கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மலையக அரசியலும் சமூக வாழ்வும்

Page 1
50 i * 2. vijiji)
QLPR
F5560
 

ரசியலும் քՖ 6)յոլիՁրն
b சத்தியநாதன்

Page 2

மலையக அரசியலும் சமூக வாழ்வும்
ஆேய்வுக் கட்டுரைகள்)
தேனம் சத்தியநாதன்)
KX">。 இல்
1977, பேராதனை வீதி, கண்டி

Page 3
முதற்பதிப்பு : நவம்பர் 1999
உரிமை : திருமதி. சத்தியபாமா சத்தியநாதன்
இல . 399/பி, வவுகபிட்டிய, புஸ்ஸல்லாவை,
வெளியீடு : ஞானம் பதிப்பகம்; வெளியீடு-02
MALAYAGA ARA5/YALCIM SAMOOGA, VAAL VCL//M
SANTHIANAM SATHIZANATHAN NO.399/B, Wahugapitiya, Pussellawa. Sri Lanka.
PUBLISHED BY GNANAM PATHIPPAGAM 19/7, PERADENIYA ROAD,
KANDY
TPhone : 077-306506 O8234.755
PRICE Rs. 100A"
ISBN: 955-83.39 - 00 - 8

... X
எண் அண்ணைக்கே
சமர்ப்பணம்
அன்பிற்கே இலக்கணமாய் வாழ்ந்து மண்ணில்
அகிலமெனைப் புகழ்ந்திடவே வைத்த நீயும் இன்றிங்கு எனைவிட்டுப் பிரிந்திட் டாலும்
இதயத்தில் என்றென்றும் நிலைத்து நிற்பாய். உன்கருவில் உருவான நானோ என்றும்
உண்மையினை உலகறியச் செய்வேன் மண்ணில் என்னிதயம் வடித்திட்ட இந்த நூலை
உன்னடியில் சமர்ப்பித்து வணங்கி நின்றேன்.
சுபம்!!

Page 4

> பதிப்புரை
மலையகம் சகல துறைகளிலும் முன்னேற வேண்டும். மலையக மக்கள் சுபிட்சமும் செழுமையும் நிறைந்த எதிர்காலத்தை எய்த வேண்டும் என்ற நோக்குடன் எழுதிவரும் ஓர் ஆக்கப் படைப்பாளியின் கட்டுரைத் தொகுதி இது.
இக்கட்டுரைகள் பத்திரிகைகளில் பிரசுரமானபோது பலரது கணிப்புக்கும் உள்ளாகின. இவை வெறுமனே பத்திரிகைத் தாள்களில் உறங்கிப் போகாமல் இவற்றைத் தொகுத்து நூலாக்கினால் பயனுடையதாக அமையலாம் என்ற நோக்கில் இக்கட்டுரைகள் தொகுப்பு நூலாக வெளிவருகிறது. இதில் உள்ள கட்டுரைகள் மலையக அரசியல் பற்றியும் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வியல் பிரச்சினைகள் பற்றியும் பேசுகின்றன. இவற்றை ஒன்றுசேர வாசிக்கும்போது ஓர் ஒட்டுமொத்தமான பரிமாணத்தையும் புதிய தரிசனத்தையும் வாசகர்கள் பெறுவதற்கு வாய்ப்பாகிறது.
இக்கட்டுரைத் தொகுப்பின் ஆசிரியர் சந்தனம் சத்தியநாதன் மலையக இளந்தலைமுறைப் படைப்பாளிகளில் குறிப்பிடத்தக்கவர். இவர் சிறுகதை, கவிதை, கட்டுரை, வானொலி நாடகம் ஆகிய துறைகளில் எழுதி வருகிறார். இவரது ‘மூடுபனி என்ற குறுநாவலும், 'வழிபிறக்குமா? என்ற சிறுகதைத் தொகுதியும் நூலாக வெளிவந்துள்ளன.
மலையகத்தில் கட்டுரை நூல்களும் அதிகம் வெளிவர வேண்டும் என்ற நோக்குடன் சந்தனம் சத்தியநாதனின் இத்தொகுப்பை ஞானம் பதிப்பகத்தின்மூலம் வெளிக்கொணர்வதில் மகிழ்ச்சியடைகிறோம்.
தி.ஞானசேகரன்
1977,பேராதனை வீதி,
ဒွိုk :01fးဖ၈ 迷

Page 5
என்னுரை
சிமுதாயத்திற்கு ஒட்டு மொத்தமாக விழிப்புணர்வை ஊட்ட வேண்டும், சமத்துவத்தை, மனித நேயத்தை உடனடியாக வளர்த்துவிட முடியும் என்பது ஒரு பொய்யான செயல்.
அதே போல் சமூக மாற்றத்தை உடனடியாகக் காணவேண்டும் என்று துடிப்பவர்களும் சமூகமாற்றத்தால் நமக்கென்ன ஆகப்போகிறது, எது எப்படி என்ன ஆனால் என்ன, நாம் நமது வழியைக் கடைபிடிப்போம் என்ற எண்ணுவோரும் இந்தச் சமூகத்தில் வாழாமல் இல்லை.
குறிக்கோள்களை எட்டவேண்டும் என்று அதிவேகத்தில் செயல்படுபவர்களை தீவிரவாதி என்ற பட்டத்தைச் சூட்டி முத்திரை குத்தி இந்த சமூகம் வேடிக்கை பார்க்கும். இவைகள் இன்று சமூகத்தில் சாதாரண செயல்கள்.
இந்நூலை வெளியிடும்போது பல எதிர்ப்புகள் போட்டிகள் வரலாம். அவை எனது குறிக்கோளுக்குத் தடை என நான் ஒரு போதும் நினைக்க மாட்டேன். அவைகளே எனது வெற்றியின் ஆரம்பப் படிகளாக எணர்ணுவேன். ஏன் என்றால் எனது முன்னைய நூல்களை வெளியிடும்போது பெற்ற அநுபவங்கள் எனக்கு ஒரு நல்ல பாடமாக அமைந்தன.
சமூக உணர்வோடு சமூகத்திற்குப் பயன்படும் வகையில் எழுதுபவர்களும் உண்டு. அதேபோல் சமூகத்தைப் பயன்படுத்திக் கொள்வோரும் இல்லாமல் இல்லை. இதில் நான் எந்த வகை என்பதை எனது கட்டுரைகளைப் படிக்கும் வாசகர்கள் தீர்மானித்துக்கொள்ள வேண்டும்.
இந்த நூலை நான் எப்போதோ வெளியிட வேண்டும் என்று எண்ணியதுண்டு. ஆனால் இதற்கான பொருளாதாரம் இருக்கவில்லை. எப்படியோ ஒருநாள் டாக்டர் ஞானசேகரன் அவர்களைச் சந்தித்தேன். அவர் என்னிடம் சொன்னார் தமது வெளியீட்டகமான ஞானம் வெளியீட்டகம் மலையக எழுத்தாளர்களின் ஆக்கங்களை வெளியிட விரும்புவதாக. அப்போது எனது கட்டுரைகள் தொடர்பாக அவரிடம் கூறினேன். அவர் எந்த மறுப்பும் தெரிவிக்காது எடுத்துவரச் சொன்னார். தமது வெளியீட்டகம் எம்போன்ற வளர்ந்துவரும் எழுத்தாளர்களுக்கு கை கொடுப்பதே தமது பணியாகக் கொண்டுள்ளது எனக் கூறினார். இதுவரை காலமும் ஒளிந்து மறைந்து கிடந்த எழுத்தாற்றல் மிக்க இளம் எழுத்தாளர்களுக்குக் கை கொடுக்கப்போவதாகக் கூறினார்.

மலையக எழுத்தாளர்களைப் பொறுத்தமட்டில் நூல்கள் வெளியிடுவது என்பது ஒன்றும் அவ்வளவு எளிதான காரியமல்ல. எம் நாட்டில் வாசிப்புப் பழக்கம் மிகவும் குறைவாகவே காணப்படுகிறது. அதுவும் மலையகத்தில் இந்த விகிதம் 03 சதவீதமாக உள்ளது என அண்மைய ஆய்வு ஒன்று கூறுகிறது.
ஒரு சமூகத்தில் விழிப்பு அதன் கல்வியிலும் வாசிப்பிலுமே அதிகம் தங்கியுள்ளது. வெளியில் நடப்பது தெரியாதவரை எங்கே எம்மைப் பற்றி ஆய்வு செய்வது? ஒப்பிட்டுப் பார்க்கும் நிலைக்குக் கொண்டு வருவதே வாசிப்புப் பழக்கம்தான் என்பதை மலையக சமூகம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.
எனது முன்னைய நூல்களுக்கு வாசக அன்பர்கள் தந்த பேராதரவினை இந்நூலுக்கும் நல்கி என்னை ஊக்குவிக்க வேண்டுமெனப் பணிவன்புடன் வேண்டுகிறேன்.
நன்றியுடன் சந்தனம் சத்தியநாதன்

Page 6

அரச சார்பற்ற நிறுவனங்களின் தோற்றமும் மலையகமும்
இரண்டாம் உலக மகாயுத்தத்திற்குமுன் உலகில் ஏகாதிபத்திய நாடாகப் பிரித்தானியா காணப்பட்டது. பிரித்தானியா பல நாடுகளைக் குடியேற்ற நாடாகக் கொண்டதுடன் உலகச் சந்தையில் பெரும்பங்கையும் தனது ஆதிக்கத்தின்கீழ்க் கொண்டுவந்தது.
இக்காலத்தில் ஜேர்மன், ஹிட்லரின் ஆட்சிக்குட்பட்டிருந்தது. அத்துடன் இந்நாடு வளர்ச்சி அடைந்துவரும் ஒரு நாடாகக் காணப்பட்டது. அத்தோடு இந்நாட்டிற்குச் சந்தைவாய்ப்புக் குறைவாகவே காணப்பட்டது. ஜேர்மனியின் வளர்ச்சி துரிதமடையச் சந்தை வாய்ப்புக்காக ஹிட்லர் நாடுகளைக் கைப்பற்ற எண்ணினார்.
இதன் விளைவாக இரண்டாம் உலக மகாயுத்தம் தோன்றியது. இரண்டாம் உலக மகாயுத்தத்தில் அமெரிக்கா எவ்வித சேதத்திற்கும் உட்படவில்லை. இதனால் சேதமுற்ற நாடுகளை ஒன்றிணைக்க எண்ணியது. இதற்குக் காரணம் அழிந்துபோன அல்லது சிதைவுற்றுப்போன நாடுகளைச் சீர் செய்வதன்மூலம் முதலாளித்துவ பொருளாதாரத்தைப் பாதுகாக்கவும் தமது கொள்கையையும் அதிகாரத்தையும் புகுத்தலாம் என எண்ணியமையுமே ஆகும்.
1944ம் ஆண்டு 2ம் உலக மகாயுத்தத்தின் முடிவுடன் யுத்தத்தில் பங்கு கொண்ட நாடுகளும் வளர்ச்சியற்ற நாடுகளும் தமது பிரச்சினைகளை கலந்தாலோசித்து முடிவுசெய்ததனால் ஐக்கிய நாடுகள் சபை உருவாகியது. 2ம் உலக மகாயுத்தத்திற்கு முன் ‘சர்வதேச சபை என்ற நாடுகள் கூட்டிணைப்பொன்று காணப்பட்டது.
2ம் உலக மகாயுத்தம் முடிவுற்ற காலத்தில் ஐக்கிய நாடுகள் (ஆரம்பத்தில் 44 நாடுகள் அங்கம் வகித்தன) சபையின் குறிக்கோள்
5666. יל
இடிந்து விழுந்த நாடுகளைக் கட்டியெழுப்புதல். முதலாளித்துவப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புதல். 5 ஆண்டு 2 ஆண்டு இடைவெளிகளைக் கொண்ட திட்டங்களைத் தீட்டி பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புதல். அதேவேளை முதலாளித்துவ நாடுகள் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் முகமாக பொருளாதார ரீதியான கூட்டொன்றினை உருவாக்க முனைந்தன. இதன் விளைவாக 1944ம் ஆண்டு ஜுலை 03ம் திகதி பிரிட்டன் வூட்டில் (Britain Wood) கூட்டப்பட்ட மகாநாட்டின்பின் சர்வதேச நாணயசபை (MF) 1945இலும் உலக வங்கி (WB) 1960
க்கப்பட்டது. வடிக் அரசியலும் சமூக வாழ்வும் 植圆

Page 7
1960 களில் மூன்றாம் உலக நாடுகளின் அபிவிருத்தியில் கவனம் செலுத்தப்பட்டது. இதன் விளைவாகத் துளித்துளியாக கீழ்மட்டத்திற்கு செல்லுதல் எனும் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது.
இதன் நோக்கம் 1960 களில் அரசுதான் பணக்காரனாக இருந்தது. எனவே அரச திட்டங்களுக்கு உதவி வழங்கினால் அதன் பயன்படிப்படியாகக் கீழ்மட்டங்களுக்குப் போய்ச்சேரும் எனக் கருதப்பட்டது. அதாவது பயன் வறியோரை சென்றடையும் எனக் கருதப்பட்டது.
1968-1971 இற்கு இடைப்பட்ட காலத்தில் ஐரோப்பாவில் வேலைவாய்ப்பு குறைவடையத் தொடங்கியது. காரணம் இரண்டாம் உலக மகாயுத்தத்திற்குப் பிறகு உயிரிழப்பு, புனர் நிர்மாணம், புனர்வாழ்வு என்பவற்றால் 1945 இலிருந்து 1968 வரை வேலைவாய்ப்பு காணப்பட்டது. 1988ற்கு பின் வேலைவாய்ப்பு குறைவடைய இளைஞர்கள் கிளர்ச்சி செய்யத் தொடங்கினார்கள்.
ஐரோப்பிய நாடுகளில் இக்கிளர்ச்சி நடைபெற்றது. இதனைத் தவிர்ப்பதற்காக மேற்கு ஐரோப்பிய முதலாளித்துவ நாடுகள் "டோல் (இலவசக் கொடுப்பனவு) வழங்கினார்கள். இவ்வலை 1970களில் ஆசியாவிலும் தோன்றியது. ஆசியாவில் ஏற்பட்ட புரட்சி காரணமாக ஐரோப்பிய நாடுகள் பல உதவும் முகமாக அடிப்படை வசதிகள் வழங்க முன்வந்தன. இந்நிகழ்வு 1970 ற்குப் பின்னர் கொண்டு வரப்பட்டது. இவர்கள் வழங்கிய இவ்வுதவி அடிப்படை உதவிகள் (Basic Needs) எனக் கூறப்பட்டது. அரசுக்கு உதவியை வழங்க, இவ்வுதவிகளை அரசு கிராமங்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யப்பயன்படுத்தியது. 1980-1990 களில் அடிப்படை உதவிகள் தோல்வியைத் தழுவின. Sgs Got II 65 6higp6LD gllis 5 Luis (Poverty Erradication) முன்வைக்கப்பட்டது. இந்நிதி உதவியை உலக வங்கி, சர்வதே நாணய சபை ஆகியன வழங்க முன்வந்தன. ஆனால் இந்நிறுவனங்கள் சில திட்டங்களை முன்வைத்தன அவையாவன.
3 முதலாளித்துவ நாடுகள் முதலிட வாய்ப்பு. 9 அவர்களின் தேவைக்கேற்ப தொழிலாளர்களை தொழிலில்
அமர்த்தவும் விலக்கவும் உரிமை உண்டு. 9 சுதந்திர வர்த்தக வலையம் தோற்றம்.
இக் காலப் பகுதில் இலங்கையில் ஆட்சி செய்தவர் ஜே.ஆர்.ஜெயவர்த்தன அவர்கள். இவர் திறந்த பொருளாதாரத்தை அறிமுகப்படுத்தினார்.
1990-2000 காலகட்டத்தின் நிலையான அபிவிருத்தி. 9ே கட்டமைப்புச் சீராக்கம். w 3 நிலையான, சமமான அபிவிருத்தி. பேங்கு பற்றுதலுடனான அபிவிருத்தி உேரித்தாளுதல் போன்றனவாகும்.
சந்தனம் சத்தியநாதன்
 

அரச சார்பற்ற நிறுவனம் (NGO) என்ற சொற்பதம் ஐக்கிய நாடுகள் சபையினால் முன்வைக்கப்பட்டதாகும். அரச சார்பற்ற நிறுவனங்களாவது ‘சிவில் சமூகத்தில் பிரதிபலிக்கிறது. 1970,1980ம் ஆண்டுகளிலே அரச சார்பற்ற நிறுவனங்களின் சேவைகள் பரந்தளவில் செயல்படத் தொடங்கின. சிவில் சமூகத்தில் அபிவிருத்தி தொடர்பான சகல விடயங்களையும் மேற்கொள்ளும் ஒரு அங்கமாகவே அரச சார்பற்ற நிறுவனங்கள் செயற்பட வேண்டும்.
1980ம் ஆண்டுகளில் அரசானது சமூக சேவைகளின்பால் அக்கறையை குறைத்துக் கொண்டமையினால், அரச சார்பற்ற நிறுவனங்கள் சமூக சேவைகளை முன்னெடுத்து செல்வதில் ஆர்வம் காட்டின. இதுவே இவற்றின் வளர்ச்சிக்கு ஏதுவாகின. அரச சார்பற்ற நிறுவனங்களை அவற்றின் சேவைகளின் அடிப்படையில் பின்வருமாறு வகைப்படுத்தலாம். சமூக சேவை
1910, 1920ம் ஆண்டுகளில் சமூக சேவை நிறுவனங்கள் தோன்றின. அரசினால் சமூக சேவை புறக்கணிக்கப்பட்டமையினால் அரச சார்பற்ற நிறுவனங்கள் சமூகசேவைகளைக் கிராமங்களில் செய்ய முன்வந்ததோடு, அவை அங்கே நிலை பெறவும் வாய்ப்பேற்பட்டன. கிராமிய அபிவிருத்தி
1950ம் ஆண்டுகளில் ‘கிராமிய அபிவிருத்தி என்ற கோட்பாடு தோற்றம் பெற்றது. இதன் செயற்பாடானது, சமூக சேவைகளை செய்வதோடு கிராமங்களின் வளர்ச்சிக்குத் தேவையான அபிவிருத்திச் செயன்முறைகளையும் செய்தன. நிபுணத்துவ அபிவிருத்தி
1970, 1978ம் ஆண்டுகளில் தோற்றம் பெற்றது. 'நிபுணத்துவ அபிவிருத்தி என்பது குறிப்பிட்ட ஒரு துறையில் மட்டுமே ஈடுபட்டு அதன்பால் செயற்படுவதாகும். இந்நிறுவனம் சூழல் பாதுகாப்பு, சிறுவர் பராமரிப்பு, குடும்பக் கட்டுப்பாடு போன்ற துறைகளில் ஈடுபட்டு வருகிறது. கட்சி சார்பற்ற அரச உருவாக்கம்
கட்சி சார்பற்ற அரசானது 1983ம் ஆண்டில் தோன்றியது. இச்சேவையானது ஜனநாயகம், அதிகாரப் பரவலாக்கல், கட்சி போன்ற அரசியல் கோட்பாடுகளை முன்வைப்பதோடு, அபிவிருத்தித் திட்டங் களையும் மேற்கொண்டது. ஆய்வுத்துறை
அரச சார்பற்ற நிறுவனங்கள் சமூகங்களில் ஆய்வுகளை மேற்கொள்ளுவதன் மூலம் சமூகத்தில் காணப்படும் பிரச்சினைகளை அடையாளம் கண்டு சேவை செய்வதோடு நின்று விடாது, ஜனநாயக சிவில் அமைப்புக்களை பலப்படுத்தல் போன்றவையாகும்.
அரச சார்பற்ற நிறுவனங்கள் பல இயங்குகின்றன. அவைகளில்
|மலையக அரசியலும் சமூக வாழ்வும் En
As a

Page 8
இலங்கையில் மலையகத்தைக் கூறி நிதியைப் பெற்றுக்கொள்ளும் சில அமைப்புக்கள் உண்மையாகவே செயல்படாததன் காரணமாக, மக்கள் மீதும் மலையக சமூகத்தின் மீதும் அக்கறையோடு செயல்பட விரும்பும் சில அரச சார்பற்ற நிறுவனங்கள் எதிர்காலத்தில் மலையகத்தில் குறிப்பாகத் தோட்டப்புறங்களில் சேவை செய்வது என்பது கேள்விக் குறியாகவே உள்ளது என வருத்தம் தெரிவிக்கின்றன.
தொண்டர் நிறுவனங்கள் இதுவரை காலமும் சரிவரச் செயற்
பட்டிருந்தால் கல்வித் துறையிலாவது ஒரு புதிய மாற்றத்தைக்கொண்டு வந்திருக்கலாம். மலையகத்தைப் பொறுத்தவரை தொண்டர்நிறுவனங்கள் கல்வித் துறையிலாவது அதிக அக்கறை காட்டவேண்டும் என்பது பலரின் கருத்தாகும்.
நவமணி
30.03.1997
சந்தனம் சத்தியநாதன்
as as
 

அதிகாரப் பரவலாக்கமும் மலையகத் தோட்டத் தொழிலாளர்களும் பிரித்தானிய காலனித்துவவாதிகளினால் இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட இந்திய வம்சாவழி மலையக தோட்டப்புற தமிழ்த் தொழிலாளர்கள் 1823-1825 காலப்பகுதியில் திட்டமிட்ட கோப்பிப் பயிர்ச் செய்கைக்காகவும் பின்னர் தேயிலைத் தோட்டங்களில் நிரந்தரமாக வேலை செய்யவும் பயன்படுத்தப்பட்டனர்.
நான்கு தசாப்தங்களைக் கழித்துவிட்ட இம்மக்கள் தமது அடிப்படை உரிமையைக்கூட இழந்த நிலையில் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அத்தோடு இந்நாட்டில் வாழும் நான்கு இலட்சத்திற்கும் அதிகமாவுள்ள தோட்டத் தொழிலாளர்களுக்கு குடியுரிமை இல்லை. இவர்கள் நாடற்றவர்களாகவே இன்னும் இருக்கிறார்கள்.
உலகத்திலே குறைந்த வேதனத்திற்காகக் கூடிய வேலை செய்யும் துர்ப்பாக்கியசாலிகளாகவும் காணப்படுகிறார்கள். எனவே சம்பளப் பிரச்சினை, வேலைநாட்கள் குறைப்பு, வீட்டுப்பிரச்சினை, சுகாதாரப் பிரச்சினை போன்றவற்றிக்கும் தீர்வு காணமுடியாமல் இருக்கின்றார்கள். நூற்றைம்பது வருடங்களுக்கு மேலாக இந்நாட்டில் வாழ்ந்த, தமது உடலுழைப்பை இந்நாட்டின் முன்னேற்றத்துக்காக அர்ப்பணித்து வரும் இம்மக்களது வாழ்வில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. தொடர்ந்து சோதனைகளும் வேதனைகளுமே இவர்களுக்கு மிஞ்சுகின்றன.
வறுமையின் பிடியில் அவர்கள் வாடிக்கொண்டே இருக்கிறார்க்ள். தினசரி அவர்கள் பலதரப்பட்ட சுரண்டல்களுக்கு ஆளாகிக் கொண்டே இருக்கின்றார்கள். அவர்களது வாழ்க்கையே ஒரு போராட்டமாக அமைந்துள்ளது. இவைகள் இவ்வாறு இருக்க, அரசியலமைப்புச் சீர்திருத்தம் மற்றும் ஆய்வுத் தகவல் நிலையம் படைத்த வெண்தாமரை இயக்கம் வெளியிட்ட ஒரு சஞ்சிகையில், அரசியல் தீர்வு யோசனைகளும் காணி அதிகாரங்களும், நியாயமான உரிமை, பொறுப்பு வாய்ந்த அரசொன்றாக, அரசியல் தீர்வு யோசனைகளில் காணி விவகாரம், யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவரல் போன்ற விடயங்கள் அடங்கியுள்ளதை அவதானிக்கக் கூடியதாக இருந்தன. அத்தோடு இணைக்கப்பட்டிருந்த ஒரு பகுதியில் அர்த்தபுஷ்டியுள்ள ஓர் அரசியல் தீர்வு மூலம் கெளரவமான சமாதானம், ஈவிரக்கமற்ற யுத்தத்தின் கசப்பான அதுபவங்கள், உறுதியானதோர் வாக்குறுதி, சமாதானத்திற்கான ஒரு திடமான அர்ப்பணிப்பு, யுத்தத்தின் பக்கம் அரசு மீண்டும் தள்ளப்பட்டதேன்? இந்த நூற்றாண்டின் துணிவுமிக்கதொரு தீர்மானம் அரசியல் தீர்வுத்திட்டம்,
மலையக அரசியலும் சமூக வாழ்வும் s
sિ[

Page 9
உங்களது தேசியத்தன்மையை மதிக்கின்றேன் போன்றதலைப்புகளுக்குக் கீழ் எழுதப்பட்டிருந்தன. இச்சஞ்சிகையில் கூறப்பட்டிருந்தவாறு,
தென்னிலங்கையில் வாழும் சிங்கள மக்களினதைப் போலவே தமிழ் மக்களது அடிப்படைக் கோரிக்கைகளிலும் பிரதான இடத்தை வகிப்பது காணி. இந்த இரண்டு இனங்கள் மத்தியிலும் நீண்ட காலமாக இருந்துவரும் துன்ப, துயரங்கள், கோரிக்கைகள் அனைத்திலும் பிரதான இடத்தை வகிப்பது காணியில் லாப் பிரச்சினையாகும். சில காலங்களுக்குமுன் சாதாரண மக்களிடையே எழுந்த இப்பிரச்சினைக்குச் சரியான தீர்வை வழங்குவதில் அரசாங்கங்கள் தொடர்ந்தும் தாமதம் காட்டின.
இதனால் தமிழ் மக்களிடையே இருந்த விரக்தி சுவாலை விட்டு எரிய ஆரம்பித்தது. வடக்கு கிழக்கு வாழ் மக்களுக்கு சொந்தமான காணிகளுள் பெரும்பாலானவை வளங்களின் அடிப்படையிலும் அவை கீழ் நிலையிலுள்ளதோடு, கைத்தொழில் நடவடிக்கைகளும் அப்பகுதிகளில் மேற்கொள்ளப் படாமையால் யாழ்ப்பாண மக்களது காணி தொடர்பான தேவையும் எதிர்பார்ப்பும் கனவாய்ப்போவதைக் காண அவர்கள் விரும்பவில்லை எனவும்,
யுத்தம் மனிதத் தன்மையற்றது. இது மனிதனுக்கும் அவனது எதிர்க்காலத்திற்கும் பரம விரோதியாகும். யுத்தம் தானாக உருவாவதில்லை. நெடுங்காலமாக உருவாகிவந்த மக்களது துன்ப, துயரங்களே இதற்கு ஏதுவாகின்றது.
இந்தக் காரணிகளை அகற்றுவதன்மூலம் யுத்தத்தை ஒழிக்கலாம் என்று அரசாங்கம் நம்புகிறது. எனவே வடக்கு கிழக்கு வாழ் மக்களது காணிப்பிரச்சினை உட்பட பல்வேறு பிரச்சினைகளுக்கு இந்த அரசியல் தீர்வு யோசனை வாயிலாக தீர்வுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதற்கு உங்கள் அங்கீகாரம் மட்டுமல்ல, அதனை வெற்றிப் பெறச்செய்வதற்கு உங்கள் அர்ப்பணிப்பையும் அரசாங்கம் எதிர்பார்க்கிறது என குறிப்பிடப்பட்டுள்ளன. இலங்கைப் பொருளாதாரத்தில் பெரும் பங்கை வகிக்கும் தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கியுள்ள இன்றைய பல பிரச்சினைகளுக்கு அதிகாரப் பகிர்வு எந்த வகையில் தீர்வைத் தரும் என்பது கேள்விக்குறி.
இம்மக்களது பிரச்சினைகள் பிரச்சினைகளாகத் தோன்ற வில்லையா? தொடர்ந்து ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் பேச்சளவில் பல வாக்குறுதிகளை வழங்கிய போதிலும் அவைகள் எந்தளவுக்கு சாத்தியமாகியுள்ளன என்பதை அளவிட ஒரு தோட்டத்துக்குச் சென்று பார்வையிட்டால் புலப்படும்.
எனவே மேல்காணும் கோரிக்கைகளும், தீர்வுத்திட்ட யோசனை களோடு சேர்க்கப்படவேண்டியது அவசியமாகக் கருதப்படுகின்றன.
j56upas - 06.07.1997
se
சந்தனம் சத் தியநாதன்

தனியார்மயம் தோட்டத்துறையில் எவ்வித தாக்கத்தை ஏற்படுத்தும்
அரசாங்கம் நீண்ட காலமாக எமது சமுதாயத்திலும் பொருளாதாரத்திலும் முக்கிய பணிகளை ஆற்றிவந்துள்ளது. அவை பல வழிகளில் எமக்குச் சிறந்த சேவை புரிந்துள்ளன. அவற்றை தனியார்மயமாக்குவது உண்மையில் அவசியந்தானா?
உண்மையிலே சில நிறுவனங்கள் செயல்திறன் குறைந்தவையாக நட்டத்தில் இயங்கி வருகின்றன. அவற்றை நடத்துவதற்குப் பெருமளவு பணத்தை வாரியிறைக்க வேண்டியுள்ளது. சில அரசாங்கத் தொழில் முயற்சிகள் இலாபத்தில் இயங்கவே செய்கின்றன. எனினும் அரசாங்கம் வழங்கும் மானியங்களின் பயனாகவே இவை இலாபமீட்டி வருகின்றன எனச் சில ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வேறு சில அரச தொழில் நிறுவனங்கள் உண்மையிலே இலாபத்தில் இயங்கிவருகின்றன. இவற்றைக்கூடத் தனியார் மயமாக்குவதனால் நாட்டுக்கு மேலும் நன்மைகள் கிடைக்கும். ஏனெனில் தனியார்மயமாக்கலின்மூலம் இந்த நிறுவனங்களை மேலும் சிறப்பாகச் செயற்படுத்தி முழுமையான உற்பத்தி ஆற்றலை வெளிப்படுத்த வாய்ப்பு ஏற்படும். இயந்திரச் சாதனங்களை நவீனமயப்படுத்தவும் தொழில் நிலைமைகளை முன்னேற்றவும் முதலீடுகள் பயன்படுத்தப்படும். புதிய தொழில்நுட்பங்கள், புதிய ஒழுங்கு முறைகள் அறிமுகப்படுத்தப்படும்.
இவைகள் நாட்டின் அபிவிருத்திக்கு உந்து சக்தி அளிக்கும். பாவனையாளருக்கு அதிக செலவு ஏற்படாத விதத்தில் உற்பத்திகளினதும் சேவைகளினதும் தரசிறப்பு அதிகரிக்கும் என அரசாங்கம் சிந்தித்துள்ளது. சமூகத்தின் மற்றெந்த அம்சத்தினைப்போலவே அரசாங்கம் அதன் பணப்பிரயோகத்தை வெளிவிடுதல், உள்வாங்குதல், போன்ற செயல்களுக்கு நிதியளிக்க ஏதாவது ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டும். ஒரு அரசு வழிமுறை இழப்பை ஏற்படுத்துமானால் மற்றொரு அரசின் வழிமுறை அதனை ஈடுசெய்யும் வகையிலான மிகை வருமானத்தினை தோற்றுவிக்க வேண்டும். முன்னைய மாதிரிகளைப் போன்று பணத்தை நுகரும் பெருந்தொகையான தொழில் முயற்சிகள் இருக்குமானால் அரசாங்கத்தின்மீது தேசிய பொருளாதாரத்தில் தவிர்க்க முடியாத விரயமே ஏற்படும். இலங்கை தொடர்பான துரதிருஷ்டவசமானதும் கவலைக்கிடமானதுமான உண்மை இதுவாகும்.
தனியார்மயப்படுத்தல் பற்றிய இன்றைய பேச்சுகளுக்கு மூலகாரணம் என்ன? தேர்தல் விஞ்ஞாபனங்கள், அரசாங்கக் கொள்கை, தொழில்கொள்வோர், ஊழியர் ஆகியோரின் வேறுபாடான நலன்கள்,
மலையக அரசியலும் சமூக வாழ்வும் s

Page 10
தொழிற்சங்கங்களுக்கிடையிலான இணக்கமின்மை அரசாங்க சேவையின் தரம், அரசாங்கத்தின் நிதிப்பிரச்சினைகள், உலக பொருளாதாரத்தின் புதிய மாதிரிகள் இவற்றில் எதையாவது விவாதத்துக்கென காரணமாகக் கூறலாம். ஆனால் தனியார்மயப்படுத்தல் என்பது ஒரு சாத்தியமான கொள்கையா? உண்மையில் இது அவசியந்தானா? என்பதை அறிந்து கொள்வது முக்கியமாகும்.
இந்த தனியார்மயத்தை யார் கோருகிறார்கள்? என்பது அடுத்த பிரச்சினை. உதவிக்கு அல்லது மேலும் தேசிய கடனில் இருந்து விடுபடுவதற்காக அரசாங்க செலவீனத்தைக் குறைக்க வேண்டுமெனக் கோரும் உலக வங்கி சர்வதேச நாணயச்சபை அல்லது வேறு வெளியார் முகவர் நிலையம் ஆகியவற்றிலிருந்தும் இந்த தனியார்மயப்படுத் தலுக்கான உடனடி வற்புறுத்தல் கொடுத்ததாக ஒரு கருத்தும் உள்ளது. அழுத்தம் கொடுக்கும் வட்டாரம் எதுவாக இருந்தாலும் பணப்புழக்கம் பெரிதாக இருக்கும் நடவடிக்கைகளை முடிவுசெய்வதே இதற்கான வெளிப்படையான முடிவாகும். கட்டமைப்பு, புனரமைப்பு, விஸ்தரிப்புக்கு உதவும் முதலீடுகளைப் பெற்றுக்கொள்வது, கிடைக்கும் ஏனைய தொழில்முயற்சிகளில் முதலீட்டிற்கான நம்பிக்கை வைப்பது ஆகியனவும் இவற்றில் அடங்குகின்றது.
எனவே தோட்டங்கள் தனியார்மயத்துக்குபின் தொழிலாளர்களின் சுகாதாரம், வீட்டுவசதி, தண்ணீர் வசதி, கல்வி போன்றவைகூட சரிவர செய்து கொடுக்காத நிலையில் அவர்கள் மிகுந்த அவதிப்படுகின்றனர். தொழிலாளர்களின் நலன்களில் எவ்வித அக்கறையும் இன்றி இலாபத்தை மட்டுமே இலக்காகக் கொண்டு சில கம்பனிகள் இயங்குகின்றன. தோட்டங்கள் நட்டத்தில் இயங்குவதாகக் கூறிக்கொண்டு, ஆதாய போனஸ் போன்ற கொடுப்பனவுகளைக்கூட வழங்குவதில்லை. அத்தோடு சேமலாபநிதி பணம் கூட சரியாக அனுப்பப்படுவதில்லை எனப் பல தொழிலாளர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். இந்த தனியார்மயத்தால் எதிர்காலத்தில் என்ன நடக்குமோ என்ற அச்சம் தொழிலாளர் மனதில் கேள்விக்குறியாக எழுந்துள்ளது.
நவமணி - 09.08.1997
சந்தனம் சத்தியநாதன்
 

தோட்டத் தொழிலாளர் கட்டமைப்பும் பல்தேசிய நிறுவனங்களின் தாக்கமும்
பிரித்தானியர்கள் இலங்கையில் ஆட்சி புரிந்த காலத்தில் பெருந்தோட்டக் கட்டமைப்பு 1810-1975 வரை தனிக்கம்பனி, சுப்பிறீன்டன், உதவி சுப்பிறிண்டன், பெரியகங்காணி, தொழிலாளர்கள் என்ற அடிப்படையில் காணப்பட்டது.
இந்தக் கட்டமைப்பு 1972-1993 வரை, அரசு, சுப்பிறீன்டன், உதவி சுப்பிறீன்டன், கணக்கப்பிள்ளை, சுப்பவைசர், கங்காணி, தொழிலாளி, ஆசிரியர்கள், சிவில் அமைப்புக்கள், வியாபாரிகள் மற்றும் கோவில் கமிட்டி, அரச சார்ந்த அமைப்புக்கள் இவைகளுடன் சாதிக்கட்டமைப்பில் பிற்படுத்தப்பட்டோர் 13%, தாழ்த்தப்பட்டோர் 87%, அதாவது, பிற்படுத்தப்பட்டோரில் கள்ளர், மறவர், அகமுடியரும், தாழ்த்தப்பட்டோரில் பள்ளர், பறையர், சக்கிலியரும் அடங்குகின்றனர். இத்தகவல்கள் அவர்களது பற்றுச் சீட்டில் இந்தியாவில் இருந்து பெரிய கங்காணியால் வரவழைக்கப்படும்போதே முத்திரையிடப்பட்ட ஒன்றாகவே அக்காலப்பகுதியில் அடையாளம் காணப்பட்டது. இது பிரித்தானியர்களின் காலனித்துவ ஆட்சி முறையாகவே கணிப்பிடப்படுகிறது.
1810ம் ஆண்டு தொடக்கம் 1975ம் ஆண்டு வரைக்கும் பெருந்தோட்டத் துறை வெளிநாட்டவர் கையில் வெளிநாட்டுக் கம்பனிகளால் நடாத்தப்பட்டது. குறிப்பாக ஜோர்ஜ்டுவட், ஸ்டேர்லின் கம்பனி போன்றவற்றைக் கூறலாம். இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னரும் கூட அந்தக் கம்பனி நிர்வாகங்கள் பெரும்பாலும் அவர்களிடையேதான் தங்கியிருந்தன.
அதன்பின் பெருந்தோட்டத்துறை அரச மயமாக்கப்பட்டது. அதன் பின்னர் வர்க்கரீதியாக உத்யோகஸ்தர்கள் பகிஷ்கரிக்கப்பட்டனர். சரியான நிர்வாகமின்மையால், அரசின் பிழையான வரிக்கொள்கையால் பெருந் தோட்டத்துறை நட்டத்தில் இயங்கத் தொடங்கியது.
அன்று அதிகாரத்தில் இருந்த அரசு திறைச்சேரியில் இருந்த பணத்தைக் கொண்டு நட்டத்தை ஈடுசெய்ய முற்பட்ட போதிலும் அது தாக்குப் பிடிக்கவில்லை.
உலக வங்கியிடம் கடன் கேட்டபோது, உலக வங்கி கடன்தர இணங்கவில்லை. அப்படி கடன் தருவதாக இருந்தால் தோட்டங்களை தனியார்மயமாக்கும்படி கேட்டுக்கொண்டது.
மலையக அரசியலும் சமூக வாழ்வும் az

Page 11
எதையுமே செய்ய முடியாத நிலையில் அரசு உலக வங்கியின் கட்டளைக்கேற்பப் பெருந்தோட்டத்துறையை தனியார் கம்பனிகளுக்குக் கையளித்தது. இலங்கையில் பெருந்தோட்டங்களை வாங்கும் அளவுக்கு அன்று பணக்கார முதலாளிமார் இருக்கவில்லை.
இங்குள்ள முதலாளிமார்கள் ஏனைய வெளிநாட்டுக் கம்பனிகளோடு உறவுகளை வலுப்படுத்திக்கொண்டு, அவர்களின் மூலதனத்தையும் இங்கு முதலீடு செய்யும்படி அழைத்தனர். இந்தக் கூட்டு குத்தகை ஒப்பந்தம் பல்தேசியக் கம்பனிகளின் வருகை எனக் கணிக்கப்படுகிறது.
இந்தப் பல்தேசிய கம்பனிகளின் தாக்கம் மலையகத் தோட்டப்புறம் எங்கும் வியாபித்துக் காணப்படுகிறது. இந்தப் பல்தேசியக் கம்பனிகளின் வியாபிப்பால் தோட்டத்தொழிலாளர்களின் வாழ்க்கைநிலையில் எந்த மாற்றமும் இதுவரைக்கும் இல்லை. சுகாதாரம், வீட்டு வசதி, தண்ணிர் வசதி, கல்விவசதி போன்றவைகூட சரிவர செய்துகொடுக்காத நிலையில் அவர்கள் மிகுந்த அவதிப்படுகிறார்கள்.
தொழிலாளர்களின் நலன்களில் எவ்வித அக்கறையும் இன்றி அவர்களது ஆதாய போனஸ் போன்ற கொடுப்பனவுகளை, தோட்டங்கள் நட்டத்தில் இயங்குவதாகக் கூறிக்கொண்டு வழங்க மறுக்கின்றனர். தொழிலாளர்களின் நலன்களில் அக்கறை காட்டவேண்டிய தொழிற்சங்கங்கள் இரகசிய ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுக் கொண்டு கூலிக்கு மாரடிக்கின்றன. முகாமைத்துவ கம்பனிகள் இலாபத்தை மட்டுமே இலக்காகக் கொண்டு செயல்படுகின்றன.
என்றோ ஒரு நாள் தொழிலாளிகள் விழித்துக் கொள்வர். அன்று இப்படியானவர்கள் எல்லோருமே ஓட்டம் எடுக்க நேரிடும்.
நவமணி 13.04.1997
சந்தனம் சத்தியநாதன்
بیج
 

தோட்டத் தனியார் மயமாக்கலும் தோட்டப் பெண்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகளும்
இலங்கையின் வரலாற்றில் பெருந்தோட்டத் துறையும் ஒரு முக்கிய பங்கை வகிக்கின்றது என்றால் அது மிகையாகாது. 1823-1825 காலப்பகுதியில் திட்டமிட்ட கோப்பிப் பயிர்ச்செய்கை பிரித்தானியர் களினால் ஆரம்பிக்கப்பட்டது.
ஹென்றி ஜோர்ஜ் பார்ட், கவர்னர் பாண்ஸ் ஆகியோர் கோப்பிப் பயிர்ச்செய்கையின் முன்னோடிகளாகக் கருதப்படுகினறனர். 1824ல் ஜோர்ஜ் பார்ட் என்பவரால் கம்பளை சிங்காப்பிட்டிய பகுதியில் கோப்பிப் பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்பட்டது.
திரு. பார்ட் போண்ஸ் என்பவரால் 150 இந்தியத் தமிழ் தொழிலா ளர்கள் வரவழைக்கப்பட்டனர். 1837-1839 வரையிலான காலப்பகுதியில் 2 437 தொழிலாளர்கள் மீண்டும் இந்தியாவில் இருந்து கொண்டுவரப் பட்டார்கள். 1840ல் சீனத் தொழிலாளர்களைக் கொண்டுவருவது பற்றி ஆராய்ந்தபோது அது சாத்தியப்படவில்லை.
1843, 1844 வரையிலானக் காலப்பகுதியில் மறுபடியும் 71-173 தொழிலாளர்களை இந்தியாவிலிருந்து கொண்டுவந்தார்கள். அக்காலப்பகுதியில் கோப்பிப் பயிருக்கு ஏதோ ஒருவித நோய் ஏற்பட்டு வீழ்ச்சி ஏற்பட்டது (1866). இதை முன்கூட்டியே உணர்ந்த ஜேம்ஸ் டெயிலர் என்பவர் 1860 களில் லூல்கந்தலா தோட்டத்தில் தேயிலைப் பயிரை அறிமுகப்படுத்தினர்.
இலங்கைத் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்வதற்கென "ஆதிலெட்சுமி" நீராவிக் கப்பலில் 120 தொழிலாளர்கள் இந்தியாவில் இருந்து இலங்கை வந்து கொண்டிருக்கையில் அக்கப்பல் கவிழ்ந்தபோது 7 சாதாரணப் பயணிகளும் 13 மாலுமிகளும் உயிர் தப்பினர். ஏனையோர் மரணமடைந்தனர்.
1876 காலப்பகுதில் ஹென்றிவிக்காம் என்பவரால் களுத்துறை, காலி, கேகாலை, மாத்தறை போன்ற பகுதிகளில் இறப்பர் பயிர்ச்செய்கையை ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.
இவைகளோடு தோட்டக் கட்டமைப்பு பின்வருமாறு அமைந்தது.
மலையக அரசியலும் சமூக வாழ்வும் s

Page 12
6hJiřša5ša5L Londů - 1810-1975
ஒ=தனிக்கம்மனி
ஒகைப்பிறிண்டன்
کمعe/ قمع قاتل تھے-جN©@@/
GGG (S- பெரிய காங்காணி
/ அ999999 Nஏ-தொழிலாளர்கள்
வர்க்கக்கட்டமைப்பு - -1975 - i q ዓኃ
கப்பிறிண்டன்
உதவி
கணக்குப்பிள்ளை
சுப்பர்வைசர் / கங்காணி N / தொழிலாளர்கள் N
இந்த கட்டமைப்பு விதிகள் இவ்வாறு இருக்க இவர்களது வீடமைப்பு எவ்வாறு இருந்தது எனப் பார்ப்போம். கோப்பிக் காலத்தில் நிரந்தரமாகத் தங்கிய தென்னிந்திய தமிழ் தொழிலாளர்களின் தொகை குறைவாகவே காணப்பட்டது.
காரணம் கோப்பித் தோட்டங்களில் வருடம் முழுவதும் மக்களுக்கு நிரந்தரமாக வேலை போதுமான அளவு இருக்கவில்லை. எனவே தற்காலிகமாகத் தங்கி வேலைசெய்வதற்கு எத்தகைய தங்குமிடமும் அவர்களுக்கு போதுமானதாக இருந்தது.
இந்த தோட்ட மக்களின் குடியிருப்புத் தொடர்பாக ஆராய புகுந்த "மில்லி” என்ற ஆய்வாளர் இந்த லைன்கள் என்ற பெயர் ஏற்பட்டது என்பது குறித்தும், அதற்கான காரணம் தனக்கு தெரியவில்லை என ஒத்துக்கொண்டுள்ளார்.
国国 国 சந்தனம் சத்தியநாதன்
 
 
 
 
 
 
 
 

அவரின் கூற்றுப்பபடி வரிசையாக "லைன்" அமைக்கப்பட்ட கொட்டில்கள், அல்லது தொடர் குடில்கள் என்பதால் வீடு என்றோ மிருகங்கள் வாழும் கொட்டில்கள் என்றோ அவற்றை அழைக்க முடியாதலால் "லைன்” என்ற பெயர் உருவாகி இருக்கலாம் என நம்பப்படுகிறது.
கோப்பியின் ஆரம்ப காலத்தில் இந்தியாவிலிருந்து வரும் பெண்களின் தொகை குறைவாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது. அன்று 1885ல் 38 ஆணுக்கு ஒரு பெண் என்ற விகிதம் காணப்படுவதும் குறிப்பிடத்தக்கதொரு விடயம்.
இதனால் சமூகப் பிரச்சினைகளும் சமூக நோய்களும் பெருகியதோடு படிப்ப்டியாக பெண்களின் வருகை அதிகரித்தது. குடும்ப அலகுகள் உருவானதும் இடநெருக்கடி பிரச்சினை உணரப்பட்டதாக தெரியவருகிறது.
தோட்டங்கள் தனியார் மயமாக்கலின் பின் எவ்வாறான நிலையில் உள்ளன என்பதை ஆய்வு செய்யும் முகமாக நான் புஸ்ஸல்லாவை சோகமாத் தோட்டத்தில் எடுத்த சில தகவல்களை தரலாம் என எண்ணுகிறேன்.
1990ல் சோகமாத் தோட்டம் SLSP நிருவாகத்தின் கீழ் இருந்தது. அதைத் தொடர்ந்து எரிசன் சாபி, மற்றும் தற்போது ஃபிரீலங்கா மெனேஜ்மன்ட கம்பனி பொறுப்பேற்றுள்ளது. 1990ல் கம்பனி எடுக்கும்முன் பதிவாகியுள்ள சில தகவல்கள்
நிரந்தர ஆண் தொழிலாளர்கள் 500 நிரந்தர பெண் தொழிலாளர்கள் 350 சமயா சமய ஆண் தொழிலாளர்கள் --
சமயா சமய பெண் தொழிலாளர்கள் 70 கைகாசு ஆண் தொழிலாளர்கள் 30 கைகாசு பெண் தொழிலாளர்கள் 25 தொழிற்கோட்டு வழக்குகள் 10 ஓய்வு பெற்றோர் 05 குறைந்த வயதில் ஒய்வு பெற்றோர் 15 புதிய தொழில் வாய்ப்பு 05 திருமணமாகி சென்ற பெண்கள் 12 திருமணமாகி வந்த பெண்கள் 08
1992 - 1996 கம்பனி எடுத்தபின் பதிவாகியுள்ள சில தகவல்கள்
நிரந்தர ஆண் தொழிலாளர்கள் 450 நிரந்தர பெண் தொழிலாளர்கள் 335 சமயா சமய ஆண் தொழிலாளர்கள்
சமயா சமய பெண் தொழிலாளர்கள் 35 கைகாசு ஆண் தொழிலாளர்கள் 20
| மலையக அரசியலும் சமூக வாழ்வும்

Page 13
கைகாசு பெண் தொழிலாளர்கள் 30 தொழிற்கோட்டு வழக்குகள் 18 ஓய்வு பெற்றோர் 50 குறைந்த வயதில் ஓய்வு பெற்றோர்
புதிய தொழில் வாய்ப்பு -
திருமணமாகி சென்ற பெண்கள் 20 திருமணமாகி வந்த பெண்கள் 25
அரசாங்கம் நீண்டகாலமாக எமது சமூதாயத்திலும் பொருளாதாரத்திலும் முக்கிய பணிகளை ஆற்றிவந்துள்ளது. அவை பல வழிகளிலும் எமக்கு சிறந்த சேவை புரிந்துள்ளன. அவற்றை தனியார்மயமாக்கியதால் பல துன்பங்களை தொழிலாளர்கள் சந்திக்க நேர்ந்துள்ளது.
உண்மையில் சில நிறுவனங்கள் செயல்திறன் குறைந்தவையாக, நட்டத்தில் இயங்கி வருகின்றன. அவற்றை நடத்துவதற்கு பெருமளவு பணத்ததை வாரியிறைக்க வேண்டியுள்ளது. சில அரசாங்க தொழில் முயற்சிகள் இலாபத்தில் இயங்கி வருகின்றன. எனினும் அரசாங்கம் வழங்கும் மானியங்களின் பயனாக இவை இலாபமீட்டி வருகின்றன எனச் சில ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வேறு சில அரச தொழில் நிறுவனங்கள் இலாபத்தில் இயங்குகின்றன. இவற்றைகூட தனியார் மயமாக்க அரசு திட்டம் தீட்டியுள்ளது. இந்த நிறுவனங்களை மேலும் சிறப்பாக செயல்படுத்தி முழுமையான உற்பத்தி ஆற்றலை வெளிப்படுத்த வாய்ப்பு ஏற்படுவதோடு, இயந்திர சாதனங்களை நவீன மயப்படுத்தவும், தொழில் நிலைமைகளை முன்னேற்றவும் புதிய தொழில் நுட்பங்களை அறிமுகப்படுத்தி நாட்டின் அபிவிருத்தியைக் கருத்தில் கொள்ளவும் அரசாங்கம், ஏழைத் தொழிலாளியின் உழைப்புச் சுரண்டலைக் கருத்தில் கொள்ளவில்லை என்பது வேதனைக்குரியது.
சமூகத்தின் மற்றெந்த அம்சத்தினைப் போலவே அரசாங்கம் அதன் பணப்பிரயோகத்தை வெளிவிடுதல், உள்வாங்குதல் போன்ற செயல்களுக்கு நிதியளிக்க ஏதுவாக ஒரு வழியைக் கண்டு பிடிக்க வேண்டும். ஒரு அரச வழிமுறை இழப்பை ஏற்படுத்தமானால் மற்றொரு அரசின் வழிமுறை அதனை ஈடுசெய்யும் வகையிலான மிகை வருமானத்தைத் தோற்றுவிக்க வேண்டும்.
முன்னைய மாதிரிகளைப் போன்று பணத்தைநுகரும் பெருந்தொகையான தொழில் முயற்சிகள் இருக்குமானால் அரசாங்கத்தில் தேசிய பொருளாதாரத்தில் தவிர்க்க முடியாத விரயமே ஏற்படும். இலங்கை தொடர்பான துரதிருஷ்டவசமானதும் கவலைக்கிடமானதுமான உண்மை
சந்தனம் சத்தியநாதன்

தனியார்மயப்படுத்துதல் பற்றிய இன்றைய பேச்சுகளுக்கு மூல காரணம் என்ன? தேர்தல் விஞ்ஞாபனங்கள் அரசாங்கக் கொள்கை, தொழில்கொள்வேர், ஊழியோர் ஆகியோரின் வேறுபாடான நலன்கள், தொழிற்சங்கங்களுக்கிடையிலான இணக்கமின்மை, அரசாங்க சேவையின் தரம், அரசாங்க நிதிப்பிரச்சினைகள், உலக பொருளாதாரத்தின் புதிய மாதிரிகள் இவற்றின் எதையாவது விவாதத்திற்கான காரணமாகக் கூறலாம்.
தனியார் மயப்படுத்தல் என்பது ஒரு சாத்தியமான கொள்கையா? உண்மையில் இது அவசியந்தானா? என்பதை அறிந்து கொள்வது முக்கியமாகும். இந்த தனியார்மயத்தை யார் கோருகிறார்கள்? என்பது அடுத்த பிரச்சினை.
உதவிக்கு அல்லது மேலும் தேசிய கடனில் இருந்து விடுபடுவதற்காக அரசாங்க செலவினத்தைக் குறைக்க கோரும் உலக வங்கி சர்வதேச நாணய சபை அல்லது வேறு வெளியார் முகவர் நிலையம் ஆகியவற்றிலிருந்தும் இந்த தனியார்மயப்படுத்தலுக்கான உடனடி வற்புறுத்தல் கொடுத்ததாக ஒரு கருத்தும் உள்ளது.
அழுத்தம் கொடுக்கும் வட்டாரம் எதுவாக இருந்தாலும் பணப்புழக்கம் பெரிதாக இருக்கும் நடவடிக்கைகளை முடிவு செய்வதே இதற்கான வெளிப்படையான முடிவாகும்.
கட்டமைப்பு, புனரமைப்பு, விஸ்தரிப்புக்கு உதவும் முதலீடுகளை பெற்றுக் கொள்வது, கிடைக்கும் ஏனைய தொழில் முயற்சிகளில் முதலீட்டுக்கான நம்பிக்கையை வைப்பது. ஆகியனவும் இவற்றில் அடங்குகிறது.
தனியார்மயத்துக்குபின் தொழிலாளர்களின் சுகாதாரம், வீட்டுவசதி, நீர்வசதி, கல்வி போன்றவைகூட சரிவர செய்து கொடுக்காத நிலையில் அவர்கள் மிகுந்த அவதிப்படுகின்றனர்.
தொழிலாளர்களின் நலன்களில் எவ்வித அக்கறையுமின்றி இலாபத்தை மட்டுமே இலக்காய் கொண்டு சில கம்பனிகள் இயங்குகின்றன. தோட்டங்கள் நட்டத்தில் இயங்குவதாகக் கூறிக்கொண்டு ஆதாய போனஸ் போன்ற கொடுப்பனவுகளைக்கூட வழங்குவதில்லை. அத்தோடு சேமலாப நிதிக்குரிய பற்றுச்சீட்டுகள் கம்பனி தோட்டங்களை நிர்வகிக்க தொடங்குவதில் இருந்து தடைப்பட்டுவிட்டது குறித்து, பல தொழிலாளர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
தனியார்மயமாக்கல் இப்பின்னணியின் கீழ் இலங்கையும் எண்பதுகளின் பின்னிறுதியில் படிப்படியாக உலக மயமாக்கலை அறிமுகப்படுத்தியது. ஆரம்பத்தில் தொழிற்சங்கங்களின் எதிர்ப்பின் காரணமாக உலக மயம் என்ற போர்வையின் கீழ் நடைபெறும் தனியார்மயமாக்கலை கட்டம் கட்டமாக மேற்கொண்டது.
தொண்ணுறுகளின் பின்னர் இச்செயற்பாடு இன்று
மலையக அரசியலும் சமூக வாழ்வும் 国型

Page 14
அதிவேகப்படுத்தப்பட்டு வருகின்றது. அனைத்து அரச ஸ்தாபனங்களும் தனியார்மயப்படுத்தப் படுகின்றது. இச்செயற்பாட்டின் அங்கமாகவே பல இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளடங்கிய தொழில்துறையான தோட்டத் தொழிற்துறை தனியார்மயமாக்கப்பட்டது.
இந்த தனியார்மயமாக்கல், தொழிற்சங்கங்களின் எதிர்ப்பின் காரணமாக பல நிபந்தனைகளுடன் மேற்கொள்ளப்பட்டது. தோட்டங்களைப் பொறுப்பேற்கும் தனியார் கம்பனிகள் அத்தோட்டங்களில் தொழில் புரியும் தொழிலாளர் தொடர்பான பின்வருவனவற்றை அமுல்படுத்த வேண்டுமென நிபந்தனை இட்டது.
தோட்டக் கம்பனிகள் தமது இலாபத்தின் பத்து சதவீதத்தை தொழிலாளர்களின் சமூக நல நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நிதியத்திற்கு வழங்கவேண்டும். தோட்டத் தொழில் துறை பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யும்போது பத்து சதவீதப் பங்கினை, தோட்டத்தில் சேவையாற்றும் தொழிலாளருக்கு வழங்கவேண்டும். வருடத்தில் முந்நூறு வேலை நாட்களை உத்தரவாதம் செய்வதுடன் இளம் சந்ததியினருக்கு வேலை வாய்ப்பினை வழங்கவேண்டும் என்பது ஏனைய நிபந்தனைகளில் முக்கியமானது. எது எப்படியோ!
சமூகக் கட்டமைப்பில் பெண் என்பவள் எவ்வகையானவள்? அவளுக்கு இந்த சமூகத்தில் கிடைக்கும் அந்தஸ்த்து என்ன? என்பவற்றை ஆராயவேண்டிய ஒரு சூழ்நிலை அவசியமாகிறது. இவ்வாறு சிந்திக்கையில் ஆண் பெண் சமத்துவம் என்பது ஒரு ஆணாதிக்க சமூகத்தில் எவ்வாறு இருக்கும் என்ற கேள்வி எழத்தான் செய்கிறது.
இங்கு முக்கியமான ஒரு விடயத்தை கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம். ஆண் பெண் சமத்துவத்தைப் பற்றி பார்க்கும்போது இருபாலாரின் கருத்துக்களும் பேணப்படுவது அவசியிமாகிறது.
பெண்கள் எவ்வாறு இரண்டாம் தரப்பிரஜைகளக்கப்பட்டார்கள் என்பதை பார்ப்போம்; மனிதகுல வரலாற்றை உற்று நோக்கும்போது அங்கு மனிதன் முதல் கண்ட கைத்தொழில் குயவத்தொழிலாகும். இந்தக் குயவத் தொழிலில் பெண்களின் கைரேகைகள் பதிவாகியுள்ளதை தொல்பொருள் ஆய்வு சான்றுகள் கூறுகின்றன.
சித்தாந்த ரீதியாக பெண்களின் நிலையை நோக்கும்போது ஆரம்பகாலத்தில் மொழி தோற்றுவிக்கப்பட்டமையால் மனிதர்களுக்கிடையே உள்ள உறவு வளர்ச்சியடைந்தது. இது மனிதனின் அறிவு வளர்ச்சிக்கு ஒரு ஊடகமாகப் பயன்பட்டது. அறிவு என்ற ஞானம் ஆண் வர்க்கத்துக்கே சாதகமாக அமைந்தது.
இதனால் அவர்களின் அதிகாரம் மேலோங்கப் பெற்றதுடன் இவ்வதிகாரமானது ஆண்களுக்கே பலம் வாய்ந்ததாக அமைந்தது. இதனடிப்படையில் சித்தாந்த ரீதியில் நடைமுறைகள் என்பதை நோக்கு
2 சந்தனம் சத்தியநாதன்

மிடத்து, மொழி, அறிவு, அரசு, அதிகாரம், ஒழுக்கக்கட்டமைப்பு, கல்வி, குடும்பம், பெண்கள், தாழ்த்தப்பட்டோர், உழைக்கும் வர்க்கம், விதவைகள், அங்கவீனர்கள், என வரிசைப்படுத்தலாம். இந்த அதிகாரங்கள் மற்றும் இந்த கட்டமைப்பை உருவாக்கியவர்கள் ஆண்கள் என்றபடியால் பெண்கள் இவற்றில் இரண்டாம் தரமாக ஆக்கப்பட்டு விட்டார்கள்.
இந்த பெண்கள் இரண்டாம்தரப் பிரஜைகளானது மட்டுமன்றி பல ஒடுக்குமுறைகளுக்கும் உள்ளாக்கப்பட்டார்கள். இந்த பெண் ஒடுக்குமுறை இலங்கையில் மட்டுமன்றி முழு உலகிலும் வியாபித்தே காணப்படுகிறது.
பெண்ஒடுக்குமுறைகளுக்கெதிராக வடஅமெரிக்காப் பெண்கள் தமது கோஷத்தை 1960ம் ஆண்டுகளிலே எழுப்பினார்கள். அங்கு எழுப்பப்பட்ட தி ஜுவாலை இங்கிலாந்துக்கும் ஏனைய ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவியது.
1970களின் பிற்பகுதியில் அவ்வலை இலங்கையிலும் பரவ ஆரம்பித்தது. 1977ம் ஆண்டு திருமதி.குமாரி.ஜயவர்த்தனா அவர்கள் பெண்விடுதலை பற்றிய ஒரு பரபரப்பை முதன்முதலாக இலங்கையில் ஏற்படுத்தினார்.
மேலும், சமசம்பளம் இதிலென்ன ஞாயம்? காலை 7 மணிமுதல் மாலை 5 மணிவரை பெண் தோட்டத் தொழிலாளர்கள் வேலை செய்து 83 ரூபா பெறுகின்றனர்.
ஆண் தொழிலாளி காலை 7 மணிமுதல் பிற்பகல் 1.00 மணிவரை வேலை செய்து 83 ரூபாவைப் பெறுகிறார்கள். இதுவும் ஒரு ஏற்றத்தாழ்வு வசதி படைத்த ஒரு அரசாங்க ஊழியர் தான் வேலை செய்யும் இடத்தில் சகல வசதிகளும் இருந்தால் மட்டுமே தனது சேவையை செய்ய முன்வருவார் (பெண்). ஆனால் தோட்டங்களில் தேயிலை மலைகளில் வேலை செய்யும் பெண்களுக்கு மலசலகூடம் இல்லை. பிற வசதிகள் இல்லை.
இவற்றோடு பெண்களின் லீவு விபரம் பின்வருமாறு, வருடம் 66 நாட்களுக்கு குறையாமல் 132 நாட்களுக்கு கூடாமல் 4 நாள் லீவு.
வருடம் 132 நாட்களுக்கு குறையாமல் 197 நாட்களுக்கு கூடாமல் 8 நாள் லீவு.
வருடம் 198 நாட்களுக்கு குறையாமல் 263 நாட்களுக்கு கூடாமல் 4 நாள் லீவு.
வருடம் 264 நாட்களுக்கு குறையாமல் அதற்கு மேற்பட்டால் 17 நாள் லீவு.
இதனடிப்படையில் சம்பளத்துடன் லீவு (Holiday Pay) வழங்கப் படுகிறது. இது சட்டத்தில் கூறப்பட்டுள்ளவை.
மலையக அரசியலும் சமூக வாழ்வும் 檀图

Page 15
இதைத்தொடர்ந்து மலையகப் பெண்கள் முகம் கொடுக்கும் பிரச்சினை "ஜீவ மரணப் போராட்டம்” என்றுகூட கூறலாம். அதுதான் பிரசவகாலம்.
இந்த பிரசவ சகாய நிதிச்சட்டம் 1939ம் ஆண்டு முதன்முதலில் கொண்டுவரப்பட்டது. அதன்பின் 1946, 1952, 1962,1965 ஆகிய வருடங்களில் திருத்தங்கள் காலத்துக்கேற்றவாறு கொண்டுவரப்பட்டன. இச்சட்டத்தின் பிரதான நோக்கம் பிரசவ தாய்மார்கள் பிரசவ காலத்தில் சம்பளத்துடன் லிவு வழங்குவதாகும். இதில் ஒரு வேடிக்கையான விடயம்தான் பிரசவ விடுதிகள் உள்ள தோட்டங்களில் 3/7 வீதம் பிரசவ விடுதிக்கு பிடித்துக்கொண்டு 4/7 சதவீதத்தை தாய்க்கு வழங்குவது.
நகரத்திலோ கிராமத்திலோ உள்ள ஒருவருக்கு அரசாங்க மருத்துவமனையில் எந்தக் கொடுப்பனவும் வாங்குவதில்லை. தோட்டங்களில் மட்டும் ஏன் இவ்வாறு நடக்கிறது. அப்படி என்றால் தோட்டங்கள் இலங்கைக்குச் சொந்தமில்லையா? அல்லது அந்த மக்கள் இலங்கை அரசுக்கு சொந்தமானவர்கள் இல்லையா? இது போன்ற பல சுரண்டல்களுக்குத் தோட்டப் பெண்கள் முகங்கொடுக்க வேண்டி யுள்ளதைக் குறிப்பிடவேண்டியுள்ளது.
எனவே மலையகத்திலும் படித்த பெண்கள், இந்த தோட்டப்புற பெண்களை அணிதிரட்ட வேண்டும். இந்த தோட்டப்புற பெண்கள் அமைப்பு சுதந்திரமாகச் செயல்பட மலையக புத்திஜீவிகள் வழியமைத்துக் கொடுப்பதை தனது வரலாற்றுக் கடமையாக எண்ணிச் செயல்பட வேண்டும்.
நவமணி - 04.01.1998, 11.01.1998
2 சந்தனம் சத்தியநாதன்

தோட்டத் தொழிலாளர் வேலை நிறுத்தம் வெற்றிதானா?
கடந்த 05.02.1998 தொடக்கம் ஒன்பது நாட்கள் தொடர்ச்சியாக வேலை நிறுத்தம் செய்த தொழிலாளர்களுக்கு முதலாளிமார் சம்மேளனம் 96 ரூபா சம்பளமும் 5 ரூபா போனஸ் பணத்தையும் சேர்த்து 101 ரூபாயென தொழிலாளர்களுக்கு வழங்குவதாக ஒப்புக்கொண்டது. இதை இ.தொ.கா மற்றும் ஏனைய தொழிற்சங்கங்களும் ஒத்துக்கொண்டதை அடுத்து தொழிலாளர்களை வேலைக்குத் திரும்பும் படி பணித்தபோது சில தொழிற்சங்கத் தலைவர்களது கொடும்பாவி எரிப்பும் ஏற்பட்டதாக செய்தித்தாள்கள் அறிக்கை வெளியிட்டிருந்தன.
இதே போன்று 09.08.1996 அன்று அடையாள வேலை நிறுத்தமொன்றை தோட்டத் தொழிற்சங்க கூட்டமைப்பு நடத்தியது. அப்போது இவர்களது கோஷம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், முதலாளிமார் சம்மேளனம் முக்கூட்டு துரோக ஒப்பந்தம் செய்து கொண்டதாக அறிவிக்கப்பட்டது.
அப்பொழுது வாழ்க்கைச் செலவு புள்ளி உயர்வு அலவன்சோடு ஜுன் மாதச் சம்பளம் ரூபா 77.28 ஜூலை 1996 மாதச் சம்பளம் ரூபா 80.52. இந்த வகையில் இன்னும் இரண்டொரு மாதங்களில் உங்கள் சம்பளம் 100 ரூபா ஆகிவிடும் எனவும் வாழ்க்கைச் செலவு புள்ளி அலவன்ஸ் தொடர்ந்து வழங்கினால் சம்பளம் தானகவே உயரும். அதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. இதை இல்லாதொழிப்பதற்காகவே இரகசிய ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டதாகவும் கூறியது தொழிற்சங்க கட்டமைப்பு.
இந்த ஒப்பந்தம் 1996ல் கைச்சாத்தானதால் 1998 வரை சம்பள உயர்வு கோரமுடியாமல் போனது.
1996 களில் தோட்டத் தொழிற்சங்க கூட்டமைப்பு பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்து மாதம் 20 நாள் வேலைக்கு 2000 ரூபா மாதச்சம்பளமும் 20 நாட்களுக்கு மேல் வேலை வழங்கினால் நாளொன்றுக்கு 150 ரூபாயும், வாழ்க்கைச் செலவு புள்ளி அலவன்ஸ் தொடர்ந்து வழங்கவும் தோட்டச் சேவையாளருக்கு வாழ்கைப் புள்ளி அலவன்ஸ் 5 ரூபாவாக உயர்த்துவதும் இவர்களது கோரிக்கைகளாக இருந்தன.
இறுதியில் தொழிலாளர்கள் ஏமாந்தது மட்டுந்தான் மிச்சமானது. இனியொரு வேலை நிறுத்தத்திற்கு தொழிற்சங்கங்களை நம்பித்
மலையக அரசியலும் சமூக வாழ்வும் 国团
a

Page 16
தொழிலாளர்கள் முன் வருவார்களா என்பது கேள்விக்குறியே. இரண்டு வருடத்திற்கு முன் கேட்ட 100 ரூபாவுக்கு இப்போதுதான் 96 ரூபா கிடைத்திருக்கிறது. ஆகவே இவைகளை ஒப்பிட்டுப் பார்க்கையில் வேலை நிறுத்தம் வெற்றிதானா? என்ற கேள்விக்கு தோல்விதான் என்ற பதிலே மேலோங்குகிறது.
நவமணி - 08.03.1998
சந்தனம் சத்தியநாதன்

எதிர்காலத்தில் தொழிற்சங்கப் போராட்டங்கள்
போராட்டங்கள் இன்றி உரிமைகளை வென்றெடுக்க முடியுமா? இது மக்கள் மத்தியில் மட்டுமன்றி அமைப்புகள் ரீதியிலும் எழுந்துள்ள கேள்வியே! இந்த போராட்டம் என்ற சொற்பதத்தை சிந்தனை ஊடாக நாம் அடையாளம் காணலாம். சில படிப்பினைகளும் உதாரணமாக அமைகின்றன.
அதே போல் தோட்டத் தொழிலாளர்கள் வென்றெடுத்த சில உரிமைகளும் போராட்டங்களில் கிடைத்த வெற்றியே என்றால் அது மிகையாகாது. போராடிப் பெற்ற உரிமைகள் பறிபோகும் போது மீண்டும் போராடும் நிலை உருவாகிறது. இந்தப் போராட்டத்தை எவ்வாறு முன்னெடுப்பது? என்ற கேள்வியும் எழத்தான் செய்கிறது. எனவே முன்னைய தொழிற்சங்கப் போராட்டங்களை, அதன் வரலாறுகளை தெரிந்து கொள்வது அவசியம். அத்தோடு இன்றைய காலத் தேவையின் நிமித்தம் போராட்டத்தின் வடிவங்களை அடையாளம் காணுதல் வேண்டும்.
தொழிற்சங்க போராட்டம் எதனால் உருவாகிறது? அதனால் ஏற்பட்ட விளைவுகள் என்ன? தீர்வு / சாதகபாதகங்கள் எவ்வாறு இருந்தன என்பதை முதலில் அடையாளம் காணவேண்டும். அன்று தொழிலாளர் மீது எவ்வாறான ஆதிக்கம் இருந்தது. இன்று அது எவ்வாறு காணப்படுகிறது என்பதோடு முன்னைய சில யுக்திகளை கையாளலாம். முழுமையாக பழைய முறைகளை பயன்படுத்துவதன்மூலம் தோல்வியை தழுவ நேரிடும்.
இங்கு ஒரு உண்மை என்னவென்றால் தொழிற்சங்கப் போராட்டங்கள் தன்னிச்சையாகவே எழுந்துள்ளன. அது அவர்களின் தேவையின் அடிப்படையில் அவ்வப்போது தோன்றியுள்ளது.
எனவே தொழிற்சங்கப் போராட்டங்களை முன்னெடுக்குமுன் முதலாளிமார்களின் சக்தி என்ன? அவர்களது பலவீனம் என்ன என்பதை அடையாளம் காணுவது அவசியம். அதேபோல் தொழிலாளர்களின் சக்தி, பலவீனம் என்ன என்பதை மிகமிக முக்கியமாக தொழிற்சங்கங்கள் அடையாளம் காண்பது அவசியம்.
காரணம், தோட்டத் தொழிலாளர்களை வறுமை வாட்டி வதைப்பதால் எடுக்கும் இந்த போராட்டத்தை அவர்களால் தாக்குபிடிக்க முடியுமா என்பதையும், தொழிலாளர்களின் மனோநிலையையும் கண்டறிதலோடு முன்வைக்கும் கோரிக்கையின் நிமிர்த்தம் அவர்கள் மனோநிலை பலப்பட வேண்டும்.
மலையக அரசியலும் சமூக வாழ்வும் z
ZSR ZA

Page 17
முதலாளிக்கு எந்த பலவீனம் இருந்தாலும் நின்று பிடிக்கும் தன்மை உள்ள காரணம், உலக மயமாக்கலின் கொள்கையோடு இணைந்த தனியார் மயமாக்கல் இதற்கு உறுதுணை அளிக்கின்றது. இதனடிப்படையில் வேறு உற்பத்தி நாடுகளில் இருந்து தேயிலை உற்பத்தியை பெற்றுக்கொள்வதோடு, அதன் மூலமாக சந்தையைக் கட்டுபடுத்திக் கொள்ளலாம். இதன் விளைவாக தொழிற்சங்க போராட்டம் சிலவேளை பலனளிக்காமல் போவதற்கு வாய்ப்பு அதிகம் உண்டு. எனவே, (External Forces) வெளிச் சக்திகளை அடையாளம் காணவேண்டும். அத்தோடு சர்வதேச ரீதியில் தரவுகளைத் தேடுவதோடு கம்பனிகளுக்கூடான தொடர்புகள் எவ்வாறு வலுப்பெற்றுள்ளன என்பதை தொழிற்சங்கங்கள் அறிந்து செயற்படுவது அவசியமாகிறது.
(Trance natioal) Multinational Company (p60puisit abry GRTLDITs கம்பனிகள் ஒருபோதும் நட்டமடைய முடியாத ஒரு கட்டமைப்பை ஏற்படுத்தியுள்ளனர். இதனடிப்படையில் சந்தையை மிக அழகாக கட்டுப்படுத்திக் கொள்வார்கள்.
தோட்ட மட்டத் தலைவர்களுக்கு தொழிலாளர் கல்விக் கருத்தரங்குகள் நடத்துவதோடு தொழிற்சங்க அறிவினையும் தொழிலாளார் மத்தியில் வழங்குவது எதிர்கால தொழிற்சங்க போராட்டங்களுக்கு வித்திடுவதாக அமையும். சில தொழிலாளப் பெண்களுக்கு தாம் எந்த தொழிற்சங்கத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றோம் என்பதும் தெரிவதில்லை. ஏன் தாங்கள் வேலை நிறுத்தம் செய்கின்றோம் என்பதும் தெரிவதில்லை. அத்தோடு தொழிசங்க போராட்டக் காலத்தில் அமைப்பு ரீதியான தொடர்புகள் தோட்ட மட்டத்தில் குறைவாகவே காணப்படுகின்றன. முறையான தொடர்புகளை இவ்வாறான காலங்களில் மட்டுமன்றி மாதமொருமுறையாவது தொழிலாளர்களுடன் கலந்துறையாடல்களை நடத்துவதன் மூலமாக தொழிற்சங்க தொழில் கூட்டம், தொழிலாளர் உரிமை தொடர்பாக அறிவூட்டல்களை மேற்கொள்ள வேண்டும்.
அத்தோடு தொழிற்சங்கங்கள் சிறுபிள்ளைத்தனமான தொழிற்சங்க போராட்டங்களை மேற்கொண்டால் தோல்வியையே சந்திக்க நேரிடும். மாறாக சர்வதேச ரீதியில் ஏனைய நாட்டுத் தொழிற்சங்கங்களுடன் தொடர்புகளை வலுப்படுத்துவதோடு உலகத் தொழிலாளர்கள் ஒன்றுபடுவதன் மூலம் இனிவரும் தொழில்சார் பிரச்சினைகளையும் சவால்களையும் முறியடிக்கலாம்.
நவமணி 26.04.1998
சந்தனம் சத்தியநாதன்
 

அரச சார்பற்ற நிறுவனங்களும் மலையகமும்
அரச சார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் (NGO) என்ற சொற்பதம் ஐக்கிய நாடுகள் சபையினால் முன்வைக்கப்பட்டதாகும். அரசசார்பற்ற நிறுவனங்களானது சிவில் சமூகத்தில் பிரதிபலிக்கின்றது. 1970-1980ம் ஆண்டுகளிலே அரச சார்பற்ற நிறுவனங்களின் சேவைகள் பரந்தளவில் செயற்படத் தொடங்கின. சிவில் சமூகத்தில் அபிவிருத்தி தொடர்பான சகல விடயங்களையும் மேற்கொள்ளும் ஒரு அங்கமாகவே அரசசார்பற்ற நிறுவனங்கள் செயற்படவேண்டும் என்ற நிலை உருவானது. 1980ம் ஆண்டுகளில் அரசானது சமூக சேவைகளின்பால் அக்கறையை குறைத்து கொண்டமையினால், அரச சார்பற்ற நிறுவனங்கள் சமூக சேவைகளை முன்னெடுத்துச் செல்வதில் ஆர்வம் காட்டின. இதுவே இவற்றின் வளர்ச்சிக்கு ஏதுவாகின.
அரச சார்பற்ற நிறுவனங்கள் சர்வதேச ரீதியிலும் தேசிய ரீதியிலும் இயங்கி வருகின்றன. அந்த வகையில் இலங்கையின் மலையகத்தைப் பொருட்டு நிதி பெற்றுக்கொள்ளும் தொண்டர் நிறுவனங்கள் மலையகத்தில் ஏற்படுத்திய மாற்றம் ஏன்ன? என்ற கேள்வி மலையக மக்கள் மத்தியில் எழுந்துள்ளது நியாயமானதே.
தொண்டர் நிறுவனங்கள் சில நேர்மையாகச் செயற்படாததன் காரணமாக மலையக சமூகத்தின் மீது அக்கறையோடு செயல்பட விரும்பும் சில அரச சார்பற்ற நிறுவனங்கள் மலையகத்தில் குறிப்பாக தோட்டப்புறங்களில் சேவை செய்வது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது என வருத்தம் தெரிவிக்கின்றன.
தொண்டர் நிறுவனங்கள் இதுவரை காலமும் சரிவர செயற்பட்டிருந்தால் கல்வித்துறையிலாவது ஒரு புதிய மாற்றத்தைக் கொண்டுவந்திருக்கலாம்.
தொழிற்சங்கங்கள், அரசாங்கங்கள் செய்கின்ற வேலையை தொண்டர் நிறுவனங்களும் செய்ய முற்படுவதனாலேயே திட்டங்கள் தோல்வியடைகின்றன. அரசசார்பற்ற நிறுவனங்கள் பொதுவான தேவைகளை சரியாக அடையாளம் காணத்தவறிவிடுகின்றன. மக்கள் விரும்பாத விடயங்களை அல்லது அவர்களுக்கு அவசியமில்லாத விடயங்களை வெளிநாட்டு நிதியுதவி இருக்கின்றபடியால் நாமும் மக்கள் சேவை செய்கின்றோம் என்ற நினைப்பு தொண்டர் நிறுவனங்களுக்கு உள்ளதாக சில நிதி வழங்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் கூறுகின்றன. எனவே அரசின் ஊடாக வழங்கப்பட்ட உதவியோ அரச சார்பற்ற நிறுவனங்களுக்கூடாக வழங்கிய உதவிகளோ மக்களுக்கு பூரணமாக
|மலையக அரசியலும் சமூக வாழ்வும் s

Page 18
சென்றடையவில்லை எனக் கருதுகின்றனர்.
இந்த நிலைமை தொடர்ந்து நீடித்தால் இனி நிதியையோ அல்லது ஏனைய உதவிகளையோ வெளிநாட்டு நிதிவழங்கும் நிறுவனங்கள் நேரடியாக மக்களுடன் தொடர்பு கொண்டு அவர்களுக்கு வழங்கும் ஒரு நிலை உருவாகலாம். இதனைப் புரிந்து மாற்று நடவடிக்கைகள் மேற்கொள்ள தொடர்ந்து தொண்டர் நிறுவனங்கள் தவறினால் இதை தவிர்ப்பதற்கில்லை.
எனவே மக்கள் பிரச்சினை என்ன அவர்களின் தேவை என்ன என்பதை சரியாக அடையாளம் கண்டு ஆய்வினை மேற்கொண்டு
திட்டங்களை செயற்படுத்துவது ஒரு சமூக மாற்றதிற்கு வித்திடும் என்பதில்
ஐயமில்லை.
தினகரன் 1.5.1998
ÜM. . «Ö
容瓮经
சந்தனம் சத்தியநாதன்
 

தோட்டக்குடியிருப்புத் திட்டம் துரிதப்படுத்தப்பட வேண்டும்
இரசாங்க புள்ளி விபரமொன்றின்படி பெருந்தோட்டங்களில் மொத்தம் 250 447 குடியிருப்புகள் உள்ளன. அவற்றில் 892 விதமானவை அதாவது 220 189 அலகுகள் லைன் அறைகளாகும்.
இவற்றின் பெரும்பாலானவை. 1921-45 காலப்பகுதியில் கட்டப்பட்டவை.
ஒரு ஆய்வின்படி 10 ற்கு 12 அடி கொண்ட லைன் அறையில் சராசரி 5.5 பேர் வாழ்கின்றனர். 10 முதல் 12 பேர் வாழும் லைன் அறைகளும் உண்டு.
ஆசியாவின் கல்வித்தரம் கூடிய நாடுகளில் ஒன்று இலங்கை. ஆனால், மலையகம் கல்வியில் பின்தங்கியே உள்ளது. இலங்கையில் எழுத வாசிக்கத் தெரிந்தவர்களின் வீதம் 872% ஆக இருக்கும் அதே வேளை மலையகத்தில் 66.9% வீதமாக உள்ளது.
இதற்கு லைன் அறைகளில் மின்சாரம் இன்மையும் படிப்பதற்கு அமைதியான இடமில்லாமையும் ஒரு பிரதான காரணமாகும்.
தோட்டத் தொழிலாளர் மத்தியில் காணப்படும் நோய்களில் 43% வீதமானவை சுவாசம் சம்மந்தமானவை.
14.2% வீதமானவை குடலோடு சம்பந்தப்பட்டவை. சுவாச நோய்களின் விகிதாசாரம் கூடுதலாக இருப்பதற்கு லைன் அறைகளின் ஒவ்வாத நிலைமையும் காரணமாகும். சொறி, சிரங்கு, சின்னம்மை போன்ற தொற்று நோய்கள் இங்கு திடீரென வேகமாகப் பரவுவதற்கு இடநெருக்கம் பெரிதும் காரணமாகிறது.
சமகால தேவையின் அடிப்படையில் ஐ.எல்.ஓ. திட்டத்தின்படி பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வீட்டு வசதிகள் அளிக்கப்படும் என்பது தற்போது சர்வதேச ரீதியாக அங்கீகாரம் பெற்ற நியதியாகும். சர்வதேச தொழில் ஸ்தாபனம் பெருந்தோட்ட தொழிலாளர் குடும்பங்களுக்கு வீட்டுவசதிகள், நிருவாகங்களால் வழங்க வேண்டும் என தீர்மானித்துள்ளது.
ஐ.எல்.ஓ. வின் கொள்கைப் பிரகடனம் இல 110 இன் 86 ஆவது சரத்தின்படி கட்டிடப் பொருட்களால் கட்டப்பட்ட காற்றோட்ட வசதி அடங்கிய அறைகள் வராண்டா, சமையல், தளபாட அறை தண்ணிர் சுகாதார வசதிகளடங்கிய வீடுகள் வழங்கப்படவேண்டும் என்பதே.
ஐ.எல்.ஓ. வின் இதே தீர்மானத்தை இலங்கை அரசும் அங்கிகரித்துள்ளது. ஐ.நா. வின் சர்வதேச வீடமைப்பாண்டு, குடியிருப்புகளின் முக்கியத்துவத்தை முன்னெடுத்து வைத்தும் இலங்கை
(மலையக அரசியலும் சமூக வாழ்வும்

Page 19
அரசின் அன்றைய கம்உதாவ திட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கு புதிய குடியிருப்புகள் உருவாக்கப்படவில்லை.
இந்த அரசு பதவிக்கு வந்த பின்னரே லயக் காம்பராகளுக்குப் பதிலாக தொழிலாளர்களுக்கு வீடுகள் வழங்கும் திட்டம் பல்வேறு 66) 856 திட்டங்களின் கீழ் தோட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் வீடமைப்புத் திட்டங்கள் போதிய வேகத்தில் செயற்படாததால் தோட்டத் தொழிலாளர்கள் லயன்களை விட்டு முற்றாக வெளியேற நீண்ட காலம் செல்லும் என்பதையே இது உணர்த்துவதாய் உள்ளது.
ஆனால், சமூக முன்னேற்றம், பொருளாதார வளர்ச்சி, சுகாதாரம் ஆகிய கண்ணோட்டங்களில் பார்க்கும்போது தோட்ட வீடமைப்புத் திட்டங்கள் துரிதப்படுத்தப்பட வேண்டியது மிகவும் அவசியமான தொன்றாகவே தெரிகிறது.
தினகரன் - 07.06.1998
சந்தனம் சத்தியநாதன்
 

நியமனங்கள் மட்டும் போதாது செயற்பாட்டு அதிகாரங்களும் தேவை
இலங்கையில் வாழும் மக்கள்தொகையின் ஒரு பிரிவினராக மலையகத்துத் தமிழ் மக்கள் கடந்த 175 வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து வருகின்றனர். இம்மக்களின் கலை, கலாசாரம், பாரம்பரியம் என்று தனக்கென்று ஒரு தனிமுத்திரையுடன் வாழ்வதோடு இந்நாட்டின் தேசிய வருமானத்தில் பெரும் பங்கை வகிக்கின்றார்கள். இவ்வாறு வாழும் மக்களுக்கும் ஏனைய சமுகங்களுக்குமிடையே ஒரு இரண்டாந்தர நிலை ஏற்படுகிறது என்று உணரும் சந்தர்ப்பத்தில் அம்மக்கள் தமது தனித்துவத்தை உறுதிப்படுத்த எத்தனிப்பது ஒரு நியாயமான செயலே, இவ்வாறு தமது இனத்தின் தனித்துவத்தை நிலை நிறுத்துவதில் ஈடுபடும்போது வேறு காரணங்களைக் காட்டி தட்டிக்கழிக்காது செயல்படவேண்டும் என்பது சிறுபான்மை மக்களின் அபிலாசை,
அரசினால் அண்மையில் வழங்கப்பட்ட தமிழ் கிராம சேவகர் நியமனம் ஒரு கண் துடைப்பாக இருக்கக்கூடாது. ஏனெனில் இன்று தமிழ் மொழி அரசு கர்ம மொழியென்று இலங்கை அரசியல் அமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டிருக்கின்ற போதிலும், எந்தவொரு அரச நிறுவனத்திலும் அமுல் நடத்தவில்லை. இதே நிலைமை புதிதாக நியமிக்கப்பட்ட கிராம சேவர்களுக்கும் நிகழ்ந்துவிடக்கூடாது. தமிழ் கிராம சேவகர்கள் நியமனம் வெறுமனே பாடசாலை இல்லாத ஆசிரியர் நியமனம் போல் ஆகிவிடுமா என்ற கேள்வி மலையக மக்கள் மத்தியில் எழுப்பியுள்ளது. எனவே புதிதாக நியமிக்கப்பட்ட கிராம சேவகர்களுக்கு தமது தாய் மொழியான தமிழ் மொழியிலே செயற்படக் கூடியதாக இருக்கவேண்டியது அவசியம்.
வாக்காளர் இடாப்புப் பதிவின்போது தமிழ் மக்கள் தமது வாக்குகளைப் பதிந்து கிராம சேவகர்களிடம் கொடுப்பதற்கு படித்த சிங்கள மக்களை நாடிச் செல்வது வழக்கம். சில வேளைகளில் ஒரு பத்திரத்தைப் பூர்த்தி செய்ய 5 ரூபா அறவிடப்படும் நிலையும் மலையகத்தில் காணப்படுகிறது.
இனிமேலாவது தமது தாய் மொழியில் வாக்குப் பதிவு பத்திரத்தை மலையக மக்கள் பதிவதற்கு இந்த புதிய கிராம சேவகர்கள் நியமனம் வழிவகுக்க வேண்டும்.
அத்தோடு கிராம சேவகர் பிரிவுக்கு தமிழ் பிரதேச செயலாளர் பிரிவும் அடுத்த கட்டமாக அமைக்கப்பட வேண்டும். தமிழ் பிரிவு
மலையக அரசியலும் சமூக வாழ்வும்

Page 20
என்று ஒன்று ஏற்படாத பட்சத்தில் நியமிக்கப்பட்ட தமிழ் கிராம சேவகர்களுக்கு எந்த ஒரு செயல் திட்டத்தையும் நடைமுறைப்படுத்த முடியாமல் போய்விடும்.
கிராம அமைப்பு முறைகளை தமிழ் கிராம சேவகர் பிரிவில் அமைப்பதோடு தோட்ட சேமநலன்களை தோட்ட நிருவாகத்திடம் இருந்து எடுத்துவிடவேண்டும். காரணம் பிரதேச சபை உறுப்பினர்கள் ஒரு குளிக்கின்ற நீர்குழாய் ஒன்றை அமைப்பதற்குகூட தோட்ட நிர்வாகம் தடையாக இருக்கின்றது. சாதாரண கிராமங்களில் வேலைசெய்யும் கிராமோதைய சபைகள் ஒரு அபிவிருத்தி வேலையைத் தோட்ட மக்களுக்கு செய்வதென்றால்கூட தோட்ட நிர்வாகத்தின் அனுமதி தேவை. எனவே தோட்ட மக்களுக்கும் ஏனைய மக்கள் அனுபவிக்கும் உரிமைகள் கிடைக்க வேண்டும்.
இன்று மலையகத்தில் அடையாள அட்டை இன்றி எத்தனையோ பேர் வெளியில் செல்ல முடியாமல் இருக்கின்றார்கள். எத்தனையோ பேர் பிறப்புச் சான்றிதழ் இல்லாமலும் இன்னும் எத்தனையோபேர் விவாகப் பதிவு இன்றியும் கணவன் இறந்தவுடன் ஊழியர் சேமலாப நிதிப்பணத்தைக் கூட பெற முடியாமல் இருக்கின்றார்கள்.
101 தமிழ் கிராம சேவகர் நியமனம் பாராட்டப்பட வேண்டிய விடயம். இருந்தாலும் இது யாரால் கிடைத்தது என்பது ஏற்புடையதல்ல. யார் நெல் குற்றினால் என்ன அரிசிதான் முக்கியம் என்பதற்கிணங்க அரசியல் பேதங்களை மறந்து பொது விடயங்களில் மலையக மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல், மற்றும் தொழிற்சங்கத் தலைவர்கள் செயற்படுவது எமது சமூகத்தை சீர்தூக்கிவிடும் என்பதில் ஐயமில்லை. அத்தோடு எமது சமூகத்தில் இருந்து சென்ற கிராம சேவகர்கள் எமது சமூக மக்களுக்காக உணர்வு பூர்வமாக செயலபடுவதை தமது கடமையாகவும் சேவையாகவும் நினைத்து செயல்பட வேண்டும். எமது மக்களுக்கு புறக்கணிக்கப்பட்ட அனைத்து வரப்பிரசாதங்களையும் கிராம சேவகர்களால் என்னென்ன செய்ய முடியுமோ அவற்றை தமது கடமையாகவும் ஏற்றுச் செய்யவேண்டும். ஒரு கிராம சேவகருக்கு என்னென்ன கடமை இருக்கின்றதோ அவற்றை நடைமுறைப்படுத்த தேவையான அதிகாரங்களை எமது அரசியல் தலைமைகள் பெற்றுக்கொடுக்க முன் வர வேண்டும்.
தினகரன் 1909.1999
s சந்தனம் சத்தியநாதன்
PasaNaCaR

தமிழ் கிராம சேவகர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும்.
அண்மையில் 101 தமிழ்க் கிராம சேவகர் நியமனங்கள் நுவரெலியா, பதுளை மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டது உண்மையிலே பாராட்டுக்குரியது. இது நாள்வரை அரசாங்க உத்தியோகம் என்றவுடன் மலையக தமிழ் மக்களுக்கு சட்டென ஞாபகத்துக்கு வருவது ஆசிரியர்கள் தான். இதில் சற்று மாறுதலாக தற்போது வழங்கப்பட்டுள்ள இந்தக் கிராமசேவகர் நியமனம் வரவேற்கத்தக்கதே.
இந்த கிராமசேவகர் நியமனத்துக்காக மொத்தம் 6000 பேர் பரீட்சைக்காகத் தெரிவுசெய்யப்பட்டு 1500பேர் பரீட்சையில் சித்தி பெற்றனர். 101 பேருக்கு நியமனம் வழங்கப்பட்டிருக்கிறது. இதில் 5பேர் பாடசாலை ஆசிரியர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
1978ம் ஆண்டில் அப்போது பாராளுமன்றத்தில் இருந்த அமைச்சர் கே.டபிள்யூ. தேவநாயகமும் அமைச்சர் தொண்டமானும் கிராமசேவகர் நியமனம் தொடர்பாக ஓர் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டதாக பத்திரிகைகள் மூலம் அறிந்தோம். இதன்படி நுவரெலியா மாவட்டத்துக்கு 90 கிராமசேவகர்களும் கண்டிமாவட்டத்துக்கு 18பேரும், மாத்தளை மாவட்டத்துக்கு 6பேரும் நியமிக்கப்படுவர் எனத் தெரியவந்தது. ஆனால் தற்போது நூரளை, பதுளை மாவட்டங்களுக்கு தமிழ் கிராமசேவகர் நியமனம் வழங்கப்பட்டிருக்கிறது. இவ்விடயத்தில் கண்டி, மாத்தளை புறக்கணிக்கப்பட்டது வேதனைக்குரியதே.
தோட்டத் தொழிலாளர் செறிந்துவாழும் பகுதிகளான கண்டி, மாத்தளைப் பகுதிகளுக்கும் தமிழ்க்கிராம சேவகர்களின் சேவை அவசியம். இப்பகுதியில் வாழும் தொழிலாளர்களுக்கு மொழிப்பிரச்சினை ஒரு பெரும் பிரச்சினைதான். தமது பிரச்சினைகளை கிராமசேவர்களிடம் தெளிவாகக் கூறமுடிவதில்லை. தோட்டத் தொழிலாளர்கள் பாஸ்போர்ட் எடுப்பதற்கு கிராமசேவகரின் அத்தாட்சிக்கடிதம் வாங்கச் சென்றால் தோட்டத்துரையின் கடிதமின்றி அவர் அத்தாட்சிக்கடிதத்தை வழங்க மறுக்கிறார். இதனால் தொழிலாளர்கள் பல சிரமங்களுக்கு முகங்கொடுக்க நேரிடுகிறது.
பெரும்பாலான கிராமசேவகர்களைக் காண்பதற்கு அவர்களின்கிராமங்களுக்குச் செல்லவேண்டியுள்ளது. உதாரணமாக நியூப்பிக்கொக் தோட்டத்தில் வசிக்கும் ஒரு தொழிலாளி தொரகல என்ற கிராமத்துக்குச் சென்றே தமது அலுவல்களைச் செய்துகொள்ள
மலையக அரசியலும் சமூக வாழ்வும் 国坠

Page 21
வேண்டும். அங்கு சென்றுவருவதற்கு ஒருநாள் முழுமையாக முடிந்துவிடும். அதாவது ஒருநாள் பேர் கிடைக்காது.
அனேகமான கிராமசேவகர்களுக்கு தோட்டமக்கள் வாழும் சூழலே தெரியாது. எனவே எதிர்காலத்தில் இந்த நிலமைகள் நீங்கிவிடச் சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை மேற்கொள்வது அவசியம். மலையகமக்களும் நாட்டில் ஏனைய பிரஜைகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் சகல உரிமைகளையும் கொண்டவர்களாக வாழ எமது அரசியல் தலைமைகளும், தொழிற்சங்கங்களும் உரிய நடவடிக்கை எடுப்பது இன்றைய தேவையாகும். அத்தோடு தோட்டத்திலும் கிராமசேவகர்களின் உப அலுவலகங்களை அமைத்து கிழமையில் ஒருநாள் தோட்ட மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய ஆவண செய்யவேண்டும்.ஏனைய மாவட்டங்களுக்கும் தமிழ்க்கிராமசேவகர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என அமைச்சர் ரத்தினசிறிவிக்கிரமநாயக்க கூறியிருப்பது நிறைவாக இருக்கிறது. என்றாலும் அதற்காக இன்னும் எத்தனைவருடங்கள் காத்திருக்க வேண்டுமோ என்பதை எண்ணும் போது அயர்ச்சியே ஏற்படுகிறது.
இனிமேல் மலையக அரசியல் கட்சிகள் மேடைதோறும் ஏறி எங்களால்தான் இந்த நியமனம் ஆயிற்று என்று முழங்கோ முழங்கு என முழங்குவதோடு, அவர் செய்யவில்லை, என்னால்தான் காரியமாயிற்று என்று ஆளுக்கு ஆள் குற்றஞ்சாட்டுவதிலும், பீற்றிக் கொள்வதிலும் மட்டந்தட்டுவதிலும் காலத்ததைக் கடத்தப்போகிறார்கள் என்பதை நிச்சயம் எதிர்பார்க்கலாம் என்பதால்,
இப்போதே இதைச் சொல்லிவைத்து விடுவோம்! இப்படி இழுபறிப்படுவதால் என்ன நடக்கும்? மேலும் புதிய நியமனங்கள் வழங்கப்படுவது தள்ளித் தள்ளிப்போகும்.
இன்னுமொன்று. இப்போது நியமனம் பெற்றவர்கள் கடுமையாக உழைக்கவேண்டும். முன்மாதிரியாக நடந்து கொள்ளவேண்டும். தமிழ்க்கிராமசேவகர்கள் இல்லாததால் ஏற்பட்டிருக்கும் சிரமங்களையும் தொல்லைகளையும் நிவர்த்தி செய்து இந்த நியமனங்கள் மலையகத்துக்கு மிகவும் அவசியம் என்பதை எடுத்துக்காட்டவேண்டும்.
இந்த மாதிரியான எதிர்பார்புகளுடன்தான் முன்னர் மலையக பாடசாலைகளுக்கு மலையக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டார்கள். சிரத்தையுடனும் சமூக உணர்வுடனும் கல்வி போதிப்பார்கள் என்ற எதிர்பார்ப்புகளுடன் தான் நியமனங்கள் நடந்தன. ஆனால் நடைமுறையில் என்னவாயிற்று?
சந்தனம் சத்தியநாதன்
Rtara ara

வேலியே பயிரை மேய்வதாக ஆகவில்லையா? நடைமுறையில் அனுபவங்கள் இதைத்தானே காட்டுகின்றன! திரும்பவும் வடக்கு கிழக்கில் இருந்து ஆசிரியர்கள் மலையகப் பாடசாலைகளுக்கு வந்தால்தான் மலையகக்கல்வி உருப்படும் எனப் பெரும்பாலான மலையகத் தமிழ் பெற்றோர் கருதும் நிலை தோன்றியிருப்பதை எவரும் மறுக்கமுடியாது.
ஆகவே புதிதாக நியமனம் பெற்றவர்கள் இவ்விஷயத்தை மனதில் வைத்துக்கொண்டால் அதுவேபோதும்
தினகரன் 15-08-99
al
மலையக அரசியலும் சமூக வாழ்வும் s
احت محتوا:

Page 22
தோட்டத் தொழிலாளர்களின் வறுமை
சர்வதேச தொழில் ஸ்தாபனத்துக்கு தெரியவில்லையா.
சீர்வதேச தொழில் ஸ்தாபனம் (ILO) இது எவ்வாறு உருவானது என்ற கேள்வி பலர் மத்தியில் உதித்தாலும் இதன் தேவை என்ன என்பதைப் பார்க்குமிடத்து, குறிப்பாக 1848-1864 காலகட்டத்தில் மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகியோர் ஒரு அறிக்கையை முன்வைத்தார்கள். அந்த அறிக்கையை கம்யூனிச அறிக்கை என்றும் கூறுவர் (Commimunis Manifoster) இந்த அறிக்கையில் பிரதானமாக கல்வி, உழைப்பு பூர்ஷ்வா அல்லது முதலாளி, பாட்டாளி, மூலதனம் இவ்வாறான விடயங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.
1864-1876 இக்காலப்பகுதியை முதலாவது அகிலம் அல்லது முதலாவது சர்வதேசியமென்று கூறப்பட்ட இக்காலப்பகுதில் 1876ல் பாரீஸ் கமீயூன்கள் மக்களை சுற்றிவளைத்து ஆட்சியைக் கைப்பற்றினர்.
1906-1914 வரையிலான காலகட்டத்தை வரலாற்றில் போராட்ட மான காலகட்டமாகக் கணிக்கப்பட்டது. இந்த போராட்டங்களுக்குட்பட்ட நாடுகள், குறிப்பாக ஸ்பெயின், பிரான்ஸ், இத்தாலி, அமெரிக்கா, ரசியா, ஜெர்மனி, இங்கிலாந்து ஆகியனவாகும்.
இதேவேளை அமெரிக்காவின் தொழிற்சங்க முன்னோடி எனக் கருதப்படும் போஸ்டர் (Foster), மாக்சின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு 1912களில் 7000 மைல்களை நாடுகளுக்கூடாக ஓடி 10000 மக்களை அணிதிரட்டி அநீதிகளுக்கெதிராக போராடத் தூண்டினார்.
1915-1918 காலப்பகுதியில் சந்தை வாய்ப்புக்காக முதலாவது உலக யுத்தம் சூடு பிடித்திருந்தது. 1917களில் இரசியாவில் தொழிலாளர்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். இதே காலப் பகுதியில் அமெரிக்காவின் வேலை நிறுத்தங்கள் பலமாக மேலோங்கிக் காணப் பட்டன. இந்நிலைமைகள் குறித்து முதலாளித்துவ வாதிகளும் அவர்களது சட்ட நிபுணர்களும் அவர்கள்சார் புத்திஜீவிகளும் ஒன்று கூடி சிந்தித்தார்கள்.
இரசியாவின் பலம் ஓங்கிக் காணப்பட்டாலும் முதலாளித்துவத்திற்கெதிராக புரட்சிகள் கிளம்புவதைத் தடுக்க, மழுங்கடிக்க முதலாளித்துவத்தின் காவலரணாக (IL.O) சர்வதேச தொழில் ஸ்தாபனம் என்ற அமைப்பை 1919ம் ஆண்டு ஆரம்பித்தார்கள். இதன் பின்னணி இவ்வாறிருந்தாலும் இந்த (LL.O) என்று சந்தனம் சத்தியநாதன்

கூறப்படும் சர்வதேச தொழில் ஸ்தாபனம் (U.N.O) ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் ஓர் அங்கமாகவே கணிக்கப்படுகிறது. இருந்தபோதிலும் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் ஆரம்பிக்குமுன்னே இது ஆரம்பிக்கப்பட்டது. U.N.எவ்வாறு இரண்டாம் உலக மகாயுத்தம் முடிவுக்குபின், முதலாளித்துவ பொருளாதாரத்தை கட்டி எழுப்பவும் பொருளாதார ரீதியில் இடிந்து விழுந்த நாடுகளுக்கு கை கொடுக்கவும் என்று கூறிக்கொண்டு IMF, WB. போன்ற அமைப்புக்களை உருவாக்கியதோ அதேபோல் இந்த ILO வும் உருவாக்கப்பட்டது.
என்னதான் இருந்தபோதிலும் LL.O கூறும் வியாக்கினங்கள் இவ்வாறு அமைகிறது.
எங்காவது ஒரு இடத்தில் வறுமை இருக்குமானால் அது மற்றெல்லா இடங்களினதும் அபிவிருத்திக்கும் செழுமைக்கும் அபாயத்தை உண்டுபண்ணும். என்ற கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு அத்தோடு தொழிலாளர்களது தொழில் நிபந்தனைகள், அநீதிகள், கஷ்டநிலை, சமாதானம், இசைவு, வேலைசெய்யும் சூழ்நிலை, முழுவேலைநேர லீவு, ஆகக்குறைந்த வேதனம் அல்லது வாழக்கூடிய வேதனம், சுகவீனம், நோய்களில் பாதுகாப்பு, தொழில்மூலம் ஏற்படுகின்ற காயங்களில் இருந்து பாதுகாப்பு, பெண்கள், சிறார் தொழில் வாய்ப்பு, வெளிநாடுகளில் வேலைசெய்யும்போது பாதுகாப்பு, தொழிற்பயிற்சி, சமவேலை, சமசம்பளம், ஒன்றுகூடல் சுதந்திரம், தொழிலாளர் அமைப்புக்களை ஏற்படுத்துதல் போன்றவையாகும்.
சர்வதேச ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவது போன்ற சிறந்த நோக்கங்களையும் அதே வேளை ஒரு நாடு ஏற்படுத்தும் தொழில் நிபந்தனைகளை வேறு ஒரு நாடு தனது நிபந்தனையை முன்னேற்ற நினைக்கும்போது தடையாக இருக்கக் கூடாது எனவும் மனிதவியல் (Humanity) மற்றும் உலக சமாதானம் ஆகியவற்றிலும் இந்த LLO கவனம் செலுத்தும்.
அத்தோடு ஐக்கிய நாடுகள் சபையின் அங்கத்துவ நாடுகள் அல்லது சர்வதேச தொழில் ஸ்தாபனம் தமது பொதுச்சபையில் மூன்றிலிரண்டு பங்கு வாக்குகளினால் நிறைவேற்றும் பிரேரணையின் மூலம் அங்கத்துவ நாடுகளைச் சேர்த்துக் கொள்ளும். இதன் தற்போதைய அங்கத்துவ தொகை-178.
இந்த ILO வின் தலைமைச் செயலகம் சுவிட்சிலாந்தின் ஜெனிவா நகரில் அமைந்துள்ளதுடன் ஆசிய பிராந்திய செயலகம் தாய்லாந்தில் பேங்கொக்கிலும் இலங்கை நாட்டுக் காரியாலயம் கொழும்பிலும் உள்ளது.
இவ்வாறான இன்னும் பல கோட்பாடுகளை உள்ளடக்கிய ஒரு முதலாளித்துவ சிந்தனைகளுடனான ஓர் அமைப்பும் சர்வதேச அரசியல்
| மலையக அரசியலும் சமூக வாழ்வும்

Page 23
களமும் இந்த LL.O என்றால் மிகையாகாது.
g(35 Gursi(3p WFTU (World Faderation of Trade Union) உலக தொழிற்சங்க சம்மேளனம் இது பெரும்பான்மையான சோஷலிச அல்லது கம்யூனிஸ்ட் நாடுகளின் தொழிற்சங்க கூட்டமைப்பாகும்.
இவ்வமைப்பு "மாசல் பிலேனை" கொண்டுவந்த போது முதலாளித்துவ நாடுகள் இதற்கு எதிரான ஒரு அமைப்பாகவே LL.O வை ஸ்தாபித்தன.
இலங்கையும் 1.L.O வின் ஒரு அங்கத்துவ நாடு ஏன் இங்கு தோட்டத் தொழிலாளர்களுக்கு வேதனம் சம்பந்தமாக பல்வேறு பிரச்சினைகள் உள்ளதே? அப்படி என்றால் இப்பிரச்சினைகள் இது வரைகாலமும் LL.O வுக்கு தெரியாமல் போய்விட்டதோ? எது எப்படி இருந்தபோதிலும் மூன்றாம் உலக நாடுகள் உட்பட பலவறிய நாடுகள் இன்னும் பலதரப்பட்ட சுரண்டலுக்கு உட்பட்டவைகளாகவே காணப்படுகின்றன. எத்தனை சர்வதேச தொழில் ஸ்தாபனங்கள் உருவானாலும் அவைகள் பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டிவிடும் தன்மை கொண்டவையாகவே அமைகின்றன.
நவமணி 076,998
V My
S
சந்தனம் சத் தியநாதன்

தேர்தலில் மலையக மக்களின் வாக்கு யாருக்கு?
இதுவரை காலமும் தோட்டத் தொழிலாளர்கள் வழங்கிய அரசியல் தீர்ப்புகள் எப்படியிருந்த போதும் இம்முறை இந்ததேர்தல் களம் ஒரு இனவாதப் போக்கை கடைப்பிடிப்பதாக தோன்றுகிறது.
அரசியல்வாதிகள் யாராக இருந்தாலும் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் வரை தானும் ஒரு தோட்டத்து லயத்தில் பிறந்தவர் என்ற ஒரு வார்த்தையை பிரயோகிப்பார்கள். இது மலையகத்துக்கு அதிகமாவே பொருந்தும்.
பொருத்தம் எவ்வாறு இருந்தாலும் மக்கள் இனி சிந்தித்து தமது வாக்குகளைப் பயன்படுத்துவார்கள் என்பதற்கு கடந்த பிரதேச சபைத்தேர்தல் பாடமாக அமைந்தது. எனவே மலையக மக்கள் இன்று எந்த ஒரு கட்சி ஆட்சியை அமைப்பதற்கும் ஒரு தூணாக இருக்கின்றார்கள் என்பதை அரசியல்வாதிகள் நன்கு உணர்ந்துள்ளனர்.
இதே அரசியல்வாதிகள் எமது சமூகத்தை எப்படி எல்லாம் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதையும் நாம் கருத்தில் கொள்வது அவசியம் எனவே சற்று பின்னோக்கி ஜனநாயக வாதிகளின் கருத்துக்களை மார்க்சிய கண்ணோட்டம் எவ்வாறு பார்க்கின்றது என்பதைப்பார்ப்போம். மார்க்சிய தத்துவஞானத்தின் தோற்றம் ஒரு தற்செயல் நிகழ்ச்சியல்ல. அது மனிதகுல முன்னேற்றத்தின் விளைவாகும். முழுமையான மார்க்சியத்தைப் போன்றே மார்க்சிச தத்துவ ஞானமும் சமுதாயத்தின் தத்துவஞானத்தின் இயற்கை மற்றும் சமூக விஞ்ஞானங்களின் நெடுங்கால வளர்ச்சி என்பதை மறுப்பதற்கில்லை.
இயக்க மறுப்பியல் பொருள்முதல் வாதத்தில் தங்களது தத்துவஞானக் கருத்துக்களில் ருஷ்யப் புரட்சிகர ஜனநாயகவாதிகள் ஒரு புறம் தங்களது ருஷ்ய நாட்டு முன்னோடிகளான லொமனோசவ், ராடிசேவ் ஆகியோரின் பொருள் முதல்வாதத்திலும் இன்னொருபுறம் ஹெகலின் இயக்கவியலிலும் ட்யாயர் பாஹின் பொருள் முதல்வாதத்திலும் நம்பிக்கை கொண்டிருந்தனர்.
யாதார்த்த குணாம்சங்களின் அளப்பரிய எண்ணிக்கையைக் கொண்டது முடிவே இல்லாத இயக்கத்தையும் வளர்ச்சியையும் கொண்டது என்று ருஷ்யப் புரட்சிகர ஜனநாயகவாதிகள் கருதினார்கள்.
தத்துவஞான ஆராச்சிகளின் சிந்தனை இயல்பை சமாளிப்திலும் ருஷ்ய புரட்சிகர ஜனநாயகவாதிகள் குறிப்பிட்ட முன்னேற்றத்தைக்
மலையக அரசியலும் சமூக வாழ்வும்

Page 24
கண்டனர். அவர்கள் இந்த உலகத்தை மாற்றியமைக்க விழைந்தனர் உதாரணமாக ஹெர்ஸென் இயக்கவியலை "புரட்சியின் இயக்க கணிதமாகப்" பார்த்தனர்.
அவர்களது சமூதாயக் கருத்துக்களை பொறுத்தமட்டில் ருஷ்ய புரட்சிகர ஜனநாயக வாதிகள் சில பொருள்முதல்வாதக் கூற்றுக்களை வெளியிட்டாலும் கருத்துமுதல்வாதிகளாகவே திகழ்ந்தனர் எனக் கூறப்படுகிறது.
எனவே சோஷலிச தத்துவங்கள் அவ்வாறு இருக்கையில் முதலாளித்துவ சிந்தனைகளை இந்நாட்டிற்கு அறிமுகப்படுத்தியவர் யார் என்ற கேள்வி எழுவது நியாயமானது.
இந்த முதலாளித்துவ சிந்தனை இலங்கையில் எவ்வாறு வலுப்பெற்றது என்பதனை “புலம்" சஞ்சிகையில் துஷ்யந்தி கூறியுள்ள கருத்துகள் இவ்வாறு அமைகிறது. அவர் இதுபற்றி “ஜனகபியன்வில” (Pravad Feb/March 1996)gg (SLD)(85moir airly singbugstonigs. (Cultural Globalization) உலக பொருளாதார மற்றும் (Communication) தொடர் பூடகங்களிலான முன்னேற்றம் முதலாளித்துவ உலக பொருளாதாரத்தின் கலாசார விளைவுகளை சர்வமயப்படுத்தியது. இப்படியாக உலக சந்தைக்காக எல்லைகளைத் தகர்த்த முதலாளித்துவம் பல விடயங் களையும் சர்வமயப்படுத்தியது. உதாரணமாக கிரிக்கட் விளையாட்டு.
இலங்கையில் 1977இல் ஆட்சிக்கு வந்த ஜே.ஆர்.அரசாங்கம் திறந்த பொருளாதாரக் கொள்கையை பிரகடனப்படுத்தியது. அதையொட்டி பல்வேறு துறைகளும் முதலாளித்துவ நலன்களைக் காக்கும் நோக்கில் வளர்ச்சி பெற்றன.
ஜே.ஆரின் காலகட்டமானது இலங்கையின் பொருளாதாரம் மற்றும் அரசியல், குறிப்பாக தேசிய பிரச்சினையில் தீர்க்கமான, திருப்புமுனைகளை ஏற்படுத்திய காலகட்டமாகும். ஆட்சிக்கு வந்த ஜே.ஆர். தன்னை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ஆக்கிக்கொண்டார்.
முன்னால் பிரதமரின் குடியுரிமையைப் பறித்தார். 80ல் மாபெறும் பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான அரச ஊழியர்களை இடைநிறுத்தியதோடு 82ல் நடைபெறவேண்டிய பொதுதேர்தலை நடத்தாததோடு மக்கள் விருப்பம் என்னும் பெயரில் ஒரு நாடகத்தை ஆடி மீள ஆட்சியை உறுதிபடுத்திக் கொண்டார்.
83 ஜூலையில் திட்டமிட்டு தமிழர் மீது வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டார். இதில் 1500ற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 150 000ற்கும் மேற்பட்டோர் வீடிழந்து வீதியில் நின்றனர். இது தொடர்பாக ஜே.ஆர். நாட்டு மக்களுக்கு விடுத்த செய்தியில், "சிங்கள மக்கள் தமது தேசிய அபிலாஷைகளை வெளிப்படுத்தினர்." எனக் கூறினார்.
இச்செய்தி வானொலியில் ஒலிபரப்பாகையில் கொல்லப்பட்ட
சந்தனம் சத் தியநாதன்

தமிழர்களின் சடலங்கள் வீதியில் பாதி எரியுண்ட நிலையில்
கிடந்தன. புகலிடமற்ற நிலையில் உயிரைப் பாதுகாத்துக் கொள்ள தமிழர் பரிதவித்துத் திரிந்து கொண்டிருந்தனர்.
பிற்காலத்தில், பாராளுமன்றத்தில் கெடுபிடியேற்பட்டபோது திகதியிடப்படாத ராஜினாமாக் கடிதங்களை மந்திரிமார் மற்றும் பா.உ. களிடமிருந்து நிர்ப்பந்தமாகக் கேட்டுப்பெற்றார். இப்படியாக ஒரு எதேச்சாதிகாரவாதியாக "இனவெறி” கொண்டவராக ஜே.ஆர். செயற்பட்டார் என அக்கட்டுரை கூறுகிறது.
"ஜனநாயகம்" மக்களின் ஆட்சிப் பெரும்பான்மையோரின் ஆட்சி வழக்கமாகக் காலத்துக்காலம் இடம்பெறும் சுதந்திரமான தேர்தல்களில் பிரதிநிதித்துவ முறைமைமூலம் நேரடியாக அல்லது மறைமுகமாகப் பிரயோகிக்கப்படும் மீயுயர் அதிகாரம் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஒரு அரசு (வெப்ஸ்டர் அகராதி). இது நம்நாட்டைப் பொறுத்தவரை எந்தளவு உண்மை.
எனவே தோட்டத் தொழிலாளர்கள் தமது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் தமது வாக்குகளை பொருத்தமானவர்களுக்கு வழங்குவதால் தமது எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றிக் கொள்ளலாம்.
சகல துறையிலும் தோட்டத் தொழிலாளர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். "ஒட்டு” தேர்தல் காலங்களில் மடடும் அவர்களின் வீடுதேடிச் செல்லும் அரசியல்வாதிகள், பின்னர் அந்த மக்களை பேரம்பேசியே தமது சுயதேவைகளைப் பூர்த்தி செய்து கொள்கின்றனர். தோட்டத் தொழிலாளர்கள் இம்முறை மகாண சபைத்தேர்தலில் மட்டுமன்றி தொடர்ந்து வரும் தேர்தல்களில் புத்திசாலித்தனமாக நடந்துகொள்ள வேண்டும்.
நவமணி 1907. 1998
ANASSA
மலையக அரசியலும் சமூக வாழ்வும் s

Page 25
தோட்டங்களின் அரசர்கள் இன்னும் துரைமார்களே!
இலங்கை நாடு சுதந்திரம் பெற்ற பின்னரும்கூட தோட்டத் தொழிலாளர்கள் முழுமையான சுதந்திரம் பெற்றுள்ளனரா என்ற கேள்வி எம்மனதில் எழுகின்றது.
இந்நாட்டில் வெள்ளையர்கள் அடியெடுத்த வைத்து காலம் தொட்டே வர்க்கச் சிந்தனை மழுங்கடிக்கப்பட்டு விட்டது. அதன்பிரதிபலன்தான் இன்றுவரை தோட்டத் தொழிலாளர்கள் அடிமைகளைப்போல் பயன்படுத்தப்படுகின்றனர்.
வெள்ளையர்கள் காலத்தில் தோட்ட உத்தியோகஸ்தர்கள்கூட தொழிலாளர்களின் லயங்களுக்குச் செல்ல முடியாது. எந்த ஒரு சொந்த பந்தம் இருந்தாலும் அந்த தோட்ட உத்தியோகஸ்தர் 24 மணித்தியாலங்களுக்குள் தொழிலில் இருந்து நீக்கப்பட்டு விடுவார். இது போன்ற கடும் நியதிகள் அன்று நிலவியது.
ஆனால், அவைகள் கட்டம் கட்டமாகக் குறைந்து அவர்கள் வெளியேறி நம்நாட்டு துரைமார் அந்த பதவிக்கு வந்த பின்னும்கூட அந்த பழைய கட்டமைப்பு இன்னும் மாறவில்லை. தோட்டத்துரை அந்த தோட்டத்தின் அரசன் என்பது இன்னும் நிலவி வருகின்றது.
அனேகமாக தோட்டத்துரைமார் கொழும்பில் சில பணக்காரர்களின் பிள்ளைகள். இவர்கள் குடும்ப பின்னணி ஒன்றே அவர்களின் தகுதியாகக் கணிக்கப்படுகின்றது.
இவ்வாறு வருகின்ற துரைமாருக்கு தொழிலாளர்களின் வறுமை, கஷ்ட நஷ்டங்கள் தெரிவதற்கு நியாயமில்லை. சிலர் இப்போது பல்கலைக்கழக படிப்பை முடித்துவிட்டு வருகின்றனர். அவர்கள் தோட்ட அபிவிருத்தி, மக்களின் கல்வி அபிவிருத்தி, சுகாதாரம் போன்றவற்றில் அதிக அக்கறை காட்டுகின்றனர்.
குடும்ப பின்னணியில் வரும் துரைமார் மிகவும் மோசமான காட்டுமிராண்டித்தனமாகவும் நடந்து கொள்கின்றனர். உதாரணமாக பாலியல் வன்முறை அதிகார துஷ்பிரயோகம் போன்றவற்றைக் குறிப்பிடலாம். இவர்களில் சிலர் இனவாதிகளாகவும் செயல்படுகின்றனர். பொதுவாக ஒரு தோட்டத் துரைக்கு இருக்கும் சலுகை வேறு எந்த ஸ்தாபனத்திலும் கிடைப்பது கடினமான செயல் என்றே கூறவேண்டும். ஒரு பங்களா, அதற்கான பராமரிப்பு செலவு, 4 பங்கு தொழிலாளர்கள் வேலைக்கு, தோட்ட வேலைக்காக ஆட்கள், அதிக குளிர் பிரதேசத்தில் இங்கிலாந்தில் போல் விறகினால் முழு பங்களாவும் சூடாகும் தன்மை. வாகன வசதி இவைகள் எல்லாம் பார்க்கும்போது ஒரு நாட்டின்
சந்தனம் சத் தியநாதன்

ஜனாதிபதியை விடவும் சலுகைகள் இவர்களுக்கு அதிகம்.
ஒரு தோட்ட துரையை சந்திப்பது என்றால் அது இலேசான காரியமல்ல. முதலில் அதற்கான நேரத்தை முன் கூட்டியே பெற்றுக்கெர்ளள வேண்டும். இப்படி தொழிலாளர்களை எப்படியெல்லாம் அடக்கியாள முடியுமோ அப்படி எல்லாம் அடக்கும் ஒரு கும்பல் இந்த துரைமார்.
சில சந்தர்ப்பங்களில் தொழிலாளர்கள் தங்கள் உரிமை தொடர்பாக அதிகம் பேச முற்பட்டுவிட்டால் அவர்களை தாக்கியச் சந்தர்ப்பங்களும் எத்தனையோ நாம் பத்திரிகைகள் வாயிலாகவும் நேரிலும் கண்டுள்ளோம். ஒரு துரைக்கு நிகராக தொப்பி அணியும் தொழிலாளியையும் பழிவாங்கி விடுகின்றனர்.
இந்த மூடியை தோட்டக் கட்டமைப்பு எதிர்காலத்தில் உடைத்தெறியப்பட வேண்டுமென்றால் தோட்ட மக்களின் ஒற்றுமை யிலேயே இது தங்கியுள்ளது. அத்தோடு கல்வி ரீதியாகவும் தோட்டப் புறங்களில் மாற்றங்கள் நிகழவேண்டும். அத்தோடு அரசினால் ஒதுக்கப்படும் நிதி குறிப்பாக பிரதேச சபை, மகாண சபையில் உள்ள உறுப்பினருக்கு தோட்டத்துரையின் அனுமதியின்றி பொதுவேலைகளை செய்யமுடியாதிருக்கிறது. சில துரைமார் அரசியல் செல்வாக்கைக் கூட பயன்படுத்துகின்றனர்.
அநேகமாக வீதி புனர்நிர்மானம், பாலம் அமைத்தல் போன்ற வேலைகளை கிராமப் புறங்களில் எவரின் தடையுமின்றி பலரும் முன்வந்து செய்கின்றனர். ஒரு தோட்டத்துக்குள் நுழைவது என்றால் துரையின் அனுமதி எடுக்காமல் எதையும் செய்ய முடியாதிருப்பதாக சில பிரதேச சபை உறுப்பினர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். எனவே எதிர்காலத்தில் முகாமைத்துவத்தை (தோட்ட) மட்டும் துரைமாருக்கு வழங்கி சேமநலன், சுகாதாரம், சமூகசேவை இவைகளை கிராம சேவகர் பிரிவுகளுக்கு ஒப்படைத்தால் தோட்ட மக்களின் சமூக நலன்கள் பாதுகாக்கப்படும் . எனவே இதற்கான தமிழ் கிராம சேவர்களை நியமிப்பதோடு அரசு இவ்விடயம் குறித்து கவனஞ்செலுத்துவதோடு துரிதமாக செயற்படுவது இன்றைய தேவையாகும்.
நவமணி 15.11.1998
மலையக அரசியலும் சமூக வாழ்வும்
سسسس

Page 26
வரவுசெலவுத் திட்டமும் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள
உயர்வுகளும், வாழ்வு நிலையும்
இந்நாட்டின் அந்நியச் செலாவணியை தேடித்தருவதில் முதுகெலும்பாக விளங்கும் தோட்டத் தொழிலாளர்கள் இன்று வரை எந்த நிலையில் வாழ்கிறார்கள் என்பதை ஒவ்வொரு லயக்காம்பிராக் களுக்கும் சென்று பார்வையிட்டால் நன்கு புலப்படும்.
21ம் நூற்றாண்டில் காலெடுத்து வைக்கும் மனித சமூகம் மலையக சமூகத்தின் அவலங்களைச் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். பெருந்தோட்டத் துறையில் உள்ள குடியிருப்புகளில் 80% மேற்பட்டவை லயங்களாகவே அமைக்கப்பட்டுள்ளன. 20% மட்டுமே குவாட்டஸ் அமைப்பில் உள்ளன. லயக்காம்பராவானது 10அடி 12அடி அமைப்பினைக் கொண்டது. இங்கு நான்கு தலைமுறையாக தொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக 4 முதல் 9 பேர்கள் வரை ஒரு அறையில் வசிப்பதை குறிப்பிடவேண்டியுள்ளது. அத்தோடு 81% மக்கள் வீட்டுத் தரைகளை சாணமிட்டு மெழுகுகின்றனர். 83% மான வீடுகள் சீலிங் இல்லாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
சுகாதாரத்தை எடுத்துக் கொண்டால் 53% தோட்டத் தொழிலாளர்களுக்கு மலசலகூடமில்லை. 87% மான மக்கள் மலசலகூடங்களை பாவிக்கத் தெரியாதவர்களாக காணப்படுக்கின்றனர். யுனிசெப் தோட்டப்புறங்களில் 65% மான மலசலகூடங்களை கட்டிக்கொடுத்தபோதிலும் அவற்றில் விறகுக்கட்டைகள் அடுக்கப்பட்டு பாதுகாக்கப்படுவதோடு அவற்றின் கதவுகள் இல்லாத நிலையை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
தோட்டத் தொழிலாளர்களின் வாழ்நிலைப் பிரச்சினைகள் இவ்வாறிருக்க, அவர்களது சம்பள நிலையை சற்று பார்த்தால் 8 ரூபா சம்பள உயர்வு தொடக்கம் கடந்த 05.02.1998 தொடர்ச்சியான ஒன்பது நாள் வேலை நிறுத்தத்தின் போது மக்கள் முதல்முறையாக வீதியில் வந்து கோஷங்கள் இட்டதையும் வர்த்தகர்கள் முதன்முறையாக தனது கடைகளை அடைத்து ஆதரவை வழங்கியதையும் குறிப்பிடலாம்.
இருந்தபொதிலும் இவ்வேலை நிறுத்தத்தின் இறுதி முடிவாக முதலாளிமார் சம்மேளனம் 96 ரூபா சம்பளம் 5 ருபா போனஸ் பணத்தையும் சேர்த்து 101 ரூபாயென தொழிலாளருக்கு வழங்க ஒப்புக்கொண்டனர்.
மற்றொரு முக்கிய விடயத்தைக் கருத்தில் கொள்ள வேண்டும். சந்தனம் சத்தியநாதன்
 

1992ம் ஆண்டு வரவுசெலவு திட்டத்தின் மூலம் அரச ஊழியர்களுக்கு 20 ரூபாய் சம்பள உயர்வுவழங்கப்பட்டது. தோட்டத் தொழிலாளருக்கு 12 ரூபா மாத்திரம் வழங்கியதோடு மிகுதி 8 ரூபாயை 1993 ஜுலை மாதம் வழங்குவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது.
வரவு செலவு திட்டத்தின்போது பல மில்லியன்கள் யுத்தத்திற்காக ஒதுக்கப்படுகின்றது. யுத்தத்தின் கொடிய விளைவுகள் இன்றைய பொருட்களின் விலையுயர்விற்கான பிரதான காரணம். தோட்டத் தனியார்மயத்தின் பின் தொழிலாளர்கள் எவ்வாறான உரிமைகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.? அதிக இலாபத்தை தனியார் கம்பனிகள் பெற்றுக்கொண்டு உழைப்புக்கேற்ற ஊதியத்தை வழங்க மறுக்கின்றன. பொருட்களின் விலை அதிகரித்துக் கொண்டு போகின்றன. ஆனால் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு பற்றி தனியார்துறைக் கம்பனிகள் எவ்வித அக்கறையும் இன்றி இருப்பது கவலைக்குரியது.
ஒரு தேங்காயின் விலை 12 ரூபா தொடக்கம் 13 ரூபா வரை உயர்ந்துள்ளபோது 101 ரூபா சம்பளத்தை வாங்கி எவ்வாறு சமாளிப்பது என்ற கேள்வி தோட்டத் தொழிலாளர்களின் மத்தியில் எழுந்துள்ளது.
அத்தோடு பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பும் பெற்றோர் கல்வி உபகரணங்களை வாங்கி தமது பிள்ளைகளுக்கு வழங்கி, பாடசாலைக்கு அனுப்புவதற்கு வருமானமின்றி அவதியுறுகின்றனர்.
தோட்டத் தொழிலாளருக்கு வறுமை பெரும் சொத்தாகி விட்டதால் தமது எதிர்கால சந்ததியை ஒரு நல்ல நிலைக்கு கொண்டுவர முடியாதவர்களாகி விடுகின்றனர்.
வறுமை காரணமாக மலையக தோட்டப் புறங்களில் இருந்து அதிக சிறுவர்கள் கொழும்பு பங்களாக்களிலும் கடைகளிலும் அடிமைகள்போல் பயன்படுத்தப்படுகின்றனர். அத்தோடு வரவு செலவு திட்டத்தை பார்த்தால் சாதாரண தோட்டத் தொழிலாளருக்கு பயனேதும் உண்டா என்ற கேள்வி எழுகிறது.
நவமணி 巫3.五2.夏父98
மலையக அரசியலும் சமூக வாழ்வும் g

Page 27
மாகாணசபைத் தோர்தலில் தோட்டத் தொழிலாளர் வாக்குகள் பழுதானதேன்?
கிடந்த மாகாணசபைத் தேர்தலில் 70 இலட்சம் வாக்காளர்கள் 5942 வாக்குச் சாவடிகளில் வாக்களிக்கும் தகுதி பெற்றிருந்தனர்.
இத் தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முன்பு 17 உறுப்பினர்த் தொகையைக் கொண்டிருந்தது. தற்போது இலங்கை இந்திய வமசாவழிப் பேரணியில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் மயில் சின்னத்தில் போட்டியிட்டு உறுப்பினர் தொகை 9 ஆகக் குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. மத்திய மாகாணத்தில் 6 ஆசனங்களும் ஊவா, சப்பிரகமுவ, மேல் மகாணம் ஆகிய மாகாணங்களில் தலா ஒரு ஆசனத்தையும் பெற்றுள்ளது.
மலையக மக்கள் முன்னணி மத்திய மாகாணத்தின் நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரம் இரண்டு ஆசனங்களைப் பெற்றதன் மூலம், பிரதிநிதித்துவத்தை இரண்டாக அதிகரித்துள்ளது.
அத்தோடு இந்நாட்டின் மூன்றாவது அரசியல் சக்தியாக ஜே.வி.பி. வளர்ந்திருப்பது ஒரு புதிய திருப்பமாக அமைந்துள்ளது. இம்முறை மாகாணசபைத் தேர்தலில் 248799 வாக்குகளைப் பெற்று 15 ஆசனங் களைப் பெற்றுள்ளது. (தென் மாகாணத்துடன் சேர்த்து 22 அங்கத்தவர்கள்) இம்முறை தெரிவுசெய்யப்பட்ட ஜே.வி.பி. உறுப்பினர்களில் ஒரு முஸ்லிம் பெண்மணியும் தெரிவு செய்யப்பட்டிருப்பது ஒரு புதிய திருப்பமாகும். அப்பெண்மணியின் பெயர் அன்ஜான் உம்மா சித்தி பரீதா என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
நடந்து முடிந்த தேர்தலின் முடிவு உறுதிபடுத்துவது. இனி இந்நாட்டில் ஒரு கூட்டு ஆட்சியே நிகழும் என்பதையும் மக்கள் தேர்தலில் அதிக அக்கறை காட்டவில்லை என்பதையுமே ஆகும்.
இந்த தேர்தலின்போது மலையக மக்கள் தமது தனித்துவத்தை உறுதிப் படுத்த இம் முறையும் தவறிவிட்டார்கள் என்பதும் உறுதியாகியுள்ளது. 1936ம் ஆண்டு 145 000 வாக்குகள் இருந்தும் இன்றுவரை அந்த வாக்குகள் 10 இலட்சத்திற்கு விரிவடைந்ததும் தமது தனித்துவத்தில் போதியளவு அக்கறை காட்டப்படவில்லை என்பது உறுதியாகிறது.
தோட்டத் தொழிலாளர்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் அதிகமான வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இதற்கு வாக்களிக்கும் முறைபற்றிய போதிய தெளிவின்மையும் ஒரு காரணமாகக் sa சந்தனம் சத்தியநாதன்
A

கொள்ளலாம்.
வாக்களிப்பு தொடர்பாக பொதுவாக வாக்களிப்பது எப்படி என்ற தலைப்புகளில் தோட்டம் தோட்டமாகச் சென்று அரசியல் கட்சிகள் அறிவூட்ட வேண்டும். அதை விடுத்து தேர்தல் காலங்களில் மட்டும் வேட்பாளர்கள் தோட்டங்களுக்குச் சென்று அச்சடித்த தமது படங்களை எவ்வித தெளிவும் இன்றி தமக்கு வாக்களிக்கும்படி கூறினால் எதிர்காலத்திலும் தோட்டப் புறங்களில் வாக்குகள் நிராகரிக்கப் படுவதை தவிர்க்க முடியாது.
இம்முறை நடந்த தேர்தலில் தோட்டத் தொழிலாளர்களைப் பிரநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்களுக்கு நல்ல பாடமாக
குறிப்பாக நடந்து முடிந்த தேர்தலில் அவதானிக்கத்தக்க ஓர் விடயம் நிராகரிக்கப்பட்ட வாக்குகள். உதாரணமாக,
பதுளை மாவட்டம் வியலுவ பதிவு செய்யப்பட்ட வாக்குகள் - 37 982
செல்லுபடியான வாக்குகள் - 24 433 நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 2 545
பசறை பதிவு செய்யப்பட்ட வாக்குகள் . 46 992 செல்லுபடியான வாக்குகள் 638 31 ܚ நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 3 773
பதுளை பதிவு செய்யப்பட்ட வாக்குகள் - 41 680 செல்லுபடியான வாக்குகள் 26 314 நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 2 162
மத்திய மாகாணம் - மாத்தளை மாவட்டம்
பதிவு செய்யப்பட்ட வாக்குகள் - 62 744 செல்லுபடியான வாக்குகள் - 39 864 நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 3 494
நுவரெலியா/மஸ்கெலியா- நுவரெலியா மாவட்டம்
பதிவு செய்யப்பட்ட வாக்குகள் - 211 565 செல்லுபடியான வாக்குகள் - 145 945 நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 17 282
தேர்தல்கள் பலமுறை இந்நாட்டில் நடைபெற்றுள்ளன. இருந்த
(மலையக அரசியலும் சமூக வாழ்வும் s
s

Page 28
போதிலும், இந்திய வம்சாவழி மக்கள் வாக்களிக்கும் உரிமையைப் பெற்றது 1931ம் காலப்பகுதியில், இறுதியாக திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதனடிப்படையில் இலங்கை நாட்டை தமது தாய் நாடாகக் கொண்டோ அல்லது ஐந்து வருடத்திற்கு மேல் வாழ்ந்து, கல்வி, சொத்து, வருமானத் தகமையை, 5 வருடங்கள் வசித்து, அல்லது குடியிருப்புச் சான்றிதழ் கொண்டோர் வாக்களிக்கும் தகுதியைப் பெற்றனர்.
இதனடிப்படையில் முதன்முறையாக தோட்டப்பகுதியில் அதிகப்படியானோர் வாக்களிக்கும் உரிமையைப் பெற்றனர். எனவே 1931ம் ஆண்டு எஸ்.பி.வைத்தியலிங்கம் - தலவாக்கொல்ல, பெரிய சுந்தரம் - ஹட்டன் ஆகிய இருவரும் கைத்தொழில் வர்த்தக மந்திரியானார்கள்.
இவ்வாறே 1936ம் ஆண்டுக்காலப்பகுதியில் இந்திய வம்சாவழி வாக்காளர்களின் தொகை 145 000 ஆக அதிகரித்தது. 1936ம‘ஆண்டில் பொதுத்தேர்தலில் இந்திய வம்சாவழியினரைப் பிரதிநிதித்துவப்படுத்தி எஸ்.பி.வைத்தியலிங்கம், கோ.நடேச ஐயர் ஆகியோர் ஹட்டன் தலவாக்கொல்லை பகுதிக்கு தெரிவானார்கள்.
1941ம் ஆண்டு அடுத்த தேர்தலுக்கான ஆயத்த வேலைகள் தயார்செய்யப்பட்டது. அக்காலப்பகுதியில் தோட்டத் தொழிலாளர்களின் வாக்கு 225 00 ஆக உயர்ந்தே காணப்பட்டது. இந்த உற்சாகத்துக்கு தோட்டத் துறையிலே தொழிற்சங்கங்களின் செயற்பாடுகளே காரணமாக அமைந்தன.
நவமணி 04.07,1999
ի)
is சந்தனம் சத்தியநாதன்
RWA

தத்துவத்தின் மெய்யியல் வளர்ச்சியும் மலையகப் பொருளாதாரக் கண்ணோட்டமும்
இலங்கையின் வரலாற்றைப் பற்றி அறிய மகாவம்சம் என்ற நூல் உதவுகிறது. எனினும் மனித பரிணாமத்தைப் பற்றி அறிவதற்கு சமயங்கள் உதவின. இந்த மனித பரிணாமத்தைப் பற்றி மேலும் அறிவதற்கு தரவுகள், உண்மைகள், சமூக ஒழுங்கு முறைகள் போன்றவை உதவியாக அமைந்தன.
அத்தோடு தொல்பொருள் ஆராய்ச்சி மூலம் பெறப்படுகின்ற சிந்தனைகள் அல்லது சான்றுகள் மூலம் ஆதாரபூர்வமாக முன்வைக்கப்படுகின்ற சிந்தனையே விஞ்ஞானப் பூர்வமான சிந்தனை என கூறப்படுகின்றது.
மனிதன் குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சிற்குட்பட்டு கூட்டமாக வாழ்ந்த காலத்தில் இருந்து சிந்தனை நிலை படிப்படியாக வளர்ச்சியடைந்து வந்துள்ளது.
எந்தக் காலத்திலும் மனிதன் இயற்கைக்கு முகம் கொடுக்கக் கூடியவனாகவே காணப்பட்டான். தற்போதும் இந்நிலை காணப்படுகிறது. இயற்கை மாற்றங்களை எதிர்கொள்ள முடியாத மனிதன் தன்னை மீறிய ஒரு சக்தி காணப்படுகிறது என எண்ணினான். மனிதன் இயற்கைப் பெளதிக அம்சங்களைக் கண்டு, அதாவது தன்னை மீறிய சக்திகளைக் கண்டு பயந்தான். பயம் என்ற சிந்தனை விலங்குகளிலிருந்தே ஏற்பட்டது. மனிதனுக்கும் விலங்குகளுக்கும் (மிருகங்களுக்கும்) சண்டை ஏற்படுவதற்கான பிரதான காரணம் இந்த பயம் என்ற சிந்தனைதான்.
இந்த பயம் என்ற சிந்தனை காரணமாக ஆரம்பக்காலத்தில் இயற்கையில் காணப்பட்ட கற்கள், பெரிய விருட்சங்களை வணங்க ஆரம்பித்தான். வாழும் காலத்தில் இயற்கைக்கு பயத்தோடு, மரணத்திற்குப் பின் எவ்வாறு வாழ்க்கை அமையும் என்பதை நினைத்தும் பயந்தான்.
இதன் விளைவாகவே எகிப்து நாட்டில் உயிர்த்துறக்கப் போகும் தருவாய் என அடையாளம் காணப்பட்ட மன்னர்கள் அவர்களின் சகாக்களுடன் பிரமிட்டுக்களில் வைத்துக் கட்டப்பட்டார்கள். இறந்த பின் மன்னனுக்கு ஆபத்து ஏற்படலாம் என்ற அச்சத்தில் மக்களையும் சேர்த்து பிரமிட்டுகளில் வைத்தார்கள்.
எகிப்திய காலகட்டம் தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்த காலகட்டமாகும். இக்காலத்திலே பயம் இவ்வாறு காணப்பட்டால், இதற்கு முற்பட்டக் காலத்தில் பயத்தின் நிலை எவ்வாறு அமைந்திருக்கும் என்பது
மலையக அரசியலுல் சமூக வாழ்வும் s

Page 29
புலனாகின்றது.
மனிதன் கூட்டமாக வாழ்ந்தாலும் மிருகங்களைப் போலவே வாழ்ந்தான். உணவை எல்லோரும் பொதுவாகவே நுகர்ந்தார்கள். இதிலும் சக்தி வாய்ந்த மனிதன் தலைவனாக இருப்பதோடு அவனின் ஆதிக்கமும் அதிகமாகவே காணப்பட்டது.
விவாகம் என்பது காணப்படவில்லை. மிருகங்களைப்போலவே மனிதனும் பாலியல் உறவில் ஈடுபட்டான். எனவே நூல்களில்கூட ஆரம்பகால சமுதாய அமைப்பு முறை கதைகளாகவே கூறப்படுகின்றன. ஆதாம் ஏவாளின் பிள்ளைகளுக்கு அவர்களுக்குள்ளேயே திருமணம் ஏற்பட்டது. அந்தக்காலத்தில் இம்முறையே சிறந்ததாகக் கருதப்பட்டது. ஆனால் காலத்திற்கு காலம் இத்திருமண முறையில் மாற்றம் ஏற்பட்டு சமூகம் மாற்றமும் ஏற்பட்டது.
சமூகம் மாற்றம் அடைந்ததைத் தொடர்ந்து கற்களை உபகரணமாகப் பாவிக்கத் தொடங்கினான் மனிதன். “கல்" ஆயுதம் கண்டுபிடித்தான். பின் உணவுப் பொருட்களைச் சேர்த்து வைக்கும் தன்மை உருவானது. இதனையே நாம் ‘உபரி நிலை” என்கின்றோம்.
மனிதன் உபரி நிலையை அடைந்தவுடன் மக்களுக்கிடையே போட்டி ஏற்படுகிறது. இப்போட்டியில் ஆயுதங்கள் பரிணாம வளாச்சியை அடைந்தன. மனித வளர்ச்சியின் அடுத்தக் கட்டம் நெருப்பைக் கண்டுபிடித்ததாகும்.
நெருப்பைக் கண்டுபிடித்ததை அடுத்து, மிருகங்களிலிருந்து மனிதன் தனித்து வாழ முற்படுகிறான். இதன் விளைவாக மேலதிக சேமிப்பை (உபரியை) பெற்றுக் கொண்ட மனிதன் வேட்டைக்குச் செல்லாமல் இருக்கின்றான். அதாவது குறிப்பிட்ட கூட்டம் வேலையற்ற நிலைமையில் காணப்படும்.
அதிக ஓய்வு நேரத்தைப் பெற்றுக் கொண்ட மனிதன் சிந்திக்கத் தொடங்கினான். அப்போது சிந்தனைக் காலம் ஆரம்பமாகியது. இதனோடு வேலைப் பிரிவும் ஏற்படுகிறது. கூட்டங்களுக்கிடையே சண்டை நிகழும்போது சக்தி வாய்ந்த கூட்டம் எதிர் கூட்டத்தில் உள்ளவர்களை அடிமைகளாக்கி தமது வேலைக்குப் பயன்படுத்தத் தொடங்கினார்கள். இது வரலாற்றில் சிறைக் கைதிகள் பிடிக்கப்பட்ட காலமாகும். இக்காலகட்டத்திலேயே அடிமை சமுதாய முறை தோற்றம் பெறுகின்றது. இதனோடு இரும்பு கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன் விவசாயத்தில் ஏர் உழுதல் முறைகளும் தோன்றியது.
எனவே இக்காலப் பகுதியில்தான் அடிமை சமுதாயம் வலுப்பெற, இதனைப் பற்றி சிந்திக்கும் மக்கள் கூட்டமும் வளரத் தொடங்கியது. இதன் விளைவாக இக்காலகட்டத்தில் புத்திஜீவிகள் தோன்றுகிறார்கள். இப்புத்திஜீவிகளின் எண்ணம் ஆண்டான் பிரிவும், அடிமைகள் பிரிவும் எவ்வாறு ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதைப் பற்றியதாகும். 幽国 சந்தனம் சத்தியநாதன்)

பிளேட்டோ அடிமை சமுதாயம் இருக்க வேண்டும் என்று கூறுகின்றார். ஆண்டான், அடிமை தோற்றத்தின் விளைவால் சமூக வர்க்கம் தோற்றம் பெற்றது. சமூக வர்க்கம் என்ற சிந்தனை வலுப்பெறவே அரிஸ் டோட்டில், சாக்ரிட்டீஸ் போன்ற சிந்தனையாளர்கள் தோன்றினார்கள்.
இக்காலக்கட்டத்தில் விஞ்ஞான அறிவும் கண்டுபிடிப்புகளும் அதிகரிக்க, மறுபுறம் தெய்வ நம்பிக்கை மக்கள் மத்தியில் அதிகரிக்கத் தொடங்கியது. தெய்வ நம்பிக்கையின் காரணமாக மரணத்தின் பின் ஏற்படுகின்ற நிலைமையை எண்ணி பாவங்கள் செய்யாமல் இருக்கவேண்டும் போன்ற சிந்தனைகளைக் கொண்ட சிந்தனையாளர்கள் வளர்ச்சியடைகிறார்கள். இவ்வாறு விஞ்ஞானம், தத்துவம், மதம் சம்பந்தமான சிந்தனைகள் தொடர்ந்து வளரத்தொடங்கியது. பொருளாதார முறை
உற்பத்திச் சக்திக்கும் உற்பத்திப் பொருட்களுக்கும் இடையேயுள்ள தொடர்பு கலப்பை என்ற கருவியாகும். கலப்பையைக் கொண்டு உழவு செய்கின்ற ஒருவருக்கும், கலப்பையின் சொந்தக்காரருக்கும் இடையேயுள்ள தொடர்பு "உற்பத்தி உறவு முறை எனக் கூறப்படுகிறது.
அடிமை சமுதாயத்தில் உற்பத்திக் கருவிகள் அடிமைகளுக்குச் சொந்தமில்லை. இதன் விளைவாக இவர்கள் சிந்திக்கத் தொடங்கினார்கள். இதன் பிரதிபலனாக ரோம் சாம்பிராஜ்யத்தில் மன்னருக்கு எதிராக கருத்துகள் எழுந்தன.
ரோம் சாம்பிராஜ்யத்தின் இறுதிக் காலத்தில் கிருஸ்தவ மதம் தோற்றம் பெற்றது. கிருஸ்தவ மதம் சமுதாயத்திற்குச் சாதகமாகவே அமைந்தது. கிருஸ்தவ மத வளர்ச்சியினால் அடிமை சமுதாயம் என்ற முறை உடைந்து நிலவுடைமை சமுதாய முறை தோற்றம் பெற்றது. குறிப்பாக கி.பி. 100-1800 காலகட்டங்களிலேயே நிலவுடைமை சமுதாய முறை காணப்பட்டது.
இதனுடனே நிலவுடைமை பொருளாதார முறை தோன்றியதன் விளைவாக அடிமைகள் சுதந்திரம் பெற்றனர். இவர்கள் பண்ணை அடிமையாளர்களாக மாற்றப்பட்டனர். கடவுளின் முன் யாவரும் சமம் என்ற கோட்பாட்டின் அடிப் படையிலேயே அடிமைகள் சுதந்திரமடைந்தார்கள். இக்காலத்தில் விஞ்ஞான வளர்ச்சியானது, மதத்தோடு ஒன்றியே வளர்ச்சியடைந்தது. விஞ்ஞானக் கருத்துகளும் சிந்தனைகளும் மதவாதிகளின் கருத்துகளுக்கு அடிமையாகி காணப்பட்டது.
நிலவுடைமை பொருளாதார முறையில் மனிதனுக்கு நாடோடிகளாக அலைய வேண்டியதில்லை. அதனால் ஓய்வு நேரம்
மலையக அரசியலுல் சமூக வாழ்வும் 国图
at

Page 30
அதிகரித்தது. புதிய இயந்திரக் கண்டுபிடிப்புகள் வளர்ச்சி அடைந்தன. இதனால் பண்ணையாளன் “தொழிலாளியாக”மாறினான். இந்தக் காலத்தில் தொழிலாளியின் சுதந்திரம் அதிகமாகவே காணப்பட்டது. உற்பத்தி உறவு முறையில் வித்தியாசம் ஏற்பட, கருத்துகளில் வித்தியாசமும் ஏற்பட்டது.
புதிய உற்பத்தி சக்தி உள்ளவர்களே பலம் வாய்ந்தவர்களாகக் காணப்பட்டார்கள். இங்கே முதலாளித்துவம் பிறக்கின்றது. முதலாளித்துவம் வளர்ச்சியடையும்போது பெரும்நிலப்பண்ணையாளன் தனது நிலங்களை விவசாயத்திற்காகப் பங்கிட்டான். இதனால் சிறுசிறு விவசாயிகள் தோன்றினார்கள். இங்கே உற்பத்தி சக்தியோடு சிந்தனை வளர்ச்சியும் படிப்படியாக வளர்ச்சியடைந்தது.
இவ்வாய்வு சமூக சேவை பயிற்சிக் கருத்தரங்கின்போது பெறப்பட்டது. இவ்வாய்வை மலையகத்தோடு ஒப்பீட்டு அடிப்படையில் நோக்குமிடத்து என்னதான் சிந்தனை வளர்ச்சி உலகளாவிய ரீதியில் தோன்றிய போதும் மலையகத் தோட்டப்புறம் கைத்தொழிற் துறையிலோ, தொழிநுட்பத் துறையிலோ பாரிய ஒரு மாற்றித்திற்குள்ளாகவில்லை என்பதே உண்மையாகப்படுகிறது.
நவமணி 01-06-1997
图国 சந்தனம் சத்தியநாதன்
 

“உண்மையான மனித உரிமை” எங்கு பேணப்படுகின்றது?
மார்க்சியத் தத்துவஞானத்தின் தோற்றம் ஒரு தற்செயல் நிகழ்ச்சியல்ல, அது மனிதகுல முன்னேற்றத்தின் ஒரு விளைவாகும். முழுமையான மார்க்சியத்தைப் போன்றே, மார்க்சியத் தத்துவஞானமும், சமுதாயத்தின், தத்துவஞானத்தின் இயற்கை மற்றும் சமூக விஞ்ஞானங் களின் வளர்ச்சியின் விளைவு.
லெனின் குறிப்பிட்டபடி, புரட்சிகர உலக கண்ணோட்டத்தை உருவாக்குவதன் மூலம் மார்க்ஸும் எங்கெல்ஸும் ஒரு உண்மையான விஞ்ஞானத் தத்துவத்தைப் படைத்தளித்தனர். தொழிலாளவர்க்கம் அதன் வரலாற்று இலட்சியத்தைப் புரிந்து கொள்வதற்கு பயிற்றுவித்து, சுரண்டும் சமுதாய அமைப்பை அகற்றி சோஷலிசத்தைக் கட்டியெழுப்புவதற்கான உண்மையான வழிகளைச் சுட்டிக் காட்டினர்.
மனிதகுலத்தின் ஏடறியா வரலாற்றுத் துறையில் திட்டவட்டமான ஒழுங்கு முறையை நுட்பமாக அறிவுடன் புகுத்த முயன்றவர்களில் மார்க்ஸே முதல்வராவார். முக்கியமான ஆதாரங்கள் இனிமேல் கிடைத்துத் திருத்தங்களுக்கு அவசியம் ஏற்பட்டாலொழிய அவருடைய பகுப்பு முறை தொடர்ந்து பின்பற்றப்படும் என்று எதிர்பார்க்கலாம்.
காட்டுமிராண்டி நிலை, அநாகரிக நிலை, நாகரிக நிலை என்னும் மூன்று பிரதான சகாப்தங்களில் அவர் முதல் இரண்டு நிலைகளைப் பற்றியும், மூன்றாவது நிலைக்கு மாறிச் செல்வதையும் மட்டுமே அக்கறை கொண்டிருந்தார் என்பது இயல்பே. அவர் உயிர் வாழ்வதற்குரிய பொருட்சாதனங்களை உற்பத்தி செய்வதில் பெற்ற முன்னேற்றத்திற்குத் தக்கப்படி இவ்விரண்டு சாகாப்தங்கள் ஒவ்வொன்றையும் கடைக்கட்டம், இடைக்கட்டம், தலைக்கட்டம் என்று மூன்று உட்கட்டங்களாகப் பிரித்தார். ஏன் என்றால் அவர் கூறியபடி,
“புவியில் மனித குலம் தலையாய நிலையடையும் பிரச்சினை முழுவதும் இத்துறையில் அவர்கள் அடைந்துள்ள திறனைப் பொறுத்ததாக இருந்தது; ஜீவராசிகளில் மனிதன் மட்டுந்தான் உணவு உற்பத்தியில் தனி முதலான அதிகாரம் பெற்றிருந்தான் என்று கூறலாம். உயிர் வாழ்வதற்குரிய மூலாதாரங்களின் பெருக்கத்தை வைத்தே மனிதகுல முன்னேற்றத்தின் மகத்தான சகாப்தங்கள் அநேகமாக நேரடியாக அடையாளங் கண்டு கொள்ளப்பட்டிருக்கின்றன.
மனிதகுல பரிணாம வளர்ச்சியின் ஓர் அம்சமாக மனித உரிமைகள் என்ற சொற்பதம் வலுவடைந்ததும் குறிப்பிடத்தக்க ஓர்
| மலையக அரசியலுல் சமூக வாழ்வும் s
STZ

Page 31
அம்சமாகும். இந்த மனித உரிமைகளில், சிறுவர் உரிமை, பெண்உரிமை, அடிப்படை உரிமைகள் போன்றவையும் அடங்குகின்றன. டிசம்பர் 10ம் திகதி சர்வதேசமனித உரிமைகள் தினமாக பிரகடனப் படுத்தப்பட்டிருப்பதும் ஓர் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் அரசியலமைப்பு அத்தியாயம் 111ல் அடிப்படை உரிமைகள் தொடர்பாகத் தெளிவாக இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
சிந்தனை செய்யும் சுதந்திரம், மனசாட்சியைப் பின்பற்றும் சுதந்திரம், மதச் சுதந்திரம், சித்திரவதைக்குள்ளாகாமல் இருப்பதற்குச் சுதந்திரம் சமத்துவத்துக்கான உரிமை,
அரசியலமைப்பு 7, எதேச்சையாகக் கைது செய்யப்படாமலும் தடுத்துவைக்கப்படாமலும், அத்துடன் தண்டிக்கப்படாமலும் இருப்பதற்கான சுதந்திரமும், கடந்த காலத்தை உள்ளடக்கும் பயனுடையனவான தண்டனைச் சட்டவாக்கங்களைத் தடைசெய்தலும்.
அரசியலமைப்பு 8, பேச்சுச் சுதந்திரம், ஒன்று கூடுவதற்கான சுதந்திரம், ஒருங்கு சேர்வதற்கான சுதந்திரம், முயற்சி செய்வதற்கான சுதந்திரம் தடையின்றி நடமாடுவதற்கான சுதந்திரம்.
அடிப்படை உரிமைகள் (12)1 சட்டத்தின் முன்பு ஆட்கள் எல்லோரும் சமமானவர்கள். அத்துடன் அவர்கள் சட்டத்தினால் சமமாகப் பாதுகாக்கப்படுவதற்கும் உரித்துடையவர்கள்.
சமத்துவத்திற்கான உரிமை (2). இன, மத, மொழி, சாதி, பால், அரசியற்கொள்கை அல்லது பிறப்பிடம் காரணமாக அல்லது அத்தகைய காரணங்களில் எந்த ஒரு காரணமாகவும் எந்தப் பிரஜைக்கும் ஓரங்காட்டுதல் ஆகாது.
இவை போன்ற பல விடயங்கள் அரசியல் அமைப்பில் கூறப்பட்டுள்ளன. இவைகள் எந்த வகையில் பேணப்படுகிறது என்பது ஒரு கேள்விக்குறியான விடயமே. தோட்டப்புற இளைஞர்களுக்குப் பிறப்புச்சாட்சிப் பத்திரம் “அடையாள அட்டை” இல்லாமல் பலர் கைது செய்யப்படுகிறார்கள். இதுவே ஒரு மனித உரிமை மீறல். இனியும் இந்நிலை தொடராது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அடையாள அட்டையை தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்குவதில் தாமதம் காட்டாது துரிதமாகச் செயற்படல் வேண்டும். அத்தோடு நான்கு இலட்சத்திற்கும் மேற்பட்ட தோட்டத் தொழிலாளர்களுக்குப் பிரஜா உரிமை இல்லை. இதுவும் மாபெரும் மனித உரிமை மீறலாகும். ஆகவே உண்மையான மனித உரிமை மீறல் எந்த சமூகத்தை அதிகம் பாதிக்கின்றது, பாதித்துள்ளது என்பதற்கு இதுவே சிறந்த உதாரணங்கள்.
நவமணி 14.2.1997
சந்தனம் சத்தியநாதன்)

சுதந்திரத்தை சுதந்திரமில்லாமல் கொண்டாடுவதா? சிந்தனை செய்யும் சுதந்திரம், மனசாட்சியைப் பின்பற்றும் சுதந்திரம் மதச் சுதந்திரம் இதைத் தவிர ஏனைய கதந்திரங்கள் அனைத்தும் சமூகப் பாதுகாப்புக் கருதி நாம் அரசிடம் ஒப்படைத்துள்ளோம். அரசும் இந்தச் சுதந்திரங்களை அவசரகாலச் சட்டத்தின் கீழ் வைத்துக்கொண்டு நாட்டைப் பாதுகாக்கின்றது. வடகிழக்கில் யுத்தம், பிரித்தானியர்களிடம் இருந்து இலங்கை சுதந்திரம் பெற்றபின் சுமார் 25 ஆண்டுகளுக்கு மேல் நாட்டில் அவசர காலச்சட்டம் அமுலில், பின் என்ன சுதந்திரத்தை மக்கள் அநுபவித்தார்களோ யாமறியோம். வாகனங்களுக்கு லைசன்ஸ். அதே போல் எமக்கும் அடையாள அட்டை என்னும் லைசன். அதுவும் தமிழன் என்றால் சிலவேளை அதுவும் செல்லுபடியாகாமலிப் போகும் சந்தர்ப்பங்களோ அதிகம். அதிகம் நடமாடவே சுதந்திரமில்லாத இவ்வேளையில் பொன்விழாவைக் கொண்டாடவும் வேண்டுமா?
சுதந்திரம் பிறப்புரிமை என்ற கருத்தும் உள்ளது. குழந்தை, தொட்டிலில் இருக்கும்போதே அது கையை, காலை ஆட்டுகிறது, அழுகிறது. அதுவும் தன் உரிமைக்காக போராடுவதாகவே கணிக்கப்படுகிறது. எனவே மனிதகுல வரலாற்றுக் காலந்தொட்டு கோத்திர வாழ்க்கை முறை. பின்னர் குடும்பம், தலைவன், மன்னராட்சி, பிரபுத்துவம், மக்களாட்சி, ஜனநாயகம் என்று அந்த ஆட்சி முறைகள் காலத்தின் தேவையறிந்து உருவாகியுள்ளது என்பது உண்மையே.
இவைகளை நாம் உற்று நோக்கும் அதேவேளை சற்று பின்னோக்கி அடிமையுடைமை சமுதாயத்தில் பொருள் முதல்வாதத்திற்கும் கருத்து முதல்வாதத்திற்கும் இடையிலான போராட்டம் எவ்வாறு என்பதை அவதானித்தோமானால், உலகத்தைப் பற்றிய பொருள்முதல்வாதக் கண்ணோட்டம் புராதனக் காலத்திலேயே தோன்றி வேரூன்றி விட்டதாகும். அது எகிப்து நாட்டிலும் பாபிலோனியாவிலும் கி.மு மூவாயிரம் ஆண்டின் முடிவிலும் இரண்டாயிரம் ஆண்டின் துவக்கத்திலும் உருப்பெற்றது.
சாவுக்குப் பின்னரும் வாழ்க்கை என்ற மதவழியிலான வறட்டுச் சூத்திரம், அன்று நிலவிய அநீதியான சமுதாய அமைப்பு ஆகியவற்றை எதிர்த்து, அடிமை சொந்தக்காரர்களின் உலகக் கண்ணோட்டத்திற்கு முற்போக்குச் சிந்தனை முதல் தாக்குதல்களைத் தொடுத்தது. முன்னரே சில சிந்தனையாளர்கள் இயற்கையின் நிகழ்வுகளது பொருளாதார தோற்றுவாய்களை அனுமானிக்கத் துவங்கிவிட்டனர் என்பதை தொன்மையான எகிப்தியக் கலாசாரத்தின் நினைவுச் சின்னங்கள் காட்டுகின்றன. இவ்வாறாக, சில ஜீவராசிகள் மட்டும் இதரப்பொருட்களின் மூலம் குளிர்ந்த நீர்தான் என்றனர். மற்றவர்கள் விசும்பும் அனைத்துப் பொருட்களும் காற்றால் நிரப்பப்பட்டது என்றனர்.
மலையக அரசியலுல் சமூக வாழ்வும்

Page 32
முதலாளித்துவ வளர்ச்சிச் சாகாப்தத்தில் பொருள்முதல்வாதமும் மற்றும் கருத்துமுதல்வாதத்தை எதிர்த்து அதன் போராட்டம் உற்பத்தியில் முதலாளித்துவ உறவுகளின் தோற்றமும் வளர்ச்சியும் உற்பத்தி நடவடிக்கை முழுவதிலும் ஒரு உத்வேகத்தை ஊட்டின.
உலகலாவியரீதியில் பார்க்கும்பொழுது முதலாளித்துவ அதிகார நாணயத்தின் ஒரு பக்கம் பூர்ஷ"வா ஜனநாயகம் என்றால் மற்றது *யாசிஸம் என்று கூடக் கூறலாம். பூர்ஷ"வா ஜனநாயக வரையறைக்குள் தன் சுரண்டலை மேற்கொள்ளவும் அதிகாரத்தைத் தொடரவும் இயலாமற் போகும்பொழுது அப்பட்டமான அடக்குமுறையை மேற்கொள்ளும் நிர்ப்பந்தம் ஏற்படுகிறது.
இரண்டாம் உலக யுத்தங்களுக்கிடையிலான ஆண்டுகளில் *யாசிஸம் என்ற கோட்பாடு இத்தாலியில் வேரூன்றியது. பின்பு ஜேர்மனி, ஸ்பெயின் ஆகிய நாடுகளிலும் அதிகாரத்தைக் கைப்பற்றியது. "யாசிஸம் நாட்டுக்கு நாடு வேறுபட்டாலும் அதன் உபாயங்கள் மூலமும் அதிகாரத்திற்கு வந்தாலும் பொதுவான இயல்புகள் சில எல்லாச் சூழ்நிலையிலும் காணக்கூடியன. தீவிர தேசியவாத உணர்வுகளைத் தட்டியெழுப்புதல், சர்வாதிகார அடக்குமுறை, வலதுசாரித் தன்மை, தொழிற்சங்க உரிமைகள் உற்பட சகல ஜனநாயக உரிமைகளதும் மறுப்பு மற்றும் அரசு நேரடியாகவே முதலாளித்துவ அதிகாரத்தின் பிரதிநிதியாகச் செயற்படுதல் போன்ற இயல்புகள் பழைய இத்தாலி, ஜேர்மன், ஸ்பெயின் முதலாக மற்றும் மூன்றாம் உலகின் "யாசிஸவாத ஆட்சிகளையுடைய சிலி, இந்தோனேஸியா, தென்கொரியா போன்ற பல நாடுகளிலும் காணமுடியும்.
இவைகளை ஒப்பீட்டு முறையில் நோக்குமிடத்து மலையக மக்களைப் பொறுத்தமட்டில் 1948ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பிரஜா உரிமை சட்டத்தின் மூலம் குடியுரிமை பறிக்கப்பட்டதுடன் நாட்டின் ஏனைய மக்கள் அநுபவிக்கும் உரிமைகள் சலுகைகள் என்பவற்றிலிருந்து இம்மக்கள் ஒதுக்கி வைக்கப்பட்டனர்.
நான்கு தசாப்தங்களைக் கழித்துவிட்ட இம்மக்கள் தம் அடிப்படை உரிமையைக் கூட இழந்த நிலையிலி இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அத்தோடு இந்நாட்டில் வாழும் நான்கு இலட்சத்திற்கு அதிகமாகவுள்ள தோட்டத்தொழிலாளர்களுக்குக் குடியுரிமை இல்லை. இவர்கள் நாடற்றவர்களாகவே இன்னும் இருக்கிறார்கள். இதுபோன்ற பல ஒடுக்கு முறைகளுக்கு உள்ளான மக்களுக்கு எங்கே சுதந்திரம்? கண்டி நகரிலும் மின்கம்பங்களுக்கும் வெள்ளையடிக்கப்பட்டு விட்டது. ஆனால், தோட்டத் தொழிலாளியின் முதுகில் உள்ள கருப்பு கம்பளி அகன்று விடவில்லை. இதுதான் பொன்விழாக் கொண்டாட்டமா? கண்டிக்குச் சுதந்திரமாகப் போய் வரமுடியவில்லை. பின் எங்கே சுதந்திரத்தைச் சுதந்திரமாகக் கொண்டாடுவது.? pianoaf - 01.02.1998
சந்தனம் சத்தியநாதன்

இலங்கையின் கல்வி வளர்ச்சிப் போக்கும் மலையகமும்
மனிதகுல வரலாற்றில் மொழி ஒரு முக்கியப் பங்கை வகிக்கின்றது. மொழி வளர்ச்சியடைந்ததின் காரணமாக கல்வி என்ற வளர்ச்சிக்குத் தள்ளப்படும் மனிதன் சிந்தனை ரீதியாகவும் வளர ஆரம்பித்தான்.
எனவே இதன் வளர்ச்சிவேகம் காலத்தின் தேவைக்கேற்ப இன, மத, நாடு என்ற ரீதியில் வேறுபட்டாலும் கல்வி என்பது மனித வாழ்விற்கு எந்தளவு அவசியமான ஒன்று என்பதை அவதானித்தோமேயானால் தமிழ் நாட்டிலே தமிழ் வரலாறு அகத்தியரிலிருந்து தொடங்குகிறது. ஈழநாட்டிலே தமிழிலக்கிய வரலாறு அரசசேரியிலிருந்து தொடங்குகிறது.
ஆங்கிலேயரும் அவருக்கு முன் ஒல்லாந்தரும் ஒல்லாந்தருக்கு முன் போர்த்துக்கீசரும் ஈழநாட்டை ஆண்டார்கள். இற்றைக்கு நானூறு வருடங்களுக்கு முன் அதாவது போர்த்துக்கீசருக்கு முன் இலங்கையை சிங்களவர்களும் தமிழர்களும் ஆண்டார்கள். ஆரியச் சக்கரவர்த்திகள் என்ற பெயர் வைத்துக்கொண்டு யாழ்பாணத்தை தமிழரசர்கள் பரம்பரை பரம்பரையாக ஆண்டார்கள் எனவும் கூறப்படுகிறது.
கேசரியின் காலத்திலே யாழ்ப்பாணத்து நல்லூரிலே ஒரு தமிழ்ச் சங்கம் இருந்தது. அப்போது நல்லூர் இராசதானியாக விளங்கியது. அந்த தமிழ்ச் சங்கத்திலே புலவர்கள் பலர் அங்கத்தவர்களாயிருந்ததாகவும் கூறப்படுகிறது.
தமிழிலக்கணம் இலக்கியங்களோடு சோதிட, வைத்தியம் முதலியனவும் வேறு பல கலைத்துறைகளும் அந்தச் சங்கத்தால் வளர்க்கப்பட்டதாக வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன. இக்காலத்தை சின்னத்தம்பி புலவர் காலம் என்றும் கூறுவர்.
சென்னைச்சர்வகலாசாலை தொடங்கியது 1950க்குப் பிறகு. ஆனால் அதற்கு முன்னமே யாழ்ப்பாணத்து வட்டுக்கோட்டையிலே செமினரி என்று வழங்கிய கல்லூரியிலே ஆங்கிலமும் சாஸ்த்திரப்பாடங்களும் நன்கு கற்பிக்கப்பட்டன.
அங்கே படிக்கப் புகுந்தவர்களுட் பலர் முன்னே ஆங்காங்கு மறைவிலிருந்து தமிழ்ப்புலவர்களிடம் இலக்கண இலக்கியங்கள் முறையாகக் கற்றுத் தெளிந்தவர்கள், அவர்கள் தமிழ்மயமாயிருந்துக் கொண்டே ஆங்கிலமுஞ் சாத்திரப் பாடங்களும் கற்றார்கள். தமிழ்த் தொண்டு பிரகாசிப்பதற்கு வட்டுக்கோட்டைப் படிப்பு உறுதுணை புரிந்தது. எனவே கல்வி கற்ற பட்டாளம் என்று பார்க்குமிடத்து அக்காலத்தில் யாழ்ப்பாண மக்களே விரல்விட்டு எண்ணக்கூடியவர்கள்,
மலையக அரசியலுல் சமூக வாழ்வும்

Page 33
இதை மறுப்பதற்கில்லை. இதனடிப்படையில் பார்த்தால் 1823-1825 காலப்பகுதியில் திட்டமிட்டக் கோப்பிப்பயிர்ச்செய்கை பிரித்தானியர்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியரின் நிர்வாகத்தின் கீழ் வேலை செய்வதைச் சிங்கள மக்கள் இழுக்காக அல்லது குறைவாக நினைத்தனர். இதனால் பெருந்தோட்டத் துறையில் வேலை செய்வதற்கு நிரந்தரமான தொழிலாளர்களைப் பெறவேண்டிய நிலை பிரித்தானியருக்கு ஏற்பட்டது. அவ்வேளை இந்தியாவின் தென்பகுதில் நெசவுத் தொழில்கள் பிரித்தானியர்களால் அழிக்கப்பட்டமையினால் அங்கு பசியும் பஞ்சமும் தலைவிரித்தாடியது.
இந்நிலையைச் சாதகமாகப் பயன்படுத்திய பிரித்தானியர்கள் இலங்கையில் கூடிய ஊதியம் வழங்கப்படுவதாகவும் சகல அடிப்படை வசதிகளும் வழங்குவதாகவும் கூறிப் போலிப் பிரசாரங்கள் மூலம் இலங்கைப் பெருந்தோட்டதுறைக்குத் தொழிலாளர்கள் அடிமைகள்போல் கொண்டு வந்தனர்.
அப்போது இவர்களது உழைப்பை மட்டுமே கருத்தில் கொண்டார்கள் பிரித்தானியர்கள். ஆணும் பெண்ணும் வேலைக்குச் சென்றபின் சிறுபிள்ளைகள் தேயிலைக் கொழுந்தை கிள்ளி வீணடித்து விடுகிறார்கள் என்பதால் தோட்டப் பாடசாலைகளை ஏற்படுத்தினார்கள். அதற்காக யாழ்ப்பாணத்தில் இருந்து படித்தவர்களை ஆசிரியர்களாக நியமித்தார்கள். இந்த பரிணாமவளர்ச்சி படிப்படியாக உயர்ந்தது. இந்த தோட்டப் பாடசாலைகள் காலப்போக்கில் அரசினால் கையேற்கப்பட்டது. அதன்பின் கல்வித் தரத்தில் பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. அப்படி கொண்டுவரப்பட்ட மாற்றத்தின் காரணமாக இன்று சில தோட்டங்களில் க.பொ.த. சா/த வரையுள்ள பாடசாலைகளும் வந்துவிட்டது குறிப்பிடத்தக்க ஒன்று. இலங்கையில் வாழும் மக்களிடையே எழுத்தறிவு விகிதத்தை பின்வரும் மத்திய வங்கி அறிக்கை 1981 (1996) Voப.131. காட்டுகிறது.
வ்களவர் இலங்கைத் தமிழர் முஸ்லிம் மக்கள் மலாயர்
பறங்கியர் மலையகத் தமிழர்
இலங்கையின் எழுத்தறிவு 1981-1982 நகரம், கிராமம், தோட்டம், எனப் பார்த்தால் (மத்திய வங்கி அறிக்கை 1984 ப.58)
s சந்தனம் சத்தியநாதன்)
 
 

இலங்கை எழுத்தறிவு
92.90 90.01
89.70 86.00 64.80
இலங்கை தோட்டப்புறக் கல்வி வளர்ச்சி அட்டவனை
(இன்றைய மலையகம் 1993 சென்னை ப.119)
ஆண்டு எழுத்தறிவற்றோர் முதல்நிலை கல்வி இரண்டாம்நிலைக்
மட்டும் கல்வி மட்டும்
1953 61 36 1963 57 35 1973 52 42 1978-1979 45 48 1981-1982 46 45 1985-1986 41 43 1988 32 53
03
08
06
07
08.50
4.
15
(மலையக தமிழாராச்சி மாநாடு) உத்தேச மதிப்பீட்டின்படி மலையக மக்கள் தகுதியடிப்படையில் தொழில்புரிவோர்
Y க.பொ.த. சா/த தகுதி ஆசிரியர்கள்
Y க.பொ.த. உ/த தகுதி ஆகிரியர்கள்
Y பட்டதாரி தகுதி ஆசிரியர்கள்
Y பெருந்தோட்ட வர்த்தக நிறுவன அலுவலக கிளார்க், மற்றும் கல்விகற்ற சாதாரண உத்தியோகத்தர்கள்
Y இடைப்பட்ட தொழிநுட்பப் பயிற்சிமிக்கத் தொழிலாளர்கள்
Y பொலீஸ் உத்தியோகம்
/ மருத்துவர்கள், பொறியியலாளர்கள், கணக்கியலாளர்கள்,
அரச உயரதிகாரிகள், பல்கலைக்கழக ஆசிரியர்கள், வங்கி அதிகாரிகள்
Y எனவே மொத்தம்
Y உத்தேச விலகல்
M மொத்தம்
மலையக அரசியலுல் சமூக வாழ்வும்
3000
750
300
3000 1250
500
300 9100
810 990

Page 34
கல்வி அமைச்சின் முன்னேற்ற அறிக்கை, 94/95 இன்படி க.பொ.த உயர்தர வகுப்புக்களின் மொழிமூல வகைப்படி மாணவர் தொகையும் விகிதாசாரமும் (1995)
மொழிமூலம் மொத்த மாணவர் க.பொ.த. உ/த விகிதம்
தொகை மாணவர் தொகை சிங்களம் 3 200 000 164 000 5.4 தமிழ் 986 000 38 700 3.9
நுவரெலியா மாவட்டத்தில் 187 280 சிங்கள மக்களுக்கு 220 சிங்கள மொழிப் பாடசாலைகளும் 317 000 மலையக தமிழ் மக்களுக்கு 258 தமிழ் மொழிப் பாடசாலைகள் மட்டுமே உள்ளன. இவ்வாறான விடயங்கள் கவனத்தில் கொள்ளப்படுவதில்லை.
மலையகத்தில் இருந்து பல்கலைக்கழகம் செல்வோர் தொகை குறைவாகக் காணப்படுகிறது. மாகாணரீதியாக 94/95 கல்வி அமைச்சின் முன்னேற்ற அறிக்கையின்படி பார்த்தால்,
மாகாணம் ஆண்டு 12-13 தமிழ் மொழி மூலம்
மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றுவோர்
மத்திய மாகாணம் 3 656
வட மாகாணம் 17 888
கிழக்கு மாகாணம் 10 724
ஊவா மாகாணம் 401
எனவே இங்கு நாம் பார்த்த புள்ளிவிபரங்களின் அடிப்படையில் இலங்கையின் கல்வி வளர்ச்சிப்போக்கோடு மலையகத்தை எந்த வகையில் ஒப்பிடலாம் என்பது விளங்குகிறது. அரசியல், பொருளாதார, சமூக மாற்றங்களுக்கேற்ப மலையகத் தமிழர்கள் எவ்வாறான ஒரு சவாலை எதிர்நோக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு செயற்படுவது இன்றைய காலத்தின் தேவை.
நவமணி 22.03.1998
பச்சைமலை
幽国 சந்தனம் சத்தியநாதன்)
 

தோட்டத் தொழிலாளப் பெண்களுக்கு சமவுரிமை உண்டா?
இன்றைய நவநாகரீக வளர்ச்சியோடு பெண் விடுதலை எனும் கொள்கையும் வலுப்பெற்று வந்துள்ளதைக் காணலாம். அத்தோடு நாகரீக வளர்ச்சியிலே வாழும் ஒரு பெண் சுதந்திரமாகத் தமது கடமைகளைச் செய்கிறாள் என்ற எண்ணம் எம்மிடையே வளர்ச்சியடைந்துள்ளதைக் காணலாம்.
இக்கருத்து உச்சியிலிருக்கும் மேற்தட்டு வர்க்கத்தினருக்கு சில வேளை பொருத்தமாக இருக்கலாம். அதேபோல் மேற்தட்டு வர்க்கப் பெண்களே பெரும்பாலும் "பெண் விடுதலை" என்ற கோஷத்தை எழுப்பியவர்களும் ஆவார். பொதுவாக நோக்கும்பொழுது தோட்டப்புறப் பெண்களுக்கு பெண்விடுதலை தொடர்பாக சிந்திக்க முடியாத அளவிற்கு குடும்ப உட்கட்டமைப்பு அமைக்கப்பட்டுள்ளது.
சர்வதேச ரீதியில் நோக்குமிடத்து பெண்விடுதலை என்ற கோஷத்தை 1960 களில் வட அமெரிக்க நகரங்களைச் சார்ந்த பெண்களே முதலில் எழுப்பியவர்கள் என்ற பெருமைக்குரியவர்கள். பெண் என்ற காரணத்தால் அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளைப் பற்றி அன்றே சிந்திக்கத் தொடங்கிவிட்டனர்.
அந்த வகையில் நம் பார்வையை இலங்கைப் பக்கம் திருப்பினால் 1977ம் ஆண்டு திருமதி குமாரி ஜயவர்தனா அவர்களே பெண்விடுதலை என்னும் புதிய கோட்பாட்டை இலங்கையில் முதன்முறையாக அறிமுகப்படுத்தினார். அவர் "பெண்ணின் குரல்" என்ற தலைப்பில் வெளியிட்ட சஞ்சிகை ஏனைய பெண்கள் மத்தியில் ஒரு புதிய பரபரப்பை ஏற்படுத்தியது.
இச்சஞ்சிகையின் தாக்கத்தால் ஆங்கில அறிவு கொண்ட சில பெண்கள் இலங்கையில் சில பெண்விடுதலை அமைப்புகளை ஏற்படுத்தினார்கள். இதற்கு முற்பட்ட காலத்தில் அரசியல் கட்சிகளைச் சார்ந்த சில பெண்களின் அமைப்புகள், பெண்கள் முகம் கொடுத்த சில தனிப்பட்ட ஒழுங்கு முறைகளைக் கூட சரிவர பார்வையிடவில்லை. பெண்கள் மலர்களுக்கு ஒப்பிடப்படும் போதிலும், நிலவுக்கு ஒப்பிடப்படும்போதிலும் கேட்பதற்கு இனிமையாக இருக்கின்றது. ஆனால் இங்கு ஒப்பிடப்பட்ட எந்த பொருளும் நிலைத்து நீடித்து வாழ்பவையல்ல. நிலவு தேய்ந்துவிடுகிறது மலர் பறித்தபின் வாடிவிடுகிறது.
மலையக அரசியலுல் சமூக வாழ்வும் [୍]]
Na

Page 35
அத்தோடு பெண்ணின் பெளதிக மாற்றங்கள், உடல்உறுப்பு மாற்றங்கள் தவிர ஆணோடு சம நடைபோடும் தன்மை இருக்கவே செய்கிறது.
தோட்டத்தொழிலாளர் வர்க்கப்பெண்கள் மலையக பொருளா தாரத்தின் அச்சாணிகள் என்றால் அது மிகையாகாது. அவர்கள் தம் குடும்ப வாழ்க்கையிலும் கணவனின் ஒடுக்கு முறைகளுக்கு உட்படுகின்றனர். அதேபோல் வேலைத்தளத்தில் ஆண் மேற்பார்வையாளர் மற்றும் கங்காணிமார் போன்றோரின் அடக்கு முறைக்குள்ளாகிறார்கள். மறு உற்பத்தி என்று பார்க்கையில் பெண்களின் பிள்ளை பெறல், வீட்டு வேலை, பிள்ளை பரராமரித்தல், விருந்தினர் உபசரிப்பு போன்றவற்றிக்கு எவ்வித கொடுப்பனவோ அல்லது பெறுமானமோ வழங்கப்படுவதில்லை. இது சர்வதேச ரீதியான ஒரு பிரச்சினை. இது குறித்து ஐக்கிய நாட்டு சபையின் சாசனமும் மெளனம் சாதித்தே வருகிறது எனப் பல பெண்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
பெண்கள் பிரச்சினை, பெண் சமத்துவம், பெண் உரிமை என்ற கண்ணோட்டத்தில் பார்க்கையில் அதிகமாக அடக்குமுறை ஒடுக்கு முறைக்கு உள்ளாகுபவர்கள் தோட்டப் பெண்களே. எல்லோருடனும் ஒப்பிடும்போது சம உரிமை உண்டா? என்று கேட்கும்போது பதில்..?
நவமணி
23.03.1998
சந்தனம் சத் தியநாதன்)
 

தேசிய வாதம் பற்றிய
சில குறிப்புகள்
இனம் என்றால் என்ன? இனவாதம் என்றால் என்ன? தேசியவாதம் என்றால் என்ன? இந்தக் கேள்விகளுடன் சனசமூகத்தின் நிலையை உற்று நோக்குவோமானால் தனிக் குடும்பம் சேர்ந்து வாழ்வது சன சமூகம் எனக் கருதுகிறோம். சமூகம் என்பது இருக்கின்ற குடும்பங்களுக்கிடையே நிலையான ஒரு நிலையில் இருப்பதையே சமூகம் எனக் கூறுகிறோம். இருந்த போதிலும் உலகில் ஒரு தனியான இனம் இருப்பதாகக் கூறமுடியாது.
கலப்பினமே உலகில் உள்ளது. இலங்கையின் ஆதிவாசிகள் கூடப் பல நாடுகளிலிருந்து வந்தே, இங்கே ஒரு சமுதாயத்தை உருவாக்கியதாக வரலாறுகள் கூறுகின்றன. இந்தியா, சீனா போன்ற நாடுகளில் இருந்து வந்தவர்களே சமூகமாக பரிணமித்தார்கள்.
சமூகம் என்பது தொடர்புகளைப் பாஷையினால் ஏற்படுத்துகிறது. பாஷை அபிவிருத்தியடைய பல்வேறு சமூகங்களுடனான தொடர்புகளை வலுப்படுத்துகின்றது. அதுவே காலப்போக்கில் வடிவம் பெறுகின்றது.
மொழியைப் பேசும்போதே சிந்தனை சக்தி வளர்ச்சியடையத் தொடங்குகிறது. இதனடிப்படையில் சமூகம் பல்வேறு மதங்களைக் கடனாக பெறுவதன் மூலம் வளர்ச்சி பெறுகிறது.
உதாரணமாக சிங்கள மக்கள் பெளத்த தர்மத்தை இந்தியாவிலிருந்து கடனாகப் பெற்றார்கள். இந்தியாவிலும் இந்நிலைமை உருவாகியது. பிராமணர்கள் கூட பல மதங்களில் இருந்து பெற்று தமது மதத்தை உறுதிப்படுத்திக் கொண்டனர். அத்தோடு மனோபாவம் மதத்தை ஒட்டியே உருவாகிறது. மக்கள் சமூகத்தின் தன்மைகள் பொதுவாகவே காணப்படுகிறது. சமய, கலை, கலாசார சட்டங்கள் கூட பல்வேறு விதமாகக் காணப்படுகிறது.
எனவே இந்தச் சமூகங்களுக்கிடையே பல்வேறு மாற்றங்களைக் காணக்கூடியதாக இருக்கிறது. இந்த மாற்றங்களுடன் பொருளாதாரம் ஒரு முக்கிய பங்கை வகிப்பதோடு சமூகங்கள் மத்தியில் பல வர்க்கங்கள் உருவாகின்றன. அதாவது உற்பத்தி வழி உரிமை உற்பத்தியாளன், நில உடைமையாளன், விவசாயிகள் தொழிலாளர் வர்க்கம் ஆகியோரைக் கூறலாம்.
இதனடிப்படையில் பார்க்கும்போது சமூகங்கள் வளர்ச்சியடைய சந்தை என்ற ஒன்று மிக மிக முக்கியமாகக் கருதப்படுகிறது. வர்க்கங்களுக்கிடையே சாதி ரீதியாகவும் மக்கள் வேறுபட்டனர். இருந்த
மலையக அரசியலுல் சமூக வாழ்வும்

Page 36
போதிலும் சந்தையிலே அனைவரும் ஒன்றிணைந்தனர். இந்தச் சாதிப் பிரிவு வேலைப்பகிர்வின் காரணமாகவே தோன்றிய ஒன்று.
எந்த வகை வேலைகளிலும் ஈடுபடாத ஒரு பிரிவினர் ஒரு வர்க்கமாக காணப்படுகின்றனர். இவர்கள் நாட்டின் சிந்தனை செய்பவர்கள். இவர்கள் நாட்டுப் போராட்டங்களுக்கு முகம் கொடுப்பவர்கள். இவர்கள் அரச பரம்பரை, பிராமண உயர்குலம் எனத் தம்மை இனங்காட்டிக் கொள்பவர்கள்.
செய்யும் தொழிலை வைத்துச் சாதியைப் பிரித்துக் கொண்டாலும் அவைகள் முதலாளித்துவ தன்மைகளோடு வேறுபடுகின்றன. ஆனாலும் இவைகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து சமூகத்தை உருவாக்க முக்கிய பங்கை வகிக்கின்றன.
இலங்கையில் பல்வேறு சமூகத்தினர் வாழ்ந்தாலும் இந்நாட்டை பெரும்பான்மையான இனம் ஆளும் பிரிவினராகக் காணப்படுகின்றனர். ஆகவே இந்நாட்டின் அனைத்து மக்களது தலைவிதியையும் நிர்ணயிற்கும் சக்தியை இவர்கள் பெற்றிருக்கின்றனர்.
ஆனால் ஆங்கிலேயர் ஆட்சிபுரிந்த காலத்தில் அவர்களது பொருளாதாரம் உலகளாவிய ரீதியில் வியாபித்திருந்ததன் காரணமாக மக்கள் தொகை அதிகமின்றியும் அவர்கள், நாட்டில் ஆதிக்கத்தைச் செலுத்தினார்கள்.
எனவே முழு உலகமும் இன்று இனமோதல் காரணமாகச் சின்னாபின்னமாக்கப்பட்டு வளர்ச்சிக் குன்றி வருவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இவ்வளர்ச்சியை அரசியல் தீர்வு யோசனைகள், யுத்தங்கள் மூலம் தீர்வு காணலாம் என பெரும்பான்மையான முதலாளித்துவவாதிகள் கருதுகின்றனர். இருந்தபோதிலும் சமஷ்டி முறையை ஒரு தற்காலிக தீர்வாக எண்ணுகிறார்கள்.
இந்த இனவாதம், தேசியவாதம் தலை தூக்குவதற்கு முக்கிய காரணமாக அமைவது சொத்து, நிலம், பொருளாதாரம் போன்ற காரணிகளே. எனவே இனவாதத்தை வளர்ப்பது முதலாளித்துவமே. உழைப்புக்கேற்ற ஊதியம் சமமாகப் பகிரப்பட்டால் இவ்வாறான வாதங்கள் தலைதுாக்காது. முதலாளித்துவத்தின் சிந்தனை இனவாதத்தின் கரு என்று கூடச் சொல்லலாம்.
நவமணி 3.05.1998
சந்தனம் சத்தியநாதன்)
 

தோட்டத் தொழிலாளப் பெண்களின் பால்நிலைச் சமத்துவமும் பிரசவ சகாய நிதிச் சட்டமும்
ால்வகை என்பது பெண்ணுக்கும், ஆணுக்கும் இடைப்பட்ட சமூக உறவுகளைக் குறிப்பதாகும். பால்வகை சமய, இன, பொருளாதார, கலாசாரக் காரணிகளால் உருவாக்கப்பட்டது. இதற்கு மாறாக "பால்” என்பது பெளதிகக் காரணிகளால் நிர்ணயிக்கப்படுவது. பால் வகைத் திட்டமிடல், பெண்களும் சமுதாயத்தில் வித்தியாசமான பாத்திரங்களை நிறைவேற்றுகிறார்கள் என்பதைத் தெளிவுபடுத்துகிறது. இந்த வித்தியாசங்கள் விஷேடமாக வறிய பெண்களை, தோட்டத் தொழிலாளப் பெண்களை எந்தளவிற்குப் பாதிக்கிறது என்பதை அடையாளம் காணமுடிகிறது.
அனேகமாக எல்லாச் சமூகத்தைச் சார்ந்த பெண்களும் ஏதோ ஒரு விதத்தில் அபிவிருத்தியடைந்து வருவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. குறிப்பாக இந்நாட்டின் பொருளாதாரத்தின் அதிகமான பங்கை வகிக்கும் தோட்டத்தொழிலாளப் பெண்கள் ஏனைய சமூகத்தோடு, ஏன்? அங்குள்ள ஆண்தொழிலாளர்களோடும் சமமாக மதிக்கப்படுவதில்லை.
சமூகத்தில் பெண்களின் பங்கென்ன? என்ற கேள்விக்குப் பதிலை வரிசைப்படுத்தினால் வீட்டு வேலை, குழந்தைகளைச் சுமப்பது, வளர்ப்பது, அவர்களது உயிரியலான இனவிருத்தியை மட்டும் குறிப்பிடாமல் கணவன், பிள்ளைகள், எதிர்கால வேலை, சக்தி என்பவைகளும் இவற்றுள் அடங்குகிறது.
இவைகளோடு மலையகத்தைப் பொறுத்தவரை தமது 175 வருட வரலாற்றில் பெண்தலைமைகளுக்குத் தொழிற்சங்கங்களிலோ, அரசியலிலோ, முன்னுரிமை வழங்கப்படாமல் சமூக முன்னேற்றத்தின் தடைகளாக எண்ணத்தோன்றுகிறது. இதன் உண்மையானக் காரணம், பெண்கள் முன்வருவதில்லையா அல்லது ஊக்குவிக்கப்படவில்லையா, அல்லது சந்தர்ப்பம் இல்லையா, சமூகக்கட்டமைப்புதான் காரணமா என்பது இன்றும் கேள்விக்குறியாகவேயுள்ளது.
மலையகத்தைப் பொறுத்தவரை தற்போது படித்த பெண்களின் தொகை 52.6 சதவீதமென ஒரு ஆய்வுத் தகவல் புள்ளிவிபரம் கூறுகிறது. இதிலிருந்து பெண்கள் படிக்கவில்லை என்ற முடிவிற்கு வரமுடியாது. அனேகத் தோட்டப்பெண்கள் க.பொ.த. (சா/த) வரை படித்துவிட்டு தேயிலை மலையில் கூடையுடன் கொழுந்து பறிப்பதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
மலையக அரசியலுல் சமூக வாழ்வும்

Page 37
எதிர்காலத்தில் தனியார்மயமாக்கலின் பிரதிபலனாகத் தோட்டத் தொழில்துறை இயந்திரமயப்படுத்துவது 80 சதவீதம் உறுதியாக இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கருத்துத் தெரிவித்துள்ளன. இதனடிப்படையில் பார்க்கையில் எதிர்காலத்தில் தோட்டத்துறையில் பெண்களே அதிக வேலைகளைச் செய்யவேண்டிய ஒருநிலை உருவாகலாம்.
அப்படி என்றால் எதிர்காலத் தலைமைகளுக்கு இப்போதே அஸ்திவாரமிடாவிட்டால் தொழில்சார் பிரச்சினைகளையும் பிணக்குகளையும் தீர்க்க ஒரு சரியான தலைமை இல்லாது போய்விடலாம்.
இவ்வாறான விடயங்களைக் கருத்தில் கொண்டு எதிர்வரும் தேர்தல்களில் பெண்களைப் பங்குபெறச் செய்வது பொருத்தமாக இருக்கும் என்பது எனது கருதுகோள்.
இவைகளோடு இன்னுமொரு முக்கிய விடயம் தோட்டத்தொழிலாளப் பெண்களின் நலன்கருதி வந்த பிரசவசகாய நிதிச்சட்டம். இந்தச் சட்டம் பற்றிய பூரண விளக்கம் எத்தனை தோட்டத் தொழிலாளர்களுக்குத் தெரியும் என்பது அடுத்த பிரச்சினை.
இவைகள் ஒவ்வொரு தொழிலாளியும் தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம். சில சமயங்களில் நிர்வாகம் தொழிலாளர்களை ஏமாற்றிவிடுகின்றது.
பிரசவசகாய நிதிச்சட்டம் 1939ம் ஆண்டுதான் முதன்முதலில் கொண்டுவரப்பட்டது. அதன்பின் 1946, 1952, 1962, 1985 ஆகிய வருடங்களில் திருத்தங்கள் காலத்திற்கு ஏற்றவாறு கொண்டுவரப்பட்டது.
இச்சட்டத்தின் பிரதான நோக்கம் பிரசவ தாய்மார்களுக்குப் பிரசவகாலத்தில் சம்பளத்துடன் லீவு வழங்குவது என்பதாகும்.
முதன்முதலில் இச்சட்டம் கொண்டுவரப்பட்டபோது தாய்மார் களுக்குச் சம்பளத்தோடு ஆறுவாரம் லிவு கொடுக்கவேண்டுமென்று சட்டத்தில் இருக்கிறது. அதாவது பிரசவத்திற்கு முன் இரண்டு வாரங்களும் பிரசவத்திற்கு பின் நான்கு வாரங்களும் லீவு வழங்கவேண்டும். இந்தக் காலத்தில் எக்காரணம் கொண்டும் வேலை வழங்கக் கூடாது. பிரசவத்திற்குப் பின் தாய் இறந்துவிட்டால் இறந்தநாள்வரை மட்டுமே பிரசவசகாய நிதி வழங்கப்படும்.
ஒரு தாயின் பிரசவசகாய நிதியைப் பெற பிரசவத்திற்கு முன் 150 நாட்கள் வேலை செய்திருக்க வேண்டும். பிரசவ விடுதிகள் உள்ள தோட்டங்களில் 3/7 சதவீதம் பிரசவ விடுதிக்கு பிடித்துக்கொண்டு 4/7 சதவிதம் தாய்க்கு வழங்கப்படும்.
1985ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட திருத்தச் சட்டத்தில் பிரசவ தினத்திற்கு முன் 12 மாதங்களில் ஒரு நாள் வேலை செய்திருந்தாலும் பிரசவ சகாயப் பணம் வழங்கப்படல் வேண்டும். இச்சட்டத்தில் கீழ்க்கண்ட அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளது.
சந்தனம் சத்தியநாதன்

முதலிரண்டு குழந்தைகளைப் பெறும் தாய்க்கு 12 வார சம்பளத்துடன் லீவு. அதாவது பிரசவ தினத்திற்கு முன் இரண்டு வாரங்களும் பிரசவத்திற்குப் பின் பத்து வாரங்களும் சம்பளத்துடன் லீவு வழங்க வேண்டும். இரண்டு குழந்தைகளுக்கு மேல் பிரசவிக்கும் தாய்க்கு ஆறு வார சம்பளத்துடன் லீவு வழங்க வேண்டும்.
குறைபிரசவம் என்றால் குழந்தை 12 அங்குல நீளமோ அல்லது இரண்டு இறாத்தலோ இருக்கவேண்டும். அத்தோடு தாய் ஏழாவது மாதம்வரை 28 வாரங்கள் பரிசோதனைக்கு வைத்தியசாலைக்குச் சென்றிருக்க வேண்டும்.
தொழிற்சங்கங்கள் மேற்கொண்ட நடவடிக்கையின் காரணமாக இப்போது கைக்காசு (CaCSua)வேலை செய்பவர்களும் குழந்தை பெற்றால் இச்சட்டத்தின் மூலம் சகாய நிதியைப் பெறலாம்.
இக்கட்டுரையில் குறிப்பிட்ட 3/7 வீதம் பிரசவ விடுதிக்குப் பிடித்துக்கொண்டு 4/7 வீதம் தாய்க்கு வழங்குவதை ஒரு ஒப்பிட்டு அடிப்படையில் நோக்குவோமேயானால், கிராமப் பெண் ஒருவர் அரசாங்க வைத்திய சாவையில் ஒரு குழந்தையைப் பிரசவிக்கும் பொழுதோ அல்லது அரசாங்க உத்தியோகம் செய்யும் பெண் குழந்தையைப் பிரசவிக்கும் போதோ எவ்வித கொடுப்பனவோ அந்த பிரசவ விடுதிக்குக் கொடுப்பதில்லை.
எனவே இவ்விடயம் தொடர்பாக தொழிற்சங்கங்கள் மேல் நடவடிக்கைகளை மேற்கொள்ளுவது பொருத்தமாக இருக்கும். தோட்டங்களில் பெண் தலைமைகளை ஏற்படுத்துவதன் மூலமும் வேலைப்பகிர்வில் ஆண்கள் புரிந்துணர்வோடு செயற்படுவதன் மூலமும் பால்நிலை சமத்துவத்தை வலுப்படுத்த வித்திடும் என்பது ஒரு ஊகம்.
மலையக அரசியலுல் சமூக வாழ்வும்
;'RANح

Page 38
சீடாக் கட்டிடங்கள் ஏன் பின்தங்கிய தோட்டப் பாடசாலைகளுக்குக் கிடைக்கவில்லை?
தோட்டப் பாடசாலைகள் என்றபதம் பிரித்தானியரின் காலகட்டத்திலே வலுவடைந்து காணப்பட்டது. ஆரம்ப காலத்தில் குறிப்பாக 1908ல் தோட்டப் பாடசாலைகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. அக்காலப்பகுதியில் சுமார் 160 பாடசாலைகள்வரை இருந்ததாகப் பதிவுப் புத்தகங்கள் கூறுகின்றன.
தோட்டப்புறங்களில் வெள்ளையர்கள் இவ்வாறு பாடசாலைகளை அமைக்கக் காரணம் சிறுபிள்ளைகள் தேயிலைக் கொழுந்தைக் கிள்ளி வீணடிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டால் என்பது தெளிவாகிறது.
அனேகமாக 1948ம் ஆண்டளவில் இந்தப் பாடசாலைகளின் எண்ணிக்கை கணிசமாக உயர ஆரம்பித்தது. 160 ஆக இருந்த தொகை ஆயிரமாக அதிகரித்தன. இவற்றில் நூற்றுக்கு மேற்பட்ட பாடசாலைகள் கிறிஸ்தவ தேவாலயங்களால் வழிநடத்தப்பட்டமை குறிப்பிடப்பட்டது.
ஆனால் தோட்டப் பாடசாலைகள் அரசாங்கத்தால் காலப் போக்கில் பொறுப்பேற்கப்பட்ட போதிலும் ஒழுங்கான வசதியான கட்டிடங்கள் காணப்படவில்லை.
அரசாங்கம் தோட்டப் பாடசாலைகளை, அதன் கட்டிட நிர்மாணங்களைச் சீர்செய்ய முயன்ற போதிலும் அவற்றைப் பூரணப்படுத்த முடியவில்லை என்றே கூறவேண்டும். இவைகள் இவ்வாறு இருக்க இவற்றுக்கான மாற்று நடவடிக்கையாக இந்தப் பாடசாலை கட்டிட வேலைகளைப் பூரணப்படுத்தும் முகமாக சிடா நிறுவனத்திடம் ஒப்படைக்கப் பட்டது.
சுமார் 720 ஆரம்பப் பாடசாலைகள்வரை தோட்டப் புறங்களில் உள்ளன. இவற்றில் 1 AB பாடசாலைகள் 9, 1C பாடசாலைகள் 30, 2ம் தர பாடசாலைகள் 126, 3ம் தர பாடசாலைகள் 670, ஆக மொத்தம் 833 பாடசாலைகள் எனச் சில ஆய்வு விபரங்கள் கூறுகின்றன.
இவற்றோடு நாம் இன்னமொரு விடயத்தைக் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. சீடாத் திட்டத்தின் கீழ் பல பாடசாலைக் கட்டிடங்கள் வந்தாலும் அசிரியர்களுக்குத் தங்குமிடங்கள் கட்டப்படவில்லை. அனேகமாக அதிபருக்குரிய தங்குமிட வசதிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதை நினைவு கூற வேண்டியுள்ளது. அத்தோடு சீடாத்திட்டங்கள் பல வெடிப்புக்குள்ளாகியும் உள்ளதை பல பாடசாலைக் கட்டிடங்களைப் பார்வையிட்டதன் பயனாகக் காணக்கூடியதாய் இருந்தது.
图国 [ சந்தனம் சத்தியநாதன்
ANSA

சில கட்டிடங்கள் மிகவும் திறமையாக செய்து கொடுக்கப்பட்டும் அவற்றை சரியாக பராமரிக்காததன் விளைவாகக் கட்டிடங்கள் பழுதடைந்தும் உள்ளன.
அத்தோடு இலவசமாகக் கிடைக்கும் பொருளை அனேகமாக யாரும் அவ்வளவாகப் பொருட்படுத்துவதில்லை. இது அநுபவரீதியான உண்மை. அதேபோல் யாரோ இனாமாகக் கட்டிக் கொடுக்கின்றார்கள் இதை ஏன் பக்குவமாகப் பயன்படுத்துவது என்ற ஒரு அசட்டைப் போக்கு மாணவர் மத்தியிலும் ஆசிரியர் மத்தியிலும் காணப்படுகிறது. இதற்கு உதாரணமாக எத்தனையோ பாடசாலைகளைக் கூறலாம்.
அத் தோடு அதிகமாகவே பின் தங்கிய இரணி டு பாடசாலைகளுக்குச் சீடாக் கட்டிடம் கிடைக்கவேயில்லை. இதற்கு என்ன
காரணமோ? அந்த பாடசாலைகளில் சுமார் 250 ற்கு மேற்பட்ட
பிள்ளைகள் இருந்த போதிலும் ஒரு சிறிய கட்டிடம் மட்டுமே உள்ளது. அவை புரடொப் குரூப் மேமலை தமிழ் வித்தியாலயமும் இறஸ்புறுக் தமிழ் வித்தியாலயமுமே ஆகும்.
உண்மையிலே கல்விக் காரியாலயத்திற்கு இவ்விரு பாடசாலைகள் உள்ளதா என்பது தெரியுமோ தெரியவில்லை. அங்கு பயிலும் மாணவர்கள் சொல்லொண்ணாத் துயரங்களை அநுபவித்து வருகின்றனர். எனவே இவ்விரு பாடசாலைகள் விடயத்திலும் உரிய அதிகாரிகள் உடன் கட்டிடவசதிற்கு ஏற்பாடு செய்து கொடுத்து அம்மாணவர்களின் கல்விக் கண்ணைத் திறக்க முன்வரவேண்டும்.
நவமணி 30.08.1998
மலையக அரசியலுல் சமூக வாழ்வும்
- is 2, ...

Page 39
எதிர்காலத்தில் சிறுவர் துஷ்பிரயோகங்களை மலையகத்தில் தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும்.
இன்று உலகெங்கும் பத்து கோடி சிறார்கள் பாதிப்புக்குள்ளாகி இருப்பதோடு இலங்கையில் இத்தொகை எட்டு லட்சத்திற்கு மேற்பட்டே காணப்படுகிறது.
யுத்தம் காரணமாக 380 000 சிறார்கள் இடம்பெயர்ந்துள்ளனர் என யுனிசெப் அறிக்கையொன்று கூறுகின்றது. கொழும்பில் மலையக சிறுவர்கள் 80 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கடைகளிலும் வீட்டு வேலைகளிலும் ஈடுபடுத்தப்படுகின்றனர். அனேகமாக 14 வயதிற்கு குறைந்தவர்களை தொழிலாளர்களாகப் பயன்படுத்த முடியாது, என்று தெரிந்து கொண்டும் வறுமையை ஒரு சாட்டாகக் கூறி அளவுக்கு அதிகமான வேலைகளைச் சிறுவர்கள் மூலம் பெறப்படுவதோடு யுத்தத்திற்கும் பாவிக்கப்படுகிறார்கள். ஒக்டோபர் 1ம் திகதி சர்வதேச சிறுவர் தினம்
சிறுவர் உரிமை, சிறுவர் நலன் போன்றவற்றைப் பாதுகாக்கும் நோக்குடன் ஒக்டோபர் 1ம் திகதி சர்வதேச சிறுவர் தினம் கொண்டாடப்படுகிறது. 1989ம் ஆண்டு நவம்பர் 20ம் திகதி ஐக்கிய நாடுகள் சபை சிறுவர் உரிமைச் சாசனத்தைப் பிரகடனப் படுத்தியது.
இந்தச் சிறுவர் உரிமை சாசனத்தில் 1991ம் ஆண்டு இலங்கை அரசும் கைச்சாத்திட்டதின் பயனாக எமது நாட்டிலும் சர்வதேச சிறுவர் தினம் கொண்டாடப்படுகிறது.
ஐ.நா சிறுவர் உரிமை சாசனத்தில் 32வது சரத்தில் பொருளியல் சுரண்டலுக்கு எதிராகவும் கல்வி, சுகாதாரம் என்பவற்றைப் பாதிக்கும் அல்லது தடுக்கும் கடின வேலைகளுக்கு எதிராகவும் பாதுகாப்பு பெறும் உரிமை குழந்தைகளுக்கு உண்டு. ஆனால் இது நடைமுறையில் உள்ளதா? என்பது கூறித் தெரிய வேண்டியதில்லை. வீதியோரங்களில் பொருட்கள் விற்பது தொடக்கம் வீட்டு வேலைகள், டீக்கடைகள் இதற்கு சாட்சியளிக்கும்.
அத்தோடு பெருந்தோட்ட சமூக சூழ்நிலை காரணமாகவும் வீடுகள் வசதியின்மை காரணமாகவும் சிறுவர்கள் மீதான பாலியல் பலாத்காரங்கள் நடைபெற அதிக வாய்ப்பு ஏற்படுகிறது. குறிப்பாக பெண்பிள்ளைகள் வயதிற்கு வந்தவுடன் லயங்களில் நிறுத்த பெற்றோர் அஞ்சி, கொழும்பு போன்ற பிற இடங்களுக்கு வேலைக்காக அனுப்பும் ஒரு நிலையும் காணப்படுகிறது.
சந்தனம் சத்தியநாதன்

பெருந்தோட்டப் பகுதியைப் பொறுத்தமட்டில் இவ்வாறான பாலியல் வன்முறைகளைப் பகிரங்கப்படுத்துவதில் மக்கள் தயக்கம் காட்டியே வருகின்றனர். தத்தெடுத்த பிள்ளையை வீட்டுவேலைக்கு பயன்படுத்திய ஒரு அரச உத்தியோகத்தருக்கு நஷ்டஈடு வழங்க உத்தரவு பிறப்பித்திருந்தமையை இங்கு நினைவுகூற வேண்டியுள்ளது. தத்தெடுத்த உத்தியோகத்தர்
இந்த சம்பவமானது அரச உத்தியோகத்தர் ஒருவர் செலகம கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணியின் 5 வயது நிரம்பிய பிள்ளையை வளர்ப்பு மகனாக தத்தெடுத்து வளர்க்க முற்பட்டார். இவருக்கு இரு பெண்பிள்ளைகள் மட்டுமே. ஆண்பிள்ளைகள் இல்லாத குறையைத் தீர்க்க இவர் தத்தெடுத்தார். ஒருநாள் இவர் வீட்டில் இல்லாத போது இவரது மனைவி வீட்டு உபகரணங்களைக் கழுவும்படி பணித்தார். கைதவறி ஒரு பாத்திரம் உடைந்து விட்டது.
இந்த விடயத்தை நேரில் கண்ட உத்தியோகத்தரின் மனைவி ஸ்திரிப் பெட்டியைச் சூடாக்கி சிறுவனின் தலையில் வைத்துள்ளார். சிறுவனுக்கு பாரிய புண் ஏற்பட்டதையடுத்து சிறுவனை தன் சொந்த ஊருக்கு எடுத்துச் சென்று சிகிச்சையளித்தபோது வைத்தியர் அப்பெண்ணை அச்சுறுத்தி விடயத்தைக் கேட்டறிந்த பின்னர், சிறுவன் சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு பின் சிறுவனின் தாயாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து வழக்குத்தாக்கல் செய்யப்பட்டது. இதைவிடவும் மோசமான சம்பவங்கள் மலையகத் தோட்டப்புற சிறுவர், சிறுமியருக்கு நிகழ்ந்துள்ளன. அண்மையில் ரங்கல பகுதியிலும் புரடொப் பகுதியிலும் வேலைக்காக கொழும்புக்குச் சென்ற சிறுமியர் பிணமாக பெட்டி சீல் செய்யப்பட்டு அனுப்பப்பட்ட சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வரவில்லை. ஏன் என்றால் அந்தளவு தோட்ட மக்கள் அறியாமையில் வாழுகின்றபடியால். அதேபோல் தோட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி வேலைக்காக வீடு ஒன்றில் இருந்து பின் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்து தேயிலை மலையில் வீசியபோது, சிலர் கண்டு புகார் கொடுத்ததையடுத்து பொலிசாரால் கைதுசெய்யப்பட்டார். இவ்வாறான விடயங்கள் வெளிச்சத்திற்கு வருவதும் மிகவும் குறைவாகவே காணப்படுகிறது. எனவே சிறுவர் துஷ்பிரயோகம் குறித்து தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் ஆராயப்பட்டு வருகின்ற போதிலும், சிறுவர் துஷ்பிரயோகத்தில் சம்மந்தப்பட்டவர்களைத் தண்டிக்கும் போது சாதாரண தண்டனை வழங்காது அதிகப்படியாக்குவதுடன் குற்றங்களை நன்கு ஆராய்ந்துப் பார்க்க வேண்டும். அத்தோடு சிறுவர் துஷ்பிரயோக குற்றவாளிகளைக் கண்டுபிடித்து அவர்களைச் சரிவர வழிநடத்த தகுந்த அதிகாரிகளுக்குப் பயிற்சி வழங்குவதோடு சிறுவர் துஷ்பிரயோகத்தைத் தடுக்க மாற்று நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த வேண்டும்.
நவமணி. 27.09.1998
மலையக அரசியலுல் சமூக வாழ்வும் s
Zara

Page 40
தோட்டத் தொழிலாளர்களுக்கு முதியோர் இல்லங்கள்
திமிழகத்திலிருந்து இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட தமிழ் மக்கள் பெருந்தோட்டப் பயிர்ச்செய்கைக்காக ஈடுபடுத்தப்பட்டனர். இம்மக்களது வருகையைப் பலரும் பல ஆண்டுகளைக் குறித்துக் காட்டினாலும் பதியப்பட்ட தகவல்களின் அடிப்படையில் 1823-1825 என்றே காட்டுகிறது.
இம்மக்கள் மலையக மக்கள் என்றும், குறிஞ்சி நில மக்கள் என்றும், இந்தியத் தமிழர்கள் என்றும், இந்திய வம்சாவழித் தமிழர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர். இவர்களுக்கென ஒரு தனியான முத்திரையை வழங்கப் பலரும் தடையாக இருக்கின்றனர். இந்நாட்டின் பல அபிவிருத்தி வேலைகளுக்காக ஒதுக்கப்படும் நிதியுற்பட விதி, நிர்மாணம் போன்றவைகள் தேயிலையைப் பிரதானமாகக் கொண்டே அன்று நிர்மாணிக்கப்பட்டது. மொத்தத்தில் இலங்கையில் முதல் தொழிலாளர் பட்டாளம் என்று கூறினால் அந்தப் பெருமை இந்திய வம்சாவழி மக்களையே சாரும்.
இந்நாட்டின் சுபீட்சம், பொருளாதாரம் போன்ற பல்வேறு பணிகளுக்கு ஆணிவேராய் விளங்கும் இம்மக்களது வாழ்வில் அவர்கள் அநுபவிப்பது சொல்லொணாத் துன்பங்கள் என்றால் மறுப்பதற்கில்லை. அன்றாட வாழ்க்கையில் போதிய உணவை உட்கொள்ள, ஒரு நல்ல ஆடையை அணிய, பொழுதுகளை இன்பமாகக் கழிக்க, இவர்களுக்கு எங்கே இடமளிக்கப்படுகிறது. வாங்கும் சம்பளம் சாப்பாட்டுக்கே போதுமானதாக இல்லை. பின்னெங்கே நல்ல ஆடை வாங்கி அணிவது இவைகளை எல்லாம் விட இந்நாட்டின் அனைவரது தேவையையும் பூர்த்தி செய்ய உழைக்கும் இவர்களுக்கு வழங்கப்படும் தேயிலை கடைசிரக "டஸ்ட்
இவர்களின் சிரமத்தால் உற்பத்தி செய்யப்படும் சிறந்த ரக தேயிலையை இவர்கள் பார்க்குமுன் பொதிசெய்து வெளிநாடுகளுக்கு அனுப்பிவிடுகின்றனர். இவர்களது உழைப்பை எவ்வாறெல்லாம் சுரண்டமுடியுமோ அவ்வாறெல்லாம் இவர்களது அறியாமையையும் கல்வியறிவின்மையையும் பயன்படுத்தி சுரண்டுகின்றனர்.
நாள்கூலி என்ற பெயரில் இவர்களது உழைப்பைக் கடன் வாங்கிக் கொள்ளும் முதலாளித்துவம் கடனாகப் பெற்ற உழைப்பிலும் அதிகாரத்துவத்தைச் செலுத்தி நசுக்கித் தன்னாதிக்கத்தை வேறுன்றச் செய்கிறது. தொழிலாளர்கள் என்ற நாமத்தைக் கொண்டதனால் இவர்கள் படும் இன்னல்கள்தான் எத்தனை எத்தனை.
இவ்வாறு வேதனையுறும் தொழிலாளர்கள் தம் வயதான காலம்
- சந்தனம் சத்தியநாதன்)
 

வந்தவுடன் அனாதரவாக்கப்பட்டு விதிகளிலும் தோட்டங்களிலும் பிச்சை வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு விடுகின்றனர்.
இதில் ஒரு உண்மையும் இருக்கிறது. அதாவது பெற்றோரைப் பராமரிக்கக் கூடிய ஒரு பொருளாதார வசதியோ வீட்டு வசதியோ போதுமானதாகப் பிள்ளைகளுக்கு இருந்தால் முதியோருக்கு இந்நிலைமை வருவதைத் தவிர்க்கலாம். என்னதான் இன்னல் வந்தாலும் பெற்றோரைப் பிள்ளைகள் பராமரிக்க வேண்டிய ஒரு மனித நேயமிக்கச் செயல் இருந்த போதிலும் பல பெற்றோர் மலையகத்தில் தமது தள்ளாத காலத்தில் விதிகளில் யாரும் ஆதரவற்ற நிலையில் இறந்து கிடப்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது.
அரச ஊழியர்களுக்கு ஓய்வூதிய பணம் ஒரு வரப்பிரசாதம். ஆனால் தோட்டத் தொழிலாளர்களுக்கு இந்த பாக்கியமில்லை. எனவே மலையகத்தைப் பொறுத்தவரை ஒன்று தொழிலாளர்களுக்குப் பென்ஷன் வழங்கவேண்டும். இல்லையேல் முதியோர் இல்லங்களையாவது கட்டிக் கொடுக்க வேண்டும். இவ்விரு கோரிக்கைகள் அரசு உற்பட ஏனைய அரச சார்பற்ற அமைப்புகளும் கருத்தில் கொள்வது அவசியம்.
நவமணி 2010, 1993
மலையக அரசியலும் சமூக வாழ்வும் z

Page 41
“மலையகப் பெண்கள்” பற்றிச் சித்தாந்த வரலாற்று ரீதியான ஒரு சமூக நோக்கு. சீமூகக் கட்டமைப்பில் பெண் என்பவள் எவ்வகையானவள், அவளுக்கு இந்த சமூகத்தில் கிடைக்கும் அந்தஸ்து என்ன? என்பவற்றை ஆராய வேண்டிய ஒரு சூழ்நிலை அவசியமாகிறது.
இவ்வாறு சிந்திக்கையில் ஆண்-பெண் சமத்துவம் என்பது ஒரு ஆணாதிக்கச் சமூகத்தில் எவ்வாறு இருக்கும் என்ற கேள்வி எழத்தான் செய்கிறது.
இங்கு முக்கியமாக ஒரு விடயத்தைக் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம். ஆண்-பெண் சமத்துவத்தைப் பற்றிப் பார்க்கும்பொழுது இருபாலாரின் கருத்துக்களும் பேணப்படுவது அவசியமாகிறது.
பெண்கள் பற்றி நோக்குமிடத்து, பெண் என்பவள் ஒரு இரண்டாந்தரப் பிரஜையாகவே ஆரம்பகாலந்தொட்டுக் கணிக்கப்பட்டு வந்துள்ளாள்.
மனித குல வரலாற்றை நோக்குமிடத்து 01. Egbassrootb (Palaelithic) 02.96Laigbassroob (Mesolithic) 03. நவீன கற்காலம் (Neolithic) என்று மூன்று பிரிவாகப் பார்க்கலாம். கற்காலப்பகுதியில் சிறு சமூக அமைப்புக்கள் நாடோடி வாழ்க்கையே நடத்தின. உணவுக்காக வேட்டையாடலும் மீன் பிடித்தலுமாக இருந்த மனிதன் இடைக்கற்காலத்தில் சமூகச் சொத்துடைமை, இயற்கை சக்திகளை வழிபட ஆரம்பித்தான்.
நவீனக் கற்காலத்தில் நிரந்தரக் குடியிருப்புக்கள், தொழிலை அடிப்படையாகக் கொண்ட பண்டமாற்று, அடிமை முறைமை, குடிமக்கள் தலைவன் தோற்றம், கோயில்கள், வழிபாட்டுத் தலங்கள் அமைத்தான். மனித குல வரலாற்றை அறிந்து கொள்வதற்கு தொல் பொருளியல் சான்றுகள், கல்வெட்டுக்கள், நாணயங்கள், மானிடவியல்த் தரவுகள், வரலாற்று நூல்கள் என்பன பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆரம்பக் காலத்தில் மனிதன் கண்ட முதல் கைத்தொழில் குயவத்தொழிலாகும். இந்தக் குயவத்தொழிலில் பெண்களின் கைரேகைகள் பதிவாகியுள்ள தையும் இங்கு குறிப்பிடுவது சாலப்பொருந்தும் என நினைக்கின்றேன். சித்தாந்த ரீதியாகப் பெண்களின் நிலையை நோக்கும்போது ஆரம்பக் காலத்தில் மொழி தோற்றுவிக்கப்பட்டமையினால் மனிதர்களுக்கிடையில் உள்ள உறவு வளர்ச்சியடைந்தது. இது மனிதனின் அறிவு வளர்ச்சிக்கு ஒரு ஊடகமாகப் பயன்பட்டது. அறிவு என்ற ஞானம்
சந்தனம் சத்தியநாதன்
 

ஆண்வர்க்கத்திற்கே சாதகமாக அமைந்தது. இதனால் அவர்களின் அதிகாரம் மேலோங்கப் பெற்றதுடன் இவ்வதிகாரமானது ஆண்களுக்கே பலம் வாய்ந்ததாக அமைந்தது. இதனடிப்படையில் “சித்தாந்த ரீதியான நடைமுறைகள்” என்பதை நோக்கும்போது கருத்திற்கொள்ள வேண்டியதை இவ்வாறு விளக்கலாம், மொழி, அறிவு, அரசு, அதிகாரம், நீதித்துறை, பாராளுமன்ற நிர்வாகம், சமூகக் கட்டமைப்பு, கல்வி, குடும்பம், பெண்கள், தாழ்த்தப்பட்டோர், உழைக்கும் வர்க்கம், விதவைகள், அங்கவீனர்கள் என வரிசைப்படுத்தலாம்.
உழைக்கும் வர்க்கம் என்று பெருமையாகச் சொல்லக்கூடிய ஒரு சமூகம் இந்த இந்திய வம்சாவழித் தோட்டத்தொழிலாளப் பெண்களே. மலையகப் பெண்கள் என்றுக் குறிப்பிடப்படும் இந்த தோட்டத் தொழிலாளப் பெண்கள் பல ஒடுக்கு முறைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்
இதுவரைக்கும் ஒரு பெண் மலையகப் பிரதிநிதியாகத் தொழிற்சங்கங்களிலோ அல்லது பாராளுமன்றத்திற்கோ செல்லவில்லை என்பதைக் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும் என எண்ணத் தோன்றுகிறது.
பெண் ஒடுக்குமுறைகளுக்கெதிராக வட அமெரிக்கப் பெண்கள் தமது கோஷத்தை 1960ம் ஆண்டுகளிலே எழுப்பினார்கள். அங்கு எழுப்பப்பட்டத் தீயின் ஜுவாலை இங்கிலாந்திற்கும் ஏனைய ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவியது.
1970ம் ஆண்டுப் பிற்பகுதியில் அவ்வலை இலங்கையிலும் பரவ ஆரம்பித்தது. 1977ம் ஆண்டு திருமதி குமாரி ஜயவர்தன அவர்கள் பெண் விடுதலை பற்றிய ஒரு புதிய பரபரப்பை முதன்முதலாக இலங்கையில் ஏற்படுத்தினார்.
எனவே மலையகத்திலும் ஒரு சூசகமான, சுயாதீனமான மலையகத்தில் படித்த பெண்கள், இந்தத் தோட்டப்புறப் பெண்களை அணிதிரட்ட வேண்டும். இந்த தோட்டப்புறப் பெண்கள் அமைப்பு சுதந்திரமாகச் செயல்பட மலையக புத்திஜீவிகள் வழிசமைத்துக் கொடுப்பதை தமது வரலாற்றுக் கடமையாக எண்ணிச் செயல்பட வேண்டும்.
நவமணி 02.02.1997
மலையக அரசியலும் சமூக வாழ்வும்

Page 42
மலையகச் சிறுவர்களுக்கும் சிறுவர் பூங்காக்கள் அவசியம்
தோட்டப்புறங்களில் வாழும் சிறுவர்கள் பாடசாலைகளுக்குச் சென்று வீடுதிரும்பியதும் பெற்றோர் சொன்ன வேலைகளைச் செய்து முடித்துவிட்டு மிகுதி நேரங்களில் பொழுதை எவ்வாறு கழிப்பது என்று சிந்தித்த வண்ணம் இருக்கிறார்கள்.
பொதுவாகவே தோட்டத்தில் வாழும் சிறார்கள் மிகவும் ஆர்வமுடையவர்கள், துணிச்சல் மிக்கவர்கள். இருந்தும் இவர்கள் உளரீதியான பாதிப்புக்குள்ளாகுவதற்கு அவர்கள் வாழும் சூழல் பெரிதும் காரணமாய் இருக்கின்றது.
சிறுவர்களின் மனநிலையைப் பெற்றோர்களால் புரிந்துகொள்ள முடியாத ஒரு நிலையை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. பெற்றோர் தமது பிள்ளைகளிடம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதைப் புரியாதவர்களாக இருக்கின்றனர்.
தோட்டப் புறங்களில் வாழும் சிறுவர்கள் அனேமானோர் 8ம் வகுப்புவரை கல்வியை கற்றவர்களாகவே இருக்கின்றனர். சிலவேளை குடும்ப கஷ்டங்களைக் காரணமாகக் கூறி பெற்றோர் சுமார் 7வயது பிள்ளைகளை வேலைக்கு அனுப்பும் ஒரு அவல நிலையும் மலையகத்திலலேயே அதிகம் காணப்படுகின்றன. சில பெற்றோர் தமது சிறுபிள்ளைகளை மலைக்குத் தேநீர் கொண்டு செல்வதற்கும் வீட்டுவேலை, விறகு பொறுக்குதல், துணி கழுவுதல், வீட்டைச் சுத்தம் செய்தல், ஆடு மாடு வளர்ப்பவர்களாக இருந்தால் அதற்கு உணவாக புல்லுக் கொண்டு வருதல், பால் சேகரிப்பு நிலையங்களுக்குப் பால் விநியோகிக்கும் வேலை போன்ற பலவாறான வேலைகளைச் சிறுபிள்ளைகளிடம் பெற்றுக்கொள்கின்றனர்.
ஆனால் சிறுவர்களின் வேலைகளைக் கணக்கிலிட்டால் அதன் பெறுமதியே எண்ணில் அடங்காது இருக்கும். அவைகள் பெறுமதி வாய்ந்ததாகக் கணிக்கப்படுவதில்லை.
அத்தோடு சிறுவர்களின் அபிலாஷைகளுக்கு மலையகத்துப் பெற்றோர் மதிப்பளிப்பதும் இல்லை. அதற்கு ஒரு பழமொழி சொல்வார்கள் "சிறுபிள்ளை வெள்ளாமை வீடு வந்து சேராது" என்று சிறுவர்களின் கருத்துகளுக்குப் பெற்றொர் மதிப்பளிப்பது மலையகத்தைப் பொறுத்த மட்டில் பூச்சியம்தான்.
அதே வேளை நகர்ப்புறங்களை எடுத்துக் கொண்டால் காலையில் பாடசாலை வேன் வாசலுக்கே வரும். பாடசாலையில் விளையாடுவதற்கான
சந்தனம் சத் தியநாதன்
 

சகல வசதிகளும் நகர் பாடசாலையில் உள்ளன. எனவே அந்தச் சிறுவன் உடல், உளரீதியாக சிறந்த வளர்ச்சியைப் பெறுகின்றான்.
நம்தோட்டப்புறச் சிறுவர்களை எடுத்துக்கொண்டால் காலையில் எழுந்து பீலிக்கரைக்குச் சென்று முகம் கழுவிக்கொண்டு பாடசாலைக்கு ஆறு கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டும். சில வேளை பஸ் வரும். சில நாட்களுக்கு ஒரே நடைப்பயணம். நடந்த களைப்புக்கு பாடசாலைக்குச் சென்றபின் நல்ல நித்திரை வரும். பின் படிப்பதெங்கே? அதே போன்ற ஒரு விளையாட்டு மைதானம் என்பது கனவிலும் எண்ணிப்பார்க்க முடியாது. சில வேளை ரோட்டில் விக்கற் ஊன்றி தோட்டத்து லொறிவரும்போது கழற்ற வேண்டிய நிலை.
எனவே மலையகச் சிறுவர்களையும் மனிதர்கள் என்று மதித்து அவர்களது அபிலாஷைகளையும் கருத்திற் கொண்டு எதிர்காலத் திலாவது எமது மலையகச் சிறுவர்களுக்குத் தோட்டங்களில் சிறுவர் பூங்காக்கள் அமைத்து நகரச் சிறுவர்களோடு சமநடை போட வழியமைக்க வேண்டும்.
நவமணி 08.11.1998
شنت تھی۔
மலையக அரசியலும் சமூக வாழ்வும்

Page 43
தோட்டத் தொழிலாளருக்குச் சுயமாக சிந்திக்கும் ஆற்றல் உண்டு
தோட்டத் தொழிலாளர்கள் உண்மையான நல்ல சில குணாம்சங்களைக் கொண்டவர்கள். அவர்களின் சிந்தனையை எப்போதும் மழுங்கடிக்க முதலாளித்துவவாதிகளும், அவர்களைச் சுரண்டி வாழும் மற்றொரு சாராரும் விடாமுயற்சியில் இருப்பது, மலையகத்தைப் பொறுத்தமட்டில் ஒரு விதண்டாவாதச் செயல் என்றே கூறவேண்டும்.
பொதுவாகப் பார்க்குமிடத்து தொழிலாளர்கள் தமக்கு ஏதும் அநீதி நடந்தாலோ அல்லது தம்மைச் சார்ந்த சக தொழிலாளர் ஒருவருக்கு அநீதி ஏற்பட்டாலோ அவர்கள் தொழிற்சங்கத் தலைவர்களைக் கேட்டு வேலைநிறுத்தம் செய்வதில்லை. மாறாக உடனடி நடவடிக்கையாக மலையை விட்டு இறங்கி தமது எதிர்ப்பைத் தெரிவித்து விடுகிறார்கள். அவர்கள் சுயமாகத் சிந்திக்கத் தக்கவர்கள் என்று இதிலிருந்து ஒரு உண்மையை விளங்கிக் கொள்ள வேண்டும்.
அத்தோடு மற்றுமொரு உதாரணம் அண்மையில் நடைபெற்ற இரத்தினபுரிச் சம்பவமும். பதுளைத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தமும். ஆனால் எம்மில் சில புத்திஜீவிகளும், சில அரச சார்பற்ற தொண்டர் நிறுவனங்களும், தொழிற்சங்கங்களும், தமது தொழிலாளர்களை இன்னும் 18ம் நூற்றாண்டில் உள்ளதாகவே கருதுகின்றனர். தோட்டத் தொழிலாளர்கள் படிப்பறிவில் சற்றுக் குறைந்து காணப்பட்டாலும் சிறந்த அநுபவ அறிவைப் பெற்றவர்கள் என்பதை மறுப்பதற்கில்லை.கிரம்சியின் கூற்றுப்படி அனைத்து மனிதர்களும் புத்திஜீவிகள் என்பது நினைவு கூரத்தக்கது.
அவ்வாறு உற்று நோக்குகையில் கடந்த 05.02.98 ல் தொழிற்சங்கங்களின் உந்துதலில் தொடர்ச்சியாக 9 நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டம் ஒன்றினை சம்பள உயர்விற்காகத் தொழிலாளர்கள் மேற்கொண்டனர். அதன் இறுதிப் பயன் என்ன? என்பதை நான் சொல்லித் தெரியவேண்டுமென்பதில்லை.
எனவே அவ்வாறான ஒருபோராட்டத்திலும்கூட மக்கள் குறிப்பாகத் தோட்டப் பெண்கள் தொழிற்சங்கத் தலைமைகள் வேலைக்குச் செல்லும்படி பணித்தபோதும்கூட அவர்கள் தயாராகவில்லை. இதிலிருந்து யார் சிந்திக்கத் தக்கவர்கள் என்பதை வெளிப்படையாக உணரக் கூடியதாய் உள்ளது.
சில சமயங்களில் பல தொழிற்சங்கங்கள் தோட்டங்களில் இருந்தாலும்கூட பொதுவான ஒரு பிரச்சினை என்றால் முன்பைவிடவும் மக்கள் ஒன்றிணைந்து செயற்படுவதை அவதானிக்கக் கூடியதாய் உள்ளது. 巴国 [ சந்தனம் சத்தியநாதன்
属臀列
Aman.

பொதுவாகவே தோட்டத் தொழிலாளர்கள் முன்பைவிடவும் சற்று சிந்தித்துச் செயலாற்றுகிறார்கள். இல்லாவிட்டால் எம்மில் முதன் முறையாக 4000 ஆசிரியர்கள் வந்திருக்க முடியாது. கல்வி ரீதியாகவும் தற்போது ஒரு விழிப்புணர்வு மலையக சமூகத்தில் ஏற்பட்டுள்ளது. இது ஒரு துரித மாற்றமாக அமைந்தால் மட்டுமே 21ம் நூற்றாண்டில் சவால்களுக்கு மலையக சமூகம் முகம் கொடுக்க முடியும்.
குறிப்பாக சில புத்திஜீவிகள் மலையக மக்களை குறை கூறுவதும் அவர்களை மட்டம் தட்டி பேசுவதும் கடமையாகக் கொண்டு செயல் படுகின்றனர். பாமரர்கள் எப்போதுமே பாமரர்கள் அல்ல. படிக்காத மேதைகளும் மலையக பூமியிலே வாழ்ந்து கொண்டுதான் வருகிறார்கள்.
தோட்டத்தொழிலாளர்களைப் பொறுத்த மட்டில் அவர்களது தேவை என்ன என்பதை உணராது அவர்களுக்குத் தேவையற்ற ஒன்றைப் புகுத்த முனைவது அல்லது தமது கருத்துக்களைத் திணிக்க முயல்வதால் பயனேதும் கிட்டப்போவதில்லை.
எம்மில் சிலர் கூறுகின்றார்கள், தோட்டத் தொழிலாளர்கள் கல்வியில் அக்கறையின்றி இருக்கின்றார்கள் என்று. அவர்களின் தேவை பொருளாதாரம் என்று இருக்கும்போது கல்வியைப் பற்றி சிந்திப்பது எப்படி? சாதாரணமாக இதைக்கூறினால் பசியால் வாடும் சிறுவனுக்குப் படிப்பு எப்படி மண்டைக்குள் ஏறும். இவ்வாறான விடயங்களை ஆழமாக சிந்திக்காது மேலோட்டமான ஆய்வுகளின் பிரதிபலன்கள் எம்மக்களுக்கு ஒருபோதும் பயனளிக்கப் போவதில்லை.
எனவே 21ம் நூற்றாண்டின் சவால்களையும் எம்மக்கள் எதிர்கொள்வார்கள் என்பதில் ஐயமில்லை. “பாட்டெழுதி பேர் வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள். குறைகண்டு பிடித்தே தம் பேரை நிலைநாட்டும் கவிஞர்களும் இருக்கிறார்கள்.” இது நக்கீரன் காலத்தைவிடவும் இப்போதைக்கு அதிகம் பொருந்தும்.
நவமணி
(" ... O
மலையக அரசியலும் சமூக வாழ்வும் s

Page 44
புதிய கல்வி சீர்திருத்தம் மலையக மாணவர்களுக்குப் பயன் தருமா?
இவ்வாண்டு புதிய கல்வி சீர்த்திருத்தத்திற்கு அமைவாக ஆண்டு ஒன்று மாணவர்களுக்கு முற்றிலும் மாறுபட்ட விதத்தில் வகுப்பறை ஒழுங்கமைக்கப்படுகிறது. பாடசாலை என்ற எண்ணத்திலிருந்து மாணவர்களை வீட்டில் உள்ள ஒரு சூழலுக்குக் கொண்டுவருவதோடு எழுத்துக்களை அறிமுகஞ் செய்யாது பாட்டுக் கதைகளைச் சொல்லிக் கொடுப்பதோடு சிறுவர் பூங்காக்கள், விளையாட்டு மைதானங்களை அமைத்து சிறுவர்களை விளையாட்டில் ஈடுபடுத்துவதும் இதன் ஒரு அம்சமாகிறது.
இந்தப் புதிய கல்வித் திட்டத்தின் கீழ் பெற்றோர்களின் பங்களிப்பு அதிகமாக இருக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனடிப்படையில் பார்க்கும்போது தோட்டப்புற பாடசாலைகளில் புதிய கல்வித் திட்டத்திற்கான கட்டிட வசதியே இல்லாதிருக்கும்பொழுது இது எவ்வாறு சாத்தியமடையும் என்பது கேள்விக்குறியே.
பெரும்பாலான பாடசாலைகளில் பெற்றோரிடமிருந்து அதிகமான நுழைவுக் கட்டணத்தை அதிபர்கள் எதிரிபார்ப்பதாகவும் பெற்றோர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். வசதியுள்ள பெற்றோருக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை. அன்றாடம் தோட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளி தனது பிள்ளைக்கு அதிகமான கட்டணத்தைச் செலுத்தி பாடசாலையில் சேர்ப்பது ஒரு கஷ்டமான விடயமே.
தோட்டப்புற பாடசாலைகளைப் பொறுத்தமட்டில் சுமார் 250 மாணவர்கள் ஒரு கட்டிடத்தில் ஐந்து வகுப்பகளாகப் பிரிந்து கற்கும் நிலையில் இருக்கும்பொழுது ஆண்டு ஒன்று மாணவர்களின் புதிய கல்வித் திட்டம் தோட்டப் பாடசாலைகளைப் பொறுத்தமட்டில் எவ்வாறு வெற்றி பெறும் என்ற கேள்வி எழுகிறது.
குறிப்பாக ஒரு தோட்டப் பாடசாலையில் கல்வி கற்கும் ஒரு மாணவன் நகள் பாடசாலைக்குச் சென்று மேல்ப் படிப்பைத் தொடரும்போது ஏனைய மாணவர்களுடன் போட்டி போட்டு கற்கும் ஒரு நிலை எவ்வாறு ஏற்படும்.
இலங்கையின் கல்வி வளர்ச்சியில் மலையகக் கல்வி நிலை 21ம் நூற்றாண்டுகளிலும் பின்தங்கியதாகவே காணப்படும் என்பது எனது ஊகம். இவைகளோடு தோட்டப் பாடசாலை ஆசிரியர்களுக்குப் புதிய கல்வி சீர்த்திருத்தம் தொடர்பான எவ்வித பயிற்சியுமின்றி கற்பித்தல் அடுத்த பிரச்சினை.
21ம் நூற்றாண்டை நோக்கிய எமது கல்விப் பயணம் ஒரு நல்ல விடயமாக இருந்த போதிலும் எம்மைப் பொறுத்தவரை உடல், உள
சந்தனம் சத்தியநாதன்
 

ரீதியாக நாம் இன்னும் பிணிதங்கியே காணப்படுகின்றோம். இவ்வாறு இருக்கையில் ஏனைய செல்வந்தப் பிள்ளைகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது குறிப்பாக மலையகத் தோட்டப்புற மாணவர்களால் எதிர் நீச்சல் போடமுடியுமா?
இவைகளோடு இன்று அதிகமான சிறுவர் ஊழியர்கள் (Child Labour) தோட்டப்புறச் சிறுவர்களுக்காகவே காணப்படுகின்றார்கள். அண்மையகால ஆய்வு ஒன்றின்படி தோட்டப்புறச் சிறுவர்கள் 80 ஆயிரம் பேர் கடைகளிலும், வீட்டு வேலைகளிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
எனவே மலையகத் தோட்டப்புறப் பெற்றோர்களால் சாதாரணமாகவே பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்பமுடியாத ஒரு சூழல் நிலவும் பொழுது புதிய கல்வித் திட்டம் மேலும் அவர்களை ஊனமாக்கி விடுமா என்ற அச்சைத்தை ஏற்படுத்துகிறது.
சாதாரணத் தோட்டத் தொழிலாளியின் நாளாந்த சம்பளம் 101 ரூபாவாக இருக்கும்பொழுது பாடசாலை நுழைவுக் கட்டணமாக 1000 ரூபாவைக் கொடுத்துப் பிள்ளையை பாடசாலையில் சேர்ப்பது மிகவும் கடினமான ஒரு விஷயம். எனவே கல்வித் திட்டத்தை வகுக்கும்போது எமது நாட்டின் வறுமையை, பொருளாதார நிலையை சற்றுச்சிந்தித்துச் செயல்படுவது சிறப்பாக இருக்கும் என எண்ணுகிறேன். கல்வியிலே நிச்சயம் பல மாற்றங்கள் நிகழவேண்டும். அது எம் நாட்டில் உள்ள வளங்களோடு ஒத்துப் போகக் கூடியதாக இருக்க வேண்டும் என்பது முக்கியமானது.
நவமணி 31.01.1999
(3)
மலையக அரசியலும் சமூக வாழ்வும்

Page 45
தோட்டப் பகுதிகளில் சுகாதார அறிவூட்டல்கள் அவசியம்
இன்று தோட்டப் பகுதியில் வாழும் மக்கள் தகுந்த சுகாதார வசதியுடன் வாழ்கின்றார்களா?
சுகாதாரம் தொடர்பாக அம்மக்கள் அறிவூட்டப்பட்டுள்ளார்களா? என்பன போன்ற கேள்விகள் பொருத்தமானவையே.
அதிகமாவே தோட்டப் பகுதியில் வாழும் தொழிலாளர்கள் கடினமான வருத்தக்காரரை வீட்டில் நிறுத்தி, பூசாரிமாரைக் கொண்டு உடுக்கடிக்கும் ஒரு நிலைமை இன்னம் நிலவிவருவது, இன்னும் நாம் 21ம் நூற்றாண்டிற்குத் தயாராகி விட்டோமா என்ற கேள்வியை எழுப்பச் செய்கிறது.
வைத்தியத்துறை வளர்ச்சி கண்டுள்ள இவ்வேளையில் எமது தோட்டத் தொழிலாளர்கள் இன்னும் சுகாதாரம் பற்றி சிந்திக்காது இருப்பது வேதனைக்குரியது.
தோட்டத்துறை வைத்திய அதிகாரிகள் இன்று நோய்கள் தொடர்பாக அறிவுபூட்டல் வேலைகளைச் செய்கின்றார்களா? தோட்ட மக்களுடன் மனம்திறந்து கதைக்கின்றார்களா? என்று கேள்விகள் இன்று பலர் மத்தியில் எழுந்துள்ளன.
வைத்திய அதிகாரிகள் நோயாளர்களிடம் பேசுவதை தரக்குறைவாக எண்ணுகிறார்கள். அதிகமாகக் கதைத்தால் மக்கள் மதிக்கமாட்டார்கள் என்ற எண்ணம்தான் இதற்கு காரணம் என எண்ணத் தோன்றுகிறது.
அதிகம் நோயாளர்களுடன் பேசும் வைத்திய அதிகாரிகளின் எண்ணிக்கை 03 சதவீதம். நோய் தொடர்பாக அதிகம் விசாரிப்போர், 26 சதவீதம். என்ன வியாதி என கேட்கும் வைத்திய அதிகாரிகளின் எண்ணிக்கை 85 சதவீதம். நோய் தொடர்பான அறிவூட்டல் செய்யும் வைத்திய அதிகாரிகளின் எண்ணிக்கை 05 சதவீதம். இது எமது தோட்டப்பகுதி வைத்திய அதிகாரிகள் தொடர்பாகச் செய்யப்பட்ட ஒரு கணிப்பீடு.
இதைத்தவிர தோட்டப் பகுதில் வேலைக்கமர்த்தப்பட்டுள்ள வெல்பெயர் சுப்பவைசர்கள், பிள்ளைமடுவ ஆயாமாரில் அதிகமானோர் சிங்கள மொழி பேசுபவர்கள். இதன் காரணமாகச் சிறுகுழந்தைகள் மொழியுச்சரிப்பில் பல தடுமாற்றங்களுக்குள்ளாகி உள்ளனர். தமிழ் மொழி தெரியாத தாதிமார்களைத் தோட்டப் பிள்ளைமடுவங்களில் அனுமதித்திருப்பதனால் அவர்கள் தொழிலாளர்களின் பிள்ளைகளை உணர்வு பூர்வமாகப் பரிபாலனம் செய்யத் தவறிவிடுகிறார்கள்.
சந்தனம் சத்தியநாதன்

அதிகமான பிள்ளை மடுவங்களுக்கு செல்ல முடியாது. அந்தளவு அசுத்தமாக பிள்ளை மடுவத்தைப் பயன்படுத்துகிறார்கள். இதனால் சிறு பிள்ளைகளுக்குத் தொற்று நோய் ஏற்பட அதிக வாய்ப்பு ஏற்படுகிறது. தோட்டப் பகுதியில் வாழும் மக்களுக்குப் போஷாக்கான உணவுகளை உண்ணுவதற்கு முடியாது. இதற்கு பிரதான காரணம் தற்போதுள்ள வாழ்க்கைச் செலவோடு ஒப்பிட்டுப்பார்க்கையில் ஒரு நாள் சம்பளத்தில் ஒரு தோட்டத் தொழிலாளி இழந்த சக்தியை மீளப் பெறமுடியாது உள்ளது. குறிப்பாக உடம்பின் இரசாயனச் செயற்பாட்டிற்கும் எலும்பு வளர்ச்சிக்கும் பல் வளர்ச்சிக்கும் ஏனைய கணிப்பொருட்களும் தேவைப்படுகின்றன. அவையாவன,
உப்பு, இரும்பு, கல்சியம், அயடீன், பொஸ்பரஸ் ஆகியனவாகும். கல்சியம், பொஸ்பரஸ் அடங்கிய உணவுகளுள் பால், முட்டை, சோயா, பருப்பு வகை, எள்ளு, குரக்கன், கீரைவகைகள், சிறுமீன் வகைகள் உள்ளன.
மேலே குறிப்பிட்ட உணவுவகைகளைத் தோட்டத் தொழிலாளி அன்றாடம் உணவோடு சேர்த்துக்கொள்ளும் நிலையில் பொருளாதாரம் உள்ளதா? அல்லது இவை தொடர்பாகத் தோட்டத் தொழிலாளர்கள் தெரிந்து வைத்திருக்கின்றார்களா? என்பதை ஆய்வு செய்து பார்க்கும் பொழுது அந்த விகிதம் 5 சதவீதம் என்பது தெரிய வந்தது.
மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்கு முதலுதவிப் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதா? எல்லாமே கேள்விக்குறிதான். தோட்டத் தொழிலாளர் வாழ்க்கையில் அதிகமாகவே நாம் காண்பது துன்பத்தின் சுவடுகளைத்தான். ஆனால் குறிப்பாக சுகாதாரம் சம்பந்தமாக அடிக்கடி அறிவூட்டல்களை மேற்கொள்வது அவசியம். ஏன் என்றால் அக்காவுக்கு காய்ச்சலுக்காக வாங்கிவந்த மருந்தை தங்கைக்கு தலைவலி வந்தவுடன் எவ்வித வைத்திய ஆலோசனையும் இன்றிக் கொடுத்து விடுகிறார்கள். சீனாவில் 'பெயர்பூட் டொக்டஸ் என்று சிலருக்கு சில முதலுதவிப் பயிற்சிகளை வழங்கி கிராமங்களுக்கு அனுப்பி விடுகிறார்கள். இவர்கள் தகுந்த வைத்திய ஆலோசனைகளை மக்களுக்கு வழங்குவதோடு காய்ச்சல், தடிமன், தலைவலி போன்றவற்றிக்கு டிஸ்பிரின்கள், பனடோல்கள் போன்ற மாத்திரைகளை வழங்குகிறார்கள்.
ஆகவே தோட்டங்கள் தோறும் இவ்வாறான பெயர் பூட் டொக்டர்களை பயிற்றுவித்து தோட்டங்கள்தோறும் அனுப்புவது சிறந்த சுகாதார சேவையை மேற்கொள்ள பேருதவியாக இருக்கும்.
தோட்ட்த் தொழிலாளர்கள் மத்தியில் பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றபடியால், இவ்வாறான சில விடயங்களை மறந்து போனது ஆச்சரியமில்லை. எனவே சுகாதாரம் தொடர்பாக தொடர்ந்து அறிவூட்டுவது தோட்டத் தொழிலாளர்களின் சுகாதாரத்தை பேண உதவும் என்பது எனது கருத்து. நவமணி - 23.05.1999
மலையக அரசியலும் சமூக வாழ்வும்

Page 46
ஒடுக்குமுறை தலித் பெண்களுக்கு மட்டுமல்ல
பெண் ணிலை அல்லது பெண் ணியம் தொடர்பாகப் பத்திரிகைகளிலோ மற்றும் மேடைகளிலோ பேசுபவர்கள் பெரும்பாலும் கலாசாரப் பண்புகளைப் பெண்கள் அணிகலனாக அணிந்து கொள்ள வேண்டும் என்ற ஒரு நிலைப்பாட்டுக்குள் இருந்து கொண்டுதான் பெண்விடுதலை தொடர்பாக குரல் எழுப்புகிறார்கள்.
என்னதான் பெண்கள் தமது விடுதலை தொடர்பாக குரல் எழுப்பினாலும் குறிப்பாகத் தமிழ்ப் பெண்கள் தமது கலாசாரப் போக்கில் இருந்து சற்று முன்னோக்கிச் சென்றால் விடுதலைப் பெறுவதற்கு வாய்ப்பு உண்டு. கடந்த 27.06.99 அன்று தாலி பெண்ணுக்கு வேலி என்ற தொடரை வாசித்த போது எனக்கு ஒரு உண்மை வெளிப்பட்டது. தமிழ்ப் பெண் என்றால் அவள் தாலி ஒன்று இல்லாமல் வாழவே முடியாது என்ற நிலைப்பாடு பெண்கள் மத்தியிலே வேரூன்றி இருக்கும் போது அவர்களின் விடுதலை அடுத்த நூற்றாண்டிலும் கிடைக்காது எனக் கருதலாம்.
இக்கருத்து பெண்கள் சில கலாசாரப் பண்புகளை தமக்கென்றே வரையறுத்துக் கொண்டு விடுதலை கிடைக்கும் என விதண்டாவாதக் கருத்துக்களைப் பேசித்திரிவதில் ஒருபோதும் தமது இலக்கை அடைய முடியாது. இங்கு நான் என்ன குறிப்பிட வருகின்றேன் என்றால் தாலி கட்டியிருந்தால் மட்டும் தனிமையில் ஒரு பெண் இரவு நேரங்களில் வெளியில் சென்றுவிட்டு மனித மரபில் கூறப்படும் கற்போடு வீடு திரும்புவாள் என்பதில் என்ன நிச்சயம். என்னைப் பொறுத்தவரை தாலி தமிழ் பெண்களின் விலங்கு. ஏன்என்றால் ஒரு பெண் ஒரு ஆடவனுக்கு மட்டும், ஆண் பலப் பெண்களுக்காகப் படைக்கப்பட்டவன் என்ற ஒரு மாயையை ஏற்படுத்தியிருப்பது இதற்குப் பிரதான காரணம்.
பெண்களை அவர்களின் சிந்தனாசக்தியில் இருந்து அப்பாற்படுத்தவே சில பழமொழிகளைக் கூறி வைத்துள்ளனர். உதாரணமாக “பொம்பளச் சிரிச்சாப் போச்சு புகையில விரிச்சாப் போச்சு 'கணவனே கண்கண்ட தெய்வம் மணாளனே மங்கையின் பாக்கியம்' போன்றவற்றோடு திருக்குறளில் 55வது குரள் "தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை அதாவது பிற தெய்வங்களைத் தொழாமல் தன் கணவனையே தெய்வம் எனத் தொழுது துயில் எழுபவள் "பெய் என்று சொல்ல மழை பெய்யும் என்று திருவள்ளுவர் கூறுகிறார். இது எங்காவது நடந்திருக்கிறதா? ஏன்என்றால் திருவள்ளுவரும் ஒரு ஆண்.
சந்தனம் சத்தியநாதன்
 

குறிப்பாக பெண்களுக்கு எழுதப்பட்ட அல்லது சொல்லப்பட்ட கலாசார சட்டவாக்கங்களையெல்லாம் உருவாக்கியவர்கள் ஆண்கள். இறைவனை எடுத்துக் கொண்டாலும் சக்தி, சிவன் என்று கூறுகிறார்களா? இல்லை பெண்களை இரண்டாம்தரப் பிரஜைகளாக ஆக்குவதில் குறிப்பாக கலாசாரத்தோடு, மதங்களும் துணைபுரிந்துள்ளன. எனவே சற்றுப் பின்னோக்கிப் பார்த்தால் மனித பரிணாம வளர்ச்சியில் வரலாற்றுக்கு முந்திய காலத்தில் மனிதன் இலை, கிழங்கு, பழம், இறைச்சி. தேன், மீன் ஆகியவற்றை தனது உணவாகக் கொண்டுள்ளன். அந்தக் காலம் தொட்டு பெண்களின் நிலைப்பாட்டை சற்று ஆராய்ந்து பார்க்கும் பொழுது, அன்று அவர்கள் யாராக இருந்தால் என்ன? ஆண், பெண் என்று யாரும் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. அவர்கள் அனைவருமே உணவு தேடி உண்பதில் மட்டும் ஆர்வமுடையவர்களாகக் காணப்பட்டிருக்கின்றனர். ஆண், பெண் என்ற பேதமோ பிரிவோ காணப்படவில்லை. என்பது வரலாற்று உண்மை.
இந்த காலகட்டத்தைக் கற்காலம் (Palaelithic) என்று கூறப்படுகிறது. அதாவது கற்களால் ஆயுதங்களைச் செய்து தனது உணவுக்கு வேண்டிய மிருகங்களை வேட்டையாடுவதிலும் பழவகைகளை உண்பதிலும் ஆர்வங்காட்டிய மனிதன், இடைக்கற்காலத்தில் (Mesolithic) இயற்கையைக் கண்டு பயந்தான். இடி, மின்னல், மழை போன்றவற்றை வழிபடத் தொடங்கினாான். அப்பொழுதும் அவனுக்கு ஆண், பெண் என்ற பேதம் தோன்றவில்லை. ஆனால் அதுநாள்வரை எதுவித பேதமும் காட்டாத மனிதன், நவகற்காலப் பகுதியில் (Neolithic) செப்பு, உலோகம், பித்தளை, இரும்பு போன்றவற்றைக் கண்டுபிடிக்கின்றான். அதுவரை அதாவது கி.மு.6000 ஆண்டுவரை ஆணும் பெண்ணும் ஒற்றுமையாகவே வாழ்ந்து வந்தனர். அன்றைய காலகட்டம் தாய்வழி சமூகமாகவே இருந்தது. கூட்டம் கூட்டமாக வாழ்ந்த படியால் பிறக்கின்ற குழந்தைகளின் தந்தை யார் என அடையாளம் காண முடியவில்லை. ஆனால் தாய் யார் என்பதை உறுதிப்படுத்தக் கூடிய படியால் தாய் வழி சமூகமாகவே இருந்தது.
பின்னர் ஒரு தாயின் பிள்ளைகள் கணவன் - மனைவியாக ஈடுபடாது தவிர்த்தனர். அவ்வாறு கூட்டங்களில் உள்ளவர்கள் கணவன்மனைவியாக ஈடுபட்டு குடும்பம் என்ற அமைப்பு தோற்றம் பெற்றது. கி.மு.6000மாம் ஆண்டளவில் புதிய கண்டு பிடிப்புகள் ஏற்பட்டன. அவற்றில் உருளை, வண்டிச்சக்கரம் போன்றவை பிரதானமானவை.
இக்காலகட்டத்தில் மக்கள் அதிகரிப்பு வீடு, விவசாயம் போன்றவையோடு வியாபாரம், சந்தை, தலைவன், நகரம், வர்க்கம், அரசு, வர்த்தகம் போன்றவையும் விஸ்தரிக்கப்பட்டன.
இத்தோடு கூலி வேலைக்கு சிலரும், உடை, வீடு கட்டுதல், போன்றத் தொழிலைச் சிலரும் செய்தனர். அப்போது இவர்களை அடக்கி
மலையக அரசியலும் சமூக வாழ்வும்

Page 47
ஆளும் ஒரு வர்க்கம் உருவானது. அவரவர் செய்யும் தொழிலை வைத்து பிரிவுகள் ஏற்பட்டன. இதே காலகட்டத்தில் பெண்கள் பிள்ளை பெறும் தன்மையைக் கொண்டபடியினால் உபரி உற்பத்தியையும் வீட்டு வேலை கவனிக்கவும் பெண்கள் வெளியில் சென்று வேலை செய்வதைத் தவிர்த்து விட்டு வீட்டில் அடைபடும் ஒரு நிலை உருவானது.
அதைத்தொடர்ந்து ஆயுதங்கள் உற்பத்தியில் ஆண்கள் ஈடுபட்டமையால் பெண்களை அடக்கியாளும் நிலை உருவானது. இதைத்தொடர்ந்து பெண்களைப் பண்டங்களாகப் பார்க்கும் ஒரு சூழல் ஏற்படவே, பெண்ணை அக்கால மன்னர்கள் போகப் பொருளாக பாவிக்கும் நிலை உருவாகின.
ஆரம்ப காலகட்டத்தில் பெண்கள் பட்டி பரிபாலணம் செய்துள்ளதையும் குயவுத் தொழில் செய்ததையும் மனித பரிணாமவளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பு அதிகமாகவே காணப்பட்டுள்ளதையும் தொல்பொருள் ஆய்வுகள் சான்று பகிருகின்றன. கி.மு.6000 ஆண்டில் வாழ்ந்த பெண்களின் எழும்புக் கூடுகளைக் கண்டு பிடித்ததன் விளைவாகவும் அக்கால உபகரணங்களைத் தேடிக் கண்டு பிடித்ததன் பயனாகவும் இவைகள் உறுதிசெய்யப்பட்டுள்ளன. ஆகவே ஆணுக்கும் பெண்ணுக்கும் உடற்கூறுகளில் மட்டுமே வித்தியாசம் தவிர, வேறு எந்த வகையிலும் ஒருவருக்கொருவர் குறைந்தவர் அல்ல என்பது நிரூபணமாகியுள்ளது.
இவைகள் இவ்வாறு இருந்தபோதிலும் மதங்களும், கலாசாரமும் பெண்களை மேலும் அங்கவீனர்களாக ஆக்கியிருப்பதே உண்மை. இன்றுகூட பெண்கள் வீட்டில் செய்யும் வேலைக்கு எந்தவொரு பெறுமானமும் வழங்கப் படுவதில்லை. அது வேலை செய்யும் பெண்ணாகட்டும் வீட்டில் இருக்கும் பெண்ணாகட்டும் இருவருக்கும் ஒரே நிலைதான்.
இங்கு ஒரு முக்கியமான விடயம் என்னவென்றால் பெண்கள் இரண்டாம்தரப் பிரஜைகளாகக் கருதப்படுவதற்குப் பெண்களும் பொறுப்புதாரர்கள். ஏனென்றால் தங்களுக்கு நடப்பது அநீதி எனத் தெரிந்துகொண்டும் அவர்கள் சில சலுகைகளுக்காக வாய் திறப்பதில்லை. இன்று தமது உடலைக்காட்டி பல விளம்பரங்களை ஏற்று பணம் பெறுகிறார்கள். தம்மை விலை பொருளாக மாற்றியுள்ளார்கள். பெண்ணுக்குப் பெண்ணே புறஞ்சொல்லுதல், எதிரியாக நடத்தல் போன்றவையே பின்னடைவுக்கு ஒரு காரணம்.
இந்த தன்மை படித்த பெண் முதல் பாமர பெண் வரை புரையோடிப்போய் உள்ளது. விதவையை அதிகமாக ஓரங்கட்டி, குத்திக்காட்டி பேசுவதும் பெண்கள்தான். இவைகள் நடைமுறை 2 60660 Deb6f.
சந்தனம் சத்தியநாதன்

எனவே, பெண்கள் எப்போது தம்மை உணர்ந்து ஒரு நிலைப்பாட்டுக்கு வருவார்களோ அன்று ஒரு தீர்வை எதிர்பார்க்கலாம். அண்மையில் ஹவாய் பல்கலைக்கழகத்தில் மேற்கொண்ட ஆய்வில் 21ம் நூற்றாண்டில் 88 சதவீதமான பெண்கள் தலைமைப் பொறுப்பையும் தீர்மானம் எடுக்கும் உரிமையையும் பெறப்போவதாக கூறப்பட்டது. பெண் உரிமை பற்றி எழுதுவோர், அல்லது பேசுவோர் பெண்களின் தன்மானத்தைக் தட்டி எழுப்ப முயற்சித்தால் நிச்சயம் எமது நாட்டுப் பெண்களும் சமமாக வாழவாய்புண்டு.
நவமணி
1107.1999
*
g
AA ZA
மலையக அரசியலும் சமூக வாழ்வும்

Page 48
நகர மாணவர்களுடன் தோட்ட மாணவர்கள் சமமாக அமர்வது எப்போது?
இன்று வெகுசனத் தொடர்பு சாதனங்கள் மற்றும் தொடர்பூடகங்கள். வளர்ச்சி பெற்று காணப்படுகின்ற போதிலும் தோட்டப்புற மக்களின் 175 வருட வரலாற்றில் அவர்கள் அடைந்துள்ள வளர்ச்சி எத்தனை வீதம் என்பது கவலைக்குரியதாகவே இருக்கின்றது.
எத்தனை அபிவிருத்தி ஏற்பட்ட போதிலும் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வில் வரவுக்கு மிஞ்சிய செலவுதான் நிரந்தரம். மாடாய் உழைத்து மண்வெட்டியாய்த் தேய்ந்தாலும் தமது அன்றாடத் தேவைகளைக்கூட பூர்த்தி செய்துகொள்ள முடியாத வகையில் வாழ்க்கைச் செலவு உயர்ந்துகொண்டே செல்கிறது.
அடுத்த பக்கம் ஒரு கிராமவாசியை எடுத்துக்கொள்வோம், அவருக்கு நிரந்தர வருமானம் என்பது இல்லை. காரணம் அவர் விவசாயத்தில் ஈடுபடுபவர். சிலவேளை விளைச்சல் இல்லாமல் போகலாம். பயிர் அழியலாம். நஷ்டம் ஏற்பட்டு விடலாம். இருந்தாலும் கிராமப் புறத்தவர்கள் தமது பிள்ளைகளைப் படிக்க வைக்காமல் விடுவதே இல்லை. ஆனால் தோட்டங்களில்.
தோட்டப் புறத்தைப் பொறுத்தவரை பிள்ளைகளைப் படிக்க வைப்பதை பலர் தவிர்த்து விடுகின்றனர். வீட்டு வேலைக்காக தனவந்தர் வீடுகளுக்கு அனுப்பிவிடுகின்றனர். அண்மையில் எடுக்கப்பட்ட ஒரு புள்ளி விபரத்தைப் பார்க்கும்போது சில வித்தியாசங்களை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
இலங்கையில் எழுத்தறிவு
unres நகரம் கிராமம் தோட்டம்
ஆண் 92.90 90.0 78.00 பெண் 88.80 82.01 52.60 மொத்தம் 89.70 86.00 64.80
12 சந்தனம் சத்தியநாதன்

இலங்கையின் எழுத்தறிவு வீதம் 1981-1982 நகரம், கிராமம், தோட்டம் (மத்திய வங்கி அறிக்கை 1984 ப58) இலங்கைவாழ் மக்களின் எழுத்தறிவு
இனம் வீதம் சிங்களவர் 89.3 இலங்கைத் தமிழர் 87.3 முஸ்லிம் மக்கள் 79.3 D6Nofru Jfr 91.5 பறங்கியர் 97.1 மலையகத் தமிழர் 68.1
இலங்கை மத்தியவங்கி அறிக்கை 1981-1996 voப.131
எனவே புள்ளி விபரங்களின் அடிப்படையில் பார்க்கும்போது மலையகத் தமிழரின் விகிதம் குறைவாகவே காணப்படுகிறது. பெற்றோர் தமது பிள்ளைகளுக்கு அதிகம் செல்லம் கொடுப்பதும், ஆசிரியர்கள் அக்கறையின்றிச் செயல்படுவதும் மாணவர்களின் எதிர்க்காலத்தையே பாதிக்கிறது என்பதை சம்மந்தப்பட்டவர்கள் உணர்ந்து நடத்தல் அவசியம். ஒரு மாணவன் அதிக நேரம் பெற்றாருடனும், ஆசிரியருடனுமே தமது பள்ளிப்பருவத்தைக் கழிக்கின்றான். ஆகவே மாணவர்களின் எதிர்க்காலம் சிறப்பதற்கும். விரயமாவதற்கும் இரு தரப்பினருமே பெரும் காரணகர்த்தாக்கள் என்பதை மறந்து விடக்கூடாது.
ஆசிரியர் தமது சேவையை தியாக சிந்தனையுடன் பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் கல்வி மேம்பாட்டில் அதிக அக்கறையுடன் செயல்படாவிட்டால் கல்வி ரீதியாக மலையக மாணவர்கள் 21ம் நூற்றாண்டில் எதிர் நோக்கக்கூடிய சவால்களுக்கு அவர்களால் முகம் கொடுக்க முடியாதிருக்கும்.
முன்பெல்லாம் இரண்டாம் மூன்றாம் வகுப்பு படித்திருந்தால் ஏதேனும் தொழிலைச் செய்யமுடியும் என்ற நிலை காணப்பட்டது. ஆனால் இன்று உயர்தரம் படித்தவர்களுக்கும் தொழில் செய்யும்போது சில நடைமுறைச் சிக்கல்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. பலருக்கு ஆங்கில அறிவு போதுமானதாக இல்லை. இவற்றைக் கருத்தில் கொண்டு அரசாங்கம் பல புதிய திட்டங்களைக் கல்வித் திட்டத்தில் கொண்டுவந்துள்ளது வரவேற்கத்தக்கது.
புதிய கல்விச் சீர்திருத்தத்தின் கீழ் தரம் ஒன்று தொடக்கம் ஒன்பது வரை பாடத்திட்டத்தில் முறையான மாற்றத்தைக் கொண்டுவந்தள்ளது. முன்பு படித்துவிட்டு வேலைவாய்ப்பின்றி இளைஞர், யுவதிகள் விட்டில் இருந்தோர் தொகை அதிகமாகவே காணப்பட்டது.
மலையக அரசியலும் சமூக வாழ்வும்

Page 49
ஆனால் இந்தப் புதிய கல்வி சீர்திருத்தத்தின் மூலம் மாணவர்களின் முழுமையான திறமைகள் இனங்காணப்பட்டு அதற்கமைய பயிற்சிகள் வழங்கப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஆனால் தோட்டப்புற பாடசாலைகளில் சீடாக்கட்டிடங்கள் கிடைக்கப்பெற்ற பாடசாலைகள் ஒரளவு வசதி செய்யப்பட்டுள்ளது. ஆகவும் பின்தங்கியப் பிரதேசங்களில் குறிப்பாக கொத்மலை கல்வி வலையத்திலுள்ள "இறஸ்புருக், தமிழ் வித்தியாலயம், புரட்டாசி மேமலை தமிழ் வித்தியாலயம், கிலேன்லொச் தமிழ் வித்தியாலயம்” ஆகிய பாடசாலைகளின் நிலைமைகள் மிகவும் கவலைக்கிடமாகவே உள்ளன. இந்தப் பாடசாலைகளில் படிப்பிக்கும் ஆசிரியர்கள் செல்ல பஸ் வசதி இல்லை. தங்குமிட வசதி இல்லை. மாணவர்களுக்கு இருந்து படிக்க ஒழுங்கான தளபாடம் இல்லை. மழை நாட்களில் குடை பிடித்துக்கொண்டு படிப்பிக்கும் நிலையை நேரில் வந்தால் காணலாம். இந்தப் பாடசாலைகளில் கற்றுவிட்டு நகர்ப் பாடசாலைகளுக்கு செல்லும் மாணவர்கள் தாம் சிறுபான்மைப் பட்டுப் போவதாக உணருகின்றனர்.
நகர்ப்புற மாணவர்களின் தரத்தை எட்டி சரிசமமாக அவர்களுடன் மலையக மாணவர்கள் நடைபோட முடியாத ஒரு நிலை உருவாகியுள்ளது. இந்த நிலை தொடருமானால் இந்தப்பகுதி மாணவர்களின் கல்வியில் வளர்ச்சி ஏற்படும் என எதிர்பார்க்கமுடியாது.
தினகரன் 08:08.999
சந்தனம் சத்தியநாதன்
 

சிறுவர்களின் உரிமை
மறுக்கப்படுவது தோட்டப்புறங்களிலே அதிகம்
இலங்கையில் எட்டு இலட்சத்திற்கும் அதிகமான சிறுவர்களும் உலகில் பத்து கோடி சிறுவர்களும் பாதிப்புக்குள்ளாகியிருப்பதோடு யுத்தம் காரணமாக 380000 சிறார்கள் இடம்பெயர்ந்துள்ளனர் என யுனிசெப் அறிக்கையொன்று தெரிவிக்கின்றது.
இந்தத் தொகைகளில் தோட்டப் புறங்களைச் சேர்ந்த சிறுவர்களின் தொகை 80 ஆயிரத்தையும் தாண்டியுள்ளதாக அண்மையில் எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்று கூறுகிறது. தோட்டப்புறச் சிறுவர்கள் தனவந்தர்களின் வீடுகளிலும், தேநீர் கடைகளிலும், வாகனங்கள் திருத்தும் கராஜ்ஜுகளிலும் அடிமைகளைப்போல் பயன்படுத்தப்படுகின்றனர். அவர்களின் எண்ணங்கள், அபிலாசைகள் கருத்துகள் மதிக்கப்பட வேண்டும் என்ற கோஷம் இன்று சர்வதேச அரங்குகளில் எழுப்பப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
சிறுவர்களின் நலன் சிறுவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவென 1989ம் ஆண்டு நவம்பர் 20ம் திகதி ஐக்கிய நாடுகள் சபை சிறுவர் உரிமை சாசனத்தை பிரகடனப்படுத்தியதோடு அக்டோபர் 1ம் திகதியை சர்வதேச சிறுவர் தினமாகவும் பிரகடனப்படுத்தியுள்ளது. இந்தச் சிறுவர் உரிமை சாசனத்தில் 1991ம் அண்டு எமது இலங்கை அரசும் கைச்சாத்திட்டதன் பயனாக இந்த சிறுவர் தினம் அரச, அரசு சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் ஏனைய அமைப்புக்களும் பல்வேறு விதமாகக் கொண்டாடுகிறார்கள்.
சிறுவர் உரிமை மீறல்கள் அதிகமாகப் பெருந்தோட்டப் பகுதிகளிலே காணப்படுகிறது. குறிப்பாக சிறுவர்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பெற்றோர்களால் மதிக்கப்படுவதே இல்லை. பெற்றோர் கட்டளையை நிறைவேற்றக் கூடிய கருவிகளாகவே பயன்படுத்தப் படுகிறார்கள்.
ஒரு சிறுவன் அல்லது சிறுமி கட்டாயமாக விறகு தேடவேண்டும். தமது தம்பி தங்கைகளை பிள்ளை மடுவங்களுக்கு தூக்கிச் செல்ல வேண்டும். பெற்றோர் இருவரும் வேலைக்குச் சென்றுவிட்டால் அவர்களுக்கு தேநீர் கொண்டு செல்ல வேண்டும். மாடு, ஆடு இருக்குமானால் அவற்றிக்குரிய வேலைகளைச் செய்ய வேண்டும். இவைகளுடன் சிறுமிகள் தாயின் சமையல், நீர் நிறைக்கும் வேலையுற்பட பெற்றோரின் பல்வேறுபட்ட வேலைகளில் பங்கேற்க வேண்டும். இவைகளில் குறைகாணும் சந்தர்ப்பங்களில் சிறுவர்களுக்கு பெற்றோரின்
Lാബ് அரசியலும் சமூக வாழ்வும்

Page 50
வசைச் சொற்கள், அடிதடி போன்றவையும் நடந்தே வருகிறது.
தோட்டப் பகுதிகளில் பெண்பிள்ளைகள் பருவமடைந்த பின் போதிய பாதுகாப்பு இல்லை என்ற காரணத்துக்காக பெற்றோர் வெளி இடங்களுக்கு வேலைக்காக அனுப்பி விடுகின்றனர்.
விதிகளில் சிறுவர்களை விட்டு பிச்சையெடுத்து வரும்படி பணிக்கும் பெற்றோரின் தொகையும் கூடிக்கொண்டே வருகிறது. பொதுவாகச் சிறுவர்களின் உழைப்பு இந்த நாட்டில் 35 சதவீதத்தைத் தாண்டி இருக்கின்ற போதும் அவர்களின் உழைப்புச் சுரண்டல் நடைபெற்ற வண்ணம் இருக்கிறது.
ஐ.நா.சிறுவர் உரிமை சாசனத்தில் 32வது சரத்தில் பொருளியல் சுரண்டல்களுக்கு எதிராகவும் கல்வி, சுகாதாரம் என்பவற்றைப் பாதிக்கும் அல்லது தடுக்கும் கடின வேலைகளுக்கு எதிராகவும் பாதுகாப்பு உரிமை குழந்தைகளுக்கு உண்டு. ஆனால் இன்று எத்தனை மலையக சிறார்கள் பல்வேறுபட்ட சுரண்டல்களுக்கும் துன்பங்களுக்கும் உள்ளாகின்றனர்.
எந்தக் குழந்தையும் இந்த மண்ணில் பிறக்கும்போது தன்னை அறியாது தாயின் அரவணைப்பில் எவ்வித பேதம், குரோதம், பொறாமை, தீய பழக்கவழக்கமுமின்றி வெள்ளை மனதோடு பிறக்கிறது. இந்த வஞ்சனைமிக்க உலகின் இசைவாக்கங்களில் சூழலில் வளரும்போதும் வறுமை, ஏழ்மை காரணமாகவும் பெற்றோரின் நிர்ப்பந்தங்களினாலும் குழந்தைகள் தமது உரிமையை இழக்கின்றனர்.
எனவே பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் உரிமை என்ன என்பதைத் தெரிந்து கொள்வதோடு அவர்களின் ஆசாபாசங்கள் விருப்பு வெறுப்புகளுக்கு இடமளித்து சுபீட்சமான சிறுவர் உலகை கட்டியெழுப்ப முன்வரவேண்டும்.
தினகரன் 22.08.互999
(3) () (3)
சந்தனம் சத்தியநாதன்

ஆடைத்தொழிற்சாலைகளில் மலையகப் பெண்களின் அவலம்
இலங்கை நாடு சுதந்திரம் பெற்று ஐம்பது ஆண்டுகளை எட்டிப்பிடித்திருக்கும் இவ்வேளையில் சுதந்திரவர்த்தக வலையங்களில் தொழில்புரியும் யுவதிகளின் நிலை கவலைக்கிடமானதாகவே உள்ளது. இந்தப் பெண்ணின் உழைப்பை மட்டுமன்றி அவர்களின் உரிமைகளைச் சூறையாடுவதுடன் பல தொழில்நிறுவனங்களின் உயரதிகாரிகள் முதல் நகரில் இந்தப் பெண்களை வேட்டைநாய்களாக விரட்டித் திரியும் கும்பல்கள் வரை அனைவரிடமும் சிக்கிச் சீரழிபவர்களாக மலையகத்தோட்டப் புற பெண்கள் திகழ்கிறார்கள்!
ஆரம்பக் காலகட்டங்களில் தோட்டத்துப் பெண்கள் இந்த ஆடைத்தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்பை பெறுவதென்றால் யாராவது ஒரு அரசியல்வாதியின் தயவும் அவசியமாக இருந்தது. பின்னர் இந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டது. ஆடைத் தொழிற்சாலைகளில் முதலில் நகரப் பெண்களுக்கே அதிக வாய்ப்புகள் கிடைத்தன. பின்னர் இந்த நிலையில் ஒரு மாற்றமாக கிராமப் பெண்களும் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். இந்த இரண்டு தரப்பினரும் குறிப்பாக இரண்டு வருடகாலம் வேலைசெய்து இந்த தொழிற்சாலையில் ஓய்வு பெற்ற பின்னர் இந்த ‘கார்மன்ட் கலாசாரம் தோட்டப்புற யுவதிகளிடையும் பரவியது.
தோட்டப்புற யுவதிகள் ஆடைத் தொழிற்சாலைகளில் தொழில்பெறும் பொருட்டு கொழும்புக்கு வரும்போது பல இன்னல்களை அநுபவிக்கிறார்கள். அடையாள அட்டை இன்றியும் பொலிஸ் பதிவுகளை சரிவரச் செய்துகொள்ளாததாலும் பல சிக்கல்களை எதிர்நோக்க வேண்டியிருக்கிறது. பாதுகாப்பு உத்யோஸ்தர்களின் தொந்தரவுகளுக்கு உள்ளாக நேரிடுகிறது.
இத்தனை சிரமங்களுக்கு மத்தியில் பொருளாதார காரணங் களுக்காக கொழும்பு வரும் இந்த யுவதிகளுக்கு வேலை கிடைத்தாலும் தங்குமிட வசதி கிடைப்பது மிகவும் சிரமமாக இருக்கிறது. அப்படிக் கிடைக்கும் தங்குமிடங்களிலும் பெண்களுடன், ஆண்களையும் சேர்த்து சில போடிங் வீட்டுக்காரர்கள் தங்கவைத்துவிடுகின்றனராம்!
தங்குமிட வசதியை வழங்குவோர் வாடைகையை மட்டுமே இலக்காக கொண்டு செயற்படுகிறார்களே தவிர பூரணவசதி வாய்ப்பைச் செய்துகொடுக்க தவறிவிடுகின்றார்கள். இவ்விடயத்தில் இலங்கை, இந்தியா சமுதாயப் பேரவை போன்ற அமைப்புகள் தங்குமிட வசதிகளைச் செய்து கொடுத்தால் இந்த யுவதிகளுக்குப் பேருதவியாய் இருக்கும்.
மலையக அரசியலும் சமூக வாழ்வும்

Page 51
ஆடைத் தொழிற்சாலையில் வேலை செய்யும் மலையக யுவதிகள் பல சுரண்டல்களுக்கு உற்படுத்தப்படுகிறார்கள். ஒன்று அவர்கள் தோட்டங்களில் வாழும்போது தாய், தந்தை தமது உடன்பிறப்புகளின் அளவுகடந்த கட்டுப்பாட்டுக்கு உற்பட்டு வாழ்கின்றபடியினால் கொழும்பு போன்ற இடங்களுக்குச் சென்று வேலை செய்யும்போது நானே ராணி என்பதாகக் கற்பனை செய்துகொண்டு செயல்படத்தொடங்குகிறார்கள். எனவே இவ்வாறு கிடைக்கும் சுதந்திரம் காரணமாக அவர்களது வயதின் வேகம் காரணமாகவும் பல தவறுகளைச் செய்ய சூழல் அமைந்து விடுகிறது. இவர்களின் இப்பலவீனத்தைப் புரிந்துகொள்ளும் சில நகர ஆடவர்களும் தோட்டத்து இளைஞர்களும் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இறுதியில் "சுமப்பது அப்பாவிப் பெண்கள்தான்!
பல சந்தர்ப்பங்களில் ஒன்று இந்தப் பெண்கள் தாம் வேலை செய்யும் மேலதிகாரியின் இச்சைக்கு இசைந்து கொடுக்கவேண்டியுள்ளது. அல்லது வெளியில் இவர்களை வலைவீசிப் பிடிக்கும் இளைஞர் கூட்டத்தினரிடையே சிக்கிக் கொள்ளவேண்டியிருக்கிறது.
இந்நிலையில் இவர்களுக்கு எவருமே உதவமுடியாது. இவர்களேதான் தமது நிலைமையை உணர்ந்து உலகத்தைப் புரிந்து கொண்டு தம்மைத்தாமே காப்பாற்றிக் கொள்ளவேண்டும்.
மலையக ஆடைத்தொழிற்சாலைகளை எடுத்துக்கொண்டாலும் இதே நிலைதான். இவர்கள் பிரயாணம் செய்யும் தனியார் பஸ்களில் பலரால் பாலியல் துஸ்பிரயோகங்களுக்கு உற்படுத்தப்படுகின்றார்கள். இந்த நிகழ்வு ஏனைய தொழில் செய்கின்ற பெண்களுக்கும் பொருந்துகின்ற போதிலும் அதிகப்படியாக இம்சைகளுக்கு உற்பத்தப்படு கின்றவர்கள் ஆடைத் தொழிற்சாலைகளுக்கு செல்லும் மலையகப் பெண்களே.
சில ஆடைத்தொழிற்சாலைகளில் வேலைசெய்யும் பெண்களை அவர்களின் "ஷிப்ட் முடிந்தவுடன் இரவு வேளைகளில் நகரின் பிரதான சந்திகளில் இறக்கி விட்டுவிட்டு சென்றுவிடுகின்றனர். இவ்வாறு இறக்கி விடப்படும் சில பெண்கள் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு ஆளாகி இருக்கிறார்கள்.
இப்பெண்களின் உணவைப் பார்ப்போமா? அதிகாலையில் ஏதாவது ஒரு கறியைச் சமைத்து சோற்றோடு கட்டிக்கொள்கிறார்கள். பின்னர் நேரத்துக்கு புறப்பட்டு செல்லும் இவர்கள் மாலையிலி அல்லது இரவு வேளைகளிலேயே விடுதியை வந்தடைகின்றனர். வேலைசெய்துவிட்டு வந்த களைப்பில் அதிகாலை சமைத்த உணவில் மிகுதியை உண்டுவிட்டு உறங்குகின்றனர். இந்தப் பெண்களுக்கு என்ன போஷாக்கு உடலில் இருக்கப்போகிறது! இவர்கள் பிரசவிக்கும் குழந்தைகள் எப்படி ஆரோக்கியமாக இருக்கும்?
சந்தனம் சத்தியநாதன்
 

இதை எல்லாவற்றையும் விட இவர்கள் அதிகாலையில் தண்ணிர் அருந்துவதில்லை. காரணம் 2500 பெண்கள் வேலைசெய்யும் ஒரு தொழிற்சாலையில் சில மலசலகூடங்கள் மட்டுமே உள்ளனவாம். டோக்கன் முறையிலே கழிப்பறைகளை பாவிக்க வேண்டுமாம். தண்ணிர் அருந்தினால்தானே கழிப்பறை செல்லவேண்டியிருக்கும் என்பதால் தண்ணிரைப் பல பெண்கள் தவிர்த்துவிடுகின்றார்கள்.
ஆடைத்தொழிற்சாலையில் வேலைசெய்யும் பெண்களின் தொழிற்பிரச்சினைகளை மட்டுமே தொழில் காரியாலயங்களும் தொழில் நீதிமன்றங்களும் விசாரித்து வருகின்றன. இந்தத் தொழிலில் ஈடுபடும் பெண்கள் சில ஒப்பந்தங்களில் கைச்சாத்து இட்டுவிட்டே தமது தொழிலைப் பெறுகின்றனர். இவ்வாறு தொழிற்சங்க உரிமை மறுக்கப்பட்டே வருகிறது. இந்த நாட்டின் அரசியல் யாப்புச் சட்டத்தின் எந்த ஒரு பிரிவும் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் தொழிற்சங்க அங்கத்துவத்தைப் பெறமுடியாது என்று கூறவில்லை. தற்போது ஒருசில அரச சார்பற்ற நிறுவனங்கள் மட்டுமே அவர்கள் தொடர்பான சில உரிமை மீறல்கள் தொடர்பாக குரலெழுப்பி வருகின்றன.
எனவே தற்போது இந்த ஆடைத்தொழிற்சாலைகளில் வேலை செய்யும் மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகள் தொடர்பாக எமது தொழிற்சங்கங்கள் அக்கறை செலுத்த வேண்டும். இவ்விடயம் தொடர்பாக எமது பாராளுமன்ற பிரதிநிதிகள் பாராளுமன்றத்தில் குரலெழுப்ப வேண்டும்.
தினகரன்
26.04.1999 un y ஆசிரியர் பற்றி. Rபுசல்லாவை சரஸ்வதி மகாவித்தியாலத்தில் ஆரம்பக்
கல்வியைப் பெற்றவர்.
&இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் Certificatein - Enterpreneurship and Business Management (CESBM):
ா சான்றிதழ் பெற்றவர். வழியிறக்குமா? சிறுகதை மலையக ஒலிபரப்பு நிலையம் ܟܔ∎ நடத்திய போட்டியில் முதல் பரிசினைப் பெற்றது.
Sதோட்டத்து டெயிலர் சிறுகதை, நெத் சிறுகதைப்
பாட்டியில் முதற் பரிசினைப் பெற்றது. மெல்லிசைப் பாடல்கள் எழுதியுள்ளார். R தொழில் சமூக அணிதிரட்டாளர்.
a in a
மலையக அரசியலும் சமூக வாழ்வும்
A: *

Page 52
உசாத்துணை நான்களும் சான்றாதாரங்களும்
* இலங்கை பெண்கள் பட்டயம். - மகளிர் விவகார அமைச்சு.
* குருவிக்கும் ஒரு கூடு வேண்டும். - பி.ஏ.காதர் 31-03-1996 * பெருந்தோட்டத்துறை வீடமைப்புத் திட்டம். (விரிவுரை)
O.A.SyrgoLDust 01.07.1997 * இரண்டாம் உலக மகாயுத்தத்தின் பின் தோன்றிய நிறுவனங்கள்.
(விரிவுரை) பெ.முத்துலிங்கம் LSD, கண்டி 1996 ر• * கிரிக்கட் சிங்கள பிற்போக்குத் தேசியத்தின் குறியீடு. (புலம்)
துஷ்யந்தி * பால்வகைத்திட்டமிடல் ISD.
செல்வி. மேனகா கந்தசாமி 1996 (விரிவுரை) * அதிகாரப்பரவலாக்கமும் காணி அதிகாரங்களும் (வெண்தாமரை
இயக்கம்) அரசியலமைப்புச் சீர்த்திருத்தம் மற்றும் ஆய்வுத்தகவல் நிலையம். * தோட்ட வீடமைப்பில் புதிய சகாப்தம். (வீடமைப்பு நிர்மாணத்
துறை, பொது வசதிகள் அமைச்சு) டிசம்பர் 1996 * (பிரெடெரிக் எங்கெல்ஸ்) மனிதக் குரங்கிலிருந்து மனிதனாக
மாறிய இடைநிலைப் படியில் உழைப்பின் பாத்திரம். (1809-1882) * மார்க்சிய - லெனினியத் தத்துவஞானத்தின் தோற்றமும் அதன் வளர்ச்சியில் முக்கியக் கட்டங்களும். (அத்தியாயம் மூன்று) * குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்.
(லூயிஸ் ஹெ. மார்க்கன்) * இலங்கைச் ஜனநாயகச்சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பு.
(அத்தியாயம் 3 அடிப்படை உரிமைகள்) * தனியார்மயமாக்கம் அது உங்களுக்கு எவ்வித தாக்கத்தை
ஏற்படுத்தும். (இலங்கை அரசு தொழில் முயற்ச்சிகள் சீராக்கல் ஆணைக்குழு) * ஜனநாயகமும் குடியியல் கல்வியும்.
(ஆசிய அமெரிக்க சுதந்திர தொழிளாளர் நிறுவகம் இலங்கை) * தலித் முரசு. ஏப்ரல் 1997
புனித பாண்டியன் * தினக்குரல் 20.08.1997
தனியார்மயமாக்கற் கொள்கையின் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள். - பெ.முத்துலிங்கம் * தொழிற் சட்டங்கள் (விரிவுரை)
தொழிற் சட்டங்கள் PVகந்தையா
சந்தனம் சத்தியநாதன்
 


Page 53
சந்தனம் சத்தியநாதன்
காலத்தை 6 எழுதிவரும் கட்டுரைத்
இக் பிரசுரமான s2_6ণী 6ারাষ্ট্ৰী5
է ՔՅԱչ 60 կմ&s @gប្រាសាទ பற்றியும் ே வாசிக்கும் up ឆ្នា 636
இக் சந் தனம் இளந் தை குறிப்பிடத்த கட்டுரை, ! 5ភារិន នៅខ្ស என்ற குறு சிறுகதைத் விந்துள்ளன
ISBN: 9.
 

லயகம் சகல துறைகளிலும் வண்டும். மலையக மக்கள் செழுமையும் நிறைந்த எதிர் ாய்த வேண்டும் என்ற நோக்குடன் ஓர் ஆக்கப் படைப்பாளியின் தொகுதி இது. கட்டுரைகள் பத்திரிகைகளில் போது பலரது கணிப்புக்கும் 1. இதில் உள்ள கட்டுரைகள் அரசியல் பற்றியும் தோட்டத் ர்களின் வாழ்வியல் பிரச்சினைகள் பசுகின்றன. இவற்றை ஒன்றுசேர போது ஓர் ஒட்டுமொத்தமான தையும் புதிய தரிசனத்தையும்
பெறுவதற்கு வாய்ப்பாகிறது. கட்டுரைத் தொகுப்பின் ஆசிரியர் சத் திய நஈ தனி மலையக லமுறைப் படைப் பாளிகளில் நக்கவர். இவர் சிறுகதை, கவிதை, வானொலி நாடகம் ஆகிய துறை தி வருகிறார். இவரது ‘மூடுபனி நாவலும், வழிபிறக்குமா என்ற தொகுதியும் நூலாக வெளி
.
烹一磊339。拿拿一&