கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பெண்ணடிமையில் பரிமாணங்களும் பெண்ணுரிமையின் விளக்கமும்

Page 1


Page 2

பெண்ணடிமையின் பரிமானங்களும் பெண்ணுரிமையின் விளக்கமும்
செல்வி திருச்சந்திரன்
பெண்கள் கல்வி, ஆய்வு நிறுவன வெளியீடு - 24 Women's Education and Research Centre Publication 24

Page 3
Title
Author
Address
Edition
Copy right
Publisher
Printer
Cover design &
Price
PENN ADMAYIN PARMANANKALUM PENNURMAYN VILAKKAMUM
MS. SELVY THIRUCHANDRAN
32, 8th Lane, Colombo -3.
Second - 1993
AUrthOr
WOMEN'S EDUCATION & RESEARCH CENTRE
Fine Art Graphics (Pvt) Ltd. No. 22. Deanstone Place, Kollupitiya.
Layout : VASHI CARA ADVERTSING
Rs. 55

பொருளடக்கம்
முகவுரை
பெண்ணுரிமை - ஒரு விளக்கம்
பெண்மையின் யதார்த்தமும் கற்பனாவாதமும்
பெண் தொழிலாளி .
கலைகளில் பெண்
இலங்கையின் சிறுகதையில் பெண்மை
பெண் விடுதலை வாதத்தின் பிரச்சினை மையம், அது ஒரு மேலைத்தேயக் கோட்பாடா?
பெண்களின் தொழிற்சங்க ஈடுபாட்டிற்குத் தடையாக நிற்கும் கலாசாரப் பண்புகள்
ஆண் பெண் இனவாரியாக அமைந்த வேலைப்பிரிவினை.
பக்கம்
26
34
38
41
56
58
25
33
37
55
57
63

Page 4
முகவுரை
இலங்கையில் பெண்கள் செய்தியகம் அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து இப்போது பெண் விவகாரத்துக்கென்று ஒர் அமைச்சே அமைக்கப்பட்டு விட்டது. உலகெங்கும் பெண்கள் சம உரிமை கோரி நடத்தும் போராட்டங்களும் ஏனைய நடவடிக்கைகளும் 20ம் நூற்றாண்டு வரலாற்றுச் செய்தியாகிவிட்டது. அன்றியும் அரசாங்கங்களும் மக்கள் குழுக்களும் ஏனையோரும் பெரும் அளவில் ஏற்றுக்கொள்ளும் ஒரு கோட்பாடாகப் பெண் விடுதலை இயக்கம் இப்போது பரிணமித்துள்ளது. ஆனாலும் ஆசியாக் கண்டத்திலும் சிறப்பாக இலங்கையிலும் இதன் தாக்கம் குறைந்தே காணப்படுகிறது. இதன் தாற்பரியம் கூட பிழையாக விளங்கப்படுகிறது. இது ஒரு பெரும் புரட்சிக் கொள்கை; மதக்கொள்கைகளைத் தகர்த்தெறியும்; இதிலிருந்து நாம் விலகி இருக்கவேண்டும் எனப்பலர் எண்ணுகிறார்கள். பெண்ணுரிமை வாதம் பல தாற்பரியங்களை அடக்கியுள்ளது; US புரட்சிக் கொள்கைகளையுடையது. காலங் காலமாக சமுதாய அங்கீகாரம் பெற்று ஏற்று, ஒத்துக்கொள்ளப்பட்ட பாரம்பரியங்களை அக்குவேறு ஆணிவேறாக பிய்த்துத் தளைத்து அவையெல்லாம் தர்க்க ரீதியானவை அல்ல பெண்ணை ஆணுக்கு அடிமையாக்கும் அநீதிகள் என, மிகத் துல்லிய மாகத் திண்மையுடன் கூறிக்கொள்ளும் இவர்கள் கருத்தரங்குகள், ஆர்ப்பாட்டங்கள், கூக்குரல்கள் போன்றவற்றை மிகத்தீவிர மனப்பான்மையுடன் நடத்துவது இலங்கைப் பெண்களைச் சிறிது பின்வாங்கச் செய்கிறது. இந்தியப் பெண்கள் கூட இத்துறையில் மிக முன்னணியில் நிற்பதும் குறிப்பிடத்தக்கது. தேசத் தலைவர்கள் பலருடன் பிரித்தானிய ஏகாதிபத்தியத்துக் கெதிராக முன்னின்று சத்தியாக்கிரகம் செய்ததும் சிறை சென்றதும் இப் பெண்களுக்கே உரிய ஒரு பெருமை. இந்த அனுபவமும் இவர்களின் தீவிர மனப்பான்மைக்கு ஒரு காரணம். இவர்கள் போராட்டங்களைக் கொண்டு நடத்தும் திண்மையும் திடசித்தமும் என்னைப் பெரிதும் பிரமிக்க வைக்கின்றது.
இலங்கைப் பெண்கள் பத்திரிகை வாயிலாகவும் கருத்தரங்குகள் மூலமும் தங்கள் கொள்கைகளையும் எண்ணக் கருத்துக்களையும் காலத்துக்குக் காலம் வெளியிட்டு வருகின்றனர். ஆனால் பெண் விடுதலையின் பூரண தாற்பரியத்தையும் அவர்கள் விளங்கிக்கொண்டதாகத் தெரியவில்லை. மதம் கலாசாரம் போன்றவற்றில் இருக்கும் காலத்துக்கொவ்வாத முரண்பட்ட பழமை வாதங்களை நாம் களைந்தெறியப் பின் நிற்கிறோம். பயப்படுகிறோம். ஊர்வலங்கள்

வேண்டாம்; ஆர்ப்பாட்டங்கள் தேவையில்லை; கூச்சல் கூக்குரலும்கூட பயன்படாது. ஆயினும் போலிநியாயங்களையும் பெண்ணை அடிமையாக்கும் கலாசாரப் பண்புகளையும் நாம் மிக ஆழமாகப் புரிந்துகொள்ளவேண்டும். பழையன கழிய புதியன புகுத்தப்பட வேண்டும்; நாகரீகம் வளரவேண்டும்; மாறவேண்டும்; இந்த ரீதியில் பெண்களை சிந்திக்க வேண்டும்.
விடுதலைக்காதல், திருமணம் என்ற கட்டுப்பாட்டை மீறி காதல் வாழ்வை மேற்கொள்ளல் போன்ற மேலைத்தேயக் கொள்கைகளையும் நாம் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பதல்ல எமது வாதம், அரசில், பொருளாதார, சமூக உரிமைகளும் வரைவிலக்கணங்களும் தேசத்துக்குத் தேசம் மாறுபடும். நவீன மாதர் சுதந்திரம் என்ற கோட்பாடு மேலைத்தேயத்தில் உதயமான தென நாம் கொண்டால் அக்கோட்பாடு அந்நாட்டுச் சம உரிமையின்மையையே தாக்கும் ஓர் இயக்கமாகவே எழுந்தது; அவ்வியக்கம் சர்வதேச பண்பு உடையது என நாம் கொள்ளலாகாது. மேலை நாடுகளுக்கு வேண்டிய சம அந்தஸ்தையும் சம உரிமையையுமே அது வேண்டி நின்றது. ஆகவே கீழைத்தேயத்தில் பெண்களுக்கு மறுக்கப்பட்ட சுதந்திரம் அதே பரிமாணத்தில் மேலைத்தேயங்களிலும் மறுக்கப்படவில்லை. பெண்கள் விடுதலை அல்லது பெண்கள் சுதந்திரம் என்ற அடிப்படைக் கொள்கையும் அக்கொள்கை வேண்டி நின்ற இலட்சியமும் மேலெழுந்த வாரியாகப் பார்க்கும் பொழுது ஒரு தன்மைத்தாக இருந்தாலும் சமுதாய அடிப்படையில் பொருளாதார அரசியல் மட்டங்களில் அவை பெரிதும் வேறுபட்டிருந்தன. விதவை விவாகமும் பால்ய விதவைகளும் பெரும்பாலும் 18-19ம் நூற்றாண்டின் இந்தியப் பிரச்சினை; மாமியார் கொடுமை, உடன் கட்டை ஏறுதல்போன்றன இந்தியாவிற்கே உரிய பிரச்சினைகள். இந்தியாவுக்கு மிக அருகே இருக்கும் இலங்கையில் இவை மிக அருகியே காண்ப்பட்டன. உடன் கட்டை ஏறும் வழக்கம் இலங்கையில் இருந்ததற்குச் சான்று எதுவுமில்லை. ஆனால் சீதனக் கொடுமை இவ்விரு நாடுகளுக்கும் பொதுவான ஒன்று. அந்த அந்தச் சூழ்நிலைக் கேற்பவே எழுத்தாளரும் கவிஞரும் முற்போக்குச் சிந்தனைகளை அளித்துச் செல்வர். இந்தப் பின்னணியிற் பார்க்கும்பொழுது பாரதி விழைந்த பெண் விடுதலை இந்தியாவிற்கு அன்று சீர்த்திருத்தங்கள். அதே போல மாதர் இன்று வேண்டும் சுதந்திர இயக்கம் இன்றைய சமுதாய வளர்ச்சியில் ஏற்பட்ட மாறுதல்களால் அவசியமாக்கப்பட்ட பிரச்சினைகளுக்கு நாம் அனைவரும் வேண்டி நிற்கும் விடைகள். இன்றைய பெண் சுதந்திர இயக்கத்தின் முக்கிய கோரிக்கைகளை வரிசைப்படுத்தினால் அவை சம சந்தர்ப்பம்; அரசியல் பொருளாதார சமூகப் பிரச்சினைகளில் ஆணுக்குரிய, பங்கு பெண்ணுக்கும் தரப்பட

Page 5
வேண்டும் (உத்தியோகங்கள் சில ஆணுக்குரியன சில பெண்ணுக்குரியன என்ற வேறுபாடு அகற்றப்படவேண்டும் என்பன போன்றனவே. சமுதாயக் கோப்பு ஒன்று எப்படி பழம் பெரும் பண்பாடு என்ற அடிப்படையில் பெண்களின் நியாயமான கோரிக்கைகளையும் அபிலாஷைகளையும் நிராகரித்து பெண்களை எப்போதும் பின்னின்று இயக்கும் சக்தியாக வைத்திருப்பதை பெண்கள் அறிந்து அதற்கு மாற்றம் விழையவேண்டும் கதைகளும் கட்டுரைகளும் மாத வார இதழ்களும் பெண்களை இனக் கவர்ச்சிச் சின்னமாக உபயோகித்து ஒரு விற்பனைப் பண்டமாக வைத்து வியாபாரம் செய்வது நிறுத்தப்படவேண்டும். குடும்பம் என்ற சமுதாயப் பிரிவில் பெண்ணும் வேலைக்குப் போவதால் ஏற்படும் பிரச்சினைகளையும் ஒழுங்கீனங்களையும் பெண் ஒருத்தியே தாங்க வேண்டிய அநீதி அகற்றப்படவேண்டும். ஆண்கள் கைகொடுத்து உதவி - வீட்டு வேலை, பிள்ளை வளர்ப்பு ஆகிறவற்றில் தாமும் சம பங்கு ஏற்கவேண்டும் என்ற மனப்பான்மை ஆண்களிடத்தில் தோன்ற வேண்டும்.
ஒரு நாட்டின் முன்னேற்றத்தில் பெண்களின் பங்கு முதலீடு செய்யப்படுவதில்லை. அடக்கி ஒடுக்கப்பட்ட பெண்ணினம் சமையல், பிள்ளை வளர்ப்பு. கணவனைக் கவனித்தல் என்ற சிறு வட்டத்தினுள்ளே இயங்குகின்றது. இதிலிருந்து அவர்கள் வெளியே வந்து ஆத்ம பூர்வமாக நாட்டின் முன்னேற்றத்தில் பங்கு கொள்ள வேண்டும். இந்த வகையில் பெண்களின் உரிமைகளை நிலை நிறுத்த வேண்டப்படும் சில மாற்றங்கள் சட்டபூர்வமாக ஏற்படல் வேண்டும்.
ஒரு நாட்டில் ஏற்படும் பல்வேறு அபிவிருத்திகளிலும் முயற்சிகளிலும் பெண்களின் பங்கு கணக்கெடுக்கப்படுவதில்லை. கமத்தொழில், குடும்பத்தில் போஷாக்கு நிறைந்த உணவு கொடுத்தல் போன்ற பெரும் தொழில்கள் சேவைகள் என்றே கணக்கிடப்படுகின்றன. இந்த மனப்பான்மை மாறிப் பெண்ணின் பெருஞ் சக்திக்கு மதிப்புக் கொடுக்கப்படல் வேண்டும்.
இந்த ரீதியில் பெண்களது பல பிரச்சினைகளுக்கு தீர்வுகாண பெண்கள் முன்வரவேண்டும். வீரப் பெண்ணும் தீரப் பெண்ணும் பாரதி கண்ட புதுமைப் பெண்ணும் தமிழ் இலக்கியத்திலேயே நின்று விட்டார்கள். யுத்த களத்துக்கு கலங்காமல் மறப் பண்புடன் தன் ஒரே மகனை அனுப்பிவைத்த பெண்ணும் யுத்தக்களத்தில் இறந்துகிடந்த மகனின் நெஞ்சுக்காயம் கண்டு மகிழ்ந்த தமிழ்ப் பெண்ணும், அரசனுடன் வழக்குரைத்து தன் கணவனைக் குற்றவாளியல்ல என்று நிரூபித்த கண்ணகியும் ஏட்டை அலங்கரிக்கும் பெண்களாகவே இருக்கின்றனர்.

சமுதாயப் பெண்கள் அச்சமாக மடமை பொருந்தியவர்களாக நாணமுடையவர்களாக அநீதி கண்டு வாய் மூடி மெளனமாக கண்ணிர் சிந்தும் பதுமைகளாகவே இருக்கிறார்கள். ஏன் இந்த முரண்பாடு?
பெண்ணினத்தின் பல கஷ்டங்களையும், உரிமைப் பிரச்சினைகளையும் சமூக, பொருளாதார, அரசியல் நோக்கில் பரிசீலனை செய்வதே எனது குறிக்கோள். பாரதி கண்ட சமரச சமுதாயத்தை அமைப்பதற்கு பண்பாடு, மதக் கொள்கைகள், கோட்பாடுகள் எனப் பல துறைகளை நாம் கடக்க வேண்டி உள்ளது. இவற்றை அறிவு பூர்வமாக தர்க்கரீதியான ஆதாரங்களுடன் அணுக வேண்டும். சமுதாயத்தில் மேலாதிக்கமாக நிலவும் ஒரு கோட்பாட்டை ஒரேயடியாகத் தாக்கிப் புரட்சியை பெண்களே வெறுத்து ஒதுக்கவும் கூடும். பெண் உரிமை, பெண்ணுக்குச் சம சந்தர்ப்பம் என்பன போன்ற தத்துவங்களில் பல விடயங்கள் அடங்கியுள்ளன. சமுதாயத்தின் பல்வேறு அம்சங்கள் இதில் தொக்கி உள்ளன. பெண் ஒருத்தியை மட்டும் தாக்கும் ஒரு பிரச்சினை இல்லை இது. அவளைச் சார்ந்து நிற்கும் குழந்தைகள், வளர்ந்த பிள்ளைகள், கணவன், அண்ணன், தம்பி, தாய், தந்தையார் என்ற உறவு முறைகள் பல இதில் அடங்கி உள்ளன. இவை யாவும் அவ்வக் கோணங்களில் அந்த அந்தப் பரிமாணங்களில் அலசி ஆராயப்பட வேண்டும். இவ்வுறவு முறைகளை முற்றிலும் எதிர்த்துப் போராடி ஒரு பெண் சமத்துவ நிலையை அடைய முடியாது அவள் இச் சுதந்திரத்தை வேண்டி நிற்பது சமுதாயத்தில் தனித்த நின்று இலங்கி தனிவழி நடப்பதற்கல்ல. பல பெண்களுக்கு எப்படித் தாங்கள் அடிமைப்பட்டு விட்டோம் என்பது தெரியவில்லையோ, அதே போல பல ஆண்களுக்கும் தாங்கள் அவர்களை அடிமைப் படுத்துகிறோம் என்பது தெரியவில்லை. பண்பாடு, வழி வழி வந்த பரம்பரைக் கோட்பாடுகள் என்ற போர்வையில் இவ்வடிமை ஆண்டான் நிலை தொடர்கிறது. இதனால் ஆண்வர்க்கத்திற்குச் சலுகைகள் அதிகம். ஆம் அதிகம். தட்டிக்கேட்க ஆளின்றி இச்சமுதாயக் கோப்பு தொடருகிறது. ஆகவே பெண்ணினத்தைத் தட்டி எழுப்பி அவர்களின் துன்பகரமான வாழ்க்கை முறைகளை அவர்களுக்கு உணர்த்த வேண்டியதன் முக்கியத்துவத்தை நாம் உணர வேண்டும். அதே அளவில் ஆண் மக்களைக் கூவி அழைத்து ஏன் இந்த அநியாயம்? ஏன் இந்த அடக்குமுறை? ஏன் இந்தப் பராமுகம் என்றும் நாம் கேட்க வேண்டும். உலகெங்கும் பெண்விடுதலைக் குரல்கள் எழுப்பி உள்ள நேரத்தில் கீழைத்தேய நாடுகளாகிய பிலிப்பைன், தாய்லாந்து, பங்களாதேசம், இந்தியா போன்ற நாடுகளில் மிகத் தீவிர பெண் விடுதலைப் பத்திரிகைளும் ஆய்வுக் கட்டுரைகளும் வெளி வருகின்றன.

Page 6
இவ்வாறு சிந்திக்க தொடங்கிய நான் இதற்கு விடை காண முற்பட்டேன். அந்த முயற்சியின் பெறுபேறே இச்சிறு நூல். நான் பெண்ணின் குரல் ஆசிரியையாயிருந்த பொழுது எழுதிய சில கட்டுரைகளும் செய்தித் துணுக்குகளும் சில மாற்றங்களுடன் இந் நூலுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு நான் பெண்ணின் குரல் ஸ்தாபனத்தாருக்குக் கடமைப்பட்டுள்ளேன்.
என்னை இம் முயற்சியில் ஈடுபடும்படி தூண்டி உற்சாக மூட்டிய எனது ஒல்லாந்து நாட்டு நண்பர்களுக்கு நான் கடமைப் பட்டுள்ளேன். என்னைத் தங்களுடன் சேர்த்து உலக சாமானத்திற்கு ஒத்துழைக்கக்கேட்ட Women for Peace என்ற இயக்கத்தைச் சேர்ந்த glid GlopТćilipsi (Jikke Hofman) Ga, Titors) dvoljniiddu (Corneri Stokuis) torfiluurtsöt sSlösuibów Marian Willems Gigasprijs596örg)uuäu (Hetty Andries) ஆகியோருக்கு நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன். என்னை இப்பணியில் ஈடுபடுத்தி அதற்கு வேண்டிய சகல உதவிகளையும் அவர்களே செய்தார்கள்.
32, 8ம் ஒழுங்கை, கொழும்பு - 3.
செல்வி திருச்சந்திரன்

பெண்ணுரிமை- ஒரு விளக்கம்
ஆதிகாலச் சமுதாயம்
பெண் விடுதலை இயக்கம் வேண்டி நிற்கும் ஒரு மறு மலர்ச்சிச் சமுதாயம் முற்றிலும் புதிய கோட்பாடன்று. ஆதிகாலச்சமுதாயப் பண்புகளை ஆராய்ந்த சரித்திர சமூகவியலாளர், அக்காலப் பெண்கள் சரிநிகர் சமமாக வாழ்ந்ததற்கு சான்று பல உண்டு என்று கூறுகின்றனர். பூர்வீக குடிமக்கள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்த பொழுது பெண்களுக்கும் ஆண்களுக்கும் கடமைகளும் உரிமைகளும் இருந்தன. இவற்றை இருபாலாரும் சம அந்தஸ்துடன் நிறைவேற்றி வந்தனர். இதற்குப் பிற்பட்ட காலத்தில் தாய்வழிச் சொத்துரிமை சமுதாயத்தில் அங்கீகரிக்கப்பட்டிருந்தது. நிலப்பிரபுத்துவத்தின் தொடக்க காலத்தில் புதிய மாற்றங்கள் புதிய கொள்கைகளையும் கோட்பாடுகளையும் தோற்றுபித்தன. கூட்டு வாழ்க்கையில் இருந்து நான், எனது நிலம், எனது மனைவி, எனது மக்கள், எனது சொத்து இச் சொத்துக்கு ஒர் உரிமை (மகன்) என்ற ரீதியில் பிளவுபட்ட மக்கட்குழுக்ககள் பெண்களை உடைமைப் பொருளாகக் கருதத்தொடங்கின. சொத்துக்களுக்கு வாரிசு வேண்டி, அவ்வாரிசு, தனது உதிரத்தில் உதித்த, தன் மனைவிக்கு மாத்திரமே பிறந்ததாக இருக்கவேண்டும் என்று கருதத் தொடங்கிய ஆண் மகன் மனைவியின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தி தனது உரிமையை அவள் மீது செலுத்தத் தொடங்குகிறான். இவ்வுரிமைகளும் கட்டுப்பாடுகளும் நாளடைவில் இறுக்கம் பெற்றதும் பெண் தனது சகல உரிமைகளையும் இழந்து ஆணின் உடமைப் பொருளாக மாறிவிட்டாள். சமுதாயம் வளர வளர, பெண் வீட்டுக்குரியவள் என்ற அடிப்படையில் அவளது கடமைகள் வரையறுக்கப்பட்டன. சமையற் கலை விருத்தியடைந்தது. உணவு பக்குவமாக சமைக்கப்பட்டு பதனப்படுத்த வேண்டி இருந்தது. குழந்தைகளைப் பராமரிக்கும் பொறுப்பு, வீட்டில் இருந்து சமையல் செய்யும் பெண்ணிடம் ஒப்படைக்கப்பட்டது. உணவு தேடல், வேட்டையாடுதல் போன்ற வெளி வேலைகளை ஆண் எடுத்துக்கொண்டான். இவ்வேலைப் பாகுபாடு பெண்களை ஜென்மாந்திர, ஜென்மாந்திரமாக வீட்டுக்குள் அடைத்து வைப்பதற்குக் காரணமாயிருந்தது. மேலும் பெண் வீட்டு வேலைக்கே உரியவள்; ஏனைய வேலைகளுக்கு

Page 7
அவள் லாயக்கமற்றவள்; பயந்த சுபாவம் உடையவள்; மந்த புத்தி உடையவள்; கல்வி அரசியல் போன்ற துறைகளில் அவள் பங்கு கொள்ளத் தகுதியற்றவள்; தீர்மானிக்கும் உரிமை அவளுக்குத் தேவையில்லை; தந்தை, கணவர், சகோதரர், மகன் என்று ஆண்மகனின் அதிகாரத்துக்கு பல்வேறு கட்டத்தில் அவள் அடங்கி இருக்கவேண்டும் என்பன போன்ற பல கருத்துக்களை தோற்றுவிப்பதற்கு காரணமாயிருந்தது. பெண்கள் உணராதவகையில் அடிமைத் தனம் படிப்படியாக அவர்களின் மீது ஏற்பட்டது. பெண்கள் இவை யாவும் தங்கள் கடமைகள்; இவையாவும் தமது உன்னத குறிக்கோள்கள்; இவற்றை நிறைவேற்றவே தாம் பிறவி எடுத்தோம் என்று எண்ணத் தொடங்கிவிட்டார்கள். சமுதாயத்தைப் பொறுத்தவரை இது ஒரு சுலபமான, பிணக்கில்லாத நடைமுறை. சமுதாயத்தின் பல்வேறுதொழில்களும் இனிது நடைபெற உதவும் ஒரு திட்டம். இதனால், பெண்கள் அல்லற் படுகிறார்கள்; பெண்களது உரிமைகள் நசுக்கப்படுகின்றன. மனித ஜாதியின் உயரிய தத்துவமும், சுயமரியாதையும் மதிக்கப்படவில்லை என்பன போன்ற வாதங்களை ஆண்கள் எண்ணிப் பார்க்க வில்லை. பெண்களும் இதை உணரவில்லை.
மதக்கோட்பாடுகளும் பெண்களும்
காலக்கிரமத்தில் மதங்களும் மதக்கோட்பாடுகளும் இந்நிலையை வலியுறுத்தத் தொடங்கின. இச் சமுதாய உடன்படிக்கையை, பெண்களின் பின் தள்ளப்பட்ட நிலையை, மதங்கள் ஏற்றுக் கொண்டது மன்றி, தங்களது மதக் கொள்கைகளிலும் பிரசாரங்களிலும் வற்புறுத்தி ஒரு மத 'அந்தஸ்தும் கொடுத்து விட்டன. மதங்களில் பெண்களது கடமைக்ள் தர்மம் ஆக்கப்பட்டு விட்டது. கணவன், இல்லம், குழந்தைகள் என்ற மும் முனைத் தத்துவத்தில் அடங்கிவிடலே பெண்களது தர்மம் என்ற வரைவிலக்கணமும் வரையப்பட்டு விட்டது.
ஆரம்ப கால மதக்கோட்பாடுகளில் பெண்களின் நிலை மிக மோசமானதாக இருக்கவில்லை. வேதகாலத்தில் பெண்கள் கல்வி கற்றவர்களாக, சிறந்த பேச்சாளர்களாக, வேத சூத்திரங்களை இயற்றியவர்களாக, தத்துவ ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்களாக இருந்தனர். இதற்கு வேதமே சான்று. கார்க்கி என்னும் பெண் ஞானி யக்னவல்கீயர் என்னும் தத்துவ ஞானியை வாதத்திற்கு வரும்படி அழைப்பு விடுத்தாள். ஏறுக்குறைய 27 பெண் ரிஷிகள் பிரம்மவாதினி என்னும் பெயர் பெற்று இருக் வேத சூத்திரங்களை இயற்றி உள்ளார்கள்.

இத்தகைய பெண் மேதாவிகள் சமுதாயத்தில் தோன்றியதற்கு ஏற்ற சந்தர்ப்ப சூழ் நிலைகள், சம அந்தஸ்து நிலைமை, கல்வி கற்கும் ஆர்வம், ஆண்களுடன் சரி நிகர் சமானமாக பழகும் மனப்பான்மை போன்ற பல்வேறு அம்சங்கள் பிரத்தியட்சமாய் நிலவி இருக்க வேண்டும். பிரம்மவாதினிகள் சர்ச்சைகளில் ஈடுபடுவதும், ஆண்களை வாதத்துக்கு அழைப்பதும் பெண்களின் நிலையை ஓரளவுக்கு எடுத்துக் காட்டுவதாக உள்ளது.
புராண இதிகாச காலங்களில் பெண் தனது சகல உரிமைகளையும் இழந்து ஒடுக்கப்பட்டு அடிமைப் படுத்தப்பட்டு விட்டாள்.
இக்கால கட்டத்தில் பெண் தனது கணவனை கடவுள் ஸ்தானத்துக்கு உயர்த்திப் பூசை செய்யவேண்டும் என்ற கெள்கை அவள் மீது திணிக்கப்பட்டது. கணவனே கண் கண்ட தெய்வம், கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்பன போன்ற பழமொழிகள் இத் தத்துவத்தை வலியுறுத்துகின்றன. கற்புவழி நிற்பது பெண்ணுக்குரிய ஒரு பண்பாக வளர்ந்து வருவதையும் நாம் காணலாம். ஆண் பெண் கூட்டுச் சேர்ந்து வாழும் ஒரு குடும்பத்தில் பெண் ஒருத்தி மட்டும் ஏன் கற்புவழி நிற்க வேண்டும். ஆண்மகன் கற்புள்ளவனாக இருக்கத் தவறினால் அது எத்தலை" பெண்கள் கற்பு நெறியிலிருந்து தவறுவதற்கு காரணமாக இருக்கிறது என்ற உண்மை ஏன் எவருக்கும் தெரியாமல் போய்விட்டது? தனது தாய், தனது மனைவி, தனது தங்கை இவர்களின் கற்புக்கும் அந்த ஆண்மகன் பங்கம் விளைவிக்கலாம் என்ற கசக்கும் உண்மை பரந்து விரிந்த ஆணின் கண்ணோட்டத்தில் ஏன் படவில்லை! தர்க்க ரீதியாக ஏற்றுக்கொள்ளப்படத் தக்க ஒரு சமுதாயச் சட்டமில்லையே இது தர்ம பத்தினிகளும் பதிவிரதைகளும் புராண இதிகாசங்களில் புகழப்படுகிறார்கள்; பூசிக்கப்படுகின்றனர். ஆனால் ஏக பத்தினி விரதம் இருந்தவன் இராமன் ஒருவனே. இதனால் பெண்கள் எல்லாம் கற்பைப் பேண வேண்டியதில்லை என்பதல்ல வாதம். ஆணுக்கும் கற்பு நெறி வற்புறுத்தப்படவேண்டும். அன்றி ஆணைப் போல சபலங்களுக்கு இடங்கொடுத்த ஒரு சில பெண்களையும் அதே அளவுகோலால் அளந்து மன்னித்து, பிரஷ்டம் செய்யாமல் சமுதாயம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
"ஆணெல்லாம் கற்பைவிட்டுத் தவறு செய்தால் அப்போது பெண்மையுங் கற்பழிந்திடாதோ? நாணமற்ற வார்த்தை யன்றோ?”

Page 8
"கற்பு நிலை யென்று சொல்ல வந்தா லிரு கட்சிக்கு மது பொதுவில் வைப்போம்”
என்று பாரதி பாஷையில் மிக ஆணித்தரமாகக் கூறலாம்.
“ஒரு கணவர் நற்பண்புகளும், நற்குணங்களும் இல்லாதவனாக இருந்தாலும் வேறிடத்திற்கு இன்பம் நாடிச் செல்கிறவனாயிருந்தாலும் மனைவி அவனை எப்போதும் கடவுள் போன்று துதித்து வணங்க வேண்டும். இது மகா பாரதத்தில் வரும் ஒரு சுலோகம், இரு வேறுகால கட்டத்தில் எழுந்த இந்த எண்ணக் கருத்துக்களை ஒப்பிட்டு எந்தக் கருத்து சமுதாயத்தினால் பெருமளவு அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்பதை ஆராய்ந்தால் ஓர் உண்மை புலப்படும். கதை ஆசிரியர்கள், பத்திரிகை ஆசிரியர்கள், தமிழ்ப்பட ஆசிரியர்கள் ஆகிய பலரும் மகாபாரதப் பெண்ணின் உருவையே வற்புறுத்தி வருவதை நாம் காணலாம். சமுதாயத்தின் எண்ணக் கருத்துக்களை உருவாக்குவதிலும் அதே சமயத்தில் அவற்றைப் படம் பிடித்து காட்டுவனவாகவும் இருக்கும் வெகு சன தொடர்புச் சாதனங்கள் ஒரு தலைப்பட்ட கருத்துக்களையே வலியுறுத்தி பெண்களுக்கு அநீதி விளைவிக்கின்றன. தவறும் ஆண் பெரும்பாலும் மன்னிக்கப்பட்டு சமூக அங்கீகாரம் பெறுகிறார். ஆணுக்குரிய சபலம் அவனை அலைக்கழிக்கிறது என்று கதை கூறும் ஆசிரியர் அவனது மனைவி அச்சம், மடம், நாணம், பயிர்ப்புடைய லட்சியப் Guodot 600TTg, அவனை மன்னித்து ஏற்றுக்கொள்கிறாாள் என்றே இறுதியில் கதையை முடிக்கிறார். இப்படி பெண்கள் இருக்கும் வரை ஆண்களும் தவறுகளைச் செய்துகொண்டே போகலாம். தட்டிக் கேட்டுத் துரோகத்தைத் தண்டித்து பெண்கள் செயல்பட வேண்டும்.
கணவனைக் கூடையில் சுமந்துதாசி வீட்டுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்று கற்பிற்கு வரைவிலக்கணம் கூறும் புராதன புராணக் கதைகள் இன்னும் எம்மைவிட்டு அகலவில்லை. ജൂഞ്ഞഖ சமுதாயத்தில் சம அந்தஸ்து வகிக்க வேண்டிய பெண்ணுக்கு இழைக்கும் கொடுமை.
இவற்றை மாற்றியமைக்க நாம் யாது செய்ய வேண்டும்?
பெண்களே முதலில் இந்த அர்த்தமற்ற பண்பாட்டுக்
கதைகளைக் கண்டிக்க வேண்டும். பண்பாடு கலாசாரம், என்ற போலிப் போர்வையில் பெண்கள் பதுமையாக, வாய்பேசாத மடமை பொருந்திய

உயிரினங்களாக கருதப்படுவதை நாம் ஆதரிக்கக் கூடாது. எதையும் தர்க்க ரீதியாக, பாரபட்ச மின்றி, அறிவுஜீவிகள் கருத்தோட்டத்தில் அலசி ஆராய வேண்டும்.
இலக்கியம் இப்படி இயம்புகிறது; புராணங்கள் இப்படிப்புத்தி கூறுகின்றன; இந்துக்களின் அல்லது தமிழ்களின் பண்பாடு இப்படிப் போதிக்கின்றன என்று உணர்ச்சி பூர்வமாக நம் பிரச்சினைகளை அணுகக் கூடாது. உண்மை வழிகண்டு நேர்மை வழி நடக்க வேண்டும்.
பெண்களின் நிலை
பெண்களின் அன்றாட வாழ்க்கையில் பிரச்சினைகள் ஏராளம், விதவைகள், விவாகாரத்துச் செய்யப்பட்டவர்கள், குழந்தைகள் இல்லாதவர்கள் என்ற பல வகைப் பெண்கள் சமுதாயத்தில் நிலவுகிறார்கள். மனைவியை இழந்த கணவன் தன் அந்தஸ்துகளை இழக்கவே மாட்டான். ஆறு மாதத்தில் மறுமணமும் புரிகிறான். அவதூறு, இழுக்கு ஒன்றுக்கும் அவன் ஆளாக மாட்டான். இதே சமுதாயம் கணவனை இழந்த மனைவியை எப்படி நடத்துகிறது? இறைவன் சிருஷ்டியில் பெண்ணுக்கு ஏன் இந்த வித்தியாசம் ? அவள் மறுமணம் செய்தால் அதை விமர்சிக்க, அவதூறு கூற, எள்ளிநகையாட ஆயிரம்பேர் வருவார்கள் ஏன் இந்த வக்கிர சிந்தனை? உணர்ச்சிகளும், ஆசாபாசங்களும், பெண்ணுக்கு ஏன் இருக்கக் கூடாது? தன் சுயமரியாதையை இழந்து தாய் தகப்பன், அல்லது அண்ணன் தம்பிமார்களின் பராமரிப்பில் அவர்களுக்கும், அவர்களது குடும்பத்தாருக்கும் ஏவல் வேலை செய்து ஏன் அவள் சீரழிய வேண்டும்? இறைவனுக்குச் செய்யும் மதச் சடங்குகளுக்கும், கணவன் இல்லாத பெண்ணுக்கும், என்ன காரணகாரியத் தொடர்புண்டு? இந்து சமயக் கிரிகைகள் மாத்திரம் ஏன் விதவையை ஒதுக்கிறது? இப் பெண் மாத்திரம் ஏன் பொட்டை அழிக்க வேண்டும்? அவளிடமிருந்து ஏன் பூவைப் பறிக்கவேண்டும்? குடும்ப வாழ்வில் அவளுக்குச் சகல சௌபாக்கியங்களையும் கொடுத்தவர் கணவன் என்றால், அதே குடும்ப வாழ்க்கையில் தன்னையே திரியாக எரிக்கும் அன்பும், பண்பும், கொண்டு பல வகைத் தியாகங்களும், சேவைகளும் செய்யும் மனைவி இறந்தபின் கணவனும் வெள்ளை உடுக்க வேண்டும். அழகு சாதனங்களைத் துறக்க வேண்டும் என்று யாரும் வற்புறுத்துவதில்லையே! ஒரு பெண்ணை தன்னிஷ்டப்படி விட்டால் எப்பொழுதும் அழகாகவே இருக்க விரும்புவாள். துக்கத்திலும், துன்பத்திலும், தன் சொந்த விருப்பத்தினால் அவள் சில நாட்களுக்கு தன் நடை உடை பாவனைகளில் கவனம் செலுத்தாமல்

Page 9
இருக்கலாம். காலம் செல்லச் செல்ல அவள் துக்கம் ஆறுகிறது. எத்தனை விதவைகள் இன்று கறுத்தப் பொட்டும், பலவித நிறச் சேலைகளும் உடுக்கிறார்கள்? இது அவர்களது சொந்த விஷயங்கள். இதை எள்ளி நகையாடுவதோ, குறை கூறுவதோ, விமர்சிப்பதோ, பண்பாடு குலைந்துவிட்டது என்று கூக்குரலிடுவதோ, அநாகரீகம், மனித குலத்திற்கே இழுக்கு.
விவாகரத்துரிமை
உலகெங்கும் சட்டத்தளவில் பெண்களுக்கு அளிக்கப்பட்ட உரிமை இது ஆண் பெண்ணும் நடத்தும் கூட்டு வாழ்க்கையில் ஓரளவேனும் ஒற்றுமையும், சுமுக நிலையும் நிலவவேண்டும். சந்தோஷமான ஒரு வாழ்க்கையை விரும்புவது மனித குலத்தின் ஒரு நியாயமான உரிமை. விருப்பமில்லாத ஒரு வாழ்க்கையை வேறு பல முக்கியமல்லாத காரணங்களுக்காகத் தொடர்ந்து நடத்த வேண்டும் என்று கூறுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை. ஒரு கணவனுக்கும் மனைவிக்கும் பிணக்குகளும் பிளவுகளும் ஏற்படுவதற்கு காரணங்கள் அதிகம். ஒரு கணவன் மனைவியை அல்லது மனைவி கணவனை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும், துன்புறுத்தலாம். விவாகரத்துச் செய்யும் உரிழை பெரும்பாலும் ஒரு கணவனுக்கே நடைமுறையில் அளிக்கப்படுகிறது. பெண் ஒருத்தி விவாகரத்தை வேண்டி நின்றால் உற்றார், உறவினர், நண்பர், என்ற உறவு முறைகளில் சமுதாயம் அவளை அதற்கு விடமாட்டாது. பெண் பதுமையாய் இருக்க வேண்டும்; பெண் வாழ்க்கையில் ஒரு போதும் தன் சந்தோஷத்தை நாடக்கூடாது; அவளது சந்தோஷம் எப்போதும் கணவனைச் சார்ந்திருக்க வேண்டும் அல்லது பிள்ளைகளைச் சார்ந்திருக்க வேண்டும்; விவாகரத்துச் செய்தால் சமுதாயத்தில் அந்தஸ்து குறைந்து விடும் என்ற பல வேறு காரணங்களைக் காட்டி அவளை அவ்வல்லல் வாழ்க்கையைத் தொடரச் செய்கிறது சமுதாயம். தன் உணர்ச்சிகளை உள்ளடக்கி தன்மானமின்றி இப்பெண் வாழ்நாள் எல்லாம் கஷ்டப்படுகிறாள். இவ்விழப்புகள் ஒர் ஆணுக்கில்லை. விவாகாரத்துச் செய்து கொண்ட ஒரு பெண்ணையும், ஆணையும், சமுதாயம் வெவ்வேறு கண்ணோட்டத்தில் பார்க்கிறது: மதிக்கிறது; விமர்சிக்கிறது. விதவைகளும், விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்களும் "வாழாவெட்டிகளாக" "வாழ்வு இழந்தவர்களாக" கணிக்கப்படுவதை, இப்படி அவர்களுக்கு பட்டமளிப்பதை, அவர்கள் வாழ்க்கை உரிமைகளைப் பறிப்பதை, சமுதாய ரீதியில் பெண்கள் கண்டிக்க வேண்டும். இயற்கைக் காரணங்களினால் ஒரு பெண் இறக்கும் வரை அவளை வாழவிட வேண்டும். அதற்குரிய சூழ்நிலைகளும் சமுதாய

மனமாற்றம் என்ற ரீதியில் அவளுக்குக் கிட்ட வேண்டும். இதற்குப் பெண்களும் பெருமளவில் முன்னுக்கு வரவேண்டும். இத்தகைய பெண்களை ஒதுக்கி வைக்காமல், விலக்கி வைக்காமல், அவர்களுக்கும் உற்சாக மூட்ட வேண்டும். அதே சமயம் அந்நிலை தங்களுக்கு வந்தால் நெஞ்சத் துணிவும், நிமிர்ந்த நன்னடையும் கொண்டு செயலாற்ற முன்வரவேண்டும். ஊர் வாயை முதலில் உதாசீனப்படுத்தினால் அந்த ஊர்வாயும் இறுதியில் மூடிவிடும். நாம் செய்வதில் யாதும் பிழையில்லை என்ற திண்மையான மன உறுதி உண்டெனில் யாரும், யாருக்கும் பயப்படத் தேவையில்லை.
பிள்ளைப் பேறின்மை
குழந்தைகள் குடும்பத்தின் பொதுச் சொத்து. மழலைச் செல்வம், வேறெந்தச் செல்வத்திற்கும் ஈடாகாது. கணவன் மனைவியின் இல்வாழ்க்கையின் இன்றியமையாத ஒரு பெருவளம்; இவ்வின்பம் இல்லாதது ஒரு பெரிய குறை. கணவன் மனைவி இருவரும் இக் குறையால் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் இக் குறை எங்கள் சமுதாயத்தில் பெரும்பாலும் பெண்களையே அதிகம் பாதிக்கிறது. பெண்மையின் பெருங் குறை இது என்று அவள் மனதில் ஆழப்பதிய வைக்கப்படுகிறது; குத்திக் காட்டப்படுகிறது. சந்தர்ப்பங்கிடைக்கும் பொழுதெல்லாம் அவளுக்கு அக் குறை உணர்தப்படுகிறது. மங்கல காரியங்களிலிருந்து அவள் நாசூக்காக விலக்கப்படுகிறாள். அவளுக்குக் குழந்தை பிறக்காததற்கு காரணங்கள் பல இருக்கலாம். ஆனால் அறிவு பூர்வமாக இதை நாம் அணுகினால் இக்குறையை யார் மீதும் சுமத்தி அதனால் யாரையும் புறக்கணித்து ஒதுக்கத் தேவையில்லை. இது இயற்கையின் ஒரு குறைபாடு. இதற்கு யாரும் பொறுப்பேற்க முடியாது. இக் குறையால் ஒரு பெண்ணை எடைபோட்டு மதித்து, குறைகூறிப் புறக்கணிப்பது வளர்ச்சியடையாத ஒரு பண்பாட்டின் குறைபாடு. இது போன்ற ஆதாரமற்ற சமுகக் குறைபாடுகள் பல காரணகாரியத் தொடர்போதும் இன்றி நம்மை அலைக்கழிக்க நாம் விடக்கூடாது. பத்தாம் பசலித்தனங்கள், அர்த்தமற்ற பழமை வாதங்கள் முதலியவற்றிலிருந்து நாம் விடுபடவேண்டும்.
விஞ்ஞானம் வளர்ச்சியடையாத காலத்தில், இயற்கையின் பெரும் ரகசியங்களைப் புரிந்து கொள்ளக் கூடிய அறிவு வளராத காலத்தில், சமுதாயங்கள் ஒரு சில கோட்பாடுகளால் வகுக்கப்பட்டு ஒரு சில கட்டுப்பாடுகளையும் கொள்கைகளையும் வாதங்களையும் தோற்று. வித்து சிக்கல், இல்லாத வாழ்க்கை முறை ஒன்றை அமைத்துக்

Page 10
கொண்டன. இக்காலப் பகுதியில் இவற்றில் சில வேண்டப்பட்டன. சில இன்றியமையாதனவாக இருந்தன. ஆனால் அதே கொள்கைகளும் வாதங்களும் பண்பாடு என்ற போர்வையில் என்றும் எப்பொழுதும் கடைப்பிடிக்கப்பட வேண்டியன என்று கூறுவது பொருந்தா வாதம்.
பெண்மையின் பாரம்
ஒரு மனித ஜன்மம் என்ற ரீதியில் புத்திக் கூர்மை, மதி நுட்பம் அன்றி பாலியல் தன்மைகளிலேயோ ஆணுக்கும், பெண்ணுக்கும் விஞ்ஞான ரீதியில் பாகுபாட்டுக் கொள்கைகள் எடுத்தியம்பப்படவில்லை. ஆனால் பெண்களைப் பற்றிய கருத்துக்கள் பெரும்பாலும் ஒரு தலைப் பட்சமாக இருக்கின்றன. V.
பெண் குழந்தை பிறந்துவிட்டால் "ஐயோ பெண்ணா?” “இதுவும் பெண்ணா” என்பன போன்ற ஏமாற்றக் குரல்களைக் கேட்கிறோம். பெண் பிறந்தால் சர்க்கரை கொடுக்கிறோம். ஆண் பிறந்தால் கற்கண்டு கொடுக்கிறோம். தாய் தந்தையர் ஏன் இப்படிப் பாரபட்சமாக நடக்க வேண்டும்? யாழும் குழலும் கொஞ்சுவது ஆண் குழந்தையின் மழலையில் மட்டும் தானா?
பெண்ணுக்கு பத்துப் பன்னிரண்டு வயதினில் பெரும்பாலும் விளையாடுவதற்கும் பாடி ஆடுவதற்கும் சுதந்திரம் கிடைப்பதில்லை. அதே வயதினில் ஆண் வெளியே சென்று விளையாடி ஆடிப்பாடிக் களைத்து வீடு திரும்பவும் பொழுது பெண், தந்தைமாருக்கும் பெரிய அண்ணன்மாருக்கும் சிற்றேவல்கள் புரிந்து கொண்டு வீட்டில் அடுப்பங்கரையில் உலவி வருகிறாள். வயதில் ஆண்பிள்ளைகளுக்குக் குறைந்தவளாயிருந்தாலும் தாய்க்கு அடுத்தவள் என்ற ரீதியில் பொறுப்புக்கள் பல அவளுக்கு அளிக்கப்படுகின்றன; அழுது நச்சரிக்கும் கைக் குழந்தைகளை பராமரிக்கும் சுமையும் அவளின் தலையில் விழுகிறது.
இப்பாரிய பொறுப்புக்களை சின்னஞ்சிறு பெண் குழந்தைகளின் தலையில் மட்டும் சுமத்தாது, வீட்டுப் பொறுப்புக்கள் அனைத்தையும் தாய் தந்தை ஏனைய ஆண் குழந்தைகள் உட்பட ஏன் எல்லோரும் சேர்ந்து ஏற்கக்கூடாது? அழும் குழந்தையைத் தகப்பனோ தமையன்மாரோ தூக்கித் தாலாட்டுவதில் ஏதும் கெளரவ பிரச்சினை ஏற்படுமா? தன் உதிரத்துச் சிறு குழந்தையைக் கொஞ்சிக் குலாவித் தாலாட்டினால் தாய்க்கும் வேலைப் பழு குறைகிறது; குடும்பத்தில் எல்லோருக்கும் பொறுப்புணர்ச்சியும் அந்நியோன்னிய மனப்பான்மையும்

உண்டாகிறது. அன்றி அதை ஏன் பெட்டைச்சி வேலை என்றோ, அதை ஆண்கள் செய்வது இழுக்கென்றோ நாம் கருத வேண்டும்? இவ்வேலைகளைச் செய்யும் ஆண்மகன், ஒருவன் எள்ளி நகையாடப் படுவதும் உண்டு. இவன் “பொண்டாட்டி தாசன்” “பெண் பிள்ளை' என்று பலரால் நாமம் சூட்டப்படுகிறான். குடும்பத்தில் குழந்தைகள் பராமரிப்பு உட்பட சகல பொறுப்புக்களும் சமமாகப் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும். இளம் வயதிலிருந்தே பூரண சமத்துவம் என்ற அடிப்படையில் குழந்தைகள் வளர்க்கப்பட வேண்டும். ஆண்களுக்குக் கொடுக்கப்படும் சகல சலுகைகளும் உரிமைகளும் பெண்களுக்கும் கொடுக்கப்பட வேண்டும். தாய் தந்தையர் இதில் மிகுந்த பொறுப்புணர்ச்சியுடன் நடந்து கொள்ள வேண்டும்.
பெண் கல்வி
பெண்களது கல்வி ஆர்வம் பெரும்பாலும் தடைப்படுத்தப் படுகிறது. பெண் படித்து என்ன செய்யப்போகிறாள்? அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு? ஆண்களுக்கே வேலை இல்லை, பெண்களும் படித்து ஏன் பிரச்சினைகளைக் கூட்ட வேண்டும்? என்பன போன்ற பெண் அடிமைக் கருத்துக்களை நாம் இப்பொழுது கேட்கிறோம். இவையாவும் அர்த்தமற்ற கூப்பாடுகள். கல்விக்கு இணையாக, அறிவுக்கு ஒத்ததாக இப்பூமிதனில் யாதொன்றுமில்லை. ஒரு மனிதன் அறிவினால் மட்டுமே பூரணத்துவம் அடைகிறான். இது மானிட வர்க்கத்திலேயே சம பங்கு வகிக்கும் பெண் குலத்திற்கு மறுக்கப்படுதல் மனித சமுதாயத்துக்கு நாம் இழைக்கும் அநீதி மனோதத்துவ அறிவு, பகுத்தறிவு வளர்ச்சி, பெருகி வரும் விஞ்ஞான அறிவு ஆகிய பலதுறைகளை நாம் பெண்களிடம் இருந்து விலக்கி அவர்களைக் கிணற்றுத் தவளைகளாக வைத்திருந்தால் நாம் முன்னேற்றப் பாதையில் பல கட்டங்களைப் பின்னுக்குத் தள்ளுவோர்களாவோம். ஒரு நாட்டின் வளர்ச்சியோ, சமுதாயத்தின் வளர்ச்சியோ ஆணினத்தின் வளர்ச்சியில் மட்டுமே கணிக்கப்படுவதில்லை. ஆகவே ஆசிரியர்களும், பெற்றோர்களும் பெண் கல்வியில் ஊக்கம் எடுத்து பழைமை வாதங்களை விடுத்து இரு பாலார்க்கும் சம சந்தர்ப்பம் அளிக்க முன்வர வேண்டும். வாழ்வின் அன்றாட பிரச்சினைகளை நாம் அறிவு பூர்வமாக அணுக வேண்டும்.
“பெண் புத்தி பின்புத்தி” என்ற பழமொழியில் ஆதார பூர்வமான அறிவுக் கொள்கை ஏதும் இல்லை. ஆண் புத்தியும் பெண் புத்தியும் எப்படி வரவேற்கப்படுகிறது என்பதிலேயே அதன் முன் நிலைமையும், பின்நிலைமையும் புலப்படுமே அன்றி அது பெண் புத்தியாக

Page 11
இருப்பதால் பின்புத்தியாக இருக்காது. பெண் பின்னுக்குத் தள்ளப்பட்ட நிலையில் அவள் புத்தியும் உபயோகிக்கப்படாமல் பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டது.
இதேபோல் பெட்டைக் கோழி கூவி பொழுது விடியாது என்கிறது பழமைவாதம், சேவல் கூவா விட்டாலும் பொழுது விடிந்து விடும். சேவல் கூவித்தான் பொழுது விடிகிறது என்று பாமர மக்கள் கூட்டம் எண்ணியிருந்த காலத்தில் எழுந்த ஆதிகாலப் பழமொழி. இதை இன்னும் நாம் உதாரணமாக எடுப்பது எம் பாமரத் தனத்தையே காட்டும்.
எத்தைனயோ குடும்பங்களில் பெட்டைக் கோழிகள் கூவிக் கொண்டே இருக்கின்றன. அக் குடும்பங்களில் பெண்களே வேலைக்கும் போய் தாய், தகப்பன், தம்பி, தங்கைகளைக் காப்பாற்றுகிறார்கள். இங்கு பெண் தனது குடும்பத்தில் ஏனையோருக்குப் படியளக்க நிர்ப்பந்திக்கப்படுகிறாள். எவ்வித கட்டாயங்களும் இன்றித் தன் சுய விருப்பப்படி தனக்குப் பொருத்தமானதாகவும் தனக்கு ஏற்றதானதுமான கல்விப் பிரிவையோ தேர்ச்சியையோ ஒரு பெண் தன் சுய அபிலாசைகளைப் பூர்த்தி செய்வதன் பொருட்டே தேர்ந்தெடுக்கக் கூடிய ஒரு சூழ்நிலை அமைக்கப்பட வேண்டும். இலங்கையின் அரசச் சட்டத்தில் இதற்கொரு தடையுமில்லை. ஆனால் சட்டங்களினால் மாத்திரம் ஒரு சமுதாயத்தின் பழைமை வாதங்களை அகற்றிவிட முடியாது. சமுதாய அங்கீகாரமே ஒரு மாற்றத்தை ஏற்றுக்கொள்ள உதவி, இறுதியில் அதைச் சமுதாய வழக்காக மாற்றுகிறது. சீர்த்திருத்தக் கொள்கை மனப்பான்மையுடையோரும், அறிவு ஜீவிகளும் மாத்திரம் இக்கொள்கைகளை ஏற்றுக்கொண்டால் போதாது. இதன் தாக்கம் ஆண், பெண், சட்டம் ஆக்குவோர், ஆசிரியர், பெற்றோர், அரசியல்வாதிகள் என்று பல்வேறு முனைகளையும் அடைய வேண்டும். இந்த முக்கிய காரணத்தை மனதில் கொண்டே நாம் (நமது கொள்கைகளை ஏனையோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்) இதில் அக்கறை கொண்டோர் எல்லோரையும் தங்கள் கருத்துக்களை எங்கெங்கு முடியுமோ அங்கங்கே எடுத்துரைக்க வைக்க வேண்டும்.
இலக்கியத்தில் பெண்மை
இலக்கியத்தில் பெண் இரு தரமாகப் பிரிக்கப்பட்டமை சங்க காலப் பண்பு என நாம் முற்றாக ஒதுக்கி விடக் கூடாது. குலமகள் ,
விலைமகள் என்பது சமுதாயத்தில் அங்கீகரிக்கப்பட்ட பாகுபாடாக இருந்த அக்காலத்தில் பெண்ணினது பெருங்குணம் மணம் செய்து
10

இல்வாழ்க்கை நடத்தும் பெண்ணாக இருப்பதிலேயே தங்கியிருந்தது. அதேபோல விலைமகள் ஏமாற்று, சூழ்ச்சி, சிற்றின்ப வேட்கை போன்ற இழி குணங்களைக் கொண்டவளாகச் சித்தரரிக்கப்பட்டாள். வலை வீசும் இப் பெண், ஆண்களை வலிந்து மயக்கும் பெண்ணாகவும் சுட்டிக் காட்டப்பட்டாள். இந்த இலக்கியப் பண்பு இன்றுவரையும் கடைப்பிடிக்கப்பட்டு வருவதை நாம் காணலாம்.
சங்க மருவிய காலப் பகுதியில் தர்க்கம் நியாயம் போன்றவற்றை அடிப்படையாக் கொண்ட புத்தமதக் கொள்கையின் ஆதிக்கம் தமிழ் இலக்கியத்தில் தோன்றத் தொடங்க கற்புள்ள மாதவியின் கதாபாத்திரப் படைப்பும் விலைமகளின் மகளாகிய மணிமேகலை கதாநாயகி அந்தஸ்து பெறுவதும் பெரும் புரட்சி என நாம் கொள்ளலாம். ஆனால் இப் புரட்சி தமிழ் இலக்கியத்தில் அத்தோடு நின்று விட்டதோ என்று எண்ண வைக்கிறது பிற்கால இலக்கியம். "ஈன்று புரந்தருதல் என் தலைக்கடனே. சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே” என்ற புற நானூற்றுச் செய்யுள் தாயின் கடனை முழுமுற்றாக வரையறுத்து
விட்டது. ஆனால் பல வீரப் பெண்டிரையும் நாம் இங்கு காண்கிறோம். இதற்குப் பிற்காலத்தில் தோன்றிய இலக்கியங்களில் பெண் கதாபாத்திரங்கள் இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றனர். தியாகம், அன்பு, அமைதி, கற்பின் திண்மை ஆகிய நற் பண்புகள் நிறைந்த ஒரு காதாபாத்திரத்துக்கு நேர் எதிர்மாறாக சஞ்சலம், சுயநலம், கற்பின் திண்மையின்மை. அடங்காப்பிடாரித் தனம் போன்ற அற்ப குணங்கள் பொருந்திய இன்னும் ஒரு பெண் படைப்பையும் நாம் காணலாம். இது சங்ககால விலைமகள், குலமகள், பாத்திரப்படைப்பின் தொடர்ச்சியேதான். வளர்ந்து வரும் சமுதாய மாற்றங்களாவது, சமுதாயச் சிக்கல்களாவது யதார்த்த நிலையில் படம் பிடிக்கப்படாமை பெண்ணின் கதாபாத்திரச் சித்திரிப்பில் பூரணப்பட்டு நிற்கிறது. தாய்மையும் பெண்மையும் கற்பும் கடவுளாக்கப்படுவதும் இந்திரன் கெட்டதும் பெண்ணாலே, சந்திரன் கெட்டதும் பெண்ணாலே என்று பெண்மை கேவலப்படுத்தப்படுவதும் அவற்றிற்கு ஒரு பாகுபாடும் வரன் முறையும் அமைப்பதும் இலக்கியத்தில் சகஜமாகி விட்டது. உமாதேவி, சரஸ்வதி, லஷ்மி, கண்ணகி அம்மன் என பெண் தெய்வங்களைப் பூஜிக்கும் நம் பண்பாடு “ஈன்றாளோடு எண்ணக் கடவுளும் இல்” என்று தாய்மையைக் கடவுளுக்கும் மேலாக மதிக்கிறது. ஆனால் பெண்மையை எள்ளி நகையாடுகிறது; காலிற்போட்டு மிதிக்கிறது; உரிமைகளைப் பறிக்கிறது; கற்பழிக்கிறது. அர்த்த நாரீஸ்வரத்தை விளக்க சக்தி இன்றி சிவமில்லையென்று தத்துவம் பேசும் பண்பாடு பெண் என்னும் மாயப் பிசாசினால் அலைக்கழிக்கப்படுகிறேன்;
11

Page 12
சுவர்க்கத்தின் பாதையில் பெரும் தடையாக நிற்பது பெண்ணின் கடைக்கண் வீச்சு என்று தேவாரத் திருப்பதிகங்களில் முறையிடுகிறது. ஏன் இந்த முரண்பாடு? ஏன் இந்த மயக்கம்?
சீதை, தமயந்தி, சந்திரமதி, நளாயினி போன்ற பெண்களை ஏன் ஆசிரியர்கள் அவ்வாறு இம்சைப் படுதினார்கள்? வாழ் நாள் எல்லாம் சோதனையால் தீக்குளித்து அவர்கள் கண்டதென்ன? இந்த இலக்கியப் பரம்பரை இன்று தொட்டும் கதாசிரியர்கள், பட ஆசிரியர்கள் ஆகிய இலக்கியக் கர்த்தாக்களால் விடாக்கண்டராக கடைப் பிடிக்கப்பட்டு வருகிறதே. வாழ்க்கையின் நியாயமான உரிமைகளும் சந்தோஷங்களும் திருப்திகளும் பெண்களுக்கு கிட்டவே கூடாதா? ஆண் மகனின் கைப் பொம்மையாக, அலங்கார மனைவியாக, தியாகத்தின் சின்ன்மாக, அவனின் பிள்ளைகளைப் பராமரிக்கும் தாதியாக, அவன் சந்தேகப்படும் போதெல்லாம் தீக்குளித்து நிரூபித்து அப்பப்பா என்ன கொடுமை. சமுதாயத்தின் உன்னத கோட்பாடுகளும் எதிர்பார்ப்புகளும், பெண்ணினத்திலேயே ஒப்படைக்கப்பட்டு வருகிறதோ என்றும் ஒர் ஐயப்பாடு தோன்றுகிறது.
ஒரு மரத்தைப் போல உணர்ச்சிகள் இல்லாத ஒரு கணவனுக்கு மான் போன்ற மனையாளை வகுத்த பிரமனை ஒளவையார் எப்படி வைகிறார் என்பதைக் கீழே தருகிறேன்.
"அற்றதலை போக அறாததலை நான்கினையும் பற்றித்திரி இப் பறியேனோ - வற்றும் மரமனையானுக் கிந்த மானை வகுத்த பிரமனை யான் காணப்பெறின்'
ஒரு சபாஷ் போடலாம் போன்று தோன்றுகிறதல்லவா? பொருந்தாத கணவனுடன் வாழ்க்கை நடத்தும் ஒரு பெண்ணின் அவலநிலை ஒளவையாரை எப்படி ஆவேசங் கொள்ள வைக்கிறது. இந்தக் 'கரு' பிற்கால இலக்கியங்களில் ஏன் எடுத்து ஆளப்படவில்லை? கல்லையும்" புல்லையுங் கூட கணவனுக்கு உவமானப் படுத்தி காலங் காலமாக பொறுமை காத்து வரவேண்டும் பெண்மை என ஏறக்குறைய இருபது நூற்றாண்டுகளாக வற்புறுத்தப்பட்டு வந்ததே.
இலக்கியம் ஒரு மனித சமுதாயத்தில் நிலவும் உறவுகள்,
பிரச்சினைகள் போன்றவற்றிற்கும் உருவங்கள் கொடுக்கின்றது. இவ்வுருவங்கள் அதனை எடுத்துக் கூறும் ஆசிரியரின் திறமை, அறிவு,
餐2

சிந்தனா சக்தி ஆக்கபூர்வமான கொள்கைகள் என்பனவற்றைக் கொண்டு நல்லிலக்கியம் தரங்குறைந்த இலக்கியம் எனப்பாகுப்படுத்தப்படும். இப்படிப் படைக்கப்படும் இலக்கியம் சமதாயத்தின் பிரதிபலிப்பாக இருக்கும். அதே சமயத்தில் சமுதாயம் எப்படி இயங்கவேண்டும் என்பதையும் கலையழகுடன் கோடுகாட்டுகிறது அல்லது பச்சையாக எடுத்துக் காட்டுகிறது. இப்படி இருவகைப்பட்டு இலக்கியப் படைப்புகளும் ஒரு விதத்தில் ஒருமைப்பட்டு நிற்கின்றன. பெண்ணின் கதாபாத்திரச் சித்தரிப்பு சமுதாயத்தின் பிரதி பலிப்பாக இல்லை. இலங்கையின் மிகப் பிற்பட்ட சமுதாயத்திற் கூட பொருளாதார, சமூக மாற்றங்களினால் பெண் அடுப்பங்கரையிலிருந்தும், வீட்டிலிருந்தும் அகற்றப்பட்டு, அலுவலகம், வயல் வெளி, தொழிற்சாலைகளில் பணிபுரியக் கிளம்பி விட்டாள். குழந்தைகளைப் பராமரிப்பதும் அலங்காரப் பதுமைகளாக வீட்டில் வருவதுமே இப்போதும் கூட நம் கதாநாயகியின் குண சித்திரப் படைப்பாக இருக்கிறது. பெண்களது மாற்றியமைக்கப்பட்டு வாழ்க்கை நெறியும் முன்னேற்றப் பாதையில் செல்லும் இலட்சியங்களும் அரசியலில் அவர்களுக்குள்ள ஈடுபாடும் சமுதாயத்தில் அவர்களது யதார்த்த நிலை. எத்தனை பெண் கதாநாயகிகளை நாம் இந் நிலையிற் தற்போது காண்கிறோம்? இந்நிலையில் இலக்கியம் சமூகத்தின் கண்ணாடி என்பதும் கூட பொய் வாதமாகிறதே.
அடுத்ததாக சமுதாயத்தை அறவழி நடத்த உத்தேசிக்கும் இலக்கியப் பிரமாக்கள் கூட பெண்ணுக்கு அநீதி செய்கிறார்கள். சமயம், தர்மம், பண்பு, பண்பாடு என்ற போர்வையில் பெண்களது நியாயமான உணர்ச்சிகளும் உரிமைகளும் நசுக்கப்படுகின்றனவே. குடியும் கூத்தியும் உடைய கணவனை பூசிக்க வேண்டும்; அடித்து உதைக்கும் கணவனது காலைக் கட்டிப் பிடித்து அழுது மன்னிப்புக் கேட்கவேண்டும்; பெண் தனது உணர்ச்சிகளை குழிதோண்டிப் புதைத்து அச்சத்துடன் மடமையாக வாழ் நாள் எல்லாம் பொறுமை என்னும் அணி அணிந்து ஏனையோரின் இன்பத்துக்கே வாழவேண்டும். ஏன்? எதற்காக? சமுதாய நலனுக்கா! அடிக்கும் கை அணைக்கும் காலம் வரும் வரை காத்திருந்தால் குடும்பம் என்ற கட்டுகோப்பு குலையாது; பிள்ளைகள் மனோதிடத்துடன் வளர்க்கப்படுவார்கள் என்பன போன்ற வாதங்களை வற்புறுத்துவார்கள். இலக்கியங்கள் இந்த (அ), நியாயத்தை வற்புறுத்த ஆண்கள் எல்லோரும் தங்களது நடத்தைக்கு நியாயம் கற்பிப்பார்கள். திருந்தி நடக்க முற்படமாட்டார்கள்.
தேசிய இலக்கியம், மண் வாசனை முற்போக்கு இலக்கியம் எனத் தரம் பிரிக்கும் திறனாய்வோர் கூட இந்தக் குறைபாட்டை
13

Page 13
படுத்தியம்புவதில்ல்ை, ஆண்டான் அடிமையென்பது பொருளாதார கிர்க்கச் சித்தாந்தத்தில் மட்டுமின்றி ஆண் பெண் வேறுபாடுகளிலும் தொடர்கிறது. சமுதாயத்தின் பிரதிபலிபு என்பதிலும் கூட இலக்கியத்தின் துன்பாடு நெள்ளத் தெரிகிறது. ஆண் பெண் உறவுமுறைகளும் கனங்கள் மEவி உறவு முறைகளும் அலுவலகத்திலும் பெண் அதிகாரியின் கீழ் ஆண்மகன் என்ற பல்வேறு கட்டங்களிலும் அதன் பரிமாாங்கள் பழைமை வாதங்களை உடைத்தெறியும் காலகட்டத்தில் தமிழ் இலக்கியம் மட்டும் ஏன் தனித்தியங்குகிறது: இந்தியாவில் ராஜம் கிருஷ்ன்ே தமது நாவல்களில் பெண்ணுரின் இயக்கத்தின் தாக்கத்தையும் மாறிவரும் சமுதாயக் கோட்பாடுகள் பெண்ணினத்தை எப்படி நடத்த வேண்டும், எப்படிப் பெண் தனது உரிமைகளுக்கு சமுதாயக் கோட்பாட்டை முற்றிலும் உடைத்தெறியாமல் அக் கோட்பாடுகளுக்குள் ளேயே மாற்றம் வேண்டி நிறகிறாள் என்பதையும் பல கதாபாத்திரப் பiLபுகளின் மூலம் துல்லியமாக விளக்கியுள்ளார். சமயம் ஒரு பக்கச் சார்பாகப் பெர்ன50 எப்படி அடிமையாக்கிறது என்பதையும் விளக்குகிறார். தமிழ் சினிமா, தமிழ் நாவல், சிறு கதை போன்ற பல ஆறகள் புெ:னடிEபு வாதத்தை வலியுறுத்துகின்றன. புராண இதிகாரக் கற்புக்கரசிகளைக் கதாநாயகி வரம்புகளை மீறாமல் கண்காவிரிப்பதில் சுதாசிரியர்கள் பங்கு கரிைசமாயிருக்கிறது. பெண்ணனக் பிற்பழித்தவன் ஒரு குடிகாரனாய், காமுகனாய், பெண் பித்தனாய் இருந்தாலும் கற்பழித்தEயே மணாளாகக் கொள்ள வேண்டும் ாறு கற்பிற்கு வரைவிலக்கணமும் துேக்கப்பட்டு விட்டது. தன்னையே வேள் அழிக்கவேண்டும் அல்லது தனது விருப்பமில்லாமல் தன் கற்பைச் ஆரேறபாடிய ஆனைக் கணவனாக அவள் வரித்து வாழ்நாளெல்லாம் பல் செய்யவேண்டும். கலியாணாகாமல் கர்ப்பம் தரிக்கும் பெண் முழுப் பாவத்தேயும் சுமக்க வேண்டும். தற்கொலையிலிருந்து அவன் தப்பினால் சமுதாபப் பிரடெம் செய்யப்படும். ஆனால் இதில் சரிசமமாக பங்கு கிக்கும் ஆந்த ஆண் எங்கே என்று கூட பாராலும் கேட்கப்படுவதில்லே. விபரி:ளக் கோட்டுக்கு அழைத்துத் தண்டனை விதிக்கும்; ஆனால்
வான வில்லை கொடுத்து வாங்கும் ஆண்கலுக்கு ஏதும் தண்டனை வழங்க முன்வருவதில்லை. இத்தகைய ஒரு தலைப்பட்சமான சமுதாயக் கோட்பாடுகாளத் தமிழ் இலக்கிய கர்த்தாக்கள் தகர்த்தெறிய முன்வரா பிட்டாலும் இதன் அநியாயத்தைப் படம் பிடித்துக் காட்டவும் பூரின்வருவதில்லை. அக்கிணி சாட்சி தமிழ்ப் படம்) பெண்ணுக்கிழைக்கப்பட்ட கொடூரம், ஒரு மென்மையான பெண் இதயத்தை எப்படிச் சிதற அடித்து மனோவியாதிக்குள்ளாக்கி விட்டது என்பதைக் கலையழகுடன் எடுத்துக் கூறுகிறது. இது ஒரு யதார்த்தம். இப்படிப் பல ஆழ்ந்த கருத்தோட்டம் உள்ள கதைகளை நாம் வரவேற்க வேண்டும். இதை விடுத்து சமுதாயத்தில் கடைப்பிடிக்கப்படும் கொள்கைகள் யாவும் சரியே எனக்கொண்டு அவற்றை இலக்கியத்தில் திரும்பத்திரும்ப வலியுறுத்துவது
.

சரியல்ல. இதனால் பெரிதும் பாதிக்கப்படுவது பெண்ணினமே. பெண்ணினத்தின் சுதந்திரமான போக்கும் நியாயமான அபிலாஷைகளும் இதனால் தாக்கப்படுகின்றன. பெண் சஞ்சலத்திற்குள்ளாகிறாள்.
தற்போது பத்திரிகைகளில், "பெண் காதலில் தோல்வி, தற்கொலை" "கணவன் துன்புறுத்துகிறான், மனைவி தற்கொலை', "கணவன் ஆசைநாயகியிடம் செல்கிறான், மனமுடைந்த மனைவி தற்கொலை" இப்படி ஒவ்வொரு நாளும் பல செய்திகளைப் படிக்கிறோம். காதலில் தோல்விக் கண்ட பெண் மனதைத் திடப்படுத்தி வாழ்க்கையில் காதல் ஒரு சிறு பகுதி என்பதை உணர்ந்து தன் வாழ்க்கைப் பாதையை மாற்றியமைக்க வேண்டும். கணவன் துன்புறுத்தினால் விவாகரத்துக்கோரி தன் கய நிர்ணய உரிமையைப் பெண் நிலை நிறுத்தப் பழகவேண்டும். தன்னிடம் பராமுகமாக இருக்கும் கணவனை மனைவி தட்டிக் கேட்க வேண்டும். மண வாழ்க்கையில் தனது உரிமைகளை அவள், அறிய வேண்டும். மனைவிக்கு மாத்திரம் தான் கடமை கணவனுக்கு உரிமைகள் தான் கடமையில்லை என்ற பெண்ணினது மத மனப்பான்மை மாறவேண்டும். மணச் சடங்குகள் வற்புறுத்துவதும் இதுவே. இப்படிப் பெண்கள் மனமுடைந்து தற்கொலை செய்யும் மனப்பான்மையை எழுதுவதற்கு இலக்கிய கர்த்தாக்களும் பெருமளவில் பொறுப்பாளிகள், இல்லற தர்மத்தை வலியுறுத்த நிலைநாட்ட அரிய பெரிய பொறுப்புகளைப் பெண்ணிடம் சுமத்தி சஞ்சல புத்தியுள்ள ஆண் சேறு கண்ட இடத்தில் சேற்றைப் பூசி நீர் கண்ட இடத்தில் கழுவி மனைவியிடம் வந்தால் அவள் மன்னித்து மறந்து அவனைப் பூசிக்கவேண்டுமென்றே சராசரிக் கதைகளும் நாவல்களும் சமுதாயத்துக்குப் பாடம் புகட்டுகின்றன.
இந்த நிலை மாறவேண்டும். பெண் ஆணுக்கு அடிமை; அவளுக்கென்று தனி உணர்வுகளும் இருக்கக் கூடாது; அவள் வாழ் நாள் பூராவும் தியாகம் செய்து கொண்டே ஏனையோரின் நல்வாழ்வையே தன்வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொள்ளவேண்டும் என்பன போன்ற வாதங்களையே இலக்கியம் எடுத்தியம்பி வருகிறது. இது பெண்ணடிமைவாதத்தை நிலைநிறுத்துகிறது. சமுதாய மட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு நிலை இது என்று பெண்கள் மனத்திலும் ஏனையோர் கருத்துக்களிலும் மேலும் மேலும் வற்புறுத்தப்பட்டு வருகிறது. இதனால் பெண் தன் நம்பிக்கையை இழக்கிறாள். எதிர்த்து நிற்கப் யப்படுகிறாள். தனக்குச் சரியென்று நியாயமானது என்று படுவதைக் - சமுதாயத்தால் மறுக்கப்பட்டு விடுமோவென அஞ்சி செய்யப் பின்நிற்கிறாள். இலக்கிய கர்த்தாக்கள் இதை உணர்ந்து ாலத்துக்கொவ்வாத பழைமை வாதங்களை விடுத்து சமுதாயத்தோடு ன்ேறிப் புதியன தோன்ற தம் படைப்புகளை ஆக்கவேண்டும். இது அவர்களது கடமையும் கூட.
15

Page 14
பெண்மையின் யதாார்த்தமும் கற்பனாவாதமும்
பெண்களின் குடும்பபாரம்
"ஓர் அலுவலகத்தில் வேலை பார்க்கிற திருமணமான ஆண்களும் திருமணமாகாத பெண்களும் தான் கடுமையாக உழைத்து முன்னுக்கு வருகிறார்கள். மாலை நேரத்தில் மேலதிக நேர வேலை செய்பவர்களும் இவர்களே. திருமணமான பிறகு பெண்களுக்கு வேலையில் ஆர்வம் போய் விடுகிறது; வீட்டுக்குச் சீக்கிரம் போகத் துடிக்கிறார்கள். ” , v.
பிரான்ஸில் ஸிங்லி என்னும் சமூகவியல் ஆராய்ச்சியாளர் நூற்றுக்கணக்கான ஆண்களையும் அங்கே பணிபுரியும் 34843 வேலையாட்களின் பதிவேடுகளையும் ஆராய்ந்து மேற் கண்டவாறு கூறுகிறார்.
இது ஒத்துக்கொள்ளப்பட்ட ஓர் உண்மைதான். ஆனால் இதில் பொதிந்திருக்கும் உண்மைகள் பல.
ஒரு திருமணமாகாத பெண்ணுக்கும் திருமணமான ஆணுக்கும் திறமைப் பண்புகளில் வித்தியாசமில்லை என்பது ஒத்துக் கொள்ளப்படுகிறது. அதே சமயம் இந்த அளவு திறமை ஒர் ஆணுக்கு திருமணமாகு முன் இருக்கவில்லை என்பது பெறப்படுகிறது. திருமணமாகு முன் ஆண விளையாட்டுப் பிள்ளையாக சபல புத்தியுடன் சஞ்சலப்படுகிறான். இதே ஆண் திருமணமான பின் திறமையுடன் பணிபுரிகிறான் என்றால் அதற்குக் காரணம் மனைவி தானோ? தேவையான அமைதியையும் பண்பட்ட ஒரு சூழ்நிலையையும் அவள் அமைத்துக் கொடுப்பதால் வேலைத் திறமை பெருகி விட்டதா? இதற்குரிய அங்கீகாரத்தையும் மதிப்பையும் பெண் குலத்திற்கு ஆண் மக்கள் கொடுக்கிறார்களா? இதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்களா? அது பெண்ணின் கடமை என்று தட்டிக் கழிக்கிறார்கள்.)அது மணவாழ்க்கையில் தாம்பத்தியத்தின் எதிர்ப்பார்ப்புகளாகி விடுகின்றன. இக் கடமைகளும் எதிர்பார்ப்புக்களும் ஒரு பக்கத்தாயதாகவே இருக்கின்றன.
ருமணமாகாத பெண் திருமணமான பின்னர், பின் தங்க நேரிடுகிறது. வேலை உயர்வுகளும் ஊதிய உயர்வுகளும் பெரும்பாலும்
16

அவளுக்கு கிட்டுவதில்லை. குடும்பச் சுமை அவளைத் தாக்குகிறது. பிள்ளை வளர்ப்பு, வீட்டு வேலை, கணவன் பராமரிப்பு போன்ற பணியையும் சமதிறமையுடன் அவளால் நடத்த இயலாது. இதனால் பாதிக்கப்படுவது அலுவலகத் திறமை. பெண் குடும்ப வட்டத்திற்கே முதலிடம் கொடுக்க வேண்டும் என்பதே பண்பாடு அவளுக்கு கற்றுக் கொடுத்த முதற் பாடம், அம் முதற் பாடம் அவளது கணிப்பிலும் சமுதாயக் கணிப்பிலும் முக்கிய பாடமாகியும் விட்டது. குழந்தை வளர்ப்பும் வீட்டு வேலையும் அவளது சிந்தையை ஆக்கிரமித்துக்கொள்ள, விடுபட முடியாத ஒர் ஆன்மீகச் சிக்கலாகத் தோன்ற அதற்குள் அவள் அமிழ்ந்து விடுகிறாள். குடும்பம் என்ற கோயிலில் சட்டி பானைகளும் வீடு கூட்டும் விளக்குமாறுகளும் பூசைக்குரிய பொருட்களின் அந்தஸ்தைப் பெறுகின்றன. இப்பூஜை பெண்ணினால் மட்டுமே செய்ய வேண்டும் என ஆண் மகன் என்ற ஆசான் கட்டளையிட்டு விட்டார். இதனால் அவளால் அலுவலக வேலைகளை முன்னைய திறமையுடன் நிறைவேற்ற முடியவில்லை. தாய்மை என்ற விடுபட முடியாத சூழலில் அவள் மெய்மறந்து நிறைவேற்ற தன்னை அமுக்கி விட்டாள். தாய் தகப்பன் கூட்டுறவால் பிறந்த பிள்ளைகளைத் தகப்பன், தாயிடமே தள்ளி விடுகிறான். தாய்ப் பால் கொடுத்தல் ஒன்றைத் தவிர ஏனைய பிள்ளை பராமரிப்புகளை தகப்பனும் ஏன் சேர்ந்து செய்யக் கூடாது? குளிக்க வார்த்தல், உண்வு கொடுத்தல், படுக்க வைத்தல் போன்றவற்றை தகப்பனும் செய்யலாம். இதனால் பெண்iைன் வேலைச் சுமை குறையும். குடும்பம் என்ற கோயிலில் கணவனும் மனைவியும் அர்த்த நாரீஸ்வரராக இருந்தால் பரஸ்ப்ர அன்பு, குழந்தைகளின் மனோதிடம், செல்வச் செழிப்பு என்ற பல நன்மைகளைப் பெறலாம். பெண் குலம் அடக்கி ஒடுக்கப்பட மாட்டாது. பெண்ணுரிமை பேணப்பட்டு ஒரு நாகரீக சமுதாயம் தோன்றும். சம உரிமைகளும் சம சந்தர்ப்பங்களும் மனிதனை முன்னேற்ற பாதையில் இட்டுச் செல்லும். பெண்களுக்கு வீட்டு வேலைப் பளு குறைந்தால் அவர்களும் ஆண்களுடன் அதே திறமையுடன் பணிபுரியலாம். உத்தியோக உயர்வு கிடைக்கலாம். அதிக ஊதியம் பெறலாம். அதே வேளையில் ஆண்களும் குடும்பப் பொறுப்பில் சமபங்கைப் பெற்றால் குடும்பம் சீர்குலையாது: பிள்ளைகள் மனோபலமும் சுக சீவியமும் உடையவர்களாக வளர்க்கப்படுவர்.
பெண்கள் மீது பலாத்காரம்
சீதையை இராவணன் கவர்ந்து சென்றான். திரெளபதியை சபை நடுவிலே அரசரும் மந்திரிகளும் ஏனைய தர்மிட்டர்களும் இருக்கையில் துகிலுரிந்தனர். அன்று தொடங்கிய பலாத்காரம் இன்னும் தொடர்கிறது. காவியக் கதாநாயகிகளுக்கு அவதாரக் கணவரும் அவதாரக் கடவுளும் உதவி செய்ய முன்வந்தனர். ஆனால் இன்றைய
17

Page 15
சமுதாயத்தில் பெண்களைக் காப்பாற்றச் சட்டங்கள் கூட சில சமயம் முன் வருவதில்லை. பெருகிக்கொண்டு போகும் இச்சம்பவங்களுக்கு உதாரணங்கள் சில.
கடத்தப்பட்ட யுவதி கத்தி வெட்டுக்கு இலக்கானாள் - வவுனியாவில் சம்பவம்.
26, 8, 83 வீரகேசரி
தோட்ட அழகி மாலினி மீது அசிட் வீசி கொலை.
இளைஞனின் திருமண ஆசை நிறைவேறாத ஆத்திரம்.
10. 3. 83 வீரகேசரி
குடும்பப்பெண் மீது பலாத்காரமா? காம வெறியர்களுக்கு கடுமையான தண்டை அளிக்கப்பட வேண்டும்.
திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கும் தாயான இளம் பெண் நான்கு நபர்களால் பலவந்தப்படுத்தப்பட்டாள்.
24. 2. 83 தினகரன்
மணமான பெண்ணை கட்டிப்பிடித்தாராம் - மண்வெட்டித்
தாக்குதலுக்கு வாலிபர் பலி.
13. 6. 83 வீரகேசரி
இளம் பெண்ணை வழிமறித்து கத்திவெட்டு - மூவர் சந்தேகத்தின் பேரில் கைது.
18. 6, 83 வீரகேசரி
வட்டகச்சியில் பெண் கொலை 24. 2. 73 வீரகேசரி
18

பெண்மையின் நகைச்சுவை - ஒரு கற்பனாவாதம் வளர்கிறது.
(பெண்களைப்பற்றி இழிவாக, வேடிக்கையாக எள்ளி நகையாடுவது பரம்பரை பரம்பரையாக ஆண்களின் பொழுது போக்குகளில் ஒன்றாக இருந்து வந்தது. ஆயினும் தற்போதைய சூழ்நிலையில் பெண்கள் உரிமைகளும் பெண் சமத்துவமும் பெருமளவில் பேசப்பட்டு அதன் தாற்பரியங்களை ஆதார பூர்வமாக ஆராய்ந்து உலகத்து அறிவுஜீவிகளும் ஐக்கிய நாடுபோன்ற உலக ஸ்தாபனங்களும் ஒருமித்து பெண் அடிமை வாதத்தின் அநீதிகளை கண்டிக்கத் தொடங்கியுள்ள காலகட்டத்தில் வீரகேசரியிலும் தினகரனிலும் பிற்போக்கான கருத்து வெளிவந்தமை மிகவும் கவலைக்கிடமானது. வீட்டு வேலையிலும் அடுக்களையிலும் பிள்ளை பராமரிப்பதிலும் பெண்ணினது அறிவுப்பிரவாகம் முடங்கிக் கிடந்த காலத்தில் வெளியுலக நடப்புகளும் அறிவு பூர்வமான விடயங்களும் பெண்களுக்கு எட்டாது ஒதுக்கப்பட்ட போது பெண்ணானவளின் குணாதிசயங்களில் ஒருவித தேக்கமும் பிற்போக்கும், அச்சமும், மடமையும் நாணமும் பெருகி வளர்ந்திருக்கலாம். ஆனால் அந்தத் தடைகள் சமுதாய, அரசியல், பொருளாதார மட்டங்களில் அகற்றப்பட பெண்ணும் தன் பின்தங்கிய நிலையிலிருந்து விடுபட்டு விட்டான். அதை உணராத ஆணினம் இன்றும் கூட அர்தமற்ற ஆதாரமற்ற விஞ்ஞானக் கண்ணோட்டத்தில் நிராகரிக்கப்பட்ட குணவியல்புகள் சில பெண்களுக்கு உண்டு என்று ககைகளிலும், கட்டுரைகளிலும், பத்திரிகைத் துணுக்குகளிலும் வரைப்படத்திலும், சினிமாக்களிலும் விதண்டாவாதம் செய்வது பண்பற்ற பிற்போக்கான செயலாகத் தோன்றுகிறது.
சீதனத்தின் கொடுமையை அர்த்த பூர்வமாக உடைத்தெறிய முன்வந்த ஒரு புதுமைப் பெண்ணைக் கதாநாயகியாக உலவவிட்ட ஒரு சிறுகதையையும் (புதிய விழிப்பு) இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் கலை இலக்கியத்துறை சார்ந்த பெண்களுக்கான அமைப்பையும் வெளியிட்ட 5, 6, 83 ஞாயிறு வீரகேசரியில் ஏன் இந்த முரண்பாடு? இனிய வீணையின் நாதத்தில் ஒர் அபஸ்வரம் ஒலிக்கிறதே!
தினகரன் 22, 2. 83ல் தொகுத்தளித்திருக்கும் பல்வேறு நாடுகளில் வழங்கப்படும் கருத்துக்களும் அதே விதண்டாவாதம் தான்; அர்த்தமற்ற ஆதாரமற்ற பிதற்றல்கள். வேடிக்கைக் கதைகளுக்கும் நகைச் சுவைக்கும் பாரில் உள் பெண் குலம் முழுவதையும் ஒருங்கே எள்ளி நகையாடுவதும் பரிகசிப்பதும் பண்பல்ல.
19

Page 16
ஒருத்தி
உன் கணவர் எங்கே வேலை:-
மற்றவள்:-
ஜி. ஒ. வேலை செய்யும் கந்தோரில் (பியோன்)
女女女
அவள்:-
உன் கணவருக்கு எவ்வளவு சம்பளம்
இவள்:- m
நானூறு ரூபாக் குறைய ஆயிரம்! (600 ரூபாய் என்று சொல்ல வெட்கம்)
女女女 ஒருத்தி:-
என்னடி உன் கையில் காயம் மற்றவள்:-
ஹொட் பிளேட்டில் சமைக்கும் போது சுட்டுவிட்டது. (கணவன் அடித்ததனால் ஏற்பட்ட காயம்)
女女女 விமலா:-
நீ எதற்காக உன் கணவரை முன்னால் விட்டுப் பின்னால் போகிறாய்?
Os:-
அவரைப் பின்னால் விட்டால் எனக்கு முன்னால் போக வழிதெரியாது. (கணவன் ஒரு திருடன், தாலிக் கொடியை பிய்த்து விடுவான் 6T6öd juub)
女女女 լD6vf:-
உஸ்! சேலை வடிவாக இருக்கிறதே என்ன விலை? ராணி
இந்த மாதச் சம்பள மிச்சத்தை அப்படியே கொடுத்து வாங்கி வந்திருக்கிறார். LDSuff:-
ஆக அறுபத்தைந்து ரூபாய் தானா? (மணியின் கணவர் வேலை செய்யும் கந்தோரில் வேலை பார்ப்பவள் LDSuff.) -
女女女
2O

விமலா:-
உங்க மகள் சோதனையில் நன்றாக பாஸ் பண்ணியிருக்கிறாளே.
SST:
தாயின் மூளை பிள்ளைக்கு இருக்கும் தானே? (கணவனைவிட தான் கெட்டிக்காரி என்ற எண்ணம்)
★★★ ரதி
உன் கணவர் மேல் உனக்கு ஆத்திரம் வந்தால் என்ன செய்வாய்? மதி:-
பிள்ளைகளுக்குப் போட்டுச் சோப்புவேன்.
女女女 மாலதி:-
உன் மணிக்கட்டில் ஏன் கட்டுப் போட்டிருக்கிறாய்? ரேவதி:-
எலும்பொன்று முறிந்து விட்டது. (புதிய மணிக்கூட்டை மற்றவர்களுக்கு காட்டுவதற்காக)
女女女
தவம்: w
உன் கணவர் இன்னும் வெளிநாட்டுக்குப் போகவில்லையா? நவம்:-
நான் தான் அவரை போக வேண்டாம் என்று சொல்லி விட்டேன். அவரைப் பிரிந்து என்னால் ஒரு நிமிடம் கூட வாழ முடியாது. (உண்மையில் ஏஜன்சிக்குக் கொடுக்க பணம் இல்லாதது தான்
காரணம்)
女女女 1. பெண்கள் இருக்கும் இடத்தில் பேச்சு இருக்கும்.
ஐலார்ந்து 2. பெண்ணால் காப்பாற்ற முடிந்த ஒரே இரகசியம் அவள் வயது.
பிரான்ஸ்
3. நல்லவளாக இருப்பதை விட அழகியாக இருப்பதையே ஒவ்வொரு
பெண்ணும் விரும்புகிறாள்.
ஜெர்மனி
4. ஒரு பெண் இன்னொரு பெண்ணை ஒரு பொழுதும்
புகழ்வதில்லை.
எஸ்தோனியா
5. ஏதாவது ஒரு முனையில் பெண்ணொருத்தி இல்லாமல் ஒரு தீய
காரியம் நடந்ததில்லை.
வேல்ஸ்
21

Page 17
6. மூன்று பெண்களும் ஒரு வாத்தும் சேர்ந்தால் ஒரு சந்தை.
டென்மார்க்
7. பெண் கையில் கொடுத்த பணம் தங்காது. ஆண் கையில்
கொடுத்த குழந்தை வாழாது.
இந்தியா
8, ஒரு பெண்ணை அழகானவள் என்று சொல், சைத்தான் அதை
அவர்களுக்குப் பத்துத் தடவை திருப்பிச் சொல்வான்.
தினகரன் இத்தாலி
னகரன
பெண் ஒருபோதும் உண்மை பேசமாட்டாள்; மூடி மறைத்து உண்மைக்குப் புறம்பானதையே கூறுவாள்; தனது தேவையற்ற வீண் பகட்டைக் காப்பதே அவள் குறிக்கோள்; அவள் அகங்காரம் பிடித்தவள். பொறாமை உடையவள்; தீய குணங்களின் இருப்பிடம்; வாயாடி சண்டைக்காரி, அழகாக இருப்பதை பெரிதும் விரும்புவாள்; இப்படிப்பட்ட கருத்து வாதங்கள் தொடர்ந்தும் இலக்கியங்களிலும் நடைமுறைப்பேச்சுக்களிலும் பழ மொழிகளிலும் பரிமாறப்பட்டு வருவது நிறுத்தப்பட வேண்டும். இக்குணங்கள் ஆணுக்கும் இருக்கலாம். தனிப்பட்ட குணாதிசயங்கள் விருப்பு வெறுப்புகள் ப்ால் ரீதியில் அல்லது இன ரீதியில் அமைவன அல்ல. "சாதிப்புத்தி; பெண் புத்தி, சிங்களப் புத்தி தமிழ்ப்புத்தி” என்று நாம் இலங்கையில் நாள் தோறும் கேட்கிறோம். இதனால் நாம் பெற்ற பெறுபேறுகளும் இப்போ வரலாற்றுச் செய்தியாகி விட்டது. தற்போதய விஞ்ஞான உலகில் இவை யாவும் விதண்டா வாதங்கள். ஒர் இனத்தாருக்கே உரிய இயல்புகள் இவை என இன்னொரு இனத்தாரால் கூறப்படும் போது அதை ஆங்கிலத்தில் Racism 6T6őrgyud Chauvinism 6T6őrgyud Sg8GJITüd. Sg5 fglufiĉo பெண் புத்தி இது என்று ஆண் மக்கள் கூறுவதை Male Chauvinism என்று அழைப்பர். பொதுவாக இக்கூற்றுக்கள் வெறுப்பையும் கோபத்தையும் வெளிப்படுத்துவதாக இருந்தாலும் வெளிப்படையாக கூறாது நகைச்சவை என்ற பேரிலும் இவை கையாளப்படுவது நோக்கற் பாலது.
பெண் உரிமைக் கோரிக்கை எப்படி பெட்டைக் கோழி வாதமாகியது என்பதற்கு ஒர் உதாரணம் இதோ.
டாக்டர் (திருமதி) புரோமில்லா கபூர் என்னும் புகழoபற்ற
சோஷியாலிஜிஸ்ட் மனைவிகளைப் போட்டு அடிக்கும் கணவர்களை சட்டப்படி தண்டிக்க வேண்டும்; அவர்களுக்கு எதிராக சட்டமியற்ற
22

வேண்டும்' என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார். மனைவியை அடிப்பதை வயலன்ஸ் என்று மட்டும் சொல்ல முடியாது. அவளை அடிமையாக நடத்தி அவமானப் படுத்தும் செயல் இது என்கிறார் இவர். நியாயமான கருத்து தான். அதே சமயம் தினமும் கணவனைத் தொண தொண வென்று நச்சரிக்கும், கணவன் மீது பாத்திரங்களை வீசும், கணவனை மாவரைக்க துணி துவைக்கச் சொல்லித் துன்புறுத்தும், மனைவிகளை அடக்கவும் சட்டம் தேவை என்கிறார் தினமும் "பெட்டைக்கோழியால் குத்தப்படும் ஒரு பரிதாபக் கணவர்'
- ஸெலினி
மேலே காணப்படும் செய்தி சென்னையில் இருந்து வெளியாகும் ஆனந்த விகடனில் காணப்பட்டது (ஜூலை 1982) இது என் கண்ணைக் கவர்ந்த அதே சமயம் என் சிந்தனையையும் தூண்டி விட்டது. கணவனால் அடித்து துன்புறத்தப்பட்டு இம்சைக்குள்ளாகும் ஒரு மனைவியின் பரிதாப நிலைக்கு அனுதாபப்படும் ஒரு கருத்து வெளிப்பாடு இது. இது ஒரு முக்கிய அம்சம். பெண் விடுதலை வாதத்தில் பின்னிப் பிணைந்த ஒரு சமுதாய அவலம். இக்கருத்தின் ஆசிரியர் இதற்குத் தேவையான முக்கியத்துவம் கொடுத்து அதைச் சீர்தூக்கி தீவிரமாகக் கண்டிக்கிறார். அத் தீவிரவாதத்தை எடுத்துக் கூறிய அதே வேளையில் அதற்கு விமர்சனம் கூற முற்பட்ட ஓர் ஆண் தினமும் கணவனைத் தொன தொண வென்று நச்சரிக்கும், கணவன் மீது பாத்திரங்களை வீசும், கணவனை மாவரைக்க, துணிதுவைக்கச் சொல்லி துன்புறுத்தும் மனைவிகளை அடக்கவும், சட்டம் தேவை என்கிறார். பெண்விடுதலை, பெண்கள் உரிமை, பெண் நலம் ஆகியவற்றில் அக்கறையும் ஈடுபாடும் கொண்ட ஒருவர் போல அதை வெளியிட்டு விட்டு அதே சமயம் அதற்குரிய முக்கியத்துவத்தைக் கொடுக்காமல் அக்கோட்பாட்டைச் சிதைக்க முயல்கிறார். பின்னவர் Henpecked என்ற ஆங்கிலப் பதத்தை எடுத்து எழுதுகிறார். ஒரு கேலி மனப்பான்மையுடன் இப்பிரச்சினையை எள்ளிநகையாடுகிறார். கணவனால் துன்புறுத்தப்பட்டு அடித்து உதைத்து வீட்டை வீட்டு விரட்டப்படும் பெண்களின் தொகை எத்தனை? பெண்ணினால் அல்லது மனைவியால் துன்புறுத்தப்படும் கணவர் இருக்கிறாரா என்பது கேள்விக்குரியது!
இந்நிலையில் அதற்கும் ஒரு சட்டம் வேண்டும் என்கிறார். ஒன்றில் இவருக்கும் பிரச்சனையின் தீவிரம் விளங்காமல் இருக்க வேண்டும், அல்லது விளங்கி அதனால் தாக்கப்பட்டு அத்தாக்கத்தின் பயனாக எழுந்த ஒரு தாழ்வு மனப்பான்மையால் முழுப் பூசனிக்காயை
23

Page 18
சோற்றில் புகைக்கும் முயற்சியாயுமிருக்கலாம். மாவரைப்பதும் துண் துவைப்பதும் வீட்டில் மட்டும் ஏன் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டவேண்டும்? ஹோட்டல்களிலும் கடைகளிலும் சம்பாதியத்திற்கு ஆண் மக்கள் மாவரைப்பதில்லையா? துணி துவைப்பதில்லையா? வண்ணாத்தியுடன் கூட வண்ணானும் துணி துவைக்கிறான். மா அரைப்பதிலும் துணி துவைப்பதிலும் பயன் பெறுவது பெண்கள் மட்டும் தானா? உருசியான இட்டலி, தோசை உண்பதற்கும், தூய உடை அணிந்திருப்பதற்கும் ஆண்மகன் மாவரைப்பதும், தணி துவைப்பதும் ஏன் இழிவான செயலாக கருதப்பட வேண்டும்? இதில் என்ன கெளரவ பிரச்சினை அடங்கியுள்ளது? ஓயாது அல்லற் படும் காதல் துணைவிக்கு மாவரைத்தால் துணி துவைத்துக் கொடுத்தால் இல்லத்தில் வசந்தம் வீசாதா? வாழ்வின் பெருஞ் சுமைகளைச் சேர்ந்து தூக்கினால் சந்தோஷம் மிளிராதா? பாரம் குறையாதா? ஆக பெண் விடுதலைத் தத்துவத்தின் ஒர் அம்சத்தை எடுத்துக் கூற முற்பட்ட ஒரு பத்திரிகையில் எவ்வாறு அதன் தாற்பரியத்தை குறைப்பதற்கும் கெடுப்பதற்கும் ஒரு விமர்சகர் முயலுகிறார் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம். சிந்தனைக்காக இப்போது மக்கள் முன்வைக்கப்படும் பெண்கள் பிரச்சினைகள் எப்படி சின்னா பின்னமாக்கப்பட்டு அதே தாற்பரியத்துடன் அக் கொள்கைகள் (வலியுத்தப்படாமல்) அவர்களை போய்ச் சேருவதில்லை என்பதற்கும் இது ஒரு சிறந்த உதாரணம்.
24

பெண்
தொழிலாளி
பெண்களுக்கு இரவு வேலை
பொதுவாகப் பெண்கள் மாலையிலும் இரவிலும் வீட்டு வேலை செய்வார்கள். இரவு, உணவு தயாரித்தல், மா இடித்தல், மா அரைத்தல், சட்டி பான்ை கழுவுதல், நள்ளிரவில் பசியால் அழும் குழந்தைகளுக்கு பால் கரைத்து ஊட்டுதல் போன்ற வேலைகள் பெண்களாலேயே ஆதிகாலந் தொட்டு செய்யப்பட்டு வந்தன. இவ்வேலைகளுக்கு நேர காலம் வரையறுக்கப்படவில்லை. ஊதியம் பேசப்பட்டு கூட்டிக் குறைத்துக் கொடுக்கப்படவில்லை. ஏன் இதைப்பற்றி யாரும் ஒரு பிரச்சினை என்ற கண்ணோட்டத்தில் அலசி ஆராயவில்லை. ஆனால் (இப்பொழுது பெண்களின் இரவு நேர வேலை சமுதாயத்தில் அரசாங்கிரீதியாகவும், சர்வதேச ரீதியாகவும் பல வாதப் பிரதிவாதங்களுக்கு உட்படுத்தப்படுகின்றது. சட்டங்களும அப்பிப்பிராயங்களும் அலசி ஆராயப்படுகின்றன. பெண் விடுதலை இயக்கங்கள், தொழிலாளர் இயக்கங்கள், பெண்கள் செய்தியகம், என்று பல மட்டங்களில் இப்பிரச்சினை வாதத்திற்குள்ளாகி இருக்கிறது.
சர்வதேச தொழிலாளர் சம்மேளனம் பெண்கள் பாதுகாப்பை முன்னிட்டு பெண்களையும் சிறு குழந்தைகளையும் இரவு பத்து மணிக்குப் பின் வேலையில் ஈடுபடுத்தக் கூடாது என்று ஒரு சட்டத்தை இயற்றியது. இதை இலங்கை உட்பட பல நாடுகள் ஆதரித்துக் கைச்சாத்திட்டன. முஸ்லிம்களும், கத்தோலிக்கரும் பெரும்பான்மையாயிருக்கும் நாடுகள் பல இதனை ஆதரித்தமையும் இங்கிலாந்து, ருஷ்யா, அமெரிக்கா, மேற்கு ஜேர்மனி, யப்பான் சிங்கபூர் போன்ற கைத்தொழில் அபிவிருத்தியில் ஈடுபட்டிருக்கும் நாடுகள் இதை ஆதரிக்காமையும் இதன் தாற்பரியத்தை விளக்குகிறது. குறைந்த சம்பளத்தில் பெண்களை வேலைக் கமர்த்தல், இயந்திர ரீதியாக தொழிற்படும் தொழிற்சாலைகளில் பெரிதும் வரவேற்கப்படுகிறது.
எனினும் பெண்களுக்கு பாதுகாப்பு என்ற நோக்கத்துடன் கொண்டு வரப்பட்ட இச்சட்டம் பெண்களுக்கு சம உரிமையும் சம
25

Page 19
சந்தர்ப்பமும் கோரும் பெண் விடுதலை இயக்கங்களினால் கண்டிக்கபடுகிறது. இது பெண்களைப் பேதப்ப்படுத்தி விலக்குகிறது.
மேலதிக ஊதியம் போன்ற பல்வேறு துறைகளில் பெண்கள் இதனால்
பாதிக்கப்படுகின்றனர் என்பது அவர்களது கருத்து
இலங்கையில் நாம் இந்தக் குரலை இப்பொழுது கேட்கிறோம்) தற்போதைய அரசாங்கத்தின் சுதந்திர வர்த்தக வலயம், பிறநாட்டு மூலதனம் முதலிடப்படுவதன் மூலம் பல தொழிற்சாலைகள் அமைத்தல் போன்ற அபிவிருத்தித் திட்டங்கள் பெருமளவில் தொழிலாளரை அதுவும் மிகக் கூடிய நேர அட்டவணையில் குறைந்த சம்பளத்தில் தொழில் புரியக் கூடிய தொழிலாளர் வகுப்பு முறை ஒன்றைப் பெரிதும் வேண்டி நின்றது. இதனால் பெண்கள் இரவு வேலையில் ஈடுபடுவதை இன்றைய அரசாங்கமும் ஆதரிக்கிறது.
ஆயினும் ஆய்வு முறை ஒன்றைத் தழுவி பெண் தொழிலாளர்கள் இச்சட்டத்தை ரத்துச் செய்வதை விரும்புகிறார்களா என்பதை ஆராய பெண்கள் செய்தியகமும் தொழில் அமைச்சும் முன்வந்தன. தொழிலமைச்சு ஆய்வு 95% வீதம் பெண்கள் இரவு வேலையை விரும்பவில்லை என்கிறது. இதை அப்படியே ஏற்றுக்கொள்வதற்கில்லை. அவர்கள் ஏன் அதை விரும்பவில்லை.? இன்ன இன்ன வசதிகள் தொழிற்சாலைகளிலிருந்தால், இரவு வேலையை அவர்கள் செய்வார்களா என்பன போன்ற தர்க்கரீதியான, ஆழமான, அறிவு பூர்வமான கேள்விக் கொத்தை அவர்களுக்கு கொடுத்திருந்தால் ஒரு வேளை இவ் விகிதாசாரம் பெருமளவில் குறைந்திருக்கும். பெண்கள் செய்தியகம் நடத்திய ஆய்வின் முடிவு வேறு விதமாக இருப்பதும் மேற்கூறிய வாதத்தை உறுதிப்படுத்துகிறது. பெண்கள் செய்திகயம் நடத்திய ஆய்வு 90% சதவீதமான பெண்கள் இரவு வேலை செய்வதை விரும்புகின்றனர் என்று திட்ட வட்டமாக்க கூறுகிறது. இரவு 8 மணித்தியால வேலை செய்வது என்றதில் மாத்திரம் இப்பிரச்சினையின் முழுத் தாற்பரியமும் அடங்கி விடவில்லை. இது பல அம்சங்களும், பல சமூக பொருளாதார பரிமாணங்களும் உள்ள ஒரு பிரச்சினை. பெண் வேலைக்குப் போவது என்பதே சமுதாய மட்டத்தில் இன்று முழுமையாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை. பெண்கள் வேலைக்குப் போவதால் அவர்கள் படும் கஷ்டங்களும், இல்லாள் வீட்டில் இல்லாததால் கஷ்டப்படும் கணவனும், சிறுகுழந்தைகளும், வயதானோரும் என்று பல பிரச்சினைகளை இது கிளப்பி விட்டிருக்கிறது. குழந்தைகள் பராமரிப்பு இதனால் பாதிக்கப்படுகிறது.
26

வீட்டில் நிலைமை அமைதியாக இல்லை என்பன போன்ற பிரச்சினைகளுக்கே நாம் இன்றும் விடை காணவில்லை.
ஏனைய நாடுகளிற் போல இலகுவாக்கப்பட சமையற் பொறுப்பு சத்துணவை பெர்ட்டலங்கட்டி விற்கும் உணவு நிலையங்கள் குழந்தைகள் பராமரிப்பு நிலையங்கள் என்பன எம்மிடை அருகியே காணப்படுகின்றன. இந்நிலையில் இரவு வேலைக்கும் பெண்கள் அனுமதிக்கப்படல் வேண்டும் என்று 90% சத பெண்களே விரும்பினால் அவ் விருப்பத்தைத் தூண்டுவதற்கு அடிப்படையாக ஒரு முக்கிய காரணமிருக்க வேண்டும்.
பெண்கள் செய்தியகம் நடத்திய ஆய்வு 76. 5 வீதமானோர் போக்குவரத்து சாதனங்கள் இரவு வேலைக்குச் செல்வதற்கு சாதகமாக இல்லை என்று கூறினர். நூற்றுக்கு 70 சத பெண்கள் இரவு வேலை செய்யும் பெண்களை ஒரு தனிப்பட்ட தொழிலாளர் வர்க்கமாக்க கணித்து அவர்களுக்கு விசேட சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்று கூறினர். தனிப்பட்ட போக்குவரத்துச் சாதனம், இலகுவான வேலை, லீவு நாட்களை அதிகரித்தல், ம்லசல கூடவசதிகள், சம அளவு ஊதியம், பதவியேற்ற வாய்ப்புகள், போன்ற சலுகைகளும், உரிமைகளும், வழங்கப்பட வேண்டும் என்று கூறி உள்ளனர்.
பல தொழிற் சங்கங்கள் பெண்கள் செய்தியகத்தின் விகிதாசாரத்தை அதன் முடிவுகளை அப்படியே ஏற்றுக் கொள்ளவில்லை. பெண் தொழிலாளர் பலர் தொழிற் சங்கங்களிலும் ஏனைய அரசாங்க, தனியார் சங்கங்களிலும், குழுக்களிலும் அங்கத்துவம் வகிக்கவில்லை. இம் முடிவு பெண் தொழிலாளியின் எண்ணக் கிடக்கைகளை சரியான முறையில் பிரதிபலிக்க வில்லை. ஆடை உற்பத்தி ஆலைகளிலாவது சுதந்திர வர்த்தக வலயத்தின் பணிபுரியும் ஏராளமான பெண்களையாவது இம் முடிவு உட்படுத்தவில்லை. சுதந்திர வர்த்தக வலயத்தின் பணிபுரியும் தொழிலாளிக்கு தொழிற் சங்க உரிமைகள் வழங்கப் படவில்லை. ஆகவே பெண் தொழிலாளர் பங்கு பற்றாத ஒரு முடிவு இது என்பது அவர்கள் வாதம.
மேலும் பெண் விடுதலை கோரும் ஏனைய பெண்
சங்கங்களில் அங்கம் வகிக்கும் பெரும்பாலான பெண்கள் மத்தியவர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். இச்சங்கங்கள் பெண்களுக்கு
27

Page 20
எத்துறையிலும் சம சந்தர்ப்பம் அளிக்கபட வேண்டும் என்ற ஒரே குறிக்கோளை வைத்தே இச்சரத்து அகற்றப் படவேண்டும் என்று கூறிகின்றன. பெண் தொழிலாளருக்கு இதனால் ஏற்படும் அல்லல்களும் ஏனைய பல பிரச்சினைகளும் இவர்களுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. ஆலைகளில் பணிபுரியும் பெண்கள் இச்சங்கங்களில் அங்கத்துவம் வகிக்கவில்லை.
எப் பெண் தான் இரவு வேலை செய்ய முன்வருவாள்? தனது ஊதியத்தால் மட்டுமே ஏனையோருக்கும் தனக்கும் ஒரு வேளை சோறு கிடைக்கும்என்ற நிலையில் உள்ள ஒரு பெண் இரவு வேலைக்குச் செல்ல சம்மதிக்கிறாள். கணவனும் தானும் உழைத்தும் சாதாரண தேவைகளையே பூர்த்தி செய்ய முடியாமல் இருக்கிறது. ஆகவே இரவு வேலைக்குச் செல்வதால் கூடிய ஊதியம் கிடைக்கும் என்று நினைக்கிற பெண்ணும் வேலை செய்கிறாள். பெண்களுக்குச் சம சந்தர்ப்பம் இல்லை; பெண் என்ற படியால் இரவு வேலை அனுமதிக்கப்பட வில்லை என்று கூறி எப் பெண்ணும் இரவில் வேலை செய்யப் போகமாட்டாள். கொள்கையளவில் ஒரு வாதத்திற்கு இதைக் காரணமாக்க கொள்ளலாமே தவிர இதனால் நான் வேலைக்குப் போகிறேன் எனக் கூறி ஒரு பெண்ணும் இரவில் ஒரு தொழிலுக்குச் செல்லமாட்டாள். அன்றியும் இரவு வேலை செய்ய மறுக்கும் ஒரு பெண் முதலாளியால் வேலைக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாள். வேலையைத் தேடுவதற்கு, கிடைத்த வேலையை இழக்காமலிருப்பதற்கு பதவியேற்றம் பெற்று கூடிய ஊதியத்தைப் பெறுவதற்கு என்று இப்படிப்பட்ட காரணத்துக்காகவும் இரவு நேர வேலைக்கு பெண் ஒத்துக்கொள்கிறாள். ஆகவே இப்பிரச்சினை முழுக்க முழுக்க ஒரு பொருளாதாரப் பிரச்சினையே அன்றி உரிமைப் பிரச்சினை அல்ல. இப்படி அவள் தனது பொருளாதாரப் பிரச்சினைக்கு விடைகாண முடியும் என்றால் அரசாங்கமோ சர்வதேச தொழிலாளர் சம்மேளனமோ தடையாக இருக்கக்கூடாது. ஆனால் அதற்கு ஏற்ற குழந்தைப் பராமரிப்பு போன்ற வீட்டு வேலைப் பழுவைப் பெண்களிடமிருந்து குறைக்க வேண்டும். ஆலைகளிலும் வேலைத் தலங்களிலும் இரவு நேர் உணவுச்சாலைகள், தரமான பாதுகாப்பு போன்ற மேலதிகச் சலுக்ைகள் பல அவர்களுக்குக் கிடைக்க வேண்டும்.
ஆவணி எட்டு ஞாயிறு ஒப்சேவர் பத்திரிகையில் வெளி வந்த ஒரு செய்தி இப்பிரச்சினையின் பரிமாணத்தின் ஒரு பகுதியை விளக்குகிறது. இரத்மலானை ஆலையொன்றில் இரவு நேர வேலையை முடித்து விட்டு 22 வயதுப் பெண் ஒருத்தி 10, 30க்கு வீடு செல்வதற்கு இலங்கை பஸ் சேவையின் ஒரு வண்டியில் ஏறி இருக்கிறாள். வண்டிச்

சாரதி வண்டியின் விளக்கை அணைத்ததும் பயந்த அவள் வண்டியை நிறுத்தி, தப்புவதற்கு மணியை அடித்திருக்கிறாள். வண்டிச் சாரதி வண்டியை நிறுத்தாமல் மிக விரைவாக ஒட்டிச் சென்றான். வண்டியிலிருந்த கண்டக்டர் அவளை நெருங்கிச் சேட்டைகள் செய்த பொழுது அதனைத் தாங்க மாட்டாத அவள் கீழே குதித்திருக்கிறாள். காயப்பட்டு மயக்க மடைந்திருந்த அவள் இரத்தம் வழிய வீடு சென்றாள். காலையில் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டாள்."இத்தகைய ஒரு நிலைமை எவ்வளவு கேவலமானது!
பொதுவாக இரவு நேர வேலை எவருக்குமே அவ்வளவு நல்ல தல்ல. இயற்கை நியதிப்படி இரவு நேர நித்திரை மானிடருக்கு அத்தியாவசியம். இரவில் இழந்த நித்திரையை பகலில் பெறமுடியாது. பகல் நித்திரை அவ் விழப்பை ஈடுசெய்வதில்லை. சர்வதேச தொழிலாளர் சம்மேளனம் சில வருடங்களுக்கு முன் தொழில் புரிவோர் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்து முகமாக ஒரு ஆய்வை மேற்கொண்டது. ஜெனிவாவில் உள்ள இச் சம்மேளனம் இரு மேதைகளைப் பொறுக்கி ள்டுத்து சமூக, மனோதத்துவ, உடற்கூற்று, எப்படி மக்களைத் தாக்குகிறது என்பதை ஆராயக் கேட்டது? இவ்விரு மேதைகளும் (ஜேம்ஸ் காபஸ்டியர், பிதி கசமியன்) தங்கள் கருத்துக்களை மிகத் திட்ட வட்டமாக எடுத்துக் கூறியிருக்கிறார்கள். என்ன தான் பொருளாதாரக் கண்ணோட்டத்தில் இது ஏற்கப்பட்டாலும் இரவு வேலை எங்கெங்கு, எவ்வளவுக் கெவ்வளவு குறைக்கப்படலாமோ அங்கங்கே குறைக்கப்பட வேண்டும்; இரவு நேர வேலையால் மனிதன் அசதி, தூக்கம், மந்தபுத்தி, போன்வற்றைப் பெறுகிறான். இரவில் உணவு உண்பது செமியாக்குணம் அல்சர் போன்றவற்றைத் தோற்றுவிக்கிறது; பகலில் இயற்கையாகத் தூங்க முடிவதில்லை. பகல் நேரச் சத்தம், சஞ்சலம் போன்றன அந் நித்திரைக்குத் தடையாக இருக்கின்றன. இதனால் நித்திரை செய்வதற்கு செயற்கை முறைகளை நாட வேண்டியுள்ளது; நித்திரை வில்லைகளுக்கு மனிதன் அடிமையாகிறான்; பகல் நித்திரை வேண்டிய அளவு பெற முடியாது; பசியும் அந்நித்திரையைக் குளப்புகிறது; இதனால் பலர் மனோ வியாதிக்குள்ளாகிறார்கள்; பெண்கள் பகல் நேரத்தில் வீட்டு வேலையில் ஈடுபட வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளாகிறார்கள்; சுமுகமான ஒரு குடும்ப வாழ்க்கைக்கு இது ஒரு முட்டுக்கட்டையாயுள்ளது என்பன இவர்களது ஆணித்தரமான கருத்துக்கள் '
29)

Page 21
இவற்றை நாம் மிகவும் ஆழமாகச் சிந்திக்க வேண்டும். இவ்வளவு பாரதூரமான விளைவுகளைக் கொண்ட ஒரு திட்டத்தை நாம் ஏன் அனுசரிக்க வேண்டும், ஆண், பெண் என்ற வாறாக அன்றி மானிட வ்ர்க்கத்தை ஒருமித்து இது தாக்குகிறது.
ஆகையால் பொருளாதார அபிவிருத்தி என்ற காரணத்தை மட்டுமே கொண்டு நாம் செயல்படாது அதனால் வரும் பாரதூரமான சமுதாயத்தையே நோயாளிக்கக் கூடிய இவ்விரவு நேர வேலையை கூடிய மட்டும் தவிர்க்க வேண்டும். கட்டாயச் சேவைகள் என்ற ஒரு சில துறைகளில், உதாரணமாக, நோயாளிகளைப் பராமரிக்கும் வைத்தியர்கள், தாதிகள், விமான, கப்பற் சேவைகள், நகரகாவற்துறையினர் போன்றோர் கட்டாயமாக இரவு வேலைக்குத் தேவைப்படுவர். இது நாம் தவிர்க்க முடியாத ஒன்று.
இலங்கைப் பெண்களின் தொழிற் சங்க ஈடுபாடு ஒரு புதிய அத்தியாயம்.
உணர்ச்சி பூர்வமாகவும் உடல் ரீதியாகவும் கட்டப்பட்டு தடுக்கப்பட்டுக் கிடந்த பெண்ணினம் தற்போது வீறுகொண்டு தம் உரிமைக்கு போராட முன்வந்தது எமது வரலாற்றின் ஒரு புது அத்தியாயத்தைத் தொடக்கி வைத்துள்ளது. ஜா-எலயில் பொலிடெக்ஸ் தொழிற்சாலையில் 800 பெண் தொழிற்லாளர்கள் தொழிற் சங்க ரீதியாக ஒற்றுமையுடன் மனத் திண்மையுடன் தமது கோரிக்கைகளை முன் வைத்து முதலாளி வர்க்கத்துடன் தொடுத்த உரிமைப்போர் வெற்றியடைந்தமை நடக்கப் போகும் ஏனைய பல போராட்டங்களுக்கு ஒரு முன்னோடியாகவும் உதாரணமாகவும் அமைந்துள்ளது. இச் செய்தியின் வரலாற்று முக்கியத்துவம் பல தாற்பரியங்களை உள்ளடக்கி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. பெண்ணானவள் குட்டக் குட்டிக் குனிவாள்; அவளை அடக்கி ஆளலாம்; தன் உரிமைகளை பற்றி ஒரு போதும் வாய் திறக்கமாட்டாள்; தன் (தொழில்) கடமைகளைப் பற்றியே கண்ணும் கருத்துமாக இருப்பாள்; தொழிற் சங்கங்களில் அங்கத்துவம் வகிக்க மாட்டாள்; முதலாளிகளின் கைப்பொம்மையாக வாய் மூடி மெளனியாக இருப்பாள் என்ற பல காரணங்களை முன் வைத்து சுதந்திர வர்த்தக வலைய, பண முதலீட்டு முதலாளிகள் பெண்களையே தங்கள் கொம்பனிகளிலும் ஆலைகளிலும் வேலைக் கமர்த்தியிருக்கிறார்கள். அவர்களது கணிப்பு தவறானது பிழையானது. தொழிலாளர் வர்க்கம்
30

ஆணானாலும் பெண்ணானாலும் ஒடுக்கப்பட்டால், அடக்கப்பட்டால், அநீதி இழைக்கப்பட்டால், உரிமைகள் பறிக்கப்பட்டால் ஒன்றுபட்டு தன் உரிமைப்போராட்டத்தை தொடங்கியே தீரும். மனித உணர்ச்சிகளை பலகாலம் ஒடுக்கமுடியாது. வரலாற்றில் நடந்த பெரும் புரட்சிகள் இதற்குச் சான்று பெண்ணினத்தையும் கூட இனி அடக்கி ஒடுக்கி அநீதி இழைக்க முடியாது என்பதற்கு வட இலங்கை நடப்புகளும் சான்று தருகின்றன.
புன்னாலைக் கட்டுவன், மத்தளோடை கிராமத்தைச் சேர்ந்த பெண் தொழிலாளர்கள் 20. 4. 83ல் சம்பள உயர்வு கோரி வேலை நிறுத்தத்திலும் ஆர்ப்பாட்ட ஊர்வலத்திலும் ஈடுபட்டார்கள். நாட் கூலியாக வழங்கப்படும் ரூபா 12 ரூபா 15 ஆக உயர்த்த வேண்டும் என்பதே அவர்களது கோரிக்கை. வானவளவு உயரும் வாழ்க்கைச் செலவை நோக்கும் போது இது ஒரு நியாயமான கோரிக்கை. கிராமிய உழைப்பாளர் சங்கம் (Rural Labouters Union) இந்தப் போராட்டத்தை நடத்தியது.
எமது நியாயமான போராட்டம் பண வெறியும் சாதித் திமிரும் கொண்ட ஒரு சிலரின் உள்ளத்திலே நெருப்பைக் கொட்டியது. அடங்கி ஒடுங்கி அடிமைகளாக வாழ்ந்த நாங்கள், துன்புறுத்தப் பட்டும் சுரண்டப்பட்டும் இதுவரை காலமும் வாழ்ந்து வ்ந்த நாங்கள், இனியும் இந்த இழிநிலை எமக்கு வேண்டாம்; நாமும் மானம் உள்ள மனிதர்களை போல தலை நிமிர்ந்து வாழவேண்டும் என்ற உணர்வை பெற்று ஒர் அணியில் திரண்டு நிற்கும் காட்சியை எம்மை அடக்கி ஒடுக்கி அடிமைப்படுத்துபவர்கள் பொறுத்துக் கொள்ள முடியவில்லை” என்று அவர்கள் கூறுவது நியாயமான உள்ளக்கிடக்கை. மூன்றே ரூபாய் உயர்த்துங்கள் என்று கேட்பதற்கு கூடவா போராட்டம் தேவை? ஊர்வலம் தேவை? என்னே இழி நிலை! மனிதாபிமானம் உள்ள ஒவ்வொருவரும் தமக்குள்ளே இக் கேள்வியை எழுப்பிச் சிந்தனையைத் தூண்டவேண்டும். ஆண்டாண்டு தோறும் உழைப்பை நல்கி மண்ணைச் செழிப்பாக்கி பயிரை செழிப்பாக வளரச் செய்து பணப் பையைக் கொழுக்கச் செய்த இவ்வப்பாவி மக்களுக்கு வாழ்க்கைச் செலவு உயர்வை முன்னிட்டு 3 ரூபாய் கூட்டிக் கொடுக்க மனம் வரவில்லையே! நிலம் அற்று, நல்ல வீட்டு வசதியற்று, வாழ்க்கைக்கு அத்தியாவசிய தேவைகள் நிராகரிக்கபட்ட அடிமைகளாக, கேவலமான வாழ்க்கை வாழ்ந்து வரும் இத்தொழிலாளப் பெண்களுக்கு இக் குறைந்த சம்பள உயர்வை வழங்குவதால் பணக்கார விவசாயிகளுக்கு என்னதான் குறைந்து விடப்போகிறது?
31

Page 22
முற்போக்குச் சக்திகள் பல தங்கள் ஒத்துழைப்பை வழங்க முன்வந்தமை வரவேற்கத் தக்கது. இனங்களுக்கிடையிலான நீதிக்கும் சமத்துவத்துக்குமான இயக்கம், இலங்கை கம்யூனிஸ்ட்கட்சி, (இடது) தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி, ஈழமக்கள் விடுதலை முன்னணி, நவ சம சமாஜக் கட்சி, மனித முன்னேற்ற நிலையம் போன்றன. பூரண ஒத்துழைப்பை நல்கிப் பல கூட்டுத் தீர்மான்களை எடுத்தன. வேறு பல இயக்கங்களையும் சேர்த்து பத்திரிகை அறிக்கைகள் விட்டு, பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து, அரசியல், ஸ்தாபனங்களையும் தொழிற் சங்கங்களையும் உள்ளடக்கிய பாரிய மகா நாடொன்றைக் கூட்டி, சமாதான முறிையில் கருத்தரங்குகள் நடத்தி, இப்போராட்டத்தை சுமுகமாக தீர்த்து வைப்பதே இத்தீர்மானங்களின் சாராம்சம்.
32

கலைகளில் பெண் தமிழ்ச் சினிமாவில் பெண் கதாபாத்திரப் படைப்பு -இரு வேறு நோக்குகள்
மணாளனே மங்கையின் பாக்கியம், கணவனே கண்கண்ட தெய்வம் போன்ற பல தமிழ்ப் படங்களைப் பார்த்துப் பார்த்துப் பெண்ணின் பெருமை பேசிய காலம் போய் விட்டதோ என்று எண்ணவைக்கிறது அக்கினி சாட்சியும், மூடு பனியும். எனக்கு இருக்கும் கலையார்வத்தினால் மட்டுமே நான் இப் படங்களுக்குத் திறனாய்வு எழுத முற்பட்டேன் என்று எண்ணிவிட வேண்டாம். பெண்ணினத்தின் கஷ்டங்களும் மனக் குமுறல்களும் பெரும்பாலும் கருப் பொருளாக எடுத்தாளப்படுவதில்லை. கற்பின்திண்மையும் பெண்ணின் பெருந் தியாகங்களும், பொறுமை என்னும் அணியின் முக்கியத்துவமும் கருப் பொருளாகக் கொள்ளப்பட்டு பெண்மை காலங் காலமாக தெய்வ ஸ்தானத்துக்கு எழுப்பப்பட்டது. பெண்ணுக்குப் போதனை ஆணுக்குச் சலுகைகள், பெண்ணுக்கு கடமைகள் ஆணுக்கு உரிமைகள். பெண்மை காலால் அடித்து உதைக்கபப்ட அவள் எழுந்து மணாளனின் காலைக் கட்டிப் பிடித்து அழுது அழுது மன்னிப்புக் கோரவேண்டும். இப்படியே போய்க் கொண்டிருந்த தமிழ்ப்பட போதனைகள் திசை திரும்பிவிட்டன.
அக்கினி சாட்சியின் கருப்பொருள் மிக ஆழமானது. மிருகமாக மாறி தன் மனைவியை அடித்துக் கொடுமைப்படுத்துகிறான் கணவன். நித்திய அடிதடி சண்டை, மனைவி பொறுத்துக்கொண்டே இருக்கிறாள். மனைவியின் கருவையே சந்தேகிக்கிறான். இராமனுடன் தொடங்கிய சந்தேகம் இன்றும் ஆணினத்தை விடவில்லை. நிறை மாதக் கர்ப்பிணியாயிருக்கும் மனைவியை அடித்துத் துன்புறுத்துகிறான். இறுதியில் அக்குழந்தைக்கு தகப்பன் தான் அல்ல என்று உறுதியாகக் கூறும் அவன் அந்தப் பிள்ளையை இரயில் தண்டவாளத்தில் எறிந்து கொலையும் செய்கிறான். இந்த அன்றாடச் சண்டைகளையும் இறுதியில் நடந்த கொலையையும் நான்கு சிறு குழந்தைக் கண்கள் பார்த்துக் கொண்டே இருக்கின்றன. அவர்கள் இருவரும் பெண்கள். அதிர்ச்சி வெறுப்பு என்ற உணர்ச்சிகளுக்கு ஆளாகும் ஒரு பெண்ணின் மென்மையான மனத்தை மிக ஆளமாகத் தாக்கிவிட்டது இச்சம்பவம். அவள் மனதைச் சிதைத்துவிட்டது. நித்திய மனநோயாளியாக்கிவிட்டது.

Page 23
ஓர் ஆண் மகனின் அர்த்தமற்ற க்ொடுரச் செயல்கள் எப்படி அவன் மனைவியை மட்டுமல்லாது உணர்ச்சி பூர்வமாக இயங்கும் இன்னுமொரு பெண்ணையும் தாக்கிவிட்டது என்பதை கலையம்சத்துடன் எடுத்துக்கூறும் கதையும் அதன் முழுத் தாற்பரியத்தையும் விளக்க, அதை நடத்திச் செல்லும் பாணியும் வரவேற்கத்தக்கன; பாராட்டப்ப்ட வேண்டியது: இரசித்து மகிழக்கூடியது. காலங் காலமாக காலில் மிதிப்ட்ட பெண்மை வீறு கொண்டு எழுமோ எனப் பெண்ணுரிமைப் போராட்டங்களையும் பெண் இயக்கங்களையும் பார்த்து சமூக இயலாளர் எண்ணிக் கொண்டிருக்க ஆண்களே அதையொரு பிரச்சினையாகக் கொண்டு ஒரு தமிழ்ப் படம் மூலம் அதனை ஆராய வந்தது என்னை மிகவும் பரவசப்படுத்துகிறது.
சீதனம் பேசப்படாமல் காதல் திருமணத்தை ஆதரித்து பெற்றோர்களும், பண்பாக அன்பாகப் பழகி மனைவியைப்புரிந்து கொண்ட, அவளது உணர்ச்சிகளை மதிக்கத் தெரிந்த ஒரு கணவனின் கதாபாத்திரப் படைப்பும் இப்படத்தின் ஏனைய சிறப்பம்சங்கள். அவளது மனநோய் கட்டுக்கடங்காது போக, அவளது மனநோயை மறைத்து வைத்து திருமணம் செய்த பெற்றோரில் கோபம் கொள்கிறான். அவளைப் பெற்றோரின் வீட்டுக்கு அனுப்பி விடுகிறான். விவாகரத்து நடவடிக்கைகளில் ஈடுபடும் அவன் அங்கே அவளது மென்மையான உணர்வுகளையும், பிஞ்சு மனத்தின் ஆசைகளையும் அபிலாஷைகளையும் கருவற்றிருக்கும் அவள் நிலையையுங் கண்டு மனம் இரங்கி மனங் கலங்கி அவளை அணைத்துக் கொண்டு மானசீகமாக அவளைத் திரும்பவும் ஏற்றுக் கொள்கிறான். ஆண்களின் ஒரு தலைப்பட்சமான உரிமைகளையே நாம் கதைகளிலும் படங்களிலும் கண்டிருக்கிறோம். மானிட தர்மத்தின் அடிப்படையில் பண்பாக மனோவியாதிக் குள்ளாகி இருக்கும் மனைவியை விவாகரத்துச் செய்ய சட்ட மிடங் கொடுத்தும் அது தர்ம மல்ல என நினைக்கும் ஓர் ஆண் மகனைக் கண்டுகொள்கிறோம். இங்கு பெண்மை தன்னை ஏற்றுக்கொள் என்று கெஞ்சவில்லை; கதற வில்லை; பெண்மை ஆண்மைக்கு அடிபணிய வில்லை; தன்னைத் தன் சுயரூபத்துடன்; வெளிப்படுத்துகிறது. போலி அடக்கம் இல்லை. தேவையற்ற பணிவு இல்லை. அவள் அவளாகவே தன்னை காட்டுகிறாள். கணவனிடத்தில் அவளுக்குக் காதல் உண்டு; அன்பு உண்டு; மரியாதையுண்டு; தோழமையுண்டு. ஆனால் அடிபணிய அடித்தால் காலில் விழ, அவன் சொல்லுவதை அப்படியே ஏற்கும் அடிமைத்தன வாழ்வு போன்று
34

வேண்டாத போலித்தனம் இல்லை. இதுவும் பெண் கதாபாத்திரப் படைப்பில் ஒரு திருப்பம்.
மனநோய் வைத்தியரிடம் கதாநாயகியைக் கொண்டு சென்ற பொழுது அவர் பல கேள்விகளைக் கேட்டு அவளது மன உலைச்சல்களைக் கண்டறிய முயல்கிறார். இறுதியில் அவளை ஒரு படம் வரையச் சொல்லுகிறார். அவள் என்ன தான் வரைகிறாள்? இதிலேயே தங்கியுள்ளது அவளது மனோவியாகூலங்களின் காரணங்களும் பரிணாமங்களும். சிலுவையில் அறையப்பட்ட ஒரு பெண் அவள் வரைந்த சித்திரம். ஒரு சமுதாயத்தில் பெண் எப்படி அடக்கி ஒடுக்கப்படுகிறாள் - எப்படி அவளது சுதந்திரம் ஆணிகளால் அடிக்கப்பட்டு சிறகொடிக்கப்படுகிறது. அந்த ஆணிகள் எவை, என்பன போன்ற சிந்தனைக் குவியல்களையும் பல கேள்விகளையும் எழுப்பிவிடுகிறது அவளது சித்திரம். அவளது மனத்தின் அடித்தளத்தில் ஸ்திரமாக நிலைத்திருப்பது பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமை. அது அவளை ஒரேயடியாகச் சிதற அடித்து விட்டது.
இது போலவே மூடு பணியும் ஒரு மனச்சிக்கலில் மூழ்கியிருக்கும் ஒரு கதாநாயகனைச் சித்திரிக்கிறது. இங்கேயும் அவனது மனோவியாதிக்குக் காரணம் அவனது தகப்பன் தாய்க்கிழைத்த இடைவிடாத்துன்பம். தாய்மையின் பரிபூரண அன்பை அனுபவித்த மகன் அந்தத் தாய், தகப்பன் என்னும் அரக்கனிடம் படும் அடியும் உதையும் இன்னலும் துன்பமும் கண்டு மனம் பொறுக்காமல் சிறு வயதிலேயே மனம் உடைந்து போகிறான். தாயின் அன்பு நிலைத்திருந்தால் ஒரு வேளை அவனது சிக்கல் நிறைந்த மனோபாவத்தைத் தடுத்திருக்கலாம். தாய் இருதய நோயால் துடித்துக் கொண்டிருக்கும் பொழுது தன் தகப்பன் தாசி வீட்டில் சல்லாபம் செய்து கொண்டிருந்ததே அவனது சின்னஞ் சிறு பிஞ்சு மனத்துக்கு கடைசி அடி. அன்று ஆட்டங் கண்ட அவனது மனநிலை ஆவேசமான வெறியாக மாறுகிறது. காணும் விபசாரிகள் எல்லோரையும் குழுத்தை நெரித்துக் கொலை செய்து விடுகிறான். விபசாரிகளே தனது தாயின் மரணத்துக்குக் காரணம் என அவன் பிழையாகக் கருதிவிட்டான். அக்கினி சாட்சியாக தாலியை அணிவித்து சுக துக்கங்களில் பங்கெடுப்பதாக மணவினை முடித்து தனது தாயை சகதர்மினியாக்கிய தன் தகப்பன் (ஒரு ஆண்) பெண்ணுக் கிழைத்த அநீதி அக்கிரமம் இது என்பது அவனை வதைக்கவில்லை. காரணத்தைப் பாரபட்சமாக விளங்கிக்கொண்டு விட்டான். இதுவும் பழைய பல்லவி
35

Page 24
தானோ என்று ஐயமடையச் செய்கிறது. பெண் . இங்கு விபசாரி ஒருத்தி - மட்டுமா அதற்குக் காரணம்? கணவனின் புத்தி எங்கே போயிற்று? பெண்ணுக் கிழைக்கும் அநீதியை இனங்கண்டு விட்ட ஆசிரியர் கதையின் போக்கைச் சுற்றுக் குழப்பி விட்டார். இறுதியில் இன்னுமொரு பெண்ணே எல்லாவற்றிற்கும் காரணம் என்றதைச் சொல்லாமல் சொல்கிறாரா? பெண்ணின் ஒர் உருவம் பத்தினி - என்றால் மறுஉருவம் விபசாரிதானா? இதை விட்டால் பெண்ணுக்கென்று எந்த தனித்துவமும் கிடையாதா? அந்த ஐந்தாறு வயதுச் சிறுவனுக்கு தன் தகப்பனின் சிறுமையும் பலவீனமும் புரியவில்லையோ என்னவோ, படம் பார்ப்போர் இதனைப் புரிந்து கொண்டால் நல்லது. தங்களது பெற்றோரின் தாம்பத்திய வாழ்க்கையின் அலங்கோலங்கள் சிறு பிள்ளைகளை நிரந்தர மனோவியாதிக் குள்ளாக்கி விடும் என்பதைத் தாயும் தகப்பனும் புரிந்து கொள்ள வேண்டும். கடமைகளும் உரிமைகளும் இருவருக்கு முண்டு என்பதையும் இருவருமே புரிந்து நடந்து கொள்ளவேண்டும். இதை விடுத்து ஆண் மகன் ஒருவன் தாசியிடம் சென்றால் குடும்ப இழிவுக்கு அத்தாசியே காரணம் என்று கொள்ளாமல் அந்த இருவருமே சரி பங்கை ஏற்கவேண்டும், என்பதை கதாசிரியர்களும் சமுதாயமும் ஒத்துக்கொள்ள வேண்டும்.
36

இலங்கையின் சிறுகதையில் பெண்மை
*யுகமலரில்” ஒரு கண்ணோட்டம்
பன்னிரெண்டு சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்துயுகமலராக வெளியிட்டுள்ள சிறுகதைத் தொகுதி ஒன்றை திறனாய்வு செய்ய முற்பட்ட நான் இதை ஏன் தெரிந் தெடுத்தேன் என்ற வினாவை எனக்குள்ளே எழுப்பினேன். விடை இரு காரணங்களுக்கு உட்பட்டது. ஒன்று பெண் எழுத்தாளரால் எழுதப்பட்டது; மற்றது பெண்களின் மன உணர்வுகளையும் உளைச்சல்களையும் துன்பங்களையும் என்பது. பெண் எழுத்தாளர் ஒருவர் துணிச்சலாக எழுதியுள்ளார். பெண்களின் துணிச்லான முற்போக்கான முடிவுகள் ஆகியவையாவும் கதைகளில் ஊடுருவி நிற்கின்றன என்று சிறப்புரை வழங்கிய திரு. கணேசலிங்கத்தின் கூற்று என் சிந்தனையைத் தட்டி எழுப்பியது. இந்த வகையில் மட்டுந் தானா இக் கதைகள் அமைந்துள்ளன? இக் கூற்று பெருமளவில் ஏற்றுக்கொள்ளப்படத் தக்கதா? என்பன போன்ற சிந்னைகளையும் என்னுள் எழுப்பிவிட்டது.
கற்பெனப்படுவது காலங் காலமாக வரையறுக்கப்பட்டு வாழையடி வாழையாக புராண இதிகாசங்கள் தொட்டு இன்றைய சிறுகதைத் தொகுதிவரை கருவாக எடுத்தாளப்பட்ட ஒரு சரக்கு. காலத்துக்குக் காலம் மாறிவரும் இதன் வரைவிலக்கணம் பல எழுத்தாளருக்குப் புலப்படவில்லை. கணவன் இறந்தால் தீக்குளித்து கணவனுக்கு அளிக்கப்பட்ட உடலும் உள்ளமும் இனி யாருக்கேனும் பயன்படக் கூடாது என்று தீவிர கற்பு நிலையை நிலைநாட்டிய காலப்பகுதியின் பின் மறு - மணம் சமுதாய ரீதியாகவும் சட்டரீதியாகவும் அங்கீகரிக்கப்படத் தொடங்க கற்பின் வரை விலக்கணமும் காலத்தோடு மாறுபட்டது. மனச் சந்தோஷமற்ற இயந்திர வாழ்கையிலிருந்து விடுபட்டு மனைவி ஒருத்தி கணவனை விவாகரத்துச் செய்து புனர்வாழ்வு தேடுவதும் இப்பொழுது சகஜமாகிவிட்டது. மன மகிழ்ச்சி அமைதி ஒன்றுபட்ட உள்ளக்கிடக்கை என்பனவற்றில் ஒன்றிணைந்து தாம்பத்தியம் நடத்துவதே மனித தர்மம் என்ற அடிப்படையில் சமுதாயமும் சட்டமும் பெண்ணுக்கு விவாரத்துச் செய்யும் உரிமையையும் கொடுத்தது. இப் பெண் வேறொருவனை மணம் செய்யச் சட்ட ரீதியாக உரிமை இருந்தும் சமுதாயம் கோணல் கண் கொண்டு பார்க்கும் பொழுது அச்
37

Page 25
சமுதாயத்தை தர்க்க ரீதியாக அணுகி வாதப் பிரதி வாதங்களை எடுத்தியம்புவதே முற்போக்குப் பெண் விடுதலை வாதம். பெண் உணர்வுக்கும் பெண் உளைச்சல்களுக்கும் துன்பங்களுக்கும் மதிப்புக் கொடுப்பது, ஆணினத்துக்கு வழங்கப்பட்ட அதே சலுகைகளும் உரிமைகளும் அதே அளவில் பெண்ணுக்கும் வழங்கப்படவேண்டும் என்று கேட்பதில் அர்த்தம் உண்டு; தர்க்க முண்டு; நியாய முண்டு. அதை விடுத்து சத்திர சிகிச்சை செய்து உடலை விற்றுப் பணம் சம்பாதிக்க மத்திய கிழக்கு செல்வதற்கு கணவன் அனுமதியும் அங்கீகாரமும் கொடுக்கின்றான் என்றால் இது ஒரு சமுதாயத்தின் அவல நிலைமையை படம் பிடித்துக் காட்டுகின்றது.
இதற்கு ஏன் நாடு விட்டு நாடு செல்ல வேண்டும். உள்நாட்டில் விபசார விடுதி அமைத்து விபசாரம் செய்யும் பெண்ணுக்கும் இக் கதாநாயகிக்கும் என்ன வித்தியசம்? வீணாக கற்பென்னும் கற்பனாவாதத்தை ஏன் இதில் கலக்க வேண்டும்? சந்தோசம் உன்னத இலட்சியங்கள் ஆகிய அனைத்தையும் அடகு வைத்து பெண்ணொருத்தி பணம் சம்பாதிக்கத்தான் வேண்டுமா! இக் கதாநாயகியின் கணவனுக்கு இருக்கும் பட்டாளத்து வேலை கூட இல்லாமல் எத்தனையோ பேர் இலங்கையில் வாழ வில்லையா? இக் கதையில் கணவனின் கையாலாகத்தனமும் மனைவியின் சீர்கெட்ட உள்ளப் பாங்கும் மிகத் துல்லியமாக எடுத்துக் காட்டப்படுகின்றன. அத்துடன் பெண் எப்ப்டி உபயோகிக்கப்படுகிறாள் பெண் எப்படி தனது உடலை பணத்துக்கும் செளகரியங்களுக்கும் தானமாக வழங்கும் படி நிர்ப்ந்திக்கப்படுகின்றாள் என்றும் எடுத்துக்காட்டப்படுகின்றன. ஒன்றே ஒன்று அவளுக்குத் தேவைப்படுகின்றது. ஆண் மகனின் அங்கீகாரம் - பெண் ஆணின் அடிமை அந்த ஆண்டானின் அங்கீகாரம் கிடைத்தால் தனது ஏகபோக உரிமையான உடலைக் கூட இவள் தாரை வார்க்கத் தயாராக இருக்கின்றாள் என்று பெண்ணடிமை வாதத்தின் மறுபக்கமே இக்கதையில் வலியுறுத்தப்பட்டிருக்கின்றது.
தற்போதைய இலங்கையின் பொருளாதார நிலையின் மாற்றத்திற் கேற்ப பெண்மையும் அவளது உடலும் எப்படிப் பிரயோகிக்கப்படுகின்றன என்பதைத் தெளிவாக்குகிறது இக் கதாபாத்திரப் படைப்பு அந்நிய செலவாணியை அதிகரிக்க அரசாங்கத்தினால் ஊக்குவிக்கப்பட்ட கொள்கைத் திட்டம் எப்படி இலங்கை நாட்டுப்
38

பெண்ணைப் பாதிக்கிறது என்பதைத் துல்லியமாக்கி பெண்மைக்கும் அரசியல் பொருளாதார நிலைக்கும் உள்ள நெருங்கிய தொடர்பை இக் கதை எடுத்துக் காட்டகிறது.
யுக மலர் கதாநாயகி வரலாற்றில் வரும் சீதையைப் போன்றவள். ஒருவித மனக் கோளாறினால் அவஸ்தைப்பட்டு தாழ்வுச் சிக்கல்' என்னும் மனநோய்க்கு ஆளாகி அவளது கற்பைச் சந்தேகித்து அவளை மனதினாலும் உடலினாலும் அல்லற்படுத்தி அவளது ஆத்மாவையும் உடலையும் அலங்கோலப்படுத்திய கணவனைப் பூஜித்து அவனது செயல்களை மறைத்து மகிழ்ச்சியோடு தான் வாழ்வதாக உலகுக்குக் காட்டிய பதிவிரதை இவள். எங்கள் சமுதாயத்தில் அன்று தொட்டு இன்று வரை இத்தகைய எத்தனையோ நித்தியாக்கள் இருக்கலாம். ஆனால் இதற்குக் காரணம் யோகா பாலச்சந்திரன் கூறுவது போல் சீதனமில்லாமையோ கணவனைத் தேர்ந்தெடுக்க முடியாமையோ அல்ல. சீதனத்துடன் கூட இத்தகைய ஒரு கணவனை ஒரு பெண் இலகுவில் அடைந்திடலாம். சீதனமில்லாமல் செய்யப்பட்ட காதல் திருமணங்களும் அலங்கோலமாக மாறிவிட இடமுண்டு. இச் சந்தர்ப்பங்களில் வாய்மூடி நித்தியா மாதிரி பெண் பதுமைகளாக இருக்கப் பழக்கப்பட்டமையே முதல் காரணம். சந்தோஷமாக வாழ நினைக்கும் ஒரு பெண்ணின் உரிமை தட்டிப் பறிக்கப்படும் பொழுது அவள் வாய் மூடி மெளனமாக இருப்பது பிரச்சினையைத் தீர்க்க வழி வகுக்க மாட்டாது.
தனது உரிமைகளை ஆசைகளை அபிலாசைகளை பெண் எடுத்துக் கூற வேண்டும். தட்டிக்கேட்க வேண்டும். திருந்தாத கணவனை விட்டு விலகி மனச் சந்தோசமற்ற வாழ்க்கையிலிருந்து விடுபட்டு புது வாழ்வு தொடங்க பரிபூரண சுதந்திரம் அவளுக்கு இருக்க வேண்டும். அதற்கேற்ற சூழ்நிலைகளை சமுதாயம் அமைத்துக் கொடுக்க வேண்டும். சமுதாயக் கோப்பு அதற் கேற்றவாறு மாறவேண்டும். பிரச்சனைகள் எங்கோ இருக்க, நாம் விடையை வேறு எங்கோ தேடுவது தவறு. Mரச்சினையை மையமாக வைத்து தீர்வுகளைக் காண முயல வேண்டும்.
மேற்கூறிய சிறு கதைக்கு நேர்மாறானது "கரை கடந்த ரதி” என்ற சிறுகதை, கதாநாயகி பெண் இனத்துக்கு வழிகாட்டி "சுமை தாங்கியாக நித்திய தியாகியாக பொறுமையின் இலக்கணமாக தனது தனித்துவத்தை விட்டுக் கொடுத்து வாழப் பிரியப் படவில்லை. இவள்
39

Page 26
போலி நியாயங்களையும் ஒருதலைச் சார்பான கருத்துக்களையும் இறுதியில் உணர்ந்து செயற்படத் தொடங்கி விட்டாள். விவாகரத்துச் செய்ய அவள் முன் வராததற்குக் காட்டும் காரணங்கள் தர்க்க ரீதியானவை; ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியவை, நித்தியாக்கள் பல மங்களங்கள் சில. இது உண்மை, நித்தியாக்கள் இருப்பதற்கும் காரணங்களுண்டு. மங்களங்களாக மாறுவதற்கும் காரணங்கள் உண்டு. இந்தக் காரணங்களை இனங்கண்டு பிரச்சினைகளையும் சிக்கல்களையும் எதிர்நோக்க வேண்டுமே யன்றி அவற்றிலிருந்து விலகி நழுவி ஒட எழுத்தாளர்கள் முயலக் கூடாது.
பெண் விடுதலை வாதத்தின் பிரச்சினை மையம் அது ஒரு மேலைத்தேயக் கோட்பாடா?
பெண்ணுக்கு சகல துறைகளிலும் நீதியும் சம வாய்ப்பும் அளிக்கப்படவேண்டும் என்று கோரிக்கை விடுத்தால் அது மேலைநாட்டு நாகரிகப் பண் பென்றாவது எம் நாட்டுக் கலாசாரத்திற்குப் பொருந்தாது என்றாவது கூறுவது சற்றேனும் பொருந்தாத வாதம். ஆனாலும் நாம் இன்று இலங்கையிலும் ஏனைய கீழைத்தேய நாடுகளிலும் இப்படி ஒரு வாதத்தை அடிக்கொரு முறை கேட்கிறோம். பெண் விடுதலை வாதம் இந்தியாவிலும் இலங்கையிலும் ஏனைய ஆசிய நாடுகளாகிய ஜப்பான் எகிப்து சீனா போன்றவற்றிலும் பல ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றிவிட்டது. பாரதியாரின் பெண் விடுதலைக் கருத்துக்கள் இந்தியாவிலும் இலங்கையிலும் ஏனைய தமிழ் கூறும் நல் உலகெங்கம் மேடைப் பேச்சுகளிலும் ஆராய்ச்சி நூல்களிலும் பெருமளவில் எடுத்தாளப்பட்டிருக்கின்றன. ஆகவே பெண் விடுதலை வாதம் என்பது மேல் நாடுகளுக்கே உரிய ஒரு கோரிக்கை அல்ல என்பது இதனால் பெறப்படும். எனினும் இப்படி ஒரு குரல் எழுப்பி அது அந்நிய கலாசாரப் பண்பு என்று அதைப் புறக்கணித்து ஒதுக்க சிலர் முற்படுதற்கும் சில காரணங்கள் இருக்கவேண்டும். அக்காரணங்கள் யாது என்று அறிவதற்கு முன் யார் இப்படிக் கூறுகிறார்கள் என்று அறிவதிலும் ஓர் உண்மை அடங்கியுள்ளது.
40

பொது உடைமைக் கொள்கை எம் கலாசாரத்திற்கு பொருந்தாது என்போரையும் நாம் கேள்விப்பட்டுள்ளோம். சாதிக் கட்டுப்பாட்டுகள் தகர்க்கப்படவேண்டும்; மனிதன் என்ற வகையில் பிறப்புரிமையால் சிலர் சலுகைகளைப் பெறவும் சிலர் ஒதுக்கப்பட்டு சுயமரியாதை இழந்து வீட்டுக்கு வெளியேயும் கோயிலுக்கு வெளியேயும் நிற்க வேண்டும் என்ற நிலைமை மாறவேண்டும் என்ற முன்னேற்றக் கொள்கை எம்மத்தியில் தோன்றியபோது இக்குரலை எழுப்பியோர் இந்து சமயத்திற்கு எதிராளிகள்; தமிழ்ப் பண்பாட்டுக்கு விரோதிகள்; எமது கலாசாரமும் நாகரீகமும் அழிகிறது என்று கூக்குரல் இட்டார்கள். சுருங்கக் கூறின் இவர்கள் யாவரும் தங்கள் ஏகபோக உரிமைகளும் சமுதாயத்தில் தங்களுக்கு உரிய சில சலுகைகளும் பறிபோய் உழைக்கும் ஒரு வர்க்கம் இதனால் மறைந்துபோகும் என்றே பயப்பட்டார்கள். அதே பயத்தை இந்து சமய தமிழ்க் கலாசாரத்தில் ஏற்றி அவற்றை தம் வக்காலத்துக்குக் கூப்பிட்டார்கள். இதே பாங்கில் தான் எம்மில் பலர் பெண் விடுதலை வாதத்தையும் எதிர்க்கிறார்களா? அன்றி அதற்கு வேறு பல காரணங்களும் உண்டா? இதற்கு விடையை இக் கட்டுரையால் விளக்க முற்படுகிறேன்.
இப் பணியில் நாம் ஈடுபடுவதற்கு முன் பெண் விடுதலை வாதத்தின் சாராம்சம் என்ன? அதில் மேலைத் தேயம் கீழைத் தேயம் என்ற வித்தியாசமும் உண்டா? என்பன போன்ற கேள்விகளுக்கும் விடை கூற முற்பட்டுள்ளோம். 20ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் (எழுபதுகளில்) ஐரோப்பாவில் தோன்றிய பெண் விடுதலை இயக்கம் பெண்ணடிமைக்கு காரணம் யாது என்று காண விழைந்து சமூக பொருளாதார ரீதியில் ஆராய்ச்சி செய்து அக் காரணங்கள் யாவும் சமுதாயப் பின்னணியில் தான் உள்ளன என்றும் குடும்பம், சட்டம், மதம் போன்றவற்றை அக்கு வேறு ஆணிவேறாகப் பிளந்து, பல காரணங்களை முன் வைத்தது. அக் காரணங்களைக் காட்டிப் பரம்பரையாகப் பேணப்பட்டு வந்த பாரம்பியங்களும் சமூகச் சட்டங்களும் வரை விலக்கணங்களும் மாறவேண்டும்; சமூகத்தில் ஒரு புரட்சிகர மாற்றம் நிகழவேண்டும் என்று வற்புறுத்தின இப்படியாக எழுந்த வாதப் பிரதிவாதங்கள் மூன்று பெரும் பிரிவுகளுக்குள் e|Ligib. 9606). Liberol feminism Socialist feminism and Rodical feminism Süd ep6örg). 6)JTg,álgsSGüd Glu5öT 6J6öt அடிமைப்படுத்தப்பட்டாள் என்ற காரணங்களை எடுத்து சரித்திர ரீதியாக விளக்கி அந்த அடிமை நிலையை மாற்ற யாது செய்ய வேண்டும் என்றும் பல கோட்பாடுகளை விதித்துள்ளன. இவை ஒன்றுக் கொன்று
4个

Page 27
முரண்பட்டதாக இருந்தாலும் அடிப்படையில் ஒன்றியே நிற்கின்றன. இக் கருத்து வாதங்கள் அந்தந்தக் காலப்போக்கின் பிரதிபலிப்பாகவும் இதை எடுத்தியம்பியவர்களின் அநுபவப் பிரதிபலிப்பாகவும் உள்ளன என்ற உண்மையை நாம் மறுக்கக்கூடாது. ஆண்களை எதிரியாக வெறுத்தொதுக்க வேண்டும் என்ற மனப்பான்மையும் இவர்களில் சிலருக்குத் தோன்றியது உண்மையே. இப்படிப்பட்ட கருத்து வாதம் தோன்றுவதற்கு அவர்கள் கண்ட கேட்ட அநுபவித்த உண்மைகளே காரணம். இதை நாம் மனத்திற்கொண்டு இப் பெண்மைவாதம் என்னதான் கூறுகிறது என்று ஆராய்வோம்.
லிபரல் பெண் விடுதலை வாதம்
பெண்களுக்கு அரசியல் பொருளாதாரத் துறைகளில் சம உரிமை அளிக்கப்பட வேண்டும் என்ற முதல் கோரிக்கை, பின் தேர்தல்களில் வாக்களிப்பதற்கு, கல்வி கற்பதற்கு, உத்தியோகம் பார்ப்பதற்கு என்று விஸ்தரிக்கப்பட்டது. இது 19ம் நூற்றாண்டு அமெரிக்காவில் எழும்பிய முதல் குரல். இது மேல் வர்க்கத்துப் பெண்களின் ஒரு குறைபாடாக முதலில் வெளிப்பட்டது. பெண்களுக்கு கர்பத்தடை செய்யும் உரிமையும் பின் சேர்க்கபப்ட்டது. இக் கோரிக்கைகளில் ஒரு சில உரிமைகள், தங்களுக்கு தவிர்க்கப்பட்ட உரிமைகளைக் கோருவ்திலேயே கவனத்தைச் செலுத்தின. சமுதாய மட்டத்தில் பொருளாதார சமூக மாற்றங்கள் அடிப்படையில் மாற வேண்டும் என்ற அவா அவர்களுக்கு இருக்கவில்லை. ஆனால் ப்ெண் விடுதலை வாதத்தின் முன்னோடிகள் இப்படிப்பட்ட ஒரு வாதத்திலேயே தோன்றினர் என்பது மறுக்க முடியாத உண்மை.
மாக்சிசம் பெண் விடுதலை வாதம் என்பதை ஏற்றுக் கொண்டாலும் இவற்றால் மாத்திரம் பெண் விடுதலையை அடைய முடியாது; இவை பெண் விடுதலையின் அம்சங்கள் தான்; ஆனால் இவற்றால் ஒரு பெண் பரிபூரண விடுதலை அடையமுடியாது என்று வாதிட்டது.
பெண்களது சமஉரிமையும் பெண்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட தொழில் முறைப் பாகுபாடும் முதலாளித்துவ சமுதாயத்தில் தோன்றி இன்றுவரை நீடிக்கிறது. என்று தனிக்குடும்பம் தோன்றியதோ
42

அன்று தான் பெண்ணும் ஆணுக்குரியவளாக அவனது சொத்துக்கு வாரிசு பெற்றுக் கொடுக்கும் ஒரு வஸ்துவாக ஆக்கப்பட்டாள்.
மனிதன் சிறு சிறு குழுக்களாக வாழ்ந்தபோது தனிச்சொத்தும் தனிக் குடும்பமும் தோன்றாத காலத்தில் ஆணும் பெண்ணும் சம அந்தஸ்துடன் சம உரிமைகளுடன் வாழ்ந்தார்கள். பின்னர் மனித இன வரலாற்றில் முதல் வேலைப் பிரிவினை ஏற்பட்டது. ஆண் வருவாய் தேடும் ஓர் உயரிய அந்தஸ்தைப் பெற்றான். பெண் பிள்ளை பெறுபவளாக வீட்டுவேலை செய்பவளாக பணவருவாய் அற்றவளாக ஆணின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவளாக பின் அடிமையாக ஆக்கப்பட்டாள். ஆகவே தனிச் சொத்து தனிக் குடும்பம் போன்ற முதலாளித்துவ அம்சங்கள் அகற்றப்பட்ட மானிடர் கூட்டுச் சேர்ந்த ஒன்றாக சகல செல்வங்களையும் வேலைகளையும் பகிர்ந்து வாழ வேண்டும்; அப்பொழுதுதான் பெண் அடிமை தீரும் என்பன இவர்களது வாதம். மாக்சீய வாதத்திலிருந்தே இவர்கள் தங்கள் கருத்துக்களை எடுத்துக் கொண்டுள்ளார்கள். தொழிலாளர் வர்க்கம் நீங்க பெண் அடிமையும் நீங்கும். கூட்டு வாழ்க்கையே அதன் தீர்வு என்பது இவர்களது உறுதியான வாதம்.

Page 28
தீவிரவாத பெண் விடுதலை
மாக்சிசப் பெண் விடுதலை வாதத்தை ஒரேயடியாகப் புறக்கணிக்கும் இவர்கள் பெண்களது அடிமை நிலை, முதலாளித்துவ உற்பத்தி முறையில் தங்கி இருக்கவில்லை; அது கருத் தரித்து மானிட வர்க்கத்தை தொடர்ந்து நிலைக்கச் செய்யும், பிள்ளைப் பேற்றுப்பொறுப்பு பெண்ணிடம் உள்ளதாலே அவள் அடிமைப்படுத்தபட்டு விட்டாள். பிள்ளை பெறுவதால் அவர்களை வளர்க்கும் ஏகபோக பொறுப்பும் அதனால் வீட்டில் தங்கி வெளியுலக நடவடிக்கைகளிலிருந்து தொடர்ச்சியாக விலக்கப்பட்டு வீட்டு வேலைக்கே அவள் உரியவள் என்ற கருத்தியலும் தோற்றுவிக்கப்பட்டது. இவர்கள் பெண், பிள்ளைப் பேற்றிலிருந்து விடுதலையடைய வேண்டும் என்றும் பிள்ளைப் பேற்றை யந்திரரீதியாக பெண்ணின் கருப்பையில் இல்லாது வெளியே நடத்தவேண்டும் என்ற அதி தீவிரவாதம் ஒன்றையும் எடுத்தியம்பி உள்ளனர். மக்சீய வாதம்- ஆண் தலைப்பாற்பட்டது என்றும் ஆணின் உடற் பலன், ஆதிக்க வெறி, பலாத்காரம், கற்பழிக்கும் ஆற்றல் போன்ற ஆண்வர்க்கத்திற்கே உரிய பண்புகள் பெண்ணை நித்திய அடிமை ஆக்கவல்லது; இக்குணங்களை ஆண்களிலிருந்து பிரிக்க முடியாது; ஆகையால் ஆண்கள் அனைவரும் பெண்களுக்கு எதிரிகள்; பெண்களை இம்சைப்படுத்தும் கொடுமைக்காரர் ஆகையால் அவர்கள் வெறுத்தொதுக்கப்பட வேண்டும் என்ற ஓர் அதி தீவிர வெறுப்பு மனப்பான்மையை இவர்களில் சிலர் வளர்த்துக் கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
44

சோவடிலிஸப் பெண் விடுதலை வாதம்
சோஷலிஸப் பெண் விடுதலை வாதம் இவ்விரு கோட்பாடுகளில் இருந்து வேறுபட்டாலும் இவர்கள் கருத்துக்களில் சில அதனை ஏற்று விஸ்தரித்து விளக்கி அதன் பரிமாணத்துக்கு மெருகேற்றியுள்ளது. மாக்சீயவாதிகள் பெண்களது பிரச்சினைகளை பின்னுக்குத் தள்ளி சோஷலிஸப் புரட்சி வெற்றிகரமாக நடத்தப்பட்ட பின்னரே பெண்களது நிலையை மாற்ற முற்பட வேண்டும் என்று கூறுவதை இவர்கள் ஏற்றுக்கொள்ள வில்லை. வர்க்கரீதிப் போராட்டமும் முக்கியம் பெண் விடுதலைப் போராட்டமும் அதேயளவு முக்கியம் என்று கூறும் இவர்கள் மாக்சீய வாதிகள் பெண் விடுதலையைத் தள்ளிப் போடுவது அவர்களது ஆண் ஆதிக்கத்தையே புலப்படுத்துகிறது என்று கூறுவர். பெண் கருத்தரிப்பதும் இனப் பெருக்கத்தில் ஈடுபடுவதும் மாத்திரம்தான் அவளது இரண்டாம் பட்ட நிலைக்குக் காரணம் என்பதை இவர்கள் ஏற்றுக்கொள்ள வில்லை. பெண் இனப் பெருக்கத்தில் ஈடுபடுவதைக் காரணமாக வைத்து எம்மைச் சுற்றி எழுப்பப்பட்ட போலிக் கருத்தியல்களை முதலில் களைந்தெறிய வேண்டும். இதைக் காரணமாக வைத்து குழந்தைப் பராமரிப்பு வீட்டுவேலை சமையல் போன்ற பல துறைகளின் பூரண பொறுப்பையும் பெண்ணின் தலையில் ஏற்றி அவள் வெளியே வேலை செய்யப் போனால் அதையும் செய்து விட்டு வந்து சமையல் வீட்டுப் பராமரிப்பு குழந்தை வளர்ப்பு ஆகிய வீட்டு வேலையையும் செய்ய நிர்பந்தப்படுத்தப்படுவது அநியாயம். இவற்றிற்கு முதலில் ஆண்களின் மனப்பான்மை மாற வேண்டும் என்பது இவர்கள் எடுத்துக்காட்டும் உதாரணம்.
சுருங்கக்கூறின் இவையே பெண்விடுதலை வாதத்தின் பல்வேறு கருத்தோட்டங்கள். பெண்விடுதலை வாதத்தை மறுதலிப்போர் எமது நாட்டில் மட்டு மன்றி மேலை நாட்டிலுமுள்ளார்கள். அப்படி மறுதலிப்போர் பலவகைப்பட்டவர்; பல்வேறு காரணங்களைக் கூறுவோர். அவற்றுள் முக்கியமான சில காரணங்கள் வருமாறு:
பெண் விடுதலை வாதம் கீழத் தேயத்திற்கும் அதன் கலாசாரத்துக்கும் பொருந்தாது; பெண்ணைத் தெய்வமாக மதிக்கும் நாம் பெண்ணை அடிமைப்படுத்துவதில்லை. பெண் வீட்டுக்கும் குடும்பத்துக்குமே

Page 29
உரியவர்; அது அபாது மேன்னக்குரிய பண்பு அவற்றே விடுத்து அவற்றிருந்து விலகி வெளியுலகில் தன்னை ஈடுபடுத்தினால் அவளது பெண்பைக்கு அது இழுக்கு ஒழுக்கத்துக்குச் சேதம்: ஆனைப் போல அரும் சேறு கனேட இடத்தில் சேற்றைப் பூசி தண்ணீர் கண்ட இடத்தில் சேற்றக் கழுவ இயலாது இது சிலரது வாதம், பெண் விடுதலை என்பது Fமூகச் சீரழிவக்கு வழிகோலும் கட்டுப்பாடற்ற ஆண் பெண் உறவ சுதந்திர காதல் போன்ற மேEI) நாட்டுப் பழக்கங்கள் சி) நம் நாட்டுப் பண்பாட்டச் சீரழிக்கும் இ:ரண்டு கருத்துக்களும் பெரும்பாலும் பு:யயே பேதும் நம்பப்பர்களால் கூறப்படும் வாதங்கள்
L LLL LLLL STkL SMT TL S mmLTT TTTTmTTm mL ST LLLTTTS பென்கருக்கு இப்பொழுது பல சலுகைகள் வழங்கப்பட்டு விட்டன: உயர்கல்வி உயர் டத்தியோகம்: Rாக்களிக்கும் ரிபுே: சட்டப்படி விவகாரத்தச் செய்யும் உரிமை ஆகியன பழங்கப்பட்டு விட்டன. பேiயின்'ஸ் ரிட்டில் இருக்கும் டயர் பர்க்கப் பெண்களின் விண் பு:ம்பல் இது இதற்கு நாம் முக்கியத்தும் கொடுக்கக்கூடாது என்பது இன்னொருவாதம்
சி தேசிய விடுத்தப் போராளிகள் தேசிய விடுதேைபு முதன்மயானது பெண் விடுத:ைபுப் பற்றி பேசுவது தேசிய விடுதலைப் போராட்டத்தைப் பிரித்துவது விழக்கச் செய்துவிடும்; ஆகவே தேசிய விடுதலை முதல் பெண்விடுத55 பின்பு என்று இவர்கள்
L-Ji,
தொழிலாளர் போராட்டமே முதன்மையானது ஆண் பெண் இருசாராரும் தொழிலாளர் போக்கத்திலிருக்கின்றனர்; இவர்கள் முதல் தங்கள் வர்க்கப் போராட்டத்தை நடத்தி வெற்றி பெறவேண்டும். அன்றி பெண் விடுதன்: என்ற கோம்ே எழுப்பினால் அது தொழில்ாாரைப் பிரித்துவிடும் போராட்டத்தை இப் பிரிவினையுடன் நடத்தமுடியாது; ஆகவே சோஷலிச சமதர்மம் முதலில்; பெண்களுக்கு சமதர்மம் பின்பு, இது சில மாக்சிச வாதிகளின் க்ருத்தோட்டம்.
ஆக பெண் விடுதலையை விளங்காமல் அதைத் தவறாகப் புரிந்து கொண்டோர் ஒரு பக்கம். அதன் தாற்பரியத்தைப் பூரணமாக அறியாமல் அரை குறையாக விளங்கிக் கொண்டோர் ஒருபுறம் அதைப்பற்றி அறியாமலே விமர்சிக்கத் தொடங்கியவர் பகிர். ஆக

பெண்களே இப்போராட்டத்தையும் இந்த இயக்கத்தையும் வெறுத்து ஒதுக்கவும் - அதில் ஈடுபடாமல் இருக்கவும் முயலலாம். இவ் வரைகுறை விளக்கங்களை அகற்றவும் அதன் பூரண அம்சங்களை விளங்கிக கொள்ளவுமே நாம் முயலவேண்டும்.
முதலாவதாக பெண் விடுதலை வாதம் ஒருமேல் நாட்டுச்
சரக்கல்ல என்பதைக் கூறிவிடுகிறேன். இந்தியாவில் தேசிய விடுதலைப்
போராட்டத்தின் பிற் பகுதியில் ஒரு விழிப்புணர்ச்சி பெண்கள் திசையிலும் திரும்பியது.
மேல் வர்க்கத்தினர் சிலர் மேலை நாட்டுக் கோட்பாடுகள் சிலவற்றைக் கற்றுத்தெரிந்து நாகரீகம் கலாசாரம் பண்பாடு என்ற போர்வையில் பெண்கள் இம்சிக்கப்படுவதையும் உணரத் தொடங்கினர். "சதி”, விதவைகளுக்குச் செய்யப்பட்ட இம்சைகள் பெண் சிசுக் கொண்ஸ்கள் போன்ற பல செயல்கள் மூலம் பெண்பால் புறக்கணிக்கப்பட்டதையும் வேண்டாத ஒரு பொருளாகக் கணிக்கப்பட்ட அநியாயத்தையும் பலருக்கு உணர்த்தியது. உணர்ந்து சட்டங்கள் செய்து அவை தடுக்கப்படவேண்டும் என்று தேசியத் தலைவர்கள் பலர் அந்த முயற்சியில் ஈடுபட்டனர். பாரதியின் ஆவேசக் குரல் பெண் விடுதலைப் பாடல்களில் ஒலித்ததும் வரலாற்றுச் செய்தி. அதே போல் சீன தேசத்தில் பெண் குழந்தைகளின் கால்களை இரும்புக்காலணிபோட்டு வளரவிடாமல் தடுப்பது போன்ற கொடுமைகளும் நிறுத்தப்படவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. எகிப்து நாட்டிலும் ஜப்பான் நாட்டிலும் பெண் விடுதலை தொடர்பான சஞ்சிகைகளும் பெண் விடுதலைக் குழுக்களும் 18ம் நூற்றாண்டுக் கடைசியில் தோன்றின. ஆக எங்கெங்கு பெண் இம்சை நடந்தோ அங்கங்கு அவற்றிற்கு எதிரொலியாக பெண் விடுதலைக் கோஷங்கள் கண்டனங்கள் பெண்களாலேயும் ஆண்களாலேயும் பத்திரிகைகள் சஞ்சிகைகள் குழுக்கள் என்பன மூலமாக எழுந்தன. இது வரலாறு நமக்குச் சொல்லும் செய்தி. இந்த எதிர்ப்பொலிகளில் கிழக்கு மேற்கு தெற்கு வடக்கு என்ற பேதம் இல்லை. இலங்கை கூட இதற்கு விதி விலக்கல்ல. யாழ்ப்பாணத்தில் "தமிழ்மகள்" என்ற பத்திரிகை மாசிலாமணி அம்மையாரால் வெளியிடப்பட்டது. பெண்ணுக் கெதிராக பெண்ணைக் கேவலப்படுத்தும் மனப்பான்மையை நாம் களைய வேண்டும் என்றும் இவர் வற்புறுத்திக் கேட்டது பலருக்குத் தெரியாத வரலாற்றுச் செய்தியாயிருக்கலாம்.

Page 30
ஆகவே நாம் இப்போது விடை காண வேண்டிய வினா ஏன் இந்தப் பெண் விடுதலைச் சித்தாந்தம் மேலைநாட்டுக்கே உரியது; ஏன் அது நம்மவர்களிற் பலரால் ஏற்றுக்கொள்ளப்பட வில்லை என்பதே. இதற்கு விடையை நாம் மேற் கூறப்பட்ட பல்வேறு தரப்பட்ட பெண் விடுதலை வாதங்களில் தான் தேடவேண்டும். பொதுவாக Libetol பெண் விடுதலை வாதங்களை ஏற்றுக்கொள்வோர் பலர் நம் நாட்டில் உள்ளனர் - பெண்ணுக்கு கல்வி வேண்டும்; பெண்ணுக்கு உத்தியோகம் பார்ப்பதற்கு சமசந்தர்ப்பம் கொடுக்கவேண்டும் என்பது ஐக்கிய நாடுகளினால் பிரகடனபப்டுத்தப்பட்டு பல நாட்டு அரசாங்கங்களினால் அங்கீகரிக்கப்பட்டு பெண் செய்தியகம், பெண்களுக்கு ஒரு அமைச்சு, என்ற அளவுக்கு ஒத்தழைப்பு வழங்கப்பட்டுவிட்டது. இத்தகைய பெண் விடுதலையை இலங்கையில் உள்ள மகளிர் சங்கங்கள் - மகிலா சமிதி, சேவா வனிதா போன்ற குழுக்கள் ஏற்றுக்கொண்டுள்ளன. பெருமளவில் பிரகடனப் படுத்தப்பட்டு ஒர் அரசியல் கொள்கையாக அநேக நாடுகளில் இப்பொழுது இத்தகைய பெண் விடுதலை வாதம் தொடர்ந்து செயல்படுகிறது.
தீவிரவாதப் பெண் விடுதலை சோஷலிசப் பெண் விடுதலை வாதங்களை நம்மவர் ஏற்றுக்கொள்ளாததுடன் அக்கருத்துக்கள் கீழ்த்தரமானவை; அநாகரீகமானவை; நமது கலாசாரத்திற்கு புறம்பானவை என்று வெறுத்தொதுக்குகிறார்கள். பெண்ணிலிருந்து தாய்மை வேறுபடுத்தப்பட வேண்டும். பெண்ணுக்கு உடலின்பம் அநுபவிக்க சுதந்திரமிருக்க வேண்டும். பெண்ணுக்கு ஆணைப்போல் உடை உடுத்து ஆணைப்போல் புகைப்பிடிக்கலாம்; மது அருந்தலாம் என்ற கருத்துக்கள் பெண் விடுதலை வாதத்துடன் இரண்டறக் கலந்திருப்பது இப்படி ஒர் எதிர் வாதத்தை தோற்றுவிக்கிறது. பெண் விடுதலையை எதிர்ப்போர் இதுதான் பெண் விடுதலை வாதம் என்று திரித்தும் கூறுவர். இங்கு நாம் ஓர் உண்மையை உணரவேண்டும். எமது உணர்ச்சிகளும் வாதங்களும் எங்கெங்கு எமது அனுபவத்திலிருந்து பிறக்கிறதோ அங்கங்கெல்லாம் ஓர் உத்வேகம் ஆவேசம் தீவிரத்தன்மை எல்லைமீறிய யதார்த்தத்தை தாண்டிய ஒர் உணர்ச்சிப் பிரவாகம் உருவாகிறது. இந்த உணர்ச்சி அதே அளவில் ஒரு புறத்தோற்றக் காட்சியையும் உருவாக்குகிறது. இதை நாம் எமது சரித்திரத்திலும் எமது இலக்கியத்திலும் கூடக் காணலாம். பாடசாலைக்குச் செல்லவேண்டிய தாய்மாரின் அணைப்பிலேயிருந்து விடுப்படாத 17, 18 வயது ஆண்பிள்ளைகள் தம்மினத்துக்குச் செய்த அநியாயங்களை இடுக்கண்களையும், இம்சைகளையும் பொறுத்தப் பொறுத்துப் பார்த்த அநுபவசாலிகளை, வயதில் முதிர்ந்தவர்களை
48

எதிர்த்து மீறி துப்பாக்கி தூக்கி இரத்தக்களிப் போரில் ஈடுபட்டது நாம் கண்ட இன்றைய சரித்திரம். இது எமது பண்பாட்டுக்கு எமது கலாசாரத்துக்கு எதிரானது தான். மனித தர்மத்துக்கு எதிரானது. என்றாலும் ஏன் இப்படி நடந்தது. யார் அப்படி அவர்களை நடக்க வைத்தது என்ற கேள்விக்குரிய விடையை நாம் தள்ளி வைத்தோமாகில் நமது கணக்குத் தவாறானது ஆகும். நமது ஆராய்ச்சியில் குறைபாடு உள்ளது. இதைப் போலவே தான் பெண் விடுதலை ஆவேசமும், தனது கணவனை அநியாயமாகப் பாண்டியன் அதுவும் அரசன் கொன்றுவிட்டான் என்றறிந்த கோபம் மதுரை மாநகரையே அழித்தது. ஓர் உயிருக்காக அத்தனை உயிரையும் அவள் அழித்தது தர்மமா என்ற கேள்விக்கு இடமிருந்தாலும் அவள் அப்படித்தான் தன் அடங்காக் கோபத்தை தணித்தாள். தன் முலையைப் பிடுங்கித் தான் தீயை மூட்டினாள். அது தமிழ்ப் பண்பாடல்லவே என்றும் நாம் கூறலாம். இதைப் போலவே பெண் விடுதலை வாதமும் ஒருங்கு சேர்ந்து இம்சைகளை, அடிகளை, உதைகளை, கற்பழிப்புக்களை, கொடுமைகளை அநுபவித்த ஆயிரக்கணக்கான பெண்களின் ஆவேசக் குரலாக அது பரிணமித்தது. இந்தப் பல்வேறுபட்ட கருத்தோட்டங்கள் அவர்களின் அநுபவப் பிரதிபலிப்பு - கோபாவேசக் குமுறல், இதில் சில மிதவாதமாகவும் மாறி உள்ளது. மிக மிகக் கீழ்ந்தரமாகக் கொடுமையாக ஒரே சமயத்தில் ஆறு ஆண்களினால் கற்பழிக்கப்பட்ட ஒரு பெண் கணவனால் "நீ தூய்மையை இழந்து விட்டாய், ஆகையால் நான் உன்னை ஏற்கமாட்டேன்” என்று கூறப்பட்டு இரண்டு பச்சிளங் குழந்தைகளுடன் வெளியே விரட்டப்பட்டால் அதேசமயம் இதை அறிந்த வெளியுலகம் "அவள் எப்படிக் கற்பழிக்கப்பட்டாள்" அவள் கவனமாக இருந்திருக்க வேண்டும். அவள் ஏன் அங்கு அந்நேரம் சென்றாள்” என்று அச்சம்பவத்தை விமர்சித்தால் அந்தப் பெண் ஆண் உலகத்தையே தனது தம்பி, தகப்பனையே கூட வெறுக்கலாம்; ஆண் இனம் கற்பழிக்கும் இனம்” என்று அவளது சிதைந்த மனத்தில் ஒர் மனப்பான்மை உதிக்கலாம்.
இதை எம்மவரில் யார் புரிந்து கொள்வார்கள்? இந்த அநுபவம் உள்ளவர்களும் அதன் பல்வேறு பரிமாணங்களை உணர்ந்து தெரிந்தவர்களும் இப்படிப்பட்ட மனப் பாங்குகளை விளங்கிக்கொள்வர். இந்த ரீதியிலே ஆண் இன வெறுப்பும் விரோத மனப்பான்மையும் தோன்றியது. அவ் வெறுப்பு இது ஆண்களுக்கு எதிரான ஒர் இயக்கம் என்ற ஒரு போலி எண்ணத்தையும் தோற்றுவித்து விட்டது. எங்கள் நாடுகளில் பெண்ணினத்தில் இப்படிப்பட்ட கொடூர அநுபவங்கள் ஒரு

Page 31
சிலருக்கு தோன்றியிருக்கலாம். குடும்பம் என்ற கட்டுப்பாடு கூட்டுக் குடும்ப அங்கத்தினராகிய அண்ணன் தம்பி அக்கா தங்கை சில குடும்பங்களில் பேரன் பேத்தி என்று பலபேரின் உதவி, ஆலோசனை, பண உதவி பெறும் வாய்ப்பும் பல பெண்களுக்கு இங்குண்டு. அமைதியான ஒரு மனோநிலையும் வெளியுலக கொடூர அநுபவங்களிலிருந்து காப்பாற்றப்படும் வசதியும் பெரும்பாலும் பெண்களுக்கு இங்கு உண்டு. தனிக் குடும்பம் அயல் அட்டையில் உள்ளவர்களுடன் தொடர்பற்ற, பேரன் பேத்தியின் அன்பும் உதவியும் இல்லாமல் பலவித துன்பங்களுடன் பிள்ளைப் பராமரிப்பு உத்தியோகம், சமையல், கூட்டித் துடைத்தல் இத்துடன் கூட ஒரு குடிகார கணவனின் நித்திய இம்சை ஆக இவ்வித எல்லாத் தொல்லைகளையும் தனியே தாங்க வேண்டிய ஒரு பெண் இதற்கு நிவர்த்தி என்ன? நான் எப்படி இந்த இன்னல்களில் இருந்து விடுதலை அடையலாம் என்று ஆழ்ந்து யோசிக்கும் பொழுது குடும்பம் என்ற கூட்டுக்குள்ளிருந்து நான் வெளியே போனால் என் இன்னல் தீருமா - கணவனை அன்றி வேறொரு ஆடவன் என்னை விரும்பினால் அவனுடன் ஆத்மார்த்த அன்பு செலுத்தி அவனது நட்பையாவது காதலையாவது ஏற்றுக்கொள்வதில் என்ன பிழை? யுக யுகமாய் ஆண்களுக்கு அளிக்கப்பட்ட சலுகைகளில் இதுவும் ஒன்றல்லவா - ஏன் அது ஆண்களின் ஏகபோக உரிமையாகவும் கொள்ளப்பட்டது. 'பரத்தையில் பரிவு "சின்ன வீடு 'வைப்பு என்று சரித்திர காலம் தொட்டு தற்போதைய நடைமுறை வரை ஒரு பாரம்பரியமே அதில் தோன்றிவிட்டது. கற்பு நிலை என்று வந்தால் அதை ஆணும் அநுசரிக்க வேண்டும் என்று பாரதி கூறியது ஒரு தீர்வு, கற்பு நிலையிலிருந்து ஒழுக்கம் பேணுவது ஒர் ஆணினால் கடைப்பிடிக்க முடியாதது என்று நாமும் அவர்களை போல வேறு காரணங்களுக்காக அம்முறையை நாடினால் ஆண்கள் அதை எப்படிக் குற்றம் என்று கூறலாம் என்பது ஒரு சில மேல் நாட்டுப் பெண்களின் புரட்சிவாதம்.
கணவனால் நிராகரிக்கப்படும் பெண்களுக்கு அன்பு, அநுதாபம், உதவி அளிப்பதற்கு குடும்ப அங்கத்தினரின் ஆதரவு இந்நாடுகளில் பெரும்பாலான பெண்களுக்குக் கிடைப்பதில்லை. அவள் ஒரு தனிப்பிரஜையாகத் தத்தளிப்பதே அவளது அநுபவம். இந் நிலையில் தோன்றிய ஒரு வாதமே இது. இந்த ஆண் பெண் உறவு, காதல், உடலின்பம் என்பன இயற்கையான உணர்ச்சிகள்; அவற்றைக் கட்டுப்படுத்தித் துன்புறுவது வேண்டாத ஒரு தியாகம் என்றுதான் அவளது மனப்போக்கில் அவளுக்குத் தோன்றும். பிள்ளைகளை
50

பராமரிக்கும் நிலையங்களுக்கு சிறிது நேரம் அனுப்பினால் எனக்கு உடல் ஒய்வும் மன அமைதியும் கிடைக்காதா என்று அவள் நினைக்க மாட்டாளா? ஆண் நாள் தோறும் பிழை செய்துகொண்டே இருந்தால் நாம் பெற்ற பிள்ளைகளை ஏன் நான் ஒருத்தி மாத்திரம் பராமரிக்க வேண்டும். நாம் வசிக்கும் வீட்டை ஏன் நான் மாத்திரத் கூட்டித் துடைக்க வேண்டும் நான் உழ்ைத்துச் சம்பாதிக்கும் பணத்தை ஏன் நானும் விரும்பியபடி செலவழிக்கக்கூடாது? என் சம்பளத்தையும் எடுத்து தனக்கு குடிவகையில் செலவழிக்க கணவனுக்கு என்ன உரிமையுண்டு? இவையாவும் எனக்கு ஏன் மறுக்கப்பட்டது? நான் பெண் என்பதனாலே தானே இப்படி ஒரு பெண் கேட்டு இல்லை; நான் இந்த அடிமை வாழ்வு வாழமாட்டேன் நானும் சுயமரியாதையுடன் சம உரிமைகளுடன் பூரண சுதந்திரத்துடன் எனது வாழ்க்கையை நிர்ணயிக்கும் உரிமைக்கு போர் தொடுக்க முன்வந்துவிட்டேன் ” என்று கூறுவதில் பிழை என்ன உண்டு?
சுருங்கக் கூறின் இதுதான் பெண் விடுதலை வாதம். இதில் யார் யாருக்கு எவ்வித அனுபவங்கள் தோன்றியதோ அந்த அந்த அளவிற்கு வெறுப் பேற்பட்டு தீவிரவாத மிதவாத இரண்டுக்கு மிடைப்பட்டதாக பலவித பெண் விடுதலைக் கருத்தோட்டங்கள் தோன்றின. சமய பொருளாளாதார பண்புகளை அடிப்படையாகக் கொண்டுதான் கருத்தியற் கூறுகள் தோன்றுகின்றன. இந்நிலையில் இவை நாட்டெல்லைகலைக் கடந்து சர்வ தேசியப் பாங்கினைப் பெறும்போது அவற்றின் அடிப்படைப் பண்புகள் பொதுவாகத தான் இருக்கும். அவற்றின் வெளிப்பாடுகளில் சில வித்தியாசங்கள் தோன்றலாம். இந்த ரீதியிலேயே நாம் பெண் விடுதலை வாதத்தையும் எடுத்துக்கொள்ளவேண்டும். இதைப்புரிந்து கொள்ளாததாலேயே நாம் இது நம் நாட்டுக்குப் புறம்பான தேவை அற்ற ஒரு கோஷம் என்று நினைக்கிறோம். அவற்றை அப்படியே நாம் ஏற்றுக்கொள்ளத் தேவையில்லை. என்தெந்த விடயங்கள் எமக்கு பிரச்சினையாக இருக்கின்றனவோ எங்கெங்கு எமக்கு திருத்தங்கள் மாற்றங்கள் தேவையோ அங்கங்கே நாம் திருத்தங்களையும் மாற்றங்களையும் முதலில் நாடவேண்டும்.
பெண் விடுதலை வாதம் பேசுவோர் எல்லாரும் புகை பிடிப்பார்கள்; ஆண் உடையில் தோன்றுவார்கள் இது நம் கலாசாரத்திற்குப் புறம்பானது என்பது இன்னொரு சிலரின் எதிர்வாதம். “மழித்தலும் நீட்டலும் வேண்டாம் உலகம் பழித்ததை ஒழித்துவிடின்”
51

Page 32
என்று பலம்பெரும் வாக்கு கூறினாலும் ஒர் இயக்கத்தின் புறச் சின்னமாக காலத்துக்கும் கருத்துக்கும் ஏற்றவாறு உடை நடை பாவனை தோன்றுவது தவிர்க்க முடியாததொன்று. சந்நியாசி காவி உடை தரிப்பதும் ஜைன மத திகம்பரர் நிர்வாணமாக இருப்பதும் காந்தியும் காந்திப் பக்தர்களும் கதர் உடுப்பதும் ஒர் எதிர்ப்புக் கருத்தையும் தீவிரவாதத்தையும் எடுத்துக்காட்டவே. ஆண்கள் போன்ற உடை நடை பாவனைகளைத் தாமும் ஏற்று தாமும் அவர்களைப் போல அவர்களது உரிமையுடன் சுதந்திரத்துடனும் வாழப் போகிறோம் என்பதின் ஒலிதான் இந்தப் புறத்தோற்றம். பழைய காலப்பாட்டி ஒருத்தி பின் விறாந்தையில் சுருட்டுப் புகைத்தால் அவளை பண்பாட்டின் விரோதி என்று யாரும் கூறமாட்டார்கள். ஆண்கள் வேட்டியும் சால்வையும் அணியாமல் சூட்டும் கோட்டும் அணிவது பண்பட்டிற்கு விரோதம் அல்ல. ஆனால் பெண் ஒருத்தி அந்நிய நாட்டு உடை அணிந்தால் அது மாத்திரம் சரியல்ல. இதனால் என் வாதம் பெண்கள் எல்லோரும் ஆண் உடையில் தோன்றி புகைப்பிடிக்க வேண்டும் என்பதல்ல. எது எது அவர்களுக்கு விருப்பமோ அதை அணியும் சுதந்திரம் ஆணுக்கோ பெண்ணுக்கோ இருக்கவேண்டும். அதைத் தேர்ந்தெடுக்கும் உரிமை ஆணுக்கு இருப்பதுபோல பெண்ணுக்கும் இருக்க வேண்டும். பெண் ஒருத்தி சைக்கில் ஒட்டும்போதோ உயர ஏறி வேலை பார்க்கும் சந்தர்ப்பங்களிலோ சேலை கட்டுவது ஆபத்தை விளைவிக்கும். ஆனால் அதைத் தேர்ந்தெடுக்கும் உரிமை ஆணுக்கு இருப்பது போல பெண்ணுக்கும் இருக்கவேண்டும். ஆனால் அதே சமயம் தேசியப் பண்பை நாம் வலியுறுத்த வேண்டின் எமது உடை எமது தனித்துவ சுதந்திரச் சின்னம் என்ற அடிப்படையில் எமது சுதேசிய உடையை விட்டுக் கொடுக்கக் கூடாது என்பது சிலரது அபிப்பிராயம். இதையும் நாம் உதறித் தள்ளக்கூடாது. இந்த ரீதியில் எம் நாட்டுப் பெண்கள் ஆண்களை விட எவ்வளவோ மேல். பெண்களில், பெரும்பாலோர் இங்கு தேசிய உடையையே அணிகிறார்கள்.
இலங்கையிலும் இந்தியாவிலும் விதவைகள் பொட்டணிதலும் நிறச்சேலைகள் அணிவதும் கூட ஒரு புரட்சி மனப்பான்மையே. பெண்ணுக்கென்றே (ஆண் விதவைகளுக்கு புறச்சின்னம் எதுவும் எங்கும் இல்லை.) ஒதுக்கப்பட்ட இந்தப் புறச்சின்னங்களை நாம் நிராகரிக்கிறோம் என்பதை துலாம்பரப்படுத்தும் ஒரு மனப்பான்மையே இது. பொட்டு சுமங்கலித் தன்மையின் சின்னம். அப்படி ஆண்களுக்கு சுமங்கலிதுவத்தை தோற்றுவிக்க ஒரு சின்னமும் இல்லை. அகவே நாம்
52

பொட்டு வைப்பதில்லை என்று ஒரு சில சுமங்கலிகள் பொட்டில்லாமலே திரிவர். இதுவும் அவர்களது நிராகரிப்பு மனப்பான்மையே.
அதே போல பொட்டு தமிழ்ச் சின்னம். பொட்டு வைத்த பெண்களைத் தேடி சிங்களக் காடையர் கற்பழித்தனர்; வெட்டினர்; எரித்தனர்; அந்த சிங்கள இனவாதத்திற்குப் பயந்து நாம் எமது தேசிய சின்னங்களைத் துறக்க மாட்டோம் என்று தமிழப் பெண்கள் இன்று கொழும்பில் பொட்டு வைத்துத் திரிவர். இந்தப் "பொட்டு” என்ற ஒரு சின்னமே. எத்தனையோ கருத்துருவ வெளிப்பாடுகளைக் கொண்டு வந்திருக்கின்றது. ஆகவே இந்தப் புறச்சின்னங்களுக்கு பின்னாலுள்ள கருத் துருவங்களையே நாம் தேடி அறியவேண்டும். இப்படிப்பட்ட கருத்து வெளிப்பாடுகளை நாம் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டியதில்லை. அவற்றைப் புரிந்து கொள்ள முயல வேண்டும். அதை விடுத்து பெண் விடுதலை மேலை நாட்டுக்கே உரியது; எமக்குத் தேவையில்லை; அது அநாகரீகப் பண்புகளை உடையது என்று வெறுத் தொதுக்கக் கூடாது. அந்நாட்டு மகளிர் அநுபவித்த, அநுபவிக்கும் இன்னல்ளை அறிந்து அவர்களுக்கு எமது அநுதாபத்தையும் ஆதரவையும் நல்க வேண்டும். ஆராய்ந்து அவை எவ்வளவில் சரி எது சரி என்று வாதிக்கும் பண்பை நாம் வளர்க்க வேண்டும்.
அடுத்ததாக எமது பெண்களுக்கு உயர்கல்வி கற்பதற்கும் உத்தியோகம் பார்ப்பதற்கும் விவாகரத்துச் செய்வதற்கும் ஏன் பிரதம மந்திரியாக வருவதற்கும் கூட உரிமை உண்டு; ஆகவே எம் பெண்களுக்கு சகல உரிமைகளும் சுதந்திரமும் உண்டு; பெண் விடுதலை என்பது தேவைப்படாத ஒரு கூச்சல் என்று கூறுவோரது குரலும் இடை இடை ஒலிக்கும்; இது இன்று எம் நாடுகளில் பெண்களையே தாக்கும் அவலங்களை அறியாத அறியாமையாக இருக்கலாம். அன்றி தெரிந்தும் பூசி மெழுகும் மனப்பான்மையாக இருக்கலாம்- சீதனம் பெண் மகள் ஒருத்தியை எவ்வளவு கீழே தள்ளுகிறது - பெண் பிள்ளைகள் உள்ள குடும்பத்தினரை எவ்வாறு சிக்கலுக்குள்ளாக்கிறது? ஆணும் பெண்ணும் தனிக்குடும்பம் தொடங்கும் போது அதற்கு முதலில் தேவைப்படும் பணவசதி - வீடு பண்டம் என்பவற்றிற்கு - பெற்றோர் பெண்ணுக்கு தங்கள் சொத்தில் ஒரு பங்கைக் கொடுப்பது என்பது தான் "ஸ்திரிதனத்தின்" தொடக்கமும் உள்ளடக்கமும். ஆனால் வரும் கணவனுக்கும் அவனது படிப்பிற்கும் அந்தஸ்திற்கும் மதிப்பீடு பணஅளவில் கொடுக்கப்பட்டு வியாபாரச் சந்தையில் பெண்களை காணி, பூமி, நகை
53

Page 33
நட்டு, வீடு, கார், வெளிநாட்டுச் செலவாணி, வெளிநாட்டுக்குச் செல்வதற்கு பயணச்சீட்டுப் பணம் என்று பேரம் 'பேசுவது இன்றைய சீதனத்தின் வளர்ச்சி. ஒரு பெண்ணுக்குரிய உணர்ச்சிகள், அபிலாஷைகள், ஆசைகள் யாவும் பின்தள்ளப்பட்டு அவள் ஓர் உடல் இச்சையைத் தணிக்கும் பிள்ளை பராமரிக்கும் வீட்டு வேலைசெய்யும், ஏன் உயர் படிப்பும் படித்த, உத்தியோகம் பார்த்து குடும்ப வருவாயையும் தரும் "ஒரு பண்டம்” ஆகவே கணிக்கப்படுகிறாள். இந்தச் சீதனப் பேயால் அக்கினி தேவனுக்கு காணிக்கை செய்யப்பட்ட ஏராளப் பெண்களை பெண் தெய்வ வழிபாடு நடக்கும் இந்தியாவின் சரித்திரத்தில் தற்போதையை காலகட்டத்தில் பார்க்கிறோம். கற்பு நிலையின் தீவிரக் கொள்கையின் அடிப்படையிலேயே ஒரு பெண்ணின் உயிரும் உடலும் அவனுக்கு சொந்தம்; அவன் இறந்தபின் அவளுக்கு வாழ்வில்லை என்ற அடிப்படையில் - அவள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னே அவலக்குரல் எழுப்பி அழுது கத்தியபோதும் இழுத்துக்கொண்டு எரியும் கணவனின் சிதையில் உயிருடன் அவளைப் பலி கொடுத்தது இந்தியாவின் அன்றைய சரித்திரத்தின் ஓர் அத்தியாயம்.
ஒர் ஆணைப் பழி வாங்க அவனது மனைவியையும் மகளையும் கற்பழிப்பது எங்கும் எப்போதும் நடப்பது. பெண்ணையும் பொன்னையும் கொள்ளை கொள்வது ஆண் வர்க்கத்தின் சாம்ராஜ்ப் பண்பாக அன்று இருந்தது. தொழிலாள வர்க்கப் பண்ணையாருக் கெதிராக எதிர்ப்புத் தெரிவித்தால் அந்தப் பண்ணையாளர் ஆட்களை ஏவி அவர்களது மனைவிமாரையும் பெண்களையும் கற்பழிப்பதும் அவர்கள் குடிசைகளுக்குத் தீ வைப்பதும் இன்றைய நடைமுறை. பூரீ லங்கா அரசின் படைகள் தீவிரவாதிகளைப் பிடிக்க முடியாத பொழுது தமிழ்ப் பெண்களை கற்பழித்தது மிகவும் கேவலமான முறையில் இளம் பெண்களை இம்சித்ததற்கு சான்றுகள் பல உள்ளன. இவற்றிற்கு எல்லாம் அடிப்படைக் காரணம் பெண் ஒர் உடமைப் பொருள்; தகப்பனின், அண்ணனின் கணவனின் உடமையாக அவள் கருதப்படுவது; அவளது பெண்மை பால் ரீதியிலேயே கணிக்கப்படுவது; அவள் உரிமை அற்ற இரண்டாம் பட்ச மனித ஜீவி என்பன போன்ற காலம் காலமாகப் பேணப்பட்ட கருத்தியல் கொத்துக்களே. இவை மாறவேண்டும்; மாற்றப்பட வேண்டும். இவை தேசங்களையும் நாடுகளையும் மொழிகளையும் பண்பாடுகளையும் கடந்த ஒரு சர்வதேசிய கருத்தியல். பெண் என்ற பெயரில் அங்கும் இங்கும் எங்கும் நடக்கலாம். ஆனால் அதன் பரிமாணங்கள் நாட்டுக்கு நாடு கலாசாரத்திற்கு கலாசாரம் மாறி கூடியும் குறைந்தும் இருக்கலாம்.
54

ஆனால் அடிப்படையில் வித்தியாசங்களோ வேறுபாடோ இல்லை. அந்த அடிப்படையை மாற்ற நாம் முயலவேண்டும். இது பெண் விடுதலையின் முக்கிய வேண்டுகோள். அந்த மாறிய மனப்பான்மை தோன்றுவதற்கு மானிடர் யாவரையும் ஆணையும் பெண்ணையும் அரசாங்கங்களையும் ஒருங்கே கூவி அழைக்கிறது பெண் விடுதலை சாரம்.
சிறுகதை நாவல் திரைப்படம் போன்ற அத்தனை கலை வடிவங்களும் பெண்ணின் பேதமை அடிமை நிலை போன்ற கருப்பொருளையே திரும்பவும் திரும்பவும் எடுத்தாளுவது மாற்றப்படவேண்டும். இவை மாறிவரும் பெண்ணின் மாற்ற நிலைகளைப் படம்பிடித்துக்காட்டுவதில்லை. மேலும் இவைபெண்ணுக்கு நீ இப்படித்தான் இருக்கவேண்டும். என்று ஒரு போலியான வாழ்க்கை நெறி முறையைப் போதிக்க அதன் விளைவுகள் பெண்ணை ஒரு முரண்பட்ட மனச்சிக்கலுக்கு உள்ளாக்குகின்றன. சுதந்திர வலயத்தில் வேலை பார்க்கும் பெண்கள் சர்வதேச ரீதியில் குறைந்த ஊதியம் கூடியவேலை நேரம் பெண்களுக்கென்று ஒதுக்கப்பட்ட அலுப்பான அசதியான வேலைமுறைகள் என்று பல்வேறு கொடுமைகளுக்குட்படுத்தப்படுவதும் ஒரு குடும்பத்தின் தலைவன் என்ற முறையில் மனைவியை அடக்கி ஒடுக்கி அடித்து இம்சை செய்யும் கணவன் ஆகிய யாவும் ஒரு பிரச்சினையின் மையத்தில் எழுந்த பல்வேறு கோளாறுகள்தாம். ஆக பெண் விடுதலையின் தாற்பரியம் பல்வேறு முனைகளையும் தாக்கி மாற்றவேண்டும். ஒரு பூரண சமுதாய மாற்றத்தை வேண்டி நிற்கும் ஒரு போராட்டமே பெண் விடுதலை என்பதனை நாம் உணரவேண்டும்.
55

Page 34
பெண்களின் தொழிற் சங்க ஈடுபாடிற்குத் தடையாக நிற்கும்
கலாசாரப் பண்புகள்.
தாய்மையின் பொறுப்புகள். வேலை நேரத்தில் பின் தான் கூட்டங்கள் நிகழும். நாள் முழுதும் வேலை செய்த அவள் குழந்தைகளிடமிருந்து பிரிந்திருக்கிறாள். உணவு தயாரிக்க வேண்டும்; வீட்டு வேலை காத்திருக்கும்.
குடும்பம் வீடு - என்ற வட்டமும் அதற்குள் சென்று கணவன் முதியோர் என்போரைக் கவனிக்க வேண்டிய நிர்ப்பந்தமும்.
வீட்டுக்குரியவள் வெளியே ஊதியத்துக்கு மாத்திரமே செல்லலாம். அதற்கு மிஞ்சி அவள் இம்மியளவும் படி தாண்டக் கூடாது என்ற ஒரு கருதியல்.
தொழிற் சங்கம் ஆண் வர்க்கத்துக்கே உரியது. அங்கு ஆண்களே அரசோச்சலாம். காலங் காலமாக தொழிற் சங்க ஈடுபாட்டிலிருந்து பெண் விலக்கப்பட்டிருக்கிறாள். அதனால் அதில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள அவளே தடைபோடும் ஒரு நிலையும், அதில் அவள் ஈடுபடத் தேவையில்லை என்ற ஆண் மக்களின் எண்ணமும் ஒன்று சேர்த்து கலாசார ரீதியில் அவளைத் தடுத்து விடும்.
தொழிற் சங்கங்களில் ஈடுபடுவோர், வாதப் பிரதிவாதங்களில் ஈடுபடுவோர் முதலாளிக்கும் சில சமயங்களில் அரசுக்கும் எதிராக அணிதிரள வேண்டும். எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும். வேலைநிறுத்தம் செய்ய வேண்டும்; கொடி பிடித்து ஊர்வலம் வரவேண்டும். இதனால் பெண்களுக்கென காலங் காலமாக வகுக்கப்பட்ட அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு என்ற நாற்குணங்களுக்கு சேதம் ஏற்பட்டு விடும்.
56

6. தொழிற் சங்கங்களில் ஆணுக்குச் சமமாகப் பெண்களும் எல்லா வித நடவடிக்கைகளிலும் பங்கு பெறுவதால் ஆண்களோடு நெருங்கிப் பழக வேண்டும். இதனால் அவளது கற்பிற்குப் பங்கம் ஏற்படலாம். இதில் இரண்டு அம்சம்: ஒன்று பெண் தன்னையே இழக்கும் சந்தர்ப்பங்களை உண்டாக்கிக் கொள்கிறாள்.
அதாவது பலாத்கார அல்லது ஆண்களின் சேட்டைகளுக்கு அவள் உட்படுத்தப்படுவாள். அந்நிலையில் சமுதாயம் அவளையே குறை கூறும். அவள் ஏன் அங்கு அந்த நேரத்தில் சென்றாள்? னே என்று வீட்டில் அடைந்து கிடக்காமல் அவளுக்கு ஏன் இந்த வீண்ான தொழிற் சங்க அல்லல்கள் என்றே பல குரல்கள் அவளைச் சர்டும்) அவளுக்கு உரிமை உண்டு. அவள் எங்கும் எவ்விடமும் எந்நேரமும் செல்லலாம்; அதனால் பாதகம் இல்லை. அவளை நெருங்கிய ஆணையே குற்றம் சொல்ல வேண்டும்; தண்டிக்க வேண்டும் என்னும் அளவுக்கு எமது சமுதாயம் முன்னேறவில்லை. இரண்டாவதாக இப்படி நடக்க வில்லை என்றாலும் ஆணுடன் அவள் கதைக்க வேண்டும். விவாதிக்க வேண்டும். இதனால் அவளுக்கு அவதூறு உண்டாகும். சமுதாயம் ஏன் சொந்தக்காரரும் அண்ணன் தம்பிதகப்பன்மார் அவளைச் சந்தேகக் கண் கொண்டே பார்ப்பார்கள். உழைப்புக்கும் ஊதியத்துக்கும் வெளியே விடும் கணவரும், அண்ணாவும் கூட்டங்களுக்கு மாத்திரம் தடை போடுவார்கள். அவளது ஊதியமும் அவளது உழைப்பும் அத்தியாவசிய தேவையாகக் கணிக்கப்படுகிறது. உறவு முறைகளும் யார் யார் என்று அறிய முடியாத முகமூடிச் சமுதாயமும் மட்டுமே கலாசார ரீதியில் முட்டுக் கட்டை போடும். முண்டக் கற்கள் என்று நாம் கூறமுடியாது. தொழிற் சங்கத்திற் தோழனாகவும், சகோதரனாகவும் பழக வேண்டிய சக ஊழியர்களும் கூட பெண்களுக்கு இன்னல் கொடுக்கலாம். தொழிற் சங்கற்களுக்கு அந்த நேரத்தில் வரும் பெண்கள் பொதுவாக கட்டுப்பாடற்ற நபர்களாக வீட்டுக் குகந்தவராக இருக்க மாட்டார்கள்; அவர்கள் அப்படி வருவதே அவர்களது குணத்துக்கு ஓர் எடுத்துக் காட்டு. இது ஒரு கருத்தியல், வாழையடி வாழையாக வந்த ஒரு கருத்தியல், அதனால் நாம் அவர்களை அணுகிச் சேட்டைகள் செய்யலாம். எமது இச்சைகளுக்கு அவர்கள் அடிபணிவார்கள் என்று ஒரு எண்ணத்தினால் பல ஆண்கள் பெண்களைத் துன்புறுத்கி அலைக்கழிப்பர்.
57

Page 35
ஆண் பெண் என்னும் பால் அடிப்படையில் எழுந்த தொழிற் பாகுபாடு
பால் அடிப்படையிலமைந்த தொழிற் பாகுபாட்டினை விளக்கும் ஆங்கிலச் சொற்றொடர் "Sezual dividoon of Labour ஆகும். ஆனாலும் பால் அடிப்படை வேறு.
ஆண் பெண் என இன அடிப்படையிலேயே நாம் எமது கருத்துக்களை நெறிப்டுத்த வேண்டுமேயன்றிப் பால் அடிப்படையில் அல்ல என பெண் விடுதலை வாதிகள் விரும்புவர். அந்த வேறுபாட்டை Sex - gender என்ற பதங்களைப் பிரயோகித்து Sex/ என்பது பால் அடிப்படையில் உள்ளது என்றும் gender என்பது ஒரு கருத்துக் கொள்கையைப் பிரதிபலிக்கும் என்றும் எடுத்துக் காட்டுவார். இந்த Sex gendeer என்னும் பாகுபாட்டை நாம் பூரணமாக விளங்கிக் கொள்ள வேண்டும். தமிழில் இந்த வேறுபாட்டிற்கு சொற் பிரயோகங்கள் உண்டா என்பது எனக்குத் தெரியவில்லை ஆண்பால் - பெண்பால் என்ற பிரிவு பால் அடிப்பையிலேயே அமைந்துள்ளதாகவே தெரிகின்றது. ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள வேறுபாடு இயற்கையான பால் உறுப்புக்களில் தான் உள்ளது.
உணர்ச்சி பூர்வமாகவோ புத்தி நிலையிலோ வேறுபாடுகள் இல்லை. கருத்தரிப்பதும் பிரசவிப்பதும் சிசுவுக்கு அத்தியவசியமாகிய முதல் உணவை தன் முலைப்பாலால் ஊட்டுவதும் பெண்ணின் சிறப்புப் பணிகள். இதனை ஆண் சாதிக்க முடியாது. இந்தச் சிறப்புத் தன்மை அளிக்கும் பிரத்தியேகமான பணியை அடிப்படையாக்கி அந்த வேலையை நீ சிறப்புறச் செய்ய வேண்டும் என்று அவளை நிர்ப்பந்திக்க ஆண்மகன் தயங்கவில்லை. பால் அடிப்படையில் அமைந்த இந்த வேறுபாடே வேலைப்பாகுபாட்டுக்கு அநுகூலமாக வாய்த்தது. இதன் அடிப்படையில் ஒரு கருத்தியலே தோன்றிவிட்டது.
பெண்மையும் ஆண்மையும் பால் வாரியான குணங்கள் அல்ல. மிருகங்களுக்கும் பறவைகளுக்கும் வேலைப் பிரிவினை இல்லை.

நாளடைவில் தாய்மையின் பெறுபேறாக அவை பெற்ற குஞ்சுகளும் குட்டிகளும் வளர்ந்து தனி இடம் செல்லும்வரை கடுவனும் பெட்டையும் தொழிற் பாகுபாட்டால் தங்களைக் கூறுபடுத்த வில்லை. இந்த வேலைப் பாகுபாட்டை ஆராயப் புகுந்த சில மானிடவியலாளர் பெண் குலமே விவசாயத் தொழில் முன்னோடிகள் என்ற முடிவுக்கு வந்துள்ளார்கள். தாய்மையின் பெறுபேறாக அவர்கள் பெற்ற செல்வங்களுக்கு முலைப்பால் ஊட்டிய காலம் முடிவடைய காய் கனிகளையாவது கிழங்குகளையாவது தேடிக் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் அவர்களுக்கு உண்டாகி இருக்கும். அவற்றைக் கிண்டி அல்லது பறித்தெடுப்பதற்கு நீண்ட ஒரு தடியையும் அவர்கள் உபயோகித்தனர். ஆணினம் வேட்டைக்குச் செல்ல பெண்ணினம் வீட்டில் தங்கி இவற்றைச் செய்தமையால் காலக் கிரமத்தில் ஒரு வேலைப் பிரிவினை உண்டாகி இருக்கலாம். வேட்டைக்குச் சென்ற ஆணினம் வேட்டையாடித் தங்கள் பசியைத் தீர்க்க பெண்ணினம் தங்களது கைக் குழந்தைகளுக்கும் வளர்ந்த குழந்தைகளுக்கும் உணவு தேடிக் கொடுத்து வந்தது. ஆனால் இதில் ஒரு வேடிக்கை என்ன வென்றால் உணவு தேடித் தங்களையும் தங்கள் வம்சாவளிகளையும் காப்பாற்றி வந்த பெண்களது வேலை காலப் போக்கில் மதிப்பிழக்கத் தொடங்கியமை தான். சமுகவியலாளர் வேட்டையாடும் ஆண்மகனுக்கு ஒர் அந்தஸ்தை நல்கி விட்டார்கள் வேட்டையாடி அவன் கொண்டு வந்த இறைச்சியால் தான் மானிடமே தளைத்தது; வளர்ந்தது என்று ஒரு தப்புக் கணக்கும் போட்டுவிட்டார்கள். இறைச்சியால் மட்டும் (புரதச் சத்தினால் மட்டுமே) உயிர் வாழ நேர்ந்தது; காயும் கனியும் கிழங்கும் நல்கிய தாய்க்குலம் மானிடவளர்ச்சியில் ஒரு பங்கும் வகிக்க வில்லை என்ற அபிப்பிராயமும் தோன்றுவதற்கு சமுகவியலாளர் தங்களது ஆராச்சியை அகல விடாமையே காரணம். ஆயுதம் கையாளும் ஆற்றல் அஞ்சா நெஞ்சம் வீட்டை விட்டு தொலை தூரம் செல்லல் ஆகியன வேட்டித் தொழிலுக்கு ஒர் அந்தஸ்தை வழங்கியமையாலேயே பெண்களது வேலைக்கு இழி நிலை ஏற்பட்டது. இதனால் ஆண் தலைவனாக தலைமைப் பிடத்தில் இருக்கத் தகுந்தவனாக ஆயுதம் ஏந்துவோனாக மானிட வாளர்ச்சியினதும் தொடர்ச்சியனதும் அத்தியாவசிய பங்கினை ஏற்பவனாக முதன்மை இடமளிக்கப்பட்டான். (டைகரும் பொக்ஸும் - 1976)வேட்டை ஆடும் ஆண்களே முதல் மானிட ஜீவன் என்று கருத்துத் தெரிவித்து விட்டார்கள். அவனே உணவு தருபவனாக ஆண்மை நிறைந்தவனாக தலைமை யுடையோனாக சமுதாயக் கோட்பாடுகளை இயற்றியவனாக கணிக்கப்பட்டு விட்டான். டைகர் (1970) என்ற மானிடவியல் ஆசிரியர் ஆண் மகனே பந்தங்கள் என்ற ஒர் உடன்பாட்டை
59

Page 36
எற்படுத்தி மக்களை ஒன்று சேர்த்தான் என்ற ஒரு கருத்தையும் வெளியிட்டு உள்ளார்.
இதனால் ஆண் பெண் என்ற அடிப்படையில் வேலைப் பிரிவினை தோன்றியது மட்டமல்லாமல் செய்யும் தொழிலில் சில மேல் சில கீழ் என்ற ஒரு மனப்பான்மையும் தோன்றி அதன் பெறுபேறாக ஒரு கருத்தியலும் தோன்றிவிட்டது. பெண் இனத்தின் முக்கிய தொழிலும் அதனால் மானிடம் அடைந்த பெரும் பயன்களும் வரலாற்றிலிருந்து விடுபட்டு விட பெண்நிலைவாதிகள் இப்போது தமது உரிமைகளை நிலைநாட்ட முயலுகிறார்கள். (பிஷர் 1979 ரெய்ற்றர் 1977 லிகொக் 1977). இவர்களது வாதத்துக்கு மேலும் சில சான்றுகளை நாம் எமது சங்க இலக்கியத்திலிருந்து மேற்கோளாக எடுத்துக் கூறலாம். ஆண்மகன் வேட்டைக்குச் செல்ல பெண் அவன் கொண்டுவரும் இறைச்சியை எதிர்பார்த்து வாளாவிருக்கவில்லை. சென்ற ஆண் எப்போது வருவான் எப்படி வருவான் என்ற ஐயம் அவளுக்கு எப்போதுமே இருந்திருக்கும். காய்கறி கிழங்குகளை ஒரு நீண்ட கைப்பிடி கொண்ட ஆயுதத்தால் கிண்டி எடுத்தார்கள் என்பதற்கு பெரும்பாணாற்றுப்படை (91 / 94) யில் ஆதாரமிருப்பதாக சிங்காரவேலு என்ற ஆராய்ச்சியாளர் கூறியுள்ளார். பெண்கள் கூட்டமாக இரவும் பகலும் திணைப்புலம் காத்ததாகவும் (மலை 328 / 329) எமக்குச் செய்தி உண்டு ஏயிறியர் என்ற சிறுபுல விவசாயச் பெண்கள் விவசாயத்தில் ஈடுபட்டிருந்தார்கள் என்றும்(1968; 27) சிங்காரவேலு சுட்டிக்காட்டி உள்ளார். ஆய்ச்சியர் பாலைக் கொடுத்து பண்டமாற்றுச் செய்தார்கள். ஆக ஆண்மகன் வேட்டைக்குச் செல்ல பெண்கள் கூட்டம் கூட்டமாக, உயிர் வாழ்வதற்கு அத்தியாவசியமான உணவுப் பண்டங்களைப் பெறுவதற்கு பல வழிகளில் முயன்றிருக்கின்றனர் இது பெண்களின் கூட்டு முயற்சியையும் புலப்படுத்தகிறது அல்லவா?
மெல்லியள் கொடி இவள் என்று ஆண்மகன் காதல் வயப்பட்டு உன்னியதெல்லாம் அவளைக் கடின வேலையிலிருந்து சில சில சமயங்களில் வேறுபடுத்தி விட்டது. கடின வேலை கருத்திற் கொள்ளப்பட்ட பொழுது அவள் அதிலிருந்து விலக்கப்பட்டாள். வீட்டுக்குரியன எல்லாம் வீட்டுவேலை எனவும் வீட்டுக்கு வெளியே நடப்பன யாவும் உத்தியோகம் என்றும் ஒரு கருத்துநிலை தோன்றிவிட்டது. வீட்டுக்கு வெளியே நடப்பன ஊதியம் பெறுபவையாய் ஒர் உயர்ந்த அந்தஸ்தைப் பெற வீட்டுவேலை கடமையாக பெண்களுக்கும் அதன் பெறுபேறுகளை பெறும் உரிமை ஆணுக்குமாக

வகுக்கப்பட்டுவிட்டது. பிரசவிப்பதும் பாலூட்டுவதும் பெண்ணினால் நிறைவேற்றப்படும் பொழுது அதன் தொடர்பான சகல வேலைகளும் பழுவும் அவள் மேல் ஏற்றப்பட்டு அதற்கே அவள் உரியவள் என்ற கருத்துநிலை வேரூன்றியது. அவள் வீட்டுக்கு வெளியேயும் சென்று ஊதியதுக்காக உழைக்கத் தொடங்க வீட்டு வேலையும் வெளிவேலையும் என இரட்டைப் பழு அவளுக்குரியதாக வகைப்படுத்தப்பட்டு விட்டது. அவளது வீட்டு வேலை கடமையாகவும் வெளிவேலை கட்டாயப் பணியாகவும் வந்த வேளை மொத்த வருவாயில் அந்தக் கட்டாய வெளி வேலைக்குரிய ஊதியம் அவளது வீட்டு வேலைக் கருத்துநிலையின் பாற்பட்டுகுறைக்கப்பட்டு விட்டது. செய்யும் தொழிலுக்கு ஆணுக்கு ஒர் ஊதிய வீதம் பெண்ணுக்கு ஒர் ஊதிய வீதம் என வகுக்கப்படும் பொழுது அது முதலாளித்துவத்தின் சுரண்டலுக்கு அநுகூலமாக அமைகின்றது. பெண்களின் ஊதியம் குடும்பத்தின் செலவுக்கு ஒரு அத்தியவசிய ஊதியமில்லை; ஆண்மகனே குடும்பவருவாயைக் தருபவன்; அவளது ஊதியம் வருவாயை இட்டு நிரம்பும் (Supplientory income) ஒருபங்கு. ஆகவே அவளுக்கு ஆணுக்குரிய ஊதியம் வழங்கப்படத் தேவையில்லை. இது தொழிற் பாகுபாட்டில் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளின் ஒரு பகுதி.
மெல்லிழையாள் கொடியாள் போன்ற கவிகளின் கற்பனாவாதம் பெண்ணை வீட்டு மெத்தையிலும் சுகபோகங்களிலும் திளைக்க விடவில்லை. கடினவேலை செய்து அலுப்புத் தோன்றும் முடிவற்ற பணிகளில் அவளைத் தொடர்ந்து அழுத்திக் கொண்டேயிருந்தது. ஆனால் ஏற்படுத்தப்பட்ட அந்த கருத்து நிலை தற்போதைய சுதந்திர வர்த்தக வலயங்களிலும் வேலைக்கமர்த்தப்பட்ட பெண்கள் பொறுப்பான வேலை பார்க்க தகுதியற்றவர்; புத்தி இல்லாதவர் என்ற கணிப்பில் மென் விரலாள் (nimble) என்ற போர்வையில் அலுப்பும் சலிப்பும் தட்டும் மிச்ச சொச்ச வேலைகளில் அமர்த்தப்படுகின்றாள். தையல் இயந்திரத்துக்கு முன்னால் எட்டு மணிநேரம் இருக்கப் பயன்படுத்தப்படும் அவளுக்கு தையல் பெண்ணின் வேலை என்ற கருத்தியலின்படி குறைவான ஊதியம் வழங்கப்படுகின்றது. வெட்டுவோன் பெரும் பாலும் ஆணாக இருப்பான். சரிவர நவீன பாணியில் வெட்டுபவன் புத்தி சாதுரியத்தடன் செயற்படுகிறான்; ஆகவே அவனுக்குக் கூடிய ஊதியம். இந்தத் தொழிற் பாகுபாட்டை ஏன் மாற்றியமைக்கக் கூடாது? வெட்டுபவர் பெண்ணாகவும் தைப்பவர் ஆணாகவும் அமைந்து விட்டால் ஊதியத்தைக் குறைக்க முடியாதே. ஆணுக்கு ஊதியத்தைக் குறைத்துக் கொடுத்தால் அவனது
61

Page 37
குடும்ப ஊதியம் குறைக்கப்பட்டுவிடுமே. அவன் குடும்பத் தலைவன்; உழைக்கத் கடமைப்பட்டவன்; குடும்பத்தை காக்கத் தக்கவன். ஆக ஒரு பொருந்தாத வாதம் இவ் வேலைப் பாகுபாட்டைத் தொடர்ந்து நிலைக்கச் செய்கின்றது. பெண்களது மதிப்பிழந்த வீட்டுவேலை நியதி அவளது வெளிவேலையையும் மதிப்பிழக்கச் செய்து விட்டது.
வர்க்க வேறுபாடுகளும் தொழிற் பாகுபாடும்.
ஆனாலும் இத் தொழிற் பாகுபாடு எல்லா மட்டங்களிலும் ஒரே பாங்காக அமைவதில்லை.
விவசாய தொழிலாள வர்க்கத்தினரிடையே வயல் வெளிகளிலும் தோட்டங்களிலும் பெண்கள் செய்யும் பணியில் கடின வேலைகளும் உள்ளன. கட்டிச் சொருகிய வேலையுடன் துலா மிதிக்கும் பெண்களும் கட்டிட வேலைகளில் இழுத்துக் கட்டிய வேலையுடன் உயர்ந்த கட்டிடங்களுக்கு செங்கல்லும் மண்ணும் எடுத்துச் செல்லும் பெண்களும் நம்மிடையே உள்ளனர். இங்கு ஒரு வர்க்க வேறுபாடு தெரியும். மத்திய தர வர்க்கமும் முதலாளித்துவப் பெண்களும் சில சமயங்களில் வீட்டுக்குரியோராக, பணிப் பெண்களின் உழைப்பில் தங்கியிருப்போராக இருப்பர். இவர்களில் பலர் இப்பொழுது உத்தியோகத்தர்களாகவும் மேலதிகாரிகளாகவும் இருப்பர். ஆனால் குடும்பப் பொறுப்பு என்ற பாரம் இவர்களிலேயே தங்கி நிற்கும். ஆணாதிக்க சமதாயத்தில் ஆண் வீட்டுப் பொறுப்புக்களில் பங்கு கொள்வது கெளரவப் பிரச்சினைக் குரியதாகி விடும். அவன் பெட்டைக் கோழி என எள்ளி நகையாடப்படுவான்.
இதே நேரத்தில் ஏழைத் தொழிலாளியின் வீட்டிலோ வேலைக்குச் சென்ற மனைவி வீடு திரும்பாவிட்டால் கணவன் உலை ஏற்றி அரிசி போடுவது சஜமான காட்சி. இங்கே பெட்டைக் கோழித் தத்துவம் தலை தூக்குவதில்லை. தெருவோரம் குழாய்களில் எத்தனையோ தகப்பன்மார் தங்களது புத்திர செல்வங்களைக் குளிப்பாட்டுவதையும் நாம் ஆங்காங்கே காண்கிறோம். ஆகவே இத் தொழிற் பாகுபாடு எங்கும் ஒரே மாதிரி ஒரே தன்மையதாக இருப்பதில்லை. ஆனாலும் செய்யும் தொழிலில் ஒர் அசமத்துவ நிலை பெரும் பாலும் இருந்துகொண்டே யிருக்கும். சில குடும்பங்களில் வெளியே சென்று காய்கறி வாங்கும் பழக்கம்

கணவன்மாரிட முண்டு. இதேபோல் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தலும் தந்தையோ, தாயோ செய்யும் பணியாக இருக்கும்.
நாம் இந்த இன வாரியான தொழில் வேறுபாட்டால் அறியக்கூடியது யாதெனில் எப்படி ஒரு கருத்து நிலை அதை உபயோகிப்போரின் அத்தியாவசியத்துக்கு தகுந்தவாறு நீட்டிக் குறைந்து பயன்படுத்தப்படுகிறது என்பதே. முதலாளித்துவம் அதைத் தனக்குச் சாதகமாக பயன்படுத்துகிறது. ஆனால் இதனால் பாதிக்கப்படுவோர் பெண்களே. சாதி சமயம் வர்க்கம் என்ற பேதங்களுக்கு அப்பாற்பட்டு அது பெண் குலத்தையே நாடித் தாக்கும்.
இதைத் தவிர்ப்பது எப்படி?
தாய்மார்கள் தங்கள் குழந்தைச் செல்வங்களுக்கு இளமையில் இருந்தே செய்யும் தொழிலின் மேம்பாட்டையும் சமத்து வத்தையும் உணரச் செய்ய வேண்டும். ஆண் வேலை என்ற பாகுபாட்டை வேலையினூடாகவும் கருத்து நிலையினூடாகவும் உடைத் தெறிய அவர்கள் முயல வேண்டும். பெண்ணை மேசை மேல் ஏறி பல்ப் பொருத்துவளாகவும் மகனை சமையலறையில் தேங்காய் துருவுபவனாகவும் பழக்கி தானும் அதை ஏற்று அவர்களையும் அதை ஏற்கச் செய்ய வேண்டும். கைக்குழந்தைகளை மூத்த சகோதரி மட்டும் சீராட்டத் தேவையில்லை. மூத்த சகோதரனும் விளையட்டுக் காட்டலாம். பால் பருக்கலாம். இதில் கெளரவக் குறைச்சல் இல்லை, என்பதை அவர்களுக்கு புலப்படுத்த வேண்டும். எமது பெரும் பணியில் இது ஒரு முதலாவது கட்டமாக அமையட்டும்.

Page 38


Page 39
|-
|-
 
 
 
 
 
 
 
 
 

.
:
-
ܦ
-
-
.