கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பெண்களும் தொடர்பு ஊடகங்களும்

Page 1
ل
I
התחתן
2
፳ለWZ
 
 
 
 

隱尋織
****%.鹰
km
ಓತಿಕೆ ೦೫ಖಿ ಏಪ್ರಿಲ್ಲ್

Page 2


Page 3

பெண்களும் தொடர்பு ஊடகங்களும்
தமிழில் எழுதும் பெண் எழுத்தாளர்களுக்கான கருத்தரங்கு
முஸ்லிம் மாதர் ஆராய்ச்சி செயல் முன்னணி × 159, கின்வR வீதி,
கொழும்பு-8.

Page 4
முதற்பதிப்பு: ஜனவரி 1991
விலை: குயா so
Publishers:
MUSLIM woMEN RESEARCH ACTION FRONT 159, KYNSEY ROAD, COLOMBO-8.
Printed by :
The Kumaran Press, 201, Dam Street, Colombo-12 Telephone : 42388
部

பதிப்புரை
ஒரு கருத்து மக்களை ஆட்கொண்டுவிடின் அது மாற்றத்தினை உந்தும் மாபெரும் பெளதிக சக்தியாக உருவெடுக்கும்; இதுவே மனித வரலாற்றின் சாராம்சமாகும். சமூகத்தில் அடிப்படை மாற்றங் களைக் கோருபவர்கள், மக்கள் உள்வாங்கும் செய்திகளையும் அவற் றின் கருத்துக்களையும் நோக்கிக் கவனம் செலுத்தவேண்டிவர்களா கின்றனர். இன்றைய நவீன உலகில், மனிதரால் கையாளப்படும் தொடர்பு சாதனங்கள் தொழில் நுட்பத்தில் உயரியதாய் முன்னெப் போதும் கற்பனை செய்திராத வகையினில் பெருமளவு கருத்துப் பரிமாற்றங்களை ஏற்படுத்தித் தந்திருக்கின்றன. நாம் விழித்திருக்கும் ஒவ்வொரு வினாடியும் ஏதோவொரு ஊடகம் வாயிலாக நம் வசிப் பிடத்திற்கப்பாலுள்ள வெளியுலகிலிருந்து பல்வேறு தகவல்கள் நம் சிந்தனையுள் படையெடுத்த வண்ணமே இருக்கின்றன. நன்மை பயப்பன சில தீமை பயப்பன ஏனையவை. படைத்தவன் அங்கிருக்க படைப்பினை நோதல் பயனற்றதென்பதனால் தொடர்பு சாதனங் களின் பொருள் கர்த்தாக்களாக விளங்கும் படைப்பாளிகளையும் கலைஞர்களையும் குறித்து வினாக்களை எழுப்புதல் அவசியமாகின்றது.
சமூக மாற்றத்தினைப் பேனா ஊற்றில் காண விழைபவர்களே, பேனாவானது அணுகுண்டை விட வலிமையுள்ளதாவெனக் கேலி பேசுபவர்கள் இந்தவொரு வினாவிற்கு மட்டும் விடை பகரட்டும்; ஆயுதபலத்தினால் பகையினையழித்து ஆட்சிப்பீடத்திலேறும் சர்வாதி காரிகள்கூட, பேனாவில் வடித்துத் தரப்படும் நேர்மையான கவிதை களையும் அரங்கேற்றப்படும் உண்மையான கற்பனைகளையும் திரை யிடப்படும் நியாயங் கோரும் நிழற் படங்களையும் கண்டு அஞ்சி நடுங்கி அவற்றை அழிக்க முற்படுவதேனோ? இதில் நமக்கு எவ்விதக் குழப்பங்களும் வேண்டா. அதர்மத்திற்கும் தர்மத்திற்குமிடை யிலான போர் கருத்து நிலையின் ஆதிக்க பூமியிலேயே முதன்முதல்

Page 5
இயங்கள் மூலம் இலட்சியப்படுத்தப்பட்டதன் நோக்கங்களை நாம் புரிந்துகொள்கின்றோம்.
இவ்வாறாக வரலாற்றுச் சக்திகளின் போக்கின் விளைவால் இரண் டாம் பட்ச நிலைக்குத் தள்ளப்பட்டதன் காரணமாகவே இன்றைய சமூகத்தில் பெண்கள் ஏற்றிருக்கும் பங்கு நிலைகள் இரண்டாந்து மாயுள்ளனவோ என ஐயுறுபவர்களுக்கு இல்லை என” ஆணித்தர மாக அடித்துச்சொல்ல வந்திருக்கின்றது. கடைசிக் கட்டுரை. சமுதாயத் தில் பெண்கள் பெறும் குறைந்த கணிப்பு நாட்டின் செல்வத்தை யீண்டு தருவதில் அவர்கள் வகிக்கும் முக்கிய பங்கினை எந்த விதத் திலும் பிரதிபலிக்கவில்லை என்கிறார் கட்டுரை ஆசிரியர். பெண் எழுத்தாளர்களாயினும் பேசாமடந்தையாக இருக்கும் பெண் பாத் திரங்களைக் கதாநாயகிகளாக அமைக்காது காரியத்திறன், இலட் சியம், தலைமைத்துவம், தொழில் நுட்பப் பயிற்சி ஆகிய திறன் க்ளைப் பெற்ற பெண்களைத் தமது கதைகளில், நாடகங்களில் கவிதைகளில் முக்கிய பாத்திரங்களாக அமைக்கவேண்டுமென வற் புறுத்திக் கேட்கின்றார் இவர், こ
மொத்தத்தில் வினாக்களுடன் வந்தவர்கள் மூன்றுநாட் கருத்தரங் கின் முடிவில் அதற்குரிய விடைகளுடன் செல்வதே கருத்தரங்கின் இலக் காகியது. எழுத்தாளர்கள் என்றும் இலங்கையின் தொடர்புத் துறை களில் முன்னணி வகிப்பவர்கள் என்றும் சுமார் முப்பது பெண்கள் பய லுள்ளதும் இனியதுமான இந்த அனுப வத் தி னை ப் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பினைப் பெற்றனர். கருத்தரங்கின் பெறுபேறுகளை அறியும் வண்ணம் அதன் இறுதி நிகழ்வாக பங்கேற்றவர்களிடையே இன்று குழுக்களைத் தோற்றுவித்து, கருத்தரங்கில் விவாதிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பான மூன்று தலைப்புகளில் சில வினா க்கள் கொடுக்கப்பட்டன. குழுவினர்கள் தமக்குள் விரிவான 6aiigi Gogurt பல்களை நிகழ்த்திப் பெற்ற விடைகளின் தொகுப்பு அடுத்த அமர் வில் சமர்ப்பிக்கப்பட்டு பொதுவிவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்
கட்டுரைப்படைப்பும் கலந்துரையாடலும் பின் நிகழ்ந்த குழு நிலை விவாதங்களும் கருத்தரங்கில் பெண்கள் பற்றிய புதிய விழிப் புணர்வைத் தோற்றுவித்தன. இவ்வனுபவமும் உத்வேகமும் பலரை பும் சென்றடைய வேண்டும் என்ற ஆவலின் விளைவே இந்நூல் வடிவு. இதனை பதிப்பிலிட உதவிய GopBT primru நிறுவனத்தினருக்கு முஸ்லிம் மாதர் ஆராய்ச்சி செயல் முன்னணியினரின் சார்பில் எமது நன்றிகளைத் தெரிவிக்கின்றோம்.
- சாந்தி சச்சிதானந்தம
-a via -

பொருளடக்கம்
பக்.
பதிப்புரை iii வரவேற்புரை - அன்பேரியா ஹனிபா ix
அமர்வு ஒன்று: தமிழ் இலக்கியமும் பெண்களும்:
சில சவால்கள் . . . . . . . . . 0. - மெள. சித்திரலேகா
அமர்வு இரண்டு: காண்பதும் கேட்பதும். வெகுஜனதீ
தொடர்பு சாதனங்களில் பெண்களின் al-QS6lassiésair. . . . . . . . . . . . . . . ... ... res ... ... see 3. - சாந்தி சச்சிதானந்தம்
அமர்வு மூன்று: பால் அடிப்படையிலமைந்த
'GSfrts)sb LITGLIrG-- • ... · ••• ••• ••• ••• 60
- மெள. சித்திரலேகா
அமர்வு நான்கு வெளிநாட்டுச் செலாவணிச் சம்பாத்தியத்தில்
பெண்களின் பங்களிப்பும் சமுதாயத்தில் அவர்கள் பெறும் கணிப்பும். . . . . . 79 - சிரோன்மணி இராஜரத்தினம்
அமர்வு ஐந்து: பெண்களும் இம்சையும்
RC5 கலந்துரை see one . . . . . . . . . . . . . . . . . no 95 - யோகா பாலச்சந்திரன்
அமர்வு ஆறு குழுநிலை விவாதம்: வினா-விடை . . . 97
- vii

Page 6
8.
கருத்தரங்கின் நோக்கங்கள்
சரித்திரவாரியான நோக்கில், பலவிதமான சமூக, பொருளா
தார, அரசியல், கலாச்சார சூழ்நிலைகளில் பெண்களுக்கு
சமுதாயத்தினால் அளிக்கப்பட்டுள்ள, ஒப்புக்கொள்ளப் பட்ட அல்லது ஒப்புக்கொள்ளப்படாத பங்களிப்புகளைப் பங்குபற்றுவோர் புரிந்துகொள்ளும்படி செய்தல்.
பால் இனக் கோட்பாட்டை, - விசேடமாக, இதுகாறும்
இருந்து வந்த அமைப்பை பாதுகாப்பதில் கலாச்சாரமும், சமயமும், மரபும் ஆற்றும் பங்கினை நீடித்திருக்கச் செய்யும் சக்தியை இனங்காணுதல்.
மூன்றாம் உலகில் பெண் கொடுமையை வலுப்படுத்தும் தேசியக் கொள்கைகள், சமய சம்பந்தமான மாறாக் கோட் பாடு, உரிமைப் பற்றுக்கள், முதலியவற்றினால் ஏற்படும்
இயக்கத்தை இனங்காணுதல்.
தந்தை வழி முறையைப் பேணி அதனை நிலைத்திருக்கச் செய்வதில் தமிழ் இலக்கியமும், தொடர்பு சாதனங்களும் ஆற்றும் பங்கினை மதிப்பிடுதல்:
தொடர்பு சாதனங்களின் மீது நாம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக எம்மிடமிருக்கும் மாற்றுமுறைகள்ை
நன்கு புலப்படுத்தல்.

வரவேற்புரை
அன்பார்ந்த சகோதரிகளே
முஸ்லிம் மாதர் ஆராய்ச்சி செயல் முன்னணி சார்பில் ஆங்கள் அனைவரையும் இங்கு வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன். எத்த னையோ கஷ்டங்களுக்கு மத்தியில் உங்களின் சொந்த அலுவல்களை யும் விட்டுவிட்டு எங்கள் அழைப்பை ஏற்று இங்கு வந்துள்ளதற்கு எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்ட எமது விளம்பரத்தைக் கண்டு பலர் பங்குபற்றுவதற்கு ஆவல் தெரிவித்திருந்தார்கள். ஆனால் 30 பெண்களை மட்டும்தான். எங்களுக்கு தெரிந்தெடுக்க முடிந்தது. தெரிவு செய்யப்படாதவர்கள் எழுத்துத்திறமை இல்லாதவர்கள் என்பது அல்ல. ஆனால் நாங்கள் இங்கு வளரும் எழுத்தாளர் களுக்கும் இடமளிக்க வேண்டியவர்களாயிருந்ததே முக்கிய காரணம் ஆகும்.
எங்களுடைய மாதர் முன்னணி 1978ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப் பட்டுபின், 1986ம் ஆண்டு முதல் பல வேலைத்திட்டங்களை செயற் படுத்தியிருக்கின்றோம். எமது நோக்கம் பெண்களின் முழு அபிவிருத் திக்காக உழைப்பதாகும். இந்த நோக்கத்தை அடையும் பொருட்டு பெண்களின் மத்தியில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தவே நாங்கள் பாடுபடுகிறோம். இதற்கு முன்னர் முஸ்லிம் மாதருக்கான விசேட கருத்தரங்குகளை நடத்தியுள்ளோம். இந்தக் கருத்தரங்குகளில் முஸ் லிம் பெண்களின் பிரச்சினை, இஸ்லாமிய சட்டம், இஸ்லாமிய கலாச்சார பழக்கவழக்கங்களைப் பற்றி ஆராய்த்துள்ளோம்.
முஸ்லிம் மாதருக்கென்றே குறிப்பான சில பிரச்சினைகள் இருந்த போதிலும் பெண்களை எதிர்நோக்கும் பிரச்சினைகள் பெரிதும் பொதுத்தன்மையானவைகளாகவே இருக்கின்றன. சமுதாயத்தில் பெண்களுக்கு இரண்டாந்தரமான இடமே வழங்கப்பட்டிருக்கின்றன: பெண்கள் தாழ்ந்த நிலையிலேய்ே வைக்கப்பட்டிருக்கிறார்கள். அர சியல் யாப்பில் பெண்களுக்கு சம உரிமைகள் கொடுக்கப்பட்டிருந் தாலும் இது நடைமுறையில் இல்லை. தந்தைவழி சமூக அமைப்பில் பெண்கள் அவஸ்தைப்படுகிறார்கள். பெண்களை அடக்கியாளும் பண்பு பரம்பரை பரம்பரையாக இருந்து வந்துள்ளது. இந்தக் கொள்கைகள் மேலும் பரவாமல் இருக்க நடவடிக்கை எடுப்பதில் எழுத்தாளர் பங்கு மிக முக்கியமானதாகும்.
- ix -

Page 7
ஆனால் இப்பொழுது பிரசுரிக்கப்படும் அநேகமான கட்டுரை களை, கதைகளை ஆராய்ந்தபோது பெண் எழுத்தாளர்கள். தாங் களே பெண்களின் கீழ்ப்படிவான தன்மையும் பெண்களின் அடங்கி வாழும் நிலைமையையும் மேன்மைப்படுத்துவதையும் தந்தை வழி முறையினை ஆதரிப்பதும் தெளிவாகியது. உதாரணமாக கூறுவதாயின் பெண்களின் இலக்கியப் படைப்புகளில் மனைவியை அடித்துத் துன் புறுத்துவது பற்றி மெளனமாக அங்கீகாரம் வழங்கப்படுகிறது: பெண்களைப் பற்றி எழுதும்போது மனித வர்க்கத்தின் ஒரு பகுதி எனக் கருதாமல் ஒரு பிரத்தியேகவகையென்று கருதுகின்றனர். அவர் களைத் தாய்மார்கள், மனைவிமார்கள் அல்லது புதல்விகள் என்று மட்டுமே கருதுகின்றனர். பெண்களை ஒரு பாலியல் பொருளாகவே மதிக்கின்றனர். சில இலக்கியப் படைப்புகளில் உலகத்தில் நட்க்கும் எல்லாப் பிரச்சினைகளுக்கும் பெண்கள்தான் பொறுப்பு என்றுகூட எழுதுவதைக் கவனித்திருப்பீர்கள். பெண்களுக்கு தனிக் குணாதி சயங்களைக் கொடுத்துஅதை நையாண்டி செய்யும் விதத்தில் எழுது வதைக் கவனித்திருக்கிறோம். இதற்கு சில ஆக்கங்களே விதிவிலக் காக உள்ளது.
இப்ப்டிப் பெண்களைத் தாக்கி எழுதுவதில் பிரதிபலன் பெண் கள் தமக்கு எதிரான கருத்துக்களைப் பரப்புவதேயாகும். பெண்கள். சமுதாயம் வழங்கும் குறைந்த அந்தஸ்தை உள்வாங்கிவிட்டதனால் தான் தமது தாழ்ந்த நிலையை ஏற்றுக்கொண்டார்கள்.
இந்த நிலைக்கு மூலகாரணம் என்ன என்பதை அறிந்து அதற்கு எப்படி தீர்வுகாணலாம் என்று அறிய இந்தக் கருத்தரங்கு உதவு மென்று நினைக்கிறேன். இந்தக் கருத்தரங்கின் நோக்கங்களை விளக்க மாக உங்களுக்கு முன்கூட்டியே தந்திருக்கின்றோம். இந்தக் கருத் தரங்கிலே நிகழ்த்தப்படும் சொற்பொழிவுகள் பெண்களைத் தாக்கும் பிரச்சினைகளின் மூல காரணத்தை அறியத்தரும். இக் கருத்தரங்கில் உங்கள் கலந்துரையாடல்களுக்கும் நேரம் ஒதுக்கியிருக்கிறோம். பெண் கள் பிரச்சினைகளை ஆராயும்போது மனதில் ஏற்கனவே பதிந்து விட்ட கொள்கைகளை பாராட்டாமல் ஒரு திறந்த மனதுடன் ஆராய்ந் தால் நல்லது. இந்தக் கருத்தரங்கு வெறும் பேச்சளவில் முடியாமல் ஒரு தீர்வுகாண வழிவகுக்குமென நம்புகிறோம். தமிழில் எழுதும் பெண் எழுத்தாளர்களுக்கான முதல் கருத்தரங்கினை ஒழுங்கு செய் வதில் முஸ்லிம் மாதர் ஆராய்ச்சி செயல் முன்னணி பெருமைப்படு கின்றது.
அன்பேரியா ஹனிபா
இணைப்பாளர்,
முஸ்லிம் மாதர் ஆராய்ச்சி செயல் முன்னணி:
ബ് X മ

தமி p இலக்கியமும் பெண்களும்: சில சவால்கள் s மெள. சித்திரலேகா
தமிழ் இலக்கியத்தைப் படிக்கும் ஒருவர். பெண் இல்லாவிட்டால் இந்த இலக்கியத் தொகுதியே இல்லை என்று கூறும் அளவுக்குப் பெண்கள் தமிழ் இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளனர். ஒருபுறம் இலக்கியப் பாத்திரங்கள் பல பெண்களாகப் படைக்கப்பட்டிருக் கின்றன. இன்னோர் புறம் பெண் பற்றிய கருத்துகள் இலக்கியங் களில் நிறைந்திருக்கின்றன. இக் கருத்துக்களைத் தமது முக்கிய பrடுபொருளாகக் கொண்டு இலக்கியங்கள் அமைந்துள்ளன. இத் தகைய முக்கிய இடத்தினைப் பெண்ணுக்கு வழங்கியுள்ள இலக் கியங்கள், பெண்ணுக்கு எத்தகைய அந்தஸ்தினை வழங்கியுள்ளன? இல்க்கியத்தில் பெண்களின் சித்திரிப்பு எந்தளவுக்கு சமூக நிலைமை களுடன் ஒத்துப் போவதாய் அமைந்துள்ளது? இச் சித்திரிப்புகள்ால் பெண்கள் பற்றிய எத்தகைய கருத்து நில்ை முன்வைக்கப்பட்டது? இது எவ்வாறு பெண்களின் தம்மைப் பற்றிய கண்ணோட்டத்தினை யும், சமூகக் கருத்துகளையும் பாதித்தது?
பெண்களைப் பற்றி ஆண்களின் சித்திரிப்புக்கும் 'பெண்களின் சித்திரிப்புக்கும் வேறுபாடு உள்ளதா? தற்காலப் பெண் எழுத்தாள ரிடையே காணப்படும் பொதுப் பண்புகள் யாவை? இவர்களது ஆக் கத்திறன் எத்தகையது? சிறந்த எழுத்தாளராக பெண் எழுத்தாளர் கள் வளரrமைக்கரிய காரணங்கள் யாவை?
மேற் கூறிய வினாக்கள் தமிழ் இலக்கியமும் பெண்களும் குறித்து ஆழமாகச் சிந்திக்கும்போது தோன்றக்கூடிய முக்கிய வினாக்களாகும் இவை ஒவ்வொன்றுமே தனித்தனியாக விரிவாக ஆராயப்பட வேண் டிவையாகும். எனினும் தமிழ் இலக்கியத்தில் பெண்கள் தொடர்
- I -

Page 8
பான பொது விளக்கம் ஒன்றினைப் பெறுவதற்காக இவை யாவற்றை պth 6pՓ சேர இக் கட்டுரையில், வெகு சுருக்கமாகவேனும் கையாள முயல்கிறேன்.
கண்ணகி, சீதை, மணிமேகலை, திலகவதியார், நளாயினி To தமிழ் இலக்கியம் படைத்தளித்த பாத்திரங்கள் சமூகத்தில் இன்று வரை போற்றப்படுகின்றன.
இப் பாத்திரங்கள் பிரதிபலிக்கும் கருத்துகள் வெவ்வேறு வகை யில் இலக்கியங்களில் வெவ்வேறு பாத்திரங்களையும் தோற்றுவித் துள்ளன. இப் பாத்திரங்கள் காலந்தோறும் மீண்டும் மீண்டும் இலக் இயங்களில் தம்மைப் புதிதாய்ப் படைத்துக்கொள்கின்றன. இப் பாத் திரங்கள் உயர் இலக்கியங்களில் மாத்திரமன்றி பொதுமக்கள் இலக் இயங்கள் எனப்படும் நாட்டார் நாடகங்கள், கதைப்பாடல்கள் என் பவற்றிலும் இடம்பெறுவன.
தமிழ் இலக்கியத்தில் காலந்தோறும் பெண்
பண்டைய இடைக்கால இலக்கியங்களில் பெண் தொடர்பான கருத்துகளும் பெண் சித்திரிக்கப்பட்டிருந்த முறைமையும் எவ்வாறு அமைந்தன என்ற விளக்கம் அவசியமானதாகும். தமிழில் பண்டைய இலக்கியமாக விளங்கும் சங்க இலக்கியத் தொகுதியில் பல்வேறான பெண் பாத்திரங்களைக் காணலாம். தலைவி, தோழி, செவிலி, நற்றாய், விறலி (பாணர் குலப் பெண்) இடையர்களான பெண்கள் என இவர்கள் பல்வகைப்படுவர். சங்கத்திற்குப் பிற்பட்ட இலக் இயங்களில் தலைவி. தோழி என்ற பாத்திரங்களே பிரபலப்படுத்தப் பட்ட போதிலும் சங்க இலக்கியங்கள் வேறு பெண்களைப் பற்றியும் பேசின என்பது மனங்கொள்ளத் தக்கதாகும்.
பிற்பட்ட கால இலக்கியங்களில் காணப்படும் பெண் பாத்திரச் சித்திரிப்புடன் ஒப்பிடும்போது சங்ககாலப் பெண் பாத்திரங்கள் ஒர ளவு சுயாதீனம் பெற்றவர்களாகக் காணப்படுகின்றனர். சங்ககால இலக்கியம் சித்திரிக்கும் சமூகம் இனக்குழு நில்ைமையைக் (tribal) கொண்டதாகும் என ஆராய்ச்சியாளர் கூறுவர்?. அரசு, நிலவுடமை, சமயம் போன்ற நிறுவனங்கள் அதிகளவு வளர்ச்சி ப்ெறாத சமூக, மாக அது அமைந்திருந்தது. பொதுவாக இனக் குழுச் சமூகத்தில் பெண்களுக்கு இருக்கக்கூடிய சுதந்திரத்தின் சில அம்சங்களை சங்க இலக்கியப் பெண் பாத்திரங்களிலே காணுதல் முடியும்.
திருமணத்திற்கு முன் தான் விரும்பிய ஆணுடன் தாராளமாகப் பழகும் பெண்ணைச் சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன. குறிஞ்சித்
一 2。一

திணையில் இடம்பெறும் தலைவி பாத்திரம் இத்தகைய பெண்ணே. திணைப்புனத்திலும், இரவில் இருப்பிட்டத்திற்குப் புறத்தேயும் தனது காதலனைச் சந்தித்து மகிழும் பெண்ணைச் சங்கப் பாடல்கள் சித் திரிக்கின்றன. தாய் போன்ற உறவினர் அறியாது காதலனைச் சந் திக்கவேண்டியிருந்த போதும் அவ்வாறு செய்வதற்குரிய துணிவு சங்க காலப் பெண் பாத்திரங்களுக்கு இருந்தது என்பதே இங்கு குறிப் பிடக் கூடியது. இந்த உறவினை களவு" என சங்க இலக்கியங்கட்கு இலக்கணம் யாத்தோர் கூறுவர்
மேலும் தான் விரும்பிய ஆடவனுடன் கூடிச் சென்றுவிடும் பெண்களையும் சங்கக் கவிதைகள் காட்டும். உடன்போக்கு என இச் செயல் குறிக்கப்படும்.
சங்ககாலப் பெண் பாத்திரங்கள், பிற்காலத்தவைபோல அரண் மனைக்குள்ளும், இல்லத்திற்குள்ளும் தமது தமது நடமாட்டத்தைக் குறுக்கிக்கொள்ளவில்லை. திணைப்புலத்திலும், கடற்கரையிலும், காட்டிலும், பாலைநிலத்திலும் இப் பெண் பாத்திரங்கள் தாராளமாக நடமாடின. இந்த நடமாட்டச் சுதந்திரம் அன்றைய சமூக நிலை மையின் பிரதிபலிப்பு எனலாம்.
சங்க இலக்கியம் பெண்களை வெறுமனே காதற் கிழத்தியராக வும் விளையாட்டுப் பருவத்தினராகவும் சித்திரிக்கவில்லை. உழைப் போராகவும் உற்பத்தியில் பங்கெடுத்தோராகவும் காட்டின. தினைப் புலத்தில் பறவைகளினின்று தானியத்தைக் காப்பாற்றும் பணி பெண் களுடையதாகவிருந்தது. "வினைகள் இயற்றுவதில் கணவருக்குப் பெண்கள் துணையாகவிருந்தனர். அவர் பரணில் ஏறிக் கிளிகளை ஒட்டிப் பயிரைப் பேணுவர். * சிறு பயிர்ச் செய்கையிலும், பாற் பொருட்களை உற்பத்தி செய்வதிலும் பேணுவதிலும் அவ்ற்றை பண்டமாற்றாக ஏனைய குழுக்களிடையே விற்பனை செய்வதிலும் ஈடுபட்ட பெண்களும் சங்க இலக்கியங்களிற் காணப்படுகின்றனர். அத்துடன் கடினம்ான வழிகளைக் கடந்து வெவ்வேறு அரசர்களிடம் போய் அவர்களைப் புகழ்ந்து பரிசில் பெற்ற விறலியரும் உள்ளனர்.
இவ்வாறு தற்துணிவும், சுயாதீனமும் கொண்டோராகப் பெண் களை இலக்கியம் சித்தரித்த நிலை தொடரவில்லை, மாறியது. தந்தைவழிச் சமூக விழுமியங்களால் வழிநடத்தப் பெறுகின்ற, ஆணுக் குப் பலவகையிலும் அடங்கிப் போகிற பெண் பாத்திரங்களே இலட் சியப் பெண்களாய்ச் சித்திரிக்கும் முறைமையே முக்கியம் பெற்றது. (பிற்காலத்தில் சங்க இலக்கியங்களின் புகழ்பாடியோர் கூட, அவை
-- 3 س

Page 9
காட்டும் மேலே கூறப்பட்ட அம்சங்களைக் கண்டும் காணாயல் விட்ட னர் என்பது இங்கு குறிப்பிட வேண்டியதாகும்) பெண் பற்றிய இத் தகைய கருத்து திருக்குறள், நாலடியார் போன்ற அற நூல்களில் மிகத் தெளிவாக வெளிப்பட்டுப் பின்னர் சிலப்பதிகாரம் போன்ற காவியங்களின் ஊடாக நிலைநிறுத்தப்பட்டது. t
" தெய்வம் தொழாஅள் கொழுநர்த் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை."
* பெண்ணிற் பெருந்தக்க யாவுள
கற்பெனும் திண்மையுண்டாகப் பெறின்."
என்றும் அமையும் குறள்களும், வாழ்க்கைத் துணைநலம் என்ற அதி காரமும் பெண்கள் ஆண்களுக்கு அடங்கியவர்கள், அதுதான் அவர் களின் சிறப்பு என்ற கருத்தையே வலியுறுத்துகின்றன.
மணம் செய்தபின் தன்னைவிட்டு நீண்ட காலம் பிரிந்து வேறு பெண் ஒருத்தியுடன் வாழ்ந்து பொருளெல்லாம் இழந்து திரும்பிய கணவனிட்ம் அவனது நடத்தை பற்றி எதுவும் கூறாது "சிலம்புள கொண்ம்" என்று தயவாகக் கூறிய கண்ணகி சிலம்பு காட்டும் பத் திணியானாள். சிலப்பதிகாரத்தை ஆக்கியதற்கான காரணங்களுள் ஒன்றாக "உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தல்" அமைகிறது. இத்தகைய கண்ணகி பாத்திரமே பின்வந்த இலக்கியங்களில் பெண் களுக்கான வகைம்ாதிரிப் பாத்திரமாக அமைந்தது.
கம்பராமாயணம் காட்டும் சீதை, கோசலை, மண்டோதரி போன்றோரும் இவ்வகையினரே. இவர்கள் இக்கால இக்கியல் களால் -பெண்களுடைய குணங்களெனச் சிறப்பித்துக் கூறப் படும் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்ற நாற்குணங்கள் கொண்ட வ்ர்களாய், கொண்ட கணவனையே தெய்வமெனக் கொண்டு பதி விர்தா தர்மம் தவறாமல் வாழ்ந்தவர்கள். குஷ்டரோகியான கண வனை அவன் விரும்பிய விபசாரியிடம், கூடையில் வைத்துத் தலை மேல் சுமந்து சென்ற நளாயினி போன்ற பாத்திரங்கள் இப் பதி விரதா'தர்மம் என்ற இலட்சியத்தின் வடிவங்களாக அமைந்தனர். பெண் சுயாதீனமற்றவள்; எக்காலத்திலும் ஒரு ஆணின் நிழலி ற் தங்கி யிருக்கவேண்டியவள் என்ற கருத்து சாஸ்திர ஆசிரியரால் மாத்திர மின்றி இலக்கிய ஆசிரிய்ராலும் வற்புறுத்தப்பட்டது.
இடைக்கால இலக்கியங்களான பெருங் காவியங்களிலும் சிறு பிரபந்தங்களிலும் படைக்கப்பட்ட பெண்கள் பெரும்பாலும் தலை
രം ! --

வனாகிய ஆணினது பெருமையை விளக்கவும் துலக்கவுமே செயற் நட்டினர். உலா, தூது, பரணி போன்ற இலக்கிய வடிவங்களில் இந் நிலையைத் தெளிவாகக் காணலாம்.
ஆணினுடைய அழகு, வீரம், புகழ் இவற்றில் தங்களை இழந்து அவனை அடையத் துடிக்கும் பேதைகளாகப் பெண்கள் சித்திரிக்கப் பட்டனர். இந்த ஆணில் கொண்ட விருப்பத்தினால் பெண்கள் தங் கள் சுயநினைவை இழந்து செயற்படுவார்கள், நாணம், பயிர்ப்பு போன்ற பெண்மைக்குரிய குணங்களைப் பற்றி இச்சந்தர்ப்பங்களில் எவரும் அலட்டிக் கொள்வதில்லை. தெருவினால் உலா வரும் தலை வனைக் கண்டவுடன் காதலுற்று மெலிந்து கைவளைகள் கழலவும், இடையிலிருந்து ஆடை தளரவும் ஏக்கமுறும் பெண்களை இப்பிர பந்தங்களிற் காணலாம். இப்பாத்திரங்கள் தலைவனின் புகழ்ைத் துலக்கிக் காட்டும் துணைப் பாத்திரங்களேயாகும். ஆண் கள து பெண் பற்றிய கனவுருவப் புனைவாற்றலின் (Male Fantasy) இலக் கிய வெளிப்பாடுகளாக இவை அமைந்துள்ளன.
மேற் கூறியவற்றை நோக்கும் போது பண்டைய தமிழ் இலக்கி யங்களை விட இடைக்கால இலக்கியங்களில் பெண்களின் நிலை மிக வும் பின்னடைந்து போனதை உணரக்கூடியதாய் உள்ளது. ஆனால் இப்பின்னடைவான பாத்திரங்களே பெண்களது இலட்சியத்துக்கு உரியனவாய் வற்புறுத்தப்பட்டன. இவ்வகையில் சமூகத்தின் கருத்து நிலையும், பெண் பற்றிய அதன் கருத்துகளும் அமைந்திருந்தன.
மேற் கூறிய பேண் பாத்திரங்கள் செல்வச் செழிப்புள்ள சமூ கத்தைச் சேர்ந்தனவாகவே அமைகின்றன என்பதும் குறிப்பிடக் கூடியதாகும். அரச குலப் பெண்டிர், செல்வந்த மகளிர் போன்ற வரே முக்கியமான இல்க்கியப் பாத்திரங்கள். மன்னரும் பணிகின்ற வணிகனான மாசாத்துவனுடைய மகள் கண்ணகியுடன் ஆரம்பித்த இந்நிலைமை நீண்ட காலத்திற்குத் தொடர்ந்தது.
இதே சமயம் வேறு சில இலக்கிய வடிவங்களில் குறிப்பாக பள்ளு, குறவஞ்சி போன்றவற்றில் ஒரளவு சுயாதீனமுள்ள, தாம் கருதுவதைக் கூறுகின்ற பெண்களைக் காணலாம். பள்ளு இலக்கி திங்களில் இடம் பெறும் பள்ளியர், குறவஞ்சியில் காணும் குறத்தி ஆகியோர் இதற்கு எடுத்துக் காட்டுகளாவர். ஆனால் இவர்கள் இல் விலக்கிய வடிவங்களின் முதன்மையான பாத்திரங்களல்லர். துணைப் பாத்திரங்களேயாவர். அத்துடன் இப்பாத்திரங்கள் சமூகக் கருத்து நிலையால் போற்றவும் படவில்லை. எனவே இப்பாத்திரங்களைப் பற்றி எவரும் எடுத்துக்கூற முன் வரவில்லை. பள்ளியர், குறத்தியர்
- 5 -

Page 10
ஆகியோரது சுயாதீனம், தற் துணிவு போன்ற குணங்கள் கேலிக் குரியனவாக இலக்கிய ஆசிரிய்ர்களாற் சித்திரிக்கப்பட்டன. பள்ளு இலக்கியங்களில் இட்ம் பெறும் உழவனான பள்ளன் தனது இரு மனைவியரான மூத்த பள்ளி, இளைய பள்ளி ஆகியோரிடையே அகப் பட்டுத் திண்டாடுபவன் ஆகவும் அவனை சிரமப்படுத்துபவர்களாக மனைவியரையும் இவ்விலக்கியங்களில் சித்திரிக்கின்றன. இளைய பள்ளி வசிய மருந்து கொடுத்து பள்ளனைத் தன் வசமாக்கினாள் என பின்வரும் செய்யுள் கூறும்,
மெய்யில் நாவிச் செவியினில் மாசுடன்
வேங்கைப் பல்லும் தேவாங்கினிற் பித்தும் பையராவின் தலைதனின் மூளையும்
பன்றி முள்ளும் உருளியும் கூட்டிக் கையினாலே அரைத்து உண்டை பண்ணி வெங்
கள்ளுஞ் சுள்ளுடன் பள்ளணுக் கிட்டாள் பொய்யும் இந்திர மாசால வித்தையும்
பூரை யென்னவும் கற்றாள் காணாண்டே.
(கதிரை மலைப் பள்ளு)
இதேபோல வேறு வேறு ஊர்களுக்குச் சென்று குறி சொல்லிச் சன்மானம் பெற்றுவரும் குறத்தியை நோக்கி அவளது ஒழுக்கத்தைச் சந்தேகித்துக் கணவன் கூறும் வார்த்தைகளும் மனங்கொள்ளத்தக் கன. இது பெண்கள் பற்றிய அக்கால ஆண் நோக்கு நிலையினின்று தோற்றம் பெற்ற கண்ணோட்டமாகும்.
ஊருக்கு மேக்கே உயர்ந்த அரசிலே
சாரைப்பாம்பேது பெண்ணே சிங்கி! (errøðir) சீர்பெற்ற சோழன் குமாரத்தி யார்தந்த
செம்பொன் அரைஞாணடா சிங்கா! (செம்பொன்) மார்பிற்கு மேலே புடைத்த சிலந்தியில்
கொப்புளம் கொள்வானேன் சிங்கி! (கொப்பு)
பாருக்குள் ஏற்றமாம் காயலார் தந்த
பாரமுந் தாரமடா சிங்கா! (Lunript) எட்டுப் பறவை குழுறும் கமுகிலே
பத்தெட்டுப் பாம்பேதடி சிங்கி (பத்தெ) குட்டத்து நாட்டாருங் காயங் குளத்தாரும்
இட்ட சவடியடா சிங்கா (இட்ட)
(திருக்குற்றாலக் குறவஞ்சி)
- 6 -

இரட்டை அர்த்தம் த்ொனிக்கும் விரசமான கேள்விகளை குறத் தியை நோக்கிக் குறவன் கேட்பதை மேலேயுள்ள பாடற்பகுதி காட்டு கிறது.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நிலைமை மாற்ற மடைந்தது. ஆசியாவில் தோற்றம் பெறத் தொடங்கிய தேசிய வாதம் அதையொட்டி வளர்ந்த சமூக சீர்திருத்தக் கண்ணோட்டம், ஐரோப்பிய நாடுகளின் கருத்துப் பரம்பல் போன்ற இன்னோரன்ன காரணங்களால் ஆசியா முழுவதிலுமே பெண்களது முன்னேற்றம் பற்றிய கருத்துக்கள் பரவலாகத் தோன்றின. இவற்றினை இலக் கியங்களும் பிரதிபலித்தன. தமிழ் இலக்கியமும் இப் பொதுப் போக் கிற்கு உட்பட்டது. நாவல், சிறுகதை, கவிதை முதலிய புதிய ஆக்கி இலக்கியத் துறைகளில் ஈடுபட்ட இலக்கிய கர்த்தாக்கள் பலரும் பல்வேறு அளவிலும் வகையிலும் தமது சமகாலப் பெண்களின் நிலைமை. குறித்துத் தமது கருத்துக்களை வெளியிட்டனர். குறிப் சு அக்காலப் பெண்களின் பின்தங்கிய நிலைமை, அவர்களின் முன்னேற்றத்துக்கான வழிகள் என இக் கருத்துக்களைப் பொதுவாகப் பகுத்துக் கூறலாம். ச. வேதநாயகம்பிள்ளை, அ. மாதவையா, தி. சு. சரவணமுத்துப்பிள்ளை போன்றோர் 19ஆம் நூற்றாண்டின் பிற் பகுதியிலேயே இத்தகைய கருத்துக்களைத் கூறத் தொடங்கியிருந் தனர். பெண்கள் கல்வி கற்பதே அவர்கள் முன்னேற்றத்துக்கான வழி என இவர்கள் ஒரே குரலிற் கூறினர்.
எனினும் கணவனுக்குத் துணையானவர்கள், அவனுக்கு மேலும் ஒன்மையைச் சேர்ப்பவர்கள் பெண்கள் என்ற கருத்தே நிலைத் திருந்தது.
பெண்களுடைய கல்வியினால் புருஷர்களுடைய கல்வியும் அதிகரிக்குமென்பது பிரகாசமாயிருக்கிறது. எப்படியென்றால் பெண்கள் தங்களைக் கல்வியினால் வெல்லாமலிருக்கும் -
• பொருட்டுபட புருஷர்களுக்குக் கல்வியில் அதிக கவனமும் முயற்சியும் உண்டாகும் என்பதற்கும் எள்ளளவும் ஐயமில்லை."
(வேதநாயகம்பிள்ளை - பெண் கல்வி)
.கற்றுத் தேர்ந்த தன் புருஷனுடைய நேசத்தையும் பாசத்தையும் தன் அழகு அழிந்து போன காலத்திலும் ஒரு நாளுங் கைவிடாது கொள்ள விரும்பும் பெண், அவனுக்குப் பிரியமாயுள்ள கல்வியில் தானும் தேர்ச்சியடைய
வேண்டும்." (அ. மாதவையா - பத்மாவதி சரிகம்)
سمس .7 . سسسه

Page 11
"கல்வி நலம் பெற்றனரேற் காரிகையர் காதலர்க்குச்
சொல்லரு நற்றுணையன்றோ தொல்லுலகு சிறக்குமற்றோ.
மேற்கூறிய கருத்துக்கள் இக்காலத்தில் பெண் கல்வி வற்புறுத்தப் பட்டாலும் கூட பெண் பற்றிய அடிப்படை நோக்கு நிலையில் மாற் றம் ஏற்படாததைக் காட்டுவனவாகும்.
இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் சுப்பிரமணிய பாரதி யினுடைய கருத்துக்கள் இவ் அடிப்படை நிலையிலிருந்து மாறு பட்டவையாக அமைந்தன.
"நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்" என்ற தொடர்
இடம்பெறும் புதுமைப் பெண் என்ற கவிதையும், பெண்கள் விடு
தலைக்கான பத்து விதிகளை அடக்கிய கட்டுரையும் பெண்கள் பற் றிய பாரதியின் முற்போக்கான கருத்துகளுக்குச் சான்றாகும்.4
மேலே கூறியவற்றிலிருந்து ஒரு விடயத்தை இங்கு மீண்டும் அழுத்திக்கூற விரும்புகிறேன். அதாவது சங்க இலக்கியங்களுக்குப் பிற்பட்ட கால இலக்கியங்களிற் சித்திரிக்கப்பட்ட பெண் சுயாதீன மற்ற, எல்லாச் சந்தர்ப்பங்களிலும் ஆண்வழித் தீர்மானங்களால் வழி நடத்தப்படுகிற பெண்-இலட்சியமயப்படுத்தப்பட்டமையாகும். இத்தகைய பெண் பாத்திரங்களே சமூகப் போற்றுதலுக்கு உரித் தாயின. இவையே இலட்சிய பாத்திரங்களாய், சமூகத்தில் பெண் களது கருத்து நிலையையும் வழிநடத்தின.
இவ்விடத்தில் ஒரு பிரச்சினை தோன்றுகிறது. மேற்கூறிய, இலட்சியமயப்படுத்தப்பட்ட பெண் பாத்திரங்கள் சமூக யதார்த் தத்தை எவ்வளவு தூரம் பிரதிபலித்தன? இச் சித்திரிப்புகள் சமூக யதார்த்தத்துடன் எந்தளவுக்கு ஒத்துப் போனது?
இதுவரை மேலே பார்த்த இலக்கியங்கள் ஏட்டுவழி வந்த செந் நெறி (classical) இலக்கியங்களாகும். இவை கருத்து நிலையின் இலக்கிய வெளிப்பாடுகளாகும். அதாவது அதிகாரமுடைய, செல் வாக்குப் பெற்ற வர்க்கம் இனம் 1 பால் உகந்தது, சிறந்தது எனக் கருதும் கருத்துத் தொகுதியின் இலக்கிய வெளிப்பாடுகள் ஆகும். இவற்றில் ஏனைய வர்க்கம்/இனம்/பால் ஆகியவற்றின் நடை முறை யதார்த்தம் இடம்பெறாது. இதனைக் காண்பதற்கு நாட் டார் இலக்கியத்தை நாம் நாடவேண்டியுள்ளது.
- 8 -

நாட்டார் இலக்கியமும் பெண்களும்
நாட்டார் பாடல்களின் ஆதாரசக்தி மக்களின் அன்றாட நடை முறையே ஆகும். இதனால் மக்கள் வாழ்க்கையில் காணப்படும் பல் வேறு அம்சங்களையும் அறிந்துகொள்ள உதவும் ஆதாரங்களாகவும் இவை அமைகின்றன.
குறிப்பாகத் தமிழ்ச் சமூகத்தில் பெண்ணின் இருப்பு, பெண் பற்றிய சமூகக் கண்ணோட்டம் என்பவற்றை அறிய இவை சிறந்த சான்றுகளாகும். பெண்ணின் சமூக ஸ்தானம் நாட்டார் இலக்கியங் கள் மூலம் நன்கு வெளிப்படுகிறது. மேலும் நாட்டார் பாடல்களிற் கணிசமானவை பெண்களின் வாய்மொழியாக அமைந்தவை. அவர் களது பல்வேறு மனோநிலையின் பிரதிபலிப்புகளாகவும் வெளி
Intege) of .
இந்திய, இலங்கைத் தமிழ்ச் சமூகங்களில் பெண், சுதந்திரமான, தனிப்பட்ட ஒரு நபர் அல்ல. அவள் தனது வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களிலும் ஒரு ஆண்மகனைச் சார்ந்து நிற்க வேண்டியவள். திருமணம் ஆகாத, விதவையான அல்லது ஆண்குழந்தை பெறாத பெண் சமூகத்தின் நன்மதிப்பைப் பெறுவதில்லை. இது வர்க்க வேறு பாட்டையும் மீறி பெண்ணின் பொதுமையான, இரண்டாம்தர நிலையைக் காட்டுவதாகும். இலங்கையிலும் பார்க்க, தென்னிந்திய சமூகத்தில் பெண்ணின் நிலை மிகவும் பரிதாபத்துக்குரியது, ஆணின் றிப் பெண்ணுக்குச் சொத்துரிமை இல்லை. கணவன் இறந்தால் பெண் சொத்துரிமை அற்ற அபலை ஆகிறாள். ஆண்குழந்தை பெறாவிடின் அவளது சொத்துகள் தொடரவழியில்லை. இதனாலேயே விதவையாக இருப்பதிலும் மலடியாக இருப்பதிலும் தமிழ்ப் பெண் பெருந்துன் பத்தை அநுபவிக்கிறாள். இலங்கையிலும் விதவைப் பெண்ணுக்கு ஈமூக மதிப்பு இல்லை. "கைம்பெண்டாட்டி" என்று அவள் புறக் கணிக்கப்படுகிறாள். இதனாலேயே கணவன் இறக்க முதல் மஞ்சள் குங்குமத்துடன் தாம் இறக்க வேண்டுமென விரும்புகின்றனர் தமிழ்ப்
பெண்கள்.
மச்சு மச்சாநெல் விளையும் மகுடஞ் சம்பா போரேறும் மச்சாண்டார், கை யாலே மாசப்படி வாங்கித் திங்க மாபாவி ஆனேனப்பா
- 9 -

Page 12
குச்சு குச்சா நெல்விளையும் குமுடரு சம்பா போரேறும் கொழுந்தனார் கையாலே கூலிப் படி வாங்கித் திங்க கொடும் பாவி ஆனேனப்பா.
தமிழ்நாட்டுச் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த இப்பாடல், கண வன் இறந்ததால் குடும்ப நிர்வாகம் அப்பெண்ணின் மைத்துனர்கள் கைக்குமாற, அவர்களில் தங்கிவாழ வேண்டியுள்ளது எனப் பெண் புலம்புவதைக் காட்டுகிறது.
குழந்தையற்ற பெண்ணின், அதுவும் ஆண்வாரிசற்ற பெண்ணின் கணவன் இறந்துவிட்டால் அவளது நிலை சொல்லுந்தரமன்று. ஆண் குழந்தை இருந்தால் அக்குழந்தை மூலம் சொத்துரிமை தொடரும். கணவனின்சகோதரர் தயவை எதிர்பார்த்து நிற்கும் அவலம் இல்லை. ஆனால் ஆண் குழந்தை இல்லாவிடிலோ கணவனுடைய, அல்லது அவ ளது.ஆண் சகோதரர்கள் வீட்டில் அவர்களது பணிப்பெண் போலத் தனது மீதி நாட்களைக் கடத்த நேரிடுகிறது. பொருளாதார அநாதை யான அவள்நிலை பின்வரும் ஒப்பாரியில் வெளிப்படுகிறது. di ST66) 6ðf இழந்த பெண்ணுடைய சோகத்தின் வெளிப்பாடாக மாத்திரம் அன்றி ஆணாதிக்கச் சமூகத்தில் பெண்ணுடைய அவலநிலையின் சமூகப் பதி வேடாகவும் விளங்குகிறது இந்தப் பாடல்.
மஞ்சனத் தொந்தியில் மைந்தன் பிறந்தாக்க மைந்தனுக்குப் பங்குண்டும் மதுரைக் கோட்டுலேயும் நியாயமுண்டும் மஞ்சனத் தொந்தியில மைந்தன் பிறக்கலியே மைந்தனுக்குப் பங்குமில்ல மதுரைக் கோட்டுலயும் ஞாயமில்ல.
வாழ்க்கைத் துணையை இழந்தால் ஆண்களை விடப் பெண்களே கலங்கி அழுவதற்கும் அவர்கள் வாய்மொழியாகவே ஒப்பாரிகள் உருப்பெறுவதற்கும் உரித்தான சமூகக் காரணம் இப்போது இலகு வில் விளங்குகிறது அல்லவா?
ஒருதார மணம் பற்றி நமது சமூகம் பெருமைப்படினும், நடை
முறையில் ஆண்கள் தமது மனைவியரை விட வேறு பெண்களுடன் தொடர்பு வைத்திருப்பதைக் காணலாம். உண்மையில் ஒரு புருஷ
سبـ 10 حسشص

மணமே நிலவுகிறது. ஒரு தார மணம் அன்று, தமிழ்நாட்டில் இது சர்வ சாதாரணம். ஆசாரப்படி திருமணம் செய்வது ஒரு பெண்ணைத் தான். ஆனால் வேறு பெண்களை நாடுவதும், அவருக்குப் பிறக்கும் பிள்ளைகளையும் பராமரிப்பதும் வழக்கம். சொத்து வசதியுள்ள, உயர் வகுப்புக் குடும்பங்களில் இது சர்வ சாதாரணம். ஆணுக்குரிய சலு கையாக இது கருதப்படுகிறது. ஆனால் ஆணுடைய இச் சலுகை முதல் மனைவியின் உரிமையில் தலையிடுவதாகும். தனக்கு முழுமை யாகச் சேரவேண்டிய சொத்தும் சுகபோகமும் இன்னொருத்திக்குப் பங்கு போகிறதே என்ற ஆத்திரம் சக்களத்திச் சண்டையின் சமூக அடிப்படையாகும்.
போறாக வன்னியனார் பொத்துவிலப் பாப்பமெண்டு என்ன மருந்துகளைப் போட்டு மயக்குறாளோ தேவடியாள்.
நிலப்பிரபுத்துவ, செல்வ்ந்தக் குடும்பங்களில் பெண்வீட்டுக்கு வெளியே பொருள் உற்பத்தியில் ஈடுபடுவது மிகக் குறைவு. நிலப் பிர புக்களின் சொத்துரிமை தொடர்வதற்கான வாரிசுகளை உருவாக்கும் பணியிலேயே அவள் ஈடுபடுகிறாள். ஆனால் ஏழை விவசாயக் குடும் பங்களில் பெண்ணின் நிலை வேறு; அங்கு பெண், பொருள் உற் பத்தியிலும், தொழிற்சக்தியை உருவாக்குதற்கு ஏதுவான இனவிருத் Suurt Gor ungp D-riðluji Suí56Myth (Production and Re-Production) ஏககாலத்தில் பங்கு கொள்கிறாள். சமூகச் சுரண்டலுக்கு அவள் ஆளான போதும் சிறிய சுதந்திரமாவது அவளுக்குண்டு. விவசாயம் சம்பந்தமான சில குறிப்பிட்ட தொழில்கள் பெண்களுக்கே உரி யவை. நாற்று நடுதல், களைபிடுங்குதல் போன்றவை அவை. அறு வடையின் பின் நெல்லைக் குற்றி அரிசியாக்கலும் பெண்ணின் வேலையாகும். மேட்டு நிலப் பயிர்களில் தினை ஒன்று. தினை விளைந்த பின் அதற்குக் காவல் தேவை. இதனையும் பெண்களே செய்வர். கொங்கு மாவட்டப் பாடல் இதனைத் தெரிவிக்கிறது.
ஒடி ஒடிக் கொய்தாளா ஒன்பதுமடி தெனங்கருதெ (கதிர்) பாடிப் பாடிக் கொய்தாளா பத்துமடி தெனங்கருதெ. வட்டொ வட்டொப் பாறையிலே கொட்டுனாளாந் தெனங்கருதெ.
--سلم : 11 -

Page 13
ஆணைத் துணைக்கொண்டு அவனில் தங்கி வாழும் இரண்டாந் தர நிலை எமது பெண்களுக்குரியது. எனினும் இந்நிலைக்கு எதி ராகச் சிலர் குரல் கொடுத்தும் உள்ளனர். பொருந்தா மணத்தை எதிர்த்தும், கொடுமை செய்யும் கணவனுக்கு எதிராகவும் இந்த எதிர்ப்புக் குரல்கள் உயர்ந்துள்ளன. தமது பண வலிமையால், உடல் வலிமையால் ஆண்கள் தமக்கு மிகவும் இளையவரான பெண் களைத் திருமணம் செய்வதுண்டு. இத்தகைய திருமணங்கள் சமூ கத்தின் எல்லா மட்டங்களிலும் இடம் பெறுபவை. பெண் கள் இதனை ஏற்றுக்கொண்டு அடங்கிப் போவதுதான் பெரும்பான்மை யாக நிகழ்ந்தாலும் தமது மன வேக்காட்டையும் வெறுப்பையும் நாட்டார் பாடல்களில் வெளிப்படுத்தியுள்ளனர்.
நாணலுத் தட்டைபோல நரைச்ச கிழவனுக்கோ கோவப்பழம் போல குமரிவந்து வாய்ச்சனல்ல.
எவ்வளவு தான் பொருளாசை காட்டினும் மனம் விரும்பா மணத்தை மறுத்துப் பேசும் தைரியத்தைச் சில பாடல்களிற் சந்திக்கலாம்.
"தங்கத் தயிலாவைத் தாரனெண்டு சொன்னாலும் தாரம் இழந்தவனுக்கு நான் தாரமாப்போறதில்ல' 'தங்கத்தால் வேட்டிகட்டி சருகையால் சால்வை போட்டு செருப்பில் நடந்தாலும் அவரைச் சேரமனம் செல்லுதில்ல’’
தமிழ்நாட்டில் சில சாதியினரிடையே பெண்களுக்கு விவாகரத் துச் செய்யும் உரிமையும் மறுமணம் செய்யும் உரிமையும் உண்டு. இத னால் கணவனுடன் பிரச்சினை வரும்போது அதனைச் சகித்துக் கொண்டு வாழ்ந்து தீரவேண்டிய நிர்ப்பந்தமில்லை. மிக இலகுவாகப் பெண்ணே மணமுறிவு செய்து கொள்ளலாம்.
குத்தின அரிசி ஒரலிலே கொளிச்ச அரிசி மொறத்திலே ஆக்கின சோத்துக்கு உண்ணாமை பேசின இந்தாடா மாமா உன்தாலி
கட்டிய தாலியையே அறுத்துத் தனது சுதந்திரத்தை நிலை நாட்டும் பெண்ணின் குரல் இங்கு ஒலிக்கிறது.
நாட்டார் இலக்கியங்களையும், செந்நெறி இலக்கியங்களையும் ஒப்பிடும்போது அவை காட்டும் பெண்களிடையே வேறுபாடு இருப் பதைக் காணலாம். மணமுறிவு செய்யும் பெண்ணையோ, பொருந் தாத் திருமணத்தை எதிர்க்கும் பெண்ணையோ செந்நெறி இலக்
12

கியங்களிற் காணுதல் முடியாது. ஆனால் நாட்டார் பாடல்கள் தமிழ்ச் சமூகத்தின் உயிரும் உணர்வும் கொண்ட பெண்ணைக் காட்டுபவையாகும்.
எவ்வாறாயினும் தந்தை வழிச் சமூக விழுமியங்களால் வழி நடத்தப்படும் சமூகத்தில் உள்ள பெண்ணே தமிழ் இலக்கியம் காட் டும் பெண் ஆவாள். செந்நெறி இலக்கியங்கள் இப்பெண்ணை இலட்சியமயப்படுத்த அவளது மன வெப்புசாரத்தையும், தாழ்ந்த நிலையையும் நாட்டார் இலக்கியம் காட்டுகிறது .இவ்வேறுபாடு அவ தானிக்கத்தக்கது.
தமிழ் இலக்கியத் தொகுதியில் பெரும்பாலானவை ஆண்களால் படைக்கப்பட்டவையாகும். இதனால் பெண்களைப் பற்றிய சித்த ரிப்புகளும் கருத்துகளும் ஆண்களுடையதாகவே அமைகின்றன. பெண் எழுத்தாளர் எவ்வாறு எழுதினர்? ஆண்-பெண் எழுத்தாள ரிடையே வேறுபாடு உள்ளதா? என்பது அடுத்த வினாவாகும். \
பெண் எழுத்தாளர்
பண்டைக் காலத்திலிருந்து சிறுபான்மையினராகவேனும் பெண் இலக்கிய கர்த்தாக்கள் காணப்படுகின்றனர். சங்க காலத்தில் 26 பெண் பாற் புலவர்கள் இருந்ததாகக் கூறுவர். இவர்களுள் பிரப லம் பெற்றவர் ஒளவையார் ஆகும். 56 சங்கக் கவிதைகள் இவரது பெயரில் உள்ளன. குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, புற நானுாறு ஆகிய தொகை நூல்களில் இவை இடம் பெறுகின்றன. இப்பாடல்கள் அரசரைப் புகழும் பாடல்களாகவும், காதற் பாடல் களாகவும் அமைந்துள்ளன. es
காரைக் காலம்மையார் கி.பி. 6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வர். பக்தி இலக்கியத்தின் ஆரம்ப கர்த்தா, இவரது எழுத்துக்க ளில் இறைவன் மீதான பக்தியுணர்ச்சியும், அறிவு ரீதியான சமய வாதமும் கலந்துள்ளன.
ஆண்டாள் (7ஆம் நூற்றாண்டு) இன்னோர் தமிழ் நாட்டுப் பக்தி இலக்கிய கர்த்தாவாவர். வைஷ்ணவ பாசுரங்களை எழுதி புள்ளார். கண்ணன் மேல் காதல் கொண்டு எழுதிய பாசுரங்கள் இவை. தமிழ் இலக்கியப் பரப்பிலேயே பெண்ணினுடைய காதல் உணர்வினை மிகுந்த ஆற்றலுடனும் பெண் என்ற நிலையிலும் வெளிப்படுத்தும் பாடல்கள் இவருடையவை. (காதல் உணர்ச்சியை வெளிப்படையாகப் புலப்படுத்த பெண் கவிஞர்கள் தயங்குவதுண்டு)
- 18 -

Page 14
இடைக்காலத்திலும் ஒளவையார் என்ற பெயரில்):சில"இலக்கி யங்களும் தனிப்பாடல்களும் எமக்குக் கிடைக்கின்றன.
ஆண்டாளுடைய காதற் பாடல்களைத் தவிர்த்து நோக்கினால் ஆண் எழுத்தாளருக்கும் பெண் எழுத்தாளர்களுக்கும் இடையே பெரும் வேறுபாடுகளோ, விசேட அம்சங்களோ இருப்பதைக் காண மூடியாது. இடைக்கால ஒளவையாரும் ஆத்திச்சூடி, கொன்  ைற வேந்தன் போன்ற அற நூல்களில் பெண்ணுடைய தாழ்த்தப்பட்ட நிலையையே சிறப்பித்துக் கூறியுள்ளார்.
தற்காலத் தமிழ்ப் பெண் எழுத்தாளர்கள்
20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து முன்னரிலும் அதிக மான பெண்கள் எழுத்துத் துறையில் ஈடுபட்டனர். இக்காலத்தில் பெண்கள் முன்னேற்றம் பற்றிய கருத்துகள் சமூகத்தில் இடம் பெறக் தொடங்கியமையும், கல்வி கற்கும் பெண்களின் தொகை அதிகரித் தமையும் இதற்குக் காரணங்களாக அமைந்தன எனலாம்.
தற்காலத்தில் இலக்கிய உலகில் பிரபலியம் பெற்ற பெண் எழுத் தாளர்களாக லசுஷ்மி, அனுத்தமா, ஆர். சூடாமணி, ராஜம் கிருஷ் ணன், ஜோதிர் லதா, கிரிஜா, கிருத்திகா, அம்பை, செண்பகம்,ஊர் வசி, கோகிலா மகேந்திரன், சிவசங்கரி, விமலா ரமணி, குயிலி ராஜேஸ்வரி, அனுராதா ரமணன், இந்துமதி, வாஸந்தி, உஷா சுப் பிரமணியன் போன்றோரைக் குறிப்பிடலாம். இவர்களுட் பெரும் பாலோர் நாவலாசிரியர்களாகவும், தொடர்கதை ஆசிரியர்களாக வும் புகழப்படுபவர்கள் ஆவர்.
பெரும்பாலான பெண் நாவலாசிரியர்கள் "குடும்ப கதைகளையே எழுதுகின்றனர். பெண் பாத்திரங்கள் இவற்றில் முக்கிய இடம் பெறும், பெண்மை, தாய்மை ஆகிய பண்புகள் பற்றி விதந்தோ தும் போக்கு இவர்களது நூல்களிலே பொதுவாக உள்ளது. இவ் விடயங்களை அணுகுவதில் ஆண் எழுத்தாளர்களிலிருந்து இவர்கள் வேறு படுகின்றனர் எனவும் கூற முடியாது. தாயின் பாசம், மனை வியின் தியாகம் போன்ற குறிப்பிட்ட வரையறைக்குள் தமது பாத் திரங்களை உருவாக்குகின்றனர். பெண்ணின் மனப் போராட்டங் களையும், வாழ்க்கையில் ஏற்படும் முரண்பாடுகளையும் ச மூ கப் பகைப்புலத்தில் வைத்து நோக்காது அவற்றைத் தனிமனிதப் பிரச் சினைகளாகவே இவர்களிற் பலர் கையாளுகின்றனர். இவ்வகையிற் பொழுதுபோக்கு இலக்கியங்களைப் படைப்போர் வரிசையில் இவர் களைச் சேர்த்து விடலாம். பெண் குடும்ப் வாழ்க்கைக்கே
سسس " 14 سس۔

சித்திரிக்கப்படுவாள். சுருக்கமாகச் சொன்னால் பெண் பற்றி இது காறும் எமது சமூகத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு வந்த குறிப் பிட்ட சில கருத்தோட்டங்களின் பின்னணியில் பெண்ணைச் சித்தரிப் பவராகவே எமது பெண் எழுத்தாளர்களிற் பெரும்பாலோர் காணப் படுகின்றனர்.
** இன்றைக்கு வெளிவரும் கதைகளில் பெரும்பாலும் பெண்களு டைய அடிப்படையான பிரச்சினைகள் பிரதிபலிக்கப்படுவதில்லை என்றே நான் நினைக்கிறேன். ஒரு சிலர் பெண்களின் பிரச் சினைகளை ஓரளவுக்குத் தொட்டாலும் இறுதியில் சம்பிரதாய போக்குகளையும், நடவடிக்கைகளையுமே நியாயப்படுத்தி, கட் டுப்பெட்டித்தனமான முடிவுகளையே கொடுத்துவிடுகின்றனர். பெண்களைப் பற்றிய சித்தரிப்பில் பெண் எழுத்தாளர்களை விட ஆண்களே சற்று மேல் என்று கூட எண்ணும் அளவுக்கு எழுத் தாளர்கள் கோழைகளாகி விடுகிறார்கள். திருமணம் ஆகாத பெண், பெண்கள் வரதட்சிணையை எதிர்த்தும், கலப்பு மணத்தை ஆதரித்தும், ஆண் ஆதிக்கப் போக்குகளை எதிர்க்கும் துணிவும் இருக்கவேண்டிய அவசியத்தை வலியுறுத்தியும் எழுதினால் தங் களுடைய திருமண வாய்ப்புகளே பாழாகிவிடுமோ என்று அஞ்சு கிறார்கள் போலும். இதேபோல் விதவை திருமணத்தை ஆத ரித்து எழுதுவதற்கும் திருமணமான பெண்கள் அஞ்சுவதாகத் தெரிகிறது. பெண் எழுத்தாளர்களுடைய உண்மையான உணர்வு களும் எண்ணங்களும் முழுமையாக அவர்கள் எழுத்துகளில் வெளிவருவதில்லை."
மேற்கண்டவாறு ஜோதிர்லதா கிரிஜா குறிப்பிடுவது மிகப் பொருத்த மாகவுள்ளது.
பெண்மை என்ற மரபுரீதியான கருத்தாக்கத்தினை பல்வேறு வகைகளில் பெண் எழுத்தாளர்கள் கையாண்டுள்ளனர். பெண்மை என்பதை வரைவிலக்கணம் செய்து பெண்ணின் தாழ்த்தப்பட்ட நிலையை நியாயப்படுத்துகின்றனர். சுயதியாகம், சமர்ப்பணம் ஆகி யவை உயர்ந்த பெண்மைக் குணங்களாகப் போற்றப்படுகின்றன. ஆனால் இதே சமயம் இப்போற்றுதலை வெளிப்படையாகவன்றி மறைமுகமாகவே செய்கின்றனர். இதனால் பெண்மையின் பழைய இலட்சியங்களுக்கும் தற்காலத்தின் தேவைகளுக்கும் இடையே சம ரஸம் காணும் பாத்திரங்கள் பலவற்றைத் தற்கால பெண் எழுத் தாளர் படைத்துள்ளனர். இன்றைய இலட்சியபூர்வமான பெண்
سے 15 ست۔

Page 15
இத்தகைய சமரஸ் பாத்திரமாகவே காட்டப்படுகிறாள். தொழில் பார்ப்பவள். துணிவுடையவள், புத்திக்கூரிமை மிக்கவள், கல்வி கற்ற வள். W
அதே சமயம் திருமணமாகி கணவன் குழந்தை ஆகியோருக் காகத் தன்னை அர்ப்பணிப்பவள். வெளி உலகின் அழுத்தங்களை պւb குடும்பத்தின் தேவைகளையும் ஒருசேர வெற்றிகரமாகச் சமா. ளிக்கும் ஒரு "சுப்பர்வுமன்" ஆகவே இத்தகைய பெண்பாத்திரம் அமைகிறது. இதே சமயம் நவீன குடும்ப வாழ்க்கையில் பெண் னுக்கு ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளையும் இவ்வெழுத்தாளர் கள் தொட்டுள்ளனர் என்பதை மறுக்கமுடியாது. ஆனால் தற் போது நிலவும் அசமத்துவ உறவுமுறைக்கு நியாயம் கற்பித்து, அதனை மனித இயற்கையாகக் காட்டுவதே பொதுப் போக்காக உள்ளது.
சில கதைகளில் எவராலும் பாராட்டப்படாத தனது உழைப்பு பற்றி பெண் விசனப்படுவது பேசப்படுகிறது. உதாரணமாக ராஜம் கிருஷ்ணனின் "பித்தம் தெளிந்தது" என்ற சிறுகதையைக் கூறலாம். தனது குடும்பத்தில் தன்னை முக்கியமில்லாதவளாக உணரும் ஒரு பெண் கணவனையும், பிள்ளைகளையும் பிரிந்து செல் கிறாள். சிலகாலம் உறவினர் வீட்டில் தங்குகிறாள். ஆனால் அங் கும் கூடத் தான் சுரண்டப்படுவதாய் உணர்ந்து வீடு திரும்புகிறாள். அப்போதுதான் கணவரும் பிள்ளைகளும் அவளது பிரிவினால் எவ் வளவு துயருற்றனர் என்பதை உணருகிறாள். வெளிப்படையாகக் காட்டப்படாவிடினும் தனது முக்கியத்துவத்தை யாவரும் உணர்ந் துள்ளனர் என்பது குறித்து அவளுக்கு மனநிறைவு ஏற்படுவதாகக் கதை முடிகிறது.
சமீப காலத்தில் வீட்டுக்கு வெளியே உழைக்கும் பெண்களது தொகையின் அதிகரிப்பானது அவர்கள் வாழ்க்கைப் பிரச்சினைகள் கிருமணம், சீதனம் போன்றவை - பற்றிய ஆக்கங்கள் தோன்று
ற்கு வழிவகுத்துள்ளது. பொருளாதார நிர்ப்பந்தங்களால் பெரும் பாலும் கீழ் மத்தியதர வர்க்கத்துப் பெண்கள் தொழில் செய்வதாக வும் அது ஏற்படுத்தும் பிரச்சினைகளையும் இத்தகைய இலக்கியங் கள் காட்டுகின்றன. ஆண்களான வேலை கொள்வோரின் தொ ந் தரவுக்கு அவர்கள் ஆளாக நேர்வதும் இவர்களது ஆக்கங்களில் எடுத்தாளப்படுகின்றது. ஆனால் இப்பிரச்சினை கண்டிக்கத்தக்கது என்ற கருத்து இன்றி, வீட்டுக்கு வெளியே தொழில் புரிவது பெண் மையின் முழுமைக்குத் தடைக்கல்லாக உள்ளது என்ற கருத்தே அடிப்படையாக அமைகிறது.
ہسست 10 - -

இத்தகைய போக்கிற்கு மாறுபட்ட ஒரு போக்கும் மிகச் சமீப காலமாக்ப் பெண் எழுத்தாளர்களிடையே இடம்பெறுகிறது. ஆணா திக்கக் கருத்துகளும், பெண் விடுதலைக் கொள்கைகளும் முட்டி மோதும் போதும் ஏற்படும் பிரச்சினைகள் பெண்களது உண்மை யான உணர்வுக் கோலங்கள் என்பவற்றை இவர்கள் கையாள் இன்றனர். ஜோதிர்லதா கிரிஜா, அம்பை, செண்பகம், ஊர்வசி சிவரமணி போன்றோர் இவ்வகையில் குறிப்பிடக்கூடியவர் கள். இவ்வாறு நோக்கும்போது பெண் பற்றிய மரபுரீதியான கருத் தோட்டங்களுக்கு வடிவம் கொடுத்து எழுதுவோர், பெண்களது பிரச்சினைகளை யதார்த்தமாகச் சித்திரிப்போர் என அடிப்படையில் இருவகையாக பெண் எழுத்தாளர்களைப் பாகுபாடு செய்யலாம் போல உள்ளது.
இதில் இரண்டாவது வகையினர் விரல்விட்டு எண்ணக்கூடியவர் கள். அவர்களது பட்ைப்புகளும் மிகக் குறைந்தனவே. எனினும் இதனை வளர்ந்து வரும் ஒரு ஆரோக்கியமான ஒரு போக்காகவே நான் இனம் காண்கிறேன். இதனால் இப்போக்கு பற்றிச் சற்று விரிவாகவே குறிப்பிடுதல் வேண்டும்.
இத்தகைய எழுத்தாளர்களுள் முதன்மை வாய்ந்தவர் அம்பை ஆவர். இறகுகள் முறியும் (1975), வீட்டின் மூலையில் ஒரு சமைய லறை (1988), ஆகிய சிறுகதைத் தொகுதிகள் இவருடையவை. எழுத்தாளர்களால் இதுவரை காலம் அலட்சியப்படுத்தப்பட்ட பெண் களது சில வகையான சிந்தனைகள், உணர்வுகள் என்பவை இவரது கதைகளில் இடம்பெறுகின்றன. காதல், பாலியல், குடும்பம் ஆகி யவை குறித்து ஆழமான, வலுவான வினாக்களை இவரது சிறுகதை கள் எழுப்புகின்றன. 'ஸஞ்சாரி" என்ற இவரது கதையின் பாத்திரம் ருக்மா சுதந்திர உணர்வுள்ள ஒரு பெண். அவளது சுயாதீனத்தி னால் கவரப்படும் ரங்கா அவளைக் காதலிக்கிறான். அதே சமயம் அவளது தன்னிச்சையான போக்கில் வெறுப்பும், பொறாமையும் அவளை உடமையாக்கும் எண்ணமும் அவனுக்கு உண்டாகின்றன். ருக்மா தமது, காதல்’ எனப்படுவது பற்றி பின்வருமாறு எண்ணு கிறாள். W
"இது உண்மையா ரங்கா? லவ் என்றால் என்ன? நமக்குத் தெரியுமோ? நீ சொல்லும் சில சொற்கள் அடிவயிற்றில் சீறிப் பாய்ந்து நெஞ்சைமூட்டுகிறதே. இதுஜழ் லவ்வூா? நான் உன் உட மைப் பொருளா? நீ அரசோச்சம் ராஜ்யமா? ஒருமுறை உன்னி டமிருந்து எதையோ கோபத்துடன் பிடுங்க லுந்தபோது, என்
. حس۔:: 17: بس۔

Page 16
னைக் கீழே தள்ளிவிட்டுப் பார்த்தாயே, அப்போது குதற வரும் நாயின் பைத்தியக்கார வெறி உன் கண்களில் எனக்குத் தெரிந் தது. இதுவும் காதலா? என்னை நீ மதிக்கிறாயா?
(ஸஞ்சாரி - சிறகுகள் முறியும்)
இந்நிலையில் இவ்விருவருக்குமிடையில் ஏற்படும் முரண்பாடுகள் உணர்வுச் சுழிப்புகள் என்பன அற்புதமாகக் க ைகவடிவம் பெறு கின்றன
ராஜம் கிருஷ்ணனின் "வீடு” என்ற நாவலும் இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது. குடும்பத்தின் பெண்ணின் நிலை குறித்த வினா இங்கு எழுப்பப்பட்டுள்ளது. வாழ்நாள் முழுக்க தனது உழைப்பை நல்கிய வீட்டில் தனக்கு அங்கீகாரமும் உரிமையும் இல்லை என்ற "ஞானோதயம்" ஏற்பட்டபொழுது தேவி வீட்டைவிட்டு வெளியேறு , கிறாள். இந்நாவல் நோர்வேஜிய நாவலாசிரியரான ஹென்றிக் இப் பலனுடைய பலத்த சர்ச்சைக்குள்ளான, ஒரு நூற்றாண்டுக்கு முந் திப் பொம்மை வீடு" என்ற நாடகத்தை நினைவூட்டுவது. வீட்டை விட்டு வெளியேறுதல் என்கிற இக்கருத்து கோகிலா மகேந்திரனின் ‘துயிலும் ஒருநாள் கலையும்" என்ற நாவலிலும் காணப்படுவதை இவ் விடத்தில் சுட்ட விரும்புகிறேன்.
யாழ்ப்பாணத்திற் செயற்படும் பெண்கள் ஆய்வு வட்டம் என்ற அமைப்பினால் 1986ஆம் ஆண்டு இலங்கைத் தமிழ்ப் பெண் கவிஞர் கள் சிலரின் கவிதைகள் ஒரு தொகுதியாக வெளியிடப்பட்டது. சொல்லாத சேதிகள் எனும் அத்தொகுப்பு, 11 கவிஞர்களின் 24 கவி தைகளைக் கொண்டது. பெண்களின் வெளிச் சொல்லப்படாத சில கருத்துக்களையும் உணர்வுகளையும் இவற்றில் சில கவிதைகள் வெளிப்படுத்தின.
எனது ஓராயிரம் சிறகுகளை விரிக்கவும் விண்ணிற் பறக்கவும் ஏங்கினேன்.
வானின் நட்சத்திரங்களையும் சூரியனையும் தொட்டுப் பார்க்க அவாவிற்று என் ஆன்மா.
- 18

பூமியின் பரப்புக்கு
அப்பால்
அண்ட வெளியில் ஸ்பேஸ் ஒடிசியின் விண்கலம் போல எல்லையின்றிச் சுழலவும் எண்ணினேன்.
வானிற் பறக்கும் புள் எல்லாம் நானாக மாறவும் எண்ணினேன்
ஆனால்
காலிற் பிணைத்த இரும்புக் குண்டுகள் அம்மியும் பானையும் தாலியும் வேலியும்
என்னை
நிலத்திலும் நிலத்தின் கீழே பாதாள இருட்டிலும் அழுத்தும்.
(விடுதலை வேண்டினும்:- சொல்லாத செய்திகள்)
மேற்குறிப்பிட்ட இப்போக்கு வளர்ந்து வருவதாயினும் தற்காலத் தமிழ்ப் பெண் எழுத்தாளர்களின் பொதுப்போக்கு என்று கூறமுடி யாது. பொதுப் போக்கானது அடிப்படையில் பழைய கருத்தோட் டங்களை பெண்ணினது தாழ்த்தப்பட்ட நிலையை நியாயப்படுத்தும் கருத்துக்களை மீள் உருவாக்கம் செய்வதாகவே உள்ளது.
பெண் எழுத்தாளர் முகம் கொடுக்கும் சவால்கள்
பெண்களது நிலையைத் தாழ்த்துகின்ற பிம்பங்களையும் கருத்து களையும் இலக்கியத்தில் பெண்களே உருவாக்கும் நிலையிலிருந்து விடுபடுதல் இன்றைய பெண் எழுத்தாளர்களை எதிர்நோக்கும்
-- 19 -س--

Page 17
சவால்களில் முதன்மையானதாகும். பெண்ணின் முன்னேற்றத்திலும் உயர்ச்சியிலும் அக்கறையுடையோர் என்ற வகையில் இது அவர்க ளது கடமையாகும்.
தமது படைப்புகளின் செய்தி, பொருள் குறித்து இத்தகைய ருே நோக்கு நிலை மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்வது பற்றிப் பெண் எழுத்தாளர்கள் சிந்திக்க வேண்டியிருப்பதுடன், அவற்றின் ஆக்க முறைமைகள் பற்றியும் விசேட கவனம் செலுத்துதல் வேண்டும்.
பெண் எழுத்தாளர்களின் படைப்புகள் தமிழ் இலக்கிய உலகில் அதிகளவு கணிக்கப்படுவதில்லை. இதற்கு இரு காரணங்கள் உண்டு
1, தரமான படைப்புகள் கூட, படைப்பாளிகள் பெண்கள்
என்ற காரணத்தினால் ஆண்களே ஆதிக்கம் பெற்றுள்ள விமர்சன உலகின் கவனத்தைப் பெறுவதில்லை.
2。 பெரும்பாலான பெண் எழுத்தாளர்களின் படைப்புகள் மலின மானவையாகும். இவற்றில் இரண்டாவது காரணம் குறித்து நாம் அக்கறை காட்டுதல் வேண்டும்.
பெண்கள் மலினமான, தரமற்ற இலக்கியம் படைக்கின்றனர் என் பது பொதுக் குற்றச்சாட்டு. ‘கண்ணிர் இழுப்பிகளை"த் தயாரிக்கின் றனர் என்று பேராசிரியர் சிவத்தம்பியும் குற்றம் சாட்டுவார் 6. இவை குறித்து நாம் பரிசீலனை செய்தல் வேண்டும்.
பெண் எழுத்தாளர்களில் மிகச் சிலரைத் தவிர ஏனையோர் தமது படைப்பின் பாணி, மொழிநடை, அமைப்பு ஆகிய ஆக்கம் சார்ந்த அம்சங்களில் அக்கறை காட்டுவதில்லை. இதனால் படைப் புத் தரம் குறைந்த ஆக்கங்களாகவே இவை அமைகின்றன. எடுத் துரைப்பாங்கான மொழிநடையே கையாளப்படுகிறது. ஒரே வகை யாக அமைகிற உவமைகள், வர்ணனைகள், சொற்தொடர்கள் மீண்டும் மீண்டும் இடம்பெறுகின்றன. வெவ்வேறு பாணிகட்கு ஆண் எழுத்தாளர் உதாரணம் காட்டப்படுவது போல பெண் எழுத்தாளர் கள் பேசப்படுவதில்லை. தனித்தன்மை, தனிப் பாணி என்பன குறித்து அக்கறை கொள்வோர் மிகச் சிலரே. மேலும் இவர்கள் திரும்பத் திரும்ப நாவல்களையும் சிறுகதைகளையுமே எழுதுகின்றனர். ஆரம் பத்தில் கவிதைகள் எழுதினாலும் கவிஞராக வளர்வோர் மிகக்குறைவு. கதை கூறும் மரபு நன்கு பழக்கமானது. ஆகையால் அதிகமுயற்சி யின்றி அதனைக் கையாளமுடிவதால் கவிதையில் இவர்கள் அக்கறை காட்டுவதில்லை எனலாம் கவிதை ஆழமான உணர்ச்சிச் செறிவை
~~ so with

யும், சிக்கனமான மொழிக் கையாளுகையையும் வேண்டி நிற்பதா கும். ஆழ்ந்த தேடலும், போதிய மொழிப் பயிற்சியுமின்றி வெற்றி கரமான கவிதைகளைப் படைக்கமுடியாது. (சொல்லாத சேதிகள் மூலம் இனம் காணப்பட்ட கவிஞர்கள் நம்பிக்கையூட்டுகின்றனர்) பெண் எழுத்தாளர்கள் இலக்கிய உலகில் பெருஞ் சாதனை ஆற்றாமைக்கு இரு காரணங்களைக் கூறலாம். இவற்றில் முக்கியமா னது சமூகத்தில் பெண்களுக்குள்ள கட்டுப்பாடு ஆகும். இது பெண்க ளது சிந்தனைகளையும், அனுபவங்களையும் எல்லைப்படுத்துவதாகும். பெண் பற்றி நிலவும் பழைய கருத்தோட்டங்களும், அதில் அவள் கட் டுண்டு கிடப்பதும் இந்த எல்லைப்படுத்தலுக்குக் காரணமாகின்றன. பெண் கல்வியில் முன்ன்ேற்றம் ஏற்பட்டபோதிலும் இக் கருத்தோட் டங்களே பெண்ணின் சிந்தனையையும், பெண் பற்றிய சமூக சிந் தனையையும் வடிவமைக்கின்றன, பெண் தனது முழுமையினை குடும்ப வாழ்க்கையிலேயே அடைய முடியும் என்ற கருத்தே சமூகத் தின் சகல மட்டங்களிலும் இன்னும் ஆதிக்கம் செலுத்துகிறது. தமது அன்றாடத் தேவைகளிலிருந்து "ஆத்மார்த்த ஈடுபாடு வரை பலவற்றையும் ஓர் ஆணின் அதிகார எல்லைக்குள்ளேயே அடைய முடியும் என்ற நிர்ப்பந்தம் பெண் எழுத்தாளரது அனுபவம், ஆற் றல் என்பவற்றைக் கட்டுப்பிடுத்துவதாகும். இதனால் விடயங்களின் அடி ஆழத்தை ஆராயும் விமர்சன நோக்கும், தேடலும் பெண் எழுத்தாளரிடம் மிகக் குறைவாகவே காணப்படுகிறது. எத்தனை முரண்பாடுகள்ளச் சித்தரித்தபோதிலும் நடைமுறையில் நிலவும் அமைப்பின் எல்லைக்குள்ளேயே அவர்கள் தீர்வுகளைத் தேடுகின்ற னர். சில குறிப்பிட்ட அடிக் கருத்துகளை பெண்கள் முற்றிலும் கையாள்வதில்லை. குறிப்பாக சமயம், வர்க்க முரண்பாடு, பாலி யல், என்பவற்றை விமர்சன நோக்கில் எந்தத் தமிழ் பெண் எழுத் தாளரும் ஆழமாகக் கையாளத் துணியவில்லை (அம்பை விதிவிலக்கு). இவ்விடத்தில் எகிப்தியப் பெண் எழுத்தாளரான நவால் எல் சாடவி? பின்வருமாறு கூறியுள்ளமை சிந்தனைக்குரியது.
'இம் மூன்று விடயங்களையும் தவிர்த்துவிட்டு சுயசிந்தனையுள்ள எந்த ஒரு ஆணோ பெண்ணோ ஆழமிக்க இலக்கியங்களைப் படைக்கமுடியாது. ஆனால் இவ் விடயங்கள் பற்றி விமர்சனம் செய்யத்துணியும் பெண், இவற்றைக் கையாளும் ஒரு ஆணை விட அதிகளவு அபாயத்துக்கு உள்ளாகிறார். இதற்குக் கார ணம் எமது சமூகத்தில் ஒழுக்கம் குறித்து நிலவும் இரட்டை மதிப்பீடுகளாகும்."9
27 གནམ་

Page 18
பெண்களது இலக்கிய சாதனைக் குறைவுக்கான அடுத்த கார் ணம், தமது ஆக்கத்திறனை வளர்த்துக்கொள்ளப் போதுமான ஊக கம், ஒத்துழைப்பு, வாய்ப்பு, நேரம் அவர்களுக்குக் கிடைக்காமை யாகும். எழுத்துத் தேர்ச்சி பயிற்சியில், அதிகம் தங்கியுள்ளதாகும். இப்பயிற்சிக்கான வசதிகள் பெண்களுக்கு அருகிலே உள்ளன. கலை இலக்கியங்களில் பெண்ணின் ஆக்கத்திறன் வெளிப்பாடு குறித்து எவரும் கவலைப்படுவதில்லை. குடும்பக் கடமைகளில் குழந்தை வளர்ப்பு, சமையல், வீட்டலங்காரம் ஆகியவற்றில் அவளது ஆக்கத் திறன் அதிகரித்திருக்க வேண்டுமென்பதே பொது எதிர்பார்ப்பாகும். இதனை நிறைவேற்ற முயலும்போது தனது சொந்த ஆர்வங்களை யும், திறனையும் விட்டுக்கொடுக்கும்படி நேரிடுகிறது. இந்த நிலைமை களை எழுத்தாளர்களாகிய பெண்கள் எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றனர் என்பது ஒரு பெரிய வினாவாகும்.
தொகுத்து நோக்கும்போது பெண் எழுத்தாளர்களுக்கு முன் னால் மூன்று பாரிய கடமைகள் உள்ளன.
1. இலக்கியத்தில் காலம் காலமாகப் பெண் சித்தரிக்கப்படும்
முறையை மாற்றுதல்.
2. பெண் எழுத்தாளர் தமது படைப்புத் திறனை வளர்த்தல். ஆழமும் தேடலும் உடைய படைப்புகளை உருவாக்குதல்,
3. இவற்றின் மூலம் கணிக்கப்படக்கூடிய, தரம் வாய்ந்த பெண்
களின் இலக்கியத் தொகுதியை உருவாக்குதல்.
இவை கடினமான சவால்கள்தாம். இவற்றை எதிர்கொள்ளும் வழி யில் எகிப்தியப் பெண் எழுத்தாளரின் பின்வரும் வாசகங்கள் எமக்கு உற்சாகம் தருவதாய் அமையும்.
'ஆக்கத் திறனுள்ள பெண்கள் சமூகத்திடமிருந்து பாராட்ட்ையோ ஏற்புடைமையையோ எதிர்பார்க்க முடியாது. இந்த விளக்கம் பெண்ணை எதற்கும் தயாராக்கி எதிரிகளுக்கு முகங் கொடுக்க வும் வெற்றி பெறவும் உதவுகிறது. எந்த ஒரு மனித உயிருக் கும் வெற்றி ஒரு மகிழ்ச்சிகரமான அனுபவம் என்றாலும் தோல்வி யும் கூட பயனுள்ள அனுபவமாகவே அமையும், தோல்வியை அனு பவமாக்கி "தைரியத்துடனும் நம்பிக்கையுடனும் முன்னோக்கி நடத் தல் வேண்டும் . மக்களது இதயத்தை ஊடுருவி அவர்களின் பாதிப்பை ஏற்படுத்த முடியுமாயிருப்பதே சுய சிந்தனையும் ஆக்கத்திறனுமுள்ள ஒரு பெண் கலைஞரின் அடிப்படைப் பலமாகும்.தேசிய ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் ஒழுங்கமைக்கப்பட்ட கூட்டுச் செயற்பாடே இத்தகைய பெண்களுக்கு உண்மையில் ஆதரவாக அமையும்."
- 22 -

அடிக்குறிப்புகள்
l.
இந்த புராணப் பாத்திரங்கள் நாட்டார் இலக்கியங்களில் சற்று வேறுபட்ட தன்மை கொண்டனவாக உருவாக்கப்பட் டுள்ளன. கண்ணகி காவியக் கண்ணகி போலன்றி சுயாதீன மும் துணிவும் உடையவளாகச் சித்தரிக்கப்படுகிறாள். ஆனால் அவை கூறும் அடிக்க்ருத்து நாட்டார் இலக்கியங்களிலும் செந்நெறி இலக்கியங்களிலும் ஒன்றேயாகும்.
சங்கச் சமூகத்தில் புராதன இனக்குழுத் தன்மை காணப் பட்டது என்ற கருத்தினை எஸ். வையாபுரிப்பிள்ளை, க. கைலாசபதி போன்றோர் முதலில் எடுத்துக்காட்டினர்.
பார்க்கவும்:- ர். வையாபுரிப்பிள்ளை எஸ். தமிழ் இலக்கிய வரலாறு
i. கைலாசபதி க., பண்டைத் தமிழர் வாழ்வும்
வழிபாடும்
சில இலக்கிய ஆய்வாளர், பெண்களின் இத் தொழில்களை விளையாட்டுகள் எனக் கூறினர். "சங்ககால மகளிர் உட லுக்கு உறுதியளித்து, உள்ளத்திற்கு உவகை ஊட்டி, வாழ் விற்குப் பயிற்சி நல்கும் விளையாட்டுகள் பலவற்றை விளை. யாடினர். சுனைப்பூவினைப் பறித்து மாலை தொடுத்தலும் திணைப்புனத்தில் கிளி கடிதலும், மலைவாணர் மகளிரின் விளையாட்டுகள்" என சி. ஆர். இராமச்சந்திரன் கூறுவார். இராமச்சந்திரன், சி. ஆர், சங்க காலச் சமூகம், பக். 176 பெண்களது உற்பத்தி ஈடுபாட்டையும் விளையாட்டு என வியாக்கியானம் செய்யும் இப்போக்கு, ஆராய்ச்சியில் ஆண் நிலை நோக்கு (Androentric VieW) செயற்படுவதின் விளை வாகும்.
பாரதியாரின் பெண்விடுதலைக் கருத்துகள் பற்றி பின்வரும் கட்டுரையில் விரிவாக ஆராய்ந்துள்ளேன். சித்திரலேகா, மெள. 'பாரதியும் பெண்விடுதலையம்" பாரதி பன்முகப் பார்வை 1985
சி. எஸ். லஷ்மி (அம்பை) பெண் எழுத்தாளர் மிக மலின மான இலக்கியங்களையே படைக்கின்றனர் எனர் கூறுவார் untidisabi Luxmi C, S. The Face
Behind the Mark - Women in Tamil Literature, 1984.
- 23 ー

Page 19
சிவத்தம்பி, கா. இலக்கியமும் கருத்துநிலையும், 1984,
நவால் எல். சாடவி என்ற எகிப்தியப் பெண் எழுத்தாளர் çycumarî6ör Lo60p35ı'ul İll - Gypsıh - The Hidden Face of the Eve - Women in the Arab World, Woman at Point Zero போன்ற பிரபலமான நூல்களை எழுதியவர். பெண் பற்றிய அரபுலகத்தின் கருத்துக்களை மிகக் காரசாரமாகக் கண்ட னம் செய்துள்ளார். இதற்காக இவரது நூல்களுக்கு எகிப் தில் தடைவிதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Naval E. Saadavi "மாறும் சமூகங்களில் பெண் கலைஞர் கள்" (மொழிபெயர்ப்பு) பெண்ணின் குரல், இல: 8, பக். 27
மேற்படி, பக். 28.
-- , 24 سې،

கலந்துரை
கோகிலா மகேந்திரன் : கட்டுரையாளரிடம் நாள் இரு கேள்வி களைக் கேட்க விரும்புகின்றேன். (1) சமயம், வர்க்க முரண்பாடு, பாலியல் இந்த மூன்றையும் தவிர்த்துவிட்டால் ஆழமான இலக்கியங் களைப் படைக்க முடியாது என்று ஏன் கூறினீர்கள்? (2) பெண் கள் பொதுவாக மலினமான இலக்கியங்களையே படைக்கிறார்கள் சானக் கூறுவது எவ்வாறு பொருத்தமாகும்?
மென. சித்திரலேகா: மனித வாழ்க்கையினை எடுத்துக் கொள் டால் சமயம், வர்க்க முரண்பாடு, பாலியல் இத்த மூன்றும் சமூக வாழ்க்கைக்கு அடிப்படையான காரணிகளாகும். மனிதனின் வின் றாட வாழ்க்கையினை இம் மூன்றுமே வழிமுறைப்படுத்துகின்றது. அடுத்து பெண்கள் படைத்த இலக்கியங்களை வாசித்துப் பார்க்கும் போது தரமற்றவையாகவே தென்படுகின்றன. பெண்கள் சம்பவக் கோவையாகவும், சுலோபமாகவும் எழுதுகின்றார்கள். ஆழமான இலக்கியம் படைப்பதில்லை. தொண்ணுறு வீதமானவை இவ்வாறே இருக்கின்றன என்று கூறுவேன்.
கமலினி செல்வராசன்: நான் கருத்துரையில்விடுபட்டுப்போனகிை
கருத்துக்கனை எடுத்துரைக்க விரும்புகின்றேன். சங்க காலத்தில் பெண்கள் ஓரளவு சுயாதீனம் பெற்றவர்களாகக் காணப்பட்டனர் காரணம், அத்தக்காலத்தில் சிறுநில மன்னர்கள்தாம் இருந்தன. இதனால் பெண்களுக்கும் ஆண்களுக்கும் முரண்பாடுகள் இருக்க வில்லை. இதற்கு நேர்மாறாக சோழர் காலத்திலே பேரரசர் ஆட்சி இருந்ததினால் அங்கே வர்க்க முரண்பாடு இருத்தது. பெண்களும் ழ்ேப்பட்டவர்களாக இருந்தார்கள். பெளத்த, சமண சமயங்கள் உருவானத் தொடங்கிய சங்கமருவிய காலத்திலேயே பெண்கள் இழி வானவர்களாகக் கருதப்பட்டார்கள்.
இதனால் சிலப்பதிகாரத்திலே மனைவியர் கணவர்கள் வேறு பெண்களிடம் போனாலும் திரும்பிவரின் ஏற்றுக்கொண்டனர். ஆண்கள் என்ன பிழை செய்தாலும் அதைப் பொறுத்து ஏற்றுக் கொண்டனர், ஆயினும் அந்தக் காலத்திலே பெண்களில் சிலர் கன வர் வேறு இடம் சென்று வந்தால் கதவைப் பூட்டிவைத்து கனவ
一·罗昂 一

Page 20
னைத் திருப்பி அனுப்பும் வழக்கமும் இருந்தது. திருநீலகண்டரின் மனைவி கணவன் வேற்றுப் பெண் வீட்டிற்குச் சென்றுவந்ததால் தன்னையவன் தீண்டவிடாது சாகும்வரை பிரிந்திருந்தாள். மற்றும். பதினெண் சித்தர் பாடல்கள் பெண்ணை மாசுபடுத்தும் வகையில் அமைக்கப்பட்டது. எந்தக் காலகட்டத்திலும் விதிகளும் உண்டு, விதி விலக்குகளும் உண்டு. நல்ல குடும்பத் தலைவி விதிக்குட்பட்டவள் என்றும் மற்றையோர் விதிவிலக்கானவர் என்றும் சொல்லப்பட்டது, பொருளாதார ஆதிக்கத்தினாலேயே முக்கியமாகப் பிரச்சனைகள் உருவெடுக்கின்றன.
வக்கிரமான போக்கை எழுத்தாளர்கள் காட்டக்கூடாது. குறிப் பாக, ஆண்களுக்கெதிரான வக்கிரமான போக்காக இருக்கக்கூடாது. பெண் விடுதலை என்ற பதம் ஆண்களுக்கு எதிராகப் பிரயோகிக் கப் படவேண்டியது அல்ல, சமூகத்திலுள்ள சகல ஆதிக்க அமைப்பு களுக்கும் எதிரானது பெண் விடுதலை.
ஜனாபா நயீமா சித்தீக்: இன்று கருத்துரையில் இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வடிவங்கள் பற்றி குறிப்பிடப்படவில்லை. இவை அநேக மாக 19ம் நூற்றாண்மன் பின்னர்தான் உருவாயின. சீறாப் புரா ணம் உமறுப் புலவர் இயற்றியது. இதில் முகம்மது நபி (ஸல்) அவர் களின் வாழ்க்கை வரலாறு கூறப்பட்டுள்ளது. இதில் வரும் பெண்க எளில் விசேடமானவர்கள்: அன்னை ஆமுனா, அன்னை ஹலீமா, அன்னை கதீஜா. தொடர்ந்து வெளிவந்த பல இலக்கிய வடிவங்களில் ஒன்றான செய்தூன் இஸ்லாவில் தீரப் பெண்ணாக செய்தூன் என் பவள் காட்டப்படுகிறாள். நூர் மசாலா என்ற நூலில் அறிவிற் சிறந்த ஒரு பெண் உருவகித்து காட்டப்படுகிறாள். அடுத்து, பெண் புத்தி மாலையில் பெண்களின் நிலை எவ்வாறு இருக்கவேண்டும் என்பது விளக்கப்படுகிறது. இலங்கையில் வெளிவந்த செய்நம்பு நாச்சியார் மான்மியம் என்ற நூலில் அப்துல்காதர் புலவர் காத்தான்குடியில் வாழ்ந்த ஒரு முஸ்லிம் பெண்ணை உருவகிக்கின்றார். நாட்டார் பாடல்களிலும் பலமுக்கிய பெண் உருவங்களைப் பல கோணங்களில் நாம் பார்க்கமுடிகிறது.
ஹிதாயா மஜீத். சங்ககால தமிழ் இலக்கிய நாயகிகள். உதாரண மாக கண்ணகி. சீதை, மணிமேகலை, நளாயினி போல் இஸ்லாமிய இலக்கிய நாயகிகளும் உண்டு. குறிப்பாகச் சொல்வதானால் யூசும் சுலைஹா, ஹஸஸ்பே, செயித்துன் இஸ்லா ஆகியவைகளில் வரும் நாயகிகளைக் குறிப்பிடலாம். இளம் முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் தமிழ்ப்பெண் எழுத்தாளர்களைப் போன்று முன்னேறுவதற்கு களங்

கள் தடையாகவுள்ளது. ஒரு பத்திரிகை எம்தாக்கங்களைப் பிரசுரித் தால் அடுத்த பத்திரிகை எம்மைப் புறக்கணிக்கின்றது. பெண் எழுத் தாளர்களுக்கேயுரிய ஒரு அமைப்பை உருவாக்கி பெண்கள் எழுத்துத் துறையில் முன்னேறுவதற்கு ஏற்றவகையில் ஓர் தினசரி வெளிவரு மானால் பலரது வளர்ச்சிக்கும் உரமூட்டியதாக அமையும் இல்லை யேல் பெண் எழுத்தாளர்கள் செழிப்பாக வளரும்போதே வாடவேண் டிய நிலைமை உருவாகலாம். இதைத் தடை செய்ய பெண்களாகிய நாமே ஒரு முடிவுக்கு வரவேண்டும்.
ஸகியா பரீத் ள்ங்கள் சமயத்தில் குடும்பப் பொறுப்பு பெண்க ளிடமே கொடுக்கப்பட்டுள்ளது. பெண்கள் பலவீனமானவர்களாகவே படைக்கப்பட்டுள்ளார்கள்.
வள்ளிநாயகி இராமலிங்கம்: நளாயினி குஷ்டரோகியான கணவ னைக் கூடையில் வைத்து அவன் விரும்பிய பெண்ணிடம் கொண்டு சேர்த்தமை, இவனுடன் எப்படி உறவு கொள்வது என அவள் நினைத்ததாலும் இருக்கலாமே. இதேபோல் "சிலம்புள கொண்ம”* என்று எல்லாவற்றையும் இழந்தாய், இதனையும் கொண்டு தொலை எனப் பொருள்பட கண்ணகி பேசியிருக்கலாமல்லவா? காவியங்களில் நிகழ்ந்த இவ்வாறான பல சம்பவங்களுக்கு பிற்சந்ததியில் வந்த ஆண்கள் தவறாக விளக்கம் கொடுத்திருக்கிறார்களென்றே நான் கூறுவேன்.
தர்மினி வீரசிங்கம்: கவிதை பிறக்குமிடம் கிராமம். நாம் கவி தைகளைக் கிராமத்திலிருந்தே பெறவேண்டும் இந்த முஸ்லிம் மாதர் அணி கிராமியப் பெண்களைப் பார்வையிட்டு அவர்களின் எழுத் தனுபவத்தை மேலும் தொடர்ந்து அதிகரிக்கச் செய்யவேண்டும்.
- 37 -

Page 21
பெண்ணின் தாழ்த்தப்பட்ட நிலையைமாற்றும் முயற்சி: இலக்கியம் என்ன செய்யலாம்?
- விமலாம்பிகை -
பெண்களின் பெருமளவு பிரச்சனைகளுக்கு அடிப்படையாக விளங்குவது சமூகத்தில் பெண்கள் ஆண்களிலும் குறைந்த அந்தஸ் துடையவர்களாக விளங்குவதேயாகும். ஆண்களும் பெண்களும் ஒரு வருக்கொருவர் சமமான மனிதஜீவிகளானபோதிலும் ஆணாதிக்கம் மிக்க தந்தைவழிச் சமூக அமைப்பில் பெண்கள் இரண்டாம் பட்ச "நிலையிலேயே கணிக்கப்படுகின்றனர். தந்தைவழிச் சமூக அமைப்பின் கோட்பாடுகள் மதிப்பீடுகளுக்கிணங்க உருவாக்கப்படும் பெண்கள் தம்நிலை தாழ்த்தப்பட்டிருப்பதை உணர்ந்துகொள்ளாதவர்களா கவோ, அன்றேல் உணர்வுபூர்வமாக அதனை அங்கீகரிப்பவர்களா கவோ உள்ளனர். ஆணாதிக்க சமூகத்தினால் வகுக்கப்பட்டுள்ள தமக்குரிய பாதை சரியானது என்றோ மீறத் தகாதது என்றோ எண்ணி அதனுள் முடங்கித் தீக்கோழி மனப்பாங்குடன் வாழ்வதற் குப் பெண்கள் நிர்ப்பந்திக்கப்படுகின்றார். இத்தகைய பொதுப் போக்கிற்கு எமது இலங்கைப் பெண்களும் விதிவிலக்கானவர்கள் அல்ல.
எமது சிந்தனையையும் கருத்தையும் இலட்சியத்தையும் மதிப் பீடுகளையும் உருவாக்குவதில், எ மால் படிக்கப்படுபவை, கேட்கப் படுபவை, பார்க்கப்படுபவை பெரும் பங்குவகிக்கின்றன. குறிப்பாக, இலக்கியம் - நாவல்களும் சிறுகதைகளும் வானொலி நாடகங்களும் பல்லாயிரக்கணக்கான பெண்களின் கருத்துக்களில் பாதிப்புச் செலுத்து கின்றன. சமூக முன்னேற்றத்தில் பெரும் பங்கு வகிப்பவர்களான எழுத்தாளர்கள், பெண்கள் முன்னேற்றத்திலும் தமது கண்ணோட் டத்தினைச் செலுத்தவேண்டியது இன்றியமையாதது. இத்தகைய ஆக்கங்கள் ஆணாதிக்க சமூகத்தின் கருத்துகளுக்குத் தீணி போடுவன வாகவன்றி, பெண்களின் மனதில் காலம் காலமாக உருவேற்றப்பட் டிருக்கும் தாழ்வு மனப்பாங்கையும், தவறான அபிப்பிராயங்களை யும் கண்டிப்பனவாக, அவற்றை க் களைவதற்கு உதவுவனவாக அமையவேண்டும். எதை இழந்தோம் எதைப் பறிகொடுத்தோம்
iം 88 -

என்பது புரியாமலே தம் உரிமைகளை இழந்து வாழும் பெண்களுக்கு தம் நிலையைத் தாமே உய்த்துணர்ந்து கொள்ளும் வகையில் சித் தனைத் தெளிவினை உருவாக்கவேண்டும்.
பழமையைப் பேணுகின்ற பண்பாடு பாரம்பரியங்களும் இலக்: கியங்களும் பெண்களது தாழ்ந்து நிலைக்கு ஆணிவேராக நின்று துணை போகின்றன. பெண்ணின் பிறப்பையே இழிந்ததாகக் காட்டி, அவளது ஒவ்வொரு சிறு அசைவையும் நடத்தையையும் தன் கட்டுப் பாட்டினுள்ளேயே வைத்துப் பெண்ணைச் சுயமாக இயங்கவிடாது தடுக்கும் பண்பாடு பாரம்பரியங்களும் இலக்கியங்களும் கூறுவன வெல்லாம் முற்று முழுதாக ஏற்கத்தக்கவை அல்ல மறுக்கத்தக்கவை மீறத்தக்கவை என்பதை உணர்த்தும் வகையில், பெண்களின் தன் னம்பிக்கையைத் தூண்டும் விதத்தில் படைப்பிலக்கியங்கள் உருவாக் கப்படவேண்டும்.
ஒரு ஆணுக்கு உலகமே வீடென்றும், பெண்ணுக்கு வீடே உலக மென்றும் கூறப்படும் கருத்துக்கள் பெண்களின் முன்னேற்றத்தினைப் பல்வேறு வகைகளிலும் முடங்கிக் கிணற்றுத் தவளைகளாக வாழ நிர்ப்பந்திக்கின்றன. பெண்ணுடைய இயல்பான தன்மைகள் ஒரு ஆண் அடைகின்ற எந்த ஒரு முன்னேற்றத்தையும் பெண் அடை வதற்குத் தடைக்கல்லாக விளங்குவதில்லை. எந்த ஒரு துறையிலும் நுழைந்து முன்னேறவும், வாழ்க்கையில் நான் இதனைச் சாதித்தேன் எனத் தன் வாழ்வின் பயனை அடைந்துகொள்ளவும் உளரீதியான தூண்டுதல்களை இலக்கியத்தினூடாக வழங்கலாம்.
ஆண் தனித்து நிற்பவன் என்றும், பெண் சார்ந்து நிற்கும் கொடி போன்றவள் என்றும் தனது ஒவ்வொரு வளர்ச்சிப் பருவத் திலும் ஒவ்வொருவரைச் சார்ந்தே வாழ்பவளாகவும், அறிவு பூர்வ மாகச் சிந்திக்க முடியாதவளாகவும் எமது பழைய இலக்கியங்கள் காட்டும் சமுதாயக் கருத்துகள் பலவும் நடைமுறைக்கு முற்றிலும் பொருந்துவனவாக அமைவதில்லை என்பதை நாம் அறிவோம். ஆகவே நடைமுறையில் நாம் காணும் தனித்து நின்று தனித்தன்மை யுடன் தம்மை வளர்த்துக்கொண்ட பெண்களை, தகுந்த நேரத்தில் அறிவுபூர்வமாக முடிவெடுக்கும் பெண்களைப் படைப்பிலக்கியங்களில் பாத்திரங்களாக நடமாடவிட்டு, அத்தகைய கருதுகோள்களின் நம் பத்தகாத தன்மையை இனங்காட்டிச் சிந்திக்கத் தூண்டவேண்டியது இலக்கியகர்த்தாக்களின் கடமையாகும்.
இலக்கியங்களில் தாய்க்குலமென்று ஏற்றிப் போற்றும் பெண் களை நடைமுறை வாழ்வில் நாலடி பின் தள்ளி வைப்பதையும்,
-سسه امر 39 سسه

Page 22
நாளாந்த உலகியல் பிரச்சனைகளே இல்லாதவர்களாக, மெல்லிய லாளராக மென்மையான உணர்வுகளின் இருப்பிடங்களாகப் படைக் கப்படும் அதே பெண்கள் அன்றாட ஜீவனோபாயத்திற்காக அல்லற் படும் நடைமுறைகளையும் நாம் தரிசிக்கின்றோம். போலியான கற் பனை உலகில் சஞ்சரித்து, எதிர்பார்ப்புகளை உருவாக்கி ஏமாற்ற மடையும் வகையிலன்றி, நடைமுறை வாழ்வில் வீட்டிலும் வேலைத் தலத்திலுமாக இரட்டைச் சுமைகளிடையே கடினமாக உழைக்கும் பெண்களை, ஆண்களுக்குரியனவெனக் கருதப்படும், சைக்கிள் திருத்து தல் முதலான வேலைகளில் ஈடுபடும் பெண்களைச் சித்திரித்து நடை முறை வாழ்வின் பிரச்சனைகளை உணர்ந்துகொள்ளவும், அவற்றிற் கான தீர்வுகளைச் சிந்திக்கவும் தூண்டும் வகையில் இலக்கியங்கள் உருவாக்கப்படவேண்டும்.
ஒட்டுமொத்தமாக நோக்கும்பொழுது ஒரு பெண் வளரும் சூழல், வளர்க்கப்படும் விதம் அவள் பெறும் அனுபவங்களே அவளைத் தன் னம்பிக்கையற்றவளாகவும், சார்ந்து வாழ்பவளாகவும், உணர்ச்சிவசப் படுபவளாகவும், இவற்றின் மூலம் ஆணிலும் தாழ்ந்தவளாகவும் உருவாக்குகின்றன. பெண் எல்லா வகையிலும் ஆணுக்குச் சமமான மனிதஜிவி என்பதை இலக்கியங்களினூடாகப் படம் பிடித்துக் காட் டிப் பெண்களின் மனநிலையில் பெருமளவு மாறுதல்களை உடனடி யாக ஏற்படுத்த முடியாவிடினும் அந்த வகையில் சிந்திப்பதற்குரிய சிறு பொறியையாவது தூண்டிவிட நிச்சயமாக இலக்கியங்களால் முடியும். பெண்களின் நிலையை, அவர் தம் பிரச்சனைகளை பெண் களாக இருந்தே கண்டு, கேட்டு அனுபவித்து வரும் பெண் எழுத் தாளர்கள் (எழுத்தாளிகள்) இவ்வகையில் சிறப்பான பங்களிப்பினை
ஆற்றமுடியும்.
- 30 m

காண்பதும் கேட்பது - வெகுஜனத் தொடர்பு சாதனங்களில் பெண்களின் உருவகங்கள்
சாந்தி சச்சிதானந்தம்
இன்றைய உலகில் பெண்கள் :ெகிக்கும் படிநிலை, பரந்த அள வில் பல பரிமாணங்களில் விவாதிக்கப்பட்டு வரும் ஒரு விடயமாகும். விசேடமாக, கருத்துக்கள் மற்றும் கலாச்சாரப் பரிமாற்றங்களை மிகுந்த அளவில் ஏற்படுத்தும் சக்தி வாய்ந்த கருவிகளான வெகு ஜனத் தொடர்பு சாதனங்களில் பெண்கள் எவ்வாறு உருவகிக்கப் படுகின்றனர் என்பதில் பலரது கவனமும் ஈர்ந்திருக்கின்றது.
தொடர்பு சாதனங்கள் என்பன, செய்திகள், தகவல்கள், விளம் பரங்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் போன்றவற்றைத்தரும் ஊட கம் ஆகும். இவை, கவிதை, கட்டுரை, நாடகம், ஆய்வு, பாட்டு, கதை எனப் பல்வேறு உருக்களில் வெளிவரலாம். ஒரே சமயத்தில் பல்லாயிரக்கணக்கான மக்களைச் சென்றடையும் ஊடகங்களை வெகு ஜனத் தொடர்பு சாதனங்கள் எனக் குறிப்பிடுகின்றோம். பொது வாக பத்திரிகைகள், வானொலி, திரைப்படங்கள், தொலைக்காட்சி ஆகியன வெகுஜனத் தொடர்பு சாதனங்களாகக் கணிக்கப்படுகின்றன. எமது சாதாரண பேச்சு வழக்கில் தொடர்பு ஊடகங்கள் எனக் கூறும்போது வெகுஜனத் தொடர்பு சாதனங்களையே குறிக்கும் அளவிற்கு அவை இன்று பிரபல்யம் அடைந்து விட்டன.
1972ல் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் ஆணைக்குழு, "பெண் களின் அந்தஸ்து" என்ற தலைப்பின் கீழ் வெகுஜனத் தொடர்பு சாதனங்களில் பெண்களின் நிலைமை தொடர்பாக முதன் முதலில் வெளியிட்ட அறிக்கையினைத் தொடர்ந்து இதனையொட்டி ஏராள மான அறிக்கைகளும், ஆய்வு நூல்களும் இதுவரை வெளிவந்துள்ளன. பெண்கள் தொடர்பு சாதனங்களின் துறைகளில் வேலை செய்பவர் கள் என்பதனாலும், அதன் படைப்புக்களில் பங்கேற்பவர்கள் என்பத னாலும், அப்படைப்புக்களை நுகர்வோரில் அடங்குவதனாலும், இந்த மூன்று நிலைகளையும் குறித்து இவை அலசி ஆராய்ந்தன. இவ் ஆய்வுகளில் கொடுக்கப்பட்ட புள்ளிவிபரங்கள் நம்மைத் திகி லடையத்தான் செய்தன. இவற்றின் நோக்கின் சாராம்சம் பின்வரு
DIT DI
-- s1 -

Page 23
-உலகின் எந்நாட்டிலும் திரைப்படத்துறை, ஒலி/ஒளி பரப்புத் துறை, பத்திரிகைத் தொழில் (Journalism) ஆகியவற்றில் தொழில் பாரிக்கும் பெண்களின் எண்ணிக்கை முழு எண்ணிக்கையிலும் 30 சத வீதத்துக்கு உட்பட்டதாகும். அதிலும், செயல்திட்ட முடிவுகள் எடுக் கப்படும்- இயக்குனர் மட்டங்களிலே 10 சதவீதத்திற்கும் குறை வாகவே பெண்கள் இருக்கின்றனர். இதுமட்டுமன்றி சமவேலை வாய்ப்புகளின்றியும் அல்லலுறுகின்றனர். கூடிய வருமானமும், அற் தஸ்தும் உள்ள வேலைப்பிரிவுகள் முக்காலும் ஆண்களுக்கே யளிக்கப் படுகின்றன. இதனால் பெண்கள் குறைந்த வருமானம் பெறுவதோ டல்லாது பதவி உயர்வு பெறும் சந்தர்ப்பங்களையும் இழந்து விடு கின்றனர்.
-தொடர்பு ஊடகங்களின் படைப்புக்களில் ஆண்களுக்குக் கொடுக்கப்படும் நேரத்தில் பத்திலொருபங்கே பெண்களுக்குத் தரப் படுகின்றன. இங்கு ஆண்களும், பெண்களும் அவர்களின் பாரம்பரிய பங்கு நிலைகளின் (role) உருமாதிரியாகவே பொதுவாக சிருஷ்டிக்கப் படுகின்றனர். இதில் பெண் பற்றிய படிமம் (image) எதிர் மறைத் தன்மைகள் பொருந்தியதாகவும், சிறுமைப்படுத்தலுக்குரியதாகவும் இருக்கின்றது:
-பெண் நுகர்வாளர்கள் தொடர்பு சாதனங்கள் தரும் படிமங் களை உள்வாங்குகின்றனர். இதனைச் சாத்தியமாக்க பெருமளவில் தம்முடைய நேரத்தினையும், பணத்தையும் செலவழிக்கின்றனர்:
இதன் விளைவாக நமது நாட்டிலும் ஏனைய நாடுகளிலும் பெண் கள் ஸ்தாபனங்கள் தொடர்பு சாதனங்களைத் தம் பிரசாரக் கருத்து களில் ஒன்றாக எடுத்துக்கொண்டன. இவை தெரிவித்த கண்டனம் களுக்கெல்லாம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்தும், எழுத்தாளர் களிடமிருந்தும், தயாரிப்பாளர்களிடமிருந்தும், விளம்பரதாரர்களிட மிருந்தும் வைக்கப்பட்ட எதிர்வாதம் : நாம் மக்களின் நடைமுறை களையே பின்பற்றுகின்றோம். அவர்கள் விரும்பும் படைப்புக்களையே அளிக்கின்றோம் என்னும் ரீதியில் இருந்தது. அன்றாட வாழ்வின் தரவுகளும் இந்த வாதத்தை ஆதரிப்பனவையாகவே இருந்தன. பெண் களை பாலியல் நுகர்வுப்பண்டங்களாக்கும் ஆபாசச் சஞ்சிகைகளும், மசாலாப்படங்களும் வியாபாரரீதியில் வெற்றிகளைக் குவிப்பதை நாம் பார்த்திருக்கின்றோம் தானே. தொடர்பு சாதனங்களை மாறச் சொன்னால் அவை சமுதாயத்தின் மேல் பழியைப் போட்டன. பெண் கள் ஸ்தாபனங்களோ, சமுதாயம் மாறாதிருக்கும் பழியை தொடர்பு சாதனங்களின் மேல் சமத்தின. கோழியில் இருந்து முட்டையா

முட்டையில் இருந்து கோழியா எனப் பொதுமக்கள் குழம்பித் தவிக்க: லாயினர். பெண்களுக்கென சில படிமங்கள் உருவாக்கப்பட்டிருக்கின் றனவா, அல்லது நடப்பியலைத்தான் தொடர்பு ஊடகங்கள் காட்டு கின்றனவா என்றும், ஒரு அர்த்தமுள்ள சமூகமாற்றத்தை வெகுஜனத் தாடர்பு சாதனங்கள் கொண்டு வருவது சாத்தியமா என்பதுமான கேள்விகளைச் சற்று ஆழமாக ஆராயப் புகுவோம்.
சென்ற 19ம் நூற்றாண்டில் மனிதவரலாற்றினைப் பற்றிய புது கருத்துப் படிவம் (Concept) ஐரோப்பாவில் உருவாகி உலகெங்கும் பரவியது. ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையும் அவன் மீதான சமூ கப் பொருளாதார தாக்கத்தின் கூட்டு என நிறுவப்படலாயிற்று, இதன்படி மனிதசமுதாயத்தின் வளர்ச்சி, நாகரீகத்தின் தோற்றங் கள், சாம்ராஜியங்களின் எழுச்சியும், வீழ்ச்சியும், புதிய மதக்கோட் பாடுகளின் ஆரம்பங்களும் வளர்ச்சியும் என, இவ்வுலகின் நிகழ்வுகள் சகலதுமே அந்தந்த காலகட்டத்தில் அச்சமூகங்களின் உற்பத்திச் சக்திகளின் உறவுமுறைகளில் ஏற்பட்ட மாற்றங்களின் விளைவாக நிகழ்ந்தவையேயன்றி தான்தோன்றியாக உதித்தவையல்ல எனத் தர்க்க ரீதியாக நிறுவப்பட்டது. அடிமைகள், உழைப்பு சுரண்டப் பட்ட தொழிலாளிகள், ஆக்கிரமிப்புக் குட்பட்டு இனவாதத்தால் நக்க்கி நலிந்து போயிருந்த காலனித்துவ நாட்டோர் போன்ற ஒடுக்கு முறைக்கு ஆளாக்கப்பட்ட மக்கள் குழுக்கள் முதன் முதலாகத் தம் நிலை உணரத்தலைப்பட்டனர்; உரிமைக்குரல் ஐஎழுப்பினர். இதே காலக்கட்டத்தில்தான் சொத்துரிமை, வாக்குரிமை, கல்வியுரிமை போன்ற வாழ்வின் பல அடிப்படை உரிமைகளையும் இழந்து தாயாய், மனைவியாய், தாதியாய் வாழ்நாள் முழுவதும் உழைக்கும் பெண்களை நோக்கி கவனம் திசை திரும்பியது. பெண்களின் ஒடுக்கு முறையின் விஞ்ஞானத்துவ விளக்கம் உருவாயிற்று, பெண்களும் முதன்மூறையாகத் தம்நிலை உணரத் தலைப்பட்டனர்.
ஆயினும் பெண்களின் பிரச்சினை ஏனைய ஒடுக்கப்பட்ட மக்க ளின் பிரச்சினைகளை விடச் சிக்கலாக இருந்தது. அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட குழுவொன்றைச் சேர்ந்த மனிதன் தன்குடும்பம், தன்சுற்றாடல், தன் சமூகச் சூழல் என்ற தனது சூழமைவினைக் கடந்து வெளியில்தான் தன் அடக்குமுறையாளர்களைச் சந்திக்கின் றான்; அவர்களுடனான சமூக உறவு முறைகளை ஸ்தாபிக்கின்றான். ஆனால் பெண்ணோ பிறந்த மாத்திரத்தே முதலில் தன் தந்தையு டனான உறவிலும் பின்பு சகோதரன், ஏனைய ஆண் உறவினர்கள், கணவன் Lo 56ör எனத் தன் உடனடிச் சூழமைவினுள்
--بر 33 ــــــــ

Page 24
ளேயே தான் ஆண்களுடன் கொண்ட உறவுகளில் ஆதிக்கத்திற்குள் ளாக்கப்படுகின்றாள். இதனால் தன்ன: மை நிலை மற்றெந்த மக் கள் குழுக்களையும் விட பெண்களுக்கே கூடுதலாக அகப்படுத்தப் படுகின்றது. உதாரணத்துக்கு, கறுப்பர்கள் வெள்ளையருக்கு இரண் டாம் பட்சமாக இருக்கும் வண்ணமே ஆண்டவன் படைத்திருக்கின் றான் என்னும் கூற்றினை ஆதரிக்காதவர்கள்கூட பெண்ணை ஆணுக்கு இரண்டாம் பட்சமாகத்தான் இயற்கை உருவாக்கியிருக் கின்றது எனத் தயங்காமல் வெளியிடுவார்கள், பெண்கள் உட்பட. ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் ஆணைக்குழுவின் 1972ம் ஆண்டு அறிக்கையில் 'ஆண்களினதும் பெண்களினதும் 193தில் ஆழமாக வேரூன்றிய சிந்தனைப் போக்குகளே (இந்த விடயத்தில்) முன்னேற் றத்திற்கு ஆகப் பெரிய தடைக்கற்களாக இருக்கின்றன" எனக் குறிப்பிடப்பட்டது. இந்தச் சிந்தனைப் போக்குகளை வழிப்படுத் தும் முக்கிய காரணிகளாக
1) சமூகத்தின் பாரம்பரிய நடைமுறைகளும்,
2) வெகுஜனத் தொடர்பு சாதனங்களும், எடுத்துக் கூறப்பட்டன. வெகுஜனத் தொடர்பு சாதனங்களின் பங்குநிலையின் தன்மை உணர்ந்தே, குறிப்பாக இளம் சிறார்களின் சமூ சமயப்படுத்தலில் அவை வகிக்கும் முக்கிய பங்கினை கருதியே பெண்கள் ஸ்தாடனங் களும் வேறு முற்போக்கு இயக்கங்களும் இவற்றினைக் கடும் விமர் சனத்திற்கு உள்ளாக்குகின்றன. மேலும், ஒரு அரசியல் நிகழ்வினைப் பற்றியோ நாட்டு நடப்பினைப் பற்றியோ பொதுமக்களின் அபிப்பிராயங்கள் வெகுஜனத் தொடர்பு சாதனங்க ளின் ஆளுமையினால் மாற்றப்படக் கூடும் எனவும் தீர்க்கமாக நிறு வப்பட்டிருக்கின்றது. (நெல்லே நியூமன் : 1981), மனிதர்கள் சமுக விலங்குகள், அவர்கள் தம்முடையே சமூக வட்டத்:ள் உள்ளவர்க ளுடன் ஒத்துப்போகவே எத்தனிப்பர். தாம் எந்தச் சூழலில் இடப் பட்டாலும் அங்கு என்ன அபிப்பிராயங்கள் மேலோங்கி இருக்கின் றன, எவ்வித நடத்தைகள் ஏற்கப்படுகின்றன எனத் தொடர்ந்து அவதானித்து அந்தப் போக்கில் தாமும் மாறவே முயலுவர். தொடர்பு ஊடகங்கள் ஒரு கருத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் போது அதற்கு எதிர்க்கருத்தினை கொண்டிருக்கும் தனிமனிதர்கள் தம் நாட்டில் பெரும்பான்மையினராக இருந்த போதிலும் அதனை உணராது முன்னைய அபிப்பிராயம் தான் பிரபலம் போலும் என எண்ணிப் பயந்து வாளாவிருப்பர். இவர்களின் மெளனத்தினால் தொடர்பு ஊகங்களில் தரப்படும் கருத்து இன்னும் ஆணித்தரமாக வெளியிடப்படுதலுடன் அக்கருத்தினை ஆதரிப்பவர்களுடைய குரலும் ஓங்குகின்றது. ஈற்றில், முன்னம் எதிர்க்கருத்தினை கொண்டிருந்த
- 34 -

விர்களும் இவ்வளவு ஆதரவினை பெற்றிருக்கும் அபிப்பிராயம்தான் சரியானது என நினைத்து அதனை தாமும் ஆதரிப்பர். அபிப்பிரா யங்களை தோற்றுவிப்பது சமுகமாற்றம் இல்லையெனினும் அம்மாற் றத்திற்கு வழிகோலும் ஒரு முக்கிய காரணி என்பதனை நாம் கருத்திற் கொள்ள வேண்டும்.
மேலோட்டமாக நோக்கின், தொ.ர்பு சாதனங்கள் பொரு ளாதார ரீதியிலும், அரசியல் ரீதியிலும் தொடர்ந்து சீவித்திருப்பதற்கு அதிகளவு ரசிகர்கol/நுகர்வேயின் ஆதரவினை நம்பியிருப்பதால், பெரும்பால் மை மக்களது சமூக மதிப்பீடுகளையே பிரதிபலிக்கின் றன என்பது போல் தோற்றும். தொடர்பு சாதனங்கள் சமுதா யத்தில் ஆளுமை கொண்ட மதிப்பீடுகளின் பிம்பமாக இருப்பத னால் இந்த சமுக அமைப்பினை மேலும் ஸ்திரப்படுத்துகின்றன என்பதென்னவோ உண்மை. ஆனால், இவை தவறான படிமங்களை உருவாக்குகின்றன என்றெல்லவோ குற்றச் சாட்டுகள் வீசப்படுகின் றன, இக்கூற்றில் உண்மை எவ்வளவு? எதற்காக ஒரு மக்கள் குழு வினரைப்பற்றிய போலிப்படிமங்களை உருவாக்க வேண்டும். இந்த இடத்தில் திரும்ப ஒருபடி பின்நோக்கி நகர்ந்து நாம் ஒடுக்கப்பட்ட மக்களின் சில சமூக நடப்பியல்களினை நோக்குவோம்.
ஒடுக்கப்படுதலின் கருவம்சம் என்னவெனில் ஒடுக்கப்பட்டவர்கள் தமது வாழ்க்கையை தாமே நிர்ணயிககுபு தகைமை பறிக்கப்பட்ட வர்கள் என்பதே. இவ்வாறு பறிக்கப்படுதலின் விளக்கம் பறிப்பவர் களினால் கொடுக்கப்படுவது அவசியமாகின்றது. இதற்காக அந்த ஒடுக்கப்பட்ட மக்களை வேறு இழித்த குணாம்சங்களைக் கொண்டமக்க ளாக உருவகித்துஇத்தன்மைகளினாற்தான் இத்தகைமை பறிக்கப்பட்ட தென விளக்குவர்; புதுநிஜங்களைஉருவாக்கி அதனை ஒடுக்கப்படுபவர்க ளுக்கு ஊட்டுவர். இதன் மூலமே இந்த சமூக அமைப்பினை கட் டிக் காத்திட இயலும். இதற்கு சிறந்த உதாரணமாக பிராண்ட்ஸ் ஃபனன் என்னும் மனோவியலாளர் ஆபிரிக்கா வெள்ளையரின் ஆதிக் கத்திற்கு உட்பட்டிருந்த காலகட்டத்தில் ஆபிரிக்கர்களைப் பற்றி ஆராய்ந்து கூறியதைக் காட்டலாம்.
வெள்ளையர்கள், கறுப்பர்களே உலகின் தீமைகளின் சாரம் என்றனர். இவர்கள் நாட்டு நடப்பினைக் கொண்டு செலுத்தும் திறமையற்றவர்கள் என்பதனால்தான் மட்டுமே வெள்ளையர்கள் இவர்களுக்காக அரசு அமைத்து உதவி செய்யும் பொருட்டு நாட்டை ஆள்கின்றனர் என்றார். வெள்ளையர்கள் கறுப்பர்களை ஆளும் இந்தவொரு உண்மையே வெள்ளையர்கள் கறுப்பர்களை விட
- }) -

Page 25
மேம்பட்டவராக படைக்கப்பட்டிருக்கின்றனர் என்பதனை நிறுவப் போதுமானது என்றும் தர்க்கித்தனர். கறுப்பர்கள் எல்லோரும் அவரவர் இடத்தில் வைக்கப்பட வேண்டியவர்கள், உயர்பதவிகளும் அதிகாரங்களும் கொடுக்கத் தகுதியற்றவர்கள் என்றும் கூறினர். இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் கறுப்பு நிறம் அவலட்சண மானது, பலவீனமானது என இயற்கையில் தோனறிய சில உயிரியல் குணாம்ச வித்தியாசங்களையே அது உயர்ந்தது இது தாழ்ந்தது என வகுத்து, தமது பலாத்காரக் கருத்தியல்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தினர்.
தமது பத்துக்கோடி வருட வரலாற்றில் முதல் முறையாக கறுப் பர்கள் தம்மை இந்த உருவில் கண்டிருக்கவேண்டும். பாடசாலைகளில் அவர்களுடைய புதிய (திருத்திய) வரலாறுகள் அவர்களுக்கே போதிக்கப்பட்டன. வெள்ளையர்களின் தலைமையின் கீழ் தமது வாழ்க்கை முறைகளை செப்பனிட்டு அன்புடனும், பொறுமையுட னும், வாழப் பழகவேண்டும் என (வெள்ளை) மதபிரசாரகர்களிடம் பிரசங்கம் கேட்டனர். பத்திரிகைகளைத் திறந்தால் கொட்டை எழுத்துகளில் 'கறுப்பு காமுகன் வெள்ளைக் கன்னியை கற்பழித் தான்’ என்றோ 'கறுப்பர்கள் இருவர் ஒருவரை ஒருவர் கோடலி யால் பிளந்தனர்" என்றோ செய்திகள் வாசித்தனர். இச் செய்தி களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவமும் ஒன்றைப் பத்தாக்கி திரிபு படுத்திக் கூறிய விதமும், அக் கால செய்திகளைக் கேட்டவர்களை கறுப்பர் எந்நேரமும் பொறாமையுற்று தமக்குள்சச்சரவிடுகின்றவர்கள் என்றும், சமயம் கிடைக்கும் போதெல்லாம் வெள்ளைக் கன்னியரை கற்பழிப்பவர் என்றுமே தப்பபிப்பிராயம் கொள்ளவைத்தது. வெள்ளையருக்கும் கறுப்பர்களுக்குமிடையிலான இந்த அதிகாரவைப்பு முறை பொருந்திய உறவு இன்னும் சில நூற்றாண்டுகளுக்கேனும் இவ்வாறாகத் தொடர்ந்திருந்தால் இன்று பைபிள் வேத நூலானது இறைவன் முதலில் வெள்ளை ஆணைத் தன் உருவில் படைத்து பின். அவன் விலா எலும்பொன்றை எடுத்து கறுப்பு ஆணைப் படைத்தான் எனக்கூட கூறும் நிலை உருவாகியிருக்கலாம்.
மேற் கூறிய ஒவ்வொரு நிலைமைகளிலும் கறுப்பர்கள் என்பதற் குப் பதிலாக பெண்கள் என்ற சொல்லையும், வெள்ளையர்கள் என் பதற்குப் பதிலாக ஆண்கள் என்ற சொல்லையும் புகுத்தி நோக் கினால் இன்னமும் அவை எங்கள் நிகழ்கால யதார்த்தங்களை சித் தரிப்பவையாக இருப்பதைக் காணலாம். ஆயினும் இவற்றில் இரண்டு சந்தர்ப்பங்களில் சிறிய வேறுபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. கறுப்பர்களைப் போல் அல்லாது பெண்கள் மற்றக் கடமைகளுடன்
= 88 =

ஆண்களின் உடற்பசியையும் தீர்க்கவேண்டியவர்களாகின்றனர். இத னைாலேயே பெண்மை அவலட்சணம் எனப்படாது அழகு என வர் னிக்கப்படுகின்றது. இன்னும் சொல்லப்போனால் அழகாக இருப் பதே அதன் ஒரே கடனெனக் கூறப்படுகின்றது. இதே போல், பொது வாகப் பெண்கள் ஆண்களைப் பலாத்காரம் செய்வதில்லையாதலி னால் இத்தகைய பலாத்காரச் சம்பவங்களில் எவ்வாறு பெண்களின் மேல் பழியை ஏற்றலாமென ஆலோசித்து, "அழகைக்காட்டி உடை உடுத்து தெருவில் சென்ற மாது கற்பழிக்கப்பட்டாள்"எனச் செய்தி கள் வெளியிடப்படுகின்றன. குறைந்தஅடைகளைப் பெண்கள் அணி வதனாலேயே ஆண்கள் பலாத்காரம் செய்யும் நிலைமைக்குத் தள் ளப்படுகின்றனர் என எமக்கு சூசகமாக உணர்த்தப்படுகின்றது. இதனை மேலும் விளக்குமுகமாக கற்பழிக்கும் ஆணின் ஆண்மை யினையும் வீரியத்தினையும் பெண்கள் விரும்புகின்றனர் எனவும் அபத்தமான சமூகவியல் சித்தாந்தங்கள் சஞ்சிகைகள் ஊடாகத் தரப்படுகின்றன. வெள்ளையர்கள் ஆளுவதை கறுப்பர்கள் விரும்பு கின்றனர் என்ற கூற்று இந்தக் கூற்றில் இருந்து எவ்விதத்திலும் மாறுபாடானதல்ல. ஆகையினால் பெண்கள் அகப்படுத்தலுக்கென்றே உருவாக்கப்பட்ட போலிப்படிமங்களை வெகுஜனத் தொடர்பு சாத னங்களுக்கூடாக எமது ஆளும் வர்க்க | ஆண் கும்பல்கள் தருகின் றனர் என்பது தெளிவு.
இதுவரை பெண்கள் பிரச்சினை பற்றியும் வெகுஜனத் தொடர்பு சாதனங்கள் பற்றியும் பரந்து நோக்கினோம். இனி இலகுவில் அடக்கியாளக் கூடிய வகையில் உருவாக்கப்பட்ட பெண்களின் படி மங்களைக் குறிப்பாகக் கவனிப்போம். இங்கு கூடியவரையில் படி மங்களின் குணாம்சங்களையொட்டியே தொடர்பு சாதனங்களின் உதாரணங்களும் எடுத்தாளப்பட்டிருக்கின்றன.
தொடர்பு சாதனங்களில் பெண்கள் உருவகிக்கப்படும் தன்மை பற்றிய கருத்துரைகளில் விளம்பரங்கள் முக்கிய இடம் வகித்தலை நாம் அவதானிக்கலாம். விளம்பரங்கள் காரண காரியம் காட்டு பவையல்ல, தர்க்கரீதியாக ஒன்றை விவாதிப்பவையல்ல. அவை எமது உணர்வுகளை, எண்ணப் பதிவுகளைத் தாக்குவன: எமது கனவுகளை யும் வேட்கைகளையும் தேவைகளாக மாற்றும் திறன் படைத்தன. அவை பார்வையாளர்களின் உள் மனத்தின் கற்பனை உலகையும் ffntasies) மூட நம்பிக்கைகளையும், சீண்டி விடுவதனால் அவற்றிட மிருந்து தம்மைக் காப்பாற்றிக் கொள்ளவோ தூர விலகிக் கொள் ாவோ அவர்கள் இயல்பற்றுப் போகின்றனர். ஆகவே விளம்பரங்கள் ாமது சிந்தனைகளில் கூடிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்கிறார்
سسس- 37 س

Page 26
கள் மனோவியலாளர்கள். குறிப்பாக தொலைக்காட்சியில், கவர்ச்சி யான காட்சிகள் இனிய இசையின் பின்னணியுடன் ஒன்றுமாறி ஒன் றாக பெட்டியில் தோன்றி சிறியவர்களை ஈர்ப்பதனால் இவை அவர்களின் சமூகமயப்படுத்தலில் பெருந் தாக்கத்தை ஏற்படுத்துகின் றன என்கின்றனர். ஒரு மூன்று வயதுச் சிறுமி ஒருமுறை தன் தாய் தந்த மைலோ பானத்தைப் பருக மறுத்துவிட்டாள். எவ்வளவோ வற்புறுத்தியும் அவள் பசியவில்லை. ஈற்றில் எத்தனையோ மன் றாட்டங்களுக்குப் பின்பு அச் சிறுமி பையன்கள்தான் மைலோ அருந்துவார்கள் என டிவியில் பார்த்தேன் என்றாளாம்.
எமது பத்திரிகைகளிலும் தொலைக்காட்சியிலும் வரும் விளம் பரங்களில் நூற்றுக்குத் தொண்ணுரறு வீதம் பெண்கள் வீட்டின் சூழ லில், சலவைத்துரள் உபயோகித்துத் துணி துவைப்பவர்களாகவும் விதவித பானங்கள் கரைத்துக் கொடுட்பவர்களாகவும் இரண்டு நிமி டங்களில் நூடில்ஸ் தயார் செய்து தருபவர்களாகவும் காட்டப்படு கின்றனர். அன்றிலிருந்து இன்றுவரை வீட்டுப்பொறுப்புகளை சுமப் பவள் பெண்தானே எனவே அவளுக்குத்தான் விம்மையும் ரின்ஸோ வினையும் மகி நூடில்ஸ்னையும் விற்கின்றோம் என்கின்றனர் விளம் பரதாரர்கள். அப்படியானால் ஸ்டீரியோ செட் விளம்பரம் எனில் ஒரு ஆண்வந்து அதன் சிறப்புகளைத் தன் மகனுக்குக் கூறும்படியாகக் காட்டுவது ஏனோ? அதுகூட வீட்டின் ஒரு பாவனைப் பொருள் அல்லவா? இதனையும் ஒரு குடும்பத்தலைவி சிபாரிசு செய்யக் கூடாதா? இங்குதான் பெண்களைப்பற்றிய உருவகங்கள் பற்றிச் சிந் திக்கத் தூண்டுகிறது. எங்களுக்கு நாசூக்காகத் தரப்படும் செய்தி என்னவெனில் வீட்டின் வேலைக்கருவிகளைப் பெண்கள் தாம் உப யோகிக்க வேண்டும்; பொழுதுபோக்கு சாதனங்கள், அதுவும் தொழில்நுட்பத் தரத்தில் உயர்ந்தது என நாம் தொடர்பு படுத்தும் எலக்ட்ரோனிக் சாதனங்கள் ஆண்களுக்குரியது என்பதாகும். பெண் கள் பெருமளவில் வேலைக்குச் செல்லும் இக்காலங்களில், ஆண்கள் வீட்டு வேலைப்பொறுப்புகளை சரிசமமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கோரப்படும் இந்நாட்களில், இம்மாதிரி விளம்பரங்கள் தேவைதானா?
விளம்பர உலகின் பேச்சுவழக்கில் ஆண்குரலினை 'அதிகாரத் திற்குரிய குரல்" என்றுதான் குறிப்பிடுவார்கள். வானொலியில் ஒலி பரப்பாகும் விளம்பரங்களில் அநேகமான பொருட்கள் ஆண் குரல் களினாற்றான் சிபாரிசு செய்யப்படுகின்றன. சஞ்சிகைகளிலும் (குறிப் பாக வெளிநாட்டு ரகங்கள்), ஆண்களைக் காட்டும்பேர்து திறந்த வெளிகளில் கார், குதிரைச் சவாரியில் ஈடுபடுவதாகவே அனேகமாக
- 38 -

இருக்கும். பெண்களை, ஒரு அறையினுள் சாய்வு நாற்காலியில் அமர்ந்தபடியோ அல்லது நின்றபடியோ அவர்களின் கவர்ச்சி தெரி யும் வண்ணம் குளோஸ்அப்களில் காட்டுவார்கள். வேற்றுக் கிரகத்தி லிருந்து ஒரு மனிதன் வந்தால் நமது விளம்பரங்களைப் பார்த்து விட்டு இன்றைய உலகில் பெண் கள் பொருளியலாளர்களாகவும் சமூகவியலாளர் 1ளாசவும், வைத்தி:ர்களாகவும், பொறியியலாளர்க ளாகவும் பல்:ேறு துறைகளில் பெருமளவு புகுந்திருக்கின்றனர் என் பதனை அறிய முடியுமா? விளம்பர ஸ்தாட!னத்தின் உரிமையாளர் ஒருவர் கூறுகின்றார், "சமூக மதிப்பீடுகளை மாற்றுவது விளம்பரங் களின் நோக்க மல்ல. பாவனையாளர்கள் சுவாரசியமாகக் கருதக் கூடிய முறை 1ளில் பொருட்களுடனும் சேவைகளுடனும் அவர்களைத் தொடர்புறச் செய்து அவற்றினை விற்க உதவுவதே விளம்பரங்களின் கடமை." ஆண்களையும், பெண்களையும் நடைமுறை யதார்த்தங் கள் எவ்வாறாக இருப்பினும், அவரவர் பாரம்பரிய பங்குநிலைகளில் காண்பிப்பது தானா சுவாரசியமான முறை? அப்படியானால் அப் படிக் காண்பிக்காத விளம்பரங்கள் தோல்வி அடைகின்றன என்று விளம்பரதாரர்கள் கருதுகின்றனரா? உதாரணத்திற்கு, ஒரு வெளி நாட்டு மருந்து ஸ்தாபனம் சமீபத்தில் தொலைக்காட்சியிலும் பத்திரி கையிலும் வெளியிட்ட பெரிய அளவு விளம்பரத்தில் ஒரு ஆண் மிக வும் இளஞ்சிசுவொன்றைக் கையிலணைத்து சீராட்டுவதாகக் காட் டப்பட்டது. இந்த விளம்பரம் வெற்றியா, தோல்வியா?
பத்திரிகைகளும் வானொலியும் நமது கட்புலனைத் திருப்தி செய் பவையல்ல என்னும் தன்மையில் ஒரேமாதிரியானவை. இங்கே கொடுக்கப்படும் செய்திகளுக்குக் கற்பனையினால் உயிரூட்டுவது பார்வையாளர்களுடையதும் கேட்போரினதும் வேலையாகும். இந்த இரண்டு சாதனங்களிலும் உருவாக்கப்படும் பெண்களின் படிமங்கள் அநேகமாக ஒத்தவையாக இருக்கக் காணப்படுகின்றது. இக் கட்டுரை யின் தேவை குறித்து பிரதானமாகப் பத்திரிகைகளை நோக்குவோம்.
பத்திரிகைகள் என்றவுடன் முதலில் நமது கவனத்தை ஈர்ப்பது அவற்றில் பெண்களுக்காக ஒதுக்கப்படும் பக்கங்கள் தாம். இவை பெண்களுக்கென வாரத்தில் குறிப்பிட்ட நாட்கள் பக்கங்கள் ஒதுக்கித் தருவதைப்!ற்றி நாம் இரண்டு அனுமானங்களுக்கு வரலாம். ஒன்று, அரசியல் மற்றும் பொது நிகழ்ச்சிகள் நடக்கும் உலகம் பெண்க ளுடையதல்ல; ஆகவே அவர்களுக்குப் பரிச்சயமான, அவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் விடயங்களைத் தருதற்காக ஒரு பக்கத்தை ஒதுக்கு தல், சிறுவர்களுக்கு ஒதுக்குவார்களே அதேமாதிரி. அல்லது, பெண் கள் சம்பந்தப்பட்ட சில விடயங்கள் ஆண்களுக்குரியவை அல்ல
سس۔ 39 --سیس۔

Page 27
என்பதாகவும் இருக்கலாம். இந்த இரண்டு அனுமானங்களில் எதனை நாம் உண்மையென்று கொண்டாலும், இந்தப் பக்கங்களில் தரப் படும் செய்திகளைக் கருதினால், இது கவலைதரும் விடயமே. இப் பக்கங்களில் முற்று முழுதாக சமையற் குறிப்புகளும், அழகுக் குறிப்பு களும், வீட்டை நிர்வகிப்பதற்கும் பெண்கள் வாழ்க்கைக்குமான ஆலோசனைகளுமே வழங்கப்படுகின்றன. இவை வெறுமனே "அழகுக் குறிப்புக்கள்" அல்லது 'பெண்களுக்குரிய சில ஆலோசனைகள்" எனக் குறிப்பிடப்பட்டாலும் பரவாயில்லை. நமது பத்திரிகைகளில் பெண்கள் பக்கத்தின் சில மாதிரித் தலைப்புகளைத் தருகின்றேன்.
-"பெண்களுக்கு உரிய மூலதனம் அழகு மிகுந்த தோற்றமே”
(சிந்: 89)
-"கணவனைத் தன் பிடிக்குள் வைத்திருக்க மனைவி என்ன
செய்ய வேண்டும்" (சிந் : 89)
-"அன்பு, பண்பு, பொறுமை பெண்ணுக்கு அவசியம்”
(ந்ெ : 89)
பெண்கள் அழகுள்ளவர்களாகவும் கணவன் என்ன ஊறு செய் யினும் அன்பு, பண்பு, பொறுமையினைக் காப்பவர்களாகவும் இருந்திட வேண்டும் எனவும் இவை குறிப்பிடுகின்றன. கணவனைத் தன் பிடிக் குள் வைத்திருக்க மனைவிக்கு நான்கு ஆலோசனைகள் வழங்கப்படு கின்றது:கணவனை குழந்தைபோல் பராமரித்தலும்,கணவன் பேச்சுக்கு செவிசாய்த்தலும், உறவில் கணவனைத் திருப்திப்படுத்தலும் தன்னை நன்றாக அலங்கரித்தலும். ஒரு ஆணினைத் தன்பால் சர்த்து வைத் திருப்பதே ஒரு பெண்ணின் வாழ்க்கையின் முழு நோக்கம்போல் தெரிவிக்கப்படுகின்றது. ஒரு கணவன் வேறு பெண்ணை நாடும் காரணம் அதற்கு இச் சமுதாயம் வழங்கும் அனுமதி என்று கூறாது ஒழுங்காக நடக்காத மனைவியின் குற்றமே என மறைமுகமாகச் சாடுகின்றனர். மனைவியினை ஒரு குழந்தைபோல் பராமரித்து அவள் பேச்சுக்கு செவிசாய்த்து, உறவில் அவளைத் திருப்திப்படுத்தி தன்னையும் அழகுற வைத்துக்கொள்வது ஒரு கணவனுக்கும் உரிய கடமைகள்தாம். ஆனால் இவை தனியே மனைவியின் தலையில் சுமத்தப்படும்போது அவள் கணவனின் தேவைகளைக் கவனிக்கும் வேலைக்காரியாக, அவன் உணர்ச்சிகளைத் தீர்க்கும் தாசியாகவே உருவகப்படுத்தப்படுகின்றாள்.
ܡܘܚܘ 40 ܚ

*சிந்தனை முத்துக்கள்" அல்லது "பொறுக்கிய பூக்கள்” என்ற தலைப்பிற் அறிஞர் வாக்குகள் (?) இடம் பெறும். பெண்களுக்கு உருவாக்கப்பட்ட படிமங்களின் சாராம்சத்தை இவை வெளிக் கொணர்கின்றன என்ற அளவில் இவை படிப்பதற்கு சுவாரசியமாக இருக்கும். பெண்ணிடம் இரகசியம் நிலைக்காது, சேலை நகை களுக்கு ஆசைப்படுபவர்களாகையால் கல்யாணம் கட்டினால் உபத் திரவம், வீட்டின் குத்துவிளக்கு போன்றவர்கள் என்று பலவித மாயும் இருக்கும். இவை “எம்மை நையாண்டி செய்யவும், அவ மதிக்கவும், பகுத்தறிவுடன் விவாதிக்க முடியாதபோது எமது தனித்து வத்தை அழிக்கவும் எமக்கெதிராகப் பயன்படுத்தப்படுகின்றது." (மனுஷி இல. 4)
பொதுச் செய்திகளில் முன் குறிப்பிட்ட வகையினைத் தவிர எமது கவனத்தை கவரும் செய்திகளில் ஒன்று ரஷ்யாவில் அழகுப் போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டதைப் பற்றித் தரப்பட்டிருந்தது. ரஷ்ய அழகிகள் என்றால் 'இறுகிப்போன தசைகளைக் கொண்ட விளையாட்டு வீராங்கனைகளும் புன்னகை செய்யாத தொழிற் சாலைப் பணிப்பாளர்களுமே எம் கண் முன்னே தோன்றுகின்றனர். எம் நாட்டுக்கு வரும் ரஷ்யப் பெண்களும் ஆஜானுபாகுவான தோற் றம் கொண்ட சட்டெனத் திரும்பி ஒரேமுறை பார்க்கத் தூண்டாத பெண்களாகவே இருப்பதைக் காணலாம்." அதாவது, விளையாட்டு வீராங்கனைகளாகும் பெரும் சாதனைகளும் நாட்டுக்கு சேவை செய் யும் ஒரு உண்மையான தொழிலாளியாக இருப்பதும் பெண்களுக்கு ஒவ்வாத காரியம்; அதிகாரம், சக்தி ன்ன்பவற்றைக் குறிக்கும் ஆளுமை கொண்ட தோற்றமும் பெண்களுக்கு அவலட்சணமானது அதனால்தான் ஆஜானுபாகுவான தோற்றம் கொண்ட பெண்களை ஒருவரும் சட்டெனத் திரும்பிப் பார்க்கமாட்டார்கள். இந்தச் செய் தித் துணுக்கு ஆமோதிப்புத் தொனியில் மேலும் தொடர்கின்றது.”* மேல்நாட்டுப் பெண்களைப்போல் தாமும் மென்மையாகவும் நளின மாகவும் இருக்கவேண்டும் என்றும் வித்தியாசமான கவர்ச்சி உடை களை அணியவேண்டும் என்றும் அவர்கள் (ரஷ்யப் பெண்கள்) நினைக்க ஆரம்பித்திருக்கிறர்கள்." ரஷ்யாவின் புதிய திறந்த கொள் கையில் அழகுப் போட்டிகளும் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன என்னும் சமாச்சாரம் செய்தி தருபவருடைய சொந்தக் கருத்துகளால் எவ் வாறு திரிபுபடுத்தப்படுகின்றது என்பதனை இதிலிருந்து நாம் காண 69 TLD .
ஒரு சினிமாப் பக்கத்தில் இவ்வாறு கொடுக்கப்பட்டிருந்தது. "நிர்வாணமாக நடித்த சிமி ராஜீவ் காந்தியைப் பற்றிய படம் எடுக்கின்றார்." (சிந்: 89)
- 41 -

Page 28
நடிகை சிமி இன்று இயக்குனராகவும் தயாரிப்டாளராகவும் மாறியதை விட பதினைந்து வருடங்களுக்கு முன்பு அவர் நிர்வாண மாக நடித்த செய்திதான் கூடிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டு இருக்கின்றது. பெண் ஒரு பாலியல் நுகர்வுப் பொருளாக இருப் பதனால் அவள் நிர்வாணமாக இருக்கும்பொழுது ஏற்படும் பரபரப்பு ஒரு ஆண் நிர்வாணமாக இருக்கும்பொழுது ஏற்படுவதில்லைதான். உதாரணமாக அதே காட்சியில் இவருடன் நடித்த சசிகபூர் பற்றி * நிர்வாணமாக நடித்த சசிகபூர் தனது 150வது பட விழாவைக் கொண்டாடினார்" எனக் குறிப்பிடுவார்களா? நிருபர்கள் நடிகை களைப் பேட்டி காண்பார்கள். பேட்டி காணப்படுபவர் எந்தப் பெரிய நடிகையாயிருந்தாலும் முக்கியமாக ஒரு கேள்வி இருக்கும்உங்களுக்குத் திருமணம் எப்போது?" அடுத்த கேள்வி - 'திரு மணத்திற்குப் பின் நடிப்பீர்களா?" இக் கேள்விகளில் இரு கருத்துக்கள் உள்ளார்ந்து ஒலிக்கின்றன. ஒன்று ஒரு பெண் திருமணம் செய்தே யாகவேண்டும் என்பதும் மற்றது, ஒரு பெண் குடும்ப வாழ்க்கை யுடன் தன் தொழிலை மேற்கொள்வது, அதுவும் பொது அரங்கத் தில் தோன்றும் நடிப்புத் தொழிலை மேற்கொள்வது, முன்னுக்குப் பின் முரணான காரியம் என்பதுமே. அப்பாவி நடிகைகளும் இந்த எதிர்பார்ப்புகளுக்குப் பலியாகி ஆண் நடிகர்களைப்போல் தாமும் நடிப்புலகில் தமக்கெனவொரு நிரந்தர இடத்தைப் பிடிக்கத் தவறி விடுகின்றனர்.
திரைப்படங்களும் தொலைக்காட்சியும் முழுக்க முழுக்க பர்ர்வை யூடகங்களாயிருக்கின்றன. இங்கு தகவல்களைத் தவிர பங்குபற்று பவர்கள் ஒருவருக்கொருவர் கொள்ளும் உறவு முறைகளையும் நடத்தைகளையும் நாம் கண்கூடாகக் காண்பதினால் அவை தரும் செய்தியின் தாக்கம் எம்மேல் பன்மடங்காகின்றது. தமிழ்த் திரைப் படங்கள் முக்காலும் வர்த்தகக் கண்ணோட்டத்துடன் தயாரிக்கப் படுபவை; பணம், செல்வாக்கு, அரசியல் அதிகாரம் இவை கொண்ட ஒரு வர்த்தக சமூகத்தினின்று எழுபவை. பெண்கள் சம்பந்தமாக மிகவும் பிற்போக்குவாதக் கொள்கையினை இத் திரைப்படங்கள் கைக்கொண்டால் அதில் ஆச்சரியமேதுமில்லை. இவற்றைப் பார்ப் பவருக்கு தோற்றும் முதல் விடயம் இங்கு பெண்கள் மேல் பிர யோகிக்கப்படும் வன்முறையே. கதாநாயகன் கதாநாயகியைக் “கலாட்டா" செய்து சீண்டும் பாடல் காட்சி தொடக்கம் அவசிய மின்றி இடம்பெறும் கற்பழிப்புக் காட்சிகள்வரை சகலதும் பெண் களை என்னென்ன விதங்களில் ஆக்கிரமிப்புச் செய்யலாம் என்று கூறும் பாடங்களாகின்றன. நாயகன் நாயகியைச் சீண்டும் காட்சியினை ஏராளமான படங்களில் நாம் பார்த்திருக்கின்றோம். காதல் அரும்பு

முன் இருவருக்குமிடையில் காணப்படும் கிளுகிளுப்பூட்டும் ஊடலாகஇது எமக்குத் தரப்படுகின்றது. அவன் நாயகியையும் அவள் தோழிகளையும் பெட்டைக் கோழிகள் என்பான் எந்த இலக்குமியாயிருந்தா லென்ன சரசுவதியாயிருந்தாலென்ன கடைசியில் (சாதாரணவொரு) ஆண் பிள்ளை தாலிகட்டும்போது தலையைக் குனிந்துதானே ஆகவேண் டும் என்று இடித்துரைப்பான். கையைப் பிடித்து இழுப்பான், பலாத்காரமாகக் கட்டி அணைப்பான், தள்ளி விடுவான், முழங்கை யினால் இடிப்பான், தன் இட்டப்படி ஆடவைப்பான். அடுத்து. வசனக்காட்சிகள் ஆரம்பித்தவுடன் நான் பின் நீ என முறை வைத்து மகள் தந்தையிடமிருந்தும் மனைவி கணவனிடமிருந்தும் தங்கை அண்ணனிடமிருந்தும் பளார் பளார் என்று இரு கன்னங்க ளிலும் அறை வாங்குவர். கதாசிரியர் விசுவின் படமொன்றில் சுமார் இருபது வருடத் தாம்பத்திப வாழ்க்கையின் பின் மனம் திருந்திய மனைவி தன் கணவனிடம் தான் செய்த குற்றங்கள் ஒவ்வொன்றை யும் ஒப்புவித்து அந்த ஒவ்வொரு முறையும் 'எனக்குக் கனனத்தில் பளார்னு ஒண்ணு போட்டீங்களா’? என்று கேட்கின்றாள். செய்திபெண்கள் தம் அவசரபுத்தியினால் ஏடாகூடமாக நடந்து கொள் ளும்போது பளாரென்று ஒன்று போட்டு இருத்தி வைப்பதே அவர் களுக்கு விருப்பமானது. இக்கட்டத்தில், ஒரு கணவன் தவறு செய் பும்போது மட்டும் பொறுமையாயிருந்து அவனுக்குக் காட்டும் அன் பில்தான் அவன் திருந்துவான் என மனைவிக்குப் புத்தி புகட்டப்ப டுவதை நாம் நினைவு கூர வேண்டும்.
திரைப்படங்களில் வரும் பலாத்காரக் காட்சிகளின் விசேஷம் என்னவெனில் இச்சம்பவத்திற்குப் பிறகு சம்பந்தப்பட்ட பெண் அநேகமாக இறந்து விடுவாள் அல்லது தற்கொலை புரிந்து விடு வாள். செய்தி - யார் எவர் செய்த குற்றமாக இருந்தாலும் சரி "கற்பு இழந்த பெண் உயிர் தரிக்கக் கூடாது. ஒரு ஆண் ஒரு பெண்ணின் உடலை அந்தவொரு பாலியல் தொடர்பின் மூலமேயே ஆக்ரோஷமாகச் சொந்தம் கொண்டாடுவதை இதனூடு பூாம் உண ரலாம். இந்தப் பெண் கதையின்படி தற்செயலாக உயிர்வாழ நேர்ந் தால் அந்த வஞ்சகக் காமுகனுக்கே எந்த விதப்பட்டும் மணம் முடிக் கப்படுவது இந்தக் கருத்தை வலியுறுத்துகின்றது. கடும் தண்டனைக் குள்ளாக்க வேண்டிய கிரிமினல் குற்றவாளிக்கு வெகுமதியீந்து திரு மணம் என்னும் பந்தத்தையே கேலிக் கூத்தாக்கின்றனர். படம் "உதிரிப்பூக்கள்' என்று நினைக்கின்றேன். அதில் கற்பழிப்புக்காட்சி வித்தியாசமான கோணத்திலிருந்து எடுக்கப்பட்டது: வில்லன் அறைக் குள் சிக்கிய கதாநாயகியின் ஆடைகளையெல்லாம் களைந்து விடு கின்றான். பின்பு இவ்வாறாகப் பொருள்பட அவளிடம் கூறுகின்றான்.

Page 29
"இதற்குமேல் நான் உன்னை ஒன்றும் செய்யத் தேவையில்லை.
இதுவே நான் உனக்குக் கொடுக்கும் தண்டனை. உன் முதலிரவில் கணவன் உன்னை உறவுகொள்ள அழைக்கும்போது வேற்றுமனித னொருவன் முன்னமேயே உன்னை இந்தக் கோலத்தில் கண்டுவிட் டானேயென்று குற்ற உணர்வில் நீ துடித்து அணு அணுவாய்ச் சாக வேண்டும்." பெண்களுக்கில்லாத தன்மை ஒன்று நாம் கண்கூடா
கப் பார்க்கும் விதத்திலேயே அவர்களுடைய தன்மையாக உருவகிக் கப்படுதலுக்கு இது ஒரு சிறந்த உதாரணம். தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போயிற்று என்று அவள் ஓட்டம் பிடிப்பாளே யொழிய எவனோ ஒருவன் நிர்வாணமாகப் பார்த்துவிட்டானென்று
எந்தப் பெண்ணும் செத்துப் போவதில்லை. ஆனால் மானமுள்ள டெண்கள் அப்படிச் செத்துப்போக வேண்டும் என இங்கு அடி எடுத்துக் கொடுக்கப்பட்டிருக்கின்றது. இந்தச் செய்தி உள்வாங் கப்படுவதன் விளைவு. பெண்கள் மென்மேலும் ஆண்களினால் பயமூட்டப்படுகின்றனர் (intimidated).
எமது தொலைக்காட்சி நாடகங்கள் திரைப்படங்கள் போல் வர்த்தக நோக்கில் தயாரிக்கப்படுவதில்லையாகையால் அவற்றில் முன்பு குறிப்பிட்ட பரபரப்பூட்டும் கிளுகிளுப்பூட்டும் காட்சிகள் இருப்பதில்லை. இது ஒரு விதத்தில் ஆறுதலைக் கொடுப்பினும் இந் நாடகங்கள் கொண்டு தரும் செய்திகள் எந்த விதத்திலும் திரைப் படங்களை விட உயரியவை எனக் கூறுவதற்கில்லை. இதற்கு எடுத் துக்காட்டாக சமீபத்தில் மறு ஒளிபரப்பாகிய "துணை ஒன்று' என்ற தொலைக்காட்சி நாடகத்தினை எடுத்துக் கொள்ளலாம். வேலை பார்க்கும் ஒரு இளம்பெண் தான் பகிரங்கமாகப் பழகிய காதலன் ஏற்கனவே மணமானவன் என்று தெரிந்ததும் மனமு டைந்து தற்கொலை செய்ய எத்தனிக்கிறாள். அத்தருணத்தில் அவள் வீட்டு முன்னறையில் பதினைந்து வருடங்களாகக் குடியிருந்து வந்த நடுத்தர வயதுப் பிரமச்சாரி ஒருவர் (அங்கிள்) அவளைத் தடுத்து நிறுத்தவே கல்யாணவரன்கள் இனித் தனக்கு தடைப்படப் போகின் றனவே, தான் தன் பெற்றோருக்குப் பாரமாக இருக்கப் போகின் றோமே என இவள் அழுகின்றாள். உடனே அங்கிள், எனக்குத் தேவை ஒரு துணை, நீ வீணே உன் உயிரை மாய்த்துக் கொள்ளா மல் என் துணையாக இருக்கலாமே என்கின்றார். முன்பே இவர் இவள்மேல் காதல் கொண்டு கேட்டிருந்தாலும் அல்லது தனது முன் னைய காதலை அந்நேரம் வெளியிட்டிருந்தாலும் இக்கதையின் தாக்கமே வேறு. அவள் இப்போது ‘எச்சில் இலை அதனால்தான் இவ்வாறு கேட்கக்கூடிய தகுதியில் இருக்கின்றாள் என்பதே இதன் தாற்பரியம். அவளுக்கு உடனடியாக, இவர் நெடுகப் பாண் FITü
- 44 -

டுவதும் 'டல்லடித்துப்போய்” உட்கார்ந்திருப்பதும் ஃப்ளாஷ் பாக் கில் வருகின்றது. செய்தி - அவருக்கு சமைத்துப் போடவும், அவர் வாழ்வை "சுவாரசியம்’ ஆக்கவும் அவருக்கு இவள் தேவை. இதற் குப் பதிலாக அவர் இவளுக்கு என்ன கொடுக்கப் போகின்றார்? அவர் ஒரு ஆணாக இருப்பது போதுமே. அத்துடன் (அந்தத்துணை) மனைவியாக இருக்கவேண்டும் என்ற தேவை இல்லை என்று வேறு கூறி வைக்கின்றார். அப்படியானால் வைப்பாட்டி அந்தஸ்து கொடுக்கின்றாரா? கடைசியில் இவள் எழுந்துபோய் விளக்கைப் போடுகின்றாள். இவள் வாழ்வில் விளக்கேற்றி வைக்கப்படுகின்ற தாம், எங்களுக்குக் கூறுகின்றார்கள். இவள் பெற்றோரைக் காட் டும் போதும் தாயாரை, இந்தக் காதலை ஆதரிக்கும் மந்த புத்திக் காரியாகவும், தந்தையினை மகள் அடக்க ஒடுக்கமாக, வேலைக்குப் போகாமல்கூட வீட்டிலிருந்தால் நன்று என நினைக்கும் விவேகமுள்ள வராகவும் காட்டப்படுகின்றது. எங்கள் சமுதாயத்தில், பெண்கள் திருமணம் செய்தேயாக வேண்டுமென்ற நிலையில் அப்படிச் செய்ய இயலாது சீதனப் பேயின் பிடிக்குள் சிக்கித் தவிக்கும்போது, ஒரு சாதாரண நடுத்தரவர்க்கத் தாய் தன் மகள் ஒரு நல்ல மாப்பிள்ளை யைத் தன் வலைக்குள் சிக்க வைக்கவேண்டும் என்று விரும்பாமல் என்னசெய்வாள்? மாப்பிள்ளையின் சுயரூபம் தெரியும்போது, சீதனம் சேர்க்க இவள் வேலைக்குப் போனது போதும் இனி வீட்டில் நிற்க லாம் என்று கோபத்துடன் தந்தை கூறுகின்றார். செய்தி-பெண் கள் வீட்டிலிருக்காது வெளியே செல்லத் தொடங்குவதினால்தான் அனர்த்தங்கள் விளைகின்றன;
இந்த நாடகத்தினை இங்கு விஸ்தாரமாகனடுத்துக் கொள்வதன் காரணம், மிகவும் மறைமுகமாகச் சில உருவகங்களைக் கொண்டு தரும் கலைப்படைப்புகளுக்கு இது ஒரு சிறந்த உதாரணமாக இருப் பதே. இது கொழும்பு நகரில் வேலைபார்க்கும் பெண்களின் இன் றைய யதார்த்தத்தைத் தானும் சித்தரித்ததா என்று நாம் வினவ வேண்டியதாயுள்ளது.
எமது நாட்டில் சகல தொடர்பு சாதனங்களிலும் வானொலி யொன்றே மக்களுடன் கூடியளவு நேரம் தொடர்பு கொள்ளும் சாத னம் எனலாம். அநேகமானோரது வீடுகளில் விடியற் காலையில் முடுக்கிவிடப்படும் வானொலி இரவு படுக்கைக்குப் போகும் போது தான் அணைக்கப்படுகின்றது. அருகில் உட்கார்ந்து குறிப்பாக க் கேட்காத போதிலும் இதனூடாக ஒலிபரப்பப்படும் தகவல்கள் எம்மையறியாமலேயே எமது உள் மனதில் ஆழமாகப் பதிந்துவிடு கின்றன. இதில் முக்கிய ஊடகங்களாவது திரைப்படப் பாடல்களே,
- 45 -

Page 30
'ஆண் கவியை வெல்ல வந்த பெண்கவியே வருக’ மற்றும் "சித்தி ரத்தில் பெண்ணெழுதி சீர்படுத்தும் மானிடரே" போன்ற பெண் கள் தம் நிலையைக் கூறியழும் பாட்டுக்கள் போல விரல் விட்டு எண்ணக்கூடிய பாட்டுக்களைத் தவிர ஏனையவை வழக்கமான உரு வகங்களையே தருகின்றன.
நாம் இதுவரை நோக்கிய சிருஷ்டி வகைகளின் கர்த்தாக்கள் ஆண்களாகத்தான் இருக்க வேண்டுமென்பதில்லை. சிலர் பெண்களா யும் இருக்கின்றனர். தன்னடிமை நிலையினைப் பெண்கள் அகப்படுத் தியதன் விளைவே இது. ஒரு கடினமான பிரச்சினையான இதற்கு இன்றைய பெண்கள் ஸ்தாபனம் ஒன்றுகூட சரியாக முகம் கொடுக்க வில்லை என்பதும் உண்மை. உதாரணத்துக்கு அழகுப் போட்டிகளை எடுப்போம். இவற்றைப்பற்றிய கண்டனங்களும், தடை செய்யக் கோரிக்கைகளும் ஸ்தாபனப் பெண்களினால் முன்வைக்கப் பட்டிருக் கின்றன. ஆயினும் அழகுப் போட்டி நிகழ்ச்சிகள்தாம் கூடியளவு மக்கள் பார்த்து இரசிக்கப்படுவன என்பது நம்மெல்லோருக்கும் தெரி யும். ஏதும் பிரதான அழகுப் போட்டிகளுக்கு முன்பு கூடிய எண் ணிக்கையான தொலைக்காட்சிகளும் விற்பனையாகின்றன என்றும் வியாபாரிகள் தெரிவித்திருக்கின்றனர். தம்மை ஒரு நடையலங்காரப் பாவையாக, ஒரு பாலியல் நுகர்வுப் பொருளாக இழித்துக் காட்டும் இந்தப்போட்டிகளை ஏன் பெண்களும் விரும்புகின்றனர்? தாம் மண் ணில் பிறந்தநாள் தொட்டு இந்த சமூகம் தம்மை எவ்வாறு இருக் கக் கோருகின்றதோ அவ்வாறே இருக்கும் பெண்கள் பங்குபற்றும் நிகழ்ச்சியாக இது இருப்பதனால் ஒருவித பொறாமை கலந்த ஆர் வத்தினால் இவர்கள் உந்தப்படுகின்றனர். இவர்களிடம் சென்று அழகுப் போட்டிகளை ஆதரிக்காதீர்கள் என்று சொல்வது பயனற்ற தாகும். அவ்வாறு சொல்வதனால் பெண்கள் ஸ்தாபனங்களைத் தமது சராசரி வாழ்க்கைக்கு அப்பாற்பட்ட ஸ்தாபனங்களாகவும் சராசரி ஆசைகளற்ற பெண்கள் அங்கத்துவம் பெறும் நிறுவனங்களு மாகவே மற்றப் பெண்களுக்கு எண்ணத் தூண்டுகின்றது. அத்துடன் ஸ்தாபனப் பெண்களும் தாம் சராசரிப் பெண்களைவிட உயர்ந்தவர் களென ஒரு உயர்ந்த (elitist) மனப்பான்மை கொள்ள வைக்கின்றது.
இந்தப் பிரச்சினைக்கு முடிவுதான் என்ன? நாம் ஒவ்வொருவரும் இச் சமூக அமைப்பில் ஊறிய மதிப்பீடுகளின் ஒட்டுமொத்த உருவந் தான். நமது சமத்துவமற்ற சமுதாய அமைப்பு புரட்சி க ர மா ன மாற்றத்திற்கு உள்ளானாலன்றி இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண முடியாது.
سست 46 سست

ஆயினும் இம்மாற்றத்தைக் கொண்டுவரும் போக்கில் பல நட வடிக்கைகளை நாம் எடுக்க முடியும். வெகுஜனத் தொடர்பு சாத னங்களைப் பொறுத்தமட்டில் சில குறைகளை நிவர்த்தி செய்யலாம்.
(அ)
(敦)
(g))
(F)
கூடிய எண்ணிக்கைப் பெண்கள் தொடர்பு சாதனங்களில் பல துறைகளிலும் பயிற்றப்பட்டு அவர்கள் பெருமளவில் இத்துறைகளில் நுழையவேண்டும்.
ஏற்கனவே இத்துறைகளில் இருக்கும் பெண்கள் ஒன்று சேர்ந்து சங்கம் அமைத்து தம்முடைய தொழில் நிலைமை களை மாற்ற முயற்சி செய்ய வேண்டும்.
பெண்கள் ஸ்தாபனங்கள் அவ்வப்போது கண்டனங்கள் தெரிவிப்பதை விடுத்து, தொடர்பு ஊடகங்களில் படைப்பு களை விமர்சித்து கருத்துரை வழங்கி இவற்றில் மாற்றம் கொண்டுவரச் செய்யும் வற்புறுத்தல் குழுக்களிற்குப் பயிற்சி யளிக்க வேண்டும். இவை தொடர்பு சாதனத் துறையி லுள்ளவர்களுக்கு பெண்களின் தேவைகளையும் அவர்களின் வாழ்நிலைத் தரங்களையும் அறியத்தருபவைகளாக இருக்க லாம். தொடர்பு சாதனங்கள் இவ்வகையான வற்புறுத் தல் குழுக்களுடன் இணைந்து செயற்படும் ஒர் புது அமைப்பு உருவாக வேண்டும்.
மாற்று சமூக தொடர்பு சாதனங்களை உருவாக்க வேண் டும். பல நாடு களி ல் பெண் க ள் தமது பாரம் பரிய கலைகளான தெருக்கூத்து, நாட்டுப்பாடல்கள் ஆகிய வற்றினை சமகாலத்திற்கேற்ப நவீனமயப்படுத்தி,பெண்கள் தம் நிலைமைகளை எடுத்துக்கூறும் சமூக அரசியற் கண் ணோட்டத்தை இணைத்து மக்கள் மத்தியில் பிரபல்யப் படுத்தி வருகின்றனர். இது மூலவளமின்மையால் வெகுஜனத் தொடர்பு சாதனங்களின் இடத்தினைக் கைப்பற்றாதெனி னும் இதன்மூலம் ஓரளவு மக்கள் மத்தியில் ஊடுருவலாம்.
நாட்டின் சகல நிறுவனங்களையும், குறிப்பாக தொடர்பு ஸ்தா பனங்களை அரசு கூடக்கூடத் தன் முழுக் கட்டுப்பாட்டில் இருத்தும் இலங்கையைப் போன்ற ஏனைய மூன்றாம் உலக நாடுகளில் மேற் படி நடவடிக்கைகளை மேற்கொள்வது கடினமாக இருக்கலாம். வெற்றியெனினும் தோல்வியெனினும் இந் நோக்கங்களினை நிறை வேற்ற முயலும் அதே சமயத்தில், நாம் பெண்கள் தனி மனித ரீதி யிலும் ஒரு கடமையினை நிறைவேற்றலாம் - அதுதான் எச்சரிக்கை யாயிருத்தல்,
- 47 -

Page 31
நாம் படைப்பாளிகளாய் இருப்பினும் அல்லது படைப்புகளை நுகரும் இரசிகர்களாக இருப்பினும் எந்நேரமும் விமர்சனக் கண் ணோட்டம் உடையவர்களாக இருக்கவேண்டும். பொங்கும் பூம்புன வில் ஒலிபரப்பாகும் ஒரு பாட்டு, பத்திரிகையில் வரும் நடிகையின் ஒரு பேட்டி, தொலைக்காட்சியில் வரும் ஒரு நாடகம் என எது வெனிலும் அதுதரும் செய்தி பற்றி எச்சரிக்கையாய் இருக்கவேண் டும். எமது சொந்தப் படைப்புகளைக் கூட நாம் விட்டுவைத்தல் கூடாது. இந்த மனப்பக்குவத்தினை நாம் கைக்கொண்டால் நாம் போகவேண்டிய பாதையின் முக்கால் தூரத்தையும் கடந்தவர்களா Gaunւb.
குறிப்புகள் 1. Fanon. Frantz : The Wretched of the Earth
Maigiffon & Kee, London 1965.
2. Gallagher, Margaret : The Portrayal and Participation of Women in the Media. Unesco-Report, Pais 1979.
3. Manushi : “Hitting out at Women - Humour as a
weapon of Oppression', No. 4, New Delhi.
4. Noelle-Neumann, Elisabeth : “Mass Media and Social Change in Developed Societies,' in Mass Media and Social Change. by Katz, E. & T. Szecsko (eds); Sage Studies, California 1981.
---- 48 -س--

கலந்துரை
சிரோன்மணி இராஜரத்தினம் : நாங்கள் 1982ஆம் ஆண்டு பத் திரிகை ஆசிரியர்களைச் சந்தித்தோம். பத்திரிகைகளான வீரகேசரி, தினகரன் என்பன பெண்கள் விளம்பரங்களைப் பிரசுரிக்கமாட்டோ மெனக் கூறிவிட்டார்கள். தற்போது அவை வருவதில்லை. வானொலி யும் தொலைக்காட்சியுமே கூடுதலான விளம்பரங்களைச் செய்து வருகின்றன.
அன்னலட்சுமி இராஜதுரை: கலாநிதி சிரோன்மணி கூறியதுபோல பத்திரிகையாளர்களைச் சந்தித்ததன் மூலம் அவர்கள் பெண்களி லான விளம்பரங்களைப் பிரசுரிக்கமாட்டோமென்று ஏற்றுக்கொண் டார்கள். மற்றும் பத்திரிகைகளில் பெண்களுக்கென்று ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டு வருகின்றது. ஏன் அது மாற்றப்படவில்லை. இந்த அமைப்புகளுக்கு ஒரு செயற்குழுவை அமைத்து ஏன் செயலாற்ற வைக்கவில்லை. தேர்ந்த குழுவைத் தெரிந்தெடுத்து பத்திரிகையாள ரிடம் சென்று நாங்கள் என்னென்ன ரீதியாக பத்திரிகையில் விளம் பரங்கள் வரவேண்டுமென்று விரும்புகிறோம் என்று எடுத்துச் சொல்ல வேண்டும். பெண்கள் என்ன விரும்புகிறார்கள்? அவர்கள் முன் னேற்றத்திற்கு என்ன செய்ய்வேண்டும் என்பதைச் செயலுறப் பெற வேண்டும். மற்றும் திரைப்படங்களில் தொண்ணுரறு வீதமானவை காதலிக்கும் கட்டங்களாகவே வருகின்றது. இப்படியான கட்டங் களில் தாய், தகப்பன், குழந்தை எல்லோரும் ஒன்றாகவே பார்க் கின்றோம். இப்படியான கட்டங்களையெல்லாம் மாற்றியமைக்க வேண்டும்.
பாத்திமா நஷ்வா கலீல் : “சகலகலாசம்பந்தி" படத்திலே தாயானவள் தனது பிள்ளைகளை அறிமுகப்படுத்துகையில் தன் விதவை மகளை அறிமுகப்படுத்தவில்லை. எனவே மகளாக இருந் தும் கூட பெண்ணே பெண்ணை ஒதுக்கி வைப்பதைக் காண்கிறோம்.
கமலினி செல்வராசன் : 'துணை ஒன்று' என்ற தொலைக் காட்சி நாடகத்திலேயும் கதாநாயகியின் சினேகிதி அவளை எச்சரித்த போதும் கதாநாயகி அவளைத் தவறாகக் கணித்ததும் இதையே தான் காட்டுகிறது.
سس 49 سس

Page 32
சித்திரா எட்வர்ட் : ஒரு பெண்ணின் எதிரி பெண்தான். ஆண் இல்லை.
சாந்தி சச்சிதானந்தம் : பெண்ணின் எதிரி பெண்ணே எனக் கடந்த இரு அமர்வுகளிலும் இக் கருத்து திரும்பத் திரும்பத் தெரி விக்கப்படுவது வருத்தத்திற்குரிய விடயமாகும். உலகெங்கணும் உள்ள எந்த ஒடுக்கப்பட்ட மக்களும் ஒட்டு மொத்தமாக ஒன் றிணைந்திருந்ததை யாராவது காட்டமுடியுமா? ஆங்கிலேயர்கள் எவ் வாறு ஆண்டனர்? எங்களில் சிலருக்கு சில சலுகைகளைக் கொடுத்து தங்களுடைய அடிவருடிகளாக மாற்றவில்லையா? இந்த அடிவருடிகள் இல்லாதிருந்தால் வெள்ளையரினால் எம்மை ஆட்சி செய்திருக்கவே முடியாது. இதற்காக "இந்தியனே இந்தியனுக்கு எதிரி" என்றோ "இலங்கையனே இலங்கையனுக்கெதிரி" என்றோ யாரும் சொல்லி நான் கேட்டதில்லை. திரைப்படங்களைப் பார்க்கிறீர்கள் பண்ணை யார் ஒருவன் கூலிகளை அடிமைப்படுத்தி வேலை வாங்கும் வில்லனா கத் தோன்றுவான். இவன் ஏவும் கட்டளைகளை சிரமேற்கொண்டு செய்து அவனதிகாரத்தைக் கட்டிக் காக்க அடியாட்கள் இருப்பார் கள். இவர்கள் யார்? பண்ணையார் வர்க்கத்தினரல்லவே. கூலிவர்க் கத்தினரல்லவா? இந்த அடியாட்கள் இன்றி பண்ணையார் ஒரு கன மேனும் அரசோச்ச முடியுமா? இதன்ால் நாம் "ஒரு தொழிலாளி யின் எதிரி தொழிலாளியே” என்று கூறுவோமாகில் அது எமது அறி யாமையையே குறிக்கும். ஒடுக்கப்பட்ட மக்களை பிளவுபடுத்தினால் மாத்திரமே அவர்களை அந்நிலையிலேயே வைத்திருக்கலாம். நாமும் கூட இந்தத் தவறினைச் செய்யக்கூடாது. மாமியார் மருமகள் போன்ற பிரபலமான உதாரணங்களையும் எடுத்துக் காட்டலாம் மாமியார் ஒரு பெண்ணாக இருந்தும்கூட அவளுக்கு இந்த சந்தர்ப் பத்தில் சமூகம் சில அதிகாரங்களையும் சலுகைகளையும் அளித்து எமது அமைப்பின் "அடிவருடிகளில் ஒருவராக மாற்றுகின்றது. ஒரு சாராயப் போத்தலுக்காக அடியாளாக மாறும் தொழிலாளிக்கும்" சீதனம் வாங்கி அந்தஸ்தை நிலைநாட்டுவதிலும் மருமகளைத் துன் புறுத்தி அதிகாரம் பண்ணும் சிற்றின்பத்துக்குமாக அடியாளாக மாறும் மாமியாருக்கும் வேறுபாடு இல்லை.
வள்ளிநாயகி இராமலிங்கம் : பெண்களுக்கான பக்கம் என்று ஒதுக்கப்படாமல் இருக்கவேண்டும். ஆண்கள், பெண்கள் பகுதியில் இருக்கும் விடயங்களை வாசிப்பதில்லை. அழகுக் குறிப்பு அம்சங்கள் எல்லோருக்கும் பொதுவானதே. ஆண்களுக்கு வேறு பெண்களுக்கு வேறு என்று இல்லையே.
سے 50 ، مس۔

சித்திரலேகா விளம்பரங்களைப் பொறுத்தமட்டில் அங்கர் பால் விளம்பரத்தை எடுத்துக் கொண்டால், மக்கள் பார்த்துவிட்டு வாங்க முடியாதவர்கள் இவை எங்களுக்குக் கிடைக்கவில்லையே என்று கவ லைப்படுகிறார்கள். விளம்பரங்களில் இலாப நோக்கத்திற்காகவே பெண்களைப் பயன்படுத்துகிறார்கள். கூடுதலாக விளம்பரங்கள் பத் திரிகையில் இருந்து வானொலிக்கும் தொலைக்காட்சிக்கும் இடம் பெயர்ந்து விட்டதென்றே குறிப்பிடலாம். பெண்கள் அமைப்புகள் நம் மத்தியில் பலமானதாக, உதாரணமாக மலேசியா போன்ற நாடுகளில் வளர்ந்திருப்பதுபோல் இல்லை.
ஜனாபா நயீமா சித்தீக் விளம்பரங்கள் தொடர்பாக மக் களுடைய ரசனையை மாற்றி விளம்பரத்தை ஏற்படுத்த வேண்டும்.
யோகா பாலச்சந்திரன் : மக்கள் ரசனையை உருவாக்குவது யார்? நாங்கள்தான் ரசனையை மாற்றி அமைக்கவேண்டு. எல்லோரும் சிந்தித்துச் செயலாற்றவேண்டும். விளம்பரத்தை நாங்கள் நினைப் பதுபோல நிற்பாட்ட முடியாது. மற்றும் திருமதி சாந்தி சச்சி தானந்தம் வெகு அருமையான கட்டுரையை சமர்ப்பித்ததற்கு மன முவந்த நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

Page 33
6.
7.
சேற்றே சிந்திக்க!”
கமலினி செல்வராசன்
தாய்மை. பெண்மை. தாயிற் சிறந்தொரு கோவிலுமில்லை; அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம். LDrts it பிதா குரு தெய்வம்.
பீரம் பேணி பாரந் தாங்கும்: (பீர் - தாய்ப்பால், தாய்ப்பால் அருந்தியவன் பலசாலி) ** அன்னம் ஊட்டிய தெய்வ மணிக்கையின்
ஆணை காட்டில் அனலை விழுங்குவோம் கன்னத்தே முத்தம் கொண்டு களிப்பினும்
கையைத் தள்ளும் பொற் கைகளைப் பாடுவோம்."" . "பெண்மை" - பாரதியார்.
தாயின் காலடியிலே உன் சொர்க்கம் இருக்கிறது.
மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம் - உலகநீதி.
பெண்மையைத் "தாய்மையாய்" "தெய்வமாய்" போற்றும் இதே உலகில்தான், தாய் ஒருத்தி சரியாகச் சாப்பிட்டாளா என்றுகூடக் கவனிக்காமல் இருக்கும் ஆண்களும் வாழ்கிறார்கள். மனைவிக்குத் தனியே ஆசாபாசங்கள் உண்டு என்று மதிக்கத் தெரியாத மனிதர் களும் வாழ்கிறார்கள். விந்தைதான்!
*சுகவாழ்வு" என்பது .பெண்ணுக்கு இல்லையா?
1.
2。
உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கழகு. பின்தூங்கி முன் எழுவாள் பத்தினி
- d -

'வளர்முக நாடுகளில் பெண்களில் நிலை சுமை கூடியதாக இருக்கிறது. ஆனால், இவர்களின் சுகாதாரமும் நாட்டின் அபிவிருத்திப் பணியுடன் பின்னிப் பிணைந்துள்ளது. இந்த நாடுகளில், தாய்க்கான சுகாதாரத்தில் குறைந்த கவனமே செலுத் தப்படுகிறது."
- யுனிசெப் நிர்வாக அத்தியட்சகளின் விசேட ஆலோசகரும், பொஸ்டன் ஹார்வேர்ட் பொதுச் சுகாதாரக் கல்லூரியின் பேராசிரியருமான பேராசிரியர் வி. இராமலிங்கசுவாமி.
உணவும் உறக்கமும் உடல் நலத்துக்கு மிகவும் அவசியமானவை: குறைந்த உணவும் குறைந்த தூக்கமும் அளவுக்கதிகமான உழைப் பும் பெண்களின் உடல்நலத்தைப் பெரிதும் பாதிக்கின்றன என்று மனிதவியல் ஆய்வாளர் ஒப்புக்கொள்ளுகின்றனர். வீட்டில் உள்ள ஆண்கள் அனைவரும் உண்ட பின்னர், மீதியையே பெண்கள் உண் ணும் பழக்கத்தால் “சத்துணவு' - "நிறையுணவு பெண்களுக்குக் கிடைக்காமல் போகிறது. தவிர, குழந்தைகளுக்கு உணவளிக்கும் போது கூட, ஆண் பிள்ளைகளுக்கு என்று விசேஷமான சத்துணவு களைத் தாய்மாரே கொடுக்கிறோம். பெண் பிள்ளைகளுக்கு அத் தகைய கவனிப்பைக் கொடுக்க மறுக்கிறோம். ஏன்.? சுக வாழ்வு பெண்ணுக்கு அவசியம் இல்லையா..?
**பெண்றொடியாக நடந்ததிவ்வுலகு.
திருமூலர் திருமந்திரம்
1. பெண் புத்தி கேட்கிறவன் பேப் - பழமொழி:
2 பெண் மூப்பான வீடு பேர் அழிந்துபோகும் - பழமொழி. 33 தையல் சொற் கேளேல் - ஆத்திசூடி - ஒளவையார். 4: பெண்டுகள் சமர்த்து அடுப்பங்கரையில்தான்.
ஆண்களை வெறுத்து தனி இராட்சியம் செய்தவள் அல்லிராணி என்று மகாபாரதம் கூறுகிறது. அந்நியரை எதிர்த்துப் போர்க் குரல் எழுப்பிய "ஜான்சிராணி" பற்றியும் அறிந்திருக்கிறோம். முஸ்லிம் பெண் வழிகாட்டிகளாக ஆயிஷா அம்மையாரையும், ராஃபியாவை
யும் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆன்மீக வழிகாட்டியாகச் "சாரதா தேவியைக் கண்டோம். மனுக்குல மீட்புக்குப் போராடும் "அன்னை
- 68 -

Page 34
திரேசா"வைக் காண்கிறோம். விஞ்ஞான உலகிலே எத்தனை பெண் ஆய்வாளர்? மேரி கியூரி அம்மையார் நைட்டிங்கேல் அம்மையார் இவர்களின் சேவை பற்றியும் அறிவோம். அன்னிபெஸன்ட் அம்மை யார், சகோதரி நிவேதிதா. இப்படி பெண் வழிகாட்டிகளின் பெயர்ப் பட்டியல் நீளும்.
அரசியலை எடுத்துக்கொண்டால். நமது நாட்டில் திருமதி பண் டாரநாயக்கா, இந்தியாவிலே இந்திரா காந்தி, மத்திய கிழக்கிலே கோல்டாமேயர், இன்றோ மார்கிரட் தட்சர், அக்கியூனோ இப்படி எத்தனையோ பெண் மேதைகளைப் பின்பற்றி உலகம் நடந்தது; நடக்கிறது; இனியும் நடக்கும்.
'கற்பு.?"
1. பெண்ணிற் பெருந்தக்க யாவுள' கற்பெனும்
திண்மை உண்டாகப் பெறின்.
- திருக்குறள்.
2. காவல்தானே பாவையர்க்கு அழகு
-கொன்றை வேந்தன்
3. கற்பெழின் மடவார் கணவனைப் பிரியார்
பழமொழி
"கற்பு, என்ற "ஒழுக்கக் கட்டுப்பாடு" நமது பண்பாடு. பல பிரச் சனைகளிலிருந்தும் தம்மைக் காப்பாற்றக்கூடியதுதான். உண்மையில், கற்பெனப்படுவது சொற்றிறம்பாமை" (கொன்றை வேந்தன்) நான் உனக்கு மனைவியாக இருப்பேன்" அல்லது "நான் உனக்குக் கரைவ னாக இருப்பேன்’ என்று திருமணத்தின்போது, அல்லது இருவர் சேரும்போது, ஒரு ஆணும் பெண்ணும் செய்துகொள்ளும் ஒப்பந் தத்தை-சொன்ன சொல்லிலிருந்து திறம்பாமல்-சொல்லை மீறி நடவாமல் இருப்பதுதான்-"கற்பு' இதைத்தான் பாரதியாரும்.
"கற்புநிலை என்று சொல்லவந்தார், இரு
கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்"
-676örgy Lurij Garíti.
ஆனாலும் சில கொள்கைகளுக்கு விதிவிலக்குகளும் உண்டு என் பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். எஸ்கிமோ இனத்தவரி டையே, ஒரு விருந்தாளி ஒரு வீட்டுக்கு வந்து தங்கினால், அன்றி
سس۔ 4 سس۔

ரவு. கணவனின் கட்டளைப்படி அந்த வீட்டுப்பெண் அந்த விருந் தாளியை உடலினால் திருப்திப்படுத்தவேண்டியது அந்த இனச் சமூ கத்தின் வழக்கமாக இருந்திருக்கிறது. ஏ.? நமது நாட்டிலேகூட ஒரு சில குறிப்பிட்ட சமூகத்தினரிடையே இந்த வழமை இருந்ததாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
ஒரு நாணயத்துக்கு இரண்டு பக்கங்கள் போல, பண்பாட்டின் இரு வேறு பக்கங்கள்!
"குலத்து மாதர்க்குக் கற்பு இயல்பாகுமாம்
கொடுமை செய்தும் அறிவை அழித்தும் அந் நலத்தைக் காக்க விரும்புதல் தீமையாம்"
-பாரதியார்
*தீதும் நன்றும் பிறர் தர வாரா?
1. அரைக்காசை ஆயிரம் பொன்னாக்கிறவளும் பெண்சாதி; ஆயிரம் பொன்னை அரைக்காசாக்கிறவளும் பெண்சாதி.
2. ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே,
3. இல்லாள் அகத்திருக்க இல்லாததொன்றில்லை.
4. இந்திரன் கெட்டதும் பெண்ணாலே சந்திரன் கெட்டதும்
பெண்ணாலே
is a ..இப்படியெல்லாம் சொல்லி-ஒரு ஆண் மது குடிப் பதற்குக்கூடப் பெண்களே காரணம் என்று குற்றஞ்சாட்டுகின்றன. ஆனால், குடும்ப நலன்புரிச் சங்கங்களான "சுமித்ரயோ? போன்ற சங்கங்கள் இதனை தவறு என்கின்றன. "மதுப்பழக்கம் ஆண் lip கிக்கொள்ளும் பழக்கமே என்கிறார்கள்.
எமிலி கூ." என்ற சுயவசிய நிபுணரோ தீதும் நன்றும் அவர வர் நடவடிக்கைகளால் ஏற்படுவன என வலியுறுத்துகிறார்.
ஆம்!
"தீதும் நன்றும் பிறர் தர வாரா"
"மனம் போல வாழ்வு"

Page 35
*மெளனம்" என்பது மெளடிகம்!
1. பெண்டிர்க்கழகு எதிர்பேசாதிருத்தல்
2. அடங்காப் பெண்சாதியால் அத்தைக்கும் நமக்கும் பொல்
லாப்பு
3. அத்தைக்கு மீசை முளைத்தால் சிற்றப்பா.
4. ஆச்சி ஆச்சி மெத்தப் படித்துப் பேசாதே.
தீமைகள்-அநீதிகள்-அறியாமைகள் இவற்றைக் கண்டும் பேசா திருப்பது மானிடத்துக்கு அழகல்ல. பெண்ணின் நீதியான போக்குக் கும், நடத்தைக்கும் ஊறு நேரும்போது, எடுத்துக்காட்டி-நீதியை நிலைபெறச் செய்வதும் பெண்மையின் கடமை.
இதோ பாரதி சொல்கிறார் இப்படி..
"புதுமைப் பெண்ணிவள் சொற்களும் செய்கையும் பொய்மை கொண்ட கலிக்குப் புதிதன்றிச் சதுர்மறைப்படி மாந்தர் இருந்த நாள்
தன்னிலே பொதுவான வழக்கமாம் மதுரத் தேமொழி மங்கையர், உண்மை தேர்
மாதவப் பெரியோருடன் ஒப்புற்றே முதுமைக் காலத்தில் வேதங்கள் பேசிய
முறைமை மாறிடக் கேடு விளைந்ததாம்’
ஆம் முன்னைய காலத்தில் ஆணுக்குப் பெண் ஒப்பாக-சமனாக ஆய்வறிவுகள் பேசிய வழமைகள் இருந்தன. எனவே.
"மெளனம் என்பது மெளடிகம்"
எட்டும் அறிவினில்
ஆணுக்குப் பெண் இளைப்பில்லைக் காண் 1. பெண் புத்தி பின் புத்தி.
2. அஞ்சு வயதுப் பிள்ளைக்கு (ஆண்) ஐம்பது வயதுப் பெண்
கால் முடக்க வேண்டும்.
3. சாண் பிள்ளையானாலும் ஆண்பிள்ளை.
ܗܗܗܗ 56 ܘܚ

4 பெண்டுகள் சமர்த்து அடுப்பங்கரையில்தான்.
5. தையல் சொற்கேளேல்.
1. பெண் எப்பொழுதுமே பின்னுக்கு வரக்கூடிய நிகழவுகளை யும் சிந்திக்கக்கூடியவள். பின்னுக்கு வரக்கூடியதை அறிந்து செயற்படக் கூடியவள். "பெண் புத்தி பின் புத்தி" என்பதன் அர்த்தம் இதுதான்
2. வெறுமனே "ஆண்" என்ற பால் பாகுபாட்டினால் மட்டும் ஐந்து வயது ஆண்பிள்ளைக்கு ஐம்பது வயதுப் பெண்மணி காலை மடித்து மரியாதை செய்யவேண்டுமென்பது அபத் தம்; சாணளவே உயரமாயிருந்தாலும் ஆண்பிள்ளை ஆண் பிள்ளைதான் என்று ஆண் பாலை ஆதர்சமாக்குவதும் மடமை. மணிதவியல் - வைத்திய ஆய்வாளர்கள் மூளை வளர்ச்சியில் இந்தப் பால் பாகுபாட்டை ஒப்புக்கொள்வ தில்லை. ஆணுக்குப் பெண், எட்டும் அறிவினில் இளக்க மானவளான்று.
4. “காற்றில் ஏறி அவ் விண்ணையும் சாடுவோம்’ என்று விண் வரை சாதனைக் கொடியினை நாட்டுகிறாள் பெண் இன்று.
5. "தையல் சொற் கேளேல்" என்று சொன்னவர் ஒளவையார். "ஆத்திசூடி" என்ற நீதிப்படைப்பிலே. அப்படியானால், அதைச் சொன்ன ஒளவையார் ஒரு பெண்; அவர் "தையல் சொற் கேளேல்" என்று சொன்னதை எப்படிக் கேட்டு நடப்பதாம். ? ஆகவே, அந்த நீதி உரைக்கு வேறொரு பொருள் - அர்த்தம் இருக்கவேண்டுமல்லவா? இருக்கத்தான் வேண்டும்:
தமிழிலே ஒவ்வொரு சொல்லுக்கும் தனி அர்த்தம் உண்டு. ஒரு சொல்லுக்கு உரிய அர்த்தம் மற்றொன்றிலிருந்து வேறுபடும். பெண் ணைக் குறிக்க நேரிழை, அரிவை, மாது, மங்கை இப்படிப் பல பெயர்கள். ஆனால், ஒவ்வொரு சொல்லுக்கும் பிரத்தியேகமான அர்த்தம் உண்டு. நேரிழை என்றால் நேர்த்தியான ஆடை ஆபரணங் களை அணியும் பெண் என்று பொருள். "அரிவை’ இருபத்தைந்து வயதுப் பெண்ணைக் குறிக்கும். “மாது' மயக்கும் அழகுடையவள் என்று பொருள் தரும். "மங்கை" பதின்மூன்று வயதுப் பெண். இதேபோல "தையல்" என்ற சொல்லும் பொதுவாகப் பெண்ணைக் குறித்தாலும் "தை தை” என்றாடும் ஆடல் மகளிரைக் குறிக்கும். ஆடல் மகளிர் சிலரை அந்தக் காலப் பண்பாட்டினடிப்படையில்
ജ 87 -

Page 36
முறையற்ற வாழ்க்கை நடத்துவோர் என்று கணித்தனர். அப்படி யான "தையலர்" வார்த்தையைக் கேட்டு நல்லொழுக்க வாழ்வைக் கெடுத்துக் கொள்ளாதீர் என்பதே "தையல் சொற்கேளேல்" என்ற ஒளவையின் வாக்குப் பொருள்.
"அச்சம் என்பது நாய்கட்கு வேண்டுமாம்’-பாரதியார்
1. “கூற்றமே இல்லிற்கு இசைந்தொழுகாப்பெண்"
-வாக்குண்டாம்
2. "பழிக்கு அஞ்சாத் தாரத்தின் நன்று தனி"
-நல்வழி
இப்படியான பழமொழிகளும் நீதி உரைகளும் பலவிதத்திலும் பெண்களுக்கு சமூகக்கட்டுப்பாடுகளை விதிப்பவை. அஞ்சவேண்டிய வைக்கு-செய்யத் தகாதன. செய்வதற்கு அஞ்சாமல் இருப்பது அறி வீனம்தான். ஆனால், நல்லதென்று-வல்லதென்று-சரியானதென்று தன்மனம் கண்ட, தக்க காரியங்களைச் செய்ய, சமூகம் பழி சொல் லுமே என்று அஞ்சுவது மடமை.
'நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும் திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவதில்லையாம்"
-ump8urriř
‘குழந்தை வளர்ப்பிலும்,
குறுகிய புத்தியா" 1. "ஆணாய்ப் பிறந்தால் அருமை; பெண்ணாய்ப் பிறந்தால்
எருமை"
2. "ஆணை அடித்து வளர்க்க, பெண்ணைப் போற்றி வளர்க்க நவீன வைத்திய முறைகளின் பயனாக "ஸ்கானிங்" என்ற வைத் திய முறையில் வயிற்றில் உள்ள குழந்தை "பெண்" என்றால் அந்தக் கருவை அழிப்பதுபற்றிக் கேள்விப்படுகிறோம். இந்தியாவின் வடபுலங் களிலே பெண் குழந்தைகளைக் கொல்லுவது பற்றியும் அறிகிறோம்.
குழந்தைகளை வளர்க்கும்போது கூட எத்துணை பாரபட்சம் காட்டுகிறோம், பெண்பிள்ளை விளையாடப் பொம்மைகளையும்
سسسسه 8 5 س

சட்டிபானைகளையும் கொடுக்கிறோம். ஆண்பிள்ளைகள் விளையாடி மகிழத் தேர், பொறியியல் விளையாட்டுப் பொருட்கள், மிதிவண்டி, இப்படியெல்லாம் கொடுத்து, தன்மூப்பைவளர்த்து விசேஷமாக உணவுகள் கொடுத்து வளர்க்கிறோம் ஏன்? சமமான உணவையே, சமமான விளையாட்டுப் பொருட்களையே சமமான கல்வியையே சமமான சகல சந்தர்ப்பங்களையுமே, ஆண்குழந்தைகளுக்கும் பெண் குழந்தைகளுக்கும் கொடுத்து வளர்த்து அவர்களின் மனப்பான்மை களை மாற்ற முயலலாமே!
"ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவிலோங்கியில் வையந் தழைக்குமாம்"
-Lunrg 6 uur rf
"பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் எட்டுமறிவினில் ஆணுக்கிங்கே பெண்
இளைப்பில்லைக் காணென்று கும்மியடி"
-பெண்கள் விடுதலைக் கும்மி
பாரதியார்
"குஞ்சியழகும் கொடுந்தா னைக் கோட்டழகும்
மஞ்சளழகும் அழகல்ல - நெஞ்சத்தே நல்லம் யாமெனும் நடுவு நிலைமையால் கல்வியழகே அழகு" --நாலடியார்
'அறிவு கொண்ட மனித உயிர்களை
அடிமையாக்க முயல்பவர் பித்தராம்"
-புதுமைப் பெண் பாரதியார்
سس 59 مسس۔

Page 37
பால் அடிப்படையிலமைந்த தொழிற்பாகுபாடு
- மெள. சித்திரலேகா -
ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் நிலவுகின்ற தொழிற்பாகு பாடே பால் அடிப்படையில் அமைந்த தொழிற்பாகுபாடு (SEXUAL DIVISION OF LABOUR) STEST gyGOppias'ü uGQ6) sörfog. gymraeg குறிப்பிட்ட சில தொழில்கள் பெண்ணுக்கு உரியவை எனவும் ஆணுக் குரியவை எனவும் வகுக்கப்பட்டிருப்பதாகும். குழந்தையைப் பிறப் பித்தல், பராமரித்து வளர்த்தல், வீட்டுடன் தொடர்பான வேலை கள் போன்றவை பெண்ணுக்கு உரியனவாகவும் வீட்டுக்கு வெளியி லான வேலைகளும், வருவாயை ஈட்டுகின்ற வேறு தொழில்களும் ஆணுக்கு உரியனவாகவும் கருதப்படுகின்றன.
இத்தகைய பாகுபாடு சமமான அந்தஸ்துடைய சமூக அங்கத் தவர்கள் இடையே அமைந்திருப்பின் அது பிரச்சினைக்குரியதாகாது ஆனால் இத்தகைய பாகுபாடு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையி லான அசமத்துவ உறவுடனும், தாழ்த்தப்பட்ட நிலையுடனும் நெருங் கிய தொடர்பு கொண்டுள்ளது. அத்துடன் பொருள் உற்பத்தியிலும் மனித இன மறு உற்பத்தியிலும் பெண்களது பங்கானது அவர்களது "இயற்கையின் ஒரு விளைவாகவே கூறப்படுகிறது. பெண் களது உழைப்பினை மனித செயற்பாடு என்பதாக அல்லாமல் அவர்களது உடலியற்கையின் தவிர்க்க முடியாத விளைவு என்ற கண்ணோட்டம் மேலே கூறிய இப்பாகுபாட்டின் முக்கிய அம்சமாகும்.
இந் நிலையானது இன்று ஏறத்தாழ சகல நாடுகளிலும், சகல இன மக்களிடையேயும், சகல கலாசாரங்களிலும் தெளிவாகக் காணக் கூடியதாகும். எனினும் மிகமிகச் சில விதிவிலக்குகள் இருப்பதையும் மனங்கொள்ள வேண்டும். அத்துடன் இப்பாகுபாடு உறுதியான வடிவில் கருத்து நிலையிலும் (Ideology) செறிந்து காணப்படுகிறது. இப்பாகுபாடே மனித வாழ்க்கைக்கு உகந்தது. இயல்பானது, சிறந் தது என இக் கருத்துநிலை கூறுகின்றது.
ܚ- 60 ܘܚ

மனித உழைப்பு பற்றி தற்போது பலராலும் கைக்கொள்ளப் படும் கருத்தாக்கம் எமது பரிசீலனைக்கு உரியதாகும். உற்பத்தித் திறன் மிக்க உழைப்பு என்பது ஆணுக்கு உரியது என்பதே இக் கருத்தாக்கம் ஆகும். இதை இன்னும் சற்று விளக்கமாகக் கூறினால் உபரி உற்பத்தியை அல்லது மிகையை உருவாக்கக்கூடிய உழைப்பே உற்பத்தித்திறனுடைய உழைப்பு எனக் கருதப்படுகிறது. ஏனைய உழைப்புகள் "உழைப்பாக"க் கருதப்படுவதில்லை. பெண்ணினது வீடு சார்ந்த தொழில்களும் உழைப்பும், கடமைகள், அல்லது "நட வடிக்கைகள்" என்றே கருதப்படுகின்றன. உழைப்பு பற்றிய இக் கருத்தாகும் ஆண்களும் பெண்களும் தமக்கிடையே சில தொழில் களைப் பகிர்ந்து கொண்டுள்ளனர் என்று கூறுவது மாத்திரமல்லாது இப் பாகுபாட்டுக்கு அடிப்படையில் காணப்படும் ஆண் பெண் அச மத்துவ உறவுநிலை, பெண்ணின் மீதான ஆணின் ஆதிக்கம், சுரண் டல் ஆகியவற்றை மறைத்தும் விடுகிறது. ஆணினது உன்ழப்பு அல் லது தொழில், உணர்வு பூர்வமான பகுத்தறிவு சார்ந்த, திட்ட மிட்ட, உற்பத்தித் தன்மை வாய்ந்தது. இதுவே மனித உழைப் பாகும். பெண்ணினது உழைப்பு அவளது உடலியற்கையுடன் தொடர் புடையது. ஆகவே அது இயற்கையான நடவடிக்கை என்பதும் அதில் எத்தகைய உற்பத்தித் தன்மையும் இல்லை என்பதும் இக் கருத்தாக் கத்தின் மூலம் பெறப்படுவனவாகும்:
தொழிற்பாகுபாட்டினை உடலியற்கையுடன் தொடர்பு படுத்து வதால் அது சாஸ்வதமானது, மாற்றமுடியாதது, என்ற முடிவு பெறப்படுகிறது; இத்தகைய கருத்தாக்கம் உயிரியல் விதிவாதத்தி னின்று (Biological Determinism) தோற்றம் பெற்றதாகும். இத் தகைய உயிரியல் விதிவாதம் 19ஆம் 20ஆம் நூற்றாண்டுகளின் பெரும் அறிஞர்கள், உளவியலாளர்கள், தத்துவாதிகள் ஆகியோரிற் பெரும் செல்வாக்குச் செலுத்தியுள்ளது 2. நவீன உளவியலின் தந்தை எனப்படும் சிக்மண்ட பிராய்ட் "உடலியல் மனிதரது விதியாகும்” (Anatomy is Destiny) என்ற கருத்துப்படக் கூறியது இங்கு நினைவு கூரத்தக்கது.
இத்தகைய பாகுபாடும் அது பற்றி நிலவும் கருத்துகளும் பெண் ணினது தாழ்த்தப்பட்ட நிலைமையுடனும் ஆண் பெண்ணுக்கிடையி லான அசமத்துவ, அதிகார உறவுடனும் தொடர்புடையனவாதலால், இவைபற்றிய ஆய்வுகள் பெண்கள் இயக்கங்களிடையே முக்கியம் பெறுகின்றன. பெண்களது விடுதலைக்காகவும், உயர்வுக்காகவும் உழைக்கும் இயக்கங்களாலும், தனிப்பட்ட் பெண்களாலும் பால் அடிப்படையிலான தொழிற்பாகுபாடு பற்றிய வினாக்கள் எழுப்பப்
- 6 -

Page 38
படுகின்றன. இவ் வினாக்களின் பயனாக பெண்களது உழைப்பு தொடர்பான பல புதிய தகவல்களும், புதிய கருத்துக்களும் வெளி வந்துள்ளன.
இத்தகவல்கள், கருத்துக்கள் ஆகியவற்றின் உதவியுடன் இப் பாகுபாட்டின் தன்மையையும், அது ஏன் ஆண் பெண்ணுக்கிடையி லான அசமத்துவ உறவுடன் தொடர்பு கொண்டது என்பதையும் விளங்கிக்கொள்ளலாம். இவ்விளக்கம் பெண்களது முன்னேற்றத்தில் ஆர்வமுடையோருக்கு அத்தியாவசியமானதாகும். ஏனெனில் பெண் களது விடுதலை, உயர்ச்சி, முன்னேற்றம் ஆகியவை குறித்து கருத் துக்களை முன்வைக்கும் போதும், திட்டங்கள் தீட்டும்போதும் இவ் விளக்கம் பக்கபலமாய் அமையும்.
இவ்விடத்தில் சில வினாக்கள் எழுவது தவிர்க்க முடியாத தாகும்.
1. பால் அடிப்படையிலான தொழிற் பாகுபாட்டுக்கும் ஆண் பெண்ணுக்கிடையில் நிலவும் அசமத்துவ உறவுக்கும் இடை யில் எத்தகைய தொடர்பு உள்ளது? அதன் அம்சங்கள்
JITGO)61?
2. மேலாதிக்க உறவுமுறையைத் தொடர்ந்து நிலைநிறுத்துவ
தற்கு இப் பாகுபாடு எவ்வாறு உதவுகின்றது?
3. இப்பாகுபாட்டிலும் அது சார்ந்த கருத்துகளிலும் செயல்
முறைகளிலும் எத்தகைய மாற்றம் தேவை?
இவ்வினாக்களுக்கு ஒரளவுக்காவது சரியான உண்மையான விடை யைக் கண்டுவிட்டால் பெண்விடுதலைக்கான தெளிவான கருத்துக் களையும் திட்டங்களையும் உருவாக்குதல் முடியும். இவற்றில் முதலா வதுவினா மனித உழைப்பின் ஆதிநிலை பற்றிய விளக்கத்துக்கு எம்மை இட்டுச் செல்கின்றது.
மனித உழைப்பின் ஆதி நிலை:
உழைப்பு என்பது ஆரம்ப நிலையில் மனித பயன்பாட்டுக்குத் தேவையானவற்றை உற்பத்தி செய்வதாக அமைந்திருந்தது. மனித தேவைகளுக்காக இயற்கைப் பொருட்களை பெற்றுக்கொள்ள இது ஏதுவானது. இது தன்னிச்சையான செயற்பாடு அன்று. மனிதரின் உணர்வுபூர்வமான செயற்பாடாகவும் அமைந்தது. மனிதருக்கும் இயற்கைக்கும் இடையிலான இப் பரஸ்பரச் செயற்பாட்டுக்கு உத
سس 623 نسس

வும் உற்பத்திக் கருவியாக அவர்களது உடலே அமைந்தது. ஆனால் மனித உடல் தனியே கருவி மாத்திரமன்று. அது மனித தேவைக ளைத் திருப்தியாகப் பெறுகின்ற இலக்குமாகும். அதாவது மனிதர் தமது உடலை, பொருட்களை உற்பத்தி செய்யப் பயன்படுத்துவது மாத்திரம் அல்ல. அப் பொருட்களை நுகர்வதன் மூலம் தம்மை வாழவைத்தும் கொள்கின்றனர்,
இவ்வாறு உற்பத்திசெய்யும்போது மனிதர் - ஆணும் பெண்ணும் இயற்கையை எவ்வாறு வேறு வேறு வகைகளில் கையாளுகின்றனர் என்பதை உணர்தல் வேண்டும்.
பெண் தனது உடலையே உற்பத்தித்தன்மை வாய்ந்ததாக உணர் கிறாள். அவளது மூளை, கைகள் மாத்திரமல்ல கருப்பை, மார்ப கங்கள் ஆகியவையும் உற்பத்தித்திறன் வாய்ந்தனவாகும். பெண் குழந்தைகளைப் பெறுவது மாத்திரமல்ல, அவர்களது உணவான பாலையும் தருபவள். பெண்கள் தமது சொந்த உடல், அதன் பயன்பற்றிய அறிவைப் பெற்றிருந்தனர். இதனால் குழந்தைகளைப் பெறுவது அவர்களது உணர்வுபூர்வமான சமூகச் செயலாக அமைந் தது. இவ்விடத்தில் ஒன்று குறிப்பிடலாம். இன்னும்கூட, பெண் ணினது குழந்தையைப் பெறும்தன்மை உழைப்பு எனக் கருதப்படா மல், ஏனைய மிருக-பாலூட்டிகளுடையதைப் போல வெறும் உலியற் செயற்பாடு என்றே நோக்குவது பெரும் குறைபாடாகும். பெண் விடுதலைக்குரிய பாதையில் இது ஒரு இடறுகட்டையாகவும் அமைந்துள்ளது.* -
பெண்கள் காலப்போக்கில் தமது உடலில் ஏற்படும் மாற்றங்களை அவதானித்து தமது உடல்பற்றிய அறிவைப் பெற்றிருந்தனர். மாத விடாய், கருப்பம், குழந்தைப்டேறு போன்றவை பற்றிய அனுபவ ரீதியான அறிவை ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு அவர்கள் கையளித்தனர். இன்னொரு வகையிற் கூறினால் பெண்கள் தமது உடலியற்கையின் சிறைக்கைதிகளாக, அது குறித்துக் கையா லாகாதவர்களாக அவர்கள் இருக்கவில்லை. ஆனால் தமது உடலியற் கையை கையாளும் திறனை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள்ளாவது பெற்றிருந்தனர். உதாரணமாக பண்டையப் பெண்கள் மத்தியில் பிறப்புக் கட்டுப்பாடு தொடர்பாகக் கைக்கொள்ளப்பட்ட நடை முறைகளைக் கூறலாம். அதுபோல் பால் சுரப்பினை அதிகரிக்கவோ கட்டுப்படுத்தவோ கிராமியப் பெண்கள் கையாளும் வழிமுறைகளைக் குறிப்பிடலாம்.
അ: '8 r

Page 39
பெண்களும் உற்பத்தியும்
புதிய உயிர்களை உற்பத்தி செய்யும் பெண்களின் திறனானது, அவர்கள் ஏனைய உற்பத்தியிலும் ஈடுபட வழிசமைத்தது. குழந்தை யைப் பிரசவித்துப் பாலூட்டும் தாய், தொடர்ந்து தனக்கும் குழந் தைக்குமான உணவை உற்பத்தி செய்ய வேண்டியவளானாள். இத னாலேயே பெண்கள் நாளாந்தம் தேவையான உணவை அளிப்பவர் களாக செயற்பட்டார்கள். இதனை இயற்கையாகக் கிடைப்ப வற்றை-விதைகள், கிழங்கு, பழம், மீன், சிறுபிராணிகள்-பொறுக் கிச் சேகரிப்பதன் மூலம் மேற்கொண்டனர். மனித குலத்தினது ஆரம்ப உழைப்பு மேற்கூறியவை போன்ற பொருட்களை கூட்டாகச் சேர்ந்து சேகரிப்பதாக அமைந்தது. இதில் முன்னணி வகித்தவர்கள் பெண் களேயாவர்.
தேடிச் சேகரிக்கும் இவ்வுழைப்பானது பயிர்கள், தானியங்கள் பற்றி அனுபவரீதியான அறிவை அளித்தது. இதுவே உலகின் ஆரம்ப கால தானிய உற்பத்தியாளராக, விவசாயிகளாகப் பெண்களை ஆக்கியது. பெண்களே விவசாய உற்பத்திக்குத் தேவையான முதலா வது கருவியை-நிலத்தைக் கிளறும் சிறு தடியாலான கருவியையும் கண்டு பிடித்தனர். உணவுப் பயிர்களைத் திட்டமிட்டு விளைவிக்கும் இந்நிலையால் உபரி உற்பத்தி சாத்தியமானது. மனிததேவைக்கு மேலாக தானியம்-உணவு உற்பத்தியாகிற்று. இதனைப் பெண்க ளின் உழைப்பு சாத்தியமாக்கிற்று. புதிய கற்காலத்தில் இத்தகைய மாற்றம் நடந்ததாக மானுடவியல் அறிஞர்கள் கூறுவர். மிகப் பழைய தமிழ் இலக்கியங்களான சங்கப் பாடல்கள் தானிய உற்பத்தி யுடன் பெண்களுக்கு நெருங்கிய தொடர்பு இருந்ததைக் கூறுவதை இங்கு சுட்டுதல் வேண்டும்.8
எனவே பெண்கள் வெறுமனே சேகரித்து நுகர்பவர்களாக மாத் திரம் அன்றி நுகர்பொருட்களை உற்பத்தி செய்பவராகவும்-வளர்ப் பவராகவும் செயற் பட்டனர்.
ஆண்களும் உற்பத்தியும்
இக் கால சட்டத்தில் ஆண்கள் என்ன செய்துகொண்டிருந்தனர் என்பது அடுத்த வினாவாகும். ஆண்களும் டெண்களுடன் சேர்ந்து உணவு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். ஆனால் வரலாற்றுப் போக்கில் நீண்ட காலத்தின் பின் கண்டு பிடித்த கூரான ஆயுதங் கள் மிருகங்களைக் கொன்று வேட்டையாடும் தொழில்நுட்பத்தை மனிதருக்கு அளித்தன. பெண்கள் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டு அதில்
- 64 -

விசேட திறன்களையும் அறிவையும் வளர்த்துக்கொண்டிருந்தபோது ஆண் வேட்டையாடுகின்ற திறனில் தேர்ச்சி பெறத் தொடங்கினான்.
ஆனால் வேட்டையாடும் தொழிலால் மனித தேவைக்கு வேண் டிய உணவினை முற்றிலும் பூர்த்திசெய்ய முடியவில்லை என்பது இன்று நிறுவப்பட்ட உண்மையாகும். மனித குலத்தின் தேவையை மரக்கறி உணவே நீண்டகாலம் பூர்த்தி செய்தது. ஏர் உழவு கண்டு பிடிக்கப்படும் வரை, இத்தானிய உணவை உற்பத்தி செய்பவர்களாகப் பெண்களே விளங்கினர்.
சிறு பறவைகளையும், சிறு விலங்குகளையும் உணவுத் தேவைக் காக வேட்டையாடப் பயன்பட்ட ஆயுதங்கள் காலம் செல்லச் செல்ல போரில் பயன்படுத்தப்படும் ஆயுதங்களாக மாறின, இந்த ஆயுதங் கள் ஒரு மக்கட் கூட்டத்தார் இன்னொரு மக்கள் கூட்டத்தினரை ஆக்கிரமிக்கப் பயன்படும் கருவிகளாயின. இவை ஆண்களினது உடை மைகளாகவிருந்தன என்பது முக்கியமான தாகும். இந்த ஆயுதங்களைப் பயன்படுத்தியே, தமது கூட்டத்தினரல்லாதவரையும், எதிரிகளையும், தமது கூட்டத்துள் உழைப்போராகிய பெண்களையும் ஆண்கள் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது சாத்தியமாகியது.
ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலாண அசமத்துவ உறவின் தோற்றம்:
இத்தகைய ஒரு வளர்ச்சிப் போக்கில் தான் பெண் ஆணினது அதிகாரத்துக்கு உட்பட்டவளாக மாறினாள். ஆதியில் இருபாலா ரிடையேயும் இருந்த ஒருவகைப் புராதன சமத்துவ உறவு மாறி அசமத்துவ உறவு உருவாகியது. இத்துடன் ஆண் ஆயுதபலத்தால் அபகரித்த செல்வங்கள் (உ-ம்) தானியங்கள், மந்தைகள், மனித அடி மைகள் ஆகியனவும் ஆணினது அதிகார பலத்தை மேலும் உயர்த் தின. போரில் கைப்பற்றப்பட்டோரில் ஆண்களைக் கொன்றுவிட்டு, வென்றோர் தம்முடன் பெண்களை எடுத்துச் சென்றனர். வேலை யாட்களாகவும், புதிய வேலையாட்களை உருவாக்குபவர்களாகவும் இப் பெண்கள் பயன்பட்டனர். சங்ககால இலக்கியங்களில் வர்ணிக் கப்படும் போர்களின் மூலம் பெறப்பட்ட பெண்கள் கொண்டி மக ளிர்” எனக்குறிப்பிடப்படுவது கவனிக்கத்தக்கது.
ஆணுக்கும் பெண்ணுக்குமிடையிலான அசமத்துவ உறவு எப் போது ஏன் தோன்றியது என்பதற்கு மே ற் கூறிய விளக்கத்தினை விட ஆராய்ச்சியாளர்கள் வேறு விளக்கங்களையும் அளித்துள்ளனர். அவற்றினையும் இவ் விடத்தில் குறிப்பிடுதல் பொருந்தும்.
-- .. 65 ܚ

Page 40
13 ஒரு சாராரி, பெண்ணினது உடலியற்கை அவளை அவளது இருப்பிடத்துடன் கட்டுப்படுத்தியது எனவும் குழந்தை பிரசவம், வளர்ப்பு போன்றவை அவளை வேறு உழைப்பில் ஈடுபட முடியாமல் செய்தது என்றும் கூறியுள்ளனர். மேலும் இக்கருத்துப்படி பெண் களது உடலியல் இயற்கையாக விதித்த கட்டுப்பாடு காரணமாக அவர்களைப் பராமரிக்கும் பொறுப்பு ஆண்கள் கடமையாகிற்று என் பர். உடல் வலுவும், உற்பத்தித் திறனைப் பெருக்கும் வாய்ப்பு களும் கொண்ட ஆண் சமூகத்தினதும் குடும்பத்தினதும் தலைவனாக வளர்ந்தான் எனவும் கூறுவர். ஆண்மை, பெண்மை ஆகிய இயற் கையான உளவியல் அமைப்பும் இதற்குப் பங்காற்றியது என்பர் உயிரியல் விதிவாத அடிப்படையிலமைந்த விளக்கம் இது எனலாம்.
2. இன்னோர் சாரார், குறிப்பாக பிரடரிக் ஏங்கல்ஸ் போன் றோர் ஆதிகாலத்தில் சமூக உற்பத்தியில் பெண் பெற்றிருந்த முக் கியத்துவத்தை ஏற்றுக்கொள்வர். உண்மையில் ஏங்சல்ஸ் எழுதிய குடும்பம், தனிச் சொத்துடமை, அரசு ஆகியவற்றின் தோற்றம் என்ற நூலே முதன்முதல் பெண்களது மறைக்கப்பட்டிருந்த வரலாற்றுப் பங்களிப்பினை மிக அழுத்தமாக எடுத்துக் கூறியது. ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் ஏற்பட்ட வேலைப் பிரிவினையே உலகின் முதலாவது வர்க்கப் பிரிவினை என்று ஏங்கல்ஸ் கூறியுள்ளார். ஆணின் அதிகாரத்துக்கு பெண் அடங்கி உட்படும் நிலை பெண்ணின் வரலாற்று தோல்வி என்றும் அவ்ர் குறிப்பிட்டார். ஆனால் இந்த அசமத்து வம், ஆதிக்கம் எப்படி உண்டாகியது. அதனைச் சாதித்தது என்ன என்பது பற்றி அவர் திருப்தியான விடை அளிக்கவில்லை. மந்தை வளர்ப்பினால் பெறப்பட்ட உபரி உற்பத்திக்கு உடைமையாளனாக ஆண் அமைந்தான். இது தனிச் சொத்துடமைக்கு ஆரம்ப நிலையாகி யது. இதன் அடிப்படையில் தனிக் குடும்ப அமைப்பு உருவாகியது: இவையிரண்டுடனும் ஆணினது அதிகாரமும் பெண்ணினது தாழ்த் தப்பட்ட நிலையும் பிணைந்திருந்தது என்கிறார் அவர்.
இவற்றுள் முதலாவது சாராரது கருத்து விஞ்ஞானபூர்வமான ஆய்வு முறைக்கும் உண்மைக்கும் முரணானது ஆகும். உண்மையில் வரலாற்றுச் சான்றுகள், ஆதியில் பெண் உற்பத்தியில் பெற்ற முக் கிய இடத்தினைத் தெளிவுறுத்துகின்றன. எனவே பெண் அவளது இருப்பிடத்தில், அவளது உடலியற்கை காரணமாகக் கட்டுப்பட நேர்ந்தது என்பது தவறானதாகும். மேலும் ஆண்மை, பெண்மை என்பவையும் இயற்கையாக அமைந்தவை அல்ல. அவை வரலாற் றுச் செய்முறைக்கூடாக உருவானவை-உருவானவையாகும். எனவே முதலாவது கருத்து தவறானது ஆகும்
was 66 are

இரண்டாவது கருத்து (ஏங்கல்சின் கருத்து) தொழிற் பாகுபாட் டினையும் உற்பத்தியையும், ஆண், பெண் அசமத்துவத்தையும் தொடர்புபடுத்த முயல்கிறது. ஆனால் வேறு சில தவறுகள் உள் ளன. அதாவது உபரியின் தோற்றம் மந்தை வளர்ப்பின் பயன் என்கிறார் ஏங்கல்ஸ். ஆனால் அது சிறு பயிர்ச் செய்கைக் காலத் திலும் அதற்கு முன்னர் சேகரித்து உண்ணும் காலகட்டத்திலும் இருந்திருக்கிறது என்பதற்குச் சான்றுகள் இன்று உள." அப்படி யானால் முந்தைய காலகட்டங்களில் உபரி இருந்தும் தோன்றாத அசமத்துவ உறவு மந்தை வளர்ப்புக் காலகட்டத்தில் மாத்திரம் ஏன் தோன்றுகிறது என்ற வினா எழுகிறது,
ஆயுத வளர்ச்சி மந்தை வளர்ப்புக் கட்டத்தில் ஒருவாறு அதி கரித்தமை இதற்கான காரணமாகும் என்பதே பொருத்தமானதாகத் தோன்றுகிறது.
இவ்வாறு பெண்மீது ஆண் பெற்ற அதிகாரமானது பல்வேறு வழிகளில் கிளைவிட்டது. பெண்ணினது சமூக உற்பத்தியை தனக்கு உரிமையாக்குதல் மாத்திரமன்றி அவளது பாலியலையும் (Sexuality) தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவேண்டிய தேவை ஆணுக்கு ஏற்பட்டது. இந்த காலகட்டத்தில்தான் ஆண் முதன்மை பெறும் தந்தை வழிச் சமூக அமைப்பு (Patriarchal Society) உருவாகியது. ஒரு புருஷ - ஒரு தார மணக்குடும்பம் இத் தந்தை வழிச் சமூக அமைப்பின் ஆதார அடிப்படை அலகாக அமைந்தது. இதனையொட் டியே பெண்ணினது கடமைகள் வீட்டுக்குரியன எனக் கட்டிறுக்கமாக வரையறுக்கப்பட்டன. அவள் வீட்டுக்கு வெளியில் செய்யும் வேலை, கள் கூடப் பெரியளவில் மதிக்கப்படவில்லை. கற்பு போன்ற விழு மியங்கள் உருவாகின. அடங்கிப் போகிற மெல்லியல்புள்ள பெண் மைக் குணம், சமயங்கள் மூலமும் இலக்கியங்கள் மூலமும் இலட்சிய மயப்படுத்தப்பட்டது.
பெண்களின் உற்பத்தியும் சமூகக் குழுக்களின் தோற்றமும்
பெண்கள் சமூக உற்பத்தியில் முக்கிய பங்கு வகித்தனர் என முன்னர் கூறப்பட்டது. அதே சமயம் அவர்கள் முதன் முதல் சமூக உறவுகளை ஸ்தாபித்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். தமது உணவுக்காகவே வேட்டையாடியும் சேகரித்தும் செயற்பட்ட வயது வந்த ஆண்கள் போலன்றி பெண்கள் தமது குழந்தை களதுஉணவுக்காகவும் முயற்சி செய்ய வேண்டியிருந்தது. இந்த நிலைமை, தாய்மாருக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான உறவை - முதலாவது சமூக உறவினை ஸ்தாபிக்கும் பண்
- 67 -

Page 41
பைப் பெண்களுக்கு அளித்தது. தாய் - பிள்ளைகள் சேர்ந்த குழுக்களே முதலாவது சமூக அலகுகளாகும் என்பதைப் பல ஆராய்ச் சியாளரும் ஒப்புக்கொண்டுள்ளனர். இந்த அலகுகள் தனியே நுகர் கின்ற அலகுகளாக அன்றி உற்பத்தி செய்கின்ற அலகுகளாகவும் அமைந்தன. அன்னையரும் பிள்ளைகளும் உணவுப் பொருட்களைச் சேகரிப்போராகவும், மண்வெட்டியைப் பயன்படுத்தும் ஆரம்பகாலப் பயிர்ச்செய்கையாளராகவும் விளங்கினர். வளர்ந்த ஆண்கள், இத் தகைய ஆரம்பகால தாய் முதன்மைச் சமூகங்களில் (Matricentric) தற்காலிகமாகவும், அவற்றின் விளிம்பிலுமே செயலாற்றினர் என் பதை பல ஆராய்ச்சியாளர்களும் எடுத்துக்காட்டியுள்ளனர். 8 நாம் பிறந்த சமூக அலகுகளைத் தவிர ஏனையவற்றுடன் ஆண்கள் நிரந் தரமான உறவை வளர்த்துக் கொள்வதில்லை. (இந்தியாவின் கேர ளப் பகுதியில் மிகச் சமீபகாலம்வரை நாயர் குடும்பங்களில் இந் நடைமுறையிருந்தது. பெண் தனது பிறந்த வீட்டிலேயே நிரந்தரமாக வசிப்பாள். அவளது சகோதரிகளும் சகோதரர்களும் அங்கேயே இருப் பர். கணவன் 'வந்துபோகிறவனாகவே" இருப்பான். அவன் அவனது பிறந்த அலகின் நிரந்தர அங்கத்தினன். இது போலவே மட்டக் களப்பிலும் தற்காலத்தில் வழக்கிறந்துபோன குடிமுறை விளங்குகி றது. பெற்றோர், சகோதரர், பிள்ளைகள் என அங்கத்தினர் உள்ள குழுவில் வாரிசுமுறையும் தாய்வழியாகவே தொடரும். மண உற வினால் இக்குழுவுள் வந்துசேரும் ஆண் தொடர்ந்து தனது தாயின் குழுவிற்கு உரியவனாகவே இருப்பான்.)
இத்தகைய ஆரம்பகாலச் சமூக அலகுகளில் வளர்ந்த உற்பத்திச் சக்திகளாவன தொழில்நுட்பத்திறன் வாய்ந்தனவாக மாத்திரமன்றி மனிதக் கூட்டுறவிற்கான கொள்ளளவினையும் அதிகரித்துக் கொண் டன. எதிர்சாலம் பற்றித் திட்டமிடும் திறன், எதிர்காலத்தை எதிர்நோக்குதல், ஒருவரிடமிருந்து மற்றவர் கற்றுக்கொள்ளல், பழைய அனுபவங்களிலிருந்து கற்றல், அறிவை ஒரு தலைமுறையில் இருந்து இன்னோர் தலைமுறைக்கு அளித்தல் முக்கியமானதாய் அமைந்தன, இதுவே வரலாற்றை ஆக்குவதாயும் இருந்தது.
ஆண்களும் பெண்களும் ஈடுபட்ட வெவ்வேறு உற்பத்தித்துறை களும், ஆயுதங்களின் உடமையால் ஆண்கள் பெற்ற மேலாதிக்கமும் பால் அடிப்படையிலான தொழிற் பாகுபாட்டை எல்லாச் சமூகங் களிலும் எல்லாக் காலங்களிலும் நிலை நிறுத்துவதற்குக் காரணமா கின. அத்துடன் பெண்களுடைய தொழில்கள் பொருளாதார நன்மை வாய்ந்தவையல்ல என்றும் அவை இரண்டாம் பட்சமான உழைப்பே என்றும் கருத்துகள் வலுப்பட இவை வழிவகுத்தன:
- 68 -

தற்காலத்தில் தொழிற் பாகுபாடு
இன்று சகல நாடுகளிலும், விவசாய உற்பத்தியில் பெண்ணு டைய உழைப்பே பெரும்பங்கு வகிக்கின்ற நாடுகளிலும்கூட மேற்கூ றிய கருத்தே வலுப் பெற்றுள்ளது. இக்கருத்தே கருத்து நிலை ஏற்புடமை கொண்டதாகவும் அதிகாரத்தில் உள்ள அமைப்பினாலும் வர்க்கத்தினாலும் மேலும் பிரசாரம் செய்யப்படுவதாகவும் உள்ளது.
இன்று குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளில் உணவு உற்பத்தித் துறையில் பெண்கள் அதிகளவு உழைக்கின்றனர். உலக நாடுகளின் உணவுத் தேவையில் சுமார் 40% பெண்களின் உழைப்பு மூலமே பெறப்படுகிறது. அத்துடன் அவர்கள் வாழ்க்கைக்கு அத்தியாவசிய மான பொருட்களை, சந்தைக்கு அன்றி குடும்ப அலகின் நுகர்ச்சிக் குரிய பொருட்களையும் (Subsistence Production) உற்பத்தி செய் கின்றனர். ஆனால் இவ்வுழைப்பானது அவ்வந் நாடுகளின் சணக் கெடுப்புகளிலோ புள்ளிவிபரங்களிலோ பிரதிபலிப்பதில்லை. உணவுற் பத்தியாளர்களும் விவசாயிகளும் தொடர்ந்தும் ஆண்களாகவே சித் திரிக்கப்படுகின்றனர். இது பெண்களை நுகர்வோராக மாத்திரமே காண்கிற கருத்துடன் தொடர்புடையது.
முதலாளித்துவம் வளர்ச்சியடைந்த நாடுகளில் குடும்ப அலகு ஒரு நுகர் அலகாகவே (Consumption Unit) பெரும்பாலும் செயற்படுகிறது. ஆனால் முதலாளித்துவம், இயந்திரத் தொழில் நுட் பம், முற்று முழுதான பணப் பொருளாதாரம் போன்றவை கூர்மை யாக அபிவிருத்தியடையாத நாடுகளில் குடும்பம் நுகர் அலகாக மாத்திரமன்றி உற்பத்தி அலகாகவும் செயற்படுகிறது. அங்கு குடும்ப அங்கத்தவர்கள் யாவரும் - பிள்ளைகள், வயது முதிர்ந்தோர் உட் பட - ஏதோ ஒருவகையில் உற்பத்தியில் ஈடுபடுகின்றனர். இந்த உண்மைநிலை மேற்கூறிய கருத்துருவாக்கத்தினால் மறைக்கப்படுகிறது. குடும்பம் உற்பத்தி அலகாகவும் செயலாற்றுகிறது; அதன் அங்கமான பெண்ணும் அவ்வுற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறாள் என்பது குடும்பத்தின் பொருளாதார நடவடிக்கைகள், ஆண், பெண்ணினது உழைப்பு போன்றவை பற்றிய ஆய்வுகளின் பின்னணியாக அமை தல் வேண்டும். இத்தகைய நோக்கு நிலையே பெண்ணுக்குத் தேவையான அளவு முக்கியத்துவம் அளிப்பதற்கு அடிப்படையாக அமையத்தக்கது.
மேலும் வீட்டு வேலைகள் உழைப்பு அல்ல என்று கருதப்படு வதும் தவறானதாகும். மனித உழைப்பு பற்றிய கருத்தாக்கத்தில் காணப்படும் ஆண் சாய்வு பற்றி முன்னரேயே குறிப்பிட்டேன்;
- 69 -

Page 42
இக் கருத்தாக்கம் ஏற்கனவே குறிப்பிடப்பட்டதுபோல குழந்தைப் பேறு, குழந்தை வளர்ப்பு போன்றவற்றை பெண்ணினது உடலியற் கையின் விளைவாகவே காணுகின்றது அன்றி உணர்வுடைய மனிதச் செயற்பாடாக அல்ல. பெண்ணுக்கு கருப்பை என்ற உறுப்பு இருப் பதால் அவள் தன்பாட்டுக்கு குழந்தைகளைப் பிரசவிக்கிறாள் என் பதே இக் கருத்தாக்கத்தின் அடிப்படையாகும். ஆனால் குழந்தைப் பேறு தன்னுணர்வுடைய மனித செயற்பாடு என ஏற்கனவே கூறப் பட்டது. அத்துடன் அது ஏனைய உற்பத்திகள் யாவற்றுக்கும் அடிப்படையான மனித வலுவைத் தோற்றுவிக்கும் உழைப்பு என் பதும் குறிப்பிடத்தக்கது.? இவ்வாறு மனித உழைப்பு பற்றிய நோக்கு நிலை விரிவுபட்டால் குடும்ப அலகின் உற்பத்தி முக்கியத்துவம் மேலும் விளக்கம்பெறும்.
இது மாத்திரமன்றி இன்றைய முதலாளித்துவ சமூகத்தில், இச் steps அமைப்பை நிலை நிறுத்துவதற்குரிய விழுமியங்களை உள் வாங்குபவர்களாக பிள்ளைகளை சமூக உருவாக்கம் செய்யும், (Socia1ization) சக்தியாகவும் பெண் விளங்குகிறாள். பிள்ளை வளர்ப்பு என்பது தனியே அதன் உடல் வளர்ச்சி மாத்திரம் அன்று; பிள்ளையின் கருத்துகள் விழுமியங்கள் என்பவற்றை நடைமுறையிலுள்ள சமூகத் துக்கு இசைவாக உருவாக்குவதில் பெண்ணின் பங்கு வலுவானது. இவ்வகையில் பல்வேறு நன்மைகளையும் இலாபங்களையும் இன் றுள்ள சமூக அமைப்புக்குப் பெண்ணின் உழைப்பு நல்குகின்றது. இந்நிலைமையைத் தொடர்ந்து பேணுவதன் மூலமே வர்க்க, பால் அசமத்துவம் நிலவும் இச் சமூக அமைப்பை நிலைநிறுத்தமுடியும் என் l Iğil இவ்வமைப்பில் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு நன்கு தெரியும்,
குடும்பத்தின் பிரதான உழைப்பாளி ஆண்; பெண் மனைவி irriggh LDIT55.j Gld'' (Male Bread Winner and Female House_Wife Model) என்றகருத்து இன்று பெரும்பாலான சமூக பொரு ளாதார ஆய்வுகளுக்கும் அபிவிருத்தித் திட்டங்களுக்கும் பின்னணியாக உள்ளது. உதாரணமாக இலங்கையில் அபிவிருத்தித் திட்டங்களில் அநேக சமூகநல நன்மைகள் "குடும்பத் தலைவனுக்கே" - ஆணாக பிரதான உழைப்பாளிக்கே வழங்கப்படுகின்றன. கணவன் இல்லாது இருந்தால் மட்டுமே பெண்கள் இந்த உரிமைகளை அனு பவிக்கத் தகுதியுடையவர்கள் ஆவார்கள். கணவன் குடும்பத்தில் இருந்து விலகினால் அல்லது விவாகரத்துப் பெற்றால் இந்த நன்மை களும் அவனுடன் நீங்கிவிடுகின்றன. சமூக நலன்புரித் திட்டங்களிலும் ஆணே குடும்பத் தலைவனாக ஏற்றுக்கொள்ளப்படுகிறான். இதன் ாக ஆண்கள் பல சந்தர்ப்பங்களில் பெண்கள் பெறாத உரிமை களுக்கு உரித்தாகின்றனர். பெண். தானே குடும்பத்தின் பிரதான
- 70 m

உழைப்பாளி என்பதை நிரூபித்தால் மாத்திரமே இந்த நன்மைகள் பெண்களுக்கு உரித்தாகும். பெண்களே பெருமளவில் தொழில் புரி யும் சுதந்திர வர்த்தக வலயம், பெருந்தோட்டங்கள், தனியே பெண் களின் தலைமையைக் கொண்ட குடும்பங்கள் ஆகிய நிலைமைகளைக் கொண்ட இலங்கையில் குடும்பப் பொருளாதாரத்தில் பெண்கள் இரண்டாம் பட்ச நிலையே வகிக்கின்றனர் என்று சமூகநலப் பகுதி யினர் கருதுவது பொருத்தமற்றதாகும்,
"ஆண் குடும்பத்தின் பிரதான உழைப்பாளி" என்ற கருத்தின் அடிப்படையிலேயே குடும்ப வேதனம் (Family Wage) என்ற முறை உருவாகியது. அதாவது ஆணையே குடும்பத் தலைவனாகக் கருதி அவனும் அவனது மனைவி மக்களும் வாழ்க்கையை நடத்துவதற்குப் போதுமான கூலியை ஆணுக்குக் கொடுப்பதாகும். இதனால் பெண் உற்பத்தியில் ஈடுபடும்போது, குடும்பத்தில் மேலதிக வருமானத் திற்கே அவள் உழைப்பதாகக் கருதி, சமனான வேகைளின் போதும் குறைந்தளவு கூலியே வழங்கப்படுகிறது. இதுவே ஆணுக்கும் பெண் ணுக்குமிடையில் சமனற்ற ஊதியம் வழங்கும் நிலையை உருவாக் கியது. இலங்கை உட்படப் பல மூன்றாம் உலக நாடுகளில் 25%- 40% வரையிலான குடும்பங்கள் பெண்ணின் உழைப்பிலேயே தங்கி பிருப்பனவாகவோ பெண்ணின் தலைமையைக் கொண்டனவாகவோ உள்ளன. இவர்களுட் பெரும்பாலான பெண்கள் மிக்க வறுமையான நிலையில் வாழ்கின்றனர். இவர்கள் செய்யும் தொழில்களுக்குக் குறைவான கூலியே வழங்கவும்படுகிறது. இவர்கள் முதலாளித்துவ, ஆண்வழித் தீர்மானங்களைக் கொண்ட வேலைத்தலங்களில் சம னற்ற கூலி பெறுதலுக்கும், ஏனைய பாரபட்மான நடைமுறைகட் கும் உட்படுகின்றனர். 1984ம் ஆண்டுவரை இலங்கையின் தேயிலைத் தோட்டங்களில் இச் சமனற்ற சம்பளம் பெரும் பிரச்சனையாக இருந் தது. அத்துடன் பல்வேறு குடிசைக் கைத்தொழில், விவசாய வேலை களிலும் பெண்கள் ஆண்களை விடக் குறைந்த ஊதியம் பெறும் நிலைமையை இன்று காணலாம்,
மேற்கூறிய இந் நோக்கு நிலையானது இன்னொரு நடைமுறைக் கும் எம்மை இட்டுச் செல்கிறது. அதாவது தொழில்கள் தரும் போது ஆண்களுக்கே முதலிடம் கொடுக்கப்படுவதாகும், தவிர்க்க முடியாத தேவைகள் ஏற்படும்போதே பெண்கள் தொழில் செய்வதற்காகச் சேர்த்துக்கொள்ளப்படுகின்றனர். குறிப்பாக யுத்த காலங்களில் ஆண்கள் செய்த தொழில்களிற் பெண் கள் ஈடுபடுவது ஊக்குவிக்கப்படுகிறது. இலங்கைத் தமிழ்ப்பகுதி களை உதாரணமாகக் கூறலாம். ஆண்களின் இறப்பு, காணாமற்
- 7 -

Page 43
போதல், இளைஞர் இயக்கங்களிற் சேருதல், வெளிநாட்டுக்குப் புலம் பெயர்தல் போன்ற காரணங்களால் ஆண்கள் நாட்டுப்பொரு ளாதாரத்தில் பங்கேற்பது குறைவான போது பெண்கள் எந்தத் தொழிலிலும் ஈடுபடுவதற்கு தடையிருக்கவில்லை. இரண்டாம் உல கப் போரின் போதும் மேற்கு ஐரோப்பாவில் இந்நிலையே காணப் பட்டது. ஆனால் போர் முடிவுற்ற பின் போர் முனையிலிருந்து ஆண்கள் திரும்பிய பின்னர் சிக்கல் ஏற்பட்டது. இந்த ஆண்களுக் குத் தொழில் தேவைப்பட்டது. எனவே பெண்கள் தொழிற்சாலை களில் இருந்து நீக்கப்பட்டார்கள். வேலைகளை ஆண்களுக்கு விட் டுக் கொடுக்கும்படி அரசாங்கத்தாலும், சமய நிறுவனங்களாலும் அறிவுறுத்தப்பட்டார்கள். பெண்கள் இல்லத்தை நன்கு பரிபாலிக்க வேண்டும்; அதுவே சிறந்த வாழ்க்கை நிலைமையைத் தரும் எனப் பிரசாரம் செய்யப்பட்டது. மனையியற் கல்வி பெரும் இயக்கமாக இக்காலத்தில் உருவாகி வளரத் தொடங்கியது. பெண்-மனைவி (House Wife) என்ற நோக்கு நிலையே இம்மனையியற் கல்வியின் அடிப்படையாக அமைந்தது. மத்திய தர வர்க்கத்துப் பெண்களின் கருத்து நிலையை உருவாக்குவதில் இது பெரும் பங்கு வகித்தது. அழகிய, அடக்கமான கணவனையும் குழந்தைகளையும் நன்கு பரா மரிக்கிற, வீட்டை அலங்காரமாகவும் பளபளவென்று சுத்தமாகவும் ஒழுங்காகவும் வைத்திருக்கின்ற மனைவி' என்ற கருத்துருவே இப் பெண்களுடைய இலட்சியமாக வடிவமைக்கப்பட்டது. மே ற்கு ஐரோப்பாவில் உருவான இக்கருத்துரு எமது நாட்டிலும் நன்கு பரவியது. இலக்கியங்கள், திரைப்படங்கள் இதனை பிரபலப்படுத் திப் பிரசாரம் செய்தன. கணவன் வேலைத் தலத்திலிருந்து திரும் பும் போது, வீட்டு வேலைகளை எல்லாம் கனகச் சிதமாக முடித்து விட்டுத் தன்னை அலங்கரித்து தேனீர்க்கோப்பையுடன் காத்திருக் கும் மனைவி பற்றிய பிம்பம் இவற்றில் இடம் பெற்றது.
இத்தகைய கருத்துருவாக்கங்கள் பெண்ணினது சுதந்திரமான நிலையை மறுதலித்தன. பெண்ணை ஆணிற் தங்கி வாழ்பவனா கவே கருதின. ஆணும் பெண்ணும் இவற்றினால் நன்கு பாதிக்கப் பட்டனர். இவற்றை உள்வாங்கினர். தம்மைப் புரவலர்-இரவலர் நிலைமையிற் கண்டனர். ஆணுக்கும் பெண்ணிக்கும் இடையிலான அதிகாரவைப்பு முறை பொருந்திய உறவினை இது மேலும் நிலை நிறுத்துவதாக அமைகிறது.
இதுவரை மேலே கூறிய விடயங்கள் பால் அடிப்படையிலமைந்த தொழிற்பாகுபாட்டின் பல்வேறு அம்சங்கள் பற்றினவாகும். அதா வது பாகுபாடு எத்தகையது? இதுபற்றி நிலவுகின்ற கருத்துகள்
- 7 -

யாவை? ஆண்-பெண்ணிக்கிடையிலான சமனற்ற உறவுக்கு இது எவ்வாறு வழி வகுத்தது? தற்காலத்தில் இது எத்தகைய பரிமாணம் பெற்றுள்ளது? ஆண் பெண் சமனற்ற உறவையும் பெண்ணினது தாழ்த்தப்பட்ட நிலையையும் மேலும் இறுக்கமாக நிலை நிறுத்து வதற்கு இது எவ்வாறு பயன்படுகிறது? ஆகிய விடயங்கள் இங்கு சுட்டிக் காட்டப்பட்டன.
மாற்றுத் திட்டங்கள் என்ன?
பெண்கள் முன்னேற்றத்திலும் சமத்துவத்திலும் ஆர்வமுடை யோர் என்ற வகையில் மேற்கூறியவை தொடர்பாகச் செய்யப்பட வேண்டியவை யாவை என்பது இப்போது எமக்கு முன்னுள்ள வினாவாகும்.
பெண்ணினது உழைப்பு உற்பத்தி பற்றிய ஆக்கபூர்வமான கருத்து மாற்றத்தைப் பரப்புதல் வேண்டும். அதாவது உபரிப்பெறு மதியை நல்கும் ஆணினது வீட்டுக்கு வெளியிலான உழைப்பே சமூக ரீதியான உற்பத்தித்திறன் வாய்ந்த உழைப்பு என்ற கருத்திற்குப் பதிலாக பெண்களின் உழைப்பு பற்றிய மாற்றுக் கருத்து முன்வைக் கப்பட வேண்டும். அதாவது பயன் பெறுமதி (Use Values) வாய்ந்த பெண்ணினது வீட்டு உழைப்பும் உற்பத்தித் திறன் வாய்ந்தது என் பது உணரப்பட வேண்டும். அத்துடன் வீட்டு உழைப்பு தவிர பெண் ஈடுபடும் ஏனைய உழைப்புத் துறைகள் இரண்டாம் பட்சமானவை யாகக் கருதப்படாது அவற்றின் பயன், அங்கீகாரம் பெறுதல் வேண்
டும்.
இதனை அரசாங்கமும், சட்ட நிறுவனங்களும், அபிவிருத்தித் திட்டமிடுவோரும் தமது கொள்கைகளில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டும். இதன் மூலம் சமூக நலத் திட்டங்கள், அபிவிருத்தித் திட்டங்கள் என்பவை பெண்ணி னுடைய உற்பத்தித்திறன், உழைப்பு, பொருளாதார முக்கியத்து வம் என்பவற்றையும் கருத்தில் கொண்டு வகுக்கப்படும் சாத்தியப் பாடு ஏற்படலாம்.
அடிக்குறிப்புகள்
1. இன்றும் உலகின் பல்வேறு பகுதிகளிற் காணப்படும் ஆதி வாசிகள் மத்தியில் ஆண் பெண்களிடையே கட்டிறுக்கமான வேலைப் பிரிவினை இல்லை என்பதைப் பல மானுடவியல் ஆய்வாளர்களும் எடுத்துக்காட்டியுள்ளனர். அத்துடன் பெண் களின் உழைப்பினைக் குறைத்து மதிப்பிடும் வழக்கமும் இவர்
س 73 سم

Page 44
56f6MLGuLu gốiv60 av. Lumtífis6aqib -- Reiter. R. Toward an anthropology of Women. 1975
இந்த உயிரியல் விதிவாதம், அதிகாரம், அந்தஸ்து உடைய வர்கள் தமது நிலையினை மேலும் பலப்படுத்தப் பயன்பட் டுள்ளது. பெண்கள், கறுப்பின மக்கள் முதலியோரை அடக்கி வைத்திருப்பதற்கான தத்துவ ஆதாரமாக இதனை அவர்கள் பயன்படுத்தினர்.
பெண்ணினது உடலின் உற்பத்தித் திறனை மிருகங்களது கருவளம்போல நோக்குவதானது இன்றைய சனத்தொகைத் திட்டமிடுவோரின் கருத்துக்கு அடிப்படையாக உள்ளது. இது தந்தைவழி விழுமியங்களின் அடிப்படையில் விளங்கிக்கொள் ளப்பட வேண்டும்.
பிறப்புக் கட்டுப்பாடு, தாய்ப்பால் சுரப்பு என்பன பற்றிய அறிவும் நடைமுறைகளும் பண்டைக் காலப் பெண்களிடையே காணப்பட்டன என்பதை ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. untidisab. Fisher. Elizebeth, Women's Creation, 1979.
விபரங்களுக்குப் பார்க்கவும்:
i) Chattopadhyaya. D, Lokayata - A study in Ancient
Indian Mateialism, 1973.
ii) Childe Gordon, What Happened in History, 1976. iii) Reed. Evlyn, Women’s Evolution, 1975:
சங்கப் பாடல்களை ஆதாரமாக வைத்து நோக்கும்போது தானியங்களில் வரகு முக்கியம் பெற்றிருந்ததை அறியலாம். தினையைப் பறவைகளிடமிருந்து காப்பதில் பெண்கள் அதிக பங்கெடுத்தனர். 'தினை ஓம்பியும் கிளி கடிந்தும்" பணி யாற்றும் பெண்களை குறிஞ்சித் திணைப் பாடல்களில் காண லாம். தினைப்புனக் காவல் என்பது வெறும் இலக்கிய மர பாக மாத்திரம் அன்றி அன்றாட வாழ்நிலையுடன் தோடர் புடையதாயிருந்தது. சங்க இலக்கியங்களை ஆதாரமாகக் கொண்டு அக்காலப் பெண்களின் நிலையை அறிவதற்கான ஆய்வுகளை பெண்நிலைவாத நோ க் கி ன் அடிப்படையில் மேற்கொள்வது சுவையான தகவல்களுக்கு எம்மை இட்டுச் செல்லக்கூடும்.
- 74 -

7. ஈரான், துருக்கி ஆகிய நாடுகளில் சமீபத்தில் மேற்கொள்
10.
ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகள் பொறுக் கி ச் சேகரிக்கும் காலத்திலேயே, உபரி சாத்தியமாயிருந்தது என்பதைத் தெரி 6ứìằ6ìaörpGör. Fisher. Elizebeth, GotDựòLItại gird).
8. Luntri jisayh: i) Briffault. R., The Mothers, 1952
ii) Thompson. J., Studies in Ancient Greek Society: The Pre - Historic Ageon. 1965
iii) Reed. Evlyn: Gud bluq. STổi:
குழந்தைப்பேறு சமூகரீதியாக அத்தியாவசியமான ஒரு உழைப்பு என்ற கருத்து பல பெண் நிலைவாத பொரு ளியல் ஆராய்ச்சியாளர்களாலும் முன்வைக்கப்பட்டுள்ளது. உழைப்பு பற்றிய பெண்நிலைவாத கருத்தாக்கம் இது என 6avsTub. Lumrriji 35 Gayub. Mies. Maria. Patriarchy and Capital Accumulation at World Scale. 1986.
இது மாத்திரமன்றி குறிப்பிட்ட சில தொழில்களில் பெண் களை மாத்திரமே வேலைக்கு அமர்த்தும் முறை தற்போது பரவலாகியுள்ளது. ஆ டைத் தயாரிப்பு, எலக்ரோனிக் பொருட்கள் உற்பத்தி ஆகியவற்றில் பெருமளவு பெண் தொழிலாளர்கள் உள்ளனர். உலகின் சுதந்திர வர்த்தக வலயங்களில் பெண்களே பெரும்பான்மையான தொழிலா ளர் ஆவர்.
ܚ- 75 ܚ

Page 45
கலந்துரை
தேவகெளரி: உறவுசேர் உடலியல் காரணமாக பெண்கள் வீட்டுக் குள்ளேயே முடக்கப்படுகின்றார்கள். இதனால் பெண் ணின் உற்பத்தி குறைகின்றது.
சித்திரலேகா: குழந்தை பெறுவதும் மனித உழைப்புத்தான்.
சித்திரா எட்வர்ட்:
ஆண்கள் செய்கின்ற வேலையை இங்கு பெண் களுக்குக் கொடுக்கின்றார்களில்லை. காரணம் பெண்கள் கூடுதலாக லீவு எடுப்பதனாலாகும்.
சீனா போன்ற நாடுகளில் எல்லோரும் எல்லா
வேலைகளையும் செய்கின்றார்கள். எனவே குழந்தைகள் வளர்க்கும் பொறுப்பை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும்.
சித்திரலேகா பெண்களுக்கு வேலை நேரம் அதிகரித்துக்கொண்டே போகின்றது. பெண்களுக்கு இரட்டைச் சுமை சுமத் தப்பட்டுள்ளது. ஒன்று வீட்டிற்குரிய கூலி இல்லாத உழைப்பு. மற்றையது வெளி உழைப்பு.
அன்பேரியா ஹனிபா : சில ஆண்கள் வெளியில் வேலை செய்கின்
றார்கள், அதே வேலையை வீட்டில் செய் கின்றார்களில்லை. உதாரணமாக அலுவலக தொழிலாளி ஒருவர் காரியாலயத்தில் கூட் டித் துடைப்பார், ஆனால் அவர் வீட்டில் அவ் வேலையைச் செய்வதில்லை. பணத்துக்காக அவர்கள் வெளியில் வேலை செய்கிறார்கள், அது கலாசார ரீதியாக வந்தது. வீட்டில் அவர்களால் செய்ய முடியாது, தெரியாதோ என்பதற்கில்லை.
சிரோன்மணி ராஜரத்தினம் : 1980ம் ஆண்டு நான் புறக்கோட்டைக்கு
வந்தபோது ஒரு கட்டிடத்தின் மேல் நின்று ஒரு சில பெண் தொழிலாளிகள்
- 76 -

வேலை செய்தபோது எல்லோரும் ஆச் சரியமாகப் பார்த்துக்கொண்டிருந்ததைக் கண்டேன். அதே வேலை இன்றும் 1990ம் ஆண்டு நடைபெற்றுக்கொண் டிருக்கிறது. அது இப்போது பெண்கள் வேலையாக மாறிவிட்டது. அதை ஒரு வரும் ஆச்சரியமாகப் பார்ப்பதில்லை. சமுதாயம் எதிர்பார்ப்பதை நாம் செய் கிறோம்.
நான் இப்போது பணிப்பாளராகக் கடமையாற்றுகிறேன். ஊருக் குப் போகும்போது எனக்கு வயல் வேலை செய்ய விருப்பம். ஆனால் நான் செய்வதில்லை. ஏனெனில் மக்கள் என்னை ஆச்சரியமாகப் பார்ப்பார்கள். நாளைக்குப் பத்திரிகையில் பெண் பணிப்பாளர் வயலில் வேலை செய்கின்றா - எனப் பிரசுரித்து விடுவார்களா எனப் பயப்படுகிறேன்.
யோகா பாலச்சந்திரன் :
சிரோன்மணி வயல்வேலை தனக்குச் செய்வதில் வெட்கம் என் கின்றா. அவவின் இடத்தில் நான் இருந்தால் அவ்வேலையை நான் செய்வேன். சமூகம் எதிர்பார்க்கின்றது என்பதற்காக சமூகத்துடன் ஒடத் தேவையில்லை. எமக்கு சரியென்று படுகின்றதை நாம் செய்ய வேண்டும், எங்களுக்குத் தேவையென்று படுகிறதையே நாம் வாங்க வேண்டும். மற்றவர்களின் பெருமைக்காக வாங்கி காட்சி அலுமாரி யில் வைக்கக் கூடாது. தொழில் பாகுபாடு என்று சொல்லும்போது, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேலை வெற்றிகரமாகச் செய்ய இயலு மாக இருக்கும். ஆணுக்கென்று ஒரு தொழிலையும் பெண்ணுக் கென்று ஒரு தொழிலையும் கொடுத்துக் கொள்ளலாம். எனக்கு விருப்பமென்றால் நான் என்ன வேலையையும் செய்யலாம். தொழிற் பாகுபாட்டில் கடந்த காலத்திலிருந்ததைப் போலல்லாத மாற்றங் களைக் கொண்டு வரலாம். அரசு நிறுவனங்கள் மூலம் உதவிகளைச் செய்து கொடுக்கலாம்.
அன்னலட்சுமி இராஜதுரை :
பெண்களுக்குப் பகுதிநேர வேலையை ஏற்படுத்திக் கொடுத்தால் அவர்கள் வருமானத்தையும் பெற்றுக்கொள்ள முடியும். அதே நேரம்
குடும்பத்தைப் பராமரிக்கவும் முடியும். அரசாங்கத் திணைக்களங்
- 77 -

Page 46
கள் தனியார் நிறுவனங்களுக்குப் பக்கத்தில் குழந்தைப் பராமரிப்பு நிலையங்களை ஏற்படுத்தி கொடுக்கவேண்டும். அப்படிச் செய்யும் போது வேலைக்குச் செல்லும் பெண்களின் தொகையை அதிகரிக்க (Մ)ւգ պւհ3
அன்பேரியா ஹனிபா
இலாபம் தரும் வேலைகளைப் பெரும்பாலும் ஆண்களே செய் கிறார்கள். பெண்கள் சிறிய வியாபாரங்களையே செய்கிறார்கள். பகுதிநேர வேலைகளினால் பெண்களுக்கு முன்பு குறிப்பிட்டதுபோல் இரட்டைச் சுமை சுமத்தும் வாய்ப்புகள் பன்மடங்காகின்றன. குறைந்த கூலிதான் வழங்கப்படுகிறது. உழைப்பாளிகள் எல்லோரும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் சந்திப்பது கஷ்டமாகையால் தொழிற்சங்கங்கள் ஒன்றும் அமைக்க இயலாது.
--سیم- 78 میسیم۔

வெளிநாட்டுச் செலாவணிச் சம்பாத்தியத்தில் பெண்களின் பங்களிப்பும் சமுதாயத்தில் அவர்கள் பெறும் கணிப்பும்
சிரோன்மணி இராஜரத்தினம்
1988ஆம் ஆண்டு ஏற்றுமதியினால் பெற்றுள்ள சம்பாத்தியத் தில் 55% தேயிலையில் இருந்தும், புடவைக் கைத்தொழில் ஏற்று மதியிலிருந்தும் பெற்றுக்கொள்ளப்பட்டன. எனவே வருமானம் வேலைவாய்ப்பு வெளிநாட்டுச் செலாவணிச் சம்பாத்தியம் என்பவற் றின் வடிவில் தேயிலையும் புடவைக் கைத்தொழிலும் எமது நாட் டின் பொருளாதார அபிவிருத்திக்குத் தமது பெரும் பங்களிப்பை நல்கியுள்ளன. இவ்விரு தொழில் துறைகளிலும் 70%ற்கு மேல் பெண்களே தொழில் புரிகின்றனர். 1976ஆம் ஆண்டு தொடக்கம் பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்று பணம் சம்பாதித்து வெளிநாட்டுச் செலாவணிச் சம்பாத்தியத்தை அதிகரித்துள்ளனர். இவ்விதம் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் பெண்களின் பெருந்தொகையினர் முஸ்லிம் பெண்களாவர். பெண்கள் தொழிலில் ஈடுபட்டால் அவர்களது குடும்பத்தினரதும் சமுதாயத்தினரதும் கணிப்பைப் பெற்று தமது வாழ்க்கையை முன்னேற்றப் பாதை யில் கொண்டு செலுத்துவசி. பெண்களின் தசாப்தம் முடிவடைந்து விட்டது. பெண் தொழிலாளர்கள் மத்தியிலும் விழிப்புணர்ச்சி ஏற்பட்டுள்ளது என்று நாம் இப்பொழுது கருதுகிறோம். எனினும் மேலே குறிக்கப்பட்டுள்ள மூன்று தொழில்களிலும் ஈடுபட்ட பெண் களின் நிலை யாது என்று நாம் சற்றுச் சிந்திப்போம்.
மறுபக்கத்திலுள்ள வரைபடம் பிரதேசவாரியாக 10 வயதிற்கு மேற்பட்ட பெண்களின் தொகையில், தொழில் புரியும் பெண்களின் சதவீதத்தை விவரிக்கின்றது: amp
ܗܝܗ 79 ܚܢ

Page 47
SSX SS
Χ Y RSSSR *V*KNIKK
.. * * --- .ت.
20%-
1 - ܬ݁ܳ-܀
*、
15%-20%
10%-15%
10%<
55 prasbi
§ൽ
-4\\' VNNNNNNNNNNN 泌效 :KV 怒
Øጏ፻X)፩ SS
ം ഈ യീ മാ. -¿
8n-> avsvare జూసి Nos
YYA രി?. N N 滚 N St x XX
漫 NSSESS N { * 篮 9 怒 W S
గ్ద
YAAYSAK
然
SNS, ጇ 3፭?! * 36ሯ QXX *Y్ళ birరjట్టిపర్చి S&- sowmano- «amsoe. amaለጕ 潑- -- -- 一_一
&
*x-- gw- ss-s-sas sma
*w*YXamam- e-nm- «sum» esanm simum- es
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பெருந்தோட்டப் பகுதியில் வேலைசெய்யும் பெண்கள்
நுவரெலியா, பதுளை ஆகிய பிரதேசங்களில் தமிழ்ப்பெண்கள் தேயிலைத் தோட்டங்களில் வேலையில் அமர்ந்துள்ளனர். இப்பிர தேசங்களில் 10 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் தொகையில் 54.3 சதவீதத்திற்கும் மேற்பட்ட பெண்கள் தொழிலில் ஈடுபட்டுள்ளதாக பிரதேச ரீதியாக கணிக்கப்பட்டுள்ள புள்ளி விபரங்கள் கூறுகின்றன. தமிழ்ப் பெண்கள் கண்டி, இரத்தினபுரி, மாத்தளை, கேகாலையி லுள்ள தோட்டங்களிலும் வேலை பார்க்கின்றனர். பெருந்தோட் டங்கள் அல்லாத கிராமியப் பகுதிகளில், பெண்களின் முழுத்தொ கையில் 17 சதவீதத்தினரே தொழிலில் ஈடுபடுகின்றனர். தேயிலை, றப்பர் பெருந்தோட்டப் பகுதியை எடுத்துக் கொண்டால் சில தோட் டங்களில் 21-50 வயதிற்கிடைப்பட்ட பெண்களின் தொகையில் 75% சத வீதமானவர்கள் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். எமது ஆய்வுக ளின்படி தோட்டப் பகுதியில் வாழும் குடும்பப் பெண் தொழிலா ளர்களில் 35 சத வீதமானவர்கள் தமது ஊதியத்தைக் காண்ப தில்லை.
கணவனும் அதே தோட்டத்தில் வேலை செய்யும் நிலை யில் இருப்பின் அவரே மனைவியின் சம்பளத்தையும் பெற்று அத னையும் செலவு செய்து வீட்டிற்குரிய தேவைகளையும் பெண்ணுக் குரிய தேவைகளையும் தீர்மானிக்கின்றனர். ஆய்வுகள் நடாத்தப்ப டும் வேளைகளில் பெண் தொழிலாளரிடமிருந்து கேட்கப்படும் வினாக்களுக்கு கணவன்மாரே விடை கொடுத்து பெண்ணை ஊமை யாக்கி " அவளுக்கு ஒன்றும் தெரியாது", என்றும் வெளிப்படையா கக் கூறுகின்றனர். கிராம நகர்புறங்களில் வேலைபார்க்கும் இளம் பெண்களிடம் “நீங்கள் தற்பொழுது செய்யும் வேலையை விரும்பு கின்றீரா? பண வசதியிருப்பினும் இவ்வேலையைச் செய்வீரா" எனக் கேட்டால் 80% மானோர் "ஆம்" என்றோ, அல்லது வேறு ஒர் உயர்ந்த உத்தியோகத்தையே விரும்புகின்றோம்" என்றோ, கூறுகின் றனர்.
ஆனால் தோட்டப் பெண் தொழிலாளர் வீட்டில் வேலை செய்யாது வீட்டில் இருந்து பிள்ளைகளைக் கவனிப்பதே சாலச் சிறந்ததெனக் கருதுகின்றனர். தமது தொழிலினால் தாம் சமுதா யத்தில் கணிப்பைப் பெறவும் இல்லை. சுதந்திரமாக வாழ்க்கையை நடத்தவும்;இல்லை. பிள்ளைப்பராமரிப்பு நிலையம் இருந்தும்கூட
--سے 81 سس

Page 48
இதனால் அதிக பிரயோசனம் இல்லை, என்பதே இவர்களது கருத் தாக அமைகின்றது. இலங்கையின் பலம் மிக்க தொழிற்சங்கங்க ளாகப் பெருந்தோட்டங்களில் அமைந்துள்ள தொழிற்சங்கங்கள் தென்படுகின்றன. தொழில் செய்யும் எல்லாப் பெண்களும் தொழிற் சங்கங்களில் அங்கத்தவர்களாக இருக்கின்றனர். எனினும் குடும்பப் பெண்களில், 505% சதவீதத்தினரே தொழிற்சங்க அலுவலகங்களில் நேராகப் பங்கு கொண்டு கூட்டங்களுக்குச் செல்கின்றனர். பல பெண் தொழிலாளர்கள் தாம் எத்தொழிற் சங்கத்தில் உறுப்பின ராக இருக்கின்றனர் எனக் கூற முடியாத நிலையில் இருக்கின்றார்.
சம சம்பளத்தைப் பெற்றாலும் கூடப் பெண் தொழிலாளி கூடிய நேரம் வேலை செய்கின்றாள். கணவன் தனது குறிப்பிட்ட நேர வேலையைச் செய்த பின் வீடு திரும்புகின்றான். மனைவியோ கூடிய நேரம் தொழிற் ஸ்தலத்தில் செலவழிக்கின்றாள். குறிப்பிட்ட தொகைக் கொழுந்தைப் பறித்தபின் வீடு திரும்பும் உரிமை அவ ளுக்கு இல்லை;
பெண் தொழிலாளர்களைப் பெரும்பான்மையாகக் கொண்டுள்ள தொழிலாக பெருந் தோட்டங்கள் இருந்தும் கூட முகாமைத்துவ நிலையில் உள்ள பெருந்தோட்டப் பெண் தொழிலாளர்களை விரல் விட்டு எண்ணலாம். கொழுந்து பிடுங்கும் போது கூட அவர்களுக்கு மலை உச்சியில் ஆலோசனை கூறும் மேற்பார்வையாளர்கள் எல்லோ ரும் ஆண்களே ஆவர். மலை உச்சியில் கால்கடுக்க வேலைசெய்யும் பெண்களுக்கு 'கால் கழுவ" ஒதுக்குப்புறம் கூட இல்லை. இந்நிலை யில் இளம் பெண்கள் தாம் வேலைசெய்யும் இடத்தில் எதுவித பிரத் தியேக வசதிகளின்றி வாழப் பழகிக் கொள்கின்றார்கள்.
சட்டரீதியாக கணவன் செய்யும் தொழிலுக்கும், கணவன் பெறும் ஊதியத்திற்கும் சமமாக மனைவி தொழில் செய்து, ஊதியத்தைப் பெற்றுங் கூடக் குடும்பத்திலும் சமூகத்திலும் அந்தஸ்து எதுவுமே இல்லாதிருப்பதற்குக் காரணம் அவளுடைய கல்வி நிலையே எனக் கூறின் மிகையாகாது. தோட்டத்திலே பிறந்து, தோட்டத்திலே 4, 5 வருடக் கல்வி கற்ற பெண்களே இப்பொழுது தோட்டங்களில் பெரும் பான்மையாக வேலைசெய்கின்றனர். இவர்களில் பலர் எழுத வாசிக்க முடியாதவர்களாக உள்ளனர். பிறருடன் தொடர்பு கொள் வதற்கான அடிப்படைத் திறனையும், அறிவையும் பெற்றிராதபடி யால் பெண்கள் தோட்டப்பகுதிகளில் இரண்டாந்தரப் பிரசைக ளாகவே கணிக்கப்படுகின்றனர். தோட்டப் பெண் தொழிலாளர் மத்தியில் கிட்டத்தட்ட 40 சதவீதத்தினர், எழுத வாசிக்கத் திறன்

அற்றவர்களாகக் காணப்படுகின்றனர். பாடசாலையில் நான்காம் வகுப்புவரை படித்த பெண்கள் கூடக் காலப்போக்கில் எழுத்து வாசிப்பு, கணிதம் ஆகிய அடிப்படைத்திறன்களை முற்றாகவே மறந் தவர்களாகக் காணப்படுகின்றனர். குடும்பப் பெண்களுக்குச் சுகா தாரக் கல்வி, நிறையுணவு பற்றிய அறிவு, நல்வாழ்வுக் கல்வி, குடும் பக் கட்டுப்பாடு பற்றிய அறிவு, பெறும் சம்பளத்தை திட்டமிட்டுச் செலவழிக்கும் ஆற்றல் போன்றவை இன்றியமையாதவை. தாயான வள் தன் பிள்ளைகளை ஊக்குவித்து, கற்றலுக்கான சூழலைப் பிள்ளைகளுக்கு வீடுகளில் அமைத்துக் கொடுத்தால் தான் பிள்ளை களும் தம் பாடங்களை வீட்டில் விரும்பிக் கற்பார்கள்.
தோட்டப் பாடசாலைகட்குச் செல்லும் பிள்ளைகள், ஒழுங்காகப் பள்ளிக்கூடம் செல்வதில்லை. அவ்வாறு சென்றாலும் 50% மானோர் ஆறாம் ஆண்டிற்கு மேல் தம் படிப்பைத் தொடர்வதில்லை. 21ஆம் நூற்றாண்டின் சமுதாய சிற்பிகளாகப் போகும் இக் குழந்தைகள் இவ்வாறு கல்வி அறிவில்லாதவராக வளர்வது வேதனைக்குரிய விடய LDrregub:
இப் பெருந்தோட்டங்களில் தொழில் செய்யும் பெண்கள் பெற வேண்டிய அறிவு பின்வருமாறு:
(1) கேட்டல், பேசுதல், வாசித்தல், எழுது த ல் போன்ற
தொடர்புகொள் திறன்களைப் பெறல்
(2) தான் பெறும் பணத்தை நாளாந்தக் குடும்பத் தேவை களுக்கு ஏற்ற முறையில், செலவழிக்கவும், சேமிக்கவும் தேவைப்படுகின்ற கணிதத்திறன்களையும், எண்ணக் கருத் துக்களையும்பெறல்.
(3) தன் குடும்பத்தில் உள்ளவர்கள் தேகாரோக்கியம் உள்ள வர்களாக வாழ்வதற்கேற்ற சுகாதார அறிவையும் நிறை யுணவு பற்றிய அறிவையும் பெறல்.
(4) குடும்பத்தைத் திட்டமிட்டு நடாத்துவதற்குரிய அறிவைப்
பெறல்.
(5) சூழல் தொடர்பான அறிவைப் பெறல்.
(6) வீட்டுத் தோட்டம் ஒன் றை ச் செயல்படுத்துவதற்கான
அடிப்படைத் திறனைப் பெறல்.
- 83 -

Page 49
(7) வானிலை, காலநிலையை அறிந்து, அதற்கேற்ற உடை களைத் தெரிவு செய்து வாங்கிப் பயன்படுத்தும் திறனைப் பெறல்.
(8) தனது இல்லத்தை அழகுபடுத்தும் ஆற்றலைப் பெறல்:
(9) பொது இடங்களை, பொது உடைமைகளைப் பாதுகாக்க வேண்டுமெனும் கடமை உணர்வைப் பெறுவதுடன் நடை முறைப்படுத்தவும் பயிலல்.
(10) சமூகத்துடன் இயைந்து ஒற்றுமையுடன் வாழும் மனப்
பாங்கைப் பெறல்.
(11) இலங்கையிலுள்ள ஏனைய பகுதிகளைப் பற்றி அறிதல்)
தோட்டத்துப் பெண் தொழிலாளர் 8 மணி நேரம் தோட்டத் தில் வேலை செய்து, அதற்குப்பின்பு 6 மணி நேரம் வீடுகளில் வேலை செய்கின்றனர். இதனால் இவர்களுக்குக் கிடைக்கும் ஒய்வு நேரத்திற் கேற்ப முறைசார்பற்ற கல்வி அமைய வேண்டும். மாறிவரும் சமுதா யத்திற்கேற்ப இவர்களும் முன்னேறி நம்பிக்கையுடன் வாழவேண் டும். தோட்டப் பெண் தொழிலாளர்களது நிலையை உயர்த்தும் பொழுது கவனிக்க வேண்டியவை.
1 பெண் தொழிலாளரது வேலைப் பழு, 2. இவர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வசதிகள். 3. இவர்கள் ஏற்கனவே பெற்றிருக்கும் அறிவு.
பெண் தொழிற்சங்கவாதிகள் முகாமையாளருடனும், தலைவிக ளுடனும் தொடர்புகொண்டு தோட்டத்துப் பெண் தொழிலாளரின் கல்வி முன்னேற்றத்தை அவர்களுக்கு விளக்கி அதற்கேற்ப வசதிகள் பெற்றுக்கொடுத்தல் வேண்டும்.
தோட்டத்துப் பெண் தொழிலாளரைத் திரும்பவும் நாம் பாட சாலைக்கு அனுப்ப முடியாது. எனவே பாடசாலை, பிள்ளை பரா மரிப்பு நிலையம், கோயில், வீடு என்றிவற்றைப் பயன்படுத்தி அவர் களுக்கு அடிப்படைத் திறன்களான எழுத்து, வாசிப்பு, கணிதம் போன்ற விடயங்களைக் கற்பிக்கலாம். அவர்களை ஆலயங்களுக்கு வரவழைத்து தேவாரம், எளிய பிரார்த்தனைப் பாடல்கள் அடங்கிய நூல்களைக் கொடுத்து அவற்றைப் பாட வைத்து வழிபாட்டில் ஈடு படுத்தலாம். அவர்களிடம் மேற்குறித்த திறன்களை வளர்ப்பதற்கு அவ்வப்பகுதியில் கற்பிக்கும் தோட்டப் பாடசாலை ஆசிரியர்கள் அச்
- 4 -

சமுகத்திலுள்ள எட்டாம் ஆண்டிற்கு மேல் படித்த மாணவர்கள், சுகாதார உத்தியோகத்தர் போன்றவர்களின் சேவையைப் பயன்படுத் துவது உத்தமமாகும். கிழமையில் இரண்டு நாட்கள் மாலை வேளை யில் இவர்களை ஒன்று கூட்டி இவர்களது பெயரை எழுதவும், தாம் வாழும் தோட்டத்தின் சரித்திரத்தை அறியவும், அவர்கள் வாழும் மலையின் சுற்றாடலை அறியவும், சுகாதாரம், நிறை யுணவு போன்றவற்றை அறியவும் வழிவகுக்கலாம். பிள்ளைகள் தாயுடன் இருந்து கற்கலாம். இத்துடன் பிள்ளைகளுடைய நிறை, அவர்களு டைய உயரம், வீட்டின் பரப்பு, சம்பளத்தைத் திட்டமிட்டு செல விடும் முறை, குடும்பக் கட்டுப்பாடு போன்ற விடயங்களை இவர்கள் அறிந்துகொள்ள வழிவகுக்கலாம். இம்முறை சார்பற்ற கல்வி நிலை யங்களாக முன் கூறிய பாடசாலைகள், கோயில்கள், பிள்ளை பரா மரிப்பு நிலையங்கள், சுகாதார மத்திய நிலையங்கள், அ மை த ல் வேண்டும்.
மகாராஷ்டிரப் பிரதேசத்தில் இம் முதியோர்க்குரிய கல்வி நிலை யங்கள் சிறப்பாக நடைபெற்றதை நான் கண்டிருக்கின்றேன். தமிழ் நாட்டிலும் இவை ஆரம்பிக்கப்பட்டுள்ளன. முறைசார்பற்ற கல்வி யில் அடங்கவேண்டிய விடயங்கள் முன்பு கூறிய நோக்கங்களை நிறைவேற்றுவனவாக அமையவேண்டும். தோட்டத்தில் வாழும் குடும்பப் பெண் தொழிலாளரைக் கவரக்கூடிய, அல்லது உடனுக் குடன் பிரயோசனம் தரக்கூடிய விடயங்களை மையமாகக் கொண்டே இச் செயற்பாடுகள் அமைதல் வேண்டும், கற்பிக்கும் முறையும் வயது வந்தவர்களுக்கு ஏற்றமுறையில் அமையவேண்டும், அவையாவன:-
1. அவர்களது அன்றாட வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்ட விட.
யங்களைக்கொண்ட படங்களைக் கொடுத்துப் பேசவிடல். .ே இராகத்துடன் பாடி மகிழல். பொதுசனத் தொடர்பு சாதனங்கள்: வானொலி,
தொலைக்காட்சி புதினப்பத்திரிகைகள் சஞ்சிகைகள், நாடகம் போன்றனவற்றைப் பயன்படுத்தி இவர்களது வாழ்க்கையை முன் னேற்றப் பாதையிலே வழிநடத்தலாம், கொழுந்தை நிறுத்து, நிறை
- 85 -

Page 50
யைக் குறித்துக் கொள்ளல், நிறை உணவைச் சமைத்து வீடுகளுக்கு எடுத்துச் செல்லல், பாடசாலைத் தோட்டத்தில் காய்கறிகளைப் ப்யிரிடுவதில் தாமும் பங்குகொண்டு செல்லல், ஆரம்ப சுகாதார அறிவைப் பெறல், தமது இல்லத்திற்கு தேவையான பொருள்களை கூட்டுறவுக் கடைகளில் தொகையாக வாங்கப் பழகுதல், அத்தகைய கூட்டுறவுக் கடைகளை நடத்தப் பழகுதல், செலவுகளைத் திட்டமிட் டுச் செலவு செய்தலும், அவை சம்பந்தமான கணக்குகளை வைத்தி ருத்தலும், பற்பொடி தயாரிக்கும் முறையைப் பழகுதல் என்றிவை யாவும் தோட்டப் பெண்களுக்குப் பயனுள்ள முயற்சிகளாக அமைந் ததை என்னால் இலங்கையிலுள்ள சில பெருந்தோட்டங்களில் அவ தானிக்க முடிந்தது,
இன்று தோட்டங்களிலே மருத்துவ வசதிகள் பற்றி மகத்துவ மாகக் கூறப்பட்டுவந்தாலும், அது தோட்டத் தொழிலாளிகளின் நன் மையைக் கருதி ஏற்படுத்தப்பட்டதா அல்லது நிர்வாகத்தின் நன்மை யைக் கருதி நிறுவப்பட்டதா என நாம் ஆராயும் பொழுது அதன் தன் மையை நாம் உணர்ந்துகொள்ள முடியும். இதுசம்பந்தமாக 1988ஆம் ஆண்டு மே மாத 'பொருளியல் நோக்கில்" கனேடிய நாட்டைச் சேர்ந்த ஜேம்ஸ் றொபேட்ஸ் என்பவர் எழுதிய கட்டுரையை மேற் கோள் காட்டி தோட்டத் தொழிலாளருடைய சுகாதாரம், கல்வி என்றிவற்றின் நிலையைக் கூற விரும்புகின்றேன். சிசு மரண வீதம் ஏனைய பகுதிகளிலும் பார்க்க இங்கு இரு மடங்காகும். தாய் மர னம் மும் மடங்கானது, கற்றல் அறிவு ஏனைய பகுதிகளிலும் பார்க்க குறைவானது. மருத்துவ உதவி, போக்குவரத்து வசதி, அறிவாற்றல் பெற்ற மருத்துவமாதின் உதவியுமின்றி தோட்டப்பகுதியில் பெண் கள் பிள்ளைகளைப் பெற்றெடுக்கின்றனர். பெற்றோர் வேலை செய் யும்பொழுது 40க்கும் மேற்பட்ட அவர்களது பிள்ளைகள் ஓர் அறை யில் ஒரு வயதுவந்தவரால் மேற்பார்வை செய்யப்படுகின்றனர்:
பெருந்தோட்டத் தொழிலாளரின் தேவைகள் மிகவும் குறைவா னவை. அவர்களது எதிர்பார்ப்பும் அங்ங்ணமே, ஒழுகாத கூரையும் குடிக்கத் தண்ணீர் வசதியும் இருந்தால் அதுவே அவர்களுக்குப் போதும் என்ற மனோபாவமுடைய தோட்டத்துரைமாரே இன்று நமது தோட்டங்களில் கடமைபுரிகின்றனர்:
-- 86 س

1987ல் "மலையக கலை இலக்கியப் பேரவை"யின் குன்றின் குரல்" பத்திரிகையால் அகில இலங்கை ரீதியில் நடாத்தப்பட்ட கவி தைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற ஜின்னாஹ் ஷரீபுத்தீனின் "விடிவைக் காண்போம்" என்ற கவிதையை மேற்கோள் காட்டி தோட்டப் பெண் தொழிலாளர்கள் பற்றிய எனது குறிப்புக்களை முடிக்க விரும்புகின்றேன்.
"காலையிலே எழுந்தெங்கள் கடமைக் கேகக்
கடுங்குளிரால் உடல் நடுங்கிக் குறுகிப் போக மாலை வரை மனந்தளரா தொன்று சேர்ந்து மலையேறித் தேயிலையின் தளிர் பறித்து ஆலையிலே சேர்த்ததன் பின் தானே யெங்கள்
அகப்பணிகள் ஒவ்வொன்றாய் நிறைவு செய்வோம் பாலை நிலம் போ லெங்கள் வரண்ட வாழ்வு
பசுமைபெறுங் காலமென்று வருமோ சொல்வீர்.”*
"நாட்டினது வருமானம் எங்கள் கையில்
நாடறியும் நாமறியா திருப்ப தேனோ தோட்டத்துக் கூலிகளென் றெம்மை மற்றோர்
தூற்றவிட மேன்கொடுக்க வேண்டும் நம்மால் ஈட்டுகின்ற பெரும் பொருளைக் கொண்டு தானே
இங்குள்ளோர் வாழுகிறார் எமைப்பு கழ்ந்து ஏட்டினிலே எழுதிவிட்டாற் போதா தெங்கள் இன்னலிடர் அகலவுல குதவ வேண்டும்."
"கல்வியொன்று தானெம்மை யுயர்த்தும் வாழ்வில்
கடை நிலையில் இருந்தெம்மைத் தூக்கும் ஒன்றும் இல்லையென்ற நிலைமாறி வாழ வைக்கும்
எவருக்குஞ் சிரந்தாழ்த்தா திருக்கச் செய்யும் எல்லையில்லா எமது மனச் சுமைக ளெல்லாம் இரவிகண்ட பணிபோல மறைந்து போகும் புல்நுனியின் துளிநீருக் கொத்த வாழ்வு
புறங்காணப் புதுவாழ்வு பொலியுந் தானே."
ܚܟܡ 37 ܗܘܼܚܗܘܢ

Page 51
முதலீட்டு அபிவிருத்தி வலயத்திலுள்ள கைத்தொழிற்சாலைகளில் தொழில்புரியும் பெண்கள்
சமீப காலமாக கைத்தொழில் ஏற்றுமதிகள் குறிப்பிடத்தக்க வளர்ச்சிப் போக்கினைக் காட்டியுள்ளன. இவ் ஏற்றுமதியின் பெறு மதியானது 1977ல் எஸ். டி. ஆர். 3 கோடியிலிருந்து 1984 எஸ். டி. ஆர். 354 கோடியாக அதிகரித்துள்ளது. இந்த இரண்டு வரு டங்களிலும் மொத்த ஏற்றுமதியில் இவைகளின் பங்கானது முறையே வீதமாகவும் 26 வீதமாகவும் இருந்தது. உற்பத்தியாக்கப்பட்ட ஏற்றுமதிகளின் விரிவாக்கமானது ஒரு பக்கம் சார்ந்ததாகவும் தோன்று கிறது. ஆடை அணிகலன் (உடுப்புகள்) என்றே ஒரேயொரு பிரிவின் மூலமே இவ் வளர்ச்சியானது பிரபல்யமாக வெளித் தோன்றி இருக் கின்றது. இந்த ஒரு அம்சமே 1978 - 82 இடையிலான காலப் பகுதியில் குறிப்பிடத்தக்க உயர்ந்த மெய்வளர்ச்சியினை (58%) காட்டி
புள்ளது.
முதலீட்டு அபிவிருத்தி வலயங்கள் கட்டுநாயக்காவிலும், பியகம விலும் பெரும்பாகப் பொருளாதார ஆணைக்குழுவின் கீழ் அமைக்கப் பட்டுள்ளன. பெரும்பாகப் பொருளாதார ஆணைக்குழுவின் திட் டங்களில் 50%ற்கு மேற்பட்டவை (65 திட்டங்களில் 35) ஆடைப் பிரிவைச் சார்ந்தவையாகவே அமைந்திருக்கின்றன. 'கைத்தொழில் மயமாக்கல்" செயல் முறையில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கே இப் புதிய கொள்கையில் அதிமுக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. பாதி பயிற்றப்பட்ட இளம் பெண் தொழிலாளர்களை நம்பியே இவ் வாடைத் தொழில்துறை இயங்குகின்றது. 90% பெண் தொழிலாளர் களே, முதலீட்டு அபிவிருத்தி வலயத்தில் (சுதந்திர வர்த்தக வலயத் தில்) ஆடைத் தொழிற்துறையில் தொழில் புரிகின்றனர் எனப் புள்ளி விபரங்கள் எடுத்துக் காட்டுகின்றன.
ം 88 -

சதவீதம்
பெண் “3 சதவீதம் தொழில்துறை மொத்தம் oಷ್ಟ್ರೇ" தொழிலா ேே)
GTI T56T
ஆடை உற்பத்தி 21,619 19,492 90.2 81.8 றப்பர் பொருட்கள் 351 20 5.7 0.1 இரத்தினக்கற்கள் நகை வகைகள் 716 626 87.4 2.6 மின் உபகரணப் பொருட்கள் 426 322 75.6 1.4 தோற் பொருட்கள் 1,914 1,120 58.5 4。7 ஏயர் லங்கா லிமிட்டட் 2,670 826 30. 9 3.5 ஏனையவை 2,503 1,423 56.9 5.9 மொத்தம் 30, 199 23,830 78.9 100.0
மூலம் பெரும்பாகப் பொருளாதார ஆணைக்குழு (1984)
இலங்கையிலும் ஏனைய நாடுகளைப் போலவே சுதந்திர வர்த் தக வலயத்தில், வெளிநாட்டு நிறுவனங்கள் பெண் தொழிலாளர் களை ஈடுபடுத்துவதற்குக் காரணம் அவர்களுக்குக் கொடுக்கும் குறைந்த வேதனமாகும் இவ் வேதனமானது தமது நாட்டுத் தொழி லாளர்களுக்குக் (அந்நியநாட்டில்) கொடுக்கும் வேத ன த் தி லும் பார்க்க 2030 மடங்கு குறைவானது. எனவே இலாபத்தில் கண் ணாயிருக்கும் இவ்வெளிநாட்டுக் கம்பனிகள் குறைந்த செலவில் பொருள்களை இங்கே உற்பத்தியாக்குகின்றன. பெரும்பாலும் இதற் குரிய மூலப்பொருட்களையும் வெளிநாட்டில் இருந்தே கொண்டு வருகின்றன. இத் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் பெண்கள் 18க்கும் 25க்கும் இடைப்பட்ட விவாகம் செய்யாத பெண் தொழி லாளர் ஆவர். இப் பெண்கள் க. பொ. த. சாதாரண அல்லது உயர்தரக் கல்வி பெற்றுள்ளனர். சொற்ப நாட்களில் இவர்களுக் குப் பயிற்சியைக் கொடுத்து, சாந்தமான குணம் படைத்த படித்த இளம் பெண் தொழிலாளர்களை, இவ் வெளிநாட்டு கைத்தொழிற் சாலைகள் பெறுகின்றன. பால் சார்ந்த, திருப்பித் திருப்பி அத னையே செய்து ஒப்புவிக்கும் கூட்டுக் கைத்தொழில் பிரிவைச் சார்ந்த, உடுப்புத் கைக்கும் தொழிலையே இவ் விளம் பெண்கள் செய்கின்ற னர். இத் தொழிற்சாலைகளிலே வேலை செய்யும் ஆண்
-- 89 --سم

Page 52
சளில் பெரும்பகுதியினர் முகாமைத்துவத் தொழில் துறையில் ஈடுபடு கின்றனர். இவ்விளம் பெண்களில் 80 சதவீதமானோர் சிறு விவசாய அல்லது நகர்ப்புற தொழிலர்ளர் வகுப்பைச் சேர்ந்தவர்களாக இருக் கின்றனர். குறிப்பிட்ட கைத்தொழில் பயிற்சியற்ற நிலையில் இவர் களுக்கு வேறு துறையில் உத்தியோகம் பெறக்கூடிய வாய்ப்புகளில்லை சுதந்திர வர்த்தக வலயத்தில் தொழில்புரிவதால் இவர்களுக்குப் பண வருவாய், பொருளாதார சுதந்திரம், வாழ்க்கை வசதிகள், குடும்பத் திலும் சூழலிலும் உயர்ந்த அந்தஸ்து, கணிப்பு என்பன உண்டு: எனினும் இவர்களது தொழில் துறையில் முன்னேறுவதற் குரிய வாய்ப்போ, தொழில்சார் நடவடிக்கைகளில் ஈடுபடும் சுதந்திரமோ இவர்களுக்கில்லை. இலங்கையில் சமீபகாலத்தில் தொழிலாளர்கள் நலன் களைப் பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள சட்டங்கள் இங்கு செயல்முறைப் படுத்தப்படுவதில்லை. பெண்கள் இத்தொழில் துறை மூலம் மனிதவள அபிவிருத்தியில் ஒன்றிணைக்கப்பட்டுள்ளனர். எனினும் மனித விருத்தியில் ஒன்றிணைக்கப்படாத, குறைந்த தரத் தில் பயிற்சியைப் பெற்றுக் குறைந்த மட்டத்தில் தொழில்களைப் புரிகின்றனர்.
மத்தியகிழக்கு நாடுகளுக்குச் செல்லும் பெண்கள்
மத்தியகிழக்கு நாடுகளுக்கு 200,000 பெண்கள் பணிப் பெண்க ளாகச் சென்றுள்ளனர். இலங்கையில் வேலைவாய்ப்பின்மையும் இங்கு முழு வாழ்நாளில் சம்பாதிக்கக் கூடிய பணத்தைச் சொற்ப ஆண்டு களில் சம்பாதிக்கும் வாய்ப்பு மத்திய கிழக்கில் உண்டு, என்ற எண் ணமே இப் பெண்களை பணிப் பெண்களாக மத்திய கிழக்கு நாடு களுக்குச் செல்லத் தூண்டுகிறது. 1981ஆம் ஆண்டு புள்ளி விபரங் களின்படி மத்திய கிழக்கு நாடுகளில் பணிப் பெண்களாக வேலை செய்யும் பெண்களில் 70.7 சதவீதத்தினர் குவைத், ஐக்கிய அரே பியக் குடியரசு, செளதிஅரேபியா ஆகிய மூன்று நாடுகளிலுமே தொழில் புரிகின்றனர். இவர்களில் மத்திய கிழக்கிற்குச் சென்றுள்ள பணிப்பெண்களில் 76% கொழும்பு, கம்பஹா பூகர்ப்புறங்களைச் சார்ந்தவர்களாகவோ அல்லது கிராமங்களில் இருந்து வந்து இவ் விரு நகர்ப்புறங்களில் வசித்த பின் மத்திய கிழக்கிற்குச் செல்லவேண் டிய ஆயத்தங்களைச் செய்தவர்களாகவோ காணப்படுகின்றனர். வெளிநாட்டுச் செலாவணிச் சம்பாத்தியத்தை மத்திய கிழக்கு பணிப் பெண்கள் பெற்றுத் தருவதால் இத்தொழில் அரசாங்க ஆதரவையும் பெற்றுள்ளது.
= 90 -

தொழிலுக்காக வெளிநாடு செல்வோர்
நிலை 1976 1977 1979 1980 1981 உயர்நிலை மொத்தம் 15 51 1,657 1,357 1,991 பெண்கள் a- 8. 25I 197 260 பெண்கள் சதவீதம் nnn mamma 5. 145 13.0 மத்தியநிலை மொத்தம் 75 348 2,874 ይ,199 3,420 பெண்கள் mm. 381 288 264 பெண்கள் சதவீதம் •ens 3.2 16.0 12.8 7.7 தொழில் (பயிற்சி பெற்றோர்) மொத்தம் 222 3,208 6, 110 5,895 11,187 பெண்கள் ~ 1.1 96 277 பெண்கள் சதவீதம் ܫܫܫ aw 1.8 1.6 2.6 மொத்தம் 214 2031 12,803 14,501 31,936 பெண்கள் 2 220 10,131 11,321 24,537 பெண்கள் சதவீதம் 0.9 108 79.1 78.1 76.8
தொழில் வாரியாக பிரிக்கப்படாத (நிலை)
மொத்தம் namn 一 8,931 4,692 8,913 பெண்கள் нам a- 1,368 2,647 4,822 பெண்கள் சதவீதம் -- gana 46.7 56.4 54。及 எல்லா மட்டமும் (நிலையும்)
மொத்தம் 526 5,633 25,875 28,644 57,447 பெண்கள் 2 231 12,242 14,543 30,160 பெண்கள் சதவீதம் 0.4 4.1 47.3 50.8 52.5
p6avih :- RBM Korale
வெளிநாடு செல்வோர் (1981) மத்திய கிழக்கில் தொழில்புரிவதாக வெளிநாடு செல்வோர் (1983) மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்வோர் (1984) திட்ட அமுலாக்கல் அமைச்சு கொழும்பு.
-a 91 -

Page 53
ஆண்களைப் போலல்லாது வேலை தேடி வெளிநாடு செல்லும் பெண்கள் பெரும்பாலும் பயிற்சி அற்றவர்களாகவே காணப்படு கின்றனர். 1981ஆம் ஆண்டில் எடுக்கப்பட்டுள்ள புள்ளிவிபரத்தின் படி பெண்கள் ஆண்களை விடக் கூடிய தொகையினராய் வெளிநாடு சென்றிடுகின்றனர். (68%) வெளிநாடு செல்லும் பெண் தொழி லாளர்களுக்குரிய பிரச்சினைகளை ஆராயுமிடத்து அவை பெரும் பாலும் மேற்கு ஆசியா செல்லும் பயிற்சியற்ற பணிப் பெண்களைச் சார்ந்ததாகவே அமைகின்றன. இப் பணிப் பெண்கள் பெரும்பாலும் குறைந்த வருமானம் பெறும் நகர்ப்புறக் குடும்பங்களைச் சார்ந்தவர் களாகக் காணப்படுகின்றனர். முற்றிலும் வேறுபட்ட சூழ்நிலையில் பணிப்பெண்களாகக் கடமை ஆற்றுவதற்குரிய பயிற்சி இவர்கள் இலங்கையை விட்டுச் செல்ல முன்பெறுவதில்லை. 1981 ஆம் ஆண்டுப் புள்ளி விபரங்களின்படி இப் பணிப் பெண்களில் 64.4 வீதமானவர்கள் விவாகம் செய்தவர்களாகக் காணப்படுகின்றார்கள். வெளிநாடு செல் லும் தொழிலாளருள் 70.5 சதவீத ஆண்களும் 40.2 சதவீத பெண்க ளும் க. பொ. த. சாதாரண பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர். இப் பணிப் பெண்களுள் சிலர் மத்திய கிழக்கு நாடுகளில் பெறும் தொழி லின் பயனாக வீடு, நிலம் போன்றவற்றை வாங்கித் தமது குடும்பப் பொருளாதார நிலையை, விருத்தி செய்துள்ளனர். வேறு சில குடும் பப் பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளில் கஷ்டப்பட்டு துன்புறுத்தப் பட்டுள்ளனர். சில பெண்கள் பொருளாதாரச் சுதந்திரம் பெற் றுள்ளனர். வேறு சிலர் வெளிநாடு சென்றபின் தமது பிள்ளைகள் கவனிப்பாரற்று சீரழிந்ததையும் தமது குடும்பங்கள் சிதைவுண்டதை யும் கண்டு மனம் வெதும்பி உள்ளனர்.
பெண்களின் நலம் சம்பந்தமாக தொழிற்படும் அரசு சார்பற்ற நிறுவனங்கள் எடுக்கவேண்டிய நடவடிக்கைள் சில இங்கே தரப்பட் டுள்ளன.
தொழிலுக்கேற்ற பயிற்சியினை இளம் பெண்களுக்களித்தல். தொழில் துறையில் ஈடுபடும் பெண்களின் திறன்களை விருத்தி செய்து தலைமைத்துவப் பண்புகளை வெளிப்படுத்தும் பெண்களுக்கு, முகாமைத்துவப் பயிற்சியினை அளித்தல்
2. தொழில் துறைக்கேற்ற புதிய தொழிநுட்பவியற் பயிற்சி
யினைப் பெண்களுக்கு அளித்தல்.
3. தன்னம்பிக்கை கொண்ட முகவர்களாகப் பெண்கள் அபி
விருத்தியில் ஈடுபடுவதற்குரிய மார்க்கத்தை ஏற்படுத்தல்.
m 92 mas

4: தொடர்பு கொள் சாதனங்கள் மூலம் பெண்கள் சமூகத்திற்கு ஆற்றவேண்டிய பங்கினை விளக்குவதுடன் அபிவிருத்தித் திட்டங்களை அமைக்கும் பொழுது செயல்முறைப் படுத்தும் பொழுதும், அதில் பெண்களுக்குரிய பங்களிப்பை மக்களுக்கு விளக்கிக் கூறல்.
பெண் எழுத்தாளர்களும், பேசாமடந்தையாக இருக்கும் பெண் பாத்திரங்களைக் கதாநாயகிகளாக அமைக்காது காரியத்திறன், இலட்சியம், தலைமைத்துவம், தொழில்நுட்பப் பயிற்சி ஆகிய திறன் களைப் பெற்ற பெண்களைத் தமது கதைகளில், நாடகங்களில், கவிதைகளில் முக்கிய பாத்திரங்களாக அமைத்து அவர்களுக்கு முதன்மை இடம் அளித்தல் வேண்டும். ஜின்னாஹ் ஷரிபுத்தீன், பெண்ணுரிமை” என்ற தலையங்கத்தின் கீழ் தினகரன் பத்திரி கைக்கு எழுதிய கவிதையினை மேற்கோள் காட்டி என் உரையை முடித்துக் கொள்கின்றேன்.
"போட்டியிட்டே ஆண்களோடு கல்வி -தன்னில்
புகழோடு வாழுபவ ரெத்த னைபேர் நாட்டினையும், ஆண்டுவின்றும் ஆளுகின்ற
நாரியரை யேன்மறந்தா ரின்னுமின்றும் ஏட்டிலடங் காதபெருந் தொகையாம் பெண்கள்
எத்தொழிலுஞ் செய்யவுளந் துணிந்தா ரின்று வீட்டினிலே யடக்கிவைத்த காலம் மாறி
விடுதலை பெற்று ழைக்கின்றா ரறிகிலாரோ.
- 93 -

Page 54
கலந்துரை
யோகா பாலச்சந்திரன் யாருக்கும் கைப்பொம்மையாக இருக் காமல் எந்தச் சக்திக்கும் அடிபணியாமல் தங்கள் காலிலே நின்றால் எதிர்காலத்தை நல்லமுறையில் அமைக்கலாம். பணத்துக்கோ மேல் நாட்டுச் சக்திக்கோ இடம்கொடுக்காமல் சொந்தக் காலில் நில்லுங் கள். இதே முறையில் நடந்தால் இளம் எழுத்தாளர்களின் கதை நன்றாக மலரும்.
கமலினி செல்வராசன்: மலையகத் தோட்டத்தில் மலசலகூடம் இல்லாத நிலையில் பொதுமக்கள் முறையிட்டு மலசல கூடம் ஒன்றை கட்டிக்கொடுத்தார்கள். ஆனால் அவர்கள் மலசலகூடத்திற்குப் போவ தற்கு நேரத்தை ஒதுக்கிக்கொடுக்கவில்லை.
வள்ளிநாயகி இராமலிங்கம்: மலையகத்தில் இருந்து ஒரு பிரதி நிதி வரவில்லையென்பது பெரும் குறையாக இருக்கின்றது. இருந் தாலும் அந்தக் குறையை கலாநிதி சிரோன்மணி அவர்கள் நிவர்த்தி செய்திருக்கிறார்கள் என்று குறிப்பிட்டார். ஒரு மலையகத் பெண் மணி போலவே அங்குள்ள சகல குறைகளையும் எடுத்துச் சொல்லி யிருக்கிறார்.
பாத்திமா நஷ்வா கலீல்: "சகலகலா சம்பந்தி" படத் தி லே தாயானவள் தனது பிள்ளைகளை அறிமுகப்படுத்துகையில் தன் விதவை மகளை அறிமுகப்படுத்தவில்லை. எனவே பெண்தான் மக ளாக இருந்தபோதும்கூட பெண்ணையே ஒதுக்கிவைக்கிறாள்.
சித்திரலேகா விளம்பரங்களைப் பொறுத்தமட்டில் அங்கர் பால் விளம்பரத்தை எடுத்துக்கொண்டால், மக்கள் பார்த்துவிட்டு வாங்க முடியாதவர்கள், இவை எங்களுக்குக் கிடைக்கவில்லையே என்று கவ லைப்படுகிறார்கள்.விளம்பரங்களில் இலாபநோக்கத்திற்காகவே பெண் களைப் பயன்படுத்துகிறார்கள். கூடுதலாக விளம்பரங்கள் பத்திரிகை யில் இருந்து வானொலிக்கும் தொலைக்காட்சிக்கும் இடம்பெயர்ந்து விட்டதென்றே குறிப்பிடலாம். மற்றும் பெண்கள் அமைப்பு பல மாக ஒன்றானதாக வளரவில்லை. மலேசியா போன்ற நாடுகளில் நன்றாக வளர்ந்திருக்கின்றது.
- 94 -

பெண்களும் இம்சையும் - ஒரு கலந்துரை
- யோகா பாலச்சந்திரன் -
யோகா பாலச்சந்திரன்: இம்சை என்பதை இன்று இதனுடைய பின்னணியில் இருந்து பார்த்தால் ஆரம்பகாலம் தொட்டு இன்று வரையும் சகல ஜீவராசிகளிடையேயும் ஒரு பொதுவான பண்பு நிலவுகின்றது, அதாவது பலவீனமானவர்களை பலமுள்ளவர்கள் தாக்குகிறார்கள். உதாரணமாக சின்ன மீன்களை பெரிய மீன்கள் தாக்குகின்றன; வலது குறைந்தவர்களைப் பூரண சுகமுள்ளவர்கள் தாக்குகின்றார்கள். இதன் பிரதிபலிப்பாகவே பெண்களுக்கு எதிரான வன்செயல்கள் இடம்பெறுகின்றன. ஆண் ஒருவன் பெண்ணை அடிமைப்படுத்தி தனக்குக் கீழே வைத்துக் கொண்டால்தான் தனது ஆண்மை வெளிப்படுகிறது எனக் கொண்டான். சமூகத்திலே பெண் சகல மட்டங்களிலும் இம்சைக்கு ஆளாகிறாள்.
இக்கட்டத்தில் தொலைக்காட்சியில் உண்மை சம்பவமொன்றை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட தொலைக்காட்சிப் பட மொன்று காண்பிக்கப்பட்டது. ஆசிரியையாக தொழில்பார்க்கும் படித்த மனைவி, கணவனால் தினமும் அடித்து துன்புறுத்தப்படுகின் றாள். காதல் திருமணம் கசக்க ஆரம்பிக்கின்றது. தாங்கவொண் ணாமல் வீட்டை விட்டு வெளியேறி பெண்கள் விடுதியொன்றில் தஞ்சம் புகுந்தாள். அங்கும் கணவன் வந்து கலாட்டா செய்யவே விடுதியின் சொந்தக்காரி இவளை வெளியேற்றி விடுகின்றாள். இவ் வாறாக, புகலிடமின்றி ஆழிமேற்துரும்பாக இவள் அல்லல்பட்டுத் தவிக்கும் நேரம் ஒரு நாள் கணவன் பாடசாலை விட்டு வெளியே வந்தவளைக் கடத்திக் கொண்டு செல்கின்றான். இவள் எவ்வளவு கூச்சலிட்டும் பயனில்லை. பொதுமக்கள் இது கணவன் மனைவிக் கிடையிலான விடயமென வாளாவிருக்கின்றனர். கணவனோ மனை வியை ஒரு பேயோட்டியிடம் கொண்டு விட்டு பேயோட்டும்படி கேட்கின்றான். பேயோட்டும் சடங்குகளின் போது பூசாரி இந்தப் பெண்ணை பேயடிக்கும் சாக்கில் கடுமையாகத் தாக்கவே இவள் மூர்ச்சையாகி விழுகின்றாள். படம் இந்தக் காட்சியுடன் முடிவுறு கின்றது.
--سم~۔ 95 عد سی۔

Page 55
யோகா பாலச்சந்திரன்: இந்த நிகழ்ச்சி சர்வ சாதாரணமாக நிகழும் நிகழ்ச்சி. பெண்கள் படித்து தொழில் பார்க்கின்ற நிலை ருந்தாலும் கூட கணவன் கொடுமைக்காரனாக இருந்துவிட்டால் சட்டமும் உதவாது, சமூகமும் உதவாது. எல்லாவற்றையும் விட்டு கடைசியில் உயிரோடு கொல்லப்படும் நிலையே வருகின்றது. இது குடும்ப மட்டத்திலேயுள்ள பிரச்சினை; கீழ்மட்டம் நடுத்தரமட்டம் உயர்மட்டம் எல்லா மட்டங்களிலும் இருக்கின்றது. உயர்மட்டக் குடும்பங்களிலுள்ள பிரச்சினைகள் பெரும்பாலும் அம்பலத்துக்கு வருவதில்லை. காரியாலயத்தில் பதவிநிலை உத்தியோகத்தர்கள் கீழ் மட்ட பெண் உத்தியோகத்தர்களை இம்சைப்படுத்தல், மற்றும் சுதந்திர வர்த்தக வலயத்திலே பெண்கள் இம்சைப்படுத்தல் என்ப னவும் இவற்றிலடங்கும். ஒருவனை நசுக்குவதற்கும் அவனுடைய பெண்ணையே இம்சைப் படுத்தினர். உதாரணமாக, பாண்டவர்க ளைக் கேவலப்படுத்துவதற்கு திரெளபதியின் துகிலை உரிந்தார்கள். கற்பழிப்புச் சம்பவங்களுக்குக் கூட பெண்தான் காரணம் என்று சமூ கம் சொல்லுகின்றது.
அம்பேரியா ஹனீபா ஒரு பெண் கணவனால் துன்புறுத்தப்படு மிடத்து ஏன் விவாகரத்துப் பெறாமல் கூடியவரை சேர்ந்து வாழ் கின்றார்கள் என்றால், திருமணம் தெய்வீகமானது எனக் கொண்ட தவறான விழுமியங்களாகும்.
ஒளவை விக்னேஸ்வரன் எழுபத்தைந்து வீதத்திற்கு மேற்பட்ட பெண்கள் அன்றாடம் பிரச்சினைகளுக்குள்ளாகி (இம்சை) வருகின் றனர். பெண்கள் சொத்துடைமையாக்கப்பட்ட பின்புதான் இம்சைப் படுத்தப்படுகிறார்கள். இதற்குமேல் மதங்களும் பெண்களுக்குப் போதிக்கின்றது. எல்லாவற்றுக்கும் சமுதாய அமைப்பே காரணம். சமுதாய விடுதலைக்காக பெண்கள் உழைக்க வேண்டும், சமுதாய விடுதலையே பெண் விடுதலை.
யோகா பாலச்சந்திரன்: இந்தியாவிலுள்ள பெண்கள் தாங்க ளாகவே சேர்ந்து ஒரு இயக்கம் ஆரம்பித்து விட்டார்கள். அவர்கள் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று என்னென்ன பிரச்சினையென்று கேட்டு அறிந்து கொள்ளுவார்கள். பெண் தனக்கு பிரச்சினை ஏற் படுமிடத்து அங்கு முறையிட்டு விவாகரத்தோ அல்லது வேறு பரி காரங்களோ தேடிக் கொள்வார்கள்,
அம்பேரியா ஹனீபா பெண்கள் பிரச்சினைகளைக் கேட்டறிவ தற்கு இலங்கையிலும் "வின்' என்ற நிறுவனம் அல்பேட் பிளேஸ், கொள்ளுப்பிட்டியில் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது:
தேவகெளரி: பெட்டைக் கோழி கூவி விடியாது,
யோகா பாலச்சந்திரன்: பெட்டைக் கோழி கூவியும் விடியும்
என்பதை நீங்கள் சமுதாயத்தில் முன்னோடியாக இருந்து நிரூபித்துக் காட்ட வேண்டும்.
ത്ത് 96 1ത്ത

குழுநிலை விவாதம் வினாவிடை
குழு - 01
தொடர்பு சாதனங்களில் பெண்கள் - பத்திரிகைத் துணுக்குகள்
1.
பத்திரிகைத் துணுக்குகள் சம்பந்தமாக உங்கள் கருத்து என்ன? ஒதுக்குகள் மிகவும் சக்திவாய்ந்த, மக்களின் மனதில் எளி
தில் வேரூன்றத் தக்க படைப்பாகும். இந்த வகையில் துணுக்
குகள் மிக முக்கிய இடத்தைப் பெறுகின்றன.
அவற்றின் மதிப்புக்கேடான அம்சங்கள் என்ன? பெரும்பாலும் பத்திரிகைத் துணுக்குகளில் பெண்கள் இழிவு படுத்தப்படுகிறார்கள். அதாவது நாகரீகம் வளர்ந்த இந்தக் காலகட்டத்திலும் பழைமையை பேணும் விதத்தில் அமைந்த துணுக்குகளை பிரசுரித்தல். உதாரணமாக **ஆத்தை அலங் காரம் வாழைக்காய் உப்பவியல்" என்பது.
அவற்றினால் உருவகப்படுத்திக் காட்டப்பட்டது என்ன?
எழுத்தாளர்கள் இந்தக் கட்டுரைகளின் மூலம் எதனை விளக்க முனைகிறார்கள் என நீங்கள் நினைக்கிறீர்கள்?
பெண்களுக்கு மட்டுமான பத்திரிகையின் பக்கங்கள் இன்றும் சமையல், கலை, தையல்கலை, கணவனை கவரும் கலை போன்றவற்றையே பிரசுரித்தல், ஆணின் சகல வசதிகளுக் கும் ஏற்பவே .ெண் படைக்கப்பட்டுள்ளாள் என்ற கருத் துக்கள் பரவியுள்ளன. பெண்ணை அடிமையாக, சொத்தா கப் பார்க்கும் நிலையை தூண்டுகிறார்கள்.
இதனை வாசிப்டோரின் கருத்து எவ்வாறு இருக்கும் என நீங்கள் நினைக்கிறீர்கள்? பெரும்பாலும் ஏற்றுக்கொள்வார்கள். சில விதிவிலக்குகள் எல்லா மட்டங்களிலும் இருக்கவே செய் கின்றன. ஒரு பொறுப்புள்ள எழுத்தாளர் என்ற வகையில் இது சம் பந்தமான உங்கள் கருத்து என்ன?
இத் துணுக்குகள் போன்று பெண்களை இழிவுபடுத்தும் அம் சங்களை நிராகரித்துச் செயற்படவேண்டும்,
-سس- 97 -سس

Page 56
(அ) (1) கடிதம் எழுதுதல்
(2) சங்கங்கள் ஆரம்பித்து கருத்துக்களைப் பரப்பிச் செயற்
படுதல்
(3) ஊர்வலங்கள் போன்றவற்றை ஒழுங்கு செய்து உறுதி
யாக நிராகரித்தல்.
(ஆ) சமூக மாற்றத்திற்கு பெண்களின் விடுதலையும் அவர்களின் சமத்துவமும் இன்றியமையாத ஒன்றாக கருதிச் செயற்படு தல். செயற்படுத்தத் தூண்டுதல், (இ) சில பழமை பேணும் எழுத்தாளர்களின் படை ப் புகளை
யிட்டு விழிப்பாக இருத்தல்.
7. இந்த மறுப்பான தோற்றங்களைத் திருத்துவதற்கு நீங்கள்
என்ன நடவடிக்கை எடுப்பீர்கள்?
படித்த மக்களுக்காக மட்டுமன்றி பாமரமக்களும் அறியும் வகையில் படைப்புகளை உருவாக்குதல்.
பெண்களுக்கு எதிரான அநீதிகள் எங்கு நடப்பினும் தட்டிக் கழிகாமல் செயற்படுதல். மக்களுக்கு ஜீரணிக்க கடினமான விடயங்களை நாகுக்காக வெளிப்படுத்தல்.
8. மறுப்பான தோற்றங்களை எதிர்க்கும் கட்டுரைகளை எழுது வதில் பத்திரிகை வெளியீட்டாளர், வாசகர்கள், சம்பிரதா யப் பற்றுடையவர், குடும்பத்தவர், முதலியவர்களிடமிருந்து, நீங்கள் எழுத்தாளர் என்ற முறையில் எதிர்நோக்கக்கூடிய பிரச்சினைகள் என்ன?
அ. பிரசுரிக்க மறுக்கலாம்.
ஆ. வாசகர்களிடம் இருந்து எதிர்ப்புகள் வரலாம். இ. தனிப்பட்ட வகையில் பயமுறுத்தப்படலாம். ஈ. சமூகத்திலிருந்து ஒதுக்கி வைக்கப்படலாம்.
இவற்றை எவ்வாறு சமாளித்து வெற்றி காண்பீர்? இவை வெற்றிகாண நேர டி யாக பத்திரிகையாளருடன் கதைத்தல்,
- 98 -

அ. குறித்த படைப்பை படிப்பதற்கான விமர்சனங்களை
எழுதுதல்.
ஆ. தனிப்பட்ட முறையில் வேலைபார்க்கும் அலுவலகங் களிலும் சந்திக்கும் மக்களுக்கும், குடும்பத்தவர்களுக் கும் இக் கருத்துக்களை வலியுறுத்துதல்.
9. தங்கள் கட்டுரையில் பெண்ணின் தாழ்ந்த நிலைமைக்கெதி ராக வாதாடும் எழுத்தாளர்களுக்கு நீங்கள் எந்தவகையில் ஆதரவளிப்பீர்கள்?
எழுத்தாளர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் விமர்சனங்கள் கூட்டங்கள், கெளரவிப்புகள் வழங்கலாம். 'தன்னிலை மாறாத" நிலையிலுள்ள பெண்ணுக்கு மாற்று முறையான “புதிய பெண்ணில்" நீங்கள் என்ன சிறப்பியல் புகளை அடையாளங் காணுகிறீர்கள்?
மனந்தடுமாறாமல் தங்களை கவர்ச்சிப் பொருளாக்காமல் நிமிர்ந்த நன்னடையும் - நேர் கொண்ட பார்வையும் யார்க் கும் அஞ்சாத செந்நெறியும், திமிர்ந்த ஞானச் செருக்கும் என்ற பாரதி கண்ட புதுமைப் பெண்ணின் அடையாளங்
கள் இருக்கும்,
குழு - 02
தலைப்புகள்: - பெண்களும் வன் செயல்களும்
விளம்பரங்கள்
பெண்களும் தொழிலும்
1 இன்றைய சமுதாயத்தில் பெண்களுக்கெதிரான எத்தகைய வன்
செயல்கள் செயற்படுத்தப்பட்டு வருகின்றன?
அ. வீட்டினுள்ளும் வெளியிலும் பெண்கள் உடல் உள ரீதியி
லான வன்செயலுக்குள்ளாக்கப்படுகின்றனர்.
ஆ. பலாத்காரம் செய்யப்படுதல் - வீட்டினுள் விருப்ப மி ன் றி உடலுறவிற்கு நிர்ப்பந்திக் கப்படுதல், வெளியில் பலாத் காரம் செய்யப் படு த ல், போர்க்கால பலாத்காரம் என்பன இதனுள்அடங்கும்.
-سسس 99 س-س-

Page 57
இ. பெண்கள் உடல் ரீதியாக ஒவ்வொரு பருவத்திலும் இம் சைப்படுத்துதல் (அடித்தல், காயப்படுத்தல்) உள ரீதியில் (வீட்டுப் பொருட்களை உடைத்தல், ஏசுதல், உணவை மறுத்தல்) இம்சைப்படுத்தல்.
ஈ. தொழில்பார்க்கும் இடங்கள், போக்குவரத்துச் சாதனங் கள். கல்வி நிலையங்கள், நடைபாதைகள் மற்றும் பொது இடங்களில் உடல் உள இம்சைக்குள்ளாதல்.
தொலைக்காட்சி, வானொலி, எழுத்து முதலிய தொடர்பு சாத னங்கள் எவ்வாறு பெண்களுக்கெதிரான வன்செயல்களை நிலை பெறச்செய்து, மெய்ப்பித்துக்காட்டுகின்றன,
1. தொடர்பு சாதனங்களில் ம னி த ஜி வி யாக வன்றிப் பொரு ளாகக் காட்டுதல், பெண்களுக்கெதிரான வன்செயல்களை மெய்ப்பித்தல் .
2. வர்த்தக நோக்கில் பலாத்காரக் காட்சிகள், படங்கள், வர்ண னைகள் என்பன பெண்களுக்கான வன்செயல்களைத் தூண்டு கின்றன.
வேதங்களும் வன்செயல்களைச் சரி காண்கின்றனவா? அப்படி யானால் எவ்வாறு எனக் கூறுங்கள், வேதங்கள் பற்றி எமது குழு நீண்ட நேரம் விமர்சித்து ஆராய்ந்த போது இரு பக்கச் சார்பான கருத்துக்கள் கிடைத்தன,
திருமண ஏற்பாட்டிற்குள் பெண்கள் தொடர்ந்தும் வன்செயல் களுக்குக் கீழ்ப்படிகிறார்கள் என்று ஏன் கருதுகிறீர்கள்? 1. திருமணத்திற்கு மேன்மையான அந்தஸ்து வழங்குதல். 2. பொருளாதார நிலை வெளியேறவிடாது தடுத்தல். 3. வளர்க்கப்படும் சூழ்நிலையும் கொடுக்கப்படும் கருத்துகளும்
பாதித்தல். 4. திருமண முறிவிற்கு சமூக ஆதரவின்மை: கற்பழித்தல் உட்பட வன்செயல்கள் பற்றிய பழங்கதைகளும், தவறான கருக்துக்களும் என்ன? அகலிகை கதை, திரெளபதி கதை கற்பு என்பது பெண்ணுக்கு மட்டும் உரித்தானது. பெண் ஒருவனுக்கேயுரிய பொருள். பலாத்காரத்தைத் தூண்டுபவள் பெண்ணே
- 100 ത്ത

6. சிங்கள/தமிழ் தொலைக்காட்சி நாடகங்கள் பெண்களின் அவமா
7.
8:
னத்தை எவ்வாறு நிலைபெறச் செய்கின்றன?
தளவிரிப்பு, துணை ஒன்று, இரட்ட நெட்டன, கம்பெரலிய போன்ற நாடகங்கள் மீண்டும் மீண்டும் பெண்ணுக்குரிய அவமா னங்களை காட்டுவதன் மூலம் அக் கருத்துக்கள் சரியானவை என நிலைநிறுத்துகின்றன.
பெண்கள் தாழ்வான பங்கையே எப்போதும் வகிக்கும் விதத் தில், தொழிலில் பால் வேறுபாட்டை அழுத்தமாகக் காட்டும் சில விளம்பரங்களைச் சிறப்பாக எடுத்துக்காட்ட முடியுமா?
அழகு சாதனங்கள், வீட்டு வேலைப் பொருட்களில் பெண்களை யும் தொழில்நுட்ப அறிவு பூர்வமான விளம்பரங்களில் ஆண்க ளையும் காட்டுதல்,
நெஸ்பிறே, திமுத்தி சம்போ, புதிய சன்லைட் விளம்பரங்
கள் - பெண்
எலக்ரோனிக் பொருட்கன், வோல்டர் பற்றறி விளம்பரங்கள்
தொலைக்காட்சியில் பெண்களைப் புதிய தோற்றத்தில் காட்டு வதற்கு என்ன நடவடிக்கைகளை எடுப்பீர்கள்?
எல்லா மட்டங்களிலும் உள்ள பெண்களையும் சித்தரித்துக் காட் டுதல் வேண்டும். உதாரணம் - உயர் அதிகாரி, தொழில்நுட்ப அதிகாரி, கடின உடல் உழைப்பில் ஈடுபடும் பெண் தொழிலாளி. தனியே குடும்பப் பெண்ணாகவும் மெல்லியளாகவும் சித்தரிக்க வேண்டாம்.
பிரசித்திபெற்ற தொலைக்காட்சி விளம்பரம் ஒன்றை வித்தி யாசமான தோற்றத்தில் காட்டக்கூடிய விதத்தில் திருத்திய மைத்து நடித்துக்காட்ட முடியுமா? ஆம்.
நியூ றின்சோ - புதிய ஆடை
நடித்துக்காட்டப்பட்டது.
سس= 1 10 سم

Page 58
குழு - 03
- சிபாரிசுகள்
- எதிர்கால நடைமுறைத் திட்டம்
1. உங்கள் கருத்தின் படி பெண்கள் கொடுமைப்படுத்தப்படுவதற்
கான அடிப்படைக் காரணங்கள் என்ன?
91 *
இ.
FF.
காலத்துக்குக் காலம் சமூகத்தில் ஏற்பட்ட, வற்புறுத்தப் பட்ட பிழையான கருதுகோள்கள்.
சரியான சட்டப் பாதுகாப்பு இல்லை. பெண்களின் தாழ்வு பனப்பான்மை,
ஆண்களின் ஆளுமை பெண்களின் முன்னேற்றத்தின் காரண மாக குறையும் என்ற ஆண்மையின் பயம்,
2. பெண் எழுத்தாளர்களுக்கான ஒரு சங்கம் தேவை என்று நீங்
கள் கருதுகிறீர்களா? ஆம்.
3. அப்படியானால் அதன் குறிக்கோள்களும், அமைப்பும் எப்படிப் பட்டவையாக இருக்கவேண்டுமென நீங்கள் கருதுகிறீர்கள்?
குறிக்கோள்கள்
H.
<器·
இ.
Rail
பெண்களின் பிரச்சினைகளைச் சமூகத்திற்கு எடுத்துக்காட்டி ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தல்,
சமூக யதார்த்தத்தின் உண்மையைத் தேடல்:
பெண்களின் பிரச்சினைகளுக்காக ஒரு குழுவாகப் போராட வேண்டியிருந்தால் அதற்கு ஒரு பெண்கள் சங்கம் இருக்க வேண்டும் என்ற குறிக்கோள்.
பெண்ணின் பிரச்சினைகளைப் போராடிச் சீராக்கும்போது அவளது எதிர்கால வாழ்க்கைக்கான வழிகாட்டலையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தல்.
வெகுசன சாதனங்களைப் பயன்படுத்தி, சமூகப் பெறுமானங் களையும், மனப்பான்மைகளையும் மாற்றுவதற்கு முயற்சி செய்தல்,
புதிய பெண் எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தல்
سنسنی۔ 102 سے

அமைப்புமுறை
அ. பிரதேச வாரியாகவும், தலைமை அமைப்பாகவும் சங்கங்
கள் இருக்கவேண்டும்.
ஆ; பேதம் இல்லாமல் சம அந்தஸ்தை சகல பெண் எழுத்தா
ளர்களும் கொண்டிருப்பதாக அமைக்கவேண்டும்.
4. இத்தகைய சங்கத்தின் நடவடிக்கைகளை பிரதேச ரீதியிலும்
தேசிய ரீதியிலும் எவ்வாறு ஒன்றிணைப்பீர்கள்?
அ. ஒரு தலைமையகம் இருக்க பிரதேச வாரியாக இணைப்புச் சங்கங்கள் அமைப்பை ஏற்படுத்தி தொடர்புகளை ஏற்படுத் திக் கொள்ளல்.
ஆ. ஏனைய மொழி - இனரீதியான பெண் சங்கங்களுடன் தொடர்புகளை வைத்திருத்தல். ܬܐܐܝܕܝ ܢܙ
5. இத்தகைய சங்கத்தின் எதிர்கால நடைமுறைத் திட்டத்தை
விபரிக்கவும்.
எதிர்கால நடைமுறைத் திட்டம்
அ. பிரதேச ரீதியான சங்கங்கள் அந்தந்தப் பகுதிகளில் உள்ள பெண் பிரச்சினைகளை வெளிக்கொணரும் றோனியோ பத்திரிகைகளை நடாத்தல்:
ஆ. ஏனைய கலைக் குழுக்களிடையே தொடர்பையும், ஒத்
துழைப்பையும் ஏற்படுத்தல்.
இ. ஏனைய மொழி - இன, பெண் சங்கங்களுடன், வேண்டிய
போது தொடர்பு கொள்ளுதல்.
6. இத்தகைய சங்கம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கு நீங்கள் என்ன
உடனடி நடவடிக்கை எடுப்பீர்கள்?
அ. அதே எண்ணக் கருத்துக்களைக் கொண்ட ஏனைய பெண்
களுடன் கலந்தாலோசித்தல்.
ஆ. இப்போது கூடியிருக்கும் பெண்களுடன் உடனடியாக ஒரு சிறு அளவிலான சங்கத்தை ஆரம்பகாலச் சங்கமாக ஏற் படுத்தல்.
- i ti 3 ----

Page 59
7. இத்தகைய சங்கம் ஒன்று பிரச்சினைகளை எதிர்நோக்கக்
கூடும் என நீங்கள் நினைக்கிறீர்களா? ஆம்.
பிரச்சினைகளைசுருக்கமாக எடுத்துக் கூறி அவற்றிலிருந்து எவ்வாறு மீள முடியுமெனக் கூறமுடியுமா?
பிரச்சினைகள்
அ. பொருளாதாரம்.
ஆ. இடவசதி.
இ. பெண் சங்கம் ஏற்படுத்தும் போது சமூகத்தில் அதிகாரத்தி
லுள்ளவர்களால் ஏற்படும் எதிர்ப்புணர்ச்சிகள்.
ஈ. ஒதுக்கப்படுதல் அல்லது தனிமைப்படுத்தப்படுதல்;
2
வேற்று இனமொழிப்பெண் சங்கங்களுடன் தொடர்பேற் படுத்தும்போது பெண் எழுத்தாளர்களுக்கிடையே ஏற்படும் முரண்பாடுகள்.
ஊ: சங்க அங்கத்தவர்களுடைய படைப்புகள் சங்கத்திற்குப்
பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்.
எ. இடையிலே சங்கம் கலைந்துவிடுதல் தீர்வுகள்
அ. சந்தாப்பணம் நன்கொடை வெளிநாட்டு நிதியம். சங்கத்தோடு ஒத்துழைக்கும் ஏனைய சங்க ங் களுடன் சேர்ந்து கலை நிகழ்ச்சிகளால் நிதிதிரட்டல். . சனசமூக நிலையங்களைப் பயன்படுத்தலாம்.
சங்க அங்கத்தவர்களின் ஒற்றுமையைப் பேணல்.
மற்றப் பெண் சங்கங்களுடன் புரிந்துணர்வை ஏற்படுத்தல்
கிராமத்தில் அதிகாரத்தில்உள்ளவர்களுடன் பேச்சுவார்த்தை செய்து புரிந்துணர்வை ஏற்படுத்தல்: ஊ தனிமைப்படுத்தல் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப் பதனால் சங்க நடவடிக்கைகளைப் பிரசாரம் செய்தல். முரண்பாடு : 1) கலந்து பேசுதல்
2. ஒத்துமேவிப்போதல்
- 104 ---

எ. தனிநபர் பிரச்சினையை அதைப் பொதுப் பிரச்சினையாக
எண்ணி நிவர்த்தி செய்தல்
8. முஸ்லிம் மாதர் ஆராய்ச்சி செயல் முன்னணியிடமிருந்து
நீங்கள் எத்தகைய ஆதரவை எதிர்பார்க்கிறீர்கள். 1. பொருளாதாரம்
ஆலோசனை
பாதுகாப்பு
வளப்படுத்தல்
ஆய்வுகளைத் தந்துதவல்
வெளியீடுகளுக்கு உதவல்
கருத்துரைகள்
குழுக்களுக்கும் - அதை இணைக்கும் ஒரு ஸ்தாபனமும்
"பெண் எழுத்தாளர்களின் சங்கங்களின் சமாஜம்" என்ற
பெயரின் கீழ் இயங்குவது நன்று.
சங்கத்தில் தலைவர், செயலாளர் என்ற பிரிவுகள் வேறுபாடுகள் இன்றி அனைவரும் சமமாக மதிக்கப்படுதல்.
سس- 106 سم

Page 60
முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணி சார்பில் கலாநிதி சிரோன்மணி ராஜரத்தினம் அவர்களின் நன்றியுரை
பெண் எழுத்தாளர்கள், சமூகத்தில் மாற்றங்கள் ஏற்படும்போது தாங்களும் சமூகத்தில் வாழ்கின்றோம் என்பதை மறக்கக்கூடாது? அந்த மாற்ற முறைகள் சமூக விழுமியங்களுக்கேற்பத்தான் அமைய வேண்டும்,
நாங்கள் வேலைசெய்கின்ற பகுதிகளில் அமைப்புக்கள் இரு க் கின்றது. அவர்களுடன் நாம் எப்பொழுதும் ஒத்துழைக்க வேண்டும். எங்களுடைய கருத்துக்களை அவர்கள் மத்தியில் ஏற்கத் தக்கதாக, எங்களுடைய கருத்துக்களை வெளிப்படுத்தி அவர்களை மாற்ற வேண்டும் அவர்களை எதிர்த்து நடக்காமல் இருக்க வேண்டும்.
கிராமங்களில் தலைவர்கள், சமயம் சம்மந்தமான தலைவர்கள், ஆயுள்வேத வைத்தியர், பாடசாலை அதிபர், ஆசிரியர், கிராம சேவகர் ஆகியோருடன் சேர்ந்து ஒத்துழைக்க வேண்டும்.
பத்திரிகைகளை நாங்கள் மாற்றத்திற்கு கொண்டுவரும் போது கண்டனம் செய்யாமல் ஆலோசனை கூறி அவற்றோடு சமயோசித மாக ஒத்துமேவி நடத்தல் வேண்டும். அதை நாம் மனதில் எப் போதும் வைத்திருத்தல் வேண்டும்.
பாரதி கண்ட புதுமைப்பெண் ஆக நாங்கள் வாழ்க்கை நடாத் தும்போது நாங்கள் சமூகத்திலே வாழ்கின்றோம் என்பதை மறக்கக்
éha L-fTgil -
நாங்கள் ஆண்களுக்கு எதிரானவர்கள் அல்ல. அவர்களுடன் ஒத்து துணையாக நடக்க வேண்டும். இவை இளம் சமுதாயத்துக்கு
வேண்டும். அப்படி ஏற்படுத்துவதற்கு இளம் எழுத்தாளர்களும் வழிகாட்டிகளாக அமைவார்கள் என்று நம்புகின்றேன்.
سے 1069 سے

தமிழில் எழுதும் பெண் எழுத்தாளர்களுக்கான கருத்தரங்கில் பங்குபற்றியவர்களின் பெயர்கள்
கருத்துரை வழங்கியவர்கள்:
l.
4.
கலாநிதி. சிரோன் ராஜரட்னம் பிராந்திய அலுவலகம் கல்வித் திணைக்களம் திருகோணமலை.
திருமதி. சாந்தி சச்சிதானந்தம் 85/20, "ஏ" யாவத்தை தோட்டம் கொழும்பு-05.
திருமதி. சித்திரா மெளனகுரு தமிழ்ப் பகுதி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாணம்,
திருமதி. யோகா பாலச்சந்திரன் குடும்பத் திட்டமிடல் சங்கம் புல்லர்ஸ் வீதி.
கொழும்பு-7.
ஏனையவர்கள்:
1.
திருமதி வள்ளிநாயகி இராமலிங்கம் 'திருப்தி” கல்லூரி வீதி,
காங்கேசன்துறை,
ஜனாபா எம். ஏ. ரஹீமா 53/8, பீர் சாய்பு வீதி, கொழும்பு-12;
செல்வி. நூறுல் ஐன் நஜ்முல் ஹ"ஸைன்
'தினபதி, சிந்தாமணி" ஆசிரிய பீடம்
5, குணசேன மாவத்தை, கொழும்பு-12.
- 107 -

Page 61
10
II.
.8
罩罗。
13.
ஜனாபா நயீமா சித்தீக்
"மவுன்ட் பிளஸன்ட்
111 உணம்புவ றோட், கஹட்டபிட்டிய, கம்பளை.
திருமதி அன்னலட்சுமி இராஜதுரை
வீரகேசரி' 185, கிரான்ட்பாஸ் றோட், கொழும்பு - 14
திருமதி, கமலினி செல்வராசன் 49/7, வைவ் வீதி, கொழும்பு-05,
செல்வி ஏ. யு. எல். அறபா சித்திலெப்பை மகாவித்தியாலயம் கண்டி,
திருமதி என். எம். ஜனுபா நெய்னா முகம்மது இல: 36/1, அராலி றோட், புதிய சோனகத் தெரு, யாழ்ப்பாணம், செல்வி. ஹிதாயா மஜீத் 677, அஹமட் றோட், சாய்ந்தமருது 6.
செல்வி, தி. செம்மணச்செல்வி “பூம்பொழில்" கோப்பாய் வடக்கு, கோப்பாய்.
செல்வி. நிலானி நித்தியானந்தன் 82 1/75, பூரீ இராமநாதன் மாடி வீடு, கொழும்பு-13.
செல்வி. மடு தேவகெளரி தமிழ்ப்பகுதி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் திருநெல்வேலி, யாழ்ப்பாணம்.
செல்வி. அப்துல் ஸலாம் ஆரியா 36. கண்டி றோட், மாத்தளை
ܚܗ 198 ܩ

14.
15.
16.
17.
19.
20.
3.
22。
3.
திருமதி கோகிலா மகேந்திரன் விழிசிட்டி, தெல்லிப்பழை.
செல்வி நா விமலாம்பிகை தமிழ்ப்பகுதி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் திருநெல்வேலி, யாழ்ப்பாணம்,
செல்வி. சித்திரா எட்வர்ட் எஸ். எல். சி. சி. 349, காலி வீதி, கொழும்பு-03: திருமதி ஸகியா பரீத்
85/12 ஏ களுபோவில, தெஹிவலை,
செல்வி: சித்திராதேவி பொன்னையா ஜெl3/8 அன்டர்ஸன் பிளாட்ஸ், பார்க் றோட், கொழும்பு-05
செல்வி, தர்மினி வீரசிங்கம் "அறவழி" த. பெ. இல: 02, சாவகச்சேரி,
செல்வி. பாதிமா நஸ்வா கலீல் 227, ரஜமாவத்த
மல்வான.
செல்வி. பரீடா இஸ்மாயில் முஸ்லிம் மகளிர் கல்லூரி, கொழும்பு-04.
கலையழகி வரதராணி (ஹசீனா மறியம் பரூக்) 9/24, மொகாந்திரம் லேன் கொழும்பு-12,
திருமதி ஒளவை விக்கினேஸ்வரன் 34|1, சிங்கா றோட், கெரங்கபொக்குன, மாபோக, வத்தனைg
ത്ത് 109 ഒ

Page 62
24.
26.
26.
27,
28.
29,
30.
மின்சாப் பேகம் ஹமீட், 74/6, மீயூ ஸ்ரீட், கொழும்பு-02.
செல்வி, மஷ”றா மஜீத் மஷறோ மன்ஸில் பிரதான வீதி, சம்மாந்துறை.
செல்வி. குர் ஷீட் நயீனா மரிக்கார் 425, இரண்டாம் குறுக்குத்தெரு, புத்தளம்.
செல்வி, அஷ்ரபாநூர்தீன் 836, பாலை ஊற்று, திருகோணமலை.
செல்வி. அகிலா குனராஜா 215, மெஸெஞ்சர் வீதி, கொழும்பு-12,
செல்வி. பாலேஸ்வரி நல்லரட்ணசிங்கம்
157, டைக் வீதி,
திருக்கோணமலை,
செல்வி. நிஹாரா லதீப் S. L. பாவா ஹாஜ்ஜியார் லேன் பிரிவு 5
காத்தான்குடி
سس= 110 سم

நன்றிப்பா!
~~് "ടിൽ~~~ണ്
எழுத்துலகில் உலாவரும் நங்கையர் நமக்கென்று நல்ல தமிழ் கருத்தரங்கை நம் நாட்டில் முதன் முதலாய் நிலை நாட்டி உதவிய முஸ்லிம் மாதர் ஆராய்ச்சி செயல் முன்னணியே முதற் கண் நன்றிகள் எழுந்து வரும் பல சங்கங்கள் இடையிலே உடைகின்றன உயிர் பெற்ற முன்னணியே உன் ஊக்கம் உடையாது உண்மையாய் செயல்படட்டும் எழுத்துக்கள் மட்டுமன்றி எண்ணங்களிலும் செயல்படட்டும்! பொய் முகங்களை உடைத்தெறிந்து மெய் மனங்கள் மணங்கமழட்டும்!
முன்னணியே பெண்கட்காய் முன் வந்து முன்னிலையான் உன் கருத்துக்கள் ஆயிரத்து தொளாயிரத்து தொண்ணுரறில் வித்திட்ட இவ்வமையம் விருட்சமாய் Lur Gonu på Guntf?!
ஆக்கங்களால் மட்டும் அறிந்த பல கலைஞர்களை அறிமுகம் தந்து கருத்துக்கள் பலவற்றை கவரச் செய்த உன் சேவைக்கு என்
நன்றிப் பாக்கள் உரித்தாகுக!
செல்வி அரஃபா
srie- , li l-r

Page 63


Page 64
முன்னணியின் கு
ܩܡܩܚܡܩܡܡܠܚܗ
7
திட்டவட்டமான மாறுதலுக்கா
தையும் பகிர்ந்து கொள்வ
யளித்தல்,
அடக்கியாளும் முறையை நில களை இனங்காணும் நோக்க பங்கேற்று ஆராய்ச்சி செய்வு கான பயனுள்ள சிறந்த மு
இலங்கையிலுள்ள முஸ்லிம்க சம்பந்தமாகக் கிடைக்கப்பெறு ஆவணப்படுத்தலும் பரப்புதலு
முக்கியமாகப் பெண்களும், ( சம்பந்தமான விடயங்கள் யும் ஆய்வு அமர்வுகளையும் களையும் உள்ளடக்கும் வி ஒழுங்குசெய்து நடத்துதல்.
பெண்களும் அவர்களுடைய ே நடப்பிலுள்ள விட்யங்களைக் கள் வெளியீடுகளை, தகவ கல்விப்பயிற்சி, அதிகாரமளி ளோடு பிரசுரித்தல்,
சமூக, பொருளாதார, அரசி களில் முஸ்லிம் பெண்கள் நடத்தப்படுவதற்காகப் பணிபு
தேசிய, சர்வதேச மட்டத்திலு
குழுக்களுடன் இணைந்து ே வுக்காகவும் ஒரு பொது முன்
eMAeAMeMLe LMLMMeLeLeLeeLeLeeLeLeeLeLeeLeLeeLeLMLMLMLMeMLAeAM MeLeAeMM MMS S eSee
 
 

ராய்ச்சிச் செயல் குறிக்கோள்கள்
ான அறிவையும் அனுபவத் தன்மூலம் கல்விப் பயிற்சி
லைத்திருக்கச் செய்யும் சக்தி த்துடன் நடைமுறை சார்பான தோடு, குழு நடவடிக்கைக் றைகளைத் திட்டமிடல்,
கள், விசேடமாகப் பெண்கள் தும் எல்லாத் தரவுகளையும்,
jin.
பெண்களின் போராட்டங்களும் 1ற்றி தொழில் அமர்வுகளை D (தேசிய சர்வதேச விடயங் தத்தில்) காலத்துக்குக்காலம்
போராட்டங்களும் சம்பந்தமான கொண்டுள்ள செய்தித்தாள் ல்களைப் பகிர்ந்துகொள்ளல்,
த்தல் போன்ற நோக்கங்க
யல், சட்ட கலாசாரத் துறை நீதியாகவும், நேர்மையாகவும் ரிதல்,
லுள்ள ஏனைய முற்போக்குக்
பாராட்டத்திற்காகவும், ஆதர *னணியை அமைத்தல்,