கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நாட்டிய அரங்கு

Page 1


Page 2

greyu ely files
ઊઠ 9તા છ
தொகுப்பு திருமதி ஞானம் இரத்தினம்
32/9 ஆற்காடு சாலை சென்னை 24 தமிழ்நாடு இந்தியா

Page 3
ithta ઉર્દૂ 3ooks UISBN 1876626 5s 5
Apart fomany fair dealing for the purpose of Private Study, Research, Criticism or Review as Permitted under the Copyright Act, No part may by reproduced, stored in a retrieval system, or transmitted, in any form or any means, electronic, mechanical or photocopying, recording or otherwise without prior written permission from the publishers.
Mithra Publication books are published by Dr Pon Anura
Publication Editor Espo
NATTIYA ARANGU
Operas in Tamil
Compiled and Edited by
Mrs. Gnanam Rathinann
Mithra Books First Edition
December 2003
Cover Design S. Siva balan
శ్రీని,
SY M1^ في شهر * AT &
የላñየዘላrg ልኵኀs વાd Creatioиs
1/23 MUNRO STREET 37578-10 ARCOT ROAD EASTWOOD 222 AUSTRALIA 30 WANNAH STREET CHENNA 600 (924 INDIA
Ph (02) 9868 2567 BATTICALOA (EP) Ph: (044) 2372 3182 e-mail: www.anurasil matra.com.au SRI ANKA e-mail: www.mithra(amd4.com.in
Fax: (02) 9868 4205 Fax: 009-44. 2472336
6i, : 99 முதற் பதிப்பு : டிசம்பர் 2003
இலங்கை junt 105- பக்கங்கள் : 112
 
 
 
 
 

ITழ்ப்பாணத்திலுள்ள இணுவில் எனும் கிராமத் தைப் பிறப்பிடமாகக் கொண்டவர் இந்நூலாசிரியர் இளைய தம்பி இரத்தினம். இசைவேளாளர் பரம்பரை வேரூன்றிய ஊர் இணுவில்; தட்சணாமூர்த்தி போன்ற இசை மேதை களை ஈந்த கிராமம். கோயில்கள் சூழ்ந்த சுற்றாடல். அதி காலை முதல் நாகசுர இசை, காற்றிலே தவழ்ந்துவரும். அக் காலத்தில் தவில் வித்வான்கள் மரத்தடியில் கூடி, முதல் நாளிரவு நடந்த இசைக் கச்சேரியில் ஏற்பட்ட தாள நுணுக்கங்கள் பற்றிச் சர்ச்சை நடத்துவர்.
இத்தகைய சூழலில் தன் இளமைப்பருவம் செழித்தது என அவர் கூறுவார். தமிழும் சைவமும் தன்னை ஈர்த்தது போல் தன் பிறந்த மண்வாசனையால் இசை ரஸனையும் தனக்கு வசமாகியது என்பார். இதன் பலனாகவே அவர் வானொலியிலே பல இசைச் சித்திரங்களும் இசை நாடகங் களும் எழுத முற்பட்டார். இதைத் தொடர்ந்து நாட்டியங் களுக்கு ஏற்ற பிரதிகள் தேவைப்பட்டபோது, மிகுந்த ஆர்வத்துடன் அப்பணியில் ஈடுபட்டார்.
இயல்பாகவே இசை, நடனம் ஆகியவற்றில் மிகுந்த
3.

Page 4
ஈடுபாடு கொண்ட அவருக்கு, இப்பணி பெரும் மகிழ்ச்சி அளித்தது. எவ்விதப் பொருட்பயனும் கருதாது கலையார் வத்தால் உந்தப்பட்டு நாட்டியப் பிரதிகள் எழுதுவதில் ஈடு பட்டார் அவர் எழுதியவற்றுள் காலத்தால் அழிவுறாது எமக்குக் கிடைத்துள்ள பன்னிரண்டு நாட்டியங்களின் பிரதி களை இத்தொகுதியில் சேர்த்துள்ளோம். இந்நூலின் நோக்கம் இளம் கலைஞர்களின் தேடல்களுக்கு இந்தப் படைப்பு களும் கிடைத்தல் வேண்டும் என்பதேயாகும்.
இந்நாட்டியங்களுள் எவற்றையேனும் மேடையில் நிகழ்த்த விரும்புவோர் அவ்வாறு செய்வதில் தடை ஏதும் இல்லை. ஆயின் அவ்வாறு பயன்படுத்தினால், ஆக்கியோன் பெயர் குறிப்பிடுதல் அறிவு நாகரிகம். நிகழ்த்துதல் பற்றிய செய்தி நமக்குக் கிடைக்குமாயின் நாமும் மகிழ்வோம்.
ஞானம் இரத்தினம்

தோற்றம் 17.08.1916 மறைவு 21.03.1981

Page 5

முன்னுரை
இது இடம்பெறும் நாட்டியங்கள் பெரும்பாலும் 1960 களிலும் 1970களிலும் எழுதப்பட்டன. ஏறத்தாழ எல்லா நாட்டியங்களும் வானொலி நிலையத்தாராலோ தனிப் பட்ட கலை நிறுவனங்களாலோ மேடையேற்றப்பட்டன. கலை நிகழ்ச்சி நடத்த விரும்புவோர் அதிலே நாட்டியம் சேர்க்கும் ஆவலுடன் என் கணவரை அணுகி, நாட்டியங் களுக்குப் பிரதி எழுதித் தருமாறு கோரிக்கை வைத்ததின் விளைவாகவே இவை எழுதப்பட்டன. நடன நாடகமான நாட்டியங்கள் இலங்கையில் பிரபலமாவதற்கு அமைந்த பின்னணியைச் சற்று நோக்குவோம்.
1950 ஆண்டு முதல் இலங்கையிலே வானொலி நன் முறையில் விரிவடைந்து சிறந்து விளங்கியது. வாரந்தோறும் தரமான வானொலி நாடகங்கள் 'சானா’ எனப் ւյծք பெற்ற சண்முகநாதன் அவர்களால் தயாரித்து ஒலிபரப்பப் பட்டன. வானொலியின் இசைப்பிரிவினரால் பல இசைச் சித்திரங்கள், இசை நாடகங்கள் ஆகியன ஒலிவரப்பாகின. இவை யாவும் ஒலி வடிவாய் அமைந்து செவிக்கு இன்பமூட்டுவனவாகவே அமைந்தன.
ஆயின், கட்புலனுக்கு விருந்தமைக்கும் வகையிலே மேடை ஏற்றப்பட்ட நிகழ்ச்சிகள் மிகக் குறைவாகவே அமைந்தன. தமிழில் வானொலி நாடகம் முன்னேறி வளர்ந் தது போல் மேடை நாடகம் வளரவில்லை. நாடக எழுத் தாளர் தயாரிப்பாளர் பலர் இருந்த போதிலும், மேடையில் நடிக்க முன்வரும் தமிழ் நடிகைகள் மிக அரிதே. சிங்களச் சமுதாயத்திலே போலல்லாது தமிழர் சமுதாயத்திலே
5

Page 6
பெண்களுக்கு மிகுந்த கட்டுப்பாடு இருந்தது. மேடையில் ஆண்களுடன் நடிக்க இளம்பெண்களைப் பெற்றோர் அனுமதிப்பதில்லை. வானொலி நாடகத்திலே குரல் மட்டுமே கொடுப்பதால் அதற்குப் பெரிதும் தடை இருக்கவில்லை.
காலப்போக்கிலே வானொலியின் வளர்ச்சியிலே ஆண்டுதோறும் தீபாவளி, நவராத்திரி முதலிய வைபவங் களை ஒட்டி மேடையில் நிகழ்ச்சிகளை நேயர்கள் கண்டுகளிக்க ஒரு செயல் திட்டம் நடைமுறைப்படுத்தப் பட்டது. இவ்விழாக்களிலே கர்நாடக இசை நிகழ்ச்சிகள், மெல்லிசை நிகழ்ச்சிகள் ஆகிய பல இடம் பெற்றன. ஆயின் நாடகத்திற்குப் பதிலாக நடன நாடகமான நாட்டிய நிகழ்ச் சிகள் இடம் பெறலாயின. மேடை நாடகத்திலே நடிக்கத் தமிழ்ப் பெண்கள் விரும்பவில்லை. ஆயின் பரதம் பயின்று நாட்டியங்களிலே ஆடுவதைத் தமிழ்ப் பெண்களும் அவர்கள் பெற்றோரும் வரவேற்றனர்.
அக்காலத்திலே தமிழ்நாடு சென்று பரதநாட்டியம் பயின்று வந்த பெண்மணிகள் பலர் நடனப் பாட சாலைகள் நிறுவி நடனம் கற்பித்து வந்தனர். இந்நடனப் பாடசாலைகளும் ஆண்டுதோறும் விழா நடத்த விரும்பின. பரதக்கலை பயிலும் பெண்மணிகளின் தொகையும் வளரத் தொடங்கியது. எனவே, வானொலி நிலையத்தாரும் தனிப் பட்ட கலை நிறுவனங்கள் பலவும் நடத்தும் கலை விழாக் களிலே பிரதான அம்சமாக நாட்டியங்கள் இடம் பெறத் தொடங்கின.
காலஞ்சென்ற இ. இரத்தினம் அவர்கள் சானா' தயாரித்த வானொலி நாடகங்கள் பலவற்றுக்கும் பிரதி எழுதிவந்தார். வானொலியின் இசைப் பிரிவினரின் அழைப் பில் பல இசைச் சித்திரங்களும், இசை நாடகங்களும் எழுதி வந்தார். இதனால் நாட்டியங்களுக்குப் பிரதி
6

தேவைப்பட்ட போது, பலரும் அவரை அணுகினர். இவ்வாறு இரத்தினம் அவர்களிடம் நாட்டியங்களுக்கான பிரதிகளைக் கேட்டுப் பெற்று அவற்றை மேடையேற்றிய நடனாசிரியைகளுள் பிரதானமானவர்கள் காலஞ்சென்ற கமலா ஜோன் பிள்ளை அவர்களும், தற்போது அவுஸ் திரேலியாவில் நடனாலயம் எனும் நடன நிறுவனத்தின் தலைவியான நடன ஆசிரியை திருமதி. ஜெயலட்சுமி கந்தையா அவர்களும் எனலாம்.
அக்காலத்திலே இந்நாட்டியங்கள் சிறப்புற அமைவ தற்கு நடன ஆசிரியைகளுக்கு அச்சாணியாக இருந்து உதவி யவர் காலஞ்சென்ற இசைவல்லாளர் பெருங்குளம் டி. எஸ். மணிபாகவதர் அவர்களே. அப்போது மணிபாகவதர் இலங்கை வானொலியிலே நிலைய வாத்தியக் கோஷ்டியின் தலைவராகப் பணியாற்றி வந்தார். நாட்டியங்களுக்கு ஏற்ற கதையைத் தேர்ந்து எடுத்துப் பிரதி எழுதியபின் அதை விரும்பிக் கேட்ட வானொலித் தயாரிப்பாளருடனும் நடன ஆசிரியையுடனும் மணிபாகவதர் அவர்களுடனும் என் கணவர் கலந்து ஆலோசனை செய்வார். பின் மணி பாகவதர் அவர்கள் இசை அமைக்கும் பணியைத் தொடங் குவார். சில சந்தர்ப்பங்களிலலே இசைக்கு ஏற்பப் பாடல் களிலே சிறு மாற்றங்கள் செய்ய நேரிடும். அதனால் பாடல் களுக்கு இசை அமைக்கும்போது பாகவதர் அடிக்கடி என் கணவருடன் தொடர்பு கொள்வார்.
பாடல்களுக்கு இசை அமைத்தபின் பாகவதரும் நடன ஆசிரியையும் சேர்ந்து முழு நாட்டியத்திற்கும் உரிய பின்னணி இசை, ஜதிகள் சேர்த்தல் ஆகிய நடன அமைப்பு விவரங்களை ஒழுங்குபடுத்துவர். நடன ஆசிரியை நர்த்தகி களைத் தேர்ந்தெடுத்துப் பயிற்றுவிப்பார். பாடகர்களுடன் ஒத்திகை பார்த்து நாட்டிய இசையைச் சீராக்குவார் பாக வதர். முழு நாட்டியத்திற்கும் - அதாவது நாட்டியம்,
7

Page 7
பின்னணியிசை, பாடல் ஆகிய யாவும் அடங்கிய - ஒத்திகைகள் பல நடைபெறும். இவ்வாறு நடைபெறும் முதலாவது முழு ஒத்திகைக்கும் என் கணவர் அழைக்கப் படுவார். அவர் கற்பனை செய்த கதைக் கரு அது விரியும் வகை ஆகியன முரணில்லாமல் அமைந்துள்ளனவா என்ப தைத் தெளிவுபடுத்தி ஏற்ற திருத்தங்கள் செய்ய இம்முதல் ஒத்திகை முக்கியமானதாகும். அப்பொழுதுதான் அரங்கேறு வதற்கான பிரதி ஒப்புதல் பெறும். பின்பு பல ஒத்திகைகள் நடைபெறும்.
வானொலி நிலையத்தார் ஏற்பாடு செய்து நடத்தும் நாட்டியங்கள் இவ்வாறு விரிவான ஆயத்தங்களுடன் நடைபெறும். வானொலிநிலையத் தயாரிப்பு நல்ல தரத்தில் அமைய வேண்டும் என்பதால் ஒத்திகைகள் பல நடை பெறும். வானொலி நிலையக் கலையக வசதி, வாத்தியக் கோஷ்டி உதவி ஆகியன எல்லா ஒத்திகைகளுக்கும் கிடைப் பதால் வானொலித் தயாரிப்பாளருக்கு இவை இலகுவாக இருக்கும். இத்தகைய வசதிகள் தனிப்பட்ட கலைநிலையங் களுக்குக் கிடைப்பது அரிது. எனினும் அவர்களும் சிரமம் பாராது, பல நாட்டியங்களைத் தயாரித்து அளித்தனர்.
இத்தொகுதியிலுள்ள இரதி பூசை’ நாட்டியம் 1967 இலே மேடையேற்றப்பட்டது. இலங்கை வானொலி அரசாங்கத் திணைக்களமாக இருந்த நிலை மாறி, கூட்டுத் தாபனமாக அமைக்கப்பட்டது 1967 இலேயாகும். அவ்வை பவத்தை ஒட்டி வானொலியில் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழி ஒலிபரப்புச் சேவைகளிலும் விழா கொண்டாடப்பட்டது. தமிழில் நடைபெற்ற விழாவிலே இடம் பெற்ற சிறப்பு நிகழ்ச்சி 'இரதி பூசை’ நாட்டியமே. இந்நாட்டியத்திற்கு நடன அமைப்பு நட்டுவாங்கம் செய்தவர் காலஞ் சென்ற நடன ஆசிரியை கமலா ஜோன் பிள்ளை ஆவார். இவர் அடையாறிலே உள்ள கலாக்ஷேத்
8

திரத்திலே பரதம் பயின்றவர். மேலே நான் கூறிய வகையில் மிக விரிவான முறையில் ஆயத்தங்கள் செய்யப்பட்டு அரங்கேறியது இரதி பூசை மேடையிலே நடைபெற்ற இந்நடனநாடகம் பின்னர் ஒலிபரப்பப்பட்டது. இதில் காட்சியின்றித் தனி நாட்டிய இசை ஒலியே கேட்டு இன்புறும் வகையில் அமைந்தது. மணிபாகவதரின் இசைய மைப்பும் பாடகிகள் பகவதி கிருஷ்ணசாமி, ராதா கிருஷ்ண சாமி ஆகியோரின் குரலிசையும் சிறப்பாக அமைந்தன. மேடையில் தோன்றிய நர்த்தகிகள் அக்காலத்திலே கொழும்பிலே சிறந்து விளங்கிய நர்த்தகிகள் சிவகுமாரி இராசையா, சாந்தாரமணி மகேந்திரா முதலாயோர் ஆவர். மணிபாகவதர் கடைசியாக இசையமைத்துச் சிறப்பித்த நாட்டிய நிகழ்ச்சி இதுவே எனலாம். ஏனெனில், இதை யடுத்த சில ஆண்டுகளிலே, அவர் நிரந்தரமாகத் தமிழ் நாடு திரும்பிவிட்டார்.
இதன் பின்னர் பெரும்பாலும் வயலின் வித்துவான் பிச்சையப்பா அவர்களும், வயலின் வித்துவான் முத்துசாமி அவர்களும் நாட்டியங்களுக்கு இசை அமைத்து உதவினர்.
இரதிபூசை நாட்டிய நாடகம் புதிய கற்பனையாக அமைந்ததனாலும், அதி விரிவான ஏற்பாடுகளுடன் நடைபெற்றதாலும் இதன் பிரதியில் பல குறிப்புகள் தரப்பட்டுள்ளன. ஏனைய நாட்டியங்களிலே அவ்வாறு தரப்படவில்லை. நடன அமைப்பு செய்வோர் ஏற்றவாறு ஒழுங்குகள் செய்யலாம்.
இரதி பூசை நாட்டியம், அவுஸ்திரேலியாவில் நடனாசிரியை ஜெயலட்சுமி கந்தையா அவர்கள் நடத்தும் நடனாலய நிறுவனத்தால் 1999 ஆண்டிலே மீண்டும் மேடையேற்றப்பட்டது.
ஞானம் இரத்தினம்

Page 8
நினைவுகள்
திரு. இ. இரத்தினம் அவர்களுடைய குடும்பத் தினருடன் எனக்கு ஏற்பட்ட தொடர்பு பல்லாண்டுகட்டு முற்பட்டது எனலாம். 1960ஆம் ஆண்டுகளிலே நான் முதன் முதல் மேடை ஏற்றிய நாட்டியம் “தெய்வத் திருமணம்” அவரால் எழுதப்பட்டது. அதைத் தொடர்ந்து என் கலை நிறுவனம் நிகழ்த்திய பல நாட்டியங்களுக்கும் அவர் பிரதி எழுதி உதவினார்.
அவர் பாடல்களிலே புகுத்திய கருத்துக்கள் பலவும் கற்பனையைத் தூண்டுவனவாக நடன அமைப்புச் செய்வ தற்கு ஏற்றனவாக அமைந்திருந்தன. அவருடைய இலக்கிய அறிவும் ஆழ்ந்த புலமையும் நடன அமைப்புச் செய்ப வர்க்குப் பெரிதும் உதவின எனலாம்.
திரு. இரத்தினம் அவர்கள் மிகுந்த பொறுமையுடன் நம் கருத்துக்களையும் கேட்டு ஏற்றவாறு பிரதி அமைக்கவும் தன் கருத்துக்களைத் தெளிவாக எடுத்துரைத்து நடன அமைப்புச் செய்பவர்க்கு உதவவும் என்றும் தயங்கிய தில்லை.
அவருடன் கலைப்பணியில் ஈடுபடுவது மகிழ்ச்சி தரும் அநுபவமாகவே அமைந்தது.
கலாசூரி திருமதி ஜெயலஷ்மி கந்தையா 0.A.M. Artistic Director Natanalaya Sydney Australia.
10

எம் வாழ்விற்கு ஒளியூட்டிய
முருகனுக்கும்
கண்ணனுக்கும்
இந்நூல் சமர்ப்பணம்
11

Page 9
நாட்டிய நாடகம்
இ. இரத்தினம்*
"நடனம் என்பது உடற் பயிற்சியோ, பொழுது போக்கோ, அலங்காரக் கலையோ, சமூக விவகாரமோ அன்று. ஆயின் வணக்கத்திற்குரியதும் மனிதனால் போற்றப் பட வேண்டியதுமான ஒன்றாகும். மனிதனுடலினை நன்கு விளங்கி அதன் ஆழ்தத்துவங்களை, வளங்களை, கட்டுப் பாடுகளை, சக்தியை, புலநுண்மையை உணர்ந்தவர்கள் யாவரும் நடனத்தைப் போற்றி வணங்கியுள்ளனர். நடனம் என்பது உயிரிலிருந்து பெறப்பட்டது. ஏனெனில் அது உடல் முழுவதனதும் மொத்தச் செயற்பாடாகும்.” இது பிரான்சு நாட்டுப் பெரும் புலவர் வலறியின் கூற்று.
"நடனம், குறித்த ஒரு தேவைக்காக எழுவதில்லை. அது அழகு பிறப்பித்தலால் அதனை யாவரும் போற்று கின்றனர்." - பரதர்
இக்கட்டுரையின் முக்கிய நோக்கம் நாட்டிய நாடகம் என்று இப்பொழுது கூறப்படும் நடன நிகழ்ச்சியைப் பற்றி ஆராய்வதாம்.
நிருத்தம் என்பது சுத்த, கருத்துக் குறிப்பற்ற ஆட
12"

லென்றும், நிருத்தியம் முகக்குறிப்பினாலும் மற்றை உறுப்பசைவுகளினாலும் ஆடலோடு உள்ளக் குறிப்பையும் சேர்த்துக் காட்டுவது என்றும், நாட்டியம் மேற்கூறிய வற்றோடு நாடக அம்சம் பொருந்தியது என்றும், பெரி யோர் கூறுவர். எனவே நாட்டியம் என்பதில் சுத்த நிருத்தம், நிருத்தியம், நாடகம் எல்லாம் சேர்ந்திருக்கும் என்பது புலனாகும்.
பரதநாட்டியத்தை மரபு படுத்தியவர்கள், தூய நிருத்த அலகுகள் வகுத்து அவற்றுடன் சுவைக் குறிப்புகள் வெளிப்படுத்த வழி வகுத்து, இவை இரண்டையும் ஒரு சம்பவத்தோடு இணைத்து நாட்டியத்தையும் பிறப்பித் தார்கள். எங்கள் ஆடல் மரபை ஆராய்ந்து பார்க்கின்ற பொழுது மிகப் பழமையான காலத்திலேயே உறுப்புக்கள் கைகள் முதலியவற்றின் குறியீடுகளினால் பல்வகை உணர்ச் சிகள் கருத்துக்களை நம் முன்னோர் புலப்படுத்த முன்வந் தனர் என்பது தெளிவாகும். குறியீடாக அமைந்த கையை எழிற்கை என்றும் அது தொழிற்படும் போதும், கருத்துக் குறிக்கும்போதும் தொழிற்கை பொருட்கை என்றும் கூறினர். சுத்தநிருத்தம் சொக்கம் எனப்பட்டது. யதி, சதி எனப்பட்டது. அதனாலேயே சதிர்க்கச்சேரி எனவும் நாட்டியம் பெயர் பெற்றது.
நாட்டிய நாடகம் எப்படி அமைய வேண்டும் என்பது நமது கேள்வி. நாட்டிய நாடகம் எப்படியும் அமையலாம். ஆயின் உள்ள இடர்ப்பாடு என்னவெனில் புறநாட்டுக் கலைவடிவங்களைக் கண்டுகளிக்கும் எம் முள்ளம், பலவகைகளிலும் அவற்றின் சாயலில் எம் கலைவடி வங்களை அமைக்க முயல்கின்றது. இதனால் பல இடர்கள் தோன்றுகின்றன.
இதற்குச் சில உதாரணங்களைக் காட்டலாம். கவிதை உலகில் ஆங்கிலத்தில் எழுந்த விடுகவிகளை (Verse Libre)
13

Page 10
கண்டு வியந்த நம்மவர் பலர் தாமும் அவ்வாறு எழுத முயல்கின்றனர். இவருட் பலர் விடுகவியும் எங்கள் யாப்பால் அமைதிப்படுத்திக் கொள்ளக்கூடிய தொன்றென் பதை அறியார். அது நமக்குப் புதிதென்பர். இசையுலகில் இப்பொழுது மேனாட்டில் பெருமளவில் பரவிவரும் இசை வழக்கினையும் பல்லியத்தோடியைந்த துரித வாய்ப்பாட் டினையும் புகுத்த உழைப்பவரும் பலர் உளர். இசையைப் புறநாட்டு இசைக் கருவிகளுடன் இசைத்துப் பல்லியல் படுத்த முயல்தலும் ஒரு புது வழக்கு. இவை பற்றி இங்கு ஆராய்ச்சி இல்லை.
இதைப்போலவே மேனாட்டில் ‘பலே’ எனப்படும் ந்டனநாடகத்தைப் போன்ற ஒன்றை எம்மிடையும் புகுத்தி வளர்க்கலாகாதா என்பது நம்மவரிடை காணப்படும் ஓர் அவா. மேனாட்டிலே ‘பலே’ எனப்படுவதற்கு ஒரு வரைவிலக்கணம் கூறப்புகின், அதை வருமாறு கூறலாம். ‘பலே’ என்பது இசை, ஊமை நடிப்பு, ஒவியம், ஆடைகள் (காட்சிகளில்) ஆகியவற்றோடு இயைந்து தொல்மரபு முறை நடனத்தால் ஒரு கதையைச் சொல்லும் அல்லது ஒரு கட்டுரையைக் கூறும் ஒருவகை அரங்காடல். இப்பதம் தொல்மரபு நடன நுண்மையைக் குறிக்கும். (BRIT ENCY)
இந்தப் ‘பலே’ என்பதை இனித் தமிழ்ப்படுத்திப் பார்ப்போம். “பலே’ எனும் பதம் சுத்த நிருத்தத்தையும் குறிக்கின்றது; அதை அடிப்படையாகக் கொண்டு இசை, ஊமைநடிப்பு, ஒவியம் முதலியவற்றினால் ஒரு கதையைக் கூறுவதையும் குறிக்கின்றது. பரதநாட்டியம் என்னத்தைக் குறிக்கின்றது? நாட்டியம், நிருத்தம், நிருத்தியம் எனும் சொற்களை உற்று நோக்கின், நாட்டியம் என்பது ஒரு நாடகம் என்பதும் அந்நாடகம் ஆடலால் ஆற்றப்பட்டது என்பதும் புலனாகும். சதிர்க்கச்சேரிகள் பரதநாட்டியம் ஆனது எப்படி? அக்கச்சேரிகளில் சுத்த நிருத்தம்,
14

நிருத்தியம், அபிநயம் மூன்றும் சேர்ந்ததால் அவை அவ்வாறு ஆயின.
பலே யையும் பரதநாட்டியத்தையும் ஒப்பிடுவோம். இரண்டிலும் இசை உண்டு. சுத்த நிருத்தம் (பலே நிருத்தம்) உண்டு. ஊமை நடிப்பு உண்டு. ஆங்கிக அபிநயமும் சாத்துவிக அபிநயமும் சேர்ந்து ஊமை நடிப்பாகின்றன. பலேயின் ஒவியம் பரதநாட்டியத்தில் ஆகார்ய அபிநயம் (ஆடை, அணி) ஆகின்றது. பரதநாட்டியத்தில் வாசிக அபிநயம் (பாட்டு அபிநயம்) ஒன்றுதான் எஞ்சி நிற்கின்றது. இது ஒரு வித்தியாசம். ஒவியத்தின் ஒரு பகுதியாகப் பலேயில் குறிப்பிடப்பட்ட ‘காட்சி பரதநாட்டியத்தில் குறிப்பிடப் படவில்லை. ருக்மணிதேவி அவர்கள் பரதநாட்டியம் பற்றிக் கூறுமிடத்து, அது ஒரு கலைக்கோவை என்றும் அரங்கு, நாடகம், இசை, கவிதை, வண்ணம் (நிறம்) ஒத்திசை எல்லாம் சேர்ந்திசைந்தது என்றும் கூறியுள்ளார். இவர் அரங்கு என்று கூறியது காட்சியலாக் குறையை நீக்குகின்றது.
அடுத்து நாம் நோக்க வேண்டியது சுத்த நிருத்தப் பகுதி. இரண்டு நிருத்த முறைகளுக்கும் அதிக வித்தியாசம் கிடையாது. ஒரு மேனாட்டுப் ‘பலே விற்பன்னர் கூறிய வாறு பரதநாட்டியம் கால்கள் தவிர்ந்த மேற்பகுதிகளுக்கு அதிகம் அப்பியாசம் கொடுக்கிறதென்பதும் ‘பலே’ கால்களுக்கு அதிகம் அப்பியாசம் கொடுக்கிறதென்பதும் உண்மையே. பரதநாட்டியத்தில் கால்கள், கைகள், கண்கள், உடலின் அங்கம், உபாங்கம், பிரத்தியங்கம், முதலியவை ஒன்றிசைந்து தொழிற்படும். ஆயின் ‘பலே'யில் அங்க நிருத்தம் முக்கிய மாகக் கால்தொழில் தலையெடுத்து நிற்கும். இதில் துள்ளல், சுழலல், பாய்தல், அமைதியாகக் குதித்தல், ஒருகால் விரல்களில் நின்று சுழலல் ஆகியன. முக்கிய இடம் வகிக்கின்றன.
ቅ
15

Page 11
பிற்கூறிய ஆடற் கூறுகள் பரதநாட்டியத்தில் அதிகம் இடம் பெறுவதில்லை. இவை ஓரளவு குறை அம்சங் களாகவே உள்ளன. ஆயின் இவற்றை நாட்டியத்திற் புகுத்தலால் நாட்டியத்திற்கு இழுக்கும் இல்லை; மரபும் கெடாது. நந்திகேஸ்வரர் இயற்றிய அபிநய தர்ப்பணத்தில் பாய்தல்களை “உத்பல்வன” என்ற தலைப்பில் எடுத்துக் கூறி இதை அலகம், கர்த்தரி, அஷ்வம், மோடிதம், க்ருபாலகம் என்றும் வகைப்படுத்தியுள்ளார். இன்னும் சுழற்சிகளை உத்புளுதம், சக்ரம், கருடம், ஏகபாதம், குஞ்சிதம், ஆகாசம், அங்கம் என்றெல்லாம் வகுத்துள்ளார். இவற்றை இன்னும் மேற்கொண்டு விருத்தி செய்வதில் ஒரு தவறும் இல்லை. பரதர் கூறிய காரணங்களுட் பல சர்க்கஸ் வித்தைகளை நிகர்த்தவை.
சுத்த நிருத்தப் பகுதியில் எவ்வாறு தாண்டவம், லஸ்யம் என்ற பாகுபாடு உள்ளதோ அவ்வாறு ‘பலே யில் சிறப்பான ஆண் பெண் பகுதிகள் உள. இன்னும் நடராசர் நிலையை ‘பலே'யில் "அரபெஸ்க்" என்ற வகையிலே வகுக்கலாம். இரண்டிலும் உள்ள நிலைகள், அசைவு, சுழற்சிகள், பாய்வுகள் யாவும் கற்பனையால் விரிக்கப்படக் கூடியவை.
பேராசிரியர் சாம்பமூர்த்தியவர்கள் ஒரிடத்தில் இசைக்குரிய அடிப்படை அசைகளான சரிகமபதநீ போல் தாளலயத்திற்கும் ததி தொம் நம் தகதரிகிட, நக தொம்தங்கணதொம் எனும் அடிப்படை அசைகள் உண் டென்றும் இவ் அசைகளைப் பல்வகையில் இணைத்துக் கோவைப்படுத்திப் பல லய அழகுகளைப் பெறலாம் என்றும் கூறியுள்ளார். அவற்றிற்கேற்ப எழிற்கைகள் தொழிற்கைகள் காட்டலாம்; ஆடலை மிக விகCதமாக அமைக்கலாம். இந்த அசைச் சொற்களின் கோவையைப் போல கற்பனையைக் கொண்டு எண்ணற்ற சுத்த நிருத்தக்
16

குறியீடுகளை, அலகுகளைப் பிறப்பிக்கலாம். மேலும் பேராசிரியர் சாம்பமூர்த்தி அவர்கள் “புதிய யதிகள் புதிய அடவுகளை அடிப்படையாகக் கொண்டு புதிய நடனம் படைக்கலாம்” என்றும் கூறியுள்ளார். எவ்வளவிற்கு இது பழைய மரபில் ஊறியதோ அவ்வளவில் இது பொருளுடை யதாய் அழகுடையதாய் இருக்கும்.
பலேயில் எவ்வாறு நாடகப் பொருள் கட்டுரை யாயும் கதையாயும் அமைந்ததோ அவ்வாறே பரதநாட்டி யத்திலும் உண்டு. ஆய்ச்சியர் குரவை ஒரு கட்டுரை. குறவஞ்சி ஒரு கதை. ஆயின் ஒருவாய்ப்பாட்டு முறையான கதை. தமிழில் புதிய கதைகள் அமைக்கப்படல் வேண்டும். பரதநாட்டியத்திற்கும் ‘பலே’க்கும் உள்ள பிறிதொரு வித்தியாசம் பரத நாட்டியம் தனி ஒருவரின் ஆட்டம். இப்பொழுது இருவர் சேர்ந்து ஒரே ஆட்டத்தை ஆடுகிறார் கள். ஆயின் பலேயில் அப்படியில்லை. பலர் சேர்ந்து ஆடுகிறார்கள். ஆயின் இங்கும் கூட்டத்தில் ஒருவரே தலைமை வகிப்பார். சில வேளைகளில் இருவர் தலைமை வகிப்பார்கள். இப்படிப் பலர் மேடையில் தோன்றி ஆடும் போது யதியினால் ஆட்டம் நடைபெறுமாயின், எல்லோரும் கட்டாயமாக ஒரே ஆட்டத்தை ஆட வேண்டி நேரிடும். ஒவ்வொருவரும் அல்லது ஒவ்வொரு தொகுதியினரும் வெவ்வேறு வகையில் ஆடல் புரியுமாறு இசையை அமைத் தால் கூட்டாடலுக்கு இது பொருத்தமாகும்.
பல்லவிக்கு ஆடுகிறது பற்றி இந்நாட்க்ளில் கேள்விப் படுகிறோம். எங்கள் நாட்டியங்களிலும் தனி இராக ஆலாபனையை உவந்த முறையில் வினியாசம் செய்து, அதன் பாவத்தைப் புலப்படுத்துமாறும் நடமாடுவார். தாம் தாம் கொண்ட உணர்ச்சியை எடுத்துக் காட்டுமாறும் ஆடவைத்தால் அது முன்மாதிரியாயிருக்கும்; அழகாயும் இருக்கும். ஒரு தொகுதியிலுள்ள பலர் தம் தம் உள்ள
ST-2 17

Page 12
அனுபவத்திற்கு இசைய சாத்துவிக அபிநயம் செய்யலாம்.
அண்மையில் நடந்த 'இரதி பூசை’ நாட்டிய நாடகத்தைப் பார்க்க வந்த ஒரு நண்பர், "கதை சொல்லும் ஒரு நாட்டியத்தில் இடையில் யதிக்கோவையுடன் சுத்த நிருத்தம் புகுத்தல் அவசியமோ?” என்று கேட்டார். இது எங்கள் நாட்டிய வளர்ச்சிக்கு மிக முக்கியமான ஒரு கேள்வி. எங்கள் இசை உலகில் சங்கீத உருப்படிகளில், கமகம், சங்கதிகள், நிரவல், கற்பனை ஸ்வரம் ஆகியன சேர்த்தல் அவசியமோ என்பது போன்றது இக்கேள்வி. இதற்கு விடை கூறுமுன், நாட்டிய அமைப்பையும் ‘பலே வரலாற்றையும் நாம் ஒத்து நோக்கல் வேண்டும்.
பலே நாடக வரலாற்றை நோக்குமிடத்து அது இசை நாடகத்தில் இடைக்கிடை நடனத்தைப் புகுத்திக் காலக்கிரமத்தில் தற்போதைய ‘பலே’யாக வந்ததைக் காணலாம். பரத நாட்டிய வளர்ச்சியையும் வரலாற்றையும் நோக்கினால் அதன் அடிப்படை அலகு அடைவு யதி முதலியவை என்பது புலப்படும். அடைவுகள், யதிகள், சொற்கட்டுகள் என்பன உண்மையில் என்ன? தாள வாத்தியங்களின் சொற்களைக் குரல் கொண்டு சொல்ல முயற்சித்தலேயாம். அனாதி தொடங்கி, தமிழர் கூத்து இந்தத் தாள லயத்திற்காட்பட்ட ஒன்றாய் விட்டது. தமிழிசை இராக ஆலாபத்திற்கு எவ்வளவு முக்கியம் அளிக்கின்றதோ, அவ்வளவு லயத்திற்கும் அளிக்கின்றது. இதை இப்பொழுதுள்ள நாட்டிய வகுப்பு முறை நன்கு புலப்படுத்தும்.
பரதநாட்டியக் கச்சேரி ஒன்றில் முதல் தோன்றும் அலாரிப்பு சுத்த நிருத்தமாகும். இது லய வினியாசமும் எழிற்கையும் இணைந்த ஒரு விம்பம். இரண்டாம் படியான யதிசுவரத்தில் ஆட்டம் இராகத்தோடு g)606007 u, மூன்றாவதான சப்தத்தில் அபிநயம் சேர்ந்துவிடுகிறது.
18

லயக்கோவையுடன் (தாளம்) ஆரம்பமாகிய ஆடல் இராகம் சேர்ந்து பாவமும் சேர்ந்தவுடன் நாட்டியமாகி விடுகிறது. அடுத்தது வர்ணம். இது இசைக்கும் ஆட்டத்திற்கும் பொதுவானது. அது போல் வர்ண் ஆட்டத்தில் சுத்த ஆட்டம் அபிநயம் இரண்டையும் அது Frflaur இணைக்கும். இவை பின்னிப் பின்னி வருவதே ஒரு அழகு. அடுத்து வரும் பதம் அபிநயத்திற்குப் பிரதான இடம் அளிக்கின்றது. அலாரிப்பு, யதிசுவரம், சப்தம், வர்ணம், பதம் என்ற ஐந்தும் சேர்ந்து நாட்டியமாகின்றன. இம்முறை தனியொருவர் கச்சேரிக்கு அழகு கொடுக்கின்றது.
ஆயின் பலர் சேர்ந்து கதையை நாட்டிய முகமாக விரித்துக் கூறும்போது, இடையே சுத்த நிருத்தம் யதி வருதல் அழகா? கதையின் மாயத்தைக் கெடுக்காதா? என்பன பொருத்தமான கேள்விகளே. இதற்கு ஏலவே கூறிய பரதநாட்டிய முறைக் கிரமத்தை நோக்கும் பொழுது விடை இலகுவில் புரியும். சுத்த அபிநயத்தால் கதை சொன்னால் அது பெரும்பாலும் இக்கால நாடகமும் வாசிக அபிநயமும் சேர்ந்தது போல் இருக்கும். சுத்த நிருத்தமே கருத்துப் பொருள் குறியாத சுத்தானந்தம் தருவது. தாண்டவ மூர்த்தியாக இறைவனை வடித்தவர்கள், இயல்பாகவும் மெய்யியல் முறையிலும் இதை உணர்ந் தவர்கள். இவ்விடத்தில் இன்னொரு குறிப்பையும் இங்கு சொல்வது பொருத்தம். சைவத்திற்கும் தாண்டவத்திற்கும் நெருங்கிய தொடர்புண்டு. நடராசரை வணங்குவதால் இது எழுந்ததன்று. ஆயின் அக்கலைத் தொடர்பினாலேயே இறைவன் சைவசமயிகளுக்குத் தில்லைக்கூத்தனாக உரு வெடுத்தான்)
எனவே நடைமுறையாலும் அபிநயத்தாலும் கதை சொல்லும்போது, இடையிட்டு வரும் சம்பவங்களின் பாவத்திற்கியைய, சுத்த நிருத்தம் புகுத்துவது மிகவும் இன்றி
19

Page 13
யமையாதது. கருத்துப் பொருளின் சுவையை சுத்த நிருத்த இன்பம் மேலும் அழுத்திக்காட்டும். இது சந்தர்ப்பத்திற்கு ஏற்ப யதி அமைப்பதில் தங்கியிருக்கிறது.
அடுத்து நாம் கவனிக்க வேண்டியது நாட்டிய நாடகத்தில் வாசிக அபிநயம் அவசியமா என்பது. முன்னர் இந்தியாவில் இருந்த புகழ் பெற்ற நடனியான மேனகா என்பார் நாட்டியத்திற்குப் பாடல்கள் அவசியமில்லை என்றும், கருவி இசையே அனைத்துலக மொழியென்றும் அதுவே போதும் என்றும் கூறுவார். இது ஏற்றுக் கொள்ளக் கூடியதன்று. பண்டையோர் அபிநயத்தில் வாசிகத்திற்கே முதலிடம் கொடுத்தார்கள். குரலையும் ஒரு கருவிபோல் எண்ணியே யதிகள் பிறந்தனவாதலின், பாடல் ஆடலோடு சேர்வதில் தவறன்று. ஆயின் சொல்லைவிட இசையே பிரதானம்.
இந்தியாவில் ஆரம்பத்தில் மேனாட்டுப் ‘பலே’யைக் கண்டு வியந்த உதயசங்கர், மேனகா தாகூர் போன்றோர் தாங்களும் அவ்வாறு அமைத்தனர். இவர்கள் நடன்ம் தொல்மரபினை அடிப்படையாகக் கொண்டு பெரும்பாலும் அமையவில்லை. அக்காலத்தில் பரதநாட்டியம் இலக்கிய மாக மட்டுமே இருந்தது. தேவதாசிகளின் ஏமாற்று வித்தை என்று கருதப்பட்டு வந்தது. 1930ஆம் ஆண்டின் பின்னரே பரதநாட்டியம் கற்றோரால் ஏற்கப்பட்டுப் புகழ் பெற்றது. மக்கள் யாவரும் ஏலவே தங்களிடம் அனாதியாக இருந்த "தனியாள் பலேயான” சதிர்க்கச்சேரியைக் கண்டனர். நாட்டியம் வழக்கிற்கு வந்தது. ஆயிரம் ஆண்டுகளாக மறைந்து புதைந்திருந்த ‘பலே நாட்டிய ரூபமாக மலர்ந்து வந்தது. பலேயை நாம் நாட்டிய நாடகம் என்று சொல்ல வேண்டியதில்லை. நாட்டியம் என்றாலே போதும்.
* 19-1-1968 இல் பிரசுரமான தினகரன் கட்டுரை, பொருத்தம் கருதி ஆசிரியர் உரையாக இணைக்கப்பட்டுள்ளது.
20

இதி பூசை
சில குறிப்புகள்
கிTதற் கணவர் நல்வாழ்வு வாழவும் கற்புநெறி மாயாது தழைக்கவும் தமிழ்ப் பெண்கள் காமனை வணங்குவது வழக்கம். காமனை வணங்கும் விழா காமன் பண்டிகை எனப்படும்.
ஆயின் காமனையும் வணங்காது, சக்தியையே வணங்க வேண்டும் என்ற கொள்கையுடன் மகளிர் சிலர் ரதியையே வணங்குவர். இரதியை வணங்குவோர் இரதி உமையை வணங்குவது போல் பாவனை செய்து வணங் குவர். இங்கு இரதி பூசை பின்வருமாறு அமைந்துள்ளது. நாட்டியத்தின் சுருக்கம்
சிவபிரானின் தவத்தைக் குலைக்கச் சென்ற மன்மதன் சிவபிரானால் எரியுண்டு இறக்கின்றான். அவனை உயிர் பெறச் செய்வதற்காக இரதி உமையின் தவத்தைக் கலைக் கிறாள். இரதிக்கும் பஞ்சபாணம் உண்டு. அவை ஒரு மலர்க்கு ஐந்து இதழ்கள் போல அமைந்தவை. அவை தாம் வேனில், தென்றல், நிலவு, இசை, நடம். இவை ஐந்தும் சேர்ந்து ஒரு மலராக, அம்மலரால் இரதி உமையை அர்ச்சிக்கிறாள். உமை தவம் விட்டொழித்து. இரதியின்பால் கருணை கூர்ந்து கணவன் உயிரை மீட்டுக்கொடுக்கிறாள்.
21

Page 14
—/i.tu ക്രwi്രൂ/ —
குறிப்புகள்
1. பாடல்களை ஒருவரோ இருவரோ பாடலாம். 2. தேவையெனில் வேனிலொடு சிறுமியர் சிலர் மலர்களாக வந்து ஆடலாம். வேனில் ஆடை பச்சை நிறம். 3. தேவையெனில் நிலவோடு (சந்திரனோடு) சிறுமியர் நட்சத்திரங்களாக வந்து ஆடலாம். நிலவு ஆடை வெள்ளை நிறம். 4. இசை - வீணை ஏந்திய பாவனை காட்டல். 5. நடனம் - நாட்டிய உடை 6. தென்றல் -அலை போன்ற உடை
ض0Zی)//٪یی46 (76026/Zo زzi/627%2060274 (76یکZ0/7 வீச தென்றலும் வீங்கிள வேனிலும் மூச வண்டறை பெ7ய்கையும் போன்றதே ஈசன் எந்தை இணையடி நிழலே 7 நிகழ்ச்சி இறுதியில் வாத்தியத்தில் பின்வரும்
பதிகத்தை வாசித்தல்,
22

இதி பூசை
பாடல்
ஓம் நமச்சிவாய ஒம் நமச்சிவாய ஒம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஒம் நமச்சிவாய
(உமை நடனமாடி வந்து தவநிலையில் அமர்கிறாள்) இரதி மேடைக்கு வருகிறாள்
இரதி
இரதி
தாயே உன் தாளணைந்தேன் - என் மன நோய் போக்கியருள்வாய் - தாயே அம்மா நீ அகில உலகிற்கும் தாயல்லவோ அதில் நானுன் ஏழைச் சேயல்லவோ - தாயே என் ஆருயிர் நாதன் எரிபட்டது அறிவாய் என் தேவி தயாபரி இனியவர் உயிர்த்தெழ இரங்குவாய் அம்மா மனமகிழ்ந்து உமாதேவி - தாயே
வான் சுவையின் வேனிலதும் வெண்மதுகொள் பால் நிலவும் ஊன்சிலிர்க்கும் தென்றலொடு ஊற்றெடுத்து வீணைநடம் நான் தொடுத்து உனக்கெய்வேன் நமச்சிவாய எனும் பதத்தை தான்விடுத்து எனக்கருள்வாய் தயாநிதியே உமையவளே
இரதி நடனமாடி, வசந்தமாகிய முதலாவது பாணத்தை உமாதேவியை நோக்கி எய்கிறாள். பாணம் எய்தலை மிருதங்க ஒலியில் காட்டலாம். உடனே வசந்தம்
23

Page 15
-/நாட்டிய அரங்கு/-
வருவதுபோன்ற இசை ஒலிக்க, மேடையில் வசந்தம் ஆகிய பெண் தோன்றி ஆடுகிறாள். இரதி மேடையில் ஒரு புறம் கைகூப்பியவாறு வணங்கியிருக்கிறாள்.) (வேனில் வருதற்குரிய இசை - ராகம் வசந்தா ஏற்றது வேனில் வேனிலழகி காணிர் வேனிலழகி
நானில மெல்லாம் போற்றும் ஆனந்த மயம் பாய்ச்சும் - வேனிலழகி காணிர் மானுடர்க் கென்றுமிலா மகிழ் தேர்ந்தூட்டும் மாநில மெங்கணும் மகிமைகள் காட்டும் - வேனிலழகி காணிர்
இளமை நலம் குன்றா எழில் சேரும் இன்புருவில் வளமாரும் பசுமையொடு வையம் துலக்கிடுவேன்
மலராட மதுவுண்ணும்
வண்டாட மணமொடு
LDu 16)/T(6) LD60TLDITL
நிலமாடும் நடமுடையேன் - வேனிலழகி
கானிர்
ஆடல் முடிய வசந்தம் ஆகிய பெண் மேடையில் ஒரு புறம் வணங்கியவாறு அமர்கிறாள். இரதி எழுந்து இசைக்கு ஏற்ப ஆடி தென்றல் ஆகிய பாணத்தை எய்கிறாள். உடனே தென்றல் ஆகிய பெண் மேடையில் தோன்றி ஆடுகிறாள். இரதி முன்போல் வணங்கியவாறு அமர்கிறாள். தென்றல் வருதற்குரிய இசை, நடனம் தென்றல் அண்ட சராசரம் யாவும் அடக்கிடும்
அன்பினேன் - அலை கொண்டுரு வாகியே அவனி யளித்திடும்
அசைவினால் உலகம் ஆளுவேன் - அண்ட
24

-/இரத்தினம் /-
மந்த மாருதமாகி ஊர்ந்துளம் மகிழ்வூட்டுவேன் - மலர்
மொந்தி மொந்தி மகரந்த மூதிச் சிந்தை குளிர்விப்பேன்
கொஞ்சு மெல்லிசை காவி உலகினைக்
காதலுக் கிரையாக்குவேன் - சற்றும் நெஞ்ச மில்லாமல் நஞ்சுபோல் விர
கூட்டுவேன் நரரை வாட்டுவேன் - அண்ட ஆடல் முடிய, தென்றல் ஆகிய பெண் வசந்தத்திற்கு அருகே மேடையில் ஒருபுறம் வணங்கியவாறு அமர்கிறாள். இரதி எழுந்து இசைக்கு ஏற்ப ஆடி நிலவு ஆகிய பாணத்தை எய்கிறாள். உடனே நிலவு ஆகிய பெண் மேடையில் தோன்றி ஆடுகிறாள். இரதி முன்போல் வணங்கியவாறு அமர்கிறாள். (நிலவு வரல் - உரிய இசை நடம்)
பால் நிற வண்ணவுடல் மயல் மெல்லலை
ஒளியினேன் (நான் பால்நிற) பலகலை வளர் தகை நிறைமதியவள் நான் வானிரை தாரகைகள் ஏற்றவும் போற்றவும்
வலந்தரு வயங்கெழில் வனப்புடை உருவினேன்
(பால்நிற) தேனிறை கதிரொளியால் காதலை வளர்த்திடுவேன் தனிமையில் தவிப்பவர்க் கெரியென நிலவுவேன் வானணைந் தாடிடுவேன் சாகரம் தானலைப்பேன்
வணங்குவார் துயர்களை மதுநிறை கலசம் (பால்நிற) ஆடல் முடிய நிலவு ஆகிய பெண் தென்றலுக்கு அருகே மேடையில் ஒருபுறம் வணங்கியவாறு அமர்கிறாள். இரதி எழுந்து இசைக்கு ஏற்ப ஆடி இசை ஆகிய பாணத்தை எய்கிறாள். உடனே இசை ஆகிய பெண் மேடையில் தோன்றி ஆடுகிறாள். இரதி முன்போல் வணங்கியவாறு அமர்கிறாள்.
25

Page 16
-/g, '_ta. ക്രwi്രൂ/-
(இசை வரல் - உரிய இசை நடனம்)
இசை
இசை எதற்கென்று கேட்டாய் - தோழி உயிரெதற் கென்பாயோ உலகினிலே - இசை) இலங்கு சராசரங்கள்
இயல்வது எதனாலே
மலரமர் தேவர்கள் மகிழ்வது எதனாலே - இசை)
மதலையர் கண்களை மகிழ்வுறு வளர்த்து வாலையர் காதலை மாண்புற விரிப்பேன்
கடவுளைப் பரவியெம் கவலையைப் போக்கி மங்கலமாய் மக்கள் மனமதைக் குவிப்பேன் - (இசை)
ஆடல் முடிய இசை ஆகிய பெண் நிலவுக்கு அருகே மேடையில் ஒரு புறம் வணங்கியவாறு அமர்கிறாள். இரதி எழுந்து இசைக்கு ஏற்ப ஆடி, நடனம் ஆகிய பாணத்தை எய்கிறாள். உடனே நடனம் ஆகிய பெண் மேடையில் தோன்றி ஆடுகிறாள். இரதி முன்போல் வணங்கியவாறு அமர்கிறாள்.
(நடனம் வரல் - உரிய இசை நடனம்)
நடனம்
ஆடுவேன் நடனம் ஆடுவேன் அற்புதமாகவே பற்பல நடனங்கள் (ஆடுவேன்)
நாடிடும் ஜதிகளும் நல்ல அடவுகளும் பாடிடும் பாவமும் பலவண்ணமும் திகழ - (ஆடுவேன்)
26

-H இரத்தினம் A
அடவலங்காரம் என்னடியினை மலர் கொஞ்ச உடலெலாம் நவரசம் ஒருங்கு நின்றாட சலங்கை குலுங்கிக்
கலீர் கலீரனெ நடனம் விரித்திட - (ஆடுவேன்)
(ஏற்ற நிருத்தியம்)
(ரதி மேடையின் முன்பாக வந்து தாழ்ந்து வணங்கியிருக்க, ஏனைய ஐந்து பெண்களும் மலர்வடிவில் நின்று இசைக்கேற்ப ஆடுகின்றனர். பின் இரதி எழுந்து
ஆடல்)
இரதி
மலரடி தொழுதேன் அம்மா - நானே - (மலரடி) மாயே எந்தன் தாயே உந்தன் - (மலரடி)
அல்லும் பகலும் அனவரதமும் உன்றன் அடியிணை யன்றி வேறு அறிந்திலன் அம்மா - (மலரடி) இன்னிசையும் கெஞ்ச - கெஞ்ச விறல் சதங்கை கொஞ்ச - கொஞ்ச இளவேனில் அஞ்ச - அஞ்ச மதியும் தென்றலும் - விஞ்ச விஞ்ச (மலரடி)
இப்பாடலோடு அனைவரும் நடனமாடி, உமையைச் சூழல்) - உமை
ரதியை ஆசிர்வதித்தல். பெண்கள் ஆடல்.
Zo/76%iv 62ýsø)6007 uyużó Lo/760p6v Lo6PuL/Qgozió விசு தென்றலும் வீங்கின வேனிலும் மூச வண்டறை பொய்கையும் போன்றதே ஈசன் எந்தை இணையடி நிழலே
27

Page 17
ஆய்ச்சியர் குரவை சில குறிப்புகள்
சிலப்பதிகாரத்திலே தனியொரு அத்தியாயமாக ஆய்ச்சியர் குரவை அமைந்துள்ளது. பண்டு தொட்டு நிலவிவந்த கூத்து முறையைக் காட்டுவதற்காகவே இதனை ஆசிரியர் இளங்கோவடிகள் இங்கு சேர்த்துள்ளார்.
ஆய்ச்சியராகிய இடையர் குலப்பெண்கள் கைகோத் துச் சுழன்று ஆடிவரும் ஆடல் வகையே ஆய்ச்சியர் குரவை யாகும்.
இந்நாட்டியம் ஆய்ச்சியராகிய மாதரி ஐயை ஆகியோரின் கதையைச் சித்திரிக்கும். இப்பெண்களிடமே கோவலன் கண்ணகியை அடைக்கலமாக விட்டுச் சென்றான்.
அன்று அரண்மனைக்கு பால், நெய் அளிக்கும் முறை மாதரிக்குரியது. விடியற்காலை எழுந்து பார்த்ததும் குடத்திலே வைத்த பால் உறையவில்லை; வெண்ணெய் உருக்கினாலும் உருகவில்லை; கன்றுகள் துள்ளி விளை யாடாது சோர்ந்து நின்றன; பசுக்கள் நடுங்கி அலறின; இவை யாவும் துன்பம் வரப்போவதை உணர்த்தும் தீய குணங்கள் என உணர்ந்த மாதரி தீங்கினைப் போக்கக் குரவை ஆடுவோம் எனக் கூறுகிறாள்.
குரவை ஆட்டத்திற்கு ஒழுங்கு செய்கிறாள். முதலில் இசையில் வரும் ஏழு ஸ்வரங்களையும் பிரதிபலிக்க ஏழு பெண்களை அரங்கில் நிறுத்துகிறாள். இவர்களுள் இருவர் கிருஷ்ணனையும் ராதையையும் பிரதிபலிக்க நியமிக்கப்படு கின்றனர். ஏனைய ஐவரும் மோகன ராகத்தில் வரும் ஐந்து ஸ்வரங்களையும் பிரதிபலிக்கின்றனர். மோகன ராகமே இடையர் குலத்தினரிடை வழங்கும் பிரதான ராகம்.
28

-7ടുrളങ്ങ് / — ஐந்த ஸ்வரங்களைப் பிரதிபலிக்கும் பெண்களும் கிருஷ்ணனும் ராதையுமாக ஏழு பெண்களும் குரவை ஆடுகின்றனர். இந்தக் குரவை ஆட்டம் நாட்டியம் முழுவதிலும் பல்லவிபோல் இடையிடை வரும். குரவை ஆட்டத்திலே ஏழு பெண்களும் கைகோத்து ஆடுவர்.
இவ்வாட்டம் முடிந்ததும், "ஸ" என்ற ஸ்வரத்தைப் பிரதிபலிக்கும் பெண் முன்வந்து கிருஷ்ணனை, தம்மிடை வந்து தீங்குழலில் மோகன ராகம் வாசிக்க வேண்டுகிறாள். அவளுடைய தனியாட்டம் முடிந்ததும் எல்லோரும் கூடிக் குரவை ஆடுகின்றனர்.
அடுத்து வரும் ஆட்டத்தில், "ரி” எனும் ஸ்வரத்தைப் பிரதிபலிக்கும் பெண் முன்வந்து ஆடுகிறாள். இவ்வாடல் மத்யமாவதி ராகத்தில் அமைந்த பாடலுக்கு நிகழ்கிறது. அடுத்து, "க", "ப", "த" எனும் ஸ்வரங்களைப் பிரதிபலிக்கும் பெண்கள் முறையே ஆடி கிருஷ்ணனின் வீரத்தையும் காதலையும் பாடுகின்றனர். இசையிலே “ஸ்ருதி பேதம்” என்று இசை வகுத்த பண்டைப் பெரியோரால் கூறப்படும் முறைக் கேற்பவே இங்கு ராகங்கள் இடம் பெறுகின்றன. மத்தியமாவதி ராகத்தைத் தொடர்ந்து இந்தோளம், சுத்த சாவேரி, உதயரவிச்சந்திரிகா ஆகியன இடம்பெறும்.
ஆய்ச்சியர் குரவையானது இளங்கோவடிகளின் அற்புத நாட்டிய அமைப்பு எனலாம். அடிகளாரின் பாடல்கள் முறை யே ஐந்து ராகங்களுக்கும் ஏற்றவாறு அமைக்கப்பட்டுள்ளன. பெண்கள் ஸ்வரங்களைப் பிரதி பலிக்குமாறு இடம்மாறி ஆடுதல் "ஸ்ருதி பேத" முறையைச் சித்திரிப்பதாக உள்ளது.
ஆய்ச்சியர் குரவையில் நாட்டியத்தில் உள்ள பிரதானப் பாடல்கள் இளங்கோஅடிகளார் அமைத்த பாடல்களே. இசையும் அவர் காட்டியவாறே, பண்டு தொட்டு நிலவி வந்ததும், அடிகளார் கண்டதுமான ஆடல் முறையை எடுத்துக் காட்டும் ஒரு முயற்சியே இந்நாட்டியம்.
29

Page 18
ஆய்சிபர் குரலுை
(காட்சி - இடையர் சேரி. இயற்கைக் காட்சி - ஒரு சிறு குடிசை. காலை - இருள் மறைய ஒளி தோன்றுகிறது - தொலைவில் பேரிகை அடித்துச் சத்தம்) (மாதரி தோன்றுகிறாள்)
வெள்ளிப் பனிமலை ஓங்கு முடிதனில் தெள்ளு தமிழ்க்கயல் பொறித்தநற் பாண்டியன் அரமனை நெய்ம்முறை இன்றெமக் கல்லவோ முரசம் இயம்பும் முறையினைக் கேளையை ஜயை வருகிறாள்)
(வேறு மாமதுரைப் பாண்டியர்க்கு நெய்யளிக்கும் நாளே இன்று ஆதலினால் மகளே ஐயை ஆவனநீ செய்திடுவாய் (ஜயை வெளியில் ஒடிப் பின் உள்ளே வந்து பதைபதைப்புடன் சொல்கிறாள்) வெண்ணெயுருகவில்லை குடப் பாலுறையவில்லை என்னதான் நேர்ந்திடுமோ சொல்லமன மில்லையம்மா ஆயம் நடுங்கி நிற்கும் எருதும் அழுது சோரும் ஆயபிழை நானறியேன் மன்னவற்கு என்ன சொல்வோம் (மாதரியும் பாட்டு முடியும்வரை ஏங்கி நிற்கிறாள். பாட்டு நின்றவுடன் துணிவு கொண்டு சொல்கிறாள் - இருவரும் சேர்ந்து ஆடுகிறார்கள்)
மனமயங்காதே ஐயை மனமயங்காதே ஐயை பின்னையோடு கண்ணனோடுங் குரவையாடுவோம் கறவை கன்று துயர் நீங்க என்று ஆடுவோம் மாதர்க் கணியான கண்ணகிமகிழ ஆடுவோம் (இசைமங்கல் - இருவரும் மேடைக்கு இருமருங்கும் நிற்கிறார்கள்)
30

-- / ΘσΦξισαίο Α --
பின்னணிப் பாடல் (ஒவ்வொரு பாட்டிற்கும் ஒவ்வொரு பெண்ணாக வந்து வட்டமாக நிற்கிறார்கள். 7 பெண்கள் வரல் வேண்டும். முதற் பாட்டிற்கு உரியவள் ச குரல் - மாயவன்
மிஞ்சு சினத்துக் கறுத்த எருதை அஞ்சப் பிடித்தவற்கு உரியளிக் கோதை
ரி துத்தம் - பின்னை
வெஞ்சினக் காளையை வெருட்டி யடக்கிய மைந்தனுக்காகும் இப்பைந்தொடி தோள்
க - கைக்கிளை
வல்லமை மிக்க விடைதனில் ஊர்ந்தவன் கொல்லரும் காதலுக் கேங்குமிப் பூவை
ம - உழை ܫ
வெள்ளை மழவிடை வென்று களித்தவன் உள்ளத்துக் கேங்கும் இப்பூவை நல்லாள் ப - இளி பலதேவன்
பொற்பொறி வெள்ளை பிடித்தவற்காகும் நற்கொடி போன்று இந்நங்கை நல்லாள்
த - விளரி
வெற்றி மழவிடை ஏற்றிப் பிடித்தவன் பற்றினுக்கேங்கும் இப்பாவை நல்லாள் நி - தாரம் - யசோதை
தூநிற வெள்ளையின் துடுக்கை யடக்கிய கோனவன் காதலுக் காகுமிப் பைங்கிளி (7 (Bus SJLLDITs நிற்கிறார்கள். மாதரி ஜயை கண்ணகி ஆகியோர் பார்த்து நிற்கிறார்கள். முதன்முதல் கூட்டு நடனம் - பின் ("ச") சட்சத்திற்குரியவள் தனியே வந்து ஆடல்)
31

Page 19
-/நாட்டிய அரங்கு/-
புல்லாங்குழல் இசை (மோகனம்)
கன்று குனிலாக் கனியுதிர்த்த மாயவன் இன்று நம் ஆனுள் வருமேல் அவன் வாயில் கொன்றையம் தீங்குழல் கேளாமோ தோழி
பாம்பு கயிறாக் கடல் கடைந்த மாயவன் ஈங்குநம் ஆனுள் வருமேல் அவன் வாயில் ஆம்பலந் தீங்குழல் கேளாமோ தோழி
கொல்லையஞ் சாரல் குருந்தொசித்த மாயவன் எல்லை நம் ஆனுள் வருமேல் அவன் வாயில் முல்லையந் தீங்குழல் கேளாமோ தோழி
(கூட்டு நடனம்)
(ரி-ரிஷபத்திற்கு உரிய பெண் முன்வந்து ஆடல் - பாடல் - ராகம் மத்தியமாவதி)
இறுமென் சாயல் நுடங்க நுடங்கி அறுவை ஒளித்தான் வடிவென் கோயாம் அறுவை ஒளித்தான் அயர அயரும் நறுமென் சாயல் முகமென் கோயாம்
வஞ்சம் செய்தான் தொழுதனைப் புனலுள் நெஞ்சம் கவர்ந்தாள் நிறையென் கோயாம் நெஞ்சம் கவர்ந்தாள் நிறையும் வளையும் வஞ்சம் செய்தான் வடிவென் கோயாம் தையல் கலையும் வளையும் இழந்தே கையில் ஒளித்தாள் முகமென் கோயாம் கையில் ஒளித்தாள் முகங்கண் டழுங்கி மையல் உழந்தான் வடிவென் கோயாம் (கூட்டு ஆடல்) (க - காந்தாரத்திற்கு உரிய பெண் வந்து ஆடல் - பாடல் - ராகம் இந்தோளம்)
32

- 7 βυφθσαίο Α --
கோவா மலையாரம் கோத்த கடலாரம் தேவர்கோன் பூணாரம் தென்னர்கோன் மார்பினவே தேவர்கோன் பூணாரம் பூண்டான் செழுந்துவரைக் கோகுல மேய்த்துக் குருந்தொசித்தா னென்பரால் பொன்னிமயக் கோட்டுப் புலிபொறித்து
LOGOST6TITGOTLITGT மன்னன் வளவன் மதிற்புகார் வாழ்வேந்தன் மன்னன் வளவன் மதிற்புகார் வாழ்வேந்தன் பொன்னந் திகிரிப் பொருபடையா னென்பரால்
முந்நீரின் உள்புக்கு மூவாக் கடம்பெறிந்தான்
மன்னர் கோச் சேரன் வளவஞ்சி வாழ்வேந்தன்
மன்னர் கோச் சேரன் வளவஞ்சி வாழ்வேந்தன்
கன்னவில் தோளோச்சிக் கடல்கடைந்தா னென்பரால்
(கூட்டு ஆடல்)
(ப பஞ்சமத்துக்கு உரிய பெண் வந்து ஆடல்) (பாடல் - ராகம் சுத்த சாவேரி)
நா-3
வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கிக் கடல்வண்ணன் பண்டொருநாட் கடல்வயிறு
கலக்கினையே கலக்கியகை யசோதையர் கடைகயிற்றினால்
க்ட்டுண்கை மலர்க்கமல வுந்தியாய் மாயமோ மருட்கைத்தே
அறுபொரு ஸ்ரிவனென்றே அமரர் கணந் தொழுதேத்த உறுபசி ஒன்றின்றியே உலகடைய உண்டனையே உண்டவாய் களவினால் உறிவெண்ணெய் உண்டவாய் வண்டுழாய் மாலையாய் மாயமோ மருட்கைத்தே திரண்டமரர் தொழுதேத்துந் திருமால் நின் செங்கமல இரண்டடியால் மூவுலகும் இருள்தீர நடந்தனையே நடந்தவடி பஞ்சவர்க்குத் தூதாக நடந்தவடி
33

Page 20
- /Bπι ιαπιειντέι (ΦΑ --
மடங்கலாய் மாறட்டாய் மாயமோ மருட்கைத்தே
(கூட்டு நடனம்) ("த" - தைவதத்திற்கு உரிய பெண் வந்து ஆடல்) (பாடல் - ராகம்
உதய ரவிச்சந்திரிகா)
மூவுலகும் ஈரடியான் முறை நிரம்பா வகைமுடியத் தாவிய சேவடி சேப்பத் தம்பியொடுங் கான்போந்து சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த சேவகன் சீர் கேளாச் செவியென்ன செவியே திருமால்சீர் கேளாத செவியென்ன செவியே
பெரியவனை மாயவனைப் பேருலக மெல்லாம் விரிகமல உந்தியுடை விண்ணவனைக் கண்ணும் திருவடியுங் கையும் திருவாயுஞ் செய்ய கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே கண்ணிமைத்துக் காண்பார்தம் கண்ணென்ன
கண்ணே
மடந்த்ாழு நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம் கடந்தானை நூற்றுவர்பால் நாற்றிசையும் போற்றப் படர்ந்து ஆரணமுழங்கப் பஞ்சவர்க்குத் தூது நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே நாராயணா வென்னா நாவென்ன நாவே எல்லாப் பெண்களும் ஆடல்
என்று யாம் கோத்த குரவையுள் ஏத்திய தெய்வம்நம் அத்தலைப் பட்ட துயர்தீர்க்க வேத்தர் மருள வைகல் வைகல் மாறட்டு வெற்றி விளைப்பது மன்னோ கொற்றத்து இடிப்படை வானவன் முடித்தலை யுடைத்த தொடித்தோள் தென்னவன் கடிப்பிகு முரசே
(கூட்டு நடனம்)
34

ഗുജദ്രകാ
(புத்தபிரானைப் போற்றிப் பல பெண்கள் வணங்குதல்)
மாதவன் புத்தர்பிரானின்
மலரடி போற்றி ஏத்த வாதனை தந்தெமை வாட்டும் பிறவித் துன்பங்கள் தீரும் நாதன் அவன்திரு நாமம்
நாளும் நாவில் இனிதே ஒதுவம் உவந்தே உலகீர்
உய்யும் வழிஇது அறிவீர்
(வேறு காட்சி) (மணிமேகலை மாலை கட்டிக்கொண்டு தனியே புலம்பல்) மணிமேகலை ஒருவர்க்கும் தீங்கு செய்யாப் பெரியோன்
என் ஐயன் இறக்கவோ - என் இறைவா - ஒருவர்க்கும்
கள்வனைப்போல் கொலைக்களத்தில் கழுத்திழக்க என்ன பாவம் செய்தாரோ
இறைவா" - ஒருவர் மதுரை செயும் திருவிளையாடலோ செந்தமிழின் அறநீதி இதுதானோ -
ஒருவர்க்கும் (அப்போது மாதவி வருதல்) மாதவி கண்ணிர் விழுந்து இந்த மலர்மாலை
கறைப்பட்டால் பகவானுக் காகுமோ -
குழந்தாய்
35

Page 21
-/நாட்டிய அரங்கு/-
புண்ணியம் நசிந்து போகும் புனிதமும் அழிந்து போகும் - மணியே
பூங்கா நீ திரும்பிப் போய் புதுமாலை கட்டி வருவாய் - மேகலை
(பூங்காவில் மணிமேகலையுடன் பல பெண்கள் மலர் கொய்தல்)
கதிரவனின் ஒளி கண்டு இதழ்விரிக்கும் வண்ண மலர்கள் பல கொண்டு மாலை தொடுப்போம் - கதிரவனின்
இதயம்மிக உருகிக் காதலுடனே நாம் பகவன் மலரடியில் பணிந்து நிற்போம் - கதிரவனின்
செந்தமிழின் பாடலெலாம் சேர்ந்து ரசித்து சிறப்பான பண்ணில் அவன் புகழ் பாடுவோம் - கதிரவனின்
தாளவகை காணாத நடன மெல்லாம் மேளமுடன் அவன்முன்னே முழங்கி நிற்போம் - கதிரவனின்
(அப்பொழுது உதயகுமரன் மணிமேகலையைக் கண்டு அதிசயித்தல்)
உதயகுமரன் மலர் பறிக்கின்ற மங்கை நல்லாள்
யாரோ என்ன பெயரோ - மலர் மலருடன் என் மனமும் பறித்து நினைவும் அழித்துமயல் பெருக்கும் - மலர்
36

- 7 Θσφξισαίο Α --
கோவலன் பாடிய காவியமோ - அந்த மாதவியாள் நட ஒவியமோ தாவி மலர் கொய்யும் போக்கிலே மேவி என் நெஞ்சில் மோகம் ஊக்குவாள் - மலர் (சுதமதி வனத்திலிருந்து வெளிவரல் - உதயகுமரன் அவளை மறித்துப் பேசுதல்) உதயகுமரன் மலர் கொய்த மடமாது யாரோ நீ சொல்
சுதமதி சுதமதி மாதவி தவம் செய்து
மாநிலம் போற்ற வந்த - மணிமேகலை
உதயகுமரன் காதலே உருவான் கனிரசமாது
வேதனை தந்தல்லோ சென்றாள்
சுதமதி மாதவன் புத்தனருள்
அடியாளவள் ஆகாது உன்காதல்
உதயகுமரன் பாட்டி சித்திராபதி துணையால்
பாவையவள் எனக்காவாள்
சுதமதி வேண்டாம் இப்பாவச் செயல்
மீளாத நரகமே கதியாகும் அரசிளங் குமர அறம் நீ கேட்பாய் புன்புலால் சேர்க்கை மனித உடம்பு வினையால் வந்தது வினைக்கு ஆளாவது நகைகளை நீக்கில் புலாலே போல்வது மூப்பும் பிணியும் மொய்த்தே இருப்பது பெண்டிர் உடம்பு இன்னும் இழிந்தது உண்மை இதனை உணர்ந்து கொள்வாயே
(உதயகுமரன் சோக முகத்துடன் செல்லல் - எதிரே மணிமேகலை வருதல் - ஒரு
நிமிடம் இருவரும் ஒருவரை ஒருவர் நோக்குதல் - உதயகுமரன்
37

Page 22
-/நாட்டிய அரங்கு/- சென்றுவிடுகிறான்) மணிமேகலை மனம் ஊசலாடுதையோ
மோகமென்பது இதுதானோ அறியேன் -
LOGðLD என்னயு மறியாமல் நினைவெல்லாம் அவர் உருவாய் - மனம்
ஊசலாடு பகவான் அடிசார்த்த மலர் பறிக்கச் சென்றால் மதனனே தன் மலரை என்மீது பொழிகின்றான் - மனம் ஊசலாடு
மாரனைப் போலவந்து மாயமேதோ செய்துசென்ற இதயகுமாரன் இவர் யார் பேதை செயல் ஒன்று அறியேன் - மனம்
ஊசலாடு
(மணிமேகலை மயங்கிச் சோரல் - இருள்சூழ அவளை மணிமேகலா தெய்வம் மணிபல்லவம் எடுத்துச் செல்வதைப் பாடல் மூலம் விவரித்தல் - பெண்கள் இருவர் பின்வரும் பாடலுக்கு ஆடுவர்)
மாதவி தவத்தின் பெற்ற
நல்மணி மேகலை தன்னை ஆதரம் மிக்க தெய்வம்
அன்புடன் எடுத்துச் சென்று தீதிலா மணிபல் லவத்தில்
தீங்கில்லாது இருக்க வைத்து காதலில் காத்ததே நாட்டில்
கற்பு அறம் வாழ்க என்றே (பூரணை - விடியற்காலம் - மணிமேகலை துயிலெழல்)
38

-/இரத்தினம்/-
மணிமேகலை முன்னர் அறியா மாயா பூமியில்
என்ன வகை நான் வந்து சேர்ந்தேன் என்ன பாபம் செய்தேனோ மாயமிது எவ்விதம் நேர்ந்ததோ ஏதும் செயல்அறியேன் (அபூர்வ ஒலி - பீடிகை தோன்றல்) மணிமேகலை எனது பிறவிப் பிணியை அறுக்க
எழுந்த கருணை வடிவமே உனது முகத்தில் பொழியும் கருணை
நிலவில் முழுதும் படிந்ததே மனதில் அகலாது இருந்து தினமும் அறத்தில் ஒழுக அருள்வையே நினைவும் செயலும் உனக்கே பணித்தேன்
நிமலா எனைக் கைவிடேல்
மாரனை வென்ற வீரா வணக்கம் தீநெறிக் கடும்பகை தீர்த்தாய் வணக்கம் பிறர்க் கறம் முயலும் பெரியோய் வணக்கம் கண்பிறர்க் களிக்கும் கண்ணோய் வணக்கம் தீமொழி கேளாச் செவியோய் வணக்கம் வாய்மொழி சிறந்த நாவோய் வணக்கம் நரகம் துயர்எலாம் தீர்ப்பாய் வணக்கம் வணங்குதல் அல்லது வாழ்த்துதல் அறியேன் (அபூர்வ இசையுடன் அமுதசுரபி எனும் பாத்திரம் அவள் முன் தோன்றல்) மணிமேகலை பகவான் அருளால் வந்தது
அமுதசுரபிப் பாத்திரம் உலகோர் பசிபோக்கி உயர்ந்தே வாழவென்று - பகவான்
மக்கள் வறுமை நான் போக்குவேன் பசித்தோர் பிணி நான் வீழ்த்துவேன்
39

Page 23
-/நாட்டிய அரங்கு/-
துக்கம் துடைத்தே உலகோர் ஒற்றுமையாய் வாழ உழைப்பேன் - பகவான்
(காட்சி மாற்றம் - மணிமேகலை பழையபடி தன் நாடு செல்லல் - அங்கு அமுதசுரபியுடன் வீதியெல்லாம் சென்று ஏழைகள், கிழவர், கிழவியர், சிறையாளர்க்குப் பாத்திரத்திலிருந்து அன்னம் எடுத்து வழங்குதல்)
மணிமேகலை புத்தர் பகவானே உன்றன்
பொன்னடியைப் போற்றுகின்றேன் இத்தரையில் மாந்தரெல்லாம் இன்புறவில் வாழச் செய்வாய் - புத்தர்
பகவானே
சாதி மத பேதமெல்லாம் தான் மறந்து போகச்செய்து மேதினியில் கருணை நலம் மேலோங்க நீ அருள்வாய் - புத்தர் பகவானே பசிப்பிணியால் நொந்து மக்கள் பஞ்சையராய் வீதியெலாம் பதைபதைத்துத் திரிவதை நீ பார்த்தும் சும்மா இருப்பாயோ - புத்தர்
பகவானே
பகைகொண்டு மக்கள் எல்லாம் போர்க்கருவி பல படைத்து புகைமூள உலகழிக்க பார்த்தும் சும்மா இருப்பாயோ - புத்தர்
பகவானே உலகெலாம் அன்பு மதம் அறக் கருணை அகிம்சைநெறி நிலவிநிற்க நீயருள்வாய் பகவானே,புத்தமூர்த்தி - புத்தர் பகவானே
40

- / ΘσΦξιοαίο Α --
(இப்பாடலின்போது
பலர் வந்துவந்து அன்னம் பெற்றுச் செல்லல் வேண்டும்.
ஓரிடத்தில் மணிமேகலை நிற்கும்போது உதயகுமாரன் வந்து அவளைப் பார்த்துப்
போதல்)
உதயகுமாரன்
மணிமேகலை
இத்தனை நாளென்னை ஏமாற்றிச் சென்றாய் இனிமேலும் என்னை ஏமாற்ற முடியுமோ - இத்தனை
ஆடல் அரசிநீ தவசியாய்ப் போவதோ ஆடவர் பொறுப்பரோ அவர்மேல் ஏன்
வெறுப்போ இளமையும் எழிலும் இளமன்னர்
உடைமையே உதயகுமரன் எனைச்சேர்தலுன் கடமையே - இத்தனை
பொன்னினால் பட்டினால் மினுங்கும் புலாலை நன்னெறி மன்னர்கள் விருந்தெனல் இலையே அன்பினில் அறத்தினில் அமையும் உடலே இன்பமாய் உலகில் விளங்கிடும் நலமே
(அப்பொழுது ஒருவன் ஓடிவந்து உதயகுமரனை வெட்டல், மணிமேகலை துயர்ப்படல் - காட்சி மாற்றம் - அறவண அடிகளும் மணிமேகலையும்)
மணிமேகலை
பிறவிகள் பல நான் எடுத்துளம் நொந்தேன் உய்வழி அறியேனே அறவழி எதுஎன எனக்குபதேசம் தந்தருள் பெரி/ே
41

Page 24
-/நாட்டிய அரங்கு/-
அறவண அடிகள்
மணிமேகலை
பகவன் புத்தன் பொன்மொழி கேட்டுநீ நடப்பாய் பெண்ணே அதனிலும் உயர்ந்த அறிவுரை உலகில் எதுவும் இல்லையே
மாநில வாழ்வு ஒயாத்துயர் - மாந்தர் இதை யறிந்து வாழ்தல் பயன் -
மாநிலவாழ்வு மாயா உலகமோ ஆயிரம் சிக்கல் மனிதனின் மனமோ அவிழாச் சிக்கல் -
மாநிலவாழ்வு
மாமிச சேர்க்கையே மனித யாக்கை -
இதில் காமங் கொண்டலைவது பெரும் மடமை புத்தரின் மொழிகாத்தல் அறிவுடைமை -
அதைப் புத்தி கொண்டொழுகல் நம் கடமை -
மாநிலவாழ்வு
அறவண அடிகள் காமம் சினமுமே மீளா நரகம்
நேயமும் உறவுமே நேர்ச் சுவர்க்கம் பகவன் போதனை இன்றே கொள்வீர் பவப்பிணி வராமல் உம்மைக் காப்பீர்
42

சித்தான்டஹ்சி
(சிவம், பரம்பொருள், ஆதிபிரான், அசைவில்லாதவன், ஐந்தொழில் நடத்துபவன். அவன் சக்தியே ஐந்தொழிலை நடத்துவாள். இச்சாசக்தி, கிரியா சக்தி, ஞானசக்தி மூன்றுமே சக்திகள். சிவன் முன்னிலையில் இவ்விளையாட்டு நடைபெறும். அவன் யோகத்தில் இருக்க அவன் சக்திகளே படைத்தல், காத்தல், அழித்தல் முதலிய தொழில்களைச் செய்வர்; சக்தி ஒன்றெனினும் செய்தொழிலால் வேறுபடுவர்.)
முதற்காட்சி
சிவன் யோகநிலையில் இருப்பான். இச்சாசக்தி அவனிலிருந்தும் தோன்றிப் படைத்தலைச் செய்வாள். படைத்தல் - இது காளிகா தாண்டவம் எனப்படும். ஆரம் பத்தில் தாளவாத்தியங்களின் இசையுடன் நடம் ஆரம்பிக்க வேண்டும். தோற்றம் துடியதனில் என்றபடியால் இச்சா சக்தி ஒரு கையில் துடியை வைத்துக் கொண்டு காதின் அருகில் அடிப்பதாய், பாவனை செய்ய வேண்டும். துடியினைக் காதருகில் வைத்து ஒலிப்பது இந்நடனத்தின் முத்திரையாய் அமைய வேண்டும். ஒரு கை திரிசூலம் தாங்கியதாக இருத்தல் வேண்டும். இது கருணை முகத் துடன் திக்கெட்டும் கழற்றப்பட வேண்டும். இவ்வாட் டத்தின் நோக்கம் உலகத்தைப் படைப்பதாகும். எனவே, வியப்பு, மனத்தெளிவு, படைத்து முடித்த ஒரு திருப்தி ஆட்டத்தில் வரவேண்டும். ஆட்டம் மேடை முழுவதும் பரவல் வேண்டும்.
43

Page 25
-/நாட்டிய அரங்கு/- 1. படைத்தல் காளிகா தாண்டவம்
இச்சா சக்தி அறிமுகம் : (விருத்தம்)
உயிரொளியாய் ஞாலமெல்லாம் ஒண்மைபெற இச்சை
வைத்து பயில் நடனப் பெருவடிவில் தனுபவனம்
படைத்தளிக்கும் இயல்ஞானத் திருவை எழில்தில்லை இதயமமர் பயிரவியைப் பண்ணோடிசை பாடிப் போற்றுமே பாரீர்
காளிகா தாண்டவம் (ராகம் நாட்டை ஏற்றது)
நாதாந்த நடனம் காணிர் ஆதிபரை நின்றாடும் - நாதா
ஒதுங்கலையறிஞர் பெரிய தவத்தர்கள் நாடியறிவொண்ணா ஞானமிக விளங்கும்
நாதாந்த
கையமர் துடியது காதில் நின்றொலித்திட மையிருள் மாயை கடைந்து ல்கங்கள் மெய்பெற விரிக்கும் மனோன்மணி பைரவி வைய மனைத்தும் வாழ்வுற ஆடிடும் -நாதாந்த
துடிகொளுந் தொனியது ஒம் ஒம் என்றிட படிநிலைப் பூதங்கள் றிம் றிம் என்றிட எடுத்த பாதமே புவன போகங்கள் கொடுத்து நின்றா டிடும்பர சிவையவள் -
நாதாந்த திக்கெலாம் திரிசூலம் சுழற்றியே பக்குவ மாகப் படைதொழில் செய்பவள்
மிக்கு வளிதீ நிலநீர் விசும்பு
44

-/இரத்தினம் A
தொக்கி நின்றாடு துரியவள் தன்னின் -
நாதாந்த காத்தல் - சந்தியா தாண்டவம் ஞானசக்தி இது காத்தலுக்காக ஆடப்படும் நடனம். ஞான சக்தியின் நடனம். ஆரம்பத்தில் துடியின் ஓசை எழுந்து அது மெள்ள மெள்ள அடங்க வேண்டும். ஆட்டம் மாலை நேரத்தில் ஆடப்படுவதாகக் கற்பனை. ரஸங்கள் - ஆனந்தமும் கோபமும்; அபயகரம் தோன்றல் வேண்டும். பெரும்பாலும் unTib பொன்றினை உடல்மேல் மாட்டுவதாகவும், கழுத்தில் அணிவதாகவும், அரையில் அணிவதாகவும் அதனோடு விளையாடுவதாகவும் இது அமைதல் வேண்டும். பாம்பு ஆன்மா என்பதனை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். இடதுகாலை, முதல் படைப்பு ஆட்டத்திலும் சிறிது உயரமாகத் தூக்கல் வேண்டும் ஆயின் நடராசர் நிலை அளவு உயரமாகத் தூக்கக் கூடாது. அறிமுகம் : விருத்தம்
அருளொளியாய் அம்பலத்தே ஆடுகின்ற
UpTITL I60)pT60)tu மருளகற்றிப் பசுவாவார் பண்புறற்காய் அழகொழுகு உருவடிவில் அரவேந்தி மருண்மாலை எழில்விரிக்க நிருத்தமிடும் நிர்மலையைத் தொழுதிடுவோம்
செகத்தீரே சந்தியா தாண்டவம் (சங்கராபரண ராகம் ஏற்றது)
அரவணிந்தவள் ஆடுகின்ற . அற்புதமென்னென்று சொல்வேன் - அரவணிந்தவள்
அங்கமெல்லாம் அன்பு பொங்கி வழியவும்
45

Page 26
-/நாட்டிய அரங்கு/-
அங்கொரு கையில் அபயம் நின்றொளிரவும் - அரவணிந்தவள்
சங்கரி உத்தமி
தரிகி தோமென
தத்திமி ததிங்ங்ண தித்திளாய் தரிகிட தீமென - அரவணிந்தவள்
ஒருகால் அரவதை
உடல் மேல் மாட்டி
மறுகால் அதனை
மடிமேல் சுற்றி
ஆடுவாள் அதனைச் சாடுவாள்
பின்பு தேற்றுவாள் மீண்டும் வீட்டுவாள் -
அரவணிந்தவள் அழித்தல் - சங்காரத் தாண்டவம் கிரியா சக்தி
இதில் குஞ்சித பாதம் வலது பாதமாகும். இத்தாண்டவத்தில் ரெளத்திரம் முக்கியமான சுவை. இதில் கையில் அரவத்திற்குப் பதிலாக நெருப்பு இருக்க வேண் டியது கற்பனை. ஆட்டம் நள்ளிரவில் தொடங்க, கையில் நெருப்புத் தோன்றுமாறு ஒளிவிழ வேண்டும். வலது காலுக்குக் குறுக்காக இடது கை மாறி மாறி நிற்கும் கோலம் இதில் முக்கியச் சின்னம். ஆடை, சிவப்பும் வெள்ளையும் கலந்திருத்தல் வேண்டும். ஆட்டம் இரவில் மயானத்தில் இருத்தல் வேண்டும். காலாட்டங்களுக்குத் தூசு வீசி எறிபடல் வேண்டும். ஆட்டம் படிப்படியாக விரைந்து உச்சநிலை அடைய வேண்டும். தீயிருக்கும் கையே தீயை எறிந்து உலகைத் தகிக்க வேண்டும்.
46

—/ §ളങ്ങ് / —
அறிமுகம் : சுடுகாடு மகிழ்ந்தாடத் துணிந்த தென்ன
சுடரமுதே சொல்லிடுவாய்
எடுத்தவுன்றன் திருப்பாதம் எரிபட்டால்
நோகாதோ சொல்லிடுவாய்
தடுத்துயிரை மீட்பதற்காய் தகித்தாளே
சங்கரிதான் தேர்ந்திடுவாய்
அடுத்துயிர்கள் பிறவாமல் ஆட்கொள்ள
எரிகொண்டாள் தேர்ந்திடுவாய்
சங்காரத் தாண்டவம் சனன மரண பிணியறுத்து தனுகரணப் புவனமழிக்கும் - சங்காரத் தாண்டவம்
கால்கள் மாறி நின்றுாழிக் கூத்திட கையனல் பொங்கி வையம் நீற்றிட மிஞ்சு வெஞ்சினம் விழிகள் பொறித்திட பஞ்ச பூதங்கள் அஞ்சி அலறிடும் - சங்காரத்
தாண்டவம்
மழுவொடு சூலம் மாவிசும் பதிர்த்திட புலியதன் ஆடை புரண்டிடக் காலின் எழுவிசையதனால் மாயை பொடிபட நடுநிசி தன்னில் சுடலையி லாடிடும் - சங்கரத்
தாண்டவம் மறைத்தல் - திரிபுர தாண்டவம் இச்சா சக்தி - (கருணை ரஸம்) இவ்வாட்டத்தில் கதக் நிருத்தம் இடம் பெற வேண்டும். கால்கள் தூக்கியாடலாகாது. இருகாலும் மாறி மாறி முயலகனை அழுத்துவதாக இருத்தல் வேண்டும். இதிலும் துடியின் ஒலி முக்கியம். கைத்துடி அபிநயம்
47

Page 27
-/நாட்டிய அரங்குAஅவசியம். மற்றைய கையில் தீயிருத்தல் வேண்டும். இவை மாறி மாறிச் சுழல வேண்டும். திரிபுரம் தொலைவில் இருப்பதாக அதை அம்பு அல்லது திரிசூலம் கொண்டு எரிப்பதும் பாவனை, திரிபுரத்தை அணுகுவதும் வில்லை வளைப்பதும், குறி வைப்பதும், மெள்ள முன்னேறுவதும் திரிபுரத்தை எரிப்பதும் முக்கிய அம்சம். இறுதியில் திரிபுரம் எரிதல் வேண்டும். நடன இறுதியில் இரு காலும் நிலத்தில் ஊன்றி ஊன்றி ஆட வேண்டும். அறிமுகம் எழுந்தனள் பைரவி
முழங்கினள் வில்லு
அழிந்தது முப்புரம்
கழிந்தது மும்மலம்
எடுத்தனள் அம்பு
விடுத்தது கண்டிலம்
படுத்தது திரிபுரம்
பொடிபட் டொடிந்தது
தொடுத்தவள் விடுத்ததும் கடுத்தது செவ்விழி பொடித்தது திரிபுரம் மலமது மாய்ந்தது
திரிபுரத் தாண்டவம் வில்லு வளைத்தனளே வல்லவி திரோதயி - வில்லு மெல்லு மும்மலம் விரட்டி அல்லல் தருபவற்றை அழிக்க எண்ணி - வில்லு
பொல்லா அசுரர்புரம் எம்மை வருத்துவதை
48

- / இரத்தினம் A
நல்லாள் தடுக்கவெண்ணி பாசப் பிணியறுக்கும் - வில்லு
விழிமுந்தியதோ கணைமுந்தியதோ பழிபாவமறு குறிமுந்தியதோ புருவநெறித்தெரி பொறிகள் பறந்திட வெருவு சினத்தொடு வயிரவிசங்கரி - வில்லு
அருளல் - ஊர்த்துவ தாண்டவம்
ஞானசக்தி (கருணை, ஆனந்தம் ஆகிய ரஸங்கள்)
இதிலே இடது பாதம் தூக்கல் வேண்டும். இதில் சிவனும் பார்வதியும் ஒரு நடனப்போட்டியில் ஈடுபடுவ தான கற்பனை. சிவனுக்கு ஞானசக்தியும் பார்வதிக்கு இச்சா சக்தியும் ஈடுபடலாம். இன்றேல், தனியே சிவனோ ஞானசக்தியோ ஆடலாம். இதில் ஆட்டம், விரைவாக இருத்தல் வேண்டும். இரண்டு காலும் குஞ்சிதமாகக் காட்டலாம். மேடை முழுவதும் ஆடலாம். இறுதியில் சிவன் மேடைக்கு முதுகுகாட்டி காலை நன்கு உயர்த்தி ஆட வேண்டும். பார்வதி நடனமாடுவது நின்றுவிட வேண்டும். இருகால்களும் குஞ்சிதமாகலாம்.
அறிமுகம் : ஆதிப் பரஞ்சுடரை அருள் சோதி வடிவினளை
வாதக் கலைகளினால் வடி வறியா
முடிபினளை நாத உருவினளை நடை மலமறுத்
தருள்பவளை ஒதிப் பரவுவமே உள மாயை மடிந்திடவே
ஊர்த்துவத் தாண்டவம் ஆடுகின்றார் கூத்தாடுகின்றார் ஆடரங்கம் பலமாக
நா-4 49

Page 28
-/நாட்டிய அரங்கு/-
அம்மையப்பர் நின்று - ஆடுகின்றார்
கூடுமடைவு சப்தம் அலாரிப்பு ஜதிகள் யாவும் நாடி அவர் அடியில் நயம்பெற நின்று கெஞ்ச - ஆடுகின்றார்
வேணு கோபாலன் ஒத்து குழலிசை மிகப் பொழிய வாணியும் வீணை வாகாக நன்றிசைக்க கானலய விஷ்ணுவும் நாதமிர்தங்கம் போட வானரசு இந்திரனும் விளம்பு தாளம்போட - ஆடுகின்றார் அம்மையோ அப்பனோ யார் நடம் வல்லாரென செம்மைபெற நின்றவர்கள் சீராக ஆடுவதைத் தம்மை மறந்தே பெருந் தேவர்கள் நோக்கி நிற்க தமிதொம் தமிதொம் தமிதொம் தமிதொம் - ஆடுகின்றார் ஆனந்தத் தாண்டவம் - சிவன்
(பாடல்களுக்கு அபிநயம் பிடித்து சுத்த நிருத்தம் ஆடினால் போதுமானது
ஆனந்தம், கருணை ஆகிய ரஸங்கள் - விரைவு முக்கியம்)
விருத்தம்
அறிமுகம் :
திரண்முகில் முடிமிசை கதிர்விரி திங்களாட தண்புனல் கங்கையும் பொங்கியாட
50

—/ §rളങ്ങ് /-
விசையினில் சிறுசடை விரிந்தாட கரமதில் கொழுந்தாடும் கனலாடக்கைவளருங்
கனத்துடி துடித்தாடக் கேட்டுமே
அரவாட மறுபகை மழுவாட அருளுடல் புரள்புலி அதனுமே சுழன்றாட அதுகண்ட மான்வெள்கி மருண்டாட அழகுடல் படிபொடி தெறித்தாட தெருளுறத் தூக்கிய திருவடி துலங்கியாட
நானாட நீயாட நடமாடும்
நாதனே தில்லை வாழ் நடராசனே
ஆனந்தத் தாண்டவம் (ராகம் கேதாரகெளள)
சச்சிதானந்தம் நட ஆனந்தம் சிற்சபை நின்று ஒரு திருவடி எடுத்தாடும் - சச்சி
நாதவிந்து கடந்து போதமாய் நின்றாடும் வேதாந்த முடிவாம் சித்தாந்த சமரச - சச்சிதானந்த
படைப்பு துடியதனில் பாதுகாப் பபயமதில் சுடர்விடும் தீயினில் அழித்தல் நிகழ்வாம் ஊன்ற மலர்ப்பாதம் ஆன்றமறைப்பிடமாம் நின்ற மலர்ப்பாதம் ஞாலத்த ருளிடமாம் -
சச்சிதானந்த எல்லையிலாப் பெருந் தில்லை வெளிதனில் சொல்லரும் பதவணத் திறமொடு நடமிடும் சுத்தநிருத்திய நாத தத்தவம் தத்திமி திமிகிட தோம் தோம் என நாதம் ஒங்கொலி ஒம் ஓம் எனும் - சச்சிதானந்த
51

Page 29
அமரதேசி, தன்வழி நுழைந்த ஆவிகி
சில குறிப்புகள்
இவ்விரு நாட்டியங்களும் இராமாயணத்தில் மிதிலைக் காட்சி நிகழ்ச்சிகளைச் சித்திரிக்கின்றன. இவை இரண்டும் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு நடன நிறுவனங் களுக்காக எழுதப்பட்டன. இவற்றில் ராமநாடகக் கீர்த் தனை, கம்பராமாயணப்பாடல்கள் ஆகியன ஏற்ற இடங் களில் சேர்க்கப்பட்டுள்ளன.
அமரகீதம் நாட்டியத்தை மேடையேற்ற விரும்பிக் கேட்டவர்கள் ஆரம்பத்தில் இலங்கை நாட்டைப் போற்றி ஆடல் பாடல் வருதல் வேண்டும் எனக் கேட்டதற்கு இணங்க ஆசிரியர் பிரதியை அமைத்தார்.
52

அமரகீதச்
(நாட்டிய நாடகத்திற்குக் கட்டியமாகப் பெண்கள் பலர் கூடி ஆடிப் பாடுதல்)
சீராமன் கதைபாடி நடமாடுவோமே சீரலங்கைத் திருமாதர் தமிழழகு நடத்தாலே - சீரா
ஒர் மாதின் நிறைகாக்கும் ஒரு நோக்கில் பார் காக்க வந்த எங்கள் பரந்தாமன் - சீரா
உயிரினுக் குயிராகி உலகளந்த திருமாலே தயரதனின் தவத்தாலே திருமகனாய் வந்தான் ஒரு முறையில் மரமேழு சரந்துருவ விடுத்தான் கேடிபெருந் தாடகையை சாடிவிண்ணில் வீட்டினான் - 6grr
பாதது ஸ்ரியாலகல்யை பாவபவம் போக்கினான் வேதன்சிவன் பெருவில்லை நொடிவேகம் ஒடித்தான் ஒடித்ததனால் ஜானகியின் துடியிடையைப் பிடித்தான் கொடியவளாம் கூனிசூதால் நெடுங்கானம் புகுந்தான் - grrr
கானகத்தில் மாரீசன் மானுருவில் மாயஞ் செய மாதவளும் அதை வேண்ட நாதனுமே
தொடர்ந்ததனின் சூதுகண்டு அம்பைவிட சீதாவோ லட்சுமுணா என்ற சோக ஒலி கேட்டு நினைவிழந்தாள் தேவி சீதை - சீரா
53

Page 30
-/நாட்டிய அரங்கு A
(காட்சி ) (அசோகவனம் - உயர் மரங்கள் நிற்கும் சோலை. சீதை ஒரு மரத்தடியில் இருக்கிறாள். பல அரக்கியர் அவள்முன் நின்று ஆடிப் பாடுகின்றனர்)
எங்கள் உயர் தாய்நாடு ஈழமணித் திருநாடு தங்கமென உலகோர்கள் சாற்றும் தவநாடு இங்கிதனின் எழிலிற்கு இணையேது நிகரேது -எங்கள்
மூவுலகும் ஏவல்செய முறைகொண்ட ராவணனார் பூவுலக அரசிதற்கு இணையேது நிகரேது சாவாத புகழ்சூழும் இதற்கு இணையேது நிகரேது
gT5956
திசைதோறும் ஈசுரனின் திருக்கோயில் திகழும் இசையூறும் பாடல்களில் அருச்சனைகள் நிகழும் வகையிலா ராவணனார் வணக்கத்தைப் புகழும் -
எங்கள்
(வேறு) வானைப் பிளந்த தேனாறுகள் மலைகளை மகிழ்ந்தாள கன்னியர் கால்படு கழனிகள்
பொன்னொடு முத்தாள தோளில் வலந்தவழ் காளைகள்
தேவரை மல்லாட யாழையும் வாளையும் வென்றனம்
ராவணன் நன் காளும் - எங்கள்
(வேறு) ஞாயிறும் திங்களும் திரண்டு
லங்கையில் நல்லதொண்டு புரிவதுண்டு இதைக் கண்டு
54

--7 Θυβξιοαίο Α --
தேவர்கள் முனிவர்கள் சேர்ந்து சினமே கொள்வதுண்டு - எங்கள்
(ஒவ்வொரு சரணத்திற்கும் தனித்தனிக் கூட்டம்
வந்து ஆடல் ஏற்றது. இதன் பின் கூட்டம் மறைய, ஒளி மங்கி வெளிச்சம் வர அனுமான் சீதையை அணுகல்)
அனுமன் என்னென்று வர்ணிப்பேன் அம்மா
சீதை
சிறீராமன் எழிலுருவை - என்னென்று
தன்னேரிலாதான் தசரதராமன் பொன்னேரழகைச் சிறியேன் நான் -
என்னென்று வில்லிலங்கு தடந்தோளும் வீரவிழி விறல் நோக்கும் அல்லல் நீக்கும் அருள் சிரிப்பும் யாரையுமே ஆட்கொள்ளும் - என்னென்று
மன்னனுக்கு இந்த வார்த்தை சொல்வாய் உன்னை வேண்டினனே அனுமானே -
மன்னனுக்கு இன்னும் இரண்டொரு மாதம் இருப்பன்யான் பின்னர் ஆவி பிடித்திலேன் என்று -
மன்னனுக்கு
வந்தெனைக் கரம் பற்றிய காலத்து இந்த இப் பிறவிக்கிரு மாதரைச் சிந்தை யாலுந்தொடேன் என்ற நல்வரம் தந்த வார்த்தை திருச்செவி சாற்றுவாய்
ஈண்டு நானிருந் தின்னுயிர் மாயினும் மீண்டு வந்து பிறந்துதன் மேனியைத் தீண்ட லாவதோர் தீவினையிலா வரம்
55

Page 31
-/நாட்டிய அரங்கு/-
வேண்டினாள் தொழுதாள் என்று
விளம்புவாய்- மன்னனுக்கு (சீதை கண்மூடிச் சோர்ந்து பழைய காலத்தைச் சிந்தித்தல்)
(காட்சி 2) மேடையின் பின்புறத்தில் ஒரு உப்பரிகை. உப்பரி கையின் கீழே மிதிலை நகர் வீதி வீதியில் பல குழுவினர் பலவித நடனம் ஆடுகின்றனர். சிலர் கும்மியடிப்பர்; வேறு சிலர் கோலாட்டம் ஆடுவர்; மற்றும் சிலர் பந்துவீசி விளையாடுவர். சிலர் நிறப்பொடி ஊதி விளையாடுவர்; சிலர் நடனம் பயில்வர்; மற்றும் சிலர் ஊஞ்சலாடுவர். இவ்வாட்டங்கள் ஒன்றன்பின் ஒன்றாக நிகழும். இவ்வாடல் களுக்கு இசை வாத்தியத்தில் மட்டுமே அமையும். ஆடல் களை உப்பரிகையில் வந்து சீதையும் தோழியரும் இடை யிடைப் பார்த்துப் போவதாகக் காட்டலாம். கடைசியாக அமையும் ஊஞ்சல் நடனத்திற்குப் பாடல் வருமாறு. பின்வரும் ஊஞ்சல் நடனத்தின் போது சீதை மட்டும் தனியே உப்பரிகையில் தோன்றி ஆட்டத்தைக் கண்டு மகிழ்வதாகக் காட்டல்,
தென்றலுதைத் தாட்டுகின்ற சிங்காரத் தேன் ஊஞ்சல் என்றும் இளையவராய் எமை ஆட்டும் எழிலூஞ்சல் - தென்றல்
சென்று சென்று வானளந்து திரும்பி வந்து மண் அளைந்தே நின்று பார்க்கும் ஆடவர்கள் நெஞ்சை ஆட்டும் நல்லூஞ்சல்
வளைந்து நின்று வனிதையர்கள்
56

- - 7 8σΦθοπίο Α --
காலுந்த ஆண் நெஞ்சை அளைந்துவரும் வடிவூஞ்சல் ஆனந்தப் பொன்னூஞ்சல் சிந்திசைக்கும் சேயிழையார் தேனுாறும் இசைபாட சந்தமொடு தானாடும் மகரந்தம் பொழி ஊஞ்சல்
இத்தருணத்தில் விஸ்வாமித்திர முனிவர், இராமர், இலட்சுமணன் ஆகிய மூவரும் வீதியில் வருகின்றனர். உப்பரிகையில் சீதை நிற்கிறாள். இராமரும் சீதையும் ஒரு வரை ஒருவர் கண்வைத்தபடி நிற்கின்றனர். அக்கணம் இருவருக்கும் ஏற்பட்ட உணர்வை ஏற்ற இசையால் சித்தி ரிக்கலாம். இராமர் மற்றிருவருடன் மறைய, சீதை தனியே புலம்புதல். மேடையின் முன்புறம் சீதை வந்து ஆடுதல்.
சீதை யாரோ இவர் யாரோ - என்ன பேரோ அறியேனே
கார் உலாவும் சீர் குலவும் மிதிலையில் கன்னி மாடந்தன்னில் முன்னே நின்றவர் - யாரோ
சந்திர விம்ப முக மலராலே என்னைத் தானே பார்க்கிறார் ஒருகாலே அந்த நாளிலே சொந்தம் போல உருகிறார் இந்த நாளில் வந்து சேவை தருகிறார் - யாரோ
காட்சி 3 (அதே இடம் - மங்கிய ஒளி மெதுவாகத் துலங்கி வருதல், இராமரும் சீதையும் ஒருவரை ஒருவர் கற்பனையில் காண்கின்றனர்)
சீதை வில்லணிந்த விறல்வீரன்
வீதிவலம் வாரானோ
57

Page 32
-7pI'...u ക്രr്രൂ/-—
இராமன்
இராமன்
(சனகமகாராசன்
சனகர்
முனிவர்
மெல்லுடலைத் தணலாக்கும் தென்றலே நீ சொல்லாயோ - வில்லணிந்த
மாடம் நின்ற பொற்கொடியின் மதி முகத்தைக் காணேனே தென்றலுடன் நிலவுவந்து செய் அவத்தை அறியாளோ
நிலைகுலைந்த என் நெஞ்சில் நல்லமுதம் வார்க்கானோ மலர்வாளி மன்மதனை தன்னம்பால் சாய்க்கானோ
எனைக் கொல்ல என்று நமன்
மன்மதனை வேண்டினனோ கணைமலராய் மேனியெங்கும்
இணைந்துநின்ற இவள் யாரோ
காட்சி - 4 சபை - சனகன், முனிவர் இராம இலட்சுமணர்)
பந்தபாசம் விட்டு சிந்தை சிவனின் வைத்த அந்தணாள, முனிவ சொந்தம் போலத் தொடர் இந்த இளைஞர்
urti எமக்குச் சொல்லும் ஐயா
வெற்றிமாது புகழ் வீரதயரதனின் புத்திரர்கள் இவர் துட்ட அசுரர் தொல்லை தீர்க்க வந்த அரும் தீர புருஷர் இவர் அரசே
58

-/இரத்தினம்/-
முனிவர் யாரிவன் அறியாயோ-அரசே
யாரிவன் அறியாயோ சீராமன் எனும் பேரான் பேராலென் ரவிகுலநாதன் - யாரிவன்
பூபாரம் தீர்க்க வந்த மாவீரன் வில்லான் பாபஞ் செய் அசுரரை கோபஞ்செய் தழிப்பவன் - யாரிவன்
சனகன் வில்லின் வீரன் இவனென்று நல்லசெய்தி நவின்றீர் இன்று வல்ல சிவனார் தனுசொன்று செல்வி சானகி பேரில் உண்டு
இன்று வரை எவருமே வில்லை சென்றணுக முடியவுமில்லை சிவன் தனுதனை வளைப்பான் சுபமகள் சீதைகரம் வரிப்பார்
இராமன் ஒரு வாத்திய இசை நடனத்துக்கு இயைய வில்லருகே போய் வில்லை எடுத்து வளைக்கிறான். வில் முறிந்துவிழல். இம்முக்கிய நிகழ்ச்சிக்கு ஏற்ற இசை ஒலித்தல், இராமன் தொடர்ந்து ஆடி கம்பீரமாக நிற்றல். அரண்மனைப் பெண்கள் பலர் வந்து ஆடுகின்றனர்.
பாடலுக்கு அபிநயம் பிடித்து ஆட முன்னணியில் ஒரு பெண் ஆடலாம். ஏனையோர் ஏற்றவாறு கூட்டாய் ஆடலாம்.
எடுத்தனன் வில்லை - சீராமன் தொடுத்ததும் ஒடிந்தது விழுந்தது - எடுத்தனன்
வில்லை சீராமன்
59

Page 33
-/நாட்டிய அரங்கு/-
மாதர்கள் களித்தார்
மாதவர் துதித்தார்
தேவர்கள் இசைந்தார் பாபர்கள் இடிந்தார் - எடுத்தனன் வில்லை
காட்சி 5
(அரண்மனை அந்தப்புரத்தில்) (தோழி ஒருத்தி வில் வளைத்த நிகழ்ச்சியைச் சீதைக்குச் சொல்கிறாள்)
தோழி வில்லை வளைத்தனனே
சீதை
வீரசுந்தரன் ஒருவன் - வில்லை வல்லவன் கைவண்ணன் வடிவொழுகும் கார்வண்ணன் - வில்லை
சொல்லில் அடங்காத தோற்றமும் முகப்பொலிவும் எல்லோரையும் மயக்கும் எழிலுருவும் உடையான் - வில்லை
கன்னி மாடந்தன்னில் அன்று கண்வழி நுழைந்தவனோ இன்று தெய்வ வில்லை எடுத்து முறித்தவன் - கன்னி மாடந்தன்னில்
என்றும் உள்ளத் துன்பந் தன்னை யார்க்குச் சொல்லுவன் என்றும் பிழையா என்றன் உள்ளம் இனிமேல் தவறுமோ - கன்னி மாடந்தன்னில்
60

-H இரத்தினம் A
காட்சி 6
(திருக்கல்யாணம் - இதில் வேதசுலோகம் சனகன் மகள் சீதையை இராமனுக்குப் பாணிக்கிரஹம் செய்தல் "இயம் சீதா மம சுதா” எனும் சமிஸ்கிரத ஸ்லோகம்
முனிவர் பெரியோர் ஆசீர்வதித்தல்) இராமரும் சீதையும் ஆடல்)
இருவரும் என்ன மாதவம் செய்தோமோ - நாம்
சீதை
இராமன்
என்ன மாதவம் செய்தோமோ - நாம்
முன்னர் மனம் பொருந்தி வந்து
பின்னர் மணம் முறையில் செய்ய - என்ன
மாதவம் செய்தோமோ
திடந்தேறி அருகில்வந்து திருமேனி தீண்டவும் தடந்தோளில் தலைபுதைத்து தனிமொழிகள் சொல்லிடவும் - என்ன
மாதவம் செய்தேனோ
தோள் காதல் கதைகள் சொல்ல துவளிடையோ நடமாட நாள் எல்லாம் புதுமணத்தே நாம் கூடிக் கொண்டாட - என்ன மாதவம்
செய்தோமோ
இருவரும் ஒருங்கிணைந்து நிற்றல் - திரை)
61

Page 34
தன்விழி நுழைந்த ஆவிஉசி (விருத்த நடையில் பாடல் - )
ஜானகி வளர் மிதிலை நகரின் சிறப்பைக் கேளிர் தேனதி சிந்து தாமரை வளர் தெய்வ மாதினை வானவர், என்றும் மகிழ்ந்து வாழ்த்திப் பரவக் காணுவீர்
(பெண்கள் ஆடிவருதல்)
பாட்டு மாதராடும் மாடம் யாவும்
காதலோடு கொடிகள் ஆடி வேதம் நாடும் வில்லின் வீரன் பாதம் காண்போம் என்று பாடும்
வானம் எழுந்த கொடிகள் எல்லாம் ஞான ராமன் நாமங்கூவி ஜானகிக் கொரு நாயகனென கானம் பாடிக் கைகள் கொட்டும்
(மிதிலைக் காட்சிகள் - வீதியெலாம் கோலம் இடுதல். தோரணங்கட்டி அலங்கரித்தல் ஆகியன நடைபெறும். அரண்மனையின் கன்னி மாடம் மேடையின் பின்புறத்தில் அமைக்கப்பட்டிருக்கும் - தெருவில் நடைபெறும் காட்சிகளை சீதை மாடத்தில் இருந்து தோழியருடனும் தனித்தும் பார்வையிடல் - பல பெண்கள் ஆடல்-கூட்டு நடனமும் மாறி மாறிப் பாடல்களுக்கு அபிநயம் பிடித்தலும்)
வளமான கலையாவும் இளமாதர் அழகாலேயாம் நவமான ரசமெல்லாம் அவர் மேனி அசைவாலேயாம் - வளமான
62

—/ áളങ്ങ് / —
விழியாலே அவர் பேசும் மொழியெல்லாம் கவியாகுமே நெஞ்சாகம் தாலாட்டும் மென்மூச்சு இசையாகுமே - வளமான
தாவியவர் தழுவுநிலை ஒவியமாய் உயிராகுமே பொற்புறவே அவர்நிற்கும் அற்புதமும் சிற்பமாகுமே- வளமான
அடி எடுத்து அவர் நடக்கும் படிவ மன்றோ பரதமானது உடல் பாதி உமையாலன்றோ நடராசன் நடங்கொண்டது - வளமான
(பெண்கள் ஊஞ்சல் பாட்டு, பாடி ஆடுதல்)
மரகதக் கமுகின் மேலே மல்லிகை வளைத்துக் கட்டி மாதரார் ஆடுகின்றார் ஊஞ்சல் நல்ல ஊஞ்சல் - அங்கு ஆடவர் மனமும் சேர்ந்து ஆடும் ஆடும் - மரகத
ஊஞ்சலி லிருந்து பெண்கள் யாழ்நரம் பிறுக்கி வாங்கி ஆசையொடு பாடுகின்றார் ט6-L"חוL (6- וחוL ஆடவர் சேர்ந்தா டுகின்றார் ஆடல் ஆடல் - மரகத
ஊஞ்சல் உதைத்திடும் கால்களில் சலங்கைகள் இசைபாட
63

Page 35
--/நாட்டிய அரங்கு /-—
வாஞ்சையில் வந்தணை வண்டுகள் சிந்தொடு சதிராட ஏங்கிய மனத்தொடு இளைஞர்கள் காதலில் தள்ளாட ஓங்கியே விண்மிசை பண்ணொ ஊஞ்சல்கள் எழுந்தாட - மரகத
(வீதியிலே ராம லட்சுமணர் விஸ்வாமித்திர முனிவருடன் வருதல் - ஏற்ற இசை - சீதை அப்போது கன்னி மடத்திலே நின்று பார்த்தல். இருவரும் காதலால் கண்ணொடு கண் நோக்கல் - அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் எனவரும் பாடல் ஒலிக்கின்றது.
பாடல் : எண்ணரும் நலத்தினாள்
இளையவன் நின்றுழி கண்ணொடு கண்ணிணை கெளவி ஒன்றையொன்று உண்ணவும் நிலைபெறாது உணர்வும் ஒன்றிட அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்
சீதை யாரோ இவர் யாரோ
என்ன பேரோ அறியேனே
காருலாவும் சீர்குலவும் மிதிலையில் கன்னிமாடந் தன்னில் முன்னே நின்றவன்
சந்திர பிம்ப முகமலராலே என்னைத்தானே பார்க்கிறார் ஒரு காலை
அந்த நாளில் சொந்தம் போல உருகிறார் இந்த நாளில் வந்து சேவை தருகிறார்
64

-/இரத்தினம்/-
இராமர்
யாரென்று அறிந்திலனே' - என் ஆருயிர் கவர்ந்தவள் - யாரென்று
பொன்னின் சோதியும் பொலிமலர் நாற்றமும் கன்னியர் மாடந்தனில் அன்னமாய் ஆடினாள் - யாரென்று
வேலோ அவள் விழிகள் காலோ கிண்கிணிகள் கரும்போ அவள் மேனி மருந்தோ ஒயிற்பாணி - யாரென்று
கண்ணுள் பாவாய் நீ யாரென்று கூறாய் நீ மண்மிசை எனைக் கொண்ட மாண்பாளே தோகாய் - யாரென்று
(முனிவருடன் ராம லட்சுமணர் சென்று மறைதல் - சீதையின் தோழியர் பந்தாடி மகிழ்கின்றனர். பந்தாட அவர்கள் அழைப்பை நிராகரித்துச் சீதை துயருடன்
இருத்தல்)
இதை
நா-5
கயல்விழி நீர் சொரியக் கலங்குகின்றேன் - நாதன் கருணை உளம் கொண்டு வருவானோடி தோழி வருவார் வருவார் என்று வழிமேல் விழி
வைத்தேன்
தருமம் இதுதானோ தயவும் புரியாரோ கண்டதும் என்மனதைக் களிக்க வைத்தாரடி காத்திருக்கும் என்னைக் கலங்கிட வைப்பாரோ அலையும் என்மனத்தில் அமைதி குடிகொள்ள ஆனந்த நாதனவன் அணைந்திட வருவானோ
65

Page 36
-/நாட்டிய அரங்குA
வேதனை மீதுறப் பாயுதே தோழி வேந்தன் அவனின் பராமுகம் ஏனோ - கயல்விழி
தோழி 1 நாதனைத் தேடினையோ சீதா
ராஜ இளங்குமரி - உன் மோன நிலை கண்டு நாதன் மோகனமாய் வருவான்
தோழி 2 காதலும் மிகக் கொண்டு - சீதா
கலங்கிட நிற்பதும் ஏன் உன் கனிமுகம் கண்ட பின்பும் நாதன் வாராதிருப்பனோ கேளாய்
தோழி 3 நிதம் அவனைத் தேடி
நிம்மதி இழந்தனையோ சீதா உன் மனக் கவலை நீக்க நாதனவன் மனம் அறிந்தே வருவான்
தோழி 1 வண்ணக் குமரன் உன் நாதன்
வந்தணைந்தே மகிழ்வான் - இந்த அணங்குகள் கூறும் வார்த்தையைக் கேள் ஆறுதல் நீ கொள்வாய் ஜனகமகாராசன் அவை - முனிவர் இராமனை ஜனகமகாராசனுக்கு அறிமுகம் செய்தல்) முனிவர் மிதிலை ஆளும் மன்னவனே
வில்லையாள் பூரீராமன் இவனே நிதமும் சதியே சூழும் அரக்கர் கதி குலைத்த ரவி திலகனே - மிதிலை
படைக்கலங்கள் இவன்பேர் கேட்கில் அடைக்கலமாய் அவன் கால் புகுமே சேதியிதனைத் தெரிந்து கொள்வாய்
66

-H இரத்தினம்/-
ஜனகன்
நீதி ஜனகன் மகாராஜனே - மிதிலை
ஆதிபிரான் அரனளித்த தனுவொன்று சீதைகரம் வரிப்பார்க் கெனவுண்டு -முனிவரே தூக்கியதனை நிறுத்தி வளைத்து வீக்கிவில்லை விடுவார் யாரோ திருவேயனையாள் கரத்தைப் பற்றும் உரிமை அவர்க்காம் உண்மையறிவீர் -
ஆதிபிரான்
(இராமன் வில்லினை எடுத்து இலகுவில் வளைத்தல் - அதற்கு ஏற்ற இசை வாத்தியத்தில் ஒலித்தல் - பின்வரும் பாடல்
LurT Gü)
தடுத்து இமையாமல் இருந்தவர் தாளில் மடுத்ததும் நாண் நுதி வைத்ததும் நோக்கார் கடுப்பினில் யாரும் அறிந்திலர் கையால் எடுத்தது கண்டனர் இற்றது கேட்டனர்.
(மங்கள இசை - பூமழை பொழிதல் - சீதை தோழியருடன் வருதல் - கல்யாணக் காட்சி - ஜனகன் தன் மகள் சீதாவின் கரம் பற்றி இராமன் கையில் கொடுத்தல். பின்வரும் சமஸ்கிருத ஸ்லோகம்)
ஸ்லோகம்
இயம் ஸிதா மம ஸிதா ஸஹ தர்மசரி தவ ப்ரதீச்ச சைனாம் பத்ரம் தே பாண்யம் க்ருஹணிஷ்வ பாணினா பதிவ்ரதா மஹா பாகா சாயா இவானுகத7^ஸ்துர
இதன் பொருள் வருமாறு)
இதோ என் மகள் சீதை
67

Page 37
-/நாட்டிய அரங்கு/-
நீ செல்லும் தரும நெறியில்
இவள் உன்னுடன் துணையாய்ச் செல்வாள்.
கையைப் பிடித்துப் பெற்றுக் கொள்வாய்
கற்பைக் காத்து மிக்க பாக்கியவதியாய்
உன் நிழல் போல் உன்னைப் பற்றி நிற்பாள்)
(இராமரும் சீதையும் சேர்ந்து நடனமாடுதல் - ஆட்டத்தின் முடிவில் அவர்கள் இணைந்து மேடை நடுவே நிற்க, பெண்கள் மலர் கொண்டு வணங்கி வருதல் - மங்களம் பாடுதல்)
68

صمه يقص قوة -45 ور
ஒரு பெண் கோயிலுள் சென்று வழிபடுகிறாள். வெளி மண்டபத்தில் இருந்த சரஸ்வதி, இலட்சுமி துர்க்கை ஆகியோரின் விக்கிரகங்களைக் கண்டு வணங்குகிறாள். பின் அவள் மனத்தில் எழுந்த ஐயங்களை நினைந்து வணங்குகிறாள்.
பெண் நாதோபாசனை நாள்தோறும் செய்தும்
ஞானோபதேசம் பெறா நாயினேன் ஆயினேன் பேதையேன் எண்ணில்பல பிறவிகள் எடுத்துமே போதமொன்றறியாப் பேதை ஆகவோ தீதறு கல்வியும் செல்வமும் வீரமும் சேர்ந்துமே சிந்தையில் சாந்தமு மில்லையே வேதாந்த ரூபா உன் பாதாந்தம் தொழுதேன் தீர்த்தருள் தேவாஎன் சிந்தையெழும் இடர்
(வேறு "கல்வியோ செல்வமோ வீரமோ. கல்வியோ (பெண் பாடிக் கொண்டு கண்மூடி ஒரு தனி இடத்தில் நிற்கிறாள் 'கல்வியோ. என்றதும் சரஸ்வதி விக்கிரகம் உயிர்பெற்று எழுந்து ஆடுகின்றது) சரஸ்வதி நிறைவான கலையாசனம்
நிலையான அரியாசனம் - நிறை அறுபத்து நான்குகலை அறிந்தவர்களல்லவோ இன்று
69

Page 38
-/நாட்டிய அரங்குA
முறையாக உலகதனில் நெறிசெலுத்தும் வல்லாளர் - நிறை
அறிவோடு ஆண்மை தந்து அளவிலாச் செல்வம் ஈந்து குறைவிலா வாழ்வுதரு நிகரிலாப் புகழ்வாய்த்த - நிறை
ஏழிசையை இணைவிரல்கள் சூழ்ந்துவரச் செய்வதெது இலகுச ராசரங்கள் மயங்கவிசை தருவதெது குலவுநடை மின்னிடைக்கு பழகுநடம் தொடுப்பதெது பொன்னுடலில் வண்ணம்பல பொருத்துபுகழ்ச் சிற்பமெது - நிறை
இப்பாடல் முடிந்தவுடன் சரஸ்வதி சிலையாகிறாள். பெண் 'கல்வியோ செல்வமோ எனப்பாடி செல்வமோ என்றவுடன் திருமகள் விக்கிரகம் உயிர்பெற்று
ஆடுகின்றது)
செந்திருமகள் சீரைத் தெரிந்தவர் சிறந்து வாழ்வரே - செந்திரு எந்தக் காரியம் எடுத்துக் கொள்ளினும் இனிது முடிப்பரே - செந்திரு
கலைகள் பலவும் கற்றுத் தேறவும் கனகநிதி பல வேண்டுமே - இன்னும் கலையிற் பட்டம் பெற்ற பின்னரும் காசுநிறைபதம் தேடவேண்டுமே விலைமதிப்பரும் ஆடல்பாடல் விரும்பிக் கற்கவும் வேண்டுமே பின்னர்
70

- / 8νΦθσαίο Α --
கலையரங்கேறிக் கவின்பெறாட்டம் காட்டிநிற்கவும் செல்வம் வேண்டுமே
செந்திரு
வேதனை நோய்களை விலக்கி வாழவும் வகைவகை விருந்துகள் விரும்பிப் புசிக்கவும் காதல் மனைவிக்கோர் மாளிகை கட்டவும் பொன்னில் நகையுடை சூட்டிச் சுவைக்கவும் ஊரிலே புகழ் பேரொடு வாழவும் தேர்த்திருவிழா சோராகச் செய்யவும் தேர்தலில்நின்று பாராள்ப வராகவும் யாருக்காகும் செல்வருக் கல்லால் - செந்திரு
நாடுகள்பற்றி ஆண்மை செலுத்தவும் நாடிய போர்களில் நன்புகழ் ஈட்டவும் சந்திர மண்டலம் தாவியுலாவவும் தந்திரமாயணு துளைத்து வாழவும் தானதருமங்கள் செய்து மகிழவும் ஞானநல்வழி நாடிநிற்கவும் நாளும் வேண்டும் செல்வமென்பதை சூளுரைத்திங்கு சொல்வேன் கேட்பீர் -
செந்திரு (திருமகள் ஆடி ஒழிந்து சிலையாகிறாள். பெண் மீண்டும் பாடுகிறாள். 'கல்வியோ செல்வமோ காரியவீரமோ எனப்பாடி 'காரியவீரமோ என்ற சொல் வரும்போது துர்க்கை விக்கிரகம் உயிர் பெற்று ஆடுகிறது)
வீரத்தினாலாகும் பெருமை - எதிலும் வெற்றியே அதன் மகிமை - வீர பாரினில் எடுத்த காரியம் யாவினும் நேரிய புகழை அளிப்பது வீரமே - வீரத்
சினக்கும் பகையின் செருக்கை அடக்கவும்
71

Page 39
-/நாட்டிய அரங்கு/-
நினைத்த தெதுவோ நிலையாய் முடிக்கவும்
வினையென ஒன்றெமை வாட்டும்
போதும்
துணிவுடன் தாங்க வேண்டுமே வீரம் - வீரத்
மண்ணையும் பொன்னையும் மகிழ்தரு
பெண்ணையும் எண்ணியபடி எமக்கு ஈவதும் வீரமே விண்ணிலே மண்ணை வலம்வந்து
துழாவவும் மண்ணோர் நம்மை வலம்வரச் செய்வது
மதே - வீரத்
(இந்நேரத்தில் திருமகள்)
திருமகள்
சரஸ்வதி
திருமகள்
துர்க்கை
என்னத்திற் கித்தனை வார்த்தைகள் எடுத்ததற் கெல்லாம் போட்டியோ
சகல உலகுமென் சக்தியே இந்தத் தத்துவ மறிந்தவர் முத்தியடைவரே - சகல சகல கலைகளும் சரிவர அறிந்தவர் அகில மெல்லாம் ஆள்பெருந் தகையவர் - சகல
கலைகள் அறியினும் கைப்பொருள் இல்லாதார் அலைவரே துரும்பென அகில முழுவதும் நிலைபெறும் மதிப்பிற்கு நிலைவரம் பொருளே தலைப்பரம் பொருளுமோர் வகையிற் பொருளே
எண்ணிய காரியம் இனிது முடிக்க என்னைப் போல வேறு யாருண்டோ -
எண்ணிய நண்ணிய காரியம் நன்மை பெறவே திண்ணிய வீரியம் தேட வேண்டும்
72

-H இரத்தினம் /-
சரஸ்வதி
திருமகள்
காரியமென்பது வீரியர் விளக்கம் சேருமே வெற்றி இவர்க்கு இணக்கம் - எண்ணிய
வீரமென்பது நெஞ்சின் ஒர்மம் ஒர்மமும் கல்வி ஒன்றாலாகும் தேர்ந்து ஞானம் தேடும் பெரியோர் சோர்ந்து உள்ளம் தாழ்வதில்லை - எண்ணிய கல்வியும் வீரமும் காரிய சித்தியும் செல்வமின்றிச் செழிக்க இயலுமோ கல்வி வீர மென்பதெல்லாம் செல்வம் தந்த சிறப்புப் பேறே - எண்ணிய
(மூவரும் போட்டியாக ஆடுகின்றனர். அப்பொழுது அசரீரி)
திருமகளாய்க் கலைமகளாய்த் துர்க்கையுமாய்
உலகனைத்தும் உய்விக்கும் ஒருமகளே பராசக்தி உலகு நிறை
சராசரங்கள் அனைத்துள்ளும் மருவுயிராய்ப் பேதமற நின்றியக்கும்
மாசக்தி அன்னையவள் திருவருளின் திறம்தெரிந்து மருளகலத்
தினம் தோறும் பரவுவமே
இதைக் கேட்டதும் மூன்று சக்திகளும் சேர்ந்து ஆடுகிறார்கள். ஆட்டம் வணங்கும் முறையில் முடிவடைகிறது)
அருளாட்டம் ஆடுகின்றாள் அன்னைசிவ பராசக்தி - அருளாட்டம் மருள்நீங்கி மன்னுயிர்கள் பிறவிப் பிணிப் பற்றறவே - அருளாட்டம் ஞானஞ் செல்வம் வீரம் நாடிநின்றேவல் கேட்க
73

Page 40
—/p'-യ ക്രly്രൂ/-—
மோனநாத விந்து கலை நமோ நமோ வென
வான விதயந் தன்னில் வகைதரு அற்புதங்கள் கான லயமோடு காட்டி நின்றே நிதம் - அருளாட்டம்
மனமாசு தானழிய வினைக ளவை பாறிட சனன மரணப் பிணி முனைப்பறுந் தொழிய - அருளாட்டம்
74

ஆயர் தேசி
(பூஞ்சோலை ஒன்றில் பாமாவின் தோழியர் பந்தாடு கின்றனர். பாமா ஆட்டத்தின் போது தூரத்தில் வந்து நின்று பார்க்கிறாள். பின் சேர்ந்து ஆடுகிறாள்.)
கண்ணனெங்கள் காவலன் காலமெலாம் காதலன் விண்ணகர வீரமகன் வேய்ங்குழலைத் தான்மறந்து எண்ணிய தெலாமெமக்கு ஈந்தருளும் நாயகன் புண்ணியன் புகழ்தனைப் போற்றிப் பந்தடிப்போமே
சேவடிச் சிலம்புகள் கலீர் கலீ ரென்றொலிக்கவும்
தாவடியில் தானைசிக்கி வீசுபந்து மறையவும்
பாவையர்கள் கைவீச்சில் பந்தலறி ஒடவும்
கோவலர்கள் கோமகனைப் போற்றிப்
பந்தடிப்போமே
(காட்சி மாறி பாமா வீட்டில் பாமா கண்ணாடியுள் முகம் பார்த்தபடி தோழிகள் பலர் உடன் நிற்றல்)
எழிலெனக்கிணை யாருளர்
ஈரேழ் உலகிலும் என்தோழி - எழிலெனக்
முழுமதியிங்கு முகமாய் வளர்ந்து விழிநகை யிவை விளங்க ஒளிரவும் இளம் உடல் தனில் துவஞம் இடைதான் வளமுலை தாங்க வருந்தி யலையவும் - எழிலெனக்
75

Page 41
-/நாட்டிய அரங்கு/-
அம்பலந் தன்னில் ஆடி நிற்பானும் அனந்த சயனம் அமர்ந்தி ருப்பானும் அம்புவி படைக்கும் அருந்தொழி லயனும் கற்பனை செய்யினும் கருத்தில மையா - எழிலெனக்
(கண்ணன் மேடைக்கு வராமலே)
முன்னிலை வரலாமோ - தேவியுன் முகதரிசனங் காண் - முன்னிலை
(வந்து கொண்டே)
என்னரும் தேவியுன்றன் எழில் நலம் ஒத்தித்தொழ என்றுமுன் புகழே பாடி இணையிலா அன்பில் வாழ - முன்னிலை LunTLDT (கோபம், பரிதாபத்துடன்)
என்னைவிட்டு இத்தனைநாள் எங்கிருந்தீரோ எங்கிருந்தீரோ என்னழகில் உயரழகாள் உலகிலுண்டோ கண்டதுண்டோ கண்ணன் (கொஞ்சலுடன்)
அன்னமே யென் ஆருயிரே அழகிற் சம மில்லாதவளே உன்னில் எழில் மிகுந்தவர்தான் உலகில் ஒருவ ரில்லைக் காண் (இருவரும் சேர்ந்து பாடி ஆடுகிறார்கள்)
[TOs கண்ணன் அழகொன்றே இன்பம் தரும்
அல்லாதன துன்பம் தரும் - உலகில் பழகினும் குன்றாத் தூய பாவை நலத்தில் தேறும் - அழகொன்றே
76

- 7 8σεξισαίο Α----
Of
அளவிலாச் செல்வம் பெற்றே அகிலமே உரிமையாக வளமிகு கல்வி கேள்வி வாய்ந்து யர்ந்திட் டாலுமே - அழகொன்றே
(ஆட்டம் முடிந்தவுடன் திடீரென பாமா ஒரு மூலைக்கு ஒடிச் செருக்குடன் கூறல்)
Ofi
ஆயிரம் கோடி அழகர்கள் கூடினும் அடியாள் அழகிற் கிணைசொல லாமோ ஐயனே எங்கள் ஆடியுள் பார்ப்பீர் அதில்காண் இருமுகம் தனிலெழு அழகிலும் அடியேன் முகவழ கதற்கிணை ஈடு கொடுக்குமோ பிறமுகம் சொல்வீர் நாதா
(கண்ணன் ஒரு வீணையைத் தொடல், பின் வீணையைப் பார்த்துச் சொல்வது போல் அபிநயம்)
கண்ணன்
ITD
கண்ணன்
வஞ்சமிலா இன்னிசையை வாரிமிக
வழங்குகின்ற அஞ்சொல்பயில் வீணை நல்லாய் ஆயிழையே
ஒரு சொற்கேள் வஞ்சியர்கள் வானவர்கள் பலரறிவார் என்
முகத்தை விஞ்சுமொரு கவின்முகந்தான் வேறெங்கும் கண்டனையோ
வண்ணத் தாமரைகள் கண்டே வாரித் தேன் உண்டிடும் வண்டே கண்டாயோ என்முகத்திற் சிறந்த கவின்மலர்கள் ஏதேனும் பொருந்த - வண்ண என்ன மமதை உனக்குத் தானடி பெண்ணே இதுபெரும் விந்தை தானடி - என்ன
77

Page 42
—/pന'-യ ക്രw്രൂ/-
t-1fTLDIT
கண்ணன்
என்னவகையில் உந்தன் முகம் இங்கு என்முகத்திலும் அழகுகூட சொல்லு - என்ன
மமதை அகிலத் துள்ள அழகுகள் எல்லாம் எந்தன் கையின் வண்ணப் படைப்புஉன் முகத்தில் ஒளிரும் மோனம் எல்லாம் என் அகத்தில் எழுந்த சிறுமென் சிரிப்பு - என்ன
மமதை வகையிதனை நீ தெரிந்து கொள்வாய் வீணகம் பாவம் வாதம் விடுவாய் பகையைப் போற்றின் பயனும் மோடி பாமா வேண்டாம் பகடி மோடி-என்ன மமதை
என்னத்தைச் சொன்னாலும் என்ன யாருமென் னழகிற்கு நிற்பாரோ - பின்னே வண்ண வடிவேலன் தான் மயிலில் வந்தாலும் வெல்ல முடியுமோ ஒயிலில் -
என்னத்தை கண்ணனெனும் தேவனும் - கள்ள மாக முன்வந்து நிற்கட்டும் வெல்ல -
என்னத்தை
வேண்டாமிந்தப் பிடிவாதம் - பாமா வினையாக முடியுமிது நிசமா - வேண்டாம்
(பாமா இறுமாப்புடன் முகம் திரும்பி நிற்றல்)
ஆண்டுபல சென்றாலும் உன்றன்
முகமதனைப் பார்க்க நான் உன்னேன் -
வேண்டாம்
இதனை நீ நன்கறிந்து கொள்வாய்
78

—/ §rളങ്ങ് / —
இனிவருவேன் மமதையில் வாழ்வாய் வேண்டாம்
(கண்ணன் கோபத்துடன் செல்லல்) (வேறு காட்சி)
(யமுனாதீரத்தில் கோபியர் சேர்ந்து ஆடல்)
விருந்தா வனத்தே வேணு கோபாலன் விரும்பியாடிய ஆட்டங்கள் ஆடுவோம் - விருந்தா
கோகுலம் காக்கக் குன்றினைத் தூக்குவான் கோபியர் கூறையைக் கவர்ந்தே ஒளிப்பான் -
விருந்தா கனியொன்று விழுத்தக் கன்றினை எறிவான் கன்னியர் உளத்தினில் கல்லினைப் போடுவான் -
விருந்தா யமுனா தீரத்தில் நந்த குமாரன் அமுதிசை வேய்ங்குழல் அழகாய் ஊதினன் -
விருந்தா கருமுகில் முளைத்த மின்னலைப் போலவன் நறும்வாய் தவழ்ந்தது நல்லிசைக் குழலே - விருந்தா
பவள வாயிதழ் குழலினில் தவழவும் * நவ நவப் பண்கள் நானிலம் ஒலித்தன - விருந்தா
குழலிசை கேட்ட குவலய உயிர்கள் அழகனின் அடிதொழ ஒடோடி வந்தன - விருந்தா
வேய்ங்குழல் நாதத் தீஞ்சுவை கேட்டவர் மாய உலகினின் மனத்துயர் விட்டனர் - விருந்தா
(வேறு - கூட்டு ஆடல், பின் ஒவ்வொருவர் வந்து தனிப் பதத்திற்கு அபிநயம் பிடித்து ஆடல்)
79

Page 43
-/நாட்டிய அரங்கு/-
கண்ணன் எந்தன் காதலனோ யாருடைய காதலனோ அறியேன் என் தோழி -
கண்ணன்
கண்படுத்த இடமெல்லாம் கண்ணன் அவன் நிற்கின்றான் எண்ணமெலாம் அவன் நிறைந்து இதயத்துள் ஆடுகின்றான் - கண்ணன்
பார்க்குமிட மெல்லாமே நீக்கமற அவன்நிற்பான் பாவையர்கள் தாகமெல்லாம் தனித்தனியே அவன் தணிப்பான்
கண்மூடி எனைத்தழுவி காதல்மொழி சொல்லி நிற்பான் பின்னோக்கி நான் பார்த்தால் இன்னொருத்தி யுடன்குழைவான் - கண்ணன்
கால்கழன்ற சதங்கையினை குனிந்தெடுத்துக் கோப்பவன்போல் காலிடறி விழவைத்து கேலிசெய்து சிரித்துடுவான் - கண்ணன் தாவியிடை பற்றிடுவான் குழைந்தவன் மேல்நான்சாய பாவியெனை விழவிட்டு வேறொருத்தி பக்கம் செல்வான் - கண்ணன் கண்ணேமானே என்று சொல்லி காதல்மொழி கெஞ்சிடுவான் கண்ணைமூடி நான்லயிக்கின் அடுத்தவளைக் கொஞ்சிடுவான் - கண்ணன்
80

—/ §ളങ്ങ് / —
(பாமா தனியே புலம்பல்)
மாதரி
ls TI DIT
நா-6
ஊதுங் குழலோசை ஊற்றும் இசையினிலே வேதனை மிகக்கூடுதே தாபமும் மிக வளருதே - ஊதும்
காதில் விழும் நாதம் - எல்லாம் காதல் மொழிந் தாலும் பேதை யென்றெண் ணாமல் - என்னை வாதைக் குள்ளாக்குதே - ஊதும்
அன்று மமதை கொண்டு அவமரியாதை செய்தேன் இன்று நான்படுந்துயர் இன்னும் நீ அறியாயோ வஞ்சம் மிகலாமோ வஞ்சி நான் பாவிசெய்த இம்சை பொறுத்தென்னை ஈடேற்ற வாராயோ -
ஊதும் உன்னகம் பேதலித்து உன்றனைக் கைவிட்ட மன்னவன் உன்னடிக்கே மகிழ்ந்து திரும்பிவர என்னா லியன்றளவும் இனிதுநான் உழைப்பேன் கண்ணே என்தோழி உன்றன் காதலை உரைப்பாய்
(பாமா தசாவதாரங்களில் சில அவதாரங்களைக் கூறல்)
(0θgώ)
ஏங்கலைகள் நெஞ்சில் என்றும் உலாவிவர
தாங்கரிய துயர் செய்த தலைவன் யார் தோழி
ஓங்கலை கொள் கடல்தனையே ஒதுக்கி
அருமறைகள்
பாங்காக வெளிக்கொணர்ந்த பெரியோனே
காண்தோழி
81

Page 44
-/நாட்டிய அரங்கு/-
(8nob) துன்பம்நிறை சாகரத்தில் சுழலவே என்மனத்தை இன்னலுறச் செய்தவன்யார் அறிவாயோ நீ தோழி முன்தேவர் கடல்கடைய மேருமலை தாழாமல் தன்முதுகில் தாங்கிநின்ற தன்நேர் இலான்
காண்தோழி (வராகம்) நெஞ்சகத்தென் ஆழ்காதல் நெடுநாளாய் உறைந்திடவும் வஞ்சமனம் கொண்டதனை நோக்காதான் யார் தோழி வெஞ்சினத்தால் ஒரரக்கன் வையம்க வர்ந்திடவும் மிஞ்சுமவன் கறுவளித்து முறைசெய்தான் அவனே
காண் (நரசிம்மம்) அல்லுபகல் அனவரதம் அவன் நாமம் நான்சொல்ல எள்ளுமுகம் கொடுத்தென்னை இகழ்ந்தானே
யார்தோழி பிள்ளை ஒரு முறைசொல்ல இரணியனைக்
கொன்றழித்த கள்ளனவன் குதினை நீ அறிவாயோ என்தோழி
(SITLD607b) என்மனத்துச் சிறுகாதல் எள்ளளவும் அளக்காதான் புன்னகையான் பொன்மனத்துப் பேராளன் யார்தோழி மண்விண்ணும் கீழுலகும் ஈரடியால் தானளந்த மன்னவனை நீதானும் மறந்தாயோ என்தோழி
கீத மினித்திடும் மாங்குயிலே - என்றன் காதலைக் கண்ணனுக் குரைத்திடுவாய் - கீத மாதுநான் வாய்விடும் வார்த்தையிதை மற்றையவர்க்கு நீ சொல்லலாமே - கீத
மாதரி இன்றேநான் முடித்துவைப்பேன் - இன்றே
82

-H இரத்தினம்/-
வண்ணமார் கண்ணன் உன்றன் வளைக்கரம் பற்றிநின்று எண்ண எண்ண இனிக்கும் வார்த்தை எடுத்தியம்பி அடிபணிய - இன்றே
கானக் குழலோசை காதில் விழுந்தின்று காலமிக வாச்சுதே - தோழி -
கானக்குழலோசை வானமுதுரட்டும் வேய்ங்குழலோய் அன்றெனது கரம் கொண்டு பிரியனெனச் சொன்ன மாயமது இன்று பொய்த்ததுவோ -
கானக்குழலோசை கோபியரோடு நின்று கொஞ்சிக் குலாவினும் கோபம் நான் கொள்வனோ கோகுலமாதவா பாபியென் மீது வஞ்சம் கொள்வது நீதியோ வார்த்தை நீ ஒன்று சொன்னால் வாழ்வதே
கண்ணா - கானக்குழ
தேனைப் பிழிந்தமுது தீங்குழல் தீட்டி ஊனை நடஞ்செய்தல் உனக்கழகோ மோனைக்குழலோடும் காதல் மிகத்தேறும் ஞான இசை ஊதும் ஆயவா
எனது உனது என்று ஈளைய கோபியர் மனம் உலரவரு மாயவா
கடலுமுகிலுமென கலந்திணைந்த தொரு உடலமைந்த நல் நாயகா
இருவிழிகள்பொழி அமுதிசையினில் உருகுமெனதுடல் தோயவா
83

Page 45
-/நாட்டிய அரங்கு/-
சீரித்த மேலிலே பூரித்த தோளிலே சிந்தைதனை பரவவிட்டென்
சிதறுமணம் பதறுமுடல் கொண்டுனது பதம்பணிந்தேன் நிதந்தொழுது - கானக்குழலோசை
கண்ணன்
(ஒரு சோலை)
கண்ணனும் விதூஷகனும் எதற்காக இந்த ஏக்கமையா - என்றும் ஈரேழுலகாளும் உமக்கேன் கலக்கமையா
பதவிசுகம் என்றும் பெரும் போகமல்ல
மதுரமொழிக் காதல் தரும் சுகமேநலம்
பாமா எனைச் சினந்து போகச் செய்தாள்
பொல்லா
ஏமாற்றமுற்றிங்கு அணைந்தேன் அன்பா
விதூஷகன் மனக்குறை நீக்க மார்க்க மொன்றுண்டு
கணமிதே என்னுடன் கடிந்து வருவீர் எழுந்து
(சோலையில் கண்ணன் விதூஷகனுடன்)
விதூஷகன் நாள்தோறும் நடமாடும் மடவார்கள் நயம்கருதி
ருக்மினி
நாலுவகைப் பாவோதும் - இசைவாணர்
காடோடும் கான்யாற்றின் கதிவெல்ல
இசைபாட
காமுற்று இங்கணைந்தார் - பெருந்தேவி
ஆடாட லயமொத்து அரும்பாடல் இவர்பாடின்
ஆனந்தம் மேலிடுமே - அடியார்கள் ஈடேறு மார்க்கமொன்று இதுபோலப்
பிறிதுண்டோ
84

-: இரத்தினம்/-
ஈறிலா ஈறையெனக்கு இசைதொடுப்பின்
கண்ணன் சொல்லும் வகையறியேனே தேவி - என்
ருக்மினி
சிந்தைகொள் காதலை மேதக - சொல்லும்
მწპiმზ}}ტჩა வில்லோன் படைத்தவோர் வெற்றிக்
கொடியோ அல்லது என்னை வருந்துமோர் படையோ -
சொல்லும் வகையறியேனே
உண்மையில்லாத துள்ளத்துக் கொண்டு வர்ணித்தீ ரென்னை சேயனே புகழ்ந்து என்றும் நான் புரிவேன் தொண்டு மகிழ்ந்து ஏழையேற்கேது வேறுவழி உண்டு-சொல்லும்
வகையறியேனே நாதா சொல்லும் வகையறியேனே நாதா - என் சிந்தைகொள் காதலை மேதக
(மாதரியும் பாமாவும் இடையே வரல்)
மாதவி
என்ன அநியாயம் உலகீர் என்ன அநியாயம் - என்ன அநியாயம் எடுத்தெடுத் துரைப்பினும் இதயமே தாங்காது - என்ன அநியாயம்
அன்னமே ஆவியேயென்று அனவரதமும் சொல்லி அபலை யொருத்தி தன்னை அணைந்திடுவார் புல்லி - என்ன அநியாயம்
பின்னோ ரழகிதன்னைப் பார்ப்பாரே யாகில் அன்னவளை மயக்குதற்கு
85

Page 46
-/நாட்டிய அரங்கு/-
ருக்மினி
LL.D/T
கண்ணன்
ஆயிரம் பொய் சொல்லிடுவார் - என்ன
அநியாயம்
இந்தவகைப் புத்தியுனக் கெந்தவிதம் வந்தது சொல் - பெண்ணே
சொந்தமிகக் கொண்டவள்போல் வந்துபல பேசுகின்றாய் நிந்தனைகள் சொல்லுவதால் எந்தபலனும் வராது - இந்தவகைப் புத்தி
பேதை யிவளுடன்
வாதாட நீயார்
ஏதிலா தவளென்று எண்ணினையோ சொல் - பேதையிவளுடன்
சத்தியம் தவறாத
பாவை நானறிவாய் எத்துணையும் பிறர்பொருளை இச்சியாதவள் - பேதையிவளுடன் வாதாட
பாமா ஒருவார்த்தை சொலக்கேள் நீதான் ஏமாற்றும் எண்ணமெனக் கில்லைதான் பேதாய் - பாமா
உங்கள் இருவரிலும் இயைந்தவர் யாரென சங்கையின் றிநானறிய பரதம் நீர் ஆடவேண்டும் - பாமா
விரத மிதுவாக விறல்மிக ஆடுவார்
86

-H இரத்தினம் A
IT DIT
ருக்மினி
உரிமையில் எனக்காவார் தெரிவீர் இருவீரும் - பாமா
(பாமா ஆடல்) இணையின்றி நடமாடுவேன் பண்ணிசை பதஞ்சொல்லி - இணையின்றி
நடமாடுவேன் விண்ணொடு மண்ணளந்த வாமனனும் நினைக்கரிய எண்ணரும் இசையடிகள் எழில்பெறத் தொடுத்துநான் -
இணையின்றி நடமாடுவேன் (ருக்மினி ஆடல்) மென்குழலின் இன்னிசைக்கு வன்தோகை விரித்தாடும் வனப்புடன் நான் ஆடுவேன் வண்ண மெலாம் கூட்டுவேன்
அனைத்துலகும் நினைத்திடினும் எனைத் திறனில் வெலத்தகுமோ -
இணையின்றி
(பாமா ஆடல் - அகம்பாவம் தொனிக்க ஆடல்)
முகில் போடும் நடையோடும்
முழங்குமின் னல்வீச்சோடும்
தகர்த்தெறி யுமிடியோடும்
சரிநிகர் சமானமென
இடிமழை புயல் இவைநிகரென துடிமுழ வவை யதிகதிசொல - இணையின்றி
(கண்ணனும் ருக்மினியும் ஆடல்)
காளிங்க நடனமாடினான் கண்ணன்
87

Page 47
-/நாட்டிய அரங்கு/-
கால்கள் மாறி நின்று காளி கால ஊழி தோன்றிட - காளிங்க நடன
ஆலகால நஞ்சு பொழிந்திட அனந்தம் தலைகளிலும் தாவித்தாவி கோலா கலமாக நின்றவன் கோகுலம் மகிழ்ந்தாடக் குதித்து குதித்து -
காளிங்க நடன
பாபஞ் செய்தவர் பதறித் துடித்தனர் ஆபத்தில் அலைந்தவர் ஆகமே பொங்கினர் ஆபத்து தவுவோன் அடிமலர் கண்டதும் கோபங் கொண்டவர் குழைந்து பணிந்தனர் -
காளிங்க நடன
கறவைகள் தம்துயர் மறந்து மேய்ந்தன காளைகள் களிப்பினில் வால்களைச் சுழற்றின குறும்புசெய் ஆயர்கள் கூக்குரல் எழுப்பினர் கோபியர் கண்ணா கண்ணாவென் றேத்தினர் - காளிங்க
(இவர்களின் நடனத்தின் போது பாமா திகைத்து சற்றே செருக்குடன் நிற்றல்)
மாதரி
TOT
பாமா - உனக்காகா தகம் பாவமே - பாமா உனக்காகா தகம்
பாவமே ஆமாறெலாம் கண்ணன் அடிவணங்கினால் போமேயுன் கோபமே தீருமேயுன் தாபமே -
பாமா உனக்காகாது
அபயம் அளித்தருள வேண்டும் அய்யனே பாவியெனக்கு - அபயம்
அழகெனும் பெருமையால்
88

—/ ടൂളങ്ങ് / —
அழகிலாத பல
மொழிந்தனன் எளியேன் மன்னித்தருள் என்னிறைவா - அபயம்
அளவிலாக் கருணையோய்
ஆனந்த ரூபனே பழமை போல்பணிசெய பாவியேற் கருள்செய்து - அபயம்
(ருக்மினி பாமா கூட்டு ஆடல் - வணக்கம்)
கண்ணன் வேய்ங்குழல் கானச்சந்தம் நண்ணினார்க் கில்லை நானிலத் துன்பம்
அண்ணல் கோகுலம் ஆடிய மாயம் எண்ணரும் ஒவிய இன்ப நேயம்
மாயவன் தாளினை மனத்தில் பூணின் மாயுமே மனிதர் பாவம் தானாய்
மாயவா முகுந்தா தீங்குழல் நாதா பேதையேம் எங்கள் ஆடல் கண்டாய்
மேதினி மீததன் புகழிசை மேலும் போதம் உற்றிடப் பாலித் தருள்வாய்
{ருக்மணி பாமா இருவரையும் கண்ணன் ஆசீர்வதித்து அணைந்து, மூவரும் சேர்ந்து இசைக்கு ஏற்ப ஆடுதல்)
முற்றும்
89

Page 48
கட்டியம்
தெய்வூதி திருமணசி
நாத மத்தளம் ததீம் ததீம் என நாளும் வேண்டும் தமிழ் தமிழ் என நாடகத் தமிழ் நாடி யாடிட நாமகள் அருள் சேர்ந்து போற்றுவம்
(அமுதவல்லி சுந்தரவல்லி ஆடுதல்)
முருகன்
நீலமாமயில் நிதமும் ஆடிடும் பாலகன் எனப்பலரும் பாடிடும் வேலனே
சீலனே சிவகாமி மைந்தனே சண்முகா ஒல மிட்டுனை வேண்டினோம் சண்முகா
தேவர் சிறையை மீட்க வந்த தேவ தேவன் சீரடி தன்னை மேவு மெம்மை மறந்துபோவதோ தேவ குஞ்சரி பாலனே வடிவேலவா
(தவம் செய்தல்) சரவணபவ ஓம் சரவணபவ ஒம் அறமென உலகில் நிலைபெறும் புகழோய் -
சரவண எளியவர் களிசெய் அழகியல் உருவோய் -
o சரவண (திடீரென முருகன் தோன்றல்)
மாதவஞ் செய்யுநல் மாமணிகாள் - உங்கள்
மாதவ நோக்கின் கருத்துரைப்பீர்
90

-7ടുളങ്ങ /-—
அமுதி
முருகன்
காதலால் உங்கள் சேவடி போற்றினோம் காத்தருள் செய்தல் உங்கள் கடன் மன்னு மயிலேறும் வண்ண வடிவேலன் மன்றல் தனை எண்ணி மாதவம் செய்திருந்தோம் தேவர் அருஞ்சிறை மீட்டபின் உங்களை தேடிக் கரம்பிடித் தாண்டிடுவேன் மேவும் இந்திரன் பாலணைந் தமுதேநீ மேலாம் தவமங்கு செய்திடுக சுந்தர வல்லியோ பண்பா லணைந்து வேடர் குலத்தினில் வாழ்ந்திடுவாய்
(அமுதவல்லி தவம் செய்தல்)
"சரவணபவ ஒம் சரவணபவ ஓம்"
(பின் எழுந்து சேடியருடன் பாடி ஆடுதல்)
கோலமயி லேறும்கும ரேசன்வரும் பருவமிதே கோகிலமே மாங்குயிலே தூதொருகால்
சொல்லிரோ சரவணத்தில் கையளித்த கந்த முருகேசன்
GT6)GT மறந்தனனோ மாறினனோ மயங்கியுளம்
மாழ்கிறதே
வேலைத் தொட்டு ஆணை தந்தவா - இந்த வேளை வந்து என்னைக் காத்தருள் காக்கும் வேலென் றுனைக் கூறினும்
சொல்லைக் காக்கும் நெஞ்சம் மறைந்து போனதோ
நாணம் மானம் யாவும் விட்டு நான் நாடி யுன்றன் புகழைப் பாடினேன் பேணிக் காக்கும் உள்ளம் இல்லையோ
91

Page 49
-/நாட்டிய அரங்கு/- பேதை என்றன் கூவலும் வீணோ
சரவணப் பொய்கையில் அன்று தவஞ் செய்திருக்கையிலே அரனார் திருமகனார் - கனிந்து அன்புடன் முன்தோன்றி பேசாத பேச்செல்லாம் - பேசியென் பேதை மனங்கவர்ந்தான் தேசம் அறியவெனை மன்றல் செய்வேன் எனமொழிந்தான்
கூரிலை வேல்மேல் கை - வைத்தே ஆணையும் செய்து தந்தான் ஆரணங்கே கவலை வேண்டாம் தேறுதல் கொள்க வென்றான்
குளினை மறந்தனனோ - என்ன சூதினை எண்ணினனோ நாள்பல சென்றுமே தான் இன்னும் நாடியே வந்திலனே
யாரிடம் சொல்வேன் தோழி பாரிலிலாப் புதுமை இதை - யாரிடம்
கூரிலை வேல் கொண்டு கான மயிலேறி
வீர னெனச் சொல்லி வெருட்டி முன் நின்றானடி - யாரிடம்
வேலிதைப் பாரென்று வெருட்டினான் அவ்வீரன் விழிமீட்டி நானோக்க
92

-H இரத்தினம் A
அமுதி
குறத்தி
விழுந்தது அவன்கைவேல் - யாரிடம் மயிலினை முன்விட்டே அழகிது என்று சொன்னான் பயில்நடை நான் காட்ட பறந்தது அவன் மயிலும் - யாரிடம்
கிளியினைக் கண்முன் வைத்து மொழிவையோ இனிமை என்றான் என்னிதழ் நான்விரிக்க புள்ளுமே பறந்ததடி - யாரிடம் குன்றெறி கைவேலான் என்னக நகைகண்டு வென்றனை என்று சொல்லி என்னடி வீழ்ந்தானடி
(குறத்தி வருதல்)
வஞ்சி வந்தனளே - மலைக்குறவஞ்சி
வந்தனளே இன்தமிழ் வாணரும் நின்றே ஏத்திடும் குன்று தோறாடிடும் குமரன் குலக்கொடி
வந்தனளே
மங்கையே உன்றன் அங்கை விரித்திடில் அங்குன துள்ளம் இயங்குநற் சங்கைகள் பங்கமடைந்திட மங்கலச் செய்திகள் பொங்கி யிறைந்திட சங்கதி கூறுவன் குறத்தியே உன்றன் பெயரை உரை உரைத்திடில் என்றன் கைதனைக் காட்டுவேன் தேமருவிய தென்தமிழறம்
சேர்ந்தாய தெங்கள் மலையே
93

Page 50
-/நாட்டிய அரங்குA
9|CUpg5 குறத்தி
s9 (p5
குறத்தி
9(lp25
பாமருவிய பண்ணிசை தவழ்
பாடல் எங்கள் ஆறு நாமருவிய வாய்மைசேரும்
நாணயம் எங்கள்நாடு பூமருவிய மதுகரத்திசை
சேர்ந்த தெங்கள் மொழியே குறத்தி இதோ என்றன் கை சொல்லுமென்குறி வெல்லத் தவறிய தில்லை ஒருகாலும் மெல்லியே இதனை நல்லாய் அறிந்துகொள் உள்ளம் இருந்துனைக் கொள்ளை யடித்த குமரன் அணைகுவன் சொன்னபடி யெல்லாம் குறத்தி
சோதனை தீர்ந்திடுமோ பன்னிரு கைவேலன் என்னை
மணந்திட எண்ணுவனோ எத்தனை ஊழிகளாக
எண்ணித் தவம் புரிந்தேன் முத்தமிழ் வேலவனை நான்
முறைகொள மார்க்கம் சொல்வாய்
முருகன் என்றொருகால் பாடிடுவாய் முருகன் - திருமுருகன் மால்மருகன் உருகுமடி யாருணர்வில் எழுநல் உதயகுமரன் உமைகுமரன் முருகா முருகா முருகா அமரர் சிறையை மீட்ட உமையின் அருமைக் குமரா - முருகா உருகும் அடியாளர் இதயம் நிறைந்து கனிய அருள்வாய் - முருகா
94

-/இரத்தினம் A
முருக
அமுத
முருக
s9(p;5
முருக
(இருவரும் ஆடி கூட்டியம்
(முருகன் தோன்றல்) அமுதே அமுதே அமுதே என்றன் மனதில் என்றும் நின்று காதல் பொழியும் - அமுதே உன்றன் துயரைத் துடைக்க வந்த முருகன் இஃதோ - அமுதே என்னைய வருக எழிலரசே வருக இளையோய் வருக இசையே இனிவருக என்றன் இடர் களையும் முதலே வருக
வடிவேலா பண்ணில் ஒளிரும் அமுதே அகமதனில் எண்ணி வரைய முடியா வடிவுடைய வண்ணத் தோகை மயிலே வளரினிய
கலைமானே இன்ப வருக குமரா வருக சுகம் வாரி வருகவரி பாடிட வருக அயரா துநட மாடிட வருக மயில் வீரா கண்ணின் றிலகுமணியே காதலினால் உள்நின் றுருக்கு முணர்வே உரைக்க அரும் எழில் உதித்த அமுதே மனதிலமர் மடமானே மேடை நடுவில் நிற்க, சேடியர் கூடி வணங்கி ஆடுதல்) எந்தை வருக குமரா வருக மைந்த வருக மயிலொடு வருக செந்தமிழ் தருக இசையொடு தருக சந்தம் தருக நடமொடு தருக - எந்தை வருக
95

Page 51
M a a முத்தசி தேற்றசி
(காட்சி - இமாலயம் சிவபிரானுக்கும் உமைக்கும் திருமணம். நாதஸ்வர இசையிலோ வாத்திய கோஷ்டி இசையிலோ "மாதர் பிறைக் கண்ணியானை" சிவபிரானின் ஆசனம் மேடையின் பின்புறம் நடுவில் தேவர் முனிவர் மானுடர் வந்து வணங்குதல் அகத்தியர் மேடையில் மிக முன்பாக) பெண்கள் பலர் இருவர் இருவராக மலரொடு வந்து பாடலுக்கு ஏற்ப ஆடல் பாடல் வேத முதற்பொருளாம் விறல் மேவிய நாயகன்
உமை யவள் கரம் பிடி நன்மண நாளிது பாத மேவிய மெல்லிசை யதி கிண்கிணி
ஆடலாள் புகழ் நட இறை யவன் இன்றுகை பற்றினளே ஆதலின் இன்றெலா நாம் மலர் கைகொளத்
தூவுவமே இசை நடமொடு துதி செய்து வணங்குவமே பூதலம் வாழ்பவரும் இதை மானதக் காட்சியில் களி பெருநிலை யொடு கண்டு குதூகலிப்பர் (வணக்கத்தின் பின் சிவன் நடனம் செய்தல்)
அநந்த நவரத்ந விலஸ்தகடக கிண்கிணி
ஜலஞ்ஜல ஜலஞ்ஜல ரவம் முகுந்த விதிஹஸ்தகத மத்தலலய த்வநி
திமித்திமித நர்த்தபதம்
96

—f ($ളങ്ങ് / —
சகுந்தரக பர்ஹிரத நந்திமுக தந்திமுக
பருங்கரிடி ஸங்கநிகடம்
ஸநந்த ஸநக ப்ரமுக வந்திதபதம்
பரசிதம் பரநடம் ஹ்ருதிபஜ
ஹரம் த்ரிபுரபஞ்ஜநம் அநந்தக்ருத கங்கணம்
அகண்ட தயமந்திர ஹிதம்
விரிஞ்சிசுர ஸம்ஹிதி புரந்தர விசிந்திதபதம்
தருண சந்த்ர முகுடம்
பரம் பதவிகண்டிதயமம் பளித மண்டித தநூம்
மதந வஞ்சநபரம் சிரந்த நமழும் ப்ரணத ஸஞ்சிதநிதிம்
பரசிதம்பர நடம் ஹ்ருதி பஜே
(நடனத்தின்பின் அகத்தியர் ஆசனம் உயரல் - பூமி நடுங்குதல் - எல்லோரும் அச்சத்தால் நடுங்குதல் - அகத்தியர் சிவனை வேண்டல்)
அகத்திய ஆநந்த வத்தாண்டவ அடியிணைக்கோர்
விண்ணப்பம் தென்திசை உயர்ந்து வடதிசை தாழ்ந்ததுவே சிவன் அகத்திய உன்மொழி அகங்கொண்டு
சொல்லுகின்றேன் தென்திசை சென்றுநீ சமநிலை கொண்டிடுவாய் அகத்திய தென்திசை சென்றுநான் சமநிலை நாட்ட
வேண்டில் செம்மொழி ஒன்றுநீ தந்தருள வேண்டும் தேவாதி தேவா
சிவன் உலகில் என்றும் உயர்ந்துவாழும்
ஒப்பில்லாத மொழி யொன்றுனக்கு தருவேன் முனியே தருவேன் முனியே - உலகில்
நா-7 97

Page 52
-/நாட்டிய அரங்கு/-
அதனைப் போற்றி வாழ்த்த வேண்டும் ஏற்ற காவியம் சூட்ட வேண்டும் புதுமை நலங்கள் பொலிய வைத்து போற்றி உலகுபா ராட்ட வேண்டும் - உலகில்
வாக்கின் தேவியாய் வாணியைப் படைத்துப் பின் செந்தமிழ் மொழிச் செல்வி யாக்கியே காக்க தென்னகம் போக்கி வைப்பன் நான் ஆக்கம் ஓங்கிய அகத்திய ஞானியே - உலகில்
(சிவபிரான் கைதட்டல் - பின்னாலிருந்து கலைமகள் வருதல்)
கட்டியம் எந்த நாளிலும் இறைவனை ஏத்திப் பாடுமடியவர்
95606)
(கலைமகள்
Lumru 6ü)
விந்தைசேரும் கலைஞரும் வித்தகப் புலவரும் சந்தம் போட்டுக் கூத்தாடத் தேவாரம் ஒதக்
தந்தோம் தந்தோம் எனத்தமிழாய் கலைமகள்
வந்தனளே
ஆடல்)
கலைமாது அமிழ்தாகினாள் கலை ஒதும் தமிழாகினாள் - கலைமாது
கலை ஓங்கும் பாரெல்லாம் அறி வோங்கும் உருவாகி நிலையான எழில் சேர்க்கும் நிகரில்லா ஒளிவாணி - கலைமாது
சச்சிதா நந்தன் அருளாலே சகமாள வந்தனளே இயல் இசைக் கோர் எழிலாகி துயர் நீக்கி ஆள்பவளே - கலைமாது
98

—7 ( /-
கவிஞர்கள் கற்பனையில் அவியாது நின்றெங்கும் இணையிலா இலக்கியங்கள் அணையாது தருபவளே - கலைமாது
ஆடுமெம் கடவுளுக்கு பாடுமடியார் பலதோற்றி வீடுபெற வழிகாட்டும் தேடரிய தவத்தினளே - கலைமாது
(கலைமகள் சிவனை வேண்டல்)
கலைமகள் தென்னகம் சென்றுநான்
செய்பணி என்னவென்று திண்ணமாய்ச் சொல்ல வேண்டும் தேவாதி தேவனே - தென்னகம்
சிவன் அறம்பாடும் இலக்கியங்கள்
அவனி வெல்லும் இசை நாடகமும் திறமாக நீ படைத்துச் செழிப்பாக வாழ வேண்டும்
கலைமகள் இவையெல்லாம் ஆக்கும் வழி
ஏதென்றறியேன் இறைவா சுவைதேரும் இயலிசை கூத்து சேர்க்கும் வழி காட்டிடுவீர்
(சிவன் கையை உயர்த்தித் தட்டல் - இயற்றமிழ் பின்னிருந்து வருதல், ஏடு
ஒன்றைப் பிரதிபலிக்கும் ஆடை)
Lunt L.6) இயற்கைப் படைப்பின் எழிலெலாம் சேர்ந்து இயல் தமிழானதே - இயற்கைப் படைப்பின்
99

Page 53
—/pr_u ക്രwiരൂ/-
நயங்கள் தேடும் புலவரெல்லாம் நாடும் ஏடாம் நங்கை வந்தனளே - இயற்கைப் படைப்பின் மலர்களின் வண்ணங்கள் மதலையர் கொஞ்சல்கள் நலம்பெறும் மாலையாய் நாட்டிடுவாள் மலைகளை நதிகளை காடுகள் கடல்களை கலைகொளச் சொற்களில் காட்டிடுவாள் -
இயற்கை
சூரிய சந்திரர் தாரகை யாவையும் உவமையில் உருக்கொளச் சூட்டிடுவாள் வீரத்தைக் காதலை வீறுகொள் பக்தியை ஆரமாய் கவிகளில் பூட்டிடுவாள் - இயற்கை
வானிடு வில்களின்
வண்ணங்கள் பிடுங்கி காதலி கன்னத்தில் தீட்டிடுவாள் ஊனை உருக்கி
உடலை நடம்செய்யும் கவிதை களாயிரம் கூட்டிடுவாள் - இயற்கை
(சிவபெருமான் ஆடி இரு கைகளையும் தட்டி வீணை மீட்டல் போல் காட்டல் - இசைமகள் வீணை உருவில் வரல்)
ஏழிசையே செந்தமிழாய் யாழின் உருவாக வந்தாள் - ஏழிசையே
100

- 788ളങ്ങ്/ -
வெண்ணிலவின் கதிர்தெரிந்து தண்நரம்பாய் யாழமைத்து தென்றல் வந்து தடவுகையில் வானமுதம் சிந்தி எழு - ஏழிசையே
மானுடத்தின் காதலெலாம் மண்டியிட்டு சுருதிபோட தேன்மொழியார் கொஞ்சுமிசை தேமதுரத் தமிழோசை - ஏழிசையே
மதலையர்கள் மழலை சிந்தும் மந்தகாச மோகனமே இதயம் நெகிழ் தாய்மார்கள் இனிதுரட்டும் தாலாட்டும் - ஏழிசையே
காலையிளம் புள்ளோசை மலைமுலைமேல் நதியோசை அலைகடலின் துடியோசை வீழ்மலையின் ஓங்காரம் - ஏழிசையே
(சிவபெருமான் கைதட்டல் - ஒரு சிறு நடனம் - நாடகத்தமிழ் வரல்)
நாடகத்தமிழே நமக்கெல்லாம் அமுதே - நாடக ஆடவல்லானின் அடியிணை ஏற்றவும் பண்ணிசையோடு பரதம் போற்றவும் - நாடக
தாமரை உரு அனையாள் இயலிசையில் இனியாள் தாவும் மரை எனவே மேவி அவள் அணைவாள் - நாடக
101

Page 54
—/pt'-യ ക്രരൂ/ — பரதமே உருக்கொண்டு வந்தனளே நடராசன் கூத்தின்பம் தந்தனளே அணுவாய் ஆடல் புரிபவளே அகில மெல்லாம் நடமாய் விரிபவளே - நாடக
தெறிதிரை கடலலை போலவள் நடனம் முகில்கிழி மின்அலை போலவள் நளினம் தொடருமோர் இடிஅலை அடைவவள்
Լյւգ-6ծTLD வானவில் போலவள் வண்ணங்கள் புதினம் -
நாடக இயல் இசை நாடகம் ஆகிய முத்தமிழும் சேர்ந்து கூட்டு நடனம் ஆடி சிவபெருமானை எல்லோரும் வணங்குதல்)
102

முர்கழி சரிதையர்
மாணிக்கவாசகப்பெருமான் அருளிச்செய்த திருவெம்பாவைப் பாடல் களைத் தொகுத்து அமைக்கப்பட்ட நாட்டியம் "மார்கழி மங்கையர்."
(மண்டபம் இருள் - மெல்லிய இசையுடன் திரை விலகல், மேடையிலும் இருள் - மெள்ள மெள்ள இருள் விலகல் ) கூட்டிசை ஆதிரை ஆனந்தம் பெரிதே
அனந்தத் தாண்டவன் திரு - ஆதிரை
மாதரீர் எல்லோரும் வாரீர் மாதுமை பாகன் புகழ்பாடி ஒதுவம் அவன் நாமம் உலக
மெங்கணும் இசையோடு நிலவ - ஆதிரை
(வீட்டுமுன் ஒருத்தி சென்று கதவைத்தட்டி)
Golu 6ðoT 1
"மாதே வளருதியோ வன்செவியோ
நின்செவிதான்"
கூட்டிசை இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால் (பெண்கள் இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்
ஆடல்)
பெண்
துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால் தொழுகையர் அழுகையர் துவள்கையர்
ஒருபால் (மீண்டும் கதவைத் தட்டி) மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான் ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும்
103

Page 55
-/நாட்டிய அரங்கு/-
Colш6ðот2
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாட்
தடங்கண் - மாதே மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய
வாழ்த்தொலிபோய் வீதிவாய்க் கேட்டலுமே விம்மி விம்மி
மெய்ம்மறந்து போதார் அமளியின்மேல் நின்றும்
புரண்டிங்ங்ண் ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே
என்னே - மாதே
பாசம் பரஞ்சோதிக் கென்பாய் இன்றேனோ நேசமும் வைத்தாய் இப்போதார் அமளிக்கே
(வீட்டினுள் இருக்கும் பெண் 3 கதவு திறவாமல் எட்டிப் பார்த்து)
பெண்3
பெண் 2
சீசீ இவையும் சிலவோ விளையாடி ஏசும் இடம் ஈதோ நேரிழையீர் கூசு மலர்ப்பாதம் தந்தருளும் வித்தகன் தேசன் சிவலோகன் நேசமுடையேன் நான் -
ஆதியும்
அத்தன் அமுதன் ஆனந்தன் என்றோதி தித்திக்கப் பேசுவாய் திறவாய் கடைவாயில் பத்தியோ டெம்சிவனைப் பாடித் தெருவெலாம் சித்தம் புளகமுறச் சேர்ந்தாட வாராய்
(பெண் 3 வீட்டினுள்ளிருந்து வெளிவந்து எல்லோரும் சேர்ந்து ஆடுதல் - பின்பு மற்றொரு வீட்டின் கதவைத் தட்டல்)
பெண்
(வேறு வீட்டின் கதவைத் தட்டி) இன்னும் துயிலுதியோ
104

- 7 ΘσΦθσαίο Α --
வன்னெஞ்சப் பேதையர் போல் - இன்னும்
பெண்3 ஒண்ணித்தில நகையாய் இன்னம்
புலர்ந்தன்றோ கண்ணைத் துயின்றவமே காலத்தைப்
போக்காதே கண்ணுக் கினியானை நாம் பாடிக்
கசிந்திடுவோம் பெண்ணே எம்சொற் கேட்பாய் வந்துன்
கடைதிறவாய் இன்னும்
(உள்நின்றபடி பெண்4) பெண் 4 விண்ணின் பெருவேந்தை வாழ்த்திநாம்
பாடுதற்கு வண்ணக் கிளிமொழியார் எல்லோரும்
வந்தனரோ பெண்2 எண்ணிக் கொண்டுள்ளதைச் சொல்லுவோம்
நம்புவாய் எண்ணிக் குறையில் துயில் ஏலோர் எம்பாவாய் - இன்னும்
பெண் நாணாமல் நேற்றொருத்தி நாளை வுந்தெங்களை
தானே எழுப்புவன் சத்தியம் என்றாளே வானவனின் புகழ் கேட்கும் வரவெளியே
தயங்கிநின்று போன அவள் திசையைப் புகல்வாயோ அம்மா
(உள்நின்ற பெண்4 வெளிவந்து
பெண் 4 விண்ணுக் கொருமருந்தை வேத
விழுப்பொருளை உண்ணெக்கி நின்றுருக ஒதத் தெரியாத
105

Page 56
—/pt'- ക്രu്രൂ/ —
மண்ணவளாம் நானம்மா மன்னிப்பீர்
என்னையே வண்ண இசைதொடுத்து வண்ணிக்க நான்
வருவேன்
(எல்லோரும் சேர்ந்து ஆடுதல்)
பெண் 1
ஏழை பங்காளனையே பாடு - தோழி ஊழி முதல்வனாய் நின்ற ஒருவன் - ஏழை கோழிசிலம்ப குருகெங்கும் சிலம்ப ஏழில் இயம்ப வெண் சங்கு இயம்ப ஆழியான் அன்பு வாழியென நினைந்து கேளில் விழுப்பொருளாம் சோதியாய் நிற்கும் - ஏழை ஆர்த்த பிறவி அறுத்தாடும் தீர்த்தன் தில்லைச் சிற்றம்பலம் தீயாடும் கூத்தன் காத்துப் படைத்துக் கரந்தாடும் ஆப்தன் வல்ல உலகம் அழித்தாடு நிருத்தன்
(காட்சி மாற்றம் - மேடையில் ஒளி மங்கிப் பின் ஓங்கச் செய்யலாம் - பெண்கள்
நீராடல்)
பெண் 1
பாய்ந்து பாய்ந்து பாய்ந்து ஆடுவோம் - நாம் சிவனும் உமையும் போன்று புனலில் - பாய்ந்து சங்கம் சிலம்ப சிலம்பு குலுங்க கொங்கைகள் பொங்க புனலும் பொங்க பொங்கு மடுவில் புகுந்து புகுந்து பங்கயப் பூம்புனல் குடைந்து குடைந்து " பாய்ந்து
பாதத் திறம்பாடி ஆடு ஆதி திறம்பாடி அந்தமா மாபாடி
பாதத்திறம்பாடி
106

-/இரத்தினம்/-
காதார் குழையாட பைம்பூண் கலனாட கோதை குழலாட வண்டின் குழாமாட சீதப் புனலாடி சிற்றம்பலம் பாடி வேதப் பொருள்பாடி அப்பொருளாமா பாடி
பாதத்திறம்பாடி (நீராடிய பின் எல்லோரும் மழை வரும்படி பாடல்)
பெண் 2 மின்னிப் பொலிந்தவள் இன்னருள்
என்னப் பொழிவாய் மழை - மின்னிப்
முன்னிக் கடலைச் சுருக்கி எழுபவள் என்னத் திகழ்பவள் இடையைப் போல -
மின்னிப்
பெண் 3 பொன்னஞ் சிலம்பின் சிலம்பி திருப்புருவம்
என்னச் சிலை குலவி நம்தமை ஆளுடையான் தன்னில் பிரிவிலா எம்கோமான் அன்பரை முன்னி நிற்பான் முழங்கும் கருணைபோல் -
மின்னிப்
(காட்சி மாற்றம் - ஒளி மங்கி மீளலாம் - கோயில் பின்னணி) எல்லோரும் எங்கெழிலென் ஞாயிறு எமக்கு துதித்தல் இறைவன் அருளுடையார்க்கு -
எங்கெழிலென்
கங்கை முடியணிந்த இறைவன் காதல் பொருளுடையார்க்கு - எங்கெழிலென் எங்கள் பெருமான் உனக்கொன் றுரைப்போம் உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம் எங்கொங்கை நின்னன்பர் அல்லார்
தோள்சேரா
107

Page 57
-/நாட்டிய அரங்கு/-
எங்கை உனக்கல்லா தெப்பணியம் செய்யா -
எங்கெழிலென் கங்குல் பகலெங்கண் மற்றொன்றும் காணா எங்கணவ ராவார் இறையடிய ராவார் மங்கல நல்நாணும் நின் மங்கா அருளே இங்கிப்பரிசே எமக்கு நீ ஈவாய் -
எங்கெழிலென்
போற்றி போற்றி போற்றி
அருளுக நின் ஆதியாம் பாதமலர் போற்றி போற்றி போற்றி
அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள் போற்றி போற்றி போற்றி
எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பதம் போற்றி போற்றி போற்றி
எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள் போற்றி போற்றி போற்றி
எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள் போற்றி போற்றி போற்றி
மால் நான்முகனும் காணாத புண்டரீகம் போற்றி போற்றி போற்றி
யாம் உள்ள ஆட்கொண்டருளும்
பொன்மலர்கள் போற்றி போற்றி போற்றி
யாம் மார்கழி நீராடு ஏலோர் எம்பாவாய்
108

உழவூர் ஆட்டியச்
(விடியற்காலை - பூபாளத்தில் வாத்திய இசை - பின் பாடல் தொடர்கிறது) Lin'L-6v தேவர்கண் விழித்தனர் செங்கதிர் தோன்றினன்
மேவுயிர்க்குலமெலாம் மேன்மை
கொண்டெழுந்தன தூமலர் கொண்டு நாம் தொழுதுமே
போற்றுவோம் நாமெலாம் உய்யவும் நானிலம் வாழவும்
(வேறு
(உழவர் உழவின் புகழ் பாடுதல்)
உழுதுண்டு வாழ்வதே அறிவுடைமை அதைப் போற்றி ஒழுகுதல் துணிவுடைமை தொழுதுண்டு வாழ்வது பெருமடைமை -இதைச் சொல்லி முழங்குதல் எம் கடமை நாடுகள் நலம்பெறல் யாராலே - எங்கள் நானில அச்செனும் ஏராலே கூட்டு முயற்சியால் வாழ்வோமே - இதைக் குவலயம் எங்கும் நாம் சொல்வோமே (உழத்தியர் வந்து உழவரை உழவரும்படி அழைத்தல்)
வயல்கள் எல்லாம் வெள்ளம் வந்து மோதுகின்றதே வாயை வளர்த்து வம்பளந்தால் வயல் விளையுமோ புயலைக் காவும் பெரிய மேகம் பொங்கி முழங்குதே
109

Page 58
-/நாட்டிய அரங்கு/-
பாரதிர இடியும் மின்னலும் மின்னிப் பொழியுதே அயரவிட்டுச் சும்மா இருந்தால் வயல்கள் அழியுமே அதற்கு முன்னர் உழுது நடுவம் வாரும் அன்பரே உயிரில் இனிய உழைப்பில் நாங்கள்
ஊக்கம் கொள்ளுவோம்
உழவில் அன்றோ உலகம் சுழலும் என்பதறியீரோ
(ஆடவர் உழுதல் - மகளிர் உதவி புரிதல்)
அவன் :
அவன் :
அவள் :
அவன் :
அவள் :
ஏருபூட்டி உழுவதெல்லாம்
யாருக்காக கண்ணா
எழுதத் தெரிந்த பெரியவர்கள்
இளையாதிருக்சக் கண்ணே
மாடு பூட்டிப் பாடு படுவ
தேதுக்காக கண்ணே கண்ணே
நாடும் நாமும் நன்மை பெற்று
நாளும் வாழ மச்சான் மச்சான்
கல்வி பெற்ற காளையர்கள்
கலங்கலேனோ பெண்ணே பெண்ணே
கலப்பை கொண்ட காளைகளை
கலக்காத தாலே மச்சான்
(பெண்கள் நாற்று நடுதல்)
பாட்டுப் பாடி நாற்று நட்டால்
பயிர் செழித்திடும்
ஆடவர்கள் ஆதரித்தால்
விளைவு ஓங்கிடும்
நாட்டும் பயிரால் நாமும் வளர்ந்து
நாடும் வளருமே
110

-/இரத்தினம் A
கேட்டுமிதைச் சும்மா இருத்தல்
கேலி யாகுமே பணத்தின் மதிப்பு பணிந்து போதல்
பார்த்தி ருப்பீரே கணத்திலேனும் பயிரின் மதிப்பு
குறைதல் கண்டீரோ (அறுவடை) கழனி நிரம்பக் கதிர்கள் விளைந்து குலுங்கல் கண்டோமே கண்களும் கொள்ளாக் கவினுறு காட்சி கண்டு
களித்தோமே பழனிமலை வாழ் பையன் முருகன் செய்த நல் அற்புதமோ பாடுபட்டவர் பயனுக்கென்றே நிலமகள் தரு பரிசோ அழகிய சிறுமணிக் கதிர்களைக் கொய்து நல் அறுவடை
செய்வோமே அவனியில் இதனிலும் அரும்பணி வேறு அறிவீரோ
சொல்லிடுவீர் பழுதிலா திப்பணி பெருங் கடனாகப் பூண்டு நாம்
ஒழுகுவமே பரிதியஞ் செல்வன் பூரித்து நலம் செயப்
பொங்கிப் படைத்திடுவோம் (பொங்கலாட்டம் - அறுவடை கொண்டு போதல். நெல்லுக் குற்றுதல் - சுளகில் அரிசி புடைத்தல் முதலியன - பின் பானை வைத்துப் பொங்கல் செய்து படைத்து வணங்குதல் - ஆண்களும் பெண்களும் சேர்ந்து ஆடல்)
வானின் றிலங்கொளியை வாழ்த்தி நாம் பொங்குவமே - வானின் ஊனின் றுலாவும் உணர்வு சேர்
பொங்கலினால் நானிலம் யாவுமே நல்லறம் பொங்கிடவே -
வானின்
111

Page 59
-/நாட்டிய அரங்கு/- நெஞ்சாரும் விளைகழனி நெல் தந்த
பயனெடுத்து மஞ்சளிஞ்சி மகிழ்ந்திலங்கு மண்பானை
தனிலிட்டு மறுவிலா ஆதந்த நறும்பாலும் தான் பெய்து சருக்கரையும் பசுநெய்யும் சரிவரவே தான்
சேர்த்து - வானின் மங்களம் எங்குமே பொங்கிட மங்கையர் செங்கண் சிவந்திட செங்கதிர் வேந்தனை பங்கமே இல்லாப் பண்ணடம் இவையொடு பொங்குக பொலிவென பொங்குக மகிழ்வென
வானின்
(எல்லோரும் பொங்கி மகிழ்ந்து இறைவனை வணங்குதல்)
112


Page 60