கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நாடும் நடப்பும்

Page 1

3 Ē
துறை

Page 2


Page 3

நாடும் நடப்பும்
(வானொலிக் கலந்துரையாடல்கள்)
துறையுநரான்
Nadum Nadappum (Radio Discussions)
Ву ThuraiyOOran
May - 1999

Page 4
நாடும் நடப்பும் ob.4O.OO.
(வானொலிக் கலந்துரையாடல்கள்
முதற்பதிப்பு வைகாசி 1999
பதிப்புரிமை : ஆசிரியருடையது.
<ණුප්"fuji சின்னையா சிவநேசன்
(துறையூரான்) வெளியீட்டாளர் : சிவ்கோ நிறுவனம்
50 பிளாக்வெல் அவெனியூ ஸ்காபரோ - ஒன்ராறியோ M1B 1K2 - abóOILII, L66örgl Teo : Sivasinniah Gnetscape.net
அச்சகம் : மோனார்க் கிராபிக்ஸ்
சென்னை-14, இந்தியா. 20 : 858.8815. Title : Natum Natappum
(Radio discussions)
Author : Cinnaia Civanecan
(Thuraiyooran)
First edition: May 1999
Copyright G) by Sinniah Sivanesan
All rights reserved under copyright conventions
Cover design: Sivoo
Publisher: Sivoo Enterprises
50 Blackwell Avenue #45 Scarborough, Ontario M1B 1K2 - Canada
Email : SivasinniahGnetscape.net
Printed by : MONARK GRAPHIKS
Chennai - 600 014. INDIA.
O. : 858.8815.

என்னுரை
கனடாவில் கால்பதிந்து ஒரு தசாப்தம் கழிந்து விட்டது. ஈழத்தில் வாழ்ந்த காலத்தில் ஆற்றிய எழுத்துப்பணியும் கலைப்பணியும் ஏறக்குறைய ஆறு ஆண்டுகளின் இடைவெளிக்குப்பின் இங்கே ஆரம்பமாயிற்று. ஆரம்பகாலத்தில் எனது எழுத்துப் பணிக்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுத்த சூரியன், தமிழருவி, ஈழநாடு, செந்தாமரை பத்திரிகை ஆசிரியர்களுக்கும், பின்னால் ஆதரவு நல்கிய உதயன் லோகேந்திரலிங்கம், கவிஞர் கந்தவனம், தமிழர் செந்தாமரை அரசரத்தினம் ஆகியோருக்கும் என் நன்றி உரித்தாகட்டும்.
வானொலி நிகழ்ச்சிகளை எழுதித் தயாரிப்பதிலும், பங்கெடுப்பதிலும் என்னை ஈடுபட வைத்த கீதவாணி நடா இராஜ்குமாருக்கு என் மனமார்ந்த நன்றி. கீதவாணி ஆரம்பித்த காலம் முதல் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கெடுக்க வைத்ததுமல்லாமல், அண்மையில் ஏறக்குறைய ஆறு மாதங்களுக்கு மேலாக, எம்மவர் மத்தியில் பிரபலமான “நாடும் நடப்பும்’ நிகழ்ச்சியை தயாரித்து வழங்க வாய்ப்பளித்தார்.
இந்நிகழ்ச்சி மேலும் தொடரவேண்டுமெனப் பல நேயர்கள் நேரிலும் தொலைபேசி மூலமாகவும் கேட்டுள்ளனர். கீதவாணி முழுநாள் வானொலி நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்க ஒழுங்குகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. மிக விரைவில் நேயர்கள் விருப்பம் நிறைவேற இருக்கின்றது.
இவ்வாறு வானொலியில் ஒலிபரப்பப்பட்ட 22உரையாடல்களை ஒன்று சேர்த்து நூலாக வெளியிட்டுள்ளேன். இவ்வாறான ஒரு நூல் இதுவரை வெளி வரவில்லை என்றே நினைக்கிறேன். இது தமிழ்ப் புத்தக வெளியீட்டில் ஒரு புதுமை எனவே கருதுகிறேன்.
இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்ற கலைஞர்கள் திருமதி சபாநடேசன், ஜீவகன், ரோஜா ஆனந், கணபதி இரவீந்திரன், விஜயதுங்கம் ஆகியோருக்கும், ஒலிப்பதிவில் உதவிய ரோஜா ஆனந்துக்கும் என் நன்றி.

Page 5
அன்றாட வேலைப்பழுவுடன் எழுத்துத்துறையிலும் பல்வேறு சங்கங்களின் அலுவல்களிலும் ஈடுபடுவதால் நேரம் விரைவாகவே செல்கிறது. எவ்வளவோ எழுதவேண்டும், எவ்வளவோ செய்ய வேண்டும் என ஆர்வம் இருந்தும், யாவற்றையும் செய்வதற்குச் சந்தர்ப்பமும் சூழ்நிலையும் இடங்கொடுப்பதாயில்லை. எனினும் பல சிரமங்களுக்கு மத்தியில் இந்நூலை வெளியிடுகிறேன். இதனை வெளியிட உதவிய அன்பர்கள் சதிருநடராசா(அச்சமைப்பு), அச்சேற்ற அரும்பாடுபட்ட எனது மைத்துனர் ஆசுந்தரலிங்கம், மதிப்புரை வழங்கிய கவிஞர் விகந்தவனம், நல்ல முறையில் அச்சுப்பதித்தமோனார்க் கிராபிக்ஸ் அச்சகத்தினர் ஆகியோருக்கு எனது நன்றி.
எனது எழுத்துப் பணிகளுக்கும் சமய, பொதுச் சேவைகளுக்கும் எந்நாளும் ஊக்கமும் ஆதரவும் நல்கிவரும் என் அன்புக்குரிய மனைவி, பிள்ளைகளுக்கும் எனது நன்றி என்றும் உரியதாகும்.
என்னை இவ்வாறான நூல் வெளியீட்டில் மென்மேலும் ஈடுபட வைப்பது வாசகர்களாகிய உங்கள் கைகளில்தான் தங்கியுள்ளது. உங்கள் ஆதரவுக்கும் என் நன்றி.
வணக்கம்.
சின்னையா சிவநேசன்
(துறையூரான்) @LDーlー1999

மதிப்புரை
நண்பர் திரு. சின்னையா சிவனேசன் அவர்கள் தமது "நாடும் நடப்பும்" என்னும் இந் நூலுக்கு மதிப்புரை எழுதும் வண்ணம் எனக்கிட்ட கட்டளை வலுவானது மறுக்க முடியாதது. காரணம் அது நட்புரிமையோடு கலந்து வந்தது.
அவர் எனக்கு நண்பர் ஆவதற்கு முன்பே நன்கு பழக்கமானவர். கொழும்பில் அவர் மேடையேற்றிய நாடகங்களிலே "நரி மாப்பிளை" என்ற நாடகம் அவரது பெயரை மிகவும் பிரபலியமாக்கியது. பின்னர் யான் கொழும்பு பாட புத்தகக் குழுவில் பணியாற்றிய காலத்தில் அவரை நேரிலே காணவும் பழகவும் வாய்ப்பு ஏற்பட்டது.
பழகுதற்கினிய பண்புகள் நிறைந்த திரு. சிவனேசன் அவர்கள் நாடகத்துறையில் தமது பெயரை நிலைநாட்டியதோடு, கல்வி, எழுத்து, சமயம் ஆகிய துறைகளிலும் ஆன்ற பணிகள் ஆற்றியவர் ஆற்றிவருபவர்.தான் ஒரு சிறந்த நிர்வாகி என்பதனை வல்வெட்டித்துறை சிதம்பராக் கல்லூரியிலும் கோப்பாய்க் கிறித்துவக் கல்லூரியிலும் அதிபராக இருந்த காலத்தில் நிரூபித்துக் ՑTւլԶեւ 16)յJ.
எல்லாவற்றுக்கும் மேலாக அவர்பற்றி யான்கொண்ட ஆரம்ப அபிப்பிராயம், அவர் எதையும் அளந்து திட்டமிட்டுச் செய்ய வல்லவர் என்பது. அந்த அபிப்பிராயத்தில் இன்னுவரை மாற்றம் எதுவும் ஏற்படவில்லை.
அவ்விதம் திட்டமிடப்பெற்ற முயற்சி ஒன்றன் ஆக்கமே இந் நூல். “கீதவாணி" வானொலியில் "நாடும் நடப்பும்" என்ற பெயரில் தொடர்ந்து வாரந்தோறும் ஒலிபரப்பப்பெற்ற கலந்துரையாடல்களில் இருபத் திரண்டைத் தொகுத்து நூலாகத் தந்திருக்கின்றார் ஆசிரியர்.
இவ்விதமான வானொலிக் கலந்துரை யாடல்கள் நூலுருவம் பெற்றிருப்பது கனடாவில் இதுவே முதல் தடவை. அந்தவகையில் திரு. சிவனேசன் அவர்கள் சாதனையாளர் ஆகின்றார். ஏனைய தமிழ்கூறும் நல்லுலகத்திலும் வானொலி உரையாடற் கலையில் இது முன்னோடியாக அமைகின்றது என்றே நினைக்கின்றேன்.
கலந்துரையாடல்களில் ஐந்து பாத்திரங்களை ஈடுபடுத்தியிருக்கின்றார் ஆசிரியர். ஆயினும் அவர்கள் ஒருசேர எல்லா நிகழ்ச்சிகளிலும் இடம்பெறுபவர்கள் அல்லர். பிரதான பாத்திரமாகிய பேரானந்தம் ஒருவரே எல்லா நிகழ்ச்சிகளிலும் தோன்றுகின்றார். அவர்

Page 6
பேராசிரியராக இருந்தவர். அதனால் 6) விடயங்களையும் அறிந்தவர். அவரது மனைவி பரிமளமும் அறிவிலே சிறந்தவர் எனினும் அடக்கம் கருதி அதிகம் பேசாதவர். சொக்கலிங்கம் என்னும் பாத்திரம் பொழுது போக்குவதற்காகப் பேராசிரியர் வீட்டுக்கு இடைக்கிடை வருபவராயினும் பல விடயங்களையும் அறிய வேண்டும் என்னும் ஆர்வமுள்ளவர். அவர் அறிமுகப்படுத்தும் கந்தையா, தில்லைநாதன் ஆகியோரும் நல்ல கதைகாரர்.
உரையாடல்கள் நாட்டு நடப்புகள் பற்றியன என்பதனைத் தலைப்பே சொல்லி நிற்கின்றது. குடியியல், புவியியல், கல்வி, கணனியியல், சுகாதாரம், சமயம், வியாபாரம் தொடர்பான பல பொது விடயங்களோடு பொழுதுபோக்குச் சாதனங்கள், தொடர்புச் சாதனங்கள், சுதந்திரமும் மனித உரிமையும், கோப்பிப் பானத்தின் வரலாறு, உலக அழிவு, சாயி பாபாபவின் அற்புதங்கள் என்று பலவிதமான விடயங்கள்பற்றி விரிவாகப் பேசப்படுகின்றன.
கூடவே, எமது சமுதாயத்தில் காணப்படும் குறைபாடுகளும் குத்திக் காட்டப்படுகின்றன. குடித்து வெறித்தல், ஆடைகளிற் கறிமணம், நேரத்துக்கு அலுவல்களை நடத்தாமை, தமிழ் மொழியை வளர்ப்பதில் ஆர்வம் இன்மை, பிள்ளைகளை வழிப்படுத்துவதில் குறுக்கிடும் பிற்போக்குத் தன்மை என்பதுபோன்ற பல விடயங்கள் குறித்து மக்கள் கவனத்தை ஈர்க்க ஆசிரியர் முயன்றிருக்கின்றார்.
அவ்விதமான இடங்களில் அங்கதச் சுவையை (ளயவசைந) அவர் சாதுரியமாகக் கையாண்டிருப்பது கண்கூடு. இருப்பினும் எமது மக்கள் மேம்பாட்டில் உள்ள அக்கறை காரணமாக இரங்கியும் வருந்தியும் வெகுண்டும் வெட்டொன்று துண்டிரண்டாகக் கண்டிக்கும் போக்கையும் பல இடங்களிற் காணக்கூடியதாக இருக்கின்றது. எனினும் பொதுவான சமுதாய நலனேயன்றித் தனிப்பட்டவர்கள் மீது குறிவைக்கும் குத்தல் கதைகளை, நையாண்டிகளோ எதுவும் இல்லாத உரையாடல்களாக இவை இருப்பது ஆசிரியரின் உயர்ந்த பண்பை உணர்த்துகின்றது. “ஊருக்கு நல்லது சொல்வேன் எனக்கு உண்மை தெரிந்து சொல்வேன்” என்று சொன்ன பாரதியார் வழி சிவனேசன் வழி என்பது நன்கு தெரிகின்றது.
பழமொழிகள் பல கதைகளைச் சொல்லும். பொருத்தமான இடங்களிற் கருத்துச் செறிவுக்குப் பழமொழிகளை உபயோகித் திருக்கும் உத்தி உரையாடலின் தரத்தை உயர்த்தி நிற்கின்றது. சில பழமொழிகள் பின்வருமாறு.
பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும் ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது

ஆலும் வேலும் பல்லுக் குறுதி உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா? நாய் வாலை நிமிர்த்த முடியாது அற்பனுக்குப் பவிசு வந்தால் அர்த்த இராத்திரியில் குடைபிடிப்பான் ஆரியக் கூத்து ஆடினாலும் காரியத்திலே கண் அவன் இன்றி அணுவும் அசையாது சுண்டங்காய் காற்பணம் சுமைகூலி முக்காற்பணம்
இவற்றைப் பார்க்க அளவிலேயே உள்ளே என்னென்ன விடயங்கள் பேசப்படுகின்றன என்பதை ஊகித்துக்கொள்ளலாம்.
கருத்துக்களை வலியுறுத்தப் பழமொழிகளன்றி, தமிழ் இலக்கிய, சமய நூல்களிலிருந்தும் தற்கால அறிஞர்களின் ஆய்வுகளிலிருந்தும் மேற்கோள்கள் காட்டப்பட்டுள்ளன. இவற்றுக்கெல்லாம் பேராசிரியர் பாத்திரம் வாய்ப்பாகவுள்ளது. ஆசிரியரின் ஆராய்வுத் திறனும் பரந்த அறிவும் இப் பாத்திரத்தின் மூலம் நன்கு வெளிப்படுகின்றன.
ஒரு குறிக்கப்பட்ட கருத்தை நோக்கி உரையாடலை விருத்திசெய்து, முடிவில் அதனை வரையறை செய்கின்ற உத்திமுறை நன்கு திட்டமிடப்பட்டிருக்கின்றது.அவ்விதமாக ஆங்காங்கு விதைக்கப் ’பட்டுள்ள ஆழமான கருத்துக்களுக்கான சில உதாரணங்கள்
பின்வருமாறு:
- ஒரு பிள்ளை கதைக்கத் தொடங்கும்போது அதன் சுற்றாடலைப் பொறுத்துத்தான் அது ஒரு மொழியைப் பேசக் கற்றுக்கொள்ளும்.
- சுதந்திரம் இருக்கத்தான் வேணும். அதற்காக அரைகுறை ஆடையோடை திரியலாமோ?
- நாங்கள் திருந்தி நடந்தால்தான் மற்றவர்களும் எங்களை மதித்து நடப்பார்கள்.
- ஒரு மாணவரின் பிரச்சனையை அலசி ஆராய்வதற்கு அம்மாணவனின் நாட்டுப் பின்னணியும் கலாச்சாரப் பின்னணியும் கட்டாயம் தேவை.
- நேரம் பொன்னானது. நேரத்துக்கு ஆரம்பித்து நேரத்துக்கு முடிக்கிற வழக்கம் இன்னும் எங்களுக்கு வரவில்லை.
இப்ப வாற தமிழ்ப் படங்களைப் பிள்ளைகுட்டியோடு இருந்து பார்க்க வயது போன எங்களுக்கு வெட்கமாக இருக்குது.

Page 7
கலந்துரையாடல் என்றால் முற்றுமுழுக்கப் பேச்சுத் தமிழிலேதான் இருக்க வேண்டும் என்றில்லை என்ற கருத்தை முன்வைக்கின்றது "நாடும் நடப்பும்" பேச்சு நடையும் எழுத்து நடையும் கலந்த புதிய நடையொன்றைக் கையாண்டிருக்கின்றார் நண்பர் சிவநேசன். என்ன காரணமாக இருக்கலாம் என்று யோசிக்கையில் அவரது பாத்திரங்களின் இயல்புகள் முன்வருகின்றன. ஈழத்துப் படித்த நடுத்தர வர்க்கத்தினரிடையே இவ்விதம் கலந்து பேசுகின்ற இயல்பு இருந்தவருகின்றது. உதாரணமாக, பிடிச்சான், முடிச்சான், அடிச்சான் என்பனபோன்ற பேச்சு வழக்குச் சொற்களை ஈழத்தவர், குறிப்பாக நடுத்தர வகுப்பினர், பிடித்தான், முடித்தான், அடித்தான் எனத் திருத்தமாகப் பேசுகின்ற வழக்கமும் உள்ளது. இந்த வழக்கத்தையே நண்பரும் பின்பற்றி இவ்வுரையாடல்களுக்கான வசனங்களை எழுதியிருப்பது கவனிக்கத் தக்கது. "நாடும் நடப்பும்" கலந்துரையாடல்கள் பின்வருமாறு முடிவடை கின்றன :
பேரானந்தம் : சரி, இன்றையோடு எல்லாமாக 22 தடவைகள் நாங்கள் சந்தித்துக் கலந்துரையாடி இருக்கின்றோம்.
கந்தையா ஏறக்குறைய ஆறு மாதம் என்று சொல்லுங்கோ. நல்ல விசயங்களை, எல்லோருக்கும் பிரயோசனமான வியங்களைத்தான் கதைத்தோம்.
வானொலியில் இவ்விதம் கதைத்த பிரயோசனமான விடயங்கள் இப்பொழுது நூலாக வெளிவந்திருக்கின்றன. எத்தனையோ பேரின் நல்ல பேச்சுக்கள் பேச்சோடு பேச்சாக, காற்றோடு காற்றாகப் போய்விட்டன. அவ்விதமன்றி நண்பர் சிவனேசன் அவர்களின் இந்த அறிவு விருந்து, சமுதாய நோய்களை மாற்றும் மருந்து நூலுருவம் பெறுவதையிட்டு மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். அதற்குரிய காரணம் யான் முன்னர் குறிப்பிட்ட அவரது திட்டம் இட்டுச் செய்யும் இயல்பேயாகும்.
இந்த அரிய வானொலி இலக்கியம் அவரது மணிவிழாக் காலத்தில் வெளிவருவது அவரது மணியான முயற்சிகளுக்கு அணியாக அமைகின்றது.
தொடர்க நண்பர் சிவனேசன் அவர்களின் பணிகள்! துலங்குக
அவரது புகழ்!
- வி. கந்தவனம்

நாடும் நடப்பும்
அங்கம் : 1
பாத்திரங்கள் :
1. பேராசிரியர் - பேரானந்தம் 2. மனைவி - பரிமளம் 3. சொக்கலிங்கம் - நண்பர் 4. கந்தையா - நண்பர் 5. தில்லைநாதன் - நண்பர்
(பேராசிரியர் வீட்டுக்கு சொக்கலிங்கம் வருகிறார் )
சொக்கலிங்கம் : என்ன புரபெசர் பிஸியாய் இருக்கிறியள் போலை
பேரானந்தம் : அதுக்குக் குறையில்லை சொக்கலிங்கம். இந்த நாட்டிலை எல்லாரும் பிஸிதானே. ஒடி ஒடி உழைக்கிறது ஒரு கூட்டம். பாடிப்பாடி வெல்பெயர் எடுத்துக்கொண்டு திரியிது இன்னொரு கூட்டம். வட்டிக் கணக்குப் பாக்குது இன்னுஞ் சிலகூட்டம். வேண்டாத வேலைகள் செய்யுது இன்னொரு கூட்டம். இப்படி எங்கடை ஆட்கள் வானத்தை வில்லாய் வளைத்துக்
கொண்டு திரியினம்.
சொக்கர் : வானத்தை வளைக்கினை என்று சொல்லுறியள்
எங்கடை ஆட்கள் வளைக்காத விஷயம் என்ன இருக்குது என்று சொல்லுங்கோ பாக்கலாம். வெள்ளைக்காரன் கண்டு பிடித்த பெரிய விஷயங்களை எப்படியெல்லாம் குறுக்கு வழியிலை மாற்றி வைக்கினை என்று நான் சொல்லவா வேண்டும். கண்டு பிடித்தவன்

Page 8
மூக்கில் விரலை வைக்கிற அளவுக்கு எங்கடை ஆட்கள் முன்னேறி இருக்கினை பாருங்கோ.
பரிமளம் : என்ன கனகாலத்துக்குப் பிறகு வந்திருக்கிறியள் - இந்தாருங்கோ கோப்பி.
சொக்கர் : என்ன பரிமளமக்கா - வந்ததும் வராததும் கோப்பியோடை வாறியள்.
பேரானந்தம் :- கோப்பி வருமுன்னே பரிமளம் வரும் பின்னே என்று இது பழகின பழக்கம். எங்கடை பரம்பரைப் பழக்கம். இதை என்னென்று மாத்துறது சொக்கர்.
சொக்கர் : ஒம் இதுகள் மாத்த ஏலாது தான். ஆனால் கனடா வந்த ஆட்கள் சிலபேர் நல்லா மாறிவிட்டினம். தமிழ் கதைக்கிறது அநாகரிகம், தமிழன் என்று சொல்லுறது வெட்கம் என்றெல்லே எங்கடை ஆட்கள் சிலபேர் சொல்லுகினம்.
பேரா : சொக்கர் - அப்படிச் சொல்லுகிற ஆட்கள் ஆரென்று நல்லாய் ஆராய்ந்து பார்த்தீரா?
பரிமளம் : இதுக்கெல்லாம் என்ன ஆராய்ச்சி தேவை - அரைகுறை ஆங்கிலத்தோடை இங்கே ஓடி வந்தினையே, அவைதான் தமிழிலை கதைக்க வெட்கப்படுகினை.
சொக்கர் ; நல்லாய்ச் சொன்னியள் அக்கா - நீங்களும் நல்லாய்த்தான் கவனிச்சிருக்கிறியள்.
பரிமளம் : இதிலை என்ன புதுமையெண்டால் ஆங்கிலத்தை அரைகுறையாகப் பெடியளோடை கதைக்க, அதுகளுக்கு ஒண்டும் விளங்காமல் பெற்றோரைப் பேசுதுகள்- இதைப் போய் தங்கடை நண்பரிட்டைச் சொல்லிச் சிரிக்குதுகள். இதெல்லாம் தேவைதானா?
பேரா : பரிமளம் உமக்கு ஒன்று சொல்லப் போறன் கவனமாயக் கேளும். இலங்கையிலை, எண்பதாம் ஆண்டுக்குப் பிறகு படித்த

பிள்ளையளிலை கனபேருக்கு ஆங்கிலமும் வடிவாய்த் தெரியாது தமிழும் தெரியாது. பெரும்பாலான ஆசிரியர்கள் கூட அவர்களுக்கு
ஒழுங்காய்த் தமிழ் படிப்பிக்க அக்கறை எடுக்கவில்லை. நாட்டின் அரசியல் நிலை காரணமாகக் கவனமெல்லாம் திசை திரும்பிப்போட்டுது. எல்லோரும் விடுதலை, தனிநாடு என்று அதிலை கூடிய அக்கறையாய் இருந்திட்டார்கள். இதை நான் ஒரு குறையாகச் சொல்லவில்லை. ஆனால் படிப்பிலை காட்டிய அக்கறைதான் குறைந்து போச்சு என்பதுதான் என்னுடைய கவலை.
சொக்கர் : நீங்கள் சொல்லுறது சரிதான். எனக்குத் தெரியும் - வளர்ந்தவைக்குக்கூட இந்த கொம்பு"ள"வு, மவ்வு'ழ'வு, எங்கெங்கு பாவிக்கிறது என்று இன்னும் வடிவாய்த் திெரியாது.
பரிமளம் : ஏன் - இந்த ற, ர, வில் கூட எத்தனையோ பேர் இன்னும் பிழை விட்டுத்தானே எழுதிகினம்.
பேரா: இந்த ற, ர இந்தியாவிலை இருக்கிற பண்டிதர் மாருக்கும் ஒரு மயக்கமாகத்தான் இருக்கிறது. கறுப்பு என்று எழுதுவதை 'கருப்பு' என்று சிலர் எழுதுகிறார்கள். இதைச் சரி என்று பலர் ஏற்றுக் கொள்கிறார்கள்.
பரிமளம் : என்ன இருந்தாலும் எங்கடை எழுத்துக்கள் சிறு பிள்ளைகளுக்குப் படிப்பதற்குக் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்குது. ஆங்கில எழுத்து 26ஐ வைத்துக் கொண்டு எவ்வளவ சுலபமாகப் படிக்கலாம் பாருங்கோ.
பேரா : இந்த விஷயத்திலை நான் உமக்கு எதிர். 26 எழுத்து இருந்தாப்போலை ஆங்கிலத்தை இலகுவாகப் படிக்கலாமென்று சொன்னால் இவ்வளவுக்கும் ஆங்கிலம் தெரிந்த எங்கடை ஆட்கள் எல்லாரும் இப்ப ஆங்கில மொழியிலை கெட்டிக்காரராய் வந்திருக்கவேண்டும். ஆங்கிலம் படிக்கிறது லேசு. ஆனால் அதிலை 6ibus GOTUTI, 6) inpg5, fl),6/h (56.L.E. "English is an easy language to learn but it is difficult to master"

Page 9
சொக்கர் : நீங்கள் சொல்லுறது மெத்தச் சரி. ஆங்கில இலக்கணத்தைப் படிக்கிறவைக்கு இது நல்லாய் விளங்கும். பொதுவாய் இந்த ஒருமை, பன்மையை எடுத்துப்பார்த்தால் தெரியும். இந்த Fish என்ற சொல்லை எடுங்கோ அதுக்கும் பன்மை என்ன தெரியுமோ -
பரிமளம் : ஏன் தெரியாது அதுவும் Fish" தானே.
பேரா : சொக்கர், ஆங்கிலத்திலை இவவோடை நீர் போட்டி போடப் போகாதையும் அவ அந்த நாட்களிலை Convent இலை படித்தவ.
சொக்கர் : அதுதான் பார்த்தனான் - இவ உடனே பதில் சொன்ன உடனை யோசித்தனான்.
பரிமளம் : ஏன் deer, sheep இதுக்கும் பன்மை அதே மாதிரித்தானே.
பேரா : ஆங்கிலம் ஒரு அதிசயமான மொழி. ஒருமை
பன்மையிலேயே ஆளை விழுத்தி விட்டிடும். இப்ப பாருங்கோ - Ox என்ற சொல்லை. அதுக்கு என்ன பன்மை சொல்லும் பாப்பம் பரிமளம்.
Luís D61Ti : ox 6T6öpsT6ò oxen, mouse 6T6öpT6ů mice.
சொக்கர் : அக்கா நீங்கள் அந்த நாளையிலை நல்லாய்த்தான் ஆங்கிலம் படித்திருக்கிறியள்.
பேரா : அதுதானே சொக்கர் நான் ஆரம்பத்திலை சொன்னனான் இவ Convent இலை படித்தவ என்று. ஆங்கிலப் பாடமென்றால் உச்சரிப் பென்ன இலக்கணமென்ன எல்லாம் சும்மா தலைகீழாகப் படிக்க வேணும்.
பரிமளம் என்ன இருந்தாலும் அந்த நாளையிலை எங்களுக்குப் படிப்பிச்ச sister மார் என்ன அக்கறையோடை, ஆசையோடை எங்களுக்குப் படிப்பித்தவை தெரியுமோ. நாங்களும் நல்ல அக்கறையோடை தான் படித்தனாங்கள்.

சொக்கர் : இப்ப இலக்கணமெல்லாம் தேவையில்லை என்று புது இங்கிலிசெல்லே படிப்பிக்கினம். பன்மையென்றால் எல்லாத்துக்கும் 'S சேர்க்கலாம் என்ற நினைப்பிலை எல்லாரும் fish க்கு fishes பொருத்தமென்றெல்லோ சொல்லுகினம்.
பேரா : இங்கை ஒன்றை நீங்கள் ஞாபகத்திலை வைச்சுக் கொள்ளவேணும். பலவகையான மீன்களை பார்த்தால் Different varieties of fishes என்று சொல்லலாம். ஒரே வகையான பல மீன்களைப் பார்த்தால் Fish என்றுதான் சொல்லவேணும்.
பரிமளம் : எனக்கு ஒரு ஞாபகம் வருகுது ஒரு பள்ளிக்கூட magazine இலை யாழ்ப்பாணத்திலை உள்ள பள்ளிக்கூடம் அங்கு படிப்பிக்கிற ஆசிரியர்கள் எல்லாற்றை படத்தையும் போட்டுட்டு கீழே stafts என்று போட்டுக் கிடந்தது.
பேரா : ஏன் இங்கை என்ன குறைவே எங்கடை தமிழ் பத்திரிகையிலை தமிழும் பிழை, ஆங்கிலமும் பிழை - எழுவாய்க்கும் பயனிலைக்கும் தொடர்பில்லாமல் வசனம் எழுதுகினம். மாடுகள் பாய்ந்து ஓடியது - என்று தானே எழுதுகிறார்கள். நாளடைவிலை மாடுகள் ஓடின என்பது பிழை என்ற நிலமை வந்தாலும் நான் ஆச்சரியப்படமாட்டன்.
சொக்கர் : ஏன் professor உங்களுக்கு விஷயம் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறன் - கனடாவில் பிறந்த தமிழ்ப் பிள்ளைகளுக்கு ஆங்கிலமும் தெரியாது தமிழும் தெரியாது என்ற நிலை.
பேரா : ஒம் நான் இதைப் பற்றிப் கேள்விப்பட்டனான். இதிலை முக்கியமாக நாங்கள் ஒன்றைக் கவனிக்க வேணும். கனடாவிலை இருந்தாலென்ன மெக்சிக்கோவிலை இருந்தாலென்ன-ஒரு பிள்ளை கதைக்கத் தொடங்கும்போது அதன் சுற்றாடலைப் பொறுத்துத்தான் அது ஒரு மொழியைப் பேசக் கற்றுக்கொள்ளும். சுற்றாடல் வீட்டிலை எல்லாம் தமிழாக இருந்தால் அது தமிழைப் பேச ஆரம்பிக்கும் - அப்போது பெற்றார் அதற்குத் தமிழ் கற்றுக் கொடுத்து, மொழித் திறனை வளர்க்க வேண்டும், இதைத்தான் Basic skills 6T6 p. 3, p-dipri 3,6i.

Page 10
பரிமளம் : அப்ப பிள்ளைக்கு ஆங்கிலச் சூழல் வீட்டிலை இருந்தால் ஆங்கிலம் பழகும் ஏன்று சொல்லுகிறீர்கள், என்ன.
பேரா : ஒம். அதுதான் உண்மை நிலை. இப்ப கனடாவிலை தமிழ்ப் பிள்ளைகளுக்குள்ள பிரச்சனை என்ன தெரியுமா? ஆரம்பத்திலை வீட்டிலை முழுவதும் தமிழ்ச் சூழல், பள்ளிக்கூடத்திலை ஆங்கிலச் சூழல் - பிள்ளைகளுக்கு ஒரே குழப்பமான நிலை. பெற்றாருக்கும் குழப்பமான நிலை -
சொக்கர் : நீங்கள் சொல்வதைப் பார்த்தால், தமிழிலை ஓரளவு நல்ல மொழித்திறன்களை நாங்கள் வீட்டிலை பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுத்தால், ஆங்கிலம் படிக்கிறது இலகுவாக இருக்கும் என்று சொல்லலாமோ.
பேரா : மிகவுஞ் சரி. ஒரு மொழித்திறனை நன்கு பெற்றிருந்தால் அதனைப் பிரயோகித்து இன்னொரு மொழியை ஒரு சிறுபிள்ளை இலகுவாகப் படிக்கலாம். இது ஆராய்ச்சி முறையில் நிரூபிக்கப் பட்டிருக்கிறது. எனவே எங்கடை தாய்மொழி தமிழ். இங்கே இதை முதல் மொழி ( First language) என்கிறார்கள். ஆங்கிலம் எங்களுக்கு Second language. எனவே முதல் மொழியில் நல்ல பயிற்சி இருந்தால் ஆங்கிலத்தைக் கற்பது சுலபமாக இருக்கும் என்பதை, மொழி வல்லுனர்கள் எடுத்துக் கூறியிருக்கிறார்கள்.
பரிமளம் : அப்படியென்றால் தமிழ்ப் பிள்ளைகளுக்குத் தமிழை ஆரம்பத்தில் படிப்பித்தால் அவர்கள் பள்ளிக்கூடத்திலை போய் ஆங்கிலத்தில் எல்லாப் பாடங்களையும் கஷ்டமில்லாமல் படிக்கலாம் என்கிறீர்கள்.
பேரா : ஒம், இதை எங்களுடைய பெற்றோர் நன்கு உணர்ந்து நடக்கவேணும். ஆனால் ஒன்றை மட்டும் மறந்து போகாதீர்கள். வீட்டிலே பெற்றோர் இருவரும் ஆங்கிலத்தில் சரளமாய்ப் பேசக்கூடியவர்களாகப் பிள்ளைகளோடு ஆங்கிலத்திலேயே உரையாடுவார்களே ஆனால்- பிள்ளைகளும் ஆங்கிலத்தில் நல்ல மொழித் திறனைப் பெறுவார்கள். அவர்களுக்குத் தமிழின் உதவி தேவைப்படாது.

சொக்கர் : அப்படியானால் ஆங்கிலத்தில் போதிய அறிவில்லாத பெற்றோர் தங்கள் தமிழிலேயே பிள்ளைகளோடு பேசி தமிழ் மொழித் திறனை வளர்க்க முயற்சிக்க வேண்டும். பிள்ளைகள் பாடசாலையில் ஆங்கிலத்தைக் கற்றுக் கொள்வார்கள் என்கிறீர்கள்.
பேரா : நீர் சரியாகச் சொன்னீர் - நேரம் போகுது அடுத்தவாரம் சந்திப்போம்.
சொக்கர் : அப்ப நான் போட்டு வாறன்.
அங்கம் : 2
(பேராசிரியர் நடந்து வரும்போது வழியில் சொக்கலிங்கத்ததைச் சந்திக்கிறார்.)
(வீதிச் சத்தம்)
பேரா : என்ன சொக்கர் இண்டைக்குப் பொடி நடையிலை வாறியள்.
சொக்கர் : என்ன புரொபசர் - நீங்களும் நடந்து வாறியள்- எங்கை கார்.
பேரா : கார் வீட்டிலை நிக்குது - பின்னேரத்திலை இப்படி walking போறனான்- நீரும் அப்படியே.
சொக்கர் : நான் எந்த நாளும் பொடி நடைதானே.
பேரா : ஒம் - உம்மட்டைக் கார் இல்லையோ?

Page 11
சொக்கர் : அது ஒன்றுதான் குறை - அதை வாங்கிப்போட்டு எங்கடை சனம் படுகிறபாடு -
பேரா : ஏன் எங்கடை ஆட்கள் எல்லாரும் ஹொண்டா, Toyota என்று வாங்கி ஒடித்திரியினம். நீர் walking இலை திரியிறீர்.
சொக்கர் : கார் வாங்கிறது சுகம் புரபசர் - ஆயிரம் டொலரோடை புதுக்கார் வாங்கலாம். ஆனால் அதற்குப்பிறகு இன்சூரன்ஸ், Gas>
மாதம் கட்டுக் காசு என்று கட்டிப் பார்த்தால்தானே தெரியும்.
பேரார் : கனடாவிலை இந்தக் குளிருக்குள்ளை கார் இல்லாமல் சமாளிக்கிறது கஷ்டம் சொக்கர். ஒரு பழைய கார் என்றாலும் நீர் வாங்கிறது நல்லது.
சொக்கர் : பழைய காரை வாங்கிப்போட்டு அதற்குச் செலவழிக் கிறதற்கு நான் புறம்பாய் உழைக்க வேணும்.
பேரா : அதுவும் சரிதான் - பேசாமல் ஒரு புதுக் காரைக் கட்டுக் காசுக்கு வாங்கும். 10 வருஷத்துக்குச் செலவழிக்கத்
தேவையில்லை.
சொக்கர் ; அதைப் பற்றி யோசிக்கத்தான் வேணும். உங்கடை வீடு வந்திட்டுது நான்வரட்டே.
பேரா : ஏன் அவசரப்படுகிறீர் - வேறை அலுவல் இல்லையென்றால் வாருமன் கதைப்பம்.
சொக்கர் : எனக்கு அப்படி முக்கியமான வேலையொன்றுமில்லை
பேரா : அப்படியென்றால் வாரும் - வாரும் -
(வீட்டுக் கதவைத் தட்டுகிறார். பரிமளம் வந்து திறக்கிறார்)
பரிமளம் : வாருங்கோ - இரண்டு பேரும் சேர்ந்தே walking போனனீங்கள்?

பேரா : சாய் - நான் வழியிலை சொக்கரைக் கண்டன் - கதைச்சுக் கொண்டு வந்தம்.
பரிமளம் : நல்லது வாருங்கோ - வாருங்கோ.
சொக்கர் : அக்கா நீங்கள் வந்ததும் வராததுமாய்க் கோப்பி போடாதேங்கோ, எனக்குத் தண்ணி ஒரு கிளாஸ் தந்தியள் என்றால் போதும்.
பேரா : நடந்து வந்தவர் களைச்சுப் போனாராக்கும் - கொண்டு வாரும் எனக்கும் ஒரு கிளாஸ்.
சொக்கர் - என்னத்தைச் சொன்னாலும் களைத்து வாற நேரத்திலை சில்லென்று தண்ணி குடிக்கிறதிலையும் ஒரு சுகம் இருக்குது பாருங்கோ -
பேரா : தண்ணி எங்களுக்கு மிகவும் முக்கியமானது. ஒரு நாளைக்கு ஒருதர் கட்டாயம் 8 கிளாஸ் தண்ணி குடிக்கவேணும். எங்கடை உடம்பிலை தண்ணிதான் 80% வீதமான இடத்தைப் பிடிச்சுக் கொண்டிருக்குது. சாப்பிடாமல் ஒருவர் 15, 20 நாளைக்கு இருக்கலாம் ஆனால் தண்ணி குடிக்காமல் இருக்க ஏலாது.
சொக்கர் ஓம், ஓம் நெடுந்தூரம் போற ஆட்கள் அந்த நாளையிலை தண்ணிைைரத்தானே கொண்டு போறது.
பரிமளம் : இந்தாங்கோ தண்ணி -
பேரா : மற்றது இந்த Walking அதுவும் உடம்புக்கு நல்ல தேகப்பயிற்சி - ஒவ்வொரு நாளும் குறைந்தது 2 கிலோமீற்றர் நடந்தால் உடம்புக்கு வருத்தமே வராது.
சொக்கர் : நல்லாய்ச் சொன்னியள் - எனக்கு இப்ப ஞாபகம் வருகிறது. ஊரிலை எனக்கொரு மாமா இருக்கிறார். அவருக்கு இப்ப 97 வயது. இன்னும் நடந்து திரியிறார். அந்த நாளையிலை எல்லாரும் சயிக்கில்லை ஒடித் திரியும்போது இவர் நடந்துதான் எல்லா இடமும் போறது. சிரிப்பென்னெண்டால் அவருக்குச்

Page 12
10
சயிக்கிள் ஓடத் தெரியாது - பொடியள் பகிடி பண்ணுவாங்கள் வாருங்கோ நாங்கள் பழக்கி விடுகிறம் என்று - அவர், அது நான் நடந்து திரிவன் என்று எல்லா அலுவலும் நடந்துதான் பார்ப்பார்.
பேரா : அப்படித் திரிஞ்சபடியால்தான் அவர் இப்ப நல்ல ஆரோக்கியமாய் இருக்கிறார் பார்த்தியளே
பரிமளம் : நீங்கள் வெளியாலை போனபோது அந்த கொம்பியூட்டரை ofபண்ண மறந்து போனியள்.
பேரா : அது பரவாயில்லை - அடிக்கடி on பண்ணி of பண்ணிறதுதான் கூடாது. மொனிட்டரை மட்டும் of பண்ணி விடலாம்- கொம்பியூட்டரை அடிக்கடி of பண்ணக்கூடாது.
சொக்கர் : அக்கா கொம்யூட்டர் என்ற உடனே, எனக்கும் சில விஷயங்கள் தெரிஞ்சு கொள்ள ஆசையாய் இருக்குது.
பரிமளம் : நாள் முழுவதும் இவருக்கு கொம்பியூட்டரோடைதானே சீவியம், விடுதலை நாட்களிலை.
பேரா : சொக்கர் இப்ப இந்தக் காலத்திலை கணனியைப்பற்றி அதுதான் கொம்பியூட்டரைப் பற்றித் தெரியாமல் காலம் கழிக்க ஏலாது.
சொக்கர் : ஒம் புரபசர் - இப்ப குஞ்சு குருமான், கிழடு கட்டை எல்லாம் கொம்பியூட்டர் என்றுதானே உயிரை விடுகினம்.
பேரா : உமக்குத் தெரியுமா கனடாவிலையுள்ள வீடுகளிலை 60% மான வீடுகளிலை கொம்பியூட்டர் இருக்குது - அதுமட்டுமல்ல, ரி.வி ரேடியோவுக்கு அடுத்தபடியாக ஒரு குடும்பம் வாங்கிறது கொம்பியூட்டர் தான்.
சொக்கர் : ஏன் இப்ப எங்கடை ஆட்களின்றை வீடுகளைப் பாருங்களேன். கனடாவுக்கு வந்த உடனே முதலிலை வாங்குகிறது ஒரு ரி.வியும் டெக்கும்தான்.

பேரா : ஒம் வீட்டிலுள்ளவையின்ரை பொழுது போக்கு அதுதானே. ஒரு டொலரோடை ஒரு தமிழ்ப் படம் பார்க்கலாம் - ஆங்கிலம் ஓரளவுக்குத் தெரிந்தவை ரி.வி யிலை நியூஸ் கேட்கலாம் - சண்டைப்படங்கள் பார்க்கலாம்- சாப்பிடுவதும் ரி.வி பார்ப்பதும்தானே எங்கடை பெண்களுக்கு வேலை.
பரிமளம் : நீங்கள் சொல்லுறது எல்லோருக்கும் பொருந்தாது. ஒருவேளை 6 போனவைக்கும் வீட்டிலை வேலை இல்லாதவைக்கும் பொருந்தும் - எங்கடை பெண்களும் ஓடி ஓடி வேலை செய்யிறதாலை இதுகளைப்பார்க்க நேரமில்லை.
சொக்கர் : ஒமக்கா நீங்கள் சொல்லுறது சரிதான் - ஆனால் வீட்டிலை வேலையில்லாமல் அரசாங்கப் பணத்திலை ஆறுதலாய் இருக்கிறவைக்கு டெக்கிலை படம்பார்கிறதுதானே வேலை.
பேரா இந்தக் குளிருக்கை வெளியிலை போறது கஷ்டமென்றுபோட்டு அவை படம்பார்க்கிறதோடை மினக்கெடுகினை. அதிலை பிழையில்லை. ஆனால் குழந்தப் பிள்ளைகளை வைச்சுக் கொண்டு எந்தநேரமும் ரிவிக்கு முன்னாலை குந்திக்கொண்டு இருக்கிறதுதான் கூடாது.
சொக்கர் : நல்லாய்ச் சொன்னியள் புரபசர் - அங்கை ஒரு வீட்டிலை சமைக்கிறது ஒரு நேரத்துக்குத்தான். மற்ற நாள் முழுவதும் தமிழ்ப் படம் பார்க்கிறதும் நித்திரை கொள்வதும்தான்
வேலை.
பேரா : பெரியாக்கள் சிறு பிள்ளையளையுமெல்லே பழுதாக்கினம். அதுகள் படத்தைப் பார்த்துப்பார்த்து அவங்கள் கதைக்கிறமாதிரி கொச்சைத் தமிழும் நடை, உடை பாவனையும் அதே மாதிரியெல்லே இருக்குது.
சொக்கர் : நல்லாய்ச் சொன்னியள் - இப்ப பெடியளுக்கு சினிமா ஸ்ரார்களைப்பற்றித்தான் கூடத்தெரியும். அவைதான் அவையின்ரை தெய்வம் - அவை எந்தப் படத்திலை என்ன வேஷத்திலை

Page 13
12
எத்தனையாம் ஆண்டு நடிச்சவை என்றதெல்லாம் ஞாபகம் இருக்கும். ஆனால் படிக்கிறதொன்றும் ஞாபகம் இராது.
பேரா : சினிமா ஒரு வலுவான தொடர்பு சாதனம். இந்த ரி.வியும் டெக்கும் வந்தபிறகு அது மூலை முடுக்கெல்லாம் புகுந்து விளையாடுது. இதனாலை களவு, கொலை, காமம் எல்லாம் உலகத்திலை கூடிப்போச்சுது. பெரிய வங்கிக் கொள்ளைகளெல்லாம் சில சினிமாப் படங்களைப் பார்த்துத்தான் நடந்திருக்குது.
பரிமளம் : அப்படியான படங்களை ஏன் எடுக்க விடுகுது அரசாங்கம் - அதுக்குத் தடை விதிக்கலாந்தானே.
பேரா : தடைவிதிக்கிறதுக்கும் ஒரு காரணமிருக்க வேணும். பேச்சுச் சுதந்திரம் எழுத்துச் சுதந்திரம் என்று தனி மனித சுதந்திரத்திலை கண்டபடி கட்டுப்பாடு விதிக்க ஏலாது. ஒரு படம் மக்களைக் கெட்ட வழியிலை இழுத்துச் செல்கிறது என்று நிரூபிக்கவேணும். அதன் பின்புதான் அதைத் தடை செய்ய முயற்சிகள் எடுக்கப்படும். அப்டியாகத் தடைசெய்யப்பட்டால் அதைத்தான் மக்கள் பார்க்க விரும்புவார்கள் - அப்ப இன்னும் மக்களின்ற ஆவலைத் தூண்டுவதாக அச்செயல் இருக்கும்.
சொக்கர் : நல்லாய்ச் சொன்னியள் புரபசர் - எதை வாசிக்கக்கூடாது பார்க்கக்கூடாது என்று சொல்லுகிறார்களோ அதைத்தான் மக்கள் பார்க்க விரும்புகிறார்கள் -
பரிமளம் : பிள்ளைகள் கூடுதலாகப் படம் அல்லது ரி.வி பாக்கிறதைப்பற்றி ஏதோ சொல்லிப்போட்டு விட்டிட்டியள்.
பேரா : ஒம் - பிள்ளைகளின் மனது எந்த விஷயத்தையும் இலகுவாக உள்வாங்கிக்கொள்ளும். முக்கியமாக சண்டைக்காட்சிகள், காதல் காட்சிகள் நடை உடை பாவனைகளை அப்படியே மனத்தில் படம் பிடித்து வைத்து அதுமாதிரி நடக்க முற்படுவார்கள். அவர்களுக்கு எது கெட்டது, எது நல்லது என்று சிறு வயசிலை பகுத்தறியுங் குணம் குறைவாக இருக்கும்.

3
சொக் : நான் குறுக்கை பேசுறதுக்கு மன்னிக்கவேணும். இப்ப இரண்டொரு வருஷத்துக்கு முன்னர் 6 வயதுப் பெடியன் ஒரு பெட்சீற்றைக் கழுத்திலை கட்டிக்கொண்டு மாடி யன்னலுக்கூடாகக் குதிச்சுக் கீழே விழுந்து செத்துப்போன கதை பேப்பரிலை வந்தது.
Luís D6Tluh : 5ů JLAš56s6oo6o 6nın so Spiderman, Superman மாதிரிப் பறக்கலாமென்று நினைச்சுக் குதித்திருக்கிறான்போலை.
பேரா : ஒம் அவனுக்கு அது படத்திலை பார்த்தது மனத்தில் நிலைத்து விட்டது. அது மாதிரி நானும் செய்தால் என்ன என்று நினைத்துக் குதித்திருக்கிறான். உண்மை நிலைக்கும் படத்திலை பாக்கிறதுக்குமுள்ள நிலையை பகுத்தறிந்து பாக்கமுடியாத வயசு - அதுதான் நாங்கள் பிள்ளைகள் பாக்கிற படங்கள், வாசிக்கிற புத்தகங்களைத் தெரிவு செய்து கொடுக்க வேணும் - கண்டது கடியதைப் பாக்க விடக்கூடாது. பொதுவாக ஆங்கிலத்திலை நடக்கிற தொடர்நாடகங்கள் அதுதான் Soap என்று சொல்லுவார்கள். அதிலையெல்லாம் வம்புப் பகிடிகளும், பாலுணர்வு சம்பந்தமான நிகழ்ச்சிகளும்தான் நடக்குது. அதுகளை குழந்தைகளைப் பாக்க விடக்கூடாது.
பரிமளம் : ஏன் குழந்தைகளுக்கென்று சில நல்ல ரி.வி நிகழ்ச்சிகள் இருக்குதுதானே - Sesame Street, Barnie போன்ற நிகழ்ச்சிகளைப் பார்க்கவிடலாம். இதாலை மொழியறிவும் பொது அறிவும் வளரும்.
சொக் : ஏன் இங்கை வாசிகசாலைகளிலை எத்தனையோ அருமையான சிறுவர் புத்தகங்கள் இருக்கின்றன - அதையெல்லாம் எடுத்துப் பிள்ளைகளுக்குக் கொடுக்கலாமே?
பேரா : சொக்கர்- பொதுவாக எங்கடை ஆட்களுக்கு வாசிக்கிற பழக்கம் குறைவு - சும்மா இருந்து வம்பளந்து கொண்டு இருப்பினையே தவிர ஏதாவது புத்தகம் வாசிக்கிறதில்லை. உங்களுக்குத் தெரியுமா இப்ப பெரும்பாலான நூல் நிலையங்களிலை தமிழ்ப் புத்தகங்கள், C.D க்கள், வீடியோக்கள் எல்லாம் இரவலாய் எடுக்கலாமென்று.

Page 14
14
சொக்கர் : காசு கொடுத்துப் புத்தகங்கள் வாங்கி வாசிக்கிறது எங்கடை ஆட்களுக்குப் பழக்கம் இல்லை. நூல் நிலையத்திலை காசில்லாமல் எடுத்து வாசிக்கிறதுக்கும் பஞ்சியாய் இருக்குது. இருக்கிற வசதிகள் வாய்புக்களைப் பாவிக்க வேணும்.
பேரா நல்லாய்ச் சொன்னீர் சொக்கர் - நாங்கள் கொடுக்கிற வரிக்காசிலையிருந்துதான் அரசாங்கம் எங்களுக்கு இந்த வசதிகளைச் செய்கிறது. அதை நாங்கள் எல்லோரும் நன்கு பாவித்தால்தான் அந்த வசதிகளை மேலும் கூடுதலாகச் செய்யும். உதாரணமாக ஸ்காபரோ நூல் நிலையச் சபை தமிழ்ப் புத்தகங்கள், C.D வீடியோக்களுக்கு சில ஆண்டுகளுக்கு முன் 5ஆயிரம் டொலர்தான் ஒதுக்கீடு செய்தது. வீடியோ படங்கள், புத்தகங்கள் எல்லாம் எங்கடை ஆட்கள் கூடுதலாக இரவல் எடுத்துப் பாவித்த காரணத்தாலை போன வருடம் ஒதுக்கீட்டை இரண்டு மடங்காக்கினார்கள். ஆகவே எவ்வளவுக்குக் கூடுதலாக நாங்கள் எடுத்து பாவிக்கிறமோ அவ்வளவுக்குப் புதுப்புதுப் புத்தகங்கள் வாங்கி வைப்பினம். அதுதான் எல்லாரும் கூடுதலாகப் பாவிக்க வேணும்.
பரிமளம் : கனடாவிலை பல்கலாச்சாரத் திட்டத்தின் கீழ் பல்வேறு மொழி பேசும் மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு, அரசாங்கம் எடுக்கிற அக்கறை, மற்றைய நாடுகளோடு ஒப்பிட்டுப் பாக்கிறபோது, மிகவும் கூடுதலாக இருக்கும் என்று பேசிக் கொள்கிறார்கள்.
சொக்கர் : ஒம் ஓம். அது எங்களுக்கே நல்லாய் தெரியிதே. நானும் வந்து கன நேரமாய்க் கதைச்சுப்போட்டன். நான் அப்ப வரட்டே?
பேரா : சொக்கர் அடிக்கடி வாரும் - எங்களுக்கும் பொழுது போகிறது தெரியாது.
பரிமளம் : ஒம் ஓம் நீங்கள் வந்து போறது நல்லது.
சொக்கர் : சரி, அப்ப நான் வாறன்.

5
அங்கம்: 3
(பேராசிரியர் வீட்டுக்கு கந்தையா வருகிறார். பரிமளம் பத்திரிகை வாசித்துக் கொண்டிருக்கிறார். கதவில் தட்டும் சத்தம் கேட்கிறது. போய்க் கதவைத்திறக்க, கந்தையா உள்ளே வருகிறார்)
கந்தையா : பெரிய ஐயா இருக்கிறாரோ, நான் கந்தையா வந்திருக்கிறன் என்று சொல்லுங்கோ.
பரிமளம் : ஒம், இருங்கோ நான் அவரிட்டைச் சொல்லுறன்.
கந் : ஒம், ஓம். --------- ( இருக்கிறார்)
பேரானந்தம் : ஆரது? நீங்கள் --- எங்கினையோ கண்ட ஞாபகம்---
கந் : ஒம், ஓம் கண்டு கனகாலம் - உங்களுக்கு ஞாபகம் இல்லையாக்கும் - கலட்டிக் கந்தையரை நினைவிருக்கோ உங்களுக்கு?
பேரா : எட. எங்கடை கந்தையா அண்ணை - என்ன நீங்கள் இப்படி மாறிப் போனியள் - என்னாலை அடையாளமே கண்டு பிடிக்க முடியாமல் போட்டுது - நான் - நீங்கள் இங்கை
கனடாவுக்கு வரப்போறியள் என்று நினைக்க கூட இல்லை.
கந் : ஒம் தம்பி, இப்ப கலிகாலம் பாரும். எல்லாம் தலைகீழாகத்தானே நடக்குது அந்த நாளையிலை உங்களைப்போல படிச்ச ஆக்கள் லண்டன், அமெரிக்கா எண்டு மேல்படிப்புக்கு வெளிநாடுகளுக்குப் போச்சினை. இப்ப குஞ்சு குருமானெல்லாம் போகாத இடம் உலகத்தில் இல்லை. வாய்க்குள்ளை நுழைய முடியாத இடங்களுக்கெல்லாம் எங்கடை

Page 15
16
பெடியள் நுழைஞ்சிட்டாங்கள். யூகோஸ்லாவியா, செக்கஸலாவியா, நோர்வே, சிம்பாப்வே என்று ஒரு சப்வேயும் மிச்சமில்லை.
பேரா : பரிமளம், இவர் ஆரென்று தெரியுதோ?
பரி : நான் முன்பு கண்டிருப்பன் - நினைவில்லை.
கந் : பிள்ளைக்கு எங்கை நினைவிருக்கப்போகுது - நீங்கள் யாழ்ப்பாணம் வாற நேரத்திலை எப்போதாவது என்னைப் பாத்திருப்பியள். ஆனால் தம்பிக்கெண்டால் - நான் அவர் சின்னப் பிள்ளையாய்த் திரியேக்கை அடிக்கடி வீட்டுக்குப் போறதுதானே. அவற்றை அப்பா என்ரை நல்ல கூட்டாளி - ஒண்டாகப், படிச்சனாங்கள்.
பேரா : சரி - சரி பரிமளம் நீர் போய் ஏதாவது கொண்டாருமென்.
பரி: உங்களுக்கு என்ன கொண்டுவாறது - கோப்பி, தேத்தண்ணி, ц6ӧ (juice).
கந்: இங்கை வந்தாப்பிறகு பிள்ளை எனக்கு இந்த நெஸ்கபேயிலைதான் ஒரு ஆசை. அங்கை இதுகளெல்லாம் கண்டு கனகாலம். அதிலைதான் கொஞ்சம் தாராளமாய்ப் போட்டு, நல்லாய்ப் பாலும் விட்டுக் கொண்டாரும்.
பரி : சீனி என்ன மாதிரி?
கந் : என்ன பிள்ளை சீனியோ - எனக்கு ஏதாவது டயபிற்றிஸ் என்று யோசிக்கிறீரோ? கடவுளே எண்டு எனக்கு ஒரு பிரச்சனையுயமில்லை. நல்ல தாராளமாய்ப் போட்டு கொண்டு வாரும். கடைசியிலை கண்டது என்ன - சாப்பிட்டதும் குடித்ததும் தானே மிச்சம்.
பரி - சரி - இருந்து கதைங்கோ நான் நல்ல கோப்பி ஒன்று போட்டுக் கொண்டு வாறன்.
பேரா : பரிமளம், அப்ப எனக்கும் ஒன்று போடுமன்.

7
பரி : இஞ்சே - நீங்கள் அடிக்கடி கோப்பி குடிக்கிறது கூடாதெண்டெல்லோ டொக்டர் சொன்னவர்.
கந் : ஏன் தம்பி - உமக்கேதேன் பிரச்சனையோ?
பேரா : சாய்சாய் அப்படி ஒன்றும் பெரிசாய் இல்லை - சாடையான சுகர் (Sugar) தான்.
கந் : சுகர் என்றால் சுகர்தான் தம்பி- சனியன் வந்தால் கவனமாய்த்தான் இருக்க வேணும். அங்கை சனம் சீனியில்லாமல் கஷ்டப்படுகுது. இங்கை சீனியை வைச்சுக் கொண்டு குடிக்க ஏலாமல் கஷ்டப்படுகிறம் - இதுதான் உலகம்.
பேரா : அது சரி நீங்கள் எப்ப வந்தியள். என்ன மாதிரி என்று சொல்ல இல்லை.
கந் : என்னத்தைத் தம்பி சொல்ல - பானைக்கை இருந்து அடுப்புக்கை விழுந்த கதைதான் என்ரை கதை.
பேரா : என்ன அலுப்பாய்ப் பேசிறியள் - கனடாவுக்கு வந்ததை நினைச்சுச் சந்தோசப்படவெல்லே வேணும்.
கந் : ஒம், அப்படித்தான் நினைச்சுக்கொண்டு வந்தன் இங்கை. வந்த பிறகுதானே விளங்குது விஷயம்.
பேரா : நீங்கள் வந்து கனகாலமோ?
கந் : சாய் - ஒரு நாலைஞ்சு மாசந்தான் - என்ரை மகன்தான் - என்னை ஸ்பொன்சர் பண்ணிக் கூப்பிட்டவன். நானும் ஊரெல்லாம் தம்பட்டம் அடிச்சு கனடா போறன், கனடா போறன் என்று கண்டவன் நிண்டவனுக்கெல்லாம் சொல்லிக் கொண்டு திரிஞ்சன். நீ புண்ணியஞ் செய்தவனப்பா - நாங்கள் பாவிகள், இங்கை கஞ்சிக்குந் தண்ணிக்கும் கஷ்டப்பட நீ போய் அங்கை உல்லாசமாய் இருக்கப்போறாய் என்று வயித்தெரிச்சலைக் கொட்டினாங்கள். கலட்டிக் கந்தையர் 6L போறார் என்று ஊே

Page 16
8.
அல்லோலகல்லோலப்பட்டுது. பேப்பரிலை 6 JITLITs குறை. இதற்கிடையிலை, ஐயா எங்கடை மகன் படிச்சுப்போட்டு வேலை இல்லாமல் இருக்கிறான். அவனுக்குக் கனடாவிலை ஒரு வேலை ஒன்று எடுத்துக் குடுத்தியள் எண்டால் பெரிய புண்ணியம், என்று தெரிஞஞ்சவை தெரியாதவை எல்லாம் வீட்டுக்குப் படை எடுத்தினம். அதையேன் கேக்கிறியள்.
(பரிமளம் கோப்பியுடன் வரல்)
பரி : இந்தாங்கோ இதிலை கேக்கும் கோப்பியும் இருக்குது. சாப்பிடுங்கோ.
கந் : என்ன பிள்ளை கேக்கோ - கேட்க நல்லாய்த்தான் இருக்குது.
ஆனால் இண்டைக்கு வியாழக்கிழமை எல்லே ---- அதுதான் யோசிக்கிறன்.
பரி : சாப்பாட்டிலை என்ன விய்ாழக்கிழமை, வெள்ளிக்கிழமை
எல்லாம் மனந்தானே. சும்மா சாப்பிடுங்கோ!
கந் : நீர் பிள்ளை சொல்லுறதும் சரிதான். ஆனால் என்ரை மருமகள் கொஞ்சம் கண்டிப்பானா ஆள். கண்டதை கடியதை தின்ன விடமாட்டா. நீங்கள் தேவையில்லாததைத் திண்டு வருத்தம் உழைச்சால் ஆர் உங்களைப் பார்க்கிறது என்று, ஒன்றும் தின்ன விடாள் பாவி,
பேரா : உங்கடை நன்மைக்குத்தானே அவ சொல்லுறா இங்கை பாருங்கோ சாப்பாட்டிலை கவனமாகத்தானே இருக்கவேணும்.
கந் : ஒம், ஓம் எல்லாரும் சாப்பாட்டிலை கவனம். ஆனால் நடை, உடை பாவனையிலை கவனமில்லாமல் நடக்கினம். எங்கடை சனத்தைப் பார்க்க நாக்கைப் பிடிங்கிக் கொண்டு சாகலாம் போலை கிடக்குது. மானம் மரியாதை எல்லாம் கப்பல் ஏறிப் போட்டுது. அதையேன் கேட்கிறியள் தம்பி.
பேரா : கனடா எண்டால் எல்லாம் அப்படித்தான். அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட்டுப் பிரயோசனமில்லை.

பரி : கேளுங்கோ - இங்கை வந்த எல்லாருக்கும் சம உரிமை - எல்லாரும் விரும்பியபடி செய்யலாம் உங்கடை பிள்ளைகளைக்கூட 16 வயதுக்கு மேற்பட்டால் நீங்கள் ஒன்றும் கேட்க ஏலாது.
கந் : நீங்கள் சொல்லுறது சரிதான். அதுதான் எல்லாரும் தலையை விரிச்சுப் போட்டுத் திரியினமாக்கும். பிள்ளை உங்களுக்குத் தெரியுமே -பெண்டுகள் தலை விரிக்கிறது சாவீட்டிலைதான் - இங்கை கலியாணவீட்டிலை எல்லாம் விரிச்சிட்டுத்தானே நிக்கினம்.
பேரா : அண்ணை அதெல்லாம் அந்தக்காலத்தில்தான் தலையைக் கொண்டைபோட்டுக் கட்டுறது. இப்ப விரிச்சுவிட்டால்தான் பஷன்.
கந் : பஷன் என்று சொல்லிக்கொண்டு எங்கடை கலாச்சாரம் பண்பாடெல்லாத்தையும் காத்திலை பறக்கவிடலாமோ.
பரி : கலாச்சாரத்தை விட ஏலாதுதான் - ஆனால் நாங்களும் எங்கடை விருப்பபப்படி செய்யிறதுக்குச் சுதந்திரம் இருக்கத்தானே வேணும்.
கந் : சுதந்திரம் இருக்கத்தான் வேணும். அதுக்காக அரைகுறை ஆடையோடை திரியலாமோ? இதைக் கேளுங்கோ. அண்டைக்கு நான் பஸ்ஸுக்குக் காத்துக்கொண்டிருக்கேக்கை ஒரு பெடியன் வந்து - you have light- எண்டான். நான் வடிவாய்ப் பாத்தன். ஒரு 15, 18 வயதுதான் இருக்கும் - பார்த்தால் எங்கடை பொடி மாதிரி கிடந்திது. ஒரு பக்கத்துக் காதிலை தோடெல்லாம் போட்டு, வழுக்கி விழுகிற கழிசானும் போட்டு, பாக்க கூத்திலை வந்த கோமாளி மாதிரிக் கிடந்தது. ஏன் light? ஆரைக் கொழுத்தப் போறாய் என்று கேட்டன். அவருக்கு கோபம் வந்திட்டுது போலை பக்கத்திலை நிண்டவனிட்டைச் சொன்னான் - Looks like a country brute 676.jp. BIT6 p L60607 QFIIsiGOT6 No, No this is a Canada brute என்று. இரண்டு பேரும் பேச்சுமூச்சில்லாமல் போட்டினம். அவை நடந்து போறதைப் பார்த்தால் சப்பாத்திலை spring வைச்சமாதிரிக்கிடந்துது.

Page 17
20
பேரா : இஞ்சை எல்லாரும் spring இலை தான் நடந்து திரியினம். ஏனென்றால் ஒடுறதுக்குச் சுகமாகத்தானே அவங்களும் சப்பாத்துக் களைச் செய்யிறாங்கள்.
கந் : நீங்கள் ஒடுறதென்று சொன்னாப்போலை எனக்கு ஞாபகம் வருகிறது - எங்கடை ஆட்களுக்கும் ஒடுறதுக்கும் நிறையச் சம்பந்தம் இருக்குதுபோலை- ஒடி ஒடி இராப்பகலாய் உழைக்கினம் சிலர் ஓடி ஒடி ஊர் தேசம் பாக்கினம் - சிலர் ஓடி ஒடி ஆட்களை இறக்கினம்- இன்னுஞ் சிலர் குஞ்சு, குருமான், முடிச்சது முடியாததையெல்லாம் கூட்டிக் கொண்டு ஓடுகினம். எல்லாம் தலைகீழாய்ப் போச்சுத் தம்பி இந்த நாட்டிலை.
பேரா : அதைப்பற்றி நீங்கள் ஏன் கவலைப்படுவான்? நாங்கள் இதைச் சொல்லப் போனால் இதுகள் பழைய கிழடுகள் - நாகரிகந் தெரியாததுகள் என்று பேசுவினம். அதுகளை விட்டுப்போட்டு
உங்கடை விஷயங்களைச் சொல்லுங்கோ.
கந் : என்ரை விஷயமும் அப்படித்தானே தம்பி ஆரிட்டைப்போய் நான் இதுகளைச் சொல்லுறது.
பரி : ஏன் நீங்களும் எங்கையாவது ஒடுற எண்ணமோ?
கந் : வடிவாய்ச் சொன்னீர் பிள்ளை - அதைப்பற்றித்தான் இப்ப கடுமையாய் யோசிக்கிறன்.
பேரா : என்ன இந்த வயசிலை இந்த எண்ணம்.
கந் : தம்பி - நீர் வித்தியாசமாய் நினைக்காததையும் நான் வீட்டை விட்டிட்டு வேறு எங்கையாவது ஓடலாம் எண்டுதான் நினைக்கிறன்.
பரி : அப்படி உங்களுக்கென்ன பிரச்சனை?
கந் : அதையேன் கேட்கிறியள் - நான் படுகிறபாடு. மகனுக்கு இரண்டு பெடியள் - ஒருத்தனுக்கு 5 வயசு மற்றவனுக்கு 3 வயசு

2
4რჯი:
மூத்தவனைக் கொண்டுபோய்ப் பள்ளிக்கூடத்திலை விடவேணும். மற்றவனை வீட்டிலை வைச்சுப் பாக்கவேணும்.
பரி : ஏன் உங்கடை மருமகள் எங்கை?
கந் : அவை இரண்டு பேரும் காலமை 7 மணிக்கு வெளிக் கிட்டால் பின்னேரம் 7 மணிக்குத்தான் வீட்டை வருவினம் வேலை, வேலை எண்டு ஓடி ஒடித்திரியினம்.
பரி : ஒம், அதுகளும் உழைக்கத்தானே வேணும்.
கந் : உழைக்க வேணாமெண்டு ஆர் சொன்னது? ஆனால் பிள்ளை பாக்கிறதுக்கே நான் இங்கை வந்தனான்? சுதந்திரத்தைப்பற்றிக்
கதைச்சியள் - அங்கை ஊரிலை இருந்த சுதந்திரம் இங்கை இல்லையே.
பரி : அதுக்கென்ன பேரபிள்ளையளைப் பார்க்கிறதுக்கு
உங்களுக்குக் குடுத்து வைச்சிருக்கே.
கந் : நல்லாய்ச் சொன்னாய் பிள்ளை. நான் படுகிற பாட்டைக் கேட்டால் - கனடாவும் வேண்டாம் கத்தரிக்காயும் வேண்டாமென்டு போச்சு. அங்கை ஒரு நாலுமுழத் துண்டோடை ஊரெல்லாம் உலாத்திக் கொண்டு வருவம். இங்கே சேட் போட்டுச் சுவெற்றர் போட்டு, கோட்டு போட்டு சப்பாத்துப் போட்டு வெளிக்கிட விடிஞ்சுபோம். அண்டைக்கொரு நாள் கையுறையை மறந்துபோய்ப்
போட்டன் - அப்பப்பா - கைவிரலெல்லாம் சுண்டிச் சுண்டிக் குத்திச்சிது. எந்த நேரமும் Fridge க்கை இருந்தமாதிரித்தானே கிடக்குது. இதுவும் ஒரு சீவியமோ? அங்கை கூழைக்
குடிச்சுக்கொண்டு திரிஞ்சாலும் - நிம்மதி பாரும்!
பேரா : கந்தையா அண்ணை - வந்த புதிசிலை எல்லாரும் அப்படித்தான் சொல்லுறது - பிறகு பழகப் பழக எல்லாம் சரியாய் போகும்.
கந் : அதென்னண்டு சரியாப் போறது? என்ரை விஷயத்திலை பாருங்கோ நிம்மதி இல்லை! ஆனவாக்கிலை சனம் இஞ்சை

Page 18
22
எதையும் சமைக்கிறது இல்லை போலை! எல்லாரும் Take out, Walk out எண்டுதான் வாழ்க்கையை நடத்தினம்.
பரி : அதென்னது Take out, walk out என்று புதிசாச் சொல்லுறியள்.
கந் : இதென்ன பிள்ளை இதுவும் தெரியாதே உமக்கு. சாப்பாடு எந்த நேரமும் Take out தான்! அதுவும் இடியப்பமும் சம்பலும்தான். விடிஞ்சாப் பொழுதுபட்டால் - புரிஷனுக்கும் பெண்சாதிக்கும் பிரச்சனை என்றவுடனை walk out - அது போய் Single என்று சொல்லிக் கொண்டு Welfare எடுக்கிறது. பிறகு கொஞ்ச நாளைக்குப்பிறகு ஒண்டாகிறது. இதுதானே இங்கையெல்லாம் நடக்குது தாய் தகப்பனை ஸ்பொன்சர்பண்ணிப் பிள்ளையளைப் பாக்க விட்டிட்டு அவை உலாத்துறது - எனக்கு சீய் என்று போட்டுது பாரும்!
பரி : இதெல்லாத்தையும் விட்டுப்போட்டு நிம்மதியாய் இருங்கோ - வாருங்கோ சாப்பிடுவம்.
கந் : அதுக்கென்ன.
அங்கம் : 4
(பேரானந்தம் வீடு - கந்தையரும் பரிமளமும் கதைத்துக்கொண்டு இருக்கிறார்கள். )
கந் : பிள்ளை நான் திறந்த வீட்டக்குள்ள நாய் வாற மாதிரி
உங்கடை வீட்டை சொல்லாமல் கொள்ளாமல் வாறனென்று குறை நினைச்சுக் கொள்ளாதையும்.
பரி : சாய்ச் சாய் - அப்படி ஒரு குறையுமில்லை. நீங்களும் சனி ஞாயிறிலைதானே வாறியள் எங்களுக்கும் அப்பதானே இருந்து

23
கதைக்க நேரம். இன்றைக்கு அவர் ஒரு அலுவலாய் வெளியிலை போட்டார் - கெதியிலை வந்திடுவார்.
கந் : இல்லைப் பிள்ளை இஞ்சை கனடாவிலை - வீட்டை போறதென்றாலும் ரெலிபோனிலை அடிச்சு சொல்லிப் போட்டுத்தான் போகவேணும் என்று மருமக ள் சொன்னவ. ரெலிபோனிலை அடிக்கவேணுமென்றவுடனை நான் முதலிலை யோசிச்சன் அதுவும் ஒரு சகுனமாக்கும் என்று. பேந்துதான் மருமகள் சொன்னா அடிக்கிறதென்றால், Cal பண்ணுறதென்று. இங்கை கனடாவிலை சில புதுப்புதுச் சொல்லுகள் புதிய கருத்திலை சொல்லுகினம்.
பரி : ஓம் பாருங்கோ நல்லாய்ச் சொன்னியள். ஒவ்வொரு இடத்துக்கும் ஒவ்வொரு மாதிரியான கருத்திலை சொற்கள் மாறிக் கொண்டுதானே போகுது.
கந் : அன்றைக்கொருநாள் அவன் ஒரு கூட்டாளியோடை கதைக்கேக்கை ஆறு மணிக்கு இறங்கடாப்பா நான் வந்து Pickup பண்ணுறன் என்றான். நான் என்ன மரத்திலையா இருக்கிறன் இறங்க என்று கேட்டன்.
பரி : ஓம். இஞ்சை எல்லாரும் இறங்கிறதென்றுதான் சொல்லுறது. ஏனென்றால் வந்த புதிசிலை எல்லாரும் பெரிய மாடிக் கட்டிடங்களிலை, Appartmentகளிலை தானே இருந்தவைஅதுதான் கீழே இறங்குகிறதென்று சொல்லிச் சொல்லி இப்ப வீட்டிலையிருந்து வெளியிலை போனாலும் இறங்கிறதென்றுதான் சொல்லுகினம்.
கந் : நீர் வீடென்று சொன்னாப்போலை ஞாபகம் வருகிறது. இஞ்சை வீடொன்று வேண்டிப்போட்டு எங்கடை ஆட்கள் படுகிற பாட்டைப் பாக்கப் பரிதாபமாய் இருக்குது. அங்கை கன காலமாய் வீடு வாசலெல்லாம் பூட்டிக்கிடக்குது.
பரி : ஒம். வீடு வாங்கினால் கஷ்டந்தான் இங்கை ஒன்றும் நிரந்தரமில்லை - வீடு, வேலை எல்லாமே அப்படித்தான்.
கந் : ஆனால் வெல்பெயர் நிரந்தரமாய்க் குடுக்கிறான்தானே!

Page 19
24
பரி : அதுவும் முந்தினமாதிரியில்லை. இப்ப கெடுபிடி கூட!
கந் : அது எங்கடை ஆட்களுக்குப் பிரச்சனை இல்லை. எதையுஞ் சமாளிப்பினை அவை - இஞ்சை எங்கடை ஆட்கள் சிலர் நடந்து கொள்வதைப் பார்த்தால் சரியான கவலையாய்தான் இருக்குது.
பரி : என்னத்தைப் பற்றிச் சொல்லுறியள்?
கந் : அண்டைக்கொரு Birthday Party என்று என்ரை கூட்டாளி
வரச் சொன்னார. வெளிக்கிடைக்கை மருமகள் சொன்னா - மாமா நீங்கள் அங்கை போய் குடிச்சுப்போட்டுத் தலைகீழாக நிக்காதேங்கோ எங்களுக்கெல்லாம் shame ஆப் போமென்றா - நான் சொன்னன்
பிள்ளை இஞ்சை குஞ்சு குருமானெல்லாம் குடிக்கிறதைப் பாத்திட்டு நீ அப்படி எனக்குச் சொல்லுறாய். உனக்குத் தெரியுமா நான் கோப்பி தேத்தண்ணியைத் தவிர வேறை ஒன்றும் குடிக்கிறதில்லை என்று
பரி : ஒம், ஓம். நீங்கள் சொல்லுவது சரி இஞ்சை எல்லாரும் குடிதான். அதுவும் Birthday Party என்றால் தண்ணி ஒடும்.
கந் : அதை அண்டைக்குத் தானே பாத்தன். ஒரு வயசுக் குழந்தைக்குப் Party-Hall எடுத்து கேக் வெட்டி எல்லாரையும் கூப்பிட்டு கும்மாளம் போடுகினை. அது கூடாதெண்டு நான் சொல்ல இல்லை. ஆனால் குழந்தைப் பிள்ளையின்ரை மனதிலை என்னத்தை வளர்க்கிறம் - Birthday Party என்றால் எல்லாரும் குடிச்சுக் கும்மாளம் அடிக்கலாம் என்பது மனசிலை பதிந்துபோம். அதுவும் வளர்ந்த உடனே போத்திலோடை நிக்குது. இந்த மாதிரியான Party களிலை செலவழிக்கிற காசிலை ஒரு பகுதியை ஊரிலை கஷ்டபடுகிற எங்கடை சனத்துக்குக் கொடுத்தாலும் புண்ணியமாய் இருக்கும். குழந்தைப் பிள்ளையின்ரை Party யிலை குடியை விட்டிட்டுப் பெரிய ஆக்களின்ரை Birthday Party யிலை குடிச்சால் நல்லதென்று நான் நினைக்கிறன்.

25
(இந் நேரம் பேரானந்தம் உள்ளே வருகிறார்)
பேரா : அது பிழையில்லை - முன்னுக்கு இருக்கிறவை ஆரென்றாலும் வாறவையை வரவேற்கிறதுதானே எங்கடை சம்பிரதாயம்.
பரி : உங்களுக்கு ஏதாவது குடிக்கக்கொண்டு வரட்டே?
பேரா : ஒம், சூடாய் எது தந்தாலும் நல்லது.
கந் : நீங்கள் களைச்சுப்போய் வந்திருப்பியள்
பேரா : சாய் நான் காரிலைதான் போனனான். உங்கடை பாடெல்லாம் எப்படி?
கந் : ஒரு மாதிரிச் சீவியம் போகுது. நீங்களும் கிட்ட இருக்கிறபடியாலை சனி ஞாயிறு உங்களிட்டை வந்து போறது பெரிய ஆறுதலாய் இருக்குது.
பேரா : அதுசரி நீங்கள் இந்த - Titanic - என்ற படம் பாத்தியளோ?
கந் : ஏதோ வீட்டிலையும் அண்டைக்குப் போய் ரிக்கற் இல்லாமல் திரும்பி வந்தவையாக்கும். அதைப்பற்றி அவை என்னோடை ஒண்டும் கதைக்கிறதில்லை. எனக்கும் படங்கள் பாக்கிறதிலை ஒரு நாட்டமில்லை.
பேரா : நீங்கள் ஒருக்கால் இந்தப் படத்தைப் பாக்கிறது நல்லது. அமெரிக்கா முழுவதும், ஏன் உலகம் முழுவதும் இந்தப் படத்தைப் பற்றித்தான் கதைக்குது.
கந் : அவ்வளவு நல்ல படமோ அது?
பரி : இந்தாருங்கோ Tea - (கணவரைப் பார்த்து) உங்களுக்கும் ஒன்று கொண்டு வந்தனான்.

Page 20
26
கந் : பிள்ளை நான் அடிக்கடி ரீ குடிப்பதில்லை - எண்டாலும் கொண்டு வந்துவிட்டீர், தாரும்.
பரி ; Titanic ஒரு நல்ல படம் நீங்கள் அதைக் கட்டாயம் பார்க்கத்தான் வேணும்.
கந் : நீங்கள் இரண்டு பேரும் ஏற்கனவே பாத்திட்டியள் போலை.
பரி ; ஆனால் இன்னொருக்கால் பார்த்தாலும் நல்லதுபோலை கிடக்குது.
பேரா : நீர் இரண்டாந்தரம் பார்க்க நினைக்கிறீர் - அமெரிக்காவிலை ஒரு மனிசி இந்தப் படத்தை ஒவ்வொரு நாளும் போய்ப் பார்க்கிறதைக் கண்ட தியேட்டர் மனேஜர் அவளைக் கூப்பிட்டு ஒரு open pass ஐயே கொடுத்து நீங்கள் எப்ப வேண்டுமானாலும் வந்து பார்க்கலாமென்று சொல்லிப்போட்டார்.
கந் : ஏன் அந்த மனிசிக்கு என்ன விசரே?
பேரா : மனிசிக்கு மட்டுமில்லை உலகத்திலுள்ள எல்லாருக்கும் Titanic விசர் பிடிச்சிட்டுது. அண்ணை உங்களுக்குத் தெரியுமா? அதிலை நடிச்ச பெடியனுக்கு இப்ப சினிமா உலகத்திலை பெரிய கிராக்கி ஏற்பட்டுப்போச்சு. அவனுக்கு இப்ப 23 வயசு - பெட்டையள் எல்லாம் அவனைத் தெய்வமாக வணங்கிற அளவுக்கு பைத்தியம் பிடிச்சு அலையுதுகள்.
பரி : எத்தனையோ நாடுகளிலை அவனுக்குச் சங்கங்களும் ஆரம்பிச்சிருக்கினை என்று பேப்பரிலை பாத்தன்.
பேரா : அது மாத்திரமல்ல அவனுக்கு 212 மில்லியன்தான் Titanic இலை நடிக்கிறதுக்குக் கொடுத்தது. இப்ப அவனுக்கு 25 மில்லியன் கொடுத்தால்தான் நடிக்கப் போவான். ஆவ்வளவு தூரத்திற்கு அவன் 3UU 9(5 Super star gé65 'LT6i.

27.
பரி : ஆளும் பாக்க வடிவாய்தானே இருக்கிறான் - இந்தக் கதையிலையும், எடுத்திருக்கிற முறையிலும்தான் சனம் முண்டியடிச்சுக் கொண்டு ஓடுது.
பேரா : இன்னொரு விஷயம் கேளுங்கோ - இந்தப்படத்தக்கு 200 மில்லியன் U.S டொலர் செலவழித்தவை - காசைக் காசென்று பாராமல் செலவழித்திருக்கினை. Titanic தாண்ட மாதிரி இவையின்ரை காசும் தாண்டு போமோ என்று ஆரம்பத்திலை பேப்பர் காரர் எழுதினவை. இப்ப அமெரிக்கா, கனடாவிலை மட்டும் 500 மில்லியனுக்குக் கிட்ட உழைத்துப்போட்டினை. உலகத்திலை ஒரு பில்லியனுக் மேலே சேர்ந்திட்டுது. இது எல்லாப் படங்களைக் காட்டிலும் வசூலில் ஒரு சாதனையை ஏற்படுத்தியிருக்குது.
பரி : இன்னும் கூடுதலாக உழைத்துக்கொண்டுதான் இருக்குது. உங்களுக்கத் தெரியுமே இந்தப் படத்தை எடுத்தவர் ஜேம்ஸ் கமரன் என்ற கனடியர் என்று.
கந் : என்ன இரண்டுபேரும் இப்படி சொல்லி என்னை இண்டைக்கே படம் பார்க்க அனுப்புவியள் போலை. அது சரி அந்தக் கப்பலின்ரை சரித்திரத்தைக் கொஞ்சம் சொல்லுங்கோ கேட்பம்.
பேரா : இது வந்தண்ணை இங்கிலாந்திலை 1912 ஆம் ஆண்டிலை கட்டப்பட்ட கப்பல் - உலகிலேயே மிகப் பெரிய கப்பல் தாளாது, எல்லாம் இரும்புக் கவசத்தாலை கட்டப்பட்டது என்று ஒரே விளம்பரம் கப்பல் ஓடுவதற்கு முன்னமே செய்யப்பபட்டது. எத்தனையோ மில்லியன் பவுன்ட்சிலை செய்யப்பட்ட கப்பல். இது சவுதம்ரன் என்ற இடத்திலையிருந்து அதன் கன்னிப் பயணத்தை ஏப்பிரல் 1912 ஆம் ஆண்டு தொடங்கி நியூ யோர்க் நகரத்துக்குச் சென்று கொண்டிருந்தது. ஒரு நாள் இரவு ஒரு பெரிய ஐஸ் மலையில் மோதி நியூபவுண்லாந்திலை இருந்து 200 மைல்களுக்குக் கிட்டக் கடலிலை தாழ்ந்து போச்சு.
கந் : பெரிய கப்பல் என்றால் கணக்க ஆட்கள் இருந்திருப்பினையே?

Page 21
28
பேரா : ஓம். ம். எல்லாமாக 2200 பேர் பயணம் செய்தவை. அதிலை 700 பேர்தான் தப்பினது. மற்ற 1500 பேரும் செத்துப் போச்சினை.
கந் : அட கடவுளே! அவ்வளவு பேருக்கும் ஒரே தலைவிதியா? கேட்க கவலையாய்தான் இருக்கு.
பரி : உங்களுக்குச் சொன்னால் என்ன - படம் பாத்த மாதிரியில்லை. நீங்களும் அந்தக் கப்பலிலை பிரயாணஞ் செய்யிற மாதிரித்தான் எடுத்திருக்கினம். உண்மையிலை அந்தக் கப்பல் தாழ்ந்து சனமெல்லாம் கடலிலை மிதக்கேக்கய் அழுகைதான் வந்துது.
பேரா : உமக்குத் தெரியுமா - இந்த ஆட்கள் கப்பலிலை இருந்து விழுகிறது, தண்ணியிலை மிதக்கிறது எல்லாம் கொம்பியூட்டர் Animation அதாவது உயிரூட்டல் என்று ஒரு நவீன முறையைப் பாவித்து அப்படியே தத்தரூபமாகச் செய்யதிருக்கிறார்கள்.
கந் : அப்ப உண்மையான சனம் அப்படி விழவில்லையோ?
பேரா : விழுகிறது. மிதக்கிறது - கப்பலிலை தொங்குறது எல்லாம் மனிதனர் போன்று உயிரூட்டப்பட்ட கம்பியூட்டர் வடிவங்களை வைச்சுத்தான் படத்திலை சேர்த்தது. இதுக்கு எத்தனைபேர் வேலை செய்தவை என்று தெரியுமா?
கந் : என்ன தம்பி எங்கடை ஆட்களும் படம்தானே எடுக்கினை. ஒரு தோணியை வைச்சுப் படம் எடுக்கத் தெரியாமல் திண்டாடுகினை.
பேரா : எங்கடை ஆட்களும் திறமை இல்லாதவையென்று சொல்ல முடியாது. ஆனால் இவ்வளவு பணஞ் செலவளிச்சுப் படத்தை எடுத்தால் அதைத் திருப்பி எடுக்கிறது ஐமிச்சம். ஆங்கிலப் படமென்றால் உலகம் முழுவதும் ஓடி உழைச்சுப்போடும். அதுதான் அவையும் துணிந்து செலவழிக்கிறது.
கந் : ஒரு பில்லியன் டொலர் சேந்திட்டுது என்று சொன்னியள் அது எவ்வளவு காசு? ሥ

29
பேரா : ஒரு பில்லியன் அதாவது 1ம் 9சைபர்களும். அதாவது ஆயிரம் கோடி.
கந் : அப்பாடி அவ்வளவு காசையும் எண்ண விடிஞ்சுபோம் போலை?
பேரா : அதுமட்டுமல்ல. இந்தப் படத்தை எடுக்க அவை எவ்வளவு பாடு பட்டினம் என்பதற்கு ஒரு உதாரணம் சொல்லறன். கடைசிக் கட்டத்திலை கதாநாயகன், கதாநாயகியை ஒரு மரக்கதவுக்குமேலை ஏத்திப்போட்டு அவன் தண்ணிக்கை அதைப் பிடிச்சுக்கொண்டு கதைக்கிறான். இரவு நேரம், தண்ணி கடுங் குளிர் அவன் கதைக்கிற நேரத்திலை, வாயிலை இருந்து ஆவி போகிறதைப் படம் எடுக்கிறதுக்கு, ஒரு குளிர் அறை கட்டி அதிலை வெல்வெட் கம்பளியாலை உடுப்பைப்போட்டு, வெவ்வேறு ஆட்களை அதை நடிக்கவிட்டு, அந்த ஆவியை மட்டும் படம் எடுத்துப் பிறகு கதாநாயகனைச் சாதாரணத் தண்ணியிலை விட்டுப் படம் எடுத்து, அந்த ஆவியை அவனுக்குச் சேர்த்து கம்பியூட்டர்மூலம் இணைத்துப் படத்திலை கதாநாயகன் வாயிலையிருந்து ஆவி போற மாதிரிச் செய்தார்கள். ܗܝ
கந் : தம்பி, வெள்ளைக்காரன் வெள்ளைக்காரன்தான். அவன் ஒரு அலுவலைச் செய்தால் அதை நல்லாய் ஆராஞ்சுதான் செய்வான். எங்கடை ஆட்கள் மாதிரி அரைகுறை வேலை செய்யமாட்டான்.
பரி : நீங்கள் சொல்லுறதும் சரிதான். இந்தப்படத்திலை அவங்கள் கையாண்டிருக்கிற தொழில்நுட்பம் எல்லாம் ஆச்சரியமாகத்தான் இருக்குது.
பேரா : இதைப்பற்றி மணிக்கணக்காய்ப் பேசிக் கொண்டிருக்கலாம். பெரிய திரையிலை பாக்க நல்லாய்தான் இருக்குது.
கந் : அப்ப என்னையும் உடனே போகச் சொல்லுறியள்.
பேரா : சாய் - சாய், நேரம் கிடைக்கிற நேரம் போய் பாருங்கோ. கந் : ஒம், அடுத்த கிழமை போகத்தான் வேணும். அப்ப நான் வாறன் தம்பி, பிள்ளை வாறன்.

Page 22
( பேரானந்தம் ஏதோ வாசித்துக் கொண்டிருக்கிறார் - மனைவி பரிமளம் ஏதோ முணு முணுத்துக் கொண்டு உள்ளே வருகிறாள். )
பரி : நீங்கள் நல்ல உல்லாசமாக இருந்து வாசித்துக் கொண்டிருங்கோ, நான் இந்தக் குளிருக்கை போய் சாமான்கள் வாங்கி வாறதுக்கிடையிலை வேணாமென்று போச்சுது.
பேரா : என்ன பரிமளம் வரமுதலே முணுமுணுணுத்துக் கொண்டு அலுப்போடு வாரீர்! நீர்தானே சாமான்கள் வாங்கிறது என்ரை பொறுப்பு, உங்களுக்கு ஒன்றும் பாத்து வாங்கத் தெரியாது என்று சொல்லிப்போட்டு வெளிக்கிட்டனீர்.
பரி : ஒம ஓம். இப்பத்தானே விளங்குது எங்கடை தமிழர் கடையிலை அவை சாமான்கள் விக்கிறமுறை. சில மரக்கறிச் சாமான்களுக்கு விலை போடுறதில்லை. அதைக் கேட்டால் சிலபேருக்கு அது பிடிக்குதில்லை. இனிக் கடைக்குள் அசைய இடமில்லாமல் ஒரு சின்ன இடத்துக்கை சாமான்களை முன்னாலும் பின்னாலும் அடுக்கி வைத்து ஆட்கள் முட்டிக்கொண்டும் இடித்துக் கொண்டுந்தான் போகவேணும்.
பேரா : இப்ப விளங்குதே இவ்வளவு நாளும் நான் சாமான் வாங்கப் பட்டபாடு. உமக்கென்ன வீட்டுக்குள் இருந்துகொண்டு இதென்ன வாடல் கத்தரிக்காயும் அழுகின வாழைப்பழத்தையும் வாங்கிக் கொண்டு வந்திருக்கிறியள் என்று.
பரி : இவ்வளவு பிரச்சனைக்குள்ளும் எங்கடை ஆட்கள் சிலர் நடந்து கொள்ளுற விதத்தைப் பார்க்க ஆத்திரமாகத்தான் கிடக்குது.
பேரா : அதென்னத்துக்கு உமக்கு ஆத்திரம் வருகுது

3.
பரி : கடைக்குள்ளை வந்து நின்றுகொண்டு டக்கென்று செல்போனைத் தூக்கி, இஞ்சேரப்பா அங்கை தூள் இருக்கோ, மல்லி இருக்கோ என்று மனிசியிட்டை அடிச்சுக் கேட்பினை சிலபேர். ஏதோ கண்டறியாதவன் பெண்டிலைக் கண்டால் காடு மேடல்லாம் கொண்டு திரிவானம்.
பேரா : எங்கடை ஆட்கள் சிலபேற்றை குணத்தை மாத்த முடியாது. உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமோ.
பரி : போனிலை கதைக்கும்போது மெதுவாகக் கதைக்கிறதில்லை. கொஞ்சமாவது மரியாதை இல்லாமல் நடக்கினை எங்கடை ஆட்கள் சிலர்.
பேரா : நீர் போய் மரியாதை, Manners என்று கதைக்கிறீர பலமாகக் கதைத்தால்தானே எல்லாரும் பாப்பினை அவரிட்டை - செல் போன் - இருக்கிறதை.
பரி : பொதுவாக எங்கடை ஆட்கள் பொது இடங்களிலும் வீட்டிலை கத்திற மாதிரித்தானே கதைக்கிறது. பஸ்ஸிலை போனாலென்ன சப்வேயிலை போனாலென்ன எங்கடை ஆட்கள் கத்திக் கதைத்தே மற்றவையைக் கலைத்துப் போடுவினை.
பேரா : எங்களுக்கு, மற்றவைக்கு இடைஞ்சலாக இருக்கிறோமே என்று ஒரு கவலையும் கிடையாது. எந்த நேரமும் எங்கை போனாலும் கதை, கதை, கதையிலேயே காலமெல்லாம் போகுது.
பரி : இன்னொரு விஷயமென்னவென்றால், பலசரக்குக் கடை யிலையும் பலகாரங்கள் விக்கினை. அதை இப்ப கண்ணாடிப் பெட்டிகளிலை வைச்சிருக்கினை. ஆனால் அதை Cypt)- வைக்கிறதில்லை. கையாலைதான் எடுத்துக் குடுக்கிறது. சில இடங்களிலை கறள்கட்டிய முள்ளுக் கரண்டியைத்தான் பாவிக்கிறது. இதையெல்லாம் இங்கை இருக்கிற சுகாதார இன்ஸ்பெக்டர்மார் பாக்கிறதில்லையோ?

Page 23
32
பேரா : அவர்களுக்குப் பலசரக்கு கடையிலை பலகாரம் விற்கிறார்கள் என்பது தெரியாமல் இருக்கலாம். ஆனால் இப்படியான : ஒழுங்கீனங்கள் நடைபெறுகிறதை நாங்களே தொலைபேசியில்) அடித்துச் சொல்லலாம்.
பரி : ஆருக்கு அடித்துச் சொல்லுறது?
பேரா : சுகாதாரத் திணைக்களத்துக்கு தொலைபேசியில் சொல்லலாம். ஆதோடு தரக்குறைவான பலசரக்குச் சாமான்கள் விற்பதை Consumers and Corporate Affairs 6T6ip $60600T did,677 ig) is எடுத்துச் சொல்லலாம்.
பரி : பொதுவாக எங்கடை பலசரக்கு கடையிலை ஒரு பக்கத்திலை மீன் கடையும் இருக்கும். குளிர் காலத்திலை அதற்குள் போய் சாமான்கள் வாங்கி வந்தால் உடுப்பு முழுவதும் ஒரே வெடுக்கு நாற்றமாய் இருக்கும்.
பேரா : ஏன் சில வீடுகளுக்குள் போனாலும் பொரியல் மணமும் வெடுக்கும் முன்னுக்கு வந்து வரவேற்குமே!
பரி : அதுமாத்திரமல்ல. எங்கடை ஆட்கள் பஸ்சுக்குள் வந்து ஏறினவுடன் மற்றச் சனமெல்லாம் மூக்கைப் பொத்துறதை நான் பலமுறை பாத்திருக்கிறன்.
பேரா ; இதற்காகத்தான் மணமகற்றும் கருவிகளும் வாசனைப் பொருள்களும் விற்கிறார்கள். அவற்றை வாங்கிப் பாவிக்கவேணும். பொதுவாக நாங்கள் பாவிக்கிற மிளகாய்த் தூள் காரம் கூடியது. அதைப் போட்டு மீன் பொரிச்சால் வீடு மாத்திரமல்ல, அந்த இடம் முழுவதுமே மணக்கும். இதை நாங்கள் இல்லாமல் செய்வதற்கு கூடிய கவனமெடுக்க வேணும்.
(இந்நேரம் கந்தையர் வருகிறார்)
பேரா : வாருங்கோ அண்ணை - நல்ல மணத்தோடை வாறியள்.

33
கந் வந்ததும் வராததுமா நல்ல மணம் என்று சொல்லுறியள் - வரும்போது நீங்கள் இரண்டுபேரும் ஏதோ பொரிச்ச மீன் மணத்தைப் பற்றிக் கதைத்த மாதிரிக் கிடந்தது.
பரி : ஒம். எங்கடை ஆட்களின்ரை வீடுகளிலை வருகிற மணத்தைப்பற்றித்தான் கதைத்துக் கொண்டிருக்கிறம். ஆனால் நீங்கள் நல்ல மணத்தோடை வந்திறங்கிறியள்.
கந் : ஒம். நான் பாருங்கோ பின்னேரங்களிலை கொஞ்ச நேரம் சாமி கும்பிட்டுத்தான் வெளிக்கிடறது. அன்றைக்கு ஒரு தமிழ்க் கடையிலை நல்ல ஊதுவத்தி இருக்குது, அண்ணை கொண்டு போங்கோ என்று சொன்னான். அதைக் கொளுத்தி வைச்சுத்தான் சாமி கும்பிட்டுட்டு வாறன்.
பரி : நல்ல யோசனை ஒன்று எனக்கு வருகிறது. இந்த மீன் பொரியல் மணத்தை இல்லாமல் செய்யிறதுக்கு இந்த ஊதுவத்தியைக் கொளுத்தி வைக்கலாமெல்லே?
பேரா : கொளுத்தி வைச்சாலும் மீன் பொரியல் மணத்தை இல்லாமல் செய்ய ஏலாது. ஏனென்றால் மீன் பொரியல் மணம் எண்ணையோடும் தூளோடும் கலந்து ஆவியாகப்போய் சமயலறை அலுமாரி கீழே இருக்கிற கம்பளம் (carpet) எல்லாம் ஒட்டிக் கொள்ளும். அது லேசிலை போகாது. அதுக்குத்தான் விசைகூடிய விசிறி அல்லது மணமாற்றுக் கருவி பாவிக்க வேண்டும்.
கந் : எங்கடை வீட்டிலை இந்தப் பொரியல், கரியல் மணமெல்லாம் கிடையாது பாருங்கோ
பரி : நல்ல கதையாய் இருக்கு - நீங்கள் என்ன பாவிக்கிறியள்?
கந் : பிள்ளை வீட்டிலை சமைச்சால்தானே பொரியல் மணம்
வாறத்துக்கு. வரயிக்கை ஒரு பாசலோடை வருவினை. அல்லாட்டிச் சாப்பிட்டிட்டு வருவினை. நான் ஏதோ இருக்கிறதைச் சமாளிப்பன்.

Page 24
34
பரி : அப்ப உங்கடை வீட்டிலை கனடியன் பிளான் என்று சொல்லுங்கோ. இங்கை காலமை எழும்பி முகத்தைக் கழுவிப்போட்டு நேரே கோப்பிக் கடைக்குத்தானே போறது.
கந் : ஆனால் எங்கடை வீட்டிலை பிள்ளை முகங்கழுவாமலே வீட்டிலே ஒரு கோப்பி பொட்டுக் குடிச்சிட்டுத்தான் மற்ற வேலை. ஆனால் ஒன்று, பெட்டிலை வைச்சுக் குடிக்கிறதில்லை.
பேரா : அது ஒரு முன்னேற்றமான செயல்தான். உங்களுக்குத் தெரியுமா அண்ணை கோப்பி குடிக்கிறதிலை முன்னுக்கு நிற்கிற
நாடுகளிலை கனடாவும் ஒண்டென்று.
கந் : கோப்பி குடிக்கிறதிலை மட்டுமா முன்னுக்கு நிக்கினை எல்லாத்திலையும்தானே நிக்கினை எங்கடை ஆட்கள்.
பேரா : இந்தக் கோப்பியின்ரை கதை தெரியுமா உங்களுக்கு?
பரி : அதென்ன கோப்பிக்கதை- பொறுங்கோ நான் போய் எல்லாருக்கும் கோப்பி போட்டுக்கொண்டு வாறன்.
கந் : வேண்டாம் பிள்ளை நான் இந்தக் கோப்பி அதிகம் குடிப்பதில்லை.
பரி : அப்ப என்ன, ரீ ஒன்று கொண்டு வரட்டே? :) Tðèí !
கந் : நான் வந்து உங்களுக்கு நெடுகலும் கரைச்சல். சரி நல்ல ரீ ஆய் ஒன்று கொண்டு வாரும்.
(பரிமளம் போகிறார்)
கந் : அதென்ன கோப்பிக் கதை தம்பரி. சொல்லுமன் கேட்பம்.
பேரா : அதுக்கு முதல் உங்களுக்கொன்று சொல்லவேணும். இந்த தேயிலை இருக்கல்லே அது இருதயத்துக்கு நல்லதாம்.
தேத்தண்ணி அதுவும் பாலில்லாமல் குடிக்கிறது இன்னும் விசேஷமென்று ஆராய்ச்சியாளர் சொல்லியிருக்கிறார்கள்.

35
கந் : அதுதான் அந்த நாளையிலை எங்கடை ஆட்களெல்லாம் வெறுந் தேத்தண்ணி குடிச்சுக்கொண்டே வயலிலை வேலை செய்து ஒரு நோய் நொடி இல்லாமல் இருந்தவை. இவை இப்பதான் கண்டு பிடிச்சினை ஆக்கும்.
பேரா : ஒம், ஓம். நீங்கள் சொன்னது சரிதான்.
(பரிமளம் தேநீருடன் வருகிறார்)
பரி : சரி, இந்தாருங்கோ எல்லாருக்கும் தேத்தண்ணியே போட்டுக் கொண்டு வந்திட்டன்.
கந் : என்ன போனதும் வந்ததுமாய் வந்திட்டாய் பிள்ளை.
பரி : இஞ்சை பாருங்கோ எல்லாம் கரணிற் தானே- மிகவும் லேசாய் வேலைகளை முடிக்கலாம்.
கந் : சரி தம்பி, பிள்ளையும் வந்திட்டா கோப்பிக் கதையைச் சொல்லும்.
பேரா : கோப்பி வந்து ஏறக்குறைய 675 ஆம் ஆண்டிலைதான் கண்டு பிடிக்கப்பட்டதுஇ கோப்பிச் செடியைப்பற்றி அதுக்கு முந்தி ஒருவருக்கும் தெரியாது- அரேபியாவிலை ஒரு பையன் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தான். ஒரு மலையடிவாரத்திலை பின் னேரத்திலை சில ஆடுகள் வழக்கத்தக்கு மாறாகத் துள்ளித்துள்ளி எழும்புறதை சில நாட்ளாகக் கவனித்தான். அவை என்ன செய்யினை என்பதை அவற்றிற்குப் பின்னால் போய் கவனித்தான்.
கந் : பொடி, ஆடுகளுக்குப் பின்னாலை போச்சுதென்று சொல்லுங்கோவன்.
பேரா : ஒம். அவன் பாக்கும்போது ஒரு அடர்த்தியாக வளர்ந்திருந்த செடியிலை இருந்த இலைகளை அந்த ஆடுகள் தின்னத் தொடங்கின. ஒரு மூன்று, நாலு மணித்தியாலங்களுக்குப் பின் துள்ளி விழத்தொடங்கின. உடனே பெடியனும் போய் அந்த

Page 25
36
இலைகளைப் பிடிங்கிச் சாப்பிட்டுப் பார்த்தான். சாடையான கசப்பாய் இருந்தது. அழகான சின்னப் பழங்கள் இருந்தன. அதைப் பிடுங்கிச் சாப்பிட்டான். நல்ல ருசியாய் இருந்தது. உடனே பழங்களைப் பிடிங்கிக் கொண்டு வீட்டுக்குக் கொண்டுபோய் விஷயத்தைச் சொன்னான்.
கந் : அப்ப அரேபிய நாட்டிலைதான் முதன்முதலிலை கோப்பி குடிச்சவை என்று சொல்லுங்கோ.
பேரா : ஒம். பழத்திலை இருந்து கோப்பி விதைக்குப் போய் இப்ப தென் அமெரிக்காவிலுள்ள பெரும்பாலான நாடுகளின்ரை முக்கிய வருமானம் கோப்பிதான்.
பரி : என்ன இருந்தாலும் காலமை. ஒரு கோப்பி குடிக்காட்டில் வேலையே ஓடாது.
பேரா : கனடாவிலை தண்ணியைக் காட்டிலும் கோப்பி குடிக்கிறதுதான் கூட.
கந் : அது நீங்கள் சொல்லத் தேவையில்லை. இங்கை மூலைக்கு மூலை கோப்பிக் கடை. எந்த நேரமும் சனமாய்த்தானே கிடக்குது.
பேரா : உங்களுக்குத் தெரியுமா இந்தக்கோப்பியிலை Cafein என்ற பொருள் இருக்குது. அதுதான் சுறுசுறுப்பை உண்டாக்கிறது. ஆனால் கூடுதலாக எடுத்தால் அது கேடு விளைவிக்கும.
கந் : அதுதான் நான் கோப்பி குறைவாய்க் குடிக்கிறது

37
அங்கம் : 6
(பேரானந்தமும் கந்தையாவும் கதைத்துக் கொண்டிருக்கிறார்கள்.)
கந்தையா : தம்பி இன்றைக்கு ஒரு கலியாணவீட்டுக்குப் போனனான். காசைக் காசென்று பாராமல் எங்கடை ஆட்கள் செலவழிக்கினம்.
பேரானந்தம் : ஒம். இங்கை எல்லாம் அப்படித்தான். எதற்குச் செலவழிக்கிறது எதற்குச் செலவழிக்கக் கூடாதென்று தெரியாமல் கடன்பட்டுச் செலவழிக்கினை. எத்தனையொ கஷ்டப்பட்டு வந்து இரவாய் பகலாய் இந்தத் தொழிற்சாலைகளிலை உழைத்து இப்படி அநாவசியமாகச் செலவழிக்கிறதைப் பற்றி எல்லோரும் நல்லாய் சிந்திக்கவேணும்.
கந் : அங்கை நாங்கள் நல்லாய் இருக்கிற காலத்திலை எப்படிக் கலியாணவீட்டிலும் திருவிழாக்கள் செய்வதிலும் காசைக் கரியாக்கினமோ, அதே வழியிலைதான் இங்கையுஞ் செலவழிக்கினம்.
பேரா : அண்ணை நாங்கள் ஒரே பிழையைத் தான் திரும்பத் திரும்ப விடுகிறம். எல்லாரும் சந்தோஷமாக இருக்கிறது நல்லது. அதற்கு ஆர் ஆரைக் கூப்பிடவேணும் என்ன மாதிரி உபசரிக்கவேணும் என்று ஒரு பிளானும் இல்லாமல் - எல்லோரையும் கூப்பிட்டுச் சாப்பாடு காணாமல் போய்க் கஷ்டப் படுகிறது. இந்த விஷயத்திலை நாங்கள் கனேடியர்களைப் பார்த்துத் தான் பழகிக்கொள்ளவேணும்.
கந் : எங்கடை ஆட்களைத் திருத்த ஏலாது தம்பி. இவர் ஆர் எங்களுக்குச் சொல்ல என்று கேட்பினம். W
பேரா : நாங்கள் பாருங்கோ அண்ணை திருந்தி நடந்தால் தான் மற்றவர்களும் எங்களை மதித்து நடப்பார்கள். நாங்கள் பட்டிக்காடுகள் மாதிரி பழைய முறைகளைக் கட்டிப்பிடித்துக்

Page 26
கொண்டு திருந்தாமல் இருந்தால் எங்களுக்குத்தான் அவமானம். இவ்வளவு காலமும் திருந்தாமல் இருக்கிறதைப் பார்த்து மற்றச் சனம் சிரிக்கிது.
கந் : தம்பி எங்கடை ஆட்கள் திருந்தமாட்டினம். நாய் வாலை நிமித்த முடியாது. அன்றைக்கு கலியாணவீட்டுக்குப் போன கதையைக் கேளும்.
பேரா : என்ன சொல்லப் போறியள் என்று எனக்குத் தெரியும்.
(பரிமளம் வருகிறார்)
பரி : இடையிலை பேசுறதுக்கு மன்னிச்சுக்கொள்ளுங்கோ. சுபமூர்த்தம் என்று பல சாத்திரிமாரிட்டைக்" கேட்டு நாள் நேரமெல்லாம் வைத்துப்போட்டுப் பிறகு தாலி கட்டுறது ஒரு மணித்தியாலத்துக்குப் பிறகுதான்.
கந் : பிள்ளை ஒரு மணித்தியாலத்துக்குப் பிறகு கட்டினாலும் பரவாயில்லை. இரண்டு மூன்று மணித்தியாலத்துக்குப் பிறகெல்லே கலியாணவீட்டைத் தொடங்குகினை.
பேரா : அண்ணை இந்த நேரம் என்றது மிகவும் பொன்னானது. கனடாவிலை நாங்களும் இதைக் கடைப்பிடிக்காவிட்டால் எங்களை மற்றைச் சமூகம் பார்த்துச் சிரிக்கும்.
பரி : நாங்கள் இப்படியே முக்கியமான நிகழ்ச்சிகளை நேரத்துக்கு ஆரம்பிக்காமல் விட்டால் இன்னும் பின்னோக்கிச் செல்லுவமே தவிர முன்னேறமுடியாது.
கந் : நல்லாய்ச் சொன்னாய் பிள்ளை. இங்கை வந்த பிறகும்
நாங்கள் திருந்தவில்லையென்றால் எப்ப திருந்தப் போறமோ தெரியாது.

39
பரி : நாங்கள் பாருங்கோ. எத்தனையோ விஷயங்களிலை கவனமாக இருக்க வேணும். பொது இடங்களிலை முக்கியமாக பஸ்சுக்குள்ளை, இரயிலுக்குள்ளை கத்திக் கதைக்கிறது, அதுவும் மற்றவையைப்பற்றித் தமிழிலை கதைக்கிறது அவைக்கு விளங்காதென்று. ஆனால் தமிழ் தெரிந்த பெண்கள், பிள்ளைகள் இருக்கினமே என்று கொஞ்சங்கூட மரியாதை இல்லாமல், எங்கடை பெடியள் சிலர் பேசிறதைப் பார்க்க அவமானமாய் இருக்கிறது.
பேரா : பொதுவாக எங்கடை இளஞ் சமுதாயம் நடந்து கொள்ளுற விதத்தைப் பார்க்க மிகவும் கவலையாயும் அவமானமாயும்
கிடக்குது.
கந் : எங்கடை பொடியள் பாருங்கோ இந்தப் பிரச்சனையோடை எல்லோரும் மாறிப் போச்சினை. ஊரிலையே எல்லாம் தலைகீழாய் நடந்தவை இங்கை வந்தா திருந்தப் போகினம்? படிப்பு இவையைத் திருத்தும் என்று பார்த்தால் அதாலும் பயனில்லை.
பரி : பழைய காரொன்றை வாங்கிறது - அதுக்குப் பக்கீசுப் பெட்டிகள் மாதிரி ஸ்பீக்கர்களைக் கண்ட இடமெல்லாம் பூட்டிப்போட்டு, காது செவிடுபடும்படியாகப் பாட்டைப் போட்டுவிட்டு கார்க் கதவுகளைத் திறந்துவிட்டுப்போட்டு டான்ஸ் ஆடுறது. மாடி வீடுகளுக்குக் கீழே நின்று இதெல்லாம் தேவையோ?
கந் : பிள்ளை உமக்குத் தெரியுமோ? அற்பனுக்கு பவிசு வந்தால் அர்த்த ராத்திரியிலை குடை பிடிப்பானென்று. அங்கை ஒரு சயிக்கிலுக்கும் வழியில்லாமல் திரிந்தவைதான் இந்தமாதிரி நடந்து கொள்கினம். இதை நாங்கள் ஆரிட்டைப் போய்ச் சொல்லுறது.
பேரா : பொதுவாய் பாருங்கோ எங்கள் இனத்தின் சாபக்கேடு என்னென்றால் ஒற்றுமை இல்லை - மற்றவனை இழுத்து விழுத்திற மனப்பான்மை, பொறாமை, வஞ்சகம் எல்லாக் கெட்ட குணங்களும் எங்களுக்கு இருக்குது.
பரி : குறிப்பாக இங்கை வேலை செய்யிற இடங்களிலை நடக்கிற விஷயங்களைக் கேள்விப்பட்டால் நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாகலாம்போலை கிடக்குது பாருங்கோ.

Page 27
40
கந் : அதென்ன பிள்ளை அப்படி மோசமான செயல்கள் எங்கடை ஆட்கள் செய்கினம்?
பரி ; அதையேன் கேட்கிறியள் பாருங்கோ - பகுதி நேரமாக வேலை செய்யிறவை முழுநேர வேலை எடுக்கிறதுக்காகக் கூடவேலை செய்யிற எங்கடை ஆட்கள் விடுகிற பிழையைப் போய் மனேஜரிட்டைச் சொல்லுறது.
கந் ; வேலை பழகும்போது சிலவேளை பிழைவிடுகிறது இயற்கைதானே. மற்றவனைத் தள்ளிவிழுத்திப்போட்டுதான் முன்னுக்கு வரப் பாக்கிறதுதானே எங்கடை ஆட்களின்ரை குணம்.
பேரா : அண்ணை, உங்களுக்குகொரு கதை தெரியுமா - இந்தக் கிடங்குக்கதை?
கந் : அதென்ன கிடங்குக் கதை? சொல்லும் கேட்பம்.
பேரா : இங்கை ஒரிடத்திலை குற்றவாளிகள் எல்லாரையும் பல கிடங்குகளிலை நிற்கவிட்டுக் காவல்காரரையும் ஒவ்வொரு கிடங்குக்குப் பக்கத்திலை நிற்கவிட்டினையாம். உயர் அதிகாரி ஒருத்தர் ஒவ்வொரு கிடங்காகப் பார்த்துக்கொண்டு வந்தாராம். அவரோடை அவற்றை உதவியாளரும் வந்து கொண்டிருந்தார். ஒரு கிடங்குக்குக் கிட்ட மாத்திரம் ஒரு காவல்காரனையும் காணவில்லை. உடனே அவர் கேட்டாராம், இதென்ன இந்தக் கிடங்கிலை குற்றவாளிகளை நிற்கவைத்திருக்கு. ஏன் காவல் போட இல்லை என்று. உதவியாளர் சொன்னார: சேர் இதிலை நிற்கிற குற்றவாளிகளெல்லாம் தமிழர் என்று. உடனே அவருக்கு ஆச்சரியமாய்ப் போட்டுது. எட தமிழர் அவ்வளவு நல்லவர்களா? என்று கேட்டாராம். உடனே உதவியாளர் சொன்னாராம் - சேர் அப்படியல்ல விஷயம், யாராவது ஏறித் தப்பி ஓட முயற்சி செய்தால், மற்றவங்கள் அவற்றை காலைப் பிடிச்சு இழுத்துக் கிடங்குக்குள் விழுத்திப் போடுவினம் - அதனாலை ஒருதரும் தப்பி ஓட ஏலாது. அதுதான் இந்த கிடங்குக்குக் காவல் போட இல்லை என்று.

4.
கந் : அருமையான கதை, அருமையான கதை தம்பி, அல்லாட்டில் பாருமன் அங்கை நடக்கிற விஷயங்களை. எவ்வளவு ஆயிரக் கணக்கிலை சனஞ் செத்துப்போச்சு? எவ்வளவு ஆயிரம் கஷ்டப்படுகிறது? இன்னும் அரசாங்கத்துக்குக் குடை பிடிக்கிற கும்பல் இருந்துகொண்டுதானே இருக்குது.
பேரா : அண்ணை நீங்கள் இப்போதைய நிலைமையைச் சொல்லுறியள். ஏன் இப்ப பல நூற்றாண்டுகளுக்கு முன்னரும் இதே நிலைதானே. எட்டப்பனும், காக்கை வன்னியனும் சாக மாட்டினம். அவர்கள் எப்போதும் தமிழினத்தில் வாழ்ந்துகொண்டுதான் இருப்பினம்.
பரி : உண்மையிலேயே தமிழன் என்று சொல்லவே வெட்கமாய் இருக்குது.
கந் : இதெல்லாம் எங்களோடை பிறந்த குணங்கள் பிள்ளை அது. சீமைக்கென்ன சிங்கப்பூருக்குப் போனாலென்ன மாறாது.
பேரா இப்ப தமிழ்நாட்டு அரசியலைப் பாருங்கோபிறநாடுகளெல்லாம் சிரிக்கிறார்கள். மக்கள் பணத்தைச் சூறையாடி மாட மாளிகைகள், தங்கத்தாலே தட்டுகள் தாம்பாளங்கள் செய்த ஒரு முன்னாள் முதன்மந்திரி அம்மையாருக்கு அடித்திருக்கிற யோகத்தைதப் பாருங்கோ. இந்திய அரசியலின் போக்கையே நிர்ணயிக்கக்கூடிய நிலைமையை தமிழ் மக்கள் அவவுக்குக் கொடுத்திருக்கிறார்கள் என்றால் அவையின்ரை மேதாவித் தனத்தை என்னென்று சொல்லுறது.
பரி : அவவின்ரை காலிலை விழுந்து கும்பிடுகிற ஆண்களுக்குச் செருப்பாலை அடிக்கவேணும் பாருங்கோ - சீச்சீ அவ்வளவு கேவலமான அரசியல் அங்கை நடக்குது. அப்ப மற்றவன் சிரிக்காமல் என்ன செய்வான், சொல்லுங்கோ பார்ப்பம்.
கந் : பிள்ளை நீர் காலிலை விழுந்ததுக்கு இப்படி ஆத்திரப்படுகிறீர் - குஷ்பு என்ற சினிமாக்காரிக்கு கோயில் கட்டிக் கும்புடுகிற சனத்தை என்னென்று மனிசர் என்று சொல்லலாம் - இல்லை அவையை மணிசர் என்று சொல்லலாமோ.

Page 28
42
பேரா : அரசியல் ஒரு சூதாட்டம்மாதிரி - படிச்ச மனிசரே அரசியலிலை இறங்கிக் கோமாளிகள் மாதிரி நடந்து கொள்கினை. முன்னாள் பிரதம மந்திரி நரசிம்ம ராவ் நல்லாய் படிச்ச மனிசன். ஆனால் கடைசியிலை என்ன நடந்தது பார்த்தியளே. இப்ப லஞ்ச வழக்கிலை மாட்டியிருக்கிறார்.
கந் : இந்தப் பொன்னாசை, பெண்ணாசை, மண்ணாசை எல்லாம் மிகப் பயங்கரமானது. அது லேசிலை ஆட்களை விடாது. இப்ப பாருங்கோவன் எங்கடை மண்ணுக்கு 15 வருஷமாய்க் கிடந்து சாகிறம் - இதெல்லாம் ஆர் செய்த வினைப்பயனோ தெரியாது.
பரி : இந்தச் சுப்பிரமணிய சுவாமி என்பவரைப் பற்றிக் கேள்விப்பட்டனிங்களோ?
கந் : அவர்தானே முந்தி ஜெயலலிதாவை இருபத்தி நாலு
மணித்தியாலத்திலை முதன் மந்திரிப் பதவியிலை இருந்து இறக்குவன் - இந்தா எல்லாம் முடிஞ்சுது, அவ இறங்கிறா என்று கயிறு விட்டவர்.
பரி : இப்ப அவர் எங்கே தொங்குகிறார் என்று சொல்லுங்கோ பார்ப்பம்.
கந் : அம்மாவின்ரை சீலைத் தலைப்பிலல்லே!
பரி : நல்லாய்ச் சொன்னியள் - இவையஞக்கு வெட்கம் ரோசம் மானம் கிடையாதாக்கும்.
கந் : ஏன் பிள்ளை - அமெரிக்க ஜனாதிபதியும் அப்படித்தானே! வெட்கம் கெட்டவேலையள் செய்தவர் என்றெல்லே சொல்லுகினம்.
பேரா : அது ஒரு பரம்பரை விஷயம். இப்ப அமெரிக்காவிலை வீட்டுக்கு வீடு அதுதான் கதை. அதைப்பற்றி அடுத்த கிழமை கதைப்பம். நான் இப்ப முக்கிய அலுவலாய் வெளியிலை போகவேணும்.

43
கந் : அப்படியென்றால் போற வழியிலை என்னையும் இறக்கி விட்டுப் போமென.
பேரா : சரி வெளிக்கிடுங்கோ.
அங்கம் : 7
(பேராசிரியர் பேரானந்தம் கந்தையருடன் பேசிக்கொண்டிருக்கிறார்.)
கந்தையா : தம்பி பேரானந்தம் தொரன்ரோவிலுள்ள கல்விச் சபையெல்லாவற்றையுயம் ஒன்றாய்ச் சேர்த்து ஒரு பெரிய கல்விச் சபையை ஏற்படுத்தியிருக்கினமாம் அதைப்பற்றி உமக்கு ஏதாவது தெரியுமா?
பேரா : ஒம, ஓம். நான் அதைப்பற்றி பேப்பரிலும் அவை வெளியிட்ட கைநூல்களிலும் வாசித்தனான். கனடாவிலை இப்படியான ஒரு பாரியம் கல்விச்சபை மாற்றங்களை ஏற்படுத்தியது மைக் ஹரிசின் அரசாங்கம்தான். இதைப்பற்றிப் பலரும் பல மாதிரிப் பேசிக் கொள்கிறார்கள். இதன் முக்கிய நோக்கம் செலவைக் குறைத்துக் குறைந்த ஆட்களோடை கூடிய பயனைப் பெறுவதுதான்.
கந் : நீர் சொல்லுறதைப் பார்த்தால் முன்பிருந்த வெவ்வேறு கல்விச் சபைகளிலை கூடுதலாக ஆட்கள் வேலை செய்தவையோ?
பேரா : ஒம. உங்களுக்குத் தெரிந்திருக்கும், தொரன்ரோ பெரும்பாகத்திலை ஆறு கல்விச் சபைகள் சென்ற வருடம் இயங்கி
வந்தன. ஒவ்வொரு சபைக்கும் ஒரு கல்வியதிபதி, பல மேற்பார்வுைம் யாளர்கள், பல உதவி மேற்பாரவையாளர்கள் என்று பல பேர் வேலை பார்த்தவை. ஒவ்வொரு சபையும் ஒவ்வொரு விதமாக இயங்கி வந்தது.
கந் : அப்படியென்றால் படிப்பு முறையிலும் வித்தியாசம் இருந்ததோ பேரா : படிப்பித்தல் முறைகளிலும் கற்கை நெறிகளிலும் சி வித்தியாசங்கள் இருந்திருக்கும. ஆனால் பொதுவான பாடத

Page 29
44
திட்டங்களிலை அவ்வளவு மாற்றமிருக்கவில்லை. ஏனென்றால் ஒன்ராறியோ கல்வி அமைச்சுதான் பாடத் திட்டங்களை வரையைைற செய்து வந்தது. ஆனால் பல உப சேவைகளிலை பலவிதமான
மாற்றங்கள் இருந்தன.
கந் : அதென்ன தம்பி உப சேவை என்றது.
பேரா : இதை வந்து Support Services என்று ஆங்கிலத்திலை சொல்லுறது. உதாரணத்துக்கு, இந்த பாடசாலைகளில் மாணவருக்கு ஏற்படும் கற்றல் சம்பந்தமான பிரச்சனைகளை ஆராய்ந்து ஏற்ற பாடமாற்றங்களை கூறுகின்ற உளவியல் நிபுணர்கள், சமூகசேவை ஆலோசகர்கள், மக்கள் தொடர்பு ஆலோசகர்கள், பேச்சு, மொழியியல் வல்லுநர்கள் ஆகியவர்களின் சேவைகளைத்தான் உப சேவைகள் என்று சொல்லுவது. இது
முன்னைய கல்விச் சபைகளில் வெவ்வேறு விதமாக அமைந்திருந்தன.
கந் : இந்த உப சேவைகளைப்பற்றி நான் எங்கடை நாட்டிலை
கேள்விப்பட இல்லையே. அவை ஒருத்தரும் அங்கை இல்லையோ?
பேரா நல்ல கேள்வி ஒன்று கேட்டிருக்கிறியள். உண்மையிலை இது ஒரு வெட்கக்கேடான விடயம். எங்கடை நாட்டிலை பாடசாலைகள் என்றால் ஆசிரியர்கள், அதிபர்கள், உப அதிபர்கள் என்பவர்களோடு முடிந்து விடும். மாணவர்கள் கல்வியில் பின்தங்கிய நிலையில் இருந்தால், படிக்க ஏலாமல் பாடசாலையை விட்டுப் போய் ஏதாவது தொழில் செய்யப் பார்க்கவேணும் அல்லது வயல், தோட்டம் இருந்தால் அதிலை வேலை செய்யவேணும்.
கந் : ஒம், அதுதானே எங்கடை கல்விமுறை.
பேரா : இங்கை அப்படியில்லை - மாணவர்கள் படிக்கக் கஷ்டப்பட்டால், என்ன காரணத்திற்காக அவர்களுக்கு இந்த நிலை, ஏற்பட்டது என்பதை அறிய உளவியல் அறிஞர்கள் இருக்கிறார்கள். இவர்களைப் பாடசாலை நிர்வாகம் பள்ளிக்கூடத்திற்கு வரச் சொல்லிக் கூப்பிட்டு விடயத்தை விளக்கும்.

45
பரிமளம் : (வந்து கொண்டே) - ஏதோ பள்ளிககூடங்களைப் பற்றிக் கதைக்கிறியள் போலை, ரீ கொண்டு வந்தனான் குடித்துப்போட்டுக் கதையுங்கோ.
கந் : பிள்ளை முன்னெல்லாம் நான் வந்தால், என்ன குடிக்கிறியள் என்று கேட்பியள். இப்ப எல்லாம் கேட்காமலே ரீ கொண்டு வாறியள்.
பரி : எனக்குத் தெரியும் நீங்கள் ரீ தான் விருப்பமாய்க் குடிப்பியள் என்று. இதிலை கேட்கிறதற்கு என்ன இருக்குது?
கந் : எங்கடை கலாச்சாரத்தை அனுசரித்து, குறிப்புணர்ந்து நடக்கும் ஒரு வீட்டுத் தலைவியாய், நீர் இருக்கிறதைப் பார்க்க எனக்குப் பெருமையாய்தான் இருக்குது.
பேரா : ஏனண்ணை அப்படிச் சொல்லுறியள்?
கந் : இல்லைதம்பரி இப்ப எங்கடை பெண்டுகள் சிலர் மாறிவிட்டினம் - கட்டின கணவனுக்கே தேத்தண்ணி ஊத்திக் குடுக்கிறதை நிப்பாட்டிப் போட்டினம் கனடாவிலை. அவரவர் விருப்பமென்றால் ஊத்திக் குடிக்கவேண்டியதுதான், என்றெல்லே நியாயம் பேசுகினம்.
பேரா : அண்ணை, நீங்கள் ஒருவேளை உங்கடை வீட்டிலை நடக்கிறதைப் பார்த்துப்போட்டு, எல்லா வீடுகளிலும் அப்படித் தானாக்கும் என்று பிழையாய் விளங்கக்கூடாது.
கந் : தம்பி, நீர் ஆரியக் கூத்தாடினாலும் காரியத்திலை கண்ணாய் இருந்து பிடிச்சுப்போட்டீர்.
பரி : சரி, சரி - இதுகளை விட்டுப்போட்டு நீங்கள் ரீயைக் குடித்திட்டு கதைச்சுக் கொண்டிருந்த விஷயத்துக்கு வாருங்கோ,
பேரா : இன்னொரு விஷயம், இங்கே உள்ள கல்வி முறையிலை மாணவர்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறது. அவர்களுடைய பிரச்சனைகளை அலசி ஆராய்வதற்கு முதலில்

Page 30
46
மக்கள் தொடர்பு ஆலோசகர்கள் என்று பாடசாலைச் சபை ஆலோசகர்கள் இருக்கிறார்கள், ஒவ்வொரு சமூகத்திற்கும்.
Lif. : 36061160)uisitsir Community Liaison Counsellor 6T6örgy ஆங்கிலத்திலை சொல்லுறதாக்கும், என்ன?
பேரா : ஒம், ஓம். முன்னைய ஸ்காபரோ கல்விச் சபையிலை இவைக்கு அதுதான் பெயர். ஆனால் வட யோர்க் கல்விச் J60)utf606) 360)6.60)u Multicultural Coordinators, 95.16s பல்கலாச்சாரா இணைப்பாளர்கள் என்று சொல்லுறது. தொரன்ரோ கல்விச் சபையிலை இவை சமூக சேவையாளர்கள், அதாவது Social Workers என்று சொல்லுறது. சில சபைகளிலை பாடசாலையிலுள்ள Guidance Counselors, அதாவது வழிகாட்டல் ஆலோசகர்களே இப்பணிகளைச் செய்கிறார்கள்.
கந் : தம்பி, இப்பதானே விளங்குது ஒவ்வொரு சபையும் வித்தியாசமாய் இயங்கிறதாலை, ஒரு ஒருமைப்பாடு இல்லாமல் போச்சென்று. அது சரி இவையின்ரை வேலை என்ன என்பதைக் கொஞ்சம் விளக்கமாகச் சொல்லும் கேட்பம்.
பேரா : இவையின்ரை வேலையைப் பற்றிச் சொல்லுவதற்கு முன்னர் உங்களுக்கு இவையைப் பற்றிச் சொல்லவேணும் - ஸ்காபரோ கல்விச் சபை இதிலை ஒரு முன்மாதிரியாக இயங்கி வருகிறது. ஸ்காபரோவிலை உள்ள முக்கியமான சமூகங்கள் ஒவ்வொன்றுக்கும் அதே இனத்தை சேர்ந்த ஒருவர் ஆலோசகராகப் பணியாற்றுகிறார்.
பரி : அப்படியென்றால் மொழி அடிப்படையிலை ஆட்கள் நியமிக்கப்பட் டிருக்கினை என்று நினைக்கிறேன்.
பேரா : இல்லை, இல்லை. முக்கியமாக அவர்களின் சொந்த நாட்டின் அடிப்படைக் கலாச்சாரத்தையும் மொழியையும் ஒட்டியே ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இப்போது உதாரணமாக, கறுப்பின மக்களைப் பொதுவாக கரீபியன், ஜமெய்கா, கயானா போன்ற நாட்டு மக்களின் நலன்களைக் கவனிக்க ஒரு ஆலோசகர் இருக்கிறார். சிறீலங்காவைச் சேர்ந்தவர்களுக்கு ஒருவர் இருக்கிறார்,

7
தென்னாசிய மக்களைக் கவனிப்பதற்கு ஒருவர். சீன மொழி, சீனக் கலாச்சாரத்தைக் கவனிக்க ஒருவர். ஸ்பானிய மொழி, கலாச்சாரத்தைக் கவனிக்க ஒருவர் என்று 9 பேர் இருக்கிறார்கள்
கந் : இவையின்ரை வேலை என்ன என்று சொல்லும் கேட்பம்.
பேரா : இவையின்ரை முக்கியமான வேலை, பாடசாலைகளிலுள்ள மாணவர்களுக்குக் கல்வி கற்பதில் பிரச்சினை அல்லது ஒழுங்கீனங்கள் ஏற்பட்டால் இப்பாடசாலைக்குச் சென்று
அம்மாணவர்களோடு அவர்களின் தாய் மொழியில் பேசி பிரச்சினைகளை அலசி ஆராய்ந்து, சில ஆலோசனைகளைப் பாடசாலை நிர்வாகத்திற்கு எடுத்துக் கூறுவது.
பரி : ஒவ்வொரு இன மாணவரின் பிரச்சனையையும் அநத இனத்துக்கென நியமிக்கப்பட்டிருக்கும் ஆலோசகர் ஆராய்ந்து ஏற்ற வழிவகைகளைக் கூறுவார் என்று சொல்லுங்கோவன்.
கந் : இது ஒரு நல்ல முறை. இங்கை பல நாட்டு மக்களும் பல்வேறு விதமான மொழிகளைப் பேசும் மக்களும் இருக்கிற தாலைதான் இப்படிச் செய்திருக்கினை என்று நான் நினைக்கிறேன்.
பேரா : ஒம், நீங்கள் நினைக்கிறது சரி. ஒரு மாணவனின் பிரச்சனையை அலசி ஆராய்வதற்கு அம்மாணவனின் கலாச்சாரப் பின்னணியும், நாட்டுப் பின்னணியும் கட்டாயம் தேவை. முக்கியமாக: எங்களுடைய இலங்கைப் பிள்ளைகளைப் பொறுத்தமட்டில் அவர்களது வாழ்க்கைப் பின்னணியும் பாடசாலைப் பின்னணியும் பற்றிய தகவல்கள் மிகமுக்கியம். இதனைப் பெற்றோரிடமிருந்து ஆசிரியர் நேரடியாகப் பெறுவதற்கு மொழி ஒரு தடையாக இருக்கிறது. பெரும்பாலான எம்மவர்களுக்கு ஆங்கிலம் தெரியாத காரணத்தினால், மக்கள் தொடர்பு ஆலோசகர் அழைக்கப்படுகிறார். அவர் வேண்டிய தகவல்களைப் பெற்றோரிடமிருந்து பெற்று மாணவன் கல்வியில் பின்தங்கிய நிலையில் இருப்பதற்கு மொழியும், பாடசாலைக்கு போவது போர் காரணமாகத் தடைப்பட்டுப் போனதையும் சுட்டிக் காட்டி, ஏற்ற கற்கை நெறிகளை எடுத்துக் கூறுவார்.

Page 31
48
பரி : மிகவும் நல்ல ஒழுங்கிது. மற்றது நான் முக்கியமான கேள்வி ஒன்று கேட்கவேணும். எனக்குத் தெரிந்த ஒரு நண்பியின் பிள்ளைக்கு பாடசாலையிலை உளவியல் சோதனை ஒன்று செய்தபின், P R C யோ என்னவோ, பெற்றார் வரவேணுமென்று ஒரு கடிதம் பாடசாலையிலை இருந்து அனுப்பினவை. அவை ஏதோ பெரிய விஷயம் என்று பயந்து கவலைப்பட்டுக் கொண்டிருந்தவை. நான் அதைப் பற்றிப் பாடசாலையோடு தொடர்பு கொண்டு கதையுங்கோ என்று சொன்னனான் - அதுதான் எனக்கும் ஒன்றும் விளங்கவில்லை.
பேரா : ஒம, இதைப்பற்றிப் பெற்றோர் பயப்படத் தேவையில்லை. இங்கு மாணவர்களுக்கு ஏற்ற கல்வியைத் தெரிந்தெடுத்து வழங்குவதற்கான வழிகளில் இது ஒன்று. P R C என்பது ldentification Placement Review Committee. 915765) அடையாளமறிந்து ஏற்ற நெறி மீளாயும் சபை என்று பொருள்படும். ஒரு மாணவன் கல்வி கற்கக் கஷ்டப்பட்டால் அவனுக்கு கஷ்டம் எதனால் ஏற்பட்டது, எந்தப் பாடங்களில் குறைவாக இருக்கிறான், அவனுக்கு கிரகித்தல், அடையாளமறிதல், கணித்தல் போன்ற மூளையின் பல்வேறு பகுதிகள் சிறப்பாக பணிபுரிகின்றனவா இல்லையா எனப் பரீட்சைகள் மூலமாக அடையாளமறிந்து ஒரு அறிக்கையை உளவியலறிஞர் இந்தச் சபைக்குச் சமர்ப்பிப்பார். இந்தச் சபையில் ஒரு பிரதான உளவியல் வைத்தியர், உளவியலாளர், பாடசாலை அதிபர், சமூகத் தொடர்பு ஆலோசகர், விசேட கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஆகியோர் அங்கம் வகிக்கிறார்கள்.
கந் : தம்பி, குறுக்கே பேசுகிறேன் என்று குறை நினைக்கப்படாது. பரீட்சை வைத்து மூளையின் பகுதிகள் எல்லாம் சரியாக வேலை செய்யிறதா என்று பார்க்கிறார்கள் என்று சொன்னீர்- பலவேறு மெசின்கள் பூட்டிப் பார்க்கிறவையோ அல்லது புத்திப் பரீட்சை ஒன்று, அங்கை வைக்கிற, மாதிரி வைக்கிறவையோ?
பரி : நல்ல கேள்வி கேட்டியள் - நானும் அதைத்தான் கேட்க் வேணும் என்று யோசித்தனான்.
பேரா : மெசின் ஒன்றுங்கிடையாது. எல்லாம் கேள்வியும் பதிலும்தான். சில கேள்விகள் வசனங்களை வாசித்து பதில் எழுதவேணும், சில

ţg
கேள்விகளுக்கு வி ைஇருக்கும் அதிலை சரியானதைத் தெரிவு செய்யவேணும், சில கேள்விகள் படங்களும், குறிகளும் இருக்கும், அதைப்பார்த்து அடுத்த படியை அல்லது இடைவெளியை நிரப்பச் சொல்லியிருக்கும், இப்படி பலமாதிரியான கேள்விகள் இருக்கும்.
பரி : நீங்கள் சொல்லுறதைப் பார்த்தால் எங்கடை நாட்டிலை இருக்கிற புத்திப் பரீட்சை போலைத்தான்.
பேரா : அடிப்படை அப்படித்தான். ஆனால் இது கொஞ்சம் கூடிய தரமுள்ளதாய் இருக்கும்.
கந் : சரி, அந்தச் சபையைப்பற்றிச் சொல்லுங்கோ
பேரா : ஒம. அந்தச் சபை உளவியலறிஞரின் அறிக்கையை அலசி, ஆராய்ந்தபின் அந்த மாணவனுக்கு சிறப்பான ஒரு வகுப்பை அதாவது மாணவர்கள் குறைவாக இருக்கின்ற வகுப்பிலை சேர்த்து, விசேட பயிற்சி பெற்ற ஆசிரியர் மூலம் கல்வி கற்க ஏற்பாடுகள் செய்வதற்கு ஒழுங்குகள் செய்யுயம்படி கூறுவார்கள். எனவே அவர் அவ்வாறான ஒரு வகுப்புள்ள பாடசாலைக்கு அனுப்பப்படுவார்.
கந் : அந்த வகுப்புகள் எல்லாப் பாடசாலையிலும் இருக்காதோ?
பேரா : ஒம். சில பாடசாலைகளிலை மட்டுந்தான் அவ் வகுப்புகள் இருக்கும். வீட்டிலை இருந்து போவதற்கு பஸ் வசதியெல்லாம் கல்விச் சபை செய்து கொடுக்கும்.
பரி : இதுக்குத்தானே அவை பயப்பட்டுக் கொண்டிருந்தவை, விஷயங்களை விளங்காமல் எங்கடை பெற்றோர் ஒவ்வொன்றைப்
பற்றிக் குறை சொல்லுறது.
கந் : அதை மாற்ற ஏலாது பிள்ளை, நேரம் போகுது நான் வாறன்.

Page 32
அங்கம் : 8
பரிமளம் : அன்றைக்கு நீங்கள் கல்விச் சபைகளைப் பற்றிச் சொன்னனீங்கள் இன்றைக்கு இங்குள்ள பல்வேறு பாடசாலைகள், கல்லூரிகளைப் பற்றிச் சொன்னால் நல்லது என நினைக்கிறன்.
பேரா : ஒம். இன்றைக்கு அதைப்பற்றித்தான் சொல்ல யோசித்தனான். இங்கே கந்தையா அண்ணை வாறனென்று அப்போது ரெலிபோன் பண்ணினவர், அதுதான் பார்த்துக் கொண்டிருக்கிறன்.
( கதவைத் தட்டும் சத்தம் )
பரி : யாரோ கதவிலை தட்டுகினை - அவர்போலைதான் கிடக்கிது - (கதவைத் திறந்து) வாருங்கோ வாருங்கோ, உங்களைத்தான் பாத்துக் கொண்டிருக்கிறம்.
கந் : என்ன பிள்ளை? என்னைப் பாத்துக்கொண்டிருக்கிறியளோ? அதென்ன அப்படி? என்ன விசேஷம்?
பரி : அப்படி ஒரு விசேஷமுமில்லை. நீங்கள் வாறது என்று சொன்னியளாம். அதுதான் நீங்கள் வந்தவுடனை எங்கடை கதையைத் தொடங்குவம் என்று இருக்கிறம்.
கந் : அது நல்லது. நான் உங்கடை வீட்டை வரத் தொடங்கின பிறகு எனக்குக் கனடாவைப்பற்றி நல்ல அறிவு ஏற்பட்டிருக்கிற மாதிரி இருக்குது.
பேரா : பூவோடை சேர்ந்த நாரும் மணம் பெறும் என்று சும்மாவுே சொல்லுறது.
கந் : ஒம் தம்பி, நீர் இருந்திட்டு இப்படி ஒரு தட்டுத் தட்டாமல் இருக்கமாட்டீர்.

5.
பேரா : அது கிடக்கட்டுமண்ணை, இன்றைக்கு நாங்கள் தொரன்ரோவிலை இருக்கிற பள்ளிக்கூடங்களைப் பற்றிக் கதைக்கலாம் என்று நினைக்கிறேன்.
கந் : ஒம் தம்பி, அது ஒரு நல்ல விஷயம் - அதற்கிடையிலை மறக்கமுன் ஒன்று சொல்லவேணும்,
பரி : சொல்லுங்கோ - சொல்லுங்கோ கேட்பம்.
கந் : உண்மையிலை எங்கடை பிள்ளையஸ் இங்கை இருக்கிற பள்ளிக்கூடங்களிலை படிக்கிறதற்குக் கொடுத்து வைச்சிருக்க வேணும்.
பரி : ஏன் அப்படிச் சொல்லுறியள்.
கந் : நான் என்ரை பேரப் பிள்ளையை ஒவ்வொரு நாளும் பள்ளிக்குக் கூட்டிக்கொண்டு போறனான்தானே
பரி : ஒம், அன்றைக்கு நீங்கள் சொன்னனீங்கள்.
கந் : நான் பிள்ளை, பள்ளிக்கூட வாசலிலை கொண்டுபோய் விட்டிட்டு வந்து விடுகிறது. ஒரு நாளும் உள்ளுக்குப் போறதில்லை. ஆனால் அண்டைக்கொருநாள் கொஞ்சம் முந்திப் போட்டம் பிள்ளை. அந்த ஆசிரியர் நல்ல மனிசி. வாருங்கோ உள்ளுக்கென்று கூட்டிக்கொண்டு போய் அவற்றை வகுப்பைக் காட்டினார். நான் விறைத்துப் போனன்.
பேரா : ஏன் உள்ளுக்கு நல்ல குளிரோ?
கந் : சீச்சீ - அந்த வகுப்பிருந்த நிலைமையைப் பார்த்துத்தான் - உடனே எனக்கு எங்கடை பாடசாலைகளைப் பற்றியும் வகுப்பறைகளைப் பற்றியும் ஞாபகம் வந்தது. உடைந்த வாங்குகள், கதிரைகள், டச்சுக் காலத்திலை செய்த மேசைகள், இடிந்து போகின்ற நிலையிலுள்ள சுவர்கள், ஒழுகின்ற கூரை, வெடிப்பும் பள்ளமுமுள்ள நிலம் எல்லாம் என் நினைவிலை ஒடிச்சிது.

Page 33
52
பேரா : அண்ணை உங்களுக்குத் தெரியுமா, இங்கை கட்டிடங்கள் கட்டுவதற்குகுச் செலவழிக்கிற காசைக் காட்டிலும், அவற்றைப் பராமரிக்கிறதிலைதான் கூடக் காசு செலவழிக்கினை என்று. 50 வருடங்களுக்குமுன் கட்டின பள்ளிக்கூடங்களைப் பாத்தால் போன வருடம்தான் கட்டினதுபோலைத் தோற்றமளிக்கும்.
பரி : நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கான, சில கல்லூரிகளிலை ஆயிரக்கணக்கான, மாணவர்களும் ஆசிரியர்களும் வகுப்பு களுக்குள்ளும் வெளியும் எத்தனை தடவை நடந்து திரியினம். ஆனால் அந்த நிலத்தையும் சுவர்களையுயம் சுற்றாடலையும் பார்த்தால் எவ்வளவு துப்பரவாகவும், அழகாகவும் இருக்குது. பார்த்தியளே?
கந் : பிள்ளை, உண்மையிலை இந்த விஷயத்திலை வெள்ளைக்காரன் வெள்ளைக்காரன்தான். அவங்கள் வீடென்றாலென்ன பொதுவான இடங்ககளென்றாலென்ன சுத்தம் சுத்தம்தான்.
பேரா : அண்ணை, இன்னொரு விஷயம் நீங்கள் கவனிச்சனீங்களோ தெரியாது. இந்தப் பள்ளிக்கூடங்களிலை இருக்கிற மலசல. கூடங்களுக்குள் போய்ப் பார்த்தியளோ?
கந் : தம்பி - ஓம் ஓம், ஒரு நாள் கலைவிழாவொன்றுக்குகுப் போனபோது போய்ப்பார்த்தனான். உண்மையிலை அதைப்பார்த்தால் இது மலசலகூடந்தானா என்று சந்தேகப்பட வேண்டியிருந்தது.
பேரா : ஏன் அந்த ஐமிச்சம்?
கந் : எங்கடை ஊரிலை இருக்கிறதுகளையும், இங்கிருக்கிறது களையும் பார்த்து நாங்கள் எவ்வளவோ முன்னேற வேண்டி யிருக்குது.
பேரா : அண்ணை இங்கை மலசல கூடமும் சமயலறையும்தான் கூடிய துப்பரவாக இருக்க வேண்டுமென்று எல்லோரும் அக்கறை எடுக்கிறது. நோய்கள் வராமல் இருப்பதற்கு இவை துப்பரவாக இருப்பதுதான் காரணம். பொதுவாக ஆசிய நாடுகளில் இவற்றைப்பற்றி ஒருவரும் அதிகம் அக்கறை கொள்வதில்லை.

53
ஒருவருடைய பழக்க வழக்கங்களை பிரதிபலிப்பது, இந்த இரண்டும்தான் என்பது சொல்லாமலே விளங்கும்.
பரி : உண்மையிலை இந்த விஷயயத்திலை மேலை நாடுகள், மேலை நாடுகள்தான்.
பேரா : எத்தனை ஆயிரம் பேர் உபயோகிக்கிற இந்த மலசல கூடங்கள் எவ்வளவு துப்பரவாகவும் துர்நாற்றம் அற்றனவாகவும் இருப்பதற்கு என்ன காரணமென்று நினைக்கிறியள் அண்ணை.
கந் : இதைப் பாவிக்கும் பிள்ளைகளின் பழக்க வழக்கமும், இவற்றை ஒவ்வொரு நாளும் துப்பரவாகக் கூட்டித் துடைத்து வைக்கும் வேலையாட்களும்தான் என்று நினைக்கிறன்.
பேரா : ஒவ்வொரு பாடசாலையிலும், அங்கு படிக்கும் மாணவரின் எண்ணிக்கையைப் பொறுத்து பராமரிக்கும் வேலையாட்கள் இருக்கிறார்கள். பாடசாலை முடிந்தவுடன் இவர்கள் யாவற்றையும் இரவிரவாகச் சுத்தம் செய்து வைப்பார்கள். பாடசாலை நேரத்தில் ஏதாவது தவறுதலாக நிலத்தில் ஊத்தப்பட்டால் அல்லது பிள்ளைகள் அசிங்கமாக்கினால் அதை உடனேயே துடைத்துத் துப்பரவாக்கி விடுவார்கள்.
கந் : தம்பி, இங்கு போதிய பணம் இருக்குதுரி வசதிகள் இருக்குது- அதுகளை அவர்கள் அப்படிச் செய்கிறார்கள். ஆனால் எங்களுக்கு அந்த வசதி வாய்ப்புக்கள் கிடையாது.
பேரா : அண்ணை, இந்த நியாயத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனென்றால் எல்லாவற்றிற்கும் ஒருவருடைய பழக்க வழக்கங்களதான் காரணம். பொதுவாக எங்கள் நாட்டிலுள்ள ஒரு காரியாலத்தையோ அல்லது ஒரு பொது இடத்தையோ பாருங்கோ - கட்டின உடன் வெள்ளை அடித்தால் அல்லது நிறமடித்தால் - பிறகு வெள்ளையே அடிக்கிறதில்லை. கண்டபடி சுவரிலை சுண்ணாம்பைத் துடைக்கிறது, வெளிச் சுவரில் வெற்றிலையைச் சப்பிப்போட்டுத் துப்புறது .

Page 34
54
பரி : நீங்கள் சொன்னவுடன்தான் எனக்கு ஞாபகம் வருகுது இங்குள்ள தெருக்கள், நடைபாதைகள் எல்லாம் என்ன அழகாகவும் துப்பரவாகவும் வைத்திருக்கிறார்கள் - தெருவிலை யாராவது துப்புறதை நீங்கள் பார்த்திருக்கிறியளே எப்போதாவது?
கந் : உண்மையிலை பிள்ளை - நீங்கள் இப்படி ஒவ்வொன்றாகச் சொல்லச் சொல்லத்தான் - நான் இங்கை நடக்கிற விடயங்களை எங்கடை நாட்டிலை நடக்கிற விடயங்களையும் ஒப்பிட்டுப் பார்க்கிறன். இது ஒரு சொர்க்கம் என்றுதான் சொல்லவேணும். நாங்களும் எங்களைத் திருத்திக்கொள்ள வேணும்.
பரி : இங்கை வந்த பத்து வருட அனுபவத்திலை எங்கடை ஆட்கள் பல விடயங்களிலை திருந்தியிருக்கினை. ஆனால் இன்னும் திருந்த இடமிருக்கு - வீட்டைத் துப்பரவாக வைத்திருக்கிறது, துப்பரவான உடுப்புக்கள் பிள்ளைகளுக்குப் போட்டுவிடுவது, காலுறைகளை நாளாந்தம் மாத்துவது, உள்ளங்கிகளை நாளாந்தம் மாத்துவது போன்ற விடயங்களிலை பெற்றோர் கூடிய கவனஞ் செலுத்த வேணும். இதைப் பற்றிச் சில ஆசிரியர்கள் குறையாகச் சொல்ல நான் கேள்விப்பட்டிருக்கிறன்.
பேரா : ஒம், நீர் சொல்லுறது சரிதான். முக்கியமாக பனிகாலத்திலை உடுப்புகளில் எங்கடை சமயல் மணம், கோட்டிலை இருக்கிற
மணம் எல்லாவற்றையும் பற்றி நாங்கள் கவனமாகத்தான் இருக்கவேணும்.
கந் : தம்பி, நாங்கள் பாடசாலைகளைப் பற்றி கதைக்க
வெளிக்கிட்டுத் தெருவெல்ாம் சுற்றிக் கடைசியிலை வீட்டுக்குள்ளை வந்திட்டம் போலை கிடக்குது.
பேரா : ஒமண்ணை, நீங்கள் சொல்லுறது சரிதான். ஆனால் என்னைத் திசை திருப்பினது நீங்கள்தான். நான் இங்கை இருக்கிற பல்வேறு வகையான பாடசாலைகள் கல்லூரிகள் பற்றியும் அங்குள்ள கற்கை நெறிகள் பற்றியும் விரிவாக கூறலாமென்றுதான் ஆரம்பித்தனான். ஆனால் கடைசியிலை பள்ளிக்கூடங்களின்ரை வெளித் தோற்றத்தோடு இவ்வளவு நேரமும் பேசிக் கொண்டு இருந்திட்டம்.

55
கந் : அதிலை ஒரு பிழையுமில்லை தம்பி. ஏனென்றால் எங்கடை பிள்ளைகள் இங்கு இருக்கிற வசதி வாயப்புகளைப் பயன்படுத்தி நல்ல முறையிலை படித்து முன்னேறுவதற்கு, இதைப்பற்றியெல்லாம் நாங்கள் சொன்னால்தான், அவர்களுக்கு ஒரு நல்ல உணர்ச்சியும் ஆர்வமும் ஏற்படும் என்று நான் நினைக்கிறன்.
பரி : ஒம், ஓம். நீங்கள் சரியாய் சொன்னியள். நாங்கள் படித்த பாடசாலைகளை இந்தப் பிள்ளைகள் பார்க்கா விட்டாலும், நாங்கள் அவைகளைப்பற்றி கூறி எங்களுடைய கஷ்டங்களை அறிய வைத்தால் தான், அவர்களுக்கு ஒரு பொறுப்புணர்ச்சி ஏற்படும்.
பேரா : நீங்கள் இரண்டு பேரும் சொன்னதை நான் ஏற்றுக் கொள்கிறேன். இந்தப் பாடசாலைகள் இவ்வளவு சிறப்பாகப் பேணப் படுவதற்கும் இயங்குவதற்கும் எல்லோரும் பொறுப்புணர்ச்சியோடும் தங்களின் சொந்தப் பொருள்கள்போலைப் பாவிப்பதும்தான் காரணம், என்றதை நாங்கள் மறந்து போகக்கூடாது. அரசாங்கக் கட்டிடங்கள்தானே அதை நாங்கள் எப்படியும் சேதப்படுத்தலாம் என்ற மனப்பானமை மாறும் வரைக்கும், எங்கள் நாட்டு மக்கள் திருந்த மாட்டார்கள். எனவே எல்லாவற்றிற்கும் மக்களின் மனோபாவத்தில், நடைமுறையில் மாற்றம் ஏற்படவேண்டும். இன்றைக்கு இவ்வளவும் காணும். அடுத்த முறை சந்திக்கும் போது நான் சொல்ல வந்த விஷயங்களைச் சொல்லலாம் என்று நினைக்கிறன்.
கந் : ஒம் தம்பி, அது நல்ல யோசனை. நான் ஒருக்கால் கடைக்கும் போக வேணும். பால் வாங்கச் சொல்லி மருமகள்
சொன்னவ. நான் போட்டு வாறன்.
(3LIJп : ஓம, ஓம், வாருங்கோ.

Page 35
56
அங்கம் : 9
(கதவில் தட்டிக்கொண்டே)
கந் : தம்பி, பரமானந்தம் நான் இன்றைக்கு நேரத்திற்கு வந்திட்டன். எங்கை ஒருதரையும் காணவில்லை
பரி : ஆர், அண்ணையே? வாருங்கோ, வாருங்கோ, அவர் அங்கை கொம்பியூட்டரிலை ஏதோ அலுவலாய் இருக்கிறார் - வந்திடுவார் இருங்கோ.
கந் : பிள்ளை, எப்படி உங்கடை பாடுகள். நீங்கள் கொடுத்து வைச்சனிங்கள். பிள்ளைகளெல்லாம் நல்ல நிலையிலை இருக்கிறதுக்கு நீங்கள் புண்ணியம் செய்திருக்கவேணும்.
பரி : இதிலை அண்ணை புண்ணியம் பாவம் என்று சொல்ல ஏலாது - எல்லாம் பிள்ளைகளைப் பொறுப்புணர்ச்சியோடை வளர்க்கிறதிலைதான் தங்கி இருக்குது.
கந் : அதுவும் சரிதான் - பெற்றாரும் பிள்ளைகளோடு குறிப்பறிந்து நடக்கவேணும். பிள்ளைகளும் பொறுப்புணர்ந்து அதற்கேற்றபடி ஒழுகவேணும்.
பேரா : (வந்து கொண்டே) என்ன அண்ணை, ஏதேர் பொறுப்புணர்ச்சியைப்பற்றிக் கதைக்கிறியள்.
கந் : இல்லைத்தம்பி பேரானந்தம். எங்கடை இளைஞர் சமுதாயம் கனடாவிலை, நடந்து கொள்கிற விதத்திலைதான். எங்கடை வருங்காலமே தங்கியிருக்குது.
பேரா : அதை ஆர் இல்லையென்றது. நாங்கள்தான் எதிர்காலம், எதிர்காலம் என்று கவலைப்படுகிறது. இப்ப இருக்கிற இளஞ் சமுதாயம் இன்றைக்கு என்ன செய்யவேணுமோ அதைச் செய்துபோட்டு, நாளைக்கு வாறதை நாளைக்குப் பார்ப்பம், என்ற யோசனையிலைதான் போய்க்கொண்டிருக்குது.

5擎
பரி : சரி, அதைப்பற்றிப் பிறகு பேசுவம். சென்ற முறை நீங்கள் ஏதோ ஸ்காபரோ பாடசாலைகளைப் பற்றியும் பல்வேறு கற்றல் நெறிகளைப் பற்றியும் சொல்லுகிறதென்று சொன்னீங்கள் - அதைப்பற்றி இப்ப சொல்லுங்கோவன் கேட்பம்.
கந் : பிள்ளைக்கு நல்ல ஞாபக சக்தி - நான் அதைப்பற்றி மறந்தே போனன்.
பேரா : அண்ணை, வயது போகப் போக ஞாபக சக்தியும் குறைந்து கொண்டுதானே போறது. எங்கடை மூளை ஒரு அதிசயமான, கொம்பியூட்டரைக் காட்டிலும், ஆச்சரியமான மெஷின். சின்ன வயதிலை நடந்த விஷயங்கள் சிலவற்றை அப்படியே ஞாபகக்தில் வைத்திருக்கும், ஆனால் அண்மையிலை நடந்த விஷயங்களை மறந்துபோம்.
கந் : அது ஒரு பெரிய ஆச்சரியமான மெஷின்தான் - நீர் சொல்லுறதை நான் அப்படியே ஏற்றுக் கொள்கிறன்.
பேரா : சரி, இனி எங்கடை விஷயத்துக்கு வருவம்.
பரி : சொல்லுங்கோ, சொல்லுங்கோ.
பேரா : இப்ப நான் ஸ்காபரோவிலை இருக்கிற பள்ளிக்கூடங்களைப் பற்றித்தான் சொல்லப்போறன்.
பரி : ஒம், சொல்லுங்கோ.
பேரா : இங்கை நாலு வகையான பாடசாலைகள் இருக்கின்றன. முதலாவது கனிஷ்ட பொதுப் பாடசாலைகள அதாவது Junior Public Schools. 35.603, UTSui 6 (5 L (Kindergarten) (up;56) 6 ஆம் வகுப்புவரை இருக்கும். அடுத்தது பொதுப் பாடசாலைகள் அதாவது Public Schools. இங்கை பாலர் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்புவரை இருக்கும். அடுத்தது சிரேஷ்ட பொதுப்பாடசாலைகள் - அதாவது 7ஆம் 8 ஆம் வகுப்புகள் மாத்திரம் இருக்கும். Senior Public School.

Page 36
58
கந் : இந்த மூன்று வகையான பாடசாலைகளிலும், எத்தனை பாடசாலைகள் ஸ்காபரோவிலை இருக்கும் தம்பி?
பேரா : நல்ல கேள்வியண்ணை. கனிஷ்ட பொதுப் பாடசாலைகள் 75, பொதுப் பாடசாலைகள் 50, சிரேஷ்ட பொதுப் பாடசாலைகள் 17, -
அப்ப எல்லாமாக எவ்வளவு சொல்லுங்கோ பாப்பம்.
கந் : தம்பி என்னட்டைக் கணக்கு விடுகிறார சரி, 75 + 50 + 17 = 142 பள்ளிக்கூடங்கள்.
பரி : என்ன ஸ்காபரோவிலை 142 பள்ளிக்கூடங்களோ - நம்பமுடியாமல் இருக்குது.
பேரா : இன்னும் எத்தனையோ இருக்குது. அவசரப்படாதேங்கோ - இந்த ஹை ஸ்கூல், கொலிஜ்களைப் பற்றி இன்னும் சொல்லவில்லை.
பரி : ஒம், ஓம். அதைப்பற்றிச் சொல்லுங்கோ.
பேரா : எல்லாமாக 25 உயர்நிலைப் பாடசாலைகள் இருக்கின்றன இவற்றுள் 3 வகைகள் இருக்கின்றன.
கந் : உயர்நிலைப் பள்ளிகளிலையும் 3 வகையோ?
பேரா : ஒம். முதலாவது 6.160), Collegiate Institute. 3f606) 18 கல்லூரிகள் இருக்கின்றன.
கந் : தம்பி இந்த வோபன் பாடசாலை இதிலை ஒன்றோ.
பரி : எட, சரியாய் கண்டு பிடிச்சிட்டியள்.
கந் : இந்த கலைவிழாக்களுக்கு அடிக்கடி போய்ப் பழக்கம்.
பேரா : வோபன் பாடசாலை இப்ப தமிழற்றை பாடசாலை என்றும்
Tuxedo Court 6Top LDITLq.5 d, 'IqLily,6061T Tamil Court என்றுமெல்லே மற்ற இனத்தவை சொல்லுகினம்.

59
கந் : எங்கடை ஆட்கள் அப்படித்தானே. ஒன்று புகுந்தால் மற்றதுகளும் அதுக்குப் பின்னாலைதானே!
பரி : என்னத்தைப் பற்றி அண்ணை சொல்லுகிறியள்.
கந் : ஒன்றுமில்லைப் பிள்ளை - இந்த ஆட்களைப் பற்றித்தான் சொன்னனான்.
பேரா : அதை மாற்ற முடியாது. அது கிடக்கட்டும் - அடுத்தது இந்த வியாபார தொழில் நுட்பக் கல்லூரிகள் - Business & Technical Schools என்று சொல்லுறது. இதிலை 3 இருக்கின்றன. இதைத் தவிர ஒரு உயர் நிலைப்பள்ளி அதாவது High Schoolம் இருக்குது. இதற்கு Maplewood High School என்று பெயர்.
கந் : தம்பி இந்த 8ஆம் வகுப்பு வரைக்குமுள்ள பாடசாலைகளிலை அது ஏன் 3 வகையான பாடசாலைகள் வைத்திருக்கினை - ஊரிலை உள்ள மாதிரி கனிஷ்ட பாடசாலை, சிரேஷ்ட பாடசாலை என்று வைத்திருக்கலாம்தானே?
பேரா : நல்ல கேள்வி கேட்டியள். ஒவ்வொரு பாடசாலையும் வெவ்வேறாக வகுப்புக்களை வைத்திருந்தாலும் படிப்பித்தலும் கற்கை நெறிகளும் ஒட்டுமொத்தமாக ஒரே மாதிரித்தான் இருக்கும். ஆனால் சில கற்கை நெறிகள் சில குறிக்கப்பட்ட பாடசாலைகளிலை மட்டும்தான் இருக்கும்.
பரி : உதாரணமாக, ஒரு கற்கை நெறியைப் பற்றிச் சொல்லுங்கோ பார்ப்பம்.
பேரா : இப்ப பொதுவாக யாழ்ப்பாணத்திலிருந்து ஆறாம் ஏழாம் வகுப்புப் படித்துப்போட்டு கனடா வருகின்ற ஒரு மாணவனைப் பற்றிப் பாரப்பம். அங்கு இருக்கிற போர்ச் சூழலிலை பாடசாலை ஒழுங்காக நடந்திருக்காது. நடந்தாலும் படிப்பு ஒழுங்காக நடந்திருக்காது. மற்றது ஆங்கில அறிவு மிகவும் குறைவாகத்தான் இருக்கும், பெரும்பாலானவைக்கு. இங்கை ஒருவரை 6)/(Lug. அடிப்படையிலைதான் LJTLJIT606ulfils) சேர்க்கிறது. இப்ப

Page 37
60
ஒருவருக்குப் பத்து வயதென்றால் அவர் ஐந்தாம் வகுப்பிலை சேர்க்கப்படுவார்.
கந் : தம்பி, நீர் சொல்லுறதைப் பார்த்தால் 10 வயதுப் பிள்ளைக்கு எழுத வாசிக்கத் தெரியாவிட்டாலும் ஐந்தாம் வகுப்பிலை விட்டு விடுவினையோ?
பேரா : ஒம், நீங்கள் சொல்லுறது சரி - அவரது கல்வி நிலை முக்கியமில்லை வயதுதான் முக்கியம்.
பரி : அப்படியென்றால், எங்கடைசி பிள்ளைகள் ஆங்கிலமும் தெரியாமல் பாடங்களும் விளங்காமல் கஷ்டப்படுங்கள் எல்லோ?
பேரா : எல்லாப் பிள்ளைகளும் கஷ்டப்படுங்கள் என்று சொல்லமுடியாது. ஏனென்றால் ஒவ்வொரு பாடசாலையிலும் E.S.L. வகுப்புக்கள் நடத்தப்படுகின்றன.
கந் : அதென்ன தம்பி E.S.L.?
GJIT : E.S. L. 6T6AD1T6ů English as a Second Language. 6TĚ560D
தாய் மொழியை அல்லது தமிழை First Language என்று சொல்லுகிறது
கந் : தம்பி கேட்கிறதென்று குறைநினைக்க கூடாது. அங்கை Mother Tongue என்றெல்லே நாங்கள் சொல்கிறது.
GuJIT : 9th. Sigods, Mother tongue, Father tongue 6Tsigo சொல்லிக் குழப்பியடித்துப் பிரச்சனைகள் வருமென்று சொல்லி First Language 6T66D Qy Tsogdis.Th.
கந் : 9iä, 9ih. Ox tongue JTI565sip 36Tiö Sps Mother tongue கையும் சாப்பிட வெளிக்கிட்டிடும்
பரி : நல்லாய்ச் சொன்னியள் அண்ணை. இருந்துபோட்டு நல்ல வெடிகுண்டைப் தூக்கிப் போடுறியள்.

6.
கந் : பிள்ளை, இங்கை பரவாயில்லை வெடிகுண்டு, துவக்கென்று சொல்லலாம். அங்கை தப்பித் தவறிச் சொன்னால் எங்களைப் பிடிச்சுக்கொண்டே போய் விடுவாங்கள் ஆமிக்காரர்.
பேரா : அண்ணை, நீங்கள் கனடாவுக்கு வந்து இப்ப கிட்டத்தட்ட
39(5 வருஷமாகிறது. இன்னும் அங்கத்தை நினைவுகள் போகவில்லைப்போலை.
கந் : அதெப்படித் தம்பி போகும்? இதெல்லாம் நினைவை விட்டுச் செல்லாத பொக்கிஷங்கள்.-
பரி : சரி, E.S.L. வகுப்புக்களைப் பற்றிச் சொல்லுங்கோ.
பேரா : ஆங்கில அறிவு குறைவாக அல்லது இல்லாத பிள்ளைகள் எல்லாம் ஒரு வகுப்பிலை ஆங்கிலம் படிப்பினை. இதற்கு விசேட பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இருக்கிறார்கள்.
பரி : இந்தப் பாட வகுப்புக்கள் பாடசாலை நேரத்திலைதானே நடக்கின்றன?
பேரா : ஒம். ஒவ்வொரு நாளும் ஒரு பாடம் இருக்கும்.
பரி : ஒரு வகுப்பிலை ஆங்கில அறிவு குறைந்த பிள்ளைகள் 5 பேர் இருக்கினை என்று வைத்துக் கொள்வம். அவை 5 பேரும் E.S.L. வகுப்புக்குப் போனால் மிச்சமாய் இருக்கிற பிள்ளைகளுக்கு நேரகுசிப் படி (Time Table) பாடங்கள் நடக்கும்தானே?
பேரா : ஒம், நடக்கும்.
பரி : அப்படி என்றால் அந்தப் பாடங்களை E.S.L. வகுப்புக்குப் போன பிள்ளைகள் தவறவிட்டுவிடுவினை எல்லோ?
பேரா : ஒம். நல்ல கேள்வி. அதுக்கு நேர சூசி, அதாவது Time Table தயாரிக்கும்போது முக்கியமான பாடங்கள் அதாவது கணிதம், விஞ்ஞானம், போன்ற பாடங்களைத் தவிர்ந்து, வரைதல், உடற்

Page 38
62
பயிற்சி, சங்கீதம் போன்ற பாட நேரங்களிலைதான் E.S.L. வகுப்பு வைக்கிறவை.
பரி : அது நல்ல ஒழுங்கு. ஆனால் எனக்குத் தெரிந்த பெற்றார் சில பள்ளிக்கூடங்களிலை அப்படிச் செய்கிறதில்லை என்று சொல்லுகினம்.
பேரா : ஒம். இந்த நேர சூசியியை ஒழுங்கு செய்யிறது சில பாடசாலைகளிலை கஷ்டமாய் இருக்கிறதாலை - பிள்ளைகள் சில பாடங்களை வீட்டிலை படிக்கவேண்டும்.
பரி : அப்படிப் படிக்கிறதற்கு வீட்டுக்குப் புத்தகங்கள் கொண்டு போக விடுகினையில்லை. பாடப்புத்தகம் என்று சில பாடங்களுக்கு இல்லை என்று பெற்றார் பலர் பெரிய கவலைப்படுகிறார்கள்.
பேரா : அப்படியான சந்தர்ப்பங்களிலை சம்பந்தப்பட்ட ஆசிரியரைப் போய் சந்தித்து வேண்டிய ஒழுங்குகளைச் செய்யலாம். அவர்கள் பாட அட்டவணை என்னமாதிரிப் படிப்பிக்கிறது என்றெல்லாம் சொல்லிக் கொடுப்பினை.
கந் : தம்பி. நீர் சொல்லுறதெல்லாஞ் சரி, எங்கடை பெற்றார் எல்லாருக்கும் ஆங்கிலம் தெரியுமென்றில்லை. அப்ப அவை என்ன செய்யிறது?
பேரா : அவை ஆங்கிலந்தெரிந்த யாரையாவது கூடடிக்கொண்டு போகவேணும் அல்லது பாடசாலை அதிபரையோ, உப அதிபரையோ கேட்டால் அவை உயர் வகுப்பு தமிழ் மாணவர்களின் உதவியை பெற்றுத் தருவார்கள். ஆங்கிலம் தெரியாது என்று சொல்லிக்கொண்டு வீட்டில் இருக்கப்படாது. அங்கை ஊரிலை இருந்த மாதிரி இங்கை இருந்தால் உங்கடை பிள்ளைகள்தான் கஷ்டப்படப்போகினை.
கந் : சரி, பள்ளிக்கூடத்துக்குப் போய் ஆசிரியரைச் சந்திக்கிறதை கரைச்சல் கொடுக்கிறதென்று அவை நினைக்காயினையோ.

63.
பேரா : நல்ல கதை, என்ன கரைச்சல்? பெற்றார் வந்து கதையுங்கோ என்றெல்லே அவை சொல்லுகினை. பாடசாலையும் பெற்றாரும் சேர்ந்து இயங்கினால்தான் பிள்ளைகள் முன்னேறுவார்கள்.
பரி : நல்லது. பெற்றார் கண்ட நேரமும் போகாமல் பாடசாலைக்குத் தொலைபேசியில் கதைத்து, ஆசிரியரைச் சந்திக்க ஒரு நேரம் கேட்டு ஒழுங்கு செய்து போட்டுப் போய் சந்திக்கவேணும்.
கந் : மிகவும் நல்லது. இன்றைக்கு இவ்வளவும் காணும் என்று நினைக்கிறன்.
பேரா : ஒம், ஒம், எனக்கும் வேலை கிடக்குது. அடுத்த முறை இதைப்பற்றி இன்னும் கதைப்பம்.
கந் : அப்ப நான் வாறன் தம்பி.
இருவரும் : ஒம், போட்டு வாருங்கோ.
அங்கம் : 10
கந் : தம்பி, பேரானந்தம் நான் இன்றைக்கு நேரத்துக்கு வந்திட்டன், ஒருவேளை உங்களைக் குழப்பிப் போட்டனோ என்று யோசித்துக் கொண்டுதான் வந்தனர்ன்.
பேரா : சாச்சா, நீங்கள் என்ன appointment வைச்சே வரவேணும். எப்ப நேரமிருந்தாலும் பின்னேரங்களிலை வாருங்கோ என்றுதானே உங்களுக்கு openhouse வைச்சிருக்கிறம்.
கந் : Open house என்று சொன்னவுடனை எனக்கு ஞாபகம் ಲ್ಟಅತಿ - இந்த வீடு விக்கிறவையின்ரை திருகுதாளங்களைப் UDD.

Page 39
64
பேரா : அண்ணை வியாபாரம் என்றால் சுத்துமாத்தில்லாமல் செய்ய் ஏலாதுதானே? எல்லாரும் அப்படி இப்படிச் சொல்லி தங்களுக்கு காசுவாற வழியைத்தானே பாப்பினை.
கந் ; அதுக்காகத் தம்பி, இல்லாதது . பொல்லாததைச் சொல்லலாமோ?
பேரா : அவை சொன்னால் கேட்கிறவைக்கு என்ன மதி - அவை
சொல்லுறதை உண்மையோ பிழையோ என்று விசாரித்துப் பார்க்கத்தானே வேணும்?
பரி : (வந்து கொண்டே) - என்ன இன்றைக்கு Open house ஐப்பற்றிக் கதைக்கிறியள்? கடைசியாகக் கதைச்ச விஷயத்தை மறந்து போனியளோ?
கந் : சாய், அதுக்கு நாங்கள் இன்னும் வரவில்லை அதுக்கிடையிலை தம்பி சொன்னார் இந்த வீடு எனக்கு, அதாவது எனக்கு மட்டுந்தான் open house என்று. அதுதான் இங்கு வீடு விக்கிறவையைப்பற்றிக் கதைக்கிறம்.
பரி : அதெல்லாம் இருக்கட்டும், இன்றைக்கு நாங்கள் ஸ்காபரோப் பாடசாலைகளிலை படிப்பிக்கிற கற்கை நெறிகளை, அதாவது வெவ்வேறு விதமான courses பற்றி நீங்கள் எங்களுக்கு விபரமாகச் சொல்ல வேணும்.
கந் : ஒம் தம்பி, எங்கடை ஆட்களுக்கு இதுகளைப்பற்றி ஒரு வடிவான விளக்கம் நீர்தான் கொடுக்கவேணும்.
பேரா : சரி - போனமுறை நாங்கள் பல்வேறுவகையான பாடசாலைகளைப்பற்றிக் கதைத்தனாங்கள் உங்களுக்கு ஞாபகம் இருக்குமென நினைக்கிறன்.
கந் : ஒம், ஓம்.
பேரா : முதலாவதாக இந்த Collegiate Institutes பற்றிப் பார்ப்பம்.

65
கந் : தம்பி, ஒரு நிமிஷம் நில்லும் - ஒரு ஐமிச்சம். இந்த Collegiate Institute i(5th Community College i(5f 6T660T வித்தியாசம்?
பேரா : நல்ல கேள்வி கேட்டியள். நானும் அதைப்பற்றி நினைக்க, நீங்கள் கேட்கிறியள். Collegiate Institute வந்து 8 ஆம் வகுப்பு முடிந்தபின் பிள்ளைகள் வழக்கமாய் போகிற உயர்நிலைப் பள்ளி, அதாவது High School. ஆனால் Colleges 12ஆம் வகுப்புக்குப்பின் பல்கலைக்கழகத்துக்கு போக விருப்பமில்லாதவை போகிற கல்வி நிலையம்.
கந் : தம்பி, பல்கலைகழத்துக்கும் போறவை எத்தனையாம் வகுப்பு வரைக்கும் படிக்கவேணும்?
பேரா : இப்ப இருக்கிற ஒழுங்கின்படி 13ஆம் வகுப்பு.
பரி : 13ஆம் வகுப்புப் படித்தவையும் Colleges போகலாந்தானே?
பேரா : ஒம். அது பிரச்சனை இல்லை. பல்கலைகழகத்துக்குப் போறதுக்கும் போதியளவு புள்ளிகள் இல்லாவிட்டால் Colleges இலை போய் Diploma சான்றிதழ் பெறலாம்.
கந் : தம்பி, தெரியயாமால்தான் கேட்கிறன் - College இலை படிச்சவை, பல்கலைக் கழகத்துக்குப் போகமுடியதோ?
பேரா : ஏன் முடியாது. College இலை நல்ல திறைமையாகச் செய்தால் மூன்று வருஷத்துக்குப்பிறகு பல்கலைக் கழகத்துக்குப் போய் இன்னுமொரு வருஷம் அல்லது 2 வருஷம் படிச்சுப் பட்டம் பெறலாம்.
கந் : இங்கை இந்த Collegiate Institutes இலை என்ன மாதிரியான பாடங்கள் என்று சொல்லும் பாப்பம்.

Page 40
66
பேரா : இங்கை வந்து கல்விக்கான பாடங்கள் என்று ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம், குடும்பக் கல்வி, புவியியல், சரித்திரம், பிரெஞ்சு, ஸ்பனிஷ், ஜெர்மன், உடற் கல்வி என்று ஒரு பகுதி இருக்குது.
கந் : பிரெஞ்சு, ஜெர்மன், ஸ்பனிஷ் எல்லாம் படிப்பிக்கினை. எங்கடை தமிழ் இல்லையோ?
பேரா : அண்ணை, நல்ல கேள்வி. நீங்கள் கேட்டது நல்லது. இப்ப மூன்று வருஷங்களுக்கு முந்தி தமிழும் ஒரு பாடமாகப் படிப்பிக்க வேணுமென்று இலங்கைப் பட்டதாரிகள் சங்கமும், ஸ்காபரோ தமிழ் ஆலோசனைச் சபையும் கேட்டு வோபண் கல்லூரியிலை தமிழும் ஒரு திறமைச் சித்திக்கான பாடமாக (Credit Course) ஆரம்பிக்கப்பட்டது.
கந் : அப்படியா? அது நல்ல முயற்சி
பேரா. : கேளுங்கோவன் கதையை - ஆரம்பத்திலை 33 மாணவர் தமிழ் படிக்க விருப்பம் தெரிவித்து முதலாவது நிலை வகுப்பிலை படிச்சவை. அடுத்த வருஷம் இது 23 ஆகி, அதற்கடுத்த வருஷம் ஒருவருமில்லாமல் தமிழ் வகுப்பை மூடிவிட்டது பாடசாலை நிர்வாகம்.
பரி : இதென்ன அநியாயாம் இது - வோபண் கல்லூரியிலை 300க்கு மேற்பட்ட தமிழ் மாணவர்கள் படிக்கினை என்று கேள்விப்பட்டன்.
பேரா : ஒம். ஆனால் தமிழ் படிக்க எங்கடை பிள்ளைகள்
ஒருவருக்கும் விருப்பமில்லை. எவ்வளவோ கஷ்டப்பட்டுத்தான்
அந்தப் பாடத்தை Time Table இலை போடச் சொல்லி - அங்கையே படிப்பித்த ஒரு ஆசிரியர்தான் தமிழும் படிப்பிச்சவர்.
கந் : தம்பி, எங்கடை ஆட்களுக்கு தமிழ்ப் பற்று இல்லாமல் போட்டுது, கனடாவுக்கு வந்த உடனை. அங்கை தமிழுக்கும் தமிழனுக்கும் ஒரு நாடு வேணுமென்று எங்கடை பிள்ளைகள் சாகினை. இங்கை அரசாங்கம் தமிழ் படிக்க வசதி செய்து

67
கொடுத்தாலும் படிக்கினை இல்லை. இதென்ன போக்கென்று எனக்கு ஒன்றுமாய் விளங்குதில்லை.
பரி : இதுவுமொரு வயித்துப் போக்குத்தான். எல்லாரும் பேச்சளவிலைதான் இங்கை. செயலளவிலை தமிழ்ப் பற்றே இல்லாமல் எங்கடை இளஞ் சமுதாயம் போகிற போக்கு, நல்லாயில்லை.
பேரா : பெற்றார் பிள்ளைகளுக்கு வழி காட்டவேணும். ஆங்கிலம் தெரியாவிட்டாலும் பிள்ளைகளோடு அரைகுறை ஆங்கிலத்திலை கதைக்கிறது பெருமை என்று நினைக்கிற பெற்றாரும், இங்கை இருக்கினை என்று உங்களுக்குத் தெரியுமோ?
கந் : ஒம், ஓம். இங்கை உள்ள சிலருக்குத் தமிழும் தெரியாது ஆங்கிலமும் தெரியாது. அதைப் படிக்கவேணுமென்றுகூட நினைக்கிறதில்லை.
பரி : அப்ப, தமிழ் இப்ப ஒரிடமும் Credit Course ஆகப் படிப்பிக்கிறதில்லையோ.
பேரா : இப்ப Thompson பாடசாலையிலை மாலை நேர வகுப்பிலை படிப்பிக்கப்படுகிறது. அதிலையும் 10,12 பிள்ளைகள்தான் இருக்கினை. அதுவும் இந்தக் கல்வியாண்டோடை மூடப்பட்டுவிடலாம்.
பரி : இந்த கத்தோலிக்க பாடசாலைச் சபை தமிழ் வகுப்புக்களை Pope John Paul பாடசாலையிலை சனிக்கிழமை காலமை நடத்துகிறதாம். அதுக்கு ஏராளமான பிள்ளைகள் போய்ப் படிக்கினை, அங்கு 8, 7 வகுப்புக்கள் நடக்குதாமே.
பேரா : ஒம், அதுசரி. ஆனால் ஸ்காபரோ கல்விச் சபைக்கு சனிக்கிழமை தமிழ் Credit Course வைக்கிறதற்கு அனுமதி இல்லை. இதைப் பற்றிப் பெற்றாரும் பல்வேறு சங்கங்களும் கேட்டு ஒழுங்குகள் செய்யவேணும்.
கந் : ஆரோடை தம்பி கேட்டு ஒழுங்குகள் செய்ய வேணும்?

Page 41
68
பேரா : இப்ப, எல்லாம் தொரன்ரோ மாவட்டக் கல்விச் சபைப் பணிப்பாளரோடு தொடர்பு கொண்டு அல்லது கடிதங்கள் எழுதித்தான் செய்யவேணும்.
பரி : சரி, அதை விரும்பிறவை செய்யட்டும் நீங்கள் கல்லூரியிலை படிப்பிக்கும் பாடங்களைப் பற்றிச் சொல்லுங்கோ.
கந் : ஒம். ஓம்,
பேரா : கல்விக்கான பாடங்களோடு கவின்கலைப் பாடங்களிலையும் ஒன்றைத் தெரிவு செய்ய வேணும். அதாவது வரைதல், சங்கீதம், நாடகம், நடனம், படப் பிடிப்பு, வெளியீட்டுக்கலை ஆகியன.
பரி : இதிலை ஏதாவது ஒன்றைத் தெரிவு செய்யவேணும்.
பேரா : ஒம். அத்தோடு தொழில் நுட்பக் கலை அதாவது கார் திருத்தல், வடிவமைத்தல், இயந்திரவியல் போன்ற பாடங்கள் உள்ள ஒரு பிரிவும், வியாபாரக்கலை அதாவது கணக்கு, அச்சுப் பொறித்தல் (Key Boarding) நிர்வாகக் கல்வி அதாவது கணனி விஞ்ஞானம், தரவு பதிதல் போன்ற பாடங்களைக் கொண்ட மூன்றாவது பிரிவும் கற்பிக்கப்படுகிறது.
பரி : இதிலை ஏதாவது ஒரு பிரிவை மாணவர் தெரிவு செய்யலாமாக்கும்.
பேரா : ஒம். விருப்பமான பிரிவைத் தெரிவு செய்ய வேணும். இறுதி ஆண்டில் 30 Creditsக்குக் குறையாமல் இருக்க வேணும்.
கந் : இதென்ன தம்பி 30 Credits என்றால் என்ன மாதிரி?
பேரா : 9ஆம் வகுப்பிலை இருந்த பிள்ளையஸ் பாஸ் பண்ணுகிற ஒவ்வொரு பாடத்துக்கும் ஒரு Credit தருவினை. 13 ஆம் வகுப்பு முடியும்போது 30க்குக் குறையாமல் Credits இருந்தால்தான் OAC - Ontario Academic Certificate d60Ligii.

69
பரி : இங்கை ஒவ்வொரு கல்லூரியும் தாங்களே சோதனை வைச்சுப் பிள்ளைகளுக்குப் புள்ளிகள் வழங்குது. இலங்கை மாதிரி ஒரு பொதுப் பரீட்சை இங்கை கிடையாதோ?
பேரா : இங்கை இன்னும் அந்த முறை கிடையாது. இனிமேல்தான் அப்படி ஒரு பொதுப் பரீட்சை ஒன்ராறியோ மாகாணம் முழுவதும் வைக்க வேணும் என்றுதான் அரசாங்கம் யோசிக்குது. இப்ப 3ஆம் வகுப்புக்குத்தான் பொதுப் பரீட்சை தொரன்ரோ பெரும்பாகத்துக்கு வைக்கினை சென்ற ஆண்டு முதல். அதுக்கும் பலரிடமிருந்து எதிர்ப்புக்கள் வந்திருக்குது.
கந் : தம்பி, இது நல்ல வேடிக்கையாய் இருக்குது. எங்கடை நாட்டிலை ஐம்பது அறுபது வருஷத்துக்கு முன்னமே O.L., A.L. என்று வைக்கத் தொடங்கிவிட்டினை. இங்கை இப்பத்தான் தொடங்க யோசிக்கினை என்றால் ஆச்சரியமாகத்தான் கிடக்குது.
பேரா : இங்கை உள்ள கல்வி முறை வேறை - இவையின்ரை மனப்பாங்கும் வேறை. இங்கு செயல் முறைக்கும், சுய முயற்சிக்கும்தான் முக்கியத்துவம் கொடுக்கிறது. எங்கடை கல்வி முறையிலை பாடமாக்கி எழுதிப்போட்டு நிறையப் புள்ளிகள் எடுக்கலாம். இங்கை விளங்கிப் படிக்காட்டில் வில்லங்கப்படவேணும். பரீட்சைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறதில்லை - நாளாந்தம் செய்கிற வேலைகள், வீட்டு வேலைகள், Project Work அதாவது செயற்றிட்டங்கள் ஆகியவற்றைப் பொறுத்துத்தான் புள்ளிகள் வழங்கப் படுகின்றன. அதுதான் பிள்ளைகள் நாளாந்தம் ஒழுங்காகப் படித்துக்கொண்டு வந்தால் நல்ல புள்ளிகள் எடுக்கலாம்
பரீட்சைக்கு மட்டும் படிக்கிறதாலை சிறப்பாகச் செய்யமுடியாது.
பரி : அப்ப நீங்கள் சொல்லுறதைப் பார்த்தால் விளையாடித் திரிஞ்சுபோட்டு பரீட்சைக் காலத்திலை மட்டும் படிச்சுக் கூடிய புள்ளிகள் பெறமுடியாது.
பேரா : ஒம் பரீட்சைக்கு 40 அல்லது 50 புள்ளிகள் மட்டும் ஒதுக்கப்படும். பிறகு செயற்றிட்டம், வீட்டு வேலை, வகுப்பில் கேள்விகளுக்குப் பதில்கூறுதல், கலந்துரையாடல்களில் பங்கு பற்றல் ஆகிய எல்லாவற்றுக்கும் 50 புள்ளிகள் வழங்கப்படும்.

Page 42
70
கந் : இது ஒரு நல்ல முறைதான் - பேய்க்காட்டுறவை பெரிய அந்தரப்படுவினை என்று சொல்லுமன்.
பேரா : அதுதான் இலங்கையிலை படித்தவை இங்கை வந்து ஆரம்பத்திலை கஷ்டப்படுகிறது. போதிய ஆங்கில அறிவு இல்லாவிட்டால் இன்னும் கஷ்டமாகத்தான் இருக்கும்.
ulf : 355 B.T. i. 95.765 Business Technical Institutes ஸ்காபரோவிலை இருக்குது என்று சொன்னீங்கள அது என்னமாதிரி?
பேரா : ஒம். கல்லூரிகளிலை படிக்கிறதுக்குக் கஷ்டப்படுகிற மாணவர்களை அல்லது 8 ஆம் வகுப்பிலை திறமையாகச் செய்யாத் மாணவர்களை இந்த B.T.1 க்கு அனுப்புறது. இவற்றைச் சில பெற்றார் கூடாத பள்ளிக்கூடங்கள் என்று நினைக்கினம்.
கந் : அதேன் அப்படி நினைக்கினை?
பேரா : விளக்கமில்லாமல்தான். இங்கை கல்விக்கான பாடங்களோடு, கூடுதலாக தொழில்நுட்பக் கல்வி ஒரு தொழிலை 60Os)UVLD/T55 வைத்து, அதாவது கார் திருத்துதல், சமையல்பகுதி, வியாபாரக்கலை, கணனி முறை வெளியீடு (Desktop Publishing), வீடியோப் படப்பிடிப்பு முதலிய பாடங்களைப் படிப்பித்து நல்ல வேலைகள் எடுக்கிற வாய்ப்பினை ஏற்படுத்துவது இக்கல்லூரியின் நோக்கம்.
கந் : அது நல்லது தானே!

71
அங்கம் : 11
(பரிமளம் பேப்பர் வாசித்துக் கொண்டிருக்கிறார். பேரானந்தம் வந்து கொண்டே)
பேரா : என்ன பரிமளம் பேப்பரிலை என்ன புதினம் போட்டிருக்குது?
பரி : வழக்கமான இலங்கைப் புதினங்கள்தான் - ஆமிக்காரர் பொதுமக்களைக் கொல்லுறதும் புலிகள் ஆமிக்காரனைக் கொல்லுறதும் என்று ஒரே கதையாய்த்தான் இருக்குது இப்ப 10, 15 வருஷமாய்.
பேரா : ஒம். இது பாரதப்போரைக் காட்டிலும் மிகவும் நீண்ட போராய்க் கிடக்குது.
பரி : இதற்கு ஒரு முடிவே கிடையாதா - எவ்வளவு சனம் செத்துப்போச்சு - எவ்வளவு பேர் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் கஷ்டப்படுகினை? சின்னப்பிள்ளைகளுக்கு எவ்வளவு பிரச்சனைகளும் மனத்தாங்கல்களும்? அயல் நாடுகளெல்லாம் இதைப் பார்த்துக் கொண்டுதானே இருக்குது?
பேரா : அரசியல் விஷயங்கள் எங்களுக்கு விளங்கிக் கொள்ளுறது
கஷ்டம் - அமெரிக்கா தொட்டிலையும் ஆட்டிப் பிள்ளையையும் கிள்ளுது என்று சொல்லுவினை விஷயம் அறிந்தவை. பிரச்சனைகள் எங்கு நடந்தாலும் அதாலை எங்களுக்கு [56LLDT 6UITLUL DIT
என்பதைப் பொறுத்துத்தான் பெரிய வல்லரசுகள் தலையிடும். இதற்குள்ளை பெரிய புள்ளிகள் ஆலோசகர்கள் எல்லாரும் ஈடுபட்டிருக்கினை.
(கதவு தட்டும் சத்தம்)
பரி : பொறுங்கோ கதவு தட்டுகிற சத்தம் கேட்குது பாத்திட்டு வாறன். ஆர், கந்தையா அண்ணையே வாருங்கோ, வாருங்கோ

Page 43
72
என்ன இவ்வளவு நேரமும் காணவில்லை எண்று யோசித்துக் கொண்டிருந்தம்.
கந் : ஒம். நானும் இப்ப நல்ல பிசி என்னுடைய பேரப்பிள்ளையின்ரை பள்ளிக்கூடத்துக்குப் போனன். அதுதான் பிந்திப்போச்சு.
பேரா : சரி, சரி, இருங்கோ பள்ளிக்கூடத்திலை என்ன விசேஷம்?
கந் : அதையேன் கேட்கிறியள்? இங்கை பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்புகின்ற பெற்றார் முதலிலை இங்கை இருக்கிற பள்ளிக்கூடங்களைப் பற்றியும், படிப்பிக்கிற முறைகளைப் பற்றியும் தெரிந்திருக்க வேண்டுமென்று சொல்லி, பெற்றார் கூட்டமொன்று வைத்தவை. மகனும் மருமகளும் ஏதோ ஒரு சாமத்தியச் சடங்கென்று போட்டினை. பின்னை, நான்தான் பள்ளிக்கூடத்துக்குப் போனது.
பேரா : ஒமண்ணை, இங்கை பெற்றார் பாடசாலையோடு கூடி ஒத்துழைக்க வேண்டுமென்றுதான் எல்லோரையும் வரச் சொல்லிக் கூப்பிடுகிறது. ஆனால் எத்தனை பேர் போகினை சொல்லுங்கோ பார்ப்பம்?
கந் : தம்பி, நீர் சொல்லுகிறது சரிதான். ஆனால் இப்ப எங்களுடைய தமிழர்களைப் பற்றி உமக்கு நல்லாய் தெரியுந்தானே, வேலை, செய்து, கஷ்டபட்டு ஒரு மாதிரிச் சீவியத்தைக் கொண்டு போகினை. இங்கை காசில்லாவிட்டால் நாயும் திரும்பிப் பார்க்காது.
பேரா : நீங்கள் சொல்லுகிறது சரிதான் அண்ணை, ஆனால் எந்த விஷயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கவேணும் எதுக்குக் கொடுக்கக்கூடாது என்பதை நாங்கள் நல்லாய் யோசிச்சுத்தான் செய்ய வேணும்.
பரி : இப்ப கலியாணவீடு, சாமத்தியவீடு என்றவுடனை குழந்தை குட்டிகளையும் இழுத்துக்கொண்டு எல்லாரும் விழுந்ததடிச்சுப் போகினை. அங்கை என்ன நடக்குது சொல்லுங்கோ பாப்பம்?

73
கந் : அங்கை அவை போறதற்கு ஒரு முக்கிய காரணமிருக்கு.
பரி : ஏன், போகாட்டில் கூப்பிட்டவை கோபித்து போடுவினை என்றோ.
கந் : சீச்சீ அங்கை ஆர் வந்தது ஆர் போனதென்று என்ன டாப்பே கூப்பிடுகினை? அன்றைக்கொரு கலியாண வீட்டுக்குப் போனன் - சனம் இருக்க இடமில்லாமல் பிள்ளைகளையும் தூக்கிக்கொண்டு நிக்குது. ஆட்கள் அசைய இடமில்லாமல் மேசை கதிரையெல்லாம் நெருக்கமாக அடுக்கி ஒரே குழப்பமாய் போச்சு நாங்கள் இங்கை வந்த பிறகும் திருந்தவில்லை என்றால் எப்ப திருந்தப் போறம்?
பேரா : அண்ணை, திருந்திற விஷயத்தை பற்றிப் பேசாதேங்கோ - அதுக்கும் எங்களுக்கும் எட்டாப் பொருத்தம். படித்த மனிதரே மிகவும் கேவலமாக நடந்து கொள்கினை என்றால் மற்றவையைப் பற்றி நாங்கள் பேசத் தேவையில்லை.
பரி : அண்ணை, நான் கேட்கிறன் என்று குறை நினைக்காதேங்கோ - இந்தக் கலியாணவீடுகளுக்கு ஏன் அளவுக்கு மிஞ்சி ஆட்களைக் கூப்பிட்டு ஒழுங்காகச் சாப்பாடோ உபசரிப்போ இல்லாமல், சனம் திட்டிக் கொண்டு போக வைக்கினை சிலபேர்?
கந் : நான் பிள்ளை முதலிலை சொல்ல வெளிக்கிட்டனான் - கதை திரும்பியிற்றுது - என் அறிவுக்கு எட்டிய வகையில் இதெல்லாம் ஒரு ஷோக் காட்டுகிறவேலை என்றுதான் நினைக்கிறன். என்ரை மகனின்ரை கலியாண வீட்டுக்கு ஆயிரம் பேர் வந்தினை. நிக்க இடமில்லை என்று சொல்லுகிறதிலை, எங்கடை ஆட்களுக்குப் பெருமை. ஆனால் அதே நேரத்தில் வந்தவை எவ்வளவு கஷ்டப்பட்டினை, சாப்பாடெல்லாம் எப்படி இருந்தது என்பதைப் பற்றிக் கூப்பிட்டவை யோசிக்கிறதில்லை.
பரி : இன்னொரு விஷயத்தை நாங்கள் மறக்கக்கூடாது. ஒவ்வொரு நிகழ்ச்சியையும் எப்படி நடத்துகிறோமோ அதைக் கொண்டுதான் ஒரு இனத்தை மற்றவை எடைபோடுகிறது. ஓர் ஒழுங்கு முறையிலை, அளவாக ஆட்களைக் கூப்பிட்டு அன்பாக உபசரித்து,

Page 44
74
சுவையான சாப்பாடு பரிமாறி ஒரு கலியாணத்தையோ, ஒரு விருந்தையோ செய்தால் அதுதான் சிறப்பு.
கந் : பிள்ளை, நீர் சொல்லுறதை நான் ஆதரிக்கிறன், ஆனால் இதை உணர்ந்து செய்யிற ஆட்கள் எத்தனைபேர் சொல்லும் பார்ப்பம்?
பேரா : இன்னொரு விஷயத்தையும் நாங்கள் மறந்து போகக்கூடாது. நேரம் பொன்னானது. நேரத்துக்கு ஆரம்பித்து நேரத்துக்கு முடிக்கிற பழக்கம் இன்னும் எங்களுக்கு வரயில்லை. 11 மணிக்கும் 12 மணிக்குமிடையிலை தாலிகட்டு என்று அழைப்பிதழிலை போட்டிட்டு, கலியாண வீடே தொடங்குறது 12 மணிக்குப் பிறகுதான சிலவேளை ஐயர் வந்து காவலிருப்பார் அல்லது பெண்பிள்ளை வந்து காவல் இருக்கும், மாப்பிள்ளை பிந்தி வருவார் - இதுதான் இங்கை பெரும்பாலும் நடக்கிற விஷயம். இப்ப ஒரு கலியாண வீட்டுக்கு 500 பேர் வந்து ஒரு மணித்தியாலத்துக்குச் சும்மா இருந்தால் 500 மணித்தியாலங்கள் வீணாகிவிடும. இந்த நேரத்தை ஒரு நல்ல வழியிலை செலவழிச்சிருக்கலாம்.
கந் : தம்பி, அதுதான் நான் முந்தியும் சொன்னனான் வெள்ளைக்காரன் வெள்ளைக்காரன்தான் என்று. அவனுக்கு நேரத்தின்ரை அருமை தெரியும். பெருமை தெரியும் - 10 மணிக்கு ஒரு அப்பொயின்மென்ட் என்றால் சரியாக ஐந்து நிமிடம் முன்னுக்கு வருவான். ஏதாவது வழியிலை கார்பிரச்சனை என்றால் டக்ஸி எடுத்து வந்து சேருவான். அல்லது உடனே தொலை பேசியிலை விஷயத்தைதச் சொல்லுவான். ஆனால் நாங்கள் ஆடி ஆடி அரை மணித்தியாலம் அல்லது முக்கால் மணித்தியாலம் பிந்தி வந்து, பஸ் லேற்றாகப் போச்சு என்று ஒரு காரணத்தைச் சொல்லிச் சமாளிக்கிறது. ஒன்றிலும் ஒரு ஒழுங்கு முறையில்லாமல் எங்கடை சனம் என்னென்னவெல்லாமோ செய்யுது - கடவுளே நீ தான் காப்பாற்றவேணும்.
பேரா : ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்ற பழமொழி உங்களுக்குத் தெரியாததல்ல. ஒருவற்றை பழக்கத்தை மாற்றுவது மிகவும் கஷ்டம். ஆனால் திருந்தவேணும் நாங்களும் மற்றவையைப் போல முன்னேற வேண்டுமென்ற ஆர்வமிருந்தால் வடிவாக முன்னேறலாம்.

75
பரி : எங்களுடைய இளைய சமுதாயமானது இங்கை வந்தபிறகு திருந்துமென்றால் அது தலைகீழாக நிக்குது. இதெல்லாம் காலத்தின் கோலமாக்கும்.
கந் : காலமென்றவுடனை எனக்கு ஞாபகம் வருகுது. இப்ப நடக்கிறது கலிகாலம். அதுதான் உலகின் பல இடங்களிலை அழிவு, போர்க் குழப்பம், சண்டை என்று நடக்குது. இதற்கிடையில் 2000மாவது ஆண்டிலை 6 பாரதூரமான அழிவு கள் ஏற்படப்போகுது என்றெல்லோ சொல்லுகினம்.
பேரா : உலகம் அழியப் போகுது என்ற கதை கேள்விப் படவில்லையோ நீங்கள்?
கந் : கேள்விப்பட்டனான்தான் தம்பி - ஆனால் நான் இந்தச் சாத்திரிமாரின்ரை புலுடாவெல்லாத்தையும் நம்புகிறதில்லை.
பரி : ஏன் நீங்கள் அப்படியாக்கும். ஆனால் எங்கடை சனமெல்லாம் அவையிற்றைத்தானே படையெடுக்குது. இந்தியாவிலையிருந்து வந்த காண்டம் வாசிச்சவை நல்லாய் உழைச்சுக்கொண்டு போச்சினமாம்.
பேரா : ஒம். எங்கடை ஆட்கள் எங்கை இருந்தாலும் அவையின்ரை பழக்க வழக்கங்களை மாத்த ஏலாது என்றுதானே சொன்னனான்.
கந் : நீர் சொல்லுறது சரிதான். இப்ப பாரும் இந்தக் கோயில் கட்டுற விஷயங்களை, கோயில் எங்களுக்குத் தேவைதான். நான் அதைக் கூடாது என்று சொல்லவில்லை. அதுக்காக மூலை முடுக்கிலை இருக்கிற வேயர் ஹவுசிலை எல்லாம் கோவில் தொடங்கிறதைத்தான் நான் எதிர்க்கிறன்.
பரி : நீங்கள் சொல்லுறது சரிதான். ஆனால் பணமில்லாவிட்டால் வேயர்ஹவுசிலைதானே தொடங்க வேணும்.
கந் : பணமில்லாவிட்டால் பேசாமல் இருங்கோவன். உங்களை ஆரும் கோவில் கட்டச் சொல்லிச் சொன்னவையே. மற்றைய

Page 45
76
இனங்களைப் பாருங்கோ காசைச் சேர்த்தபின் அழகான அடக்கமான ஒரு கோயிலை கட்டுகினை. இப்படி கண்ட கண்ட இடத்திலை புனிதமான கோயில்களைக் கட்டுறதைப் பார்த்து மற்றவன் சிரிக்கிறான். இதை யாராவது உணருகினையா?
பேரா : அண்ணை, உங்கடை ஆத்திரம் எனக்கு விளங்குது. இந்தக் கோயில்கள் இப்ப என்ன மாதிரிக் கிளம்புது சொல்லுங்கோ பார்ப்பம்? அகதிகளாக வந்த சிலருக்கு வேலை வேணும்தானே. அப்ப அதற்கு வழிவகைகளை வியாபார நோக்கமுள்ள சிலர் செய்து கொடுக்கினை. அவ்வளவுதான் விஷயம்.
கந் : அது எனக்கு விளங்குது தம்பி. ஆனால் எதற்கும் ஒரு எல்லை வேணுந்தானே. இந்தக் கோவில் கட்டுற காசிலை ஒரு தொழிற்சாலையைத் தொடங்கினால் எங்கடை ஆட்கள் பலபேருக்கு வேலை கொடுக்கலாமல்லே. இங்கை அரசாங்கம் இப்படியான முதலீடுகளுக்கு உதவியுமெல்லே செய்யுது.
பரி : ஒம், நீங்கள் சொல்லுறது மெத்தச் சரி. நாங்களும் முன்பு விட்ட பிழைகளைத் திரும்பத் திரும்ப விட்டுக் கொண்டுதான் இருக்கிறம். கோவில் கட்டித் திருவிழாக்களை செய்து கடைசியிலை கண்ட மிச்சம் என்ன சொல்லுங்கோ பாப்பம்.
பேரா : இது தமிழர்களில் பெரும்பாலானவைக்கு இருக்கிற ஒரு வியாதி என்றுதான் சொல்ல வேணும். அரைத்த மாவையே அரைப்பதில் விமோசனம் ஏற்படாது.
கந் : சரியாய்ச் சொன்னாய் தம்பி.
அங்கம் : 12
பேரா : நாங்கள் போனமுறை சந்தித்த போது ஸ்காபரோ பாடசாலைகள் பற்றியும் அங்கு படிப்பிக்கப்படும். பல்வேறு கற்கை நெறிகள் பற்றியும் பார்த்தனாங்கள். இன்றைக்கு எமது பெற்றார்,

77
பிள்ளைகளுக்கு எவ்வாறு உதவிசெய்யலாம் என்பதைப்பற்றிக் கவனிக்கலாம் என நினைக்கிறேன்.
பரி : ஒம், ஓம், இது மிகவும் முக்கியமான ஒரு விடயம். நானும் இதைப்பற்றியும் கதைக்க வேணுமென்றுதான் நினைத்தனான்.
கந் : தம்பி, பொதுவாகப் புலம்பெயர்ந்த நாட்டிலே வாழுகின்ற எங்கடை இளம் பெற்றாருக்குப் பிள்ளைகள் வளர்ப்பதில் ஆலோசனைகள் கூறுவது மிகப் பொருத்தமாய் இருக்குமென நான் நினைக்கிறேன்.
பேரா : ஒம். அதுமிகவும் ஒரு முக்கிய விடயம்தான். இதற்கிடையில் ஒவ்வொரு தாயும் கர்ப்பமாய் இருக்கும்போது கடைப்பிடிக்க வேண்டிய சில வாழ்க்கை முறைகளைப் பற்றிப் பார்ப்பது மிக முக்கியமென நினைக்கிறேன்.
கந் : சரியாய்ச் சொன்னீர் தம்பி. ஊரிலை என்றால் பேரன் பேத்திகள் இருந்து, கர்ப்பமாய் இருக்கிறவை எதைச் சாப்பிட்டால் நல்லது என்றெல்லாம் சொல்லுவினை. இங்கை அவையள் மிகக் குறைவாகத்தான் பிள்ளைகளோடு இருக்கினை. 966 சொல்லுறதை இந்த நாளையிலை ஆர் கேட்கினை. தாயாகப் போகிற பிள்ளை கேட்டால்தானே அவவின்ரை பிள்ளை அவ சொல்லுறதைக் கேட்கும்.
பரி : நீங்கள் சொல்லுறது நல்ல ஒரு அம்சம். அதைப்பற்றி நாங்கள் முதல் கதைக்கிறது நல்லது என நான் நினைக்கிறன்.
பேரா : சரி. பெண்களுக்கு முதலிடம் - உம்முடைய அனுபவங்களைச் சொன்னால் எல்லாருக்கும் அது பயன்படுமென நினைக்கிறன்.
பரி : பொதுவாக என்னுடைய தாயார், சில உணவுப் பொருட்களை, அதாவது கிரந்தியையப் பிள்ளைக்கு ஏற்படுத்தக்கூடிய உணவுப்
பொருட்களைச் சாப்பிடக்கூடாது என்று சொல்லுவா.
கந் : கிரந்தி என்றால் இந்த தோல் வியாதிகளைத்தானே சொல்லுறது.

Page 46
78
பரி : ஒம். பெரும்பாலான தோல்வியாதிகள் பிள்ளை கர்ப்பமாக இருக்கும்போது தாய் உண்ணுகின்ற சில உணவுப் பொருட்கள், அதாவது அன்னாசிப்பழம், கத்தரிக்காய், நண்டு, இறால், பப்பாப்பழம், சில இறைச்சி வகைகள் போன்றவை அதிகம் சாப்பிடக்கூடாது என்று சொல்லுவா.
பேரா : இதிலை முற்றும் முழுதாக உண்மையில்லாவிட்டாலும் சில முன்னெச்சரிக்கையாய் இருப்பது நல்லது. என்ன பொருட்களைச் சாப்பிடச் சொல்லுவினை. −
பரி : கர்ப்பமாய் இருக்கும்போது புரதச் சத்துக்கள் உள்ள பருப்பு வகைகள், கீரை, பொன்னாங்காணி, வல்லாரை, பால், முட்டை, மீன், முதலியனவற்றைக் கூடுதலாகப் பாவிக்க வேணும் எண்று சொல்லுவினை.
கந் : தம்பி, இந்த வல்லாரை மிகவும் நல்லதொரு பொருள். ஞாபசக்தியை ஏற்படுத்துவதற்கு நிறைய வல்லாரை சாப்பிட வேண்டுமென்று ஊரிலை சொல்லுறவை.
பேரா : நீங்கள் சொல்லுறதிலை எவ்வளவு உண்மை இருக்குது என்று எனக்குத் தெரியாது. ஆனால் வல்லாரையில் கூடுதலாக இரும்புச் சத்து இருக்கென்பது தெரியும். அது ஒருவேளை மூளை வளர்ச்சிக்கு உதவலாம்.
கந் : தம்பி, எங்களுடைய சித்தர்மார் இந்த மூலிகைகளைப் பற்றியெல்லாம் பாட்டுகள் பாடி வைச்சிருக்கினை - இதை வாகடம் என்று சொல்லி எங்கடை பரியாரிமார் வாசித்து அதன்படி வைத்தியம் செய்யுறது உமக்குத் தெரியாதோ.
பேரா : ஏன் தெரியாது? ஆங்கில வைத்தியமுறை எமது நாட்டுக்கு வரமுன்பே எங்களுடைய ஆயுள்வேத வைத்திய முறைதானே நடைமுறையிலை இருந்தது.
பரி : ஏன் அந்த நாட்களிலை பிள்ளைகள் பிறந்தவுடன் கிர்ந்தி எண்ணை தலைக்கு வைக்கிறதும் பருக்கிறதும் எங்களுக்கு பழக்கமான வைத்திய முறைதானே.

79
கந் : ஏன் கோரோசனை, குங்குமப்பூவை மறந்து போனியளே! இப்ப இளம் தாய்மாரைக் கேட்டால் அதென்ன கோரோசனையும் குங்குமப்பூவும் என்று பகிடி பண்ணுவினை - இங்கை இருக்கிற சனமெல்லாம் அதையே பாவிக்கினை என்று சொல்லுவினை.
பரி : இங்கை பின்பற்றுகிற முறைகள் வேறு. அதற்கேற்றபடி எங்கடை பெற்றார் செய்தால் நல்லதுதான். எங்கடை நாட்டிலை உள்ள சீதோஷண நிலைமைக்கும், எங்கடை உணவு முறைக்கும் வித்தியாசம்தானே. அதனாலைதான் இந்தக் குங்குமப்பூ பாலுக்கை போட்டுக் குடித்தால் பிறக்கின்ற பிள்ளைகள் நல்ல நிறமாகப் பிறக்கும் என்ற நம்பிக்கை.
பேரா : இதிலை எவ்வளவுதூரம் உண்மை இருக்குது என்று சொல்லமுடியாது. ஆனால் அதனாலை பலன் இருக்கிறது என்பதை எல்லாரும் ஏற்றுக் கொள்ளத்தான் வேணும்.
கந் : தம்பி, எங்கடை மூதாதையர் ஒரு விடயத்தையும் செய்கின்ற போது அதாலை பலன் ஏற்படாவிட்டால் காலங்காலமாகச் செய்யமாட்டார்கள்.
பரி : ஒம், அது உண்மைதான். பொதுவாக இந்த தேங்காய்ப்பூ கீரை என்ற பூண்டை அவித்துக் குடிக்கிறது. இது சலஞ் சுத்தஞ் செய்யக்கூடிய ஒரு பூண்டு. இதைக் கர்ப்பிணிகள் அவித்துக் குடிப்பார்கள்.
கந் : இங்கை தேங்காய்ப்பூவுமில்லை, கீரையுமில்லை. அவற்றை இப்ப அங்கை ஊரிலையும் ஆர் அவித்துக் குடிகினை?
பேரா : இந்த உணவுவகைகள் எங்களுக்கு எவ்வளவு தூரத்துக்கு எங்கள் உடம்பைப் பாதுகாக்க உதவுகின்றன என்பதை நாங்கள் நன்கு கவனிக்கவேணும். உதாரணமாக எங்கள் மூதாதையர்களை, அதாவது எங்கள் பாட்டனார், பூட்டனார் எவ்வளவு ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள் என்பதை நாங்கள் சிந்தித்துப் பார்க்கவேணும்.

Page 47
80
கந் : நல்ல ஒரு விஷயத்தை இப்ப நீர் சொல்லியிருக்கிறீர். எனது தாத்தா சாகும்போது அவருக்கு 97 வயது. அவருடைய பல்லு ஒன்றுகூட அசையவில்லை, புளுக்கொடியல், பனாட்டு, ஒடியல்பிட்டு- இவைதான் அவர் கூடுதலாகச் சாப்பிடுவார். அவர் எங்கு போனாலும் நடந்துதான் போவார்.
பேரா : ஒம். இந்தப் பணம் பண்டங்களும், ஊர் அரிசி, தினை, சாமை, வரகு போன்ற தானியங்களும் நல்ல போசாக்கும் புரத சத்தும் நிறைந்தவை. இப்போது நாகரிகம் என்ற போர்வையிலை நாங்கள் ரின்னில் அடைத்த, உறைகளில் போட்டுவைத்த சாப்பாடுகளையும் தான் சாப்பிடுகின்றோம்.
பரி : அந்த நாட்களில் கர்ப்பிணிகள் நல்ல சாப்பாடுகளைச்
சாப்பிட்டதோடு வேலையும் செய்வார்கள். வயலில் வேலை செய்கிறது,
மா இடிப்பது, அம்மியில் அரைப்பது இவையெல்லாம் நல்ல தேகப்பயிற்சிகள்.
கந் : இப்படி செய்ததாலை பிரசவமும் இலகுவாக இருந்தது. பிள்ளைகளும் ஆரோக்கியமாகப் பிறந்தார்கள். அந்த நாட்களிலை இந்தப் பல்வலி, பல்லு கிளின்பண்ணுறதை நான் கேள்விப்பட இல்லை.
பேரா : ஏன் அண்ணை நீங்கள் இதைக் கேள்விப்பட இல்லையோ - ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்று.
கந் : ஒம ஒம், நல்லாய்ச் சொன்னீர்! அந்தநாட்களிலை ஆலங்குச்சி வேப்பங்குச்சியாலைதானே பல்லு விளக்கினது நாங்கள். இப்பவும் பாரும் எனக்கு ஒரு பல் அசையவில்லை.
பேரா : உண்மையிலை எங்கடை மக்கள் இயற்கையோடு இயைந்த வாழ்க்கையைத்தான் வாழ்ந்தார்கள்.
கந் : எங்கடை பண்டைய மக்களின் பெருமையைப் பல நூல்களிலை வாசிக்கலாமே. புறநானூற்றிலை எத்தனையோ பாடல்கள் வருகின்றனவே.

8
பேரா : அண்ணை, நீங்கள் புறநானூறு என்று சொன்னவுடன் எனக்கொரு விஷயம் ஞாபகத்துக்கு வருகிறது. ஒரு பாடலில் அருமையான ஒரு காட்சியை விவரிக்கிறார் புலவர். ஒரு குரங்கு பிரசவவேதனையால் துடித்துக் கொண்டிருப்பதைக் கண்ட மந்தி, ஓடோடிச் சென்று ஒரு கொடியை பிடுங்கி வந்து அதன் வயிற்றைச் சுற்றிக்கட்டியதாம். சில நிமிடங்களின்பின் குட்டியையப் பிரசவித்து தாய் குட்டியையும் தூக்கிக் கொண்டு போன காட்சியை அழகாக விவரித்திருக்கிறார்.
கந் : இது மாத்திரமே. எங்களுடைய பண்டைய இலக்கியங்களிலை இப்படி எத்தனையோ விஷயங்களெல்லாம் கூறப்பட்டுள்ளன. இப்ப அதைக் கேட்டால் எங்கடைபிள்ளைகள் சிரிக்கும்.
பரி : நீங்கள் மறந்து போகுமுன்னர் அந்த நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்றதை விளக்கமாய்ச் சொல்லுங்கோ கேட்பம்.
கந் : நாலு என்றால் இங்கை நாலடியாரையும் இரண்டு என்றால் திருக்குறளையும் குறிக்கும். நாலடியாரையும், திருக்குறளையும் படிப்பதாலை எங்களுடைய சொல்வளம் பெருகும் என்பதைத்தான் அப்படி சொல்லுகிறது அந்தப் பழமொழி.
பேரா : இன்னுமொரு முக்கிய விடயம். இந்தக் கர்ப்பிணிகள் புகைபிடித்தல், போதைப் பொருட்கள், மது பானங்கள் பாவித்தால் அது குழந்தையைத் தாக்கும் என்பதையும் நாங்கள் கவனத்தில் கொள்ளவேணும்.
கந் : மேலை நாடுகளிலை இதெல்லாம் பெண்கள் பாவிப்பது மிகவும் கூடுதலாக இருக்குது. இதனாலைதான் பிறக்கின்ற பிள்ளைகள் அங்கவீனர்களாகப் பிறக்கிறார்கள் என்று வைத்தியர் சொல்லுகினம்.
பேரா : நீங்கள் சொல்லுவது சரி. அதுமாத்திரமல்ல, கர்ப்பிணிகளின் செயலும் சிந்தனையுங்கூட வயிற்றில் வளர்ந்து கொண்டிருக்கும் பிள்ளையைத் தாக்குகின்றது என்றும் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

Page 48
82
பரி : இதைப் பற்றியெல்லாம் எங்கடை தாய்மார் முந்தியே அறிந்திருந்தார்கள். கூடுதலான Š56እዟ6026N)› அதிர்ச்சி, பயம் முதலியவற்றால் கர்ப்பச் சிதைவு ஏற்பட்ட சந்தர்ப்பங்களும் உண்டு.
பேரா : இன்னொரு விஷயம் - தற்போது, எங்கடை நாட்டில் நடந்து கொண்டிருக்கின்ற போர் சூழலால் தாக்கப்பட்ட தாய்மாரின் பிள்ளைகள் இங்கு வந்து பல கற்றல் பிரச்சனைகளுக்கு ஆளாகியிருப்பதை நாங்கள் காணக்கூடியதாய் இருக்கிறது.
பரி : அதனாலேதான் கர்ப்பிணிகள் சந்தோஷமாகவும், நல்ல சத்தான உணவுகளை உண்டும், தேகப் பயிற்சிகள் செய்தும் கவனமாக வாழவேண்டுமென இங்குள்ள வைத்தியசாலைகளில் ஆலோசனைகள் வழங்குகிறார்கள். அந்த வகுப்புக்களுக்குப் போய் அவை சொல்லுகின்றபடி நடந்து கொள்ளவேணும்.
கந் : பிள்ளை, நீர் சொல்லுறது நல்லது. எத்தனைபேர் எங்கடை ஆட்கள் அப்படியான வகுப்புக்களுக்குப் போகினை? எத்தனை பேருக்கு ஆங்கிலம் விளங்கும் சொல்லும் பாப்பம்?
பரி : மொழி ஒரு தடை என்று நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. இங்கை தமிழில் மொழிபெயர்க்க ஒவ்வொரு வைத்தியசாலையிலும் ஆட்கள் இருக்கினை - வேண்டிய
உதவிகளைப் பெறலாம்.
அங்கம் : 13
பேரா : வாருங்கோ கந்தையா அண்ணை, வாருங்கோ
கந் : தம்பி, போன ஞாயிற்றுக்கிழமை வந்தனான். ஒருதரையும் காணவில்லை. கதவிலை தட்டு தட்டென்று தட்டிப்போட்டுப் போனன்.

83
பேரா : ஒம். அன்றைக்கு ஒரு இசைத்தட்டு வெளியீட்டு விழாவுக்குப் போனனாங்கள். அது தான் நீங்கள் வந்து ஏமாந்து போனியள்.
கந் : நான் அப்பவும் யோசித்தனான்- ஒருக்கால் தொலைபேசி அடிப்போமா என்று. எதுக்கும் நீங்கள் வீட்டிலைதானே இருப்பியள் என்று போட்டு வந்தன். அது கிடக்கட்டும் எப்படிச் சனம்.
பேரா : நல்ல சனம. நல்ல முறையாக ஒழுங்குபண்ணி யிருந்தார்கள். கலையுலகம், பத்திரிகை உலகம் என்று எல்லாத் துறைகளிலுமிருந்து பலர் வந்திருந்தார்கள. ஒரு குறுகிய வட்டத்துக்குள் நில்லாமல் எல்லோரையும் அழைத்திருந்த நல்லமுயற்சி. ஆனால் நேரத்திற்குத் தொடங்கியிருந்தால் இன்னும் திறமாக இருந்திருக்கும்.
(பரிமளம் வந்து கொண்டே)
பரி : என்ன இசைத்தட்டு வெளியீட்டு விழாவைப் பற்றிச் சொல்லுறியள் போலை - M
கந் : நல்லசனம் என்று சொல்லுறியள், அப்ப இசைத்தட்டு நல்லாய் விலைப்பட்டிருக்க வேணுமே?
பேரா : 200 பேருக்குமேல் வாங்கினதாக அறிந்தேன். அது ஒரு உற்சாகமான அறிகுறி. ஆனால் அது காணாது என்றுதான் நினைக்கிறன்.
பரி : தொரன்ரோவிலை இருக்கிற எங்கடை ஆட்களின்ரை எண்ணிக்கையைப் பார்த்தால் இது சமுத்திரத்திலை போட்ட ஒரு துளி போலை. இன்னும் கூடிய ஆதரவு தேவை என்றுதான் நான் நினைக்கிறன்.
கந் : தம்பி, சொல்லுகிறனென்று குறை நினைக்கக்கூடாது. சினிமாப்படம் அல்லது சினிமா சம்பந்தமான விஷயம் என்றால்

Page 49
84
எங்கடை ஆட்கள் கூடுதலாக வருவினை. இப்படி ஏதாவது புதிய, நல்ல முயற்சிகளுக்கு ஆதரவு குறைவாகத்தான் இருக்குது.
பேரா : அண்ணை, சினிமா ஒரு வலுவான, பார்வையாளரைப் பொறுத்த மட்டிலை மலிவான ஒரு ஊடகம். புலம் பெயர்ந்த நாட்டிலை வாழுகின்ற எம்மினத்தவர்க்கு உள்ள முக்கிய பொழுது போக்கு வீடியோப்படம் வீட்டிலை பார்க்கிறதுதான். அதனாலை சினிமாவுக்கு மக்கள் மத்தியிலை நல்ல ஆதரவு இருக்கத்தான் செய்யும்.
பரி : நான் இதைக்கூடாது என்று சொல்லவில்லை. ஆனால் எங்கடை படைப்பாளிகள் பல பொருட் செலவிலும், பல பிரச்சனைகளுக்குள்ளும் இம்மாதிரியான படைப்புக்களை அறிமுகம் செய்கிறபோது நாங்கள் நல்ல ஆதரவு கொடுத்தால்தான் இன்னும் ஊக்கமடைந்து மேலும் புதிய படைப்புக்களைக் கொண்டு வருவினம்.
கந் : இப்ப நீங்கள் எங்கடை படைப்பாளிகளுக்கு கூடிய உதவி ஒத்தாசை, அவர்களது படைப்புக்களை நாங்கள் கூடுதலாக வாங்கிச் செய்யவேண்டுமென்று சொல்லுறியள்.
பேரா : ஒம். அது மிகவும் முக்கியம். எங்களுக்கும் இனப்பற்றும் மொழிப்பற்றும் தேவை. இப்ப வருகிற சினிமாப்படங்களிலை ஆங்கிலமும் ஹிந்திச் சொற்களும் கூடுதலாக இருப்பதை நீங்கள் கவனித்திருப்பியள். ஒசைக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கினையே தவிர மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கிறதில்லை. எங்கடை மொழியும் எங்கடை கலாச்சாரமும் வளரவேண்டுமென்றால் எங்கள் இனத்தவரின் படைப்புகளுக்கு நல்ல ஆதரவு கொடுக்கவேண்டும்.
பரி : இன்னொரு விஷயத்தையும் நாங்கள் கவனிக்க வேணும். இந்த இந்தியாவிலிருந்து வருகின்ற படைப்புக்களுக்கு எம்மவர் காட்டுகின்ற ஆர்வமும் ஆதரவும், அதனுடைய தரம் எப்படியிருந்தாலும் அதை இங்கு ஏராளமான பொருட் செலவிலை முற்பணம் கொடுத்து வரவழைத்துப் பின்னர் அது விலைப்படாமல் கஷ்டப்படுகிறது.

85
கந் : ஒம். ஈழத்திலை உள்நாட்டுப் படைப்பாளிகளுக்குப் போதிய ஆதரவில்லாமல் இதுபோன்ற பொருட்செலவான படைப்புக்கள் வெளிவரவில்லை. இங்கை தொழில்னுட்பமும் வசதி வாய்ப்புக்களும் இருக்கிறபோது நாங்கள் நல்ல ஆதரவு காட்டினால்தான் அவர்களுக்கு உற்சாகமாய் இருக்கும்.
பேரா : அண்ணை, ஒரு முக்கிய விஷயத்தை நாங்கள் கவனிக்க வேணும் - இலக்கிய முயற்சிகளுக்கும் படைப்புக்களுக்கும் ஒரு எல்லை கிடையாது. அதாவது இது தமிழ்நாட்டுப் படைப்பு, இது ஈழநாட்டுப் படைப்பு, இது கனடியப் படைப்பு என்று பிரித்துப் பார்க்கக்கூடாது. திறமான படைப்பு ஏதோ அதுக்கு நாம் நல்ல ஆதரவு கொடுக்கவேணும். “தரமான படைப்புக்கெல்லாம் தலை வணக்கஞ் செய்வோம்” என்றான் பாரதி. ஆனால் இந்தியாவிலை இருந்து வாறதெல்லாம் திறமென்ற மனப்போக்கு எம்மவர் மத்தியிலை இருக்கின்ற நிலைமைதான் மாறவேணும்.
கந் : நல்ல விஷயத்தைச் சொன்னீர். எனக்குத் தெரியும் இங்கை நடந்த ஒரு விஷயம்.
பரி : என்ன விஷயம் சொல்லுங்கோ.
கந் : இங்கை தியேட்டர்கள் நடத்துகின்ற எங்கடை ஆட்கள், அங்கை தமிழ் நாட்டிலை வெளிவருகின்ற படங்களுக்குப் போட்டிபோட்டுக் காசைக் காசென்று பாராமல் கொடுத்துக் கொப்பிகளை வாங்குறது.
பேரா : அதுதான் வியாபாரம் - அவைக்குக் காசிலைதான் கண்.
கந் : அதை நாங்கள் பிழையென்று சொல்லவில்லைத் தம்பி. தரமான படைப்புக்களுக்குக் 56)SF அள்ளிக்கொடுக்கலாம். ஆனால்
எல்லாத்துக்கும் கண்ணை மூடிக்கொண்டு கொடுக்கலாமோ?
பரி : ஓம். அவையும் கவனமாகத்தான் இருக்கவேணும்.

Page 50
86
கந் : போன வருஷம் ஒரு படத்துக்கு எக்கச்சக்கமாகக் காசைக் கொட்டி ஏதோ 130 ஆயிரமோ என்னவோ என்று கேள்வி
பேரா : ஒருலட்சத்து முப்பதாயிரம் டொலரோ?
கந் : ஒம். அது இந்தியாவிலை ஒரு படமே தயாரிக்கக் காணுமென்று நினைக்கிறன்.
பரி : அதண்ணை அப்ப, இப்ப காணாது - அங்கையும் எல்லாம் கூடத்தான் முடியுதாம்.
கந் : கேளுங்கோவன் கதையை - அந்தப்படம் இங்கை ஒரு கிழமைக்குக்கூட ஓடவில்லை. இப்ப தியேட்டரை மூடிப்போட்டு ஆள் எங்கையென்றே தெரியவில்லை.
பேரா : இதிலையிருந்த நாங்கள் நல்ல ஒரு படிப்பினையையக் கவனிக்கவேணும். நல்ல படைப்பு எது. கூடாதது எதுவென்று தீர்மானிப்பது பார்வையாளர்கள், அதாவது மக்கள்தான். அவர்களை ஏமாற்ற முடியாது. இதைத் தயாரிப்பாளரும் படைப்பாளிகளும் நல்லாய் உணர்ந்து செயலாற்ற வேணும். மக்கள் விரும்புகிறார்கள் என்று சொல்லிக்கொண்டு அங்கங்களை அவலட்சணமாகக் குளோஸ் அப்பிலை காட்டும் படங்களை எடுத்தால், கடைசியிலை அவையின் தயாரிப்பு குளோசாகப் போகக்கூடும்.
கந் : நல்லாய்ச் சொன்னீர். இப்ப வாற தமிழ்ப்படங்களைப் பிள்ளைகுட்டிகளோடு இருந்து பார்க்க வயதுபோன எங்களுக்கு வெட்கமாய் இருக்குது.
பரி : அதைத்தான் எங்கடை இளஞ் சமுதாயம் விரும்புது. அது தான் அவைகளும் அப்படிப்படங்களை எடுக்கினம்.
பேரா : அதை நான் முற்றிலும் சரியென்று எடுக்கமாட்டன். ஏனென்றால். எங்கடை இளஞ்சமுதாயத்துக்கு நல்ல படங்களைப் பார்க்கும் வாய்ப்பை நாங்கள் ஏற்படுத்தினால்தான் அவர்களும் நல்லது எது கெட்டது எது என்று அறிந்து கொள்ளமுடியும். அவர்களுக்குப் பிடிக்குது என்று சொல்லிக்கொண்டு அவலட்சணப்

87
படங்களையே நாங்கள் கூடுதலாகத் தயாரிக்கக்கூடாது. மற்றது, தயாரிப்பாளர்கள் படம் தயாரிக்கிறது காசு சேர்ப்பதற்கே ஒழிய, கலாச்சாரம் பேணுவதற்கல்ல. அவர்களின் மனோபாவம் மாறினால்தான் நல்ல கலைப்படைப்புக்களை நாம் பார்க்க முடியும். இப்பொழுது 30 ஆண்டகளுக்கு முன்னிருந்த சத்தியாஜித்றே என்ற வங்காளத் தயாரிப்பாளர், நல்ல கலையம்சம் பொருந்திய படங்களைத் தயாரித்து உலகப் பரிசுகளைப் பெற்றார். தமிழிலும் கலியாணப்பரிசு, நெஞ்சில் ஓர் ஆலயம், ஒளவையார், போன்ற படங்களும் கே. பாலச்சந்தர், பாரதிராஜா போன்றோரின் பல படங்களும் வெளிவந்து மக்களிடையே நல்ல ஆதரவைப் பெற்றன.
பரி : எல்லா விஷயமும் மக்களின் ஆதரவிலும் ரசனையிலும்தான் தங்கியிருக்குது. நான் இங்கை இன்னொரு விஷயத்தைப்பற்றிச் கதைக்கலாமென்று நினைக்கிறன்.
கந் : சொல்லும்பிள்ளை கேட்பம்.
பரி : அதாவது, பெண்கள் மேடையிலை நடிக்கிறதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறியள்?
பேரா : நல்ல விஷயம். இதைப் பற்றி நீங்கள் நல்லாய் ஆராயலாம். இலங்கையிலை இருந்த நிலைதான் இங்கை கனடாவிலையும் இருக்குது. ஏன் என்றால் நாங்கள் உடலால் புலம் பெயர்ந்து இருக்கிறோமே தவிர உள்ளத்தால் அல்ல. நாங்கள் எங்கை போனாலும் எங்கடை மனோநிலை பரந்த நோக்கு, கலையார்வம் மாறாமல் இருக்குது. இதுக்கு ஒரு விழிப்புணர்ச்சி தேவை.
கந் : தம்பி, பெண்பிள்ளையஸ் நடிக்கிறது நல்லது. அது கட்டாயம் தேவைதான். ஆனால் ஒழுக்கம் மிகமுக்கியம் - ஒழுக்கத்துக்கு கூடிய முக்கியத்துவம் கொடுக்கிறது எங்கடை இனம்தான்.
பரி : அண்ணை, ஒழுக்கம் மிக முக்கியம்தான். ஆனால் அது பெண்பிள்ளைகளுக்கு மட்டும்தான் என்ற நிலைமை மாறவேணும். ஆண்பிள்ளைகள் என்னவும் செய்யலாம் பெண்கள் செய்யக்கூடாது என்ற ஆணாதிக்கத்தை நான் வெறுக்கிறன். எவ்வளவோ படிச்சு பலநாடுகளிலும் வாழ்ந்து நல்ல அனுபவமுள்ள அறிவாளிகள் கூட

Page 51
88
பெண்களை அடிமைகளாகத்தான் நடத்துகினை. அந்த நிலை எங்கடை சமூதாயத்தைதப் பொறுத்தமட்டிலை மாறாது என்றுதான் நான் நினைக்கிறன்.
கந் : பிள்ளை, நீர் எங்களையும் சேர்த்துத்தான் சொல்லுநீரோ அல்லது நாங்கள் சேர்ப்பில்ேையா.
பரி : எல்லாரையும் சேர்த்துத்தான் சொல்லுறன்.
கந் : தம்பி, அப்ப நான் வரட்டே.
பேரா : அண்ணை, பயப்படாமல் இருங்கோ! நாங்கள் இதைப்பற்றி நல்லாய் உணர்ந்து கவனிச்சுத்தான் கதைக்கவேணும். இந்த ஒழுக்கம் என்ற விடயம் இப்ப ஓரிடமும் கடைப்பிடிக்கப்படவில்லை என்றுதான் நான் நினைக்கிறன். சந்தர்ப்பம், சூழல், சமுதாய மாற்றமெல்லாம் ஒழுக்கத்தை உடைச்சுத் தள்ளிப்போட்டுது. ஒழுக்கம் உயிரினும் மேலானது என்று வள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் சொன்னார். இப்ப அது என்ன என்று கேட்கிற நிலைமை வந்திட்டது. இங்கை நடக்கிற அல்லோல கல்லோலத்தை நான் உங்களுக்கு எடுத்துச் சொல்லத் தேவையில்லை. இப்ப திரைஇசை நடனமென்று மேடையிலை எங்கடை பிள்ளைகள் குலுக்கி, அசைத்து ஆடகினை. அதைச் சமுதாயம் ஏற்றுக் கொள்ளுதுதானே. அப்படியென்றால் மேடையிலை நடிக்கிறதிலை என்ன பிழை என்று எனக்குத் தெரியவில்லை.
கந் : தம்பி, எனக்கும் பிழை இருக்கிறதாகத் தெரியவில்லை. ஆனால் பெண்பிள்ளைகள் கவனமாக நடக்கிறதுதான் முக்கியம். ஆண்களோடு நடிக்கும்போது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி ஒரு எல்லைக்குள் நின்று கொண்டால் பிரச்சனை இல்லை என்று நினைக்கிறன்.
பரி : தனியப் பெண்பிள்ளைகளைக் குறை சொல்லக் கூடாது. ஆண்களும் பொறுப்புணர்ச்சியோடு சகோதரங்களோடு பிழங்குவது மாதிரி நடந்தால் பிரச்சனை இல்லைத்தானே.

89
பேரா : நான் கவனித்தமட்டிலை இப்போது சமுதாயத்தின் பார்வையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என நினைக்கிறன். ஆனால் பிற இனத்தவரோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது இன்னும் கூடிய மாற்றங்கள் தேவை என்றுதான் கருதுகிறேன்.
கந் : நல்லது. இதைப்பற்றி மணிக் கணக்காய் கதைக்கலாம், தம்பி. எனக்கு நேரமாகுது நான் வரப்போறன்.
இருவரும் : சரி போட்டு வாருங்கோ.
அங்கம் : 14
( பேரானந்தம் வாசித்துக் கொண்டிருக்கிறார்.)
கந் : தம்பி, தம்பி, என்ன வீடெல்லாம் திறந்து கிடக்குது? உள்ளுக்கு வரலாமோ?
பேரா: ஆர் கந்தையா அண்ணையோ? வாருங்கோ, வாருங்கோ இங்கை சமர் என்றால் எல்லாம் திறந்தபடிதானே!
கந் : ஒம், ஒம், நல்லாய்ச் சொன்னீர. வின்றருக்கு மூடி வைக்கிறதெல்லாத்தையும் சமரிலை திறக்கத்தானே வேணும்.
பேரா : இதார் இவர் - எங்கையோ கண்டஞாபகமாய்க் கிடக்கு.
கந் : என்ன தம்பி அப்படிச் சொல்லுறீர்? இவர் எங்கடை ஊர்தான்தில்லைநாதன், மறந்துபோனீராக்கும்.
பேரா : ஒம், ஓம், இப்ப விளங்குது ஆரென்று. இவர் எங்கடை மாணிக்கம் மாஸ்டற்றை தம்பியாரெல்லே.
கந் : நல்லாய்ச் சொன்னீர். அப்ப மாணிக்கம் மாஸ்டரை நீர் இன்னும் மறக்கயில்லை.

Page 52
9()
பேரா : அதென்னென்று மறக்கிறது? படிச்ச பள்ளிக்கூடம், படிப்பிச்ச மாஸ்டர்மார், கூடப்படிச்ச பொடியள் இவர்களை என்னென்று மறக்கிறது? அதெல்லாம் அழியாத நினைவுகள் - அடிக்கடி அசைபோட்டுக் கொள்கிறதுதான் என்னுடையய பழக்கம். இருங்கோ, இருங்கோ.
கந் ; அப்ப அவரிட்டை வாங்கின அடியெல்லாம் இன்னும் ஞாபகம் இருக்குமென்று நினைக்கிறன்.
தில்லை : அதையெல்லாம் இப்ப ஏன் ஞாபகப்படுத்திறியள். பழைய கதைகள் - முடிஞ்சு இப்ப எவ்வளவு காலம்.
பேரா : பழைய கதைகள்தான் ஆனால் மறக்கமுடியாத சம்பவங்கள் தாயகத்தையும் எங்கடை சமூதாயத்தையும் திருத்தின
சம்பவங்கள், இப்ப எல்லாம் தலைகீழாய்ப் போச்சு.
கந் : தம்பி, உம்மைக் குழப்பிப் போட்டம் போலை கிடக்குது. நேரே விஷயத்துக்கு வருவம்.
பேரா : சீச்சீ! அப்படியொன்றும் நீங்கள் குழப்ப இல்லை. விஷயத்தைச் சொல்லுங்கோ.
கந் : தில்லை, நீர்தான் சொல்லும் - விளக்கமாய்ச் சொல்லும்.
தில்லை : பாரதூரமாக ஒன்றுமில்லை. இந்த- சீட்டுக் கட்டுறதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறியள்?
பேரா : சீட்டுக் கட்டுறது - அதாவது சீட்டுப் பிடிக்கிறது -
கந் : ஒம், ஓம் - எங்கடை பரம்பரைத் தொழில் என்று சொல்லுங்கோவன்.
பேரா : நல்லாய்ச் சொன்னியள். எங்கடை பரம்பரைத் தொழில்களிலை ஒன்று - மிகப் பழமையானது. எப்ப ஆரம்பமானது என்று ஒருதருக்கும் சொல்ல ஏலாது.

9.
தில்லை : அது எங்கடை ஆட்கள் தோன்றின காலம் முதல் இருந்திருக்கும் என்று நினைக்கிறன் -
பேரா : இருக்கலாம். ஆனால் ஒரு விஷயத்தை நீங்கள் மறந்து போகக் கூடாது. இது ஒரு திறமான கண்டு பிடிப்பென்றுதான் சொல்லவேணும்.
கந் : அதை இப்ப ஆர் இல்லையென்றது. இப்படிப் பல எழுதாத கண்டு பிடிப்புக்கள் எல்லாம் எங்கடை ஆட்களிட்டை இருக்குது. அதையெல்லாம் வடிவாய் எழுதி ஒரு கலாநிதிப் பட்டமே வாங்கலாம் என்று நினைக்கிறன்.
பேரா : பிலத்துச் சொல்லாதேங்கோ, சனம் அதுக்குச் சண்டைபிடிக்கத் தொடங்கியிடும்.
தில்லை : சரியாய்ச் சொன்னியள். நாங்கள் ஒரு வீரப் பரம்பரைதானே. எல்லாத்துக்கும் சண்டை பிடிக்கிறதும் எங்கடை பரம்பரைத் தொழில்களிலை ஒன்று.
கந் : என்ன தில்லை வந்த விஷயத்தைச் சொல்லாமமல் ஏதோ விழல் கதைக்கிறீர்!
தில்லை : ஒம், ஓம். நான் ஒரு சீட்டுப் போட்டனான். தெரிஞ்ச ஒரு பெடியனோடை அதிலை கொஞ்சம் இழுபறியாய்க் கிடக்குது. அதுபற்றி உங்களோடை கதைக்கலாமென்று கந்தையா அண்ணை சொன்னார அதுதான் வந்தனாங்கள்.
பேரா : என்னோடை கதைக்கிறதாலை ஏதாவது பிரயோசனம் ஏற்படுமென்று நீங்கள் நினைத்தால் நல்லது. ஆனால் என்னைப் பொறுத்தவரையிலை இந்தச் சீட்டுப் போட்டு பிரச்சனைப்படு கிறவையிலை பெரும்பாலானவை போட்ட காசை எடுக்கிறதென்றால் பெரிய வில்லங்கம்தான் - நான் ஆரம்பத்திலேயே உங்களைப் பயப்படுத்த விரும்பவில்லை.
கந் : தம்பி, அவர் நல்லாய் மாட்டுப்பட்டு இப்ப ஏலாத கட்டத்திலைதான் உம்மட்டை வந்திருக்கிறார். கனடாவிலை

Page 53
92
இருக்கிற சட்ட திட்டங்க்ளை வைச்சு இதுக்கொரு வழிபண்ணலாமோ என்று யோசிக்கத்தான் வந்தனாங்கள்.
பேரா : அப்படி என்றால் நீங்கள் ஒரு வழக்கறிஞரிட்டைத்தான் போகவேணும்.
கந் : அதுக்குக் காசெல்லே தம்பி செலவழிக்கவேணும்? மனிசன் ஏற்கனவே காசைக் கொடுத்திட்டுக் கலங்கிப்போய் இருக்குது. நீர் இன்னும் செலவழி என்றால் எங்கை போறது?
தில்லை : கந்தையா அண்ணை சொல்லுறது சரிதான். அதோடை இதையெல்லாம் கண்ட நிண்டவையோடை கதைக்க ஏலாது தானே.
பேரா : சரி. ஏதோ எனக்குத் தெரிஞ்ச ஆலோசனையைச் சொல்லித்தாறன். விரும்பினால் செய்து பாருங்கோ. அதுக்கு முதல் என்ன நடந்ததென்று வடிவாய்ச் சொல்லுங்கோ.
தில்லை : எனக்குத் தெரிஞ்ச பெடியன் வந்து தான் ஒரு சீட்டுப்பிடிக்கப்போறன், எல்லாரும் நம்பிக்கை ஆன ஆட்கள் - உங்களுக்கு கூறின ஒரு கிழமைக்குள் காசு வீட்டைவரும். கனக்க இல்லை 200 டொலர்தான் ஆரம்பம். போகப் போகக் கழிவு கூடக் கட்டுக்காசு குறையும், உங்களுக்கும் ஒரு தொகை சேரும் என்று ஆசைகாட்டினான்.
பேரா : ஒம், ஓம், ஆரம்பத்திலை எல்லோரும் அப்படித்தான். கலியாணமும் அப்படித்தான். வியாபாரமும் அப்படித்தான். எங்களுடைய ஆட்கள் ஆரம்பிக்கும்போது ஆலாவர்ணத்தோடு ஆரம்பிக்கிறது. பிறகு முடிவுதானே சோகமாய்ப் போறது.
கந் : எங்கடை சினிமாவைப் போல இல்லையென்று சொல்லுநீர. சுரி, சரி, தில்லை மிச்சத்தைச் சொல்லும்.
தில்லை : சீட்டுப் போட்ட 8 மாதத்தாலை கழிவெல்லாம் சும்மா வாயு வேகத்திலை போச்சுது. சனம் பாஞ்சு பாஞ்சு கண்டமாதிரிக் கழிச்செடுத்தினை. கட்டுக்காசு நல்ல குறைவாய் கட்டினன்.

93
கந் : இதுவரைக்கும் தம்பி எங்கடை சினிமாப் படம்போலை ஆடல் பாடலோடு அமர்க்களமாய் இருந்தது கதை.
பேரா : அப்ப இதற்கு மேலைதான் பிரச்சனை என்று சொல்லுங்கோவன்.
தில்லை : பதினைஞ்சு மாசத்திலை 8 மாசம் கழிஞ்சாப்பிறகு கடைசியிலை விட்டு எடுத்தால், கூடக் காசு வருமென்று பேராசையிலை கட்டிக் கொண்டே இருந்தன். ஒன்பதாம் மாதத்துக்குப் பிறகு ஒரு நாள் அவன் பொடியன் அடிச்சு, அண்ணை இந்தமாதம் கட்டுக்காசைக் கொஞ்சம் வெள்ளெனத் தருவியளோ சீட்டு எடுத்தவருக்குக் காசு அவசரம் தேவையாம் என்றான். நான் சொன்னன் தம்பி நான் என்ன உழைக்கிறனே, வெல்பயர் வந்தால்தானே தரலாமென்றன். சரி அதுக்கென்ன அடுத்தடுத்த நாள் எடுத்துத் தாருங்கோ என்றான். அதே மாதிரி நேரே வந்து காசை வேண்டிக் கொண்டு போனான். அவ்வளவுதான் - இப்ப ஆளைக் காணவில்லையாம். இதே மாதிரி ஊரிலையும் செய்துபோட்டு வந்தவனாம் என்று இப்பதான் அறியிறம்.
பேரா : அண்ணை, நீங்கள் சொன்ன கதை பழையகதை. இதுமாதிரிக் கேட்டுக் கேட்டுப் புளிச்சுப்போச்சு.
கந் : என்ன தம்பி பழைய கதையென்றீர். இப்பதானே முதன்முதலாய் தில்லை சொல்லுறார்.
பேரா : அண்ணை இது இவருக்குப் புதிய கதைதான். ஆனால் சீட்டுப் போட்டவையிலை ஏறக்குறைய முக்கால்வாசிப்பேருக்கு நடக்கிற கதைதான் இது. இன்று நேற்றல்ல இப்ப எத்தனையோ நூற்றாண்டாக இப்படித்தான் நடக்குது. அப்படி இருக்கவும். இந்தச்சீட்டுப் போடுறது நடந்து கொண்டுதான் இருக்குது.
கந் : அதுக்கு என்ன காரணமென்று நினைக்கிறீர்.
பேரா : நம்பிக்கைதான் காரணம். நீங்கள் சீட்டுப் போடமுன்னர் ஆர் தொடங்கிறார் என்பதைத்தான் பார்ப்பியள். அவன் நல்லாய்த் தெரிஞ்ச

Page 54
94
பொடியன் ஒரு நாளும் பிழை செய்யான் என்று நினைச்சுப்போட்டுத் தொடங்கிறது.
தில்லை : நானும் அப்படித்தான் தொடங்கினது.
பேரா : மற்றது, அவன் ஏன் சீட்டுப் போடத் தொடங்கினான் என்பதைப்பற்றி நாங்கள் சிந்திக்கிறதில்லை.
கந் : நல்லாய்ச் சொன்னீர் தம்பி. காசு அவசரமாகத் தேவைப்படுகிறவனுக்குத் தான் இந்த யோசனை ஒடும், மற்றது வட்டி கொடுக்காமல் காசு சேர்க்கிறதுக்கு இது ஒரு நல்ல வழி.
பேரா : சீட்டுப் போடுறது நல்ல வழி என்றுதான் நானும் சொல்லுறன். வங்கியிலை கடன் எடுக்கிறது கஷ்டமான காரியம். மற்றது அவர்களுடைய நிபந்தனைகளும் வட்டியும் கூட. இது ஒருவருக்கு ஒருவர் உதவிசெய்யிற ஒரு உயர்ந்த நோக்கம். ஆனால் இதைச் சிலர் துஷ்பிரயோகம் செய்கிறதாலைதான் இதற்கும் மக்களிடையே மவுசு குறைஞ்சு போச்சு. வாக்குக் கொடுத்தமாதிரி எல்லாரும் நம்பிக்கையாக நடப்பார்களேயானால், இது ஒரு சிறப்பான பொருளாதாரத் தத்துவம் என்று சொல்லலாம்.
தில்லை : சரி, இப்ப என்னுடைய பிரச்சனைக்கு ஒரு வழி சொல்லுங்கோ பார்ப்பம்.
பேரா : உம்முடைய பிரச்சனைக்கு வழி இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அதாவது நீங்கள் அவனோடு சீட்டுப் போட்டதற்கு ஒரு அத்தாட்சியுமில்லை. எல்லாம் வாய்ப்பேச்சிலைதான் நடந்தது. எனவே நீர் கொடுத்த பணத்துக்கு ஒரு பற்றுச்சீட்டுக்கூடக் கிடையாது. இதுக்கு வழக்கு வைக்க முடியாதென்று எல்லாருக்கும் தெரியும்.
கந் : எல்லாம் தெரிஞ்சுகொண்டு, காலாகாலமாக எங்கடை சனம் சீட்டுப் போடுகிறதைப் பார்க்க, ஆச்சரியமாய் இருக்குது தம்பி.
பேரா : இது மாத்திரமல்ல. இப்படி எத்தனையோ விஷயங்களைப் பிழையென்று தெரிந்தும் சனம் செய்துகொண்டுதானே இருக்குது.

95
தில்லை : அப்ப நீங்கள் சொல்லுறதைப் பார்த்தால், நான் இவ்வளவு நாளும் கட்டின காசுக்கு அதோகதிதான் போலை கிடக்குது.
பேரா : அவன் உங்களுக்கு இரங்கிக்கொடுத்தாலொழிய அந்தக்காசை எடுக்கிறதற்கு வேறு வழியொன்றும் கிடையாது. நீங்கள் 1800 டொலரோடு தப்பிவிட்டியள இங்கை 10 ஆயிரம் கொடுத்து ஏமாந்தவையும் இருக்கினை தெரியுமே.
கந் : நான் இவர் தொடங்கும் போதே சொன்னனான் - இது தேவையில்லாத வேலையப்பா பேசாமல் இரென்று. இது காசு சேர்க்கிறதுக்கு ஒரு சுகமான வழி என்று துவங்கினார்.
பேரா : தில்லையண்ணையின்ரை யோசனை நல்ல யோசனைதான். ஆனால் ஆரொடு சேர்ந்து துவங்கிறம் என்பதிலைதான் தங்கியிருக்குது. அவற்றை பின்னணி என்ன - கொடுக்கல் வாங்கல் எப்படி என்றெல்லாம் விசாரிச்சுத்தான் இதைத் துவங்கவேணும்.
தில்லை : நீங்கள் சொல்லுறது சரி. இங்கை சீட்டுப் போட்டு வீடு வாங்கிப் பிள்ளைகள் மூன்று நாலுக்கு நல்ல ஆடம்பரமாய்க் கலியாணவீடுகள் எல்லாம் செய்த ஆட்களும் இருக்கினைதானே.
பேரா : இல்லை என்று ஆர் சொன்னது? சேர்க்கிற ஆட்கள் நல்லவர்களாயும், நடத்துகிறவர் நாணயமானவராயும், நம்பிக்கையான வராயும் இருந்தால் இது ஒரு சிறப்பான வழி என்பதை நான் மறுக்கவில்லை.
கந் : தம்பி, நாணயம், நம்பிக்கை என்ற விஷயங்கள் இப்ப எல்லாம் குதிரைக் கொம்பு. அதுவும் கனடாவிலை எல்லாம் இப்ப தலைகீழாகத்தான் நடக்குது. பெரிய மனிசர் என்று சொல்லிக் கொண்டு திரியிறவை செய்யிற விஷயங்களை, ஆராய்ஞ்சால்தான் தெரியும் அவயின்ரை பொட்டுக்கேடெல்லாம்.
பேரா : நீங்கள் சொல்லுறதை நான் எதிர்க்கவில்லை. இப்ப இருக்கிற சமுதாயம் காலத்தின் கோலத்தால் நல்லாய் மாறிப் போச்சு. ஆர் நல்லவை ஆர் கெட்டவை என்று கண்டுபிடிக்கிறது கஷ்டம்.

Page 55
96
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இங்கை வந்து சீட்டுப் போட்டுப் பலரை ஏமாத்திப் போட்டு தொரன்ரோவை விட்டு ஓடிப் போனார் என்று கேள்வி. இப்படிப் பல சம்பவங்கள் நடந்த பின்னரும். கொலை அடிதடி என்று நடந்த பின்னரும், சீட்டுப்போடுறது நடந்து கொண்டுதான் இருக்குது. இதை நிற்பாட்டுடறதற்கு ஒருவராலும் முடியாது.
கந் : தில்லை, என்ன தலையைச்சுத்துதோ? பயப்படாதையும். இஞ்சை பாடுபட்டு உழைச்சவனே காசைக் குடுத்திட்டுக் கவலைப் படுகிறான். நீர் உழைக்காத காசுதானே, வாரும் போவம். அப்ப நாங்கள் வாறம் தம்பி.
தில்லை : போட்டுவாறம்.
பேரா : ஒம், வாருங்கோ.
அங்கம் : 15
( தில்லையும் கந்தையாவும் பேரானந்தம் வீட்டுக்கு வருகிறார்கள்.)
கந் : என்ன தம்பி ஏதோ சீரியசாக யோசித்துக் கொண்டிருக்கிறீர் போலை கிடக்குது? நாங்கள் குழப்பிப் போட்டமோ ?
பேரா : சாய், அப்படி ஒன்றுமில்லை. இருங்கோ, இருங்கோ.
கந் : எங்கை பிள்ளையைக் காணயில்லை ---?
பேரா : ஒம அவ சாமான்கள் ஏதோ வாங்க வேணுமென்று
வெளியிலை போட்டா. ஏதோ ‘சேல்’ போடுறாங்களாம் என்று சொன்னா.
கந் : "சேல்’ என்றவுடனை எனக்கு ஞாபகம் வருகுது - இந்த ‘சேல் "கீல்’ என்று எங்கடை ஊரிலை போட்டதை நான் ஒரு

97
நாளும் கேள்விப்பட்டதே இல்லை. இங்கை ஒவ்வொரு கிழமையும் 6,657 96.560p& JT Lq 'sini (636 month end sale” “week end sale” என்று ஒவ்வொரு நாளும் சேல் போடுகினை கனடாவிலை. இதாலை அவைக்கு நன்மை இருக்கோ?
தில்லை : என்ன கந்தையா அண்ணை, தெரியாத மாதிரிக் கேட்கிறியள்? எங்கடை சனம் சேல் என்ற உடனை அங்கை ஒடிப்போறது தெரியாதே உங்களுக்கு.
பேரா : தில்லையண்ணை, நீங்கள் எல்லாம் வடிவாகக் கவனிச்சு வைச்சிருக்கிறியள் என்று தெரியுது. இங்கை வியாபாரத்துக்கு அழகு விளம்பரம் செய்தல் என்ற வாக்கியத்திலை முற்று முழுதாக நம்பிக்கை வைத்துத்தான் வியாபாரிகள் விளம்பரம் செய்யிறது.
கந் : விளம்பரம் செய்யிறது மிக முக்கியமானது என்பதை நான் ஆதரிக்கிறன். ஆனால் இந்த சேல் என்று ஏன் அடிக்கடி போடுகினை என்பதைப் பற்றித்தான் கேட்டது.
பேரா : சேல் என்பது ஒரு வகையான விளம்பர உத்தி. சேல் என்று போட்டு நான்கைந்து சாமான்களின் விலையைக் குறைத்துப் போட்ட உடன் என்ன நடக்கும்.
தில்லை : உங்கடை மனைவி போனமாதிரி எல்லாரும் கடைக்குப் போவினை.
பேரா : சரியாய்ச் சொன்னியள். அதுதான் அங்கை இருக்கிற கவர்ச்சி. மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்குச் செய்கின்ற ஒரு முக்கியமான வியாபார உத்திதான் இந்த சேல் என்ற விளம்பரம்.
கந் : கவர்ச்சி, ஈர்ப்பு என்று இரண்டு சொல்லுச் சொன்னியள் தம்பி - இந்தக் கவர்ச்சி உண்மையிலையே விளம்பரத்துக்கு மிக முக்கியம் என்று நினைக்கிறன்.
பேரா : முக்கியமில்லை அண்ணை. விளம்பரத்தின் உயிரே அதுதான் என்று சொல்லலாம். இந்தக் கவர்ச்சியைப் பயன்படுத்தி

Page 56
98
விளம்பர ஸ்தாபனங்கள் எவ்வளவு பணம் செலவழித்து விளம்பரம் செய்கிறார்கள் என்று தெரியுமே?
தில்லை : லட்சக் கணக்கிலை செலவழிக்கினை என்று நினைக்கிறன்.
பேரா : லட்சமோ? கோடிக்கணக்கிலை செலவழிக்கினை. உங்களுக்குத் தெரியுமா கொக்கொ கோலா, IBM, Microsoft போன்ற உலகளாவிய நிறுவனங்கள், தங்களுடைய பொருட்களின் விற்பனையைக் கூட்டுவதற்கு கோடிக்கணக்கிலை செலவழிக் கிறார்கள். விளம்பரத்துக்கென்றே தனியான ஒரு பிரிவு இருக்குது. அதிலை வேலை செய்கிறவர்கள் எந்த நேரமும் மக்களின் கவனத்தைதக் கவர்வதற்காக என்ன புதிய உத்திகளைக் கையாளலாமென்று ஆராய்ச்சிகள் செய்து கொண்டே இருக்கிறார்கள். சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதுதான் அவர்களின் முக்கிய நோக்கம்.
கந் : தம்பி, இந்த ரி.வியிலை அடிக்கொருதரம் விளம்பரங்களைப் போட்டுக் காட்டுவினை அதுக் கெல்லாம் நிறையக் காக கொடுப்பினை. என்று நினைக்கிறன்.
பேரா : அண்ணை 30 செக்கனுக்குக் காட்டுகிற விளம்பரத்திற்குச் சிலவேளை 3 லட்சம் டொலர் கூட குடுக்கிறார்கள். அது காட்டப்படுகிற நேரத்தையும், நிகழ்ச்சியையும் பொறுத்து கொடுக்கிற காசு வேறுபடும்.
தில்லை : தம்பி, இந்த உலக உதைப்பந்தாட்டப் போட்டி நடந்ததெல்லோ, அதுக்கு விளம்பரம் செய்ய ஏராளமாகக் கொடுத்திருப்பினை என்று நினைக்கிறன்.
பேரா : நிச்சயமாகக் கொடுத்திருப்பினை. அந்த உதைப்பந்தாட்டப் போட்டியை எவ்வளவு பேர் பார்த்திருப்பினை என்று நினைக்கிறியள்.
தில்லை : உலகம் முழுவதுமென்றால் ஏறக்குறைய இரண்டு பில்லியன் சனம் பார்த்தினமென்று நினைக்கிறன்.

99
பேரா : நீங்கள் ஓரளவுக்குக் கிட்ட வந்திருக்கிறியள். ஆனால் சராசரியாக 3 பில்லியன் சனம் பார்த்திருந்தார்கள் என்று கணக்கிட்டிருக்கிறார்கள். உலக சனத்தொகையிலை ஏறக்குறைய அரைவாசிப்பேர் பார்த்திருக்கிறார்கள் அந்த நிகழ்ச்சியை.
கந் : தம்பி, பொறும் இந்த பில்லியன் என்றால் எவ்வளவு.
பேரா : பில்லியன் என்றால் மில்லியன், மில்லியன். அதாவது ஒன்றும் 12 சைபர்களும் சேர்ந்தது தான் 1 பில்லியன்.
தில்லை : அப்படி என்றால் உலக சனத் தொகை 6 பில்லியன் என்று சொல்லுறியள்.
பேரா : ஒம் உலக சனத் தொகை 5.7 பில்லியன். இது சென்ற ஆண்டு எடுத்த புள்ளிவிபரம்.
கந் : தம்பி இன்னொரு கேள்வி - இந்த 3 பில்லியன் சனங்கள் இந்த உதைபந்தாட்டப் போட்டியை ரி.வியிலை பார்த்தார்கள் என்று இவைக்கு எப்படித் தெரியும்?
பேரா : நல்ல கேள்வி கேட்டியள் அண்ணை - என்னை மடக்குற யோசனையோ?
கந் : தம்பி, உம்மை மடக்கி எனக்கென்ன பிரியோசனம்? தெரியாத விஷயங்களைக் கேட்கிறதற்குத் தானே உம்மட்டை வாறனாங்கள்.
பேரா : சரி, சரி, சொல்லுறன் கேளுங்கோ. பொதுவாக இப்படியான முக்கியமான நிகழ்ச்சிகளை தொலைக்காட்சியிலை காட்டும்போது ஒவ்வொரு தொலைக்காட்சி நிலையத்திலும் ஒரு யந்திரம் வைத்திருப்பார்கள். நீங்கள் அந்த நிகழ்ச்சிக்கு உங்கள் தொலைக் காட்சியை மாற்றிய உடனே அந்த யந்திரம் 1 எனப் பதிவு செய்து கொள்ளும். இப்படியே ஒவ்வொரு தொலைக்காட்சியும் அந்தக் குறிப்பிட்ட நிகழ்ச்சிக்கு மாற்றப்பட்டவுடன் அந்த யந்திரம் தானாகவே எண்ணிக்கொண்டு போகும்.

Page 57
100
கந் : நல்ல யந்திரந்தான். ஆனால் ஒரு வீட்டிலை ஒருதர் மட்டும் பார்த்துக் கொண்டிருப்பார் அல்லது பல பேர் பார்த்துக் கொண்டிருப்பார்கள். அதெல்லாம் என்னமாதிரி அந்த யந்திரத்துக்குத் தெரியும்.
பேரா : அண்ணை நீங்கள் முந்திப் பொலிசிலை வேலை செய்தனியளோ?
கந் : ஏன் கேட்கிறீர்?
பேரா : இல்லை, இப்படித் துருவி துருவிக் கேட்கிறியள். அதுதான்
கேட்டனான்.
கந் : நான் பொலிசிலை வேலை செய்யவில்லை. ஆனால் ஓடிற்றராக இருந்தனான்.
பேரா : அதுதானே பாத்தன் - இப்படிக் கேள்வி கேட்கிற உங்களிட்டைக் கணக்கு விட ஏலாது.
தில்லை : அப்படிச் சொல்லாதையும் இவரிட்டையே எத்தனையோ பேர் கணக்கு விட்டிட்டாங்கள்.
கந் : அதெல்லாம் பழைய கதைகள். அதை விட்டுப்போட்டு விஷயத்துக்கு வாரும்.
பேரா : இப்ப கணக்கு விடாதையும் என்று சொல்லுறியள் - சரி, சரி - உங்கடை கேள்வி ஒரு நல்ல கேள்வி. அதுக்கு என்னாலை பதில் சொல்ல முடியாத நிலை. ஏன் என்றால் எனக்குத் தெரியாது.
கந் : தம்பி, நீர் பயந்து போனீராக்கும் நான் ஓடிற்றராக வேலை செய்தனான் என்று சொன்னவுடனே.
பேரா : அண்ணை நான் ஏன் பயப்படவேணும்? தெரியாத விஷயத்தைத் தெரியாதென்று சொன்னன் அவ்வளவுதான்.

0.
தில்லை : தம்பி, நீர் ஒருத்தர்தான் தெரியாததை தெரியாதென்று சொன்ன நான் கண்ட முதல் ஆள். தெரியாவிட்டாலும் தெரிஞ் மாதிரிக் கதைக்கிற ஆட்கள்தான் கனடாவிலை கூட இருக்கினை.
கந் : தில்லை, நீர் தம்பியோடை அவ்வளவு பழகவில்லை. போகப் போகத்தான் அவரைப்பற்றி உமக்கு விளங்கும்.
பேரா : சரி, விஷயத்துக்கு வருவம். இந்த யந்திரம் மாதிரி உலகம் முழுவதுமுள்ள தொலைக்காட்சி நிலையங்கள் பதிவு செய்த எண்ணிக்கைகளை வைத்து எத்தனை பேர் இந்த நிகழ்ச்சியைப் பார்த்தார்கள் என்று முடிவு செய்வார்கள்.
கந் : மனிசன்ரை மூளை என்ன மாதிரி வேலை செய்யுது. அப்ப அந்த நிகழ்ச்சியின் போது காட்டப்பட்ட விளம்பரத்துக்கு எக்கச்சக்கமாகப் பணம் கொடுத்திருப்பார்கள் என்று நினைக்கிறன்.
பேரா : ஒம். அதிலை அடிக்கடி காட்டின “Master Card” கம்பனியின்ரை விளம்பரம் உங்களுக்கு ஞாபகம் இருக்குமென்று நினைக்கிறன்.
தில்லை : ஒம். ஒரு பாட்டு மாதிரி பரிசிலிலுள்ள முக்கியமான இடங்களைக் காட்டிக் கடைசியிலை இரண்டு பந்து போய் மாஸ்டர் காட்டின் சின்னமாக மாறுவதைத்தானே சொல்கிறீர்.
பேரா : பார்த்தியளா உங்களுக்கு அந்த விளம்பரம் இப்பவும் ஞாபகத்திலை இருக்குது. அதுக்கு என்ன காரணம் சொல்லுங்கோ பார்ப்பம்.
தில்லை : அது அடிக்கடி காட்டப்பட்ட ஒரு விளம்பரம் - அதுதான் எனக்கு நினைவிலை நின்றது என்று நினைக்கிறன். இது விளம்பரம் செய்வதிலுள்ள இன்னொரு உத்தி. அடிக்கடி காட்டப்படுகின்ற, சொல்லப்படுகின்ற விஷயங்களை எங்கடை மூளை ஞாபகத்திலை வைத்திருக்கும். அது இலேசிலை மறந்து போகாது. அந்த நாட்களிலை இலங்கை வானொலியில் வர்த்தக சேவையிலை ஒலிபரப்பிய எத்தனையோ விளம்பரங்கள் எங்களில் பலருக்கு ஞாபகம் இருக்குமென்று நினைக்கிறன்.

Page 58
102
கந் : அப்ப நீங்கள் சொல்வதைப் பார்த்தால் எந்த வியாபாரத்துக்கும் விளம்பரம் தேவை - அதுவும் அடிக்கடி செய்யவுேணும். அப்படி என்றால்தான் வியாபாரம் பெருகும்.
பேரா ; முற்றிலும் சரி. அதனாலைதான் இங்கையுள்ள கம்பனிகள் எல்லாம் பத்திரிகைகளிலை, வானொலியிலை, தொலைக்காட்சியிலை ஏராளமான பணத்தைச் செலவழித்து விளம்பரம் செய்கிறார்கள்.
தில்லை : தம்பி, அது மட்டுமே வீடு வீடாய் fliers அடிச்சுமெல்லே கொடுக்கினை. அதைக் கொண்டு வந்து போடுகிற ஆட்களுக்குமெல்லே காசு கொடுக்கினை.
பேரா பொதுவாக பெரிய கம்பனிகள் எல்லாம் விளம்பரத்துக்கென்றே வருமானத்தில் 10, 15 சத வீதத்தை வருட ஆரம்பத்தில் ஒதுக்கி வைப்பார்கள். மேலும் விளம்பரத்துக்குச் செலவழிக்கிற பணத்தைக் காட்டி அதுக்கு வரிச் சலுகையும் பெறுவார்கள். எனவே விளம்பரம் செய்வதற்கு உண்மையில் பொருட்களை வாங்குகின்றவர்கள்தான் மறைமுகமாகப் பணம் கொடுக்கிறார்கள்.
தில்லை : ஓம், அதுதான் வியாபாரிகள் கையாளும் முறை.
கந் : அப்படியென்றால் வியாபாரிகள் நிறைய விளம்பரம் செய்யலாம் தானே.
பேரா : ஒம், அதனாலைதான். பெரிய விளையாட்டுகள்- கார் ரேஸ், ரென்னிஸ், உதைப்பந்தாட்டம், ஒலிம்பிக்ஸ் போட்டிகள் எல்லாம் பல மில்லியன்கள் செலவழிச்சு நடத்துறதற்குக் காசு கொடுக்கிறது, விளம்பரம் செய்யும் கம்பனிகள் தான்.
கந் : இப்ப எங்கடை கலைவிழா நடத்துகின்ற சங்கங்கள் அடிக்கிற மலரெல்லாத்துக்கும் வியாபாரிகள்தானே பணம் கொடுக்கினை.

03
பேரா : ஒம், சரியாய்ச் சொன்னியள். எங்கடை வியாபாரிகள் கூடுதலாக விளம்பரம் செய்து, வியாபாரத்தைப் பெருக்கும் வழி வகைகளைக் கையாள வேணும். அதுதான் முன்னேறுவதற்கு வழி.
தில்லை : நல்லாய்ச் சொன்னீர் தம்பி - எங்களுடைய பத்திரிகைகள், சஞ்சிகைகள், வானொலி, தொலைக்காட்சி முதலிய தொடர்பு சாதனங்கள் எல்லாவற்றிற்கும் எமது வியாபார ஸ்தாபனங்கள்தான் உதவி செய்யினை, அவைக்கு நாங்கள் எல்லாரும் நன்றி சொல்லவேணும்.
கந் : அது நல்லது, அதோடை இந்தப் பொருட்களையெல்லாம் வாங்கி வியாபாரத்தைப் பெருக்குகின்ற எங்கடை மக்களுக்கும் நாங்கள் நன்றி சொல்லத்தான் வேணும்.
பேரா : அண்ணை, நாங்கள் சொன்ன விஷயம் நல்லது. எங்கடை மக்கள், எங்கடை வியாபாரா ஸ்தாபனங்களைக் கூடுதலாக ஆதரித்தால், எங்கடை இனத்துக்குத்தான் நன்மை. வியாபாரிகள் உழைக்கிற பணத்திலை ஒரு பகுதியை மக்களின் நன்மைக்காகப் பாடுபடுகின்ற பொது ஸ்தாபனங்களுக்குக் கூடுதலாகக் கொடுத்தால், அதனாலை எல்லாருக்கும் பயன் ஏற்படும்.
கந் : அப்ப நாங்கள் கூடுதலாகப் பொருட்களை வாங்கினால், அதாலை எங்கடை வியாபார ஸ்தாபனங்கள் வருமானத்தைக் கூட்ட. அவர்கள் வியாபாரம் செய்வதைக் கூட்டவேணும். அத்தோடு தொலைத் தொடர்பு ஸ்தாபனங்களுக்கும் இதனாலை நன்மை ஏற்படும் - கடைசியாக எங்கடை இனத்துக்கே நன்மை ஏற்படும் என்று சொல்லுறீர்.
பேர சரியாச் சொன்னியள்.

Page 59
104
அங்கம் :16
(பேரானந்தம் வீடு - கந்தையாவும் தில்லைநாதனும் வருகிறார்கள்)
(கதவில் தட்டும் சத்தம்)
பேரா : ஆரது? வாருங்கோ, வாருங்கோ.
கந் : வணக்கம் தம்பி -
பேரா : வணக்கம், வணக்கம் - தில்லை அண்ணை.
தில்லை : வணக்கம் தம்பி.
பேரா : என்ன, இன்றைக்குச் சோடியாய் வாறியள்?
கந் : ஓம், ஓம். இரண்டு பேருக்கும் கலியாணச் சோடியள் இல்லை - பின்னை இப்ப நாங்கள் இரண்டு பேரும் சோடி சேர்ந்திட்டம்.
பேரா : எட, அப்படியே சங்கதி? ஏதோ ஒருவருக்கொருவர் துணையாய் இருக்கிறது நல்லது தானே. சுரி, என்ன விஷயம் நீங்கள் இரண்டுபேரும் விஷயமில்லாமல் வரமாட்டியளே.
கந் : சரியாய் கண்டு பிடிச்சிட்டீர் - நாங்கள் விஷயத்தோடைதான் வந்திருக்கிறம். இது லேசுபட்ட விஷயமில்லை.
பேரா : என்ன பயப்படுத்திறியள் போலை கிடக்குது. என்னைச் சங்கடத்திலை மாட்டி விட்டிடுவியள் போலை கிடக்குது.
தில்லை : சாய் அப்படி ஒன்றும் பெரிசாய் இல்லை, கந்தையா அண்ணை உங்களோடை பகிடி விடுகிறார்.

05
கந் : சரி தில்லை, நான் விஷயத்தைச் சொல்ல இல்லை - நீர்தான் சொல்லும்.
தில்லை : ஏன் கந்தையாண்ணை, என்னை மாட்டப் பாக்கிறியள்?
கந் : இல்லை, நீர்தானே அந்தக் கேள்வியோடை என்னட்டை வந்தனீர். நான் இப்ப தம்பியிட்டைக் கூட்டிக் கொண்டு வந்திருக்கிறன். பயப்படாமல் விஷயத்தைச் சொல்லுமன்.
தில்லை : ஒன்றுமப்படிப் பெரிசாய் இல்லை. இந்த 2000மாவது
ஆண்டிலை உலகத்திலை 6) மாற்றங்கள் அழிவுகள் ஏற்படப்போகுது என்று எல்லாரும் கதைக்கினை. அதுதான் உங்களோடை கதைச்சுப் பாப்பம் என்று இரண்டு பேரும் வந்தனாங்கள்.
பேரா : நீங்கள் இரண்டு பேரும் பீடிகை போடும்பொழுது யோசித்தனான், ஏதோ முக்கியமான விஷயமாய்தான் இருக்குமென்று. நல்லது- நல்ல விஷயம், வடிவாய் கதைப்பம். ஆரம்பத்திலையே ஒன்று சொல்லவேணும். இது ஒரு மிகவும் முக்கியமான விஷயம். நான் புத்தகங்களைப் பேப்பர்களை வாசித்த அறிவைக் கொண்டுதான் உங்களுக்குச் சில விஷயங்களைச் சொல்லப்போறன். பிறகு இன்னார்தான் சொன்னவர் இப்படி, நடக்குமென்று, என்று மற்றவைக்கும் சொல்லி என்னைச் சங்கடத்திலை மாட்டி விடக்கூடாது.
கந் : ஒம், ஓம். எங்களுக்கு அது நல்லாய் விளங்கும். நீர் ஒன்றுக்கும் பயப்படக்கூடாது. நாங்கள் உங்களைக் கடைசிவரையும் சங்கடத்தில் மாட்டமாட்டம்.
தில்லை : அது சரிஈ நாங்கள் என்ன சாத்திரம் சொல்லுறமோ, அல்லது மற்றவையளைப் பயப்பிடுத்துறத்துக்குச் சொல்லுறமோ - ஏதோ ஒரு விளக்கம் கேட்கிறதுதானே எங்கடை நோக்கம்.
பேரா : நீங்கள் கேட்ட கேள்விக்கு மணிக்கணக்காக விளக்கம் சொல்லலாம். நான் இப்ப சில முக்கியமான விஷயங்களைப் பற்றித்தான் உங்களுக்குச் சொல்லப்போறன்.

Page 60
106
கந் : சரி, அது உம்முடைய விருப்பம் - சொல்லும் கேட்பம்.
பேரா : ஆதிகாலத்திலேயே இந்த உலக மாற்றங்களைப் பற்றிப் பல ஞானிகளும் அறிவாளிகளும் சொல்லியிருக்கினை. அவர்களுக் குள்ளை, ஆரம்பத்திலை இதைப் பற்றிச் சொன்னவர் நொஸ்ரடமஸ் என்ற ஒரு பிரான்சு நாட்டு டொக்டர். இவர் 16ஆம் நூற்றாண்டிலே வாழ்ந்தவர். இவர் “நூற்றாண்டுகள்” என்ற பாடல்களில் உலகத்திலே நடக்கப் போகிற விடயங்களை விரிவாக எடுத்துக் கூறியிருக்கிறார். இது ஓர் புத்தகமாக வெளிவந்திருக்கிறது. அத்துடன் "The Man Who Saw Tomorow ” அதாவது “நாளையைக் கண்ட மனிதன்” என்ற ஒரு வீடியோ படமாகவும் இது தயாரிக்கப்பட்டிருக்குது.
கந் : இதை வாங்கிப் பார்க்கலாமோ தம்பி.
பேரா : தெரிய இல்லை அண்ணை. வீடியோ கடைகளிலே தேடிப்பார்த்தால் கிடைக்கும், கிடைச்சால் எனக்கும் கொண்டுவந்து தாருங்கோ.
கந் : நல்ல கதை, கட்டாயம் கொண்டவந்து தருவம். அவர் என்ன சொல்லியிருக்கிறார்.
பேரா : அவர் பல விடயங்கள் சொல்லியிருக்கிறார். முக்கியமான விடயம் இதுதான். கிறிஸ்து நாதர் இறந்த பிறகு ஒரு சூரிய கிரகணம் ஏற்படும். இது ஒரே இருட்டாயும் சூனியமாயும் இருக்கும். இது ஒக்டோபர் மாதத்தில் நடக்கும். இந்த நேரத்தில் பூமியானது தனது இயற்கைச் சமநிலையை இழந்து ஒரே இருளாயிருக்கின்ற ஒரு சூனியத்தில் விழுந்துவிடும். இது நடக்கும் முன்னர் பல அறிகுறிகள் தோன்றும். பருவகால மாற்றங்கள் ஏற்படும். நாடுகளின் தலைவர்கள் தூக்கி எறியப்படுவார்கள். பூமி நடுக்கம், வெள்ளம், நெருப்பு முதலிய சக்திகளால் அழிவுகள் ஏற்படும் என்றெல்லாம் சொல்லியிருக்கிறார்.
தில்லை : தம்பி, இதெல்லாம் என்ன கதையோ அல்லது மெய்யாய் நடக்கிற விஷயங்களோ.

()7
பேரா : இதுவரைக்கும் இவர் சொன்ன விஷயங்களிலை 75 முதல் 80 வீதமானவை ஏற்கனவே நடந்திருக்கின்றன.
கந் : அப்ப மனிஷன் கதை விடவில்லை என்று வடிவாய் விளங்குது. தில்லை நாங்கள் ஒருக்கால் அந்தப் படத்தை வாங்கிப் பார்க்கத்தான் வேணும். இந்தக் கிரகணம் எப்ப நடக்குமென்று சொல்லியிருக்கிறார்?
பேரா : 9-9-1999 என்றுதான் சொல்கிறார்கள். ஆனால் அதற்குமுதல் கலிபோனியாவிலை ஒரு பெரும் பூமி நடுக்கம் ஏற்படுமென்றும் ஒரு மைல் நீளமான எரி நட்சத்திரமொன்று இந்து சமுத்திரத்தில் விழுமென்றும் இதனால் U6) இடங்களிலை அழிவுகள் ஏற்படுமென்றும் சொல்லியிருக்கிறார்.
தில்லை : சரி. எங்கடை ஆட்கள், அதாவது எங்கடை ரிஷிகள் அறிஞர்கள் இதைப்பற்றி எதாவது சொல்லியிருக்கினையோ?
பேரா : ஒம், ஓம். அவையும் சொல்லியிருக்கினம். அதுக்கு முதல் மகாபாரதத்தில் இதைப்பற்றிச் சொல்லப்பட்டிருக்குது.
கந் : என்ன தம்பி, மகாபாரதத்திலையோ? என்ன சொல்லியிருக்குது?
பேரா : இப்போது நடக்கிறது கலியுகம், அடுத்தது கிருதயுகம், கலியுகத்தின் கடைசி வருடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகள் பற்றி மார்க்கண்டேயர் உதிஷ்திரனுக்குக் கூறுவதாவது - அயோக்கியர்கள் நாடுகளை ஆள்வார்கள், பணம் சம்பாதிப்பதற்குக் கெட்ட வழிகளை நாடுவார்கள், பூக்களுக்கு மணமிராது, பழங்களும் மரக்கறிகளும் சுவைகுன்றிக் காணப்படும், மக்கள் சிற்றின்பத்தில் கூடிய நாட்டங் கொள்வர், விலைமாதர் வீதிகளில் உலாவுவர், புதிய நோய்கள் தோன்றும், அரசாங்கங்கள் அளவுக்கு மீறிய வரியை விதிக்கும், பருவ மழை பெய்யாது, மக்கள் பேராசை, தன்னலம், காமம் ஆயவற்றால் பீடிக்கப்பட்டிருப்பார்கள், நேர்மையயானவர்கள் குறைவாகவே காணப்படுவர், வியாபாரிகள் ஏமாற்றிப் பணம்பறிப்பர், சிலர் திடீர் பணக்காரர் ஆவர், மனிதர் பூங்காக்களிலும், வயல் வெளிகளிலும் உடலுறவு கொள்வர், காதல் கலியாணங்களே பெரும்பாலும் நடைபெறும். செயற்கை நூல்களினால் செய்யப்பட்ட

Page 61
108
ஆடைகளையே மக்கள்அணிவர், போதிய விளைச்சல் இல்லாமையால் பல நாடுகளில் பட்டினியால் இறப்புக்கள் நேரும்
கந் : தம்பி, பொறும், பொறும். இதெல்லாம் இப்ப நடக்கிறன்த யெல்லோ நீர் சொல்லுநீர்.
பேரா : நான் சொல்ல இல்லை. மகாபாரதத்திலை எழுதப் பட்டிருக்கிறதைத்தான் நான் சொல்லுறன். இன்னும் கேளுங்கோ -
தில்லை : சரி, சரி, சொல்லுங்கோ கேட்பம்.
பேரா : பார்க்கக்கூடாத விஷயங்களைப் பார்க்கிறதும், சத்தில்லாத உணவுகளை அதாவது Junk food சாப்பிடுவதும் அப்போது அதிகமாகக் காணப்படும். மக்கள் தமது சொந்த நாடுகளைவிட்டு பிற நாடுகளுக்கும் புலம் பெயர்ந்து செல்வார்கள். விலங்குகளின் எண்ணிக்கை கூடும். 8, 9 வயதுப் பெண் பிள்ளைகள் குழந்தை பெறுவார்கள், இளசுகள், கிழவர்கள் போலவும், கிழவர்கள் இளசுகள் போலவும் நடந்து கொள்வர். கற்பழிப்பு, பலாத்காரம் அதிகமாக இருக்கும். நாடுகளும் இனங்களும் சண்டைகளில் ஈடுபடும். சமயச் சடங்குகள் போலியாக நடைபெறும். குடியிலும் கும்மாளத்திலையும் மக்கள் கூடுதலாக ஈடுபடுவர். காட்டுத்தீ பல இடங்களில் உண்டாகும். வெப்ப நிலை அதிகரிக்கும். பலத்த மழை பெய்யும்.
கந் : தம்பி, இதெல்லாம் இப்ப உலகெல்லாம் நடக்கிற விஷயங்கள். இதைப்பற்றி முன்பே எழுதியிருக்கென்று சொல்லுநீர். நம்பமுடியாமல் இருக்குது மகாபாரதத்தை ஒருக்கால் படிக்கவேணும்.
பேரா : ஓம் - கட்டாயம் படிக்கவேணும். இனி இந்த கிரகநிலை பற்றியும் பின்வருமாறு சொல்லியிருக்கு - 4 ஆம் திகதி மே மாதம் 2000 ஆம் ஆண்டு 944 காலையில் (இந்திய நேரப்படி) ஆறு கிரகங்கள், அதாவது சூரியன், சந்திரன், புதன், குரு, சுக்கிரன், சனி எல்லாம் ஒரு வீட்டுக்கு வருகின்றன - அப்போது பரணி நட்சத்திரம் 3 ஆம் பாதம் - கிருதயுகம் ஆரம்பம் - இது ஒரு பொற்காலமாயிருக்கும்.

()9
கந் : கிருதயுகத்திலை நாங்கள் வாழ்வது ஐமிச்சம் என்று சொல்லுறியளோ?
பேரா : அப்படியில்லை - உலகின் சில பகுதிகள்தான் தாக்கப்படும். கனடாவைப் பொறுத்தவரையில் பிரச்சனை இல்லை என்று சொல்கிறார்கள். இதைப்பற்றி பைபிளிலும் சொல்லப்பட்டிருக்கிறது.
தில்லை : பைபிளிலை என்ன சொல்லியிருக்கு?
பேரா : பைபிளிலை Revelations - அதாவது புதிய ஏற்பாடு என்ற பகுதியிலை 2000 ஆவது ஆண்டளவில் இதுவரை காணாத ஒரு பெரிய பூமியதிர்ச்சி ஏற்படும், மலைகள் காற்றில் ஆடும் புற்கள் போன்று ஆடும், கற்பாறைகள் நாலாபக்கமும் வீசப்படும், கடல் கொந்தளிக்கும், தரைகளெல்லாம் பிளக்கும், மலைகள் நீருக்குள் மறைந்துபோகும், நாடுகள் மறைந்து போகும், கட்டிடங்கள் தரைமட்டமாகும் என்றெல்லாம் கூறப்பட்டுள்ளது.
கந் : இப்ப நீர் சொன்னதைப் பார்த்தால் இதெல்லாம் நடக்கக் கூடிய சாத்தியம் இருக்கும்போலை கிடக்குது.
பேரா : அண்ணை, இதுமட்டுமில்லை, வேறு ஞானிகள்கூட இதைப்பற்றிச் சொல்லியிருக்கினை.
தில்லை : அதையுஞ் சொல்லுங்கோ கேட்பம்.
பேரா : ஆந்திரப் பிரதேசத்திலை 15ஆம் நூற்றாண்டிலை வாழ்ந்த வீர பிரமேந்திரா என்பவர் இந்த கலியுகத்தின் கடைசியைப்பற்றி விரிவாகக் கூறியிருக்கிறார்.
கந் : என்ன கூறியிருக்கிறார்?
பேரா : அவர் 1899 ஆம் ஆண்டிலை நடப்பவை, 1927 முதல் 1974 வரை நடப்பவை என்று எல்லாம் விபரமாாகச் சொல்லியிருக்கிறார். அவற்றில் சிலவற்றைச் சொல்லுறன் - மாடில்லாத வண்டில்கள் ஒடும் (கார்), நீரிலிருந்து வெளிச்சம் உண்டாகும், கிராமங்கள் நகரங்களாகும், அரசுகள் அழியும், கலகம், சண்டை, வழிப்பறி,

Page 62
0.
கொள்ளை, களவு, எல்லாம் அதிகமாகும். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் கூடுதலாக இருப்பார்கள், பல புதிய நோய்களினால் மக்கள் பல்லாயிரக் கணக்காக இறப்பார்கள், மகாபாரதத்திலும் இதுபற்றிக் கூறப்பட்டுள்ளது. இந்தியாவின் தலைவியாக ஒரு விதவை வருவாள். இது 1974க்கு பின் நிகழும். எரிநட்சத்திரங்கள் பகலில் தோன்றும். இவை பூமியில் விழும். பலர் இறப்பார்கள. பூமியில் இரத்த ஆறு ஓடும். 2000 ஆண்டளவில் கலியுகம் முடியும்போது ஒரு பெரிய நட்சத்திரம் தோன்றும். வானில் நெருப்பும் புகையும் காணப்படும். 25 நகரங்கள் எரிந்து அழிந்து போகும். 6) நகரங்கள் தரைமட்டமாகும். பணக்காரர் ஏழைகளாவார்கள். பூரண நிலவன்று பூமியின் எடைகுறையும், வட துருவம் தென்துருவமாகப் பூமி நிலை மாறும். இதனால் பூமியதிர்ச்சியும் நடுக்கமும் பலமாக ஏற்படும்.
தில்லை : இவர் சொன்னதும், மற்றவை சொன்னதும், ஏறக்குறையச் சரியாகத்தானே இருக்குது.
பேரா : இது மாத்திரமில்லை, இன்னும் பலர் இதே மாதிரி இன்றைக்கு 300, 400 ஆண்டுகளுக்கு முன்னரே சொல்லியிருக்கினை.
கந் : என்ன தம்பி, அப்ப இதுகளெல்லாம் உண்மையாய் இருந்தால் எங்கடை கதியென்ன?
தில்லை : என்ன அண்ணை, இவ்வளவு நாளும் அனுபவித்தது காணாதே? பிள்ளைகள் எல்லாம் பிள்ளைகளோடு சந்தோஷமாய் இருக்குதுகள், இனி என்ன நிம்மதியாய் போக வேண்டியதுதானே?
கந் : நான் தில்லை, என்னைப்பற்றிப் பயப்பட இல்லை. இந்தப் பிள்ளைகளெல்லாம் அந்தரப்படுமே என்றுதான் சொன்னனான்.
பேரா : அண்ணை, இதிலை பயப்படுவதற்கு ஒன்றுமில்லை. இது எல்லோருக்கும் ஏற்படுகிற நிலை. ஆனால் தெய்வ பக்தியுள்ளவை, நேர்மையானவை சிலபேர் தப்பிவிடுவினம் என்று சொல்லுகிறார்கள். இதிலை எது நடக்கும் எது நடக்காதென்று இருந்துதான் பாரக்கவேணும்.

கந் : தம்பி அப்போதை, நீர் கனடாவிலை ஒன்றும் நடக்கா தென்றெல்லே சொன்னீர்.
பேரா : ஒம், ஒம அப்படித்தான் எழுதியிருக்குது. நடக்காட்டில் நல்லது. நடந்தால் நாங்கள் ஒன்றுஞ் செய்ய ஏலாது.
தில்லை : ஒம் நீங்கள் சொல்லுறது சரி. இதைப்பற்றி யோசித்துப் பயனில்லை. ஆறிலுஞ் சாவு, நூறிலுஞ் சாவு - வாறது வரட்டும்.
பேரா : அப்படிச் சொல்லுங்கோ. அப்படித்தான் இருக்கவேணும் - கந்தையா அண்ணையைப் போலை பயந்தால் ஒன்றும் செய்ய ஏலாது.
கந் : சீச்சீ, நான் பயப்பட இல்லை!
பேரா : சரி, எனக்கும் அலுவல் கிடக்குது. மிச்சத்தைப் பிறகு கதைப்பம்.
இருவரும் : ஒம், ஓம்.
அங்கம் : 17
பேரா : வாருங்கோ, வாருங்கோ! உங்களைத்தான் பாத்துக் கொண்டிருக்கிறன்.
கந் : ஏன் தம்பி, ஏதேனும் பிரச்சனையோ?
பேரா : சாய், அப்படி ஒன்றுமில்லை. அன்றைக்கு ஆதிகாலத்தில் ஞானிகள் 2000 வது ஆண்டைப்பற்றிச் சொன்னதைக் கதைச்சம். 20ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவை, விஞ்ஞானிகள் சொன்னதையும் பற்றிப் பார்க்கப்போறம்.

Page 63
12
தில்லை : அதுதானே நாங்களும் ஆவலாய்க் கேட்க வந்தனாங்கள்.
பேரா : சரி, சரி, இருங்கோ. இன்றைக்கு பரிமளம் இல்லை. அவ கோயிலுக்குப் போட்டா. உங்களுக்கு கோப்பி போடவும் ஆளில்லை.
கந் : அதைப்பற்றிப் பரவாயில்லை. ஏன் இங்கை வாற நேரமெல்லாம் நாங்கள் குடிக்கிற நாங்கள்தானே. இன்றைக்கு இல்லாவிட்டால் என்ன குறையே?
பேரா : சர அப்ப நாங்கள் துடங்குவம். எட்கார் கேசி என்ற ஒரு அமெரிக்கர் 1877 முதல் 1945 வரைக்கும் வாழ்ந்தவர். இவர் ஒரு ஞான திருஷ்டிக்காரர்.
தில்லை : அதென்ன தம்பி அது?
பேரா : அது வந்து, இனி நடக்கப்போற விஷயங்களை முன்கூட்டியே சொல்லுறது.
கந் : சாத்திரக்காரரும் அதைத்தானே செய்யினம்?
பேரா : அவை வந்து உங்கடை நட்சத்திரங்கள், கிரகங்களை வைத்துக்கொண்டு பலன் சொல்லுறவை. இவை வந்து ஒரு ஞான நிலையிலை இருந்து திடீரெனச் சொல்லுவினை.
கந் : ஓ அப்படியா? நல்லது. அவர் என்ன சொன்னவர்?
பேரா : 1934 ஜனவரி 19 இலை அவர் சொன்னது - பல இடங்களில் பூமி பிளவுபடும். அமெரிக்காவின் மேற்குக் கரையோரப் பகுதிகளில் பெரும் மாற்றங்கள் ஏற்படும். ஜப்பானில் பெரும்பகுதி கடலுக்குள் அமிழ்ந்து விடும். ஐரோப்பாவின் வடபகுதி கண்ணிமைக்கும் நேரத்தில் மாற்றமடையும். அமெரிக்காவின் கிழக்குக் கரையிலும் புதிய நாடு தோன்றும். வடதுருவம் தென்துருவமாக மாறும். இது அனேகமாக 2000, அல்லது 2001 ஆம் ஆண்டு நிகழும்.

3
தில்லை : எல்லாரும் இந்தப் பூமியின் துருவ மாற்றம் பற்றித்தான் கூடுதலாகச் சொல்லியிருக்கினை போலை தெரியுது.
பேரா : றுத் மொன்ற்கோமரி என்ற ஒரு ஹேஷ்யங்கூறும் பெண்மணி இந்த மாற்றங்களைப்பற்றிச் சொன்னதாவது - ஹவாயின் ஒரு பகுதி, கலிபோனியா, இங்கிலாந்து, ஹொலண்ட், ஜப்பான் முதலிய நாடுகள் கடலுக்குள் அமிழ்ந்து போகும். அவுஸ்திரேலியா, நியூசீலந்து, பஹாமாஸ் பரப்பளவில் பெரிதாகும் இந்தப் பிரளயத்திலிருந்து தப்பிப் பிழைக்கும் மக்கள் நல்ல வாழ்க்கை வாழ்வார்கள். புதிய சகாப்தம் மிகவுஞ் சிறந்த காலமாக இருக்கும் என்று கூறியுள்ளனர்.
கந் : இந்த விஞ்ஞானிகள், அதாவது வானியலறிஞர்கள் இதைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லையோ தம்பி.
பேரா : நல்ல கதை. அவையும் சொல்லியிருக்கினை. அதுக்குமுதல் எங்கடை பூமியைப்பற்றி நாங்கள் அறிந்து கொள்ளவேணும். இந்தப் பூமியின் நிறை 66உம் 20ழஜ்யங்களும் கொண்ட எண்ணிக்கை அளவு தொன்கள். எமது பூமி ஒரு கோழி முட்டை வடிவம் போன்றது. பூமியின் அச்சு 23 பாகை கோணத்தில் சரிந்துள்ளது. 14 மாதங்களுக்கு இடஞ்சுழியாக (Counter Clokwise) வட துருவத்தைச் சுற்றி நடுங்குவது போன்று பூமி சுற்றும். இதனை “Chandler Wobble” என்று விஞ்ஞானிகள் கூறுவர். இவ்வாறு சுற்றும்போது பூமியின் நடுப்பாகம் வீங்குகின்றது.
தில்லை : அதென்ன வீக்கம் தம்பி? எங்கடை கைகால் வீங்கிற
மாதிரியோ?
பேரா : இல்லை இது வந்து பூமிக்குள்ளிருக்கும் உருகிய குழம்பு, சுற்றுவதினால் ஏற்படும் விசை வெளிநோக்கி வீசப்படுவதால் இவ் வீக்கம் ஏற்படுகிறது.
கந் : அதுதான் எரிமலையாய் வெளியே வருகுதோ தம்பி? பேரா : சரியாய்ச் சொன்னியள். பூமியின் மேற்பரப்பு சில இடங்களில் மெல்லியதாய் இருந்தால், இந்தக் குழம்பு வெளியூே எறியப்படுவதால்தான் எரிமலை உண்டாகிறது.

Page 64
14
கந் : தம்பி, இந்தப் பூமி சூழலுவதுடன் சூரியனைச் சுற்றியும் வருகுதல்லோ? இதுக்கு ஒரு சக்தி தேவைதானே. அது எங்கையிருந்து வருகுது?
பேரா : அது தான் அண்ணை ஒருவருக்கும் விளங்காத் விஷயமாய் இருக்குது. பூமி தன்னைத்தானே ஒரு மணிக்கு 1000 மைல் வேகத்திலும் சூரியனை மணிக்கு 66,000 மைல் வேகத்திலும் சுற்றுகிறது.
தில்லை : என்ன எங்களைப் பயப்படுத்திறியளோ? இந்த வேகத்தில் சுற்றுகிற பூமியிலை நாங்கள் சீவியம் நடத்துகிறோமென்றால் அது ஆச்சரியமாய்தான் இருக்குது.
பேரா : இதிலை ஆச்சரியப்பட ஒன்றுமில்லையண்ணை - இப்ப நாங்கள் விமானத்திலை போகும் போது இதைப் பற்றி யோசித்து பாக்கிறதில்லைத்தானே. பெரும்பாலும் விமானங்கள் 2, 3ஆயிரம் மைல் வேகத்திலை பறக்கும்போது எங்களுக்குத் தெரியாது. அதைப்போலத்தான் பூமியும் எங்களைவைச்சுக் கொண்டு பிரபஞ்சத்தில் சுற்றுது.
கந் : என்னதான் சொன்னாலும் தம்பி, இந்தப் பூமி 66 ஆயிரம் மைல் வேகத்தில் சுற்றுதென்றால், அதை நினைக்கப் பெரிய ஆச்சரியமாய்த்தான் இருக்குது.
பேரா : இதைப் போல எத்தனையோ ஆச்சரியமான விஷயங்கள் எங்களைச் சுற்றி நடக்குது அண்ணை. இதைக் கேளுங்கோ- பூமி தன்னைத் தானே சுற்றும் வேகம் குறைந்து கொண்டு வருகுது. 1972ஆம் ஆண்டிலை ஆகஸ்ட் 3க்கும் 21ஆம் திகதிகளுக்கும் இடையில் நாளொன்றுக்கு 16 மில்லி செக்கன்கள் குறைந்து விட்டதாம். சாதரணமாக மிகவும் குறைவாக நாம் கருதினாலும். இந்தச் சக்தி மிகவும் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும். ஒரு நாளைக்குப் பூமியின் சுற்றுதலை 16 மில்லி செக்கன் குறைப்பதற்கு 10,812 கோடி கிலோவாட் சக்தி தேவை. இது அமெரிக்காவுக்குத் தேவையான மின்சார சக்தியை 5700 வருடங்களுக்குக் கொடுக்கக் கூடியதாய் இருக்கும்.

115
கந் : தம்பி பொறும், பொறும் - எனக்குத் தலையைச்சுற்றுது. இதை இன்னொருக்கால் விளக்கமாகச் சொல்லும் கேட்பம்.
பேரா : பூமியின் வேகம் குறைந்து வருகுது என்று சொன்னன்.
தில்லை : ஒம். ஒரு நாளைக்கு 16 மில்லி செக்கன் என்று சொன்னியள்.
பேரா : இந்த வேகத்தைக் குறைப்பதற்குச் சக்தி தேவை. அந்தச் சக்தியை மின்சாரமாகப் பயன்படுத்தினால் அமெரிக்காவுக்குத் தேவையான மின்சக்தியை 5700 வருடங்களுக்குப் பயன்படுத்தலாம். பயன் படுத்தலாமென்றால் 1 நிமிசத்துக்குத் தேவையான சக்தியை நினைச்சுப் பார்க்க முடியாதுபோலை கிடக்குது.
கந் : தம்பி, இதெல்லாம் எங்களாலை யோசித்துப் பார்க்க முடியாத தலையைச் சுற்றுகிற விஷயங்கள். இதுகளை விட்டுப்போட்டு பொதுவான எல்லாருக்கும் விளங்கிற விஷயங்களாகச் சொல்லும்.
பேரா : சரி, அப்படியென்றால் ஹியூ பிறவுன் என்ற விஞ்ஞானி சொன்ன விஷயங்களைப் பார்ப்பம்.
கந் : சரி, சொல்லுங்கோ.
பேரா : தென் துருவத்திலை இருக்கிற பனிப்பாறையின் நிறையை 1960களிலை அவர் 19குவாட்றிலியன் தொன்கள் அதாவது (19ம் 21 பூஜ்யங்களும்) என்று கணக்கிட்டார். பூமி சுற்ற ஆரம்பித்து 7000 வருடங்கள் என்றும் ஆண்டு தோறும் இப் பனிப்பாறையின் நிறை கூடிக்கொண்டே போகுது என்றும் சொன்னார்.
கந் : சரி, அதனாலை என்ன ஆபத்து என்று சொல்லுங்கோ.
பேரா : இந்தப் பனிப்பாறை கடல் மட்டத்திலிருந்து 14 ஆயிரம் அடி
உயரத்துக்கு வளந்திருக்குது. இதனாலை இது பூமியின் துருவத்தை விரைவில் மாற்றக்கூடும் என்று கூறினார்.

Page 65
6
தில்லை : அதாவது இதனுடைய பாரத்தாலை வடதுருவம் கீழேவர தென்துருவம் மேலை போகும் என்று நினைக்கிறியளே.
கந் : பொறு தில்லை, அப்படி தென்துருவம் மேலை போனால் இந்தப் பனிப்பாறைக்கு என்ன நடக்கும்?
பேரா : நல்ல கேள்வியண்ணை. இந்தப் பாறை கீழ்நோக்கி நகரத் தொடங்கும். அதனாலை நாடுகளெல்லாம் அழிந்து போகும்.
கந் : இது எப்ப நடக்குமென்று சொன்னவர்?
பேரா : அவர் சொன்னதைப் பல பேர் நம்பவில்லை. அமெரிக்க அரசாங்கத்துக்கு இதைப்பற்றி எதாவது செய்யவேணுமென்று சொன்னார். ஒருவரும் அக்கறை காட்ட இல்லை. இதைப்பற்றிக் கவலைப்பட்டுக்கொண்டே 1976இலை அவர் இறந்து போனார்.
தில்லை : பாவம் மனுசன் - தப்பியிட்டுது.
பேரா : ஆண்டுதோறும் பனி கூடச் சேருது தென்துருவத்தில் என்பதை நிரூபிக்க, அட்மிறல் பேட் (Byrd) என்றவர் 1930இலை 10 அடி வானொலிக் கோபுரம் ஒன்றைக் கட்டினார். இப்ப அந்தக் கோபுரத்தின் உச்சியில் சில அடிகள்தான் வெளியிலை தெரியுது, கீழே உள்ள பகுதிகள் எல்லாம் பணியால் மூடப்பட்டு விட்டன.
கந் : அப்ப பிறவுன் சொன்னது சரிதான். நாங்கள் சரியான சங்கடத்திலைதான் மாட்டியிருக்கிறம்.
பேரா : இன்னும் கேளுங்கோ - 1968இலை செய்மதியிலிருந்து (அதாவது Satelite) எடுக்கப்பட்ட படங்களிலை பூமியின் 21 மில்லியன் சதுர கிலோ மீற்றர் பரப்பு பணியால் மூடப்பட்டிருந்தது என்று கணக்கிடப்பட்டது. 1972 இலை இது 28 மில்லியனாகக் கூடிவிட்டது. ஆனால் 1987 இலை 32 மில்லியனாகிவிட்டது. அதாவது 20 வருஷத்திலை பனிப்படலம் 33% ஆல் அதிகரித்துவிட்டது.

17
தில்லை : இப்படியே போனால் எங்களுக்கு இருக்க இடமில்லாமல் போகும்போலை கிடக்குது.
கந் : என்ன பேய்க்கதை? கதைக்கிறாய் நாங்களே இருக்கமாட்டம் பிறகு என்ன இருக்கிறதுக்கு இடம்.
பேரா : சரியாக சொன்னியள். இது மட்டுமில்லை. 1985 இலை அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள் தென்துருவம் இடம் மாறுவதைக் கணக்கிட்டர்கள். அதன்படி 1955 இலை இருந்த இடத்திலிருந்து 300 கிலோ மீற்றர் தள்ளி இருப்பதைக் கண்டு பிடித்திருக்கிறார்கள். அதாவது ஆண்டுதோறும் சராசரி 102 கிலோ மீற்றர் தள்ளிப்போகுது என்பதுதான் அவர்கள் முடிபு.
கந் : அப்ப பிறவுன் சொன்னதை இவை நிரூபித்துக் காட்டியிருக்கினை என்று சொல்லுறீர்.
பேரா : ஒம். இனி இந்த சிறு கிரகங்கள் விழுகிறதைப்பற்றிப் பார்ப்பம்,
தில்லை : சிறு கிரகமோ? சொல்லுங்கோ?
பேரா : 1990 ஆகஸ்ட் 20ஆம் திகதி வெளிவந்த இந்தியன் எக்ஸ்பிரஸ் பேப்பரிலை அவுஸ்திரேலியாவின் அடிலெய்ட் பல்கைைலக்கழக விஞ்ஞானிகள் சின்னக் கிரகமொன்று பூமியோடு மோதக்கூடுமென்று கண்டு பிடிச்சிருக்கிறார்கள். இதை முதலில் கண்டுபிடித்தவர் றொபெட் மக்றோட் என்ற வானியலறிஞர். இவர் நியூ சவுத்வேல்சிலுள்ள அவதான நிலையத்திலிருந்து இதனைக் கண்டுபிடித்தார்.
கந் : இதென்ன செய்யப் போகுதாம்?
பேரா : அவர்களின் கணிப்பின்படி சிலநூறு நீளமான இக் கிரகம் இன்னும் 2 வருஷத்திலை பூமியோடு மோதலாம் என்று கூறியிருக்கிறார்கள். இதை அடிப்படையாக வைச்சுத்தான் Impact என்ற ஒரு ஆங்கிலப் படம் தயாரிச்சவை. இது சென்ற மாதம் இங்குள்ள தியேட்டர்களிலை ஒடினது.

Page 66
S
தில்லை : அப்படியே சங்கதி எனக்குத் தெரியாமல் போட்டுதே!
கந் : கவலைப்படாதை தில்லை - வீடியோ எடுத்துப் பார்ப்பம்.
பேரா : ஒம். அது நல்ல யோசனை. இந்தமாதிரி ஒரு நிலமை 1993 இலை ஏற்பட்டது என்றும், சிறு கிரகமொன்று பூமியிலிருந்து 10,000 மைல்களுக்குக் கிட்டவாகச் சென்றதென்றும் டேவிட் றபினோவிற்ஸ் என்ற வான்வெளி நோக்கினர் ஒருவர் கூறியதாக ஜூன் 23, 1993ஆம் ஆண்டு வெளிவந்த ரைம்ஸ் ஒவ் இந்தியாப் பத்திரிகை கூறியுள்ளது.
தில்லை : 90ஆயிரம் மைல் கிட்டவே? அப்பிடி எத்தனை கிரகங்களும் வால் நட்சத்திரங்களும் எங்கடை பூமிக்குப் பக்கத்தாலை போகுதுகள்?
பேரா : பூமிக்கு இவ்வளவு கிட்டவாக வேறொரு கிரகமும் வரவில்லையாம். அதுதான் இன்னும் சிறிது கிட்டவாக வந்திருந்தால் பெரிய அழிவுகள் ஏற்பட்டிருக்கலாம் என அவர் கூறியுள்ளார்.
கந் : இப்பிடி எல்லாரும் சொல்லிச் சொல்லி எங்களைப் பயப்படுத்துகினை போலைகிடக்குது.
பேரா : அண்ணை, இது விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புக்கள். அதைக் கேட்டுப் பயப்படுவதாலை ஒரு பலனும் ஏற்படாது. வாறது. வரட்டுமென்று சொல்லிப்போட்டுப் பார்க்கிற அலுவல்களைப் பாக்கவேண்டியதுதான்.
தில்லை : நல்லாய்ச் சொன்னியள் - இந்த மனிசன் தேவையில்லாமை எல்லாத்துக்கும் பயப்பட்டுக் கொண்டிருக்குது.
கந் : தில்லை, நீ ஏதோ பயப்படாத ஆள்மாதிரிக் கதைக்காதை, எனக்குத் தெரியும் உன்ரை விளையாட்டு. ஊரிலை இரவிலை எங்காவது போறதென்றால், ஏதாவது சாட்டுச் சொலிலிப்போட்டு வீட்டிலை இருக்கிறது

9
பேரா : சரி, அதெல்லாம் கிடக்கட்டும். இவ்வளவு நேரமும் இந்த விஞ்ஞானிகள் ஆராய்ச்சியாளர்கள் இனிமேல் நடக்கப்பபோகிற விஷயங்களைச் சொன்னதைப் பற்றி ஆராய்ஞ்சம்.
தில்லை : ஒம். இதெல்லாம் நடக்குமோ நடக்காதோ என்று இருந்துதான் பார்க்கவேணும்.
கந் : ஒம் தில்லை. இவ்வளவு நீங்கள் ஆதாரங்களோடை சொல்லியும் தில்லை நம்ப இல்லை. நம்புறது நம்பாதது அவரவர் விருப்பம்.
பேரா : நல்லாய்ச் சொன்னியள் இதெல்லாம் ஒவ்வொருதற்றை மனோபாவத்தைப் பொறுத்தது. அடுத்த முறை தற்போது நடக்கிற சம்பவங்களுக்கு என்ன விளக்கங்கள் கொடுத்திருக்கினை என்று
பார்ப்பம்.
கந் : தம்பி இந்தப் பிள்ளையார் சிலை பால் குடிச்சதைப்பற்றி என்ன நினைக்கிறீர்?
பேரா : அதைப் பற்றியும், சாமி பாபாவைப் பற்றியும் பல விஷயங்கள் கதைக்கவேணும். பிறகு சந்திப்பம்.
இருவரும் : அப்ப நாங்கள் வாறம்.
அங்கம் : 18
கந் : தம்பி, வணக்கம்.
தில்லை : வணக்கம் - தம்பி எப்பிடிச் சுகம்?
பேரா : வணக்கம். வாருங்கோ. ஏதோ உங்கடை புண்ணியத்திலை சுகமாய் இருக்கிறம்.

Page 67
120
தில்லை : என்ன நக்கலோ?
பேரா : அப்படி யொன்றுமில்லை. இந்த நக்கல் என்ற சொல்லுக்குச் சரியான அர்த்தம் என்ன சொல்லுங்கோ பார்ப்பம்.
கந் : நக்கல் என்னறால் நக்குதல், நாக்கால் நக்குதல் என்றுதான் நாங்கள் பொருள் கொள்ளுறது.
பேரா : ஆனால் இப்ப தில்லை அண்ணை பாவிச்சது அந்தப் பொருளிலை இல்லையே?
தில்லை : நான் என்ன பகிடி விடுகிறியளோ என்றுதான் சொன்னன்.
பேரா : இல்லை இது பகிடியல்ல. இது கேலி செய்தல். இதை ஆங்கிலத்திலை Sarcasm என்று சொல்வது. இதை தமிழ் நாட்டவருக்குச் சொன்னால் விளங்காது. அவர்கள் நக்குதல் என்ற பொருளிலைதான் எடுத்துக் கொள்ளுவினம். இது வந்து மிகவும் அண்மைக் காலத்தில்தான் இந்தப் பொருளில் இலங்கைத் தமிழர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதைப்போல பல சொற்கள் புதிய அர்த்தங்களில் வழங்கப்பட்டு வருகின்றன.
கந் : அவர் இறங்கிவிட்டார் என்று சொல்லுறது, இங்கை அடுக்குமாடிக் கட்டிடத்திலிருந்து இறங்கிவிட்டார் என்ற பொருளில் இப்போது வெளியில் போட்டார் என்றும் பாவிக்கப்படுகிறது.
பேரா : சரியாய்ச் சொன்னியள். இந்த பாவித்தல் என்ற சொல்லும் அப்படித்தான். பாவித்தல் என்றால் ஒருவரைப் பார்த்து நடித்தல் - “கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி தானுமதுவாகப் பாவித்து’ என்ற பாடல் வரியில் அந்த அர்த்தத்தில் எழுதப்பட்டது. ஆனால் இப்போது பாவித்தல் என்ற சொல்லு உபயோகித்தல், பயன்படுத்தல் என்ற அர்த்தத்தில் நடைமுறையில் இருக்கிறது.
தில்லை : சொற்கள் இடத்துக்கு இட்ம் காலத்துக்குக் காலம் மாற்றமடையுந்தானே.

21
கந் : தம்பி நாங்கள் முக்கியமான விஷயத்தை விட்டுப்போட்டு வேறு ஏதோ கதைச்சுக்கொண்டு இருக்கிறம்.
பேரா : சரி, சரி. போன முறை பூமியைப்பற்றியும் வால் நட்சத்திரம், சிறு கிரகங்களைப்பற்றியும் கதைச்சம். இனி எங்களைச் சுற்றியிருக்கற ஓசோன் படை, சூழல் மாசுபடல், பூமி சூடேறுதல் என்ற விஷயங்களைப்பற்றிப் பார்ப்பம்.
கந் : தம்பி, பொறும். நீர் ஆட்களைப் பயப்படுத்திற சொற்கள் எல்லாம் சொல்லுநீர் - இதுகளைக் கொஞ்சம் விளங்கப்படுத்தினால் நல்லது.
பேரா : ஒம் அதைப் பற்றித்தான் சொல்லப்போறன். இந்த ஓசோன் என்றது ஒரு வாயு. இது சாதாரண ஒக்சிசனைக் காட்டிலும், ஒரு சிறு துணிக்கை கூடுதலாகக் கொண்டிருக்கும். சாதாரண ஒக்சிசனுக்கு 2 சிறு துணிக்கைகள் (molecules) இதுக்கு 3 சிறு துணிக்கைகள் இருக்கும். இந்த ஓசோன் படை பூமிக்கு மேலே 10 முதல் 15 கிலோ மீற்றர் தொலைவில் காணப்படும். உயிரினங்கள் பூமியில் வாழ்வதற்கு இந்த ஓசோன் படை மிகவும் முக்கியமானது. சூரிய ஒளியிலிருக்கிற அதீத வயலற் கதிர்களை வடிகட்டிப் பூமிக்கு அனுப்புவது இந்த ஓசோன் படைதான். இது மொத்தத்தில் குறைஞ்சு போனால் வயலற் கதிர்களாலை உயிரினங்களுக்குக் கெடுதல் ஏற்படும்.
தில்லை : இந்தப் படையினுடைய மொத்தம் என்னென்டு குறையுது தம்பி.
பேரா : இது நல்ல கேள்வி. குளிர்சாதனப் பெட்டிகள்-Fridge, Airconditioner போன்றவற்றிலிருந்து வெளியேறும் குளோரின் வாயு இந்த ஓசோன் படையைக் குறைத்து விடும். இதை விஞ்ஞானிகள் ஆராய்ச்சி மூலம் கண்டறிந்திருக்கிறார்கள். 1975க்கும் 84க்கு மிடையில் பூகோளத்தின் தென்பகுதியிலுள்ள ஓசோன்படை அரைவாசியாகக் குறைந்துவிட்டதாக (F)பார்ம்ன் என்ற விஞ்ஞானியின் தரவுகள் எடுத்துக்காட்டுகின்றன. இதனால் மக்களுக்கு தோல் கான்சர், பயிர்கள், மீன்கள் இறந்து போதல், கால

Page 68
122
நிலை மாற்றங்கள் எல்லாம் ஏற்படுவதாகச் சொல்கிறார்கள். இந்த மாதிரியான நிலைமை மோசமானால், பூமியில் உயிரினங்கள் வாழமுடியாத நிலைமை ஏற்படுட்மென்று விஞ்ஞானிகள் கூறியிருக்கிறார்கள்.
š : S9ŮULq (ou 6öpsT6ů (51TIẾS56 Fridge, Airconditioner பாவிக்காமல் எல்லோ இருக்கவேணும்?
பேரா : அப்படிச் செய்யிறது கஷ்டம். ஆனால் பாவனையைக் குறைத்துக் கொள்வது நல்லது. இதனால்தான் பூமி சூடேறுகிறது. அதாவது Global Warming. இதனால் பனிமலைகள் உருகிக் கீழ்நோக்கி நகரத் தொடங்கிவிட்டன என்பதைப் பற்றி போனமுறை சொன்னனான்.
தில்லை : ஒம், ஓம. நினைவிருக்கிறது. வெள்ளப் பெருக்கும், அழிவும் இப்ப சீனா, பங்களதேஷ் ஆகிய இடங்களிலை நடக்குது.
பேரா : அது மாத்திரமல்ல. சிறிய, சிறிய தீவுகளெல்லாம் உலகுக்கடியில் மறைந்து போகின்றன. 1993ஆம் ஆண்டு 1190 தீவுகளைக் கொண்ட மாலைதீவுகள் என்ற இடத்திலிருந்த தீவொன்று கடலுக்குள் மறைந்து போச்சு.
கந் : மாலைதீவிலை 1190 தீவுகள் இருக்குதோ தம்பி?
பேரா : ஒம். அதிலை பெரும்பாலான தீவுகளிலை ஆட்கள் கிடையாது - மிகவும் சின்னத் தீவுகள். மற்றது இந்தக் காடுகளை அழிக்கிறதாலையும் வெப்பம் அதிகரிக்குது. உங்களுக்கு ஞாபகம் இருக்குமென்று நினைக்கிறன் - Green Peace என்ற ஒரு சங்கம் இந்தக் காடுகள் அழிக்கிறதை எதிர்த்து மறியல்செய்து வருகிறது இங்கை கனடாவிலை. இது மாதிரிப் பிற நாடுகளிலையும் இந்தச் சூழல் மாசு படுத்தல் (Polution), எண்ணெய்க்கப்பல் விபத்துக்களால் எண்ணெய் கடலிலுள்ள உயிரினங்களை அழிக்கிறது. அதை உடனடியாக அகற்ற வேணுமென்று பாடுபடுவது, எங்கள் சுற்றாடலைச் சுத்தமாக வைத்திருக்க வேணும்; அப்போதுதான்

123
நாங்கள் சுத்தமான காற்றைச் சுவாசித்து ஆரோக்கியமாக வாழலாம் என்றெல்லாம் பிரசாரம் செய்கினை. தில்லை : இந்த தொழிற்சாலைகளிலையிருந்து வெளிவருகின்ற நச்சுப் புகைகளும் சுற்றாடலைக் கெடுக்குதுதானே?
பேரா : ஒம். அதனாலேதான் இந்தத் தொழிற்சாலைகளிலிருந்து வெளிவருகிற கழிவுப் பொருள்களையெல்லாம், கடலுக்குள் விடாமல் அவற்றை அழிப்பதற்குப் பல வழிகளைக் கையாளவேண்டுமென்று தொழிற்சாலை நிர்வாகத்தை உலக நாடுகள் கேட்டிருக்குது. சில ஆசிய நாடுகளிலை இதைப்பற்றிக் கவனிக்காமல் கண்டமாதிரி கழிவுப் பொருள்களைக் கடலுக்குள் விட்டு, அதனாலை கடல்வாழ் உயிரினங்களுக்கும் மீனைச் சாப்பிடுகின்ற மக்களுக்கும் நோய்கள் ஏற்படுகின்றன.
கந் : நீங்கள் சொல்லுறது சரிதான். நாங்களே எங்களுக்குச் சவக்குழி தோண்டுவது போலத்தான் விஷயங்கள் நடக்குது.
பேரா : இன்னுமொரு முக்கியமான விஷயத்தைப் பற்றிச் சொல்லப் போகிறன் கேளுங்கோ.
தில்லை : சொல்லுங்கோ, சொல்லுங்கோ.
பேரா : ஆன்னி ஒட்டேகா கேக்வூட் என்ற ஒரு தாதி (nurse) ரெக்சாசிலை இருந்தவ. 1987க்கும் 1981க்கும் இடையில் சொன்ன விஷயங்களைப்பற்றிப் பார்ப்பம். யேசுபிரானின் தாயாரான மேரி தனக்குக் கூறியதாகச் சில விஷயங்களை அவ சொல்லியிருக்கிறா. 1995இலை பல பூமி நடுக்கங்களும் புயல் காற்றும் வீசும். கலிபோனியாவில்தான் பெரிய நடுக்கம் ஏற்படும். சில பகுதிகள் கடலுக்குள் மூழ்கும். இத்தாலி, கிறீஸ், ரஷ்யா, சைனா, கொலம்பியா, ஜப்பான் ஆகிய இடங்களிலை பூமி நடுக்கங்கள் ஏற்படும். 1996இலை பல தடவை அடையாளமறியப்படாத அசையும் கலன்கள் (U.P.O). தோன்றும். இதைப் பல மக்கள் பார்க்கக் கூடியதாக இருக்கும்.
தில்லை : ஏன் பேப்பரிலை எல்லாம் இதைப்பற்றி வந்திருக்குதுதானே.

Page 69
24
பேரா : அது மாத்திரமல்ல. அமெரிக்காவிலை சிலர் இவற்றை வீடியோ படமாகவும் பிடிச்சு வைச்சிருக்கினை. மற்றது நான் முன்பு சொன்னமாதிரி, பூமியின் நிலை மாறும், கடல் கொந்தளிச்சுச் சில நாடுகள் அழியப் புதிய கண்டங்களான அற்லான்ரிக்கும், லெமோறியாவும் மேலே கிளம்பும் என்றெல்லாம் மேரி சொன்னதாக அந்தத் தாதி சொல்லி யிருக்கிறா. ஜப்பான் கடலுக்குள் மூழ்கும். உலகத்தின் சில பகுதிகள் பனிப்பாறைகளால் மூடப்பட்டுவிடும். மத்தியதரைக் கடல் நாடுகள் குளிர்ப் பிரதேசங்களாக மாறும். அமெரிக்காவின் சில பகுதிகள் இங்கிலாந்து, பிரான்ஸ், கிறீஸ் ஆகியன மறைந்து போகும். எப்பொழுதும் பல சண்டைகள் நடந்து கொண்டிருக்கும் ஒரு நாடும் மறைந்து போகும். விஞ்ஞானிகள், தெய்வீகத்தில் நம்பிக்கை இல்லாமல் தாங்களே யாவற்றையும் செய்வதாக எண்ணி இறுமாப்புக் கொண்டு நடக்கிறார்கள். இது அழிவுக்கே வழி கோலுகின்றது. இவர்களால் விளங்கிக்கொள்ள முடியாத பல அதிசயங்கள் உலகில் இந்தச் சகாப்தத்தின் முடிவுக்காலங்களில் நடக்கும்.
கந் : அப்ப இந்த பிள்ளையார் சிலை பால் குடிச்சதிலை ஒரு அதிசயமாய் இருக்குமோ?
பேரா : சரியாச் சொன்னியள். அது ஒரு நல்ல ஊகம். அடுத்த அதிசயம் ஹேல்பொப் வால் நட்சத்திரம். ஜூலை 95இல் கண்டுபிடிக்கப்பட்டது. இது பகலில் பார்க்கக்கூடியதாக இருந்தது: டெல்லி வான்வெளி ஆராய்ச்சி நிலைய இயக்குனர் நிருபமா இராகவன் கூறிய தகவலின்படி - இந்த வால் நட்சத்திரம் 1986இல் கண்டு பிடிக்கப்பட்ட ஹேலியைக் காட்டிலும் 100மடங்கு பெரியதாகவும் 25 ஆயிரம் மடங்கு ஒளி கூடியதாயும் இருந்தது. இதன் வால் மற்றைய வால் நட்சத்திரங்களைப் போலல்லாமல் சூரியனுக்கு எதிராக நோக்கிக் கொண்டிருந்தது.
தில்லை : அப்ப வழக்கமான வால் நட்சத்திரங்களின் வால், சூரியனைப் பார்த்துக் கொண்டிருக்குமோ?
பேரா : ஒம இதனுடைய வால் எதிர்பக்கமாகப் பார்த்துக் கொண்டிருந்தது. மேலும் இதன் தலை 150 கிமீ அகலமுள்ளதாய் இருந்தது.

தில்லை : அப்பாடி! அவ்வளவு பெரிசோ?
பேரா : ஒம். அதனால்தான் இதை சென்ற வருஷம் பலர் பகலிலும் பாரக்கக்கூடியதாய் இருந்தது. படங்கள் பேப்பரிலை எல்லாம் வந்தது பார்த்தியளோ தெரியவில்லை.
கந் ஏதோ இதைப்பற்றிக் கேட்ட ஞாபகம் இருக்குது. தமிழ்ப் பேப்பரிலையும் வந்ததோ தம்பி?
பேரா : அது தெரியவில்லை. வந்திருக்கலாம். அடுத்தது, 1998 நவம்பர் 20ம் திகதி Asian Age என்ற பத்திரிகையில் பெத்தலஹேம் நேற்றிவிற்றி சேர்ச்சில் (கோவில்) யேசுகிறிஸ்துவின் வரை படத்திலிருந்து ஆறு வாரங்களாகக் கண்ணிர் வந்து கொண்டிருப்பதாகச் செய்தி வந்தது. ஏராளமான மக்கள் சென்று பார்த்து இது உண்மை என்று கூறினர் என்றும் எழுதப்பட்டிருந்தது. இதே பத்திரிகையில் டிசம்பர் 98ஆம் ஆண்டு Clear Water, Florida 6T6ip 3Li:565bis Finance 6T6ip கட்டிடத்திலிருந்த கறுப்பு யன்னல் கண்ணாடியில் 15 மீற்றர் அகலமும் 11 மீற்றர் உயரமுமுள்ள கன்னி மேரியின் பலவர்ண உருவம் காணப்படுவதாகவும் பலர் சென்று பார்த்து வருவதாகவும் படம்கூடப் போட்டிருந்தது.
கந் : அந்த நேர்ஸ் சொன்ன விஷயமெல்லாம் இப்ப நடக்குது என்பதற்கு இந்த உதாரணங்களைச் சொல்லுகிறியளோ.
பேரா : ஒம். நான் படித்த புத்தகத்திலை படம் போட்டு இந்தத் தகவல்களெல்லாம் போட்டிருக்குது. அதுமட்டுமில்லை, பெல்லப்பூர் என்ற இடத்திலை (இந்தியாவில்) 1996 டிசம்பரிலை உடைக்கப்பட்ட தேங்காய்க்குள் விநாயகர் வடிவில் தேங்காய்ப் பூரான் இருந்தது. இதேமாதிரி ஒரு பப்பாப் பழம் விநாயகர் சிலைபோன்று கோலாலம்பூரில் காட்சியளித்தது. இவ்வாறு சென்ற இரு ஆண்டுகளில் பல அதிசயங்கள் உலகின் பல பாகங்களில் ஏற்பட்டன.
தில்லை : பிள்ளையார் பால் குடித்ததை நான் கண்ணால் பார்த்தேன். அதற்கு ஒருவராலும் விளக்கம் கூறமுடியாமல் போய்விட்டது.

Page 70
26
பேரா : இதற்கு “Hinduism Today” என்ற ஹவாய் சிறீ சிவாய சுப்பிரமுனிய சுவாமிகளால் வெளியிடப்படும் சஞ்சிகையில் நல்ல விளக்கம் கொடுக்கப்பட்டிருந்தது. அதன்படி தாவர போசணிகளான பசுக்களுக்கு இறந்த விலங்குகளின் குடல், பிற அங்கங்களைக் காய வைத்து அரைத்து மாட்டுத்தீனியாக இங்கிலாந்தில் பண்ணைக்காரர் கொடுத்து வந்திருக்கிறார்கள். இது பசுக்களின் தெய்வாம்ச நிலையைப் பங்கப் படுத்துவதாக அமைகிறது. இந்துக்கள் பசுக்களைத் தெய்வமாக வழிபடுபவர்கள். அதன் பாலை உண்டு பயன் பெறுபவர்கள். இதனை உதாசீனப்படுத்தி ஆங்கிலேயர்கள் நடந்ததால்தான் அங்குள்ள மாடுகளுக்கு மூளை நோய் ஏற்பட்டு அதன் இறைச்சியைச் சாப்பிட்ட மனிதர்களுக்கும் ஏற்பட்டது. இதனால் இங்கிலாந்தின் இறைச்சி வியாபாரமே அழிந்து போகும் நிலை ஏற்பட்டது. விஞ்ஞானிகள் இவ்வாறு மாட்டுத் தீவனத்தில் விலங்குகளின் உடல்கள் சேர்க்கக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்தார்கள். இதனால் பல ஆடு, மாடுகளைக் கொல்ல வேண்டுமென அரசாங்கம் கட்டளை பிறப்பித்தது.
தில்லை : ஒம். இதெல்லாம் பேப்பர், ரேடியோ, தொலைக் காட்சியிலெல்லாம் காட்டினார்கள். இதனாலைதான் பிள்ளையார், பாலின் முக்கியத்துவத்தையும் பசுக்களின் தெய்வீகத் தன்மையையும் மக்களுக்குக் காட்டுவதற்காகச் செய்தார் என்று எழுதப்பட்டிருந்ததோ.
பேரா : ஒம். இது ஒரு நல்ல விளக்கம் என்று நான் நினைக்கிறேன். எங்கள் முன்னோர் செய்கின்ற பல செயல்களை நாங்கள் விளக்கமில்லாமல் பரம்பரை பரம்பரையாகச் செய்து வருகின்றோம். சிலர் இப்படியான அதிசயங்களை நையாண்டி பண்ணியும், எல்லாம் தெரிந்த மேதாவிகள் போன்றும் நடந்து கொள்கிறார்கள். “அவனன்றி அணுவும் அசையாது’ என்ற வேதவாக்கை விளங்கிக் கொள்வது சாதாரண மனிதர்களால் முடியாது. இதனால்தான் சீவன்முக்தி பெற்ற எமது ஞானிகள் “ உன்னை முதலில் அறிந்து கொள் பின்னர் ஆண்டவனை அறிவாய்” என்று கூறியிருக்கிறார்கள். எம்மிடையே

127
வாழ்ந்த யோகர்சுவாமிகள், “என்னை எனக்கறிவித்தான் எங்கள்
குருநாதன்” என்று கூறியிருக்கிறார்.
கந் : இதை விளங்காமல் சனங்கள் தலைகீழாக நிற்குதுகள்.
அங்கம் : 19
(பேரானந்தமும் பரிமளமும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.)
பரி : நீங்கள் ஏதோ கலியுகத்தின் கடைசிக்காலத்திலை பல அழிவுகள் எல்லாம் நடக்கப் போகுதென்று கந்தையா அண்ணைக்குச் சொல்லிப் பயப்படுத்திப் போட்டியளோ?
பேரா : ஆர் சொன்னது உமக்கு இதைப்பற்றி?
பரி : அன்றைக்கு நீங்கள் இல்லை, கந்தையா அண்ணை ரெலிபோனிலை கதைத்தபோது சொன்னவர். மனிசன் நல்லாய்ப் பயந்து போச்சுது.
பேரா : நான் ஏனப்பா அந்த ஆளைப் பயப்படுத்திறன். நடந்த, நடக்கப்போற விஷயங்களைப் பற்றிக் கதைச்சம் அவ்வளவுதான்.
(கந்தையா வருகிறார்)
கந் : தம்பி வணக்கம். பிள்ளை வணக்கம் - ஏதோ ஆரையோ பயப்படுத்தினதைப் பற்றிக் கதைச்சியள். என்னைப் பற்றித்தான் கதைச்சுக் கொண்டிருக்கிறியளோ?
பேரா : வாருங்கோ, கந்தையா அண்ணை - உங்களுக்கு ஆயுசு
5s).

Page 71
128
கந் : என்ன தம்பி அப்படிச் சொல்லுநீர்? உலகமே அழியப்போகு தென்றால் நான் எப்படி நூறு வயசுவரைக்கும் இருக்கிறது.
பேரா : உலகம் அழியப் போகுதென்று ஆர் சொன்னது?
கந் : என்ன ஆர் சொன்னதோ? நீர்தானே அப்படிச் சொல்லிப்போட்டு இப்ப ஆர் சொன்னதென்றோ கேட்கிறியள்.
பேரா : அண்ணை, நான் உலகமழியப் போகுதென்று சொல்ல இல்லையே. உலகத்திலை சில பகுதிகள்தானே அழிந்து போகுமென்று விஞ்ஞானிகளும், ஞான திருஷ்டிக் காரரும் சொல்லுகிறார்கள் என்றுதானே சொன்னனான்.
பரி : அவர் நீங்கள் சொன்னதையெல்லாம் கேட்டு நல்லாய் பயந்து போனார் போலை.
கந் : அப்பிடி யொன்றும் நான் பயப்பட இல்லை. அப்பிடிப் பயப்பட்டால் நான் இன்டைக்கு இங்கே வர மாட்டனே கதைக்க.
பரி : அப்ப இன்டைக்கும் அதைப் பற்றித்தான் கதைக்கப் போறியளோ?
கந் : ஒம், ஓம். நல்ல கதை - தம்பி சொல்லுறதைக் கேட்கத்தானே ஆவலாய் வந்தனான்.
பேரா : சரிசரி, நாங்கள் கதைப்பம். வடிவாய் கேளும். ஆதுசரி, எங்கை தில்லையரைக் காணவில்லை.
கந் : அவர் இன்றைக்கு வரவில்லை.
பரி : சரி, சொல்லுங்கோ.
பேரா : கலியுகத்தின் இறுதிப் பத்து வருடத்தின் ஆரம்பமே பிரச்சனைகளோடுதான் தொடங்கியிருக்கு, முன்னைய வருடங்களைக்
காட்டிலும் 1990ஆம் ஆண்டு ஈரானிலை பூகம்பம் ஏற்பட்டு 50ஆயிரம் பேர் இறந்து போனார்கள். வெப்பமும் ஒரு போதும்

29
இல்லாதவாறு மிகக்கூடுதலாக இருந்தது. குளிரும் அப்படித்தான். இந்தியாவிலை 80 வருடத்துக்குப்பிறகு மிகவும் குளிராகச் சில இடங்களிலை இருந்தது. மஹாபலேஸ்வர், பஞ்சகனி என்ற இடங்களிலை முதன் முதலாக ஜனவரி 1991ஆம் ஆண்டு பனி பெய்தது.
கந் : இந்த இடங்களிலை முந்தி ஒருக்காலும் பனி பெய்ய இல்லையோ தம்பி.
பேரா : ஒம். அன்றைக்குத்தான் முதன் முதலிலை பனி பெய்தது. அதுமட்டுமில்லை, ஐரோப்பாவிலையும் கடுங் குளிராயிருந்தது. கிறீசிலை வெப்பம் -20 செல்சியசாகக் குறைந்ததாலை பலர் விறைத்து இறந்து போனார்கள். அமெரிக்காவிலும் பல இடங்கள் குளிரால் தாக்கப்பட்டன. கலிபோனியாவிலை பயிரினங்கள் அழிந்து போயின. பல இடங்களிலை நீர்க்குழாயெல்லாம் வெடித்தன. குளிராலை சன்ராகுரூஸ் என்ற இடத்திலை ஏராளமான பறவைகள் நிலத்தில் இறந்து கிடந்தன. சஹாரா பாலைவனத்தில் 30 வருடங்களுக்குப்பின் முதல்முறையாகப் பனி பெய்தது.
பரி : பாலைவனத்திலையும் பனி பெய்ததோ? கேட்க ஆச்சரியமாய் இருக்குது
பேரா : வழக்கமாக டிசம்பர், ஜனவரி மாதங்களிலை சஹாராப் பாலைவனத்திலை ஒரே பனிப்படலமாகவும் குளிராகவும் இருக்கும். இது பெரும்பாலும் கிழக்கு ஆபிரிக்கா நாடுகள் முழுவதும் பரந்திருக்கும். இதை நைஜீரியாவிலை “ஹமட்டான்’ என்று சொல்லுவார்கள்.
கந் : தம்பி, நீர் நைஜீரியாவிலை இருந்த மாதிரிக் கதைக்கிறீர்.
பரி : ஒம். நாங்கள் 6 வருஷம் இருந்தனாங்கள். அங்கை வெயில் என்றால் வெயில்தான். குளிரும் அப்படித்தான் 2, 3 மாதங்களுக்கு.
பேரா : அது ஒரு நல்ல அனுபவம்தான். அதிருக்கட்டும். மற்றைய விஷயங்களைப் பார்ப்பம். 1991 இலை மத்திய கிழக்கு நாடுகளிலை ஏற்பட்ட போரிலை 2 இலட்சம் பேர் இறந்து போனார்கள்.

Page 72
30
மெக்சிக்கோ, யப்பான், பிலிப்பைன் தீவுகள், அந்தமான் நிக்கோபார் தீவுகளிலை பல 100 வருடங்களாக அமைதியாக இருந்த எரிமலைகள் திரும்பவும் வெடித்துப் பல அழிவுகளை ஏற்படுத்தின. பங்காளதேசத்தில் ஏற்பட்ட சூறாவளியினால் 5 இலட்சம் பேர் இறந்து போனார்கள்.
பரி ஏன், போன மாதமும் வெள்ளப்பெருக்காலை இரண்டாயிரம் பேருக்குக்கிட்ட இறந்து போனார்கள் என்று பேப்பரிலை வாசித்தனான்.
கந் : இந்த பங்காளதேசத்திலை ஒவ்வொரு வருஷமும் வெள்ளப்பெருக்கு, சூறாவளி என்று சனம் செத்துக்கொண்டுதானே
இருக்குது.
பேரா : ஒம். அது வந்து ஒரு வளைகுடாவை அண்டி இருக்கிற நாடென்றபடியால் இப்படியான விளைவுகள் ஏற்படத்தான் செய்யும். இது மாதிரித்தான் மெக்சிக்கோ வளைகுடாவிலையுயம் சேதங்கள் ஏற்படுகிறது. அது மாத்திரமல்ல வெள்ளப்பெருக்குப் பின்னாலை
கொலரா, நெருப்புக் காய்ச்சல் என்ற தொற்று நோய்களும் உண்டாகிப் பலர் இறந்து போனார்கள். இந்த இராக்கிற்கும், சவுதி அரேபியாவுக்கும் ஏற்பட்ட போரிலை ஏறக்குறைய 500க்கும்
அதிகமான எண்ணெய்க் கிணறுகள் 6 மாதங்களாக எரிந்து ஏராளமான தீங்குகளை விளைவித்தன. இதனால் அண்டை நாடுகளுக்கெல்லாம் பயங்கரமான தீய விளைவுகள் ஏற்பட்டன.
கந் : தம்பி, அதனாலைதான் வெப்ப நிலை பூமியிலை கூடிச்சுதோ என்று நான் நினைக்கிறன்.
பேரா : அதுவும் ஒரு காரணமாய் இருக்கலாம். சீனாவின் கிழக்குப் பகுதியிலை ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக்கு இந்த எண்ணெய்க் கிணறுகள் எரிந்ததாலை ஏற்பட்ட விளைவுதான் காரணம் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். மேலும் இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் பெய்த கறுப்புப் பனிக்கும் இது காரணமாய் இருக்கலாம்.

13
பரி : கஷ்மீரிலை கறுப்பு பனி பெய்ததோ? நல்ல வேடிக்கையாய்தான் இருக்குது.
கந் : எல்லாம் இப்ப கொஞ்ச நாளாய்த் தலைகீழாகத்தானே இருக்குது. இந்த அமில மழையைப் பற்றிச் சொல்லும் கேட்பம்.
பேரா : அமில மழையென்றால் நீரிலை அமிலத்தன்மை கூடுறது. இதனாலை காய்கறிகள், பழங்கள், மர இலைகள் எல்லாம் பாதிக்கப்பட்டு அழிந்து போகும். கால நிலையிலும் பல வியத்தகு மாற்றங்கள் ஏற்படும். 1992இலை, 32 பாகை வெப்பமாக இருந்தபின் ஒரு நாள் திடீரென்று பனிகொட்டி பெரும் வீதிகளெல்லாவற்றையும் மூடிவிட்டது. பரிசிலை பல வருடங்களுக்குப் பின்னர் பலத்த மழை பெய்து பல தீங்குகளை விளைவித்தது. மத்திய கிழக்கு நாடுகளிலை மிகவும் கடுங்குளிராய் இருந்தது. அமான், டமாஸ்கஸ், ஜெரூசலம், ஆகிய இடங்களிலை பனிப்புயல் அடித்து பல சேதங்களை ஏற்படுத்தியது. அமெரிக்காவிலை டிசம்பர் 1991 முதல் மார்ச் 92 வரைக்கும் வெப்பமான பனிக்காலம் என்றும் 97 வருடங்களுக்குப் பின்னர் இது ஏற்பட்டீருக்கிறது என்றும் வானிலை ஆராய்ச்சியாளர் கூறினர். தெற்குக் கலிபோனியாவில் பலத்த மழை பெய்து வீடுகள், கார்கள் எல்லாவற்றையும் அடித்துச் சென்றது.
கந் : இந்த அழிவுகளுக்கெல்லாம் அந்த எண்ணெய் கிணறுகள் எரிந்ததுதான் காரணமோ தம்பி.
பேரா : ஒம. அது ஒரு முக்கியமான காரணமாய் இருக்கலாம். அதோடு நாங்கள் போனமுறை கதைச்சமே ஒசோன் படையின் மொத்தம் குறையுதென்று. அதுவுமொரு காரணமாய் இருக்கலாம்.
பரி : அப்ப உலகமுழுவதுமுள்ள கால நிலைகள் இவற்றாலை மாறுதலடைகின்றன என்று சொல்லுறியள்.
பேரா : ஒம். இதாலை பல நாடுகளிலை அழிவுகள் ஏற்பட்டிருக்கின்றன. இனியும் ஏற்படலாம் - 1992இலை அன்ட்று என்ற குறவளியாலை 20 பில்லியன் டொலர் பெறுமதியான உடமைகள் நாசமாக்கப்பட்டன. பிரான்சிலை ரென்னிஸ் பந்தளவு

Page 73
132
பனிக்கட்டி மழைபெய்தது. 40 வருடங்களுக்குப் பிறகு புதுடெல்லியிலை ஆகக்கூடிய வெப்பநிலை ஏற்பட்டது.
பரி : ஏன், சென்ற வாரம் இந்த ஜோர்ஜ் என்ற சூறவளியாலை டொமினிக்கன், கியூபா, புளொரிடா, நியூ ஒளின்ஸ் போன்ற இடங்களிலை மழையும் பெய்து பலர் இறந்தும் போனார்கள் என்று பேப்பரிலை போட்டிருந்ததே.
கந் : ஏன் பிள்ளை இப்ப பல மாதங்களாக எங்கை பாத்தாலும் அழிவாய்தானே கிடக்குது. ஏன், எங்கடை நாட்டிலையும் ஆயிரக் கணக்கிலை ஆமிக்காரர் செத்துப்போச்சினை என்று கேள்வி.
பரி : ஒம் ஓம், நீங்கள் சொல்லுறது சரிதான்
பேரா : 1993இலை காட்டுத்தீயால் லொஸ் ஏஞ்சல்சைச் சுற்றிய பகுதிகளிலை பல்லாயிரம் ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டதோடு பில்லியன்கள் பெறுமதியான உடைமைகளும் அழிக்கப்பட்டன. அமெரிக்காவின் கிழக்குப் பகுதிகளில் கடுங்குளிர் 250 ஆண்டுகளாக இருந்த குளிர் நிலைக்குக் கீழே இறங்கிச் சாதனை படைத்தது. வெப்பநிலை 32பாகை செல்சியசாக இருந்தது. மேலும் பூமி நடுக்கங்கள் பல இடங்களில் ஏற்பட்டன. ஜூலை மாதத்தில் ஜப்பானில் ஏற்பட்ட நடுக்கம் 7, 8 ஆக மிகவும் கூடுதலானதாய் 250 பேரைப் பலியெடுத்துப் பல மில்லியன் டொலர்கள் சேதத்தையும் விளைவித்தது.
கந் : தம்பி, கலியுகத்தின் கடைசிப் பத்து ஆண்டுகளிலையும் பல அழிவுகள் ஏற்பட்டிருக்குது என்பதைப் பார்க்கும் பொழுது ஒரு வேளை கடைசி வருடம் அழிவு கூடுதலாகத்தான் இருக்கும்போலை கிடக்குது.
பேரா : இதுவரைக்கும் 3 ஆண்டுகளைப் பற்றித்தானே பார்த்திருக்கிறம். அடுத்தடுத்த வருஷங்கள் என்ன நடந்தது
என்றதைப் பார்த்திட்டுக் கதைப்பம்.
பரி : சரி சரி நீங்கள் சொல்லுங்கோ கேட்பம்.

133
பேரா : 1994ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவிலை பெரிய காட்டுத்தீயோடு ஆரம்பித்தது. இதனால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காடுகள் அழிந்து போயின. அமெரிக்காவிலும் 84,000 ஹெக்ரர் காடுகள் அழிந்து போயின. புதுடில்லியில் வெப்பம் 46 செலசியஸ் ஆக இருந்தது. இந்தமாதிரியான நிலைமை 60 வருஷத்துக்கு முன் இருந்ததாக வானிலை ஆராய்ச்சியாளர் கூறினார்கள். ஜப்பானிலும் அதிக வெப்பம் ஏற்பட்டது. இதனால் அவர்கள் கொரியாவிலிருந்து தண்ணீர் இறக்குமதி செய்தனர்.
கந் : தண்ணிருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டதே?
பேரா : ஒம். வெப்ப அதிகரிப்பினால் நீர் நிலைகள் வற்றிப்போனால் ஒன்றும் செய்ய முடியாது. இறக்குமதி செய்யிறதுதான் ஒரே ஒரு வழி.
கந் : சுண்டங்காய் காப்பணம் சுமைகூலி முக்காப்பணம் என்ற நிலமைதான்.
பரி : ஏன், இப்ப தண்ணி போத்திலிலை அடைத்து வெளிநாடுகளுக் கெல்லாம் போகுது தானே.
பேரா : கனடாவிலை உள்ள தண்ணிக்கும் பெரும் கிராக்கி ஏற்பபட்டிருக்குது தெரியுமே. அது இப்ப ஒரு பெரிய வியாபாரம் - எத்தனையோ கம்பனிகள் தண்ணி வெளிநாடுகளுக்கு அனுப்பிகினம்.
கந் : இதெல்லாம் நாங்கள் கேள்விப்படாத விஷயங்கள் - கலியுகத்திலைதான் பாக்கிறம்.
பேரா : தண்ணியில்லாமல் சில நாடுககள் கஷ்டப்பட, இந்தியாவிலும், சீனாவிலும் தண்ணியாலை பல அழிவுகள் ஏற்பட்டது. நாக்பூர் நகரத்திலை 24 மணித்தியாலங்களிலை 304 மி. மீ மழை பெய்து ஒரே வெள்ளம் ஏற்பட்டது. சீனாவிலும், தைவானிலும் புயல் காற்றும் மழையும் அடிச்சு ஆயிரக்கணக்கிலை ஆட்கள் இறந்ததோடு பல பில்லியன் டொலர் சேதங்களும் ஏற்பட்டன. இதோடு பல இடங்களிலை பூமி நடுக்கமும் ஏற்பட்டது. இத்தோடு விமானங்கள் விழுந்ததாலை 1385 பேர் இறந்துபோனார்கள்.

Page 74
கந் : இவ்வளவும். தானோ, இன்னுங் கிடக்குதோ?
பேரா : அவசரப்படாதேங்கோ - 1995ஆம் ஆண்டைப்பற்றி பாப்பம். 17ஆம் திகதி ஜனவரி மாதம் ஜப்பானிலுள்ள கோபே நகரத்திலை ஏற்பட்ட பூமி நடுக்கத்தால் 520 பேர் இறந்து போனார்கள், உடைமையஞக்கான சேதம் 100பில்லியன் என்று மதிப்பிட்டார்கள். இதிலை ஒரு வேடிக்கை என்னவென்றால் கலாநிதி செல்கான் என்றவர் 1991இலை இப்படி ஒரு பூமி நடுக்கம் ஏற்படுமென்று சொல்லி ஒரு அறிக்கை தயாரிச்சு யப்பானிய மொழியில் மொழிபெயர்த்து அங்கு அனுப்பினார். ஆனால் அதைப்பற்றி ஒருவரும் அக்கறை எடுக்கவில்லை.
கந் : அது தம்பி வழக்கமாக நடக்கிற விஷயம்தானே - இவர் ஆர் எங்களுக்குச் சொல்ல என்று தானே எல்லாரும் நினைக்கிறது.
பரி : சரியாச் சொன்னியள், இது எல்லாரிடமும் காணப்படுகிற ஒரு வியாதி.
பேரா : கஷ்மீரிலை பனிமலை உருகி 250பேர் இறந்து போனார்கள். இத்தாலியில் ஒருபோதும் இல்லாதமாதிரி பனி அதிகமாய் பெய்தது வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. பிரான்ஸ், பெல்ஜியம், நோர்மண்டி, பிரித்தானியா, ஹொலன்ட், ஆகிய நாடுகளில் பெருமளவு சேதம் ஏற்பட்டது. ஏப்ரில்/மே மாதங்களில் 1995 மில்லியன் சாடின் மீன்கள் தென் அவுஸ்திரேலியாவின் 10 ஆயிரம் கிலோ மீற்றர் கடற்கரை ஓரங்களில் இறந்து கிடந்தன. இதற்கான காரணத்தை எவராலும் கூறமுடியாது போய்விட்டது.
கந் : மீன் இவ்வளவு ஏராளமாக செத்துக் கிடந்ததென்றால், கடலுக்கடியில் ஏதோ நடந்திருக்கலாம்.
பேரா : அதுக்கு இன்னும் காரணம் கண்டு பிடிக்கப்படவில்லை. 1996இல் பூமியின் சூடேற்றம் காரணமாக பல நாடுகளளில் காலநிலை மாற்றங்கள் ஏற்பட்டன. நியூயோர்க் நகரத்தில் பனிமழை பெய்து பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. யப்பானில் கூடிய பனி பெய்தது. ஆர்ஜென்ரீனாவில் கூடிய வெப்பம், ஸ்கொட்லாரந்தில்

35
கூடிய குளிர், இத்தாலி, இந்தோனேசியா, தென்னாபிரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் வெள்ளப்பெருக்கு. அமெரிக்காவின் பல நகரங்களில் ஒருபோதும் ஏற்படாத அளவுக்கு குளிர் ஏற்பட்டது. இங்கிலாந்திலும் ஐரோப்பிய நாடுகளிலும் கடுங்குளிர் காணப்பட்டது
பரி : ஒம், எனக்கு ஞாபகம் இருக்குது பேப்பரிலை பார்த்தது.
பேரா : 1997ஆம் ஆண்டிலும் இதே நிலைதான். இங்கிலாந்தின் தேம்ஸ் நதி 1963ஆம் ஆண்டுக்குப்பின் முதன்முறையாக உறைந்து போனது. 14 சூறாவளிகள் ஆர்கன்சா மாகாணத்தை ஒரே நாளில் தாக்கின.
கந் : தம்பி, இது காணும் இன்றைக்கு. பிறகு பாப்பம் மற்றதுகளை. நான் வரப்போறன்.
பேரா : சரி, போட்டு வாருங்கோ.
அங்கம் : 20
பேரா : கந்தையா அண்ணை, இன்றைக்கு நாங்கள் கலியுகத்தின் கடைசிக்காலத்தில் நடந்த தெய்வீக விஷயங்களைப் பற்றிப் பேசப் போறம்.
கந் : அப்பனே முருகா, நீதான் துணை.
பரி : ஏன் இப்ப அவரைக்கூப்பிடுகிறியள?
கந் : எங்களைக் காக்கின்ற கடவுள் அவர்தானே.
பேரா : நாங்கள் இப்போது கலியுகம் முடிந்து கிருதயுகம் ஆரம்பிக்கப் போகின்ற காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

Page 75
36
ஒரு சக்கரத்தில் நான்கு யுகங்கள் "உள்ளன. அவையாவன கிருத, திரித, துவாரபர, கலி எனப்படும். விஷ்ணு தசாவதாரத்தில் கல்கி அவதாரம்தான் கடைசியாகக் கூறப்பட்டுள்ளது. கலியுகத்தின் கடைசிக் காலத்தில் இந்த அவதாரம் எடுப்பார் விஷ்ணு எனப் பழைய வேதங்களில் கூறப்பட்டுள்ளது. கல்கி அவதாரம் இந்தியாவில் வெண் குதிரையில் பிரயாணம் செய்தபடி விஷ்ணு வருவார் எனக் கூறப்பட்டுள்ளது. இதன்படி தற்போது நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கும் சாயிபாபாவே அந்த அவதாரம் எனக் கூறப்பட்டுள்ளது. அவரது வாகனம் (கார்) வெள்ளை நிறமானது.
கந் : என்ன தம்பி, நீர் குண்டைத் தூக்கிப் போடுகிறீர்?
பரி : நானும் இதைப்பற்றிக் கேள்விப்பட்டனான். பாபாவே இதைப்பற்றி பல முறை கூறியிருக்கிறார்.
பேரா : அண்ணை அவசரப்படாதேங்கோ - இதைப்பற்றிப் போதிய ஆதாரங்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றாகப் பார்ப்பம்.
கந் : கடவுளே, சொல்லுங்கோ கேட்பம். நான் இதுவரைக்கும் விஷயம் விளங்காமல் இருந்திட்டன் - சொல்லுங்கோ -
பேரா : நீங்கள் மட்டுமில்லை, பலபேர் அப்படித்தான். நானும் அப்படித்தான். முதலிலை பாபாவின் பூர்வீகத்தைப் பற்றிப் பார்ப்பம்
பரி சரி சொல்லுங்கோ -
பேரா : இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் சீறடியில் என்ற இடத்தில் வாழ்ந்த சீறடி சாயிபாபாவின் அவதாரம்தான் சத்ய சாயிபாபா, எனக் கூறப்படுகிறது. அவர் இறந்த எட்டு ஆண்டுகளின் பின் சாயிபாபா நவம்பர் 23ஆம் திகதி 1926 ஆண்டில் ஆந்திரப் பிரதேசத்திலுள்ள புட்டப்பர்த்தி என்ற ஊரில் பிறந்தார். இவர் பிறந்த அன்று உலகப் புகழ்பெற்ற சிறீ அரவிந்தர், கடவுள் பூமியில் அவதரித்து விட்டார் எனக்கூறி பாண்டிச்சேரியிலிருந்த ஆச்சிரமத்தில் அத்தனை வேலைகளையும் நிறுத்திவிட்டு தியானத்தில் ஆழ்ந்தார்.
கந் : இது ஒரு அதிசயப் பிறப்புத்தான்

பேரா : சாயிபாபா 96 வருடங்களுக்கு வாழ்ந்து 2022ஆம் ஆண்டில் மறைந்துபோக, 8 வருடங்களின்பின் பிரேம சாயிபாபாவாக பங்களுரிலிருந்து 100 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள மத்திய மாகாணத்தில் பிறப்பார் எனக் கூறப்பட்டுள்ளது. பரி : இதை சாயிபாபாவே கூறியிருக்கிறார்
பேரா : ஒம். அது மாத்திரமல்ல, அவரின் தோற்றம் எவ்வாறிருக்கும் என்ற படத்தையும் காட்டியிருக்கிறார். அப்படம் நூல்களிலெல்லாம் வெளி வந்திருக்கிறது. கடவுள் இவ்வாறு அவதாரம் எடுப்பது உலகில் அநீதி ஓங்கி தர்மம் குறைந்து போய், மக்களுக்குப் பேராபத்து ஏற்படும் வேளையில், அவர்களில் நல்லவர்களைக் காப்பதற்காக என்று கூறப்படுகிறது. இதைத்தான் கண்ணபிரான் கீதையில் “எப்போது தர்மம் குறைந்து அதர்மம் தலை தூக்குகிறதோ அப்போது தர்மந் தலைகாக்க நான் அவதரிப்பேன்’ என்று கூறியுள்ளார்.
பரி : இது பகவத் கீதையில் அர்ச்சுனனுக்கு உபதேசம் செய்வது போல் அமைந்திருக்கிறது.
பேரா : இவ்வாறான கடவுள் அவதாரங்களைப் பழிப்பவர்களும் இருக்கிறார்கள். இவர்களைப் பற்றி மகாகவி காளிதாசர் “உயர் ஆத்மாக்களைப்பற்றி அறியாமையினால் பழி கூறுபவர்கள் இருக்கிறார்கள். இதன் தத்துவத்தை அவர்களால் விளங்கிக் கொள்ள
முடியாது’ என்கிறார்.
கந் : ஏன் தம்பி, இப்ப சாயி பாபாவைப் பற்றியும் குறை சொல்லுகிற சனம் நிறைய இருக்குதுதானே.
பேரா : ஒம் இதைப்பற்றி பாபாவே கூறியிருக்கிறார். இவ்வாறான பழிச்சொற்களை எதிர்த்து வெற்றி பெறுவதனால்தான் தெய்வீகத் தன்மையின் தார்ப்பரியம் விளங்கும். எந்த ஒரு பெரிய மனிதனும் பழிச் சொல்லுக்கு ஆளாகாமல் இருக்கவில்லை. இவ்வாறான அவதூறுகளை வெற்றி கொள்வதன் மூலம்தான் அவன் பெருமை அடைகிறான். ".

Page 76
138
பரி : மிகவும் பொருத்தமாகச் சொல்லியிருக்கிறார். இதை விளங்காமல் எங்களுடைய மக்கள் பலர் அவதூறு சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
கந் : யேசு பிரானையும் சிலுவையிலை அறைந்தவர்கள்தானே அவரது மகிமையை உணராமல்.
பேரா : சரியாய்ச் சொன்னியள். இந்த மகான்களை சாதாரண மக்களால் விளங்கிக் கொள்வது கஷ்டம். தனது அவதாரத்தின் நோக்கத்தைப் பற்றி பாபாவே கூறியிருக்கிறார்.
கந் : என்ன சொன்னவர் தம்பி? அதைச் சொல்லுங்கோ.
பேரா : எனது அவதாரம் இராமர் அல்லது கிருஷ்ணருடைய அவதாரத்தைப் போன்று துஷ்டர்களை அழிப்பதற்காக அல்ல. தற்போதைய உலகில் நல்லவர்கள் அரிதாகி விட்டார்கள். எனவே கெட்டவர்களை நல்வழிப்படுத்தி உண்மை, நேர்மை, சாந்தம் அன்பு ஆகிய வழிகளில் அவர்களைத் திசை திருப்புவதே எனது நோக்கம். இதற்காக அவர்களுக்கு புத்திமதி கூறி, அறிவுரைகள் வழங்கி உய்விக்கவே அவதரித்துள்ளேன் என்கிறார்.
பரி : உண்மை, முற்றிலும் உண்மை. அவர் கூறியிருக்கிற் உபதேசங்கள் எல்லாம் புத்தகங்களாக வெளிவந்திருக்குது. நீங்கள் எல்லாம் வாங்கி வாசிக்கவேண்டும்.
கந் : தமிழிலையும் இருக்குதோ பிள்ளை?
பரி : ஒம். தமிழிலும் புத்தகங்கள் மொழி பெயர்க்கப்பட்டிருக்குது. நீங்கள் இதையெல்லாம் எடுத்து வாசிக்க வேணும்.
கந் : நான் பிள்ளை இவ்வளவு நாளும் இதைப்பற்றி அவ்வளவு அக்கறை எடுக்கவில்லை. இனிப் பாப்பம்.
பேரா : பாபா ஓரிடத்தில் சொல்லியிருக்கிறார், நான் மக்களுக்கு பரிசுகள் கொடுப்பது அவர்களைக் கடவுளைப் பற்றிச் சிந்திக்க

13
வைப்பதற்காகவே. இதைப் பலரும் பலவாறு கூறுகிறார்கள். உலக ஆசாபாசங்களால் ஆட்கொள்ளப்பட்டு அநியாயத்திலும் அதர்மத்திலும் உழலுகின்ற மக்களை நல்வழிப்படுத்துவதே எனது அவதாரத்தின் குறிக்கோள். இதனை உணர்ந்து என்னை பின்பற்ற நாளெடுக்கலாம் என்று கூறியிருக்கிறார். பரி : உலகத்திலை எத்தனையோ இடங்களிலை பாபா சங்கங்கள் ஆரம்பிக்கப்பட்டு மக்கள் பஜனைகளிலும் வழிபாட்டிலும் ஈடுபடு கிறார்கள். யப்பான், நைஜீரியா, சம்பியா போன்ற தூர நாடுகளிலிருந் தெல்லாம் மக்கள் புட்டப்பர்த்தியை நோக்கிப் படை எடுத்த வண்ணம் இருக்கிறார்கள். இப்போதுதான் அவரது மகிமையை எல்லோரும் உணர்கிறார்கள்.
கந் : பிள்ளை, நீர் இதிலை நல்ல ஈடுபாடுபோலை.
பரி : ஒம் பாருங்கோ, இப்ப எத்தனையோ வருடங்களாக நான் இதில் ஈடுபட்டிருக்கிறன். என்னைப்பற்றி நான் அதிகம் கூற விரும்பவில்லை
பேரா : இன்னொரு விஷயத்தை நீங்கள் இங்கு கவனிக்க வேணும். முன்னைய அவதாரங்களிலெல்லாம் அவர்கள் மனிதனாக வாழ்ந்த போது அவர்களுக்கு உலகளாவிய பெயர் புகழ் மக்களிடையே ஏற்படவில்லை. அதாவது இராமன் அவதாரம் அல்லது கிருஷ்ண அவதாரத்தின்போது வேற்று நாட்டவர் இவர்களைப்பற்றி அக்கறை கொள்ளவில்லை. ஆனால் பாபாவைப் பொறுத்த மட்டில் உலகளாவிய பெயரும் புகழும் கூடுதலாக இருப்பதை நீங்கள் அவதானிக்கலாம். ஆங்கிலத்தில் நூல்கள் ஏராளமாக எழுதப்பட்டுள்ளன. ஆங்கிலேயர், அமெரிக்கர், யப்பானியர், அவுஸ்திரேலியர் எனப் பலர் தமது அனுபவங்களை நூல்களாக எழுதியிருக்கிறார்கள்.
கந் : தம்பி. அப்படியென்றால் நானும் இதைப்பற்றி வாசிக்கத்தான் வேணும்.
பரி : தொரன்ரோவிலை கனடியர்களே ஒரு பெரிய நூல் நிலையத்தை வைத்து நடத்துகிறார்கள். அங்கு போனால் நீங்கள் பாபவைப்பற்றி நிறைய நூல்களை இரவலாக வாங்கி வாசிக்கலாம்.

Page 77
140
பேரா : இன்னுமொரு முக்கியமான விஷயத்தை நீங்கள் கவனிக்கவேணும். யேசு கிறிஸ்துநாதர் மீண்டும் பிறக்கப்போகிறார் என பாபா கூறியிருக்கிறார். இதுபற்றி ஜோன் துறவிகள் எழுதிய புதிய ஏற்பாட்டிலும் எழுதப்பட்டிருக்கிறது. இன்னுமொரு அதிசயமான விஷயம், பாபா 1992ஆம் ஆண்டு நத்தார் தினத்தன்று தனது பிறப்பைபற்றி யேசு நாதர் கூறியிருப்பது பைபிளில் இருக்கிறது - "என்னை அனுப்பியவர் மீண்டும் பிறப்பார்" - யேசுவின் உண்மையான வார்த்தைகள். இவரது பெயர் உண்மை இவர் செந்நிற அங்கி அணிந்திருப்பார், இவர் குள்ளமாகவும் முடிபோன்ற தலைமயிரைக் கொண்டவராயும் இருப்பார் என்றும் இந்த வாசகம் பைபிளிலிருந்து எடுக்கப்பட்டுவிட்டது, என்றும் பாபா அன்று கூறினார்.
கந் : கேட்க வியப்பாய்த்தான் இருக்குது.
பேரா : புதிய ஏற்பாடு 19இல் கடவுளின் மறு அவதாரம் வெண்குதிரையில் ஏறி வருவதைப் பற்றிக் கூறுகிறது. பலவாயிரம் வருடங்களுக்கு முன் இந்து வேதங்களில் கூறப்பட்ட கல்கி அவதாரத்தைப் பற்றித்தான் இது கூறுகிறது. எமது வேதங்களின்படி சத்யம் குதிரை மீது வருவார் - அவர்தான் உண்மையின் உருவம் சத்யசாயி. அவரது கண்கள் தீபோஸ் ஜூவாலிக்கும். அவரது தலையில் கிரீடம் போன்றுள்ளது. அவரது பெயர் கடவுளின் பெயராக இருக்கும். அதுதான் பகவான்.
பரி : பகவான் சத்யசாயி பிறப்பார் என்பதைப் பற்றி பல ஆயிரம் வருஷங்களுக்கு முன்னரே எங்கள் வேதங்களில் கூறப்பட்டுள்ளதோ?
பேரா : ஒம். அதுபற்றி 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நொஸ்றடமஸ் என்பவரும் கூறியிருக்கிறார். அவர் கூறியதாவது தெய்வீகத் தன்மை வாய்ந்த ஒருவர் ஆசியாவில் அவதரிப்பார். அவர் மூன்று பக்கங்களும் கடலால் சூழப்பட்ட ஒரு நாட்டில் பிறப்பார். இவர் வியாழக்கிழமையை தனது புனித நாளாகக் கொள்வார். உலகம் முழுதிலுமள்ள ம்க்கள் இவரை வணங்க வருவார்கள்.
பரி : இப்ப புட்டப்பர்த்தியில் அதுதானே நடக்குது.

4.
பேரா : எமது பழைய வேதங்களான விஷ்ணு புராணம், சுக்கிர நாதி, ஜெய்மினி மகாபாரதம், பிருகு சம்ஹித ஆயவற்றில் பாபாவின் பிறப்புப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. இவையெல்லாம் 5 ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்டவை எனக்கருதப்படுகிறது. இன்னொரு முக்கிய விஷயத்தை நீங்கள் கவனிக்கவேணும். "மெஹெதி மோட்” என்ற அராபிக் புத்தகத்திலும் இது பற்றிக் கூறப்பட்டுடுள்ளது.
கந் : அரபிக் புத்தகமோ தம்பி? அதிலை என்ன சொல்லி இருக்குது.
பேரா : “இரு உலகங்கள்" என்ற ஒரு ஆங்கிலப் பத்திரிகையில் வந்த ஒரு கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது: ஒரு இரானிய எழுத்தாளர் ரெஹ்ரானிலுள்ள ஒரு புத்தகசாலையில் "வெளிச்சத்தின் சமுத்திரம்" Ocean of lights என்று பெயரிடப்பட்ட 25 பகுதிகளைக் கொண்ட முகம்மது நபியின் பிரசங்கங்கள் அடங்கிய நூலைக் கண்டார். இதில் 13ஆவது பகுதியில் 'உலக ஆசிரியரைப் பற்றி முகம்து கூறியிருப்பதாக பெகி மேசன் என்றவர் எழுதியிருப்பதை வாசித்த அவர், அந்த விவரங்கள் அத்தனையும் பாபாவை அப்படியே வர்ணிப்பது போன்று அமைந்திருப்பதாக எழுதியுள்ளார்.
பரி : பெகி மேசன், இரானிய எழுத்தாளரின் கண்டுபிடிப்பைப் பற்றி ஆங்கிலத்தில் அந்தக் கட்டுரையில் எழுதியிருக்கிறார் என்று சொல்லுங்கோவன்.
பேரா : ஒம. அதில் எழுதப்பட்டிருப்பதாவது: தலைமயிர் நன்கு வளர்ந்து முடி போலிருக்கும், சிறிய மூக்கின்மேல் ஒரு புட்டி காணப்படும். முன் வாய்ப் பற்களுக்கிடையில் இடை வெளி காணப்படும். சொக்கில் ஒரு மச்சமிருக்கும். அவர் நன்கு சவரம் செய்தவராகக் காணப்படுவார். அவரது மேலங்கி நெருப்பின் நிறம் போன்றிருக்கும். அவரது முகம் சிலவேளை செம்பு நிறமாகவும் சில வேளை பொன் போன்று - மஞ்சளாகவும், சில வேளை இருளடைந்தும், சிலவேளை சந்திரன் போன்று பிரகாசமானதாகவும் இருக்கும். உடல் சிறுத்தும் வயிறு பெருத்தும் இருக்கும். கால்கள் ஒரு சிறுமியினது போன்றிருக்கும். உலக சமயங்களின்

Page 78
42.
போதனைகள் அத்தனையும் அவருக்குப் பிறப்பிலேயே தெரிந்திருக்கும். உலக அறிவும் விஞ்ஞானமும் அவருக்குப் பிறப்பிலேயே இருக்கும்.
கந் : அப்படி தம்பி - இது உண்மையிலேயே நம்ப முடியாமல் இருக்குது.
பேரா : பொறுங்கோ இன்னும் இருக்குது. நீங்கள் கேட்பதை அவர் தருவார். அவர் உங்களுக்கு எடை குறைவான பொருட்களைப் பரிசாகத் தருவார். இவரது அடியார்கள் ஒரு பெரிய மரத்தின் கீழ் ஒன்று கூடுவார்கள் (அரச மரம்). பெரும்பாலானவர்கள் நெற்றியில் பொட்டு வைத்திருப்பார்கள். இவர் அடியார்களுக்கிடையில் சென்று அவர்களின் தலையில் தொடுவார். இவரைத் தரிசிப்பவர்கள் ஆனந்தத்தில் மிதப்பர். இவர் 95 வருடங்களுக்கு வாழ்வார். இவரது கடைசி 20 வருடங்களில், இவரை உலகத்திலுள்ள 75% சதவீதமானவர் நம்புவர். இவரைப் பற்றி முஸ்லிம்கள் கடைசி 9 ஆண்டுகளுக்கே நன்கு நம்பிக்கை வைப்பார்கள். இவர் ஒரு மலைமேல் வாசம் செய்வார். இவரது வீடு சதுரமாக இருக்கும். இவர் உலகம் முழுவதற்கும் ஒரு இராசா போன்றிருப்பார்.
கந் : இவ்வளவும் முகம்மது நபி கூறியிருக்கிறாரோ?
பேரா : அப்படித்தான் அந்தக் கட்டுரையில் எழுதப்பட்டிருக்கிறது. மேலும் இனிவரும் பேராபத்துக்களிலிருந்து தனது அடியார்களைத் தான் காப்பாற்றுவாரென்றும் இவற்றைப்பற்றி அதிகம் கவலைப்படத் தேவையில்லை என்றும் பாபா கூறியிருக்கிறார். அணு ஆயுத யுத்தம் ஏற்படாமல் தன்னால் காக்கமுடியுமென்றும், எனினும் பல அனர்த்தங்கள் நிகழப்போகின்றன எனவும் கூறியிருக்கிறார். இனிப் பிறக்கப் போகின்ற யுகம் திறமாக அமையும் என்றும் தனது அடுத்த அவதாரமாகிய பிரேம சாயி 2030 ஆண்டு நிகழும் என்றும் கூறியிருக்கிறார். அடுத்த அவதாரத்தின் நிழற்படத்தையும் பலருக்குப் பார்க்கும்படி வெளியிட்டிருக்கிறார்.
கந் : இது ஒரு புதுமையான விஷயம்தான். கேட்க எனக்குப் புல்லரிக்கிறது.

143
பரி : இது போன்ற பல விஷயங்களைப் பாபா அடிக்கடி சொல்லி வருகிறார்.
பேரா : அடுத்தமுறை சந்திக்கும்போது இன்னும் பல விஷயங்களைப் பற்றிக் கதைப்பம்.
கந் : அப்ப நான் போட்டு வாறன். மிக்க நன்றி தம்பி
இருவரும் : ஒம் போட்டு வாருங்கோ.
அங்கம் : 21
கந் : தம்பி, பேரானந்தம் எப்படிச் சுகமாக இருக்கிறீரோ? இன்றைக்கு நான் தில்லையரையும் கூட்டிக் கொண்டு வந்திட்டன்.
பேரா : வாருங்கோ, வாருங்கோ தில்லை அண்ணைக்கு நாங்கள் போனமுறை கதைச்ச விஷயங்களையெல்லாம் சொன்னியளோ?
தில்லை : தம்பி, என்னைவிட்டுப்போட்டு சாயிபாபாவைப் பற்றிக் கதைச்சியளாம் - நல்ல விஷயம். நான் கந்தையாண்ணையிடம் சில விஷயங்களைக் கேட்டணான். இன்றைக்கு என்னத்தைப் பற்றிக் கதைக்கிற யோசனை?
பேரா : இன்றைக்கும் பாபாவைப் பற்றித்தான் கதைப்பம் என்று நினைக்கிறன்.
கந் : நல்லது தம்பி, அது நல்ல விஷயம்தானே! நாங்களும் அறியத்தானே வேணும்.
பேரா : பொறுங்கோ வாறன்.

Page 79
144
(பேரானந்தம் கோப்பியோடு வருகிறார்)
கந் : என்ன கோப்பியோ?
பேரா : அண்ணை, குளிர் துவங்கிவிட்டது. வாற சனம் சூடாகக் குடிக்கட்டுமென்று ஏற்கனவே பரிமளம் கோப்பி போட்டு வச்சவ, Coffee Maker இலை. நான் அதுதான் போய் கொண்டு வாறன்.
தில்லை : அப்படியல்லோ குறிப்பறிந்து நடக்க வேணும். எல்லோரும் இப்ப களைச்சு விழுந்து வீட்டை போனால் திரும்பிப் பார்க்க ஆளில்லாமல் போட்டுது.
கந் : தில்லை. இங்கை எல்லாம் அப்படித்தான். இனி என்ன நாங்கள் பட்டுப்போகிற மரங்கள்தானே! தண்ணி ஊற்றினால் என்ன, கோப்பி ஊற்றினால் என்ன, முளைக்கவா போறம்? அதுதான் ஒருத்தரும் கவனிக்கிற தில்லை.
பேரா : அப்படிச் சொல்லாதேங்கோ என்னதான் இருந்தாலும் பிள்ளைகள் பெற்றாரைக் கவனிக்காமலா விடப் போகுதுகள்?
தில்லை : அதெல்லாம் மலையேறிப் போச்சுது தம்பி, அதுகளை இப்ப கதைச்சு நாங்கள் ஏன் நேரத்தை வீணாக்குவான். தம்பி, நீங்கள் பயனுள்ள விஷயங்களைச் சொல்லுங்கோ, கேட்பம்.
பேரா : இன்றைக்கு நாங்கள் சாயிபாபாவின் சில அதிசயமான செயல்களைப் பற்றிப் பார்ப்பம்.
இருவரும் : ஒம் ஓம், சொல்லுங்கோ.
பேரா : பாபாவைப் பற்றிப் பலர் தங்களுடைய அனுபவங்களைப் புத்தகமாக எழுதியிருக்கிறார்கள். இவர்களுள் கலாநிதி ஜோன் ஹிஸ்லொப் என்பவர் எழுதிய சில அற்புதமான விஷயங்களைப் பற்றிப் பார்ப்போம். இவர் 1968இல் முதன்முதலாக பாபாவைச் சந்தித்ததிலிருந்து தனது அனுபவங்களைப் பற்றி விரிவாக எழுதியிருக்கிறார். இவர் ஒரு அமெரிக்கர். இவர் பொதுவாகத்

45
தெய்வீக விடயங்களில் அதிக நாட்டமுள்ளவர். தியானம், ஆன்மீகம் ஆயவற்றைப் பற்றி அறிவதற்கு இந்தியா, கம்போடியா, வியட்னாம், பர்மா போன்ற தென்கிழக்காசிய நாடுகளுக்கும் பல விஜயங்களை மேற்கொண்டிருக்கிறார்.
கந் : இவர் ஒரு சாமியாரோ தம்பி?
பேரா : இல்லை இவர் ஒரு சாதாரண மனிதன். ஒரு பெரிய கம்பனியின் நிர்வாகஸ்தராக கலிபோனியாவில் வேலை பார்த்தவர். பின்னர் மஹரிஷி மகேஸ் யோகியின் ஆழ்நிலை தியானத்தில் அதிக ஈடுபாடு கொண்டு இந்தியாவின் ஆன்மீகத்துறைக்கு இழுத்து
வரப்பட்டார்.
தில்லை : நாங்கள் இந்துக்களாக இருந்தாலும் எங்கடை தியான வழிபாட்டை. பற்றியோ ஆன்மீக ஈடேற்றம் பற்றியோ அதிகம் அக்கறை காட்டுவதில்லை. வெளி நாட்டவர்கள் எவ்வளவு ஆர்வத்தோடு இவைகளில் ஈடுபடுகிறார்கள் என்பதைப் பார்க்க ஆச்சரிமாய்த்தான் இருக்குது.
பேரா : இவரைப் போலத்தான் இப்போது ஹவாயில் இருக்கிற சுப்பிரமுனிய சுவாமியும் ஒரு அமெரிக்கர்தானே.
தில்லை : ஒம்.
பேரா ; ஹிஸ் லொப் பல அனுபவங்களைப் பற்றி எழுதியிருக்கிறார். அதிலை சில முக்கியமானதுகளைப் பற்றிப் பார்ப்பம். 1973ஆம் ஆண்டு மஹா சிவராத்திரிக்கு முதல் நாள், மைசூரிலுள்ள பக்திப்பூர் என்ற வன விலங்கு பாதுகாப்புக் காட்டுக்குச் சிலரையும் அழைத்துக்கொண்டு பாபா போனாராம். காட்டுக்கூடாகப் போகும் வழியில் ஒரு பாலத்தைக் கடந்து போகும் பொழுது தண்ணீர் இல்லாத ஆற்றுப் படுக்கையைக் காட்டி, இன்று மாலை எல்லோரும் இங்கே வருவோம் என்றாராம். அவ்வாறே எல்லோரும் மாலை அங்கு வந்து கார்களை விட்டிறங்கி ஆற்றங்கரையில் நடந்து செல்லும்போது அருகிலிருந்த ஒரு செடியிலிருந்த இரு குச்சிகளை முறித்துக் குறுக்கே கைமேல் வைத்துவிட்டு, ஹிஸ் லொப்பைப் பார்த்து இது என்ன என்று கேட்டாராம் பாபா. அவர்

Page 80
46
இது சிலுவை சுவாமி என்றாராம். பின்னர் பாபா மற்றக் கையால் அதை மூடி மூன்று தடவை ஊதிவிட்டு கையைத் திறந்து சிலுவையில் அறையப்பட்ட, யேசுநாதர் உருவத்தை ஹிஸ் லொப்பிடம் கொடுத்தாராம்.
தில்லை : பாபாவே தம்பி கொடுத்தவர்?
பேரா : ஒம். அதைக் கொடுத்துவிட்டுச் சொன்னாராம், யேசு இறந்தபோது அவரது உடல் எந்நிலையில் இருந்தது என்பதை இந்த உருவம் நன்கு காட்டுகிறது. அவரது உடல் சுருங்கியும் விலாவெலும்புகள் வெளியே தள்ளிக்கொண்டுமிருந்தன. ஏனென்றால் எட்டு நாட்களாக அவர் பட்டினி கிடந்தார். ஹிஸ் லொப் அந்த உருவத்தை உற்று நோக்கிக் கொண்டிருந்தபோது இந்தச் சிலுவை யேசு அறையப்பட்ட அதே சிலுவையின் மரத்திலிருந்து பெறப்பட்டது. 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்த சிலுவையிலிருந்து பெறுவதற்கு சில நிமிடங்கள் தாமதமாகிவிட்டது. இந்த உருவம் யேசு இறந்தபின் இருந்த நிலையைக் காட்டுகிறது என்றாராம் பாபா.
கந் : தம்பி, இது உண்மையாய் நடந்ததோ - என்னால் நம்ப முடியாமல் இருக்கிறது.
பேரா : கேளுங்கோ இன்னுமிருக்குது - ஹிஸ் லொப் சிலுவையின் நுனியில் ஒரு துவாரம் இருப்பதைப் பார்த்து விட்டு. இதென்ன சுவாமி இதிலை ஒரு துவாரம் இருக்குதே என்று பாபாவிடம் கேட்டராம். அவர் சொன்னாராம் இந்தச் சிலுவை ஓரிடத்தில் தூக்கப்பட்டிருந்தது. அதனால்தான் ஒட்டை இருக்கிறது என்றாராம். தான் அதை வாங்கிப் பாதுகாப்பாகத் தனது பைக்குள் போட்டுக் கொண்டாராம். பாபாவின் அற்புதங்களைப் பார்த்தவர்கள் பலர் எங்களிடையே இருக்கிறார்கள். இதிலை ஐமிச்சப் படுவதற்கு இடமேயில்லை என்றுதான் நான் நினைக்கிறேன்.
கந் : பிழையாக விளங்கப்படாது தம்பி, எனக்கு இன்னும் பாபாவைப் பற்றி அதிகம் தெரியாதபடியால்தான் கேட்டனான்.
பேரா : நான் உங்களைப் பிழை சொல்லவில்லை. அவரோடு கூடிய ஈடுபாடு இல்லாதவர்கள் அப்படித்தான் கேட்பார்கள் - ஆனால்

147
அவரைப் பற்றி அறிய வேண்டுமென்றால் கூடுதலாக அவரது சேவைகளில் ஈடுபடவேண்டும். நான் சம்பவத்தைப் பற்றி இன்னும் சொல்கிறேன் கேளுங்கோ. அதன்பிறகு எல்லோரும் சதுரவடிவில் அமர்ந்திருந்தோம். சுவாமியின் உடல் வேதனையால் துடிப்பது போன்று அசையத் தொடங்கியது. உடனே அங்கிருந்தோர் எல்லோரும் பஜனை பாடத் தொடங்கினோம். சிறிது நேரதத்தின் பின்னர் பாபாவின் வாயிலிலிருந்து ஒரு லிங்கம் வெளிவந்தது. அதை அவர் ஒரு கைக்குட்டையில் ஏந்தி எல்லோருக்கும் பார்க்கும்படி கொடுத்தார். யாவரும் பார்த்த பின் அதை ஒரு பக்கத்தில் வைத்துவிட்டு, மண்ண்ால் ஒரு சிறிய மேட்டை அமைத்து அதன்மேல் ஒரு விரலால் ஏதோ வரைந்தார். சிறிது நேரத்தில் அந்த மேட்டுக்குள் கையைவிட்டு ஒரு வெள்ளிக் கூஜாவை எடுத்தார். அது நிறைய அமிர்தம் இருந்தது. பின்னர் கையை அசைத்து ஒரு வெள்ளிக் கோப்பையை வரவழைத்தார். அக் கோப்பையில் எல்லோருக்கும் அமிர்தத்தை ஊற்றிக் கொடுத்தார். அதன் சுவையை வர்ணிக்க முடியாதென்றும் அதற்கு ஈடான சுவை எதுவுமில்லையென்றும் ஹிஸ் லொப் எழுதியுள்ளார். தனது வீட்டுக்கு. அதாவது நியூ மெக்சிக்கோவுக்கு எடுத்தக்கொண்டுபோய் நண்பர்களுக்கெல்லாம் காட்டினாராம். அது மிகவுஞ் சிறியதாய் இருந்ததால் யேசு கிறிஸ்துவின் உருவம் துலக்கமாகத் தெரியவில்லையாம். அவரது நண்பர் வோல்டர் என்பவர் அதனைப் படமெடுத்து பெருப்பித்துக் கொண்டுவந்தார்.
தில்லை : பொறுங்கோ - அந்தச் சம்பவம் நடந்நதபின் ஹிஸ் லொப் நியூ மெக்கசிக்கோவுக்குப் போன பிறகுதான் நண்பர் படமெடுத்துப் பெருப்பித்துக் கொண்டு வந்ததா?
பேரா : ஒம். அவர் கொண்டு வந்த கலர் படங்களைப் பார்த்ததும் எல்லோரும் ஆச்சரியப்பட்டனர். இம்மாதிரியான படம் ஒருவரிடமும் இல்லை. பாபா எங்களுக்காக விசேடமாக இந்த உருவத்தைத் தந்திருக்கிறார் என்று ஹிஸ் லொப்பும் மனைவியும் சந்தோஷப் பட்டனர். இதைக் கேள்விப்பட்டு அருகே இருந்த பலர் அதைப்பார்க்க வந்தனர். ஒரு யன்னலுக்குப் பக்கத்திலிருந்த மேசையில் LATILAT கொடுத்த உருவமும் படங்களும் வைக்கப்பட்டிருந்தன. அப்போது பின்னேரம் 5 மணி வானம் தெளிவாகவும் அமைதியாகவும் இருந்தது. திடீரென ஒரு இடி

Page 81
48
இடித்தது, கரிய மேகத்திலிருந்து மின்னல் மின்னியது. ஒரு பயங்கரக் காற்று யன்னலுக்கூடாக வீசி, திரைச் சேலை கதவுகள் எல்லாவற்றையும் அடித்துக் கொண்டு போயிற்று. எல்லோரும் பயந்து போனார்கள். உடனே ஹிஸ் லொப்பின் மனைவி இப்போது மணி 5 யேசு நாதர் சிலுவையில் இருந்ததும் இதே நேரந்தான். இது பைபிளில் சொல்லப்பட்டிருக்கிறது என்று சொல்லிவிட்டு பைபிளைக் கொண்டு வந்து அப்பகுதியைக் காட்டினார். அதில், அன்று நடந்தமாதிரி யேசு நாதர் இறந்த அன்றும் நடந்ததைப் பற்றி விபரிக்கப்பட்டிருந்தது. 2000 வருடங்களுக்கு முன் நடந்த ஒரு நிகழ்ச்சியை நாம் அன்று நேரிலே பார்த்தோம் என்று அவர் எழுதியிருக்கிறார்.
கந் : தம்பி, இதென்ன புதுமையிது? இதெல்லாம் தெய்வீகமல்லாமல் வேறென்ன?
பேரா ; மேலும் அவர் எழுதியிருக்கிறதையும் கேளுங்கோ. இந்த விஷயத்தைப்பற்றி விளக்கமாக இவர் தனது புட்டர்ப்பத்தியிலிருந்த நண்பர் கலாநிதி எறுக் பனிபண்டா என்பவருக்கு எழுதியிருக்கிறார். அதை அவர் பாபாவிடம் காட்டினபோது அவர் சொன்னாராம், அது உண்மை. பைபிளில் எழுதப்பட்டிருப்பது யேசு இறந்த அன்று நடந்த விஷயந்தான் என்றாராம்.
தில்லை : தம்பி, இதெல்லாம் நாங்கள் நினைச்சும் பார்க்க முடியாத விஷயங்கள். எல்லாம் அவன் செயல் என்று சும்மாவே சொல்லறது.
பேரா : இனியாவது கடவுள் நம்பிக்கை உங்களுக்கு வருகுதோ என்று பார்ப்பம்.
கந் : கடவுள் நம்பிக்கை இல்லை என்று ஆர் தம்பி சொன்னது? தெரியாத சில விஷயங்களை நாங்கள் விசாரிக்கத்தானே வேணும்.
பேரா : ஒம். அதுவும் சரிதான். எதையும் அனுபவித்தால்தான் அதன் உண்மை விளங்கும். மேலும் கேளுங்கோ: 1975ஆம் ஆண்டு ஹிஸ் லொப் சுவாமியை அமெரிக்காவுக்குக் கூட்டி வருவதற்காக இந்தியாவுக்குப் போனாராம். அன்றைக்கு அவர் வேறெங்கோ போய் விட்டாராம். அன்று மத்தியானம் அங்கிருந்து சாப்பிட்டுக்

149
கொண்டிருக்கும்போது சுவாமி சொன்னாராம் ஹிஸ் லொப் வந்து பங்களுரிலை எனக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார் என்று - அங்கிருந்த ஒருவர் சொன்னாராம் சுவாமி நீங்கள் அவருக்குச் சிலுவை ஒன்று கொடுத்தனீங்கள் என்று. அதற்கு பாபா' சொன்னாராம். நான் அந்த சிலுவையைத் தேடிக் கொண்டு போனபோது அதெல்லாம் உக்கிப் போச்சுது, பின்னர் விசேடமாக அதே மரத்தை உருவாக்கிச் சிறிய சிலுவையொன்று செய்து கொடுத்தேன். இதுமாத்திரமல்ல பல அற்புதங்கள் LATILAT செய்திருக்கிறார் - நீங்கள் புத்தகங்களிலை வாசிக்கலாம். நேரில் பார்த்தவர்களைக் கேட்கலாம்.
தில்லை : கந்தையா அண்ணை, நாங்கள் ஒருக்கால் பாபாவைப் போய் பார்த்துக்கொண்டு வருவமே?
கந் : என்ன தில்லை இருந்தாப்போலை இவ்வளவு பக்தி வந்திட்டுதோ உனக்கு?
தில்லை : இதுகளை நாங்கள் நேரிலை போய் பார்க்கிறது நல்லதுதானே.
கந் : ஒம். அதுவும் நல்ல யோசனைதான்.
பேரா : என்ன இரண்டு பேரும் அப்ப புட்டர்ப்பத்திக்குப் புறப்படப் போறியளோ?
கந் : ஓம். அதைப்பற்றி யோசிக்கிறம்.
பேரா : அதுவும் நல்ல யோசனைதான். இப்படியான அவதார புருஷர்கள் வாழுகின்ற காலத்திலை, நாங்கள் வாழ்வதற்குக் கொடுத்து வைத்திருக்கவேணும். இப்படியான ஒரு சந்தர்ப்பத்தைப் பயன் படுத்திக் கொள்ளுங்கோ. மற்றது இந்த இரண்டாயிரம் ஆண்டு ஆரம்பிக்கிற காலத்திலை நாங்கள் வாழ்வதற்கும் கொடுத்து வைத்திருக்க வேணும்.

Page 82
150
கந் : தம்பி, இந்த ஆண்டை வெகு சிறப்பாகக் கொண்டாட வேண்டுமென்று எத்தனையோ நாடுகளிலை இப்பவே திட்டங்கள் எல்லாம் தீட்டுகினம் என்று கேள்விப்பட்டன்.
பேரா : ஒமண்ணை. இங்கை தொரன்ரோவிலும் பல விசேடமான விழாக்கள் ஒழுங்கு செய்யப் போகினை என்று கேள்வி.
கந் : தம்பி, கேட்கிறன் என்று குறை நினைக்கப்படாது. இரண்டாயிரம் ஆண்டு உலக அழிவென்று சொன்னீர். பிறகு கொண்டாட்டம் என்று சொல்லுநீர் - அதுதான் ஒரே குழப்பமாய் இருக்குது.
பேரா : அண்ணை தொரன்ரோவிலை அழிவில்லையென்றெல்லே சொன்னனான்.
தில்லை : அப்ப நாங்கள் கொண்டாடத்தான் வேணும்.
அங்கம் : 22
(கதவை தட்டுஞ் சத்தம்)
பேரா : பொறுங்கோ வாறன் - ஓ - வாருங்கோ, வாருங்கோ. இன்றைக்கு என்ன இரண்டு பேரும் வெள்ளனவே வந்திட்டியள்?
கந் : இனிக் குளிர்காலமும் தொடங்கி விட்டுதெல்லே. நாங்கள் வெளிக்கிடுகிறதையும் குறைத்துக்கொள்ளத்தான் வேணும்.
பேரா : இருங்கோ, இருங்கோ.
தில்லை : கந்தையா அண்ணைக்கு குளிர் என்றால் பயம்தான். மனிசன் இனி வீட்டைவிட்டு வெளிக்கிடவே மாட்டுது.

151
பேரா : இதுக்கெல்லாம் பயந்தால் இந்த நாட்டிலை வாழ முடியாது. எங்கடை உடம்பைப் பாதுகாப்பாக மூடிக் கொண்டு போனால் குளிர் ஒன்றும் செய்யாது.
கந் : என்ன தம்பி, எப்படி மூடினாலும் பஸ்சுக்காக காவல் நிற்கும்போது காலெல்லாம் ஊசி குத்தினமாதிரிக் குத்துது. நீங்கள் காரிலை போய் திரிவியள் உங்களுக்கு விளங்காது இந்தக் குளிரைப் பற்றி.
தில்லை : கந்தையா அண்ணை சொல்லுறதிலையும் நியாயம் இருக்குதுதான் - பஸ் வழியே ஏறிப் போய் திரிஞ்சால்தான் எல்லாம் விளங்கும்.
பேரா : எல்லாத்துக்கும் மனந்தான் காரணம். குளிருது வெளியிலை போறது கஷ்டம் என்றால் குளிரத்தான் செய்யும். இதென்ன குளிர், இதுக்கெல்லாம் பயந்தால் ஒரு வேலையும் செய்ய முடியாது என்றால் குளிரும் தெரியாது.
தில்லை : தம்பி சொல்லறதிலையும் நியாயம் இருக்குது போலத்தான் தெரியுது. எல்லாம் எங்கடை மனதைப் பொறுத்ததுதான்.
கந் : தில்லை, நீ இந்த அரசியல்வாதிகள் மாதிரி அங்காலையும் பாடி இங்காலையும் பாடாதே.
பேரா : என்னண்ணை?
கந் : இல்லை தம்பி, இந்த நாட்டுக் குளிரைப் பற்றிச் சொல்லுறன். இனிமேல் நாங்கள் இங்கை அடிக்கடி வர ஏலாது என்று
தில்லைக்குச் சொன்னனான்.
பேரா : ஒம். பஸ்ஸிலை வாறது உங்களுக்குக் கஷ்டமாய்த்தான் இருக்குமென்று நினைக்கிறன்.
தில்லை : சர அதைப் பற்றிப் பிறகு யோசிப்பம். இன்றைக்கு என்ன விஷயத்தைப் பற்றிக் கதைக்கப் போறம் தம்பி.

Page 83
152.
கந் ; போன முறை பாபாவைப் பற்றிச் சொன்னியள். இன்னும் இரண்டொரு அற்புதங்களைப்பற்றிச் சொன்னால் நல்லது என்று நினைக்கிறன்.
பேரா : அப்படியென்றால் நல்லது. இதுவும் ஹிஸ் லொப் என்ற அமெரிக்கர் தனது அனுபவத்தைப் பற்றி எழுதியதுதான்.
தில்லை : சரி - சொல்லுங்கோ கேட்பம்.
பேரா : பாபா - பம்பாயில் தங்கியிருந்தபோது ஒரு நாள் நண்பகல் சாப்பாட்டுக்குப் பின் பாபா ஓர் சாய்வு நாற்காலியில் படுத்திருக்க, சில அடியவர்கள் அவர் முன்னால் தரையில் இருந்து கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தார்களாம். அவர்களின் கேள்விகளுக்கெல்லாம் பாபா பதில் கூறிக் கொண்டிருந்தார். அப்போது அவரது தலையைச் சுற்றி ஒரு பொன்னிறமான வளையம் ஒளி வீசிக்கொண்டிருப்பதை ஹிஸ் லொப் கண்டாராம். இந்த ஒளியின் விளிம்புகள் ஒழுங்கில்லாமல் காணப்பட்டதாம்.
கந் தம்பி பொறும், பாபாவின் தலையில் ஒரு ஒளி வட்டம், இருந்தது என்று சொல்லுநீர். அதென்ன பிறகு அது ஒழுங்கில்லாமல் இருக்குது என்று சொன்னீர். அதுதான்
விளங்கவில்லை.
பேரா : அண்ணை, நீங்கள் கிருஷ்ணருடைய படம் பார்த்திருக்கிறியளே?
கந் : ஒம். வீட்டிலையும் இருக்குது.
பேரா : தலையிலை ஒரு ஒளி வட்டம் சூரியன் மாதிரிக் கதிர்கள் விட்டபடி இருக்கிறதைப் பார்க்கவில்லையோ?
கந் : பார்த்திருக்கிறன்.
பேரா : அதே மாதிரியான ஒரு வட்டத்தைத்தான்; அவர் பார்த்திருக்கிறார்.

S3
கந் : குறை நினைக்கப்படாது தம்பி - நான் இந்தச் சாமிப்படங்களிலை பார்க்கிறதெல்லாம் அதைக் கீறுகின்ற ஓவியர்களுடைய கற்பனையாக்கும் என்றெல்லோ நினைச்சன்.
தில்லை : நானும் அப்படித்தான் இவ்வளவு நாளும் நினைச்சுக் கொண்டிருக்கிறன.
பேரா : இதெல்லாம் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒவ்வொரு காட்சி கொடுக்கும் போது அவர்கள் கூறியதையும் அவர்கள் பாடியதையும் அடிப்படையாக வைத்து வரையப்பட்ட ஓவியங்கள்தான். பொதுவாக எமது இந்து சமயத் தத்துவங்களின்படி இவை யெல்லாம் கடவுளின் வெவ்வேறு அவதார கோலங்கள்.
தில்லை : ஹிஸ் லொப் கண்டது பாபாவின், கிருஷ்ண அவதாரத்தைத்தான் என்று நான் நினைக்கிறன்.
பேரா : ஒம். பாபாவே வேறொரு தடவை காரில் போய்க் கொண்டிருந்தபோது தனது கிருஷ்ண அவதாரத்தை நீலநிற மேனியனாக, ஹிஸ் லொபுக்கு காட்டியிருக்கிறார். இதைப் பற்றியும் அவர் எழுதியிருக்கிறார்.
தில்லை : அதேன் சிலருக்கு மாத்திரம் அவ்வாறான காட்சிகள் தெரியுது- எல்லாருக்கும் தெரியிறநில்லை?
பேரா : இதே கேள்வியை ஹிஸ் லொப்போடு இருந்த இன்னொருவர் பாபாவைக் கேட்டாராம். அதற்கு அவர், இந்த ஒளி வளையம் எப்போதும் என்னோடு இருக்கிறது. அதை எவரும் எப்போதும் பார்க்கலாம ஆனால் அதற்குக் கூடிய அவதானமும் ஆர்வமும் வேண்டும் என்று கூறினாராம்.
தில்லை : அப்படியென்றால், அவரது பக்தர்களுக்குத்தான் தெரியும் என்று சொல்கிறீர்கள்.
பேரா : ஒம். உண்மையான பக்தர்களுக்குத்தான் தெரியும் எல்லாருக்கும் தெரியாது.

Page 84
154
கந் : தம்பி, நீர் சொல்லுறதைப் பார்த்தால், இந்த கிருஷ்ண அவதாரம், இராமர் அவதாரம் எல்லாம் முன்பு உண்மையாக நடந்த நிழ்ச்சிகள் போல அல்லவோ இருக்குது.
பேரா : உண்மையான நிகழ்ச்சிகள்தான். இந்தியாவிலை இராமர் வாழ்ந்த அயோத்தி, கிருஷ்ணர் வாழ்ந்த இடமான கோகுலம் எங்கிருந்தன என்பதற்கான சான்றுகள் இருக்கின்றன.
கந் : தம்பி, இந்த அயோத்தியிலை, இராமர் கோயிலை உடைத்துப்போட்டுப் பள்ளிவாசலை முகலாயச் சக்கரவர்த்தி ஒருவர் கட்டினார் என்று, இப்ப ஆராய்ச்சியளர் கண்டு பிடித்திருக்கினை என்று நான் பேப்பரிலை வாசித்தனான்.
பேரா : அண்ணைக்கு விஷயங்கள் நல்லாய் தெரியுது. அதில்ை இப்ப இராமர் கோயில் கட்டப்படுகுது. அதனாலை இந்துக்களுக்கும் முஸ்லிங்களுக்கும் பெரிய பிரச்சனை ஏற்பட்டிருக்குது.
தில்லை : ஏன், இப்ப இரண்டு வருஷத்துக்கு முன்னர் இங்கு பலபேர் சண்டை போட்டு இறந்து போனார்கள் என்று கேள்விப்பட்டனான்.
பேரா : ஒம். இது போன்ற சமயச் சச்சரவுகள் இந்தியாவிலை அடிக்கடி நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
கந் : இப்ப நீர் சொல்லறதைப் பார்த்தால், பாபா விஷ்ணுவின் அவதாரம் என்றெல்லோ நாம் நினைக்க வேண்டியிருக்குது.
பேரா : ஏன், பாபாவே சொல்லியிருக்கிறார் தான் விஷ்ணுவின் அவதாரம் என்று. இதை விளங்காமல் எல்லோரும் பல விதமாகக் கதைக்கிறார்கள். பாபாவின் புகழ் இப்போது உலகின் பல இடங்களிலெல்லாம் பரவி இருக்கிறது. ஏறக்குறைய 40 நாடுகளிலை பாபா சங்கங்கள் இருக்கின்றன. அநேகமாக ஜப்பான், ஆபிரிக்கா, சீனா, ரஷ்யா போன்ற கம்யூனிச நாடுகளிலைகூட பாபா சங்கங்கள் இருக்கின்றன.

155
தில்லை : அப்படியா விஷயம்? அப்படியென்றால் அவர்கள் எல்லாரும் பாபாவை ஒரு தெய்வமாக நினைக்கினையோ?
பேரா : அது மாத்திரமல்ல, அவரது போதனைகள் அவரது வாழ்க்கை வரலாறு, அற்புதங்கள் எல்லாம் பல்வேறு மொழிகளில் நூல்களாக வெளி வருகின்றன. பாபாவின் இந்த அவதாரத்தின் நோக்கம் மக்களை நல் வழிப்படுத்தி ஆன்ம ஈடேற்றம் பெற வைப்பதுதான். மேலும் இந்தச் சங்கங்கள் 'பாலவிகாஸ்’ என்ற சிறுவர் பள்ளிக்கூடங்களையும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தி வருகின்றன.
கந் : அதென்ன ‘பாலவிகாஸ்? அதைப்பற்றிச் சொல்லுங்கோ கேட்போம்.
பேரா : பாலவிகாஸ் என்பது பாபா சங்கம் நடத்தும் பள்ளிக்கூடம். இங்கே அன்பு, சகோதரத்துவம், மனித விழுமியங்கள், நன்னடத்தை, சமய நெறிகள், பெரியோரைக் கனம்பண்ணல், உலக சமாதானம் போன்ற U6) விடயங்களைப்பற்றிய போதனைகள் சிறுவர் சிறுமியர்களுக்குச் சொல்லிக் கொடுக்கப்படுகின்றன.
தில்லை : இதுக்கு காசு ஏதாவது கொடுக்க வேணுமோ?
பேரா : இல்லை. சுவாமியின் சங்கங்கள், கூட்டங்கள் எதிலும் காசு அறவிடுவதில்லை. அங்கு ஒரு உண்டியல் வைக்கப்பட்டிருக்கும் விருப்பமானோர் காணிக்கை செலுத்தலாம். இந்த பாலவிகாஸ் பாடசாலையில் ஆங்கிலத்தில் போதனைகள் நடைபெறும் - மாணவ மாணவியர் எம் மதத்தைச் சேர்ந்தவர்கள் ஆனாலும் சேர்ந்து படிக்கலாம்.
கந் : ஏன் தம்பி, ஆங்கிலத்திலை வைக்கினம். தமிழிலை சொல்லிக் கொடுத்தால் நல்லதல்லவா.
பேரா : இங்கு பல மொழிகள் பேசும் பிள்ளைகள் இந்த வகுப்புக்கு வருகிறார்கள். மற்றது எல்லா சங்கங்களும் ஆங்கிலத்திலைதான்

Page 85
156, .
போதனையைச் செய்கிறார்கள். இது எங்கடை பிள்ளைகளுக்கும் வசதியாக இருக்குது.
தில்லை : இது எங்கை நடக்குது? என்ன நாட்களிலை என்று சொல்லுவியளோ?
பேரா : இது வந்து ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை காலையிலை, இப்போது வோபன் கல்லூரியிலை ஸ்காபரோவிலை நடத்துகினை
ஒவ்வோரு சங்கமும் ஒவ்வொரு பாடசாலையிலைதான் இந்த வகுப்புக்களை வைக்கினை. இன்னொரு விஷயம், நீங்கள் கவனிக்க வேணும். எங்கடை பிள்ளைகளுக்கு இந்த மாதிரியான வகுப்புக்கள் மிகவும் முக்கியம். வாழ்க்கையிலை ஒழுக்கம், கட்டுப்பாடு, பெற்றோருக்குக் கீழ்ப்படிதல் முதியோரைக் கனம்பண்ணல், அன்பு; சாந்தம், கடவுள் பக்தி போன்ற விடயங்களில் அவர்களுக்குப் போதனை மிகவும் முக்கியம். தாயகத்தில் போர்ச் சூழல் காரணமாக பசி, பட்டினி, கொலை பலாத்காரம் போன்ற கோரச் சம்பவங்களுக்கு ஆளாகி அவர்கள் திசை மாறிப் போய்க்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நல்ல வழிகளையும் நன்னடத்தை முறைகளையும் சொல்லிக் கொடுத்துவரும் பாலவிகாஸ் போன்ற பாடசாலைகள் ஆற்றும் பணி மிகவும் மகத்தானது. இதனை நடத்துகின்ற பாபா சங்கத்துக்கு நாங்கள் நன்றி செலுத்தவேண்டும். அது மாத்திரமல்ல எங்களுடைய பிள்ளைகளையும் இவற்றில் சென்று படிக்க நாங்கள் ஊக்குவிக்க வேண்டும்.
கந் : இவ்வளவு திறமான சேவைகளை பாபா சங்கத்தினர் செய்து வருகிறார்கள் என்று எனக்கு இவ்வளவு காலமும் தெரியாமல் போச்சுது.
பேரா : இது மாத்திரமல்ல, இளைஞர் யுவதிகளுக்கென்று பல பயிற்சி வகுப்புக்களும் நடாத்துகிறார்கள். எவ்வாறு வருங்காலத் தலைவர்களாகவும், வழிகாட்டிகளாகவும் வரலாம் என்று பயிற்சித் திட்டங்கள், பஜனைகள், ஆன்மீகத் தத்துவங்கள், பல மதங்களின் கோட்பாடுகள் எல்லாம் சொல்லிக் கொடுக்கிறார்கள்.

157
தில்லை : மிகவும் நல்ல திட்டங்கள். இதைப்பற்றி நாங்கள் எல்லோருக்கும் சொல்லவேண்டும். இந்த விடயங்களை இவை ஏன் பேப்பரிலை போடுறதில்லை.
பேரா : பொதுவாக, இது ஒரு தெய்வீகத்தன்மை வாய்ந்த சங்கம். இவை பெரும்பாலும் விளம்பரத்திலே அதிக நாட்டம் கொள்வதில்லை. எங்களுடைய சேவைகளை மக்கள் அறிந்துவந்தால் அவர்களுக்கு நாங்கள் உதவிகள் செய்யத் தயாராக இருக்கிறோம் என்ற கோட்பாட்டுடன்." இந்த உறுப்பினர்கள் தொண்டாற்றி வருகின்றார்கள். இதில் சேர்ந்து சேவையாற்றும் பிள்ளைகள் எல்லோரும் சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள். அனாதைகளுக்கு உணவு வழங்குதல், இரத்ததானம் செய்தல், உடைகள் சேகரித்துக் கொடுத்தல் போன்ற பல சமூகத் தொண்டுகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இது போன்ற பொதுச் சேவைகளில் கட்டாயம் எமது இளஞ் சந்ததியினர் ஈடுபடவேண்டும். அவர்களை ஈடுபட வைப்பது எமது பெற்றோரின் முக்கிய பங்கு.
கந் : தம்பி, இது போன்ற சமய வகுப்புக்கள் எங்களுடைய வேறுபல சங்கங்களும் நடத்துகின்றார்கள்தானே.
பேரா : ஒம். அவை பெரும்பாலும் தமிழில் சைவ சமயத்தைப் பற்றிய வகுப்புக்கள். அவையும் எமது பிள்ளைகளுக்குத் தேவைதான்.
தில்லை : ஏதோ புலம்பெயர்ந்த நாட்டிலை, நல்ல பிள்ளைகள் என்று எங்கடை பிள்ளைகள், பெயர் எடுக்க வேண்டுமென்பதுதான் என்னுடைய விருப்பம்.
பேரா : உங்களுடைய விருப்பம் மாத்திரமல்ல எல்லோருடைய விருப்பமும் அதுதுான். ஆனால் நடக்கிற சம்பவங்களைப் பார்த்தால் எங்களுக்குக் கெட்ட பெயர்தான் ஏற்பட்டிருக்குது. அதுக்குத்தான் எங்கடை பிள்ளைகளைப் பெற்றோர் இம்மாதிரியான ‘பாலவிகாஸ்’ வகுப்புக்களுக்கு அனுப்ப வேணும். இதிலை படிக்கின்ற, படித்த பிள்ளைகள் எல்லோரும் நல்ல உத்தியோகங்களிலை, சீரும் சிறப்புமாக இருக்கிறார்கள்.

Page 86
158
கந் : அப்படியென்றால் என்னுடைய பேரப் பிள்ளைகளையும் அனுப்பத்தான் வேணும்.
பேரா : சரி, இன்றையோடு எல்லாமாக 22 தடவைகள் நாங்கள் சந்தித்துக் கலந்துரையாடி இருக்கிறோம்.
கந் ஏறக்குறைய 6 மாதம் என்று சொல்லுங்கோ. நல்ல விஷயங்களை எல்லோருக்கும் பிரயோசனமான விஷயங்களைத்தான் கதைத்தோம்?
தில்லை : இது எல்லாத்துக்கும் உங்கள் இரண்டு பேருக்கும் நாங்கள் இரண்டு பேரும் நன்றி சொல்லவேணும்.
பேரா : நன்றி, உங்களுக்கும் நாங்கள் சொல்லவேணும்.
கந்/தில்லை : நாங்கள் போட்டு வாறம்.
பேரா : ஒம் ஓம் போட்டு வாருங்கோ.


Page 87


Page 88
ஆசிரியரைப்பற்ற
திரு சின்னையா சிவனேசன் (துறை
பிறப்பிடமாகக் கொண்டவர். சுண்டிக்கு கிறிஸ்தவக் கல்லூரி ஆயவற்றின் ! ஆசிரியராகப் பணியை ஆரம்பித்து க மொழிபெயர்ப்பாளராகவும் பின்னர் L பணிபுரிந்தார். ஆக்காலத்தில் இவர் நூல்களைத் தமிழில் மொழிபெயர்த் மருத்துவம் ஆகிய சொல்லாக்கக் குழ
கொழும்பில் வாழ்ந்த காலத்தில் வா6ெ நடிப்பதிலும் 1962ஆம் ஆண்டு முதல் நாடகங்கள் எழுதுவதிலும் நடிப்பதிலும் வந்தார்.இவர் எழுதி நெறிப்படுத்திய நா நினைத்தது நடந்ததா? நரி மாப்பிள்ை நரி மாப்பிள்ளை நூலாக வெளிவந்தது கட்டுரைகள், பேட்டிகள், கவிதைகள் ஆ தினபதி, வீரகேசரி பத்திரிகைகளில் எ என்ற நாடகமன்றத்தை நிறுவி அதன் தொண்டாற்றினார்.
1973இல் இலங்கைக் கல்விச் சேை சிதம்பராக் கல்லூரிக்கு அதிபராகச் ெ கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரி அதிL மாணவரை நெறிப்படுத்தி அலைகள் ஆரடித்தார், ஆகிய நாடகங்களை மேல்
1980இல் நைஜீரியாவுக்கு ஆசிரியராகச் சேவையாற்றினார். 1986 ஒக்டோபரில் பணிகளைத் தொடர்ந்து வருகிறார். ஒ6 கந்தவனத்தைக் கொண்டு நாட்டிய நா இது நூலாகவும் வெளிவந்துள்ளது. பதி ஆயவற்றிற்கு விஞ்ஞானம், கல்வி, சமூ களும் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழு காட்சி, வானொலி நிகழ்ச்சிகளிலும் பங் தொரொன்ரோ மாவட்டக் கல்விச் சபை கராகப் பணியாற்றுகிறார். பல சங்கங் வகித்து அரும்பணி ஆற்றி வருகிறார்.

Bபூரான்) ஈழத்து யாழ்ப்பாணத்தைப் ரி பரியோவான் கல்லூரி, சென்னைக் பழைய மாணவர். இவர் விஞ்ஞான ல்வி வெளியீட்டுத் திணைக்களத்தில் பதிப்பாசிரியராகவும் 12 ஆண்டுகள் பல தாவரவியல், விலங்கியல் ததோடு, தாவரவியல், விலங்கியல், விலும் பணியாற்றினார்.
னாலி நாடகங்கள் எழுதுவதிலும ஈடுபட்டு வந்தார். பின்னர் பல மேடை
நெறிப்படுத்துவதிலும் ஈடுபட்டு ாடகங்களில் தங்கச்சி கொழும்புக்கோ ளை ஆகியன மிகவும்பிரபலமானவை.
நாடகங்களுடன் விஞ்ஞானக் ஆயவற்றை தினகரன் சிந்தாமணி ழுதி வந்தார். இத்துடன் அரங்கு
செயலாளராகப் பல ஆண்டுகள்
வயின் பணியாளராக ഖങ്ങഖ് ஈன்றார். பின் 1975 முதல் 1980 வரை பராகப் பணிபுரிந்தார். அக்காலத்தில் ஒய்வதில்லை, ஒன்று பட்டால், SDL(3uipí56OTITIŤ
சென்று 1986 வரைக்கும் கனடா வந்து,பழையபடி கலையுலகப் ன்றுபட்டால் நாடகத்தை கவிஞர் டமாக எழுதுவித்து மேடையேற்றினார். ந்திரிகைகள் சஞ்சிகைகள் கவியல் கட்டுரைகளும்,கவிதை திவருகிறார். இத்துடன் தொலைக் வ்கு பற்றிவருகிறார். தற்போது யின் மக்கள் தொடர்பு ஆலோச களில் முக்கிய பொறுப்புக்களை