டாடிக்கொண்டு

Page 29
g|ഖണ് :-
g|ഖണ് :-
அவன் :-
அவள் :
அவன் :
g|ഖണ് :-
அவன் :-
ജൂഖണ് :-
g|ഖണ് :-
36 இருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் சந்தோஷமாக இருக்கிறார்கள். கொஞ்ச நேரத்துக்கு முன்னர் எல்லோருமே யுத்தத்தில் மூழ்கிப்போய் இருந்தார்கள். இப்போதோ சமாதானத்தில் மூழ்கிப்போய் இருக்கிறார்கள். இரண்டுமே ஒன்றுதான், எதுவாக இருந்தாலும், அவர்கள் இங்கு இருந்ததே கிடையாது.
அது ஏனென்றால், அவர்கள் எப்போதும் எல்லா இடங்களிலும் இருப்பார்கள். (சத்தம் மெல்லக் குறைகிறது)
சத்தங்கள் எல்லாம் முற்றாகவே நின்றுவிட்டன.
உண்மைதான். ஆனால் அவை மீண்டும் கட்டாயம் தொடங்கும். (BLTuulb.
அவர்கள் நன்றாக நடக்கப் பழகிக் கொள்ளவே மாட்டார்கள். அதனால் என்ன நன்மை?
வாழ்க்கையைச் செலவிடுவதற்கு அதுவும் ஒரு முறை.
எங்கள் வாழ்க்கையும் செலவாகிக் கொண்டிருக்கிறது.
அவர்கள் தங்கள் வாழ்க்கையைச் செலவிடுவது அவ்வளவு மடத்தனமாக இல்லை. ஆனால் மற்ற விஷயங்களில் அவர்கள் மடையர்களாக இருக்கிறார்கள். மடையர்களாக இருப்பதற்கு பல வழிகள் உண்டு.
உன்னுடைய வாழ்க்கையில் உனக்குத் திருப்தி இல்லை. எந்த நேரமும் மற்றவர்களின் மேல் உனக்குப் பொறாமை. எப்படியோ நாம் விட்டைத்திருத்த வேண்டும். இப்படியே நாம் சீவிக்க முடியாது. என் கணவர், மெத்தை தைப்பவர், இப்போது இங்கிருந்தால் நீ சந்தோஷப்படுவாய்.
கேட்கிறதா, பார்த்தாயா, மீண்டும் ஆரம்பமாகிவிட்டது. மீண்டும் ஆரம்பமாகும் என்று நான் சொன்ன போது, ஆரம்பமாகாது என்று சொன்னாயே. நான் சொன்னதுதான் சரி.

ഖങ്ങt :
.?|ഖണ് :
ജ|ഖങ്ങ് :-
.G|ഖണ് :
அவன் :-
அவன் :-
ജൂഖണ് :-
9ഖങ്ങ് :-
9|ഖണ് :-
37 இல்லை நீ சொல்வது பிழை.
அப்படியானால் நான் சொன்னதற்கு நீ மதிப்புத் தெரிவிக்க வில்லையா? எங்கே நிரூபித்துக்காட்டு பார்ப்போம்.
மீண்டும் அதை அரம்பிக்க நான் விரும்பவில்லை. (தலையில்லாத உடல்களும், உடலில்லாத பொம்மைகளின் தலைகளும் மேலே இருந்து மெல்ல இறக்கப்படுகின்றன).
கடவுளே அது என்ன? (ஒரு தலையற்ற உடலின் கால்கள் அவர்கள் தலையில் உராய்கிறது. அவள் ஓடி விலகுகிறாள்) છે------ (மெல்லச் சென்று தலையைத் தொட்டுப்பார்க்கிறாள். மற்றத் தலைகளையும் பார்த்து விட்டு) என்ன வடிவான பொம்மைகள், இவைகளெல்லாம் என்ன? என்னவென்றுதான் சொல்லேன். சாதாரணமாக வளவளவென்று பேசிக்கொண்டு இருப்பாயே. இப்போது ஏன் வாயடைத்துப் போயிருக்கிராய்? என்ன இது?
நீ குருடி இல்லையே. தலையில்லாத உடல்கள், அவை உடலில்லாத தலைகள்.
உன்னை முதன்முதலில் கண்டபோது நான் குருடியாகத்தான் இருந்தேன். நான் சரியாகவே உன்னைப் பார்க்கவில்லை.
இப்போது உன்னைப் பார்க்கும் போது, நான் குருடியாக இருந்திருக்கக் கூடாதா என்று தோன்றுகிறது.
எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. உன்னைப் பார்க்கும் போது, நான் குருடனாக இருந்திருக்கக் கூடாதா என்று எண்ணத் தோன்றுகிறது.
சரி, நீ ஒரு குருடனாக இல்லா விட்டால், அல்லது ஒரு முழு மடையனாக இல்லாவிட்டால், ஊய். ஊய். இவையெல்லாம் ஏன் தொங்குகின்றன என்று சொல் பார்க்கலாம். பார்த்தாயா, யுத்தம் இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
இல்லை அவர்கள், அமைதியாக, சமாதானமாக நீதி தீர்த்துக கொண்டிருக்கிறார்கள். மேல் மாடியிலே அவர்கள் கொலைக்

Page 30
9ഖണ് :-
அவன் :
அவள் :
அவன் :-
அவள் :
38 களத்தை நிறுவியிருக்கிறார்கள். நீயே பார்த்துக் கொள்ளலாம்.
இது சமாதானத்தின் அறிகுறி
நாங்கள் என்ன செய்யப் போகிறோம் நல்ல நிலையில் f என்னைக் கொண்டு வந்துவிட்டிருக்கிறாய்.
நமக்கென்ன, நாம் ஒளிந்து கொள்வோம்.
சோம்பேறி. காமுகா. இடத்தைச் சரிசெய்வதற்கு எனக்குக் கொஞ்சம் உதவி செய்.
(ஜன்னலை, மெத்தையை வைத்து அடைக்கிறார்கள். கதவை நன்றாக அடைக்கிறார்கள். ஆனால் ஓட்டை வழியாக, ஆட்கள் கொடிகள், மத்தளங்கள் நடமாடுவது தெரிகிறது).
ஆமை!
நத்தை! (ஒருவரையொருவர் கன்னத்தில் அறைந்து கொள்கிறார்கள்.
ஆனால் செய்யும் வேலைகளை நிறுத்தாமல் செய்யத் தொடங்குகிறார்கள்)
- திரை -

39
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ்ச்சேவை 1979ம் ஆண்டு நடத்திய முதல் மேடைநாடக விழாவில் மேடையேறிய நாடகம்.
“மோட்சமும் நரகமும்’
மேடையேறிய திகதி : 07.04.1979.
LD606, Lulf வெள்ளவத்தை புதிய கதிரேசன்
மண்டபம்
எழுதியவர் : ஜோர்ஜ் சந்திரசேகரன்
மேடையமைப்பு : கே.கதிர்காமத்தம்பி
இசையமைப்பு : M.A.குல.சீலநாதன்
இசைவழங்கியோர் மோகன்ராஜ் குழுவினர்
நடித்தவர்கள்:
யமகிங்கரர் 1 : குயின்ட்ஸ் ஜீவன்
uJLDöÉÉl35UíT II லிங்கவேலாயுதன்
மனித உயிர் : ஜோர்ஜ் சந்திரசேகரன்
நரக வாசிகளாகவும் மோட்ச வாசிகளாகவும் வந்து போனவர்கள்: இராஜா கணேசன்
N.சிவசண்முகநாதன்
ஏ.நாகேந்திரன்
வரதராஜன்
நெறியாள்கை ஜோர்ஜ் சந்திரசேகரன்
P.விக்னேஸ்வரன்

Page 31
40
மோட்சமும் நரகமும் நாடகத்துக்கான முகவுரை
Waitz இசையைப் பின்னணியாகக்கொண்டு இடைக்கிடை இசைக்குறியீடுகளையும் சேர்த்து ஒரு நாடகம் செய்ய வேண்டுமென்று ஓர் ஆசை, நீண்ட காலமாக என்னுள் இயங்கிக் கொண்டுடிருந்தது. இதை 1970களின் முற்பகுதியில் பி.விக்னேஸ்வரன் பரீட்சார்த்த நாடகங்கள் தயாரித்து வந்த காலத்தில் அவரிடம் கூறினேன். தனக்கும் அப்படியொரு ஆசை வெகு காலமாக இருப்பதாகக் கூறினார். அத்துடன் அப்போது இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் இசைத் தயாரிப்பாளராகக் கடமையாற்றி வந்த குல சீலநாதனிடம் இது பற்றி உரையாடினோம். அவர் தனக்கும் இப்படி ஒரு ஆசை வெகு காலமாக இருப்பதாகக் கூறினார். எனவே நான் எழுத, குல சீலநாதன் இசையமைக்க, விக்னேஸ்வரன் தயாரிக்க “சொர்க்கமும் நரகமும்’ ஒரு வானொலி நாடகமாக உருவாகிற்று. இதில் நானே மனித உயிராக நடித்தேன். 1970களின் ஆரம்பத்தில் இது ஒரு மணி நேர நாடகமாக ஒலிபரப்பப்பட்டது. பின்னர் 1979ம் ஆண்டில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் நடத்திய முதல் மேடை நாடக விழாவில் இது அரை மணி நேர நாடகமாக மேடையேற்றப்பட்டது.
பின்னர் 1982ம் ஆண்டில் இரண்டாவது மேடைநாடக விழா நடந்தபோது, "சொர்க்கமும் நரகமும்’ மீண்டும் மேடையேற்றப்பட்டது. இது பின்னர் யாழ்ப்பாணத்திலும் காண்பிக்கப்பட்டது.
"சொர்க்கமும் நரகமும்” ஒரு அபத்த நாடகம் என்று கூறிவிட முடியாது. ஆரம்பத்திலிருந்து, நாம் காணமுடியாத யமகிங்கரர்களும் மனித உயிரும் காட்சிப்பொருள்களாக ஆவதால் மட்டும் இதனை அபத்த நாடகம் என்று கூறிவிட முடியாது. ஆனால் இதனை நவீன நாடகத்திற்கும் அபத்த நாடகத்திற்கும் இடைப்பட்டதோர் முயற்சி என்று கூறலாம்.

41 மோட்சமும் நரகமும்
(திரை விலகும் போது ஒருவர் நாற்காலியில் அமர்ந்து பேப்பர் படித்துக்கொண்டு இருக்கிறார். - காலைப் பொழுது - மனைவி தேநீர் கோப்பையைக் கொண்டு வந்து அவரிடம் கொடுத்து விட்டு கையில் பையுடன் சந்தைக்குச் செல்கிறார். சற்று நேரத்தில், அவருக்கு மார்பு வலி ஏற்படுகிறது. இப்போது விளக்குகள் யாவும் அணைய அவருக்கு மட்டும் வள்னவிளக்கொளி பாச்சப்படுகிறது. அவர் மாரடைப்பால் துடித்து இறக்கிறார். சற்று அமைதி. மேடையெங்கும் மெல்லிய ஒளி பாச்சப்படுகிறது. திடீரென யமகிங்கரர்கள் இருவர் மேடையின் இரு மருங்கிலும் பலத்த சிரிப்பெர்லியுடன் வந்து குதிக்கிறார்கள - கரிய நிறம். தலையிலே இரண்டு வெள்ளைக் கொம்புகள், நீண்ட தலைமுடி, கையிலே வேலாயுதம். வந்து குதித்த யமகிங்கரர்கள் இருவரும் இறந்து கிடக்கும் மனிதனின் இரு மருங்கிலும் வந்து, தமது வேலாயுதங்களினால் குத்தி அவனை முன்னே அழைத்துச் செல்கிறார்கள். மூவரும் வந்து முன்மேடையில் நிற்கும் வரை பறப்பதை குறிக்கும் இசை. இப்போது மூவருக்கும் மூன்று ஸ்பொட் லைட்டுக்கள் பாச்சப்படுகின்றன. உடனே இசை தொடங்குகின்றது).
மனித உயிர் - யார் நீங்கள்? . என்ன வேண்டும் உங்களுக்கு?
யமகிங்கரர்- 1 - உமது உயிர் .
மனித உயிர் - என் உயிரா?
யமகிங்கரர். II ஆமாம் . கணக்கை முடித்தும்மைக் கூட்டிவரும்படி
காவலன் உத்ரவு .
மனித உயிர் - கணக்கா?
யமகிங்கரர்- 1 - ஆமாம் .
மனித உயிர் - எந்தக் கணக்கு?

Page 32
யமகிங்கரர்.
மனித உயிர்
யமகிங்கரர்
யமகிங்கரர்-II
மனித உயிர்
ujLD355Jir-I
யமகிங்கரர்-II
மனித உயிர்
யமகிங்கரர்
யமகிங்கரர்-II
மனித உயிர்
யமகிங்கரர்.
மனித உயிர்
42
காலக் கணக்கு.
என்ன, காலக்கணக்கா? (சிரித்து) காலத்தைக் கணக்கிட்டு முடிப்பவன் யாரப்பா?
காலன் . தென்திசையோன். யமதர்மராஜன்.
எம் காவலன் .
அப்படியானால் என் உயிரைக் கொண்டு போகவா வந்திருக்கிறீர்கள? .
(சிரித்து) உடலெதற்கு நமக்கு?
உழுத்துப்போன ஊனெதற்கு நமக்கு?
முட்டை, மீன், இறைச்சி, பால், பழம், பருப்பு, நெய் என்று பாங்காய்க் கொடுத்து நிதம் வளர்த்த உடலப்பா.
(சிரித்து) பேதை மனிதா . காலத்தால் அழியாத காந்த உடலுமக்குக் கடிதில் கிடைத்துவிடும்.
வாரும் எம்மோடு.
வருகின்றேன். வருவதற்கு முன்னர். சந்தேகம் ஒன்றுளது.
என்ன அது?
நன்மையே செய்தவர்கள் இறைவன் அடிநிழலில், துன்பமே தொடராத சுவர்க்க லோகத்தில் முடிவில்லா இன் பத்தில் மூழ்கி இருப்பார்கள். திமையே செய்தவர்கள் தீராத் துயர்க் கடலாம், நகரத்தீ நாக்குகளால் உயிர்வதைக்குள்ளாகி, காலாதி

யமகிங்கரர்-II
யமகிங்கரர்-1
மனித உயிர்
யமகிங்கரர்-II
யமகிங்கரர்-1
யமகிங்கரர்-II
மனித உயிர்
யமகிங்கரர்
யமகிங்கரர்-II
மனித உயிர்
43 காலமாக வேதனையே அடைவார் கள என்று நம்மவர்கள் சொல்வதெல்லாம் உண்மையா என்றறிய ஆவலாய் இருக்கிறது.
நன்மை செய்தவர்கள் நன்மையே அடைவார்கள்.
தீமை செய்தவர்கள் தீமையே அடைவார்கள்.
நன்மைகள் நடுவே சில தீமைகளும் செய்ததுண்டு.
எங்கென்னைச் சேர்ப்பீர்கள்? கொழுந்து விட்டெரியும்
கொடுந் தீயின் நாக்குகளில் கொண்டு போய் தள்ளுவீரா? அல்லது, இறைவன் திருவடியில், பசி தாகம் பற்றென்ற அத்தனைக்கும் அப்பாலே ஆனந்தமயமான சுவர்க்கத்தில் சேர்ப்பீரா?
ஏன் அவசரப்படுகிறீர்?
உழுத்த உடலுக்கும், உலகுக்கும் உமக்குமுள்ள கணக்கை முடித்தும்மைக் கூட்டிவரத்தான் எமக்கு உத்தரவு.
நேரமாகிறது புறப்படும்.
மனைவிக்கும் மற்றுமுள்ள குழந்தைகள், உறவினர்கள், அனைவருக்கும் சொல்லிவிட்டு நாளைக்கு வருகிறேன், என்று சொன்னால் விடவ்ா போகிறீர்கள்.
நாளை என்றொன்று நம்முலகில் இல்லையப்பா.
(ஆச்சரியம்) (சிரித்து) விந்தை மனிதர். நாளைக்கு வருவதனால் நன்மைகள் ஏதுமக்கு?
நன்மைகள் அதிகமில்லை. என்றாலும் மனைவிக்குச்

Page 33
யமகிங்கரர்.
மனித உயிர்
யமகிங்கரர்.I
மனித உயிர்
மனித உயிர்
யமகிங்கரர்.
மனித உயிர்
யமகிங்கரர்-II
மனித உயிர்
யமகிங்கரர்-II
மனித உயிர்
44 சொல்லாமல் மற்றெங்கும் போனதில்லை.
(சிரித்தல்)
வேண்டாம் இன்றே புறப்படுவோம் .
இப்போதே என்று சொல்லும்.
சரி புறப்படுவோம் . (வானவெளியில் பறந்து செல்லும் இசை தொடர்தல்)
என்ன சுகம். என்ன சுகம்.
எதைச் சொல்கிறீா?.
உடலே இல்லாமல் உலகத்தார் கண்களுக்குச் சிறிதும் தெரியாமல் வானத்தில் மிதப்பதுதான் எத்தனை இன்பமாய் இருக்கிறது.
உம் இனத்தைச் சேர்ந்தவர்கள் பயந்து நடுங்குவது இதற்குத்தான்.
உண்மைதான். கொஞ்சம் பொறும். அதோ என் மனைவி. சொல்லாமல் போவதற்குச் சும்மா விடமாட்டாள்.
மனிதர்கள் தம் மனைவியருக்குப் பயப்படும் அளவுக்கு இறைவனுக்குக் கூடப்பயப்படுவது இல்லை போலத் தோன்றுகிறது. (சிரிப்பு)
சந்தைக்குப் போய் நல்ல காய்கறிகள் வாங்கிவரும் கண்மணி என் கமலாவுக்குக் கையை அசைத்துக் காட்டி, பிரியாவிடை கூடப்பெறமுடியாமல் இருக்கிறதே. கைகள் இல்லாத குறை இப்போதுதான் தெரிகிறது.

uuLDatilesgir-II
மனித உயிர்
ujLD355/35J fr-II
மனித உயிர்
யமகிங்கரர்.I
மனித உயிர்
யமகிங்கரர்-1
மனித உயிர்
ம்னித உயிர்
uuLD585 fr-II
மனித உயிர்
யமகிங்கரர்-II
மனித உயிர்
45 (சிரித்தல்)
ஏன் சிரித்தீர் இப்போது?
இனிச் சிரிக்கவில்லை.
என் கவலைகள் என்னோடு. உமக்கென்ன தெரியும்.
gFाीि का புறப்படும்.
சற்றுத் தாமதித்துச் சென்றால் என்ன?
வீட்டுக்குள் சென்றுவிட்டாள் உம் மனைவி. ട്രഖ് அழுது புலம்புவதை கேட்கவா நிற்கிறீர். வாரும்
போவோம்.
gFीि का.ि (மீண்டும் வானத்தில் பறப்பதற்கான இசை)
அதோ என் மகன்.
உம்மைப்போலவே இருக்கின்றானே.
என் பிள்ளையல்லவா. என்னைப் போலத்தான் இருப்பான். . உமக்கெங்கே அதெல்லாம் புரியப்போகிறது. நாங்கள் கொடுக்கும் உயிரைக் கொண்டு போகத்தான் உங்களுக்குத் தெரியும். உயிர் கொடுக்கத் தெரியுமா உங்களுக்கு?
தத்துவம் பேசிக்கொண்டிருக்கும் தருணமல்ல இது. ம்.ம் புறப்படும்.
பெட்டைப் பிடித்து பம்பரமாய்ச் சுழன்று, பந்தை

Page 34
யமகிங்கரர்
யமகிங்கரர்.I
மனித உயிர்
யமகிங்கரர்.1
மனித உயிர்
யமகிங்கரர்-II
மனித உயிர்
யமகிங்கரர்
மனித உயிர்
ujLD355.35) fr-II
மனித உயிர்
46 அடிக்கிறானே என் பையன். ஒரு ஓவர் பார்த்துவிட்டுப் போனாலென்ன?
(சற்றுக் கோபம்) காலத்தை வீணாகக் கடத்தாமல் புறப்படும்.
காலத்தைக் கடத்துவதில் நீர் சமர்த்தர். உம். இனத்தின் நோப் உமக்கும். புறப்படும். புறப்படும்.
(இசை பறந்து செல்லுதல்)
வெகுதூரம் வந்து விட்டோமே. இன்னும் வெகுதூரம் செல்ல வேண்டுமா?
யமலோகம் பக்கத்துத் தெருவில்தான் இருக்கிறதென்று நினைத்துவிட்டீரோ?
இல்லை. எனக்கொரு ஆசை.
ஒன்றுதானா?.
ஆமாம்.ஒன்றே ஒன்றுதான். எமது வழக்கிலே
சொல்வதென்றால். என் இறுதி ஆசை.
ஆசைக்கு அளவில்லை என்றுங்கள் நாட்டினிலே கூறக் கேட்டுள்ளோம்.
உண்மை தான். செத்தும் ஆசைகளை சாகடிக்க முடியாத இனம் நம் இனம்.
சரி. உமது இறுதி ஆசையைக் கூறும்.
போகும் வழியினிலே பொழுது போக்காக, நரகம் மோட்சம் என்ற இரண்டு இடங்களையும் போயப் பார்த்து

யமகிங்கரர்
மனித உயிர்
யமகிங்கரர்-II
யமகிங்கரர்.
மனித உயிர்
மனித உயிர்
யமகிங்கரர்-1
மனித உயிர்
47 வந்திட்டால். பக்குவமாய் இருக்குைென்று பேதை மனம் சொல்கிறது.
போகும் வழியில்தான் சொர்க்கமும் நரகமும். பார்க்கலாம் வாரும்.
முதலில் போவது நாம் எவ்விடமென்று நீர் சொன்னால் தான் என் மனம் நின்மதியடையும்.
நரகத்தினூடே தான் சொர்க்கத்துக்குப் போக வேண்டும்.
முதலில் நரகத்திற்கே போவோம்.
சந்தோஷம். (காட்சி மாற்ற இசை - தேய்ந்து இனிமையான இசை)
அஹிா. என்ன இனிமையான இசை. என்ன ரம்மியமான சூழ்நிலை. தென்றல் எவ்வளவு இதமாக வீசுகிறது.ஆஹா. SWS)sBT......... ஆற்றிலே தவழ்ந்து மலர் சோலையிலே புகுந்து வரும் தென்றலின் இதத்தை அனுபவித்துக் கொண்டே இருக்கலாம் போலத் தோன்றுகிறதே.
இங்கேயும் நின்றுவிடவா யோசனை. வாரும்.
வருகிறேன்.
(சற்றுத் தாமதித்து)
முக்கனிகளும் காய்த்துத் தொங்குகின்றனவே. அங்கே வயல்கள். நெற்கதிர்கள் எல்லாம் முற்றி அறுவடையை எதிர்நோக்கி நிற்கும். நேர்த்தியே நேர்த்தி. இது பொன் விழையும் பூமி. ஐயோ. தேனும் பாலும் ஆறாய் ஒடுகிறதே. என்ன, என்னை ஏமாற்றலாம் என்ற எண்ணமா? நரகத்தைக்

Page 35
யமகிங்கரர்
மனித உயிர்
யமகிங்கரர்
uJLD35s,15Jir-II
மனித உயிர்
யமகிங்கரர்.I
மனித உயிர்
யமகிங்கரர்.
மனித உயிர்
யமகிங்கரர்
மனித உயிர்
ujLD&Srilaby i-II
மனித உயிர்
48 காட்டுவதாகச் சொல்லி சொர் க் கத்துக் கு அழைத்து வந்து விட்டீர்களே.
இதுதான் நரகம்.
(சிரித்து) இதுதான் நரகமென்றால். நான் இங்கேயே இருந்து விடுகிறேன்.
முழுவதையும் பார்க்குமுன்னர் முடிவுக்கு வரும் உமது இனத்தின் குணம். இன்னும் உம்மை விட்டுப் போகவில்லையே.
இன்னும் சிறிது தூரம் சென்று பார்போம். வாரும்.
பார்க்கப் பார்க்க பரவசமாய் இருக்கிறது. ஆமாம்
எங்கே நரக வாசிகளைக் காணவில்லையே.
அதோ பாரும்.
எங்கே?
அதோ.
ஆமாம். ஆமாம்.
இன்னும் சற்று அருகே சென்று பார்ட்போம். வாரும்.
(சற்றுத் தாமதித்து) எலும்பும் தோலுமாக, எல்லோரும் மெலிந் திருக்கிறார்களே. என்ன விந்தை. தேனும் பாலும் இவர் களுக்குத் தெவிட்டி விட்டதோ.
நரக வாசிகளை இன்னும் சற்று நெருங்கிப் பாரும்.
என்ன இது. தனித் தனியாய்ச் செல்கிறார்கள்.

யமகிங்கரர்-11
மனித உயிர்
யமகிங்கரர்.
னித உயிர்
யமகிங்கரர்-II
மனித உயிர்
யமகிங்கரர்-1
மனித உயிர்
u JLD&ÉrÉJ35JJíT-III
மனித உயிர்
யமகிங்கரர்-II
மனித உயிர்
49 ஒருவரோடொருவர் இங்bே. கதைப்பதே கிடையாதோ.
கிடையாது.
திரும்பித் திரும்பி எதையோ தேடிய வண்ணமாய், பதுங்கிப் பதுங்கிப் போகிறார்களே, முதுகுக்குப
பின்னால் எதையோ மறைத்துச் செல்வது போல் தெரிகிறதே. என்ன அது?
கத்தி.
கத்தியா?. ஆமாம் கத்திதான். ஏன் கத்தியை ஒளித்துக் கொண்டு போகிறார்கள்?
மற்றவர்களைக் குத்தத்தான்.
திரும்பித் திரும்பி ஏன் பார்க்க் வேண்டும்?
தம்மைப் பின்தொடர்ந்து தந்திரமாய் யாரும் வந்து முதுகிலே குத்தாமல் பார்த்துக் கொள்ளத்தான்.
(பெருமூச்சு) போகட்டும். சத்தான உணவு வகைகள் எத்தனையோ இருந்தும, எலும்பும் தோலுமாய் உலாவு
கிறார்களே ஏன்?
உணவு வகை ஏராளமாய் இருந்தென்ன. உண்ண முடியாத நிலை.
(ஆச்சரியத்துடன்) ஏன்?
இங்கு அத்தனையும் நஞ்சு.
நஞ்சா? வியப்பாய் இருக்கிறதே. விந்தை உலகமிது.

Page 36
யமகிங்கரர்.
மனித உயிர்
யமகிங்கரர்-II
மனித உயிர்
யமகிங்கரர்
மனித உயிர்
uLDail36Ji-II
மனித உயிர்
ujLD35,35J fr-II
மனித உயிர்
யமகிங்கரர்
மனித உயிர்
50 இயற்கையின் கோளாறோ?
இல்லை இல்லை. நரக வாசிகளே நஞ்சுக்குக்
காரணம்.
எப்படி?
மற்றவர்கள் மாயட்டும் என்றெண்ணி முன்னரே நஞ்சூட்டத் தொ ங்கியதால் இப்போது எல்லாமே நஞ்சாகி விட்டன. •
ஏன்?
சந்தேகம்.
அதோ, தனியாக இருந்தொருவன் மற்றவர்களுக்குத் தெரியாமல் குழியொன்றைத் தோண்டுகிறானே. புதிதாக நஞ்சற்ற மரமேதும் நாட்டபோகிறானோ?
இல்லை இல்லை. மற்றவர்களுக்குத் தான் அவன் குழி தேனடிக்கொண்டு இருக்கின்றான்.
இவர்கள் உறங்குவது கூட இல்லையா. ?
இல்லை. உறங்கினால் மற்றவன் கத்தியால் குத்தி விடுவானே.
மற்றவர்களைத் தாக்குவதைத் தவிர, மற்றேதும் தொழில் இவர்களுக்கு இல்லையா?
இல்லை.
மற்றவரைத் தாக் குவதை இலட்சியமாக க கொணடிவர்கள் ஊனுறக்கமின்றி நிம்மதியும் இழந்து

யமகிங்கரர்.I
யமகிங்கரர்
மனித உயிர்
யமகிங்கரர்
மனித உயிர்
யமகிங்கரர்-11
மனித உயிர்
யமகிங்கரர்-II
மனித உயிர்
யமகிங்கரர்.I
மனித உயிர்
யமகிங்கரர்
51 பரிதவித்துக் கொண்டிருக்கிறார்களே.
இதுதான் நரகம்.
இன்னும் இங்கிருக்க இருக்கிறதா..?
உமக்கு ஆவலாய்,
இல்லை யில்லை. புறப்படுவோம்.
சரி வாரும். (பறப்பதைக் குறிக்கும் இசை தேய்ந்து மோட்சத்தைக் குறிக்கும் இசை)
என்ன இது. துர்நாற்றம் வீசுகிறதே.
மோட்சத்துக்கு வந்துவிட்டோம்.
(ஆச்சரியமாக) என்ன மோட்சமா?
ஆமாம்.
(சிரித்து) என்னால் நம்பவே முடிய வில்லை. காற்றுக்குக் கூடவா மோட்சத்தில் பஞ்சம்.
என்னமாய் அவிகிறது.
சரி சரி. மோட்ச வாசிகளைப் பார்த்து விட்டுப் புறப்படும். போவோம்.
என்ன கிண்டலா செய்கிறீர்..? எங்கு பார்த்தாலும் ஒரே இருள் மயமாய் இருக்கிறதே.
நரக வெளிச்சத்தில் இருந்து விட்டு வந்ததனால். உமக்கப்படித் தெரிகிறது. கண்களைத் திறந்து நன்றாகக் கூர்ந்து கவனித்தால் தெரியும்.

Page 37
மனித உயிர்
யமகிங்கரர்-II
மனித உயிர்
யமகிங்கரர்-II
மனித உயிர்
யமகிங்கரர்
uLD555Jir-II
மனித உயிர்.
யமகிங்கரர்
மனித உயிர்
52 தெரிகிறது. தெரிகிறது. இலேசாயத் தெரிகிறது. பாலை வனமன்றோ பரந்து கிடக்கிறது.
அதோ நன்றாகக் கூாந்து uT(5lb............ சொர்க்க வாசிகள் இருவர்.
ஆமாம். ஆமாம். குதுாகலமாய் கதைத்துக் கொண்டு செல் கிறார்களே. அதென்ன ஒருவரை ஒருவர் தாங்கிப் பிடித்தபடி தளர் நடை போடுகிறார்களே. அது ஏன்?
சுவர்க்கத்துப் பாதையிலே பள்ளங்கள் மிக உண்டு. ஒருவருக் கொருவர் உதவியாகச செல்கிறார்கள்.
பார்க்கும் இடமெல்லாம் பாலைவனமாகத் தெரிகிறதே. இருந்தும் உணவுப் பிரச்சினையே இல்லாதார் போலிவர்கள், உண்டு உறங்கி,உற்சாகமாயப்
இருக்கிறார்களே.
உணவு சிறிதே கிடைத்தாலும் கிடைத்த உணவைப்
பகிர்ந்துண்டு இன்பமாக வாழ்கிறார்கள்.
இதுதான் மோட்சம்.
(பெருமூச்சு) விந்தையிலும் விந்தை. நரகம் மோட்சமென்று நம்மவர்கள் சொல்லுவதில் உள்ள பிழையெல்லாம் உணர்ந்துவிட்டேன். நரகமும்
மோட்சமும் நம்மால்தான் என்பதனை நன்றாய் உணர்ந்துவிட்டேன்.
காலத்தைக் கடத்தாமல் வாரும் போவோம்.
சரி போவோம்.
(திரை)

இந்நாலாசிரியரின் பிற நால்கள்
1. ஜோர்ஜ் சந்திரசேகரனின் சிறுகதைகள்
(1995ம் ஆண்டு சாகித்திய விருது பெற்றது)
2. ஒரு சருகுள்ளே கசியும் ஈரங்கள் (முதல் பாகம்)
3. ஒரு சருகுள்ளே கசியும் ஈரங்கள் (இரண்டாம் பாகம்)
வானொலியும் நானும்
இந்த நூலின் ஏகவினியோகஸ்தர்:
t nțiferi
111, பிரதான வீதி, மட்டக்களப்பு.

Page 38


Page 39
ஜோர்ஜ் சந்தி
மெல்லென
ஆங்கில அறிவு நன்கு கைவரப் (சிந்தனையுமாக) இருப்பவர். அவரிடம் இ பார்க்கும் ஒரு தன்மையை வளர்த்துள்ளது ஆளுமைப்போக்கை உண்டாக்கி விட்டுை
இந்த ஆக்கியுள்ளது மெல்லென ஆ நதியை ஒத்தது
ஜே7 விடயங்களை 6 பற்றி காத்திரL tion ) ଔଘୋif f! f மேலும் தமிழ்
சிந்தனைகளுக் வந்துள்ளன. இதனாலேதான் இவரிடம் ஒரு பு mism) காணப்படுகிறது.
(ஒரு முன்னுரைக் குறிப்பில்
கொழும்பில் 1940 ஆம் ஆண்டு சென்ற் பெனடிஸ் கல்லுரியில் படித்தவர். ஆண்டுகளாக இலங்கை வானொலியில் ஒலி நடிகராக, நூலாசிரியராக, ஒவியராக, பதித்திருக்கிறார் என்பதும், ஜோர்ஜ் சந்த 1995ம் ஆண்டுக்கான சாஹித்ய விருது புெ 'உண்டா’ விருதும் பெற்றுக்கொண்டார் எ
ஆதவன் அச்சகம், அர
 

ரசேகரன் எனும் ப் பாயும் நதி
பெற்ற ஜோர்ஜ் எப்பொழுதும் புத்தகமும் கையுமாக இயல்பாக உள்ள கூச்ச சுபாவம் ஒதுங்கி நின்று அது வாசிப்பில் மனக்குவிவை ஏற்படுத்தும் ஒரு 7ளது என்று கூறலாம். ச் சுபாவம் ஜோர்ஜை ஒரு தன்மையாளராக
ஆரவாரத்தோடு பாயும் ஆறு போல் அல்லாது னால் நியமம் தவறாது ஆழமாகப் LTub ஒடு து அவர் அறிவு நிலை,
ஜ் ஒரு காததிரமான வாசகர் காத்திரமான வாசிப்பவர் அதிலும் பார்க்க முக்கியம் வாசிப்பவை 0ான சிந்திப்பில் பட்டெறிச் சிந்திப்பில் (Reflecடுபட்டவர். அத்துடன் ஆக்கத்திறன் உடையவர். மரபை உணர்ந்தவர். இந்த இயல்பு அவருடைய க்கு புதிய ஆக்கயியற் பரிமாணத்தை வழங்கி
லமைத்துவ அசைவியக்கம் (Intelectual Dyna
பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி)
பிறந்த ஜோர்ஜ் சந்திரசேகரன் கொட்டாஞ்சேனை 1968ல் இருந்து 1996இல் ஓய்வு பெறும்வரை 28 பரப்பாளராக இருந்தார் என்பதும் நாடக ஆசிரியராக, சிறுகதை எழுத்தாளராகவெல்லாம் முத்திரை ரசேகரனின் சிறுகதைகள் என்ற தனது நூலுக்கு ற்றுக்கொண்டார் என்பதும் ஒலிபரப்புத் துறைக்கான ன்பதெல்லாம் ஜோர்ஜைப் பற்றிய புற விபரங்கள்
(இளைய ஒலிபரப்பாளர்கள்)
FlQ2, LDLL át5dA5óTTLÜL/. TP-22076.