கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பேரழிவுகளுக்குப் பெண்கள் முகம் கொடுத்தல்

Page 1

சரளா இமானுவ சித்திரலேகா மெளனகுரு
சூரியா
ண்ைகள் அபிவிருத்தி நிலையம்

Page 2

பேரழிவுகளுக்குப் பெண்கள் முகம் கொடுத்தல்

Page 3

பேரழிவுகளுக்குப் பெண்கள் முகம் கொடுத்தல்
தென்னாசிய அனுபவங்களும் சவால்களும்
தொகுப்பாசிரியர்கள் சரளா இமானுவல் சித்திரலேகா மெளனகுரு
சூரியா பெண்கள் அபிவிருத்திநிலையம்

Page 4
பேரழிவுகளுக்குப் பெண்கள் முகம் கொடுத்தல்: தென்னாசிய அனுபவங்களும் சவால்களும் ("சுனாமிக்குப் பின்னரான மீள்கட்டுமானத்தின்போது பெண்களின் அக்கறைகள்: பொது உபாயங்களைத் திட்டமிடலும் வளங்களைப் பகிர்ந்து கொள்ளலும்" என்ற பொருளில் நடைபெற்ற தொன்னாசியப் பெண்கள் மகாநாட்டில் வழங்கப்பட்ட கட்டுரைகளின் தமிழாக்கம், மட்டக்களப்பு, ஜீலை 2005.)
தொகுப்பாசிரியர்கள்: சரளா இமானுவல் - சித்திரலேகா மெளனகுரு இ) சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம், 2008.
ஐக்கியநாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் நிதி உதவி பெற்றது
வெளியீடு சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம்
20 டயஸ் ஒழுங்கை, மட்டக்களப்பு, இலங்கை.
அச்சு: குமரன் அச்சகம் - 361, 1/2 டாம் வீதி, கொழும்பு - 12
Women Responding to Disasters: Challenges and Experiences from South Asia (Collection of Papers Submitted at the South Asian Conferance on Gender Concerns in Post Tsunami Reconstruction - Planning Common Strategies and Sharing Resources, Batticaloa, July 2005.)
Edited by: Sarala Emmanuuall & Sitralega Maunaguru
GC) Suriya Women's Development Center, 2008
This Publication was funded by UNDP, Colombo.
Published by: Suriya Women's Development Center 20 Dias Lane, Batticaloa. Sri Lanka.
Printed by: Kumaran Press (Pvt) Ltd.
- 361, 1/2 Dam Street, Colombo -12
ISBN 978-955 - 8695 - 04 - 3

பொருளடககம்
முன்னுரை
. சுனாமிக்குப் பின்னரான சூழல் பற்றிய உரிமை
அடிப்படையிலான அணுகுமுறை - பொறுப்புடைமைக்கான அறை கூவல் - சுனிலா அபயசேகர
. பால்நிலை, அரசு மற்றும் சுனாமி மீள்நிர்மாணம்: இந்தியா, இலங்கைக்கு இடையிலான ஒப்பீட்டுப் பகுப்பாய்வு
- ரீட்டா மன்சந்தா
. சுனாமிக்கு பின்னரான மீள்கட்டுமான பணிகளில் பால் ரீதியிலான கவனம் : ஒரு சுருக்கக் குறிப்பு - ருத் மனோராமா
. சுனாமி மறு வாழ்வு பணியில் அரசின்
கொள்கைகளும் பெண்களின் நிலைப்பாடும் - எஸ். சிவகாமி
. சுனாமியினால் பாதிக்கப்பட்டவர்களின்
குடித்தனக் கணக்கெடுப்பு: இலங்கை, மட்டகளப்பு மாவட்டத்திலிருந்து சில ஆரம்ப கட்டத் தகவல்கள் : GLD 2005
- சரளா இமானுவல்
vii
13
34
44
56

Page 5
vi
10.
Il.
12.
13.
பெண்களின் வாழ்வாதாரங்களுக்கு மதிப்பளித்தல் : மாலைதீவில் பொருளாதார மீள்நிலை முயற்சிகளில் பாலின உரிமையை உறுதிப்படுத்துதல் - ஷாலினி ஜாவர் & சிந்து ஷாலி
பேரழிவிற்குப் பின்னரான சந்தர்ப்பங்களில் பெண்களின் செயல்வாதம் - சுமிகா பெரேரா
மட்டக்களப்பில் சுனாமிக்குப் பின்னரான சூழலில்
பெண்களின் கூட்டுச் செயல்வாதம் - சித்திரலேகா மெளனகுரு
சுனாமிக்கு பின்னர் ஆச்சேயின் புனர்வாழ்வு மற்றும் மீள்கட்டுமான பணிகளில் பெண்களின் பங்களிப்பு - சித்தி மைசாரா
குஜராத்தில் அரச ஆதரவுடனும், உடந்தையுடனும் மனிதன் அனர்த்த நிலையை உருவாக்கினான் : குஜராத் மனிதப் படுகொலை 2002 உம் தற்போதும்
- ஷரீபா ஜோர்ஜ்
பேரழிவிற்கான ஆயத்தநிலையில் பாலின விவாத விடயங்கள்: இலங்கை அனுபவம் - தனுஷா சேனறாயக்க
பேரழிவுக்குத் தயார்படுத்திக் கொள்ளும் செயற்பாட்டில் வலுவான உள்ளூர் மற்றும் பிராந்தியக் கொள்கைகளின் அவசியம் " அபிததுல் பாத்திமா
விதப்புரைகள்
கட்டுரையாளர்கள்
64
89
94
IO5
109
I26
144
154
I67

முன்னுரை
சுனாமிக்குப் பின்னரான யதார்த்தத்திற்கு முகம் கொடுக்கும் வகையில் தென்னாசியாவில் பிரதேசரீதியான பெண்நிலை வலையமைப்புக்களை உருவாக்கல்
இந்து சமுத்திரத்தில் 2004 டிசம்பர் 26ம் திகதி ஏற்பட்ட சுனாமி ஒரே சமயத்தில் பல நாடுகளையும் சமுகங்களையும் தாக்கியது. மனிதவரலாற்றில் ஏற்பட்ட மிக மோசமான பேரழிவுகளில் இதுவும் ஒன்று என அடையாளம் காணப்பட்டது. கிழக்கே இந்தோனே சியாவின் கரையில்இருந்து அந்தமான், நிக்கோபார் தீவுகள், இந்தியாவின்கிழக்குக் கரையோரம், இலங்கையில் கிழக்கு தெற்கு பகுதிகள், மாலை தீவு, ஆபிரிக்காவின் கிழக்கு கரை யாவற்றையும் இது தாக்கியது.
சமூகங்களிலும் குடும்பங்களிலும், சமூக உறவுகளிலும் சுனாமி எற்படுத்திய பாதிப்புக்கள் பாரதூரமானவை. ஆண்கள், பெண்கள், பிள்ளைகள் ஆகியோர் தமது குடும்பம், வீடு, சொத்து, நிலம், உறவுகள் சமூக ஆதரவு அமைப்புக்கள், ஜீவனோபாய ஆதாரங்கள் ஆகியவற்றை இழந்துள்ளனர். சுனாமியினால் ஏற்பட்ட பாரதூரமான விளைவுகளுக்கு பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் காணப்படும் சமூகக்கலாச்சார நடைமுறைகளும் காரணமாய் அமைந்தன. உதாரணமாக எல்லா பேரழிவுகளிலும் அவற்றின் பாதிப்பு பால்நிலைப்பட்டதாய் இருப்பது போலவே சுனாமியின் பாதிப்பும் அமைந்தது. ஆண்களை விடப் பெண்களே அதிகளவு (60%) உயிரிழந்தமையை ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உதாரணமாக இலங்கையின் அம்பாறை மாவட்டத்தில் சுனாமியின் போது இறந்த ஆண்களின் தொகையை விடப்

Page 6
viii
பெண்களின் தொகை இரு மடங்காகும். சுனாமியின்போது ஏற்பட்ட பால்நிலைப்பட்ட பாதிப்பை இது காட்டுகின்றது. சுனாமியால் ஏற்பட்ட பாதிப்பும் இயற்கைப் பேரழிவுகளின் பின்னரான மீள் கட்டுமான முயற்சிகளும் இலங்கையின் நீண்டகால இனத்துவப்பிணக்கு வரலாற்றாலும் அதன் தற்போ தைய இயல்பினாலும் வடிவமைக்கப்படுகின்றன.
சுனாமிக்குப்பின்னரான மீள்கட்டுமானம் பற்றிய அரசாங்கக் கொள்கைகள் பெண்களைப் பாராபட்சப்படுத்துகின்றன. உதாரணமாக இத்தகைய திட்டமிடலில் பெண்களின் ஜிவனோ பாயம் பற்றிய அக்கறைகள் கவனிக்கப்படவில்லை. இடப் பெயர்வின்போது பால்நிலையால் பெண்களின் அனுபவங்களும் பிரச்சனைகளும் வேறுபடுகின்றன. குறிப்பாக குடும்பங்களிலும் சமூகங்களிலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித் துள்ளன. எனவே பால்நிலை அடிப்படையிலும் உரிமைகள் அடிப்படையிலும் அமையும் நோக்குநிலைகளைக் கையாளுவதன் மூலம் பெண்களது வாழ்கையில் அனர்த்தங்கள் ஏற்படுத்தும் இத்தகைய வித்தியாசமான பாதிப்புகளைத் தெளிவாக வெளிப் படுத்த முடியும்.
சுனாமியால் தாக்கப்பட்ட நாடுகளில் இலங்கையும், இந்தோனேஷியாவும் இனப்பிணக்கினால் ஏற்பட்ட போர் நிலைமைகள், வன்முறைகள், இராணுவமயமாதல் ஆகியவற்றிற்கு நீண்டகாலமாக முகம் கொடுத்துள்ளன. போரின் பாதிப்புகளும், இடப்பெயர்வும் அதன் விளைவுகளும் மக்கள் வாழ்கையில் ஆழமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன. போரினால் ஏற்பட்ட இடப்பெயர்வும் அது தொடர்பான மக்களின் வாழ்க்கைப் பிரச்சனைகளும் இலங்கையில் இன்னும் முழுமையாகத் தீர்க்கப்படவில்லை. இந்நிலையானது சுனாமி பேரழிவில் இருந்து மீள் எழுவதற்கான முயற்சிகளில் பாதிப்பை ஏற்படுத்தும் சாத்தியக் கூறு உள்ளது. இலங்கையில் நீண்டகால இன முரண்பாட்டு வரலாற்றாலும் அதன் தற்போதைய நிலைமை யாலும் மீள்கட்டுமான முயற்சிகள் வடிவமைக்கப்படுகின்றன.
எனவே முரண்பாடு பற்றிய விளக்கமும் தெளிவான பார்வையும் சுனாமிக்குப்பின்னரான மீள்கட்டுமான கொள்கையை வரைவோருக்கும் நடைமுறைப்படுத்துவேருக்கும் இருக்க வேண்டியது அவசியமாகும்.

iX
இத்தகைய பாதிப்புகள் அவை நிகழும் சமூக அரசியல் பண்பாட்டுச் சூழல்களைப் பொறுத்து வேறுபடினும் பரந்தளவில் தென்னாசியப் பின்னணியில் நோக்கும்போது இவற்றிடையே பொதுமைகளையும் இனங்கான முடியும். இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், மாலைதீவு, ஆகிய நாடுகளிடையே கலாச்சாரம் சமூக அமைப்பு, ஜீவனோபாயங்கள், அரசினதும் ஏனைய முகவர்களினதும் பாத்திரங்கள், பெண் களது செயல்வாதம் ஆகியவற்றில் பொதுமைகள் உள்ளன. மேலும் தென்னாசியப் பெண்கள் அமைப்புகளிடையே நீண்டகாலமாக வலைப்பின்னல் தொடர்புகள் உள்ளன. எனவே பெண்கள் என்ற வகையில் தென் ஆசிய நோக்கு நிலையிலிருந்து அனர்த்தங்களை நோக்குவதற்கும், பெண்களுடைய உரிமைக்காக வாதாடுவதற்கும், பணியாற்று வதற்கும் உரிய காலம் இது எனலாம்.
இவற்றைக் கருத்தில் கொண்டு சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம் “சுனாமிக்குப் பின்னரான மீள் கட்டுமா னத்தின்போது பெண்களின் அக்கறைகள்: பொது உபாயங்களைத் திட்டமிடலும் வளங்களைப் பகிர்ந்து கொள்ளலும்" என்ற தலைப்பில் தென்னாசியப் பெண்கள் மகாநாடு ஒன்றை ஒழுங்கு செய்தன. இதற்கு ஐக்கிய நாடுகள் சபை அபிவிருத்தித் திட்டம் போதுமான நிதி உதவியை வழங்கியது. இம் மகாநாட்டின் நோக்கங்கள் இரு வகைப்படும்.
1. மகாநாட்டில் பங்கு பெறுவோரின் வேலைச் சூழலில் தமது கருத்துக்களை எடுத்துரைப்பதற்குரிய தந்திரோபா யங்களையும் பொறிமுறைகளையும் பகிர்ந்து கொள்ள லும் உருவாக்கலும்.
2. தென் ஆசியப் பிராந்தியத்தில் பெண்கள் அமைப் புக்களிடையே எதிர்கால இணைப்புக்களை உருவாக்கு வதற்கும், பரிமாறுவதற்கும், அனர்த்தங்களின் போது பெண்கள் பற்றிய அக்கறைகளை அதிகரிப்பதற்குமான சந்தர்ப்பத்தை வழங்கல்.
இந்த மகாநாட்டில் பல்வேறுபட்டோர் கலந்து கொண்டனர். குறிப்பாக உள்ளூர் பெண்கள் நிறுவனங்கள், இந்தியா, இந்தோனேஷியா, பங்காளதேஷ், மாலைதீவு ஆகிய நாடுகளைச் சேர்ந்த பெண் செயல் வாதிகள், சர்வதேச அபிவிருத்தி

Page 7
நிறுவனங்கள், ஜக்கிய நாடுகள் சபை முகவர்கள், அரச அலுவலகர்கள், இடம் பெயர்ந்த பெண்களின் பிரதிநிதிகள், ஆராய்ச்சியாளர்கள் ஆகியோர் பங்குபற்றினர்.
இம் மகாநாடு 2005 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15,16 ஆம் திகதிகளில் மட்டக்களப்பில் நடைபெற்றது. இம் மகாநாட்டில் கட்டுரைகள் வாசிக்கப்பட்டதுடன் குழுக்கலந்துரையாடல்களும் இடம் பெற்றன. இக் கலந்துரையாடல்களின் போது பல விதந்துரைகள் முன்வைக்கப்பட்டன.
மகாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகளையும், மகாநாட்டின்போது உருவாகிய ஆவணங்களையும் ஒன்று சேர்த்து நூலாக வெளியிட சூரியா பெண்கள் நிலையம் தீர்மானித்த போது ஐக்கிய நாடுகள் சபை அபிவிருத்தித் திட்டம் நிதி உதவி வழங்கியது. இச்சந்தர்ப்பத்தில் மகாநாடு வெற்றிகரமாக நடக்க பங்களித்த அனைவருக்கும் எமது நன்றி உரித்தாகட்டும். அத்துடன் இந்நூலில் அடங்கியுள்ள கட்டுரைகளை எழுதியவர்களுக்கும் மிகுந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
சரளா இம்மானுவேல் சித்திரலேகா மெளனகுரு சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம், மட்டக்களப்பு

சுனாமிக்குப் பின்னரான சூழல் பற்றிய உரிமை அடிப்படையிலான அணுகுமுறை - பொறுப்புடைமைக்கான அறை கவல்
- சுனிலா அபயசேகர
இரண்டாயிரத்து நான்காம் ஆண்டு டிசெம்பர் 26 ஆந் திகதி சுனாமியினால் உயிர்கள் இழக்கப்பட்டு மேலும் பலரது வாழ்க்கை முற்றாக சிதறடிக்கப்பட்ட இடமான இலங்கையின் கிழக்கு மாகாணநகரமான மட்டக்களப்பில் இன்று நாங்கள் கூடியுள் ளோம். ஏதோ ஒரு விதத்தில் சுனாமியினால் பாதிப்புற்ற ஆண்கள் பெண்கள் என்ற வகையில், இலங்கை, தென் இந்தியா, ஆச்சே, இந்தோனேசியா, தாய்லாந்து மற்றும் எண்ணுக்கணக்கற்ற வேறுபல இடங்களில் சுனாமியினால் பாதிப்புற்ற சகல சமூகங்களுக்கும் எமது ஆதரவுக் கரத்தினை நாம் நீட்டுகின்றோம். நம்மெல்லோருக்கும் ஏற்பட்ட இழப்பிற்காக துயருறுகின்றோம். சுனாமி காரணமாக உயிரிழந்தவர்களை நினைவு கூருகின்றோம். அத்துடன் சுனாமியின் பின்னரான நிலைமைக்கு அர்த்தமுள்ள பதிற்செயற்பாடொன்றிற்கான எமது அர்ப்பணிப்பினை நாம் பகிர்ந்து கொள்கின்றோம். இதற்காக நாமும் எம்முடன் பணியாற்றும் பிறரும், பெண்கள் வாழும் பல்வேறு உலகங்களை வடிவமைக்கும் பாரபட்சம் மற்றும் வன்முறை வட்டத்திற்கு அப்பால் செல்வதற்கு இச்சந்தர்ப்பத்தினை பயன்படுத்துவோமென உறுதி கூறுகின்றோம்.
சுனாமியின் பின்னரான காலப்பகுதியில் புனர்கட்டமைப்பு மற்றும் புனர்வாழ்விற்கு நியாயமானதும் நேர்மையானதுமான அடிப்படையினை வழங்க வேண்டிய, வழங்கக் கூடிய மனித உரிமை உரித்துக்கள் மற்றும் பாதுகாப்பு என்பனவற்றின்

Page 8
2 பேரழிவுகளுக்குப் பெண்கள் முகம் கொடுத்தல்
நோக்கெல்லைக்குள் நின்று இன்று எனது கருத்துரைகளை முன்வைக்கவுள்ளேன்.
எனது அவதானிப்புகள் எமது இலங்கை அனுபவங்களில் குறிப்பாக ஆதாரப்படுத்தப்பட்டுள்ள போதிலும், இத்தகைய பேரழிவொன்று சமூகங்கள், பெண்கள் மீது ஏற்படுத்தக் கூடிய ஒட்டுமொத்தமான தாக்கவிளைவு தொடர்பாக எம்மிடையே ஆக்கபூர்வமான கலந்துரையாடலொன்றிற்கு வழியமைக்கு மெனவும் நம்புகின்றேன். மனிதராலோ அல்லது இயற்கை யினாலோ ஏற்படுத்தப்பட்டிருப்பினும், பேரழிவுகள் என்பன, வறியோர், காணியற்றோர், பெண்கள் போன்ற இத்தகைய வசதிகளற்ற சமூகங்களுக்கு பெருமளவு தாக்கவிளைவுகளை ஏற்படுத்தும் சமூக இடப்பெயர்வு மற்றும் துண்டாடப்படுதல் போன்ற செயற்பாங்குகளுக்கு வழியமைக்கின்றன. இலங்கை விடயத்தில், ஆச்சே போன்று, பல்லாண்டு காலமாக போர் முரண்பாட்டினாலும் உள்நாட்டு அழுத்த நிலைகளினாலும் ஏற்கெனவே சின்னாபின்னமாகியிருந்த எமது நாட்டின் பகுதிகளையே சுனாமி சீரழித்தது. இடப்பெயர்வு, துண்டாடப் படுதல் போன்ற இத்தகைய செயற்பாங்குகள், சமூக தோற்ற மாற்றப்பாடுகளையும் அவற்றினுள்ளே உள்ளடக்கியிருக்கலா மென்பதை வரலாறு எமக்கு எடுத்துக் காட்டுகின்றது. சுனாமியின் பின்னரான மீள் கட்டமைப்பு செயன்முறையானது மீள் குடியேற்றம், மீள்கட்டமைப்பு மற்றும் புனர்வாழ்வு என்பவற்றின் சமூக, கலாச்சார, பொருளாதார விளைவுகளுக்கான கூருணர்வுத் திறனுடன் கையாளப்படுமிடத்து, பாதிப்பிற்குள்ளான சமூகங்கள் வேதனை, துயரம் நிறைந்த அனுபவங்களிலிருந்து தன்மானத் துடனும் வலுவுடனும் அத்துடன் தமக்கென சிறந்த வாழ்க்கை முறையைக் கட்டியெழுப்பும் பொருளாதார, சமூக ஆற்றல் திறன்களுடனும் வெளிவரலாம். பேரழிவின் பின்னரான நிலைமை யொன்றின் விடயத்தில் பெண் செயல்வாதிகளான நாம் இத்தகைய நிலைமைகளில் கட்டமைப்புகளினுள்ளேயும் வெளியேயும் எவ்விதம் பணியாற்றி, பயனுள்ள விளைவுகளையடையலாம் என்பது இன்று எம்மை எதிர்நோக்கும் சவாலாகும்.
இங்கு கூடியுள்ள நாமெல்லோரும் சுனாமியின் விளைவு களை அனுபவித்தவர்கள். எம்முள் சிலர் நேருக்கு நேராக இந்நிலைமையை எதிர்கொண்டவர்கள், இன்னும் சிலர் இதன்

சுனாமிக்குப் பின்னரான சூழல் பற்றிய உரிமை . 3
பின்விளைவுகளின் பேரச்சத்தினை எதிர்கொண்டனர். அனர்த் தத்தின் பரிணாமத்தினை நாம் நன்கு அறிவோம். எனவே இதை இங்கு மீண்டும் கூறவில்லை. பாதிப்புற்ற நாடுகளின் கரையோரப் பகுதிகளெங்கிலும் ஏற்பட்ட பிரம்மாண்டமான உயிரிழப்பும் சொத்திழப்பும்; அத்துடன் எமது நாட்டிற்குள்ளிருந்தும் வெளியிலிருந்தும் வந்து குவிந்த அனுதாபங்களும், கூட்டுப் பொறுப்புணர்வு என்பனவும் இந்த கடந்த ஆறு ஏழு மாதங்களாக எமக்குக் கிட்டியுள்ள அனுபவப் பகிர்வாகவுள்ளது.
சென்ற ஆறு மாதங்களாக, சுனாமியினால் பெண்கள் பாதிப்புற்ற குறித்துரைத்த மாதிரிகளைப் புரிந்துகொண்டு பகுப்பாய்வு செய்வதற்கு எம்முள் பலர் முயன்றுள்ளோம். எமது சொந்த நிலைமைகளுக்கு இணக்கமாக எமது அனுபவங்கள் வேறுபடுகின்றபோதிலும் எமது பால்நிலை அடையாளங்களின் அடிப்படையில் பொதுவாக பகிரப்பட்ட அனுபவங்கள் சிலவுள்ளன. இலங்கையில் குறித்துரைக்கப்பட்ட நிலைமைகளில் எமது அனுபவங்களை, பகிர்வதன் மூலமாக, எமது பகிரப்பட்ட அனுபவங்களில் உள்ள பொது அடிப்படைகளை பகுத்தறியும் செயன்முறையொன்றினை ஆரம்பித்து, சுனாமியின் பின்னரான நிலைமையில் எம்முடன் பணியாற்றும் பெண்களுக்கு மாத்திரம் ஆதரவு வழங்குவதன்றி, எதிர்காலத்தில் சுனாமியின் பின்னரான எந்தவொரு நிலைமையிலும் பெண்களுடன் பணியாற்று பவர்களின் பதிற் செயற்பாடுகளையும் ஆதரிக்கும் கூட்டுப் பொறுப்புணர்வினை அபிவிருத்தியாக்குவதனை இயலச் செய்யுமென நம்புகின்றோம்.
பெண்கள் தொடர்பான பாரம்பரிய மனேபாவங்கள் அவர்களை அனர்த்தத்தின் மிகப் பாதிப்புறு தன்மையுள்ள வர்களாக்கிய நிலைமைகளை சுனாமிக்குப் பின்னரான அனுப வங்கள் எமக்கு எடுத்துக்காட்டின. குற்ற உணர்வு, கீழ்ப்படிவு என்பவற்றுடன் குடும்பத்தின் கவனிப்பாளர் என்ற பொறுப்பு போன்றவை அவர்கள் தம்மை அலைகளிலிருந்து காப்பாற்றிக் கொள்வதை அனுமதிக்கவில்லை. பெண்கள் தமது இளம் பிள்ளைகளையும், வயதானவர்களையும் பாதுகாப்பாகக் கொண்டு வருவதற்கும் அத்துடன் ஆடைகளற்ற நிலையில் அலைகளின் ஆபத்திலிருந்து தப்பிச்செல்ல இயலாத நிலையிலும் அழிந்தனர். முகாம்களிலும், நலன்புரி நிலையங்களிலும் பெண்கள் தமது

Page 9
4 பேரழிவுகளுக்குப் பெண்கள் முகம் கொடுத்தல்
சொந்தத் தேவைகளையும் துயர்களையும் புறந்தள்ளி விட்டு தொடர்ந்தும் பிள்ளைகளையும், நோயாளிகளையும், வயோதிபர் களையும் கவனிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். பெண்களை இழந்து விட்ட நிலைமைகளில், குடும்பங்களின் சுமைகளை ஏற்க வேண்டியிருந்த ஆண்கள் எதிர்கொண்ட பல பிரச்சனைகள் அவர்கள் எத்தனை தூரம் பெண்களில் தங்கியி ருந்தார்கள் என்பதை மீள் உறுதிப்படுத்தியது.
இலங்கையில், சுனாமியின் உடனடிப்பின்னரான நிலை மைகளில் பெண்களின் குறித்துரைத்த நெருக்கடி நிலைமைகளில் கவனம் செலுத்தப்பட வேண்டியிருந்த இரு பிரதான விடயங்களை நாம் எதிர்கொண்டோம். ஒருபக்கம், நிவாரணம் மற்றும் அத்தியாவசிய பதிற்செயற்பாடுகளை வழங்குதல், ஒப்படைத்தல் என்பன பெண்களின் குறித்துரைத்த தேவைகளுக்கு அதிகளவு உணர்வுத்திறன் மிக்கவையாக இருப்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டியிருந்தது. நிவாரணப் பொருட்களில் பெண்களின் உள்ளாடைகள் மற்றும் உடல்நலத் துப்புரவு துணிகள் என்ப வற்றை உட்சேர்த்தல் முதல் பெண்கள் சுனாமியின் உடனடிப் பின்னரான சந்தர்ப்பங்களில் அடைக்கலம்பெற்ற நிவாரண நிலையங்களிலும் தற்காலிக தங்குமிடங்களிலும் தனிமை வசதியுள்ள இடங்களை ஒதுக்குதல் போன்ற சாதாரண விடயங்கள் வரை அக்கறை செலுத்த வேண்டியிருந்தது. பெண்கள் ஆடைகளை மாற்றுவதற்கென தனிமையான, பாதுகாப்பான இடவசதிகளை மாத்திரமன்றி, இறந்தோருக்காக தமது கலாச்சார, சமய வழமைகளுக்கு இணக்கமாக தனிமையில் துயர் கொள்வ தற்கும் இடவசதிகளையும் பெற வேண்டியிருந்தனர்.
வன்முறைகளிலிருந்தும் பெண்களுக்கென பாதுகாப்பு வழங்க வேண்டிய தேவை மீதும் புரிந்துணர்வினை உருவாக்க வேண்டியிருந்தது. சுனாமியின் பின்னரான உடனடி நிலைமை களில் சுனாமியிலிருந்து காப்பாற்றும் செயன்முறையில் பாலியல் வன்முறைகளுக்கு ஈடுபடுத்தப்பட்ட மூர்க்கத்தனமான சில விடயங்களுக்கு பொதுமக்களது கவனத்தை மாத்திரமன்றி, இது தொடர்பான அதிகாரிகளினது கவனத்தையும் நாம் திருப்ப வேண்டியுள்ளோம். இதேமுறையில் முகாம்களுக்குள்ளும், தற்காலிக தங்குமிடங்களுக்குள்ளும் ஏற்படும் குடும்ப வன் முறைகள் மற்றும் மனைவியையும், பிள்ளைகளைய்ம கைவிட்டுச்

சுனாமிக்குப் பின்னரான சூழல் பற்றிய உரிமை . 5
செல்லும் நிலைமைகள் போன்றவற்றினையும் நாம் கவனிக்க வேண்டியுள்ளது.
மறுபுறம், சமவுரிமையின் அடிப்படையில், நிவாரணம் மற்றும் மீள்குடியிருப்பு கொடுப்பனவுகள் மற்றும் ஏனைய நலன்களின் ஒதுக்கீடு, விநியோகம் என்பவற்றில் பெண்கள் உட்சேர்க்கப்பட்டுள்ளார்களா இல்லையா எனும் செயன்முறை யொன்றினையும் நாம் ஆவணப்படுத்தி பகுப்பாய்வு செய்வதை ஆரம்பிக்க வேண்டியுள்ளது. ஆண், பெண் இருபாலாரும் கொடுப்பனவுகள், நலன்கள் என்பவற்றிற்கு உரித்துடையவர் களாகும் தகைமை முறையில் கவனம் செலுத்தி, விதவைகள், தனிப்பெண்கள், குடும்பங்களின் தலைமைகளிலுள்ள பெண்கள், ஆகியோர் நலன்கள் ஒதுக்கீடுகள் வழங்கப்படும் சந்தர்ப்பங்களில் விசேட, குறித்துரைத்த பிரிவினராக கருதப்படுவதை உறுதிப்படுத்தி, பெண்களை கலாச்சார, மத அல்லது இன அடிப்படையில் பாதிக்கக் கூடிய சமூக காரணிகளை அடையாளங்கண்டு, முறைமைக்குள்ளேயும், வெளியேயும், சுனாமிக்கு பின்னரான மீள்கட்டமைப்பு, மீள் குடியிருப்பு செயன்முறைகளில் சமவுரிமை, சந்தர்ப்பம் என்பவை வழங்கப்படுவதை உறுதி செய்வதற்கும் நாம் திட்டமிட்டு இயங்குதல் வேண்டும்.
சுனாமியினால் பாதிப்புற்ற ஏனைய நாடுகளில் போலன்றி இலங்கையில் சுனாமியின் பின்னரான செயன்முறையானது, இவ்விதம் தாக்கத்திற்குள்ளாகிய ஏனைய நாடுகளில் நிலவும் நிலையிலிருந்து வேறுபட்டதொரு வகையில் பல அரசியல் சிக்கல் நிலைமைகள் செறிந்ததாக உள்ள அதேவேளை, சுனாமியினால் பாதிப்புற்ற சகலரும், சமூகங்களும் தன் மானத்துடனும் நியாயத்துடனும் தமது இயல் வாழ்க்கைக்கும் சீவனோபா யங்களுக்கும் சம உரிமைகள், சந்தர்ப்பங்கள் நிறைந்த வாழ்க்கைக்கு மீளும் உறுதிப்பாடான நிலையை வழங்கும் சட்ட வரையறை யொன்றினை தேடும் நோக்கில் நாம் ஒன்றுபட்டுள்ளோம். பாகுபாடின்மைக் கோட்பாட்டிற்கு மதிப்பளிப்பதை உறுதிப் படுத்தி, சுனாமிக்கு முன்னரான விடயத்தில் பாகுபாடான தன்மை, சுரண்டற்தன்மை, ஒடுக்குமுறைகள் என்பவற்றை அனுபவித்த சமூகப்பிரிவுகள், குழுமங்கள் மேலும் பாதிப்படையக் கூடிய இத்தகைய நிலைமைகளுக்கு இப்பிரிவினர் செல்லாதிருத்தலை உறுதிப்படுத்துதல் செயன்முறையில் எமது வழிகாட்டல் வரைச்சட்டமாக இருத்தல் வேண்டும்.

Page 10
6 பேரழிவுகளுக்குப் பெண்கள் முகம் கொடுத்தல்
இந்த சந்தர்ப்பத்தில்தான் தற்போதுள்ள மனித உரிமைகள் இயல்புநிலைகள், தராதரங்கள், குறிப்பாக எமது நாட்டின் மனித உரிமைகளின் கடப்பாடுகளுக்கு எமது பணியை தொடர்பு படுத்துதல் முக்கியமாகின்றது.
ஐக்கிய நாடுகளினால் உடன்படப்பட்ட ஏழு பிரதான மனித உரிமைகள் உடன்படிக்கை களுக்கும், இலங்கை அரசாங்கம் கையொப்பதாரியாகவுள்ளது. இந்த உடன்படிக்கைகளில் அமைவாக்கப்பட்டுள்ள வழமைகள், தராதரங்களுக்கு இணக்கமாக இருப்பதற்கு வெளிப்படுத்திய பொறுப்புடைமையினூடாக இந்த உடன்படிக்கைகளில் அமைவாக்கப்பட்ட உரிமைகளை அதன் பிரசைகள் அனுபவிப்பதனை இயலச்செய்யும் வகையில் நடந்து கொள்வதற்கான கடப்பாட்டினை அரசாங்கம் கொண்டுள்ளது.
அரசாங்கங்களின் கடப்பாடு இந்த உரிமைகளை அவற்றை உறுதிப்படுத்தும் சட்டம் மற்றும் கொள்கை சட்ட வரைச்சட் டங்களை உருவாக்குவதன் மூலமாகவும் வன்முறை பற்றிய முறைப்பாடுகளைப் பெற்று அவற்றை நுண்ணாய்ந்து, வன்முறை களுக்கு பொறுப்பானவர்களை தண்டிக்கும் ஒழுங்கேற்பாட்டு முறையொன்றினைத் தாபித்தல் என்பன மூலமாகப் பாதுகாத்தலும் அரசின் கடப்பாடாகும். இந்த உரிமைகளை அனுபவிப்பதற்கு சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் கலாச்சார சூழலைச் சாதகமாக இருக்கச்செய்தலும் அரசின் கடப்பாடாகும்.
மேலே நான் குறிப்பிட்ட ஏழு சருவதேச மனித உரிமைகள் உடன்படிக்கைகளில் அடங்கியுள்ள குடியுரிமை மற்றும் அரசியல் உரிமைகள் பொருளாதார, சமூக, கலாச்சார உரிமைகள் மீதும், இனம்' பால்" என்பவற்றின் அடிப்படை மீது பாகுபாடான நிலையிலிருந்து விலகி நிற்கும் உரிமை மீதும், சித்திரவதை யிலிருந்து விடுபடல் மீதும், பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் புலம்பெயர் பணியாட்களின் உரிமைகள்' மீதுமான உத்தர வாதங்கள் சில சமயங்களில் இரட்டிப்பாகவுள்ளன. இந்த உடன்படிக்கைகளிலுள்ள வழிகாட்டற் கோட்பாடுகள் யாவும் பாகுபாடின்மை அடிப்படையிலானவையாகும். 1948 இல் ஐக்கிய நாடுகளினால் மனித உரிமைகள் மீதான சர்வதேசப் பிரகடனம் ஏற்றுக்கொள்ளப்பட்டதன் பின்பு முதல் எழுந்துள்ள பல்வேறு ஒப்பந்தங்கள், மரபு ஒழுங்குகள் என்பன, மனித உரிமைகளின் கருத்து ரீதியானதும் அனுபவரீதியானதுமான சிக்கல் நிலை

சுனாமிக்குப் பின்னரான சூழல் பற்றிய உரிமை . 7
மைகளை மனிதசமூகம் புரிந்து கொண்டதோடு, இந்த உரிமைகள் பற்றிய தனது சொந்த புரிந்துணர்வினையும், வரையறையினையும் புதிய மற்றும் அதிகளவு உள்ளடங்கலான நியமங்கள் மற்றும் நியதிகளின் தொடர்ச்சியான, நிலையான அபிவிருத்தி மூலமாக தொடர்ந்து விரிவடையச் செய்துள்ளது. தன்மானம், மதிப்புணர்வு, பாகுபாடின்மை ஆகிய நடைமுறைகளுக்கென பல சமூகங்கள் மேலும்மேலும் எழுச்சியுற்று வரும் சந்தர்ப்பத்தில், சருவதேச சமூகமானது இத்தகைய ஒவ்வொரு கோரிக்கையினையும் எதிர்கொண்டு ஒரு சமூகத்தின் மனித உறவு, மற்றைய சமூகங்களின் உரிமைகள் மீது தாக்கத்தினை ஏற்படுத்தாத வகையினை உத்தரவாதப்படுத்தும் வரைச் சட்டமொன்றினை உருவாக்குதல் வேண்டும். சமீப காலங்களில், உள்ளுர் மக்கள், சமபாலுறவினர் இருபால் உறவினர், பால்மாறியோர், மற்றும் எச்ஐவி/எயிட்ஸ் நோய்களுடன் வாழ்பவர்கள் போன்றவர்களின் உரிமைகள் மீதான விவாதங்கள், கலந்து ரையாடல்கள் என்பன, கோரிக்கைகள், எதிர்கோரிக்கை களுக்குமிடையில் அழுத்தங்களை பொதுத்துறைக்குள் ஏற்படுத் தியுள்ளன. எவ்வாறெனினும், சகலருக்கும் சகல மனித உரிமைகள் எனும் உலக பொறுப்புடைமையானது சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்தின் 50 ஆவது ஆண்டுவிழா கொண்டாட் டங்களின்போது மீளுறுதிப்படுத்தப்பட்டவாறாக இந்த செயன் முறையினூடாக முரணற்ற நிலையிலுள்ளது.
மனித உரிமைகளின் நியதிகள், தராதரங்கள் மீதான இந்த விவாதங்கள், கலந்துரையாடல்கள் என்பவற்றிற்குச் சமாந்தரமாக பேரழிவிற்கான பதிற் செயற்பாடு மற்றும் முகாமைத்துவ விடயத்தில் எமக்கு விசேடமாக இயைபாகவுள்ள மனிதாபிமான நிவாரணம், உதவி என்பவற்றிற்கான நியமங்கள் மற்றும் வழிகாட்டல்களின் அபிவிருத்தியினையும் நாம் காண்கின்றோம். போர்ச் சூழ்நிலைகளில் அரச துறைக்கும் அரசுசாரா துறைக் குமான செயற்பாடுகளுக்கு நியமங்களை அமைவாக்கும் சருவதேச மனிதநேயச் சட்டத்தின் பரிணாமம், அத்துடன் அகதிகளுக்கான ஐ.நா. உயர்ஸ்தானிகராலயம் (யுஎன்எச்சிஆர்), போரினாலும் உள்நாட்டுக் கலவரங்களினாலும் பாதிக்கப்படும் சமூகங்களுக்கு நிவாரணமும் உதவியும் வழங்குவதற்கான சருவதேச செஞ்சி லுவைச் சங்க அமைப்பும் (ஐசிஆர்சி) முரண்பாடு மற்றும் பேரழிவு

Page 11
8 பேரழிவுகளுக்குப் பெண்கள் முகம் கொடுத்தல்
நிலைமைகளில் பாதிப்பிற்குள்ளாகும் சமூகங்களுக்கு பெறுமதிமிக் கதாகவுள்ளன. காலப்போக்கில் போர்கள், அனர்த்தங்களின்போது மக்களைக் கவனிப்பதற்கென குறித்துரைக்கப்பட்ட கொள்கைகள் மற்றும் வழிகாட்டல்களின் அபிவிருத்தியை, அதாவது அகதிப் பெண்களின், பிள்ளைகளின் பாதுகாப்பிற்கென யுஎன்எச்சிஆர் வழிகாட்டல்கள் உள்ளூரில் இடம்பெயர்ந்தோரைக் கவனிப் பதற்கான ஐ.நா. வழிகாட்டற் கோட்பாடுகள் போன்றவை மேற்கொள்ளப்படுவதை நாம் அவதானித்துள்ளோம். இதற்கு மேலதிகமாக, சருவதேச அபிவிருத்தி மற்றும் உதவு முகவர் நிலையங்களும் அபிவிருத்தி மற்றும் அனர்த்த முகாமைத்து வத்திற்கான உரிமைகள் அடிப்படையான அணுகுமுறையொன்று என நாம் இப்போது குறிப்பிடும் முறையொன்றினை மேற்கொள் வதையும் காண் கின்றோம்.
சுனாமியின் பின்னரான விடயத்தில், சுனாமிக்கு ஆறு மாதங்களின் பின்னர் அரசாங்கத்தின் மீதும், அபிவிருத்தி மற்றும் உதவி முகவராண்மைகள் மீதும், சுமத்தப்பட்டுள்ள பொறுப் புடைமை கடப்பாடுகளுக்கும் பெண்களினதும் மற்றும் புற மொதுக்கப்பட்ட சமூக பிரிவுகள் துறைகளினதும் குறித்துரைத்த தேவைகள், அக்கறைகள் தொடர்பில் தொடர்ந்து காட்டப்படும் பாகுபாடு மற்றும் உணர்வற்ற தன்மை போன்ற யதார்த்த நிலைமைகளுக்கும் இடையே பல முரணி பாடுகள், வேறு பாடுகளை நாம் எதிர்கொள்கின்றோம்.
இலங்கை விடயத்தில் நாம் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனை விடயங்களிடையே, பாதிப்புற்ற சமூகங்களை கொள்கை வகுத்தலில் கலந்தாலோசித்தல், பங்குபற்றுதல் செயன்முறையின்மை, நிதியுதவி மற்றும் ஏனைய உதவிகளின் கிடைக்கப்பெறுந் தன்மை தொடர்பில் நேர்த்தியான தகவலின் தடையற்ற பாய்ச்சலை அனுமதிக்கும் வெளிப்படைத் தன்மை யான செயன்முறையின்மை, கொள்கை வகுப்பாளர் அத்துடன் பாதிப்புற்ற சமூகத்தவர் பாகுபாடற்ற முறையில் செயற்படுவதனை பிணைக்கும் கடப்பாடுகள் தொடர்பில் புரிந்துணர்வின்மை போன்றவை எதிர்கொள்ளப்படுவதை நாம் காண்கின்றோம். இவ்விடயத்தில் கோட்பாடுகள் மற்றும் சட்டங்களில் தாபிக்கப் பட்ட உரிமைகளுக்கும், சுனாமியினால் பாதிப்புற்ற தனியாட்கள் சமூகங்கள், சுனாமியின் பின்னரான புனர்நிருமாணம் மற்றும்

சுனாமிக்குப் பின்னரான சூழல் பற்றிய உரிமை . 9
புனர்வாழ்வு செயன்முறையில் தமது உரிமைகள் மறுக்கப்படுதல் மற்றும் மீறப்படுதலில் எதிர்கொள்ளும் யதார்த்த நிலைமைக்கு மிடையே தொடர்பின்மை இருப்பதை நாம் மேற்பரப்பிற்கு கொண்டு வர வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.
இலங்கைப் பெண்கள் சுனாமி அனர்த்த வேளையில், பெண்களின் தேவைகளுக்கு விசேட கவனம் செலுத்தி நிவார ணங்கள், உதவிகளை வழங்குவதில் பெருமளவு ஈடுபட்டனர். இம்முயற்சிகளின்போது சுனாமி பாதிப்புக்குட்பட்ட சமூகங்களில் பெண்கள் நலன்களை பெற்றுக்கொள்வதற்கென தம்மை ஒழுங்காக அமைப்பாக்கிக் கொள்வதற்கு உறுதிப்படுத்தி, கள விபரங்களை பெண்களுக்கு ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் விபத்துக்களில் விசேட கவனம் செலுத்தி அவதானித்தல் ஆகிய செயன்முறைகளை மேற்கொண்டனர். சுனாமியினால் பாதிப்புற்ற பெண்களுக்கு உதவுவதற்கான கூட்டமைப்பின் உருவாக்கமானது (CATAW) நிவாரண உதவி வழங்கும் செயற்பாடுகளை ஒன்றி ணைக்கும் இலக்குடன் பல்வேறு பெண்கள் பிரிவுகள் மற்றும் கட்டமைப்புகளிலிருந்து பெண்கள் பிரிவினரை ஒன்றிணைத்த அதேவேளை தேசிய, சருவதேச மட்டத்தில் கருத்தாதரவு மற்றும் பரிந்தாதரவு பெறுதலுக்கான வலுவான வலையமைப்பொன்றி னையும் உருவாக்கியது. மட்டக்களப்பில் அனர்த்த முகாமைத் துவத்திற்கான பெண்கள் கூட்டமைப்பின் உருவாக்கமானது சுனாமியின் பின்னரான நிவாரண மற்றும் புனர்நிருமாணப் பணிகளில் ஈடுபட்டுள்ள அரசு மற்றும் அரசுசாரா நிறுவனங் களுடன் இணைந்து இப்பணிகளை பெண்கள் பிரத்தியேக அத்துடன் பால் நிலைப் பிரத்யேக தேவைப்பாடுகள் மீது குவிமையமாக்குவதன் பொருட்டு மாவட்ட அடிப்படையான சமூக அமைப்புகள் செயற்படுவதற்கான சந்தர்ப்பத்தினை வழங்கியது.
சுனாமியின் பின்னரான புனர்நிருமாணப் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களிடையே பெண்களுக்கான முன்னுரிமைகள் வழங்கும் விடயம் பற்றிய இணக்கப்பாட்டினைப் பெறுதல் தற்போது பெண்கள் அமைப்புகளுக்கு ஒரு சவாலாகவுள்ளது. காணி, வீடுகள், மற்றும் சீவனோபாய உதவி வழங்கல் விடயங்களில் பெண்களுக்கு சமவுரிமை வழங்கப்படுதலை ஆதரித்தலே எமது முக்கிய பணியாகவுள்ளது. எவ்வாறெனினும்

Page 12
O பேரழிவுகளுக்குப் பெண்கள் முகம் கொடுத்தல்
ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு சமூகத்திலும் இனம், மதம், கலாச்சாரம், பாரம்பரியம் என்பவற்றின் அடிப்படையிலான பல்வேறு அக்கறைகள், பரிவுகள் என்பன பெண்களுக்கான சமவுரிமையை கோரும் வேளையில் கவனத்திற்கெடுக்கப்பட வேண்டியுள்ள சில தேவைகளாகவுள்ளன. இதற்கு மேலதிகமாக வடக்கிலும் கிழக்கிலுமுள்ள முக்கிய பிரச்சனை விடயமாக குறிப்பாக முரண்பாட்டு நிலைமை காரணமாக இடம்பெயர்ந்து நிரந்தர மீள் குடியிருப்பிற்கென நீண்ட காலமாகக் காத்திருப் போரிடையேயும், சுனாமி காரணமாக, சமீபத்தில் இடம்பெயர்ந் தோரிடையேயும் மீள்குடியேற்ற முன்னுரிமைகளை சமநிலைப் படுத்தும் விடயம் அமைந்துள்ளது. இவ்விடயத்தில் நிரந்தர மீள்குடியிருப்பினை, தற்போது நடைமுறையில் காணப்படும் வகுப்பு, சாதி, இன, மத அடிப்படையான சமூக அழுத்தங்களை அதிகரிக்காத வகையில், அல்லது முரண்பாடு, அழுத்தம் நிறைந்த புதிய பிரச்சனைகளை உருவாக்காத வகையில் முன் எடுத்துச் செல்லுதல் பெரும் சவாலாகவுள்ளது.
நாம் எதிர்நோக்கும் வேறுசில சவால்கள் யாவை?
கடற்கரைகளில் கட்டடங்களைக் கட்டுவது தொடர்பில் விசேடமாக அத்துமீறிக் குடியிருப்போரினால், குடியிருக்கப்படும் காணிகளை பெரும் சுற்றுலாத்துறைகள் பாரம்பரியமாக உரிமை கோரும் பகுதிகளில் அரசாங்கம் விதிக்க முயலும் தடைகள் பெரும் எண்ணிக்கையான மோதல்கள், முரண்பாடுகளுக்கு வழி வகுத்துள்ளது. சுனாமி பாதிப்பிற்குட்பட்ட சில பகுதிகளில், உதாரணமாக காலி, அம்பாறை மாவட்டங்களில் காணப்படும் கடும் காணிப் பற்றாக்குறை, நிரந்தர மீள் குடியேற்றத்திற்கென காணிகளை அடையாளங்கண்டு, ஒதுக்கீடு செய்வதில் பல்வேறு பட்ட அழுத்த நிலைமைகளுக்கு வழிவகுக்கின்றது. காணி அல்லது சொத்தினை பல ஆண்டுகாலமாக வாடகைக்கு, அத்துமீறி அல்லது வேறு வகையில் குடியிருந்து வாழ்ந்து வந்தவர்களுக்கும், சட்டபூர்வமாக அக்காணியின் சொந்தக்காரருக்குமிடையே சிறப்புரிமை காட்டுதல் சாத்திய அழுத்த நிலைமைக்கான திடீர் அச்சுறுத்தலொன்றாகவுள்ளது. அம்பாறை மாவட்டத்தில் காணி உரித்துடமை மீதான அழுத்த நிலைமையானது முரண்பாடு காரணமாக கைவிடப்பட்ட காணி அவற்றின் சொந்தக்காரரைவிட

சுனாமிக்குப் பின்னரான சூழல் பற்றிய உரிமை . II
வேறுபட்ட இன, மத, சமூகத்தவரால் குடியிருக்கப்பட்டு வரும் நிலைமை காரணமாக மேலும் சிக்கலானதாகவுள்ளது.
சீவனோபாய பிரச்சனை விடயங்கள் பொதுவாக நிரந்தர குடியிருப்பு விடயத்துடன் ஒன்றிணைந்து பிணைக்கப்பட்டுள் ளதால், அவற்றின் சொந்த அழுத்தங்களை அவை உருவாக்கு கின்றன. கரையுடன் அல்லது கரைக்கண்மித்த சீவனோபா யங்களுடனும், வாழ்க்கை முறைகளுடனும் அவர்களது வாழ்க் கையை இறுகப் பிணைத்துள்ள மீனவ சமூகத்தவரையும் ஏனைய சமூகத்தவரையும் மீளக் குடியமர்த்தும் விடயம் சுனாமி பாதிப் பிற்குட்பட்ட பல பகுதிகளில் முக்கிய பிரச்சனையாகவுள்ளது. இதற்கு மேலதிகமாக, நிலையாதார அபிவிருத்தியுடன் தொடர்பு பட்ட சூழல் அக்கறைகளையும், பிரச்சனைகளையும் கருத்திற் கெடுத்தல், சூழல் ரீதியில் நட்பானதும் நிலையானதுமான சக்திப்பாவனை, சாக்கடை கழிவு வெளியேற்ற முறை, குப்பை கூளங்களைப் போடும் முறை என்பவற்றுடன் குடியிருப்பு களையும் வீடுகளையும் வடிவமைத்தல் என்பன தொடர்பிலான அக்கறைகளைக் கவனித்தலும் எமது கவனத்தைக் கோருவன வாகவுள்ளன.
இத்தகைய சகல செயன்முறைகளிலும், மனித உரிமைகள், நீதி, தன் மானம் என்பவற்றிற்கு முன்னுரிமையும் முன்னு தாரணமும் வழங்கும் சுனாமியின் பின்னரான புனர்நிருமாணத் திற்காக பணியாற்றும் பெண்கள் பிரிவினர், மற்றும் சமூக அமைப்புப் பிரிவினர் என்ற வகையில் நாம் சுனாமியினால் பாதிப்புற்றோரில் அநேகர் வறியவர்கள், காணியற்றவர்கள், தமது சாதி, வகுப்பு அல்லது சிறுபான்மை, அந்தஸ்து காரணமாக புறமொதுக்கப்பட்டவர்களாகவுள்ள யதார்த்த நிலையை எதிர்கொள்கின்றோம். இத்தகைய ஒவ்வொரு சமூகத்திற் குள்ளேயும் பெண்களே தொடர்ந்து கவனிப்பு வழங்குநராகவும், குடும்ப/வீட்டுப் பொறுப்புகளை சுமப்பவர்களாகவும் காணப்படும் அதேவேளையில் வன்முறை, சமூக கட்டுப்பாடு, மெளனப் படுத்தல் என்பவற்றை எதிர்நோக்குபவர்களாக உள்ளார்கள். இப்பெண்கள் அவர்களது உரிமைகளை பாதுகாக்கவும், அவர்களது சொந்த குடும்பங்கள் மற்றும் சமூகங்களிடையேயும், நிவாரணம் மற்றும் உதவிகளை வழங்கவென எதிர்பார்க்கப்படும் அரசு, அரசுசாரா நிறுவனங்களிடையேயும் நிலவிவரும் வழமைகள்

Page 13
2 பேரழிவுகளுக்குப் பெண்கள் முகம் கொடுத்தல்
கட்டமைப்புகளை எதிர்கொள்வதற்கும் தமது உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் பெண்களை ஆதரித்தல் விடயமானது, பெண்களின் வாழ்க்கைமுறையை வரையறுத்து தீர்மானிக்கும் பல வரம்புகள், எல்லைகள் மீதான இடையறாத அத்துடன் முரண் பாடற்ற, கவனமான கலந்துரையாடல்கள், மீள் கலந்துரை யாடல்கள் என்பவற்றை வேண்டி நிற்கிறது.
1. சமூக மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சருவதேச மரபொழுங்கு
(ICCPR)
2. பொருளாதார, சமூக, கலாச்சார உரிமைகள் மீதான சருவதேச
மரபொழுங்கு (ICESCR)
3. சகலவிதமான இனப்பாகுபாடுகள் மீதான ஐ.நா. மரபொழுங்கு
(ICERD)
4. பெண்களுக்கு எதிரான சகலவிதமான பாகுபாடுகளையும் நீக்கல்
(CEDAW)
5. சித்திரவதைக்கெதிரான ஐ.நா. மரபொழுங்கு (CAT)
பிள்ளையின் உரிமைகள் மீதான ஐ.நா. மரபொழுங்கு (CRC)
7. புலம்பெயர் வேலையாட்கள் மற்றும் அவர்களின் குடும்ப அங்கத்த
வர்களின் உரிமைகள் மீதான ஐ.நா. மரபொழுங்கு (CMW)

2
பால்நிலை, அரசு மற்றும் சுனாமி மீள்நிர்மாணம்: இந்தியா, இலங்கைக்கு இடையிலான ஒப்பீட்டுப் பகுப்பாய்வு
- ரீட்டா மண்சந்தா
சுனாமிக்குப்பின்னரான கொள்கைகளை ஜனநாயகப்படுத்தலும் பால்நிலைப்படுத்தலும்
சுனாமி விருதுகளை வென்ற புகைப்பட ஆல்பமொன்றில் (Album) ஆற்றொணாத் துயருடன் தனது கைகளை அகல விரித்தவாறு, தமிழ்நாட்டுக் கடற்கரையொன்றில் வீழ்ந்து கிடந்தவாறு வெறித்து நோக்கியபடி பெண்ணொருத்தி காணப்படுகிறாள். துரதிர்ஷ்டமான அன்றைய காலைப் பொழுதில் அவளும் அவளது “சகோதரியும்” மீன் பிடிபடுமா எனக் கடற்கரையில் காத்திருந்த வேளையில் சுனாமி தாக்கியது. அதில் அவள் உயிர் தப்பினாள். ஆனால், அவளது அன்பிற்குரிய சகோதரி (நண்பி) உயிரிழந்தாள். பெண்கள் (சிறுவர்களும்தான்) சுனாமியினால் அதிகம் பாதிக்கப்பட்டார்கள் என்பதை இது எடுத்துக்காட்டுகிறது. சில கிராமங்களைப் பொறுத்தவரையில் சுனாமியினால் இறந்தவர்களுள் 60% பெண்களாவர். சுனாமியினால் பாதிக்கப்பட்ட சமுகங்களையும், குறிப்பாக பெண்களது நிலைமையையும், அதாவது பெண்கள் நேரடிப் பயனாளிகளாக முடியாமல், தங்கி வாழ்கின்ற அவல நிலைமையையும் இது எடுத்துக்காட்டுகிறது. ஆண் ஆதிக்க உள்ளூர் சமுதாயத்தில் மாத்திரமல்ல சூழ்ச்சிகரமான அரசாங் கங்கள் மற்றும் சுனாமி நிவாரணப் பணிகளையும் மீட்புப் பணிகளையும் மேற்கொள்கின்ற சர்வதேச நிறுவனங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள் ஆகியவற்றாலும்கூட தீர்மானம் மேற் கொள்ளும் செயற்பாட்டின் போது பரவலாகப் பெண்கள் தவிர்க்கப்பட்டுள்ளனர்.

Page 14
l4 பேரழிவுகளுக்குப் பெண்கள் முகம் கொடுத்தல்
சுனாமிக்குப் பின்பு அரசின் பதிலீட்டுச் செயற்பாடுகளை ஒப்பிட்டு நோக்குதல் மற்றும் சில பாரிய ஒத்த தன்மைகளை ஆராய்தல், குறிப்பாக பெண்களது ஜீவனோபாயத் தேவைகள் தொடர்பில் நன்நோக்கத்துடன் திட்டமிடப்பட்டிருந்தாலும் முறையாக அறிவிக்கப்படாத அரச தலையீடுகளின் காரணமாக இவற்றில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளையும், இடர்களையும் இக் கட்டுரை ஆராய்கின்றது. மேலும் மீன் பிடித் துறையுடன் தொடர்புடைய பெண்கள் பற்றிய அடிப்படைத் தரவுகள் இன்மை, அரசாங்கம், பல்தேசிய அமைப்புகள், அரச சார்பற்ற நிறுவனங்கள் ஆகியவை சுனாமிக்குப் பின்னரான ஜீவனோபாய வழிமுறை களைத் திட்டமிடுகின்றபோது காணப்படுகின்ற சில திரிபுகள் பற்றியும் இங்கு ஆராயப்படுகிறது.
மக்களது சிறப்பான பங்களிப்புகள் மிக அரிதாகவே இடம்பெற்றுள்ள அதேவேளை அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்ட நிவாரண மற்றும் மீள்கட்டமைப்பு நிகழ்ச்சித்திட்ட திட்டமிடல் மற்றும் நடை முறைப்படுத்தலின்போதுகூட பிரசைகள் என்ற வகையில் பெண் களது பங்களிப்பு பெற்றுக்கொள்ளப்படவில்லை. இவர்களது பங்களிப்பு இங்கு ஓரங்கட்டப்பட்டுள்ளது. இது ஒர் ஆச்சரியத்துக்குரிய விடயமல்ல என சுனாமிக்குப் பின்னரான செயற்பாடுகள் பற்றிய அண்மைக்கால அறிக்கை குறிப்பிடுகின்றது. உதாரணமாக சுனாமிக்குப் பின்னரான மீள்கட்டமைப்புப் பற்றிய பங்குபற்றுதல், பொறுப்புக் கூறல், வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை ஜனநாயகப்படுத்தல் தொடர்பான இலங்கை, இந்திய அரச சுட்டெண்கள் எங்குள்ளன? கரையோர மீன்பிடி சமூகத்திற்கும் பல்தேசிய தாக்க மதிப்பீட்டிலுள்ள இரண்டாம் கிராமிய மட்டத்திலுள்ள பொருளாதார ரீதியாக தங்கிவாழ்கின்ற சமுதாயத்திற்கும் இடையிலான தாக்கங்கங்கள் என்ன? கரையோர மீன்பிடித்தலுக்குப் பதிலாக துறைமுக மைய மீன்பிடித்தலை இந்தியா மேம்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கரையோர மீன்பிடித்தலில், மீன்பிடிக்கப்பட்டதன் பின்பு பெண்கள் காத்திரமான பங்களிப்பை வழங்குகின்றனர். இவர்களில் இது எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்துகின்றது என்பது கவனிக்கத்தக்கது.
ஆண் ஆதிக்க சமூகத்தில் பெண்களுக்கு எத்தகைய இடம் வழங்கப்பட்டுள்ளது? சமுதாயங்களை மீள்கட்டமைப்பதிலும்,

பால்நிலை, அரசு மற்றும் சுனாமி மீள்நிர்மாணம் . 15
சமுதாய வலையமைப்புச் செயற்பாடுகளிலும் பெண்களுக்கு எத்தகைய இடம் வழங்கப்பட்டுள்ளது? பெண்களுக்கும் ஆண்களுக்கும் சுனாமி ஏற்படுத்திய மாறுபட்ட தாக்கம் சரிவர அடையாளம் காணப்பட்டுள்ளதா? தாக்கம் மற்றும் தேவை மதிப்பீட்டு மட்டங்களில், திட்டமிடல், நிகழ்ச்சித்திட்ட வடிவமைப்பு, நடைமுறைப்படுத்தல் ஆகிய படிமுறைகளின் போது பால்நிலைப் பிரதானப்படுத்தலின் தேவை உணரப் பட்டுள்ளதா?
வெற்றுப் பிரதேசங்களைத் (buffer Zones) தீர்மானித்தல் அல்லது கரையோர ஒழுங்கமைப்பு வலயத்தை நடைமுறைப் படுத்தல் தொடர்பாக எங்காவது ஆலோசனைச் செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளதா? கைத்தொழில்சார் அகழ்வுகளுக்காகவும், உல்லாசப் பிரயாணத் துறை அபிவிருத்திக்காகவும் அவர்கள் கையொப்பமிட்டுள்ளதைத் தாம் அறிந்திருக்கவில்லையென தமிழ்நாட்டைச் சேர்ந்த கரையோர மக்கள் கவலையுடன் தெரிவித்ததாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக இயற்கைக்கு ஏற்படக்கூடிய அழிவுகள் தொடர்பில் "அனர்த்த முகாமைத்துவம்" என்ற தொனிப்பொருளில், தீவிர ஊடகவியலா ளரான நயோமி கெலின் போன்றவர்கள் கருத்துத் தெரிவித்த பொழுது மக்கள் அதிர்ச்சியுற்ற வர்களாகக் காணப்பட்டனர். நியோ லிபரல் நிகழ்ச்சி நிரல் தொடர்பாகவும் மக்களது கவனம் ஈர்க்கப்பட்ட போது அவர்கள் அதிர்ச்சியுற்றவர்களாகக் காணப் பட்டனர். கைத்தொழில் மற்றும் உல்லாசப் பிரயாணத்துறை அபிவிருத்தியாளர்களது (முதலாளி மார்கள்) நிகழ்ச்சி நிரலுக்கு வழிவிடாமல், பாதுகாப்பு என்ற பெயரில் வெளியேற்றப்பட்ட மக்களது உரிமைகளை மீளநிறுவுவதற்கு ஏதாவது முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டனவா?
இடம்பெயர்ந்த மக்கள் (ஒரு சமுதாயம் என்ற வகையில்) எங்கே சென்று குடியேற வேண்டுமென அவர்களுடன் கலந்தா லோசிக்கப்படுகின்றதா, அல்லது ஆகக்குறைந்தது இது தொடர் பில் அவர்களுக்கு அறிவிக்கப்படுகிறதா என்றால் அதற்கான சான்றுகளும் மிகக் குறைவாகவே உள்ளன. இவர்களுக்கெனத் தற்காலிக குடியிருப்புகள் கட்டப்படுகின்றன. இங்கு குடியிருக் கப்போகின்றவர்களது எவ்விதத் தேவையையும் கருத்திற் கொள்ளாது, பொருத்தமற்ற பொருட்களைப் பயன்படுத்தி இவை

Page 15
16 பேரழிவுகளுக்குப் பெண்கள் முகம் கொடுத்தல்
கட்டப்படுகின்றன. இவை வெற்று வீடுகளாகவே காணப்படு கின்றன. ஆனால் மீனவச் சமுதாயத்தைச் சாராத சுனாமியினால் பாதிக்கப்பட்ட, மிகவும் ஒரங்கட்டப்பட்ட மக்களாக வாழ்கின்ற வர்களுக்காக, தமிழ் நாடு கட்டிடத் தொழிலாளர் ஒன்றியம் அமைக்கின்ற தற்காலிக குடியிருப்புகள் ஒப்புநோக்கத்தக்கது.
மக்கள் தமது சமுதாயங்களை மீளக்கட்டியெழுப்பக் கூடிய விதத்தில் உரிமையை அடிப்படையாகக் கொண்ட அணுகு முறைக்கு முன்னுரிமை அளிக்கின்ற வழிமுறைகள் காணப்படு கின்றதா? அல்லது தங்கிவாழ்பவர்களுக்கான குடியேற்றத் திட்டங்கள் காணப்படுகின்றதா? இது தெடர்பில் நோக்குகையில் மேல் மட்டத்திலிருந்து கீழ் மட்டம் வரை தகவல்கள் மறுக்கப் படுகின்ற மனப்பாங்கே காணப்படுகின்றது. இது நிவாரணங்களை வழங்குவதிலும், வாழ்க்கையைக் கட்டியெழுப்பும் செயற்பாடு களிலும் மக்களது வலுவைக் குன்றச்செய்வதற்கான வழிமுறையாக அமைகிறது.
இலங்கையைப் பொறுத்தவரை நிவாரணம் மற்றும் மீளெழுச்சி முகாமைத்துவம் மத்தியப்படுத்தப்பட்ட கட்ட மைப்பைக் கொண்டதாகவே காணப்படுகின்றது. "துரித 6) ClijLDITGOTLb FFL'Lois Gil 60LOlil" (Rapid Income Recovery Housing) என்ற ஆவணத்தில் பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாட வேண்டுமென்றும், பால்நிலை அக்கறைகள் கருத்திற்கொள்ளப்பட வேண்டுமென்றும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலும் மேல்மட்டத்தில் எடுக்கப்படுகின்ற தீர்மானங்களே தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்படுவதாக ரவ்றன் (TAFREN) அமைப்பு தெரிவிக் கின்றது. இலங்கையைப் பொறுத்தவரை சுனாமியானது கரையோரங்களில் வாழ்கின்ற ஏழை மக்களை மட்டுமன்றி முரண்பாடுகளின் காரணமாக கடந்த 20 வருடங்களுக்கு மேலாக பாதிப்புற்றிருக்கும் வடகிழக்கு மக்களையும் தாக்கியது.
யுத்தநிறுத்த உடன் படிக்கைக்குப் பின்னர் சமஷ்டி ஏற்பாடுகள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நடைபெற்றாலும் உண்மையில் மத்திய அரசாங் கத்தினது அதிகாரத்தை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளே இடம்பெற்றதோடு புனர்வாழ்வு மற்றும் நிவாரணம் போன்றன அரசியல் மயப்படுத்தப்பட்டன. சுனாமிக்குப் பின்னரான மீள் நிர்மாணம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே கையொப்பமிடப்பட்ட P

பால்நிலை, அரசு மற்றும் சுனாமி மீள்நிர்மாணம். 17
Toms உடன்படிக்கையில் பால்நிலைப் பிரதிநிதித்துவம் தொடர்பாக உயர்மட்ட பிராந்தியக் குழு காணப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தாலும் தொடர்ச்சியாக இடம்பெறுகின்ற அரசியல் முரண்பாடுகளின் காரணமாக ஆரம்ப கட்டத்திலேயே இதனை நடைமுறைப்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டது.
இந்தியாவில் காணப்படுகின்ற நல்லுறுதிமிக்க சமகூழ்டி முறையானது ஆட்சி அமைதிக்கு வழிசமைப்பது மாத்திரமல்லாது அதிக அதிகாரப்பகிர்வுள்ளதாகவும் காணப்படுகின்றது. இதனால் மாநில மட்டங்களிலிருந்து பல்வேறு வகையான பதிலளிப்பு களைத் தோற்றுவிப்பதுடன் மாவட்ட மட்டங்களில் சுதந்திரமாக செயற்படுவதற்கும் முன்னெடுப்புகளை மேற்கொள்வதற்குமான குறிப்பிடத்தக்களவு அதிகாரங்கள் பகிரப்பட்டுள்ளன. இருப்பினும் ஆங்காங்கே அவ்வப்போது மேற்கொள்ளப்படும் முன்னெடுப்பு களையே இது உற்சாகப்படுத்துகிறது. நிறுவன ரீதியிலான கொள்கைகள் இங்கு கட்டியமைக்கப்படவில்லை. மேலும் தேசிய சபைகளுக்கான தேர்தல் இவ்வருட இறுதியில் நடைபெற இருப்பதால் கரையோர மீன்பிடிச் சமூகங்களைச் சேர்ந்தவர் களுடைய வாக்கு வங்கி முக்கியமானது. இதனைப் பெற்றுக் கொள்வதற்காக உள்ளூர் சமுதாய (சாதி ரீதியான பஞ்சாயத்து) கட்டமைப்புகளை வலுப்படுத்தவேண்டிய அவசியம் ஏற்பட்டது. இவ்வகையான மரபுக் கொள்கைகள் தமிழ்நாட்டு அரசாங்கத்தின் மீளெழுச் சிக் கொள்கைகளை எவ்விதத் தங்குதடைகளோ விமர்சனங்களோ இன்றி ஏற்றுக்கொண்டன. இதன் காரணமாக கடல் சார்ந்த மீன் பிடி சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் மீதான கவனம் இழக்கப்பட்டது. சுனாமியினால் பாதிக்கப்பட்டவர்களுள் 85% வீதமானவர்கள் இவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது இரண்டாம் நிலைக் கிராமத்தவர்களை வேண்டுமென்றே புறக்கணித்ததுடன் இம்மக்களுக்கு பாரபட்சம் காட்டியதாகவும் விளங்கியது. உதாரணமாக கடற்றொழிலாளர்கள் அல்லாதவர்களின் வீடுகள் இவ்வாறு முழுமையாக பாதிப் படையாமல் இருந்திருக்கலாம். ஆனால் இவர்களது ஜீவனோ பாயத் தொழில்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம். அல்லது அழிவுற்றிருக்கலாம். உதாரணமாக உப்பளங்களில் சகதி நிரம்பிவழிதல், பண்ணைகள் வெள்ளத்தால் பாதிப்படைதல், உப்பு நீர் உட்புகுதல், தும்புத் தொழிலாளர்களது தும்பு ஊறவைக்கும் நிலங்கள் பாதிக்கப்படுதல் போன்றன நடைபெற்றிருக்கலாம்.

Page 16
8 பேரழிவுகளுக்குப் பெண்கள் முகம் கொடுத்தல்
இவர்களுள் பெரும்பாலானவர்கள் தலித்துகளாவர். இவர்கள் வரலாற்று ரீதியாக பல்வேறு விதமான ஒடுக்குமுறை களினாலும் பாரபட்சத்தினாலும் பாதிக்கப்பட்டவர்களாவர். மீனவ சமுதாயத்தினர் பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் சில பலன்களைப் பெற்றுள்ள போதிலும் இந்திய சாதிக் கட்டமைப்பில் சமூக ரீதியாக இன்னும் உள்வாங்கப் படவில்லை. சுனாமி நிவாரணம் மற்றும் மீளெழுச்சி உரிமங் களைப் பெற்றுக் கொள்வதிலும் கீழ் சாதியினருக்கும் தலித் சமூகத்தினருக்கும் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது. சுனாமிச் செயற்பாடுகளின்போது தலித் சமூகத்தினர் அதிகளவிலான பாரபட்சங்களை எதிர் கொண்டனர். மேலும் பால் நிலை அக்கறைகளையும் கருத்திற் கொள்ளல் வேண்டும். சுனாமி தொடர்பான செய்திகள், ஏனைய ஆக்கங்கள் பற்றி நாம் துரிதமாக மீட்டிப்பார்க்கின்றபோது பால்நிலை பற்றிய ஒரேயொரு ஆக்கம் மாத்திரமே பெண்ணிய எழுத்தாளரான “கல்பனா சர்மா” அவர்களினால் சுனாமி பெண்கள் மீது ஏற்படுத்திய தாக்கம் என்ற தொனிப் பொருளில் ஒக்ஸ்பாம் அறிக்கையில் எழுதப்பட்டிருந்தது. இது மட்டுமே இந்து பத்திரிகையின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டிருந்தது.
கரையோர சாதிய பஞ்சாயத்து முறைமைகளை நோக்கு கையில் இவை ஆண் ஆதிக்கம் மிக்கதாகவே காணப்படுகின்றன. மேலும் சமய ரீதியாகவும் (அரச தலையீடுகள் மூலமாகவும்) ஆணாதிக்கம் வலுப்படுத்தப்படுகிறது. உள்ளூர் சமுதாய ஆட்சி முறைமைகளில் பெண்கள் உள்ளடக்கப்படுவதில்லை. இதன் காரணமாக சாதாரண நிலைமைகளின் போது அல்லது சிக்கல் மிகுந்த காலப்பகுதியிலே பெண்களது தேவைகள், அக்கறைகள் தொடர்பாக குறைவான கவனம் செலுத்தப்படுகின்றது அல்லது முழுமையாகக் கவனம் செலுத்தப்படாத சந்தர்ப்பங்களும் உள்ளன. உள்ளூராட்சித் தேர்தல்களின்போது 33% வீதமான ஆசனங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட வேண்டுமெனக் குறிப்பிடப்பட்ட போதிலும் “கரையோரச் சமூகங்களைச் சேர்ந்த பெண்களுக்கு சாதகமாக அதிகாரப்பரவலாக்கல்கள் ஆட்சி முறைமைகள் எவ்விதத்திலும் உருவாக்கப்படவில்லை" என ஆய்வாளரும் செயற்பாட்டாளருமான நளினி நாயக் தெரிவித் துள்ளார்.

பால்நிலை, அரசு மற்றும் சுனாமி மீள்நிர்மாணம் . 9
இலங்கையைப் பொறுத்தவரையில் தேசிய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் பெண்ணியம் தொடர்பான ஆட்சிக் கொள்கைகள் வளர்ச்சி பெற்றுள்ளன. பெண்கள் தொடர்பான தேசியக் குழு (பெண்கள் வலுவூட்டல் அமைச்சு), UNIFEM, UNFPA மற்றும் பெண்கள் தொடர்பான பல்வேறு விதமான அமைப்புகள், அரச சார்பற்ற நிறுவனங்கள் போன்றன சுனாமி நிவாரண மீளெழுச்சிக் கொள்கைகளில் பால் நிலை தொடர்பான பொறுப்புக்கூறல்களை வழியுறுத்தின. ஆனால் இந்தியாவில் இவ்விதமான நிலைமைகள் காணப்படவில்லை.
பால்நிலை சரிபார்த்தல் பட்டியல் (Checklist)
பால்நிலை தேசிய கொள்கைகளின் ஒருசில பரந்த குறிகாட்டிகள் எவ்வாறு தோன்றுகின்றன? (உ+ம்)
(1) பால் தொடர்பான தனித்தனியான தரவுகளின் முக்கியத் துவத்திற்கு அழுத்தம் வழங்குகின்ற வடிவங்கள். (ii) சுனாமியின் தாக்கம், தேவைகளை மதிப்பிடல், கொள்கைகளைத் திட்டமிடல், நிகழ்ச்சிநிரல் நடை முறைப்படுத்தல் ஆகிய சகல விடயங்களிலும் தேசிய (மாநில மட்டங்கள் உள்ளடங்கலாக) பெண்கள் பொறிமுறையின் கட்டமைப்பு ரீதியான ஈடுபாடு.
(ii) கலாசார நடைமுறைகளை விட பால்நிலை ரீதியான உடற் பாதுகாப்பு மற்றும் கூருணர்வு அக்கறைகளை முன்னுரிமைப்படுத்துதல்.
(iv) முகாம் குழுக்கள், மாவட்ட, மாகாணமட்ட இயக்கக் குழுக்கள், அனர்த்த முகாமைத்துவக் குழுக்கள் ஆகியவற்றில் பால்நிலைச் சமநிலை, பால்நிலைக் கூருணர்வு தொடர்பாக கவனம் செலுத்துதல்.
(V) பொருளாதார முகவர்கள், சமுதாய முகாமையாளர்கள் என பெண்களது பல்வேறுபட்ட வகிபாகங்களை அங்கீகரிப்பதுடன் அவர்களை வலுப்படுத்துதல்.
(vi) பாதிப்புறு நிலையிலுள்ள குழுக்கள், பெண் தலை மைத்துவ வீடுகள், வயதான பெண்கள் (ஆண்கள்)

Page 17
2O பேரழிவுகளுக்குப் பெண்கள் முகம் கொடுத்தல்
ஆகியோர் வறுமையிலிருந்து விடுபடுவதற்கேற்ற விதத்தில் அவர்களது விசேட தேவைகள் மீது கவனம் செலுத்துதல், மற்றும் வழமையான தையல் தொழில், இடியப்பம் விற்றல் ஆகியவற்றிற்கு அப்பால் ஆக்கபூர்வ மாகச் சிந்தித்தல்.
(vi) விதவைகள் மற்றும் காணாமல் போனவர்களது தேவைகள் தொடர்பாக சமுதாயப் பராமரிப்புகளை ஏற்படுத்தும் விதத்தில் கவனத்தை ஈர்த்தல், குடும்பத்தி லுள்ள வயதானவர்கள் மற்றும் இளையவர்களைப் பராமரிப்பதற்கான முறைகள் மற்றும்,
(vii) சொத்துக்கள், விசேடமாக காணி, வள்ளங்கள், மீன்பிடி உபகரணங்கள் போன்றவற்றைப் பெண்கள் பெற்றுக் கொண்டு அதனை அவர்களே கட்டுப்படுத்தக்கூடிய விதத்திலான சட்டத் திருத்தங்களைத் துரிதமாக நடைமுறைப்படுத்தல்.
இலங்கையையும் இந்தியாவையும் எவ்வாறு தரப் படுத்துவது? உதாரணமாக, பால் தொடர்பான் தனித்தனித் தரவுகளைப் பொறுத்தவரையில் இந்தியாவில் தமிழ்நாடு மற்றும் கேரளா உள்ளடங்களாக பல மாநில அரசுகள் மீனவக் குடும்பங்கள் தொடர்பான அடிப்படைப் புள்ளிவிபரத் தரவுகளைத் திரட்டி யுள்ளன. ஆனால் பால் தொடர்பான தனித்தனித் தரவுகள் பற்றிய பால் விகிதத்தைப் பதிவு செய்வதற்கு மாத்திரமே இது மட்டுப்படுத்தப்பட்டதாயுள்ளது. (ரூத் மனோரம்மா அவர்களின் கருத்துப்படி தமிழ் நாட்டில் சாதிய பஞ்சாயத்தின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட புள்ளிவிபரக் கணிப்பீட்டின்போது பெண் தலைமைத்துவ வீடுகளை தவிர்ப்பதற்கான முயற்சிகள் மேற்கொள் ளப்பட்டன) குறிப்பாக மீன்பிடித் துறையில் பெண்களது பணிகள் தொடர்பாக எதுவும் குறிப்பிடப்படவில்லை. சுனாமிக்குப் பின்னரான ஜீவனோபாயத் திட்டங்களில் பால்நிலை கூருணர்வு தொடர்பான திட்டங்களை மேற்கொள்வதற்கு இது முக்கிய மானது. சுனாமிக்குப் பின்பு உத்தியோகபூர்வ தரவுத் திரட்டல் படிவங்களில் பால் தொடர்பான தனித்தனித் தரவுகள் திரட்டு வதற்கான விடயங்கள் காணப்படவில்லை. சமூகப் பணி பாடசாலைகள், ஏனையவர்கள் மற்றும் ஏனைய மாநிலத்தை

பால்நிலை, அரசு மற்றும் சுனாமி மீள்நிர்மாணம். 2
அடிப்படையாகக் கொண்ட கல்வி நிறுவனங்கள் முன்வந்து இவ் இடைவெளியை நிரப்புவதற்கு உற்சாகப்படுத்தப்பட்டன.
சுனாமிக்குப் பின்னர் இலங்கையில் பால் தொடர்பான தனித்தனித் தரவுகளைத் திரட்டுவதற்கு பல்வேறு வகையான நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் பால்நிலை நடுநிலை தொடர்பான படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் உள்ளடக்கப்படவில்லை. இதன் பெறுமதியை அரச நிர்வாகத்தைச் சேர்ந்தவர்கள் சரிவர உணர்ந்துகொள்ளவில்லை என்பது தெளிவாகின்றது. இவ்வகையான விடயங்கள் பெண்கள் தேசிய ஆணைக்குழு (NCW), UNIFEM மற்றும் அனர்த்த முகாமைத்துவ பெண்கள் கூட்டமைப்பு முதலியவற்றின் ஆய்வுகள் போன்றன பல நிறுவனங்களால் மீறப்பட்டுள்ளன. மேலும் திரட்டப்பட்ட பல தரவுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டு அட்டவணைகளாக இன்னும் ஒழுங்குபடுத்தப்படவில்லை. குறிப்பாக இவ்வகையான தரவுகள் மீள்நிர்மாண நிகழ்ச்சித்திட்ட திட்டமிடலில் உள்ளடக்கப்படுவது மிக முக்கியமானது. உள்ளூர் நிலைமைகளைப் பற்றி சரியான விழிப்புணர்வு இன்மையின் காரணமாக வினாக் கொத்துக்களை வடிவமைப்பதில் பல குறைபாடுகள் காணப்படுகின்றன. இதன் காரணமாக ஏனைய விடயங்களிலும் முழுமையற்ற தரவுகளை உள்ளடக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. உதாரணமாக அழிந்த அல்லது பாதிக்கப்பட்ட சொத்துக்கள் மற்றும் உடைமைகள் தொடர்பான தரவுத் திரட்டல் பட்டியலில் உள்ளவைகள், மீன்பிடி உபகர ணங்கள், சைக்கிள்கள் போன்றன குறிப்பிடப்படவில்லை. சைக்கிள்கள் ஆகியன ஆண்களுக்கு மட்டுமன்றி பெண்களும் மீன்களை மற்றும் ஏனைய பொருட்களை சந்தைக்கு எடுத்துச் செல்வதற்கு அவசியப்படுகின்றன. மீன்பிடித் துறையைச் சார்ந்த பெண்களது ஜீவனோபாயத் தொழில்கள், பொருளாதாரம் பற்றிய தகவல்கள் இன்மை காரணமாக பல சிரமங்கள் ஏற்பட்டன. மேலும் உள்ளூர்த் தேவைகளைத் திட்டவட்டமாக எடுத்துரைக் கக்கூடிய பாரிய மாதிரி ஆய்வுகள் வடிவமைக்கப்படவில்லை. இலங்கையின் மேற்குக் கரையோரப் பகுதிகளில் வசிக்கின்ற கத்தோலிக்க மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த பெண்கள் மீன்களைப் பதப்படுத்துதல், சந்தைக்கு எடுத்துச் செல்லல் போன்ற கரையோரச் செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும் அதேவேளை

Page 18
22 பேரழிவுகளுக்குப் பெண்கள் முகம் கொடுத்தல்
தெற்கிலே பெளத்தர்கள் அதிகமாக வாழ்கின்ற பிரதேசங்களில் இவ்விதமான செயற்பாடுகள் சமூகரீதியாக ஏற்றுக்கொள்ளப் பட்டன அல்ல எனவும் சந்திரிக்கா சர்மா தனது "கரையோரச் சமூகங்களைச் சார்ந்த பெண்களது ஜீவனோபாயம்” என்ற ஆய்வில் குறிப்பிட்டுள்ளார்.
பால்நிலையைப் பிரதானப்படுத்தும் குறிகாட்டிகள் தேசிய, அரச (சமகூழ்டி) மட்ட பெண்கள் தொடர்பான பொறிமுறைகளின் கட்டமைப்பு ரீதியான ஈடுபாடாகும். தீர்மானம் மேற்கொள்ளும் அமைப்புகளில் பெண்கள் உள்ளடக்கப்படாதவரை அவர்களது அக்கறைகள் சிறப்பாக கவனிக்கப்படமாட்டாது என்பதும், அவர்களது தேவைகளோ அல்லது வளங்களோ முன்னுரிமைப் படுத்தப்படமாட்டாது என்பதும் தெளிவு. இலங்கையைப் பொறுத்தவரையில் கட்டமைப்பு ரீதியான விடயங்களை நோக்குகையில் தேவை மதிப்பீடு மற்றும் தாக்கம் தொடர்பான குழுக்களின் நிகழ்ச்சித் திட்டங்களை அமுல்படுத்தல் போன்ற வற்றில் பெண்கள் தேசிய ஆணைக்குழு உள்ளடக்கப்படவில்லை. சமூக சேவைகள் அமைச்சு அதனோடு தொடர்புடைய இணை அமைச்சுகளும் இவற்றில் சம்பந்தப்பட்டுள்ளன. ஆனால் பெண்கள் வலுவூட்டல் பிரிவு உள்ளடக்கப்படவில்லை. தேவை தொடர்பான பல்தேசிய மதிப்பீட்டின் முதற் கட்டம் பால்நிலை தொடர்பான விடயங்களைக் கொண்டிருக்கவில்லை. ஆனால் இரண்டாம் கட்டத்தில் பால்நிலை தொடர்பான விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தாலும் அவை மேலதிகமாகவே இணைக்கப் பட்டிருந்தன. ஒன்பது பல்தேசிய நாடுகளின் மதிப்பீட்டுக் குழுவுக்கு இலங்கை அரசாங்கம் தனது அரச அதிகாரிகளையும் உறுப்பினர்களாக அனுப்பியிருந்த போதிலும் பால் நிலை அக்கறைகளைக் கருத்திற்கொண்டு மகளிர் அமைச்சைச் சேர்ந்த பிாதிநிதிகள் இதில் உள்ளடக்கப்படவில்லை.
மட்டக்களப்பு மாவட்ட பிரதேச செயலாளர் போன்ற அரச அதிகாரிகள் பால் நிலைக் கூருணர்வு தொடர்பான தமது தனிப்பட்ட நல்லெண்ணங்களை வெளிப்படுத்தி, பாதிப்புக்களை மதிப்பிடுதல் தொடர்பான 13 குழுக்களில் 7 பெண்களை உள்ளடக்குவதற்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டனர். ஆனால் இது ஒரு நிறுவனமயப்பட்ட அல்லது ஒன்றிணைக் கப்பட்ட பிரதிபலிப்பு அல்ல. அவ்வப்போது ஆங்காங்கே மேற்கொள்ளப்பட்ட ஒரு விடயமாகும்.

பால்நிலை, அரசு மற்றும் சுனாமி மீள்நிர்மாணம் . 23
மட்டக்களப்பு நெல் சந்தைப்படுத்தும் முகாமில் காணப் பட்டது போன்று பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை. இதுபற்றி ஆண் அதிகாரிகள் அறிந்திருந்தும், தொடர்ச்சியாக முகாம் குழுக்கள் ஆண் ஆதிக்கம் மிக்கதாகவே காணப்படுகின்றன. சுனாமிக்குப் பின்னரான நிவாரணச் செயற்பாடுகளை கண்காணிப்பதற்காக பால்நிலை அவதானிப்பு அமைப்பொன்றை நிறுவுவதற்காக பெண்கள் அமைப்புகள் மேற்கொண்ட முயற்சியின் காரணமாக பால்நிலைப் பொறுப்புக் கூறலில் குறிப்பிடத்தக்களவு மாற்றங்கள் ஏற்பட்டன.
இந்தியாவைப் பொறுத்தவரை, தேசிய அனர்த்த முகா மைத்துவ இணையத்தளம் இப்பணியுடன் தொடர்புடைய பல்வேறு மத்திய அமைச்சுகளைப் பட்டியலிட்டுள்ளது. ஆனால், பெண்கள், சிறுவர் பராமரிப்புத் திணைக்களங்களை உள்ளடக்கிய மனிதவள அமைச்சு இங்கு உள்ளடக்கப்படவில்லை. இங்கு அதிகளிவில் அதிகாரம் பரவலாக்கப்பட்டுள்ளது என்பதை கருத்திற்கொள்ள வேண்டும். மேலும் அக்கறையுள்ள பல விடயங்கள் மாநில அரசுகளுக்குள்ள விடயமாக அல்லது ஆகக் குறைந்தது இணக்கத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டிய விடயங்களாக இணங்காணப்பட்டுள்ளன. இச்சந்தர்ப் பத்தில் சுனாமி நிவாரணம் தொடர்பாக பொதுமக்களது அபிப்பிராயத்தைப் பெற்றுக்கொள்வதற்காக தமிழ்நாட்டு மாநில பெண்கள் ஆணைக்குழுவின் ஈடுபாடு தொடர்பில் கவனத்தை ஈர்ப்பது சிறப்பானது.
இருப்பினும் மாவட்ட தலைமையகங்களில் உள்ள தனிப்பட்ட அதிகாரிகளின் பிரகாரமே பாரிய அளவில் பால்நிலைக் கூருணர்வு தங்கியுள்ளது. பால்நிலையை அடிப்படை யாகக் கொண்ட வன்முறைகள் தொடர்பான அக்கறைகள் காணப்பட்ட போதிலும் சுனாமிக்குப் பின்னரான ஆரம்பக் கட்டங்களில் தமிழ்நாடு, கேரள அரசாங்கங்கள் பாதிக்கப்பட்ட கிராமங்களில் மற்றும் முகாம்களில் பெண் தீயணைப்புப் படை அதிகாரிகள், பெண் பொலீஸ் அதிகாரிகள், பெண் வைத்தியர்கள் ஆகியோரை சேவைக்கமர்த்தியதைக் காணலாம்.
திருமணமான தம்பதிகளுக்கு சொந்தமான நிரந்தர வீடுகளை அவர்கள் இருவரது பெயருக்கும் பதிவு செய்ய கேரள அரசாங்கம் இணங்கியது. இதனால் இருவரது அனுமதியின்றி மற்றவர்

Page 19
24 பேரழிவுகளுக்குப் பெண்கள் முகம் கொடுத்தல்
அவ்வீடுகளை விற்க முடியாது என ஒக்ஸ்பாம் அறிக்கையொன்று தெரிவிக்கின்றது. 1980-90 களில் மீனவ சமுதாயத்திற்கென நலன் புரித் திட்டங்களை (வீடமைப்பகளை) கேரள அரசு உருவாக்கியது. உற்பத்தித் துறையில் பெண்களது வகிபாகத்தை அங்கீகரித்ததுடன் பால்நிலைக் கூருணர்வையும் இது எடுத்துக் காட்டுகின்றது. மேலும் சந்தைக்குப் பொருட்களை எடுத்துச் செல்வதற்கு பெண்களுக்கு போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்ததுடன் சேமிப்பு மற்றும் நிவாரணத் திட்டங்களிலும் அவர்களை இணைத்துக் கொண்டது. தம்பதிகளது பெயர்களுக்கு நிரந்தர வீடுகளைப் பதிவு செய்துகொள்வதற்கும், கன்னியாகுமரி LDITGILL 56.5LigaOSTIsildupgratiti (Oxfam - The Impact of Tsunami on Women, March 2005).
கடலூரில் (தமிழ்நாடு) தனியார் நிறுவனங்களால் வழங்கப்பட்ட வள்ளங்களை ஆறு பேர்களது பெயருக்கு கூட்டாகப் பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளை அப்பிரதேச மாவட்டக் கலக்டர் மேற்கொண்டார். இவர்களுள் ஒரு மீனவர், வள்ளங் கட்டுனர், தச்சன், மற்றும் சுனாமியின் காரணமாக விதவையான மீனவப் பெண் ஆகியோர் உள்ளடங்குவர். (Front Line 11, 2005). பிடிக்கப்படுகின்ற மீன்களிலிருந்து பெண்களுக்கும் வருமானம் கிடைக்கின்றது என்பதை இது உறுதிப்படுத்தியது. பாரம்பரிய ரீதியில் நோக்குகையில் பல்வேறு விதமான இவ்வகைச் சமூகங்கள் தாய் வழிச் சமூகங்களாகும், இங்கு மீன்பிடி உபகர ணங்கள், வள்ளங்கள் ஆகியவற்றின் உரிமையாளர்களாக பெண்களே திகழ்ந்தனர்.
பிடிக்கப்படுகின்ற மீன்களில் பெண்களுக்கும் பங்கு உள்ளதென்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்கான ஓர் உத்தியாக சுனாமிக்குப் பின்னரான புனர்வாழ்வுத் திட்டங்களின்போது பெண்களுக்கும் மீன்பிடி வள்ளங்களை சில அரச சார்பற்ற நிறுவனங்கள் வழங்கியுள்ளதாக தனது ஆய்வில் நலினி நாயக் தெரிவிக்கின்றார். அரசில் நிறுவன ரீதியான பால்நிலைக் கூருணர்வுகள் காணப்படுகின்றதா அல்லது மாவட்டத்திலுள்ள குறிப்பிட்ட அதிகாரியிடம் இது தங்கியிருக்க வேண்டுமா என்ற முக்கியமான கேள்விகள் இங்கு எழுகின்றன. கட்டமைக்கப்பட்ட ஒழுங்கமைப்பில் குறிப்பிட்டுள்ளவாறு பால் நிலையைப் பிரதானப்படுத்துவதற்கு நிறுவன ரீதியான அணுகுமுறைக்கும்

பால்நிலை, அரசு மற்றும் சுனாமி மீள்நிர்மாணம். 25
அவ்வப்போது மேற்கொள்ளப்படும் அணுகுமுறைக்குமிடையில் வேறுபாடுகள் காணப்படுகின்றன.
இலங்கையைப் பொறுத்தவரை ஆண் கட்டுப்பாடுடைய தாகவே நிவாரண விநியோகக் கட்டமைப்புகள் காணப்படு கின்றன. சுனாமியினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ரூபா. 5000 அவர்களது வீட்டுத் தலைவருக்கு அல்லது பிரதான குடியிருப் பாளருக்கு வழங்கப்பட்டது. இவ்வகையான பயனாளிகள் ஆண்களாகவே காணப்பட்டனர். பெட்ரீசியா ஜே. அலய்லிமா g5607 g. "Gender dimensions of Tsunami related Assistance” 676ip ஆய்வில் "கூட்டுக் கணக்குகளை (Joint Accounts) ஆரம்பிக்கும்படி வங்கி மக்களைத் தூண்டினாலும் இது ஓரளவுக்கே வெற்றிகரமாக அமைந்தது" என மக்கள் வங்கியைச் சேர்ந்த ஓர் அதிகாரி தன்னிடம் குறிப்பிட்டதாகத் தெரிவிக்கிறார். அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தமது வருமானத்தின் நிமித்தம் 80% வீதம் நலன் புரி நிதியிலேயே தங்கியுள்ளதாக மதிப்பிடப் பட்டுள்ளது.) மேலும் வீடு, உணவு, பாடசாலை செல்லும் பிள்ளைகளுக்கான எழுது கருவிகள் போன்றவற்றிற்குப் பெண்கள் முன்னுரிமை அளித்தாலும், இவர்களது முன்னுரிமைகள் ஆண்களால் மறுதலிக்கப்படுகிறது. ஆண்கள் இப்பணத்தை சைக்கிள், ரேடியோ போன்றவற்றிற்காகவே செலவு செய்ய முன்னுரிமை அளிக்கின்றனர். சன நெருக்கடிமிக்க முகாம்கள், நலன்புரி நிலையங்கள், தற்காலிக குடியிருப்புகள் போன்றவற்றில் வசிக்கின்ற பெண் பிள்ளைகளைப் பாதுகாப்பதற்காக அவர்களது தாய்மார்கள் படும் துன்பம் தொடர்பாகவும், அவர்கள் செலவிடும் நீண்ட நேரம் தொடர்பாகவும் அவர் வலியுறுத்திக் கூறினார். ஆனால் கிடைக்கின்ற வருமானங்களை, மது போன்ற விடயங் களுக்கும் ஆண்கள் சுயாதினமாகப் பயன்படுத்துகின்றனர்.
சுனாமி நிவாரணம் தொடர்பான விடயங்களை ஆராய்கை யில், “நிவாரணம் மற்றும் மீள்கட்டமைப்பு தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளல் ஆண் ஆதிக்கம் மிக்கதாகவே சகல மட்டங் களிலும் காணப்படுகின்றது. அரசாங்கம், நன்கொடையாளர் கலந்துரையாடல், மீள்கட்டமைப்புக் கருத்திட்டத் தீர்மானங்கள் போன்ற சகல மட்டங்களிலும் பெண் களது கருத்துக்கள் பிரதிநிதித்துவப்படுத்தப்படவில்லை. மேலும் கடற்றொழில் (வலை திருத்துதல், மீன்களைத் துப்புறவு செய்து விற்பனை செய்தல்),

Page 20
26 பேரழிவுகளுக்குப் பெண்கள் முகம் கொடுத்தல்
செங்கல் தயாரிப்பு, தும்புத் தொழில் போன்ற ஜீவனோபாயத் தொழில்களுக்கு பெண்கள் காத்திரமான பங்களிப்பை நல்கிய போதிலும், இவற்றை மீளாய்வு செய்கையில் இவர்களது கருத்துக்கு உரிய இடம் வழங்கப்படவில்லை. பொருளாதாரச் செயற்பாடுகளுக்காக உதவிகள் வழங்கும்போது பால்நிலை ரீதியாகப் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது என்பது தெளிவு" என பெட்ரீசியா ஜே. அலய்லீமா தனது ஆய்வினை நிறைவு செய்கிறார்.
பால் நிலை தொடர்பான விடயங்களுக்கு குறைவான அக்கறையே செலுத்தப்பட்டமையின் காரணமாக, சுனாமி நிவாரணம் மற்றும் மீள் கட்டமைப்புச் செயற்பாடுகளில் கவனத்தை ஈர்க்கும் முகமாக புரிந்துணர் உடன்படிக்கை யொன்றை வரைவதற்கு அமைச்சர் அவர்களைக் கோரும் தேவை மகளிர் அமைச்சிலுள்ள தேசிய பெண்கள் ஆணைக்குழுவிற்கு நேரிட்டது. இதனை அமைச்சரவை ஏற்றுக்கொண்டதன் காரணமாக, தேசிய பெண்கள் ஆணைக்குழு (NCW) போன்ற அமைச்சிலுள்ள பிரிவுகள் வலுப்பெற்றன. இதன் காரணமாக அனர்த்த முகாமைத்துவப் பிரிவுகளில் சுனாமி மீளெழுச்சி நிகழ்ச்சிகளில் பால்நிலைப் பிரதானப்படுத்தல் தொடர்பாக பிரதேச மட்டங்களிலுள்ள அதிகாரிகளை சென்றடையக்கூடிய விதத்தில் பல்வேறு வகையான நிகழ்ச்சித் திட்டங்களை மாவட்ட மட்டத்தில் மேற்கொள்ள முடிந்தது. மேலும் காணி உரிமங்கள் தொடர்பாக தற்போது பெண்கள் எதிர்கொள்கின்ற முக்கிய பிரச்சினைகள் தொடர்பாகவும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை வீடொன்றை சீதனமாக வழங்கும் நடைமுறை பொதுவாகக் காணப்படுகிறது. அரச சார்பற்ற சில நிறுவனங்களான மாற்றுக் கொள்கைகளுக்கான நிறுவனம் மேற்கொண்ட "வன்னி, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு பெண்கள் சொத்துக்களின் உரிமைகளைப் பெற்றுக்கொள்ளல்" தொடர்பான ஆய்வு (2005 ஏப்பிரல்) மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 17 கிராமங்களில் பெண்களது காணி உரிமை தொடர்பாக சூரியா நிறுவனம் மேற்கொண்ட ஆய்வு போன்றன சுனாமிக்குப் பின்னரான அரச கொள்கைகளில் பெண்கள் காணிகளின் உரிமையைப் பெற்று அதனை கட்டுப்படுத்தும் அவசியத்தை உறுதிப்படுத்தக்கூடிய பயன்மிக்க தகவல்களை வழங்கியது.

பால்நிலை, அரசு மற்றும் சுனாமி மீள்நிர்மாணம் . 27
அரசாங்கத்தினால் வழங்கப்படும் காணிகள் கூட்டு உரிமத்தின் அடிப்படையில் வழங்கப்பட வேண்டுமென பல்வேறுபட்ட பெண்கள் அமைப்புகளும், தேசிய பெண்கள் ஆணைக்குழுவும் தொடர்ச்சியாகக் கோரிக்கைகளை விடுத்தன. மேலும் மகனை வாரிசாகக் கருதும் பால்நிலைப் பாரபட்ச ஏற்பாடுகளில் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டுமெனவும் இவை ஆதரவு திரட்டுகின்றன. இவ்வாறான திருத்தமொன்று மேற்கொள்ளப்படாதவரை அரசாங்க அதிபர்களுக்கு கூட்டு உரிமம் தொடர்பான பணிப்புரைகளை வழங்க முடியாது என காணி ஆணையாளர் தெரிவித்தார். இவ்வகையான சட்டத் திருத்தங்கள் வரையப்பட்டு அமைச்சரவையின் அங்கீகாரமும் அதற்குப் பெறப்பட்டுள்ளது. மேலும், பாராளுமன்றத்தின் அங்கீகாரத்திற்காகத் தற்போது இது முன்வைக்கப்பட்டுள்ளது. இவ்வகையான திருத்தங்கள் தனது நுண் ணாய்வுக்காகச் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென தேசிய பெண்கள் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.
TAFREN மற்றும் TAFOR ஆகியவற்றின் அவதானிப்புகளின் பிரகாரம் இவ்வகையான விடயங்கள் சுனாமிக்குப் பின்னரான நிகழ்ச்சித் திட்டங்களின் பிரதான கட்டமைப்பிற்கு வெளியிலேயே காணப்படுகிறது. TAFREN இன் நிகழ்ச்சித்திட்ட ஆவணம், விசேடமாகத் துரித வருமானம் ஈட்டல் நிகழ்ச்சித் திட்டம் போன்றன பால் நிலை அக்கறைகளை உள்ளடக்கியிருந்த போதிலும், இவை கள மட்டங்களில் நடைமுறைப்படுத்தப் படுகின்றனவா என்பதை கண்காணிப்பதற்கோ அல்லது அவற்றை கூட்டிணைப்பதற்கோ ஏற்ற விதத்தில் பெண்கள் அமைப்புக் களுடனோ அல்லது பொறிமுறைகளுடனோ கலந்தாலோ சனைகளை மேற்கொள்ளக்கூடிய கட்டமைப்பு இல்லை. பால்நிலை அக்கறைகள் முறையாக உள்ளடக்கப்படுவதன் அவசியம் உணரப்பட்டுள்ளது. மேலும் சுனாமி மீள்நிர்மாணம் தொடர்பான பால் நிலை மைய ஆலோசனைக் குழுவை அமைப்பதற்கான முயற்சிகளும் இடம்பெறுகின்றன.
மேலும் இலங்கை அரசாங்கத்தின் உதவிக் கொள்கைகள் மற்றும் நகர அபிவிருத்தி, வீடமைப்பு அமுல்படுத்தல் வழிகாட்டி களில் காணப்படுகின்ற குறைபாடுகள் தொடர்பாக சனாதிபதி அவர்களின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு நிருபம் ஒன்றை

Page 21
28 பேரழிவுகளுக்குப் பெண்கள் முகம் கொடுத்தல்
மட்டக்களப்பைச் சேர்ந்த அனர்த்த முகாமைத்துவ பெண்கள் கூட்டமைப்பு (2005) அனுப்பிவைத்தது. இங்கு வீடு தொடர்பாக தீர்மானம் மேற்கொள்ளும் அமைப்புகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் இன்மை தொடர்பாக குறிப்பாக எடுத்துரைக் கப்பட்டது. "வீடுகளை இழந்தவர்களுக்காக வீடமைப்புத் திட்டங்களை நிர்மாணித்தல்" என TAFREN வழிகாட்டியில் குறிப்பிடப்பட்டுள்ள வாசகத்தில் காணப்படுகின்ற சிக்கல் தொடர்பாகவும் குறிப்பிடப்பட்டது. அதாவது, கூட்டுக் குடும்பமாக ஒரே வீட்டில் வசிப்பவர்கள் ஒரு வீட்டை மாத்திரம் பெற்றுக் கொள்வதற்கு அருகதையுள்ளவர்களா? அல்லது வீடு எனும்போது அது குடும்பத்தவர்களை அல்லது வெறும் வீட்டைக் குறிக் கின்றதா?
அதேபோன்று இதே விதமான சிக்கல்கள் துரித வருமானம் ஈட்டல் நிகழ்ச்சித்திட்ட (RIR) ஆவணங்களிலும் காணப் படுகின்றன. உதாரணமாக, பெண் தலைமைத்துவ வீடுகளை நோக்குகையில், சில வீடுகளில் ஒன்றிற்கு மேற்பட்ட பெண்கள் (சகோதரிகள், மைத்துணிகள்) தமது சிறிய பிள்ளைகளுடன் கூட்டாக வசித்து வருவதை அவதானிக்க முடிகிறது. சுஐசு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் பெண் தலைமைத்துவக் குடும்ப மொன்றிற்கு வருமானம் ஈட்டும் பொருட்டு ரூபா 25,000/- விசேட உதவிக் கொடுப்பனவாக வழங்கப்படுகிறது. இவ்வகையான உதவித் தொகை ஒரு வீட்டிற்கு வழங்கப்படுகிறதா அல்லது பெண் தலைமைத்துவக் குடும்பமொன்றுக்கு வழங்கப்படுகின்றதா?
ஜீவனோபாயத் தொழில்களும் பெண்களது ஆதனத்திற்கான உரிமைகளும்
உற்பத்தித் துறைசார்ந்த பொருளாதாரத்தில் பெண்களது பல்வேறு வகையான வகிபாகங்களை முறையாக அங்கீகரிக் காமையின் காரணமாக, பொருளாதார முகவர்கள் என்ற முறையில் பெண்களது வகிபாகங்களுக்கான அரச மற்றும் சமூக உதவிகள் சுனாமிக்குப் பின்னரான ஜீவனோபாய மீளெழுச்சி நிகழ்ச்சித் திட்டங்களில் குழப்பகரமானதாகவே காணப்பட்டன. பாரம்பரிய மீன்பிடிச் சமுதாயங்களில் பால் ரீதியிலான தொழிற் பிரிவுகளைக் கருத்திற் கொள்ளாமையும் மீன்பிடித்துறை சார்ந்த பெண்கள் தொடர்பான அடிப்படைத் தரவுகள் இன்மையுமே இவ்விதக்

பால்நிலை, அரசு மற்றும் சுனாமி மீள்நிர்மாணம் . 29
குழப்பகரமான நிலைமைக்குக் காரணமாகும். மேலும் அண்மைக் காலமாக தொழில்நுட்ப புத்தாக்கங்களுடன் கடற்றொழிலில் இணைந்த அரச தலையீடுகளின் காரணமாக இத்துறையில் சில மாற்றங்கள் ஏற்பட்டதோடு, கரையோரப் பிரதேசங்களில் வாழ்கின்ற கடற்றொழிலாளர்களது வாழ்க்கையின் தன்மையில் மாற்றங்கள் ஏற்பட்டு, சுற்றாடலுக்கும் பாதிப்புகள் ஏற்பட்டன. அத்துடன் பெண்களது ஜீவனோபாயத் தொழில்களில் (குடும்ப நலன்களில்) பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தியதோடு, சில இடங்களைப் பொறுத்தவரை பெண்கள் தமது சொத்துக்களையும் இழப்பதற்குக் காரணமாயமைந்தது. அரச தலையீடுகளின் திரிபடைந்த பின்விளைவுகள் மற்றும் மீன்பிடித்துறை சார்ந்த பெண்களது பல்வேறு வகையிலான வகிபாகங்களின் தாக்கம் ஆகியன பற்றி தெளிவாக அறிந்திருத்தல் சுனாமிக்குப் பின்னரான நிலைமைகளைப் புரிந்துகொள்வதற்கு முக்கியமானதாயுள்ளது.
தமிழ்நாட்டில் வலுவூட்டப்பட்ட கண்ணாடி இழைக் கட்டுமரங்களையும் இயந்திரப் படகுகளையும் வழங்குவதற்கு மாநில அரசாங்கமும் பல அரச சார்பற்ற அமைப்புக்களும் முன்வந்தன. குறிப்பாக இயந்திர இழுவைப் படகுகளுக்கு எவ்விதக் கட்டுப்பாடுகளும் அற்ற நிலையில் மிகையாக மீன்களைப் பிடிப்பதற்கான வாய்ப்புகளை இவை ஏற்படுத்தின. திறமையான மீனவர்களைக் கொண்டு மீன்பிடிக்கின்ற நிலையிலிருந்து நவீன மீன் பிடித்துறைக்கு மாறுவதற்கான நிலைமைகளை இது மென்மேலும் அதிகரிக்கச் செய்தது. மேலும் மதில் ஒன்றைக் கடலில் கட்டுவதற்காக மேற்கொள்ளப்பட்ட பிரேரணையின் காரணமாக கட்டுமரங்கள் கடற் கரையை வந்தடைவதில் பல சிரமங்கள் ஏற்படலாம். இதன் காரணமாக கடற்கரை மைய மீன் பிடித்தல் முறைகளுக்குப் பதிலாக துறைமுக மைய மீன்பிடித்தல் முறைகள் வளர்ச்சி பெறலாம். இதன் காரணமாக தூர இடமொன்றில் மீன்கள் குவிக்கப்படலாம். இதனால் பெரிய வியாபாரிகள் நன்மை பெறுவதுடன் பெண்கள் தவிர்க்கப்படலாம். இவை யாவும் முழுச் சமுதாயத்திற்கும், குறிப்பாக மீன்பிடித் துறையைச் சேர்ந்த பெண்களுக்கும் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தலாம்.
இச்சூழமைவில் சமூக சேவைகள் நம்பிக்கை நிறுவனத்தின் (ISST) அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், "ஆசியாவின் கரையோரச் சமுதாயப் பெண்களது ஜீவனோபாயத்

Page 22
3O பேரழிவுகளுக்குப் பெண்கள் முகம் கொடுத்தல்
தொழில்கள்" என்ற தொனிப்பொருளில் கூறப்பட்டுள்ள விடயங்கள் பல விதங்களில் பயன்தரக்கூடியதாக அமைந்துள்ளன. இங்கு கரையோர மீன்பிடிச் சமுதாயங்களைச் சேர்ந்த பெண்கள் வழங்குகின்ற எண்ணற்ற செயற்பாடுகள் தொடர்பாக விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக "ஆசிய பிராந்தியத்தில் கரையோர மீன்பிடிச் சமுதாயப் பெண்கள்” என்ற தொனிப் பொருளில் சந்திரிக்கா சர்மா மேற்கொண்ட ஆய்வும், “கரை யோரச் சமுதாயங்களின் ஜீவனோபாயத் தொழில்களை பெண்ணியல் கண்ணோட்டத் திசையில் அமைத்தல்; மற்றும் இடைத்தொடர்புகளைக் கூர்மைப்படுத்தல்” என்ற தொனிப் பொருளில் நளினி நாயக் மேற்கொண்ட ஆய்வும் சுனாமிக்குப் பின்னர் ஜீவனோபாயத் தொழில்கள் தொடர்பான மீள்கட்ட மைப்பு நிகழ்ச்சித் திட்டங்களை திட்டமிடுகின்றபோது பயன்தரக்கூடிய பல விடயங்களை வழங்குகின்றன.
இந்திய கடற்றொழிலாளர் சமுதாயங்கள் பற்றி “நாயக் கருத்துத் தெரிவிக்கையில் பாரம்பரிய மீன்பிடிச் சமுதாயங்களில் காணப்படுகின்ற பால்நிலையுடன் தொடர்புடைய வேலைப் பிரிவுகள் பற்றி எடுத்துரைக்கிறார். வர்த்தக நோக்கங்களுக்காக மீன் பிடிக்கப்படுகின்ற போது ஆண்களே மீன் பிடித்தலில் ஈடுபடுகின்றனர். மீன் பிடித்த பின்னர் பெண்கள் தமது பங்களிப்புகளை வழங்குவதுடன், மீன்பிடிக்கச் செல்வதற்கு முன்னர் வலைகளைத் தயார் செய்தல் போன்ற நடவடிக்கைகளில் இருபாலாரும் ஈடுபடுகின்றனர். இவ்வகையான வேலைப் பகிர்வின் (வேலைப் பிரிவு) காரணமாக பெண்களே சந்த்ைகுச் சென்று மீன்களை விற்று வருகின்றனர். இதனால் பணத்தை நிருவகிக்கக்கூடிய வாய்ப்புகள் இவர்களுக்குக் கிடைக்கின்றன. மீனைப் பணமாக மாற்றுவதும் பெண்களே. “சந்தைக்கும், வெளிஉலகத்திற்குச் செல்வதற்குமான வாய்ப்புகள் பரந்த கண்ணோட்டத்தை ஏற்படுத்துகின்றன". தாய்வழிச் சமுதாயம், உள்நாட்டு திருமண சம்பிரதாயங்கள் போன்றவற்றின் அடிப் படையில் நடைபெறுகின்ற திருமணங்களின் போது பெண்களுக்கு மீன்பிடி வள்ளங்கள் மரபுரிமையாக வழங்கப்படுவதுமுண்டு. இதனால் பிடிக்கப்படுகின்ற மீனிலிருந்து பெண்களுக்கு பங்குகள் கிடைக்கின்றன. இவற்றை இவர்கள் விற்பனை செய்யலாம் அல்லது உணவிற்காகப் பயன்படுத்தலாம்.

பால்நிலை, அரசு மற்றும் சுனாமி மீள்நிர்மாணம் . 3.
1970 ஆம் ஆண்டு முதல் அரச ஊக்குவிப்புகளின் காரணமாக ஏற்பட்ட தொழில்நுட்ப மாற்றங்களின் விளைவாக பாரிய வள்ளங்களைப் பயன்படுத்தி மீன்பிடித்தல், அதிக முதலீடு மைய மீன்பிடி நடவடிக்கைகள், ஏற்றுமதி மைய உற்பத்திகள் போன்ற மாற்றங்கள் கடல் சார்ந்த மீன்பிடித் துறையில் ஏற்பட்டன. மேலும் மத்தியமயப்படுத்தப்பட்ட ஓர் இடத்தில் மீன்களை இறக்குவதன் காரணமாக அவற்றைப் பெற்றுக்கொள்வதற்காக பெண்கள் நீண்ட தூரம் பிரயாணம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. அவை மிகத் தொலைவில் அமைந்திருக்குமெனில் பெண்கள் மீன்களைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்படலாம். மேலும் அதிகளவு மீன்கள் பிடிக்கப்படுவதன் காரணமாக அவற்றைக் கையாள்வதில் பெண்களுக்குப் பல சிரமங்கள் ஏற்படலாம். “பெண்களுக்கு அவர்களது தொழில் சார்ந்த உதவிகளை வழங்குவதற்காக அரசாங்கம் மிக அரிதாகவே முன்வந்துள்ளது. ஆனால் ஆண்களைப் பொறுத்தவரையில் கடன் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை அரசாங்கம் வழங்கியுள்ளது. பெண்களுக்கும் இவற்றை மேற்கொள்வதற்கான வல்லமையுள்ளது என்பதை விசாகபட்டிணத்தைச் சேர்ந்த சில பெண் களது நடவடிக்கைகள் மூலம் நாம் உணர்ந்துகொள்ளலாம். உதாரண மாக, விசாகபட்டிணத்தைச் சேர்ந்த சில பெண்கள் புகையிரம் மூலம் மும்பாய்க்கு மீன்களை அனுப்புகின்ற பாரிய வியாபாரத்தில் ஈடுபட்டனர். சிலர் மொத்த வியாபாரிகளுக்கு மீன்களை வழங்குவதன் மூலம் குறிப்பிடத்தக்களவு தரகுப் பணத்தைப் பெற்றுக்கொண்டனர். மேலும் சில பெண்கள் பிடிக்கப்படுகின்ற மீனில் தங்களுக்கும் உரிமையுள்ளது என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக வள்ளங்களுக்கு நிதியுதவிகளை வழங்கியுள்ளனர்.
உண்மையில் அரசாங்கமானது பெண்களுக்கு உதவி செய்திருக்குமெனில் அவர்கள் மீன்பிடிக்கப்பட்டதன் பின்னர் தமது தொடர் செயற்பாடுகளை மேற்கொண்டிருக்க முடியும். ஆனால் அதற்குப் பதிலாக மீன்களைக் களஞ்சியப்படுத்துவதற்காகப் பாரிய இடங்களை ஒதுக்குவதோ, அல்லது கடன் வசதிகளை வழங்கு வதோ பெண்கள் தொடர்பான இப்பிரச்சினைகளுக்கு அரசாங்கம் வழங்குகின்ற தீர்வாயிருக்காது." ஜீவனோபாய மீளெழுச்சி மற்றும் மீள்நிர்மாணம் போன்ற நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப் படுத்துகின்றபோது மீன்பிடிச் சமுதாயங்கள், இரண்டாம் மட்டக்

Page 23
32 பேரழிவுகளுக்குப் பெண்கள் முகம் கொடுத்தல்
கிராமங்கள் போன்றவற்றிலுள்ள பெண்களது பல்வேறு வகையான வகிபாகங்கள் தொடர்பில் கவனம் செலுத்துதல் மிக முக்கியமா னதாகும். மேலும் பெண்கள் பொருளாதாரத்திற்கு முக்கிய பங்களிப்புகளை வழங்குகின்றவர்கள் (பொருளாதார முகவர்கள்) என்ற முறையில், அரசு மற்றும் மனிதாபிமான அபிவிருத்தி அமைப்புகள் அவர்களது ஆற்றல்களை வலுப்படுத்தக்கூடிய விதத்தில் தமது இடையீடுகளை மேற்கொள்ள வேண்டும்.
அரச நடைமுறைகளின் காரணமாக பெரும்பாலும் பெண்கள் தமது உடைமைகளை இழந்ததுடன், அவர்களது வலுவும் குறைக்கப்பட்டன. கடன் வழங்குகின்ற முறையை நோக்குகையில் தாய்வழிச் சமுதாய முறைகள் மேலோங்கி இருக்கின்ற சில பிரதேசங்களுக்கும் கடன் வழங்க அரசாங்கம் முன்வந்தது. இக்கடனைப் பயன்படுத்தி வள்ளங்களையும் வலைகளையும் வாங்க முடியும். ஆனால் இக் கடன்களை வழங்குவதற்கு முன்வந்த வங்கிகள் ஆண்களை மீனவர்களாக அங்கீகரித்ததுடன் அவர்களது (ஆண் களது) பெயருக்கே கடன்களை வழங்கின. இதன் காரணமாக வள்ளங்கள், பிடிக்கப்படுகின்ற மீன்கள் மீது தமக்கிருந்த உரிமைகளைப் பெண்கள் இழந்தனர். அதேவேளை அரச மானியத்துடன் புதிய வள்ளங்களை கொள்வனவு செய்ய வேண்டுமென்ற ஆவல் ஆண்களுக்கு ஏற்பட்டபோது, அவர்கள் தமது பழைய வள்ளங் களை மனைவியின் பெயருக்கு மாற்றினர். மனைவியின் பெயருக்கு வள்ளங்கள் மாற்றப்பட்டாலும் உண்மையிலேயே அவர்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை. மீன் ஏற்றுமதி வர்த்தகம் விரிவடைந்து வருவதால் மேலதிக மீன்களைப் பதப்படுத்தும் (உதாரணமாக, கருவாடாக மாற்றுதல்) தொழிலில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகளைப் ப்ெண்கள் இழந்தனர். ஆதாயம் குன்றிய காலப் பகுதிகளில் இவை பெரிதும் இவர்களுக்கு உதவின. மேலும் இந்தியாவின் பல பாகங்களுக்கு கருவாடு எடுத்துச் செல்லப்பட்டது. இதன் மூலம் பாரிய அளவில் இடைத்தரகர்கள், முகவர்கள், சில்லறை வியாபாரிகள் போன்றவர்கள் உருவாகினர். இவர்களுள் பெரும்பாலானவர்கள் பெண்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
வீட்டிலோ அல்லது சமுதாயத்திலோ தீர்மானம் மேற்கொள் ளப்படுகின்றபோது பெண்களுக்கு உரிய இடம் வழங்கப்பட

பால்நிலை, அரசு மற்றும் சுனாமி மீள்நிர்மாணம் . 33
வில்லை. இதனால் பெண் களது செயற்பாடுகள், அவர்கள் வழங்குகின்ற பங்குபற்றுதல் தொடர்பான வகிபாகங்கள் வெளியில் தெரிவதில்லை. உள்ளூர் சாதிய பஞ்சாயத்து அதிகாரக் கட்டமைப்பிலும் பெண்களுக்கு உரிய இடம் வழங்கப்பட வில்லை. மேலும் அரசியலமைப்பின் 73ஆம், 74ஆம் திருத்தங் களில் குறிப்பிடப்பட்டுள்ள உள்ளூராட்சிக் கட்டமைப்பு களுக்கான அதிகாரப் பரவலாக்கல் தொடர்பான விடயங்களையும் பெண்களுக்குச் சாதகமானதாக அமைத்துக்கொள்ள முடியவில் லையென “நாயக் குறிப்பிடுகிறார். தீர்மானம் மேற்கொள் ளலின்போது பெண்களது குரல் காத்திரமாக ஒலிக்காதவரை அவர்களது அக்கறைகள் முறையாகக் கவனிக்கப்படமாட்டாது.
சுனாமிக்குப் பின்னர், கரையோரச் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் தமது சமூக, பொருளாதார வலைப்பின்னல்களை மீள்கட்டமைப்புச் செய்து அவற்றை மீள்நிர்மாணம் செய்யக்கூடிய வகைகளை வலுப்படுத்தக்கூடிய விதத்தில் இவ்வகையான பால்நிலை அக்கறைகளில் விழிப்புடையவர்களாக அரசும், அபிவிருத்தி நிறுவனங்களும் இடையீடுகளை மேற்கொள்வது அவசியமாகின்றது. கரையோரச் சமூகங்களின் நலிவடைந்த பொருளாதாரச் சமநிலை மேலும் வீழ்ச்சியடையக்கூடியவாறு நடந்துகொள்ளக் கூடாது. சுனாமி இயற்கையானது என்ற போதிலும் கூட அதனால் ஏற்பட்ட சமூக, பொருளாதார பின்விளைவுகள் திரிபுபட்டதாகவும், பாரபட்சமுடையதாகவும் காணப்படுகின்றன. மேலும் பால்நிலை சமத்துவம், பால்நிலை வலுவூட்டல் ஆகியவற்றை ஒருங்கிணைக்கக்கூடிய ஒரு புதிய ஆரம்பத்திற்கான வாய்ப்பை சுனாமிக்குப் பின்னரான நிகழ்வுகள் எமக்கு வழங்கின.

Page 24
3.
சுனாமிக்கு பின்னரான மீள்கட்டுமான பணிகளில் பால் ரீதியிலான கவனம்:
ஒரு சுருக்கக் குறிப்பு
- ருத் மனோராமா
சுனாமிக்கு பலியான 29,000 மக்களில், பல பிரதேசங்களில் உயிரிழந்த 80 சதவீதமானோர் பெண்களாவர் என சர்வதேச நன்கொடை நிறுவனமான ஒக்ஸ்பாம் தெரிவிக்கின்றது. "வேறு பிரதேசங்களில் முறையே உயிரிழந்த ஒவ்வொரு ஆணுக்கும் நான்கு பெண்கள் உயிரிழந்துள்ளனர் என மதிப்பிடப் பட்டுள்ளது".
I.
எங்களுக்கு தெரிந்தமட்டில் ராட்சஸ சுனாமி அலைகள், தென் கிழக்கு ஆசியா முதற் கொண்டு, தென்னாசியா, மற்றும் கிழக்கு ஆபிரிக்கா வரையில் 12 நாடுகளில் 2,20,000 மக்களை பலிகொண்டது. இந்திய அரசாங்கத்துக்காக ஆசிய அபிவிருத்தி வங்கியினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தமிழ் நாடு, கேரளா, ஆந்திர பிரதேஷ், மற்றும் பாண்டிச் சேரியில் 6,45,000 குடும்பங்களின் (ஏறத்தாழ 3.2 மில்லியன் மக்களின்) ஜீவனோபாயம் நோரடியாக அல்லது மறை முகமாகவேனும் பாதிப்படைந்துள்ளது என கணிப்பிடப் பட்டுள்ளது. எனினும் உயிரிழந்த பெண்களின் எண் ணிக்கை, காணாமற் போன அல்லது இடம்பெயர்ந்த பெண்களின் எண்ணிக்கை போன்றவற்றை காட்ட சிறியளவிளான திட்பநுட்பமான மற்றும் ஒருங்கிணைக்க படாத தகவல்கள் காணப்படுகின்றன. இந்தியாவில் சமூக சேவை பள்ளிகளால் அண்மையில் மேற்கொண்ட ஆய்வில்

சுனாமிக்கு பின்னரான மீள்கட்டுமான பணிகளில் . 35
மாறக்கூடிய ஒருங்கிணைக்கப்படாத தகவல்களை சேகரிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
. அனர்த்தங்கள் இயற்கையானவையாக இருந்த பொழு திலுங் கூட அவைகளை அழ்ந்து நோக்கின் பாரபட்ச மானவை என்பதை இயற்கை அனர்த்த அனுபவங்கள் வலியுறுத்துகின்றன. இயற்கை அனர்த்தங்கள் எங்கு ஏற்பட்ட பொழுதிலும் சமுதாயத்தில் சில அங்கத்தவர்கள் சிறியளவி லேயே பாதிப்புக்குள்ளாவதையும் வேறு சிலர் பலத்த அடிகளை எதிர் நோக்க வேண்டியுள்ளமையையும் சமூக சூழ்நிலை மற்றும் கட்டமைப்புகளே நிர்ணயிக்கின்றன. இவ்வனர்த்தங்களால் எவ்வாறு மக்கள் பாதிக்கபடுகின்றனர் என்பதை நிர்ணயிக்கும் வேறுபாடுகளில் ஒன்றாக பால்ரீதியிலான கண்ணோட்டமும் உள்ளடக்கப்படும். பால்ரீதியாக பிரிக்கப்பட்ட உயிரிழப்பு மற்றும் இடப் பெயர்வு எண்ணிக்கைகள் பற்றிய தகவல்களே தற்பொழுது அவசியம் தேவைபடும் ஓர் விடயமாகும். இந்தோனே ஷியாவின் ஆச்சே மாகாணம், இந்தியா மற்றும் இலங்கை போன்ற நாடுகளிலிருந்து கிடைக்கப்பெற்ற ஏராளமான, இல்லையெனில் அரைகுறையான ஆதாரங்கள், அதிக உயிரிழப்புக்கள் ஆண்களை விட பெண்கள் மற்றும் சிறுவர்கள் மத்தியிலேயே ஏற்பட்டுள்ளது என்பதை எடுத்து காட்டுகின்றது.
* இந்தோனேஷியா. அச்சே பேஸாரில் உள்ள நான்கு கிராமங்களில் உயிர் பிழைத்த 676 மக்கள் மத்தியில் 189 பெண்கள் மாத்திரமே காணப்பட்டனர். உயிர் தப்பிய ஆண்களுக்கும் உயிர் தப்பிய பெண்களுக்கும் இடையிலான விகிதசாரமானது 3: ஆகும். * கோலா, கெங்கோய் என்ற அதிகளவில் பாதிப்புக் குள்ளான கிராமங்களில் உயிரிழ்ந்த ஒவ்வொரு ஆணுக்கும் நான்கு பெண்கள் விகிதம் உயிரிழந் துள்ளனர். * இந்தியாவின் கடலூர் பிரதேசத்தில் பெண்களின் உயிரிழப்பு ஏறத்தாழ ஆண்களின் உயிரிழப்பின் மூன்று மடங்காகும். ஊயிரிழந்த 146 ஆண்களுடன்

Page 25
36
பேரழிவுகளுக்குப் பெண்கள் முகம் கொடுத்தல்
ஒப்பிடுகையில் 391 பெண்கள் உயிரிழந்துள்ளனர். பச்சன்குப்பன் கிராமத்தில் உயிரிழந்த அனைவருமே பெண்களாவர்.
சுனாமி தாக்கிய நாளன்று பெண்கள் வீடுகளில் தங்க ளுடைய குழந்தைகளையும் உறவினர்களையும் பராமரித்து வந்தனர். சிலர் கடற்கரையில் மீனவர்கள் அன்று பிடிக்கப்பட்ட மீன்களை கரைக்கு கொண்டு வரக் காத்திருந்தனர். இலங்கையின் மட்டகளப்பு மாவட்டத்தில் சுனாமி தாக்கிய வேளையில் சில பெண்கள் நீராடி கொண்டு இருந்தனர். நீண்ட கால புனர் வாழ்வு மற்றும் மீள்கட்டுமான பணிகளில் குடியியல் புள்ளி விபரவியல் மாற்றங்களினால் ஏற்பட்ட பின் விளைவுகளை புரிந்து கொள்வது அவசியம் முக்கியமாகும்.
3. இவ்வாறான பேரழிவுகள் ஏற்படும் வேளையில் பெண்
களுடைய குறிப்பிட்ட தேவைகள் புறக்கணிக்கபடுகின்றன. அத்துடன் முன்னைய அனுபவங்களை பார்க்கிலும் அவர்களது மனித உரிமைகளானது மோசமாக மீறப்படு கின்றன. தற்காலிக முகாம்களில் பாலியல் துஷ்பிர யோகங்கள் மற்றும் அதன் எண்ணிக்கைகள் தொடர்பான அறிக்கைகள் கிடைக்கப்பெற்றன. நிந்திக்கப்பட்டு தள்ளி வைக்கப்படும் அபாயத்துக்கு அஞ்சி இவ்வாறு பாதிக்கப் பட்டவர்கள் தங்களை அடையாளங் காட்டிக் கொள்ளாத காரணத்தால் இதை உறுதிபடுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறைந்த சமூக பொருளாதார நிலை, தெரிவு செய்வதற்கான தடங்கள் மற்றும் வளங்களை பெற்று கொள்ள முடியாமை என சாதாரண சூழ்நிலையிலே ஒதுக்கி வைக்கப்பட்டு வலுவற்றவர்களாக காணப்படுவதன் காரணத்தால் இந்து சமுத்திர சுனாமி போன்ற இயற்கை பேரழிவுகளின் பொழுது பெண்கள் எளிதல் பாதிப்புக் குள்ளாகக்கூடிய அபாய நிலை உள்ளது. ஆண் வர்க்க குடும்ப தலைமையிலான சமூக கட்டமைப்பை பிரதிப லிக்கும் மற்றும் காணப்பெறுகின்ற வளங்களை பகிர்ந்த ளிக்கும் கட்டமைப்பிலேயே நிவாரண முயற்சிகள்

சுனாமிக்கு பின்னரான மீள்கட்டுமான பணிகளில் . 37
தங்கியிருக்கும். டிசம்பர் சுனாமியானது சமுதாயங்களில் காணப்பெறுகின்ற சமத்துவமின்மையை மேலும் கூர்மை யாக்கி பெண்கள், சிறுமிகள் மற்றும் “தலித்" போன்ற சில குறிப்பிட்ட சமுதாயங்களை தள்ளி வைக்கின்றது (தமிழ் நாட்டு கடலோர பிரதேசங்களில்). . தங்களது குடும்பத்தை மாத்திரமல்லாது உறவினர்களையும் பராமரிக்கும் காரணத்தினால் பெண்களின் வேலைப் பழு மேலும் அதிகரிக்கின்றது. அளவுக்கதிகமான ஆண்களின் எண்ணிக்கை சமுதாயங்களில் அதிகரிக்க அவை தகவல்கள், சேவைகள் மற்றும் தீர்மானம் எடுக்கும் சந்தர்ப்பங்களி லிருந்து நன்மையடைவதை தடுக்க அசைவியல் மற்றும் காண்பு நிலைகளாக கட்டுபாடுகளை விதிக்கலாம். எனினும், இந்திய மீனவ சமுதாய பெண்கள் மத்தியில் கல்விமட்டம் மிகவும் கீழ் நிலையிலேயே உள்ளது.
துன்புறுத்தல்கள், பாலியல் துஷ்பிரயோகம், அல்லது குடும்ப வன்முறைகள் போன்றவைகளுக்கு எளிதில் பாதிப்படையக் கூடிய பெண்களின் எண்ணிக்கை சிறிதாயினும் உயிர் பிழைத்த பெண்களுக்கான காணி உரிமை மற்றும் அவர்களது வேறு சொத்துக்களை அடைவது பற்றிய நிலை என்ன? அது எதை குறிக்கும்?
நிவாரண உதவிகள், வீடு மற்றும் உறைவிடம் அத்துடன் சுகாதார மற்றும் மருத்துவ சேவைகளுக்கு பெண்களுக்கான வாய்ப்புகள் குறைவாகவே காணப்படுகின்றன.
* பால் விநியோகம் இல்லாத காரணத்தினால்
குழந்தைகள் உயிரிழந்தமை * பசியுடன் பட்டினியுடனும் பெண்கள் உறங்கியமை மலசலகூட வசதிகள் மற்றும் சுகாதார வசதிகள் இல்லாமை * உணவு, உறையுள், மருத்துவ வசதிகள், மற்றும்
உளவள ரீதியிலான உதவி.
* மருத்துவ மற்றும் இனபெருக்க ரீதியிலான சுகாதாரம் போன்ற பெண்களின் முக்கிய தேவைகள் தற்

Page 26
38
பேரழிவுகளுக்குப் பெண்கள் முகம் கொடுத்தல்
பொழுது காணப்படும் கடலோரப் பகுதிகளின் யதார்த்த நிலையாகும். * பெண்களுக்கான பொருளாதார காப்புறுதி சுனாமியினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. அவைகளில் சில சிறு கைதொழில், மீன்களை பதனிடல், மீன் வியாபாரம் போன்றவை. * தனிநபர் சுதந்திரம் பாதிக்கப்படல் (அந்தரங்க தன்மை
இல்லாமை) * உணவு, நிவாரண உதவிகள் அல்லது வேறு பல உதவிகளை பெற பெண்களே அதிக நேரம் நீண்ட வரிசையில் காத்திருத்தல். கணவர்களின் பெயரின் கீழ் நிவாரண நிதி உதவி பதிவு செய்யப்பட்டுள்ளதால் விதவைகளுக்கு அந்நிதி உதவி சில நேரங்களில் வழங்கப்படுவதில்லை. * இடப் பெயர்வு அபாயத்தால் கடலோரப் பிரதேசங் களுக்கு அப்பால் வெகு தொலைவில் வாழ வேண் டிய நிர்ப்பந்தம் * தற்காலிக வீடுகளிலும், இடம் பெயர் வோார் முகாம்களிலும் வாழும் பெண்களுக்கு பாலியல் பலாத்காரம், பாலியல் வதைகள் மற்றும் பால் ரீதியிலான குறிப்பிட்ட சில நோய்களுக்கு முகங் கொடுக்க வேண்டிய ஓர் அபாயகர சூழ்நிலை. 5. சுனாமியில் உயிர் பிழைத்தோர் மத்தியில் பெண்கள் 1/3 பங்காக இருப்பதன் காரணத்தால் அவர்களுக்கு மீள் கட்டுமான நடவடிக்கைகளில் பங்குபற்றும் உரிமை காணப்படுவது மாத்திரமல்லாது சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதிலும் அவர்கள் ஓர் முக்கிய பங்கை வகிக்கலாம். பால் ரீதியிலான சமத்துவ மற்றும் புனர் வாழ்வு கொள்கைகள், ஆண் குடும்ப தலைமையிலான சமூக ஒழுங்கினை வலுவூட்டுவதனால் பெண்களுக்கு இயல் பாகவே ஓர் பாதகமான நிலை ஏற்படுகின்றது. இதனால் இடம் பெயர்ந்தோருக்கு உதவி செய்து ஆதரவு அளிக்கும் அரச மற்றும் அரச சார்பற்ற ஸ்தாபனங்கள் பெண்களது

சுனாமிக்கு பின்னரான மீள்கட்டுமான பணிகளில் . 39
பால் ரீதியிலான குறிப்பிட்ட சில மற்றும் விஷேட தேவைகளை இனங்கண்டு பூர்த்தி செய்தல் வேண்டும்.
. மீள்கட்டுமானப் பணிகளில் பெண்கள்: மீள் கட்டுமானச் செயற்பாடுகளில் பெண் தொழிலாளார்களுக்கான கொள்கை கட்டமைப்பின் அவசியமானது காலத்தின் கட்டாயத் தேவையாகும். மீள் கட்டுமான நடவடிக்கைகளில் ஈடுபடும் அரசும் வேறு சிலரும் பெண் தொமிலாளர்களின் பங்களிப்பினை பதிவு செய்யத் தவறியுள்ளனர். அவர் களுக்கென விஷேட புனர்வாழுவு செயற்பாடுகள் எதுவும் கிடையாத ஒரு நிலை காணப்படுகின்றது. ஒவ்வொரு பெண்ணுக்கும் நிவாரண உதவிகளை பெற்றுக் கொள்ளும் உரிமை உறுதி செய்யப்படல் வேண்டும். அத்துடன் கடலோரங்களுக்கு முதல் நிலை தகுதி வாய்ந்தவர்களாக கடலோர சமுதாயங்கள் காணப்படுகின்றன என்பதை உறுதி செய்வதன் மூலம் பெண் தொழிலாளர்களின் ஜீவனோபாய தெரிவுகள் திட்டமிடப்படுவது அவசியம். கரை சேரவும், அவர்களது வலைகளை உலரவிடவும், மற்றும் வேறு மீன்பிடித்துறை தொடர்பான செயற்பாடு களுக்கும் கடற்கரைகளை உபயோகிக்கும் உரிமை பெண்களுக்கு உண்டு. கரையோர மீளமைப்பு வலயங்களின் அறிவிப்பிற்கேற்ப மீனவர் சமுதாயத்தின் உறைவிடம் மற்றும் எஞ்சியிருக்கும் வீடுகள் அவர்களது இயற்கையான உரிமை எனக் கருதி இடமளிக்கப்பட வேண்டும். 500 மீட்டர்களுக்கு அப்பால் உறைவிடங்களை நகர்த்த வேண்டுமென்ற புதிய வீடமைப்பு கொள்கையானது அச் சமுதாயத்தின் மீன்பிடி வழக்கங்களை கருத்திற் கொள்ளாது. ஹோட்டல்கள், கடலோர ஹோட்டல் விடுதிகள் மற்றும் சிறு இறால் மீன் உற்பத்தி என்ற வடிவில் உருவாகியுள்ள அத்துமீறல்களிலிருந்து மேற்படி வலயங்களை மீட்டெடுக்க அரசாங்கமானது நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண் டும். திட்டமிடல் மற்றும் அமுல் படுத்தல் போன்றவற்றில் பாதிக்கப்பட்டவரும் அதில் ஓர் பெரும் பங்கை வகிக்கும் வகையில் உரிமையாளரை மையமாக கொண்ட கொள் கையை உடையதாக வீடுகள் தொடர்பான மீள்கட்டுமான பணிகளானது காணப்பட வேண்டும். உள்ளூர் இயற்கை

Page 27
40
பேரழிவுகளுக்குப் பெண்கள் முகம் கொடுத்தல்
மாற்றங்களுக்கான மண்ணியல் நிலை மற்றும் மரபு வழியிலான அறிவு என்பவைகளின் பின்னணியின் அடிப்படையில் நிலநடுக்க பாதுகாப்பு, சூறாவளி பாதுகாப்பு மற்றும் புயல் காற்றினால் பாதிப் படையாத நிலை போன்றவற்றுக்கான தொழிநுட்ப உதவி, நன்கொடைகள், நிதியுதவி, மற்றும் மூலப்பொருள் அல்லது மூலவளங்கள் உதவி என பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கலாம்.
கொள்கைகளானது பெண்கள் மற்றும் சிறுவர்களின் பின் வரும் குறிப்பிட்ட தேவைகளுக்கு தீர்வு காண வேண்டும்; வீடமைப்பு கொள்கையானது பாடசாலைகள், நீர் வசதி, சுகாதார வசதி மற்றும் மருத்துவ நிலையங்கள் போன்ற அத்தியாவசிய உள்ளமைப்புகளை கொண்டிருத்தல் வேண்டும். இவ்வுள்ள மைப்பானது அரசாங்கத்தினால் வழங்கப்பட வேண்டும். கலாசார மற்றும் சமூக பொருளாதார மரபுகளை முற்றாக புறக் கணிக்கும் காரணத்தினால் தனி நபர் அல்லது நிறுவனங்களோ கிராமங்களை தத்தெடுப்பதற்கு இடமளிக்க முனையும் அரசாங்கங்களின் எண்ணங்கள் கைவிடப்பட வேண்டும். மீள்கட்டுமான பணிக ளானது "தலித்" இனத்தவரையும் வேறு சிறுபான்மையி னத்தவரையும் கருத்திற் கொண்டு மேற்கொள்ளப்பட வேண்டும். கடலோர சமுதாயங்களின் ஜீவனோபாய தேவைகளுக்கேற்ப மீள்கட்டுமான பணிகள் காணப்பட வேண்டும். அரசாங்கத்தினால் ஒதுக்கபட்டுள்ள தனிப்பட்ட குடும்பங்களுக்கான வீடமைப்பு மீள்கட்டுமான பணிகளானது, பிராந்தியத்திற்கு பிராந்தியம் மாறுப்படக் கூடிய குடும்பங்களுக்கான ஜீவனோபாய தேவைகள் மற்றும் குடும்பத்தினரது எண்ணிக்கை போன்றவற்றை கருத்திற் கொண்ட அரசாங்க கட்டளைகள் வடிவில் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட வேண்டும். இயற்கை அனார்தத்தினால் அநாதரவான நிலைக்கு தள்ளப்பட்ட பெண்களுக்கு கூடியவரை அவர்களது சொந்த சமுதாயத் திலேயே புனர்வாழ்வு அளிக்கப்பட்டு ஜீவனோபாய காப்புறுதி மற்றும் சுயாதீனமான குடியிருப்பு வழங்கப்பட வேண்டும். அவர்கள் அநாதை இல்லங்களுக்கு தள்ளப்படக் கூடாது.

சுனாமிக்கு பின்னரான மீள்கட்டுமான பணிகளில் . 4.
7. மூலக் காரணங்களை ஆராய்ந்து தீர்வு காணல் : பாதிப்புக்குள்ளாகும் தன்மை மற்றும் பால் ரீதியிலான சமத்துவமின்மை போன்றவற்றுக்கான மூலக் கார ணங்களை ஆராய்ந்து தீர்வு காணிபதன் மூலமாகவே மீள்கட்டமைப்பானது மேற்கொள்ளப்பட வேண்டும். மீளகட்டியெழுப்ப போராடும் சமுதாயங்களுக்கும் குடியிருப்புகளுக்கும் பெண்களின் உள்ளூர் பற்றிய அறிவும் திறமையும் மிகவும் முக்கிய கூறாகும். மீள்கட்டமைப்பு செய்றபாடுகளானது பெண் தொழிலாளர்களின் குடும்ப உறவுகள், தொழில் மற்றும் வீடமைப்பு தொடர்பான சட்ட தேவைகளை இனங்கண்டு பூர்த்தி செய்ய வேண்டும். விதவை தாய்மார்கள், விதவைகள், தொழிலற்ற வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் பெண்கள், மற்றும் ஒதுக்கப்பட்ட பெண்கள் போன்ற பாதிப்புகளுக்குள்ளான பெண்களை இலக்காக கொண்டு சேதத்திற்குள்ளான வீடுகள் மற்றும் புதிய வீடுகளுக்கான மீள்கட்டுமான பணிகளில் பெண் களுக்கு தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தல் ஒர் முக்கிய எதிர்பார்ப்பாகும்.
மீள்கட்டுமான பணிகளுக்கான யோசனைகள்
* மனிதாபிமான பணிகளில் மற்றும் கொள்கை உருவாக் கத்தில் ஈடுபடும் அனைவரும் பால் ரீதியிலாக பிரிக்கப்பட்ட தகவல்களை சேகரித்தல் அவசியம்
* தகவல்கள் வெளிவருவதில் தாமதமான பொழுதிலும் பாலியல் வன்முறைகள் மற்றும் துஷ்பிரயோகங்களிலிருந்து பெண்களை பாதுகாப்பதில் முக்கியதுவம் செலுத்தப்பட வேண்டும். (முக்கியமாக போர் மற்றும் இராணுவ நடமாட்ட சூழ்நிலைகள், இளம் பெண்கள் தனிமையில் இருக்கும் வேளை, அத்துடன் ஆண்கள் மத்தியில் மதுபாவனை அதிகரிப்பு போன்ற பல அபாயகர சூழ்நிலைகளில்)
* நிவாரண மற்றும் நிதி உதவிகளை பகிர்ந்தளிக்கும் பொழுது உயர் மட்ட தரத்திலான பாதுகாப்பு மற்றும் பொறுப்பு கூறல் போன்ற உத்திகளை கையாண்டு பேணுதல் அவசியம். இவை பெண்களை பாதுகாக்கும் முறைகளையும் துஷ்பிர

Page 28
42
பேரழிவுகளுக்குப் பெண்கள் முகம் கொடுத்தல்
யோக மற்றும் ஒழுக்க சீர்கேடுகள் போன்ற சம்பவங்களை அறிவித்து நடவடிக்கை எடுக்கும் உபாயங்களை உள்ள டக்கும். உழைப்பிற்கான உடனடி ஊதிய திட்டங்களிலும் அல்லது நிலையான ஜீவனோபாய திட்டங்களிலும் வருமானத்தை பெற்று கொள்ளும் சந்தர்ப்பங்கள், ஆணி பெணி இருவருக்கும் உறுதி செய்யப்பட வேண்டும். சகலருடைய திறமைகளையும் வெளிக்கொணர்ந்து உள்ளூர் பொருளா தாரத்திற்கு புத்துணர்வளிக்க இது மிகவும் அவசியமாகும். சில வகைகளினாலான (பாலியல்) துஷ்பிரயோகங்கள் மற்றும் ஒருவரில் அல்லது ஒன்றில் தங்கி வாழும் தன்மை போன்றவை உருவம் பெறுவதிலிருந்து அல்லது வலுப் பெறுவதிலிருந்து இது தவிர்க்கின்றது. உள்ளூர் கலாசா ரங்கள் அனுமதிக்கும் வரையறைகளுக்குள் பெண்களின் தொழிலாக கருதப்படும் சமையல் மற்றும் தையல் திட்டங்களிலிருந்து அப்பால் செல்வது சாத்தியமும் அவசியமுமான ஓர் விடயமாக உள்ளது. அதன் மூலமாக நிலைநாட்டப்பட்ட மற்றும் மரபு வழி சாராத புதிய சந்தர்ப்பங்கள் அவர்களுக்கு கிடைக்கப்பெறும் சாத்தியக் கூறுகள் உண்டு. மீண்டு வரும் முயற்சிகள் நடைபெறும் பாதையிலுள்ள நகரங்கள், கிராமங்கள், மற்றும் முகாம்களில் மேற்கொள்ளப் படும் தலையீடுகளின் செயலுாக்கம் பற்றிய மதிப்பீடு, நிவாரண மற்றும் நிதி உதவிகளை வழங்குதல், தேவைகளை மதிப்பிடல் போன்ற செயற்பாடுகளின் பொழுது பெண் களுடனும் ஆண்களுடனும் உரையாடுவதை மாத்திரம் சகல மட்டத்திலுமான உணர்மையான பங்களிப்பாக கருத முடியாது. பாதிக்கப்பட்ட நாடுகளில் தலைமைத்துவ கட்டமைப்புகளில் காணப்படும் மாறா நிலையுடைய ஆணாதிக்க வரையறைகளிலிருந்து மீண்டு வர ஆக்கப் பூர்வமான உபாயங்களை அபிவிருந்தி செய்வதையும் சகல மட்டத்திலுமான உண்மையான பங்களிப்பு குறிக்கும். மனக் கருத்தில் அல்லது எண்ணங்களில் ஏற்படும் மாற்றத்தினையும் பங்களிப்பாக கருதலாம்: பெண்களை எளிதில் பாதிப்புக்குள்ளாக கூடிய ஒரு பாலாக கருது

சுனாமிக்கு பின்னரான மீள்கட்டுமான பணிகளில் . 43
வதிலிருந்து தவிர்த்து குறிப்பிட்ட நோக்கமும் தகமைகளும் கொண்ட பிரஜைகளாக அவர்களது உரிமைகளை மதித்தல். உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள், நன்கொடை நிறுவனங்கள் மற்றும் அரசாங்கங்கள் இவர்களுக்கு வழிகாட்ட கடமைப் பட்டுள்ளனர். நிலபுலங்கள், கல்வி, குடும்ப உருவாக்கம், மற்றும் இனப்பெருக்க சுகாதாரம் தொடர்பான கொள்கைகள் மற்றும் தலையீடுகளில் பெண்கள் மற்றும் ஆண்களின் உரிமை பாதுகாக்கப்பட்டு முன்னெடுத்து செல்லப்பட வேண்டுமாயின் பாதிக்கப்பட்ட நாடுகள் குடியியல் மாற்றங்கள் (மற்றும் கலாசார விழுமியங்கள்) தொடர்பாக அக்கறையுடன் நோக்க வேண்டும். அனர்த்தத்தின் தாக்கத்திற்கு அதிகம் பாதிப்படைந் தவர்களையும் அது எவ்வாறு கணிப்பிடப்படுகின்றது என்பதனையும் பால் ரீதியிலான சமத்துவமின்மையே தீர்மானிக்குமானால், முன்னர் உறுதியளிக்கப்பட்ட நிதயுதவிகளை வழங்குவதன் மூலம் பால் ரீதியிலாக குறிப்பிட்ட நூற்றாண்டிற்கான அபிவிருத்தி இலக்குகளை அடைவதே எதிர் காலத்தில் அனர்த்தங்களுக்கு ஆயத்த படுத்தி கொள்ளும் மிகச் சிறந்த முறையாகும்.

Page 29
4
சுனாமி மறுவாழ்வு பணியில் அரசின் கொள்கைகளும் பெண்களின் நிலைப்பாடும்
- எஸ். சிவகாமி
சுனாமியின் தாக்கம்
அரிதாக நிகழக் கூடிய இயற்கை பேரழிவு, 2004 - டிசம்பர் 26 இல் நிகழ்ந்த சுனாமி தெற்காசிய கடலோரப் பகுதி மக்களுக்கு பெரும் சேதம் விளைவித்தது. வாழ் நாள்முழுவதும் மறக்க முடியாத துயரமாகவும் அழிவாகவும் தடம் பதித்துள்ளது.
இலங்கை, இந்தோனேஷியா, தாய்லாந்து மற்றும் இந்தியாவில் தமிழகததின் 13 கடலோர மாவட்டங்கள் பாண்டிச்சேரி, கேரளா, அந்தமான், நிபோபார் தீவுகள் போன்றவை சுனாமியால் மிகப் பெரும் பாதிப்புக்குள்ளாகின. சுனாமியால் கடலோர மக்களே மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் பெண்களும் குழுந்தைகளும்தான் எந்தப் பேரழிவுகளின் போதும் அதிகம் தாக்கம் அடைவர். தற்போது நிகழ்ந்த சுனாமியால் லட்சக்கணக்கான குடும்பங்கள் தங்கள் வீடுகள், உடமைகள் மற்றும் தங்களது அனைத்து வாழ்வாதாரங்களையும் தற்போது சுனாமியால் இழந்தனர்.
இந்த நிலையில் உடனடி அவசர தேவைகளுக்கான நிவாரணங்கள் பல்வேறு துறையினிடமிருந்தும் மக்களை சென்றடைந்தது. இந்தியாவில் மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு உள்நாட்டு, வெளிநாட்டு அமைப்புகளும் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டன.

சுனாமி மறுவாழ்வு பணியில் அரசின் கொள்கைகளும் . 45
1. தமிழ்நாட்டில் சுனாமியால் பாதிக்கப்பட்ட பல்வேறு பிரிவைச் சேர்ந்த
பெண்களின் நிலை
சுனாமி பேரலைகள் தாக்கியதின் விளைவாக தமிழ்நாட்டில் எட்டாயிரத்து பத்து பேர் உயிரிழந்தனர். உயிரிழ்ந்தோரில் ஆண்கள் - 2377 பெண்கள் - 3141 ஆண்குழந்தைகள் - 1237 பெண் குழந்தைகள் - 1255, இறந்தவர்களில் பெண்களும், பெண் குழந்தைகள் எண்ணிக்கையுமே அதிகம் ஆகும்.
தமிழ்நாட்டின் 13 கடலோர மாவட்டங்களின் கடற்கரை யோர பகுதியில் உள்ள கிராமங்களிலும் நகரங்களிலும் வாழ்ந்து வந்த மீனவர்கள், சிறு வியாபாரிகள், விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் மற்றும் கடல்சார் தொழில்களை நம்பியிருந்த 1.5 லட்சம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டனர். இந்த சுனாமியால் 291 குழந்தைகள் ஆதரவற்றவர்களாக ஆகிவிட்டனர், 567 பெண்கள் தங்கள் கணவரை பறிகொடுத்து விதவைகள் ஆகிவிட்டனர்.
a. மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்கள் மீதான பாதிப்புகள்
மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் சுனாமியால் பாதிக்கப்பட்டனர். உயிரிழந்தவர்களில் பெரும்பான் மையான வர்கள் மீனவமக்களே. மீனவ குடும்பங்களின் கலாச்சாரம் மிக வித்தியானமானது. ஆண்களின் ஆதிக்கமே அதிகம். முக்கிய விவகாரங்களில் பெண்களின் தலையீட்டுக்கோ / முடிவு எடுப்பதற்கோ விடமாட்டர்கள். வியாபாரத்தில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்களாக இருந்த போதிலும், அவர்களது கலாச்சாரத்தின்படி தொழில் முறையிலும் ஆண்களை சார்ந்து வாழ வேண்டிய நிலையில் உள்ளார்கள். மீனவ குடும்பத்தில் ஆண்கள் கடலுக்குச் சென்று மீன் பிடித்த பின்னர் மொத்தமாக ஏல முறையில் அல்லது எடை கணக்கில் விற்பனை செய்வது வழக்கம். ஆனால் பிடித்த மீன்களை சந்தையில் விற்பனை செய்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் பெண்களே.
இந்நிலையில் சுனாமிக்கு பின் அவர்களது நிலைைம மிகவும் பின் தங்கி விட்டது. பெண்கள் தங்கள் வியாபாரத்தில் கிடைத்த சொற்ப லாபத்தினை குடும்ப நலனுக்காக பல்வேறு விதங்களில் சேமிப்பாக வைத்திப்பார்கள். ஒவ்வொரு மீனவ குடும்ப பெண்களும் கஷ்டப்பட்டு சேர்த்து வந்த சேமிப்புகள் அனைத்தும்

Page 30
46 பேரழிவுகளுக்குப் பெண்கள் முகம் கொடுத்தல்
சுனாமி பேரலைகளால் அடித்து செல்லப்பட்டு விட்டது. இந்த இழப்பினை அரசாங்கம் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. அவர்களது சேமிப்புக்களுக்கு எந்த நஷ்ட ஈடும் கிடையாது. சுனாமி பெரும் சேதங்களை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் பெண்களுக்கு கண்ணுக்கு தெரியாத மன உளைச்சல்களையும் ஏற்படுத்தியது. மீன் பிடி கலன்களுக்கு மட்டுமே சுனாமி மறுவாழ்வு திட்டத்தின் கீழ் நிவாரணம் கிடைத்தது. அதுமட்டுமல்ல சுனாமிக்குப் பின் கடந்த 6 மாதங்களாக கடலுக்கு செல்ல தயங்கும் மீனவ குடும்பங்கள் அதிகம். மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை என்றால் உடனடியாக பாதிக்கப்படுபவர்கள் பெண்களே. அவர்களது வருவாய் தடைப்பட்டுவிட்டது.
b.விவசாய தொழிலாளர் குடும்பங்களில் பெண் தொழிலாளர்களின்
பாதிப்பு
சுனாமி பேரலை 1 முதல் 2 கீ. மீ. நிலப்பரப்பினை ஆக்கிர மித்ததால் 300 க்கும் மேற்பட்ட விவசாய கிராமங்களில் கடல் நீர் புகுந்தது. 15 000 ஹெக்டேர் விவாசய விளை நிலத்தில் பயிரிடப்பட்ட பயிர்கள் பாழாகிப் போனதாக தகவல் வெளியிடப்பட்டது. இந்தகிராமங்களில் வசிக்கும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாய தொழிலாளர் குடும்பங்களின் ஜீவனம் விளை நிலங்களை நம்பியே உள்ளது. தற்போது சுனாமியால் உப்புத்தன் மையான நிலமாக மாறிவிட்டது. இதனை நல்விளை நிலமாக மாற்ற குறைந்தது இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் பிடிக்கும். விவசாய வேலைகளில் அதிக எண்ணிக்கையில் ஈடுபடுபவர்கள் பெண்களே. இங்கும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது என்ன வென்றால் விளை நிலங்களின் பாதிப்பு பெண்களையே மீண்டும் தாக்குகிறது. கடந்த 7 மாதங்களாக விவசாயத்தில் கிடைக்கும் சொற்ப வேலை நாட்களும் தடைபட்டு வருவாய் இழந்து தவிக்கின்றனர்.
C. கடலோர நகர் மற்றும் புறநகர் பகுதிவாழ் குடும்பங்களைச் சேர்ந்த
இதர பெண்களின் பாதிப்பு
துறைமுகங்கள் மற்றும் கடலோர பகுதி வாழ் மக்களில்
பெருமபாண்மையானோர் சிறு வியாபாரம் மற்றும் கூலித் தொழிலாளர்களாக பணியாற்றி வருபவர்கள். அரசு தரப்பின்

சுனாமி மறுவாழ்வு பணியில் அரசின் கொள்கைகளும் . 47
அறிக்கையின் படி கடல்சார் தொழிலை நம்பியிருந்த 1.5 இலட்சம் குடும்பத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப் பட்டது. ஆக பல்வேறு தொழில்களில் உள்ள அனைத்து தரப்பு பெண்களின் பாதிப்புகள் ஏராளம். உப்பளத் தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலை சுனாமிக்குப் பின் தமிழ்நாட்டில் அரசு தரப்பின் நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணியில் அரசின் கொள்கை களையும் ஆராய்வோம்.
2. தமிழக அரசின் சுனாமி மறுவாழ்வுப் பணிகள் a. தமிழக அரசின் சுனாமி நிவாரணங்கள்
சுனாமி தாக்கியபின் பாதிக்கப்பட்டோர் தங்குவதற்கு முகாம்கள், உணவுப்பொருட்கள், போர்வை, மருத்துவ உதவிகள் என பல்வேறு நடவடிக்கைகளை தொண்டு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், பொது மக்கள் ஆகியோருடன் இணைந்து ஏற்பாடு செய்தது. பின்னர் அத்தியாவசியத் தேவைகளுக்கென உடனடி நிவாரத்தொகை ரூபா 5000 அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் மீனவ குடும்பங்களுக்கும் 30 கிலோ அரிசி 3 மாதங்களுக்கு வழங்கப்பட்டது. மற்றப் பிரிவினருக்கு நிவாரணத்தொகை ரூபா 2000 மற்றும் 30 கிலோ அரிசி மட்டுமே வழங்கப்பட்டது.
தினசரி குடும்ப வேலைகளில் அதிகம் பங்கெடுக்கும் பெண்களுக்கு நிவாரணங்களை நம்பி குடும்பம் நடத்துவது மிகப்பெரிய சோதனை மற்றும் வேதனை. அதிலும் சில மீனவ குடும்பத்தினருக்கும் இதர பிரிவைச் சேர்ந்த மற்ற குடும்பப் பெண்களுக்கும் பலத்த போராட்டத்தின் பின்பே நிவாரணங்கள் கிடைத்தது.
உடனடி அத்தியாவசிய தேவைகளை வழங்கிவிட அரசு உத்தரவிட்டாலும் மக்களைச் சென்றடைவதற்கான வழிமுறை களால் பல பகுதிகளில் சிக்கல்கள் உருவாகி பலர் பாதிக்கப் பட்டனர்.
இது தவிர, சுனாமிப் பாதிப்பை நேரடியாக உணர்ந்த வர்களின் மன உளைச்சலை நீக்கி சகய நிலைக்குத் திருப்ப உளவியலாளர்களை வைத்து அரசுதரப்பில் பயிற்சிகள் தரப்பட்டன. ஆனால் பயிற்சி பெற்றவர்கள் அனைத்து மக்களையும் சந்தித்து பயிற்சி அளித்திருப்பார்களா என்பது கேள்விக்குறியே?.

Page 31
48
பேரழிவுகளுக்குப் பெண்கள் முகம் கொடுத்தல்
சுனாமி தாக்கியபின் தமிழ அரசு நிவாரணம் மற்றும்
மறுவாழ்வுப் பணிகளுக்காக 70 க்கும் மேற்பட்ட அரசு ஆணைகளை வெளியிட்டது. வருவாய்த்துறையின் மூலம் 57 ஆணைகளையும், சமூகநலத்துறை, கல்வித்துறை, நிதித்துறை, கால்நடை மற்றும் மீன்வளர்ப்புத்துறை, வணிகவரித்துறை, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புக் கூட்டுறவுத்துறை ஆகிய துறைகளின் மூலம் மற்ற ஆணைகளையும் வெளியிட்டது.
b. மத்திய அரசு சார்பான நிவாரணங்கள்
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான நிவாரணப்பணியில் மத்திய அரசின் பங்கு
★
குழந்தைகளுக்கான சேவை செய்ய 6 தொலைபேசித் தொடர்புகள் செய்யப்பட்டன.
பெண்களுக்கு குறுகிய காலம் வரை தங்குவதற்கான மையங்கள் தொடங்கப்பட்டன.
குழந்தைகளின் மன உளைச்சலைப் போக்குவதற்காக உளவியலாளர்கள் நாகபட்டினம், கன்னியாகுமரி, மற்றும் கடலூர் மாவட்டங்களில் பணியாற்றினர்.
அனாதையான மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கான காப்பகம் நாகபட்டினம், கன்னியாகுமரி மற்றும் கடலூர் மாவட்டங்களின் தொடங்கப்பட்டன. 1.168 மில்லியன் ரூபாய் மத்திய அரசு தமிழ்நாட்டு அரசுக்கு வழங்கியது. உடல் ஊனமுற்றோர்களுக்கு உதவி மற்றும் மாவட்ட ஊனமுற்றோர் மறுவாழ்வு மையங்கள் தொடங்கி அதன் மூலமாக கருவிகள், மற்றைய உதவிகள் வழங்கப் பட்டன.

சுனாமி மறுவாழ்வு பணியில் அரசின் கொள்கைகளும் . 49
தமிழக அரசின் நிவாரணம் சம்பந்தப்பட்ட முக்கிய அரசு ஆணைகள் சுனாமி மறுவாழ்வு அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள ஆணை களில் பணி சம்பந்தப்பட்ட ஒரு சில முக்கிய ஆணைகளை பார்ப்போம்.
தமிழக வெளியிட்
+ முக்கிய சாராம்சம் ஆணை
எண்
G.O.No. 28.12.2004 உயிரிழந்த குடும்பத்தினருக்கு ஒரு இலட்சம்
574 ரூபாய் ஈவுத்தொகை
G.O.No. 28.12.2004 ஒன்றரை இலட்சம் குடும்பங்களுக்கு உடனடி 575 அவசியப் பொருட்கள் வாங்க உடனடி நிவாரணத் தொகை மற்றும் இரண்டாம் கட்ட நிவாரணம் வழங்க. G.O.No. | 31.12.2004 தினசரி உபயோகத்திற்கான பொருட்கள்
583 வாங்க தலா ரூபா 5000. G.O.No. 06.01.2005 13 மாவட்டங்களில் 1 இலட்சம தற்காலிக வீடு 10 கட்ட தலா ரூபா 8000 முடிவெடுக்கப்பட்டு
அரசு தரப்பில் 50000 தற்காலிக குடியிருப்
புகளும், இதர அனைத்து நிறுவனங்கள் சார்பில் 50000 வீடு கட்டுவது சம்பந்தமாக.
G.O.No. 5 08.01.2005 12 மாவட்டங்களில் புதியதாக அரசு சேவை
இல்லம்
G.O.No.6 08.01.2005 சமூகநலத்துறை மூலம் - சுனாமி அலைகளால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்து நிரந்த ரமாக நிற்கும் 14 வயது முதல் 18 வயது வரையிலான வளர் இளம்பெண்கள் மற்றும் 18 வயதிற்கு மேற்பட்ட திருமணமாகாத பெண் களுக்கு நிதியுதவி வழங்குதல்
G.O.No.7 08.01.2005 3 இடங்களில் குழந்தைகள் காப்பகங்கள் ஆதர வற்ற குழந்தைகள் நிதியுதவி வழங்க சுனாமி பாதித்த கிராமங்களில் நிரந்தர வீடு கட்டி தர தொண்டு நிறுவனங்கள், பொது சேவை நிறுவ னங்களுக்கு அளிக்கப்பட்டது.

Page 32
50 பேரழிவுகளுக்குப் பெண்கள் முகம் கொடுத்தல்
G.O.No. 13.01.2005 நிரந்தர வீடு கடித்தர அனைத்து தரப்பு நிறு 23 வனங்களுக்கு அழைப்பு விடுத்தல் - குறைந்த பட்டசம் 50 குடும்பங்களுக்கு 75 இலட்சம் செலவு செய்ய முன்வருவோருக்கு மட்டும் வாய்ப்பு G.O.No. 17.01.2005 பயிர் சேதங்களுக்கு நிவாரணம்
30
G.O.No. 24.01.2005 மாவட்ட / பஞ்சாயத்து/வார்டு அளவில்
36 நிவாரண குழு அமைத்தல் G.O.No. | 31.05.2005 நிரந்தர வீடு கட்டித்தர அனைத்து தரப்பு 342 நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தல் -
குறைந்தபட்சம் 50 குடும்பங்களுக்கு 75 இலட்சம் செலவு செய்ய முன்வருவோருக்கு மட்டும் வாய்ப்பு.
G.O.No. 08.02.2005 |பல்வேறு மீன்பிடி கலன்களுக்கு ஏற்பட்ட 61 பாதிப்புகளுக்கு ஏற்றவாறு நிவாரணத்
தொகை.
மாநில அரசு தரப்பில் வெளியிட்டுள்ள ஆணைகளில் நிவாரணத் தொகை, தொழில் சம்பந்தப்பட்ட நஷ்ட ஈடு - நிரந்தர குடியிருப்பு, மாணவர்களின் படிப்பு - தேர்வு ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கு நிதி உதவி என்ற அளவில் பெருவாரியாக உள்ளது.
சுனாமி மறுவாழ்வு பணிகளில் பெண்களுக்கான பிரச்சினைகளும் அரசு திட்டங்களின் பிரதிபலிப்புகள் மற்றும் கவனதில் எடுத்துக் கொள்ள வேண்டிய விஷயங்கள்:
அ. தற்காலிக குடியிருப்புகள்
சுனாமியால் தங்களது வீடுகளை இழந்த மக்களுக்கு தற்காலிக குடியிருப்புகள் கட்டித்தர தன்னார்வ நிறுவனங்களிடம் அரசு அவசரமாக வேண்டுகோள் விடுத்தது. பல தனியார் மற்றும் தொண்டு நிறுவனங்களும் அரசு குறிப்பிட்ட நிபந்தனை களை ஏற்றுக் கொண்டு உடனடியாக போட்டி போட்டுக் கொண்டு கட்டித்தர முன் வந்தனர்.

சுனாமி மறுவாழ்வு பணியில் அரசின் கொள்கைகளும் . 5I
இதன் விளைவால் தற்காலிக குடியிருப்புகள் மனிதர்கள் வசிக்கக் கூடிய நிலையில் இல்லை. குடும்ப நபர்களுக்கு தேவைப்படுகின்ற அடிப்படை காற்றோட்ட வசதி கூட இல்லை. தரைகள், ஜன்னல்கள், கதவுகள் எல்லா வற்றிலும் குறைகளே மிஞ்சியது. பெண்களுக்கு தேவைப்படும் தனிமையான இடம், சுகாதார கழிப்பிடம் எதுவுமே சரிவர திட்டமிட்டு செயல்படுத்தப் படவில்லை. அனைத்து வீடுகளும் தகரம், தார்பாய் கொண்டு கட்டப்பட்டது. தகரம், தார்பாய் இரண்டும் அனலை உறிஞ்சும் தன்மை கொண்டவை.
பெண்களை கருத்தில் கொள்ளாமல் கட்டப்பட்டுள்ள அனைத்து தற்காலிக குடியிருப்புகளிலுமே உஷ்ணம் தாங்க முடியாமல் மக்கள் பகல் நேரங்களிலம் நிழலை தேடி வெளியி லேயே தங்கி இருந்தனர். இரவு வேளைகளில் பனி தாக்கியது. உஷ்ணம் தாக்கியதாலும், சுற்றுப்புற சூழல் மாசுபட்டதாலும் அதிக எண்ணிக்கையில் பெண், குழந்தைகளும் அம்மை நோய்க்கு உள்ளாகினர்.
சமீபத்தில் பருவ மழை நேரத்தில் வீசிய காற்றினால் 80 சதமான தற்காலிக குடியிருப்புகள் சூரையாடப்பட்டும் தண்ணிர் உட்புகுந்தும் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.
இந்த தற்காலிக குடியிருப்பு இடம் ஒன்றே பெண்களின் நிவாரணம் மற்றும் மறுவாழ்வு பணியில் பெண்களின் மீதான அக்கறை குறித்து விளக்கும்.
ஆ, உளநல மற்றும் மருத்துவ உதவிகள்
சுனாமி பேரலை தாக்கியதில் பல பெண்களுக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் மிகுந்த காயங்கள் உண்டாகியது. கருத்தரித்த சில பெண்களின் கர்ப்பம் கலைந்துவிட்டது. கருத்தடை செய்த பெண்கள் சிலரின் குழந்தைகள் சுனாமியில் இறந்து விட்டனர். சிலர் கணவரை இழந்து குழந்தைகளையும் இழந்து விட்டனர்.
உயிர் இழப்பையும், காயம் உற்றோரையும், கவனத்தில் கொண்ட அரசு கருச்சிதைவுகளை கவனத்தில் கொள்ளவில்லை. ஒழுங்கு செய்யப்பட்ட மருத்துவ முகாம்களில் கூட இதற்கான ஆலோசனைகளோ, மருத்துவமோ வழங்கப்படவில்லை. இந்நிலையில் அரசுதரப்பு உளவியலாளர்களின் பயிற்சிகள் சிலரை மட்டுமே சென்றடைந்தன. அரச உதவி இருந்தபோதிலும் பல

Page 33
52 பேரழிவுகளுக்குப் பெண்கள் முகம் கொடுத்தல்
பெண்கள் பிள்ளைப்பேறு மறு அறுவை சிகிச்சை முற்ைகு தயக்கம் காட்டுகின்றனர். சரியான உளவியல் ரீதியான அணுகுமுறையும் சமூக ஆதரவும் இல்லாமையே அவர்களுடைய தயக்கததிற்கு காரணம்.
அது மட்டுமல்லாமல், சுனாமியால் குழந்தைகளை இழந்துவிட்ட தாய்மார்களும் ஏற்கனவே கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்ட தாய்மார்களும் குழந்தைகளுக்காக தங்கள் கணவனுக்கு மறுமணம் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர். காரைக்கால் பகுதியில் இரண்டு தாய்மார்கள் மாற்று அறுவை சிகிச்சைக்கு உட்பட்டனர். எனினும் கணவரின் திருப்தியின்மையை புரிந்து கொண்டதாலும் கணவனின் பெற்றோர் மறுமணத்திற்கான ஏற்பாடுகளை செய்ததாலும் கிளிஞ்சல் மேட்டை சேர்ந்த செல்வி என்ற பெண் தற்கொலை செய்து கொண்டார்.
இயற்கை பேரழிவால் ஏற்படும் மன உளச்சல்களை நீக்க உளவியலாளர்கள் கொண்டு மருத்துவ ரீதியாக அணு கினாலும் அவை மக்களுடைய கலாசாரத்துடன் ஒன்றிய முறையில் வழங்கப்பட்டதால்தான் மக்களின் மனபலம் மிக விரைவாக அதிகரிக்கும். இம்மாதிரியான மன உள சிகிச்சை பயிற்சி திட்டங் களை உள்ளூர் மக்களின் கலாச்ாரத்திற்கேற்றவாறு அரசு வகுக்க வேண்டும்.
இ. குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான நிவாரண நிதி உதவிகள்
சுனாமியால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், சிறுமிகள் திருமண மாகாத பெண்கள், விதவைகள் ஆகியோருக்கு அரசாங்கம்
வைப்பு நிதி தொகையை நிவாரணமாக வழங்கியது. குழந்தை
காப்பகங்கள் மற்றும் ஆதரவு இல்லங்களை அரசு உருவாக்கியது.
அரசின் இந்த உதவி பாராட்டப்பட வேண்டிய அதே நேரத்தில்
பெண்களுக்கு மறைமுகமான பின் விளைவுகள் ஏற்படுவதையும்
கருத்தில் கொள்ள வேண்டும்.
ஈ. சுனாமியினால் பெண்களுக்கு கட்டாயத்திருமணத்திற்கு தள்ளப்படும்
நிலை
சுனாமியால் மனைவியரை இழந்த கணவன் மார்களுக்கு மனைவியின் தங்கை கட்டாயமாக மனைவி ஆக்கப்படுகின்ற

சுனாமி மறுவாழ்வு பணியில் அரசின் கொள்கைகளும் . ó。
கொடுமை நிகழ்ந்து கொண்டு இருக்கிறது. அது மட்டுமல்ல, ஒரே குடும்பத்தில் உயிர் இழப்பு அதிகம் நேரும் பட்சத்தில் நிவாரணத் தொகை அதிகம் கிடைத்தவுடன் இளம் பெண்களுக்கு உடனடி கட்டாயத் திருமணம் நிகழ்கின்றது. அரசாங்கத்தின் ஆதரவற்ற இளம் பெண்களுக்கான வைப்பு நிதி உதவியால் போலியான உறவுகளுடன் வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்படும் வாய்ப்பு உள்ளது.
உ. வயதான பெண்களுகக்கு மீண்டும் குடும்ப சுமை
சுனாமியால் மகன் அல்லது மகளை பறிகொடுத்த நிலையில் உள்ள வயதானவர்கள் மீண்டும் தாங்களே பேரக் குழந்தைகளை முன் நின்று பராமரிக்க மற்றும் பாதுகாக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். வயதான நிலையில் வேலைக்கு சென்று சம்பாதிக்கவும் வேண்டிய கட்டாயத்திற்குட்பட்டுள்ளார்கள். இவர்களுக்கென்று எந்த விதமான சிறப்பு சலுகைளோ முதலிட்டு உதவிகளோ அரசாங்கததிடமிருந்து கிடைக்கவில்லைல.
ஊ. ஆதரவற்ற / விதவை பெண்களின் வருவாய் பாதிப்பு
மீன்பிடி தொழில் படகு, என்ஜின், வலை எதுவுமெ இல்லாத மீன் பிடிக்கின்ற தொழிலாளர்களாக மட்டுமே வாழ்ந்து வருகின்ற குடும்பத்தை சேர்ந்த பெண்களே அதிகம். இந்த குடும்பங்களுக்கு உயிர் இழப்பு நிவாரணங்கள் தவிர வேறு எந்த நிவாரணங்களும் சென்று அடையவில்லை. இதர தொழில் பிரிவில் உள்ள பெண்கள், விதவைகளின் நிலையும் இதுவே.
ரூபாய் 500 முதல் 5000 வரை ஒரு நாள் வியாபாரத்திற்கு மீன் கொள்முதல் செய்கின்ற பெண்களுக்கு எந்த வித நிவாரணமும் வழங்கப்படவில்லை. அரசின் இச்செயல் மீன் வியாபாரம் செய்யும் பெண்களை தொழிலாளர்களாகவே அங்கீகரிக்கவில்லை என்பதை காட்டுகிறது. இதனால் பெரிதும் பாதிக்கப்படுபவர்கள் விதவை பெண்களே.
சில பெண்கள் தாங்கள் மட்டுமே சம்பாதித்து குடும்பம் நடத்த வேண்டிய சூழலில் உள்ளனர். இத்தகைய பெண் களுக்கான வேலை வாய்ப்புக்களுக்கான சிறப்பு பயிற்சி களும், சலுகைகளும் அரசு தரப்பில் சரிவர தெரிவிக்கவில்லை.

Page 34
54 பேரழிவுகளுக்குப் பெண்கள் முகம் கொடுத்தல்
அவர்களுடைய திறமைகளுக்கேற்ற வருவாய் ஈட்டும் நடவடிக் கைகளை மேற்கொள்ள வேண்டும்.
எ. இயற்கை சீற்றங்கள் குறித்த விழிப்புணர்வு
இயற்கை பேரழிவுக்கு தயார் நிலையில் இருக்கவும், அவை ஏற்படும் போது சமாளிப்பதற்கும் சர்வதேச நிறுவனங்கள் (UNDP) இந்தியாவில் பயிற்சி அளித்து வருகின்றனர். தமிழ் நாட்டிலும் இப்பயிற்சி கடந்த 2003 ஆண்டிலிருந்து வழங்கப் படுகிறது. இப்பயிற்சியானது மாநில மாவட்ட மற்றும் அரசாங்க ஊழியர்களுக்கு மற்றும் இளைஞர்களுக்கும் வழங்கப்படுகின்றது. ஆனால் இயற்கை சீற்றங்களினால் பெரும்பானமையாக பாதிக்கப்படுவது வீட்டில் இருந்து குடும்பம் நடத்தும் வயதான பெண்கள், குடும்பத் தலைவி மற்றும் குழந்தைகளே. அரசு தரப்பில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பேராபத்துக்களிலிருந்து தங்களை காப்பாற்றிக் கொள்வதற்கான பயிற்சி மற்றும் ஆபத்து குறித்து அறிந்து கொள்வதற்கான முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும்.
தமிழக அரசின் முனைப்பாய செயல்பாடுகள்
சுனாமி மறுவாழ்வு பணியில் அரசு இயந்திரங்களை திறம்பட பயன்படுத்தி தமிழக அரசின் முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா அவர்கள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்ட விதம் பாராட்டுக்குரியதே. பாதிக்கப்பட்ட மாவட்ட ஆட்சியாளர்களும் திறம்பட முனைப்புடன் செயல்பட்டனர். இருந்த போதிலும் பெண்களின் பாதிப்புகளை இன்னும் ஆழமாக ஆராய்ந்து மேற்குறிப்பிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண உடனடியாக சுனாமி மறுவாழ்வு பணிகளை மறுபரிசீலனை செய்து திட்டங்கள் வகுக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட பெண்களுக்கான சுனாமியால் மறுவாழ்வு பணி நடவடிக்கைகளில் கவனத்தில் கொள்ள வேண்டிய செயல்பாடுகளுக்கான பரிந்துரைகள்:
* சுனாமியால் பாதிக்கப்பட்ட விதவைகள், முதிய பெண்கள், குடும்பத்திற்காக சம்பாதிக்கும் நிலையில் உள்ள பெண்கள் ஆகியோருக்கு ஜீவனம் செய்தற்கான

சுனாமி மறுவாழ்வு பணியில் அரசின் கொள்கைகளும் . 55
தொழில்களை இனம் கண்டு வருவாய் ஈட்ட திட்டம் தேவை. வயது முதிர்ந்த பெண்களுக்கு ஏற்றவாறு சலுகைகளுடன் கூடிய திட்டம் வகுக்க வேண்டும். அனைத்து கடலோர பகுதியில் வாழ் மக்களுக்கு (குறிப்பாக வீட்டிலேயே தங்கி உள்ள முதியவர்கள், பெண்கள், குழந்தைகள்) இயற்கை பேரழிவுகள் குறித்த விழிப்புணர்வு முகாம்கள் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ச்சியாக நடத்த வேண்டும்.
சுனாமியால் பாதிக்ககப்பட்ட இளம் பெண்கள், சிறுமிகள், விதவைகள் ஆகியோரின் நிவாரண வைப்பு நிதிகளினால் எவ்வித ஆபத்துக்களும் நிகழாமல் கண்காணிக்கவும் அவர்களது எதிர்காலத்திற்கு வைப்பு நிதி பயன்படும் விதத்தைப் பாதுகாக்கவும் மாநில அளவிலான பெண்கள் புனரமைப்பு குழு அமைக்க வேண்டும்.
உள்ளூர் மக்களின் கலாச்சாரத்திற்கு ஏற்றவாறு பேரழிவினை எதிர்கொள்ளக்கூடிய வகையில் உளவியல் பயிற்சி திட்டங்கள் உருவாக்க வேண்டும். வாழும் சூழ்நிலைக்கேற்ப நிரந்தர குடியிருப்புக்கள் உருவாக்க அந்தந்த பகுதி பெண்களின் ஆலோசனையை பெற வேண்டும். சுனாமி மறுவாழ்வு பணிகளை திட்டமிடும் மற்றும் செயல்படுத்தும் குழுக்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிக பட்சமாக இருக்க வேண்டும்.

Page 35
5
சுனாமியினால் பாதிக்கப்பட்டவர்களின் குடித்தனக் கணக்கெடுப்பு: இலங்கை, மட்டகளப்பு மாவட்டத்திலிருந்து சில ஆரம்ப கட்டத் தகவல்கள் - மே 2005
- சரளா இமானுவல்
புவியியல் பரப்பு - மட்டகளப்பு மாவட்டம்
பிரதேச செயலாளர் பிரிவுகள்
மண்முனை வடக்கு மண்முனைப் பற்று கோரளைப் பற்று வடக்கு கோரளைப் பற்று ஏறாவூர் பற்று மண்முனை தெற்கு எருவில் பற்று காத்தான்குடி
கணக்கெடுப்பில் குடித்தனங்களின் இனத்துவம் (மட்டக்களப்பு மாவட்ட்ம்)
தமிழ் முஸ்லிம்
93% 6.2%
15.2% 78.5% 6.2%
கிறிஸ்தவர்கள் இந்துக்கள் முஸ்லீம்கள்
 

சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களின் குடித்தனக் . 57
குடித்தனங்களுக்கிடையில் சமூக உறவுகளில் மாற்றங்கள்: குடும்ப அங்கத்தவர்களின் இழப்பு
மாவட்ட செசயலத்தினால் திரட்டப்பட்ட புள்ளிவிபரங்கள் கீழுள்ள அட்டவணையில் உள்ளன. தேசிய ரீதியான விபரங் களைப் போலவே ஆண்களை விட அதிகமான பெண்கள் இறந்துள்ளதை இது காட்டுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் இது 58% வீதமாகும். ஆனால் காயமடைந்தோரில் பெண்களை விட ஆண்களே சற்று அதிகம்.
உயிரிழந் உயிரிழந் காணாமற் காயமடைந் காயமடைந்) இடம்
தோர் தோர் போனோர் தவர்கள் தவர்கள் பெயர்ந் (ஆண்கள்) (பெண்கள்) (ஆண்கள்) (பெண்கள்) தோர்
157
(41.1)
1658
(58.9)
52
603 (52.2)
553
(47.8)
22002
மாவட்ட அலுவலர் காரியாலயம், மட்டக்களப்பு 2005 இக் கணக்கெடுப்பிற்காக ஆய்வு செய்யப்பட்ட 200 குடித் தனங்களில் 22 குடும்பங்கள் தமது குடும்ப அங்கத்தவர்களை இழந்துள்ளன.
விதவையானோரின் விபரம்
விதவைகளின் எண்ணிக்கை (146)
பிரதேச அலுவலர் காரியாலய பிரிவு
ஏறாவூர் நகரம் 2 6) ITé9568)D 27
மண்முனை வடக்கு 5. கிரான் 6
வாழைச்சேனை 31 ஒட்டமாவடி 2
கோரளை பற்று மத்திய பிரதேசம் செங்கலடி
வெல்லாவெளி
பட்டிப்பளை
களுவாஞ்சிகுடி 17

Page 36
58 பேரழிவுகளுக்குப் பெண்கள் முகம் கொடுத்தல்
பெண் ஒருவர் தன்னுடைய கணவரை இழந்தும், 3 குடும்பங்கள் மனைவிமாரினை இழந்துமுள்ளனர். 10 குடும்பங்கள் குழந்தைகளை இழந்தும், 8 குடும்பங்கள் வேறு உறவினர்களை இழந்தும் உள்ளன. உதாரணத்தில்: நேரிட்ட உயிரிழப்புகளில் 80% பெண்களும் பெண் குழந்தைகளுமாவர். ஒட்டுமொத்த சனத்தொகையில் நேரிட்ட உயிரிழப்புகளில் 60% பெண்களும் பெண் குழந்தைகளுமாவர்.
பிரதேச செயலகங்களும் விதவையானோர் தொடர்பாக மேற்கண்ட தகவல்களை திரட்டியுள்ளன.
குடித்தனங்களுக்கிடையில் சமூக உறவுகளில் மாற்றங்கள்: சுனாமிக்குப் பின்னர் குடியிருப்புகளினுள் புதியவர்களின் வருகை.
* மட்டக்களப்பு உதாரணத்தில், 25 குடித்தனங்களில் புதியவர்களின் வருகை காணப்பட்டது இதில் 30 பெண்களும் 34 ஆண்களும் உள்ளனர். (சிறுவர்களும் வயது வந்தவர்களும்)
* சராசரியாக 2 தொடக்கம் 3 புதிய அங்கத்தவர்கள் இக்குடித்தனங்களில் உள்ளனர். ஒரு குடிகுடித்தனத்தில் மாத்திரம் 7 புதிய அங்கத்தவர்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். சுனாமிக்குப் பின்னரான சூழலில் குடித் தனங்கள் மேலதிகமாக குடும்ப அங்கத்தவர்களைப் பராமரிக்கும் பொறுப்பை எடுத்துதுக் கொண்டமை தெரிகிறது. இதனால் குடித்தனங்களில் ஆண் பெண்களது பொறுப்பும் சுமையும் அதிகரித்த போதிலும் பெண்கள் பெரும்பாலும் பராமரிப்பில் ஈடுபடுவதால் அவர்களது பொறுப்பே அதிகரித்தது.
குடியிருப்புகளுக்கிடையில் சமூக உறவுகளில் மாற்றங்கள்: குழந்தைகளை பராமரித்தல்
* மூன்று குடித்தனங்கள் குடும்பத்தினரை இழந்த சிறுவர் களை ஏற்று கொண்டன. இவர்களில் இருவர் 3 மற்றும் 9 வயதான பெண் குழந்தைகளும் 1 1/2 வயது ஆணி குழந்தையுமாவார்கள்.

சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களின் குடித்தனக் . 59
* முழு மாவட்டத்திலும் 700 உட்பட்ட சிறுவர்கள், பெறறோர்கள் இருவரையுமே இழந்தவர்கள் பதியப் பட்டுள்ளனர். பிள்ளை, பராமரிப்பு, நன்னடத்தை சேவைகளானது இத்தகைய பிள்ளைகளை எஞ்சியுள்ள அவர்களது குடும்பத்துடன் தங்க வைக்க முயலுககின்றனது.
குடியிருப்புகளுக்கிடையில் சமூக உறவுகளில் மாற்றங்கள்: பெண்கள் வீட்டு தலைமை பொறுப்பை வகிக்கும் குடியிருப்புகள்
* மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் புரியும் ஆணி அங்கத்தவர்களை கொண்ட 10 குடும்பங்களில் பெண்களே குடும்பத்தைப் பராமரிக்கும் பிரதான உறுப்பினர்களாக காணப்பட்டனர். பேட்டி காணப்பட்டோரில் 15 சத வீதமான பெண்கள் தாமே குடும்ப தலைமைப் பொறுப்பை வகிப்பவர்களெனக் கருதினர். சுனாமிக்கு முன்னரும் இத்தகைய நிலைமை காணப்பட்டது.
பெண்களின் வாழ்வாதாரங்கள்
மாவட்டம் ஜீவனோபாய சுனாமிக்கு சுனாமிக்கு பின்னர்
நடவடிக்கை முன்னர் தொடர முடிகின்றதா?
மட்டகளப்பு தையல 22% வருமானத்தை ஈட்டி அரசாங்க 11.8% தரும் உபகரணங்களை ஆசிரியர்/தாதிமார் யும், மூல வளங்களை சிறிய வியாபாரம் / யும், கால்நடை வளர்ப் 3, UG5ITLégi 22% புகளையும் மற்றும்
35% மூலதனத்தையும் இழந் 8.5% தமையினால் சுனா மிக்கு பின்னர் தங்களது தொழிலை தொடர முடி யாதுள்ளனர் என 62% பெண்கள் கூறினர்.
பண்ணை/நெசவு
வேறு (மீன்பிடிப்பு மற்றும் செங்கல் செய்கை/கட்டிட வேலை
13.6%
குறைந்தது 10 குடியிருப்புகளில் ஓர் குடும்ப அங்கத்தவரேனும் வெளிநாட்டில் அல்லது கொழும்பில் தொழில்புரிகின்றனர். இவர்களில் அநேகர் ஆண்களாவர். பேட்டியெடுக்கப்பட்ட பெண்களில் 69.9 சதவீதத்தினர் குடியிருப்புகளில் வருமானம் ஈட்டாத அங்கத்தவர்களாகவே காணப்படுகின்றனர்.

Page 37
6O பேரழிவுகளுக்குப் பெண்கள் முகம் கொடுத்தல்
சுனாமிக்கு முன்னரான கடனுதவி
மாவட்டம் செயற்பாடு ஆண் பெண்
மட்டகளப்பு சிறு கைத்தொழில் l III
(5,000 - 25,000)
விவசாயம் 2 2
மீன்பிடிப்பு 2 2 வீடமைப்பு(சராசரி
50,000 - 15,000) 4 4
தையல் l மொத்தம் 9 2O
சுனாமி ஏற்பட்டு மூன்று மாதங்களின் பின்னர் ஓர் ஆணும் பெண்ணுமே வியாபார நோக்கத்தில் கடனுதவிகளை பெற்று கொண்டனர். மேலுள்ள அட்டவணையின்படி பெண்களே அதிகம் வாழ்வாதாரத்திற்கான கடன்கள் பெற்றுள்ளனர். இக் கடன்களை மீளச் செலுத்துதல் பிற்போடப்படுமா அல்லது கடன் முற்றாக அழிக்கப்படுமா என்பது பற்றிய நிச்சயமின்மையை அவர்கள் பேட்டியின்போது தெரிவித்தனர்.
விடு அல்லது குடியிருப்பு வசதி
* வீட்டின் நிலை * மட்டக்களப்பில் கணக்கெடுப்பிற்காகப் பேட்டி காணப் பட்டோரில் 39.3% வீடுகள் முழுவதும் அழிவுக்குள்ளானது மற்றும் 42.9% வீடுகள் ஒரளவு அழிவுக்குள்ளானது 17.9% வீடுகளே அழிவுக்குட்படவில்லை.
நில அல்லது காணி உரிமை
* கணக்கெடுப்புக்கு உட்பட்ட 200 குடித்தனங்களில் 80.1 சதவீதமான குடும்பங்கள் தங்களது நிலத்திற்கு உரிமை பூண்டவர்கள் என்பதை நிரூபிக்கக் கூடியவர்கள், 17.9 வீதமானவர்கள் நீண்டகாலமாக அந்நிலத்தில் குடியிருந் தவர்களாக காணப்பட்டனர். அவர்களில் மூவர் குத்தகை

சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களின் குடித்தனக் . 61
காரர்களாகவும் ஒருவர் அனுமதி வழங்கப்பட்ட காணியில் வாழ்பவராகவும் காணப்பட்டனர். * குடித்தனங்களுக்குள் ஏற்று கொள்ளப்பட்ட புதியவர்களை பொறுத்தமட்டில் 17 பேர் முன்னர் வாழந்த அழிவுக் குட்பட்ட காணி நிலங்களுக்கு சட்டபூர்வமான உரிமையா ளர்களாக கருத பத்திரங்களை கொண்டிருந்தனர்.
* 7 பேர் நிண்டகாலம் குடியிருந்தவர்களாக காணப்பட்டனர்
* ஒருவர் அவருடைய அழிவுக்குட்பட்ட காணி நிலங்களுக்கு உரிமை கோர சட்டபூர்வமான பத்திரங்களை கொண்டிருக்க வில்லை.
புதிய சொத்துக்களுக்கு உரிமை வழங்குவது பற்றிய பெண்களின் விருப்பம்
* தங்களது சொந்த பெயரில் சொத்துக்களை வழங்குவதை
33.5% பெண்கள் விரும்பினர்.
* மகள் அல்லது கணவருடன் கூட்டு உரிமையில் சொத்துக்கள்
வழங்கபடுவதை 40.1% பெண்கள் விரும்பினர். எழுபது சதவீதத்திற்கும் மேலான பெண்கள் சொத்துக்களின் முழு உரிமையையும் ஆண்களுக்கு வழங்குவதை விரும்ப வில்லை என்பதை இது எடுத்து காட்டுகின்றது - இது தற்பொழுது காணப்படும் அரச கொள்கைக்கு எதிர்மாறா னதாகும். தற்போதைய நிலையில் சுனாமிக்கு முன்னர் பெண்ணின் பெயரில் காணி உறுதி இருந்தால் மாத்திரமே பெண்ணுக்குக் காணி வழங்க முடியும். அரச காணிச் சட்டத்தின் படி இணை உரிமை அங்கீகரிக்கப்படவில்லை.
அசையும் சொத்திழப்பின் பால்நிலை பரிமாணங்கள்
* மூன்று மாவட்டங்களிலும் காணாமற் போன அசையும் சொத்துக்களாக நகைகள், பெண்களுக்கு வருமானம் ஈட்டித்தரும் உபகரணங்கள் மற்றும் வீட்டுப் பொருட்கள் கருதப்பட்டன. இவை சம்பிரதாயபூர்வமாக பெண்களுக்கு பொருளாதார உதவியையும் சமூக பாதுகாப்பையும் தந்தவையாகும். இவற்றில் சில அரசசாரா நிறுவனங்களால் திரும்பவும் கொடுக்கப்பட்டன.

Page 38
62 பேரழிவுகளுக்குப் பெண்கள் முகம் கொடுத்தல்
* அவசர தேவைகளுக்கு வீட்டில் பெண்களாலும் சிறுவர்க ளாலும் உபயோகப்படுத்தப்பட்ட சைக்கிள்கள், அவர்கள் முக்கியமாக கருதிய இன்னுமோர் பொருளாகும். மட்டக் களப்பில் மிகவும் குறைந்த போக்குவரத்து வசதிகளே உள்ளன. எனவே சொந்தப் போக்குவரத்து மிக முக்கியமா னதாகும். அதற்கு உதவும். வாசனங்களின் இழப்பானது. பாடசாலை, சந்தை போன்றவற்றுக்குச் செல்வதையும் வாழ்வாதார முயற்சிகளை மேற்கொள்வதையும் கட்டுப் படுத்தியது.
சிறுவர்களும் பாடசாலையும்
சுனாமிக்கு பின்னர் 16 குடித்தனங்களில் (உதாரணத்தில் 8%), சிறுவர்கள் பாடசாலைக்கு சமூகமளிக்கவில்லை. இது 12 வயதிற்கு மேற்பட்ட 8 பெண் பிள்ளைகளையும் 8 ஆண் பிள்ளைகளையும் உள்ளடக்கும்.
பாடசாலை செல்லாமைக்கான காரணம்
* புத்தகங்கள் மற்றும் உபகரணங்கள் இல்லாமை. * வருமானம் இல்லாமை. * போக்குவரத்து வசதி இல்லாமை - இதுவே பிரதான
பிரச்சினையாக கருதப்பட்டது.
தனிப்பட்ட பாதுகாப்பு
* முக்கியமான பிரச்சினையாக கொள்ளையடித்தல் மற்றும்
களவு குறிப்பிடப்பட்டது. * மட்டக்களப்பு உதாரணத்தில் 12.5 சதவீதமானோர் வன்முறைகள் மற்றும் குடும்ப வன்முறைகளுக்கு அஞ்சினர்.
கலாசார வழக்கங்கள்
* மட்டக்களப்பு - மரணக் கிரியைகள், பூப்பு நீராட்டு விழா மற்றும் திருமண வைபவங்களை நடாத்த முடியாமையை பிரச்சினைகளாக பெண்கள் கருதினர்.

சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களின் குடித்தனக் . 63
பெண்களுக்கு சாதகமான அனுபவங்கள் * 26.8 சதவீதத்தினர் அரச உதவிகளும் நிவாரணங்களும்
பெற்றமையைக் குறிப்பிட்டனர். * சுனாமிக்கு பின்னர் அரசுடனும் அரச சாார்பற்ற நிறுவனங் களுடனும் கலந்துரையாடி முடிவிற்கு வருவதை கற்றுக் கொண்டமை, தீர்மனங்கள் எடுப்பதில் ஈடுப்படல், பொது வாழ்க்கையில் ஈடுபடல் மற்றும் தகவல்களை பெற்றுக் கொள்ளல் போன்ற சாதகமான அனுபவங்களை பெற்று கொண்டதாக 24.8% பெண்கள் கூறினர்.
* வேறு நிறுவனங்களின் மூலமாக பெற்று கொண்ட
உதவிகளை 12.4% ஆனோர் சாதகமாக கருதினர்.
* 4.8 சதவீதமானவர்கள் குடும்ப உதவிகளை சாதகமாக
கருதினார்கள்.
( யுனிபெம் ஆதரவில் கொழும்பில் இயங்கும் பெண்கள் ஆய்வு மையம் (CENWOR) வடிவமைத்த தேசிய மட்டத்திலான கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையத்தினூடாக இவ்வாய்வு
மேற்கொள்ளப்பட்டது).

Page 39
6
பெண்களின் வாழ்வாதாரங்களுக்கு மதிப்பளித்தல் : மாலைதீவில் பொருளாதார மீள்நிலை முயற்சிகளில் பாலின உரிமையை உறுதிப்படுத்துதல்
- ஷாலினி ஜாவர், சிந்து ஷாலி
முன்னுரை
மாலைதீவு அபிவிருத்தியடைந்து வரும் ஒரு சிறு தேசமாகும். இதில் ஏறக்குறைய 1-9 கிலோமீற்றர் வரையான நீளத்தினையும், கடல்மட்டத்திற்கு 1.5 மீற்றர்களுக்கு மேற்படாதுள்ளதுமான 1190 சிறிய முருகைத்தீவுகளையும் உள்ளடங்கியுள்ளது. ஏறக்குறைய 200 வரையான தீவுகளில் மாலைதீவு சனத் தொகையினர் 270,101 (சனத்தொகை கணக்கெடுப்பு 2000) மக்கள் பரவலாக வாழ்கின் றனர். நாட்டில் ஒரளவு ஒருபடித்தான இனமக்கள், ஒரே மொழி, மதம், கலாச்சாரமுடையவர்களாக வுள்ளனர்.
பாரம்பரிய ரீதியில் மாலைதீவின் பொருளாதாரம் கடற்றொழிற் துறைசார்ந்ததாகவுள்ளதுடன் சனத்தொகையில் பெருமளவினர் இத்துறையில் ஈடுபட்டுமுள்ளனர். கடந்த சில தசாப்தங்களில் நாடு கணிசமானளவு முன்னேறியுள்ளதுடன், பொருளாதாரமும் பல்வேறு துறைகளுக்கு, குறிப்பாக சுற்றுலாத் துறைக்கு பன்முகப்படுத்தப்பட்டுள்ளது.
மாலைதீவில் வாழும் பெண்கள், அதையொத்த கலாச்சாரம், சமூகப் பின்னணிகளிலுள்ள நாடுகளில் வாழும் பெண்களுடன் ஒப்பிடுகையில் அதிக சுதந்திரத்தையும் சமூகத்தில் அதிகளவு பங்குபற்றலையும் கொண்டவர்களாக காணப்படுகின்றனர். எவ்வாறெனினும், பால்நிலை சமமின்மைகள் அங்கு இருந்து வருகின்றதுடன், சகல சமூக - அரசியல், பொருளாதார துறைகளிலும் ஆண்கள் - இளைஞர்களுக்கு ஒப்புரீதியில் குறைந்த

பெண்களின் வாழ்வாதாரங்களுக்கு மதிப்பளித்தல் . 65
நலனைப் பெறுபவர்களாக பெண்களும், யுவதிகளுமுள்ளர் (2005 உலக வங்கி). இத்தகைய பால்நிலை சமமின்மை குறிப்பாகக் காணப்படும் துறைகளில் ஒன்றாக வருமான உற்பத்தி செயற் பாடுகள் அல்லது வாழ்வாதாரங்கள் உள்ளன.
சுனாமியின் முன்னர் பால்நிலையும் வாழ்வாதாரங்களும்
குடும்ப வருமானங்களுக்கு செயற்திறனான பங்களிப்பு வழங்கு நராக பெண்கள் பாரம்பரியமாக காணப்படுகின்றனர். எவ்வா றெனினும், பொருளாதார வளர்ச்சி மற்றும் கைத்தொழில் அத்துடன் சேவைத்துறையின் பரந்த விரிவு நோக்கிய நகர்வு என்பவற்றுடன், பெண்கள் பெருமளவில் ஈடுபட்டிருந்த பாரம்பரிய பொருளாதார நடவடிக்கைகளில் வீழ்ச்சியேற்பட்டது. இத்தகைய நிலைமையானது, குடும்பங்களுக்கான மனைவிமாரின் அல்லது பெண்களின் வருமானத் தேவையைக் குறைந்த வருமான மட்ட அதிகரிப்பினால் மீள்வலியுறுத்தப்பட்டதுடன் பெண்களை இல்லற வாழ்க்கையில் இல் லக் கவனிப்பாளர் என்ற வகைக்கு மட்டுப்படுத்தியது.
வேலையணியில் பெண்களின் பங்களிப்பு எண்ணிக்கையில் ஏற்பட்ட வீழ்ச்சிக்கு கடற்றொழில் துறையின் நவீனமயமாக்கலும், சுற்றுலா முக்கிய துறையாக தாபிக்கப்பட்டமையும் பெருமளவு காரணமாக அமைந்தனவெனலாம். பெண்களின் செயற்களமாக பாரம்பரியமாகவிருந்து வந்த மீன்பதனிடல் செயற்பாடுகளை, புதிய தொழிற்சாலைகள் மேற்கொண்டன. மீன் பதனிடுதலில் உள்ளுர் மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் விற்பனை செய்வதற்கென சூரை மீனை அவித்தல், புகையிடுதல், உலர்த்தல் என்பன அடங்கும். வீட்டிற்கு வெளியே பெண்கள் ஊழியத்தில் ஈடுபடுவதை சமூக வழமைகளும் கலாச்சார மட்டுப்படுத்தல்களும் தடை செய்தன. இத்தகைய வழமைகள் பெண்கள் சுற்றுலாத்துறையில் பங்குபற்று வதனையும் மட்டுப்படுத்தியது. இத்துறையிலும் இதேபோன்று வீட்டிற்கு வெளியே பணியாற்றும் தேவைப்பாடுள்ள ஏனைய துறைகளிலும் 4% பெண்கள் மாத்திரமே ஈடுபட்டுள்ளமை காணப்படுகின்றது (2005 உலகவங்கி முதலியன).
எவ்வாறெனினும், சமீப காலங்களில் பெண்கள் பெற்றுள்ள பயிற்சியும், கல்வியும் அவர்களை பல்வேறு பங்களிப்புடன் வேலையணியில் புகுவதை ஆதரித்துள்ளதுடன், பெண்களின்

Page 40
66 பேரழிவுகளுக்குப் பெண்கள் முகம் கொடுத்தல்
வேலையணி பங்குபற்றல் விகிதமும், 1995 இலிருந்து 2000 ஆண்டில் 9% மாக உயர்ந்தது. அவ்விதமிருந்தும் வேலையணியில் பெண்களின் பிரதிநிதித்துவமானது ஆண்களின் 71.1% பங்களிப் புடன் ஒப்பிடுகையில், விரும்பத்தக்க விகிதமாக அமையாது 37.4% குறைந்தளவாகவே அமைந்துள்ளது (சனத்தொகை விபரம் 2000). அட்டொல்ஸ் அபிவிருத்தி அமைச்சினால் வெளிப்புற அட் டொல்ஸ் தொடர்பில் நடாத்தப்பட்ட ஆய்வொன்றிற்கு இணக்கமாக (2004) தொழில்களின் 46% தனி ஆண்களினாலும் 15% மாத்திரம் தனிப்பெண்களினாலும், 39% ஆண், பெண் இருபாலாரினாலும் மேற்கொள்ளப்பட்டமை தெரிய வருகின்றது. அத்துடன் ஏறக்குறைய இத்தகைய 50% மாலைதீவு குடும்பங்கள் தனிப் பெண் தலைமையிலான குடும்பங்களாக, குறிப்பாக இலகுவில் பாதிப்புறு தன்மையுள்ளனவர்களாயிருப்பதை இது காட்டுகிறது. (UNFPA 2004) மேலும் பாதிப்புறுதன்மை மற்றும் வறுமை மதிப்பீட்டின்படி (1998) சனத்தொகையின் 43% த்தினர் வறுமையில் வாழ்பவர்களாக, நாளொன்றிற்கு ஒரு டொலர் தொகைக்கு சற்று மேலாகவுள்ள 15 ருவியா (Rufiyaa) தொகையில் வாழ்பவர்களாக காட்டப்படுகின்றனர்.
விவசாயத் தொழிற்றுறை பெண்களினால் முகாமை செய்யப்படுகின்றதெனினும், சில தீவுகளில் இத்தொழில் ஆண்களுக்கான பிரதான பொருளாதார செயற்பாடாகவுமுள்ளது. விவசாயம் முக்கிய வாழ்வாதார செயற்பாடாகவுள்ள தீவுகளில் உலக உணவு நிகழ்ச்சித்திட்டத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் படி குடும்ப வருமானத்தின் மதிப்பிடப்பட்ட 60% த்தினை இத்துறை கொடுத்துதவியதை அறிய முடிகின்றது. பெண்கள் சமூகப்பொது நிலங்களுடன் தனி விவசாய நிலங்களைப் பேணிவந்ததுடன் வீட்டு நுகர்விற்கும் விற்பனைக்குமென வீட்டுத் தோட்டங்களையும் செய்கை பண்ணி வந்தனர்.
நாட்டின் இரு முக்கிய கைத்தொழிற்றுறைகளில் பெண்கள் குறைவாகப் பிரதிநிதித்துவப் படுத்தப்பட்டிருப்பினும், நாட்டின் பொருளாதார முயற்சிகளுக்கான பெண்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகவேயுள்ளது. பெரும் தொகையான பெண்கள் சுய வேலைவாய்ப்பில் ஈடுபட்டிருந்தனர் அல்லது வீட்டிலிருந்த வண்ணம் தையல்வேலை, பாரம்பரிய உணவுகளைத் தயாரித்தல், கைப்பணி என்பன மூலமாக மேலதிக வருவாய் பெறுவதன் மூலம்

பெண்களின் வாழ்வாதாரங்களுக்கு மதிப்பளித்தல். 67
குடும்ப வருமானங்களுக்கு துணைபுரிந்தனர் (2005 உலக வங்கி முதலியன).
மாலைதீவு மீதான சுனாமியின் தாக்கவிளைவு
இந்தோனேசியாவிற்கு அப்பாலுள்ள கடலில் எழுந்த சுனாமி, அதன் வழியில் சொல்லொணா அழிவினையும் மரணங்களையும் ஏற்படுத்தி 2004 டிசெம்பர் 26 ஆந் திகதி காலை ஒன்பது மணிக்கு சற்றுப் பின்னதாக மாலைதீவினைத் தாக்கியது. 1 - 4 மீற்றர்கள் வரை உயர்ந்த இந்த அலைகள், ஆகக் கூடிய உயர அளவில் கடல்மட்டத்திற்கு 1.5 மீற்றர்களுக்கு மேலாக அமைந்திருந்த இச்சிறிய நாட்டிற்குள் மோதி, தீவுகளெங்கிலும் பரவி, அதனுடன் உயிர்களையும் தலைமுறைகளாகக் கட்டி யெழுப்பப்பட்ட வீடுகளையும் அவற்றுடன் முக்கிய உட் கட்டமைப்புகளையும் முற்று முழுதான வாழ்வாதாரங்களையும் அடித்துச் சென்றது.
இது மாலைதீவு சரித்திரத்தில் இடம்பெற்ற மிகப்பெரிய இயற்கை அனர்த்தமாகவுள்ளது. ஏறக்குறைய 100 பேர் வரை குறிப்பாக பெருமளவு பெண்களும் பிள்ளைகளும் உயிரிழந்தனர். அத்துடன் சனத்தொகையின் 7% அல்லது 1200 பேர் வரை இடம்பெயர்ந்தனர் (2005 உலக வங்கி முதலியன). சில தீவுகளில் உட்கட்டமைப்புகள், வீடுகள், தோட்டங்கள் எதுவுமே இல்லாத நிலையில் அங்கிருந்து மக்கள் முற்றாக வெளியேறினர். ஒட்டுமொத்த சமூகங்களும் இடம்பெயர்ந்து வேறிடங்களுக்கு சென்றனர். மாலைதீவில் இதுவரை காலத்திலும் மக்கள் வீடுகளை இழந்த ஒரு நிலைமையை எதிர்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டிராத காரணத்தால் இது இந்நாட்டிற்கு ஏற்பட்ட மிகக் கடினமான யதார்த்த நிலையொன்றாக காணப்பட்டது. இந் நிலைமையில் ஆயிரக்கணக்கானோர் தற்காலிக புகலிடங்களுக்குச் சென்றதுடன் விருந்தாளிக் குடும்பங்களுடன் எதிர்வரும் மாதங்கள் அல்லது ஆண்டுகளுக்கு வாழ வேண்டியுமிருந்தது. ஏனைய சிலருக்கு குடும்பங்களும், நண்பர்களும் புகலிடம் வழங்கினர்.
நாட்டின் அபிவிருத்தியினை இருபது ஆண்டுகாலப் பின்னடைவிற்கு சுனாமி பின்தள்ளியது. உட்கட்டமைப்பு ஏற்பாடுகளுக்கும் கைத்தொழில்களுக்கும் ஏற்பட்ட சேதம் அழிவுகளின் செலவு நாட்டின் வருடாந்த மொத்த உற்பத்திச் செலவின் 62% மாகவும், தீவுகளின் 15% நீர் வழங்கல்

Page 41
68 பேரழிவுகளுக்குப் பெண்கள் முகம் கொடுத்தல்
முறைமைகளை இழந்தும், தீவுகளின் 25% த்திற்கு முக்கிய கட்டமைப்பு வசதிகளான சரக்கு இறக்கும் இடங்கள், துறை முகங்கள் என்பவற்றிற்கு முக்கிய சேதங்களும் ஏற்படுத்தப்பட்டன (உ.உநி 2005). பாதிப்பிற்குள்ளான தீவுகளில் வீடுகள், சொந்த உடமைகள், கல்வி மற்றும் சுகாதார ஏற்பாடுகள், போக்குவரத்து மற்றும் தொடர்பு முறைகள், கட்டமைப்புகள் பெருமளவு சேதப்படுத்தப்பட்டன அல்லது அழிவுற்றன.
மாலைதீவின் பொருளாதாரம், சுற்றுலா மற்றும் கடற் றொழிலாகிய இரு கைத்தொழில்களின் அடிப்படையிலானது. உள்ளுர் சிறிய பொருளாதாரங்களில் விவசாயமும் முக்கிய பங்கினை வழங்கியது. இந்த பொருளாதார வாழ்வாதாரங்களில், அனர்த்தம் பெரும் தாக்கவிளைவினை ஏற்படுத்தியது. இணைந்த தேவைப்பாடுகளின் மதிப்பீட்டின் படி (2005 உலக வங்கி முதலியன) சுற்றுலா கடற்றொழில் மற்றும் விவசாயம் என்பவை நேரடி இழப்புகளாக ஏறக்குறைய 266.2 மில்லியன் அமெரிக்க டொலர்களையும், மறைமுக இழப்புகளாக ஏறக்குறைய 30 மில்லியன் அமெ.டொலர்களையும் கணக்குக் காட்டின.
மொத்த தேசிய வருவாயில் 33% த்தினை சுற்றுலா நேரடியாகக் ஈட்டுகின்றது. சுனாமி காரணமாக 87 விடுதியிடங் களில் 19 மூடப்பட்டு 2005 ஆண்டு முற்பகுதியில் வதிவு வீதங்களும் 40% த்திற்கு கீழாக அமைந்திருந்தது (ஜனாதிபதி அலுவலகமும் மாலைதீவு தொலைக்காட்சி சேவையும் 2005).
அலைகள் பல மீன்பிடிக் கலங்களை, மீன் பதனிடும் உபகரணங்களை, சரக்கு இறக்கும் துறைகளை, துறைமுகங்களை, கரையோர கட்டமைப்புகளை அழித்தது. இதனால் பெரும் எண்ணிக்கையான மீனவர்களும் இத்தொழிலில் ஈடுபட்டிருந்த வேறு பலரும் சீவனோபாயங்கள் எதுவுமின்றி கைவிடப்பட்டனர். கடல்நீரானது, நன்னீரினை மாசுபடுத்தியதுடன் முக்கிய விவசாய, தோட்டப்பகுதிகளையும் அழித்தது. இவற்றை மீளியல்பு நிலைக்குக் கொண்டு வருவதற்கு பல ஆண்டுகளாகுமென எதிர்பார்க்கப்படுகின்றது. சிறு வருமான உற்பத்தி நடவடிக் கைகளில் ஈடுபட்டோர் பெருமளவு அல்லது முற்றான அளவு களில், அவர்களின் உபகரணங்கள், உட் கட்டமைப்பு வசதிகள் என்பவற்றில் இழப்பினை எதிர் கொண்டனர். இதன் காரணமாக சனத்தொகையில் குறிப்பிடத்தக்க பகுதியினர் வேலைவாய்ப் புகளை இழந்தனர்.

பெண்களின் வாழ்வாதாரங்களுக்கு மதிப்பளித்தல் . 69
மாலைதீவின் வலுவற்ற சூழல் நிலையானது, கடல்கோளின் கடின தாக்கத்திற்குட்பட்டது. கடற்கரையின் பெரும்பகுதிகளும் வளமான மேல்மண்ணும் கழுவிச் செல்லப்பட்டன. தாவர இனங்கள் அழிக்கப்பட்டன. அனர்த்த அழிவுகளினால் உருவாக்கப்பட்ட கழிவுகள், சிதைவுகளின் பெருமளவு தொகை இயற்கைச் சூழ்நிலைக்கு ஆபத்தாகவுள்ளது.
அனர்த்தத்தின் உள சமூகவியல் தாக்கவிளைவானது, சீவனோபாய இழப்புகளினாலும், அதன்விளைவான எதிர்கால நிச்சயமற்ற தன்மையினாலும் மோசமாக்கப்பட்டது. சீவனோபாய இழப்புகளுக்கு மேலதிகமாக வாழ்நாளின் சேமிப்புகளையும் சொத்துக்களையும் இழந்ததுடன், மீன்பிடித்தொழில் மற்றும் சுற்றுலாத் துறைகளின் குறுக்கம் பலருக்கு குறிப்பாக இளம் சந்ததியினருக்கு வேலைவாய்ப்பு இழப்பினை ஏற்படுத்தியது.
பால்நிலையும் வாழ்வாதாரங்களும் , சுனாமியின் பின்னரான நிலைமை
சுனாமி அனர்த்தமானது, ஆயிரக்கணக்கான ஆண், பெண்களின் வாழ்வாதாரங்களை அழித்து இடையீடு செய்தது. சொத்துக்கள் உடமைகளுக்கு மேலதிகமாக, பல குடும்பங்கள் தமது வீடுகளில் சேகரித்து வைத்திருந்த சேமிப்புகளையும் இழந்தன. ஆண்கள் அவர்களது மீன்பிடிக் கலங்கள் மற்றும் வேலையிடங்கள் போன்றவற்றில் கணிசமான இழப்பை சந்தித்த அதேவேளை, பெண்களின் வாழ்வாதாரங்களும் இழக்கப்பட்டன. எவ்வாறெ னினும் பெண்கள் சிறு அளவு தொழில்களில் மாத்திரம் ஈடுபட்டு, பெரும் சொத்துக்களுக்குச் சொந்தக்காரராக இராமையி னாலும் அத்துடன் வீடுகளுக் குள்ளேயே பணிகளை மேற் கொள்ளும் காரணம் காரணமாகவும், அவர்களது இழப்பு ஆண்களுக்கு ஏற்பட்ட இழப்புகளின் அளவு போன்று பெருமளவினதாக நோக்கப்படவில்லை.
விவசாயத்துறை
தீவிலுள்ள இரு பிரதான வகையான விவசாய நடவடிக் கைகளில் பொதுக் காணிகளில் பெரும் விவசாய நிலங்களை முகாமித்தல் மற்றும் வீட்டுத்தோட்டங்களில் சிறியளவில் பழங்களை, மரக்கறி வகைகளை உற்பத்தி செய்தலும் உள்ளடங்கின. இவ்விரு வகைகளிலும் பெண்கள் கணிசமானளவு பங்குபற்றுகின்றனர்.

Page 42
70 பேரழிவுகளுக்குப் பெண்கள் முகம் கொடுத்தல்
கீனா ஒமடு தீவின் பெண்கள் பள்ளிவாசலின் இமாமாக வுள்ளார். இவர் தமது வீட்டுத்தோட்த்தில் மா, மிளகாய், பப்பாசி, கொய்யா, கறிவேப்பிலை, வாழை என்ப வற்றை வளர்த்து இவ்விளைவு களை விற்பதன் மூலமாக கணிசமான வருவா யினைப் பெற்று வந்தார். அனர்த்தத்தின் பின்னர், தரைநீரின் அதிகரித்த உவர்த்தன்மை காரணமாக அவரது பயிர்ச்செய்கை உலர்வுற்று அழிந்தது (MGFDSS, 2005 b).கீனா ஒமடு தீவின் பெண்கள் பள்ளிவாசலின் இமாமாகவள்ளார். இவர் தமது வீட்டுத்தோட்த்தில் மா, மிளகாய், பப்பாசி, கொய்யா, கறிவேப்பிலை, வாழை என்பவற்றை வளர்த்து இவ்விளைவுகளை விற்பதன் மூலமாக கணிசமான வருவாயினைப் பெற்று வந்தார். அனர்த்தத்தின் பின்னர், தரைநீரின் அதிகரித்த உவர்த்தன்மை காரணமாக அவரது பயிர்ச்செய்கை உலர்வுற்று அழிந்தது (MGFDSS, 2005 b).
விவசாயத்துறையில் சுனாமியின் தாக்கவிளைவு பெருமளவி னதாகவிருந்தது. விவசாய நிலங்கள் சேதப்படுத்தப்பட்டு, விவசாய பயிர்களும், வீட்டுத்தோட்ட செடிகள் மரங்களும் உலர்ந்தன. இதற்கு மேலதிகமாக விதைகள், கருவிகள், உர வகைகள், பம்பிகள் மற்றும் விவசாய உபகரணங்கள் என்பன சேதப்படுத் தப்பட்டன. அனர்த்தத்தின் மற்றுமொரு தீவிர விளைவானது, தீவின் தரைநீரில் அதிகரித்த உவர்த்தன்மை ஏற்பட்டு, மீள்பயிரிடலை சாத்தியமற்றதாக்கிய நிலையாகும். மரக்கறி உற்பத்தியினை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வருவதற்கும், விவசாயத் தினை சுனாமிக்கு முன்னரான மட்டங்களுக்கு கொண்டு. வருவதற்கும் பல ஆண்டுகள் வரையான கணிசமான காலப்பகுதி செல்லலாம்.
விசாயத்துறையின் மீதான சுனாமி தாக்க விளைவானது, குறிப்பாக பெண்களுக்கு இழப்பேற்படுத்துவதாக அமைந்தது. இதற்கான காரணம் இத்தகைய நடவடிக்கையானது அவர்களது சொந்த தீவிற்குள் வருமான உற்பத்தி நடவடிக்கையொன்றாக இருப்பதுடன், கடந்த தசாப்தங்களில் பொருளாதார கட்டமைப்பு மாற்றங்களின் நலனைப் பெறுவதற்கென விவசாயத்திலிருந்து விலகியுள்ளமையும் ஆகும்.
பெருமளவு காணி விவசாயத்திலீடுபட்டுள்ளவர்களில் அரைவாசி தொகையினரும் வீட்டுத்தோட்டங்களை மேற்கொள்ப

பெண்களின் வாழ்வாதாரங்களுக்கு மதிப்பளித்தல். 71
வர்களும் பெண்களாவர். இப்பெண்கள், தங்கள் வீடுகளுக்கு வெளியே இயங்குவதை கலாச்சார மட்டுப்படுத்தல்கள் தடை செய்வதன் காரணமாகவும் தீவுகளுக்குள் காணப்படும் மட்டுப்படுத் தப்பட்ட வருமான மூலங்கள் காரணமாகவும் மாற்று வாழ்வாதார வழிகளைத் தேடுதல் பெண்களுக்கு கடினமாகவுள்ளது.
மீன்பிடித்துறை
மீன்பிடித்துறையில் ஆண்கள் மீன்பிடிக்கு செல்பவர்க ளாகவும், பெண்கள் விற்பனைக்கெனவும், தமது சொந்த நுகர்வுகளுக் கெனவும் மீனைப் பதனிடுபவர்களாயுமுள்ளனர். சுனாமி காரணமாக, சில தீவுகளில் படகுகள், மீன்பிடி வலைகள், விளக்கு வட்டங்கள், ஜெனரேட்டர்கள் மற்றும் மீன்பிடிக்கென பயன் படுத்தும் மற்றைய உபகரணங்களுக்கு பல்வேறு அளவுகளில் இழப்புகள், சேதங்கள் ஏற்பட்டமை அறிவிக்கப்பட்டுள்ளது. சில சந்தர்ப்பங்களில், தீவிலுள்ள ஒவ்வொரு மீன்பிடிக் கலமும் காணாமற் போயுள்ளது. மீனைப் பதனிடுபவர்கள் முக்கியமாக பெண்கள் தமது பணிகளில் பயன்படுத்தும் கலங்களை அடுப்புகளை, சமையலறைகளை, கொட்டில்களை கருவிகளை இழந்தனர்.
வயோதிப மாதான ருகியா, தனது பிள்ளைகளுடன் இணைந்து மீன் உலர்த்தல், மீன்விற்பனை செய்தல் போன்ற நடவடிக்கைகளை பெருமளவில் மேற்கொண்டு கணிசமான வருவாயினை பெற்று வந்தார். குடும்பத்தில் சில அங்கத் தவர்கள்நெய்தல், சோளப்பொரி விற்றல்,பாக்கு பக்கெற்றுகளை செய்தல் என்பவற்றுடன் வீட்டுத் தோட்டங்களையும் கவனித்தனர். அனர்த்தம் இவர்களது இல்லத்தினையும் சொத்துக்களையும் உபகரணங்களையும் வீட்டு சேமிப்புகளையும் அழித்தது. இவர்கள் தற்பொழுது இடம் பெயர்ந்து சமூக நிலையமொன்றில் வேறு தீவொன்றில் நெருக்கடியான நிலைமைகளில் வாழ்ந்து வருகின்றனர். ருகியா தமது பேரப் பிள்ளைகளில் ஒருவரையும் அனர்த்தத்தில் இழந்துள்ளார் (MGFDSS, 2005 b).
அனர்த்தத்தின் பின்னர், முற்றுமுழுதாக அழிந்துவிட்ட தீவுகளில் தவிர, மிகுதியாகவிருந்த மீன்பிடிக்கலங்களை பகிர்ந்து அல்லது சேதமுற்றவையை மீளத் திருத்தி பெருமளவு மீன் பிடியாளர் தமது மீன்பிடி நடவடிக்கைகளை மீள ஆரம்பித்தனர்.

Page 43
72 பேரழிவுகளுக்குப் பெண்கள் முகம் கொடுத்தல்
எவ்வாறெனினும், பெரும்பாலும் பெண்களாகவிருந்த மீன் பதனிடுநர்கள், தமது சமையலறைகள் சேதமுற்றமையாலும் அத்துடன் இலகுவில் மீளமைக்கப் படமுடியாத சமையல் உபகரணங்களின் இழப்பாலும் தமது செயற்பாடுகளை ஆரம்பிக்க முடியவில்லை. பெண்கள் மீனைப் பதனிட முடியாமை காரணமாக அவற்றை நேரடியாக மீன் சேகரிப்பு கலங்களுக்கு விற்பனை செய்தனர். ஆகவே, இத்தீவுகளில் உள்ள கணிசமான அளவு தொகைப் பெண்கள் தமது வாழ்வாதாரங்களை இழந்து, குடும்ப ஆண்களின் வருவாயில் முற்று முழுதாக தங்கியுள்ளனர்.
சுற்றுலாத்துறை மாலைதீவின் மொத்த உள்நாட்டு வருமானத்தில் தனிப் பெரும் உதவுதுறையாக சுற்றுலாத்துறையுள்ளது. எனினும், இத்துறை ஊழியருள் 4% மானவர்களே பெண்கள். இப்பெண்கள் துப்புரவாக்குநர், வீடுகளைப் பேணுவோர் போன்ற குறைந்த சம்பளப் பணிகளிலேயே உள்ளனர் என்பதுடன் சுற்றுலா கூடுமிடங்களுக்கு அருகிலுள்ள அல்லது அடுத்துள்ள தீவுகளில் வாழ்பவர்களாகவுமுள்ளனர். பணிப்பெண்களை அவர்கள் வாழும் தீவுகளிலிருந்து பணிகளுக்கு ஏற்றியிறக்கும் தோணிகளை யுடைய சுற்றுலா விடுதிகள், இவையில்லாத கூடுமிடங்களை விட உயரளவு பெண் ஊழியர்களைப் பொதுவாகக் கொண்டுள்ளன.
இத்தகைய சுற்றுலா கூடுமிடங்கள் சிலவற்றுக்கு ஏற்பட்ட சேதம் காரணமாக, திருத்த வேலைகளுக்கென அவற்றை மூட வேண்டிய நிலை ஏற்பட்டது. இது பெருமளவு ஆண் ஊழியர் களையும் இத்தகைய ஆண்களின் வருவாயினை நம்பிதங்கியிருந்த பெண்களையும் பாதிப்பிற்குள்ளாக்கியது. அனர்த்தத்தின் மற்றுமொரு விளைவு நாட்டிற்குள் வரும் சுற்றுலாப் பயணிகளின் வீழ்ச்சி காரணமாக, இத்தகைய கூடுமிடங்கள் பணிாட்களின் தொகையை குறைத்தலாகும். ஏனினும் இதுவரை இத்தகைய நடவடிக்கை தேவைப்படவில்லை.
சிறு நடுத்தர அளவு தொழில் முயற்சிகள்
மேரியம் ஒரு விதவை. ஆவர் வயோதிப தாயாருடனும் மூன்று பிள்ளைகளுடனும் வாழ்ந்து வந்தார். கயிறு திரித்தல், வேய்தல், கறித்தூள் செய்தல் ஆகியவற்றை மேற்கொண்டு வந்த வேலைப்

பெண்களின் வாழ்வாதாரங்களுக்கு மதிப்பளித்தல் . 73
பிரிவொன்றின் தலைவியாக இருந்தார். இவற்றுடன் நிலையான வருமானத்தைத் தந்த 35 மிளகாய்ச்செடிகளையும் வளர்த்து வந்தார். அனர்த்தம் அவரதுவீட்டை அழித்து சொத்து, உபகர ணம்யாவற்றையும் சேதப்படுத்தி இக்குடும்பத்தை இப்போது வேறுமொரு தீவில் இடம்பெயர வைத்துள்ளது (MGFDSS).
பெண்கள் பெருமளவில் ஈடுபட்டுள்ள ஒரு துறை இது வாகும். இதில் தையற்பணி, கறித்தூள் செய்தல், சிற்றுண்டி செய்தல், வேய்தல், கயிறு திரித்தல் போன்ற நடவடிக்கைகள் உள்ளடங்குகின்றன. உயர் தேர்ச்சித்திறன் தேவைப்படும் தச்சர்கள், மின்சார தொழிலாளர், ஒட்டுநர் பணிகளில் ஆண்களே பெருமளவில் காணப்படுகின்றனர்.
சுனாமி அலையெழுச்சிப் பகுதிகளில் பெரும்பாலான கருவிகளும், உபகரணங்களும் உவர்நீரால் சேதப்படுத்த்பட்டன அல்லது இழக்கப்பட்டன. வேலைக் கொட்டில்கள் அல்லது வேலைப்பகுதிகள் அழிக்கப்பட்டன அல்லது கடலுக்கு அடித்துச் செல்லப் பட்டன. தீவுகளில் தையல் இயந்திரங்களின் இழப்பும், உயர்வலு மின்கருவிகளின் மின் உபகரணங்களின், ஜெனரேட் டர்களின் இழப்பும் அறிவிக்கப்பட்டது. வீட்டில் இருக்கும் பெண்களின் முக்கிய வருமான செயற்பாடாக தையல் இருந்த துடன், தையல் இயந்திரங்கள் இலகுவில் வாங்கக் கூடிய பொருளாகவும் இருக்கவில்லை. உலர் தென்னோலைகளினால் பாரம்பரிய கூரை, சுவர் தடுப்புகளை தும்புக்கயிறுகளை வேய்ந்தும் திரித்தும் வந்த பெண்கள் தமது பொருட்களை இழந்ததுடன், கயிறு திரிப்பதற்கென கடலுக்குள் ஊறப்போட்டி ருந்த பெருமளவு தென்னம்மட்டைகளையும் இழந்தனர். சில தீவுகளில் கயிறு திரித்தலும், வேய்தலும் ஏற்கனவே ஆரம்பிக் கப்பட்டுள்ள போதிலும், இப்பொருட்களை வாங்கும் பெரும் சந்தைகளாக சுற்றுலாத்துறை கூடுமிடங்கள் இருந்தமை காரணமாக, இப்போது தமது உற்பத்திகளுக்கென சந்தைகள் இல்லையென்ற குறையை பெண்கள் தெரிவித்தனர்.
இத்துறையிலுள்ள மக்கள் சுனாமியால் அதிகளவில் தாக்கமடைந்த பாதிப்புறு பிரிவினராக இருந்து, தமது வேலை யிடங்களை, கருவிகளை இழந்துள்ளதுடன் அவர்களது விசேட வருமான உற்பத்தி நடவடிக்கைகள் காரணமாக, வேறு நடவடிக்கையில் ஈடுபடுவதற்கான விருப்பத் தேர்வினை அல்லது தேர்ச்சித்திறன்களைக் கொண்டிருக்கவில்லை.

Page 44
74 பேரழிவுகளுக்குப் பெண்கள் முகம் கொடுத்தல்
பரந்த விளைவுகள் : பெண்களின் வாழ்வாதாரங்களை புனரமைத்தலுக்கு ஏன் முன்னுரிமை அளித்தல் வேண்டும்?
பால்நிலை, குடும்ப அபிவிருத்தி மற்றும் சமூக பாதுகாப்பு அமைச்சினால் இரு தீவுகளில் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீடு களின்படி ஆண்களின் பெரும் விகிதத்தினர் தமது சீவனோ பாயங்களை மீள ஆரம்பித்தள்ளமையினையும், பெண்கள் பிரிவினர் தான் அதிக சந்தர்ப்பங்களில் தமது நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்க இயலாதுள்ள நிலைமையும் தெரிய வந்துள்ளது உதாரணமாக, தா.அடொலிஸ் நடாத்தப்பட்ட மதிப்பீடு காட்டுவது, திமராவுவி (Thimara-Fushi) தீவில் பெரும்பா லான ஆண்கள் தீவிற்கு பெளியே பணிபுரிகின்றமையால், தமது நடவடிக்கைகளுக்கு மீளத் திரும்பக் கூடியதாக விருந்த அதேசமயம் வீட்டுத்தோட்ட வேலைகளில் தையல், மீன்பதனிடுதல் பணிகளில் ஈடுபட்டு இருந்தவர்கள் தமது உபகரணங்களை, கருவிகளை இழந்தமை காரணமாக அரை வாசிக்கு மேற்பட்ட பெண்கள் தமது பணிகளை தொடர்ந்தும் மேற்கொள்ள முடியாத நிலையி லிருந்தனர் (MGFDSS,2005 b). மீட்சிப்பணிகளின் ஆரம்பத்துடன், நிருமாணிப்பு, தச்சவேலை போன்ற குறிப்பிட்ட தேர்ச்சி வேலைகளுக்கான தேவையெழுந்த காரணத்தால் தமது சீவனோ பாயங்களை இழந்திருந்த ஆண்கள் மாற்று வருமான மூலங்களை தேடிக் கொள்ள முடிந்தது.
குடும்பத்தில் உழைப்பவர்களாக பெண்கள் இருந்தமை அவர்களது தன்னாதிக்கத்தையும், ஓரளவு சுதந்திரத்தையும் வளர்த்ததுடன் தன்னம்பிக்கையினையும் உயர்த்தியது. பெண் களின் அதிகாரத்தினைப் பெறுவதற்கு முக்கிய வழியொன்றாக பொருளாதார சுதந்திர நிலையுமுள்ளது. வருமானத்தை உழைப்பதற்கான வழிகளை இழந்தமை, பல ஆண்டுகளாக அடைந்த முன்னேற்றத்தினை பின்னடைவு செய்யுமென்பதோடு பொருளாதார சுதந்திரத்தினைப் பெற்றிருந்த பெண்களை, மீண்டும் சமூகரீதியில் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த இல்லப் பொறுப்பாளர், கவனிப்பாளர் என்ற பதவிகளை மீண்டும் ஏற்கவும் செய்தது. பாதிப்புற்றவர்களில் பலர், சிறியளவு வருமான உற்பத்திச் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்ததுடன், அவர்களது சீவனோபாய இழப்பு, வருமானத்திலும், மூலதன உரிமையிலும் தற்போதுள்ள பால்நிலை வேறுபாடுகளை மீளவலுப்படுத்தி, ஆழமாக்கு

பெண்களின் வாழ்வாதாரங்களுக்கு மதிப்பளித்தல். 75
மென்பதுடன், பொருளாதார நடவடிக்கைகளில் ஆண், பெண் பங்குபற்றல் மட்டங்களில் பெரும் இடைவெளியினையும் ஏற்படுத்தும்.
MGFDSS; 2005a (2005b) இன் சீவனோபாய மதிப்பீடுகளினால் பெரும்பாலான பெண்கள் தாம் வேலையற்று சோம்பலாக இருத்தல் உளவியல் சமூக பிரச்சனைகளுக்கு வழிவகுப்பதாகத் தெரிவித்தனர். கொல்ஹர" புஷி தீவிலிருந்து (Kolhufushi) பெண்கள் விவசாயக் குழுவொன்று, தெரிவித்த விடயம் தாம் மிக சுறுசுறுப்பாக வேலை பார்த்து பழக்கப்பட்டமையால் இப்போது வேலையெதுவுமின்றி இருப்பது தமது எதிர்காலம் பற்றிய பாதுகாப்பின்மையினையும் அத்துடன் தமது நிலைமை பற்றிய மன அழுத்தம் கவலையினையும் ஏற்படுத்துகின்றதென்பதாகும் (MGFDSS,2005a). இடம் பெயர்ந்த பெண்களிடையே அடையாளங் காணப்பட்ட மற்றுமொரு பிரச்சனை விடயம், அவர்கள் பொது சமையலறைகளில் முக்கியமாக ஈடுபட்டு துப்புரவாக்குதல், முகாம்கள், தற்காலிக தங்குமிடங்களை கவனித்து வருதல் பணிகளை மேற்கொண்டு வருதலாகும். இத்தகைய நிலைமை அவர்கள் தங்கள் குடும்பங்கள், குழந்தை கவனிப்புப் பொறுப்பு களுக்கு மேலதிகமான பொறுப்புகளையும் ஏற்படுத்திய மையால், அவர்கள் தங்கள் வருமான உற்பத்தி நடவடிக்கைகளைத் தொடருவதற்கு போதிய நேரத்தினை வழங்கவில்லை. புறுணித் தீவு (Buruni) பெண்கள் விலுவுவுரி தீவிலிருந்து (Vilufushi) இடம் பெயர்ந்த ஏறக்குறைய சகலரையும் ஏற்றுக்கொண்டதுடன் தாம் பொது சமையலறைகளில் மிக சுறுசுறுப்பாக சமைத்தல், துப்புரவாக்கல் பணிகளில் ஈடுபட்டிருப் பதாகவும் இதன் காரணமாக விவசாயக் காணிகளைக் கவனிப்பதற்கு நேரம் கிடைக்கவில்லையெனத் தெரிவித்தனர் (MGFDSS,2005b). இந்நிலை பெண்களின் வருமானங்களில் குறைவை ஏற்படுத்துமென்பதுடன், பயிர்களைக் கவனிக்காது விடுதல் எதிர்காலத்தில் அவர்களது சீவனோபாய வழிகளை மீள ஆரம்பிப்பதையும் தடைசெய்யும் நிலைமையினையும் எதிர் கொள்ளச் செய்யும்.
பெண்களின் வருமான உற்பத்தி நடவடிக்கைகள், பல்வேறு காரணங்களினால் ஆண்களைப் போலன்றி குடும்பங்களின் அடிப்படையிலானதாக அமைந்திருந்தமையால், இடம்பெயர்ந்த பெரும் எண்ணிக்கையினருடன், தற்போது விருந்தாளிக்

Page 45
76 பேரழிவுகளுக்குப் பெண்கள் முகம் கொடுத்தல்
குடும்பங்கள், தற்காலிக புகலிடங்கள், கூடாரங்கள் போன்ற நெருக்கடியான இடங்களில் வாழ வேண்டிய பெண்கள் தங்கள் நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பதற்கு போதிய பெளதீக இடமில்லாதிருந்தனர். விலுபுஷி இல் வாழ்ந்த பெண்கள், தற்போது புருணித் தீவில் விருந்தாளிக் குடும்பங்களுடனும், தற்காலிக தங்குமிடங்களிலும் வாழ்ந்து வருவதுடன், இவர்கள் பெரும்பாலும் மீன் பதனிடுநர்களாக இருந்தமையால் உரிய முறையான உபகரணங்களற்ற சமையலறைகளில் இத்தகைய பணியை தொடர முடியாத நிலைமையை அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தமை பெரும் நிர்ப்பந்த நிலையாக இருந்தது.
மேலும், அனர்த்தத்தினதும், மக்களின் நெருக்கடியான நிலைமைகளிலும் தற்காலிக தங்குமிடங்களினதும் ஏற்படும் மற்றுமொரு எதிர்மறையான விளைவு திட்டமிடப்படாத கர்ப்பங்களும், திருமணமாகாது தாய்மாராகும் நிலையுமாகும். இடம்பெயர்ந்தவர்களுக்கு கருத்தடை சாதனங்கள் பெருமளவில் கிடைப்பதில்லை என்பதுடன், இத்தகைய கருவுற்ற தன்மை, இப்பெண்களின் பொறுப்புக்களை அதிகரிப்பதுடன், இவர்கள் தங்கள் வருமான உழைப்பு நடவடிக்கைகளை மீள ஆரம்பித் தலையும் தாமதப்படுத்துகின்றது அல்லது தடை செய்கின்றது. இந்நிலை குடும்பங்களின் மீதான பொருளாதார நிர்ப்பந்தங் களையும் ஏற்படுத்துகின்றது.
ஆகவே, பெண்கள் தம் சீவனோபாயங்களை இழந்தமையும் தடைப்படுத்தப்பட்டமையும் சரிவர கவனிக்கப்படாதவிடத்து, சமூகத்தில் ஏற்கெனவே பிரதிகூலமாகவுள்ள பெண்களின் பாதிப்புறு தன்மையையும் தங்கியுள்ள தன்மை யினையும் அதிகரிக்கும் ஆபத்தினை எதிர்கொள்ள வேண்டியேற்படும்
நிவாரணம் மற்றும் மீட்சி நிகழ்ச்சித்திட்டம் பதிற்செயற்பாடுகள்
சுனாமி காரணமாக மக்கள், குறிப்பாக இடம் பெயர்ந்த வர்கள் தமது அடிப்படை வசதிகளைக்கூட பெற்றுக் கொள்ள முடியாத மட்டுப்படுத்தப்பட்ட அல்லது பணமற்ற நிலைமைக்கு தள்ளப் பட்டனர். அவசர நிவாரண உதவி வழங்கப்பட்ட தையடுத்து, அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட பெருமளவு உதவி நிகழ்ச்சித்திட்டம், பாதிப்புற்ற மக்களுக்கு உடனடி பண உதவி வழங்கியமையாகும். தீவுகளுக்கு மதிப்பீட்டுக் குழுக்கள் விஜயம்

பெண்களின் வாழ்வாதாரங்களுக்கு மதிப்பளித்தல் . 77
செய்து பாதிப்புற்ற குடும்பங்களை அடையாளங் கண்ட பின்னர், பாதிப்புற்ற குடும்பங்களுக்கு அவற்றின் இழப்புகள், சேதங்களுக்கு இணக்கமாக இந்த நிதியுதவி வழங்கப்பட்டது. இது மக்களுக்கு அவர்களுக்கு தேவையான அடிப்படை விடயங் களையும், இயன்றவிடத்து அவர்களது வருமான உற்பத்திக்குப் பயன்படுத்தி வந்த சில பொருட்களை மீள வாங்குவதற்கும் செலவிடுவதற்கான பணத்தினை வழங்கியது. மக்களின் உடனடித் தேவைகளைக் கவனிப்பதே நிகழ்ச்சித் திட்டத்தின் நோக்கமாகும்.
அனர்த்த தாக்கவிளைவின் ஆரம்ப மதிப்பீடுகள், பெளதீக உட்கட்டமைப்புகளுக்கும், பெரும்பாலும் ஆண்களுக்குச் சொந்தமாகவிருந்ததும், இலகுவாக கண்ணுக்குப் புலப்படுவன வாகவுமிருந்த மீன்பிடிக் கலங்கள், கடைகள் போன்றவற்றின் சேதங்களையே மதிப்பீடு செய்தன. இத்தகைய சொத்துக்கள், கட்டடங்கள் பதிவு செய்யப்பட்டனவாகவும் அல்லது பதிவுசெய்த தொழிலுரிமையாளருக்கு சொந்தமானவையாகவும் காணப் பட்டன. எவ்வாறெனினும், முறைசாரா துறைகளிலும், சிறு வருமான உற்பத்தி நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருந்த பெண் களுக்கு இந்நடவடிக்கைகள் பதிவுசெய்யப்பட்டிருக்கவில்லை என்பதுடன் இவற்றின் எண்ணிக்கைகளை அல்லது சேதத்தின் அளவினைத் தீர்மானிப்பதற்கான வழிவகை இருக்கவில்லை. இதன்விளைவாக, அனர்த்தத்தினால் ஏற்படுத்தப்பட்ட சேதங் களின் ஆரம்ப மதிப்பீட்டு அறிக்கைகள், பெண்கள் அனர்த் தத்தினால் எதிர்நோக்கிய இழப்புகள் பற்றிய முழு பிரதிபலிப் பினையும் தரவில்லை. அனர்த்தம் காரணமாக ஏற்பட்ட சேதங்கள், இழப்புகள் மீது கிடைக்கப்பெறும் பால்நிலை வேறுபடுத்தல் தரவுகளின் பற்றாக்குறையொன்று பொதுவாகவுள்ளது. ஆரம்ப தரவுகளும் மதிப்பீடுகளுமே பெரும்பாலான மீட்சி மற்றும் பொருளாதார மீள்நிறுவுதல் நிகழ்ச்சித் திட்டங்களை உருவாக் கவும் திட்டமிடவும் பயன்படுத்தப்பட்டமையால் பெண்களுக்கான உதவி நிகழ்ச்சித் திட்டங்கள் மட்டுப்படுத்தப்பட்டவையாக இருந்தன.
அனர்த்தத்தில் தமது வாழ்வாதாரங்களை இழந்தவர்களுக்கு உதவி வழங்கவென அரசாங்கத்தினால், சர்வதேச நன்கொடை முகவர்கள், மக்கள், தனியார்துறை என்பவற்றின் ஆதரவுடன் பல்வேறு கருத்திட்டங்கள், நிகழ்ச்சித் திட்டங்கள் என்பன

Page 46
78 பேரழிவுகளுக்குப் பெண்கள் முகம் கொடுத்தல்
திட்டமிடப்பட்டன. இத்திட்டங்களுள் சில இன்னமும் ஆய்வு மற்றும் உருவாக்க கட்டங்களில் உள்ளபோதிலும், சில உதவி நிகழ்ச்சித் திட்டங்கள், முக்கிய துறைகளான மீன்பிடி போன்ற வற்றுக்கு நன்கொடைகள், கடனுதவிகள், அன்பளிப்பு மீள் வைப்புகள் போன்றவை மக்கள் தமது அன்றாட தொழில்களை அல்லது வருமான உற்பத்தி நடவடிக்கைகள் ஆரம்பிப்பதற்கென நடைமுறைப்படுத்தப்பட்டன.
நாட்டின் வாழ்வாதார மீளாற்றல்படுத்தல் மற்றும் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்கள் சுனாமியினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நன்கொடை மற்றும் கடனுதவிக் கூறுகளினூடாக வாழ்வாதாரங்களை மீளத்தாபித்தல் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை மீளாற்றல் படுத்தல் என்பவற்றிற்கென இத்திட்டம் உருவாக்கப் பட்டது. இத்திட்ட மானது கடற்றொழில், விவசாய, வர்த்தகத்துறை அமைச்சு களினால், மாலைதீவு வங்கியினால் நடைமுறைப் படுத்தப் படுகின்றது. இதற்கான இணை நிதியுதவியை உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, ஐக்கிய நாடுகள் முகவர் நிலையங்கள் என்பன 6uụpểi(953ếiaổip65T (MOFT, 2005).
இத்திட்டத்தின் கீழ் திட்டமிடப்பட்டுள்ள நடவடிக்ை 595GTTT667; V
* இழந்ததை மீளவைக்கும் நன்கொடைப் பொருட்கள்
* தொழில் முதலீட்டிற்கென சிறு மற்றும் குறுகியகால பண
நன்கொடைகள்
* விவசாய மற்றும் ஏனைய உற்பத்திகளுக்கான மானியப்
படுத்தப்பட்ட சிறு கடனுதவிகள்.
* மீன்பிடிக் கலங்கள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் என்பவற்றின் திருத்தப் பணிகளுக்கென அரசாங்க நிதிப்படுத்தல்.
* இழக்கப்பட்ட மீன்பிடிக் கலங்களை மீளப்பெறுவதற்கான செலவுப் பயன் மிக்க புதிய மீன் பிடிக் கலங்களின் கொள்வனவு.

பெண்களின் வாழ்வாதாரங்களுக்கு மதிப்பளித்தல். 79
நிகழ்ச்சித்திட்டத்தின் கடனுதவிக்கூறு தற்போது இடம் பெற்று வருவதுடன், கடனுதவிகளும் மாலைதீவு வங்கியினால் துறைசார் அமைச்சுக்களுடன் இணைந்து விநியோகிக்கப்பட்டு வருகின்றது.
இத்திட்டத்தின்கீழ் மீன்பிடிக் கலங்கள், மீன்பிடி உபகர ணங்கள், விவசாயக் காணிகள் என்பவற்றை மீளமைப்பதற்கான உதவிகளை வழங்குவதற்கு குறித்துரைக்கப்பட்ட கவனமுள்ளது. மீன் பதனிடுதல், விவசாயம், வீட்டுத்தோட்டம் என்பவற்றில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கு உதவி வழங்க திட்டமிடப்பட்டுள்ள போதிலும், வீட்டுத்தொழில்களிலும், சிறு தொழில்முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ள பெரும்பாலான பெண்கள், பரந்த துறையின் கீழ் வராத காரணத்தால் இத்திட்டத்தினால் உள்வாங்கப்படாதிருப்பர். இப்பெண்களில் பலர் பதிவுசெய்யப்படாமல் உள்ளதோடு தமது நடவடிக்கைகளையும் வீடுகளினுள்ளேயே மேற்கொள்வதால், இவர்களும் நிகழ்ச்சித் திட்டத்தின் வர்த்தக துறைக்குள்
6 TIL DITL LL LITU 356MT.
விவசாயத்துறை
விவசாயிகள் மற்றும் வீட்டுத்தோட்டக்காரர் என்போருக்கு உதவி வழங்குமுகமாக கடற்றொழில், விவசாய மற்றும் கடல் வளங்கள் ஆகிய அமைச்சுகளினால் தற்போது மூன்று நடை முறைத் திட்டங்கள் அமுற்படுத்தப்பட்டுள்ளன (MFAMR) (MPND 2005). இவற்றுள் பின்வருவன உள்ளடங்கும்:
* எவ். ஏ. ஓ, ஆசிய அபிவிருத்தி வங்கி யுஎன்டிபி, ஜப்பான் என்பவற்றால் இணைந்து நிதிப்படுத்தப்படும் விவசாயிகள், வீட்டுத் தோட்டக் கவனிப்பாளருக்கான விவசாய உள்ளீடுகளின் மீள் வைப்புகள். இத்திட்டத்தின் கீழான செயற்பாடுகளில், விவசாய உள்ளீடுகள், எந்திரங்கள், உபகரணங்கள், தொழில் முதலீடு என்பவற்றின் வழங்கல் உள்ளடங்கும்.
* விவசாய விரிவாக்க வலுப்படுத்தல். இதன்கீழ் விவசாயிக
ளுக்கான விரிவாக்க உதவிகள் வழங்கப்படும்.
* சுனாமி பாதிப்பிற்குட்பட்ட பகுதிகளில் மண், வனவியல், நீர்வளங்கள் என்பவற்றை மேம்படுத்தல். இதற்கான

Page 47
80 பேரழிவுகளுக்குப் பெண்கள் முகம் கொடுத்தல்
இணைந்த நிதிப்படுத்தலை மாலைதீவு அரசாங்கம், சிங்கப்பூர் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி என்பவை வழங்கின.
இத்திட்டத்தின் கீழான நடவடிக்கைகளின் கீழ் நீரையும் மணலையும் பரிசோதிப்பதற்கான மணல், நீர் பகுப்பாய்வு உபகரணங்கள் மற்றும் பழ மரங்களின் புனருத்தாரணமும் நாற்றுச்செடிகளின் வழங்கலும் உள்ளடங்கும். * விவசாய நிறுவன செயலாற்றலை வலுப்படுத்துதல்.
இத்திட்டத்தின் கீழ் திட்டமிடப்பட்ட கூறுகளில் ஒன்று, IFAD இனதும் அரசாங்கத்தினதும் நிதியுதவியுடன் விவசாய சந்தைகளை தாபித்தலாகும். இதன்மூலம் சிறந்த விளைவு களை, குறிப்பாக விவசாயத் துறையில் அரைவாசிக்கு மேற்பட்டு பங்குபற்றும் பெண்களுக்கு, இத்தகைய சந்தைகளை இப்பெண்களின் வீடுகளுள்ள இடங்களுக்கு அண்மையில் அமைப்பது அவர்களது பொருளாதார வளத்தினை விரிவாக்க உதவுகின்றமையால் வழங்குகின்றது. இத்தகைய சந்தைகள் அவர்களது வேலைகளின் விரிவாக் கத்திற்கு பெருமளவில் உதவும் என்பதோடு தங்களின் உற்பத்திகளையும் பன்முகப்படுத்துவதை இயலச் செய் கின்றது. விவசாயத்துறையின் கீழ் திட்டமிடப்பட்ட சீவனோபாய மீள்வைப்பு நிகழ்ச்சித் திட்டங்கள் பொதுவாக, இத்துறையில் ஈடுபட்டுள்ள பெண்களின் தேவைகளைக் கவனிக்கின்றன. இத்துறையில் பெண்களின் பங்களிப்பு கணிசமானளவுள்ள மையால் இது இத்துறைக்கு மிகவும் முக்கியமானதாகும்.
கடற்றொழிற்துறை கடற்றொழிற் துறையின் கீழ் திட்டமிடப்பட்டவற்றின் திட்டங் களின் நடைமுறைப்படுத்தல், இன்னமும் ஆரம்பிக்கப்படவில்லை என்பதுடன் சில திட்டங்கள் கொள்வனவு மற்றும் கேள்விப்பத்திர கட்டத்திலுள்ளன. இத்திட்டத்தின் கீழுள்ள நடவடிக்கைகளில் பின்வருவன உள்ளடங்கும்:
* மீன்பிடிக் கலங்களின் மீள்வைப்பும் திருத்த வேலையும் * மீன்பிடி உபகரணத்தினதும், கருவிகளினதும் மீள்வைப்பு

பெண்களின் வாழ்வாதாரங்களுக்கு மதிப்பளித்தல். 8.
கடற்றொழிற் துறையின் கீழ் திட்டமிடப்பட்ட பல திட்டங்கள், சொத்துக்களை மீள் வைப்பதிலும், மீனவருக்கான உதவிகளை வழங்குவதிலும் குவிமையமாக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான மீன் பதனிடுபவர்களாகவுள்ள பெண்களுக்கு மீள்வைப்பு உதவி வழங்குவதற்கான எந்த நிகழ்ச்சித் திட்டங்களும் இதுவரை இல்லை. எவ்வாறெனினும் சிறிய நடுத்தர அளவு மீன் பதனிடுபவர்களுக்கு சிறியளவு கடனுதவி ஏற்பாடுகள் வழங்கப் படக் கூடிய ஒரு கருத்திட்டம் திட்டமிடப்பட்டு வருகின்றது. ஆயினும் இது எப்போது நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என்பது பற்றிய அறிவித்தலெதுவும் இல்லை.
வேலை நிகழ்ச்சித் திட்டங்களுக்கான பணம்
அனர்த்தத்தின் பின்னர், இழப்புகள் காரணமாக எத்தகைய வருமானமும் இல்லாதிருந்த சமூகத்தவருக்கு, அவர்களது நாளாந்த தேவைகளுக்கென எதையேனும் தேடிக் கொள்வதை இயலச் செய்வதற்கென வேலை நிகழ்ச்சித் திட்டங் களுக்கான பணம் வழங்கப்பட்டது. ஒக்ஸ்பாமின் இத்திட்டத்தின் மற்றுமொரு நோக்கம், சமூகத்தவரை அவர்களது தீவுகளின் புனர்நிருமாண வேலைகளில் உட்படுத்துவதும் மக்களைத் திரட்டுவதுமாகும். இனால் நிதிப்படுத்தப்பட்ட இந்நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், கட்டட சிதைவுப் பொருட்களை துப்புரவாக்குதல், செங்கற்களை அடுக்குதல் போன்ற புனர்நிருமாணப் பணிகளுக்கு பணம் வழங்கப்பட்டது.
பணம் வழங்கிய வேலை நிகழ்ச்சித் திட்டங்கள் சிலவற்றில் பெண்கள் பங்குபற்றினர். இது பெரும்பாலும் தீவினை துப்புரவாக்கல், சுத்தப்படுத்தல் பணிகளாக அமைந்தன. சில தீவுகளில், பெண்கள் விரும்பியபோதிலும் மேசன் பணிகளில் பங்குபற்றும் சந்தர்ப்பம் பெண்களுக்கு வழங்கப்படவில்லை. இதற்கென தரப்பட்ட சில காரணங்கள், பெண்களின் பங்குபற்றல் வேலையில் மெதுகதியினைக் கொண்டுவரும் அல்லது வேலை யெதுவும் இல்லாத நிலையில் ஆண்கள் இருக்கையில் பெண் களுக்கு இவ்வேலையினைக் கொடுத்தல் நியாயமற்றது என்பவை யாகும். எவ்வாறெனினும் சில தீவுகளில் இத்தகைய மேசன் பணிகளில் ஆண்களும் பெண்களும் இணைந்து பங்கு பற்றினர் (MGFDSS 2005c).

Page 48
82 பேரழிவுகளுக்குப் பெண்கள் முகம் கொடுத்தல்
பெண்களின் சீவனோபாய நிகழ்ச்சித்திட்டங்களின் புனரமைப்பு
பொருளாதார செயற்பாடுகளினால் பாதிப்புற்ற பெண்க ளுக்கு உதவிகள் வழங்குவதற்கான திட்டங்களை பெரும் துறைகள் கொண்டிருந்தபோதிலும், பாதிப்புற்ற சனத்தொகையில் பெருமளவு பெண்களின் வருமான உற்பத்தி நடவடிக்கைகள் எந்தவொரு குறித்துரைக்கப்பட்ட துறைக்குள்ளும் வராத நிலைமை காணப் பட்டது. இதன் விளைவாக, இப்பெண்கள் எந்தவொரு முக்கிய சீவனோபாய புனரமைப்பு நிகழ்ச்சித்திட்டங்களிலிருந்தும் உதவியினைப் பெற முடியாத நிலையிலிருந்தனர்.
பால்நிலை, குடும்ப அபிவிருத்தி மற்றும் சமூக பாதுகாப்பு அமைச்சானது, யுஎன்டிபியுடன் இணைந்து, இந்த பிரச்சனையை கவனித்து இத்தகைய பெண்களுக்கு உதவிகளை வழங்கவென திட்ட மொன்றினைத் திட்டமிட்டுள்ளது. இத்தகைய பெண்களில் தையல் வேலை, கோழிப்பண்ணை, பதனிடுதல், கறித்தூள் செய்தல், வேய்தல் மற்றும் கயிறு திரித்தல் போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ளோர் உள்ளடங்கினர்.
இந்நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் பெண்கள் தமது வருமான உற்பத்தி நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பதற்கான பண உதவி அல்லது நன்கொடை பொருட்களின் உதவி என்பன வழங்கப்
படும்.
தலையிடுகளுக்கான பகுதிகளும், இடைவெளிகளும் பரிந்துரைகளும் தேசிய மட்ட நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் கொள்கை வகுத்தல் என்பவற்றில் பெண்களின் வாழ்வாதாரங்களை கூட்டிணைத்தல் தொடர்பில் ஒரளவு முன்னேற்றமுள்ள போதிலும், மீளியல்பு வாழ்வும் புனர்நிருமாணமும் சகலருக்கும் உரியதென்பதை உறுதிப்படுத்துமுகமாக அவசரம் கவனிக்கப்பட வேண்டிய பால்நிலை விடயங்களுள்ள பல துறைகள் இருந்து வருகின்றன.
1. நிவாரணத்திலிருந்து மீளியல்பு நிலைக்கான மாறுதலுடன், மீளியல்பு நிலை திட்டமிடுதலின் சகல அம்சங்களிலும் பால்நிலை ஒழுங்குமுறைப்படுத்தலை மேற்கொள்வதற்கான ஆரம்ப செயற்பாடுகள் பற்றாக்குறையாக இருந்தது. இதன் விளைவாக, தேசிய மட்ட கொள்கை மற்றும் மீளியல்புநிலை திட்டமிடுதல் என்பவற்றில் பால்நிலை

பெண்களின் வாழ்வாதாரங்களுக்கு மதிப்பளித்தல் . 83
அமைச்சு கலந்தாலோசிக்கப்படவில்லை என்பதுடன், சீவனோபாயங்கள் தொடர்பில் பால்நிலை பிரத்தியேக தேவைகள் மீது போதிய தகவல் சேகரிக்கப்படா மலுமிருந்தது. பெண்களின் சீவனோபாய விடயங்கள், ஓரளவிற்கு கொள்கை மட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ள போதிலும், பெண்களுக்கு ஏற்பட்ட சொத்துக்கள், கருவிகளை மீள்வைப்பதில், புறந்தள்ளப்படும் நிலை அல்லது இரண்டாவது முன்னுரிமை நிலை காணப்படு கின்றது.
* எல்லாவற்றிற்கு மேலாக கொள்கை மற்றும் சமூக மட்டங்களில், பெண்களின் சீவனோபாய விடயங்கள், மீளியல்பு நிலை மற்றும் புனரமைப்பு என்பவற்றில் சமமான, முக்கியமான பாகமாயமைதல் பற்றிய இணக்கப் பாடு ஒன்றினை கட்டியெழுப்புவதற்கான முயற்சிகள் தேவைப்படுகின்றன. . பெண்கள் ஈடுபட்டுள்ள சில முறைசாரா தொழில் முயற்சிகள் ஒன்றில் பதிவு செய்யப்படவில்லை அல்லது முறையாக அங்கீகரிக்கப்படாதுள்ளமை காரணமாக நன்கொடைகள்/ கடனுதவிகளுக்கு அவர்களை உரித்து டையவர்களாக்கும் எந்தவொரு குறிப்பிட்ட வகுதியின் கீழும் அடையாளங் காணவோ அல்லது ஊர்ஜிதமாக்குவதற்கோ முடியவில்லை. உதாரணமாக, சிறியளவு கடனுதவி மற்றும் கடன்வசதி/ நன்கொடைத் திட்டங்களுக்கு உரித்துடைய துறையொன்றாக தச்சுத் தொழிலை கணக்கிற்கு எடுக்கும் அதேசமயம் சிற்றுண்டி வழங்கும் தொழில் கணக்கிற்கு எடுக்கப்படவில்லை.
* சொத்துக்களின் அழிவினாலும் காணித் தேவைகளி னாலும் ஏற்படுத்தப்பட்ட பால்நிலை பிரத்தியேக தகவல், பெண்களின் சீவனோபாயங்கள் மற்றும் வருமான மூலங்கள் போன்ற பால்நிலை பிரத்தியேக தகவல், மேலும் சிறந்த ஒழுங்குமுறையில் பரந்தளவில் பல்வேறு துறைகளில் தகவல் பகிர்ந்து கொள்ளல் ஏற்பாடளிக்கப்பட வேண்டிய தேவையுள்ளது.

Page 49
84
பேரழிவுகளுக்குப் பெண்கள் முகம் கொடுத்தல்
* மேற்கொண்டும் மதிப்பீடுகளை மேற்கொள்ளுதலை தவிர்க்குமாறும் விதந்துரைக்கப்பட்டுள்ளது. ஏனெனில் மீண்டும் மீண்டும் அதே தகவலைப் பெறவென மேற் கொள்ளப்படும் விஜயங்களும் ஆய்வுகளும், இவ்விதம் மதிப்பீடு செய்யப்படுபவர்களிடையே களைப்பி னையும், விரக்தியினையும் ஏற்படுத்துகின்றது. இதன்பொருட்டு மேலே குறிப்பிட்டவாறாக சரியான தகவல் பகிர்தல் முறை பல சந்தர்ப்பங்களில் தேவையான மதிப்பீடுகளை வழங்குகின்றது.
3. தீவுகளின் மட்டத்தில், ஆரம்ப திட்டமிடல் கட்டத்தில்
பெண்களின் ஈடுபாடு இல்லாதிருந்தமை
கொள்கை வகுத்தலில், கலந்தாலோசனை இருக்க வேண்டுமென்பதோடு, முறைசார்ந்த முறைசாரா பொருளா தாரங்களில் பெண்களின் பங்குபற்றல், ஈடுபாடு செயற் பாடுடையதாக இருத்தல் வேண்டும். இது ஏற்கெனவே உள்ள அல்லது திட்டமிடப் பட்டுள்ள தகவல் சேகரித்தல்/ கொள்கை வகுத்தல் ஒழுங்கு அமைப்புகளில் எடுத்துக் காட்டப்பட்டு உறுதிப்படுத்தப்படல் வேண்டும்.
புனர்நிருமாணம் மற்றும் மீள்நிலை அடைதற் திட்டங்களில்
பிரதானமாக பெண்கள் பங்குபற்றும் மீன் பதனிடுதல் உட்பட சிறிய, நடுத்தர தொழில் முயற்சிகளுக்கு ஆதரவு வழங்கும் நுண் கடன்வசதி ஏற்பாடுகள் மற்றும் கடனுதவி நிகழ்ச்சித்திட்டங்கள் என்பவை உள்ளடங்கும். மேலும், இப் பெண்களுக்கு கடனுதவிகளை கவனிக்கும் அறிவும் தேர்ச்சியும் பற்றாக் குறையாகவுள்ள நிலை, அவர்களை கடன் சுமைக்குள் ஆழ்த்தி விடும் ஆபத்து உள்ளது. தொழில் முகாமைத்துவம், விரிவாக்கல் பற்றிய அறிவினை பெறாதநிலை அதாவது பல்வேறு சந்தைகளை அடையா ளங்கண்டு, வழங்குதல், உதாரணமாக விவசாய உற்பத்திகள் சுற்றுலா கூடுமிடங்களில் அரிதாகவே விற்பனையாகும் நிலைமை ஏற்படுகின்றது.
* நுண் கடன்வசதி ஏற்பாடுகளும் கடனுதவி நன்கொடை வசதிகளும் பெண்களுக்கு கடனை முகாமிக்கும் தேர்ச்சி களை வழங்கும் வகையில் ஆற்றலைக் கட்டி

பெண்களின் வாழ்வாதாரங்களுக்கு மதிப்பளித்தல். 85
யெழுப்புதல் மற்றும் தொழில்நுட்ப பயிற்சிக் கூறுகள் என்பவற்றை உள்ளடக்கியிருத்தல் வேண்டும். * இந்தப் பயிற்சி பெண்கள் அவர்களுக்குக் கிடைக்கக் கூடியதாகவுள்ள வருமான உற்பத்தித் துறைகளை விரிவாக்கவும் பன்முகப்படுத்தவுமென மாற்று சீவனோபாய வழிவகைகளுக்கான தேர்ச்சிகள் பயிற்சியினையும் உள்ளடக்குதல் வேண்டும்.
* பயிற்சியில் பெண்களின் பொருளாதார பங்களிப்பினை விரிவாக்குவதற்கென தொழில் முகாமைத்துவம் மற்றும் சந்தைப்படுத்தல் தேர்ச்சிகளையும் கொண்டிருத்தல் வேண்டும்.
5. பெண்களின் சீவனோபாயங்களின் விடயம் பெருமளவு புறக்கணிக்கப்பட்டுள்ளது. கூறப்போயின் இதுவரை பெண்களுக்கென பிரத்தியேகமாக இலக்காக்கப்பட்ட ஒரேயொரு சீவனோபாய புனரமைத்தல் திட்டமே இருந்து வருகின்றது.
* குறுகிய காலத்தில் சீவனோபாய புனரமைப்பு திட்டங்கள் பிரத்தியேகமாக பெண்களை இலக்குப் படுத்தி இருத்தல் தேவையும், நீண்ட காலத்தில் சீவனோபாய புனரமைப்பு நீண்டகால திட்டங்களில், பெண்களின் பிரச்சனைகள் இணைப்பொன்றாக அல்லது கூறொன்றாக அமையாது, பிரதான திட்டத் திற்குள் அல்லது திட்டத்திற்குள் பெண்களுக்கான உதவிகள் ஒழுங்கு முறையாக்கப்பட வேண்டும். பெண்களுக்கென தனியான, சிறிய திட்டங்களை மேற் கொள்ளுதல் மொத்த பொருளாதாரத்திற்கு பெண் களின் பங்களிப்பு முக்கியத்துவத்தை தரங்குறைப்ப தோடு இது வளங்களையும் நேரத்தினையும் விரய மாக்குகின்றது.
பால்நிலை சமத்துவம் மற்றும் அதிகாரப்படுத்தல் நோக்கி
நாட்டின் மீளியல்பு நிலையைப்பெறும் இலக்குகள் சுனாமிக்கு முன்னரான காலப்பகுதியின் அபிவிருத்தி மட்டங்களை விஞ்சி

Page 50
86 பேரழிவுகளுக்குப் பெண்கள் முகம் கொடுத்தல்
முன்னேற்ற நிலையைப் பெற விழைகின்ற வேளை, பால்நிலை பிரச்சனைகளுக்கான நிகழ்ச்சிநிரலும் இதே போக்கில் அமைதல் வேண்டும். சீவனோபாயங்களை மீளமைப்பதற்கான பால்நிலை சமத்துவம் பற்றிய பரந்த விடயங்கள் மற்றும் நீண்டகால அதிகாரத்தினை பெண்களுக்கு வழங்குதல் என்ப வற்றைக் கவனிப்பதற்கான முக்கிய சந்தர்ப்பங்களை உருவாக்கு கின்றன.
பெண்களுக்கு அதிகாரம் வழங்குவதற்கும் சமத்துவத்தினை ஊக்குவிப்பதற்குமான ஆக்கபூர்வமான துறையினை வழங்கு வதற்கான ஒரு அம்சம் சொத்துக்களை மீள அளிப்பதாகும். சமுதாயத்தில் தனியாளொருவரின் பொருளாதார, சமூக நிலையை தீர்மானிக்கும் முக்கிய காரணி சொத்துக்களின் உரித்தாகும். அரசாங்கக் கொள்கை மற்றும் சமூக வழமைகள் காரணமாக, மாலைதீவில் காணிகள் ஆண் பெண் இருபாலாரினாலும் சமமாக உரிமையாக்கப்பட்டுள்ளது. எவ்வாறெனினும், ஆண்களை விட பெண்கள் குறைந்த வருமானத்தை உழைக்கும் காரணத்தால், பெண்களுக்கு குறைந்தளவு சொத்துக்களே உள்ளன. ஆகவே, அனர்த்த நிலையொன்றின் பின்னர், பெண்களும் பெண்கள் தலைமையிலான குடும்பங்களும் மிகவும் பாதிப்புறு தன்மையி னராகவுள்ளன. மீளியல்பு கட்டத்தில் சொத்து மீள அளித்த லின்போது பெண்களை நேரடியாக ஈடுபடுத்தி, நலன்பெறச் செய்தல் அவசியம். அத்துடன் பல நீண்டகால கட்ட நலன் களுக்கான பெண்களுக்குச் சொந்தமான சொத்துக்களை அதிகரிப் பதற்கான அடிப்படையாகவும் இச் சந்தர்ப்பம் அமைதல் வேண்டும்.
சீவனோபாய புனரமைப்பு நிகழ்ச்சித்திட்டங்கள், பெண் களின் சீவனோபாய விருப்பத்தேர்வுகள் முன்னைவிட விஸ்தரிக் கப்படுவதை உறுதிப்படுத்தவும் முயல வேண்டும். நன்மை பயக்காத சமூக வழமைகள், நியதிகள் என்பவற்றிற்கு எதிரி டையாக செயற்படுதலும் மீளியல்பு முயற்சிகளின் பாகமாக அமையலாம். இதில் வருமானம் தேடுபவர்கள் எனும் பெண்களின் பாத்திரம் பற்றி சமூகங்களில் புரிந்துணர்வினை அதிகரித்தல் மற்றும் பெண்கள் நோக்கிய மட்டுப்படுத்தப்பட்ட மனோபாவங்களை மாற்றுதல், அடிப்படையான நீண்டகால நிகழ்ச்சித்திட்டங்கள் என்பன உள்ளடங்கும்.

பெண்களின் வாழ்வாதாரங்களுக்கு மதிப்பளித்தல். 87
செயலாற்றலைக் கட்டியெழுப்பும் அத்துடன் தேர்ச்சித் திறன்களை அபிவிருத்தியாக்கல் என்பவற்றை உட்சேர்க்கும் சீவனோபாய புனரமைப்பு நிகழ்ச்சித்திட்டங்கள், பெண்கள் தாம் வதியும் இடங்களிலும் வெளியிடங்களிலும், அதாவது சுற்றுலா கூடுமிடங்கள் போன்ற இடங்களிலும் வேலைவாய்ப்பினையும் மாற்று சீவனோபாய வழிகளையும் தேடிக்கொள்ளும் சந்தர்ப் பங்களை அதிகரித்து உதவுகின்றது.
இத்தகைய நிகழ்ச்சித்திட்டங்களுக்கு மேலதிகமாக பெண்கள் வேலையிடங்களை சென்றடைவதற்கான பாது காப்பான, இயலத்தக்கதான போக்குவரத்து வசதிகளை வழங்குதல், வேலையிடங்களில் துன்புறுத்தல்களுக்காளாதல் போன்ற விடயங்களைக் கவனித்தல், வேலையிடங்களில் பெண்கள் வசிப்பதற்கு பாதுகாப்பான வதிவிடங்களை வழங்குதல், மற்றும் பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் மேற்கொள்ளப் படுவதை ஊக்குவித்தலை கொள்கையாகக் கொள்ளுதல் போன்ற விடயங்களை கவனத்திற்கெடுக்கும் பரந்த கட்டமைப்பு ரீதியான விடயங்களுமுள்ளன.
நாட்டில் அபிவிருத்தியில் பெண்களின் பங்குபற்றல் அதிகரித்து வருகின்றபோதிலும், அத்தகைய பங்குபற்றலின் மட்டமானது இன்னமும் குறிப்பிடத்தக்களவு குறைவாகவே உள்ளது. இத்தகைய சமானமின்மையை கவனிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை வழங்குவதற்கான உன்னத சந்தர்ப்பம் இதுவாகும். பொருளாதாரத் துறையில் பால்நிலை சமத்துவத்தினை நாம் பெறுவதற்கு இத்தகைய பரந்த உபாய வழிகள் அத்தியாவசியமாகவுள்ளன.
உசாத்துணைகள்
அடொல்ஸ் அபிவிருத்தி அமைச்சு (2004), மாலைதீவில் உள்ள பழைய, தற்போதைய மற்றும் சாத்தியவள வருமான உற்பத்தி செயற் பாடுகள். மாலே, மாலைதீவு.
நிதி அமைச்சு (2005), தீவின் வாழ்வாதார புனரமைப்பாக்கல் மற்றும் அபிவிருத்திநிகழ்ச்சித்திட்டம் திட்ட ஆவணம், மாலே, மாலைதீவு.
பால்நிலை, குடும்ப அபிவிருத்தி மற்றும் சமூக பாதுகாப்பு அமைச்சு (2005 ய), மதிப்பீட்டு அறிக்கை, மீமு அடொல்பின் சுனாமி பாதிப்புற்ற தீவுகளுக்கான மதிப்பீட்டுப் பயணம். மாலே, மாலைதீவு.

Page 51
88 பேரழிவுகளுக்குப் பெண்கள் முகம் கொடுத்தல்
பால்நிலை, குடும்ப அபிவிருத்தி மற்றும் சமூக பாதுகாப்பு அமைச்சு (2005), மதிப்பீட்டு அறிக்கைள் அடொல்பின் சுனாமி பாதிப்புற்ற தீவுகளுக்கான மதிப்பீட்டுப் பயணம். மாலே, மாலைதீவு. பால்நிலை, குடும்ப அபிவிருத்தி மற்றும் சமூக பாதுகாப்பு அமைச்சு (2005), மதிப்பீட்டு அறிக்கைகள் அடொல்பின் மகளிர் அபிவிருத்தி குழுக்களின் கூட்டங்கள், மாலே, மாலைதீவு. திட்டமிடல் மற்றும் தேசிய அபிவிருத்தி அமைச்சு (1998) பாதிப்புறுதன்மை
வறுமை மதிப்பீட்டு ஆய்வு. மாலே, மாலைதீவு. திட்டமிடல் மற்றும் தேசிய அபிவிருத்தி அமைச்சு (2001) சனத்தொகை
மற்றும் வீடமைப்பு புள்ளிவிபரம் 2000, மாலே, மாலைதீவு. திட்டமிடல் மற்றும் தேசிய அபிவிருத்தி அமைச்சு (2004) புள்ளிவிபர ஆண்டு
நூல் 2004. மாலே, மாலைதீவு. திட்டமிடல் மற்றும் தேசிய அபிவிருத்தி அமைச்சு (2005) தொடர்
D -(DJÜLH6OJ: http://WWW.t SunamimaldivieS. mV/progreSS % 20 Update/Fisheries/Fish eries%20Sector%20Update.htm. (accessed
on 5 july 2005) ஜனாதிபதி அலுவலகம் மற்றும் மாலைதீவு தொலைக்காட்சி சேவை
"மாலைதீவின் சுனாமி" DVD மாலே, மாலைதீவு. 955u piTG).56ir F601565/Taos figulb (2004) ICPD + 10 and Beyond: Progress, Acivemwnts and Challengwin the Maldives 1994 - 2004, மாலே, மாலைதீவு.
உலக உணவு நிகழ்ச்சித்திட்டம் (2005), மாலைதீவில் சுனாமி
தாக்கவிளைவின் துரித மதிப்பீட்டு அறிக்கை மாலே, மாலைதீவு.
உலக வங்கி, ஆசிய அபிவிருத்திவங்கி, ஐநா முறைமை, (2005), சுனாமியின்
தாக்க விளைவு: தேவை மதிப்பீடு. மாலே, மாலைதீவு.

7
பேரழிவிற்குப் பின்னரான சந்தர்ப்பங்களில் பெண்களின் செயல்வாதம்
- சுமிகா பெரேரா
2004 டிசெம்பர் 26 ஆம் திகதி இலங்கையர்களான எமது வரலாற்றில் மிகப் பயங்கரமான இயற்கை பேரழிவிற்கு முகம் கொடுத்தோம். இலங்கையின் பிரதானமான 7 மாவட்டங்களின் கரையோரப் பகுதிகளில் வாழ்ந்த மக்கள் மிகக் கடுமையாக இதனால் பாதிக்கப்பட்டார்களென்பதோடு, இதில் அம்பாறை, மட்டக்களப்பு, அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களின் மக்கள் மிகப் பயங்கரமான பேரழிவிற்கு முகம் கொடுத்தனர்.
உலகம் பூராவும் இயற்கை அனர்த்தத்தின் போதும் அதேபோன்று மனிதர்களால் உருவாக்கப்படுகின்ற யுத்தம் போன்ற அனர்த்தங்களின் போதும் பெண்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இது வரலாறு பூராவும் நாம் அனுப வித்துள்ள உண்மையாகும்.
சுனாமி பேரழிவின் பின்னர் நிவாரண முகாம்களில் வாழ்கின்ற காலத்திலும் அதேபோன்று தற்காலிக வீடுகளில் வாழ்கின்ற காலத்திலும் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் ஆகிய அனைத்து இனப் பெண்களும், தாம் பெண்களாய் இருப்பதன் காரணத்தினால் முகம் கொடுக்க நேரிடுகின்ற பாரபட்சம் காட்டுதல்களுக்கு உள்ளாகினர். இவற்றில் சுனாமி அனர்த்தத்திற்கு முகம் கொடுத்தது மட்டுமன்றி யுத்தத்தின் காரணமாக இருபது ஆண்டுகளுக்கும் அதிக காலம் ககூழ்டப்படுகின்ற வட-கிழக்குப் பெண்களில் இந்நிலைமை மிகவும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியது. சுனாமிக்கு 6 மாதங்களுக்குப் பின்னர் இன்று கூட இம்மக்களில் பெரும்பாலானவர்கள் நிவாரண முகாம்களிலும் தற்காலிக வீடுகளிலும் வாழ்ந்து வருகின்றனர்.

Page 52
90 பேரழிவுகளுக்குப் பெண்கள் முகம் கொடுத்தல்
சுனாமியைத் தொடர்ந்து இந்நாட்டின் பெண்கள் அமைப் புக்கள் பல்வேறுபட்ட செயற்பாடுகளிலும் ஈடுபட்டன. முதலாவதாக குறித்த அனர்த்தத்துக்கு உள்ளாகிய பிரதேசங் களுக்குச் சென்று முகாம்களில் வாழ்ந்த பெண்களது அவசரத் தேவைகளை நிறைவு செய்வதற்கு பொருட்களாலான உதவிகளை வழங்கினோம். பின்னர், சுனாமி நடைபெற்ற சந்தர்ப்பத்திலும், அதன் பின்னர் முகாம் வாழ்க்கையிலும் பெண்கள் முகம் கொடுக்கின்ற விசேடமான பிரச்சினைகள் எவையென்பதைக் கண்டறிந்தோம்.
மேற்படி செயற்பாட்டின் பொருட்டு ஒன்றுதிரணி ட பெரும்பாலான பெண்கள் அமைப்புகள் ஒன்றுகூடி வலைய மைப்பாகச் செயற்பட ஆரம்பித்தன. நீண்ட காலமாகப் பெண்களது உரிமைகள் தொடர்பில் செயற்பட்டு வந்த 4 பெண்கள் வலையமைப்புகள் (55 அமைப்புகள்) ஒன்றிணைந்து சுனாமி Gugorsair fia) ITU603T3- Gay G06 (Coalition for Assisting Tsunami Affected Women - CATAW) கூட்டமைப்பைத் தாபித்தமை இதன் பெறு பேறாகும்.
ஒன்றிணைந்து அமைப்பு ரீதியில் மேற்கொள்ளப்பட்ட தகவல் திரட்டல் மூலம், அனர்த்தத்திற்கு உள்ளாகிய பெண்கள் முகாம் வாழ்க்கையிலும், அதற்கு வெளியே சமூகத்திலும் பாதுகாப்பற்ற நிலைமைக்கு உள்ளாகியுள்ளனர் என்பதும், அத்துடன் பால்நிலை அடிப்படையிலான பாரபட்சம் காட்டல் களுக்கு (Gender Based Violence) உள்ளாகியுள்ளனர் என்பதும் கண்டறியப்பட்டது. நிவாரணங்களைப் பெறுகின்றபோது, தகவல் திரட்டப்படுகின்றபோது, முகாம் நிருவாகத்தின்போது பெண்கள் முகம்கொடுக்கின்ற விசேடமான பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டிருக்கவில்லை. அவர்களுக்கு தீர்மானங்கள் மேற்கொள்ளப்படுகின்ற நிர்வாகக் கட்டமைப்பில் சேர்வதற்கான வாய்ப்புக் கிடைக்கவில்லை. அரச மற்றும் அரச சார்பற்ற மட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட தகவல் திரட்டல்கள் அனைத்துமே முக்கியமாக ஆண்களிடமிருந்து தகவல் திரட்ட லையே இலக்காகக் கொண்டிருந்தன.
அவசர உடனடி உதவி, ஒத்தாசைகளுக்கு அப்பால் செல்கின்ற, பெண்களை வலுவூட்டுகின்ற வேலைத் திட்ட மொன்றின் தேவையை உணர்ந்துகொள்வதற்கு எமக்கு அதிக

பேரழிவிற்குப் பின்னரான சந்தர்ப்பங்களில் பெண்களின் . 91
காலம் எடுக்கவில்லை. முதலில் சுனாமியினால் பாதிக்கப்பட்ட பெண்கள் முகம் கொடுக்கின்ற ஆபத்தான நிலைமைகளைப் புரிந்துகொண்டு அவர்களது தேவைகளை மதிப்பிடும் பொருட்டு பெண்கள் செயற்பாட்டாளர்களை அறிவூட்டுகின்ற பயிற்சி வேலைத் திட்டங்களை ஒழுங்கு செய்வதற்கு எமக்கு நேரிட்டது. மேற்படி செயலமர்வுகளில், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தீவிரமாகச் செவிமடுத்தல், அவர்களது பிரச்சினைகளில் தலையிடுவது எவ்வாறு? என்ற தலைப்புகளும் உள்ளடங்கி யிருந்தன.
இவற்றைத் தவிர மீள் கட்டமைப்புச் செயற்பாட்டில் பெண்களது குரலை ஒன்று திரட்டுவது எவ்வாறு? என்ற கேள்வி இன்னமுமே ஒரு சவாலாக எமது முன்னிலையில் விளங்கு கின்றது. பால்நிலை அடிப்படையில் பெண்களுக்கு நேரிடுகின்ற பாரபட்சம் காட்டல்கள், அவர்கள் முகம்கொடுக்கின்ற வன்மு 60p56ir (Gender Based Violence and Discrimination) Luibg 6TCup;5g/ மூலம் உரிய அதிகாரிகளுக்குச் சமர்ப்பிப்பதற்கு பெண்கள் அமைப்புக்கள் நடவடிக்கையெடுத்த போதிலும், அவற்றிற்கு திருப்தியளிக்கக்கூடியதான பதில்கள் எமக்குக் கிடைக்கவில்லை. மேலும் ஒழுங்கமையப்பெற்று, பாதிக்கப்பட்ட பெண்களை வலுவூட்டுவதற்கும், அவர்களது உரிமைகளை மேம்படுத்து வதற்குமான தேவையை மேற்படி அனுபத்தின் ஊடாகவே நாம் உணர்ந்துகொண்டோம்.
முகாம் நிர்வாகத்திலிருந்து மேல்மட்ட தீர்மானங்கள் மேற்கொள்ளப்படுகின்ற கட்டமைப்புகள் வரை பெண்களது பங்களிப்பை வளர்க்கின்ற செயற்பாடுகள் தொடர்பில் நாம் நடைமுறைச் சாத்தியமான விதத்தில் தலையீடு செய்தோம். பிரதேச மட்டத்தில் செயற்படுகின்ற, எம்முடன் சேர்ந்து நீண்ட காலமாக சேவையாற்றுகின்ற பெண்கள் அமைப்புக் குழுக்களுக்கு இங்கு வழிகாட்டுவதற்கு எம்மால் முடியுமாயிருந்தது.
அத்துடன் தமது வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கு, குறிப்பாக அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்வதற்கு சுனாமியினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வழிகாட்டுதலும் அதேபோன்று கொள்கைத் திட்டமிடலாளர்கள் மீது தொடர்ந்தும் நிர்ப்பந்தங்களை மேற்கொள்ளுதலும் இன்றைய தினம் பெண்கள் அமைப்புக் குழுக்களின் பிரதானமானதொரு கடமைப் பொறுப்

Page 53
92 பேரழிவுகளுக்குப் பெண்கள் முகம் கொடுத்தல்
பாக விளங்குகின்றது. பெண்களுக்கு தமது உரிமைகளைப் பாதுகாக்கின்ற சூழலை உருவாக்கிக் கொடுப்பதற்கு உதவி யளித்தல் எமக்குரியதொரு கடமையாக உள்ளது. பாதிக்கப்பட்ட பெண் களது தேவைகளை, அவர்களது குரலைத் தேசிய மட்டத்திற்குக் கொண்டுவருதல் அத்தியாவசியமாக மேற்கொள் ளப்பட வேண்டியதொன்றாக விளங்குகின்றது.
பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மீண்டும் தமது பொருளா தாரத்தைக் கட்டியெழுப்புவதற்கும் அதேபோன்று சமூகமயமா வதற்குமான சூழலை உருவாக்குவதற்கும் சுனாமி நிவாரணச் சேவைக் கூட்டமைப்பு போன்ற பெண்கள் கூட்டமைப்புகள் வலையமைப்புகளாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வரு கின்றன. நாம் ஏற்கனவே இப்பெணிகளுக்கு, தமது மன அழுத்தத்தைக் குறைத்துக் கொள்வதற்கு உதவி வருவதோடு, பொருளாதார ரீதியில் மீண்டும் தமது ஜீவனோபாயத்தைக் கட்டியெழுப்புவதற்கும் உதவி வழங்குகின்றோம். இது அவர்களை தொடர்ந்தும் தங்கி வாழ்பவர்களாக, அகதிகளாக ஆகாமலிருப் பதற்காக மேற்கொள்ளப்படும் ஒரு முயற்சியாகும். மேலும், பெண்களை பொருளாதார ரீதியிலும் அதேபோன்று சமூக ரீதியிலும் வலுவூட்டுவதற்காக மேற்கொள்ளப்படுகின்ற ஒரு முயற்சியுமாகும்.
இங்கு குறிப்பாக இருபது ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலம் யுத்தத்தில் சிக்கித் தவிக்கின்ற வட-கிழக்கு மாகாணங்களின் பெண்கள் தொடர்பில் நாம் அதிக கவனம் செலுத்தியுள்ளோம். இது வெறுமனே சுனாமியினால் நடைபெற்ற வீழ்ச்சியிலிருந்து மீளெழுவதற்கு மாத்திரம் மட்டுப்படாத, இன ஒற்றுமை, சகவாழ்வினைக் கட்டியெழுப்புதல், பரஸ்பர நம்பிக்கையைக் கட்டியெழுப்புதல் வரை நீண்டு செல்கின்ற ஒரு செயற்பாடா யிருத்தல் வேண்டுமென நாம் கருதுகின்றோம்.
சமாதானத்தை முன்னிட்டு வட-கிழக்கு தமிழ் மற்றும் முஸ்லிம் பெண்கள், பெண்கள் அமைப்புக்களுடன் சேர்ந்து நீண்ட காலமாக செயற்பாடுகளைக் கட்டியெழுப்பியுள்ள தெற்கேயுள்ள பெண்களுக்கு, பெண்கள் அமைப்புகளுக்கு இது மேலும் தமது செயற்பாடுகளை பலப்படுத்திக் கொள்வதற்குக் கிடைத்த பெறுமதிமிக்கதொரு சந்தர்ப்பமாக விளங்குகின்றது. சுனாமி யினால் அழிவுக்குள்ளான எமது பெண்களது வாழ்க்கையை மீளக்

பேரழிவிற்குப் பின்னரான சந்தர்ப்பங்களில் பெண்களின் . 93
கட்டியெழுப்பவதற்கும் அதேபோன்று யுத்ததத்தினால் அழிவுக்குள் ளாகியுள்ள வாழ்க்கையைக் கட்டியெழுப்புவதற்கும் நாம் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியுள்ளோம். இங்கு எம் ஒவ்வொருவரினுள்ளும் கட்டியெழுப்பப்படும் நம்பிக்கையானது எம்மை முன்னோக்கி நகர்த்துகின்ற பலம்வாய்ந்ததொரு சக்தியாக அமையும்.
சுனாமியினாலும் அதேபோன்று யுத்தத்தினாலும் பேரழி விற்கும் பாதிப்புக்கும் உள்ளாகின்ற பெண்களது, குறிப்பாக விதவைப் பெண்களது வாழ்ககையை மீளக் கட்டியெழுப்புவதற்கு, அவர்களது உரிமைகளைப் பாதுகாப்பதற்கு, மனிதர்கள் என்ற வகையில் சமமான கவனிப்புக்களைப் பெறக்கூடிய சமூகச் சூழலைக் கட்டியெழுப்புவதற்கு நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்.
பல்வேறான தடைகளுக்கு மத்தியில் இவ்வாறானதொரு கூட்டத்தை ஒழுங்கு செய்வதற்கும் அதேபோன்று கருத்துக்களை முன்வைப்பதற்கும் அழைப்பு விடுத்தமை தொடர்பில் சூர்யா பெண்கள் அபிவிருத்தி நிலையத்திற்கு எமது நன்றிகள் உரித்தா கின்றன.

Page 54
3.
மட்டக்களப்பில் சுனாமிக்குப் பின்னரான சூழலில் பெண்களின் கூட்டுச் செயல்வாதம்
- சித்திரலேகா மெளனகுரு
அறிமுகம்
மார்கழி மாதம் 2004ஆம் ஆண்டு இந்து சமுத்திரத்தில் உருவாகிய சுனாமி பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கையைத் தலைகீழாகப் புரட்டியது. பெரியளவிலான இடப் பெயர்வை ஏற்படுத்தியதுடன் மில்லியன்கள் பெறுமதியான அரச, பொதுச் சொத்துகளையும் சேதப்படுத்தியது. இலங்கையின் கிழக்குக் கரையோரம் இச் சுனாமியால் மிக மோசமாகப் பாதிப்புற்ற பிரதேசமாகும். அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். சொத்துகளும் வீடுகளும் அழிவடைந்தன. மக்கள் தமது வாழ்வாதாரங்களை இழந்தனர்.
இத்தகைய பேரழிவினைப் பெண்கள் எவ்வாறு எதிர் கொண்டனர்? அதன் விளைவுகளிலிருந்து மீள எவ்வாறு செயற் பட்டனர்? என்பவற்றை எடுத்துக் காட்டுவதே இங்கு எனது நோக்கமாகும்.
மரபு ரீதியான கருத்துகள் பேரழிவுகளின் போது பெண்களை எந்த வலுவுமற்ற அபலைகளாகவே சித்திரிக்கின்றன. ஆனால் இலங்கையிலும் ஏனைய பகுதிகளிலும் இத்தகைய பிரபலமான கருத்துக்கு மாறான ஒரு நிலையையே கண்டோம். மிகவும் உறுதியுடனும் நம்பிக்கையுடனும் பேரழிவின் விளைவுகளுக்கு எதிராகப் பெண்கள் செயற்பட்டனர். பெண்களின் இத்தகைய செயல்வாதமானது பேரழிவின் போது பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் பற்றிக் கவனத்தைக் குவித்தது.

மட்டக்களப்பில் சுனாமிக்குப் பின்னரான சூழலில் . 95
இலங்கையை அரசியல் வன்முறையும் போரும் கடந்த மூன்று தசாப்தங்களாக மிக மோசமாகப் பாதித்துள்ளன. உயிரிழப்புகள், காணாமற் போதல்கள், இடப் பெயர்வுகள், மனித உரிமை மீறல்கள் ஆகியவை இதன் விளைவுகளாகும். இக் கால கட்டத்தில் இத்தகைய பிரச்சனைகளக்கு வெவ்வேறு வகையில் பெண்கள் அமைப்புகள் எதிர்வினை புரிந்துள்ளன. யாழ்ப்பா ணத்தில் அன்னையர் முன்னணி, தெற்கு அன்னையர் முன்னணி, பெண்கள் செயற்பாட்டுக் கமிட்டி, இலங்கையின் புதல்வியரும் அன்னையரும், சமாதானத்துக்காக பெண்கள் போன்ற அமைப் புகள் ஊர்வலங்களை நடத்தின. போரில் ஈடுபடும் தரப்பினருக்கு சமாதான முறையில் முரண்பாட்டைத் தீர்க்கும்படி அறிக்கைகள் மூலமும் விண்ணப்பங்கள் மூலமும் விண்ணப்பம் விடுத்தன. இத்தகைய செயற்பாடுகள் எப்போதுமே முரண்பாட்டையும் அரசியல் வன்முறையையும் முடிவுக்குக் கொண்டுவருமாறு கோரின. அரசியல் மட்டத்தில் சமாதானப் பேச்சுவார்த்தைகளின் மூலம் நீதியானதும் நிலைத்திருக்கக் கூடியதுமான சமாதானத் தீர்வை ஏற்படுத்துமாறு வற்புறுத்தின. 1983, 1990, 1991 ஆண்டுகளில் நிகழ்ந்த இனவன்முறைகள், இடப்பெயரவுகள் ஆகியவற்றின் போது எழுந்த பெண்களின் அவசரத் தேவைகளை நிறைவேற்றுவதாகவும் பெண்கள் அமைப்புகளின் செயல்வாதம் விரிவுபட்டது.
சுனாமிப் பேரழிவு தொடர்பாகப் பெண்களின் எதிர்வினைகள்
சுனாமிக்குப் பின்னர் உடனடியாகவே மட்டக்களப்பில் பெண்கள் நிறுவனங்கள் தம்மிடம் ஏற்கனவே இருந்த மனித, பெளதீக வளங்களைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண, அவசர உதவிகளை வழங்க ஆரம்பித்தன. தனிப்பட்ட பெண்களும் இத்தகைய ஆரம்பகட்டச் செயற்பாடுகளில் மிகுந்த அர்ப்பணிப் புடன் ஈடுபட்டனர். அயலவர்களைக் கொண்ட சிறு குழுக்களை அமைத்து அவசர உதவிகளை வழங்கினர். எனினும் பெண்கள் நிறுவனங்கள் உடனடி நிவாரணங்களை அளிப்பதுடன் மாத்திரம் அமையவில்லை. விரைவிலேயே பிரச்சனைகளின் அடி ஆழத்தைக் காணும் வகையில் செயற்பட்டு கொள்கை மட்டத்தில் குறுக்கீடு செய்யத் தொடங்கின. நிவாரணம், புனருத்தாரணம், மீள் குடியிருப்பு தொடர்பான முயற்சிகளின் போது பால்நிலை

Page 55
96 பேரழிவுகளுக்குப் பெண்கள் முகம் கொடுத்தல்
நோக்கினைக் கடைப்பிடிப்பதற்குரிய தேவையைத் தொடர்ந்து வலியுறத்தி வந்தன.
மட்டக்களப்பின் பெண்கள் நிறுவனங்கள் சுனாமியால் பாதிக்கப்பட்டோரின் பிரச்சினைகளையும் அக்கறைகளையும் பற்றிக் கூட்டாகக் குரல் கொடுப்பதற்காக தம்மை ஒரு கூட்டமைப்பாக உருவாக்கினர். இக் கூட்டமைப்பு சிறப்பாக பெண்களின் பிர்ச்சனைகளைப் பற்றி கவனஈர்ப்பு செய்வ தற்காகவே அமைந்தது. இதனாலேயே அனர்த்த முகாமைத்து வத்திற்கான பெண்கள் கூட்டமைப்பு என்பது உருவாகியது.
அனர்த்த முகாமைத்துவத்திற்கான பெண்கள் கூட்டமைப்பு(அ.மு.பொ. க) UDUU.66Gn UU
இக் கூட்டமைப்பு 2005 ஜனவரி மாத முற்பகுதியில் உருவாகியது. இது சுமார் 20 உள்ளுர், சர்வதேச அரசுசாரா நிறுவனங்களையும் சுனாமியால் பாதிக்கப்பட்ட உள்ளுர் பெண்கள் குழுக்களையும் உள்ளடக்கி இருந்தது. இத்தகைய ஒரு கூட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்ற தீர்மானம், சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையத்தில் நடைபெற்ற, உள்ளூர் பெண்கள் நிறுவனங்கள், ஐக்கிய நாடுகள் சபை நிறுவனங்கள், சர்வதேச அரச சார்பற்ற அமைப்புகள் ஆகியவற்றில் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில் எடுக்கப்பட்டது. நலன்புரி முகாம்களில் வாழும் இடம் பெயர்ந்த பெண்கள், பால் நிலைக் கூருணர்வற்ற அணுகுமுறை காரணமாக முகங் கொடுக்கும் பிரச்சனைகளை மையப்படுத்தியதாகவே இக் கூட்டத்தில் கலந்துரையாடல்கள் நிகழ்ந்தன. இடம்பெயர்ந்த பெண்கள் தொடர்பாக மேற்கொள்ளப் படும் நடவடிக்கைகளில் பால்நிலைக் கூருணர்வு அமைந்திருக்க வேண்டும் என்பதைக் கூட்டாக வற்புறுத்துவதற்காகவும் இது தொடர்பான குறுக்கீடுகளை மேற்கொள்வதற்காகவும் இக் கூட்டமைப்பு உருவாகியது.
மட்டக்களப்பு அரச அதிபரின் தலைமையில் இயங்கும் மாவட்ட அனர்த்த செயற்பாட்டுக் கொமிட்டிக்கு (District diaster Dperational Committee) ஒரு விண்ணப்பம் 2005 ஜனவரி 12ஆம் திகதி அனுப்பப்பட்டது.
இடம்பெயர்ந்த பெண்களின் நலன்கள், புனருத்தாரணம் ஆகியவை தொடர்பான ஒழுங்குகளை மேற்கொள்ளும்போது

மட்டக்களப்பில் சுனாமிக்குப் பின்னரான சூழலில் . 97
அப்பெண்களுடன் கலந்தாலோசிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை இவ் விண்ணப்பம் முன்வைத்தது. அத்துடன் தீர்மானம் எடுக்கும் அமைப்புகளின் உள்ளுர்ப் பெண்கள் நிறுவனங்களின் பிரதிநிதித்துவம் வேண்டும் எனவும் வேண்டு கோள் விடுத்தது.
வெவ்வேறு மீள் குடியமர் இடங்களைச் சேர்ந்த பெண் களின் பிரதி நிதிகளையும் உள்ளுர் பெண்களின் பிரதிநிதிகளையும் உள்ளுர், மாவட்ட மட்டத்தில் தீர்மானம் எடுக்கும் சகல அமைப்புகளிலும் சேர்த்துக் கொள்ளுமாறு கோருகிறோம் (அ.மு.பெ.கூட்டமைப்பின் அறிக்கை - 2005 ஜனவரி 12)
பின்வருவன தொடர்பாகத் தேவைப்படும் நடவடிக்கைகளை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளை வற்புறுத்தியதுடன் மாத்திரமன்றி அவை தொடர்பாக சில அ.மு.பெ. கூட்டமைப்பு பரிந்துரைகளையும் முன்வைத்தது:
★
முகாம்களில் பெண்களுக்கான தனியிடங்கள்: பெண்கள் உடைமாற்ற, குளிக்க, உறங்க, குழந்தை களுக்குப் பாலுட்ட தேவையான தனியிடங்கள் முகாம்களில் இல்லை. எனவே இடம் பெயர்ந்தோர் வசிக்கும் ஒவ்வொரு இருப்பிடத்திலும் பெண்களுக்கு மாத்திரமான இடங்கள் அமைக்கப்பட (கண்காணிக்கப் படவும்) வேண்டும்.
பெண்களுக்கு எதிரான வன்முறையைத் தடுத்தல்: முகாமிலுள்ள ஆண்கள் மத்தியில் மதுபாவனை அதிகரித் திருப்பதையிட்டு பெண்கள் கவலையடைந்துள்ளனர். இது பாலியல் தொந்தரவு, துஷ்பிரயோகம், வன்முறை ஆகியவற்றுக்கு வழிவகுக்கும் எனக் கருதுகின்றனர். இது ஆண்கள் தமது வழக்கமான சமூகப் பாத்திரங்களை ஆற்றமுடியாத நிலைமை, ஆக்கபூர்வமான செயல் இழப்பு ஆகியவற்றுடன் தொடர்புடையது என்பதை நாம் அறிவோம். எனவே பெண்களைப் பாதுகாப் பதற்கான ஏற்பாடுகளுடன் ஆண்கள் முகாம்களிலும் வெளியிலும் பயனுள்ள வேலைகளில் ஈடுபடும் வாய்ப்புக்களை ஏற்படுத்துதல் போன்ற முற்தடுப்புப் பொறிமுறைகளுக்கான வழி வகைகள் செய்யப்பட வேண்டும்.

Page 56
98 பேரழிவுகளுக்குப் பெண்கள் முகம் கொடுத்தல்
* பெண்கள், சிறுமிகள் ஆகியோரின் இனப்பெருக்க
சுகாதாரத் தேவைகள்: ஒவ்வொரு இருப்பிடத்திலும் ஒழுங்கான கால ஒழுங்கில் இயலுமானவரை பெண் மருத்துவர் குழுவினால் மருத்துவ சேவைகள் - கிளினிக்குகள் - பெண்களுக்குப் பிரத்தியேகமாக நடத்தப்பட வேண்டும். கர்ப்பிணித் தாய்மார், பாலூட்டும் தாய்மார் ஆகியோரின் தேவை களுக்கு விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும்.
* முகாம்களின் நிர்வாகத்தில் பெண்களின் பங்கேற்பு: சகல இருப்பிடங்களிலும் பெண்கள் குழுக்கள் அமைக்கப் படுவதுடன் முகாம்களிலுள்ள சகல குழுக்களிலும் பெண்கள் பிரதிநிதிகள் இருக்க வேண்டும்.
* உரிய காலத்தில் தெளிவான தகவல்கள்:
குழப்பம், பயம், வதந்திகளிலும் அதிகாரம் மிக்கோரிலும் தங்கியிருத்தல் ஆகியவற்றைத் தடுக்கும் வகையில் தெளிவாகவும் உரியகாலத்திலும் தகவல்கள் பெண்க ளுக்குக் கிடைப்பதற்கான ஒழுங்குகள் வேண்டும். இவை குறிப்பாகப் பதிவு செய்தல், வைத்திய சேவைகள், கிளினிக்குகள், உணவுப்பங்கீடு, சட்டநிலை, இழப்பீடு தொடர்பான விடயங்கள், முகாம்களின் எதிர்கால நிர்வாகத் திட்டம் பற்றிய தகவல்களையும் அறிவுறுத்தல் களையும் உள்ளடக்க வேண்டும்.
* பெண் குடித்தனத் தலைவியருக்கு விசேட அக்கறை: குடும்ப அங்கத்தவர்களை இழந்ததால் குடித்தனத் தலை வியராக மாறியுள்ள பெண்களின் மீள் குடியேற்றத் தேவைகள், விருப்பங்கள் ஆகியவை குறித்து விசேட அக்கறை செலுத்தப்பட வேண்டும். இந்த விண்ணப்பத்தில் அனர்த்த முகாமைத்துவ பெண்கள் கூட்டமைப்பு பெண்களது வாழ்வாதாரத் தேவைகள் பற்றியும் சுட்டிக்காட்டியது. இத்தேவைகள் பெரும்பாலும் ஆண்களிலிருந்து வேறுபட்டதுடன் அவர்களது சொந்த சமூக, பெளதீகச் சூழலுடன் தொடர்புபட்டது. எனவே மீள்குடியிருப்பு பற்றிய தீர்மானத்தில் இவ் வாழ்வாதாரத் தேவைகள் கவனத்தில் கொள்ளப்பட

மட்டக்களப்பில் சுனாமிக்குப் பின்னரான சூழலில் . 99
வேண்டும் என வற்புறுத்தியது. மேற்கூறிய விண்ணப்பத்தில் பின்வரும் நிறுவனங்கள் கையொப்பமிட்டிருந்தன:
1. சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம் 2. பெண்கள் அபிவிருத்தி மன்றம்
3.
பால்நிலையடிப்படையிலான வன்முறைகளைத் தடுப்ப தற்கான செயற்றிட்டம் - கெயார் சர்வதேசம்
நேத்ரா - கிரான்குளம்
ஒக்ஸ்பாம் - CAA
ஒக்ஸ்பாம் - GB திருப்பெருந்துறை சமூக அபிவிருத்தி நிறுவனம் கோறளைப்பற்று வடக்கு சமூக அபிவிருத்திச் சங்கம்
மக்கள் நலன்புரிச் சங்கம் - கிரான் 10. உழைக்கும் மகளிர் அபிவிருத்தி மன்றம் 11. சகவாழ்வுக்கான வலையமைப்பு - பெண்கள் கமிட்டி
12. பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான
வலையமைப்பு
13. உலகப் பல்கலைக்கழக சேவை - WUSC
இந்த அறிக்கையானது பரவலாக வினியோகிக்கப் பட்டதுடன் ஆலோசனைக்கும் பிரசாரத்திற்குமான ஓர் ஆவணமாகவும் மாறியது. இந்தப் பிரசாரத்தினால் முகாம் களிலுள்ள பெண்களது நிலை தொடர்பான சில முன்னேற்றங்கள் ஏற்பட்டன.
(1) பல முகாம் கமிட்டிகளில் பெண்கள் உள்ளடக்
கப்பட்டனர்.
(i) முகாம்களில் பெண்கள் குளிப்பதற்கான தனியிடங்கள்
அமைக்கப்பட்டன.
(ii) மாவட்ட பெண்கள் பொலிஸ் பிரிவின் உத்தியோ கத்தர்கள் பெண்களிடமிருந்து முறைப்பாடுகளைப் பெறுவதற்காக முகாம்களுக்கு ஒழுங்காகச் செல்லத் தொடங்கினர்.

Page 57
OO பேரழிவுகளுக்குப் பெண்கள் முகம் கொடுத்தல்
(iv) அரச, அரசசார்பற்ற பிரதிநிதிகளை உள்ளடக்கிய வாழ்வாதார பணிக்குழு அதன் தீர்மானம் எடுக்கும் உயர் மட்டத்தில் மூன்று பெண்கள் நிறுவனங்களை சேர்த்துக் கொண்டது. (v) உள சமூக பாதுகாப்புப் பணிக் குழுவின் இணைத் தலைவராக அ.மு.பெ.கூட்டமைப்பு உறுப்பினர் ஒருவர் சேர்ந்தார் - மாவட்ட மட்டத்தில் சுனாமிப் பேரழிவு தொடர்பாக நிறுவப்பட்ட 9 பணிக்குழுக்களின் தலைமை மட்டத்தில் அங்கம் வகித்த ஒரே ஒரு பெண் அங்கத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அ.மு.பெ.கூட்டமைப்பின் செயலகமாக சூரியா பெண்கள் அபிவிருத்தி நிறுவனம் செயற்பட்டது. வாராந்தக் கூட்டங்களும் கலந்துரையாடல்களும் இடம் பெற்றன. கூட்டங்களில் பெண்கள் நிறுவனங்கள், உதவி வழங்கும் சர்வதேச நிறுவனங்கள், முகாம்களில் வசிக்கும் பெண்கள், ஐ. நா. சபை நிறுவனங்களின் அலுவலர்கள் எனப் பலதரப்பட்டோரும் பங்குபற்றினர். இக் கூட்டங்கள் பெண்களின் அக்கறைகள் பற்றி கவனம் ஈர்ப்பதற் கான, வினாக்கள் எழுப்புவதற்கான, துயரங்களைச் செவி மடுப்பதற்கான, யதார்த்தத்தை விளங்குவதற்கான தளமாகப் பயன்பட்டன.
காணி உரிமை தொடர்பான பிரசாரம்
அ.மு.பெ.கூட்டமைப்பு மட்டக்களப்பில் முன்னிறுத்திய இன்னோர் விடயம் காணி, வீடு உரிமைகள் தொடர்பானதாகும். புனர்நிர் மாண வேலைகள் நடைபெறும் சூழலில் பெண்களின் காணி உரிமைகளை மையப்படுத்தியதாக இது அமைந்தது. புதிய மீள்குடியேற்றப் பகுதிகளில் நிலம் வழங்கும்போது குடும்பத் தலைவரின் (பெரும்பாலாக கணவன் அல்லது தந்தை) பெய ரையே பிரதேச செயலகங்கள் பதிவு செய்தன. இலங்கையின் கிழக்கில் வழக்கிலுள்ள பாரம்பரியச் சட்டங்கள் தாயிடமிருந்து மகளுக்கு சொத்துகள் தொடர்வதை உறுதிப்படுத்தின. மட்டக் களப்பு மாவட்டத்தின் எழு கிராமங்களில் அ.மு.பெ. கூட்டமைப்பு நடத்திய துரித கணக்கெடுப்பு சுனாமிக்கு முன்னர் தமிழ் முஸ்லிம் பெண்கள் பலர் காணி உரிமையாளராக இருந்ததை எடுத்துக்

மட்டக்களப்பில் சுனாமிக்குப் பின்னரான சூழலில் . Ol
காட்டின. ஆனால் மீள் குடியேற்றத்துக்கு நிலம் வழங்கும்போது இவ்வழமை அலட்சியப்படுத்தப்பட்டதால் சுனாமிக்கு முன்னர் காணி உரிமையாளராகவிருந்த பெண்கள் தமது உரிமையை இழக்கும் ஆபத்தை எதிர்நோக்கினர். இதனைப் பல பெண்கள் அ.மு.பெ.கூட்டமைப்பின் வாராந்திரக் கூட்டங்களில் எடுத்துக் கூறினர். எனவே இலங்கை ஜனாதிபதிக்கு இவ்விடயம் தொடர்பாக இரண்டாவது விண்ணப்பம் அனுப்பப்பட்டது. பின்வரும் விடயங்களை இந்த விண்ணப்பம் சிபார்சு செய்தது:
1. சுனாமிக்கு முன்னர் காணி பெண்ணுக்குச் சொந்தமான தாயிருப்பின் மீள் குடியேற்றக் காணியும் பெண்ணுக்கே உரியதாக வேண்டும்.
2. 200 மீற்றர் கரையோரத் தடுப்புப் பகுதியில் அதிகளவான பெண்கள் இறந்துள்ளனர். இறந்த பெண்ணுக்கு காணி இருந்திருப்பின் மீள் குடியேற்றக் காணி அவரது மகளுக்குக் கொடுக்கப்பட்ட வேண்டும். தாயிடமிருந்து மகளுக்கு வீடும் காணியும் தொடர்ந்து உரிமையாகும் கிழக்கின் பாரம்பரிய வழமையை அனுசரித்து இது செய்யப்பட வேண்டும்.
3. சுனாமிக்கு முன்னர் வீடும் காணியும் பெண்ணின் பெயரில் இருந்திருப்பின் உடைந்த வீட்டைத் திருத்து வதற்கான சான்றிதழும் அப்பெண்ணின் பெயரிலேயே கொடுக்கப்பட வேண்டும்.
மேலும் குடியிருப்புகள், வீடுகள் தொடர்பான தீர்மானம் எடுக்கும் அமைப்புகளில் பெண்கள் பிரதிநிதித்துவத்தின் அவசியத்தையும் அ.மு.பெ. கூட்டமைப்பு வற்புறுத்தியது.
சமூகப் பங்களிப்பு, சேதமடைந்த வீடுகளை மதிப்பீடு செய்தல், காணிகள் கொடுத்தல், குறைகேள் குழுக்கள், வதிவிடங்களை வடிவமைத்தல், சான்றிதழ்கள் அளித்தல் ஆகியவற்றுக்காக அரசாங்கம் உள்ளுர் மட்டத்தில் அமைப்புகளை உருவாக்கியது. ஆனால் இவற்றில் பெண்களின் நேரடியான பிரதிநிதித்துவம் இருக்கவில்லை. கடந்த கால அனுபவத்தின்படி பெண்களின் பிரதிநிதித்துவம் தீர்மானம் எடுக்கும் மட்டங்களில் கட்டாயமாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டாலன்றி அப்பிர திநிதித்துவம் மிகக் குறைவாகவே இருக்கும். ஆண்களைப்

Page 58
IO2 பேரழிவுகளுக்குப் பெண்கள் முகம் கொடுத்தல்
போன்று பெண்களும் சுனாமியால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதைக் கணக்கில் எடுத்து அவர்களை தீர்மானம் எடுக்கும் மட்டத்தில் சேர்த்தாலன்றி அவர்களது அக்கறைகள் கவனத்தில் எடுக்கப்படாது. எனவே அரச அதிகாரிகள், உதவி வழங்குவோர் ஆகியோர் பெண்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய வேண்டும் என்ற வேண்டுகோள் முன்வைக்கப்பட்டது.
* கிராமப் புனருத்தாரணக் குழுக்களில் ஒரு பெண்ணாவது இடம் பெறவேண்டும். இப் பெண் சமூக நிறுவனத்தின் அங்கத்தவராகவோ அல்லது உள்ளூர்ப் பெண்கள் நிறுவனத்தைச் சார்ந்தவராகவோ அல்லது பெண்களின் அக்கறை குறித்து சிறப்பான அறிவு கொண்டவராகவோ இருக்க வேண்டும்.
* சலக பிரதேச, மாவட்ட மட்டத்திலான குறைகேள் குழுக்களும் சமூகத்தைச் சார்ந்த பெண்களை உள்ளடக்கி யிருக்க வேண்டும்.
* சகல சேதமதிப்பீட்டுக் குழுக்களும் கிராமப் புனருத்தாரணக் குழுவின் பெண் அங்கத்தவரை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* மாவட்ட நிதி வழங்கும் இணையத்தின் 3 அங்கத்தவர் கொண்ட செயற்குழுவானது கிராமிய புனருத்தாரணக்குழு, சேத மதிப்பீட்டுக் குழு, மாவட்ட குறைகேள் குழு ஆகியவற்றில் நியமிக்கப்படும் பிரதிநிதிகளில் 1/3 வீதம் பெண்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் (ஜனாதி பதிக்கு விண்ணப்பம் : மே 2005)
சில பிரதேச செயலாளர்கள் மேற்கூறியவை தொடர்பாக பொருத்தமான நடவடிக்கைகளை எடுத்தனர். உதாரணமாக மட்டக்களப்பு மாவட்ட வாகரைப் பிரதேச செயலாளர் 7 பெண்களைக் கிராமப் புனருத்தாரணக் குழுவில் சேர்த்துக் கொண்டார்.
அ.மு.பெ. கூட்டமைப்பின் இப்பிரசாரம் தீர்மானம் மேற்கொள்ளும் உயர்மட்டங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. கூட்டமைப்பின் பிரதிநிதிகள் ரவ்றன் - தேசத்தைக் கட்டியெழுப்பும்

மட்டக்களப்பில் சுனாமிக்குப் பின்னரான சூழலில் . O3
UGooflás (gCup (Task Force For Rebuilding Nation), Gugorsair 65a15. TJ அமைச்சு ஆகியோருடன் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தினர். ஐக்கிய நாடுகள் சபையின் பெண்கள் பிரிவின் தலைவி மே மாதம் 2005ஆம் ஆண்டு இலங்கை வந்தபோது அவருடனான கலந்துரையாடலுக்கு அ.மு.பெ. கூட்டமைப்பு அழைக்கப்பட்டது.
பால்நிலை உரிமைகள் துஷபிரயோக அறிக்கையிடல்
அ.மு.பெ. கூட்டமைப்பின் இன்னோர் முக்கிய பணியாக சுனாமியின் பின்னரான மீள் நிர்மாணச் சூழலில் பெண்களின் உரிமைகள் துஷ்பிரயோகம் தொடர்பான கண்காணிப்பும் அறிக்கையிடலும் அமைந்தது. துஷ்பிரயோக நிகழ்வுகள், முறைப்பாடுகள் ஆகியவற்றை தொகுக்கத் தொடங்கியது. இந்த அறிக்கைத் தொகுப்பு பால்நிலைக் கண்காணிப்பு எனப்பெயரிடப் பட்டது. சுனாமியால் பாதிக்கப்பட்ட சமூகங்களின் உரிமை மீறல்களில் கவனம் செலுத்தியது. இரு வாரங்களுக்கு ஒரு தரம் தொகுக்கப்பட்ட இந்த அறிக்கைகள் நிறுவனங்களுக்கு மின் அஞ்சலிடப்பட்டன.
பால்நிலைக் கண்காணிப்பு நடைபெற்ற சகல உரிமை மீறல்களையும் பட்டியலிடவில்லை. ஆனால் பிரச்சினைகளின் இயல்பை எடுத்துக் காட்டுவதாக அமைந்தது.
2005 ஆண்டு தை மாதம் முதல் சித்திரை மாதம் வரை 17 வீட்டு வன்முறைகள், 1 பாலியல் வன்முறை, முகாம்களில் சுகாதாரம் தொடர்பான 12 முறைப்பாடுகள், அரச கொள்கைகள், நடை முறைகள் ஆகியவற்றின் விளைவான 19 உரிமை மீறல்கள் பட்டியலிடப்பட்டன. இவற்றை விட இடம் பெயர்ந்தோர் தங்கியிருந்த இடங்களிலிருந்து நிர்ப்பந்தமாக வெளியேற்றப்பட்ட 5 சம்பவங்கள், மீள் குடியேற்றும் பகுதியில் புதைந்திருந்த கண்ணிவெடி ஆகியவையும் இவ் அறிக்கையில் இடம் பெற்றன. சில விடயங்கள் சம்பந்தப்பட்டோரிடம் தொடர்பு கொண்டதை யடுத்து சுமூகமாகத் தீர்க்கப்பட்டன. உதாரணமாக அரச கொள்கைகள் காரணமாக ஏற்பட்ட 19 உரிமை மீறல்களில் 9 தொடர் கண்காணிக்கப்பட்டன. பாடசாலைகளிலிருந்து வெளியேற நிர்ப்பந்திக்கப்படல், குடும்பங்களுக்கான பங்கீட்டு அட்டைகள் வழங்காதிருத்தல், குடும்பங்களை பதிவு செய்யாமை, பெண்களுக்கு நிவாரணப் பணம் அளிக்காமை, தகாதவார்த்தைப்

Page 59
O4 பேரழிவுகளுக்குப் பெண்கள் முகம் கொடுத்தல்
பிரயோகம் ஆகியவை இந்த முறைப்பாடுகளில் அடங்கும். ஏனைய பிரச்சினைகள் அரசாங்கத்தின் பால்நிலைக் கூருணர்வற்ற வீடு தொடர்பான கொள்கைகள், கடன் மீளக் கட்டுதல் பற்றியவையாகும். இந்த முறைப்பாடுகள் பரிசீலிக்கப்படாவி டினும் தொடர் நடவடிக்கைக்காக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டன.
எனவே பால் நிலைக் கண்காணிப்பு சமூக மட்டத்தில் காணப்பட்ட உண்மையான பிரச்சினைகளை அவை தொடர்பான அலுவலர்கள், நிறுவனங்கள் ஆகியோருக்குத் தெரியப்படுத்தியது. அத்துடன் மக்கள் தமது குறைகளை எடுத்துச் சொல்வதற்கான சந்தர்ப்பத்தையும் அளித்தது.
அ.மு.பெண்கள் கூட்டமைப்பு ஏற்படுத்திய தளம் ஊடாக வெளிப்பட்ட பெண்களின் கூட்டுச் செயல்வாதம் பெண்களது பிரச்சினைகள், உரிமைகள், பால்நிலை அக்கறைகள் தொடர்பாக அரச நிறுவனங்கள், ஏனைய முகவர் நிலையங்கள் மத்தியில் விழிப்புணர்வையும் கூருணர்வையும் ஏற்படுத்தியது.
நான் முன்பே கூறியது போல இவ்விடயங்களை இச் செயல் வாதம் முன்னுக்குக் கொணர்ந்தது. இலங்கையின் தென்பகுதியைச் சேர்ந்த ஏனைய பெண்கள் வலையமைப்புகளும் அ.மு.பெ. கூட்டமைப்பின் செயற்பாடுகளில் பங்கேற்றன. குறிப்பாக கற்றோ (CATAW), சுனாமியால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவும் கூட்டமைப்பு, அ.மு.பெண்கள் கூட்ட மைப்பு ஆரம்பித்த பிரசாரங்கள் பலவற்றைத் தெற்கில் முன்னெடுத்தது. K
எவ்வாறாயினும் புனர்நிர்மாண நிகழ்வோட்டத்தின்போது பெண்களது நலனையும் உரிமைகளையும் போதுமான அளவு சேர்த்துக் கொள்ளுதலில் ஏற்படும் சவால்கள் பல இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளன. களைப்படையாமல் கூட்டாக இவை தொடர்பாக நாம் செயலாற்ற வேண்டி உள்ளது.

9
சுனாமிக்கு பின்னர் ஆச்சேயின் புனர்வாழ்வு மற்றும் மீள்கட்டுமான பணிகளில் பெண்களின் பங்களிப்பு
- சித்தி மைசாரா
ஆச்சேயில் சமுதாயங்கள் தற்பொழுதுமுகங்கொடுத்து வரும் பிரச்சனைகள்
* ஆச்சேயில் போர் தொடர்ந்து நடைபெற்று வருகின்றமை (பல பெண்கள் பாலியல் வன்முறைகளை அனுபவித்து வருகின்றமை, வெற்றி இலக்குக்கான கருவிகளாக பெண்கள் நடாத்தபடுகின்றமை, மற்றும் அவர்கள் உயிருள்ள கேடயங்களாக மாறியுள்ளமை) * இப் பிராந்தியத்தில் ஷரியா சட்டம் படிப்படியாக அமுல்படுத்தப்பட்டு வருகின்றது (இதை அமுல்படுத்து வதற்கான பிரதான குறிக்கோள் பெண்களாவர்) * நிலநடுக்கங்களினாலும் சுனாமியினாலும் பாதிக்கப்பட்ட பிராந்தியமாகும் (இதனால் பல பெண்கள் தங்களுடைய குடும்ப அங்கத்தவர்களையும், வீடுகள், சொத்துக்கள், மற்றும் பலவற்றை இழந்துள்ளனர்)
நிலநடுக்கம் மற்றும் சுனாமியின் தாக்கம்
உயிரிழப்பு : 138,728 காணாமற் போனோர் : 371,063 (65 சதவீதம் பெண்கள்) பாதிக்கப்பட்ட வீடுகள் : 179,312 அகதிகள் : 474,318

Page 60
O6 பேரழிவுகளுக்குப் பெண்கள் முகம் கொடுத்தல்
* ஆச்சேயின் 21 பிராந்தியங்களில் 15 பிராந்தியங்கள் பாதிப்புக்குள்ளாகின: கிழக்கு ஆச்சே, வட ஆச்சே, பைரியுன், பைடி, ஆச்சே பேசார், சபங், ஆச்சே ஜயா, மேற்கு ஆச்சே, தென்மேல் ஆச்சே, நகன் ராயா, தென் ஆச்சே, ஆச்சே சிங்கில், சியுமெயுலு, மற்றும் லோக் செயுமாவே.
* பாதிப்புக்குள்ளாகிய 15 பிராந்தியங்களில் 9 பிராந்தியங்கள்
போர் பிராந்தியங்களாகும்.
பெண்களால் முகங்கொடுக்கப்படும் குறிப்பிட்ட பிரச்சினைகள்
* அகதி முகாம்களில் வாழும் பெண்களுக்கு பாதுகாப்பற்ற மற்றும் பிரதிகூலமான ஓர் சூழ்நிலை தென்படுகின்றது. * உடல் ரீதியிலான பலவீனம். * உளரீதியிலான பிரச்சினைகள் அதிகரிப்பு. * பெண்கள் தங்களுடைய பொருளாதார வளங்களை இழந்துள்ளனர் அல்லது தங்களுடைய குடும்பத்திற்கு ஜீவனோபாயத்தை ஈட்டித் தரும் பிரதான அங்கத்தவாராக மாறியுள்ளமை. * இப்பேரழிவிற்கான காரணமாக அவர்களை கருதி நிந்தித்து
களங்கப்படுத்தி தள்ளி வைத்தல். * பெண்கள் தங்களது சொத்துக்களையும் செல்வங்களையும்
இழத்தல். * சொத்துக்களுக்கு உரிமையாளர் என்பதை நிரூபிக்க சட்ட
உரிமைகளை பெறுவதில் சிக்கல்கள். * பல பாலியல் வன்முறைகளுக்கு ஆளாதல் (இதில் பாலியல்
துன்புறுத்தல்களே வழக்கமாக நடைபெறுவதாகும்.
வேறு பிரச்சனைகள்
* தீர்மானங்கள் எடுக்கும் நடவடிக்கைகள், (திட்டமிடல் மற்றும் மூலப்பிரதி உருவாக்கம் போன்ற நடவடிக்கைகள் உட்பட) புனர்வாழ்வு மற்றும் மீள் கட்டுமான நடவடிக் கைகளில் பெண்களின் குரல் சிறியளவிலேயே ஒலிக் கின்றது.

★
சுனாமிக்கு பின்னர் ஆச்சேயின் புனர்வாழ்வு. IO7
வழங்கப்படும் உதவிகள் பெண்களை வலுப்படுத்தும் நடவடிக்கைளுக்கு கை கொடுப்பதில்லை அவர்களை ஒருவரில் அல்லது ஒன்றில் தங்கியிருப்பவர்களாகவே மாற்றுகின்றது. மேற்கொள்ளப்படும் நடவடிக்கைள் அனைத்தும் திட்டங் களை சார்ந்தவையாகவே உள்ளன.
அச்சேரியில் சுனாமியின் பின்னரான சூழலில் பெண்களின் செயல்வாதம்
★
பொருளாதாரத் தை மீள பெறுதல், சமூக உளவியல் தலையீடு, மாற்றீடு கல்வி, மற்றும் அவசர நிவாரணம் போன்ற பல நடவடிக்கைகளை சில நிறுவனங்களுடன் இணைந்து பெண்கள் மேற்கொள்கின்றனர். தீர்மானங்களை எடுத்தல் மற்றும் கொள்கை உருவாக்கம் உட்பட்ட மீள்கட்டுமான மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கை களில் ஈடுபடுவதற்கான கூட்டு திட்டத்தினை வடிவமைக்க பெண்கள் காங்கிரஸை நடாத்தியமை (400 பெண்கள் பங்குபற்றினர்). கிராமங்களை சுத்தப்படுத்தும் திட்டங்களில் ஈடுபடல். உள்ளூரில் இடம்பெயர்ந்தோருக்கும் சிறுவர்களுக்கும் வழிகாட்டல். சித்திரம், விளையாட்டு, கல்வி, தனிப்பட்ட உளவள ஆலோசனை மற்றும் குழு உளவள ஆலோசனை போன்ற சில நடவடிக்கைகள் மூலமாக சிறுவர்களுக்கு ஒர் ஆதரவளிக்கும் குழுவினை உருவாக்கல். சமுதாயத்திற்கான சமூக உளவியல் கல்வித் திட்டங்களை நடத்துதல்.
மேலும் அக்கறை செலுத்த வேண்டிய பால்நிலைத் தேவைகள்
மீள்கட்டுமான மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகளிற்கான தீர்மானங்களை எடுக்கும் மற்றும் கொள்கைகளை உருவாக்கும் செயற்பாட்டில் பெண்களின் ஈடுபாடு.

Page 61
O8
பேரழிவுகளுக்குப் பெண்கள் முகம் கொடுத்தல்
பெண்களின் தேவைகளை மனதிற் கொண்டே முகாம்களில் வசதிகளை ஏற்படுத்தல். பெண்கள் பாதுகாப்பு உபாயங்களை அதிகரித்தல். பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் சமூக உளவியல் தலையீட்டு செயற்பாடுகளை அபிவிருத்தி செய்தல். உள்ளூர் அல்லது சர்வதேச நிறுவனங்களுக்கிடையில் சிறந்த இணைப்பை ஏற்படுத்துவதற்கான தேவை. பெண்களை ஒழுங்குபடுத்தபடுவதை அதிகரிப்பதற்கான தேவை. பெண்கள் வளங்களின் முயற்சிகளை அதிகரிப்பதற்கான தேவை. அத்துடன்: உள்ளூர், தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் வலையமைப்பை உருவாக்கல்.

10
குஜராத்தில் அரச ஆதரவுடனும், உடந்தையுடனும் மனிதன் அனர்த்த நிலையை உருவாக்கினான் : குஜராத் மனிதப் படுகொலை 2002 உம் தற்போதும்
- ஷிபா ஜோர்ஜ்
"குஜராத் இத்தகையதொரு நிகழ்வினை சகித்துக்கொள்ள மாட்டா தென்பதை குஜராத் மக்களுக்கு நிச்சயமாகக் கூற விரும்புகின்றேன். குற்றவாளிகள் தமது பாவங்களுக்கான முழத்தண்டனையினையும் பெறுவர். இது மாத்திரமன்றி, எவரேனுமொருவர், தமது கனவிலேனும் இது போன்ற மாபாதகத்தினைச் செய்ய நினைக்காதிருப்பதற்கான எச்சரிக்கை சான்றினை அமைவாக்குவோம்."(அழுத்திக் கூறப்பட்டது)
- முதலமைச்சர் திரு நரேந்திரா மோதிடி 2002 பெப்ருவரி 28ஆந் திகதியன்று குஜராத் அரச தொலைக்காட்சிச் சேவையில்
“நாட்டின் அரசாங்கம், இத்தகைய கொடுரமான, மனிதாபி மானமற்ற குற்றச்செயலான பெருமளவு வன்முறையினை (களங்கமற்ற பயணிகள் மீதான) கண்டிப்பாக கவனித்து, எதிர்காலத்தில் இத்தகையதொரு நிகழ்வு மீண்டும் நிகழா திருக்கும் வகையில் அடையாள நடவடிக் கைகளை எடுக்கவும் தண்டிக்கவும் உறுதிபூண்டுள்ளது."
- முதலமைச்சர் திருநரேந்திரா மோதிடி
2002 பெப்ருவரி 28 அன்று குஜராத் பொதுச்சபையில்
"குஜராதின் முதலமைச்சரினால் கூட்டப்பட்ட இருமணி நேர கூட்ட மொன்றில் (2002 பெப்ருவரி 27 இரவு) மறுநாள் விஸ்வ ஹிந்து பரிக்ஷக்தினால் மேற்கொள்ளப்படவுள்ள பந்த்தில் கோத்ராவிற்கு நியாயம் கிடைக்குமென்பதை தெளிவாகத் தெரிவித்தார். “இந்துக்களின் பதிற் செயலின்” வழியில் பொலிஸ் வரலாகாதென உத்தரவிட்டார். அப்போதைய அரச பொலிஸ் பணிப்பாளர் நாயகம் இதற்கு வலுவான எதிர்ப்பு

Page 62
IO பேரழிவுகளுக்குப் பெண்கள் முகம் கொடுத்தல்
தெரிவித்தபோது, முதலமைச்சர் அவர்கள் அவரை எதிர் வார்த்தை பேசாது, கீழ்ப்படியுமாறு கடுமையாக உத்தரவிட்டார். கூட்டத்தின் முடிவில், தமது மேலதிகாரிகள், விசேடமாக பொலிஸ் அதிகாரிகள் சங்க பரிவார் ஆண்களின் (Sabgh parivar men) வழியில் நிற்க மாட்டார்களென முதலமைச்சர் உறுதிகூறினார். இவரது செய்தி மக்கட் கும்பலுக்கு பரவலாக்கப்பட்டது”
- குஜராத் நாட்டு அரசாங்க மூத்த அமைச்சரினால் முன்னைய உச்ச நீதிமன்ற நீதவானால் தலைமை தாங்கப்பட்ட சம்பந்தப்பட்ட மக்கள் முறைமன்றில் முன்வைக்கப்பட்டது பிஜேபி முன்னணி அரசாங்கத்தினால் ஆதரவளிக் கப்பட்டு, 2002 பெப்ருவரி 28 ஆந் திகதியில் விஷ்வ இந்து பரிஷாத்தினால் பந்த் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. 2002 பெப்ருவரி 28 அன்று முழமையான அரச உடந்தையுடனும், குற்றத்தன்மையுடனும் வலதுசாரி அணியினரால் அவிழ்த்து விடப்பட்ட இந்த வன்முறைகள் குஜராத்தில் முஸ்லிம் சிறுபான்மையினரை முழு 2002 ஆம் ஆண்டிற்கென பல கட்டங்களில் தனித்து கைவிட்டு இன்னமும் தொடருகின்ற மனிதரால் உருவாக்கப்பட்ட பேரழிவை ஏற்படுத்தியது.
மார்ச் 2002 முதல் மே 2002 வரை
பொலிஸ் படையினாலும், துரித செயற்பாட்டு அணி யினாலும் முஸ்லீம்கள் மீது, குறிப்பாக அஹமதாபாத், வதோரா ஆகிய இடங்களில் கட்டவிழ்த்து விடப்பட்ட அட்டூழியங்கள் பெண்கள், இளம் யுவதிகள் அவர்களது வீடுகளிலும், முகாம் களிலும் உடல் ரீதியிலும் (துப்பாக்கிச்சூடு உட்பட) வாய்மொழி மற்றும் பாலியல் வல்லுறவு மூலமும் துன்புறுத்தப்பட்டனர் (தொந்தரவு கொடுத்தல், பாலுறவு குறிப்புகள், அநாகரீக நடத்தை, நடுச்சாம கதவு தட்டுதல், அச்சுறுத்தல்கள் மற்றும் நரோதபதி யாவில் நடந்தது போன்ற வற்றிற்கு உட்படுத்துதல்). சட்டமுறையற்ற தடுப்புகளும் ஆண் கள் மற்றும் இளைஞர்கள் மீதான துப்பாக்கிச்சூடு உட்பட உடல்ரீதியான துன்புறுத்தல்கள். முஸ்லிம் பகுதிகளில் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது பொலிசினால் துருவித் தேடுதல், கொள்ளையடித்தல், அச்சுறுத்திப் பணம் பறித்தல் என்பன இடம் பெற்றன. இடையறாது இடம்பெற்று வரும் சிதறலான வன்முறைகள், பொலிஸ் மிகைச் செயல்கள், அத்துடன்

குஜராத்தில் அரச ஆதரவுடனும், உடந்தையுடனும் மனிதன் . 111
அரசின் மனோபாவம் என்பன தொடர்ந்தும் பிழைத்துத் தப்பியவர்கள், முகாம்களில் இடர்ப்படும் வேளைகளில் தொடர்ந்தும் மனேரீதியான, உணர்வு ரீதியான, உளவியல் ரீதியான வன்முறைகளை ஏற்படுத்தின.
மே 2002 முதல் டிசெம்பர் 2002 வரை
எந்தப் புனர்வாழ்வு நடைமுறைகளும், நலிவான நிவாரண நடைமுறைகளும், நட்டஈடுகள் வழங்குவதில் கவனிப்பின்மை முகாம்களை மூடிவிடுமாறு அரச அதிகாரிகளினால் வற்புறுத்தப் படுதல், முறையீடுகளைப் பதிவுசெய்தல், நீதி மறுப்பு, அரசின் சிறுபான்மை விரோத மனப்பான்மை என்பன தொடர்ந்தும் முஸ்லிம்கள் மீது வன்முறைகளை ஏற்படுத்தின.
முகாம்களின் நிலைமை: குஜராத் அரசினால் அங்கீகரிக்கப்படாத முகாம்களும், இடம்பெயர்ந்த ஆட்களும் 2002, பெப்ருவரி 28 மாலை முதல் கிடைக்கக் கூடியதாக விருந்த இடங்களில் முஸ்லிம் சமூகத்தினால் அமைவாக்கப்பட்ட நிவாரண முகாம்களில் மாநிலமெங்கிலும் பரந்து வாழ்ந்த 2 இலட்சம் இடம்பெயர்ந்த முஸ்லீம்கள் அடைக்கலம் தேடும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். உடனடி வன்முறையின் 15 முதல் 20 நாட்களின் பின்னரும் கிராமிய குஜராத் பகுதிகளிலிருந்த தப்பிப் பிழைத்த வர்கள் உணவும், நீருமின்றி மலைப்பகுதிகள் வனப்பகுதி களினுடாக வந்தவண்ணமிருந்தனர். 2002 மார்ச் 15 இல் மாத்திரமே குஜராத் அரசாங்கம் முகாம்களுக்கு அங்கீகாரத்தினை வழங்கியது. குஜராத் அரசாங்கம் உத்தியோகபூர்வ முறையில் 103 முகாம்களையும், 113,697 இடம்பெயர்ந்த முஸ்லீம்களையும் அங்கீகரித்தது. அங்கீகரிக்கப்பட்டதும், அமைவாக்கப்பட்டதுமான உத்தியோகபூர்வ, முறையான, முறைசாராத முகாம்களினதும் இடம்பெயர்ந்தவர்களினதும் எண்ணிக்கைகளில் பெரும் இடைவெளிகள் காணப்பட்டன. அஹமதாபாத் நகரிற்குள் மாத்திரம் :
* மொத்த 89 நிவாரண முகாம்களில் 54 நிவாரண
முகாம்களே அங்கீகரிக்கப்பட்டிருந்தன.
* - 54 அங்கீகரிக்கப்பட்ட முகாம்களில் 16,863 பேர்கள்
அரசாங்கத்தினால் கணக்கிற்கெடுக்கப்படவில்லை.

Page 63
II2 பேரழிவுகளுக்குப் பெண்கள் முகம் கொடுத்தல்
மாநில அரசிடம் ஆதரவு நிலையங்கள்/சட்ட உதவி நிலையங்கள் ஆலோசனை வழங்கும் நிலையங்கள் என்பவை இல்லாமை
பாதிப்புற்றவர்களுக்கும், தப்பிப் பிழைத்தவர்களுக்கும் குறிப்பாக கடும் வன்முறைக்காளான பெண்கள், யுவதிகள் மற்றும் பிள்ளைகளுக்கு உடனடி மருத்துவ உதவி மற்றும் கலந்தாய்வுகள் என்பவற்றினை வழங்குவதற்கு எந்த ஆதார முறைமைகளும் இருக்கவில்லை. தப்பிப் பிழைத்தவர்கள் தொடர்ந்தும் தாக்கப் பட்ட கனவுகளையும், பிரமைகளையும் கண்டு நாட்கணக்காக நித்திரையும் அமைதியுமின்றி காணப்பட்டனர் (தாம் பார்த்த/ பாதிப்புற்ற காட்சிகள்). முகாம்களுக்குள் ஆழ்ந்த அதிர்ச்சியும், மனக்கலக்கமும், மனவேதனையும் நிலவியது.
தப்பிப்பிழைத்தவர்களுக்கு, உயிரிழந்த உடல்களையும் தேடி எடுப்பதிலும், காணாமல் போனவர்களைத் தேடிக் கண்டுபிடிப்ப திலும், உதவுவதற்கென பொறுப்பான எந்த உத்தியோகத்தரோ/ அரசாங்க ஆளணியினரோ இருக்கவில்லை. இதற்குப் பதிலாக அவர்கள், பெண்களுட்பட, முறையீடுகளைப் பதிவு செய்த மைக்கும், நட்டஈடுகளைப் பெறுவதற்கான படிவங்களை நிரப்பியமைக்குமாகத் துன்புறுத்தப் பட்டனர்.
அரசாங்கத்தினால் எத்தகைய சட்ட உதவி நிலையங்களோ/ வழிகாட்டல் நிலையங்களோ வழங்கப்படவில்லை. மாறாக முறையீடுகளைப் பதிவு செய்யவென முகாம்களுக்கு வருகைதந்த பொலிஸ் அதிகாரிகள், குற்றவாளிகளாக விஎச்பி /பிஜேபி தலைவர்களை பெயர் குறிப்பிட்டவர்களை அச்சுறுத்தி பயமுறுத் தினர். அத்துடன் பற்றாக்குறையான/ அரைத்தகவலுடனான முறையீடுகளின் பொது முறையீடுகளைப் பதிவதற்கும், பதிவின் பிரதியை முறையீட்டாளருக்கு வழங்குவதற்குமென ரூபா 100/- முதல் ரூபா 150/- வரை எதிர்பார்த்தனர்.
தப்பிப்பிழைத்தவர்களுக்கென அடிப்படைத் தேவைகளையும் நிவாரணத்தினையும் வழங்குதல்
அரசாங்கம் நிவாரண முகாம்களை வழங்கி, அமைப் பாக்குவதை விடுத்து, முஸ்லீம் சமூகத்தவர் இத்தகைய நிவாரண முகாம்களை அமைப்பதற்கான நியதிகளையும், நிபந்தனை களையும் விதித்து பொறுப்புடைமையினை தப்பி வாழும் முஸ்லீம் சமூகத்தின் மேல் ஏற்படுத்தியது. இந்த நிபந்தனைகளில் - நிவாரண முகாமைகள்

குஜராத்தில் அரச ஆதரவுடனும், உடந்தையுடனும் மனிதன். 113
பதிவு செய்யப்பட்ட நம்பிக்கைப் பொறுப்பினால் அல்லது அமைப்பொன்றினால் அமைக்கப்பட வேண்டும். அல்லது கலக்டரின் விசேட அனுமதி பெறப்படல் வேண்டும். முகாம்களில் மலசலகூட வசதிகள் குடிநீர் வசதிகள், சுகாதார ஏற்பாடுகள் மற்றும் புகலிடம் பெற்றோரிடையே வியாதிகள் பரவாது தடைசெய்தல், பிள்ளைகளுக்கும் ஏனைய சகலருக்கும் சுகாதாரத்தினை உறுதிப்படுத்தி, துப்புரவான உணவினை வழங்குதலுக்கு முகாம் அமைப்பாளர்கள் பொறுப்பாகவிருத்தல், பெறப்படும் மற்றும் செலவு செய்யப்படும் நிவாரணங்கள் பற்றிய பதிவுகளுக்கு முகாம் அமைப்பாளர்கள் பொறுப்பாகவிருத்தல் என்பன இவற்றுள் உள்ளடங்கியிருந்தன.
உகந்த மாற்று நடவடிக்கைகளின்றி முகாம்களை வலுக்கட்டாயமாக மூடிவிடுதல்
2002 ஜூன் மாதத்தில் அரசாங்கம் முகாம்களை வலுக் கட்டாயமாக மூடிவிட ஆரம்பித்ததுடன், 2002 ஜூன் மாத முடிவளவில் சகல முகாம்களும் உத்தியோகபூர்வமாக மூடப் பட்டனவாக பிரகடனப்படுத்தவும்பட்டன. இத்தகைய கட்டாய மூடுதல்களின் முன்பதாக அரசாங்கம் எத்தகைய மாற்று ஒழுங்கேற்பாடகள், புனர்வாழ்வு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கை களை வழங்கவில்லை.
அஹமதாபாத்தில் மாத்திரம், இவ்விதமான முகாம்கள் வலுக்கட்டாயமாக மூடப்படுகின்ற சமயத்தில் 59,935 முஸ்லீம்கள் முகாம்களில் வாழ்ந்து கொண்டிருந்தனர்.
தப்பிப்பிழைத்து வாழும் துன்புற்றவர்களுக்கு நட்டஈட்டினை வழங்குதல்
கோத்ரா ரயில் விபத்தில் துன்புற்றவர்களுக்கு 2 இலட்சம் ரூபா நட்டஈட்டுப் பொதியும், குஜராத் படுகொலையில் துன்புற்ற வர்களுக்கு ஒரு இலட்சமும் வழங்கப்படுமென குஜராத் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டது. நட்டஈட்டுப் பொதியில் இத்தகைய பாகுபாடு காட்டும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு நாடளாவிய விமர்சனங்களும், எதிர்ப்புகளும் ஏற்பட்டதையடுத்து இப்பாகுபாடு நீக்கப்பட்டது.

Page 64
II4 பேரழிவுகளுக்குப் பெண்கள் முகம் கொடுத்தல்
அரசாங்க நட்டஈட்டுப் பொதியில் பின்வருவன உட் படுத்தப்பட்டன:
ரூபா 90,000/- காசோலையாகவும் ரூபா 60,000/- பிணை முறிகளாகவும் இறந்தவர்களுக்கு வழங்கப்படல். ரூபா 1,500/- முதல் 15,000/- வரை காயங்களுக்கென வழங்கப்படல் (இதில் பாலியல் வன்முறைகள், தோட்டாக் காயங்கள் கணக்கிற்கெடுக்கப்படவில்லை)
ரூபா 5,000/- முதல் ரூபா 50,000/- வரை வீடு வதிவிட சொத்து சேதத்திற்கு வழங்கப்படல்.
- ரூபா 10,000/- வர்த்தக சொத்து சேதத்திற்கு வழங்கப்படல்.
ரூபா 2,500/- வீட்டு சேதங்களுக்கு வழங்கப்படல்.
முகாம்களில் இருந்து வெளியேற விரும்பும் குடும்பத்த வர்களுக்கு, முகாம்களில் வழங்கப்பட்ட அளவிற்குச் சமமான இரண்டு மாத பங்கீட்டுப் பொருட்கள் வழங்கப் LIL LGib.
இடம்பெயர்ந்த தப்பி வாழ்வோருக்கென புனர்வாழ்வினை வழங்குதல்
அனர்த்தங்களுக்கான பொறுப்புகள்/ தயார்நிலைகளுக்கான வரைச்சட்டத்தினை அரசு விரிவாக்க வேண்டியுள்ளது.
ஆபத்தான நிலையொன்றனில் ஏற்கெனவே உழன்று, வெளிவர முயலும் உள்ளுரில் இடம்பெயர்ந்த சாதி/இன/ மதப் பிரிவினர், நிவாரணம் மற்றும் புனர்வாழ்வு பெறுநர்களென்ற வகையில் (நிலநடுக்கம்/ சுனாமி/ மத வன்முறைகள்) பாரபட்ச நிலைக்குட்படுத்தப்படுகை, புதிய அனர்த்த நிலைமையொன்றின் சமயத்தில் மீண்டும் தமது உரிமைகள் மறுக்கப்படுகின்றனர். உள்ளூர் சிக்கல் நிலைமைகளை, விளங்கித் தொகுப்பதற்கு உதவி முகவர் நிலையங்கள் நேரமெடுக்கின்றதென்பதுடன், அரசாங்கம் இவற்றை மறுக்கின்றது அல்லது பெரும்பாலான சமயங்களில் வாழ்க்கைகளை மற்றும் சொத்து புனரமைப்பு நடவடிக்கைகளை அரசுசாரா அமைப்புகளிடம் கையளிக்கின்றது. உதாரணமாக குஜராத்தில், இடம்பெயர்ந்து வாழ்பவர்களுக்கென எந்த புனர்வாழ்வு ஏற்பாடுகளையும் அரசாங்கம் அறிவிக்கவில்லை.

குஜராத்தில் அரச ஆதரவுடனும், உடந்தையுடனும் மனிதன் . 115
மனித உரிமை அக்கறைகள் மற்றும் பெண்களின் உரிமைகள் மீதான அத்துமீறல்கள் திரித்துரைக்கப்பட்டன; குறைத்துக் கூறப்பட்டன. மிகைப்படுத்தல் கூற்றென சந்தேகத்திற்குட் படுத்தப்பட்டன. உண்மை அல்லது நீதியிலிருந்து அகற்றப்பட்டன.
அரசின் குற்றத்தன்மை காரணமாகவும் (குஜராத்தின் விடயத்தில் 2002 இந்து தீவிரவாதிகள், பொலிஸ் மற்றும் துணைப்படை அணிகளின் ஈடுபாடு) நடைமுறையிலுள்ள சட்டங்களின் எதிர்த்தாக்குப் பிடிக்க முடியாத சான்றுகள் காரணமாகவும் குற்றவாளிகளைத் தண்டிக்கும் சாத்தியமெதுவு மில்லை. ஆரம்பமும் முடிவும் உண்மையைக் கண்டறிய முயலும் பல அறிக்கைகளாகவேயுள்ளன. பிரிவுபடுத்தல்களாவன, ஆழமாகப் படிந்த வேதனை, அகதிகளாகும் நிலைமை, சுய மற்றும் சமூக சீரழிவு மீளியல்பு ஏற்படுத்தும் நிதி அல்லது நட்டஈட்டு ஏற்பாடுகள் என்பன அரச முகவர் நிலையங்களினால் மேற்கொள்ளப்படாதிருந்தன. இவற்றுடன் வாழ வேண்டிய ஒரு நிலைமையுள்ளது. இது மனித உரிமைப் பணிகளிலும் கொள்கை மற்றும் தீர்மானம் மேற்கொள்ளலில் பெண்களுக்கு ஏற்படுகின்ற சவால் நிலையாகும்.
மத்திய அரசின் பங்கு
என்டிஏ (NDA) தலைமையிலான மத்திய அரசாங்கம் வன் முறைக்கான அரச உடந்தையை வழங்கியது. ரூபா 150 கோடி உதவி பற்றி அறிவித்தபோதிலும், இப்பணத்தின் பாவனை பற்றிய மேலதிக விபரங்கள் கிடைக்கப் பெறவில்லை.
UPA தலைமையிலான மத்திய அரசாங்கம் 2004 மே மாதத்தில் தப்பி வாழ்பவர்களுக்கான புனர்வாழ்வு உதவிகளை வழங்க உறுதி கூறியபோதிலும், இதுவரை எதுவும் அறிவிக்கப் படவில்லை அல்லது ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
சிவில் சமூகத்தின் பங்கு
குஜராத்திற்குள் சிவில் சமூகத்தினரும் பெரும்பான்மை சமூகத்தினரும் எத்தகைய நிவாரண, புனர்வாழ்வு நடைமுறை களிலும் பங்குபற்றவில்லை. இதற்குப் பதிலாக கொள்ளை யடித்தல், கடைகளை, தாபனங்களை, வீடுகளை தீயிடல் போன்ற வன்செயல்களில் நேரடியாக பங்குபற்றினர். அத்துடன் வன்

Page 65
II6 பேரழிவுகளுக்குப் பெண்கள் முகம் கொடுத்தல்
முறைக்கு ஆதரவு வழங்கி மறைமுகமாகவும் பங்குபற்றினர். குஜராத் நகருக்குள் பெரும்பான்மை சமூகத்தின் பெரும்பகுதியினர் "முஸ்லிம்களுக்கு நடந்தவை அவர்களுக்கு தேவைப்படுவதொன்று தான்” எனும் உணர்வினைக் கொண்டிருந்தனர்; தொடர்ந்தும் கொண்டுள்ளனர். எவ்வாறெனினும், குஜராத்திற்கு வெளியே, நிவாரண முகாம்களில் தொண்டர்களாகவும், சட்ட உதவி நிவாரணம் மற்றும் புனர்வாழ்வுக்கான நிதியுதவி நடைமுறைகளில் உதவுபர்களாகவும் பதிற்செயற்பாடுகளில் ஈடுபட்டனர்.
இடம்பெயர்ந்தவர்களுக்கான புகலிடம், சீவனோபாயம், பாடசாலைகள், மதவழிபாட்டிடங்கள் என்பவற்றை புனர்வாழ்வு நியதிகளில் தப்பிப் பிழைத்த சமூகமே வழங்க வேண்டிய தாயிருந்தது.
குஜராத்தில் முஸ்லீம் சமூக அமைப்புகளினால் 10,000 வீடுகள் நிருமாணிக்கப்பட்டு திருத்தப்பட்டன. பிழைத்து வாழ்பவர்களுக்கு கிடைக்கக் கூடியதாகவிருந்த மாற்று நிலத்தில் 80 புதிய காலனிகள் கட்டப்பட்டன. தமது சொந்த வீடுகளுக்கு, கிராமங்களுக்கு திரும்பச் செல்வதற்கு அனுமதிக்கப்படாதவர் களுக்கும், முறையீடுகளைப் பதிவு செய்ததற்கான அச்சுறுத்தல் களை எதிர்நோக்கும் சாட்சியாளர்களுக்குமென முஸ்லீம் அமைப்புகள் கல்விசார் மற்றும் சீவனோபாய ஆதரவின் முக்கிய பங்கினை வழங்கியுள்ளன. பாடசாலைகள், மருத்துவ சிகிச்சை நிலையம், வைத்தியசாலைகள் என்பன புனர்வாழ் வாக்கப்பட்ட குடும்பங்கள் வாழ்ந்த பகுதியில் முஸ்லீம் அமைப்புகளால் கட்டப்பட்டன.
புனர்வாழ்வு மற்றும் புனர்நிருமாணம் எனும் விடயம் பெண்களினால் அல்லது தப்பிப் பிழைத்தோரினால், அல்லது ஆதரிப்போரினால் வரையறுக்கப்படாதுள்ளமை தீவிர அக்கறை யொன்றாகவுள்ளது. பெண்களின் தன்மையை வலுப்படுத்தும் உபாய மாற்றங்களின் சாத்தியங்களையும் தேவைகளையும் எடுத்துரைப்பதற்கான சந்தர்ப்பங்களையும் இது பாதிக்கின்றது.
ஆண்கள் நிதிவளங்களின்மீது கொண்டு:ள்ள கட்டுப்பாடு காரணமாக கலாச்சார, மத/ சாதி மற்றும் அரசியல் அமைப்புகள் என்பன அவர்களினாலேயே கட்டப்படுத்தப்படுகின்றன. பெண்களுக்கு உண்மையாக பண அதிகாரத்தினை மாற்றும் தன்மை இல்லாமை அவர்களது வாழ்க்கைகள், சமூகங்களை

குஜராத்தில் அரச ஆதரவுடனும், உடந்தையுடனும் மனிதன் . 117
பெண்கள் சார்ந்ததாக மீளக்கட்டியெழுப்பும் நிலையைத் தடை செய்கின்றது.
சீவனோபாயங்களை மீட்டெடுக்க முடியாத தன்மை காரணமாக ஆண்கள், இதனை வழங்குபவர்களாக தம்மால் இருக்க முடியவில்லை என்ற மனஅழுத்தம், செயலற்ற நிலை யொன்றிற்குள் தள்ளிவிடப்படுகின்றனர். பெண்கள் சமத்துவ நிலையில் கீழ் நோக்கிச் சென்று அதன்விளைவாக பாலியல் சுரண்டல் தன்மைக்கு உட்படுத்தப்படுகின்றனர். மறுபுறம் பெண்களும், யுவதிகளும் குறிப்பாக அவர்கள் எல்லைப்புற முரண்பாட்டு வலயங்களில் வாழ்பவர்களாயின் அவர்கள் வெளியே செல்வதில் மட்டுப்படுத்தப்படல்களை எதிர்நோக்கு கின்றனர். தனி முகாம்களில் இந்த உரிமை ஓரளவு உள்ளது.
முற்றிலும் தனிமைப்படுத்தல் மற்றும் வேறுபடுத்தல்கள் என்பன அனர்த்த நிலைமையொன்றிற்கான பால்நிலை தயார் நிலைக்கான சிந்தனையை பாதிக்கின்றன. பெண்களை இலக்குப் படுத்தும் எதிர்கால அனர்த்தங்களை மட்டுப்படுத்துவதற்கான உபாய வழிகள், பதிற்செயற்பாடுகள், நடவடிக்கைகள் என்ப வற்றையும் பாதிக்கின்றன.
இடம்பெயர்ந்து தப்பி வாழ்பவர்கள் மற்றும் சாட்சிக்காரரின் தற்போதய அக்கறைகள்
படுகொலையின் 3 ஆண்டுகளின் பின்னர் . . .
61,000 முஸ்லீம்கள் நிரந்தர புகலிடம், சீவனோபாயம் இன்றி தொடர்ந்தும் இடம்பெயர்ந்து வாழ்கின்றனர். 18,000 கிராமங்கள் வரையில் முஸ்லீம்கள் தங்கள் சொந்த வீடுகள், சொத்துக்களுக்கு திரும்பிச் செல்ல அனுமதிக்கப் படாதுள்ளனர். - 2002 இல் வன்முறைகளினால் குஜராத்தின் பல பாகங் களிலும் பாதிப்புற்ற முஸ்லீம்கள் தொடர்ந்தும் கடின பொருளாதார, சமூக பகிஷ்கரிப்பிற்கு உட்படுத்தப்படு கின்றனர். நாடெங்கிலுமுள்ள புனர்வாழ்விற்குட்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு திடமான சீவனோபாய வழிவகைகள், குறைவான நஷ்டஈடுகள், மனித பாதுகாப்பிற்கான

Page 66
18 பேரழிவுகளுக்குப் பெண்கள் முகம் கொடுத்தல்
அடிப்படை உரிமைகளின் மறுப்பு, நீதி மற்றும் சுகாதாரம், கல்வி, போக்குவரத்து, குடிநீர், துப்புரவேற்பாடுகள் போன்ற அடிப்படை பெளதீக தேவைகள் மறுக்கப்பட்டுள்ளன.
தப்பி வாழும் சமூகத்திற்கான முக்கிய அக்கறைகள் மூன்று வருடங்களின் பின்னர் இன்னமும் மாற்றமடையாத நிலை யிலுள்ளன. தொடரும் கட்சி சார்பான அரச மனேபாவம் அத்துடன் விரிவாகி வரும் வலதுசாரி அணியின் செயற்பாடுகள் பெரும்பான்மை சமூகத்தின் நீதி மற்றும் சமாதானத்திற்கான அக்கறையற்ற நடத்தை முறை என்பன பிழைத்து வாழும் சமூகத்தவரை சமூகரீதியில், பொருளாதார ரீதியில், கல்வி ரீதியில் மேலும் விளிம்பிற்கே தள்ளியுள்ளது.
இது வேற்றுமைகளிடையேயும் பொதுத்தன்மையைத் தேடுதலுக்கான சுயநிர்ணயம் மற்றும் இடர்ப்பாடுகளுக்கான வழியினை வலுப்படுத்தும் நிலைமையை ஏற்படுத்தியுள்ளது. பெண்களின் பொருளாதார மேம்பாட்டினை மட்டுப்படுத்தும் சமுதாய பொருளாதார அபிவிருத்தியில் குறிப்பிடத்தக்க கீழ்நோக்கிய போக்கு இருந்து வருகின்றது. விதவைப் பெண்கள், இது தொடர்பிலான பாரம்பரிய மனோபாவங்கள் காரணமாக பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். முகங்களில் காயமுற்ற பெண்கள் வேதனைக்குள்ளாகி, சமூகத்தில் முன் வருவதற்கு பின்வாங்குகின்றனர். பெண்கள் கல்வி மற்றும் தொழில் அபிவிருத்திக்கான விருப்பத்தேர்வுகளை கைவிட்டு இளவயதில் திருமணம் செய்து கொடுக்கப்படும் போக்கு அதிகரித்து வருகின்றது.
தனிப்பிரிவிற்குள் வாழும் நிலைக்கு கட்டாயப்படுத்தப்படல்
அஹமதாபாத்தில் முஸ்லீம்கள் செறிந்து வாழும் ஜூஹாபுரவில் 50,000 முஸ்லீம்கள் வதிவுற்றிருந்தனர். 1992 இனக்கலவரங்களின் பின் இங்கு வாழும் முஸ்லீம்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சமாக அதிகரித்துள்ளது.
ஒவ்வொரு வன்முறை நிகழ்வின் பின்னரும் நகரின் வெளிப்புறங்களில் அல்லது ஒரு கிராமத்தில் ஒரு பிரிவினராக வாழும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். நகர்களின் எல்லைகளிலும் கிராமங்களிலும் வாழும் நிலைக்கு கட்டாயப்படுத்தப்படும் நிலைமை அடிப்படை வசதிகளான நீர், துப்புரவேற்பாடு,

குஜராத்தில் அரச ஆதரவுடனும், உடந்தையுடனும் மனிதன் . 119
போக்குவரத்து, மருத்துவ உதவி, கல்வி போன்றவற்றிற்கான அணுகுதலை மறுப்பதுடன் அவர்களது வாழ்வாதார விருப்பத் தேர்வுகளையும் மட்டுப்படுத்தி ஒட்டுமொத்த வாழ்க்கைச் செலவினையும் அதிகரிக்கின்றது. இந்த அம்சங்கள் பம்பாய் ஹோட்டலில், அஹமதாபாத் நகரின் வட்வா சுந்தரம்நாம் நகர் அஹமதாபாத் கிராமப்புறத்தில் ராமொல், அதேபோன்று பஞ்சமஹால் டாஹொட், வதோரா மாவட்டங்களிலும் இவ்விதம் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கென 80 காலனிகள் கட்டப் பட்டுள்ளன.
இன முரண்பாட்டு நிலைமைகள் இந்து, முஸ்லிம் ஆகிய இருதரப்பினரையும், முரண்பாட்டுப் பகுதிகளிலிருந்து வெளியேறி இந்து, முஸ்லீம் தனிப்பிரிவுகளாக வாழும் நிலையினை ஏற்படுத்துகின்றன. இவ்விரு தனிக் குடியிருப்புகளின் முக்கிய வேறுபாடானது, பெரும்பான்மையினரான இந்துக்களுக்கு காணி வசதி, போக்குவரத்து, நீர், துப்புரவேற்பாடு போன்ற அடிப்படை வசதிகள் அரசினால் வழங்கப்படுதலும், மறுபுறம் சிறுபான்மை யினத்தவரான முஸ்லிம்கள் அபிவிருத்தியடைந்த இந்துப் பகுதியில் காணியை வீட்டினை கொள்வனவு செய்ய அல்லது வாடகைக் கெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன் அரசாங்கமும், இவர்கள் இடம்பெயரும் இடங்களுக்கு அடிப்படை வசதிகளை வழங்குவதுமில்லை. உதாரணமாக அஹமதாபாத் நகரிற்குள், மேற்கு அஹமதாபாத் பகுதிக்கு நீர், துப்புரவேற்பாடு, பூங்கா, பூந்தோட்டம், நீரூற்றுக்கள் போன்றவை அப்பகுதியின் அழகுக்க ாகவும் நலனுக்கெனவும் அரசாங்கத்தினால் அபிவிருத்தி யாக்கப்பட்டு, அரச சேவை பஸ் வண்டிகள் இப்பகுதியில் வாழ்பவர்களுக்கான போக்குவரத்தினை வழங்குவதற்காக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதற்கு நேரெதிராக அஹமதாபாத்தின் முஸ்லீம்களை செறிவாகக் கொண்டுள்ள பம்பாய் ஹோட்டல் பகுதியுள்ளது. இப்பகுதியை சென்றடைவதற்கான பொதுப் போக்குவரத்து எதுவும் இல்லை. இதன் வதியுநருக்கென எந்த துப்புரவேற்பாடுகளும், சாக்கடை முறைமைகளும் அபிவிருத்தி யாக்கப்படவில்லை. அணுகக் கூடியதான எந்த அரசாங்க சுகாதார நிலையங்களோ பாடசாலைகளோ உள்ளுரில் காணப்படு வதில்லை. பிள்ளைகள், பெண்கள், நோயாளிகள் 0.5 முதல் 3 கிலோ மீற்றர் வரையான தூரத்தினை தமது வீடுகளிலிருந்து

Page 67
2O பேரழிவுகளுக்குப் பெண்கள் முகம் கொடுத்தல்
பிரதான வீதியைச் சென்றடைவதற்கு செல்ல வேண்டியுள்ளது. இதைவிட அதிக தூரத்தினை பாடசாலைகள், வைத்தியசாலைகள் மற்றும் பிற நாளாந்த தேவைகள் என்பவற்றை அடைவதற்கு கடக்க வேண்டியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மழைகாலத்தில் நீர் அடைத்து நிற்கும் நிலை ஏற்படுவதால் அதிலுள்ள இரசாயனம், சாக் கடைக் கழிவு என்பதன் காரணமாக நோய் பரவும் அச்சத்தினை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
ஆபத்து நிலையும், பாதுகாப்பும் இன்மையும்
2005 ஜூலை 5இல் நரோதா பற்றியா எனும் இடத்தி லிருந்து குடும்பங்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறி வட்வா மற்றும் பம்பாய் ஹோட்டல் எனுமிடங்களுக்கு இடம் பெயர்ந்தன. (அஹமதாபாத்தில் முஸ்லீம் பிர தேசங்கள்) இது உத்தரப் பிரதேசத்தில் அயோத்யாவில் இந்து பண்டிகை ஊர்வலமொன்றின் போது நிகழ்ந்த தாக்குதலின் பின்னர் உடனடியாக நடந்த தாகும்.2002 வன்முறைகளை அனுபவித்த முஸ்லீம் குடும்பங்கள் ஒவ்வொரு இந்து விழாவின் வருகையுடனும் அல்லது உலகில் அல்லது நாட்டில் தாக்குதல்கள் இடம்பெறுதல் சமயங்களில் அச்சம் காரணமாகவும், தொடர்ந்தும் குஜராத்திற்குள் முஸ்லீம்கள் செறிந்து வாழும் இடங்களை நோக்கியும் அல்லது நிவாரண முகாம்கள் உள்ள இடங் களை நோக்கியும் நகர்ந்தவண்ணம் இருக்கின்றனர்.
பெளதீக வன்முறை அச்சுறுத்தலுடன் முஸ்லிம் சமூகத்தவர் உள்ளுர் குற்றக்கிளை பொலிஸ் முகவர் நிலையத்தினரால் சட்டத்திற்கு விரோதமாக தடுத்து வைக்கப்படும் அச்சத்தினையும் அடிக்கடி எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இதுவரை, பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் 542 பேர் உத்தியோகபூர்வமாக கைது செய்யப்பட்டுள்ளதுடன் இதில் 99% மானோர் முஸ்லீம்களுமாவர். புதிவு செய்யப்படாத பல கைதுகளும் துன்புறுத்தல்களும் இளம் முஸ்லீம் ஆண்கள் மீது தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
பிழைத்து உயிர் வாழ்பவர்களிடையே பாதகாப்பினையும், நம்பிக்கையினையும் ஏற்படுத்தும் எந்த ஆதரவு செயற் பாட்டு முறைகளையும் அரசாங்கமோ அல்லது அரச முகவர் நிலையங் களோ மேற்கொள்ளவில்லை. இதற்குப்பதிலாக அரசாங்கத்தின்

குஜராத்தில் அரச ஆதரவுடனும், உடந்தையுடனும் மனிதன் . 121
கோபமூட்டும் கூற்றுகளும், சமூக அமைப்புகளினால் மேற் கொள்ளப்படும் சமூக, பொருளா தார பகிஷ்கரிப்புகளும், வலதுசாரியணியின் செயற் பாடுகளும் குறைவின்றித் தொடர் கின்றன.
ஆக்கபூர்வ வாழ்வாதார வழிவகைகளின்மையும் தொடரும் பொருளாதார பகிஷ்கரிப்பும், உடமை/சொத்துக்களுக்கான மறுப்பும்
மாவட்ட நிருவாகத்திற்குள் முஸ்லீம் இந்து சமூகங் களுக்கு மிடையிலான சமாதானக் குழு கூட்டங்களில் முஸ்லீம் சமூகத்தவர்கள் அவர்களது சொந்த இடங்களுக்கு திரும்பிச் செல்ல வேண்டுமென நியதிகள், நிபந்தனைகளை வைத்துள்ளன.
குஜராத் எங்கிலும், முஸ்லிம்கள் அவர்களது தொழில் மற்றும் நிறுவனங்களிலிருந்து வெளியேற கட்டாயப்படுத்தப்படுகின்றனர். இடம்பெயர்ந்த முஸ்லீம் குடும்பங்களை பொருளாதார ரீதியில் புறந்தள்ளி அவர்களது சொந்தப் பிரதேசங்களுக்கு செல்ல அனுமதிக்காமையால் அவர்கள் தமது காணியுரிமைகளையும், சொத்து, மற்றைய உடமைகளையும் இழந்தனர். இவர்களுக்கு ஏற்பட்ட பலத்த பொருளாதார இழப்புகளுடன் ஒப்பிடுகையில் வழங்கப்பட்ட அரசாங்க நட்டஈடு, நூற்றுக்கணக்கான குடும் பங்களை வறுமைக்குள் தள்ளியது (உதாரணமாக அஹமதா பாத்தில் நரோதா பற்றியா, குல்பேர்க் சமூகம்).
அடிப்படை உரிமைகள் மறுப்பு
இடம்பெயர்ந்த தப்பிப்பிழைத்தவர்களுக்கான புனர்வாழ்வு பெருமளவு பகுதிகள், நகரின் எல்லைப் புறத்தில் அல்லது அந்த அடிப்படை வசதிகளும் வழங்காத சமூக அமைப்புகளுள்ள கிராமங்களில் உள்ளன. இதன் காரணமாக அதிகமான இத்தகைய இடங்கள் குடிநீர், மின்சார வழங்கல், துப்புரவு வசதிகள், சாக்கடை வெளியேற்ற பிரச்சனைகளை எதிர்கொள்கின்றன. இப்பகுதிகள் நகருக்கு வெளிய அமைந்துள்ளதால் சீவனோபாய விருப்பத் தேர்வுகள் மட்டுப்படுத்தப்படுகின்றன. இரண்டாவதாக நகருக்குள்/ கிராமங்களுக்குள் வேலை செய்வதன் மூலம் சீவனோபாயத்தினை மேற்கொள்ளும் ஆட்கள் தமது வருவாயில் பெருமளவினை போக்குவரத்திற்கெனச் செலவிடுகின்றனர். பிள்ளைகளுக்கு கல்வி வசதிகள் மறுக்கப்படுகின்றன. கல்வி

Page 68
I22 பேரழிவுகளுக்குப் பெண்கள் முகம் கொடுத்தல்
இடங்கள் தூரமாக அமைந்தள்ளமையும், அதிகரித்த கல்விச் செலவும் பெண்களைப் பெரிதும் பாதிக்கின்றது. கல்விச் செலவு அதிகரிப்பதற்கான காரணம் போக்குவரத்துச் செலவும், அரசாங்க பாடசாலைகள் இல்லாமை காரணமாக தனியார் கல்வி நிலையங்களுக்கு செல்ல வேண்டிய நிலைமையுமாகும். இப்பகுதிக்குள் கிடைக்கக் கூடிய சுகாதார கவனிப்பு வசதிகள் பற்றாக்குறையாகவுள்ளன. குடும்பங்கள் அவர்களது வீடுகள் அமைந்துள்ள இடங்களிலிருந்து 0.5 கி.மீ முதல் 5 கி. மீற்றர்கள் வரை பயணம் செய்ய வேண்டியிருந்தது. இது அவசர நிலைமைகளில், பருவ மழைக்காலங்களின் போதும் இரவு களிலும் இது ஒரு தீவிர பிரச்சனையாகவிருந்தது.
அழிக்கப்பட்ட சட்ட ஆவணங்கள்/நட்டஈடுகளை பெறுவதற்கான அககறைகள
பிழைத்து வாழ்பவர்களுக்கு அழிந்துபோன ஆவணங்களை (பங்கீட்டு அட்டை, மின்சார அட்டை, பிறப்புச் சான்றிதழ், கடவுச்சீட்டு, வாகனம் ஒட்டும் உரிமங்கள் என்பவற்றுடன் அவர்களது சொத்துக்கள், உடமைகள் பற்றிய ஆவணங்கள்) வழங்குவதற்கென மாநகர சபைகளினாலோ அல்லது அரசாங் கத்தினாலோ எந்தவொரு உகந்த ஒழுங்கமைப்போ அல்லது ஆதார முறைமையோ ஏற்படுத்தப்பட்டிருக்கவில்லை. இத்தகைய பற்றாக்குறை, சரியான தகவலின்மை என்பவை இந்த ஆவணங் களை மீளப்பெறுவதில் இவர்களை பெருமளவு பணத்தைச் செலவிட வைத்துள்ளது.
இடம்பெயர்ந்து தப்பி வாழ்பவர்கள் தாம் இழந்த குடும்ப அங்கத்தவருக்கான அல்லது காயமுற்ற அல்லது சேதமுற்றவை களுக்கான நட்டஈட்டினை தேவையான ஆவணங்களின்மை காரணமாக பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் இன்னமும் உள்ளனர் (வைத்தியசாலைகளிலிருந்தும் காயம்பட்ட மரண சான்றிதழ்கள் பொலிஸ் நிலையங்களிலிருந்து எவ்ஆர் பிரதிகள் என்பன).
இடர்நிலையொன்று ஏற்படுகையில் பெண்கள் முன்னணி யில் நிற்கின்றபோதிலும், பின்னர் அவர்கள் பின்தள்ளப்படுவதோடு புனர்நிருமாண விடயங்களிலோ அல்லது அவதானிப்பு அமைப்பு களின் போது எழும் எந்த நிரந்தர ஒழுங்கமைப்புகளிலும் அல்லது

குஜராத்தில் அரச ஆதரவுடனும், உடந்தையுடனும் மனிதன் . 123
கொள்கை வகுத்தல், நிதிசார் நிறுவனங்களின் முக்கிய விடயங்களில் எந்தவித கருத்துக்களையும் தெரிவிக்க முடியா துள்ளனர். பெண்களின் பங்குபற்றலானது, பாதிப்புற்ற தன்மையின் சிறு உதாரணங்கள் முடிவடைகின்றதேயன்றி, புனர்நிருமாண பணிகளின் கொள்கை திட்டமிடல், அவதானித்தல், நடை முறைப்படுத்தல் என்பவற்றில் எந்த கணிசமான பங்குபற்றலும் இருப்பதில்லை. புவி நடுக்கங்கள், வெள்ள நிலைமை அல்லது இனப்படுகொலைகள் போன்ற எந்நிலைமைகளிலும் பணமும் திட்டமிடலும் பெண்களின் கைகளைச் சென்றடையவில்லை. மீண்டும், மீண்டும் பெண்கள் முரண்பாடுகளை சமாளிப்பதில் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதில் முக்கிய பங்கினை வகிக்கின்றனர். "தனியாட்கள்” எதிர் நிறுவனங்கள் அல்லது அமைப்புகள் என்ற ரீதியில் பெண்களின் பங்களிப்பு, பால்நிலை அக்கறையுடன் அனர்த்தங்களுக்கான தயார்நிலையை வரையறை செய்யும் சாத்தியங்களை மட்டுப்படுத்துகின்றன. முரண்பாட்டு நிலை மாற்றலுக்கான பல்வேறு முயற்சிகளிலிருந்து கற்றுக் கொண்ட பாடங்களாவன முரண்பாடு/அனர்த்த நிலைமை களின் பின்னரான சந்தர்ப்பங்களுக்கு தயார் நிலையை உறுதிப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் தீர்மானங்களை மேற் கொள்ள திட்டமிடல் என்பவற்றில் நிரந்தர நிலைமைகளில் இல்லையென்பதைக் காட்டுகின்றன.
SAHRWARU இனால் மேற்கொள்ளப்பட்ட உபாய வழிகளும் செயற்பாடுகளும்
பெப்ருவரி 2002 - 2004
கோத்ரா ரயில் நிகழ்வின் பின்னர் இடம்பெற்ற 2002 குஜராத் படுகொலையினை கணிணுற்ற, பணியாற்றிய எமது சகல வேலைக்கூறுகளும் தீவிரமாகப் பாதிப்புக்குள்ளாகின.
நிவாரணம் மற்றும் சட்டரீதியான ஆதரவினை வழங்கும் உடனடி தலையீடுகள்.
எமது பணிகளின் பெரும்பகுதி, பங்குபற்றலுடன் மக்களின் 6 மாத காலங்களுக்கு முகாம்களில் மேற்கொள்ளப்பட்டன.
FIRS தயாரிப்பதற்கான சட்ட ஆவணங்களுக்கு தேவை யான படிவங்களை நிரப்புதல்.

Page 69
I24 பேரழிவுகளுக்குப் பெண்கள் முகம் கொடுத்தல்
முகாம்களிலும், பாதிக்கப்பட்ட பகுதிகளிலும் 7000 குடும்பங்களுக்கு உணவு விடயங்களின் நிவாரணப் பணி (ஷாஹே - அலாம் முகாம், மாதம்பாய் கூட்டுமுகாம், மிலட்நகர், கோம்திபூர், சண்டோலா, ஜமல்பூர், சார்க்ஜே, பாபுநகர், ஷாஹே அலாம்)
முகாம்களில் உணவு அல்லாத விடயங்களில் நிவாரணப் பணி மாதவ்பாய் மில் கூட்டு முகாம் - ஷாஹே அலாம் முகாம்
கல்விசார் ஆதரவு நிவாரணப்பணி - 300 பிள்ளைகள்.
மருத்துவ உதவி நிவாரணப்பணி - 6 பெண்கள் எரிகாயங் களிலிருந்து தப்பியோர்.
dfolG360Turtu isla)IT60Tu'iu6of - SANJHA - SAHR WARU - நாரோடா பட்டியாவிலிருந்து பிழைத்து வாழும் பங்கீட்டுக் கடைநடத்தும் 8 பெண்களுக்கும் அத்துடன் மேலும் இத்தகைய 8 பெண்களுக்கான சீவனோபாய ஆதரவும்.
தேசிய மற்றும் சர்வதேச அதிகார ஆவணங்கள்
இந்த ஆவணங்கள் உண்மையில் பெண்கள் சார்ந்தனவாக உள்ளனவா? இந்த கட்டமைப்புகளும் முறைமைகளும் பாதிப் புற்றவர்களுக்கு நீதியை வழங்குகின்றனவா அல்லது பாதிப் புற்றவர்கள் உண்மை மற்றும் நீதியை பெறுவதிலிருந்து தடுப் பனவா? நடைமுறையிலுள்ள அல்லது செயற்படும் எத்தகைய விசேட சட்டங்களும், ஒழுங்கமைப்புகளும் இல்லாமை பற்றாக் குறையாக உள்ளதுடன், பெண்களின் பாதிப்புறு தன்மையையும் ஊக்குகிறது. பெண்களைப் பாதிப்புற்றவர்களாக மாத்திரம் காட்டி அவர்களது தன்னாற்றல், எதிர்ப்புச் சக்தி ஆகியவற்றைப் புறக்கணிக்க நாம் விரும்பாதபோதும் பெண்கள் பாதிப்புறுபவர்களாகவுள்ள அளவுகள் விரிவிடைந்து செல்கின்ற தென்பது உண்மையாகும்.
பன்முகக் கலாச்சாரம் மற்றும் பல்வகை சமூகங்கள் நிலையிலிருந்து விலகிச் செல்லும் சந்தியில் நாம் உள்ளோம் என்பதுடன் வேலைவாய்ப்பின்மை மற்றும் மன அழுத்தநிலைகள் (குஜராத்) காரணமாக பெண்களுக்கெதிரான குற்றச்செயல்கள்

குஜராத்தில் அரச ஆதரவுடனும், உடந்தையுடனும் மனிதன் . 125
அதிகரிப்பும் அத்துடன் தற்கொலைகளின் அதிகரிப்பும் இருந்து வருகின்றன. இதற்கான பின்னணி சீரான சமூக, கலாச்சார தரங்களை ஏற்றுக் கொள்ளுதலும், தகுதிநிலையை இணக்கமாக பேணிவருதலுக்கான அதிகளவு அழுத்தம் கொடுத்தலுமாகும்.

Page 70
11
பேரழிவிற்கான ஆயத்தநிலையில் பாலின விவாத விடயங்கள்: இலங்கை அனுபவம்
- தனுஷா சேனறாயக்க
பேரழிவிற்கான ஆயத்தநிலையும் அவசரகால பதிற்செயற்பாடும்
தென் ஆசியாவில் பேரழிவுகளை எதிர்கொள்ளும் பெரும்பாலான அல்லது பாரம்பரியமான அணுகுமுறையாக விருப்பது, அவசரகால பதிற்செயற்பாடு மற்றும் நிவாரணம் வழங்குதல் முறையாக இருக்கின்றதேயன்றி, அனர்த்தங் களை, அபிவிருத்தி செயல்முறையின் பாகமொன்றாகப் பார்க்கும் மாற்று அணுகு முறையாக இல்லை. மாற்று அணுகு முறையாவது, அனர்த் தங்களை சமுதாயத்திற்குள் அமைந்த நிலைமைகளின் சூழமை வில் காண்கின்றது. பல தெற்காசிய நாடுகளில், அவசரகால நிலைமைகளுக்கென அரசாங்கத்தினால் நிதிகள் ஒதுக்கப் பட்டுள்ளபோதிலும், அனர்த்தமொன்று உண்மையில் ஏற்படும் வரை இவை வைத்திருக்கப்படுகின்றன. இதன்விளைவாக தேசிய, அரச சார்பற்ற அமைப்புகளின் நிதிகள், அபிவிருத்திச் செயற்பா டுகளிலிருந்து, அனர்த்த நிவாரணங்களை வழங்குவதில் செலவிடப்படுகின்றன. எவ்வாறெனினும், அனர்த்தங்களுக்கான மாற்று அணுகுமுறையானது, அனர்த்த தயார்நிலை மற்றும் நீண்டகால நடைமுறைகள் மீது அதிக வலியுறுத்தலை தருகின்றது.
பாரம்பரிய அனர்த்த பதிற் செயற்பாடுகளின் ஏனைய பொது அம்சங்களாவன: அதிகாரத்துவப் போக்கு, முறையற்றதன்மை, உயர் மையப்படுத்தப்படுதல், மேலிருந்துகீழான தன்மை என்பனவாகும். மேலிருந்துகீழான அணுகுமுறையும் அதிகாரித்து வப்போக்கான, மையப்படுத்தப்பட்ட முறைமைகளும் இணைந்து,

பேரழிவிற்கான ஆயத்தநிலையில் பாலின விவாத . 127
அனர்த்த மீளியல்பு பணிகளுக்கென பாதிப்புற்ற சமூகங்களின் ஆண்களையும் பெண்களையும் ஆலோசனை, பணிக்கமர்த்தல் செயற்பாடுகளில் அனுமதிப்பதில்லை. மேலும், அனர்த்தங்களை ஆணிகளும் பெண்களும் வெவ்வேறு முறைகளில் எதிர் கொள்கின்றனர் எனும் விடயத்திற்கு சிறிதளவு கவனத்தையே இவை தருகின்றன.
பால் நிலையும் பேரழிவுகளும்
ஆண்களும் பெண்களும் தத்தம் சமூக கட்டமைப்பு பாத்திரங்கள் காரணமாக அனர்த்தங்களை வெவ்வேறு விதங்களில் எதிர்கொள் கின்றனர். இதன்விளைவாக அனர்த்தங்களும், ஆண் பெண் இனத்தவரை வேறுபட்ட முறைகளில் தாக்கத்திற் குள்ளாக்கு கின்றன. அனர்த்த முகாமைத்துவ செயன்முறைகளிலும் ஆண் பெண் இனர்த்தவர்களின் பாத்திரங்களும் பொறுப்புகளும் வேறுபடுகின்றன. அனர்த்த நிலைமையொன்றினில் பாதிப்புறு தன்மை, ஆற்றல்கள் மற்றும் ஆண் பெண்களுக்கு கிடைக்கக் கூடியதாகவுள்ள விருப்பத்தேர்வுகள் என்பனவும் வேறுபடுகின்றன. எவ்வாறெனினும் பெரும்பாலான அனர்த்த பதிற் செயற்பாட்டு நிகழ்ச்சித்திட்டங்களில் பின்பற்றப்படும் பெருமளவு பாரம்பரிய அணுகுமுறையானது ஆண் பெண்களின் வேறுபட்ட பாதிப்புறு தன்மைகளை உணர்வதுமில்லை, கவனிப்பதுமில்லை. இதற்குப் பதிலாக நலன்கள் யாவும் பெரும்பாலும் “குடும்பத்தலைவன்", “உழைப்பவன்” எனக் கருதப்படும் ஆண்களுக்கே செல்கின்றதன்றி "குடும்பப்பெண்”, “இரண்டாம் பட்சம் உழைப்பவள்” “தாய்” என்ற அந்தஸ்தினை குடும்பத்தில் பெறும் பெண், பெறுவதில்லை. பால் நிலை வேறுபாடுகளை புறக்கணிப்பதால் மேற் கொள்ளப் படும் நிவாரண, மீளியல்புப் பணிகளும் உணர்வற்றவையாகவும் பயனற்றவையாகவுமுள்ளன. மேலும், இந்நிகழ்ச்சித்திட்டங்கள் பெண்களுக்கு நலன்களை மறுப்பது மட்டுமன்றி அவர்களது நிலைமைகளை மோசமாக்குவதாகவும் அமையலாம்.
பெண்கள் அனர்த்தத்திற்கு அதிகளவு பாதிப்புறு தன்மை யுள்ளவர்களா?
சாதாரண சூழ்நிலைகளிலும் பெண்களின் நிலையை பல்வேறு ஆய்வுகளும் ஆராய்ச்சிகளும் காட்டியுள்ளன.

Page 71
28 பேரழிவுகளுக்குப் பெண்கள் முகம் கொடுத்தல்
* எச்சமயத்திலும் ஆண்களைவிடப் பெண்கள் பொதுவில் வறுமையானவர்கள். பெண்கள் விகிதாசாரமற்ற முறையில் சம்பளம் குறைந்த, சம்பளமற்ற அத்துடன் முறைசாரா துறைகளில் பணிக்கமர்த்தப்பட்டுள்ளனர்.
* வளங்களுக்கான மட்டுப்படுத்தப்பட்ட அணுகுதல். திருமணங்கள், தகப்பனில், கணவரில், மகனில் தங்கியி ருக்கும் தன்மை, மற்றும் வங்கி முறைமைகள், மரபுரிமைச் சட்டங்கள் என்பன போன்ற பாரம்பரிய சமூக வழமைகள் பெண்களுக்கு சாதகமற்ற அல்லது மட்டுப்படுத்தப்பட்ட அணுகுதல்களையும், கட்டுப்பாட்டையும் ஏற்படுத்துவதற்கு துணைபுரிகின்றன.
* தகவல் மற்றும் சந்தைகளுக்கான அணுகுதல் இன்மை,
பாரம்பரிய குடும்ப அடிப்படையான பொறுப்புகள் பெண்களின் இயங்கும் தன்மையை மட்டுப்படுத்துகின்றன. இது பெண்கள் கல்வி கற்றல், அரசியல் பங்குபற்றல், சந்தைகளை அணுகுதல் என்பவற்றை மட்டுப்படுத்து கின்றது.
* மனித உரிமைகளை அனுபவிக்கும் அணுகுதலில் பற்றாக்
குறை.
பால்நிலை சமமின்மையானது, பெண்கள் மனித உரிமை களை, சுகாதார கவனிப்பு அரசியல் உரிமைகள், பொருளாதார தகுதிநிலை, காணியுரித்து உரிமைகள் என்பவற்றை அனுபவிப் பதினை தடைப்படுத்துகின்றது.
அனர்த்தங்களின் விளைவாக, உயிரிழப்பு, சீவனோபாய இழப்பு, உறையுள் இழப்பு, உட்கட்டமைப்பு இழப்பு என்பவை ஏற்பட்டன. அதாவது இயல்பு நிலைமையில் முற்றாக எதிர்பாரா மாற்றத்தினை ஏற்படுத்துகின்றது. தமது உற்றாரை இழந்த மன உளைச்சலைவிட பாதிப்பிற்குட்பட்ட சமூகங்களின் ஆண், பெண்கள், மட்டுப்படுத்தப்பட்ட வசதிகளையுடைய இடைக்கால கூடார வாழ்க்கைக்குத் தள்ளப்படல் போன்ற வேறு இன்னல் களையும் தாங்கிக் கொள்ள வேண்டியுள்ளது. இடைக் கால வாழ்க்கை முறை அதற்குரிய கலாச்சார மொன்றினையும்

பேரழிவிற்கான ஆயத்தநிலையில் பாலின விவாத . 29
ஏற்படுத்துகின்றது. பெண்களின் பாதுகாப்பினையும் சமூக கட்டுக் கோப்பினையும் உறுதிப்படுத்திய பழம்பெரும் பாரம்பரியங்கள், அனர்த்தகால நிலைமைகளில் முற்றாக கைவிடப்படுகின்றன. தனி மறைவிடம், பாதுகாப்பு இன்மையும், உடன் குடும்ப அங்கத்த வர்களின் இழப்பும் பெண்களின் பாதிப்புறு தன்மையை அதிகரிக்கின்றது. இதன் காரணமாக பல சமுதாயங்களில் பெண்கள் தம் கணவன்மாரில், சகோதரத்தில் அல்லது தந்தையில் தங்கியிருந்து அத்தகைய நபரை இழந்தவுடன் பலவீனமாகி உதவியற்ற நிலைக்காளாகின்றனர்.
அனர்த்தமொன்றின்போது ஆபத்திற்குட்படுபவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்களாக அமைகின்றனர். சுனாமி காரணமாக இலங்கையில் ஏற்பட்ட மரணங்களில் பெரும்பா லானவர் பெண்களேயாகும். பெண்கள் நேரகாலத்துடனான எச்சரிக்கைகளைப் பெறாது, அத்துடன் அவர்களது இயங்கும் தன்மையை கலாச்சார, சமூக கட்டுப்பாடுகள் மட்டுப்படுத் தப்படும் சந்தர்ப்பங்களில் இது மிகவும் உண்மையாகவுள்ளது. அத்துடன் பெண்களிடத்து நீச்சல், ஏறுதல் போன்ற திறமைகள் இல்லாத சந்தர்ப்பங்களும் உள்ளன. வெளியேற வேண்டிய சந்தர்ப்பங்களில் தமக்கு பாதுகாப்பான இடங்கள் கிடைக்காத நிலையில் பெண்கள் அத்தகைய இடங்களை அணுகாது தடுக்கப்படுகின்றனர். மேலும், பெண்களின் அறிவின்மை மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட இயக்கத்தன்மை காரணமாக அவசரகால நிலைமைகளில் வயதான பெண்கள், இயலாத பெண்கள், கர்ப்பிணிகள், பிள்ளைகளுடனான பாலூட்டும் தாய்மார் ஆகியோரை விட்டுச் செல்லும் சந்தர்ப்பங்களும் அல்லது கடைசியாக அழைத்துச் செல்லப்படுபவர்களாகவுள்ளனர்.
பால்நிலை அடிப்படையிலான மனப்பாங்குகள், வேறு பாடற்ற உருமாதிரிகள் என்பன பெண்களின் மீளியல் பு கட்டத்தினை நீடிக்கச் செய்யலாம். குடும்ப அங்கத்தவர்களின் கவனிப்பாளர்கள் என்ற முறையில், அனர்த்த வேளைகளில் பெண்களிடமிருந்து எதிர் பார்க்கப்படும் அதிகரித்த எதிர்பார்ப்புகள் அவர்களின் நெருங்கிய உணர்வுகளுக்காக அவர்கள் கவலைப்பட்டு மன, பெளதீக வேதனையை அனுபவிக்க முடியாது தடை செய்கின்றது. மறுபுறம் ஆண்கள் பொதுவாக பெளதீக, மனரீதியான வலுவினையுடையவர்களாக காட்டப்படுவதால்,

Page 72
IBO பேரழிவுகளுக்குப் பெண்கள் முகம் கொடுத்தல்
அவர்களுக்குத் தேவையான கலந்தறிவுரை வழங்குவதில் புறக் கணிப்பும் ஏற்படுகின்றது. பல குடும்பங்களில் சுனாமி காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகளில் பெண்களின் தொகையே அதிகம். தமது பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கும், பெண்களுக்கும் கலந்தாலோசனைகளை வழங்குவதற்கென பல எண்ணிக் கையான அமைப்புகள் இருந்தபோதிலும் மனைவிமாரை இழந்த ஆண்களுக்கு விசேட கவனிப்பு வழங்கப்படவில்லை. தங்கள் குடும்பங்களை இழந்த ஆண்கள் தங்கள் உயிர்களை மாய்த்துக் கொள்ள முயன்ற சந்தர்ப்பங்கள் பல காணப்பட்டன. சில சமூகங்களில் ஆண்கள் குடும்ப சொத்துக்களை பாதுகாத்துக் கொள்வதற்கென மீளத் திருமணம் செய்யும் நிலைக்கு வற்புறுத்தப் பட்டனர். இலங்கையின் கிழக்குப் பகுதியில் குறிப்பிட்ட ஒரு சமூகத்தில் மனைவிமாரை இழந்த இரு ஆண்கள், அதே சமூகத்தைச் சேர்ந்த திருமணமாகாத பெண்களைத் திருமணம் செய்யுமாறு வற்புறுத்தப்பட்டனர்.
அனர்த்த நிலைமையொன்றிலிருந்து சூழலில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் மேலதிக வேலைகள் காரணமாக, அனர்த் தத்தின் பின்னரான விளைவுகளில் பால்நிலைப் பாத்திரங்கள் சில சமயங்களில் மீள்வலியுறுத்தப்படுவதால் அல்லது சில சமயங்களில் தீவிரப்படுத்தப்படுவதால் பால் அடிப்படையிலான வேலைப் பிரிவினை சிக்கலடைகின்றது. கடற்றொழில், சுய வேலைவாய்ப்பு மற்றும் முறைசாரா துறைகள் என்பன சுனாமியினால் பெருமளவு பாதிப்புக்குட்பட்டன. இத்துறைகளில் பணிக்கமர்த்தியிருந்த பல பெண்கள் தமது சீவனோபாயங்களை இழந்தனர். பொருளாதாரச் சுமையுடன் பெண்கள் குடும்பச் சுமையினையும் சுமக்கின்றனர். அனர்த்த வேளைகளில் பெரும்பாலும் வாழும் வீடுகள் இழக்கப் படுவதால், பல குடும்பங்கள் சமையல் வசதிகள் பற்றாக் குறையாகவுள்ள தங்குமிடங்களுக்கு இடம்பெயர வேண்டியுள்ளது. சுனாமியின் பின்னர் பாதிப்பிற்குள்ளாகிய குடும்பங்களின் பெண்கள் இடைக்கால தங்குமிடங்களில் வாழ்ந்து, குடும்பத் திலுள்ள வயோதிபர்கள், இயலாதவர்கள் மற்றும் குழந்தைகள் ஆகியோரையும் பராமரித்து கிடைக்கக் கூடியதாகவிருந்த மட்டுப்படுத்தப்பட்ட வசதிகளுடன் உணவுகளையும் தயாரிக்க வேண்டியிருந்தது.

பேரழிவிற்கான ஆயத்தநிலையில் பாலின விவாத . 131
இலங்கையில் சுனாமியின் பின்விளைவுகளில் மனிதாபிமான இடையீடுகள்
சுனாமி அனர்த்தமானது எதிர்பாராததென்பதுடன் அதன் தன்மையும் முன்னெப்போதும் இல்லாத தொன்றாகவிருந்தது. இந்நிலைமையின் சிக்கலான தன்மையும் அளவும் உடனடித் தேவைகளை கவனிக்க வேண்டிய சந்தர்ப்பம், இயல்பு நிலையை மீளத்தாபித்தல், புனர்வாழ்வு, புனர்நிருமாணம் என்பவற்றை ஆரம்பித்தல் என்பவற்றைத் தேவைப்படுத்தியது. பல்வேறு முகவர் நிறுவனங்கள், அரசாங்கம், உள்ளுர் அமைப்புகள், தனியார் ஆகியோர் உடனடி நிவாரண நடைமுறைகளைக் கவனித்ததுடன் இதையடுத்து பெரியளவு புனர் நிருமாண மற்றும் புனர்வாழ்வு செயன்முறையும் ஆரம்பிக் கப்பட்டது. இவ்விதம் உதவ முன்வந்த சிலருக்கு அனர்த்த நிலைமையில் பதிற்செயலாற்றும் முன் அனுபவம், அறிவு, தேர்ச்சி என்பன இருந்தபோதிலும் வேறு பல அமைப்புகள்/பிரிவுகள் இத்தகைய நிலைமைக்குப் புதியவர்களாக இருந்தனர்.
நல்லெண்ணங்கள் இருந்தபோதிலும் அனர்த்த நிலைமை களில் பெண்களின் பிரச்சனை விடயங்களைக் கவனிப்பதில் அனுபவமற்ற காரணத்தாலும் அத்துடன் அறியாமையாலும் முக்கிய விடயங்கள் பல கவனிக்காது விடப்பட்ட பல சந்தர்ப்பங்கள் காணப்பட்டன. இதன்விளைவாக பெரும்பாலும் பெண்களும் அத்துடன் ஆண்களும் தமது அடிப்படை இயற்கை உடற்கூறுத் தேவைகளை அடைவதில் பல இடர்ப்பாடுகளை அனுபவித்தனர். பல முகாம்களில் ஆண்களே முகாமையாளர் களாக இருந்த காரணத்தால் பெண்கள் தமக்குத் தேவையான துப்புரவு ஆடைகள், ஆடைகளை கழுவும் வசதிகள் என்பவற்றை அடைய முடியாதிருந்ததுடன் சில சமயங்களில் அவமானங் களையும் சகிக்க வேண்டியிருந்தது. பெண்கள், நிவாரண மற்றும் ஏனைய ஆதாரங்களை, அவசரகால உதவி பற்றிய போதிய அறிவின்மை காரணமாகவும், அரச அதிகாரிகளினால் விநியோகிக் கப்படும் நிவாரண பங்கீடுகளில் குடும்பத்தலைவராக ஆண் கருதப்படும் நடைமுறை காரணமாகவும் நேரடியாக அணுக முடியவில்லை. பிரசவத்திற்கு முன்னரும், பின்னருமான வேளைகளில் மற்றும் இனவிருத்தி சுகாதார கவனிப்பில் பற்றாக்குறையான கவனிப்பு முறையானது கர்ப்பிணிப் பெண்

Page 73
132 பேரழிவுகளுக்குப் பெண்கள் முகம் கொடுத்தல்
களும், பாலூட்டும் தாய்மாரும் இளைப் பாறுவதற்கான இடவசதியின்றி அவதிப்பட்ட நிலைமையைக் உருவாக்கியது. மேலும் பெரும்பாலான இடைக்கால முகாம்கள் பெண்களுக்கென வேறான மலசலகூடங்களையும் குளியல் இடங்களையும் கொண்டிருக்கவில்லை. ஆரம்பக் கட்டங்களில் ஆண் வைத்தியர் களே உதவிகளை வழங்கியமை காரணமாக பெரும்பாலான சந்தர்ப்பங்களில் கருத்தடை முறைகள், அறிவுரைகள் என்பவற்றை முகாம்களில் பெண்கள் கிடைக்கப்பெறாதிருந்தனர். தனிமை வசதிகள் கிடைக்கப் பெறாதிருந்த சந்தர்ப்பங்களிலும் பாலுறவு செயற்பாடுகளை வலியுறுத்திய கணவன்மாரும், ஆண்களும் இருந்ததாக அறிக்கைகள் காட்டுகின்றன.
பெண்கள் பேரழிவுகளுக்கு முன்னிலை பதிற்செயற்பாட்டாளராக உள்ளனரா?
பொதுவில் ஆண்களை விடப் பெண்களே அனர்த்த வேளைகளில் அதிகளவு பாதிப்புறு தன்மையுள்ளவர்களெனவும், இயலாதவர் களாகவுள்ளவர்கள் எனவும் கருதப்படுகின்றார்கள். எவ்வாறெ னினும், அனர்த்த நிலைமைகளைக் கையாள்வதில் பெண்கள் பெறுமதியான அறிவையும் அனுபவத்தையும் கொண்டுள்ளனர். பல சமூகங்களில் சமூக முனைப்பாக்கங்களில் பெண்கள் ஊக்கமாகச் செயற்பட்டு தலைமைத்துவப் பங்கினை ஏற்பதுடன், அடிமட்டங்களில் ஆண் களைவிட அதிக எண்ணிக் கையி னராகவுமுள்ளனர்.
அனர்த்தங்கள் வரவுள்ளதை ஆண்கள் காலநிலை அறிவித் தல்கள் மூலம் அறிந்து கொள்ளுமிடத்து, பெண்கள் தமது உண்ணாட்டு காலநிலை பொது அறிவினைப் பயன்படுத்தி அறிந்து கொண்டனர். சூழ்நிலையுடன் பெண்கள் கொண்டுள்ள நெருங்கிய தொடர்பு, அனர்த்தமொன்றிற்கு முன்னதான அசாதாரண அடையாளக் குறிகளை விளங்கிக்கொள்ளும் சாத்தியத்தினை வழங்குகின்றது. வரவுள்ள இடர் காலங்களை சமாளிப்பதற்கான உணவு வகைகளை சேகரித்து களஞ்சியப்படுத்துபவர்களும் பெண்களே. அனர்த்தமொன்றின் பின்விளைவு நேரத்தில் ஆண்கள் வேலைதேடி இடம்பெயர வேண்டியுள்ள நிர்ப்பந்தங்களில் குடும்பச் சுமையை முற்றாக தங்கள் தோள்களில் பெண்களே சுமக்கின்றனர். சுனாமியின் பின்னர் இடைத்தங்குகால

பேரழிவிற்கான ஆயத்தநிலையில் பாலின விவாத . 133
முகாம்களில் பெண்களே அனாதையான பிள்ளைகளையும், கர்ப்பிணிப் பெண்களையும், வியாதியானவர்களையும், இயலாத வர்களையும், வயோதிபர்களையும் கவனிப்பதில் பெரும் பங்காற்றினர். பாடசாலைகளுக்கு செல்லாத பிள்ளைகளுக்கான தற்காலிக ஆசிரியைகளாக ஆதரவு வழங்குவதிலும் பெண்கள் ஈடுபட்டிருந்தனர். தற்காலிகமான தங்குமிடங்களை அமைப்ப திலும் ஆண்களுடன் இணைந்து பெண்கள் பணியாற்றினர். எவ்வாறெனினும், புனர் நிருமாண செயன்முறையில் பல இடைவெளிகள், குறிப்பாக ஆண்களைப் போன்று பெண்களும் மீளியல்பு நடைமுறையில் சமமான பங்காளிகளே எனும் விடயத்தினை கவனிக்கத் தவறி விடுகின்றன.
புனர்நிருமாண செயன்முறைகளில் பால்நிலை உணர்வு இல்லாமை
நிவாரண மற்றும் புனர்நிருமாண முயற்சிகளின்போது ஆண் மற்றும் பெண்களின் அக்கறைகள் கவனியாது விடப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பல சந்தர்ப்பங்கள் பல காரணங்களால் ஏற்பட்டவையென கூறலாம். இத்தகைய ஆண் பெண் உணர்வு வேறுபாடின்மைக்கான முக்கிய காரணம், அனர்த்தத்தின் அளவும், மீளியல்பு நிலைமையை மீள ஏற்படுத்துவதில் காணப்பட்ட அவசரமுமே எனத் தெரிகின்றது.
நிவாரண செயற்பாடுகளில் பல எண்ணிக்கையானோர் ஈடுபட்டிருந்தனர். சிலர் அனுபவமிக்கவர்களாகவும் பால்நிலை உணர்வு பற்றி புரிந்துணர்வுடையவர்களாகவும் இருந்த அதே வேளை, அவர்களது நிவாரண முயற்சிகள் பால்நிலை நோக்கில், சமூக பகுப்பாய்வு பற்றாக்குறையாக இருந்தமை அவர்களை மட்டுப்படுத்தியது. பின்னர் புனர் நிருமாண செயன்முறையின் போதும், பால்நிலை பிரிவு தரவுகள் இல்லாமை அவர்களது பணியில் தொடர்ந்தும் தடங்கல்களையேற்படுத்தியது.
தற்போது கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு உதவுவதற்கென பகுப்பாய்வு வரைச்சட்டங்கள், வழிகாட்டல்கள், மற்றும் பிற தகவல் மூலங்கள் என்பன கிடைக்கக் கூடியதாக வுள்ளது. உதாரணமாக யுஎன்எச்சிஆரின் (UNHCR) (1992) அகதிகள் நிலைமைகளில் மக்கள் சார்பான திட்டமிடல் எனும் ஆவணம் சூழ்நிலைப் பொருத்தம் மற்றும் அகதிகளின் தோற்றப்பாடு, ஆண், பெண்களின் செயற்பாடுகளும், நெருக்கடி

Page 74
134 பேரழிவுகளுக்குப் பெண்கள் முகம் கொடுத்தல்
நிலைமைக்கு முன்னரும் பின்னரும் அவர்களது வளங்களின் பாவனையும் கட்டுப்படுத்தலும், செயலாற்றல்கள் மற்றும் பாதிப்புறு தன்மைகளின் பகுப்பாய்வு என்பவற்றைக் கூறுகின்றது. எனினும் அனர்த்த முகாமைத்துவத்தில் ஈடுபட்டுள்ள முகவர் நிறுவனங்களினால் இவை பிரயோகிக்கப்படுவதில்லை அல்லது போதியளவு பின்பற்றப்படுவதில்லை. புனர்நிருமாண செயன் முறையில் பால்நிலை கூருணர்வுத் திறனின்மைக்கான வேறும் பல காரணங்களாவன, அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புகளுக் கிடையே அவற்றின் பங்குகள் மற்றும் பொறுப்புகள் பற்றிய ஒன்றிணைப்பின்மை, நிவார விநியோகங்களில் அரசியல், பால்நிலை உணர்வுத்திறன் பற்றிய அறிவு நிவாரண பணியாள ரிடையே இன்மை என்பனவாகும்.
மாற்றமொன்றிற்றகான நிகழ்ச்சி நிரல்: சுனாமியின் பின்னரான புனர்நிருமாண செயன்முறைக்கான விதந்துரைகள்
பால்நிலை வேறுபாடுகள் பற்றிய அறியாமை, அனர்த்த நிவாரணம் மற்றும் புனர்நிருமாண செயற்பாடுகளில் உதவுதற்கான அவர்களது சாத்தியங்கள், மற்றும் பெண்களின் தேவைப்பாடுகள் என்பன பெருமளவு கவனிக்கப்படாது விடப்படு உணர்வற்ற மற்றும் பயனற்ற செயற்பாடுகளுக்கு வழிவகுக்கின்றது.
நிவாரணம் மற்றும் புனர்நிருமாணங்களில் பெண்களின் அக்கறைகள் மற்றும் பால் நிலை பிரச்சனை விடயங்கள் என்ப வற்றைக் கவனிக்கும் பின்வரும் விதப்புரைகள் அனர்த்த முகாமைத்துவ முக்கிய விடயத் துறையில் கொள்கை வகுப்பா ளர்கள் மற்றும் செயல்முறையாளர்களுக்கான வழிகாட்டி யொன்றாக பயன்படுத்தப்படலாம்.
ஆரம்ப அனர்த்த பதிற்செயற்பாடுகளை பால்நிலை உணர்வுமிக்கதாக்குதல்
நிவாரண விநியோகம்
பால்நிலை உணர்வுமிக்க அனர்த்த நிவாரணத்தின் தேவைப்பாடு
56TIT66
* நிவாரண திட்டமிடல் நடைமுறையின்போது பாதிக்கப் பட்ட சமூகங்களுடனான நெருங்கிய இடைச் செயற்பாடு.

本
பேரழிவிற்கான ஆயத்தநிலையில் பாலின விவாத . 135
நிவாரண விநியோகத்திற்கான பால்நிலை - தொகையாக்கப் படாத மதிப்பீடுகள். பெண் நிவாரண பணியாளருக்கான வேலைவாய்ப்பு. உ+ம் : பெண்களினூடாக வழங்கல்களை விநியோகித்தல். பால்நிலை பிரச்சனை விடயங்கள் மற்றும் மனிதாபிமான நெறிகள் பற்றிய புரிந்துணர்வு, உணர்வுமிக்க நிவாரணப் பணியாளர்கள். பாதிக்கப்பட்ட சமூகங்களிலிருந்து பெண்களின் தேர்ச்சித் திறன்கள் ஆற்றல்களை அறிதலும், நிவாரண திட்டமிடல், உதவிகளை விநியோகித்தல் மற்றும் ஏனைய அவசரகால முகாமைத்துவ செயற்பாடுகள் என்பவற்றில் ஈடுபாடு பற்றியறிதலும். உபபிரிவினரான விதவைகள், வயோதிப பெண்கள், பெண் குடும்பத்தலைவிகள் திருமணமாகாத பெண்கள், இயலாத வர்கள் போன்றவர்களை நிவாரணம் சென்றடைதல். பல்வேறு சமூகத்தவரின் கலாச்சார அக்கறைகளுக்கான கவனிப்பும் பதிவு செய்தல், நட்டஈடு வழங்குதல், நிவாரண விநியோகம் என்பவற்றில் கலாச்சார/ மத/ பால்நிலை அடிப்படையிலான பாகுபாடுகளைக் கவனித்தல்.
நிவாரண பகிர்ந்தளிப்பிற்கென ஆகக்குறைந்த தராதரங்களை பின்பற்றுதல் (உ-ம்: SPHERE தராதரங்கள்).
அடிப்படை நடைமுறைத் தேவைகள்
பெண்களுக்கென குறித்துரைக்கப்பட்ட தேவைப்பாடு களுள்ளன. இவை தொடர்பில் பின்வரும் நடைமுறைகள் எடுக் கப்படல் வேண்டும்:
本
முகாம்களின் பொதுப்பகுதிகளில் பெண்களுக்கான தனிமை வசதிகளை உறுதிப்படுத்துதல் உ-ம்: பெண்கள் "இடங்கள்” தனியான மலசலகூட மற்றும் குளியல் வசதியிடங்களை வழங்குதல். மாதவிடாய் காலப்பகுதியில் துப்புரவு துணிகளை, ஆடைகளை, உள்ளாடைகளை வழங்குதல்.

Page 75
36 பேரழிவுகளுக்குப் பெண்கள் முகம் கொடுத்தல்
* கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மாரின் தேவைப் பாடுகளைக் கவனித்தல்.உ-ம் : குழந்தைகளின் பால்மா, பாற்போத்தல்கள், குழந்தை ஆடைகள், அணையாடைகள் என்பனவற்றை வழங்குதல்.
பாதுகாப்பும் இடர்காப்பும்
இடப்பெயர்வு நிலைமைகளில் தற்காலிக புகலிடங்களிலும், முகாம்களிலும் பெண்களும் குழந்தைகளும் பால் நிலை வற்புறுத்தல்கள், துஷ்பிரயோகம், வன்முறைகள் என்பவற்றிற்கு உட்படுத்தப்படுகின்றனர் என்பது உண்மை. பெண்களினதும் சிறுபிள்ளைகளினதும் பாதுகாப்பினை உறுதிப்படுத்த குறிப்பிட்ட நடைமுறைகள் எடுக்கப்பட வேண்டிய தேவையுள்ளது:
* அவர்களை துஷ்பிரயோகங்களிலிருந்து பாதுகாப்பதற்கான செயன்முறை நடவடிக்கைகளை எடுத்தல் உ-ம்: பாது காப்பான படுக்கை ஏற்பாடுகள், போதியளவு வெளிச்சம் மற்றும் மலசலகூடங்களை பாதுகாப்பான இடங்களில் அமைத்தல்.
* பிள்ளைகளின் பாதுகாப்பிற்கு சமூகமே பொறுப்பு என்பதை உறுதிப்படுத்து வதற்கான நடவடிக்கைகளை எடுத்தல்.
* தமது உற்வினர்களை தேடிச்செல்லும் பெண்கள் பிள்ளை களுக்கு இயன்ற வரையான உதவுதலும், துணைபோதலும்.
சுகாதார அக்கறைகள்
அனர்த்தங்களின் பின்னர் பெண்களே தமது குடும்பங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கின்றனர். இளவயதினர், வயோதிபர், நோயாளிகள், இயலாதவர்கள் மற்றும் காயமுற்றோர் என்போரின் கவனிப்பாளர்கள் என்ற முறையில் பெண்கள் தமது தேவைகளைப் புறந்தள்ளி இவர்களைப் பராமரிக்கின்றனர். நிவாரண, புனர்நிருமாண முயற்சிகள் பெண்கள் ஆரோக்கியத்திற்கு கவனம் செலுத்தி, குறிப்பிட்ட ஆரோக்கிய அக்கறைகள், தேவைப்பாடுகள் என்பவை கவனிக்கப்படுவதை உறுதிப்படுத்துதல்.
* பெரும் அனர்த்தங்களுடன் தொடர்புபட்ட பால்நிலை மற்றும்/ அல்லது குடும்ப வன்முறைகளின் அதிகரித்த

பேரழிவிற்கான ஆயத்தநிலையில் பாலின விவாத . 1.37
ஆபத்து, நிகழ்வு என்பவற்றை கையாள்வதற்கு நடை முறைகள் தேவைப்படுகின்றன. உ-ம் : உடல்ரீதியான அல்லது பால்நிலை துஷ்பிரயோ கத்திற்கு ஆளான பெண்கள், பிள்ளைகளுக்கு மருத்துவ உதவிகள் கிடைக்கப்பெற வேண்டும்.
* பொது சுகாதாரப் பணிகளில் இனவிருத்தி மற்றும் குடும்பக் கட்டுப்பாட்டு திட்டமிடல் சுகாதார சேவைகள் உட்சேர்க் கப்படல் வேண்டும். உ+ம் : பிரசவத்திற்கு முன்னரும் பின்னருமான கவனிப்பு வழங்கல். போஷாக்கு உணவுகள் தேவைப்படும் கர்ப்பி ணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள்.
* பெண்களின், ஆண்களின் வேறுபட்ட உள,உடல்ரீதியான சுகாதார தேவைப்பாடுகள் அறியப்பட்டு கவனிக்கப்படுதல். உ+ம் : இயலாதவர்கள், வயோதிபர், குடும்ப கவனிப்பு வழங்குநர்கள்.
அதிர்ச்சிநிலை அறிவுரை வழங்கல்
நிவாரண குழுக்களின் அங்கத்தவர்கள், மன அதிர்ச்சிநிலை விடயங்கள் பற்றிய அறிவினையும் உணர்வினையும் கொண்டி ருத்தல் வேண்டும்.
* பெண்களின் கவலையானது தங்களது குடும்பம்/பிள்ளை களுக்கு ஏற்படும் ஆபத்துக்கள் பற்றியவை என்பதை அனர்த்தங்களின் உளவியல் தாக்க விளைவுகளில் பால்நிலை வேறுபாடுடாக உணருதல் வேண்டும். * மனநிலை ஆரோக்கியத்தினை வழங்குநருக்கான பயிற்சி யானது, பெண்கள் தலைமையிலான குடும் பங்கள், அனாதைகளைக் கவனிக்கும் பேத்திமார்கள், தாக்குண்ட பெண்கள், புதிதாக வாழ்க்கைத் துணைகளை இழந்த ஆண், பெண்கள், தற்கொலைக்குத் துணியும் பெண்கள் போன்ற உயர் பாதிப்புறு பிரிவுகளின் பிரச்சனைகளை கவனித்தல் வேண்டும்.

Page 76
138 பேரழிவுகளுக்குப் பெண்கள் முகம் கொடுத்தல்
புனர்வாழ்வு/புனர்நிருமாணத்திற்கான பால்நிலை உணர்வுத் திட்டமிடல் பல சமூகங்களில், சமூக அனர்த்த முனைப்பாக்கங்களில் பெண்கள் தீவிர பங்கினையாற்றுகின்றனர். எனினும், பெருமளவு முறைசார் திட்டமிடலில் பெண்கள் அரிதாக பிரதிநிதித்து வப்படுத் தப்படுவதுடன் தீர்மானம் மேற்கொள்ளலிலும் குறிப்பாக இவர்கள் காணப்படுவதில்லை. அபிவிருத்தி திட்டமிடலிலும், அனர்த்த தணிப்புகளிலும் பால்நிலை பிரச்சனைகளுக்கு உணர்வின்றி யிருத்தல் என்பது, ஆண்களை மாத்திரமே இலக்குப்படுத்துவதாக பொருள்படுகின்றது. அனர்த்தநிலையின் படுகுழியிலிருந்து வெற்றிகரமாக மேல்நோக்கி எழுவதற்கு சமூகத்தினை வலுப்படுத் துவதற்கு பால்நிலை உணர்வுத்திறன் மிக முக்கியமாகும்.
புனர்வாழ்வு/ புனர்நிருமாணம் என்பன அனர்த்தமொன் றின்போது சமூகங்களில் ஆபத்துக்களை குறைத்து, உள்ளுர் சமூகங்களை வலுப்படுத்தி அனர்த்த பின்னிலை அபிவிருத்தியை ஊக்குவித்தல் வேண்டும். அதாவது அனர்த்தங்களில் ஏன் குறிப்பிட்ட சமூக, சமுதாயப் பிரிவுகள் அதிகளவு பாதிப்புறு தன்மையுள்ளவர்களாக இருக்கின்றனர் என்ற காரணத்தை கவனித்தலாகும். புனர்நிருமாணமானது, பாதிப்புறு தன்மையின அடிநிலைக் காரணங்களை, பால்நிலை சமமின்மையுட்பட கவனிக்கும் தன்மையில் அமைதல் வேண்டும்.
புனர்வாழ்வைக் கட்டியெழுப்பும் பணியில் முயற்சி செய்யும் சமூகங்கள் குடும்பங்களுக்கு பெண்களின் உள்ளுர் அறிவு, நிபுணத்துவம் என்பன அத்தியாவசியமாகும். இத்தகைய ஆற்றல்களைப் பெறுவதற்கு, அனர்த்த பதிற்செயற்பாட்டாளர் பெண்களுடன் நெருக்கமாக பணியாற்றுதல் வேண்டும். புனர்நிருமாணம்/புனர்வாழ்வு திட்டமிடல் மற்றும் நடைமுறைப் படுத்தலில் பின்வருவன தொடர்பில் செயன்முறை நடவடிக்கைகள் எடுக்கப்படுதல் வேண்டும்:
* பாதிக்கப்பட்ட சமூகங்களின் தேவைகள், தேர்ச்சித் திறன்கள், ஆற்றல்கள் என்பன புனர்வாழ்வுப் பணிகளின் திட்டமிடல் மற்றும் நடைமுறைப்படுத்தலில் ஒன்றிணைக் கப்படுவதை உறுதிப்படுத்துதல். உ-ம் : வீடுகளை உருவமைப்பதிலும் நிருமாணிப்பதிலும் பெண்களை

பேரழிவிற்கான ஆயத்தநிலையில் பாலின விவாத . 139
உள்ளடக்குதல். இயற்கை வளங்களை முகாமிப்பதில் பெண்களின் பாரம்பரிய அறிவு மற்றும் அனுபவத்தினை உணர்ந்து ஒன்றிணைத்தல். பாதிக்கப்பட்ட பகுதிகளில் பெண்களுடன் பெண் பணியகங்கள், பெண்ணாதரவாளர் ஆகியோருடன் தொடர் ஆலோசனைகளைத் தாபித்தல்.
புனர்நிருமாணிப்பில் பெண்கள் பங்களித்து பொருளாதார மீளியல்பு நடவடிக்கை நலன்களை உறுதிப்படுத்துவ தற்கான நடைமுறைகளை மேற்கொண்டு உறுதிப்படுத்தல். உ-ம் : புனர்நிருமாணம், புனர்வாழ்வு செயற்பாடுகளில் பெண்கள் பங்கு பற்றுவதற்கான இயக்கத்தன்மை இருப் பதை உறுதிப்படுத்துதல். பெண்கள் பங்குபற்றக்கூடிய நேரங்களிலும் இடங்களிலும் கூட்டங்கள், நிகழ்வுகள் இடம்பெறுவதை உறுதிப்படுத்துதல். குடும்ப கவனிப்பா ளர்கள், ஆதரவுகளைப் பெறுவதனை உறுதிப்படுத்துதல். முறைசாரா சமூக வலையமைப்புகளை வலுப்படுத்தி, அவற்றை அனர்த்த பதிற் செயற்பாடு முகவர் நிலையங்க ளுடனும் அலுவலகங்களுடனும் தொடர்புபடுத்துதல். அனர்த்த மீளியல்பு திட்டங்களை அவதானிப்பதற்கென பெண்கள் பிரிவுகளை நிதிப்படுத்துதல். வீடமைத்தல், ஊழியம், குடும்பத் தொடர்புகள் ஆகிய பகுதிகளில் சட்டத்துறை சேவைகளுக்கான பெண்களின் தேவைகளை அடையாளங்கண்டு பதிற் செயற்படுதல். உம் : புதிதாக நிருமாணிக்கப்பட்ட வீடுகளின் உரித்தாவணம் கணவன் மனைவி ஆகியோரின் பேரில் அமைதலும் பெண்களுக்கு காணி உரித்துகள் அமைதலும். சமூக சேவைகள், பிள்ளைகளுக்கு ஆதார முறைமைகள் மற்றும் பெண்கள் நிலையங்கள் என்பவற்றிற்கு முன்னுரிமை வழங்குதல். சேதப்படுத்தப்பட்ட மற்றும் புதிய வீடுகளை மீள நிருமாணிப்பதில் தனிப் பெற்றோர், விதவைகள், வறுமை நிலைக்கு கீழ்ப்பட்டோர், ஊழியமற்றவர்கள் போன்ற பாதிப்புறு தன்மையான பெண்களை இலக்குப்படுத்துதல்.

Page 77
140 பேரழிவுகளுக்குப் பெண்கள் முகம் கொடுத்தல்
* காலப்போக்கில் ஏற்படக் கூடிய பால்நிலை பாகுபாடு சமமின்மை என்பவற்றிற்கென நிவாரணம் மற்றும் புனர்வாழ்வு என்பவற்றை கண்காணித்தல். உ-ம் : வீட்டில், ஊழியத்தில், சமூகத்தில் பலவிதமான பொறுப்புகளை பெண்கள் மீது சுமத்துதலைத் தவிர்த்தல்.
* நிவாரண மற்றும் மீளியல்பு சொத்துக்கள் எத்தனை தூரம் சமமாகப் பகிரப்படுகின்றன என்பதை இயன்றவரை கண்காணித்தல்.
வாழ்வாதாரங்களை மீளக்கட்டியெழுப்புதல்
புனர்நிருமாணிப்பில் பெண்கள் முற்றாக ஈடுபடுத்தப்பட வேண்டுமென்பதோடு பெண்கள் பொருளாதார மீளியல்பு மற்றும் வருமான ஆதரவு நிகழ்ச்சித் திட்டங்கள் என்பவற்றிலிருந்து நலன்பெறுதலையும் உறுதிப்படுத்துதல். பெண்களின் மட்டுப்படுத் தப்பட்ட வருமான உற்பத்தி மற்றும் ஊழிய சந்தரப்பங்கள் என்பன உள்ளுர் பொருளாதார அபிவிருத்தி நடைமுறையில் விரிவாக் கப்படுதல். சீவனோபாயங்களை மீளக் கட்டியெழுப்புதலில் பின் வருவன தொடர்பில் செயன்முறை நடவடிக்கைகள் எடுக்கப்படுதல் வேண்டும்:
* சகல வயது மற்றும் சமூகப்பிரிவுகளில் பொருளாதார ரீதியில் ஆர்வமிக்க பெண்களை புனர் வாழ்வு மற்றும் புனர் நிருமாணம் என்பன இலக்குப்படுத்துவதை உறுதிப் படுத்துதல். * சகல அனுபவ அடிப்படையிலான மதிப்பீடுகளிலும்
பால்நிலை பாகுபாட்டினை கூட்டிணைத்தல். உ-ம் : பால்நிலை - குறித்துரைத்த தரவினைச் சேகரித்தல் அல்லது ஏற்படுத்துதல் பெண்களின் பங்கினை அடை யாளங் காணும் அத்துடன் அவர்களது பங்களிப்புப் பகுதிகளை அடையாளங் காணும் வகையில் சேதப்படுத் தப்பட்ட பொருளாதார துறையின் பூரண பகுப்பாய்வினை மேற் கொள்ளுதல். * பெண்களிடையே பாரம்பரியமற்ற திறன்களை கட்டி
யெழுப்பும் வருமான உற்பத்தி திட்டங்களை ஆதரித்தல். உ-ம் : நிருமாணிப்பு சார்ந்த அத்துடன் ஏனைய பாரம்பரிய

பேரழிவிற்கான ஆயத்தநிலையில் பாலின விவாத . 141
மற்ற ஊழியத்திற்கான நியாயமான அணுகுதலை பெண் களுக்கு வழங்குதல். ஊழியம் சார்ந்த தொழிற் பயிற்சியினை உட்சேர்த்தல். வீடுகளின் நிருமாணிப்புப் பணிகளை மேற்பார்வை செய்தல் போன்ற குறித்துரைத்த திட்டங் களுக்காக தொழில்நுட்ப தராதரங்களைக் கொண்ட பெண்களை நாடுதல். சீவனோபாயத்தினைக் கட்டியெழுப்பும் திட்டங்களில் பெண்களின் வருமான உற்பத்தி விருப்பத்தேர்வுகளைக் கூட்டிணைத்தல். உ-ம் : சுய வேலைவாய்ப்பு, குடும்ப அடிப்படையான பெண்கள் பணியாளர்களுக்கு திட்டங்களில் ஏற்பாடுகளை வழங்குதல். இழந்த சீவனோபாயங்களை மீளக் கட்டியெழுப்புதற்கென நன்கொடைகள், கடனுதவிகளை உறுதிப்படுத்துதல், சேதப்படுத்தப்பட்ட அழிக்கப்பட்ட கருவிகளை, இட வசதியை, உபகரணத்தை, வழங்கல்களை, கடனுதவியை, முதலீட்டை, சந்தைகளை மற்றும் பிற பொருளாதார வளங்களை மீளவைத்தல். பொருளாதார வழங்குநர்கள் மற்றும் குடும்பப் பணி யாளர்கள் என்ற வகையில் பெண்களின் பல்பொறுப் புகளை ஆதாரப்படுத்துவதற்கென நடைமுறைகளை உள்ளடக்குதல். உ-ம் : உதவிக்கென விண்ணப்பிக்கும் நேரம் தேவைப்படு வோருக்கான "குடும்ப நட்பு” கொள்கைகளை அபிவிருத்தி செய்ய அல்லது வலுப்படுத்தவென தொழில் தருநருடன் பணியாற்றுதல், மன அதிர்ச்சிகளை சமாளித்தலும் காயம்பட்ட குடும்ப அங்கத்தவர்களை கவனித்தலும் குடும்ப கவனிப்பாளருக்கு உதவி வழங்குதல், அவர்களை பொருளா தார ரீதியில் ஆதாரப்படுத்துதல். மற்றும் காயமுற்றோர், பிள்ளைகள், இயலாதவர்களுக்கு தொடர்ந்து கவனிப்பு வழங்கலை உறுதிப்படுத்துதல். பால்நிலை பொறுப்புடைமை மற்றும் கண்காணிப்பு நடைமுறைகளை அபிவிருத்தி செய்தலும் பொறுப் பேற்றலும்.

Page 78
142 பேரழிவுகளுக்குப் பெண்கள் முகம் கொடுத்தல்
உ-ம் : நிருமாணிப்பில், வர்த்தகத்தில், ஏனைய தொழில் களில் ஆண் பெண் விகிதத்தினை கண்காணித்தல், பயிற்றப்படும் தொழில்களில் பெண்களின் எண்ணிக்கை, பெண்களால் பெறப்படும் பொருளாதார மீளியல்பு நன் கொடைகள், கடனுதவிநிதிகள் என்பவற்றின் விகிதாசாரம், தனியார் மற்றும் பொது நிவாரண பணி கருத்திட்டங்கள் போன்றவற்றில் பணியாற்றும் நிலைமைகள், குழம்பிய சந்தைகள், வற்புறுத்தலான சொத்து விற்பனைகள் சுயவிருப்பமற்ற புலம்பெயர்வு, அதிகரித்த விகிதாசார பெண் தலைமையிலான குடும்பங்கள் என்பவை தொடர் பில் பெண்கள், யுவதிகள் மீதான நீண்டகால தாக்க விளைவு களைக் கண்காணித்து மதிப்பீடு செய்தல்.
ஆண்களையும் பெண்களையும் பேரழிவுகள் வலுவிழக்கச் செய்து நட்டப்படுத்துவதால், அவர்களின் நிலைமைகளை மேலும் படிப்படியாக அழிவுறச் செய்யாதிருத்தல் முக்கியமானதாகும். அனர்த்தங்களின் போது பால் நிலை பிரச்சனைகளுக்கான கூருணர்வு திறனானது, பெண்கள், பிள்ளைகள் பற்றிய பாரம்பரிய அக்கறைகளுக்கு அப்பாலும் செல்லுதல் வேண்டும். தம்மில் தங்கியிருப்பவர்களை ஆதரிப் பதற்கான பெண்களின் பொறுப்பு களுக்கு உணர்வுடையதாக இருக்கும் அதேசமயம் நிவாரண, புனர்நிருமாண நிகழ்ச்சித் திட்டங்கள் ஆண்களின் நேரத்தினையும் பயனுள்ள வகையில் பிரயோசனப்படுத்துதல் வேண்டும். நிவாரண மற்றும் புனர் நிருமாணிப்பு ஒழுங்கேற்பாடுகள் இரண்டும், குடும்பத்தினை முகாமித்தல், உணவு, நீர், குடும்ப கவனிப்பு என்பவற்றின் முகாமைத்துவம் போன்ற பெண்களின் பாரம்பரிய் அதிகாரத்துறைகளை தரங்குறைத்தலாகாது. கலாச்சார, சமூக ரீதிகளில் உணர்வுமிக்க அனர்த்த முகாமைத்துவக் கலாச்சாரம் பெண்களை ஆபத்து முகாமையாளராக தீவிரமாக ஈடுபடுத்து வதோடு, அதேசமயம் அனர்த்த நிலைமைகளில் ஆண்களாலும் பெண்களாலும் வழங்கப்படும் குறைநிரப்பு பங்களிப்பினையும் பெற்றுக்கொள்ள உதவுகின்றது.

பேரழிவிற்கான ஆயத்தநிலையில் பாலின விவாத . 143
உசாத்துணைகள்
எலெயின் எனாசன் (மார்ச் 2001), அனர்த்த மீள்கட்டமைப்பில் சமூகநீதியை ஊக்குவித்தல்: பால்நிலை உணர்வு மற்றும் சமூக அடிப்படையான திட்டமிடல் என்பவற்றிற்கான வழி காட்டல்கள்.
குஜராத் அஹமதாபாத் அனர்த்த தணிப்பு நிறுவனம், பால்நிலை மற்றும் அனர்த்தங்கள் வலையமைப்பு (ஜனவரி 2005), அனர்த்தங்களில் பால்நிலை சமத்துவம்: பெணிகள், யுவதிகளுடன் பணியாற்றுவதற்கான ஆறு நடைமுறை விதிகள்.
மாதவி மலகொட ஆரியபந்து, மைத்ரி விக்கிரமசிங்க (2003), அனர்த்த முகாமைத்துவத்தில் பால்நிலை பரிமாணங்கள்: தெற்காசியாவிற்கான ஒரு வழிகாட்டல், ITDC தெற்காசிய பிரசுரம்.

Page 79
12
பேரழிவுக்குத் தயார்படுத்திக் கொள்ளும் செயற்பாட்டில் வலுவான உள்ளுர் மற்றும் பிராந்தியக் கொள்கைகளின் அவசியம்
- அபிததுல் பாத்திமா
முகவுரை
பங்களாதேஷில் அனர்த்தங்கள் வழக்கமான ஓர் நிகழ்வாகும். இவை புயல்காற்று, சூறாவளி தொடங்கி சூறையாடும் வெள்ளப் பெருக்கு வரை ஆனவையாகும். பங்களாதேஷ் மக்கள் மத்தியில் வெள்ளப்பெருக்கே ஓர் முக்கிய பிரச்சனையாக 1955 முதல் 2004 வரை காணப்படுகின்றது.அவ்வெள்ளப் பெருக்கானது 60 வீத நிலப்பரப்பினை ஆட்கொண்டு, பயிர் செய்கைகள் மற்றும் சொத்துக்களை அழித்து, பொருளாதார நடவடிக்கைகளை சீர்குலைத்து, தொற்று நோய்களை பரப்பி, உயிர் இழப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. இதே போன்று சூறாவளியும் பலத்த புயல் காற்று மற்றும் கடற் கொந்தளிப்பும் ஏற்பட்டு மனித சமூகத்தை அச்சுறுத்தி கூடவே கடலோர பிரதேசங்களில் மண்ணரிப்பையும் தோற்றுவிக்கின்றது. புயல் காற்று மற்றும் சூறாவளியானது மக்களையும் சொத்துக்களையும் அழித்து பொருளாதார வாழ்க்கையையும் சீர்குலைக்கின்றது. பங்களாதேஷ் முகங் கொடுக்கும் மற்றுமோர் அபாயம் வறட்சி நிலையாகும். வறட்சியானது விளைச்சல்கள், நீர்பாசனம் மற்றும் பயிர் வளர்ச்சியை பாதிப்பதன் மூலம் உற்பத்தி குன்றி உணவு பற்றாக்குறையை ஏற்படுத்துகின்றது.
மேலும் அரிதார நச்சுப் பாதார்த்தமானது (Arsenic) மனித உயிர்களுக்கு கசப்பான பாடத்தை கற்பிக்கும் ஓர் மெளனமான அனர்த்தமாகும். குடிநீரில் காணப்படும் அதிகளவிலான இரசாயன

பேரழிவுக்குத் தயார்படுத்திக் கொள்ளும் செயற்பாட்டில் . 145
மூலகப் பதார்த்த கலப்பானது "உயிரை காக்கும்" சுத்திகரிப்பு பொருளாக அமையாது மனித வாழ்விற்கு அச்சுறுத்தலாக அமைகின்றது.
அனர்த்தம்
அனர்த்ததிற்கு வரைவிலக்கணம் கொடுப்பதை பார்க்கிலும் அவைகளை இலகுவில் இனங் கண்டு கொள்ளலாமென சில ஆய்வாளர்கள் தர்க்கம் செய்கின்றனர். உண்மையில், அனர்த் ததிற்கு ஓர் தனிப்பட்ட வரைவிலக்கணம் கிடையாது. குறிப்பிட்ட பிரதேசத்தில் குறிப்பிட்ட நேரத்தில் நடைபெரும் அன்றாட அனுபவங்களிலிருந்து வேறுபட்ட குறிப்பிடதக்க ஓர் மாற்றம் எனவும் இதை வரையறை செய்யலாம். உயிரிழப்புகளின் எண்ணிக்கை மூலம் அனர்த்தங்களை புரிந்து கொள்ளலாம். அழிக்கப்பட்ட சொத்துக்களின் பெறுமதியும் மொத்த தலா வருமானமும் இதை கணிப்பிட போதுமானதல்ல. எளிதில் பாதிப்புக்குள்ளாக்கூடிய தன்மையை பற்றிய அறிவு, கைவ சமிருக்கும் போதுமான விளக்கங்கள் மற்றும் உயிரிழப்பு, அழிவு போன்றவைகள் தொடர்பாக சமூகத்தின் கற்பனை போன்ற வைகள் இக்குறிப்பிடதக்க கூறிற்கு மிகவும் அவசியமானது.
பேரழிவு பகுப்பாக்கம்
அனர்த்தங்களை இரண்டு வகுப்புகளாக வகைப்படுத்தலாம். அவையாவன:
1. இயற்கைப் பேரழிவு 2. மனிதால் உருவாக்கப்பட்ட பேரழிவு (செயற்கை
அனர்த்தம்)
1. இயற்கை பேரழிவு
இயற்கை அனர்த்தத்தை இரண்டு பகுதிகளாக வகைப்படுத்தலாம். அவையாவன:
1.1 குறுகிய காலம்
1.2 நீண்ட காலம்

Page 80
I46 பேரழிவுகளுக்குப் பெண்கள் முகம் கொடுத்தல்
1.1 குறுகிய கால அல்லது திடீர் பேரழிவு
திடீரென நடைபெற்று உயிர்கள், சொத்துக்கள் மற்றும் வளங்களுக்கு பெருமளவிளான அழிவை ஏற்படுத்துவது குறுகிய கால அல்லது திடீர் பேரழிவு எனப்படும். சூறாவளி, பூமி அதிர்ச்சி மற்றும் பேரலைகள் போன்றவைகளை குறிப்பிடலாம்.
திடீர் அனர்த்தங்கள்
வெள்ளப்பெருக்கு: பங்களாதேஷில் ஏற்படும் வெள்ளப்
பெருக்கானது அந்நாட்டின் வரலாற்றினை போன்று பழமை
வாய்ந்தது. ஆனால் பல வருடங்களாக இப்பிரச்சனை படிப்
படியாக அதிகரித்து வந்து தற்பொழுது அநேக மக்களுக்கு
முக்கியமான பிரச்சனைகளில் ஒன்றாக மாறியுள்ளது. இவ்
வெள்ளப் பெருக்கிற்கான தெளிவான காரணம் இன்னும் கண்ட
றிப்படாத பொழுதிலும் தேசிய மற்றும் சர்வதேச நிபுணர்கள்
கூறும் வெள்ளப்பெருக்கிற்கான காரணங்கள் பின்வருமாறு:
1. பிரதான நதியில் பல நதிகளின் சந்திப்பு
பெரும் பருவமழை
தாழ்வான கடல் மட்டம்
கடல் மட்ட அதிகரிப்பு
ஆறுகளில் சேற்றுப்படிவு
வெள்ளப்பெருக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள்
காடழிப்பு
பராக்கா அணையின் நிர்மாணம் (Farakka Barrage)
இக்கட்டுரையில் பங்களாதேஷின் பராக்கா பிரச்சனையில் கவனம் செலுத்தி விளக்க விரும்புகிறேன். எதிரோட்டமாக நீரை திசைதிருப்ப இந்தியாவினால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விளைவாக கங்கை, பிரம்மபுத்ரா, மெக்கேன் மற்றும் கிளை யாறுகளின் நீர் பண்பியல் மற்றும் தாவர மற்றும் விலங்கு அமைப்பியல் போன்றவை கடுமையான பின்விளைவுகளை எதிர் நோக்கின. நீரோட்ட நிலையில் காணப்படும் சில திடீர் மாற்றங்கள், படிவுகள் மற்றும் மணலினால் ஆற்றின் விலங்கு மற்றும் தாவர அமைப்பியலின் நடுநிலை பாதிக்கப்படும். மேலும்

பேரழிவுக்குத் தயார்படுத்திக் கொள்ளும் செயற்பாட்டில் . 147
ஒருங்கிணைக்கப்பட்ட நீர் திசைதிருப்பம் ஏற்பட்டதனால் உணர்டான மிகவும் குறைவான நிரோட்ட நிலையானது எதிரோட்டத்தில் நீர் மட்டத்தை குறைத்துள்ளது. இதனால் பங்களாதேஷ் தொடர்ந்து நடைபெறும் சூறையாடும் வெள்ளப் பெருக்கினால் வேளாண்மை உற்பத்தி பாதிப்பு, மண்ணரிப்பு, சனத்தொகை இடப்பெயர்வு, கரி நிலங்களின் உருவாக்கம், உவர் தன்மை அதிகரிப்பு, கடல் பயணங்களில் மாற்றங்கள், மீன்பிடி துறை பாதிப்பு, காடழிப்பு, சில பிரதேசங்கள் பாலைவனங்களாக மாறுதல், எளிதில் பாதிப்புக்குள்ளாகும் தன்மை, மற்றும் வறுமை நிலை என பலத்த அடிகளுக்கு முகங்கொடுத்து வருகின்றது. இவ்வெள்ளபெருக்க நிலை மேலும் அதிகரித்து அதன் தாக்கம் மிகவும் கொடுரமானதாக அமையும் என கருதப்படுகின்றது.
புயல் காற்று (சூறாவளி): வெள்ளப்பெருக்கை போன்றே சூறாவளியும் கடலோரப் பிரதேசங்களிலும் கரையிலிருந்து சற்று விலகிய தீவுகளிலும் அடிக்கடி நிகழ்கின்ற ஓர் சம்பவம். கடந்த மூன்று தசாப்த காலங்களில் அனைத்து கடலோரப் பிரதேசங்களும் கரையிலிருந்து சற்று விலகிய தீவுகளும் சூறாவளிக்கு முகங் கொடுத்து வருகின்றன. வறட்சி: ஒவ்வொரு வருடமும் ஆர்ஷின் மற்றும் கார்த்திக் மாதங்களில் பங்களாதேஷின் வட பாகத்து மக்கள் பலத்த வறட்சிக்கு முகங் கொடுத்து வருகின்றனர். பூமி அதிர்வு: பங்களதேஷ் நிலநடுக்க அபாயம் செறிந்த ஒர் பகுதியில் உள்ளது. பூமி அதிர்ச்சியினால் ஏற்பட்ட அழிவுகளை தெளிவாக கணிப்பிட போதுமான தகவல்கள் இல்லை. பங்களாதேஷின் மலைச் செறிவான பிரதேசங்கள் நிலநடுக்க அபாயம் கூடிய பிரதேசங்களாக உள்ளன.
1.2 நீண்ட கால அனர்த்தங்கள், பேரழிவு
பல வருடங்களாக ஏற்பட்ட கண்ணுக்கு புலப்படாத பேரழிவு நீண்ட கால பேரழிவு எனப் பொருள்படும். ஆனால் இது எங்களுடைய இயற்கை வளங்களை அழித்து மனித உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும். இவ்வனர்த்தங்கள் பின்வருமாறு:
1. இரசாயன மூலக பதார்த்தங்களின் பாவனை
2. காட்டை அழித்தல்

Page 81
148 பேரழிவுகளுக்குப் பெண்கள் முகம் கொடுத்தல்
3. பூமியின் மேல் மட்டத்திலும், அடி மட்டத்தில் உள்ள
நீரிலும் உவர் தன்மை அதிகரித்து வருகின்றமை. இரசாயன மூலகக் கலப்பு (அரிதார நச்சு): தற்பொழுது பங்களாதேஷின் 61 மாவட்டங்களில் 80 மில்லி யனுக்கும் மேற்பட்ட மக்கள் இவ்வாறான அரிதார நச்சு பாதார்த்த தாக்கங்களின் அபாயத்திற்கு ஆளாகும் நிலை உள்ளது. இவர்களில் 2 மில்லியன் மக்களில் இரசாயன மூலக பதார்த்த தாக்கத்தின் அறிகுறிகள் காணப்படுகின்றது. எஞ்சிய மக்கள் மத்தியில் அறிகுறிகள் இன்னும் தென்படவில்லை. உடலில் கலக்கப் பட்டுள்ள அரிதார நச்சின் அளவிலேயே ஒருவர் பாதிக்கபட்டவரா என்பதை உறுதிப்படுத்த முடியும். இதற்கு 10 முதல் 20 வருடங்கள் வரை செல்லும். தரை நீரில் அரிதார நச்சு காணப்படுவது இந்நூற்றாண்டின் கொடூரமான அனர்த்தமாக பங்களாதேஷில் கருதப்படுகின்றது.
தரை மற்றும் தரை நீரின் அதிகளவிலான பாவனையினால் தரையில் காணப்படும் பல்வேறுப்பட்ட கனியுப்பு கூறுகள் அத்தன்மையை நச்சாக அதிகரிக்கிறது என பங்களாதேஷில் கடும் அரிதார நச்சு கலப்பினால் ஏற்பட்ட நிரந்தரமான பாதிப்பு எடுத்து காட்டுகின்றது. இந்தியா பெரிய நதிகளிலிருந்து அதிகளவிலான மேல் மட்ட நீரை திசைதிருப்பிய காரணத்தினால் எதிரோட்டமன நீர் மட்டம் அதிகளவிலான இரசாயன மூலக பதார்த்தங்ளினால் கலக்கப்பட்டுள்ளது. பெண்களின் மீது இரசாயன மூலகக் (அரிதார நச்சு) கலப்பின் தாக்கம்: இரசாயன மூலகக் கலப்பினால் பெண்கள் பெரும் பிரச்சனைகளை எதிர் கொள்கின்றனர்.
ஓர் பெண் இரசாயன மூலகக் கலப்பினால் பாதிக்கப்படும் பொழுது, அவர் எதிர்நோக்கும் பிரச்சனைகள்:
1. சமூக பிரச்சனைகள் 2. பொருளாதார பிரச்சனைகள் 3. சுகாதார பிரச்சனைகள்
ஓர் பெண் இரசாயன மூலகக் கலப்பினால் பாதிக்கப்பட்ட வரானால், அவர் கணவரால் கைவிடப்பட்டு தன்னுடைய பெற்றோரிடம் சென்று அவர்களுக்கு சுமையாக மாறுகிறார்.

பேரழிவுக்குத் தயார்படுத்திக் கொள்ளும் செயற்பாட்டில் . 149
அத்துடன் அவர் தன்னுடைய தொழிலையும் இழந்து நிதி பிரச்சனைகளுக்கு முகங் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படு கின்றது. இறுதியில் அவரது இனப்பெருக்க சுகாதாரமும் பாதிப்படைகின்றது. அத்துடன் மாதவிடாயில் சிக்கல் நிலை ஏற்படுகின்றது. இரசாயன மூலகக் கலப்பினால் நாடு மாத்திரம் அழிவு பாதையை நோக்கி செல்லவில்லை அது குடும்பத்திற்கும் (முக்கியமாக பெண்களுக்கு) பெரும் அச்சுறுத்தலாக அமைகின்றது.
காடழிப்பு: வருடாந்த சராசரி மழைவீழச்சியானது ஆவிவெளி யேற்றம் இல்லாத காரணத்தினால் குறைவடைந்து வருகின்றது. காடழிப் பின் காரணமாக இது ஏற்படுகின்றது.
உவர் தன்மை அதிகரிப்பு: இந்தியாவினால் எதிரோட்டமாக தாவர வளங்கள் கூட்டாக திசைதிருப்பப்பட்ட காரணத்தினால் ஏற்பட்ட உவர் தன்மை அதிகரிப்பு காடுகளில் காணப்பட்ட வெப்பமண்டல சதுப்பு நில தவார வகைகளை முற்றாக அழித்து வருகின்றது. அத்துடன் இறால் மற்றும் கூனி இறால் வளர்ப்பினால் இவ்வாறான தாவரவகை கொண்ட காட்டு வளங்கள் மேலும் அழிவுக்குட்பட்டுள்ளது. உவர் தன்மையின் அதிகரிப்பினால் பல கூனி இறால் குளங்களில் மறைந்திருக்கும், கூனி இறால் கழிவுகள், உயிர் கொல்வி வைரசுகள், மற்றும் நச்சு பதார்த்தங்கள் இத்தாவர வகைகளை ஆட்கொள்கின்றன. உலகின் பெரிய வெப்பமண்டல சதுப்பு நில தவாரங்களை கொண்ட காடான “சுன்டர்பான்" காடு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
பாலை நிலங்களின் உருவாக்கம்: கடந்த 25 வருடங்களாக வட மாவட்டங்களில் நூறுக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாலவனங்களாக மாறியுள்ளன. இதற்கு இந்தியாவையும் ஒரு காரணமாகக் கருதலாம்.
பராக்கா பிரச்சினை: பரக்கா அணையின் நிர்மாணத்தின் விளைவாக பல கடுமையான பிரச்சனைகள் எழுந்துள்ளன: இவ்வணையில் பல சிக்கல்கள் உண்டு. மேல் மட்ட மற்றும் தரை மட்ட நீரில் உவர் தன்மை அதிகரிப்பு, கடல் மார்க்க பயணங்களுக்கும் தொடர் பாடல் வலையமைப்புகளுக்கும் இடையூறு, தரைமட்ட நீரில் அதிகமான இராசயன மூலக பதார்த்த (அரிதார நச்சு) கலப்பு, மீன் வளங்களின் இயற்கை செறிவின் அழிவு, வேறுப்பட்ட உயிரின மற்றும் தாவர இனங்களின் அழிவு,

Page 82
150 பேரழிவுகளுக்குப் பெண்கள் முகம் கொடுத்தல்
சதுப்பு நிலங்கள் குறைந்து செல்லல், மற்றும் சூறையாடும் வெள்ளப்பெருக்குகள் போன்ற பல சிக்கல்கள் தோன்றியுள்ளன.
2. மனிதனால் உருவாக்கப்படும் பேரழிவு (செயற்கை அனர்த்தம்)
இந் நூற்றாண்டில் மனிதர்களும் அனர்த்தங்களை ஏற்படுத்துகின்றனர். மனிதனால் உருவாக்கப்பட்ட அனர்த்தம் பின்வருமாறு:
21 சூழல் மாசடைதல் 22 சனத்தெகை பிரச்சனை
2.3 பெண்களுக்கெதிரான வன்முறைகள்
21 சூழல் மாசுறல்
பல வழிகளில் மனிதன் சூழலை மாசு படுத்துகிறான். சூழல் மாசுபடுவதனால் மனிதனுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகின்றது.
2.2 சனத்தொகை பிரச்சனை
நாம் அனைவரும் இப்பிரச்சனை பற்றிய விழிப்புணர்வுடன் உள்ளோம். ஆனால் ஒருவருமே இதை அனர்த்தமாக கொள்ள வில்லை. இவ்வுலகின் மிகப்பெரிய அனர்த்தமாக இதைக் கருதலாம்.
23 பெண்களுக்கெதிரான வன்முறைகள்
ஆண்களால் தடுக்கக்கூடிய ஒர் அனர்த்தம் பெண்களுக்கெதிரான வன்முறைகளாகும். ஆனால் ஆண்கள் இதை ஓர் விடயமாக் கருத தவறுகின்றனர். எனினும் இன்று அதிகரித்து செல்லும் பெண்களுக்கெதிரான வன்முறைகளை நோக்கினால், எதிர் காலத்தில் அதுவோர் திகைக்க வைக்கும் விடயமாக மாறும் நிலை உருவாகலாம்.
பங்களாதேஷின் தயார்படுத்தல் மற்றும் தற்செயல் நிகழ்வுக்கான திட்டம்
அனர்த்ததிற்கு தயார்படுத்தி கொள்ளும் நோக்குடன் கீழ்வரும் நடவடிக்கைகளை பங்களாதேஷ் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது:

பேரழிவுக்குத் தயார்படுத்திக் கொள்ளும் செயற்பாட்டில். 151
* சமூகத்தின் சகல மட்டங்களிலும் சூறாவளி மற்றும் வெள்ளபெருக்கு போன்ற குறிப்பிட்ட அனர்த் தங்களுக்கு முகங்கொடுக்கும் வகையில் தற்செயல் நிகழ்வுக்கான திட்டங்களை வகுத்துள்ளது. விரிவான அனர்த்த முகாமைத் துவ திட்டங்களானது உள்ளூர் அனர்த்த செயற்பாட்டு திட்டங்களையும் உள்ளூர் அபிவிருத்தி திட்டங்களையும் நடைமுறைப்படுத்தும் அனர்த்த அபாய குறைப்பு திட்டங் களை உள்ளடக்கும்.
* அனர்த்தங்களுக்கு முகங் கொடுக்க அவசர நிதியுதவிகள் அரசாங்கத்தினால் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. அத்துடன் உணவு, மருந்து பொருட்கள், மற்றும் கூடாரங்கள் போன்ற பொருட்களை களஞ்சியப்படுத்தும் சமுதாய களஞ்சிய ஏற்பாடுகளை செய்தல்.
* அனர்த்தத்திற்கு முகங்கொடுக்கும் தயார்படுத்தல் திட்டத் திற்கான இணைப்பின் பொறுப்பை அமைச்சு மட்டத்திலும், மாவட்ட சங்க மற்றும் தான மட்டத்திலும் சீர்திருத்தல்.
பெண்களும் அனர்த்தமும் தொன்று தொட்டு ஜீவ ராசிகள் அனர்த்தங்களின் தயவிலேயே வாழ்ந்து வருகின்றனர். ஆண்களை விட பெண்களும் சிறுவர் களுமே அதிகமாக அனர்த்தங்களின் போது பாதிக்கப்படுகின்றனர். அனர்த்தங்களின் போது பெண்கள் முகங்கொடுக்கும் பிரச்சி னைகள் பின்வருமாறு:
* பெண்கள் நிரந்தரமாக வீட்டு பொறுப்புக்களை ஏற்று பிள்ளை பராமரிப்பு மற்றும் வயதுவந்தவர்கள் ஊனமான வர்களை பராமரித்தல் போன்ற விடயங்களில் ஈடுபடு வதனால் புலம் பெயர்வதற்கு அவர்களுக்கு வாய்ப்புகளோ சுதந்திரமோ இல்லை. * அனர்த்தங்களுக்கு பறிகொடுத்த குழந்தைகளின் இழப்பு மற்றும் வேதனை பெண்களுக்கே (தாய்மார்களுக்கே) அதிகமாக காணப்படும். அதற்கான காரணம் தொப்புல் கொடி பந்தமான ஒன்பது மாதம் சுமந்து பிரசவ வேத னையுடன் உலகிற்கு வாரிசை கொண்டு வந்தமையே.

Page 83
I52
தீர்வு
பேரழிவுகளுக்குப் பெண்கள் முகம் கொடுத்தல்
அத்தியாவசிய வீட்டு செலவுகளை சமாளிக்க பெண்கள் தங்களது நகைகளை விற்கின்றனர். குடும்பத்திற்கு வருமானம் ஈட்டி தர குடும்பத்தின் ஆண் அங்கத்தவர்கள் வேலைவாய்ப்பினை தேடி நகரங்களுக்கும், மாநகரங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் புலம் பெயர்ந் துள்ளனர். இதனால் பெண்கள் குடும்பத்தின் தலைமை பொறுப்பை தற்காலிகமாக வகித்து யதார்த்த நிலைக்கு முகங்கொடுக்க வேண்டியவர்களாக உள்ளனார்.
(அனர்த்த நிலையின் பொழுது) முகாம்களில் வசிக்கும் பெண்கள் பாலியல் வதைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர். அனர்த்த சூழ்நிலையின் பொழுது சுகாதார கட்டடைப்புகள் சேதப்படுத்தபடுகின்றன இதனால் பெண்கள் அந்தரங்கமற்ற நிலையில் உள்ளனர். அனர்த்த சூழ்நிலையின் பொழுது இனப்பெருக்க சுகாதாரம், மற்றும் மகப்பேற்று சுகாதாரம் போன்ற பல சுகாதார பிரச்சனைகளுக்கு முகங்கொடுக்க நேர்கின்றது. பங்களாதேஷில் இயற்கையாகவே ஆண்களை விட பெண்களுக்கு குறைவான உணவே கிடைக்கின்றது. அனர்த்த சூழ்நிலையின் பொழுது இந்நிலை மேலும் அதிகரிக்கின்றது. அநேக நேரங்கள் அவர்கள் பட்டினி யாகவே உள்ளனர்.
பெண்களே குடிநீர், சமைப்பதற்கு எண்ணை, மற்றும் விறகு சேகரிக்கின்றனர். அனர்த்த சூழ்நிலையின் பொழுது துார இடங்களிலிருந்து குடிநீர், எண்ணை, மற்றும் விறகு சேகரிப்பதில் பிரச்சனைகளை எதிர்நோக்குகின்றனர்.
பெண்கள் மத்தியில் குறைந்த கல்வியறிவு மற்றும் பொதுவான விழிப்புணர்வு இல்லாமையின் காரணத்தினால் அவர்களுக்கு அதிக ஊக்கமளித்தல் மிகவும் அவசியம். அனர்த்த சூழ்நிலையின் பொழுது குடிநீர், எண்ணை மற்றும் விறகு சேகரிக்கும் பொறுப்பை ஆணகள் ஏற்க வேண்டும்.

பேரழிவுக்குத் தயார்படுத்திக் கொள்ளும் செயற்பாட்டில் . 153
அனர்த்த சூழ்நிலையின் பொழுது நிறை மாத கர்ப்பிணி தாய்மார்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட வேண்டும். அனர்த்த சூழ்நிலையின் பொழுது பாலியல் வன்முறை களைத் தடுப்பதற்கு சகலரும் விழுப்புடன் நடந்துக் கொள்ள வேண்டும்.
சிபாரிசு
அனர்த்தங்களை சந்திக்க பின் வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்:
xk
சமுதாய மட்டத்திலான விழிப்புணர்வு திட்டங்கள் அதிகரிக்கப்பட வேண்டும். அனர்த்தத்தை எதிர் கொள்ள பிராந்திய மட்டத்திலான உடனடி நிதியுதவிகள் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் ஒவ்வொரு கட்டத்திலும் தேசிய மற்றும் பிராந்திய மட்டங்களில் அனர்த்தத்திற்கு முகங்கொடுக்க தயார்படுத்தி கொள்ளும் செயற்பாடு நடைமுறைப்படுத்தபட வேண்டும். ஒவ்வொரு நாடும் சர்வதேச நீர் சட்டத்தை கடைப்பிடிக்க வேண்டும். ஆற்றிணைப்பு பிரச்சனைகளை சந்திக்க பிராந்திய மற்றும் இருபக்க கூட்டுறவு அவசியம்.
முடிவுரை
பங்களாதேஷில் அனர்த்தங்கள் தொடர்ந்து நிகழ்கின்ற ஓர் விடயம். பெண்கள் சமூகத்தில் தாழ்ந்த நிலையில் காணப்படுவதனால் அவர்களே அனர்த்தங்களின் பொழுது அதிகம் பாதிப்புக் குள்ளாகின்றனர். இதனால் பெண்கள் மற்றும் சிறுவர்களின் மீது முக்கிய கவனம் செலுத்தபட வேண்டும். அனர்த்தத்திற்கு முகங் கொடுக்கும் திட்டங்களானது சிறந்த கொள்கைகள் மற்றும் வழிகாட்டல் முறைமைகளை கொண்டிருப்பின் செயற்திறன் மிக்கவையாக காணப்படும்.

Page 84
13
விதப்புரைகள்
குழு கலந்துரையாடல்களின் விதப்புரைகள்
பெண்களுக்கெதிரான வன்முறையைத் தடுத்தல், பெண்களும் தீர்மானம் மேற்கொள்ளுதலும், ஜீவனோபாயம், வீடமைப்பு, சேமநலனும் நட்டஈடும், காணி உரிமைகள் மற்றும் உடைமை, தகவல்கள் சுகாதாரம், கல்வி மற்றும் சமூக சேவை உரிமைகள் போன்ற குறிப்பிட்ட கருப்பொருட்களில் குழுக் கலந்துரை யாடல்கள் நடைபெற்றன.
இவை பொதுவாகவும் இலங்கைச் சூழ்நிலை தொடர் பாகவும் கலந்துரையாடப்பட்டன. ஆதலால், இந்த விதப்புரைகள் பொதுவானவை மற்றும் குறிப்பாக இலங்கை தொடர்பானவை என பிரிக்கப்பட்டுள்ளன.
பொதுவான விதப்புரைகள்
* இரு தரப்பு, பல்தரப்பு, சர்வதேச மற்றும் உள்நாட்டு அரச சார்பற்ற நிறுவனங்களின் சுனாமி பதில் நடவடிக்கைகள் உரிமைகளை அடிப்படையாகக் கொண்டவையாக இருப்பதுடன் சர்வதேச விதிமுறை, உரிமைகள் சட்டகம் மற்றும் வழிகாட்டல்களின் பிரகாரம் நடை முறைப் படுத்தப்படுதல் வேண்டும்.
* சுனாமி மீட்பு வெறுமனே பாதிக்கப்பட்டோர் மற்றும் தேவைகள்/சேமநலனை மட்டும் குவிமையமாகக் கொள்ளாது, உரிமைகளிளை மேம்படுத்தல், பாதுகாப்பு மற்றும் பிரயோகத்தில் உறுதியான தளத்தைக் கொண்ட தாக இருத்தல் வேண்டும்.

விதப்புரைகள் 155
சுனாமி மீட்பு நடவடிக்கைகள் பால்நிலை, இனம், சமயம், சாதி, வகுப்பு அல்லது பிராந்திய அடிப்படையில் பாரபட்சம் உள்ளதாக இருத்தலாகாது. மீட்பு நடவடிக்கையில் எல்லா அம்சங்களிலும் பால்நிலைப் பகுப்பாய்வு உள்ளடக்கப்பட்டிருப்பதையும் தீர்மானம் மேற்கொள்ளும் எல்லா அமைப்புகளிலும் பெண்களுக்கு சமமான பிரதிநிதித்துவம் இருப்பதையும் அது உறுதிப்படுத்துதல் வேண்டும். சுனாமி மீட்பு நடவடிக்கை சமத்துவத்தையும் பெண் களுக்கெதிராகப் பாரபட்சம் காட்டப்படாதிருத் தலையும் உறுதிப்படுத்துதல் வேண்டும். அரசாங்கங்கள் உலகளாவிய மனித உரிமை பிரகட னங்கள் அவ்வாறே அவர்கள் ஏற்றுக்கொண்ட ஐ.நா. ஒப்பந்தங்களின் கீழ் தமது சர்வதேசக் கடப்பாடுகளுக்கு விசேட கவனம் செலுத்துதல் வேண்டும். பெண்களுக்கெதிரான எல்லா வகையான பாரபட் சத்தையும் ஒழித்தல் (CEDAW) பற்றிய சமவாயத்தின் கீழ் கடப்பாடுகளைக் கூறும் பெண்களின் உரிமைகள் தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்படுதல் வேண்டும். சர்வதேச மனித உரிமை நியமங்களை செயற்படுத்தும் தேசிய அரசியலமைப்பு உத்தரவாதங்கள் மற்றும் உள்நாட்டுச் சட்டங்களையும் சுனாமி மீட்பு வேலைகள் அடிப்படையாகக் கொண்டிருத்தல் வேண்டும். நிதி முகாமைத்துவம் அடங்கலாக சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நுண்கடன் முன்னெடுப்புகளில் பெண் களுக்கான ஆற்றலைக் கட்டியெழுப்புதல். பெண்களின் வஞ்சக்கடத்தல் மற்றும் பாலியல் சுரண்டலைத் தடுத்தல். மனிதநேயப் பணிகளுக்கான பாதுகாப்பு நிவாரணம் மற்றும் ஏனைய உதவிகளை வழங்குவதில் பெண்களைப் பாலியல் ரீதியாகச் சுரண்டுவதைத் தடைசெய்தல்.

Page 85
156 பேரழிவுகளுக்குப் பெண்கள் முகம் கொடுத்தல்
* ஆட்கள் காணாமல் போதல் - மரணம் பற்றிய உறுதிப்பாடு எதுவுமின்றி காணாமல் போனவர்களின் குடும் பங்களின் நீண்ட கால அதிர்ச்சி. புதைக் கப்பட்டுள்ள இடங்களை அடையாளம் கண்டு துக்கம் அனுஷ்டிப்பதற்கும் அவை தொடர்பான சடங்குகளை நிறை வேற்றுவதற்கும் வாய்ப்பளித்தல்.
* அநாதைகளின் பாதுகாப்பு, அவர்களின் உரிமைகள், மற்றும் முதியோர்களின் - குறிப்பாக முதிய பெண்களின் அக்கறைகளை உறுதிப்படுத்தல்.
* சுனாமி மீட்புக்காக, குறிப்பாக பால்நிலை தொடர்பான அக்கறைகளுக்காக அரசினால் பெறப்பட்ட உதவியின் அளவு பற்றிய தகவல்களைப் பெறுவதற்கான பொறி முறைகளை அமைத்தல் - உதவிகளின் வெளிப் படைத்தன்மை.
குறிப்பாக இலங்கை தொடர்பான விதப்புரைகள்
பிராந்தியத்தில் நீண்ட காலமாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் முரண்பாட்டின் அழிவு பற்றியும் சுனாமியினால் ஏற்பட்ட அழிவுகளை இது எவ்வாறு மேலும் சிக்கலுக்கு உள்ளாக்கியது என்பது பற்றியும் இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாண சுனாமி மீட்பு நடவடிக்கைகள் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும். எனவே, சுனாமி மீட்பு நடவடிக்கை முரண்பாட்டுக்கும் இராணுவமயப்படுத்தல் ஆகியவற்றுக்கும் இடையிலான தொடர்புகள் மற்றும் அனர்த்தம் மற்றும் குறிப்பாக அதன் பால்நிலைத் தாக்கம் பற்றிய பகுப்பாய்வை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும்.
மிகக் கடுமையாக ஒருமுகப்படுத்தப்பட்ட தீர்மானம் மேற்கொள்ளல் மற்றும் நடைமுறைப்படுத்தல் அமைப்புகள் உள்ளுர் மட்டத்தில் பன்முகப்படுத்தப்பட்டு, உடைமையாக் கப்பட்டு நிர்வகிக்கப்படுதல் வேண்டும்,
சுனாமி மீட்பின் மிகக் கடுமையான அரசியல் மயப் படுத்தப்பட்ட தன்மை பற்றிய அக்கறைகளையும் நாங்கள் தெரிவித்துக் கொள்வதுடன் சுனாமியினால் பாதிக்கப்பட்ட எல்லா சமூகங்களைச் சேர்ந்த மக்களினதும் தேவைகளை முன்னுரி

விதப்புரைகள் 157
மைப்படுத்துமாறு எல்லா அரசியல் கட்சிகளையும் அமைப்பு களையும் வேண்டுகின்றோம்.
பெண்களுக்கெதிரான வன்முறை
முகாம் சூழ்நிலைகளிலும் இடம்பெயர்ந்த குடும்பங்களிலும் இடம்பெயர்ந்த சமுதாயங்களிடையேயும் அதிகரித்த ரீதியில் பெண்களுக்கெதிரான வன்முறை, குறிப்பாக குடும்ப வன்முறையும் பாலியல் தொல்லையும் காணப்படுகின்றது.
விதப்புரைகள்
l.
மீள்குடியேற்ற இடங்களில் (தற்காலிக அல்லது நிரந்தர ) பெண்களுக்கெதிரான வன்முறையைத் தடுப்பதற்கும் சமூக மற்றும் குடும்ப வன்முறையிலிருந்து சுதந்திரமாக இருப் பதற்கான அவர்களின் உரிமையைப் பாதுகாப்பதற்கும் சமுதாய மட்ட நடவடிக்கைக் குழுக்களைத் தாபித்தல்.
இந்நடவடிக்கைக் குழுக்கள் மகளிர் விவகார அமைச் சுடனும் உள்ளுர் மட்டத்தில் - அரசாங்க முகவர்கள், மாவட்டச் செயலகங்கள், கிராம சேவை அதிகாரிகள், சமுர்த்தி ஊக்குவிப்பாளர்கள் போன்றவர்களுடனும் அவ்வாறே சர்வதேச மற்றும் உள்ளுர் அமைப்புகளுடனும் இணைந்து மேற்கொள்ளப்படலாம்.
பெண்களுக்கெதிரான வன்முறைக்கு வழிகோலும் நேரடி யாக ஆண்களிடம் மட்டுமே நிவாரண உதவிகளையும் ஏனைய பணம் போன்றவற்றையும் வழங்கும் பாரபட்சம் காட்டும் கொள்கைகள் மாற்றப்படுதல் வேண்டும். குடும்ப வன்முறை சட்டமூலம் முழுமையாக நடை முறைப்படுத்தப்படுவதுடன் சட்ட ஆலோசனை, சட்ட உதவி, ஆலோசனை, புகலிடம் மற்றும் பொருளாதார சுயாதீனத்தன்மைக்கான திறன் அபிவிருத்தி போன்ற வசதிகள் பெண்களுக்கு வழங்கப்படுதல் வேண்டும். பெண்களின் பிரத்தியேகப் பாதுகாப்புக்கு விசேட கவனம் செலுத்தப்படுதல் வேண்டும். இளவயது அல்லது குறைந்த வயது திருமணம் மற்றும் கர்ப்பம் ஆகியவற்றுக்கு

Page 86
பேரழிவுகளுக்குப் பெண்கள் முகம் கொடுத்தல்
பலவந்தப்படுத்தும் அல்லது கட்டாயப்படுத்தும் காரணிகள் மீது அவற்றைத் தவிர்க்கும் நோக்குடன் கவனம் செலுத்தப்படுதல் வேண்டும்.
6. விதவைகளை ஒதுக்கி வைத்தல் மற்றும் மறுமணம் தொடர்பான அக்கறைகள் மீது சமுதாய மட்டத்தில் கவனம் செலுத்தப்படுதல் வேண்டும். 7. சுனாமியின் காரணமாக விதவையானவர்கள் அல்லது மனைவியை இழந்தவர்கள் ஆகியோர்களின் மறுமண சூழ்நிலையில் சிறுவர்களின் குறிப்பாக சிறுமிகளின் நிலை குறித்து விசேட கவனம் செலுத்தப்படுதல் வேண்டும்.
பெண்களும் தீர்மானம் மேற்கொள்தலும்
தேவை மதிப்பீடுகள், கொள்கைத் திட்டமிடல், கொள்கை வடிவமைப்பு, நடைமுறைப்படுத்தல், கண்காணிப்பு நடவடிக் கைகளின்போது - திட்டம் வகுத்தல் மற்றும் நடைமுறைப்படுத்தல் ஆகிய இரண்டு மட்டங்களிலும் - பெண்கள் போதியளவு பிரதிநிதித்துவம் செய்யப்படவில்லை.
விதப்புரைகள்
1. நிவாரணம், மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு தொடர்பான எல்லா கொள்கை வகுத்தல்களும் சுனாமி யினால் பாதிக்கப்பட்ட சமுதாயங்களின், குறிப்பாக பெண்களின் முன் கூட்டிய கலந்தாலோசனையுடன் மேற்கொள்ளப்படுதல் வேண்டும். கொள்கை வகுப்ப வர்களுடன் - அரச மற்றும் அரச சார்பற்ற - தொடர்புகளை மேற்கொள்ளும் நோக்கங்களுக்காக உள்ளுர் மட்ட சமுதாயங்களுடன் உள்ளுர் மட்டக் குழுக்கள் தாபிக் கப்படுதல் வேண்டும்.
2. மாவட்டக் குழுக்கள், கிராமியக் குழுக்கள் ஆகிய மட்டங்களிலும் மற்றும் TAFREN இனால் தாபிக்கப்படும் மாவட்ட மற்றும் உள்ளுர் மட்ட செயலணிகளிலும் அரச முகவர்கள் மற்றும் ஏனைய முகவர்கள் - பல்தரப்பு, சர்வதேச அமைப்புகள் மற்றும் பாரிய தேசிய அமைப்புகள்

விதப்புரைகள் 159
ஆகியவற்றில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப் படுதல் வேண்டும்.
ஜீவனோபாயங்கள்
பெண்களின் ஜீவனோபாய தேவைகள் மற்றும் அக்கறைகளின் பால்நிலைப்படுத்தப்பட்ட தன்மை கொள்கை மட்டத்தில் தீர்க்கப்படவில்லை. உண்மையானதும் சட்டப்படியானது மான வீட்டுத் தலைவர்கள் என்ற வகையில் குடும்பம் தொடர்ந்து வாழ்வதற்கான பொறுப்பைக் கொண்டுள்ள முதிய பெண்கள், அநாதையாக்கப்பட்ட இளம் வயதுவந்த பெண்கள் ஆகியோரின் குறித்த தேவைகள் நிவர்த்தி செய்யப்படுதல் வேண்டும். பெண்களின் ஜீவனோபாய உதவி பெண்களை இரண்டாம் தர வருமானம் ஈட்டுபவர்களாகக் கருதியும் பெரும்பாலும் வீட்டை அடிப்படையாகக் கொண்ட சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சி அல்லது வருமானத்தை ஈட்டும் கருத்திட் டங்களுடன் வரையறுத்தும் வகுக்கப்பட்டுள்ளது. சமனான தொழில் வாய்ப்புகள், சொத்துகள் மற்றும் வளங்களை பெண்கள் பெறுதல் தொடர்பான நீண்டகால நடவடிக்கை எதுவும் கிடையாது. பெண்களுக்கான பெரும்பான்மையான ஜீவனோபாய கொள்கைத் தலையீடுகளும் முறைசாராத் துறை தொழில் வாய்ப்புகளுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளது. முறைசார் தொழில்வாய்ப்பு மற்றும் வருமானம் ஈட்டும் செயற்பாடுகளில் பெண்களின் பங்கேற்புக்கான கட்டமைப்பு மற்றும் (உட்கட்ட மைப்பு) சார்ந்த நெருக்கடியில் போதிய கவனம் செலுத்தப் படுவதில்லை.
விதப்புரைகள்
1. பெண்களின் தேவைகளையும் வருமானம் ஈட்டுவதற்கான தேவைப்பாடுகளையும் நிர்ணயிப்பதற்கும் அவ்வாறே பெண்களின் திறன்கள் மற்றும் ஆற்றல்களை அடையாளம் காணி பதற்கும் உள்ளுர் மட்டத்தில் பெண்களுடன் கலந்துரையாடப்பட வேண்டும்.
2. உள்ளுர் ஆலோசனை மற்றும் கொள்கை மட்ட தீர்மானம் மேற்கொள்ளல் ஆகிய இரண்டிலும் பெண்களின் பங்கேற்

Page 87
160
பேரழிவுகளுக்குப் பெண்கள் முகம் கொடுத்தல்
புடன் ஜீவனோபாய உதவி பற்றிய கொள்கை வகுக்கப் படுதல் வேண்டும். துறை அடிப்படையிலான ஜீவனோபாய உதவிக் கொள் கைகள் தொழில் சந்தையில் பெண்களின் குறித்த சூழ்நிலையையும் முறைசாரா துறையில் அவர்கள் பெரும் எண்ணிக்கையில் இருப்பதையும் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும்.
கொள்கைத் தலையீடுகளை வகுக்கும் போது மீன்பிடிக் கைத்தொழில் மற்றும் கடற்றொழில் சமுதாயங்களில் குறிப்பாக பெண்களின் பாத்திரம் புறக்கணிக்கப்படக் கூடாது. உ-ம். கடற்கரையை அடிப்படையாகக் கொண்ட கடற்றொழில் மற்றும் சிறிய அளவிலான கடற்றொழிலுக்கு எதிராக துறைமுகத்தை அடிப்படையாகக் கொண்ட கடற்றொழிலுக்கு மிகுந்த கவனம் செலுத்தப்படுகின்றது. சுனாமியினால் பாதிக்கப்பட்ட விவசாய சமுதாயங்களில் பெண்களின் பாத்திரம், வாழ்வாதார கமத்தொழிலில அவர்களின் பாத்திரம் மற்றும் கமத்தொழில் காணிகளின் உவர்த்தன்மை ஆகியவற்றின் மீதும் கவனம் செலுத்தப் படுதல் வேண்டும்.
பெண்களுக்கான ஜீவனோபாயம் மற்றும் தொழில் வாய்ப்பு உதவி ஆகியவை தொடர்பான கொள்கை குடும்ப வாழ்வாதாரத்தை வழங்குவதற்கான பெண்களின் அடிப் படைப் பொறுப்பு பற்றி கவனத்தில் கொள்ளுதல் வேண்டும். எனவே, ஜீவனோபாய தலையீடுகள் பெண்களுக்கான வீட்டை அடிப்படையாகக் கொண்ட, ஒழுங்குபடுத்தப் படாத மற்றும் பாதுகாக்கப்படாத தொழில்வாய்ப்புத் தெரிவுக்கு வரையறுக்கப்படக்கூடாது.
முறைசார் துறையில் ஈடுபட்டு தொழில்வாய்ப்புகளையும் போதிய திறன்களையும் பெறுவதற்கும் பெண்களுக்கு வாய்ப்பளிக்கப்படுதல் வேண்டும்.
பெண்கள் வீட்டுக்கு வெளியே தொழில்களைப் பெறக் கூடியவாறு சமுதாய மட்டத்தில் பொறுப்புகளை அடிப் படையாகக் கொண்ட பெண்களின் வீட்டுப் பராமரிப்பு

IO.
II.
I2.
l3.
14.
15.
I6.
I7.
விதப்புரைகள் I6
கவனத்தில் கொள்ளப்படுவதை உறுதிப்படுத்துவதற்கு சமூக சேமநலன் கொள்கைகள் வகுக்கப்படுதல் வேண்டும்.
தங்களுக்குக் கிடைக்கக்கூடிய தொழில் வாய்ப்புகள் தொடர்பாக தெரிவுகளை மேற்கொள்வதற்கு போதிய தகவல்கள் பெண்களுக்கு வழங்கப்படுதல் வேண்டும். குறிப்பாக பெண்களுக்கு ஏற்பட்ட சுனாமியின் பாதிப்புகள் விரிவாக ஆராய்ச்சி செய்யப்பட்டு அவை கொள்கை வகுப்பதில் பயன்படுத்தப்படுதல் வேண்டும்.
கடன் வசதிகள், குறைந்த வட்டி மற்றும் இலகு தவணைக் கொடுப்பனவுகள் ஆகிய வசதிகள் போதியளவு பெண் களுக்குக் கிடைக்கச் செய்யப்படுதல் வேண்டும். சுனாமிக்கு முந்திய கடன்களைப் பதிவளிப்பதற்கான சூத்திரம் ஒன்று வகுக்கப்படுதல் வேண்டும். பெண்களின் ஜீவனோபாயங்களுக்கு உதவி அளிப்பதற்கு ஒரு விசேட மாவட்ட அடிப்படையில் நிர்வகிக்கப்படும் நிதியம் ஒன்று உருவாக்கப்படுதல் வேண்டும்.
100 மீற்றர் மற்றும் 200 மீற்றர் பாதிப்பு வலையம் பற்றி மீள் பரிசீலனை செய்து கரையோரக் குடியேற்றம் தொடர்பாக விஞ்ஞான மற்றும் சுற்றாடல் காரணிகளை அடிப் படையாகக் கொண்ட மேலும் யதார்த்தமான தீர்மானத்தை மேற்கொள்வதற்கு அரசாங்கத்தின் ஆதரவு பெறப்படுதல் வேண்டும். தமது பாரம்பரிய சமுதாயங்களில் வாழ் வதற்கான கரையோர மக்களின் உரிமை பாதுகாக்கப்படுதல் வேண்டும்.
அனர்த்தங்கள் மற்றும் அனர்த்த ஆயத்த நிலை தொடர்பான விஞ்ஞான அறிவு பெண்களுக்கு ஊட்டப்படுதல் வேண்டும். சுனாமி பதில் நடவடிக்கை ஒரு தேசிய பிரச்சினையாகக் கருதப்பட்டு கட்சி அரசியல் தலையீடுகளுக்கு உட்படாமல் நிவர்த்திக்கப்படுதல் வேண்டும். தமது வீடுகளுக்கு வெளியே வருமானம் ஈட்டுவதில் பெண்கள் ஈடுபடுவதில் பங்குபற்றுவதற்கான கட்டமைப்பு சார்ந்த நெருக்கடிகளை தவிர்ப்பதற்கு பெண்களை இயலச்

Page 88
I62 பேரழிவுகளுக்குப் பெண்கள் முகம் கொடுத்தல்
செய்வதற்காக உட்கட்டமைப்பு (வசதிக்கேற்ற போக்கு வரத்து வசதிகள்) மற்றும் ஆதரவு (சிறுவர் பராமரிப்பு நிலையங்கள்) வழங்கப்படுதல் வேண்டும்.
வீட்டு வசதி, சேமநலன் மற்றும் நட்டஈடு
சுனாமியின் காரணமாக பெருமளவிலான இடம்பெயர்வானது அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட எல்லோருக்குமான மீள்குடி யேற்றம், மற்றும் போதிய புகலிடம் ஆகிய அடிப்படைப் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றது. காணி ஒதுக்கீடு, நட்ட ஈடு செலுத்துதல், மற்றும் புகலிடத்தை மீள் நிர்மாணம் செய்வது ஆரம்பத்தில் வாழ்ந்த இடத்திலா அல்லது மீள்குடியேற்றப்பட்ட இடத்திலா என்பன போன்ற பிரச்சினைகளையும் அது ஏற்படுத்துகின்றது. புகலிடத்துக்கான உரிமை தனது புகலிடம் எங்கு அமைந்திருத்தல் வேண்டும் என நிர்ணயித்தல் அவ்வாறே தனக்குத் தேவையான புகலிடத்தின் வகையை நிர்ணயித்தல் போன்ற போன்றவை பெண்களுக்கு மிகுந்த அக்கறையை ஏற்படுத்துகின்றது. குடும்பங்களின் தன்மை பற்றிய தற்போதைய ஊகத்தின் விளைவாக (அதாவது, ஒருவரின் - வழக்கமாக ஆண் - தலைமையிலான ஒரு குடும்ப அலகைக் கொண்டதாக) அத்தகைய ஊகம் பொருத்தமற்ற பல சந்தர்ப்பங்களில் சமத்துவமற்ற சேவை வசதிகள் கிடைக்கின்றன.
விதப்புரைகள்
1. புகலிடம் தொடர்பான பெண்களின் தேவைகளையும் அக்கறைகளையும் முன்னிலைப்படுத்துவதற்கு மாவட்ட மட்டத்தில் புகலிடம் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பெண்களின் குழுக்கள் மற்றும் ஆட்களைக் கொண்ட ஒரு வலையமைப்பு தாபிக்கப்படுதல் வேண்டும். 2. சுனாமியினாலும் ஏனைய அனர்த்தங்களினாலும் பாதிக்கப் பட்ட பிராந்தியத்திலுள்ள நாடுகளிலிருந்து சிறந்த நடவடிக்கைகளுக்கு எதிராக பால்நிலை உணர்வுள்ள புகலிடங்களின் ஒப்பீட்டு உதாரணங்கள் பொதுவான மன்றங்கள் ஊடாகப் பகிர்ந்துகொள்ளப்படுதல் வேண்டும்.

விதப்புரைகள் 163
. புகலிடம் ஒன்றினுள் வாழும் பரப்பு, பொதுவான பரப்பு, வேலை செய்யக்கூடிய பரப்பளவு ஆகியவற்றை பெண்கள் நிர்ணயிக்கக்கூடியவாறு தற்காலிகப் புகலிடங்களின் நிர்மாணம் பற்றி வடிவமைக்கும்போது பெண்களிடம் கலந்தாராயப்படுதல் வேண்டும். உட்பம். சமையலறை, துாங்கும் இடம், கழிவறைகள் போன்றவை.
. தற்காலிக மற்றும் நிரந்தர புகலிடங்கள் ஆகிய இரண்டும் மீள் குடியேற்ற சமுதாயங்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு பொது சேவைகள், போக்குவரத்து, பாடசாலை மற்றும் ஏனைய சமூக வசதிகள் இலதுவாகக் கிடைக்கக்கூடிய இடத்தில் அமைந்திருத்தல் வேண்டும். நட்ட ஈடு மற்றும் ஏனைய நிவாரண மற்றும் சேம நலன் பயன்கள் குடும்பங்களின் ஆண் தலைவர்களின் பெயரில் வழங்கப்படாமல் இணைந்து வழங்கப்படுதல் வேண்டும்.
மீள் குடியேற்றத்துக்கான காணி ஒதுக்கீட்டின் போது பெண்களின் காணி உடைமைப் பாங்கு மற்றும் உடை மைக்கான பெண்களின் உரிமைகள் ஆகியவை கவனத்தில் கொள்ளப்படுதல் வேண்டும்.
பெண்களின் பெயரில் வைத்திருக்கும் காணிகளுக்கு போதிய நட்ட ஈடு வழங்குவதுடன் புதிய உறுதிகள் அல்லது அனுமதிப் பத்திரங்கள் வழங்கும்போது பெண்களின் பாரம்பரிய உடைமைப் பாங்கு பாதுகாக்கப்படும் விதத்தில் அவை பெண்களின் பெயரில் வழங்கப்பட வேண்டும்.
. காணியற்ற ஆட்களுக்கு மீள் குடியேற்றத்துக்காக அரச காணியை ஒதுக்கும்போது அத்தகைய உறுதி அல்லது பாவனை கூட்டு உடைமை அடிப்படையில் ஒதுக்கப்படுதல் வேண்டும்.
. ஆண்களுக்குச் சிறப்புரிமை அளிக்கும் குடும்பத் தலைவர் என்னும் எண்ணக்கருவில் மாற்றம் ஏற்படுத்தப்படுவதுடன் பணம் அல்லது வேறு வகையான அரச நன்கொடைகளும் நட்ட ஈடும் பெண்களுக்கும் ஆண்களுக்கும் கூட்டாக வழங்கப்படுதல் வேண்டும்.

Page 89
164 பேரழிவுகளுக்குப் பெண்கள் முகம் கொடுத்தல்
10. தேசிய மற்றும் உள்நாாட்டு மட்டம் இரண்டிலுமே நிவாரண முயற்சிகள் ஒருங்கிணைக்கப்படுதல் வேண்டும். சுனாமி நிவாரணங்கள் மீண்டும் மீண்டும் ஒருவருக்கு கொடுக்கப் படாமலும் சுனாமி மீட்பு அவ்வப்போதைக்கானவையாக அல்லாமலும் இருப்பதையும் தேவையான பொருட்களும் சேவைகளும் வினைத்திறனுடன் வழங்கப்படுவதையும் உறுதிப்படுத்துவதற்கு எல்லா NGOகளும் INGOகளும் உள்ளுர் மட்டத்தில் தாம் ஒருவருக்கொருவரும் உள்நாட்டில் அமைந்துள்ள அரசாங்க அதிகாரிகள் மற்றும் திணைக் களங்களுடனும் ஒத்துழைக்க வேண்டும்.
11. சுனாமி மீட்பு முயற்சிகள் அரசியல் மயமாக்கப்படா திருப்பதை அல்லது குறுகிய கட்சி அரசியல் நோக்கங் களுக்காகப் பயன்படுத்தப்படாது இருப்பதை அரசும் அரசியல் குழுக்களும் உறுதிப்படுத்துதல் வேண்டும். இம்முயற்சிகள் பால்நிலை, இனம், சாதி, வகுப்பு, மற்றும் சமய அடிப்படையில் பாரபட்சம் மிக்கதாக இருக்கக் கூடாது.
காணி உரிமைகளும் காணி உடைமையும்
கிழக்கு மாகாணத்தின் மரபு ரீதியான நடைமுறையும் உள்ளுர் திருமணப் பாங்கும் வரலாற்று ரீதியாகப் பெண்களின் காணி உரிமைகளைப் பாதுகாத்திருந்தது. இந்தப் பிரதேசங்களைச் சேர்ந்த பெரும்பான்மையான பெண்கள் தமது சொந்தப் பெயர்களில் காணிகளையும் ஆதனங்களையும் உடைமையாகக் கொண் டுள்ளனர். அதன் விளைவாக சுனாமியினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் இழந்த அல்லது அழிந்த ஆதனங்களில் பெரும்பான்மையானவை பெண்களுக்குச் சொந்தமானவை யாகும். தற்போது இழந்த காணிக்கான நட்ட ஈடாக அல்லது மீள்குடியேற்றத் திட்டங்களில் அரச காணிகளை ஒதுக்கும்போது நடைமுறையில் ஆண்களை குடும்பத் தலைவர்களாக வரையறுக் கப்பட்டுள்ளவாறு அவர்களின் பெயர்களுக்கு மேற்கொள்ளப் படுகின்றது. எனவே, பாரம்பரிய பெண்களின் காணி உடைமைப் பாங்கு மாற்றப்படக் கூடிய ஆபத்தில் உள்ளது. ஆகவே, பெண்களின் காணி உரிமைகளைப் பாதுகாக்கின்ற அதே வேளை

விதப்புரைகள் 165
கிழக்குப் பிராந்தியத்தில் நிலவும் பயன்மிக்க காணி உடைமை நடைமுறைகளும் பாதுகாக்கப்படுதல் வேண்டும்.
விதப்புரைகள்
l.
போதிய நட்ட ஈட்டைக் கோரக் கூடியவாறு தமது பெயர்களில் பதிவு செய்யப்பட்டுள்ள காணிகளினதும் ஆதனங்களினதும் உடைமையை நிரூபிப்பதற்கு பெண்க ளுக்கும் ஆண்களுக்கும் உதவுவதற்கான பொறிமுறைகள் வகுக்கப்படுதல் வேண்டும்.
உடைமையை உறுதிப்படுத்துவதற்கும் அளவுக்கு அதிக மான கால தாமதமின்றி நட்ட ஈட்டையும் மீள் குடியேற்ற வசதிகளையும் நன்கொடைகளையும் பெறுவதற்கும் வீட்டுத் தலைவர்களாக இருக்கின்ற பெண்களுக்கு விசேட உதவி வழங்கப்படுதல் வேண்டும். மீள் குடியேற்ற மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படும் போது அல்லது மீள் குடியேற்றக் கொள்கைகள் வகுக்கப்படும் போது பெண்களின் குறிப்பாக ஜீவனோபாயங்களுடன் தொடர்புடையவர்களின் தேவைகளும் அக்கறைகளும் நிவர்த்திக்கப்படுதல் வேண்டும்.
வீடமைப்பு மற்றும் புகலிடம் தொடர்பாக தீர்மானங்களை மேற்கொள்ளும்போது பெண்களுடன் கலந்தாராயப்படுதல் வேண்டும். மீள் குடியேற்றச் சமுதாயங்களுக்கான வீடமைப்பு மற்றும் புகலிடங்களை வடிவமைக்கும் போது தமது வீட்டின் அமைவிடத்தையும் அவற்றின் அமைப்பையும் நிர்ணயிப்பதில் பெண்கள் உள்ளடக்கப்படுதல் வேண்டும்.
சேதமடைந்த வீடுகளின் நிர்மாணம் மற்றும் மீள் நிர்மாணத்துக்கான பயன்களை வழங்கும் போது பெண் களின் தேவைகள் மற்றும் ஆற்றல்களைக் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும். மீள் நிர்மாணம் மற்றும் மீள் கொடுப்பனவுக் காலம் பெண்களுடன் கலந்தாராய்ந்து தீர்மானிக்கப்படுதல் வேண்டும். குடும்பத்துக்குத் தலைமை வகிக்கும் பெண்கள், முதிய பெண்கள், தனித்து வாழும் பெண்கள் தங்கி வாழ்வோரின் பராமரிப்பில் வாழும்

Page 90
166 பேரழிவுகளுக்குப் பெண்கள் முகம் கொடுத்தல்
பெண்கள் போன்ற விசேட சூழ்நிலைகளில் பெண்களுக்கு உதவுவதற்கு விசேட திட்டங்கள் வகுக்கப்படுதல் வேண்டும்.
தகவல், சுகாதாரம், கல்வி மற்றும் சமூக சேவை உரிமைகள் விதப்புரைகள்
1. தீர்மானம் மேற்கொள்ளும் ஒவ்வொரு மட்டத்திலும் சிறுபான்மையினரின் கருத்துகள் பிரதிநிதித்துவம் செய்யப் படுதல் வேண்டும்.
2. சமுதாயத்தின் தேவைகளையும் அக்கறைகளையும் மத்திய தீர்மானம் மேற்கொள்வோரிடம் கொண்டுசெல்வதற்கும் மத்திய நிலையத்திலிருந்து தகவல்களை சமுதாயத்துக்குக் கொண்டுவருவதற்கும் ஒவ்வொரு துறையிலிருந்தும் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளை உள்ளடக்கிய தகவல் மன்றங்கள் தாபிக்கப்படுதல் வேண்டும்.
3. நிரந்தர மீள்குடியேற்றத்தில் ஒவ்வொரு மட்டத்திலும் சமுதாயக் குழுக்கள் பங்கேற்றல் வேண்டும். வீடுகளுக்காக எவ்வளவு செலவிடப்படுகின்றதென்பதை சமுதாயம் தெரிந்திருத்தல் வேண்டும். வீடுகளைக் நிர்மாணிப்பதில் நிதிகளைச் செலவிடும் வழிகள் பற்றிய வெளிப்படைத் தன்மை இருத்தல் வேண்டும்.

கட்டுரையாளர்கள்
அபேதாதுல் பாத்திமா - பொதுமக்கள் தொடர்பு மற்றும் பிரசுர அலுவலர், BROTEE - வலுவற்றோரின் உரிமைகளை பாதுகாக்கும் கிராமிய இயக்கம்,பங்காளாதேஷ்.
சரளா இமானுவால் - ஆயுதப் பிணக்குகளின்போது பெண்கள், சமூக உளவியல் பராமரிப்பு ஆகியவை எதிர் நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக ஆய்வு செய்துள்ளார்.அத்துடன் இலங்கையிலும் ஆசியாவிலும் பெண்கள் நிறுவனங்கள் பலவற்றின் வலைப்பின்னல்கள் ஊடாக ஆலோசனை வழங்குவதிலும், உரிமைகள் தொடர்பான பிரச்சாரத்திலும் ஈடுபட்டுள்ளார்.
சித்தி மைசபிரா- மனிதாபிமானப் பணிகளுக்கான பெண் தொண்டர் குழு - RPUK - அச்சே, இந்தோனேசியா.
சித்திரலேகா மெளனகுரு: கிழக்குப் பல்கலைக்கழகப் பேராசிரியர், மட்டக்களப்பு சூரியா பெண்கள் நிறுவனத்தின் இணைப்புக் குழு அங்கத்தவர். இடம் பெயர்ந்த பெண்களின் நலனுக்காக உழைத்தமைக்காக 2003 ஆம் ஆண்டு அகதிகளுக்கான ஜக்கியநாடுகள் உயர் ஆணையாளர் நிறுவனத்தின் விருது பெற்றவர். இலங்கைப் பெண்கள் தேசிய ஆணைக்குழுவின் உறுப்பினர்.
எல்.சிவகாமி - நிகழ்ச்சி திட்ட இணைப்பாளர், சமூகக் கல்விக் கும் அபிவிருத்திக்குமான நிறுவனம், சென்னை, இந்தியா.
சுமிகா பெரெரா - சுனாமியால் பாதிப்புற்ற பெண்களுக்கு உதவும்
கட்டமைப்பின் இணைப்பாளர், கொழும்பு.

Page 91
168 பேரழிவுகளுக்குப் பெண்கள் முகம் கொடுத்தல்
சுனிலா அபயசேகர - இன்போம் (INFORM) நிறுவனத்தின் பணிப்பாளர். பெண்கள் உரிமைகள், மனித உரிமைகள் தொடர்பாக பரந்தளவில் பணிபுரிபவர். 1998இல் மனித உரிமைப் பணிக்காக ஜக்கிய நாடுகள் சபையின் விருது பெற்றவர்.
தனுவுரி சேனநாயக்க - Practical Action நிறுவனத்தில் பணி
புரிகிறார்.
ரீட்டா மன்சந்தா - எழுத்தாளர், ஆய்வாளர், பத்திரிகையாளர். சமாதானப் பாதுகாப்பு, மனித உரிமைகள், பெண்கள், சிறுபான்மையினர் உரிமைகள் முதலியவை தொடர்பாக அதிகம் எழுதியுள்ளார். மனித உரிமைகளுக்கான தென் னாசிய அமைப்பின் (SAFHR) ஆலோசகராகப் பணிபுரி கிறார். 2005 ம் ஆண்டு இலங்கை அரசாங்கத்தில் பால் நிலை தொடர்பான பொதுநலவாய ஆலோசகராகப் பணிபுரிந்தவர், இவரது சமீபத்தைய நுால் "The No Nonsense Guide to Minority Rights in South Asia' -gglh.
ருத் மனோரம்மா - Women's Voice நிறுவனத்தின் பொதுச் செயலாளர். இந்திய தேசிய பெண்கள் தேசியக் கூட்டமைப் பின் தலைவர்.
ஷாலினி ஜாபர் - மாலைதீவு பால் நிலை குடும்ப அபிவிருத்தி
சமூகப்பாதுகாப்பு அமைச்சில் பணிபுரிகிறார்.
ஷிபா ஜோர்ஜ் - SAHRWARU பெண் நிலையத்தின் பணிப்பாளர்,
அஹமதாபாத், இந்தியா,


Page 92

ISBN 978-955-8695-04-3
97895.586 950.43