கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆற்றுகை 1995.04-09

Page 1
意き
·đī£®; los useos@rnborginioa─ná
 
 


Page 2
இந்த இதழில்.
அரங்கின் வளர்ச்சித் தேவையும் நோக்குதலும் (ஆசிரியர் குழு)
கிரேக்க அவலம் சுவைத்த அவலச்சுவை (குழந்தை ம சண்முகலிங்கம்)
-
さ
S
நாடக நெறியாளர்
(க. பூரீகந்தவேள்) நூல்நுகர்வு - இம்மனுவல் நாட்டுக்கூத்து (எ. எல்வீஸ்)
* வீதி நாடகம் ஓர் அறிமுகம்
(சி. மெளனகுரு)
நாடகம் - 'அகதிகளின் கதை' (ம. நிலாந்தன்)
* அரங்கியல் கண்காட்சி ஒரு பார்வை
(இரா வளனன்)
S$ எஸ். ரி. அரசுடன் நேர்காணல்
(பா. அகிலன்)
* விமர்சனம் - அவள் ஒரு மாதிரி
(G. e.g560T air)
S தேடுங்கள் கண்டடைவீர்கள்
(போட்டி முடிவுகள்)
* நெஞ்சில் நிறைந்தவர்
(வை. மா. அருட்சந்திரன்)
* நிகழ்வும் பதிவும்
(கி. செல்மர் எமில்)
* பாஸ்கா நாடகங்கள்
* ஆற்றுகை அறிவுப் போட்டி
அட்டைப்படம் : புனரமைக்கப்பட்ட கிரேக்க அரங்கம்

ܥܦ̈ܝܗ
கல்ாம் 01
நாடக அரங்கியலுக்கான இதழ்
காட்சி 03, 04
காலாண்டுக்குரியது.
ஏப்ரல் - செப் 1995
**நாமும் நமக்கோர் நலியாக் கலை உடையோம் நாமும் நிலத்திரனது நாகரிக
வாழ்வுக்கு நம்மால் இயன்ற பணிகள் நடத்திடுவோம்'
- மஹாகவி
வெளியீடு
நாடகப் பயிலகம் திருமறைக் கலாமன்றம் 238, பிரதான வீதி, யாழ்ப்பானம்.
அரங்கின் வளர்ச்சித் தேவையும் நோக்குதலும்
அதிக கால திTI) தங்களின் பின்னர் உங்கள் கரங்களில் இரு காலாண்டுகளின் தெ ாகுப்பாக கனதியான ஆக்கங்களுடன் ' fo றுகை' வெளிவந்து தினது முதல் '9' - ', 3) 111111ഞ7 gതെ ബ நிறைவு செய்கிறது எனினும் காலதாமதங்களுக்காக ம ன ம் வருந்துகின்றோம். நாட்டின் அர சியல் சூழ்நிலைகள் தற்காலிக இடம் பெயர்வுகள், நெருக்கடி நிலைமைகள் இதன் பி ச வ காலத்தை அதிகப்படுத்தி ” விட் டன. இக்காலப் பகுதியில் fi (65) L. பெற்ற இரு துயரச் சம்பவங்கள்.
மறக்க இயலா மனவடுவையும் மாறாச்சோகத்தையும் ஏற்படுத்தி
இருக்கிறது. நவாலியில் இடம் பெற்ற கொடூர விமானக் குண்டு வீச்சும், அதனால் பல நூற்றுக் கணக்கான மக்கள் அநியாயமாகக்

Page 3
கொல்லப்பட்டமையும், நாகர் கோவிவில் இருபதுக்கும் அதிகமான பச்சிளம் பா க மாணவர்களை பலி கொண்ட மிலேச்சத்தனமான குண்டு வீச்சுத் தாக்குதல்களும் ஆகும். துயரமும் குருதியும் நோய்ந்த மண்ணின் இழப்புக்களை நாம் நீண்ட சுமையாக சும ந்து கொண் டாலும் எதிர்காலத்தில் நிச்சயமான அழுத்தம் நிற தயம் எமக்கு. கிடைப்பது உறுதியானதே!
. 11 ܢ  ைநாடக ஆற்றுகை கலை ஊடகங்கள். புராணங்கள். இதி காசங்களின் கருக் கதைகளில் மூழ்கியும், சினிமாத்தனம் மாறா படிச்சட்டத்துக்குள் அமிழ்ந்தும் இருந்த நிலை மாற்றப்பட்டு இன்று எமது வாழ் வி ய லு டன் இணைந்து சமூகத்திற்கு தேவையான அரங்கை வளர்த்தெடுக்கும் முயற்சி கல்வியியல் ரீதியிலும், ஆற் துகை முறைமைகளிலும் முனைப்பாக எழுந்து வருகிறது. இந் நில்ைபில் 'நாடக வளர்ப்பை ஆரம்ப மட்டத்தில் இருந்து வளர்த் தெடுக்க வேண்டிய பாடசாலைகள், திணைக்களங்கள் அரங்கியல்ை நோக்கும் விதமும் பார்வையும் விசனத்தை ஏற்படுத்துகின்றது.
ஆ பாடசாலைகளில் கோட்ட, மாவட்ட மட்டங்களில் வருடாந் தம் நடைபெறும் தமிழ்மொழி கலைத்திறன் போட்டியில் நிகழும் நாடகப் போட்டி முடிவுகள் பெரும் அதிருப்தியையும். பொறுப் பானவர்களின் அக்கறையினத்தையும் காட்டுகின்றது. உதாரணமாக இம்முறை கோட்ட மட்டத்தில் நடைபெற்ற சிறுவர் நாடகப் போட்டியில் சிறுவர்களைக் கவரக் கூடியதும், பாடல், ஆடல், விளையாட்டுக்கள் விரவிவந்த சிறுவர் நாடகப் பண்புகளைக் கொண்ட நாடகங்கள் பின் இடங்களைப் பெற்றதும், சிறுவர்களது ஆளுமை முதிர்ச்சி, இயல்பு ஆகியவற்றுக்கு அப்பாற்பட்ட பாத் திரங்களைக் கொண்ட வரலாற்று நாடகங்கள் முன் இடங்களைப் பெற்றதும் வேதனைக்குரியதே. சங்கீதம் நடனம், போன்ற தேர்வு களுக்கு நன்கு பாண்டித்தியம் பெற்றவர்களும், அனுபவம் உள்ள வர்களும் நடுவர்களாக அமர்த்தப்படுவதும், நாடகப் பிரிவில் நாகத்தை நாடக வகைகளை, பண்புகளை வெறும் வெற்று அனுப வங்களாகக் கொண்டவர்கள் நடுவர்களாக இருப்பதுமே இவ் இடத் தெரிவு குழம்பல் நிலைக்கு காரணமாகின்றது. எனினும் கலை ஊடகங்களின் முற்றும் முழுதான உண்மையான வெளிப்பாட்டுத் திறனை மதிப்பீடு செய்ய இயலாது என்பது நிதர்சன உண்மையே வட இலங்கை சங்கீத சபையால் வருடாந்தம் நடாத்தப்படும் நாடகமும் அரங்கியலுக்குமான தேர்வுகள் ஏதோ நடத்தி முடிக் வேண்டுமென்ற நோக்குக்காக நடத்தப்படுகிறது போல் தெரிகிறது. வருடாந்தம் நடக்கும் அரங்கியல் செயன் முறைத் தேர்வில் தரம்
ஆற்றுகை
2
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சிறு தொடக்கம் ஐந்து வரையிலான தொடர் பிரிவுகளில் ஒரே பரீட்சகர்கள் இருப்பதும், பரீட்சிப்ப தும் எந்தளவுக்கு பொருத்தப் பாடு உடையது? தேர்வில் ஒரே கேள்விகள் கேட்கப்படுவதும், அதே வேளை பாடத் திட்டத்தை விட்டு விலகி நின்று அதற்கு அப்பர்ற் பட்ட கேள்விகளை கேட்டு மாணவர்களை பரீட்சிப்பதும்,' எந்தள விற்கு பரீட்சையை முழுமைப் படுத்தியிருக்கும். பரீட்சை முடிவுக்ள் முதலாக பலரை அதிர்ச்சிக்குள்ளக்குவதோடு, இப்பரீட்சையில் வெறுப்பையும் தோற்றுவிக்கின்றது.
அ கடந்த மே மாத இறுதியில் சுதேசியக் கலாமன்றம் அரங்கிப்ல்
ஆய்வுக்காக ஆரம்பித்த நாடக விழாவில் பல நாடகங்கள் மே யேற்றப்பட்டன், (3.5", it as விழா முற்றுப் பெறாமல் இடை நடுவில் நிறுத்தப்பட்டுள்ளது.) நாடகத்தை வளர்த்தெடுப்பதில் நிறுவனங்கள், கல்லூரிகள் தாங்களே வரலாற்று நாயகர்கள் என்று கோடிட்டுக் காட்டிக் கொண்டிருக்கும் வேளை பல்வேறு மனித உறவு களை இறுக்கமாகக் கொண்டு இயங்கும் இச் சிறிய அமைப்பு நாடக வளர்ச்சிக்கு ஆற்றும் பணி போற்றுதற்குரியது. ஆனால் நாடக ஆய் வாளர்கள், ஆர்வலர்கள் என்று சொல்லிக் கொண்டு கல்லூரிகள் மன்றங்கள், பல்கலைக் கழகங்கள் போன்றவற்றில் தங்கள் முகன் களை பதிந்து விமர்சனம் எழுதுபவர்கள் ஏனோ அன்னைபூபதி கீவை அரங்கை முற்றுகை இடவில்லை.
திருமறைக் கலா மன்றம் நடத்தி முடித்த நாட அரங்கியற் கண்காட்சி - 1995 நாடக உலகில் ஒர் புத்தூக்கத்தை ஏற்படுத்தி இருப்பதாக பலரும் கூறுகிறார்கள். அதற்கு பெரும் ஆதரவும், சிறப்பும் கிடைத்து து என்பதும் உண்மைதான். இம் முயற்சிகள் இனிவரும் காலங்களிலும் தொடர வேண்டும்.
 ேஇன்று தனியொரு சமூகக் கனவியாக, ஆற்றுவிகக் அரங்கு வளர்ந்து வருகிறது. இவ்வாறு வளர்ந்து ஆழப்பரவும் நேரத்தில் அனைவரும் அக்கறையுடனும், ஆதரவுடனும் மன வேறு பTடுகளை மறந்து கல்வி நோக்கிலோ அல்லது பரீட்சை நோக்கிலோ மட்டுமன்றி ஆற்றுகை ரீதியிலும் அதனை வளர்ப்பதில் இணைந்து நிற்பது காலத்தின் கட்டாயத் தேவையாகும். இல்லையேல் நாடக அரங்கியலின் பர. சிவகு மட்டுமே எஞ்சி நிற்க சிறந்த, நாட்க ஆற்றுகைகள் இல்லாமல் போகவும் கூடும்.
-ஆசிரியர் குழு
ஆற்றுகிை

Page 4
கிரேக்க அவலம் சுவைத்த அவலச் சுவை
உலககெங்கும் நாடகத்தின் தோற்றம் சூனியத்துள் கிடக்கி
றது. அதனால் தெட்டத்தெளி.
வான ஆதாரங்களைக் காட்டி நிறுவ முடியாதுள்ளது. கிரேக்க மும் இதற்கு விதிவிலக்கல்ல. கி . மு . 5 ம் நூற்றாண்டு, கிரேக்க நாடகத்தின் பொற்கா லம் - அக்கால நாடகங்கள், நீண்டகால வளர்ச்சியின் பெறு பேறாக வந்தவை என்பதை அவற்றின் உயர் மோடிமையும், பரந்த மரபார்ந்த தன்மையும் வெளிக்காட்டி நிற்கின்றன. கிரேக்க நாடக வரலாற்றின் உச் சிப்பகற் பொழுதை அவை சுட்டி நிற்கின்றன. இதன் முன்னும் பின்னும் இத்தகைய ஒளிப்பிர காசத்தைக் காண முடிவதில்லை.
தோற்றம் எத்தகைய இரு ளினுள் கிடந்த போதிலும், கிரேக் கத்தின் அவலச்சுவை நாடகம் அழகிய ஒளியினை வெளித்தள்ளி நிற்கின்றது. நாளாந்தம் நடந்த தொரு ந ட வ டி க் கை அல்ல
கிரேக்க அரங்கம். தற்செயலாக
ஒன்று கூடும் பார்வையாளருக்கு, வினோதங்களையும், கற்பனை
வியப் புக் க ைள யும் புனைந்து
காட்டி மகிழ்விப்பதற்காக அமைந்
ததல்ல கிரேக்க அரங்கம். வாழ்க்
.
குழந்தை ம. சண்முகலிங்கம்
கையை வெளிப்படையாக, பிண் டப்பிரமாணமாக பெளதீக நிலைப்பட்டதாகக் காட்ட எழுந் ததல்ல கிரேக்க அரங்கம்.
அது பருவ காலத்தோடு பின் னிக் கிடந்தது. சமூகச் சீர்மையும், மக்கள்தம் பகட்டாரவா ர மும், மேன்மையும், சமயச் சடங்கா சாரம் விஞ்சிய கரணமும் கலந்து சங்கமிக்கும், சமய - சமூக விழாக் களிலேயே கிரேக்க அர ங் கம் கிடந்து வளர்ந்தது. அவ் விழாக் களில் கூடியவர்கள் பார்வை யாளர்களல்ல; அ வ ர் க ள் பங் காளர்கள்: த மது சமூகத்தின் கடவுளரையும், வீரரையும், உயர் மனிதர்களையும், தம்மையும்கூட தரிசிக்க வந்த பக்தர்கள்; வழி பாட்டையும், ஒன்று கூடலையும் நிகழ்த்த வந்த மக்கள். இதனால், இவ்விழாக்களில் பங்கேற்ற நாடக ஆசிரியர்களுக்கு, பொறுப்பிருந்தது; அது புனிதப் பொறுப்பாகப் போ ற் ற ப் பட வேண்டி இருந்தது; அது சமயம் - சமூகம் சார்ந்த உயர் பொறுப் பாக அமைந்தது. இவ்வுயர் பொறுப்பினை அவர்கள் ஏற்று, நெறிநின்று ஒழுகியமையால், மக். களால் மதிக்கப்பட்டனர்.
ஒர் உய ர்
ஆற்றுகை

புராதன கிரேக்கர்களைப் பொறுத்த வரையில் போட்டிகள் புதியனவல்ல. அன்னியர் தம் படையெடுப்புக்களை எதிர் கொண்டு நாட்டின் தைக் காக்கும் போரில் அவர்கள் அடிக்கடி ஈடுபடவேண்டி இருந் தது. அந்த யுத்தப் போட்டிகளில்
அவர்கள் வெற்றி தோல்விக ளைச் சந்தித்து வந்தனர். யுத்தம் புரிந்து நாட்டைக் காக்கத்
தேவைப்படும் உடல் வலுவையும். ஆத்ம பலத்தையும் பெறுவதற்கு அவர்கள் மெய் வ ல் ல  ைம ப் போட்டிகளும், 'தேவாரப்" பா ஒதல் (டித்திராம்) போட்டிகளும் நடத்தினர்.
அத்தோடு, உலகில் முதன் முதலாக ஜனநாயகப் பண்பில
மைந்ததொரு அரசை அமைக்கும் முயற்சியில் அக்கறையோடு ஈடு பட்டிருந்தனர். பொறாமையைத் தோற்றுவிக்காத போட்டிகள், சுதந்திரத்துக்குத் தகுதியுடைய மக்களை உருவாக்கும்.
இவ்வாறாக, தனிமனித சுதந் திரமும், நாட்டின் சுதந்திரமும், பேணப்பட வேண்டுமென்று விரும் பிய கிரேக்கர் போட்டிகளை நடாத்தினர் எனலாம். இப் போட்டிகளுள் ஒன்றாக நாடகப் போட்டிகளும் இடம் பெற்றன. தனி மனித சுதந்திரம், கூட்டு மனித சுதந்திரம் (நாட்டின் சுதந் திரம்) என்ற உயரிய பண்புகளை கிரேக்க அவலச்சுவை தனது உள்
ளடக்கத்தாலும் நாடக வடிவத் தாலும் வெளிக்கொணர்ந்து நின்'
19து. ‘கோரஸ்' கூட்டு மனி
சுதந்திரத்.
தனையும், நடிகன் தனி மனித னையும் சுட்டுவனவாகவும் நின் றன. கூட்டு மனித நலனிலேயே தனி மனித நலன் தங்கி இருந் தது, என்பதையும் 'கோரஸ்" தனது பொதுமைப்படுத்தும் பணி களால் சுட்டிக்காட்டி நின்றது. மனித நடத்தைகளால் விளையும்
அனர்த்தங்கள் யாவும் " "தெய்வ
சித்தம்" என * Ο85, Πιτου ' " அமைதிகண்டு ஆறுதற்படுத்தும்.
அங்கு நடைபெற்ற போட்டி கள் எந்த வகையிலும், அவை
நிகழ்த்தப்பட்ட சமய - சமூக சூழ
லின் பவித்திரத்தைக் க்ெடுக்க வில்லை. குறிப்பாக அவலச் சுவை
நாடகங்கள் அஷ்வுயரிய சூழலின்
கன தி யை மே ம் படுத் த வே
உதவின .
ஆள் மேற் கொள்ளல் (Imper Somation), 5 Gð55 #n-p6v (Narration) என்பன மனித உள்ளுணர் வில் உறைந்திருப்பவை. அவ் வாறே, கரண நிலைப்பட்ட வெளிப்பாடுகளும் மனிதன்டத்து இயல்பாக உள்ள உணர்வுகளி லொன்றாகும். இவை அனைத் தினதும் இணைவைக் கிரேக்கத் தின் நாடகங்களில் காணலூாம். இயற்கை சக்திகளைப் பற்றிய விளக்கங்களும், பிறப்பு, இறப்பு பற்றிய மர்மங்களும் , பருவ காலங்களின் இசைவும் தொடர் பும் கிரேக்கரையும் கவர்ந்திருந் தன. இவைதாம் அ  ைன த் து மக்கள் சமூகங்களினதும் கரண வெளிப்பாடுகளுக்கும் . கலையாக் கங்களுக்கும், காலாக அமைந்தன என்பது மறுக்க முடியாத ஒன்று.
5
ஆற்றுகை

Page 5
தம்மை விஞ்சிய, தம்மிலும் மேலான கண்ணுக்குப் புலப்ப டாத ஆயினும் பருவ காலவட் பம், வாழ்வு வட்டம் மூலம் பெளதீக நிலைப்பட்டும் நிற்கின்ற - சக்திகளை வெற் நறி கோள்ள, சாந் த ப் படுத் த முனைந்த மனிதன் அச்சக்திக ரின் வல்லமை, வலிமை என்ப வற்றைச் சந்திப்பதாயின் அவற் றுக்குச் சமதையான வலிமை வீறு டன் தனது கரணங்களைப் புரிய வேண்டுமெனக் கருதிக் கொண் டான். எனவே, ஆடினான், பாடி னான், சன்னதங்கொண்டான். இயற்கையின் சன்னதத்தை தன் சன்னதத்தால் சாந்தப்படுத்தி சமநிலைப்படுத்த எண்ணினான் போலும், எவ்வாறாயினும், JFläf னதம் என்பது ஒருவகையான தனர்ச்சி வெளியேற்றுகையை வெளிக்கொணர்கையை (CathaTE is) மனிதனுக்கு நல்கியது என லாம். இந்த விதமாகவே தனது வாழ்வை ஆளுகை செய்யும் புறச் சக்திகளோடு - இவை மனிதனி லும் மேலானவை - போராடி நின்று தனது உணர்வுகளையும், நியாயங்களையும் வெளிப்படுத் திய கிரேக்கத்து நாடகம், ஆட லையும், பாடலையும், ஒதலை யும் தனது பிரதான வெளிப் பாட்டு மார்க்கமாகக் கொண்டது.
GTIGT IGIT
'மனிதனை விட மேலான அதிகமான ஒன்றுடன் மனிதன் நடத்திய போராட்டங்கள்" என இதனைச் சோபோகிலிஸ் கூறு வார். இப்போராட்டத்தில் தனி மனிதனும் முதன்மை பெற்றான்
கூட்டு மனிதனும் முக்கியத்துவம் பெற்றான். கட்டு மனிதன் என் பது அவலச்சுவையின் * * (3л, тЈгії லும்' தனிமனிதன் என் ப து அவல நாயகன், நாயகியிலும் பிரதிநிதித்துவம் பெற்றன. இக் கூட்டுப் பண்பும், சமயத் தொனி யும் கி ரே க் க அவலச்சுவையில் தொடர்ச்சியாக இருக்கக் காண ԵնrTլի,
கட்டு மனிதனைப் பிரதிநிதித் துவப் படுத்துகின்ற கோரஸ்" நாடக இயக்கத்தில் முதன்மை பெற்றது. புதுமைகளைப் புகுத்தி நின்ற யூரி ப் பிடி ச"ஆ" கோரசை" முற்றாக நீக்கிவிட முடியவில்லை. நா- நிகழ்வுக ஒளில் "நடிகன்" என்ற வாகயி லும் நாடகத்தில் மேலாண்மை பெற்று நின்ற கரு  ைெ
ப் பாக்க ஸ் மூலம் வலியுறுத்தி, பிரதான கருத்திை அளிக்கை செய்யும் சக்தி என்ற வகையிலும், ום, זחיחת תg:חנון וה HTT)ליתי கும் ைேடப்பாத்திரங்களுக்குமி
டபில் தொடர்பினை தும் இடை த்தரகராகவும். ந"= இயக்கத்தைச் செறிவுடையதாகி விளக்கமுடையதாகவும்
ഖുIf, ஆக்கும் கருவியாகவும் அவிசி நடு நாயகியர்தம் மே ாதல்
ளைப் பொதுவில்நின்று நோக்கி அனைத்து மக்களுக்கும் அறியு மாறு அவற்றை எதிர் கொண்டு நிற்பதன் மூலம் சகமனிதர்கள் அவற்றை ஆய்வு செய்து தீர்ப்பு
நின்று.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

செல்லும் பிரதான மூலமாக விளங்கி நிற்பதைக் காணலாம்.
அவலச்சுவை என்பது வெறு மனே நல்லதுக்கும் கெட்டதுக்கு மிடையிலான மோதவில், நல்லது அழிந்து போவதால் விளையும் பயமும், பரிவுமல்ல. நல்லவை இரண்டுக்கிடையிலான மோதவில் இரண்டுமே அவலமாக அழிந்து போவதால் விளையும் ஒன்றாக பெரும்பாலான கிரேக்க அவலச் சீவிவ நாடகங்கள் அமைந்து விடுகின்றன. இவை அனைத்துக் stjih Ginguri, நல்லவர் இருவர், தக்கம் சார்பில் சரியான தியா யங்களைக் கொண்டு நிற்கும் வேளையில், ஒருவர் ற்றவருடன் முரண்பட்டு மோதி நிற்கையில், இம் மோதலில் ? 题、 山T品 சம்பந்தப்படாத ஆயினும் முரண் பட்டு நிற்பவர்களுடன் Frħ மந்திப்பட்ட ஒருவர் நல்லவர் - வீணே அழிவை எதிர் கொள்வ தால் விளையும் பாரிய பரிவை யும் பயத்தையும் ஏற்படுத்தும் இதே அவி,ெ நாடகமாக ரோே திதிரித் "அன்டிக்கனி" நாடகம் அமைகிறது.
'நிலமார்ந்த ஒன்று பாழ்பட டுப் போதல்" என்று வரைவிலக் கனத்துக்கமைய, கிரேக்க அவ சீெசிவை நாடகங்கள் சிறந்த Tuff, விளங்குகின் றன. பதத்துக்கு ஒரு பருக்கை யாக "அன்டிக்கனி' நாடகத்தை நோக்கலாம். நெகிழா மனஉறுதி Gsfreðar L- இஸ்மார்ந்த இருவர், தம்மளவில் மேன்மையான கோட்
ஆற்றுகை
பாடுகளுடன் நின்று கொண்டு எத்தகைய இன்னலும் இடரும் திமிக்கு ஏற்படும் பட்சத்திலும், தமது உயர் இலட்சியத்தை இறு கப்பற்றிக் கொண்டு நிற்கையில் இருவரது இலட்சியங்களும் ஒன் றுடன் ஒன்று போதிக் கொள்ள இருவர் மீதும் பேரழிவு சரிந்து விழுந்து விடுகின்றது. அவர்சு இருக்கு ஏற்படும் அவலம் எமக்கு விளையும் அவலமாகி விடுகின் றது. இத்தோடு அந்த நாடகத் தின் அ வல ம் நின்று விடுவ தில்லை. அது அதற்கு அப்பா இம் செல்கிறது. அப்படிச் செல்
வ தேர் "அன் டி க்க ளி  ைப" சோபோகிலிசினதும், கிரேக்கத் தினதும் மிகச்சிறந்த -3|hirdիմ
FSð:Fl fj TL ri LIIITil, கிந்து போலும்,
கருதி வைக்
"அன்டிக்கனி' யில் வரும் அவலம், வெறும் மேற்தளத்தில் மட்டும் வைத்து நோக்குகையில், Gf Grif?F3Lr Lurrar ஒன்றாகவே தோற் றமளிக்கிறது. அரசின் கடமை பியையும், கெளரவத்தையும் காந்து நிலை நிறுத்தும் இலட் சியத்தோடு மன்னன் செயற்படு கின்றான். அவன் முழு மனத் தோடும், நேர்மையோடும். ஆனது மனச்சாட்சியின் வலுக் கொண்டு உறுதியாக நிற்கின்றான். நாட் டுக்கு விரோதமாகச் செயற்பட் டவன் மீது கடுமையான இரக் மேற்ற தண்டனையை விதிக்கி றான். நாட்டுக்கு விரோதமாக
நடத்திய சண்டையில் மடிந்து போன "துரோகி" யின் உட லுக்குக் கல்லறையில் அடக்கம்
7

Page 6
மறுக்கப்படுகிறது; அதன் மூலம் இறந்தவனது ஆத்மாவுக்குச் சாந் தியும், ஆறுதலும் நிராகரிக்கப் படுகின்றது. அரசியல் நிலைப்
பட்ட வழிமுறைகளைவிட, இரக்
கமும், கடமை உணர்ச்சியும் மத வழிபட்ட ஆசாரமும் மேன்மை பானவை எனக் கருதும் பெண் - இவள் இறந்தவனின் சகோதரி - அரச கட்டளையை மீறுகிறாள் அதனால் மரவின தண்டனை பெறு கிறாள். இதுவரை உள்ள கதை பும், நாடகப்பாங்கான சிக்கலான நிகழ்வுகளும், அவல உணர்வை ஏற்படுத் தப் போதுமானை வயே
இத்தோடு கதையின் தன்மை
அல்லது மோதலின் எல்லை நின்று விட்டிருந்தால், சரி, பிழை என்ற இரண்டுக்குமிடையில் ஏற் பட்ட மோதலில், வெளிப்படை யானதொரு சரிக்காக நின்று உயிர்த்தியாகம் செய்தல், என்ற சாதாரன அவ3ம் 'மட்டுமே விளைந்திருக்கும்.
இங்கு இரண்டு "சரிகள் எதிரெ திரே நிற்கின்றன. அரச கட மையை பொறுப்பேற்று நிற்கும்
மன்னன் ஒரு புறம் நிற்கிறான்.
இவன் இறந்தவனுக்கு மாமன், அரச பணியை, அரச நீதி வழு வாது நிறைவேற்றுதல், என்ற இவனது இலட்சியம் சரியானதே. இறந்து கிடக்கும் தனது சகோ திரன் கல்லறையில் அடக்கம் செய்யப்பெற்று. அதன் மூலம் ஆன்ம ஈடேற்றம் பெறவேண்டும் என்னும் உறுதியோடு நிற்கிறாள் பெண் - அவள் பெயர்தான் "அன்டிக்கனி'
ܢ ̄ ،
மரபார்ந்து
சமயாசார வழி நிற்கும் அவளது இலட்சியமும் சரியானதே.
இங்கு நடைபெறுவது என்ன? இருவரும் தத்தமது இலட்சியம், கடமை என்பவற்றின் சரி யில் நியாயப்பாட்டில் தளராத 西凸 பிக்கை கொண்டிருக்கும் வேளை யில், தமது எதிர்த்தரப்பில் நிற்ப வரது நியாயப்பாடுகள் பற்றி நோக்கத் தவறி விடுகின்றனர். இதுவே "அவலத்தவறு" எனக் கொள்ள்ப்படும் சோகத்தைப் பிழிந்தெடுக்கவல்ல கருணாரசக் குழம்பாகும்.
"அன்டிக்கனி' நாடகத்தின் அவலம் இத்தோடு நின்று விட வில்லையே. இவ்விருவரை விட மூன்றாமொருவரின் அவலத்தை யும் இதற்குள் கலந்து விடுகின்
றது . இவ்விரு எதிரிடையாள ருக்கு மிடையில் மூன்றாவது பாத்திரமொன்று பரிதாபகர
மான நிலையில் நிறுத்தப்படுகி றது. முன்னைய இருவரது அவ லங்களும் இப்பாத்திரத்தில் தற் குறிப்பேற்றம் பெற்று விடுகின் றன. இந்த மூன்றாம் பாத்திரம் வெறுமனே ஒரு மூன்றாம் நட ராக நிறுத்தப்படவில்லை; இப் பாத்திரம் வேறுயாருமல்ல மன் வினவின் மகன் அந்தப் பெண்ணை அன்டிக்கனி' யை மணம் முடிக்க வென நிச்சயதார்த்தம் செய்து
ளிகளாகக் கிடக்கும் அவ்விருவர் மத்தியில் அகப்பட்டுக் கிடக்கும் அப்பாவி எறும்பு. இவன், பெண்ணை அவளது துணிவுக்
■ 曹
I ஆற்றுகை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

காகவும், கடமை உணர்வுக்காக விம், மத விசுவாசத்திற்காகவும் மதிக்கின்றவன். தன் தந்தை என் பதற்காகவும், நாட்டின் வேந்தன் என்பதற்காகவும் மன்னனை என் றென்றும் மரியாதையோடு போற் நுபவன்.
மதத்தின் விதிகளும் அரச ஆட் in air விதிகளும் மோதும் நிலை ஏற்படும் பட்சத்தில் மதத்தின் சட்ட விதிகளின் பக்கம் நிற்பதே கிரேக்கச் சிந்தனையாக இருந் தது. எனவே மதம் விதித்த கரு மங்கீளை மீறும் நிலைக்கு அர சாட்சியைத் தவறாக வழி நடத் @ಕ್ಕೆ செல்வதென்பது இறை பழி தெ ப்வ நிந்தனையாகக் கரு தப்படுவது கிரேக்கத்தின் பொது விதியாக அ  ைம ந் திரு ந் த து. எனவே இவனும் அவ்வாறே கரு துவான். மக்களும் ஆதிTதிெ பார்வையாளரும் அவ்வாறே கரு துவர். இத்தகைய ஒன்று நிகழ்ந்து விட்டால், அது இவர்கள் அனை வருக்கும் பெரியதொரு அவல மாகத் தோன்றும் இந்த அவலத் தோடு ஒப்பிடுகையில், அதாவது மதவிதியை மீறும் அரசாட்சி திரும் அவவத்தோடு ஒப்பிடுகை யில் தெய்வ நிந்தனையால் வரும் அவலத்தோடு ஒப்பிடுகையில், நன் நோக்குடைய ஒரு பெண் னின் உயிர்த்தியாகமென்பது, குறைவானதொரு அவலத்தையே தோற்றுவிக்கும் தம் விதிகளை மீறும் மனிதரை தெய்வங்கள் வருத்தும் என்ற நம்பிக்கை கார ணமாக எழும் பயமும் அப் பயத்
ஆற்றுகை
தால் எழும் ப்ரிவும் கிரேக்கரை நிலை குல்ையச் செய்யும்.
இறுதியில், இந்த மூன்றாம் பாத்திரமும் மரணத்தைத் தழு விக் கொள்கிறது. அதன் மரணம் தெய்வ நிந்தனை என்னும் பழி யில் இருந்து மன்னனையும், மிக்களையும் விடுவித்து விடுகின் *றது. இப்பாத்திரத்தின் அழிவில், "நலமார்ந்த ஒன்று பாழாகி விடு கிறது" என்ற அவல இலக்கணம் உச்ச விளக்கத்தைப் பெறுகின் றது. என்ற போதிலும் தெய்வ நிந்தனையால் விளைய விருந்த தெய்வச் சிற்றத்தைத்'தவிர்த்து விட்டது என்ற வகையில் பார் வையாளர் நனங்களில் ஒர வெழுச்சிச் சமநிலையை ஏற்ப டுத்த பெரிதும் உதவுகின்றது.
"அன்டிக்கனி' நாடகம், முக் கோன நிலைப்பட்ட அவளத் தைப் பிறப்பிக்கும் ஒர் அவலச் சுவை நாடகமாக உள்ளது. மனச் சாட்சியால் வழி நடத்தப்படும் பெண் தனது அதிகாரத்தின் மீது அளவுக்கு அதிகமான நம்பிக்கை கொண்ட மன்னன் ஒன்றுடன் ஒன்று மோதும் விசுவாசங்களுக் கிடையில் அகப்பட்டுக் கிடந்து அவதிப்படும் இளைஞன், ஆகிய இம் முத் திறத்தாரும், ஒரு போதும் தன்னளவில் பூரணத்து வம் பெறமுடியாதிருக்கும் "மனித சித்தம்' என்னும் தன்மையால் வழி நடத்தப்படுகின்றனர். இவர் கள் ஒவ்வொருவரும் தனித்தனி மனிதர்களே - வெறும் தனி நபர் கள் மட்டுமே.
一 9

Page 7
* மனிதம்' என்பது கூட்டு மனி தரின் இணைப்பால், இசைவால் பிறப்பது. கூட்டு மனிதரில் பிறக்
கும் ** மணிதம்" "தெய்வ சித் தம்' எனும் மேன்மையுள் கலக் கும் தன்மையது. அதுவே,
"தெய்வ சித்தத்தை" அறிய வல்லது உ ன ர வ ல் ல து . ** அகம் பிரம்மம்' எனும் தத்து
வம் இங்கு நினைவுக்கு வரலாமீ.
மனிதம் தெய்வமாகும் படி முறையை கிரேக்க அவலச் சுவை யின் ** கோரஸ்" செய்து காட் டியது. கூட்டு மனிதனின் குர லாக மனச்சாட்சியாக நின்று இதனைக் ** கோரஸ்" செய்தது.
** அன்டிக்கனி" நாடகத்தில், மோதும் மனித சித்தங்களுக் கிடையில் சமரசத்தை ஏற்படுத்து முகமாக ** கோரஸ்" தெய்வத் தின் சட்டவிதிகளை நோக்கி விண்ணப்பம் செய்கிறது. விண் ணை நோக்கிய இந்த விண்ணப் பத்தின் மூலம், ஆழ்ந்த அவலத்தின் பாற்பட்டு நின்று, பரிவும் பயமும் கொண்ட நிலையில் நெஞ் சுட் கிடந்த உணர்ச்சிகள் வெளியேற்றப் பட்டு, செய்வதறியாதொரு நிலையை எய்தி, தம்முள் தாம் சமைந்து கிடந்த பார்வையாளர்/
மக்கள், மனவெழுச்சிச் சமநிலை பெற்றுச் சுதாகரித்துக் கொள் கின்றனர்.
கிரேக்க அவலச்சுவையின் பிழி சாரமாகவும், பேராதிக்கம் செலுத்தும் பொது மனநிலை யாகவும், ஒழுக்கப் போதனையா
இது வரை
கவும், வாழ்வியல் தத்துவமாக வும் விளங்குவது தெய்வ சித்தமா கும். மனிதச் செயல்கள் யாவுமே தெய்வ சித்தத்தின் விளைவுகளே. ** நன்றே செய்வாய், பிழை செய் வாய், நானோ இதற்கு நாய கமே" எனும் பூரண சரணாகதி நிலையை நாம் கிரேக்கர் மத்தி யிலும் தரிசிக்கிறோம். கிரேக்கத் தின் மிகச் சிறந்த அவலச்சுவை நாடகாசிரியரான சோபோகிலிஸ் எழுதி இன்று கிடைக்கப்பெறும் ஏழு நாடகங்களின் இறுதி வாக்கி யங்களை இங்கு சுருக்கமாக நோக்குவதன் மூலம் மேற்கண்ட உண்மையை நாம் காணலாம். இவற்றில் ஒன்  ைற த் த வி ர ஏனைய யா வும் கோர ச ரீல் மொழியப்படுவன:-
1. ‘நிலையற்ற மனிதன் எப் பவுமே தனது இறுதியை எதிர் பார்க்க வேண்டும்; தனது சவக் குழிவரை சமாதானத்தோடு ஆண்டவனின்" ஆனந்தத்தைச் சுமந்து செல்ல முற்படாத நாள் வரை, எவனைப் பார்த்தும் சந் தோசமாக இருக்கிறான் எனக் கூற முடியாது’ - கோரஸ், "ஈடிப் பஸ் மன்னன்.""
2. **இது வே ಆ diTಾಸ್ ಗಿ air முடிவு இனி ஒப்பாரி எதுவும் தே ைவ யில்  ைல. ஆண்டுகள் அனைத்தினூடும் இதுவே மாற்ற முடியாதோர் நிகழ்வாக நிற்கி றது’’ - கோரஸ், ‘ஈடிப்பஸ் அட் கொலொனஸ்'
3. தற்பெருமையால் பீடிக் கப் பட்டுள்ள மனம் அழிக்கப்
«ლ ஆற்றுகை
0

பட்டு, மெய்யறிவினுாடு தெய் வங்களை வி யப் பார் வத் தி ல் நிறுத்தி வைத்திருத்தலே ஆனந் தத்தின் மணி முடியாகவும் மிகப் பிரதான பகுதியாகவும் உள்ள தென்ற இந்த விதியை நாம் முது மையின் போதே அறிந்து கொள் கிறோம்" ᎯᏏ6Ꮘifl* ?
கோரஸ், "அன்டிக்
4. ** பார்க்கும் மனிதன் பல வற்றைப் புரிந்து கொள் ள வேண்டியுள்ளது. பார்க்காது இருப்பவன் எதிர்காலத்தில் என்ன வர இருக்கிறது என்மதை எவ் வாறு அறிவான்? கோரஸ், **அஜக்ஸ்”*
5. 'இப்போ அட்றியசின் சந்த திக்கு அனைத்துத் துயரங்களில் இருந்தும் விடுதலை பெறப்பட்டு விட்டது; இன்றைய பொழுதின் பணி நன்கு நிறைவேற்றப்பட்டு
விட் டது . " - G аь п л бір,
இலெக்ட்ரா.
6. "மரணத்தின் பயங்கரமான கைகள், சோகத்தின் புதிய வடி வங்கள், எண்ணிலடங்காத் துய ரங்கள், என நீங்கள் காணாத வற்றைக் கண்டு விட்டீர்கள்; நீங் கள் பார்த்த இவை அனைத்தும்
தான் கடவுள்' - ஹில்லஸ், * விமின் ஒல்ட்ரச்சிஸ்?"
7 ** அனைவரும் வாருங்கள்
எமது வீடு நோக்கிய பயணத்தில் இன்று எம்மை மகிழ்வுடன் காத்து வழி நடத்துமாறு, கடலை ஆளும் கடல் தெய்வங்களை வேண்டி வழிபடு வோ ம் - கோரஸ்
விலொக்டேட்ஸ்”*
‘ஒரு பொல்லாப்பும் இல்லை; முடிந்த என்பது தான் அவலச்
எல்லாம் எப்பவோ கதை
சுவையோ ?
னேற்பாடின்றி நிகழும்
மேலோங்கி உள்ளதாகவும் ஆற்றுகைக் கலை ,
அரங்கியற் கலையின் சிறப்பு, நாடகம் எழுதுவதில் தங்கி இருப்பதில்லை. நாடகம் படைக்கப்பட வேண்டும்; தனிப்பட்ட நடிகர்களது இயல்புணர்ச்சிகளின் கூட்டிணைப்பாகவும், க்லை ஞர்கள் ஒன்றிணைந்து வெளிப்படுத்தும் சேர்க்கையாகவும் களப்பயிற்சிகளில் அல்லது அரங்கில் முன்
செயல் முகிழ்ந்து நிற்கும் நெறியாள்கையின் வெளிப்பாடகவும், நாடக ஆசிரியரின் கற்பனையில் எழுந்த நாடக அமைப்பின் இயல்பு நிற்கும் ஒரு கலையே நாடக
எதிர்வினைகளின்
3GIL 35
நிகழ்ச்சிகளின்
ஜோசவ் சைக்கின்
ஆற்றுகை

Page 8
நாடக நெறியாளர்
கந்தையா ‘ழரீகந்தவேள்
நாடகமென்பது கூட்டு முயற்சி
யால் உருவாரும் ஓர் கலையென நாம் அனைவரும் அறிவோம். பல கலைகளின் சங்கமம் நாடகமானால் எந்தவொரு கலைஞ்ர்களின் பணி களும், பொறுப்புக்களும், தகமை
ஒரு நாடகத்தை நெறியாள்கை செய்யும் நெறியாளர் பற்றி ஆராயுமிடத்து அந் நா - க நெறியாளரின் பணிகள், நாடக நெறியாளருக்கு இருக்க வேண் டிய தகமைகளின் இயல்புகள், நெறியாளருக்கும் அவர் கையா, ளும் பொருட்களுக்குமிடையில் உள்ள உறவு முறை நாடகத் தயாரிப்பில் நெறியாளரின் பங் களிப்பு, நெறியாளர் வரலாறு, நெறியாள்கைப் போக்குகளில் காணப்படும் வேறுபாடுகள், நெறி யாளரின் அணுகு முறையும் மனப் போக்கும், நாடகத்தை இனங் காணுதல் ஒரு நாடகம் தன்ன கத்தே ரெண்டுள்ளவற்றை அறி தல், போன்ற பல அம்சங்களை கருத்தில் கொள்ள வேண்டும் . ஆனால் இந்தக் கட்டுரையில் நெறியாளரின் பணிகள் நெறியா ளருக்கு இருக்க வேண்டிய தகமை களின் இயல்புகள் Gröru 600u விளக்கப்படுகின்றன
நாடகத் தயாரிப்பின் கலைத் துவ அம்சங்கள்" அனைத்திற்கும் பொறுப்பாக இருப்பவரும் நாட கப் பிரதியை வியாக்கியானம் செய்யும் முறையையும் அரங்கின் ஏனைய கலைஞர்கள் அனைவ ரையும் இணைத்து அவர்களது முயற்சிகளை ஒன்றிணைப்பவரும் நாடகத்தின் வெற்றிக்கு அத்தியா வசியமானவரும் ஒரு நெறியாள Gjurt GJITri. W
நாடக நெறியாளரின் பணிக
களும், ஆராயப்படவேண்டியவை ளைக் கருத்தில் கொண்டால், պմo அறியப்படவேண்டியவையு பொதுவாக அவர் பின்வரும் மாகும். பணிகளை புரிபவர்
2 - ஆற்றுகை

6 நாடகப் பிரதிக்கு அளிக் கும் வியாக்கியானத்தை அவரே தீர்மானிப்பார் .
9 நடிகரைத் தெரிவார்.
0 நாடகத் தயாரிப்பைத் திட்டமிடுவதில் அவர் நாடக ஆசி
ரியர், அரங்க நிர்மானக் கலை ஞர்கள். அதாவது, காட்சி அமைப்பு, உடை ஒப்பனை,
இசை நடன அமைப்பாளர்களு டன் இணைந்து செயற்படுவார்.
நடிகர்களுடன் ஒத்திை turrriturri.
9 தொழில் நுட்பக் கலை ஞர்களான ஒலி, ஒளி அமைப் பாளர்களுடன் இணைந்து பணி tqila stri.
* ஏனைய அரங்கக் கலைஞர் களுடன் இணைந்து இறுதி ஒத்
திகை பார்ப்பார்.
அரங்கில் அனைத்து அடிப் படை இயல்புகளையும் இறுதி மேடைத் தயாரிப்புக்களுடன் இணைப்பார்.
நாடகாசிரியரின் உள்ளத் தில் உதித்த கற்பனைகளைப் பார்வையாளர்களுக்கு உயிரூட்டி உண்மை மனிதர்களாக உலவ விடுவார்.
சு இறுதித் தயாரிப்பை பார்க்கின்ற LJ Tri 60, а штетi upor
தில் நெறியாளரின் நினைவு, எந்தவொரு கட்ட த் தி லும் வராதபடி தி  ைது பணியை
நுணுக்கமாகச் செய்து முடிக்க வேண்டிய பொறுப்பு ஒரு சிறந்த நெறியாளனுக்கு உண்டு.
ஓ நாடக எழுத்துப் பிரதி யில் புதைந்திருக்கும் நாடகாசிரிய ரினது அடிப்படை நோக்கினை அதாவது நா ட கா சி ரிய ன து சிருஷ்டிக் கருத்தினை நெறியாளர் புரிந்து கொண்டு அதற்கு மாறா கச் சொல்லாதிருப்பது அவரது தலையாய பணியாகும்.
அடுத்து நெறி யாளருக்கு இருக்க வேண்டிய தகைமையின் இயல்புகளையும் அதன் பரிமா ணங்களையும் விளக்குவதன் மூலம் அவற்றை புரிவதற்கு அவசிய மான தகைமைகளின் இயல்பு களைக் குறிப்பாக உணர்த்தலாம். நெறியாளனின் செயற்பாட்டின் பரப்பினை மூன்று பகுதிகளாகம் பிரிக்கலாம்.
01. நாடக இலக்கியம் பற்றிய அறிவு அவசியம்.
02. நாடக நெறியாளருக்கு நாடகம் எழு துவ தி ல் முரள வே னும் ஆற் ற ல் இருக்க வேண்டும்,
அல்லது நாடகத்தில் உள்ள குறைகளையாவது அறிந்து திருத் தம் செய்யும் வல்லமையாவது இருக்க வேண்டும்.
03 நாடக நெறியாளர் தமது சாதனமான நெறியாள்கையின் மையப் பொருட்களான நடிப்பு, அரங்க நிர்மானம், ஒளி அமைப்பு
ஆற்றுகை
13

Page 9
என்பவற்றில் பூரண அறிவு பெற் றிருக்க வேண்டும்.
01 நாடக இலக்கியம் பற்றிய
அறிவு:
அதாவது சிறந்த நாடகாசிரி யர்களின் நாடக ஆக்க முறை களை நயக்கும் ஆற்றல் இருந் தால் மட்டும் போதுமானது. இவ் ஆற்றல் ஒரு நாடகாசிரியரின் பிர தியின் குறை நிறைகளை அளந் தறிய உதவும். இச் சந்தர்ப்பத் தில் நெறியாளர் ஒரு இலக்கிய விமர்சகனின் பணியினை மேற் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. மொழி, கூட்டுக்காட்சி யமைப்பு, கட்டுரை வடிவம் , உரு வகம், கரு, கட்டமைப்பு, ஆகிய வற்றின் மோடிகளை எவ்வாறு கையாளுவது என்பது பற்றி அறிந்து கொள்ள வேண்டும். அதாவது ஒரு நாடகத்தை ஒரு இலக்கிய வடிவமாக ஆராய்ந்து அதனைப் புரிந்து கொள்ளவும் ஒப்பு நோக்கவும் ஆய்வு செய்ய வும் ஆற்றல் பெற வேண்டும்.
02. நாடக நெறியாளருக்கு நாட கம் எழுதுவதற்கு ஒரளவேனும் ஆற்றல் இருக்க வேண்டும். அல் லது நாடகத்தில் உள்ள குறை களையாவது அறிந்து திருத்தம் செய்யும் வல்லமையாவது இருக்க வேண்டும்:
அவர் நாடக ஆசிரியர்களோடு கலந்து, தான் நெறியாள்கை செய்யும் போதும் நாடகம் பற்றிக் கலந்துரையாடும் சந்தர்ப்பம் ஏற் பட்டால் நாடகப் பிரதியை
4.
மீளாய்வு செய்து அதனைச் செழு மைப் படுத்தும் ஆற்றல் அவரிடம் இருக்க வேண்டும். பார்வையா ளரின் ஆர்வத்தையும் கவனத்தை யும் கவர்ந்து கொண்டிருக்கக் கூடிய அரங்க அம்சங்களை அவர் அறிந்து கொள்ளும் ஆற்றல் உடையவராக இருக்க வேண்டும் . நாடக நெறியாளர் பின்வரும் விடயங்களில் நாடகாசிரியனுக் குத் துணை புரியக் கூடியவராக இருக்க முடியும்.
O காட்சிகளை கூடுதலான அரங்கத் தன்மையுடையனவாக் குதல் .
த சரியான அழுத்தத்தைப் பெறும் வகையில் ஒரு பேச்சில் வரும் பிரதான சொற்களை உரிய இடத்தில் பயன்படுத்தக் கூடிய தாகச் செய்தல் .
O ஒரு நடிகர் சுலபமாகப் பேசக் கூடிய ஒரு வசனத்தின் லயத்தை சரி செய்தல்.
0 உரையாடல், செயல்கள், அசைவுகள் ஆகியவற்றின் நோக் கங்களைத் தெளிவு படுத்தல்.
O வெளி யே று த ல் க  ைள விரைவு படுத்தல்.
9 வரவுகளுக்கான ஆயத்
தங்களைச் செய்தல்.
இ உச்சக்கட்டத்தை இறுக்க மாக்குதல்.
e ஆகக் கூடுதலான அரங்கத்
தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக கதைச் சூழ்வின் தொடர்ச்சியில்
ஆற்றுகை

உள்ள காட்சிகளை மீள் ஒழுங்கு செய்தல்.
 ைமுக்கியமான நாடகப் பய னை ஊறு செய்யாத வகையில் வாக்கியங்களை எவ்வாறு ஏன்
வெட்ட வேண்டும் என்பதை அறிதல்.
03. நாடக நெறியாளர் தமது
சாதனமான நெறியாள்கையின்மை யப் பொருட்களான நடிப்பு, அரங்க நிர்மானம், ஒளியமைப்பு என்ப வற்றில் பூரணமான அறிவு பெற் றிருக்க வேண்டும்:
மேலும் நாடகத்தின் வெற்றிக் குப் பெருமளவில் துணை புரியும் புறக் கலைகளான இசை, நட னம், ஒவியம், சிற்பம் என்பவை பற்றிய அடிப்படை அறிவேனும் இருப்பது அவசியம். அரங்க வளர்ச்சி பற்றிய தெளிவான அறி வும் அவசியம். நடிப்பு மோடி களையும் பல்வேறு காலங்களின் தயாரிப்பு முறைகளையும் அறிந் திருக்க வேண்டும்"
புதிய புதிய கண்டு பிடிப்புக் களை ஆக்கத் திறத்தோடு கையா ளும் ஆற்றல் இருத்தல் வேண் டும். நடிகரின் செயல்களை அவர் கள் மேடையில் திறம்படச் செய்ய முடியாது நிற்கும் வேளைகளில் நெறியாளர் உரிய செயல்களை
எடுத்துக் கூறக் கூடிய கற்பனை வளம் உள்ளவராக இருக்க வேண் டும். சிறிய நுணுக்கங்களைப் புகுத்துவதிலும் இவ் ஆற்றல் இருக்க வேண்டும். மேடைப் பொருட்களையும் கைப்பொருட் களையும் கற்பனையோடு பயன் படுத்தி நாடகத்தின் பொருளைப் புலப்படுத்தும் திறன் வேண்டும்.
நெறியாளனின் செவி, குரலின் ஏற்ற இறக்கங்களையும் அவற்
றால் விளையும் வேறுபட்ட உணர்வுகளையும் துல்லியமாக இனங்கண்டு கொள்ளும் ஆற்றல் உடையதாகவும், க ண் கள் , கோடு, பி ன் ட ம் , வடிவம் ஆகியவற்றிற்கும், நுண்ணுணர் வுக்கும் இ  ைட யி ல் உள் ள
தொடர்பையும் சரியாக அறிந்து வெளிப்படுத்த உதவும் ஆற்றலும் கொண்டதாகஇருக்க வேண்டும்.
நடிகர்களை மேடையில் வேக மாகவும் சரியாகவும் உரிய இடங் களில் நிறுத்திக் கூட்டுக் காட்சி அமைப்புக்களை வலிமையோடும் அழகாகவும் அமைக்கும் ஆற்றல்
இருக்க வேண்டும் . அத்துடன் பா த் தி ர ப் பொருத்தமான நடிகரைத் தெரிதல் நிகழ்"களத்
தின் வரைபடத்தை அமைத்தல் போன்ற விஷயங்களிலும் நெறி யாளருக்கு ஆற்றல் இருக்க வேண் டும்.
நாடக சபைகள்
பாமர மக்களின் பல்கலைக்கழகம்
. கவியரசி சரோஜினிதேவி
ஆற்றுகை
1S

Page 10
இம்மனுவல் நாட்டுக்கூத்து
எமிலியானுஸ் எல்விஸ், B. A
பாஷையூரைப் பிறப்பிடமாகக் கொண்ட முத்தாரக் கவிஞன் ஆசீர்வாதம் தேவசகாயம்பிள்ளை (செகராசசிங்கம்) எழுதிய கூத்து நூலானது 1994 ல் அச்சேற்றப்பட்டு, 1995 சித்திரை 29 ல் வெளி யீடு செய்யப்பட்டுள்ளது. கூத்தின் தொடக்கத்தில் சாம்புவன் மனைவியின் பாடலினூடாக,
*" பாடினார் நாடகத்தைப் பாசூர்
பாவலனாம் செகராசசிங்கம்.""
கூத்தை எழுதியவர் பெயர் தென்படுவதனைக் காணலாம். அத் துடன் சாம்புவன், சாம்புவன் மனைவி நாடகத்தை தொடக்கு வ தோடு அவர்களின் பகுதி முடிவடைகின்றது. இந்நூலின் பெயர் 'இம்மானுவல் நாட்டுக்கூத்து' என்று எழுதப்பட்டுள்ளது. இது ‘தென்மோடி நாட்டுக்கூத்து' என்றவகைக்குள் அடங்கும். இங்கு ‘தென்மோடி" என்ற பதம் நூலின் எப்பகுதியிலும் வெளிக்காட் டப் படவில்லை.
கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களிடையே கிறிஸ்தவ விழுமியக் கருத் துக்களைக் கொண்டதாகவும், புனிதர்களின் வாழ்க்கையைக் கொண் டதுமான கதைகளே பெரும்பாலும் தென்மோடியில்ச் சேர்க்கப்பட் டுள்ளன. இந்த வகையில், இம்மனுவல் தென்மோடி நாட்டுக்கூத்தும் இத்தாலியைச் சேர்ந்த கலிலேயன் என்கின்ற இளைஞன் ஞானத் தீட்சை பெற்று கத்தோலிக்க திருமறையிற் சேர்ந்து இம்மனுவல் என்ற பெயரைப் பெற்று வாழ்வதனால், ஏனையவர்களால் வெறுக்
6 ஆற்றுகை
 

கப்பட்டு அவர் பாழ்ங்கிணற்றில் எறியப்பட்டு, பின்பு காப்பாற்றப் பட்டு கிரேக்க மன்னன் அவையில் சேனாதிபதியாகி, மடுத்தீன் அரசனுக்கு திறை செலுத்தாததால் போரிட்டு, தம்பி ஞானசீலனால் சிறைப்பிடிக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளாகும் நேரத்தில், தங்கை ஞானசோதி அண்ணன் என்பதை அறிந்து விடுதலை செய்கின்றான் இதுதான் கதையின் சாராம்சம்.
இந்நூலுக்கு முன்னுரையினை தூயகவிஞன் யாழ் ஜெயம் (விக்ரர்) அவர்களும், ம தி ப் பு ைர யி  ைன யாழ். பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத் தலைவர் பேராசிரியர் சண்முகதாசும், அணிந்துரையினை யாழ். பல்கலைக் கழக நுண்கலைத் துறைத் தலைவர் பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்களும் எழுத புனிதவளன் கத்தோலிக்க அச்ச கத்தினர் அச்சிட்டுள்ளனர்.
இன்று யாழ்ப்பாணத்தில் தென்மோடி உயிர் வாழுகின்ற தென் றால், அதிற் பாஷையூருக்கும் முக்கிய பங்குண்டு. யாழ்ப்பாணத் திலே தென்மோடி பல நூற்றுக்கணக்கில் ஆடப்பட்டாலும் ஒரு சிலவே அச்சுவாகனம் ஏறியுள்ளன. (உ- ம்) தேவசகாயம்பிள்ளை, மரியதாசன், எஸ்தாக்கியார், மனம்போல் மாங்கல்யம், கண்டி யரசன், விசயமனோகரன். இம்மனுவல் கூத்தானது, 'இம்மனுவல் இளவரசன் அம்மானை' என்ற நூலை வைத்தே யாக்கப்பட்டுள் ளது, அத்துடன் புலவர் எழுதுபவராகவும், இராகத்தினை அண் ணாவியார் தீயோ இராசேந்திரம், சிங்கத்துரை குணசிங்கம், வஸ் ரியாம்பிள்ளை அல்பிறட் என்போர் வழங்கியுள்ளமையும் குறிப்பிடத் தக்கது. தேவசகாயம்பிள்ளை தென்மோடி நாட்டுக்கூத்தில் முதன் முறையாக இராகதாளம் சேர்க்கப்பட்டுள்ளது. அதே போல் இம் மனுவல் கூத்திலும் இம்முறை கையாளப்பட்டுள்ளது. தற்போதய கூத்து நூல்களில் இம்முறை பின்பற்றப்பட்டு வருவதனைக் காண லாம்.
பல தடவைகள் மேடையேறிய பின்பு இக்கூத்து எழுதப் பட் டுள்ளதனால், இதனை இராகத்துடன் பாடுவதில் எந்தவித சிக்க லும் இருக்காது. இராகம் தெரிந்தோருக்கு இதனைப் பாடி மகிழ்வு தற்குக் கிடைத்த வரப்பிரசாரம் எனக் கூறலாம். இவரின் நூலுக் கான சொற்கோப்புக்களை யாழ் ஜெயம், 'சொல்லச் சொல்ல சுவைக்கும் வெல்லத் தமிழ்ச் சொற்கள் துள்ளித் துள்ளி வந்து இன் பத்தை அள்ளி அள்ளிச் சொரிந்தன" என்கின்றார்.
நாட்டுக்கூத்து மரபின் அமைப்பியல் முறைகளான பாத்திரங்
களின் அறிமுகம், பிரச்சினை, கருக்கூட்டல், பிரச்சினை உச்ச நிலையடைதல், உச்சநிலையில் பாத்திரங்களின் முரண்பாடு இறுதி
ஆற்றுகை 17

Page 11
யில் பிரச்சினை நல்லமுறையில் நிறைவேற்றுதல் கூத்தின் கதை யமைப்பில் நன்கு பேணப்பட்டுள்ளதாக பேராசிரியர் கா. சிவத்தம்பி அணிந்துரையில்க் கூறியுள்ளார்.
தற்காலங்களில் எவ்வகை நாடகங்களானாலும், காட்சி பிரித் துப் பார்க்கும் தன்மை காணப்படுகின்றது. ஆனால், இக்கூத்தில் காட்சிகளாக்குதலானது நிகழ்வுகள் நடக்கும் இடங்களைச் சுட்டிக் காட்டுவதனூடாக விளக்கிக் காட்டப்படுகின்றது.
கூத்துக்கள் இயற்றப்படும் போதும், அளிக்கை செய்யப்படும் போதும், வெண்பா முதலில் பாடப்படும். ஒவ்வொருவரும் தமது குல தெய்வங்கள் மீது பாடுவர். இங்கு, சிறந்த முறையில்ப்பாடி யும் சிறப்பாக கூத்தினை மேடையேற்றவும், சொற்பிழை பொறுத்து அருள்தரும்படியும் இயேசுவை வேண்டுவதனை இந்நூலிலே காண өрптub .
கூத்து நூலின் இறுதியிலே சிறந்த முறையில் ஒப்பேறியதனால் தம் தெய்வங்களுக்கு நன்றி கூறியும்,
* 'இம்மனுவல் சரிதை மங்களம் - இதை
இயற்றினோர் பயிற்றினோர்க்கும் மங்களம் நன்மனதாய்ப் படித்தோர்க்கும் மங்களம் - இதில் நாடியே நலம் சிறக்க மங்களம். **
என்று நூலை நிறைவு செய்வதனைக் காணலாம். பொதுவாக, மேடையேற்றத்தின் போது காப்பு விருத்தம் அண்ணாவியார் படித் துத் தான் கூத்தினை நிறைவு செய்வார், தொடக்கத்துக்கும் இதே போலக் காப்பு வெண்பா அண்ணாவியரால் பாடப்படுவது வழமை.
வாய்மொழி மூலமாகவும். ஏடுகளில்ப் பேணப்பட்டு ஆடிவந்த கூத்துக்களானது பல அழிந்து இல்லாமற் போயுள்ளதனைக் காண லாம். இதனால், தமிழ் நாடகத் துறையின் தொன்மையினையும், அதன் போக்கினையும் முற்றாக அறிவதிற் சிரமங்கள் ஏற்பட்டுள் 63.
இத்தகைய ஏடுகள் தூலுருப் பெறும் போது அவை பாதுகாக் கப்படுவதோடு மேடையேற்றவும், படித்துப் பயன் பெறவும் இதன் மூலம் வழிவகுக்கப்படுகின்றது. இம்மனுவல் தென்மோடிக் கூத்தா னது இன்றைய காலத்தின் தேவைக்கு சிறந்ததொரு நூலாகக் காணப்படுவதோடு நாடக மாணவர்களுக்கும், நாடக ஆர்வலர்க ளுக்கும் சிறந்ததொரு கொடை என்று கூறுவது பொருத்தமான தாகும.
8 ஆற்றுகை

வீதி நாடகம்
ஒரு அறிமுகம்
கலாநிதி சி. மெளனகுரு
வீதி நாடக வடிவம் இப் போது உலக நாடக அரங்கில் முக்கியமான ஒன்றாகக் கருதப் படுகிறது.
வீதி நா ட கம் எ ன் பது இந்திய, இலங்கை மக்களுக்குப் புதிய ஒன்றல்ல. இந்துக் கோயில் களில் நடைபெறுகின்ற சூரன் போரை நினைத்துப் பாருங்கள். மரத்தாலான சூரன் சிலை, வேட மிட்ட நாரதர், வீரவாகு தேவர், தேவகணங்கள், கோயிலிலுள்ள முருகன் சிலை, இவையே அதிற் பங்குகொள்ளும். கோ யி லின் வெளி வீதி முழுவதும் மேடை, மக்கள் சிலவேளை பார்வையாள ராய் இருந்து சூரன் போரை ரசிப்பர். சிலவேளை பங்காள ராகி சுவாமி தூக்குவர், வணங் குவர். எந்தவித பந்தாக்களுமில் லாமல் பார்வையாளர்களையும் நடிகர்களையும் நெருக்கமாக்கி
எடுத்துக் கொண்ட விடயத்தை மக்கள் மனதில் தொற்ற வைத்து விடும் பண்பு வீதி நாடகத்துக் குண்டு. சூரன் போரிலும் அத னையே காணுகிறோம். சூரன் போரை நாம் எவரும் வீதி நாட கமாக நினைத் தும் பார்ப்ப தில்லை. ஏனெனில் நமக்கு அது ஒரு சமயச் சடங்கு.
இதே போலத்தான் கிறிஸ் தவர்கள் ஈஸ்டர் நா ட் களி ல் Lug:Tair bit lash (Passion play) போடுவர். யேசுவை கல்வாரி மலைக்கு அழைத்துச் செல்லும் காட்சி தெருக்களிலே நடை பெறும் . மலையக மக்கள் காமன் கூத்தையும் அதில் வரும் லாவணிப் பாடலையும் தெருவுக்குத் தெரு நடத்துவர். தமிழ் நாட்டிலே கூத்தை தெருக்கூத்து என்று தான் அழைப்பர். காரணம் அது தெருவிலே நடக்கிறது. தெரு வுக்கு இன்னொரு பெயர் வீதி, எனவ்ே தெருக்கூத்தும் ஒருவகை யில் வீதி நாடகமே என்று வாத மிடுவர் சிலர்.
உலக நாடக வரலாற்றை எடுத்து நோக்கின் இத்தெரு நாடக, அல்லது வீதியில் நிர்டகம் போடும் மரபு எல்லா நாடுகளிலும் இருந்துள்ளது. நாடகம் வளர்ந்த கிரேக்கத்திலே பண்டைக் காலத் தில் தெரு வழியே நடிகர் ஆடிப் பாடி வருதல் மரபு. மத்திய காலத்தில் இங்கிலாந்தில் கோயி லுக்கு வெளியேதான் நாடகத்தின் காட்சிகள் இடம் பெறும் .
19
ஆற்றுகை

Page 12
ஆனால் இன்று வீதி நாடகம் எனக் குறிப்பிடப்படுவது வேறு. பண்டைய வீதி நாடகங்களில் இருந்து; உருவையும், நிகழ்த்தும் முறைகள், நுணுக்கங்கள் சிலவற் றையும் இன்றைய வீதி நாடகங் கள் பெற்றிருந்தாலும், உள்ள டக்கத்திலும் நிகழ் முறைகளிலும் பண்டைய வீதி நாடகங்களில் இருந்து இவை வேறுபடுகின்றன. இன்றைய வீதி நாடகங்கள் நவீன நாடகப் போக்கின் ஒரு வளர்ச்சி நிலையாகும்.
1917 ல் ரஷ்யப் புரட்சிக்குப் பிறகுதான் இந்த நவீன வீதி நாடக மரபு தொடங்கியது. இந்த நாடக மரபினை ஆரம் பித்து வைத் த வர் ‘மேஜர் ஹோல்ட்" என்பவராவார். உலக நாடக உலகில் அவர் ஒரு திருப்பு மையம், இவர் முதன் முதலில் ரஷ்யக் கவிஞரான மாயாகோவ்ஸ் கியின் "மிஸ்ரறி கெளHலே" என்ற நாடகத்தை வீதியில் நிகழ்த்திக் காட்டினார்.
நாடக உலகில் பல பரி சோதனைகள் மேற்கொண்டு புதுப்புது நாடக உருவங்களை உருவாக்கிய இவர் அன்றைய ரஷ்ய ஆட்சியாளர்களால் உருவ வாதி என்று குற்றம் சாட்டப் பட்டதுடன் கொலையும் செய்யப் பட்டார் என்பது வரலாறு. இவர் நடிப்பில் வயோ மெக்சானிஸம் Bio Mechanism) GT GIgyuh ugi முறையைப் பயன்படுத்தினார். அதிக முக்கியத்துவமளித்தார். இந்த வீதி நாடகத்தில் அவர் சர்க்கஸில் (circus) உடலைக்
20
கொண்டு செய்யும் சாகஸ் விளை யாட்டுக்களைப் ப யன் படுத்தி புரட்சிகரமான கவிதை ஒன்றை ஆயிரக்கணக்கான மக்க ளு க்கு முன் வீதி யி ல் நிகழ்த்தினார். இதுவே வீதி நா ட க த் தி ன் தொடக்கமாகும். (இந் நாடகம் சிங்களத்தில் தம்மஜா கொடை யினால் " " மொன்சம்கினி கனி' என்ற பெயரில் மேடையிடப் பட்டது)
இத்தகைய நாடகங்கள் தய ரிக்க, தயாரிப்புச் செலவுகள் குறைவு, காட்சியமைப்பு ஒலி ஒளி, அலங்காரங்கள் தேவையில்லை. நடிகனுக்குத் தேவையான உடல், குரல், கற்பனை இவற்றை மூல தனமாகக் கொண்டு நாடகத்தை நிகழ்த்தி விடலாம். நாடகத்தில் வரும் மரம், கதிரை, மேசை, மிருகங்கள், காட்சிகள் போன்ற மேடை பொருட்களை மனித உடல்மூலம் காட்டிவிடலாம். குர லும் உடலும் நன்கு வளைந்து கொடுக்க வேண்டும். இதற்குப் பயிற்சி மிக அவசியம். வீதி நாடக நடிகன் மேடை நடிகனை விட அறிவும், பயிற்சியும், தேர்ச் சியும் மிக்கவனாய் இருக்க வேண் டும்.
இத்தகைய நாடகங்கள் பின் னால் மக்கள் மத்தியில் செல் வாக்கடைந்தன. ரஷ்ய ரா வில் இவை தொழிற்சாலை வாசல் கள், சந்தைகள், வீதியோரங்கள் ஆகிய இடங்களில் மேடையே றின. நாடக அரங்கை நோக்கி மக்கள் செல்வதுதான் வழமை.
ஆற்றுகை

இங்கு அரங்கு மக்களை நாடி வந்தது.
இந்நாடகங்கள் அன்றாட நிகழ்வுகளை, வாழ்க்கை முறை களை, முன்னேற்றங்களை விளக் கியது; விமர்சித்தது. இதனால் இது ஒருவகையில் சமூக விமர்ச கர்களின் தி யே ட் டராகியது. அடக்கப்பட்ட மக்களின் தியேட் டராகியது. இதனை குறட்டோ
விஸ்கி என்ற நாடக புலமையா
னர் வறுமை அரங்கு (Poor Theatre) என்று பெயரிட்டு வளர்த் தார். மரபு நாடகங்களை இவை மறுதலித்தன. மக்களையும் நடிக ரை யும் பிரிக்கும் திரையினை இவை தூக்கி எறிந்து விட்டன.
1920 களில் இத்தகைய நாட கங்கள் உலகின் பல இடங்களுக் கும் களில் இது பெரும் செல்வாக்குப் பெற்றது. சீனப் புரட்சி யி ன் போது மாஓவின் தலைமையில் நடைபெற்ற நீண்ட பயணத்தில் இவ்வீதி நாடகங்கள் மக்களை யும், மக்கள் இராணுவத்தையும்
ஊக்குவிக்கின்ற சாதனமாகச் செயற்பட்டன"
ஸ்பெயினின் உள்நாட்டுப்
போரின் போதும், 45 வருட காலம் வியட்னாமியர் பிரான்சுக் கும், ஐக்கிய அமெரிக்காவுக்கும் எதிராக நடத்திய போரி ன் போதும், கியூபாவின் புரட்சிக்குப் பின்னரும் , லத்தீன் அமெரிக்க நாடுகளில் இன்றுவரையும் வீதி நாடகங்கள் பிரச்சினைகளை மக்
பரவின. சீனாவில் 1920
களுக்கு உரைப்பதில் முக் கி ய பங்கை வகித்ததுடன், தாமாக வளர்ச்சியும் பெற்றன. ஐக்கிய அமெரிக்காவில் மெக்ளிகன் விவ சாயிகளும், நீக்ரோக்களும் தமது பிரச்சினைகளை வெளிப்படுத்த ஒரு சக்தி வாய்ந்த கருவியாக இதனைக் கையாளுகின்றனர்.
இந்தியாவில் இத்துறையில் ஈடுபட்டவர்களுள் இருவர் பெயர் கள் 'முக்கியமானவை. ஒருவர் பாதல் சர்க்கார், இன்னொருவர் சவ்தார் ஹஸ்மி, பாதல் சர்க் கார் இதனை மூன்றாவது அரங் கென்று அழைக்கிறார். மரபுவழி நாடக அரங்கு முதல் வகையினது. ஐரோப்பாவிலிருந்து வந்த நவீன
நாடக அரங்கு இரண்டாவது வ  ைக யி ன து. இவையிரண்டும் அவற்றிற்குரிய அம்சங்களுடன் நடைவெறுவது. இவையிரண்டு
மேயில்லாமல் மக்கள் மத்தியில், திரைகள் இல்லாமல் நிர்வாண மாகச் செல்லும் இதனை மூன் றாவது அரங்கென்றும். ஏழைக ளைப் பெரும்பான்மையாகக் கொண்ட இந்தியாவுக்கு இந்த மூன்றாவது அரங்கான ஏழை அரங்குதான் மிக ப் பொருத்த மானது என்கிறார் அவர் அவ ரது நாடகங்கள் பல பிரசித்த
DIT GATGC) af
சவ்தார் ஹஸ்மி டிய சங்கம் ஸ்தாபித்து வீதி நாடகம் செய்தவர். அவருடைய சமூக விமர்சனங்கள் அதிக சக்தி வாய்ந்தவை. முடியாத அவரது எதிரிகள் அவ
ஜனநாட
அதைப் பொறுக்க
ஆற்றுகை
2

Page 13
ரைக் கொலை செய்தனர். நாட கத்திற்காக உயிர் ஈந்தவர் அவர்.
தமிழ் நாட்டிலே ந. முத்து சாமி கூத்துப் பட்டறை என்ற அமைப்பை நிறுவி வீதி நாடகங்
கள் நிகழ்த்தி வருகிறார். ஞாநி
போன்றோரும், இதில் ஈடுபடு கின்றனர். இலங்கையைச் சேர்ந்த இளைய பத்மநாதன் என்பவரும் தமிழ்நாட்டில் வீதி நாடகங்கள் நடத்துபவர்களில் முக்கியமான வர்.
சிங்கள நாடக உலகில் வீதி நாடகத்தின் முன்னோடி காமினி சத்தட்டுவகம ஆவார். பேரா தனை பல்கலைக்கழக ஆங்கிலத் துறையில் விரிவுரையாளராகக் கடமையாற்றும் இவர் 16 வரு டங்களாக ஒரு வீதி நாடகக் குழுவை வைத்து இயக்கி வருகி றார். இவரைத் தொடர்ந்து சிங் களத்தில் சில வீதி நாடகக் குழுக் கள் தோன்றி உள்ளன.
இலங்கையில் தமிழர் மத்தி யில் இத்தகைய வீதி நாடகங்கள் யாழ்ப்பாணத்தில் இடம் பெறு கின்றன. கோயில் வீதிகளிலும், ஊர்மன்றுகளிலும் தெருவோரங் களிலும் அவை நிகழ்த்தப்படுகின் றன. 1985 க்குப் பின்புதான் தமிழர் மத்தியில் வீதி நாடகங் கள் இடம் பெறலாயின. அவை இன்றைய பிரச்சினைகளை எடுத் துரைப்பனவாயுள்ளன. உ - ம் * “Drittuu Lorrøör””
வீதி நாடகம் இன்று மிகவும் பிரசித்தமான, இ லகு வான நாடக வடிவமாகக் கருதப்படுகி றது. இதனை நிகழ்த்துவோருக் குத் தேவையான அ ம் சங்க ள் இவை. ஒன்று நாடகம் பற்றிய
அறிவு: இரண்டு சமூக உணர்வு: மூன்று சமூக ஈடுபாடு, நான்கா வதும், முக்கியமானதும் ஒன் றுண்டு. அதுதான் துணிச்சல் .
பல்கலைக் கழகம்;
நாடகம் கலைக்கரசு; நாட்டின் நாகரீகக் கண்ணாடி மக்களின் உள்ளுணர்ச்சியைத் தூண்டி உள்ளத்தில் புதைந்து கிடக்கும் அன்பையும் w வெளிப்படுத்தி மக்களை பண்படுத்தும் சிறப்பான கலை நாடகக *சில கண், காது, மனம் மூன்றையும் தன்பால் இழுத்துவைத்துக் கொள்ளும் ஒர் புதுமைக் கலை நாடகக் கலை.
அறிவையும் தாய்மையையும்
- அவ்வை தி. க. சண்முகம்
24
ஆற்றுகை

(C
))
(( )
( நாடகம் ) !) LLLLL) ஆக்கம் ம.நிலாந்தர் LL_டL
υάυρ ταινιών η δρυα υγι θα υα θα ψι δρυα χα υα κι
))
* அகதிகளின் கதை' ((
முன்னுரை
அழகானதேயெனினும் நமது பூமி இப்பொழுது அகதிகளை உடைய ஒரு கிரகம். பூமியிலிருக்கும் ஆசியாக் கண்டத்தை கடவு ளர்களின் கண்டம் என்று கூறுவார்கள். இன்று பூமியிலிருக்கும் பெரிய பிரதான மதங்கள் நான்கும் ஆசியாவில் தோன்றியதனாலேயே ஆகும். ஆனால் கடவுளர்களின் கண்டமேயெனினும் ஆசியா, பூமி யிலேயே அதிகம் உள்நாட்டு அகதிகளையுடைய இரு கண்டங்களில், ஒன்றாயிருக்கிறது. (மற்றது ஆபிரிக்கா), ஆசியாவிலிருக்கும் சிறிய இலங்கைத் தீவை எல்லோருமே தீவுகளின் ராஜகுமாரி என்று கூறு கிறார்கள். ஆனால் கவர்ச்சியானதேயெனினும் இச்சிறுதீவு இன்று அகதிகளை அதிகமுடைய ஒரு தீவாகிவிட்டது.
இச்சிறு தீவிலே, தமது தாய்நிலத்தை மீட்பதற்காக போராடிக் கொண்டிருக்கும் தமிழர்களைப் பொறுத்தவரை அகதி வாழ்வு எனப் படுவது அவர்தம் வாழ்வின் ஒரு பகுதியாகவே மாறிவிட்டிருக்கிறது. அநேகமாக ஒவ்வொரு தமிழருக்கும் அகதிவாழ்வு பற்றிக் குறைந் தது குறுகியகால அனுபவமாவது உண்டு. தமது தாய்நிலத்திலேயே லட்சக்கணக்கான தமிழர் கள் இடம்பெயர்ந்து வாழ்கிறார்கள். இந்தியாவில் அகதிகளாகப் போன தமிழர்கள் கைதிகளாக வைக்கப் பட்டிருக்கிறார்கள். ஐரோப்பாவில் வேண்டாத விருந்தாளிகளாக, எந்த வினாடியும் கேவலமான விதங்களில் நாடு கடத்தப்படக் கூடியவர்களாக தமிழர்கள் காணப்படுகிறார்கள்.
இப்படித் தமது வாழ்நிலத்திலிருந்து வேரோடும் விழுதுகளோ டும் பிடுங்கி எறியப்பட்டு சொந்த நாட்டிலும், பிறநாடுகளிலும்
ஆற்றுகை 23

Page 14
அந்தரித்து நிற்கும் லட்சக்கணக்கான தமிழர்களைப் பற்றியதே இச் சிறு நாடகம் .
ஈழப்போரில் ஒப்பீட்டளவில் இரண்டாவது ஈழப்போரே அதி களவு அகதிகளைக் கண்டிருக்கிறது. தமது தாய்நிலத்தின் தென் பகுதியில் தமிழர்கள் இடம்பெயர்ந்து காடுகளில் வசித்தார்கள். வடக்கில் அகதிமுகாம்களிலும் தற்காலிக குடியிருப்புக்களிலும் உற வினர், தெரிந்தவர் வீடுகளிலும் தமிழர்கள் வசித்து வருகிறார்கள். குறிப்பாக வடக்கில் வலிகாமத்தின் குறிப்பிட்டளவு பகுதியும் அநேக மாக முழுத் தீவுப் பகுதியுமே இடம்பெயர்ந்துவிட்டது. ر
இரண்டாவது ஈழப்போரின் அகதிகளில் அதிகளவு அகதிகள் இடம் பெயர்ந்தமை “ஒப்பறேஷன் வலம்புரி" எனப்படும் பூநகரி வழியை மூடிய ராணுவ நடவடிக்கையின் போதே நிகழ்ந்தது. வலம் புரியின் அகதிகள் தீவுகளிலிருந்து திடீரென்று ஒரு பகலில் யாழ் நகரை வந்து நிறைத்தார்கள். இதற்கும் சற்றுப் பிந்தியே “அகதி களின் கதை' உருவாகத் தொடங்கியது.
உடுவில் மகளிர் கல்லுரரி மாணவிகளால் நடிக்கப்படுவதற்காக ** அகதிகளின் கதை' எழுதப்பட்டது. அப்பொழுது வலம்புரியின் அகதியாக வந்திருந்த கவிஞர் சு. வில்வரத்தினம் எங்களோடிருந் தார். அகதிவாழ்வின் துயரங்களை அதிக பட்சம் மனிதநிலைப் படுத்திச் சிந்திப்பதற்கு அந்த அகதிக் கவிஞர் எமக்கு ஒருவகை மாதிரியாக உதவினார். (அவரே நாடகத்துக்குரிய வணக்கத்தையும் மங்களத்தையும் எழுதித் தந்தார்.)
தவிர, உடுவில் மகளிர் கல்லூரியில் நாடகம் நடிக்கப்படும் பொழுது நடிகையருள்ளும் அகதிகள் இருந்தார்கள். அவர்களிட மிருந்து பெற்ற நேரடியான வாக்கு மூலங்களும் நாடகத்தை உரு வாக்குவதில் உதவின. இவற்றோடு எல்லாவற்றையும் விட முக்கிய மிாக, ஒரு ஆரம்ப உருவரையை வைத்துக் கொண்டு நடிக்கப்படும் பொழுதே திருத்தித் திருத்தி எழுதப்பட்டு ஒரு முழுமையை அடைந் ததே இந்த எழுத்துரு ஆகும்.
அகதிகளின் அந்தர நிலையை அப்படியே கலப்பின்றிக் கொண்டு வருவதே நாடகத்தின் நோக்கம். சாத்தியமற்ற வாக்குறுதிகளை யோ, சுய திருப்தியின் பாற்பட்ட பிரகடனங்களையோ பாத்திரங் களிற்கூடாகக் கூறவைப்பதன் மூலம் அகதிகளின் மெய்யான துய ரங்களிற்கு துரோகமிழைக்கப்படுவது இந்த எழுத்துருவில் இயன் றளவு தவிர்க்கப்பட்டிருக்கிறது என்பதினாலேயே நாடகம் கேள்வி களுடனே முடிகிறது.
2. - ஆற்றுகை

சோகம் கோபமாக மாறும்போதுண்டாகும் மெளனமே இந்த நாடகத்தின் தொனி. எனவே, பாத்திரங்கள் கதைக்கும் போதும், அசையும் போதும், பாடல்களின் போதும், எ ல் லா வற்றி ந் கும் இடையிலும் அடியிலும் இந்த மெளனமே தொனித்துக் கொண் டிருக்க வேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பாயிருந்தது. நாடகத் தின் ஆதார இசையும் இந்த மெளனத்தின் நீட்சியாக அமைவதையே நாம் விரும்பினோம்.
1992 ல் உடுவில் மகளிர் கல்லூரியில் முதல் முதல் மேடையேற்றப்பட்டி இந்நாட கத்தை சி. ஜெய்சங்கர் நெறியாள்கை செய்ய கோ. சத்தியன் இசையமைத்திருந்தார்.
வாத்திரங்கள் * ஒரு குடும்பம் தந்தை, தாய், பிள்ளை (சிறுமி)
* நடுத்தர வயதுள்ள அல்லது சற்று மூத்த மூன்று பெண்கள்
இவர்களை X, Y, Z எனப் பெயரிடலாம். * இரண்டு தம்பதிகள் நடுத்தர வயதுள்ளவர்கள் அல்லது
சற்று மூத்தவர்கள் - தம்பதி A (கணவன் A, மனைவி A) தம்பதி 8 (கணவன் B, மனைவி B}
* தனியனான ஒரு ஆண் - C எனலாம்.
* தனியனான ஒரு கிழவி.
வாழ்த்து உண்டென்ற வாசலுக்கு ஒளி விளக்கே உள்ளகக் கோயிலின் உயிர் விளக்கே எங்கெங்கும் ஒளிர்கின்ற அழகிருப்பே இன்பமே தேடிடும் வாழ்விலக்கே என்னிருப்பே உன்னிருப்பே இனிதிருப்பே வாழ்கவே வாழ்கவே, வாழ்கவே.
வாழ்த்து கவிஞர் சு. வில்வரத்தினம் எழுதியது.
ஆற்றுகை 25

Page 15
(மேடையின் பின்னால் குழம்பிய கலவரமான கூச்சல் கேட்டல் கூச்சல் படிப்படியாக அதிகரித்தல். அதிகரித்துச் செல்லும் கூச்சலோடு பாத்திரங்கள் மேடையுள் இழுபட்டபடி பிரவேசித்தல். கூச்சலை மீறிக் கெண்டு சில குரல்கள் சன்னமாக ஒலித்தல்.) ண ஆச்சி, எங்க ஆச்சியைக் காணேல. - உடுத்த உடுப்போட ஓடிவந்தாச்சு. - தம்பி! தம்பி!! - வீட்ட பூட்டக் கூட இல்லை. - கறி அடுப்பில அப்படியே விட்டிட்டு ஓடி வந்தாச்சு . ண ஒரு பொருளையும் எடுத்துக் கொண்டு வரேல்ல.  ைஅம்மா! அம்மா !! அம்மாவைக் காணேல்ல. (திடீர் என வெடிச் சத்தங்கள், குண்டுச் சத்தங்கள், பாத்திரங்கள் பதட்டமடைதல். தன்னியல்பாக நிலத்தில் வீழ்ந்து படுத்தல்.)
(நிலத்தில் பதுங்கிய பாத்திரங்களுக்குள் இருந்து குரல்கள் ஒலித் தல்.)
அம்மா. அம்மா. அம்மாவைக் காணேல. ஆச்சி! எங்கயண இருக்கிறாய்? தம்பி! தம்பி! s a A gy
(பதுங்கியிருந்த பாத்திரங்கள் மெல்ல எழுதல்.)
தாய்: போகேலாது. தந்தை: : மெயின் றோட்டுக்கு அங்கால போகேலாது.
Χ : பாலம் பிளந்திட்டுது. Y கரையில நிண்டு பா (ர்)க்கேக்க பு()ைக தெரியுது. Z ஒ. ஊர் எரியுது.
ஐயோ எங்கட அவர் பிள்ளயளக் கூப்பிடப் போனவர் இன்னும் வரேல. Z எங்கட ஆச்சி வரமாட்டன் எண்டிற்றா. Y : இஞ்ச பார் உடுத்த உடுப்போட ஓடி வந்தாச்சு. மனைவி-B: மெய்யப்பா வரேக்க கோழி களை யும் கொண்டே
வந்தனியள்.
கணவன்-B: சும்மா இரு, மனிசன் தப்பினது அருந்தப்பு, அதுக்க
ஆர் கோழியளப் பார்த்தது.
26 ஆற்றுகை

தந்தை
தாய்
LITTL6i)
ஆற்றுகை
தம்பி! தம்பி!. தம்பி என்னோட வந்தவன் பிறகு
காணேல கண்டனியளே! இனிப் போகேலாது அண்ண.
ஐயோ! ஐயோ!! கடவுளே! கடவுளே! நாங்கள் எங்கட வீடுகளுக்கு இனிப் போகேலாதோ. (இப்பாடல் யேசுநாதரின் சிலுவைப் பாடுகளைக் குறித்து கத்தோலிக்கர்களால் பாடப்படும் பசாம் இசை மெட்டை நினைவில் வைத்து எழுதப்பட்டது.) முற்றுகையிடப் பட்டவர்கள் நாங்கள் முறிக்கப்பட்ட எல்லா உடன்படிக்கைகளினதும் முதற் பலிகளாயானவர்கள்.
கனவு காண்பவர்களாய் பொய்யான சமாதானத்தால் குழப்பி விடப்பட்டவர்களாய்
பூமியிலெங்கும்
அகதிகளாய்
அழைக்கப்படாத விருந்தாளிகளாய் அவமானப் பட்டவர்கள் நாங்கள்.
எங்கள் வீடுகளில்
முதியோர்களே
தனித்து விடப்பட்டுள்ளார்கள்
எங்கள் வீடுகளில்
நாய்களே ஊளையிடுகின்றன.
எங்கள் வீடுகளில்
விளக்குகள் எரிவதேயில்லை எங்கள் கிராமத்தின் வீதிகள் இறந்து போய்விட்டன. ஐயோ. அறுவடைக் காலத்தில் எங்கள் வயல் பறி போனது &Guit......
மீன் படும் காலத்தில் எங்கள் கடல் பறி போனது.
27

Page 16
தந்தை!
தந்தை:
தந்தை:
ge . . . . . கைவிடப்பட்டதெங்கள் கிராமம் காட்டிக் கொடுக்கப் பட்டவர்கள் நாங்கள் நாங்கள் காட்டிக் கொடுக்கப் பட்டவர்கள். (பாடல் இசை தேய (அல்லது இசை உச்சத்துக்குப் போய் திடீரென்று நின்றுவிட) தந்தை தனது குரலை படிப் படியாக உயர்த்தியபடி எழுதல்,
நி வா ர ணம்
நி - வா - ர - ண - ம்
நி - வா - ர - ண - ம்
முதலாம் கட்டம் உலர் உண்வு. (ஏனைய பாத்திரங்கள் நிவாரணம் பெற வரிசைக்கு வரு தல். நிவாரணம் பெற்று முடிந்ததும் தங்களுடைய பழைய நிலைகளிற்குத் திரும்புதல்). இரண்டாம் கட்டம் மண்ணெண்ணை. (முன்பு போலவே ஏனைய பாத்திரங்கள் வரிசைக்கு வரு தல், நிவாரணம் வாங்கிக் கொண்டு பழைய நிலைகளிற். குத் திருப்புதல்), மூன்றாம் கட்டம். பால்மா. (மறுபடியும் பாத்திரங்கள் வரிசைக்கு வருதல், நிவாரணம் வாங்கிக் கொண்டு - இம்முறை தள்ளாட்டமாக ஆடத் துவங் குதல்.)
(பாடலிசை)
ஏலேலோ ஐலசா
ஏலேலோ
ஏலேலோ ஐலசா
ஏலேலோ
கப்பல் வருகுது கடிதம் வருகுது (இரு தடவை) ஏலேலோ ஐலசா ஏலேலோ (2) அரிசி வருகுது சீனி வருகுது (2) ஏலேலோ ஐலசா ஏலேலோ (2) மருந்து வருகுது முத்திரை வருகுது (2) ஏலேலோ ஐலசா ஏலேலோ (2) இன்னும் என்ன வரேல.?
ஆற்றுண்க

பிள்ளை
தாய்
பிள்ளை
தாய்
பிள்ளை
தாய்
தாய்
பிள்ளை
தாய்
ஆற்றுகை
இன்னும் என்ன வரேல்.. ? (பாத்திரங்கள் சோர்ந்து தள்ளாடியபடி அமர்தல். மெல்லமைதி
இரவின் இசை அல்லது இரவின் நிசப்தத்தைக் கூறும். பூச்சி ஒலிகள் கேட்டல் )
அம்மா பயமாயிருக்கு.
விடியட்டும் பொறு.
அம்மா குளிருது.
விடியட்டும் பொறு.
அம்மா பசிக்குது.
விடியட்டும் பொறு
(மெல்லமைதி)
அம்மா அப்பா எங்க? விறகு கட்டிக் கொண்டு வரப்போனவர். எப்ப வருவார்?
விறகு வெட்டி முடிய
(தொடர்ந்து இசை, இந்த இசை பின்வரப்போகும் பாடலுக்கான முன் இசை அல்லது நாடகத்தின் ஆதார இசை எனலாம் ) தொடர்ந்து பாடல். (பாடலின் போது இரு பாத்திரங்கள், தந்தையும் Cயும் சைக்கிள் ஓடுவதாகப் பாவனை செய்தல்.)
(LumrL6ü)
சின்னச் சின்ன வண்டி கட்டி சிவத்த மாடு ரெண்டு பூட்டி வாழைக்காய் பாரமேற்றி வாறாண்டி உன் புருசன்
இடையிசை
(சைக்கிள் ஒட்டிகள் கதைத்தல் - இவ்வுரையாடல் இடை யிசையின் பின்னணியில் நிகழ்வது.)
BU--mf unu lá).
29

Page 17
தந்தை
தந்தை
தந்தை
தந்தை
தந்தை
தாய்
அண்ண எவ்விடம்?
மகாவித்தியாலய அகதிமுகாம்.
எங்க போறியள்? கொம்படிக்கு . மண்ணெண்ணை கட்ட. சொந்த இடம் ,
திருகோணம()ைல நீங்கள்.. ? தீவுப் பகுதி
(இடையிசை பெரிதாதல்
*சின்ன சின்ன வண்டி கட்டி’ பாடலின் இரண்டாவது பந்தி)
மாடுமோ செத்தல் மாடு
மணலுமோ கும்பி மணல்
மாடிழுக்க மாட்டாமல்
மாய்கிறாண்டி உன் புருஷன்.
(இடையிசை)
(சைக்கிள் ஒட்டிகள் இடையிசைக்குள் கதைத்தல்.)
அப்ப சொந்தக்காரரோடயே இருக்கிறியள்?
ஒம். சொந்தக்காரரோடதான் மற்றவைக்கு சுமை,
செத்த சீவியம் .
ஓம் சுமைதான் (சைக்கிள் ஒட்டிகள் சைக்கிள்களை நகர்த்துவது போல நகர்ந்து மேடையிலிருந்து நீங்குதல்.) (தொடர்ந்து விடியற் புறத்திற்கான இசை அல்லது விடி
காலையின் ஒசைகள், குறிப்பாக - இருமலோடு விடிகிறது - ரோக விடியல்.)
எங்கட ஊரில எங்களுக்கெண்டொரு காணி இருந்தது. அதில ஒரு வீடு இருந்திது.
எங்களுக்கும் ஒரு வீடு இருந்திது. சின்ன வீடு எண் டாலும் அது எங்கல சொந்த வீடு.
gèlib.•.• ... எங்கட ஊரில் எங்கட வீடு.
ஆற்றுலுக

Dsonso si A:
மனைவி 8:
தாய்:
கணவன் A
மனைவி A:
கணவன் 8:
மனைவி B:
Z
தந்தை
ஆற்றுகை
எங்கட ஊரில எங்களுக் கெண்டொரு வயல் இருந்திது. சின்ன வயல் எண்டாலும் அது எங்கட சொந்த வயல் .
எங்கட ஊரில எங்களுக்கெண்டொரு கடல் இருந்திது. சின்னக் கடல் எண்டாலும் அது எங்கட சொந்தக் és 4.- Giv.
எங்கட ஊரில எங்களுக்கு இனசனம் இருந்திது. எங் களுக் கெண்டொரு வாழ்க்க இருந்து பெறுமதி இருந் திது.
(இந்த நேரம் Y திடீரென உணர்ச்சி வசப்பட்டு வீரிட்டல றியபடி எழுந்து ஒடுதல், ஏனைய பாத்திரங்கள் Y ஐ அனைத்து தேற்றுதல்.)
இஞ்ச எல்லாத்தையும் முதலில் இருந்து துவங்க வேண்டி இருக்கு.
நாங்கள் இஞ்ச ஒரு புதுச் சாதி,
ஒரு புது இனம்.
ஒரு புது வகுப்பு. அகதி எண்டொரு புதுச் சாதி, புது இனம் புது வகுப்பு.* (பாடலிசை முற்றுகையிடப்பட்டவர் நாங்கள். பாடலின் முதற்பந்தி பாடப்படுதல். தொடர்ந்து ‘சின்னச் சின்ன வண்டி கட்டி" பாடலின் இடை இசை எழுதல். பாடலின் கடைசிப் பந்தி பாடப்படுதல் )
Jfr L.6):
மாடுமோ செத்தல் மாடு வண்டியுமோ ஒட்டை வண்டி மாடிழுக்க மாட்டாமல் தானிழுத்து
மாய்கிறாண்டி.
(பாடலில் இடையிசை தேய்கிறது. தந்தை சைக்கிளை உருட்டியபடி வந்து நிறுத்துவது போல பாவனை செய்துவிட்டு மனைவி பிள்ளைகளிடம் வருதல் )
நாரி முறிஞ்சு போச்சு.
அகிலனின் கவிதையிலிருந்து.
3.

Page 18
தாய்
பிள்ளை
έ5τtiι
தந்தை தாய்
தந்தை
3.
料
தேத்தண்ணியக் குடியுங்கோ. (தந்தை தேனீர் அருந்த, பிள்ளை அருகிற் சென்று) அப்பா எனக்கென்ன கொணந்தனி? (தந்தை மெளனமாகப் பிள்ளையைப் பார்த்தல்) மெல்லமைதி. இந்த முறை நிவாரணம் இல்லையாம். வெட்டிறதுக்கு விறகும் இல்ல. அப்ப என்ன செய்யிறது? பிச்ச தான் எடுக்கோணும்.
மெல்லமைதி
(தொடர்ந்து பிள்ளை ஒரு புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டு வாசித்தல்.)
ஆக்காண்டி ஆக்காண்டி எங்கெங்கு முட்டை வைத்தாய் கல்லைப் பிளந்து ஏழ் கட்லிலே முட்டை வைத்தேன் வைத்ததுவோ நாலு முட்டை பொரித்ததுவோ மூன்று குஞ்சு ,
மூத்த குஞ்சுக் கிரை தேடி மூன்று மலை சுத்தி வந்தேன் இளைய குஞ்சுக் கிரை தேடி ஏழு மலை சுத்தி வந்தேன் பார்த்த குஞ்சுக் கிரை தேடி பவள மலை சுத்தி வந்தேன் மாயக் குறத்தி மகன் வழிமறித்துக் கண்ணி வைத்தான் கண்ணியிலே காலிரண்டும் சிறகிரண்டும் மாரடிக்க நானழுத கண்ணிரும் ! என் குஞ்சழுத கண்ணீரும் வாய்க்கால் வழியோடி வழிப்போக்கர் கால் கழுவி இஞ்சிக்குப் பாய்ந்திடவே
j5rt - tri ur.6);
ஆற்றுகை

இலாமிச்சை வேரூன்றி வெண்டிக்குப் பாய்ந்திடவே மாதாளை வேரூன்றி வற்றினது காணிரே. (வாசித்து முடிந்ததும் பிள்ளை சலிப்புடன்)
பிள்ளை அம்மா கண்ணப் புழுந்துது.
எழுத்துத் தெரியேல வெளிச்சங் காணாது.
தாய் இருக்கிற வெளிச்சத்தில படி. பிள்ளை : அம்மா கணக்குக் கொப்பி முடிஞ்சு போச்சு. தாய் ஏன் போன மாசம் வாங்கின கொப்பி எங்க ?
பிள்ளை ஓடி வரேக்க வீட்டில விட்டிட்டு வந்திட்டன்.
கணக்குப் புத்தகமும் கொண்டரேல.
தாய் பக்கத்தில இருக்கிற பிள்ளையிற்றக் கேளன்.
பிள்ளை ஆரிட்டக் கேக்கிறது எனக்கு ஒருத்தரையும் தெரியாது.
மெல்லமைதி (பாடலிற்கான முன் இசையை தொடர்ந்து பாடல்
LUITL6ib:
* வானம் எங்கும் வெள்ளிப் பூக்கள்
அள்ளிச் சூடக் கைகளில்லை பூமியெங்கும் அகதிச் சிறுவர் அள்ளி அணைக்க ஆளில்லை (2) வெளியிலெங்கும் கிளிகள் பாடும் விரும்பிக் கேட்க ஆளில்லை வழியில் தெருவில் மழலைப் பேச்சு இரக்கங் கொள்ள மனம் இல்லை. (வானம் எங்கும்) கடலில் துள்ளும் மீன்கள் கூட்டம் கண்டு களிக்க ஆள் இல்லை படகில் அலையும் அகதிச் சிறுவர் கரையும் சேர வழியில்லை. (வானம் எங்கும்) உலகம் எங்கும் உயர்ந்த நீதி போதனைக்குக் குறைவில்லை
* கவிஞர் மு. பொன்னம்பலத்தின் சிறுவர் Luar. Áð.
ஆற்றுகை 33

Page 19
கிழவி
மனைவி A:
மனைவி A:
34
இரவும் பகலும் வந்து போகும் அகதிச் சிறுவர்க் கொளியில்லை. (வானம் எங்கும் (பாடலிசை முடிய தபால்காரரின் மணியோசை கேட்டல், மனைவி A மேடையின் ஒரு பக்கம் சென்று கடிதத்தை வாங்குதல்.)
கடிதமே ?
வெளி நாட்டில இருந்தே வந்திருக்கு. ஒம். மகன் போட்டிருக்கார்.
(கடிதத்தை வாசித்தல்.)
கடிதம்:
அம்மா, அப்பா யாவருக்கும்! நான் சுகம் . உங்கள் சுகத்திற்கு கடவுள் அருள் புரிவாராக. உங்கு பிரச் சினை என்று 8. P. C. சொன்னது. நீங்கள் எங்கே இருக்கிறியளோ தெரியாது. இந்தக் கடிதம் உங்கள் கைக்கு எப்டிொழுது வந்து சேருமோ தெரியாது.
போன மாதம் நாங்கள் பெயர் தெரியாத ஒரு ஆபிரிக்க நாட்டில் நின்றோம். இப்ப பாங்கொங்கில் நிற்கிறோம். ஏஜென்சிக்காரன் இனி எங்க கூட்டிக்கொண்டு போவானோ தெரியாது, எண்டாலும் கடைசியில ஜேர்மனியில கொண்டுபோய் விடுவன் எண்டு சொல்லு கிறான்.
ஏஜென்சிக் காரர்களில் ஒருவன் கூட நல்லவனோ யோக்கியனோ கிடையாது. ஆனாலும் அவர்களைத் தான் நம்பவும் வேண்டி இருக்கிறது ஏதோ கடவுள் விட்டவழி.
நிற்க,
உங்கள் பேரப்பிள்ளை கதைக்கத் தொடங்கி விட்ட தாக சுவிஸில் இருந்து அண்ணா ரெலிபோனில் சொன்னார். குழந்தை சுவிஸ் மொமியில் அம்மம்மா என்று கூறுகிறதாம்.
மேலும்,
கடைசியாக போன் பண்ணோக்க அண்ணா சொன்னவர். சுவிஸ் அரசாங்கம் தமிழ் அகதிகளை
ஆற்றுகை

மனைவி A:
கணவன் A:
1,60566ir A:
மனைவி A:
இ
p
வி
தந்தை
தாய்
ஆற்றுகை
திருப்பி அனுப்பப் போகுதாம். என்ன செய்யிற தெண்டு தெரியேலயாம்.
ம். நாங்கள் இஞ்ச அகதியள்.பிள்ளையஸ் வெளிநாட்டில அகதியள். எங்க போனாலும் நாங்கள்
புகலிடந் தேடியள்தான்
கறுமச் சீவியம்.
பேரப்பிள்ளை கதைக்கிறானாம். கேக்கிற பாக்கியம் இல்ல.
எங்கட கடைசிக் காலத்தில எங்களப் பராமரிக்க வேண் டிய பிள்ளையஸ் எங்ளோட இல்லை.
(கிழவி சலிப்புடன் நாயை விரட்டுவது போல பாவனை
செய்தபடி.) அடீக் கொள்ளி வைக்கவும் பிள்ளையஸ் இல்ல. பிள்ளயளப் பெத்துப் போட்டும் மலடுகள் போல தனிச் சுப் போனம்.
எங்கட குடும்பங்கள் சிதறிப் போச்சு. (இந்தச் சமயத்தில் கிழவி தொடர்ச்சியாக இருமுதல்.
அது ஒரு ரோக இருமல் கிழவியை நோக்கி X உம் Y உம் நகர்தல்.) ஆச்சி ஆச்சி என்னண செய்யிது. மூன்று நாளா ஒரே தலையிடி . தேகமெல்லாம் உளையிது.
ஒமெண கண் சிவந்திருக்கு.
(X ஆச்சியைத் தொட்டுப் பார்த்து)
மேல் கொதிக்குது!
காச்சலே?
தொத்து நோயோ? (சிறுமியின் தாய் கிழவியை நெருங்கிப் போன சிறுமியை இழுத்து வந்து சற்றுத் தள்ளி அமர்த்துதல்.) இஞ்சால வா. ஆச்சிக்குக் கிட்டப் போகாத, ஆச்சிக்கு வருத்தம்.
35

Page 20
தந்தை
assorshioi A:
கிழவி
மனைவி A
கிழவி
தந்தை
கிழவி
தந்தை
தாய்
கணவன் B.
ஒம் மற்றவயளுக்கும் தொத்தப் போகுது. ஆச்சி ஏதும் குளிச போட்டனியே. ஆர் மோனே எனக்கு மருந்து தாறது? ஏனெண தர்மாஸ்ப்பத்திரிக்கு போவேனெணை. ஆர் என்னக் கூட்டிக் கொண்டு போறது? உப்பிடியே விட்டா எல்லாருக்கு மெல்லே தொத்திடும்
நான் என்ன செய்யிறது மோனே, எனக்கு ஆர் இருக் கினம்.
ஏன் உன்ர பிள்ளையன் எங்க ? வெளிநாட்டிலயாக்கும்.
இல்லாட்டி அதுகள் எங்கயோ என்ன் பாடோ.
கிழவி பிள்ளயஸ் என்னத் தனிய விடாத யுங்கோ எனக்கு
ஒருத்தரும் இல்ல.
(இசை - பாடலின் முன்னோடி இசை. அல்லது நேரடி யாகவே பாடல் ஆரம்பமாதல். பாடலின் ஒவ்வொரு பந்திக்கும் இடையில் வரும் வசனங்கள் இடை இசையின் பின்னணியில் சன்னமாக உரைக்கப்படும்.)
பாடல் நோயுற்ற தாயே
முதியவளே தனித்தவளே நோன்பிருந்து நீ பெற்ற பிள்ளைகள் எங்கே?
வசனம் X துயரங்களின் அரசி
இளம் விதவைகளின் தாய் இன்று தனியனாய் விடப்பட்டாள்.
tITLsi) முதுமையும் நோயும்
உனைத் தின்னும் நேரம் ஊர் விட்டு வேரற்று யாரிடம் வந்தாய்?
36 ஆற்றுகை

IT-5i)
தாய்
4. Fr.6ü)
கிழவி
பிள்ளை
ஆற்றுண்க
அவளது புதல்வர்கள் காணாமல் போயினர். அவளது புதல்வியர் கவர்ந்து செல்லப்பட்டனர். அனாதைக ளாய் விடப்பட்ட குழந்தைகளோடு அவள் தனித்துப் போனாள்.
நில வொளியில் உன் வீடு எரிகின்ற போது மகனில்லை, மகளில்லை, தனித்தாயே அம்மா.
விளக்கற்ற மிக நீண்ட இரவுகளை அவள் காடுகளில் கழித்தாள். பாதுகாப்பற்ற வீதிகளைத் தாண்டி, ஆறு களைத் தாண்டி, மலைகளைத் தாண்டி தன் வளர்ப்புப் பிள்ளைகளிற்கு உணவு கொண்டு வந்தாள்.
துக்கித்த தாயே
விதவையே
கேளாய்
புதல்வர்களைப் பெற்றும். மலடு போலானாய் அம்மா.
அம்மா.. அம்மர் .
(பாடல் இசை அடங்குதல்.)
கடவுளே! கடவுளே! நான் தனிச்சுப் போனன்"
என்ர ஊரில என்ர வீட்டில என்ர பிள்ளையளோட
என்ர இனசனத்தோட இருந்தா நான் உப்பிடி அனாதை யாத் தவிக்க மாட்டன்.
(இந்த இடத்தில் எல்லாப் பாத்திரங்களும் மேடையின் அணியத்திற்கு - பார்வையாளரை நோக்கியபடி நகர ஆரம் பித்தல்.)
(பார்வையாளரை நோக்கி) ஐயோ எங்கட பிள்ளையஞம் நாங்களும் எங்கட முத் தத்தில் நிம்மதியா ஒண்டாயிருக்கிறகாலம் எப்பவரும் ?
(தாயை நோக்கி அழுதபடி) நான் வீட்ட போப்போறன் எங்கட வீட்ட போப்' போறன் வீட்ட . எங்கட வீட்ட
(ஏனைய பாத்திரங்கள் ஒவ்வொன்றும் பார்வையாளரை நோக்கி கேட்டல்.)
37

Page 21
கிழவி
மங்களம்
38
நாங்கள் எங்கட வீடுகளுக்குப் பயமில்லாமல் திரும்பிப் போற காலம் எப்ப வரும்? குலைஞ்சு போன எங்கட குடும்பங்கள் திரும்பிச் சேர்ற காலம் எப்ப வரும்? எங்கட வீடுகள் இருண்டு கிடக்கு. நாங்கள் திரும்பிப் போய் அங்க விளக்கேத்த வேணும். எங்கட முத்தங்கள் பாழடைஞ்சு கிடக்கு. அங்க விஷப் பாம்புகள் புத்தெடுத்திருக்கு விஷப் பாம்புகள். நாங்கள் போய் எல்லாத்தையும் கூட்டித் துப்பரவாக்கி, புதுசா மெழுகிக் கோலம் போட வேணும். எங்கட ஆலயங்களில் மணி ஒச கேட்கிறதில்ல நாங்கள் திரும்பப்போய் எங்கட வழிபாடுகள் தொடர வேணும். என்ர தம்பிய கண்டனியளே? கண்டாச் சொல்லுங்கோ நான் இஞ்ச நிக்கிறன் எண்டு. என்ர அய்யாவக் கண்டனியளே? என்ர பிள்ளயளக் கண்டனியளே? என்ர பேரப்பிள்ளயளக் கண்டனியள்ே? என்ர தம்பியக் க Gண் ட னி யளே? கண்டாச் சொல் லுங்கோ நான் இஞ்ச இருக்கிறன் எண்டு. மறந்திடாதயுங்கோ கட்டாயம் சொல்லுங்கோ ? என்ர பிள்யைள் . என்ர பிள்ளயஸ்.
பிள்ளயஸ் பிள்ளயஸ். பிள்ளயன் (இசை எழுந்து அடங்குதல்
அமைதி பாத்திரங்கள் மேடையின் அணியத்தில் வரிசையாக நின்று வணங்கி மங்களம் பாடுதல்.) வாழ்வின் பொருளே மங்களம். வளரும் கலையே மங்களம். கூத்தே இசையே மங்களம். கூடும் அரங்கே மங்களம்,
மங்களம் சுப மங்களம்.
மங்களம் சுப மங்களம்.
மங்களம் சுப மங்களம்.
ஆற்றுகை

அரங்கியல் கண்காட்சி
கடந்த ஆனி மாதம் 15ம் திகதி தொடக்கம் 18ம் திகதி வரை யாழ் பிரதான வீதி யில் அமைந்துள்ள திருமறைக்
கலாமன்றத்தின் வளாகத் தில், திருமற்ைக் கலாமன் றத்தால் நடாத்தப்பட்ட
மேற்படி நாடக அரங்கியல் கண்காட்சி ஈழத்து நாடக வரலாற்றில் மிக முக்கிய மானது. இது பற்றிய ஒர் பார்வையை இக்கட்டுரை
தருகின்றது.
எமது மண்ணில் (3. umri மே க ங் கள் சூழ் ந் த இந்த வேளையிலும், பொருளாதாரத் தடைஎமது குரல்வளையை நெரிக் கின்ற வேளையிலும் இவ்வாறான கலை முயற்சிகளை மேற்கொள் வது பாராட்டப்பட வேண்டியது. அது மட்டுமன்றி "நாடகம் ஒரு காத்திரமான கலை ஊடகமாக வும், அழகியல் அம்சமாகவும் மட்டுமன்றி கல்விநெறியாக பாட சாலைகள், பல்கலைக் கழகம், தனியார் கல்வி நிறுவனங்கள் மட் டங்களிலெல்லாம்; பயில் துற்ை யாக்கப்பட்டதனால் LDT 60.376hiff கள், ஆசிரியர்கள், ஆய்வாளர் கள் ஆர்வலர், கலைஞர்களென் விரிந்து வரும் நாடக சமுகத்திற்கு தீனி தரும் வகையிலும் ஓர் புறச் செயற்பாடாக முதன் முதல் இக் கண்காட்சியை அமைத்த அமைப்
se Q5
T
6ზ1)6)||
கண்காட்சியின் அம்சங் களுக்குள் நுளைந்தால், முத லில் வரலாற்று அடிப்படை யில், நாடகம் தோன்றிய தொன்மையின் ஒழுங்கில் அதன் தோற்றம் வளர்ச்சி என்பன நுட் ப ம |ா க வும், அறிவு பூர்வமாகவும் காட் சிப்படுத்தப் பட்டிருந்தன.
நாடகத்தின் தாய் என வர்ணிக்கப்படும் கி ர்ே க் க அரங்கு பற்றிய பகு தி யில் அங்கு நாடகம் தோன்றிய வரன் முறையும், ஆதாரக் குறிப்புகளும், கிரேக்க, நாடக ஆசிரியர்களின் படங்களும் பணிகளும் அக்கால நாடக மீளுருக்களினதும் தற்போ துள்ள அரங்கினதும், புகைப் படங்களும், கிரேக்க நாடகத்தை உய்த்துணர  ைவத் த து ட ன்,
அங்கு நாடகம் ஆடப்பட்ட *அரங்க மாதிரியும் மிக நுட்ப மாக அமைக்கப் பட்டிருந்தது.
இவை கிரேக்கத்தை நிறைவாக அறியவைத்தன,
இராவளனன்
அடுத்த பகுதி * உரோம அரங்கு இங்கும் கிரேக்கத்தின் தொடர்ச்சியாக உ ரே ர் மின்
நாடக வரலாறும், நாடக ஆசிரி
பாளர்களை பாராட்டத்தான் யர்களின் படங்களும், பணிகளும் வேண்டும். அமைத்து விளக்கப்பட்டிருந்த
ஆற்றுகை 39

Page 22
துடன் "உ ரோம அர ங் கி ன்" மாதிரியும் சிறப்புற அமைக்கப் பட்டிருந்தது. அ வ் வா றே தொடர்ந்து எலிசபெத் கால அரங்கும் அரங்க மாதிரியுடனும், ஷேக்ஸ்பியரின் நீ ட க ங் கள், அரங்கு, தொடர்பான விடயங்க ளுடனும் அமயப் பெற்று இருந் அது அடுத் து ‘மத்தியகால அரங்கு" (இது எலிசபெத் காலத் துக்கு முன் அமைந்திருக்க வேண் டியது ஏன் மாற்றப்பட்டதோ தெரியவில்லை) இதில் மிகப் பெரிய அளவிலான மத்தியகால அரங்கின் மாதிரித் தோற்றமும், அககால நாடகங்களின் தன்மை பும் வரலாறும் விளக்கப்பட்டிருந் தன.
அது மட்டுமன்றி, சீன ய பான் அரங்கு" இங்கும் நோ" நாடக அரங்க மாதிரி அதன் வர லாறு, ஆடை அமைப்பு போன்ற விடயங்கள் அமையப் பெற்று இருந்தன. அத்துடன் "இந்திய அரங்கும் அட்டைப்பட விளக் கங்களாக, நாட்டிய சாஸ்திர மரபு, மார்க்க , “தேசிய வகை விளக்கங்களுடன் காணப்பட்
- ģi.
தொடர்ந்து ‘தமிழ் நாடக அரங்கு வாயிலில் கட்டியகாரர் வரவேற்க, வியப்புறு வகையில் சிலப்பதிகார அரங்கு, வட்டக் களரி, போன்றன வெல்லாம், மாதிரிகைகளாக அமைக்கப்பட் 4-ருந்ததுடன், தமிழ் நாடக தோற்றம் வளர்ச்சி, மாதவியின் ஆடல் முறைகள் என கவர்ச்சி கரமான முறையில் தமிழ் அரங்
40
கின் தொன்மை வெளிப்படுமாறு அமைக்கப்பட்டிருந்தது. அத் தோடு கூடவே ஈழத்து நாடக வளர்ச்சியும் , அரங்க மாதிரி களும், ஈழத்தின் நாடக வளர்ச் சிக்கு பங்களிப்புச் செய்த, செய்து கொண்டிருக்கின்ற பே ரா ள ர் களின் புகைப்படங்கள் அவர்களின் பணிக்குறிப்புகள், நாடக புகைப் படங்கள் என்பன இங்கு சிறப் பம்சமாக திகழ்ந்தது. அதுமட்டு மன்றி நாடக அரங்க கல்லூரியின் செயற்பாடுகள், திருமறைக்கலா மன்றத்தின் செயற்பாடுகள் என்
பனவும் காட்சிப் படுத்தப்பட் டிருந்தன.
'நூல்கள்" பகுதியில் நாட
கங்களும், நாடகம் தொடர்பான அனேக தமிழ் நூல்களும் ஆங்கில நூல்களும், சஞ்சிகைகளும் பார் வைக்கு வைக்கப்பட்டிருந்தன.
இவை மட்டுமன்றி எம்மண் ணின் கலை வடிவமான நாட்டுக் கூத்துக்கள் பற்றிய விபரங்களும் அதற்குப் பாவித்த உடைகள், அலங்காரப் பொருட்கள், முடி கள், வாள்கள் என்பனவும் பார் வைக்கு  ைவ க் க ப் பட் டி ருந்த துடன், நாடகத்தில், ஒப்பனை, ஒளி, ஒலி அமைப்புகள், எவ் வாறு செயற்படுத்தப் படுகின்றன என்பதை செயற்பாடுகள் மூலம் காட்டப்பட்டது. ஒலி, ஒளியூட் டலின் நவீன வளர்ச்சியும், விளக் கங்களும், பலருக்கு பயன்படக் கூடியனவாய் அமைந்தது.
இவற்றை விட பொதுவான எழுத்துருக்களில் அட்டை விளக் கங்களும் காணப்பட்ன. இவை
ஆற்றுகை

மட்டுமன்றி, இக்கண்காட்சி அரங் கிலேயே தனிநடிப்பு, பாடல், நடனம், நிழல் நடிப்புக் காட்சி கள் போன்றவை நடிப்பின் பல் வேறு பரிமாணங்களை எமக்கு எடுத்து விளக்கி நின்றன. மற்று மொரு பாராட்டப்பட வேண்டிய விடயம் இக் கண்காட்சித் திடலுக் குள் “ஆற்றுகை' சஞ்சிகை ஒர் போட்டி ஒன்றினை நடாத்தியது. பல மாணவர்கள் இதில் உற்சா கத்துடன் கலந்து கொண்டதைக் காணக் கூடியதாக இருந்தது. கண்காட்சியை ஆழமாக நோக்க வைப்பதற்கு இது ஓர் நல்ல உத்தி.
காட்சி நடைபெற்ற நாட்களில் மாலையில், கலை நிகழ்ச்சிகளும் நாடகங்களும் கலாமன்ற அரங் கில் மேடையேறின. (திருமறைக் கலாமன்றம் தனது நாடகங்களை மேடையேற்றாது பரந்த அளவில் பலரின் நாடகங்களுக்கு சந்தர்ப் பம் அளித்தது. பாராட்டப்பட வேண்டியது.) மற்றும் நாடகம் சார்பேருரைகளும்இடம்பெற்றன. இறுதி நாள் நிகழ்வில் பாடசாலை மாணவர்களுக்கிடையில் ‘வினாடி வினாப் போட்டி ஒன்றும் நடை பெற்றது. நாடக அரங்கியல் தொடர்பா ன இந்த போட்டியை அறிமுகம் செய்தது புதியதும் வரவேற்கப்பட வேண் டியதுமான அம்சம்.
மற்றுமொரு விடயம் கருத் தரங்கு தமிழ் நா ட க ம் ; ‘நேற்று" " இன்று”, “நாளை"
என்ற தலைப்புகளில் இக் கருதி
தரங்கு நடைபெற்றது. நா. சுந்
சேர்க்கப்பட்டிருக்கலாம்.
தரலிங்கம் தலைமையில், சி. ஜெய் சங்கர், பா. அகிலன், ரதிதரன் ஆகியோர் கருத்துரை வழங்கி னர். மாலை நிகழ்வில் பேராசிரி யர் சிவத் தம் பி தலைமையில் குழந்தை ம. சண்முகலிங்கத்தின்
* எதிர் கொள்ளக் காத்திருப் போம் நாடக நூல் வெளியிடப் பட்டது.
இவ்வாறு நான்கு நாட்களும் பல்வேறு வகைகளில், இக் கண் காட்சியை அமைத்த திருமறைக் கலாமன்றத்தினதும், இணைந்து செயற்பட்ட ஒருசில பாடசாலை களினதும், முயற்சியும், உழைப் பும், விதந்துரைக்கப்பட வேண் டியதே. இருப்பினும், கண்காட்சி சார் பின்வரும் குறைபாடுகளை யும் சுட்டிக் காட்டுதல் யாகும்.
85-6) is
கண் கா ட் சிக் கா ன இடத்
தெரிவு சரியாக, தெரிவு செய் யப்படவில்லை. li Ti SF T3) 6) யொன்றில் இ த  ைன ஒழுங்கு
படுத்தி இருப்பின் சிறப்பாக அ  ைம ந் தி ரு க் கும். அதுமட்டு மன்றி, காட்சி அறைகளும், சரி யாக கவர்ச்சிகரமான ஒழுங்கில் அமைக்கப்படவில்லை.
நித்து நாடகம் தொடர் பான பல விடயங்கள் இன்னும்
உதா ரணமாக, நாடகத்தில் முக்கிய மான விடயம் இசை, இக்கண்காட்சியில் இசை தொடர்
எந்த அமைக்கப்படவில்லை.
ஆனால்
T காட்சிப் பகுதியும்
ஆற்றுகை
4.

Page 23
சில காட்சி அறை களி ல் (உ-ம் இந்திய அரங்கு) போதிய புலக்காட்சி அமைப்புகள் இல்லா மையும் அதை ஈடு செய்ய முற்று முழுதாக கருத்துப் பிரசார அட்டையில் தங்கி இருந்தமையும் சற்று சவிப்பைக் கொடுத்தன். அது மட்டுமன்றி, சில அரங்குகள் மிக ஆழமாக நோக்கப்படாமை ஓர் குறைபாடாக காணப்பட் -து. உதாரணமாக "ஆபிரிக்க அரங்கு" என்று எழுதப்பட்ட அரங்கில் எதுவும் சரிவர விளக் கப்படவில்லை.
அடுத்து திருமறைக் கலா *றம் நாடக அரங்க கல்லூரி இகு அமைப்புகளின் செயற்பாடு கள் மட்டும் காட்சிப் படுத்தப்பட் டிருத்தது. எத்தனையோ 25r 5 அமைப்புகள் ஈழத்தில் செயற்படு கின்றன. அவை பற்றி தகவல் இல்லாது பாகுபாடு காட்டியதும் ஆவ் அமைப்புக்கள் சார்ந்த பல ருக்கு வேதனையைக் கொடுத் திருக்கக்கூடிய விடயம்.
மற்றுமொரு குறைபாடு இக் கண்காட்சி; மாணவர்களூமைய மாகக் கொண்டு ஒழுங்குப் த்தி இருந்தமை. பரீட்சை நோக்கை மட்டும் மின்தில் கொள் எா து பரந்த அளவில் செயற்பட்டு இருக் *விாம் என்ற கருத்தும் மேலோங் குகின்றது.
அடுத்து இறுதி நாள் நடை பெற்ற நாட சுருத்தரங்கிற்கு
42
Lugilii வெகு ஆர்வத்தோடு வத் திருந்தனர். ஆனால் ஆர்வல ருக்கு ஏமாற்றமான விடயமாக
வும், அமைப்பாளர்களின் எண் ஓணம் நிறைவேற்றப் பட்டதோ என சந்தேகிக்கக் கூடிய வகையி
லும் இக் கருத்தரங்கு ஆழமற்ற வகையில் அ  ைமந்திருந்தது. ஏனோ தானோ என்ற வகையில் சில பேச்சாளர்கள் நடத்து கொண் டது போலவே தோன்றியது.
மேற்போந்த குறைபாடுகள் ஊடுருவி நின்றாலும் ஒட்டு மொத்தமாகப் பார்க்கும் போது திருமறைக் கலா மன்றம் நடாத் திய இக் கண்காட்சி ஈழத்து நாடக வரலாற்றில் புதிய முயற்சி. இதனூடாக நாடகத்தை கல்வி நெறியாகக் கொண்ட மாணவ ரும், ஆசிரியர்களும், ஆர்வலர் களும் பயனடைந்திருப்பர் என்ப துடன் சாமானிய பொதுமக்கள் மத்தியிலும் அரங்கியல் பற்றி ஒர்
விழி ப்பு ன ர்ச்சி யை இது ஏ ற் படுத் தி யுள் ளது. இது முதல் முறை என்பதாலும், இத்
துறை சார்ந்த ஆதாரங்கள் அதி கம் இல்லை என்ற நோக்கிலும் பார்க்கும்போது இக் கண்காட்சி பெரு வெற்றிக்குரியதே எனினும் எமது மண்ணின் இத் துறை சார்ந்த ஏனைய சக அமைப்பு கள் கல்லூரிகள், ஆர்வலர்கள், கி  ைல ஞர் க எளின் பங்களிப்பும், ஆற்றலும் இணைக்கப்பட்டிருப் பின் இது மிகச் சிறப்புக்குரிய தாய் அமைந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.
ஆற்றுகை

' 6Tsä gosan Lu வாழ்க்கை என்னுடைய தெரிவாக இருந்ததில்லை”
எஸ். ரி. அரசுடன்
நேர்காணல்
நேர்கண்டவர் : பா. அகிலன்
"அரசய்யா' என அன்போடு கலையுலகில் அழ்ைக்கப்படும், 1926 கில் பிரித்த, சி. திருநாவுக்கரசு என்ர முழு ப் பெ டி ர் கொண் ட எஸ். ரி அரசு அவர்கள், எதிலும் நிலைகொள்ளாது நீண்ட அலை வொன்றையே தன்னுடைய வாழ்வின் இளமைக்காலத்தில் மேற்கொண் டிருந் $ார். நல்லூரிலுள்ள சாதனா பாடசாலையில் ஆரம்பக் கல்வியைப் பெற்றபோது, 1934 இல் செல்லையா ஆசிரியர் பழக்கிய சிறுவர் நாடகத்தில் நடித்ததே கலையுலகில இவரின் முதல் அனுபவம். பின்னர், சென் ஜோன்ஸ் கில்லுரரிக்குச் சென்று ஆறாம் வகுப்பு படிக்கும் வேளை பணமுடைய காரணமாக, கல்வியை விடுத்து. குடும்பத்தினரின் பணிப் பின் பேரில், தந்தையார் பார்த்த பரம்பரை வைத்தியத்தொழிலை கற்ப்ப தற்காக சில வைத்தியர்களிடம் சென்றார். ஆனால், அவரது நாட்டமோ வேறு விதமாய் அமைந்திருந்தது. வண்ணார் பண்ணைச் சிற்சி சீனி வாசஸ்தபதி தொடர்பு காரணமாய் விருதுநகர் வெயிலுகந்த அம்மன் கோயில் திருப்பரிைசில் சிற்பப்பயிற்சி பெற்ரார். அவ்வேளை 2 ம் உலகப் போர்க்காலம், அதனால், தம்விருப்பிற்கு பாராக, இந்திய இராவே சேவையில் நான்கு வருடம் பணிபுரித்தார். பின்பு, தாயகம் மீண் வேந்து வாழ்க்கை ஒட்டத்திற்காக ஒரு சில தொழில்களைப் புரிந் தும் அவற்றில் கால்தரிக்காது திரு நீக்லஸிடம் சென்று புகைப்படம் பிடிக்கக்கற்றுக்கொண்டார்.
ஆற்றுகை - - 43

Page 24
வீ. சி. பரமானந்தத்தை தனது குருவாகக் குறிப்பிடும் அரசய்யா,
நடிப்பு, ஒப்பனை அரங்க விதானிப்பு, நெறியாள்கை முதலிய அரங்கக் கலைகளுடன் தன்னை பிடித்தனைத்துக்கொண்டு, மரபிலிருந்து நவீனம் வரை நாடகத்தில் நெடும் பயணம் மேற்கொண்டிருப்பவர் அரசியலி” லும் மிகுந்த ஈடுபாடு கொண்ட இவருக்கு கலைப்பணிக்காக, 1991 இல் நிகழ்ந்த முத்தமிழ் விழாவில் தேசியத் தலைவர் அவர்களால் ‘மாமனிதர்" விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அரசைய்யா வின் கலைவயது நாற்பத்தெட்டு.
德
44
உங்கள் இளமைக் காலத்தில் அதிகம் அலைந்து திரிந்திருக்கிறீர்கள். இந்த கால் தரிக்காத அலைவு தந்த அனுபவம்.
அப்போது சந்தோஷமாக இருந்தது. இப்போது நினைத்துப் பார்க்கையில் ஒன்றிலும் ஒன்றும் இல்லைப் போல தெரிகிறது.
கலைஞர்களைப் பொறுத்தவரைக்கும் அவர்களின் வாழ்க்கை, அவர் களது தெரிவாக இருக்கும் என்பார்கள் உங்களது வாழ்க்கை
என்னுடைய வாழ்க்கை எனது தெரிவாக இருக்கவில்லை.
புகைப்படம், சிற்பம் போன்ற கலை வடிவங்களோடு பரிச்சயம் இருந்தும் நாடகத்தையே பிரதான துறையாகத் தெரிந்து கொண்ட தன் காரணம்
சிற்பத்தையும், புகைப்படத்தையும் வாழ்க்கைக்கு ஊதியம் தரும் தொழில்களாக எடுத்துக் கொண்டேன். மற்றும்படி என் இனுடைய ஆத்ம திருப்பதிக்காக நாடகத்தை எடுத்துக் கொண் டேன்.
எது எவ்வாறாயினும், மேற்கூறப்பட்ட கலை வடிவங்களுடன் சம் பந்தப்பட்டிருக்கிறீர்கள் என்ற வகையில் எல்லாக் கலை வடிவங்க ளூடாகவும் இறுதியாகக் கிடைப்பது என்ன?
என்னைப் பொறுத்தவரையில் மனநிறைவொன்றைக் கண்டேன்.
பாரம்பரிய நாடக மரபிலிருந்து நவீன நாடக மரபு வரை நீங்கள் வந்துள்ளீர்கள். இவ்வாறு வருவதற்கான காரணம் என்ன? ஏற்கனவே நீங்கள் ஆடிவந்த அரங்கில் போதாமை இருந்ததா? அல்லது முனைநிலைப்பட்ட ஒரு மாற்றமா?
போதாமைதான் முக்கிய காரணம். காட்சிக்காக இலைகளைக் காவிக்கொண்டு வருவதும், பின்புறம் காட்டி நடிக்கக்கூடாது
ஆற்றுகை

என்ற மரபும் எனக்குச் சலிப்பூட்டியது. எனவே, புதிதாக வேறு விதமாகச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு வந்தது.
9 நீங்கள் நடிக்க வந்த காலத்திலிருந்த நடிகர்களுக்கான சமூக அந்
தஸ்து பற்றி
* பிரமாதமாக ஒன்றும் சொல்ல முடியாது. கூத்தாடிகள் என்ற இழிவு நிலைதான் இருந்தது. நேர்மையாக இருந்த சிலரைத் தவிர நாடகத்தை தொழிலாகக் கொண்ட பலர், கூட ஆடிய சின்னமேளக்காரர்களோடு ஒழுக்கந் தவறி வாழ்ந்தவர்களாக இருந்தார்கள். இதுவும் இந்த நிலைக்கொரு முக்கிய காரண மாக இருந்தது.
நீங்கள் அரங்கிற்கு வந்த காலத்தில் வெவ்வேறு சாதியினர் ஒன் றாக நடிக்கும் வழக்கம் இருந்தது அரங்கிற்கு வெளியே சாதி யைத் தாண்டிய உறவு நிலைகள் இருந்ததா?
* எல்லா நாடகக் குழுக்களிலும் சேர்ந்து நடித்தார்கள் என்றில்லை. சிலவற்றில்தான் இவ்வாறு சேர்ந்து நடித்தல் இருந்தது. மேடை யில் ஒன்றாக நடித்தாலும் மேடைக்கு வெளியில் ஒருசில தனி நபர்களே சாதியைக் கடந்து தொழிற்பட்டார்கள். கத்தோ லிக்கர்களிடம் பெரியளவில் இந்தப் பிரச்சனை இருக்கவில்லை.
 ேபொதுவாக அந்தக்கால நாடகத்தின் உள்ளடக்கமாக இருந்த விட
யங்கள்
* வரலாற்றுக் கதைகளை, வரலாற்றுக் கற்பனைக் கதைகளைப் போடுவதில் அதிக ஆர்வம் இருந்தது. சமூக நாடகங்கள்; மூட நம்பிக்கைகள், சாதி அந்தஸ்துப் பிரச்சனைகள் பற்றிக் கூறின.
9 கொழும்பை மையமாகக் கொண்டு, பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை 1940 களிலேயே யாழ்ப்பாணத்துப் பேச்சு மொழியை நாடகத்திற்கு கொண்டு வந்தார். யாழ்ப்பாணத்தில் நீங்கள் இதனைப் பின்பற்றி யிருந்தீர்களா? る。
* இல்லை. இங்கு எதுகை மோனையும் செந்தமிழுமே முக்கிய மாக இருந்தது. பகிடிகளுக்காக பயன்படுத்தப் படுகின்ற பேச்சுத் தமிழ்கூட இந்திய பேச்சுத் தமிழாக இருந்தது. பேராசிரியர் யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழைப் பயன்படுத்துகிறார் எனக் கேள்விப்பட்டபோது எங்களுக்கு சிரிப்பாக இருந்தது பின்பு நாடகத்தைப் பார்த்தபோது நன்றாக இருந்தது
ஆற்றுகை 45

Page 25
46
பின்னர் ம்ெல்ல மெல்ல பகிடிகளுக்க்ாக யாழ்ப்பாண்த்துப் பேச்சுத் தமிழைப் பயன்படுத்தத் தொடங்கினார்கள்.
ஈழத்து தமிழ் நாடக வரலாற்றில் உங்களது காலத்தை “காட்சி விதானிப்புகளின் காலம்** எனலாம். அக்கால காட்சி நுட்பங்கள்
பற்றி.
பிரமாண்டத்தை தோற்றுவிக்க அப்போது விரும்பினார்கள். பெருமளவுக்கு மேடையில் எல்லாவற்றையும் கொண்டு வர விரும்பினார்கள். சிலைட்ஸ் எபிடஸ்கோப், ஒளி விளைவுகள், கப்பிகள், கயிறுகள் எல்லாம் பயன்படுத்தினார்கள்.
நண்பர்களுடன் இணைந்து நீங்கள் கலைவாணர் நாடக மன்றத்தை ஆரம்பித்ததன் நோக்கம், அதன் செயற்பாடுகள் பற்றி
முற்போக்கான கருத்துக்களை சொல்ல விரும்பினோம். அதற் காகவே, 1940 இன் பிற்பகுதியில் வட இலங்கை முற்போக்கு
நாடக மன்றம் என்ற பெயரில் நாடகக் குழுவைத் தொடங்கி
னோம். பெயர் அவ்வளவு கலைத்துவமாக இருக்கவில்லை.
மேலும் கண்லவாணர் சிந்தனைகள் மீது எமக்கு ஆர்வமும் இருந்
தது. இதனால் 1950 இல் கலைவாணர் நாடக மன்றம் என
பெயரை மாற்றிக் கொண்டோம்.
முற்போக்குக் கருத்துகளின் பாலும் அரசியலிலும் உங்களுக்கு ஆர் வம் ஏற்படக் காரணம்.
தி. மு. க. வினரின் எழுத்துக்களை வாசித்தமையே முற்போக் குக் கருத்துக்கள் மீதான ஈடுபாட்டிற்கு அடிப்படைக் காரண மாக இருந்தது. சமுகத்தில் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் அரசியல் ஆர்வத்திற்கு வழிவகுத்தது. ஆனால் தற் போது தி. மு. க. வின் கருத்துக்கள் எல்லாவற்றின் மீதும் உடன் பாடில்லை. இருப்பினும் முற்போக்கான அவர்களது சிந்தனை கள் பல இப்போதும் விருப்பத்திற்குரியனவாக இருக்கின்றன.
தாஸ்திகத்தை விட வேதாந்தத்தில் இப்போது எனக்கு ஆர்வம் அதிகம். நாஸ்திகத்திற்கும் வேதாந்தத்திற்கும் இடையில் அதிக
வேறுபாடு இல்லை.
கட்சி அரசியற் காலங்களில் நீங்கள் அவற்றோடு சம்பந்தப்பட்டிருந் தீர்கள். தமிழரசுக் கட்சியோடு உங்களுக்குத் தீவிர ஈடுபாடு இருந் தது. இந்த ஈடுபாட்டுப் பின்னணியில் நீங்கள் மேடையிட்ட ‘தமி ழன் கதை" முக்கியமானது. இதனை மேடையிட்டதற்கான பின்
ஆற்றுகை

* ஏற்கனவே இனமொழி எழுச்சியைத் தூண்டுவதற்காக, ** வீர மைந்தன்', ** திப்புசுல்தான்' போன்றவற்றை மேடையேற்றி யிருந்தோம். தமிழர்கள் முன்னெடுத்துச் செல்கின்ற போராட் டத்தை அவர்களுக்கு உள்ளேயிருக்கின்ற சிலர் குழப்புவதைக் காட்ட விரும்பினோம். குறிப்பாக ஜீ. ஜீ. பொன்னம்பலம் போன்ற நபர்களின் குழறுபடிகளை வெளிக்காட்ட நினைத் தோம். அந்தக் காலத்தில் ஜீ. ஜீ பற்றிய ஒரு மாயை இருந் தது. நாங்கள் அதை உடைக்க விரும்பினோம்.
0 நாடக அரங்கக் கல்லூரியின் ஸ்தாபகர்களில் நீங்களும் ஒருவர். அது உருவாக்கப்பட்ட காரணங்களில் ஒன்று நாடகம் கற்றுச் செய் கின்ற துறை என்பதை நிலை நிறுத்துவதுமாகும் என ஒருமுறை பேசும்போது குறிப்பிட்டீர்கள். இன்று நாடகம் கற்கை நெறியான தன் விளைவு நாடகத்தைப் பயிற்றும் ஆசிரியர்களேயொழிய, நாடகக் கலைஞர்கள் அல்ல என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படு கின்றது. இது பற்றி
* நாடகத்தைப் பற்றிப் படிக்கலாம். படித்துவிட்டால் நாடகம் போடும் திறமை வந்துவிடும் என்றில்லை. முன்பெல்லாம் நீண்ட கால நடிப்பனுபவத்தின் பின்னே நடிகர்கள் நெறியாள்கை செய்ர வருவார்கள். இப்போது நாடகம் பற்றிப் படித்தால் நெறி யாள்கை செய்யலாம் என்ற நிலை இருக்கிறது.
O நெறியாளர் சர்வாதிகாரியாக தொழிற்படலாமா?
* அவருக்கு சகல அதிகாரங்களும் இருக்கலாம். ஆனால், அதை அனாவசியமாகப் பிரயோகிக்கக் கூடாது. நல்ல நடிகர்கள் கிடைக்காதபோது அவர்களுக்குத் திணிக்கவேண்டியிருப்பது தவிர்க்க முடியாததுதான். கெட்டிக்கார நடிகர்கள் வரும்போது அவர்கள் நெறியாளரது கற்பனையையும் மீறி நன்றாகக் செய்வ துமுண்டு.
9 ஏறத்தாழ 50 வருடகால உங்கள் நாடக அனுபவம் ஊடாக சம
கால நாடகங்கள் பற்றிய உங்களது கணிப்பு.
* அந்தக்கால நாடகம் அந்தக்காலத் தேவைகளுக்குரியதாக இருந்
தது. இந்தக்கால நாடகம் இந்தக் காலத்திற்குரியதாக இருக் கிறது.
 ெஇன்றைய இளைய தலைமுறையின் ஆற்றல் மிக்க கலைஞர்களாக
யார் யாரைக் குறிப்பிடுவீர்கள்?
ஆற்றுகை 47

Page 26
* சிக்கலான விடயம். ஏனெனில் பரந்து இருக்கின்றார்கள்.
யாரை எனக் கூறுவது. ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொருவர்
இருக்கின்றார்கள். நான் அருகில் உள்ளவர்களை மட்டும் கூறி விட்டுப் போவதில் பிரயோசனமில்லை.
0 நல்லது, துறைசார்ந்து கூறுங்களேன்?
- நான் அறிந்தவரையில், பல்கலைக் கழக மட்டத்தில் ஜெயரஞ்
சினி, ரதிதரன் போன்றவர்களைக் கூறலாம்.
கு நாடகத்திலும் சரி ஏனைய கலை இலக்கியத் துறையிலும் சரி குழு மோதல்களைக் காணமுடிகிறது. வ ய தி லும் அனுபவத்திலும் முதிர்ந்த கலைஞர்கள் கூட கருத்து மோதல்களை தனிமனிதத் தாக்குதலாக்குகின்ற நிலைமைகளைப் பார்க்க முடிகிறது. இது பற்றி
* தேவையற்ற விடயம். கருத்துமோதல்கள் சகஜம் - அப்பிடி இருந் தால்தான் வளர்ச்சி. அவ்வாறில்லாத தனிமனிதத் தாக்குதல் கள் பொறாமையால் வருவன. இவ்வாறானவர்கள் சமுகத்தில் ஒட்டிக்கொள்ள மாட்டார்கள்.
 ைகலைக்கும் சொந்த வாழ்க்கைக்கும் இடையில் லயப்பிறழ்வு இருக்க
6) TAD II ?
* சொல்வது மாதிரியே நடப்பது நல்லது. சொல்லிற்கும் செய லுக்கும் இடையில் வித்தியாசம் இருக்கக் கூடாது. அப்படியிருந் தால் தெய்வமாகிவிடலாம்.
9 நாடகம் சமுகத்தை மாற்றும் கருவி எனவும். நாடகம் மனிதனை உருவாக்குவது எனவும் பொதுவாகச் சொல்லப்படுகிறது. உங்கள் அனுபவத்திலிருந்து இதற்கான பதில்
* நூற்றுக்கு ஒரு ஐந்து சத வீதம்தான், சமுகத்தை மாற்ற வேறு செயற்பாடுகள் அவசியம். மனிதனை உருவாக்குவது என்ற வகையில், என்னுடைய சொந்த வாழ்க்கையில் மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறது. சமுகத்தின் வரம்புகள் பலவற்றைத் தாண்டுவதற்கு எனக்கு அது உதவியுள்ளது.
அடுத்த ஆற்றுகை சிறப்பிதழாக அதிக பக்கங்களுடன் வருகின்றது. உங்கள் ஆக்கங்களும் கருத்துக்களும் வரவேற்கப்படு கின்றன,
48 ஆற்றுகை

** எந்த ஒரு கலை வடிவ மானதும் ஒரு இனத்தின் பண் பாட்டுக்குள் முகிழ்ந்து, அதன்
எச்சங்களையும் மரபு நிலைகளை யும் வெளிப்படுத்தி, அதன் தேசிய வடிவமாக மேற்கிழம்பினாலும், அது எந்த சமூக கட்டமைப்பி லிருந்து பிறக்கின்றதோ, அதன் தன்மைகளையும் , பிரச்சினை களையும், அச்சமூக அரங்கப் பண்பாட்டையும் மிகைப்படுத்தி நிற்கும்'. இக்கூற்றிற்கேற்ப மேடையேற்றப்பட்டதே சுதேசிய கலாமன்றம் வழங்கிய பாலசிங் கம் அவர்களின் நெறியாள்கை யில் உருவான * அவள் ஒரு மாதிரி" என்னும் நாடகமாகும்.
ஒரு சமுகத்தின் பின்னணி யில் ஒரு கிராமத்தின் பண்பாட்டு கோலமுறை சிதையாத ԼDITւյ வழித் தன்மையும், நகரத்தின் நாகரீக மாற்றமும் முரண்படுவ தே "அவள் ஒரு மாதிரி"யின் கதைப் பி ன் ன லும் (Plot), கதைக் G35rriřGO) Guuytih (Episodic plot) ஆகும்.
கி ராம த் து சூழ்நிலையில் வாழும் தம்பியின் குடும்பத்திற் கும், கிராமத்தில் வாழ்ந்தாலும் நகரத்து பழக்க வழக்கங்களில்
மூழ்கினவராகவும் காணப்படும் அவரது சகோதரனின் குடும்பத் திற்கும் இ  ைட யி ல் ஏற்படும் காணித் தகராறும், பண ரீதியி லான ஏற்றத்தாழ்வும் முரண் பட்டு பகைமை வளர்கிறது.
ஏழைக் குடும்பத்துப் பாத்திர மாகவும், மரபு நிலைகளை ஏற். றுக் கொண்டு ஆனால், ஆடி
மட்டத்தில் காணப்படும் சம்பிர
தாய சாக்கடைகளை நீக்கும் பல் கலைக் கழக மாணவியாக வரும் செல்வி எ ன் னு ம் பாத்திரமே * அவள் ஒரு மாதிரி" என்ற எண்
G வதனன்
ணத்தை உருவாக்க, இறுதியில் சுமதி என்ற சித் த ப் பி ர  ைம பிடித்த பாத்திரமே அவள் ஒரு மாதிரி என்ற உண்மை நில்ையை நிதர்சனமாக்கியது. எனினும் செல்வி என்ற பாத்திரத்தின் மீது பாத்திரச் செறிவும், வசனங் களும் குவிவுபடுத்தப்பட்டது, பின்னுக்கு நிற்கும் மாற்றமடை யாத அரங்கின் கதாநாயகத் தனத்தை தோற்றுவித்தது.
பல்கலைக் கழக படிப்பு - பல் கலைப் படிப்பை முடித்த செல்வி
49
ஆற்றுகை

Page 27
யின் கிராமத்துக் காதல் என் பவை காட்டப்பட்ட விதத்தில் நெறி யா ள ர் பாராட்டப்பட
வேண்டியவர். செ ல் வி யி ன் காதலை உணர்வுகளுக்கூடாக
வும், வார்த்தைகளற்றும் பார்வை களுக்கூடாகவும் காட் டி யது ; பாராட்டப்பட வேண்டிய விட யம். இரு நடிகர்களும் புரிந் துணர்வோடு நடித்தமை பாராட் டப்பட வேண்டியது. எனினும் சினிமாப் பாடலின் பின் ன Cை இசை சி னி மாத் தன த் தை க் காட்டி விட்டது.
மறுபுறம் சுமதியின் பணக் கார குடும்ப வாழ்வு, கிராமத் தில் வாழ்ந்தாலும், கிராமத்தின் மண் வாசனையை மறந்து நகரத் தின் ஆடம்பரத் தன்மைகளை நேசிப்பதும், பல்கலைக் கழகக் காதல், நகரத்தில் வேட்டி உடுத் திய தகப்பனைக் கண்டதும் சக மா ன வி யிட ம் மறுதலித்தல். இவை அனைத்தும் ஒரு கிராமத் தில் வாழ்ந்து பல்கலைக் கழகம் தெரிவு செய்யப்படும் மாணவர் சமுகம் தம் படிப்புக் காரணமாய் நகரத்து நாகரிக வாழ்வை விரும் பியோ விரும்பாமலோ தாம் மேற் கொள்வதனால் ஏற்படும் பிரச் இதைவிட சம மட் இருக்கும் மனைவி பிரச்சினைகள், விட்டுக் புரிந் துணர்வின்மை ஆகிய அனைத் தும் துல்லியமாகக் காட்டப்பட் டது. பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த சுமதியின் வாழ்வு வீண்
சினைகள்,
டத்தில் கணவன் .
கொடாமை, சந்தேகம்,
50
சந்தேகங்களால் சிக்குண்டு சித்தப் பிரமையில் முடிகிறது.
சமுக உறவுகளில் இருந்து தனித்து விடப்பட்டு படிப்பை யும், பல்கலைக் கழக இலக்கை
யும் நோக்கமாகக் கொண்டு வீடு, ரியூசன், பாடசாலை, சாப்பாடு இவைகளைத் தவிர, எதுவித வெளித் தொடர்பும் இல்லாது வளர்க்கப்பட்ட விமலின் பரீட் சைத் தோல்விகள், சமுகத்துடன் இணைந்து வாழ முடியாத் தன் மைகள், ஆளுமைச் சிதைவு, மன தின் சமநிலைக் குழப்பம், என்பன அவனை தற்கொலை செய்ய வைக்கிறது. தற்கொலை மர ணத்தை, மேடையில் மேற்புறத் தில் இருந்து வரும் நஞ்சுப் போத்
தல் ஊடாக வித்தியாசமாகக்
காட்டியது பாராட்டப்பட வேண் டிய இடம். தற்கொலை மர ணம் அவனை அழைப்பது போல வும், அவன் தற்கொலையை நாடிச் செல்வது போலவும் அக் காட்சி அமைந்திருந்தது.
மறைபொருள் பண்பு குறைந் தும், புலமைப் பண்பு நீக்கப்பட் டும், கட்புலன் சார்ந்த குறிமுறை மைகள் எதுவுமின்றி பலதரப்பட்ட பார்வையாளரையும் உணர வைத் தது நல்ல விடயம்.
எனினும் விமர்சன நோக்கில் சில விடயங்களை அவதானிக்க வேண்டியுள்ளது.
எழுத்தாளரே நெறியாள ராக இருந்ததாலோ என்னவோ சொல்லாட்சி மிகுதியாக இருந்
ஆற்றுகை

தது, எழுதியவற்றை எல்லாம் வலிந்து புகுத்தியிருப்பது தெரி கிறது. பார்வையாளர் நாடகம் கேட்க வருவதில்லை; பார்ப்ப தற்காகவே கூடுதலாக வருகின்ற னர். நெறியாளர் தனது தத்து வார்த்த கருத்துக்களையும் , கருத்துவ சொல்லாடல்களையும் அதிக முதன்மைப்படுத்தியதால் ஆற்றுகையான அரங்குக் குரிய ஏனைய மூலகங்களின் வன்மை யை இழந்து இரு ந் த தே (ா டு தொய்வு நிலையும் இருந்தது.
அரங்கு, உண்மையில் ஆற் றுகை நிகழ்த்தப்படும் வேளையில் நிகழ்த்திக் காட்டுகைக் களமாக Theatre as enactment) g(l)ij தல் வேண்டும். ஆனால், அடிக் கடி நிகழும் காட்சி மாற்றம் , திரைகளை அடிக்கடி திறந்து மூடல் ஆகியவை பார்வையாள ரின் சிந்தனையை குழப்பியது.
பத்துக்கு மேற்பட்ட நாடகங் களை எழுதி நெறியாள்கை செய்த பாலசிங்கம் அவர்களின் ஆற்றுகை அளிக்கை வடிவம் (Presentational form ) ஏன் குழந்தை சண்முகலிங் கத்தின் சாயல்களுக்குள் மூழ்கிப் போனது? நெறியாளர், அவரின் போக்கில் இருந்து வி டு பட முடியாது நிற்கிறார் போல் இருக் கிறது.
நடிகர்களின் மெய் அசைவுக்
குறிகளை வெளிப்படுத்துவதில் இசையின் பங்கு முதன்மையா னது. ஆனால், இங்கு இசை
எங்கேயோ பதுங்கி இருந்தது போல் இருந்தது. இசை, பின் னணி இசையின் வெளிப்பாட்டுத் திறன் ஆற்றுகையை காவிச் செல் லாமல் அமைந்து இருந்தது.
பாத்திரங்கள் உரையாடல் களில் ஏற்ற இறக் க ங் க ைள (Modulation) gyC3T 6fj926) 2 Gi) லது எந்த அசைவு நிலைகளிலும் ஒரே குரலையே உபயோகித்தமை பெரிய குறையாய் இருந்தது. உதாரணமாக பணக்கார அண் ண னின் பாத்திரம் ஏற்றவரின் பேச்சைக் குறிப்பிடலாம்.
மொத்தத்தில் சிறிய குறை களை கொண்டிருந்தாலும் அரிஸ் டோட்டிலும், பரத முனிவரும் கூறியுள்ள ஆரம்பம், உச்சம், முடிவு என்கின்ற நேர்கோட்டு வ டி  ைவ க் கொண்டதாகவே இருந்தாலும், சமகால நாடகம் t Contemperoray Theatte) Gr GsTip வகையில் "அவள் ஒரு மாதிரி வரவேற்கக் கூடியது. எனினும், படச்சட்ட மேடையின் இறுக்க
நிலையில் இருந்து ஒருசில தூரங் களை கடந்தாலே அது பெரிய
மாற்றத்துக்குரியதாகும்.
சந்தாதாரராகுங்கள்
நாடகத்தை நேசிப்பவர்களே!
ஆற்றுகையையும் நேசி
யுங்கள்! உங்களுக்காகவே ஆற்றுகை வெளிவந்துகொண்டிருக்
கின்றது. உங்கள் ஆதரவுக்
கரங்கள்
பலம் தரும்பொழுது
ஆற்றுகை புதுப் பொலிவுடன் வீறுநடை போடும். ஆற்றுகை காலாண்டு இதழுக்கான ஒரு வருட சந்தா ரூபா 80/-
ஆற்றுகை

Page 28
" தேடுங்கள் கண்டடைவீர்கள் ”
திருமறைக்கலா மன்றம் நடாத்திய நாடக அரங்கியற் கண் காட்சியை முன்னிட்டு ஆற்றுகை சஞ்சிகையால் நடாத்தப்பட்ட "தேடுங்கள் கண்டடைவீர்கள்" நாடக அரங்கியல் அறிவுப் போட் டியில் கலந்து கொண்டு சரியான விடைகளை எழுதி குலுக்கல் மூலம் தெரிவு செய்யப்பட்டவர்கள்.
* B. பிரபாகரன் * ஜெயசுதா மேகநாதன் 1511, மின்சார நிலைய வீதி வேலணை து. ம . யாழ்ப்பாணம் வித்தியாலயம்
க. ஜீவாஜினி * றுஸ்மி போசவ் சுண்டிக்குளி மகளிர் யா திருக்குடும்ப கல்லூரி கன்னியர் மடம்
* சூ மேரிவதனா கஜனி முத்துலிங்கம்
பா சென். அன்ரனீஸ் யா வேம்படி மகளீர் றோ. க. வித்தியாலயம் கல்லூரி
* கமலினி அமிர்தலிங்கம் அகல்யா செகராசா
யா வேம்படி மகளீர் சுண்டிக்குளி மகளிர்
கல்லூரி கல்லூரி
* செ. நிஷாந்தன் மேஷாக்
* அணைக்கும் கரங்கள்" அணைக்கும் கரங்கள் 79, பிரதான வீதி 79, பிரதான வீதி யாழ்ப்பாணம் யாழ்ப்பாணம்
* இவர்கள் ஒவ்வொருவருக்குமான 100/- பரிசுத் தொகை காலக்
கிரமத்தில் அனுப்பி வைக்கப்படும்,
இப்போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் "ஆற்றுகை தனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கின்றது.
அரங்கியல் கருத்துக்களம் அடுத்த வெளியீட்டில் இருந்து ஆற்றுகை இப்புதிய | பகுதியை தொடரவிருக்கிறது. ஆர்வலர்களால் அனுப்பி வைக் கப்படும் அரங்கியல் தொடர்பான தரமான கேள்விகளுக்கு ஆற்றுகை பதில் அளிக்கிறது. உங்களுக்கு எழும் சந்தேகங்களை வினாக்களை எமக்கு அனுப்பி வையுங்கள்.
(விடைகளை துறைசார்ந்த வல்லுனர்கள் வழங்குவார்கள்.)
- ஆற்றுகை
 
 
 

இவ்வாண்டு ஈழத்து நாடக உலகம் தனது வளர்ச்சிப் பாதையில் தடம் பதித்த இரண்டு காத்திரமானவர்களை இழந்து நிற்கின்ரது சிவானந்தானத் தொடர்ந்து திரு ஆ. கல்யாணசுந்தரேசன் அவர் க்ளை 8 ?5 ல் பிரிந்தது இழப்பின் பரப்பை அதிகமாக்கிவிட்டது. தமிழ் நாடக உலகின் வளர்ச்சிப் படிகளில் இவரும் தன் உழைப்பால் கால் பதித்தவர் உரமூட்டியவர். இவருக்கு ஆற்றுகை தனது அஞ்சலி யைச் செலுத்துகின்றது
OL C. C. OL OL O
நெஞ்சில்
நிறைந்தவ it....
O Ο Ο| | | |O| 1 | Ο
- கை. மா அருட் சந்திரன்
"அரிது அரிது பானிடராய் பிறப்பது அரிது" என்பார்கள். பிறந்து உன்னதமான மனிதனாய், சேவையாளனாய், J, qÜ}Sህ{êኴ னொய், ஆசானாய் வாழ்ந்து செல்வது அதைவிட அரிது. அப்படி வாழ்ந்து சென்றவர்தான் "கல்யாணி" என அன்போடு அழைக்கப் படும். ஆ. கல்யாணசுந்தரேசன். அவரது வாழ்வும், பணியும் மறக் கப்பட முடியாதவை, அதிலும் அவரது கலை வாழ்வு போற்றுதற் குரியது.
யாழ். இந்துக் கல்லுரரியில் "மந்திரி குமாரி" தாடகத்துடன் ஆரம்பமாகிய இவரது கலைப் பணி மிகப் பெரிய சாதனைகளைப் புரியாது விடினும் நாடகத் துறைக்கு கணிசமான பங்களிப்பினை நல்கி நிற்கின்றது. ஈழத்தில் மட்டுமல்லாது இந்தியாவிலும் இவரது கலைப்புலன்ம மிளிர்ந்தது. 1954 காலப் பகுதியில் சென்னைப் பல்
ஆற்றுன் 5.

Page 29
கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டப் படிப்பை மேற்கொண்ட போது பல இந்திய நாடகங்களில் பங்கு கொண்டு நடித்தது மட்டு மல்லாது இசைப் போட்டிகளிலும் பங்கு கொண்டு பரிசுகள் பெற்ற வர். ஜெமினிமகாலிங்கத்துடன், "வீரபாண்டியன்' நாடகத்தில் இராஜகுரு வேடம் தாங்கி நடித்தபோது அறிஞர் அண்ணாவினா லேயே பாராட்டப்பட்டவர். அதுமட்டுமன்றி இந்திய பிரபல்ய நடி கர் ஜெமினிகணேசனுடன இணைந்து "விஞ்ஞானி' எனும் நாட கத்தில் நடித்தபோது இவர் திறமை மேலும் வெளிப்படுத்தப் பட்
-
"இலங்கை கலைக் கழகம் இயங்கிய காலத்தில் பேராசிரியர் வித்தியானந்தனுடன் இணைந்து செயற்பட்டதும் தொடர்ந்து கலைக் கழகத்தின் ஆதரவுடன் ராம் சுந் த ரோ டு சேர்ந்து "அமெச்சூர்' நாடக மன்றத்தை ஊவா மாகாணத்தில் அமைத்து பல நாடகங்களை வெற்றிகரமாக மேடையேற்றியவர். அது மட்டு மன்றி ஈழத்து நாடக வரலாற்றின் திருப்பத்துக்குக் காரணமாய் அமைந்த கொழும்பு பல்கலைக் கழகம் நடாத்திய நாடக டிப்ளோமா பயிற்சியிலும் (1976 - 1977) ஈழத்தில் இருந்து சென்ற அறுவரில் ஒருவராகப் பங்கு கொண்டவர். தொடர்ந்து யாழ். ஸ்கந்தவரோதயா கல்லூரியில் ஆசிரியப் பணியை மேற்கொண்ட போதும், கலைப் பணியை சிறப்புற ஆற்றினார். இக் காலப்பகுதியில் இவரது "காற் நாடிகள்" நாடகம் இலங்கை கலைக் கழகம் நடாத்திய நாடகப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்றது. கற்பித்தலில் முத லாய் நாடகப் பாணியை கையாண்டு வெற்றியும் கண்டவர்.
சில காலப் பகுதியில் இவர் நோயாளியாகி தன் பணியைக் குறைத்துக் கொண்டாலும் ஓய்வு பெற்றதன் பின்னர் மானிப்பாயில் கலையரசு சொர்ணலிங்கம் நினைவாக "கலையரசு கலைகழக நாடகப் பயிற்சிக் கல்லூரி' ஒன்றை நிறுவினார். அதன் வளர்ச் சிக்குப் பெரும் உந்து சக்தியாகவும் திகழ்ந்தார். இன்று கல்லூரி யின் முனைப்பான அடித்தளத்தையும், ஏற்படுத்திக் கொடுத்தவர்.
எனினும் கால நகர்வு தனது பதிவில் அன்னாரின் பெயரை விரைவில் பதித்துவிட்டது. இருப்பினும் கலை வரலாற்றில் இவரால் உருவாக்கப்பட்ட மாணவர் மனங்களிலும் அவர் புரிந்த நிறைவான செயற்பாடுகளிலும் நெஞ்சில் நிறைந்த அவரின் நிழல்கள் படர்ந்து கொண்டே இருக்கும்.
54 S S S S S S S LSL SS ------ ஆற்றுகை
193O1
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தொகுப்பு :
கி. செல்மர் எமில்
நூல் வெளியீடுகள்
* இம்மனுவல் நாட்டுக்கூத்து
29-04-1995 அன்று பாஷையூர் பங்கு மண்டபத்தில் "முத்தாரக் கவிஞர்" ஆசிர்வாதம் தேவசகாயம்பிள்ளை (செகராசசிங்கம்) எழுதிய "இம்மனுவல் நாட்டுக் கூத்து" நூல் வெளியிடப்பட்டது. இவ் விழாவிற்கு பாஷையூர் புனித அந்தோனியார் ஆலய பங்குத்தந்தை
அருட்திரு. ஜெயக்குமார் அடிகள் தலைமை தாங்கினார். யாழ். ஆயர் பேரருட்திரு தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை நூலாசிரி யருக்குப் பொன்னாடை போர்த்து பொற்கிழி வழங்கினார். யாழ்.
பிரதேச செயலர் திரு க. குணராஜா செஞ்சொற் கவிஞன் என்னும் பட்டமளித்து கெளரவித்தார்
* திருமறை நாடக நூல்கள்
திருமறைக் கலாமன்றத்தினால் தொடராக வெளியிடப்பட்டு வரும் கூத்து நூல்கள் வரிசையில் 3-வது வெளியீடான 3 நாட கங்களைக் கொண்ட எதிர்கொள்ளக் காத்திருத்தல்" என்ற குழந்தை 10. சண்முகளிங்கம் அவர்களின் நாடக நூல் "நாடக அரங்கியற் கண் காட்சி - 1995 இன் நான்காம் நாளான 18-06-1995 அன்று மாலை யில் மன்ற அரங்கில் நடந்த "கலை அரங்கு" நிகழ்வின் போதும், திருமறை நாடக நூல்கள் வரிசையில் 13 -வது வெளியீடான 'சட் |- என்ற நாடக நூல் செம்பியன்பற்று புனித பிலிப்நேரி யார் ஆலய திருவிழா அன்று மாலையில் நடந்த கலை நிகழ்வின் போதும் 14-வது வெளியீடான "குருவும் பலியும்" என்ற நாடக Fifi () 5-07-1995 இல் நல்லூர், ஆசிர்வாதப்பர் اللاتيني திருவிழா அன்று மாலை இடம்பெற்ற கலை நிகழ்ச்சியிலும் வெளியிட்டு வைக்கப்பட்டது.
நாட்டுக் கூத்துக்கள் * புனித யூதாததேயு
அரியாலை புனித யூதாததேயு ஆலயத் திருவிழா 30-04-1995 இல் கொண்டாடப்பட்டது. அன்று மாலையில் அண்ணாவியார்
ஆற்றுகை 55 - - كمسكته

Page 30
திரு. பேக்மன் ஜெயராசா அவர்களின் நெறியாள்கையில் "புனித யூதாததேயு நாட்டுக்கூத்து மேடையேற்றப்பட்டது. * புனித பிலிப்புநேரியார்
செம்பியன்பற்று புனித பிலிப்பு நேரியார் ஆலய 125 - வது ஆண்டு நிறைவு விழா மே 26 இல் சிறப்புடன் கொண்டாடப்பட் டது. பிற்பகலில் அண்ணாவியார் திரு. A. பாலதாஸ் அவர்களின் நெறியாள்கையில் உருவான புனிதரின் வரலாற்றைச் சித்தரிக்கும் நாட்டுக்கூத்து உட்பட பல கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
* பண்டார வன்னியன்
பாஷையூர் புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருநாளை முன்னிட்டு 14-06-1995 இல், ஆலய முன்றலில் சிறப்பு நிகழ்ச்சி யாக அண்ணாவியார் திரு. வ. அல்பிரட் அவர்களினால் நெறி யாள்கை செய்யப்பட்ட “பண்டார வன்னியன்’ நாட்டுக் கூத்து" மேடையேற்றப்பட்டது.
* தேவசகாயம்பிள்ளை
பருத்தித்துறை, புனித தோமையார் ஆலய திருவிழாவை முன் னிட்டு 03-07-1995 இல், மாலையில் அங்கு இடம் பெற்ற கலை நிகழ்ச்சிகளின் போது திருமறைக் கலா மன்றத்தினால் இந் நாட்டுக் கூத்து மேடையேற்றப் பட்டது. இதனை அண்ணாவியார் திரு. A. பாலதாஸ், திரு. பேக்மன் ஜெயராசா ஆகியோர் நெறியாள்கை செய்திருந்தனர். (இந் நிகழ்வில் இந் நாடகத்தில் நடித்த செல்வி அ. சாந்தி அவர்கள் அருட்திரு. P M இம்மனுவேல் அவர்களால் பொன்னாடை போர்த்திக் கெளரவிக்கப்பட்டார்.)
நாடகங்கள் * பாஞ்சாலி சபதம்
நாடக அரங்கக் கல்லூரியின் தயாரிப்பில், திரு. ஏ. ரி. அரசு வின் நெறியாள்கையில் உருவான இந் நாடகமானது 05-04-1995 இல் மாணிப்பாய் மகளிர் கல்லூரியில் மேடையேறியது. * மாணவர் கலைப் பூங்காவில்
விடுதலைப் புலிகள் மாணவர் அமைப்பின் கலைப் பண்பாட்டுப்
பிரிவினரால் நடாத்தப்பட்டு வரும் மாதாந்த " மாணவர் கலைப் பூங்கா’ நிகழ்ச்சிகளில் முதலாவது 12-04-1995 இல், யாழ். பல் கலைக் கழக கைலாசபதி கலை அரங்கிலும், இரண் டா வ து
27-05-1995 இல் பளை மத்திய கல்லூரியிலும், மூன்றாவது 30-06-1995 இல் நாகர்கோவில் ம கா வித் தி யா லயத் தி லும் நடைபெற்றது. இவற்றில் பல்வேறு பாடசாலைகளில் இருந்து
56 ஆற்றுகை

தெரிவு செய்யப்பட்ட இசை, நடன , நாடக, நாட்டுக்கூத்து நிகழ்ச்சி கள் பெருமளவில் இடம் பெற்றன. * தமிழ்ப் புத்தாண்டு விழாவில்
வலி தெற்கு உடுவில் பிரதேச செயலகத்தால் நடாத்தப்பட்ட தமிழ்ப் புத்தாண்டு விழா, சுன்னாகம் இராமநாதன் கல்லூரியில் 15-04-1995 மாலையில் நடைபெற்றது. இதில் பல்வேறு கலை நிகழ்வுகளுடன் யாழ் சுதேசியக் கலாமன்றம் வழங்கிய கூடி நாம் வாழ்வோம்’ என்ற நாடகம் மேடையேற்றப்பட்டது. * பாலுக்குப் பாலகன், ஆரொடு நோகேன், கூர்
இம் மூன்று நாடகங்களும் 16-04-1995 இல் நாடக அரங்கக் கல்லூரி: இளங்கலைஞர் மண்டபத்தில் நடாத்திய “அவைக்காற்றுகை” நிகழ்ச்சியில் காலை, மாலை இரு காட்சிகளாக மேடையேற்றப்
பட்டன. இதில் "பாலுக்குப் பாலகன்’ என்ற சிறுவர் நாடகம் குழந்தை ம. சண்முகலிங்கத்தால் எழுதப்பட்டு தேவானந்தின் நெறி யாள்கையிலும், * ஆ ரொ டு நோ கே ன் " என்ற 15Tl.
கம் குழந்தை ம. சண்முகலிங்கத்தால் எழுதப்பட்டு, க. சிதம்பர நாதனின் நெறியாள்கையிலும், ‘கூர்’ என்ற பெண்ணிய நாடகம் செல்வி. இ. ஜெயரஞ்சினியால் எழுதி நெறியாள்கை செய்யப்பட்டும் மேடையேறியது.
* நாமிருக்கும் நாடு நமது
தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம் தயாரித்து வழங் கிய க. சிதம்பரநாதனின் நெறிப்படுத்தலில் உருவான "நாமிருக்கும் நாடு நமது' என்ற நாடகம், புதிய வடிவில், 12-05-1995 இல் பளை மகா வித்தியாலயத்திலும், 14-05-1995 இல் சாவகச்சேரி இந்துக் கல்லூரியிலும், 10-06-1995 இல் உடுவில் இராமநாதன் கல்லூரியிலும், 11-06-1995 இல் மானிப்பாய் இந்து மகளிர் கல் இாரியிலும், 08-07-1995 இல் நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரி யிலும் மேடையேறியது. இந் நாடகம் இன்னும் பல இடங்களூரிலும் மேடையேற விருப்பது குறிப்பிடத்தக்கது. * கலை விழாவில்
வலிகாமம் தெற்கு பிரதேச கலை, கலாச்சாரப் பேரவையால் ஒழுங்கு செய்யப்பட்ட மாபெரும் கலை விழா 13-05-1995 முதல் 3 நாட்களுக்கு வலி தெற்கு பிரதேச சபை, உடுவில் உப அலுவலகத் தின் திறந்தவெளி அரங்கில் நடைபெற்றது. முதல் நாளில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் பிரபல பாடகர் திரு . எஸ். ஜி. சாந்தன், திரு. வி. ரி. செல்வம் இணைந்து வழங்கிய " சத்தியவான் சாவித்திரி, என்ற நாடகமும், இரண்டாம் நாள் சுன்னாகம் இராமநாதன் கல்
57 «ֆ,0մ): მზ) ტ5

Page 31
லூரி மாணவிகள் வழங்கிய "அசோகவனத்தில் சீதை' என்ற நாட் டிய நாடகமும், மானிப்பாய் கலைஞர்கள் வழங்கிய 'சொர்க்கம் யாருக்கு" என்ற நாடகமும் மற்றும் 'அரிச்சந்திர மயான காண்ட
மும், மூன்றாம் நாள் கோப்பாய் உதயதாரகைக் கலைக் குழு வழங் கிய "அவள் ஒரு மாதிரி" என்ற நாடகமும் மேடையேற்றப்பட்டன.
* காவியத் தலைவன்
வல்வை ஹெலியன்ஸ் நண்பர்களின் தயாரிப்பான மன்னார் மாதோட்ட பனங்காமத்தினை ஆண்ட மன்னன் கயிலை வன்னிய னின் வரலாற்றைக் கூறும் "காவியத் தலைவன்" என்ற வரலாற்று நாடகம் வல்வை அம்மன் கோவில் வீதியில் 14-05-1995 இல் மேடையேறியது. இந் நாடக ஆக்கத்தினை ச. காந்திதாசனும், நெறியாள்கையை இவருடன் வெ. முத்துச்சாமியும் இணைந்து செய்
திருந்தனர்.
* முழங்கம் முரசு
யாழ். செஞ்சிலுவைச் சங்க யாழ்ப்பாணப் பிரிவால் 20-05-1995 இல் பரியோவான் கல்லூரி மண்டபத்தில் நடாத்தப்பட்ட நிகழ்ச்சி பில் கலைஞர் வேல் ஆனந்தன் ஆடல் அணியினர் அளித்த கதகளி ஆடல் நிகழ்ச்சியுடன் அக் கலைஞரின் நெறியாள்கையில் தென்ப ராட்சி கலாமன்றம் வழங்கிய நாட்டியக் கலைமணி" திருமதி. பாரதி சிவயோகநாதனின் முழங்கும் முரசு"ம் (கதகளி ஆடல் வடிவில் தேசிய முறை ஆடற் கதை) மேடையேற்றப்பட்டது.
* விடுதலை வேட்கை, விதைகள் விருட்சமாகிறது
சித்தன்கேணி மாணவர் கல்வி வளர்ச் சிக் கழ சுத் தி னர் 20-05-1995 இல் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி திறந்த வெளியரங்கில் மாபெரும் கலை நிகழ்ச்சி ஒன்றை நடாத்தினர். இதில் "விடுதலை வேட்கை" என்ற நாட்டிய நாடகமும் "விதைகள் விருட்க மாகிறது" என்ற நாடகமும் மேடையேற்றப்பட்டது.
* தீ சுமந்தோர்
திரு. சி. ஜெயசங்கரினால் எழுதி, நெறியாள்கை செய்யப்பட்டு, யாழ் பல்கலைக் கழக சமுக விஞ்ஞான மன்றத்தினரால் தயாரிக்கப் பட்ட "தீ சுமந்தோர்" என்னும் நாடகம் 20-05-1995 இல் யாழ் Li di கலைக் கழக கைலாசபதி கலை அரங்கில் முதல் தடவையாக மேடை யேற்றப்பட்டது. தொடர்து ஒரு மாத காலத்தில் 17 வரையிலான தடவைகள் யாழ் குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மேடை யேற்றம் கண்டது. இறுதியாக 24-06-1995 இல் காலை, மாலை இரு காட்சிகளாக சுண்டிக்குளி மகளிர் கல்லூரி மண்டபத்தில் யாழ்ப்
ஆற்றுகை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

to Y. M. C. A. இளைஞர் குழுவின் சேவை நிதிக்காக மேடை யேறிய
ஏழு பிள்ளை நல்லதங்காள்
சென்ற நூற்றாண்டில் சங்கரதாஸ் சுவாமிகளால் இசை, நாடக பிT அளிக்கப்பட்ட ஏழு பிள்ளை நல்லதங்காள்" என்று இசை நாடகம் திருமறைக் கலாமன்றத்தினால் கலைவேந்தன் ம. தைரிய நாதனின் நெறியாள்கையில் ஜூன் மாதம் 2, 3, 4 ஆம் திகதிகளி ஆம் ஜூலை 8-ம் திகதியிலும் மன்ற அரங்கில் மேடையேறியது.
* முழுநிலா கலைவிழாவில்
மருதனாமடம் திறந்தவெளி அரங்கில் முழுநிலா கலை விழா ஒன்று 12-06-1995 இல் திரு. ஆ. மகாலிங்கம் (பிரதேச செயலகம், உடுவில்) தமைமையில் நடைபெற்றது. இதில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் நாடக நிகழ்வுகளாக வவி வடக்கு இடம்பெயர்ந்த சிறுவர்கள் வழங்கிய வசந்தின் கோவாட்டமும், தாளலயம், ஐயனார் சனசமூக நிலையம் வழங்கிய வெளிக்கிடடி கொழும்பிற்கு என்ற 125"TL="(! y)Lh, rr rrG2) ErJI5a#;rf- நேருஜி கலோ மன்றத்தினரின் சேரன் செங் குட்டுவன்' என்ற சரித்திர நாடகமும் மேடையேற்றப்பட்டது.
எவ்வாளன்
யாழ் பல்கலைக்கழக வரலாற்றுக் கழகத்தினரால் கைலாசபதி கலை அரங்கில் பாஷையூர் கவிஞர் தேவதாசனால் எழுதி நெறி 4 Tirani, Gift" LIL "எல்லாளன்" என்ற வரலாற்றுக் கற்பனை நாடகம் 24-06-1995 இல் காலை, மாலை இரு காட்சிகளாக மேடை யேற்றப்பட்டது
* ஆவியில் இனியவளே
இடம்பெயர்ந்து வாழும் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக, இடம்பெயர்ந்த தீவக மக்கள் நலன் காக்கும் கழகத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட கலைப் பூங்கா' 24-06-1995 இல் நடைபெற்ந்து. அரியாவை சீன சமூக நிலைய காசிப்பிள்ளை கலையரங்கில் நடை பெற்ற இந் நிகழ்ச்சியில் சுதேசியக் கலா மன்றம் வழங்கிய "ஆவியில் இனியவளே! என்ற நாடகம் மேடையேறியது.
* ஒரு தேடல்
கிருமறைக் கலாமன்ற நாடக பிரதியாக்கக் குழுவால் எழுதப் பட்டு திரு. G. P பேர்மினவினால் நெறியாள்கை செய்யப்பட்ட ஒரு தேடல்" என்ற நாடகம் 15-02-1995 இல் இலங்கை இளங் கலைஞர் மன்ற மண்டபத்திலும், 18-02-1995 இல் உடுப்பிட்டி மக் ளிர் கல்லூரியிலும், 30-037ggது இல் யாழ் நாகர்கோவில் மகா
ஆற்றுகை 59

Page 32
வித்தியாலய மைதானத்தில் மாணவர் கலைப்பூங்கா 3 இன் போதும் மேடையேற்றப்பட்டது. SS துறவி, ஒற்றுமையின் சின்னம்
சுண்டிக்குளி மகளிர் கல்லூரியின் நூற்றாண்டு விழா நிதிக்காக தமிழ் மன்றத்தால் நடாத்தப்பட்ட ‘கலைப்பொழுது’ கல்லூரி மண்டபத்தில் 30-06-1995, 01-07-1995 திகதிகளில் நடாத்தப் பட்டது. இதில் பல்வேறு கலை நிகழ்வுகளுடன் குழந்தை ம. சண் முகலிங்கத்தின் “ஒற்றுமையின் சின்னம்’ என்ற சிறுவர் நாடகமும், ரவீந்திரர்தாகூரினால் எழுதப்பட்டு, குழந்தை ம. சண்முகலிங்கத் தினது மொழிபெயர்ப்பில், வைத்திய கலாநிதி S. சிவயோகனின் நெறியாள்கையில் உருவான "துறவி என்ற நாடகமும் மேடையேற் யேற்றப்பட்டன.
S& கோபுரத்தில் குழப்பம்
திருமறைக் கலாமன்றத்தால் மேடையேற்றப்பட்டு வரும் திரு மறை நாடகங்களில் ஒன்றான 'கோபுரத்தில் குழப்பம்’ என்ற நாட கம் திரு. . ஜோன்சன் ராஜ்குமாரின் நெறியாள்கையில் மன்ற களப் பயிற்சி மாணவர்களால் 03-07-1995 இல் பருத்தித்துறையில் புனித தோமையார் ஆலய முன்றலிலும், 05-07-1995 இல் நல்லூர் ஆசீர் வாதப்பர் ஆலய முன்றலிலும், 08-09-1995 இல் யாழ் அடைக்கல அன்னை ஆலய முன்றலிலும் (இங்கு அடைக்கல அன்னை ஆலய இளைஞர் மன்றத்தினர் வழங்கிய தடைகள்” என்ற நாடகமும் மேடையேற்றப்பட்டது.) இவ் ஆலயங்களின் திருநாளை முன்னிட்டு மாலையில் இடம்பெற்ற கலை நிகழ்ச்சிகளின்போதும் 03-09-1995 இல் குருநகர், புனித யாகப்பர் ஆலயத்தில் மாலையில் இடம்பெற்ற வழிபாட்டு சிறப்பு நிகழ்ச்சியின் போதும் மேடையேற்றப்பட்டது.
* பட்டாம் பூச்சி, சமாதானத்தைத் தேடி
உடுவில் மகளிர் கல்லூரி தமிழ் மன்றம் 04-07-1995 இல் மாலை
யில் கல்லூரி மண்டபத்தில் "கலைமாலைப் பொழுது ஒன்றை நடாத்தியது. இதில் பல்வேறு கலை நிகழ்வுகளுடன், நாடக நிகழ் வாக "பட்டாம் பூச்சி’ என்ற சிறுவர் நாடகமும், "சமாதானத் தைத் தேடி" என்ற சமுக நாடகமும் மேடையேற்றப்பட்டது.
* “மனிதம்" எங்கே?
இந் நாடகம் 03-09-1995 அன்று மாலையில் குருநகர் புனித யாகப்பர் ஆலய முன்றலில் இடம்பெற்ற வழிபாட்டு சிறப்பு நிகழ்ச்சி பின் போது புனித ஜோசவாஸ் இளைஞர் மன்றத்தால் மேடை யேற்றப்பட்டது.
60 ஆற்றுகை

* யாத்திரை
தியாகி திலீபனின் எட்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன் னிட்டு 26-09-1995 அன்று மாலையில் நல்லூர் ஆலய முன்றலில் நினைவஞ்சலிக் கூட்டத்தைத் தொடர்ந்து இடம் பெற்ற கலை நிகழ்ச்சிகளின்போது விடுதலைப் புலிகள் கலை பண்பாட்டுக் கழக கலைக் கல்லூரியின் தயாரிப்பில் திரு. செந்தமிழ்க்கீரனால் எழுதப் பட்டு, திரு. எஸ். பாலசிங்கத்தின் நெறியாள்கையில் ‘யாத்திரை", என்ற நாடகம் மேடையேற்றப்பட்டது.
நாடகக் கருத்தரங்குகளும், களப் பயிற்சிகளும்
EK 25-05 - 1995
ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டு நிறுவனத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட கருத்தரங்கு நிறுவன நூலக மண்டபத்தில் ஏ. ஜே. கனகரட்ணா தலைமையில் நடைபெற்றது.இதில் *1990க்கு பின் யாழ்ப்பாணத்தில் ஆங்கில நாடக அரங்கு" என்ற தலைப்பில் செல்வி நா. வை. இராஜபிள்ளை கருத்துரை வழங்கினார்.
* 23-06-1995
யாழ் பல்கலைக் கழக நுண்கலைத்துறையின் கலை வட்டக் கருத் தரங்கு 23-06-1995 மாலையில் யாழ் பல்கலைக் கழக முகாமைத் துவ மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் ‘குழந்தை ம. சண்முக லிங்கத்தின் எழுத்துருக்கள்” என்ற தலைப்பில் திரு. க. ரதீதரன் உரையாற்றினார். "எனது நாடக அனுபவம்" என்ற தலைப்பில் குழந்தை ம. சண்முகலிங்கம் அவர்கள் தனது அனுபவத்தை பகிர்ந்துகொண்டார்.
ER 15 05- 1995, 27-08- 1995
திருமறைக் கலா மன்ற நாடகப் பயிலக மாணவர்களுக்கான * முழு நாள் நாடகக் களப் பயிற்சி 15-05-1995 இல் யாழ் புனித பத்திரிசியார் கல்லூரி மண்டபத்திலும், 27-08-1995 இல் யாழ் மறைக்கல்வி நடு நிலைய மண்டபத்திலும் நடாத்தப்பட்டது. இதில் நான்கு நாடகப் பயிலக மா ண வர் களும் கலந்து கொண்டனர்.
நாடக விழாக்கள்
* சுதேசியக் கலாமன்ற நாடக விழா
யாழ் சுதேசியக் கலாமன்றம் அரங்கியல் ஆய்வுக்கான 'நாடக விழா ஒன்றினை மே மாதம் 27 ஆம் திகதி உரும்பிராய் அன்னை
ஆற்றுகை 6

Page 33
பூபதி கலை அரங்கில் ஆரம்பித்தது. சனி, ஞாயிறு தினங் களில் ஜூன் மாதம் 4 ஆம் திகதி வரை இரு வாரங்களுக்கு நடாத் தப்பட்ட இந் நாடக விழா? அதன்பின் பல காரணங்களால் முற் றுப் பெறாமல் இடை நிறுத்தப்பட்டுள்ளது. விரைவில் மீண்டும் ஆரம்பமாகி நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் இந் நாடக விழா முடிவடைந்ததும் அது தொடர்பான ஆய்வு ஒன்  ைற *ஆற்றுகை வெளியிடும். இதுவரை நடைபெற்ற இந் நாடக விழா வில் 9 நாடகங்கள் திரு. எஸ். பாலசிங்கம் அவர்களின் நெறியாள்கை யில் மேடையேற்றப்பட்டன. 27-05-1995 இல் "ஜோனாஸ்" என்ற நாடகமும், கல்லாய் மனிதராய்” என்ற நாடகமும், 28-05-1995ல் “அவள் ஒரு மாதிரி" என்ற நாடகமும், ‘கூடி நாம் வாழ்வோம்’ என்ற நாடகமும், 03-06-1995 இல் 4 + 4-40 என்ற நாடகமும், "குளவிக் கூடு” என்ற சிறுவர் நாடகமும், "இருள் சூழ்ந்த பொழுது கள்" என்ற தெரு வெளி நாடகமும், 04-06-1995 இல் "ஒளி உதித்தது" மற்றும் சூரியனைச் சுட்டெரிப்போம்" என்பனவும் மேடையேற்றப்பட்டன.
x மானிப்பாய் இந்துக் கல்லூரி நாடக விழா
மானிப்பாய் இந்துக் கல்லூரியின் வருடாந்த 'நாடக விழா ஜூலை மாதம் 1*ம், 2-ம் திகதிகளில் கல்லூரியில் இடம் பெற் றது இதில் பல நாடகங்கள் மேடையேற்றப்பட்டன.
நாடக அரங்கியற் கண்காட்சி * திருமறைக் கலாமன்றம்
நாடக உலகில், புதிய ஒரு முயற்சியாக ஜூன் மாதம் 15 ஆம் திகதி தொடக்கம் 18 ஆம் திகதி வரை திருமறைக் கலா
மன்றத்தால் 'நாடக அரங்கியலுக்கான கண்காட்சி ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டு நடத்தப்பட்டது. இக்கண்காட்சியின் கடைசி இரண்டு நாட்க ளிலும் மாலையில் * க  ைல அர ங் கு '
நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. இதில் பல்வேறு அமைப்புக்களது நாடகங்கள் மேடையேற்றப்பட்டன. 17-06-1995 இல் சென்மேரிஸ் முத்தமிழ் நாட்டுக் கூத்து மன்றம் வழங்கிய 'சங்கிலியன்’ என்ற தென்மோடி நாடகம் அண்ணாவியார் டானியல் பெலிகானின் நெறியாள்கையிலும், அல்வாய் மனோகரகான சபா வழங்கிய பூதத் தம்பி இசை நாடகமும், 18-06-1995 இல் நாவண்ணனின் அடம் பன் கொடிகள்" மறவன், ஜெசிமனின் நெறியாள்கையிலும், வ: குருசாமியின் நெறியாள்கையில் செ. மெட்றாஸ் மயில் குழுவினர் வழங்கிய ஒயில் ஆட்டமும் மற்றும் எஸ். ஜெயசங்கரின் "தீ சுமந் தோர்’ நாடகமும் மேடையேற்றப்பட்டது. இக் கண்காட்சியின்
62 ஆற்றுகை

போது இடம்பெற்ற ஏனைய நிகழ்வுகள் தொடர்பான விபரங்கள் கட்டுரையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
நாடக மன்ற புனரமைப்பு
* கிறிஸ்து அரசர் நாடக மன்றம்
1919 ஆம் ஆண்டு முதல் திரு. அகுஸ்தீன் - பிரான்சீஸ் (நாட்டுக் கூத்து நெறியாளரினால்) வழிநடத்தப் பெற்று இலை, மறை காய் போன்று 1992 வரை இயங்கி வந்த பலாலி கிறிஸ்து அரசர் நாடக மன்றத்தை, அவருக்கு புனருத்தாரணம் செய்து தொடர்ந்து இயக்கு முகமாக யாழ், கோப்பாய் தெற்கு, றோ. க. த. க. பாடசாலை யில் 08-07-1995 இல் நிகழ்ச்சி ஒன்று தலைவர் திரு. அ. செபமாலை தலைமையில் இடம் பெற்றது.
agtaas Gadartusaw
* கரும்புலிகள் நாளை முன்னிட்டு
விடுதலைப் புலிகள் கலை பண்பாட்டுக் கழகம் கரும்புலிகள் நாளையொட்டி நடத்திய பார்ம்பரிய அரங்க, சிறுவர் அரங்க், நாடக அரங்கப் போட்டிகளில் யாழ் மாவட்டத்தில் பாரம்பரிய அரண் கில் முதலாம் இடத்தை "வேதா குழுவினர்" (தும்பளை, பருத்தித் துறை) வழங்கிய "பூநகரியிற் பூகம்பம்’ என்ற தென்மோடிக் கூத்தும் 2 ம் இடத்தை 'மதன் கலைக் குழு’ (இராசகிராமம், கரவெட்டி) வழங்கிய "காவியம் படைப்போம்" என்ற இசை நாடகமும், 3 ம் இடத்தை 'கலைக்குரிசில் கலாமன்றம்’ (மெலிஞ்சி முனை, தீவகம் வழங்கிய வரலாற்று மங்கை" என்ற தென்மோடிக் கூத்தும் பெற்றது. சிறுவர் அரங்கில் கலைவாணி வித்தியாலயம், கைதடி வழங்கிய *குளவிக் கூடு முதலாம் இடத்தையும், ' சதாவதானி கலைக் குழு" தம்பசிட்டி பருத்தித்துறை வழங்கிய ‘சிங்கத்தை வென்ற வேங்கை" இரண்டாம் இடத்தையும், புங்குடுதீவு கமலாம்பிகை வித்தியிலயம் வழங்கிய நாடகம் மூன்றாம் இடத்தையும் பெற்றது. நாடக அரங்கில் முத்லாம் இடத்தை வடமராட்சி கலைஞர்கள் ஒன்றிணைந்து வழங் கிய ‘இனியும் துயிலோம்" என்ற நாடகமும், இரண்டாம் இடத்த்ை வடமராட்சி கலைஞர்கள் வழங்கிய தெளிவு" என்ற நாடகமும், மூன்றாம் இடத்தை "புனித கிறிஸ்தோப்பர் கடற்சாரணர் கல்விக் குழு’ வழங்கிய "தியாகத்தின் வேள்வி" மற்றும் அளவையூர் கலிையக் மன்றத்தின் "நெருப்பு நதிகள்' போன்ற நாடகங்களும் பெற்றன. இப்போட்டிகள் வன்னி, முல்லை, மன்னார் மாவட்டங்களிலும் நடாத்தப்பட்டன என்பதும், இப்போட்டிகளுக்கான சிறந்த தெதி யாள்கை, சிறந்த பிரதியாக்கம், சிறந்த நடிகர், நடிகைகளுக்கள் பரிசில்களும் வழங்கப்படவுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆற்றுகை 63

Page 34
பாஸ்கா நாடகங்கள் கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பு என்பவற்றை சித்த ரிக்கும் பாஸ்கா நாடகங்கள் யாழ் திருமறைக் கலாமன்றத்தினால் இவ்வருடம் நீண்ட கலைப் பயனத்தின் மூலம் நாடளாவிய ரீதியில் நிகழ்த்தப்பட்டது.
'அன்பில் மலர்ந்த அமரகாவியம்" என்னும் நாடகம் இவ்வருடம் 13-03-1995 இல், மகரகம தேசிய இளைஞர் சேவை மன்றத்திலும் 15-03-1995 இல் கொழும்பு ஜோண்டி சில்வா மண்டபத்திலும் (இவை வார்த்தைகளற்ற வடிவ miming நாடகங்களாக, பேரா. சரத்சந்திராவின் நாடகக் கலைஞர்களுடன் இணைந்து நிகழ்த்தப் பட்டவை. ஏப்ரல் மாதம் 5, 6, 7, 8 - ம் திகதிகளில் யாழ் திரு மறைக்கலாமன்ற அரங்கிலும் மேடையேற்றப்பட்டது. இதே நாட கம் 1971- ம் ஆண்டு மிகப் பெரிய அளவில் யாழ் முத்தவெளி மைதானத்தில் கோட்டையை பின்னணியாகக் கொண்டு நிகழ்த்தப்
பட்டது குறிப்பிடத்தக்கது.
"பலிக்களம்' என்னும் நாடகம் 12-03 - 1995 'ஹற்றன் புனித ஜோண் பொஸ்கோ வித்தியாலயத்திலும், 18-03-1995 திரு கோணமலை புனித ஜோசவ் கல்லூரி மைதானத்திலும், 16-03-95 மட்டக்களப்பு புனித மரியாள் இணைப் பேராலய முன்றலிலும், 21-03-91 வவுனியா புனித அந்தோனியார் கல்லூரிமைதானத்திலும் 31-03-95 புதுக்குடியிருப்பிலும் மேடையேற்றப்பட்டது. (புதுக்குடி யிருப்பில் அந்தப் பிரதேசக் கலைஞர்களே நடித்தார்கள். இதனை G. P. பேர்மினஸ் நெறிப்படுத்தி இருந்தார்.) -
"சிலுவை உலா" என்னும் நாம்ே உலா என்ற சிற்றில்க்கிய வடி வத்தினூடு கிறிஸ்துவின் பாடுகளை சித்தரித்தது. 1991 - ம் ஆண்டு ப்ாழ்ப்ப்ாணத்தில் மேடையேற்றப்பட்ட இந்நாடகம் இவ்வருடம் 10-03-95 இல் இரு காட்சிகளாக மருதானை டவர் மண்டபத்தில் நன்டபெற்றது. " " " T
இம்மூன்று நாடகங்கள்ையும் எழுதி ந்ெறிப்படுத்தி இருந்தவர் திருமறைக் கலா மன்ற இயக்குன்ர் அருட்கலாநிதி நீ. மரிப்சேவியர் அடிகளாவர். - , "
இழப்பினூடே. *
வர்ணியூரர்ன் என அழைக்கிப்படும் திரு.S.S. கணேசபிள்ளை 30-98-95 கொழும்பில் இனந்த்ெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டார்; இவர் நாடறிந்தி நாடகக் கலைஞன், இலங்கை வானொலி, தொலைக் காட்சி வாயிலாக நாடகத்துறையில் பெரும் பிரபல்யம் பெற்றவர். பல மேடை நாடிகங்களிலும் திரைப்படங்களிலும் தனது ந் ப்புத் திறமையால் கால் பதித்தவர். இவரது "புளுக பொன்ன்ையா", "நம்பிக்கை", "அசட்டு மாப்பிள்ளை", "பாசச் சுமை", "கறுப்பும் சிவப்பும்", "சண்டியன் சின்னத்தம்பி" தனியா தாகம்" ப்ேர்ன்றுநர்டகங்கள் எடுத்துக்காட்டாகும்; இவர் வானொ என்ற ஊடகத்தில் குரல் மூலமான பாத்திர வெளிப்பாட்டை சிறப் புற வெளிக்கொணரக் கூடியவர். அண்மையில் ஐரோப்பிய நா களுக்கு, கலைப்பயணம் ஒன்றை மேற்கொண்டு திரும்பியிருந்தவர் என்பதும் கடந்த வருடத்தில் "மக்களின் குரல்" வானொலியில்ப யாற்றியவர் என்பதும் குறிப்பிடத் தக்கதாகும். - 'இன்றியமையாச் சிறப்பின ஆயினும் பு 。
குன்ற வருபவிடல்." (குறள் 961)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

போட்டி விதிகள்: * இப் போட்டியில் எவரும் பங்கு கொள்ளலாம். ஒருவர் எத்தனை விடைகளையும் அனுப்பலாம். ஒவ்வொன்றிலும் ஆற்றுகையி அலுள்ள கூப்பனே பூர்த்தி செய்து அனுப்பப்பட்டிருக்க வேண் (իւն.
* சரியான விடைகளைப் பலர் அனுப்பும் பட்சத்தில் பரிசுக்குரிய
வர் குலுக்கல் மூலம் தெரிவு செய்யப்படுவார். * பரிசுத் தொகை ரூபா 100/- * முடிவு திகதி 30-10-1995
சொற்சிலம்பம் - 03" 2 5 : : : רור 5ן
7 : : - " -- : .
:
' ffff;"
FS E! 語、溺 EE 击 蟹 : S. (சரியான விடை கொண்டுள்ள 'நீதிக்களின் தொகை இறுதியில் தரப்பட்டுள்ளது.)
* இடமிருந்து வலம்: T"ே
. இது ஜப்பானில் ஆடப்படுகின்ற நாடக வகை. (፵) - g) Liri mrar, மாறி நிற்கின்றது. ()
விபுலானந்த அடிகளால் எழுதப்பட்ட ஓர் நாடக இலக்கண
5Tk:ä). (8) L *。
颚-壬 -
ஆற்றுகை 65.
"=፡

Page 35
8
1. 擅多。 13.
சிங்கள மரபு வழி நாடகமொன்று குழம்பி நிற்கின்றது. (4) இது அரங்கிற்கு வழங்கப்படும் மற்றுமொரு பெயர். (3) கலையரசு சொர்ணலிங்கத்திற்கு புகழ் தேடிக் கொடுத்த பாத்திரமொன்று வளம் மாறியுள்ளது. (4) இது நவரசங்களில் ஒன்று. (3) தேரோட்டி மகன் நாடகத்தின் நாயகன் (4) இது முன்னாயத்தமின்றி நிகழ்த்தப்படுவது. நடிகனை இனங் காண நெறியாளனுக்கு உதவக் கூடியது. ஆனால் இங்கே குழம்பியுள்ளது. (7)
மேலிருந்து கீழ்
罗。
3.
4。
6.
7.
வி. வி. வைரமுத்து அவர்களால் மேடையேற்றப்பட்ட ஈழத் தவரின் கதையைக் கொண்ட ஒர் இசை நாடகம். (6) சந்திரகாசம் நாடகத்தை எழுதிய நாடக ஆசிரியர். (5) இது பேராசிரியர் கணபதிப்பிள்ளை அவர்களால் வடமொழி நாடகமொன்றைத் தழுவி எழுதப்பட்ட நாடகம். (6) அரிஸ்ரோட்டில் கூறிய நாடக ஆக்கக் கூறுகளில் ஒன்று. (7) கிரேக்கத்தின் புகழ் பெற்ற நாடக ஆசிரியரொருவர் தலை கீழாக நிற்கின்றார். (5)
இது கேரளத்துக்குரிய நாடக வகை. (4)
@ກສງທີ່ອນຢ່ອub 02 (Tລະ deຫLaສໍາສະ மேலிருந்து கீழ்: 1. மகாகவி 2. அரிஸ்ரோட்டில் 3. கமல்
6. மேகதூதம் 7. அபசுரம் 8. மதமாற்றம் 9. கிங்லியர் 10. விறலியர் 13. கோடை இடமிருந்து வலம்: 2. அரங்கம் 4. முகாரி 5. மணமே
7. அகஸ்தோ 11. ஊமம் 12. அல்லியம்
போல் 14. d'sbspuri * சரியான விடை எழுதி பரிசு பெறும் அதிஸ்டசாலி: Lu. a Div அ. ம. தி. குருமடம், கொழும்புத்துறை. * சரிவான விடை எழுதி பாராட்டப்படுபவர்கள்:
ஜீன்மேரி பேர்மினஸ் மேரிரெபிக்கா மத்தியூஸ்
சென் ஜேம்ஸ் வீதி, சென் ஜேம்ஸ் மேற்கு வீதி,
குருநகர். குருநகர்.
எஸ். லோகேஸ்வரன் *சிலம்பின் அணை" காங்கேசன்துறை
ஆற்றுகை

ஆற்றுகை வாசகர் வட்டம்
வாசகர்களே!
ஆற்றுகை தனது கலைப்பயண நகர்வில் ஓராண்டை பூர்த்தி
செய்து கொள்வதையிட்டு,
大
★
★
Ní
ஆற்றுகை தொடர்ந்து வரும் காலங்களில் தனது பாதங்களை அகலப் பதித்துக் கொள்ளவும்,
ஆற்றுகைக்கும் உங்களுக்குமான உறவை நிரந்தரப் படுத்திக் கொள்ளவும்,
நாடக அரங்கியல் கலைஞர்கள், அறிஞர்கள், ஆய்வாளர்கள், ஆர்வலர்கள் மத்தியில் பரஸ்பரமான தொடர்புகளை புரிந் துணர்வுகளை ஏற்படுத்திக் கொள்ளவும்,
ஆற்றுகையினால் நடத்தப்படும் கருத்தரங்குகள், களப்பயிற்சி கள், கலைநிகழ்வுகளில் உங்கள் வரவை உறுதிப்படுத்திக் கொள்ள வும் "ஆற்று கை வாசகர் வட்டம்" ஒன்றை ஆரம்பிக்கத் தீர் மானித்துள்ளோம். எனவே ஆற்றுகை தொடர்பான மனப் பதிவுகளுடன், உங்கள் பெயர், முகவரி, மாணவராயின் கல்வி கற்கும் பாடசாலை போன்ற விடயங்களையும் குறிப்பிட்டு, நவம்பர் மாத முடிவுக்குள் எமக்கு அனுப்பி வைப்பதன் மூலம் உங்களை ஆற்றுகை வாசகர் வட்டத்தில் இணைத்துக் கொள் ளுங்கள்.
ஆசிரியர் குழு
}{ { δί ή υβ ν υβ δ0 δί υβ, γ, δ, - δ6 ε6 να δβιβιβυρυβιβυρρ,
ஜெயந்தி நகை மாடம்
48. கே. கே. எஸ். வீதி,
யாழ்ப்பாணம்.
அன்னை அச்சகம், குருநகர், யாழ்ப்பாணம்,

Page 36