கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வெளிச்சம் 2004.01-03

Page 1


Page 2
இந்த இதழில்.
بختيو
喹。
r"
منت
التي
ت
جی
سمتی
உள்ளத்திலிருந்து.
சுடத்தரங்கிள் புத்துருவாக்கம் சுதேச தவீன:வாதத்தின் திறவுகோல்
P. guar if Eir நாட்டுக்கூத்து மறுமலர்ச்சி விங் அவதானிப்புக்கள்
கலாபூஷணம் முல்லைமணி யாழ்ப்பாணக் கத்தோவிக்க நாட்டுக்கூடத்த ப்ரபு - ம்ே
ரபா. யோன்சன் ராஜ்குமார் மலையகத் தமிழ்ப் பண்பாட்டில் அர்ச்சுன5ண் தபசு
அ. ஜெகன்தாசன் அண்ணாவியார் செபமாலை ஆழந்தையுடன் ஒரு நேர்காணள்
ஆசிரியர் குழுவினர் கனலப்பேரரசு ஏ.ரீ.பொன்ஜத்துரை அஞ்சலியாக ஒரு குறிப்பு
கலாபூஷணம் ஜி.பி. ரபrமினஸ்
நான் நகர்வு
அரங்கநேசன் அரங்கியலில் புதிய ந:ள் வரவுகள்
புரீசை கண்ணப்பதம்பிரானிடம் பெற்ற கற்கை நெறிமுறைகள்
முனைவர் கே. ஆர். குனசேகரன் கால மாற்றமும் அரங்கத் தே3ை:பரம்
பிரான்சிஸ் அமல்ராஜ் தீருமறைக் கலாமன்றம் நடத்திய ாழுத்தக் கூத்துவிழா: ஒரு பார்வை
தrமீகி நாட்டுக்கடத்தின் திங்கிலமும் தேசிய அரங்கை நோக்கிய தேடலும்
யோ. போன்சன் ராஜ்குமாள்
அண்மைக்கால அரங்கப் பதிவுகள்
தொகுப்பு : கி. செல்மர் எமில்
BEG: 40.00
Լ}:
s
1斗
: Լի
卫卧
37
고
45
5:
5.

களம் 10 காட்சி 12
டிசம்பர் 2004
"நாமும் நமக்கோர் ாலியாக் கலையுடையோம் நாமும் நிலத்தினது நாகரீக வாழ்வுக்கு நம்மால் இயன்ற பணிகள் நடத்திடுவோம்"
- மனுராகவி
வெளியீடு : நாடகப் பயிலகம், நிருமறைக் காமன்றம், 238, பிரதான வீதி, யாழ்ப்பாணம். Tcl & Fax, O2-222 2393 Website: www.cpartstcalm.org
E-ml:Lil: cpajaffnag:sltnct. Ik
ஆற்றுகை
நாடக அரங்கியலுக்கான இதழ்
ஆசிரியர் குழு ாே போண்சன் ராஜகுமார் கி செப்மர் எஃப் னை கிைதேகி
கடினினிசார் சேவைகள் ஜேந்தி சென்ரர். 28. மாட்டின் வீதி யாழ்ப்பாயினர்.
அட்டைப்பட அமைப்பு அ. ஜுட்சன்
இதழ் வடிவமைப்பு கிசெஃப்

Page 3
உன்னத்திலிருந்து,
"ஆற்றுகையின் பன்னிரண்டாவது இந்த இதழ் கூத்து விழாவின் சிறப்பிதழாக வெளிவருகின்றது. அரங்கில் கொண்ட பற்றுறுதியின் நீட்சியாக, கடந்த பத்து வருடங்களாக வெளிவருகின்ற இந்தச் சஞ்சிகை, ஏந்த வேண்டிய கரங்களின் ஆதரவுக்காக தொடர்ந்தும் காத்திருக்கின்றது. இதன் நகர்ச்சி மெதுவானதாக அமைந்தாலும், இதன் தடங்கள் காத்திரமான பற்றுறுதியையும், அரங்குக்குரிய காலத்தின் கணிசமான தேவையையும் பூர்த்தி செய்துள்ளது என்பதை பலரின் கருத்துக்களுக்கூடாக, அறிய முடிகின்றது. தொடர்ந்துவரும் காலங்களில் இதன் நகர்ச்சியை வேகப்படுத்த முடியுமானவரை முயற்சிக்கின்றோம். ஆர்வலர்கள், அரங்கப்பற்றாளர்கள், மாணவர்கள், ஆக்க கர்த்தாக்கள் தருகின்ற ஆதரவும், தூண்டுதலும் எமது நோக்கத்தைப் இபூரணப்படுத்தும். எனவே உங்களின் பூரண ஆதரவினை இ"ஆற்றுகை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றது. இஇந்த இதழ் திருமறைக் கலாமன்றம் நடத்திய நாட்டுக்கத்து விழா தொடர்பான பதிவுகளை அதிகம் தாங்கி வந்துள்ளது. 2எமது பாரம்பரியக் கலைகளின் பேணுகை, காலத்துக்கேற்ப இ|அதன் புத்தளிப்புத் தொடர்பான அண்மைக்கால விழாக்களில் இவ்விழா காத்திரமானது என்பதனை உணர்கின்றோம். அதன் முக்கியத்துவத்தை இவ்விதழ் கட்டி நிற்கின்றது. எமது பெறுமதிமிக்க கூத்துக்கலையானது பேணப்படவும், 2.அடுத்த கட்டத்திற்கு நகர்த்தப்படவும் வேண்டிய அதிதீவிர
சேயற்பாடுகள் மேற்கொள்ளப்படவேண்டிய ஒரு காலகட்டமாக இது காணப்படுகின்றது. ஆனால், கூத்து விழாவின் இகருத்தமர்வுகள், கருத்துப்பகிர்வுகள், விவாதங்களை வைத்து
நோக்கும்போது வேறுபட்ட கருத்து முரண்பாடுகள், முற்சார்பான சில முரனியஸ் கொள்கைகள், கற்பனையான கற்பிதங்கள் போன்றவை பெருமளவில் தடையாக நிற்பதை உணரக்கூடியதாகவுள்ளது. இவற்றிற்கு அப்பால் நின்று கூத்துக்கலையை வளர்க்க வேண்டும் என்ற தெளிவையே இஅந்த முரண்பாடுகள் தோற்றுவித்துள்ளன. எனவே
கூத்துக்கலையை அதன் இக்கட்டான கலாச்சூழ்வில் நின்று காத்தெழுப்பிட ஆர்வலர்கள் அனைவரும், எல்லை கடந்து தொழிற்பட முன்வரவேண்டும்.
ஆசிரியர் குழு
2 ஆற்g-பித்
 

சி.ஜெயசங்கர்
தமிழ் பிரதேசங்களில் இன்றும் பாரம்பரிய கூத்துக்கள் ஆடப்பட்டு வருகின்றன. இவை பெரும்பாலும் பன்ழய தலைமுறையினருக்கான பக்திசார்ந்த கலையாக இயங்குவதையே அவதானிக்க முடிகிறது. மேற்குமபமாதல் அல்லது நவீனமயமாதல் எமது பாரம்பரியச் சங்கத்தின்மீது மாற்றத்தை திணித்துவிட நாம் புதியதான ஒரு சமூகச் சூழ்நிலையுள் இழுத்து விடப்பட்டோம், இது காலனித்துவ நாடுகள் அனைத்துக்குமே பொதுவான ஒரு நிலைமை, பழையதைக் கழற்றிவிடவும் முடியாத, புதியதை பற்றாது விட்டுவிடவும் முடியாத நிலைமை. இந்த இரண்டு நிலைமைகளதும் தேவையானவற்றின் இணைவினூடாக புதியதொன்றினை நோக்கியதாகவே எமது தேடல் அமையும் அமைய வேண்டும்.
கூத்தரங்கின் புத்துருவாக்கம் சுதேச நவீனவாதத்தின்
திறவுகோல்
இது ஒரு தளத்தில் சுதேசியத் தன்மையுடைய
தாகவும் இன்னொரு தளத்திலே சர்வதேசத் தன்மையுடையதாகவும் விளங்குவதாக இருக்கும். காலனித்துவ நாடுகளுக்குரிய, முன்றாம் உலகநாடுகள் என்று பொருளாதார அர்த்தத்தில் கொள்ளப்படுகின்ற நாடுகளது பொதுவான நோக்குநிலை இது. இந்த நாடுகளது அரங்குகள் தம் அகத்திருந்தும் புறத்திருந்தும் வரும் அடக்கு முறைகளுக்கு எதிராக இயங்க வேண்டியதாக உள்ளது.
இந்தப் பொதுவான நிலைமைகளில் இருந்து எங்களுக்குரிய குறிப்பான நிலைமைகளைக் கருத்துக்கெடுத்துக்கொள்ள விரும்புகிறேன். அதனையும் யாழ்ப்பாணத்து நிலைமைகளையும், அனுபவங்களையும் அடிப்படையாகக் கொண்டே எனது கருத்துக்களை முன்வைக்க விளைகிறேன்.
யாழ்ப்பாணத்தின் கரையோரக் கிராமங்கள் இன்று சூனியப் பிரதேசங்களாகவும் இராணுவக் கிராமங்களாகவும் காணக்கிடக்கின்றன. முன்பு உடுக்கொலியும், மத்தள
"குர்ரீதே

Page 4
அடியும், காற்சலங்கை ஒலியும் கேட்ட அக்கிராமங்களில் இருந்து வேட்டொலிகளே இன்று வருகின்றன. உரத்து குரலெடுத்துப் பாடும் அண்ணாவி புலம்பெயர் கிராமமொன்றின் அகதிமுகாமில் வெறுங்கை தாளம்போட கூத்துப் பாடல்களை முணுமுணுத்தபடியிருந்த காலமுமிருந்தது.
ஆனால் நாரந்தனையிலும், மெலிஞசி முனையிலும் படிக்கப்பட்ட கத்தோலிக்கக் கூத்துக்கள் இன்று யாழ்ப்பாண நகரில் படிக்கப்படுகிறது. கட்டுவனிலும், வீமன்காமத்திலும் அடிக்கப்பட்ட வீரபத்திர வசந்தன் உரும்பிராயிலும், மல்லாகத்திலும் மற்றும் பிற இடங்களிலும் அடிக்கப்படுகிறது. முன்பொருகாலம் பெரும் கூத்தர்கள் வாழ்ந்ததாக அறியக்கிடக்கும் இணுவில் கிராமத்தில் புலம்பெயர்ந்து வந்திருப்பவர்களால் உடுக்கடித்து காத்தான் கதை படிக்கப்படுவதை விளக்கற்ற இரவுகளில் இன்று கேட்கமுடிகிறது. இவ்வாறாக குடாநாடடின் கிராமங்கள் இன்று புதிய சமுகவியற் பரிமாணங் கொண்டுள்ளன. இப்பொழுது ஊர்கள் புதியதாய் பிறந்திருக்கின்றன.
முன்பு கூத்துக்களில் புதிய சமகாலக் கதைகளை பாடியாடுவது பற்றிப் பேசுவதையே அபச்சாரமாக நினைத்த கூத்தரின் நம்பிக்கையில் இன்று பெரும் மாற்றம். யதார்த்தம் அவர்களை அவ்வாறு மாற்றிவிட்டது. தாறுகட்டி முடிதரித்து வாளேந்தி தருமபுத்திரனுக்கு ஆடும் கூத்தனே சீருடை அணிந்து, துப்பாக்கி ஏந்தி வீரமைந்தனுக்கும் ஆடுகின்றான். ஆனால் வாழ்த்தும் மங்களமும் அம்மனுக்குப் பாடுவதை அவனால் கைவிடவும் முடியவில்லை. இன்றைய யாழ்ப்பாணத்துப் பாரம்பரிய அரங்கின் புதிதான மாற்றம் இவ்வாறாக உள்ளது.
நாரந்தனையில் கத்தோலிக்கக் கூத்துக்களை பாடும் அருளப்பு அண்ணாவியார் ’தம்பி விட்டிட்டு வந்த வீடுவளவை நினைக்க, விட்டிட்டு வந்த பொருள் பண்டத்தை நினைக்க, அவிட்டு விடாமல் ஓடிவந்த மாடுகளை நினைச்சு நினைச்சு எங்களைச் சாகடிக்காமல் வைத்திருக்கிறது இந்தக் கூத்துத்தான்” என்று கூறுவதிலிருந்தும் புலம்பெயர்ந்து வாழும் முகாமில் இரவு வேளைகளில் புதிதாக அவர்கள் வாங்கிய தாளத்தை தட்டிக் கூத்தாடிய பாடல்களைப் பாடிக் கொண்டிருந்ததிலிருந்தும் கூத்து அவர்களுக்கு வழங்கும் ஆன்ம வலுவை ஆழமாக உணரமுடிகிறது. இந்த ஆன்ம வலு வேகத்தையும் அச் சமுகத்தையும் இணைத்து வைத்திருக்கிறது. இந்தச் சக்திதான் இன்று அவர்களது தன்னம்பிக்கையின் ஆயுதமாகத் திகழ்கிறது. தாளம் தட்டி கூத்தைப் படிக்கும் கணங்களில் தங்களது சொந்த இடங்களை நினைத்துக் கொள்கிறார்கள். சொந்த இடங்களுக்குத் திரும்பிவிடும் ஓர்மமுனைப்பாய் ஆகிவிடுவதை உணர்ந்து கொள்கிறார்கள்.
கட்டுவனில் வீரபத்திரசாமிக்கு அடிகப்படும் வசந்தன், உரும்பிராய் வைரவர் கோவிலில் அடிக்கப்பட்டது தமது சொந்தக் கிராமத்தில் இருந்து இரவோடிரவாகச் சிதறியோடி பல்வேறு கிராமங்களிலும், தொங்கு சீவியம் நடத்தும் கட்டுவன் கிராம மக்கள் உரும்பிராய் வைரவர் கோயில் முன்றலில் ஒன்றுகூடினார்கள். கட்டுவன் விரபத்திர கோவில் ஐயரே வைரவர் கோவிலிலும் பூசை வைத்து, பூசையில் வைத்த வசந்தன் அடிக்கும் கம்புகளை எடுத்துக் கொடுத்து வசந்தன் அடியைத் தொடக்கி வைக்கின்றார். “வசந்தன் அடிச்ச பன்னைக் கம்பால அடிக்க வேணும். வெங்கலச் சத்தமாய்க் கேட்கும். கட்டுவனிலையென்டா பன்னை
4 కjpgర

நிறைஞ்சிருக்கும், இஞ்ச நாங்கள் பன்னைக்கு எங்க போறது? வசந்தன் அடிக்க கொய்யாக் கம்பு பாவிக்கல்லாம். இஞ்ச நாங்கள் கொய்யாக் கம்புதான் பாவிக்கிறம்” என்று கூறும் குருசாமியார். “இப்ப சின்னப் பெடியளை வலைபோட்டு பிடிச்சுத்தான் வசந்தன் அடிக்கிறம் முந்தியென்டா இளந்தாரிப் பொடியள் அடிப்பாங்கள் பார்க்க விறுவிறுப்பாய் இருக்கும்” என்றார். இப்பொழுது அவர்கள் போய்விட்டார்கள். புலம் பெயர்ந்து அந்நிய தேசங்களுக்கு, போர்முனைகளுக்கு. போர்முனைகளில் அவர்கள் போய்விட்டார்கள்.
“இப்ப வசந்தன் அடிக்கிற பெடியள் படிக்கிறவங்கள். படிப்பெண்டு நேரமில்லாம ஆத்துப்பறந்து ஒடுறவங்கள். மிச்சநேரத்திலையும் உவங்களை வலை விரிச்சுப் பிடிச்சுத்தான் இப்ப வசந்தன் அடிக்கிறம்” என்று குருசாமியார் கூறுவது கூத்தில் இளைய தலைமுறையினரை ஈடுபடுத்துவதன் சிரமங்களையும், அதன் காரணங்களையும் விளங்கிக்கொள்ள வைக்கிறது.
உரும்பிராய் வைரவர் ஆலய முன்றலில் ஒலித்த வசந்தன் அடி ஒவ்வொரு மனங்களிலும், நம்பிக்கையாய் எதிரொலித்தபடி. “இதுகளைப் பார்க்க ஆசையா இருக்கு. சின்னப் பெடியள் ஈடுபாட்டுடன் ஆடுவதைப் பாக்க நம்பிக்கைவருது. எங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு” இது உரும்பிராயில் வசந்தன் ஆட்டம் நிறைவு பெற்ற பின்பு பார்த்தவர்களிடையே இடம் பெற்ற உரையாடல்களுள் ஒன்று. ஒவ்வொருவரது மனங்களிலும் பூரிப்பு. உரும்பிராய் கிராமமும் புதிதாய் ஒன்றைப் பார்த்து புளகாங்கிதம் அடைந்திருந்தது. கட்டுவன் வீரபத்திர வசந்தன் உரும்பிராயில், புதிய சூழ்நிலையில் புதிய பரிமாணத்துடன் வாழவும், வாழ்விக்கவும் தலைப்பட்டுள்ளது.
கட்டுவன் கிராம மக்களது தீராத துயரங்களில் உடைந்து போயிருக்கும் வீடொன்றில், அழிந்து போயிருக்கக்கூடிய வீரபத்திர வசந்தன் ஏட்டுச் சுவடியும் ஒன்றாய்ப் போயிற்று. குடாநாட்டின் பல கிராமங்களுக்கும் சிதறிப்போன மக்கள் ஒன்றுகூடும் இக்களத்தில் புலம்பெயர் சீவியத்தைப் பகிர்ந்து கொள்கிறார்கள். அடுத்த வருடமாவது வீரபத்திரர் முன்றலில் ஒன்று கூடுவோமா? என்ற கனத்த எதிர்பார்ப்புடன் வைரவர் முன்றலில் வீரபத்திரரை உரத்துவேண்டி விடைபெற்றுக் கொள்கிறார்கள்.
புலம்பெயர்ந்த கிராமங்களது இயக்கம் இவ்வாறாக இருக்க, இதுவரை இடம்பெயராக் கிராமங்களில் கூத்து தனது வாழ்வுக்கான போராட்டத்துடன் தொடர்ந்தும் இயங்கி வருகிறது.
பொதுவாகவே கூத்தை ஆடுபவர்கள் “நாங்கள் சமய நம்பிக்கையின் காரணமாகவும், பொழுது போக்கிற்காகவும், சமுகத்தைச் சீர்திருத்தும் நோக்கத்துடனும் கூத்தை ஆடி வருகிறோம்” என்று சொல்லுகிறார்கள். கூத்து, அவர்களுக்கு இம்மூன்றையும் வழங்குகின்றது. மேலும் கூத்தாடுவது என்பது கடவுளுக்குக் காணிக்கை செலுத்தும் கைங்கரியமாகவும் காணப்படுகிறது. “எமக்கேற்பட்ட துன்பங்கள் தீரவேண்டுமென்று நேர்ந்து, எமது நேர்த்தியை சுவாமிக்கு கலையாகப் படைக்கிறோம்” என்றும் அவர்கள் கூறுகின்றார்கள்.
இவ்வாறாக, பல்வேறு தளங்களில் இயங்கும் கூத்துக்கும், அதைப் பாரம்பரியமாக ஆடிவருபவர்களுக்குமான உறவு எத்தகையது என்பதையும்
(Q0g-Cab 5

Page 5
விளங்கிக் கொள்ளவேண்டும்.
“எங்கட ஆக்கள் மட்டுந்தான் எங்கட கூத்தில ஆடுறது. வேறு ஆக்களைச் சேர்க்கவும் மாட்டம், அவை கேட்டாலும் சொல்லிக் குடுக்கவும் மாட்டம். இது எங்கட சொத்து. கூத்தை வேறே ஆக்களுக்குப் பழக்கிவிட்டால், அவை தங்கட என்று உரிமை கோரவும் முற்படுவினம். கூத்து எங்கட ரத்தத்தில ஊறினது. அப்பா, அம்மா எண்டு சொல்லத் தெரியாத பிள்ளையஞக்குக்கூட ஆட்டந்தானா வரும். தலைமுறை தலைமுறையா ஆடிவந்த கூத்தை நாங்களும் சிறப்பாய் ஆடி அடுத்த சந்ததிக்குக் குடுத்துப் போடவேணும். கூத்தை நாங்கள் எப்பவும் வருமான நோக்கோட செய்யிறேல்லை. பக்தி நோக்கத்தோடதான் செய்யிறனாங்கள்” என்கிறார் வட்டுக்கோட்டைக் கூத்தாடும் க. நாகப்பு.
கூத்தைப் பாரம்பரியமாக ஆடி வருபவர்களது நம்பிக்கையும், மனப்பாங்கும் இவ்வாறாக அமைய, புதியதும் அந்நியமானதுமான சமூகத்திலும் கூத்து அறிமுகமாகியுள்ளது.
அந்திய தேசங்களுக்கு புலம்பெயர்ந்து போனவர்கள் அந்தந்தத் தேசங்களில் இப்பொழுது கூத்துக்களை ஆடி வருகின்றனர். அது தங்களுக்கு ஊரிலிருப்பதான உணர் வைத் தருவதாக பெற்றோர்களுக்கும் வீட்டிலிருப்பவர்களுக்கும் கடிதங்களில் எழுதிக் கொள்கிறார்கள். மேலும். நிறங்களுக்குப் பழக்கபட்டுப்போன சாதி வித்தியாசம் புரியாத மேலைத்தேசக் கண்களுக்கு புராதமான அல்லது புதினமான ஒன்றைப் பார்க்கும் புளகாங்கிதம் வந்திருக்கும். மேலும் கூத்தாடுவது அவர்களது அடையாளத்தை வெளிப்படுத்துவதுடன் ஆதாயம் தரும் ஒன்றாகவும் இருக்கிறது. இவற்றையெல்லாம் பிறநாடுகளில் இருந்து அவர்கள் எழுதும் கடிதங்களில் கண்டு கொள்ளக்கூடியதாக உள்ளது.
ஊரில் ஆடப்படும் கூத்தை காசனுப்பி வீடியோ பண்ணுவித்து எடுத்துப் போட்டும் பார்க்கிறார்கள். மற்றவர்களுக்கு போட்டும் காட்டுகிறார்கள். கூத்தை ஆடக் கூடியவர்களுடன், வீடியோவைப் பார்த்து கூத்துப் பழகியவர்களும் சேர்ந்து ஆடுகிறார்கள். அதனை வீடியோவில் பதிப்பித்து ஊருக்கும் அனுப்பியுள்ளார்கள். கூத்துப் பாடல்களை அண்ணாவி தாளம் தட்டி மத்தள அடிக்கு பிற்பாட்டுடன் பாட அதனை ஒலிப்பதிவு நாடாவில் போட்டு அதற்கும் ஆடுகிறார்கள்.
இவ்வாறாக பாரம்பரியக் கூத்துகளது இருப்பும். அதனைப் பாரம்பரியமாக ஆடி வருபவர்களது நம்பிக்கைக்கும் தேவைக்கேற்ப அவற்றின் பரவுகையும் பேணுகையும் புதியதான நிலைமைகளில் இயங்குவதையும் தெளிவாகவே அவதானிக்க முடிகிறது. Σ
நிலப்பிரபுத்துவச் சமூக அமைப்புடன் அறிமுகமாகிய கூத்துக்கலை, அச்சமூக அமைப்பு, அதன் சிந்தனை முறை நிலைத்திருக்கும்வரை உயிர்ப்புடையதாக இருக்கும். அர்த்தமுடையதாக இயங்கும். பழைய சமூக அமைப்பு நிலையிழந்து புதியதன் வருகையுடன் புதிய கலைகளும் அறிமுகமாகும். அவற்றின் பொருள் புதிதாகும், சுவை புதிதாகும் இப்புதியதன் வருகை பழையதுடனான இளைய தலைமுறையினரின் ஈடுபாட்டைக் குறைத்துவிடும்.
எனவே, கூத்துத் தொடர்பாக நவீன அரங்கவியலாளரது பணி என்பது.
6 ஆகுற்றுைேத

கூத்தைப் பேணுவது அல்லது பராமரிப்பது என்பதாக இருப்பது எந்தளவிற்கு அர்த்தமுடையதாகிறது என்று கேட்டுக்கொள்வது அவசியமாய்ப்படுகிறது.
தமிழரது பாரம்பரியக் கூத்தினுடைய சமூகம் சமூகக் குழுமம் சார்ந்தது. எனவே கூத்தை ஆடும் சமூகக் குழுமத்தில் ஏற்படும் சிந்தனை மாற்றமே கூத்தினை பொருள் புதிது, சுவை புதிது கொண்டதாய் ஆக்கும். இடத்தின் பெயரால், சாதியின் பெயரால், சமயத்தின் பெயரால் வழங்கப்படுகிற பாரம்பரியக் கூத்துக்களை இவையெல்லாவற்றையும் கடந்த முழுச் சமூகத்திற்குரியதாக இயங்க வைப்பது பற்றிய சிந்தனையும், செயற்பாடுமே இன்றெமக்குத் தேவையாயுள்ளது. எனவே பாரம்பரிய அரங்கு பற்றிச் சிந்திக்கும் நாடக அரங்கவியலாளரது கவனம் அதனைப் புத்துருவாக்கம் செய்வதில் செல்ல வேண்டுமென்றே நான் கருதுகிறேன்.
ஏனெனில், பாரம்பரியக் கூத்தைப் புனரமைப்பதும் மக்களது மூடநம்பிக்கைகளையும் பிற்போக்குத்தனமான கண்ணோட்டங்களையும் புனரமைப்பதன் மூலம் கூத்துக்களது முற்போக்கான சிந்தனையோட்டத்திற்கு எதிராக, விழிப்புணர்வை மழுங்கடிக்கச் செய்து விடுகின்ற நடவடிக்கையாக அமைந்து விடுகின்றது.
நுாற்றாண்டு காலமாக மக்கள் தமது நம்பிக் கைகளை வெளிப்படுத்திவந்த கூத்தின் மூலம் செயல்படுவது அவசியந்தான் ஆனால், பிரச்சனை என்னவென்றால் மரபார்ந்த கலை வடிவங்களுக்குள் இணைந்துள்ள மூடநம்பிக்கைகளும் பிற்போக்கான கருத்துக்களும் இதற்கு இடையூறாக நிற்கின்றன. தேசிய நாடகம் என்பது வடிவம் சார்ந்தது மட்டுமல்ல, படைப்பாக்கத்தின் நோக்கத்தையும். படைப்பாக்கத்தின் மதிப்பீட்டையும் சார்ந்தது. இதற்கு தேசத்தின் கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் வரலாற்று ரீதியாக ஆழமாக விளங்கிக் கொள்வதோடு, எதிர்காலம் பற்றிய தீர்க்கமான பார்வையும் இருக்க வேண்டும். எமது அரங்கு எப்பொழுது மக்களது வாழ்வை ஆழமாகப் பார்க்கத் தொடங்குகிறதோ, எப்பொழுது மக்களுக்காக தன்னை அர்ப்பணிக்கிறதோ அப்போது தேசியத் தன்மை என்பது எய்தப்பெறும்.
எமது பாரம்பரிய நாடகங்கள் மேலைத்தேச நாடகங்களிலிருந்து வேறுபட்டவையாக இருக்கலாம். ஆனால், நிகழ்கால அனுபவங்களுக்கு, எதிர்பார்ப்புகளுக்கு எந்தளவிற்குத் துணைபுரிகின்றன என்ற கேள்வியை எழுப்புதல் இங்கு அவசியமாகிறது. ஏனெனில், பாரம்பரிய அரங்கு தர்மத்திற்கும் அதர்மத்திற்குமான போரில் தர்மம் வெற்றி கொள்வதாக எளிமையாக சித்தரிக்கிறது. அது ஒவ்வொரு பாத்திரமும் தனித்த ஒரு பண்புடையதாக மட்டுமே சித்தரிக்கப்பட்டிருக்கும். இராமன் தர்மத்தின் பாத்திரம் இராவணன் அதர்மத்தின் பாத்திரம். இராமன் இராவணனை வெற்றி கொள்கிறான். ஒழுக்கப் பண்பை வலியுறுத்துவதாக பாரம்பரிய அரங்கு விளங்குகிறது.
ஆனால். தற்கால அனுபவமோ சிக்கலானது தனித்த ஒரு மனிதப் பண்பென்பது இருப்பதில்லை. தனித்த மனிதனே உள்ளான். அவன் வேறு நபர்களுடன் தொடர்பு கொள்கிறான். ஒருவன் பல்வேறு மனிதர்களிடமும் தொடர்பு கொள்ளும்போது பல்வேறு தன்மையுடையவனாக இருக்கிறான் அவனுக்கு வீட்டு
G 7

Page 6
முகம் தெரு முகம், அலுவலக முகம் எனப் பல முகங்கள் இருப்பதை தெளிவாகவே கானமுடியும்.
எனவே இத்தையோரு சிக்கலான அனுபவத்தை எளிமையான அமைப்புடைய பாரம்பரியக் கூத்தினூடாக எவ்வாறு கொண்டு வருவது என்ற கேள்வி எழுகின்றது. மேலும் கூத்தினுடைய அளிக்கை அனுபவம் சமயம் சார்ந்த நம்பிக்கையுடன் இணைந்ததாக இருப்பதையும் நாங்கள் மனங்கொள்ளவேண்டும். எனவே, நிகழ்கால அனுபவத்தை வெளிப்படுத்த அமைப்பு ரீதியாகவும், ஆத்ம ரீதியாகவும் பொருத்தமற்ற பாரம்பரிய அரங்கை எவ்வாறு பொருத்தமுடையதாகப் பயன்படுத்திக்கொள்வது என்ற சிந்தனை எழுவது தவிர்க்கமுடியாதது.
இங்கு, கூத்தரங்கினை புத்துருவாக்கம் செய்வது பற்றிய கருத்தை முன்பு கூறினேன். அதனை நடைமுறைச் சாத்தியமாக்கும் வழி முறைகளை என்னளவிலான சிந்தனைகளை அடிப்படையாகக்கொண்டு முன்வைக்க விரும்புகின்றேன்.
பாரம்பரிய அரங்கினைப் புத்துருவாக்கம் செய்வதென்பது அதனைத் தலைமுறை தலைமுறையாக ஆடிவரும் சமூகக் குழுமத்தின் சிந்தனை மாற்றத்தினூடேயே முழுமையானதாகிறது. கூத்தரங்கின் புத்துருவாக்கம் பற்றிய சிந்தனை. அதனைப் பேணிவரும் சமூகக் குழுமத்தின் சிந்தனை மாற்றம், சமுக மாற்றம் பற்றியதாகவே இருக்க முடியுமென நம்பகிறேன்.
எனவே, கூத்தரங்குடன் தொடர்புடைய அரங்களியலாளரது பணி. கூத்தைச் சுருக்கி எடுத்து நகரத்துக்குக் கொண்டுவருவதுடனோ அல்லது புதிய வியாக்கியானங்களுடன் கூத்து மாதிரிகளை அறிமுகப்படுத்தி விடுவதுடனோ முடிந்து விடுவதில்லை அவர்களது பணி அதற்கும் அப்பாலானது. பாரம்பரியச் சிந்தனைப் போக்குடன் போராடுவதும், புதிய நிலைமைகளை புரிந்துகொள்ள முனைவதும், உணரவைப்பதும் அவைகளைக் காவும் அமைப்பை, ஆற்றலை, பாரம்பரிய அரங்கு கொண்டிருக்கிறதா? என்பதை அரங்கியல் ரீதியாக விளக்கிக்கொள்ளrவப்பதும். நிகழ்கால அனுபவங்களை முழுமையாக வெளிப்படுத்தும் சாத்தியப்பாடுகளைப் பற்றிச் சிந்திப்பதும் செயன்முறை அனுபவங்களுக்கு வருவதுமான ஒரு தோடரான நடைமுறையை மேற்கொள்ளுவதே அவசியமாகிறது.
இதற்கான வழிமுறையும் வித்தியாசமானதாகிறது. கூத்தை ஆடும் சமூகக் குழுமத்தினருடன் எங்களைப் பரிச்சயப்படுத்தி கொள்வது, நட்புடன் அவர்களை விளங்கிக் கொள்ளமுனைவது, எங்களது நோக்கங்களை அவர்களுடன் பகிர்ந்து கொள்வது. எதிர் விளைவுகளை ஆராய்ந்து இருசாராருமாக அந்த கலாசாரத்துக்கு நகர்த்திக்கொள்வது என்பதாக இதன் படிமுறை வளர்ச்சி தொடரும்.
இந்தச் சேயன்முறை பாரம்பரியக் கூத்தாடும் காங்களில் நிகழ்த்தப்பட்டு மெல்ல மெல்ல வெளிநோக்கிக் கொண்டுவருவதாக இருக்கும். இந்த அனுபவம் நவீன நாடகங்களுக்கும் புதிய பரிமானங்களைக் கொடுக்கும்.
இவை எங்களுக்கேயான கடந்த காலத்தில் வேர்கொண்டு எதிர்காலத்தை
8 ஆற்றுவித்

நோக்காக வைத்து சமகால அனுபவங்களுடன் தொடர்புகொண்டு சுதேசிய நவீனவாதத்தை விருத்தி செய்வதற்கு வழிவகுக்கும். இந்தச் செயற்பாடு அரங்குடன் மட்டும் தொடர்புடைய விடயமல்ல சமகால உலகச் சூழ்நிலையின் பின்னணியில் முழுச்சமூகம் சார்ந்த விடயமாகும். நன்றி களம் ே
“காவிய நாயகன் திருப்பாடுகளின்
நாடகம்
எழுத்துருவிலும் நேறியாள்கை" யிலும் உருவாகி கடந்த 2(x1 ஆம் ஆண்டில் கிறிஸ்தவர்களின் தவக்காலத்தில் ஏப்ரல் 5,6,7,8 ஆகிய திகதிகளில் முதற் தடவையாக மன்ற அரங்கில் மேடையேற்றப்பட்டு அனைவரது பாராட்டுக்களையும் வரவேற்புக்களையும் பெற்ற "காவிய நாயகன் திருப்பாடுகளின் காட்சி மீண்டும், இவ்வானர்டு மார்ச் 30,31 ஏப்ரல் 1,3,4 ஆகிய நாட்களில் மன்ற அரங்கில் 200 இற்கும் மேற்பட்ட கலைஞர்களின் ஒருங்கினைப் பிவி , பிரமாண்டமான தயாரிப்பாக மேடையேற்றப்பட்டது. இதனை 5 நாட்களிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பார்வையிட்டுச் சென்றார்கள், 5 ஆவது நாளில் இரண்டு காட்சிகள் இடம் பெற்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
"காவிய நாயகன் இடைப்பட்ட காலங்களில் சர்வதேச நாடுகளிலும் அங்குள்ள திருமறைக் கலாமன்றங்களால் மேடையேற்றப்பட்டுள்ளது.
இவ்வாண்டு யாழ். நாவாந்துறை பங்கு மக்களாலும் "கல்வாரி கண்ட கடவுள்' என்னும் திருப்பாடுகளின் காட்சி மார்ச் 29,30 ஆகிய தினங்களில் நாவாந்துறை புனித பரலோக அன்னை ஆலய முன்றலில் மேடையேற்றப்பட்டது.
எதிர்பார்க்கின்றோம். எழுதுங்கள். ஆற்றுகை தொடர்பான உங்களது கருத்துகிகளை யும், விமர்சனங்களையும் மற்றும் ஆற்றுகையில் பிரசுரிப்பதற்கு உகந்த, உங்களது நாடக அரங்கியல் சார்ந்த ஆக்கங்களையும் எதிர்பார்க்கின்றோம்.

Page 7
நாட்டுக்கத்து மறுமலர்ச்சி:
#ରd அவதானிப்புகள்
கலாபூஷணம் முல்லைமணி
இலங்கை 1948 இல் சுதந்திர மடை நீதபோதும் 1956 ஆம் ஆண்டினையொட்டிய காலப்பகுதியி லேயே மக்கள் மயப்படுத்தப்பட்ட தேசியளழுச்சி ஏற்பட்டது. இதுவரை காலமும் நாட்டுக்கூத்துக்கள் கல்வி அறிவுகுறைந்த சாதாரண மக்களா லேயே பேணப்பட்டு வந்துள்ளது. தேசிய எழுச்சியின் அங்கமாகக் கற்றறிந்த புத்திஜீவிகளும் தமது கலைப் பாரம்பரியங்கள்பால் தம் கவனத்தைச் செலுத்தினர். சிங்களப் புத்திஜீவிகள் நாட்டுக்கூத்தினைப் பேணுவதிலும் அவற்றைச் சுருங்கிய முறையில் நகரமாந்தர்க்கு அறிமுகப் படுத்துவதிலும் ஈடுபட்டனர். இதன் தாக்கம் தமிழிலும் உணரப்பட்டது. பேராசிரியர் சு.வித்தியானந்தன் முதலானோர் தமிழ் நாட்டுக்கூத்து மறுமலர்ச்சி தொடர்பில் சிந்தித்துச் செயலாற்றினர்.
நாட்டுக் கூத்து தமிழ் மக்களின் தேசியச் சொத்தாகும். சர்வதேச ரீதியில் இடம்பெறும் விழாவொன்றிற்கு தமிழீழ நாடகம் ஒனர் றைக் கொணி டுசெல்ல நேரிட் டால் நாட்டுக்கூத்தினைத்தான் கொண்டு செல்லவேண்டும். பின்னர் எமது நாட்டில் புகுந்த பார்சி தியேட்டர் மரபில் வந்த இசைநாடகம், ஐரோப்பியர் மரபில் வந்த மேடை நாடகம் , திரைப்படங்கள் என்பவற்றின் பாதிப்பால் நாட்டுக்கூத்துக்கள் நாகரீகமற்ற கலை
வடிவம் எனக் கருதப்பட்டது. உயர் மட்டத்தினர் இவற்றைப் புறக்கணித்த போதும் கிராமப்புறமக்கள் இவற்றைப் பேணிவந்தனர். கல்வி அறிவுகுறைந்த மக்களால் பேணப்பட்ட இக்கலை வடிவம் தூசுபடிந்து காணப்பட்டது. நாட்டுக்கூத்துப் பிரதிகள் வழுக்கள் நிறைந்தனவாகக் காணப்பட்டன. பல சமயங்களில் பாடலிசைகூட அபசுரம் தட்டத்தொடங்கியது. ஆட்டத்தில்கூட தாள அமைதி பிசகி இருந்தது. ஆட்டத்தில் அதிக கவனம் செலுத்தியதால் நடிப்பு புறக்கணிக்கப் பட்டது.
நாட்டுக்கூத்து மறுமலர்ச்சி இயக்கத்தின் பயனாக இக்கலை நான்கு நிலைகளில் பேணப்பட்டது. 1. நாட்டுக்கூத்தின் மூலவடிவத்தை அப்படியே பேணிப் பாதுகாத்தல். 2. தற்காலச் சூழ்நிலைக்கேற்ப கூத்தினுடைய அழகியலைச் செம்மைப் படுத்தி நகர மாந்தர்க்கு அறிமுகப் படுத்தல். 3. நாட்டுக்கூத்துப் பாணியில் வரலாற் றுப் பாரம்பரியங்களை உள்ளடக்கிய புதிய கூத்துக் களை எழுதித் தயாரித்தல். 4. சமூக உள்ளடக்கத்தையுடைய நாட்டுக்கூத்துக்களை எழுதி மேடை யேற்றல். நாட்டுக்கூத்தின் முலவடிவம்
கிழக்குப் பல கலை கி கழகத்தைச் சேர்ந்த பாலசுகுமார் அவர்கள் நாட்டுக்கூத்தின் மூல வடிவத்தை இனங்கண்டு அதனைப்
10
&s(
 

பேணிப் பாதுகாக்கவேண்டும் எனக் கருதுகின்றார். இந்த ரீதியில் அவரின் முயற்சி பாராட்டிற்குரியது.
“கூத் தைத் திரும் பவும் பழைய நிலைக்குக் கொண்டுவருவது முடியாத காரியம். ஏனென்றால் அது ஒரு காலகட்டத்திற்குரிய வாழ்க்கையோ டும், பொருளாதார அமைப்போடும், பண்பாட்டோடும் சேர்ந்தாக இருந்தது. இன்று நிலைமைகள் மாறிவிட்டன. மாறியபின் பழைய நிலைக் குக் கொண்டுவருவதென்பது கடைசி வரைக்கும் நடக்காத காரியம்’ என்கிறார் பேராசிரியர் மெளனகுரு.
பேராசிரியர் மெளனகுரு அவர்கள் இளமைக்காலந் தொடக்கம் மட்டக் களப்பு நாட்டுக் கூத்தில் ஊறித்திளைத்தவர். நாட்டுக்கூத்துத் துறையில் பல ஆராய்ச்சிகளைச் செய்தவர். நாட்டுக்கூத்தின் மூலவடிவத் தைக் கண்டுபிடிப்பது அவரால் நிச்சயமாக முடியும் . அவர் மனம்வைத்தால் மட்டக்களப்பு நாட்டுக் கூத்தின் பழைய நிலையை எமக்குக் காட்டமுடியும்.
முல்லைமோடிக் கூத்தின் பழைய வடிவத்தை முல்லைத்தீவி லுள்ள கோவலன் கூத்தில் இன்றும் காணமுடியும். இதே பாணியில் புதிய கூத்துக்களும் ஆக்கப்பட்டுள்ளன. அருணா செல் லத்துரை இதனை கொழும்பில் மேடையேற்றியுள்ளார்.
மன்னாரிலும் நாட்டுக்கூத்தின் பழையவடிவங்களைக் காணலாம்.
நாட்டுக்கூத்தினை முதன் முறையாகப் பார்க்க விரும்புவோருக்கு அதன் பழைய வடிவத்தையே காட்ட வேண்டும். இது மிகவும் அவசியமான பணியாகும்.
இன்று பல்வேறு நோக்குட
னும் தேவைக்கேற்பவும் மேடை யேற்றப்படுபவை நாட்டுக்கூத்தின் அடியாகப் பிறந்த நாடகங்களே.
கூத்தினுடைய அழகசியலைச் செம்மைப்படுத்திய நாடகங்கள்
பேராசிரியர் சு. வித்தியா னந்தன், பேராசிரியர் மெளனகுரு முதலானோர் மேடையேற்றும் நாட்டுக்கூத்துக்கள் பெரும்பாலும் இந்த வகையைச் சார்ந்தவை.
இவற்றின் பண்புகள் 1. வட்டக் களரிக்குப் பதிலாகப் படச்சட்டமேடையைப் பயன்படுத்தல். 2. பாட்டிற்கும் ஆட்டத்திற்கும் மாத்திர மன்றி நடிப்புக்கும் முக்கியத்துவம் கொடுத்தல். 3. ஒன்பது மணித்தியாலக் கூத்தினை ஒன்றரை அல்லது இரண்டு மணி நேரத்திற்குச் சுருக்குதல். 4. பாட்டின் இசையமைதி ஆட்ட முறைகளில் கவனம் செலுத்துதல். 5. மத்தள அடிபாட்டை மேவாது இருக்கும் வகையில் கட்டுப்படுத்தல். 6. சில சந்தர்ப்பங்களில் நாடகப்பாணியில் பாத்திரங்கள் கதிரையில் அமர்வதும் உண்டு.
பாரம்பரிய வரலாற்றுக் கதைகளை உள்ளடக்கமாகக் கொண்ட புதிய கூத்துக்கள்
“வேலப்பணிக்கன் பெண்சாதி அரியாத்தை பேரில் ஒப்பாரி' என்னும் நாட்டார் கதைப் பாடல் ஒன்று வன்னிப்பிரதேசத்தில் நிலவுகின்றது. இதனை ஆதாரமாகக் கொண்டு 'வேழம்படுத்த வீராங்கனை’ என்னும் முல்லை மோடிக்கூத்தினை எழுதியுள் ளார் அரியான பொய்கை அவர்கள்.
&jpgర

Page 8
பழைய வடிவிலான கோவலன் கூத்துப்பாணியில் வட்டக்களரியில் ஆடப்பட்டது. அருணா செல்லத்துரை இதனைக் கொழும்பில் தயாரித்துள் ளார். ஒளிப்பேழையாகவும் வெளியிட் டுள்ளார்.
திரு செல்லையா மெற்றாஸ் மயில் இக்கூத்தினைப் பல இடங்களில் படச்சட்ட மேடையில் அரங்கேற்றியுள் ளார். யாழ்ப்பாணக் கூத்திலுள்ள சில ஆட்டமுறைகளை முல்லை மோடிக் கூத்தினுள் புகுத்தியதன்மூலம் முல்லை மோடிக்கூத்தினை அவர் குழப்பியுள்ளார் என்றே தோன்றுகின்றது.
முல்லைமணியின் பண்டார வன்னியன் நாட்டுக்கூத்து வன்னியிலும் யாழ்ப்பாணத்திலும் பல முறை மேடையேற்றப்பட்டுள்ளது. இதுவும் முல்லை மோடியில் அமைந்ததே. இதே கூத்தை என்.எஸ். மணியம் வித்தியானந்தன் பாணியில் தயாரித்துள்
6TT.
சமுக உள்ளடக்கத்தையுடைய கூத்துக்கள்
மெளனகுருவின் ‘சங்காரம்’ வடமோடியிலுள்ள ஆட்டமுறைக ளுடைய குறியீட்டுப் பாங்கான கூத்தாகும். வர்க்க அரக்கன், சாதி அரக்கன், இன அரக்கன், நிற அரக்கன், என்போரைச் சங்காரம் செய்வதாக இக்கூத்து அமைகிறது. அருள் செல்வநாயகத்தின் ஏர்முனை வேலன் மட்டக்களப்பு மக்களின் விவசாய வாழ்க்கையை அடிப்படை யாகக் கொண்டது.
“இதிகாச புராணங்களில் இருந்த கூத்தை போடியார், போடியார் மனைவி, வாத்தியார், மாணவர்கள் ஆடுவதாக அமைத் திருப்பது
பகிடியாகவே நோக்கப்படுகின்றது. இதிகாச புராணங்களைக் கூத்தில் பார்த்துப் பழக்கப் பட்டவர்களுக்கு அதில சமூகக் கதைகளைப் பார்க்கும்போது ஒரு பொருந்தாமை வரப்பார்க்கிறது. “விபுலானந்தர் பாத்திரம் கூத்தாடினால் எங்களுக்குச் சங்கடமாயிருக்கும்” என்கிறார் மெளனகுரு. இவரது கருத்தின்படி சமூகக் கதைகள் கூதி திற்கு உகந்ததல்ல. குறியீட்டுப் பாங்கான புதுமுறை நாடகங்களில் கூத்தின் ஆட்டமுறைகள் பாட்டு என்பன பயன்படுத்தப்படலாம் என்பதாகும்.
வடமோடிக்கூத்து: (பழையவடிவம்) இக்கூத்து மட்டக்களப்பில் வட் டக் களரியில் ஆடப்படும் கதைப் போக்கு, ஆடல் வகை, தாளக்கட்டு, உடையணியும் முறை என்பவற்றால் தென் மோடியிலிருந்து வேறுபடும். வடமோடிக் கூத்துக்கள் பெரும்பாலும் போர்செய்து வெற்றி பெறுவனவாக இருக்கின்றன. வீரம், கோபம், அழுகை முதலான சுவைகள் விரவி வரும்.
வடமோடியில் வரும் பிரதான பாத்திரங்கள் கரப்பு உடுப்பையே அணிவர். இதனை முல்லைத்தீவில் வில் லுடுப்பு என்று அழைப்பர். வடமோடி அரசருடைய முடி கெருடம் (கிரீடம்) என அழைக்கப்படும். இது மரத்தில் கோதி அமைக்கப்படுவது மிகவும் பாரமானது. தடிப்பான வேலைப்பாடுகள் அமைந்த நெஞ்சுப் பட்டி அணிந்திருப்பர்.
வடமோடியார் தம் விருத்தங் களை அதிகம் நீட்டி இசைக்காது படிப்பர். வசனங்களும் சாதாரணமா கவே பேசப்படுகின்றன. வடமோடியில்
12
(ക

கூத்தர் ஒரு பாட்டைப் படித்தால். பக் கப்பாட்டுக் காரரும் அதனை முழுமையாகப் படிப்பர். வடமோடியார் தம்வரவு ஆட்டம் பாட்டு என்பவற்றை முடித்துக்கொண்டு களரியைவிட்டுப் போகவேண்டிய நேரம் வந்ததும் ஒரு துரிதமான ஆட்டத்தை ஆடுதல் நியதியாகும். பொதுவாக வடமோடி ஆட்டங்கள் தென் மோடியைவிட நுணுக்கமும் கடினமும் குறைந்ததாக இருக்கும்.
வட மோடியில் அவரது ஆட்டமுறைகளை அவர்களது கரப்பு உடுப்புக்கள் கட்டுப்படுத்துகின்றன.
இன்று வடமோடிக் கூத்து எனினும் பெயரில் பல வேறு தேவைகளுக்காக கூத்துக்கள் படச்சட்ட மேடையில் ஆடப்படுகின்றன. பாடசாலைப் பிள்ளைகள் தமிழ்த்தினப் போட்டிக்கென ஆடுகின்றார்கள். பாரமான கிரீடமோ கரப்பு உடுப்போ அணிவதில் லை. 5 IT LI G8 LI IT LI மட்டையால் கிரீடம் அணிகின்றனர். உடுப்புக்கள் பட்டுத் துணியாலானவை. இதனால் இவர்களது ஆட்டமுறை களில் பாரிய வேறுபாடுகள் காணப்படுகின்றன.
பாரங்குறைந்த கிரீடத்தையும் மெல்லிய பட்டியினாலான உடைகளையும் அணிவதால் இவர்களது ஆட்டங்கள் தென்மோடியை ஒத்து விறுவிறுப் பானவையாக அமைந்து விடுகின்றன. துரிதமான முறையில் தொங்கி ஆடி நடுவர்களைக் கவர்ந்து முதலிடத் தையும் பெற்றுவிடுகின்றனர். பாவம் நடுவர்கள் வடமோடியின் ஆட்டமுறை களைச் சரியாக அறியாததால் கூடிய புள்ளிகளை வழங்கிவிடுகின்றனர்.
மெளனகுருவின் 'இராவனே சன் வடமோடிக் கூத்தன்று. வடமோடி ஆட்ட முறைகளையுடைய நாடகம் ஆகும். கம்பராமாயாணப் பாடல் களைப் பயன்படுத்திப் புதுமுறையில் ஒரு கூத்தை உருவாக்கியுள்ளார்.
மறுமலர்ச்சி, மாறிவரும் சமூக அமைப்பு என்பவற்றைக் காரணம் காட்டி நாட்டுக்கூத்தின் மூலவடிவத் தைச் சிதைப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியது அன்று. சில கூத்துக்களை யேனும் பழையவடிவில் பேணிப் பாதுகாக்க வேணி டியது எம் கடமையாகும். G)
நாடகப் பயிலகம் 11ஆவது பிரிவின் ஆரம்பம்
திருமறைக் கலாமன்றத்தால் 1992 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் நாடகப் பயிலகத்தின் இவ்வாண்டுக்கான 11 ஆவது புதிய பிரிவு இவ்வாண்டு பெப்ரவரி மாதம் 02 திகதி மாலை 4.30 மணி அளவில் மன்ற அரங்கில் இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பயிற்சி நெறிக்கு புதிதாக விண்ணப்பித்த மாணவர்களும், மன்ற அங்கத்தவர்களும் கலந்து கொண்டார்கள். நிகழ்வில் சிறப்புரையினை சிறப்பு விருந்தினராக வருகை தந்திருந்த செயல் திறன் அரங்க இயக்க இயக்குனர் தே.தேவானந்த் அவர்களும் ஆசியுரையினை அருள் திரு. அ. ஜெயசேகரம் அடிகளாரும் வழங்கினார்கள்.
புதிய பயிற்சி நெறிகள் அனைத்தும் 07.02.2004 சனிக்கிழமை முதல் ஆரம்பமாகி சனி, ஞாயிறு தினங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இப் பயிற்சி நெறி ஒரு வருடத்தைக் கொண்டதாகும்.
&jpgరు 13

Page 9
யோ. யோண்சன் ராஜ்குமார்
(6.
8:88
யாழ்ப்பாணக் கத்தோலிக்க கூத்து மரபானது காலத்துக்குக் காலம் ஏற்பட்ட மாற்றவிளைவுகளை உள்வாங்கியும், எதிர்த்து நின்றும், தனது மரபு வழிவந்த அடிப்படைப்பண்புகள் கெடாவண்ணம் நகர்ந்து வந்தமையை கடந்த அத்தியாயங்களில் நோக்கினோம். அவ்வாறே தமிழ்நாட்டில் திராவிட இயக்கம் தோற்றுவித்த எழுச்சியும், தொடர்ந்து வளர்ச்சியடைந்த தமிழ்ச் சினிமாவும், தமிழ்நாட்டு அரங்கில் ஏற்படுத்திய தாக்கம் ஈழத்தின் தமிழ் அரங்கிலும் ஏற்பட்டதனை யாவரும் அறிவர். அந்தத் தாக்கம் யாழ்ப்பாணக் கூத்து மரபில் முழுமையான தாக்கத்தை ஏற்படுத்தாது விடினும் கணிசமான விளைவுகளை குறிப்பாகச் சில பிரதேசங்களில் ஏற்படுத்தியுள்ளது எனலாம். அதுபற்றி இக்கட்டுரை ஆராய முற்படுகின்றது.
திராவிட இயக்க அரங்க முயற்சிகளும், தமிழ்ச் சினிமாவும் கூத்தில் ஏற்படுத்திய தாக்கங்கள்
தமிழ் நாட்டில் நாற்பதுகளில் எழுச்சி பெற்ற திராவிட இயக்கம், அரங்கையே தனது பிரதானமான ஆயுதமாகக் கொண்டு செயற்பட்டது. பிராமணியம் , சாதிய ஒடுக் குமுறை, பெணி அடிமைத் தனம் போன்றவற்றிற்கெதிராக அவ்வமைப்பு மேற்கொண்ட தீவிர எதிர்ப்பும், பிரச்சார நடவடிக்கைகளும் அரங்கில் புது இரத்தத்தைப் பாய்ச்ச வைத்தன. அதிலும் சிறப்பாக அறிஞர் அண்ணாத்துரையின் தலைமையில் திராவிட முன்னேற்றக்கழகம் உருவாகிய பின்னர் அந்த அமைப்பு தனது அரசியல் ஆயுதமாகவும், சமுக சீர்திருத்தக் கருவியாகவும் அரங்கையும், தொடர்ந்து வளர்ச்சி பெற்ற சினிமாவையும் “கூத்தாடிக்கட்சி தி.மு.க” என்று கூறப்படுமளவுக்குப் பயன்படுத்திக் கொண்டது. இது பற்றிப் பேராசிரியர் சிவத்தம்பி பின்வருமாறு கூறுகின்றார். “திராவிட இயக்கத்தின் முகிழ்ப்பானது அரசியல் சார்புள்ள தமிழ் அரங்கில் தன் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டது. இவ்வியக்கமானது தேசியத்தை மேம்படுத்துவதற்குப் பதிலாக தமிழ் நாட்டையும் தமிழ்க் கலாசாரத்தையும் புனிதப்படுத்துவதற்கே குரல் கொடுத்தது. 1950 அளவில் தமிழ் அரங்கானது (அதனுடைய இயற்கையான வெளிப்பாடான
14 &gర
 
 

தமிழ்ச் சினிமாவுடன்) தி.மு.க வினதும் அதன் இலட்சியத்துக்குமான பிரச்சார ஆயுதமாக உருப்பெற்றது. உண்மையிலேயே சினிமாவுடனும் அரங்குடனும் தி.மு.கவின் மிக நெருங்கிய தொடர்பானது அதனை ஒரு கூத்தாடிக்கட்சி என தாக்கப்படுமளவுக்கு வைத்து விட்டது.”*
இந்த அரசியல், சமூக சீர்திருத்த எழுச்சியின் வினைத்திறனுடன் உருப்பெற்ற அரங்க இயக்கம் தமிழ் நாட்டில் மட்டுமன்றி, ஈழத்திலும் கலை, கலாசார சந்துபொந்துகள் எல்லாவற்றிலும் புகுந்து கொண்டு பிரதான முறைமையாக கொள்ளத்தக்க நீரோட்டமாக மாற்றமடைந்தது. குறிப்பாக அண்ணாத்துரை, கருணாநிதி போன்றோரின் புரட்சிகரமான சிந்தனைகளும், அவர்கள் கையாண்ட கவர்ச்சிமிக்க மொழிக்கையாள்கையும் தமிழ் நாட்டு மக்களை அவர்கள்மேல் பயித்தியம் கொள்ள வைத்து. குறிப்பாக
> எதுகை மோனையுடன் உரையாடுதல். > மூச்சுவிடாமால் பேசத்தக்க ஒழுங்கில் வார்த்தைகளை வார்த்தெடுப்பது. >லொஜிக்கலான வாதவிவாதங்களை தோற்றுவித்தல். > சிலேடைகள் நாச்சுழரத்தக்க சொற்கோவைகளை பயன்படுத்தல். >நீண்ட உரையாடல்கள் அமைத்தல். >உணர்சிமிக்க சொற்களை கோர்வை பண்ணுதல்.
போன்றதான பல அம்சங்களும், பிராமணியம், குறிப்பாக வடநாட்டுப் பாரம்பரியத்திற்கு எதிரான, இராமாயண மகாபாரத, எதிர்ப்புச் சிந்தனைகள், மூட நம்பிக்கைகள், பெண் அடிமைத்தனம் என்பவற்றிற்கு எதிரான கதைப்பொருள்கள் என அனைத்தும் இணைந்த ஒரு அரங்கப்பாரம்பரியம் தமிழ் நாட்டை ஆட்கொண்டதைப்போல ஈழத்தையும் ஆட்கொண்டது. இத்தாக்கம் ஏறத்தாழ நாற்பதுகளில் இருந்து எழுபது வரை தீவிரமாக இருந்தது எனலாம்.
இந்த அரங்கப்பின்னணியில் ஈழத்தவர்களும் நாடகங்களை எழுத முற்பட்டனர். அண்ணாத்துரையின் ‘சந்திரோதயம்', ‘நீதிதேவன் மயக்கம். கருணாநிதியின் ‘தூக்குமேடை’ போன்ற பல நாடகங்கள் தமிழ்நாட்டில் மட்டுமன்றி ஈழத்திலும் மேடையேற்றப்பட்டன. கருணாநிதி அண்ணாத்துரை போன்றோரின் மேடைப் பேச்சுக்களையே பாடம்செய்து பேசும் ஒரு பாரம்பரியமே உருவாகியது எனலாம். கவர்ச்சிகரமான இந்த அரங்கப்பாச்சலை ஈழத்து கூத்தரங்கும் சந்திக்கவேண்டிய சவாலைக் கொண்டிருந்தது.
தி.மு.க. நாடகங்களால் மட்டுமன்றி, திரைப்படங்களிலும் தமது முத்திரைகளை பிரதிபலித்த காலத்தில், திரைப்படம் என்ற ஊடகம் இங்கு மிகுந்த கவர்ச்சிக்குரியதாக அறிமுகமாகிறது. அக்காலத்திரைப்படங்கள் புராண, வரலாற்று, கற்பனைக் கதைகளை பாடுபொருள்களாக கொண்டவையாக அறிமுகமாகின. இந்தத் திரைப்படக் கவர்ச்சியானது. திரைப்படங்களையே நாடகமாக்கும் ஒரு முனைப்பையும், திரைப்படங்களைப் போன்ற கற்பனைவாத நிலையில் நாடகங்களை மேடையேற்றுதலையும் ஒரு வழக்கமாக கொள்ளுமளவுக்கு படைப்பினரை மாற்றியது. இது பற்றிப் பேராசிரியர் மெளனகுரு பின்வருமாறு கூறுகின்றார் “. இந்நாடகங்களில் பெரும்பாலானவை சினிமா உத்திகளைக் கையாண்டன. சினிமாவுக்கும் நாடகத்திற்குமிடையேயுள்ள துல்லிய
G 15.

Page 10
வேறுபாடுகளைப் புரிந்து கொள்ளாமையினாலும், நாடகம் பற்றிய ஞானம் இன்மையினாலும், சினிமாவில் கொண்ட அபரீத கவர்ச்சியினாலுமே சினிமாவைப்போல நாடகம் அமையவேண்டும் என இதன் தயாரிப்பாளர்கள் விரும்பினர் சினிமாவின் விறுவிறுப்பை நாடகமும் கொண்டிருக்க வேண்டுமென இவர்கள் எண்ணினர். புறஜெக்ரரைப் பயன்படுத்தி பின்னணியில் காட்சிகளை உண்டாக்குதல் சினிமா தொடங்குமுன் எழுத்துக்கள் திரையில் தெரிவதுபோல் நாடகமேடையின் பின்புறத்தில் போட்டுக் காட்டுதல் , பின்னணியில் சினிமாப்பாடல்களை றெக்கோடரில் போட்டுவிட்டு அதற்கு வாயசைத்து ஆடிப்பாடுதல், சினிமாவில் வரும் கதாநாயகன் வில்லன்போல பாவனை செய்து நடித்தல் போன்ற சினிமா அம்சங்கள் இந்நாடகங்களை பிடித்துக் கொண்டன.” பேராசிரியரின் இந்தக் கருத்துக்கொட்ப உருவான சினிமாக் கவர்ச்சி புத்தி ஜீவிகளால் நிராகரிக்கப்பட்டாலும் சாதாரண மக்கள் அதன் பாதிப்பை உணரமுடியாமல் அள்ளுண்டு சென்றனர் எனலாம்.
இத்தகைய கவர்ச் சிகரமான அரங்கப் போக்கு அதிகம் கிராமப்புறங்களிலேயே ஆதிக்கம் பெற்றிருந்து. எனவே பாரம்பரியக் கூத்துக்கள் கவர்ச்சியற்றதாகச் செல்லத்தக்க அபாயம் காத்திருந்தது. இதனால் சில பிரதேசங்களில் சினிமா நாடகத்திற்கு கூத்து சளைத்தல்ல, என நிரூபிக்கவும் அந்நாடகப்போக்குடன் எதிர் நீச்சல் போட்டு வாழவேண்டிய தேவையையொட்டியும் சில மாற்றங்களை தங்களை அறியாமலே உள்வாங்கிக் கொண்டனர். ஆனால் எல்லாக் கூத்து மரபினரும் இதைபின்பற்றினர் என்று கூறமுடியாது. இவற்றை எதிர்த்து நின்று கூத்தின் மரபைக் கெடுக்காது மரபுகாத்தவர்களும் உள்ளார்கள். தி.மு.கவின் எழுச்சியும், சினிமாவின் கவர்ச்சியும் கூத்தரங்கில் பின்வரும் சில மாற்றங்களை தோற்றுவித்ததை ஒரளவு உணரக்கூடியதாகவுள்ளது.
> கதைப்பொருளில் மாற்றங்கள் ஏற்பட்டன. > கூத்தின் ஊட்டு வசனங்கள் அதிகரித்தன. > அளிக்கை முறைகளில் மாற்றம் ஏற்பட்டது.
மரபுவழியான புராணக்கதைகளையும், புலசந்தோறம் நூலில் எடுக்கப்பட்ட கதைகளையும், விவிலியம் மற்றும் வரலாற்றுக் கதைகளையும் பாடு பொருளாகக் கொண்ட கூத்து மரபில் மேற்கூறப்பட்ட தாக்கங்களிற்குப்பின் சில பிரதேசக் கூத்துக்களில் புதிய பாடுபொருள்கள் அறிமுகமாகின. தி.மு.க வினால் மேடையேற்றப்பட்ட நாடகங்களை கூத்தாக்கும் முனைப்பும், சினிமாவில் இடையிட்டு வருகின்ற கதைகளை கூத்தாக்குதல் சினிமாக் கதையையே கூத்தாக்குதல் போன்ற எழுச்சிகள் இக்காலத்தின்பின் காணப்பட்டுள்ளன.
உதாரணமாக ‘கண்டியரசன் கதை ஈழத்துக்குரியதாக இருப்பினும் ‘புதையல்’ என்ற திரைப்படத்தின் இடையில் நாடகமாகவந்த காட்சியைப் பார்த்தன் பின்னரே பாஷையூர்ப் பகுதியில் அதனைக் கூத்தாக யாத்தனர். அவ்வாறே ‘கட்டப்பொம்மன்’ நாட்டுக்கூத்து கட்டப்பொம்மன் திரைப்படத்திற்குப் பின்னர் எழுந்தது. அதுபோலவே, கோவலன் சரித்திரம் இங்கு அதிகம் அறிமுகமாகி இருந்தாலும் ‘பூம்புகார்’ திரைப்படத்திற்கு பின்னரே ‘முத்தா மாணிக்கமா’ என பாஷையூரில் எழுதி ஆடப்பட்டது. இது அங்கு மட்டுமன்றி நாவாந்துறை, குருநகர்,
16 Mg(

தீவகம், பருத்தித்துறை போன்ற பல இடங்களிலும் வழக்கமாக இருந்ததை அறியக்கூடியதாகவுள்ளது. இதற்குப் பின்வரும் நாட்டுக்கூத்துக்களை ஆதாரமாகக் குறிப்பிடலாம்.
அம்பிகாபதி ராஜராஜசோழன் யூலியஸ் சீசர் மருதநாட்டு இளவரசி ராஜகுமாரன் மர்மக்கொலை தெய்வநீதி சகோதரபாசம் கிளியொபெற்றா வேளாங்கன்னி வீரமாதேவி துன்பத்தின் பின் மனோகரா.
திரைப்படக் கதைகளைத் தழுவி, கற்பனைக் கதைகளைக் கூத்தாக்குகின்ற ஒரு போக்கும் குறிப்பிடத்தக்க அளவில் காணப்பட்டது. ‘கவிஞன் கண்டகனவு, அலங்கார ரூபன், விஜயமனோகரன். போன்ற சில கூத்துக்களை இவ்வாறு நோக்கலாம்.
மற்றொரு முக்கியமான மாற்றமாக பெருமளவில் பாடல்களையே கொண்டு எழுதப்பட்ட கூத்துக்களில் ஊட்டு வசனங்களின் பயன்பாடு அதிகரித்தமையையும் சுட்டிக்காட்ட முடியும். வெறுமனே பாடல்களுக்கிடையே வரும் சிலவரிகள் என்ற நிலை மாறி சிலகாட்சிகளே வசன உரையாடல்களாக அமையுமளவுக்கு சில நாடகங்களில் இவ்வசனங்களின் பயன்பாடு அதிகரித்தது. உதாரணமாக, காவலூர்க் கவிஞர் ஞா.மா. செல்வராசாவின் ‘ராஜராஜசோழன், “பண்டார வன்னியன்'. மிக்கோர் சிங்கத்தின் ‘வீரபாண்டிய கட்டப்பொம்மன்'. போன்ற கூத்துக்களை கூறலாம். அதுமட்டுமன்றி உரையாடல்களில் ஆங்கிலச் சொற்களைக் பயன்படுத்துதல் செம்மையான மொழியுடன், கிராமிய பேச்சு வழக்கான சொற்களை பயன்படுத்துதல் குறிப்பாக, தென்னிந்திய சினிமாவின் தாக்கத்தாலான தென்னிந்திய உச்சரிப்புடைய வசனங்களை பயன்படுத்துதல் எனப்பல பிறழ்வுகளை கூத்துக்களுக்குள் அவதானிக்கக் கூடியதாக இருந்தமைக்கு மேற்குறிப்பிட்ட தாக்கங்களே காரணம் எனலாம்.
இவை தவிரவும் தி.மு.க பயன்படுத்திய கவர்ச்சிகரமான மொழியை கூத்தின் உச்சக்கட்டத்தில் சில நாடக ஆசிரியர்கள் பயன்படுத்தியுள்ளார்கள், குறிப்பாக ‘வீரபாண்டிய கட்டப்பொம்மன்’, ‘மனோகரா’ போன்ற திரைப்பட உரையாடல்களின் தாக்கங்களை இவற்றில் அதிகமாகக் காணலாம். உதாரணமாக, காவலூர் கவிஞர் ஞா.மா. செல்வராசா அவர்களின் பண்டார வன்னியன் நாட்டுக்கூத்தின் இறுதிப்பகுதி பின்வருமாறு காணப்படுகின்றது.
'நெஞ்சில் உரங்கொண்ட வீரர்கள் எவராயினும் நேருக்கு நேர் போர்புரிந்து களத்திலே இருவரும் மடிவோம் வாருங்கள். சி. அந்நியனின் வாள் இந்த வன்னியனுக்கு வேண்டாம். இப்போ என்னிடத்தில் வேல் இல்லை வாள் இல்லை, வெடிக்கும் குண்டுகளில்லை, வீரம் செறிந்த கரங்களுண்டு திரம்மிகுந்த புஜங்களுண்டு ஒர்மம் படைத்த மார்புண்டு வாருங்கள் போரிலே மாள்வோம்'. எனத் தொடங்கும் வசனம் மீண்டும் தொடர்கின்றது. "ஆ.வற்றாத பாலாறு
ஆற்றுதை 17

Page 11
நெளியும் வன்னித் திருநாடே, நான்பிறந்த கன்னித் தமிழ்விடே! உன் அரவணைப்பில் இருந்து விர்மகன் விலகப்போகிறான். என்னைப் பெற்றவளே நற்றவளே எனக்குப் பேரிட்ட கொற்றவளே உனது காதிலே தொங்கும் குண்டலத்தை, கழுத்திலே நிறைந்த மணியாரத்தை கையிலே மலிந்த வளையங்களை காலிலே குவிந்த சிலம்புகளை இனி எப்போ கலிதிரக் காணப்போகிறேன்.”*
எனத் தொடருகின்ற வசனம் இரண்டு பக்கங்களுக்கு நீளுகின்றது. இது கூத்து மரபிற்கு புதியது.
அது மட்டுமன்றி சினிமாவினுடைய கதை இயல்பை பார்த்து கூத்தின் கதைப் பின்னலில் மாற்றத்தை ஏற்றுக் கொண்ட கூத்துகளையும் இக்காலப்பகுதியில் காணலாம். கூத்திற்கென ஒரு மரபுரீதியான கட்டமைப்பு உண்டு அது; காப்பு, தோடையம், பாயிரம் (புலசந்தோர்), கட்டியன் வரவு. என வழங்கும் கட்டமைப்பு மாறி கதையுடன் ஆரம்பிக்கும் கூத்துக்கள் பலவும் சினிமாவின் தாக்கத்திற்குட்பட்டே அவ்வாறு பிறழ்வு பட்டிருக்க வேண்டுமென எண்ணத் தோன்றுகின்றது. இதற்கு ’மனம்போல் மாங்கல்யம்’, ‘கண்டி அரசன். போன்ற பல கூத்துக்களை உதாரணமாகக் கூறலாம். திரைப்படத்தைப் பின்பற்றி அதே கதைக்கட்டமைப்பைப் பாவித்த கூத்துக்களுமுள்ளன உதாரணமாக, மிக்கோர்சிங்கம் புலவரால் எழுதப்பட்ட ‘வீரபாண்டிய கட்டப்பொம்மன்’ நாட்டுக்கூத்தில் திரைப்படத்தின் சாயலை அப்படியே காணலாம். அக்கூத்து திரைப்படத்தினைப்போலவே கோவிலில் கட்டப்பொம்மன், ஜக்கம்மா வேண்டுதல்செய்யும் காட்சியுடன் ஆரம்பிக்கின்றது. அது மட்டுமன்றி திரைப்படத்தில் வெள்ளைத்தேவனை போருக்குப் போகாது தடுக்கும் வெள்ளையம்மாவின் பாடல்களில் அதே கருத்துக்களே தொனித்து நிற்கின்றன.
“போகாதே போகாதே மன்னா - நானும் பொல்லாத கனவு கண்டேன். குழல் அவிழ்ந்து விழவும் கண்டேன் - ஐயோ கொண்டை மலர் வாடக்கண்டேன். குளிக்க மஞ்சள் அரைத்தேன் அத்தான் - அது கொம்பன் கரியாச்சுதத்தான்.' எனத் தொடருகின்ற பாடல் வரிகள். கூத்தின் முடிவு திரைப்படத்தைப் போலவே வீராவேசத்துடன் கட்டப்பொம்மன் உரையாடும் காட்சி போன்ற பலவற்றையும் உதாரணமாக நோக்கலாம். O (தொடரும்)
A A த. பிரபாகரனினி 3 நாடகங்களி ‘அம்பலம்' சஞ்சிகையின் வளர்ச்சி நிதிக்காக த.பிரபாகரனின் நெறியாள்கையில் உருவான யாழ்ப்பாணத்தின் சமகாலத்தை வெளிப்படுத்திய 'மண் மூடும் சுவடுகள் ' கபாடம் திறமின் "மேன் மக்கள்' ஆகிய மூன்று நாடகங்கள் கடந்த 7.11.2004 ஞாயிறன்று யாழ் பல்கலைக்கழக கைலாசபதி கலை அரங்கில் 3 நேரக் காட்சிகளாக மேடையேற்றப்பட்டது.
18 (

பாரம்பரிய கலைகள் மேம்பாட்டுக் బ్ప్రైళ్ల . . கழகத்தின் பத்தாவது ஆண்டு நிறைவு விழாவும், கலைஞர் கெளரவிப்பும் பததாவது ஆண்டு இவ்வருடம் ஜூலை மாதம் 16,17,18 ஆகிய நிறைவு விழா திகதிகளில் நல்லூரில்" அமைந்துள்ள துர்க்கா மணி மண்டபத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. மூன்று நாள் நிகழ்வுகளின்போதும், பாரம்பரிய கலைகள் மேம்பாட்டுக் கழகத்தின் பத்தாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இவ்வாண்டின் முற்பகுதியில் நடத்தப்பட்ட நாட்டுக்கூத்து, இசைநாடகம், வாத்தியம், கிராமியப் பாடல்கள் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ், பதக்கம், விருதுகள், வழங்கப்பட்டதுடன், முதலாம், இரண்டாம் இடங்களைப் பெற்ற நாட்டுக்கூத்து, மற்றும் இசைநாடகங்களும் மேடையேற்றப்பட்டன. இத்துடன் நாட்டுக்கூத்து, இசைநாடகம், ஒப்பனை, ஆர்மோனியம், வில்லுப்பாட்டு, சிற்பம் உட்பட்ட கலைகளில் சிறந்த விளங்கும் 15 இற்கும் அதிகமான கலைஞர்கள், மகுடம் சூட்டப்பட்டு பொன்னாடை போர்த்தப்பட்டு, மாலை அணிவித்து மரபுக் கலைச் சுடர்' என்னும் பட்டம் வழங்கிக் கெளரவிக்கப்பட்டார்கள். இறுதி நானள்று கிராமியக் கலைகள் ஊர்வலமும் இடம்பெற்றது.
திருமறைக் கலாமன்றத்தின் இசைநாடக விழா
ஈழத்தின் அரங்க வரலாற்றில் 19ஆம் நூற்றாண்டில் அறிமுகமாகி, அரங்கப் பாரம்பரியத்துடன் சங்கமித்து, எமது தனித்துவமான மரபாக முகிழ்ந்தெழுந்த 'இசைநாடகம்' (ஸ்பெஷல் நாடகம்) இன்று எமது மரபுக் கலை வடிவமாக நோக்கப்பட்ட போதிலும் அது தன் மரபிழந்து, நலிந்து வருகின்றது. இதனை மீளவும் புத்துயிருடன் எழுப்பும் ஒரு முயற்சியின் விழிப்புணர்வுச் செயற்பாடாக திருமறைக் கலாமன்றத்தால் கடந்த ஜூலை மாதம் 02ஆம், 03ஆம், 04ஆம் திகதிகளில் 'இசைநாடக விழா” நடத்தப்பட்டது.
இதன் போது மூன்று நாட்களிலும் மாலையில் திருமறைக் கலாமன்ற அரங்கில் வெவ்வேறு வகையில் அமைந்த இசைநாடகங்கள் யாழ் மாவட்டத்தின் பல்வேறு பிரதேசக் கலைஞர்களாலும் மேடையேற்றப்பட்டது. அத்தோடு மூத்த இசை நாடகக் கலைஞர்கள் பலர் பொன்னாடை போர்த்திக் கெளரவிக்கப்பட்டார்கள். இறுதி இரு நாட்களிலும் பகல் பொழுதில் யாழ் மறைக்கல்வி நடுநிலைய மண்டபத்தில் இசை நாடகம் தொடர்பான பல்வேறு ஆய்வுக் கருத்தரங்குகளும் இடம்பெற்றது. இதனை துறை சார்ந்த புலமையாளர்கள் வழங்கியிருந்தார்கள். இவ் இசைநாடக விழா இசைநாடகத்திற்கு புத்தெழுச்சியை ஏற்படுத்திய ஒன்றாக அமைந்திருந்தது.
‘இசை நாடக விழா வில் வாசிக்கப்பட ஆய்வுக் கட்டுரைகளை தாங்கி ஆற்றுகை” யின் அடுத்த இதழ் விரைவில் வெளிவரவுள்ளது.
pgర 19

Page 12
மலையகத் தமிழ்ப்
பண்பாட்டில் அர்ச்சுனன் தபசு
அ.ஜெகன்தாசன்
மக்களின் உணர்வுகளோடு கலைகள் வாழ்கின்றபோதுதான் மக்கள் சமுதாயம் அர்த்தமுள்ளதாக அமைந்திருக்கும். வாழும் கலைகள் என்று மக்களால் இன்றுவரை ஆற்றப்பட்டு வருகின்ற அத்தனை கலைகளும் மனித வாழ்க்கையின் மாற்றங்களுக்கு மகத்தான வகையில் பங்காற்றியுள்ளன. இவ்வாறான கலைகள் யாவுமே கிராமிய கலைகள் என்கின்ற ஒரு நிலையிலிருந்தே வளர்த்தெடுக்கப் பட்டவை என்பது வெளிப்படையானது.
இந்தியாவில் தமிழ்நாட்டுக் கிராமங்களில் வளர்ந்து பின்னர் இலங்கையிலே கடந்த நூற்றி எண்பது வருடங்களுக்கு மேலாக மத்திய மலைநாட்டில் இன்றுவரை உன்னதமாக வழங்கி வருகின்ற கலைகளான காமன் கூத்து, அர்ச்சுனன் தபசு, பொன்னர் சங்கர், லவகுசா, குறவஞ்சி என்பன விதந்து குறிப்பிடத்தக்க கலைகளாகும். இம்மலையக கலைகளுள் அர்ச்சுனன் தபசு கூத்து நாடகம் பற்றி அறிந்து கொள்வோம்.
இலக்கியத்தில் அர்ச்சுனன் தபசு
இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதத்திலே பஞ்ச பாண்டவர்களில் ஒருவராக சித்தரிக்கப்படுபவனே அர்ச்சுனன் ஆவான். இந்த மகாபாரதக் கதையிலே வருகிற பாண்டவர்கள், கெளரவர்கள் ஆகியோருக்கிடையே இராச்சிய போட்டியின் காரணமாக வஞ்சகத்தால் பாண்டவர்களின் இராச்சியத்தை பறிக்கிறார்கள் கெளரவர்கள். பாண்டவர்களை பன்னிரண்டு ஆண்டுகள் வனவாசமும், ஒருவருடம் யாருக்கும் தெரியாமல் மறைந்து வாழும் வகையிலும் தண்டனை அளித்து வனவாசம் அனுப்புகின்றனர். பஞ்ச பாண்டவர்களின் “வில்லில் சிறந்தவன் விஜயன்” எனப் புகழப்படுபவன் அர்ச்சுனன் ஆவான். கெளரவர்களால் அவமானப்பட்ட பாண்டவர்களில் தருமனைத் தவிர ஏனைய நால்வரும், துரோபதையும் கெளரவர்களின் கொட்டத்தை உடனே அடக்க வேண்டுமெனத் துடிக்கின்றனர். தருமனோ கெளரவர்களின் ஆட்பலம், படைபலம் என்பவற்றை கணக்கில் கொண்டு தக்க நேரத்திற்குக் காத்திருக்குமாறு கூறுகின்றான். வனத்திலே வாழ்ந்து வரும் இவர்களை ஒரு நாள் வியாச முனிவர் சந்தித்து குறைகளை கேட்கின்றார். பின்னர் அர்ச்சுனனுக்கு “பிரதிஸ்மிருதி” எனும் மந்திரத்தை உபதேசித்து பின் சிவனிடமிருந்து பாசுபதாஸ்திரத்தை பெறுவதற்கு ஆலோசனை கூறி இது
20 (
 
 

கெளரவர்களுடனான போரிலே மிகவும் முக்கிய இடம் வகிக்கும் என்பதையும் கூறுகின்றார். இந்த ஆலோசனையால் மகிழ்ந்த பாண்டவர்கள், அர்ச்சுனனை வாழ்த்தி தவம் இயற்றி பாசுபாஸ்திரத்தை சிவனிடத்திலிருந்து பெற்றுக்கொள்வதற்கு அனுப்புகின்றனர்.
தவம் இயற்றுவதற்கு செல்லுகின்ற அர்ச்சுனன் அடர்ந்த பல வனங்களைக் கடந்து சென்று இமாலயத்தை அடைந்து திருவைந்தெழுத்தை ஒதி, திருநீற்றை பூசி கால் கட்டை விரலில் நின்று கொண்டு ஒற்றைக்காலில் தவம் செய்கிறான். இவனுக்கு அருள் செய்வதற்கு சித்தம் கொண்ட சிவன் வேடன் உருவில் வந்து அருள்செய்து பாசுபத அஸ்திரத்தை அர்ச்சுனனுக்கு வழங்குகிறான்.
இந்த பாசுபத அஸ்திரத்தை பெறுவதற்காக பல வனங்களைக் கடந்து செல்கிறபோது அவனது மனஉறுதியைக் சோதிக்கும் பொருட்டு இந்திரன் முதலிய தேவர்களும், கிருஸ்ணபரமாத்மாவும் இந்திரனால் அனுப்பப்பட்ட ஊர்வசி, இரம்பை போன்றவர்களும் மாறுவேடமிட்டு குறுக்கிடுகின்றனர். இவற்றையெல்லாம் வென்று இறுதியில் அர்ச்சுனன் பாசுபத அஸ்திரத்தை பெறுவதாகவே மகாபாரதத்தில் ‘வனப்பர்வத்தில் இக்கதை அமைந்துள்ளது. இவற்றில் சிவனிடம் பாசுபத அஸ்திரத்தைப் பெறுவது வரையான கதையே நாம் “அர்ச்சுனன் தபசு” என்னும் கூத்து நாடகமாகப் பார்க்கின்றோம்.
கூத்துக்கலையில் அர்ச்சுனன் தபசு
மகாபாரதக் கதையின் ஒரு பகுதியாக வருகின்ற இந்த அர்ச்சுனன் பாசுபதம் பெறும் பகுதியானது - இந்தியாவிலே காலங்காலமாக மக்கள் மத்தியில் கதை வடிவில் (செவிவாயிலாக) இதிகாசங்களின் கதை வரலாறு பயின்று வரும் வேளையிலே தமிழ் நாட்டிலும் இவற்றின் செல்வாக்கு பரம்பிய காலகட்டத்தில் கோயில்களில் நாடகக் கலையாக நீண்ட இரவுகளில் செய்யப்படும் கூத்து வடிவமாக மக்கள் மத்தியில் கலை வடிவம் பெற்றது. தென்னிந்திய தமிழ் நாட்டு மக்களின் கலைசெல்வங்களில் கூத்துக் கலையானது அம்மக்களின் உணர்வுகளோடு ஒன்றிப்போனது. தெருக் கூத்தாகவும் நீண்ட இரவுகளில் கொட்டகைகளில் ஆடப்படும் கூத்தாகவும் இக்கூத்துக்கலை வளர்ச்சிப் பெற்ற வகையிலே “அர்ச்சுனன் தபசு”ம் கூத்தாக ஆற்றப்படும் கலையானது. இதன்போது இக்கதைக்குரிய ஆட்டமும் பாடலும் கூத்து பயிற்றுனர்களால் உருவாக்கப்பட்டு ஆற்றப்பட்டு வளர்ந்தது. மகாபாரத கதைப்பகுதியே ஆனாலும் அதன் மூலப் பாடலல்லாமல் கூத்து ஆடப்படும் சமூக நிலை களம் என்பவற்றுக்கேற்ற வகையில் பாடல்களும் பாடலுக்கான மெட்டுக்களும் வேறுப்பட்டே இக்கலை வளர்ந்து வந்திருப்பதை நாம் அவதானிக்கலாம். ஆனால் எந்த களமாக இருப்பினும் கூத்தின் அடிப்படை அம்சங்களில் பெரிதாக மாற்றம் இடம் பெறவில்லை என்பதை நாம் உணர வேண்டும்.
மலையக பாரம்பரியத்தில் அர்ச்சுனன் தபசு
பதினெட்டாம் நூற்றாண்டிலே ஆங்கிலேயரால் கூலிகளாக இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட இந்தியத் தமிழர்கள் தங்கள் உணர்வுகளோடு சுமந்து வந்த
ஆற்றுதை 21

Page 13
கலைகளையும் பேணிப் பாதுகாத்து அதனுடாக வாழ்ந்து கொண்டிருப்பதை இன்றும் காணலாம். சுமார் நூற்றிஎண்பது வருடங்களுக்கும் மேலாக இம்மக்கள் தங்கள் வாழ்வியலோடு இணைத்து தங்களது சமூக பொருளாதார கட்டுமானங்களுக்கேற்ப ஏலவே சொல்லப்பட்ட காமன்கூத்து அர்ச்சுனன் தபசு, பொன்னர் சங்கர், லவகுசா, குறவஞ்சி ஆகிய கூத்துக்களையும், நாட்டார் பாடல்கள், கும்மி, காவடி, கரகாட்டம், சிலம்பு, தீச்சுடராட்டம் என்பவற்றையும் வளர்த்து வருகின்றார்கள். இம்மக்கள் தங்களது பெருந்தோட்ட உற்பத்தி உறவுகளுக்கேற்பவும் காலத்திற்கேற்பவும் பெற்றுக்கொண்ட கருத்தியல் அடிப்படையிலே இக்கலைகளின் ஆற்றுகை முறையிலும் மாற்றம் ஏற்பட்டன எனினும் கூத்தின் அடிப்படைகள் மாறாத வகையிலே இம்மாற்றங்கள் ஏற்பட்டன. வருடத்தில் அனைத்தும் நாட்களுமே ஏதோ ஒரு வகையில் உழைப்பவர்களாகவே இருக்கிற இம்மக்கள் தக்களின் ஒய்வு நாளாகக் கொள்ளக் கூடியது - தீபாவளி, பொங்கல்திருவிழா போன்ற விசேட நாட்களாக மட்டுமே இருந்தன. உழைப்புக்காக மட்டுமே தங்களை முழுமையாக அர்பணித்துவிட்ட இம்மக்களின் எண்ணங்கள், எதிர்ப்பார்ப்புகள், இலட்சியங்கள் என்பவற்றையும் இழந்து போயிருக்கின்ற சமூக, அரசியல், கல்வி, பொருளாதார, உரிமைகள் என்பவற்றையெல்லாம் உணர்வுபூர்வமாக கிளர்ந்தெழுந்து வெளிக்காட்டுகிற களமாக மேற்கூறிய விசேட தினங்களில் ஆற்றப்படும் கூத்துகளிலும் நாடகங்களிலும் வெளிப்படுவதை நாம் நிச்சயம் காணலாம்
இக்கூத்துக் கலைகளை வளர்த்தெடுப்பதில் மலையக மக்களில் பெரும்பாலும் கல்வியறிவற்றவர்களும் ஓரளவு கல்வியறிவு கொண்டவர்கள் சிலருமே பெரும்பங்கு வகித்தனர். இன்று பாடப்படும் கூத்துப் பாடல்கள் யாவுமே இம்மக்களால் இயற்றப்பட்டு பாடப்படும் பாடல்களாக இருப்பது விதந்து குறிப்பிடத்தக்கது. இக்கூத்துக்கள் மலையக பகுதிலே தெருக்கூத்துக்களாக ஆடப்பட்டு வருகின்றது. இவற்றில் காமன் கூத்தைத் தவிர அர்ச்சுனன் தபசு, பொன்னர் சங்கர், லவகுசா, குறவஞ்சி என்பன தெருக்கூத்தாகவும் மேடையில் ஆடப்படும் கூத்து நாடகமாகவும் பரிணாமம் பெற்றிருப்பதை நாம் காணலாம்.
இந்த கலைகளுள் “அர்ச்சுனன் தபசு’ மலையகமக்களின் வாழ்வியல் அம்சங்களோடு கலந்து இம்மக்களின் மனஉறுதியை பறைச்சாற்றும் பெரும் கூத்தாக இன்றுவரை ஆடப்பட்டு வருகிறது. (இக்கூத்திலே அர்ச்சுனனுடைய தவவலிமையை காட்டுவதற்காக இவர்கள் எடுத்துக்கொள்ளும் பிரயத்தனம் - இம்மக்கள் தங்கள் உழைப்பின் மேல் கொண்ட பக்தியையும், வாய்ப்புக்கிடைத்தால் எதையும் சாதிப்போம் என்ற மனஉறுதியையும் காட்டும் குறியீடாகவே அமைந்திருப்பது கவனிக்கத்தக்கது)
அர்ச்சுனன் தபசு கூத்து நாடகமானது குறிப்பாக இந்து பண்டிகைகளின் போது ஆடப்பட்டு வருகிறது. தெய்வாம்சம் பொருந்தியது என்ற நம்பிக்கையுடன் ஆடப்படும் இக்கூத்தை குறித்த நாளில் மேடை ஏற்றுவதற்காக இவர்கள் இரண்டு மாதங்களுக்கு மேல் பயிற்சி எடுத்து கொள்கின்றனர். சமய ஆசாரங்கள் பின்பற்றப்படுகின்ற அதேவேளை மிகுந்த கட்டுப்பாடுகளும், கடப்பாடுகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இந்நிலைமைகளில் இம்மக்களின் வாழ்க்கை
22 ශිෂ්‍ය%ශ්‍ර><කණි

ஒழுக்கங்களின் உச்சக்கட்டமாக இவற்றை நாம் பார்க்கலாம்.
அர்ச்சுனன் தபசுக்குரிய களம்
இக் கூத்தானது ஆடப்படுவதென்று இக்கூத்தினை நடாத்தும் வாத்தியாரினால் முடிவு செய்யப்பட்டபின் குறித்த விஷேடத்தினத்தின் நேர அட்டவணையானது தோட்ட தலைவர்மார்கள், கோயில் பரிபாலன சபை உறுப்பினர்களால் தயாரிக்கப்பட்டு கூத்து வாத்தியாருக்கு அறிவிக்கப்படும்.
கூத்து வாத்தியாரும் அவரது உதவியாளர்களும் முதலில் கூத்து கலைஞர்களை நாள் ஒன்று குறித்து ஒரு மாலை நேரத்தில் கோவிலில் அல்லது ஒரு வீட்டில் கூடும் படி அழைப்பார். இவ்வாறு அழைக்கப்பட்டவர்களுடன் புதிதாக கூத்தாடும் ஆர்வத்துடன் வந்தவர்களும் அடங்குவர்.
இவர்களிலே ஏற்கனவே ஆடிய ஆர்வமுள்ளவர்கள் இவ்வருடம் ஆடுவதற்கு தயாராக உள்ளவர்களைத் தவிர ஏனையோர் விலகிக்கொள்ள இடமளிக்கப்படுவர். அனுபவமுள்ள கூத்தாடும் கலைஞர்கள் வாத்தியாருடன் இணைந்துக் கொண்டு புதியவர்களுக்கு பயிற்சியளிப்பவர்களாகத் தொழிற்படுவர். கூத்து ஆடுபவர்கள், பாட்டுக்காரர், இசை வழங்குபவர்கள் என அனைவரும் தெரிவு செய்யப்பட்டபின், முதல் - ஐந்து தொடக்கம் 10 நாட்கள் வரை கூத்துப்பாடல்கள் பயிற்றுவிக்கப்படும். பின்னர் பாத்திரங்கள் தெரிவுசெய்யப்பட்டு குறித்த பாத்திரத்திற்குரிய ஆட்டமுறை தனித்தனியே வேடத்திற்கேற்ற வகையில் பயிற்றுவிக்கப்படும். பெரும்பாலும் தொழிலாளர்களே கலந்து கொள்வர்.
இந்த வகையில் கூத்தாடுபவர்கள் அனைவருக்கும் அர்ச்சுனன் தபசுக்குரிய முழுப்பாடலும் தெரியும் அதேநேரம் தமக்குரிய ஆட்டங்களிலும் சிறப்புத் தேர்ச்சியை அடைந்து விடுவர். இவற்றிலே திருப்பதியடையும் வாத்தியார் அன்றிலிருந்து ஒவ்வொரு நாளும் மாலை 6 மணிதொடக்கம் இரவு 11 மணிவரை முழுக் கூத்துக்குமாகப் பயிற்சிகள் இடம்பெறும் இப்பயிற்சியானது இரண்டு மாதங்கள் வரை நடைபெறும்.
பயிற்சிக் கால நடை முறைகள் 1. பயிற்சியாளர்கள் அனைவரும் நேரத்திற்கு சமூகந்தரவேண்டும். 2. பயிற்சியின் போது பக்தியுடனும், ஒருவருக்கொருவர் கெளரவம் அளிக்கும் வகையிலும் நடந்து கொள்ளவேண்டும் (குரு பக்தி மேலோங்கி காணப்படும்) 3. பயிற்சிக் காலங்களில் பயிற்சியில் ஈடுபடுபவர் மதுபானம் அருந்ததல், புகைத்தல், மாமிசம் உண்ணுதல் என்பவற்றுக்கு முழுமையாகத் தடைவிதிக்கப்பட்டு ஒழுக்கம் கடைபிடிக்கப்படும். 4. திருமணமானவர்கள் கூத்தாட தெரிவுசெய்யப்பட்டால் தாம்பத்திய உறவில் ஈடுபடுவதற்கும் இக்காலத்தில் தடைவிதிக்கப்படும். 5. கூத்தாடுபவர்களுக்கு இக்காலத்தில் சமூகத்தவர்களாலும் விசேட மரியாதை கிடைக்கும். கூத்தாடுபவர்களும் பொறுப்புடன் நடந்து கொள்ளவேண்டும்.
இவ்வாறான கட்டுப்பாடுகளை தெய்வ நம்பிக்கையோடு கடைப்பிடிக்க வேண்டும். இந்த அடிப்படையில் பயிற்சிகள் இடம்பெறும். பாத்திரங்கள் தெரிவு
కిjpgర 23

Page 14
செய்யும் போது அர்ச்சுனன், பேரண்டன், இராட்சசன், என்போர் வலுவானவர்களாகத் (பலம் மிக்கவர்கள்) தெரிவுசெய்யப்படுவர். முக்கியமாக இக்கூத்துக்களில் பருவமடையாத பெண்கள் தோழி பாத்திரங்களில் கலந்து கொள்வதைத் தவிர பருவமடைந்த பென்கள் கூத்தில் சேர்ந்துக்கொள்ளப்பட மாட்டார்கள். இதற்கான காரணமாக தெய்வ நம்பிக்கையே கூறப்படும்.
அர்ச்சுனன் தபசு கூத்திலே சுமார் 30பேர் வரைகலந்து கொள்வர். இக்கூத்தில் பின்வரும் பாத்திரங்கள் இம்மக்களின் வாழ்வியல், பொருளாதார, உற்பத்தி உறவு என்பவற்றின் அடிப்படையில் இடம் பிடிக்கின்றன.
பயூன், காளி, ஏலக்கன்னி, வேங்கைகன்னி, பேரண்டன், பேரண்டச்சி, தோழியர், மாயவர், பஞ்சபாண்டவர், துரியோதனன், கெளரவர்களில் சிலர், பிராமணர், இராட்சசன், மோஹினி, சிவன், உமை, வேடன், என்பவையே அர்ச்சுனன் தபசில் இடம்பெறும் பாத்திரங்களாகும். இவற்றிலே காளி, மாரியம்மா, ஆகிய பாத்திரங்கள் தங்களது பிரதேசத்தில் பிரதான வழிபாட்டுக்குரிய தெய்வங்களாகும். கதையின்படி பாசுபதத்தை பெறுவதற்கு அர்ச்சுனன்தான் பொருத்தமானவன் என்பதை குலசோதிடர் மூலம் பாண்டவர்கள் தெரிந்து கொண்டபின் அர்ச்சுனன் பாசுபதம் பெறுவதற்கு ஏழுவனங்களைக் கடந்து செல்கின்றான். அவ்வனங்களாவன மோகினி வனம், ஏலக்கன்னி வனம், இராட்ச்சசவனம், பிராமண வனம், பேரண்டன் வனம், அன்னப்பட்சி வனம், வேங்கைக் கன்னி வனம் என்பனவாகும். இவற்றிலே பல சோதனைகளுக்கு முகம் கொடுத்து வெற்றியுடன் முன்னேறிய அர்ச்சுனன் இறுதியில் இந்திர நீல மலைச்சாரலை அடைந்து கடும் தவம் இயற்றி பாசுபதம் பெறுகின்றான்.
இங்கு மலையுச்சிக்கு ஏறுவதை “கம்பம்” ஊன்றி அதன் உச்சியில் நின்று அர்ச்சுனன் தவம் செய்வதாக கூத்திலே காட்டப்படும். கூத்தின் பெரும்பகுதி மேடையிலே ஆட்ப்பட்டாலும் அர்ச்சுனன் தவமியற்றும் (கம்பத்தில் ஏறி உச்சியை அடைதல்) பகுதி திறந்த வெளியிலே (வட்டக்களரி அமைப்பில்) இடம்பெறும்.
“கம்பம்” எனப்படுவது தடித்த சுமார் 65அடி நீளம் கொண்ட காட்டு மரமாகும். கூத்திலே கம்பம் நடுதல் என்பது பெரிய சடங்காகும். கம்பம் வெட்டச் செல்லும் நாளில் கம்பம் வெட்டச் செல்வோர் விரதமிருந்து கம்பம் வெட்டுவர், இக்கம்பத்தை 5அடி ஆழத்தில் ஊன்றுவர். கம்பம் ஊன்றும் நாளில் விரதமிருந்து தோட்ட மக்களுக்கும் அழைப்பு கொடுத்து (நேர்த்திகள் இடுபவர்கள் இந்நாளில் நேர்த்தி வைப்பர்) கம்பத்தை ஊன்றுவர். தற்போது கம்பம் 60அடி உயரம் கொண்டதாக காணப்படும் இவற்றில் 108 படிகள் கட்டப்படிருக்கும். விடிய விடிய ஆடப்படும் கூத்தின் இறுதி பகுதியானது அதிகாலையில் பறவைகள் பறக்கத் தொடங்கும் ஒரு மணித்தியாலத்திற்கு முன்னே அர்ச்சுனன் தவமியற்றச் செல்லும் காட்சி அரங்கேறும். பாடிப்பாடி கம்பத்தின் உச்சுக்கு அர்ச்சுனன் அருளுடன் ஏறிச்செல்வான். பார்வையாளர்கள் பக்தியுடன் அரோகரா - சப்தமிட்டவண்ணமிருப்பர். உச்சியை அடைந்த அர்ச்சுனன் கம்பத்தின் உச்சியில் ஒற்றைக் காலில் பெருவிரலை மாத்திரம் கீழுன்றிப் பாடியபடியே தவமிருப்பான் (வானத்தில் முதலாவது பறவை பறப்பதை கண்டவுடன்) சிவன் வந்து அர்ச்சுனன் தவத்தை மெச்சி பாசுபதம் வழங்குவார், பின் அர்ச்சுனன் கீழிறங்கிய பின் மக்கள் அர்ச்சுனனிடம் வரம்
24 (

பெறுவார்கள். குறிப்பாக குழந்தைப்பாக்கியம் இல்லாதவர்கள் வரம் பெறுவதான நம்பிக்கை இன்றும் உள்ளது. இக்கம்பத்திற்கான பூசையின் போது குடங்களிலே நீர் நிறைத்து கம்பத்தைச் சுற்றி ஊற்றி வழிபாடுகளும் இயற்றப்படும்.
கூத்து நாளன்று கூத்து தொடங்குதல்
அழைக்கப்பட்ட விஷேட அதிதிகள் மேடையில் இருக்கும் வகையில் இறைவனுக்கு பூசைகள் செய்யப்பட்டு குருவை வணங்கிய பின் கூத்து தொடங்கி ஆடப்படும். தொடர்ந்து வாத்தியாரால் கூத்துப்பாடல்கள் பாடப்படகூத்து ஆடப்படும். இவருக்கு சிறு ஓய்வுக்காக இடையிலே “பயூன்” அறிமுகஞ் செய்யப்படுவார். பயூன் மக்கள் படுகிற வாழ்க் கைத் துன்பங்களுக்கு காரணமான அதிகாரவர்கத்தினரை ஏளனஞ் செய்யும் கதைகளுடனும் பாட்டுக்களுடனும் நகைச்சுவையாக வந்து செல்வார்.
இடையில் மாயவர் வரும் போதும், காளி வரும்போதும் பூஜைகள் இடம்பெறுவதும் வழக்கமானதாக அமைந்திருக்கும்.
இக்கூத்திற்காகப் பயன்படும் இசைக் கருவிகளாக தபேலா, டொல்கி, தாளம், சர்பினா (ஆர்மோனியம்) என்பன பயன்படுத்தப்படும்.
பாடல் மெட்டுக்கள் தோட்டத்திற்குத் தோட்டம் மாறுபட்டு காணப்படும். பொதுவாக நாட்டார் பாடல் மெட்டை கொண்டு அமைந்திருக்கும். பொகவந்தலாவ பிரதேசத்தில் ஆடப்படும் பாடல்கள் பொதுவாக குறவஞ்சி மெட்டில் உள்ளதாக இங்குள்ள வாத்தியார் கூறுகின்றார். இப்பாடலைப்பாடி பயிற்றுவிக்கும் வாத்தியார், பரம்பரை பரம்பரையாக பாடும் குடும்பத்தில் வந்தவராக இருக்கிறார். தற்காலத்தில் புதிதாகப் பாடல்களைப் பாடி கூத்தாடும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆட்டமுறையானது தபேலா இசையினை அடியொட்டி நான்கு, எட்டு, வட்டம் என்ற வகையிலே ஆடப்படுகின்றது. பாத்திரங்களின் தன்மைக்கேற்ப ஆட்டங்கள் வேகமாகவும் வேகம் குறைந்தும் காணப்படும். உடைகளும், நகைகளும், ஒரு தோட்டத்திலிருந்து இன்னொரு தோட்டத்திற்கு வாடகைக்கு வழங்கப்படுவது வழக்கமாயுள்ளது. தற்காலத்தில் இதற்கான உடைகள் நவீன உடை அலங்காரங்களின் பின்னணியில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. நீள காற்சட்டை, நீளக்கை சட்டை, கிரீடம், அங்கஆபரணங்கள், அரைப்பாவாடை, சாறி என்பன பயன்படுத்தப்படுகின்றன.
இங்கு வேடமணியும் போது பாத்திரங்களின் தன்மைக்கேற்ற வகையில் முகச்சாயங்கள் போடுவது கவனமாகவும் கண்டிப்பானதாகவும் கொள்ளப்படுகிறது. உதாரணமாக மாயவர் பச்சைநிறப் பூச்சைப் பூசுவதும், அர்ச்சுனன் வெள்ளைநிறப் பூச்சைப் பயன்படுத்துவதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அர்ச்சுனன் தபசானது மலையகக் கலைகளில் ஒன்றாக வளர்ந்து வருகிறது. இன்றுவரை மலையக பிரதேசங்களில் பெருந்தோட்டங்களிலே காமன் கூத்தைப்போல் குறித்த காலத்திலே வருடந்தோறும் இடம்பெறாவிட்டாலும் பல்வேறு விஷேட தினங்களில் அர்ச்சுனன் தபசு கூத்து நாடகமாக ஆடப்பட்டு, ஆடப்பட்ட மறுநாள் தெருக்கூத்தாக இடம்பெற்று வருவதை நாம் காணலாம்.
நவீன நாடகங்கள் பல அறிவுசார், அறிவியல்சார் நுட்பங்களோடு
&sg(ക 25

Page 15
ஆற்றப்படுகின்ற இன்றைய காலகட்டத்தில் சினிமாவின் மிகப்பெரிய தாக்கம் அனைத்து தரப்பினரையும் ஆட்டிப்படைக்கின்ற போதும் மலையகக் கூத்துக்கள் மறக்கப்படாமல் ஆற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
காலனித்துவ ஆட்சியிலிருந்து சுதந்திரமடைந்த சமூகங்களாக அம்மக்கள் வாழ்ந்தாலும் சமூக ரீதியின் எந்த வகையான சுதந்திரமும் அற்ற ஒடுக்கப்பட்டவர்களாகவே அரசியல் அநாதைகளாக்கப்பட்டுள்ளார்கள். அதிகாரம், பெருந்தோட்ட நிர்வாகத்தின் கீழ் இருப்பதோடு பூகோளமயமாக்கமென்ற அசுர வேகத்தில் அம்மக்களை மேலும் மேலும் பொறிக்குள் தள்ளிக்கொண்டிருக்கின்ற இன்றைய காலகட்டத்தில் இக்கூத்து கலைகளும் புதிய கருத்துக்கனை கூறிக் கொண்டு மேடையேறுவது எம்மக்களின் அபிலாஷுைகளையும் எதிர்பார்ப்புகளையும் விடுதலையுணர்வோடு காட்டுவதாக கருதவேண்டியுள்ளது.
எதிர்காலத்தில் மக்களை புரிந்து கொண்ட வகையில் அரசியல், பொருளாதாரம், கல்வி, கலை அம்சங்களில் மலர்ச்சி பெற வேண்டுமேனின் மலையக மக்களின் வாழ்க்கை அவர்களிடையே தீர்மானிக்கப்படுவதாக அமைய வேண்டுமெனின் "அர்ச்சுனன் தபசு" கலைfதியாகவும், உணர்வுகளோடும் மேடையேற்றப்பட வேண்டுமென்பது அத்தியாவசியமானதாகும். ()
இக்கட்டுரை திருதிரைக் கவிாரன்ரர் நடத்திய ஈழத்துக் சுத்து விழாவின் முதலாம் நாளில் இக்கட்டுரைான்ராஸ் விராசிக்கப்பட்டதிாதுர்,
'சித்தி ரம் பேசேல்” நாடகம்
திருமறைக் கலாமன்ற 10 ஆவது நாடகப் பயிலக மாணவர்கள் தமது பயிற்சியின் நிறைவாகத் தயாரித்த "சித்திரம் பேசேல்' என்னும் நவீன நாடகம் 28.12.2003 இல் திருமறைக் கலாமன்ற அரங்கில் நடைபெற்ற "ஒளிவிழா நிகழ்வுகளின்போது முதல் தடவையாக மேடையேற்றப்பட்டது. தொடர்ந்து 15.01.2004 பொங்கல் தினத்தன்று மாலையில் மன்ற அரங்கில் இடம்பெற்ற கலை நிகழ்வுகளின்போதும் மேடையேற்றப்பட்டது. இதன்போது ஒருவருட பயிற்சியை நிறைவுசெய்த 10 ஆவது நாடகப்பயிலக மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது. மீண்டும் இந்நாடகம் கடந்த மார்ச் 08ஆம் திகதி மகளிர் தினத்தன்று மாலையில் திருமறைக் கலாமன்றத்தில் இடம்பெற்ற மகளிர் தின ஒன்றுகூடலின்போது பார்வையாளர்களுடனான கலந்துரையாடலுக்காக மேடையேற்றப்பட்டது. இதில் பலர் தமது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்கள்.
"சித்திரம் பேசேல் நாடகம் எமது சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளை வெளிக்கொணர்வதாகவும், பேண்கள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகவும் அமைந்திருந்தது.
இந் நாடகத்தை பயிலக மானவர்களுடன் இணைந்து உருவாக்கி நெறியாள்கை செய்திருந்தவர் திருமறைக் கலாமன்ற நாடகப் பயிலக போறுப்பாளரான செல்வி வைதேகி வைகுந்தநாதன் ஆவார்.
교f ஆந்:Eத்

யாழ்ப்பாணத்தில் ஆங்கில நாடங்கள்
பிரிட்டிஷ் கவுன்சிலின் ஏற்பாட்டில் லண்டனில் உள்ள The Cold Enscnnble ÉIGIGANTËfl:531 fisiji "Greed’ (BLITT IT GIF) || என்னும் உளம நாடகம் இலங்கையின் பல பாகங்களிலும் இ மேடையேற்றப்பட்டதன் தொடர்ச்சியில் ஏப்ரல் 25 ஆம் திகதி: மாலையில் யாழ் நாவலர் மண்டபத்தில் மேடையேற்றப்பட்டது. இரண்டு நடிகர்கள் மட்டும் நடித்த இந்நாடகத்தில் இருவரும் அற்புதமாக நடித்திருந்தார்கள். ஒளி அமைப்பு கணனி மூலம் நெறிப்படுத்தப்பட்டு வழங்கப்பட்டிருந்தமை புதிய அனுபவத்தைத் தந்தது. இந்நாடகக் குழுவினரால் ஏப்ரல், 26 ஆம் திகதி
இதில் நாடகக் கலைஞர்கள் பலர் பங்குபற்றியிருந்தார்கள்.
பாழ் பல்கலைக்கழக மொழியியல் துறையினரின் ஒழுங்கமைப்பில், கொழும்பு பல்கலைக்கழக மொழியியல்துறை விரிவுரையாளரான ஜெகான் அலோசியசின் எழுத்துருவிலும், நெறியாள்கையிலும் உருவான "The Ritual" (மேடையில் எரிந்த பெண்) என்னும் ஆங்கில நாடகம் யாழ் பல்கலைக்கழக : கைலாசபதி கலை அரங்கில் மே மாதம் 29 ஆம் திகதி மாலையில் மேடையேற்றப்பட்டது. இவ் ஆற்றுகை இரண்டு மணித்தியாலங்களை கொண்டதாக அமைந்திருந்தது.
இதேவேளை பிரிட்டிஷ் கவுன்ஸிலின் ஏற்பாட்டில் திருமறைக் கலாமன்ற அனுசரணையில் "பூஜா என்னும் ஒராள் அரங்க அளிக்கை கடந்த 15.03.2003 இல் நாவலர் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது. இதனை : றாணி மூர்த்தி என்னும் மலேசிய புலம்பெயர் நடிகை தனியொரு|* பெண்ணாக நின்று ஆற்றுகை செய்திருந்தார்.
சிவப்புவிளக்கு” காடகம் யாழ் பல்கலைக்கழக நாட்கமும் அரங்கியலும் மாணவர்களின் வெறு வெளி அரங்கக் குழுவின் தயாரிப்பில் சீன இசை நாடகமான சிவப்பு:விளக்கு(பீக்கிங் ஒபேரா) என்னும் நாடகம் ஜூலை 17ஆம் திகதி மாலையில் யாழ் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் மேடையேற்றப்பட்டது குழந்தை ம:சண்முகலிங்கம் அவர்களின் மொழிபெயர்ப்பு:நாடகமாகிய இதனை க. ரதிதரன் நெறியாள்கை செய்திருந்தார். இந் நாடகத்தின் உடைகள், ஒப்பனைகள் அனைத்தும் சீனப் பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டு அமைந்திருந்தது. இந் நாடகம் மீள் உருவாக்கம் செய்யப்பட்டு க. சிதம்பரநாதனின் நெறியாள்கையில் மீண்டும் மேடையேற்றப்படவுள்ளது.
ஆற்grத

Page 16
ச|எழுத்துத்துறை, என பல பரிமானத்துடன் கடந்த
பாடல்கள் போன்ற கவிதை நூல்களும், "பரிசு பெற்ற
இ|நாடகங்கள்' (சாகித்திய மண்டலப்பரிசு பெற்றது) |மரபுவழிநாடகங்கள்” என்ற நாட்டுக்கூத்துத்
""
|னவராக காணப்படுகின்றார். 'முத்தமிழ்க்கலாமன்றம்
என்ற அமைப்பினை உருவாக்கி அல் அமைப்புக் கூடாக பல நாடகங்கள்: நாட்டுக்கூத்துக்களை
மன்றங்களிலும், கலை நிறுவனங்களிலும்
அன்ைனாவியார்,
கலாபூஷணம்
FLIDITGOGO
குழந்தையு -ன்வளர்ந்து
மன்னாரில் உள்ள முருங்கனைப் பிறப்பிடமாகக் கொண்ட 'குழந்தை' என்ற புனை பெயரைக்கொண்ட நாட்டுக்கூத்து அண்ணாவிய நாடகக்கலைஞருமான திரு 蠶 செபமாலை அவர்கள் ஈழத்து நாடகக்கலையின் முதுசமாக கொள்ளத்தக்கவர்களில் பன்முக ஆளுமை கொண்ட ஒரு கலைஞன் நாட்டுக்கூத்து நாடகம் கிராமியக்கலைகள், கவிதை, நடிப்பு நெறியாள்கை
நாற்பது வருடங்களுக்கு மேலாக உழைத்துவருபவர் ஆசிரியப்பணிபுரிந்து ஓய்வு பெற்றவராகிய இவர் 30 நாடகங்களுக்கு மேல் எழுதி நெறிப்படுத்தியவர் இவரது "இன்பத்தமிழின் இதயஒலம்'அறப்போர் அறைகூவல்' போன்ற அரசியல்சார்ந்த நூல்களும் "யாகப்பர் இன்னிசைப்பாடல்கள்', 'மாதோட்டப்
தொகுதிகளும் "நாம்' (சஞ்சிகை) போன்றவையும் நூல்களாக வெளிவந்துள்ளன. 3 மன்னார் மாவட்டத்தின் வடபாங்கு கூத்து மரபின் இன்றைய முகவரியாகக் காணப்படும் இவர் இம்மாவட்டத்தின் கலைஞர்களில் முதன்மையா
மேடையேற்றியதுடன், பல்வேறு சமூக செயலூக்க
அங்கத்தவராக பணியாற்றுபவர்.
இவரது கலைச்சேவையை மதித்து வடக்கு கிழக்கு, மாகாண பண்பாட்டலுவல்கள் அமைச்சு
'கலாபூஷணம்'ஆளுநர் விருது' போன்றவற்றை
வழங்கிக் கெளரவித்துள்ளது.
சமூக நேசிப்புள்ள, மரபுக்கலைகளை வருகின்ற அனுபவமும், ஆளுமையும் மிக்க
ஒரு இக்கலைஞனின் நேர்கானலை, ஆற்றுகை நேர்காணல் இவ்விதழில் பிரக Il
நேர் கண்டவர்கள் ஆசிரியர் குழுவினர்
ஆற்றுப்பித்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நீேண்டகாலமாக நாட்டுக்கூத்துத் துறையில் செயல்பட்டுவரும் நீங்கள் எவ்வாறு இந்தத் துறைக்குள் நுழைந்திர்கள்?
என் தந்தையார் ஓர் அண்ணாவியார் அவர் மாதோட்டத்திலே பல நாட்டுக்கூத்துக்களை மேடையேற்றிப் புகழ்பெற்றவர். இவரது அன்ைனன் மரியான் சந்தான, சந்தியோருமையோர் நாடகம், அருளப்பர் நாடகம் எனப் பல நாடகங்களை bl LgġifLLI L-JEDElJri, LIġbġla! வயதில் இருந்து இவர்களோடு நான் வளர்ந்ததாலம், எனக்கு கிடைத்த இவர்களது வழிகாட்டல்கள், நான் நாட்டுக்கூத்துத் துறையிலே நுழைவதற்கு காரணமாய் இருந்தது எனலாம்.
உேங்களுடைய தந்தையார் எந்தவகை மோடிக் கூத்திலே அதிக பாண்டித்தியம் பெற்றிருந்தார்?
வடபாங்குக் கடத்தைத்தான் அவர்கள் மரபு ரீதியாக ஆடி வந்தார்கள். ஆனால் இப்போது ஆய்வு செய்கின்ற போதுதான் தெரிகின்றது எனது தந்தையாள் ஆடிய நாடகப்பிரதிகளில் ஏறத்தாழ ஐம்பது வீதம் தென்பாங்கு சுத்துக்களின் இராகங்கள் கலந்திருக்கின்றது என்று. நானும் எனது தந்தைவழியில் வடமோடிக்கத்துக்களைத்தான் ஆடி வருகின்றேன். வடபாங்கு எமக்கு அதிக பரிச்சயமாக இருந்த காரணத்தினாலும், அதன் இராகங்கள் யாழ்ப்பானத்தை தழுவிய தாய், அழகும் இனிமையும் கொண்டதாக காணப்படுவதாலும் நாங்கள் இக்கூத்துமரபில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றோம்.
நோட்டுக்கூத்துக்களை மரபு கெடாது பாதுகாத்த பிரதேசங்களில் மன்னார்ப் பிரதேசமும் கூறப்படுகின்றது. இப்பிரதேசக் கூத்துக்களை, வடபாங்கு, தென்பாங்கு, வாசாப்பு, என்று வகைப்படுத்துவதையும் அறியக்கூடியதாக உள்ளது. இவ்வகைப்பாடு உங்களால் ஆரம்பத்தில் இருந்தே துல்லியமாக இனங்கானப்பபடக்கூடியதாக இருந்ததா?
ஆரம்பகாலத்தில் வடபாங்கு தென்பாங்கு என்று பிரித்தறியும் தேவையோ, அவசியமோ இருந்ததில்லை. 19ft இற்குப் பின் அமரர் பேராசிரியர் வித்தியானந்தன் அவர்களின் ஆலோசனையின் பெயரில் மன்னார் மாவட்டப்பிரதேச கலைமன்றத்தினால் மிகப்பெரிய அளவில் கூத்துப்போட்டி ஒன்று நடத்தப்பட்டது. அப்போட்டிக்கென என்னுடைய தலைமையின் கீழ் இயங்கிய முத்தமிழ் கலாமன்றத்தினூடாக ஒரு கூத்தை தயாரித்தேன் (வீரத்தாய்) இதனை தயாரிக்க முற்பட்டபோதுதான் இந்த கூத்துவகைகளுக்கான தணித்துவங்களை துல்லியமாக இனங்கண்டோம். அவ்வாறு உருவாக்கம் பெற்ற வீரத்தாய், கலைக்கழகத்தினால் தெரிவு செய்யப்பட்டு கொழும்பில் மேடையேற்றப்பட்டது. அந்த நிகழ்ச்சிக்குப் பின்னரே இவ்வேறுபாடுகளை தனித்துவமாகக் கைக்கொள்ளவேண்டுமென்ற உணர்வுமேற்பட்டது.
உேங்களுடைய முருங்கன் பிரதேசத்தில், வடமோடிக்கூத்தை மட்டுந்தான்
ஆடுவார்களா?
எங்கள் கிராமத்தை சூழவுள்ள பிரதேசங்களில் குறிப்பாக பிச்சைக்குளம்
கலிமோட்டை, பிடாரிக்குளம், மாவலங்கேணி. போன்ற இடங்களிலெல்லாம்
ஆநிறுவித்

Page 17
சந்தியோகுமையோர் வாசாப்பு, மற்றும் சில தென்பாங்கு, வடபாங்குக்கூத்துக்களும் மேடையேற்றப்பட்டன. ஆனால் நாம் தென்பாங்கு கூத்துக்களை விட வடபாங்குக் கூத்துக்கே அதிக முதன்மை கொடுத்துவந்தோம் அதேவேளை மற்றொரு விடயத்தையும் கூறவேண்டும் வடபாங்குக்கூத்துக்களில் ஏறத்தாள முப்பது வீதத்துக்கு மேல் தென்பாங்கு இராகங்கள் கலந்துள்ளன.
)ே அப்படியாயின் வடபாங்கு இராகங்கள் ஏதும் தென் பாங்கிலி காணப்படுகின்றனவா..?
இல்லை. மிகக்குறைவு என்றுதான் கூறவேண்டும்.
)ேஅதேவேளை வாசாப்பு, என்பது நேத்திக்காக ஆடப்படுவதென்றும் அதிக சடங்குப் பண்புகளோடு காணப்படுகின்றது என்றும் அண்மைக்காலத்தில் கூறக்கேள்விப்பட்டுள்ளோம். அது பற்றி.?
வாசாப்பு என்பது தனித்துவமானது என்று கூறலாம் ஆனால், வடபாங்காக இருந்தாலும் சரி தென்பாங்காக இருந்தாலும் சரி, மாதோட்டப்பகுதியில் நேர்த்திக்காகவே எல்லாக் கூத்துக்களும் ஆடப்பட்டன. உதாரணமாக ‘என்றிக் எம்பிரதோர் கூத்து நடிக்கப்படும் இடங்களில் நோய்பிணி அகலவும், நல்ல பொருள் வளம் வேண்டியுமே பெரும் பாலும் மேடையேற்றப்படுகின்றது.
)ே மன்னார்ப்பிரதேசத்தில் 'வட்டக்களரி"யில் கூத்தாடும் மரபு இன்னும் காணப்படுகிறதா?.அதுபற்றி.
மன்னாரில் கூத்துக்கள் வட்டக்களரியில் ஆடப்பட்டு வந்தது என்ற கருத்தை எமது முன்னோர்களும் சொல்லி வந்ததை அவதானித்துள்ளேன். ஆனால் நான் வட்டக்களரிக் கூத்தைக் கண்டதில்லை. அதாவது என்னுடைய அனுபவகாலத்துக்குள் இந்த வட்டக்களரி முறை இருந்ததை நான் அறியவில்லை.
)ே பேராசிரியர் வித்தியானந்தன் மன்னார்பிரதேசத்தில் செய்த கூத்தின் வளர்ச்சிக்கான பணிகளைக் குறிப்பிடமுடியுமா?
வித்தியானந்தனின் பணியை மன்னார்ப்பிரதேசம் மறக்காது என்றுதான் கூறவேண்டும். மன்னாரில் பிரதேசக் கலாமன்றத்தினை உருவாக்கி அதன் மூலமாக மன்னார் மாவட்டத் திணைக்களத் தலைவர்களை ஒன்றுபடுத்தி ‘அண்ணாவிமார் மாநாடு', 'புலவர் மாநாடு போன்றவற்றை மிகவும் எழுச்சியுடன் நடத்தினார். அந்த எழுச்சி மன்னாரில் பல படைப்பாளிகளை உருவாக்கியது, பல கலைஞர்களை தூண்டியது. அண்ணாவிமார். புலவர்கள் பலரை வெளி உலகிற்கு அறிமுகப்படுத்திய விழாக்களாக அவை அமைந்தன. 1966 இற்கு முன்னரும்சரி, அதற்குப் பின்னரும்சரி அவ்வாறான விழாக்கள் மன்னாரில் நடக்கவில்லையென்றுதான் கூறவேண்டும்.
)ே பேராசிரியர் வித்தியானந்தனின் செயற்பாடுகள் கூத்துத்கலையினை வளர்த்தது என்று கருத்திருக்கின்ற அதேவேளை, மரபுசார்ந்த, வாழ்வியல் அம்சங்களோடு இரண்டறக் கலந்திருந்த கூத்துவடிவம் வெறும் நாடக
30 Mg(

வடிவமாக, மாற்றமடைந்தது என்ற கருத்துமுள்ளது. அதுபற்றி.?
பேராசிரியர் வித்தியானந்தன் வருவதற்கு முன்னரும்சரி, பின்னரும்சரி மன்னாரில் கூத்துக்கள் சிறப்பாக ஆடப்பட்டே வந்தன. வித்தியானந்தன் வந்ததனால், விடியவிடிய ஆடப்படுகின்ற மரபு வழிக்கூத்துக்களில் பெரிய மாறுதல்கள் ஏற்பட்டன என்று கூறமுடியாது. ஏனெனில் அவை இன்றும் பழமை கெடாது மேடை யேற்றப்படுகின்றன. ஆனால் வித்தியானந்தனின் வருகைக்குப்பின் குறிப்பாக, அவரது கர்ணன் போர், வாலிவதை, நொண்டி நாடகம் போன்றவை மேடையேற்றப்பட்டதன் பின் மன்னார்க் கூத்தில் ஒரு புதிய வேகம் பிறந்தது, கூத்தில் ஈடுபடாத பலர் ஈடுபடத் தொடங்கினர். புதிதாக நாடக மன்றங்கள் தோற்றம் பெற்றன. கூத்துக்களிலும் சிறந்ததான ஒழுக்கம் பின்பற்றப்படலாற்று. இதற்கு உதாரணமாக, வங்காலை வளர்பிறை மன்றம், வான்மதி கலைமன்றம், போன்றவற்றின் நாடகங்களையும், அதிபர் மைக்சிமோஸ் லம்பேட், பசில் லம்பேட் போன்றோரின் நாடகங்களையும் குறிப்பிடலாம். எனவே வித்தியானந்தனின் பணி மன்னாருக்கு மிகுந்த பயனைக் கொடுத்த பணி என்பது மறுக்கமுடியாதது.
)ே நீங்கள் இதுவரை எத்தனை நாடகங்கள் எழுதியுள்ளிர்கள்.?
ஏறத்தாழ ஐம்பது நாடகங்கள் வரை எழுதியுள்ளேன். 1966 இற்கு முன் இருந்தே எழுதி வருகிறேன். ஆரம்பத்தில் “பணத்திமிர்”, “பாட்டாளிக்கந்தன்”, “பணமா? கற்பா?’ போன்ற சமூக நாடகங்களை எழுதி நடித்திருந்தோம். இந்நாடகங்கள் என்னை ஊக்கப்படுத்தியதுடன் எமது முத்தமிழ்க்கலாமன்றம் பிரபல்யம் பெற்றுப் பாராட்டப்படவும் காரணமாகியது. அதனைத் தொடர்ந்து "இலங்கை வென்ற இராயேந்திரன்', ‘நளதயமந்தி’, ‘அம்பிகாவதி” போன்ற இலக்கியநாடகங்களை எழுதிமேடையேற்றினேன். 1966க்குப்பின் அமரர் வித்தியானந்தன் மன்னாரில் மேற்கொண்ட நாட்டுக்கூத்து முயற்சிகளால் தூண்டப்பட்டு நாட்டுக்கூத்துக்களை எழுதத் தொடங்கினேன். 'வீரத்தாய்', 'கல்சுமந்த காவலர்கள்', 'யார்குழந்தை' போன்ற கூத்துக்களை ஆரம்பத்தில் எழுதினேன் இன்றுவரை எழுதி வருகிறேன். மன்னாரில் மட்டுமன்றி, கிளிநொச்சி, பளை, யாழ்ப்பாணம், திருகோணமலை, மடடக்களப்பு. கொழும்பு என பல இடங்களிலும் கொண்டு சென்று இந்நாடகங்களை மேடை யேற்றியுள்ளேன்.
)ே நீங்கள் நாடகங்களை எழுதும் போது என்ன நடைமுறைகளை கைக்கொள்வீர்கள். அதாவது உங்கள் எழுத்தாக்க முறைமை எப்படி பட்டதென்று கூறமுடியுமா?
நாடகமொன்று எழுதவேண்டுமென்ற தேவை அல்லது எண்ணம் தோன்றிவிட்டால், மிக வேகமாகச் செயற்படுவேன். எழுதி முடிக்கும்வரை நிம்மதி இருக்காது. அனேகமாக அரமணி நேர, ஒருமணி நேர நாடகம், நாட்டுக்கூத்து என்றால் கிட்டத்தட்ட ஒரு இரவுக்குள் எழுதிப்போடுவேன். அப்படியான ஆற்றல் என்னிடம் இருந்தது. ஆனால் பிற்பட்ட காலத்தில் எனக்கு ஏற்பட்ட நோயினால் என்னை அதிகம் வருத்தி எழுத முடியாது போனது. அதன் பின் நிதானமாக, நன்கு நேரமெடுத்தே செய்ற்படுகிறேன். முன்புபோல் அதிக தீவிரமாக நிற்பதில்லை. அதே
&jpgర 31

Page 18
நேரத்தில் நாடகத்திற்கான கதையை தெரிந்தெடுப்பதென்றாலும் அதில் காதல், சோரம், வீரம். போன்றதான பல்வகைச் சுனையுமுள்ள கதைகளைத்தான் தெரிவுசெய்வேன் அனஸ்தான் நாடகத்திற்கு வெந்நீEmபத் தரக்கூடியவை.
நீேங்கள் எழுதிய நாட்டுக் கூத்தின் கதைகளைப் பார்க்கின்றபோது, பெரும்பாலும் தமிழ் இலக்கியம் சார்ந்ததாகவே கானப்படுகின்றன. மன்னார்ப்பிரதேசத்தில் அதிக அளவில் கத்தோலிக்க கூத்துக்களுக்கே வரவேற்பு இருக்கும் சூழலில் நீங்கள் இலக்கியம்சார் கதைகளை நாடியதன் +IIII&ÝÏIլի,, Չ
நல்லTேள்ளி; மன்னார்ப்பிரதேசம் அதிக கத்தோவிக்கர்களைக் கொண்ட பிரதேசம் என்பது உண்மைதான். ஆனாலும் நாடகங்களை மேடையேற்றுவதற்கும், அவற்றின் சேப்ளினங்களை பொறுப்பதற்கும் எல்லாக் குருக்களும் தயாராக இருக்கவில்லை. 1961இல் புனித யாகப்பருடைய கதையை கூறுகின்ற "நல்வாழ்வு” என்னும் நாடகத்தை தயாரித்தேன். அதற்கு அதிக செலவு பிடித்தது. அர்செலவின் சிறு பகுதியையாவது பொறுப்பதற்கு அட்போதைய முருங்கன் சிறிஸ்துராசா ஆலய பங்குத்தந்தை இனங்கவில்லை. இது என்னுள் ஒரு வெறுப்பைத் தோற்றுவித்தது. எனவே கத்தோலிக்கருக்கு மட்டுமென்று எல்லைப்பட்டு நிற்காமல் எல்லாமக்களையும் சென்றடையத்தக்க இலக்கியக்கதைகளை தெரிவு செய்தேன். ஆத்தோடு எனது ஆசிரியப்பணியும் இலக்கியம் சார்ந்த சூழலுக்குள் அதிகம் வாழும் நிலையை தேற்றுவித்தது. அதனால் இலக்கிய கதைகளை அதிகம் தெரிவுசெய்தேன். அதேவேளை கிறிஸ்தவக் கத்துக்களையும் ஆக்கியுள்ளேன்.
அேதேவேளை நீங்கள் தெரிவு செய்த இலக்கியக்கதைகள், குறிப்பாக "வீரத்தாய்" "கல்சுமந்த காவலர்கள் போன்றவை, தமிழர் தம் போராட்ட வரலாற்றுக்கு புத்துயிர்ப்பு கொடுப்பவை. அவற்றை தெரிவு செய்ததான் காரணம்.?
நான் தமிழில் அதிகமான பற்றுள்ளவன். 1940 இல் நான் பிறந்தேன். 1945 இல் இருந்து எனது பாடசாலைக் கல்வி ஆரம்பமானது. அதுமுதலே என்னுள் தமிழlவம் கொழுந்துவிட்டேரியத் தொடங்கியது எனiனம், அது என்னை ஒருகாலத்தில் அரசியலிலும் தீவிரமாக இயங்குவதற்கு வழி கோவியது. அக்காலத்தில் தமிழ் அரசியல்க்கட்சிகள் சுதேசியம் பற்றிப் பேசித்திரிந்த காலகட்டம், திருகோணமலை யாத்திரை, சந்தியாக்கிரகம், மன்னார் கச்சேரியில் மாதக்கணக்காக நடைபெற்ற சத்தியாக்கிரகம் போன்ற அனைத்திலும் பங்குபற்றினேன். அதேவேளை "அறப்போர் அறைகூவல்" "இன்பத்தமிழின் இதயஒலம்" என்ற இரண்டு நூல்களை அக்காலத்தில் எழுதி வெளியிட்டேன். இவ்வாறு எனக்குள் இருந்த தமிழ்த் தேசியம் பற்றிய சிந்தனைதான் அவ்வாறான நாடகங்களை எழுதுவதற்கும் காரணமாக இருந்தது. பிற்பட்ட காலங்களில் படிப்படியாக அரசியலில் இருந்து விலகி முழுக்க முழுக்க கலைத்துறையுடனேயே நின்று கொண்டேன்.
நீங்கள் எழுதி நூலாக வெளிவந்த நாடகங்கள்.?
'Tஸ்சுமந்த காவலர்கள். "யாதுழந்தை', 'வீரத்தாய்' வீரனை வென்ற திரள்
3. ஆற்றுதை

என்ற ஐந்து நாடகங்களின் தொகுதி வெளிவந்துள்ளது. இதற்கு 8ே இல் சாகித்திய விருது கிடைத்தது. இதனைத் தொடாந்து விடுதலைப்பயணம் நளன் தமயந்தி என்ற மூன்று மரபு வழி நாடகங்கள் நூலுருவில் வெளிவந்துள்ளன.
உேங்களின் நாடக முயற்சிக்கு, பாடசாலைகளும் ஆசிரியத் தொழிலும் எந்தவகையில் உதவியது என்பது பற்றி.
என்னுடைய நாடக முயற்சிகளில் கணிசமான செயற்பாடுகள் பாடசாலைகள் சார்ந்தவை - ஏனெனில் 40 வருடங்கள் நான் ஆசிரியப்பணி செய்துள்ளேன். எனது கற்பித்தல் கடமைகளுடன் நாடகங்கள், நடனங்கள், வில்லுப்பாட்டுகள், இசை நிகழ்ச்சிகள் என பலவற்றையும் புறச்செயற்பாடாக மேற்கொண்டு வந்துள்ளேன். குறிப்பாக தமிழ்த்தினவிழா, தமிழ்த்தினப்போட்டிகளிற்கு, அதிகமான நாடகங்கள், நாட்டுக்கூத்துக்களை எழுதிப்பழக்கியுள்ளேன்.உதாரணமாக, முருங்கன் பாடசாலையில் மட்டும் கவரிவீசிய காவலன்', 'மயானகாண்டம்', ‘நளன் தபமந்தி". உட்பட ஏழு நாடகங்கள் எனது காலத்தில் மேடையேற்றப்பட்டு முதற்பரிசைப் பெற்றன. இன்று நான் ஓய்வு பெற்றாலுங்கட பாடசாலைகள் என்னை விடுவதாயில்லை. அதனாள் இயன்ற அளவில் பாடசாலைகளில் நாடகங்களைப் பழக்கி வருகின்றேன்.
மேன்னார்ப் பிரதேசத்தில் மட்டுமன்றி அதற்கு வெளியேயும் நாடகங்களை மேடையேற்றியுள்ளிர்கள். வெளிமாவட்டங்களில் பெற்ற அனுபவங்கள், தொடர்புகள்.?
நாங்கள் எங்களுடைய முத்தமிழ்க் காலமன்றத்துக் கூடாக இலங்கையின் பலபாகங்களிலும் நாடகங்களைக் கொண்டு சென்று மேடையேற்றியிருக்கின்றோம். அவை அங்கெல்லாம் மிகுந்த வரவேர்பினைப் பெற்றன. உதாரணமாகக் கூறுவதானால் 1972ம் ஆண்டு "அன்புப்பரிசு' என்னும் நாடகத்தை தயாரித்தோம் அது மன்னாப் மாவட்டப்பிரதேசக்கலை விழாவில் 1ம் இடத்தைப் பெற்றது. அதன் பின் அதனை யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையிலுள்ள "உதயசூரியன் நாடகமன்றம்' நடத்திய நாடகப்போட்டிக்குக் கொண்டு சென்றோம். அந்தப்போட்டியில் 32 நாடகங்கள் பங்கு பற்றின. அதில் எமது 'அன்புப்பரிசு நாடகம் இரண்டாவது இடத்தைப் பெற்றது. T: )ெ முதலாவது இடத்தை துருநகள் கலைஞர்களின் இெே) "கண்நிறந்தது நாடகம் பெற்றது. இதை நான் கூறுவதற்குக் காரணம், அந்தக்கால கட்டத்தில் ஆனையிறலைக்கடந்து சென்று போட்டியில் | பங்கு பற்றிய நாடகமன்றமாக எங்களுடைய நாடகமன்றம் மட்டுந்தான் இருந்தது. இவ்வாறு * பல இடங்களிலும், பல மாவட்டங்களிலும் | நாடகங்களை மேடையேற் றரினோம் . அண்மையில் கூட திருமறைக்கலாமன்ற | நாட்டுக்கத்து விழாவில், யாழ்ப்பாணத்தில் "கல்சுமந்த காவலர்கள்' என்னும் சுத்தினை மேடையேற்றினோம். இதனால் பரந்த அளவில்,
3

Page 19
கலைஞர்களுடன் நெருங்கிய தொடர்பு எனக்கிருந்தது. நடிகமணி, வி.பி. வைரமுத்து, நாட்டுக்கூத்துக்கலாநிதி பூந்தான் யோசேப்பு என பிரபல்யம் பெற்றிருந்த பல கலைஞர்களுடன் எனக்கு நெருங்கிய நட்பிருந்தது.
)ே மிக நீண்டகாலமாக நாடகத்துறையில் ஈடுபட்டு வருகின்றீர்கள், இந்த ஈடுபாட்டிற்கு உங்கள் குடும்பத்தின் ஆதரவு எவ்வாறு இருந்தது என்பது பற்றிக்கூற முடியுமா?
நிச்சயமாக. காரணம் எனது குடும்பம் எனக்களித்த ஆதரவினால்தான் நான் இதுநாள்வரை செயற்பட்டு வருகின்றேன். நாடகம் மனதிற்கு நிறைவைத்தரும். ஆனால் பொருளாதாரத்தில் மிகுந்த சிரமத்தைத்தான் தரும், இதற்கு ஒரு சில உதாரணங்களைக் கூறலாம். 1966ம் ஆண்டு 'வீரத்தாய் நாடகத்தை கொழும்பிலே மேடை ஏற்றுவதற்கு எல்லாமாக 1600ரூபா முடிந்தது. இந்தச் செலவை எனக்கு யாரும் தரவில்லை. எனது மனைவியின் சங்கிலியை கொண்டு சென்று அடைவுவைத்து ஒருதொகைப் பணத்தையும் கற்குளம் கிராமத்தில் வட்டிக்குப்பணம் எடுத்து மீதித்தொகையையும், பெற்றே செலவை ஈடுசெய்தேன். இப்படிப்பல சந்தர்ப்பங்களில் எனது குடும்ப நகைகளை அடைமானம் வைத்துத்தான் நாடகம் நடத்தினேன். அதற்கு என்னுடைய குடும்பம் நல்ல ஆதரவாக இருந்தது. ஒருதடவை ‘அன்புப்பரிசு’ நாடகத்தைத் தயாரித்து மேடையேற்ற முற்பட்டபோது அம்பிகாவதியாக நடித்த என்னுடைய தங்கையாருக்கு, திடீரென, கன்னியர்மடத்துக்குச் செல்வதற்கான அழைப்பு வந்துவிட்டது. இதனால் நான் எனது மனைவியை அந்நாடகத்தில் நடிக்கவைத்தே மேடையேற்றினேன், இப்படி பலசந்தர்ப்பங்களில் எனது குடும்பம் பக்கபலமாக இருந்தது. குறிப்பாக, எனது மனைவி பொறுமையும் நிதானமும் கொண்ட ஒருவர். இவ்வாறான ஒருவள் எனக்கு அமைந்தது நான் பெற்ற மிகப்பெரிய கொடை என்றுதான் கூறுவேன். அவர் இல்லையென்றால் நான் இவ்வளவு ஆட்டமும் ஆடி இருக்க முடியாது. அதேபோல் எனது பிள்ளைகளும் நான் எதைச்செய்தாலும் தடை சொல்லமாட்டார்கள். என்னுடைய வளர்ச்சியிலும், புகழிலும் என் மனைவிக்கும், பிள்ளைகளுக்கும் பெரும்பங்குண்டு.
)ேஉங்கள் நாடகங்களுக்கான சமூக அங்கீகாரம் எவ்வாறு இருந்தது.
இது நான் கூறித்தான் உங்களுக்குத் தெரிய வேண்டுமென்றில்லை என்று நினைக்கிறேன். மன்னாரில் என்னுடைய நாடகங்களுக்கு ஒரு தனி வரவேற்பு என்றும் இருந்தது. என்னுடைய கலைச்செயற்பாட்டை அங்கீகரித்துப் பல மேடைகளில் கெளரவித்தார்கள். குறிப்பாக ஒருசிலவற்றைக் குறிப்பிடலாம் 1982 இல் முருங்கன் பாடசாலை அபிவிருத்திச் சபை என்னைக் கெளரவித்தது. 1983 இல் மட்டக்களப்பு இலக்கிய விழாவில் மாவட்டத்தின் சிறந்த கலைஞருக்கான கெளரவ விருது எனக்கு வழங்கப்பட்டது. 1999 இல் கலாசார அமைச்சு “கலாபூஷணம்” விருதை வழங்கியது. 2000 ஆம் ஆண்டு மன்னார் ஆயர் அவர்கள் பொன்னாடை போர்த்தி 'திருக்கலை வேந்தன் விருதை அளித்தார். அதே ஆண்டு, வடக்கு கிழக்கு பண்பாட்டலுவல்கள் அமைச்சு "ஆளுநர் விருது’ வழங்கி கெளரவித்தது. 2003 இல் யாழ்ப்பாணத்தில் திருமறைக்காலமன்றத்தில் பேராசிரியர் மரியசேவியர் அடிகள் பொன்னாடை போர்த்திக்
34 &sjpgర

கெளரவித்தார். இவையெல்லாம் எமது சமூகம் என்னை அங்கிகரித்துள்ளது என்பதற்கான சான்றுகள். நான் உழைக்கத் தொடங்கிய காலத்தில் இருந்து எனக்கு ஒரு வீடோ, காணியோ வாங்கியதில்லை என் உழைப்பைக்கலைக்காகத்தான் செலவழித்தேன். அதன் பயனாகத்தான் கடவுள் இவ்வாறான விருதுகளைப் பெறும் சந்தர்ப்பங்களைத் தந்தார் என நிம்மதி அடைவதுண்டு.
)ேநீங்கள் ஆரம்பகாலத்தில் நாடகம், நாட்டுக்கூத்துறையில் ஈடுபட்டபோது, இளைஞர்கள் காட்டிய ஆர்வத்திற்கும், இன்றைய இளைஞர்களின் ஆர்வத்திற்குமிடையில் எவ்வாறான வேறுபாடுகளைக் காணுகின்றீர்கள்.? நாங்கள் ‘முத்தமிழ்க் கலாமன்றத்தை அமைத்து நாடகங்களை மேடையேற்றியபோது அவற்றிற்கு உயிர் கொடுத்தவர்கள். அன்றைய இளைஞர்கள் குறிப்பாக, எமது உறவினர்கள், இதில் எனது சகோதரர்களாகிய, மாசில்லாமணி, புலேந்திரன், யேசுதாசன், கமலன், இரத்தினம், இவர்களோடு என் மருமக்களும் குறிப்பாக, அந்தோனிப்பிள்ளை, பாலசிங்கம், சத்தியசீலன், மனோகரன், தேவராஜா, அற்புதராஜா என, எனது சொல்லை கேட்டு நடக்கக் கூடிய இளைஞர் குழாம் இருந்தார்கள். ஒழுக்கம், கட்டுப்பாடு போன்றவற்றில் நாம் மிகவும் கண்டிப்புடன் இருந்து செயற்பட்டோம். மிகவும் பொறுப்புணர்வுடன் அக்கால இளைஞர்கள் தொழில்ப்பட்டனர். உதாரணமாக ஒரு விடயத்தை குறிப்பிடலாம். ஒருதடவை, நாம் கொழும்பிலே நாடகமொன்றை மேடையேற்றவேண்டிய, நிலையில் இருந்தபோது, எனது சகோதரனின் மனைவியார் குழந்தைப் பிரசவத்திற்காக, வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார், அப்போது எனது சகோதரன் நாடகம்தான் முக்கியமென்று கொழும்பு வந்து நடித்து விட்டுதிரும்பினார். அவ்வாறான பொறுப்புணர்வு மிக்க இளைஞர்கள் அன்று இருந்தார்கள். ஆனால் இன்று அவ்வாறான இளைஞர்களைக்கான முடியவில்லை. தற்போதய இளைஞர்களை நாடகத்திற்கு கொண்டுவருவதே பெரியவிடயம். தவறுகளை சுட்டிக்காட்டுதல், பேசுதல், நேரத்துக்கு வருமாறு கண்டிப்புடன் நடத்தல் எதுவுமே இன்றைய இளைஞர்களுக்குப் பிடிக்காது. எனவே இன்று நாடகம் செய்வதென்றால் அவர்களோடு இணங்கிச் செயற்படுவதற்கு நாம் எம்மைத் தயார் செய்ய வேண்டிய ஒரு விசித்திரமான நிலை.
)ே இறுதியாக ஒரு கேள்வி, இன்று நாடகத்துறையில் ஈடுபடுகின்ற இளங்கலைஞர்களுக்கு நீங்கள் கூறக்கூடிய ஆலோசனை என்ன?
கூத்தாடுவதும் குண்டி நெளிப்பதும் ஆத்தாதவன் செயல்' என்று ஒரு பழமொழி உண்டு. ஆனால் இன்றைய காலம் அப்படியல்ல. கலை பல ஆச்சரியங்களை யெல்லாம் சாதித்து வருகின்றது. நாடகக்கலை என்பது மனிதனுக்குப் பிரியமான ஒரு சொத்து. அது ஒரு கூட்டு முயற்சி. இளம் சந்ததியினர் இந்தத் துறையில் ஈடுபடும்போது, மொழிப்பற்றும், தேசப்பற்றும், மனிதத்துவம் பற்றிய விழிப்புணர்வும் ஏற்படுகிறது. ஆத்மீக நிறைவு ஏற்படுகிறது. நற்பழக்கங்களைப் பெற்றுக் கொள்ளுகி றார்கள். இதில் ஈடுபடுபவர்கள் நன்மையடைவார்களே தவிர தீமையடையப் போவதில்லை. எனவே இளைஞர்கள், மாணவர்கள், இக்கலையை மானசீகமாக நேசிக்கவேண்டும். அது நல்லதொரு சமுதாயத்தைக்கட்டி எழுப்ப உதவும்.
( 35

Page 20
“ஞானசெளந்தரி” இசைநாடகம்
யாழ் தரிரு மறைக்
விதியிலுள்ள திருமறைக் கலாமன்ற அரங்கில் மாலை 07.8 மணிக்கு மேடையேற்றப்பட்டது. இதனை: தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பார்வையிட்டிருந்தார்கள். - இறுதி நாளன்று இரண்டு காட்சிகள் மேடையேற்றப்பட்டமையும் குறிப்பீடத்தக்கது. இந் நாடகத்துக்கான நெறியாள்கையை அண்ணாவியார்கள் அ. பாலதாஸ் அ. ராஜ்குமார் ஆகியோர் கூட்டாக மேற்கொண்டிருந்தார்கள்.
இவ் இசைநாடகம் 13 ஆண்டுகளுக்கு முன்பாகவும் 1991 ஆம் ஆண்டு ஜூன் 29,30 ஆகிய திகதிகளிலும், ஜூலை 01 ஆம் இதரிகதரியும் திருமறைக் கலா மனி றத் தாலப் மேடை யேற்றப் பட்டு பெரும் வரவேற்பபைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
“மானுடத்தை நேசித்த மகான்’ நாட்டுக்கூத்து
கொழும்புத்துறை புனித சவேரியார் குருத்துவக் கல்லூரியின் தமிழ் மன்றத்தினால் நடத்தப்படும் ‘தமிழ் விழா 15.05.2004 இல் திருமறைக் கலாமன்ற அரங்கில் நடத்தப்பட்ட போது 'மானுடத்தை நேசித்த மகான்' என்னும் மன்னார் பாங்கு நாட்டுக்கூத்து குருத்துவக் கல்லூரி மாணவர்களால் மேடையேற்றப்பட்டது. எல்சல்வடோர் நாட்டின் பேராயராக இருந்து மக்களுக்காக வாழ்ந்து அந்நாட்டு இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்ட ஆயர் ஒளப்கார் ரொமேறோ ஆண்டகையின் வாழ்க்கையை எடுத்துக்காட்டுவதாக இக்கூத்து அமைந்திருந்தது. நாட்டுக்கூத்தினை உருவாக்கியவர் அருள்சகோதரர் பா. பிராயன் ஆவார். இதனை மன்னார் பாங்கிற்கேற்றவாறு அமைத்து நெறிப்படுத்தியவர் திரு செபமாலை (குழந்தை) ஆவார்.
3. (
 
 

அமரர் ஏ.ரி. பொன்னுத்துரை அஞ்சலிபாக ஒரு குறிப்பு
கலாபூஷணம் ஜி. பி. பேர்மினஸ்
எமது மண்ਹi சிறந்த நாடக ஆசிரியராகவும், நடிகராகவம் வாழ்ந்த கலைப்பேரரசு ஏ. ரி பொன்னுத்துரை அவர்கள் கடந்த 10:2003 இல் காலமானார் அவரது மறைவுக்கு அஞ்சவியாக இக்கட்டுரை பிரசுரிக்கப்படுகின்றது.
கலைப்பேரரசு ஏரி போன்னுத்துரை மறைவுக்கு (ெ
உயரிய பண்புகொண்டு வாழ்ந்த மனிதன். தான் வாழும் காலத்தில் தன்னுள் உறைந்துகிடக்கும் கலையைப் பிறருக்கு அள்ளிக்கொடுத்துவிட வேண்டும் எனத் |ே துடியாய்த்துடித்து வாழ்ந்து காட்டிய கலைஞன். இளம் வயதிலிருந்தே நாடகமே தனது உயிர்த்துடிப்பு என வாழ்ந்து வந்த ஓர் நாடகப் பித்தன் என்று கூட அவரைக் கூறலாம். அவர் 'இருபதாம் நூற்றாண்டின் நாடக விற்பன்னன் என்று பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவர்களால் பாராட்டப்பட்டவர். "நாடக நூல்களைப் படிப்பதில் அல்லது நாடகத்தில் நடிப்பதில் உள்ள சுவையும், குதூகலமும், பூரிப்பும் வேறு எதிலும் எனக்குப் ஏற்படுவதில்லை” என்று கூறிய ஏரி.பி அவர்கள் நாடகக்கலையின் மீது எவ்வளவு பற்றுக்கொண்டிருந்தார் என்பது எமது நாடகஉலகில் அனைவரும் அறிந்த விடயம்.
போன்னுத்துரை அவர்கள் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் கல்விகற்ற காலத்தில் அவருக்கு எல்கொத்லாந்து நாட்டு நாடக விற்பன்னர்களுடன் பழகும் வாய்ப்புக் கிட்டியது. இதன்மூலம் ஷேக்ஸ்பியரின் ஆங்கில நாடகங்களில் பரிச்சயம் ஏற்பட அதன்மூலம் தன்னை வளர்த்துக்கொண்டார். குவேனி, ராகிமைடியா போன்ற நாடகங்களை பல்வேறு நாட்டார் முன்பாக நிகழ்த்திப் புகழ்பெற்றார். இவர் எழுதிய வானொலி நாடகமாகிய வருஷம் பிறந்த முன்னம் முன்னம் என்ற நாடகம், பிரபல வானொலி நாடகக் கலைஞரான "சானா அவர்களால் பாராட்டப்பட்டது.
யாழ் இலக்கிய வட்டத்தில் ஆரம்ப காலம் முதல் பல பதவிகளில் இருந்து இலக்கியப்பணியாற்றி வந்தார். குரும்பசிட்டி சன்மார்க்க சபையின் வளர்ச்சிக்கு பல வழிகளிலும் தனது முழுப்பங்களிப்பையும் ஆற்றிவந்தார். அவர் எழுதிய ஓரங்க நாடகமாகிய நாடகம் இலங்கைக் கலைக்கழக தமிழ் நாடகக்குழு நடாத்திய நாடக எழுத்துப்போட்டியில் 1966இல் இரண்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்டமையும் இங்கு நினைவுகூரத்தக்கது.
ஆற்றுTழ் .דו

Page 21
பேராசிரியர் சு. வித்தியானந்தனோடு பொன்னுத்துரை அவர்கள் கோண்டிருந்த நட்பின் பிரதிபலிப்பாக ‘அரங்கு கண்ட துணைவேந்தர்' என்ற நூலை 1984இல் எழுதி வெளியிட்டு அவரை மகிமைப்படுத்தினார்.
1950இல் இவர் பரமேஸ்வராக் கல்லூரி மாணவனாக இருந்த காலத்தில் பிரான்ஸ் நாட்டு மோலியரின் "லோபி என்ற நாடகத்தில் சிறப்பாக நடித்தமைக்காகப் பாராட்டப்பட்டார். இளைய தலைமுறையினர்க்கு பல வழிகளிலும் கலைத்துறையில் ஊக்கமளித்து வந்தார். அதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்தது அவர் உருவாக்கிய தனிநடிப்புப் போட்டி, அதற்குப் பரிசும் வழங்கி வந்தார்.
தாளக்காவடி என்ற எமது பாரம்பரிய கலைவடிவம் இவரால் பலகாலம் நிலைத்து நின்றது என்றே கூறலாம். அவர் அரங்கின் மீது கொண்டிருந்த பற்றுதலால் தன்னுள் உறைந்து கிடந்த நாடக எண்ணங்கள், சிந்தனைகளை பலரது தரிசனத்திற்கு கொடுக்க வேண்டும் என்பதற்காக பல நாடக நூல்களையும் எழுதி வெளியிட்டிருந்தார். அவைகளாவன:
1. நாடகம் 2. கூப்பிய கரங்கள்
3. பக்தி வெள்ளம் 4. பாடசாலை நாடகம் 5. கலையில் கால் நூற்றாண்டு 6. அரங்கு கனன்ட துணைவேந்தர் 7. நிஜங்களின் தரிசனம் 8. தாளக்காவடி
9. LDL lis 10. அரங்கக் கலைஞர் ஐவர், போன்றன.
இத்தகைய ஓர் கலைஞனை நான் சந்தித்தது 1978 இல் ஆரம்பமான நாடக அரங்கக் கல்லூரியில் தான். அங்கு இடம்பெற்ற அரங்கப் பயிற்சியில் யாழ்ப்பாணத்தின் பல பாகங்களில் இருந்தும் பலர் பங்கு கொண்டனர். பேரும்பாலானவர்கள் இளையோராகவே இருந்தனர். ஏ.ரி.பி மட்டும் சற்று வயது கூடியவராக இருந்தார். இவர் பிரசன்னமாக இருந்தபோது காதில் விழுந்தது "இந்த வயதில் உந்த மனுசனுக்கேன் உந்த வேலை’ என்றவார்த்தை பயிற்சி ஆரம்பமான போதுதான் தெரிந்தது, அந்த வயதிலும் தளர்வில்லாது பயிற்சியில் அவர் பங்குகொண்டமை. அது அவரது மன உறுதியையும், உடல் பலத்தையும் காட்டியது.
பயிற்சியில் ஈடுபட்ட அனைவரோடும் ஈடுகோடுத்து உடற்பயிற்சி, மூச்சுப்பயிற்சி, குரல் பயிற்சி முதலியவற்றில் அவர் சிறப்பாக பங்கு கொண்டது பலரையும் வியக்கவைத்தது. ஒரு வருடம் நடைபெற்ற பயிற்சியினூடாக (ஒவ்வொரு சனி ஞாயிறு முழுநாள் பயிற்சி) மகாகவியின் "கோடை" யில் "காசி' என்ற சலவைத் தோழிலாளியின் வேடத்தை ஏற்று மிகவும் அற்புதமாக நடித்ததர்.
29-05-1982 இல் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் அரங்கேற்றப்பட்ட "கோடை நாடகத்தின் விமர்சனம் அப்போது வெளிவந்த "காலைக்கதிர் என்ற பத்திரிகையில் திரு ரி. பகவதி என்பவரால் எழுதப்பட்டு வெளிவந்தது. அதில் அவர் பொன்னுத்துரை அவர்கள் பற்றிக் குறிப்பிடுகையில் "கட்டாடி காசியாக கலைப்பேரரசு ஏ.ரி பொன்னுத்துரை தோன்றி நடித்துள்ளார். நகைச்சுவைக் காட்சி ஒன்றில் மட்டும் தோன்றி நடித்தாலும் அவரது நடிப்பு பிரமாதம்” என்று குறிப்பிட்டிருந்தார். இதுபோலத்தான் திரு. தாசீசியளயின் "பொறுத்தது போதும் நாடகத்திலும் கிழவன் பாத்திரத்தை சிறப்பாகச் செய்திருந்தார். அதில் சாதாரண கரைவலைத்
38 ஆற்றுதை

தொழிலாளியாக கிழவன் பாத்திரமேற்று மிகச் சிறப்பாக நடித்திருந்தார். அந்தக் காட்சி இப்போதும் மனதில் நிழலாடுகிறது. வெறும் மேலுடன் நாரியில் உரைப்பையாலான உடுப்பு. அதற்கு மேலால் கரைைெல இழுக்கும் பழங்கயிறு இவைதான் அவரது தோற்றம், அதில், சம்மாட்டியின் கோபத்தால் விபரீதம் நடக்கும் என கிழவன் தன் இளைஞர்களுக்கு, “தம்பி ஒண்டு சொல்லட்டோடா.” என்று தனக்கே உரித்தான தனித்துவத்துடன் பாடியதும், தோல்வியினால் ஏற்பட்ட ஆத்திரத்தில் சம்மாட்டி சுந்தரத்தின் ஒலைக் கொட்டிலுக்கு தீயிடுகின்றார். இதை அறிந்த கிழவன் கரவலை இழுத்துக் கொண்டிருக்கும் இளைஞர்களிடம் ஓடோடி வந்து உரத்த குரவில் “தம்பி எல்லாமே போச்சுதடா” என்று கலக்கத்தோடு கூறியதும், இன்றும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. அந்தளவுக்கு உணர்ச்சிகரமாக அவர் அப்பாத்திரத்தை மக்கள் முன் நிறுத்தியிருந்தார்.
"பொறுத்தது போதும் நாடகம் 07.02.1980 அன்று கொழும்பு ஜோன் டி சில்வா அரங்கில் இடம்பெற்ற தேசிய நாடக விழாவில் பல நாடகங்களுடன் போட்டியிட்டு ஜனாதிபதியின் நான்கு விருதுகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இதுபற்றி அவர் கூறுகையில், "மரபுக் கலைஞர்கள் புதியதை ஒதுக்குவதோ, புதுமைக் கலைஞர்கள் மரபை ஒதுக்குவதோ கூடாது. பார்ப்போருக்கு பயன் தரவல்ல நாடகத்தை வழங்குவதே பிரதானமாகும். எனவே நாம் அறிந்தவற்றைப் பிறருக்குப் பயிற்றுவிக்கும் அதே வேனை அறியாதவற்றைப் பிறரிடமிருந்து அறிந்து கொள்ளவேண்டும். அரங்கக் கல்லூரியில் தாசீசியஸ், குழந்தை சண்முகவிங்கம் போன்றோரின் நெறியாள்கையில் பல மோடி நாடகங்களிலும் நடித்தேன். பல விருதுகளைப் பெற்ற தாசீசியசின் "பொறுத்தது போதும் நாடகத்தில் சிறந்த குணச்சித்திர நடிகருக்கான விருதையும் பெற்றேன்” என்றார்.
இருபத்தியேட்டு மேடை கண்ட போறுத்தது போதும் இருபத்தொன்பதாவது மேடை அப்போதைய யாழ் அரச அதிபரின் வேண்டுகோளின் பேரில் நுவரேலியாவில் நடந்த 'வசந்த விழாவில் அரங்கேறியபோது கடும் குளிரையும் போருட்படுத்தாது எல்லோரும் வெறும் மேலுடன் இடுப்பில் கட்டிய உரைப்பைத் துன்டோடு நடிக்கத் தொடங்கினோம். அவ்வேளை குளிரில் எல்லோரும் நடுங்கிட்போனோம். ஆண்ால் பொன்னுத்துரை மாளப்ரரோ சாதாரணமாகவே நின்றார், அத்தகைய
ஆற்றுவித் 39

Page 22
உடல் வலிமையும், திடகாத்திரமும், உறுதியும் கொண்டவராக அவர் இருந்தார். பொன்னுத்துரை அவர்களிடம் நான் கண்ட மற்றொரு பண்பு எவர் எந்தக் கருத்தரங்குக்கோ, பயிற்சிக்கோ, நூல் வெளியீட்டுகோ, பாராட்டு விழாவுக்கோ, நாடகப் போட்டிகளுக்குக்கோ நடுவராகவோ, தலைமை வகிக்கவோ எதற்கு அழைத்தாலும் மறுக்காமல் குறிக்கப்பட்ட நேரத்திற்கு முன் குறித்த இடத்திற்கு சமூகம் கொடுக்கும் உயர்ந்த பண்பு கொண்டவர். இறுதிக் காலத்தில் நடமாட முடியாத நிலையிலும் மூன்று சக்கர வாகனத்தில் அழைப்பு விடுத்த இடம் செல்வார்.
அவர் தன் வாழ்நாளில் சிறந்த மாணவனாக, சிறந்த ஆசிரியனாக, சிறந்த சமூகப் பணியாளனாக, நல்லதோர் குடும்பத் தலைவனாக, நல்ல கலைஞனாக எல்லாவற்றையும் விட ஓர் நல்ல மனிதனாக வாழ்ந்தார் என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள்.
கலைப்பேரரசின் பவள விழாவின் போது திருமதி கோகிலா மகேந்திரன் குறிப்பிடுகையில் “பவள விழா அகவையில் இருக்கும் ஏ.ரி.பி சற்று சுகயினமாக இருக்கிறார். என்றாலும் வயதுகளில் ஒரமல்ல. வாழ்க்கையின் சாரமிது ஆரோக்கியமான முதுமைப் பொழுதெல்லாம் பூச்சொரியும் வசந்தமாகிறது” என்றார். தன்னை ஒரு நாடகச் சந்நதக்காரன் என அழைக்கும் ஏ.ரி.பி. தனது 75 வயதினை அடைந்தவேளை உடல் முதுமை அடைந்த போதும் உள்ளத்தின் இளமையுடனும் தூய்மையுடனும் உடலையும் பாதுகாத்த ஓர் அற்புத மனிதன். அவரின் மறைவால் ஏற்பட்ட வெற்றிடம் வெறுமையாக விடப்படாது நிரப்பப்பட வேண்டும் என்பதுதான் இப்போது எம்முன் உள்ள முக்கிய பணியாகும் )ே
ாஅஞ்சலிக்கின் றோம் ஆசீர்வாதம் தேவசகாயம்பிள்ளை
முத்தாரக் கவிஞர் என அழைக்கப்படும் பாஷையூரைச் சேர்ந்த திரு. ஆசீர்வாதம் தேவசகாயம்பிள்ளை (செகராசசிங்கம்) அவர்கள் 25.04.2004 இல் காலமானார் கலைத்துறையின் பல பக்கங்களிலும் தனது கால்களை பதித்திருந்த இவர், பத்துக்கும் மேற்பட்ட நாட்டுக்கூத்துக்கள், இசைநாடகங்களையும் எழுதியுள்ளார். சில நூல்களாகவும் வெளிவந்துள்ளன. கலைவாழ்வில் பல பாராட்டுக்களையும், கெளரவங்களையும் இவர் பெற்றிருந்ததுடன் ‘கலாபூஷணம்' விருதையும் இவ்வாண்டு பெற்றிருந்தார். முன்பு பாஷையூரில் செயற்பட்ட ‘ஜெயசிறி நாடகமன்ற ஸ்தாபகராகவும் இவர் விளங்கினார். வி என் செல்வராசா
பிரபல இசைநாடகக் கலைஞரான வி. என். செல்வராசா அவர்கள் கடந்த 07.11.2004 இல் காலமானார். தனது சிறுவயதில் இருந்தே நாடகக் கலையில் ஈடுபடத் தொடங்கிய இவர், பல்வேறு பட்ட இசை நாடகங்களில் முக்கிய பாத்திரமேற்று நடித்திருந்ததுடன், பல புதிய கலைஞர்கள் நாடகத் துறையில் ஈடுபடவும் காரணமாக இருந்தவர். இசை நடிகமணி, இசைநாடகக்
40 (

கலாஜோதி, கலாபூஷணம் போன்ற பட்டங்களையும் கலை வாழ்வில் இவர் பெற்றிருந்தார். சண்டிலிப்பாயைச் சேர்ந்த இவர் நடிகமணி வி.பி. வைரமுத்துவுடன் இணைந்தும் பல இசைநாடகங்களில் நடித்திருந்தார்.
தமிழறிஞர் க. சொக்கலிங்கம் (சொக்கன்)
ஈழத்து கலை இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்டவரும், தமிழறிஞருமான க. சொக்கலிங்கம் (சொக்கன்) அவர்கள் 10.12.2004 இல் காலமானார். சொக்கன் அவர்கள் இலக்கியத்தில் மட்டுமல்லாமல் நாடக உலகிலும் தீவிரமாக ஈடுபட்டவர். தனது முதுமாணிப் பட்டப்படிப்பிற்கு, ஈழத்துத் தமிழ் நாடக இலக்கிய வளர்ச்சியையே ஆய்வுப்பொருளாக எடுத்து ஆய்வுசெய்திருந்தார். பல நாடக நூல்களையும் இவர் எழுதியுளளார்.
மறைந்த இம் மூன்று கலைஞர்களுக்கும் “ஆற்றுகை' தனது அஞ்சலிகளைத் தெரிவித்துக்கொள்கின்றது.
நாடக விழாக்களும், போட்டிகளும்
யாழ் மாவட்டத்தில் இவ்வாண்டிலும் பல அமைப்புக்களால் நாடகப் போட்டிகளும், நாடக விழாக்களும் நடத்தப்பட்டிருந்தன அவற்றின் விபரம் வருமாறு. யாழ் மனித முன்னேற்ற நடுநிலையமான "கியூடெக் அமைப்பின் ஏற்பாட்டில் சிறுவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை மையப்படுத்தி கிராமங்களுக்கிடையிலான நாடகப் போட்டி ஜூலை மாதம் 10 ஆம் திகதி யாழ் மறைக்கல்வி நடுநிலைய மண்டபத்தில் இடம்பெற்றது. இப்போட்டிகளில் 12 கிராமங்களிலிருந்து வந்த நாடகங்கள் கலந்து கொண்டன. இதன்போது முதல் மூன்று இடங்களை கரைகாணா ஒடங்கள், ‘மீட்சியே கிடைக்காதா', 'மெளனத்தின் அலறல்' ஆகிய நாடகங்கள் பெற்றுக்கொண்டன.
மானிப்பாய் இந்துக் கல்லூரியினால் வருடந்தோறும் நடத்தப்பட்டு வரும் நாடக விழா இவ்வாண்டும் ஜூலை 1ஆம் 2 ஆம் திகதிகளில் கல்லூரி மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் கல்லூரியில் உள்ள நான்கு இல்லங்களும் நாடகங்களை தயாரித்து வழங்கியிருந்தன.
கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் முத்தமிழ் மன்றத்தால் ஜூலை 8,9 ஆம் திகதிகளில் நடத்தப்பட்ட முத்தமிழ் விழாவின்போது நாடகம் சிறப்பான இடத்தைப் பெற்றிருந்தது. இதன் போது ‘அறுவடை, ‘நினைவுகளின் நிஜங்கள், ‘மானுடச் சிக்கல்', 'தடைகளைத் தாண்டி’, ‘மயான காண்டம் ஆகிய நாடகங்கள் கலாசாலை மாணவர்களால் மேடையேற்றப்பட்டது.
இலங்கை செஞ்சிலுவை சங்க யாழ்ப்பாணக் கிளையினரால் ஒக்ரோபர் மாதம் 8 ஆம் திகதி யாழ். மத்திய கல்லூரி மண்டபத்தில் பாடசாலைகளுக் கிடையிலான நாடகபட்போட்டியொன்று நடத்தப்பட்டது. இதேபோல் இன்னும் சில அமைப்புகளும் சிறியளவிலான நாடகப் போட்டிகளை நடத்தியிருந்தன.
&jpgర) 41

Page 23
அறுபதுகளின் இறுதியில் இருந்து ஈழத்தின் நவீன நாடக வளர்ச்சியின் வேர்களுக்குள் நின்று பணியாற்றிய மிகச்சிலரில் ஆசிரியரும், உளவியலாளருமான திரு பீ.ஏ.சி. ஆனந்தராஜாவும் ஒருவராவார். இவர் வெவ்வேறு காலகட்டங்களில் எழுதி நெறிப்படுத்திய 16 நாடகங்களின் தொகுதியாக, "இருட்டினில் குருட்டாட்டம் வெளிவந்துள்ளது. ஏ.4 வடிவநூலாக, 222 பக்கங்களுடன் வெளிவந்திருக்கும் இந்நூல் ஈழத்தின் நாடகவளத்திற்கு அணிசேர்க்கும் மிக முக்கியமான வெளியீடாக அமைந்துள்ளது. இந்நாடகத் தொகுதியில் உள்ள நாடகங்கள் 70, 80களின், அரங்கினை, குறிப்பாக நவீன அரங்கினை, அந்த அரங்கின் பன்முகத்தன்மையை வெளிப்படுத்தி நிற்கும் குறிகாட்டியாக அமைந்துள்ளன. இவை எழுபதுகளில் தோற்றம் பெற்ற தொடர்புக் காத்திரம் மிக்கதான நவீன அரங்கின் தளத்தில் தன்னை செயல்முனைப்புடன் இனைத்துக்கொண்ட ஆசிரியர் பி.ஏ.சி ஆனந்தராஜா அவர்களின் செயல் வீச்சை, சிந்தனை ஓட்டத்தை வெளிப்படுத்தி நிற்பதுடன், தாசீசியஸ் போன்றோருடன் இணைந்து
அரங்கநேசன்
செயற்பட்ட அனுபவ நீட்சிகளையும் அவரது ஆசிரியத்துவ, உளவியல்சார் துறைகளின் களங்களையும் வெளிப்படுத்தி நிற்கின்றன.
இத்தொகுதியில் உள்ள நாடகங்களை சிறுவர் நாடகங்கள், மொழிபெயர்ப்பு நாடகங்கள். நவீன நாடகங்கள், சமய நாடகங்கள் என வகைப்படுத்தலாம். எழுபது, எண்பதுகளில் கானப்பட்ட முக்கிய இயல்புகளிலோன்றாக, மொழிபெயர்ப்பு நாடகங்கள் மேடையேற்றும் இயல்பு காணப்பட்டது. இத்தொகுதியில் பி.ஏ.சி ஆனந்தராஜா அவர்கள் மோழிபெயர்த்த, பாதல்சர்க்கார்
எழுதிய “ஊர்வலங்கள் (Profession), BIT (SLIII (Dust of the road), தியாகராச அரசநாயகத்தின் "asTGlailifoli (The Intruder), வில்லியம் ஷேக்ஸ்பியரின்
க ஆநரடி
நூல் 'இருட்டினில் குருட்டாட்டமி' 。 நாடகத்தொகுதி எழுதியவர்: பிஏசி ஆனந்தராஜா ዕiኔmgjúú] ::- ጋቖùùሻ] வெளியிடு:கலை இலக்கிய நண்பர்கள்
வட்டத், வக்ஷ்ரியா,
|호
gరh
 
 

அவலநாடகங்களான "ஒத்தேல்லோ" (Othello), " GrufsliðL’’’ (Halimlet), "யூலியஸ்சீசர் (Julius Cesar) போன்ற முக்கிய காட்சிகளை உள்ளடக்கிய மொழிபெயர்ப்பு நாடகங்கள் கானப்படுகின்றன. இம்மொழி பெயர்ப்புக்களில் மொழிக்கையாள்கையும், கதைப்பின்னலாக்கமும் ஆசிரியருக்குரிய தனித்துவமான ஆளுமையுடன் ஆக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
நவீன உத்திகள், குறியீடுகள், உரைஞர்கள், பாடுநர்களுடாக நாடகங்களை நகர்த்திச் செல்லுதல், எரியும் சமூகப் பிரச்சனைகளைப் பாடு போருளாகக் கொள்ளுதல் போன்றதான எழுபதுகளின் நவீன நாடகமரபை உள்வாங்கியும் ஆசிரியர் நாடகங்களைப் படைத்திருக்கின்றார். நா.கந்தரலிங்கம், தாசீசியஸ், சுஹையர் ஹமீட் போன்ற நெறியாளர்களே இந்த அரங்கின் தோற்றுவிப்பாளர்களாக இருந்துள்ளனர். இவர்களுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்தவரான இந்நூலாசிரியரின் இருட்டினில் குருட்டாட்டம்', நாடகம் உட்பட பாதகாணிக்கை', 'யானையும் சிட்டுக்குருவியும், "புரட்சிக்குள் ஒரு பாதை போன்ற பல நாடகங்களில் அந்த நவீன நாடகங்களின் இயல்பைக் கானக்கூடியதாகவுள்ளது. அதேவேளை சிறுவருக்கான நாடகங்களை, ஆக்கும் முயற்சியும் எனண்பதுகளில்தான் கால்கோள் கொள்ளுகின்றது. அந்த வகைக்குள்
இவர் எழுதியதான "யானையும் சிட்டுக்குருவியும்'. "பாப்பா யானைவிரனல்லோ", "கற்பனைச்சுவர்' நாடகங்கள் திகழுகின்றன. இவற்றைவிட "நாடோடி", "பாதகானிக்கை”. "புரட்சிக்குள் ஒரு பாதை' போன்ற நாடகங்கள் கிறிஸ்தவ சமயப்பின்னணியில் எழுதப்பட்டவை. கிறிஸ்தவ சமயப் பின்னணிகளை அவை கொண்டிருந்தாலும், அக்கால சமூக விழிப்புணர்வுகளுக்கேற்பவே கதைத்தெரிவும், மையப்பொருளும் ஆக்கப்பட்டுள்ளன. உதாரணமாக "புரட்சிக்குள் ஒருபாதை' என்ற நாடகம் ஒருவகையில் வரலாற்று நாடகமென்றுதான் கூறவேண்டும் அமலமரித்தியாகிகள் சபையைத் தோற்றுவித்த "யூஜின்டி மசனெற் என்ற துறவியின் வரலாற்றை அது கூறினாலும் பிரான்சியப் புரட்சியும். யுத்தத்திள் விளைவுகளும் சமய வாழ்வியல் நினைவுகளுடன் சமூகத்தை ஒப்பிடச்செய்த படைப்பாக அமைந்தது.
எனவே இந்தவகையில், 70.80கள் காலத்தின் அரங்க வெளிப்பாடுகளுக்கு உதாரணங்களாகக் கொள்ளத்தக்க நாடகங்களாக இத்தொகுதியில் உள்ள நாடகங்கள் காணப்படுகின்றன. அதுமட்டுமன்றி, ஒரு சமூக நோக்குள்ள, அநீதிகளை கண்டு கொதிக்கின்ற, சமூக இழிநிலைகளை எண்ணிக்கலங்குகின்ற, சிறந்த ஆத்மீகமுள்ள ஒரு நாடக ஆசிரியரின் படைப்புக்கள் என்று துணிந்து கூறத்தக்க வகையிலும் இத்தொகுதியிலுள்ள பெரும்பான்மை
ஆற்றதை
43

Page 24
நாடகங்கள் காணப்படுகின்றன. அந்தக்காரணத்தினால் காலத்தின் கண்ணாடிகளாகக் கோள்ளத்தக்க வகையில் இவை துலங்குகின்றன. இத்தொகுதியில் உள்ள "இருட்டினில் குருட்டாட்டம் இவை அனைத்துக்கும் சிகரம் வைத்தது போல் அமைந்துள்ளது. இனக்கலவரத்தின் கொடுரம், வெளிக்காட்டப்பட்ட அதேவேளை, இக்கொடுரத்துக்குள்ளும் தமிறி நிற்கின்ற சாதித்துவ வேறியை ஆசிரியர் உணர்ச்சிபொங்க வெளிப்படுத்தியுள்ளார். இந்நாடகத்திலுள்ள, “கீழ்சாதி கீழ்ச்ச எச்சிலையே வச்சிருந்தனான். விசர்ப்பெட்டை. இவ'ங்கள் காவாதிகTRTப் எங்களுக்கு குடிமை வேலை செய்தவர்கள் பத்தர தவிர்னி நின்றுகொண்டுதான் கதைச்சுப் பழகினaங்கள் நீங்களைத் தோட்டு உரண்பாடுற அளவுக்கு வந்திட்டாங்கள்." என்ற வரிகளில், தமிழ்ச் சமூகத்திற்குள் உள்ளேரிந்து கொண்டிருக்கும் சாதித் துவேஷத்தை மிகச்சிறப்பாக ஆற்றாமையோடு ஆசிரியர் படம்பிடித்துக் காட்டுகின்றார். "பாப்பா விரன் நானஸ்லோ" என்ற சிறுவர் நாடகம் ஓர் உளவியல் நாடகமாகும். இது தொண்ணுறுகளில் எழுதப்பட்டுள்ளது. ஆசிரியத் தொழிலில் இருந்து ஓய்வு பெற்றபின், உளவியலாளனாக, தன்னை இனைத்துக் கொண்டு செயற்படும் பி.ஏ.சி ஆனந்தராஜா அவர்களின் உளவள குணமாக்கல் விருப்பின் வெளிப்பாடு அது. நான்சிபரன் என்ற உளவியலாளர் யுத்த நேருக்கீட்டின் பிணி மருந்தாக
கையாண்ட 'குட்டியானைக் கதையின் நாடகவடிவமாக இது காணப்படுகின்றது.
இவ்வாறு இத்தொகுதியிலுள்ள நாடகங்கள் ஒவ்வொன்றும் வேறுபட்ட பரிணாமங்களைக் கொண்டு விளங்குகின்றன. ஆசிரியரின் ஆளுமையை, அனுபவவெளிப்பாட்டினை, கடந்தகாலத்தில் அரங்குடன் அவர் கொண்டிருந்த தொடர்பினை ஊகித்தறியக்கூடிய, சுட்டியாக இன்நூல் இருக்கின்றது என்பதனை மறுக்கமுடியாது.
ஆனால் இதன் அச்சுருவாக்க முறைமை நிறைவைத் தரவில்லை. இந்நூலில் 16 நாடகங்கள் உள்ளன. இவற்றை ஒரே தொகுதியாக்காது. பிரித்து மூன்று அல்லது இரண்டு பகுதிகளாக வெளியிட்டிருக்கமுடியும். இன்று நூல்கள் கையடக்க நிலைக்கு வருகின்ற சூழலில், இதன் கனதி பேரியது. அதேபோல் இந்நூலின் அளவும் பொதுவான நூல்பேணும் I
8" முறையை சாராது A4 அளவு வடிவத்தில் வெளிவந்திருக்கின்றது. இந்நூலை பேணுதல், காவிச்செல்லுதல், படித்தல் போன்ற அனைத்து நடைமுறைகளுக்கும் இதன் அளவும். கனதியும் பொருத்தமற்று இருக்கின்றது. அதேபோல் ஒரு நூலை வாசிக்க விரும்பும் வாசகனை கவரும் இயல்புடன் அதன் வடிவமைப்பு அமைந்திருத்தல் வேண்டும். இதில் அந்த விடயமும் கவனத்தில் கொள்ளப்படவில்லை. அதேபோல் நூலைப் பார்த்தவுடன் அதன்
44
ஆற்றுந்ே

கனதியை விளங்ககூடிய வகையில் பொத்தத்தில் கனதிமிக்க
அதன் அட்டை வடிவமைப்புச் எழுத்தாக்கம், கவர்ச்சிஅற்ற
செய்யப்படவேண்டும். இதில் முறையில்
அரங்கம்' சஞ்சிகையில் எப்போதோ அச்சுருப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால்
வெளிவந்த ஓவியம் ரமணியின் நிராகரிக்கமுடியாத ஈழத்தின்
ஒவியத்தை அதன் அழகியலை அரங்கப்புலத்துக்கு வந்திருக்கின்ற
சரியாக வெளிப்படுத்தாது பெறுமதிமிக்க நூல். ே பதித்திருப்பதும் பொருத்தமற்று இருக்கின்றது.
அரங்கியலில் புதிய நூல் வரவுகள்
இ) மூன்று நாடகங்கள் (தென் பாங்குக் கூத்து) - கவிஞர் பா. * அமிர்தநாயகம், வெளியீடு பா. அமிர்தநாயகம், 15, இராசாவின் இதோட்டம் ஒழுங்கை, யாழ்ப்பாணம். விலை . 300.00
முல்லைக்கவி' என்ற புனை பெயரில் தண்கு அறியப்பட்டவரும், நாட்டுகின்த்துக் கரிைஞரூர், படைப்பாளிான இந்நான் ஆசிரியரின், பனங்காமத்து அரசன். கவிஞன் கண்ட தீவு, இது ஞானசெளந்தரி ஆகிய மூன்று நாட்டுக்கத்துக்கள் இந்நூலில்
இடம்பெற்றுள்ளன.
நெருந்கரத்தும் காணல் நாடகத்தொகுதி). தே. தேவானந்த் வெளியீடு 1 அகதிகள் புனர்வாழ்வு நிறுவனம், பா6, 4 ம் குறுக்குத்தெரு, uITji Irreali. Síabsu - 100.00 மிதிவெடி, வெடிப் பொருட்கள் தொடர்பாக பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக தயாரிக்கப்பட்டு, யாழ் குடாநாட்டினர் பகிர் வேறு பகுதிகரிலும் தொடர்ச்சியாக மேடையேற்றப்பட்ட ஆசிரியரின் நெஞ்சுறுத்தும் கானல் முடக்கம் ஆசிய இரு நாடகங்களும் அவற்றினி அடைபுகளுர், அனுபவங்களும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இந்தாவிர்து இண்கிருடர் கிடக்கு கிழக்கு மாகான பண்பாட்டலுவிழிப்கள் அரைச்சின் சிறந்த நூலிர்கான பரிசு கிடைக்கப்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
வானொலி நாடகம் எழுதுவது எப்படி? (கட்டுரைத் தொகுதி) கலாபூஷணம் அராலியூர் ந. சுந்தரம்பிள்ளை, வெளியீடு கடையிற்சுவாமி விதி, நீராவியடி, யாழ்ப்பாணம். விலை . 18000 வானொலி நாடகத்தில் நண்து பரீட்சயமான நூலாசிரியரின் பத்தானது நாடக நாவிாக ைேளிவந்துள்ள இந்தாலில் இலங்கை வானொலிக்காக அவரால் விழுதப்பட்டு ஓசிபிபரப்பப்பட்ட முதிர்து நாடகங்களும், கிட்டுரைகள் பலர்ை இடம்பெற்றுள்ளன. தனது

Page 25
படைப்பு இலக்கியச் சேவையின் பொண்ணிழா பிராக ஆசிரியர் இதனை வெளியிட்டுள்ளார். நவாலியூரான் (பவளவிழா மலர்) தொகுப்பு: க. கமலசேகரம், வெளியீடு. வாழும் கலைஞர்களைக் கெளரவிக்கும் அமைப்பு, மத்திய கல்லூரி, யாழ்ப்பாணம், : (7.2.2 இனம் தனது பrள விழாகிைக் கொண்டார பிரபல நாடகக் கலைஞர் கலாபூஷணம் நா. செல்வத்துரை தவாளியூரான்) இ அவர்களின் பவள விழா :ராக இந்நாள் ைெளிந்துள்ளது. இந்து பிள் நவாலிபூராண் குறித்த அனுபவிப் பகிர்வுகளும், பிர3ாற்றுக் குறிப்புகளும் அடங்கினர்ான்.
வீரத் தளபதி (தென்மோடிக்கூடத்து கலைக்கவி நீ எனங்தாக்கி வெளியீடு நாவாயூர் ஒன்றியம், நாகனாந்துறை, யாழ்ப்பாணம். விலை - குறிப்பிடப்படவில்லை பண்வேறு நாட்டுக் கத்துக்களையும். நாடகங்களையும் எழுதி மேடையேற்றிய பாழி தராந்துறையைச் சேர்ந்த அமரர் கரக்கrநீ எனர்தாக்கி அர்ைகளின் நூலுருவிப் வெளிவந்துள் முதலானது நாட்டுக்கத்தாக இது அமைகின்றது. கத்தோலிகர்களின் புனித செயனப்திபாரின் வரலாற்றைச் சித்தரிக்கும் தாட்டுக்கித்து " இது என்பது குறிப்பிடத்தக்கது. ஆசிரியரின் மறைவின் 20 ஆவது
ஆண்டு நினைவாக இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது.
பண்டாரவன்னியன் - குருவிச்சி நாச்சியார் (வரலாற்று நாடகம்) . அருனா செல்லத்துரை. வெளியீடு - அருணா வெளியீட்டகம், ஏ 15' மனிங்ரவுண் வீடமைப்புக்தொகுதி Eங்கள வீதி கோழும்பு 08, விண்ட்
'DILI-IIII | பிரபல வானொபிேக் கலைஞரும். ஈழத்தாளருாேகிய அருணா செல்:த்துரை ஆர்கள் எண்ணிப்பிரதேசத்திப் நிலவுகின்ர செவிவழி பாரம்பரியக் கதையாகிய குருவிச்சி நாச்சியாருடைய கதையை நாடக நூலாக்கம் செய்துள்ளார். வன்னிப் பாரம்பரிய வரலாற்று நாடகமாக இது வெளிவந்துள்ளது. இந்நூலுக்கும் இன்வருடம் வடக்கு கீழத்து மாகாண பண்பாட்டலுவல்கள் அமைச்சின் சிறந்த தாலுக்கான பரிசு கிடைக்கப்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
ஈழத்துத் தமிழ் நாடக அரங்கு (ஆய்வு துல் பேராசிரியர் சி. மெளனகுரு, வெளியீடு குமரன் புத்தக இல்லம், 201, டாம் வீதி, htt:Itւքtiւ - 12, 5ն:735 - 151.10
ஈழத்து தமிழ் நாடக அரங்கின் பிரண்டார்ரை எடுத்துக் கீதம் இந்நூலப் பேராசிரியராகப் : இப் வேளியிடப்பட்டது. தற்போது ஆதன் இரண்டாம் திப்பு வெளிவந்துள்ளது. இன் இரண்டாம் பதிப்பில் ஈழத்தின் சமகா நாடகச் சேப்நெறிகள் என்ற பகுதி புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.
s ஆற்றுதை
 
 
 
 
 
 
 
 
 
 
 

பகுந்சவர்ண் நரியாள் (சிறுவர் அரங்கிற்கான நாடகம்) . குழந்தை ம. சண்முகலிங்கம், வெளியீடு செயல் திறர் அரங்க இயக்கம் 'அருளாகம் ஆடியபாதம் வீதி திருநெல்வேலி, யாழ்ப்பாணம், விலை
- EO ' குழந்தை ம. சண்முகவிங்கர் ஆவர்களால் எழுதப்பட்டு.
தெரியாள்கை செய்யப்பட்டு செயல்திரன் இயக்கத்தின் தயாரிப்பீஸ் ஆண்கீகாரத்திப் பWழ் Tவிட்டத்தின் ஆரம்பப் பாடசாலைகளிஃப் பரவலாக மேடையேற்றப்பட்ட சிறுவர்களுக்காக வளர்ந்தோர் நீதிப்பதற்காக எழுதப்பட்ட சிறுவர் ஆரங்கிர்கான நாடகப் இதுTேது.
மெனனம், பதிப்பாசிரியர் . திரு. வெ. தனராஜா, வெளியீடு பேராசிரியர் சி. மெளனகுரு மணிவிழாச் சபை, மட்டக்களப்பு பேராசிரியர் சி மெளனகுரு அவர்களின் மணிவிழா சிறப்பு மலராக வெளிவந்துள்ள இந்தால் பி பகுதிகளைக் கொண்டமைந்துள்ளது. முதவி பகுதி பேராசிரியர் பற்றி அறிமுகம் இரண்டாவது பகுதி பேராசிரியர் பற்றிய பிறர் கருத்துக்கள். மூன்றாவது பகுதி பேராசிரியரது புலமைசார் ஆய்வு நான்காவது பகுதி அவரது துறைசார் ஆயிக் கட்டுரைகள் ஐந்தானது பகுதி அவரது பன்முகப்
டைப்பWளுமையையும் கொண்டமைந்துள்ளது.
adlı köTçi வீரபாண்டிய கட்டப் பொம்மன் (நாட்டுக்கூத்து) . மதுரகவி நீ. ಹ೭-ಕ್ಲೌtvi மிக்கோர்சிங்கம், வெளியீடு . அ. மிக்கோர்சிங்கம் மனோகரன்
(G3gfr LICeiaf), 55feroxesu, - 50.1}n
பாழி பாஷைபூரைச் சேர்ந்த புலவர் அமரர் மதுரகவி நீ | மிக்கோர்சிங்கம் அவர்களால் கேளில் எழுதப்பட்ட மேற்படி |நாட்டுக்கூத்து தற்போது நூலுருவில் வெளியிடப்பட்டுள்ளது. இந்நாட்டுக்கித்து இன்றும் தொடர் மேடையேற்றங்களைக் கண்டு வருகிறது. இஸ்ரீ பல இசைநாடக நர்களையும், நாட்டுக்கத்துகளையும் எழுதியுள்ளமை குறிப்பிடதக்கது.
பண்டைய தமிழ்ச் சமூகத்தில் நாடகம் (ஆய்வு) . பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி மொழிபெயர்ப்பு . அம்மன்கிளி முருகதாஸ், வெளியீடு. குமரன் புத்தக இல்லம், 201, டாம்வீதி கொழும்பு- 2,விலை
. . பேராசிரியர் கா. சித்தம்பி அவர்களால் கலாநிதிபட்ட ஆய்வுக்காக  ேே9 இன் இறுதிப் பகுதியினம் எழுதப்பட்ட இந்தாம் 28 இப் ஆங்கிலத்தில் வெளிவந்தது. தற்போது கிழக்குப் பஸ்கலைக்கழக கிரிை, கலாசார பீட் பீடாதிபதி அம்மண்கினி முருகதானமினர் முயற்சியின் தமிழரின மொழிபெயர்ப்புச் செய்யப்பட்ஜி வெளிவந்துள்ளது. శీరియెస్తో 47

Page 26
நாடக அரங்கு (மொழிபெயர்ப்பு நாடகம்), இ. இரத்தினம், தொகுப்பு ஓ திருமதி. ஞானம் இரத்தினம், வெணியீடு - மித்ர ஆர்ட்எம் ரூ கிரிபேக்ஷன்ஸ், 329, ஆர்க்காடு சாலை, சென்னை - 24 தமிழ்நாடு - ஜ் இந்தியா
இந்நூலில் சோபோக்கிளியின் மன்னன் ஈரப்பனப் ஷேக்ஸ்பியரின் ஒதனிப்லோ, ஒனம்கார் வயிண்டின் 'மேகலையின் விசிறி ஆகிய நாடகங்களின் தமிழ்மொழிபெயர்ப்புக்கள் இடம் பெற்றுள்ளன.
காவிய நாயகன் (திருப்பாடுகளின் நாடகம்) - அருள் திரு. நி. | மரியசேவியர் அடிகள், வெளியீடு-திருமறைக்கலாமன்றம்,23.பிரகான | வீதி, யாழ்ப்பானம், விலை . 100.00 ஆ|திருமறைக்கலாமரை இயக்குனர் பேராசிரியர் தி மரியசேவியர் | அடிகளாரால் மனிதம் பற்றிய புதிய தேடலுடன் 200 ஆம் | ஆண்டிஸ் எழுதப்பட்ட இயேசுவின் திருப்பாடுகளின் நாடகமாகிய "காவி நாயகன்’தற்போது நூலுருவிப் வெளியிடப்பட்டுள்ளது. இந்நாடகம் 200 ஆம் ஆண்டிலும், இன்ாைண்டிலும் திருமறைக் கrமன்றத்தாம் யாழ்ப்பாணத்தில் மேடையேற்றப்பட்டது குறிப்பிடதக்கது.
தர்மத்தில் பூக்க மலர்கள் (தென்போடி நாட்டுக்கூத்து) - இசைக் தென்றல் பா. பேசுதாசன், வெளியீடு - திருமறைக் கலாமன்றம், 234,
Justral ill, LuIIILIII. If, fast - III.ii) கிரினத்தவர்களின் புனித தாலான பைபிளின் பழைய ஏற்பாட்டில் உள்ள தோபியாளப் ஆகத்தின் தோபியாசின் விWழிவுச் சரிதையை தென்மோடி நாட்டுகிசுத்து விரலில் எழுதியுள்ளார் ஆசிரியர்.
அரங்கியல் (கட்டுரைத் தொகுப்பு) - பேராசிரியர் சி மெளனகுரு, : வெளியீடு. பூபாலசிங்கள் பதிப்பகம், 340, செட்டியார் தெரு, கொழும்பு
- 1. sirls' - 75D.J.) பேராசிரியர் சி. rெriனகுருவான கேளிர்குப் பினர் கருத்தரங்குகளித்துச் சமர்ப்பிட்டதற்காகவும். சஞ்சிகைகளுக்காகலுேம் ஆண்வப்போது எழுதப்பட்ட 3 அரங்கக் கட்டுரைகள் இந்நூலில் இடர் பிரத்துள்ளன.
R ஆற்றுண்த
 
 
 

நாடக வழக்கு - குழந்தை ம. சண்முகலிங்கம் - தொகுப்பாசிரியர் . ' கந்தையா றிகணேசன், வெளியீடு . கலை இலக்கிய வட்டம்,
Georgisissio, Sfiso30 – 350.00 கலாநிதி குழந்தை 12 சண்முகப்கேங்கம் அவர்களால் அவ்வப்போது நூல்கள் சஞ்சிகைகள் பத்திரிகைகளில் எழுதப்பட்ட மி அரங்கியப் கட்டுரைகளுர், பல்வேறு சசூசிகைகளிலும் வெளிவந்த அவருடனான 8 நேர்கானஸ்களும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.
ஈழத்துத் தமிழ் அரங்கில் பெண் (ஆய்வு நூல்) . ஜெயாஞ்சினி இராசதுரை, வெளியீடு - குமரன் புத்தக இல்லம், 201, டாம் வீதி, கொழும்பு, 12 விலை .450.00 ஆசிரியர் முதுதத்துவமாணிப் பட்டத்திற்காக மேற்கொண்ட முயற்ச்சியின் வெளிப்பாடு இந்நூல், தமிழில் பெண்ணிலை வாதம் ஜீன் என்ற கருத்து நிலை சார்ந்து வெளிவரும் முதல் அரங்க வரலாற்று நூலாக இந்நூல் அமைவதாக சென்னைப் பல்கலைக்கழக
: பேராசிரியர் வி. அரசு அவர்கள் அணிந்துரையில் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பானத்தில் இருந்து அண்மைக் : காலத்தில் நாடக அரங்கியலுக்கென மற்றுமொரு சஞ்சிகையாக * கூத்தரங்கம்: வெளிவர ஆரம்பித்துள்ளது. இதனை செயலி திறன் அரங்கLF இயக்கம் வெளியிடுகின்றது. கூத்தரங்கத்தின் முதலாவது இதழ் கடந்த மார்ச் 2004 இல் வெளிவந்தது. இதுவரை 5 இதழ்கள் வெளிவந்துள்ளது.
இதனைப் பெற்றுக்கொள்ள விரும்புவோர் அருளகம் ஆடியபாதம் வீதி,திருநெல்வேலி, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள செயல்திறன் அரங்க இயக்க அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். கூத்தரங்கத்தில் நாடகம் தொடர்பான பல்வேறு தகவல்களும், யாழ் குடாநாட்டில் இடம்பெறும் அரங்க நிகழ்வுகளும் இடம்பெற்று வருகின்றது. .¬¬ 1+5 : 8
& リ。 。 'கூத்தரங்கம் க:
தாடகமும் அரங்கியலும் சார்ந்த தாள்களை வெளியிடுபவர்கள் தாங்கள் வெளியிடும் தாள்களின் ஒரு பிரதியை "ஆற்றுகை"நாஷ் நுகர்வுப் பகுதிக்கு அனுப்பிவிைத்தானம் அவை இப்பகுதியில் அறிமுகம் செப்துவைக்கப்படும்.
ళీjgరయెత్త 망

Page 27
முனைவர் கே. ஏ. குணசேகரன்
பெற்ற கற்கை நெறிமுறைகள்
இந்தியா, பாண்டிச்சேரி பஸ்கலைக்கழகத்தின் நாடகத்துறைத் தலைவரான முனைவர் கே. ஏ. குரேசேகரன் அவர்கள், "ஆற்றுகை' சஞ்சிகைக்காக அனுப்பிவைத்துள்ள இக்கட்டுரையினை நண்றியுடன் பிரகிரிக்கின்றோர்.
புதுவை பல்கலைக்கழகத்தில் இணைப்பேராசிரியராகப் பொறுப்பேற்ற நாள்முதல் என் துறையில் அப்போது ஆசிரியராகப் பணிஏற்றிருந்த ஆறுமுகத்தின் மாமா அவர் என ஏலவே அறிந்தேன். அதற்குமுன் கன்னப்ப தம்பிரானின் மகன் சம்பந்தன் எனக்கு அறிமுகமாயிருந்தார். தேசிய நாடகப் பள்ளி, புதுடில்லி, காந்தி கிராமப் பல்கலைக் கழகத்தோடு இணைந்து நடத்திய பத்துவார நாடகப்பயிற்சி மாணவராக நான் இருந்தபோது சம்பந்தன் என்னுடன் சகமாணவராக இருந்தார். அப்போது அவர் தெருக்கூத்தின் அடபுெ முறைகளை அவ்வப்போது நாடக ஒத்திகையின்போது ஆடிக்காட்டுவார். அப்போது எனக்குத் தெரிந்திருந்த குறவன் குறத்தி ஆட்டம். ஒயிலாட்டம் போன்ற ஆட்ட அசைவு முறைகளை நான் ஆடிக்காட்டுவேன். அப்போது நான் தியாகராசர் கலைக்கல்லூரியில் முதுகலை மானவராகப் பயின்று கொனன்டிருந்தேன்.
தெருக்கூத்தில் இடம்பெறும் சில காட்சி முறைகள், அடவு முறைகள், வசனம் மற்றும் பாட்டு முறைகளை சம்பந்தன் வழிப்பெற்று பாரதியின் பாஞ்சாலி சபதத்தை "பிணம் தின்னும் சாத்திரங்கள்’ எனும் பேயரில் நாடகமாக எழுதிய இராமானுஜம் அவர்கள் காஷ்மீரைச்சேர்ந்த பன்சிகொளல் அவர்களுக்கு விளக்கிக் காட்டி பன்சியின் நாடக இயக்கத்துக்குத் துணைசெய்வார். அப்போது சம்பந்தன் கண்ணப்ப தம்பிரானின் மகன் என அறிந்து தெருக்கூத்து குறித்து அதிகம் கொள்ளும் ஆர்வத்தில் அவருடன் நட்புபாராட்டிக் கொண்டிருந்தேன். அந்த நட்பு இன்றுவரை தொடர்கிறது. கண்னப்ப தம்பிரானின் கூத்தினை அவர் வேடமிட்டு ஆடிய நிகழ்ளினைக் கடைசியாக நான் பார்த்தது பெங்களுரில், அங்கு அவருக்கு சங்கீதநாடக அகாதெமி விருது அளித்த விழாவில் கலந்துகொண்டபோது அவருக்கு வயது எழுபதுக்கும் மேல் இருந்நது. ஆயினும் கிரீடம் வைத்து புஜக்கட்டைகள் கட்டி குட்டைப்பாவாடை அணிந்து குதித்து அடபுெ செய்து ஆடிப்பாடியபோது அவருக்கு வயது முப்பதாகவே இருந்தது என உனர்ந்தேன்.
5 ஆற்:Eத்
 

டாக்டர் இந்திரா பார்த்தசாரதி அவர்களுக்குப்பின் நான் நாடகத்துறைத் தலைவராகப் பொறுப்பேற்றிருந்த கல்வியாண்டில் எம் மாணவர்களுக்கு ஒருமாத காலம் தெருக்கூத்துப் பயிற்சி அளித்திட புரிசை கண்ணப்ப தம்பிரான் அவர்களை அவர்தம் குழுவினரோடு அழைத்திருந்தோம். ஒவ்வொரு பிற்பகவின் வேளைகளிலும் பயிற்சி துவங்கும். அவர் முதலில் எந்தக் கூத்துப்பிரதியை எடுத்து மாணவர்களுக்குப் பாடம் பயிற்றுவிக்கலாம் என ஆசிரியர்களாகிய எங்களிடம் விவாதித்தார். ஒருமாத காலத்திற்குள் "திரெளபதி வஸ்திராபரணம்' எனும் கூத்துப்பிரதியை எடுக்கலாம் என முடிவானது. இருக்கும் மாணவர்களின் எண்ணிக்கை சிறியது. அதிலும் ஒழுங்காகப் பாடும் குரலுக்குச் சொந்தக்காரர்கள் கொஞ்சம் பேர்களே. அதனால் இவர்களை முதன்மைக் கதாபாத்திரங்களாகப் பயன்படுத்தி பிறரை துணைநிலைப் பாத்திரங்களுக்கும் பிற பணிகளுக்கும் பயன்படுத்தலாம் என அவர் அதற்கான அமைதி கூறியது நினைவிருக்கிறது. தொடர்ந்து பிரதியை வசனப்பகுதிகளை வாசிக்கச் சொல்லி யார் சிறப்புற நாடக வசனத்தை வாசிக்கிறார்கள் என அறிந்து அனைவரையும் பாடச்சொன்னார். ஆர்மோனியப் பெட்டியைப் பிடித்து சுதியைத் தொட்டு இதில் கதி சேர்த்து பாடு என்பார். நான் பாடுறது போலப் பாடு, என்பார். யாரையும் நீ வா, போன்னுதான் பேசுவார் ஆசிரியர்களாகிய எங்களைபயும் நி, வான்னு தான் கூப்பிடுவார்.
அவர் அனைவருக்கும் "அய்யா வானார். பாட்டுப்பாடத் தகுதியான குரல் இருக்கிறது என அவர் நம்புவாரானால் தாளக்காரர்களை அழைத்து வேறுபட்ட தாளநடைகளை வாசிக்கச் சொல்லி அந்தத் தாள நடைகளுகேற்ப அடவு போட்டுவா என்று ஆட்டத்துக்கான அறிவு உடையவரா என அறிய முற்படுவார், முதலில் அவரது புதல்வர் சம்பந்தனை வாசிக்கும் தாள நடைகளுக்கேற்ப அடவு போட்டு ஆடிக்காட்டச் சொல்லுவார். சம்பந்தனும் ஈடுபாடு கொள்ளும்படி கிளிப்பிள்ளைக்குச் சொல்லித் தருவதுபோல அடவு போடச் சோல்லித்தருவார். "சரிவிடு இப்ப அந்தப்பையன ஆடவிடு தாளம் வாசிங்க, ம்.ம். அடவு போடு. தாளம் என்ன வாசிக்கிறாகன்னு காதுல நல்லா வாங்கிக்கினு அடவு போடுன்னு சொல்லுவார். அவ்வப்போது ம்..ம்.ம். என்று சுதியோடு சேர்ந்து ஆணை பிறப்பிப்பார். இப்படியாக அவரது பாத்திரங்களின் தேர்வு முறை அமைந்திருந்தது.
ஒருமாத காலப் பயிற்சி முடியும் தறுவாயில் இரவுகளில் பயிற்சி வைக்கத்திட்டமிட்டோம். 'அய்யா பிற்பகலில் ஒருமணி நேரம் தூங்கிவிட்டு வருவார். அவர் தூங்கும் அந்த ஒருமணி நேரத்திற்காக ஒரு படுக்கை மெத்தை, பாய், தலையனை, விரிப்புத்துணி அனைத்தும் அவருக்கு அளித்திருந்தோம். ஒரு குழந்தை போலவும் ஒரு மகானைப் போலவும் நாங்கள் மதிப்பளித்திருந்தோம். எம் பல்கலைக்கழக எதிரில் உள்ள காலாப்பட்டு மீனவர் பகுதியிலுள்ள அம்மன் கோயில் அருகே மாணவர்கள் கற்றுவந்த கூத்தினை அரங்கேற்றம் செய்விக்க முடிவெடுத்தோம். இரவு ஏழு மணிக்கு சுத்தினை அரங்கேற்றம் செய்வதற்காக பிற்பகல் மூன்று மணியிலிருந்தே அய்யா அவர்கள் உடை ஒப்பனைகளை ஒவ்வொரு மாணவருக்கும் அவரவர் ஏற்றுள்ள பாத்திரங்களுக்கேற்ப செய்யத் தொடங்கினார். ஒவ்வொருவரும் அய்யா அவர்களை வணங்கியபின்
ஆழ்முதே 51

Page 28
வேடம் அணியத் தொடங்கினர். ஆம், குரு வணக்கம். அய்யா அவர்கள் ஒவ்வொருவரும் முகத்தை சோப்புப் போட்டுக் கழுவி விட்டு வந்துள்ளாரா என அறிந்து நெற்றியில் ஒரு கோடு, நாமம் போலத் தீட்டி அவரது பிற கூத்துக் கலைஞர்களிடம் இந்தப் பையனுக்கு இன்ன வண்ணம் போடு என அனுப்பிவைப்பார். அய்யாவுடன் வந்த கூத்துக் கலைஞர்கள் வண்ணம் தீட்டியுள்ள முறைமையில் கூடுதலோ குறைவோ அமைந்திருக்குமாறு அய்யா உணரும்போது அதனைச் சரிசெய்யும் நோக்கில் அவரது கை வண்ணம் படும். பயிற்சி எடுத்த மாணவர்களைக் கொண்டே புஜக்கட்டைகள், கதைக்கோல், கிரீடம் போன்ற பொருள்களுக்கு வண்ணக் காகிதங்களை ஒட்டிப் பளபளக்கச் செய்திருந்தவைகளைப் பிடித்து அடவு போட்டுப்பார் எனச்சொல்லி ஒருசிலருக்குச் சிறப்புக் கவனம் அளித்தார்.
அரங்கேற்றம் செய்விக்கும் இடம் போனதும் அய்யாவுக்கு ஒரு நாற்காலி போட்டிருந்தோம். கூத்து ஆரம்பமானது.
கணபதி வந்தனம் வந்தனம் தந்தனம் இங்கனம் - சுந்தர கணபதி வந்தனம் புரிசை மாநகர்தனில் வாசா புலவர்கள் புகழும் உல்லாசா - சிறுவன் ராகவன் துதி நேசா - சுகுண பூசன உவ்லாசா (வந்தனம்)
மங்கலம் தேவி அருள்வாயே தேவி அருள்வாயே ஏழை நாங்கள் எல்லோரும் வாழ மாதம் மும்மாறி பொழியணும் தாயே சீரோங்கும் புரிசை மாநகர் தனில் வாழும் சிங்கார எல்லம்மன் துணை தரவேணும் பேரோங்கும் ராகவ தம்பிரான் பாணி
(தேவி)
கூத்து ஆரம்பமான வந்தனப் பாடல் தொடங்கி மங்கலம் - பாடிமுடியும் வரை அனைத்துப் பாத்திரங்களுடனும் இணைந்து பாட்டுப் பாடினார். முன்பாட்டும் பின்பாட்டும் அவரே என அவரது பாட்டுக் குரல் கூத்து முழுதும் ஒலித்துக்கொண்டேயிருந்தது. பொறுப்பு எடுத்துக் கூத்தினைச் சிறப்புற நடத்தி ஊராரின் வெகுவான பராட்டினை எம் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் நிகழ்கலைப்பள்ளி மாணவர்களுக்கு அளித்தார். கூத்துப்பாடல்களையும் ஒருசில
52 ஆற்றதை

வசனங்களையும் உணர்வுறப் பாத்திரங்கள் நிகழ்த் திட அய்யா துணையிருந்தமையை நான் உணர்ந்தேன். அவ்வப்போது ஒரு தூக்குச்சட்டியிலிருந்து தேனீரை மூடியில் ஊற்றி ஊற்றி ஒரு "மடக், இரண்டு மடக் எனக் குடித்துவிட்டுக் குரலை வெண்கலம் போலத் தீட்டியவாறு பாடியது மனதில் பதிந்திருந்தது. அய்யா மங்கலம் பாடும் போதுதான் அவரது அருகாமையில் சென்று கவனிக்க முடிந்தது. அவரது மருமகனார் முனைவர் ஆறுமுகம் தூக்குச்சட்டியிலிருந்து அவ்வப்போது ஊத்திக் கொடுத்தது தேனி அல்ல. ‘புதுவை சரக்கு அது. அய்யாவின் கரங்களைப் பிடித்து நன்றி சொல்லப் போகும்போது புதுவை சரக்கின் ‘நெடி மூக்கை துளைத்தது.
கூத்துக் கலைஞர்கள் யாரும் கூத்தின்போது இவ்வாறு செய்வதால் விடிய விடியக் கூத்தாடும் சிரமத்தை உளவியல் ரீதியாகத் தவிர்த்திட எண்ணிச் செய்கின்றனர் போலும். இப்பழக்கத்தை பல இடங்களில் பல கூத்துக் கலைஞர்களிடம் காணமுடிந்தது. இன்னும் இது வழக்கில் உள்ளது.
ஆண்டு தோறும் எம் மாணவர்களுக்கு தெருக்கூத்துப் பயிற்சியினை (Folk Theatre', 'Therukkoothu) 9(5 UTLIEldb6f Uuigjub LDT600T6...f35(6535(55 தொடர்ந்து அய்யாவின் தெருக்கூத்துக் கலைக்குழுவினரைக் கொண்டே செய்து வந்தோம்.
ஒருமுறை மாணவர்களின் எண்ணிக்கை குறைந்திருந்தது, கூத்தில் இடம்பெறும் பாத்திரங்களை எடுத்துக்கொள்ள மாணவர்கள் பற்றாக்குறை. வேறு துறை மாணவர்களைப் பயன்படுத்தலாமா என எண்ணும்போது பருவத்தேர்வு அருகாமையிலிருந்தது. தேர்வு குறுகிய நாட்களில் நடக்கப்போகிறது என பயமுறுத்திக் கொண்டிருந்தது. எனவே பிறதுறை மாணவர்களும் தொடர்ந்து பயிற்சி பெற வர இயலாது போனது. நானும், நண்பர் பேரா. இராசு அவர்களும் சேர்ந்து ‘நாங்கள் முன்வருகிறோம் என ஆளுக்கொரு பாத்திரத்தை எடுத்துக் கொள்ள முன்வந்தோம். அய்யாவின் ஆசிபெற்றோம். நான் சகுனி வேடம். நண்பர் முனைவர் இரா. இராசு துரியோதனன் வேடம். திரெளபதி வஸ்திராபரணம் ஒத்திகை பார்க்க யாரேனும் காலதாமதமாக வந்தால் அய்யாவின் கோபத்திற்கு ஆளாக வேண்டியிருக்கும். அவ்வப்போது நானும், ராகவும் அய்யாவின் அதட்டல்களைப் பெற்றோம். ஏற்கனவே, ராசு அவர்கள் அய்யாவின் பயிற்சியை இந்திரஜித் எனும் கூத்தில் இந்திரஜித் எனும் பாத்திதைதை ஏற்று நடித்திருந்தார். தொடக்கக் காலப் பயிற்சியின்போது பாடங்களை மனப்பாடம் செய்தாயிற்றா என்று கேள்வி கேட்பார். கூத்தில் வசனமும், பாடலும் அடவுகளோடு சேர்ந்து முறைப்படி வெளிப்படாமல் போனால், நேற்றுச் சொல்லிக் கொடுத்ததை வீட்டுக்குப் போனதும் மறந்து வந்தாயா? இன்னும் ஏழெட்டு நாட்களில் கூத்து அரங்கேறணும் பார்க்குற சனங்க காரித்துப்புவாங்க. ஒங்களுக்கும் அவமானம், சொல்லிக்கொடுத்த எனக்கும் அவமானம் பொறுப்பு வேணாமா? கவனம் வேணாமா? எனச் சத்தம் போட்டுவிட்டு இப்படிப் பேசு
துரியோ : அன்னா’ புது மண்டபம் ஒன்று கட்டினேன். அதைக்காணும் பொருட்டு
அழைத்தேன். இதோ பாருங்கள்.
sg( 53

Page 29
西@ தருமன் : சுந்தர மிருந்த தம்பி துரியோதனா நீ கேளாய் அந்த மா மண்டபங்கள் அநேகம் நான் பார்த்ததுண்டு விந்தை இதென்ன சொல்வேன் விளங்குவது உலகு தன்னில், வசனம் தம்பி ! ஆகா ! ஆடும் பதுமை, பாடும் பதுமை, சாளரம், நிலைக் கண்ணாடி என்ன அழகு. நன்றாய் இருக்கிறது தம்பி இதைப் போல நான் பார்த்ததே இல்லை. இப்படி இந்த முகவீணை சுதியில் சேர்த்து பேசு பாடுன்னு பழக்கிக் கொடுப்பார்.
"G&LD uDmb G&LD LDIT - 2–6ö பெண்டு பிள்ளை சேமமா’ பாடு இப்படி வாயத் தொறந்து பாடு. கூத்தில் மைக்செட்டு கிடையாது. ஒன் பாட்டை நாலுபேரு கூத்துப் பார்க்கிறவுங்க கேக்கவேணும். அதட்டிப் பாடுன்னு பலமுறை அயராது பாடிக்காட்டிச் சொல்லிக் கொடுப்பார்.
அய்யாவுக்கு இந்திரஜித் பதினெட்டாம்போர், திரெளபதி வஸ்திராபரணம் என்று உள்ள அனைத்துக் கூத்துப் பிரதிகளின் வசனங்களும், பாடல்களும் மளமளவென நினைவில் நிற்கும். வேண்டும்போது அவை சரளமாகப் பாடல்களாகவும், வசனங்களாகவும் வெளிப்படும். ஆர்மோனியக்காரர் பின்பாட்டுப் பாடும்போது வார்த்தைகளைச் சரியாகச் சொல்லாது பாடல் பாடுவாரேல் அவரைப் பார்த்து மீண்டும் வார்த்தைகளை அல்லது பாடல் வரிகளை நினைவுபடுத்திப் பாடுவார். ‘அய்யாவின் ஒவ்வொரு பார்வைக்கும், ஒவ்வொரு அசைவுக்கும் இன்னது பொருள் என விளங்கிக் கொள்ளும் அளவுக்கு அவரது குழுவினர் அனைவரும் திறன் பெற்றிருந்தனர்.
புகைக்கும் பழக்கத்தைக் கூத்துக் குழுவினர் பெரும்பாலோர் வைத்திருந்தாலும் தம்பிரான் அய்யா அவர்கள் அறியாது செய்வர். மதிப்பும் மரியாதையும் அவர்கள் கூடுதலாக அய்யாமேல் வைத்திருந்தனர். எங்கள் குடும்பம் இவராலேதான் வாழ்கிறது. வாழவைக்கும் தெய்வம் எங்க அய்யா என மனம் நெகிழ்ந்து கலைஞர்கள் கூறக்கேட்டிருக்கிறேன்.
எங்கள் துறையில் இந்திரஜித், திரெளபதை வஸ்திராபணம் எனும் இரு கூத்துக்களை அய்யா எம் மாணவர்களுக்கு நடத்தினார். ஆண்டுதோறும் நடத்தும் வழக்கத்தை நாங்கள் இன்றுவரை பெற்றிருக்கிறோம். அய்யா இறந்த ஆண்டு தொடங்கி கண்ணப்ப தம்பிரானின் புதல்வர் சம்பந்தன் தலைமையில் குழு வந்து எம் மாணவர்களுக்கு நடத்திக் கொண்டு வருகிறது.
அய்யா நடத்திய இரு கூத்துக்களிலும் பிரதிகளை அப்படியே நடத்துவது கிடையாது. நேரம் கருதியும், பாத்திர எண்ணிக்கை கருதியும், பயிற்சிக் காலஅளவு கருதியும் மாணவர்களுக்கு நடத்தும் கூத்துப் பிரதிகளை அய்யா அவர்கள் இலாவகமாக செப்பமாக்கம் 'எடிட்' செய்துவிடுவார். அய்யாவின் சுருக்கப்பட்ட கூத்துப் பிரதிகள் கூத்துப் பார்ப்போருக்கு மனநிறைவைத் தருவதாகவே அமைந்திருந்தன.
கூத்துப் பயிற்சியின் தொடக்கத்தில் அவரது கண்டிப்பு எந்த வகையில்
54 ஆகுற்றுதை

கடுமையாக இருந்ததோ அதற்கு நேர்மாறாக, நாட்கள் செல்லச் செல்ல, பயிற்சியைச் சிறப்பாக மாணவர்களாகிய நாங்கள் எடுத்துக் கொள்வதை பார்க்கப் பார்க்க அய்யா மனமாரப் பாராட்டுவார்.
கூத்துப் பயிற்சியின்போது அய்யா அவர்கள் சொல்லிக் கொடுத்தபடி நான் அடவு செய்து பாடிக்காட்டினேன்.
மண்டபம் எழுப்புதல் சகுனி : மண்டபம் ஒன்றுண்டாக்கி
மற்றந்த மண்டபத்தை கண்டி டவரவழைத்து காண்பித்து பொழுதுபோக்கி உண்டு முதலான பின்பு ஒருதரம் சூதாடு வோமென்று உரைத்தோமானால் தண்டி தலால் தருமனும் பின்வாங்க மாட்டான் சபையில் சூதாடுதர்க்கு சம்மதிப்பான் வண்டிதழால் ஐவர்கள் வாழ்வெல்லாம் சுவர் தேர்க்க வகை செய்வேனே
சகுனி வேசத்தை எப்படிச் சரியாகச் செய்யுறாரு பார்த்திகளா? ‘வாத்தியாருங்கிறதை எப்படிக் காட்டுறாரு’ என்று சொல்லி சரியாகச் செய்யாதவர்களிடம் ‘ஒன்னோடதானே இவரும் பயிற்சி எடுத்தாரு அவரு அழகாச் செய்றாரே - எனச் சொல்லி பிறரும் சிறப்புறச்செய்ய வழிகாட்டி மிகச் சிறந்த ஒரு
ஆசான் அவர் எனக் காட்டி நின்றார்.
எம் மாணவர்களிடையே அவர் தொடர்ந்து நான்கு ஆண்டுகள் கூத்துப்பயிற்சி அளிக்க வந்திருந்தார். அவரிடமிருந்து எம் மாணவர்கள் நிறையக் கற்றனர் என்பதைவிட ஆசிரியர்களாகிய நாங்களும் அவரிடம் மாணவர்களாக ஆகிப் பெற்ற அனுபவங்கள் ஏராளம். இன்று உள்ள எம் சிறிய கலை அரங்கை எங்களைவிட அதிக நாட்கள், அதிக நேரங்கள் வகுப்பு நடத்தியவர் அய்யாதான். காலம், பத்திரம், சூழல், நிகழ்த்தும் இடம், பார்வையாளர் என்னும் காரணிகளுக்கேற்ப எவ்வாறு கூத்து (நாடகப் பிரதி)ப் பிரதிகளை (எடிட்) செப்பமாக்கம் செய்வது? அதாவது தேவையானவை எவை? எவற்றை நீக்குவது, எவற்றை விரிப்பது? எவற்றை மாற்றி அமைப்பது? என்பன போன்ற உத்திமுறைகளை அவரிடமிருந்து கற்றுக்கொள்ள முடிந்தது.
மாணவர்களிடம் காட்டும் கண்டிப்பு, அரவணைப்பு, பாராட்டுவது குறைகளை நீக்குவது போன்ற முறைமைகளை அவரிடமிருந்து அறிந்துகொள்ள முடிந்தது.
ஆசிரியராக விளங்குபவர் நேரங்களில் கவனம் செலுத்துதல் முக்கியமானது. அய்யா அவர்கள் பயிற்சி கால அட்டவணையை வகுப்பதிலும் வகுத்த நேரப்படி வகுப்புகளுக்கு வந்துவிடும் பண்பையும் கொண்டிருந்தவர்.
MG 55

Page 30
ஒரு இசைவாணர், பிரதி எழுதுவதிலும் பிரதியைச் சுருக்கி (எடிட்)ச் செப்பமாக்கம் செய்வதிலும் வித்தகர். ஒரு ஆசான் என்பவர் தொடர்ந்து படிப்பதிலும். எழுதுவதிலும், செயற்படுத்துவதிலும் தேடலும் செயற்திறனும் கொண்டு விளங்கவேண்டும். தம்பிரான் தனது கடைசிக் காலகட்டங்களில் ஆண்டுதோறும் புது கூத்துப் பிரதிகளைச் செய்வதிலும், இயக்குவதிலும், மேடையாக்கம் செய்வதிலும் தொடர்ந்து முனைப்புக்காட்டிக் கொண்டே இருந்தார்.
சூர்ப்பநகை கடோத்கஜன் அனுமன் தூது வாலி மோட்சம்
போன்ற கூத்துப் பிரதிகளை அவர் உருவாக்கி மேடையேற்றியமையினை நாம் மறந்துவிட இயலாது. புரிசை கண்ணப்ப தம்பிரான் அவர்களிடம் பெற்ற
அனுபவங்கள் வழி அவர் ஒரு நல்ல குரு ஆவார். அவர் ஒரு நல்ல நாடக ஆசிரியன் நல்ல ஒரு நாடகப் பிரதியாக்கக் கலைஞர். நாடக இயக்குநர். எடுத்துக் கொண்ட துறையில் தொடர்ந்து சிந்தனையும், படைப்பாகத் திறனும், மேடையாக்க முறைமையும் கொண்ட ஒரு முன்மாதிரிக் கலைஞர். அவரிடம் பெற்ற அனுபவங்கள் என்னைப் போன்றவர்களுக்கு கற்கை நெறிமுறைகளைக் கற்பித்துள்ளன. இவ்வகைக் கற்றை நெறிமுறைகள் எமது மாணவர்களுக்கு வழிகாட்டுதல்களாக அமையும். O
இந்திய அரங்கியலாளர்களின் யாழ் வருகை
இந்தியாவில் நாடகச் செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் பேராசிரியர்கள், கலைஞர்கள் பலர் அண்மைக் காலத்தில் இலங்கைக்கு வந்து செல்கின்றார்கள். இலங்கைக்கு வரும் இவர்கள் யாழ்ப்பாணத்திற்கும் வருகைதந்து பல கலந்துரையாடல்கள், சந்திப்புக்களில் ஈடுபட்டுச் செல்கின்றனர்.
இந்த வகையில், கடந்த மே மாதத்தின் இறுதியில் இந்தியாவின் பாண்டிச்சேரி பல்கலைக்கழக நாடகத்துறை தலைவரான பேராசிரியர் கே. ஏ. குணசேகரன் அவர்கள் யாழ்ப்பாணம் வந்திருந்தார். அதேபோல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைப் பேராசிரியராக இருந்து, நாடகத்துறையிலும் தீவிரமாக ஈடுபட்டு வரும் பேராசிரியர் வீ. அரசு அவர்களும் அண்மையில் யாழ்ப்பாணம் வந்திருந்தார்.
மற்றும் தமிழ் நாட்டில் 'சென்னைக் கலைக்குழு" என்ற அமைப்பிற்கூடாக வீதி நாடகத் துறையில் ஈடுபட்டு வரும் 'பிரளயன் அவர்களும் நவம்பர் மாதத்தில் யாழ்ப்பாணம் வருகை தந்திருந்தார்.
இவர்கள் இலங்கையின் பல பகுதிகளுக்கும் சென்று கலந்துரையாடல்கள், பயிற்சிகளை நடத்தியுள்ளார்கள்.
56 Gക

ஆற்றுகைகளிற்கும் அரங்குகளிற்கும் நாம் புதியவர்களாக இருந்தாலும், அவை குறிப்பிட்ட ஒரு கால வரையறைக்குள் மட்டுப்படுத்தப்பட்ட வரலாறு கொண்டவை அல்ல. அவை எமது பண்டைத்தமிழ் பிரசவித்தகாலம் முதல் தமிழர் கலாசார ஒன்றிப்பு வாழ்க்கையில் எம்மோடு பின்னிப்பிணைந்த மரபுகள் என்றே கூறலாம். “நாமும் நமக்கொரு நலியா கலையுடையோம்.” என்கின்ற மகாகவியின் வார்த்தைகள் தொடக்கம் நமக்கென்று பல ஆற்றுகைகளையும் விசேடமாக கூத்துக்களையும் கொண்டிருப்பது எமது தமிழ் மரபின் சிறப்பு.
2,601.T6) g6360puu bei6OTusLDITbpril 66ir (Modern Global Alteration) அசாதாரணமாக அவ்வப்போது மாறிக்கொண்டிருக்கின்ற உலக ஓட்டத்தில் எமது ஆற்றுகைகளும், எமது அரங்குகளும் மாற்றம் பெறவேண்டுமா?. மாற்றம் இல்லாவிடில் தொடர்ந்தும் அவை சவால் விடுகின்ற நவீனத்தோடு நிலைக்கமுடியுமா..? போன்ற கேள்விகள் இன்றைய அரங்கிற்குள் நுழைந்திருப்பது நியாயம் என்றே சிந்திக்க முடியும்.
காலமாற்றமும் அரங்கத் GSGDJ Guuit
பிரான்சீஸ் அமல்ராஜ்
“ஆற்றுகை என்றால் என்ன?’ என்பது இங்கு ஒன்றும் புதியது அல்ல. இந்த ஆற்றுகை என்பதன் அந்தரங்கம் இருக்கிறதே அது மிக முக்கியமானது ஆற்றுகைகளை எப்பொழுதும், எப்படி வேண்டுமானாலும் அரங்காலும், பார்வையாளனாலும் ஏற்றுக்கொள்ள முடியுமா? அரங்கிலே ஆற்றப்படுகின்ற ஆற்றுகைகள் ஒவ்வொரு பார்வையாளனையும் திருப்திப்படுத்த வேண்டுமென்பது எமது அரங்க யதார்த்தம். அன்றைய காலங்களிலே மாதத்திற்கு ஒருதடவை, வருடத்திற்கு ஒருதடவை ஏன் சிலவேளை நான்கு வருடங்களுக்கு ஒருதடவை வருகின்ற அந்த ஆற்றுகை நாளை எதிர்பார்த்திருந்து, அந்த நாளிலே அரங்கிற்கு வருகின்ற பார்வையாளனை திருப்திபடுத்துவது என்பது இலகுவானதொன்றுதான். ஆனால், "வேலை முடிந்து அவர் அவசரமாக வீடு திரும்பிக்கொண்டிருக்கும் போது ஒரு முறை இதை பார்த்து விட்டுப்போவோம். என்று அரங்கிற்கு வரும் ஒரு பார்வையாளனையும், தொலைக்காட்சி நாடகங்களுக்கும் திரைப்பட நேரங்களுக்கும் மாறிமாறி கால அட்டவணை போட்டுக் கொண்டு இடையில் கிடைக்கின்ற அரைமணி இடைவேளையைப் போக்குவதற்கு அரங்கிற்கு வரும் ஒர் பார்வையாளனையும், அவசர உலகத்தில், உலகமயமாக்கல் கொடுமைக்குள் (Globalization) சிக்கிக் கொண்டு அன்றாட கருமங்களையே செய்ய முடியாமல் அரைகுறை மனங்களோடு அரங்கிற்கு வரும் ஓர் பார்வையாளனையும், வலைப்பின்னல் உலகிலே (Network Global) முழித்துக் கொண்டு உள, சுக தளர்விற்காக அரங்கிற்கு வரும் ஒர் பார்வையாளனையும் இன்றைய நாடக அரங்கிலே திருப்திப்படுத்தி வெளியேற்றுவது என்பது இன்றைய ஒரு யதார்த்த
♔gഠതക 57

Page 31
சவால் என்றே கூறமுடியும். அந்தளவிற்கு இன்றைய நவீன யுகத்தில் ஆற்றுகைகளின் நிலவரம் நீண்டு நிற்கிறது.
இந்த நவீன யுகத்தில் ஆற்றுகைகள் என்று அரங்கிற்கு வருகிற பொழுது நவீனமாக எதிர்கொள்ள வேண்டியிருக்கின்ற சில யதார்த்த நிலைமைகளை வளர்ந்து வருகின்ற நவீன நாடகக்கலைஞர்களின் மத்தியில் நானும் ஒருவனாக நின்றுகொண்டு மிக சிறிய அளவிலே அலசிப்பார்க்கிறேன்.
எமது பாரம்பரிய ஆற்றுகைகளையும். கூத்துக்களையும் நாம் மறந்து விட முடியாது. காரணம் எமது இந்த விழுது விருட்சத்தின் ஆணிவேர்கள் அவை. அவற்றின் பரிணாம வளர்ச்சியில்தான் இன்று நவீன நாடகங்கள் நவீன அரங்குகளிலே தலை நிமிர்ந்து நிற்கமுடிகிறது அந்த பாரம்பரிய கலைவடிவங்களை இன்றும் நாம் தூசு தட்டிக்கொண்டிருப்பதனால் தான் நவீன நாடக தோன்றல்கள் சிரமமின்றி நடந்தேறுகிறது. ஆனால் இன்றைய ஒட்ட உலகில் (Speed Global) அரங்குகள் அந்த பண்டைய எமது ஆற்றுகைகளையும், கூத்துக்களையும் எந்த அளவிற்கு எதிர்பார்த்து நிற்கிறது என்பது முக்கியமான ஒரு விடயம். அப்படியாயின் எவ்வாறான ஆற்றுகை வடிவங்கள் இன்றைய அரங்குகளிலே, நவீன பார்வையாளர்களின் முன்னிலையில் நிற்கமுடியும்?
உண்மையிலேயே ஆற்றுகைகளின் முக்கியத்துவமும் அதன் வெற்றிகளும் அவ் ஆற்றுகை பிரதிகளிலோ அல்லது நெறியாளரிலோ தங்கியிருப்பதை விட பார்வையாளர்களின் அந்த ஆற்றுகை பற்றிய அந்தஸ்தில் தான் பெரும்பாலும் தங்கியிருக்க முடியும். தற்காலத்து ஆற்றுகைகளை அரங்கிற்காக தயார் செய்யும் பொழுது நான் மேலே குறிப்பிட்டு வருகின்ற “நவீனத்துவம்” (Modernization) மிகமுக்கியமான ஒரு விடயமாக அமைகிறது. அதாவது பழைய காலங்கள் கழிந்துகொண்டுபோக நவீன காலங்கள் பிரசவிக்கப்படுகிற பொழுது எதையுமே ஓர் நவீனத்தன்மையுடன் நோக்கி பழக்கப்பட்ட எமது மக்கள் அரங்கிற்கு வருகிறபோது அதிலும் ஓர் நவீனத்துவத்தை எதிர்பார்ப்பதை நாம் தவறென்று கூறிவிட முடியாது. ஆற்றுகை ஒன்றைப்பார்த்து பார்வையாளன் திருப்திப்படும் போதுதான் எமது ஆற்றுகைகள் வெற்றியடையுமென்றால் இன்றைய காலகட்டத்தில் எந்தவொரு ஆற்றுகையிலும் நவீனத்துவம் நிச்சயமாக ஊடுபுகுத்தப்பட வேண்டும். அப்படியென்றால்தான் தொடர்ந்தும் அரங்கு என்கின்ற ஸ்தலத்தில் எமது நிலைகளை ஸ்திரப்படுத்திக் கொள்ள முடியும்.
சிறு அனுபவம் பகிர்வு
எனது பாடசாலை நாட்களிலே பாடசாலையின் நிகழ்வொன்றிற்கு நாடகம் தயார் செய்யவேண்டுமென்ற பொறுப்பு என்பக்கம் விழுந்தது. ஆனாலும் அந்நிகழ்வை ஒழுங்குபடுத்துகின்ற குழு என்னிடம் இரு நிபந்தனைகளை முன்வைத்தது. 1. அந்த நாடகம் நிறைவடையும் வரை எந்தவொரு மாணவனும் வெளியேறக்கூடாது. 2. அந்த நாடகத்தை பார்த்துவிட்டு அடுத்துவருகின்ற ஒரு முக்கியமான நிகழ்வொன்றிற்கு அந்த நாடகத்தை பரிந்துரைக்க வேண்டும்.
58 ஆற்றுதை

என்ன செய்வது? இரண்டும் பாரிய நிபந்தனைகள் “சரி” என்று தயாராகிக் கொண்டேன். திருமறைக் கலாமன்றம் தந்த கல்வியையும். அனுபவங்களையும் புரட்டிப்பார்த்துக் கொண்டு அந்த நாடகத்தை தயாராக்கினேன். எப்படித்தெரியுமா? 35 நிமிட நாடகத்தில் 10 நிமிடங்கள் மாத்திரம்தான் வார்த்தைகள் வந்துபோனது. அத்தோடு நவீன இசைப் பாணியில் அமைந்த இசைவடிவங்களையும் நடனவடிவங்களையும் மட்டும் கொண்டு நான் சொல்ல வந்த அந்தக் கதை முழுவதையும் நகர்த்திமுடித்தேன். உண்மையிலேயே அந்த முதலாவது எனது ஆற்றுகை பெருவரவேற்பை பெற்று ஓர் நிலையான நாடக அந்தஸ்தைக் கொடுத்தது அத்தோடு கல்லூரிக்கு புறம்பே 4 இடங்களில் மேடையேற்றக்கூடிய சந்தர்ப்பமும் கிடைத்தது.
எனவே, புதிய இசை வடிவங்களையும், புதிய புதுமையான நடன கூத்து வடிவங்களையும் பார்த்துக் கேட்டே பழகிப்போன தற்கால கண்களுக்கும் காதுகளுக்கும் நாம் எப்படி இன்னும் பழைய விடயங்களைக் கொடுத்து அரங்கிற்குள்ளே அவர்களை நிலைப்படுத்த முடியும்?. உண்மையிலேயே மேலைத்தேச இசைவடிவங்களுடனும் "சினிமா” என்கின்ற நவீன பல்கலை வடிவத்துடனும் அன்றாடம் போட்டியிடுகின்ற பார்வையாளர்களின் முன்னால் அவற்றைத் தாண்டியும் அவர்களால் இரசிக்கக்கூடிய ஆற்றுகைகளை அரங்கிலே காட்டுவது என்பது இன்று ஓர் நியாயமான கடினமான சவால்தான். ஆற்றுகைகள் ஒரு மரபுவழிக் கூத்துக்கள் என்கின்ற ஒரு அந்தஸ்து மாறி இன்றைய உலகிலே அது ஒரு வகையான போட்டி அரங்கு என்று கூறுவதில் தப்பொன்றும் இருக்கமுடியாது. இன்று பாடசாலை நாடக ஆற்றுகை போட்டிகளில் கூட ‘நவீன தன்மை” என்கின்ற ஒரு விடயம் அதன் நிலைகளில் பங்களிப்பு செய்வது சாதாரணமாகிவிட்டது. அதாவது நாடகத்துறையிலும் கூட ஒரு கலைஞன் புதிதாக ஏதேனும் சிந்திக்க முயல்கின்றானா? என்பது தான் இந்த நவீனத்துவம் என்கின்ற விடயத்திற்கு அடித்தளமாக (Fundemental base) அமைகிறது. நாடகம் என்றால் இப்படித்தான் என்கின்ற ஒருசில வரையறைகளை எமது பண்டைய பாரம்பரிய கலை ஆற்றுகை வடிவங்களில் காணக்கூடிய வாய்ப்பு எமக்கு கிடைத்தாலும் இன்று அப்படியான ஒரு வரையறையை இன்றைய ஆற்றுகைகளுக்கு இடமுடியுமா? என்கின்ற விடயத்தினுடைய கடினத்தன்மை எம்மைப்போன்ற இளம் நவீன நாடகக் கலைஞர்களுக்கு அனுபவரீதியாக புரிகிறது. ஒரு குறித்த நேரத்திற்குள்ளே பல்வேறு விடயங்களை ஒரே அரங்கில் ஒரே ஆற்றுகையில் பார்க்கத்துடிக்கின்ற பார்வையாளனின் முன்னால் எப்படி இப்படிப்பட்ட வரையறைகளை விட்டு வைக்கமுடியும். கதை, கருப்பொருள் இன்றியே நவீன யுக்திகள் மூலமே வெற்றியடைகின்ற ஆற்றுகைகளை நாம் பார்த்திருக்கிறோம். அந்த அளவிற்கு ஓர் நாடக ரசிகனுடைய எதிர்பார்ப்பு பல்வேறு கோணங்களிலே பரந்து விரிந்து கிடக்கிறது.
ஒட்டு மொத்தத்திலே எமது அரங்குகளை ஓர் குட்டி திரை அரங்குகளாக பிரமித்துக் கொண்டு ஆற்றுகைகளை பார்க்கவரும் பார்வையாளர் கூட்டமும் இல்லாமல் இல்லை. அப்படிப்பட்ட திரைஅரங்க ரசிகர்களை எப்படி எமது நாடக அரங்கிற்குள் சரியாக திருப்திப்படுத்த முடியும். பாரம்பரிய கூத்து ரசிகர்களையும்,
ஆற்றுைேத 59

Page 32
நவீன சினிமா ரசிகர்களையும் அருகருகே வைத்துக்கொண்டு அரங்க திரையை விலக்க வேண்டிய சிக்கலாக நிலை தோன்றியிருக்கிறது இதை எப்படி சமாளிப்பது என்பது ஒரு பெரிய விடயம். இதற்குள் நிறையவே உண்மை இருக்கிறது. தன்னைத் தானே திருப்திப்படுத்திக் கொள்ள அரங்கிற்கு வருபவனை அப்படியே திருப்திப்படுத்தி அனுப்ப வேண்டிய பாரிய பொறுப்பு இன்று எமக்கு திணிக்கப்பட்டிருக்கிறது. எனவே எமது அரங்குகள் நவீனத்துவமடைய வேண்டிய தேவை அவசரமானது.
கதை கரு அமைப்பு
காலங்காலமாய் வரலாறுகளையும், காப்பியங்களையும் அரங்கிலே பார்த்துக் கொண்ட மக்கள் இப்பொழுதும் அதே மனநிலையில் அரங்கிற்குள் வருகிறார்களா என்பது கேள்விக்குறிதான். அந்தளவிற்கு புதிய புதிய கரு, கதை அம்சங்களை தேடி அரங்கப்பக்கம் வருகின்ற ஒரு நோக்கல் முறை அதிகரித்திருக்கிறது. எமது பாரம்பரிய வரலாற்று கதை ஆற்றுகை வடிவங்களை தெரிந்திராத, தெரிந்துகொள்ளாத ஒரு சந்ததி (Modern generation) இன்று எமது சமுதாய அரங்குகளை ஆக்கிரமித்திருப்பது எமது ஆற்றுகைகளின் நிலையை அவசரமாக மாற்றுவதற்கான தேவை ஒரு காரணம் எனலாம். எமது பழைய கலை வடிவங்களை இந்த ஒரு சந்ததியின் முன் எவ்வளவு திறம் படகாட்டினாலும் அது வெற்றிபெறுமா? என்பதும் சிந்திக்கவேண்டிய ஒன்றுதான். கதைகளுக்குள்ளேயே பல திருப்பக் கதைகளை பின்னிப் பிணைந்து பார்வையாளர்களின் உணர்வுகளை தெளிவாக தீணி டிப்பார்க்கின்ற நூற்றுக்கணக்கான தொலைக்காட்சி நாடகங்கள் மத்தியில் எமது மேடை நாடக வசன கர்த்தாக்களின் நிலைமை மிக முக்கியத்துவமுடைய வேண்டிய ஒன்றாக தென்படுகிறது. பழைய எமது பாரம்பரிய வரலாற்று காப்பிய ஆற்றுகைகளை இன்று பார்வையாளர்கள் முற்றாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதற்கில்லை. மாறாக அவ் வடிவங்களுக்கு நவீன நாடக மரபு அத்தியாயங்களை பிணைப்பு செய்வதன் மூலம் எமது கலை வரலாற்றில் தொடர்ந்தும் அவற்றை சிறப்பாக காத்துக்கொள்ள முடியும். இதற்கு திருமறைக் கலாமன்ற அண்மைக்கால ஆற்றுகை வரலாறுகள் சாட்சி சொல்லி நிற்கிறது. எனவே கதை, கருப்பொருள் எதுவாக அமைந்தாலும் அதை ஓர் நவீனத்தன்மையோடு கொடுக்கிற பொழுது அதை எந்த காலத்து பார்வையாளனும் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கின்றான், இருப்பான்.
நவீன பாணிகள்
இன்றைய நவீன அரங்கின் அதிக கரகோசங்கள் இதற்கே கிடைக்கிறது. எமது இன்றைய நாடக அரங்கில் பழைய நாடக மரபுகள், பழைய ஆற்றுகை பாணிகள் மாய்ந்துவிடவில்லை மாறாக சற்று ஓய்ந்திருக்கிறது எனலாம். காரணம் அந்த மரபுகள் பாணிகள் அரங்கில் எடுபடுகின்ற தன்மை தற்பொழுது கணிசமான அளவினால் வீழ்ச்சியடைந்திருக்கிறது. “அந்தக்காலம் தொட்டு இந்தக்காலம்வரை இதைத்தானே காட்டுகிறீர்கள். புதிதாக ஒன்றும் இல்லையா..?” என்று அரங்கைக் 60 &jgరచి

கிழிக்கின்ற சத்தங்களுக்கு மத்தியில் இன்னும் அந்த பழைய மரபு, பாணிகளுக்கு மாலையிட்டுக் கொண்டிருக்கும் சம்பிரதாய அரங்குகள் இனிதேவையில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது. எமது மூதாதையரின் அரங்கப்பாணிகளுக்கு பின்னால் இன்னும் எமது நவீன நாடகயுக்திகளை மறைத்து வைத்திருப்பதன் நியாயம் புரியவில்லை. இதற்காக பழைய நாடக, ஆற்றுகை மரபுகள் எம்மை விட்டு நீங்கிவிடக்கூடாது. அவை எமது பொக்கிசங்கள் மட்டுமல்ல, எமது சங்ககாலம் தொடக்கம் இந்தக்காலம் வரை எமது மொழியோடு மாலைமாற்றிக் கொண்டிருக்கின்ற நிச்சயதார்த்தங்கள்.
நவீன யுக்திகளும். நவீன பாணிகளும் அரங்கிலே வெற்றியளிக்கிற பொழுது அவற்றை தொடர்ந்து எமது அரங்க மரபாக்குவதன் நியாயம் சரியானது. பண்பாடு, மரபு, சம்பிரதாயம் இவற்றைக்கடந்து ஓர் அரங்க பார்வையாளனின் எதிர்பார்ப்பை நிவர்த்தி செய்வது எமது நாடக அரங்கியலில் புனிதமானது என்றே நான் கருதுகிறேன்.
dLD35 Iso fasgo
“நாடகம் என்றால். போரும். வெடிச்சத்தங்களும். அழுகையும் தானா..?.’ என்கின்ற குறுகிய எண்ணங்களை கீறிட்டுகாட்டுகின்ற வினாக்களும் இன்று அரங்கில் இல்லாமல் இல்லை. சமகால விடயங்கள் என்கின்ற போர்வையிலே அரங்கம் கண்ட இவ்வாறான ஆற்றுகைகள் இன்று மெல்லக் கசக்கிறது. மனித சமகால விடயங்களிலே ஆற்றுகைகள் என்பது மிக முக்கியமானதுதான். எமக்கு ஒன்று புரிகிறது இனியும் நாம் போரின் அழிவுகள், அழுகைகளைக் கொடுக்க அதை முன் போலவே ஏற்றுக்கொள்ள பார்வையாளர்கள் தயாராக இல்லை. காரணம் அவற்றிலும் மாற்றங்களை எதிர்பார்க்கும் ஓர் கூட்டம் அரங்கின் முன் வரிகளில் உண்டு. தற்போதைய சமகால நிகழ்வுகளோடு புதிய மெருகூட்டப்பட்ட நவீனத்துவம் வாய்ந்த அண்மைக்கால நிகழ்வுகளும் இனியும் எமது நவீன ஆற்றுகைகளில் வரவேற்பைப் பெறலாம்.
எமது பாரம்பரிய கூத்துக்களின் நவீன நிலவரம்
ஒரு விதத்தில் எமது பாரம்பரிய கூத்துக்களின் முக்கிய தன்மைகள் இன்னும் குறைந்து விடவில்லை. ஆனால் இனியும் இவைகள் எமது நவீன அரங்கிலே ஆதிக்கம் செலுத்துமா? என்பதுதான் சந்தேகத்திற்குரிய விடயமாகிறது. “ஈற்றில், அதற்கு உறுதியான எதிர்காலம் வேண்டுமானால் இன்றைய இளம் உள்ளங்களைக் கவரக் கூடிய ஆற்றல் உடையதாக அது சுவையூட்டப்படவேண்டும்.” என்கின்ற கருத்துப் போன்று எமது கூத்துகள் ஓர் நவீனத்துவத்தில், தொடர்ந்தும் அளிக்கை செய்யப்படுமாயின் அது தொடர்ந்தும் எமது அரங்குகளில் நிலைத்து நிற்கும் என்பது உறுதி.
ஒட்டு மொத்தத்தில், இன்று அரங்கம் என்பது எதையோ புதுமையாக எதிர்பார்த்து நிற்கின்ற ஒன்று. அந்த எதிர்பார்ப்புக்கள் நவீன உலக நகர்வோடு இணைந்து நிற்கின்ற ஒன்று எனலாம். இனியும் நவீன நாடக கர்த்தாக்கள் மட்டுமே யதார்த்தமான அரங்க முரண்பாடுகளுக்கும், நவீன ஆற்றுகை
sg( 61

Page 33
கலாச்சாரத்திற்கும் தெளிவாக முகம் கொடுக்க முடியும், புதுமையான ஆற்றுகைகளை எதிர்பார்த்து காத்திருக்கின்ற புது அரங்குகளையும். நவீனத்துவத்தோடு புது யுக்திகளை காலமாற்றத்தோடு பினைத்து காட்டுகின்ற நாடக அரங்கை பார்வையிடவரும் நவீன பார்வையாளர்களையும், புதிதாக புதுமையாக எதைச் செய்யலாம். நவீனமாக எதை காட்டலாம் என்று சிந்திக்கத் தொடங்குகின்ற நாடக கலைஞர்களையும் சமாளிப்பது என்பது வளர்ந்து வருகின்ற நவீன நாடக நெறியாளர்களின் மனங்களில் பொறிக்கப்பட்டிருக்கின்ற இலட்சிய சவால்கள்தான், அபாரமான மேலைத்தேய இசைப்பானி, ஆச்சரியம் தருகின்ற தொலைகாட்சி தோடர்கள், நவீனத்துவத்தையே உலுப்பிப்பார்க்கின்ற திரைப்பட வரவுகள், இவற்றின் மத்தியிலான எமது நவீன நாடக கர்த்தாக்களின் (Modern drant artist) ஆற்றுகைப் பயனம் சவால் நிறைந்தது மட்டுமல்ல ஆச்சரியத்தை தரக்கூடிய ஒரு பயணமும்தான். C}
அரங்கியல் கருத்தரங்குகள், பயிற்சிகள்
அண்மையில் யாழ்ப்பாணம் வருகை தந்திருந்த லண்டனில் உள்ள மான்செஸ்ரர் பல்கலைக்கழக நாடகத்துறை விரிவுரையாளர் ஜேம்எல் தோம்சன் அவர்கள் 28.07.2004 புதன்கிழமை மாலையில் திருமறைக் கலாமன்ற நாடகப் பயிலக மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு யாழ். மறைக்கல்வி நடுநிலைய மண்டபத்தில் அரங்கக் களப் பயிற்சியினை வழங்கினார். இதில் 50 வரையிலானோர் கலந்து கொண்டார்கள். இதேபோல் செயல் திறன் அரங்க இயக்கத்தினருக்கும் பயிற்சிகளை வழங்கினார்.
இதேவேளை, செயல்திறன் அரங்க இயக்கத்தின் ஏற்பாட்டில் 23.07.2004 வியாழன் மாலையில் யாழ் நாவலர் கலாசார மண்டபத்தில் 'பிரயோக அரங்கு தொடர்பான சிறப்புக் கருத்தரங்கு ஒன்றையும் அவர் நடத்தினார், ஜேம்ஸ் தொம்சன் அவர்கள் முன்னதாக 2000 ஆண்டிலும் யாழ் வருகை தந்திருந்தமை இங்கு நினைவிற் கொள்ளத்தக்கது.
செயல் திறன் அரங்க இயக்கத்தின் ஏற்பாட்டில் 22.09.2004 இல் நாவலர் கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற மற்றுமொரு கருத்தரங்கில் கடந்த மூன்றாண்டுகளாக இந்தியாவில் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் நாடக அரங்கியலுக்கான உயர்கல்வியினை பயின்று தாயகம் திரும்பியுள்ள திரு. செ.சுந்தரேஸ் அவர்கள் "சமகால இந்திய அரங்குகளின் போக்கு ஒரு அனுபவப் பகிர்வு” என்னும் தலைப்பில் உரை நிகழ்த்தினார், திரு. குழந்தை ம. சண்முகலிங்கம் அவர்கள் இதற்கு தலைமை தாங்கினார்.
வலிகாமம் வலயத்தைச் சேர்ந்த ஆரம்பப் பாடசாலை ஆசிரியர்களுக்கான சிறுவர் அரங்கக் களப்பயிற்சி செப்ரெம்பர் மாதம் 27 ஆம், 28 ஆம் திகதிகளில் மருதனார் மடம் இராமநாதன் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது. இதில் வள ஆளுநர்களாக குழந்தை ம. சண்முகலிங்கம், செ. கந்தரேஸ், க.இ. கமலநாதன் ஆகியோர் செயற்பட்டார்கள்.
திருமறைக் கலாமன்ற நாடகப்பயிலக மாணவர்களுக்கும் அரங்கப் பயிற்சிப் பட்டறைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.
f இதழ்வித்

፲ኳኑmህ
திருமறைக் கலாமன்றம் நடத்தி lب ஈழத்துக் கூத்துவிழா
ஒ7 മസ്ത്രജ് தர்மிசி
யாழ் திருமறைக் கலாமன்றம் இவ்வாண்டின் ஜூலை மாதத்தில் மூன்று நாட்களுகது நடத்தியிருந்த இசை நாடக விழாவும், கடந்த ஆண்டின் செப்ரெம்பர் மாதத்தில் நான்கு நாட்களுக்கு நடத்தியிருந்த ஈழத்துக் கூத்து விழாவும் இசைநாடக மற்றும் நாட்டுக்கூத்துத் துறைகளில் எமது மண்ணில் மீளவும் ஒரு புத்துயிர்ப்பைத் தோற்றுவித்த நிகழ்வுகள் என்பதை உறுதிப்படக் கூறலாம். அந்த வகையில், இக் கட்டுரை ஈழத்துக் கூத்து விழாபற்றிய பார்வையை முன்வைக்கிறது.
2003ம் ஆண்டின் செப்ரெம்பர் மாதத்தின் 11.12.13.14 ஆகிய நான்கு நாட்களும் மிகவும் பெறுமதி வாய்ந்த நாட்கள் என்று தான் கூறவேண்டும். 'ஈழத்தின் வெவ்வேறு பிரதேசங்களிலுமுள்ள கூத்து மரபுகளை அறிகை செய்தல், தேசிய அரங்கை நோக்கிய தேடலை ஏற்படுத்துதல் என்னும் நோக்குகளோடு எமது மன்றத்தால் ஒழுங்கு செய்யப்பட்டு நடத்தப்படவுள்ள இக்கூத்து விழாவுக்கு தங்களையும் அழைப்பதில் மகிழ்வடைகின்றோம் என எனக்கு வழங்கப்பட்ட அழைப்பிதழிற்கமைவாக நானும் இவ்விழாவில் கலந்து கொண்டிருந்தேன். இதற்கு முன்னரும் 10 வருடங்களுக்கு முன்பாக 1993 ஆம் ஆண்டிலும் மே மாதம் 7ஆம், 8ஆம். 9ஆம் திகதிகளில் திருமறைக்கலாமன்றத்தால் நாட்டுக்கூத்து விழா நடத்தப்பட்டிருந்தபோது அவ்விழாவிலும் அப்போது கலந்து கொண்ட நினைவுகள் இவ்விழாவின்போதும் என்னுள் எழுந்திருந்தது.
ஆற்றுயிர் |ı

Page 34
அப்போதைய சூழலில் அவ்விழாவும் நாட்டுக்கூத்துத் துறையில் ஒரு மறுமலர்ச்சியை தோற்றுவிக்கும் விழாவாக அமைந்திருந்தாலும், இரண்டாவது தடவையாக "ஈழத்துக் கூத்து விழா" என்ற பெயரிடப்பட்டு நடத்தப்பட்ட இவ்விழா பல வழிகளிலும் முக்கியத்துவமும், சிறப்பும் பெற்று நின்றதனை உணர்ந்துகொள்ள முடிந்தது. காரணம் 1993-2003 இற்கு இடைப்பட்ட பத்து வருட காலத்திற்குள் எமது மண்ணிலும் உலகச் சூழலிலும் ஏற்பட்ட பாரிய மாற்றங்களும் அவை எம்மத்தியில் ஏற்படுத்தி வரும் தாக்கங்களும் தான்.
1993 இல் கூத்து விழா நடத்தப்பட்டிருந்த காலத்தை நோக்கினால், காலம் காலமாக, இரவிரவாக கூத்தினை மேடையேற்றி மகிழ்ந்திருந்து, எமது பாரம்பரிய கலை வடிவங்களை காத்துவந்த எமது பாரம்பரியமிக்க பிரதேசங்கள் பல இராணுவ ஆக்கிரமிப்பால் இடம்பெயர்ந்திருந்த சூழலில் அவ்விழா நடத்தப்பட்டிருந்தது. இடம்பெயர்வுகளால் ஒரு மையப்பகுதிக்குள் திரண்டிருந்த நாட்டுக்கூத்து கலைஞர்கள், ஆர்வலர்களுக்கெல்லாம் ஒரு புதுநம்பிக்கையை அவ்விழா கொடுத்திருந்தது. எனினும் "எமது பாரம்பரியக் கலைகள் எல்லாம் இனி அழிந்துபோய் விடுமோ” என்று இன்று எம்மத்தியில் எழுகின்ற அச்ச ஸ்டனர்வுகளை அன்றைய அக்காலம் பெரிதாக தோற்றுவித்திருக்கவில்லை. ஆனால், முன்னோக்கி நகர்ந்துவிட்ட இந்த பத்து வருட அசைவில் எம் முன்பாக எழுகின்ற மிக முக்கியமான அச்சமாக மேலே குறிப்பிடப்பட்ட வினாதான் எழுகின்றது. ஏனெனில் இன்றைய உலகியல் போக்கில் மிக வேகமாக மாற்றமடைந்து வரும் தொழில் நுட்ப யுகத்துக்குள் அல்லது மேலத்தேய கலாசார பரவலாக்கங்களுக்குள் அகப்பட்டு எமது தேசமும், தேச மக்களும் கூட எமது சுயங்கள், பாரம்பரியங்களை மறந்து நிராகரித்து செல்கின்ற நிலை தோன்றி வருவதுதான். காலச்சூழல்களில் ஏற்படுகின்ற நல்ல மாற்றங்கள் உள்வாங்கப்பட வேண்டியவைதான். எனினும் அவை எமது அடையாளங்களை காவு கொள்ளாதபடி பார்த்துக் கோள்ளவேண்டும். ஆனால், இன்றுள்ள நிலை கவலை தருவதாகவே உள்ளது.
நீண்டு நடந்த போரில் அழிக்கப்பட்டுவிட்ட எம் கலைச் சொத்துக்கள் ஏராளமானவை. எஞ்சியிருப்பவற்றையாவது நாம் இத்தருணத்தில் காக்கவும், பேணவும் முனைவதுதான் எமது இனத்தின் எதிர்கால இருத்தலுக்கான மிக முக்கியமான பங்களிப்பைச் செய்வதாக அமையும். இத்தகைய ஒரு சூழலில் தான் 'ஈழத்துக் கூத்து விழா' வின் பெறுமானத்தையும், பயன்பாட்டையும் உணர்ந்து கொளள முடிகின்றது.
 

இன்னும் ஒரு வகையில் நோக்கினால், 1993 இல் எமது மண்ணில் இருந்த முற்றுகைச் சூழலில் குடாநாட்டுக்குள் மட்டும் உள்ள பல்வேறு பிரதேசங்களிலுமுள்ள வெவ்வேறு பிரதேசக் கூத்துக்களையும் ஏனைய நிகழ்வுகளையும் கொனன்டதாக அப்போதைய கூத்து விழா அமைந்திருந்தது. ஆனால் இம்முறை ஈழத்தின் பல்வேறு பிரதேசங்களிலுமுள்ள சுத்துக்களையும் அந்த அந்தப் பிரதேசங்களிலிருந்து ஒருசேரக்கொண்டு வந்து அந்த அந்தப் பிரதேசக் கலைஞர்களைக் கொண்டே அவை தொடர்பான ஆய்வுகளையும் நடத்தியிருந்தார்கள். இதனால் 'ஈழத்துக் கூத்து விழா' பெயரிற்கமைவாக சிறப்பாக அமைந்திருந்தது. இதற்குப் பின்னால் இருந்திருக்ககூடிய மனித உழைப்பும் மிக அதிகம்தான் என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.
நான்து நாட்களுக்கு தொடராக நடத்தப்பட்டிருந்த இவ்விழாவில் பகல் பொழுதுகளில் யாழ் மறைக்கல்வி நடுநிலைய மண்டபத்தில் நாட்டுக்கூத்து தொடர்பான கருத்தமர்வுகளும், மாலைப் பொழுதுகளில் திருமறைக் கலாமன்ற அரங்கில் கூத்து அளிக்கைகளும் இடம்பெற்றிருந்தன. இவை முறையே முதலாம் நாளில் மன்னார், மலையகப் பிரதேசங்கள் சார்ந்தவையாகவும், இரண்டாம் நாளில் மட்டக்களப்பு, வன்னிப் பிரதேசங்கள் சார்ந்தவையாகவும், மூன்றாம் நாளில் யாழ்ப்பாணத்தில் பல பிரதேசங்கள் சார்ந்தவையாகவும், நான்காம் நாளில் பொதுமைப்பட்டதாகவும் அமைந்திருந்தது. இக்கருத்தமர்வுகளில் இடம்பெற்ற கருத்துரைகளின் மூலம் பல்வேறு பிரதேச கூத்துகள் பற்றியும், அவற்றின் மரபுகளையும் தெளிவாக அறிந்து கொள்ள முடிந்ததுடன் தினமும் இரண்டு கூத்துக்களாக நான்கு நாட்களிலும் அளிக்கை செய்யப்பட்ட 8 வகையான கூத்துக்களுக்கூடாக கூத்துக்களிலுள்ள பல்வேறு வகையான தனித்துவ முறைமைகளையும் கனன்டு கொள்ளமுடிந்தது.
கருத்தரங்குகள்
நான்கு நாட்களிலும் காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகி மாலை 5.30 மணிவரை கருத்தரங்குகள் இடம் பெற்றது. முதல் நாளில் "மன்னார் பிரதேசக் கூத்துமரபுகள் என்ற தலைப்பில் காலைக் கருத்தமர்வு இடம்பெற்றது. இதற்கு திருமறைக் கலாமன்றத்தைச் சேர்ந்த ம. சாம் பிரதீபன் தலைமை தாங்க, "மன்னார் பிரதேசக் கூத்து மரபு ஓர் அறிமுகம் என்ற தலைப்பில் மன்னாரைச் சேர்ந்த எஸ். ஏ. உதயனும், "மன்னார் பிரதேசக் கூத்துமரபு செயல்முறை விளக்கம் என்ற தலைப்பில் அண்ணாவியார் செபமாலை குழந்தையும் கருத்துரை பாற்றினார்கள். செபமாலை குழந்தை அவர்கள் தனது உரையினை செயல்முறை

Page 35
விளக்கங்களுடன் வழங்கியிருந்தார். மாலை நிகழ்வுகள் ‘மலையகப் பிரதேசக் கூத்து மரபுகள்' பற்றியதாக அமைந்த்திருந்தது. இதற்கு திருமறைக் கலாமன்றத்தைச் சேர்ந்த யோ, யோண்சன் ராஜ்குமார் தலைமை தாங்கினார். இதன்போது 'காமன் கூத்தின் அரசியல் பொருளாதாரம் - மலையகத் தமிழர் பண்பாட்டியல் ஆய்வு' என்ற தலைப்பில் பொன் பிரபாகரனும், மலையகத் தமிழர் பண்பாட்டில் அர்ச்சுனன் தபசு" என்ற தலைப்பில் அன்னமுத்து ஐெகன்தாசனும் கருத்துரை வழங்கினார்கள். இவர்கள் இருவரும் மலையகத்தைச் சேர்ந்தவர்களாவர்.
இரண்டாம் நாள் கருத்தமர்வுகள் காலையில், மட்டக்களப்பு பிரதேசக் கூத்து மரபுகளை உள்ளடக்கியதாக அமைந்திருந்தது. கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறை விரிவுரையாளர் சி. ஜெயசங்கர் தலைமையில் இடம் பெற்ற இவ்வமர்வில் மட்டக்களப்பு "மூன்றாவது கனன் அரங்கச் செயற்பாட்டுக் குழுவின் ஒருங்கிணைப்பில், மட்டக்களப்பு வடமோடி கூத்து அளிக்கைகளை சீலாமுனைக் கலைக் கழக கலைஞர்கள் நிகழ்த்திக் காட்ட, து. கெளரீஸ்வரன் அதற்கான விளக்கத்தினை வழங்கினார். இதே போல் மட்டக்களப்பு தென்மோடி கூத்து அளிக்கைகளை கன்னன் குடா கண்ணகி கலைக்கழக கலைஞர்கள் நிகழ்த்திக் காட்ட, மா. செந்துரன் அவற்றுக்கான விளக்கங்களை வழங்கியிருந்தார். ஆறாலையில் 'வன்னிப் பிரதேச கூத்து மரபுகள் என்ற தலைப்பில் கருத்தமர்வு இடம்பெற்றது. இதன்போது வன்னிப்பிரதேசக் கூத்து மரபுகள் - ஓர் அறிமுகம் எனற தலைப்பில் க.அருந்தாகரன் கருத்துரையாற்றினார்.
மூன்றாம் நாளின் முழுநாளும் யாழ்ப்பாணப் பிரதேசக் கூத்து மரபுகளை உள்ளடக்கியதாக கருத்தமர்வுகள் இடம்பெற்றது. இதன்போது காலை அமர்வுகளுக்கு திருமறைக் கலாமன்றத்தைச் சேர்ந்த யோயோன்சன் ராஜ்குமாரும், மாலை அமர்வுகளுக்கு திருமறைக் கலாமன்றத்தைச் சேர்ந்த செல்வி. வைதேகி வைகுந்தநாதனும் தலைமை தாங்கினார்கள். இதில், வட்டுக்கோட்டை கூத்து மரபுகள் தொடர்பாக போ. இரவிச்சந்திரனும், வடமாராட்சி - பருத்தித்துறை கூத்துமரபு ஓர் அறிமுகம் என்ற தலைப்பில் பா. இரகுவரனும் - காலையில் கருத்துரையாற்றியிருந்தார்கள். இரகுவரன் அவர்கள் அதிகம் அறிமுகமில்லாத நாட்டை என்ற கூத்துப் பற்றியும் விளக்கமளித்திருந்தார். மாலையில் யாழ்ப்பான தென்மோடி நாட்டுக்கூத்து மரபு - கத்தோலிக்க கூத்துமரபு தொடர்பாக பா.அமிர்தநாயகம் மற்றும் யோயோன்ைசன் ராஜ்குமார் ஆகியோர் கருத்துரை வழங்கியிருந்தார்கள். தொடர்ந்து 'சிந்து நடைக் கூத்துமரபு தொடர்பாக அருந்தவநாதன் கருத்துரை வழங்கினார்.
 

நான்காம் நாள் பொது அமர்வுகளாக அமைந்திருந்தது. ஆனாலும் இக்கூத்து விழாவின் மிக முக்கிய அமர்வாகவும் இது அமைந்திருந்தது. அன்றைய நாளில் "நாட்டுக் கூத்தின் எதிர்காலப் பேணுகையும், தேசிய அரங்கை நோக்கிய செயல் நகர்வும் என்ற தலைப்பில் மிகவும் காத்திரம்மிக்கதான கலந்ததாய்வரங்கு இடம்பெற்றது. இதன்போது புண்மது மன்னின் நாடக அரங்கியல் துறைசார்ந்த பேராசிரியர் சிமெளனகுரு, பேராசிரியர் நீ.மரியசேவியர் அடிகள், சி.ஜெயசங்கள், பாலசுதுமார், பா.அகிலன், பா.அமிர்தநாயகம், செ.மேற்றாஸ்மயில், யோ.யோன்சன் ராஜ்குமார், க.அருந்தாகரன், அ.பாலதாஸ், க.திலகநாதன் உட்பட பலர் தமது பெறுமதி வாய்ந்த கருத்துக்களை வழங்கினார்கள். இதன்போது பல்வேறு மாறுபட்ட கருத்துக்கள் விவாதங்களாக முட்டி மோதின. எனினும் பயன்தரவல்ல விவாதங்களாக அவை அமைந்திருந்தன. இதன்போது கூத்துக்களில் மரபுகளை மாற்றம் செய்யக்கூடாது என்ற கருத்துக்களும், கூத்துக்களின் காலப் மாற்றங்களுகேற்ப தேவையான மாற்றங்களை புதுத்துதல் அவசியம் என்ற கருத்துக்களுமே மேலோங்கி நின்றன. இதற்கூடாக எமக்கான தேசிய மரபை உருவாக்கவேண்டியதன் அவசியம் உணரப்பட்டது. கடித்துத் தொடர்பாக இன்றைய காலகட்டத்தில் எடுக்கப்படவேண்டிய முடிவுகளை, கேள்விகளை முன்வைத்த காத்திரமிக்க விவாதங்களும், கருத்தளிப்புகளும் இடம்பெற்று ஒரு செயல்முறை நீட்சிக்கு வழிகோலியதாகவும் இது அமைந்திருந்தது எனலாம். இன்னும் பல்வேறு பிரதேசங்களிலும் கூத்தில் ஈடுபடும் இளங்கலைஞர்கள் பலர் இவ்விவாதத்தில் பங்குகொண்டமையும் இதன் பெறுமானத்தை பன்மடங்காக்கியது.
இதற்கு முன்னதாக இவ் அமர்வின் ஆரம்பத்தில் பேராசிரியர் மெளனகுரு அவர்கள் "முன்னோக்கிய பாச்சலும் பின்நோக்கிய தேடலும் என்ற தலைப்பில் ஆற்றிய சிறப்புரை இன்றைய நிகழ்வுகளுக்கு சிகரம் வைத்ததுபோல் அமைந்திருந்தது. மாலையில் பேராசிரியர் மெளனகுரு அவர்களும், கிழக்குப் பல்கலைக்கழக நுணன்கலைத்துறை மானவர்களும் "நாட்டுக்கத்தை செயல் நெறிப்படுத்தும் முயற்சிகள்' தொடர்பான அறிமுகங்களை செயல்முறை விளக்கங்களுடன் வழங்கினார்கள்.
கூத்து அளிக்கைகள்
நான்கு நாட்களாக இடம்பெற்ற கூத்து விழாவில் இரவு வேளைகளில் திருமறைக் கலாமன்ற அரங்கில் மாலை 6.45 மணி முதல் கூத்துக்கள் அரங்கேற்றப்பட்டன. இதன்போது முதல்நாளில், மலையகத்தைச் சேர்ந்த புதிய பண்பாட்டு அமைப்பு அளிக்கைக் குழுவினரின் "அர்ச்சுனன் தபசு என்ற மலையகக்
ஆதிடுமுரு يجتشتيتيتيننتقل

Page 36
கூத்தும், மன்னார் முருங்கனைச் சேர்ந்த செபமாலை குழந்தை குழுவினரின் "கல்சுமந்த காவலர்கள் என்ற மன்னார் வடபாங்கு கூத்தும், இரண்டாம் நாளில், மலையகத்தைச் சேர்ந்த புதிய பண்பாட்டு அமைப்பு - அளிக்கைக் குழுவின் 'காமன் கூத்தும்'. யாழ் திருமறைக் கலாமன்ற இளைஞர் அவையினரின் 'ஏகலைவன்’ என்ற யாழ்ப்பான தென்மோடிக் கூத்தும், மூன்றாம் நாளில், வட்டுக்கோட்டை நாட்டுக்கூத்து அபிவிருத்திக் குழுவினரின் "கீசகன் வதை என்ற யாழ்ப்பான வடமோடிக்கூத்தும், யாழ் திருமறைக் கலாமன்றத்தின் "கம்பன் மகன்’ என்ற யாழ்ப்பான தென்மோடிக் கூத்தும், நான்காம் நாளில், கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறையினர் வழங்கிய பேராசிரியர் மெளனகுருவின் 'இராவனேசன் கூத்தும், யாழ் நாட்டாரியற் கழகம் வழங்கிய 'காத்தவராயன்' சிந்து நடைக்கூத்தும் அரங்கேறின. இவற்றில், 'இராவனேசன் புதிய முயற்சியாக அமைந்திருந்தது. அமரர் பேராசிரியர் சு.வித்தியானந்தளின் கூத்து புத்தாக்க முயற்சியின் வெளிப்பாடாக 1960களில் மேடையேற்றப்பட்ட இராவனேசனை தற்போது பேராசிரியர் மெளனகுரு அவர்கள் மீள் உருவாக்கம் செய்துள்ளார்.
ஏனையவை
ஏனைய பொது நிகழ்வுகளில் இடம்பெறும் வழமை நிகழ்வுகளான மங்கல விளக்கேற்றல், இறைவணக்கம், மெளனஅஞ்சலி, வரவேற்புரை, நன்றியுரை என்பன இக்கூத்து விழாவிலும் தினமும் இடம் பெற்றன. முதல் நாளில், காலையில் ஆரம்ப உரையினை திருமறைக் கலாமன்ற இயக்குனர் பேராசிரியர் நீ.மரியசேவியர் அடிகளார் நிகழ்த்தி கூத்து விழாவை ஆரம்பித்து வைத்தமை சிறப்பானதாக அமைந்திருந்தது. அவர் தனதுரையில் "தமிழர்கள் தம் தேசியத்தை நாடுகின்ற இந்த வேளையில் தமிழர்களின் தனித்துவம் மிக்க கலைகளும் அதற்குச் சமமாக பேணப்படுதல் அவசியம். ஒவ்வொரு இனத்தினது தனித்துவத்தையும் அந்த இனம் சார்ந்த கலைகளே எடுத்துக்காட்டுகின்றன. அந்தவகையில், அழிவடையும் நிலையில் உள்ள ஈழத்து கூத்துக்கலைக்கு புத்துயிர் ஊட்டுதல் அவசியமும், அவசரமானதுமான பணி” என்றார்.
தினமும் மாலைப்பொழுதுகளில் இடம்பெற்ற ஆரம்ப உரை மற்றும் சிறப்புரைகளை யாழ் வெகுஜன அமைப்புக்களின் ஒன்றியத் தலைவர் சூ, சொலமன் சிறில், யாழ். பல்கலைக்கழக தமிழ்த்துறை விரிவுரையாளர் கலாநிதி எஸ்.சிவலிங்கராசா, குருநகர் முன்னேற்ற ஐக்கிய முன்னணியின் அப்போதைய தலைவர் கி. கிறிஸல்ரோப்பர், யாழ் பிரதேச செயலர் பா. சேந்தில்நந்தனன், பாரம்பரியக் கலைகள் மேம்பாட்டுக் கழகச் செயலாளர் செ. மெற்றாளல்மயில்,
 

விடுதலைப் புலிகள் கலை பனபாட்டுக் கழகப் பொறுப்பாளர் கவிஞர் புதுவை இரத்தினதுரை, யாழ் பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் அசண்முகதாஸ் ஆகியோர் வழங்கியிருந்தார்கள் கூத்துவிழாவின் நிறைவு நாளுக்கு மகுடம் சூட்டியதுபோல் அமைந்த விடுதலைப் புலிகள் கலைப்பண்பாட்டுக் கழகப் பொறுப்பாளர் புதுவை இரத்தினதுரை அவர்களின் உரை அனைவரது கவனத்தையும் ஈர்ந்திருந்தது.
மொத்தத்தில் நான்கு நாட்களுக்கு, மிகுந்த பிரயத்தனம் எடுக்கப்பட்டு நடத்தி முடிக்கப்பட்டிருந்த ‘ஈழத்து கூத்துவிழா - 2003", கூத்துலகில் புதிய செயலூக்கங்களுக்கு வித்திட்டுள்ளது. ஈழத் தமிழர்களுக்குரிய தனித்துவம் வாய்ந்த கலை கூத்துத்தான் என்பதை மீண்டும் நினைவில்கொள்ள வழிவகுத்துள்ளது. நான்கு நாட்களிலும் அண்ணாவிமார்கள், நாட்டுக்கூத்துக் கலைஞர்கள், நாடக ரசிகர்கள், மானவர்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றும் , கண்டுகளித்துமிருந்த மிக முக்கிய - காலத்தின் முன்னுரிமைப் படுத்தப்பட்ட நிகழ்வாக இக்கூத்து விழா அமைந்திருந்தது. இதனை ஒழுங்கு செய்த திருமறைக் கலாமன்றம் பாராட்டுக்குரியது. இக்கூத்து விழாவுக்கு முன்னேற்பாடாக திருமறைக் கலாமன்றம் நடத்தியிருந்த தென்மோடி நாட்டுக் கூத்து போட்டியும் இங்கு குறிப்பிடப்பட வேண்டியது. இப்போட்டி கூட பல இடங்களிலும் நாட்டுக்கூத்து தொடர்பான விழிப்புணர்வு ஏற்பட வழிகோலியிருந்தது.
இறுதியாக இக் கட்டுரையின் நிறைவில் இன்னெரு விடயத்தையும் குறிப்பிடவேண்டி உள்ளது. ஈழத்து கூத்து விழாவுக்கு சில காலங்களுக்கு பின்னர் வெளிவந்து எனக்குப் பார்க்கக் கிடைத்த பேராசிரியர் சி. மொளனகுரு அவர்களின் மணிவிழா சிறப்பு மலரான "மெளனம்" நூலிலும், பேராசிரியரது இரண்டாம் பதிப்பாக வெளிவந்துள்ள "ஈழத்துத் தமிழ் நாடக அரங்கு' என்ற நூலிலும் என் மனதை நெருடிய இரு விடயங்கள்தான்.
1. "மேளனம் மலரில் 21ஆம் பக்கத்தில் உள்ள சி. மெளனகுருவின் வெளியீடுகளும், தயாரிப்புக்களும் என்ற பகுதியில் 4ஆவது பிரிவில் உள்ள சி. மெளனகுரு எழுதிய, நடித்த, நெறியாள்கை செய்த நாடகங்கள் (காலமுறைப்படி) என்ற தலைப்பின்கீழ் 36ஆம் பக்கத்தில் 2003 - இராவனேசன் பற்றிக் குறிப்பிடுகையில், அது மேடையேற்றப்பட்ட இடங்களாக மட்டக் களப்பு, யாழ்ப்பான நகரம் , யாழி , பல்கலைக்கழகம், உடுவில் மகளிர் கல்லூரி, வவுனியா கல்வியியற் கல்லூரி ஆகிய இடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் ஆச்சரியம் என்னவென்றால், யாழ்ப்பாணத்தில் மேடையேற்றப்பட்ட ஏனைய இரு இடங்களும் பெயர்களுடன் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் திருமறைக் கலாமன்றத்தால் நடத்தப்பட்ட ஈழத்துக் கூத்து விழாவில்தான், அவர்களது அழைப்பிற்கமைவாகவே "இராவனேசன் முதன்முறையாக கிழக்கிலிருந்து வடக்கில் யாழ்ப்பாணத்துக்கு கொண்டுவந்து மேடையேற்றப்பட்டது. யாழ்ப்பானத்தில் 'இராவனேசனின் முதல் மேடையேற்றம் திருமறைக் கலாமன்ற அரங்கிலேயே இடம்பெற்றது. ஈழத்து கூத்துவிழாவின் இறுதி நாளான 14.09.2003 மாலையில் மேடை
ஆற்று-பித் ꬂቧ

Page 37
யேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்தே ஏனைய இடங்களிலும் இராவனேசனர் மேடை யேற்றப்பட்டது. இதற்கு "நமது ஈழநாடு தினசரியில்| 鱷 18.09.2003 இல் வெளிவந்த “ஊர்சுற்றி எழுதுவது' என்னும் பத்தியில் 'இராவனேசன்’ பற்றி குறிப்பிடுகையில், "யாழ் திருமறைக் கலாமன்றம் யாழ்ப்பானத்தில் நடத்திய ஈழத்துக்கடித்து விழாவில்|ங்
பங்கேற்பதற்காக வந்த இராவனேசன். என்று|கேங் தொடரும் குறிப்பைபபும் பக்கத் துணையாக கொள்ளலாம். இவ்வாறிருக்க இந்நூலில் திருமறைக் கலாமன்றம் என்பதற்குப் பதிலாக யாழ்ப்பான நகரம் என்று பொதுமைப்பெயர் இடப்பட்டிருப்பது ஆச்சரியம் கலந்த வியப்பை தோற்றுவிக்கிறது.
ميني الإفرنجي.
2. 1993 இல் முதற்பதிப்பையும் 2004 ஆடியில் இரண்டாம் பதிப்பையும் கண்டு வெளிவந்துள்ள "ஈழத்துத் தமிழ் நாடக அரங்கு' என்னும் நூலின் இரண்டாம் பதிப்பில் 14ஆவது பிரிவாக புதிதாக சேர்க்கபட்டுள்ள "ஈழத்தின் சமகால நாடகச் செல்நெறிகள் என்ற பகுதியில் 198 ஆம் பக்கத்தில் 6ஆவது பந்தியில் யாழ்ப்பானத்தில் திருமறைக் கலாமன்றத்தால் 1993 இல் நடத்தப்பட்ட கூத்துவிழா பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அது வரவேற்கக்கூடியது. ஆனால், பத்து வருடங்களுக்கு முன்பு நடந்த இக்கூத்து விழாபற்றிய குறிப்பு, பத்து வருடங்களுக்கு பின் இந்நூலில் இடம்பெறும்போது - அதிலும் சிறப்பாக 2003 இல் ‘ஈழத்துக் கூத்துவிழா திருமறைக் கலாமன்றத்தால் நடத்தப்பட்டிருந்தது. இதில் இந்நூல் ஆசிரியரான பேராசிரியர் மெளனகுரு அவர்களும் கலந்துகொணர் டு உரைகளை வழங்கியிருந்ததுடன், கலைநிகழ்ச்சிகளையும் வழங்கியிருந்தார். ஆனால் "ஈழத்துக் கூத்துவிழா' தொடர்பான ஒரு குறிப்பும் இந்நூலில் இடம்பெறவில்லை. இந்நூல் ஆடி 2004 இல் பதிப்பிக்கப்பட்டுள்ளது. ஆகவே 2003 செப்ரேம்பர் மாதம் நடந்த கூத்துவிழா பற்றிய தகவல்கள் சேர்க்கப்பட்டிருக்க முடியும். ஏன் சேர்க்கப்படவில்லை என்பதுதான் புரியவில்லை. இவற்றை சம்மந்தப்பட்டவர்களின் கவனத்திற்கு முன்வைத்து இக் கட்டுனரயினை நிறைவு செய்கின்றேன். G}
உங்கள் கவனத்திற்கு
நாடகத் தயாரிப்புக்கள் மற்றும் அரங்கிபீப் சார்ந்த நிகழ்வுகள்ை
மேற்கொள்ளுர் அமைப்புக்கள். தனிநபர்கள் அவைபற்றிய தகவல்களை புகைப்படங்களுடன் எமக்கு அனுப்பிவைத்தால் அவற்றை "ஆற்றுகையில் பிரசுரிப்பதற்கு உதவியாக அமையும்.
ஆற்றுவதை
 

திருமறைக் கலாமன்றம் நடத்திய
= Filem -_′量 .. Hi = "#" id -- - جيلات G. ன்மோ ... BITL () is a 6 T-56T தென்மோடி நாட்டுக் கூத்துப் போட்டி
திருமறைக் கலாமன்றம் நடத்திய ஈழத்து கூத்து விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட தென்மோடி நாட்டுக்கூத்துப் போட்டிகள் 11.10.2003 இல் யாழ் திருக்குடும்ப கன்னியர் மட மண்டபத்தில் நடைபெற்றன. நாவாந்துறை, பருத்தித்துறை, கொழும்புத்துறை, பாஷையூர், தம்பாட்டி ஆகிய பிரதேசங்களிலிருந்து 7 நாட்டுக்கூத்துக்கள் இப் போட்டிகளில் பங்குபற்றியிருந்தன. இதன் போது முதலாவது இடத்தை பாஷைபூர் கலைஞர்களின் பண்டாரவன்னியன்' நாட்டுக்கூத்தும், இரண்டாவது இடத்தை தம்பாட்டி காந்திஜி நாடக மன்றத்தினரின் பண்டாரவன்னியன்' நாட்டுக்கூத்தும், மூன்றாவது இடத்தை நாவாந்துறை கலைஞர்களின் 'புனிதவதி நாட்டுக்கூத்தும் பெற்றுக்கொண்டன.
இவர்களுக்கான பரிசளிப்பு வைபவம் (3.12.2003 இல் யாழ், மறைக்கல்வி நடுநிலைய மண்டபத்தில் இடம்பெற்ற திருமறைக் கலாமன்ற தின சிறப்பு கலை நிகழ்வுகளின்போது இடம்பெற்றது. இதன்போது முதல் மூன்று இடங்களைப் பெற்ற நாட்டுக்கூத்துக்களுக்கு முறையே 8000.00, 6000,00, 4000.00 பனப் பரிசும். அவற்றில் பங்குபற்றிய கலைஞர்கள் அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இதே வேளை நாட்டுக் கூத்துப் போட்டியில் பங்குபற்றிய ஏனைய கூத்துக்களுக்கு ஊக்குவிப்புப் பரிசாக தலா 1000 ரூபாவும் வழங்கப்பட்டது. அத்துடன் முதல் இடத்தைப் பெற்ற பாஷைபூர் கலைஞர்களின் "பண்டாரவன்னியன் நாட்டுக்கூத்தும் மேடையேற்றப்பட்டது.
‘புதுயுகம் நோக்கி நிகழ்வில்.
திருமறைக்கலாமன்ற ஏற்பாட்டில் இலங்கையிலுள்ள அனைத்து திருமறைக் கலாமன்ற இளைஞர்களும், சிறுவர்களும் பங்குபற்றிய புதுயுகம் நோக்கி என்ற சிறுவர், இளையோர் கலைக் கதம்ப நிகழ்வு கொழும்பு - 02 இல் அமைந்துள்ள ஆயர்கள் கல்லூரி மண்டபத்தில் செப்ரெம்பர் 27, 2004 மாலையில் இடம்பெற்றது. இதன்போது 80 இற்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கு பற்றிய புதுயுகம் நோக்கி' என்ற வார்த்தைகளற்ற நாடகம் மேடையேற்றப்பட்டது. இதனை எழுதி நெறியாள்கை செய்தவர் பீ. சே. கலிஸ் ஆவார். இதற்கான இசையமைப்பை கு. அற்புதன் வழங்கியிருந்தார்.
அனைத்து இனங்களும் தமது கலை, கலாசார, பண்பாடு தொடர்பான தனித்துவங்களைப் போற்றி வளர்த்து, ஏனைய இனங்களின் வளர்ச்சிக்குத் துணைசெய்து, ஒற்றுமையாக, வேற்றுமைகளை இனங்கண்டு. அவைகளைத் தவிர்த்து ஒன்றிணைந்து சேயற்படுவோம் என்ற பொருள்கொண்டதாக இந்நாடகம் அமைந்திருந்தது.
ஆற்றுTத ןד

Page 38
தேசிய நாடக விழாவில் 'கொல் ஈனுங் கொற்றம்’
கலாசாரத் திணைக்களத்தின் அனுசரணையுடன்: ای இலங்கைக் கலைக்கழகத்தின் தேசிய நாடக சபை நடத்தி தேசிய நாடகவிழா-2004 டிசம்பர் மாதம் 02 ஆம் — முதல் 19 ஆம் திகதி வரை கோழும்பு 07 இல் அமைந்துள்ள ஜோண் 1 சில்வா" அரங்கில் நடைபெற்றது. இதன்போது 18 ஆம் திகதி மாலையில் யாழ் திருமறைக் கலாமன்றத் தயாரிப்பில் யோ, யோனின்சன் ராஜ்குமாரின் எழுத்துருவிலும் நேறியாள்கையிலும் உருவான 'கொல் ஈனுங் கோற்றம்' என்னும் கூத்துருவ நாடகம் மேடையேற்றப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றது. இராமாயணத்தில் கும்பகர்ணன் வதைப் படலத்தினை பின்னணியாகக்கொண்டு புதிய பாடு பொருளில், புதிய கோணத்தில் நாட்டுக் கூத்தின் பல்வேறு பிரதேச Lry LT63)61Tulf ஒன்றினைத்து அமைக்கப்பட்ட ஆற்றுகையாக இது அமைந்துள்ளது. இந் நாடகத்தில் 40 வரையிலான கலைஞர்கள் பங்குபற்றியிருந்தார்கள். இந் நாடகம் விரைவில் யாழ்ப்பாணத்திலும் பரவலாக மேடையேற்றப்படவுள்ளது.
தேசிய நாடக விழாவில் 2 ஆம் திகதி முதல் தினமும் மாலையில் பல நாடகங்கள் மேடையேற்றப்பட்டன. இதன்போது சிங்கள, ஆங்கில நாடகங்களுடன் தமிழ் நாடகங்களாக கொழும்பு கிருஷ்ண கலாலயத்தின் தயாரிப்பில் கே. மோகன் குமாரின் "வெள்ளைச் சிறகுகள் விரிகின்றன" என்ற நவீன நாடகமும், யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற நாடகங்களாக இளவாலை திருமறைக் கலாமன்றத் தயாரிப்பில் போன் கணேசமூர்த்தியின் மனு விலங்கு என்ற நாடகமும், யாழ். திருமறைக் கலாமன்றத்தின் "கொஸ் ஈனுங் கொற்றம்" என்ற கூத்துருவ நாடகமும் மேடையேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, தேசிய நாடக விழாவின் நிறைவுநாளான 19 ஆம் திகதி இடம்பெற்ற பரிசளிப்பு வைபவத்தின்போது கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக நாடகத்துறையில் ஈடுபட்டுவரும் நவாலியூர் நா. செல்லத்துரை அவர்களுக்கு ஐம்பது ஆயிரம் ருபா பனப்பரிசு வழங்கப்பட்டது. இதுவரை காலமும் சிங்கள நாடகக் கலைஞர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுவந்த இப்பரிசு வரலாற்றில் முதற்தடவையாக தமிழ்க் கலைஞர் ஒருவருக்கும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேபோல், நடிப்புத் திறமைக்காக திருமதி மணிமேகலை |இராமநாதனுக்கும் விருது வழங்கப் பட்டது. இப் பரிசில்களை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷர் ஷ வழங்கிக் கெளரவித்தார்,
ஆற்றுனத் כל
 
 
 
 
 
 
 

நாட்டுக்கூத்தின் எதிர்காலமும், தேசிய அரங்கை நோக்கிய தேடலும்
தொகுப்பு - போ. யோண்சன் ராஜ்குமார்
(கருத்துப் பகிர்வு)
கடந்த இதழின் தொடர்ச்சி
கடந்த இதழில் கூத்தின் எதிர்காலம் தொடர்பாக முன்வைத்த கருத்து நிலைகளுக்கு உரம் சேர்க்கும் வகையில் திருமறைக் கலாமன்றம் நடத்திய கூத்துவிழாவின் இறுதிநாள் கருத்துரைகள் அமைந்திருந்தன. அன்றைய நாளில் நடைபெற்ற விவாதங்கள், கருத்து முன்வைப்புக்கள் இக்கட்டுரையாக்கத்திற்கு மிகவும் பொருத்தமாக இருப்பதனால் அவ்விவாதங்களில் சிலவற்றை இக்கட்டுரையில் இனைத்துக்கொள்ள முற்படுகின்றேன்.
"தேசிய அரங்கை உருவாக்குதல் என்பது ஒரு வளமான கற்பனை-"
".கூத்தைப்படச்சட்டமேடைக்கு கொண்டுவருதல் என்பது கூத்தைப்பேணுதல் என்று நாம் நினைக்கின்ற அடிப்படையான கூத்தைப் பேணுதலா என்பது எனக்குத்தேரியாது. உதாரணமாக, மட்டக்களட்புக்கூத்து வட்டக் களரியின் இருளுக்குள் குறைந்த ஒளிக்குள்ளிருந்து வெளிவரும்போது அதன் அழகியல் என்னவாகும் என்பதுபற்றி யோசித்துதான் ஆகவேண்டும். மரபு மாறுகின்றது எப்பதை நான் நூறுவீதம் ஏற்றுக்கொள்ளுகின்றேன். ஆனால் மரபை பார் மாற்றுகிறார்கள் என்பதுதான் பிரச்சனை. மக்கள் மாற்றுகிறார்களா? சமூகத்தின் இயல்பான மாற்றங்களோடு மாறுகின்றதா?. அல்லது புத்திஜீவிகள் என்று சொல்லப்படுபவர்களால் மாற்றப்படுகின்றதா?. கிராமத்தில் "நான் பல்கலைக்கழகத்தைச் சேர்த்தவன்' என்ற அறிமுகமே எனக்கான அதிகாரமாகவரும். நான் சொல்வது வேதமாக மாறும், புத்திஜீவிகள், சரித்தாடும் மக்கள் மத்தியிஸ் சென்று ஊக்கப்படுத்தும் செயல் சாதகமானதுதான். ஆனாலும் அங்குதான் பாதகமான நிலையும் உள்ளது அவர்களின் கருத்துக்கள் வேதவாக்காகின்ற அபாயம் உள்ளது.
எமது பண்பாட்டிலுள்ள புராணங்கள் எல்லாம் "பன்முக எடுத்துரைப்பு’க்குரியவை அவை பார்க் குந்தோறும் எங்கள் கொள்ளளவுக்கேற்ப, வயது அனுபவங்களுக்கேற்ப அர்த்தப்பாடுகளை மாற்றுகின்றன. பரம்பரையான மூட, அல்லது கேவலமான கதைகள் என்று சொல்லப்பட்டவைகள் கூட, சிலவேளையில் நாங்கள் இப்போது பார்க்கும்போது வேறு அர்த்தங்களை கோடுத்துவிடக்கூடும்; நாங்கள் ஏதோவொன்றை அழுத்தப்போகின்றோம் என்பதற்கூடாக, கூத்தை ஒற்றைப்படையாக்குகின்றோம். இந்தப்பிரச்சனையை புத்தி ஜீவிகள்தான்
ஆந்நாத் 73

Page 39
கொண்டு வருகிறார்கள்.
0 0 & 0 & 0 x 0 தேசிய அரங்கை உருவாக்குதல் என்பது ஒரு வளமான கற்பனை. உலகத்தின் எல்லா அரங்குகளும் எவ்வாறு உருவாகி இருக்கின்றன என்று வரலாற்று அனுபவங்களுக்குத் திரும்பிச்சென்று பார்த்தால் புரிந்து கொள்ளமுடியும். யக்ஷகாணம், கதகளி உட்பட ஆராய்ந்து பார்த்தால் புரிந்து கொள்ளலாம். ஒருகலைஞன் எல்லாக்கூத்து வடிவங்களையும், மரபுகளையும் செரித்துக்கொண்டு ஏதோவொரு கணத்தில் பற்றி எரிகின்ற படைப்புச் சூழலில் கண்டுபிடிக்கின்ற ஒரு முழுமை. இதில் அரைக்கிலோ அதில் கால்க்கிலோ போட்டொரு தேசிய வடிவத்தை உருவாக்கலாம் என்று புத்தியால் பேசுவது, கலைஞர்களால் எவ்விதம் சாத்தியமாகும் என்பது எனக்குப்புரியவில்லை.”
“...எங்களிடம் வலுவான பிரதேசவாதம் உள்ளது. அதனை நான் சரி என்று சொல்லவில்லை. ஆனால் இந்தப்பிரதேசங்களின் தனித்துவங்களும் வேறுபாடுகளும் சேர்ந்துதான் நமது தேசியம். ஆகவே இந்தப்பிரதேசங்களின் வடிவங்களைவிட்டு நடுவடிவத்துக்கு வரவேண்டுமா? எனக்குத் தெரியவில்லை. ஆனால் இயல்பாக காலப்போக்கிலே அவ்வாறு நிகழலாம். “தேசியம் என்கின்ற கருதுகோளை வைத்துக்கொண்டு கலை எங்காவது படைக்கப்பட்டதாக எனக்குத் தெரியவில்லை. தேசிய அரங்கு (National Theatre) 61 6oi []) Gulu (f) 6ú g), ([bB 5 (oig 6ú 6o (T uð அரங்கக்கட்டடங்கள்தான் அங்கு பல்வேறு நாடகங்கள் ஆடப்பட்டன. ஆக, கிட்லரின் ஆட்சிக்காலத்தில் மட்டும் அவ்வாறான ஒரு சித்தனை வந்துள்ளது. எங்களிடையே பன்மைப்பாடுகள் இருக்கின்றன a பன்மைப்பாடுகள் பேணப்படட்டும் கூத்தின் வல்லவர்கள் வந்து தங்களுக்குரிய வடிவத்தை உருவாக்கட்டும் அதில் எந்தப்பிரச்சினையும் இல்லை. ஆனால் அவர்கள் உருவாக்கியதுதான் தேசியவடிவம் என்று சொல்வது பொருத்தமாகாது. ஷேக்ஸ்பியர் வந்தது பிரித்தானிய அரங்கு வெற்றிவாகை சூடிய காலத்தில், அந்த யுகசந்தியில் வந்தார் அவ்வாறுதான் பாரதியும் வந்தார். இதை புரிந்துகொள்ளவேண்டும்.”
பா. அகிலன், யாழ்ப்பாணம்.
“கூத்தை பல மூலங்களில் இருந்து வடிவமைக்க வேண்டும்”
“...எவ்வாறு யக்ஷகானமும், கதகளியும், கர்னாடகம்,
கேராளத்திற்கென்று தேசிய வடிவமாக மாறியது.? ரி. வி. கரந் அவர்கள் அதுபற்றிய ஆய்வை பெரிய புத்தகமாக வெளியிட்டுள்ளார். அவர் எப்படி யக்ஷகானத்தை கிராமங்களில் மிகவும் சிதைவடைந்து போனநிலையில் இருந்து இந்தநிலைக்கு கொண்டு வந்தார் என்ற அவரது அனுபவம் எமக்குச்சிறந்த உதாரணமாக நிற்கின்றது. அவர் தனியே யக்ஷகானத்தை மட்டும் வைத்துக்கொண்டு அதனைச் செய்யவில்லை. தமிழகத் தெருக்கூத்து, கூடியாட்டம், கதகளி இவற்றில் இருந்துதான் அவர்
74
శిjpgర

மூலங்களை எடுத்தக்கொண்டதாக கூறுகிறார். அவர் எல்லா வகையிலும் அதற்கான மூலங்களைப் பெறுகின்றார். குறிப்பாக அவர் யக்ஷகானத்துக்குரிய ஆகாரியத்தை (உடை, ஒப்பனை) வடிவமைப்பது பற்றி மிகுந்த கவனம் செலுத்தினார். அதன் புஜக்கட்டை, உடைகள், கிரீடம், ஒப்பனை எல்லாமே எங்கெங்கிருந்து பெறப்பட்டது என்பதற்கான முழுவிடயத்தையும் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார்.
அவ்வாறே கதகளியும் மக்களின் விருப்புக்கேற்பதான் ஆடப்பட்டு வந்தது. கேரளாவை மீட்டெடுப்பது என்ற கொம்னிசுகளின் சிந்தனைக்குப்பின்னர் கிருஷ்ணராட்டம், தேவராட்டம், கூடியாட்டம் போன்றதான பல மூலங்களில் இருந்து எடுத்தாளப்பட்ட விடயங்களில் இருந்துதான் இன்றைய கதகளி வடிவமைக்கப்பட்டது. அன்றைய பழைய கதகளி இன்று இல்லை. எங்காவது கிராமங்களில் சில இடங்களில் மட்டும் ஆடப்படுகிறது. ஆனால் பரவலாக ஆடப்படுகின்ற இன்றைய கதகளி, ஆடல், பாடல், வேடஉடை, ஒப்பனை எல்லாமே பல மூலங்களிலிருந்து பெறப்பட்டு வடிவமைக்கப்பட்டதே. ”ஈழத்துக்கூத்து’ என்பதும் இவ்வாறுதான் வடிவமைக்கப்பட வேண்டும்.” பாலசுகுமார், மட்டக்களப்பு
“பண்பாட்டுவேர்களை இழந்துவிடக் கூடிய பேராபத்து உள்ளது”
“... தேசியக்கூத்து மரபை உருவாக்குதல் என்பதன் பெயரால் எமது மக்களின் பன்முகத்தன்மை மிக்க பாரம்பரியங்களையும் தனித்துவங்களையும் அழித்துக்கொண்டு, பன்முகப்பண்பாடு ஒன்று உள்ளது என்று நாங்களே கூறிக்கொண்டும் இந்தப் பன்முகப்பண்பாடுகள் ஒன்றை ஒன்று நசுக்கி விடுவதற்கான களங்களையும் நாங்களே உருவாக்கிக்கொண்டும் எப்படி எமது பன்முகப்பண்பாட்டைப்பாதுகாக்க முடியும். அறிவுத்துறையினர் ஒரு கூத்தின் அல்லது எமது மக்கள் பண்பாட்டுவேரின் ஒரு கூறை எடுத்தாள்வதானாலும் அதை நாகரீகமாகவே செய்தல் வேண்டும். எந்தக்காலத்தில் எந்த வெளியில் எந்தக்கலைஞனால் ஆற்றப்பட்டது. அது எதற்காக எப்படிப் பெயர்த்தெடுக்கப்பட்டது என்பது பற்றித் திட்டவட்டமான ஆவணங்களையும் அகராதிகளையும் தனியாகப்பேண வேண்டும் இல்லாதுவிடில் அசல் எது நகல் எது என்று தெரியாத நிலையில் நாம் எமது பண்பாட்டு வேர்களை இழந்துவிடக்கூடிய பேராபத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருப்போம். . கூத்து மரபுகளை கையாளர் வது மீள் கணி டுபிடிப்பது வளர் தி தெடுப்பது. வகைப்படுத்துவதென்பதெல்லாம் எந்த அறிவுத் துறைச் சிந்தனைத்தளத்தில் இருந்து செயற்படுத்தப்படுகின்றது என்பது தெளிவாக்கப்படவேண்டும். கென்யா, பப்புவா நியுக்கினியா தீவுகளின் 'அனில்கா காப்பிறல் சொல்வதுபோல எங்களுடைய பண்பாட்டுவேர்களில் இருந்து தேசியவிடுதலை நோக்கி நாம் பலம் பெறமுடியும். பண்பாட்டுவேர்களையே
Mg( 75

Page 40
இந்தச் சந்தையில் வைத்துப் வியாபாரச் சரக்காக்கி விட்டால் பின்பு
எமக்கு எடுத்துக் கொள்வதற்குப்பலம் பொருந்திய ஆயுதங்கள் எதுவும் இருக்காது.”
பொன் பிரபாகரன்,
மலையகம்.
“எமக்கு யார் அதிகாரந்தந்தது.?”
“.யாழ்ப்பாணக் கலாசாரமென்றால் கந்தபுராண கலாசாரம்
என்று சொல்லுகின்ற ஒரு ஆபத்தான கருத்தாக்கத்தை ஏற்கப்போகிறோமென்றால் தமிழ்த்தேசிய நாடகவடிவமென்ற ஒரு வடிவத்தைப்பற்றி நாம் பேசலாம். ஆனால் யாழ்ப்பாணத்திலேயே பல கலாசாரங்கள் உள்ளன. அதேபோலத்தான் ஒவ்வொரு பிரதேசத்திலும் பல்வேறு கலாசாரங்கள் காணப்படுகின்றன. உதாரணமாக, மட்டக்களப்பிலே சீலாமுனை, கன்னன்குடாப் பிரதேசங்களை எடுத்தாலும் இரண்டிற்கும் மத்தள அடி தொடக்கம் வேடஉடைகள் வரை பல்வேறு வேறுபாடுகள் காணப்படுகின்றன. எனவே கூத்தை ஒரு ஆய்வுகூடப் பொருளாக நோக்குவது அபத்தமானது. இது நல்லகூத்து என்று எதனை நாம் தெரியப்போகின்றோம்.? எமக்கந்த அதிகாரத்தை யார்தந்தது? ஒவ்வொரு ஊர்க்காரரும் தம்முடைய கூத்தே சிறந்தது என்பார்கள். எனவே கூத்தைப்பற்றிப்பேசும்போது நேரம், வெளி, பற்றிய எண்ணக்கரு பிரக்ஞை முக்கியமானது. வெறுமனே ஆடலும் பாடலும் மட்டும் கூத்துஅல்ல. அதற்குப்பின்னாக பல பண்பாட்டம்சங்கள் கலந்திருக்கின்றன. எனவே நாம் எதனை எடுக்கப்போகின்றோம். தேசியவடிவம்பற்றிப்பேசுகின்றோம். தேசிய அடையாளம் பற்றிப்பேசுகின்றோம். நடுத்தரவர்க்கத்தின் அடையாளங்கள் மட்டும் தேசிய அடயாளமாகி விடுமா..? சி.ஜெயசங்கள்,
மட்டக்களப்பு.
“எமக்குப் பொதுவான ஒரு வடிவம் தேவை.”
“.பல தேசியங்கள் இருக்கட்டும் - ஆனால் எமக்கு இன்று ஒரு அரசியல்தேவை இருக்கிறது. தமிழர்களுக்குப்பல தேசியங்கள் இருக்கலாம். யாழ்ப்பாணத்திலேயே வடமராட்சி, தென்மராட்சி, வலிகாமம், தீவகம் என பன்முகப்பிரிப்புகளும், தனித்துவமான கலாசாரங்களுமுள்ளன. இப்பிரிப்புக்களுக்கூடாக நாம் சிதறுண்டு போகப்போகிறோமா? இன்று எங்களுக்கொருதேவை இருக்கிறது. அது காலத்தின் தேவை அதாவது ஒரு அரசியல் தேவை உள்ளது. அரசியல் என்பது தற்போதைய ஆட்சி அதிகார அரசியல் நிலையில் அல்ல. பரந்த அளவில் தமிழ்பேசும் மக்கள் என்ற பெரிய தொடர்பில் ஒன்றுபடவேண்டிய தேவை உள்ளது. எனவே நாம் சிதறுண்டுபோக முடியாது. எமக்கு பொதுவான ஒருவடிவம் தேவை. அது மத்தியதரவர்க்கத்தை அதிகம் பிரதிபலித்து நின்றாலும் குற்றமில்லை. அந்த வடிவத்தை நாம் கண்டுணரவேண்டும். வெறும் எலும்புக்கூட்டை வைத்தே டயனோசரஸ் என்ற விலங்கை கண்டு
76
ஆற்றதை

பிடித்தார்கள் இங்கு எமது கூத்தில் எலும்புக்கூடு அல்ல, முக்கால்வாசி உருவம் கிடைக்கிறது. அதனை முழுமைப்படுத்தவேண்டும்.”
கந்தையாழரீகணேசன், வவுனியா.
“எங்கள் நாட்டுக்கூத்தினை நாங்கள் மாற்றப்போவதில்லை”
“...எனக்கு இப்போது 78 வயது, 13 வயதில் இருந்து கூத்திலஈடுபட்டு வருகின்றேன் கடந்த 65 வருடங்களாக என்னுடைய காலம் கூத்துடன் சென்றுகொண்டிருக்கின்றது பப்பிரவான் நாடகம், விராட நாடகம், வாளாபிமன்னன் நாடகம் குருகேத்திரன் நாடகம். எனப்பல நாடகங்களை நாங்கள் ஆடிவந்திருக்கின்றோம். இவற்றை நாங்கள் எந்தக்காரணங்கொண்டும் படச்சட்ட அரங்கிலோ, திறந்தவெளி அரங்கிலோ மேடையேற்றியது கிடையாது. அதற்கெனவுள்ள வட்டக்கொட்டகையிலேயே ஆடிக்கொண்டு வருகிறோம். ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் கூத்தாடி அம்மன்கோயில் குளிர்த்தி அல்லது வேள்வியில் சோடனைபோட்டுச் செய்துகாட்டுவோம் கடந்த 250 வருடங்களாக பரம்பரை பரம்பரையாக நாங்கள் இதனை ஆடிவருகின்றோம். எந்தக்காரணங்கொண்டும் நாங்கள் அதிலுள்ள பாட்டைக்கூட மாற்றமாட்டோம். வேறுமேடைகளிலும் ஆடமாட்டோம் அதேவேளை எங்களை உற்சாகப்படுத்தப்போகிறோம் என்று எவரும் எங்கள் கிராமத்துக்கு வரவேண்டிய அவசியமில்லை. ஏனெனில் அது அந்த இடத்தில் இருக்கும்போதுதான் அதுவாக இருக்கும் மாறியவுடனே அது கெட்டுப்போகும்.” அண்ணாவியார் முருகவேள், வட்டுக்கோட்டை.
தொகுப்புரை:
மேற்கூறப்பட்ட பல்வேறு கருத்துக்களையும் வைத்து நோக்கும்போது
கூத்துக்கலையின் பேணுகையும், தேசிய வடிவம்சார் கருத்து நிலையும் மிகவும் ஆழமாகச் சிந்தித்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் என்பது மிகத் தெளிவாகத் தெரிகின்றது. ஆனால் கூத்துத் தொடர்பாக நாங்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் அவசரமானவை. கிராமங்களின் இறப்பும், நகரமயமாதலின் வேகமும், நவீன தொடர்பூடாக வளர்ச்சியும் எச்ச சொச்சங்களை அள்ளிக்கொண்டு செல்வதற்கு முன்னர் “செயற்பாடுகள்” அவசியமானவை. இந்தக் கருத்து பகிர்வினுடாக பின்வரும் சில விடயங்கள் அழுத்தம் பெறுகின்றன.
* கூத்து என்பது வெறுமனே ஆடல், பாடல் சார்ந்த வடிவம் மட்டுமல்ல. அதற்குப் பின்னால் பாரம்பரியமான கிராம மக்களின் நம்பிக்கைகள், பண்பாட்டம்சங்கள் வாழ்வியல் ஒழுக்கங்கள் என்பன நிறைந்திருக்கின்றன. என்ன மாற்றங்கள், வளர்ச்சிகள் செய்யப்பட்டாலும் அந்தச் சமூகத்தின் இயல்பூக்கத்துடனேயே மாற்றம் பெறவேண்டும். புத்திஜீவிகள் அவர்களை தூண்டலாமே தவிர அவற்றில் கைவைக்கக்கூடாது.
&jpgర 77

Page 41
* எமது பிரதேசத்தில் பன்முகத்தன்மைமிக்க கலாசார மரபுகள் காணப்படுகின்றன. இந்தப் பன்மைத் தன்மைகள் புறக்கணிக்கப்படாது பேனப்படவேண்டும். எனவே தேசிய வடிவம் என ஒற்றைச் சிந்தனையுடன் செயற்படுவோமாயின் இந்த பன்மைப் பிரதிநிதித்துவமும், தனித்துவமும் இழக்கப்படும் அபாயம் காணப்படுகிறது. * தேசிய வடிவம் என்ற ஒன்றை உருவாக்குவது காலத்தின் தேவை. பரந்த தமிழ்த் தேசியம் பற்றிச் சிந்திக்கும்போது இது ஒரு அரசியல் தேவை. * பல மரபுகளையும் பொருத்தமுற ஒன்றினைக்கும்போது ஒரு தனித்துவமான மரபு மேற்கிளம்பும். * ஒரு கலைஞன் எல்லாக்கூத்து வடிவங்களையும் மரபுகளையும் செரித்துக் கொண்டு ஏதோ ஒரு கணத்தில் பற்றி எரிகின்ற படைப்புச் சூழலில் கண்டு பிடிக்கின்ற வடிவமாகவே ஒரு தனித்துவ வடிவம் மேற்கிழம்பமுடியும், புத்திபூர்வமாக இதனைச் செய்ய முடியாது. * கூத்தை பாடத்துறையாக மேற்கொள்ளும்போதே அது தொடர்ந்து பயிலப்படும் அல்லது பேணப்படும். * கூத்து காலத்தால் மாறும். மாற்றம் இயல்பானது. * கூத்தினை பயன்படுத்தி புதிய பரீட்சார்த்தங்களை எவரும் செய்யலாம் ஆனால் அதுதான் சரியானது என்று விவாதிக்க முடியாது
இவ்வாறு மேற்கிளம்பும் கருத்து நிலைகளுக்கூடாக, எதிரும் புதிருமான சிந்தனைப் பரிமாற்றங்கள் அலசப்பட்டாலும் அவை ஆரோக்கியமான கூத்துக் கலையின் வளர்ச்சியை நோக்கியே வெளிப்படுத்தப்பட்டுள்ளன என்பதை யாவரும் ஏற்பர். கூத்துக்கலையின் பேணுகையிலும், தனி ஒரு வடிவமாக செந்நெறிப்படுத்தி உருவாக்குவதிலும் இக்கருத்துக் கணிப்பு கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். இதற்கு ஓரளவு ஏற்கக்கூடிய தீர்வாக, அல்லது ஆலோசனையாக, பேராசிரியர் மெளனகுரு, அருட்திரு மரியசேவியர் அடிகள் இருவரும் கூத்துவிழா கருத்தமர்வில் சமர்ப்பித்த தொகுப்புரையில் கூறப்பட்டவற்றை நோக்கலாம், அதாவது மூன்று தளங்களில் இக்கூத்துப் பயில்வு பேணப்படவேண்டும். முதலாவது கிராம மட்டத்தில் அந்தந்த மக்களால் அவை இயல்பாக பேணப்படவேண்டும். அவ்வாறு பேணப்பட ஊக்கமளிக்கவும் வேண்டும். இரணி டாவது தளத் தரிவி அவை பேணப் படுகளின் ற வையாக, ஆய்வுக்குட்படுத்தப்படுகின்றவையாக, ஆவணப் படுத்தப்படுபவையாக மாறவேண்டும். இத்தளத்தில் புத்திஜீவிகளும், கூத்துக் கலைஞர்களும் இணைந்து பணியாற்றவேண்டும். மூன்றாவது தளத்தில் சுதந்திரமாக பணியாற்றவல்ல கலைஞர்கள் புதிய புதிய படைப்பாக்கங்களைச் செய்ய வல்லவராக வெளிவர வேண்டும். இது ஒரு கருத்துநிலையாக இருந்தாலும் செயல்வடிவத்தைப் பெறக்கூடியவை. அரசு, பல்கலைக்கழகம், அரசசார்பற்ற நிறுவனங்கள். கலைஞர்கள், கலாமன்றங்கள் அனைத்தும் இணைந்தோ பகுதிபகுதியாகவோ இப்பணிகளை பொறுப்பேற்கும்போது விளைவு சாத்தியமாகும். (s)
TS ஆநிறுவதை

திருமறைக் கலாமன்றம் இம்மண்ணில் இருந்து பிறநாடுகளுக்குக் கலைப்பயணம் செய்து, எமது கலை வடிவங்களுடாக உலகளாவிய ரீதியில் உறவு நிலைப்பட்ட வலைப்பின்னலை ஏற்படுத்தத்தக்க வகையில் பல்வேறு கலைப்பயணங்களை மேற்கொண்டுள்ளது. அதில் 12 ஆவது கலைப்பணமாக கடந்த அக்ரோபர். நவம்பர் மாதங்களில் மேற்கோள்ளப்பட்ட "புதுயுகம் நோக்கி" என்ற கலைப்பயணம் அமைந்தது. ஜேர்மனி. பிரான்ஸ், லண்டன், பெல்ஜியம், நெதர்லாந்து, ஒஸ்ரியா, செக்றிபப்ளிக் (சேக்கோசிலாவாக்கியா), கனடா, இத்தாலி ஆகிய 9 நாடுகளுக்கு பல்லினங்களும் இனைந்த 9 கலைஞர்களுடன் இக்கலைப் பயனம் மேற்கொள்ளப்பட்டது.
திருமறைக் கலாமன்ற இயக்குநர் அருள்திரு நீ மரியசேவியர் அடிகளாரின் வழிகாட்டலுடன் பிரதி இயக்குனர் ம.சாம்பிரதிபன் இக்குழுவுக்குத் தலைப்மை தாங்கிச் சென்றார். "சமாதானத்தை விரும்பும் மக்களின் நல்லெனன்ன சிந்தனையைப் பிரதிபலித்து" இப்பயணம் வடிவமைக்கப்பட்டிருந்தது. "அசோகா" (ஊம நாடகம்) "ஒளியே வருக" (கூத்து) "கண்ணுக்குத்
7

Page 42
சிறப்பாக, கனடா ஜோக் பல்கலைக்கழகத்தில் மேடையேற்றப்பட்டு அதிக வரவேற்பைப் பெற்றது. இலங்கையில் இருந்து கனடாவுக்கு நாடக, நடன நிகழ்ச்சிகளை கொண்டுசென்ற முதற் குழுவாகவும் இதுவே காணப்படுவது சிறப்புக்குரியது. அத்துடன் இத்தாலியில் (வத்திக்கான்) பரிசுத்த பாப்பரசர் ஜோனர்போல் அவர்களை சந்தித்து ஆசி பெற்றதும், ஜேர்மனியிலுள்ள பசாவு கதிற்றல் தேவாலயத்தில் உலக மறைபரப்பு ஞாயிறு தினத்தில் உலகின் பிரபல்யம் பேற்ற ஆயர்கள், குருக்கள் முன்னிலையில் ஆற்றுகையை மேற்கெண்டது மட்டுமன்றி, மதிப்பார்ந்த விருந்தினர் கையேட்டில் மரியசேவியர் அடிகள் கையொப்பம் இட்டதுமான நிகழ்வுகள் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய வரலாற்றுத் தடங்களாகும்.
இப்பயணத்தின் விளைபயன்களை லண்டன் பி.பி.சி. வானொலி, தீபம் தொலைக்காட்சி சேவை, கனடா கீதவாகினி வானொலி போன்ற பலவும் முன்னுரிமைப்படுத்தி வெளிப்படுத்தியதுடன் நேர்காணல்களையும் இணைத்துக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
ܵ ܵ பூச்சிகள் அரிக்கும் கண் ணிை
இடம் பெயர்ந்து மீளக்குடியேறிய கிராமங்களில் உள்ள பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு நிதி சேகரிக்கும் முகமாக, அகதிகள் புனர்வாழ்வு நிறுவனத்தின் பெண்கள் அபிவிருத்தி திட்டப் பிரிவின் ஏற்பாட்டில், செயல் திறன் அரங்க இயக்கத்தின் தயாரிப்பில், தே. தேவானந்த்தின் எழுத்துருவிலும், நேறியாள்கையிலும் உருவான 'பூச்சிகள் அரிக்கும் கண்ணிமைகள்' என்ற நாடகம் 19.12.2004 இல் காலையிலும், மாலையிலுமாக இரு காட்சிகளாக யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலை அரங்கில் மேடையேற்றப்பட்டது.
இதற்கான இசையமைப்பை த. றொபேட் வழங்கியிருந்தார். இந் நாடகம் தொடர்ந்தும் மேடையேற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. போரினால் தமிழ்ப் பெண்கள் வாழ்வுப் போராட்டத்தில் எதிர்கொள்ளும் நெருக்கீடுகளை மையப்படுத்தியதாக சமகால கருத்துக்களைக்கொண்ட நாடகமாக இது அமைந்திருந்தது.
“ஆற்றுகை” சார்ந்த தொடர்புகளுக்கு School of Drama Centre for Performing Arts, 238, Main Street,
Jaffna, Sri Lanka.
T. & Fax. 02-222 239 websitc: www.cpaTtstCarm. Corg E-Tail:cpajaffnagisltnet.lk
ஆழிறுனத்
 
 

ஆற்றுகையின் பணிகளை திரைவாக்கி நிறைவுடன் நிமிர்கையில் நிகழ்ந்தது இயற்கையின் கோரத்தனர்.
எதிர்பார்க்காத திசையில் எதிர்பார்க்காத வகையிரம் ஈர் தாயக மண்ணிலும், உலகிலுமாக ஒன்றரை இலட்சத்திற்தும் அதிகமான மனித உயிர்கள்ை
கால்கொண்டது
கடற் பேரல்ை,
விாழ்தலின் நம்பிக்கைகளையே நீர்மூலமாக்கிய இந்த இயற்கை அனர்த்தத்திப் மாண்டுபோன அத்தனை மனித உயிர்களுக்குச் சிரர் தாழ்த்தி அஞ்சலிக்கின்றோர்.
இக் கோடூரமான அார்த்தத்திரம் விாழ்நாளின் சுரவிருந்து உறவிTடி மகிழ்ந்த உதவிகளையும், பெறுமதிவாய்ந்த சொத்துக்களையும் விாழிவிதத்த நிலங்களையும் கனப்பொழுதிப் இழந்து பரிதவித்து நிற்கும் பF) இலட்சம் மக்களின் துயரத்தினர் நாமும் பங்கேற்றுக் கொள்கின்றோர்.
26.12.2(x); e.

Page 43
Design & Print Jude